Powered By Blogger

Sunday, April 23, 2023

ஞாயிறையும் தெறிக்க விடலாமா ?

 நண்பர்களே,

வணக்கம். உலக புத்தக தினத்தன்று நமது ஆன்லைன் புத்தக மேளா தெறிக்க விட்டுக் கொண்டிருப்பது செம coincidence என்பேன் ! And ஆன்லைன் மேளாவின் முதல் நாளான நேற்றைக்கு சும்மா பட்டையைக் கிளப்பி விட்டிருக்கிறீர்கள் guys !! மாலை 6 க்கு போனை ஆப் செய்யும் முன்பாய் ஆளுக்கு 100 பேருக்குக் குறையாது பேசியிருப்பார்கள் !! And இன்னும் திறக்கப்படா வாட்சப் மெசேஜ்கள் கிட்டத்தட்ட 150 உள்ளன !! Phew !!!!! ஒரு கோடி நன்றிகள் people !! நேற்றைக்கின் வேகம் இன்றும் தொடர்ந்திடும் பட்சத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு நம்மாட்கள் பெண்டு கழற்வது சர்வ நிச்சயம் ! 

And சொன்னது போலவே இன்று focus on இங்கிலீஷ் புக்ஸ் !

*நம்மிடம் கைவசமுள்ள சகல லக்கி லூக் ; தோர்கல் ; ஆஸ்டெரிக்ஸ் & இன்ன பிற இறக்குமதி செய்யப்பட இங்கிலீஷ் இதழ்களுக்கு, இன்றைய ஒரு நாள் மட்டும் 20% டிஸ்கவுண்ட் உண்டு !!

*அதே போல கொஞ்ச காலத்துக்கு முன்பாய் சென்னை புத்தக விழாவினில் நமது ஸ்டாலில் விற்கும் பொருட்டு வாங்கிய கலந்தடித்த இங்கிலீஷ் காமிக்ஸ் இதழ்களும் இன்று விற்பனைக்கு இருந்திடும் ! Agatha Christie ; Gotham Comics (வெறும் 15 ரூ.விலை !!!!) ; Phantom ; Campfire Comics என்ற கலவை அது ! நம்மிடமுள்ள இறக்குமதி செய்யப்பட இங்கிலீஷ் காமிக்ஸ் வாங்கிடும் நண்பர்கள் இவற்றுள் உள்ளவற்றை வாங்கிட இயலும் ! 

Please note : இவற்றை மட்டுமே தனியாக வாங்க வாய்ப்பு நஹி !


*அப்புறம் சமீபமாய் கிட்டங்கியைக் கொஞ்சம் ஒதுக்கிய போது நமது சமீபத்தைய back issues சில தேறின...they will be on sale too !

*அப்பாலிக்கா - வழக்கம் போல இரத்தப் படலம் மறுக்கா விற்பனைக்கு இன்று ஒரு நாள் மாத்திரம் வருகிறது !

$$$$$. 2007-ல் வெளியான black & white தொகுப்பில் 5 பிரதிகள் மட்டும்  விற்பனைக்கு இருக்கும். இதன் ஒரிஜினல் விலை - ரூ.200 ; ஆனால் இன்றைய தினம் அவை ரூ.1000 வீதம் விற்பனை செய்திடவுள்ளோம் - அதன் தொகை முழுவதும் நண்பர் பழனியின் குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்திடும் பொருட்டு !

$$$$$.சமீபமாய் வெளியான கலர் தொகுப்புகளில் 2 பிரதிகள் மட்டும் விற்பனைக்கு இருக்கும். And அவை தலா - ரூ.4000 விலைக்கு விற்கப்படும் ; இந்தப் பணமும் மொத்தமாய் பழனியின் குடும்பத்துக்கு !

ரூ.5000 - black & white இதழ்களிலிருந்து 

&ரூ.8000 - கலர் இதழ்களிலிருந்து 

ஆக - Total : Rs.13,000 = நண்பர் பழனியின் ஆதர்ஷ நம்பரிலான தொகை இது ! 


Happy shopping all !! Happy reading too !



65 comments:

  1. புத்தக தின வாழ்த்துகள் புத்தகப் பிரியர்களே..😍📖📖📖😍

    ReplyDelete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. சிறப்பான தகவல்.. விழா மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஆசிரியர் வாசகர்களுக்கு இடையே குடும்பம் போன்ற பந்தம் இருப்பது இங்கேதான்

    ReplyDelete
    Replies
    1. நம்மது சின்னதான, அழகான குடும்பம் சார் ! God's gift...

      Delete
  5. ////பூமர் அங்கிள் மாதிரி இங்க என்னென்ன பண்ணனும்னு க்ளாஸ் எடுக்க வேணாமே?////

    இப்படி சொல்லி எனக்கு கிளாஸ் எடுத்த மனிதருக்கு நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  7. உயிரைத் தேடி :

    வசனங்கள் ஆகப் பொருத்தம்,
    "அழிந்து கொண்டிருக்கும் உலகத்திற்குப் பணம் எதற்கு ? "

    "ஒட்டு மொத்தமாய் பூமிக்கே நாள் குறித்தான பிறகு குற்றவாளி என்ன ? நிரபராதி என்ன ?
    கணக்கு முடிக்கும்போது எமன் எந்த தயவு தாட்சண்யமும் காட்டுவதில்லை போலும்...!!!"

    "இறுதியில் இயற்கை தனக்குத் தேவையான இடத்தை தனக்கேற்றார் போல் ஆக்கிரமித்துக் கொண்டது !"

    வேதியியல் ஆராய்ச்சிக் கூடமும்,அங்கே நடக்கும் போராட்டங்களும்,பறக்கும் தட்டு சந்திப்பும்,திடீர் காப்பான் எந்திரன் "கர்" ரின் வருகை,கூடுதல் சுவராஸ்யத்தையும்,த்ரில்லையும் கொடுக்கிறது...

    பெரும் போராட்டத்தில் மார்க்கும்,ஜானியும் தப்பிப்பது நம்மை சற்றே ஆசுவாசப்படுத்துகிறது...

    சிறுபிராயத்தில் உயிரைத் தேடி,பலமுக மன்னன் ஜோ கதைகளைத் தேடித் தேடி படித்த நினைவுள்ளது,எனினும் கதைகள் நினைவு பெட்டகத்தில் இல்லை,
    உயிரைத் தேடி வாசிப்பு மீண்டும் சிறுபிராயத்தை மீளத் திருப்பியது...

    கொரோனா ஊழி தாண்டவக் காலத்தில் இதை வெளியிடாததே நல்ல முடிவு சார்...
    கதைக்களம் முழுக்கவே வறட்சியான ஒரு தன்மை நிலவுகிறது,முழு முற்றிலும் வைரஸால் தாக்குண்ட மனிதர்களையும்,வைரஸின் கோர தாண்டவங்களையும் கடந்து வாசித்துக் கொண்டே செல்வது சற்றே நம்மை உலுக்குகிறது...

    Black & White தொகுப்பே பார்க்க & வாசிக்க நன்றாக இருக்கிறது,வண்ணம் சரியான தாக்கத்தை கொடுக்குமான்னு பார்த்தால்தான் தெரியும்...

    உயிரைத் தேடி மிகச் சிறப்பானதொரு Survival Thriller தான்...

    உயிரைத் தேடி மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்டது எனத் தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கதைக்கு வசனங்களுமே ஒரு ஜீவநாடி என்பது உள்ளே புகுந்த போதே புரிந்தது சார் !

      டெக்ஸுக்குப் போல பன்ச் வரிகளோ ; டெட்வுட் டிக்குக்குப் போல நக்கல் வரிகளோ ; ஸ்பைடருக்குப் போல தெனாவட்டு வரிகளோ தேவையில்லை என்றாலும், இந்த நேர்கோட்டுப் பயணத்தின் ஒரு அங்கமாக டயலாக் இருத்தல் முக்கியம் என்பதால் தான் வாரக்கணக்கில் இதனோடு மல்லுக்கட்ட நேரிட்டது சார் !

      Delete
    2. உண்மைதான் சார்...

      Delete
    3. என்னது டெட்உட்-ஆ. அந்த தம்பி கீர்த்தி இந்த அளவா. 2 Part கொடுத்த ஷாக் எனக்கு ஆயுசுக்கு போதுங்க. Kindy go for limited edition.

      Delete
  8. அடேங்கப்பா அருமை அருமை சார்.

    ReplyDelete
  9. இரத்தப்படலம் க/வெ-அடடா நீண்ட நாளாக வாங்க வேண்டும் என்ற புக்.
    கை நழுவி விட்டது.

    ReplyDelete
  10. அடடா நீண்ட நாளாக வாங்க வேண்டும் என்ற புக்.
    கை நழுவி விட்டது.
    இரத்தப்படலம் க/வெ.

    ReplyDelete
  11. Ordered books. Waiting for final totals to pay.

    ReplyDelete
  12. ஆசிரியருக்கு,
    மதர் தெரேசா காமிக்ஸ் புக்கை தமிழில் வெளியிட வாய்ப்பு இருக்கிறதா.

    ReplyDelete
  13. என் ஆர்டரை வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டேன்.. ஜெய் சூப்பர் ஹீரோ டைகர்..

    ReplyDelete
  14. உலக புத்தக நாளில் எனக்கென சொந்தமாக வாங்கித்தரப்பட்ட புத்தகம் கொலைகார குள்ளநரியை நினைவு கூர்கி6றேன்

    ReplyDelete
  15. நம்ம காமிக்ஸில் சூப்பர் மேன் பேட்மேன் எக்ஸ் மேன் காமிக்ஸ் எல்லாம் விற்கப்பட்டிருக்கிற அந்தப் போட்டோவை பார்த்தது அசந்து போயிட்டேன். இனிமேல் பேட்மேன் காமிக்ஸ் எல்லாம் தமிழில் வர வாய்ப்புகள் இருக்கிறதா..? ஆவலுடன்😊😊

    ReplyDelete
  16. என்னோட ஃபேவரைட் சூப்பர் ஹீரோ பேட் மேன் இந்த போஸ்ட பார்த்த பிறகு தான் நம்ம காமிக்ஸிலும், பேட்மேன் ,சூப்பர் மேன், x man போன்ற காமிக்ஸ் இருக்குதுன்னு தெரியும் வாங்க மிஸ் பண்ணிட்டேன் சோ sad 😔
    🤣🤣🤣😂❤🥰

    ReplyDelete
  17. Edi Sir..😍😘

    நாளையும் OBF தொடர வாய்ப்புள்ளதுங்களா?..😃

    FB ல் நண்பர்கள் போட்டிருக்கற போஸ்ட்ஸ் பார்த்துவிட்டு நிறைய புதியவர்கள் "காந்தி செத்துட்டாரா" -ன்னு அதிர்ச்சி யா கேக்குறமாதிரி

    Tex கதைகள் கிடைக்குமா?.. 😃

    இரும்புகை மாயாவி கதைகள் கிடைக்குமா?..
    ன்னு கேக்கறாங்க ..😍

    அதனால வரும் வாரம் 29,30-சனி,ஞாயிறும் OBF தொடர்ந்தால் கொடவுன காலி பண்ணிபுடலாம்..😀

    என்ன சொல்றீங்க சார்?..😍😃😘😀

    ReplyDelete
    Replies
    1. கோடாலி சங்க தலைவரே,
      நல்ல ஐடியா தந்தீங்க. நா இன்னும் புக் பேர்- க்கு ஆர்டர் சொல்லவே இல்லை. வரும் புதன் கிழமைதா பணம் அனுப்பிட்டு ஆர்டர் கொடுக்கணும். எடிட்டர் சார் மனம் இரங்குவாரா.

      Delete
    2. @புன்னகை ஒளிர்..😍😃😀

      கேளுங்கள் தரப்படும்..
      தட்டுங்கள் திறக்கப்படும்..
      கேளுங்கள் கிடைக்கும்..
      என்றார்..நம்எடிட்டர் கேளுங்கள்.. கிடைக்கும் என்றார்..🎤🎺🎷🎸❤😘

      Delete
    3. Extending will put too much work load on staff friends ! Konjam vittup pidippom !!

      Delete
    4. // Extending will put too much work load on staff friends ! Konjam vittup pidippom !! // Correct Sir. Too much work load it'll be.

      Delete
  18. Edi Sir..😍😃

    இன்னும் நிறைய பேருக்கு OBF பற்றின தகவலே தெரியல..😶

    Discount ல புக்ஸ் கிடைக்கும் கிறதும் தெரியல..😑

    அதனால OBF extend பண்ணுங்கோ..😍💐🙏

    ReplyDelete
  19. Boo Hoo - saw this too little too late :-( There are a bunch of titles I can pick for my kids ... will have to order at normal rates though. Also if there is a BW XIII, I would like to have one unread copy to complete my XIII collection.

    ReplyDelete
    Replies
    1. Raghs, I might have an extra copy... Will give you one when we met next up. 🥰

      Delete
  20. // Total : Rs.13,000 = நண்பர் பழனியின் ஆதர்ஷ நம்பரிலான தொகை இது ! //

    Super sir

    ReplyDelete
  21. டியர் எடி,

    இத்தனை ஆரவாரமான விற்பனைக்கு பிறகு ஆன்லைன் புத்தக திருவிழா இன்னும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்படுகிறது என்ற அறிவிப்பையினையும் உடனே வெளியிட்டடலாமே ?! 🥰

    ReplyDelete
  22. சார் ஒரு வேண்டுகோள். மேகி கேரிசன் மொத்தமே 3 புத்கங்கள் என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம். எனவே இந்த தொடரில் 3 ஆவது கதையையும் கூடிய விரைவில் வெளியிடுமாறு வேண்டுகிறேன்.

    ReplyDelete
  23. எடிட்டர் சார்,
    மேரி கேரிசன் First story, reprint செய்வீர்களா அந்த புத்தகம் இல்லாதவர்கள் வாங்குவதற்கு.

    ReplyDelete
  24. ஆசிரியர் சார்@ ஆன்லைன் புத்தக விழாவின் வரவேற்பு, விற்பனை எப்படி இருந்தது???

    இன்றும் தொடர்கிறதா??

    ReplyDelete
  25. எனக்கு உயிரைத் தேடி B&W புத்தகம் இன்றும் வரவில்லையாம். DTDC ஆபீஸ் தகவல்.

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்'
    இது மாதிரி சிம்பிளா, சின்னதா பேர் வச்சுக்கலாங்களா ஸ்டீல்.

    ReplyDelete
  28. நண்பர்களே 

    கடும் பணிச்சுமைகளில் இவ்வாரம் லயன் நிறுவனத்தின் முன்களப்பணியாளர்கள் இருப்பர். தயை கூர்ந்து நமது ஆர்டர்கள் வரும் வரை பொறுமை காப்போமே !? சற்றே சில தினங்கள் தள்ளி வந்தாலுமே cool ஆக எடுத்துக்கொள்வோமே ப்ளீஸ் !

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார்...நம்மாட்கள் நாக்குத் தொங்கிப் போயுள்ளனர் ! கொஞ்சமே கொஞ்சமாய் பொறுமை ப்ளீஸ் guys !

      Delete
  29. @Edi Sir..😍😃

    உயிரைத்தேடி (B&W)..
    இன்னும் என்னைத்தேடி வரலிங்களே சார்.😶.

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ...எந்த கூரியர் சார் ?

      Delete
  30. ST courier Sir..😶

    நம்ப ஆபிசில் இருந்து பேசினார்கள்..😃

    வெள்ளிகிழமையே அனுப்பிவிட்டதாகவும் இன்றைக்குள் கிடைத்துவிடும் என்றும் கொஞ்சம் பொறுத்து அருள்க.. என்றும் சொன்னார்கள்..😃

    Thanks for your immediate response Sir...😍🙏❤💐

    ReplyDelete
  31. எடிட்டரின் அடுத்தபதிவும் ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete
  32. உயிரை தேடி.. படித்து முடித்தாயிற்று சார்... மற்றும் ஒரு அதிகாரி கதையை படித்து முடித்த பீலீங்.. மொழி பெயர்ப்பு சூப்பர்...
    அப்புறமே தனலட்சுமி நியாபகமும், வந்து போனதை மறைக்க முடியாது...

    ReplyDelete