Powered By Blogger

Saturday, February 18, 2023

பகலிலொரு சிவராத்திரிப் பதிவு !

 நண்பர்களே,

வணக்கம். இன்னொரு வாரயிறுதி + நெருங்கும் இன்னொரு மாதயிறுதி = வழக்கம் போல் காலில் சுடுதண்ணீரைக் கொட்டிக்கிட்டு கதக்களி ஆடும் வேளை ! So பெருசாய் பதிவில் டீ ஆற்ற நேரம் நஹி ! பற்றாக்குறைக்கு இப்போதெல்லாம் நண்பர்களின் பெரும்பான்மைக்கு சாயா பருகவே நேரம் குறைச்சலாக இருப்பது கண்கூடு ; தளத்தின் பார்வைகள் குறைந்திடவில்லை - but பதிவாகிடும் பின்னூட்டங்கள் ரொம்பவே குறைவு எனும் போது, in general பொறுமை + நேரம் at a premium என்பது புரிகிறது ! நமது நண்பர் டாக்டர் ஹரிஹரன் சார் சொல்வது போல, time to move on I guess ! இனி வரும் வாரங்களில் முக்கிய தகவல்களை மாத்திரம் பதிவினில் போட்டுத் தாக்கி விட்டு, இந்த previews ; டிரெய்லர்களையெல்லாம் YouTube-க்குக் கொண்டு செல்லப் பார்க்க வேணும் போலும் ! எண்ட குருவாயூரப்பா....எண்ட முகரையை நீங்கள் அடிக்கடி பார்க்க வேண்டி வருமே என்பதை நினைக்கும் போது தான் பயந்து பயந்து வருது ! But இன்றைய உலகம் எந்தத் திக்கில் நடை பயில்கிறதோ - அதுவே நமது பாதையாகவுமே இருந்திட வேண்டும் போலும் ! இதோ, காத்திருக்கும் மார்ச் மாதத்தினில் நமது புது வரவு ஒருவர் நம்மை இட்டுச் செல்லவுள்ளதொரு பயணம் கூட something completely different !!

அமெரிக்க  I.R.$......!! அதாவது INTERNAL REVENUE SERVICE .....அதாவது வரி நிர்ணயிப்புகளுக்கும், வரி வசூல்களுக்கும் சட்டங்கள் இயற்றி, அவற்றை நடைமுறைப்படுத்திடும் அமெரிக்க அரசுத்துறை அமைப்பு ! சுருக்கமாய்ச் சொல்வதானால் - வருமான வரி ஆபீஸ் ! எல்லா தேசங்களிலும் வருமான வரித்துறைகள் கெடுபடியாய் இருப்பதில் வியப்புகளில்லை தான் ; but அமெரிக்காவில் I.R.S. செம ஹை-டெக் & செம ஸ்ட்ரிக்ட் போலும் ! நாம் சந்திக்கவுள்ள புது நாயகரும் இந்த IRS அமைப்பினில் பணியாற்றும் ஒரு ஸ்பெஷல் ஏஜெண்ட் தான் ! லேரி B.மாக்ஸ் என்பது அவரது பெயர் & நூதனமாய் வரி ஏய்ப்பு செய்வோரையும், கறுப்புப் பணங்களோடு சல்சா ஆடுவோரையும் சுளுக்கு எடுப்பதே இந்த blonde சார்வாளின் உத்தியோகம் ! சுருக்கமாய்ச் சொல்வதானால் கொஞ்சமாய் லார்கோவையும், கொஞ்சமாய் ஜேம்ஸ் பாண்டையும் இவரிடம் நாம் காணலாம் ! And கதை வரிசையின் பாணியிலுமே கொஞ்சம் லார்கோ ஸ்டைலை நாம் பார்த்திடலாம் - becos அங்கு போலவே இங்கும் ஆண்டுக்கொரு ஆல்பம் & 2 ஆல்பங்கள் சேர்ந்து ஒரு முழுநீள சாகசம் ! So 1999-ல் துவங்கிய இத்தொடரானது இன்னமும் going ஸ்ட்ரோங், கனகச்சிதமாய் வருஷத்துக்கொரு ஆல்பம் வீதம் ! தற்சமயம் இதழ் # 24-ஐ தொட்டு  நிற்கின்றது எண்ணிக்கை எனும் போது, உத்தேசமாய் 12 முழுநீள சாகசங்கள் இங்கே ரெடி ! லார்கோவைப் போலவே இங்கே உலகமே கதைக்களங்களாகிடும் அழகை ரசிக்கலாம் ! அமெரிக்காவில் துவங்கும் பிள்ளையார் சுழிகள் உலகின் ஒவ்வொரு கோடிக்கும் நம்மை விரல்பிடித்து இட்டுச் செல்லும் ரகங்கள் ! And சித்திரபாணிகளும் சரி, கலரிங்கும் சரி - செம மாஸ் ! 

எல்லாம் ரைட்டு - சாமுத்ரிகா லட்சணங்கள் சகலமும் பொருந்திய இந்த அம்பியை முன்னமே கண்ணில் காட்டியிருக்கலாமே ? என்கிறீர்களா ? காட்டியிருக்கலாம் தான் ; ஈரோட்டில் மரத்தடி சந்திப்புகளின் சமயமாய் நண்பர்கள் இதே கேள்வியைக் கேட்கவும் செய்திருந்தார்கள் தான் ! But வாசிப்பு ரசனை எனும் வானில் நாம் சிறகுகளை விரிப்பது சிற்சிறு தயக்கங்களோடு தான் எனும் போது - கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறுவது தேவலாமென்று நினைத்தேன் ! 1990-ல் துவங்கிய லார்கோவை 2012-ல் கண்ணில் காட்டிய சமயம் we were perfectly ready for him ! 1987-ல் துவங்கிய SODA-வை 2018-ல் கண்ணில் காட்டிய போது அந்த பாணிக்கு we were ready ! So "வருமான வரி ஆபீசரை வைச்சு கதையா ? இன்னா மேன் சுத்த நான்சென்ஸா கீதே ?" என்று விமர்சனங்கள் எழுந்திடாது என்பது உறுதியான ஒரு பொழுதில் I.R.S அறிமுகம் இருந்திடட்டும் என்று எண்ணினேன் ! Of course - 'எங்க ரசனையை குறைச்சலா நீ மதிப்பிடறியா ? கொழுப்பு மேன் உனக்கு !' என்ற விமர்சனங்கள் எழலாம் தான் ; so be it ! ஆனால் இந்தப் பயணமானது, ரசனை எனும் வானவில்லின் சகல முனைகளிலும் உள்ளோருக்கானது எனும் போது, கொஞ்சம் நிதானம் தப்பில்லை என்பதே எனது எண்ணம் ! என்ன - இந்த கொரோனா கொயப்பங்களால் லேரி மாக்ஸ் ஓராண்டு கூடுதலாய்க் காத்திருக்க வேண்டிப் போனது தான் சங்கடமே ; ஒண்ணேமுக்கால் வருஷங்களுக்குக் கிட்டக்க in hibernation !  But லேட்டாய் வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் இந்த அதிரடிப் பார்ட்டியின் அட்டைப்பட முதற்பார்வை + உட்பக்க preview இதோ ! 


ஒரிஜினல் டிசைன் முன் + பின் அட்டைப்படங்களில் ; வழக்கம் போல நமது DTP கோகிலாவின் மெருகூட்டலோடு + ஜெகத்தின் எழுத்துருக்களோடு !! கதையைப் பொறுத்தவரை, ரொம்ப காலத்துக்கு  முன்னே இதனை இங்கிலீஷில் படித்திருந்த ஞாபகம் சன்னமாய் இருந்தது ; but பேனா பிடிக்க ஆரம்பித்த பிற்பாடு தான் இதன் முழு வீரியமும் புலப்பட ஆரம்பித்தது ! நியூயார்க்கின் வீதிகளில் அரங்கேறிடும் அனல்பறக்கும் action sequences ஒவ்வொன்றையும் பார்க்கும் போது ஓவியரின் பங்களிப்பும் எத்தகையது என்பது புரிய ஆரம்பித்தது ! சரி, கதைக்கான கற்பனையாக ஒரு knot கையில் எடுக்கப்பட்டுள்ளது போலும் என்றபடிக்கே எழுதிக் கொண்டே போனவனுக்கு லைட்டாக பொரி தட்ட ஆரம்பித்தது - "ஆஹா..இதனில் மிளிரும் பல சமாச்சாரங்கள் ஏதோ நிஜ சம்பவங்களை சார்ந்திருப்பது போலுள்ளனவே !" என்று !! அவசரமாய் கூகுள் பண்ணிப் பார்த்தால் - bingo !! மெய்யாலுமே நிகழ்ந்துள்ளதொரு சர்வதேச "Operation ஆட்டையைப் போடுதல்" தான் இந்த டபுள் ஆல்பத்தின் முதுகெலும்பே ! அமெரிக்காவில் துவங்கும் அதிரடி, ஸ்விட்சர்லாந்துக்கு பயணிக்கின்றது இரண்டாம் அத்தியாயத்தினில் ! எச்சில் விழுங்கக்கூட அவகாசம் தராது லேரி பட்டையைக் கிளப்பி வருவதால் - இந்த ஆல்பத்தை 'ஏக் தம்'மில் வாசிக்க ஒரு 45 நிமிடங்களை ஒதுக்கிக் கொண்டு அமருங்களேன் folks - மின்னல் வேகத்தில் உங்களை ஒரு transcontinental பயணம் முடித்து ஊட்டுக்கே பத்திரமாய்க் கொண்டு வந்து லேரி டிராப் பண்ணி விடுவார் ! லார்கோவைப் போலவே நமது இந்த ஆபீசரும் கொஞ்சம் ஜாலிலோ ஆசாமியே என்பதால், ஆங்காங்கே அழகான பட்டாம்பூச்சிகளும் குறுக்கும் மறுக்குமாய்ப் பறக்க நேர்வதை பார்த்திடலாம் ! அனைவருக்கும் இந்தப் புது வரவு ரசித்திடும் பட்சத்தில், நமது அட்டணவைக்கொரு நிரந்தரர் கிட்டியிருப்பார் - fingers crossed !!

போன வாரமே வெறும் அட்டைப்பட தரிசனத்தோடு கிளம்பியிருந்த SODA தான் இம்மாதத்து இரண்டாம் கலர் இதழ் ! ஏற்கனவே இந்த மனுஷனை ; அவரது பாஸ்டர் / போலீஸ் இரட்டை வாழ்க்கையினை நாமறிவோம் தான் ! And ஒருவித dark shades சகிதமான கதையை, கார்ட்டூன் பாணிச் சித்திரங்களில் நகர்த்திட முனையும் அந்த வித்தியாசமான சிந்தனையுமே நமக்கிப்போது familiar ! "தப்பிச் சென்ற தேவதை" இந்தத் தொடரின் முதல் ஆல்பம் ! மாமூலை விடவும் சற்றே funky ஆன சித்திரங்கள் ; ஆனால் தெறிக்கும் அதே வேகம் என்பதே இந்த இதழின் template ! இது போலான கதைகளின் டயலாக்களில், கதாசிரியர்  கொண்டு வர விழையும் ஒருவித இருண்ட நகைச்சுவைகளை பிசிறின்றி தமிழுக்குக் கொண்டு வருவது தான் சவாலே ; and தற்போதைய பொழுதுகள் அந்தச் சவாலோடே பயணித்து வருகின்றன ! இதோ - ஒரு சின்ன சாம்பிள் : 


இம்மாதத்தின் V காமிக்ஸ் - நம்மள்கி "யூத் பேரவை" குதித்துக் கொண்டாடிடும் ஜம்பிங் ஸ்டார் ஸாகோரின் சாகஸமே ! டார்க்வுட் நாவல்ஸ் வரிசையில் கதை # 2 - "புரவிகளின் பூமி" ! As usual மிரட்டும் சித்திரங்களுடன், 64 பக்க 'நச்' வாசிப்புக்கு ஸாகோர் செமத்தியாய்த் தீனி போட்டுள்ளார் ! படிக்க அவகாசமின்றித் தடுமாறும் நட்புக்களுக்கு இந்த V காமிக்ஸ் template ரொம்பவே ரசிக்குமென்பது புரிகிறது - becos 'எடுத்தோம்-படித்தோம்' என்று முடிக்கக்கூடிய நேர்கோட்டுக் கதைகள் ; அதுவும் ரொம்பவே crisp கதை சொல்லல்களோடு எனும் போது, இந்த நொடியின் தேவையினை அது பூர்த்தி செய்வதாகவே எனக்குப்படுகிறது ! இம்மாதமும் நிறைய நண்பர்களின் முதல் வாசிப்பு V ஆக இருப்பின், வியப்பே கொள்ள மாட்டேன் ! இதோ - அட்டைப்பட first look + previews :  


யூத்தான தலைவரும், இயமையான சங்கத்தினரும் ஜம்பிங் ஸ்டார் பேரவையினை துடிப்போடு இங்கே முன்னெடுத்துச் செல்ல - அக்கட தேசமான இத்தாலியில் உள்ள ஸாகோர் ரசிகர் மன்றத்தினர் துளியும் சளைத்தவர்களாக தெரியவில்லை ! இதோ - அவர்களின் கைவண்ணங்கள் :






வரும் காலங்களில் இன்னமும் துடிப்புடன் சங்கத்துக்கு ஆள் சேர்த்து ஜம்பிங் ஸ்டார் பேரவை இப்படி ரவுசுகளை அரங்கேற்றும் என்று எதிர்பார்க்கலாமா - விவாதிப்போம் !!

Before I sign out - சில ஜாலி updates :

1.போன பதிவினில் குறிப்பிட்டது போல - குறைவான விலைகளில் பள்ளி மாணாக்கருக்கு புத்தக விழாக்களில் விற்பனை செய்திட இதழ்கள் தட தடவென ரெடியாகி வருகின்றன ! பாக்கெட் சைசில் ; பாக்கெட்டைப் பதம் பார்த்திடா விலைகளில் MINI COMICS இருந்திடும் - black & white நேர்கோட்டுக் கதைகளுடன் ! அந்த வரிசைக்கென உத்தேசமாய் உருவாக்கியுள்ள லோகோ இதுவே ; இதனை மெருகூட்டிட நண்பர்கள் முன்வந்தால் most welcome !

2."மினி காமிக்ஸில்" இடம்பிடிக்கவுள்ளவொரு நாயகர், உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவரே ; கொஞ்சம் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் அதிரடி காட்டும் ஆசாமி ! அவர் யாரென்று any guesses ?

3.இந்த மினி காமிக்ஸ் வரிசையில் கொஞ்சம் புக்ஸ் + "உயிரைத் தேடி" கலர் + black & white புக்ஸ் + இன்னும் ஓரிரு வரவுகளுடன் ஒரு ஆன்லைன் புத்தக விழாவினை மார்ச் இறுதியினில் - or ஏப்ரல் துவக்கத்தில், போட்டுத் தாக்கிடலாம் ! அந்தத் தருணத்தினில் ஒரு சூப்பர்-டூப்பர் செய்தியினையுமே பகிர்ந்திடவுள்ளேன் ! Stay tuned folks !

4.Before I sign out - ஒரு ஜாலியான கேப்ஷன் போட்டி !! கீழுள்ள சித்திர நாயகி   மெய்யாலுமே இருக்கும் பட்சத்தில் - அம்மையாருக்கு நீங்கள் வைக்கக்கூடிய பெயர் என்னவாக இருக்கும் ? ("ஸாகோரினி" என்ற பெயர் மீது நான் துண்டை விரித்து வைத்துள்ளேன் - so வேறு ஏதாச்சும் ?) அப்புறம் விரசமின்றி, இந்தப் படத்துக்குப் பொருத்தமானதொரு கேப்ஷன் ப்ளீஸ் !! I repeat : நோ விரசம் ப்ளீஸ் !! வெற்றி பெரும் கேப்ஷனுக்கு "ஸாகோர்" கலர் ஸ்பெஷல் இதழ் வெளியாகிடும் வேளையில் நம் அன்புடன்


மாலை முதலே சிவன்கோவில்களுக்கு படையெடுக்க ஆரம்பித்து விடுவோம் என்பதால் முந்திக் கொண்டுள்ளேன்  - பதிவுடன் ! Bye all....have a great weekend ! See you around !

231 comments:

  1. வன ராணி .. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  2. ஆசிரியருக்கு இனிய காலை வணக்கம்..
    மு பாபு
    Gangavalli

    ReplyDelete
  3. புதுசா பேர் வைக்கசொன்னிகளோனு அவசரவசரமா புதுபேர் வச்சுட்டேன் .சாரி ங்க சார்.கேப்சனுக்கு நான் வரலை .இப்பத்திற்கு ஆப்சன்ல விட்டற்றேன் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே. 🙏🙏

    அனைவருக்கும் சிவன் ராத்திரி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அடடே நானும் வந்து விட்டேன்

    ReplyDelete
  6. Caption Contest:

    இளவரசி:

    பேசாம இந்த காஸ்ட்யூம மொதல்லையே போட்டிருக்கலாம்... V comicsலையாவது ரெகுலரான இடம் கிடைச்சிருக்கும்... இந்த வில்லிதான் காஸ்ட்யூமெல்லாம் போடமாட்டேன்னு ரொம்ப பிகு பண்றான்...

    ReplyDelete
    Replies
    1. 👌🏻அருமை சார். இதை படித்தப்புறம் தான் "லேடி ஸாகோரை" டக்குன்னு பார்க்க மாடஸ்டி மாதிரியும் தெரியறாங்க

      Delete
  7. வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  8. அனைவருக்கும் மஹா சிவராத்திரி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அந்த பெண் பெயர் மின்னல்

    ReplyDelete
  10. SORINA = A Sun-like woman|Feminine form...
    KIWIDINOK = Of The Wind
    KACHINA EYOTA = the great spirit

    my vote will be for SORINA sounding similar to ZAGOR

    ReplyDelete
  11. CAPTION CONTEST

    தொழிலதிபர்களும் டாக்டர்களும் இளவரசிக்கு குண்டு புக்கு கேட்டுகிட்டு இருக்காங்களாமே... நாமளும் களத்துல குதிச்சிட வேண்டியது தான்..

    ReplyDelete
  12. 1.வன ரோஜா 2.காட்டு முல்லை.3.ஜம்ப்பிங் ஸ்டாரினி.4.காட்டு ரோஜா.5.வன மல்லி.6.சீறும் சிங்க ராணி.7.ராணித் தேனீ.

    ReplyDelete
  13. //இனி வரும் வாரங்களில் முக்கிய தகவல்களை மாத்திரம் பதிவினில் போட்டுத் தாக்கி விட்டு, இந்த previews ; டிரெய்லர்களையெல்லாம் YouTube-க்குக் கொண்டு செல்லப் பார்க்க வேணும் போலும் !//

    Absolute NO SIR!

    ஏற்கனவே, மக்களின் உலகத்தில் பாதி, முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் என போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும், எழுத்துக்களை வாசிப்பதில் கிடைக்கும் அலாதி ஆர்வம், வீடியோ பார்ப்பதில் கிடைப்பதில்லை. எனவே, இங்கே எழுத்துக்களை குறைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்....!

    ReplyDelete
  14. அந்த பெண்ணுக்கு 'வனமோகினி' என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  15. ஸாகோரினி,

    மலை முழுங்கி மகாதேவி..!!

    யாருடா அது! இந்த மலை முழுங்கி மகாதேவி இடத்துல பட்டா போட்டு ப்ளாட் விக்குறது! போறோம்! அடிக்கிறோம்! ஆளைத் தூக்குறோம்! ஜெய் ஜம்பிங்காய நமஹ!


    ReplyDelete
  16. மினி காமிக்ஸில் இடம்பிடிக்கப்போகும் நபர் சாகச வீரர் ரோஜர் (BOB MORNE) அல்லது முதலைப்பட்டாளம் 1எஎன நினைக்கிறேன் சார்.

    ReplyDelete
  17. ஜாகோர் ராணி ..
    ஜகோர் ஜம்பிங் எளவரசி ..
    லிட்டில் ராணி
    லிட்டில் குயின்
    குயின் லிட்டில
    லிட்டில் பிரின்(ஸி)ஸஸ்
    J (L)லிட்டில் (p)பிரின்ஸஸ்


    ReplyDelete
  18. பகலிலே ஓர் இரவு பதிவு :-)

    ReplyDelete
  19. கோடாலி ராணி, பறக்கும் பாவை

    ReplyDelete
  20. IRS முன்னுரையே கதையை படித்தது போல் உள்ளது நன்றி சார்.
    சிறுவர்களுக்கென புதிய இதழ் பற்றிய அறிவிப்பு இரட்டிப்பு மகிழ்ச்சி.

    மினி காமிக்ஸ் என்பதற்கு,
    "மினி லயன்" என்றே வைக்கலாமே சார்?. லயன் காமிக்ஸ், லயன் லைப்ரரி வரிசையில் "மினி லயன்" மிக அழகாக இருக்கும்.

    ப்ளாக்கில் வாசகர்களின் கமெண்ட்ஸ் குறைவுதானே தவிர, தங்கள் பதிவை பல வாசகர்கள் படித்து மகிழ்கிறார்கள் சார்.
    இந்த எழுத்து வாசிப்பின் சுவை காணொளியில் இருக்காது சார். நீங்கள் வழக்கமான பதிவை தொடர்ந்து எழுத வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. // ப்ளாக்கில் வாசகர்களின் கமெண்ட்ஸ் குறைவுதானே தவிர, தங்கள் பதிவை பல வாசகர்கள் படித்து மகிழ்கிறார்கள் சார்.
      இந்த எழுத்து வாசிப்பின் சுவை காணொளியில் இருக்காது சார். நீங்கள் வழக்கமான பதிவை தொடர்ந்து எழுத வேண்டும் //

      +100

      Delete
  21. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  22. ///கீழுள்ள சித்திர நாயகி மெய்யாலுமே இருக்கும் பட்சத்தில் - அம்மையாருக்கு நீங்கள் வைக்கக்கூடிய பெயர் என்னவாக இருக்கும் ?///

    ஜகன்மோகினி..🏃🏃🏃🏃

    ReplyDelete
  23. // படிக்க அவகாசமின்றித் தடுமாறும் நட்புக்களுக்கு இந்த V காமிக்ஸ் template ரொம்பவே ரசிக்குமென்பது புரிகிறது //
    அடடே...!!!

    ReplyDelete
  24. கேப்சன் போட்டிக்கு

    வேதாளத்திற்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏறணும்; சாகோருக்கு வாழ்க்கைப்பட்டால் செடார் மரம் தாண்டனும். தாண்டுவோமில்ல.

    ReplyDelete
    Replies
    1. கேப்சன் போட்டிக்கு

      எவடி அவ, என் ஆளுகிட்ட 'லவர்ஸ்  டே கிப்டா 'அல்வா வாங்கி தர சொல்றது. இருடி. வந்து இந்த பருப்பான் மொத்தையிலேயே நாலு போடறேன்.

      Delete
    2. கேப்சன் போட்டிக்கு

      நமக்கு பேர் வைக்க எடிட்டர் சொல்லி விட்டார் என்பதால், ஆளாளுக்கு நம்மை ஸ்கேன் பண்ணுற மாதிரி பார்ப்பாங்களே! தெறிச்சு ஓடுடி.

      Delete
    3. //வேதாளத்திற்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏறணும்; சாகோருக்கு வாழ்க்கைப்பட்டால் செடார் மரம் தாண்டனும். தாண்டுவோமில்ல.// sema rofl

      Delete
    4. இது செமயா இருக்கு குமார்.

      Delete
  25. சாய் பாபு ஜி ;கொஞ்சம் அவசரப்பட்டுட்டமோ!சரி. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல.ஆசிரியர்சார் இந்தம்மா வுக்கு பேர் வச்சவுடனேயே ஒரு பேரவையைப் போட்டுரவேண்டியதுதான் .

    ReplyDelete
  26. // அந்தத் தருணத்தினில் ஒரு சூப்பர்-டூப்பர் செய்தியினையுமே பகிர்ந்திடவுள்ளேன் ! Stay tuned folks ! //
    ஆர்வமுடன் சார்...

    // ஒரு ஆன்லைன் புத்தக விழாவினை மார்ச் இறுதியினில் - or ஏப்ரல் துவக்கத்தில், போட்டுத் தாக்கிடலாம் ! //
    சிறப்பு,சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. அந்த சூப்பர் டூப்பர் செய்தி என்ன சார்?

      Delete
  27. சாகோருக்கு ஏதோ ஆபத்து போல் தோன்றுகிறது.
    இதோ !இந்த சாகோரியீன்
    கோடலி பாடம் கற்றுக் கொடுக்கும்!!!😂😂😂😂

    ReplyDelete
  28. CAPTION CONTEST

    நம்மள பார்த்த உடனேயே பேரவைய ஆரம்பிச்சுடுவாங்கன்னு பாத்தா, எல்லாரும் சைலண்டா இருக்காங்களே.. தமிழ்நாடு வெஸ்ட்பா..

    ReplyDelete
  29. Caption Contest:

    இளவரசி:

    வேலன்டைன்ஸ் டே வந்தாலும் வந்தது... அந்த அமெரிக்க மாப்பிள்ளையும், அவரோட மச்சினரும் பண்ற அளப்பரை தாங்க முடியல... இந்த கெட்டப்பு போட்டாச்சும் அவங்ககிட்டயிருந்து தப்பிக்கலாம்ன்னு பார்த்தா, இந்த காஸ்ட்யூம பார்த்துட்டு, புதுசா ஒரு கோஷ்டி நாமக்கல் தலைமையில் ஜம்பிங் பண்ணிகிட்டே தொரத்துதே... வில்லியும் அவன் கத்தியும் நம்மள காப்பாத்தினாதான் உண்டு போல...

    ReplyDelete
  30. கோடாலி மாமி :-) எடுடா ஓட்டம் பரணி!
    கோடாலி மாயம்மா :-)

    சாகோனி
    சாகோநிதி
    சகோரசி

    ReplyDelete
  31. டியர் எடி,

    ஐஆர்எஸ் இரு இதழ்கள் சினிபுக்கில் வெளிவந்த சமயத்தில் படித்தது.... கணக்கு வழக்கு வரி வட்டி என்ற வித்தியாசமான கதைகளம்... தமிழில் அது எடுபடுமா என்ற சந்தேகம் இருந்தது ஒரு காலம். லார்கோ போன்ற பங்கு சந்தை வணிக கதையே நம்மிடையே சிறப்பான வரவேற்பு பெற்றதால் இதுவும் சாதிக்கும் என்ற நம்பிக்கை பலமாகிறது... வரட்டும் வரவேற்கிறோம்.

    சோடா முதல் கதையில் இருந்தே ஒரு தனிபட்ட ஃபேவரைட்.... வித்தியாசமான ஓவியமைப்பு, காமடி கலந்த அழுத்த கதைபோக்கு... என்று வித்தியாசபடுத்துவார்.

    பல காலம் முன்பு டெக்சுக்கு யாரோ கஸின் ஒருத்தன் இருக்கானாம், அதை போடலாமே, என்று உங்களிடம் ஓரு கோரிக்கை வைத்திருநதேன்.. நீங்களும் தேடி பார்ப்போம் என்று பதிலளித்த
    ஞாபகம்... கழுகு போல இவரும் ஒரு சின்னத்துடன் இருப்பதை இணையத்தில் பார்த்து, சித்தப்பா பெரியப்பா என்று நானே அர்த்தம் கற்பித்து கொண்டது இப்போதைகைய ஸாகோரை தான். இவர் இனி நமது இதழ்களில் நிரந்தரம் என்பது விமர்சனங்களில் தெரிகிறிது.... தனிபட்ட முறையில் இன்னொரு திருப்தி, அது மாதா மாத இதழ் போல நீங்கள் அறிவித்த இளம் டெக்ஸ் வரிசை போல வருவது... அனைவரையும் சென்றடைய சிறப்பான முயற்சி இது.

    இதே வரிசையில் மினி காமிக்ஸும் கலக்கும் என்று ஆருடம் சொல்ல, சிறப்பு மூளை தேவையே இல்லை. சல்லிசான விலைகளில் சின்ன கதைகள் எனற் பல நாள் கோரிக்கை இதன் மூலம் நிறைவேற போகிறது.... தொடருங்கள். எனது தரப்பில் இருந்த ஒரு லோகோ டிசைனை உங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.. சிறந்த படைப்பு தேர்வாகட்டும்.

    புதிய வீராங்கனைக்கு ஸாய்னா என்று பெயர் சரியாக இருக்குமா ? பல காலம் முன்பு ஷீனா என்ற பெயரில் ஒரு காட்டுவாழ் டார்ஜான் கதாநயாகி படித்திருககிறேன்.. அதை கொஞ்சம் நமது ஊர் வீராங்கனைகளான சாய்னா, சானியா வுடன் ஸாகோரை மிக்ஸ் செய்து உருவாக்கியதே இந்த பெயர் காரணி. கூடவே அந்த கேப்ஷன் போட்டிக்கு.... நமக்கு சரக்கு கம்மி தான் என்றாலும்.

    "காட்டுல என்ன விட்டுபுட்டு நகரத்தில் என்ன இந்த ஸாகோர் பய என்ன புதிய கேளிக்கை பண்றானோ தெரியல... இந்த மத்தில் அவன் மண்டையை பதம் பார்க்காம விட போறதில்லை, இந்த ஸாய்னா...."

    ReplyDelete
    Replies
    1. மினி காமிக்ஸில் அறிமுகமாக போகும் அந்த ஜேம்ஸ் பாண்ட் பானி ஹீரோ அநேகமாக சூப்பர் ஹீரோ டைகராக<)b> தான் இருக்கும்.

      சின்ன வயசில் அவரை ஜேம்ஸ் பாண்ட் என்று நினைத்த நாட்கள் அதிகம். டொட்ட டாய்ங் 🥰

      Delete
    2. " ...இந்த மத்தில் அவன் மண்டையை பதம் பார்க்காம விட போறதில்லை, இந்த ஸாய்னா...."

      வெரசாமால்ல இருக்குது? ஆத்தீ ! ;-) :-)

      Delete
    3. இதுக்கே விரசமா.... ?!?! 😁

      Delete
  32. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  33. சாகோர் டெக்ஸுக்கு போட்டின்னு நம்மவர்கள் சண்ட போட்டுக்கிட்டுஇருக்கும்போதே போட்டியா ஒரு சாகோரினிய இறக்கிவிட்டுட்டார் ஆசிரியர்சார்.இனிசாகோர் பேரவைக்கும் சாகோரினி பேரவைக்கு ம் தான் போட்டி.டெக்ஸ் ரசிகர்கள் ஹாப்பி.

    ReplyDelete
  34. சூப்பர் பதிவு சார்....‌‌
    ஐஆர்எஸ் அட்டைப்படம் பரவால்லை....உள் பக்கம் அன்று லார்கோவ பாத்து அதிசயித்து நினைவில்....‌

    ReplyDelete
    Replies
    1. சோடா அட்டகாசம்....லார்கோ போல ஐஆர்எஸ் கும் தூள் கிளப்பட்டும்....
      மினி காமிக்ஸ் சூப்பர்....
      ஸாகோர் அட்டை ஒரே மாதிரி.... ஆனா சூப்பர்....

      Delete
  35. Pocket size book again:-) what a right time to bring back this size and introducing them to school kids! Lovely idea sir.

    ReplyDelete
  36. ஐயய்யோ மாடஸ்டிக்கு ஆப்போ.சார் .இருக்கிறதே ஒரு ஸ்லாட்தான்அதிலும் புதுசா சாகோரினிகள கூட்டிட்டு வந்து எங்கள கலங்க உடறிங்களேங்க சார் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. @Karur Rajasekar...😃😃😃

      ஆப்புன்னா ஆப்பு பெரிய ஆப்பு...😃😃😃

      வேதாளர் ஆர்டினரி பிளேயரா...😬

      உங்க மாடஸ்டி க்கு டீமுலேயே இடம் இல்லைபோல இருக்கே...😃😃😃😃😃

      Delete
  37. சார் ஜம்போ க்ராபிக் நாவல்கள் .இருண்ட களங்கள்மாறுதல் வேணும்னு குரல் வந்தப்பவேi.r.s.வந்திருக்கவேண்டும்.இப்ப ரொம்ப லேட்டுங்க சார்.

    ReplyDelete
  38. மினி காமிக்ஸில் இடம்பிடித்துள்ள நமக்கு ஏற்கனவே அறிமுகமான ஜேம்ஸ்பாண்ட் பாணி ஆசாமி யாராக இருக்கும்?ப்ரூனோபிரேசில் .ரோஜர்.கராத்தே டாக்டர்.யாருங்கசார்

    ReplyDelete
  39. 1. முதலில் மினி காமிக்ஸிற்கு ஆயிரம் பூச்செண்டுகள். வி அடித்த சிக்சரை மினியும் அடிக்க வாழ்த்துகள்.
    2. ஆன்லைன் புத்தக விழாக்காக வெயிட்டிங். அது வரும் என்பதால் உயிரைத் தேடி கலருக்கு இன்னும் பணம் கட்டவில்லை. கூடவே சில பல புத்தகங்களும் வரப்போகுது என்பதும் மகிழ்ச்சியான சேதி. ஆன்லைன் புத்தக விழாவும் களை கட்டட்டும்.
    3. யூ ட்யூப் ஓகே. ஆனால் இங்கே எழுதறதை குறைக்க வேணாம் என்பதே எனது கருத்து. தமிழ் வாசிக்கும் வழக்கத்தை தொடர்ந்து என்னைப் போன்ற சந்தர்ப்பம் குறைவான ஆசாமிகளுக்கு ப்ளாக் வாசிப்பு ஒரு வரப்பிரசாதம். பின்னூட்டம் குறைந்தாலும் வியூஸ் குறையாததை கவனிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. // இங்கே எழுதறதை குறைக்க வேணாம் என்பதே எனது கருத்து. தமிழ் வாசிக்கும் வழக்கத்தை தொடர்ந்து என்னைப் போன்ற சந்தர்ப்பம் குறைவான ஆசாமிகளுக்கு ப்ளாக் வாசிப்பு ஒரு வரப்பிரசாதம். பின்னூட்டம் குறைந்தாலும் வியூஸ் குறையாததை கவனிக்கவும்.//

      +1

      அதே போல் இதற்கு முன்னால் நீங்கள் இங்கு அடிக்கடி வருகை தந்து எங்களின் பின்னூட்டம்களுக்கு பதில் கொடுப்பீர்கள்; தற்போது உங்களுக்கு வேலை பளு அதிகம் காரணமாக நீங்களும் இங்கு அதிகம் எங்களுக்கு பதில் அளிக்க முடியாத நிலை என நினைக்கிறன்!

      விஜயன் சார், எனது புதிய மொபைலில் G-போர்டு உபயோகபடுத்த முடியாமல் வேறு ஒரு keyboard ஆஃப் மூலம் தமிழில் type செய்வது கடினமாக உள்ளது, எனவே முன்பு போல் பின்னூட்டம் இட முடியவில்லை சார்; வேலை பளுகிடையில் அலுவலக நேரத்தில் லேப்டாப் மூலம் பின்னூட்டம் இட முடிவது இல்லை சார் முன்பு போல! ஆனால் தினமும் குறைந்தது ஒரு பத்து முறையாவது நமது தளத்தை வந்து பார்வை இட்டு விடுவேன் சார்!

      Delete
    2. ஆம் சார் இங்கே எழுதுவதை தயவு செய்து குறைக்க வேண்டாம்.

      Delete
    3. //தமிழ் வாசிக்கும் வழக்கத்தை தொடர்ந்து என்னைப் போன்ற சந்தர்ப்பம் குறைவான ஆசாமிகளுக்கு ப்ளாக் வாசிப்பு ஒரு வரப்பிரசாதம். பின்னூட்டம் குறைந்தாலும் வியூஸ் குறையாததை கவனிக்கவும்.//

      I totally agree with this +1000

      Delete
    4. தயவுசெய்து இங்கு எழுதுவது வழக்கம் போலவே இருக்கட்டும் ஆசிரியரே

      Delete
  40. விஜயன் சார்,

    I.R.$ பற்றிய உங்களின் முன்னோட்டம் ஆர்வத்தை கிளப்புகிறது, ஓவியங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நன்றாக உள்ளது!

    மைக் ஹமர் முதல் கதை வந்தவுடன் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்த எனக்கு இரண்டாம் கதையில் சில பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியாமல் முடிவைத்த புத்தகத்தை இன்னும் திறக்க மனம் வரவில்லை :-(

    I.R.$ நிறைவான வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் என ஆர்வத்துடன் படிக்க காத்து கொண்டு இருக்கிறேன்!

    சோடா சமீபத்திய அறிமுகத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர், இது வரை வந்த கதைகள் இரண்டும் அருமை! இந்த கதையின் டீசர் பக்கங்கள் அருமை! சோடா பருக ஆர்வமுடன் உள்ளேன்!

    மாணவ மாணவியர்களுக்காக அறிமுகப்படுத்த உள்ள கதைகள் பாக்கெட் சைஸ் வருவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது! பாக்கெட் சைஸ் சிறுவயதில் எங்களை கவர்ந்தது போல் இன்றைய மாணவ மாணவியர்களையும் கண்டிப்பாக பிடிக்கும் என நம்புகிறேன்! ஒரு சிறிய வேண்டுகோள் மட்டும் பாக்கெட் சைசில் வரும் கதைகளின் font (எழுத்துரு) அனைவரும் படிக்கும் வகையில் இருக்கும் படி மட்டும் பார்த்து கொள்ளுங்கள் சார்.

    மீண்டும் ஒரு சிறிய வேண்டுகோள்: லயன் ஆண்டு மலருக்கு லக்கி லூக் கதைகளை வருடம் தோறும் கொடுப்பது போல் முத்து காமிக்ஸ் ஆண்டு மலருக்கு சிக் பில் (கிட் ஆர்டின் & டாக் புல்) கதைகளை கொடுக்க முடியுமா? இரண்டு கதைகளை இணைத்து அல்லது சிக் பில் (கிட் ஆர்டின் & டாக் புல்) + தற்போது வரும் புதிய கார்ட்டூன் நாயகர்கள் கதையை இணைத்து கொடுக்க முடியுமா சார். முத்து காமிக்ஸ் ஆண்டு மலருக்கு டூயுரோங்கோ போன்ற சிறந்த கதை நாயகர்கள் கதையை படித்து விட்டு மைக் ஹமர் போன்ற கதைகள் ஆண்டு மலரில் வருவது பெரிய ஆர்வத்தை கிளப்பவில்லை, இவர் விற்பனையில் சாதித்தாரா என தெரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. அல்லது ஆண்டு தோறும் முத்து ஆண்டு மலரில் ஜாகோரின் வண்ணக் கதையை குண்டு புத்தகமாக கொடுங்கள் சார்.

      Delete
  41. மினி காமிக்ஸ் வரப்போவது ஜேம்ஸ் பாண்ட் பாணி உள்ள ரோஜா மோர் தான்

    ReplyDelete
  42. @Edi Sir..😍😘

    *மினிகாமிக்ஸ் MC * ங்கறதுக்கு பதிலா ..

    *முத்துமினிகாமிக்ஸ்MMC* னு வச்சா நல்லா இருக்குமே..😍😘💪👍

    ReplyDelete
    Replies
    1. எண்ணி ஆறோ, ஏழோ இதழ்களோடு கடையைச் சாத்திய ஒரு தடம் சார் - முத்து மினி காமிக்ஸ் ! அதையே மறுக்கா வைப்பானேன் ? Nopes !

      Delete
  43. சார் நீங்கள் சாதாரணமாக சொன்னால் சுலபமாய் கடந்து விடலாம். ஆனால் ஓவர் பில்டப் என்றாலே யோசிக்கத்தான் வேண்டும் போல் உள்ளது. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள் & மைக் ஹேமர் மற்றும் இன்னும் சில , பல மொக்கை கதைகள் போல் இல்லாமல் லார்கோ போல் சிறப்பாய் இருந்தால் மிகவும் மகிழ்ச்சியே. புத்தகம் கைக்கு வந்த பிறகு தான் தெரியும் எப்படி உள்ளது என்று.

    ReplyDelete
  44. சார் நல்லதொரு பதிவு.

    அடுத்த மாதம் வர உள்ள 3 இதழ்களின் preview அருமை. IR$ அறிமுகம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். சோடா எனக்கு பிடித்த ஹீரோக்களில் ஒருவர். அவர் எப்போதுமே அசத்துவார்.

    இப்போதெல்லாம் ஒவ்வொரு மாதமும் முதலில் படிப்பது V காமிக்ஸ் தான் சார். அதுவும் இந்த முறை ஸாகோர் ஓவியங்கள் அருமை.

    பதிவை விட அதன் கடைசியில் நீங்கள் கொடுத்து உள்ள தகவல்கள் எல்லாமே அருமை.

    மினி காமிக்ஸ் பட்டையை கிளப்பும் என்பது திண்ணம். யாரு சார் அந்த ஹீரோ?

    ஆன்லைன் புத்தக விழாவுக்கு ஆவலுடன் வெயிட்டிங். மினி காமிக்ஸ், உயிரை தேடி, இன்னும் ஒன்று இரண்டு புத்தகங்களும் அடடே!!!!

    ReplyDelete
    Replies
    1. அந்த சூப்பர் டூப்பர் செய்தி என்ன என்று அறிய மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கம் வரை காத்து இருக்க வேண்டுமா?

      வெயிட் செய்வோம் ஒரு மாதம் தானே

      Delete
  45. Zagorina is the right name sir - ஸாகரீனா !

    ReplyDelete
  46. Zagora, ஸகோரா

    டெக்ஸ் வில்லர் பையனுக்கு பொண்ணு தேடிகிட்டு வந்திட்டிருக்கார். தெறிச்சு ஓடிடுவோம். மரங்களில் ஜம்பி ஜம்பிங் பண்ணிக்கிட்டிருக்கிறதில் உள்ள ஜாலியே தனி. இவங்க கூட குதிரையில் லொங்கு லொங்குன்னு சுத்தறதெல்லாம் நமக்கு சுகப்படாது.🤭

    ReplyDelete
  47. I.R.$ க்கு நல்வரவுகள்.

    V காமிக்ஸ் வெற்றிப்பாதையில் செல்வதில் மிகுந்த மகிழ்ச்சி.எமது பால்யகால காமிக்ஸ்களை நினைவூட்டுவது போல் குறைந்த விலையில் 64 பக்க கதைகள் அருமையான பார்மூலா. முத்துவின் அடையாளமாக இரும்புகையாரும் லயனின் அடையாளமாக மஞ்சள் சட்டையாரும் இருப்பது போல் V யின் அடையாளமாக இருப்பதற்கும் அதிக வாய்ப்புக்களை பெறுவதற்கும் ஜம்பிங் ஸ்டார் ஸாகோர் பொருத்தமானவர் தான்.

    சென்றமுறை வராது விட்ட மிஸ்டர் நோ வின் அட்டை மிகவும் கவர்ந்திருந்தது. அவருக்கும் கூடிய சீக்கிரத்தில் ஒரு வாய்ப்பு கொடுங்கள் சார்.

    மினி காமிக்ஸ் வெற்றிக்கொடி நாட்டிட வாழ்த்துக்கள். பெயரிலோ லோகோவிலோ முத்து / லயன் இணைந்து இருந்தால் சிறப்பாக இருக்கும். எம்மில் பலரின் சிறுவயதில் நடந்தது போல் வாங்கும் மாணவர்கள் மூலம் மற்ற மாணவர்களிடையே பரிச்சயமாகும் போது அவற்றின் பெயரும் சேர்ந்து பரிச்சயமாகுமே சார்.

    ReplyDelete
  48. அணிலாடும் முன்றில்

    ............. வங்குடிச் சீறூர்
    மக்கள் போகிய அணிலாடும் முன்றில்

    புலப்பில் போல......( சங்க காலப் பாடல்)

    காதலன் அருகில் இருந்தால் காதலிக்கு திருவிழா நடப்பது போல் மகிழ்வாக உள்ளதாம்

    அவன் சென்றுவிட்டாலோ சிற்றூர் மக்கள் வெளிச் சென்றபின் அணில் வந்து விளையாடும் முற்றமுடைய தனிமை நிரம்பிய வீடு போல காட்சியளிக்கிறதாம்.

    கமெண்ட்டுகள் குறைவென்பதால் அணிலாடும் முன்றில் உள்ள இல்லமா தளம்?

    வெளிச்சம் தராத அமாவாசைகள் வரலாம். அதற்காக நிலவே அன்று இல்லை என ஆகிவிடாதே?

    எழுத்தில் கொட்டிக் கிடக்கும் வசீகர நடையும் அபரிமித நகைச்சுவையும் காணொளியில் கைவரப் பெறாது.

    தடையின்றி தாய்ப்பால் தர ஸ்தனங்கள் பெருத்துக் கிடக்க குழவிக்கு புட்டிப்பால் தர முயல்வதும் ஏனோ!?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. புட்டிப்பால் என்பது குழவிக்கு ஸ்னாக்ஸ் சாப்பிடுவதைப் போல!

      Delete

  49. கன்று முண்ணாது கலத்தினும் படாது

    நல்லான் றீம்பா னிலத்துக் கா.......



    நல்ல பசுவின் இனிய பாலானது அந்தப் பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் தரையில் சிந்தி வீணாவதைப் போல, வேதாளர் போன்ற இதழ்களை வாசித்து இன்புற இயலாது பிரியவும் மனமில்லாது அலமாரியில் உள்ளன.

    ஊரில் உள்ள எல்லோரும் நல்ல செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும். இரவில் அவர்கள் நன்கு உறங்க வேண்டும் என விரும்பும் அஹிம்சையில் நம்பிக்கை உள்ள திருடனைப் போல இயல்பான போக்கிலும் புத்தகத் திருவிழாக்களிலும் வேதாளர், மாயாவி, ஸ்பைடர் அதிகம் விற்பனையாகும் தகவல் அதிக மனமகிழ்வைத் தருகிறது. காலம் சாதகமாக இல்லாத போதே தேவதையின் கதை போன்றவற்றை வெளியிட்டவர் ஆசிரியர். வேதாளர் உள்ளிட்டோரின் அதீத விற்பனை தாக்கத்தால் நிதிநிலைமை உயர்ந்து இன்னும் பல ஸ்டெர்ன்களும் , சோடாக்களும் வரட்டும்.

    சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்

    உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.

    பலா மரத்தின் சிறிய கொம்பிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருப்பதுபோல, தலைவியின் உயிரோ மிகச்சிறியது; அவள் உன்மேல் கொண்ட ஆசையோ மிகப் பெரியது. /

    வாழ்நாள் குறுகிச் செல்ல புதிய நவீனத்துவ கதைகளை படிக்க வேண்டிய வேட்கையோ அதிகரிக்கிறது .லயன் காமிக்ஸ் எனும் மரத்தில் விற்பனையில் சுணக்கம் எனும் சிறிய கொம்பில் நவீன கதைகள் எனும் பெரிய பலாப் பழத்தை ஏந்தச் சொல்வது நடைமுறைக்கு எவ்வளவு பொருந்தும் என அறிவுக்கு எட்டினாலும் மனம் அவ்வாறு விரும்புவதை தடுக்க இயல்வதில்லை.

    ஸ்மாஷிங் 60s வரவைக் காட்டிலும் IRS வருகை அதிக எதிர்பார்ப்பைத் தருகிறது.



    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அவைப் புலவர் செனா அனா அவர்களே...

      அருமை அருமை!!

      Delete
  50. இம்மாத இதழ்கள்

    1. பறக்க மறந்த பறவைகள் 9.1/10

    2. பின் விளைவுகள் ஜாக்கிரதை 9.2/10

    சுற்றுப் புற சூழல் பாதிக்காம சேலம் நாலு ரோட்டில் மேச்சேரி கண்ணன் பால்பாயிண்ட் பேனாவுக்கு ஒரு 70 அடியில சிலை வைக்கலாம்னா வைக்கலாம். சிறந்த மொழிபெயர்ப்பு.

    3. ப்ளாக்மெயில் பண்ண விரும்பு

    9.0/10

    ReplyDelete
    Replies
    1. ///சுற்றுப் புற சூழல் பாதிக்காம சேலம் நாலு ரோட்டில் மேச்சேரி கண்ணன் பால்பாயிண்ட் பேனாவுக்கு ஒரு 70 அடியில சிலை வைக்கலாம்னா வைக்கலாம். சிறந்த மொழிபெயர்ப்பு.///

      சூப்பர்!
      தொடர் அலைச்சல் & வேலைகளால் நம்ம KOKன் எழுத்துக்களைப் படிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் படித்து சிரிக்கப்படும்! :)

      Delete
  51. மினி காமிக்ஸ் சின்னச் சின்னக் கதைகள்புலவர் விஜயனாரின் கவிதைகள் கட்டுரைகளுடன் வருங்களாசார்இல்லை ஒரேகாமிக்ஸாக வருமாங்கசார். மதயில்லா மந்திரி ,ஸ்டீல் பாடி ஷெர்லாக் ,ஜார்ஜ் நோலன்,இன்ஸ்பெக்டர் டேஞ்சர்.ரேம்போபோன்ற கதைகளுக்கு பட்ஜெட் இடம் கொடுக்குமா.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  52. ஜம்பி ன்னு பேர் வெச்சுபுடலாங்க...

    ReplyDelete
  53. Welcome mini comics. My heartiest wishes for success and igniting little minds

    ReplyDelete
  54. Sir, blog is from 2000s but you entered only in 2012. Fb and youtube were not that much feasible for ur purposes then, but they are well suited now. Now twitter and insta also there. I am engaging in many social medias for last 10 yrs and built my client base using them. In that experience, I am suggesting the below.

    Continue blog with your same flourishing writing to retain us. Along with that, do below.

    Nowadays nobody watches longer youtube videos. Start with 1 minute videos. One 1 minute video daily. You may think it's impossible, but it's as easy and so much interesting like writing a blog. I create 1 minute video daily and post in instagram reels, insta stories, fb reels, fb stories, youtube shorts, whatsapp status and Twitter tweet. It takes 15 minutes from rime of idea conception to finish all these works.

    Don't plan anything. Just open selfie camera and talk for a minute. Talk about past, present, future, travels, book fair, new announcements, what work you are doing now, problems. Slowly you will come to know there are thousands of things to talk.

    Our people can watch u in ur whatsapp statuses, old clients who are silent in blog will also engaged there. And huge potential for new young clients.

    One more advantage is you are hearing from us readers who s average age is 40.🤣. You can understand from other platforms, what the millenials really want.

    ReplyDelete
    Replies
    1. அருமையான ஐடியாக்கள் டாக்டர் சாப்!!

      Delete
  55. Sir mini comics க்கு மினி லயன் என்று பெயர் வைக்கலாமே ?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி, ஒரு காமிக்ஸை புதிதாய் கையில் ஏந்திடவுள்ள இளம் வாசகருக்கான தடமாக இது இருக்கவுள்ளது ! அந்தப் புது வாசகருக்கு மினி லயன் என்பதாலோ மினி டைகர் என்பதாலோ துளியும் ப்ளஸ் - மைனஸ் இருந்திடப் போவதில்லை !

      கைக்கு அடக்கமான மினி காமிக்ஸ் இதழாய் மாத்திரமே தென்படவுள்ளது & hence the name !

      Delete
  56. ஸாகோரிட்சாயினி. பல்லு வலிக்குதுங்க கவிஞரே . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  57. ஓகோ. அது கோடாலி இல்லையா.?பருப்பு கடையும் மத்தா .ஸாகோர் கையில் இருந்தா கோடாலி. சாகோரினி கையில் இருந்தா பருப்பு கடையும் மத்தா . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  58. நம்ம டென்னிஸ் ஜான் மாஸ்டர்

    ReplyDelete
  59. மாடஸ்டிக்கு ஆப்பெல்லாம் கிடையாதுசார்.நேர் கோட்டுக் கதைகளில் கியாரண்டி யான ஒரு ஹீரோ உருவாகும் வரை மாடஸ்டி&ராபினுக்கு ஒரு ஸ்லாட் உறுதி.சிஸ்கோ ஆல்பா டாங்கோ ரூபின் இவங்கள்ளாம் இன்னும் ஸ்டாண்டர்டு ஹீரோ இல்லைங்க சார் .இன்னும் முன்னோட்டத்தில்தான் இருக்காங்கஎனவே மாடஸ்டி டேஞ்சர் ஜோன்லயெல்லாம் இல்லைங்க சாய்பாபு ஜி.ஏதோ ஒரு கதையில் ஸ்லிப்பாகும்பட்சத்தில்ஸாகோருக்குதான்ஆப்பு . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. @Karur Rajsekar...😃😃

      18-ம்தேதி 19.04 நிமிசத்துக்கு
      *மாடஸ்டிக்கு ஆப்போ* அப்படின்னு பொழம்பனது நாங்க இல்லிங்கோ...😃😃😃
      நீங்க தானுங்கோ..😃😃😃😃😃😃😄

      Delete
  60. Replies
    1. ஸாகோராதா
      ஸாகோரம்பிகா
      ஸாகோரேகா
      சாகோஷ்மிகா
      ஸாகோஷ்பு
      ஸாகோம்ரன்
      ஸாகோமலாபால்
      ஸாகோவதி
      ஸாகோரூபினி
      ஸாகோமலா
      ஸகோர்த்தி


      Delete
    2. தெய்வமே...போய் பையனுக்கு "பனித்துளி இளவரசி" கதையை சொல்லுற வழியை பாருங்க ! இங்க "ஸோர்னக்கா" மாதிரி ஏதாச்சும் வைத்திடலாம் !

      Delete
    3. சார்,
      எதுக்கு இந்த கொலவெறி. ஆனா
      அப்பிடிக்கா பேர் வைச்சா,
      அந்த பேருக்காகவே
      சூப்பர்-டூப்பர் கிட்டாகும்.

      Delete
    4. ராதா, அம்பிகா,ரேகா, குஷ்பு, அமலா பால், ரேவதி, ரூபினி, அமலா, ரதி, ரஷ்மிதா ?????????

      Delete
  61. *ஸகலக்க பேபி* ன்னு பேரு வைங்கோ Edi Sir..😍😘

    ReplyDelete
  62. கேப்ஷன் போட்டி: அவரு ஜம்பிங் ஸ்டார்னு பேர் வச்சா, இந்த லேடிக்கு "ஜம்பிங் மூன்" என்று வைப்பது தான் பொருத்தமாய் இருக்கும். ஆகவே......

    "ஜம்பிங் மூன்"
    "ஜம்பிங் மூன்"
    "ஜம்பிங் மூன்"

    பேரு வச்சாச்சு

    ReplyDelete
  63. கேப்ஷன் போட்டி: அவரு ஜம்பிங் ஸ்டார்னா, நான் ஜம்பிங் மூன். ஆரம்பிக்கலாமா.

    ReplyDelete
  64. சார், பிப்ரவரி மாதத்தில் வந்திருக்க கிராபிக் நாவலான வேண்டிய "தரைக்கு வந்த வானம்" என்னவாயிற்று. Any update. மேலும் அது காம்பேக்ட் சைஸ் என்று விளம்பரத்தில் உள்ளது.
    ஒரிஜினலாகவே காம்பேக்ட் சைஸ் தானா, அல்லது விலை குறைப்பிற்காக நம் தரப்பில் சுருக்கப்பட்டாதா. அப்படி இருந்தால் வேண்டாமே

    ReplyDelete
  65. மினி காமிக்சில் இடம் பிடிக்க உள்ள நாயகர் காரிகனா? சார்

    ReplyDelete
  66. படிப்பு பொழுது போக்கு விளையாட்டு அனைத்தும்செல்போனில்தான்என்று மூழ்கிக் கிடக்கும் ஒரு தலைமுறையை வாசிப்பு பழக்கத்திற்கு இழுத்து வர என்ன முயற்சிகள் எடுத்துள்ளீர்கள் (அதுவும் மினிமம்பட்ஜெட்)என்று அறிந்துகொள்ள பெரும் எதிர்பார்ப்பு.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete


  67. மினி காமிக்ஸ் - ஆஹா!! 'பள்ளிச் சிறுவர்களுக்காக மலிவு விலைப் பதிப்பாக சில வெளியீடுகள்' என்ற நமது நீண்டநாள் எதிர்பார்ப்பும், கோரிக்கையும் விரைவில் நிறைவேறயிருப்பதில் மகிழ்ச்சி!

    * 20 அல்லது 25 ரூபாய் விலையில்
    * புராதனமல்லாத, விறுவிறுப்பான சாகஸக் கதைகளோடு
    * தெளிவான, தரமான சித்திரங்களோடு
    * சிக்கென்ற வசனங்களோடு
    * கவர்ந்திழுக்கும் அட்டைப்பட மேக்கிங்கோடு

    மினி காமிக்ஸ் வெற்றிகள் பல குவித்திடட்டும்!

    ReplyDelete
  68. @EV..😻😘

    ஈவியாரே..
    ரொம்ப வருசமா காணோம்..😍😃

    ReplyDelete
    Replies
    1. ஆபீஸுல திடீர்னு 'வேலை செய்யணும்'னு சொல்லிட்டாங்க ஜம்ப்பிங் தலீவரே! அப்படியே சில வருடங்கள் ஸ்தம்பிச்சுப் போய்ட்டேன்! :)

      Delete
    2. தூக்கத்த கெடுத்துட்டாங்கன்னு சொல்லுங்க.

      Delete
    3. தலைவரே,
      சிங்கத்தை அவுக பக்கம் இழுத்துட்டாங்க. டெரரு தாங்க ஜம்பிங் குரூப். நீங்க துணிஞ்சி பொங்கி எழுங்க.

      Delete
  69. ஹீரோயின் பெயர் : லாரா

    கேப்சன் : எனக்கு தெரியாம என் ஆளு ஜாகோருக்கு பேரவையா ஆரம்பிக்கிறீங்க, இந்தா வந்து மண்டைலயே போடுறேன்

    ReplyDelete
  70. சார் அந்த சூப்பர் டூப்பர் Announcement பத்தி ஒரு க்ளூவாச்சும் குடுங்க
    எங்களுக்கு பிஞ்சு மனசு அவ்ளோ நாள் Suspense தாங்க மாட்டோம்

    ReplyDelete
  71. மினி காமிக்ஸில் என்னவெல்லாம் வேண்டும் என்று தெளிவானபட்டியல் ஜி.அருமை அப்படியே அட்டைடிசைனையும் வெளியிட்டுவிடுங்கள் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  72. முறைப்படி பேர் வச்சவர் திருநாவுக்கரசு வழுக்குப்பாறையார்தான் மூன்றுமுறை தெளிவாகவைத்துள்ளார்

    ReplyDelete
  73. தோர்கல் அடுத்த இதழ் எப்போது வரும்..?? Please soillungoo.?

    ReplyDelete
  74. **** பறக்க மறந்த பறவைகள் ****

    ஒரு ரயில் கொள்ளையர் கும்பல்...
    அந்தக் கொள்ளையர்களிடமே கொள்ளையடித்த ஒரு கூட்டாளி கொள்ளையன்..
    அந்தக் கூட்டாளி கொள்ளையனோடு புதிய வாழ்க்கையைத் தேடி ஓடும் ஒரு இளைஞி..
    இவர்களையெல்லாம் தேடியலையும் டெக்ஸும் & கார்ஸனும்..
    இவற்றோடு, உலக காமிக்ஸ் வரலாறு இதுவரை கண்டிராத ஒரு க்ளைமாக்ஸ்!!.

    கதையைப் படித்து முடிக்கும்போது அற்புதமான சித்திரங்கள் அநியாயத்திற்கு வீணடிக்கப்பட்டிருப்பதை உணரமுடிகிறது!

    கதையின் தலைப்புக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பென்று எனக்கு அர்த்தமாகவில்லை! விளங்கியவர்கள் விளக்குங்களேன்?

    பறக்க மறந்த பறவைகள் - படித்து மறந்திடும் படக்கதைகள்!

    என்னுடைய ரேட்டிங் :
    சித்திரங்கள் : 10/10
    அட்டைப்படம் : 10/10
    வசனங்கள் : 9/10
    கதை : 6/10

    ReplyDelete
  75. கேப்சன்
    ஜாகோர் புலி ரசம் வைக்க சொல்லிட்டு போயிட்டார் புலி ஒன்னு கூட கண்னுக்கு தெரியலியே
    (கீழே இருந்து குரல்) அடிப்பாவி அது புலி ரசம் இல்ல புளி ரசம் நீ அந்த மரத்துல தான் இருக்க

    ReplyDelete
    Replies
    1. @சே.ச ஜி..😍😘

      That Puli..
      Plain puliஆ?..
      இல்ல..வரிபுலியா?..😃😀😀😀

      Delete
  76. செந்தில் சத்யா .செம்.கரூர் ராஜசேகரன் .

    ReplyDelete
  77. ஐயா விஜயன் அவர்களே மேஜிக் பாண்டஸி கலந்த புத்தகங்களை எதிர்பார்க்கிறேன் . புத்தகங்கள் வர
    வாய்ப்பிருக்கிறதா?

    ReplyDelete
  78. அறிவியல் புனைவு கதைகளையும் விரும்புகிறேன் வர வாய்ப்பு இருக்கிறதா ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..?🥰

    ReplyDelete
  79. "கழுகுப் பெண்"

    கேப்சன்: கழுக சட்டையில போட்டதால ரெக்கை கட்டி பறக்கலைன்னாலும் மரத்திற்கு மரம் தாவியாவது பறப்போம்ல

    ReplyDelete
  80. Replies
    1. கேப்ஸன்: கல் சுத்தி காதலனை மரம் சுத்தி தேடி...

      Delete
  81. கேப்சன் போட்டிக்கு


    சண்டை நிகழும் இடத்தை அடைய இன்னும் எத்தனை மரம் தாண்டணும்னு தெரியலையே!இத்தனை தாவு தாவியதற்கு,  இன்னைக்கு குறைந்தது ஐவரையாவது போட்டு பொளக்கணும். ஜெய் ஆஞ்சநேயா!

    ReplyDelete
  82. சார் பிப்ரவரியில் மார்ச்சுக்கு வாய்ப்பு உள்ளதா? ஏதாவது பார்த்து செய்யுங்கள் சார்.

    ReplyDelete
  83. கேப்சன்

    என்ன கீழே ஒரே கூட்டமா இருக்கு எல்லாம் எங்க போறிங்க

    ஈரோட்டுக்கு போறோம் அங்க இடைத்தேர்தல் ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் தர்றாங்களாம்

    என்ன பத்தாயிரமா அடியே தாவுடி தாவு

    ReplyDelete