நண்பர்களே,
வணக்கம். நாக்கு வறள்கிறது ....குறுக்கெல்லாம் நோவுகிறது...முட்டிகள் ஐயா..தெய்வமே...என்று கதறுகின்றன...! ஆனால்...ஆனால்...surprise ...surprise ....மனசெல்லாம் மத்தாப்பூவாய் பூரித்துக் கிடக்கின்றது ! கடந்த 10+ வருஷங்களாய் தூக்கங்களைத் தொலைத்த இரவுகளுக்கு பஞ்சமே கிடையாது ; ஞாயிறுகள், பண்டிகைகள், நாள்,பொழுது,விசேஷங்கள் என எதை எதையோ மிஸ் செய்திருக்கிறோம் தான்....ஆனால்...ஆனால்...surprise...surprise .....அவையெல்லாமே இந்த நொடியில் சந்தோஷ நினைவுகளாகவே மனதில் நிழலாடுகின்றன ! Simply becos - இது போலான ஒற்றை நாளுக்கென யுகங்களாய் தவமிருந்தாலும் தப்பே இல்லை ! Enter the சென்னை புத்தக விழா 2023-ன் முதல் வாரயிறுதி & ஒரு வரலாறு படைக்கும் விற்பனை கண்ட மாலைப்பொழுது !! Oh yes sir.....நேற்றைய தினமானது நம் நண்பர்களை நேரில் சந்திக்கும் குதூகலத்தினை மாத்திரமன்றி, நமக்கொரு record breaking விற்பனையினையும் நல்கிய அற்புதப் பொழுது !! ஜெய் ஸாகோராயா நமஹ !!
எப்போதும் போலவே நேற்றைக்கும், நிமிடத்துக்கொரு பரவச அனுபவமென, சந்திக்க இயன்ற ஒவ்வொரு நண்பரிடமுமிருந்தும் கொஞ்சம் மின்சாரத்தை உள்வாங்கிக் கொள்ள முடிந்ததெனில் அது மிகையே அல்ல ! கண்ணில்பட்ட ஒவ்வொரு வதனத்திலும் சந்தோஷப் பிரவாகங்கள், உள்ளத்திலிருந்து பூத்திடும் முகம் நிரப்பும் புன்னகைகள் & கண்களில் ஒரு ஆவல் !! ஸ்டாலுக்குள் கால்பதித்த ஒவ்வொரு நண்பரிடமும் 'இது நம்ம வீட்டு விசேஷம்' என்பதான உணர்வு ததும்புவதை உணர முடிந்தது ! டெக்ஸ் ; டைகர் ; XIII ; மாயாவி ; லக்கி இத்யாதி..இத்யாதி...950 புக்ஸ் ; ஊர்ப்பட்ட தேசங்களின் படைப்புகள் - என்பனவெல்லாம் நம் சாதனைகளே இல்லீங்க ; அவையெல்லாம் அப்டிக்கா ஓரமாய்ப் போய் விளையாட வேண்டிய குட்டிப் பையன்களே ! ஆனால் இந்த 51 ஆண்டு காலப் பயணமும் நம் ஒவ்வொருவருக்குமே சொந்தமானது, இந்த பொம்ம புக் முயற்சிகளின் முழுமையிலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு - என்ற அந்த உணர்வானது - சிலாகிப்புகள், விற்பனைகள், வரவு-செலவுகள் என்பனவற்றையெல்லாம் தாண்டியதொரு அசாத்திய உச்சம் !! இம்மியும் சந்தேகமில்லை - நம் ஆயுட்கால சாதனை என்பது இதைத் தவிர்த்து வேறெதுவும் இல்லை !! And இந்த அன்புகளுக்கு அருகதையானவர்களாய் தொடர்ந்திட, என்ன பல்டியடித்தாலும் தப்பே இல்லையென்று தோன்றுகிறது !!
சந்தேகங்கள் இன்றி இன்னொரு சமாச்சாரமும் நேற்றைக்குப் பதிவாகியது & "ஜம்பிங் ஸ்டார் பேரவையின்" அதிகாரபூர்வமான அதகளம் ஸ்டார்ட்டு என்பது தான் அது ! பதுங்குகுழித் தலீவரும், ரவுண்டு பன் செயலருமாய் சங்கமென்று ஒன்றை நடத்தி வந்ததை....சாரி..சாரி..கைத்தாங்கலாய் உருட்டி வந்ததை, இத்தனை காலமாய்ப் பார்த்து வரும் நமக்கு, செம யூத்தான இந்தச் சிகப்புப் பேரவை செய்திடும் அதிரடிகளை வாய் பிளந்து ரசிக்கவே நேற்றைக்கு பொழுது சரியாக இருந்தது ! தலைவர் ஸாகோர் பாபு சார் - பை நிறைய ZAGOR டி-ஷர்ட்களோடும், டப்பி நிறைய அல்வாவோடும் கண்ணில் படும் நண்டு நஸ்கானில் ஆரம்பித்து அத்தினி பேருக்கும் பதவிகளை வாரி வழங்கிய அழகிருக்கே...அட அட அட....காண கண்கோடி போதாது !! சொல்லி வைத்தாற்போல நேத்திக்கு நானும் சிகப்புச் சட்டையோடு ஆஜராகியிருக்க - ஸ்டால் முழுக்க 'சிகப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு...டொய்யுங்..டொய்யுங்..' .என்ற மீசிக் தான் ! அநேகமாய் நாமக்கல்லில் அடுத்த M.L.A எலெக்ஷனில் புதுத் தலீவர் சுயேட்சையாய், கோடாலி சின்னத்தில் நின்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை - simply becos வோட்டு போடக்கூடிய அத்தினி பேருக்கும் ஏதாச்சும் பதவியினை முன்கூட்டியே அறிவித்து கவர் பண்ணும் அந்தத் திறனுக்கு நேற்று ஸ்டாலில் இருந்தோர் அனைவரும் சாட்சி !
நேற்றைய விற்பனை highlight என்று பார்த்தால் - சந்தேகமின்றி 3 standout performers !!
முதலாமவர் நம்ம 'தல' டெக்ஸ் தான் ! மலரைச் சுற்றும் வண்டுகளைப் போல, வரிசையாய் டெக்ஸ் இதழ்கள் அடுக்கப்பட்டிருந்த இடத்திலேயே நங்கூரமிட்டு நின்ற வாசகர்கள் அநேகர் ! 'போன வருஷத்து டெக்ஸ் full ஆ குடுங்க !!' என்று கேட்ட மஞ்சச்சட்டை காதலர்கள் எக்கச்சக்கம் !
இரண்டாவது standout performer - நம்ம V Comics !! முழுமையான பாராட்டுக்கள் ; சிலாகிப்புகள் ; வாழ்த்துக்கள் - "பிரியமுடன் ஒரு போராளி"க்கு !!
And மூன்றாம் standout performer அல்ல - performerssssss !! Yes - ஓராண்டின் முழு செட் புக்ஸ் வேணுமென்று வாங்கிப் போன நண்பர்கள் கணிசம் !! Smashing '70s - full set 5 கொண்டு வந்திருந்தோம் - காலி !! 2022 full set pack 3 கொண்டு வந்திருந்தோம் - காலி ! 2022-ல் சந்தாவுக்கு அப்பாற்பட்டு வெளியான ஸ்பெஷல் இதழ்களின் pack கொண்டு வந்திருந்தோம் - காலி !! Phew !!! அப்படியே இந்த ஜனவரியின் துவக்கங்களில் மட்டும் காலம் நின்று விட்டால் ; மறுக்கா மறுக்கா ஒரே வாரமானது தொடர்ந்து கொண்டேயிருக்க தோர்கலின் பாணியில் சாத்தியமாகிடுமெனில் - கிட்டங்கிகளைக் காலி பண்ணிவிட்டு வாயெல்லாம் பல்லாய் நின்று விடுவேனே !!
2 ஆண்டுகளாய் தொடர்பு விட்டுப் போயிருந்த நண்பர்களில் பலர், புஜம் நோகும் பளுவிலான புக்ஸை அள்ளிப் போனதே நேற்றைக்கின் விற்பனைச் சாதனையின் பின்னணி என்பது புரிகிறது ! And இன்னொரு சந்தோஷ ஆச்சர்யம் - நேற்றைக்கு நான் பார்த்த (எனக்குப் புது) வாசகர்களில் பலரும் இளைஞர்கள் !! (ஸ்ரீபாபு சார்....ஹேப்பி அண்ணாச்சி !!) பலரும் in their late '20s & early '30s !! இவர்கள் அனைவருமே வருடாந்திர வாடிக்கையாளர்கள் மாத்திரமே - at least for now ! அனைவரின் நம்பர்களை பில் போடும் போது நம்மாட்கள் சேகரித்து வருவதால், தொடரும் பொழுதுகளில் அவர்களையும் சிறுக சிறுக நம் வட்டத்தின் ரெகுலர்களாக்கிட முயற்சித்துப் பார்க்க வேண்டும் !
நேற்றையின் top buyer திருவனந்தபுரத்தில் வசிக்கும் நண்பர் - ரூ.15000-க்கு போட்டுத் தாக்கினார் ! And அவர் காட்டிய ஆர்வமும், உற்சாகமும் simply wow !! மிகச் சரியாய் என் வயதிலானவர் ; வயதுகளெல்லாம் வெறும் நம்பர்களே என்பதை அழுத்தமாய் நேற்றைக்கு கோடிட்டுக் காட்டினார் !!
இளம் டாக்டர் ஜோடி ; கணவர் cupboard முழுக்க காமிக்ஸ் ஆல்பங்களால் நிரப்பித் திரிவதைப் பற்றி மனைவி என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கும் நொடியிலேயே மனுஷன் 2022 full set-ஐ அள்ளிக் கொண்டிருந்தார் !! வாங்கி வீட்டுக் கிளம்பியவர் , திடு திடுவென திரும்பி வந்து Specials Pack ஒன்றையும் வாங்கிப் போனார் !!
'2 வருஷம் முன்னே 'தலையில்லாப் போராளி' வாங்கி குடுத்து என் நண்பன் ஒருத்தன் என்னை வாசிக்க வைச்சான்; இப்போ கிறுக்கு பிடிச்சி டெக்ஸ் full set வாங்கிட்டு இருக்கேன்' என்று சொன்னதொரு நண்பரும் யூத்தின் பிரதிநிதியே ! தமிழில் ஏழு லட்சம் வாசகர்களைக் கொண்டதொரு podcast செய்து வருகிறாராம் & அதனிலும் நம்ம 'தல' பற்றிப் பேசியுள்ளனராம் !!
'பச்சக்' பச்சக்' என்று போட்டோக்கள் எடுக்கப்பட, வழக்கம் போல போவோர்-வருவோரின் முகங்களில் 'இத்தினி பேருக்கு இந்த கொயந்த புள்ள புக் ஸ்டாலில் இன்னா ஜோலி ?' என்ற கேள்வி நெளிவதை பார்க்க முடிந்தது !
ஒரு புதுமண ஜோடி !! கணவரின் ஆர்வத்துக்கு தடை சொல்ல மனமின்றி மனைவி போரடித்துப் போய் நிற்க, கணவரோ காமிக்ஸ் புதையலைக் கண்டதும் bachelor ஆகிவிட்ட குதூகலத்தில் இதை புரட்ட, அதை அள்ள, என்று ரவுண்டு கட்ட ஆரம்பித்தார் !
And நேற்றைக்கு கணிசமான பெண்களின் வருகையுமே இருந்தது நமது ஸ்டாலில் ! வாங்கினார்களோ, இல்லியோ - பொறுமையாய் புக்ஸை புரட்டிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது !!
இன்னொரு highlight - வீட்டிலுள்ள குட்டீஸ்களுக்கென ஷாப்பிங் செய்திட முனைந்த டாடிக்கள் !! லக்கி லூக் ; பென்னி ; smurfs என்று வாங்கிப் போனார்கள் ! And சிண்ட்ரெல்லா புக்கைப் பார்த்து விட்டு, அந்தக் கதையை தன தந்தையிடம் ஒப்பித்த ஒரு குட்டீசின் அழகை மெய்மறந்து ரசித்தோம் - நானும், பிரசன்னாவும் ! இந்த fairytale comics முயற்சி வியர்த்தமாகிப் போச்சே என்ற ஆதங்கம் என்னுள் இருந்தது நிஜமே ; ஆனால் - இது போலான காட்சிகள் அந்த நெருடல் மீது ஒரு வாளி குளிர்ந்த நீரை ஊற்றி விடுகிறது ! எல்லாம் அழகே - இந்த காமிக்ஸ் உலகினில் எல்லாம் அழகே !!
ரைட்டு...ஞாயிறு காலையே புத்தக விழாவில் ஆஜராகக் கிளம்பிட வேணுமென்பதால் இப்போதைக்கு நடையை கட்டுகிறேன் ! And yes - இன்றைய தினத்தின் Times of India நாளிதழில் பக்கம் 2-ல் ஒரு அரைப்பக்கக் கட்டுரையை பிரசுரித்து நமக்கு செம பூஸ்ட் தந்துள்ளனர் !! ரொம்பவே பொருத்தமான தருணத்தின் நிகழ்வு என்பதால் - அதனிலுள்ள சில பிழைகளைத் தாண்டியும் மகிழ்கிறோம் !! நான் சுட்டிக் காட்டியிருந்த திருத்தங்களையும் போட்டிருந்தார்களெனில் மகிழ்வு இரட்டிப்பாகியிருக்கும் ! Anyways நமது உளமார்ந்த நன்றிகள் இந்த ஊடக ஜாம்பவானுக்கு !
Bye all...இன்றைய பொழுதும் ஜம்பிங் ஜாக் பேரவையின் அலப்பறைகளுடனும், விற்பனை சாதனைகளுடனும் தொடர்ந்திடும் பட்சத்தில் - "எங்கே ? எப்போது ?" பகுதியில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த "ஸாகோர் கலர் Special" fast track செய்திட முனைவோம் ! ஜெய் ஜம்பிங் ஜாக் !! See you at the fair guys !!
P.S : இத்தாலியில் கூட ஒரு செம active ஜம்பிங் ஜாக் பேரவை உள்ளது போலும் ; 60 புக்ஸ் ஆர்டர் தந்துள்ளனர் !!
https://timesofindia.indiatimes.com/city/chennai/a-novel-twist-to-an-old-adventure-in-chennai-book-fair/articleshow/96824413.cms
ReplyDeleteThanks Ragavan Sir!
DeleteME2
ReplyDeleteஇரண்டாவது
ReplyDelete3வது
Deleteஅப்பாடா பதிவு வந்தாச்சு நன்றி ஆசிரியரே
ReplyDeleteவந்துட்டேன்.
ReplyDeletePresent sir :)
ReplyDeleteGood morning all.....
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஜெய் ஜம்பிங் ஸ்டார் பேரவை. அதன் பொருளாளர் என்பதில் மகிழ்ச்சி.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி...
Deleteநீங்க கலக்குங்க.. 😃😀செயலாளரே & பொருளாளரே..😍😘😘
Deleteஸாகோர் கலர் ஸ்பெஷல் சீக்கிரம் fast track செய்யுங்கள் சார்.
ReplyDeleteசூப்பரான பதிவு கொப்பளிக்கும் உற்சாகம்.
சென்னை புத்தக விழாவில் இன்னும் பல ரெக்கார்ட் உடைபடட்டும்.
""எங்கே ? எப்போது ?" பகுதியில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த "ஸாகோர் கலர் Special" fast track செய்திட முனைவோம் !"
Deleteஹையா ஜாலி.
வாழ்க இத்தாலி ஜம்பிங் ஸ்டார் பேரவை.வெல்க ஸாகோர் டி நே புகழ்.
ReplyDeleteஸாகோர் கலர் ஸ்பெஷல் வரட்டும்..வெல்லட்டும்.
ReplyDelete16
ReplyDeleteMe வந்துட்டேன்😘😘😍😍
ReplyDeleteAll the very best to Zagor peravai... Hope Chennai gives a much needed record breaking sales.
ReplyDeleteHi..
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஒவ்வொரு வரியைப் படிக்கும் போதும் மனசு சந்தோசத்துல பறக்குது. மீதி நாட்களும் விற்பனை சிறக்க வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே🙏🙏
ReplyDeleteஎங்கள் ஊரில் திருவிழா தொடங்கியாச்சு 😍😍😁🤗
ReplyDelete@சிவலிங்கம் ஜி..😍😘
Deleteஆமாங்க..👍
ஸாகோர் பேரவையின் சென்னை மண்டல செயலாளரே..🙏💐💪👍
- "எங்கே ? எப்போது ?" பகுதியில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த "ஸாகோர் கலர் ஸ்பெஷலை" fast track செய்திட முனைவோம்//
ReplyDeleteஎளய தலமுறையினர் பொறுப்பெடுத்ததும் நிறைய புக்கு பாஸ்ட் ட்ராக் ஆகும் போலிருக்கே. ஜெய் கோடாலி பாபுஜி.
ஜெய் ஜம்பிங் ஸ்டார்...
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநீங்களு இந்த ஜோதில சங்கமமாயிட்டீங்களா.
Deleteஏப்பா புலி பேரவைலிருந்து வெளியே வந்தீட்டீயாப்பா...எந்த பேரவைல சேந்தாலும் நீர் டெக்ஸ்ன் ஸ்லீப்பர்செல்ன்னு கண்டுபிடிச்சுட்டாங்கப்பா....:-)
Delete@Rummi xiii 😍😘
Deleteவாருங்கள் அய்யா..
💐😍😘😘
தலைவன் ஸாகோரை உச்சத்திற்கு கொண்டு செல்ல தங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள் ஜி..😍😘🙏
அது ரொம்ப சுலபமாச்சுங்களே... குறைந்தது ஒரு மூனு வருசத்துக்காச்சும் ஒரே மாதிரி கதைகள் வரனும் வெவ்வேறு அட்டைப் படங்களோட..
Deleteமாசம் ஒரு கருப்பு வெள்ளை புத்தகம், மூனு மாசத்துக்கு ஒரு கலர் புத்தகம் அப்புறம் ஆறு மாசத்துக்கு ஒரு குண்டு புத்தகம் அவ்வளவு தாங்க..
@Edi Sir..😍😘
ReplyDeleteஓம் ஸாகோராய நமஹ..😍😘
Me Happy Sir..😃😍
ஸாகோர் கலர் ஸ்பெஷல் போட்டு தாக்குங்க Sir..😍😘
பேரவை சார்பாக கலர் கலர் gift போட்டு தாக்கிடுவோம்.😍😘😃
இனி எப்பவுமே டாப்ஸ்டார் ஸாகோர்தான்.😍😘💪👏👍
ஜெய் ஸாகோராய நமஹ..😘😘
One and only super star
DeleteTEX
@Sridharanrckz 🙏
DeleteDefinitely ji..👍
ஒரே ஒரு MGR தான்..😍
ஒரே ஒரு ரஜினிதான்😘😘
இதில் மாற்று கருத்தே இல்லை..😃🙏
//பெயருக்கு ஒருசங்கத்த நடத்தி வந்ததை சாரி உருட்டி வந்ததை // எங்க தலைவரையும் செயலரயும் உசுப்பி விட்டுட்டிங்களேங்கசார்.கரூர்ராஜசேகரன் .
ReplyDeleteஉசுப்பிவிடலீங்க ராஜசேகர் ஜி..
Deleteசாணியை உருட்டி குறிபார்த்து வீசியிருக்கிறார்!! 😌
செயலரே நம்ம சங்கத்து நிலமை இப்படி ஆயிறுச்சே...அப்பவே சொன்னேன் காரணமே இல்லீனாலும் ஏதாவது போராடனும் அப்பதான் நாம பீக்குல இருப்போம்..இல்லீன்னா மறந்துருவாங்க ..மறந்தாலும் பரவால சான் எல்லாம் எடுத்து அடிச்சு இருக்க மாட்டாங்க..மனசு வலிக்கது செயலரே...அதனால் வீட்ல மட்டனும் ,மீனும் எடுத்து கொடுத்து ரெடி பண்ண சொல்லிட்டேன்..:-(
Deleteஆமா தலைவரே,
Deleteஇன்னைக்கு ஞாயித்து கிழமை வேற. மட்டன் வேறு எடுத்தாச்சு. நல்லா சாப்புட்டுட்டு தூங்கிபுட்டு சாயந்தரம் செமையா ஒரு மீட்டிங் போட்டு நம்ம கண்டனத்தை தெருவிக்கிறோம்.
எஸ் சார்..தெருவ விக்குறோம்...!
Deleteஅப்புறம் வட்டம் மாவட்டம் எல்லாத்தையும் காலி பண்றோம் தலைவரே.
Deleteஜெய் ஜம்பிங் ஸ்டார்...💪💪
ReplyDeleteஐயா,
Deleteநீங்களு ஜோதில ஐக்கிய மாயீட்டீங்களா.
@KOK..😍😘
Deleteவாருங்கள் அய்யா.. வாருங்கள் 😍😘🙏
///ஐயா,
Deleteநீங்களு ஜோதில ஐக்கிய மாயீட்டீங்களா.///
பின்னே... நாங்களும் யூத்துதானே சார்.!
///@KOK..😍😘
வாருங்கள் அய்யா.. வாருங்கள் 😍😘🙏///
உத்தரவு புத்தம் புதுத் தலைவரே..! 😊
செமையா Set ஆயிட்டீங்க. ஜெய் ஜம்பிங் ஸ்டார்...💪💪
Deleteபேரவை வாழ்க.
(ஓரிரு இடங்களில் சற்றே கடுப்புகளைக் கிளப்பும் வரிகளைத் தாண்டி) மொத்தப் பதிவுமே உற்சாகத்தை எகிறச் செய்கிறது! சென்னைக்கு ஈடிணை கிடையாதென்பதை ஆரம்ப நாட்களிலேயே நிரூபித்துவருகிறது விற்பனை தொடர்பான செய்திகள்! நீண்ட தொலைவு பயணித்துவந்து உற்சாகமாய் விற்பனைக்கு உதவிக்கொண்டிருக்கும் ஜம்ப்பிங் ஸ்டார் பேரவை மக்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்! குறிப்பாக உற்சாகத்தின் உரைவிடமாய் திகழ்ந்துவரும் ஜம்ப்பிங் தலைவர் கோடாலி பாபுக்கு ஒரு மானசீக மலர்கொத்து!!
ReplyDeleteநேற்றைய விற்பனை எண்ணிக்கைகளை இன்றைய விற்பனை ஜம்ப் செய்ய புனித மனிடோ துணையிருக்கட்டும்!!
வேதாளர்கடத்தல் படலம் .செம காமெடி .கஞ்சன் என்ற பட்டப் பெயருடைய இளவரசர்:பல் போன இவள் மலிவாகக்கிடைத்தாள் என்பதாலேயே மனைவியாக்கிக் கொண்டேன். மெல்ல முடியாதாகையால் கூழ் தான் இவளுக்கு ஆகாரம். பைலட்டிடம்:அடேய் நாசமாகப் போகிறவனே பைலட் :தள்ளுபடி சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டிற்தகும் விமானியிடம்நீங்கள் திறமையை எதிர்பார்த்தால் எப்படி.கரூர் ராஜசேகரன்
ReplyDeleteகிட்டங்கி காலியாகி பல கிராபிக் நாவல்களை படிக்க ஆசை.. நடக்கட்டும். நடக்கும்
ReplyDeleteஆத்தாடி.
Deleteஆம் நேர்கோட்டு கதைகளாக படித்து போர் அடிக்குது. கிராபிக் நாவலா இருந்தால் சூப்பராக இருக்கும். எனக்கு கிராபிக் நாவல் என்றால் கொள்ள பிரியம்
Deleteகூட்டமா கிளம்பிட்டாங்கய்யா. சீக்கிறமா ஜம்போ ஓப்பன் பண்ணுங்க எடிட்டர் அய்யா.
Deleteஅடுத்த மாதம் தரைக்கு வந்த வானம் வருதே.. அதை எதிர்நோக்கி தரையில் நிக்க முடியாமல் மிதக்கும் நானும்
Deleteநானுமே
DeleteEnjoy
Deleteபகை பல தகர்த்திடு
ReplyDeleteஎங்கோ ஆரம்பித்து எங்கெங்கோ திரும்பி கதையின் நாடியை உணரும் பொழுது 234 பக்கங்கள் முடிந்து இருந்தது. வித்தியாசமான ஓவிய பாணி ஒரு சில இடங்களில் நெருடலையும், பல இடங்களில் அட என்று ஆச்சரியப்பட வைத்தும் கண்ணுக்கு விருந்தாக்குகிறது. கதையின் முடிவை கண்டதும் ஒரு நிமிடம் வழக்கமான டெக்ஸ் கதைகளில் கிடைக்கும் திருப்தியை இதில் உணர முடியவில்லை. இன்னும் கதை முடியவில்லை என்று மனம் கதையின் முடிவை ஏற்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. பல இடங்களில் எழுத்துப் பிழைகள் மற்றும் ஓரிடத்தில் முகத்தின் மீதே பலூன் வரைந்து வசனம் எழுதியது மைனஸ்.. கதைக்கு 10/10... மேக்கிங்கு மார்க் கொடுக்க முடியவில்லை.
மரணம் சொன்ன இரவு..
ReplyDeleteபக்கம் 5 லிருந்து 13 வரை ஒரு சிறு கதை.. இந்த கதையின் முக்கியத்துவம் என்ன? எதற்காக இந்த கதையுடன் ஆரம்பிக்கிறார்கள்? என்ற கேள்வியுடனேயே கதைக்குள் நுழைந்தேன். முதல் 9 பக்கங்களை இணைக்கும் புள்ளி எது என்றே கதையை படித்துக் கொண்டே சென்றால் கடைசி பக்கத்தில் முடிச்சை போடுகிறார்கள். வண்ணக் கலவை அள்ளுகிறது. ஒரு ஹாலிவுட் படம் பார்த்த ஒரு feeling.. மைக் ஹெமராக ப்ரூஸ் வில்லிஸ் மற்றும் மேல் கிப்ஸன் கலந்த கலவையாக உருவகப் படுத்திக் கொண்டு படித்து முடித்தேன். சில இடங்களில் ஓவர் சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. இவனா இருக்குமோ? அவனா இருக்குமோ? என்று சென்று கொண்டே இருந்த சஸ்பென்ஸ் இவனா? அவனா? இவனா? அவனா? என்று பக்கத்துக்கு பக்கம் மாற துவங்கியதும் பக்கங்கள் பறந்தது. 66 ஆம் பக்கத்தில் ஆரம்பித்த ஆக்ஷன் அதகளம் கடிகார முட்களை கட்டி போட்டு கடந்து சென்றது போல் இருந்தது.
கதைக்கு 9/10 மேக்கிங்கு 10/10
பகை பல தகர்த்திடு மற்றும் மரணம் சொன்ன இரவும் கதையில் உள்ள ஒற்றுமை பிரியமுடன் ஒரு போராளியின் இருக்காது என்று நம்பிக்கையுடன் ஜாகோரை நாடி செல்கிறேன்..
பகை பல தகர்த்திடு - செமையான தல கதை. சித்திரங்கள் சுமார். ஆனால் கதை தெறி ரகம். வழக்கம் போல நண்பருக்காக உதவச் செல்லும் தல சில பல பிரச்சினைகளில் சிக்கி மீளும் கதை தான். ஆனால் கிளாடியோ நிஸ்ஸியின் பரபரப்பான சம்பவங்களால் விறுவிறுப்பாக நகர்கிறது கதை. லோ லாவை ஜானி பட்லருடன் நானும் நேசிக்கின்றேன். டைகர் பாணியில் ஒரு டெக்ஸ் கதை.ஜிம்மியாய் கார்சன். டெக்ஸ் -கார்சன் உரையாடல்கள் மற்றும் இருவரின் வீரச் சண்டைகள் பக்கங்களை பரபரவென்று புரட்ட உதவுகின்றன. தலயின் 75 ஆண்டிற்குப் பெருமை சேர்க்கும் கதை இது. மொழிபெயர்ப்பு சொல்லவும் வேண்டுமா என்ன ? சிறப்பான கதைக்கு சிறப்பான மொழிபெயர்ப்பு.அட்டைப் பழம் அழகோ அழகு.
ReplyDeleteநானும்.
ReplyDeleteஎங்கள் சங்கத்தை பற்றிய ஆசரியரின் வரிகள் "கிர்கிர்" ஆக்கினாலும் மற்ற விடயங்கள் செம மகிழ்வாய் அமைந்து உள்ள காரணத்தால் அதனை மறந்து விட்டும் ,மன்னித்துவிட்டும் இந்த கூதுகலத்தில் எங்கள் போராட்ட குழுவும் இணைந்து கொள்கிறது..செம மகிழ்ச்சி சார்..வெற்றி நடை போடட்டும்...
ReplyDeleteஎன்ன தலைவரே அம்புட்டு தானா.
Deleteதலைவன் எவ்வழியோ, அவ்வழியே எங்களதும்.
Delete:-)))
Deleteவழக்கம் போல காமிக்ஸ் உலக மெகா ஸ்டார் டெக்ஸ் என மீண்டும் மீண்டும் விற்பனையில் காட்டியுள்ளார் டெக்ஸ் எனும்போது மனம் குத்தாட்டம் போடுகிறது.....💃💃💃💃💃💃
ReplyDeleteஅதகளமான விற்பனை தொடரட்டும் சார்.....
ReplyDeleteசென்றாண்டுக்கும் சேர்த்து கிட்டங்கி காதலர்கள் கொஞ்சம் சிறகடிகடிக்கட்டும்...
ஜம்பிங் ஸோகோர் காட்டும் விற்பனை ஆச்சர்யபடவைக்கிறது...
ReplyDeleteஅடுத்த இளம் நாயகர் உதயமாகிட்டாருனு புரிகிறது...
கலக்கிவரும் ஜம்பிங் ஸோகோர் பேரவைக்கு வாழ்த்துகள்....🌹🌹🌹🌹🌹🌹
@STV ji..😍😘🙏
Delete*வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி* என்பதுபோல
தங்கள் வாழ்த்துக்களை ஸாகோர் பேரவைக்கு வழங்கியதற்கு பேரவையினர் சார்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏💐🌷❤💜😘😘
"ஜம்பிங் ஸோகோர் காட்டும் விற்பனை ஆச்சர்யபடவைக்கிறது...
Deleteஅடுத்த இளம் நாயகர் உதயமாகிட்டாருனு புரிகிறது..."
இது சிறந்த விசயமே.
49th
ReplyDeleteமரணம் சொன்ன இரவு..
ReplyDeleteஅட்டைப்படம் ஆங்கில நாவல் இதழை போல ..திரைப்பட போஸ்டரை போல கலக்குகிறது...கதையும் ஆக்ஷன் க்ரைம் என பட்டாசாய் பரபரக்கிறது...குறை ஏதும் இல்லை ..ஆனாலும் எனக்கு மட்டும் ஏனோ இந்த பெயிண்டிங் டிராயிங் போல படிக்கும் சித்திரக்கதைகள் மட்டும் கோட்டாவியங்களில் மனதினால் உட்புகுவது போல போக முடிவதில்லை.. மற்றபடீ புது நாயகரும் கதையும் ஓகே ...
பகை பல தகர்த்திடு...
ReplyDeleteஅட்டகாசமான அட்டைப்பட சித்திரம் ..ஆனால் கதையிலோ வேறு பாணி சித்திரம்.. என்னடா நம்ம விங் கமாண்டர் ஜார்ஜ் ஓவிய பாணியில் நமது டெக்ஸ் வருகிறாரே என்று யோசித்தபடியே தான் கதைக்குள் மெல்ல மெல்ல நுழைய நேர்ந்தது...ஆனால் பக்கங்கள் செல்ல செல்ல அந்த ஓவியபாணியும் நம்மை கதை களனுக்குள் நுழைத்துக்கொள்ள வழக்கம் போல பரபரவிறுவிறு தான்...இதோ ஒண்பது மணிக்கு ராத்தூங்கம் போடும் நான் கதையின் விறுவிறுப்பில் இப்பொழுது கதையை படித்து முடித்து இந்த பதினொரு மணி வாக்கிலும் விமர்சனத்தை எழுத சொல்கிறதே...இதிலியே கதையின் அட்டகாசம் சொல்லவும் வேண்டுமா என்ன...? இந்த கதை கரு இது போல் கதைகளை ஏற்கனவே படித்துள்ளோம் தான்..ஆனால் கதைகளனும் சரி ,அதிரடி சாகஸ களனும் சரி டெக்ஸ் அதில் மீண்டும் நுழைந்தால் அதிரிபுதிரி தான் என்று மீண்டும் நிரூபித்த சாகஸமே இந்த பகை பல தகர்த்திடு...
டெக்ஸ்ன் ஆரம்பமே அட்டகாசமாய் ஆரம்பித்து வீறு நடை போட்டுள்ளது...அடுத்த டெக்ஸ்ன் சாகஸத்திற்கு மீண்டும் ஆவலுடன் காத்திருக்கிறேன்..
"பதுங்குகுழித் தலீவரும், ரவுண்டு பன் செயலருமாய் சங்கமென்று ஒன்றை நடத்தி வந்ததை....சாரி..சாரி..கைத்தாங்கலாய் உருட்டி வந்ததை,"
ReplyDeleteதலைவரே,
இதுக்கு மேலே நாம பொறுமையா இருக்கக் கூடாது.
பொங்கி எழுங்க.
நாமளு யூததுன்னு காமிச்சு ஆகணும். சீக்கிரமா ஒரு மடல் வரைங்க. நிறைய பொறுப்பாளர்களை மாவட்டம் மாநிலம் நாடு கண்டம் வாரியா நியமிங்க.
செவ்வாய் கிரகத்தை கூட விட்டு வைக்க கூடாது. அங்கையு நம்ம பேனரை நடுறோம். நம்ம கொடியை பறக்க விடுறோம். நம்ம மானத்தை காப்பாத்துங்க தலைவரே.
🙏👍💪💪
Deleteவாருங்கள் எங்கள் முன்னோடியே..
😘
தோ - காய போட்ட நிஜாரை எடுத்துக்கினு தலீவர் வேப்பிலை பறிக்க கிளம்பிடுவார் ! இன்னிக்கி எத்தினி பேரு கிறுகிறுத்து குப்புற கிடக்க போறாங்களோ ?!
Delete/நாமளு யூததுன்னு காமிச்சு ஆகணும். சீக்கிரமா ஒரு மடல் வரைங்க. நிறைய பொறுப்பாளர்களை மாவட்டம் மாநிலம் நாடு கண்டம் வாரியா நியமிங்க.
Deleteசெவ்வாய் கிரகத்தை கூட விட்டு வைக்க கூடாது. அங்கையு நம்ம பேனரை நடுறோம். நம்ம கொடியை பறக்க விடுறோம்.//
ROFL
இவுக நம்மளை வச்சு சீரியஸா பேசுறாங்களா இல்ல காமெடி கீமெடி பன்றாங்களா ..ஒண்ணுமே புரிலயே...:-(
Deleteதலைவரே,
Deleteஇதெல்லாம் ஒரு விசயமா. இப்பத்தான் நாம துடிப்பா இருக்கோம். அப்படியே ஸ்டெடியா இருப்போம். நீங்க ரூட்டு மட்டும் சொல்லுங்க.
முதியோர் சங்கத் தலைவர் தலீவர் தாரமங்கலம் பரணிதரனை வைச்சுகிட்டு என்ன கனவு இது? கலாம் கனவு காண சொன்னாருங்கறதுக்கா இப்படியா? தலீவரு எதுக்குமே சரிப்பட மாட்டாருங்க.
Deleteஇந்த மாத புக்ஸ் unboxing
ReplyDeletehttps://youtu.be/NVqCCJ3qQ-A
அட !!
Deleteகிரி,
Deleteநல்லா இருக்கு.
மெபிஸ்டே மந்திர மண்டலம் ஸ்பெஷல் புக் சர்ப்ரைஸ்ஸா போட்டிருந்தா சென்னை புத்தகக் கண்காட்சி இன்னமும் களை கட்டியிருக்கும். அவுட் ஆஃப் ஸ்டாக் ஆகியிருக்கும்.
ReplyDelete+101
Deleteபெட்டி வந்தும் வேலை பளு காரணமாக இன்னும் கைப்பற்ற முடியவில்லை. அதுவும் அடுத்த வாரம் தான் முடியும். ஏற்கனவே டிசம்பர் இதழ்களையே இன்னும் படிக்கவில்லை
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDelete.ஸாகோர் பேரவைக்கு வாழ்த்துக்கள் .ரம்மி ஜியின் சீரிய ஆலோசனையில் ஸாகோர் தங்கத்தலைவராக மின்ன வாழ்த்துக்கள் .கரூர் ராஜசேகரன்
ReplyDeleteபுத்தக காட்சி விற்பனை நிலவரம் உற்சாகமுட்டுகிறது
ReplyDelete82வது
ReplyDeleteவேதாளரை தவிர மற்ற மூன்று ( வி காமிக்ஸ் ) இதழ்களையும் வாசித்தாயிற்று...மூன்று இதழ்களுமே ,கதைகளுமே ஏமாற்றம் அளிக்காமல் சிறப்பாகவே அமைந்து உள்ளது..
ReplyDeleteவேதாளரை பொறுத்தவரை இனி உறங்கும் ஒரு நாளைக்கு ஒரு கதையாக பத்துநாட்கள் கழிக்க உத்தேசம்..
மொத்தத்தில் சனவரி மாதம் ஒரு சர்க்கரை மாதம்...
(Pazhaya) ThaleevarE :-) Vedhaalar - 2 is super fast. OrE naaLla mudichuruveenga paarunga. Max 2 days.
Delete:-))
Deleteபழைய தலீவரா
என்ன கொடுமை இது செயலரே...:-((
அரதப்பழம்பீசு தலீவரேங்கறது தான் சரி.
DeleteMike Hammer was unexpected. Fantastic art work. Story was like a bullet Train. Welcome Mike hammer
ReplyDeleteஅடி தூள்ன்னு சொல்றீங்க.
Deleteடியர் எடிட்டர், ஸாகோரின் ஆயுதம் கோடரி/கோடாலி இல்லை. அது ஒரு கற்கதை/ கல்கதை. புராணங்களில் வரும் கதை/ கதாயுதம் போல ஒரு கல்லை கதை போல் கம்பில் கட்டி பயன்படுத்துகிறார். தோரின் ஆயுதம் போலவேயிருப்பதால் சுத்தி (Hammer)என்று சொன்னால் கூட பொருத்தமாக இருக்குமே. படங்களிலும் இது தெளிவாகவே தெரிகையில் யாரோ ஸாகோரை நையாண்டி செய்ய பயன்படுத்திய கோடாலி என்ற வார்த்தையை உத்தியோகபூர்வமாகவே இன்று பயன்படுத்துவது அவ்வளவு நன்றாக இல்லை.
ReplyDeleteயோசிக்க வேண்டிய விசயம் தான்.
Deleteஇந்த மாதிரி ஒரு ரகளையான புத்தக திருவிழா நேரத்தில் இந்தியா வந்து கலந்து கொள்ள வேண்டும் எடிட்டரை நண்பர்கள் பலரை நேரில் சந்தித்து மகிழ வேண்டுமென்று கிட்டத்தட்ட 7-8 ஆண்டுகளாக ஆசை. இந்த முறையும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. என்றாவது கண்டிப்பாக வருவேன்.
ReplyDeleteவருக..வருக.....நண்பரே
Deleteகாலம் கனியும் தோழரே.
DeleteEBFக்கு வரத் திட்டமிடுங்கள் சகோ!!
Deleteஆமாம் அபி ஈரோடு புத்தக விழா வர திட்டமிடுங்கள்.
Deleteநன்றி நன்பர்களே🙏, கண்டிப்பாக முயற்சிக்கிறேன்🥰
Deleteசென்னைப் புத்தக விழாவில் நமது காமிக்ஸ் விற்பனை நிலவரம் மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது. நன்றி புனிதமனிடோ.
ReplyDelete***** பிரியமுடன் ஒரு போராளி **** V-காமிக்ஸ் ******
ReplyDeleteகதாநாயகன் : சித்திரங்கள்
கதாநாயகி : கெண்ட்ரா
சைடு கதாநாயகன் :கோடாலி மாயாத்மா
முதல் நான்கைந்து பக்க 'கதை சொல்லும் நிழல் மனிதன்' மொக்கைக்குப் பின்னே காட்டுக்குள் வேகமெடுக்கிறது கதை!! கதையின் நாயகி கெண்ட்ராவை கோடாலி மாயாத்மா தேடிவர, அதேசமயத்தில் கெண்ட்ராவை வேறு சில கும்பல்களும் கொல்ல முயற்சிக்க, தன் வழக்கமான பாணியில் தாவிக்குதித்து சாகஸம் செய்து காப்பாற்றுகிறார் நம் கோ.மா! இந்தக் களபேரங்களில் கதை திடுதிப்பென தன் இறுதிப் பகுதிக்கு வந்துவிட, கெண்ட்ரா யாரென்பது தெரியவரும்போது 'பார்ர்ரா' என்று ஆச்சரியத்துடனும், தக்கணூண்டு மென்சோகத்துடனும் கதை முடிகிறது!
உயர்வானதொரு நோக்கத்திற்காக தன் உயிரையும் பணயம் வைத்த கெண்ட்ராவின் கதாபாத்திரம் மனதில் நிற்கிறது!! ஸாகோர் பகலில் இரு சாகஸங்களையும், இரவில் ஒரு சாகஸத்தையும் (ஹிஹி) நிகழ்த்திவிட்டு இறுதியில் கண்ணீரும் கம்பலையுமாக நடையைக் கட்டுகிறார்!
சித்திரங்கள் - வேற லெவல்!! கொஞ்சம் 'தலையில்லாப் போராளி'யின் சாயல் தெரிகிறது! ஆக்ஸன் காட்சிகள் துள்ளலாக அமைந்து அசத்துகிறது!
அட்டைப்படமும், புத்தத்தின் வடிவமைப்பும் சிக்கென்று அமைந்து அழகூட்டுகிறது! முதல் இதழ் வண்ணத்தில் வந்திருக்கலாமோ என்ற எண்ணம் எழுவதை மட்டும் தவிர்க்கமுடியவில்லை!!
ஒரு கமர்ஷியல் ஹிட்டுடன் தன் பயணத்தைத் தொடங்கியிருக்கும் V-காமிக்ஸ் இனிவரும் காலங்களில் பல புதுமைகளைப் புகுத்திப் புல்லரிக்கச் செய்திட நம் வாழ்த்துகள்!!
9/10
கோ. மா என்றால் கோடாலி மாமா வா e.vi ji.
Delete///கோடாலி மாமா ///
Deleteஹா ஹா!! இதுகூட நல்லாத்தானிருக்குங்க sridharan ji! :)))
ஸாகோர் வெற்றியைப் காத்து ரொம்பப் பொகை விடற மாதிரி தெரியுதே? ஒரு வேளை யங் ஹீரோஸை இவங்களை மாதிரி ஏஜ்ட் பார்ட்டிக்கெல்லாம் பிடிக்காதோ? இப்பவே இப்படின்னா ஜாகோர் vs டெக்ஸ்ல டெக்ஸை தர்ம அடி வாங்கறதைப் பாத்ததுக்கப்பறம் என்ன ஆகப் போறாங்களோ.
Delete///இப்பவே இப்படின்னா ஜாகோர் vs டெக்ஸ்ல டெக்ஸை தர்ம அடி வாங்கறதைப் பாத்ததுக்கப்பறம் என்ன ஆகப் போறாங்களோ.///
Deleteஒரே அடியில சாச்சிபுட்டான் மச்சான் னு டெக்ஸ் விழுந்து கிடக்கிறது பரிதாபமாத்தான் இருக்கு..!
இவங்க ரெண்டு பேருக்கும் எதுக்கு சண்டை வந்திருக்கும்...!? ம்ம்ம்.... ஒருவேளை பனியன்ல போட்டிருக்குற கழுகு பொம்மை காரணமா இருக்குமோ.? ஸாகோர் பனியன்ல இருக்குறது கழுகு இல்ல.. வவ்வாலுன்னு டெக்ஸ் கிண்டல் பண்ணியிருப்பாரோ.!?
///கோடாலி மாமா ///
Deleteஇப்பவே பாசமா நா கூப்பிடுறேன்.
///ஸாகோர் வெற்றியைப் காத்து ரொம்பப் பொகை விடற மாதிரி தெரியுதே?///
Deleteமுன்னே 'கேப்டன் டைகரு.. கேப்டன் டைகரு'ன்னு ஒருத்தர் இருந்தார். தல'க்கு ஈடிணை ஆகமுடியாதுன்னாலும் ஏதோ கொஞ்சம் ட்ஃப் கொடுத்திட்டிருந்தார்ன்றது உண்மை தான்!. ஆனா இப்போ வந்த நண்டுசிண்டுகளை எல்லாம் தல'க்கு போட்டியா எடுத்துக்கிடவே முடியாது. தல அடிவாங்கிச் சரிவதும் கூட அவரோட சாகஸத்துல ஒரு பார்ட்தான்றதை விரைவிலேயே நீங்கள்ல்லாம் பாக்கத்தானே போறீங்க?!!
மைக் ஹேமர் xiii போலவோ, லார்கோ விஞ்ச் போலவோ ஈர்க்கவில்லையே சார்.சித்திரபாணியும் தான்.மிகப்பழைய ஆல்பமா இது
ReplyDeleteஆமாம் சார். ஓவியமும் சரி, கதையும் சரி ஈர்க்கவில்லை எனக்கும்.
Deleteஇது போல் பெயிண்ட் ட்ராயிங் சித்திரகதைகள் காமிக்ஸ் இதழை படிக்கும் திருப்தி அளிப்பதில்லை என்பது உண்மை..
Delete1982 it seems as per Google..
Delete//ஆமாம் சார். ஓவியமும் சரி, கதையும் சரி ஈர்க்கவில்லை எனக்கும்.//
Deletesame feeling ..
பகை பல தகர்த்திடு
ReplyDeleteஓவியங்கள் ரொம்பவே சுமார். அதனால் கதையோடு என்னால் ஒன்றவே முடியவில்லை.
ஆங்கில தினசரியில் நம் முத்து, லயன், v காமிக்ஸ் பற்றிய கட்டுரை எழுதியவர்
ReplyDeleteயாருங்க...?
https://www.linkedin.com/in/kamini-mathai-99b035200/?originalSubdomain=in
Delete@Easwar ji..
DeleteTOI ல் நமது லயன் முத்து காமிக்ஸ் பற்றிய கட்டுரை எழுதியவர் நமது வாத்தியார் பல்லடம் சரவணகுமார் ஜி..😍😘👍💪
Very useful & informative..😍😃👍
மனதை மகிழச் செய்த பதிவு, லயன் Comics வெற்றியை வாசகர்களாகிய நாங்கள் குடும்ப வெற்றியாகவே கொண்டாடி மகிழ்வோம்
ReplyDeleteபிரியமுடன் ஒரு போராளி :
ReplyDeleteV காமிக்ஸின் முதல் சிக்சருக்கு வாழ்த்துகள்.!
ஸாகோர் கதைகளின் மிகப்பெரிய பலமே சித்திரங்கள்தான்.. அது இந்தக் கதையிலும் நிரூபணமாகிறது.! கென்ட்ரா சிற்றோடையில் குளிக்கும் காட்சியில் அந்த அழகுநங்கையின் பிம்பம், நீரீல் அத்தனை தத்ரூபமாக வரையப்பட்டு இருக்கிறது.! குதிரை நீர் அருந்தும் காட்சியிலும் அப்படியே...! கென்ட்ரா சொக்க வைக்கும் அழகி என்று வசனத்தில் சொன்னால் போதாதென்று வதனத்திலும் சொல்லியிருக்கிறார்கள் வரைந்து.! ஓவியர் ஃப்ரெக்கெரி.. செதுக்கியிருக்கிங்க சார்.!
கதையும் சோடைபோகவில்லை... 64ஏ பக்கங்களுக்குள் எத்தனை ட்விஸ்ட்டுகள்.. எதிர்பாராத நிகழ்வுகள்.. அருமை.!
கென்ட்ரா ஸாகோரை ஏமாற்றித் தப்பிச்செல்வதாக நினைத்தால்.. இல்லையில்லை.. கென்ட்ரா தப்பிச்செல்ல வேண்டுமென்பதே ஸாகோரின் திட்டம்தான் என்று ட்விஸ்ட் வைக்கிறார்கள்..!
கென்ட்ரா சாதாரண திருடி என்று நினைத்தால்.. பக்கங்களைப் புரட்டப் புரட்ட ஒவ்வொரு குற்றமாக ஏறிக்கொண்டே போகிறது..!
இறுதியில் ஸாகோருக்கும் கென்ட்ராவுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் நெகிழ்வாக இருக்கிறது..!
மொத்தத்தில் 64ஏ பக்கங்களில் நிறைவானதொரு.. (ஆக்சன் + சென்டிமென்ட் + கிளுகிளுப்பு + விறுவிறுப்பு அத்தனையும் நிறைந்த) சித்திர விருந்து.!
பத்திரிக்கையாளர் ராஜர் ஒவ்வொரு தினமும் கேட்கும் கதை நமக்கு ஒவ்வொரு ஆல்பமாக வெளிவர இருப்பதில் மகிழ்ச்சி.! ஒருவேளை கதை சொல்லும் நபர் சாட்சாத் ஸா-கோர்-டி-நே என்கிற இருள்வனத்து மாயாத்மா என்கிற பாட்ரிக் வைல்டிங் தானா.!?
V. காமிக்ஸில் அடுத்து வரவிருக்கும் மிஸ்டர் நோ வின் விளம்பரமே ஆர்வத்தை கிளப்புகிறது.! அமேசான் காடுகளில் அவர் செய்யவிருக்கும் சாகசங்களுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.!
அருமையான விமர்சனம் கண்ணா.
Deleteஅடுத்த V காமிக்ஸ்க்கு ஆவலுடன்.
மிஸ்டர் நோ உடன் அமேசான் காட்டுக்குள் பயணம் போக நானும் ரெடி
ஆப்பிரிக்க கானகத்தில் சாகசம் செய்யும் வனரேஞ்சர் ஜோவின் கதைகளை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது குமார்..! ஆனா உருவாக்கப்பட்டதே ரெண்டு கதைகள்தாம் (புதைய வேட்டை+யானைக் கல்லறை & சிறுத்தைகள் சாம்ராஜ்யம்) என்று என்னுடைய ஆனந்தத்தில் அரைலோடு ஜல்லியைக் கொட்டிவிட்டார்கள்.!
Deleteஇப்போது கிட்டத்தட்ட அதே பாணியில் இன்னொரு தொடரைப் பார்த்ததும் குதூகலமாக இருக்கு குமார்..😍😍😍
உண்மை தான் கண்ணா உங்களுக்கு மட்டும் அல்ல இன்னும் பல நண்பர்களுக்கு பிடித்த தொடர் அது. ஒரு கலர் reprint வேண்டும். காலத்துக்கும் என்னுடன் வைத்துக் கொள்ள. எடிட்டர் சார் மனது வையுங்கள் சார்.
Delete////வனரேஞ்சர் ஜோவின் கதைகளை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது குமார்..! ஆனா உருவாக்கப்பட்டதே ரெண்டு கதைகள்தாம் (புதைய வேட்டை+யானைக் கல்லறை //
Deleteநண்பர்களுக்கு,
இது மிகவும் அற்புதமான கதை. Must read புத்தகங்களில் இதுவும் ஒன்று.
ரீ-பிரிண்ட் வந்தால் நலமே.
//(புதைய வேட்டை+யானைக் கல்லறை & சிறுத்தைகள் சாம்ராஜ்யம்) ஒரு கலர் reprint வேண்டும். காலத்துக்கும் என்னுடன் வைத்துக் கொள்ள. எடிட்டர் சார் மனது வையுங்கள் சார்.//
Delete+123456
விஜயன் சார், சென்னை புத்தகத் திருவிழா விற்பனை அதகளம் என்ற செய்தி மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. மீண்டும் மக்கள் புத்தகங்கள் மீது அதுவும் நமது காமிக்ஸ் மேல் மீண்டும் காதல் கொண்டு படையெடுத்து வருவது மகிழ்ச்சியை தருகிறது. இன்று போல் இந்த புத்தகத் திருவிழா முழுவதும் விற்பனை சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteஇன்றைய சென்னை புத்தகத் திருவிழா நிகழ்வுகளை பற்றி நண்பர்கள் யாராவது சொல்ல முடியுமா?
ReplyDelete8.1.2023 CBF ல் சாரைசாரையாக பல்லாயிரகணக்கான பொதுமக்கள் வருகை புரிந்தனர்.👍 ஒவ்வொரு ஸ்டாலிலும் சரியான கும்பல். சென்னை ரங்கநாதன் தெருவில் செல்வது போல் தோன்றியது.
Deleteநமது ஸ்டால் பலாப்பழத்தை ஈ மொய்ப்பதுபோல வாசகர்களும், ரசிகர்களுமாக களை கட்டியது.😘
நிறை:
பார்க்க வாய்ப்பில்லாமல் முகநூல்/Whatssappல் பேசி பழகிய பல நண்பர்களை நேரில் கண்டு அளாவளாவியது அஜித் தேவயானி காதலை நினைவூட்டியது.😍😘😘
எடிட்டரை நேரில் சந்தித்து Zagor புத்தகங்களில் கையெழுத்து வாங்கியது பெரிதும் மனநிறைவை தந்துள்ளது.😍
சிறுசிறு குறைகள்:
CBF முழுக்க Network சரியாக கிடைக்காததால் கார்டு/Gpay மூலம் பணம் செலுத்தமுடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிபட்டதை பார்க்கமுடிந்தது.😏
நமது ஸ்டாலில் சின்னஞ்சிறு குறை :
ATM /Credit card swiping machine இல்லாததால் சிறு தடுமாற்றம் நமது வாசகர்களிடம் காணப்பட்டது. அடுத்தமுறை எடிட்டர் மனது வைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
@ pfb..
DeleteNetwork problem தால் பத்து ஸ்டால் தள்ளி புத்தகம் வாங்க போன எனது மகளை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள இயலாமல் காணாமல் போய்விட்டாள் எனகருதி BABASI ஆபிஸ் சென்று மைக்கில் *காணவில்லை* அறிவிப்பு செய்து கண்டுபிடித்தது தனிக்கதை.😃😍
(நான் என்ன சின்னபுள்ளையா காணாமல்போக, மைக்கில் announce செய்து மானத்தை வாங்கிவிட்டாயே என்று என் மகள் என் குமட்டில் குத்தியது பாசக்கதை😃😃😀)
##ஒரு தகப்பனுக்குதானே தெரியும் எவ்வளவு வளர்ந்தாலும் மகள் தனக்கு சிறு குழந்தைதானே## 😍😘😘
அருமையான தகவல்களுக்கு நன்னிகள் ஜம்ப்பிங் தலீவரே!!
Deleteஇரண்டு-மூன்று வருடங்களுக்கு முன்பு TMBன் ஒரு POS swiping machine ஐ நம் அண்ணாச்சி புத்தகத் திருவிழாக்களில் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேனே?!! அது என்னாச்சுன்னு தெரியலியே?!!
அது சும்மா குந்திக் கிடந்த மாதங்களெல்லாம் ரூ.1400 வீதம் வாடகைக்கு வெடி வைத்து விட்டு, இப்போது வேலை செய்ய வேண்டிய வேளையில் காலை வாரிப்புடிச்சி ! புதனன்று புது மிஷின் இருக்கும் !
Delete(நான் என்ன சின்னபுள்ளையா காணாமல்போக, மைக்கில் announce செய்து மானத்தை வாங்கிவிட்டாயே என்று என் மகள் என் குமட்டில் குத்தியது பாசக்கதை😃😃😀)
Delete##ஒரு தகப்பனுக்குதானே தெரியும் எவ்வளவு வளர்ந்தாலும் மகள் தனக்கு சிறு குழந்தைதானே## 😍😘😘
உண்மைதான் நமது அம்மாவுக்கு நாம் எப்படி சிறு குழுந்தைகளே அதேபோல் நமக்கு நம் குழந்தைகள் எவ்வளவு வளர்ந்தாலும் குழந்தைதான் ( இதில் ஒரு அட்வாண்டேஜ் என்னவென்றால் அவர்களை குழந்தையாக நினைத்தால் தான் நாம் வாலிபனாக இருக்கலாம்)
அருமையான அப்டேட்ஸ் கோடாலி பாபுஜி 😘😘😘
DeleteThanks for the detail update @Shribabu
Deleteஇளவரசர்&k.o.k.அந்த சும்மனாச்சும் மயங்குன மாதிரி நடிச்சேன் விட்டுட்டீங்களே.phandom Kumar. Welcome. விளக்கம் அருமை .கரூர் ராஜசேகரன்
ReplyDelete////சும்மனாச்சும் மயங்குன மாதிரி நடிச்சேன் விட்டுட்டீங்களே///
Deleteஆமாங்க ராஜசேகர் ஜி!! எசகுபிசகா ஏமாந்துபோவது - அப்புறம் 'எனக்கு தெரியும்.. நான் மயங்கினமாதிரி சும்மா நடிச்சேன்'னு சமாளிக்க வேண்டியது!! நான்தான் ஏற்கனவே சொல்லியிருக்கேனே.. 'ஆசாமிக்கு மேல் மாடி காலி'ன்னு!! ;)
Sir - can we increase V comics to 2 albums a month? :-)
ReplyDeletePossible sir :-)
DeleteIf postal services were reliable, sending books would not be a big expense !
DeleteSir - can we increase V comics to 2 albums a month////
DeleteI second it....💪💪💪💪💪
அடடே மாதம் ரெண்டு V காமிக்ஸ். கேட்கவே ரொம்ப நல்லா இருக்கே.
DeleteNot at this moment. Vikram must act independently. He must contribute directly.
DeleteEither he should translate himself or edit other's translations( not those working with lion) that suit his taste. He must be given a separate office or home office . He must decide every issue's matters. He must write hotline in his own style.v comics should be his signature edition and youthful and different.he should not tread upon his father's footprints. He will definitely succeed with his own talent and style .
Editor sir must not interfere with his creativity and let bright future unfold for him with his contributions.
Number of V comics at this stage should not be a burden for him at this early stage.
2 issues per month? Perhaps in 2025 or so.
Wish him good luck.
சூப்பரா சொன்னீங்க செனா அனா!!
Deleteசெனா அனா@ +1....
Deleteமாசம் 2 V காமிக்ஸ் +1....
ஆஹா ரெண்டுமே காலத்தின் தேவை...
//2 issues per month? Perhaps in 2025 or so.//
DeleteTrue... This price tag, 12 issues with special edition enough at this moment.
ஆஹா...சூப்பர்....
Deleteஉங்களின் பார்வை அற்புதமாக இருக்கிறது. விக்ரம் தானே சுயமாய் அனைத்து காரியங்களையும் செய்ய நானும் ஆசைப்.படுகிறேன்.
DeleteV காமிக்ஸ் இன் ஒவ்வொரு அசைவிலும் அவரது ஆளுமை வெளிப்பட வேண்டும் நமது எடிட்டர் ஐயாவின் வழி காட்டுதல் இருந்தால் நலமே..
சார் நேற்று சிறிய பதிவாக போட்டதால் இன்று ஒரு நெடும் பதிவு இடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteஅதும் பதிவிட நிறைய விசயங்கள் இருக்கும் இப்போது, அந்த YouTube video இந்த மாத புத்தகங்களை உங்கள் பார்வையில் காண ஆவலுடன்.
ஆரம்பிக்கலாமா சார்?
///சார் நேற்று சிறிய பதிவாக போட்டதால் இன்று ஒரு நெடும் பதிவு இடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்///
Deleteஆமா
ஆமா
ஆமா
ஆமா
ஆமா
பிரியமுடன் ஒரு போராளி
ReplyDeleteawesome making... நேர்கோட்டு கதை.. ஏகப்பட்ட twist கள்.. 60 பக்கங்களில் ஒரு விருந்து... இந்த மாதம் வந்த டெக்ஸ், சாகோர் மற்றும் மைக் கதைகளில் எதை முதலில் படிக்கிறீர்களோ அது உங்களை ஆச்சரியப்பட வைக்கும்.. இரண்டாவது படிக்கும் புத்தகம் அது எதுவாக இருந்தாலும் முடிவு அதுவா இருக்க கூடாது என்று யோசனையுடனேயே படிக்க வைக்கும். மூன்றாவது புத்தகம் இந்த கதையும் அதே தான் என்பது போல் முடிந்து நிற்கும். ஏறக்குறைய மூன்று கதைகளுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. சில பல காரணங்களால் வித்தியாசப் பட்டு நிற்கிறது. அவ்வளவே.
கதை 10/10
making 10/10
////இந்த மாதம் வந்த டெக்ஸ், சாகோர் மற்றும் மைக் கதைகளில் எதை முதலில் படிக்கிறீர்களோ அது உங்களை ஆச்சரியப்பட வைக்கும்.. இரண்டாவது படிக்கும் புத்தகம் அது எதுவாக இருந்தாலும் முடிவு அதுவா இருக்க கூடாது என்று யோசனையுடனேயே படிக்க வைக்கும். மூன்றாவது புத்தகம் இந்த கதையும் அதே தான் என்பது போல் முடிந்து நிற்கும். ஏறக்குறைய மூன்று கதைகளுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.///
Deleteவித்தியாசமான பார்வைக் கோணம் - ஆச்சரியப்பட வைக்கிறது உங்கள் எழுத்து!!
செயலரே…இது நம்ம திருவண்ணாமலை சுரேஸ் சார்
Deleteமூன்றிலும் அழகுப் பெண்களின் ஆதிக்கம் அதிகம்.
DeleteThanks friends
DeleteThis month tex was a nice story. artwork is not great, but good story line and action
ReplyDeleteஅப்பாடா!! இப்பத்தான் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு!!
Deleteஇன்னொரு முறை சொல்லுங்க டாக்டர் 💃💃💃💃💃
Deleteவிக்ரம் நேரமே கிடைக்கலை...ஓட்டம்....
ReplyDeleteசாகோர் கதை வேகம்...விறுவிறுப்பு....சூப்பர்...ஆனா சட்டுன்னு முடிஞ்ச உணர்வு ....இதை ரசிக்கும் நண்பர்களும் அதே போல் வேகமா முடிவதை விரும்பினால் அருமை....கடவுளின் படைப்பில் நிறங்கள் தாம் அதிகமாச்சே...ஒவ்வொருவர் ஓர் நிறத்தை விரும்புவதில்லையா...வெற்றி நடை தொடர செந்தூரான் என்றும் துணை வரட்டும் வாழ்த்துக்கள்...அடுத்தக் கதைக்காக காடுகளுக்குள் தொலைய ஆவலுடன் வெய்ட்டிங்...வண்ண சிறப்பு மலர் சீக்கிரமா வரட்டும்.சாகோரும் இளம் டெக்சும் ஆவலைத்தூண்டுது....அரையாண்டு மலராய்.. சென்சார் ....சிறுவர்கள குறி வச்சா இன்னும் கூடுதலாக சென்சார் தேவை...
ஜம்பிங் ஸ்டார் பேரவை....ஜம்பிங் ஸ்டார் பேரவை அதகள வெற்றி அருமை...இதே ஆர்பரிப்போடு தொடருங்கள் நண்பர்களே....பழைய தலைவர் கோரிக்கையை மாற்றினால் நலமே....
சார் எப்போ எப்படி எங்கே...சீக்கிரமாவட்டும்
ஆசிரியரின் புதிய பதிவை எதிர்பார்த்து இக்கட வெயிட்டிங் .
ReplyDelete150 .
ReplyDeleteமாலை வணக்கம் நண்பர்களே...
ஜெய் ஸாகோர்..😘😍😘💪👍
ReplyDeleteவெற்றி செய்தியுடன் கூடிய புதிய பதிவுக்காக வெயிட்டிங்..😍😘😘
Ji...Neenga thaan Talk of the CBF..and did a Wonderful Kick Start for Zagor Promotional Activities...Keep Rocking...Waiting eagerly for Editor's Suspense Announcement today...
Deleteஸாகோர் -- ப்ரியமுடன் ஒரு போராளி
ReplyDeleteமுதல் கதை முழு கலரில் வந்ததாலும் கருப்பு வெள்ளையும் அப்படி கவருமா என்ற ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் அருமையான ஓவியங்கள் அந்த குறை தெரியாமல் பார்த்து கொண்டுள்ளது சிறப்பு.
கதையில் ஸாகோரை விட, அதில் வரும் கெண்ட்ரா தான் அனைவரையும் கவருகிறார்.
ஒரு திருட்டு பழி அவர் மீது சுமத்தப் பட அவரை ஸாகோர் தேடி வருகிறார், அவர் ஏன் அந்த திருட்டை செய்கிறார் என்பதை அடுத்தடுத்த பக்கங்களில் எதிர்பாரா திருப்பங்களுடன் அறியும் போது நம் மனதையும் திருடி செல்கிறார்.
அவருக்கு ஏற்படும் முடிவு நம்மையும் சோகத்தில் ஆழ்த்தி விடுகிறது.
முதலில் அழகில் கவரும் இவர் போக போக எல்லாருடைய மனதையும் கவருகிறார்.
படிக்காத நண்பர்கள் வாங்கி படித்து விடவும்.
புத்தகத்தை படிக்காம, இந்த விமர்சனத்தை படிக்காம தாண்டி போறது ரொம்பவே கஸ்டமா இருக்கு. இது என்ன சோதனை.
Deleteதெளிவான, அழகான விமர்சனம்!!
Deleteகாத்திருப்பு ஆரம்பம்.
ReplyDeleteYes. நல்ல சேதி. உற்சாகமான சேதி க்காக வெயிட்டிங். அப்படியே எங்கே எப்போது பாஸ்ட் ட்ராக் பத்தியும் ஒரு நல்ல சேதி 😀
Deleteஆமா ஆமா.
Deleteகாத்திருந்து காத்திருந்து......
ReplyDelete//போனவருசத்து டெக்ஸ்fullஆககொடுங்க //கேட்க கேட்க இனிக்கிறதே.ஸாகோர் பேரவையில். புதிதாக இணைந்த நண்பர்கள் k. O. K.ஜி & ரம்மி. ஜி. முதலாமவர் மாடஸ்டியின்ஸ்லீப்பர்செல் அடுத்தவரோடெக்ஸ் ஸ்லீப்பர் செல்மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுதே . லாலேலாலலலாலா கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி பிரியாடெல்!! :)
ReplyDelete