Powered By Blogger

Wednesday, January 04, 2023

ஒரு ஜனவரிப் படலம் !

 நண்பர்களே,

வணக்கம். இள ரத்தம் ஏதேதோ ரூபங்களில் உட்புகும் காரணமோ என்னவோ தெரியலை, இந்த மாதமே படா பரபரப்பாய்க் கீது !! மண்டைக்குச் சாயம் பூச அவசியமில்லா எடிட்டர் ஒரு பக்கம் ; கோடாரியுடன் காட்டிலும், மேட்டிலும், செம பிரெஷாய் அதிரடி செய்யும் ஒரு இளம் மாயாத்மா மறு பக்கம் ; அப்பாலிக்கா ரெம்போ இயமையான ; துடிப்பான ; செயல் வேகமிக்க ஜம்பிங் ஸ்டார் பேரவையினரின் ஆரவாரம் இன்னொரு பக்கம், என்று தொக்காய் இந்த ஜனவரியில் வாய்த்திருக்க, ஆபீசே கடந்த சில நாட்களாய் அல்லோலம் + கல்லோலம் பட்டுக் கிடக்கின்றது ! அதிலும் இன்றைக்கு தெறி மாஸ் !! Supreme '60s சந்தாக்களுக்கான பிரத்யேக பாக்சில் - வேதாளர் ; டெக்ஸ் ; மைக் ஹாமர் & ஜம்பிங் ஸ்டாரார் என்று உங்களின் கூரியர்கள் பேக் ஆகியது ஆண்டின் முதல் டெஸ்பாட்சுக்கு செம உரமூட்டியதெனில், கிட்டத்தட்ட 200 போன்களில் இன்றைய தினம் முழுக்க நீங்கள் விசாரித்து வந்தது icing on the cake !! புக்ஸ் கைக்குக் கிடைத்த உடனே அதே ஸ்பீடில் வாசிக்கப் போவது எத்தினி பேர் ? 'பொம்ம' பாத்துப்புட்டு தலைமாட்டில் அடுக்கி வைக்கப் போவது எத்தினி பேர் ? பொட்டிகளோடு பரணில் கர்ம சிரத்தையாய் அடுக்கப் போவது எத்தினி பேர் ? என்பதெல்லாம் தெரியலை ; ஆனால் எதிர்பார்ப்பும், உற்சாகமும் கலந்த உங்களின் ஆர்ப்பரிப்புகள், ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் எங்களுக்கு ராக்கெட் fuel ஏற்றிக் கொண்ட மாதிரியான ஒரு high தரத் தவறுவதில்லை ! அதிலும் காதில் கெட்சப் வழியாத குறையாய் நம்மாட்கள் இன்றைக்கு பதில் சொல்லுவதை ரூமுக்குள் குந்தியபடியே கேட்டுக் கொண்டிருந்த போது, அடிவயிற்றில் வண்ணத்துப்பூச்சிகளின் அணிவகுப்பைப் போல ஒரு இனம்புரியா ஜிலீர் உணர்வு !! வீட்டில் உள்ளோரிடம் பேசவே வாட்சப் தான் என்றாகி விட்டுள்ள இன்றைய பொழுதுகளிலும், இந்தச் சிறு காமிக்ஸ் குடும்பத்தினில் நிலவும் அந்த அன்னியோன்யம் மெய்யாலுமே ஆண்டவனின் வரமன்றி வேறேதுமில்லை ! இந்த உற்சாகமும், உத்வேகமும் தொடரும் வரையிலும் வானமும் நமக்குத் தொடும் தூரம் தான் ! Thanks a ton for all the love & support folks !!

சந்தா பேக்கிங்ஸ் ஒரு பக்கத்து ரகளைஸ் எனில், இன்னொரு பக்கமோ சென்னைக்கான கடைசி நிமிட புக்ஸ் பேக்கிங் ; பேனர்கள் ; stationery ; பிரிண்டர் ; கம்பியூட்டர் ; கிரெடிட் கார்டு மெஷின் ; bar code ஸ்கேனர் ; இத்யாதி..இத்யாதி...பேக்கிங் என்று இன்னொரு டீம் அதகளம் செய்து கொண்டிருந்தனர் ! And GPay ; PhonePe மூலமாய் பணம் தரும் நண்பர்களின் பரிவர்த்தனைகளை ஸ்டாலில் அண்ணாச்சியே தெரிந்து கொள்ள ஏதுவாய் ஒரு ஓசை எழுப்பா ஏற்பாட்டையும் ஜூனியர் எடிட்டர் செய்து தந்து விட்டார் என்பது கொசுறுச் சேதி ! "பெறப்பட்ட PayTm தொகை ரூபாய்....." என்று பக்கத்து, எதிர் ஸ்டால்கள் வரைக்கும் கூவிடாமலே, நம்மவர்களுக்கு அந்த நொடியிலேயே தகவல் தந்திடும் இந்தப் புது ஏற்பாடு ! So கூட்ட நேரத்தில் அண்ணாச்சி தடுமாற அவசியங்கள் இராதென்று நினைக்கிறேன் இனிமேல் !முந்தைய பதிவினில் நண்பர் Sowmeyan பதிவிட்டது போல, புத்தகப் பெட்டிகள் காலியாகவும், காலியான கல்லாப்பெட்டி நிறைவாகவும் திரும்பிடும் பட்சத்தில் - இந்தாண்டின் முழுசையும் ஒரு திருவிழாவாக்கி விடலாம் ! தோரணங்கள் கட்ட இருக்கவே இருக்கார்கள் யூத்தான ஜம்பிங் ஸ்டார் அணியினர் !! Fingers on the hands & toes all crossed !!

ஓ..யெஸ்...உங்களின் டப்பிகள் இன்று பின்மதியமே கிளம்பியாச்சு ! கூரியர் நண்பர்கள் மட்டும் உம்ரன் மலிக்கின் பந்துவீச்சு வேகத்துக்கு நிகராய் நாளை பட்டுவாடாக்களை நிகழ்த்தினால், சூப்பரோ சூப்பர் தான் ! அதுக்கோசரம் இன்னொருக்கா fingers crossed ! 

ஆன்லைன் லிஸ்டிங்கும் ரெடிhttps://lion-muthucomics.com/monthly-packs/1056-january-pack-2023.html

இம்முறையும் 4 இதழ்கள் எனும் போது, உங்களின் வாசிப்புகளின் order எந்த வரிசையில் இருக்குமோ என்றறிய ஆவல் ! புக்ஸ் கிட்டிய பின்னே பதிவிடும் போது - உங்களின் பார்வைகளில் எவை - எந்த வரிசையில் உங்களை வசீகரித்தன ? என்பதைக் குறிப்பிடுங்களேன் - ப்ளீஸ் ! Just curious !! 

அப்புறம் அடியேனின் வாசிப்பு வரிசையுடன் ஜனவரி இதழ்களின் அறிமுகங்களோடு, ஒரு குட்டி வீடியோ பதிவும் நமது YouTube சேனலில் வெள்ளி or சனி upload ஆகிடும் ! And இயன்றால், சென்னையின் புத்தக விழாவில் வாரயிறுதிகளில் நமது ஸ்டால் சார்ந்த வீடியோஸ் குட்டிக் குட்டி ரீல்ஸாக ரெடி செய்ய முடிகிறதா என்றுமே பார்க்கலாம் ! ஸ்டால் பிசியாக உள்ள பொழுதுகளில் அங்கிருக்கக்கூடிய நண்பர்கள் சின்னதாய் ஒரு வீடியோ எடுத்து அனுப்பினால் நிச்சயம் உதவிடும் ! 

நமது ஸ்டால் நம்பர்ஸ் 531 & 532 நண்பர்களே ; மறவாது விசிட் அடியுங்களேன் - ப்ளீஸ் ! Bye for now ! See you around !

219 comments:

  1. 2023 ஆம் ஆண்டில் முதல் இடம் எனக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் பொருளாளரே...

      Delete
  2. சென்னை கலை கட்டட்டும் 🥰👍

    ReplyDelete
    Replies
    1. சென்னை களை கட்டட்டும். கிட்டங்கி காலியாகட்டும். விற்பனை பெருகட்டும்.

      Delete
    2. நடக்கும் ... என்று பிரார்த்திப்போம் 👍

      Delete
  3. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  4. இந்த வாட்டி புது வருஷம், ' மைக் ஹேமரோடு'தான் துவக்கம் ..:-)

    ReplyDelete
  5. இந்த வாட்டி புதுவருடம் வழக்கம் போல டெக்ஸோடு தான் துவக்கம்.கரூர்ராஜசேகரன்

    ReplyDelete
  6. ஆசிரியர் சார் உங்க சாய்ஸ் என்ற 30புத்தகங்கள் எந்தமாதிரியான வரிசையில் வரிசைப்படுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. @சக்தி..😃

      நாளை அல்லது சனிக்கிழமை வெளியாகும் நமது Editor Sir ன் Youtube பதிவில் வெளியிடுவதாக எடிட்டர் தெரிவித்துள்ளார்.👍

      Delete
  7. கீழ்க்கண்ட வரிசையில் படிக்க முடிவெடுத்துள்ளேன்.

    1.ஸாகோர்.
    2.வேதாளர்.
    3.மைக் ஹேமர்
    4.தல டெக்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பொருளாளரே..😍😘😘

      வாழ்த்துக்கள்..💐🌷ஆண்டின் முதல் பதிவில் முதல் இடத்தை ஜம்ப் செய்து கைப்பற்றி நாம் ஜம்பிங் ஸ்டார் பேரவையினர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.👍💪😘😍

      Delete
  8. @Edi Sir & Jr.Editor..😍😘🙏

    நமது அண்ணாச்சிக்கு உதவியாக Paytm payment speaker box ஏற்பாடு செய்து கொடுத்தமைக்கு நன்றிகள் Edi Sir🙏

    *ஜம்பிங் ஸ்டார் ஸாகோர் பேரவை*யினரை பதிவில் அவ்வப்போது குறிப்பிட்டு மேலும் மேலும் உற்சாகஜம்பிங் செய்ய வைக்கும் தங்களுக்கு பேரவையினர் சார்பாக கோடானு கோடி நன்றிகள் ..💐🌷🌹😘

    ReplyDelete
    Replies
    1. "கோடாலி" கோடி நன்றிகள்

      Delete
    2. // *ஜம்பிங் ஸ்டார் ஸாகோர் பேரவை*யினரை பதிவில் அவ்வப்போது குறிப்பிட்டு மேலும் மேலும் உற்சாகஜம்பிங் செய்ய வைக்கும் தங்களுக்கு பேரவையினர் சார்பாக கோடானு கோடி நன்றிகள் // பேரவை சார்பாக நன்றிகள் சார்.

      Delete
  9. என் வாசிப்பு வரிசை😍😘:

    1)வேதாளர்😍
    2)ஸாகோர்😘
    3)Tex 💋
    4)ஒலிவாங்கி சுத்தியார் (மைக் ஹேமர்)😃

    ReplyDelete
  10. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  11. உற்சாகம் துள்ளும் பதிவு சார். இதே உற்சாகம் சென்னையிலும் தொடர்ந்து விற்பனை சிறக்க வாழ்த்துக்கள்.

    ரொம்ப நாட்களுக்கு பிறகு இது போல திருவிழா மனநிலையில் உங்களுடைய பதிவு.

    சந்தா சேர்க்கை, புத்தக விழாவிற்கு தயாராவது, நமது V காமிக்ஸ் முதல் இதழ் என்று அட்டகாசமாக இந்த வருடம் தொடங்கி உள்ளது.

    இந்த மாதம் முதலில் ஸாகோர் தான். அட்டை, உட்பக்க சித்திரங்கள் என்று ரொம்பவே impressed.

    அடுத்து மைக் ஹேமர், பிறகு டெக்ஸ் கடைசியாக வேதாளர்.

    பெட்டி கைக்கு கிடைக்கட்டும் சார். உடனே பதிவுடன் வருகிறேன்.

    ReplyDelete
  12. // இந்தாண்டின் முழுசையும் ஒரு திருவிழாவாக்கி விடலாம் ! தோரணங்கள் கட்ட இருக்கவே இருக்கார்கள் யூத்தான ஜம்பிங் ஸ்டார் அணியினர் !! //
    ஆக்கிடுவோம் சார்.

    மாதா மாதம் தோரணம் கட்டி கலக்கிடலாம்.

    ReplyDelete
  13. // அப்புறம் அடியேனின் வாசிப்பு வரிசையுடன் ஜனவரி இதழ்களின் அறிமுகங்களோடு, ஒரு குட்டி வீடியோ பதிவும் நமது YouTube சேனலில் வெள்ளி or சனி upload ஆகிடும் ! //

    அடடே icing on the cake.

    ReplyDelete
  14. சூப்பர் சார்.....வாழ்த்துக்கள் வியாரே.....ஆசிரியர் முதல் புத்தகத்த வெளியிட்ட போது பெற்ற பரபரப்பை இப்போ வியாரிடமும் எதிர்பார்க்கலாமா...ஸ்பைடரை விட்ட பின் பெற்ற வெற்றியை காட்டிலும் மேலதிக வெற்றியை வியார் பெற செந்தூரான் அருளட்டும்....கடைகள் தோறும் வி காமிக்ஸ் தொங்கட்டும்....அதை வாங்கிப்படிக்குமின்பம் பாலகரிடம் தங்கட்டும்

    ReplyDelete
  15. எனக்கு மிகவும் பிடித்த டெக்ஸ் புக்கை பொங்கல் அன்று தான் படிப்பேன்.
    Dear Editor, why we are not planning for Pongal Special (Tex) like Deepavali special?
    He is he real Cowboy. So there shouldn't be any chance for others especially jumping boys for this occasions. 😂😂😂

    ReplyDelete
    Replies
    1. // He is he real Cowboy. So there shouldn't be any chance for others especially jumping boys for this occasions. //

      LOL :-)

      Delete
    2. இது.. இது.. இது பேச்சு @கோவை நிலா

      Delete
    3. அவ்வளவு நாள் எப்படி பொறுமையா இருக்கிறது டெக்ஸ்அ படிக்காம. வேனுமுனா பொங்கல் டெக்ஸ் ஸ்பெஷல் வெளியிடுங்க. அமர்களமா பொங்கல கொண்டாடுவோம்.

      Delete
    4. "He is he real Cowboy."
      அப்ப இவரு அதிகாரி இல்லையா. ரம்மி சார் எ அப்படி கூப்பிடுறாரு.

      Delete
    5. @ புன்னகை ஒளிர்,
      சார்,
      டெக்ஸ் கதையைப் படிக்காமல் இருக்கவே முடியாது. அதனால்தான் பொங்கல் ஸ்பெஷல் டெக்ஸ் கேட்கிறேன் (றோம்).

      Delete
  16. அப்பாலிக்கா ரெம்போ இயமையான ; துடிப்பான ; செயல் வேகமிக்க ஜம்பிங் ஸ்டார் பேரவையினரின் ஆரவாரம் இன்னொரு பக்கம்


    #####


    பழைய சங்கத்தை மறந்த ஆசிரியரை வன்மையாக கண்டிக்கிறோம்...விரைவில் இதனை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதையும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்வதில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மகிழ்ச்சி அடைகிறது..

    ReplyDelete
    Replies
    1. ஒற்றை வேப்பிலைக்கு வேளை வந்துடுச்சு தலீவரே!!

      Delete
    2. இதுக்கு ஏதாவது ஸ்பெஷல் எடிஷன் டெக்ஸ் புக் உண்டுங்களா?

      Delete
    3. தலைவர் பின்னாடி யாரு இல்லைன்னு நினைச்சீங்களா...நா இருக்கேன்.

      Delete
    4. கண்ணு கூசலியா சார் ?

      Delete
    5. அவரு தலைவருக்கு பின்னால் இருப்பதால் கண்ணு கூசலையாம் சார்:-)

      Delete
    6. தலைவரே,
      நம்ம எடிட்டரை கூட அவுங்க பக்கம் இழுத்துட்டாங்க. நம்ம அடுத்த பிளான் என்ன. நாங்க இருக்கோம். துணிஞ்சு இறங்குங்க.

      Delete
    7. தலைவரே,
      பொன்ராஜ் தம்பி நம்ம கூடதா இருக்காரு. அவரு நூறு பேருக்கு சமம். நம்ம படைபலத்தை காட்றோம்.

      Delete
    8. ஆமாம்..காட்டுவோம்...

      Delete
    9. இதுக்கு மேலேயுமா ?

      Delete
    10. // இதுக்கு மேலேயுமா //

      LOL :-)

      Delete
  17. தோரணங்கள் கட்ட இருக்கவே இருக்கார்கள் யூத்தான ஜம்பிங் ஸ்டார் அணியினர்

    ####

    இம்முறையும் 4 இதழ்கள் எனும் போது, உங்களின் வாசிப்புகளின் order எந்த வரிசையில் இருக்குமோ என்றறிய ஆவல்

    #####

    முதல் இதழ் எதுன்னு தெரில சார்..ஆனா கடைசி இதழ் கோடாலி இதழ் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...கிர்ர்ர்ர்ர்..

    ReplyDelete
    Replies
    1. // முதல் இதழ் எதுன்னு தெரில சார்..ஆனா கடைசி இதழ் கோடாலி இதழ் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...கிர்ர்ர்ர்ர்//
      😂😂😂 🤣🤣🤣🤣🤣

      Delete
  18. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  19. சார் புத்தகத் திருவிழாவுக்கு உங்களை பார்க்க வேண்டும் என்றால் எந்த தேதியில் வந்தால் பார்க்கலாம் நேராக, உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது என் சிறு வயது முதலா ஆசை

    ReplyDelete
    Replies
    1. வரும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் எடிட்டர் நமது ஸ்டாலில் இருப்பாரென்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார் chick Bill நண்பரே!

      ஒருவேளை ஜம்ப்பிங் ஸ்டார் உறுப்பினர்களுடன் மீட்டிங்கில் இருந்தாரென்றால் அருகிலுள்ள மரங்களில் தேடிப்பார்ப்பது நல்லது!

      Delete
  20. எனக்கு விடுமுறை கிடைக்கலை.

    ReplyDelete
  21. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனவருக்கும் வணக்கம்
    எனது வாசிப்பு வரிசை எப்பொதுமே டெக்ஸில்தான் துவங்கும்.
    1)டெக்ஸ்
    2)வேதாளர்
    3)மைக்
    4)ஸாகோர்.


    ReplyDelete
  22. வணக்கம் நண்பர்களே..

    ReplyDelete
  23. 1) V Comics
    2) Tex
    3) Phantom
    4) Muthu 51

    ReplyDelete
  24. வாரிசு டிரெய்பர் நம் பலாரகோ மாதிரியே இருக்கே

    ReplyDelete
  25. அடேங்கப்பா... அடேங்கப்பா!
    வாழ்த்துக்கள் விக்ரம்! இம்மாத புத்தக தயாரிப்பில் முதலிடம் வீ காமிக்சின் முதல் இதழ் தட்டி பறிக்கிறது.... அவுட் அண்ட் அவுட் தரமான.காமிக்ஸ். (பக்கம் 64 முதல் 67 பக்கம் மட்டுமே பிசிறடிக்கிறது...)
    இரண்டாமிடம் வேதாளர் ஸ்பெசல் 2. சென்ற வருடம் விடவும் இந்த வருடம் கூடுதல் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. புக்கே 66 பக்கங்கள் தானே ?

      Delete
    2. //புக்கே 66 பக்கங்கள் தானே ?//

      Yes Sir. பின் உள்ளட்டையை 67ம் பக்கமாக சொன்னேன், இப்படி உள்ளதை உள்ளதாக சொல்லும் போதே சால்ரா என சிலர் செய்யும் இம்சை தாங்கலையே

      Delete
  26. சீர்காழியில் இருந்து மற்றும் சென்னையில் இருந்து நேற்று இரவு அனுப்பிய பார்சல்கள் இன்று மதியம் வந்து விட்டது.‌ ஆனால் நமது காமிக்ஸ் பார்சல் மட்டும் இன்னும் வரவில்லை. நல்லா புத்தகங்கள் காய்ந்த பிறகு அனுப்பியும் :-) எனக்கு வாஸ்து சரியில்லை போல நமது காமிக்ஸை மறுநாளே பெற்றுக்கொள்ள:-)

    ReplyDelete
    Replies
    1. Same with me - every month it comes 2 days after despatch - frustrating to the core.

      Delete
    2. எனக்கும் வரவில்லை! நாளை கிடைக்கக் கூடும்! அயாம் வெயிட்டிங்...

      ஒரு டவுட்: இந்த மாதம் டப்பிகளில் அடைக்கப்பட்டு வந்து சேர்ந்த புத்தகங்களில் ஒரு கார்ட்டூன் கதையும் உண்டு என்று நண்பர்கள் சொல்கிறார்களே?!!

      Delete
    3. எனக்கும் வரல.

      Delete
    4. எனக்கு வந்துருச்சு செயலரே புரட்டி புரட்டி ரசித்து கொண்டு இருக்கிறேன்..

      Delete
    5. சூப்பர் தலைவரே. ஆண்டவன் உங்கள் பக்கம் தான்:-)

      Delete
  27. ஸாகோர் வண்ணத்தில் வந்திருந்தால் இன்னும் செமையாக இருந்திருக்கும். ஓவியங்கள் அவ்வளவு அழகு. இருந்தாலும் கருப்பு வெள்ளையிலும் செம அழகு தான். வாழ்க ஸாகோர் டி நே.

    ReplyDelete
  28. இம்மாத புத்தகங்கள் இன்று கிடைத்தது. பொங்கல் விடுமுறையில்தான் படிக்க ஆரம்பிக்கவேண்டும். புத்தககாட்சியில் விற்பனை சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. சேலத்தை சேர்ந்த நண்பர்களுக்கு இதழ் கிடைக்கவில்லை என்று நண்பர்கள் வாட்ஸ்அப் தகவல்களின் மூலம் தெரியவர எனக்கும் வந்து இருக்காது என்ற நம்பிக்கையில் இல்லம் வர முதல் பார்வையிலேயே தென்பட்டது மிகப்பெரிய மாயாவி அட்டைப்பட பெட்டி..அனைத்து கவலைகளும் புறம்தள்ளி மனது மகிழ்ந்தோடியது..

    பிறகு பொறுமையாக இதழ்களை பிரித்து வழக்கம் போல் ஒவ்வொரு இதழாக பிரித்து ரசிக்க மனதை போலவே கண்களும் ஆனந்ததில் மிதந்தது .காரணம் இந்த முறை அனைத்து இதழ்களும் நண்பர்களின் அன்பை சுமந்து கொண்டு வந்த காரணத்தால்..மானசீக நன்றிகளை மனதினில் அவர்களுக்கு அளித்து கொண்டே இதழ்களை ரசித்து கொண்டு இருக்கிறேன்...

    முதல் பார்வையில் அனைத்து இதழ்களின் அட்டைப்படமும் மனதை அள்ளுகிறது.. ஹாட்லைன் அடுத்த வெளியீடு விளம்பரங்கள் என வாசித்து ரசிக்க புது அறிமுக வி காமிக்ஸ் இதழில் ஹாட்லைன் இடம் பெறுமா என்று எதிர்பார்ப்புடன் இதழை புரட்டினால் இதழின் நாயகரே ஹாட்லைனாய் நம்முடன் உரையாடியது அருமை...ஸாகோர் ,டெக்ஸ் இணையும் சாகஸம் வேறு விரைவில் என்ற அறிவிப்பு இன்னும் கொண்டாட்டத்தை விதைக்கிறது...இப்பொழுது இரவு வாசிப்பினில் வேதாளரா ,டெக்ஸா..அறிமுக நாயகரா ,ஸாகோரா என மனசு அலைபாய முதல் இதழாய் வாசிக்க எடுக்க இருப்பது நறுக் ,சுறுக் என இருக்கும் புது காமிக்ஸ் இதழின்
    பிரியமுடன் ஒரு போராளியே...

    ( *கடைசியா படிக்கிறேன்னு சொன்னதா நினைவு என யாராவது சங்கத்து ஆட்கள் கடுப்பாக வேண்டாம் நமது சங்கத்தின் வழக்கம் நேருக்குமாறுதானே இதுதான் நமது சங்கத்தின் பலமே என்றும் தெரிவித்து கொண்டு இதழை வாசித்து விட்டு வருகிறேன் ..)*

    ReplyDelete
    Replies
    1. செம்ம தலீவரே எனக்கு தெரியும் உங்களை பற்றி. படித்து விட்டு விமர்சனம் போடுங்க.

      Delete
  30. மனதுக்கு பிடித்ததை எப்போதும் கடைசியாகப் படிப்பது இயல்பு

    ReplyDelete
  31. வி காமிக்ஸ்

    முதல் இதழான "பிரியமுடன் ஒரு போராளி " நறுக்கென ஒரு முத்திரையை பதித்து விட்டுள்ளது .அழகான அட்டைப்படம் ,கறுப்பு வெள்ளை சித்திரங்கள்.,பழைய லயன் காமிக்ஸ் அளவான வடிவமைப்பு ,நேர்பாணி கதையிலும் ஓர் அழகான திருப்பம் என இருக்க இந்த தரத்தில் இந்த விலையில் வருகை தந்த வி காமிக்ஸ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு முத்தாகவும் ,வி காமிக்ஸ்ற்கு ஸாகோர் ஒரு லயனாகவும் இருக்க போவது முதல் இதழிலியே அறிய முடிகிறது..

    புதிதாய் காமிக்ஸ் படிக்க ஆரம்பிப்போருக்கு கனத்த இதழாய் அறிமுகம் செய்வதை விட இந்த வி காமிக்ஸ் இதழ்களின் அறிமுகமே அவர்களுக்கு காமிக்ஸ் பயணத்தில் தொடந்து வர வைக்கும் என்பது எனது எண்ணப்பாடு...

    மொத்தத்தில் வி காமிக்ஸ்ன் முதல் இதழ் பிரியமுடன் ஒரு போராளி வாசகர்களுக்கு எப்பொழுதும் பிரியமுடன் ஒரு இதழாக இருப்பது உறுதி...🌹🌹🌹

    ReplyDelete
    Replies
    1. வி காமிக்ஸின் முதல் விமர்சனம் முத்தான விமர்சனம். அது உங்களிடம் இருந்து தான் வர வேண்டும் என்று இருக்கு நன்றிகள்.

      Delete
    2. ///வி காமிக்ஸின் முதல் விமர்சனம் முத்தான விமர்சனம். ///

      எங்க தலீவரிடமிருந்து வந்ததால் முத்தான விமர்சனமா இருக்கு! இதுவே உங்க தலீவரிடமிருந்து வந்திருந்தா 'முத்தமான' விமர்சனமா இருந்திருக்குமில்ல?!!

      Delete
    3. கண்டிப்பாக எங்க ஸாகோர் பேரவை தலைவராக இருந்தா முத்த முத்த விமர்சனமாக இருந்து இருக்கும் 😘😘😘

      Delete
    4. சங்கத்து பெயரை ஜம்பிங் பாய்ஸ் என்பதற்கு பதிலாக "முத்தா பாய்ஸ்" என்று மாற்றம் செய்யலாமா ஜி?

      Delete
    5. @😍😘😘
      வாருங்கள் ஜம்பிங் ஸ்டார் பேரவையின் முத்தாபாய்ஸ் பிரிவு செயலரே..😃😘💐

      Delete
  32. V COMICS

    மெய்யாலுமே ப்.ஒ. போராளி செம க்ரிஸ்ப்தான்.

    புக் ஃபார்மட் வசீகரமாக உள்ளது.

    கதை 9/10

    படங்கள் 9/10

    ஒரு வெற்றிகரமான துவக்கம்.

    ReplyDelete
  33. இன்றில் இருந்து சென்னை புத்தக விழா. ஆரம்பமே அமர்க்களமாக அமையட்டும்.

    ReplyDelete
  34. நண்பர்களே தவிர்க்க முடியாத சில காரணங்களால் நாளை நான் சென்னை செல்லவில்லை.

    ReplyDelete
    Replies
    1. என்னாலும் வரமுடியாத சூழ்நிலை! சற்றே கனத்த மனதுடன் இப்போதுதான் டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு வந்தேன்!

      Delete
    2. // சற்றே கனத்த மனதுடன் இப்போதுதான் டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு வந்தேன்! //

      நான் நேற்று மாலையில் தான் எனது டிக்கெட்டை கேன்சல் செய்தேன்.

      Delete
  35. வந்து விட்டது பொக்கிஷ பெட்டி வந்து விட்டது. அருமை அருமை

    ReplyDelete
  36. பொட்டி வந்துவிட்டது.

    முதலில் ஸாகோர் டி நே படித்தாகிவிட்டது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை. ராணி காமிக்ஸ் போன்ற தோற்றம். செம அருமையான கதை. ஓவியங்கள் கண்ணுக்கு அழகு. கெண்ட்ரா கண்ணிற்குக் குளிர்ச்சி. கெண்ட்ராவை நேசித்தது ஸாகோர் மாத்திரம் அல்ல, நானும் தான்.

    V காமிக்ஸ் முதல் இதழே Vயின் வெற்றியைப் பறை சாற்றுகிறது.

    ReplyDelete
  37. மைக் ஹேமர் -ஒரு ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு. காமிக்ஸ்ஸா படமா என்று ஐயம் தோன்றாவிட்டால் வியப்பே இல்லை.

    ReplyDelete
  38. எண்ட குருவாயூரப்பா..நான் Supreme 60க்கு பணம் கட்டியாச்சு. ஆனா எனக்கு புத்தகம் வரில்லா.. ஞான் எந்தா செய்யூ..

    ReplyDelete
  39. எனக்கு பதிலளித்த ஸாகோர் பாபுஜிக்கு நன்றி.புத்தாண்டில் முதலிடம் பிடித்த ஜம்பிங் ஸ்டார் பேரவை பொருளாளர் சின்னமனூராருக்கு வாழ்த்துக்கள். கனத்த உருவத்துடன்"சாரி"கனத்த மனதுடன் வீடு திரும்பிய இளவரசருக்கு ஆறுதல் கள் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  40. இந்த மாதம் புத்தகங்கள் கிடைத்தது V காமிக்ஸ் (ஸாகோர்) மட்டும் missing 😔

    ReplyDelete
    Replies
    1. ஜி..😍நீங்கள் 2023 லயன் சந்தாவில் இருந்தால் V காமிக்ஸ் ற்கு தனியே ரூ.170 காலாண்டு சந்தா செலுத்த வேண்டும் அல்லது ரூ300 காலாண்டு சந்தா V காமிக்ஸ் ற்கு செலுத்தியிருக்க வேண்டும்.

      அப்பதா ஸாகோர் கிடைக்கும் ஜி..🙏

      Delete
    2. சந்தாவில் இருக்கிறேன் ஜி
      V காமிக்ஸ்க்கும் பணமும் அனுபிட்டேன்!அனா புத்தகம் வரவில்லை லயன் அலுவலகத்தில் கேட்டால் புத்தகம் அனுபிட்டேன் என்று சொல்கிறார்கள்! ஞாயிறு அன்று புத்தக விழாவிற்கு போகும் போது இந்த புத்தகம் வாங்க வேண்டும்! சில நண்பர்களும் சேர்ந்து 5புத்தகம் தேவைப்படும் 😘

      Delete
  41. ஸாகோர்.....நம்ம அந்தக்கால மாடஸ்டியின் மரணக் கோட்டை சிகப்பு வண்ண அட்டை....பயங்கர நகரம் அட்டை நினைவிருக்கா நண்பர்களே...இரும்பு மனிதனும் கூட ஓரளவு பொருந்துவான்....

    அதைப் போல அதிருமட்டைய புரட்டுனா உள்ளட்டை வெள்ளை நிறமாய் ஜில்லென சுடுது அமேசான்...பறவைகள் கானம் பாடுவது கூட கேக்குறது...பறக்கும்தாராக்கள்...ஸ்டைலாய் வெட்டருவாளோடு நாயகன்...தனிமைசுவை/மையையோ சுமந்த படி படகு..நதி....அடடா எப்படா நம்மட்ட வருவோம்னு நாயகன் ஏங்கி நிற்க....அந்தப்படம் நாமளே இருக்கலாமா கைய நீட்டி எனும் எண்ணத்த தட்டியபடி முதல் பக்க சகோதரர் நான் யார் நான் யார்னு பாட அட்டகாசத் தாள்களில் அட்டகாசம் உறுதி எனத் தெரியுது...சான்சே இல்லை நண்பா....கலக்கி விட்டாய் வி

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் நோ சித்திரங்க அந்தக் காலத்துக்கே செல்லும் போல...இளம் டெக்ஸ் சாகோர் தீபாவளி வண்ண விருந்தா வந்தா கலக்கும் விக்ரம்..

      Delete
    2. மைக் அட்டைப்படம்....புரட்டிப் போட....உள்ள பாத்தா புரட்டி....வண்ணங்கள் அருமை.....ஓவிய அதகளம்....சிறுவர்கள் கண்ல பட வேண்டாமோ....ஆனா ஜேம்ஸ் பாண்ட் அழகிகள் பாத்து படிக்க கூசிய என் நினைவுகளும்..18 வயதுக்கு மேல் வரட்டும்

      Delete
    3. வேதாளன் அட்டைப்படம் அருமை...ஆனா போன முறை பார்த்தது போலவே உள்ளது....
      டாப் பட்டை இரண்டு மாயாத்மாக்களுமே...பளிச்சென உள்ள சாகோரட்டை டாம்போ டாப்...பின்னட் டையும் பெருசாவே போட்ருக்கலாமோ

      Delete
    4. மைக்கதான் முதல்ல படிக்கணும்னு நினைத்தேன்...வித்தியாசமாருக்குமேன்னு....நல்லாருக்கான்னு ஆசிரியருக்கறிவிக்கனும்னு...

      ஆனா சாகோர் நண்பர் ...நம்ம ஆசிரியர் இருவரும் விமர்சனத்துக்காக காத்திருப்பார் என்பதால் முதலில் அதான் அதேதான்....இரவு படித்து வாரேன்

      Delete
  42. கொரியர் டப்பி இன்று கிட்டி!!

    முதல் பார்வை அவசர புரட்டலில்::

    * V-காமிக்ஸ் அசத்தலான அட்டைப்படம் & வடிவமைப்பு! புதிய எடிட்டரின் ஹாட்லைன் ஏரியாவைப் படிக்கலாம்னு புரட்டினால் உள்ளே ஜம்ப்பிங் ஸ்டார் மைக் புடிச்சுப் பேசிக்கிட்டிருக்கார் (என்னா ஒரு புத்திச்சாலித்தனம்!!)
    சித்திரங்கள் அருமை!! பேரவை மக்கள் இங்கே சகட்டுமேனிக்கு அள்ளிவழங்கும் சமாச்சாரத்தை அவர்களது ஜம்ப்பிங் ஸ்டாரும் கானகத்தில் செய்துகொண்டிருப்பது கண்ணில் பட்டுத் தொலைத்தது!

    * டெக்ஸ் - புத்தகத்தின் தடிமன் குதூகலிக்க வைத்தாலும் உள்பக்க சித்திரங்கள் கொஞ்சம் சுமாராகவே தோன்றியது! கதையைப் படித்தபிறகு மேற்கொண்டு கருத்துக் கூறுவதே சிறப்பாக இருந்திடும் என்பதால் இப்போதைக்கு ஒரு - ஜம்ப்!

    * மரணம் சொன்ன இரவு : அம்மாடியோவ்!! சித்திர அதகளம்!!! அட்டை டூ அட்டை - ஒரு ஃபோட்டோ ஆல்பத்தைப் புரட்டுவதைப் போன்ற பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது!! ஒரு வித்தியாசமான, ரகளையான பொழுதுபோக்கு காத்திருப்பதாக உள்ளுணர்வு சொல்கிறது!

    இன்றிரவு நேரம் கிடைத்தால் முதலில் படிக்கயிருப்பது - V comics!!

    ReplyDelete
  43. V Comics was at breakneck speed sir - so fast !

    Vedhaalar - 2 is crispier and stories are a notch better than Vedhaalan 1. The end product is neat - loved this more than the last album.

    ReplyDelete
  44. இன்னும் புத்தகங்கள் வரவில்லை. இன்று வெளியூர் செல்கிறேன் 5-6 நாட்கள் கழித்து பெங்களூர் திரும்பி வருவேன். அதுவரை புத்தகங்கள் செக்யூரிட்டி உடன் பெங்களூரில் உறங்கும். என்ன கொடுமை சார்.

    ReplyDelete
    Replies
    1. @PfB வாட் எ டெலிகேட் பொசிஷன்!!

      Delete
    2. அதிகப்படியாக எல்லா மாதமும் எனது நிலைமை இதுதான். எனக்கு புத்தகம் கிடைத்தது படிக்க ஆரம்பிப்பதற்குள் நண்பர்கள் படித்து துவைத்து காய போட்டு விடுவார்கள். அதன் பிறகு புத்தகங்களை எடுத்து படிக்க ஆர்வம் குறைந்து விடுகிறது:-)

      Delete
    3. இங்கும் புத்தகம் இன்னும் வரவில்லை. 🤒🤒🤒

      Delete
    4. நிலாவுக்கெல்லாம் கொரியர் சர்வீஸ் கிடையாதோ என்னமோ?!!😌

      Delete
  45. புத்தக பார்சல் பிரித்த உடன் 4 அருமையான புத்தகங்கள்.

    வேதாளர் அட்டை அட்டகாசம் இந்த முறை ரொம்பவே நன்றாக இருந்தது.
    உள்ளே படங்களும் நெருக்கமாக இல்லாமல் ரொம்பவே அழகாக உள்ளது

    முதலில் ஸாகோர் படித்து விட்டேன். ஒரு வித மர்மத்துடன் ஆரம்பிக்கும் கதை எடுத்த உடனே படு வேகமாக தொடங்குகிறது. அதே வேகத்தில் முடிந்தும் விடுகிறது. தலீவர் சொன்னதுபோல நேர்க் கோட்டு கதை ஒரே ஒரு சின்ன டுவிஸ்ட். மொத்தத்தில் நல்ல ஆரம்பம் நமது V காமிக்ஸ்க்கு.

    அட்டையும் சரி புத்தக வடிவமைப்பும் சரி ரொம்பவே நன்றாக இருக்கிறது.

    எனது மதிப்பெண் 8/10.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபீஸர் போல!!
      பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!

      Delete
    2. Most of the Phantom 2 stories are Sunday Strips - so larger panels - does not hurt the eye. There are some daily strip stories too which are 4 panelled. Nicely mixed. Less pain on the eyes of 40+ folks like us :-)

      Delete
    3. @EV..😍😘
      @ செயலர் Kumar😘😘

      ##ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபீஸர் போல!!
      பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!##

      ஸாகோர்னாவே நேர்மை, நீதி, நியாயம்ங்க EV யாரே❤💪👍

      Delete
  46. எடிட்டர் சார்....லயன் & முத்து 2023 சந்தாதாரர்களுக்கு V காமிக்ஸின் முதல் இதழ் இலவசம் னு சொன்னிங்களே சார்...ஆனால் என்னுடைய பார்ஷலில் V காமிக்ஸ் இதழ் வரவில்லை சார்...லயன் ஆபீஸில் போன் பண்ணி விவரம் கேட்டால் , V காமிக்ஸ் ன் மற்ற இரு இதழ்களுக்கும் பணம் கட்டியிருந்தால் தான் முதல் இதழ் இலவசம் னு சொல்றாங்க சார்...தயவுசெய்து கொஞ்சம் தெளிவுப்படுத்துங்கள் சார்...ப்ளீஸ்...

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் வரவில்லை நண்பரே V காமிக்ஸ்

      Delete
    2. ஒன்றும் புரிவில்லை ஜி...

      Delete
    3. மொத்தம் மூன்று புத்தகங்கள் நண்பரே மூன்றுக்கும் சேர்ந்து 300 மட்டும் /சாந்தாவில்இருந்தால்170ரூபாய் மட்டும் கட்டினால் போதும் முதல் புத்தகம் அன்பளிப்பு!

      Delete
    4. Yuva - Simple.

      தானாக இலவசம் கிடையாது. நீங்கள் இரண்டு இதழ்களுக்கு (Issues 2 அண்ட் 3) பணம் செலுத்தி இருந்தால் Book 1 free.
      எடிட்டர் இதனை இன்னும் கொஞ்சம் தெளிவாய் சொல்லி இருக்கலாம் தான்.No doubt !

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Mike Hemar - too slow and dragging. முடியல - not for me ! படங்கள் கதையின் ஸ்வாரஸ்யத்தினைக் கெடுக்கின்றன என்பது என் கருத்து.

      Delete
    7. தெளிவுப்படுத்தியதற்க்கு நன்றி ராகவன் ஜி.... லயன் & முத்து சந்தாதாரர்களுக்கு V காமிக்ஸ் ன் முதல் இதழ் இலவசம் னு, என்று தான் எடிட்டர் சொன்னமாதிரி நியாபகம்..
      ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள மாதிரி எடிட்டர் எங்கேயும் இப்படி சொன்ன மாதிரி எனக்கு தெரியவில்லை ஜி....ஒருவேளை நான் கவணிக்கவில்லையோ என்னவோ....நன்றி ராகவன் ஜி....

      Delete
    8. ////And லயன்-முத்து காமிக்ஸ் சந்தாதாரர்களுக்கு, V காமிக்சின் முதல் இதழ் விலையின்றி அனுப்ப போகிறோம் !. இந்த arrangement ஜனவரி 15 வரைக்கும் லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களுக்கு சந்தா கட்டும் போது மட்டுமே applicable. 2023 பொங்கலுக்கு பிறகு வரும் சந்தாக்களுக்கு இந்த gift ஏற்பாடு இருக்காது. //////

      இதை நீங்கள் குறிப்பிட்டுள்ள படி எப்படி புரிந்துகொள்வது என்று தெரிவில்லை ராகவன் ஜி...பார்ஸலில் V comics புத்தகத்தை எதிர்ப்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்....

      Delete
    9. //தெளிவுப்படுத்தியதற்க்கு நன்றி ராகவன் ஜி.... லயன் & முத்து சந்தாதாரர்களுக்கு V காமிக்ஸ் ன் முதல் இதழ் இலவசம் னு, என்று தான் எடிட்டர் சொன்னமாதிரி நியாபகம்..//

      yes .. I TOO THOUGHT LIKE THAT .. MY MISTAKE ..

      Delete
    10. It was in the image. That is why I wrote above that Editor could have clarified better.

      Delete
  47. *** மரணம் சொன்ன இரவு***
    படித்தாகிவிட்டது.
    ஈ.வி. சொன்னது மாதிரி சித்திர அதகளம்.
    கதையோட்டம் ஜேம்ஸ்பாண்ட் 2.0 படித்த மாதிரி உணர்வு .
    சித்திர பாணியும் பக்கத்துக்கு பக்கம் அதுே போலவே இருந்தது.
    பக்கத்துக்கு பக்கம்
    துப்பாக்கியின் சத்தம்.
    மைக் ஹேமர் ஏமாற்றவில்லை.

    ReplyDelete
  48. Mike Hammer - Page 31 and Page 47 last but 1 panel - bubbles interchanged. Seems the book was done in a haste.

    ReplyDelete
  49. *** பிரியமுடன் ஒரு போராளி***
    பிரியமுடன் ஒரு உளவாளி என்று பெயர் வைத்திருக்கலாம்.
    நேர்கோட்டு கதை.
    க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட்.
    எடிட்டர் (விக்ரம்தான்) சொன்னதுபோலவே க்ரிஸ்ப்பான கதை.
    பளிச்சென்ற சித்திரங்கள்.
    கதை முழுவதும் காட்டுக்குள்ளேயே சுழல்கிறது.
    ஆரம்பம் அருமை.
    வெல்டன் விக்ரம் சார்.

    ReplyDelete
  50. ரவேதாளரின் 1.எல்லாம் கேளிக்கையே சுமார்50வருடங்களுக்கு முந்தைய தபுராதனம்எதுவுமில்லாமல் விறுவிறுப்பாக உள்ளது.சில இளவரசர்களின் வரிவசூல் வேட்டையாடுதல் போன்றவற்றில் தலையிடுகிறார் வேதாளர்.இளவரசர்களோ சிங்கங்களை மனித வேட்டைக்குப் பழக்கி கானகத்திற்க்குள் விடுகின்றனர் அமைதியான கானகத்தின்சமச்சீர் கெடுகிறது.நிலமையைசீராக்க வரும் வேதாளரை கிளாடியேட்டர் கள் போல கேளிக்கைநிகழ்ச்சி யில் ஈடுபடுத்துகின்றனர் வேதாளரவென்றாரா.அநீதியாளர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவந்தாராசுவாரஸ்யமான இக்கதை விடைகூறுகிறது.வேதாளர்ஏன் காமிக்ஸ் சூப்பர்ஸ்டார் .இக்கதைபதில்கூறுகிறது.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  51. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  52. . சாகோரின் சண்டைக்காட்சிகள் திரைப்படம் பார்க்கும்உணர்வை ஏற்படுத்துகின்றன.இம்மாதம் மகளிர் மாதம்.டெக்ஸ் ஸாகோர் மைக் மூன்றிலும் கதையை நகர்த்திச் செல்வது மகளிரே.மூவரில் டெக்ஸ் மட்டுமே பெண்களிடம் நாகரீகமாக நடந்துகொள்கிறார். சாகோர் "அப்பாலிக்கா" நான் மயங்கினமாதிரி நடிச்சேன் என்கிறார்.டெக்ஸ் தான் ரியல் ஹீரோ.கரூர் ராஜசேகரன்.

    ReplyDelete
  53. இன்னும் டெக்ஸ்&வேதாளர்முழுதுமாக முடிக்கவில்லை. தற்போதையநிலவரப்படிமுதலிரண்டு இடம் இவர்களுக்கு .பின்னிரண்டு சாகோர் மற்றும் மைக் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  54. I have read Piriyamana Porali. Nice Artwork and Straight line story. Good Starting for V comics!

    ReplyDelete
  55. எனக்கும்நேற்று. வரை. புக். வரவில்லை. நண்பர். பரணி. பெங்களூர். பதிவு. இட்டு. இருந்தார். சீர்காழி. சென்னை. 4ந்.தே தி. இரவு. அனுப்பி. 5ந் தே தி. கிடைக்கிறது. ஆனால். நம். புக். எனக்கும்
    6 ந் தேதி. வரை கிடைக்கவில்லை. என. பதிவு. இட்டு. இருந்தார் எனக்கும் 6ந். தே தி வரை கிடைக்கவில்லை ஒரே. தே தி இல். எல்லோருக்கும் புக். அனுப்பும்போது. ஒருவர்க்கு. அடுத்த நாள் மற்ற வர்க்கு மூன்று நாள். கழித்து. எல்லாம். கிடைக்கிறது முன்பு. எல்லாம். 1993. மூன்று. மாதம் எல்லாம். கழித்து. புக் வரும். படிப்போம் 1999. 20000 வாக்கில். ஒருவருடம். கூட. புக். வராமல். இருந்தது எந்தவித. தகவல் தொடர்பு ம். இல்லாமல். இருந்ததால் பொறுமையாக. இருந்தோம். ஆனால். இப்போது. தகவல். தொழில் நுட்பம். வளர்ந்து. விட்டது ஒருவருக்கு. புக். கிடைத்தவுடன் பதிவில். போடுகிறார் அது. கிடைக்காத வர்களுக்கு. மிகுந்த. மன வருத்தத்தை. ஏற்.படுத்துகிறது
    இதற்க்கு. ஒரே. தீர்வு. எல்லார்க்கும். ஒரே. நாளில். புக். அனுப்புவது. தான். மேலும். கொரியேர். நிறுவனத்திற்கு. நம். சார்பில். கணிசமான. தொகை. கொடுக்கும்போது. கூரியர். நிறுவனம். சார்பில். அவர்கள். அலுவலர்கள். நம். அலுவலகத்தில். வந்து. Booking. செய்து. விட்டு. புக். பார்சல். கள். Collect. செய்து. கொண்டு. Bookங செய்து Booking
    no வாங்கி கொள்ளலாம். ஒவ்வொரு. கூரியர். நிறுவனமும் collection. செய்வதற்கு. என்று. பணியாளர். கள். வேலைக்கு. அமர்த்தி. இருக்கிறது. Booking. செய்பவர். அடுத்த. நாள். காலை. Tracking. No. கொடுத்து. விட்டு. செல்ல. சொல்லலாம். நம். அலுவலர்கள்நம். வாசகர்களுக்கு. உடனே. Message. அனுப்பலாம். (Booking. No). Dekshnamoorthy. திருவாரூர்

    ReplyDelete
  56. நேற்று. மாலை6. மணி. வரை. 10முறை. போன. Phone. Pannium. Booking. No. Kadaisi. Varai. Kodulkavillai

    ReplyDelete
    Replies
    1. ஒரே ஒரு ஆள் ; அவர் தான் தற்போதைக்கு மேனேஜர் - புக்கிங் கிளெர்க் ; அக்கவுண்ட்ஸ் இன் - சார்ஜ் சிவகாசி ST கூரியருக்கு ! சட்டையைக் கிழிக்காத குறையாய் அவரிடம் நம்மாட்கள் மல்லு கட்டி வருகின்றனர் - கூரியர் ரசீதுகளைக் கோரி ! இது தான் சார் நிலவரம் !

      இந்த அழகில் அவர்களே நம்மிடம் வந்து பார்சல்களை பெற்றுச் சென்று புக்கிங் தகவல்கள் தருவதெல்லாம் கனவில் கூட சாத்தியமாகாது !

      DTDC அவ்விதம் கிடையாது ; முறையாக ஆபிஸ் ; பணியாட்கள் என்றெல்லாமே உள்ளது தான் ! ஆனால் அவர்களுமே சொதப்புவது தான் புதிராக உள்ளது !

      Delete
    2. கூரியர் தான் படுத்துகிறார்கள் என்றால் - போஸ்ட் ஆபிசில் இம்மியும் நிவாரணம் இல்லை ! மொத்தமாய் ரெஜிஸ்டர் பார்சல்களை பார்த்தால் கவுண்ட்டரில் இருப்போர் 'இன்னிக்கி முடியாது...ஆளில்லை ..கிளம்பு கிளம்பு' என்று துரத்தி விடுகின்றனர் ! எங்கே போய் முட்டிக் கொள்வதென்று சுவற்றையோ, தூணையோ தான் தேட வேண்டிப் போகின்றது !

      Delete
    3. And இங்கே சின்னதொரு வேண்டுகோளும் சார் : ஆர்வமிகுதியில் நீங்கள் 10 தடவை போன் பண்ணியது புரிகின்றது ; ஆனால் மறுமுனையில் உள்ள கூரியர் அலுவலகத்தினர் போனை எடுக்காது போகும் போது, நம்மாட்களால் கையைப் பிசைவதைத் தாண்டி என்ன செய்திட முடியும் ?

      And ST கூரியரில் கம்பியூட்டர் ரசீதுகள கிடையாது ; எல்லாமே கோழி கீச்சல் கையெழுத்துக்கள் தான் ! ரசீதுகளை கண்ணில் காட்டவே 3 நாட்கள் எடுக்கிறார்கள் & அதன் பின்னே அந்த கத்தைக்குள்ளிருந்து உங்கள் ரசீதை தேடிப் பிடிக்க வேண்டி வரும் !

      நீங்கள் மணிக்கொரு தடவை அடிக்கும் போன்கள், பெண்களின் பதட்டங்களை அதிகரிக்க மாத்திரமே உதவிடும் சார் ! கொஞ்சமாய் அவர்களும் மூச்சு விட்டுக் கொள்ளட்டுமே - ப்ளீஸ் ?

      Delete
    4. கொரியர்காரர்களின் குளறுபடிகளால் எல்லாத் தரப்புக்குமே சங்கடமாகிவிடுகிறது. இங்கே இனி எடிட்டர் தரப்பில் செய்ய இனி ஏதுமில்லை என்ற நிலையில் வாசகர்களாகிய நாம் தான் இனி கொஞ்சம் பொறுமை காத்திட வேண்டும்! ஓரிரு- மூன்றுநான்கு தினங்கள் தாமதமாகினாலும் கூட, நம் புத்தகம் எப்படியும் நம்மை வந்தடையும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பது - லயன் அலுவலகத்தில் நிலவும் பதமான சூழ்நிலையைத் தவிர்க்க உதவும்!

      Delete
    5. பதமான சூழ்நிலைதான் நிலவ வேண்டும் EV ! அங்கு நிலவுவதோ பதட்டமான சூழ்நிலை :-)

      Delete
    6. ஹிஹி! 'பதட்டமான' தான் ஒரு பதட்டத்துல 'பதமான' ஆகிடுச்சுங்க ராக்ஜி! கொஞ்சூண்டு பதனீ குடித்தால் பதட்டம் தணியும்னு நினைக்கிறேன்!

      Delete
  57. எடிட்டர் சார். நான் Supreme 60க்கு பணம் கட்டியும் எனக்கு அது மட்டும் வரவில்லை. மற்ற புத்தகங்கள வந்துவிட்டன. ஆபீசிற்கு போன் செய்து சொல்லி இருக்கிறேன்.

    ReplyDelete
  58. /// லயன் அலுவலகத்தில் நிலவும்
    'பதமான' சூழ்நிலையைத் தவிர்க்க உதவும்///
    நீங்க கூட பதட்டத்துல டைப்பிட்டீங்களா ஈவி?

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி! அதுவேதாங் பத்து சார்! :)

      Delete
  59. எனக்கு விட்டு போனV காமிக்ஸ் வந்து விட்டது 🙏

    ReplyDelete
  60. Replies
    1. ///Yes sir..in the evening///

      சார்.. ஹெல்மெட் எல்லாம் ரெடி தானே?!! :)

      Delete
  61. கொரியர் தாமதத்திற்கு அது கொரியர் அலுவலகத்தில் routing செய்பவர்களைப் பொருத்து மாறுபடுகிறது. எனது மற்ற கொரியர்கள் சரியான பாதையில் கொரியர் அலுவலகத்தில் உள்ளவர்கள் அனுப்பியதால் மறுநாளே கிடைத்து விட்டது. ஆனால் இந்த புத்தகப் பார்சல் கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருக்குள் இன்பச் சுற்றுலா சுற்றி வருகிறது. இது மெயின் அலுவலகத்தில் உள்ள கொரியர்கார்கள் அட்ரசை சரியாக தெரியாமல் நமது பார்சலை ஊர் சுற்ற விடுகிறார்கள்.

    இந்த முறை நமது கொரியர் டப்பிகள் சரியான நேரத்தில் நமது அலுவலகத்தினரால் ஒப்படைக்கப் பட்டாலும் கொரியர் அலுவலகத்தில் இருந்து பெங்களூருக்கு அனுப்பி வைத்தது நடு இரவில் தான்.

    உங்களுக்கு கொரியர் ரசீது கிடைக்கவில்லை என்றால் அவர்கள் சென்னை புத்தகத் திருவிழா மற்றும் இந்த மாத புத்தகங்கள் அனுப்புவதில் பிஸியாக இருக்கலாம். அதனால் மறந்து போய் இருக்கலாம். எனவே மீண்டும் ஒருமுறை நமது அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். நான் அப்படித்தான் செய்தேன்.

    ReplyDelete
  62. Waiting in stall to meet Edi...one of my life time dream about to come true

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே

      Delete
    2. கொண்டாடுங்க நண்பரே. எனக்கெல்லாம் லீவு கெடக்கலை. நீங்க எல்லா போறப்போ அதுவே நிறைஞ்ச சந்தோசம்.

      Delete
  63. Good crowd in the stall...feel happy...

    ReplyDelete
  64. எலேய் ! சின் ராசு !! போட்ரா வெடிய !!!
    பொட்டிய புடுச்சாச்சூ 💃💃💃💃💃

    ReplyDelete
    Replies
    1. யம்மா. நா இன்னு பொட்டிக்கு ஆர்டகொடுக்கலையே.

      Delete
  65. இன்று நீண்ட நெடும் பதிவு உண்டுனு பட்சி சொல்லுது.

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்புக் குறைச்சல் தான்! இப்போ புக்ஸ்டாலில் நின்னுக்கிட்டிருக்கார். இரவு 10 மணிக்கு மேல் தான் வீடு/ரூமுக்கு திரும்புவார். அலைச்சல் - அலுப்புகள் (& சிலரது அலும்புகள்) காரணமாக பதிவை நாளைக்கு காலையில் ஒத்திப் போடவே வாய்ப்புகள் அதிகம்!!

      Delete
    2. இன்று. தான். Book. வந்தது. புக்கிங். No. இல்லாமல். கூரியர். நிறுவனத்தில். நுழைய. முடிய. வில்லை. நான். எப்போதுமே. Book. அனுப்பி. மூன்றாம். நாள். கழித்து. தான்(. Book. வராத. பட்சத்தில்)Booking. No ரேகேட்பேன். நேற்று. கடைசி. வரை. கிடைக்கவில்லை. அதனால்தான் புக். அனுப்பி. மூன்று நாள் கழித் தா வது. Booking. No. Message. அனுப்பினால். நன்றாக. இருக்கும். Dekshnamoorthy

      Delete
    3. நண்பர்கள் சுவையான விவாதங்கள் மற்றும் அறிவிப்புக்களை உடனடியாக இங்கே பதிவேற்றி அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கலாமே ! :-)

      Delete
  66. வரயிருக்கும் பதிவின் தலைப்பு "நச்சென்று ஒரு நாளும்.. இச்சென்று ஒரு ஆளும்!"னு இருக்கலாம்னு தோனுது! ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. Ennamo innaiku kootam kammiya iruntha mathiri than irunthuchuu ... Puthu release intha varam varala vera

      Delete
    2. போகப் போக தானே pickup ஆகும் நண்பரே...

      Delete
    3. இதை நா படிக்கவே இல்லை. பாக்கவே இல்லை. வர வர நம்ம ஆட்கள் எல்லா யூத்தா கலக்ராங்க. என்னா கமாண்டு. ட்ரெயின்ங் கிளாஸ் இதுக்குனே போவாங்களோ. எல்லா துள்ளுவதோ இளமை காமிக்ஸ் பண்ற வேலை. ஐயையோ, இதோட அடுத்த எபிசோட சீக்கிரமா போட சொல்லி லைன் கட்டி நிப்பாங்களே. தவளை தா வாயால கெடும்கிறது உண்மைதா போலிருக்கு.

      Delete
    4. ஏங்க, நா என்ன பத்தி சொன்னேன். சொக்க நாதா என்ன காப்பாத்துப்பா.

      Delete
  67. இன்றைக்கு CBF ல இருந்த கடைசி S70 full set கஸினுக்கு ப்ரெசன்ட் பண்ண தூக்கியாச்சு..😍😘
    அப்படியே அவளுக்கு புடிச்ச Tex, ஸாகோர், லார்கோன்னு ஒரு பல்க் பர்ச்சேஸ் பண்ணியாச்சு..😍😘😃

    ReplyDelete
    Replies
    1. ஜம்பிங் ஸ்டார் பேரவை தலைவர்னா சும்மாவா ?!!! சூப்பர் தலைவரே.

      Delete
  68. நாளைக்கும் CBF என் பொண்ணோட போவோனும்..😍😃😃
    அவளுக்கு புடிச்சத வாங்கி கொடுக்கோனும்..😍😘😘

    ReplyDelete
    Replies
    1. அருமையிலும் அருமை தலைவரே.

      Delete
    2. நீங்க கலக்குங்க ஜம்ப்பிங் தலீவரே!!

      Delete
  69. ஆண்டுகள் பல கழித்து இங்கு பதிவிடும் வடபழனி வௌவாலின் அன்பு கலந்த வணக்கங்கள்! இன்று திரு.எடியை நேரில் கண்டேன், அளவில்லா ஆனந்தம் கொண்டேன்🤩. மலர்ந்த முகத்துடன் காமிக்ஸ் நேசகர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அவரை, அமைதியாக சுற்றி வந்து கிராபிக் நாவல்கள் சிலவற்றை அள்ளிக்கொண்டு ஓர் சிறிய புன்சிரிப்பினை உதிர்த்து அங்கிருந்து விடைபெற்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வருக ...வருக நண்பரே

      Delete
    2. வடபழனி வெளவாலு!
      ஆஹா! இந்தப் பேரைக் கேட்டு எத்தனை வருடங்களாயிற்று!! வெல்கம் பேக் வெளவாலு நண்பரே!! மகிழ்ச்சி மகிழ்ச்சி!!

      நேரம் கிடைக்கும்போது அவ்வப்போது இங்கே தலைகாட்டிட முயற்சியுங்களேன்!

      Delete
    3. நன்றிகள் பல நண்பர்களே! நிச்சயமாக அடிக்கடி, இனிமேல் இங்கே தலைகாட்டிடுவேன். சிங்கத்தினை அதன் குகையில் தரிசிக்கவும் இந்த ஆண்டில் ஒரு திட்டமொன்று உண்டு 😍😁

      Delete
    4. இது நம்ம வீடுங்க. நீங்க கூட சிங்க குட்டின்னு நினைக்கிறேன்.

      Delete
    5. 47 வயது பொடி சிங்கமென்றும் கருதலாம் 🤣😂😁

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
  70. பகை பல தகர்த்திடு...


    அட்டகாசமான அட்டைப்பட சித்திரம் ..ஆனால் கதையிலோ வேறு பாணி சித்திரம்.. என்னடா நம்ம விங் கமாண்டர் ஜார்ஜ் ஓவிய பாணியில் நமது டெக்ஸ் வருகிறாரே என்று யோசித்தபடியே தான் கதைக்குள் மெல்ல மெல்ல நுழைய நேர்ந்தது...ஆனால் பக்கங்கள் செல்ல செல்ல அந்த ஓவியபாணியும் நம்மை கதை களனுக்குள் நுழைத்துக்கொள்ள வழக்கம் போல பரபரவிறுவிறு தான்...இதோ ஒண்பது மணிக்கு ராத்தூங்கம் போடும் நான் கதையின் விறுவிறுப்பில் இப்பொழுது கதையை படித்து முடித்து இந்த பதினொரு மணி வாக்கிலும் விமர்சனத்தை எழுத சொல்கிறதே...இதிலியே கதையின் அட்டகாசம் சொல்லவும் வேண்டுமா என்ன...? இந்த கதை கரு இது போல் கதைகளை ஏற்கனவே படித்துள்ளோம் தான்..ஆனால் கதைகளனும் சரி ,அதிரடி சாகஸ களனும் சரி டெக்ஸ் அதில் மீண்டும் நுழைந்தால் அதிரிபுதிரி தான் என்று மீண்டும் நிரூபித்த சாகஸமே இந்த பகை பல தகர்த்திடு...

    டெக்ஸ்ன் ஆரம்பமே அட்டகாசமாய் ஆரம்பித்து வீறு நடை போட்டுள்ளது...அடுத்த டெக்ஸ்ன் சாகஸத்திற்கு மீண்டும் ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  71. மரணம் சொன்ன இரவு..

    அட்டைப்படம் ஆங்கில நாவல் இதழை போல ..திரைப்பட போஸ்டரை போல கலக்குகிறது...கதையும் ஆக்‌ஷன் க்ரைம் என பட்டாசாய் பரபரக்கிறது...குறை ஏதும் இல்லை ..ஆனாலும் எனக்கு மட்டும் ஏனோ இந்த பெயிண்டிங் டிராயிங் போல படிக்கும் சித்திரக்கதைகள் மட்டும் கோட்டாவியங்களில் மனதினால் உட்புகுவது போல போக முடிவதில்லை.. மற்றபடீ புது நாயகரும் கதையும் ஓகே ...

    ReplyDelete
    Replies
    1. தலைவருக்கே இம்மா யோசனைனா, நாங்க எல்லா எந்த மூலைக்கு. தை திருநாள்ள தா லீவு கிடைக்கும் காமிக்ஸ் படிக்க டைம். இப்பவே எ மனச திட படுத்திகிறேன். டெக்ஸ்எயே 4 வாட்டி படிக்கலாம்ன்னு முடிவுக்கு வந்துட்டேன்.

      Delete
    2. என்ன டெரரா பாக்காதீங்க. டெக்ஸ்அ படிச்சா ஒவ்வொரு வாட்டியு புதுசா படிக்கிற மாதிரி தோணுதுங்க. அது தாங்க நிசமே.

      Delete
  72. @பாகுபலி, ப்ளூபெர்ரீ & மீம்ஸ் மன்னர்😍😘

    CBF க்கு நமது முத்து லயன் காமிக்ஸ் ஸ்டால்களுக்கு 7ம் தேதி வருகை புரிந்து *ஸாகோர் பேரவைக்கு* ஆதரவும், நல்லாசிகளும் வழங்கிய Tex & Tiger படைப்பிரிவுகளை சேர்ந்த தளபதிகள் அனைவருக்கும் ஸாகோர் பேரவை சார்பாக நன்றிகள்..😍😘😘😘

    ReplyDelete
  73. பதிவுக் கிழமையன்னிக்கு பதிவு போட முடியலேன்னா "காலம்பற கண்ணுமுழிக்கறப்போ காத்திருக்கும் காமிக்ஸ் பதிவு"ன்னு ஒரு கமெண்டாவது போடுவாரு!!
    நேத்திக்கு பதிவுக்கிழமைன்றதே மறக்கற அளவுக்கு ஜம்ப்பிங் ஸ்டார் பேரவை மக்கள் அவரைப் புரட்டியெடுத்திருக்காங்க போல தெரியுது!!

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே ஆவலுடன் Hanging here 🦇

      Delete