Powered By Blogger

Wednesday, January 18, 2023

ஒரு பழமுதிர்சோலைப் பதிவு !

ஆப்பிள்களே...சேலத்து மாங்கனிகளே....மலேசிய டிராகன் பழங்களே....பிஞ்சு ஸ்டிராபெரிகளே....பட்டியலில் வராத திராட்சைகளே, மாதுளைகளே...!

வணக்கம். ஒரு பழமுதிர்சோலைக்குள் புகுந்து வெளிப்பட்ட உணர்வே மேலோங்கியது போன பதிவினில் ! நம்மகிட்டே ஆல் ரேஞ்களில் கனிகள் இருப்பதால் இப்போதைக்கு all is well என்றே சொல்லுவேன் ! தொடரும் காலங்களில் இன்னும் கணிசமாய் இளசுகளை உள்ளே இழுத்துப் போட்டுக்கொண்டால், நமது தற்போதைய 'யூத் அணியும்' தொப்பைகளை 'தம்' கட்டி உள்ளே இழுத்துப் பிடித்துக் கொண்டே, வாசகர்ஸ் + வழிகாட்டிகளாய் பயணங்களை ஜாலியாய் தொடர்வர் என்பது நிச்சயம் ! And அதற்கான அட்டகாச ஆரம்பமாய் இந்தாண்டின் சென்னைப் புத்தக விழா அமைந்தால் வியப்பு கொள்ள மாட்டேன் ! இதோ - காத்திருக்கும் ஞாயிறன்று நிறைவு காணவுள்ள விழாவானது, நமக்கொரு விற்பனை ரெக்கார்டை உருவாக்கித் தரும் தருவாயில் நிற்கின்றது ! அடுத்த 4 நாட்களும் true to form அட்டகாசமாகவே தொடர்ந்திட்டால் - புனித மனிடோவின் அருளாசி நமக்குப் பூரணமாய் இருப்பது ஊர்ஜிதமாகிப் போகும் ! விரல்கள் சகலத்தையும் cross செய்தபடிக்கே, மூச்சை இழுத்துப் பிடித்துக் காத்திருக்கிறோம் - ஞாயிறு இரவின் இறுதிக் கணக்கிடலை எதிர்நோக்கி !   

And இங்கே காட்டும் மூட்டைகளை அடுத்துப் பிரிக்கக் காத்திருப்பது திருப்பூரில் ! So ஒற்றை மெகா adventure முற்றுப்புள்ளி காணும் கையோடு அடுத்ததும் துவங்கிடக் காத்துள்ளது ! வாரயிறுதியின் பதிவினில் மேற்கொண்டு விபரங்களை பகிர்ந்திடுகிறேன் folks - இந்த நொடிக்கு பிப்ரவரியின் 'தல' சாகசம் வெயிட்டிங் !! இப்போதைக்கு கொஞ்சம் சென்னை போட்டோஸ் + கொஞ்சம் செஞ்சட்டைப்படை memes சகிதம் பொழுதை ஓட்டிக் கொள்வோமே ?!

Bye all ....see you around ! 

ஒரு ரிலாக்ஸ்ட் தருணத்தில் ஒரு ஜாம்பவான் !
AND HERE ARE THE MEMES !!
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

108 comments:

 1. புகைப்படங்கள்
  மிக
  அருமை

  ReplyDelete
 2. வணக்கம் நண்பர்களே🙏🙏

  ReplyDelete
 3. பட்டுக்கோட்டையாரும் , நாஞ்சில் சம்பத்தாரும்.....வாவ்.மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. பொருளாளரே..ஒன்றை கவனித்தீர்களா..😍😘😃

   பட்டுக்கோட்டையாரின் சட்டை சிவப்பு நிறம், நாஞ்சிலாரும் சிவப்பு மற்றும் கையிலே நமது தல ஸாகோர் புக், குட்டி செல்லங்கள் பலரும் சிவப்பு ஆடையில்,..❤❤😍😘😃😀
   இதெல்லாம் எதேச்சையாகவே நடக்கிறது ..😍😘💪👍✌✊✊😃😀

   Delete
  2. ஆமாம் நாஞ்சிலார் கையில் ஸாகோர். கழுகு கண்கள் தலைவரே உங்களுக்கு...

   Delete
  3. தலைவரே நீங்க எங்கேயோ போய்டீங்க ?!!!

   Delete
  4. சங்கத்துல இருக்கும் (மொத்த)3பேரும் செட்டு சேர்ந்திட்டீங்க போல...🤪

   Delete
 4. @Edi Sir..😍😘😃

  ஜம்பிங் ஸ்டார் பேரவையின் புகழ் கொடிகட்டி பறப்பதை மீம்ஸ்கள் தெரிப்பதின் மூலம் தெரிய வருகிறது.
  (பேரவையின் IT wingக்கு நன்றிகள் பல 🙏💏) 😍😘💪👍✊✌👌

  எனவே லட்சோபலட்சம் ஸாகோர் பேரவை ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க *தீபாவளி ஸ்பெஷல் கலர் குண்ண்டு புக்* வெளியிடுமாறு ஜம்ப் செய்து கேட்டு கொள்கிறோம்.😍😘😘😘🙏💋💋

  ReplyDelete
  Replies
  1. ///(பேரவையின் IT wingக்கு நன்றிகள் பல 🙏💏)///

   ஓஹோ!


   ///லட்சோபலட்சம் ///

   ஓஹோஹோ?!!

   Delete
  2. மீம்ஸ் எல்லாம் தெறி ரகம்... ஹிஹிஹி TOFL...

   Delete
  3. இப்படி சொல்லலாமா தலைவரே நீங்க.
   " போர்...போர்...போர்..."
   அப்படின்னு குரல் கொடுங்க.
   பதுங்கு குழியிலருந்து நம்ப படை வீரர்கள் புயல் சூறாவளி போல வருவாங்க. இன்னைக்கு எதிரி படை சின்னாபின்னம் தான்.

   Delete
  4. ///லட்சோபலட்சம் ///-- எது இந்த 3பேரா???

   Delete
 5. வணக்கம் நண்பர்களே!!!

  ReplyDelete
 6. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 7. ஆனாலும் ரொம்ப ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கு!

  இந்த மீம்ஸ் கிரியேட்டர்களோட சோலிய இம்மீடியட்டா முடிச்சாகணும்! கிர்ர்ர்ர்.. உர்ர்ர்..

  ReplyDelete
  Replies
  1. உறுமிட்டு இருந்தா பத்தாது செயலரே போய் கடிக்கனும் போங்க...

   Delete
 8. விற்பனை விபரங்கள் மிகவும் மகிழ்வை தருகிறது Sir, இது தொடர மென்மேலும் வளர அனைத்து காமிக்ஸ் ரசிகர்களை போல இறைவனை வேண்டுகிறேன்.
  எங்களுக்கு மேலும் பல காமிக்ஸ்களை வழங்க வேண்டுகிறேன்

  ReplyDelete
 9. Replies
  1. செனாஅனாஜீ நீங்க தான் சங்கத்தோட பொருளாளரு ஞாபகம் இருக்குங்களா ...அவுக ஓட்டுறது நம்மளதான் ..நீங்க என்னடா்னா பாராட்டிட்டு இருக்கீங்க..நம்ம சங்க உறுப்பினர் எல்லோரும் இவ்வளவு நல்லவங்களா இருக்குறதாலதான் அவுக ஆட்டம் அடங்கமாட்டேங்கது..நம்ம மறுபக்கத்தை காட்ட நேரம் வந்துருச்சு பொருளாளர் அவர்களே..எடுங்கள் ஆயுதத்தை...

   Delete
  2. 2042 ஜூன் 22 எடிட்டரின் பதிவிலிருந்து

   வாழைக்காய்களே, சேனைக்கிழங்குகளே, வெண்டைக்காய்களே, பிஞ்சு கத்தரிக்காய்களே, முருங்கைக் காய்களே.
   சென்ற பதிவிலிருந்து மூழ்கி வெளிவந்தபோது கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்தது போலிருந்தது.

   ப்ராங்க்பர்ட் வருடாந்திர புத்தக விழா விற்பனை புனித மனிடோவின் அருளால் உச்சத்தை இவ்வருடம் எட்டியுள்ளது.நமது ஸ்டாலின் மேற்பார்வையாளர் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ரோபோ 090910 மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு தயாராக இருக்க நமது கார்கோ விமானம் நார்வே நோக்கி நகர உள்ளது.

   நமது Y காமிக்ஸ் நாயகனை ஆராதிக்கும் கோளாறு ஸ்டார் பேரவை தலைவர் கோபுவின் அட்டகாச பங்களிப்பு ப்ராங்க்பர்ட்டை ஜொலிக்க செய்தது.

   பல போர்க்களங்களை கண்டு இப்போது மரவுரி தரித்து பைன் மரத்தில் ஜம்ப் செய்து மர வீட்டில் பதுங்கி இருக்கும் ஜம்பிங் ஸ்டார் பேரவை தலைவரை பற்றிய மீம்ஸ் கீழே..//

   இதுதான் கால சுழற்சி தலீவரே!

   ஆனாலும் இரும்புக்கை மாயாவி மாதிரி ஒரிஜினல் தலீவர்
   நீங்கதான்தலீவரே!

   Delete
  3. அப்ப " செனா... அனாஜி" நம்ம தளபதியா. அப்ப அவர முன்னால நிறுத்துங்க. கவச உடைய மாட்டுங்க.
   ஆயுதங்கள் நிறைந்த டேங்கர் அனுப்புங்க.
   பேரிகையை முழங்குங்க.
   தலைவரே நீங்க
   " போர்...போர்...போர்..."
   அப்படின்னு மட்டும் குரல் கொடுங்க.
   அப்புறம் பாருங்க ரணகளத்தை.

   Delete
  4. செம்ம பதிலடி செனா அனா ஜி.. ஒரே கமெண்ட்ல ஜம்பிங் வண்டியை கொடை சாய்ச்சி விட்டீங்க....🤣🤣🤣

   Delete
  5. @செ.அ ஜி..😍😃😘

   🙏அப்போ 2042 வரை அதாவது அடுத்த 20 ஆண்டுகளுக்கு நம் ஜம்பிங் ஸ்டார் ஸாகோரை யாரும் அசைக்கமுடியாது என ஆணித்தரமாக எடுத்துரைத்ததற்கு நன்றிகள் ஜி..🙏❤💐

   😘#ஜெய் ஸாகோர்#😘

   Delete
  6. சிரிச்சு முடியலீங்க செனா அனா 🤣🤣🤣🤣🤣🤣

   Delete
  7. செனாஅனாஜீ...

   :-))))))

   Delete
 10. பகை பல தகர்த்திடு!

  சிகுகுவா சில்க்- லோலோ

  ட்ரெவர் -ஜானி பட்லர் ( இருவரின் சிறை மீட்பு,மனைவியர் ஏமாற்றுவது)

  கான்பெடரேட் தங்கம்- தெற்கத்தியர்களை சுரண்டிய புதையல்

  மின்னும் மரணம் ஞாபகம் வருதா?


  லோலோ ஏதோ அவங்கப்பா உழைச்சு சம்பாதிச்ச பணம் போல்
  அப்பாவிகளை கொன்று குவித்து சேர்த்த பணத்துக்கு உரிமை கொண்டாடுவது வேடிக்கை.

  கதை நடத்தப்பட்ட விதம் அருமை!

  9.2/ 10

  ReplyDelete
  Replies
  1. // மின்னும் மரணம் ஞாபகம் வருதா? // அதே கதையை திரும்ப எழுதினால் ஞாபகம் வராமல் இருக்குமா சார்?
   ;)

   Delete
 11. Sir! Did you meet any international publishers of interest at CBF?

  ReplyDelete
 12. மீம்ஸ் எல்லாம் செம. 🤣🤣🤣🤣

  ReplyDelete
 13. டியர் எடி,

  ஆப்பிள் கண்களுடன், மூச்சு இருக்கும் வரை இந்த பயணத்தில் இணைந்திருப்பேன்.

  கூடவே வீட்டு இளசுகளுக்கு காமிக்ஸ் படிக்க கத்து கொடுத்து கொண்டே 🥰👍

  ReplyDelete
 14. அப்புறம். ஒரு தலைவன் ஒரு சகாப்தம் போலவே பத்திரிகையாளரின்பேட்டியில் கதை ஆரம்பிக்கிறது.வன் மேற்கில் ஏற்கனவே டெக்ஸ் வில்லரை வைத்து எல்லா வகையிலும் கதையை நகர்த்திவிட்டனர் போனெலியார்இனி வித்தியாசப்படுத்துவதென்றால்அட்டையிலும்,கலர் சட்டையிலும்தான்முடியம்போல.ஜுனியருக்கு காத்திருப்பது பெரிய சவால்தான்.எந்த க்கதை கொடுத்தாலும் இது ஏற்கனவே வந்த டெக்ஸ் போல உள்ளதே என்றவிமர்சனம் வரவேசெய்யும்.கரூர் ராஜசேகரன்

  ReplyDelete
 15. இனி 'கிர்ர்ர் உர்ர்' தான் இளவரசரின் அடையாளம் போல.கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 16. காலையிலேயே கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்...:-(((

  ReplyDelete
  Replies
  1. அப்ப மதங்கொண்ட யானை படை முன்ன அனுப்புலோம். அது பிளிர்ற சத்தத்த கேட்டா இந்த உலகமே நடுநடுங்கி போகாதா.

   Delete
 17. இதற்கு மேலும் எங்களால் பொறுத்து கொள்ள முடியாது....


  பொங்கி எழு மனோகரா...


  மனோகரன் இன்னிக்கு லீவுங்க...


  அடச்சே...

  ReplyDelete
  Replies
  1. தலைவரே,
   வானத்த போல படம் போல பேசுறீங்க.
   சும்மா துணிவோட தில்லா நில்லுங்க.

   Delete
 18. எழுத்தாளர் பிகேபி,நாஞ்சிலார்..வாவ்..சூப்பர் சார்..

  ReplyDelete
 19. சென்னை விற்பனை இந்தமுறை அணுகுண்டு அதகளத்தை அளித்துள்ளது என்பதை நினைக்கும் பொழுது மிகமிகமிக மகிழ்வு சார்..வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 20. தெளிவான சித்திரங்கள் அருமையான மொழிபெயர்ப்பு வித்யாசமான கதைக்களன்கள் இம்முறை வேதாளர் .வேற லெவல்..கொண்டாடவேண்டிய பொக்கிசம் .வேதாளர்ஸ்பெசல் 2 அருமையான வாசிப்பு அனுபவம் . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. @சக்தி ஜி..😍
   வேதாளர் கதை ஒரே ஒரு கதையாவது கலரில் வந்தால் செம்மையா இருக்கும் ஜி..😃❤💛💙💚💜

   Delete
 21. @Edi Sir..😍😘

  VIP களின் வருகை, விற்பனையில் உச்சம்,
  ஸாகோர் பேரவையினரின் அதிரடி...
  என
  #இந்த வருடம் CBF பட்டையை கிளப்புகிறது # சரவெடி#...😍😃💐🔥☀

  ReplyDelete
 22. சென்னை புத்தக விழாவில் நமது லயன் முத்து காமிக்ஸ் விற்பனையில் தொடர்ந்து சாதிக்க எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகின்றேன்.

  ReplyDelete
 23. ////நமது தற்போதைய 'யூத் அணியும்' தொப்பைகளை 'தம்' கட்டி உள்ளே இழுத்துப் பிடித்துக் கொண்டே, வாசகர்ஸ் + வழிகாட்டிகளாய் பயணங்களை ஜாலியாய் தொடர்வர்///

  ஆசிரியர் சார்@இந்த பயணத்தை இப்பலாம் ரொம்ப ரசிக்கிறோம் சார்😍

  இளசுகளுக்கு வழிகாட்டியாய்& தங்களுக்கு வழி துணையாய் என்றென்னும் இந்த ஆப்பீள்கள் பூசணி தொப்பையுடன் தொடர்வோம்💃💃💃💃

  ReplyDelete
 24. ////காத்திருக்கும் ஞாயிறன்று நிறைவு காணவுள்ள விழாவானது, நமக்கொரு விற்பனை ரெக்கார்டை உருவாக்கித் தரும் தருவாயில் நிற்கின்றது ! ///

  --3ஆண்டு சோதனையை தாங்கிக்கொண்ட தங்களது மனவுறுதிக்கும், டீம் லயனுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இது சார். வாழ்த்துகள்💐💐💐💐💐

  ரொம்பவும் மகிழ்ச்சயாக உள்ளது., இதில் நாங்களும் சிறு பங்கு வகிக்கிறோம் எனும்போது நெகிழ்ச்சியாகவும் உள்ளது...

  1990களின் பிற்பகுதியில் "S.விஜயன்"-- என்ற பெயரை மட்டுமே ஹாட்லைன் வாயிலாக அறிந்த பொழுதுகளில் ஓடிய எண்ணத்தை சொல்கிறேன்.....,

  ///"""இத்தனை இன்பமுற செய்யும் காமிக்ஸ்க்கும், தங்களுக்கும், "வாசிப்பு& சிலாகித்து கடிதம்" எழுதுவதை தாண்டி என்ன செய்யப்போகிறோம்..!!!!//////

  பலமுறை இதை நினைத்தது உண்டு அப்போது....!!

  இன்றைய தங்களது பதிவில் வெளிப்படும் தங்கள் மகிழ்ச்சியை காணும்போது நாங்களும், ஐ மீன் ஒட்டுமொத்த வாசக குடும்பதும், இயன்றதை செய்துள்ளோம் என்ற நிறைவும் பரவசமும் அடைகிறோம்!!😍😍😍😍😍😍

  ReplyDelete
 25. ///விரல்கள் சகலத்தையும் cross செய்தபடிக்கே, மூச்சை இழுத்துப் பிடித்துக் காத்திருக்கிறோம் - ஞாயிறு இரவின் இறுதிக் கணக்கிடலை எதிர்நோக்கி ! ///

  ----விழா முடிந்து ஒட்டுமொத்தத்தையும் விவரிக்க இருக்கும் தங்களது பதிவுக்காக நாங்களும் ஆவலுடன் வெயிட்டிங்கு......

  ReplyDelete
 26. ///And இங்கே காட்டும் மூட்டைகளை அடுத்துப் பிரிக்கக் காத்திருப்பது திருப்பூரில் ! So ஒற்றை மெகா adventure முற்றுப்புள்ளி காணும் கையோடு அடுத்ததும் துவங்கிடக் காத்துள்ளது !////

  வாவ்... புத்தக விழாக்கள் நார்மல் சுற்றுக்கு திரும்பிட்டதா...அருமை சார்👌

  இதில் உள்ள செய்தி, நாமும் சோதனைகள் இழப்புகளை தாண்டி நார்மலுக்கு திரும்பும் பாதையில் அடியெடுத்து வைக்கிறோம் என்பதே...!!!

  ReplyDelete
 27. மீம்ஸ்கள் அனைத்தும் ஏக ரகளை...
  பதுக்கு குழி செட்டு கெளரவம் ரொம்ப பங்சர் ஆகிட்டது போல...🤣🤣🤣🤣


  அந்த மொத மீம் போட்ட தம்பி யாருங்க... தனி செய்தியில தொடர்பு கொள்ளுங்க.
  நிறைய பாராட்டணும்....ஆமா நிறைய பாராட்டணும்😉

  ReplyDelete
 28. திருப்பூர் புக்பேர் விரைவிலேயா.

  ReplyDelete
 29. ஜம்பிங் பேரவை வரவின் பின் பளிச்சென்று ஒரு மாற்றம் தெரியத்தான் செய்கிறது.👌
  புலியார் அக்டிவ்வாக இருந்த காலத்தின் பின் ப்ளாக் மீண்டும் களை கட்ட ஆரம்பிக்கிறது. மீம்ஸ்களில் எல்லாம் தெறிக்க விட்டுள்ளார்கள்.😅  ReplyDelete
 30. ஜம்பிங்கார் பேரவை போல் மஞ்சள் சட்டையார் அணியும் தமது 75ம் விழா ஆண்டில் சர்ப்ரைஸ்கள் தந்து கலக்குவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் 🙏

  ReplyDelete
 31. .கடைசிமீம்கு முதல்மீமில் பததுங்குகுழி தலைவராக சித்தரிக்கப்பட்டுள்ளவர் மேல் சிவப்பு கலர் .இதற்கு அர்த்தம் என்ன எனக்குப் புரியவில்லை . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. @ராஜசேகரன் கரூர்..😍😘

   பதுங்கு குழி தலைவரும் CBF ல ஸாகோர் பேரவைக்கு தனது ஆதரவை நல்கி தொடர்ந்து தூங்குவதாக பேரவை யூனிஃபார்மினை பெற்றுகொண்டு வாக்குறுதி அளித்துள்ளார்
   என்பதை ஜம்ப் செய்து தெரிவித்து கொள்கிறோம்..😍😘😃

   Delete
  2. எங்க பதுங்கு குழி தலைவரை பத்தி சொன்னதை கூட நா பொறுத்துக்கிறேன்.
   ஆனா
   நீங்க செய்யற அந்த
   " ஜம்ப் "
   மட்டும் வைச்சிகிட்டு நீங்க பண்ற அலம்பல் இருக்கே,
   இந்த பூமி தாங்காதய்யா. என்னமா பெர்பாமன்ஸ் பண்றாங்க.
   இப்பிடி சொல்லியே எல்லா ரையும்
   " ஜம்ப் "
   பண்ண வைக்கிறீங்களே. எடிட்டரையாவது விட்டு வைங்க. போற போக்ல
   அவரு
   " ஜம்ப் " ஜோதியில ஆனந்த கூத்தாடாம இருந்தா சரிதான்.

   Delete
  3. @புன்னகை ஒளிர்..😍😘😃

   ஜம்பிங் வணக்கமுங்கோ ஜி..😃😀

   Delete
  4. தலைவரே, செயலரே,
   என்னை காப்பாத்துங்க.

   Delete
 32. நாளை பதிவுக்கிழமை ஆசானே !!!

  ReplyDelete
 33. எடிட்டர் சார் டைகர் கதையான 'கான்ஸாஸ் கொடூரன்' (NBS ல் வந்தது) தொடர்ச்சி வெளிவரும் வாய்ப்பு உண்டா? அந்த கதையின் முடிவில் , வில்லனான குவான்ட்ரில் மீண்டும் வருவான் என்று வெளியிட்டிருந்தீர்கள். 10 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் அவனைக் காணோம். டைகர் கதைகளை மீண்டும் படிக்க ஆவல். மனது வையுங்கள் சார்.

  ReplyDelete
 34. அட்லாண்டாவில் ஆக்ரோஷம் கதையில் வில்லன் போமேன் தானே. குவாண்ட்ரில் இல்லையே ஸ்டீல்.

  ReplyDelete
  Replies
  1. ஓ...சாரி நண்பரே அதன் தொடர்ச்சியான கதைதான்...ஆனாலும் பாத்த ஞாபகம்....டைகர் படை கேட்டா ஆசிரியர் போட மாட்டேன்னு சொல்லவா போறார்...ஆனா அற்புதமான கதைகளே ஸ்லாட் கிடைக்காம நிற்பதையும் பார்க்கிறோம்...

   Delete
 35. வேதாளர் கதை ஒண்ணே ஒண்ணாவது கலர்ல. எனக்கும் அதுதான் ஜி ஆசை கறுப்பு வெள்ளையில் இந்த மேக்ஸி சைஸ் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்கும்போது நடுவில் ஒருகதைமட்டும் அப்படியே அந்த பழைய கால பிங்க் கலர்ல டாலடிச்சா சும்மா ஜிர்ருணு இருக்குமே.ஆசிரியர் சார் ஒருகதையாவது டபுள்கலர்ல பார்த்துமனசு வைங்க சார்.கரூர்ராஜசேகரன்

  ReplyDelete
 36. பகை பல தகர்த்திடு...

  கர்னல் ஷெல்பி நீங்க என்ன பண்றீங்கன்னா..ஒரு விபச்சாரியைக் கொன்னுட்டு வேற பேர்ல ஜெயில்ல உக்காத்துக்கிறீங்க..

  ஜானி பட்லர் ..ஏற்கனவே வேற பேர்ல சட்டப்படி ஜெயில் தண்டனை அனுபவிக்கிற ஷெல்பியை வெளியேத்தி அவனோட உண்மையான பேர்ல தண்டனை வாங்கிக் கொடுக்க..வக்கீல் வேசத்துல அந்த ஊருக்குப் போறீங்க..உடனே உங்களையும் ஜெயில்ல போட்டுறாங்க..அதுக்கு முன்னாடி நான் ஜெயிலுக்குப் போறேன்னு மறக்காம டெக்ஸுக்கு தந்தி கொடுக்கிறீங்க..

  லோலா மேடம்..நீங்க ஜானியோட லவ்வர்ங்கிறதால அந்த ஊர்ல ஜானிக்காக உளவு பார்க்க டான்சராக வேவு பாக்காம நடனமாடி பொழுதை ஓட்டுறீங்க.

  டெக்ஸ் & கார்சன் நீங்க ரெண்டுபேரும் நீட்டா குளிச்சு..வயிறார சாப்பிட்டு ..ஷு..குளம்புக்கெல்லாம் பாலீஷ் போட்டு வெயிட் பண்ணுங்க.ஜானியோட தந்தி கெடச்சதும் டக்னு கிளம்பி போய் லோலாவைப் பாத்துட்டு அப்புறம் ஜானியை ஜெயில்லேர்ந்து மீட்கணும்..நடுவுல லோலாவோட டான்ஸ் ப்ரோக்ராம் இருக்கு.சலூன் அல்லோலோகல்லோலோ படற சீன் இருக்கு.இதையும் தாண்டி நாப்பது பக்கத்துக்குள்ள முடிச்சாகணும்.

  கோகன்...நீ பிங்கர்டன்னோட முன்னாள் ஆளு. உன் வேலை என்னான்னா ஷெல்பியை மீட்க ஆபிஸர் ..வார்டனை கைக்குள் போட்டு ரகசியமாக பக்கத்திலிருக்கிற லோலாவுக்கு கேக்கிற மாதிரி ப்ளான் போடுற.

  டெக்ஸ் &கோ..ஷெல்பியை மீட்க எதுவும் மெனக்கெடாதீங்க..அதை கோகன் க்ரூப் பாத்துக்குவாங்க..அவங்க ஷெல்பியை காப்பாத்திட்டு தூங்குப்போது நீங்க போய்..அலேக்காக அவனை தூக்கி வந்தாப் போதும்..

  ரெஸிட்டரி..நீ கர்னலோட படையில இருந்த ஆளு..கோகன் மூலமா ஷெல்பியை காப்பாத்துறது நீதான்.உன்னாலதான் தேவையேயில்லாத ஆணி..தேவையான ஆணியா மாறுது...

  தன்னை எதுக்கு ஆளாளுக்கு காப்பாத்த நினைக்கிறாங்கன்னு குழம்பிய ஷெல்பிக்கு உன்னாலதான் விடை கிடைக்குது.

  அப்புறம்...எப்பவும்போல
  கோகன் கும்பலோட ஒரு பைட்..
  ரெசிட்டரி கும்லோட ஒரு பைட்..
  சிறை வார்டன் கும்பலோட ஒரு பைட்னு மிச்ச பக்கத்தை தேத்திடலாம்..ஒரு மாறுதலுக்கு கோச் வண்டில ஒரு பைட்னு சேத்திக்கலாம்.

  ஏம்மா.. லோலா க்ளைமாக்ஸ்ல உனக்கு முக்கியமான ட்விஸ்ட் இருக்குது..ஒரு தியாகம் இருக்கு..பாக்கிறவங்க பரிதாபப்படற மாதிரி சீக்வென்ஸ் இருக்கு.அதை நம்பிதான் இருபது பக்கத்தை அலாட் பண்ணிருக்கேன்.எங்கேயும் போயிடாத..

  கோகன் ..உனக்குமே குண்டடிப் படற மாதிரி சீன் இருக்கு. பாத்துக்கோ..

  அடடா..டெக்ஸை விட்டுட்டோமே..சுபம் போட்டு முடிச்சுவைக்கிறது நீங்கதானே.அதனால லோலாவை முதுகில் சுட்ட ஷெல்பியை நெஞ்சில் சுட்டு ஆளை முடிச்சுட்டு..கதையை முடிக்கிறீங்க..

  சுபம்...சுபம்.

  பி.கு..
  ஜானி க்ளைமாக்ஸுல கண்ணீர் விட்டு கதறியழுததற்கு வெளியே தெரியாத வேற காரணமும் இருக்கு..
  'வேற பேர்ல ஒளிஞ்சிட்டிருக்கிற ஷெல்பியை அவனோட உண்மையான அடையாளத்தை உலகுக்கு காட்டி தண்டனை வாங்கித் தரவேண்டுமென்ற ஜானியின் கனவு ..லட்சியம்.. அயராத. உழைப்பு அத்தனையும் ஒரு தோட்டாவால் சில்லு சில்லா சிதறியதை நினைத்துதான் அந்த அழுகை..

  இதுக்கு அவனை முதல் பக்கதிலேயே
  போட்டுத் தள்ளியிருக்கலாமோ.
  .

  ReplyDelete
 37. ஹைய்யோ இந்த g.p.நேரங்காலந்தெரியாம அற்புதமான.அபாரமானசேம் சைடு கோல் போட்டுக்கிட்டிருக்கிறாரே. அருமையான கருத்துக்கள் .ஆழ்ந்தசிந்தனை..ஆனாபாராட்டத்தான் முடியலே.கரூர் ராஜசேகரன்

  ReplyDelete
  Replies
  1. @கரூர் ராஜசேகர் 😍😘😃

   அய்யா..😃
   ஸாகோர் பேரவையின் ஸ்லீப்பர் செல் எங்க GP ஜி..
   மாதிரி இன்னும் நிறையபேரு இருக்காங்க சக்தி ஜி..😍😘💪👍✊✌

   Delete
 38. @கரூர் ராஜசேகரன்..😍😘

  செ.அ. ஜி..😍 2042 வரைக்கும் ஸாகோர் பேரவைதான் லீடிங்குன்னு சொல்லாம சொல்றாரு..😃
  இந்த உள்குத்த கவனிக்காம நீங்க வேற நிம்மதியா தூங்குவேன்னு வேற சொல்றீங்க ..😃😃😃😃

  ReplyDelete
 39. சாய்பாபு ஜி போறபோக்கப் பார்த்தா ஈரோடு மேனேஜரையும் இளவரசரையும்அப்படியே டெக்ஸ் விஜயராகவரையும் ஸாகோர் பேரவைன்னு சொல்வீங்க போல.ஹும் .வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க . கரூர் ராஜ சேகரன்.

  ReplyDelete
 40. ஜி..😃😍
  அப்ப நீங்க ஜி..😘

  நம்ப எல்லோருமே ஒண்ணுக்குள்ள ஒண்ணுங்க ஜி..👍

  ஒருகொடியில் பூத்த பல நிற மலர்கள் ஜி..❤💛💙💚💜

  ReplyDelete
 41. ஒரு கொடியில் பூத்த பலநிறமலர்கள் ஜி. மலர்களா இப்பத்தானேங்கஜி ஆப்பிள் .ஸ்ட்ராபெர்ரி ன்னு ஆசிரியர் கிட்ட அட்டனென்ஸ் போட்டுட்டு வற்றோம் .நாமெல்லாம் பழுத்த பழங்களுங்க ஜி . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க @ கரூர் ராஜசேகர்ஜி..😍😘😃

   உண்மைதான்..😍

   நாம் எல்லோரும் ஒரு மரத்தில் பழுத்து கனிந்த கனிகள்தான்..🍋🍓🍇🍉🍌🍊🍎😘

   Delete
 42. இன்று பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.

  ReplyDelete
 43. @Edi Sir..😍😘😃

  இன்று ஸாகோர் கிழமை சார்.😍

  CBF வெற்றி செய்திகள்💪👍, சேல்ஸ் ஜம்பிங் பதிவுகள் 👍💪✊ஆகியவற்றை பற்றி நிறைய , நிறைவா எதிர்பார்க்கிறோம் சார்.😘😍

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க தலைவரே. நீண்ட பதிவாக எதிர்பார்க்கின்றோம் ஆசிரியரே. ஜம்பிங் ஸ்டார் பேரவையின் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் ஆவன செய்வாரா என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் தலைவரே. நன்றி தலைவரே.

   Delete
 44. சார் இன்று பதிவுக் கிழமை...

  ReplyDelete
  Replies
  1. கோரிக்கை அனுப்பப்பட்டுவிட்டது நண்பரே. ஆசிரியர் ஆவன செய்வாரா?

   Delete
  2. ஸாகோர் பேரவை செயலரே..பொருளாளரே..
   😍😘😃

   நமது பேரவையின் இருப்பை நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் தெரியபடுத்தி கொண்டே இருக்கவேண்டும்..💪👍😘

   ஆசிரியரின் அன்புக்கு உரியவராக நாம் எப்போதும் நடந்து கொண்டு, நமது சீனியர் பேரவையினர்களின் மனது கொஞ்சமும் புண்படாமல் நடந்து வெற்றிகனியை அடையவேண்டும்.💪👍😘

   #ஜெய் ஸாகோர்#😘😘😍

   Delete
  3. நீங்க சொன்னா சரிங்க தான் தலைவரே .

   Delete
 45. பெரியவர் செ.அ அவர்களின் அருள்வாக்குபடி அடுத்த 20 ஆண்டுகளுக்கு நம் தலைவன்தான் Peak ல இருக்கபோறாரு.😘🙏

  அதனால பொறுமையாக இருந்து
  நாமும் சந்தோஷப்பட்டு அடுத்தவர்களையும் சந்தோஷபடவைப்போம் பொருளாளரே..😍😘

  ReplyDelete
 46. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

  ReplyDelete