நண்பர்களே,
வணக்கம். முன்னெல்லாம் குதிரைப் பந்தயங்கள் கிண்டியில் நடப்பதுண்டு ! மாலை 4 மணிக்கு ரேஸ் என்றால் மதியம் 3 முதலே ரேஸ் பிரியர்களுக்குக் கை நடுங்க ஆரம்பித்து விடுமாம் ; வேறெந்த வேலையிலும் கவனம் செல்லாதாம் ! கிட்டத்தட்ட அந்தக் கதை தான் போலும் நம்மளுக்கும் !
ரைட்டு...ஒரு வீடியோ பதிவோடு இந்த சனிக்கிழமையை ஒப்பேற்றி விடலாமென்றே காலையில் எண்ணியிருந்தேன் & surprise....காலங்கார்த்தாலே அரை அவரிலேயே வேலையும் முடிஞ்சது ! ஜூனியர் எடிட்டரிடம் அதனை upload செய்யும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, "மரணம் சொன்ன இரவு" பணிகளுக்குள் புகுந்திருந்தேன் ! ஆனால் அந்தப் பரிச்சயமான மாலை நேரம் புலர ஆரம்பிக்க, விரல்கள் எதையாச்சும் லொட்டு லொட்டென்று தட்டும் அரிப்பெடுத்து restless ஆகயிருப்பதை உணர முடிந்தது ! 'ஆஹா....மாமூலானதொரு மொக்கை போடாமல் வாராது நித்திரை ' என்று புரிபட, இதோ - அசடு வழிய இங்கே ஆஜர் !!
December ! நிறையவாட்டி சொல்லியுள்ளது தான் ; இந்த மாதம் நமக்கு எப்போதுமே வாஞ்சையானதொரு வேளை ! And அகஸ்மாத்தாய் இந்த மாதத்தின் இதழ்கள் நான்குமே தத்தம் பாணிகளில் impressive ஆக அமைந்து போனது இந்த டிசம்பரை இன்னும் கொஞ்சம் ரம்யமாய்க் காட்டுகிறது ! But இந்த நொடியில் நான் இங்கே எட்டிப் பார்த்திருப்பது, நேற்றும், இன்றுமாய் "வாங்கியது எத்தனை ? வாசித்தது எத்தனை ?" என்ற நமது கேள்விகளுக்கு நீங்கள் சரமாரியாய்ப் போட்டுத் தாக்கியுள்ள பதில்களினாலேயே !! முன்னெல்லாம் "படிவத்தைப் பூர்த்தி பண்ணி கடுதாசியாய் அனுப்புங்க மக்கா !" என்று கோரியிருப்போம் ; கொட்டாவி விட்டபடிக்கே மூணோ, நாலோ பேர் மட்டுமே அதற்கு மெனெக்கெடுவதைப் பார்த்திட முடியும் ! ஆனால் இப்போதோ வாட்சப்பின் புண்ணியத்தில், உங்கள் வீட்டுக் கூடங்களுக்கும், நம் ஆபீசுக்குமான தொலைவு ரொம்பவே மட்டுப்பட்டு விட்டது ! இருந்தாலுமே, கிட்டத்தட்ட 90 நண்பர்களுக்குக் கிட்டக்க இன்றைக்கு பதில்களெழுதிப் போட்டுத் தாக்கியிருப்பது செம sweet surprise !! அவற்றில் நான் கவனித்த சமாச்சாரங்களின் பகிர்வு இவை :
1.ரெகுலர் சந்தா இதழ்களின் பெரும்பான்மையினை கிட்டத்தட்ட அனைவருமே வாசித்துள்ளனர் ! That's a relief !!!
2 .ஜம்போவில் வந்துள்ள கிராபிக் நாவல்களை கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் வாங்கவுமில்லை ; வாசிக்கவுமில்லை ! "ஒன்-ஷாட்ஸ் வேணாமே !!" என்ற குரலாய் இதைப் பார்ப்பதா ? Confusion ...!
3 .தொண்ணூறு சதவிகிதத்தினர் SMASHING '70s வாங்கியுள்ளனர் ! And சர்ப்ரைஸ்.....மாண்ட்ரேக் கரைசேர்ந்திருக்கிறார் வாசிப்புகளில் ; ஆனால் காரிகன் தடுமாறி நிற்கிறார் ! சமீபத்து இதழ் இது என்பதால் இன்னமும் காரிகனுக்கு நேரம் தர தோதுப்படவில்லையா - அல்லது கதைகள் ரொம்பவே சுமாரா ? Again confusion ...! அடுத்த வருஷத்தினில் மாண்ட்ரேக் சந்தாவுக்கு வெளியேவும், காரிகன் உள்ளேயும் உள்ளனர் ! Maybe அதனில் ஒரு உல்டா தேவையோ ? Your thoughts please ?
4.கதை சொல்லும் காமிக்ஸ் (பீன்ஸ்கொடியில் ஜாக் ; சிண்ட்ரெல்லா) இதழ்களின் திசைப்பக்கமாய் கிட்டத்தட்ட முக்கால் பங்கினர் போகக்கூடக் காணோம் ! மீத 2 இதழ்களை தக்கி முக்கி வெளியிட்டு விட்டால், இந்த முயற்சியினை "ஒரு மெகா புத்திக் கொள்முதல்" என்று செலவெழுதி விட்டு அடுத்த வேலையைப் பார்த்தாகணும் போலும் !
5 ."குண்டு புக்....கூட்டணி இதழ்...கதம்ப காம்போ" - என்ற குரல்கள் உரத்து இருப்பினும், வாசிப்பினில் பாதிக்குக் கொஞ்சம் குறைவான நண்பர்கள் பெரிய புக்குகளில் தொக்கடி வைத்துள்ளனர் ! On the contrary, ஒற்றைக் கதை ; 48 பக்க ரெகுலர் புக்ஸ் கிட்டத்தட்ட முழுமையான வாசிப்புகளுக்கு உட்பட்டுள்ளன ! ஓய்வாய் நேரம் கிட்டுவது குதிரைக்கொம்பாய் மாறி வரும் இந்நாட்களில், குண்டு புக்ஸ் இனி அலமாரிகளை மட்டுமே லங்கரிக்குமோ ? ஐயகோ...இளம் வேங்கை வேற வரணுமே காத்திருக்கும் ஆண்டினில் !!
6 .ரெகுலர் அட்டவணைக்கு அப்பாலுள்ள "திடீர் ஸ்பெஷல் இதழ்கள்" நிறைய நண்பர்களின் கவனங்களை ஈர்க்கக் காணோம் ; ஒரு 30 சதவிகிதத்தினர் இந்த புக்ஸை வாங்கவே இல்லை ; so வாசிக்கவும் இல்லை ! More confusion ...."எங்கே...? எப்போது ?" என்றதொரு பெரும் பட்டியல் சந்தாவுக்கு அப்பாலிக்கா இருக்குதே !! அதனைக் கையாள்வது எவ்விதம் ?
7 .கார்ட்டூன்களில் அதே சோக trend தொடர்கிறது ! சந்தாவின் ஒரு அங்கமாய் அவற்றை நண்பர்கள் வம்படியாய் வாங்கியிருந்தாலும், லக்கி லூக்கைத் தவிர்த்த எதையும் கிட்டத்தட்ட 60 சதவிகிதத்தினர் வாசிக்கக் காணோம் ! Even சிக் பில் ! ஐயகோ...ஐயகோ..!
8 .கால்வாசிப் பங்கு நண்பர்களுக்கு கிட்டத்தட்ட 2 மாதங்களின் அவகாசம் அவசியமாகிடுகிறது - நமது மாதாந்திர இதழ்களை வாசிப்புக்கு உட்படுத்த ! அந்த அணியினர் அனைவருமே நவம்பரின் இதழ்களை இன்னமும் வாசித்திருக்கவில்லை ! (டெக்ஸ் நீங்கலாய்) ! A case for more crisp stuff I guess !!
இது வரைக்குமான உங்களின் பகிர்வுகளிலிருந்து கிட்டியுள்ள தகவல்கள் இவை ! தொடரும் நாட்களில் இன்னமும் நண்பர்கள் தங்களது "வா.எ ? வா.எ.?"-வைப் பகிர்ந்திட்டால் will give us an even better insight !! அருள்கூர்ந்து மெனெக்கெடுங்களேன் ப்ளீஸ் ?
Before I wind up - இதோ உங்களின் கற்பனை ஊற்றுக்களை பிரவாகமெடுக்கச் செய்ய இன்னொரு contest !
இதோ - நமது இரவுக்கழுகாரின் full டீம் !
And நீங்க தான் வன்மேற்கின் ரேஞ்சர் பிரிவின் HR மேனேஜர் !! நம்மவர்கள் ஒவ்வொருவரும் ஒற்றை வரியில் தங்களை அறிமுகம் செய்து கொண்டாக வேணும்....! So அதற்கேற்றவாறு crisp ஆக அவர்களுக்கான வரிகளை உருவகப்படுத்திடுங்களேன் ? ஒருவரையொருவர் மட்டம் தட்டுவது போலவோ, வாருவது போலவோ இல்லாமல், ஜாலியாய், டீசெண்டாய் இருக்கட்டும் guys உங்களின் ஆக்கங்கள் ! வெற்றி பெறும் நண்பருக்கு நமது அடுத்த கலர் டெக்ஸ் மினி (32 பக்க) இதழுக்குப் பேனா பிடிக்கும் வாய்ப்பு பரிசாகிடும் ! So get cracking people !!
இதோ - டிசம்பர் இதழின் YouTube அறிமுகத்தின் லிங்க் இன்னொருக்கா :
And carry on with the டிசம்பர் அலசல்கள் ப்ளீஸ் ! Bye for now ! See you around !
Me 1
ReplyDeleteMe 2
ReplyDeleteMe 2nd
ReplyDelete4th
ReplyDeleteDeadwood Dick was ripping action sir - awesome !!
ReplyDeleteஅந்த ஒற்றைப் பக்க "டுமீல்-டுமீல்" பிரவாகம்...பராக்குப் பார்த்த எனக்கே மூச்சிரைக்கச் செய்தது சார் !
Deleteஒரே டுமீல் மழைதான் போங்கள்…
Deleteவணக்கம் கா...கா.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!!
ReplyDeleteபதிவு மழை பொழிகிறது....
ReplyDeleteஎங்கள் மனம் மகிழ்ச்சி கொள்கிறது.
நன்றி ஆசிரியர் சார்.
9th
ReplyDeleteSir - 90 is just 15% of 600 or around subscribers sir - please do not make a quick decision based on this. You would need 400 or more counts to get a decent opinion.
ReplyDeleteJust an initial impression sir....in any case 2023 க்கான அட்டவணை & out of the அட்டவணை - என சகலமும் cast in stone ! மாற்றங்கள் அவசியமாகிட்டால் கூட 2024-ல் தான் !
DeleteHi..
ReplyDeleteஎனது பார்மை இன்று மாலை அனுப்பி உள்ளேன் சார் 34/45.
ReplyDeleteபெயரின்றி வந்திருந்த படிவமா கிருஷ்ணா ?
Deleteநானும் அனுப்பிட்டேன் சார்...
Deleteஇல்லை சார் பெயர் இருக்கிறது சார். கிருஷ்ணா வ வே என்று. இன்னும் வாட்டசப்பில் டெலிவரி ஆகவில்லை. ஒற்றை டிக் தான் இருக்கிறது. மாலை என்பதை இரவு என்று கொள்ளவும் சார் 😁
Deleteஆஜர்
ReplyDeleteஇன்று பதிவில்லையே என்று கவலையில் இருந்தேன் கவலையை போக்கியதற்க்கு நன்றி ஆசிரியரே
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஇன்னாது அதுக்குள்ள புதுப் பதிவா ?!
ReplyDeleteஹி..ஹி..ஹி..!
Deleteஇம்மாத வாசிப்பு.
ReplyDeleteடெட் உட் : முதல் கதையை விட இரண்டாவது கதை நன்றாக இருந்தது. பயங்கர ரா வாக இருந்தது. வெட்டியான் போல ஒரு நல்ல கதையம்சம். அவரை பற்றிய எனது எண்ணத்தை மாற்றி விட்டது.
மார்ட்டின்: நல்ல தலைப்பு 😀
மொழிபெயற்பு மிகவும் கஷ்டம் தான் சார். நடப்பதை புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால் சிறிய கதை தான் என்பதால் ஓகே தான்
அந்த முன்னுரை நன்றாக உதவியது.
டெக்ஸ் : அட்டை படத்தின் அழகை ரசித்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் படிக்க வேண்டும்
மொக்கை போட்டது மொழிபெயர்ப்பினில் அல்ல கிருஷ்ணா ; புரிதலில் தான் ! என்ன சொல்ல வருகிறார்கள் ? யார் எந்த அணி ? வரலாற்றில் யாருக்கு என்ன role ? என்ற தேடலே பெண்டை நிமிர்த்தி விட்டது !
Delete🙋♂️
ReplyDeleteடிக் - தெறி
ReplyDeleteChick bill readership has gone down ? That's soo bad... graphic novel is a very good attempt pls do not stop it. தனியே தன்னந்தனியே was really good.
ReplyDeleteHow to participate in the contest btw?
ReplyDeleteJust type your lines here sir..
Delete// அடுத்த வருஷத்தினில் மாண்ட்ரேக் சந்தாவுக்கு வெளியேவும், காரிகன் உள்ளேயும் உள்ளனர் ! Maybe அதனில் ஒரு உல்டா தேவையோ ? Your thoughts please ? //
ReplyDeleteஇருப்பதை அப்படியே விட்டு விடுங்கள் சார்,மாண்ட்ரேக் வெளியே இருந்தாலும் சர்ப்ரைஸ் ஸ்பெஷலாய் வந்தாலும் பாஸ் பண்ணி விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது…
அப்படீங்கிறீங்க ?
Deleteயெஸ் சார்…
DeleteTex-கதை சொன்ன விதம்,வேற லெவல்.வெகு நாட்கள் மனதில் நிற்பது உறுதி.90/100.
ReplyDeleteD.W.D-கதையை படித்த பிறகு இவரின் முன் கதையை தேடி கொண்டு இருக்கிறேன் பெட்டிகளில்...வாவ் சூப்பர்..80/100
:-)
Delete//Tex-கதை சொன்ன விதம்,வேற லெவல்.வெகு நாட்கள் மனதில் நிற்பது உறுதி//
Deleteபோசெல்லி மாயாஜாலம் !
நமக்கு இந்த கவிதை, கற்பனை, கேப்சன்லாம் வராது என்பதால் வெற்றியாளருக்கு வாழ்த்துகள்... அதுவும் தலை கதைக்கு எழுதும் வாய்ப்பு எனும்போது ஐசிங் ஆன் த கேக்.... வின்னருக்கு முன்கூட்டியே வாழ்த்துகள்💐💐💐💐💐💐
ReplyDeleteஅப்போ இந்தவாட்டி உங்களை ஜட்ஜையாவா போட்டுப்புட வேண்டியது தான் சார் !
Deleteவாழ்த்து சொன்னது குத்தமாங்க யுவர் ஹானர்...🤣
Deleteகும்மிட்டுகிறேனுங்க ஜட்ஜையா !!
Deleteபோடுங்க சார் அப்படி போடுங்க
Delete// முன்னெல்லாம் குதிரைப் பந்தயங்கள் கிண்டியில் நடப்பதுண்டு ! மாலை 4 மணிக்கு ரேஸ் என்றால் மதியம் 3 முதலே ரேஸ் பிரியர்களுக்குக் கை நடுங்க ஆரம்பித்து விடுமாம் ; வேறெந்த வேலையிலும் கவனம் செல்லாதாம் ! கிட்டத்தட்ட அந்தக் கதை தான் போலும் நம்மளுக்கும் ! // அவங்களுக்கு 3 மணி நமக்கு சனி இரவு 10 மணி.
ReplyDeleteசிரித்துச் சாக வேண்டும்,காரிருள் காரிகை இளவரசியின் இரண்டு கதைகளுமே செம விறுவிறுப்பு சார்,காரிருள் காரிகை இளவரசிக்கு இணையாய் வரும் தைனாவின் கேரக்டர் செம ஸ்பெஷலாய் உள்ளது,சிறப்பு அம்சங்களை கொண்ட தைனாவின் பாத்திர வடிவமைப்பு நம்மை கவராவிடின் தான் வியப்பேன்…
ReplyDeleteசிரித்துச் சாக வேண்டும்-ஜோக்கர் கும்பலின் வெறியாட்டமும்,காரிருள் காரிகையில் எட்லிட்ஸ் பிரபுவின் வெறியாட்டமுமாய் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் கதை நகர்கிறது…
இரு கதைகளுமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை,ஓவிய பாணிகளும் ஓகே இரகத்தில் உள்ளன,உறுத்தும் சில எழுத்துப் பிழைகளை தவிர்த்துப் பார்த்தால் பெரிதாய் குறை சொல்ல ஒன்றுமில்லா கதைகளிது…
இளவரசி பரிட்சையில் பாஸ் செய்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்…
எமது மதிப்பெண்கள்-8/10.
கண்டிப்பாக பாஸ் செய்துவிட்டார் அண்ணா. இரண்டு கதைகளும் மிக அருமை.
Delete"ஆத்தா....நான் பாஸாயிட்டேன் moment #"
Delete// ரெகுலர் அட்டவணைக்கு அப்பாலுள்ள "திடீர் ஸ்பெஷல் இதழ்கள்" நிறைய நண்பர்களின் கவனங்களை ஈர்க்கக் காணோம் ; ஒரு 30 சதவிகிதத்தினர் இந்த புக்ஸை வாங்கவே இல்லை ; so வாசிக்கவும் இல்லை ! More confusion ...."எங்கே...? எப்போது ?" என்றதொரு பெரும் பட்டியல் சந்தாவுக்கு அப்பாலிக்கா இருக்குதே !! அதனைக் கையாள்வது எவ்விதம் ? // அதையும் ஒரு சந்தா அறிவித்து ஜம்போ போல கொண்டுவந்து விடலாமே சார்.
ReplyDeleteஅதையும் ஒரு சந்தா அறிவித்து ஜம்போ போல கொண்டுவந்து விடலாமே சார்.//
Deleteநல்ல ஐடியா!! ரெகுலரா ப்ளாக் வராதவங்களுக்கு தனியாக புத்தக விழாக்களில் வரும் புத்தகங்கள் தெரியாமல் போக வாய்ப்புண்டு. சோ ஜம்போ மாதிரி மார்ச் அல்லது ஏப்ரலில் அறிவிச்சுடலாமே.
நல்ல யோசனைதான்...
Delete1.வாவ் குட் நியூஸ்
ReplyDelete2.அழுகாச்சிகளுக்கு இன்னும் அணைபோட்டிருப்பது தொடருது....ஹூம் ஜம்போ இனிமே அம்போதானா???
3.no comments
4.simply drop those 2, சிக்கஙான சூழலில் பணம் முடங்கும் எதுவும் இனி வேணாம் சார்
கதைகள்லாம் வாங்கிப் போட்டு ஒரு மாமாங்கம் ஆச்சு சார் ! ஜெ புத்தக விழாஸ் !!
Deleteஜெய் புத்தக விழாஸ்......😍😍😍
Deleteஇந்த பதிவை படித்த பிறகுதான் இன்றைய நாள் முழுமையடைந்தது போல் உள்ளது Sir
ReplyDeleteஎனக்குமே சார் !
Deleteநிழல்களின் ராஜ்யத்தில்
ReplyDeleteகதையின் ஆரம்பமே அமர்க்களம். ஒரு பேய் கதை படிப்பது போலவே கதை நெடுகிலும் அமானுஷ்யம். அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஓவியங்கள். பயமாகவே உள்ளது கதை முழுவதும்.
இந்த வருடத்தின் மிகச் சிறந்த டெக்ஸ் கதை. என்னைப் பொறுத்தவரை 2021 தான் டெக்ஸ் கதைகளின் பெஞ்ச் மார்க்.
இந்த வருடம் ஆரம்பம் முதலே அதனை தொட முடியவில்லை. தீபாவளி மலர் வரை இப்போது வருட இறுதியில் இந்த கதை. You saved the best for the last.
உங்களுக்கு ஏனோ டெக்ஸ் அமானுஷ்ய கதைகள் பிடிப்பது இல்லை. ஆனால் எனக்கு அவை மிகவும் பிடிக்கும். சைத்தான் சாம்ராஜ்யம், மரண முள், மந்திர மண்டலம், மரணத்தின் நிறம் பச்சை, கடைசியாக வந்த இருளோடு யுத்தம் அந்த வரிசையில் இப்போது இந்த கதை.
எனது மதிப்பெண் 10/10.
போன பதிவில் எனது விமர்சனம்.
மெபிஸ்டோ மீள்வருகையும் சரி, இந்த "நிழல்களின் ராஜ்ஜியத்தில்.." ஆல்பமும் சரி, தேர்வானதான் காரணமென்னவென்று யோசித்தீர்களா சார் ?
Deleteகாதில் பூ சுற்றல் குறைவாகவும்.மாயாஜால வித்தைகள் அளவாகவும் இருந்ததாலா சார் ?!
Deleteஉங்களை அந்த கதைகள் கவர்ந்து இருக்க வேண்டும் சார். அது மட்டும் இல்லாமல் வெகு நாட்களாகவே இது நேயர் விருப்பம்.
Deleteஇன்னொரு guess எடுத்துக் கொள்ளுங்கள் சார்...!
Deleteஅண்ணன் சரியாக சொல்லி விட்டார். அது மட்டும் இல்லாமல் அது மாயாஜாலம் இல்லை தானே.
Deleteஅண்ணன்-தம்பி பாசம் நெக்குருகச் செய்தாலும், அண்ணாரின் பதில் தப்புன்னு சொல்லக் கடமைப்பட்டிருக்கேனுங்கோ !
Deleteதாங்கள் அமானுஷ்ய கதைகளின் அதிதீவிர ரசிகர் என்பதாலாங் சார்!
Deleteஇல்லீங்கோ....ஞானே பரையும் !!
Deleteகாத்துள்ள மெபிஸ்டோ புதுக் கதைகளுக்கும், இம்மாதத்து "நிழல்களின் ராஜ்ஜியத்தில்" திகில் ரக ஆல்பத்துக்குமான ஒற்றுமை - அவற்றின் கதாசிரியர் மௌரோ போசெல்லி என்பதே சார் ! போசெல்லியின் கதை சொல்லும் அபார ஆற்றலில் எனக்குள்ள நம்பிக்கை தான், மெபிஸ்டோ ஒரு விட்டலாச்சார்யா ரேஞ் வில்லனாக அல்லாது, ஒரு டெர்ரர் பார்ட்டியாய் இனி வலம் வரக்கூடும் என்ற நம்பிக்கையினைத் தந்தது !
இதோ - இம்மாத டெக்ஸ் கூட அந்த நம்பிக்கையின் ஊர்ஜிதமே !
இப்போ ஹாரர் ஜானர் வருவதே இல்லை என்பதால்
Deleteபோசெல்லியின் கதை சொல்லும் அந்த நேர்த்தியான பாணியா சார்...
Deleteஅருமை சார்.... எக்ஸலன்ட் டிஸிஸன்...🙏
Deleteஆனா "லியோனல் மெஸி" மேஜிக் தொடங்க இன்னும் ஒரு மணி நேரம் உள்ளது... இன்னும் சில வாய்ப்பு தந்திருந்தீங்கன்னா கண்டு பிடித்திருப்போம்....
அடடா விடையை கணிச்சி டைப் பண்ற கேப்பில் வட போச்சே மொமெண்ட்...
Delete'சென்னைக்கண்ணோடு' இன்னிக்கி ராக்கூத்து தானா ? ஆஹா !!
Deleteமெஸியும், ஆருயிர் அர்ஜென்டினாவும் களம் இறங்கச்சே "பிங் ஐஸ்" லாம் நம்மை தடைபோட இயலுமாங் சார்.....!! ஜெய் அர்ஜென்டீனா! ஜெய் டெக்ஸ் வில்லர்!
Delete5.தொக்கடி வைத்தாலும் குண்டுகளை வாசித்து விடுவோம் சார்.... பிரிக்க இயலாதது "குண்டுபுக்கும்,லயன் காமிக்ஸ் வாசகரும்"_---இதை இப்படியும் சொல்லலாம்,- " எடிட்டரும் கால்கட்டைவிரல் நமைச்சலும்"
ReplyDelete6.புத்தக விழாக்கள் இருக்கு யோசனை ஏன் சார்????? 6புக்குக்கு 10விழா இருக்கும் போல ஜமாய்க்க..
Delete7.யோசனையே வேணாம் சார், ஓடற குதிரைகளை மட்டுமே இனி பந்தயத்தில விடுங்க...காம்ப்ரமைஸ்களுக்கு காலம் அல்ல...லக்கிதான் கேட்கிறாங்கனா, காலியாகும் அவ்விடங்களில் இருக்கவே இருக்கிறது எங்கே?எப்போது???
8.அடுத்த 100ஆன்ஸர் ஷீட்டுகள் இன்றியமையாதவை....அவைகளின் ரிசல்ட்டுக்கு ஆவலுடன் வெயிட்டிங்...
//அவைகளின் ரிசல்ட்டுக்கு ஆவலுடன் வெயிட்டிங்...//
Deleteஞானுமே !
Deadwood is a wonderfull choice but I felt you have spoiled little. May be because you want to give a good intro of a new character.
ReplyDeleteAlso the choice of TEX story is also interesting I am. Going to go for it.
I hope I will still get the form to fill if go for only these stories.
டெட்வுட் Spoil ஆனது எங்கே ? ஏன் ? என்றுமே சொன்னால் புரிந்து கொள்ள நன்றாக இருக்கும் சார் ! ஒற்றைப் புள்ளி, கமா கூட ஒரிஜினலிலிருந்து நான் மாற்றியிருக்கவில்லை எனும் போது, very curious to know !
DeleteAnd இந்த மனுஷனுக்கு நல்ல intro தர விழைகிறேனா ?? அது தான் போன வருஷமே establish பண்ணிவிட்டோமே சார் - இவனொரு பட்டா இல்லாத நிலமென்று !
Delete@vijayan spoiled in the sense , revealing the content before some one reads it . Not in the qualitative way . Sorry if I was confusing. Typically this happens when we introduce / review some content (films / books etc.,) .
DeleteIt may be only me because am very sensitive towards this!!
For eg: when you said deadwood worked for military and came out I was like... "ahhhh,I should have read this rather than hearing from you"
DeleteMe: வன்மேற்கின் ரேஞ்சர் பிரிவின் HR manager..👷
ReplyDeleteTex and team come for reporting before me..💂
*Tex*:
Sir.. Me TEX.. *Texas ன் Terror team captain Tex* reporting with my Terror team Sir.. 👍
எப்பேற்பட்ட கலவர பூமியா இருந்தாலும் நான் களம் இறங்கிட்டன்னா அதம்..கதம் தான் சார்..
Tex ன்னா Terror..
Terror ன்னா Tex sir..💪
*Karson*:
Sir.. Me *அன்னதாத்தா கார்சான்* reporting Sir..
எங்கே வருத்தகறியும்,பீன்ஸும்
கிடைக்கும்கிறதை கண்டுபுடிச்சு எங்க டீமோட பசி ஆத்தறது என்னோட முக்கியபணி சார்.😃
அப்பப்போ எங்க டீம் கேப்டனோட மொக்க கலாய்ப்ப சிரமேற்கொண்டு தாங்கிக்கறது மித்தநேரப்பணி Sir..😶
*Kit willer*:
Sir.. Me *Kitkat Tex* reporting Sir.. *குயந்தைபையன் Tex* ன்னும் சொல்லலாம் Sir..
தக்கிடித்தனமா தனியே போய் எங்கேயாவது மாட்டிக்கிட்டு Tex டாடி வருவாரான்னு வழிமேல் விழி வச்சு பாத்துகிட்டே இருக்கிறது முக்கியவேலை Sir..😟
மீதி நேரம் எங்க கார்சன் அங்கிளோட அச்சு பிச்சு பேச்சை கேட்டுகிட்டு இன்னும் மொட்டபையனாவே பொழைப்ப ஓட்டுறது Sir..😃
*Tiger* :
Sir.. மீ *வன்மேற்கின் வந்தியத்தேவன்* டைகர் reporting Sir.. 👮
மீ ய *Texன் நிழல்* ன்னு கூட சொல்லுவாங்க Sir..✊
எங்க தல டெக்ஸ்க்கு ஒண்ணுண்னா உயிரை கொடுத்தாவது காப்பத்தறது என் வேலை Sir..💪
Me: Ok..Mr.TEX ..You all are recruited to our வன்மேற்கின் ரேஞ்சர் டீம் .
நீங்க இனிமேல சட்டைய போடுவீங்களோ, சண்டைய போடுவீங்களோ.. எனக்கு தெரியாது.. வன்மேற்கில எங்க கலவரம் வந்தாலும் உடனே களம் இறங்குங்க.. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து தமிழ் காமிக்ஸ் உலகை காப்பாத்துங்க..💪💪
O.k..Now all are disburse..👷
ஸ்ரீபாபு,
நாமக்கல்..
போட்டுத் தாக்குறீங்கோ ஜம்பிங் சார் !
Delete@Edi Sir..😍😃
Deleteஎல்லாம் நம்ப தல ஜம்பிங் ஸ்டார் ஸாகோரின் மகிமை Sir..🙏😍
டெட்வுட் டிக்: உதிரத்தின் நிறம் கருப்பல்ல!
ReplyDeleteதோலின் நிறம்... அது கருப்பா... சிவப்பா... மஞ்சளா... இல்லை வெள்ளையா? இத்தனை வன்மமும் துவேஷமும் அந்த நிறத்தின் பொருட்டு உண்டா? செத்த பிணத்தைக் கூட விட்டு வைக்காமல் அதை குதறிப் பார்க்கும் ஈன ஜென்மங்களும் மனிதர்கள் கணக்கில்தான் சேர்த்தியா? இதில் வெள்ளைத் தோலென்ற பெருமிதம் ஒரு கேடா..?
இதுவரை காணாத மேற்கின் கோரமுகம்...ச்சை... சகிக்கவில்லை...! நாற்றமெடுப்பது சீனக் கொட்டாய்களில் அல்ல... இந்த கேடுகெட்ட வெள்ளைத்தோல் பரதேசிகளின் நெஞ்சங்களில்தான்...!
அந்த செவ்விந்திய குழந்தைக்கு நேரும் கொடூரம் அடுத்த பத்து நிமிடங்களுக்கு பக்கங்களை தாண்டவிடாமல் ஸ்தம்பிக்கச் செய்து விட்டது. இந்த வீணாய்ப் போன வெறித்தனங்களை விட்டு இந்த மானுடச் சமூகம் மாற்றம் பெறுவதுதான் எப்போது?
சிவில் யுத்தத்திற்கு பின்னர் நீக்ரோக்களுக்கு சுதந்திரம் கிடைத்ததாய் பீற்றிக் கொள்ளும் படாடோபங்களுக்கு மத்தியில் இது போலான சித்தரிப்புகள் மட்டுமே உண்மை நிலையை உரக்கச் சொல்கிறது.
டெட்வுட் டிக்! ராவான வசனங்கள் என்று பார்த்தால் இத்தகைய கதைக்கு இந்த காரமில்லாவிட்டால் அப்புறம் வெற்று புளியோதரையாக வீணாகத்தான் போயிருக்கும். அருமை சார். சரியான கையாண்டிருக்கிறீர்கள். அடுத்தடுத்த பாகங்களுக்காக வெயிட்டிங்!!!
//நாற்றமெடுப்பது சீனக் கொட்டாய்களில் அல்ல... இந்த கேடுகெட்ட வெள்ளைத்தோல் பரதேசிகளின் நெஞ்சங்களில்தான்...!//
DeleteWell said sir...! இன்னமுமே அயல்தேசங்களில் வசிக்கும் நமது நண்பர்களிடம் பேசிப் பாருங்கள் - நிச்சயமாய் நிற துவேஷங்களின் அசிங்க முகங்களை சந்திக்காது இருந்திருக்க மாட்டார்கள் !
அதிலும் அமெரிக்காவின் தென் மாநிலங்கள் பக்கமாய்ப் போகப்போக இன்னமுமே வெள்ளை supremacy சார்ந்த நம்பிக்கைகள் முகத்தில் அறைந்தார் போல நிலவிடுவதைப் பார்க்கலாம் !
// இதுவரை காணாத மேற்கின் கோரமுகம்...ச்சை... சகிக்கவில்லை...! நாற்றமெடுப்பது சீனக் கொட்டாய்களில் அல்ல... இந்த கேடுகெட்ட வெள்ளைத்தோல் பரதேசிகளின் நெஞ்சங்களில்தான்...! //
Deleteதொடக்க காட்சியில் செவ்வியந்தியர்கள் வெள்ளை இன பெண்களை வன்புணர்வு காட்சிகளும் பல கேள்விகளை எழுப்பும் நம்முள்...
வன்முறைகள் எல்லா இடங்களிலும் தாண்டவமாடுகின்றன...
//தொடக்க காட்சியில் செவ்வியந்தியர்கள் வெள்ளை இன பெண்களை வன்புணர்வு காட்சிகளும் பல கேள்விகளை எழுப்பும் நம்முள்...
Deleteவன்முறைகள் எல்லா இடங்களிலும் தாண்டவமாடுகின்றன...//
உண்மைதான். ஆனால் இவையனைத்துக்குமான தொடக்கப்புள்ளி White supremacy என்ற கேடுகெட்ட எண்ணமாகத் தானிருந்திருக்க வேண்டும். அதன் கொடூர பின்விளைவுகளே செவ்விந்தியர்களின் வன்முறையாக இருந்திருக்க வேண்டும்.
// பனிபோல் வெள்ளை நிறத்திலான ராஜகுமாரன்//
ம்ம்...
Deleteகாரிகன் ஓவியங்கள் படிக்க சிரமம் ஏற்படுத்தி நண்பர்களின் விமர்சனத்தில் பார்த்தேன். S60 ல் நல்ல ஓவியங்கள் உள்ள கதைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் சார்.
ReplyDelete//Al Williamson's run on Secret Agent Corrigan from 1967 to 1979 stands as one of the artistic highlights in the history of the American comic strip. Williamson's delicate line-work, coupled with a style both realistic and atmospheric, enhanced the no-nonsense story of Corrigan.//
Deleteநமது தொகுப்பினில் இடம்பிடித்திருப்பது 1967+ கதைகளே சார் :-) :-)
Dear விஜயன் sir... தங்களின் புத்தக அறிமுக காணொளி முழுதும் பார்த்தேன். எனக்கு தங்கள் மீது வியப்புக் கலந்த கேள்வி ஒன்று எழுந்தது.
ReplyDeleteநான் அதிசய தீவில் ஆர்ச்சியில் இருந்து இதோ இன்று வரை தங்களின் வாசகன், தங்களின் எழுத்து நடை வாசகர் அனைவரும் அறிவோம் தங்களின் வாசகர் பெரும்பான்மை தங்களின் பாணியிலேயே கூட எழுதுவதும் உண்டு. அதாவது விஜயன் sir என்றால் சிறப்பானதொரு காமிக்ஸ் ரசிகர், திறன்மிகு காமிக்ஸ் எடிட்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என்பது நாங்கள் அறிவோம். இவையெல்லாம் தாண்டி தற்போது வீடியோவில் கேமரா கூச்சமின்றி வார்த்தைக் குழரலின்றி மற்றும் உறுத்தாத உடல்மொழியுடன் மிக சிறப்பாக புத்தக அறிமுகம் செய்கிறீர்கள் எனும் போது மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது..நம்ம விஜயன் சாரா இது பட்டையைக் கிளப்புறாரே என்று புருவம் உயர்கிறது. எப்படி sir இந்த தங்கு தடையில்லாத வீடியோ..?? (இதை வாசிக்கும் மற்ற நண்பர்களுக்கு இது பெரிய மேட்டரா என்று தோணக் கூடும்.. ஆம்.. புதியவர்கள் கேமரா முன் நிற்கும்போது கண்டிப்பாக நெர்வஸ் ஆகிவிடும்.)
மற்றும் ஒவ்வொரு மாதமும் அவசியம் இதேப் போல் நீங்களே புத்தக அறிமுகம் செய்ய அன்பு வேண்டுகோள்.. கூடவே முதல் டெக்ஸ் இதழுக்கு கதாசிரியர் ஓவியர் பெயர் குறிப்பிட்டது போல மற்ற இதழ்களுக்கும் குறிப்பிட வேண்டுகிறேன்.
நண்பரே, சன் tv ஸ்டுடியோவில் ஒரு ஐம்பது அறுபது பேருக்கு முன்னே live கேமராவைப் பார்த்த பிற்பாடு, நம்ம ஆபீசில், நம்ம சிறு வட்டத்துக்கென எடுக்குமொரு வீடியோவில் ஏன் தடுமாறப் போகிறேன் ?
Deleteதவிர, எழுதி வைத்துப் பேசாமல், மனதிலிருந்து பேசும் போது தகவல்கள் மீதே சிந்தை லயித்திருக்கும் ; so பதட்டம் கொள்ள அவகாசமும் இராது !
அருமைங்க sir... தொடர்ந்து காணொளி பதிவிடுங்கள். நன்றி.
Delete2020 லாக்டௌன் தருணத்திலான BBC பேட்டியுமே செம ஜாலி அனுபவம் நண்பரே ! இலண்டனில் BBC ரெக்கார்டிங் ஸ்டுடியோவிலிருந்து கேள்விகளை கணைகளாய் அனுப்பியது அவர்களது top அங்கர்களுள் ஒருவர் ! முன்கூட்டி எவ்வித preparations-க்கும் வசதிகள் எனக்குத் தந்திருக்கப்படவில்லை !
Deleteஇக்கட சிவகாசியில் இருந்தபடிக்கே பதிலளித்த எனக்கோ - அவர்களது நேரத்தை வீண் பண்ணிடப்புடாதே என்ற பதட்டம் ! தவிர, இம்மி கூட எதிரொலியோ, வேறு சத்தங்களோ இடையே எழலாகாது என்பது கண்டிஷன் ! ஒரு மாதிரியாய் எல்லாம் செட் ஆன பின்னே துவங்கிய பேட்டியானது, கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஓடியது ! And அதனில் இம்மி கூட எடிட்டிங் செய்ய அவசியமின்றி ஒலிபரப்பினார்கள் !
One of my easiest recordings என்று அவர் அப்புறமாய்ச் சொன்னது கேக் மீதான ஐசிங் !
அருமைங்க sir... முந்தைய பேட்டிகளின் காணொளி தங்கள் வசம் இருப்பின் வலையேற்றுங்கள் sir. இது போன்ற ஆவணங்கள் அவசியம் பாதுகாக்கப் பட வேண்டும். முன்பு ஜம்போ spl வெளியீட்டின் போது சுட்டி tv ல் வந்த தங்களின் சுருக்க பேட்டி இணையத்தில் எங்கோ கிடைத்தது அதை அப்போது தரவிறக்கம் செய்து எனது youtube ல் பத்திரப்படுத்தி உள்ளேன். சுமார் 11 ஆண்டுகள் முன்பு.
Deletehttps://youtu.be/w9sY7CLocYU
அந்த BBC பேட்டி இருக்கா
Deleteசன் Tv புரோகிராம் நா இன்னும் பாக்கவே இல்லை. யூ டீயூப் ல இருக்கா
DeleteBBC audio ...
Deletehttps://www.bbc.co.uk/programmes/w3cszdkj
DeleteRegarding corrigan the printing as well as the paper quality was not up to the expectation sir. That is one(two) hell of a reason to be noted.
ReplyDeleteசரிங்க சார் !
Deleteடைகர் ஜாக் - அடக்கி வாசித்தாலும் அதிரடியில் சளைக்காத ஆதிவாசி
ReplyDeleteகிட் வில்லர் - தந்தையை தாயாக காண்பதால் குட்டியாக இருந்தாலும் 16 அடி பாய தயங்குபவர்.
கிட் கார்சன் - ஓய்வை தேடும் வயதானாலும் புலம்புவதில் மட்டுமே அதை காட்டிக் கொண்டு நட்புக்காக சீறிப் பாயும் சிங்கம்
டெக்ஸ் - சட்டப்படி நீதி வழங்காமல், நீதி வழங்குவதை சட்டமாக வைத்திருக்கும் (மஞ்ச) சட்ட நாயகன்.
And நீங்க தான் வன்மேற்கின் ரேஞ்சர் பிரிவின் HR மேனேஜர் !! நம்மவர்கள் ஒவ்வொருவரும் ஒற்றை வரியில் தங்களை அறிமுகம் செய்து கொண்டாக வேணும்....! So அதற்கேற்றவாறு crisp ஆக அவர்களுக்கான வரிகளை உருவகப்படுத்திடுங்களேன் ? ஒருவரையொருவர் மட்டம் தட்டுவது போலவோ, வாருவது போலவோ இல்லாமல், ஜாலியாய், டீசெண்டாய் இருக்கட்டும் guys உங்களின் ஆக்கங்கள் ! வெற்றி பெறும் நண்பருக்கு நமது அடுத்த கலர் டெக்ஸ் மினி (32 பக்க) இதழுக்குப் பேனா பிடிக்கும் வாய்ப்பு பரிசாகிடும் ! So get cracking people !!
ReplyDeleteபோட்டிக்கு நாங்களும் வரலாமா...???
டெபினிட்லி...!
Delete90th
ReplyDeleteகேள்வி 2
ReplyDeleteஜம்போ சந்தா பலர் கட்டவில்லை
பலருக்கு அதை படிக்கும் ஆர்வமும் இல்லை
ஏனெனில் அது ரசனையில் முதிர்ந்தோர்க்கு மட்டுமே
இன்னும் பலர் ரசனையில் முதிரவில்லை என்பதாக பார்க்கலாமா?
வாட்சப்பை வைத்துப் பார்க்கும் பொழுது ஜம்போ சீசன் 4 கதை தேர்வு சரிவர இல்லை என்ற negative comments பார்த்தேன். ஒரு வேளை அதுவும் காரணமாக இருக்கலாம்.
உளவும் கற்று மற நம் வலைதளத்தில் listingகில் இல்லை
Whatsap விற்பனையில் மட்டுமே உள்ளதும் காரணமாக இருக்கலாம்
கேள்வி 3
ReplyDeleteவேதாளர் மற்றும் கிர்பிக்கு அமைந்தது போல மாண்ட்ரே்க மற்றும் காரிகனுக்கு தொடக்க கதைகள் சரியாக அமையவில்லை என்பது என் கருத்து.
Many says Corrigan failure is due to printing and paper quality inspire of your repeated denial. But i dont think that is the reason
Deleteகேள்வி 4
ReplyDeleteஇந்த இதழ்கள் குழந்தைகள் இருக்கும் வீட்டுக்கு என்பதாலும் நம்மில் பலரின் குழந்தைகள் அநேகமாக 10 ஆம் வகுப்பு படிகப்பவராக இருப்பார் என்பது என் ஊகம்.
புத்தக விழாக்களில் இந்த புத்தகங்கள் எப்படி விற்பனையாகிறது என தெரியவில்லை.
ஆனால் இந்த புத்தகங்கள் புத்தக விழாக்களில் இளம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்க உதவினால் பலன் வருங்காலத்தில் நிச்சயம்.
Most of our comics target audience seems to be 80s or 70 s kids. That is our weakness.
கேள்வி 5
ReplyDeleteகுண்டு புத்தகங்கள் சாவகாசமாக படிக்க வேண்டியவை. கண்டிப்பாக ஒரு நாள் படிக்கப்படும்.
சார் படிக்காத கதைகள் / குண்டு புக்ஸ் டிக் பண்ணாம இருக்குறதுக்கு முக்கிய காரணம் பெரும்பாலும் நேரமின்மை தான், ஆர்வம் & அவா எல்லாம் இருந்தும் படிக்க ஒதுக்கும் நேரம் மிக குறைவே.
ReplyDeleteபொதுவாக நிறைய பேருக்கு இதுதான் நிலைமையாக இருக்கும்னு நினைக்கிறேன்..😇😇
Tex : 75 வயசு ஆயிடுச்சே ... ம்ம்ம் .. Bonelli வீட்டுக்கு அனுப்பிடுவானுகளோ ? பேசாம தமிழ்நாட்டு பக்கம் செட்டில் ஆயிடுவோமா? இன்னொரு 25 வருஷம் வண்டி ஓடும் !
ReplyDeleteKid Carson : ஏய் .. நல்ல வேளை இந்த bonelli பயலுக நம்ம வயசை வெச்சு விளையாடாம விட்டானுக ... சிவகாசி ஸார்வாள் லந்து தாங்க முடியாது சாமீ !
Kid Willer: இனிமேலாவது டாடி retire ஆவாரா? நமக்கு தனித்தடம் கிடைக்குமா புரியலையே !
Tiger Jack : இனிமேல் சின்னக்கழுகாருடன் தனிக்கூட்டணி அமைக்க வேண்டி வருமோ?
பட்டையை கிளப்புது ராக்ஜி....!!
Deleteகமெண்ட் போட்டியில் லேட்டஸ்ட்டாக இணைந்தாலும், சும்மா ஜிகு ஜிகுனு இருக்கு...!!!
உள்ளேன் ஐயா..!!
ReplyDeleteநடுராத்திரி ஒன்றரை மணிக்கு என்னய்யா வேலை உனக்கு....???
Deleteஅமயாவா இருந்தாலும் பரால்ல...மடஸ்காவுக்கு இப்படி விழிக்க மாட்டாயே! ஓவ்..அட்டையை பார்த்து அமாயானு....,..??🤪
103வது
ReplyDeleteடெட்வுட் டிக்கில் தாங்கள் பயன்படுத்தி இருக்கும் மொழிப் பிரயோகம் குறித்த விமர்சனங்கள் பற்றி வீடியோவில் சொல்லி இருந்தீர்கள். சரிதான்... bi*ch என்ற வார்த்தைக்கு தே**யா என்று எழுதாமல் சிறுக்கி என்றோ கழிசடை என்றோ எழுதினால் அந்த இடத்தின் பரிமாறப்படும் சூடே குறைந்து விடாதா???
ReplyDeleteகா**ப்பதற்கு திராட்சை அறுவடை என்றெல்லாம் (படிக்கும் போது இந்த வார்த்தைக்காக இரண்டு நிமிஷமாவது சிரிச்சிருப்பேன்... ரசனையான ஆளு சார் நீங்க...) கலைச்சொல் கண்டுபிடிச்சு கலாச்சாரம் காத்திருக்கீங்க... அதுக்கப்புறமும் வேறு என்னதான் பிரச்சனை?
ஒருவேளை சிலருக்கு சில கெட்ட வார்த்தைகள் மேல் ஓர் ஒவ்வாமை இருக்கலாம். இந்த வார்த்தைகளின் வீரியம் அது நிகழும் சூழலைக் காட்டிலும் கூடுதலான ஒரு அசூயையை அவர்களுக்கு வழங்கி இருக்கலாம். இதற்காக மொழி பெயர்ப்பினை தயவு செய்து பத்தியம் செய்துவிடாதீர்கள்... அதிகபட்சமான நேரடிப் பொருள் தரும் வார்த்தைகளுக்கு மட்டும் வேண்டுமானால் (தே**யா) இடையில் இதுபோல நட்சத்திரங்க(***)ளைச் சொருகி இலை மறை காயாக்கி விடுங்கள்...
என்னைப் பொறுத்தவரை இந்த மொழியாடலை 100% ஏற்கிறேன். கதையை
.. அதை நிகழ்த்தும் கதாபாத்திரங்களில் தெரியும் அசூயையைக் காட்டிலும் வார்த்தைகள் ரொம்ப நாகரிகமாகத்தான் வந்திருக்கிறது.
// அதுக்கப்புறமும் வேறு என்னதான் பிரச்சனை? //
Deleteஒழுக்கம்,ஒழுக்கமின்மை குறித்தான பிரச்சினை தான்,பொது புத்தியில் ஊறியிருக்கும் பிம்ப கட்டமைப்புகளை எளிதில் உடைத்து விட முடியாது என்றே தோன்றுகிறது...
//ஒழுக்கம்,ஒழுக்கமின்மை குறித்தான பிரச்சினை தான்,பொது புத்தியில் ஊறியிருக்கும் பிம்ப கட்டமைப்புகளை எளிதில் உடைத்து விட முடியாது என்றே தோன்றுகிறது...//
Deleteவார்த்தைகளை விட அந்த நிறபேத வக்கிரங்களின் பாத்திரங்களில்தான் எக்கச்சக்க நாற்றமடிக்கிறது... சகிக்க முடியாமல்....!!!
உண்மைதான் சார்...
Deleteகப்பு தாங்க முடியலடா சாமி வசனம்தான் நினைவுக்கு வருகிறது....
அவர்களின் சிந்தையில் வக்கிரங்கள் முழுமையான குணாம்சங்களாக பதிந்திருக்கும் போல...
I have read 4 corrigan stories and I find them just fine sir. In fact Corrigan is second to none. In fact some Rip Kirby and Mandrake stories were stale - not all of them - the full collection more than made up for the staleness.
ReplyDeleteOne problem could be with the readability due to size sir. On second thoughts - classic books can look more appealing in either current Modesty/Tex format OR half the size of current Maxi sir. Compactness matters when reading !!
சனிக்கிழமை புத்தகப் பார்சலை கைப்பற்றி விட்டேன். வேலைப்பளு காரணமாக இன்னும் பார்சலை பிரிக்கவில்லை. அடுத்த சனிக்கிழமை தான் பார்சலை பிரிக்க வேண்டும். அதன் பின் தான் இந்த வருட ரிப்போர்ட்டை அனுபவேண்டும்.
ReplyDeleteகாரிகன் வெளியேயும் மான்ட்ரேக் உள்ளேயும் வந்தால் எனக்கு சந்தோசமாக இருக்கும்
ReplyDeleteஉண்மை..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிக்பிள்ளின் கதை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த கதையை பலர் படிக்கவில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது
ReplyDeleteகாரிகனின் ஸ்பெஷல் காரிகனில் அவரது ஸ்பெஷல் எதிரி செவன் மற்றும் கேரக்டர் சரியாக வடிவமைக்கப்படாத் ஆரம்பநிலை கதைகள் ,கதைகளை ஆரம்பித்ததோடு சரி கிளைமாக்ஸ் வரை போகவே முடியவில்லை. 70ல பெயில் ஆனது காரிகன் தான்.மற்றபடி நமது டாப் ஸ்டார்களில் டெக்ஸை தவிர பிறர் இடம்பெறாத வருடம்.ஆனால் மொத்தத்தில் இந்த வருட கதைகள் 60%
ReplyDeleteமார்க்கை தாண்டி விடும்.பரபரப்பான ஹீரோ ஒருவர் புதிதாக இல்லை என்ற குறை தவிர. புது டார்சான் பிறருக்கு பிடித்திருக்கிறது,எனக்கு செட் ஆகலை.
கறுப்பு கிழவிக்கு இந்த மாதிரிஒரு மெகா ஸ்பெஷல் கொண்டு வாங்களேன்
ReplyDeleteமாண்டரக்குக்கும் அவர் ஸ்பெஷலான அதீத கற்பனை தீம்களை விட்டுவிட்டு யதார்த்த கதைகளாக தேர்வு செய்ததில் ஒரு வருத்தம் சார்
ReplyDeleteஅடுத்த வருஷத்தினில் மாண்ட்ரேக் சந்தாவுக்கு வெளியேவும், காரிகன் உள்ளேயும் உள்ளனர் ! Maybe அதனில் ஒரு உல்டா தேவையோ ? Your thoughts please ?
ReplyDeleteவைரஸ் x
காணமல் போன கலைப்பொக்கிஷம்
இரண்டாவது வைரக்கல் எங்கே
இது போன்ற சில மறுபதிப்பு கதைகளோடு காரிகன் வருவார் என நினைத்திருந்தபோது இவைகளில் எதுவும் இல்லாதது கொஞ்சம் ஏமாற்றத்தை உண்டு பற்றியது மற்றபடி காரிகனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம்
கிட் கார்சன் :
ReplyDeleteஒரு " சோலோ " பெர்பாமன்ஸ் செஞ்சி தனி ட்ராக் போகணும்.
டைகர் :
போதுங்க இந்த பொழப்பு, காசி ராமேஸ்வரம் போகப் போறேன்.
ஜீனியர் :
நமக்கு கண்ணாலமே கிடையாதா, கடைசி வரைக்கும் சிங்கிள் தானா, மிங்கிள் லேதா
டெக்ஸ் :
மாடஸ்டி ஜீலியா லேடி S ரூபீனி இவங்களோட புது டீம் பாம் பண்ண போறேன் சும்மா கலர் புல்லா இருக்குமுல்ல.
ReplyDeleteடைகர் ஜாக் - லீனாவும் டோனாவும் வருகிறார்கள். இன்றைய பயணம் முழுக்க சோக காதல் கீதம் ஒலிக்க போகிறதே
கார்சன் - லீனா என்னை தான் பார்க்கிறாள்.இம்முறையாவது என் காதலை சொல்லி விடலாமா
கிட் வில்லர் - ஆகா, டோனா பிரமாதமான அழகியாகி விட்டாளே. என்ன பேசுவதென்றே தெரியவில்லையே
டெக்ஸ் வில்லர்- ஏற்கனவே தாமதமாகி விட்டது. லீனாவுக்கும் டோனாவுக்கும் கையசைத்து விட்டு அடுத்த வில்லனை குமுறக் கிளம்ப வேண்டியது தான்.
மெபிஸ்டோ - யோவ், உங்களை ஒற்றை வரியில் அறிமுகம் செய்து கொள்வது தான் போட்டியாம்.
Deleteபடித்துறை பாண்டி :
Deleteஎங்களப் பத்தியு கொஞ்சம் சொல்ல விடுங்க..!
This comment has been removed by the author.
ReplyDeleteகார்சன்: நான் தோல்வியே காணாதவன்.
ReplyDeleteடைகர்: நான் இரவுக்கழுகாரின் இறகு.
கிட்: நான் பாய்ச்சலில் பதினாறடி.
டெக்ஸ்: நான்... டெக்ஸ் .
( இவருக்கு இதற்கு மேல் ஒற்றைவரியில் சொல்ல என்ன இருக்கிறது. பெயர் ஒன்றே சொல்லுமே, நூறு வரலாறு)
Warm welcome back sir
Deleteநன்றி பரணி சார்.
Deleteதிருவண்ணாமலையில், கடந்த வாரம் எங்களது புதிய இல்லத்தின் கிரஹப்பிரவேசம், வரும் நாட்களில் பேரனின் காதணிவிழா என சுப நிகழ்ச்சிகளால் நேரமின்மை . இடையில் இன்று சிறிது ஓய்வு கிடைத்தது. அதனால் தான் ஆசிரியரின் பதிவுகளை பார்க்கவும், படிக்கவும் முடிந்தது.
அட....அண்ணாமலையாரின் அடிவாரத்தில் இல்லமா சார் ?! சூப்பர் ...சூப்பர் !
DeleteYes sir Tiruvannamalai is my birth place and home town.
Deleteஎங்கள் பூர்வீக வீடு இங்கு தான் உள்ளது.
நான் பிறந்து வளர்ந்ததும், +2 வரை படித்ததும் அங்குதான்.
TNPLல் வேலை அமைந்ததால் 84 முதல் கருர் வாசம்.
அடுத்த வருடம் மே மாதம் பணி ஓய்வுபெற இருப்பதால் இங்கு புதிதாக வீடு வாங்கிவிட்டேன்.
எல்லாம் இறைவன் அருள்.
"நிழல்களின் ராஜ்ஜியத்தில்"
ReplyDeleteடெக்ஸ் வில்லரை இறுதியாக அனைத்து இதழ்களையும் படித்து விட்டு இறுதியாக படித்து கொள்ளலாம் என்றுதான் இருந்தேன்...ஆனால் அதன் மாஸான அட்டைப்படமும்..கனமான பக்கங்களும் இந்த ஞாயறுக்கு தோதான இதழ் என மனம் புரிபட இதழை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்...
அடேங்கப்பா ஆசிரியர் ஹாட்லைனில் சொன்னது நூறு சதவீதம் உண்மை...வழக்கமான் டெக்ஸ் கதை அல்ல இது...சித்திரங்களும் வழக்கமான பாணி அல்ல...ஆனால் கதையும்,சித்திரபாணிகளும் ஒரு திக் ,திக் பயணத்திலியே வாசிக்கும் நம்மை கூட்டிச்செல்கிறது...உண்மையில் ஒரு திகில் படத்தை பார்த்த அனுபவத்தை இந்த "நிழல்களின் ராஜ்ஜித்தில் " வழங்கியது மறுக்க முடியாத உண்மை..
இந்த கதையை படித்து முடித்தவர்கள் இனி எப்பொழுதும் டெக்ஸ் ஒரே பாணி என்ற வார்த்தையை பிரயோகத்தை உபயோகிக்க மாட்டார்கள்...மேலும் இந்த சாகஸத்தில் டைகர்,கிட்,மட்டுமல்ல டெக்ஸ் , கார்ஸன் அனைவருமே கடும் நெருக்கடியில் சிக்கும் பொழுது ஒவ்வொருவரும் எப்படி மீள போகிறார்களோ என்ற பதைபதைப்புடனே வாசிக்க முடிந்தது.. இப்படிப்பட்ட திக் திக் சாகஸத்திலும் டெக்ஸ் ,கார்ஸன் நையாண்டி முகத்தில் புன்னகையை பூக்க வைத்து விட்டு சென்றது உண்மை...பன்னாடைகள் எல்லாம் பன்ச் டயலாக் பேசுதே கொடுமைடா சாமீ என்ற கார்ஸனின் வசனம் எல்லாம் ஒரு உதாரணம் மட்டுமே..
அதே சமயம் 176 ம் பக்கம் முதல் பேனலில் வரும் வசனத்தை வாசித்தவுடன் என்னடா ஆசிரியர் மிகப்பெரிய பிழையை அறியாமல் செய்து விட்டாரே எப்படி இந்த பிழையை கவனிக்காமல் செய்து விட்டார் ..நம் மக்கள் அவரை பிறாண்டாமல் விட மாட்டார்களே என்ற வருத்தத்தோடவே தொடர்தேன்..ஆனால் 223 ம் பக்கம் கார்ஸனின் வசனத்தை படித்தவுடன் ஆசரியரின் திறமையை உணர முடிந்தது என்பது மட்டுமல்ல கார்ஸனும் ,கிட் ,டைகரும் எந்த அளவு அன்பு தோழமையில் உள்ளார்கள் என்பதை ஆசிரியர் அட்டகாசமாக வாசிப்போருக்கு உணர்த்தி உள்ளார்..செம சார்..
ஒரு மணிநேரத்தில் ஓர் அட்டகாசமான க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை காண நீங்கள் செல்ல வேண்டியது திரை அரங்கத்தை நோக்கி அல்ல மக்களே...
டெக்ஸ் குழுவின் "நிழல்களின் ராஜ்ஜியத்தில் " இதழை நோக்கியே ...தவறவிடாதீர்கள்..
சூப்பர் தலைவரே. நன்றாக விமர்சனம் எழுதியுள்ளீர்கள்.
Deleteநன்றி பரணி சார்...
Delete( உங்களுக்கு நன்றி சொன்னா இந்த கூகுள் பி்ரசுரம் பண்ணாதே...என்ன பண்ணலாம்..)
தலைவர் கண்ணுக்கு எதுவும் தப்பாது போல...
Delete:-)
Delete// ஒரு மணிநேரத்தில் ஓர் அட்டகாசமான க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை காண நீங்கள் செல்ல வேண்டியது திரை அரங்கத்தை நோக்கி அல்ல மக்களே // உண்மை தலைவரே
Deleteபுது பதிவிற்கு நன்றிகள் சார....:-)
ReplyDelete.தொண்ணூறு சதவிகிதத்தினர் SMASHING '70s வாங்கியுள்ளனர் ! And சர்ப்ரைஸ்.....மாண்ட்ரேக் கரைசேர்ந்திருக்கிறார் வாசிப்புகளில் ; ஆனால் காரிகன் தடுமாறி நிற்கிறார் ! சமீபத்து இதழ் இது என்பதால் இன்னமும் காரிகனுக்கு நேரம் தர தோதுப்படவில்லையா - அல்லது கதைகள் ரொம்பவே சுமாரா ? Again confusion ...! அடுத்த வருஷத்தினில் மாண்ட்ரேக் சந்தாவுக்கு வெளியேவும், காரிகன் உள்ளேயும் உள்ளனர் ! Maybe அதனில் ஒரு உல்டா தேவையோ ? Your thoughts please ?
ReplyDelete####
கண்டிப்பாக மாண்ட்ரேக்கை உள்ளே கொண்டு வந்து காரிகனை வெளி இதழாக ஆக்கலாம் சார்..அனைத்து இதழ்களையும் வாங்குவோருக்கு நோ ப்ராப்ளம்..ஆனால் தேர்ந்தெடுத்து வாங்குவோருக்கு இந்த சந்தாவில் இணைய காரிகனை விட மாண்ட்ரேக் தான் சரியான சாய்ஸ்...
( பின்குறிப்பு : காரிகன் நானும் பாதி கதைகளை மட்டுமே படித்து உள்ளேன் சார்..நேரம் இருந்தும்...)
நிழல்களின் ராஜ்ஜியம் :
ReplyDeleteஅமானுஷ்யமும் த்ரில்லுமாய்,ஆக்ஷனும் விறுவிறுப்புமாய்,வஞ்சமும் பழிவாங்கலுமாய்,கார்சனின் நக்கலுமாய்,டெக்ஸின் கிண்டலுமாய் கொஞ்சம் கூட போரடிக்காமல் அனல் வேகத்தில் பறக்கும் கதை...
பார்ச்சூன் பிரதர்ஸ்,நிழல் அசுரர்கள்,வெகுமதி வேட்டையன் ஜிம் பார்க்கர்,எதிர்காலத்தைக் கணிக்கும் ஸாரா,இருள் திருவிழா,ஜாக் ஷாடோ என கதை வலைப் பின்னல் போல் அழகாய் பின்னப்பட்டுள்ளது...
இருள் சார்ந்த களங்களும்,அமானுஷயங்களும் த்ரில்லான அனுபவத்தை கொடுத்தது,கதைக்கு கூடுதல் பரபரப்பைக் கூட்ட உதவியுள்ளன...
ஓவியங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாய் இருந்திருக்கிலாமோ என்று தோன்றியது.....
டெக்ஸ் & கோ வும்,செவ்விந்தியர்களை மையமாய் வைத்து புனையப்படும் களங்களும் இருக்கும் எத்தனை சாகஸங்கள் வந்தாலும்,எத்தனை பக்கங்களில் வந்தாலும் கொண்டாட்டமாய் வாசிக்கலாம்,அது ஈடியிணையில்லா அலாதியான அனுபவம்...
நிழல்களின் ராஜ்ஜியத்தில் மிக நிறைவான வாசிப்பு...
எமது மதிப்பெண்கள்-9/10...
// டெக்ஸ் & கோ வும்,செவ்விந்தியர்களை மையமாய் வைத்து புனையப்படும் களங்களும் இருக்கும் எத்தனை சாகஸங்கள் வந்தாலும்,எத்தனை பக்கங்களில் வந்தாலும் கொண்டாட்டமாய் வாசிக்கலாம்,அது ஈடியிணையில்லா அலாதியான அனுபவம்... // உண்மை
Deleteஇந்த ஒவியர் இத்தாலியில் ரொம்பவே பிரசித்தம் சார் !
Deleteஅடடே...
Deleteசார் இப்பொழுது எல்லாம் கொரியர் பாக்ஸ் நான் முதலில் திறந்து பார்ப்பதற்கு முன் வாரிசுகள் திறந்து இதழ்களை தவிர வெளிவரும் மற்ற அன்பளிப்புகளை அவர்களே லவட்டி விடுவதால் படிவத்தை தேடி கொண்டிருக்கிறேன்...எனவே பதிலை சுருக்கமாக இங்கேயே சொல்லி விடுகிறேனே..( எல்லாம் தங்களின் பைவ்ஸ்டார் சாக்லேட்டும் ,ரவுண்ட் பன்னின் மகிமையும் தான் சார்..நான் என்ன செய்ய)
ReplyDeleteநான் அனைத்து சந்தா இதழ்களையும் வாங்கி விட்டேன் அனைத்து இதழ்களையும் வாசித்து விட்டேன்..
*திடீர் சர்ப்ரைஸ் இதழ்களும் அவ்வாறே..*
கதை சொல்லும் காமிக்ஸ் நண்பரின் சகாயத்தில் படித்தேன் ..வாசித்தேன் தான் ஆனாலும் ஆர்வம் தோன்றவில்லை
70 இதழ்களை அனைத்தையும் வாங்கினேன் ..அனைத்தையும் வாசித்தேன் தான்..ஆனால் காரிகன் மட்டும் பாதியுடன் தள்ளாடுகிறது..
Smashing 70s subscription ¨நீங்கள் அறிவித்தவுடன் கட்டிவிட்டேன்,, முக்கியமாக காரிகனுக்காக,,,,மான்ட்ரெக் வந்தாலும் வராவிட்டாலும் , காரிகன் நிச்சயம் வேண்டும் ஸார்,,martin mystere my favourite. .. நன்றி,,
ReplyDeleteகாரிகன் காதலர்கள் இது போல் குரல் தர மெனெக்கெட்டால் எனது புரிதல்களுக்கு உதவிடும் ! நன்றி சார் !
Deleteகாரிகன் வேண்டும் Sir..😍😘👍
Deleteவைரஸ் X, மடாலயமர்மம் இதெல்லாம் வந்தால் Double O.K..🙏💐
நான் ரெகுலர் சந்தா கட்டாததன் காரணம் டெக்ஸ் overdose என்பதால் தான்,, தனி தடம் மற்ற heroகளுக்கு அறிவித்தால் நான் நிச்சயம் சந்தாவில் இணைந்து கொள்வேன்,, அதற்காக நான் டெக்ஸ் வாங்காமலும் இருக்க மாட்டேன்,, டெக்ஸ் overdose that's all.
ReplyDeleteI think sales makes the decision here.
Deleteஎப்படி இருந்தாலும் நண்பரே - Tex அனைத்தையும் நீங்கள் வாங்கிடும் பட்சத்தில் சந்தா செலுத்துவதுதானே மலிவு? தனியாக வாங்கும் பொது கூரியர் செலவு சேர்த்து ஜாஸ்தி ஆகுமே. நானும் 6-7 Tex சேர்ந்த பின் நவம்பர்-டிசம்பர் மாத லீவு வேளைகளில் தான் படிக்கிறேன்.
It works out cheaper to subscribe AND it gives that much needed boost to Editor.
எல்லா கதைகளும் வாங்கிவிடுவேன் ஆனால் படிப்பதில்லை,, டெக்ஸில் திகில் கலந்து தேர்ந்தெடுத்த கதைகளாக விரும்பி படிப்பேன் உதாரணமாக / சைத்தான் சாம்ராஜ்யம், மெபிஸ்டோ, மரணமுள், தலையில்லா போராளி , சிறிது வித்தியாசமாக உள்ள கதைகள்¨டிராகன் நகரம், பவளச்சிலை மரமம், இந்த மாதிரி ,,ஆனால் எல்லா கதைகளும் அப்படி அமைவதில்லையே,,
DeleteHr mind voice in brackets
ReplyDeleteடைகர் ஜாக் - பாயும் புலி ( பல இடங்களில் பதுங்கும் நாகம்)
கிட் வில்லர் - சொல்லியடிக்கும் கில்லி ( தாண்டு அவர் அப்பா)
கிட் கார்சன்- நட்பின் காவலர்
(கல்யாணம் செஞ்சா நட்பில் விரிசல் விழுமோ)
டெக்ஸ் - தீயவர்களின் தீக்கனவு
(பாயச பார்ட்டிகளின் உயிர்நாடி)
This comment has been removed by the author.
DeleteVery nice
DeleteThanks bro
Deleteநிழல்களின் ராஜ்ஜியத்தில்
ReplyDeleteடெக்ஸின் அதிரடி
கார்சனின் சரவெடி
கிட்டின் மென்மை
டைகர் ஜாக்கின மதியூகம்
என்று மட்டும் முடியாமல் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு உரம் சேர்க்க
அமானுஷ்யமாக கதை நகர்ந்தாலும் அதற்கும் ஒரு விளக்கத்தை கொடுத்து லாஜிக்கை ஒப்பேற்றி
சரசரவென நகர்ந்த பக்கங்கள்
வீரியமான வசனங்கள்
நிழல்களின் ராஜ்ஜியத்தில் ஓவியங்கள்.
மனிதன் குலத்தாழ்வு உயர்வு கொள்கை எனும் குப்பையை எத்தனை நாள் சுமக்கப் போகிறானோ என நினைத்துக் கொண்டே இதை டைப்பிக் கொண்டிருக்கிறேன்.
10/10
அட, இன்னொரு 10 /10
DeleteThought of giving 11/10 sir but stopped short because many may think it as overdose.
Delete@Edi sir..😍😘
ReplyDeleteDecember books ல நம்ப டெட்வுட் டிக் ம், மாடஸ்டியும் படிச்சு முடிச்சுட்டேன்.👍✊
*டெட்வுட்டிக்*-
ரணகளம். ...அதகளம்...👍👏
10/10❤💚💙💛💜
*மாடஸ்டி*-
விறுவிறுப்பு.. சுறுசுறுப்பு..👏
இரண்டு கதைகளுமே ஒன்றையொன்று விஞ்சுகின்றன. நீண்டநாட்களுக்கு பிறகு இளவரசி& கார்வின் ரீஎன்ட்ரி.. திரில்லிங்ஸ்டோரிஸ்...👌
தைனா..the extrodinary power girl.. What a character she is.. Fantastic.💪.
10/10 ❤💛💙💚💜
அடுத்தது மார்ட்டின் படிக்கணும்..💚
கடைசியா நம்ப தல..ஆற அமர ரசிச்சு படிக்கோணும்..💙💛❤
அப்புறமாதான் *வாங்கியது எத்தனை.. வாசித்தது எத்தனை* 😃😍
நீங்கள்லாம் ஸ்கூல் மாஸ்டராக அமைந்தால் பசங்க செம குஷியாகிப் போவார்கள் சார் ! அத்தனைக்கும் முழுசாய் மார்க்குகள் போட்டுத் தாக்குகிறீர்களே ?!
Delete@*எங்க தல* Comics TEX Vijayaraghavan Salem STV ji.. 🤓💐
ReplyDeleteடிசம்பர் 5 தேதியாச்சு..
சும்மா இருக்க கூடாது..😃
🤓4,5 கேள்விய கேட்டு வைப்போம்..🤓🥰🫣🫣🫣
1) January'2023 ல என்னென்னபுக்ஸ் வருதுங்க?..
2)S-60 வேதாளர் ஜனவரில வர்ராறுங்களா?
3)சென்னை புக்ஃபேர் எப்ப ஆரம்பிக்குதுங்க? ஸ்பெஷல் வெளியீடு ஏதாவது உண்டா? Any guess?
4) நம்ப எடிட்டர் Sir.. சென்னை புக்ஃபேருக்கு வருவாரா? Any program /discussion உண்டுங்களா?
5)கைப்புள்ளயும், எலியப்பாவும் சென்னை வர்றாங்களா?..
1.அது எனக்கே இன்னமும் தெரியாத சமாச்சாரம் சார் ! ரெகுலர் தட சந்தா சேர்க்கைக்கு குழப்பமின்றியே சென்னை சார்ந்த திட்டமிடல்கள் இருந்திடும் !
Delete2 வர்றாரு !
3 a)ஜனவரி 6 என்று ஒரு தகவல் சார் !
3 b) பெரிதாய் எதிர்பார்க்க வேணாம் சார் ; ஒற்றை வாரத்துக்கு முன்பு வரையிலும் நமக்கு ஸ்டால் சார்ந்த ஊர்ஜிதம் இராதென்பதால் எதையுமே திட்டவட்டமாய்த் திட்டமிடுவது சிரமம். And சந்தா சேகரிப்பு பிரதானமாகிடும் தருணமும் என்பதால் இயன்றமட்டுக்கு need to keep things simple for January !
4 ஸ்டால் கிட்டின் நிச்சயம் ஆஜராவேன் சார் !
5. YES !
Delete@Edi Sir..😍😘
Deleteதகவல்களுக்கு நன்றிகள் Sir..😍😃🙏
This comment has been removed by the author.
ReplyDeleteவிஜயன் சார்,
ReplyDelete1. கைப்புள்ள ஜாக் சென்னை புத்தக திருவிழாவில் வரவுள்ளார் என்பதால் கார்ட்டூன் ஸ்பெஷலில் அவருக்கு பதில் மாக் & ஜாக் அல்லது வேறு ஒரு கார்ட்டூன் நாயகர் கதை வருகிறது என எடுத்து கொள்ளலாமா?
2. சுப்ரீம் 60 காரிகன் சொன்ன படி வரட்டும், அவரின் கதைக்கு பதில் வேறு நாயகர் கதை என்றால் சிலர் மன வருத்தம் கொள்ளலாம்!
3. காரிகன் கதைகள் எனக்கு அந்த அளவு பிடிக்கவில்லை, கதை பெரியதாக இல்லை அதே நேரம் கதாபாத்திரங்கள் மேல் பெரிய ஈடுபாடு இல்லை எனக்கு, இதனால் மொழி பெயர்ப்பு பெரியதாக ஈர்க்கவில்லை அதனால் ஈடுபாடுடன் இவரின் கதையை படிக்க முடியவில்லை.
4. அடுத்து வரவுள்ள காரிகன் ஸ்பெஷலில் நமது காமிக்ஸில் வந்து ஹிட் அடித்த சில கதைகள் கண்டிப்பாக இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள் சார். குறிப்பாக வைரஸ் -X, மாடலாய மர்மம்,..
Deleteமுதல் கதை சூப்பரா இருந்துச்சேல
Deleteடியர் எடிட்டர் சார் - Smashing and supreme இல் மிகவும் எதிர்பார்த்த நாயகன் காரிகன் தான் சார். கிளாஸிக் கதைகள் எப்பொழுதுமே ஹிட் ஆர் மிஸ் தானே சார். ரிப் கிர்பி தரமான கதைகள், ஓவியங்களில் வெற்றிக் கொடி நாட்டினார்.. வேதாளரும், மாண்ட்ரேக்கும் தரும் நாஸ்டாலஜியா ஃபேக்டரில் பாஸ். நண்பர்கள் பலரும் கோரும் படி ஏற்கனவே நம்மிடம் வெளியாகி ஹிட் அடித்த வைரஸ் x, இரண்டாவது வைரக்கல் எங்கே என ஒரு ஐம்பது சதவீதம் கலந்து வந்தால் காரிகன் நிச்சயம் 2023 இல் மறக்க முடியாத அனுபவமாக இருப்பார். ஆனால் தற்சமயம் நாம் குறிப்பிட்ட கால கட்டத்தைச் சேர்ந்த கதைகளில் மட்டும் தேர்வு செய்வதாலும், கதைகளை மொத்தமாக கொள்முதல் செய்வதாலும், cherrypick செய்யும் option எவ்வளவு சாத்தியம் குறைவு என்பதும் புரிகிறது. மொத்தத்தில் காரிகன் வரட்டும் சார். மாடஸ்டி போல் நல்ல கதைகள், ஓவியங்கள் மாட்டினால் காரிகனும் தூள் கிளப்புவார் சந்தேகமேயில்லாமல்.
ReplyDeleteஅழகான புரிதலுக்கு ஒரு லோடு நன்றிகள் நண்பரே !
Deleteகிட்டத்தட்ட 108 ஆண்டுகளுக்கு முன்னே நிறுவப்பட்ட King Features நிறுவனம் காரிகன் கதைகளை துவக்கம் முதல் சந்தைப்படுத்தி வருகின்றது ! And காரிகன் 1934 முதல் 1996 வரை கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் ஓடியுள்ளது ! ஆக இத்தனை நெடும் காலத்தின் கதைகளை பத்திரப்படுத்துவதென்பது without any doubts - உசிர் போகும் வேலை !
நாம் ஒரு கதை ; ரெண்டு கதையென்று கொள்முதல் செய்துகொண்டிருந்த தருணங்களின் இங்கே இந்தியாவில் ஏஜெண்ட் இருந்தார் & அவர்கள் கைவசம் கதைகளும் ஸ்டாக் இருக்கும். So படித்துப் பார்த்து - "இது வேணும் , அது வேணாம்" என்று சொல்ல இயன்றது.
இன்றைக்கோ - நேரடியாய் அமெரிக்காவில் உள்ளோரிடம் ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட 20 கதைகள் வாங்குவது நிலவரம் . இந்த சூழலில் "1972 லே வந்ததிலே ஒரு கதை அண்ணாச்சி ; அப்புறமா 1976 லே ஒண்ணு ; 1977 லே இன்னொண்ணு" என்று ஆர்டர் செய்தொமெனில் அவர்கள் சட்டையைக் கிழிக்கும்படி ஆகிப் போகுமன்றோ ?
தவிர இங்கே கதைகளுக்கு references வெறுமனே அவை வெளியான தேதிகள் தான் ; பெயர்களென்று கிடையாது - which makes things eve more difficult !
கிளாசிக் கதைகளின் இன்னொரு பக்கமிது folks ; நமக்கு மொத்தமாய் 1967 to 1972 என்ற 5 ஆண்டுகளின் கதைகளைத் தந்துள்ளனர் ! இவற்றுள் நீங்கள் எதிர்பார்க்கும் முந்தைய கதைகள் இருந்தால் அதிர்ஷ்டம் ; இல்லையெனில் செய்திடக்கூடியது ஏதுமிராது ! So கிளாசிக் ஹீரோசை அப்படியே ரசிக்கப் பழகிட வேணும் guys !
இப்போதுதான் விவகாரத்தின் தன்மை புரிகிறது சார்! நீங்கள் சொன்னபடியே ரசிக்கப் பழகிக்கொள்கிறோம்!
Deleteகாரிகன் கட்டாயம் வேண்டும்..
ReplyDeleteவரலாற்றின் வாடிவாசல்
ReplyDeleteநான் படிக்கும் முதல் மார்ட்டின் கதை
பிரஞ்சு புரட்சி
டைம் டிராவல்
பூஞ்சை காளான் LSD
போன்ற பாடங்களை அருமையாக கதையில் குழைத்து கொடுத்து இருக்கிறார்கள்.
ஒரு முறை படிக்கலாம்
பலவற்றை ஆராய்ச்சி செய்யலாம்.
9/10
பிங் ஐஸில் இருந்து ரிகவர் ஆகி 4நள் விடுமுறைக்குப்பின் இன்று புத்தக பார்சலைக் கைப்பற்றியாச்சுதுங் சார்..
ReplyDeleteசெம கனமான பார்சல் வருட கடைசிக்கு; பார்சல் பாக்ஸம் செம கனம்! இந்த திக்னஸ்னா எந்த மாதமும இதழ்கள் முனை மழுங்காது வந்தடையும்😍
டெக்ஸ் அட்டைப்படமும், டைட்வுட் அட்டையும் செம....
தல சும்மா மிரட்டுது...
மிகமிக தத்ரூபமாக உள்ளது....
"த பெஸ்ட் ஆஃப் 2022"
மார்க் போட்டு அனுப்பிட்டு,
டெட்வுட்டின் பயணத்தில் நானும் இணைஞ்சிங்....!!!
வெயிட்டிங் உங்க விமர்சனத்துக்கு...
DeleteDWD கதை கலப்படம் இல்லாத நாட்டுச் சரக்கு. நன்று.
ReplyDeleteமற்ற கதைகளை இனிமேல் தான் படிக்க வேண்டும்.
சாரி டூ சே திஸ், என்னால் காரிகன் கதைகளை படிக்கவே முடியவில்லை.
மிகவும் கஷ்டப்பட்டு முடித்தேன். Even I felt very happy , while reading my subject books Digital Signal Processing, Electro Magnetic Theory etc. Corrigan is Not upto the expectations.
கண்டிப்பாக குண்டு புக்ஸ் வேண்டும். சுவாரஸ்யமான கதைகளை நீங்கள் சந்தாவுக்கு வெளியே திடீர் ஸ்பெஷல் ஆக கொடுத்தாலும் சரியே.
ReplyDeleteடிக்,இளவரசி,தல தரிசனம் முடிச்சிட்டு கோவமா முறைச்சி பார்த்துகிட்டு இருந்த மார்ட்டினை இன்னிக்கு படிக்கலாம்னு எடுத்துப் பார்த்தா,முன்னால் 8 பக்கங்களும்,பின்னால் 8 பக்கங்களும் இட்ஸ்கான் போயே போச்சி...
ReplyDeleteஇது என்னடா மார்ட்டினுக்கு வந்த சோதனை...
டிக் பார்த்து ஜெர்க் ஆகி இதைப் பார்க்காம போயிட்டியேடா சூனா பானான்னு சொல்லிகிட்டு,அதை போட்டோ எடுத்து அலுவலகத்துக்கு அனுப்பியாச்சி,மாற்றுப் புக் அனுப்புவதா சொல்லி இருக்காங்க...
**** உதிரத்தின் நிறம் கருப்பல்ல ****
ReplyDeleteகதையைப் படித்து முடித்தபோது நானே ஒரு நூறு நூற்றம்பது பேரை சுட்டு வீழ்த்தியதைப் போல லேசாக மூச்சுவாங்கி கிர்ர்ரடித்தது!
சொந்தமுமில்லை.. நண்பனுமில்லை.. அவனுக்காக டெட்வுட் டிக் அரங்கேற்றும் ருத்ரதாண்டவம் - இதுவரை காணாத மரண தாண்டவம்!!
கதையென்று பெரிதாக ஒன்றுமில்லை! ஆனால் அதை நகர்த்திய விதத்தில் 'இப்படியெல்லாம் கூட ஒரு பொம்மை புக்கை படைக்க முடியுமா?!!' என்று மலைக்கச் செய்துவிட்டார்கள் படைப்பாளிகள்!! வெளியூர் படைப்பாளிகளின் இந்த வித்தியாசமான ஆக்கத்துக்கு உள்ளூர் படைப்பாளியின் பேனா வசனங்களால் உரமேற்றியிருக்கிறது! வரிசையாய் நிகழும் சாவுகளிணூடே கிச்சுகிச்சு மூட்டிடும் லோக்கல்பாஷை வசனங்கள் - உள்ளூர் படைப்பாளியின் பன்மொழித் திறமைக்கு ஒரு சான்று! வெளுத்து வாங்கியிருக்கிறார்!
கதை தொய்வில்லாமல் நகர்ந்தாலும் இத்தனை கோரங்களும், குரூரங்களும் ரசிக்கப்படவேண்டியவை தானா? - என்ற துளியூண்டு சந்தேகம் கதையை முடிக்கும்போது கொஞ்சமாய் எட்டிப்பார்க்கிறது! இதை நான் ரசிக்கிறேன் என்றால் என் மனதின் எங்கோ ஒரு மூலையில் குடிகொண்டிருக்கும் வன்மத்துக்கு இந்த டெட்வுட் டிக்கால் தீனிபோடப்பட்டிருக்கிறதா என்ன?!! கடவுளே.. சீக்கிரமே ஒரு சுயபரிசோதனை அவசியமோ என்னமோ?!! கொஞ்சநாட்களுக்கு கார்ட்டூன் கதைகளையோ அல்லது லோன் ரேஞ்சர் கதைகளையோ படித்து என்னை ஆசுவாசப்படுத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்!
டெட்வுட் டிக் நிச்சயம் தொடரப்பட வேண்டும் தான் - ஆனால் இத்தனை குரூரம் சற்றே மிகையோ - எ.எ.க!
9.5/10
குரூரத்தை ரசிக்கவில்லை சார். அந்த குரூரம் தான் உண்மை என்று நம் மனம் ஏற்றுக் கொண்டது.
Deleteசானிக் காயிதம் படத்தை விட இதில் குரூரம் குறைவே
இன்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டு எனும் மலையாள படத்தை காணவில்லை. ஆனால் டிரைலரை காண்கையில் உதிரத்தின் நிறம் கறுப்பல்ல கதையின் குரூரம் மிக மிக குறைவே
/* ஆனால் இத்தனை குரூரம் சற்றே மிகையோ - எ.எ.க! */
ReplyDeleteNever E.V !! It was more than the pictures could ever depict. Wild west was real damn wild. Remember the into scene where stuff happens to the hooker? That used to be a many-times-daily scene in wild west !
ஆத்தாடியோவ்!!! மனிதர்களை விடவும் குரூரமானதொரு உயிரினம் இந்த யுவனிவர்ஸ்லயே கிடையாது போலிருக்கு! 🙀😲😲😱😱
Delete100% but you can compare humans with cuckoo bird
DeleteWe were placed last in the food chain it seems and our brain which developed weapons pushed us to the top of the food chart according to the book SAPIENS. That promotion from down bottom scavengers to the top predators made us vain and proud
Delete"கதை தொய்வில்லாமல் நகர்ந்தாலும் இத்தனை கோரங்களும், குரூரங்களும் ரசிக்கப்படவேண்டியவை தானா?"
ReplyDeleteநமது ரசனை வன்முறையை விரும்புவது வெட்கக்கேடு. அதிலேயும் சிலாயித்து எழுதுவது அதை விட கேவலமானது.
நம்மிடம் நகைச்சுவை உணர்வு இருந்திருந்தால் இந்த கருமாந்திரத்தை அவர் ஏன் வெளியிடுகிறார்.
என்னை பொறுத்த வரை டெக்ஸ் கதைகளே போதுமானது. ஆண்டுக்கு எத்தனை புக்குகள் வந்தாலும், இத்தகைய உணர்வுகளை எழுப்புவதில்லை. டெட் வுட் படித்த நமக்கு
"பிரளயம்" த்துக்காக ஏன் குரல் கொடுக்க தயங்குகிறோம்.
ஒரு வேளை அது நெஞ்சை பிழிய கதை என்பதாலா.
நான் கிட்டத்தட்ட அந்த கதையை 100 முறைக்கும் மேவ் படித்திருக்கிறேன்.
மிருகத்தை உறங்கச் செய்து, மணித உணர்வுகளை தூண்டும் நாவல் அது.
நில் கவனி வேட்டையாடு இத்தகைய ரகமே.
Delete...அது நெஞ்சை பிழியும் கதை என்பதாலா...
Deleteடெக்ஸ் மற்றும் டைகர் கதைகளில், இத்தகைய வன்முறைகளை யார் செய்தாலும், அவர்களை தண்டித்து அமைதியை நிலை நாட்டுவார்கள். அதுவே சிறந்தது.
Deleteபிரளயம்? என்ன கதை சார் அது
Deleteநண்பரே @புன்னகை ஒளிர்
Deleteஒரு படைப்பின் மீதான உங்களது விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்துதெல்லாம் சரிதான் ஜி.. ஆனால் கருமாந்திரம், கேவலம் போன்ற பதங்களோடு கூடிய உங்களது பின்னூட்டத்தைப் படித்தபோது எனக்கு மீண்டும் ஒருமுறை டெட்வுட் டிக் கதையைப் படித்தது போல தான் இருந்தது!
கனியிருப்ப ஏன் காய்கவர்ந்தற்று ஜி?!!
அப்படிக்கூட செய்யலாம் சார். இரண்டாம் முறை படிப்பதற்காய் உங்களை வாழ்த்துகிறேன். எது நிகழ வேண்டுமோ, அது நிகழ்ந்தே தீரும். உங்களுக்காக நானும் இரண்டு தடவை படிக்கிறேன். சந்தோசமா...
Delete"கொஞ்சநாட்களுக்கு கார்ட்டூன் கதைகளையோ"
ReplyDeleteஇது தாங்க சூப்பர் ட்ராக். இனி லியோனி தாத்தா வந்தா படிக்கலாம்னு இருக்கேன்.
HR is TR
ReplyDeleteTiger Jack - அமைதியான புலி
Kit willer - அதிரடி புலி
Kit Carson - அட்டகாசமான புலி
TeX willer - அசால்ட் புலி
TEX: வில்லன்களுக்கு எல்லாம் வில்லன் அதனால் டெக்ஸ் வில்லர் / வில்லன்களுக்கு குதிரையில் வரும் எமன் இந்த வில்லர்.
ReplyDeleteKIT: கிட் (kid)னு (சின்ன) பயல்னு நினைக்குற கெட்ட பயல்களை எல்லாம் சின்னாபின்னமாக்குவான் இந்த சின்ன கழுகு.
TIGER: என் பெயரிலேயே இருக்கு நான் பாய்ந்தாலும், பதுங்கினாலும் புலி தான் (எப்போதும் போல சின்ன வசனம்).
CARSON: (ஆங் இவனுங்க எல்லாம் இப்புடி கட்டம் கட்டி கெத்து காட்டரானுன்களே நாமளும் கொஞ்சம்...) தப்பு செய்றவங்களை கண்டாலே சீறும் சினங்கொண்ட சிங்கம் இந்த கார்ஸன்.
டைகர் ஜாக் - செய்தி தகவல் துறை மற்றும் உளவுத் துறையின் அங்கம்
ReplyDeleteகிட் வில்லர் - உளவுத் துறை
கிட் கார்சன் - பாதுகாப்புத் துறை
(பாதுகாப்பு இருப்பாரோன்னு நினைச்சுக்காதீங்க.. பாதுகாப்பு கொடுப்பவர்)
டெக்ஸ் - துப்பறிந்து நீதி வழங்கும் துறை
HR - இந்த மாதிரி மொக்க caption போட்டுவிட்டு பரிசுக்காக காத்திருக்கும் துரை.. சே துறை
ஏங்க. சுப்பரோ சூப்பர்.
ReplyDelete