Powered By Blogger

Friday, December 23, 2022

பதிவு எண் 900 !!

 நண்பர்களே,

வணக்கம். நிறைய நேரங்களில் நமக்கான ஸ்கிரிப்டை புனித மனிடோ செமையாய் ரசித்து எழுதுகிறார் என்று தோன்றுவதுண்டு ! "இப்போ இன்னா மேன் புதுசாய் ?" என்கிறீர்களா ? இதோ - இந்தப் பதிவு தான் நமது வலைப்பக்கத்தின் Post # 900 !! And இந்த  ஜாலி மைல்கல்லை தொட்டு நிற்கும் தருணத்தில், எதையாச்சும் ஜாலியாய் எழுதிடணுமே என்ற யோசனைக்கு அவசியமேயின்றி, வாகாக ஒரு வாய்ப்பையுமே நம் பக்கம் அனுப்பியுள்ளார் பெரும் தேவன் ! 'சரி...அது இன்னா மேட்டரு ?' என்கிறீர்களா ? வேறொன்றுமில்லீங்க - சிறுசோ, பெருசோ ; வத்தலோ, தொத்தலோ ; சுவாரஸ்யமோ, மொக்கையோ - எதுவாகினும், நீங்கள் இது வரையிலும் இங்கே வாசித்து வந்துள்ள இந்த 899 பதிவுகளையும் எழுதியது சாட்சாத் முழியாங்கண்ணன் மாத்திரமே - and you know that all too well ! சந்துகளிலும், பொந்துகளிலும், ரயில்களிலும், விமானங்களிலும், அட, ஒரு பக்கம் டியூப் போட்டிருந்த வேளையில் ஆஸ்பத்திரியிலிருந்தும், வாஷ்பேசின் இருக்கும் மேடை மீது குந்தியபடிக்கே பாத்ரூமிலிருந்துமே  கூட இந்தப் பதிவுகள் உருவாகியுள்ளன ! ஆனால்    'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக', நமது பதிவுப் பக்கத்தினை ஒரு விருந்தாளி ஆக்கிரமிக்கவுள்ளார் இந்த வாரம் ! And ஏற்கனவே 'ஜனவரியின் சர்ப்ரைஸ்' பற்றிச் சொல்லியிருந்தேன் தானே ?  சர்ப்ரைஸான அந்த விருந்தாளியே  அந்த ஜனவரி சர்ப்ரைஸ் பற்றியுமே சொல்லுவார் ! So நான் அப்பாலிக்கா வாரேனுங்க ! 

===================================================================================================

பாஸ்,

அனைவருக்கும் வணக்கம். நமது லயன் & முத்து காமிக்சின் 2 -ஆம் இன்னிங்ஸ் 2012 COMEBACK ஸ்பெஷலில் துவக்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன. அன்று முதல் இன்று வரை behind the scenes இல் பணிபுரிந்து கொண்டிருப்பவன் நான். வாசகர்களில் கொஞ்ச பேருக்கு என்னை தெரியும். தெரிந்திருக்காதவர்களுக்கு என்னை formal ஆக அறிமுகம் செய்து கொள்கிறேன். என் பெயர் விக்ரம் ! உங்கள் அன்பார்ந்த லயன்-முத்து காமிக்ஸ் எடிட்டர் திரு.S .விஜயன் அவர்களின் புதல்வன் நான். கடந்த 10 வருடங்களில் நமது காமிக்ஸ் வெளியிடுவதில் technical டிபார்ட்மென்ட்டிலும், ஒன்றிரண்டு முறைகள் மொழிபெயர்ப்பிலும் என் பங்கேற்பு காணப்பட்டிருக்கும். ஆனால் முதல் முறையாய் ஓர் தனி காமிக்ஸ் brand ற்கு எடிட்டராக பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிட்டியிருக்கு. 

V காமிக்ஸ் !

ஜனவரி 2023 முதல் நம் கம்பெனியிலிருந்து மாதா மாதம் வெளிவரவுள்ள புதிய brand இது. இதில் வரும் அந்த "V"க்கு என்ன பொருள் ? என்ற கேள்வி எழுந்திருக்கும். "V" என்பது என் பெயரிலிருந்து சூட்டியது ; ஆகையால் V என்றால் "விக்ரம் காமிக்ஸ்" என்று  தோன்றலாம். ஆனால் இந்த V யின் பொருள் வேறு ! 

V = WE = நாம் !

இது தான் புதிய இந்த V காமிக்சின் பார்முலா ! So இது எப்போதுமே நம்ம காமிக்ஸ் !

மாவீரர் அலெக்ஸ்சாண்டர் கூறியதை இங்கே எனக்கு நானே சொல்லி கொள்கிறேன் : "There is nothing impossible to him who will try " ! So எனக்கு முடிந்த அளவு முயற்சிகள் செய்து V = WE = VICTORY என்றுமே  அமைக்க பார்ப்பேன் ! அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஆசிகளும், வாழ்த்துக்களும், ஆதரவும் வேண்டுமென்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் ! 

Small flashback :

முத்து காமிக்சின் 50 வது ஆண்டில் எனக்கு active ஆன ஒரு பொறுப்பு தர  வேண்டும் என்பது அப்பாவின் ஆசை. அதனால் இந்த V காமிக்ஸ் பயணத்தை 2022 நடுலேயே ஆரம்பிக்க வேண்டுமென்று யோசித்திருந்தோம். ஆனால் ஏற்கனவே லயன் & முத்து schedule ல் நிறைய புக்ஸ் இருந்ததாலும், வருஷத்தில் நடுவில் இருந்து ஆரம்பித்த ஜம்போ காமிக்ஸ் அவ்வளவு வெற்றி பார்க்கவில்லை என்பதாலும் V காமிக்ஸ் ஜனவரி 2023 க்கே வரட்டும் என்று வைத்து கொண்டோம். 

கதைகள் select பண்ண அப்பா எனக்கு முழு சுதந்திரம் தந்திருந்தாலும், அதற்காக கண்ணில் படும் எல்லா publisher களையும் தொடர்பு கொள்ள உடனடியாக அவசியம் இல்லை என்று நினைத்தேன். அரசு அலுவலுகத்தில் குமிஞ்சு கிடக்கும் பைல்களை போல, அப்பா ரூம் பீரோக்குள் குமித்து இருக்கும் காமிக்ஸ் புதையலில் இருந்து டாப் கதைகள் கொஞ்சத்தை அள்ளிக் கொண்டு, அதன் பின்னே தேவைப்படக் கூடிய கதைகளுக்கு மட்டும் ஆர்டர் பண்ணி கொண்டால் போதும் - V காமிக்சின் புது பயணத்தை சூப்பராய் நடத்தலாம் என்று தோன்றியது. போகப் போக உங்கள் ரசனைகளை இன்னும் நல்லா எனக்கு புரிந்து கொள்ள ஆரம்பித்த பிறகு, அப்பா ஸ்டைலில் கதை ஷாப்பிங் o.k என்று தீர்மானித்தேன். 

கதைகள் நிறைய இருக்கிற போது அதிலிருந்து எதை V காமிக்ஸுக்கு select பண்ணுறது ? என்ற யோசனை next வந்தது. லயன் காமிக்ஸ் - முத்து காமிக்ஸ் செய்வது போல வித விதமான கதைகள் என்பதை விட, வாசிக்க crisp ஆக இருக்கும் action கதைகளை மட்டும் V காமிக்சில் போட்டால் சிறப்பாக இருக்கும் என்று மனசுக்கு பட்டது. ரொம்ப complicated கதைகளில் கையே வைக்க வேணாம், straight & smooth & simple போதும் என்று அப்பாவிடம் சொல்லி ஓ.கே. வாங்கினேன் ! So முழுக்க முழுக்க action oriented கதைகளை தேர்வு செய்து கொண்டேன்.

அடுத்து காமிக்ஸ் பெயர் & லோகோ பற்றி யோசித்தோம் ! முதலில் "லயன் மினி" என்ற பெயர் நான் ஓ.கே. என்று நினைத்தேன். ஆனால் அப்பா அது வேண்டாம் என்று சொல்லிவிட்டு இந்த பெயரை (V Comics) select செய்து தந்தார். அவரே ஒரு லோகோ டிசைனரிடம் ஒரு லோகோவும் போட்டு வாங்கி தந்தார். ஆனால் அந்த டிசைன் கொஞ்சம் complicated ஆக இருந்தது மட்டும் இல்லாமல், கொரோனா வைரஸ் உருவத்தில் இருக்கும் மாதிரி எனக்கு தெரிந்தது. அதனால் அதில் இருந்த image ஐ எடுத்து  விட்டு, சிம்பிளாக கீழே இருந்த எழுத்துக்களை மட்டும் லோகோவாக்குவோமா ? என்று அப்பாவிடம் கேட்டேன். Simple  பெயருக்கு சிம்பிளான லோகோ போதுமே என்ற லாஜிக் அப்பாவுக்கும் சரி என்று பட்டதால் V காமிக்ஸ் bright சிகப்பில் ரெடி ஆனது ! 

இந்த பயணத்தில் எஞ்சினை turbocharge செய்ய ஓர் கோடாரி ஏந்திய மாயாத்மா முதலில் சாகசம் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். சென்ற ஆண்டு அனல் பறக்க அறிமுகமான ஸாகோரின் கலர் கதைகள் தான் for 2023 - லயனின் அட்டவணையில் உள்ளது. ஆனால் Zagor தொடரில் நிறைய black & white கதைகளும் இருக்கிறது. அவை லயனில் வெளியாக time ஆகும் என்பதால் காமிக்ஸை ஸாகோரின் இன்னொரு முகவரி ஆக்க விரும்பினேன். Darkwood Novels என்ற பெயரில் ஸாகோரின் ரொம்ப racy 6 சாகசங்களை 64 பக்க தனி தனி இதழ்களாக போனெல்லி வெளியிட்டிருக்கின்றனர், ஒவ்வொன்றுமே ஒரு முழுநீள, தனி கதை என்பதால் சிரமங்கள் இல்லாமல் ஈசியாக நாம் வாசிக்க முடியும் என்று பட்டது. So நம்ம V காமிக்சின் ஆரம்பமே ஸாகோரின் 64 பக்க அதிரடி தான் ! 

கதை selection முடிந்த பிறகு டைட்டில் & அதற்கு பின்னே மொழிபெயர்ப்பு வேலை ! அப்பா ஸ்டைலில் கதைக்கு பெயர் வைக்க நான் WWF போட்டு பார்த்த போது தான் எவ்வளவு கஷ்டமென்னு புரிந்தது. So அப்பாவையே முதல் 3 இதழ்களின் பெயரையும், முதல் புக்கின் மொழிபெயர்ப்பையும் செய்து தர சொல்லி வாங்கி விட்டேன். வீட்டுக்குள்ளேயே ஒரு translator ; அதுவும் பில் போடாமல் பணி செய்து தரும் translator இருப்பது செம வசதி ! அடுத்தடுத்து வரப் போகும் இதழ்களில் நான் work பண்ண முயற்சிப்பேன். 

  • "பிரியமுடன் ஒரு போராளி" என்பதே முதல் இதழின் title ! 
  • விலை ரூ.70 . 
  • Black & White புக் 
  • 64 பக்கங்கள்
  • ஒரிஜினல் அட்டைப்படத்துடன் வருகிறது !

அதற்கு அடுத்த இதழாக in Februaru'23 வரவிருப்பவர் MISTER NO என்று அதிரடி செய்யும் ஒரு பைலட் கேரக்டர். இவரின் முழுப் பெயர் ஜெரி டிரேக். அமேசான் காட்டுப் பகுதியில் freelance பைலட். இவர் கதை வரிசையிலும் நிறைய ஆல்பம்ஸ் உண்டு என்றாலும் லேட்டஸ்ட் ஆர்ட்வொர்க் இல் உள்ள 96 பக்க தனித்தனிக் கதைகளை செலக்ட் செய்திருக்கிறோம். So ரூ.100 விலையில் இந்த புது ஹீரோ இன்னொரு crisp ஆல்பத்தோடு (அமேசானில் அதகளம்) பிப்ரவரி மாதம் வருவார். இதுவும் சூப்பர் artwork இருக்கும் action thriller ! 

மார்ச் மாதத்தில் ஸாகோரின் Darkwood Novels தொடரில் இரண்டாவது கதை - "புரவிகளின் பூமி' என்று வெளியாகும். Again 64 பக்கம் & again விலை ரூ.70கலரில் பார்த்து பழகிய ஸாகோர் sharp ஆன b & w படங்களிலும் சும்மா அள்ளுகிறார் ! ஒரு ஜர்னலிஸ்டுக்கு இருட்டில் அமர்ந்து கொண்டு பேட்டி கொடுக்கும் ஒரு மர்ம ஆள் தான் ஸாகோரின் அதிரடிகளை flashback போல் சொல்லுகிறார் ! அந்த அதிரடிகள் ஒவ்வொரு அத்தியாயமும் நமக்கு ஒவ்வொரு தனி புக்காக வர போகுது. Super artwork பக்கத்துக்கு பக்கம்.  

அதற்கடுத்த மாதங்களின் V COMICS இதழ்களில் இன்னும் புதுப்புது ஹீரோஸ் & ஏற்கனவே நமக்குப் பழக்கமான ஹீரோஸ் வரவுள்ளனர். எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிவித்து விடாமல் கொஞ்சம் சஸ்பென்ஸ் வைத்திருந்தால் நல்லா இருக்கும் இல்லையா ? So மார்ச் இதழ் வெளியாகும் போது V காமிக்சின்  ஏப்ரல், மே & ஜூன் இதழ்களின் அறிவிப்பு வரும். 

மூன்று, மூன்று இதழ்களாக அறிவிப்பதில் இன்னொரு திட்டமும் உள்ளது - அப்பாவின் உபயத்தில் ! எடுத்த உடனேயே ஒரு வருஷ சந்தா என்று நீங்கள் கட்ட தேவை இருக்காது. முதல் 3 மாத இதழ்களின் அறிவிப்பு பார்த்துவிட்டு உங்களுக்கு புக்ஸ் பிடித்திருந்தால் பணம் அனுப்பி ஆர்டர் போட்டால் போதும் - லயன் & முத்து மாதா மாதம் அனுப்பும் கூரியரில் V காமிக்ஸ் புக்கையும் சேர்த்து அனுப்பி விடுவோம். தனியாக கூரியருக்கு தண்டம் அழுக வேண்டி இருக்காது. அதே சமயம் நீங்கள் லயன்-முத்து காமிக்ஸ் சந்தாவெல்லாம் போடவில்லை என்றால் every 3 months அறிவிக்கப்படும் V காமிக்ஸ் வெளியீடுகளை பார்த்து விட்டு, கூரியருக்கு ஒரு தொகையோடு, பணம் அனுப்பி அந்த புக்ஸை நீங்கள் வாங்கி கொள்ளலாம். G-Pay இருப்பதால் ஆண்டுக்கு 3 or 4 தடவைகள் பணம் அனுப்புவதில் சிரமம் இருக்காது என்ற நம்பிக்கையில் இப்படி திட்டமிட்டிருக்கிறோம். உங்களுக்கும் இது வசதிப்பட்டால் super ! எங்கள் office staff தான் பாவம்.

Sales க்கான இந்த planning முழுக்கவே அப்பாவின் ஐடியா தான் என்பதால் லயன் & முத்து காமிக்ஸ் சந்தா அறிவிக்கும் நேரத்தில் கூட "V காமிக்ஸ் பற்றி அறிவிக்க வேண்டாம் ; இது டிசம்பர் கடைசி வாரத்தில் சஸ்பென்சாக சொல்லிக் கொண்டு, இப்படி batches of 3 books என்று அறிவித்து கொள்ளலாம்" என்று சொல்லி விட்டார். சின்னச் சின்ன விலைகளில் தான் V காமிக்ஸ் புக்ஸ் இருக்கப் போவதால் கஷ்டம் இல்லாமல் தேவையானதை வாங்கி கொள்ள இது o.k. என்பது அவர் லாஜிக். 

And லயன்-முத்து காமிக்ஸ் சந்தாதாரர்களுக்கு, V காமிக்சின் முதல் இதழ் விலையின்றி அனுப்ப போகிறோம் !. இந்த arrangement ஜனவரி 15 வரைக்கும் லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களுக்கு சந்தா கட்டும் போது மட்டுமே applicable. 2023 பொங்கலுக்கு பிறகு வரும் சந்தாக்களுக்கு இந்த gift ஏற்பாடு இருக்காது. 

இப்படியெல்லாம் எழுதி பழக்கம் கிடையாது எனக்கு. நிறைய தடவை யோசித்து யோசித்து, 4 நாட்களாக எழுதியிருப்பதில் தேவையான details எல்லாற்றையும் சொல்லி விட்டேன் என்று நினைப்பதால் இனி நான் வழக்கம் போல silent mode க்கு கிளம்பி விடுகிறேன். ஏப்ரலில் தொடங்கும் V காமிக்சின் அடுத்த 3 செட் இதழ்கள் அறிவிப்பு நேரத்தில் (March'23) உங்களை மீண்டும் சந்திக்கிறேன். நடுவில் சந்தேகங்கள் இருந்தால் நம் ஆபீசில் கேட்டு தெளிவு பண்ணிக் கொள்ளுங்கள். தனியாக ஒரு ஆபீஸ் போட்டு, தனியாக staff போட்டு V காமிக்ஸ் நடத்தலாம் தான். ஆனால் இதழ்களை வாங்கப் போவது நீங்களே தான் என்பதால் தேவையில்லாத courier செலவுகள், நிர்வாக செலவுகள் வேஸ்ட் அல்லவா ? அந்த பணத்தை மிச்சம் பண்ணினால், விலை சரியாக அமைக்க முடியும் தானே ? 

V காமிக்ஸ் பெரிய பிரிண்ட்ரன் இருக்காது. கொஞ்சமாய் பிரிண்ட் பண்ணி விட்டு, விறு விறுப்பாய் விற்று இடம் காலி ஆனால் போதும் என்பதே எனக்கு first தோன்றுவது. So குறைந்த பிரிண்ட்ரன் க்கு ஏற்ற மாதிரி விலைகள் அமைத்திருக்கிறோம். Please bear with us. 

And எப்போது நானாக எதையாச்சும் புதுசாக செய்ய ஆரம்பித்தாலும் முதல் புக்கில் இருந்து ஒரு சின்ன amount ஆவது ஒரு நல்ல காரியம் எதற்காவது donate செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை உண்டு. ஆகையால் V காமிக்ஸ் முதல் இதழின் sales லிருந்து ஒரு சிறு தொகை அடையார் கேன்சர் ஹாஸ்பிடலுக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறோம்.

Lastly, என் பெயருக்கு முன் இருக்கும் இனிஷியலுக்காக V காமிக்ஸ் வாங்காமல், அதில் இருக்கப் போகும் கதைகளின் தரத்துக்காக நீங்கள் வாங்கினால் இந்த முயற்சி V = VICTORY என்பதை உறுதியாக சொல்லி விடலாம் ! 

NO FRILLS....... ALL THRILLS ! இது தான் நம்ம பார்முலா ! So தோட்டாக்கள் தெறிக்கட்டும் ; கோடரிகள் பறக்கட்டும் ! மீண்டும் மார்ச் மாதத்தில் உங்களை சந்திப்பேன். Wish me good luck please ! Bye !

==================================================================================================

ஏனுங்கண்ணா, 

நா தான் அந்த '899 பதிவுக்காரன்' மறுக்கா வந்திருக்கேன் ! நம்பர் 900 ஜெர்சிக்காரரின் ஜனவரி சர்ப்ரைஸ் ஓ.கே. தானுங்களா ? 

17 வயதில் நான் அடித்த பல்டிகளையையும், இன்றைக்கு 28 வயதினில் ஜூனியர் அடிக்க முற்படுவதையும் ஒப்பிட்டுப் பார்க்கவெல்லாம் தோன்றவில்லை எனக்கு ! அன்றைய நாட்களும், சூழல்களும், உலகமும் - இன்றயதுக்குத் துளியும் சம்பந்தமில்லாதவைகளே ! ஆனால் டையடித்த மண்டையைக் கொண்டே இளைஞர் அணித்தலைவர் பதவியினில் அடியேன் ஓட்டி வரும் காலத்துக்கு என்றைக்கேனும் டாட்டா சொல்லத் தான் வேணும் எனும் போது, அடுத்த தலைமுறை நம் கண்முன்னேயே தேர்ச்சி பெற்றுக் கொண்டால் தப்பில்லை தானே ? So better late than never என்று மகிழ்கிறேன் ! என்ன - முத்துவின் மைல்கல் ஆண்டிலேயே ஜூனியரை களமிறக்கி விட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றியது  ; but again - அதது விதிக்கப்பட்டிருக்கும் வேளைகளில் தானே நிகழும் ?

And make no mistake guys, இங்கே சட்டியில் கணிசமாய் சாயப்பொடி உள்ளது தான் ; அதனை ஈஷிக் கொள்ள சிரத்தில் கேசமென்ற சமாச்சாரம் கோரைப்புல் பாணியினில் தொடரவும் செய்கின்றது தான் ! So ஜூனியருக்கு பட்டாபிஷேகம் பண்ணிப்புட்டு, நான் இடத்தைக் காலி பண்ணி விடுவதாகவெல்லாம் இல்லை ! ஆரோக்கியத்தையும், ஆயுளையும் ஆண்டவன் வழங்கிடும் வரைக்கும் உங்களை அத்தனை சீக்கிரமாய் தப்பிக்க விடுவதாக இல்லை ! So நமது பயணம் எப்போதும் போலவே ரைட்டுக்கா,,லெப்ட்டுக்கா...நேருக்கா....புளிய மரம் சைடுக்கா தொடர்ந்திடும் !

இந்த நொடியோ -  புதியதொரு முயற்சியின் வாயிலில் நிற்கும் ஜூனியருக்கானது ! உங்களின் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் அவனுக்கு நல்கினால், V காமிக்ஸ் 'விஷுக்'கென்று பயணத்தை துவக்கி விடும் ! ஒரு முழியாங்கண்ணன் எடிட்டராய் ஏகப்பட்ட புது முயற்சிகளை ஜாலியாய், துளியும் டென்ஷன்களின்றிக் கையாண்டுள்ளேன் தான் ; ஆனால் ஒரு தகப்பனாய், ஒரு புது முயற்சியின் துவக்கப் புள்ளியினைக் கண்காணித்து நிற்கும் இந்த நொடிதனில், நெஞ்சாங்கூட்டுக்குள் ஒரு படபடப்பைத் தவிர்க்க இயலவில்லை !! புனித மனிடோ நம்மை ஆசீர்வதிப்பாராக !!

Bye for now folks ! See you around !

319 comments:

  1. வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  2. ஐந்துக்குள் ஐக்கியமாச்சு...

    ReplyDelete
  3. விக்ரம். !!! வாவ் !! வாழ்த்துகள்!!
    God bless you on this adventure!

    ReplyDelete
  4. பதிவை படித்து விட்டு வருகிறேன். நன்றி

    ReplyDelete
  5. விக்ரம். !!! வாவ் !! வாழ்த்துகள்!! அருமை .... இந்த முயற்சி மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறை அருள் துணை இருக்கட்டும்....

    ReplyDelete
  6. விக்ரம் உங்கள் புதிய முயற்சியில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் புதிய பாதைக்கு என ஆதரவு எப்போதும் போல் உண்டு. உங்களுடன் எப்போதும் போல் பயணிப்பேன்.

      Delete
    2. 3 மாதங்களுக்கான சந்தா பணம் செலுத்தி விட்டேன்.

      Delete
  7. வாவ்.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. Transferred rs170/- for V Comics.
    Wish U All the Best Vikram.
    Keep it Up!

    ReplyDelete
  9. முதல் இரட்டை சந்தா அனுப்பியாச்சு
    Make it 1 & 2 numbers

    ReplyDelete
    Replies
    1. அடி தூளு!! சென அனாவா கொக்கா?!! :)

      Delete
    2. எனக்கு சந்தா 5ம் எண்ணை கொடுத்து விடுங்கள். நன்றி.

      Delete
  10. ஜீனியர் எடிட்டர் விக்ரம் அவர்களா !!! வணக்கம் தம்பி. வாழ்க வளமுடன். V காமிக்ஸ் கண்டிப்பாக வெற்றி வாகை சூடும். தங்களுக்கு என் ஆதரவு என்றென்றும் உண்டு. நன்றி.

    ReplyDelete
  11. இனிமே ஜூனியர் எடிட்டர் னு கூப்பிடறதா ? இல்ல எடிட்டர் னு கூப்பிடறதா ?

    ReplyDelete
  12. வாழ்த்துகள் (ஜுனியர்) எடிட்டர் சார்..!

    V = we = victory செம்ம ஃபார்முலா..!

    Always with you..😍

    ReplyDelete
  13. வாழ்த்துகள் விக்ரம்!! அடிச்சு விளையாடி தூள் கிளப்புங்க! நாங்க இருக்கும் வரை எங்களின் ஆதரவு 'நம் காமிக்ஸ்'( V comics) உண்டு!

    அன்று முத்து வெளியாகி ஒரு சீரான பாதையில் நிதான நடை நடந்து கொண்டிருந்தபோது, உங்கள் தந்தை 'லயன்'ஐ அறிமுகப்படுத்தி புது ரத்தம் பாய்ச்சினார்!! அவரது கதை/நாயகர் தேர்வுகள் துடிப்புடன் இருந்தது! எங்களின் கற்பனைகளை சிறகடிக்கச் செய்தது நிச்சயமாய் - முத்துவைக் காட்டிலும் லயனே!!

    இன்று நீங்கள் உங்கள் தந்தையின் கரம் பிடித்தே உங்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தாலும், வரும் காலத்தில் எல்லோரும் ஆச்சரியப்படும்படி ஒரு புது ரத்தம் பாய்ச்சுவீர்கள் என்ற நம்பிக்கையில் வாழ்த்தி வரவேற்கிறோம்!!

    நல்வரவு ஜூனியர் எடிட்டர் சார்!!

    ReplyDelete
  14. 26
    மு பாபு
    கங்கவல்லி

    ReplyDelete
  15. V காமிக்ஸ்க்கு இன்றிரவு சந்தா கட்டிவிடுகின்றேன் சார். நன்றி.

    ReplyDelete
  16. My heartiest welcome to V comics and V editor.
    Rs 170 phonepe transferred now.

    ReplyDelete
  17. லோகோ இல்லாத காமிக்ஸ், கிரீடம் இல்லாத அரசன் போல் பார்வைக்கு தோன்றுகிறது. எனவே ஒரு Crisp ஆன லோகோ ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. நானும் இதைத்தான் யோசிக்கிறேன். நடுவுல அந்த மேப்புக்கு பதிலா, "V" யையே நல்ல எழுத்துருவுல வைக்கலாம்.

      Delete
  18. வணக்கம் நண்பர்களே 🙏🙏

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. அருமை, வாழ்த்துகள்!

    ReplyDelete
  21. புது வருடம்!
    புது கதைகள்!
    புது பாணி!

    இதெல்லாம் பழசுங்கோ!

    புது எடிட்டர்! இது தானே புதுசு! V வெற்றியடைய உளமார்ந்த வாழ்த்துக்கள்!...

    ReplyDelete
  22. மொதல்ல கையக் குடுங்க விக்ரம். கங்கிராஜுலேசனஸ். ஜனவரி சர்ப்ரைஸ் உண்மையாலுமே மிகப்பெரிய சர்ப்ரைஸ். ஏதாவது ஒரு புக்கா இருந்திருந்தா அதன் கொண்டாட்டம் ஒரு மாதத்தில் முடிந்திருக்கக்கூடியதா இருந்திருக்கும். ஆனால் V Comics அறிமுகமும் அதன் கொண்டாட்டங்களும் எங்களுடன் காலமெல்லாம் தொடரும். எங்களுடைய ஆதரவு, வாழ்த்துகள் என்றும் உண்டு. (ஆசி மட்டும் வயதில் பெரியவர்களான செனா அனா, தலீவர், செயலர், மேச்சேரி ஜமீனய்யா குடுத்துடுவாங்க). கவலையே இல்லாம எல்லா பந்துகளையும் அடிச்சு ஆடுங்க. We comics விரைவில் விக்டரி காமிக்ஸாக உருவெடுக்கும்.

    சந்தாவை கட்டிட்டு சந்தோசமா வரேனுங்க..

    ReplyDelete
  23. Most beautiful... வாழ்த்துக்கள்... ❤️

    ReplyDelete
  24. நல்வரவு விக்ரம்,
    ஈரோடு வாசகர் சந்திப்பில் இரத்தபடல வெளியீடு பரபரப்பிலும்,
    என் கோரிக்கையை ஏற்று, ஞாபகம் வைத்து, நான் ஹாலை விட்டு வெளியேறி, நமது ஸ்டாலுக்கு சென்றிருந்தாலும், என் நம்பருக்கு கூப்பிட்டு இரத்தப்படலம் பிரதியை அளித்தீர்கள். தங்களின் செயல்பாட்டை பதம் பார்க்க அந்த ஒரு சோறே போதும்.

    துவக்கத்தில் crisp ஆக இருந்தாலும், விக்ரமின் தேடல்கள் எவ்விதம் இருக்கும் என்பதை நன்கறிவோம். காமிக்ஸ் நேசத்தை, மூன்று தலைமுறையாக தொடர்ந்திட முன் வந்திருக்கும் ஜூனியருக்கு ஆதரவுகளும், ஆசிகளும் உளமாற உண்டு என்பதில் துளியும் ஐயமில்லை.

    மிக மிக மகிழ்ச்சியான தருணம். நம் வீட்டு பிள்ளை களமிறங்கிய பூரிப்பு தான் நிலவுகிறது இங்கு அனைவரிடமும். V + WE = VICTORY.

    ReplyDelete
  25. நிச்சயமாக இப்படி ஒரு சர்ப்ரைஸ் எதிர்பார்க்கவில்லை !!

    மனமார்ந்த வாழ்த்துகள் ஜூனியர் எடிட்டர் V அவர்களுக்கு ! 👏👍

    ReplyDelete
  26. Replies
    1. 1000 மாவது பதிவு வர இன்னும் 2 வருசம் ஆகுமா....

      Delete
    2. உப உப உப பதிவுன்னு போட வச்சா இந்தாண்டே வந்துடுங்க

      Delete
  27. ஆரோக்கியத்தையும், ஆயுளையும் ஆண்டவன் வழங்கிடும் வரைக்கும் உங்களை அத்தனை சீக்கிரமாய் தப்பிக்க விடுவதாக இல்லை//

    இறைவன் ஆரோக்கியம், ஆயுள், மன நிறைவு மற்றும்மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்க மனமார்ந்த பிரார்த்தனைகள் சார். அப்பத்தான் நீங்க எங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியாது. 😉

    அது மட்டுமில்லாமல், க்ளின்ட் ஈஸ்ட்வுட், ஸ்பீல்பெர்க், கலைஞர், மாதிரி எத்தினியோ சாதனையாளர்கள் வயது கடந்தும் மனதுக்கு பிடித்த வேலையை தொடர்ந்திருக்கிறார்கள். எனவே நீங்களும் தொடர்வீர்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு.

    மொழிபெயர்ப்பு மற்றும் கதைத் தேர்வுகளில் தொடர்ந்து நீங்கள் பங்களித்தால் ஓடியாடி செய்ய வேண்டிய வேலைகளை ஜூ. எ. கவனிச்சுக்குவார்.

    தொடருங்கள்..தொடர்வோம்..

    ReplyDelete
    Replies
    1. // இறைவன் ஆரோக்கியம், ஆயுள், மன நிறைவு மற்றும்மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்க மனமார்ந்த பிரார்த்தனைகள் சார். அப்பத்தான் நீங்க எங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியாது. 😉//

      நீங்க எப்போதுமே எங்களிடம் இருந்து தப்பிக்க முடியாது சார்.

      Delete
  28. V என்றால் விக்ரம்.விக்டரி
    என எடுத்துக் கொள்வோம் 👍👍👍👍💐💐💐💐💐💐

    ReplyDelete
  29. 'வேகமா' அறிவிச்சிருக்கீங்க விக்ரம் - WElcome :-) and more the merrier !!

    Congrats - and all the best !! 

    நாளை முதல் வேலையாக சந்தாவில் இணைகிறேன் !!

    ReplyDelete
  30. வாழ்த்துகள் ஜூனியர் எடிட்டர் .. Wish you all the best !!!

    ReplyDelete
  31. எடி ஜி,

    சர்ப்ரைஸ் என்ற பெயரில் புதியதாக ஒரு கதை வரும் என்று நினைத்திருந்தேன், புதியதாக ஒரு brand உருவாக்கி விட்டீர்கள். 2023 இதைவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்க முடியும். வாழ்க வளர்க v comics.

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள் விக்ரம்.நல்ல நல்ல கதைகளை வெளியிட்டு வெற்றி பெற வேண்டும்.

    ReplyDelete
  33. All the Very Best Mr.Vikram...
    Keep going & Keep on Rocking.

    ReplyDelete
  34. புதிய முயற்சி வானுயரம் வளர இளையவருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. என்னடா.. ஜாகோர் ஒரு சக்சஸ் ஆன பெரிய ஹீரோ ஆச்சே..நிறைய ஹிட் கதைகள் இருக்குமே.. இதையெல்லாம் நம்ம எடிட்டர் சாரு எப்போ போடுவாரு'ன்னு நெனச்சிக்கிட்டு இருந்தா ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு அட்டகாசத்தை ஆரம்பிச்சிருக்காரு.வாங்க.. விக்ரம் சார்.வாழ்த்துக்கள். கபில்தேவ் ரிடையர்ட் ஆகும்போது புதிதாக சச்சின் என்ற இளம்காளை வந்தது.சச்சின் போகும்போது விராட்கோலி.. அதேபோல நீங்களும் தனியாகவே பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்களும்,பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  36. Congrats Junior/V லயன்!!!

    இந்த Blogpost நல்ல செய்தியை அறிவித்தாலும்....
    ஜூனியர் Editor taking over the mantle, காலம் வேகமாக ஓடி விட்டதையும், ஏனோ முதல் முறையாக எனக்கும் வயது ஏறி வருவதை ஞாபக படுத்தி விட்டது.

    ReplyDelete
  37. லயன் காமிக்ஸ்க்கு டெக்ஸ் மாதிரி,V காமிக்ஸ்க்கு ஸாகோர் பிராண்டட் ஹீரோவாக வலம் வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. இந்த முயற்சி எல்லா வழியிலும் சிறக்க வாழ்த்துகள் ஜுனியர் எடிட்டர். பதிவில் அந்த எழுத்து நடையும் சூப்பர்.

    ReplyDelete
  39. Like a dad.....
    Like a son.....
    Your are welcome Mr. Lion junior 🦁🦁

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள்..
    விக்ரம் சார்+V. காமிக்ஸ்..

    ReplyDelete
  41. மாதம் எத்தனை இதழ்கள் கச்சிதம் என்பீர்கள் ?

    என்ற ஆசிரியரின் கேள்விக்கு 90% வாசகர்கள் 3+ புக்ஸ் என்று வாக்கு அளித்திருந்தார்கள். V comics அறிவிப்பு (lion + muthu இதழ்களுடன் சேர்த்து) வாசகர்களின் தீர்ப்பு/ஆசையை பூர்த்தி செய்கிறது.

    ReplyDelete
  42. Me வந்துட்டேன்..😍😘

    ReplyDelete
  43. மிகச் சிறப்பான முயற்சி விக்ரம் bro. என் அன்பு வாழ்த்துகள். 💐💐💐💐💐

    எங்கள் விஜயன் சாருக்கு பிற்பாடு நம் தமிழ் காமிக்சில் பெரும் வெற்றிடம் தான் ஏற்படும், தமிழ் காமிக்சின் கடைசி தலைமுறையும் நாம் தான் என்று என்னுடன் நட்பில் உள்ள வாசக நண்பர்களிடம் மெல்லிய கவலையோடு பேசுவதுண்டு. ஆனால் இன்று எதிர்பாரா ஒரு சர்ப்ரைஸ்.

    உங்கள் தாத்தா எட்டடி எனில் உங்கள் தந்தை பதினாரெல்லாம் இல்லை முப்பதி இரண்டடி பாய்ந்தவர். நீங்களும் எதிர்காலத்தில் நம் விஜயன் சாருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் சிறக்க மீண்டும் அன்பு வாழ்த்துகள்.
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
    V காமிக்ஸ் எடிட்டர் V.விக்ரம் சகோவுடன் 2014 ஈரோடு புத்தக விழாவில் புகைப்படம் எடுத்து கொண்ட தருணம் இப்போது நினைவில் வந்து செல்கிறது.

    ReplyDelete
  44. வாழ்த்துகள் விக்ரம்..!

    ReplyDelete
  45. எனக்கு இலவச இதழ் வேண்டாம் சார் - V துவக்கம் காண்பதால் நான் பணம் கொடுத்து வாங்கவே விரும்புகிறேன் - எனவே நாளை மூன்று இதழ்களுக்கும் சேர்த்து அனுப்பிடுவேன் !

    Moreso because Vikram is going to send part of proceeds to Adayar Institute.

    ReplyDelete
    Replies
    1. // எனக்கு இலவச இதழ் வேண்டாம் சார் - V துவக்கம் காண்பதால் நான் பணம் கொடுத்து வாங்கவே விரும்புகிறேன் ///

      +1

      Delete
  46. வாழ்த்துக்கள் விக்ரம் சகோ...
    தந்தையை போன்றே உங்கள் காமிக்ஸ் பயணம் சிறக்கவும், 3ம் தலைமுறையாக இந்த காமிக்ஸ் பயணத்தில் வெற்றிக்கொடி நாட்டிடவும், புலிக்கு பிறந்தது பூனையாகுமா? எனவும் சத்தமற சாதிக்கவும் எனது வாழ்த்துக்கள்... God bless.

    ReplyDelete
  47. அட்டகாசமான பதிவு சார். இப்படி ஒரு சர்ப்ரைஸ் யாரும் எதிர்பாராதது.

    விக்ரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஜூனியர் எடிட்டர் ஆக இருந்தது இப்போது V காமிக்ஸ் க்கு எடிட்டர் ஆக பதவி உயர்வு பெற்றதற்கு.

    நான் ஒரு புத்தகம் வரும் என்று எதிர்பார்த்தால் மாதம் ஒன்றாக 12 புத்தகங்கள். இதற்கு மேலே என்ன வேண்டும்.

    ஸாகோர் தனியே கொண்டு வந்ததற்கு நன்றிகள். அமேசான் காட்டுக்குள் Mr. நோ உடன் பயணம் செய்ய ரொம்பவே ஆவலுடன் நான்.

    V காமிக்ஸ் மிகப் பெரிய வெற்றி பெறும். எப்போதும் போல உங்களுடன் தொடருவோம் சார்.

    ReplyDelete
  48. அடேங்கப்பா...சத்தியமாக எதிர்பார்க்கவில்லை சார்...இந்த சஸ்பென்ஸ் எதிர்பார்ப்பை....

    புதிதாய் ஒரு காமிக்ஸ் புது எடிட்டருடன்...

    புது எடிட்டர் எங்க சின்ன ஆசிரியர்...

    வாவ்...

    ஆசிரியர் சார் கோவிச்சக்கவேண்டாம்...

    முத்துவை லயன் முந்தியதை போல லயனை "வி" முந்த எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    சூப்பரோ சூப்பர்..

    ReplyDelete
  49. >>ஸாகோரின் ரொம்ப racy 6 சாகசங்களை 64 பக்க தனி தனி இதழ்களாக போனெல்லி வெளியிட்டிருக்கின்றனர்,

    எடி/ஜூனியர் எடி சார், முடிந்தவரை சென்சார் செய்து வெளியிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  50. உயிரைத் தேடி...
    எப்போது வரும் ஜி....

    ReplyDelete
  51. Welcome Vikram.. All the best for the Victory of=We=V Comics

    ReplyDelete
  52. வாழ்த்துக்கள் விக்ரம். 💐💐💐💐

    ReplyDelete
  53. Vக்கு வாழ்த்துக்கள் சார், ஆக்க்ஷன் என்றால் பெருச்சாளி பட்டாலம் போன்ற கதைகள் வரம்ன்னு வேண்டிக்கிறேன்

    ReplyDelete
  54. தனது பாட்டனார், தந்தை ஆகியோரை தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக காமிக்ஸ் எடிட்டராக களமிறங்கும் விக்ரமுக்கும் முத்து, லயன் காமிக்ஸ்களின் மூன்றாவது தலைமுறையாக களமிறங்கும் V காமிக்ஸ்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    900 ஆம் பதிவுக்கும் எடிட்டர் விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    நிஜமான சர்ப்ரைஸ் இந்த பதிவு. V காமிக்ஸ் நல்ல பெயர் தெரிவு. புதியதொரு துவக்கத்துக்கு ஸாகோர், மிஸ்டர் நோ நல்ல தெரிவுகள்.

    ஜூனியரிலிருந்து எடிட்டராக பதவியுயர்வு பெற்றுள்ள விக்ரமின் முதல் பதிவும் எழுத்து நடையும் நன்றாக இருக்கிறது. அவருக்கும் நன்றாக எழுத வருகின்றது. இதை போல் தொடர்ந்து அவ்வப்போது அவரும் பதிவுகளையிட்டால் மகிழ்ச்சியடைவேன்.

    ReplyDelete
  55. ஏற்கனவே சந்தா கட்டியவர்கள் ,முதல் இதழ் இலவசம் போக எவ்வளவு அனுப்ப வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Rs.170/- சார். விளம்பரத்தில் உள்ளது.

      Delete
    2. ஹையா.... நானு சந்தால இருக்கேன்...நானு சந்தால இருக்கேன்...

      Delete
  56. உங்கள்
    தாத்தாவுக்கு முத்து
    உங்கள் தந்தைக்கு லயன்
    என்பது போல உங்களுக்கு வீ காமிக்ஸ் தனியொரு அடையாளம் பெற்று மேன்மேலும் பலபல கதை வரிசைகள் வெளியிட நல்வாழ்த்துக்கள். .

    ReplyDelete
    Replies
    1. ... உங்களுக்கு
      "நம்ம" காமிக்ஸ்...

      Delete
  57. புதிய ஆண்டு
    புதிய பாதை
    புதிய பயணம்
    என்றும் வெற்றிப் பயனமாக தொடர்ந்து பயனிக்கும்👍👍👍

    ReplyDelete
  58. .........தொடர்ந்து பயணிக்கட்டும்....

    ReplyDelete
  59. சர்ப்ரைஸ் ஆக நாங்க எல்லோரும் என்ன புக் வரும்னு பார்க்க ஒரு எதிர்காலத்தையே அளித்து அசத்தி விட்டீர்கள் சார்...அற்புதம்....

    முத்து...லயன்...வரிசையில் "V for We" ஒரு பெரிய ப்ராண்ட் ஆக வலம் வர வாழ்த்துகள்....💐💐💐💐💐

    *V* for *Vijayan sir, Vikram, Vijay*(பூனை& டெக்ஸ்)💃💃💃💃💃💃
    ஐ லைக் திஸ் *V comics*👌👌👌👌👌

    நம்மை போன்ற இளைஞர்களின் பியூச்சர் எடிட்டர் இளைஞர் விக்ரம் கொஞ்சம் கொஞ்சமாக நம்ம வட்டத்தில் இணைய இது துவக்கப்புள்ளயாக இருக்கும்😍😍😍😍😍

    அப்புறம்....ஆங்....அதேதான் V யில 4வது புக் டெக்ஸ்தானே???

    ReplyDelete
  60. Welcome Junior. All the best for V-Comics sucess

    ReplyDelete
  61. ஹைய்யா புதிய பதிவு…

    ReplyDelete
  62. V for vijayan
    V for Vikram
    V for victory
    V for We
    Congratulations Vikram boy.

    ReplyDelete
  63. இளம் ஆசிரியர் முயற்சியில் V காமிக்ஸில் இளம் டெக்ஸ் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  64. Best Wishes and wonderful journey ahead. Welcome junior..

    ReplyDelete
  65. "V" காமிக்ஸ் இனி "நம்ம" காமிக்ஸ்..

    ReplyDelete
  66. ஏப்ரலில் v காமிக்ஸில் இளம் டெக்ஸ் களம் காணுவாரா பார்ப்போம்

    ReplyDelete
  67. சந்தா விரைவில் அனுப்புவேன், விக்ரம் சார்.

    ReplyDelete
  68. டியர் எடி,

    900 பதிவாக ஜுனியர் விக்ரமின் புதிய முயற்சி... சரியான திட்டமிடல். உங்கள் தந்தை உங்களுக்கு காட்டிய வழிமுறையை, நீங்கள் விக்ரமுக்கும் காட்டி இருப்பதில் ஏக திருப்தி.

    அதுவும் எடுத்தவுடன் பெரிய இதழாக போடாமல், சின்ன கதைகள், அதுவும் ஸாகோர் மற்றும் நோ போன்ற ஒரு நெடுந்தொடரில் ஆரம்பித்து, மாதா மாதா இதழ்களாக சீரான பாதையில் செல்வதை கரகோஷத்துடன் வரவேற்கிறேன்.

    இதை தான் லயன் முத்துவில் நடைமுறைபடுத்த நான் வேண்டி வந்தேன்... புதிய தடத்தில் மாதா மாதம் ஒரு நெடுந்தொடர் கதைகளை வெளியிடுவது, அதுவும் இந்த கால நடைமுறையான வேகமான வாசிப்பு சைஸ்களில், என்னும் பதம் இன்னும் புதிய வாசகர்களை நம் பக்கம் அழைத்து வரும் என்பது திண்ணம்.

    வழக்கம் போல நம்ம இதகளின் புதிய முயற்சிக்கு அச்சாரமாக பணத்தை Gpay பண்ணி விட்டேன்.... அடித்து தூள் கிளப்பு விக்ரம்.....👍

    ReplyDelete
  69. Sir - oru idea. Why not print Young Tex 64 pagers in V comics?

    ReplyDelete
    Replies
    1. திட்டமிடலை ஜூனியரிடம் விட்டு விட்டேன் சார் ; and ஒரு வருஷத்துக்கு இப்போதே தயாராகிக் கொண்டிருக்கிறான் ! In any case இளம் டெக்ஸ் 64 பக்கங்களில் நிறைவுறாது ; they run into 2 or 3 or more episodes !

      Delete
    2. யங் டெக்ஸ் கதைகள் 2,3 பாகங்களுக்கு மேல் என்றால் அதனை ஒரு ஸ்பெஷல் இதழாக வெளியிடலாம்.குண்டு புக்ஸ் என்றாலே லயன்காமிக்ஸில் தீபாவளி மலர்-முத்து காமிக்ஸில் கோடைமலர் வருவதுபோல புதிதாக வரும் V காமிக்ஸில் ஒரு மாறுதலாக பொங்கல் மலர் என வெளியிடலாம் சார்.

      Delete
    3. ஏற்கனவே தான் இளம் டெக்ஸ் ஒன்றுக்கு, இரண்டாய், மூன்றாய், நான்காய், ஐந்தாய்....ஆறு பாகங்கள் ஒரு சேர லயனில் வெளியாக உள்ளாரே சார் ? அதையே இங்கேயும் போடும் பட்சத்தில் - லேபிலைத் தாண்டி வேறென்ன வேற்றுமை இருந்திடக்கூடும் ?

      Delete
  70. // இது தான் புதிய இந்த V காமிக்சின் பார்முலா ! So இது எப்போதுமே நம்ம காமிக்ஸ் ! //
    V-= WE = நாம்
    V-விக்ரம்
    V-வெற்றி...

    ReplyDelete
  71. "வி" என்றால் என்றும் "நாம்"

    இனி இது

    "நம்ம" காமிக்ஸ்.

    ReplyDelete
  72. சரி சரி .. ரெகுலர் பதிவை சீக்கிரம் போடுங்க சார் - ஜனவரி இதழ்கள் பற்றி :-) இன்று பதிவுக்கிழமை :-) :-)

    ReplyDelete
    Replies
    1. என்னது...இன்னைக்கு சனிக்கிழமையா...

      Delete
    2. அது காலையிலே சேலத்திலிருந்து வர வேண்டிய மெசேஜ் ஆச்சே !

      Delete
  73. Happy happy எங்கள் குடும்பத்தில் ஒரு சந்தோசமான விழா. எங்களுக்கு வாழ்வின் ஒரு முக்கியமானதருணமிது.சந்தோசத்தின் உச்சத்திலிருக்கிறோம் ஜுனியர் எடிட்டரைவிட.இனி v.comicஸின் வளர்ச்சி எங்கள் பொறுப்பு. எங்கள் குடும்பம் .எங்கள் குடும்பம் என்ற சந்தோசம்மனசெல்லாம். . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. நெகிழ செய்கிறீர்கள் ராஜசேகரன் சார் !

      Delete
  74. வாழ்த்துக்கள் விக்ரம் சார்

    ReplyDelete
  75. Warm welcome to Vikram and V comics ..

    ReplyDelete
  76. // ஆகையால் V காமிக்ஸ் முதல் இதழின் sales லிருந்து ஒரு சிறு தொகை அடையார் கேன்சர் ஹாஸ்பிடலுக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறோம். //
    நற்செயல் வாழ்க….

    ReplyDelete
  77. // நா தான் அந்த '899 பதிவுக்காரன்' மறுக்கா வந்திருக்கேன் ! நம்பர் 900 ஜெர்சிக்காரரின் ஜனவரி சர்ப்ரைஸ் ஓ.கே. தானுங்களா ? //
    அருமையான எதிர்பார்க்காத அறிவுப்பு சார்,உண்மையிலேயே சர்ப்ரைஸ் தான்,நீங்க 16 அடி பாய்ந்தால் விக்ரம் சார் 32 அடி பாய்வார் என்பதில் சந்தேகமில்லை…
    இதயத்திற்கு நெருக்கமான லயன் –முத்து நிறுவனத்தில் இருந்து இன்னொரு புதிய உதயம் வரவேற்கப்பட வேண்டியது…..

    ReplyDelete
    Replies
    1. ஒப்பீடுகளின் அழுத்தமெல்லாம் ஜூனியருக்கு வேணாம் சார் ; பத்தோ ; முப்பதோ ; அறுபதோ - அவனுக்கு இயன்ற உசரங்களை தாண்டி விட்டுப் போகட்டும் ! நீங்களெல்லாம் இருக்கும் போது அவனை தேங்கி நிற்க அனுமதிப்பீர்களா - என்ன ?

      Delete
  78. வாழ்த்துக்கள்
    விக்ரம் Sir
    உங்களுக்கு
    எப்போதும் எங்கள்
    ஆதரவு உண்டு

    ReplyDelete
    Replies
    1. "சார்" க்கு அவசியங்களில்லை சார் !

      Delete
  79. One Suggestion - Please consider releasing V comics around 15th of every month. I know this would mean extra courier charges but would help to have something to read in the second half of the month sir.

    ReplyDelete
    Replies
    1. ஊஹூம்...அனுப்பும் டப்பாக்களும் இப்போது கொள்ளை விலை & கூரியர்களும் கட்டணங்களில் ரிவிட் அடித்து விட்டார்கள் சார் ; 70 ரூபாய் புக்கை அனுப்ப நெருக்கி 45 ரூபாய் செலவழித்த கதையாகிப் போகும் !

      மாற்றாக, தபாலில் புக்-போஸ்ட்டில் அனுப்புவது ஒரு option ! ஆனால் புக் தொலைஞ்சு போச்சு என்ற பஞ்சாயத்துக்கள் தான் சிக்கலே ! இல்லாங்காட்டி. பத்து ரூபாயில் வேலை ஆகிடும் !

      Delete
  80. வரவேற்கிறோம் விக்ரம் சார்

    ReplyDelete
    Replies
    1. சார்...சார்....இந்த "சார்" என்ற அடைமொழிகளெல்லாம் வேணாமே ?

      எப்போதுமே நம் காமிக்ஸ் குடும்பத்துக்கு அவன் விக்ரமாக உலவுவதே மகிழ்ச்சி !

      Delete
  81. @Edi Sir..😍😘
    வெற்றிவேல்..👍வீரவேல்..💪..
    V காமிக்ஸ்..🌷❤💛💙💚💜
    சிறப்பான இனிப்பான செய்தி சொன்ன தங்களுக்கு என் வணக்கங்கள் Sir..🙏💐

    இனி *நம்ம வீட்டுபிள்ளை*👦 விக்ரம் எங்கள் பொறுப்பு..👍😍😘😃😀

    &

    @டியர் ஜூனியர் எடி விக்கி..😍😃😀

    V comics வெற்றி உறுதி செய்யபட்ட ஒன்று..💪

    எங்கள் ஜம்பிங் ஸ்டாரை முதல் நாயகனாக வைத்து வெற்றி ஆட்டத்தை துவங்கி இருக்கும் உங்களை எங்கள் *ஜம்பிங் ஸ்டார் ஸாகோர் பேரவை* சார்பாக வரவேற்கிறோம்..🙏💐🌷🌹

    ReplyDelete
    Replies
    1. //இனி *நம்ம வீட்டுபிள்ளை*👦 விக்ரம் எங்கள் பொறுப்பு..//

      இந்த ஒற்றை வரி போதுமே சார் !! ஒரு தகப்பனுக்கு இதை விடவும் பெரிய மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும் ?

      Delete
    2. // எங்கள் ஜம்பிங் ஸ்டாரை முதல் நாயகனாக வைத்து வெற்றி ஆட்டத்தை துவங்கி இருக்கும் உங்களை எங்கள் *ஜம்பிங் ஸ்டார் ஸாகோர் பேரவை* சார்பாக வரவேற்கிறோம்..🙏💐🌷🌹//

      அடுத்த வருடமே 6 ஸாகோர் நிச்சயம். சும்மா தெறிக்க விடறோம்.

      Delete
    3. @Kumar Salem..😍😃😘
      *ஜாகோர் பேரவை செயலாளர்* நீங்க சொன்னா சரிதாங்க..😍😃👏🙏💐

      Delete
    4. நன்றி ஸாகோர் பேரவை தலைவரே ...

      Delete
    5. அங்கே ஒரு தலீவர் நிஜாரை குளிருக்கு மப்ளராய் காதைச் சுற்றிக் கட்டிக்கினு பதுங்கு குழிக்குள்ளாற ஏழு மணிக்கே குறட்டை விட்டுக் கொண்டிருக்க, செயலாளர் பாட்டு கிளாஸ், ரவுண்டு பன்னுன்னு நகர்வலம் வந்துக்கினு இருக்க, இப்போ ஸாகோர் பேரவை தான் ஊருக்குள்ளாற இஷ்ட்ராங்காமே ? பேசிக்கிறாங்க ?

      Delete
  82. V காமிக்ஸ் வெற்றிபெற வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  83. V காமிக்ஸ் கடைகளில் விற்பனைக்கு கிடைக்குமா சார்...

    ReplyDelete
  84. எதிர்பார்ப்பை விஞ்சி விட்டாய் நண்பா.....அருமையான இதழ்கள் வெற்றி நிச்சயம்.....வேலனின் முதலெழுத்தும்....மயில் போல பறக்கும் இந்த வி யும் எனது ஆட்டோவில் போட்ட முதல் டிசைன் போலவே உள்ளது....கந்த வேலனின் மயில் பறந்து சென்று உலகை வலம் வந்து அட்டகாசங்களை அள்ளித்தர இரு கரம் கூப்பி/நீட்டி காத்திருக்கிறேன் தாவி அணைக்க....
    முதல் கதை மனம் கவர் கோடாலின்னா...
    இரண்டாம் கதை அமேசான்...பைலட் எனும் வார்த்தைகள் மனதை அள்ளுது...
    ஆசிரியர் எனக்கு தந்தது எனக்கு பிடித்த கதைகளையா அல்லது அவர் தந்த கதைகள் எனக்கு பிடித்ததா என ஓடும் மன எண்ணங்களில் புதிதாய் நண்பர் அள்ளி வர உள்ள கதைகள் மாயாத்மா...பைலட்...அமேசான்...மயிலாய் வி...இவைகளும் அது போல பிடித்தமாய் வருவதும் செந்தூரான் அருள் போலும்....அடுத்த வாரம் லயனுக்கு பணம் அனுப்ப நினைத்தேன்....இதோ இப்பவே விக்கு அனுப்புறேன்

    ReplyDelete
  85. @Edi Sir..😍😃😘😀

    *V காமிக்ஸ்*💝 உதயம் குறித்த நண்பர்களின்
    வாழ்த்துக்களையும் வரவேற்புகளையும் பார்க்கும்போது எனக்கு

    ❤💜** ஒரு நாயகன் உதயமாகிறான்..
    ஊரார்களின் இதயமாகிறான்**💛💙💚
    என்று பாடத் 🎤🎺🎷🎸தோன்றுகிறது..😍

    ReplyDelete
    Replies
    1. உதயமாகவிருப்போர் புது நாயகர்கள் சார் ; அவர்களை பார்த்துக் கொள்ளப் போகும் மேனேஜர் நம்மாள் !!
      -இப்படிக்கு : கால்கள் தரையில் இருப்பதே என்றென்றும் நலமென்ற பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் ! -

      Delete
  86. @டியர் ஜூனியர்..😍😃
    நான் நமது *V காமிக்ஸ்*க்கு முதல் காலாண்டு சந்தா ரூ.170/- அனுப்பிவிட்டேன்..💪👍

    ## I support V காமிக்ஸ்## 👍💪✊✌👌❤

    ReplyDelete
    Replies
    1. ஜம்பிங் ஸ்டார் பேரவை தலைவருக்கு நன்னி ஒரு நூறு !

      Delete
  87. ஏனோ எனக்கு, இரத்தப்படலம் இதழ் ஒன்றில் ஜானதன் ப்ளையின் கையை பிடித்தவாறு ஜேஸன் ப்ளை நடந்துவரும் அட்டைப்படம் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. செம சார். உண்மையாகவே செம

      Delete
    2. அட...என் மேஜையில் தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும் பணி கூட ஜானதன் ப்ளை தான் சார் !

      Delete
  88. சந்தா கட்டின மெஸேஜ் லயன் ஆபீஸ்க்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியாச்சு.

    ReplyDelete
    Replies
    1. நம்மாட்கள் நாளைக்கு பேந்தப் பேந்த முழிக்கப் போகிறார்கள் சார் ; இனிமேல் தான் அவர்களுக்கு V காமிக்ஸ் பற்றிக் காதில் போட்டாகணும் !

      Delete
  89. இணைந்துவிட்டேன் V காமிக்ஸில்

    ReplyDelete
  90. அடுத்த மாதம் முதலில் படிக்கப் போவது V காமிக்ஸ் தான். ஸாகோர் உடன் பயணம்.

    ReplyDelete
    Replies
    1. எதைப் படித்தாலும் நேக்கு ஓ.கே. சார் ; as long as the books are read !

      Delete
    2. எனக்கு அதிக பட்சம் 2 நாட்கள் தான் சார். நமது புத்தகங்களை படிக்காமல் பெண்டிங் வைக்கும் பழக்கம் இது வரை இல்லை.

      Delete
  91. @டியர் ஜூ.வி(க்கி)..😍😃

    2023 ஜனவரி சென்னை Book fair ல் களமிறங்கறோம்..😍💪

    "V காமிக்ஸ்" விற்பனையில கலக்கிறோம்..👍✊

    #சிங்கமுத்து பேரன்னா சும்மாவா..#💪✊👍💐

    ReplyDelete
  92. Welcome Vikram bro

    " So ஜூனியருக்கு பட்டாபிஷேகம் பண்ணிப்புட்டு, நான் இடத்தைக் காலி பண்ணி விடுவதாகவெல்லாம் இல்லை !"

    Editor Sir, நாங்களும் உங்களை விடுவதாக இல்லை,

    ReplyDelete
  93. இளவலுக்கு வந்தனம் 🙏. ஆனாலும் ஜுனியர் லயன் என்ற பெயர் மிகவும் ஏற்புடையதாக இருந்து இருக்கும் என்ற எண்ணம் இப்போதும் எழாமலில்லை சார்

    ReplyDelete
    Replies
    1. ////ஜுனியர் லயன் ////

      யெஸ்!!

      பல காலம் முன்பு இப்பெயர் வைக்கப்பட்டத்தைவிடவும் இப்போது இன்னும் அர்த்தமுள்ளதாய்!!

      Delete
    2. அதே தான் நண்பரே... புது ப்ராண்ட் ஐ ப்ரமோட் செய்வதை விடவும் ஜுனியர் லயன் இன்னும் ஈஸியாக ரீச்சபிள் என்பது திண்ணம்.‌அதுவே அதன் பிளஸ் எஎக

      Delete
    3. சார்...நீங்கள் சொல்வதெல்லாம் வாஸ்தவமே....ஒரு சராசரியான பொருளை சந்தைப்படுத்தும் நடைமுறைகளுக்கு நூற்றுக்கு நூறு ஒத்துப் போகும் தான் ! கடையில் ஒரு பொருளை வாங்க வரும் வாடிக்கையாளர், தனக்குப் பரிச்சயமான நிறுவனத்தின் இன்னொரு தயாரிப்பென்றால் நம்பிக்கையோடு வாங்கிப் போவார் தான் ! ஆனால் - இது சராசரியானதொரு மார்க்கெட்டே அல்லவே & இங்கே அரங்கேறும் விற்பனை pattern களும் முற்றிலும் மாறுபட்டவைகளே !

      இங்கே யார் என்ன கடை விரிச்சாலும், அதன் வெற்றியையோ, தோல்வியையே நிர்ணயிக்கப் போகும் பிரம்மாக்கள் ஆகக் குறுகிய அந்த diehard காமிக்ஸ் ரசிகக் கூட்டம் மாத்திரமே ! அவர்களே இங்கு ஜட்ஜ் & ஜூரி...! So ஒரு பெயரின் பரிச்சயத்துக்காக, maybe முதல் இதழையோ, தொடரும் இதழையோ ஒரு நெடுநாள் வாசகர் வாங்கிடலாம் தான் ; ஆனால் அதன் சரக்கு அவருக்குப் பிடித்தமானதாக இல்லாது போயின், ஜூனியர், சீனியர்,சூப்பர் சீனியர் என எந்த 'ர்' இருந்தாலும் போய்க்கிட்டே தான் இருப்பார் ! இது தான் இந்தக் குறுகிய வட்டத்தின் யதார்த்தம் !

      And இந்தச் சிறு வட்டத்தின் பலவீனத்தையே பலமாக்கிக் கொள்வதுமே கம்பு சுற்றும் சூத்திரமாகாது ! தகவல் போய்ச் சேர வேண்டியது மொத்தமே ஆயிரத்து சொச்சம் பேருக்குத் தான் எனும் போது மிஞ்சிப் போனால் 3 மாதங்களுக்கு மேல் எடுத்திடாது சார் ! So பெயரின் மகத்துவத்தைக் காட்டிலும் இங்கே சரக்கின் முறுக்கே வாங்குவதைத் தீர்மானிக்கும் காரணி - at least எனது பார்வையினில் !

      அப்புறம் காலம் முழுக்க "ஜூனியராய்" ; இன்னொன்றைச் சார்ந்து நிற்கும் entity ஆக காலம் தள்ளுவதில் என்ன ஆத்மதிருப்தி கிட்டிடக் கூடும் சார் ? நானுமே 1984-ல் இவ்விதம் எண்ணியிருந்தால் "முத்து மினி காமிக்ஸ்" என்றோ ; "ஜூனியர் முத்து " என்றோ களமிறங்கியிருக்கலாம் தானே ? நான் இன்னாரின் பையன் என்பதையோ ; இது இந்தக் குழுமத்தின் சார்பு நிறுவன வெளியீடு என்பதையோ வாசகர்களிடம் கொண்டு சேர்க்க அன்றைக்கு ஏது சார் சமூகத் தகவல் பரிமாறும் களங்கள் ?? In fact நான் யாரென்பதே ஆண்டாண்டு காலமாய் நிறைய பேருக்குத் தெரியாதே ? எத்தனையோ நாட்கள் ஆபீசில் அமர்ந்திருக்கும் என்னிடமே வந்து "எடிட்டர் இன்னும் வரலியா?" என்று கேட்டுவிட்டு கிளம்பியோர் ஏராளம் ஆச்சே ? அன்றைக்கு "லயன்" என்ற பெயரைப் பார்த்து வாங்கிய நண்பர்களான நீங்கள் ஒவ்வொருவருமே அந்த ஸ்பைடர்களையும், ஆர்ச்சிகளையும், டெக்ஸ் வில்லர்களையும் கண்டு ஈர்க்கப் பட்டவர்கள் தானே ?

      Simple logic சார்...! நினைவில் நிற்கவல்ல சுலபமானதொரு பெயரும், நம்பிக்கையூட்டும் கதைகளும்....யோக்கியமான உழைப்பும் ஒரு புது முயற்சிக்கு இங்கே அத்தியாவசியம் என்று நினைக்கிறேன் - rather than a legacy !

      Delete
  94. Congratulations junior editor "V"ikram.

    வரும் ஆண்டு டெக்ஸ் 75வது ஆண்டு, ஒரு மிகப்பெரிய ஹீரோவின் மைல்கல் ஆண்டில் உங்களுடைய "V" காமிக்ஸ் தொடங்குவதும் என்றென்றும் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெறும்.

    இந்த தனிப் பாதை (காமிக்ஸ்) உங்களுடைய தனித்துவத்தை சிறப்பாக வெளிப்படுத்த உதவும்.

    (ஒரு விளம்பரத்தில் ஒரு வாசகம் வரும்) "நாங்க இருக்கோம்" துணைக்கு எப்போதும்.

    மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎁🎉💐🤝 கலக்குங்க. 👌

    ReplyDelete
    Replies
    1. ஓராயிரம் நன்றிகள் சார் !

      Delete


  95. விக்ரம் விக்ரம்
    விக்ரம் விக்ரம்

    நான் விஜயன் பெற்றவன்
    லயனை தொட்டு விட்டவன்
    முத்தை முட்டி விட்டவன்
    சாகோரை சுட்டுவிட்டவன்
    என் கதைகளே வாகையே சூடும்

    விக்ரம் விக்ரம்
    விக்ரம் விக்ரம்



    டிசம்பர் செல்லட்டும்
    வி பேர் வெல்லட்டும்
    டிசம்பர் செல்லட்டும்
    வி பேர் வெல்லட்டும்

    ரதகஜகதை எங்கும் செல்லும்
    விண்ணை வெல்லும்
    வானும் மண்ணும்
    ஹ ஹ வி பேர் சொல்லும்

    ஒ கதைகள் எனக்கென இருக்குது
    ஆ கனவுகள் பாதையில் பலித்தது ஆம்
    கதையெனும் விதை நெஞ்சில் விழுந்தது
    ஹ பயிரென தினம் அது வளர்ந்தது
    வி'யால் அதோ அதோ விடியுது

    கதைகளால் ஜனவரி வழியுது
    சாகோரால் அதோ தலை(டெக்ஸ்) உருளுது
    சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது

    துடிக்குது புஜம்
    ஜெயிப்பது நிஜம்
    தகிட தகதமிதா தீம்
    தகிட தகதமிதா தீம்தக்
    தகிட தகதமிதா தீம்
    தகிட தகதமிதா தீம்தக் தகிட

    விக்ரம் விக்ரம்
    விக்ரம் விக்ரம்




    வி'யார் விட்டார்கள்
    கதை பாலகர் தொட்டார்கள்
    வியார் விட்டார்கள்
    கதை பாலகர் தொட்டார்கள்
    இனியொரு கதை செய்வோம் இன்றே
    மனதினை வென்றே கதைகளை கொண்டே
    செய்வோம் நன்றே

    ஹே வாசகனுக்கு
    தராதது பிழையே வா
    கதைகளை அளிப்பது முறையே
    ம்ம கேட்பது வாசகன் இனமே
    ஆம் அளிப்பது விகளின் குணமே

    எப்போ இதோ வி வருகுது
    திட்டத்தால் கதைபல ஒளிருது
    சித்தத்தில் மாணவகூட்டம் வருகுது
    மொத்தத்தில் பல கதை கிடைக்குது

    துடிக்குது புஜம்
    ஜெயிப்பது நிஜம்
    தகிட தகதமிதா தீம்
    தகிட தகதமிதா தீம்தக்
    தகிட தகதமிதா தீம்
    தகிட தகதமிதா தீம்தக் தகிட

    விக்ரம் விக்ரம்
    விக்ரம் விக்ரம்

    நான் விஜயன் பெற்றவன்
    லயனை தொட்டு விட்டவன்
    முத்தை முட்டி விட்டவன்
    சாகோரை சுட்டுவிட்டவன்
    என் கதைகளே வாகையே சூடும்

    விக்ரம் விக்ரம்
    விக்ரம் விக்ரம்

    ReplyDelete
    Replies
    1. கவி சுனாமி, கவி எரிமலை, கவி பூகம்பம், கவி சூறாவளி ஸ்டீல் 🤗😁😇🥶🌞💥💫🔥

      Delete
    2. ஸ்டீல்...உங்க கிட்டே T ராஜேந்தர்லாம் கியூவில் நிற்கணும் !! தப்பிப் போய் கோவையிலே இருக்கீங்க நீங்க !

      Delete
    3. ஸ்டீல் ஜி... செம்ம..செம்மங்க..😍😘😘😘👍💪✊

      Delete
    4. பின்னுரேல மக்கா.

      இத்தோடு நிறுத்திக்கோலே அதுதான் எங்க எல்லோருக்கும் பாதுகாப்பு:-)

      Delete
  96. எரிமலை எப்படி பொறுக்கும்..
    நம்ம ஸ்டீலுக்கு ஏது இனி உறக்கம்..
    சிங்கக்குட்டி சிலிர்த்தெழுந்தால்..
    இங்கு, கவிதை கதவுகள் தெறிக்கும்..

    ReplyDelete
    Replies
    1. காது ஜவ்வுகள் கிழியும்...
      காதோரம் கெட்சப்பும் கசியும்...!

      Delete
  97. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. V=We

      பல்வேறுபட்ட சிந்தனைகளையும் செயல்களையும் புறத்தே எட்டி நிற்கச் செய்து, ஒற்றை நோக்குடன் இங்கே ஒன்றுகூடி இருக்கும் இந்த சித்திரக்கதை நேச சிறு கூட்டத்தினை நாம் என விளித்து அதன் ஆசிரியராக பரிணமித்துள்ள விக்ரம் அவர்களே! இங்குள்ளோர் நெஞ்சங்கள் அத்துனையும் தங்கள் தாத்தா மற்றும் தந்தையாரின் கரம் பற்றி கதை கேட்ட சிறார்களே! ஆசிரியர் - வாசகர் என்ற நிலை கடந்து இங்கே தகப்பனாய், தமையனாய், குடும்ப உறவாய் எங்களோடு பயணித்து வரும் தங்கள் தந்தையாரின் வழியிலேயே தாங்களும் நாம் என்று உரக்கக் கூறி பயணத்தை தொடங்கியுள்ளதை எண்ணி பெருமைப்படுகிறோம். மனம் மிக மகிழ்கிறோம். நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!! இது சிறு கூட்டமே ஆயினும் எல்லைகளில்லா அன்பாலும் ஆதரவாலும் என்றென்றும் உங்களுக்கு மிகப்பெரும் துணையாக இருப்போம் என்பதில் ஐயமில்லை.

      வாழ்க!! மென்மேலும் வளர்க!!!

      Delete
  98. V காமிக்ஸ் குடும்பத்தில் நானும் ஒரு உறவினன் ஆனேன்.

    ஆமாங்க .சந்தா செலுத்தியாச்சுங்க.

    ReplyDelete
  99. எங்க வீட்டுப் பிள்ளைக்கு இல்லாத ஆதரவா ? தங்களின் எல்லா வித முயற்சிக்கும் அடியேனின் தொடர் ஆதரவு என்றென்றும் உண்டு. தம்பி விக்ரம் அவர்களே சும்மா பூந்து விளையாடுங்க. உங்கள் பின்னால் நாங்கள் இருப்போம்.

    ReplyDelete
  100. Superb news. All the best for V Comics...

    ReplyDelete
  101. விக்ரம் @ தெளிவான சிந்தனை உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது, புதிய கதை வெளியே என இல்லாமல் அப்பாவின் பீரோவில் இருந்து ஆரம்பித்தது, அப்புறம் அனைவரும் சந்தாவில் இணைய வசதியாக 3 மாத சந்தா என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியது இதற்கு எல்லாம் மேலாக கொரியர் செலவைக் கட்டுப்படுத்த ரெகுலராக வரும் நமது காமிக்ஸ் புத்தகங்கள் உடன் அனுப்ப முடிவு செய்தது. I like your approach. வெற்றி உங்கள் பக்கவே, உங்கள் முதல் பதிவை டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் உடன் அமர்க்களமாக ஆரம்பித்து உள்ளீர்கள்.

    ReplyDelete
  102. Congrats Vikram.. Clarity that you are showing in your thought process will help you to grow further..

    ReplyDelete
  103. "Junior Muthu' .....Yes sir you are good at making us understand things. Welcome 'V' comics and welcome Vikram who has made us happy by announcing Exclusive Action genre which we were yearning for!

    ReplyDelete
  104. வாழ்த்துகள் விக்ரம்!! முதல் பதிவிற்கும் வாழ்த்துகள்!! அப்படியே கீழே கமெண்டுக்கு பதிலும் நீங்களும் போட ஆரம்பிக்கலாமே?? அப்பாவே எல்லாருக்கும் நன்னி சொல்றாரே?

    ReplyDelete
  105. எடிட்டர் விஜயன் அவர்களுக்கு பிறகு one and only தமிழ் காமிக்ஸ் என்னவாகும் என்ற அப்போ அப்போ நினைத்துக் கொள்வேன்.
    ஆனால் அந்தக் கேள்விக்கு ஒரு விடை கிடைத்து விட்டது.
    இந்த புது பிராண்டு காரணமாக மேலும் பல புதிய ஹீரோக்கள் வரப் போகிறார்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாகவே உள்ளது.

    ReplyDelete
  106. எப்போதும் புத்தகங்கள் அது சார்ந்த அறிவிப்புகள்தான் சர்ப்ரைஸாக இருக்கும்..இம்முறை அறிவிப்பரையே சர்ப்ரைஸ் ஆக்கியது செம சர்ப்ரைஸ்.
    😍😍😍

    வாழ்த்துகள் விக்ரம் சார்.உங்ளோடு பயணிக்க எப்போதும் போல நாங்கள் இருப்போம்.

    ReplyDelete
  107. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஆசிரியர் சார். இன்று சனி பதிவுக்கிழமை.

      Delete
  108. ஜூனியர் எடிட்டர்.

    புத்தக விழாக்களில் பட்டும் படாமல் யாரோடும் டச் இல்லாமல் அமைதியாக. காணப்பட்டாலும். காமிக்ஸின் Behind the scene. ல் சத்தமின்றி மறைமுகப் பங்களித்தவர்...இதோ..நம்மோடு நேரடியாக ஐக்கியமாகிறார்.

    V : We. : நாம்..

    ReplyDelete
  109. V-காமிக்ஸ் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  110. சார், இப்போ பார்த்தீங்களா எத்தனை நண்பர்கள், எத்தனை வாழ்த்துக்கள். நீங்க வாரா வாரம் இதுபோல சர்ப்ரைஸ் அறிவிப்பு கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும், அதை நாங்கள் கொண்டாடி தீர்க்க வேண்டும்.

    எப்படியும் இன்னும் ஒன்று இரண்டு நாட்களில் load more வந்து விடும். அப்போ உபபதிவு போட்டு தானே ஆகணும். I am waiting.

    ReplyDelete
  111. V-காமிக்ஸ் சந்தா செலுத்த online link போடுங்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. 9003964584 க்கு Gpay பண்ணுங்க பாஸ்..👍

      Delete
  112. Definitely செயலரே ..😍😘
    இந்த தடவை உபபதிவு நம்ப *ஜூனியர் எடி விக்கி* ரெடி பண்றாராமே..❤

    ReplyDelete
  113. அது வருட கடைசியாக இருந்தாலும் சரி, பண்டிகை நாளாக இருந்தாலும் சரி. நமது தளத்துக்கு என்றே exclusive வாசகர்கள் உண்டு.

    இந்த முறை பாருங்கள் இது வரை பதிவிடாத நிறைய நண்பர்கள் நமது விக்ரமுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.

    One of the best surprises announced here. நிறைய அதிரடியை பார்க்க போவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete