நண்பர்களே,
வணக்கம். மார்கழியும் பிறந்தாச்சு ; பனி படர்ந்த அதிகாலைகளும்.... போர்வைகளைக் காது வரையிலும் பொத்திக் கொண்டே நீளும் உறக்க ரம்யங்களும் சேர்ந்தே புலர்ந்தாச்சு ! கண்ணுக்கெட்டும் தூரத்தினில் காத்திருக்கும் கிருஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளின் இனம்புரியா த்ரில்லும், ஒரு புது வருஷத்தினில் நிகழவிருப்பனவெல்லாம் நன்மைகளாகவே இருந்திடுமென்ற நம்பிக்கைகளும், வருஷத்தின் இந்தக் கடைசி வாரங்களை ஒரு வித தேஜஸுடன் காட்சி தரச் செய்யத் தவறுவதில்லை & no different this time as well !! நம் அனைவருக்கும் அந்த நம்பிக்கை நிஜமாகிட பெரும் தேவன் ஓடின் ஆசீர்வதிக்கட்டும் !
ஆர்வங்களோடு முன்னே பார்த்திடும் வேளை இது எனும் போது, நாமும் அதையே செய்வோமே guys - காத்திருக்கும் ஜனவரியின் பக்கமாய் கவனங்களைக் கொண்டு சென்றபடிக்கே ! First in line - இதோ நமது வேதாள மாயாத்மாவின் அட்டைப்பட first look !
வேதாளரின் ஒரிஜினல் உடுப்பு ஒருவித வயலெட் நிறமே என்றாலும், அதனை பளீர் சிகப்பில் வர்ணமூட்டி அழகு பார்த்த தேசங்களும் உண்டு & படைப்பாளிகள் இதற்குமே ஓ.கே. சொல்லியிருந்தனர் ! 'சிகப்பு தான் எனக்கு புடிச்ச கலரு' என்ற இந்த கோஷத்தை உரக்க உச்சரித்தோருள் பிரதானமானோர் துருக்கியர்கள் ! அங்கே ரொம்பவே பிரசித்தி பெற்ற நாயகராய் வேதாளர் உலா வர, அங்கு வெளியான இதழ்களின் அட்டைப்படங்களில் அவருக்கு சிகப்பில் டிரெஸ் அணிவித்து தெறிக்க விட்டிருந்தனர் ! அந்த துருக்கிய அட்டைப்பட ஓவியர்களின் லிஸ்டில், Ertugrul Edirne என்ற ஜாம்பவான் ஐரோப்பா முழுக்கப் பிரசித்தம் ! பிதாமகர் Sy Barry-ன் வேதாளருக்கு ரொம்பவே நெருக்கமான வார்ப்பாய் எனக்கு இவர் வரைந்திட்ட Phantom ஓவியங்கள் தென்பட, நாம் வேதாளரை வெளியிடத் தயாரான நொடியிலேயே துருக்கிய ஓவியரையுமே தொடர்பு கொண்டிருந்தோம் ! அதைத் தொடர்ந்து அவரிடமிருந்து வாங்க இயன்ற ஓவியங்களையே, வேதாளர் ஸ்பெஷல் 1 & 2-வினில் பார்த்து வருகிறோம் - not just on the book covers ; but also on the courier boxes ! ஓ.....யெஸ் ; இம்முறையுமே அனலடிக்குமொரு முழுவண்ண சித்திரத்துடனே கூரியர் டப்பிக்கள், சந்தா இதழ்களைச் சுமந்து பயணிக்கவுள்ளன ! இதோ - கலரில் டாலடிக்கும் டப்பியின் first look கூட ! And இதுவும் கூட அதே துருக்கிய ஓவியரின் கைவண்ணம் தான் !
இன்னமும் SUPREME '60s தனித்தடத்துக்கென சந்தா செலுத்தியிருக்கா நண்பர்கள் மேற்கொண்டும் தாமதிக்க வேணாமே - ப்ளீஸ் ! முழுக்க முழுக்க Collector's Edition பாணியினில், இந்த க்ளாஸிக் நாயகர்கள் வலம் வரவிருக்கும் இறுதிச் சுற்று இதுவே ; simply becos 2024 முதலாய் இவர்கள் வேறு பாணிகளில் ; ஸ்டைல்களில் கலக்கவுள்ளனர் ! So இந்த SUPREME '60s சேகரிப்புகளைத் தவற விடாதீர்கள் என்பேன் folks !! And இதோ - உட்பக்கத்து preview இன்னொரு தபா - ஓவியர் SY BARRY-ன் அசாத்திய சித்திரங்களுடன் ! தற்போது 94 வயதைத் தொட்டு நிற்கும் இந்த ஓவிய ஜாம்பவான், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாய் வேதாளர் கதைகளுக்கு படம் போட்டு வந்தவர் ! So பின்னாட்களில் வேறு சில ஆற்றலாளர்கள் தூரிகைகளைப் பிடித்திருந்தாலும், என் மட்டில் வேதாளர் = Sy Barry சித்திரங்களே !
மொத்தம் 10 கதைகள் ; 200+ பக்கங்கள் ; ஹார்ட் கவர் பைண்டிங் + அட்டைப்படங்களில் மாமூலான நகாசு வேலைகள் என வேதாளர் ஸ்பெஷல் - 2 செமையாய் தயாராகி வருகிறது ! முழுசுமே கருணையானந்தம் அங்கிளின் மொழியாக்கமே ; ஆங்காங்கே நான் செய்திருக்கும் சில மாற்றங்களோடு ! என்ன தான் நேர்கோட்டுக் கதைகளாய் இருப்பினும், இந்தப் பணியின் பளு just for the sheer length of the stories - பெண்டை நிமிர்த்தத் தவறுவதில்லை & இம்முறையும் அதற்கொரு விதிவிலக்காகிடாது ! இதோ - ஞாயிறுமே முழு வீச்சில் பணிகள் நடந்திடவுள்ளன - வேதாளரை டென்காலி கானகத்திலிருந்து உங்கள் இல்லங்களுக்குக் கொண்டு சேர்ப்பிக்கும் பொருட்டு ! கதைகளை பொறுத்த வரையிலும், 'முதல் வேதாளனின் கதை' இணை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம் தான் - முத்து மினி காமிக்சில் ! இம்முறை அந்த முதல் வேதாளனின் daddy பற்றிய கதையுமே உண்டு ! So வேதாள அபிமானிகளுக்கு இதுவொரு must have என்பேன் !
SUPREME '60s !! உங்களின் சந்தாக்களுக்குக் காத்திருக்கின்றது :
Moving on, முத்துவின் 51-வது ஆண்டுமலர் ஜனவரியில் highlight-களுள் முக்கியமானது என்பேன் - இரு காரணங்களுக்காக :
காரணம் # 1 : பிடரியில் அறையும் சித்திர பாணி + கலரிங் !
காரணம் # 2 : கோங்குரா காரங்களையெல்லாம் ஓரம் கட்டவல்லதொரு, 'எவனா இருந்தா எனெக்கென்ன ?' ஹீரோ !!
Mike Hammer !! தமிழில் சுஜாதா சார் உருவாக்கிய லாயர் கணேஷ் மாதிரி - இவரொரு அமெரிக்க நாவலாசிரிய ஜாம்பவானின் கற்பனைப் படைப்பு ! மிக்கி ஸ்பிலெய்ன் என்ற அதகள எழுத்தாளர் 1947-ல் உருவாக்கிய இந்த டிடெக்டிவ், யாருக்கும் அடங்காத முரட்டுப் பையன் ! 'சிக்கலா ? போட்டுத் தள்ளிவிட்டு அப்புறமாய் யோசிச்சுக்கலாம் !' என்ற ரீதியிலான ரணகளப் பார்ட்டி ! இறுக்கமான மொழிநடையுடன், எக்கச்சக்க ஆக்ஷன் + ஏராள 'கில்மா' sequences சகிதம் பயணித்தன இவரது நிறைய க்ரைம் நாவல்கள் ! அப்புறமாய் தொலைகாட்சி சீரியல்களாய் மைக் ஹேமரை முன்னிலைப்படுத்தியது போறாதென்று, அவரை காமிக்ஸ் பக்கமாகவும் கொணர்ந்துள்ளனர் ! கதாசிரியர் ஸ்பிலெய்னின் நூறாவது ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பங்காய், அவரே எழுதியிருந்ததொரு ஒரிஜினல் கதையினை அட்டகாசமான சித்திர பாணியில் ஒரு முழுநீள காமிக்ஸ் ஆல்பமாக்கியுள்ளனர் ! அதன் தமிழாக்கமே - "மரணம் சொன்ன இரவு" இதோ - அதன் அட்டைப்பட first look :
ஒரிஜினலாய் வெளியான இதன் ஆங்கிலப் பாதிப்புக்கு மொத்தம் 4 Variant கவர்ஸ் உண்டு ! அவற்றுள் சிறப்பான இரண்டை எடுத்து முன் + பின் அட்டைகளாக்கியுள்ளோம் ! And guess what ? இந்த அட்டைப்படத்தினை வடிவமைத்தது நம்ம ஜூனியர் எடிட்டர் தான் ! நமது டிசைனர்கள் சொந்த வேலைகளில் சற்றே பிசியாக இருக்க, ஆபீஸிலேயே நம்ம டீமைக் கொண்டு, இந்த அட்டைப்படத்தினை தேற்ற முயற்சித்து, மண்டை வீங்கிப் போயிருந்த நிலையில் ஜூனியர் முயற்சிக்கிறேன் என்றார் & here you go :
சுட்டுப் போட்டாலும் drawing sense தேறாது எனக்கு ; so என் பார்வையில் இதை 'ஆஹா' என்று சிலாகித்து "காக்காய் ; பொன்குஞ்சு..." என்ற ஒப்பீடுகளை எழுப்பிடத் தோன்றவில்லை ! பார்த்த நொடியிலேயே படைப்பாளிகள் ஓ.கே. சொன்ன இந்த டிசைன் உங்களுக்கும் ஓ.கே.வாகத் தென்படுகிறதா guys ? Just asking #
அப்புறம், இந்த அட்டைப்படத்தினில் இன்னொரு விசேஷமும் உண்டு ! அதுவும் கூட நமது இளைய தலைமுறையின் பங்களிப்பே !! அட்டைப்படத்தில் டெரராக கதையின் தலைப்பு இருப்பதைக் கவனித்தீர்களா ? இது நமது கைவண்ணமே அல்ல !! "நம்ம லயனுக்கு ஏதாச்சும் செய்யணும்னு எனக்கு தோணும் சார் ; அட்டைப்படம் டிசைன் பண்ண ஆசைலாம் உண்டு தான் - ஆனால் அவ்வளவு போகாட்டியும், இதோ அட்டைப்படங்களில் நீங்கள் பயன்படுத்திட தலைப்புகளை வடிவமைத்து அனுப்பியுள்ளேன்" என்று தெறிக்க விட்டுள்ளார் நண்பர் (Salem) ஜெகத் !! பாருங்களேன் இந்த அதகளங்களை :
இன்னமுமே நிறைய அனுப்பியுள்ளார் நண்பர் ; சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போதெல்லாம் அவற்றை நமது அட்டைப்படங்களில் நீங்கள் தரிசிப்பீர்கள் !! Freaking Awesome ஜகத் !! ஓராயிரம் நன்றிகள் !!
Back to மைக் ஹேமர் ! ஒற்றை மாதத்துக்கு முன்னே தான் ஒரு ஊத்தைவாய் கௌபாய்க்கு பேனா பிடித்திருந்தேன் ; சூட்டோடு சூடாய் இந்த முரட்டுப் பையனும் வந்து சேர்ந்திருக்க - அதே ரேஞ்சுக்கு இல்லாவிடினும், அக்மார்க் தெனாவட்டோடு சுற்றி வரும் ஒரு கதாப்பாத்திரத்துக்கு இயன்ற நியாயத்தைச் செய்திட முனைந்துள்ளேன் ! Of course , 'இது தேறாது' என்று உதடுகளைப் பிதுக்க ஒரு அணி இல்லாது போகாது போகாதென்பது தெரிந்த விஷயமே - ஆனால் அந்த விமர்சன நண்பர்கள் ஒருக்கா இதன் ஒரிஜினல் ஆங்கிலப் பதிப்பையும் வாசிக்க மெனெக்கெட்டால் செமையாக இருக்கும் ! இங்கொரு விஷயம் சொல்லியாகணும் - Max Allan Collins எழுதியுள்ள ஸ்கிரிப்ட் பற்றி ! பொதுவாய் இங்கிலீஷில் நமக்கு வண்டி ஓடி விடும், பெருசாய்த் தாளம் போடாதென்ற நம்பிக்கை எனக்குள் உண்டு ! கூகுளுக்குள் துழாவுவதெல்லாம், மார்ட்டின் ; கிராபிக் நாவல்ஸ் போலான படைப்புகளின் பின்னணி வரலாறுகளை ; விளக்கங்களைப் புரிந்து கொள்ளும் பொருட்டாகவே இருப்பதுண்டு ! ஆனால் முதல்வாட்டியாய் இங்கிலீஷில் புழங்கிடும் சில பல சொற்றொடர்களின் சரியான அர்த்தங்களை புரிந்து கொள்ளவே கூகுளுக்குள் பல்டியடிக்க இங்கே அவசியப்பட்டது ! கதை நிகழும் 1930's-ன் அமெரிக்காவினில், அந்நாட்களின் கரடு முரடான சம்பாஷணைகளை அட்சர சுத்தமாய்க் கொண்டு வரும் பொருட்டு இங்கிலீஷ் ஸ்கிரிப்டில் இத்தனை வேலைப்பாடைச் செய்துள்ளனர் ! அவற்றை சரி வர புரிந்து கொண்டு வரிகளை தமிழில் அமைக்க மெய்யாலுமே தண்ணீர் குடிக்க வேண்டிப் போனது !!
கதையைப் பற்றிச் சொல்வதானால், முதலில் நம்மூர் டைரக்டர் ஹரியின் படங்களில் இழையோடும் அந்த மின்னல் வேகத்தை இரண்டால் பெருக்கிக் கொள்ளுங்கள் என்பேன் ! அப்புறமாய் ஹாலிவுட் படங்களின் ஆக்ஷன் பாணிகளை, கேமரா கோணங்களை கண்முன்னே கொண்டு வந்து கொள்ளுங்கள் என்பேன் ! ஒரேயொரு நொடி கூட இப்டிக்கா, அப்டிக்கா திரும்பினீர்களெனில் கதையின் ஏதாச்சுமொரு ட்விஸ்டை கோட்டை விட்டு விடுவீர்கள் என்பதால், இந்த ஆல்பத்தினுள் புகுந்திடும் முன்பாய் செல்லை silent -ல் போட்டு விடல் நலமென்பேன் - because அங்கே எழ இயலாது போகும் சத்தத்தினை மைக் ஹேமர் கதை நெடுக எழுப்பிடவுள்ளார் !! பற்றாக்குறைக்கு ஒன்றுக்கு இரண்டாய்ப் பட்டாம்பூச்சிகள் கதையினில் நெடுகப் பயணிக்க, எட்டும் தூரத்தில் ஒரு கைக்குட்டையையும் வைத்துக் கொள்ளல் தேவலாம் ! இதோ - கணிசமான பக்கங்களின் preview :
ACTION at it's riveting best !! படிக்கத் தவறாதீர்கள் guys !! 2023-ன் ரெகுலர் தடத்தின் முதல் இதழ் என்பதால், சந்தா எக்ஸ்பிரஸில் தொற்றிக் கொள்ள இதுவொரு கூடுதல் காரணம் என்பேன் ;
இன்னமும் சந்தாவினில் சேர்ந்திருக்காத பட்சத்தில், இப்போதே ப்ளீஸ் : https://lion-muthucomics.com/33-subscription
Before I wind up, சில பல ஜாலி updates :
1.நமது ஆதர்ஷ நண்பர்களுள் ஒருவர், தனது தொழில் சார்ந்ததொரு சந்திப்பினை நிகழ்த்திட உள்ளார் ! அந்த சந்திப்புக்கு தனது கஸ்டமர்களை மாத்திரமன்றி, அவர்களது குடும்பங்களையும் வரவேற்றுள்ளார் ! அந்த நிகழ்வினில் கலந்து கொள்ளும் குட்டீஸ்களுக்கு ஒரு குட்டிப் பரிசாகத் தரும் பொருட்டு Smurfs புக்கில் 100 வாங்கியுள்ளார் !! செம ஹேப்பி !!
2.கள்ளக்குறிச்சியில் நடைபெற்று வரும் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 56 ! பெருநகரம் அல்ல எனும் போது, விற்பனைகள் சார்ந்த பெரிய எதிர்பார்ப்புகளின்றியே இருந்தோம் ; but surprise ....செம டீசண்ட் சேல்ஸ் ! அந்தப் பகுதிகளில் உள்ள நண்பர்கள் ஒரு விசிட் அடிப்பதோடு, இயன்றமட்டுக்கு உங்கள் நட்பு வட்டங்களின் காதுகளிலும் சேதியைப் போட்டு விடுங்களேன் ப்ளீஸ் ?
3.கள்ளக்குறிச்சியில் புத்தக விழா முடியும் முன்பாகவே காஞ்சிபுரம் நோக்கிப் பயணிக்கிறது நமது கேரவன் ! டிசம்பர் 23 முதலாய் அங்கு நிகழ்ந்திடவுள்ள புத்தக விழாவில் நாமும் பங்கேற்கவுள்ளோம் ! முற்றிலும் புதிதான சில பல திக்குகளில் செய்யக் கிடைக்கும் இந்த வாய்ப்புகளை புனித மனிடோவின் ஆசிகளாகவே பார்த்திடுகிறோம் !! காஞ்சி நகரிலும், அருகாமையிலும் உள்ள நண்பர்கள் please do visit !!
4.காஞ்சிபுரத்துக்கு அடுத்தது சென்னை மாநகரின் புத்தக விழாவே தான் ! ஜனவரி 6 to 22 வரையிலும் நடந்திடவுள்ள விழாவினில் பங்கேற்க ஆவலாய்க் காத்திருப்போம் ! அமைப்பாளர்களின் அன்புடன் நமக்கு இம்முறையும் ஸ்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனதளவில் தயாராகி வருகிறோம் ! ஜனவரி பிறந்த பின் உறுதிபட தெரிந்திடும் ! And in any case சென்னைப் பக்கமாய் பயணம் பண்ணியே ஏக காலமாகி விட்டதென்பதால் ஜனவரி 7 & 8 (சனி & ஞாயிறு) தேதிகளுக்கு பொட்டியைத் தூக்கிக்கினு அக்கட ஆஜராக எண்ணியுள்ளேன் ! Hope to see you there guys !!
5."ஜனவரி சர்ப்ரைஸ்" என்று நான் சொல்லி வைக்க, நிறையவே கற்பனைகள் சிறகடிப்பது கண்கூடு ! எல்லா வேளைகளிலும், எல்லா சர்ப்ரைஸ்களும் தடிமனான இதழ்களாகவே அமைந்திட வேண்டுமென்பதில்லையே folks ? உள்ளதைப் படிக்கவே நீங்கள் தடுமாறி வரும் தருணங்களில், புதுசு புதுசாய் குண்டூஸ்களைக் களமிறக்கி, உங்கள் பாக்கெட்களுக்கும், அலமாரிகளுக்கும் பளுவைக் கூட்டத் தான் வேணுமா ? அதே சமயத்தினில், சில சுவாரஸ்யச் சேதிகள், சின்னதாய் இருப்பினும் சிறப்பான இதழ்கள், சில தகவல்கள் - என இவைகளையுமே "சர்ப்ரைஸ்' என்ற ஜாதியினில் சேர்த்துக் கொள்ளலாம் தானே ? அந்த விதத்தில் ஜனவரியின் துவக்கத்திலொரு சர்ப்ரைஸ் & இறுதியில் இன்னொன்று காத்திருக்கும் !
6."பயபுள்ள தெளிவா கொயப்பபுறானே ?" என்று தோன்றுகிறதா ? விடுங்க யோசனைகளை - அடுத்த பதிவிலேயே அந்த ஜனவரி (துவக்க) சர்ப்ரைஸ் என்னவென்பதை சொல்லிவிட்டால் போச்சு ! கிருஸ்துமஸை ஒட்டிய அந்த வாரயிறுதிக்கு ஒரு பயணம் காத்திருப்பதால், அடுத்த பதிவினை சனியிரவு வரை ஜவ்விழுக்காமல் வெள்ளிக்கிழமையே போட்டு விடலாமென்று இருக்கிறேன் & அதனில் ஜனவரி சர்ப்ரைஸ் பற்றி எழுதிப்புடலாம் ! So நெக்ஸ்டு மீட் சீக்கிரமே !
Bye all...see you around ! Have a fun Sunday !
Present sir
ReplyDeleteஹய்யா... மீ த ஃபர்ஸ்டு... :)
Deleteவாழ்த்துக்கள் நண்பரே
Deleteமுதலாவது
ReplyDelete1st
ReplyDeleteMiss ayidichi
Deleteவணக்கம் நண்பர்களே....
ReplyDeleteநானும்...
ReplyDeleteMe too..😃😍
ReplyDeleteநானும்
ReplyDeleteவேதாளர் அட்டை வண்ணப்படம் செம அசத்தல் சாரே.வேதாளர் மீண்டும் வெற்றிக் கொடி நாட்டப் போவது உறுதியோ உறுதி. ஜெய் வேதாளரே.
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteநானும் வந்துட்டேன்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே 🙏🙏
ReplyDelete"பற்றாக்குறைக்கு ஒன்றுக்கு இரண்டாய்ப் பட்டாம்பூச்சிகள் கதையினில் நெடுகப் பயணிக்க,"
ReplyDeleteமெய்யாலுமா...
"அந்த ஜனவரி (துவக்க) சர்ப்ரைஸ் என்னவென்பதை ,
ReplyDeleteவெள்ளிக்கிழமையே போட்டு விடலாமென்று இருக்கிறேன் & அதனில் ஜனவரி சர்ப்ரைஸ் பற்றி எழுதிப்புடலாம்"
இது பேச்சு.
இன்னையிலிருந்து காலண்டர் -ல ஒவ்வொரு தாளா கிழிக்கிறேன்.
முத்து ஆண்டு மலர் அட்டைப் படம் செம்ம, தூள், கலக்கலாக இருக்கிறது எடிட்டர் சார் 👌👏
ReplyDelete🙏🙏
ReplyDelete2024லிலும் S60 உண்டுங்கோ. வெடிய போட்றா சரவணா !!!
ReplyDeleteமரணம் சொன்ன இரவு ரொம்ப நன்னா இருக்கும் போல. பேஷ்...பேஷ்....ரொம்ப சந்தோஷம்.
ReplyDeleteஅடுத்த பதிவு வரைக்கும் சர்ப்ரைஸை இழுத்துட்டாரே... அதுவும் சனவரி ஆரம்பத்துல ஒன்னாம்.. கடைசியில ஒன்னாம்!!
ReplyDelete'உயிரைத் தேடி'யைப் பத்தி ஒரு வரிகூட எழுதாமல் இப்படி பண்ணா எப்படிங்க எடிட்டர் சார்?!!
ஆமா உயிரை தேடி இதழ்(கள்) பற்றி சொல்ல வேண்டுமே சார். சென்னை புத்தக விழாவில் உயிரை தேடி கிடைப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள் சார்.
Delete2024 Classic 1960 வேறு வடிவமைப்புடனா அமர்க்களம்!
ReplyDeleteநண்பர் ஜெகத்தின் இந்த டிசைனிங் திறமை ரொம்பவே சர்ப்ரைஸ்!! பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்!! ஒவ்வொரு தலைப்புமே அதன் அர்த்தத்திற்கு ஏற்ற டிசைனில் அமர்க்களப்படுத்துகிறது!! ஒவ்வொரு தலைப்பிலும் அவரது காமிக்ஸ் காதல் மிளிர்கிறது!!
ReplyDeleteவாழ்த்துகள் ஜெகத்!! தொடர்ந்து அசத்துங்கள்!!
Vanthachungo
ReplyDeleteசிவப்பு அங்கியில் வேதாளர் வயலண்ட் ஆக மிரட்டுகிறார்!!
ReplyDeleteபுதுமுகம் 'மைக் ஹேம்மரின்' அட்டைப்படம் ஜூ.எடியின் கைவண்ணத்திலும், ஜெகத்தின் எழுத்துரு டிசைனாலும் பட்டையைக் கிளப்புகிறது! டிசைனிங்கிங் ஜூ.எடி தனக்குக் கிடைத்த முதல் பந்தையே சிக்ஸருக்குத் திருப்பியுள்ளார்!
முன்னட்டையைவிட பின்னட்டை கூடுதல் 10% மிரட்டலான ஆக்கத்தோடு அசத்துகிறது!!
உள்பக்க சித்திரங்களின் வண்ணக் கலவைகள் - வேற லெவல்!!
சிரித்து சாக வேண்டும்
ReplyDeleteஅருமையான க்ரைம் ஸ்டோரி. சொத்துக்காக ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு, அதை மூடி மறைக்க தொடர் கொலைகளை செய்கிறது மூன்று பேர்கள் அடங்கிய கொடூரர்களின் குழு.
மூன்று பேர்கள் அடங்கிய அந்த குழுவினர், அப்பாவிகள் மூன்று பேரை கொலை செய்து தொடர் கொலைகள் செய்யப்படுவது போன்ற தோற்றத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தி, தங்களுடைய இலக்கினை அடையும் நேரத்தில் மாடஸ்தி மற்றும் வில்லி கார்வனின் பாதையில் குறிக்கிடுகிறார்கள்.
இந்த தொடர் கொலைகாரர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் தத்தை வெறியாட்டத்தை அடக்கும் நோக்கில் வேட்டைக்கு புறப்படுகிறார்கள் மாடஸ்டியும், வில்லியும்.
ஆனால், வேட்டைக்கு புறப்பட்டவன் வேட்டையாடப்பட்ட கதையாக கார்வின் சிக்கிக் கொள்ள கிளைமாக்ஸ் நோக்கி நகர்கிறது கதை.
அது என்னமோ தெரியலை: மாடஸ்டி, கார்வினை தூக்கி தோளில் போட்டு சுமக்கும் கதைகள் எல்லாம் பட்டாசாக இருக்கின்றன. அந்த வகையில் கழுகு மலை கோட்டைக்குப் பிறகு இந்த கதையும் பட்டாசு ரகம்...
@Edi Sir..😍😘
ReplyDeleteயாருங்க இந்த சேலம் (ஜெகத்) தலைப்பு டிசைனிலேயே அசத்துறாரே..💐
எனக்கே பாக்கணும்போல இருக்கே..😃
முத்து 51⭐🌟✨
அட்டைபடம் அமர்களம்..😍😃 Hatsoff to இளையதளபதி..👏✊👌💪❤
S'60- வேதாள மாயாத்மா கலக்குறாரே..❤💛
அட்டைபெட்டிலேயும் வர்றாராம்..😃
அய்யோ சொக்கா..
அந்த அட்டை பொட்டிய அலுங்காம குலுங்காம கொண்டு வந்து சேத்துருயா..🙏
உனக்கு நூறு *கேட்பரீஸ்* வாங்கிதாறேன்..😃
Edi Sir..💛💙நீங்க சென்னை ஜனவரி 7&8 வர்ரேன்னு சொல்றதே எங்களுக்கு எல்லாம் பெரிய சர்ப்ரைஸ்..💐🌷🌹😍😘😃😀👍
Ticket சென்னைக்கு இப்பவே போட்டுடறேன்.😃
28th
ReplyDeleteமைக் ஹேமர்.. வாவ்.. சித்திரங்கள் அதகளம் செய்கின்றனவே..
ReplyDeleteகூடுமானவரை கால்மா சீன்களை தவிர்க்கப்பாருங்கள் சார்.எங்கள் வீட்டில் எனது அண்ணன் மகனும்,மகளும் படிக்கின்றனர்.இப்படியாக வரும் புத்தகங்களை கொடுக்க ஒருமாதிரியாக உள்ளது.மறைத்து வைக்க வேண்டியதாக உள்ளது.இதனாலேயே கென்யா,ஜாகோர் புத்தகங்களை விற்றுவிட்டேன்.ஏற்க்கனவே படைப்பாளிகள் & கோ ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என நிறைய முறை சொல்லியிருக்கிறீர்கள் தான்.இருந்தாலும் நாளைய வாசகர்களான இளைய தலைமுறைகளிடம் படிக்க கொடுப்பது (இந்தியாவில்)தர்மசங்கமாக உள்ளது.இந்த கருத்தை முன்வைத்து பேசிப்பார்க்கலாமே சார்.என்னதான் இந்த காலத்துப்பிள்ளைகளிடம் மொபைல்போன் இருந்தாலும் பழைய கர்ணன் படங்களை குடும்பத்தோடு பார்க்க நம்மால் முடியாதுதானே.. என் கோரிக்கை தங்களுக்கு எரிச்சலை மூட்டியிருந்தால் மன்னிக்கவும்.
ReplyDeleteStrongly agree with you bro... Our comics should always have the tagline, "7 to 77"
Deleteபிழையான புரிதல் உதய் ...!
Deleteஒரே புக்கினை 7 வயதிலிருந்து 77 வரை சகலரும் படிக்கலாம் என்பதல்ல நமது tag line-ன் அர்த்தம் !
மாறாக -
நாம் சொல்ல விழைவது - 7 முதல் 77 வரை அனைவரின் ரசனைகளுக்கும் ஏற்ற இதழ்கள் நம்மிடம் உள்ளன என்பதையே !
உங்கள் ஆசைப்படி universal வாசிப்பு சாத்தியமாகிட வேண்டுமெனில் - Smurfs அனைவருக்குமே பிடித்திருக்க வேணும் ; ஸ்பைடரை ஒரு ஆள் பாக்கியின்றி ஆராதிச்சாகணும் ; டெக்ஸ் வில்லர் ஓவர்டோஸ் என (நீங்கள் உட்பட) யாரும் விசனம் கொள்ளலாகாது ; கிராஃபிக் நாவல்கள் புரியலை என யாரும் குறைபடக்கூடாது ! இதெல்லாம் நடைமுறை சாத்தியமா - என்ன ?
ரசனைகளில் பன்முகத்தன்மை உண்டு & அகவைகளுக்கேற்ப அவை மாற்றம் காண்பதும் உண்டு ! அந்த சகல மாற்றங்களுக்கும் ஏற்ற வாசிப்புக் களங்கள் நம்மிடம் உண்டு என்பதே bottomline !
//டெக்ஸ் வில்லர் ஓவர்டோஸ் என (நீங்கள் உட்பட) //
DeleteI am reading most of the Tex Books Sir. Even I feel Tex is overdose, we have no other option for meeting all our requirement in our comics.
Thanks for your reply Sir.
I got disappointed with our latest Modesty book Sir. Thats why I insisted "7 to 77" tagline.
கில்மா சீன்கள்
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteநம்ப வேதாள மாயாத்மா ஜனவரி 1க்கே வந்துருவாருங்களா?😍😎 வர்றப்ப அவரு டீம் மெம்பர்ஸ்ன் புக் மார்க்ஸோட வருவாரோ..😍😃👏
மைக் ஹேம்மர் அட்டைப்படம் ஆரம்பமே அதகளம் என சொல்கிறது சார். வேதாளர் அட்டைப்படமும் வெரி கலர்ஃபுல். ஜெகத் கைவண்ணத்தில் எழுத்துரு டிசைன்ஸ் கூடுதல் கவனம் பெறுகிறது. சூப்பர். அப்படியே அடுத்தாண்டு முழுவதற்கும் டெக்ஸ் அட்டையில் இடம் பெற டெக்ஸ் 75 ஆண்டு லோகோவையும் கேட்டு வாங்கி விடுங்கள்.
ReplyDeleteHi..
ReplyDeleteஜெகத்! செம!!!
ReplyDeleteமைக் ஹேமர் ! My heart gets Hammered against the ribs on seeing this first preview.
Deleteமாடஸ்டியும் ஷேக்ஸ்பியரும்
ReplyDelete" என்னாது ? மாடஸ்டிக்கும் ஷேக்ஸ்பியருக்கும் ( வரலாறு ரீதியாதாங்க! ) தொடர்பிருக்கா?"
"ஆமாங்க! ஆமா !" அது மட்டுமில்லீங்க . 'சிரித்து சாகவேண்டும் 'என்ற தலைப்புக்கும் மூணு கொலையில ஒரு கொலைக்கும் அது சார்ந்த வரலாற்று சம்பவத்துக்கும் கூட தொடர்புண்டு.
"பக்கம் 9- ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜான் க்ளாரன்ஸ் கொலையைப் பற்றி சொல்றீங்களா?"
"ஆமா! 15- ம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரியணைக்காக யார்க் மற்றும் லங்கான்ஸ்ட்ரியன் பிரபு குழுக்களிடையே பதவி சண்டை ஏற்பட்டது.( ரோஜாக்களின் யுத்தம். Wars of Roses) யார்க் வம்சாவழி ஜார்ஜ் ப்ளாண்டாஜெனட் க்ளாரன்ஸ் பிராந்திய ட்யூக் . பதவி சண்டையில் தனது சகோதரன் எட்வர்ட் IV - க்கு எதிராக செயல்பட்டு எதிரியாக விளங்கிய லங்காஸ்டர் வம்சாவழியினர் - க்கு ஆதரவாக துணை நின்றார். பின் மறுபடியும் அணி மாறி தன் சகோதரன் எட்வர்ட் பக்கமே வந்தார்.பின்னாளில் ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.
எட்வர்டை இவ்வாறு செய்யத் தூண்டியது ஜார்ஜின் மற்றொரு சகோதரனான ரிச்சர்ட் III எனச் சொல்லப்படுகிறது.
1478, பிப்ரவரி 18 -ல் டவர் ஆஃப் லண்டனில் போயர் பகுதியில் ட்யூக் ஆஃப் க்ளாரன்ஸ் அதாவது ஜார்ஜ் ப்ளாண்டாஜெனட் - க்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
அது பற்றிய வதந்தி என்னவென்றால் மார்ம்ஸ்லே வைன் நிரம்பிய பீப்பாயில் மூழ்கடிக்கப்பட்டு
ஜார்ஜ் கொல்லப்பட்டார் என்பதே.
மனநிலை அடிக்கடி தடுமாறும் இயல்புடையவர் என அறியப்படும் ஜார்ஜ் இறப்பதற்கு சில விநாடிகள் முன்பு வரை சிரித்துக் கொண்டேயிருந்தார் என செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரித்து சாக வேண்டும்.
(ரோஜாக்களின் போர் - முடிவுகள் விந்தையானது. ஆனால் கதையின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்பதால் அதை விடுத்து செல்கிறேன்)
*****************************
ஷேக்ஸ்பியர் ஒரு நாடகாசிரியர் என அறியப்பட்டது ஹென்றி IV நாடகத்தினால்தான் . 3 பாகங்கள் அடங்கிய இதன் 3 - ம் பாகத்தில் ஜார்ஜ் மரண தண்டனை பற்றி வருகிறது.
இதன் நீட்சியாக கருதப்படுவது ரிச்சர்ட் III நாடகம். இதில் பெரும்பகுதி ஜார்ஜ் மரணம் பற்றிய சூழல்களின் விளக்கமே.
***""""""*******""""**************
லக்கி, டைகர், டெக்ஸ் மட்டுமல்லாது மாடஸ்டியிலும் ஒரு வரலாற்று சம்பவம்.
70's இதழ்களில் வேதாளர் , கெர்பி, மாண்ட்ரேக் இதழ்களில் பாதி கதைகளும், காரிகன் முழுக்கவும் படிக்க இயலாமல் விடுபட்டு நிற்கின்றன. பொங்கல் தொடர் விடுமுறை நாட்களில் படிக்க உத்தேசம். நேரம் , சூழ்நிலை என்பதை விட சற்றே இவற்றின் மீதான ஆர்வக்குறைவே பிரதான காரணம் எனத் தோன்றுகிறது.
ReplyDelete+10... இங்கேயும் அதே நிலை தான் சார்...வேதாளரை மட்டும் நாவல்போல நினைத்து சிரமபட்டு 10-15 நாளில் முழுவதுமாக படித்தேன் ...மற்ற மூன்று புத்கங்களும் படிக்க விருப்பம் இல்லாமலே பரணுக்கு அனுப்புவிட்டேன்...S60 க்கும் முன்பதிவு பண்ணாமல் விட்டுவிட்டேன்.....
Deleteமற்ற கதைகளை இஷ்டப்பட்டு படிக்கிறேன் என்றால், smashing 70 கதைகளை கஷ்டபட்டு படிக்க வேண்டியதாக இருககிறது. தக்கி முக்கி மாண்ட்ரேக் 8ல் 7 முடிந்தது. ஒன்று பாக்கி. காரிகன் இன்னும் தொடவேயில்லை. நமது லோகோவில் பிரம்மாண்டமாக வருவதால், வாங்காமல் இருக்கவும் முடியல. வாங்கிட்டு படிக்கவும் திணர வேண்டி இருக்கிறது.
Deleteசகோ ஜகத் கை வண்ணம் அருமை...
ReplyDeleteபுத்தகங்கள் முன்பதிவு. துணைக்கு கூகுள். பற்றாத குறைக்கு நம்மிடமே பழைய முத்துகாமிக்ஸ் ராப்பர்கள். ஈஸியா நூறு அட்டைப்படங்கள் ரெடி பண்ணிட்டு ஓரமா நின்னு வேடிக்கைபார்த்துக்குட்டு நிக்கலாம். ஆனாலும் உங்க மெனக்கெடல்..நினைத்துப் பார்க்கவே முடியலைங்கசார். வேதாளர் அட்டைப்படத்திற்கான உங்கள் உழைப்பு. ஒரு உண்மையானபடைப்பாளியாக ஜொலிக்கிறீர்கள்சார். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteவாவ்...வேதாளர் ,அறிமுக நாயகர் இருவரின் அட்டைப்படமும் அட்டகாசம் சார்..கலக்குகிறது...செம..
ReplyDeleteநண்பரின் தலைப்பு உருவாக்கம் அனைத்துமே அட்டகாசம்..
வாழ்த்துக்களுடன் பாராட்டுகள் நண்பரே...
+1
Deleteவாவ்...முத்து மினியில் வந்த முதல் வேதாளனின் கதையும் இதில் வருகிறதா...செம சார்...இதற்காகவே இதழை படையெடுப்போர் அதிகரிப்பர் சார்..
ReplyDeleteஅவங்க தந்தையார் கதையாம் நண்பரே
Delete@Paranitharan K..😃
DeleteJi.. முதல் வேதாளனின் கதை மற்றும் அவங்க தந்தையார் கதை இரண்டுமே வருதுங்க..👍
##முத்து மினி காமிக்சில் ! இம்முறை அந்த முதல் வேதாளனின் daddy பற்றிய கதையுமே உண்டு ! So வேதாள அபிமானிகளுக்கு இதுவொரு musthave என்பேன்##
சூப்பர் பதிவு சார். வேதாளர் அட்டைப்படம் அருமை. கையில் புத்தகத்தை வாங்கும் போது இன்னும் அருமையாக இருக்கும். அதை விட அட்டைபெட்டி டிசைன் இன்னும் அருமை.
ReplyDeleteமைக் ஹேமர் அருமையாக உள்ளது. போன வருட ஆண்டு மலர் போலவே இந்த ஆண்டு மலரும் அசத்தும் என்று நினைக்கிறேன்.
வெள்ளி பதிவுக்கு இப்போது இருந்தே காத்திருப்பு தொடங்குகிறது.
நண்பர் ஜெகத் உருவாக்கிய தலைப்புகள் எல்லாமே அருமை.
Deleteஜூனியர் எடிட்டர் அவர்களின் அட்டைப் பட டிசைன் சூப்பர்.
45வது
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஇனிய ஞாயிறு வணக்கங்கள் 😊
ReplyDeleteசூப்பர் சார் அட்டை படங்கள் கலக்குது ஜுனியருக்கு பாராட்டுக்கள்....எழுத்துருக்கள் அதகளம் வாழ்த்துக்கள் நண்பரே....ஆனா ஜனவரி சிறப்பு வெளியீடு குறித்த தகவல்கள் வயித்த கலக்குது
ReplyDeleteவேதாளர் அட்டை படங்கள் செம்ம 😍😍😍
ReplyDeleteஅட்டைப்படங்கள் கண்கவரும் படி சிறப்பாக உள்ளன.
ReplyDeleteஆண்டு மலர்னாலே ஸ்பெஷல் தான்.
சென்றமுறை டேங்கோ, ஆல்ஃபா என தோட்டாக்கள் முழங்கியது. இந்த முறை இன்னுமொரு ஆக்சன் ஹீரோ, வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கலக்கிட்டீங்க ஜெகத்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteமைக் hammer...ஆல்பத்தின் அட்டை வடிவம்...ஹாலிவுட் படங்களின் போஸ்டர்களை
ReplyDeleteதூக்கி சாப்பிட்டுவிட்டது என்பதே நிஜம்.... சூப்பர்...
This comment has been removed by the author.
ReplyDeleteவேதாளர் அட்டைகள் தெறிக்கின்றன!!!
ReplyDelete// முத்துவின் 51-வது ஆண்டுமலர் ஜனவரியில் highlight-களுள் முக்கியமானது என்பேன் - இரு காரணங்களுக்காக //
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சார்…
// And guess what ? இந்த அட்டைப்படத்தினை வடிவமைத்தது நம்ம ஜூனியர் எடிட்டர் தான் ! //
ReplyDeleteஅடடே சூப்பரு…
// இதோ அட்டைப்படங்களில் நீங்கள் பயன்படுத்திட தலைப்புகளை வடிவமைத்து அனுப்பியுள்ளேன்" என்று தெறிக்க விட்டுள்ளார் நண்பர் (Salem) ஜெகத் !! //
ReplyDeleteவடிவமைப்புகள் ஈர்ப்பா இருக்கு சார்,க்ரைம் நாவலின் தலைப்புக்குரிய அம்சங்களுடன் தெறிக்குது…
// அந்த நிகழ்வினில் கலந்து கொள்ளும் குட்டீஸ்களுக்கு ஒரு குட்டிப் பரிசாகத் தரும் பொருட்டு Smurfs புக்கில் 100 வாங்கியுள்ளார் !! செம ஹேப்பி !! //
ReplyDeleteஅருமை,அருமை…
// .கள்ளக்குறிச்சியில் புத்தக விழா முடியும் முன்பாகவே காஞ்சிபுரம் நோக்கிப் பயணிக்கிறது நமது கேரவன் ! //
ReplyDeleteவிற்பனை சிறக்கட்டும்…
// ஜனவரி 6 to 22 வரையிலும் நடந்திடவுள்ள விழாவினில் பங்கேற்க ஆவலாய்க் காத்திருப்போம் ! அமைப்பாளர்களின் அன்புடன் நமக்கு இம்முறையும் ஸ்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனதளவில் தயாராகி வருகிறோம் ! //
ReplyDeleteசென்னை புத்தக விழா நமது லயன் குழுமத்துக்கு கூடுதல் ஆக்ஸிஜனை தரட்டும்…
// அந்த விதத்தில் ஜனவரியின் துவக்கத்திலொரு சர்ப்ரைஸ் & இறுதியில் இன்னொன்று காத்திருக்கும் ! //
ReplyDeleteஇரண்டுதானா ?! அடடா…!!!
புத்தக விழாவை குறிவைத்து இன்னும் கொஞ்சம் கூடுதலாய் ப்ளான் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது சார்,சென்னை புத்தக விழா நல்லதொரு வாய்ப்பாயிற்றே…
பொதுவான , தவறான அனுமானம் சார் ! ஏதேனும் புதிதாய் அறிவித்த நொடியில் புத்தக விழாக்களின் சேல்ஸ் எகிறியடிப்பதெல்லாம் கிடையவே கிடையாது ! சில பட்டவர்த்தன நிஜங்களை சொல்லவா ?
Delete1 வெறும் 40 இதழ்களின் கையிருப்பு இருந்த நாட்களின் விற்பனைக்கும் , கிட்டத்தட்ட 300 இதழ்களின் கையிருப்பு உள்ள இந்த நாட்களுக்கும் மத்தியினில் 15% increase இருந்தால் அது பெரிய பாடு ! நியாயப்படி குறைந்த பட்சமாய் 50 சதவிகிதமாவது கூடிட வேணும் தானே ? ஊகூம்...வாய்ப்பில்லே ராஜா !
2 .நயாகராவில் மாயாவி & ஸ்பைடர் மறுபதிப்பு ரெண்டாம் ரவுண்டு துவங்கிய அந்த ஆண்டினில் சேல்ஸ் பிய்த்துப் பிடுங்கிப் பறக்குமென்று எதிர்பார்த்தோம் ! ஊகூம்...வழக்கம் போலவே தொடர்ந்தன நம்பர்கள் !
3 . சிங்கிள் ஸ்டாலுக்குப் பதிலாய் டபுள் ஸ்டால் போட்டுப்புட்டால் விற்பனை பின்னிப்புடும் என்று எதிர்பார்த்தோம் ! பிம்பிலிக்கா பிலாக்கி ....பத்தே சதவிகித ஏற்றம் கூடக் கண்டபாடில்லை ! வாசகர்கள் மூச்சுத் திணறாது வந்து செல்ல முடிந்த மகிழ்வே மிஞ்சியது !
இது தான் சார் நிதரிசனம் ! வரும் வாசகர்களின் பெரும்பான்மை casual readers & so நாம் சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்துக் கொண்டு வந்து ஸ்டாலில் நட்டியிருந்தாலும், "காலுக்குள் இடிக்கிது...செத்தே நகர்த்துறேளா ?" என்றே கருதுவர் !
ஸ்பெஷல் இதழ்கள் சார்ந்த பரபரப்பெல்லாம் நமது hardcore வாசக வட்டம் சங்கமிக்கும் அந்த அரங்கினில் மட்டுமே ! So அதற்கு வாய்ப்பில்லாத இதர விழாக்களில் கையிருப்புகளை போணி பண்ணும் வழிகளையே பிரதானமாய் பார்த்திட வேண்டியுள்ளது சார் !
சென்னை விழா விற்பனைக்கொரு அசாத்தியக் களமே சார் ; கிஞ்சித்தும் சந்தேகம் கிடையாது ! சென்னையின் ஆன்மாவுக்குள் அந்த விழாவிற்கு நீங்கா இடம் ஏற்படுத்தியுள்ள விழா அமைப்பாளர்கள் போற்றுதலுக்குரிய ஆற்றலாளர்களே ! ஆனால் end of the day - நமது பொம்ம புக் வட்டத்தின் விஸ்தீரணம் பிரம்மாண்டம் அல்ல எனும் போது அதற்கேற்பவே நமது திட்டமிடல்கள் + எதிர்பார்ப்புகள் அமைந்திட வேணுமே சார் !
Facts of life#
😞😞😞
Deleteபுரியுது சார்...
Delete// அடுத்த பதிவினை சனியிரவு வரை ஜவ்விழுக்காமல் வெள்ளிக்கிழமையே போட்டு விடலாமென்று இருக்கிறேன் & அதனில் ஜனவரி சர்ப்ரைஸ் பற்றி எழுதிப்புடலாம் ! //
ReplyDeleteஆவலுடன்…
// First in line - இதோ நமது வேதாள மாயாத்மாவின் அட்டைப்பட first look ! //
ReplyDeleteஇம்முறையும் வேதாளர் மேக்கிங்கில் கலக்கும் போல,கதையிலும் வழக்கம்போல் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை…
வேதாளர் அட்டைப்படம் கொள்ளை அழகு சார் .
ReplyDeleteஆனால் வந்து 😓.....தொடரும் வருடங்களில் ஓவியரிடம் சொல்லி டெக்ஸ் வில்லருக்கு அவரது ஒரிஜினல் உடையையே தொடர்வது போல் வேதாளருக்கும் சிவப்பு வர்ணத்தை மட்டும் மாற்றி அவரது ஒரிஜினல் அடையாளத்தையே
தொடர்வோமே சார்.
வேதாளர் உடை ஒரு வகை வயலெட்/ கரும் ஊதா போன்ற நிறத்தில் இருப்பது அவரது கானகம் சார்ந்த கதைகளுக்கும் எதிரிகளுக்கு அவரை சாகாவரம் பெற்ற மாயாத்மா என்ற ஒரு பீதியை ஏற்படுத்தவும் துணைபுரிவதாக கருதுகிறேன். வேதாளர் கதைகளின் தனி அடையாளங்களில் ஒன்று மற்றவர்கள் அறியாமல் கானகத்தினூடே அல்லது மரங்களினூடே மறைவாக அவதானிப்பது மற்றும் பின்தொடர்வது. மரங்களினுள்ளோ இருளினுள்ளோ அவர் பதுங்கி நிற்கும் போது ஒரு camouflage ஆடை போல் அவரை அடையாளம் காட்டாமல் இருக்க, அடிக்கடி கதைகளில் இருளினுள் அவர் நகர்ந்து செல்ல, நழுவிச் செல்ல அந்த நிற ஆடை மிகவும் உதவியாகவும் இவற்றை (கதையில்) நாமும் நம்ப அந்த நிறமும் ஒரு காரணமாகின்றது.
ஆனால் ராணிக் காமிக்சின் கோமாளிப் பிங்க் கலர் உடையை போலவே துருக்கியரின் சிவப்பு நிற ரசனையும் இவற்றுக்கு நேர் மாறாக இருளில் நின்றாலும் பளிச்சென்று ஆளை அடையாளம் காட்டுவதாகவும் ஒரு வகையில் சிரிப்பூட்டும் நிறங்களாகவும் உள்ளது வேதனை. (துருக்கியர் சிவப்பு கலரில் பேண்ட், உடை, குல்லா போடுவதிலும் பிரபலம்.🤣)
எதிர்காலத்தில் வேதாளர் வண்ணத்தில் வெளியிடும் சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது டெக்ஸ் வில்லரை போலவே ஒரே உடை அடையாளத்தில் இருப்பது கச்சிதமாக இருக்கும் 🙏.
+1
DeleteMike Hammer அட்டையும் கதை ஓவியங்களும் வாவ் ரகம். எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
ReplyDeleteSalem ஜெகத் மிக அழகாக தலைப்புகளை வடிவமைத்துள்ளார். நண்பருக்கு வாழ்த்துக்கள்
This comment has been removed by the author.
ReplyDeleteஇப்போதைய புத்தக திருவிழாக்களில் அரசு உத்தரவுப்படி மாணவச் செல்வங்கள் நிறைய வரிசை கட்டி வந்து போகின்றனர்.அவர்களின்நிதிநிலைமைக்கேற்ப விலையுள்ள புத்தகங்களே கேட்கிறார்கள்.இல்லாவிடில் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்
ReplyDeleteஇன்றைய கள்ளக்குறிச்சி விழாவிலும் அதை பார்த்தேன்.
எனவே 30₹ விலையிலும் புத்தகங்கள் வெளியிட வேண்டுகிறேன்
டியர் எடி,
ReplyDeleteஜனவரி 7 மற்றும் 8 ல் சென்னையில் 'பொன்னியின் செல்வனை' பார்க்க நானும் அங்கு ஆஜராகிடுவேன். 🥰
அதுக்குள்ளாறவா சார் அடுத்த பாகம் ரிலீஸ் ? ஒரு டிக்கெட் சேர்த்தே போட்டுப்புடுங்க !
Deleteநான் சொன்னது "சிவகாசி செல்வனை" 🥰
DeleteI ll also join with you Rafiq bro... ha ha... dont forget.
DeleteHope we get the stall, Udhay Brother'.... fingers crossed 🥰
Deleteடியர் எடிட்டர் சார் இரண்டு பாகங்களையும் முடித்து விட்டேன் மிகவும் அருமையாக இருந்தது உங்களது வசன நடை நிறைய இடத்தில் சிரிப்பை வரவழைத்தது உண்மையில் சூப்பர் சார் அடுத்த இரண்டு மூன்று பாகங்களுக்காக வெயிட்டிங். டெக்ஸ் தவிர்த்து வேறு புத்தகங்கள் வாங்காமல் இருந்தேன். ஆனால் படித்ததுமே நிரம்பவும் பிடித்து விட்டது.
ReplyDeleteமார்ட்டின் அதுவும் சிறப்பாகவே இருந்தது.
மாடஸ்டி பிலைசி மிகவும் அருமை இரண்டு கதைகளும் மிக நன்றாக இருந்தது வரலாற்று பின்னணி உடன்.
இந்த மாசம் கார்ட்டூன்கள் இல்லையென்றாலும் சிரிப்பா வந்துச்சா ? அது என்ன மாயமோ சார் - டெட்வுட் டிக்கை சந்தா C பக்கமாய் நகற்றியிருக்கணுமோ ?
Deleteநிழல்களின் ராஜ்யத்தில் இனிமேல் தான் படிக்க வேண்டும் அதற்காக விடுமுறையை எதிர்நோக்கி விட்டு வைத்திருக்கிறேன்.
ReplyDeleteMike 🔨 சித்திரங்கள் பெயிண்டிங் போல இருக்கிறது. அதனால் அதனுடன் ஒன்றே முடியவில்லை .மேலும் அட்டைப்படத்தில் பின் பக்கம் உள்ள அட்டைப்படம் முன்பக்கம் இருந்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.
ReplyDeleteவருஷ ஆரம்பத்து இதழை, அதுவும் ஆண்டுமலரை....... நெற்றி பொட்டில் தோட்டாவை வாங்கியதொரு பொத்தலோடு மட்டையாகிக் கிடக்கும் பயபுள்ளை சகிதம் ஆரம்பிக்க உங்களுக்கு ஓ.கே ஆக இருக்கலாம் சார் - not for me !
Deleteவேதாளர் சிறுவயதில் மிகவும் பிடித்த ஹீரோவாக இருந்த தற்பொழுது ரசிக்க இயலவில்லை. சாரி.
ReplyDeleteநாம் எப்படி சிறுவயதில் வேதாளரை பார்த்து(படித்து) வளர்ந்தோமோ அதேபோல இளம்தலைமுறைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் சார்.புதிதாக காமிக்ஸ் படிக்க விரும்புவோர்க்கும் புரியும்படியான எளிய கதைவரிசை.
Deleteவேதாள மாயாத்மாவின் அட்டைப்படதில் ஒரு ஆக்ஷன் காட்சியை வைத்து அமைத்தது நன்றாக உள்ளது; ஒரு உண்மையான சண்டையை நேரில் பார்ப்பது போல் மிக சரியாக கச்சிதமாக கொடுத்துள்ளார் ஓவியர்! Ertugrul Edirne என்ற ஐரோப்பா ஜாம்பவான் ஓவியரை பற்றி நீங்கள் சொன்னது அனைத்தையும் ஒத்துக்கொள்ள இந்த ஒரு ஓவியம் போதும் சார்! ஏன்னா ஒரு திறமை! பின்பக்க அட்டைப்பட வடிவமைப்பு அதில் போட்டபட்டுள்ள படங்கள் நன்று!
ReplyDeleteவேதாள மாயாத்மாவின் உட்பக்க கதை சித்திரங்கள் தெளிவாக உள்ளது! வசனங்கள் எளிதாக குழந்தைகள் படித்து புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது! புறாவில் பயணம் செய்யும் ஸ்லாடை பார்த்தவுடன் எந்திரன் 2.0 ஞாபகம் வந்து விட்டது, ஒருவேளை அந்த படத்தின் இயக்குனர் இதனை பார்த்து தனது படத்தில் காட்சியை அமைத்து இருப்பாரோ என தோன்றுகிறது! புத்தகம் வந்தவுடன் புறாவில் பயணம் செய்யும் ஸ்லாட் கதையை தான் முதலில் படிக்க உள்ளேன்!
// அந்த முதல் வேதாளனின் daddy பற்றிய கதையுமே உண்டு //
ஆகா ஆகா! இப்படி ஒரு கதை இருப்பது உங்கள் மூலம் இன்று தெரிந்து கொண்டேன்! இந்த கதையையும் படிக்க ஆர்வமுடன் உள்ளேன்!
// முழுக்க முழுக்க Collector's Edition பாணியினில், இந்த க்ளாஸிக் நாயகர்கள் வலம் வரவிருக்கும் இறுதிச் சுற்று இதுவே ; simply becos 2024 முதலாய் இவர்கள் வேறு பாணிகளில் ; //
ஆகா ஆகா! ஆசிரியரிடம் ஏதோ புதிய திட்டம் உள்ளது போலவே! 2024 முதல் மாதம்தோறும் இந்த கிளாசிக் நாயகர்களில் யாராவது ஒரு நாயகர்களில் கதைகள் 2-3 இணைத்து ஒரு புத்தகமாக வருமோ? கண்டிப்பாக உங்களின் சிந்தனை இதனைவிட சிறப்பாக இருக்கும், எனவே 2024 காமிக்ஸ் காலெண்டர் வரும் நாட்களை இப்போதே நான் எண்ண ஆரம்பித்து விட்டேன் சார் :-)
This comment has been removed by the author.
Deleteவிஜயன் சார், வேதாளர் கதையில் ஒரு இடத்தில் ஸ்லாட் எனவும் மற்றொரு இடத்தில் வ்லாட் எனவும் உள்ளது சார்.
Delete// 5."ஜனவரி சர்ப்ரைஸ்" என்று நான் சொல்லி வைக்க, நிறையவே கற்பனைகள் சிறகடிப்பது கண்கூடு ! எல்லா வேளைகளிலும், எல்லா சர்ப்ரைஸ்களும் தடிமனான இதழ்களாகவே அமைந்திட வேண்டுமென்பதில்லையே folks ? உள்ளதைப் படிக்கவே நீங்கள் தடுமாறி வரும் தருணங்களில், புதுசு புதுசாய் குண்டூஸ்களைக் களமிறக்கி, உங்கள் பாக்கெட்களுக்கும், அலமாரிகளுக்கும் பளுவைக் கூட்டத் தான் வேணுமா ? அதே சமயத்தினில், சில சுவாரஸ்யச் சேதிகள், சின்னதாய் இருப்பினும் சிறப்பான இதழ்கள், சில தகவல்கள் - என இவைகளையுமே "சர்ப்ரைஸ்' என்ற ஜாதியினில் சேர்த்துக் கொள்ளலாம் தானே ? //
ReplyDeleteஉங்களின் இந்த சிந்தனை மிகவும் பிடித்து இருக்கிறது சார்! புத்தக திருவிழா என்றால் ஏதாவது சிறப்பு புத்தகங்கள் இருந்தால் போதும் சார், அது குண்டாக இருக்க வேண்டும் என இது நாள் வரை நான் நினைக்கவில்லை! புத்தக திருவிழாவில் குண்டு அல்லது நிறைய புத்தகங்கள் வெளிஈடுவது ஒரு குறிப்பிட்ட நண்பர்கள் விருப்பப்படலாம் ஆனால் விற்பனை மற்றும் மொழிபெயர்ப்பு & உங்களில் வேலைப்பளு என்பதை மனதில் வைத்து கொண்டு நீங்கள் எடுத்த இந்த முடிவுக்கு நான் தலை வணங்குகிறேன்! எனக்கு மாதம்தோறும் நமது காமிக்ஸ் புத்தகங்கள் வர வேண்டும் இது போன்ற புத்தக திருவிழா என்றால் உங்களால் முடிந்த படிக்க எளிதாக உள்ள (குறைவான நேரம் எடுக்கும்) புத்தகங்கள் இருந்தால் போதும் சார்!
நீங்க ஸ்கூலில் படிக்கும் போதும் இப்படித்தானா பரணி. ரொம்ப Obedient ஸ்டூடண்ட் போல.
Deleteகொஞ்சம் ஃப்ரீயா விடுங்க...
குமார் @ ஆசிரியருடன் இத்தனை வருடங்கள் பழகி இருக்கிறோம் விற்பனை முதற்கொண்டு அனைத்து விஷயங்களையும் நம்மிடம் மறைக்காமல் சொல்லி வருகிறார் இதனை புரிந்து கொண்டதன் வெளிப்பாடே இந்த பின்னூட்டம். ஒரு நிமிடம் அவரின் இடத்தில் நீங்கள் இருந்து (pratical ஆக) சிந்தித்து பாருங்களேன் குமார், இதற்கு obedient மாணவனாக இருக்க வேண்டும் என்பது இல்லை :-) வெளிப்புறத்தை புரிந்து கொள்ளும் மனம் இருந்தால் போதுமே :-)
Deleteஅப்புறம் பள்ளியில் படிக்கும் போது நீங்கள் சொன்னது போல் நான் ஒரு obedient மாணவனே :-) சரியான கணிப்பு:-)
// நீங்கள் சொன்னது போல் நான் ஒரு obedient மாணவனே :- //
Deleteஎன்னைப் போலன்னு சொல்லுங்க,ஹி,ஹி,ஹி...
This comment has been removed by the author.
ReplyDelete// "நம்ம லயனுக்கு ஏதாச்சும் செய்யணும்னு எனக்கு தோணும் சார் ; //
Deleteஇது போன்ற மனசு நமது காமிக்ஸ் நண்பர்களுக்கு மட்டுமே உண்டு என நினைக்கின்றேன்; அதுதான் இந்த காமிக்ஸ் வட்டத்தை ஈர்ப்புடன் வைத்து வரும் மற்றும் ஒரு காரணம் என நினைக்கிறேன்; பெரிய மனது (Salem) ஜெகத் சார்!! நண்பரின் ஆக்கத்தை உபயோகபடுத்தி உள்ள இனி மேலும் உபயோகப்படுத்துவேன் என சொன்ன மனதும் பெரியது, வாசகர்களின் ஆக்கங்களை அன்று முதல் இன்றுவரை ஊக்கப்படுத்தி வரும் ஆசிரியருக்கு மனம் நிறைந்த நன்றிகள் சார்.!
// தெறிக்க விட்டுள்ளார் நண்பர் (Salem) ஜெகத் !! //
உண்மை சார்! அருமையான கற்பனை திறன் உள்ளவர் என நினைக்கிறேன், ரொம்பவும் தனித்தன்மையுடன் ஒவ்வொரு தலைப்பையும் அமைத்து உள்ளார்! அதுவும் கௌபாயின் காதலி என்ற கதை தலைப்பில் இறுதியில் தூக்கு கயிறை தொங்க விட்டது சிறந்த கற்பனை! "ஒரு" சுருட்டு பிடிப்பது போல் என்ன ஒரு கற்பனை, ஒரு மனிதன் தொப்பியுடன் புகைப்பது போல்! சூப்பர்! பாராட்டுக்கள் (Salem) ஜெகத்; அனைத்து தலைப்பு வடிவமைப்புகளும் அருமை!
// சென்னைப் பக்கமாய் பயணம் பண்ணியே ஏக காலமாகி விட்டதென்பதால் ஜனவரி 7 & 8 (சனி & ஞாயிறு) தேதிகளுக்கு பொட்டியைத் தூக்கிக்கினு அக்கட ஆஜராக எண்ணியுள்ளேன் //
ReplyDeleteவாவ்! சூப்பர்!! பல வருடங்களுக்கு பிறகு உங்களை சந்திக்க ஒரு சந்தர்ப்பம், இதனை கண்டிப்பாக தவற விட கூடாது என மனம் சொல்கிறது சார்!
2023 Regular Subscription இணைந்தாச்சு ,
ReplyDeleteSuper. Thank you
Deleteகொஞ்சம் adult content வேண்டாம் ஸார்,,
ReplyDeleteமார்ட்டின்
டயலான் டாக்,
ராபின்
கமான்செ
ஜீலியா
டயபாலிக்
all time favourite
//ராபின்
Deleteகமான்செ
ஜீலியா//
My Favorite too
I too....
Deleteமரணம் சொன்ன இரவு அட்டைப்படம் - ஒரு அட்டை படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அதனை எல்லாம் சிறப்பாக கொண்டுவந்துள்ளார் ஜூனியர் எடிட்டர் விக்ரம் அவர்கள். நாவலாசிரியர் "Mickey Spillane" பெயரை முதல் பக்கத்தில் போட்டது இந்த கதாசிரியரின் கதையை ஆங்கிலத்தில் படித்தவர்கள் இதனை வாங்கிச் செல்ல வாய்ப்புகள் அதிகம். பின் அட்டையில் "க்ரைம் நாவல் கிங்கின் ஆக்கம்" என்பது உடன் நாவலாசிரியர் இணைத்து எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். முன் அட்டையில் ஒரு துப்பாக்கி அந்தரத்தில் தொங்கி கொண்டு உள்ளது, அதனை அட்டைபடத்தில் இருந்து எடுத்து இருக்கலாம்.
ReplyDeleteமரணம் சொன்ன இரவு கதையின் உட்பக்க படங்கள் நன்றாக உள்ளது, வாயைபிளக்க செய்யும் சண்டை காட்சிகள் வித்யாசமான கோணங்களில் சண்டை காட்சியை வரைந்த விதம், அங்கே கதையில் வரும் மனிதர்களின் முகங்களில் தெரியும் வித்தியாசங்களை வெளிப்படுத்திய விதம் அருமை; ஒரு ஆக்ஷன் காட்சியில் துப்பாக்கி எங்கு இருந்து எடுக்கிறார் என்பதை படத்தில் காண்பித்த விதம் சிறப்பு! இந்த ஓவிய பாணி மற்றும் படங்களின் பேனல் வடிவமைப்பு ஜேம்ஸ் பாண்ட் 2.0வை ஞாபகப்படுத்துகிறது இரண்டு கதைக்கும் ஓவியர் ஒருவரா சார் ?
மொத்தத்தில் இந்த புத்தகத்தை படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது உங்களின் பதிவு மற்றும் ஜூனியர் எடிட்டரின் அட்டைப்பட வடிவமைப்பு!!
//முன் அட்டையில் ஒரு துப்பாக்கி அந்தரத்தில் தொங்கி கொண்டு உள்ளது, அதனை அட்டைபடத்தில் இருந்து எடுத்து இருக்கலாம்.//
Deleteஅத எடுத்தா நாயகனுக்கு நீயால துப்பாக்கி தருவ
தோட்டாக்க மட்டுந் தெரிக்கல தம்பி....துப்பாக்கியுந்தா
Delete// அத எடுத்தா நாயகனுக்கு நீயால துப்பாக்கி தருவ //
Deleteஅவரு கையில் துப்பாக்கி இருப்பதை நீ பார்க்கவில்லையாலே :-)
குண்டு தீர்ந்ததும் அத பாஞ்சு புடிப்பாருல
Deleteஎன்னல சத்தத்தயே காங்கல
DeleteThis comment has been removed by the author.
Deleteபோ சத்தம் போடாம வேலையைப் பாருலே :-)
Deleteவிஜயன் சார், கதை சொல்லும் காமிக்ஸ் புத்தகங்கள் என்று கிளம்பும் சார் ?
ReplyDeleteHow to buy lion comics from Sri Lanka? Who is your dealer in sri lanka?
ReplyDeletesuper sir
ReplyDeleteGudos to Jagath Sir. Awesome typography!
ReplyDeleteமைக் ஹேமர் கதையின் சித்திரங்களில், தேவ ரகசியம் தேடலுக்கல்ல கதையின் சித்திரங்களின் சாயல் தென்படுகிறதே. இரண்டு கதைகளின் ஒவியரும் ஒருவரே தானோ?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete"தேவ ரகசியம் தேடலுக்கல்ல"
ReplyDeleteஇந்த கதையை இன்னுமா ஞாபகம் வச்சுருக்கீங்க. இந்த கதையை படிச்ச புறகு தான் கிராபிக் நாவல் வாங்குறதையே நிப்பாட்டுனேன்.
பரணுக்கு போன முத புத்தகம் இது தான். அப்புறமா லைப்ரேரில டொனைட் பண்ணியாச்சு.யாம் பெற்ற அனுபவம் இந்த வையகமும் பெற வேண்டும். லைப்ரேரியன் எம்மேல ரொம்ப பாசமா இருப்பார். காமிக்ஸ் புதுசா 50 புத்தகத்துக்கு மேல குடுத்துருக்கேன்.அதுல கார்ட்டூன் சேத்துதான். லக்கிலூக் தவிர. அங்க சின்ன பிள்ளைங்க எல்லாம் கார்ட்டூன் புரட்டுறத ,அதை அதிசயமா பாக்குறத ...பாக்குறதுக்காகவே லைப்ரேரி போவேன்.
Deleteஅங்க காமிக்ஸ் டொனைட் பண்ற ஒரே டோனர் நாந்தான்.
Delete//இந்த கதையை படிச்ச புறகு தான் கிராபிக் நாவல் வாங்குறதையே நிப்பாட்டுனேன்//
Deleteவாஸ்தவம் தான் ப்ரோ... எனக்கும் ஏகமாய் நெருடலை உண்டு பண்ணின இதழ்... ஆனால் அதில் நமது எடிட்டர் எவர் மனங்கள் நோகாதபடிக்கு எய்டட் செய்ய முற்பட்டிருந்தார்.... தனிப்பட்ட முறையில் எதிர்வினையாற்றும் மக்களுக்கு பதில்வினை சொல்ல என்னை ஆயத்தம் செய்வித்த புத்தகம், அந்த கோணத்தில் அது சேகரிக்கப்பட்ட வேண்டியதே... எனினும் அதில் சித்திரங்கள் என்னை ஏனோ பெரிதாக கவரவில்லை.
/எய்டட்/ எடிட்
Deleteவாழ்த்துக்கள் ஜெகத்சார். கரூர் ராஜ சேகரன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete/// இந்த கதையை படிச்ச புறகு தான் கிராபிக் நாவல் வாங்குறதையே நிப்பாட்டுனேன்//
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்தமான கி. நாவல் இது.
இந்த கதையை படித்த பிறகு Roszaball line பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
ரோஸபால் லைன் என்ற தலைப்பில் அஷ்வின் சாங்கி அவர்கள் ஒரு நாவல் ஆங்கிலத்தில் எழுதி இருந்தார். அதன் தமிழாக்கத்தை இன்றுவரை தேடி வருகிறேன். கிடைக்கவில்லை.
சார்.. இன்று பதிவுக்கிழமை!! (சரிதானுங்களே KS, சின்னமனூர்கார்?!)
ReplyDeleteஉபயம் :
///அடுத்த பதிவினை சனியிரவு வரை ஜவ்விழுக்காமல் வெள்ளிக்கிழமையே போட்டு விடலாமென்று இருக்கிறேன் & அதனில் ஜனவரி சர்ப்ரைஸ் பற்றி எழுதிப்புடலாம் !////
சூடா ஒரு சர்ப்ரைஸ் பிளீஸ்?
ஹிஹிஹி நான் காலையிலேயே யோசித்தேன் பதிவு கேட்கலாமா என்று. நீங்கள் அதை செயல் படுத்தி விட்டீங்க செயலரே....
Deleteக க க போங்கள்....
வருஷக் கடாசி ....அத்தினி பேரும் இருக்கின்ற இடத்தை விட்டுப்புட்டு பக்கத்து ஊரு....பக்கத்து மாநிலம்...பக்கத்து தேசம்னு சத்துக்கு ஏற்ப ரவுண்ட்ஸில் உள்ள நேரம் ! சரி...ஆள் இருந்தாலும், இல்லாங்காட்டியும் ஆத்துறே டீயை ஆத்திப்புடலாம் !
Deleteநாளைக்கி மாலை !
அப்பாடி நல்ல வேளை. எடிட்டர் சார் வாழ்க வாழ்க
Delete.////அத்தினி பேரும் இருக்கின்ற இடத்தை விட்டுப்புட்டு பக்கத்து ஊரு....பக்கத்து மாநிலம்...பக்கத்து தேசம்னு சத்துக்கு ஏற்ப ரவுண்ட்ஸில் உள்ள நேரம் !////
Deleteசார்.. யார் எங்ஙன சுத்திக்கிட்டிருந்தாலும் எல்லோரோட மனசும் இங்ஙனக்குள்ளதான் சுத்திக்கிட்டிருக்கும்றதை நீங்கள் அறியாதவரல்லவே எடிட்டர் சார்!
நாளை மாலை என்பது நாளை காலையே வருவதற்காண்டி வெயிட்டிங்....
அதிலே பாத்தீங்கன்னா நாளைக்கி நான் வருவேன்....ஆனா வர மாட்டேன் !
Deleteவர மாட்டேன்னு சொல்ல முடியாது.... ஏன்னா நான் வருவேன் !
என்றா இவன் ...வெறி நாயாட்டம் இப்போவே கடிக்கிறானேன்னு பாக்குறீகளா ?
Deleteஅதுக்கு காரணம் இல்லாம இல்லேன்னு சொல்ல மாட்டேனுங்க ...ஆனாக்கா அந்த காரணம் காரணமா தா இப்புடி பேசுறேனா ? இல்லே இப்புடி பேசறதுக்கு காரணமே தேவை இல்லியா ? அல்லது காரண காரியத்தோட தான் இப்டில்லாம் பேசுறேனான்னு நாளைக்கி பாப்போமுங்க !
என்ன நல்லா புரிஞ்சதுங்களா ?
ஆஹா ஆரம்பம் ஆயிடுச்சு அய்யா ஆரம்பம் ஆயிடுச்சு.
Deleteஉங்களுடைய இந்த கொலை வெறிக்கு காரணம் என்ன சார்?
Deleteமொழிபெயர்ப்பு:- ஏதோ கதையில் உள்ளே புகுந்து இப்ப வெளியே வந்தது போல தெரிகிறது சார். அந்த கேரக்டராவே நீங்கள் மாறியதன் தாக்கம்:-)
Deleteஅச்சச்சோ எடிட்டர் சார்... 'சினிஸ்டர் செவன்' புரூஃப் ரீடிங் வேலையை வேற யாரையாவது வச்சுப் பண்ணுங்கன்னு அப்பவே சொன்னோமே.. கேட்டீங்களா...
Deleteபிரிஸ்க்ரிப்ஷன் பேடில் ஹெலிகார் போட்டுக்கினு இருக்கார் சினிஸ்டர் செவென் மொழிபெயர்ப்பாளர் ! அதுக்குள்ளாற நான் எடிட்டிங் பண்றது எப்புடியாம் ?
Deleteஅது வந்துண்ணா ...நாளைய பதிவு வந்து - பதிவு எண் : 900 ! ஆயிரத்துக்கு இன்னு நூறே நூறு கீது ! எதாச்சும் 'ஜிலோ'ன்னு செய்வோமுங்களா ? Evening meet!
ஆஹா...அப்ப சினிஸ்டர் கிடையாதா புத்தாணீடு கொண்டாட ஹெலிகாரேரி போக
Delete// ஆயிரத்துக்கு இன்னு நூறே நூறு கீது ! எதாச்சும் 'ஜிலோ'ன்னு செய்வோமுங்களா ? //
Deleteசெம செம. நல்லாவே செய்யலாம் சார்.
// அது வந்துண்ணா ...நாளைய பதிவு வந்து - பதிவு எண் : 900 ! // அடேங்கப்பா இன்னும் ஒரு வைரக் கல் நமது lion-muthu மகுடத்தில். ஏதாவது செய்தே ஆகவேண்டும் சார். போடுங்க சார் மீட். நானும் ஃப்ரீ தான்.
Delete@Kumar Salem ji..😄
Deleteமீட்டுன்னா..Evening blog ல மீட்லான்றாருங்க ஜி..😍
////நாளைய பதிவு வந்து - பதிவு எண் : 900 ! ஆயிரத்துக்கு இன்னு நூறே நூறு கீது ! எதாச்சும் 'ஜிலோ'ன்னு செய்வோமுங்களா ?////
Deleteஆஹா ஆஹா!! 900வது பதிவுன்றதை நாங்க எப்படி கண்டுக்காமவிட்டோம்!!!
போவட்டும்! புள்ளிவிபரங்களை அடுக்கறதுல நீங்க ஒரு மினி கேப்டன்'ன்றதை ஒப்புக்கிடறோம்!
பதிவைப் போட்டுத் தாக்குங்க! காத்திருக்கிறோம்...
நீங்க சொன்னா சரி தான் இளவரசரே.
Delete@Erode Vijay ji..😻😼😹
ReplyDeleteபூனைக்குட்டி ஜி..
ஆர்வ கோளாறுன்னாலும்
ஒரு அளவு வேணாம்..😃😃😃
இன்னைக்கு விசாழகிழமைங்க..😃
அடக்கடவுளே.. ஆமா! இன்னிக்கு வெள்ளிக்கிழமைன்னு நினைச்சுப் போட்டுட்டேன்! நன்றிங்க பாபு ஜி! கோடாலி வாழ்க!!
Deleteஆனா இதை நீங்க இப்படி வெளிப்படுத்தாம இருந்திருந்தீங்கன்னா
Deleteஎடிட்டரும் இன்னிக்கு வெள்ளிக் கிழமைன்னே நம்பி 'சூடா ஒரு சர்ப்ரைஸை' பதிவைப் போட்டிருப்பார்!
இது நீங்க நேத்து போட்ட பதிவுதான
Deleteநீங்க எங்கயோஓஓஓ போய்ட்டீங்க ஸ்டீல்! :)
Delete@Edi Sir..😍😘😃😀
ReplyDeleteஇன்று பதிவுகிழமை..❤💛💐🌷🌹
எல்லோரும் வெயிட்டிங் ..😃
ஜனவரி சர்ப்ரைஸ். இன்றைக்கு சொல்லிருங்கசார்.. ரெம்ப டென்சனா இருக்கு. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஜனவரி சர்ப்ரைஸ் இன்னான்னு தெரியோணும். பொறவு உயிரைத்தேடி கலர்ல வருதா இல்லே க. வெள்ளையா இல்லே ரெண்டுமான்னு தெரியோணும்.
ReplyDeleteஆமா ஆமா
Deleteமீ wating ஃபார் ஒன் வீக்.
Deleteஅது கலர்தான்....சினிஸ்டர் செவன் என்னன்னு கேளுங்க.....
Deleteஐயா ..இரும்பாரே....! கிளி ஜோசியங்களை அறிவிப்பாகவே ஆங்காங்கே போட்டுப்புட்டு கிளம்பிடுறீங்க - மேலோட்டமாய்ப் பதிவுகளைப் பார்க்கும் நண்பர்களில் சிலர் அவற்றை நிஜம் என்று நினைத்துக் கொண்டு ஆபிசுக்கு போன் போட்டு நம்மாட்களை உலுக்கி எடுத்து விடுகின்றனர் !
Deleteஇந்த 'ஜெய் ஜக்கம்மா ' ஆரூடங்களை, அறிவிக்கப்பட்டிருக்கும் இதழ்களிலாவது கொஞ்சம் அடக்கி வாசியுங்க ! மிடிலே !
சரி சார்....ஸ்பைடரோட மகிமை அப்டி
Deleteசாரி சார்...புரியுது மன்னியுங்களீ...இனி மேல் ஆரூடங்களை அளிக்க மாட்டேன்
Deleteஸ்டீலுக்கு ஒரு டோஸுடன் அடுத்த பதிவை எழுத ஆரம்பிச்சிருக்கார் போலிருக்கு! பட்சியோட ராசி எப்படியிருக்குமோ.. பதிவு வந்தாத்தான் தெரியும்!
Deleteஆசிரியர் அட்டகாச அறிவிப்பு தருவார்....காத்திருப்போம்...சார் சீக்கிரமா வாங்க தூங்குறதுக்குள்ள
Deleteசார்.. அவ்ளோதான் சார்.. அவ்ளோதான்! See you around soon'ஐ மட்டும் டைப் பண்ணி அந்த 'பப்ளிஷ்' பட்டனை அழுத்திட்டீங்கன்னா வேலை முடிஞ்சது!
ReplyDelete'மீ த பர்ஸ்ட் ஃபார் த பர்ஸ்ட் டைம் இன் மை லைஃப்'
///Evening meet! ///
ReplyDeleteநண்பர்களே.. பொதுவா eveningனா சூரியன் மறைவதற்குள்ளான நேரம் தானே?
ஆமாங்க EV. இன்னும் மாலை பதிவை காணலையே
ReplyDeleteஇத்தனை மொழிபெயர்ப்புகளை செய்த நம் எடிட்டருக்கு evening'னா அர்த்தம் தெரியாமப் போய்டுச்சு பாத்தீங்களா KS?!!
Deleteஹோ ஹோ ஹோ!!
கமமமாலை நாளைதான்னு நமக்கு மாலைய தத்துவப் போறார் காதுக்கு
Deleteஎடிட்டரின் புதிய & 900வது பதிவு ரெடி நண்பர்களே! :)
ReplyDelete@Editor: Sir, Vankkam. Vedhalar spine incorrectly says "smashing 70s", front cover has "supreme 60s". Hope it's not the file sent to print.
ReplyDelete