Powered By Blogger

Saturday, December 10, 2022

கதை சொல்லும் காகிதங்கள் !

 நண்பர்களே,

வணக்கம். பிய்த்துப் பிடுங்கி ஓட்டமெடுத்து வரும் பொழுதுகளானவை - இதோ இன்னொரு ஆண்டின் இறுதி நோக்கி நாற்கால் பாய்ச்சலில் பயணித்து வருகின்றன ! And கண்மூடிக் கண் திறப்பதற்குள் கிருஸ்துமஸ் தாத்தா வருகை புரிந்திருப்பார் ; "all லுலாயி" என்று தெரிந்திருந்துமே கெத்தான பல புத்தாண்டு சபதங்கள் ஆங்காங்கே எடுக்கப்பட்டிருக்கும் ; மொக்கை மொக்கையாய் புத்தாண்டு வாழ்த்துக்களை வாட்சப்பில் forward செய்திடும் வேகங்கள் விரல்களுக்குப் புலர்ந்திருக்கும் & வெடி வெடிச்சோ ; உசரமான கேக்குகளை மொசுக் மொசுக்கென்று போட்டுத்தள்ளியோ ;  பனி இரவுக்குள் "ஹோய்ய்ய்ய்ய்ய்" என்ற கூச்சலோடு மோட்டார் சைக்கிள்களில் ஒரு லிட்டர் பெட்ரோலை விரயம் செய்தோ, புத்தாண்டை வரவேற்கும் வேளையும் புலர்ந்திருக்கும் ! Phewwww .....இன்னா ஸ்பீடு !! நாட்கள் காலாவதியாகும் அதே வேகத்துக்கு நமது 'பொம்ம புக்' தயாரிப்பிலும் ஈடு தர வேண்டுமென்பதே இங்கே மேட்டர் ! இதோ - இப்போ தான் வீடியோவில் டிசம்பர் இதழ்கள் சார்ந்த அறிமுகத்தைப் போட்டு வைத்தது போலுள்ளது ; அதற்குள் ஒரு வாரமும் போய், வீடியோவுக்கு நெருக்கி 700 பார்வைகளும், நமது YouTube சேனலுக்கு சுமார் 275 subscriber-களும் கிட்டியாச்சு ! And ஜனவரிக்கென வேதாளரையும், இரவுக்கழுகாரையும், மைக் ஹேமரையும் ஒரு சேர கரை சேர்க்க குட்டிக்கரணங்களுமே நம் தரப்பினில் முழுவீச்சில்   துவங்கியாச்சூ ! 

அதற்குள்ளாய் புத்தாண்டின் இதழ்கள் பக்கமாய்ப் பார்வைகளை ஓடச் செய்வது டிசம்பர் இதழ்களின் மீதான ஒளிவட்டங்களை மட்டுப்படுத்திடும் என்பதால், இந்த ஒற்றை வாரத்துக்கேனும் நடப்பாண்டிலேயே சஞ்சாரம் செய்தால் தப்பில்லை என்று தோன்றியது ! And டிசம்பரின் highlights மூன்று - at least நம்மளவிற்காவது ! அதைப் பற்றி முதலில் பகிர்ந்திடுகிறேனே ?!

1.அகஸ்மாத்தாய் நான்கு இதழ்களுமே black & white இதழ்களாய் அமைந்து விட்டிருந்த இந்த டிசம்பர் - நடப்பாண்டின் ரொம்பவே வெற்றிகரமான மாதங்களுள் ஒன்று ! விமர்சன ரீதியிலும் சரி, விற்பனை ரீதியிலும் சரி, இந்த மாதம் simply on fire ! இந்த வாரத்தின் முழுமையிலுமே ஆன்லைன் ஆர்டர்கள் அதகளம் எனில், கொஞ்ச காலமாய் பணம் அனுப்பாது தொடர்பு எல்லைகளுக்கு அப்பாலிக்கா போயிருந்த முகவர்களுமே அவசரம் அவசரமாய் ஆர்டர்கள் அனுப்பியுள்ளனர் ! Thanks to you folks !!!

2.'டெட்வுட் டிக்' கப்படிக்கும் கெட்ட பயலாய், வலம் வந்திருக்கலாம் தான் ; ஆனால் பயல் எங்கெங்கோ ரீச் ஆகி, ஏதேதோ விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளான் ! அதிலும் அந்த raw தமிழ் நடைக்கு ஷாக் கலந்த சிலாகிப்புகள் - உங்களிடமிருந்து மட்டுமல்ல guys ; தற்போதைய தமிழ் திரையுலகின் படைப்பாளி ஒருவரிடமிருந்துமே ! கதையினை ப்ளாக் பிளாக்காய் அலசித் தள்ளி விட்டார் !

3 .And நடப்பாண்டில் "வாங்கியது எத்தனை ? வாசித்தது எத்தனை ?" சார்ந்த கேள்விகளுக்கு இந்த வாரத்தின் முழுமையிலும் சரமாரியாய் பதில்கள் குவிந்து வருகின்றன - நமது ஆபீஸ் வாட்சப் நம்பரில் ! மெய்யாலுமே இத்தனை பங்களிப்பு இதனில் சாத்தியமாகிடுமென்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை தான் ! Thanks again....!!!

நீங்கள் முதல் தவணையாய் அனுப்பியிருந்த சுமார் 90 படிவங்களின் பதில்கள் சில பல தகவல்களை நமக்குச் சொல்லின என்றால், அதன் பின்பாய் நீங்கள் தொடர்ந்து அனுப்பி வரும் அடுத்த 100+ படிவ நகல்கள் ஏகமாய்  கதைகள் சொல்லுகின்றன ! அந்தக் காகிதங்கள் சொல்லிடும் கதையே இந்தப் பதிவின் முதுகெலும்பே ! In fact, இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பரிசீலிக்கும் போது பெரும் ஆதங்கமொன்று தலைதூக்குகிறது - நண்பர்கள் பலரும் தங்களின் மௌன விரதங்களை மட்டும் அவ்வப்போது இது போல் களைந்தால், நமது பயணப் பாதைகள் இன்னமும் சீராய் அமைந்திருக்குமே என்று !! 

Here goes : 

1 .நீ டெல்லிக்குப் போய்க்கோ...டேராடூனுக்குப் போய்க்கோ....நாங்க டெக்ஸ் இருக்கும் டெக்ஸாசுக்கு மாத்திரமே போவோம் என்று பிடிவாதமாய் 'தல' தவிர்த்த பாக்கி இதழ்களைத் தவிர்க்கும் அணி ஒன்று உள்ளது ! And அவர்கள் தீவிரமாய் கார்டூன்களைத் தவிர்ப்பது அப்பட்டமாய்த் தெரிகிறது - லக்கி லூக் கூட அதற்கொரு விதிவிலக்காக இருக்கக் காணோம் ! So 'டெக்ஸ் & கோ' இல்லாத மாதங்களில் இந்த நண்பர்கள் முற்றிலுமாய் தொடர்பற்றுப் போய் விடுகிறார்கள் ! And இன்னொரு முக்கிய விஷயமும் இங்குள்ளது ! பெரும்பாலும் நமது ஹாட்லைன் அல்லது காமிக்ஸ்டைம் பகுதிகளை இடம்பெறச் செய்வது அந்தந்த மாதத்து கலர் இதழ்களிலேயே ! இதோ - இந்த டிசம்பரைப் போல ஏதேனும் ஒரு முழுக்க முழுக்க b&w மாதம் புலரும் பொழுதுகளில் மட்டுமே ஹாட்லைன் பகுதியானது டெக்சின் b&w இதழுக்குக் குடிபெயர்கிறது ! So 'நாங்க டெக்ஸ் தவிர்த்த வேறெதையும் வாசிக்க மாட்டோம்' எனும் நண்பர்களுக்கு நமது பொதுவான அறிவிப்புகள் ; அட்டவணைகளில் இடம் பிடிக்கா இதழ்கள் ; on the go திட்டமிடல்கள் பற்றியெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லையே ?! என்பது இப்போது தான் தலைக்குள் உரைக்கிறது ! தொடரும் பொழுதுகளில், இனி எல்லா தலையங்கங்களையுமே டெக்ஸ் இதழ்களிலேயே இடம் பெறச் செய்திட வேணும் போலும் !! 'இத்தினி கழுதை வயசாகியும், இப்படியொரு ஆங்கிள் இருப்பதைக் கவனிக்க மறந்துப்புட்டியே அங்கிள் !' என்று உள்ளாற மிஸ்டர் மண்டை குமட்டில் குத்துகிறது ! 

2.நடப்பாண்டில் Most Unread Book(s), அதாவது "வாசிப்புக்கு உட்படா இதழ்கள்" என்ற சங்கடப் பெருமையை ஈட்டியிருக்கும் இதழ்கள் மூன்று (Jack & The Beanstalk ; Cinderella - கணக்கில் சேர்த்திடவில்லை for obvious reasons !) :

a .ப்ளூ கோட்ஸ் பட்டாளத்தின் - "களமெங்கும் காதல்" !

b .முத்து கோடை மலர் '21 

c .செய்வன தில்லாய்ச் செய் (மேகி கேரிசன்)

Frankly I am surprised guys !! At least - முதல் 2 இதழ்களைக் கண்டு !! கார்ட்டூன் ஜானர் நம் மத்தியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகி வரும் சூழலில் லக்கி லூக் & சிக் பில்லுக்கு அடுத்தாற்போலான இடத்தினில் ஸ்கூபியும், ரூபியும் இருந்து வருவதாக நான் நினைத்து வருகிறேன் ! ஆனால் கார்ட்டூன் ஆணிகளில் முக்காவாசி தேவையில்லாத ஆணிகளே என்பது போல் பொருள்படுகிறது இந்த ப்ளூ கோட்ஸ் புறக்கணிப்பு ! என்ன கொடுமை சரவணன் சார் ???

And ஏற்கனவே, போன பதிவிலேயே சின்னதாய்க் கோடிட்டுக் காட்டியிருந்தேன் - கோடை மலர் பத்திரமாய்ப் படம் பார்க்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டிருப்பது பற்றி ! இந்த இரண்டாவது batch படிவங்களுமே கிட்டத்தட்ட அதே தகவலைச் சொல்கின்றன ! இது கதை மாந்தர்களின் சொஸ்தி குறைவின் காரணமா ? அல்லது குண்டு புக்ஸை முழுசுமாய் வாசித்திட நேரமின்மையால் எழுந்துள்ள சிக்கலா ? பதில் தெரியலை எனக்கு ! Maybe மரியாதையாய் அவற்றுள் இடம்பிடித்திருந்த கதைகளை தனித்தனி ஆல்பங்களாய்ப் போட்டிருக்கணுமோ ? நடப்பாண்டின் கோடைமலரை அவ்விதம் மாற்றித் திட்டமிடணுமோ ? Confusion .....!!

மேகி கேரிசன் சமாச்சாரம் புரிகிறது ! "டிடெக்டிவ்" என்ற பெயரைத் தாண்டி, மாமூலான அடையாளங்கள் எதுவுமில்லாமல் சுற்றி வருவது மாத்திரமன்றி ஒரு ஈரோயினிக்கான சாமுத்ரிகா லட்சணங்களுமின்றி அம்மணி இருப்பதால் நிறைய நண்பர்களுக்கு அத்தனை ரசிக்கவில்லை என்று எடுத்துக் கொள்கிறேன் ! And விலையில்லா இதழ் என்றாலுமே ஆக்ஷன் இல்லாங்காட்டி ரசிக்க மாட்டோம் என்ற உங்களின் statement இங்கே எனக்குக் கேட்பதாகவும் எடுத்துக் கொள்கிறேன் ! அதே சமயம் ரொம்பவே யதார்த்தமானதொரு படைப்பை நண்பர்களில் ஒரு பகுதியினர் miss செய்திருப்பதில் எனக்கு வருத்தமே ! 

3.இங்கு மாத்திரமன்றி, உங்களின் தனிப்பட்ட வாட்சப் க்ரூப்களில் அரங்கேறிடும் உங்களின் அலசல்களும், மதிப்பீடுகளும் விற்பனையினில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஏற்கனவே நிறையவாட்டி குறிப்பிட்டுள்ளேன் தான் ; but still அதற்கொரு பட்டவர்த்தன உதாரணம் கிட்டியுள்ளது ! 'தல' சாகசம் தான் ; மிரட்டலான அட்டைப்படமும் உண்டு தான் ; ரெகுலர் சந்தாவின் அங்கம் தான் ; so பெரும்பான்மை நண்பர்களை எட்டியிருக்கக் கூடிய இதழும் தான் ! ஆனால் "கதை அத்தனை வீரியமில்லை" என்று விமர்சனம் கண்ட டெக்சின்  "பாலைவனத்தில் பிணம்தின்னிகள்" இதழானது "வாங்கப்பட்டும்...வாசிக்கப்படவில்லை" பட்டியலில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்று நிற்கிறது ! So வழக்கத்தை விடவும் இன்னும் சித்தே பணிவாய் ஒரு வணக்கத்தைப் போட்டுக்கிறேனுங்கண்ணா வாட்சப் க்ரூப்கள் இருக்கக்கூடிய திசையினில் ! "ஏதோ பாத்து பண்ணுங்க அண்ணாச்சி !! டெம்போல்லாம் வைச்சு கதைகளை இட்டாந்துட்டு இருக்கோம் !" 

ஜாலிக் கும்மிகளோடு இத்தகைய ஆக்கபூர்வமான அலசல்களுக்கும் ஒத்தாசை செய்து வரும் வாட்சப் குழுக்களில், மாதத்தில் ஏதேனுமொரு நாளில் மட்டும் என்ட்ரி கோரி அதனதன் அட்மின் சார்வாள்களிடம் கோரிக்கை வைத்து உட்புகுந்து, ஏதேனும் போட்டிகள் ; கேள்விகள் என்று பொழுதை செலவிட முயற்சிக்கணும் போலும் ! ஜனவரிக்கு ஆரம்பிக்கலாமுங்களா ?

4. Surprise !! Surprise !! இதுவரையிலும் தகவல் சொல்லியிருக்கும் நண்பர்களின் பெரும்பான்மை தாத்தாஸ் கதைகளை வாசிக்கவே செய்துள்ளனர் ! அது அவர்களுக்கு ரசித்ததா - இல்லியா ? என்ற பஞ்சாயத்துகளுக்குள் போகலை நான் ; but pleasantly surprised !!

5. கொஞ்சம் கணிசமாய் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு படிவங்களைப் பரிசீலிக்கும் போது ஒரு விஷயம் மெலிதானதொரு pattern அமைப்பது புரிகிறது ! எந்தெந்த மாதங்களில் நான்கு இதழ்கள் or maybe even more வெளிவந்துள்ளனவோ, அம்மாதங்களில் எல்லாமே ஏதேனும் ஒன்றோ-இரண்டோ இதழ்கள் தொக்கடி விழுகின்றன !! And இதனை ஒரு தற்செயல் என்று கருதிட எனக்குத் தோன்றவில்லை ! தோசை வார்ப்பதிலும், கறிகாய் நறுக்கித் தருவதிலும், பூரிக்கு மாவு பிசைவதிலும் பிஸியான வீரர்கள் நாமென்பதில் no secrets ! அவற்றின் மத்தியினில் பொம்ம புக் வாசிப்புகளுக்கு நேரம் ஒதுக்கத் திணறுகிறீர்கள் என்பது மறுக்க இயலா நிஜம் ! வாழ்க்கைச் சக்கரங்களின் சுழற்சிக்கு முன்னுரிமை என்பதில் யாருக்கும் ஐயங்கள் இருக்க இயலாது ; so நாம் செய்ய வேண்டியது கீழ்க்கண்ட இரண்டுள் ஏதேனும் ஒன்றை என்பதிலுமே no ஐயங்கள் :

a .வெளியீட்டின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்தல் 

or 

b .வெளியீடுகளை crisp ஆக ; வாசிக்க அயர்ச்சி தரா பக்க எண்ணிக்கைகளில் அமைத்தல் ! And more importantly - பார்த்தவுடன் கவனத்தைக் கோரவல்ல நாயக / நாயகியர் is an absolute must ! 

6. அந்தந்த மாதத்து இதழ்களை அந்தந்த மாதங்களில் முழுசுமாய் வாசிக்கும் ஒரு அணி உள்ளதெனில், சாவகாசமாய் நேரம் கிடைக்கும் சமயங்களில் சேர்த்து வைத்துப் படிக்கும் இன்னொரு அணி இருப்பதுமே தென்படுகிறது ! I say this because - நவம்பர் மாத இதழ்கள் நிறைய நண்பர்களின் வாசிக்கப்படா இதழ்களின் பட்டியலினில் உள்ளன ! Clearer & clearer - நறுக் தெறிக்கும் ; சிக்கென்ற புக்ஸ்களுக்கான அவசியம் !

7."சகலத்தையும் வாங்குவோம்....சந்தோஷமாய் வாசிப்போம்" என்ற அணி இன்னமும் ஒரு மெஜாரிட்டியாய் இருப்பது நெகிழச் செய்யுமொரு சந்தோஷ தகவல் ! அன்றாட அலுவல்களுக்கு மத்தியிலும் காமிக்ஸ் வாசிப்புக்கென நேரம் ஒதுக்கிட நண்பர்களுக்கு சாத்தியப்படுவது simply awesome !! 'சவசவா' புக்சாக இருந்தாலுமே, இந்த "ச.வா.ச.வா" அணி அவற்றுள் புகுந்து போட்டுத் தாக்குவது நம்மை முன்செல்லத் தூண்டும் காரணிகளில் முக்கியமானதென்று சொல்லலாம் !! 

8.கிட்டத்தட்ட ரெகுலர் சந்தாவில் உள்ள அனைவருமே SMASHING '70s சந்தாவினில் இடம்பிடித்துள்ளனர் தான் ; சூப்பர் தகவல் அது ! But காரிகனின் ஆல்பத்தை பாதிக்கும் மேற்பட்டோர் இன்னமும் வாசிக்கவில்லை என்றே சொல்லியுள்ளனர் !! இங்கே எனக்கு ஒரு  கேள்வி உள்ளது - moreso மாடஸ்டியின் டபுள் டமாக்கா வெற்றி கண்டிருக்கும் இம்மாதத்தினில், எனது வினா கூடுதல் முக்கியத்துவம் பெற்று நிற்கின்றது :

My கேள்வி : வாசிக்க இந்த மாக்சி சைசில் உள்ள சிரமங்களை பற்றி அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறீர்கள் தான் ! But சேகரிப்புக்கும் சரி, display கம்பீரத்துக்கும் சரி, MAXI சைஸ் அட்டகாசமானது என்பதால் சைஸ் மாற்றம் பற்றிப் பெரிதாய் நான் காதில் போட்டுக் கொண்டிருக்கவில்லை !  தவிர, முதல் சீஸனின் முழுமையினையும் சீராய் பூர்த்தி செய்திடல் அவசியமென்று எண்ணினேன் ! ஆனால் மாடஸ்டியின் இம்மாத இதழின் வெற்றிக்கு, வாசிக்க சுலபமான அந்த சைஸுமே ஒரு காரணி என்பீர்களா ? If yes - அந்த சைசுக்கு க்ளாஸிக் நாயக / நாயகியரை காத்திருக்கும் SUPREME '60s இதழ்களிலிருந்து மாற்றம் செய்திடல் அவசியமாகிடுமா ? வேதாளர் ஸ்பெஷல் -2 ஏற்கனவே ரெடியாகி வருகிறது ; அட்டைப்படமும் already அச்சாகி விட்டதெனும் போது அதனில் மாற்றத்துக்கு வாய்ப்பில்லை ! Maybe அதற்கடுத்த டிடெக்டிவ் சார்லி ஸ்பெஷல் இதழிலிருந்து சைஸ் மாற்றம் செய்து பார்க்கலாமா ? Thoughts on it ப்ளீஸ் ? 

Here are a few PHANTOM pages - வழக்கமான மாக்சி சைசில் :



இதற்கான பதில்களை இங்கே பதிவு செய்தாலும் சரி ; அல்லது ஆன்லைனில் நாம் ரெடி செய்துள்ள Polling பக்கத்தில் பதிவிட்டாலும் சரி, நீங்க பதில் சொன்னா மட்டும் போதுமுங்க !!

1.இது : மேகி கேரிசன் குறித்த Poll : https://strawpoll.com/polls/ajnENJG79gW 

2.இது கோடை மலர் 2021 பற்றிய Poll : https://strawpoll.com/polls/ajnENJGMAgW

3.இது மாதாந்திர இதழ்களின் எண்ணிக்கை சார்ந்த Poll : https://strawpoll.com/polls/e6Z2eMp96gN

4.இது SUPREME '60s சைஸ் மாற்றம் குறித்த Poll : https://strawpoll.com/polls/NMnQB4E1wg6

அப்புறம் இங்கேயே பதில் சொல்லிட 3 கேள்விகளுமே :

  1. நடப்பாண்டின் TOP 3 இதழ்களென்று தேர்வு செய்வதாயின் உங்களின் choices எவையோ - ப்ளீஸ் ?
  2. நடப்பாண்டின் TOP 3 அட்டைப்படங்கள் எனில்..?
  3. நடப்பாண்டின் TOP தருணமென்று நீங்கள் கருதுவது எதனையோ ?

Bye all...see you around...have a fun weekend !

P .S :

1.கள்ளக்குறிச்சி புத்தக விழா மாவட்ட நிர்வாகத்தால் டிசம்பர் 15 to 25 தேதிகளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ! So நம்ம வண்டி அங்கே மறுக்கா போக வேண்டியிருக்கும் புது தேதிகளுக்கேற்ப !

2.சந்தா சார்ந்த நினைவூட்டலுமே folks !! SUPREME '60s & ரெகுலர் சந்தா தடத்தினில் உங்களை ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம் ! Please do join in !!

244 comments:

  1. வணக்கம் நட்புக்களே 🙏🙏

    ReplyDelete
  2. மேகி கேரிசன் என்னளவில் ஒரு ஆர்ப்பாட்டமில்லாத அருமையான கதை தான் ஆனால் ஓவியங்கள் தான் கொஞ்சம் கீச்சலாக இருந்தது மற்றபடி கதை நல்லா தான் இருந்தது

    ReplyDelete
  3. கோடை மலர் கூட நன்றாக தான் இருந்தது ஆனால் நெகடிவ் சார்பாக கருத்து கணிப்பு நடப்பதால் என்ன சொல்றது

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  5. //கதை அத்தனை வீரியமில்லை" என்று விமர்சனம் கண்ட டெக்சின் "பாலைவனத்தில் பிணம்தின்னிகள்" இதழானது//

    இந்த கருத்தில் அல்லது போன வருட டெக்ஸ் கதைகளில் அனைத்து கதைகளுமே வித்தியாசமாக நன்றாக இருந்தது சார். பொதுவாக நண்பர்கள் சொல்லும் ஒரு குறை அனைத்து கதைகளும் ஒரே போல இருக்கிறது என்பதை இந்த வருடம் தீர்ந்து உள்ளது.

    இவவருட தேர்வுகளில் மிஸ் ஆனது இந்த ஒரு கதை தான் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே

    கோடை மலர் தொடர வேண்டும் சார் ஒரு safety க்காக வேண்டும் என்றால் குண்டு புக்கில் புதிய அறிமுகம் இல்லாமல் வெற்றி நாயகர்களை கொடுக்கலாம். சமீபத்து வரவில் வெற்றி நாயகர் என்னை பொறுத்த வரை டேங்கோ தான்

    ReplyDelete
  6. Me வந்துட்டேன்..😍😘

    ReplyDelete
  7. சார் கோடை மலர் 2022 poll தவறாக உள்ளது. அதில் இடம் பெற்று இருந்தது ரூபின், ஜானி, சிக் பில்

    ReplyDelete
  8. எனது கணிப்பு .இருண்ட களங்களை பெரும்பாலானோர் தவிர்க்கின்றனர்.அதேபோல் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் களங்களையும் தவிர்க்கின்றனர்.குண்டு என்றால் நல்லவன் மாஸ்ஹீரோஆவதை விருப்பத்துடன் படிக்கின்றனர்.

    ReplyDelete
  9. குமார் சார் செமஅலர்ட் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  10. // Maybe அதற்கடுத்த டிடெக்டிவ் சார்லி ஸ்பெஷல் இதழிலிருந்து சைஸ் மாற்றம் செய்து பார்க்கலாமா ? //

    Maxi only please.

    ReplyDelete
    Replies
    1. Yes.. நாங்கெல்லாம் எந்த ஆணியுமே புடுங்க வேண்டாம் கட்சி..💪

      Delete
    2. அடுத்த வருடம் வரும் கதைகளுக்கு வேண்டும் என்றால் புத்தகம் சைஸ் மாற்றம் செய்யலாம். சைஸ் மாற்றம் செய்வதால் font சைஸ் மாறும் என நினைக்கிறேன் அப்படி மாறும் போது படிப்பது சிரமமாகிவிட வாய்ப்புகள் அதிகம்.

      Delete
  11. Top 3 இதழ் - தீபாவளி மலர் 22, ரிப் கிர்பி special 1, மேற்கே இது மெய்யடா.
    Top 3 அட்டைப்படம் - முத்து 50 ஆண்டு மலர், தீபாவளி மலர் 22, சிகாகோவின் சாம்ராட்.
    Top தருணம் - Tango வருகை மற்றும் இளம் TEX கதைகள்

    ReplyDelete
  12. 1. மேகி எனக்கு பிடித்திருந்தது. கார்ட்டூன்களை விட தாத்தா, மேகி மாதிரியான கதைகளில் காமெடி நன்றாக இருந்ததாக எனக்குத்தோன்றியது. இந்தப் போலில் இருக்கும் ஆப்சன்களில் எதும என்னால தேர்வு செய்ய முடியலை.

    ReplyDelete
    Replies
    1. கதைகளோடு பின்னிப் பிணைந்து பயணிக்கும் ஹியூமர் எப்போதுமே வீரியமானது தான் ! அவற்றை நண்பர்களின் ஒரு அணி மிஸ் செய்வது குறித்துத் தான் எனக்கு நெருடல்களே !

      Delete
    2. நா என்னைக்குமே கார்ட்டூன் கட்சி தான்.. என்ன அந்த "பொடி" பாஷையை கண்டு தெரிச்சு ஓடுறேன். ஆனா இனிமே வர்ற காமிக்ஸ் புக்க படிச்சுட்டு லைப்ரேரில குடுக்கலாம் இருக்கேன். லக்கி லூக்கை தவிர்த்து. கார்ட்டூன் தனியா சந்தா வந்தா நா ஆதரிப்பேன்.

      Delete
  13. 2. இரண்டாவது போலும் எனக்கான ஆப்சன்கள் இல்லை. மூன்று கதையும் எனக்கு பிடித்திருந்தது.

    ReplyDelete
  14. 4. S60 & S70 என்னுடைய ரசனை எல்லைக்கு அப்பால இருக்கு. எது விற்பனைக்கு உதவுதோ அந்த பேட்டர்ன்ல வரட்டும். எப்படி வந்தாலும் என்னுடைய காமிக்ஸ் கடமையான சந்தாவில் சேருவதை செய்து விடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜெய் காமிக்ஸ் நேசம் !

      Delete
    2. @Sheriff Ji..😍😃

      Me too... என்ன ஆனாலும் சரி... எது வந்தாலும் சரி.. சந்தா கட்டிடற கடமையே கண்ணாயிரம் கட்சி..😍👍👏💪👌

      Delete
    3. அன்புக்கு நன்றிகள் சார் ; ஆனால் உங்களிடம் வாங்கும் காசுக்கு ஈடாக நியாயமான வாசிப்பு அனுபவங்களைத் தரும் தார்மீகக் கடமை நமக்கு உண்டன்றோ சார்ஸ் ? அதனில் நான் தவறிடல் கூடாதே ?!

      Delete
  15. மேகி கேரிசன் - எனக்கு பிடித்திருக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாமல் ஆபத்துகளை எதிர்கொள்ளும் வித்தியாசமான பாத்திரப்படைப்பு! வசன நடையுமே அப்பாத்திரத்திற்கேற்ப பொருத்தமாய் அமைந்திருந்ததை நினைவுகூர முடிகிறது!

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே ரசித்துப் பணியாற்றிய கதைகளுள் மேகியும் ஒன்று !

      Delete
    2. என்னங்க. இந்த வாரம் மேரி கேரிசன் வாரமா. முடிவே பண்ணிடீங்களா. நா English edition- ல இந்த புக்கு இருக்கான்னு, தேடி புடிச்சு படிச்சிட்டு வாறேன்.

      Delete
    3. உண்மை விஜய்...

      Delete
  16. மேகி கேரிசன் -- படிக்கவில்லை என்றால், அதற்க்கு காரணம் அந்த look and feel & லேடி ஹீரோயின் என்பதாகத்தான் இருக்க வேண்டும், ஆக்‌ஷன் இருக்கா இல்லையா என்றால் படித்தால் தானே இருக்க தெரியும். இந்த வருடத்தின் top 10ல் இடம் பெற வேண்டியவர்

    ReplyDelete
    Replies
    1. ///இந்த வருடத்தின் top 10ல் இடம் பெற வேண்டியவர்////

      +1

      Delete
    2. மேரி கேரிகன்னா யாருங்க. மேரிய சின்ன வயசுல பாத்து வளர்த்த ஆயாவா. அப்படித்தா இருக்கு போல இருக்கு. இந்த ஆயா கதை எனக்கு வரலையே. கொரியர் காரனுக்கு இந்த கதை புடிச்சு இருக்கு போலிருக்கு. இந்த புக் மறு பதிப்பு வந்தா சொல்லுங்க.

      Delete
  17. ஸ்மர்ஃப்ஸ்..
    லியனார்டோ தாத்தா..
    கிளிப்டன்..
    மதியில்லா மந்திரி..
    ரின்டின்கேன்..
    இவர்களைத் தொடர்ந்து இப்போது சிக்பில் மற்றும்
    ப்ளூகோட்ஸின் தலைக்கும் ஆபத்து வந்துவிட்டிருப்பது வேதனையான சமாச்சாரம்!

    கார்ட்டூன் கதைகளுக்கு பிரீமியம் விலையிலான தனிதடம் ஒன்றைத் துவங்கிடும் ஐடியா ஏதாவது இருந்தால் என் பெயரை முதலில் எழுதிக் கொள்ளுங்கள் எடிட்டர் சார்!

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பட்டியலில் கடாசிப் பெயராகவுமே அது அமைந்து போய்விடும் போலுள்ளது சார் - போகிற போக்கைப் பார்த்தால் !! இந்த அழகில் எலியப்பா & கைப்புள்ள ஜாக் தொகுப்புகளை ரெடி செய்து வருகிறோம் ! அதற்கொரு பிரேக் போடணும் போலுள்ளது !! Phew !!

      Delete
    2. சடன் பிரேக்.. போட்டுவிடுங்கள் sir... காலம் மாறுகிறது...action.. இல் கூட யதார்த்தம் +
      நிஜத்தை எதிர் பாக்கும் ரசனை வந்து விட்டது... என்னால் மாயாவி படிக்க முடியும்.. But.. லூக் முடியல...

      Delete
  18. டியர் எடிட்டர் சார் - மாடஸ்டி ஹிட்டுக்கு கதைகளோடு நிச்சயமாக முக்கிய காரணம் அந்த காம்பாக்ட் சைஸ். குறைந்த பட்சம் காரிகனையாவது அந்த சைஸில் முயற்சித்துப் பார்க்கலாம்.. அடுத்த வருடக் கதைகளும் அதே ஓவியரின் கைவண்ணம் என்னும் போது.. 2024 க்கு முடிவெடுக்க உதவக் கூடும்..

    கோடைமலர் எல்லா கதைகளுமே எனக்குப் பிடித்திருந்தன. Especially ரூபின். அதானால் அங்கே ஓட்டுப் போடவில்லை.

    மாதம் 3 அல்லது 4 புத்தகங்கள். நாங்கள் பொறுமையாக எப்படியும் படித்துவிடுவோம் :)

    மேகி கேரிசன் - தெரியவில்லை என்பதே உண்மைஉண்மை. தாத்தாக்களைப் போல பெரிய word of mouth இல்லாதது கூட காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. விலையில்லா இதழ் எனும் போது மேகி கிட்டத்தட்ட அத்தினி வாசகர்களின் கைகளையும் எட்டியுள்ளன நண்பரே ! So வாங்குவதா ? வேணாமா ? என்ற கேள்வி இங்கு not applicable என்றே எனக்குத் தோன்றுகிறது !

      பொதுவாய் இந்த வாய்வழி விளம்பரங்கள் விற்பனையினை influence செய்திட உதவிடும் தான் ; ஆனால் கைகளில் உள்ளதை வாசிக்கவும் சக வாசகரின் சிபாரிசு தேவையா - என்ன ? And if memory serves me right - மேகிக்கு ரொம்பவே பாசிட்டிவ் விமர்சனங்களே அந்நேரம் கிட்டியிருந்தன !

      Delete
    2. எனக்கு கிடைக்கலை.
      Sale -க்கு வந்திருந்தா வாங்கியிருப்பேன். என்ன சொல்ல எ நிலையை.

      Delete
    3. இந்த இதழ் கிடைக்காத வாசகர்கள், உங்க லிஸ்டுலேயே இல்லாதர்வர்களா. வடையை கண்ல காட்டாமலே இப்படி பேசுறீங்களே. இது எல்லா. நியாயமா. இது எங்க போய் சொல்ல.

      Delete
  19. நடப்பாண்டின் TOP 3 இதழ்களென்று தேர்வு செய்வதாயின் உங்களின் choices எவையோ - ப்ளீஸ் ?
    1. டெங்கோ - என் பெயர் டேங்கோ
    2. ஸகோர்
    3. சுஸ்கி & விஸ்கி

    நடப்பாண்டின் TOP 3 அட்டைப்படங்கள் எனில்..?
    1. தீபாவளி மலர் 2022
    2. கென்யா
    3. காரிகன்
    (நிழல்களின் ராஜ்ஜியத்தில் font எனக்கு நெருடல் , அதான் select ஆகலை)

    நடப்பாண்டின் TOP தருணமென்று நீங்கள் கருதுவது எதனையோ ?
    1. S70 & அதன் வெற்றி
    2. டேங்கோ
    3. S60


    ReplyDelete
    Replies
    1. அட...டேங்கோ ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தேர்வாகியுள்ளார் !

      Delete
  20. என்னளவில் ஒரு முக்கியமான விஷயம் இன்னான்னா மாடஸ்தி கதை வெற்றி அதன் கதை தேர்வு மற்றும் தெளிவான சித்திரங்கள் என்பதாக எனக்கு தோன்றுகிறது (அதன் சைஸ் என்பது யோசிக்க தான் வைக்குது)

    ReplyDelete
    Replies
    1. சைஸ் மாற்றம் என்னளவில் தேவையற்ற சமாச்சாரமே சார் ; ஆனால் அவ்வப்போது நண்பர்களில் ஒரு அணியினர் கிராபிக் டிசைனர்களாய் திடும் உருமாற்றம் கண்டு, சித்திர அமைப்பு, பக்க அமைப்பு, அச்சு ஏற்பாடுகள் குறித்தெல்லாம் பாடம் நடத்த ஆரம்பித்து விடுகின்றனர் ! So அவர்கள் ஆசைகளைக் கெடுப்பானேன் என்று தான் இந்த சைஸ் மாற்ற option-ஐ பரிசீலிக்கும் வாய்ப்பினையும் முன்வைத்துள்ளேன் !

      Delete
    2. சரியான கணிப்பு! என்னதான் கதை நன்றாக இருந்தாலுமே சித்திரங்களின் தரம் சரியாக அமையவில்லை என்றால் போனி ஆவது ரொம்பவே சிரமம்!

      Delete
    3. // So அவர்கள் ஆசைகளைக் கெடுப்பானேன் என்று தான் இந்த சைஸ் மாற்ற option-ஐ பரிசீலிக்கும் வாய்ப்பினையும் முன்வைத்துள்ளேன் ! //

      உங்களுக்கு எது சரியோ அதை செய்வது நலம் சார். நீங்கள் ஒரு முடிவு எடுத்து நன்றாக சென்று கொண்டு இருக்கும் போது இது போன்ற தீடீர் opinion எனக்கு பிடிக்கவில்லை சார். அப்படி புத்தக சைஸ் மாற்றம் செய்து பார்க்க வேண்டும் என்றால் அடுத்த சீஸனில் முயற்சி செய்யுங்கள் சார்.

      Delete
    4. //கிராபிக் டிசைனர்களாய் திடும் உருமாற்றம் கண்டு, சித்திர அமைப்பு, பக்க அமைப்பு, அச்சு ஏற்பாடுகள் குறித்தெல்லாம் பாடம் நடத்த ஆரம்பித்து விடுகின்றனர் //

      சமைக்க தெரியலானாலும் காரம் கொஞ்சம் உறைப்பா இருந்துருக்கலாம். புதினா சேத்துருக்கலாம். அப்படின்னு ஒரு ஹோட்டலுக்கு போயிட்டு கஸ்டமர்கள் சொல்றதில்லயா? உனக்கென்ன சமையலை பத்தி தெரியும்? இத பத்திலாம் பேசாம, போடறத சாப்பிட்டுட்டு போங்கன்ற தொணி தெரியுதே சார்.

      காரிகன் அச்சு சரியில்லை. முன்னே வேதாளர்ல அச்சடிச்ச பேப்பர் தரமும் இல்லைன்றது கண்கூடு தானே. ஸோ மாற்றத்துக்கு காரணம் அதான். காசு கொடுத்து வாங்குறவங்க குறை இருந்தா சொல்ல உரிமை இல்லையா?

      Delete
    5. //ஆனால் அவ்வப்போது நண்பர்களில் ஒரு அணியினர் கிராபிக் டிசைனர்களாய் திடும் உருமாற்றம் கண்டு, சித்திர அமைப்பு, பக்க அமைப்பு, அச்சு ஏற்பாடுகள் குறித்தெல்லாம் பாடம் நடத்த ஆரம்பித்து விடுகின்றனர் !// என்னங்க சார் டப்புன்னு அடிச்சிட்டீங்க :(

      Delete
  21. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  22. வரலாற்றின் வாடி வாசல் :

    மார்ட்டின் எப்போதுமே ஒரு புரியாத புதிர்தான்,இனி எல்லாம் மரணமே போன்ற கதைகள் போல் அனைவருக்கும் புரியும்படியான கதைக் களங்கள் எப்போதும் அமைவதில்லை,அப்படி அமைந்து விட்டால் கதையும் ஹிட்தான்,மார்ட்டினுக்கு ஆதரவும் மாஸ்தான்....
    வரலாற்றின் வாடி வாசல் போல் கொஞ்சம் குழப்பியடிக்கும்,நம்பமுடியாத அசத்தியக் களங்களில் இயங்கும்படியான கதைக் களங்கள் வரும்போது கமலின் ஆளவந்தான் வந்தது போலவோ,ஹே ராம் வந்து விட்டது போலவோ ஜெர்க் அடிப்பதில் வியப்பில்லை...
    ஒருவேளை காலம் கடந்துதான் மார்ட்டின் கொண்டாடப்படுவாரோ ?!
    பிரெஞ்சு புரட்சி,மேஜிக் லான்டெர்ன்,திகில் நிகழ்வுகள் என வரிசை கட்டி அடித்தாலும் வேறு எந்த களத்தில்தான் இதுபோன்ற தகவல்களை அறிந்து கொள்வது ?!
    அந்த வகையில் மார்ட்டின் எப்போதும் ஈர்ப்புடையவரே...

    எமது மதிப்பெண்கள்-8/10...

    ReplyDelete
    Replies
    1. Yup...மாமூலான டுப்பாக்கிகளைத் தூக்கிக்கினு ஓட வண்டி வண்டியாய் நாயகப் பெருமக்கள் இருக்கும் போது, இத்தகைய offbeat நாயகர்கள் ஏதோ ஒருவித ஈர்ப்பினைத் தக்க வைக்கின்றனர் ! And yes - மார்ட்டின் பெயரைச் சொல்லி நாம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் ஏராளம் !

      Delete
  23. நடப்பாண்டின் TOP 3 இதழ்களென்று தேர்வு செய்வதாயின் உங்களின் choices எவையோ - ப்ளீஸ் ?
    1.மேற்கே இது மெய்யடா-ஸ்டெர்ன்,
    2.உதிரத்தின் நிறம் கறுப்பல்ல-டெட்வுட் டிக்,
    3.என் பெயர் டேங்கோ-டேங்கோ.

    நடப்பாண்டின் TOP 3 அட்டைப்படங்கள் எனில் ?
    1.தீபாவளி வித் டெக்ஸ்-2022,
    2. மேற்கே இது மெய்யடா-ஸ்டெர்ன்
    3.நிழல்களின் ராஜ்ஜியத்தில்.

    நடப்பாண்டின் TOP தருணமென்று நீங்கள் கருதுவது எதனையோ ?
    1. 2023 அட்டவணை வெளியான தருணம்,
    2. தீபாவளி மலர் வெளியான தருணம்,
    3. S 70 யில் ரிப்கெர்பி,மாண்ட்ரேக் கதைகள் வெளியான தருணம். (கிடைக்காத,மிஸ் செய்த கதைகள் கிடைக்கும் மகிழ்ச்சியும்,வாசிக்காத கதைகள் வாசிக்கப் போகும் மகிழ்ச்சியும் ஒருசேர இணைந்த தருணம்...

    ReplyDelete
  24. நடப்பாண்டின் Top 3 இதழ்:😍
    1.ஸாகோர்
    2.சுஸ்கி விஸ்கி
    3.கென்யா

    நடப்பாண்டின் Top 3 அட்டைப்படங்கள்:😘
    1.காரிகன்
    2.கென்யா
    3.புயலில் ஒரு புதையல் வேட்டை (Tex)

    நடப்பாண்டின் Top தருணம்:❤
    1.S'70- வேதாளர் & மாண்டிரெக் கைக்கு கிடைத்த தருணம்.
    2.2023 சந்தா அறிவிப்பில் அதிரடிகளை பார்த்து அசந்த தருணம்.😍😘😃😀


    ReplyDelete
  25. நடப்பாண்டில் மனம் நொந்த தருணம்:😥

    1.முத்து காமிக்ஸ் 50 ஆண்டு மலர்களில்
    முத்து காமிக்ஸ் ன் பழம்பெரும் நாயகர்களை காண இயலாத தருணம்..👎

    ReplyDelete
  26. நடப்பாண்டில் டாப் 3 கதைகள்

    துள்ளுவதோ முதுமை
    மேற்கே இது மெய்யடா
    உதிரத்தின் நிறம் கறுப்பல்ல

    டாப் 3 அட்டை படங்கள்

    நிழல்களின் ராஜ்ஜியத்தில்
    மௌன நகரம்
    புயலில் ஒரு புதையல் வேட்டை

    டாப் 3 தருணம்

    ஜாகோர் வெளியீடு
    இளம் டெக்ஸ் தீபாவளி மலர்
    இலவச வெளியீடுகள் - ஜுட்ஜ் ட்ரெட்ட் தவிர்த்து மீதி எல்லாம்

    ReplyDelete
  27. // வெளியீட்டின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்தல் //
    எக்காரணம் கொண்டும் இந்த முடிவை மட்டும் எந்தக் காலத்திலும் எடுத்து விடாதீர்கள் சார்...

    ReplyDelete
  28. Top 3 கதைகள் :
    1. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்
    2. கென்யா
    3. லக்கி ஆண்டு மலர்

    Top 3 அட்டைப்படம்
    1. Fifty & Forever Special
    2. வேதாளர் ஸ்பெசல்
    3. புயலில் ஒரு புதையல் வேட்டை

    Top 3 தருணம்
    1. 50 வது ஆண்டு மலர் ரிலீஸ்
    2. 2023 அட்டவணை ரிலீஸ்
    3. தீபாவளி மலர் & கென்யா ரிலீஸ்

    ReplyDelete
  29. சத்தியமாகச் சொல்கின்றேன் ஆசிரியர் சார். மாடஸ்டி இதழ் மாதிரி S60 நாயகர்களும் வந்தால் அது பெரும் மகத்தான வெற்றியைப் பெறும். குண்டு புத்தமாக கெட்டி அட்டை & எட்டுக் கதைகள் என்பது காமிக்ஸ் காதலர்களை நெக்குருக வைக்கும். மகத்தான வெற்றியை இழக்க வேண்டாம் நண்பர்களே. ஆதரவு தாருங்கள். ஆசிரியர் பின் ஒரணியாக திகழ்வோம்.

    ReplyDelete
  30. 1. மேகி கேரிசன் படித்து விட்டேன்
    அவசியம் வேண்டும்.
    2. கோடை மலர் படித்து விட்டேன். அனைத்து கதைகளும் சிறப்பு.
    3. மாதம் நான்கு புத்தகம் தேவை.
    4. தயவு செய்து மேக்ஸி சைஸை மாற்றுங்கள். உள்ளே உள்ள சித்திரங்கள் மேக்ஸி சைசுக்கு சுத்தமாய் செட் ஆகவில்லை. அதுவும் மாண்ட்ரேக், காரிகன் எல்லாம் முடியல ரகம்.

    ReplyDelete
  31. Bluecoats shocked to see result, one of my fav

    Already Iznogoud is out😔

    Top 3 thathas, stern, deadwood, rubin

    Maggie Garrison was very good, i liked it..Maybe giving free is the prob..

    Poll 1 and 2 not taken

    Supreme 60s indrjal size would be nice, curr size good..

    I go for subscription option but read one or two tex only.. plz have separate track for variety if its not selling..

    ReplyDelete

  32. மேகி கேரிசன் - மிகவும் சிறந்த இயல்பான மற்றும் ரசிக்கும் படி வந்த கதை. மேரியின் ஒவ்வொரு செயல்களையும் மிகவும் ரசித்தேன். இந்த வருடத்தில் சிறந்த அறிமுகத்தில் இவரும் ஒருவர். இவரின் அடுத்த கதையை காலம் தாழ்த்தாமல் விரைவில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  33. முத்து 50 ஆண்டு மலர் இரண்டாம் புத்தகம் ஒ.நொ.ஒ.தோ படிக்க நேரம் இல்லாமல் அந்த புத்தகம் வந்த மாதத்தில் இதனை படிக்க முடியாமல் தள்ளிப் போனது. மற்றும் ஒரு காரணம் சில புதிய கதைகள் அதிகம் கால தாமதம் செய்யாமல் சூட்டோடு சூடாக வெளியிட்டால் படிக்கும் ஆர்வம் குறையாமல் இருக்கும்.

    ஒ.நொ.ஒ.தோ முதல் அத்தியாயம் ஆரம்பித்து அதன் பிறகு சில நாட்கள் படிக்க முடியாமல் போனது இப்போது புத்தகத்தை எங்கே வைத்தேன் எனத் தெரியவில்லை. டிசம்பர் விடுமுறையில் அந்த புத்தகத்தை தேடிப் பிடித்து படித்து முடிக்க உள்ளேன்.

    இந்த கதையை படிக்க ஆர்வம் குறைய மற்றும் ஒரு காரணம் வசனங்கள் அதிகமாக இருந்தது.

    ReplyDelete
  34. // Polling பக்கத்தில் பதிவிட்டாலும் சரி, நீங்க பதில் சொன்னா மட்டும் போதுமுங்க !!
    1.இது : மேகி கேரிசன் குறித்த Poll : https://strawpoll.com/polls/ajnENJG79gW

    2.இது கோடை மலர் 2021 பற்றிய Poll : https://strawpoll.com/polls/ajnENJGMAgW
    //

    ஒட்டு போடவில்லை. எனக்கு இவர்கள் பிடித்தே இருந்த காரணத்தால்.

    ReplyDelete
    Replies
    1. கோடை மலர் 2022 பற்றிய கேள்வி என நினைக்கிறேன்.

      Delete
  35. பிடித்த கதைகள்:

    1. தீபாவளி டெக்ஸ் & நிழல்களின் ராஜ்ஜியத்தில்.
    2.கூண்டில் ஓர் கணவன
    3. புதிதாய் ஓர் புயல்.ஸாகோர்.

    சிறப்பான அட்டைப்படம்:
    1. தீபாவளி டெக்ஸ்
    2. மர்மதேசம் கென்யா
    3.வேதாளன் ஸ்பெஷல் -1


    மாடஸ்தி கதை வெற்றி பெற்றதுக்கு காரணம் கதையில் உள்ள சரக்கு ஸாரே! அதன் சைஸ் அல்ல.

    ReplyDelete
    Replies
    1. // மாடஸ்தி கதை வெற்றி பெற்றதுக்கு காரணம் கதையில் உள்ள சரக்கு ஸாரே! அதன் சைஸ் அல்ல //

      +1

      Delete
  36. டாப் 3 கதைகள்:
    1. என் பெயர் டேங்கோ
    2. ஸ்டெர்ன் - மேற்கே இது மெய்யடா!
    3. தாத்தாஸ் - துள்ளுவதோ முதுமை!

    டாப் 3 அட்டைப் படங்கள்:
    1.S70 - வேதாளர் ஸ்பெஷல்-1
    2.மர்ம தேசம் கென்யா- வேரியன்ட் கவர்
    3. ஸாகோர்

    டாப் 3 தருணங்கள்:
    1. கூண்டிலொரு கணவனுடன் சேர்த்து மொத்தமாக ஷைகான் சுற்றினை தமிழில் வாசித்தது.
    2. டேங்கோ #1 படித்தபின் பரவசத்தில் ஆழ்ந்த நேரங்கள்
    3. தோர்கல் சீஸன் -2 போட்டியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் ஆசிரியர் வழங்கிய அன்புப் பரிசு சுஸ்கி விஸ்கியை நண்பர்கள் பெற்றுக்கொண்டு புகைப்படங்களை பகிர்ந்த தருணம்.

    ReplyDelete
  37. மாடஸ்தி - மிகத் தெளிவான சித்திரங்கள், அட்டகாசமான கதையுடன் இணைந்து அந்த சைசில் வந்தது ரொம்பவும் ரசிக்க முடிந்தது.

    ஆனால் S70 வாசிக்க முடியாமல் போனது அந்த மேக்சி சைசினால் மட்டும் என்று கூற முடியவில்லை. புத்தகத்தை எடுத்தால் ஏனோ தொடர்ச்சியாக வாசிக்க இயலாமல் போகிறது. ஒருவித சோம்பலுடன் கலந்த ஆர்வமின்மை ஏனெனத் தெரியவில்லை.

    ReplyDelete
  38. மேகி கேரிசன், கோடை மலர் இரண்டுமே படித்தாயிற்று... எனக்கு பிடித்திருந்தது. எனவே அந்த ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.

    மாதம் 4+ புத்தகங்கள் வேண்டும் சார். சேர்த்து வைச்சாச்சும் படிச்சிக்கறோம்... எண்ணிக்கையை குறைக்க வேண்டாம்.

    ReplyDelete
  39. கேட்டுள்ள மூன்று கேள்விகளும் மிகவும் கடினமானவை. அதிலும் யார் மீது குறை என்று குறிப்பாக சொல்லச் சொல்லுகிறீர்கள். இரண்டாவது கேள்வியில், மூன்று பேரில் யாராவது ஒருவரை கை காட்ட வேண்டி இருக்கிறது.

    என்னைப் பொறுத்த வரையும் கோடை மலர் நன்றாகவே இருந்தது. ஆனால், அதில் என்னென்ன கதைகள் வந்தன என்பதை புத்தகத்தின் அட்டையை பார்த்து தான் சொல்ல வேண்டியிருந்தது. அதனால் நண்பர்கள் மிஸ் செய்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் கோடை மலரில் இடம்பெற்ற ஆல்ஃபா மற்றும் டேங்கோ இருவருமே நன்றாக சிலாகிக்கப்பட்ட நாயகர்கள். ரூபின் அறிமுகம் என்றாலும் கதை நன்றாகவே இருந்த நினைவு. நான் விமர்சனம் எழுதிய நினைவும் கூட உள்ளது.

    கோடை மலர் 2022 சக்சஸ்! 😍😍🍎

    ReplyDelete
  40. டாப் 3 கதைகள்:
    1. தாத்தாஸ் - துள்ளுவதோ முதுமை
    2. ஸ்டெர்ன் - மேற்கே இது மெய்யடா!
    3. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள், கென்யா.

    டாப் 3 அட்டைப் படங்கள்:
    1. தீபாவளி மலர் 2022
    2.மர்ம தேசம் கென்யா
    3. ஸாகோர்

    டாப் 3 தருணங்கள்:
    1. முத்து 50 ஆவது ஆண்டு மலரை கையில் ஏந்திய தருணம். இரண்டு புத்தகங்களும் அருமை.
    2. சுஸ்கி விஸ்கி படித்து மகிழ்ந்த தருணம்.
    3. ரிப் கிர்பி இதழ் கொண்டு வந்த சந்தோசம்.

    ReplyDelete
  41. 70 galil Thangalidam Irundhu Vandha Endha Veliyeedum Rip Kirbi, Vedhalan, Carigan Ellamey
    Pudhidhaga Ullana . Marupadiyum
    Avatrai Veliyida Mudiyadha Sir ?

    ReplyDelete
  42. Editor Sir முகமூடி வீரர் மாயாவி (Phantom) bookல் புறாவை புரு என்று போட்டிருக்கிறது... காலத்திற்கு ஏற்றாற்போல் வாக்கியங்கள் நன்றாக அமைந்தால் வாசகர்களுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. இவை இன்னும் திருத்தப்படாதவை நண்பரே...

      Delete
  43. 1.Top 3
    a) தீபாவளி மலர்
    b) டெட் வுட் டிக்
    c) மொடேஸ்டி பிளைசே

    2.அனைத்துமே
    டாப் தருணம்
    டிசம்பர்

    ReplyDelete
    Replies
    1. ///மொடேஸ்டி பிளைசே///

      ஆஹா! இளவரசிக்கு இந்தப் பெயரும் அழகாகவே இருக்கிறது!

      Delete
  44. 1.top. 3. அட்டை A.மாயனோடு மோதல். B.ரிப் கிர்பி. C.மாடஸ்டி பிளைசி. அப்புறம். ஸாகோர்.வேதாளர்.
    டாப்3. அட்டை. A.மாயனோடு மோதல். B.காரிகன். c.கென்யா. தருணம்
    ஸ்மாசிங் .70'sவெளி வந்த ஒவ்வொரு நிமிடமும். ..மாடஸ்டியின் வெற்றியும்.அதற்குபின்பான
    மாடஸ்டி ரசிகர்களின்உற்சாகமும்

    ReplyDelete
  45. நானெல்லாம் நீங்கள் எந்த புத்தகத்தை போட்டாலும் வாங்கும் அணி. வேலைப்பளு காரணமாக நவம்பர் டிசம்பர் இதழ்களை இன்னும் பண்டலையே உடைக்கவில்லை. அடுத்த வாரத்தில் அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புகிறேன்.

    ReplyDelete
  46. அட்டவனைகள்

    சுஸ்கி விஸ்கி
    ஜாகோர்
    தீபாவளி வித் டெக்ஸ்

    தருணங்கள்

    அட்டவனை 2023 வெளியீடு
    ஈரோடு புத்தக விழா
    ஜாகோர்

    ReplyDelete
  47. ****** நிழல்களின் ராஜ்ஜியத்தில் ******

    * அதுவொரு 'ஒற்றைக்கு ஒற்றை' மோதல்! டெக்ஸ் & கார்ஸனுக்கு எதிரே திடகாத்திரமாய் எதிரிகள் துப்பாக்கிகளை உருவக் காத்திருக்க - டெக்ஸும், கார்ஸனும் நிற்கக்கூடத் திராணியற்றவர்களாய் தள்ளாடியபடியே நிற்கும் பரிதாபக் காட்சியை நாம்மால் கற்பனை செய்ய முடிகிறதா?!!

    *ஆழ்ந்த உறக்கத்தின் நடுவே நம் போர்வைக்குள்ளிருந்து கொத்துக் கொத்தாக விஷப் பாம்புகள் சீறிக்கொண்டு வெளிப்படுவதை கற்பனை செய்ய முடிகிறதா? அது டெக்ஸுக்கும் கார்ஸனுக்கும் உண்மையாகவே நிகழ்ந்துவிட்டால்?!!


    * பல மாதங்களாக சந்தித்திராத தந்தையும், மகனும் எதிரெதிரே வரநேரிடினும் ஒருவரையொருவர் அறிமுகமில்லாதவர்களைப் போல கடந்துபோகும் நிலை ஏற்படுமா? அந்தத் தந்தையும் மகனும் - டெக்ஸும், கிட் வில்லருமாக இருந்துவிட்டால்?!!

    * உலகின் மிக அழகான யுவதியின் முகம் காண நேரிடும் யாரும் நொடியில் வசியமாகிப் போவது இயல்பு தான்! ஆனால் அந்த அழகான யுவதியே ஒரு வசியம் செய்யும் சூனியகாரியாக இருந்துவிட்டால்?!!


    * மேற்கண்டதையெல்லாம் படித்துவிட்டு "இது ஏதோ மாய, மந்திர, காதுல-பூ சமாச்சாரக் கதை போலிருக்குடோய்" என்று நீங்கள் நினைத்துவிட்டால்?!! ஆனால் உண்மை வேறுமாதிரியாக இருந்துவிட்டால்?!!

    படித்துத்தான் பாருங்களேன்!

    10/10

    பி.கு: டெக்ஸ் & குழுவினரின் துப்பாக்கிகள் துருப்பிடிக்காத குறையாகவே பயன்படுத்தப்பட்டிருந்தாலும் 250 பக்கங்களை சுவாரஸ்யமாகவே நகர்த்திச் செல்ல கதாசிரியர் முடிவெடுத்திருந்தால்?!! அதை சாத்தியமாக்கியும் காட்டியிருந்தால்?!!

    ReplyDelete
  48. மேகி கேரிஸன் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. எனவே அந்த ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.

    ReplyDelete
  49. வாட்ஸப்பில் இட்ட கமெண்ட்.

    இவ்வாரம் கார்ட்டூன் பஞ்சாயத்து போலும். போற போக்கில் கார்ட்டூன்கள் காலாவதி ஆகிடும் போலிருக்கே. ☹️

    ஆனால் இவ்வருட இதழ்கள் குறித்து நான் வியாசம் பாடினால் சுஸ்கி & விஸ்கியை தான் முதலிடத்தில் வைப்பேன். 🙂

    ஆனால் என் இத்தனை வருட வாசிப்பில் இதுவரை கார்ட்டூன் என்றும் நார்மல் சித்திர இதழ் என்றும் அடர்வண்ணக் கிராபிக் இதழ் என்றும் பாரபட்சம் பார்த்ததில்லை. என்னைப் பொறுத்தவரை எதுவாக இருந்தாலும் கதைக்கு தான் முக்கியத்துவம். கதை நம்மை ஈர்த்து உள்ளிழுக்க வேண்டும். மற்றும் மொழிபெயர்ப்பு துருத்திக்கொண்டு இல்லாமல் கதையோடு இழையோட வேண்டும் என நினைப்பேன்.

    ReplyDelete
  50. சற்று முன்னர் தான் X9 எதிரிக்கு எதிரி இதழைப் பார்த்தேன். நியூஸ் பிரிண்ட்டில் அச்சு அவ்வளவு தெளிவாக உள்ளது சார்.

    ReplyDelete
  51. அப்புறம் , maxi size is always Welcome.

    ReplyDelete
  52. மற்றும்... இவ்வருட கைப்புள்ள ஜாக், எலியப்பா போன்றவை எனக்கு துளிகூட ரசிக்க வில்லை. (சீனியர் எடிட்டரின் கட்டுரை முழுமை பெறாமல் எலியப்பவோடு நின்றே போனது.. தொடர்ந்து எழுதி முழுமை செய்திருக்கலாம்.) நல்லவேளையாக இவை விலையற்ற இதழ்கள். ஆனால் சோகம் அடுத்த வருடம் கைபுள்ளையை ஏதோ மெயின் ஸ்பெஷல் இதழில் சேர்த்து உள்ளது என்னளவில் ஏற்பில்லை.

    மாறாக இந்த ஜாக்கை தூக்கி விட்டு நம்ம விச்சு & கிச்சுவை கூட வர செய்யலாம். வி&கி யில் இன்னும் வராதவை ஏராளம்.

    ReplyDelete
    Replies
    1. நம்ம விச்சு & கிச்சுவை கூட வர செய்யலாம்.
      Please remember விச்சு & கிச்சு, Sir. Either in Single or color print

      Delete
  53. 2022 வாங்கியது படித்தது - முத்து காமிக்ஸ் ஆண்டு மலர் -2 என்ற கேள்விக்கு உரிய புத்தகம் ஜனவரியில் வந்த ஒன்றை நொடி ஒன்பது தோட்டா என நினைத்து படிக்க வில்லை என பதில் சொல்லி இருந்தேன்.

    இங்கு உள்ள பின்னூட்டங்களை படித்த பின்னர் அது ஆண்டின் நடுவில் வந்த இன்ஸ்பெக்டர் ரூபின் கதை என புரிந்து கொண்டேன். இந்த கதாநாயகியின் கதையை விரும்பிப் படித்தேன் அம்மணியின் தெறிக்கும் ஆக்ஷன் கெத்து அதற்கு வலுசேர்க்கும் விதமான அந்த தெனாவெட்டான வசனங்களை மிகவும் ரசித்தேன். இவர் அடுத்த வருடம் திட்டமிட்டபடி வரவேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் சார்.

    என்னைப் போல் எத்தனை பேர் ஆண்டு மலர் -2 என்பதைப் பார்த்து குழம்பிப் போனார்கள் என தெரியவில்லை.

    ReplyDelete
  54. Top 3 கதைகள்
    மரணத்தின் வாடிவாசல் - Martin Mystere -
    ராபின் கதை
    மேகி கேரிசன்

    Top 3 அட்டைபடங்கள்
    மரணத்தின் வாடிவாசல் - Martin Mystere -
    மர்ம தேசம் கென்யா
    ஸாகோர்


    நடப்பாண்டின் TOP தருணமென்று நீங்கள் கருதுவது எதனையோ ?

    மரணத்தின் வாடிவாசல் - Martin Mystere -

    ReplyDelete
  55. நடப்பாண்டின் டாப் 3 இதழ்கள் பற்றிய கேள்விகள் வரும்போது அந்தப் புத்தகங்களின் பெயர்களையும் கொடுத்து விட்டால் மிக எளிதாக இருக்கும். ஞாபகம் வைத்திருப்பது கடினமல்லவா சார்?

    ReplyDelete
  56. மிகத் தெளிவான ரிசல்ட் அப்போதுதான் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது

    ReplyDelete
  57. இந்த ஸ்ட்ரா போல் கேள்விகளை அடிக்கடி முன் வைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  58. சில நேரங்களில் பத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் வரும்போது 200 பின்னூட்டுங்களுக்கு பின் பதில் சொல்லும் பொழுது ஒவ்வொரு பதிலையும் போட்டு, அடுத்த கேள்வியை பார்க்க பின்னோக்கி பயணம் செய்ய வேண்டி இருக்கிறது.. Very difficult..

    ReplyDelete
  59. காமிக்ஸ் whatsapp குரூப்பில் எங்களையும் இணைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் நண்பர்களே.....

    ReplyDelete
  60. முத்து கோடை மலர் பற்றிய கேள்வியில் பிடிக்காதவர்கள் அல்லது படிக்காதவர்கள்மட்டுமே பதில் அளிக்க வேண்டுமோ?

    ReplyDelete
  61. ராட்சசர்களுக்கு ஏழு கடல் ஏழு மலை தாண்டி உயிர் இருப்பது போல, குண்டு புத்தகங்களில் தான் எங்களுடைய உயிரை வைத்திருக்கிறோம் சார்..

    ReplyDelete
  62. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட இதழ்கள் வெளிவரும் போது விற்பனை அல்லது வாசிப்பு குறைவாக இருந்திருக்கிறது என்பது கதாநாயகர்களுடைய வீரியம் சார்ந்ததாகக் கூட இருக்கலாம்.. டெக்ஸ், லக்கி, டியூராங்கோ, XII ஒரே மாதத்தில் வந்து வாசிப்பு குறைவாக இருந்திருப்பின் இந்த எண்ணம் சரியாக இருந்திருக்கலாமோ?

    ReplyDelete
  63. கறிகாய் நறுக்கித் தருவது ஃபுல் (காமிக்ஸ்)மீல்ஸ் சாப்பிடத் தானே.. சிங்கிள் ஆல்பங்களில் கிக்கே இல்லை சார்.. அது ஸ்னாக்ஸ் சாப்பிடுவது போல,விரல்களிலேயே முடிந்து விடும்.. நெஞ்சோடு தழுவுவது குண்டூஸ்களையே.. (புத்தகம் தான் சார்..)

    ReplyDelete
  64. வெளியீடுகளின் எண்ணிக்கையை குறைத்தால் இந்த தளத்தில் இவ்வளவு தகவல் பரிமாற்றங்களுக்கு அவசியமே இருக்காது.. தளம் செயலற்றுப் போய்விடும் நிலையும் உள்ளது... சிற்றுண்டி விடுதிகளில் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும் அல்லவா..

    ReplyDelete
    Replies
    1. சார் ...புக்ஸுக்காக துவங்கியது தானே தளம் ?! Not the other way around...!

      Delete
  65. உங்கள் கேள்விகளுக்கு நண்பர்களின் பதிலில் நிறைய RECENCY BIAS இருப்பதைப் பார்க்க முடிகிறது சார்...

    ReplyDelete
  66. என்னை பொறுத்த வரையில் எல்லாமே TOP தான் SIR...1ம் இல்ல,10ம் இல்ல...4தடவை படிச்சதுன்னா... அது, காலனின் காகிதம்....

    ReplyDelete
  67. //நிழல்களின் ராஜ்யத்தில்//இளவரசரின் வித்யாசமான விமர்சனம் அருமை .புத்தகத்தை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது . கரூர் ராஜ சேகரன்.

    ReplyDelete
  68. ////நடப்பாண்டின் TOP தருணமென்று நீங்கள் கருதுவது எதனையோ ?////

    இதென்ன கேள்வி? ஈரோட்டில் இவ்வாண்டு நடைபெற்ற 'முத்து பொன்விழா ஆண்டு - வாசகர் சந்திப்பு' தான்! 200க்கும் மேற்பட்ட நண்பர்களின் பலத்த கரகோஷத்தினூடே சீனியர் எடிட்டர் ஐயா அவர்கள் 'பொன்விழா கிளாஸிக் ஹீரோ ஸ்பெஷல்' குண்டுவை வெளியிட, அதை நமது கருணையானந்தம் ஐயா பெற்றுக்கொண்ட தருணத்தையும், சீனியருக்கு பொன்னாடை போர்த்த எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பின்போது அவரது கரங்களைப் பற்றி என் கண்களில் ஒற்றிக் கொண்ட ஒப்பற்ற தருணத்தையும் எப்படி மறப்பேன் - இன்னும் ஒரு யுகத்திற்காவது?!!

    ReplyDelete
    Replies
    1. ஒரு ரவுண்டு பன்னுக்கோசரம் இன்னலாம் ரீல் விட வேண்டிக்கீது ?

      எங்கேயோ ஒரு இயவரசரின் மைண்ட் வாய்ஸ் !

      Delete
  69. சார்.. வழக்கம்போல இளவரசி புத்தகத்தின் மை வாசனையையும் 'ம்..ஹா' பண்ணிட்டு, அட்டைப்படத்தை கன்னத்துல வச்சு தேய்ச்சுக்கிட்டிருந்தேன்.. வீட்டம்மா பாத்துட்டாங்க!

    அதன்பிறகு வானம் எனக்காக அழுதது!

    ReplyDelete
    Replies
    1. கூடவே இந்த உலகம் சிரித்தது என்பதையும் சேத்திக்குங்க.

      Delete
    2. அந்த வானம் அழுதாத்தான்
      இந்த பூமியே சிரிக்கும்..
      வானம் போல் சில பேர்
      சொந்த வாழ்க்கையும் இருக்கும்...
      உணர்ந்தேன் நான்!!

      (யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராமயா போய்டும்?
      வரும்போது நாங்களும் சிரிப்போம்..
      சிரிப்பா சிரிப்போம்!)

      Delete
  70. @Erode Vijay..😃😍

    மாடஸ்டிக்கு *முத்தா*❤ கொடுக்கறதை பாத்த உடனே இடிமின்னல் ..⚡

    அப்புறம்தாங்க.. ஈரோட்டுல வானம் அழுதது..
    கன்னத்துல கை வச்சு தேச்சது..😃😀

    இதெல்லாம் நடந்தது..😌

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கென்னங்க..😍😘 நீங்கள்லாம் வித்தை தெரிஞ்சவங்க..😃😀 யார் அட்டாக் பண்ண வந்தாலும் ஜம்ப் பண்ணியே தப்பிச்சுடுவீங்க!! 😍😘😃😀

      Delete
    2. @Erode Vijay..

      நாங்கெல்லாம் மரத்துக்கு மரம் தாவி காட்டுக்குள்ள போறதே இந்த மாடஸ்டி மாதிரி Girls படம்போட்ட புக் படிக்கறதுக்குதாங்க..😃😃😃

      Delete
    3. 'ஜம்பிங் ஸ்டார்' ரசிகர் மன்றத்துக்கு அதுக்குள்ள எப்படி இத்தனை ஆளுங்க சேர்ந்தாங்கன்றது இப்பத்தான் புரியுது!

      ஹூம்ம்ம்ப்ப்... (ஹிஹி நானும் ஒருவாட்டி ஜம்ப் பண்ணிப் பார்த்தேன்!)

      Delete
    4. ///ஹூம்ம்ம்ப்ப்... (ஹிஹி நானும் ஒருவாட்டி ஜம்ப் பண்ணிப் பார்த்தேன்!)///

      அடடே... நாங்க பாக்காம போயிட்டோமே...!!!

      Delete
  71. Dear Editor Sir,

    1. TOP 3 இதழ்கள்

    1. ராஜா ராணி ஜாக்கி
    2. மர்ம தேசம் கென்யா
    3. உளவும் கற்று மற

    2. TOP 3 அட்டைப்படங்கள்

    1. நிழல்களின் ராஜ்ஜியத்தில் & கென்யா
    2. சிரித்துச் சாக வேண்டும் & சொர்க்கத்தில் சாத்தான்கள்
    3. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்

    3. TOP3 தருணம்

    1. Suske Whiske Release Dates
    2. S60 Release Announcements
    3. S70 Success Moments
    4. 2023 Gundu Books Announcements…

    இது SUPREME '60s சைஸ் மாற்றம் குறித்த Poll
    Maxi or Regular Size … Choice is Yours Sir. But we want all S60 (5) Books in One same Format to keep S60 comfortably/Safely. Difficult to keep if size differs.

    Thanks.

    ReplyDelete
  72. டாப் 3 இதழ்கள்
    1.சுஸ்கி விஸ்கி
    2.வெள்ளை செவ்விந்தியன்
    3.மேற்கே இது மெய்யா

    டாப் 3
    அட்டைப்படங்கள்
    1.புயலில் ஒரு புதையல் வேட்டை
    2.தீபாவளி டெக்ஸ்
    3.காரிகன் ஸ்பெஷல்

    டாப் 3 தருணங்கள்
    1.2023 அட்டவணை வெளியான தருணம்
    2.சுஸ்கி விஸ்கி கையிலேந்திய தருணம்
    3.தீபாவளி மலர்களை கையிலேந்தியது

    ReplyDelete
  73. Top 3 இதழ்கள்-என்னளவில் 1) ஒற்றை நொடி ஒன்பது தோட்டா 2)தீபாவளி மலர் 3) ஸாகோர்

    TOP 3 அட்டை படம் 1) கென்யா 2) டாங்கோ 3) ராஜா ராணி ஜாக்கி

    TOP தருணம் - Fifty forever Special + தாத்தாஸ்+S70

    ReplyDelete
  74. Top 3 கதைகள்
    மரணத்தின் வாடிவாசல் - Martin Mystere
    Tex- Chicagovin Samraat
    Chuskie Whiskie (been a while since I laughed like this)

    Top 3 அட்டைபடங்கள்
    Phantom Supreme 70s
    KENYA - both covers (original and variant)
    ZAGOR

    நடப்பாண்டின் TOP தருணமென்று நீங்கள் கருதுவது எதனையோ ?

    For some strange reason, release of 2023 books list !

    ReplyDelete
  75. Smashing 70 நான்கு இதழ்களும் அருமை... Maxi size கண்டிப்பாக problem தான்... அடுத்த பக்கத்தை புரட்டும் போது, பல முக்கிய காட்சிகள் யதேச்சையாக கண்ணில் பட்டு விடுகின்றன... சுவாரசியம் சற்று குறைகிறது.
    எனவே normal size இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்:)

    ReplyDelete
  76. Top 3 இதழ்கள்:

    1.வேதாளர்
    2.ஆல்ஃபா (1st story)
    3. கென்யா

    ReplyDelete
  77. Top 3 அட்டை படங்கள்


    1. தீபாவளி மலர்
    2. ஒ. நொ.ஒ.தொட்டா
    3. காரிகன்

    ReplyDelete
  78. மாடஸ்காவும் நானும் :-

    ஆர்வமா எடுத்து படிச்சதெல்லாம் உண்மைதான்...

    கார்வின்.. நீ கோபத்தில் கொந்தளித்துப் போய் இருப்பது தெரிகிறது இளவரசி.. ன்னு வசனம் பேசினாரு.. மாடஸ்கா முகத்தைப் பாத்தா சிரிச்சா மாதிரி இருந்துச்சி..

    சரி.. எதுக்கு குழப்பம்.. கொஞ்ச நாள் கழிச்சி படிச்சிக்குவோம்னு எடுத்து வெச்சிட்டேன்..!

    ReplyDelete
  79. Top 3 தருணங்கள்

    1. Smashing 70s entry
    2. கோடை மலர்
    3.தீபாவளி மலர் 2022

    ReplyDelete
  80. இன்னும் சில பல புத்தகங்கள் நுகரப்படாமலேயே இருக்கின்றன...

    இருப்பினும் வாசித்த வரையிலும்....

    நடப்பாண்டின் TOP 3 இதழ்களென்று தேர்வு செய்வதாயின் உங்களின் choices எவையோ - ப்ளீஸ் ?

    1. டெக்ஸ் தீபாவளி மலர்
    2. சுஸ்கி விஸ்கி
    3. முத்து கோடைமலர் & மர்மதேசம் கென்யா

    நடப்பாண்டின் TOP 3 அட்டைப்படங்கள் எனில்..?

    1. சுஸ்கி விஸ்கி
    2. டெக்ஸ் தீபாவளி மலர்
    3. மர்மதேசம் கென்யா

    நடப்பாண்டின் TOP தருணமென்று நீங்கள் கருதுவது எதனையோ ?

    சுஸ்கி விஸ்கியை கையில் ஏந்திய தருணம்.!

    ReplyDelete
  81. ஒரு மாயனோடு மோதல் :

    முதல் பக்கத்தில் மிஸிஸிபி ஆற்றில் இருந்து நோக்கும் கோணத்தில் செயின்ட் லூயியின் பிரம்மாண்ட கட்டிடங்களை வரைந்திருக்கும் விதத்திலேயே நம்மை கைகால்களை கட்டித் தரதரவென்று இழு(ஈர்)த்துக்கொண்டு போய் கதைக்குள் ஒன்ற வைத்துவிடுகிறார்கள்..!

    தொடர்ந்து வரலாற்று மாந்தர்கள் லிங்கன் மற்றும் டக்ளஸ் ஆகியோரை பாத்திரங்களாகக்கொண்டு.. அதனுடன் லிங்கன் மீதான கொலைமுயற்சியை டெக்ஸ் அண்ட் பிங்கர்ட்டன் ஏஜென்சியினர் சேர்ந்து முறியடிப்பதாக கற்பனையை கோர்த்திருக்கிறார்கள்..!

    பரபரப்பான ஆக்சன்களும் பளபளப்பான சித்திரங்களும் பட்டையைக் கிளப்புகின்றன..!

    சதிக்கும்பலில் ஊடுருவியிருந்த டெக்ஸ் ஊடுருவல் பேர்வழி என்று தெரிந்த பின்னர் க்வின் கும்பலிடம் தப்பிக்கும் விதமும்.. தொடர்ந்து கேட்டி வார்னேவை சொகுசு ஓட்டலில் சந்திக்க எடுக்கும் நடவடிக்கைகளும்... லிங்கனை சர்ச்சில் நடக்கவிருந்த கொலைமுயற்சியில் இருந்து காப்பாற்றி.. படகு மூலம் இல்லினாய்ஸ்க்கு அழைத்துவருவதும்... தொடர்ந்து கொலைகாரர்கள் சூழ்ந்திருக்கும் வேளையிலும் பாதுகாப்பாக சிகாகோவுக்கு ட்ரெயினில் ஏற்றி கூட்டிச் செல்வதாகட்டும்.. இளம் டெக்ஸின் அதகளம் கதை முழுவதும் பின்னியெடுக்கிறது.!
    கேட்டி வார்னேவையும் சும்மா சொல்லக்கூடாது...!

    கதையில் ஒரேஒரு உறுத்தல் என்னவெனில்.... மெஃபிஸ்டோ..! செம்ம விறுவிறுப்பான கதையோட்டத்திற்கு நடுவே மாண்ட்ரேக் வேலைகள் செய்யும் மெஃபிஸ்டோவை (என்னளவில்) ரசிக்க இயலவில்லை.! (போனாப்போகுது.. மெஃபிஸ்டோவின் தங்கை லில்லி வேணா இருந்துட்டு போகட்டும்..!)

    அட்டகாசமான வாசிப்பு அனுபவம்..!

    ReplyDelete
  82. Top-3

    1.முத்து கோடை மலர் ( ரூபின்)
    2. அழகிய ஆபத்து ( சிஸ்கோ)
    3. ரீலா...ரியலா...? ( மேக் & ஜாக்)

    ReplyDelete
  83. Top-3 அட்டை படங்கள்
    1. காலனோடு கூட்டனி ( சோடா)
    2.உஷார்...அழகிய ஆபத்து..! (சிஸ்கோ)
    3.ரீலா ...? ரியலா ..? (மேக்& ஜாக்)

    ReplyDelete
  84. சிறந்த தருணங்கள்.
    1. முத்து கோடை மலர்
    2.டெக்ஸ் தீபாவளி மலர்
    3.ஜாகோர்

    ReplyDelete
  85. தி கோல்டன் ஹீரோஸ் ஸ்பெஷல் :
    இதுல என்ன கதை தா வந்துச்சு.
    யாராவது ஞாபக படுத்துங்க.
    படிச்சேனா படிக்கலாயான்னு தெரியலை.

    ReplyDelete
    Replies
    1. Supplementary thin book with Muthu 50 last January - I think there was a Spider, Mayavi and some other detective story !

      Delete
    2. தகவலுக்கு நன்றி தோழரே. நான் படித்த மாதிரி ஞாபகம் இல்லை. கிறிஸ்மஸ் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற பின் உறுதி செய்ய வேண்டும். நான் சந்தாவில் இருப்பதால், அது வந்திருக்க வேண்டும். மதுரை சென்ற பின்னே தான் விவரம் தெரிய வரும்.

      Delete
  86. 1. டெக்ஸ் தீபாவளி மலர்
    2. ஸ்டெர்ன் - மேற்கே இது மெய்யடா!
    3. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள், கென்யா.

    ReplyDelete
  87. டாப் த்ரீ....
    படித்த கதைகள் பாதிதான்...அதிலிருந்து...அனைத்துமே டாப்னாலும்....
    1.முத்து ஆண்டு மலர்
    2.கென்யா
    3.சாகோர்...டெக்ஸ்

    ReplyDelete
  88. சூப்பர் தருணம்....
    1.அடுத்த மாத இரவண்ண கொலைப் படை அறிவிப்பு
    2.வண்ணத்ல உயிரைக் தேடி உற்சாகம்
    3.வண்ண சுஸ்கி விஸ்கி கிச்சென பொக்கிஷமாய் அழகாயற்புதமாய்

    ReplyDelete
  89. சூப்பர் 60 அந்தப் பெரிய சைசே அட்டகாசம்....
    நீங்க மாத்தி மாடஸ்டி போல தர யோசிச்சா அதற்கு பாங்காய் பொருந்தும் சார்லி....காரிகன் பக்கங்களால் குண்டாய் ஒரு புத்தகத்தை வெள்ளோட்டம் விட்டு பாத்து முடிவு செய்வோம்....சில நண்பர்கள் நீண்ட நாள் கோரிக்கையான பாக்கெட் சைசு கூட அழகாய் இருக்கலாம்...
    ஒரே சைசும் போரடிக்காமல்....ஆகவே சைசு மாறி மாறி வந்தாலுமழகே

    ReplyDelete
  90. நடப்பாண்டின் TOP 3 இதழ்களென்று தேர்வு செய்வதாயின் உங்களின் choices எவையோ - ப்ளீஸ் ?

    1. FFS1
    2. சுஸ்கி விஸ்கி
    3. மேற்கே இது மெய்யடா!
    (கென்யா, சிவந்த மண்&கூண்டிலொரு கணவன்....டாப்6ல)

    நடப்பாண்டின் TOP 3 அட்டைப்படங்கள் எனில்..?

    1. டெக்ஸ் தீபாவளி மலர்
    2. சுஸ்கி விஸ்கி
    3. கென்யா

    நடப்பாண்டின் TOP தருணமென்று நீங்கள் கருதுவது எதனையோ ?

    FFS1-நம்ம பயணத்தின் அடுத்த பாதையை காட்டிய இதழ் இது.

    சுஸ்கி விஸ்கி கையில் ஏந்திய தருணம்--கடந்த காலத்தில் மீண்டும் ஐ மீன் நான் இளமையில் தவறவிட்ட 1980களில் ஓரு காலப்பயணம் சென்றதை உணர வைத்தது.

    டெட்வுட் டிக்-லயனின் பெஞ் மார்க் உயர்வதை கண்டு உவகை அடைந்த பொழுது... முதல் முறையாக ஐரோப்பாவுக்கு இணையான முயற்சி!

    2023-அட்டவணை... மிரளவைக்கும் படைப்புகள் ரவுண்ட் கட்டி காத்துள்ளன! எங்கே? எப்போது?-- வாயிலாக மீண்டும் பழைய காலத்தைக் காணலாம் என்ற எண்ணமே சிலீரிட வைக்கிறது!

    மீண்டும் புத்தக விழாக்களில் ஆருயிர் நட்புகளை சந்திக்க இயன்றது...
    ஓவரால் தி பெஸ்ட் ஆஃப் காமிக்ஸ் வேல்டு இயர்களில் இதுவும் உண்டு!

    ReplyDelete
    Replies
    1. ஹைர ஹைர ஹைரோப்பா ...ஹைரோப்பா.....முடியலை. இன்னும் ஒரு புக் தானே. படிங்க...ரசிங்க... எனக்கென்ன கவலை...பரண் இருக்கவே இருக்கு. அப்புறம் என்ன செய்வீங்க....

      Delete
  91. டிசம்பர் இதழ்கள்

    1. மாடஸ்டி - சி.சாக வேண்டும்

    நைஸ்! 9/10

    2. நி.ராஜ்யத்தில் ( டெக்ஸ்)

    அமேஸிங்! 9.5/10

    3. உ.நிறம் கறுப்பல்ல( டெட்வுட் டிக்)

    டிலைட்ஃபுலி ஷாக்கிங் ! 9/10

    4. வரலாற்றின் வாடிவாசல் ( மார்ட்டின்)

    ஸாரி! மிடில !!!


    ReplyDelete
  92. சென்னை புத்தகத் திருவிழா தேதி அறிவிப்பு வந்து விட்டது போல சார்,ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 22 வரை போல...

    ReplyDelete
  93. Polling

    கேள்வி 1 & 2 நெகட்டிவ் வைப் உள்ளது.
    நியூட்ரலாக இல்லை.எனவே பதில் அளிக்கவில்லை.

    தனிப்பட்ட முறையில் மேகி வசீகரிக்கும்
    இதழ்.

    ReplyDelete
    Replies
    1. இதுவே சரி தோழரே. எல்லாமே டாப்புதாங்க. எனக்கு புடிக்காதது, சேலம் டெக்ஸ்க்கு புடிச்சுருக்கு. என்ன சொல்ல. நட்புதாங்க முக்கியம். அவருக்காக வுட்டு கொடுக்க மாட்டேனா என்ன....

      Delete
  94. சிக் பில்லின் விண்வெளியில் ஒரு எலி பதிவு கிடைக்குமா?

    ReplyDelete
  95. //நடப்பாண்டின் TOP 3 இதழ்கள்//
    1. ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்
    2. கோல்டன் ஹீரோஸ் ஸ்பெசல்
    3. a) ராஜா ராணி ஜாக்கி
    b) மேற்கே இது மெய்யடா
    c) மாயனோடு ஒரு மோதல்

    ReplyDelete
    Replies
    1. டாப் 3 அட்டைப்படங்கள்
      1. காரிகன் ஸ்பெசல்
      2. ரிப்கிர்பி ஸ்பெசல்
      3. போர்முனையில் தேவதைகள்

      Delete
    2. //நடப்பாண்டின் TOP தருணம்//
      Muthu கோல்டன் ஹீரோஸ் ஸ்பெசல் மற்றும் சுஸ்கி விஸ்கி வெளியான தருணம்

      Delete
    3. ஐயா நன்றி, எனது பார்வையில் டாப் 3 சொன்னேன்...

      Delete
  96. 2022 டாப் 3
    1. துள்ளுவதோ முதுமை

    2. ரா.ரா. ஜாக்கி

    3. நிழல்களின் ராஜ்யத்தில்


    ReplyDelete
  97. டாப் 3 கவர்ஸ் 2022

    1. கென்யா

    2. ரா.ரா. ஜாக்கி

    3. ஒரு வெள்ளை செவ்விந்தியன்

    ReplyDelete
  98. டாப் தருணம் 2022

    காவல்துறை விழாவுக்காக " பெருமதிப்பிலான இதழ்கள்" விற்ற சேதி.

    ReplyDelete
    Replies
    1. +1 எனக்கும் இதுவே இந்த ஆண்டின் மிகச்சிறந்த தருணம்.

      Delete
  99. மேகி கேரிஸன் கதை பற்றிய பழைய விமர்சனம் :

    ***** செய்வன தில்லாய் செய் ***** (வேதாளர் ஸ்பெஷலுடன் இலவச இணைப்பு) *****

    இலவச இதழ் என்பதாலும், முதல் புரட்டலில் உட்பக்க சித்திரங்கள் சற்று சுமாராகத் தோன்றியதாலும் கொஞ்சம் அண்டர் எஸ்டிமேட் பண்ணிவிட்டேன் என்று நினைக்கிறேன். பிறகு படிக்கத் தொடங்கிய சில கணங்களிலேயே 'இது ஜாலியான வேற லெவல்' என்பதைப் புரிந்துகொண்டுவிட்டேன். கதை எதை நோக்கி நகர்கிறது என்ற சந்தேகம் நடுநடுவே லேசாக எட்டிப்பார்த்தாலும், 'லேடி டிடெக்டிவ்' மேகி கேரிஸனின் ரொம்பவே இயல்பான, ரசிக்கும்படியான வசனங்கள் ஒரு நெருங்கிய நண்பனைப் போல கையைப் பிடித்து இழுத்துச் சென்று வழிநெடுக கிச்சுகிச்சு மூட்டியபடியே பயணிக்க வைத்தது!

    பக்கத்துக்குப் பக்கம் நையாண்டியான, நகைச்சுவை இழையோடும் வசனங்கள் மிகமிகமிக அதிக கவனக்கோரல்களைப் பெறுகின்றன! முதல் பக்கத்தின் முதல் வரியில் "வேலைக்குப் புறப்படற முதல் நாளில்தானா வயிறு சரியில்லாத யானையாட்டம் வானத்துக்கு ஊற்றித்தள்ளத் தோன்றணும்?" என்ற வசனமே கற்பனையைக் கிளறிச் சிரிப்பு மூட்டுகிறதென்றால், "பெரிசு! மணி 12ஐ தாண்டிடுச்சு.. பர்த்டே பார்ட்டி முடிஞ்சது! வீட்டிலே போய் பாட்டிம்மாவைக் கட்டிக்கோ!" வரியைப் படித்தபோது பத்து நிமிடங்களுக்கு விடாமல் சிரித்துக் குலுங்கினேன்!
    "ரைட்டு! ராஜகுமாரன்களா.. உங்களை வேட்டையாட ரெடியாகிட்டேன். எல்லாப் பயல்களும் இந்தப் பப்புக்கே வந்துப்புட்டா என் வேலை சுலபமாகிடும்!" டயலாக்கை படித்தபோதும் அப்படியே! ஒரு இளம் பெண்ணின் மனவோட்டத்தை எத்தனை இயல்பாய், நகைச்சுவையோடு வெளிப்படுத்த முடிந்திருக்கிறது!!!
    "குப்பை கொட்ட வேண்டிய இடத்திலே குப்பையாச்சும் பொறுக்கலாம் முதல்லே!"- எத்தனை ரசணையான மொழிமாற்றம்!!! அபாரம் எடிட்டர் சார்!! ரொம்பவே ரசிச்சு செஞ்சுருக்கீங்க!!

    மேற்கண்ட வசனங்கள் மட்டுமல்லாது, இதுபோல வசனங்கள் வழிநெடுகவே - பக்கத்துக்குப் பக்கம்!!

    முதல் கதையிலேயே பச்சக் என்று ஒட்டிக்கொண்டுவிட்டாள் மேகி!!

    ஐ லவ் மேகி!!

    10/10

    ReplyDelete
    Replies
    1. அந்த கடைசி வரி நூடுல்சுக்குத்தானே?

      Delete
    2. நூடுல்சுக்கும்தான்! ஹிஹி!! ;)

      Delete
  100. இன்று இப்பொழுதைய இந்த நிமிடம் திடீர் இன்ப அதிர்ச்சி . எதிர்பார்க்கவே இல்லை.. ...திடீர் தகவல் வந்தவுடன் மனம் நெகிழ்ந்தும் கண்கள் கலங்கியும் போனது... வேறு வார்த்தைகள் எழுதவும் வரிகள் மறுக்கிறது.

    மனம் கனிந்த நன்றிகள் பொருளாளர் செனாஅனாஜீ ..மறக்க முடியாத அன்பு பரிசு..


    ( யோவ்..மேச்சேரி அட்டு அய்யா தங்களுக்கும் மிக்க நன்றி அய்யா..எதிர்பார்க்கவே இல்லை..)

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் தலைவரே மிக்க மகிழ்ச்சி. செனா அனா அவர்களுக்கும் நன்றிகள்.

      Delete
    2. வாழ்த்துகள் தல &செனா அனா.

      என் மச்சான் இப்படி உருப்படியான வேலையெல்லாம் செய்யறது சந்தோசமாக்கீதுப்பா.

      Delete
    3. வாழ்த்துகள் தலீவரே!
      சமீபத்திய சில இன்னல்களுக்கு நடுவிலும் இதுபோன்ற உதவிகளைச் செய்ய முன்வந்த செனா அனாவின் நல்லமனம் போற்றுதலுக்குரியது!

      இன்னும் சில உதவிகளும் இன்னும் ஓரிரு நண்பர்களால் ஆங்காங்கே செய்யப் பட்டிருக்கிறது. வருடம் தவறாமல் அதைச் செய்துவரும் நல்லுள்ளங்களுக்கு புனித மனிடோவின் ஆசிகள் சென்று சேரட்டும்!

      Delete
  101. சார், வாக்களிக்கப்பட்ட "இரும்புக்கை மாயாவி" ரிப்ளிகேட் முத்து பொன்விழா ஆண்டிற்குள் வெளிவருமா?

    ReplyDelete
    Replies
    1. ப்பா!! என்னா ஒரு மெமரி பவர்!!!

      Delete
  102. Any chance for a quick year end special for Muthu 50 sir? :-) Oru Mayavi special or a Mandrake !!

    ReplyDelete
    Replies
    1. ராக் ஜி.. நான் உங்களைப் பத்தி வெளிப்படையா எதையும் சொல்லலைன்றதை நீங்க கவனிச்சீங்களா?!!
      ரகசியத்தைக் காப்பாத்தறதுல இந்த ஈவியை அடிச்சுக்க ஆளே கிடையாதாக்கும்!

      Delete