நன்பர்களே,
வணக்கம். டிசம்பர் ஆல்பங்களின் பணிகளெல்லாம் நிறைவுற்றிருக்க, FFS இதழ்களின் finishing touches-ல் செம பிசி - கடந்த வாரமாய் ! கொட்டித் தள்ளும் மழை டிசம்பரிலும் இது போல ஏதேனும் அதிரடிகளைக் காட்டும் உத்தேசத்தில் இருப்பின், நாம் முன்ஜாக்கிரதையாய் முந்திக் கொண்டாகணும் அல்லவா ? So தட தடத்து வருகிறோம் ஒன்றல்ல, இரண்டல்ல,மூன்றல்ல - நான்கு இதழ்களின் பணிகளுடன் !
And FFS புக்களுக்கான அட்டைப்படங்களுமே நிறையவே trial & error சகிதம் ஓட்டமெடுத்து வர, நமது டிசைனர்கள் அத்தினி பேரும் - வானிலை அறிக்கையைக் கேட்கும் சென்னைவாசிகளைப் போல தெறித்தடித்து ஓடி வருகின்றனர் ! ஜனவரியில் இதழ்(கள்) வெளியான பின்னே, அவற்றின் making பற்றி எழுதிடும் வேளையில் - இன்றைய இந்த அட்டைப்படக் கூத்துக்களை நிச்சயம் பகிர்ந்திடுவேன் ! And அந்தப் பதிவுக்கு பெயர் கூட ரெடி - "சலோ ஜார்கண்ட் !!" என்று ! எது எப்படியோ - ஒரு மைல்கல் தருணத்தின் பொருட்டு அரங்கேறி வரும் இந்த அட்ராசிட்டிக்கள் - உங்களின் புத்தாண்டின் பொழுதுகளை 'பளிச்' ஆக்கிடும் பட்சத்தில் - நிச்சயம் ஒட்டு மொத்தமாய் மகிழ்வோம் ! Fingers crossed - with a prayer on the lips too !!
டிசம்பரின் இதழ்கள் நவம்பர் 29-ல் கிளம்பிடுமா ? அல்லது 30-லா ? என்பது வர்ண பகவானின் கைகளில் உள்ளதால் - இப்போதைக்கு நான் வாயை விடத் தயாரில்லை ! 3 புக்ஸ் ஏற்கனவே பைண்டிங் முடிந்து காத்திருக்க, 320 பக்க குண்டுப்பையனான "இளம் டெக்ஸ்" தான் ரெடியாகிடணும் ! படிக்கும் போது 'தல' ரம்யம் தருகிறார் தான் - ஆனால் பணியாற்றும் போதோ, அந்த sheer number of pages பெண்டைக் கழற்றிட தவறுவதே இல்லை ! அதிலும் இம்முறை 62 பக்கங்கள் வீதம் 5 அத்தியாயங்கள் எனும் போது - பக்கங்களும், பணியும் முடிஞ்சா பாடில்லை ! ஒரிஜினல் வரிசையின்படி - நாமிப்போது வாசிக்கக் காத்துள்ளவை ஆல்பம்ஸ் 5 to 9 வரையிலான இதழ்களை ! 'சின்னவருக்கு' இன்னமும் ஒரு பின்னணி ; ஒரு கள உருவாக்கல் நிலையிலேயே நாமிருக்கிறோம் என்பதால் - பெரியவர் பாணியில், சலூனுக்குள் புகுந்தோமா ? முரட்டு பீஸ்களாய்ப் பார்த்து மூக்கோடேயே குத்தினோமா ? என்ற பாணிகள் இன்னமும் இங்கு உட்புகுந்திருக்கவில்லை ! Maybe பெருசுக்கும், சிறுசுக்கும் மத்தியினில் கதாசிரியர் போசெல்லி அவர்கள் காட்ட விரும்பிடும் நூலிழை வேற்றுமைகளின் ஒரு அங்கமாகக் கூட இது இருந்திடலாம் ! எனது ஆதங்கம் என்னவெனில், முரட்டு & மொக்க பீஸ்களுக்கு சுளுக்கெடுக்கும் படலங்கள் அரங்கேறிடும் வேளைகளில் வசனம் அதிகம் அவசியமாகிடாதென்பதே ! தெறிக்க விடும் பன்ச் ஏதாச்சும் சிக்கினாலே ஒரு எட்டுப்பத்துப் பக்கங்களை ஜிலோவென்று தாண்டி விட இயலும் எனக்கு ! ஆனால் இங்கே still very much a hero in progress என்பதால் டயலாக்ஸ் ஏகம் ! So நமது தமிழாசிரியர் அவர்கள் proof reading செய்து தர, நான் இறுதி எடிட்டிங்கை நிறைவுறச் செய்திட - என ஒன்றிரண்டு நாட்கள் கூடுதலாய் இழுத்து விட்டது ! இதற்கு முந்தைய அத்தனை ஆல்பங்களிலும் 'சின்னவர்' அடித்துள்ள சூப்பர் ஹிட்ஸ், இம்முறையும் தொடருமென்ற நம்பிக்கை எனக்குள் கணிசம் ! அடுத்த சில நாட்களில் பார்த்து விடலாமே !!
ரைட்டு...டிசம்பர் பிரிவியூஸ் ஆச்சு ; அவற்றைப் பற்றி மேலோட்டமாய்ப் பேசவும் செய்ஞ்சாச்சு ; இணைத்தடத்தில் FFS கதைகள் பற்றி சலசலக்கவும் செஞ்சாச்சு ! இந்தப் பதிவில் what next ? என்று யோசித்தேன் ! போன வாரத்து பாணியினில் அடுத்த புது வரவை அறிமுகம் செய்து வைக்கலாம் என்று தோன்றியது ! 'அதுவும் செர்தான் ; டேங்கோ தம்பியினை சபைக்கு அறிமுகம் செய்து வைக்கலாம் !' என்று தீர்மானித்த போது தான், இனிப்பு லட்டு, புளிப்பு லட்டு என்று உங்களை உசுப்பி விட்ட ஞாபகம் எழுந்தது ! மகளின் திருமணத்துக்கு பத்திரிகை தர வந்த நண்பன், கையோடு கொண்டு வந்திருந்த ஒரு டப்பி லட்டுக்கள் அதற்கு உதவியும் இருக்கலாம் தான் ! So ஒரு இனிப்பு லட்டு first ; டேங்கோ அறிமுகம் next !
ஒரு ருசியானது - தித்திப்பா ? அல்லது திகட்டலா ? என்பது அவரவர் நாவிற்கேற்ப மாறிடும் என்பதைப் புரிந்திடுவது பெரும் கஷ்டமே அல்ல தான் ; so தொடரவுள்ள அறிவிப்பானது அவரவரது ரசனைகளுக்கேற்பவே, impact ஏற்படுத்திடும் என்பதை நான் நினைவில் இருத்தியாச்சு ! "திகட்டுது" அணியினராய் யாரெல்லாம் இருப்பர் ? என்பதைக் கூட யூகமும் பண்ணியாச்சு ! And அவர்களுக்கு ஒற்றை வேண்டுகோள் மாத்திரமே : ரொம்ப காலமாய் ; ரொம்ப ரொம்ப காலமாய் நண்பர்களின் ஒரு அணி (சிறுசோ - பெருசோ ; doesnt really make a difference !!) கோரி வருவதை நடைமுறை செய்திடும் வாய்ப்பாய் இதனைப் பார்த்துள்ளேன் ; so உங்களுக்குத் திகட்டலாய்த் தென்பட்டாலுமே, அந்த நண்பர்களின் மகிழ்வுக்கோசரம் சற்றே பொறுமை காத்திடக் கோரிடுவேன் ப்ளீஸ் ! "ஷப்பா....பீடிகையே கண்ணை கட்டுதே....மிடிலே !!" என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் அடுத்து ஏதாச்சும் bad words பக்கமாய்த் தாவிடும் முன்பாய் மேட்டருக்கு வந்து விடட்டுமா ?
இமய மலையையே ABT பார்சல் சர்வீஸில் அடைத்து உங்களிடம் ஒப்படைத்தால் கூட, "ஹ்ம்ம்...பரவால்லே....ஆனா நான் ஒன்பதாப்பு படிக்கிறச்சே பரணிலே குந்தியபடிக்கே பஜ்ஜி சாப்டுட்டே படிச்ச அந்த கதை மெரி வருமா ?" என்று நண்பர்கள் அவ்வப்போது நோஸ்டால்ஜியா பயணங்களில் கிளம்பிடுவதில் இரகசியங்கள் கிடையாதே ? ஆனால் கொஞ்ச காலத்திற்குள் அவற்றுள் பெரும்பான்மை done & dusted என்பேன் !
- "இரத்தப் படலம்" - துவையோ, துவையென்று துவைத்துத் தொங்கப் போட்டாச்சு !
- "மும்மூர்த்திகள்" - அதே நிலவரமே !! புத்தக விழா audience நீங்கலாய் இவர்களுக்கென கொடிபிடிக்க நமது ஆக்டிவ் வாசகர்களின் மத்தியில் ஆட்கள் சொற்பம் !
- "ஆர்ச்சி" - நீங்கள் ரெடியெனும் போதெல்லாம் ஞானும் ரெடி !
- "ஸ்பைடர்" - நீங்க சொன்னா மட்டும் போதும் !!
- "வேதாளன்" - இதோ ஜனவரியில் !!
- "ரிப் கிர்பி" - இதோ ஏப்ரலில் !!
- "மாண்ட்ரேக்" - இதோ ஜூலையில் !!
- "காரிகன்" - இதோ அக்டொபரில் !!
- "க்ளாஸிக் டெக்ஸ் கதைகள் / கலரில்" - இதோ புத்தாண்டினில் !
இதுவே நிலவரம் எனும் போது - "விங் கமாண்டர் ஜார்ஜ் நஹியா ?" ; "சார்லீ நஹியா ?" ; இரட்டை வேட்டையர் இல்லியா ?" என்ற ரீதியிலான random வினவல்கள் மட்டுமே எஞ்சி இருக்கக்கூடும் !
ஆனால்...ஆனால்...ரொம்ப காலமாய் ; ரொம்பவே ரொம்ப காலமாய், தொங்கலில் இருந்து வருமொரு request - நமது கார்ட்டூன் ஜானர் சார்ந்தது ! "இன்றைய கார்ட்டூன் வறட்சிக்கான அருமருந்து ; இன்றைய கொரோனாக் காலத்திலும் குஷி கொள்ளச் செய்யும் அதிசயம் !" என்றெல்லாம் ஒரு தொடர் அதன் அபிமானிகளால் சிலாகிக்கப்படுவது வழக்கம். இத்தனைக்கும் நாம் அந்தத் தொடரிலிருந்து வெறும் மூன்றே இதழ்களை வெளியிட்டுள்ளோம் ; அதுவும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னே ! சில மாதங்களுக்கு முன்பான நமது அரட்டைக் கச்சேரிகளில் கூட இந்தக் குட்டிப் பையன் + சுட்டிப் பெண் ஜோடி பற்றிய பேச்சு எழுந்திருந்தது & ஒரு குறிப்பிடும் அளவிலான நண்பர்கள் "முயற்சிக்கலாமே ?" என்று கோரிக்கை வைத்திருந்ததும் நினைவுள்ளது ! FFS பணிகளின் அழுத்தம் கருதி பாக்கி சமாச்சாரங்களைக் கொஞ்சமாய்ப் பின்சீட்டில் அமர்த்தியிருந்தேன் தான் ; ஆனால் மண்டைக்குள்ளிருந்து எவையுமே விலகியிருந்திருக்கவில்லை ! So நண்பர்களின் அந்த தொங்கல் கோரிக்கையினை நிஜமாக்கிப் பார்த்திடும் முனைப்பில் கொஞ்ச காலம் முன்னே மெது மெதுவாய்ப் பணிகளைத் துவக்கினேன் ! And அதன் பலனே நான் குறிப்பிட்ட இனிப்பு லட்டு # 1 !!
To cut a longish story short, நண்பர்களின் அபிமான "சுஸ்கி & விஸ்கி" மறுக்கா நம் மத்தியினில் வலம் வரவுள்ளனர் - 2022 முதலாய் !! And அவர்களது முதல் இதழாய் காத்திருப்பது ஒரு டபுள் ஆல்பம் ! And அந்த டபுள் ஆல்பத்தில் காத்திருப்பதோ - நீங்கள் பஜ்ஜி சாப்பிட்டபடியே படித்த 2 இதழ்கள் ! And அவற்றிற்கு "பயங்கரப் பயணம்" & "ராஜா ராணி..ஜாக்கி...!!" என்று அந்நாட்களில் பெயர் !
Yes dudes - சேகரிப்பாளர்கள் மத்தியில் செம டிமாண்டான நமது அந்நாட்களது இந்த மினி-லயன் இதழ்கள் - முழு வண்ணத்தில் ; ஆர்ட் பேப்பரில் ; லக்கி லூக் சைசில் ; ஹார்ட் கவர் ஆல்பமாய், செம ஸ்டைலிஷாக வந்திடவுள்ளன - 2022-ன் வாகான பொழுதினில் ! எப்போது ? என்ன விலையில் ? என்பதையெல்லாம் ஒரு சாவகாசப் புத்தாண்டின் பொழுதினில் சொல்கிறேனே ?
இவை மறுபதிப்புகளாய் இருந்தாலுமே, நண்பர்களின் பெரும்பான்மை இதனை வாசித்திருக்க வாய்ப்புகள் சொற்பம் என்பதே எனது யூகம் ! நம்மிடமே ஒரேயொரு பிரதி பீரோவுக்குள் அடியில் உறங்கிக் கிடப்பதால், hardcore சேகரிப்பாளர்கள் நீங்கலாய் பாக்கிப் பேரிடம் இவை இருக்கும் வாய்ப்புகள் குறைச்சலே என்றே நினைக்கிறேன் ! Anyways அந்நாட்களில் சாணித் தாளில், சின்ன சைசில், இரு வண்ணத்தில் வாசித்ததை இன்றைக்கு உயர் தரத்தில், முழுவண்ணத்தில் வாசிப்பதென்பது முற்றிலும் வேறொரு லெவல் அனுபவமாய் இருக்கக் கூடும் என்பதால் - ஏற்கனவே வாசித்துள்ளோருக்குமே காத்திருக்கும் இந்த "லயன் லைப்ரரி" பதிப்பு ரசிக்காது போகாதென்பேன் ! Fingers crossed again !
உரிமைகளுக்கெனப் பேசிய போது - "எக்கச்சக்கக் கதைகள் கொண்ட தொடரிது - so புது யுகக் கதைகளாய்த் தேர்வு செய்திடலாமே ? தொடரின் துவக்க காலத்து ஆல்பங்களாய்த் தேர்வு செய்வானேன் ?" என்று படைப்பாளிகள் வினவினர் ! ஆனால் நாம் என்ன மாதிரியான நோஸ்டால்ஜியா பிரியர்கள் என்பதை விளக்கிச் சொல்லி விட்டு, "to start with - பெட்ரோமேக்ஸ் லைட்டே குடுங்க ப்ளீஸ் ; போகப் போக LED ; போகஸ் லைட் என்றெல்லாம் வாங்கிக்கொள்கிறோம் !" என்று சொன்னேன் ! இவை முழுக்கவே கார்ட்டூன் ; ஜாலி கதை ஜானர் எனும் போது தொடரினில் முன்னுள்ள கதைகளுக்கும், பின்னுள்ளவைக்கும் பெரிதாய் content-ல் மாற்றம் இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை ! And பல ஐரோப்பியப் படைப்புகளில், அந்நாட்களின் ஒரிஜினல் பிதாமகர்களின் படைப்புத் திறனை இன்றைய யுகக் கதாசிரியர்கள் எட்டிப் பிடிக்கத் தடுமாறுவதைப் பார்த்துள்ளோம் ! So கார்ட்டூன்களில், old is a golden option என்று தீர்மானித்தேன் ! எது எப்படியோ - பரிச்சயமான இந்த ஆல்பங்களைப் பார்த்து, ரசித்த பிற்பாடு, தொடரின் புதுக் கதைகள் பக்கமாய் நுழைய நீங்கள் இசைவு சொல்லின் சூப்பர் ! இப்போதைக்கு பந்து உங்களின் தரப்பினில் கார்ட்டூன் காதலர்களே ! So பார்த்து கரை சேர்த்து விடுங்கோ ப்ளீஸ் !
And லயன் லைப்ரரியின் லேபிலில் வரவுள்ள இந்த இதழுக்கும் முன்பதிவெல்லாம் அவசியமாகிடாது ! ஏதேனுமொரு புத்தக விழாவின் போதோ - நமது ஆன்லைன் புத்தக விழாவிலோ வெளியாகிடும் & வேண்டுவோர், நிதானமாய் வாங்கிக் கொள்ளலாம் ! என்ன - கார்ட்டூன் ஜானர் எனும் போது ஒரு டெக்ஸ் வில்லர் அளவுக்கோ ; ஒரு ஆக்ஷன் கதையின் அளவுக்கோ நமது பிரிண்ட்ரன் இருந்திடாது தான் ; but கார்ட்டூன் ரசிகர்கள் திடீரென ஆவேசப்பட்டாலொழிய, ஸ்டாக் டப்பென்று காலியாகிடாது தான் ! So ஆராம் சே !
ஆச்சு ! பெரிய லட்டு என்னவென்பதைச் சொல்லியாச்சு ! And குட்டி லட்டு என்னவென்பதைத் தொடரும் பதிவிலோ ; உபபதிவிலோ பார்த்துக் கொள்ளலாம் ! So FFS இதழின் புதியவர்களுள் ஒருவரான டேங்கோ பக்கமாய்ப் பார்வைகளை ஓட விடுவோமா இனி ?
TANGO !! நான்கு ஆண்டுகளுக்கு முன்பாய் உருவாக்கப்பட்டு, இப்போதும் தொடர்ந்து வரும் இந்த ஆக்ஷன் தொடரின் நாயகர் ஒரு போலீஸ்காரரோ ; டிடெக்டிவோ ; சீக்ரெட் ஏஜெண்டோ கிடையாது ! யார் கண்ணிலும் படாது ஓரமாய் ; தூரமாய் விலகி வாழ நினைத்திடும் ஒரு வித்தியாசமான மனுஷன் ! பதுங்கிட அவர் தேர்வு செய்வதோ தென்னமெரிக்காவில் பொலிவியாவில் எனும் போது - மூச்சிரைக்கச் செய்யும் அந்த தேசத்தின் பாலைப்பரப்புகளின் நடுவே ஒரு அனல் பறக்கும் ஆக்ஷன் மேளா அரங்கேறுகிறது ! செம ஓட்டமெடுக்கும் கதையின் மத்தியில் - ஓவியரும், கலரிங் ஆர்டிஸ்ட்டுமே ரவுண்டு கட்டி அடித்துள்ளனர் ! So சம அளவு சிலாகிப்புக்கு அவர்களும் உரியோர்களே ! இதுவரையிலும் நாம் பார்த்திரா ஒரு புது மண்ணில் ஓடுமிந்தக் கதையின் நிறைய பகுதிகளில், நாயகர் தானாகவே மனசுக்குள் பேசிக்கொள்ளும் விதமாய் வரிகளை அமைத்துள்ளார் கதாசிரியர் ! So அவையெல்லாம் நான் போட்ட எக்ஸ்டரா நம்பர்களோ ? என்ற சந்தேகங்களின்றி படிக்கலாம் ! And சமீபத்தில் செய்த பணிகளுள் ரொம்பவே சுவாரஸ்யத்தை உருவாக்கிய ஆல்பம் இது என்பதால் - உங்களின் வாசிப்பு அனுபவங்கள் பற்றியறிய ஜனவரியில் காத்திருப்பேன் !
உட்பக்க பிரிவியூ நாளை பகலில் upload செய்கிறேன் !
கிளம்பும் முன்பாய், FFS முன்பதிவு / சந்தாக்கள் பற்றிய நினைவூட்டல் guys !! And "சந்தா செலுத்தியாச்சு ; ஆனால் இன்னமும் போட்டோ அனுப்ப நேரமில்லை !" நண்பர்களுமே - ஜல்தி ப்ளீஸ் !! டிசம்பரின் முதல் வாரத்துக்குள் எல்லா அச்சுப் பணிகளையும் நிறைவு செய்திருப்போம் ; so அழகுக்கு அழகு சேர்க்க உங்களின் "வதனப் படங்களை" விரைந்து அனுப்புங்கள் all !!
ப்ளூகோட் பட்டாளத்துடன் லூட்டி செய்ய இப்போது கிளம்புகிறேன் ; see you around all ! Bye for now !!
P.S : வாரயிறுதிக்குக் கொஞ்சம் வேலைகள் காத்திருப்பதால் - பதிவு ஒரு நாள் முன்பாகவே !!