நண்பர்களே,
வணக்கம். செப்டெம்பரின் முக்கால்வாசி கடந்து சென்றிருக்க, ஆண்டின் கடைசிக் க்வாட்டர் நம் முன்னே !! ("கடைசிக் க்வாட்டர்" என்றவுடனே ஒரு சில பல்லடத்து இல்லங்களில் உஷ்ணக்கொதிப்பு அதிகமாயின் அதற்கு கம்பெனி பொறுப்பாகிடாது !!) ஆனால் கொதிப்புகள் எங்கெங்கே ; எதன் பொருட்டு ; எவ்விதம் இருப்பினுமே, அவற்றை சரி பண்ணும் ஆற்றல் கொண்ட ஒரு மனுஷன் இந்த அக்டொபரில் ஆஜராகத் தயாராகி வருகிறார் ! "TEX" என்ற பெயருக்கு பதில் சொல்லும் அந்த மஞ்சள் சட்டைக்காரர் போட்டிருக்கக்கூடிய ஓவர்கோட் இம்முறை (நமது அட்டைப்படத்தினில்) வேறு நிறத்தில் இருந்தாலுமே - அவர் காட்டிடவுள்ள ஜாலங்களில் மாற்றமே இருக்கப் போவதில்லை தான் ! இதோ - போன வருஷமே வந்திருக்க வேண்டிய அந்த 224 பக்க ஆல்பத்தின் அட்டைப்பட first look :
முன்னட்டை & பின்னட்டைகள் - ஒரிஜினல் சித்திரங்களே ; பின்னணி வண்ண சேர்க்கையினில் மட்டுமே மாற்றங்களுடன் ! And கதாசிரியர் மௌரோ போசெல்லி !!
டெக்சின் கதைவரிசைகளின் மொத்தத்திற்கும் பொறுப்பேற்றுப் பயணித்து வரும் போசெல்லி - ஒவ்வொரு வாய்ப்பிலுமே 'தல' & டீமின் எல்லைகளை விரிவாக்கம் செய்வதில் முனைப்பாக இருப்பதை கொஞ்ச வருஷங்களாகவே பார்த்திருக்கிறோம் தான் ; and இந்த சாகசமும் அதற்கொரு ஊர்ஜிதமே ! மாமூலான அதே வன்மேற்குக்குள்ளும், புதுசு புதுசாய் களங்களை உருவாக்கி, ஏதேனும் வித்தியாசங்களைக் காட்டிடும் அவரது லாவகம் yet again on show !! ஆள் அரவமே இல்லாததொரு பேய் நகரில் துவங்கும் கதையினுள் எடிட்டிங்குக்கென இன்று காலை தான் புகுந்துள்ளேன் ; so அந்த ஆரம்பமே வாடிக்கையான டெக்ஸ் பாணிகளிலிருந்து விலகியிருப்பதைக் கவனிக்க முடிந்தது ! And 'தல' தலைகாட்டுவது பக்கம் 25 முதலே எனும் போது, அதற்கு முன்னமே கதைக்கான ஆடுகளத்தை அம்சமாய் போசெல்லி செட் பண்ணிட அவகாசம் கிட்டியுள்ளது ! ஓவியர் Alfonso Font நமக்குப் புதியவரே அல்ல தான் என்றாலும், அவரது சற்றே வித்தியாச பாணிக்குப் பழகிக் கொள்ள மட்டும் கொஞ்சம் நேரம் எடுக்கிறது ! Maybe ..just maybe சிவிடெல்லி போலான (நமக்கான) ஆதர்ஷ ஓவியர் யாரேனும் இங்கு பணியாற்றியிருப்பின் இன்னமும் பிரமாதமாக இருந்திருக்கக்கூடும் ! Anyways - ஆளே இல்லாத துவக்கத்திலிருந்து இதோ ஒரு பக்கம் ! கதைக்குள் நான் பயணிக்க ஒரு வண்டித் தொலைவு காத்துள்ளது தான் ; but so far so good !! நடப்பாண்டில் 'தல' அடித்துள்ள சிக்ஸர்களின் எண்ணிக்கையினை இதுவும் கூட்டிடுமென்ற நம்பிக்கையோடு ஆக்டொபரின் அடுத்த ஆசாமியின் பக்கமாய்ப் பார்வையினை ஓடச் செய்கிறேன் !
And அங்கே தென்படுவதோ பத்து கிலோ மீசையும், முப்பது கிலோ பாடியுமான நம்ம க்ளிப்டன் !! பிரிட்டிஷ் மகாராணியாரின் ஊழியத்தில், கடமை தவறாது வலம் வரும் இந்த கேரட் மண்டைக்காரர் - ஒரு 40 பக்க சாகசம் + 6 பக்க மினி சாகசம் என இம்முறை ரவுசு செய்கிறார் ! இங்கிலாந்தவர்களின் சற்றே வித்தியாசமான குணங்களையும் ; அவர்களது வறண்ட நகைச்சுவையுணர்வுகளையும் இந்த MI 5 முன்னாள் ஏஜெண்டின் மூலமாய் பகடி செய்வதே கதாசிரியரின் இலக்கு என்பதை இந்த ஆல்பமுமே உறுதி செய்கிறது ! என்ன - "கார்டூன்னாக்கா - பக்கத்துக்குப் பக்கம், பிரேமுக்கு பிரேம் எனக்கு கிச்சுகிச்சு மூட்டிக்கினே இருக்கணும் !!" என்பது நண்பர்களின் கணிசமான எதிர்பார்ப்பெனும் போது தான் க்ளிப்டன் உதை தின்ன நேரிட்டு விடுகிறது ! இவருமே ஜில் ஜோர்டனைப் போலொரு ஆக்ஷன் நாயகரே ; கார்ட்டூன் பாணியிலான கதை சொல்லலில் ! ஆனால் அங்கும் சரி, இங்கும் சரி - அந்தக் குசும்பான சித்திர ஸ்டைலில் நமது எதிர்பார்ப்புகள் குழம்பிப் போய்விடுகின்றன என்று தான் சொல்ல வேண்டும் ! கடந்த 6 ஆண்டுகளாய் ஆண்டுக்கொரு ஸ்லாட் என்று வண்டியோட்டி வரும் இந்த பிரிட்டிஷ்காரருக்கு இதுவொரு பரீட்சார்த்த வேளையே !! கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பினில் மேக் & ஜாக் பாணியில் சிக்ஸர் அடித்தாரெனில் ஜாலி ; இல்லையேல் காலி ! So இம்மாதம் இவரது ஆல்பத்தின் அலசல்களுக்கு (என்மட்டிலாவது) ஆர்வம் ஒரு மிடறு தூக்கலாக இருந்திடும் ! Her Majesty Save Clifton !!
இதோ - ஒரிஜினல் அட்டைப்படம், நமது கோகிலாவின் கைவண்ணத்தில் ! And உட்பக்க preview கூட :
இம்மாதத்தின் இதழ் # 3 பக்கமாக தொடரும் நாட்களில் தான் புகுந்திட வேண்டி வரும் என்பதால், "உலகத்தின் கடைசி நாள்" preview அடுத்த வாரப்பதிவினில் !
Moving on, முத்துவின் ஆண்டுமலர் 50 பணிகளின் பெரும்பகுதி நிறைவுற்று விட்டாச்சு ! இன்னும் ஒரு 46 பக்க ஆல்பமும், filler pages-களுமே பாக்கி ! And அங்கே தான் உங்களின் பங்களிப்புகள் முக்கியமாகின்றன !
ஒரு மைல்கல் இதழினில் உங்களின் அடையாளங்கள் ஏதேனுமொரு விதத்தினில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று பட்டது எனக்கு ! FB பக்கங்களில் கூட 2 நாட்களுக்கு முன்பிலிருந்து தினமும் ஒரு குறும்பதிவு என்று போட்டு வருகிறேன் - அவரவரது துவக்க நாட்களின் இதழ்களின் சேகரிப்புகளின் போட்டோக்களைக் கோரி ! ஆனால் 1972 முதலே முத்து காமிக்ஸை வாசித்திருந்தால் மட்டுமே ஆச்சு என்றில்லை தான் ; நடுவே புகுந்தோர் ; சமீபமாய்ப் புகுந்தோருக்குமே இந்த இதழினில் நிச்சயம் இடமுண்டு ! Maybe .... மாவட்டவாரியாய் நண்பர்களின் முகவரிகளோடும், நமது இதழ்கள் சகிதமான போட்டோக்களோடுன் ஒரு வாசக டயரி போல எதையேனும் உருவாக்கிட முனைந்திடலாமா ? அதன் சாதக-பாதகங்கள் என்னவாக இருக்குமோ ? Your thinking caps on ப்ளீஸ் ?
அப்புறம் வழக்கமான அந்த TOP இதழ்களின் தேர்வுகளும் இல்லாதொரு சிறப்பிதழ் இருக்க முடியுமா - என்ன ? இம்முறையோ - 50 வருஷங்களுக்கு மத்தியிலான சுமார் 455 இதழ்களிலிருந்து தேர்வு செய்திட வேண்டி வரும் என்பதால் உங்களின் TOP 10 இதழ்களினைத் தேர்வு செய்திடும் வாய்ப்பினை வழங்கிட நினைத்தேன் ! வரிசைக்கிரமமாய் 10 இதழ்களை லிஸ்ட் செய்திட சாத்தியப்பட்டாலும் ஓ.கே. ; இல்லாங்காட்டி TOP 3-ஐ மட்டும் வரிசைப்படுத்தி விட்டு, மீத 7 இதழ்களை எவ்விதக் குறிப்பிட்ட வரிசையிலும் இல்லாதே தெரிவிக்கவும் செய்யலாம் ! Needless to say - the most சுவாரஸ்ய அலசல்கள் & தேர்வுகள் ஆண்டுமலரினில் இடம்பிடித்திடும் ! எல்லா என்ட்ரிகளோடும் உங்களின் போட்டோக்கள் ப்ளீஸ் !
And for those who hadn't seen my brief post on நூற்றிப் பதினெட்டாவது "இரத்தப் படலம்" - இதோ ஒரு copy - paste மறுக்கா !!
//உங்களுக்குத் தேவையான "இரத்தப் படலம்" பிரதிகளின் எண்ணிக்கையினைக் குறிப்பிட்டு lioncomics மின்னஞ்சலுக்கு மெயில் ஒன்றைத் தட்டி விடுங்கள் - முழு முகவரி + செல் நம்பருடன் ! அடுத்த 30 நாட்களுக்குள் எத்தனை பேருக்கு, என்ன தேவைப்படுகிறதென்பதை பார்த்தான பின்னே - என்ன செய்திட இயலுமென்பதை அறிவிக்கிறேன் ! மொத்தமே பத்தோ, இருபது பேரோ மட்டுமே தான் இந்தத் தேடலில் இருக்கும் பட்சத்தில், தற்சமயம் அரங்கேறி வரும் கூத்துக்களின் முழுப் பரிமாணமும் புரிந்து விடும் ! மாறாக, மெய்யாலுமே புதுசு புதுசாய் எக்கச்சக்க XIII காதலர்கள் எழுந்திருக்கும் பட்சத்தில், "உலகத் தொலைக்காட்சிகளில், முதன்முறையாக, செக்கு மாடு சிறப்பாய்ச் சுற்றி வருவதை" புத்தம் புது ஈஸ்ட்மேன் கலரில் இன்னொரு தபா வெள்ளித்திரையில் அரங்கேற்றிப்புடுவோம் ! //
இன்னும் 29 நாட்களின் அவகாசமுள்ளது guys - உங்களின் ஆர்வங்களைப் பதிவு செய்திட ! முப்பதாவது நாளினில் தேறியிருக்கும் எண்ணிக்கையினைப் பொறுத்து, என்ன செய்யச் சாத்தியப்படுமென்று அறிவித்த கையோடு, project ஓ.கே. ஆகிடும் பட்சத்தில் சூட்டோடு சூடாய் பணம் அனுப்பிடக் கோரிடுவோம் ! So அதற்குத் தயாராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஆர்வங்களைப் பதிவிடுங்கள் - ப்ளீஸ் ! If all goes well - புராஜெக்ட் நடைமுறை காணும் நாளிலிருந்து 60 நாட்களுக்குள் புக்ஸ் உங்கள் கைகளில் இருந்திடும் ! இனி முழுக்கவே உங்கள் தரப்பில் தான் இந்த ஆட்டத்தின் தலைவிதியானது !
And group admins : உங்களின் க்ரூப்களுக்குள்ளும் தகவலைச் சுற்றில் விடுங்களேன் - ப்ளீஸ் !
விழி பிதுங்கப் பணிகள் காத்திருப்பதால் இப்போதைக்குக் கிளம்புகிறேன் guys Bye for now ! Have a fun weekend !! See you around !!