Powered By Blogger

Monday, July 12, 2021

தேர் இழுக்கும் தருணமிது !

 நண்பர்களே,

வணக்கம். 'நான் எதிர்பார்த்தது போலவே உங்களின் ரியாக்ஷன்ஸ் அமைந்து விட்டன guys' - என்றெல்லாம் நிச்சயமாய்ப் புளுகிட மாட்டேன் ! வேண்டுமானால் - "மனசுக்குள் நான் ஆசைப்பட்டது போலவே உங்களின் ரியாக்ஷன்ஸ் அமைந்து போனதில் செம ஹேப்பி guys !' என்று சொல்லலாம் - ஏனெனில்  அது தான் நிஜம் ! 

கிளாசிக்சில் வேதாளர் கதைகளுக்கு கணிசமான வரவேற்பு இருந்திடுமென்பதை யூகிக்க பெரிய ஆற்றலெல்லாம் தேவைப்பட்டிருக்கவில்லை  & அடிப்படையில் நானுமே வேதளாரின் செம ரசிகனே எனும் போது, அவரின் கதைகளைத் தேடி ஓடியதில் எனக்கு மகிழ்வே ! இந்த காமிக்ஸ் பயணம் ; இந்த எடிட்டர் குல்லா என்றெல்லாம்  வாழ்க்கை என்னை எங்கெங்கோ இட்டுச் சென்றிடலாம்  ; ஆனால் இவற்றிற்கெல்லாமே துவக்கப் புள்ளி - ரொம்பச் சின்ன வயதினில் வேதாளரை ஆராதித்ததே என்பேன் ! வேதாளர் அணிந்திடும்  அந்த நிஜாரைப் போலவே என்னிடம் ஒன்று  அந்நாட்களில் இருந்ததும் சரி, இப்படியும், அப்படியுமாய் ஒரு துப்பாக்கியைச் செருகிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே டெங்காலியின் கானகங்களை உருவகப்படுத்திக் கொண்டு திரிந்ததும் சரி - பால்யத்துப் பசுமைகள் ! In fact அந்த BBC பேட்டியின் போது அவர்கள் ரொம்பவே கிண்டிக் கிழங்கெடுத்தது எனது அந்த Phantom நினைவலைகளைப் பற்றியே ! So வேதாளர் ஆல்பத்தினைத் திட்டமிட்ட போது, எப்படியும் கரை சேர்ந்திடுவார் என்ற நம்பிக்கை  இருந்தது !

ஆனால் இதர நாயகர்களை நீங்கள் எவ்விதமாய் அணுகிடுவீர்களோ ? என்றெல்லாம் உறுதிபடச் சொல்லத் தெரிந்திருக்கவில்லை எனக்கு ! கொஞ்ச காலம் முன்பு வரை நானே இவர்களைக் கண்டு தெறித்து ஓடியவன் தான் எனும் போது - ஆண்டவன் மேல் பாரத்தைப் போடுவதே எனக்கான வழியாய்ப் பட்டது ! But உங்களின் அந்தப் பழமைக் காதலை நான் இன்னமுமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை நேற்றும், இன்றும் எனக்கு உணர்த்தி விட்டீர்கள் guys ! எல்லாவற்றையும் விட - என்னை நிஜமாகவே மலைக்கச் செய்துள்ள விஷயம் - இங்கே பதிவாகியுள்ள வோட்டுக்களின் FOR & AGAINST விகிதாச்சாரமே ! Maybe ஒரு நாலைந்து நண்பர்கள் தவிர்த்து - பாக்கி அனைவருமே இந்த Smashing '70s அணிக்கு வோட்டுக்களைக் குத்தோ குத்தென்று குத்தியுள்ளது, எனது ஆந்தை விழிகளை - திருஷ்டி பொம்மையில் வரையப்பட்டிருக்கும் பூதத்தின் விழிகளின் அளவுக்கு விரிய வைத்துள்ளது ! நம்மில் பெரும்பான்மைக்கு பால்யங்களும், அந்நாட்களில் வாசிப்புகளும் ஒரு விடைதர இயலா சமாச்சாரம் என்பது தெரிந்த விஷயம் தான் ; ஆனால் அதன் பரிமாணம் இத்தனை ராட்சஸத்தனமானது என்பதை இத்தனை காலமான பின்னேயும் யூகிக்கத் தெரிந்திருக்கவில்லை எனக்கு ! So அந்த மே மாதத்தின் லாக்டௌன் தினங்களை ; நித்தமும் ஒரு பதிவென்று விளையாட்டாய் ஆரம்பித்ததை, எப்படி எப்படியோ பயணித்து, நம் பயணம் சார்ந்த நிறைய விஷயங்களைத் தெளிவு செய்திட அது உதவியதை - குருட்டு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும் ! இல்லையெனில் - 2022 என்ற மைல்கல்லினை, என்ன தான் புதுசுகளாலும், பட்டுக்களாலும் நான் அலங்கரித்திருந்தாலுமே, உங்களின் பெரும்பான்மையிடம் முழுமையான அங்கீகாரங்களைப் பெற்றிராதே போயிருப்பேன் போலும்  ! Not that இப்போது இந்த ஒற்றை அறிவிப்போடு எனது பாடெல்லாம் தீர்ந்தது ; இனி விக்ரமன் சார் படத்தின் க்ளைமாக்ஸ் போல - சந்தோஷப் பாடல்கள் பாடிடலாம் என்ற பகற்கனவெல்லாம் கிடையாது ! In fact ஆண்டின் இந்த இரண்டாம் பாதியில் காத்திருக்கும் சவால்களையும், பணிகளையும் , பொறுப்புகளையும் பார்க்கும் போது மடக் மடக்கென்று தண்ணீரைக் குடிக்கத் தான் தோன்றுகிறது ! 

இதோ  :

  • அடுத்த மாதத்துக்கென லயன் 400  &
  • இரத்தப் படலம் மெகா இதழ்கள்  !
  • தொடர்ந்திடவுள்ள செப்டெம்பர் to டிசம்பர் என்ற 4 மாதங்களினில், 13 இதழ்கள் & அவற்றினுள் ஒரு "தீபாவளி மலர்" !
  • இடையினில் ஏதேனும் ஆன்லைன் புத்தக விழாவினை நடத்திடும் பட்சத்தில் - அதற்கென ஏதேனுமொரு எக்ஸ்டரா நம்பர் !
  • And ஜனவரியில் 50-வது ஆண்டுமலரின் மெகா பணிகள் + வேதாளர் 208 பக்க மெகா தொகுப்பு 

இப்போவே கண்ணைக் கட்டுதே என்று சொல்லத் தோன்றினாலும், உங்களின் புண்ணியங்களில் கொஞ்சம் சீக்கிரமே நான் சுதாரித்துக் கொள்ளமுடிந்துள்ளதால், பணியாற்ற ஓரளவுக்கு அவகாசம் கிட்டியுள்ளது ! இதற்குமே அந்த லாக்டௌன் தினங்களின் தினசரி ரகளைகளுக்குத் தான் நன்றி சொல்லிட வேண்டி வரும் ! 

And இதோ - நாளைக்கு முத்து ஆண்டுமலரின் கதைகளின் டிஜிட்டல் கோப்புகள் அனைத்தும் ஏக் தம்மில் அணிவகுத்து நமது மெயில் பாக்ஸை தெறிக்க விடவுள்ளன ! இத்தனை நாட்களாய் வெறுங்கையால் போட்டு வந்த முழத்தினை இனிமேல் கதைகளின் கோப்புகளில் போட ஆரம்பித்தால் - தேர் நகரத் துவங்கியிருக்கும் ! அதனோடு வேதாளரையும் சேர்த்தே இழுத்திட வேண்டி வருமெனும் போது - அடுத்த 6 மாசங்களுக்கு நீங்களுமே 'தம்' கட்டித் தயாராக இருந்திட வேண்டி வரும் folks ! ஏனெனில் காத்திருப்பது ஏப்பசாப்பையான தேரே அல்ல : திருவாரூர் தியாகேசரின் ஆழித் தேரின் பிரம்மாண்டத்தை ஆராதிக்க எண்ணிடுமொரு காமிக்ஸ் தேர் ! If ever there was a time for us all to pull together - இதுவே அது !! 

செவ்வாயன்று ஜூலை இதழ்கள் கூரியர்களில் பயணங்களைத் துவக்கிடும் ! And புதன் முதல் இந்த SMASHING '70s ஆன்லைன் லிஸ்டிங்களை  நம்மவர்கள் செய்திடுவார்கள் ! So பிஸியான உங்களின் இந்த நாட்களின் மத்தியில், நம்ம பொம்ம புக்குக்கும் நேரம் ஒதுக்கிடக் கோரியபடியே  இப்போதைக்குக் கிளம்புகிறேன் folks !! ஐயாயிரத்துச் சொச்சம் விலைக்கு ஒரு மாதம் முன்னே அமேசானில் ஆர்டர் செய்திருந்த வேதாளர் மெகா புக் சரியாக இன்றைக்கு மதியம் தான் கைக்கு கிட்டி !! So அதனுள் தொபுக்கடீரென குதிக்கக் கிளம்புகிறேன் ! பார்க்கப் பார்க்க கடைவாயெல்லாம் ஜலம் ஓடச்செய்திடும் அந்த அசாத்தியத் தரத்தினில் ஒரு பாதியைத் தொட்டுப் பிடிக்க நாம்  முனைந்தாலே இந்த ஜென்மம் சாபல்யம் கண்டிருக்கும் ! Fingers crossed !

Bye all....See you around !  Have a lovely week ahead !

139 comments:

  1. ஆர்வத்துடன் நாங்களுமே சார்

    ReplyDelete
  2. /* இடையினில் ஏதேனும் ஆன்லைன் புத்தக விழாவினை நடத்திடும் பட்சத்தில் - அதற்கென ஏதேனுமொரு எக்ஸ்டரா நம்பர் ! */

    What about e-road (erode) fair in August sir?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனோதிடம் நான் மிகவும் ரசிக்கும் ஒன்று ஸ்டீல்.

      Delete
    2. One book may be உயிரை தேடி for e-road (erode) book fair.

      Delete
    3. குமார் ஹிஹிஹி...
      எல் தம்பி உயிரைத்தேடிதான் ஏற்கனவே சொல்லியாச்சே...இன்னொன்று தா கென்யா

      Delete
  3. பெரும்பாண்மை பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது சார். இதழ்களும் வெளியாகி சிறப்பான வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    வரும் மாதங்களின் அணிவகுப்பு மிகுந்த எதிர்பார்ப்பையும் அளிக்கிறது.

    ஆவலுடன் கொரியர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

    ReplyDelete
  4. ////எனது ஆந்தை விழிகளை - திருஷ்டி பொம்மையில் வரையப்பட்டிருக்கும் பூதத்தின் விழிகளின் அளவுக்கு விரிய வைத்துள்ளது !////

    சார்.. தூங்கப்போற நேரமும் அதுவுமா இந்தமாதிரி திகிலா எழுதி பயமுறுத்துவதை நீங்க கொஞ்சம் தவிர்த்துக்கணும்னு கேட்டுக்கறேன்..

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார். ஈவி பாவம் பிள்ளை. பயந்திரும்

      Delete
  5. இந்த பயணம் கண்டிப்பாக 100% வெற்றியின் பாதையில் செல்லும் என்பது உறுதி சார்...

    ReplyDelete
  6. ஜனவரி எப்பொழுது வரும் என்ற பரபரப்பு இப்பொழுதே...:-)

    ReplyDelete
  7. இந்த புத்தகங்கள் Nostalgic feel காரணமாக புத்தக விழாக்களில் சாதிக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. Especially வேதாளர்@மாயாவி.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா வேதாளரின் வருகை களை கட்டும்...ஆனா முன் பதிவுக்கு மட்டும்தான்...இரண்டாம் மறுபதிப்பு இரத்தப்படலத்து விஞ்சி தெறிக்கும்

      Delete
  8. சார்...

    ஏனோ எனக்கு பாலு மகேந்திராவின்... "நீங்கள் கேட்டவை" ஞாபகத்திற்கு வருவதை தடுக்க முடியவில்லை...

    ReplyDelete
  9. மீண்டும் வேதாளர்🙏🙏🙏🙏

    ReplyDelete
  10. அடுத்த மாதத்துக்கென லயன் 400 &
    இரத்தப் படலம் மெகா இதழ்கள் !
    தொடர்ந்திடவுள்ள செப்டெம்பர் to டிசம்பர் என்ற 4 மாதங்களினில், 13 இதழ்கள் & அவற்றினுள் ஒரு "தீபாவளி மலர்" !
    இடையினில் ஏதேனும் ஆன்லைன் புத்தக விழாவினை நடத்திடும் பட்சத்தில் - அதற்கென ஏதேனுமொரு எக்ஸ்டரா நம்பர் !
    And ஜனவரியில் 50-வது ஆண்டுமலரின் மெகா பணிகள் + வேதாளர் 208 பக்க மெகா தொகுப்பு ///

    ஆஹா எவ்ளோ பெரிய மாத்திரைகள்...

    ReplyDelete
  11. அந்த BBC பேட்டியின் போது அவர்கள் ரொம்பவே கிண்டிக் கிழங்கெடுத்தது எனது அந்த Phantom நினைவலைகளைப் பற்றியே//

    கொஞ்சம் அதை கண்ணுல காட்டுங்களேன் சார்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார். பிளீஸ் இல்லை முத்து 50 க்கான விழாவின் போது வெளியிட திட்டமா சார்?

      Delete
    2. // In fact அந்த BBC பேட்டியின் போது அவர்கள் ரொம்பவே கிண்டிக் கிழங்கெடுத்தது எனது அந்த Phantom நினைவலைகளைப் பற்றியே ! //


      @ வாசக நண்பர்களுக்கு,
      எடிட்டர் அவர்களின் நேர்காணலை இங்கு கேட்கலாம்.

      https://www.bbc.co.uk/sounds/play/w3cszdkj

      Delete
  12. ஹை புது பதிவு.

    ReplyDelete
  13. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  14. // வேதாளர் அணிந்திடும் அந்த நிஜாரைப் போலவே என்னிடம் ஒன்று அந்நாட்களில் இருந்ததும் சரி, இப்படியும், அப்படியுமாய் ஒரு துப்பாக்கியைச் செருகிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே டெங்காலியின் கானகங்களை உருவகப்படுத்திக் கொண்டு திரிந்ததும் சரி - பால்யத்துப் பசுமைகள் ! //

    Good. Golden day memories.

    ReplyDelete
    Replies
    1. முத்திரை
      மோதிரமும் கிடைத்ததா ஆசிரியரே...தேடித் திரிந்தேன் கைகள் பரபரக்க

      Delete
  15. சார் அப்படியே லக்கி லூக்கின் 75 வது ஆண்டு மலர் பற்றிய திட்டமிடலையும் கூடிய விரைவில் பகிர்வீர்களா.

    ReplyDelete
  16. சூப்பர் பதிவு சார்...உற்ச்சாகங்கள அள்ளித் தெறிக்க விடுறீங்க.....இது வர அதிக விலைக்கு வந்த இரத்தப்படலத்து விலய விட அதிகமா...அதாவது நீங்க படிக்க உள்ள ஐயாயிரம் சொச்ச விலை ஜம்போ வேதாளர் போல.....விலைல...விலைல...நாங்க ஜம்ப்புறும் விதமாக முத்து 50 தயாராயிருக்குமென...

    ReplyDelete
  17. இரத்தபடலம். இதற்காக தான் சந்தாவையே தியாகம் செய்தேன்.

    ReplyDelete
  18. Replies
    1. On second thoughts, this would be great for people like us who missed the 70s. Instead of getting new albums for old heroes, every yr, make this 1800rs as reprint subscription. Will be happy to pay and it will be a less burden to u as editor to print as payment received

      Delete
  19. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  20. பழங்காமிக்ஸ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. பழங்காமிக்ஸ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்//
      தாங்கள் எப்படியாம்...??

      Delete
    2. விரைவில் எடிட்டர் சார் நிர்ணயித்துள்ள 600-700புக்கிங் வந்து புராஜக்ட் சக்ஸ்ஸ் ஆக மீண்டும் வாழ்த்துகள் ப்ரெண்ட்ஸ்🌹🌹🌹🌹🌹

      நோ மோர் டிஸ்கஸன்ஸ்...இது கொண்டாடும் வேளை! என்சாய் எவ்ரி மொமென்ட்🍫🍫🍫🍫🍫

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. ஷ்மாஸிங் செவன்டீஸ் பணம் கட்டியாகி விட்டது.

    ReplyDelete
  23. வேதாளர் - இவரை நான் லயனில் படித்ததே இல்லை..ஆனால் ராணி காமிக்ஸில் முகமுடி வீரர் மாயாவி என்ற பெயரில் தவறாமல் ஆஜராகிவிடுவார். மாலி என்பவர் அட்டகாசமாக வரைந்திருப்பார். பெரும்பாலான அட்டைப்படங்களில் துப்பாக்கி எந்திய படியோ அல்லது யாரையாவது குத்துவது போலவோ இருக்கும் ..ஒரு அட்டைப்படத்தில் இவர் விட்ட குத்தினால் எதிரி வாய் கோணி அவர் வாயிலிருந்த சிகரெட் அந்தரத்தில் இருக்கும்...இதனைப்பார்து என் சித்தப்பா பையன் சிரித்தது இன்றும் நினைவில் உள்ளது. இவர் ஜட்டி மட்டுமே போட்டுகிட்டு சுத்தரார் என நானும், இல்லடா மேல Dress போட்டுருக்கார் என என் நண்பனும் பலமுறை பட்டிமன்றம் நடத்தி இருக்கிறோம். மண்டை ஓட்டுக்குகை, மாயாவி மலை முகடு, காட்டுவாசி குள்ளர்கள், ஈடன் தீவு, தங்கமணல் கடற்கரை, டெவில் நாய் ...குதிரை பெயர் மறந்து போச்சு ...என்னமோ போங்க சார் எழுத ஆரம்பிச்சா நிறுத்த முடியலே ...

    ReplyDelete
    Replies
    1. ஹீரோ குதிரை பெயர்...டயானா...ரெக்ஸ்..சூசன்...மாயாவதியின் முந்தய தலை முறை...டெங்காலியா காடு...டைனோசர்....டால்ஃபின்......நுழையும் போதே தலையில் நக்கும் விழுந்தோடும் நீர் வீழ்ச்சிக்குள்...அருவிக்குள் குகை....வேதாளனின் முத்திரை மோதிரங்கள் இரண்டு...நல்லவர்களை காக்கவும் குறியீடு...கெட்டவர்களை காட்ட மண்டையோட்டு முத்திரையோடும்...குள்ளர்களின் விஷ அம்புகள்...ஒலிக்கும் முரசு தந்திகள்

      Delete
    2. நன்றி...இவருக்கு இன்னோரு பேர் கூட இருக்கு வாக்கர் ...காட்டிலிருந்து City க்குள்ள வரும்போது Raincoat மாதிரியான dress போட்டுக்கிட்டூ ஊர சுத்துவாரு...அந்த சமயம் அவர யாருக்கு அடையாளம் தெரியாது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் பத்து வயது பையனை மயக்க என்னவெல்லாம் தேவையோ அத்தனையும் இவர் கதையில் இருக்கும்.

      Delete
  24. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    Smashing 70 subscription number 4018

    ReplyDelete
  25. என்னோட புக்கிங் கன்ஃபர்மேஷன் மெஸேஜ் வந்நூ...ஹேப்பி..ஹேப்பி...

    ReplyDelete
  26. ##செவ்வாயன்று ஜூலை இதழ்கள் கூரியர்களில் பயணங்களைத் துவக்கிடும்##

    Iam waiting....

    ReplyDelete
  27. // In fact அந்த BBC பேட்டியின் போது அவர்கள் ரொம்பவே கிண்டிக் கிழங்கெடுத்தது எனது அந்த Phantom நினைவலைகளைப் பற்றியே ! //


    @ வாசக நண்பர்களுக்கு,
    எடிட்டர் அவர்களின் நேர்காணலை இங்கு கேட்கலாம்.

    https://www.bbc.co.uk/sounds/play/w3cszdkj

    ReplyDelete
    Replies
    1. ஷப்பாரா .. என்னா ஒரு accent ! நீங்க இங்கன ITல இருந்திருந்தா oru விபியாக இருந்திருப்பீர்கள் - but எங்களுக்கு இப்போ காமிக்ஸ் கடைச்சிருக்காது !

      Delete
    2. இன்னிக்கு ராத்திரிக்கு பார்க்கிறேன்.. அப்பத்தான் க்ளோஸ்-அப் ஸாட்ல காட்டும்போது த்ரில்லிங்கா இருக்கும்!!

      எனக்கு இப்பவே 'ய்யீயீயீக்க்'னு கத்தணும் போல இருக்கு!

      Delete
    3. //இன்னிக்கு ராத்திரிக்கு பார்க்கிறேன்.. அப்பத்தான் க்ளோஸ்-அப் ஸாட்ல காட்டும்போது த்ரில்லிங்கா இருக்கும்!//


      ஆடியோ ஃபைல் இது...வீடியோ இல்லை!!

      எடிட்டரோட சின்ன வயசு போட்டோ டிஸ்ப்ளே ஆகுது...டீன் ஏஜ் போட்டோ..he looks gorgeous...

      Delete
    4. ///ஆடியோ ஃபைல் இது...வீடியோ இல்லை!!///

      அடடா!!😰😰

      சரி, எடிட்டரின் YouTube பதிவுகளில் எதையாவது ஒன்னைப் பார்த்து கொஞ்சம்போல 'வீல்ல்ல்ல்'னு கத்திக்கிட வேண்டியதுதான்! 😌😌

      Delete
    5. Just listen from 1.30 min on for this // வேதாளர் அணிந்திடும் அந்த நிஜாரைப் போலவே என்னிடம் ஒன்று அந்நாட்களில் இருந்ததும் சரி, இப்படியும், அப்படியுமாய் ஒரு துப்பாக்கியைச் செருகிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே டெங்காலியின் கானகங்களை உருவகப்படுத்திக் கொண்டு திரிந்ததும் சரி - பால்யத்துப் பசுமைகள் ! //

      Interesting :-)

      Delete
    6. நன்றி தனபாலன் சார். 44 நிமி ஆடியோ போல. சாயந்தரம் கேட்டுடறேன்.

      எடிட்டரோட சின்ன வயசு போட்டோ டிஸ்ப்ளே //


      தலை வாங்கிக் குரங்கு முதல் இதழில் அவரோட டூர் போட்டோ போட்டிருப்பாங்க செனா. அதுல பாருங்க மீசை வைச்ச இந்தி ஹீரோ மாதிரி இருப்பாரு.

      Delete
    7. எப்படியாவது சீனியர் எடிட்டரபுடிச்சு நம்ம ஆசிரியரோட எவர்கிரீன் போட்டோவ புடிச்சர்னும்...

      Delete
    8. ///தலை வாங்கிக் குரங்கு முதல் இதழில் அவரோட டூர் போட்டோ போட்டிருப்பாங்க செனா. அதுல பாருங்க மீசை வைச்ச இந்தி ஹீரோ மாதிரி இருப்பாரு.///

      ஆங்! நானும் பார்த்திருக்கேன்.. கோட்சூட்டுக்குள்ள நின்னுக்கிட்டிருப்பாரே...

      Delete
    9. தனபாலன் சார் தங்களுக்கு மிக்க நன்றி...

      Delete
  28. அந்த அசாத்தியத் தரத்தினில் ஒரு பாதியைத் தொட்டுப் பிடிக்க நாம் முனைந்தாலே இந்த ஜென்மம் சாபல்யம் கண்டிருக்கும் //

    நிச்சயமா அதைவிட சிறப்பாக வழங்கமுடியும் சார் உங்களால்...

    ReplyDelete
  29. Got my booking number confirmed - yay !

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் புக்கிங் நம்பர் கொடுத்துட்டாங்க!! ஹைய்யா!!

      Delete
    2. எனக்கு வேதாளர் புத்தகமே வந்து விட்டது :-)
      சும்மா ஜாலிக்கு :-)

      Delete
    3. Hahahaha .. KONJAM LATE-AA PURINCHUDHU STEEL :-D :-D :-D

      Parani mayakkamaa irukkaarunnu nenakkiren :-D :) :) Good one !!

      Delete
    4. கரெக்ட் மக்கா. பாயிண்டை பிடிச்சிட்ட :-)

      Delete
  30. [11/7, 13:47] 🌹சின்சண்பொன்பொன்செந்தூர்🦄:
    கிளாசிக் 4க்கான சந்தா மேடம்...பதிவு செய்து கொள்ளுங்கள்...நன்றி🙂
    [12/7, 11:01] LION: sir,smashing 70's' subscription no-4014.thank you your payment
    [12/7, 11:44] 🌹சின்சண்பொன்பொன்செந்தூர்🦄: Thanks madam🙂

    ReplyDelete
    Replies
    1. நீ கலக்கு மக்கா...🎊🎉🎊🎉🎊🎊

      Delete
  31. வேதாளர் மீண்டு வருவதில் மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் சார் .
    இங்கு ஒரே குறை.MAXI சைஸ். இந்த சைஸ் புத்தகங்களை அடுக்கி வைப்பதில் மட்டுமல்ல பேணுவதும் உண்மையாகவே சிரமமாக இருந்து வருகின்றது. நம்ம வழக்கமான பெரிய்ய சைஸில் வந்தாலே கூட இந்த எவர்கிரீன் நாயகர்களின் கதைகள் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. வேதாளர் மட்டுமாவது கலரில் கொடுக்கலாமே sir?

    ReplyDelete
  34. Phantom உங்கள் வசன நடையில் படித்திட ஆர்வமாக உள்ளோம்

    ReplyDelete
  35. காமிக்ஸ் என்னும் தேரை இழுக்க நாங்கள் ரெடி ஊரில் உள்ள அனைவரையும் வரவேற்கிறோம் தேர் இழுக்கலாம் வாங்க

    ReplyDelete
  36. அடி. ஆத்தி. Blogspot. ல எங்க. ஊர் தேர். ரும். வந்து. விட்டதா. காத்திருக்கும். மாதங்கள். கொண்டாட்டங்கள். தான். Lion comics ஆரம்பம் முதல். படித்து. வருகிறேன்.
    வே. தா ளர். ரை. இப்போது. தான். முதல். முதலாக. பார்க்க. போகிறேன். வரவேற்கிறேன்

    ReplyDelete
  37. ////கிட் ஆர்டின் கண்ணன்:-

    *கனவுலக அன்பர்களுக்கு வணக்கம்*
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    *போட்டி எண் 3ஆ 4ஆண்ணே ஞாபகம் இல்லை.! அதில் வெற்றிபெற்று ஜம்போ பரிசு பெற்ற நண்பர் ஒருவர்.. ஏற்கனவே ஜம்போ சந்தா கட்டியிருந்ததாலும்..*🤓🤓

    *அதே போல் வேறொரு குழுவில் "ஸ்பைடர்" போட்டியில் வெற்றி பெற்றிருந்த இரு நண்பர்களுக்கும் நம் குழுவின் சார்பில் அறிவித்திருந்த சிறப்பு பரிசை இப்போது பெற்றுக்கொள்ள அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கும் காரணத்தாலும்..* 😎😎

    *அந்த மூன்று நண்பர்களுக்கும் Smasing 70s 2022க்கான முன்பதிவு நமது குழுவின் சார்பாக பரிசாக அளிக்கப்படுகிறது*

    *பரிசினை பொறுத்திருந்து பெற்றுக்கொள்ளும் நண்பர்கள்*👇🏻👇🏻👇🏻

    *சேலம் Tex விஜயராகவன்*

    *Modesty ப்ளைசி பாபு கோவை*

    *Thorgal சரவணகுமார் பல்லடம்*


    *வாழ்த்துகள் நண்பர்களே.!!!*////


    ------- நாங்க ஏற்கனவே பெற்ற வெற்றிகளுக்கான, சிறப்பு பரிசுகளை இப்போது பெற்று கொள்கிறோம்.

    அந்த வகையில் முத்து "Smashing70"---ஐ விட சிறப்பு பரிசு இருக்க முடியுமா????

    நாங்களும் இணைந்து கொண்டோம் கொண்டாட்டத்தில்....😍

    கொண்டாட்டத்தில் இணைத்த கனவுலகம் குழுவுக்கும், போட்டியை நடத்திய ஸ்பைடர்படை குழுவுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏🙏🙏🙏

    ---STV, தோர்கல் SK and ப்ளைசிபாபு!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் பரிசு பெற்ற, பரிசை கொடுத்த மற்றும் போட்டியை நடத்திய நண்பர்களே அனைவரும் பாராட்டுக்கள்.

      Delete
    2. வாழ்த்துகளுக்கு நன்றிகள் நண்பர்களே🙏🙏🙏

      நானும் இந்த 1970s ஹீரோக்களை முதன்முறையாக முழு அளவில் ரசிக்க வெயிட்டிங்...😍

      Delete
  38. *மா துஜே சலாம்*
    —————————-

    சோகக்கதையாக இருக்கும். பிழியப் பிழிய அழ வைச்சிருவாங்களோன்னு ஆரம்பிக்கறப்ப கொஞ்சம் பேஜாராத்தான் இருந்துச்சு. ஆனா கதை ஆரம்ப சில பக்கங்களில் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் சுவராஸ்யமாகவே இருந்தது. போர்க்களத்தில் மகனைத் தேடிய ஒரு தாயின் தேடல் சில இடங்களில் Saving Private Ryan ஐ நினைவூட்டுகிறது. இந்தித் தலைப்பாக இருந்தாலும் கதைக்கு பொருத்தமான தலைப்பு.

    எனக்கு பிடித்திருந்தது.

    ReplyDelete
    Replies
    1. Totally agree - actually the pace picked up half way and the story was very good. The title could have been in Tamizh - AMMA ENDRAAL ANBU !!

      Delete
    2. அம்மா என்றால் அன்பு 🤔. எடிட்டரை மாட்டி விடப் பாக்கறீங்களா?

      Delete
    3. ///AMMA ENDRAAL ANBU !! ///

      'மா துஜே சலாம்'ஐ விட எனக்கு இந்தத் தலைப்பு பிடித்திருக்கிறது!

      Delete
  39. தேர் இழுக்கும் தருணமிது - இழுத்திடுவோம். இழுத்திடுவோம். கவலை வேண்டாம்.

    ReplyDelete
  40. இதுவரை வெளிவந்துள்ள நமது காமிக்ஸ்களில் இன்னும் படிக்காத புத்தகங்களின் லிஸ்ட் எடுத்தேன். அட தேவுடா இன்னும் இவ்வளவு இருக்கா!!! டெக்ஸ் கதைகளை மட்டுமே முழுவதுமாக படித்து முடித்திருக்கிறேன் என்பது புரிந்தது. படிக்காதவைகளில் பெரும்பாலும் கிராஃபிக் நாவலும் அடுத்து கார்ட்டூனும் இருக்கிறது. எப்போது படிக்கப் போகிறேனோ?! மலைப்பாகதான் இருக்கிறது. ஒரு நல்ல நாள் பார்த்து ஆரம்பிக்கவேண்டும். லிஸ்ட் எடுக்கவே ஒரு வாரம் ஆச்சு, ம்ம்ம்... பார்ப்போம். எனக்கு அந்த காமிக்ஸானந்தா அருள்பாலிப்பாராக ! :-))

    ReplyDelete
    Replies
    1. அம்புட்டு பிஸியா இருக்கீங்க போல! சாவகாசமா படிக்கவும் ஒரு நாள் வரும்!

      Delete
    2. // அம்புட்டு பிஸியா இருக்கீங்க போல! //
      அப்படிலாம் அவசரப்பட்டு முடிவு பன்னிடாதிங்க. அவ்வளவு பிஸிலாம் இல்ல. சோம்பேரினு வேனா சொல்லலாம்.

      Delete
  41. மாண்டிரெக் : நமது காமிக்ஸ் முகவர்களை அய்யோ மந்திரவாதி புக்கா என அலறச் செய்த 'மான்டிரெக்' அறிமுகமானது 'தினத்தந்தி' மூலமாகத்தான் ...தோராயமாக 1994 காலகட்டம் என நினைக்கிறேன், என்னுடைய சித்தப்பா வீட்ல காலை 7 to 8 தினத்தந்திய காபியோடு கரைச்சி குடிச்சதும் அது நேரே பக்கத்துல இருக்குற பாட்டி வீட்டுக்கு போயிரும் ...என் பாட்டி 8 To 9 படிச்சி முடிச்சதுப்பறம் பக்கத்து டேபிள்ல ஓரம் கட்டப்படும் ..அதே நேரத்துல் வீட்டு உப்புமாவோ இல்ல சேமியவோ சாப்பிட்டு நான் பாட்டி 20 அடி தூரம் இருக்குற பாட்டி வீட்டுக்கு நடையை நடையை கட்டுவேன், ஏன்னா பாட்டி வீடு தான் Cousins சங்கமம் ஆகிற இடம் . வீட்டுக்கு நுழைஞ்சு பேபப்பர பாத்த உடனே ரெண்டாவது பக்கம் இருக்குற 'கன்னித்தீவு'சிந்துபாத் என்ன பண்ணாருன்னு பாத்துட்டு ஞாயிறு மலர்ல வந்த Comics strip ah பாக்க ஆரம்பிப்போம்..நம்ம மந்திரவாதி மட்டும் இல்லாம பிளாஷ்கார்டன் மற்றும் இன்னும் பல ஆட்களை அறிமுகப்படுத்தியது தினசரிகள் தான். மந்திரவாதி கதையிலே Highlight டே அவர் வீடுதான், Gate la Guest wait பன்னும் போது இவருக்கு Message போகும் ..Gate Automatic an open ஆகும் ..இன்னும் பல Security enhancement ஐ அந்த காலத்திலே பன்னவரு...எவனாவது இவர் வீட்டுக்கு வந்து ஒரன்ட இழுத்துட்டு வெளிய போகவே முடியாது ..லொதார் ஓரு கிங்கரன Assistant ah கூடவே வச்சு இருப்பாரு, அதிலேயும் ஓரூத்தன் தப்பிச்சுடான்னா ஒடனே button அமுக்குவார் ...தரை ரெண்டா பிளந்திரும் .. Gate தானா மூடீக்கும்...காலா பட தலைவர் மாதிரி உள்ளே வந்தா இவர் கிட்ட Permission கேட்டுதான் வெளியே போகனும். எப்போ பாத்தாலும் Swimming pool la உட்கார்ந்துகிட்டு Wife கிட்ட Juice order பன்ற இவர் என்ன வேலை பாக்குறார் எப்படி இவ்ளோ பெரிய வீடு கட்னார்றது கடவுளுக்கு தெரியும் ..அவ்ளோதான்

    ReplyDelete
    Replies
    1. மாண்ட்ரேக் இல்லத்திற்கான கதையும் ஒரு கதையாக உள்ளது நண்பரே...மாண்டரேக் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒரு நாட்டு அதிபருக்கு ஒரிஜினல் மாண்ட்ரேக் உதவி செய்ய அந்த நாட்டு அதிபர் நம்ம மாயாஜால மன்னருக்கு கட்டி கொடுத்த பரிசு அந்த கோட்டை வீடு...:-)

      Delete
    2. Oh ..thx...எல்லா Comics hero வுக்கும் ..ஏதோ ஓரு நாட்டு அதிபர் Friend ah இருக்குராங்க

      Delete
    3. சூப்பரா எழுதியிருக்கீங்க நண்பரே!

      Delete
  42. Where can i get the booking link please

    ReplyDelete
    Replies
    1. Editor said it will be posted tomorrow - you can send money via GPAY if you want to book before that

      Delete
  43. 70'S Spl நேற்றே புக் பண்ணியாச்சு. புக்கிங் நம்பரும் வந்துவிட்டது

    ReplyDelete
  44. Books கிளம்பி விட்டது. நாளைக்கு சரவெடி ஆரம்பம். ஆன்லைன் லிஸ்டிங் வந்தாச்சு

    ReplyDelete
  45. வேதாளர் அணிந்திடும் அந்த நிஜாரைப் போலவே என்னிடம் ஒன்று அந்நாட்களில் இருந்ததும் சரி, இப்படியும், அப்படியுமாய் ஒரு துப்பாக்கியைச் செருகிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே //
    நானும் வேதாளர் போலவே கோவில்திருவிழாவில் தம்மாத்துண்டு பைனாகுலர் வாங்கிக்கொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் பார்க்க ஜூம் செய்துகொண்டு நாட்கணக்கா திரிந்தேன்.
    ( பின்னாட்களில் தெரியும் அதில் நூறு அடி தூரத்திற்கு மேல் பார்க்க முடியாது என்று)

    ReplyDelete
  46. எனது ஆந்தை விழிகளை - திருஷ்டி பொம்மையில் வரையப்பட்டிருக்கும் பூதத்தின் விழிகளின் அளவுக்கு விரிய வைத்துள்ளது //

    ஒரு போட்டோ அனுப்புங்கள் ஸார் பின்னாடி பயன்படும்.

    ReplyDelete
    Replies
    1. ///ஒரு போட்டோ அனுப்புங்கள் ஸார் பின்னாடி பயன்படும்.///

      இன்னும் கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா நாங்களும் தெரிஞ்சுக்கிடுவோமே ஜெயக்குமார் சார்?

      Delete
    2. E v ஸார். இந்த ரகசியம் நமக்குள்ளேயே இருக்கட்டும்.

      Delete
  47. எல்லாரும் phantom பத்தி எழுதறாங்க! நம்மளும் எழுதுவோம்!!!

    நான் சின்ன பையனா இருந்தப்ப phantom - மை மொதன்மொதலா பாத்தேன்..

    எனக்கும் phantom கதைகள் பிடிக்கும்

    அப்ப phantom - த்துக்கு வால் கூட இருந்துச்சு..முருங்கை மரத்து மேல இருந்துச்சு


    ரெண்டாவது தடவை திருச்சி தியேட்டர்ல வச்சு பாத்தேன்..அஜித்ன்னு யாரோ நடிச்சிருந்தாங்க!!

    ReplyDelete
    Replies
    1. ///நான் சின்ன பையனா இருந்தப்ப phantom - மை மொதன்மொதலா பாத்தேன்..///

      அடக்கடவுளே! phantom இவ்வளவு வயசானவரா இருப்பார்னு நினைச்சுக்கூட பார்க்கலை!

      ///அப்ப phantom - த்துக்கு வால் கூட இருந்துச்சு///

      வால்?!! ஆர் யூ ஷ்யூர்?!!
      phantom தன்னோட தலையை அவ்வப்போது 90 டிகிரி திருப்பி மரத்தில் உட்கார்ந்தபடி வேடிக்கை பார்க்கும் வினோதப் பழக்கம் இருந்ததாக நான் சின்ன வயதில் படித்த ஞாபகம்!!


      அடுத்த சில நாட்கள் மாடஸ்டியுடன் டேட்டிங் போகயிருப்பதால் எல்லா டாக்டர்களும் ஏக குஷியில இருக்காப்ல தெரியுது!

      தூண்டில் எல்லாம் ரெடி தானே? :D

      Delete
    2. ///அடுத்த சில நாட்கள் மாடஸ்டியுடன் டேட்டிங் போகயிருப்பதால் எல்லா டாக்டர்களும் ஏக குஷியில இருக்காப்ல தெரியுது!//


      Aha!!! Who can escape from this femme fatale and her seductive traps?

      In one way she is like corona virus..


      In each story she appears as a variant.

      She comes as alpha, beta ,gamma ,delta,kappa ,epsilon ,zigma and so on.

      Only difference is she attacks the hearts ,spares the lungs ( not entirety still she takes your breath away).

      தூண்டில்? A man catches fish to check are they in anyway resemble modesty's eyes..கயல்விழி you know?

      Delete
    3. 'மாடஸ்டி'ன்னு ஒரு வார்த்தை சொன்னதுக்கு எப்படி அருவி மாதிரி வந்து கொட்டுது பாருங்க மக்களே!!

      Delete
  48. நானும் படுத்து இருக்கேன் முகமூடியை ஆனால் மாலை மலர் தினசரி பத்திரிகையில்

    ReplyDelete
  49. மன்னிக்கவும் படுத்தல படித்திருக்கிறேன்

    ReplyDelete
  50. /// resemble modesty's eyes..கயல்விழி you know?///

    வாலி சாரோட பாடலை 'பிள்ளையோ பிள்ளை' படத்துல ஹீரோ பாடுவாரே அதானே?..நல்லாத் தெரியுமே..
    மீனாட்டம் கண் கொண்ட மாடஸ்டி..
    கோபங்கள் கூடாது காமாட்சி ..

    ReplyDelete
  51. /// Only difference is she attacks the hearts ,spares the lungs ///

    கொரோனாவாவது உடனே கொன்னுடும். இது அப்படி இல்லே. இதயத்தை தாக்கினா,நித்தமும் கொல்லும். (எடிட்டர் சார்.. தலைப்பு நல்லா இருக்கு இல்லே.) கொடிபிடிக்கச் சொல்லும். சங்கம் ஆரம்பிக்க வைக்கும். அப்புறம் boating, fishing, தூண்டில், etc ..etc..ஷப்ப்பா... மிடியல..
    மாடஸ்டி கடைக்கண் காட்டி விட்டால்..இம்
    மாநிலத்தோர்க்கு மாமலையும் சிறு கடுகாம்.
    (பாரதிதாசன் மன்னிப்பாராக)

    ReplyDelete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. / மாடஸ்டி'ன்னு ஒரு வார்த்தை சொன்னதுக்கு எப்படி அருவி மாதிரி வந்து கொட்டுது பாருங்க மக்களே!!///

    ஈவி..அருவி மாதிரின்னு எதைச் சொன்னீங்க. இதழ்க்கடையோரம் இளநகை காட்டி
    மெல்லக் கீழிறங்கி, மேனி நனைக்குமே, அதுதானே.ஹி..ஹி..

    ReplyDelete
  54. தமிழாசிரியர் : மேலே உள்ள கவிதைக்கு (?..?..) இரண்டெழுத்துக்கு மிகாமல் வரும்படி ஒரு வார்த்தையில் பொருள் சொல்லுங்கள்.
    ஈரோடு விஜய்: ஜொள்..
    ஆசிரியர்: நன்று.. மிக நன்று.. கற்பூரம் நீ..
    நல்லாவே வருவே..
    ஈ.வி: நன்றி ஆசானே..

    ReplyDelete
    Replies
    1. ஈ.வி : ஹிஹி.. நன்றி ஆசானே! நல்லவேளையா (மடச்) சாம்பிராணி நீ சொல்லலை நீங்க!

      Delete
  55. மாடஸ்டியை வரவேற்க மலர்கொத்து சகிதம் மருத்துவர்களும், தொழிலதிபர்களும் கொரியர் ஆபீஸ் முன் தவம் கிடப்பதாகத் தகவல்!

    மீன்பிடி தூண்டில்களின் விற்பனை தமிழகத்தில் கிடுகிடு உயர்வு!

    ReplyDelete
  56. முத்துவின் பொன்விழா ஆண்டுமலரை தரிசிக்க மிக ஆவலுடன் நாம தயாராகிக் கொண்டு உள்ள வேளயையில், சத்தம் காட்டாமல் நாங்களும் இருக்கம்ல ஆட்டத்தில் என, 37வது லயன் ஆண்டுமலர் இன்றைக்கு களம் இறங்குது.

    கொரியர் ஆபீஸ்ல எனக்காக காத்திருக்கும் லயன் "ஜாலி" ஆண்டுமலரைக் கைப்பற்ற விரைந்து கொண்டுள்ளேன்....

    இதழைக் கைப்பற்றும் வரையில் இதுவரை வந்த ஆண்டுமலர் நினைவுகளில் திளையுங்கள் நட்புகளே.....

    லயன் ஆண்டு மலர்கள்....!!!!

    1.சைத்தான் விஞ்ஞானி-1985
    2.பவளச்சிலை மர்மம்-1986
    3.அதிரடிப் படை-1987
    4.கானகத்தில் கண்ணாமூச்சி-1988
    5.நடுக்கடலில் அடிமைகள்-1989
    6.எமனுடன் ஒரு யுத்தம்-1990
    7.மர்ம முகமூடி-1991
    8.மின்னலோடு ஒரு மோதல்-1992
    9.கானகக் கோட்டை-1993
    10.மந்திர மண்ணில் மாடஸ்தி-1994
    11.பூம் பூம் படலம்-1995
    12.இரத்தப் படலம்-VI-1996
    13.பேங்க் கொள்ளை-1997
    14.கானகத்தில் கலவரம்-1998
    15.தலைவாங்கும் தேசம்-1999
    16.இரத்த பூமி-2000
    17.மெக்சிகோ படலம்-2001
    18.பயங்கரப் பயணிகள்-2002
    19.பரலோகத்திற்கொரு பாலம்-2003
    20.----------------------------2004
    21.----------------------------2005
    22.சூ மந்திரகாளி-2006
    23.----------------------------2007
    24.----------------------------2008
    25.----------------------------2009
    26.----------------------------2010
    27.----------------------------2011
    28.நியூ லுக் லக்கி ஸ்பெசல்-2012-(கம்பேக்கிற்கு பின்பு)
    29.ஆல் நியூ ஸ்பெசல்-2013
    30.லயன் மேக்னம் ஸ்பெசல்-LMS-2014
    31."தி லயன் 250"-Texஸ்பெசல்-2015
    32.பெல்ஜியம் எவர்கிரீன் ஜானி,XIII&பிரின்ஸ் மலர்-2016
    33.லயன் 300 ஸ்பெசல்-2017
    34.லூட்டி வித் லக்கி-2018
    35.தி லக்கி ஆண்டுமலர்-2019
    36.Lucky's லயன் ஆண்டுமலர்-2020

    "கொளுத்தும்" கோடைமலருக்கும்,
    "அதிர்வேட்டு" தீபாவளி மலருக்கும் இடையே சத்தமின்றி கம்பு சுத்திப்போகும் ஆண்டுமலர்களும் அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளன....

    ரூ550க்கு வந்த லயன் ஆண்டுமலர் LMS ன் சாதனையை எல்லாவகையிலும் முத்து 50வது பொன்விழா ஆண்டுமலர் முறியடிக்குமோ?????

    ReplyDelete