Powered By Blogger

Saturday, July 10, 2021

முன்னாடி...பின்னாடி...பின்னாடி..முன்னாடி...!

 நண்பர்களே,

Caution : நெடும் பதிவு ahead !!

வணக்கம். கதை சொல்றது தான் நம்ம வேலை… ஆனால் அந்தக் கதைகளுக்குப் பின்னாடியும் கதை(கள்) இருப்பது தான் சுவாரஸ்யமே! So let me tell you a குட்டி ஸ்டோரி…

1974 என்று ஞாபகம்!

நம்ம வயசிலான “பழங்களைத்” தவிர்த்து இங்குள்ள “யூத்படைக்கு” அந்த வருஷமோ; அந்நாட்களது நடப்புகளோ தெரிந்திருக்க வாய்ப்பிராது தான்! வரலாறு காணா அரிசித் தட்டுப்பாடு தலைவிரித்தாடிய நாட்கள் அவை! உலகின் வல்லரசுகளிடம் இந்தியா பிச்சைப் பாத்திரம் ஏந்தியது அந்நாட்களின் சோகம்! அந்தத் தட்டுப்பாடுகளின் பலனாய் பல அதிரடி அரசு உத்தரவுகள் அமலுக்கு வந்தன! கல்யாண வீடுகளில் அரிசிச் சாப்பாட்டு விருந்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன! ‘இத்தனை பேர் தான் சாப்பிடலாம்; அதற்கு மேல் பந்தியில் பரிமாறினால் அதிகாரிகள் ஆப்படிச்சிடுவார்கள்; கபர்தார்!‘ என்று பிள்ளையைப் பெற்ற புண்ணியவான்களுக்கு அறிவுறுத்தப்பட்டது! ‘அந்தக் கல்யாண வீட்டிலே ஆபீஸர்ஸ் புகுந்து இவையெல்லாம் எண்ணினாங்க தெரியுமோ?‘ என்று ஊருக்குள் பரவலாய் வதந்திகள் நிலவிய நாட்களவை! அந்நேரம் தான் எனது பெரியப்பாவின் புதல்விக்குத் திருமணம் உறுதி செய்யப்படடிருந்தது; மதுரைக்கு அருகாமையிலான திருப்பரங்குன்றத்தில் மண்டபமும் ஏற்பாடாகியிருந்தது! அந்நாளில் அந்தத் திருமணம் தான் குடும்பத்தின் வாரிசுகளுக்கான திருமணங்களில் முதலாவது என்பதால் பெரியப்பா, அப்பா, சித்தப்பா என சகோதரர்கள் அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்! மதுரை என் அப்பாவின் பூர்வீகம்; அங்கே பாட்டி பெரியதொரு வீட்டில் இருப்பார்; and திருமண ஏற்பாடுகள் குறித்த எல்லாக் கூத்துக்களும் அரங்கேறுவது அங்கே தான்! பேரப் பிள்ளைகள் மொத்தமாய் விடுமுறைகளுக்கு அங்கு சென்று கும்மாளமிடுவது வாடிக்கை என்பதால் சகோதரர்களது கல்யாணத் திட்டமிடல்களையும் பார்த்திட முடிந்தது!

‘ரோட்டு மேலே கல்யாண மஹால் இருக்குது… எந்த நேரம் வேணும்னாலும் Food Control ஆபீஸர்கள் ஆய்வுக்கு வரக்கூடும்; ஆகையால் பந்தியில் சாதம் பரிமாறும் அளவுகளில் ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்கணும்!‘ என்று அப்பா சொல்ல ஏற்கனவே எதையுமே கோக்கு மாக்காய் செய்திடப் பிரியப்படும் பெரியப்பா அதிரடியாய் – “அரிசிச் சாதமே இல்லாமல் ஒரு விருந்து தயார் பண்ணிடுவோம்!” என்றார்! அந்நாட்களிலெல்லாம் கல்யாண வீடுகளில் முதல் நாள் ராத்திரியும் சரி, திருமண தினத்து மதிய விருந்துகளும் சரி – அரிசிச் சோற்றைச் சுற்றியே உலவிடும்! சாம்பார் ஊற்றி ஒரு பந்தி; ரசம் ஊற்றி இன்னொன்று; மோர் ஊற்றி லாஸ்ட்டுக்கா – என்று ஆளாளுக்கு ஒரு படி சாதத்தைக் கபளீகரம் செய்வது வழக்கம்! So பெரியப்பாவின் அந்தப் ”புரட்சிகரமான அகுடியா”வைக் கேட்டு ஆளாளுக்குத் ‘திரு திரு‘வென விழித்தனர்! ஆனால் "இது கூட different–ஆ இருக்கும் போலவே!!" என்று எல்லோருக்கும் தோன்றவே – அடுத்த 2 நாட்களுக்குப் பாட்டி வீட்டு அடுக்களை தான் பரிசோதனைக் கூடமாகியது! ஆளாளுக்கு டக்கிலோ… ஸ்ப்ரிங் ரோல்… கபாப்… என்று எதையெதையோ செய்து வைத்து பொடி டிக்கெட்களான எங்களிடம் தந்து டேஸ்ட் பார்க்கச் சொன்னார்கள்! ஒவ்வொன்றும் ஏக தினுசான பூச்சி மருந்து போலச் சுவைத்தாலும் – ஆஹா… பேஷ்… பேஷ்… என்று சொல்லி வைத்தோம்! பெரியப்பாவோ செம குஷியாகிப் போனார்! “இது  போக பந்தியில் பரிமாற பப்ஸ் ஆர்டர் பண்ணலாம்; சமோசா ஆர்டர் பண்ணலாம்!” என்றவர் அன்றைய மதுரையின் டாப் பேக்கரியான ராஜா பார்லியில் ஆயிரம் பப்ஸ்களுக்கு ஆர்டர் தந்து வைத்தார்!

ஒரு மாதிரி வெள்ளோட்டங்களெல்லாம் முடிந்து, மெனுவும் final செய்யப்பட்டு சமையல்காரரிடம் விளக்கவும் பட்டது! அந்த மனுஷன் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வணங்கிய கையோடு தான் பாத்திரங்களில் கையே வைத்திருக்கக்கூடும்; மாறுபட்ட மெனுவை தெரிந்தமட்டுக்குச் செய்து வைத்தார்! பந்தி பரிமாறும் வேளைகளும் புலர்ந்த போது – சகோதரர்கள் அத்தினி பேருமே சாப்பிட அமர்ந்திருந்த ஜனத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். இலையைப் போட்டு சப்ளையர்கள் “பெசல் ஐட்டங்களை” ஒவ்வொன்றாய் களமிறக்க – பசியில் அமர்ந்திருந்த மக்களின் முகங்கள் அஷ்டகோலாகின! பெரியப்பாவோ - “சேமியா உப்புமா இன்னும் போடட்டுமா? சோயா பிரியாணி டேஸ்ட் அள்ளுமே?!” என்று கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டிருந்தார்! நெய் ஊற்றி, பருப்பு ஊற்றி சாப்பிட்டுப் பழகியிருந்த மக்கள் கண்கள் வியர்க்க சாப்பிட்டுக் கிளம்பிய போது – தேக்ஸாக்களில் இன்னும் ஒரு சின்ன கிராமம் சாப்பிடக் கூடியளவுக்குப் பதார்த்தங்கள் மிஞ்சியிருந்தன! விருந்தினர் கிளம்பிய போது – “அண்ணா பப்ஸ் சாப்பிடுங்க; அத்தாச்சி பப்ஸ் சாப்பிடுங்க” என்று நாங்கள் பொடியன்கள் உபசரித்ததெல்லாம் நினைவில் உள்ளது! மண்டபமே காலி…. வீட்டாட்களைத் தவிர, என்ற போது சுமார் 800 பப்ஸ் மீதமிருந்தது! அவற்றைப் பார்த்த நொடியில் எனக்கே கிறுகிறுத்தது – பாவப்பட்ட பெரியப்பா எப்படிச் சமாளித்தாரோ; அவற்றையெல்லாம் என்ன செய்தாரோ – அறியில்லா!

கட்! கட்! இப்போது 1974லிருந்து நேராக 2015-க்கு! கல்யாண விசேஷத்துக்குப் பதிலாய் நமது காமிக்ஸ் கம்பேக் வைபவம்! இம்முறையோ அரிசித் தட்டுப்பாடுகளோ, கதைத் தட்டுப்பாடுகளோ லேது தான்! ஆனாலும் ஒரு முழியாங்கண்ணனுக்குத் திடீர் ஞானோதயம்! “இன்னும் எத்தினி நாட்களுக்குத் தான் சோறு-சாம்பாரு-கூட்டுன்னு கூத்தடிச்சிட்டு? உலகம் எவ்ளோ மாறிடுச்சி தெரியுமா? ப்ரான்கோ-பெல்ஜியத்திலேலாம் ஆமை வடை சாப்பிடறதே கிடையாது; ஆமையை வச்சே வடை தான் சுடறாங்க! நாமளும் அந்த ஜோதியில் ஐக்கியமாகிடுவோமா?" என்றபடிக்கு தினுசு தினுசாய் கி.நா.க்கள்; ரகம், ரகமாய் புதுத் தொடர்களைக் கொண்டு வந்து பந்திகளில் பரிமாறுகிறான்! “ஆஹா…. திவ்யமாயிட்டு! நன்னாயிட்டு!” என்று பந்தியில் அஜால் குஜால் அமளிகள் அரங்கேறிடுகின்றன! முழியாங்கண்ணனும் ஹேப்பி அண்ணாச்சி! ஆனால்… ஆனால்…

பந்தி முடிந்து, கை கழுவும் இடத்தில் சில முகங்களில் மெலிதான பசிரேகைகள் இன்னமும் தொடர்கின்றன ! "அந்த “சிப்பாயின் சுவடுகள்” சூப்பராமே…? நீ படிச்சே ?” என்ற வினவலுக்கு – “எங்கே? நான் அந்த ஸ்மர்ஃபையே தாண்டலை! போவியா?" என்று பதில் பறக்கிறது! “பனியில் ஒரு குருதிப்புனல்” டாப்பா இருந்ததாமே மாப்பு? புரிஞ்சுச்சா உனக்கு?” என்று இன்னொரு பக்கம் கேள்வி எழ – “எலேய். அந்த ”தோழனின் கதை” தான் புரியலேன்னு நினைச்சாக்கா – நம்மாளுங்க பண்ணின அலசல்கள் டாஸ்மாக் பூட்டியிருக்கப்போவே கிறுகிறுக்க வச்சிடுச்சி… நீ வேற!” என்று பதில்!

கட்! கட்! கட்! இது மே‘ 2021… லாக்டௌன் பொழுது! ‘நெதம் ஒரு பதிவு என்று ரகளைகள் நடந்து கொண்டிருக்கையில் – அலசல் ”முத்து 50வது ஆண்டுமலர்” பக்கமாய்ப் பயணமாகிறது!

விரலுக்கேற்ற வீக்கமாய்; இடர்பொழுதுக்கேற்ற இடியாப்பமாய்  சுட நினைத்திருந்தவன் மண்டையில் சரிமாரியாகத் தட்டப்பட்ட  மத்தளமானது – எனது திட்டமிடலையும், பட்ஜெட்டையும் விசாலமாக்கிடுகிறது! ரைட்டு… கார்ட்டூன் ஒத்துக்கிட மாட்டேன்கிறது; ஒரு மாஸ் தருணத்துக்கு செம மாஸாய்ப் புதியவர்களை; டிடெக்டிவ்களை; ஆக்ஷன் நாயகர்களைக் களமிறக்குவதென்றும் தீர்மானமாகிறது! பந்தியில் பாதுஷா; பாதாம் அல்வா; பாம்பே ஸ்வீட்ஸ் என தூள் கிளப்பப் போவது புரிகிறது! ஆனால்… ஆனால்…

சன்னமான ஈனஸ்வரத்தில் குரல்கள் ஒலிக்கின்றன… “பாதாம் அல்வால்லாம் சர்தான்… பால்சாதம் கிடைக்குமா?“ என்று ! “இல்லீங்கண்ணா… சோறுலாம் நெம்ப சாப்பிடப்படாது; முழுசும் கார்போஹைட்ரேட்; ஏற்கனவே பிதுங்கும் தொப்பைகளை இன்னும் சாஸ்தியாக்கிடும்!” என்று சமையல்கார சந்தானம்  கண்களை உருட்டி உருட்டி விளக்குகிறான்! “ரசகுல்லா டேஸ்ட்டா தான் இருக்கும்; ஆனால் ஒரு வாய் ரசம் சாதம் கிடைக்காதா?” என்று பந்தியின் இன்னொரு பக்கமிருந்து இன்னொரு சன்னமான குரல் ! “அச்சச்சோ… ரசம்லாம் பழைய பஞ்சாங்கமுங்கோ; இந்த ரஸ்மலாய் சாப்டு பாருங்கோ – தித்திக்கும்!” என்று ச.ச. வாயில் ஊட்டுகிறான்! வழுக்கிக் கொண்டு தொண்டைக்குள்ளாற ரஸ்மலாய் போகிறது தான்; அதன் சுவை நாக்கில் படிவதும் புரிகிறது தான்; ஆனால் பழகிப் போனது  கிடைக்காத சிறு வருத்தம் மட்டும் அந்தக் கண்களில் மறைந்த பாடில்லை ! ஊரைக் கூப்பிட்டுத் திருவிழாவாய் நடத்த வேண்டிய வைபவத்தில் வருத்தங்களே இருக்கலாகாதே என்ற குயப்பத்தில் ச.ச. மண்டையைச் சொறிகிறான்!

கட்! கட்! கட்! இப்போ ஜுலை 2021-க்கு…. நடப்புக்கு… யதார்த்தங்களுக்குத் திரும்புறோம் : இன்னமும் கசங்கிக் கிழிந்த ஒற்றை ரூபாய் புக்குகள் ஆயிரங்களுக்கு ஏலங்களில் விற்பதைப் பார்க்கிறோம் ! சுடச்சுட ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு, சுடச்சுட photoshop செய்யப்பட்ட ஸ்பைடரின் டிஜிடல் பிரிண்ட் அட்டைப்படத்துடன் “விண்வெளிப் பிசாசு” சந்தைக்கு வருவதைப் பார்க்கிறோம் – அதுவும் ஒன்றுக்கு, இரண்டு அட்டைப்பட choice-களுடன்! இன்னமும் பழைய இதழ்களின் – ஸ்கேன் செய்யப்பட்ட pdf-களை விநியோகிப்பதே என் மகோன்னத லட்சியமென்று கருதி வரும் புரவலர்களைப் பார்க்கிறோம் ! அதற்கு நட்ட நடுவே – ‘மாற்றம் முன்னேற்றம்‘ என்று மல்லுக்கட்ட பார்க்குமொரு ஆந்தையன்! 

Oh yes- வாசிப்புகளின் நமது range இன்டர்நெட்டின் வருகையினைத் தொடர்ந்து ஏகமாய் முன்னேறி விட்டுள்ளது! And நம் பங்குக்கு இண்டு இடுக்குகளிலிருந்தும் ஏதேனும் வித்தியாசமான சமாச்சாரங்களைத் தேடிப் பிடித்து உங்கள் கைகளில் திணித்து விடுகிறோம் ! லார்கோ; தோர்கல்; அண்டர்டேக்கர்; ட்யுராங்கோ போன்ற சில மாஸ் (புது) நாயகர்களும் சரி, நிறைய b&w கிராபிக் நாவல்களும், SODA போன்ற offbeat நாயகர்களும் நமது இன்றைய அணிவகுப்பின் அங்கங்கள் ! இந்தக் காலத்தின் கட்டாயமான மாற்றங்கள் இப்போதெல்லாம் பழகியும் விட்டுள்ளது ! ஆனால்… ஆனால்… ஆனால்…

அவ்வப்போது – மல்லாக்கப்படுத்தபடிக்கே, அவரவரது பால்யத்து நினைவுகளைத் துறக்க மனமின்றி… “ப்ச்சு… என்ன இருந்தாலும் அந்த “பேரிக்கா போராட்டம்” மாதிரி வருமா ? அந்த ‘வைரஸ் X‘ மாதிரி வருமா?‘ என்ற பெருமூச்சுகள் கேட்காது போயின் நான் ஆச்சர்யப்படுவேன் – ரொம்ப ரொம்ப ஆச்சர்யப்படுவேன் ! கிடைப்பதைப் பிடித்ததாக்கிக் கொள்வது மகிழ்ச்சி; ஆனால் பிடித்ததே கிடைப்பது பெருமகிழ்ச்சி அல்லவா ? அந்தக் கோணத்தில் யோசிக்கும் போது – பழசை நினைத்தே காலத்தை ஓட்டும் நண்பர்களின் அந்த ‘இருக்கு – ஆனா இல்லே‘ மனநிலை புரிகிறது ! 

So மே மாதத்தின் இந்த அலசல் களேபரங்கள் ஓய்ந்ததொரு தினத்தில் நிரம்பவே யோசித்தேன்! பழசின் மீதான மையல் ஒருபோதும் தானாய்க் குறைந்திடாது ; நான் தொண்டை நரம்பு புடைக்க முயற்சித்தாலும் அந்தத் தேடல்கள் மட்டுப்பட்டிடாது என்பதில் இரகசியமே இருக்கவில்லை ! ஒரு சமாச்சாரம் எட்டும் தூரத்தில் இல்லாத வரையிலும், அதனையே தேடும் அந்த இயற்கையான உந்துதல்கள் நம் வட்டத்தில் ஒரு மிடறு அதிகம் எனும் போது – “மாயாவி மறுபதிப்பு போட மாட்டியா? ஸ்பைடர் வராதா? ஆர்ச்சிக்கு ஆப்பா?” என்ற கொந்தளிப்புகள் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உரக்க ஒலித்து வந்தன! சிறுகச் சிறுக மும்மூர்த்திகளின் மறுபதிப்புகள் போட ஆரம்பித்தோம்; ஸ்பைடர் & ஆர்ச்சியின் புது சாகஸங்களைக் கண்ணில் காட்ட ஆரம்பித்தோம் ; க்ளாசிக் ஜேம்ஸ் பாண்டை களமிறக்கவும் செய்தோம்! இவற்றையெல்லாம் காணாத வரையிலும் கண்ணீர் விட்ட நம்மவர்களே, இன்றைக்கு கண்கள் வியர்க்கத் தெறித்து ஓடுகின்றனர் - அந்நாளைய க்ளாஸிக் பாணிகளைக் கண்டு ! இதோ – இந்த once in a life time முத்து காமிக்ஸ் ஆண்டுமலரோடு இணைப்பாய் முதல் மாயாவியின் சாகஸத்தைத் தரலாமென்று நான் செல்ல – ‘ஆஹாங்?‘ என்றபடிக்கே கிட்டத்தட்ட அனைவருமே cool ஆக நகன்றாச்சு! So the bottomline is – கிடைக்காத வரையிலும், பழசெல்லாம் பொன் !

இந்த நொடியில் “கிடைக்காதது” பட்டியலில் இடம்பிடிப்பதென்னவோ? என்று யோசித்தால் - சுஸ்கி & விஸ்கி; ஸ்பைடரின் “கொலைப்படை”; ”விண்வெளிப் பிசாசு” போன்ற சமாச்சாரங்களைத் தாண்டிய பாக்கியெல்லாமே முத்து காமிக்ஸின் 1970’s சமாச்சாரங்களே!!

- வேதாளனின் ”பூவிலங்கு”

- ரிப் கிர்பியின் “ரோஜா மாளிகை ரகசியம்”

- காரிகனின் “வைரஸ் X“

- சார்லியின் “குரங்கு தேடிய கொள்ளைப் புதையல்”

- விங் கமாண்டர் ஜார்ஜின் “நெப்போலியன் பொக்கிஷம்”

என்று அடுக்கிக் கொண்டே ஒரு 70’s பட்டியலை நான் போட்டால் இன்றைய தேதி வரையிலும் பழசை மறக்கவியலா நண்பர்கள் தெறிக்கச் செய்திடுவார்கள் என்பது உறுதியாய் தெரிகிறது! ஆகையால்… ஆகையால்… ஆகையால்…

மே மாத நடு முதலாய் – நிறையவே யோசனை; நிறையவே திட்டமிடல்; நிறையவே மின்னஞ்சல் பரிமாற்றம் என்று ஏகமாய் behind the scenes நிகழ்ந்து வந்துள்ளன! And அவற்றின் பலனாய் – 2022 என்ற அந்த மைல்கல் ஆண்டினில் புதுசும் இருக்கும், பழசுமே இருக்கும்! அதுவும் நீங்கள் ஆராதிக்கும் முத்துவின் ‘70s வெளியீடுகளின் பிரதான நாயகர்களோடு! So இனியும் நீட்டி முழக்காமல் The Smashing 70’s திட்டமிடலை உங்கள் கண்ணில் காட்டுகிறேன்!

Yes!! நமது நெடுநாள் கனவான வேதாள மாயாத்மா மீண்டும் தமிழ் பேசவுள்ளார்! இந்திரஜால் காமிக்ஸிலும் சரி, ராணி காமிக்ஸிலும் சரி, இந்த முகமூடி நாயகர் ஏகமாய் தலைகாட்டியிருக்கிறார் தான்; ஆனால் இன்னமும் அவரது தொடரில் எக்கச்சக்கப் புதுக்கதைகள் மீதமுள்ளன தான்! திருச்சி விஜய் சார் - ஹேப்பியா? சௌந்தர் - ஹேப்பியா?

Yes!! வேதாளன் களமிறங்கும் போது, அவரது தோஸ்தான மாயாஜால மன்னன் மாண்ட்ரேக்கை நட்டாற்றில் விட்டுவிட முடியாதல்லவா? So – அந்நாட்களில் நிறையவே கொட்டாவிகளுக்குக் காரணகர்த்தாவாயிருந்த மனுஷனுமே மீள்வருகை செய்திடவுள்ளார் – ஆனால் இம்முறையோ முடிந்தமட்டிற்கு ஓவரோ – ஓவராய் காதில் சரங்களைத் தொங்கச் செய்யா கதைகளுடன்! In fact – மாண்ட்ரேக்கின் selected சாகஸங்கள் செம ஆக்ஷன் த்ரில்லர்களுமே! இயன்றமட்டுக்கு அவற்றைத் தேடிப்பிடிக்க முயற்சிக்கவுள்ளோம்! சமீபமாய் மாயாஜாலக்காரரைத் தேடிய நம் தலீவர் ஹேப்பியா?

Yes!! ஜென்டில்மேன் டிடெக்டிவ் is back too! ரிப் கிர்பியின் க்ளாஸிக் கதைகள் அழகான கதைக்களங்களுடன், எப்போதுமே கண்ணைக் கவரும் சித்திரங்களோடு மிரட்டியுள்ளன – முத்துவின் best ஆண்டுகளில்! “நாலுகால் திருடன்“; “மூன்று தூண் மர்மம்“; ”புதையல் வேட்டை“ என்று அடுக்கிக் கொண்டே போகலாம்! So அந்த ‘70களின் classy ரிப் கதைகளை target செய்வதே இப்போதைய இலட்சியம்! பிரசன்னா- ஹேப்பி?

Yes… ஜேம்ஸ் பாண்டுக்கு ஆற்றலிலும், மிடுக்கிலும் சவால்  விடக்கூடிய காரிகனும் மறுவருகை தந்திடவுள்ளார்! “டாக்டர் செவன்”; “வைரஸ் X“; “மடாலய மர்மம்“; கடலில் தூங்கிய பூதம்” என்று இந்த sure நாயகர் தந்துள்ள ‘ஹிட் லிஸ்ட்‘ ரொம்பவே பெரிது! பின்நாட்களில் ஓவியர் மாறிய பின்பாய் இந்தத் தொடரில் ஒரு தொய்விருந்தது தான்; ஆனால் Al Williamson பணியாற்றிய காலங்களில் செம க்ளாசிக் கதைகள் ஏராளமுண்டு இத்தொடரில் ! And நமது தேடல் அங்கேயே தானிருக்கும்!

So - “2022” எனும் உங்களின் எதிர்பார்ப்புகளை ஏகமாய் சுமந்து நிற்கும் ஆண்டினில் – முத்து காமிக்ஸின் மும்மூர்த்திகளுக்கு அடுத்தபடியாய் இடம்பிடித்து நிற்கும் “க்ளாசிக் 4” அழகாய், தாட்டியமாய் வலம் வந்திடுவர்!

முன்பதிவுகளுக்கு மாத்திரமே” எனும் அடையாளம் தாங்கி வந்திடவுள்ள இவை:

- மேக்ஸி சைஸில்...

- ஹார்ட் கவர்களுடன்...

- செம திக்கான உட்பக்கக் காகிதங்களுடன்...

- துல்லியமான சித்திரத் தரத்துடன்....

- Black & White–ல்....

- புதுக் கதைகள் + க்ளாசிக் கதைகள் என்ற கூட்டணியில்... !



ரைட்டு… எப்போதும் போலவே புது அறிவிப்புகளைத் தொடர்ந்து ஆளுக்கொரு கொத்துக் கேள்விகள் இருப்பது நிச்சயம்! So ஒவ்வொன்றாய் நீங்கள் கேட்டு – ஒவ்வொன்றாய் நான் பதில் சொல்ல தெம்பு லேது என்பதால், ‘கேள்வியும் நானே – பதிலும் நானே‘ என்று அமைத்திட விழைகிறேன்! So here goes:

1. முன்னே போக வேண்டிய வண்டி, திடுதிப்பென ரிவர்ஸ் கியர் போடுவது ஏனோ? கிராபிக் நாவல்கள்; புது முயற்சிகள் கண்டிடும் விமர்சனங்கள் “பின்னாடியே போவோமே” என்பது நினைக்கச் செய்து விட்டதோ?

பதில் : Not at all! எப்போதும் போலவே புதுத் திட்டமிடல்கள் தொடர்ந்திடவே செய்யும்! இந்தப் பேரிடர் நாட்களில் அழுகாச்சிகள் வேண்டாமே என்ற தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டதென்பதால் – கொஞ்ச காலத்துக்கு மட்டும் இருண்ட களங்கள் இராது தான்; ஆனால் அது நாம் வாழ்ந்து வரும் இந்தக் கொரோனா நாட்களின் பிரதிபலிப்பேயன்றி – விமர்சனங்களின் நீட்சி அல்ல ! தவிர 2022-ல் Muthu # 50 ; ஒற்றை நொடி… ஒன்பது தோட்டா… TEX தீபாவளி மலர் – போன்ற மெகா விலைகளிலான இதழ்கள் சற்றே ஜாஸ்தி என்பதால் பரீட்சார்த்தக் களங்களுக்கு அதிகமாய் வாய்ப்புகளிராது தான்; ஆனால் 2023 முதலாய் they’d be back for sure ! இருண்ட களங்கள் தவிர்த்து – புதுயுக நாயகர்கள் ஏகமாய் முத்து # 50–ல் இடம்பிடித்திடவுள்ளதே நமது வண்டி ரிவர்ஸ் கியரை அழுந்த அழுத்தவில்லை என்பதற்கான ஊர்ஜிதமாய் எடுத்துக் கொள்ளலாம்!

2022-ல் பந்தியில் அமர்ந்திடும் எவருக்கும் புன்னகைகளைத் தவிர்த்து வேறெதுவும் பலனாகிடக் கூடாதே என்ற ஒற்றை அவாவே தற்போதைய இந்தக் குட்டிக்கரணத்தின் பின்னணி!

2. அது என்ன 208 பக்கங்கள் ஒவ்வொரு புக்குக்கும்? அத்தனை பக்கங்களுக்கு ஒரே கதையா?

பதில்: Not at all! இந்த நாயகர்களின் கதைகளின் சகலமுமே (ஒரிஜினல்) செய்தித் தாள்களில் தினசரி stripகளாக வெளிவந்ததால் – தோராயமாய் 2-3 மாதங்களில் ஒவ்வொன்றும் நிறைவுறுவதாய் இருந்திடும்! So 208 பக்க மேக்ஸி சைஸிலான ஆல்பத்தில் - ஏழோ-எட்டோ முழுக்கதைகள் இடம்பிடித்திடும் ! அமெரிக்காவில் IDW Publishing என்ற பதிப்பகமும் சரி, Hermes Press பதிப்பகமும் சரி, இது போன்ற மெகா தொகுப்புகளை வெளியிட்டு செம அதகளம் காட்டியுள்ளனர்! ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பாய் சிகாகோவின் ஒரு காமிக்ஸ் ஸ்டோரில் இந்தத் தொகுப்புகளைப் பார்த்து மிரண்ட ஞாபகம் என்னுள் தொடர்கின்றன ! அதே பருமனுக்கோ, அதே தரத்துக்கோ நமக்குச் சாத்தியப்படாதென்றாலும் – அவற்றை முன்மாதிரியாய்க் கொண்டு, இயன்றமட்டிலும் பெஸ்டாகத் தர இயன்ற அத்தனை கரணங்களையும் அடித்திடவுள்ளோம்!

3. இந்தக் கதைகளுக்கெல்லாம் உரிமைகள் வாங்கணும்னாக்கா ரொம்ப பெரிய தொகைகளை ராயல்டியாக முடக்க வேணும் என்று 2 மாசத்துக்கு முன்னே சொன்னியேப்பா?

பதில்: Yes ; and அதனில் மாற்றம் இருக்கவுமில்லை தான்! நானுமே கடந்த 3 வருஷங்களாய் வேதாளன் கதைகளுக்கான உரிமைகளை மட்டும் வாங்கிடும் முனைப்பில் இயன்ற குட்டிக்கரணங்களையெல்லாம் அடித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்! ஆனால் சொற்ப சர்குலேஷனில், சொற்ப விலைகளில் தக்கி முக்கி ஆண்டுக்கு ஐந்தாறு கதைகளை வெளியிடத் திட்டமிட்டாலுமே கூடத் தேறிடும் ராயல்டிக்கள் ஒரு மெகா குழுமத்தின் மினிமம் எதிர்பார்ப்புகளைத் தொடக்கூடச் செய்திடவில்லை என்பதால் ஜெயம் கிட்டியிருக்கவில்லை ! ஆனால் இம்முறையோ நிறைய யோசனைகளுக்குப் பின்பாய் – இழுப்பது ஒற்றைத் தேராக அல்லாது – 4 தேர்களாக இருக்கும் பட்சத்தில் வரம் கிடைக்குமென்ற நம்பிக்கை பிறந்தது ! Of course – இதனில் முதலீட்டு முடக்கம் எக்கச்சக்கமாய் இருக்கும் என்பதும் புரிந்தது ; ஆனால் ஒருவாட்டி மண்டைக்குள் ஒரு அவா குடியேறிவிட்டால் அது L&T சிமெண்ட் போட்டுக் குந்திவிடுகிறதே ! So இயன்ற சகல தரப்புகளிலிருந்தும் எப்படியாவது பணம் புரட்டிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சத்துக்கு மீறிய சாகஸத்தைச் செய்து பார்க்கத் துணிந்து விட்டோம் ! And இங்கே King Features குழுமமே மூச்சு விட்டுக் கொள்ள அவகாசம் தந்து நமக்கு அன்போடு கரம் கொடுத்திருப்பதால் மனசுக்குள் ஒரு தைரியம் பிறந்துள்ளது ! தவிர, சீனியர் எடிட்டருமே தன்னால் இயன்றதொரு தொகையினைக் கைமாற்றாகத் தரச் சம்மதம் சொல்லி உள்ளதால் – இந்த “க்ளாசிக் 4” கனவு – நனவாகிடவுள்ளது!

4. “மாசா மாசம் ஒரு கதை” என்று போடலாமே,? எதுக்காக தொகுப்புகள் ?

Simply put – உங்களின் “குண்டு புக் காதல்” தான் இங்கே பிரதான காரணம்! தனித்தனியாய் ஒல்லி இதழ்களாய் ஐப்பது ரூபாய்க்கும், அறுபது ரூபாய்க்கும் வெளியிடும் போது ஏற்படும் தாக்கத்தை விடவும் இத்தகைய தொகுப்புகள் உருவாக்கும் impact மிக அதிகம் என்பதை அனுபவத்தில் பார்த்தாச்சு! தவிர, மாதா மாதம் ஒரு கதை; சின்ன சைஸ் என்ற template எனில் அவை கடைகளில் விற்பனை; ரெகுலர் சந்தா; ரெகுலர் பிரிண்ட்-ரன் என்றான மாமூல் ரூட்களில் பயணித்திட வேண்டிவரும். இந்த க்ளாசிக் நாயகர்களை - விரும்புவோர் – விரும்பாதவரென சகலரின் சிரங்களிலும் கட்டிட நான் நிச்சயமாய் தயாராக இல்லை ! அது பழசை ஆராதிப்போருக்கு மாத்திரமே ; பந்தியில் பால்சோறு கேட்பவர்களுக்கு மட்டுமே – என்பதில் தெளிவாக உள்ளேன் ! So முன்பதிவு ரூட் ; தேவைப்படுவோர் மட்டுமே வாங்கிக்கலாம் ; மினிமம் ப்ரிண்ட்ரன் என்ற அடையாளங்கள் அத்தியாவசியப்படுகின்றன - இம்முயற்சிக்கு! And அதற்கு தொகுப்புகளே வசதி !

5. **MAXI சைஸாாாாா? அடுக்கி வைக்க சிரமமாக இருக்குமே?!

**இந்த விலையாாாாா?

**மாண்ட்ரேக்காாாாாா?

Sorry guys – நிரம்ப தி்ட்டமிடல்; நிறைய சிந்தனை; நிறைய முன்னேற்பாடுகளின் பலனாகவே இந்தச் செயலாக்க முறையினை எட்டியுள்ளோம் ! இவற்றுள் எதுவுமே; I repeat எதுவுமே மாற்றம் காண்பது சாத்தியமேயில்லை ! ஆகையால் அது குறித்த கேள்விகள் / வேண்டுகோள்கள் / அலசல்கள் / பகடிகள் வரும்பட்சத்தில் நான் பதிலளித்திட இயலா நிலையில் இருந்திடுவேன் ! So முன்கூட்டிய புரிதல்களுக்கு நன்றிகள்!

6. கலர்லே போடலாமேமமமமம??

Sorry again guys – இவை சகலமுமே ஒரிஜினலாய் black & white-ல் உருவாக்கப்பட்டு, வெளியானவைகளே ! மிகுந்த பிரயாசைகளுக்குப் பின்னே இவற்றை வெளியிடக் களமிறங்குகிறோம். இறங்கும் போதே கால்களை மேற்கொண்டும் ‘பப்பரக்காாா‘ என விரித்துக் கொள்ள ‘தம்‘ இல்லை! ஆகையால் IDW Publishing இதழ்களின் சித்திரத் துல்லியத்துடன், திக்கான பேப்பரில், அழகாய் b&w ஆல்பங்களாகவே இவை வெளியாகிடும் ! பரீட்சார்த்த முயற்சிகளே இவை & 2022 plus 2023 என இரு வருஷங்களுக்கு இதே template-ல் இவை தொடர்ந்திடும்!

இந்த template ஹிட்டாகிட்டால் 2024 முதலான முயற்சிகளுக்கு வண்ணம் சேர்ப்பது குறித்துத் திட்டமிடலாம் ! In case நமது பிரிட்டிஷ் மும்மூர்த்திகள் நாளாசரியாய் உங்களுக்கு போரடித்துப் போன கதையே இந்த ‘க்ளாசிக் நால்வருக்கும்‘ நிகழ்ந்திடும் பட்சத்தில் – என்ன செய்வதென்று அன்றைக்குத் தீர்மானிக்க வேண்டி வரும் ! So இலட்சியம் 2024 -ல் கலர்; நிச்சயம் தற்சமயத்து black & white !

7. ‘வைரஸ் X’; ‘ரோஜா மாளிகை ரகசியம்‘; அப்புறம் “பூவிலங்கு”லாம் வந்தே தீரணும்!

கதைத் தேர்வினைப் பொறுத்த வரையிலும், இங்கே படைப்பாளிகளின் கரம் பிடித்தே நாம் நடக்கவுள்ளோம் ! ஒரு குறிப்பிட்ட ஆண்டின், ஒரு குறிப்பிட்ட தேதியினில் துவங்கிடக்கூடிய கதையிலிருந்து – தொடர்ச்சியாய் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வெளிவந்த கதைகளையே படைப்பாளிகள் நமக்குத் தந்திடுவர் !! உதாரணத்துக்கு ஜனவரி 1972 என ஒரு வேதாளன் கதை துவங்கிடுகிறதெனில் - 1972 ; 1973 என 2 ஆண்டுகளில் - தொடர்ச்சியாய் ; ஒன்றன்பின் ஒன்றாய் வெளியான கதைகளை நமக்குத் தந்திடுவார்கள் ! So 1974ல் ஒண்ணு; 1967ல் இன்னொன்னு; 1976ல் வெளியானதிலும் ஒண்ணு – என்ற “நீங்கள் கேட்ட பாடல்கள்” ரகத் தேர்வுகள் இங்கே நமக்கு சாத்தியமாகிடாது! ஏகப்பட்ட கதைகளை இங்கும் அங்குமாய்த் திரட்டி – the best years என்று ஒவ்வொரு நாயகருக்குமே fix செய்து வைத்துள்ளேன் ! தவிர, ஒவ்வொரு தொடரிலும் தலைசிறந்த ஓவியர்கள் பணியாற்றிய காலகட்டங்களை தேடிட முற்பட்டு வருகிறேன் ! So கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்து தந்திடக்கூடிய கதைகள் அமையுமென்று நம்புவோம் ! And ஏற்கனவே சொன்னது போல - இவற்றுள் ஏற்கனவே முத்துவில் வெளியிட்ட கிளாசிக் சாகசங்களும் இருந்திடும் ; நாம் இதுவரையிலும் படித்திரா புதுசுகளும் இருந்திடும் ! 

8.முத்து ஆண்டுமலர் # 50 கூட வேதாளன்  புக்குமே வருமா ?

ஒரே சமயத்தினில் இவை வெளிவந்திடுமே தவிர்த்து, கட்டாயமாய் இரண்டையுமே  வாங்கியாகணும் என்ற நிர்பந்தங்கள் இராது ! நமது 2022 ரெகுலர் சந்தா அறிவிப்பினில் இந்த க்ளாஸிக் 4 அணியின் SMASHING 70's இதழ்கள் இடம்பிடித்திடாது !  So ஜனவரியில் புது இதழோடு வேதாளனையுமே சந்தோஷமாய் ஏந்திட நினைப்போர் மட்டும் வாங்கிக் கொள்ளலாம்  ! 

9.முன்பதிவு எப்போது முதல் எப்போது வரைக்கும் ? 

2022-ன் அட்டவணை அக்டோபர் 14-ம் தேதி வெளியாகிடும் (சரஸ்வதி பூஜை ; ஆயுத பூஜை விடுமுறை நாளது !!) So ஜூலை 14 முதல் அக்டோபர் 14 வரை என 3 மாதங்கள் அவகாசம் - இந்த Smashing 70's நாயகர்களின் ஆல்பங்களை புக் செய்திட !

And of course - 2 தவணைகளில் புக் செய்தும் கொள்ளலாம் ! 

10.சுஸ்கி விஸ்கி இதே மாதிரி போடலாமே ? 

இந்த முயற்சியின் வெற்றியோ - தோல்வியோ தான் இது போலான சிறு பிரிண்ட்ரன் ; on demand கதைகளின் எதிர்காலத்தினைத் தீர்மானித்திடும் ! இரத்தப் படலம் முன்பதிவுகளைப் போலவே வாசக நண்பர்கள் + ஏஜெண்ட் நண்பர்கள் என்ற கூட்டணி - தோரயமாய் 600 - 700 புக்ஸ்களை உறுதி செய்திட்டால் இந்த Smashing 70's வண்டி தண்டவாளத்தினில் ஏறி விடும் ! பார்க்கலாமே - மெய்யாலுமே 'புலி வருது' என்றான பின்னே பரவலான ரியாக்ஷன்ஸ் என்னவாக உள்ளனவென்று ! 

இதுக்கும் மேல் உங்களிடம் கேள்விகள் இருக்குமோ இல்லியோ தெரியலீங்கோ - ஆனால் இதுக்கு மேலே பதில்களில்லை என்னிடம் ! So நடையைக் கட்டுகிறேன் - மேக் & ஜாக் அணியோடு ரவுண்டடிக்க ! இந்த classic நால்வரின் மறுவருகை குறித்த உங்களின் reactions எவ்விதமிருக்கும் என்ற கேள்வி தான் இந்த நொடியில் மெகா சைசில் நிற்கிறது ! புனித மனிடோ காப்பாராக ! Bye all...see you around ! Safe Weekend !!

328 comments:

  1. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. வேதாளர் & மாண்ட்ரெக் - பால்ய நதியினில் மூழ்க மீண்டுமொரு எதிர்பாராத இனிய வாய்ப்பு. முத்துவின் பொன்விழா ஆண்டில் ஆரம்ப கால நாயகர்கள் இடம்பெறுவது மிகச்சிறப்பு. சாலப்பொருத்தம். எடிட்டர் அவர்களுக்கு 50 மில்லியன் நன்றிகள்!!
      இன்ப அதிர்ச்சியில் கண்ணெல்லாம் வேர்த்துருச்சுங்கோ!! மறுக்கா நன்றி சார்!!

      Delete
    2. இது தான் சந்தோஷமென நிறைய நண்பர்கள் கருதிடுவதை இந்த landmark ஆண்டிலாவது நிறைவேற்றாது போனால் அதுவொரு நெருடலாய் காலத்துக்கும் உள்ளுக்குள் குத்தும் சார் ! ரைட்டோ - தப்பா ; எனக்குப் பிடிக்குதோ - இல்லியோ - ஆசைப்பட்டதை வழங்கிய திருப்தி மகத்தானதாச்சே !

      Delete
    3. //ஆசைப்பட்டதை வழங்கிய திருப்தி மகத்தானதாச்சே ! // உண்மை தான் சார்.

      Delete
  2. Replies
    1. நான் பிறப்பதற்கு முன்பே வந்த இதழ்களை பற்றி நான் கூற ஒன்றுமேயில்லை..
      ஆனால்
      நண்பர்களின் விருப்பத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன்..

      Delete
    2. அதனால் தான் துண்டாக இதனைத் தனித்தடத்துக்குக் கொண்டு போயாச்சு சிவா !

      Delete
  3. ஆத்தாடி இது கனவா இல்ல நீஜமா???
    அப்படியே மெபிஸ்டோவாளையும் போட்டா பேஷாயிட்டு இருக்கும். புனித மானிடோ வரம் தருமா??

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களும் ,முகவர்களும் இனி இதனை நனவாக்கிடும் பொறுப்பினைக் கொண்டவர்கள் சார் !

      Delete
  4. ஆகா ஆகா வேதாளர் கதை அதுவும் நமது முத்து 50ல். முத்து நான் படிக்க ஆரம்பித்த பின்னர் வரும் வேதாளர் கதை. கனவு மெய்பட போகிறது. நன்றி விஜயன் சார். எதிர்பாராத சர்ப்ரைஸ்.

    ReplyDelete
  5. ஆத்தாடி இருங்க வாரேன்

    ReplyDelete
  6. Top 10க்குள்ள வந்துட்டேன்

    ReplyDelete
  7. இந்த மாறுபட்ட முயற்சி அற்புத வெற்றி பெற என் வாழ்த்துகள்... சார்..

    I hope things turn out so good on this one... that we will be spoiled for choices in the coming years... Touchwood/saltovershoulder/fingerscrossed.. et al...

    ReplyDelete
  8. சூப்பர், தொடரட்டும் ..... மீண்டும் வேதாளன்... கேட்கவே ஆனந்தமாக உள்ளது

    ReplyDelete
  9. மீண்டும் வேதாளர் கதை படிக்க ஒரு வாய்ப்பு.சூப்பர் சூப்பர்.

    ReplyDelete
  10. அட்டகாசமான அறிவிப்பு சார்.. தலைவணங்குகிறேன்..

    தெளிவா மறுபடியும் படிச்சிட்டு வாரேன் கனவல்லவே..

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  12. /* ஆகையால் அது குறித்த கேள்விகள் / வேண்டுகோள்கள் / அலசல்கள் / பகடிகள் வரும்பட்சத்தில் நான் பதிலளித்திட இயலா நிலையில் இருந்திடுவேன் ! So முன்கூட்டிய புரிதல்களுக்கு நன்றிகள்! */

    MEMES varum sir :-D

    ReplyDelete
    Replies
    1. வரணும் சார் ! இந்த சுனா பனாக்கு memes இல்லாங்காட்டி கெத்து லேதாச்சே !

      Delete
  13. வாவ்...வாவ்...வாவ்...

    உறக்கம் தழுவ முற்படுவதால்


    பதிவை மட்டும் படித்து விட்டு கண் உறங்கலாம் என இருந்தால் பதிவை படித்தவுடன் குஷியோ குஷி சார்..மகிழச்ச்சியை தெரிவித்து விட்டு தான் உறக்கமே என முடிவெடுக்க வைத்து விட்டது.

    மாயாவி ,மாண்ட்ரேக் இவரகளே எனக்கு ஓகே எனும் போது காரிகனும் ரிப்பும் போனஸ் ஹீரோக்கள்..வண்ணத்தை விட கறுப்பு வெள்ளைக்கு எனக்கு ஆதரவு அதிகம் என்பதால் என்னை போறுத்தவரை இந்த சந்தாவில் இந்த காரணம் மட்டுமன்றி எந்த காரணமும் நோ மைனஸ் சார்..


    அட்டகாசமான அமர்க்களமான அறிவிப்பு


    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தலீவரே ; இது உங்க நள்ளிரவாச்சே ?

      Delete
  14. இந்த மாறுபட்ட முயற்சி அற்புத வெற்றி பெற என் வாழ்த்துகள்... சார்..//

    +1. இந்தக் கதைகளில் பெரிய ஆர்வம் இல்லையெனினும் கண்டிப்பாக ஆதரவுண்டு. இது வெற்றியடைந்தால் தனித் தடத்தில் பல வேறு கதைகளை கேட்டுப் பெறலாம் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பன்னீர் பட்டர் மசாலா இருக்கு சார் ; பால்சாதத்தை லைட்டா மட்டும் தொட்டுக்கோங்கோ !

      Delete
    2. // இது வெற்றியடைந்தால் தனித் தடத்தில் பல வேறு கதைகளை கேட்டுப் பெறலாம் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது. // வெற்றி அடையும் என்று முழு நம்பிக்கை இருக்கிறது.

      Delete
    3. சார் ஷெரீஃப் சொல்வது ரூட் லிஸ்ட் 66, போன்ற கதைகளை

      Delete
    4. இதுல மேக்ஸி சைஸ், ஹார்ட் கவர் என நிறய அட்ராக்டிவான விசயங்கள் இருக்கிறது சார். அதுவும் வேதாளருக்கென மிகப்பெரிய ரசிக கூட்டமே இருக்கு. அதனால் 700 என்னும் எண்ணிக்கையை அடைவது சுலபம் என்றே தோன்றுகிறது. குத்துமதிப்பாக 8 கதைகள், ஹார்ட் கவர் கொண்ட ஒரு இதழ் நானூறு ரூபாய் மிகப்பெரிய வேல்யூ பார் மணி. வழக்கம் போல புக் பண்ணிடறேன்.

      Delete
    5. //இது வெற்றியடைந்தால் தனித் தடத்தில் பல வேறு கதைகளை கேட்டுப் பெறலாம் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது//

      அதே! அதே! வெற்றி பெறும்!!

      Delete
  15. வாழ்த்துக்கள்!
    வணக்கங்கள்!!
    நன்றிகள் சார்!!!

    அப்புறம் "ஜூலையில் ஜூலை" எப்போது சார்?மிகுந்த எதிர்பார்ப்புடன்!

    ReplyDelete
  16. நாங்க சொன்னதெல்லாம் நம்பீட்டீங்களா? அங்க பாருங்க கேமரா! உங்கள சும்மா ப்ராங்க் பண்ணோம்னு யாரும் சொல்லிடக்கூடாது. ஆண்டவா!!

    ReplyDelete
  17. இன்று அல்லது நாளை 300பதிவுகள் confirm. திருவிழா ஆரம்பம். எனக்கு ஒரு புத்தகம் கண்டிப்பாக வேண்டும் சார். அட்டகாசமான அறிவிப்பு.

    ReplyDelete
    Replies
    1. செம்ம சர்ப்ரைஸ் சார். இந்தப் பதிவில் நீங்கள் எழுதிய அனைத்து வரிகளுக்கும் வரிக்கு வரி உடன் படுகிறேன்.

      Delete
    2. ஏதாச்சும் மந்தி வேலைகள் செய்திடாட்டி பொழுது போகாதே சார் ..!

      Delete
    3. இந்த வேலைகள் எல்லாம் எங்களுக்கு மகத்தான மகிழ்ச்சி தருகின்றன சார். Without a doubt we are always indebted to you.

      Delete
  18. அதிரடி சரவெடி அட்டகாஷ் அறிவிப்புகள். முழுமையாக வரவேற்கிறேன்.

    ReplyDelete
  19. One of the best news in recent times . Though you have told 1000 times , can't help myself from asking include wing commander George and Charlie also

    ReplyDelete
  20. Sir this is a good idea. I am surely buying 2 sets each - one for me and one for my nephew. I wish my uncle who was an original Muthu comics fan (those big size 90 paisa comics!) was alive today - he would have been delighted having these on his hands starting January - anyways his son will get it!

    ReplyDelete
  21. பால்யத்தின் நினைவுகள் என்று கூறிவிட்டு மேக்ஸி சைஸ் தேர்ந்தெடுத்தது கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது. அதேபோல் மேகஸி சைஸில் ஹார்ட் பவுண்ட் பர்சனலாக எனக்கு உடன்பாடு இல்லை. மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை என்று நீங்கள் கூறி விட்டாலும் கூட டெக்ஸ் வில்லர் சைஸில் குண்டு புத்தகமாக வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத் தோன்றுகிறது. எப்படியாயினும் புத்தகம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. Arun the reason for the maxi size hard cover must be to get the page sizing correct for the Hermes Press collections. It is a technical idea with perhaps no place for sentiments.

      Initially I also blinked and wanted to create memes on it.

      But see the book in the link below and you will understand why the size and the price:

      https://www.amazon.in/Phantom-complete-dailies-1961-1962-Newspaper/dp/161345175X/ref=sr_1_7?dchild=1&keywords=phantom+newspaper+collection&qid=1625933891&sr=8-7

      Delete
    2. And special thanks to Senior Editor indeed - it takes a lot of heart to invest hard earned money in twilight years especially into one's passion !

      Delete
    3. Thank you sir.. I just convey what I felt... That's all sir. Thank you for the link sir.

      Delete
    4. இதே சிந்தனை தான் எனக்கும்.. ii

      Delete
    5. ///And special thanks to Senior Editor indeed - it takes a lot of heart to invest hard earned money in twilight years especially into one's passion !////

      +1

      Delete
    6. என் எண்ணமும் அதுவே. மேக்ஸ் யில் அவ்வளவு விருப்பம் இல்லை. டெக்ஸ் சைஸ் ஓகே வெரி குட். 👌👌👌👌👌

      Delete
    7. // And special thanks to Senior Editor indeed - it takes a lot of heart to invest hard earned money in twilight years especially into one's passion ! //

      +1

      Delete
  22. இது வரை நீங்கள் போட்ட பதிவில் இது தான் என்னை பொருத்தவரை மிகவும் சிறந்த பதிவு.

    ReplyDelete
  23. வேதாளன், மாண்ட்ரேக் கதைகளை முன்னர் ஒரு பதிவில் நான் தங்களிடம் கேட்டிருந்தேன். கனவு மெய்ப்பட்டுவிட்டது. நன்றிகள் சார்.
    சீனியர் எடிட்டருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் சார்.
    முன்பதிவுக்கான தொகையை இன்றே அனுப்பலாமா, இல்லை 14ம் தேதிக்கு பின்புதானா?

    ReplyDelete
  24. நடப்பெதெல்லாம் உண்ைமையா

    ReplyDelete
  25. அந்தநாள் ஞாபகம் அருகினில்..!

    ReplyDelete
  26. ///Yes!! நமது நெடுநாள் கனவான வேதாள மாயாத்மா மீண்டும் தமிழ் பேசவுள்ளார்///

    வாவ்! சூப்பர்! சூப்பர்!!

    ReplyDelete
  27. நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!
    நன்றி!






    தொகையை கூடிய விரைவில் அனுப்பிடுவேன்.👍

    ReplyDelete
    Replies
    1. என்னா ஸ்பீடு... அட்டகாசம் தலைவரே....

      Delete
    2. நன்றி 3000டைம்ஸ்

      Delete
  28. நான்கு கதைகள் 1400 ரூபாய் + 200
    விலை தாறுமாறாக இருக்கிறது சார்.
    எனவே, ஐ ம் எஸ் கேப்

    ReplyDelete
    Replies
    1. 4 கதைகள் இல்லை சார், நான்கு புத்தகங்கள், ஒவ்வொன்றும் 200 பக்க மேக்சி ஹார்ட் பவுண்ட், கதைகளின் எண்ணிக்கை அதன் நீளத்தை பொறுத்தது என நினைக்கிறேன்.

      Delete
    2. நாக்குத் தொங்க எழுத எனக்கிருக்கும் பொறுமையில் ஒரு சிறு பங்கேனும் வாசிப்பதில் காட்டினால் தேவலாமே ? ஒவ்வொன்றிலும் தோரயமாய் 8 கதைகள் எனும் போது மொத்தம் 32 கதைகள் இருந்திடும் ! தப்பாய்ப் புரிவதோடு மற்றவர்களையும் குழப்புவதே பலனாகிடும் சார் !

      Delete
    3. - ஒவ்வொரு 208 பக்க இதழிலும் தோராயமாக 8 கதைகள் இருந்திடும்; ₹1600-க்கு தோராயமாக 32 கதைகள்.
      - ஆக, ஒரு கதையின் விலை ₹50 மட்டுமே!!

      Thanks Karthik Somalinga

      Delete
    4. Will ultimately depend on the number of the strips that each story runs into sir !

      Delete
    5. அன்புள்ள எடிட்டர்,

      Blog content படித்து எனக்கும் குழப்பம். ஒரு 208 பக்க கருப்பு வெள்ளை புத்தகத்திற்கு என்பது மிக அதிகமாகத் தெரிந்தது.

      எங்குமே மொத்தம் நான்கு hardbound புத்தங்கங்கள் 208 x 4 = மொத்தம் 832 பக்கங்கள் என்று குறிப்பிடவில்லை.

      இது ஒரு தனிச் சந்தா Rs.1800 (தமிழகத்திற்குள்) மொத்தம் நான்கு புத்தங்கங்கள் மூன்று மாத இடைவெளியில் வெளிவரும் என்பதை மேலே சில கமெண்ட்ஸ் பாத்து பின்பு தான் தெரிந்து கொண்டேன்.

      நீங்கள் தயவுசெய்து இவ்விவரங்களை தெளிவாக Blog content-ல் விளக்கி குறிப்பிட்டால், என்னைப்போல் மேலோட்டமாக படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்வர். நன்றி.

      Delete
  29. எல்லா ஏற்பாடும் சூப்பர் ஸார்.ஆனா அந்த மேக்ஸி சைஸ்தான்...
    மேக்ஸி சைஸ் படிப்பதற்கு சிரமமாக உள்ளது. ஆதலால் முத்து 50 க்கு பிறகு வரும் கதைகளை டெக்ஸ் அளவிற்கே கொண்டு வாருங்கள் ஸார்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே என் வசதி, உங்கள் வசதி என்பதைத் தாண்டியுமே ஒரு சமாச்சாரம் உண்டாச்சே சார் !

      Delete
  30. அடுத்த வருடம் வரவிருக்கும் கிளாசிக் கதைகள்:
    1) வேதாள மாயாத்மா - ஜனவரி 2022
    2) ரிப் கிர்பி - ஏப்ரல் 2022
    3) மாண்ட்ரேக் - ஜூலை 2022
    4) காரிகன் - அக்டோபர் 2022

    ஒவ்வொரு இதழும்,
    - ₹400/- விலையில் (கூரியர் சேர்க்காமல்)
    - 208 கருப்பு வெள்ளைப் பக்கங்களுடன்
    - மேக்சி சைஸ் மற்றும் ஹார்ட் கவரில்
    - முன்பதிவுகளுக்கு மட்டும்

    வரவிருக்கின்றன...

    ... என்பதை புரிந்து கொள்வதற்குள் ஏகத்துக்கும் தலை சுற்றி விட்டது!

    "காமிக்ஸ் காதலர்" ஒருவர், 'ஒவ்வொரு புத்தகமும் ₹1600 விலையில் வருதாமே?' என்று உள்பெட்டியில் புரளி கிளப்பி விட்டதில், மேற்படி தகவல்களை, சாப்பாட்டுப் பந்திகளின் தள்ளுமுள்ளுகளுக்கு இடையே தேடி எடுத்திருக்கிறேன்!

    மற்றபடி, வாழ்த்துக்கள் சார்! :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இப்போ தான் லைட்டா தெளியுது சார்🤗

      Delete
    2. @ Puthagapriyan மேலும் ஒரு விடுபட்ட தகவல்! :)
      - ஒவ்வொரு 208 பக்க இதழிலும் தோராயமாக 8 கதைகள் இருந்திடும்; ₹1600-க்கு தோராயமாக 32 கதைகள்.
      - ஆக, ஒரு கதையின் விலை ₹50 மட்டுமே!!

      Delete
    3. எனக்குமே கொஞ்சம் அந்த விளம்பரப் பக்கத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஆராய்சசி நடத்திய பிறகுதான் ஒரு தெளிவு கிடைத்தது! :)

      Delete
    4. அது படித்ததும் புரிந்தது சார். புக்கிங் date details சிறிது குழப்பங்கள் தருகிறது. அவ்வளவே.. 🙏

      Delete
    5. நானுமே அப்படித்தான் புரிந்து கொண்டேன் ஒரு 208 பக்க புத்தகம் Rs.1600 என்று :)

      Delete
    6. சார் இன்னும் ஒரு கேள்வி:
      ஒரு புத்தகம் 7/8 கதைகளை கொண்ட ஒரே ஒரு Hero வின் தொகுப்பு தானா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட Hero'க்கள் இணைந்து வருமா சார்?

      Delete
  31. //2022-ன் அட்டவணை அக்டோபர் 1 -ம் தேதி வெளியாகிடும் (சரஸ்வதி பூஜை ; ஆயுத பூஜை விடுமுறை நாளது !!) So ஜூலை 14 முதல் அக்டோபர் 14 வரை என 3 மாதங்கள் அவகாசம் - இந்த Smashing 70's நாயகர்களின் ஆல்பங்களை புக் செய்திட !

    And of course - 2 தவணைகளில் புக் செய்தும் கொள்ளலாம் ! //
    சார் அட்டவணை இந்த வருடம் 2021ல் தானே வருகிறது??? அக்டோபர் 1ம் தேதி இந்த வருடம் சரஸ்வதி பூஜை ஆயூத பூஜை இல்லையே. பண்டிகை அக்டோபர் 14 தானே சார்!!! குழப்பம் 1
    குழப்பம் 2: பிறகு எப்படி சார் முத்து ஆண்டு மலருடன் வேண்டுமெனில் smashing 70"s ஐ வாங்கி கொள்ளலாம் என்ற அறிவிப்பு??? 🤔🤔🤔

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. "October 14 '2021" என்று டைப் அடிக்க வேண்டியதை "அக்டொபர் 1" என்று அடித்து விட்டது தான் குழப்பத்தின் காரணம் சார் ; Sorry !

      Delete
    3. ஸாரி ல்லாம் டூ மச் சார்...‌‌‌‌‌லேட்டாகவேணும் சார் புரிஞ்சு... 🙏🙏🙏 நம் BladePedia கார்த்திக் உபயத்தில் தெளிவாயிற்று

      Delete
  32. வேதாளர், மாண்ட்ரேக்,காரிகன், ரிப் கிர்பி..

    முடில!!!

    முன்பதிவு - ங்கறதுன்னதால ஒண்ணும் சொல்ல முடியலே!!!

    புக் வாங்கறதுங்கறதுல்ல மாற்றமில்லே!!!

    ஆனாக்க???


    இவ்ளோ பணம் போட்டு பண்றத புதுசா ஆர்ப்பாட்டமா பண்ணியிருக்கலாமே அப்டிங்கற ஆதங்கம் இல்லாம இல்லை!!!


    ReplyDelete
    Replies
    1. இங்கே பழசு - புதுசு என்பதைத் தாண்டியுமொரு சமாச்சாரம் உள்ளது சார் !

      850 பக்கங்கள் கொண்டதொரு new age படைப்பெனில் அது கிட்டத்தட்ட 18 ரெகுலர் இதழ்களுக்கு சமானம் ! அவற்றின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பிரேமிலும் ; ஒவ்வொரு டயலாக்கிலும் எனது hands on பங்களிப்பு இருந்திட வேண்டி வரும் ! பீற்றிக் கொள்ளும் தொனியில் அதனை நான் குறிப்பிடவில்லை சார் ; மாறாக இப்போதெல்லாம் அத்தனை உழைப்பினை dish out செய்திட தடுமாறுகிறது !

      So புதுசு தான் போடுவதெனில் - என்னால் பணியாற்ற முடிந்திடும் அளவுக்கு மட்டுமே திட்டமிடல்களை அமைத்திட முனைவேன் ! இதோ - முத்து ஆண்டுமலர் கதைகளின் முழுமையையும் கையில் வைத்துக் கொண்டு நான் அடிக்கும் கூத்துக்கள் ஆண்டவனுக்கே தெரியும் !


      Comparatively,இந்த கிளாசிக்சில் எனக்கு அழுத்தங்கள் ரொம்பவே குறைவு !

      Delete
    2. //மாறாக இப்போதெல்லாம் அத்தனை உழைப்பினை dish out செய்திட தடுமாறுகிறது !//

      //Comparatively,இந்த கிளாசிக்சில் எனக்கு அழுத்தங்கள் ரொம்பவே குறைவு//


      ரொம்ப ஸாரி சார்!!! இப்படி ஒரு பக்கம்

      உண்டு என்பதை உணரவில்லை...


      உங்களை சிரமத்துக்குள்ளாக்கும் எதுவுமே வேண்டாம் சார்...

      Delete
    3. In effect - இது புது முயற்சிகள் எவற்றின் இடத்தையும் கபளீகரம் செய்திடவில்லை சார் ! "இது இல்லையெனில் இந்த இடத்தில் வேறு புதுசாய் ஏதாச்சும் வந்திருக்குமே" - என்று நினைக்க அவசியமில்லை, simply becos இதனிடத்தில் வேறெதுவும் வந்திராது !

      Delete
    4. டாக்டர் ,
      நீங்கள் சொல்வது புரிந்தாலும் இப்பேரிடர் காலத்தில் மருத்துவர்கள் படும் சிரமத்திற்கு முன்பு இது ஒரு சுகமான சுமைதான் என்று எடிட்டரே ஒப்புக்கொள்வார். மருத்துவ உலகின் தியாகங்கள் இல்லையெனில் இன்று ஓரளவு கட்டுக்குள் இருக்கும் பேரிடர் ஓர் பெரும்பெரிடராகியிருக்கக்கூடுமன்றோ?

      Simply becos ஒரு infected நோயாளியைப் பார்க்க மாட்டேன் என்று எந்த ஒரு மருத்துவரும் சொல்லவியலாதே !

      Delete
  33. மிக்க மகிழ்ச்சி சார்..

    ReplyDelete
  34. //திருச்சி விஜய் சார் - ஹேப்பியா//
    ஹேப்பி அண்ணாச்சி

    ReplyDelete
  35. " தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே "

    Really Smashing Announcement! !!!!!!!

    சமீப காலங்களில் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் தாங்கள் குறிப்பிட்ட கசங்கிய பழைய லயன் முத்து காமிக்ஸ்கள் ஏலத்துக்கு வரும் பொழுது வாங்கவும் மனதில்லாமல் விடவும் மனதில்லாமல் நான் பட்டபாடு எப்படியோ தங்களுக்கு தெரிந்திருக்கிறது Sir,

    கண்டிப்பாக இந்த முயற்சி வெற்றி பெறும், Grey market க்கு கடிவாளமாகவும் அமையும்,

    எனக்கு பிடித்த சுஸ்கி விஸ்கி அறிவிப்பில் இடம்பெறவில்லை ஆனால் அந்த கோரிக்கையின் பலனே இந்த பொக்கிஷங்கள், மற்றும் இதன் வெற்றி சுஸ்கி விஸ்கியையும் கொண்டு வரும் முன்னோட்டமாக இருக்கும் என்று நம்புகிறேன், இன்று மகிழ்ச்சியான இரவு, Thank you very much sir,

    ReplyDelete
    Replies
    1. காய்கறி மார்க்கெட் இல்லாது போனால் கூட Grey market காணாது போகாது சார் ; என்ன - கொஞ்சம் விலைகளில் நிதானம் வரப்பெறலாம் ! ஆனால் அது கூட wishful thinking தான் !

      Delete
  36. அட்டகாசம் எடிட்டர் சார்! நீங்க அமைதியா இருந்தீங்கன்னாலே ஏதோ ஒரு பட்டாசான ஐடியா உருவாகிட்டிருக்கும்றதை மறுக்கா மறுக்கா நிரூபிச்சுட்டீங்க!!

    இந்த அறிவிப்பு வேதாளரின் ரசிகர்களை எகிறி குதிக்க வைத்திடும் என்பதில் சந்தேகமே இல்லைதான்! போதாதென்று மான்ட்ரேக், ரிப்கிர்பி, காரிகன் வேறு!! அடை மழை தான்!!

    ஒவ்வொரு புத்தகமும் 208 பக்கங்களில்; பெரிய்ய்ய சைஸில் வரயிருப்பது ஆச்சரியமே! (கலரில் வந்திருந்தால் இன்னும் பட்டையைக் கிளப்பியிருக்கும்!) ஆனாலும் ரிப்கிர்பியின் கதையை 208 பக்கங்களுக்குப் படிக்கவிருப்பதை நினைத்தால் லேசாய் தலை சுற்றுகிறது தான்! ஆனால் 'தேர்ந்தெடுத்த நல்ல கதைகளே இடம்பெறயிருக்கிறது' என்று நீங்கள் உறுதி கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது!

    ஆவலோடு காத்திருப்பேன் - வேதாளரைக் கையில் ஏந்திடப் போகும் அந்த குதூகல தருணத்திற்காக!!

    ReplyDelete
    Replies
    1. வேதாளரையே கையில் ஏந்தப் போறீகளா - மனுஷன் நிச்சயமாய் 90 - 100 கிலோ இருப்பாரே ? முதுகு பத்திரம் சாமி !

      Delete
  37. Sir அப்படியே ஸ்பைடரின் “கொலைப்படை”; ”விண்வெளிப் பிசாசு ,,😎

    ReplyDelete
  38. சார்.. வேதாளர், மாண்ட்ரேக் இரண்டு புத்தகங்களும் வெளியீடு ஜனவரி 2021, ஜூலை 2021 என பிரிண்ட் ஆகி உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ஜனவரியில் துவங்கி ,ஒவ்வொரு மூன்றாம் மாதமும் அடுத்த இதழ் வெளியாகிடும் சார் !

      சனவரி

      ஏப்ரல்

      ஜூலை

      அக்டொபர்

      என்று !

      Delete
    2. 2022 என்று மாற்றச் சொல்லி விடுகிறேன் சார் !

      Delete
  39. பணப்பரிமாற்றம் சக்ஸஸ்.....😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  40. பழமை விரும்பும் நண்பர்களுக்கு உற்சாகமான தகவல். மிகவும் மகிழ்ச்சி!

    என்னைப் பொறுத்தவரையில் வேதாளர் தவிர்த்து பிற நாயகர்கள் மீது பெரிய ஈடுபாடு இருந்தது இல்லை. ஆனால் அந்த தரம் மற்றும் மேக்ஸி சைஸ், கெட்டி அட்டை இவைகள் நிச்சயம் கவர்ந்து இழுக்கிறது. இந்த மைல்கல் ஆண்டும் இதற்கு சரியான தருணம் தான். நிச்சயம் வெற்றி பெறும்!

    ReplyDelete
    Replies
    1. இந்த IDW Publishing உருவாக்கித் தந்துள்ள template ரொம்பவே ஈர்க்கும் சார் ; பாருங்கள் !

      Delete
  41. ஆசிரியர் அவர்களுக்கு ,

    உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்.உலக மொழிகள் எதிலும் இல்லையாம். என்ன செய்வது எனக் குழம்பிக் கொண்டிருக்கின்றேன்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. குழப்பங்களே இன்றி நிம்மதியாய்த் தூங்குங்கள் சார் ; புனித மனிடோ பார்த்துக் கொள்வார் எல்லாத்தையும் !

      Delete
  42. phone pe மூலம் புக்கிங் பண்ணியாச்சு. So happy.

    ReplyDelete
  43. அருமையான முயற்சி சார், கருப்பு வெள்ளையில் துவங்கி வண்ண இதழ்களாக, வேகம் எடுக்க, வாழ்த்துக்கள்..., இது போன்றே லயன் முத்து , திகிலில் 1990 க்கு முன் வந்த கதம்ப குண்டு புத்தகங்களையும் செட் ஆக போட, ஆவன செய்து அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துங்கள்

    ReplyDelete
    Replies
    1. முதலில் இதனில் கரை சேர்ந்து கொள்வோம் சார் !

      Delete
  44. இந்த மாச புக்ஸ் எப்பொ சார் கிளம்பும்??

    ReplyDelete
  45. மிக்க நன்றி சார். வாசகர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் ஆசிரியர் எங்களுக்கு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. ஒரு குட்டியூண்டு வட்டத்தை சந்தோஷப்படுத்த முடியாங்காட்டி - என்ன செய்து, என்ன பிரயோஜனம் சார் ?

      Delete
  46. சனவரி 2022 எப்போ வரும்?

    ReplyDelete
  47. சிறப்பான அறிவிப்பு பணம் GPaY செய்து whatsapp செய்தியும் தட்டிவிட்டாச்சு.

    ReplyDelete
  48. 2021 ஜூலை 14 முதல் அக்டோபர் 14 வரை என 3 மாதங்கள் அவகாசம் - இந்த Smashing 70's நாயகர்களின் ஆல்பங்களை புக் செய்திட

    2021 ஜூலை 14 முதல் சரியாங்க சார்...

    ReplyDelete
    Replies
    1. யெஸ்...அக்டோபர் 1 என்று தவறாக டைப் அடித்திருந்தேன் ; சரி செய்தாச்சு மேலேயும் !

      Delete
  49. சூப்பரான அறிவிப்பு! முதல் தவணை விரைவில் அனுப்புகிறேன். அடுத்த மாதம் இரண்டாம் தவணை அனுப்புகிறேன். விக்ரம் ஸ்டைலில் "ஆரம்பிக்கலங்களா"

    ReplyDelete
  50. டியர் எடி,

    முதலில் புதிய குண்டு புக் திட்டத்திற்கு அமோக வரவேற்பை நான் பதிவு செய்து கொள்கிறேன். முன்பதிவுகளுக்கு மட்டும் என்பது உகந்த வியாபார உத்தி கூட, நிதர்சன உலகத்தின் சரியான பிரதிபிம்பம். வட இந்தியாவில் இந்த டைஜஸ்ட் முறையில், பாரம்பரிய நிறுவனமான ராஜ் காமிக்ஸ் முதல் புதிய காமிக்ஸ் நிறுவனங்கள் வரை லாக்டவுன் சமயத்திலும், வெற்றிகரமாக வெளியிட்டு வருகிறார்கள். கருப்பு வெள்ளை குண்டு புக் என்பதே நமது வித்தியாசம், அதுவே நமது தனிபட்ட ரசனையின் வெளிபாடுதானே.

    தமிழ் காமிக்ஸிலும் இந்த முறை சரியாக செயல்படும் என்று நம்புகிறேன். என் தரப்பில் இருந்து வழக்கம் போல ஒரு முன்பதிவு கணக்கில் சேரும்.

    ReplyDelete
    Replies
    1. ஊரோடு ஒத்துப் போக நாமுமே பழகிக்குவோம் சார் !

      Delete
  51. 32 கதைகள் அடேங்கப்பா. நான் ரெண்டு மாதங்கள் வைத்து படிப்பேன். எனது 8ம் வகுப்பு ஆண்டு விடுமுறை காலகட்டத்துக்கு என்னை இட்டுச்செல்லும் போகிறது‌ ஒரே நேரத்தில் இந்த 32 கதைகள் பொக்கிஷம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. துல்லியமாய் 32 கதைகள் என்றாகாது சார் ; சில கதைகள் நீளம் ஜாஸ்தியும், சில குறைச்சலாகவும் இருக்கக்கூடும் ; so அவர்கள் வழங்கிடவுள்ள கதைகள் கைக்கு வரும் போதே சரியான எண்ணிக்கை உறுதியாகிடும். ஆனால் புக்கின் பக்க நீளம் 208 என்பதில் மாற்றங்களிராது !

      Delete
  52. இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. கிள்ளிப் பார்த்துக் கொள்கின்றேன். ஆ.....வலிக்கிறது. நிஜந்தான்.நன்றி ஆசானே !!!!!

    ReplyDelete
  53. இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும். இதேபோல் விரைவில் கார்டூன் ஸ்பெஷல் வரும் என்று நம்பிக்கையுடன் காத்துக்கொண்டு இருப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. Smurfs கையிலே ஒரு துப்பாக்கியையும், ஒரு குதிரையையும் கொடுத்துப் பார்க்கணும் சார் !

      Delete
    2. அட இது நல்லா இருக்கே! கௌபாய் ஸ்மர்ப்!

      Delete
    3. வரும் சார் கண்டிப்பாக கார்டூன் தொகுப்பு இதேபோல் வரும். நம்பிக்கை உள்ளது.

      நண்பர்களுக்காக எல்லா கதைகளையும் ஆதரிக்கும் எங்களை, எங்களின் கனவான கார்டூன் கதைகள் தொகுப்புக்கும் கார்டூன் கதையை விரும்பாத நண்பர்கள் கூட விரைவில் ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறேன்.

      Delete
  54. மிக மிக மகிழ்ச்சியானசெய்திகள் சார்என்னுடையஆதரவு எப்பொழுதும் மாயாவியின் பக்கமே

    ReplyDelete
    Replies
    1. நம் அணிவகுப்பில் "மாயாவி" என்றென்றும் இரும்புக்கரத்தாரே ; Phantom எப்போதுமே நம்மிடையே "வேதாளன்" தான் !

      Delete
  55. சும்மா அதிருதுல்ல் 🎉🎊🎉🎊🔥🔥... கலக்கல் ஐடியா/அறிவிப்பு சாரே👌👌👌

    ReplyDelete
  56. அப்பப்பா எத்தனை முறைகேட்டு கேட்டுமிகவும் ஓய்ந்து விட்டோம்ஆனால்இப்படி கிடைக்கும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை நன்றி சார்

    ReplyDelete
  57. முதல் தவணை செலுத்திவிட்டேன். இரண்டாம் தவணை அடுத்த மாதம் செலுத்துவேன். நண்பர்களே முந்துங்க! முயற்சி வெற்றி பெற வைங்க!

    ReplyDelete
  58. பழங்காமிக்ஸ் ப்ரியர்களே உங்களை நம்பித் தான் ஆசிரியர் களத்தில் குதித்திருக்கின்றார். அவரை வெற்றி பெற வைப்பது நம் கைகளில் தான் உள்ளது.வாருங்கள் இணைவோம். இணைந்து முன்பதிவை முன்னெடுப்போம். வெற்றி பெறுவோம்.வெற்றி பெறவைப்போம்.

    ReplyDelete
  59. முன்பு ஒருமுறை மும்மூர்த்திகளின் 4 கதைகள் இணைந்த ெதாகுப்பாக ரூ 50 விலையில் அறிவித்தீர்கள்.
    ஆனால், அதற்கு வரவேற்ப்பில்லை.
    அதன்பின், தனி இதழ்களாக வெளியிட்டீர்கள். அனைவரும் விரும்பி வாங்கி திருப்திப்பட்டுவிட்டதும், நீங்களும் நிறுத்திக்கொண்டீர்கள்.
    இப்ெபாழுது, இவர்களையும்,-வெளியிட்டு, திருப்திபடுத்திவிட்டால்-- தான் புதிய கதைக்களங்களுக்குள் செல்லலாம் என்று எண்ணுகிறீர்கள் போலும்.
    என்ன செய்வது- காமிக்ஸ் என்றாலே, மறுவாசிப்பு என்றாலே இவர்கள்தானே கையி
    ல் எடுக்க ேதான்றுகிறது.
    தனிமை படுத்திக்கொண்ட ேபாது படித்த கதைகள் ரிப் கிர்பி யும், காரிகனும்-ஒரு பால்யநண்பனைப்ேபால் ேதாள் மேல் கை போட்டு உலவினார்கள்.
    தற்ேபாதைய ெமச்சூரிட்டிக்கு கதையில் வலு இல்ைலயே என்பதெல்லாம். முக்கியமாகப்படவில்லைேயே..?i என்ன ெசெய்வது எங்களின் காமிக்ஸ் காதலை...
    இதுவும் ஒருவகையில் "ஒரு ேதாழனின் கதை" - மாதிரிதான்..
    அதற்கு "முத்து 50வது ஆண்டில் "சிறப்பு செய்வதற்கு மிக்க நன்றி.. iii

    ReplyDelete
  60. சார் அருமை....அட்டகாசம்....அதகளம்...பின்னிட்டீங்க...பிரம்மாதம்....பிரம்மாண்டம்.....புதையல்....பிரம்மாண்டம்....பிசிறு....பிச்சிட்டீங்க....வியப்பு...கனவு...கற்பனை....என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டே போகலாம்...எங்க நம்பிக்கையை பிரம்மாண்டமாக்கிட்டீங்க

    ReplyDelete
  61. உங்களின் பதிவின் ஆரம்பத்தில் சொன்ன கல்யாண விருந்து நிகழ்வுகளை மிகவும் ரசித்தேன்.

    எனது திருமணம் நடந்த காலகட்டத்தில் எல்லா கல்யாண வீட்டிலும் சாப்பாட்டில் நிறைய புதிய வெரைட்டி என காட்டிக் கொண்டு இருந்தார்கள் ஆனால் நாங்கள் நமது பாரம்பரிய மற்றும் புதிய சாப்பாடு வகைகள் என இரண்டும் கலந்தத
    மெனு சமையல்காரர்களிடம கொடுத்தோம். இது திருமணத்திற்கு வந்த அனைவரையும் கவர்ந்தது அனைவரும் மகிழ்ச்சியாக சாப்பிட்டு விட்டு சென்றார்கள்.

    ReplyDelete
  62. பதிவு படிக்க படிக்க ...கவனிங்க....ஆரம்பத்திலேயே அந்த கல்யாண கூத்து கண்முன்னை விரிய மனசுல இதுவரை வந்ததிலேயே சிறந்த பதிவு எனும் வார்த்தை துள்ளிக் குதித்தபடி அங்குமிங்கும் திரிய...குடும்பக் கடமை மற்றும் ரசிச்சு படியா தம்பின்னு பொறுப்புகள் நகர்த்திட....வந்து படிச்சா...யப்பா இது வேற லெவல்...இத தாண்டி என்ன சார் கிடச்சிடப் போவுது எனும் சந்தோசம்....என் மகனோடு விளையாடும் சந்தோசத்துக்கிணையாவோ அதத் தாண்டியோ இருக்குது தங்கள் அதிரடி சிவகாசி சரவெடி அறிவுப்புகள்...சார் நிச்சயமா தருவீங்கன்னு இருந்தது....ஆனா 50ம் ஆண்டு விழாவுக்கு என ஐந்து வருடங்கள் முன்னர் எண்ணியிருப்பேன் . ஆனா கொரனா ...அடுத்த ஆண்டு புதுக்கதைகள் மட்டுமே பட்ஜட்டால் எனும் அறிவிப்பில்...இன்றய அறிவிப்போ ....ஏழை கண்ட புதையல்....ஊமை பாடிய பாட்டு...முடவனுக்கு கிட்டிய கொம்புத் தேன்...காதிழந்தவனுக்கு கேட்ட ஓசை...மழலை பாசை....யாழினிது தேனினிது என்பர் நம் கதைகள் அருமை அறியாதோர்...

    ReplyDelete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
  64. கனவா..நிஜமா..! இல்ல.. இல்ல.. அந்தக்கதையை நான் இங்க கேக்கல. இந்த பதிவுல சொல்லியிருக்குறதெல்லாம்.. கனவா நிஜமா..!

    ReplyDelete
  65. இப்பத்தய நமது பெரிய சைசுல கமாண்டோ எனும் தொகுப்பு திக்கான தாள்ல .ஹார்ட்பௌண்ட்ல..வெயிட்லஸ் தாள் புத்தகமா 1996ல் அல்லது அதற்க்கு மேலாய் கண்ணன் டிபார்ட்மெண்டில் பார்த்த நினைவு...இது போல் நம்ம இதழ் வராதா என ஏங்கியது நினைவில் வந்து போவுது....வேதாளர் தவிர பிற கதைகள் ...நீங்க சொன்ன காரிகன் கதைகள் நண்பர்கள் சிலாகிப்பால் படிக்க ஆசைப் பட்டேன்...திருட்டு முகமூடிகள் கொட்டத்தை அடக்க சரியான ஆள் இந்த முகமூடி...அதுவும் வேதாளர் டைரிய புரட்டி கதை சொல்லும் போது கேட்கும் அந்த கும்பல்ல நிச்சயமா நானும் கலந்திருப்பேன்...

    ReplyDelete
  66. வேதாளர் வர்றாரு....

    விடியல் தரப்போறாரு....

    அதுதான் அதுதான் எங்களோட மகிழ்ச்சி....

    என்னதான் புடிக்காத புது மருமகளைத் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்குற மாமியார் ஐஸ்வர்யா மாதிரி நாங்க நடந்துகிட்டாலும் கடைசில அனைவரையும் அசத்தும் மருமகள்/திருமகள் அஞ்சலி மாதிரி கலக்கப் புட்டீங்க ஆசிரியர் அண்ணே!

    மாடஸ்டிக்காக இருந்த விரதத்தை மாயாவிக்காக கலைச்சிட்டு புத்தகம் வெளிவரும் நாளன்று தீபாவளியை கொண்டாடிட வேண்டியதுதான்....

    ReplyDelete
  67. சூப்பரான செய்தி, மாண்ட்ரேக், காரிகன் ,ரிப் ,phantom.
    Thank you எடி ஜி thank you

    ReplyDelete
  68. அப்படியே அந்த wing ஜார்ஜ் கமாண்டர் கொண்டு வந்துவிடுங்கள் ஜி

    ReplyDelete
    Replies
    1. சார்..நீங்க சார்லியையும் கேக்க மறந்துட்டீங்க ..

      Delete
  69. கனவு கதாநாயகர்களை களம் காண வைத்து உள்ளீர்கள் நன்றி ஜி,

    ReplyDelete
  70. தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே

    ReplyDelete
  71. தனித்தடம் என்பது ஆறுதல். கண்டிப்பாக ரெகுலர் தடத்தில் இருந்திருந்தால் முழி பிதுங்கி இருக்கும். ஆனால் இதுவே ஒரு தவறான முன் உதாரணம் ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள் சார். இந்த தனித் தட பாணியை இத்தனை காலம் தவிர்த்து வந்தீர்கள். ஆனால் முத்து 50 வது வருடத்தையும் தாண்டி இத்தடம் நீள்வது போல் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நமது சிறு வட்டம் மேலும் சிதறி அந்தந்த ரசனைக்கு ஏற்ப கோரிக்கைகள் எழுந்து தனித்தடங்கள் வரும் காலங்களில் அதிகமாகி ரெகுலர் தடத்திற்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். மேலும் நீங்கள் வெளியிடும் புத்தகமும், உங்களது உழைப்பும் ஒரு சாரருக்கு என்றில்லாமல் அனைவருக்கும் செல்லுமாறு பார்த்து கொள்ளுங்கள். ரூ 500, 600 என்றால் கூட பரவாயில்லை சார். கிட்டதட்ட 2 ஜம்போ சீஸன் அல்லது 35% சந்தா தொகையை இத்தனித்தடம் விழுங்க போகிறது. பிடித்தவர்கள் தான் வாங்க போகிறார்கள் என்று மட்டும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. பிடிக்காவிட்டாலும் வெரும் கலெக்சனுக்காக வாங்குபவர்களும் சரி சமமாகவே இருப்பர். அவர்கள் அனைவரும் அத்தனை கதைகளையும் படித்து சிலாகிக்க போகிறார்களா என்றால் கேள்விக்குறியே. எனக்கு பிடிக்காததை அறிவித்து விட்டார் அதை எதிர்த்து கொடி பிடிக்க வேண்டும் என்பதல்ல என் நோக்கம். பகிர தோன்றியது பகிர்ந்து விட்டேன். மற்றபடி இதழ் வெற்றி அடைய என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    ReplyDelete
  72. Thanks for giving us one more chance of reading old titles.

    ReplyDelete
  73. சார் பணமனுப்ப பேங் ஒத்துழைக்கல...நாளையே அனுப்பிடுகிறேன்...எப்பவும் கடைசி வாரம் அனுப்பும் நான்....எங்க சந்தோசத்துக்காக செயல்படும் தங்களை ஊக்கப்படுத்த நாளையே அனுப்பிடுகிறேன்.செந்தூரான் அருளோடு இம்முயற்ச்சி வெற்றி பெற நண்பர்களும் கலந்து கொள்ளனும் வேகமா...கை கொடுப்போம் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் மக்கா... ஏஜென்ட்டா இருந்தாலும் என்னுடைய முன்பதிவும் இதில் உண்டு ...விரைவில்...

      Delete
    2. சூப்பர்லே மக்கா.

      Delete
  74. ```ப்ரான்கோ-பெல்ஜியத்திலேலாம் ஆமை வடை சாப்பிடறதே கிடையாது; ஆமையை வச்சே வடை தான் சுடறாங்க! நாமளும் அந்த ஜோதியில் ஐக்கியமாகிடுவோமா?```

    இத படிச்சவுடனே Ninja Turtles வரப்போதுனு நினைச்சேன்

    ReplyDelete
  75. சூப்பர் அண்ணாச்சி! சூப்பர் பதிவு. வேதாள மயாத்மா வாராக, மாண்ட்ரெக் வாராக, ரிப் கெர்பி வாராக, காரிகன் வாராக. எனக்கு ஒரு சீட் சார்.

    ReplyDelete
  76. இதை, இதை, இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்... இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  77. நாலு பேருக்கு சந்தோஷமுன்னா ஆசிரியர் எதுவேண்டுமானாலும் செய்வார் என்பதற்க்கு இந்த பதிவே உதாரணம் இம் முயற்சி பெரும் வெற்றியடைந்து இரட்டை வேட்டையர்கள் ஜான் மாஸ்டர் நார்மன் போன்றவர்கள் வருவதற்க்கு முன்னோடியாக இருக்க வேண்டும் நண்பர்களே நீங்கள் செய்வீர்களா செய்வீர்களா

    ReplyDelete
    Replies
    1. +1000000000

      ஆனால் ஒரிஜினல் ஆக மொத்தம் எத்தனை கதைகள் வந்தது என தெரியவில்லை. குறைவாக தான் இருக்கும் என நினைக்கிறேன்

      Delete