Powered By Blogger

Thursday, January 30, 2020

புக் 4 ..'பக்..பக்' 2 ....!

நண்பர்களே,

வணக்கம். ஜனவரி நேற்றைய பொழுதாகி, பிப்ரவரி இன்றாகிடுகிறது - at least நம்மளவிற்காவது !  ரகத்துக்கொரு கலராய் டாலடிக்கும் பிப்ரவரி இதழ்கள் இதோ என் கையில் தயாராய் இருக்க, டப்பிகளுள்  அவசர அவசரமாய் அவற்றை அடைத்து உங்கள் இல்லங்களை நோக்கி அனுப்பும் பணிகளில் நம்மாட்கள் பிசி ! So மாமூலான அந்தத் தேய்ந்த வரியினை மறுக்கா தூசி தட்டி போட்டுக் கொள்கிறேனே : "ஜனவரியில் பிப்ரவரி" !! Yet another 4 இதழ் கூட்டணி இம்முறையும் - and yet another before time take-off தான் ! ஆனால் Indigo விமானங்களது சமீபத்தைய எஞ்சின்கள் போல, டெஸ்பாட்ச் தேதியில் லைட்டாக சொதப்பிடுவோமோ என்ற பயம் மெய்யாலுமே இம்முறை  எனக்கிருந்தது ! சென்னைப் புத்தக விழாப்  பயணம் ; பொங்கலின் தொடர் விடுமுறை சொகுசு என்று சோம்பல் முறித்துக் கொண்டே சுற்றி வர, தேதி 20-ஐத் தொட்டு நின்றது ! 'ஆத்தாடியோவ்' என்று ராக்கூத்துக்களை ஆரம்பித்து எடிட்டிங் வேலைகளை முடித்து அச்சுக்கு இதழ்களை அனுப்பும் போதே தேதி 25 !! அப்புறமாய் அத்தனையும் fast forward-ல் நடந்ததன் பலனாய் தலை தப்பியுள்ளது ! 

ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு கத்தை இதழ்களையும் உங்களுக்கு அனுப்பிடும் வேளைதனில் உங்களின் reactions எவ்விதமிருக்குமோ என்றறியும்  ஆவல் அலையடிக்கத் தவறுவதில்லை ! No different this time as well - ஆனால் இம்முறையோ நான்கில் இரண்டு குறித்து பெரிதாய் அலட்டிக் கொள்ள அவசியமிராதென்ற மௌன நம்பிக்கை உள்ளுக்குள்  ! 'தல' டெக்சின் பர பர ஆல்பமான "ஒரு துளி துரோகம்" நம்பிக்கை தந்த முதல் இதழ் எனில் - நமது ஆதர்ஷ ஜானரான கௌபாய்க் களத்தில் ; வண்ணத்தில் உலவிட முயற்சிக்கும் "அந்தியின் ஒரு அத்தியாயம்" இதழ் # 2 ! Of course எனது நம்பிக்கை பணாலாகி மேற்படி இரு இதழ்களும் மொத்து வாங்கிடலும் நிகழ்ந்திடலாம் தான் ; ஆனால் அவ்விதம் நிகழாதென்ற அசட்டு நம்பிக்கையினைப் பட்சி ஊட்டுகிறது  ! இம்முறை எனது ஆவலோ பாக்கி 2 இதழ்களின் மீதுமே மையல் கொண்டு நிற்கின்றது !  

ஆவல் # 1 : அஞ்சாநெஞ்சர் ஆருயிர் அண்ணன் ஆர்ச்சியின் பொருட்டு !! Of course -  'அந்த நாள் ஞாபகம்..நெஞ்சிலே வந்ததே...நண்பனே..நண்பனே..!' என்று சிகப்புச் சட்டித்தலையனை வாஞ்சையோடு வாரியணைக்க இன்னமும் ஒரு அணியினர் தயாராய் இருப்பார்கள் தான் ; ஆனால் அவர்களின் பலம் மிகுதியா ? அல்லது இப்போதே குதிங்கால் பிடரியில் அடிக்க ஜார்கண்டுக்கு போகும் ரயிலில் டிக்கெட் போட ஓட்டமெடுக்கும் அணியின் பலம் ஜாஸ்தியா ? என்பதே எனது curiosity ! டெக்ஸுக்கும் ; லார்கோவுக்கும் ; ட்யுராங்கோவுக்கும் பன்ச் வரிகளை எழுதி வரும் சமீப நாட்களில் - திடு திடுப்பென நமது அண்ணாத்தேக்கு பன்ச் எழுத முனைந்த என் பேனாவுக்கு லைட்டாக ஜெர்க் அடித்தது வாஸ்தவமே ; ஆனால் துவக்கங்களெல்லாமே இங்கிருந்தே என்பதை அதற்கொருவாட்டி நினைவூட்டிய பின்னே வண்டி பிக்கப் ஆனது ! "ஆர்ச்சி இருக்க பயமேன் ?" என்று பந்தாவாய்ப் பெயரெல்லாம் வைத்தாச்சு - சாத்து விழுந்தாலும் சட்டித் தலைவனுக்கு வலிக்கப் போவதில்லையே என்ற நம்பிக்கையில் ! ஆனால் நம்ம ஷைனிங் கபாலத்துக்கும் ஒரு இரும்புப் பாதுகாப்பு அவசியப்படுமோ ? என்ற கேள்வியே இம்மாதத்தின் பிரதான point of interest - என்னளவிளாவது !         

ஆவல் # 2 : கிராபிக் நாவல் கதைத் தேர்வுகளென்பது பொதுவாகவே கத்தி மேல் நடப்பதல்ல - நடனமாடுவது போலானது ! லைட்டாய் சொதப்பினாலும் கத்தி கழுத்தைப் பதம் பார்த்து விடும் ! இம்முறை சந்தா E சார்பில் வெளிவந்திடும் "தனியே..தன்னந்தனியே.." அதற்கொரு classic example என்பேன் !  இந்தக் கதையின் இறுதியில்  தென்படும் விடைகளை விட, எழுந்து நிற்கும் கேள்விகளே ஜாஸ்தியாக இருக்கும் என்ற விதத்தில் இம்முறையின் வாசிப்பனுபவம் வித்தியாசமானதாகவே இருந்திடவுள்ளது ! And சமகால பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகின் ஹாரர் + த்ரில்லர் கதைகளின் ஜாம்பவானாய் உலவிடும் Christophe Bec உடன் நமக்கான முதல்ப் பரிச்சயமிது ! So புதுக் கதாசிரியர் ; புது கதை சொல்லும் யுக்தி +புது சித்திர பாணி (உட்பக்கங்கள் வெறும் கறுப்புக் கோட்டோவியங்களாய் மட்டுமே இராது, grey வையும் வலு சேர்க்க அற்புதமாய்ப் பயன்படுத்தியுள்ளனர் !) என்ற முக்கூட்டணியின் பலனை நாம் எவ்விதம் ரசிக்கவுள்ளோம் ? என்ற curiosity தலை முழுக்க ! Fingers crossed !!      

நாளைய தினம் பார்சல் கிட்டிடும் ; அட - மிஸ் ஆனால் நிச்சயம் சனியன்றாவது கிட்டிடும் என்பதால் இந்த ஞாயிறை சுவாரஸ்யமாக்கிட உங்களின் முதல்பார்வை அலசலகளையே பெரிதும் எதிர்பார்த்திருப்பேன் ! வித்வான்கள் - please oblige !! 

அப்புறம் ஆன்லைன் லிஸ்டிங்குகள் கூட ரெடி : 



Bye all ; See you around & Happy Reading !!                 
 P.S:  இன்று திருப்பூரில் துவங்கிடும் புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 23 ! Please do visit us folks !!           

 
 பல்லடத்துக்கு அருகிலானதொரு துவக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் நமது வாசக நண்பர் சரவணகுமார் & அவரது வகுப்பு மாணவர் !!  

                                   

Saturday, January 25, 2020

ஒரு திருவிழாவின் கதை..!

நண்பர்களே,

வணக்கம்.  பிப்ரவரி இதழ்களின் டெஸ்பாட்ச் நாலோ - ஐந்தோ நாட்களில் காத்திருப்பதால் நம்மள் கி கவனம் முழுசும் அப்பக்கமாய்த் திரும்பியாச்சு ! So சில பல கீ-போர்டுகளில் F5 key-களைத் தேய்த்துப் பொழுது போக்கும் நண்பர்களை ignore mode-ல் போட்டு விட்டு இறுதிக்கட்டப் பணிகளுக்குள் குதித்தால் நலமென்று நினைத்தேன்   !! And in any case - அவர்களுக்கே இந்த Refresh பொத்தானை அமுக்கிடும் ஆட்டம் போர் அடித்து விட்டதோ - என்னவோ டாட்டா சொல்லிக் கிளம்பிவிட்டார்கள் ! 

பிப்ரவரியின் நான்கு இதழ்களுள் இன்னமும் கண்ணில் காட்டியிரா ஒரே இதழ் - 'தல' டெக்ஸ் வில்லரின் "ஒரு துளி துரோகம்" மாத்திரமே ! And without much ado - இதோ நடப்பாண்டின் முதல் புது டெக்ஸ் சாகஸத்தின் அட்டைப்பட முதற்பார்வை ! 
ஒரிஜினல் டிசைன்...துளியும் மாற்றங்களின்றி...so டெக்ஸும் சரி, கார்சனும் சரி....செம மிடுக்காய்க் காட்சி தருவதாய் எனக்குத் தோன்றியது ! And கதையைப் பற்றிச் சொல்வதானால் ஒற்றை வார்த்தை போதுமென்பேன் : "தீ" !!! நம்மிடையே சில பல நண்பர்களுக்கு கார்சனின் நண்பர் மீதொரு கடுப்ஸ் உண்டென்பதில் இரகசியங்கள் ஏது ? And அவர்களின் முக்கிய குறைபாடே - ஒரு டெக்ஸ் சாகசத்துக்கும் , மறு சாகசத்துக்கும் இடையிலான வேறுபாடு பூஜ்யத்துக்கு மிக அருகில் என்பதே ! ஆனால் Claudio Nizzi-ன் இந்த ஆல்பத்தைப் படித்த பிற்பாடு நண்பர்கள் தம் அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள அவசரமாய் முனைந்திட வேண்டிவரலாம் !! ஒற்றை வரியிலான கருவே ஆனாலும் செம வித்தியாசமான கதைக்களத்தோடு  ஓட்டமெடுக்கும் இந்த சாகசத்தினில் முதல் பக்கத்தில் பிடிக்கும் சூடு - சும்மா தெறிக்கத் தெறிக்க "சுபம்" வரையிலும் தொடர்கிறது ! தொய்வென்ற பேச்சுக்கே இடமின்றி 264 பக்கங்களுக்கும் high octane thrills தந்துள்ளார் கதாசிரியர் நிஸ்ஸி ! And இம்முறை கதையின் ஓட்டமே மையமாய் கவனங்களைக் கோரிடுவதால், மாமூலான பன்ச் டயலாக்குகளின் பொருட்டு எனக்குப் பெரிதாய் வேலைகளில்லை ! சும்மா ஜாலியாய்ப் பேனாவை ஏந்திப் பிடித்தாலே கதையின் ஓட்டம் நம்மை இழுத்துச் செல்கிறது ! So "ஆபீசரின் அடாவடிகள்" ; "சலூனில் சிதறிய சில்லுமூக்கு" என்று விமர்சனம் எழுதிடும் நண்பர்கள் கூட இம்மாதம் தோளில் மஞ்சள் சால்வைகளோடு "ஆபீசரின் அற்புதங்கள்" ; "கார்சனின் நண்பருக்கு மரியாதை" என்று அலசல்கள் எழுதிட  நேரிடலாம் என்பேன் ! டெக்சின் modern day classics களுள் ஒன்றாய் "ஒரு துளி துரோகம்" அமைந்திடாது போனால் வியப்பே மேலோங்கும் என்னுள் ! இதோ உட்பக்க டிரெய்லர் : 

Moving on - ஜனவரியின் highlight ஆக எப்போதுமே அமைந்து விடும் சென்னைப் புத்தக விழாவினைப் பற்றி !! துவக்கம் தெறிக்கும் பட்டாசாய் நமக்கு அமைந்த போதிலும் ,பொங்கலின் தொடர் விடுமுறைகளின் சமயத்தினில்  முதல் வாரத்தின் வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை ! So கிட்டத்தட்ட சென்றாண்டின் target-ஐத் தான் இம்முறையும் தொட சாத்தியப்பட்டது என்றாலும் - இம்முறை நமக்குக் கிட்டியுள்ள footfalls , வரும் காலங்களுக்கு  நிச்சயமாய் உபயோகமாய் இருக்குமென்ற நம்பிக்கை துளிர் விடுகிறது ! And ஜூனியர் எடிட்டர் ஏற்பாடு செய்து தந்திருக்கும் புது software-ன் உபயத்தால் இம்முறை எந்தெந்த இதழ்கள், என்ன மாதிரி விற்பனை கண்டுள்ளன என்பதை நொடியில் தெரிந்து கொள்ள முடிந்துள்ளது ! ஆண்டின் மிகப் பெரிய புத்தக மேளா தந்திடும் விற்பனை சார்ந்த pointers நமக்கு நிச்சயமாய் பலன் தருவன என்பதில் no doubts whatsoever ! And இதோ அவற்றுள் சில சுவாரஸ்யத் துளிகள் : 

The Big Story !!

இந்தப் புத்தக விழாவின்  big story இரும்புக்கை மாயாவியின் விற்பனையின் புத்துணர்ச்சிகளோ ; 'தல' டெக்சின் smooth sailing களோ அல்லவே அல்ல !! மாறாக இரண்டு பூஜ்யங்களை தன் பெயரோடு கொண்டிருக்கும் ஒரு உளவாளி செய்துள்ள விற்பனை அதகளமே இம்முறையின் பேசுபொருள் ! And no prizes for guessing who that is !!  இந்தச் சென்னை விழாவினில் விற்பனை சார்ந்ததொரு ஓட்டப் பந்தயம் நிகழ்த்தியிருப்பின், பாக்கிப் பேரெல்லாம் கூடுவாஞ்சேரியில் ஓடிக் கொண்டிருக்கும் நேரத்துக்கு, கோப்பையைத் தூக்கிக் கொண்டு செங்கல்பட்டில் போய் நிலைகொண்டிருப்பார் ஜேம்ஸ் பாண்ட் 007 !! குறைந்த விலையிலான "பட்டாம்பூச்சிப் படலம்" மாத்திரமின்றி, வண்ணத்திலான JB 007-ம் மாஸ் காட்டியுள்ளனர் சென்னையில் !!  இங்கே குறிப்பிடும்படியான இன்னொரு விஷயமும் கண்ணில்பட்டதாய்த் தோன்றியது :

Early days yet ; ஆனால் வாங்கும் திறனுக்குப் பஞ்சமிலா பெருநகரிலேயே இந்த ரூ.40 தடத்தின் இதழானது வாஞ்சையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், தொடரக்கூடிய Tier 2 நகர்களின் புத்தக விழா விற்பனைகளுக்கு இந்தச் சொற்ப விலை track ரொம்பவே பிரயோஜனமாகிடக்கூடும் என்றொரு gut feel ! காலவோட்டத்தில் அந்த வரிசையில் ஒரு டஜனுக்கு மேற்பட்ட இதழ்கள் நம் வசமிருக்கும் பட்சங்களில், மாமூலாய் விலைகளை பார்த்து மிரண்டிடும் இள வயது வாசகர்களை தைரியமாய் இவற்றின் பக்கமாய்த் திருப்பி விட இயலும் ! So ஜேம்ஸ் பாண்டின் புண்ணியத்தில் ஒரு ஆரோக்கியமான side track உருவாகிடும் வாய்ப்புகள் பிரகாசமாய்க் கண்ணில்படுகின்றன !

The Next Big Story :


"உண்டான காண்டு யாவும் தன்னாலே ஆறிப் போகும் மாயம்   என்ன  ? மாயாவி...மாயாவி...?..மாயாவி ...?"

"எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது...!!"

"உந்தன் புக்கை ரேக்கில் பார்க்கும் போது வந்த அழுகை நின்றது..!!"

"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல.....

அதையும் தாண்டிப் புனிதமானது...!"

குணா கமலஹாசன் போல நான் பாதி மறையோடு - "கி.நா. ; வோ.நா ; அக்கன்னா" என்று பெனாத்தித் திரிய - புத்தக விழாவிற்கு வருகை தரும் மூத்த வாசகர்களோ - 'அது கிடக்கு அரைலூசு' என்றபடியே மாயாவிகாருவை மார்போடு அணைத்துக் கொண்டதே இந்தாண்டின் highlight # 2 ! இடையே 2 ஆண்டுகளாய் இந்த மாயாவி மேனியா ரொம்பவே அடங்கி இருந்திருக்க - நடப்பாண்டில் பெரிதாய் மாயாவியின் பொருட்டு நாங்கள் திட்டமிட்டிருக்கவில்லை ! கடந்தாண்டின் விற்பனை எண்ணிக்கையை அனுசரித்து 50 பிரதிகள் மட்டுமே பேக் செய்திருந்தோம் - ஒவ்வொரு மாயாவி டைட்டிலிலும் ! ஆனால் இம்முறை பொங்கோ பொங்கென்று பொங்கித் தீர்த்த மூத்த வாசகர்கள் பிரித்து மேய்ந்து விட்டார்கள் ! And வெண்பொங்கலோடு போணியாகும் மெதுவடையைப்  போல, மாயாவி மாமாவோடு ஸ்பைடர் அண்ணாச்சி ; லாரன்ஸ் அப்புச்சி & ஜானி நீரோ சித்தப்பும் கைகோர்த்துக் கொள்ள - ஓரளவிற்கு இந்த golden oldies சார்ந்த ஸ்டாக் குறைந்துள்ளது ! Of course - மாயாவியின் விற்பனை நான்குக்கு - ஒன்று என்று வேறொரு லெவலில் இருந்தாலும், கடைசி 2 ஆண்டுகளாய்ச் சீந்த ஆளின்றித் தவித்த ஸ்பைடரும், ஜானி நீரோவும் இம்முறை கொஞ்சமேனும் நம் கிட்டங்கியிலிருந்து குடிமாறியிருப்பதில் ஹேப்பி ! And yes - இன்னமும் கணிசமான ஸ்டாக் உண்டு - மாயாவி நீங்கலான இதர Fleetway மறுபதிப்புகளில் ! இதே உத்வேகம் தொடர்ந்து, அந்த ஸ்டாக் கரைய பெரும் தேவன் மனிடோ அருள் புரிவாராக !


And yes - 'என் கடன் மாயாவியை வாங்கி வீடு அலமாரியில் அடுக்கி வைப்பதே !" என்ற முனைப்பிலான வாசகர்கள் இதர contemporary இதழ்களை ஏறெடுத்துப் பார்க்கவும் தயாரில்லை என்பதில் இம்முறையும் மாற்றங்கள் நஹி !!

The Next Big Thing !!

இந்தாண்டின் விற்பனைகளுள் கவனிக்கத்தக்கதொரு இடத்தை வாரிச் சுருட்டியிருப்பவர்கள் நமது அலைகடலின் அசுரர்கள் !! பராகுடாவின் 2 ஆல்பங்களும் ரொம்பவே impressive விற்பனை கண்டுள்ளன எனும் போது - புதுயுக வாசகர்களின் வருகையும் உற்சாகமூட்டும் விதமாய் இருந்திருப்பது புரிகிறது !! பொதுவாய் இந்தக் கோர மூஞ்சிக்காரன்களை அட்டைப்படத்தில் போட்டு வைத்தால் - புத்தக விழாவின் casual readers "ஐயே...." என்று ஒதுங்கிடுவது வாடிக்கை !  ஆனால் இம்முறை பராகுடா சாதித்திருப்பதை மாற்றங்களின் முன்னோடியாய்ப் பார்த்திடத் தோன்றுகிறது !

The Ho..ho..ho..story !!

நெஞ்சைக் குளிர்விக்கும் சேதி இது - அட் லீஸ்ட் எனக்கும், கார்ட்டூன் ரசிகர்களுக்குமாவது !! இந்தாண்டின் overall performance -ஐப் பார்த்திடும் போது கார்ட்டூன் இதழ்களின் செயல்பாடு ரொம்பவே முன்னேறியுள்ளது தெரிகிறது ! எப்போதுமே புத்தக விழாக்களில் கார்ட்டூன்கள் சோடை போனதில்லை தான் ; ஆனால் இம்முறை pretty improved show !! தெறிக்க விட்டு அதனில் முன்னணியில் இருப்பவர் நம்ம லக்கி லூக் தான் ! மாயாவி எவ்விதமோ ; டெக்ஸ் எவ்விதமோ ; ஜேம்ஸ் பாண்ட் 007 எவ்விதமோ - அவ்விதமே இந்த ஒல்லிக்குச்சி கௌபாயும் தனது ஜானரில் இதர ஆசாமிகளை விட எக்குத்தப்பான முன்னணியில் நிற்கிறார் !

அப்புறம் இன்னொரு சந்தோஷச் சேதி - பென்னி சூப்பராய் விற்றிருப்பது ! Of course இதன் பின்னணியில் நமது ஸ்டாலில் விற்பனைக்கு ஒத்தாசை செய்திட முன்வந்திருந்த நம் நண்பர்களின் கைவண்ணம் தெரிவதாய் நான் நினைத்தேன் ! எது எப்படியோ - சுட்டிப் புயல் இம்முறை சுறுசுறுப்புப் புயல் !


அப்புறம் Smurfs ; ப்ளூ கோட் பட்டாளம் ; க்ளிப்டன் ; சிக் பில்  வரிசைகளுமே சோம்பிக் கிடக்காது ரவுசு செய்திருப்பதையும் ; ஹெர்லாக் ஷோம்ஸ் & மேக் & ஜாக் தொடர்கள் - புருவங்களை உயர்த்திடும் விற்பனைகளை நிகழ்த்தி இருப்பதையும் பார்க்க முடிந்துள்ளது ! இதில் விடுபட்டு நிற்பது நம் மதியில்லா மந்திரியார் மாத்திரமே ! அட..லியனார்டோ தாத்தா விற்ற அளவிற்கு கூட மந்திரியார் போணியாகக் காணோம் !

The Surprise Package :

மாயாவி ; ஸ்பைடர் ; ஆர்ச்சி ; அப்புச்சி என்று இந்தாண்டினில் ரிவர்ஸ் கியரை சித்தே பலமாகவே அமுக்கி விட்டோமோ ? என்ற பீலிங்கு நம்மிடையே எழுந்திருப்பின் - அதனை சரி செய்யும் விதமாய் அமையவுள்ளது - தொடர்ந்திடும் stat :


இந்தாண்டின் புத்தக விழா விற்பனையில் மாயாவி ; டெக்ஸ் & லக்கி லூக் வரிசைகளுக்கு  அடுத்தபடியாக விற்பனையில் சாதித்துள்ள தொடர்  எது தெரியுமோ ? Surprise ...surprise ....கிராபிக் நாவல்களே ! பராகுடாவில் துவங்கி, கதை சொல்லும் கானகம் ; கனவுகளின் கதையிது ; தேவ ரகசியம் தேடலுக்கல்ல ; சிப்பாயின் சுவடுகள் (!!) என்று நிறையவே கி.நா. titles அழகான விற்பனை கண்டுள்ளன ! இவற்றுள் ஒரு சில 25 % டிஸ்கவுன்ட்டில் நாம் வழங்கிய இதழ்கள் என்ற முறையில் சாதித்திருக்கலாம் தான்; ஆனால் in general எல்லா கிராபிக் நாவல்களுமே அதிரடி காட்டியிருக்கும் நிலையில் - ஒரு "கி.நா.ஸ்பெஷல் "போடும் நாள் தொலைவில் இல்லியோ ? என்று யோசிக்கத் தோன்றுகிறது !! Winds of change ?

The Sad Story !!

சந்தோஷம் வரும் முன்னே...சங்கடம் வரும் பின்னே....!!

நல்ல செய்திகளை சொன்ன கையேடு இதனைச் சொல்ல கொஞ்சம் தயக்கமாகவே உள்ளது ; ஆனால் கசப்பையும் விழுங்கத் தான் வேண்டுமே ? கொஞ்ச காலமாகவே தொடர்ந்திடும் சமாச்சாரம் தான் - ஆனால் இம்முறை கொஞ்சம் அழுத்தமாகவே தலைதூக்கியுள்ளது, இந்தாண்டின் சென்னை விழா விற்பனைகளில் ! ஜாம்பவான் கதாசிரியரான வான் ஹாமின் லார்கோ வின்ச் தொடரும் சரி ; வெய்ன் ஷெல்டன் தொடரும் சரி ; LADY S தொடரும் சரி - படு சுமாரான விற்பனை கண்டுள்ளன ! ஷெல்டனின் ஆல்பங்கள் in particular படு சொதப்பல் !! சத்தியமாய் ஏனென்று புரியவில்லை ! மண்டை நரைத்த மீசைக்காரர்களை ஹீரோக்களாய் ஏற்றுக் கொள்ளப் பிடிக்கலியோ - என்னவோ என்று குடாக்குத்தனமாய்த் தான் யோசிக்கத் தோன்றுகிறது !! ஆனால் அப்படிப் பார்த்தால் -  கண்ணுக்கு குளிர்ச்சியான LADY S அட்டைப்படத்தில் தலைகாட்டும்  இதழ்களும் தடுமாறத் தான் செய்துள்ளன ! Tough !!!

The எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போயிருக்கார் story :


ஆளோடு ஆளாய் அழகாய்த் தயாராகி, பயணத்தின் போது ஜன்னல் சீட்டைப் பிடித்து ; பட்டணம் போயான பின்னே சமர்த்தாக ரேக்குகளில் குந்தி பராக்குப் பார்த்துவிட்டு ; ஊருக்கு நல்ல பிள்ளைகளாய்த் திரும்பிய தொடர்கள் சில இம்முறையும் உண்டு ! இதோ அவற்றின் பட்டியல் :

டைலன் டாக்

XIII இரத்தப் படலம் 

ஜில் ஜோர்டன்

புருனோ பிரேசில் 

சாகச வீரர் ரோஜர்

கேப்டன் டைகர்  (regular titles ; not the Specials)

மேற்படித் தொடர்களின் சகலத்திலும் இன்னமும் கணிசமான கையிருப்பு இருக்கும் நிலையில் - அரை டஜன் பெண்பிள்ளைகளைப் பெற்ற வயதான தோப்பனாரின் கவலை உள்ளுக்குள் குடிகொள்கிறது !! "இதுகளை என்னிக்குக் கரைசேர்க்கப் போறேனோ ?" என்று டிராமாவில் வரும் அந்தக் காலத்து டாடியைப் போல கண்ணீர் சிந்தத் தோன்றுகிறது !!  பூஹு...!!!

The நான் வளர்கிறேனே மம்மி story :

இதுவரையிலும் தத்தித் தத்தி நடை போட்டுக்கொண்டிருந்த சில தொடர்கள் இம்முறை சித்தே வேக நடை போடப் பயின்றிருப்பது இந்தாண்டின் சந்தோஷங்களுள் இன்னொன்று !! அந்த லிஸ்டில் முதலிடத்தில் நிற்பது கமான்சே !! வழக்கமாய் ரெண்டு புக்...மூணு புக் என்று விற்றிடும் சமாச்சாரமானது இம்முறை இருபது ; முப்பதென்று விற்றுள்ளது ! Maybe இதன் பின்னணியில் அந்த 25% தள்ளுபடி ஒரு முக்கிய காரணமாய் இருக்கலாம் தான் ; ஆனால் விற்ற மட்டிலும் சந்தோஷம் என்றுள்ளேன் ! திங்கட்கிழமை முதல் நமது ஆன்லைன் விற்பனைகளிலும் இத்தொடருக்கு 25% டிஸ்கவுண்ட் இருந்திடும் - along with a few more titles !!

இந்தாண்டின் அடுத்த வேக நடை பயின்ற பார்ட்டி - ஒற்றைக்கை பவுன்சர் தான் ! வழக்கமாய் இவருக்கும் புத்தக விழாக்களுக்கும் ஏழாம் பொருத்தமே ! ஆனால் இம்முறை - 25% off ஸ்டிக்கரின் புண்ணியத்தில் இவரும் brisk ஆக விற்றுள்ளார் !! ஜெய் ஸ்டிக்கர்பலி !!

பட்டியலின் இடம் # 3 - நமது இளவரசியாருக்கே !! சொற்ப விலையில் இருந்தாலுமே பொதுவாய் இவரது இதழ்கள் அவ்வளவாய் விற்பதில்லையே ? என்பது எனது ஆதங்கங்களுள் ஒன்றாக இருந்து வந்தது ! ஆனால் இம்முறை இளவரசி சோம்பலைக் களைந்திருப்பதில் ஹேப்பி !! இங்குமே ஸ்டிக்கரின் மகிமையா ? என்று சொல்லத் தெரியலை தான் ! ஆனால் புண்ணியத்துக்குக் கறக்கும் மாட்டைப் பல்லை பிடித்துப் பார்ப்பானேன் ?

THE STORY !!!

எந்தவொரு "விழாக் கதையும்" - 'தல' புராணமின்றி இருக்கத் தான் முடியுமா - என்ன ? இம்முறையும் no different !! 'லாலே லா லல்லி லா லா..." என்று பின்னணியில் வாசித்தபடியே பில் போடும் வேலை மாத்திரமே நமக்கிருக்க, டெக்ஸ் & கோ. விற்பனைக்கான சகல வேலைகளையும் தாமாகவே செய்து கொண்டனர் !!  Color டெக்ஸ் ; black & white டெக்ஸ் ; (கார்த்திக் சொன்னது போல) கோ-ஆப் டெக்ஸ் என சகல டெக்ஸ்களும் ஒரே சீரில் விற்றுள்ளன ! அதிலும் கலரில் இருந்த 'தல' இதழ்கள் எல்லாமே blockbusters !! ஆபீசர் அடாவடிக்காரராய் இருந்தாலும், நம்மை அரவணைத்து வழிநடத்தும் அன்பர் என்பதை மறுக்கவோ / மறைக்கவோ வழிகள் லேது !!

And some brief snippets :

*பாக்கெட் சைசிலான ஸ்பைடரின் இதழ் அதகள விற்பனை இம்முறை !!

*MAXI லயனின் இதழ்கள் அனைத்துமே decent sales !! அதிலும் "மனதில் உறுதி வேண்டும்" ஓஹோ ரகம் !

*இம்முறை 2019-ன் ஒட்டு மொத்த இதழ்கள் கொண்டதொரு pack தயார் செய்து கொண்டு வந்திருந்தோம் - ஆறாயிரம் ரூபாய் சுமாருக்கு !! அந்த packs 7 விற்றுள்ளதில் அடியேன் ரெம்போ ஹேப்பி - ஐடியா என்னது எனும் பொருட்டு !!

*டைனமைட் ஸ்பெஷல் - சுத்தமாய்த் துடைத்தாயிற்று !!

*"யாவரும் நலம்" என்றபடிக்கே நார்மலான விற்பனை கண்டுள்ள நாயகர்கள் :

ரிப்போர்ட்டர் ஜானி

தோர்கல்

மர்ம மனிதன் மார்ட்டின்

கேப்டன் பிரின்ஸ்

ட்ரெண்ட் 

தோர்கலின் துவக்க இதழ்கள் ரொம்பவே தடுமாறி வருவது மட்டும் கவலை தரும் விஷயம் !!


*சத்தமின்றி வந்து, மொத்து பல தந்து, இந்தாண்டுமே ஒரு crackerjack துவக்கம் தந்துள்ளார் ட்யுராங்கோ !! விற்பனையில் மனுஷன் கில்லிங்கோ !!

Thus ends my roundup of the Chennai Fair !!

இதோ, அடுத்த சில நாட்களில் சட்டி, பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு நமது காமிக்ஸ் கேரவன் திருப்பூர் நோக்கிப் பயணமாகிறது !! ஜனவரி 30 to  பிப்ரவரி 9 வரையிலும் அங்கே கடைவிரித்துக் காத்திருப்போம் !! Welcome folks !!

"தனியே...தன்னந்தனியே"வின் எடிட்டிங் மட்டும் பாக்கி நிற்பதால் இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன் ! You have a lovely weekend all !! Bye for now !!

P.S : இன்னமுமே நமது 2020-ன் சந்தா எக்ஸ்பிரஸில், நண்பர்களின் ஒரு பகுதி இணைந்திடாது இருப்பது சங்கடமாய் உள்ளது ! இன்றைய சூழல்களில் பொருளாதார நெருக்கடிகள் அனைவருக்குமே பொதுவுடைமை என்றான பின்னே, (காமிக்ஸ்) வாசிப்புக்கென ஒரு கணிசமான தொகையினைச் செலவிடுவது சுலபமல்ல என்று புரிகிறது ! எனினும் வருஷங்களாய் கரம்கோர்த்து வந்தோரை இம்முறை மிஸ் செய்வது ஒரு நெருடும் விஷயமாய் இருப்பதால் - சந்தாத் தொகைகளை 3 தவணைகளில் செலுத்தும் சலுகையினை பிரத்யேகமாய் அறிவிக்க நினைக்கிறேன் ! 'ஏக் தம்'மில் பணம் செலுத்தச் சிரமம் காணும் பாக்கி நண்பர்கள் இப்போது ; மே & ஆகஸ்டில் - என 3 தவணைகளில் பணம் செலுத்திடும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் ! Hope to see you onboard too folks !!


Before I sign out here's another interesting comics trivia : (நன்றி : நண்பர் ரஃபிக் ராஜா )

டியர் எடி, 

உங்கள் பார்வைக்கு, இதை பற்றிய ஒரு பதிவை கண்டிப்பாக இட வேண்டும்... நம்ம லக்கிலூக் இருக்காரே :)


கலா ரசிகர்கள்.... நம்ம ப்ரெஞ்சுக்காரங்க ! 2020ம் ஆண்டினை கிராபிக் நாவல் ஆண்டாக அறிவிச்சிருக்காங்கன பாருங்களேன் !




பேசாமல் பிரான்சில் கொஞ்ச காலம் ; இத்தாலியில் மீதிக் காலம் என்று குப்பை கொட்டும் தீர்மானத்தோடு புறப்படுவோமா guys ? யார்லாம் வர்றீங்க ? 

Thursday, January 23, 2020

நான் வளர்கிறேனே டம்மி !!

நண்பர்களே,

வணக்கம். 'நான் வளர்கிறேனே மம்மி !!' என்று பாட்டுப் பாடும் காம்பிளான் பாப்பாவைப் பார்த்திருப்போம் !  

ஆனால் -

"நான் வளரோ வளரோ வளரோ என்று வளர்கிறேனே டம்மி !" என்று பாடி வரும் ஒரு வலைப்பதிவைப் பார்த்திருப்பீர்களா ? என்பது சந்தேகமே !! Welcome to the latest episode of the non-stop soap opera that is otherwise called "Tamil comics" folks !!

இதோ கீழிருப்பது கடந்த ஒரு மாதத்தின் நமது வலைப்பதிவுப் பக்கத்தின் பார்வைக் கணக்கு விபரங்கள் : 
இனி வரும் நாட்களில் நாமெல்லாம் செம கெத்தாய்ச் சொல்லிக் கொள்ளலாம் - "எங்கள சப்பானிலே பாத்தாகோ ; அமெரிக்காவுல பாத்தாகோ ; சுச்சர்லாந்திலே பாத்தாகோ !!" என்று !! கோபால் பல்பொடி மாத்திரமல்ல - நமது வலைப்பக்கமும் எக்கச்சக்க தேசங்களுக்கு ஏற்றுமதி ஆவது எத்தினி மெகா பெருமை !!

And தொடர்ந்திடும் screenshot சொல்லிடும் stats மீதுமே கொஞ்சம் கவனம் ப்ளீஸ் :

Windows Firefox & Chrome பிரௌசர்களின் புண்ணியத்தில் 68% பார்வைகள் - அதாவது 109,929 பார்வைகள் பதிவாகியுள்ளன !!

Android மார்க்கமாயும் IPhone வாயிலாகவும் 29% - அதாவது சுமார் 47,500 பார்வைகள் !! இது நமது வாடிக்கையான பார்வைகளை அனுசரித்துச் செல்லும் ஒரு நம்பராக்கும் ! 

So இதிலிருந்து என்ன கிரஹித்துக் கொள்வதென்பதை உங்களின் யூகங்களுக்கே விட்டு விடுகிறேனே guys ! சிஸ்டத்தில் அமர்ந்து browse செய்யும் திருவாளர் பொதுஜனம் இந்தக் கடைசி ஒன்றேகால் மாதத்தில் - "இணையத்தில் வேறு சரக்கே கிட்டில்லா சாமி ; நீங்களே நிம்ம தேவுடு" என்ற ஆதங்கத்தோடு  திடு திடுப்பென ஓட்டமாய் ஓடியாந்து நம் தளத்தில் ஐக்கியமாகியுள்ளது இன்னா மாதிரிப் பெருமை  ? 

சரி, 4 மில்லியனைத் தொட்ட கையோடு ஒரு ஸ்பெஷல் இதழைக் கோரிக் பெறுவதே இதன் பின்னணி நோக்கமென்று வைத்துக் கொள்ளுங்களேன் - நேற்றோடு இந்த வேகமும், மோகமும் மட்டுப்பட்டிருக்க வேண்டாமோ ? மாறாக வேகம் கூடவல்லவா செய்கிறது ? 

"இன்றைய பொழுது இன்னமும் வேகம் பிடிப்பதன் மருமம் என்ன ? " என்று தில்லானா மோகனாம்பாள் மாடுலேஷனில் பாட்டுப் பாடத் தான் தோன்றுகிறது எனக்கு !! And எதை நோக்கியோ இந்த வேகம் ? என்றும் கேட்கத் தோன்றுகிறது ! 

ஆனாலும் நமக்கு போர் அடிக்காது இருந்திட வேண்டுமென்பதற்காக அநியாயத்துக்கு அக்கறையும் , முனைப்பும் காட்டிச் செயல்பட்டு வரும் அனாமதேய அன்பர்கள், ஊன், உறக்கத்தைத் தொலைத்து வருவதே இங்கே கஷ்டமான சமாச்சாரமாய் எனக்குத் தோன்றுகிறது !!  Rest a wee bit guys !! 

Saturday, January 18, 2020

ஒரு பரோட்டா படலம் !

நண்பர்களே,

வணக்கம். சரம் கோர்த்து வந்திட்ட விடுமுறைகள் சரவெடி போல் பட்டையைக் கிளப்பியிருக்குமென்று நினைக்கிறேன் ! வாரயிறுதிக்கு இன்னொரு தபா சென்னைப் புத்தக விழாவினில் தலை காட்ட எண்ணியிருந்தேன் ; ஆனால் ஒரு ஒட்டகத்தையோ ; கோவேறு கழுதையையோ பிடித்துச் சவாரி செய்தாலொழிய சிங்காரச் சென்னைக்குப் போக மார்க்கம் லேது என்பது தடையாகிப் போனது ! Anyways சென்னைப் புத்தக விழாவின் விற்பனைகள் doing good என்பதால் நான் விபரங்களை மட்டும் கேட்டுக் கொண்டு இக்கட பிப்ரவரியின் பணிகளுக்குள் பொழுதுகளை ஒட்டி வருகிறேன் ! As always, நிறையவே நேரம் இருக்கும் போதெல்லாம் 'பாத்துக்கலாம் !!' என்று வளைய மறுக்கும் உடம்பானது  தேதி இருபதை நெருங்கப் போகிறதெனும் போது பதட்டம் + பரபரப்பு என்ற பெட்ரோலில் ஓட்டமெடுக்கத் துவங்குகிறது !  And as always - இந்த மாதமும் "உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக" என்று புது இதழ்கள் பற்றிய பில்டப் படலம் இல்லாது போகாதென்றாலும், பிப்ரவரியின் நான்குமே  ஏதோவொரு காரணத்தின் பொருட்டுப் பேசப்படும் இதழ்களாய் அமையவிருப்பது நிச்சயம் ! Simply becos கதைகளின் தன்மை top class !!

ஜம்போ காமிக்ஸின் இரண்டாம் சீசனில் இன்னமும் 2 இதழ்கள் பாக்கியிருக்க - அந்த இரண்டுமே வெவ்வேறு விதங்களில் பொறி பறக்கச் செய்யப் போகும் ஆல்பங்கள் ! அவற்றுள் பிப்ரவரியில் வெளிவரக் காத்திருப்பது ஒரு கௌபாய் one shot ! மார்ஷல் சைக்ஸ் !! இவரின் "அந்தியின் ஒரு அத்தியாயம்" தான் நமக்கிம்மாத வண்ண இதழ் ! (பாக்கி 3 இதழ்களுமே black & white இம்முறை !!) வழக்கமான வன்மேற்கு ; வழக்கமான போக்கிரிகள் ; வழக்கமான வன்முறை ! ஆனால் இங்கே சட்டத்தை நிலைநாட்ட வலம் வருபவரோ கொஞ்சம் வித்தியாசமானவர் ! இவருக்கு இரக்கம் உண்டு ; கௌபாய் நாவல்கள் மீது நாட்டமுண்டு & உள்ளுக்குள் ஒரு ஆறா ரணமும் உண்டு !! அத்தனையையும் சுமந்து கொண்டே வெறிநாய்களை வேட்டையாட முனைந்திடும் இந்த மனுஷனுக்கு எதிராய் இருப்பது இன்னுமொன்று : மூப்பு !! தனக்குள் உறையும் சாத்தான்களோடு போரிட்டபடிக்கே - ஒவ்வொரு மனிதனையும் விட்டு வைக்கா காலத்தின் ஓட்டத்தோடும் போட்டி போட்டபடிக்கே - வன்மேற்கை சுத்தப்படுத்த நினைக்கும் சைக்ஸ் நிச்சயமாய் நம் மனதைத் தொடுவார் ! கதையின் வீரியத்துக்குத்  துளியும் தொனிக்கா ஓவிய பாணி & ஓவிய பாணிக்குத் துளியும் சளைக்கா கலரிங் பாணி என்று இங்கொரு முக்கூட்டணி ரகளை செய்துள்ளது ! மிகையிலா ; மேக்கப் போடா வன்மேற்கை தரிசிக்க நினைப்போர்க்கு "அந்தியின் ஒரு அத்தியாயம் !" would make for an engrossing read !! ட்யுராங்கோ பாணியில் சைக்ஸூம் ஜாஸ்தி பேசுவதில்லை என்றாலும், கதை நெடுக உள்ள வசனங்கள் 'நச்' ரகம் & பேனா பிடிப்போர் score செய்திட  ஆங்காங்கே வாய்ப்புகள் நிறையவே உண்டு !  So ஒரிஜினல் ஸ்கிரிப்ட் சொல்ல முனையும் சங்கதிகளை ; பொருத்தமான அதே தொனியில் சொல்லிட இயன்றமட்டிலும் முயற்சித்துள்ளேன் !! பார்க்க வேண்டும் இதழ் வெளியான பின்பு இது குறித்த உங்களது அபிப்பிராயங்கள் என்னவென்று ! இதோ அட்டைப்படத்தின் முதல் பார்வை ; ஒரிஜினல் டிசைனை மிக மெலிதாய் மெருகூட்டும் நம் முயற்சிகளோடு ! And தொடர்வது உட்பக்க டிரெய்லரும் கூட !


A word of advice too :  விஷயங்களைச் சொல்லிட ஸ்கிரிப்டை பயன்படுத்திய அதே அளவுக்கு சித்திரங்களையும் இங்கே படைப்பாளிகள் பயன்படுத்தியுள்ளனர் ! So சித்திரங்கள் மீதும்  நுணுக்கமாய் பார்வைகளை ஓடவிட நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் !!

Moving on, பார்வைகளை ஈர்ப்பதோ நடப்பாண்டின் முதல் கிராபிக் நாவல் ! And இம்முறை ஒரு திகில் கதையானதே அந்த ஸ்லாட்டை ஆக்கிரமிப்பது !! இதோ - 'தனியே...தன்னந்தனியே...' இதழின் அட்டைப்பட முதல் பார்வை - இம்மியும் மாற்றமிலா ஒரிஜினல் டிசைனோடு :
மிரட்டலான அட்டைப்படத்துடனான இந்த இதழுக்கு ஒரு  first உண்டு !  பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகின் உச்ச ஸ்தானத்தில் உள்ளதொரு ஜாம்பவானான GLENAT பதிப்பகத்துடன் கரம்கோர்க்க நமக்கு வாய்ப்புக் கிட்டியுள்ள முதல் தருணம் இது என்பதே அந்த first ! சுமார் 4000 இதழ்களை வெளியிட்டுள்ள நிறுவனம் ; ஆண்டொன்றுக்கு சுமார் 400 ஆல்பங்கள் ; ஆண்டுக்குத் தோராயமாய் 12 மில்லியன் இதழ்கள்  விற்பனை என்று மிரட்டும் GLENAT பதிப்பகத்தின் துவக்கம், நமது நீலப் பொடியர்கள் smurf களுக்கொரு ரசிகர்மன்ற இதழ் போலானதொரு வெளியீட்டோடு தான் ! 1969 வாக்கில், (Glenat நிறுவனர்) ஜாக் க்ளெநாட் அந்த இதழை உருவாக்கிய சமயம்   அவரது வயது 17 மட்டுமே !! இருபது வயதாகிய போது Glenat பதிப்பகத்தைத் துவங்கியவர் இன்றைக்கு அது ஒரு அசாத்திய காமிக்ஸ் சுரங்கமாக விஸ்வரூபம் எடுக்கச் செய்துள்ளார் !  பிரெஞ்சுக் காமிக்ஸ் உலகுடன் நமக்கு 35 ஆண்டுகள் பரிச்சயம் என்ற போதிலும் இவர்களின் கதைகளுக்கு உரிமைகள் கிட்டிடும் தருணம் இன்றைக்கே புலர்ந்துள்ளது !! Fingers crossed இவர்களின் படைப்புகளை நாமும் ரசிப்போமென்று !! கதையைப் பொறுத்தவரைக்கும் இதுவொரு ஹாரர் த்ரில்லர் எனும் போது அதனைப் பற்றி முன்கூட்டியே பேசி வைத்து சஸ்பென்ஸை போட்டுத் தள்ளிடக் கூடாதென்பதால் - மிஞ்சியிருக்கும் பொங்கலால் வாயை ரொப்பிக் கொள்ளவுள்ளேன் - பெவிகால் இல்லாத குறையைத் தீர்த்துக் கொள்ளும் விதமாய் !

பிப்ரவரியின் இறுதி இதழ் - 'தல'யின் crackerjack சாகசம் !! அது பற்றிய preview அடுத்த ஞாயிறுக்கு என்பதால் தற்போது அடுத்த தலைப்பின் பக்கமாய்த் தாவட்டுமா ?

And இதுவோ ரொம்ப காலமாகவே வெறும் வாக்குறுதியாய் மாத்திரமே தொடர்ந்து வந்திடும் ஒரு சமாச்சாரத்தை நிஜமாக்கிடும் முயற்சிக்கான முதல் படி பற்றி ! தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாய் நமது சந்தா எக்ஸ்பிரஸில் இடம்பிடித்து வரும் ரெகுலரான சந்தா நண்பர்கட்கு loyalty points வழங்கப்படும் என்றும், அவற்றிற்கு ஈடாக பரிசுகளோ ; காமிக்ஸ் இதழ்களோ பிரேத்யேகமாய் இருந்திடும் என்று அறிவித்திருந்தது நினைவிருக்கலாம் ! ஆண்டுகள் ஓடிக் கொண்டேயிருக்க, நாம் அதனை நடைமுறைப்படுத்தாது போயின் அப்பாலிக்கா ஒட்டு மொத்தமாய்க் கணக்குப் பார்ப்பதற்குள் நம்மாட்களுக்கும் நாக்குத் தள்ளிப் போய் விடக்கூடும் என்பதால் இதோ அந்த 2020 நடப்பாண்டின் சந்தாக்களுக்கு ஈடான சமாச்சாரங்களை முதலில் அறிவிக்கின்றேனே ? அடுத்த 3 மாத இடைவெளிக்குள் இதனை நிஜமாக்கிய கையோடு 2019-க்கான பரிசு ; அதன் பின்னே 2018-க்கு என வாக்குறுதிகளை நிறைவேற்றிட உத்தேசித்துள்ளேன் !

நடப்பாண்டை நான் முதலில் தேர்வு செய்திடக் காரணங்கள் இரண்டுள்ளன ! காரணம் # 1 : Obviously நமக்கு இதற்கான பட்டியலைத் தயார் செய்வது ரொம்பவே சுலபம் ! And காரணம் # 2 : இம்முறை கிட்டத்தட்ட 95% சந்தாக்கள் "ஆல்-இன்-ஆல் அழகுராஜா" சந்தாக்களே !! So இந்தாண்டினில் நீங்கள் ஈட்டியுள்ள பாய்ண்டுகளில் பெரிதாக வித்தியாசம் இராதென்பதால் - ஒற்றை அறிவிப்பே அனைவருக்கும் பொருந்திடும் ! As a result எனது வேலையும் லேசாகிப் போகிறது !

இங்கே என் முன்னே இருப்பன 2 options :

1."படகோட்டி" படத்தில் தலீவர் (நம்ம பதுங்குகுழிப் புகழ் தலீவர்   நஹி!) கழுத்திலே கட்டின கர்சீப் ; "கன்னடத்துப் பைங்கிளி பயன்படுத்திய சோப்பு டப்பி" என்ற ரகத்தில் அல்லாது - உருப்படியாய் நம் நாயகர்களின் படங்களுடனான printed tshirts ; coffee mugs ; wallclocks என்று வழங்கிடலாம் ! டெக்ஸ் வில்லர் ' லக்கி லூக் ; ஜேம்ஸ் பாண்ட் 007 போன்ற prime நாயகர்களின் படங்களை பதித்திட அனுமதி கிட்டுவது கடினம் - becos ஏற்கனவே அவர்களின் இது போலான merchandise உலகளவில் விற்பனைக்கு உள்ளன ! மாறாக - மாயாவி ; ஸ்பைடர் ; ஆர்ச்சி ; போன்ற evergreen பார்ட்டிகளை இங்கே பயன்படுத்திடலாம் !

2.Option # 2 : ஏதேனும் பிரத்யேக விலையில்லா காமிக்ஸ் இதழ்களைத் தயாரித்து பாய்ண்ட்களுக்கு ஈடாக அவற்றை வழங்கிடலாம் தான் ! ஆனால் இங்கே சின்ன நடைமுறைச் சிக்கல்கள் நெருடுகின்றன   :

முறைப்படிப் பார்த்தால் இந்தத் திட்டமிடலின் கீழ் உருவாக்கக்கூடிய இதழ்களை "சந்தாவின் அங்கத்தினர்கட்கு மாத்திரமே" என்று  - பிரேத்யேகங்களாக்கிடுவதே  சிறப்பாய் இருக்கும் ! ஆனால் சந்தாவினில் இணைந்திட இயலாது போன இதர நண்பர்களின் வருத்தங்களை மறுபக்கம் சம்பாதிப்பதும் அங்கு நிகழும் ! So தற்போதைய அந்த இலவச கலர் டெக்ஸ் பார்முலாவையே அங்கும் கையில் எடுக்க எண்ணியுள்ளேன் ! Which means சந்தா நண்பர்களுக்கு விலையின்றி சுடச் சுட விநியோகிக்கும் இதழ்களை ஒரு கால இடைவெளிக்குப் பின்பாய் (maybe towards the end of the year) ஒரிஜினல் விலைக்கே limited editions-களாய் விற்பனைக்குக்  கொணர்வது நிகழ்ந்திடும் !

ரைட்டு - எந்த மாதிரிக் கதைகளை இங்கே உபயோகிப்பது ? என்பது அடுத்த கேள்வி ! ஏதேனும் புதுக் கதை நாயகர்களையோ ; அல்லது டெக்ஸ் வில்லரின் புது அதிரடிகளையோ இங்கே களமிறக்கிவிட்டு - சந்தாவின் அங்கத்தினர்கள் தவிர்த்து மீதப் பேருக்கு  எட்டோ ஒன்பதோ மாதங்களுக்கு அப்பால் அவை கிடைக்குமென்று நான் அறிவிக்கும் பட்சத்தில் - முழியாங்கண்ணன் - முழியில்லாகண்ணன் ஆகிடும் சாத்தியங்கள் செம பிரகாசம் என்பது புரிகிறது ! So "சித்தே தாமதமாய்ப் படித்தாலும் ஓ.கே." என்ற ரீதியிலான கதைகளே இந்தத் திட்டமிடலும் சுகப்படும் ! அவ்விதம் யோசிக்கும் போது மறுபதிப்புகள் அல்லது சற்றே புராதனங்கள் இழையோடும் கதைநாயகர்களே தேர்வாகிறார்கள் ! மறுபதிப்புகளை மறுக்கா அப்படியே போட்டு சந்தா நண்பர்களின் சிரங்களில் கட்டுவதிலும் பெருசாய் fancy இராதெனும் போது - அந்த இதழ்களுக்கு ஏதேனும் ஸ்பெஷலாய் மெருகூட்டல் அவசியம் என்பது common sense ! உதாரணத்திற்கு  - மாயாவியின் "கொரில்லா சாம்ராஜ்யம்" மறுபதிப்பினை வண்ணத்தில் போட்டு தாக்கிடலாம் ! ஆனால் நீண்ட நெடும் காலமாய் இதனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நண்பர்கள் / மூத்த வாசகர்கள் சந்தா அணியினில் இடம்பிடித்திருக்கும் அதே அளவுக்கு சந்தாவில் அல்லாதோர் அணியிலும் இருப்பது நிச்சயம் ! அவர்களிடம் போய்  "கொரில்லா சாம்ராஜ்யம்" இப்போ வருதுங்கண்ணா ; ஆனா பாருங்கோ - நீங்க சந்தாவிலே இல்லாததனாலே உங்களுக்கு அடுத்த ரவுண்டிலே தான் அதைக் கண்ணிலே காட்டுவேனாக்கும் !!" என்று சொல்லிடும் பட்சத்தில், குரல்வளையோடு நான் முழுசாய் வீடு திரும்பும் வாய்ப்புகள் என்ன மாதிரியானவை என்பதை யூகிக்கச் சிரமங்களே இராது தான் !! So அது போன்ற evergreen மறுபதிப்புகளை இந்த முயற்சிக்குப் பயன்படுத்துவது out of question !!

சரி, evergreen மறுபதிப்புகள் வேணாம் ; MAXI லயனில் தற்சமயம் வருவது போலான TEX மறுபதிப்புகளை வண்ணத்தில் போட்டு அவற்றை விநியோகிக்கலாமா என்றும் யோசித்துப் பார்த்தேன் ! வண்ணத்தில் 'தலைவாங்கிக் குரங்கு" came to mind - அது கிட்டத்தட்ட எல்லோரிடமும் black & white-ல் இருப்பதால், கொஞ்சம் முன்னேவோ,பின்னேவோ வண்ண மறுப்பதிப்பை  வாங்கிக் கொள்வதில் பெருசாய் நெருடல்கள் இராதே என்ற காரணத்தினால் ! ஆனால் அங்கே வேறொரு நெருடல் தலைதூக்கியது ! நடப்பாண்டின் சந்தாவில் MAXI லயனும் ஒரு அங்கம் & அதனில் டெக்ஸ் மறுபதிப்புகள் வெளிவருகின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ! அவ்விதமிருக்க - "இந்த ஒரு டெக்ஸ் மறுபதிப்பு மாத்திரம் சந்தாவிலே சேராதுங்க சார் ; இது loyalty points கோசரம் போடற இதழ் என்று சொல்வதாயின், நமது பதிவுகளை ; இங்கே அலசப்படும் தலைப்புகளை அத்தனை உன்னிப்பாய்க் கவனிக்கா வாசகர்கள் கண்சிவப்பது நிகழ்ந்திடும் துளியும் சந்தேகமின்றி ! வெகு சமீபத்தில் கூட இத்தகைய "வாசக காச் மூச் படலம்" அரங்கேறியது -  "ஈரோடு ஸ்பெஷல்"இதழ்களை முன்பதிவுக்கென அறிவித்து வெளியிட்ட வேளைதனில் ! அது சந்தாவின் அங்கமல்ல என்பதை  புரிய வைக்கத் தலைகீழாய் நின்று நம்மாட்கள் தண்ணீர் குடித்தும் நிறைய வாசகர்கள் கத்தித் தீர்த்ததே நிகழ்ந்தது ! "அதுலாம் எனக்குத் தெரியாது...ஒரு வருஷத்துக்கான சந்தா கட்டிப்புட்டேன் ; அதனாலே வருஷத்தின் அத்தினி புக்கும் எனக்கு வேணுமாக்கும் !" என்று அடம் பிடித்தோர் எக்கச்சக்கம் !! So மறுபடியும் அது போலொரு சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்ளும் படலம் வேண்டாமே என்ற எண்ணத்தில் டெக்ஸ் வண்ண மறுபதிப்பு யோசனையையும் கைவிட்டேன் !!

சரி...கார்ட்டூன்களுள் ஏதேனும் ஸ்பெஷல் இதழ் போடலாம் என்றாலும், அதே வாசக அர்ச்சனைப் படலம் தொடருமோ என்ற குழப்பமே !! "இது சந்தா C -ன் அங்கம் தானே ? எனக்கு ஏன் அனுப்பலை ? நான் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகப் போறேன் !!" என்று போனில் நமது பாவப்பட்ட பணிப்பெண்களிடம் எகிறும் வைபவங்கள் நிச்சயமாய் நடந்திடும் !

கதவுகள் பல அடைபட்டாலும் "நாங்க இருக்கோம் ஜி !!" என்று உத்வேகமாய்க் கைதூக்கி நிற்போர் யாரென்று பார்த்தால் - அட...நம்ம ஆர்ச்சி அண்ணாத்தேயும் ; ஸ்பைடர் அப்புச்சியும் தான் !! இவர்களை நடப்பாண்டின் சந்தா அட்டவணைகளில் கண்ணில் காட்டவே கிடையாதெனும் போது இவர்களது (புதுக்) கதைகளை தனித்தடத்தில் வெளியிடும் பட்சம் பெரிதாய்க் குழப்பங்கள் நேராது என்றுபட்டது ! சரி....இவர்களுள் ஒருவரைத் தேர்வு செய்து வழக்கமான பாணியில் கதைகளை வெளியிட்டு "loyalty points க்கு இது தானுங்கோ !" என்று ஒப்படைப்பதில் என்ன கிக் இருக்க முடியும் என்றும்  யோசித்துப் பார்த்தேன் ! "அண்ணன் ஆர்ச்சியை முழுவண்ணத்தில் போட்டுத் தாக்கினால் எப்படியிருக்கும் ?" என்று லேசான யோசனை மண்டைக்குள் ஓட்டமெடுக்க - அதை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் முஸ்தீபுகளில் இறங்கினோம் சத்தமின்றி ! சும்மா சொல்லக்கூடாது - கலரில் சட்டித் தலையன் சும்மா தக தகவென்று மின்னுறான் !! பயலை வண்ணத்தில் ஆர்ட்பேப்பரில் பார்த்தால் மெர்சலாக இருக்குமென்றேபட்டது ! Here is a sample !!
So 2020-ன் சந்தா நண்பர்கட்கு loyalty points-களுக்கு ஈடாக இந்த ஆல்பம் இருந்திடும் - வரும் ஏப்ரல் மாதத்தினில் ! "இல்லீங்கோ ...black & white ஆர்ச்சியே பாக்கிறதுக்கே பயந்து பயந்து வருது ; கருப்பசாமி கோயில்லே துன்னீரு போட நினைச்சருக்கேன் ; இந்த அழகிலே கலரிலே காப்ரா காட்டுறீரே !!" என்று மிரளும் நண்பர்கள் இந்தப் பாய்ண்ட்களை டி-ஷர்ட்களிலோ ; coffee mug-களிலோ ஈடு செய்து கொள்ளலாம் ! அல்லது - இந்தப் புள்ளிகளை அடுத்தாண்டிற்கு Carry forward-ம் செய்து கொள்ளலாம் ! உங்கள் தீர்மானங்கள் எதுவாயினும் lioncomics@yahoo.com என்ற நம் மின்னஞ்சலுக்கு உங்கள் சந்தா நம்பரைக் குறிப்பிட்ட கையோடு - "ஆர்ச்சிக்கு ஜே" என்றோ ; "ஆத்தாடியோவ் நோ !!" என்றோ ; "Carry forward" என்றோ சுருக்கமாய் தகவல் சொன்னால் போதும் ! அதற்கேற்ப நாங்கள் குறிப்பெடுத்துக் கொள்வோம் !

எனக்குத் தோன்றிய கோணங்களில் எல்லாமே யோசித்துத் தான் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளேன் - யாருக்கும் பெரிதாய் நெருடல்கள் தோன்றிடக் கூடாதே என்ற ஆர்வத்தோடு  ! ஆனால் வண்ணாந்துரையில் உள்பாவாடை காணாது போவதற்குக் கூட இந்த முட்டைக்கண்ணன் தான் காரணமாக இருக்க முடியும்  ! என்ற அசைக்க முடியா அன்பும், நம்பிக்கையும் கொண்ட அணியினருக்கு நிச்சயமாய் இதனுள் குறைகளைக் கண்டுபிடித்துக் கும்மியடிக்க வாய்ப்புகள் அல்லாது போகாதென்பதும் நிச்சயம் ! Just a word to them too : கும்மியடிக்கும் மும்முரத்தில் மின்னஞ்சலை அனுப்ப மறந்து விடாதீர்கள் - ப்ளீஸ் ; ஜனவரி 31-க்கு முன்பான பதிவுகளுக்கேற்பவே அச்சிடவுள்ளோம் ; அல்லது merchandise தயார் செய்திடவுள்ளோம் ! So நடப்பாண்டின்  சந்தா எக்ஸ்பிரஸில் தொற்றிக் கொள்ளவும் ; அஞ்சாநெஞ்சன் ; ஆருயிர் அண்ணன் ஆர்ச்சியின் முதன்முதல் வண்ண ஆல்பத்தை தரிசிக்க புக்கிங் செய்திடவும் ஜனவரி 31 வரையிலும் தான் அவகாசமிருக்கும் guys !

நெடுநாள் அவகாசம் கழித்து முன்மண்டையில் முட்டை பரோட்டா போடும் ஒரு சந்தோஷ சந்தர்ப்பத்தை வழங்கிய திருப்தியோடு இப்போது கிளம்புகிறேன் guys !! பிப்ரவரி இதழ்களின் பணிகள் இன்னமும் மலையாய்க் குவிந்து கிடக்கின்றன ! Bye now ...see you around !! Have a lovely weekend !! 

Wednesday, January 15, 2020

பொங்கட்டும் சந்தோஷம் !!

நண்பர்களே,

வணக்கம். பொங்கலோ பொங்கல் !! இல்லமெங்கிலும் சந்தோஷமும், குதூகலமும் பொங்கி வழியட்டும் !! ஏக் தம்மில் இது போல சரமாரியாக லீவுகள் இப்போதைக்குக் கிடைக்காதென்பதால் போட்டுத் தாக்கிட கூடுதலாய் ஒரு காரணம் !! So have a blast guys !!

சென்னைப் புத்தக விழாவினில் அற்புதங்கள் தொடர்ந்திடுவது இந்தப் பதிவின் முதல் ஜாலி சேதி ! வெள்ளி & சனிக்கிழமைகளில்  வசூலான பணத்தை ஜோப்பிக்குள் குஷாலாய்ச் செருகிக் கொண்டு நான் ஞாயிறு ஊர் திரும்பியிருந்தேன் ! அந்த ஞாயிறின்  விற்பனைகளுமே பட்டாசு ரகம் தான்  & கேக்கின் மீதான ஐசிங் போல ஒன்பது நண்பர்கள் அன்றைக்கு சந்தாக்களையும் செலுத்தியிருந்தனர் என்பதை நம்மாட்கள் மகிழ்வோடு சொல்லக் கேட்ட போது வயிற்றில் பாயசம் வார்த்தது போலிருந்தது ! ஏதோவொரு கித்தாய்ப்பில் டபுள் ஸ்டால் எடுத்திருந்தாலும் - "கொஞ்சம் ஆவேசப்பட்டுப்புட்டோமோ ? " என்ற நெருடல் உள்ளுக்குள் ஓசையின்றி உலவித் திரிந்து வந்தது தான் ! "ஆங்....வாசகர்களுக்கு வசதியாய் இருக்கும்லே... பார்வையை இருக்கும்லே...!" என்று வெளியே சால்ஜாப்பு சொல்லிக் கொண்டாலும், "அந்தப் பணத்தில்  அடுத்த இதழுக்குப் பேப்பர் வாங்கியிருக்கலாமோ ? கதை வாங்கியிருக்கலாமோ ?" என்ற குடைச்சல் இல்லாதில்லை தான் ! ஒரு மாதிரியாய் விற்பனை on the right track என்று ஊர்ஜிதமான பின்னே தான் மூச்சை கொஞ்சமாய் விட்டுக் கொண்டேன் ! தொடரவுள்ள பொங்கல் விடுமுறை நாட்களிலும், வாரயிறுதியிலும் இதே உத்வேகம் தொடர்ந்திட பெரும் தேவன் மனிடோ அருள் பாலிப்பாராக !! 

"ஹை....ஒண்ணும் வலிக்கலியே...எல்லாம் ஜாலி..ஜாலி தான் !" என்பதாய் முகரையை வைத்துக் கொண்டு நான் சுற்றித் திரிந்திருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி என்பது தான் நிலவரம் ! கூடி வரும் கிட்டங்கிக் கையிருப்பு + எகிறிச் செல்லும் செலவினங்கள் என்ற double whammy-ஐ சமாளிக்க ரொம்பவே நாக்குத் தள்ளிக் கொண்டிருந்தது தான் ! பற்றாக்குறைக்கு 2020-ன் சந்தா எக்ஸ்பிரஸில்  இன்னமும் கணிசமான நண்பர்கள் தொற்றிக் கொள்ளவும் வேண்டியிருப்பதால் M.N.நம்பியாரைப் போல கையைக் கசக்கிக் கொண்டு தானிருந்தேன் திரைமறைவில் !! எதிர்பாரா சாரல் மழை போல இந்தச் சென்னைப் புத்தக விழா கைகொடுத்திருக்கும் சூழலில் - சந்தாவினில் பாக்கி நண்பர்களும் மட்டும் இணைந்து கொண்டிட்டால் phewwwwwwwwwww என்றொரு பெரும் பெருமூச்சை விட்டுக் கொள்வேன் !! சந்தா நினைவூட்டல் guys !! 

Early days yet - ஆனால் சென்னைப் புத்தக விழாவினில் இதுவரையிலும் தொய்வின்றி விற்பனை கண்டுள்ள இதழ்கள் எவை என்பதை ஜூனியர் எடிட்டர் ஏற்பாடு செய்திருக்கும் புது software -ன் புண்ணியத்தில் பார்க்க முடிந்தது & that made for interesting viewing :
  • 2019-ன் டாப் 2 இதழ்களான "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" & பராகுடா எதிர்பார்த்தபடியே brisk sellers !!
  • "லக்கி லூக்கைச் சுட்டது யார் ?" ஆச்சர்யமூட்டும் விதத்தில் has sold well !!
  • "டைனமைட் ஸ்பெஷல்" - சென்னை ஸ்டாலில் உள்ளது மாத்திரமே கையிருப்பு என்பதாலோ-என்னமோ selling in a hurry !!
  • "2019-ன் மொத்த இதழ்கள்" என்றதொரு முரட்டு பண்டலை ஏதோவொரு ஆர்வக்கோளாறில் போடச் சொல்லியிருந்தேன் !  "எனக்குப் போன வருஷத்து இதழ்கள் சகலதும் வேணும் !" என்று யாராச்சும் கேட்டு வராது போக மாட்டார்கள்  என்ற நம்பிக்கையில் அடித்த கூத்து அது ! And surprise ..surprise ...அந்த பண்டல் பிரமாதமாய் விற்று வருகிறது !!
  • 25% டிஸ்கவுண்ட் ஸ்டிக்கர் தாங்கி நிற்கும் அந்த 52 இதழ்களும் ஓரளவிற்கு போணியாகியுள்ளன ! Maybe இதனை கொஞ்ச காலம் முன்னரே நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டுமோ - என்னவோ !! சீக்கிரமே நமது ஆன்லைன் ஸ்டோர்களிலுமே இந்த discounted விலைகளை அமல்படுத்திட எண்ணியுள்ளோம் - பெவிகால் தடவிக்கொண்டு நம் கிட்டங்கியிலேயே வாடகையும் தராது குடியிருக்கும் இதழ்களுக்கு விடை தரும் பொருட்டு !!
  • இம்முறை சென்னைப் புத்தக விழாவினில் நான் கவனித்ததொரு விஷயம் - வலைமன்னனின் இதழ்கள் ஓரளவுக்கேனும் விற்பனை கண்டுள்ளதை !! வழக்கமாய் ஜன்னலோர சீட்டை சடுதியில் பிடித்து விட்டு ஊர் ஊராய்க் கிளம்பும் மனுஷன், போனது போலவே அலுங்காமல், குலுங்காமல் பத்திரமாக வீடு திரும்புவது வாடிக்கை ! ஆனால் இந்தவாட்டி தான் லைட்டாக மாறுதல் !! சிங்காரச் சென்னையின் அழகில் மயங்கி அங்கே கால்பதிக்கும் நினைப்போ ; இல்லாங்காட்டி மெரினா பீச்சுக்கு அடியே கொக்கி மாட்டி சென்னையையே இக்கட இழுத்து வரும் திட்டமோ - தெரியலை - ஜாகை மாற்றத்துக்குத் தயாராகி வருகிறார் ! 

தொடரும் நாட்களில் விற்பனை பற்றி இன்னமும் ஒரு தெளிவான சித்திரம் கிடைத்திடும் போது, அது பற்றி மேற்கொண்டு பேசுவோமே !! 

Moving on, இந்த உழவர் திருநாளில் - பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளை நினைவூட்டும் விதமாய் இதோ ஒரு பளிச் பச்சையில் காத்திருக்கும் பிப்ரவரியின் அட்டைப்படப் preview ! புத்தக விழா ; ஜனவரி இதழ்கள் என்றே நாம் சுற்றி வந்தாலும், ஆண்டின் இரண்டாம் மாதம் புலர இன்னும் இரண்டே வாரங்கள் தானே உள்ளன ? So பார்வைகள் ; பணிகள் அப்பக்கமாய்ப் பயணித்தாக வேண்டுமென்றோ ?! Here you go !!
இங்குள்ள பால்யக் காதலர்களுக்கு இந்த அட்டைப்பட நாயகனைப் பார்க்கும் தருணம் 'ஜிவ்'வென்று உற்சாகம் தூக்கியடிப்பதும் ; பால்யத்தை பால்யத்தோடே விட்டு வந்தோர்க்கு குளிர் ஜுரத்தில் உடம்பு தூக்கித் தூக்கி அடிப்பதும் ஒருசேர நிகழவிருப்பது உறுதி !! புய்ப்பமே ஆனாலும்  - அதனை பயபக்தியோடு காதில் செருகிக் கொள்ள நண்பர்களில் ஒரு கணிசமான அணி தயாராய் இருப்பதால், இந்தாண்டின் கோட்டாவாய் இதனை பாவித்திடலாம் guys !! And சட்டித் தலையன் ஆர்ச்சியின் அந்த மாமூலான  காலப்பயண ஜாகஜமே இம்முறையும் !! இந்த கி.நா. யுகத்திலுமே போட்டுத் தாக்கும் இதுபோன்ற superhero tales-களுக்கு நம் மத்தியில் ஆர்வம் தொடர்வது ஒரு பட்டிமன்ற அலசலுக்கு உகந்த தலைப்பே ! ஆனால் ரசனைசார் விஷயங்கள் அலசல்களுக்கு அப்பாற்பட்டவை என்பதால், ஓட்டைவாய் உலகநாதன் - அடக்கி வாசிக்கும் ஆராவமுதன் ஆகிடுவதே உசிதம் என்று படுகிறது ! Anyways, ஓராண்டின் பயணத்தினில் ஒரேயொரு super hero இதழ் என்பதில் பெருசாய் நெருடல்கள் யாருக்கும் இராதென்றே நம்ப விரும்புகிறேன் !!  அட்டைப்படம் நமது அமெரிக்க ஓவியை (!!!) யின் கைவண்ணம் ! ஜனவரியின் 5 இதழ்களுள் மூன்றின் அட்டைப்படங்கள் அவரது கைவண்ணமே ! And இதோ - பிப்ரவரியிலும் அவரது திறன்கள் களங்காண்கின்றன !! 'ஜிங்கு-ஜாங்-'பச்சையாய் இங்கே வர்ணங்கள் தோன்றினாலும், மிரண்டு போகத் தேவையிலில்லை என்பேன் - becos நேரில் ரொம்பவே பளிச்சென்று தெரிகிறது ! விற்பனையிலும் இந்த ரூ.40 தடத்தின் இதழ்கள் பளிச்சென்று சாதித்துக் காட்டிட நம் சட்டித் தலையன் சிறிதேனும் உதவினால் நாங்களும் ஹேப்பி அண்ணாச்சி ! Fingers crossed ! 

இந்தத் தருணத்தில் ஒரு அத்தியாவசிய இடைச்செருகல் folks :

ஆண்டின் முதல் தேதியன்று நமது கோவைக்கவிஞரின் கைவசம் ஒரு வாய்ப்புத் தந்தேன்  - "இஷ்டப்பட்டதொரு இதழைத் தேர்வு செய்து கொள்ளுங்கோ  !!" என்றபடியே ...!  நிச்சயமாய் காதிலே புய்ப்ப லாரியையே டாப் கியரில் சபக்கடீர் என்று  ஏற்றிடச் செய்யும் கதைகளாகத் தான் அவரது தேர்வு இருக்கும் என்று தெரிந்திருந்தே தான் அந்த ரிஸ்க் எடுத்தேன் ! And எதிர்பார்த்தது போலவே ஸ்பைடர் & ஆர்ச்சிக்கு கொடி பிடித்தார் கவிஞர் ! 

புத்தக விழாவில் மூத்த வாசகர்களின் ஆர்வத் தாண்டவங்களை தரிசித்த கையோடு -"புட்ச்சிக்கோங்க  யூத்ஸ் !! மாயாவி மறுக்கா மறுபதிப்புக்கு வாராருங்கோ !!" என்று அறிவித்தேன் !

அதற்கு சற்றே முன்பாக தான் ரூ.40 தடத்தினில் சிகப்புத் தலையன் ஆர்ச்சி ஆஜராகவுள்ள சேதியைச் சொல்லியிருந்தேன் ! So ஒற்றை மாதத்து இடைவெளியினில் 3 பிரிட்டிஷ் சூப்பர் ஹீரோக்களின் மறுவருகை உறுதியாகியுள்ளது !! 

அரை நிஜார்களுக்கு ஈரிருபது ஆண்டுகளுக்கு முன்னேயே டாடா காட்டிவிட்ட இன்றைய 5G நண்பர்களுக்கு இந்த திடீர் U-டர்ன் மாதிரியான செயல்பாடு லைட்டாக வயிற்றைக் கலக்கலாம் தான் ! ஏதேதோ பிரயத்தனங்களை செய்து, வேறுபட்ட காமிக்ஸ் வாசிப்புக்கு  வித்திட்டு வரும் இந்த சமீப வேளைகளில் கோட்டை முழுசும் அழிச்சிப்புட்டு ஆரம்பத்திலிருந்து சூப்பர் ஹீரோ பரோட்டா சாப்பிட முனைவது என்ன மாதிரியான திட்டமிடலோ ? என்ற பீதி தலைகாட்டினால் நிச்சயம் தவறு அவர்களதல்ல !! So அந்த பயங்களை சற்றே சமனம் கொள்ளச் செய்வது என் பொறுப்பல்லவா ? 

Rest assured folks - இது U-டர்ன் அல்லவே அல்ல !! எத்தனை புதுசுகளை ரசித்தாலும் ; எத்தனை நவீனங்களுக்குள் நீச்சலடித்தாலும் ; "அந்த நாள்..ஞாபகம்... நெஞ்சிலே... வந்ததே..வந்ததே..!" என்று TMS குரலில் கணீரென்று கானம் பாடிக்கொண்டே ஒருவாட்டியாச்சும் அன்றைய நாயகர்களுடன் கைகுலுக்க விழையும் அணியினரை இக்ளியூண்டாவது திருப்திப்படுத்திப் பார்க்கும் ஆசை என்று வைத்துக் கொள்ளுங்களேன் !! நான் எத்தனை பெரிய கல்லுளிமங்கத் தடித்தாண்டவராயனாய்  இருந்தாலுமே , மனம் தளராது தம் ஆசைகளை வெளிப்படுத்திட்டுக் காத்திருக்கும் அந்தப் பொறுமைகளுக்கான ஒரு சிறு அங்கீகாரம் ! And இந்த இதழ்கள் உங்கள் அபிமானங்களை ஏகமாய் ஈட்டினாலொழிய  சந்தாக்களின் அங்கமாக இருந்திடாது என்பது எனது promise !  ஏதேனும் புத்தக விழாக்களின் போது 'லோஜெக்-மொஜக்' என்று  ஓசையின்றி வெளிவந்திடும் ! So ஆர்ச்சி மட்டுமே விதிவிலக்காக - ரெகுலர் சந்தாவினில் இடம்பிடித்திருக்கிறான் ! பயலைக் கரை சேர்ப்பதும் ; கையைப் பிடித்து இழுப்பதும், இனி உங்கள் பாடு சாமி ! 

I'll now sign out folks....இதோ புத்தக விழாவிலிருந்து இன்னும் சில போட்டோக்கள் !! உங்கள்வசம் மேற்கொண்டும் இருப்பின், ப்ளீஸ் do mail them to us !! Bye now....Happy Pongal !! 







Sunday, January 12, 2020

தெறிக்கும் தருணங்கள் !!

நண்பர்களே,

வணக்கம். இதமானதொரு சென்னைப் பகலில், சுட்டெரிக்காத இளம் வெயிலை ரசித்தபடிக்கே  டைப்பும் இந்தப் பதிவின் நம்பர் 600 என்று blogger சொல்கிறது ! வியாழன் மாலையே சென்னைப் புத்தக விழா துவங்கியிருக்க, முதல் 2 நாட்களின் விற்பனையும்  இந்தக் க்ளைமட்டைப் போலவே மிதமான ரம்யம் !! சரி, ஒட்டு மொத்தமாய் 9 நாட்கள் விடுமுறை வாய்க்கவுள்ள வேளையில், வாரயிறுதிகளும் மிதமாகவே இருக்குமென்ற எண்ணத்தில் சோம்பிக் கிடந்தால் - சென்ட்ரல் ரயில்நிலையத்து ஆட்டோ மீட்டர்களைப் போல விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது திடு திடுப்பென ! So நொடிக்கொரு தபா 'டிங் டிங்'கென உற்சாகமாய் ஒலிக்கும் கிரெடிட் கார்ட் பில்களின் ஓசையை கேட்டபடியே பதிவுக்குள் நுழைகிறேன் !

இவை தான் புத்தக விழாவுக்குப் போகும் முன்பாகவே பதிவைத் தயார் பண்ணிட எண்ணி சனிக்கிழமை மதியம் ரூமில் குந்தியிருந்த சமயம் நான் எழுதிய வரிகள் ! வெள்ளி மாலையே சென்னைக்கும், புத்தக விழாவுக்கும் hi சொல்லியிருந்தோம் என்பதால் பரபரப்பில்லாத அந்தப் பொழுது சற்றே வித்தியாசமாய்ப்பட்டிருந்தது ! எப்போதும் தெறிக்கும் பிசியில் தென்படும் மைதானம் comparatively அமைதியாய் வெள்ளியன்று   காட்சி தந்தது என்பதால் சனியின் நிலவரம் பற்றி பெரிதாய் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி  சாவகாசமாய் நாலரை சுமாருக்கு ஜூனியர் எடிட்டரும் , நானும் நந்தனம் YMCA மைதானத்தை எட்டிப் பிடித்த போது சாலையிலேயே ஒரு buzz அப்பட்டமாய்த் தென்பட்டது ! 'இது...இது தானே சென்னையின் அடையாளம் !! அட்றா சக்கை....அட்றா சக்கை !!' என்று உள்ளுக்குள் துள்ளினாலும், பெரிதாய் வெளிக்காட்டிக் கொள்ளாது அரங்கினுள்  நுழைந்தோம்  !!  இம்முறை நமது ஸ்டால் இரட்டை அரங்கு எனும் போது தொலைவிலிருதே ஆந்தை விழிகளை ஓட விட எத்தனித்தேன் - கூட்டம் தென்படுகிறதா என்று !! And boy oh boy ...oh boy !!! கூ-ட்ட-ம்  இ-ரு-ந்-த-தா-வா ??

நமது அரங்கில் கம்பியூட்டர் பில்லிங்கின் பொருட்டு சென்னை நண்பர்கள் இருவரைத் தற்காலிகப் பணியாட்களாய் நியமித்திருந்தோம் & ஊரிலிருந்து நம்மவர்கள் மூவர் வந்திருந்தனர் ! ஆக மொத்தம் 5 பேர் பணியில் இருந்தும் நேற்றைய பொழுதின் தெறிக்கும் ஜனத்திரளுக்கு ஈடு தந்திட இயலாது - யாருமே மதிய பூவாவின் பொருட்டு நகர்ந்திருக்கக் கூட இல்லை !! தலைநகரின் வாங்கும் ஆற்றல் தனது மிரட்டலான பரிமாணத்தை காட்டிக் கொண்டிருக்க     - உள்ளுக்குள்  பிரவாகமெடுத்த உணர்வுகளை விவரிக்கத் தடுமாற்றம் மிஞ்சுகிறது ! மின்சாரம் உற்பத்தி  கண்டிருக்கும் நேற்றைய மாலையில் நமது அரங்கினுள் வாசகர்கள் காட்டிய உற்சாகத்தின் உபயத்தில் ! சமீப ஆண்டுகளின் பாணி இம்முறையுமே தொடர்ந்தது - மெய்யாகவே 7 முதல் 77 வரையிலான வாசக / வாசகியர் ரகளையாய் நம் இதழ்களை அள்ளிச் சென்ற வகையில் !! Oh yes "இங்கிலீஷில்   காமிக்ஸ்  இல்லையாக்கும் ?" என்ற கேள்வியோடு நமது அரங்கில் கலர் கலராய் டாலடிக்கும் கார்ட்டூன்களை கண்களில் ஆவல் மிளிர ரசித்து நிற்கும் பிள்ளைகளை  இழுத்துச் செல்லும் பெற்றோருக்கு இம்முறையும் பஞ்சமில்லை தான் !! "ஓ...தமிழ் மட்டும் தானா ?" என்றபடிக்கே அகன்றிட்ட இளசுகளுக்கு குறைவில்லை தான் ! ஆனால் அந்தச் சிறுபான்மையைத் தாண்டி - வாங்குறோமோ-இல்லியோ - பொறுமையாய்ப் புராட்டவாவது செய்வோமென்று இம்முறையும் வருகை தந்த ஜனம் செயலில் காட்டிக் கொண்டிருந்தது நிறைவாய் இருந்தது !! மறுப்பதற்கே இல்லை தான் - விற்பனைகளும் , அவை  கொணர்ந்திட்ட பண வரவுகளும் காதுக்குள் இளையராஜாவின் மெலடிக்களை இதமாய் ஒலிக்கச் செய்தன தான் !! ஆனால் எண்ணற்ற பகல்களும்-ராக்களும் பெண்டை கழற்றிய பணிகளின் நோவுகளையெல்லாம் அங்கே தென்பட்ட வெறித்தனமான வாசக ஆர்வங்கள் நொடிப்பொழுதில் மறக்கச் செய்த மாயாஜாலத்தை என்னென்பது ?!! By now - ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் நாம் தரிசிக்கும் காட்சிகள் கிட்டத்தட்ட இவ்விதமே இருந்திடும் என்பதை யூகித்து, கொட்டாவியோடு இதனைப் படிக்கக்  கூடிய நண்பர்களின் பொருட்டு - அதே விவரிப்புகளை இன்னொருக்கா எழுதிடாது - நேற்றைய நிகழ்வுகளின் சாரத்தை மட்டுமே தந்திடுகிறேனே ?!

***இந்தாண்டின் - இதுவரையிலுமான big story மாண்புமிகு லூயி கிராண்டேல் அவர்களே தான் !! Phew !!! இடையில் ஓரிரு ஆண்டுகள் அத்தனை வேகம் காட்டியிரா நமது மாயாவிகாரு இந்தாண்டின் இந்தப் புத்தக விழாவின் கில்லி !! நேற்றைய பொழுதில் மூன்றோ-நான்கோ மாயாவி மறுபதிப்புகள் மாத்திரம் கைவசம் இருந்திருக்காவிடின் அநேகமாய் என்னைச் செவிளோடு சாத்தியிருப்பார்கள் மூத்த வாசகர்களில் பலர் !! சொல்லி மாளாது - இன்னமும் நமது மின்சார விரலோனை நாடி துள்ளிக் குதித்திடும் "கட்டிளங்காளை"களின் உற்சாகங்களை !! நேராய் அந்த மறுபதிப்புகள் வீற்றிருக்கும் ரேக்கின் முன்னே போய் நிற்கும் ஒரு யுகத்துக்கு  முந்தைய ரசிகர்கள் - இடமும் பார்ப்பதில்லை ; வலமும் திரும்புவதில்லை !!  "அட போய்யா...!!யாருக்கு வேணும் உன் மத்த குப்பைகள் ?" என்று சொல்லாது சொல்லியபடியே மாயாவி ப்ளஸ் ஒன்றோ இரண்டோ லாரன்ஸ்-டேவிட் கதைகளை மட்டுமே வாங்கிப் போவோரிடம் நான் கேட்கவே செய்தேன் : "சார்..இவற்றை நீங்க மெய்யாலுமே மறுக்கா படிக்கத் தான் போறீங்களா ?" என்று !! "லூசாப்பா நீ ?" என்பது போலானதொரு பார்வையோடு - "இல்லே...இதெல்லாம் ஒரு ஞாபகார்த்த சேகரிப்புக்கோசரம் தான் !!" என்று சொல்லி விட்டு முகம் நிறைய சந்தோஷங்களோடு புறப்பட்டோர் ஏராளம் - ஏராளம் ! முதிய தந்தையின் முகத்தில் தென்பட்ட பூரிப்பைப் பார்த்து அவரை என்னருகே நிறுத்தி ஒரு க்ளிக் செய்த மகளின் கண்களில் மிளிர்ந்த மகிழ்வுக்கும் ; நொடிப்பொழுதில் 40 அகவைகளைத் துறந்து விட்டு துள்ளிக் குதிக்கும் யூத்தாகிடும் ஆத்துக்காரர்களை ஒரு amused பார்வை பார்த்திட்டே  நின்ற இல்லத்தரசிகளின் மனநிறைவுகளுக்கும் சத்தியமாய் எதுவும் ஈடாகிடாது !! "அரைத்த மாவு ; முன்போகும் பயணத்துக்கு இவை வலு சேர்த்திடாது ; கடல் போல காமிக்ஸ் குவிந்து கிடைக்கும் வேளைதனில் சுற்றிச் சுற்றி இங்கேயே பயணிப்பதில் பிரயோஜனம் கிஞ்சித்தும் லேது !!" காதிலே தக்காளிச் சட்னி வரும் மட்டிற்கு மேற்படி வரிகளை நானும் ஒப்பித்துப் பார்த்து விட்டேன் !! கிராபிக் நாவல்கள் ; ஜேம்ஸ் பாண்ட் 2.0 ; லார்கோ etc etc என்று நவீனங்களின் பிரதிநிதிகளைக் களமிறக்கவும் செய்தாச்சு !! ஆனால் அத்தனைக்கும் பின்னே புத்தக விழாத் தருணங்களிலாவது மாயாவி மாமா சாரின் கடாட்சம் இருந்தாலன்றி நிறைய "கட்டிளங்காளைகள்" ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்லும் சங்கடங்கள் தொடர்கதையாகிடும் என்று புரிகிறது ! So மாயாவியாரின் வெளிவந்திரா மறுபதிப்புகள் மாத்திரம் இனி வரும் பிரதானப் புத்தக விழா ஸ்பெஷல்களாய் திடும் திடுமென கண்ணில் படத் துவங்கிடும் என்பதை அகில உலக கிராண்டேல் ரசிகர் மன்றத்தின் அறுபதாவது ; எழுபதாவது வட்டங்களின் சார்பாய் அறிவிக்கிறேன் !! இவை சந்தாக்களின் அங்கமாய் இருந்திடாது ! And for starters - "கொரில்லா சாம்ராஜ்யம்" நடப்பாண்டிலேயே இருக்கும் ! எங்கு-எப்போது ? என்ன மாதிரி ? என்ற nitty gritties களை தீர்மானம் செய்திட கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்வேன் - ஆனால் கொ.சா. நிச்சயமாய் உண்டு சாமீஸ் !! 'ஹை !! உவகை தரும் ஊசிப் போன உப்மா இன்னொரு பிளேட்டா ? ஜூப்பரு !!' என்று அன்பான விமர்சனங்கள் ஆங்காங்கே எழுந்திடக்கூடும் என்பது புரியாதில்லை தான் ! ஆனால் நான் பார்த்த சமாச்சாரங்களையும் ; கண்முன்னே அரங்கேறிய பூரிப்பின் பிரதிபலிப்புகளையும் ;  சிந்திய ஆதங்கங்களையும் ஒரு யுகமாயினும் உணர்ந்திடல்  விமர்சிப்போருக்குச்  சாத்தியமாகாதெனும்   போது - good luck with the brickbats guys !! எங்களுக்கு உப்மாவே போதுமெனும் அணியினரின் புத்தக விழா ஆர்வங்களின் முன்னே இதர வைராக்கியங்கள் பின்செல்வது தவிர்க்க இயலாது போகிறது !

*** மாயாவிக்கு அடுத்தபடியாக evergreen இடம்பிடித்து நிற்பது நமது 'தல' தான் ! அதுவும் அந்த MAXI லயனின் மெகா சைஸ் டெக்ஸ் இதழ்கள் brisk sellers ! மாற்றம் - முன்னேற்றம் - என்று கரடியாய்க் கத்தியபடியே தினுசு தினுசாய்க் கதைகளைக் களமிறக்கிப் பார்த்தாலும் அந்த நேர்கோட்டுப் பாணி ; நேர்கொண்ட பார்வையுடனான நாயகன் ; சிலபல ணங்க் ; கும் ; சத்த் சாத்துக்கள் கொண்ட கதைகளைத் தொனிக்க ஏதும் லேது என்பது yet again புரிகிறது !! மாயாவி மாமன்னர் என்றால் - 'தல' சகலத்துக்குமே மெய்யாலுமே 'தலை தான் !
***Story of the 2020 bookfair வரிசையில் குறிப்பிடத்தக்கதொரு பெயர் நமது 007 தான் ! அந்த நாற்பது ரூபாய்த் தடத்தின் black & white க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் ஈட்டி வரும் அபிமானம் மெய்யாகவே பிரமிக்கச் செய்கிறது ! இங்கொரு சமாச்சாரத்தைக் குறிப்பிட்டே தீர வேண்டும் : கிட்டத்தட்ட 35+ஆண்டுகளாய் உங்களோடு பயணித்து வரும் எனக்கு, உங்களின் ரசனைகளை ஸ்பஷ்டமாய்த் தெரியும் என்ற ரீதியிலானதொரு எண்ணம் உள்ளுக்குள் காலூன்றி நின்றது - சில பல ஆண்டுகளுக்கு முன்வரையிலும் ! ஆனால் இந்த நமது இரண்டாம் வருகைக்குப் பிற்பாடு நான் படித்த முதல் பாடமே - expect the unexpected என்பது தான் !! ஹிட்டான கதைகளை மேம்படுத்திய மறுபதிப்புகளாக்கிடும் போது மொழிபெயர்ப்பையும் புதுப்பித்தால் ரசிப்பீர்களென்று எதிர்பார்த்தேன் ; ஆனால் ரூம் போட்டுத் தங்க வைத்துத் தெளியத் தெளிய நீங்கள் சாத்தியதே மிச்சம் !! கைக்குட்டையைப் பிழியப் பிழிய வைக்கும் அழுகாச்சிக் காவியங்களை ரசிப்பீர்களென்று முயற்சித்தேன் - சில்லு மூக்கு சிதறியதே மிச்சம் !! ரைட்டு...நம்ம golden oldies மறுக்க பவனி வரும் போது விசில் களைகட்டுமென்று எதிர்பார்த்தேன் ; ஆனால் சிரசாசன SMS  களையும், சிலபல ஜாக்கி ஜட்டிகளையும் பார்த்துக் 'கெக்கே பிக்கே' என்று நீங்கள் சிரித்ததே பலன் ! அதே நேரம் 'க்ரீன் மேனரை' என்ன செய்யக் காத்திருக்கிறீர்களோ ? "பராகுடாக்களை" எப்படி அணுகப் போகிறீர்களோ ? என்று தயங்கிய வேளைகளில் தெறிக்க விட்டு வெற்றிகளைக் காட்டியுள்ளீர்கள் ! So நிறைய தருணங்களில்  முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாகவே தொடர்ந்திடல் முதுகுக்கு நலம் பயக்கும் என்ற உணர்வினை உள்ளுக்குள் வளர்த்துக் கொண்டாலும், எனது gutfeel மீதான நம்பிக்கைகளை நான் முழுசுமாய் இழந்ததில்லை ! But இந்த ஜேம்ஸ் பாண்ட் க்ளாஸிக் கதைகளுக்கு நீங்கள் தந்திடக்கூடிய வரவேற்பு சிகப்புக் கம்பள பாணியில் இருந்திடுமென்று சத்தியமாய் எனக்கு யூகிக்கச் சாத்தியப்பட்டிருக்கவில்லை ! "ராணி காமிக்ஸ்" போட்டி இதழ் எனும் போது அந்நாட்களில் அவற்றை வாசிக்கப் பெரிதாய் நான் மெனெக்கெட்டதில்லை ! So 007 அங்கு செய்திருக்கக்கூடிய சாகசங்களின் பரிமாணம் என்னை முழுசாய் எட்டியிருக்கவில்லை என்பதே நிஜம் ! தவிர ஆரம்ப நாட்களின் கதை வாங்கும் போட்டியில் ஜேம்ஸ் பாண்டின் விஷயத்தில் நமக்கு கிட்டியது அல்வாவே என்பதால் அவர் மீதே ஒரு மெல்லிய காண்டு இருந்தது நிஜம் ! "சீ..சீ..இந்த அல்வா திகட்டும்...பிசு பிசுன்னு இருக்கும் !" என்ற கதை தான் ! So கிளாசிக் 007 உங்களுள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இன்றைக்கு கண்கூடாய்ப் பார்ப்பது பிரமிக்கச் செய்யும் அனுபவம் !!  பட்டாம்பூச்சிப் படலம் அற்புத வாஞ்சையோடு வரவேற்கப்படுவது இந்த ஜனவரியில் highlight என்பேன் !!

***Happy Story of the bookfair பற்றியும் நான் பேசியே தீர வேண்டும் ! நேற்றைக்கு நான் சந்தித்துப் பேசிய வாசகர்களில் கணிசமானோர் தம் வீட்டுப் பிள்ளைகளையும் என்னிடம் அறிமுகம் செய்து வைத்தனர் - "டெக்ஸ் ரசிகன் " ; லக்கி லூக் ரசிகை" என்ற அடைமொழிகளோடு ! எங்கே - இன்றைய இளசுகள் நம் பக்கமாய் திரும்பிடாதே போய் விடுவார்களோ ? என்ற பீதியினை ஓரளவிற்கு மட்டுப்படுத்திட உதவிட்டது அவர்களுடனான உரையாடல்கள் !! லக்கி லூக்கின் சகல இங்கிலீஷ் டைட்டில்களையும் ஒப்பித்த கையோடு - அவற்றின் தமிழ் பதிப்புகளை பார்த்துக் குஷியான தந்தை & தனயன் ஜோடி ;  சூப்பர் சர்க்கஸில் ஆரம்பித்து, சமீபத்தைய உத்தம புத்திரன் வரைக்கும் ஒவ்வொரு லக்கி ஆல்பத்தையும் நினைவு கூர்ந்திடும் தந்தையோடு உற்சாகமாய்ப் பங்கெடுத்த இளவல் ; டெக்சின் அத்தனை கதைகளும் "தெறி !!" என்று சர்டிபிகேட் தந்த குட்டிப் பெண் - என்று நம் பயணத்துக்கொரு எதிர்காலம் நிச்சயம் உண்டென்று ஊர்ஜிதம் செய்தோர் நேற்றைய பொழுதை பிரகாசமாக்கிய பலருள் பிரதானமானோர் !!

*** Hardcover இதழ்கள் மீதான காதலின் வெளிப்பாடையும் கண்கூடாய்ப் பார்த்திட இயன்றது நேற்றைக்கு !! "நானும் படிக்கணும்  ; என் மகனுக்கும் ரசிக்கணும் ! அதுக்கு ஏற்றா மாதிரி புக்கா காட்டுங்களேன் ?" என்ற வினவலோடு எதிர்பட்டார் வாசகர் ஒருவர் ! சரி, காமிக்ஸுக்குப் புதுசான வாசகருக்கு light வாசிப்புக்களமாகவே தரலாமென்ற எண்ணத்தில் லக்கி லூக்கை சுட்டிக் காட்டினேன் ! ஊஹூம்....கார்ட்டூன் வேணாமே ! என்றார் ! ரைட்டு....ஜேம்ஸ் பாண்ட் 007 என்று பட்டாம்பூச்சிப் படலத்தை நீட்டினேன் ! அதை வாங்கி ரசித்த போதிலும் அவர் கண்கள் மொத்தமாய் நிலைகொண்டிருந்ததோ நமது hardcover கலெக்ஷன் மீதே ! "இதிலே ஏதாச்சும் தாங்க !" என்றவரிடம் "இரத்தக் கோட்டை" இதழை நீட்டிய போது சந்தோஷமாய் வாங்கிச் சென்றார் ! அவர் தானென்றில்லை, தினகரன் குழும எடிட்டர் திரு கே.என். சிவராமன் அவர்களும் நம்மை அன்போடு சந்திக்க வந்த தருணத்தில் சிலாகித்தது ஹார்ட் கவர் இதழ்களின் ரம்யத்தையே ! ஊடக உலகினில் பழம் தின்று கொட்டை போட்டதொரு ஜாம்பவான் பாராட்டும் போது அந்த ஹார்ட் கவர்கள் இன்னமுமே மினுமினுத்தது போலிருந்தது எனக்கு !!

***And yet again கார்ட்டூன்கள் மீதான இரு முற்றிலும் மாறுபட்ட தீர்ப்புகளை நேற்றைக்கு உணர்ந்திட இயன்றது ! ஸ்டாலுக்கு வந்த casual readers மத்தியில் பென்னி ; லக்கி லூக் ; ரின்டின் கேன் ; smurfs சுலபமாய் நட்புப் பாராட்டியதை கவனித்தேன் ! வாஞ்சையோடு கார்ட்டூன் புக்குகளைத் தூக்கிக் கொண்டு பில் போடா நகர்ந்தனர் கணிசமானோர் ! ஆனால் நமது ரெகுலர் வாசக வட்டத்தின் அங்கத்தினரோ - "கார்டூனிலே லக்கி தவிர்த்து வேற எதுவும் புடிக்கல சார் !" என்று உதட்டைப் பிதுக்கிச் சென்றது தவறாது நிகழ்ந்தது !! நானும் மத்திமமாய் விளக்கெண்ணெய் குடிச்சவன் போலொரு புன்னகையோடு 'சரிங்க சார் !' என்று கேட்டு வைத்துக் கொண்டேன் !! வானவில்லின் இரு முனைகள் !! நடுவே ஒரு பொட்டல் தலையன் !! ஹ்ம்ம் !!

***தவறாது நேற்று என்னிடம் சொல்லப்பட்ட இன்னொரு சமாச்சாரம் ட்யுராங்கோ தொடருக்குக் காத்திருக்கும்  'கதம்..கதம்..' தான் ! ஓசையின்றி இந்த மனுஷன் நம் வாசகர்கள் மத்தியில் என்ன மாதிரியானதொரு இடத்தைப் பிடித்துள்ளார் என்பதை நேற்றைக்கு தெள்ளத் தெளிவாய் உணர்ந்திட முடிந்தது ! "ஆறாது சினம் அட்டகாசம்" என்று சொல்லிய அதே மூச்சில் -"அடுத்த வருஷம் தொடர் முடியுதோ சார் ?  " என்று வருத்தத்தையும் வெளிப்படுத்தியோர் ஏகம் ! பார்க்கலாமே நண்பர்களே - இதன் படைப்பாளி உருவாக்கியுள்ள புதுத் தொடர் ட்யுராங்கோவின் இடத்தை இட்டு நிரப்புமா என்று !!

***அநேகரால் அழுத்தமாய் பேசப்பட்ட இன்னொரு topic -  "குண்டு புக் கோரிக்கையே "!! "ஜானியின் கதைகளிலொரு நாலைந்தை இணைத்துப் போடுங்களேன் ; "லக்கி லுக்கில் நாலு ?" ; "கலரில் டெக்ஸ் புதுக் கதைகள் ?" " என்ற ரீதியில் Collection ஆல்பங்களுக்கோசரம் பிடிக்கப்பட்ட கொடிகள் நிறையவே இம்முறை ! நமது பட்ஜெட்டின் நெருக்கடிகளை சொல்லி ; யாருக்கேனும் இத்தனை கூடுதல் வாய்ப்புத் தருவதாயின் - இருப்போரில் யாருக்கேனும் பியூஸ் பிடுங்க வேண்டிவரும் என்பதையும் விளக்கினேன் !  பதிலில் முழுத்திருப்தியின்றி - க.க.போ. என்று நண்பர்கள் நடையைக் கட்டும் போது சங்கடமாகவே இருந்தது எனக்கு ! ஆனால் இதற்கு மேலும்  உங்கள் பர்ஸ்களைப் பதம் பார்க்க நமக்கு சம்மதமில்லை எனும் போது வேறென்ன சாத்தியமோ ?

***Yet another familiar line I got to hear yesterday : "உங்க பதிவுகளின் மௌன வாசகர்கள் சார் ! ஞாயிறு காலையில் கண்ணைத் திறப்பதே உங்க பதிவுகளில் தான் !!" என்ற வரிகளை ! And வழக்கம் போல ஹி..ஹி..ஹி...என்று அசடு வழிந்த கையோடு - "ஏதாச்சும் பின்னூட்டங்கள் போடலாமே சார் ?" என்று கேட்ட போது, பதிலுக்கு அவர்களின் அசடு வழியும் படலம் துவங்கின ! என்றைக்கேனும் ஓய்வுக்குள் புகுந்த பிற்பாட்டின் ஒரு  சாவகாச நாளில் - இந்தப் பதிவுகளின் பயணத்தை அசைபோட நேரம் கிட்டாது போகாது தான் ! விளையாட்டாய் துவங்கியதொரு விஷயமானது இத்தனை காலம் தாக்குப் பிடித்து, உங்கள் ஆர்வங்களையும் தக்க வைத்த மாயத்தை எண்ணி maybe அந்தப் பொழுதினில்,பொக்கை வாய் பிளக்கச் சந்தோஷம் கொள்வேன் ! இந்த நொடிக்கு - "சாமீ...தெய்வமே...வாராவாரம் சனிக்கிழமை மட்டுமாவது  சரஸ்வதி கடாட்சம் கிட்டும் வரம் வேண்டுமே !!" என்ற பிரார்த்தனை தான் !

***கேட்கப்பட்ட அடுத்த கேள்வி : "சென்னையில் ஏன் ஈரோடு பாணியிலான வாசக சந்திப்போ / புக் ரிலீசோ வைப்பதில்லை ?" என்பதே !! நிச்சயமாய் இந்த விஷயத்தில் நமது ஈரோட்டு விழா முன்னணியில் நிற்பதில் சந்தேகங்கள் லேது தான் ! Much as I would like for it to happen in Chennai too - இங்கு நடைமுறைச் சிக்கல்கள் நிரம்பவே உண்டென்பது obvious ! ஆனால் 'மனமிருந்தால் மார்க்கபந்து' எனும் முதுமொழியை மனதில் இருத்திக் கொண்டு 2021-ன் ஜனவரிக்கு ஏதேனும் திட்டமிட முயற்சிக்கலாமா guys ? ஜனவரியின் முதல் வாரயிறுதியில் புத்தக விழா துவங்கிடும் பட்சத்தில் அந்த ஞாயிறு சுகப்படுமா ஒரு புக் ரிலீஸ் + ஜாலியான சந்திப்புக்கு ? மெது மெதுவாய் திட்டமிடலாம் ; ஜெயமென்றால் சந்தோஷம் ; இல்லையெனில் no worries !!


***வண்டி வண்டியாய் புகைப்படங்கள் ; தொண்டை வறண்டு போக அரட்டைகள் என்று என் வண்டி ஜாலியாய் ஒடிக்கண்டிருந்த நேரத்தினில் ஜூனியரோ  ஓசையின்றி கம்பியூட்டர் பில்லிங்கில் நமது சிவகாசிப் பணிப்பெண்கள் செய்து வைத்திருந்த குளறுபடிகள் சகலத்தையும் சரி செய்து கொண்டிருப்பது நடந்து கொண்டிருந்தது ! போன வருஷம் வரைக்கும் பயன்பாட்டில் இருந்து வந்த software சொதப்பிக் கொண்டேயிருந்ததால், புதுசாய் ஏதோ software ஆர்டர் செய்து அதனை நம்மாட்களுக்கும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்க - பின்னணியில் ஜூனியரின் பங்களிப்பு இல்லாங்காட்டி கதை கந்தலாகியிருக்குமென்பது புரிந்தது ! Moreso நேற்றைக்குப் பின்னியெடுத்த கூட்டத்திற்கு முன்போல கையால் பில் போட்டிருந்தால் டப்பா டான்ஸோ டான்ஸ் ஆடித் தான்   போயிருக்கும் ! இரவு 9 மணி நெருங்கிய வேளையில் நண்பர்களுக்கு விடை தந்து விட்டு - கிரெடிட் கார்டு பில்லிங் + ரொக்க விற்பனை என total போட்டுப் பார்த்த போது கை மெல்ல நடுங்கியது - simply becos நேற்றைய மொத்த விற்பனையானது இதுவரையிலும் நாம் பங்கேற்றுள்ள எந்தவொரு புத்தக விழாவிலும் ஒற்றை நாளில் பார்த்திருக்கா ஒரு விற்பனை ரெகார்ட் !!

அசதியில் zombies போல காட்சி தந்த நமது பணியாட்களை விடை தந்த கையோடு ரூமுக்குள் கிளம்பிட சாலைக்கு வந்த போது கூட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மூத்த வாசகர் ஒருவர் பைக்குள் கிடந்த மாயாவியாரை நொடிக்கொரு தடவை வெளியே எடுத்துக் பார்த்துத், தடவிக் கொண்டே, வீட்டம்மாவின் முறைப்பையும் சமாளிக்கும் அழகு கண்ணில் பட்டது !! அந்த நொடியில் வெகு சமீபத்தில் நமது FB பக்கத்தில் நண்பர் ஒருவர் எழுதியிருந்த tagline தான் நினைவுக்கு வந்தது !!

ஐந்து முதல் ஈரைம்பது வரை !! காமிக்ஸ் - இது அனைவருக்கும் !!

அந்த "7 முதல் 77 வரை" tagline க்குள் நமது சீனியர் எடிட்டரோ ; மாயாவியை தரிசித்த நொடியில் உற்சாக யூத்தாகிடும் பல முது வாசகர்களோ அடைபட மாட்டார்களேனும் போது - மாற்றத்தை நமது tagline-ல் கொணர்வோமே ? ஒரு நூறு ஆண்டுகள் & more தழைக்கட்டுமே இந்தக் காமிக்ஸ் காதல் !! Feeling truly blessed & truly humbled !!

Bye all ! See you around !







P.S : எனக்கு அனுப்பப்பட்ட போட்டோக்கள் இவையே ! மேற்கொண்டிருப்பவைகளை lioncomics@yahoo.com முகவரிக்கு மின்னஞ்சல் செய்திடுங்களேன் ப்ளீஸ் ? 

Sunday, January 05, 2020

இது "ரமணா" நேரம் !!

நண்பர்களே,

வணக்கம். ஒவ்வொரு சனிக்கிழமை மாலையிலும் லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு குந்தும் வரையிலும் அன்றைய பதிவினில்  எதைப் பற்றி எழுதப் போகிறேன் என்பது குறித்து எவ்வித முன்னேற்பாடும் மண்டைக்குள் இருப்பது கிடையாது ! Of course - புது இதழ்களின் previews ; புத்தக விழா சந்திப்புகள் ;  போன்ற clearcut தருணங்களில் பெருசாய் யோசிக்க எதுவும் இராது தான் ! ஆனால் அவை நீங்கலான வேளைகளில், டைப்ப ஆரம்பித்த பின்னே தான் பதிவின் பாதைகளே புலனாவது வாடிக்கை ! ஆனால் இம்முறையோ மெலிதாயொரு மாற்றம் ! நாலைந்து நாட்களுக்கு முன்பிலிருந்தே 'இது தான் இவ்வாரத்து topic !' என்று திட்டவட்டமாய்த் தெளிவிருந்தது என்னுள் ! வேறொன்றுமில்லை folks - ஆண்டின் அந்த "புள்ளிவிபர ரமணா" அவதார் எடுத்திடும் வாய்ப்பு மறுக்கா வாய்த்துள்ளது - டிசம்பர் 31-ம் தேதிக்கு நம்மவர்கள் கிட்டங்கிகளில் ஸ்டாக் எடுத்துக் கொணர்ந்ததன் நீட்சியாக !! So கடந்த ஓராண்டின் ஆன்லைன் விற்பனைகள் ; புத்தக விழா விற்பனைகளுக்குப் பிற்பாடான நிலவரத்தின்படி - நமது நாயக / நாயகியரில் யார் - என்ன மாதிரியான standing தனை கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் பார்ப்போமா ? "நல்ல சேதி-கேட்ட சேதி" பாணியிலேயே இந்தப் பதிவையும் அமைத்திட நினைத்தேன் - simply becos நிலவரத்தில் கலவரமும், குதூகலமும் மாறி மாறியே ஆட்சி செய்து வருகின்றன ! Here goes : 

நல்ல சேதி என்னவென்றால் - ஜம்போவில் அறிமுகமாகி, வண்ணத்தில், புது பாணியில் அதிரடி செய்து வரும் ஜேம்ஸ் பாண்ட் 2.0 செம ஹிட் !! "பனியில் ஒரு பிரளயம்" வெளியானது போன வருஷமா ? அல்லது 2018-லா ? என்று நினைவில்லை எனக்கு ; ஆனால் இந்தச் சென்னை புத்தக விழாவினைத் தாண்டி இதனில் ஸ்டாக் இருப்பின் ஆச்சர்யம் கொள்வேன் என்பதே நிலவரம் ! வெகு சமீபத்து "சுறா வேட்டை" கூட doing pretty well ! கறுப்பு வெள்ளையில் மட்டுமன்றி, கலரிலும் நம் 007 சாதித்து வருவது குஷியான விஷயம் தானே ?
கெட்ட சேதி என்னவென்றால் - நமது லேடி ஜேம்ஸ் பாண்ட் மாடஸ்டி இன்னமுமே நம் கிட்டங்கியுடனான பந்தத்தை தளர்த்திக் கொள்ளும் மன நிலையில் இல்லவே இல்லை !! ரூ.30-ல் ஆரம்பித்து ரூ.50 வரையிலும் சின்னச் சின்ன விலைகளிலேயே உள்ள இவரது black & white இதழ்கள் ஓராண்டின் புத்தக விழாக்களிலுமே ஸ்கோர் செய்யாதிருப்பது நிஜமாய் நெருடுகிறது ! All said & done - நமது இளவரசிக்கு இதை விட சற்றே கூடுதலாய் வரவேற்பு இருக்க வேண்டுமென்றே படுகிறது ! இதோ - ரூ.40 விலையிலான புதுத் தடத்தினில் மார்ச் மாதம் வரவுள்ள இளவரசியின் அடுத்த சாகசத்தை எப்படியேனும் டாப் கியர் போட்டுத் தூக்க ஆன மட்டுக்கு முயற்சிப்பது தான் எனது priority !! ஜெய் மாடபலி !!
நல்ல சேதி என்னவென்றால் எப்போதும் போலவே மாயாவிகாருவின் விற்பனையானது  ஆண்டின் ஒவ்வொரு புத்தக விழாவிலும் துவக்கத்து உச்சங்களில் இல்லாவிடினும் - pretty decent all the same !! இடைப்பட்ட வேளைகளில் ஆன்லைனிலுமே "வெறும் மாயாவி பிரியாணி போதும் ; டெக்ஸ் வில்லர் லெக் பீஸோ ; லக்கி லூக் பாதாம்கீரோ  வேணாம் !!" என்ற ஆர்டர் வருவதுண்டு ! அவர்கள் அனைவருமே - முன்னாட்களது வாசகர்கள் ; மாயாவியின் மச்சீஸ் என்பது நொடியில் புரிந்திடும் ! Evergreen மாயாவி ; முடிவறியா மாயாவி !
கெட்ட சேதி என்னவென்றால் மாயாவியின் சூப்பர் ஹீரோ சகாவான குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடர் விற்பனை சார்ந்த ஓட்டப் பந்தயத்தில் ரொம்பவே பின்தங்கி நிற்கிறார்  ! In fact மாயாவி ஓடி முடித்து, கோப்பையை வாங்கி விட்டு, வூட்டுக்குப் போய் ஒரு குளியலும் போட்டு முடித்திருப்பார் - இக்கட ஸ்பைடர் காசியப்பன் பாத்திரக் கடையைத் தேடிப் புறப்படும் நேரத்திற்கு ! அந்நாட்களது massive ஹிட்களான 'கடத்தல் குமிழிகள்" : "டாக்டர் டக்கர்" ; "எத்தனுக்கொரு எத்தன்"போன்ற இதழ்களிலெல்லாம் நம்மிடம் உள்ள கையிருப்பைப் பார்த்தால் பீதியில் உறைந்தே போகத் தோன்றுகிறது !! Phew !!

நல்ல சேதி என்னவென்றால் மறுபதிப்பு மேளாவின் இன்னொரு அங்கமான CID லாரன்ஸ் ஓரளவுக்குத் தலை தப்பியுள்ளார் இடைப்பட்ட இந்த ஓராண்டின் புத்தக விழா விற்பனைகளினில் ! ஆனால் ஏனோ புரியவில்லை -  "மஞ்சள் பூ மர்மம் " & "சிறைப் பறவைகள்" இதழ்கள் மட்டும் சுத்தமாய் ஸெல்ப் எடுக்கக் காணோம் ! இந்த 2 டைட்டில்களில்  மாத்திரம் உள்ள ஸ்டாக் - சாலையோர பானிப்பூரிவாலாவிடம் குமிந்து கிடக்கும் குட்டி பூரிகளைப் போல ஒரு வண்டி தேறும் !! Thinking !!

கெட்ட சேதி என்னவென்றால் பூப்போட்ட ட்ரவுசருக்கும் ; கர்னல் ஜேகப்புக்கும் ரொம்பவே பிடித்தமான ஜானி நீரோ தள்ளாட்டமே கண்டு வருகிறார் விற்பனைகளில் ! காணாமல் போன கைதி ; கொலைக் கரம் ; மூளைத் திருடர்கள் ; போன்ற இதழ்களில் மலையாய் ஸ்டாக் !! மும்மூர்த்திகளுள் முக்கியமான ஜானி நீரோவுக்கு ஏனிந்த பாராமுகம் - முன்னாட்களது வாசகர்களிடம் ?என்பது புரிபட மாட்டேன்கிறது ! Maybe இனிமேல் 2 மாயாவி வாங்கிட வேண்டுமெனில் 1 ஜானி நீரோ வாங்கியே தீர வேண்டுமென்ற நிபந்தனை விதிக்க வேண்டுமோ - என்னமோ ? 

நல்ல சேதி என்னவென்றால் நாலைந்து முக்கிய புத்தக விழாக்களின் உபயத்தால் நீலப் பொடியர்கள் SMURFS ஓரளவுக்கு விற்பனை கண்டுள்ளனர் ! இங்கும் "தேவதையைக் கண்டேன்" இதழ் மட்டும் 'அம்போ'வென கண்டு கொள்ள ஆளின்றித் தவிக்கிறது ! ஆனால் பாக்கி SMURFS இதழ்கள் "பிடாரிச் சுமை" என்ற கட்டத்தில் இல்லை என்பது ஆறுதலான சேதி ! அதற்காக அடுத்த வருஷமே இவர்களை மறுக்கா அழைத்து வரலாமே ? என்ற கோரிக்கைக்கு இது நேரமல்ல ; because இந்தக் கையிருப்பு குறைய / கரைய இன்னமும் 2 ஆண்டுகளாவது அவசியப்படும் - இதே வேகம் தொடர்ந்தாலே !!

கெட்ட சேதி என்னவென்றால் - என்னவென்றால்... என்னவென்றால்...?!!! என்ன தடுமாற்றம் என்று பார்க்கிறீர்களா ? விழுங்கக் கொஞ்சமல்ல ; ரொம்பவே கஷ்டமான சேதி தொடரவுள்ளது ! அது தான் உட்ஸிடியின் சிரிப்புப் போலீசின் செயல்பாடு - இந்தக் கடைசி ஒற்றை ஆண்டினில் மாத்திரமன்றி, சமீப சில ஆண்டுகளிலுமே !! "ஒரு ஷெரீபின் சாசனம்" & அந்த ஹார்டகவர் "சிக்பில் ஸ்பெஷல்" நீங்கலாய் பாக்கி எல்லா சிக் பில் ஆல்பங்களிலுமே உள்ள கையிருப்பு மதுரை சிம்மக்கல் கோனார் மெஸ்ஸில் செம கட்டு கட்டியவனின் தொப்பையைப் போல பிதுங்கி நிற்கிறது ! சுத்தமாய்ப் புரியக் காணோம் - ஆனால் முதல் ரவுண்டில் சந்தாக்களிலும், முகவர் ஆர்டர்களிலும் விற்பனை கண்டிடும் இதழ்களுக்குப் பின்பாய் இவற்றை ஆராதிக்க ஆளைக் காணோம் !! "ஆர்டினின் ஆயுதம் " ; "நிழல் 1 ; நிஜம் 2 " : ஒரு பைங்கிளிப் படலம்" போன்ற ஆல்பங்கள் அடுத்த தசாப்தம் வரைக்கும் தாக்குப் பிடிக்கும் - ரொம்பச் சுலபமாய் !! MAXI லயனில் இவர்கட்கு இடமளிப்பது குறித்து ரொம்பவே மறுபரிசீலனை அவசியம் போலும் !! Perplexing !! 
நல்ல சேதி என்னவென்றால் புது வரவுகளான மேக் & ஜாக் விற்பனையில் spectacular என்றில்லாவிட்டாலும் செம ஸ்டெடி ! அந்த வரிசையில் இதுவரைக்கும் வெளிவந்துள்ள 2 ஆல்பங்களுமே அழகாய் விற்றுள்ளன ! இந்த அட்டாவே ஏஜென்சி நம் மத்தியில் அட்டையை ஒட்டிடப் போவதுஉறுதி என்பது "கதவைத் தட்டிடும் கோ)டி " கண்டுவரும் வெற்றி ஊர்ஜிதம் செய்கிறது !! Glad for that !!   

கெட்ட சேதி என்னவென்றால் மதியிலா மந்திரியாரும் going the சிக் பில் way !! ரொம்பவே மந்தம் விற்பனையினில் ! நிச்சயமாய் இது இந்தத் தொடரின் தரத்தின் மீதான தீர்ப்பாய் நான் பார்த்திடவில்லை ; மாறாக, சிறுகதைத் தொகுப்புகளின் மீதான துவேஷம் தொடர்வதையும், ஒட்டு மொத்தமாகவே கார்ட்டூனுக்குக் கொடி  பிடிப்போர் சங்கத்தின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் மாறிடுவதையே காட்டுகிறது !! கார்ட்டூன் ரசிகர்களெல்லாம் இனிமேல் லெமூரியாவுக்குத் தான் குடி பெயர வேண்டிவரும் போலும் !! மறக்காமல் எனக்கொரு டிக்கெட் போட்ருங்கப்பா ; புளிசாதத்தைக் கட்டிக்கிட்டு ஓட்டமா ஓடியாந்திடறேன் ! 

நல்ல சேதி என்னவென்றால் LADY S இந்த ஓராண்டினில் நன்றாகவே perform செய்துள்ளார் !! எல்லாமே புத்தக விழா உபயங்கள் என்பதில் சந்தேகங்களிலை - becos ஆன்லைன் ஆர்டர்களில் இவரை அவ்வளவாய்ப் பார்த்ததாகவே எனக்கு நினைவில்லை ! Maybe இன்னுமொராண்டுக்கு இதே வேகத்தில் LADY S செயல்பட்டால் - இவரது தொடரின் பாக்கி ஆல்பங்களை பற்றிச் சிந்திக்கலாமென்று படுகிறது !!
கெட்ட சேதி என்னவென்றால் தொங்கலில் நிற்கும் இன்னொரு தொடருக்கு (நம்மிடையே) மறுஜென்மம் தந்திட துளியும் வாய்ப்பு லேது & அது கமான்சே தொடரே ! இதன் ஆரம்பத்து ஆல்பங்கள் தவிர்த்து மீதம் சகலத்திலும் முழிபிதுங்கச் செய்யும் ஸ்டாக் உள்ளது ! நிச்சயமாய் இந்தச் சொதப்பலுக்குக் காரணமாகிடும் வகையில் மட்டமல்ல இந்தத் தொடர் ! Maybe இங்கே ஒரு டெக்சின் ஆக்ஷனோ ; டைகரின் விவேகமோ மிஸ்ஸிங் ஆக இருக்கலாம் தான் ; ஆனாலும் இந்தத் தீர்ப்பு ரொம்ப ரொம்ப harsh என்பேன் ! வாசக நாட்டாமைஸ்...தீர்ப்பே மாத்துங்க - ப்ளீஸ் !!  

நல்ல சேதி என்னவென்றால் 'தல' TEX எப்போதும் போல மலை !!  எந்தச் சேதங்களுமின்றி எல்லா சீதோஷ்ணங்களையும் தாக்குப் பிடித்து நிற்கும் அண்ணாமலை ! டைனமைட் ஸ்பெஷல் காலி ; "காதலும் கடந்து போகும்" almost காலி ; முந்தைய ஸ்பெஷல் இதழ்களும் காலி ! டெக்சா ? தக்காளித் தொக்கா ? இன்னமும் கூட இவரை சிலாகித்துக் கொண்டே போகலாம் தான் ; ஆனால் கார்சனின் நண்பரை சிலாகிப்பது சிலருக்கு காதிலே புகை வரவழைக்கக்கூடும் - தமன்னாவோடு ஆட்டம் போடும் லெஜெண்ட் சரவணனைப் பார்த்திடும் பாணியில் என்பதால் அடக்கி வாசிக்கிறேன் ! சில "அதிகாரிகளை" அசைக்க இயலாதென்பது ஆண்டவனின் நிர்ணயம் போலும் ! ஆனால் இங்கேயும் ஒரு சிறு புதிரான சமாச்சாரம் : "சட்டத்துக்கொரு சவக்குழி " & "திகில்நகரில் டெக்ஸ்" மாத்திரம் சுணங்கி நிற்கின்றன !! 
கெட்ட சேதி என்னவென்றால் ஒரு முழுத் தொடருமே களமிறங்கிய பிற்பாடும் ஒரு ஜாம்பவான் எழுத்தாளரின் படைப்புக்கு நம் மத்தியிலான ஆதரவு கலக்கத்தையே தருகிறது ! அது வேறு யாருமல்ல - வான் ஹாமின் "வெய்ன் ஷெல்டன்" ! NBS-ல் அறிமுகம் கண்டுள்ள இவரது அடுத்த எட்டுப் பத்து ஆல்பங்களிலுமே கணிசமோ கணிசமான ஸ்டாக் உள்ளது !! புள்ளி விபரங்களை மாத்திரமே கொண்டு நமது கதை தேர்வுகளை ; கதை நாயகத் தேர்வுகளை நான் செய்திருக்கும் பட்சத்தில் இவருக்கு எப்போதோ நாம் டாட்டா சொல்லியிருக்க வேண்டும் !! குலைநடுங்கச் செய்கிறது இவரும் கமான்சேக்குத் துணையாய்க் கிட்டங்கியில் கோந்து போட்டு குந்தி இருப்பதைக் காணும் போது ! 
நல்ல சேதி என்னவென்றால் ஜில் ஜோர்டன் ("துணைக்கு வந்த தொல்லை" நீங்கலாய்) ; ரின்டின் கேன் ; சாகசவீரர் ரோஜர் (மஞ்சள் நிழல் நீங்கலாய்) ஆகிய mid level உருப்படிகள் இந்த ஓராண்டில் decent விற்பனை கண்டுள்ளன ! தலையில் சுமையாய் நின்றவை இப்போது இடுப்பில் சுமக்கக் கூடிய சுமையாய் உருமாற்றம் கண்டுள்ளன என்றமட்டுக்கு சந்தோஷம் ! 

கெட்ட சேதி என்னவென்றால் அட்டகாசமான reviews பெற்றிட்ட போதிலும் ஜேசன் ப்ரைஸ் முப்பாக fantasy தொடர் அதன் பின்னே அதிக விற்பனை கண்டிடக் காணோம் ! Maybe சற்றே திகில் கலந்த அந்த fantasy லயிக்கவில்லையோ - என்னவோ தெரியலை ; ஆனால் மூன்று பாகங்களிலுமே கணிசக் கையிருப்பு !! Strange !!
அப்புறம் கொடியிடை ஜூலியா ; CID ராபின் போன்றோரும் ரொம்பவே slow movers இந்த ஓராண்டினில் ! And ஸ்லோவோ ஸ்லோ - XIII தொடரின் இரண்டாம் சுற்றுச் சமாச்சாரங்கள் + spinoffs !! ஆண்டிறுதியின் ஸ்டாக் நிலவரத்தைப் பார்க்கும் போது நண்பர் XIII -ஐப் போல தற்காலிக மராத்தி வந்திட்டாள் தேவலாம் என்றே தோன்றுகிறது ! அதிலும் பெட்டி & ஆமோஸ் !! Phewwwwwwwwwww !! 

இவை தவிர துவக்க நாட்களது கிராபிக் நாவல்கள் கிட்டத்தட்ட மறந்தே போனது போலாகி தேங்கிக் கிடக்கின்றன ! In fact "இரவே..இருளே..கொல்லாதே" ; "தேவ ரகசியம் தேடலுக்கல்ல" ஆல்பங்களுமே in plenty !! 

So where do we go from here on these stats folks ? சிகப்பு மசியால் வட்டமிட்டு கிட்டத்தட்ட 55 டைட்டில்களை விசேஷ கவனத்துக்கென இருத்தியுள்ளேன் ! அவை சகலத்துக்கும் இந்தப் புத்தக விழாவிலிருந்தே 25% டிஸ்கவுண்ட் தந்திடத் தீர்மானித்துள்ளோம் ! So அதீதக் கையிருப்புள்ள இதழ்களுக்கு 25% என்றொரு ஸ்டிக்கர் ஒட்டி - அவற்றை கண்ணில்படும் விதமாய் display செய்திடவுள்ளோம் நமது சென்னை ஸ்டாலில் ! கொஞ்சமேனும் இதற்கொரு பலன் கிட்டின், தெய்வமே - இழுத்துப் பிடித்திருக்கும் மூச்சை சற்றே வீட்டுக் கொள்வேன் !! ஆன்லைனிலுமே ஜனவரியின் மத்தியிலிருந்து ஒரு SALE கொணர எண்ணியுள்ளேன் - குறிப்பிட்ட title-கள் மீது !! And இவற்றை வாங்கிடும் முகவர்கட்கு பிரேத்யேகமாய் ஒரு incentive தந்திடவும் திட்டமிட்டுள்ளோம் !

Before I sign off - ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாய்ப் புரிகிறது guys !! ஒட்டுமொத்தமாய் ஒரு மாதத்தினில் எல்லா இதழ்களுமே நல்ல ரேட்டிங்ஸ் பெற்றிடும் தருணங்களில் அந்த பாசிட்டிவ் vibes ஆன்லைன் விற்பனை ; கடைகளின் விற்பனை என சகலத்தையும் தொற்றிக் கொள்கின்றன ! இதோ இந்த ஜனவரியின் ட்யுராங்கோ ; ஜேம்ஸ் பாண்ட் ; MAXI டெக்ஸ் ; மேக் & ஜாக் சார்ந்த உங்களின் சிலாகிப்புகள் நிறையவே விற்பனைக்கு ஊக்கம் தந்திடுவது கண்கூடாய்த் தெரிகிறது ! அதிலும் ஜேம்ஸ் பாண்ட் & ட்யுராங்கோ அதகளம் ! So ஒரு கதையைப் படித்த பின்னே ரெண்டே நிமிஷம் இதற்கென ஒதுக்கி - ஒரு thumbsup அல்லது thumbs down தந்தால் கூட - அந்த இதழ்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் காரணிகளை அவை மாறிடக் கூடும் ! நிச்சயமாய் இது ஜாலரா - காலரா கோரல் அல்ல guys ; சிலபல நாயக / நாயகியர் நம் மத்தியில் தொடர்வதற்கும், தொலைவதற்கும் அவசியமான தீர்ப்புகளை எழுதச் சொல்லி உங்கள் முன்வைக்கும் மன்றாடலே ! Give it a thought & a finger guys !! அது நடுவிரலை உசத்திக் காட்டுவதாகவே இருந்தாலும் கூட - அதனிலும் ஒரு சேதி இருப்பது புரியாது போகாது ! 

ஜனவரியின் இதழ்கள் தூள் கிளப்புவதில் பெரும் நிம்மதி எனக்கு ! அதிலும் ரூ.40 விலை ஜேம்ஸ் பாண்ட் எல்லா பக்கங்களிலும் நிறைவான வரவேற்பைக் கண்டுவருகிறதென்பது icing on the cake ! மார்க்கெட்டில் ரவுண்டடிக்கும் நமது பணியாட்களிடம் "பட்டாம் பூச்சிப் படலம்" புக்கைப் பார்க்கும் எல்லா முகவர்களுமே செமயாய் impressed ! அவை ஆர்டர்களாய் ; விற்பனைகளாய் உருமாற்றம் கண்டிடுமா ? என்பதைப் போகப் போகத் தான் பார்த்தாக வேண்டும் ! ஆனால் இப்போதைக்கு அந்த சைஸ் ; அந்த அட்டைப்படம் ப்ளஸ் ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற அந்தப் பரிச்சயம் கவனங்களைக் கோரத் தவறவில்லை !! உங்கள் ஊரினில் இன்னமும் JB அடிவைக்கவில்லை எனும் பட்சத்தில், நீங்கள் வாடிக்கையாக புக் வாங்கிடும் கடையின் விலாசத்தை மட்டும் நமக்குத் தெரியப்படுத்துங்களேன் ப்ளீஸ் ? அங்கே பேசி முயற்சிக்க நம்மாட்களை அனுப்பிடலாம் ! 

Bye all guys ; ஜனவரியின் விமர்சனங்கள், அலசல்கள் தொடரட்டுமே ? See you around !! Have a beautiful Sunday !!

And here's Chennai Bookfair's Stalls layout :