நண்பர்களே,
வணக்கம். இந்த வாரம் தேய்ந்து போன cliche திருமொழிகளைத் துவைத்தெடுக்கும் வா-ர-ர-ம்-ம்-ம் !! So ஆங்காங்கே க்ளீஷே கொழந்தைசாமி அவதார் தலைகாட்டினால் கண்டுகொள்ளாதீர்கள் ப்ளீஸ் !
⧭மாற்றம் ஒன்றே மாறாதது !!
ஆங்... போன வாரப் பதிவில் ஜானதன் கார்ட்லேண்டின் அளவில் அடிக்க நேர்ந்த பல்டி ; செய்திட அவசியமாகியிருந்த மாற்றங்கள் பற்றி எழுதியிருந்தேன் ! மாற்றங்களை நடைமுறைப்படுத்தி, அச்சிட்ட இதழாகக் கையிலேந்திப் பார்த்த போதுதான் அதுவரையிலும் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விடமுடிந்தது ! நார்மலான சைஸில்; தெளிவான படங்களோடும்; பழக்கப்பட்ட அந்த எழுத்துருக்களோடும் படித்துப் பார்த்த போது ஜம்மென்று இருந்தது ! “சரி, இதெல்லாமே போன வாரத்துக் கதை தானே...! இப்போது எதற்கு?” என்கிறீர்களா? இருக்கே... தொடர்ந்து கதை இன்னுமிருக்கே...!!
எஞ்சியிருந்தது ஜம்போ சீஸன் 2-ன் முதல் இதழான “காலவேட்டையர்” எடிட்டிங் பணிகள் மட்டுமே என்பதை போன வாரம் சொல்லியிருந்தேன் ! And இந்தக் கதை ஒரு one-shot ஆக்ஷன் மேளா என்பது பற்றியும் ஏற்கனவே பகிர்ந்திருந்தேன் ! போன ஞாயிறு இதன் பணிகளுக்குள் புகுந்தேன் – ‘மள மள‘வென்று போட்டுத் தாக்கிய கையோடு மே மாத பராகுடா மீது ரேடாரைத் திருப்பலாமென்ற எண்ணத்தில் ! Black & White இதழே & இது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே மொழிபெயர்க்கப்பட்டுத் தயாராகிக் கிடந்த script என்பதால் எவ்விதச் சிக்கல்களும் எழ வாய்ப்பில்லை என்று தைரியமாகயிருந்தேன் ! ஆனால்... ஆனால்... பக்கங்களைப் புரட்டப் புரட்ட லேசாயொரு நெருடலும் தொற்றிக் கொண்டது ! மர்ம மனிதன் மார்ட்டின் & மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் கதைகளின் ஜாடையில் கதை தடதடக்க, எனக்கோ லேசாயொரு குழப்பம் ! 15 வருடங்களுக்கு முன்பு இதன் ஆங்கில இதழைப் படித்தே கதையைத் தேர்வு செய்திருந்தது நினைவிருந்தது – ஆனால் கதையின் அவுட்லைனைத் தாண்டி வேறு பெருசாய் எதுவும் தற்சமயம் ஞாபகத்தில் இல்லை என்பதால், கதையின் ஓட்டம் புதுசாகவே தோன்றியது. இரு அத்தியாயங்கள் கொண்ட ஆல்பத்தின் பாதியைத் தொட்டிருந்த போதே லேசாயொரு குழப்பம் என்னுள் ! பரபரப்பான ஆக்ஷன் கதை தான்; சித்தே காதுல பூ ரகம் தான் ; ஆனால் ஜம்போவின் சீஸன் 2-ஐத் துவக்கித் தர இது சரியான புள்ளி தானா ? என்ற கேள்வி எழத் துவங்கியது !! பக்கங்களைப் புரட்டிக் கொண்டே 100-ம் பக்கத்தை எட்டிப் பிடித்திருந்த போது என்னுள் ஒரு தீர்மானம் தோன்றியிருந்தது – ‘Nopes... ஜம்போ காமிக்ஸில் நாம் சித்தரிக்க முனையும் “நூற்றுக்கு நூறு ஏற்புடைய காமிக்ஸ்” நிச்சயமாய் இதுவல்லவென்று !“ 15 ஆண்டுகளுக்கு முன்பாய் மெர்சலூட்டிய கதையானது இன்றைக்கு ஓ.கே.வாக மட்டுமே தென்பட்டது ; தெறிக்கும் ஒரு துவக்கத்துக்கான களமாய்த் தட்டுப்படவில்லை ! கதைகள் என்னவென்று அறிவிக்கா நிலையிலேயே நம்மை நம்பி சந்தா செலுத்திய நண்பர்களுக்கு இப்படியொரு Season opener-ஐ அறிமுகம் செய்வது நிச்சயமாய் சுகப்படாது என்று திட்டவட்டமாய் முடிவெடுத்தேன் ! ராப்பர் அச்சாகி ரெடியாக உள்ளது; கதையும் வாங்கியாச்சு; DTP செய்து அச்சுக்கும் தயாராக உள்ளது ; ஆனால் பச்சைக்கொடி காட்ட மனசு வரவில்லை - at least - ஜம்போவின் முதல் இதழென்ற ஸ்லாட்டினுக்கு ! !!
⧭ A job well begun is half done....!
சரியாய்த் துவக்கம் காணுமொரு பணியானது – அப்போதே பாதி நிறைவானது மாதிரித் தான் என்பதை ஜம்போவின் முதல் சீஸன் உணர்த்தியிருந்தது ! இளம் TEX “காற்றுக்கென்ன வேலி” என ரகளையாய் பிள்ளையார்சுழி போட்டுத் தந்திருக்க – அழகான அட்டைப்படம்; தெளிவான கதையோட்டம்; தரமான தயாரிப்பு என்ற முத்திரைகளை ஜம்போவின் முதல் சீஸனின் முழுமைக்கும் தொடர்வது சாத்தியப்பட்டிருந்தது ! So அந்த மாதிரியானதொரு அதிரடித் துவக்கமே சீஸன் 2-க்கும் அவசியமென்று மனசு துடித்ததால் – வேறு யோசனைகளுக்கே இடம் தராது – ‘The Lone Ranger’-ஐ fast track செய்திடத் தீர்மானித்தேன் ! 6 பாகங்கள் – 138 பக்கங்கள் and பிரித்து மேயும் ஆக்ஷனுடனான அதிரடி சாகசம் என்பது தெரியுமாதலால், ஜம்போவின் launching pad-க்கு perfect என்று நினைத்தேன் ! So மே மாதம் அதனைக் களமிறக்கத் தயாராகிக் கொண்டு, ஜம்போவின் 2nd சீஸனையும் மே முதலாயென்று அமைத்துக் கொள்ளத் தீர்மானித்தேன் ! மே மாதம் ஏற்கனவே சில பல heavyweights காத்துள்ளனர் என்பது தெரியும் தான் ; ஆனால் கொஞ்சம் எக்ஸ்டராவாய் உருண்டு, புரண்டு சிரமப்பட்டுவிட்டாலும் தப்பில்லை – இயன்றதில் best-ஐ முன்வைப்பது தான் சாலச் சிறந்தது என்றுபட்டது ! So ஜம்போ சீஸன் 2 மே முதலாய் folks ! And முதல் இதழே “தனியொருவன்“!!
⧭ஆட்றா ராமா... தாண்ட்றா ராமா...!
ஆக ஏப்ரலின் திட்டமிடலில் 3 வண்ண இதழ்கள் ரெடியாகியிருந்தன :
- - ஜானதன் கார்ட்லேண்ட் : குளிர்காலக் குற்றங்கள்
- - லக்கி லூக் : பரலோகத்திற்கொரு படகு
- - கேப்டன் ப்ரின்ஸ் : மரண வைரங்கள்
And ஒரே b&w இதழாய்த் திட்மிட்டிருந்த “கால வேட்டையர்”-ஐப் பின்தள்ளத் தீர்மானித்ததால் மொத்தம் மூன்றே புக்குகளோடு ஏப்ரலின் கூரியரை நிறைவு செய்திடலாமென்ற ரோசனை ஓடத் தொடங்கியது தலைக்குள் ! “ஊஹும்... ஒரு 128 பக்க முழுநீள ஆக்ஷன் கதையும் சேர்த்தி என்றிருந்த planning-ல், அதனை கழற்றிய கையோடு, வேறு எதையேனும் இணைக்காவிட்டால் லயிக்காதே !” என்று குரல் கேட்டது உள்ளுக்குள் ! 'சரி.... ‘தல‘ இல்லாத கூரியர் சுவைக்காது !' என்றபடிக்கு சுற்றுமுற்றும் பார்த்தால் Color Tex 32 பக்க சாகஸம் நினைவுக்கு வந்தது ! ரைட்டு... இந்த வருஷம் இதுவரையிலும் அதனைக் கண்ணில் காட்டவில்லையே ; இந்த மாத ரயிலில் இணைத்துக் கொள்ளலாமென்று வேக வேகமாய் அதனைத் தயாரித்தோம் ! ஒரே நாளில் எழுதி, DTP செய்து அச்சுக்கும் தயார் செய்து, செவ்வாயன்றே முடித்தும் விட்டோம் ! ‘சூப்பரப்பு...‘ என்று என்னையே மெச்சிக் கொண்டே ஏப்ரலின் 4 all-color இதழ்களையும் கையிலெடுத்து ஜாலியாய்ப் புரட்டினேன் ! அப்போது தான் ஒரு விஷயம் லேஸ் லேசாய் உறைத்தது...! தடதடவென எழுதி, படபடவென முடிக்க சாத்தியப்பட்ட 32 பக்க இதழைப் படித்து முடிப்பதுமே சடுதியான சமாச்சாரமாகத் தானே .இருந்திட முடியும் ?! அதிலும் இந்த முறை நாம் கையிலெடுத்த கலர் Tex சிறுகதை செம வேகத்திலான நேர்கோட்டுக் கதையெனும் போது – படபடக்கும் பட்டாசாய்ப் பக்கங்கள் ஓட்டம் எடுத்து விடுகின்றன! 'ஆஹா... இதை பத்தே நிமிடங்களில் படித்து முடித்த கையோடு கொட்டாவி விடத் தோன்றுமே!!' என்ற கவலை குடிகொள்ளத் துவங்கியது மறுக்கா!!
⧭லெப்டிலே இண்டிகேட்டரைப் போட்டு... ரைட்டிலே கையைக் காட்டி, நேரா போ!!!
‘பளிச்‘ சென்று அந்த நொடியிலேயே மே மாதத்துக்கான Tex-ன் “பச்சோந்திப் பகைவன்” தயாராகிக் கிடப்பது மின்னலடித்தது மண்டைக்குள் ! ராப்பரும் ரெடி... கதையும் ரெடி என்ற மறுநொடியே லியனார்டோ தாத்தாவுக்குப் போல பல்பு எரிந்தது பிரகாசமாய் ! வியாழன் காலையில் அதனைக் கையில் எடுத்து; அன்றைக்கே எடிட்டிங் முடித்து, வெள்ளி காலை அச்சுக்கு கொண்டு சென்று, சனி காலையில் புக்காகவும் ஆக்கி விட்டோம் !! So ஏப்ரலின் பட்டியல் ஒருமாதிரியாய் எனக்கு திருப்தி தரத் தொடங்கிய நொடியே டெஸ்பாட்சுக்கு ஏற்பாடு செய்திடச் சொல்லி ஆபீஸையே ரணகளமாக்கிட, உங்களது கூரியர்கள் சகலமும் புறப்பட்டு விட்டன – ஏப்ரலின் முதல் தேதியை உங்கள் கைகளில் செலவிடும் பொருட்டு ! கூத்தடிப்பது நமக்குப் புதிதல்ல தான்; குட்டிக்கரணங்கள் அன்றாடமே ; ஆனால் இம்மாதம் taking it to a different level என்பேன் ! எது எப்படியோ – all’s well that ends well !
ஆக எங்கோ துவங்கி, எப்படியோ பயணித்து, எவ்விதமோ நிறைவு கண்டுள்ள ஏப்ரலின் பாக்கி 2 இதழ்களின் preview இதோ !
ஒரிஜினல் அட்டைப்படம் ; கதாசிரியர் மோரிஸின் உச்சநாட்களில் உருவான vintage லக்கி சாகசம் & இம்முறையோ பாழும் பாலைவனமாயன்றி, மிஸிஸிப்பி நதியே நமது ஒல்லியாரின் கதைக்களம் !! நாம் ஏற்கனவே ரசித்த template கதை தான் ; ஆனால் வழக்கம் போல ஜாலியாய்க் கதாசிரியர் நகற்றிச் சென்றிருக்க, a pretty breezy read in the offing !!
And இதோ - இம்மாத மறுபதிப்பின் preview !! (நானிருக்கும் கிர்ரில் இந்த ராப்பரை ஏற்கனவே கண்ணில்காட்டி விட்டேனா - இல்லை இப்போது தானா ? என்பது கூட தெரியவில்லை !!) மறு ஒளிபரப்பாய் இருப்பின் sorry folks !! எப்போதோ ஒரு யுகத்தின் black & white கோடைமலரில் இடம்பிடித்த இந்த சாகசமானது இப்போது ஹை-டெக் வண்ணத்தில் வளம் வரக்காத்துள்ளது ! இதுவும் ஒரிஜினல் ராப்பர் - நமது DTP டீமின் கோகிலாவின் கைவண்ணத்தில் !
So மொட்டையும் போட்டாச்சு ; ஆனையிடம் ஆசீர்வாதமும் வாங்கியாச்சு ; இனி திங்கள் முதல் கிடா வெட்ட வேண்டியது தான் !! Monday வித் கூரியர் ; மாதப்பிறப்பு வித் காமிக்ஸ் - என்று ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா ?
மே மாதம் காத்திருக்கும் இதழ்களின் பட்டியல் இப்போதே மிரளச் செய்கிறது :
பராகுடாவின் இரண்டாம் பாகத்தினுள் நுழைந்துள்ளேன் ; இன்னொரு பக்கம் தனியொருவனை கவனிக்கத் துவங்கவும் வேண்டும் !! எண்ட அம்மே !! ஞான் இப்போ விடைபெறும் !! Bye all ! See you around ! Have a cool Sunday !!
- ட்யுராங்கோ
- பராகுடா - The climax !!
- தி Lone ரேஞ்சர்
பராகுடாவின் இரண்டாம் பாகத்தினுள் நுழைந்துள்ளேன் ; இன்னொரு பக்கம் தனியொருவனை கவனிக்கத் துவங்கவும் வேண்டும் !! எண்ட அம்மே !! ஞான் இப்போ விடைபெறும் !! Bye all ! See you around ! Have a cool Sunday !!
P.S : Almost ரெடி என்ற நிலையிலான "காலவேட்டையர்" நிச்சயம் வெளியாகிடும் ; ஆனால் ஜம்போவின் சந்தாவின் அங்கமாகயிராது ! ஏதேனுமொரு புத்தக விழாவின் போது just like that வெளியாகிடும் ; and ஆன்லைனில் லிஸ்டிங் செய்யப்படும் & முகவர்களுக்குமே அனுப்பப்படும் ! So இஷ்டப்படும் நண்பர்கள் அந்நேரம் வாங்கிக்கொள்ளலாம் ! And சந்தாவினில் இந்த இதழுக்குப் பதிலாய் வேறொரு apt replacement சீக்கிரமே அறிவிப்பேன் !!