நண்பர்களே,
வணக்கம். தீபாவளியின் உற்சாகம் உச்சத்தில் இருக்கும் இந்த வேளையினில் நானிங்கு சின்னதாகவொரு லீவு விண்ணப்பம் போட வேண்டியதொரு நெருக்கடியினை M/s .ஜலதோஷத்தாரும் ; ஜூரத்தாரும் ஏற்படுத்தியுள்ளனர் ! சும்மா எழுத ஆரம்பித்தாலே மூக்கை முன்னூறு தடவை சுற்றும் பழக்கம் கொண்டவன் நான் ; இந்த அழகில் ஜலதோஷ மாத்திரைகள் தரும் அந்த மிதப்பு சகிதம் எதையாச்சும் எழுத ஆரம்பித்தால் கதை கந்தலாகிப் போய் விடும் என்பதால் மரியாதையாக ஜகா வாங்கிக் கொள்கிறேன் இந்த ஞாயிறுக்கு ! So நவம்பர் இதழ்களின் review-ன் தொடர்ச்சியாகவே இதனையும் பார்த்திடுவோமே ?
அப்புறம் - இந்தப் பண்டிகை நாளை உங்களுக்கும், உங்கள் வாட்சப் குழுக்களும் ; ஜாலியானதாக ஆக்கிட ஏதோ எங்களுக்குத் தோன்றிய சிறு உபாயம் இங்குள்ளது ! இவற்றை download செய்து உங்கள் வட்டங்களுக்குள் அனுப்ப முயற்சித்துப் பாருங்களேன்..? இவை சுற்றி வரும் வேளைகளில் - நமது இதழ்கள் இப்போது தொடர்ச்சியாய் வந்து கொண்டிருப்பதை அறிந்திரா நண்பர்கள் யாரேனையும் அவை எட்டிப் பிடித்தாலும் நமக்கு சந்தோஷம் தானே ? (கொஞ்சம் சுமாரான சித்திரத் தரத்துக்கு apologies ; அடைத்த டூக்கோடு, தேட முடிந்தது இவ்வளவே !! ஜூ.எ. இன்னொரு பக்கம் ஜல்ப்போடு மல்லுக் கட்டிக் கொண்டிருப்பதால் அந்தப் பக்கமாயும் சகாயம் சாத்தியமாகவில்லை !) And - இது போல் நண்பர்கள் அழகாய்த் தயாரித்து அனுப்பிடும் பட்சத்தில் most welcome !! அவற்றையும் இது போல் இங்கே வலையேற்றம் செய்து விடுவோம் !!
மீண்டும் சந்திப்போம் நண்பர்களே ! ஷெல்டன் பற்றிய reviews ஏதேனும் பார்த்தது போலத் தெரியவே இல்லையே..? Was it ok ?
P.S : இந்த "ஞாயிறு அல்வாவை" ஈடு செய்யும் விதமாய் தீபாவளி தினத்தன்று புதிய பதிவோடு எப்படியும் ஆஜராகி விடுவேன் - ஜல்ப்போ ஜூரமோ - நிச்சயம் தடை போடாது ! ((என் பேனா இட்டுச் செல்லும் திசை எதுவென எனக்கே தெரியாதென்பதால் ஏதேனும் அதிரடி அறிவிப்போ ? என்ற யூகங்கள் வேண்டாமே ப்ளீஸ் ! ) So catch you soon ! Bye till then !
Super sir
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் சார்....
ReplyDeleteDiwali wishes to all
ReplyDeleteஆகா நான் மூன்றாவது.!
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைவருக்கும் திபாவளி திரு நாள் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteதீபாவளி நல் வாழத்துக்கள் .take care sir
ReplyDeleteஅனைவருக்கும் தீபதிருநாள் நல்வாழ்த்துக்கள்! ��
ReplyDeleteநன்றாக ஓய்வு எடுங்கள் சார்.!
ReplyDeleteதீபாவளி இதழை வாங்கி நிம்மதியாக புரட்டி கூட பார்க்க முடியவில்லை. மஞ்சள் நிழல் குட்டி புத்தகம் என்பதால் முதலில் படித்து விட்டேன்.! தொடர் விடுமுறை ,பிள்ளைகள் மற்றும் எல்லோருடைய பண்டிகை அவசரம் புத்தகங்களை நெருங்க விடாமல் செய்து விட்டது.டெக்ஸ் கதைகளை தீபாவளி அன்றுதான் படிப்பேன்.!
ஷெல்டன் கதை வரலாறு மற்றும் சமயம் சார்ந்தே சென்றாலும் ,கதை தொய்வில்லாமல் பரபரப்பாய் சென்றது. ஷெல்டன் டாடி ரேஞ்சுக்கு சென்றுவிட்டார்.!கடைசியில் ஜெயிப்பது நாத்திகமா? ஆத்திகமா ?என்று பரபரப்பாய் படித்தால்..........?
நண்பர்கள் அனைவருக்கும்...வழக்கம்போலவே 'கிளிக்' மூலமா வாழ்த்துக்கள் சொன்னாதானே ஒத்துகுவிங்ககிறதால...ஹீ..ஹீ...
ReplyDeleteஇங்கே'கிளிக்'-1
இங்கே'கிளிக்'-2
நன்றாக உள்ளது.
DeleteSuper
Deleteஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். . .
ReplyDeleteHi
ReplyDeleteஇது வரை வந்த வேய்ன் கதைகளில், இதுவே சிறந்ததாக எனக்கு படுகிறது.
ReplyDeleteஎடிட்டர் அவர்களுக்கும் , அவருடைய குடும்பத்தினருக்கும், அலுவக ஊழியர்களுக்கும் மற்றும் காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.....
ReplyDeleteநண்பர்கள் மற்றும் ஆசிரியர் அவர் தம் குழுவினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
ReplyDelete20வது
ReplyDeleteஅனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள். Take rest Sir please.!
ReplyDelete22nd
ReplyDeleteAdvanced happy diwali for all comics lovers and our editor sir.
ReplyDeleteகார்ஷன்:-என்ன டெக்ஸ், மூஞ்சு இஞ்சு தின்ன குரங்கு மாதிரி இருக்கு. முதலையை நினைச்சு பயமா.
ReplyDeleteடெக்ஸ்:-ஹச்சு, ஹச்சு, தும்மியபடி, பயமா, எனக்கா, இந்த லயன் காமிக்ஸ் விஜயன் இருக்காரே, அவரு ஜல்ப் புடிச்ச கையோடு, என்னை தொட்டு, வசனம் எழுதினாரா, எனக்கும் ஜல்ப்பு புடிச்சுகிச்சு. மூக்கு அரிக்குது. சொரியகூட முடியல. இங்க தப்பிச்ச கையோட, முத வேளையா,சிவகாசிக்கு குதிரையில போயி, அவர் தொப்பியில துப்பாக்கியால, ஓட்டை போட்டாதான், ஜல்ப்போட. மறுபடியும் என்னை தொட மாட்டரு, ஹச்சு.
காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் ஆசிரியர் அவர் தம் குழுவினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்... தீபாவளிக்கு வெளிவந்த டெக்ஸ் மற்றும் ஷெல்டன் கதைகள் அனைத்தும் மிக அருமை... அதுவும் ஷெல்டன் கதையை படிக்க ஆரம்பித்து முடிக்கும் வரை நானும் கூடவே சென்றது போன்ற பிரமிப்பு... வழக்கம் போல டெக்ஸ் கதைகள் வான வேடிக்கைதான்... ஒரே குறை.. டெக்ஸ் புத்தகம் hard core coverல் வந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்... மீண்டும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்...
ReplyDeleteமஞ்சள் நிழல்: பொம்மைகளுக்கு உயிர் வந்து நகரத்தை ஆட்டிவைப்பது தான் கதை, அதன் பின்னால் ஒரு டம்மி பீஸ் வில்லன். அந்த பொம்மைகளை அழிக்க கதாநாயகன் ஒரு குழுவோடு போராடுகிறான். அவன் பெரிதாக ஒன்றும் துப்பறியவில்லை, ஒரு பெண் வந்து இந்த சிகப்பு கலர் பட்டனை அழுத்தினால் பொம்மைகளை அழிந்து விடும் என்கிறார், இதுபோக அந்த பட்டன் எங்கு இருக்கிறது என்று என்ற "ரசசியத்தையும்" சொல்லி விடுகிறார்.
ReplyDeleteஒன்றும் இந்த கதையில் விசேஷம் இல்லை, போதாத குறைக்கு கதையின் நாயகன் மற்றும் அவர்களின் தோழன் கதை நெடுக காமெடியாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் இது காமெடி திர்ல்லர் என நினைக்க தோன்றுகிறது. இந்த கதை வண்ணத்தில் ரசிக்க ஒன்றும் இல்லை, கருப்பு வெள்ளையில் வெளி இட்டு இருந்திருக்கலாம். கதை முழுக்க ஓடிக்கொண்டே இருக்கும் கதாநாயகன் .... சப்பென்ற ஒரு முடிவு; இதே போன்று பல வருடம்களுக்கு முன் "சாவதற்கு நேரம் இல்லை" என்று ஒரு கதை.
ஒரு உப்பு சப்புல்லாத கதை. இது போன்ற கதைகளை தவிர்ப்பது நலம்.இந்த வருடத்தில் வந்த கதைகளில் எனக்கு பிடிக்காத கதை இதுதான். இது போன்ற கதைகள் விற்பனையில் சாதிக்கவில்லை என்றால் வரும் காலம்களில் விற்பனையில் சாதிக்கும் நாயகி/நாயகர்கள் கதைகளை வெளி இடலாம்.
இந்தக்கதையை வண்ணத்தில் வெளி இட்டு இருப்தற்கு பதில் எங்கள் மாடஸ்டி கதையை வண்ணத்தில் வெளி இட்டு இருந்தால் ஒரு கோடி புண்ணியம் உங்களுக்கு கிடைத்து இருக்கும் - என்ன சொல்லுரிங்க மடிப்பாக்கம் வெங்கடேசன்?
Deleteபரணி.!@ 100% உங்கள் கூற்று உண்மை.!
Deleteமாடஸ்டி கதைகள் ஒருசில கதைகள்தான் கலரில் உள்ளது என்று எடிட்டர் கூறியதாக ஞாபகம்.ஆனால் இரவணன் சார் தலைகீழக நின்று தண்ணீர் குடித்து பார்த்தார். உஹும்......வேலைக்கு ஆகவில்லை.எடிட்டருக்கு நடைமுறை சிக்கல் ஏதோ இருக்கும் போல் உள்ளது.இல்லாவிட்டால் அவர் மாடஸ்டியை கொண்டு வந்து அசத்திவிடுவார்.எடிட்டர் மாடஸ்டியின் தீவிர ரசிகர் மட்டுமல்லாமல் லயனின் முதல் புத்தகத்தின் நாயகி என்ற பெருமை +சென்டிமெண்ட் நிறையவே உள்ளது.!(நியூஸ் உபயம் சி.சி.வ. )
அன்பு ஆசிரியரும்,ஜூ.எடியும்,
ReplyDeleteசீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
ஆசிரியரே....
தீபாவளி மலர்களில் இம்மாதம் சூப்பர் ஹிட் என்றால் வெய்ன் ஷெல்டன் தான்.
கதையும், சித்திரத்தரமும்,வண்ணங்களும், படு ஷார்ப்பான ப்ரின்டிங்கும் என...ஆஹா..!
சமீபத்தில் இவ்வளவு திருப்தியை வேறு இதழ்கள் அளிக்கவில்லை...
அட்டகாசம்...!
டெக்ஸ் முதல் முறையாக இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.....!!!!!!!
டைனோசரின் பாதையில் இரண்டாம் முறை படிக்கும் ரகம் இல்லை.....!
ஷெல்டன்: இதுவரை படித்த ஷெல்டன் கதைகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசமான கதை. வரலாற்று சம்பவத்துடன் இணைத்து வந்து சிறப்பு அம்சம். வழக்கமான ஷெல்டன் பார்முலா, இந்த முறை புனித ஈட்டியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொண்டுபோய் சேர்க்கவேண்டும். புனித ஈட்டியை கொண்டுபோய் சேர்பதற்கும் தனது ரேட்டை பேசிகொள்கிறார். மனுஷன் பிசினஸ்சில் செமகறார் :-)
ReplyDeleteவரலாற்று சம்பவத்துடன் இருந்ததால் எங்கே இதுவும் ஒரு "விடுதலையே உன் விலையென்ன" போல் ஆகிவிடுமோ என்ற பயத்துடன் முதல் பாகத்தை படித்துவிட்டேன். ஷெல்டன் கதையென்பதால் ஆங்காங்கே அதிரடி action புகுத்தி ரசிக்க செய்துஉள்ளார்கள். வழக்கம் போல் ஓவியம்கள் டாப்.
வரலாற்று சம்பவத்துடன் இருப்பதால் ஷெல்டன் கதையில் வழக்கமாக இருக்கும் வேகம் கொஞ்சம் குறைவு.
ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, யுத்தத்தின் போது தனது மனைவி கர்பமாக இருந்தவருடன் அர்ஜென்டினாவில் போய் குடியேறி; குடும்பம் நடத்தி, தனது குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து, வயோதிகம் காரணமாக இறந்ததாக கூறுவது உண்டு. அதன் அடிப்படையில் அமைக்கபட்ட ஒரு கதை என்பது இதன் சிறப்பு.
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் இரசிகப் படையினருக்கும்!
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
ReplyDeleteGood morning friends........ advance happy diwali...
ReplyDeleteஎடிட்டர் & நண்பர்கள் அவர்தம் குடும்பத்தார் க்கும்
ReplyDeleteஇனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
காலை வணக்கம் நண்பர்களே! ஆசிரியரும் ஜூ.எ.வும் விரைவில் குணமடைந்து 'ஜம்'மென்று வரட்டும்!
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கும் ...அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் ....பிரகாஷ் பப்ளிஷர் பணியாளர் அனைவர்களுக்கும் ...காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் ....
மர்மக்கத்தி காலத்தில் இருந்தே இந்த ரோஜர் கதைகள் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்..புஸ் என்று போய்விடும் ..மஞ்சள் நிழல் வில்லனின் பெயராம் ..ஏன் கருப்புகத்தரிக்காய் ,வெள்ளை வெண்டைக்காய் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கலாம்..அட..வெட்டுக்கிளி என்று வைத்திருந்தால் கூட சந்தோ சப் பட்டிருப்பேன் ..அப்புறம் வரலாறும் வல்லூரும் ..பெயர் ராசியோ என்னவோ ஏகப்பட்ட வரலாற்று தகவல்கள்...ஜீரணம் ஆவதற்கு தீபாவளி லேகியம்தான் வேணும் ..வெல்டன் செல்டன் எப்போதுமே.. இந்தமுறை
ReplyDeleteகொஞ்சம் கம்மிதான்...இதில் வல்லூரு யார்..ஹீரோவா வில்லனா ...
மர்ம கத்தி என்னிடம் சிறுவயதில் இருந்தது!. பின் 20 வருடங்களுக்கு முன் காணாமல் போனாலும் ஓவியங்கள் மற்றும் கதை என் கண் முன்னே நிற்கிறது..
Deleteமறுபதிப்பு போட ஏற்ற கதை.!
திகில் காமிக்ஸில் எடிட்டர் "கறுப்பு ஞாயிறு "என்று ஒரு கட்டுரை எழதினார் அதுவும் பசுமையாக நினைவில் உள்ளது.! அதன் பின் சில மாதங்களில் இந்த விஷயம் இலண்டன் பிபிசி தமிழ் ஒளிபரப்பில் ஒளிபரப்பியபோது மிகவும் சந்தோசம் அடைந்தேன்.!
@ MV
Deleteகறுப்பு சூரியன் என்ற சொல் XIII தொடரில் வரும் பிரபல சொல்..! விசித்திர உலகம் என்ற தொடர் ஆரம்ப திகில் காமிக்ஸில் வந்தன. கறுப்பு ஞாயிறு என்பது சரிதானா மடிபாக்கம் வெங்கடேஸ்வரன் ..?
மாயாவி சிவா.!@
Deleteமாயாவி ! நீங்கள் சொன்னால் அதுக்கு அப்பீல் ஏது.?
@ MV
Deleteஉங்க நியாபக சக்தி அபாரமானது..கொஞ்சம் யோசிச்சிபாருங்கன்னு கேட்ட..கேட்டை போடுறீங்களே...:P
மர்மக்கத்தி: இது ஒரு கிளாஸ்ஸிக்கான கதை. நாம் இதுவரை பார்த்திடாத கதையில் காலயந்திரமும், சரித்திரமும் அழகாகப் பின்னப்பட்டியிருக்கும். எத்துனை முறை படித்தாலும் சலிக்காது. இதுப் போன்ற கதைகள் எல்லாம் எப்போதாவதுதான் அமையும். இனி மேல் இதுப்போல் ஒரு கதை வருமா என்பதெல்லாம் சந்தேகமே..? வண்ணத்தில் மறுபதிப்பிற்கு என்னுடைய முதல் சாய்ஸ்-ம் இதுவே. எப்படியோ இன்னும் இரண்டு வருடங்களுக்கு வண்ண மறுபதிப்பு எட்டாக் கனிதான்! ஆனா, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கொடியைக் தூக்க வேன்டியதுதான்.
Delete@ மொய்தீன் MH
Deleteஉங்கள் மனசுல தங்கிப்போன பத்து கதைகள் சொல்லுங்க பாப்போம்..என பட்டியல் கேட்ட அதுல மர்மகத்தி நிச்சயம்..! வந்த புக்ஸ் படிக்கவிடாம மறுபடியும் பழைய புக்ஸை கையில எடுக்கவெச்சிடிங்களே..ம்..ம்..! இன்னும் ரெண்டு வரி எழுதினிங்கன்னா...நான்..நான்..அப்புறம்...ஆங்...போராட்டம்..போராட்டம்...மர்மகத்தி வண்ணத்தில் மறுபதிப்பு வேண்டும்..போராட்டம்..ன்னு கத்த ஆரம்பிச்சுடுவேன்..!
This comment has been removed by the author.
Delete@maayaavi
Deleteஎன்ன அப்படி கேட்டுடீங்க..!
மர்மக்கத்தி, தவளை மனிதனின் முத்திரை, மரணத்தின் பலமுகங்கள்,,,, காசில்லா கோடீஸ்வரன், பழிக்குப் பழி (டெக்ஸ்), பனி மண்டலக் கோட்டை, பழி வாங்கும் பொம்மை (ஸ்பைடர்), மந்திர ராணி, தலைமுறை எதிரி என இப்படி பல கதைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன என்னுடைய நெஞ்சில் மறுபதிப்பு பட்டியலில். இவையாவும் ஒன்று கதைக்காக அல்லது சித்திரத்திற்காக மறுவருகை அவசியம்.!
மொய்தீன் சார்.!@
Deleteவாவ் அற்புதமான தேர்வு.!இவையெல்லாம் சத்தம் இல்லாமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நெஞ்சில் நிறைந்து இருக்கும் கதைகள்.!
@ MH மொய்தீன்
Delete"என்னங்க பண்றிங்க...? தீபாவளி அதுவுமா எவ்வளவு புக்ஸ் வந்திருக்கு...நீங்க எவ்வளவு புக்ஸ் வாங்கியிருக்கிங்க...அதெல்லாம் புரட்டாம...திரும்ப பரண்ல போடவேண்டியதை எடுத்துவெச்சி... குப்பையைதட்டி என்னத்த தேடுரீங்களோ..நல்ல வருது...ஒருநாள் இல்லாம ஒருநாள் உங்க எடிட்டரும்,ப்ரண்ட்சும் வசம்மா சிக்குவாங்க..அன்னிக்கு..அன்னிக்கு இருக்கு.."
இப்படி மிரட்டல் வர்றாப்பல சிக்கவெச்சிட்டிஈங்களே...மொய்தீன் & MV..!
@ கடவுள்
"பகவானே..இந்த பழசை கிளறிவிடற...அந்த வகுப்பு தோழர்கள் கிட்ட இருந்து என்னைய காப்பாத்துங்கோ..!"
அப்படி பழசு இல்லை...
Deleteபயமும் தேவை இல்லை...
ஆசிரியர் சார் ....
ReplyDeleteதல டெக்ஸ் இதழை தவிர மற்ற மூன்று இதழ்களையும் படித்து முடித்தாயிற்று ..மறுபதிப்பில் வந்த மூளை திருடர்கள் முதலில் ..படித்து நாளாகி விட்டதால் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு பேருந்தில் செல்லும் பயண நேரத்திலியே படித்து விட்டேன் ..எப்பொழுதும் ஒரு மணி நேர களைப்பான பயணம் அன்று சுறுசுறுப்பாக சென்று விட்டது ....புதிய புத்தகத்தில் புதிதாக படிப்பது போலவே சுவையான அனுபவம் தான் ...முன் அட்டைப்படம் நல்ல கலக்கலாக அமைந்து இருந்தது ...பாராட்டுகள் ...
அடுத்து ரோஜரின் மஞ்சள் நிழலில் ....ரோஜர் எனக்கு பிடித்தமான ஹீரோவே ...ஆனால் போன முறை மறுபிறப்பில் சுமாராக தோன்றியவர் இந்த முறை ஏமாற்ற வில்லை ..ஒரு மணிநேரம் நாமும் பொம்மையின் அருகில் இருப்பது போல பிரமை ....நம்ப முடியாத கதையா என நினைக்கும் பொழுது பொம்மைகள் அனைத்தும் ரோபா என மஞ்சள் நிழலின் மூலம் அறியும் பொழுது லாஜிக் கும் ஓகே ஆகி விட்டது ....சித்திரங்களும் அருமை ....
நேற்று இரவு ஷெல்டன் ....கொஞ்சம் அசதியாக இருந்ததாலும் ஷெல்டனை படித்து நாளாயிற்றே ...ஒரு பாகம் மட்டும் படித்து பார்க்கலாம் என ஆரம்பித்தால் பரபர.....விறுவிறு என சென்று ஒரே மூச்சில் புத்தகத்தை படித்து விட்டு தான் வைக்க கீழே வைக்க முடிந்தது ....சித்திரங்கள் ஒவ்வொரு பிரேமும் புகைப்படமோ என ஐயப்படும் அளவிற்கு சிறப்பாக அமைந்து இருந்தது ..ஷெல்டனுக்கு டாடி வயது என்றவுடன் அவரை போலவே எனக்கும் கோபம் வந்ததும் ..மன ஆறுதலுக்கு மற்ற தோழியிடம் ஆறுதலுக்கு போன் பேச அந்த தோழியின் பதில் வாய்விட்டு சிரிக்கவும் வைத்ததும் .உண்மை ....அந்த ஈட்டியின் மகிமை ஷெல்டனை போலவே நமக்குள்ளும் கடைசியில் உண்மையா ...பொய்யா என பட்டிமன்றம் போல குழப்பம் வர வைத்தது கதையின் வெற்றி ....முடிவில் இறந்து விட்டதாக நினைத்த தோழி உயிருடன் எழுப்பியது மனதில் மகிழ்ச்சி ...மொத்ததில் ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை பார்த்த திருப்தி ....ஷெல்டன் எப்பொழுதும் போலவே இம்முறையும் ஏமாற்ற வில்லை ...இந்த நூற்றாண்டின் டெக்ஸ் வில்லர் தான் ஷெல்டன் ....))
இனி காத்திருப்பது எங்கள் தலயின் அதிரடி மட்டுமே ....காத்திருக்கிறேன் ....
நான் டெக்ஸ் வில்லர் கதையை இன்னும் படிக்கவில்லை.!காரணம் ஒரு நீண்ண்ண்டடடடட சுவராசியமான கதையை படிக்கும்போது இடையூறு ஏதுவுமே இருக்கலாகாது ,ஏக் தம்மில் முடித்துவிட வேண்டும் என்ற ஒரே காரணம்தான்.!
Deleteஆனால் இன்னும் (இருவரை தவிர ) யாருமே விமர்சனமே செய்யவில்லையே.? ஏன் டெக்ஸ் விஐயராகவன் கூட ஆளையே காணோமே.?
தீபாவளின்னா பல வித ஸ்வீட் இருக்கும் MV சார்....ஆனால் டாப் முந்திரி கேக் தானே....அதை தீபாவளி அன்று ருசி தானே அழகு.... கதைகளின் முந்திரி கேக்கையும் தீபாவளி அன்று தானே ரசிக்கனும்.....அசுக்கு புசுக்கு, நான் மட்டும் இப்பவே படித்து விட்டி ....தீபாவளி அன்று என்ன செய்ய????
Deleteசரி உங்க மாடஸ்தி கதை அல்லாத்தையும் அனுப்பி வைங்க, தீபாவளி வரை படித்து, படித்து விமர்சனம் போடுகிறேன் ....
//மாடஸ்டி கதை அல்லாத்தையும் அனுப்பி வைங்க,//
Deleteடெக்ஸ் விஜயராகவன்.!
சிபி சக்கரவர்த்தி ஒரு புறாவுக்காக தன்னையே கொடுக்க வந்த சிபி சக்கரவர்த்தி அல்ல நான்.புத்தகங்கள் விஷயத்தில்.,நான் கஞ்சன் ,சுயநலம் பிடித்தவன்,அல்ப்பம் , இரக்கம் இல்லாதவன, மனசாட்சி இல்லாதவன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.!
அதுவும் மாடஸ்டி கதையா.?
దైఐడోహౌనమఁమఁడచడగగబైఈచజౌజడతజజంజడజజజజణోడంనయడజుఓగ
ঈগগজডটটডজ দদডজগৌএএততননঁজজৈঐএওটটটডডডডডডংগজজজা
কজঁডগৈএঈএজডতডণগৌঈঈঔজতজৈওজডৌওগজগগডডংঞডণণংঔ
જંઔઓઓઐઉઈઇઊઋઐએગગડોએઓગોએઑકજગેએગજગોએઑજઁનરનતટચજગોઐઐએઈઈઓ
கர்ர்................
//அந்த ஈட்டியின் மகிமை ஷெல்டனை போலவே நமக்குள்ளும் கடைசியில் உண்மையா ...பொய்யா என பட்டிமன்றம் போல குழப்பம் வர வைத்தது கதையின் வெற்றி ....//
Delete+1
@ MV
Deleteகாமிக்ஸ் புக்ஸ் விஷயத்துல ..என்னோட நிலைமே..அவுக்..அவுக்...யோசிச்சா...அவுக்...ரொம்பவே கஷ்டம்...அவுக்...உங்க நிலைமை எவ்வளவோ பரவாயில்லை..அவுக்..!
இரண்டாது காப்பி இருந்தால் ...அதையாவது படிக்க தருவீர்களா.....???......
Deleteடெக்ஸ் விஜயராகவன் கிண்டலுக்காக கேட்டு கலாய்த்து இருந்தார்.! அவர் டெக்ஸ் வெறியர் என்பது எல்லோரும் அறிந்த இரகசியம் ஆச்சே.!
Deleteமாயாவி சிவா.! 100 பேரில் ஒரு 2% பேர் பத்திரமாக திருப்பிக் கொடுத்தால் அது பெரிய விஷயம். உங்கள் நண்பர்கள் அக்மார்க் தங்கம் என்பதால் பிரச்சினை இல்லை.
நான் ஆறாம் வகுப்பு படித்தபோது பறக்கும் வீரரும் பயங்கரவாதிகளும் புத்தகத்தை ஒருவன் இரவல் வாங்கி ஏமாற்றினான்.அதில் இருந்து ஆண்களுக்கு இரவல் தருவதே இல்லை.அதன் பின் +1, +2, படிக்கும்போது சக மாணவிகளுக்கு இரவல் கொடுத்து நிறைய தொலைந்து போயிற்று.அதன் பின் எனது பெரிய அண்ணி நான் வெளியூரில் படித்த போது நிறைய ஓ.சி. கொடுத்து என் பொக்கிஷங்களை பெருமளவு காலி செய்து விட்டார். அதன் பின் பெரிய ட்ரங் பெட்டியில் பூட்டுபோட்டு சாவியை கையோடு மதுரை எடுத்து சென்றதால் எஞ்சியவை தற்போது இருப்பவை. ஆரம்ப காலங்களிலே பூட்டு போட்டு பாதுகாத்து வைத்திருந்தால் இன்னேரம்............கலீல் ,ஆர்.டி.முருகன் அவர்களையே போட்டி போட்டு இருந்திருப்பேன்.! ஹும்.......
@ MV
Deleteபுலம்பல்: பழசையெல்லாம் இப்படி..அவுக்..பண்டிகைநாள்ல நியாபகபடுத்தாதிங்க...கைவிட்டு போன சில புக்ஸ் நினைச்சா...அவுக்...அதை திரும்பபிடிச்ச கதை..உஸ்ஸ்...முடியலை...விட்டுருங்க...!
ஒரு தத்துவம்: கையில எவ்வளவு புக்ஸ் வெச்சிருக்கோம்கிறது முக்கியமில்லை.எத்தனை படிச்சி அனுபவிச்சிருக்கோம்கிறது தான் மேட்டர்..! படிச்சதை மறக்காம, எவ்வளவுகெவ்வளவு படிச்ச காலத்தை நியாபகம் வெச்சிருக்கோமோ...அவ்வளவுகொவ்வளவு [மனதளவில்] இளமையா இருக்கலாம்..! இந்த விஷயத்துல நீங்க ரொம்பவே இளமையானவர் MV..!
ஒரு பத்தவெப்பு: சே.இரவுகழுகார்...டெக்ஸ் புக்ஸை ரெட்டைகாபிகள் வெச்சிருக்கார், நீங்க படிக்காத.. ஸாரி.. ஸாரி...நீங்க தவறவிட்ட, நீங்க படிக்கவிரும்புற கதையை வேணும்ன்னா கேட்டுபாருங்களேன்..! [பத்தவெச்சிட்டியே பரட்ட..]
டெக்ஸ் விஜயராகவன்.!
Delete//இரண்டாவது காப்பி இருந்தால் படிக்க தருவீர்களா.?//
ஓ.!அது தருகிறேன்.!அவை.:
1) நிழலோடு நிஜ யுத்தம்.
2)கொலை செய்ய விரும்பு.
3)தேடி வந்த தூக்கு கையிறு.
4) மிதக்கும் மண்டலம்.
5) ஆவியின் பாதையில்.
6)மரணத்தை முறியடிப்போம்.
7) காட்டேறி கானகம்.
இவைகளை படித்துவிட்டு திருப்பிக்கொடுப்பதாக இருந்தால் கூறுங்கள் உடனே அனுப்பிவைக்கின்றேன்.!
நண்பர்களே மதிப்புமிக்க புத்தகங்கள் கையைவிட்டுப் போனால் போனதுதான் என்பதை வருத்தத்தோடு ஒத்துக்கொள்கிறேன் ..சென்ற வருடம் நான் பரிசுபெற்ற இரத்தப்படலம் புத்தகம் சங்கர் R என்பவருக்கு அனுப்பிவைத்து,படிக்காத மற்ற நண்பர்களுக்கும் அனுப்பிவைக்க கேட்டிருந்தேன் ....இன்று அதன் நிலை என்ன என்பதே எனக்குத் தெரியாது..மணியத்தின் சித்திரங்கள் யோக்கியனையும் திருடத் தூண்டும் ..என்று ராஜாஜி
Deleteபொன்னியின் செல்வன் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டு இருப்பார்..நமது காமிக்ஸ் பொன்னியின் செல்வனை விடவும் பலமடங்கு மதிப்பு மிக்கதாகி விட்டது ..ஏனென்றால் பொன்னியின்செல்வன் நாட்டுடமை
ஆக்கப்பட்ட நூல் ..யார் வேண்டுமானாலும் எத்தனை பிரதி வேண்டுமானாலும் அச்சிட்டுக் கொள்ளலாம் ..நமது காமிக்ஸின் பழைய புத்தகங்கள் ஒரு பிரதி கிடைத்தாலும் பொக்கிசமே...படிக்காத மற்ற நண்பர்களுக்கும்
கிடைக்கட்டும் என்கிற எ ன் நோக்கம் வீணாகிவிடக் கூடாது
ஓவ் நன்றிகள் பல MV சார்..... காமிக்ஸ் படிக்கும் குழந்தை பருவத்தில் தவற விட்டிருந்தாலும், 1990 ல் இருந்து காமிக்ஸ் படிக்க வந்த பிறகு ..நாய் அலை, பேய் அலை அலைந்து அனைத்து லயன் காமிக்ஸ் புத்தகங்களையும் படித்து விட்டேன் அடுத்த 10ஆண்டுகளில்.... டெக்ஸ் புக் மட்டுமே சேர்த்து வைக்க தோணியது.....அதில் 2காப்பிகள் உள்ள சிலவற்றை மட்டுமே லோக்கல் நண்பர்கள் யாரேனும் படிக்க கேட்டால் தந்து வருகிறேன் சார்........ஹி..ஹி..நானும் புத்தக விசயத்தில் உங்களை மாதிரியே தான்......
Deleteமாயாவி சிவா.!@
Delete//டெக்ஸ் விஜயராகவன் இரட்டை காப்பிகள் வைத்துள்ளர்.//
நீங்கள் இவ்வாறு கூறியதும் ஒருகணம் இரவல் கேட்போமே என்று தோன்றியது. ஆனால் அவரது டெக்ஸின் மீதான வெறியை பார்த்ததும் , " டூ ஸ்டெப்ஸ் பேக் " என்று கவுண்டமணி சொல்வது போல் ஜகா வாங்கிட்டேன்.!
பாம்பாம் பிகிலோ.!@
Delete// இரத்தப்படலம் தற்போது எங்கு இருக்கின்றது என்றே தெரியவில்லை.//
உங்கள் வருத்தம் புரிகிறது.! புத்தகத்தை இரவல் கொடுத்துவிட்டு திரும்ப கேட்டால் பகையாகிவிடுகிறது.! இது ஒரு சாபக்கேடா.?அல்லது மனித இயல்பா.?என்று தெரியவில்லை.!இதில் நல்ல நண்பர்களும் உண்டு. நம் புத்தகத்தை அடுத்தவர்களுக்கு இரவல் கொடுத்து விட்டு திரும்ப கிடைக்காமல் தொலைத்துவிட்டு இருதலைகொள்ளி எறும்பாக தவிப்பதும் உண்டு.!
இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
ReplyDeleteஇனிய காலை வணக்கம் நண்பர்களே!!!
எடிட்டர் சார்:
ReplyDeleteநல்லா ரெஸ்ட் எடுத்திட்டு வாங்க...தீபாவளி அன்று 'தீபாவளி வித் டெக்ஸ்' குண்டு புக் மாதிரியே நல்ல வெயிட்டான ஒருபதிவை எதிர்பார்க்கிறோம்...!!!
டியர் எடிட்டர் விஜயன் சார்,
ReplyDeleteவிளம்பரங்களில் தலைகாட்டும் ஆர்ச்சியை மறுப்பதிப்பில் பார்ப்பது எப்போது சார்?
எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி
தல தீபாவளி
ReplyDeleteதல இல்லாமல் ஏது தீபாவளி
தல அட்டகாசம்
தல அமர்க்களம்
தல கதைகளில் வீரம்
தல கதை படிக்க ஆசை
2016 முதல் மாதம் தோறும் தலதான்
நமது பதிப்பகப ணியாளர்கள் மற்றும்
வலை பதிவு நண்பர்கள் மற்றும்
நமது பாசத்திற்குரிய ஆசிரியர்
சின்ன & பெரிய ஆசிரியர் அவர்களுக்கும் மனம் கனிந்த தீபாவளி
நல்வாழ்த்துக்கள்.
காலை வணக்கம் எடிட்டர் & நண்பர்களே. உடல்நலனை கவனித்து கொள்ளுங்கள் ஆசிரியரே,தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த மாத இதழ்களில் ஜானி நீரோ மறுபதிப்பை தவிர வேறு எதுவும் இன்னும் படிக்கவில்லை,இன்றும்,நாளையும் தான் படிக்க வேண்டும்.படித்துவிட்டு தீபாவளி பதிவில் விமர்சனம் இடுகிறேன்.
ReplyDeleteமறுபதிப்பில் அட்டையில் உள்ள ஜானி நீரோவை பார்த்தால் நம்ம எம்.ஜி.ஆர் லேட்டஸ்ட் போஸில் கையில் துப்பாக்கி வைத்துள்ளது போல் தோன்றுவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை.
புத்தககங்களை பார்த்தவுடன் டெக்ஸ் கதையை மட்டும் ஒரு மணி நேரம் புரட்டி பார்த்து ரசித்தேன்.எமனின் வாசலில் சித்திர தரமே இந்த புத்தகத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் என்பதற்கு மாற்று கருத்தில்லை.நீண்ட நாள் கழித்து டெக்ஸ்சின் அட்டைபடம் மிக பிரமாதமாக அமைத்துள்ளது.
ReplyDeleteஇரண்டாம் கதையை நோட்டம் பார்த்து விட்டு முதல் கதையை பார்த்தால் ஹி,ஹி.
அப்புறம் அட்டை பைண்ட் வித்தியாசமாக உள்ளது,உள்பக்கங்களுக்கும்,மேல் அட்டைக்கும் சிறு இடைவெளி உள்ளது ஏன் என்று தெரியவில்லை,புத்தகத்தை கையில் வைத்து பார்க்கும்பொழுது உள்பக்கம் அப்படியே தெரிகிறது.
நிறைய நண்பர்களுக்கும் அப்படியே வந்துள்ளது என்று கூறுகின்றனர்,ஆனால் சிலர் எங்களுக்கு அப்படி வரவில்லை என்று கூறுகின்றனர்.
புத்தகங்களை அனுப்பும்போது இதை சற்று கவனித்திருக்கலாம்.
@ ரவி,அகமத் பாஷா,யுவா கண்ணன் இன்னும் பிற நண்பர்களுக்கும்..!
Deleteஅட்டை ஒட்டிய பின்...முப்புறமும் கட்டிங் செய்யும்போது முன் பக்கங்கள் வெட்டும்போது ..அந்த புக்மார்க் போன்ற மடிப்புகள் இங்கே'கிளிக்' இரண்டும் வெட்டுபட்டு தனியே வராமல் இருக்க, 2mm உள்ளே இருக்கும்படி குறைத்து வைக்கப்பட்டுள்ளது. இது அவசியமான அளவு குறைப்பு நண்பரே..! இதை பெரிதுபடுத்தி...மெனக்கெட்டு எடிட்டர் செய்த சிறப்பு தோற்றத்தை கொஞ்சம் புரிந்து கொண்டு, குறையாக பார்க்காமல்...ரசிக்கும்படியான கண்ணோட்டத்தின் பக்கம் பார்வையை திருப்பலாமே...!
ஹா ஓவ் புக்மார்க்கா அது...நாம தான் கட் பண்ணி எடுக்கனுமா???... சொல்லவே இல்லை!!!!.... விளக்கத்திற்கு நன்றி மாயாவி சார்....
Delete@ சே.டெக்ஸ்
Deleteஅதை அவசரபட்டு வெட்டி விடாதீர்கள்..! அது அப்படியே வைத்து அழகு பார்ப்பதே சரியாக இருக்கும். என் பெயர் டைகர் & வருட சந்தாவை கட்ட கலரில் வந்த படிவத்தை புத்தகத்தில் இருந்து வெட்டுனோமா என்ன..!!! அதுபோலதான் இதுவும், மேலும் வெட்டினால் அட்டை சுருண்டுவிடும் என்பது முக்கியாமான காரணம்..!
டெக்ஸ் தொப்பியை கழட்டினால் , உச்சி மண்டை வரை முடியில்லாமல் வரையப்பட்டு இருந்தால்..... அந்த ஓவியங்கள் சற்றே 2ம் ரகம் தான்.....உருவமும் இழுத்து கொண்டு விடுகிறது, இது போன்ற ஓவியப்பாணியில்.......உடனடியாக பவளச்சிலை மர்ம ....ஸ்கொயர் பாணியில் டெக்ஸ் இல்லையே என்ற சிறு ஏக்கம் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது..... முதல் கதை இந்த உச்சிமண்டை ஓவியம் தான், அதான் அப்படி ..ஹி..ஹியை வரவைக்கிறது....
Delete2ம்கதை பற்றி நண்பர்கள் எழுதுவதை படித்து , படித்து....இன்னொரு முறை சொல்லுங்க என என்சாய் பண்ணனும்....
டெக்ஸ் விஜயராகவன்.!& மாயாவி சிவா.!
Deleteடெக்ஸ் புத்தகம் எனக்கும் அதுபோலத்தான் வந்துள்ளது.ஆனாலும்.,எனக்கு அது ஒரு பிரச்சினை இல்லை .!நான் இன்னும் மூன்று புத்தகங்கள் வாங்க போறேன்.அதை கொஞ்சம் பார்த்து வாங்கிவிட்டால் போயிற்று.! காலத்தால் அழியாத காவியங்கள்.! அதன் மதிப்பு தங்கம் போல் உயருமே தவிர மதிப்பு குறையாது.!
ராம்ஜி 75 ஒரு ஐடியா சொன்னார் அது ஓ.கே.தான்.கொஞ்சம் ஒவராக மடித்துவிட்டார்கள் அவ்வளவுதான்.!
டெக்ஸ் விஜய ராகவன்.!@
Deleteஉங்க மாமா " பவளச்சிலை மர்மம் " பற்றி எழதுவதாக கூறி ஒரு மாமாங்கம் ஆகிவிட்டதே.!அது என்னாச்சு.?
அப்புறம் தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் முதன் முதலாக ஒ.சி.சு.கதையை முழவிளக்கம் கொடுத்து கதைவிமர்சனம் எழத போவதாக கூறியதும், ,,அரசியல்வாதியின் வாக்குறுதிபோல ஆகிவிட்டதே.?ஆவலுடன்............(கதை சுருக்கம் சொன்னால் கதையை தெரிந்துகொண்டு புத்தகத்தை யாரும் விலைகொடுத்து வாங்காமல் போய்விட வாய்ப்பு உண்டு என்று நொண்டி சாக்கு சொல்லி
எஸ்கேப் ஆகமுடியாது சார்.!)
MV சார்....எதிர்பாரா நேரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது வரும்....இந்த மாதம் டெக்ஸ் அதகள மாதம்....மேபி நெக்ஸ்ட் மன்த்.....பெளன்சர் வெளியீடு விழா வந்து ஆசிரியர் மற்றும் சென்னை நண்பர்கள் உடன் முதல் முறை சந்திப்பு என நான் ஒர் சேப்டர் , இப்பத்தான் நடந்தவற்றை அசை போட்டு கொண்டு உள்ளேன்....வெயிட் ஃபார் வெரி லிட்டில் டைம் சார்.....
Deleteஎன்னாது சிப்பாயின் சுவடுகளா..தொம்...
டெக்ஸ் விஜயராகவன்.!@ மிக்க நன்றி.!நான் காத்திருக்கின்றேன்.!
Delete// ஒ.சி.சு களா தொம்...//
ஹும் ................ காதலிக்க நேரமில்லை நாகேஷ் மாதிரி கதையை தேடி திரியவேண்டி உள்ளது.!.........என்டே !குருவாயூரப்பா.!
தகவலுக்கு நன்றி மாயாவி ஜி.அவசியமான அளவு குறைப்பு எனில் மகிழ்ச்சியே.மற்றபடி குறை ஒன்றும் இல்லை.
Deleteதகவலுக்கு நன்றி மாயாவி ஜி.அவசியமான அளவு குறைப்பு எனில் மகிழ்ச்சியே.மற்றபடி குறை ஒன்றும் இல்லை.
Deleteேவய்ன் ெஷல்டன் கனத அருனமயாக உள்ளது.
ReplyDeleteதல தீபாவளி சும்மா அதிருது.
எமனின் எல்னலயில் கனத சித்திரமும் கனதயும் பட்னடனய கிளப்புது.
எடிட்டர் ஸார்.நீங்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.
ReplyDeleteநன்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வெறும் சல்ப்புதான் போல ஜெய், நல்லா மிளகு நிறைய போட்டு ஒரு ப்ளேட் வறுத்த கறியும், பெப்பர் ஆப்லெட்ம் சாப்பிட்டால் சல்ப்பு பறந்து போயிடும்.......சாயந்திரம் லைட்டா ஒரு சிக்கன் சூப்பும் சேர்த்து கொண்டால் தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு எல்லாம் ரிலீஸ் ஆகிடும்....நாளைக்கே ஸ்வீட்களை வெளுத்து கட்டலாம்...
Delete//ஒரு பிளேட் வறுத்த கறி.//
Deleteடெக்ஸ் கதை படித்த பாதிப்புபோல.............
ReplyDeleteசற்றுமுன்புதான் புத்தகங்களைக் கைப்பற்றினேன்... (வழக்கம்போல) அட்டைப் படங்களைக் கண்குளிர ஆனந்தமாய், பிரம்மிப்பாய் ரசித்தபின்பு... முதலில் ஹாட்லைன்/காமிக்ஸ்டைம் பக்கங்களைப் படித்து முடித்தேன். 'கடமையே' என்ற பாணியில் இல்லாமல் இம்முறை ஆத்மார்த்தமான எழுத்துகளைக் காணமுடிந்தது! அடுத்தவருட அட்டவணை உண்டானதின் பின்புலம் பற்றிய எடிட்டரின் அறிக்கையும், டெக்ஸின் 'எமனின் வாசலுக்காக' 7 ஆண்டுகள் இரவுபகலாக உழைத்துவிட்டு, தன் லட்சியம் ஈடேறியாத எண்ணத்தில் உயிர்நீர்த்த ஓவியர் மேக்னஸைப் பற்றிய எடிட்டரின் "ஒரு 'காமிக்ஸ் தாஜ்மகாலை' எழுப்பிய நிரந்தரத் தூக்கம் நாடிவிட்டாரா?" என்ற சிந்தனைகளும் ஆத்மார்த்தமானவை! இனி கதையைப் படிக்கும்போது ஓவியரின் அர்ப்பணிப்பை ஒவ்வொரு ஃப்ரேமிலும் உணரச் செய்திடும்!
அடுத்தவருட வெளியீடுகள் பற்றிய புக்லெட் அட்டகாசம்! பெரும்பான்மையான பக்கங்களில் டெக்ஸே நிறைந்திருந்தது கண்கொள்ளாக் காட்சி! ரொம்ப நாள் ஏக்கம் ஒன்று நிறைவேறியதைப்போல ஒரு நிம்மதி, பெருமிதம், குதூகலம், எல்லாம் எல்லாம்! நன்றி எடிட்டர் சார்! 'தல' நம்மை நிச்சயம் கைவிடமாட்டார்!
நன்றாக ஓய்வெடுங்கள் எடிட்டர் சார்! தீபாவளியன்று உங்கள் பதிவு பண்டிகைக் கொண்டாட்டங்களை இன்னும் பலமடங்காக்கிடும்! நண்பர்களுக்கும், உங்களுக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகள்!
மாயாவி 'சிவா'வின் மீள்வருகையும், மற்ற நண்பர்களின் பங்களிப்பும் மகிழ்ச்சியளிக்கிறது! அடுத்த சில மாதங்கள் வேலை நிமித்தம் எனக்கு சற்றே கடினமான நேரமென்பதால் இங்கே பதிவிடும் வாய்ப்பு சற்றே குறையக்கூடும்! எனினும், நண்பர்களின் கருத்துகளை அவ்வப்போது படிக்கத் தவறமாட்டேன்!
இனி 'தல'யை படிக்கவேண்டியதுதான்!
செயலாளர் அவர்களே ....பதவி உயர்வின் காரணமாக ....தாங்கள். பணி சுமையை அதிகரித்து. வெளிநாடு சென்று தங்கியிருப்பதை போராட்ட குழு உணர்ந்தே உள்ளது ...அதன் காரணமாக இங்கேயும் சரி ...போராட்ட குழுவின் செயல்பாடுகளிலும் சரி உங்கள் பங்கு சிறிது குறைந்தே காணப்படும் என்பதை யாம் அனைவரும் அறிந்தே உள்ளோம் ...உங்கள் பணி முழுமையாக வெற்றி பெற்று ஒரு புது இருக்கையில் அமர்ந்து மீண்டும் வெற்றிகரமாக நீங்கள் இங்கே படை எடுக்கும் வரை போராட்ட குழு பொறுமையுடன் காத்து கொண்டிருக்கும் உங்கள் பணியையும் இனிமையாக சுமந்து கொண்டு ....
Deleteசென்று வாருங்கள் ....வென்று வாருங்கள் ......;-)
ஈரோடு விஜய்.!
Deleteஉயர்அதிகாரியாக பதவி உயர்வு பெறும் ஈரோடு விஜய் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.!
________/|\________
ஈரோடு விஜய்.!
Deleteஉயர்அதிகாரியாக பதவி உயர்வு பெறும் ஈரோடு விஜய் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.!
________/|\________
@ M.V
Deleteஅச்சச்சோ! வாழ்த்து மட்டும் போதும் M.V அவர்களே! இதற்கெல்லாம் வணக்கம் எதற்கு? ( கொஞ்சம் பதறிப்போய்விட்டேன்) உங்கள் வயது, அனுபவம், காமிக்ஸ்+ மாடஸ்டி காதலின் முன்பு நானெல்லாம் குழந்தைப் பையன் மாதிரி! உண்மையில் நான்தான் உங்களைப் போன்றவர்களிடம் வணங்கி ஆசிபெறவேண்டும். _/|\_
@ தலீவரே
Deleteபோராட்டத்தில் சுணக்கம் ஏற்பட ஒருபோதும் விடமாட்டேன். நீங்க கோடு மட்டும் போடுங்க தலீவரே... ரோடு போட்டு பாதாளச்சாக்கடை, பைப் கனெக்சனெல்லாம் கொடுக்க நாங்க எப்பவும் தயாரா இருக்கோம்! ;)
Sir,
ReplyDeleteI'm suffering from jalpu &Etc. So I can't attend the blog for two days
Your sincerely
ASHAFF
மூளைத் திருடர்கள்:
ReplyDeleteஅட்டைப்படத்தை பார்த்தவுடனே தெரிகிறது, இது freelancer ஓவியரின் கைவண்ணமென்று. அரைகுறையாக வேறு ஒருவன் கீழே படுத்திருப்பது பற்றி என்ன சொல்ல வராங்களோ, இல்லை அட்டையில் இடப்பற்றாக் குறையோ...?
கதை: நியூயார்க்-ல் ஆரம்பிக்கிறது, பிரபல விஞ்ஞானி மதிமயங்கிய நிலையில் நீரில் விழ, ரோந்து படகில் உள்ளவர்களால் தூக்கி காப்பாற்றப்பட்டு கப்பலில் கிடத்தப்படுகிறார். அப்போது, அவர் காப்பாற்றுக்கள், காப்பாற்றுக்கள் என்று சொல்லி உயிரை விடுகிறார்.
இப்போது லண்டன், நம் நாயகர் ஜானி உல்லாசமாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்க, அவரை சந்திக்க பிரிட்டன் உளவு பிரிவின் தலைவர் விஞ்ஞானி விஷயமாக சந்திக்கிறார். விஞ்ஞானியின் மரணம் தற்கொலையா, கொலையா என் துப்பறியும் படி ஜானியை தொந்தரவு செய்ய, அவரோ நான் தான் இப்போது உளவு பிரிவில் இல்லையே என்று ஜகாவாங்க, இல்லப்பா, உன்னைவிட்டால் உளவுப் பிரிவில் வேறு ஆளில்லை, நீதான் எப்படியாவது ஒத்துக்கொள்ள வேண்டும் என்று மன்றாட ஒருவழியாக சரியென்று சம்மதிக்கிறார்.
ஜானி பெட்டிப் படுக்கையுடன் நியூயார்க்-ல் நுழைந்து தனது பணியை விஞ்ஞானி பணியாற்றிய நிறுவனத்திலிருந்து தொடங்குகிறார். பின்பு விஞ்ஞானி தங்கிய விடுதி என்று அலைந்தும் ஒரு துப்பும் கிடைக்காமல் திரும்புகிறார். இந்நிலையில், தன் மீதான ஓரிரண்டு கொலை முயற்சியிலிருந்து தப்புகிறார். ஏன், எதற்கென்று குழம்பிய நிலையில் அரசாங்க மருத்துவமனை சவக்கிடங்கில் விஞ்ஞானியின் மரண அறிக்கையில் அவர் மட்ட சாராயத்தை குடித்திருந்ததாகவும், போதையில் இருந்ததாகவும் சொல்ல, அந்த நேரத்தில் காரியதரிசி ஸ்டெல்லா முக்கிய ஆவணங்களுன் ஜானியை நியூயார்க்-ல் சந்திக்கிறார். அமெரிக்காவில் தங்கி ஆராய்ச்சி செய்கின்ற மற்ற பிரிட்டன் விஞ்ஞானிகள் பற்றிய தகவலையும், அந்த நிறுவனத்தின் தலைவர் நெல்சன் என்றும் அறிகிறார். ஸ்டெல்லாவை அந்த 20 விஞ்ஞானிகளைப பற்றி விபரமறிந்து வர அனுப்பி விட்டு, வெளியில் செல்ல நெல்சன் ஆட்களால் தூக்கி வரப்படுகிறார். ஜானியை போட்டுத் தள்ள சொல்லிவிட்டு, நெல்சன் அங்கே நடக்கும் வர்த்தக மாநாட்டில் கலந்துக் கொள்கிறார். அவர்களிமிருந்து தப்பும் ஜானி, அந்த மாநாட்டில் நெல்சன் சொல்லும் ‘நெவாடா மாநிலத்தில் லாஸ்டிசா ஆராய்ச்சி நிலையம்’ என்பதை ரகசியமாக அறிந்துகொள்கிறார்.
ஊருக்கு வெளியே மலையடிவாரத்தில் இருக்கும் அந்த ‘நெவாடா மாநிலத்தில் லாஸ்டிசா ஆராய்ச்சி நிலையம்’ ஜானி சென்றடைந்தாரா...? அங்கு அவர் செல்ல பட்ட சிரமங்கள் என்ன...? அங்கு நடக்கும் ரகசியம் தான் என்ன? அதன் நோக்கமென்ன....? என்பதை மீதமுள்ள மூளைத் திருடர்கள் சொல்கிறது.
கதையை இன்னும் கொஞ்சம் ஸ்க்ரிப்சா பண்ணியிருக்கலாம். சித்திரங்களும் சுமார் ரகம். ஜானியிடம், பிரிட்டன் உளவு பிரிவு தலைவர், விஞ்ஞானியின் இரண்டு புகைபடங்களைக் காட்டி ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என் கேட்க, அதற்கு ஜானி சேவிங் ப்ளேடு விளம்பரத்துக்காக ஒரே ஆசாமியை இரண்டு விதமாக படம் எடுத்திருப்பது போல் தெரிகிறது என்று சொல்லுவது நல்ல ஜோக். அதைப்போல், பாரில் ஐஸ் வேண்டுமா என் கேட்கும் போது, எனக்கு தேவையெனில் ஆல்ப்ஸ் மலைக்கே சென்று எடுத்துக் கொள்வேன் என்பது 1967 பன்ச்.
டியர் எடிட்டர்
ReplyDeleteவேய்ன் ஷெல்டன் கதை - mixed பீலிங்க்ஸ் ..
ஸ்டோரி plot காட்டிய வித்யாசம் - சொன்னால் SPOILER ஆகிவிடும் - நோக்க வைக்கத் தவறவில்லை .. அதே சமயத்தில் ...
... முதல் மூன்று பாகங்களின் strategic clinch இக்கதையில் missing - probably due to a monotonous plot. எனினும் நண்பர்கள் சொன்னது போல சித்திரங்கள் ரசிக்கும் படி இருந்தன. ஓவர் பில்டப் இல்லாத வசனங்கள் கச்சிதமாய் பொருந்தி வந்திருக்கிறது.
நான் படித்த இரு கதைகளில் ரோஜர் மேலே நிற்கிறார் - அடுத்து ஷெல்டன். இன்று படிக்கவிருப்பது ஜானி. டெக்ஸ் கதையை நண்பருக்கு கொடுத்து விட்டதால் எனது செகண்ட் காப்பிக்கு waiting !
பிரமிப்பு....
ReplyDeleteஎமனின் வாசலில்.....!
ஆசிரியரே,நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் ஓவியர்"மாக்னஸ்"காமிக்ஸ் தாஜ்மஹால் எழுப்பியுள்ளார்.ஒவ்வொரு ஃப்ரேமும் பிரமிப்பு....
பாராட்ட வார்த்தைகளே இல்லை.
இந்த கதை வண்ணத்தில் வந்திருந்தால் என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக வண்ணத்தில் மறுபதிப்பாக வரவேண்டும்.
இதுவே மாக்னஸ் அவர்களுக்கு நாம் அளிக்கும் அஞ்சலியாக இருக்கும்...
சல்யூட்....
டைனோசரின் பாதையில்... ஏக் தம்மில் படித்து முடித்துவிட்டேன்.முதலில் எமனின் வாசலில் கதை சித்திரத்துடன் ஒப்பீடும் போது டைனோசர் பாதையிலே சித்திரம் சுண்டெலிபோல் முதலில் இருந்தது. ஆனால் கதையை படிக்க ஆரமித்தவுடன் கதையின் வேகம் உள்ளிழத்துக்கொண்டது.நானும் வில்லருடன் வேட்டைக்கு சென்றதுபோல் பரபரப்பு.கதை சீரியஸ் ஸாக சென்றாலும் கார்சனின் கலகலப்பால் ஜாலியாக சென்றது.352 பக்கங்கள் போனதே தெரியவில்லை.அடிக்கடி படிக்க வலுவான பைண்டிங் செய்த ஒரு குண்டுபுக் கிடைத்துவிட்டது.!சூப்பர் டூப்பர் கதை.!
Deleteரோஜரின் ‘மஞ்சள் நிழல்’ / உயிரை வாங்கும் பொம்மைகள் / பொம்மைகள் எழுந்து வந்தால்.....? / ராட்ஷச பொம்மைகள்...
ReplyDeleteசரியாக 1 ¾ வருடங்களுக்கப்புறம் ரோஜரின் என்ட்ரி. போன கதையில் (காலத்தின் கால் சுவடுகளில்) சித்திரங்களுக்குக்காக தம்ப்ஸ் அப் வாங்கியிருந்தாலும், கதையில் வாங்கிக் கட்டிகிட்ட சாத்திற்கு, இந்த முறை வட்டியும் முதலுமாக வெளித்து வாங்கி விட்டார். வருடத்தின் 48 இதழ்களுள் ஓர் இடம் பிடிக்க ஒவ்வொருத்தரும் துண்டைப் போட்டு மல்லுகட்ட, தனக்கு கிடைத்த அந்த மாதிரியான இடத்திற்கு நியாயம் செய்து விட்டாரென்றே சொல்லலாம். அடுத்தாண்டு வரவிருக்கும் ரோஜரின் ‘எழுந்து வந்த மம்மி’ யும் நம்மை கைவிடாது என்று நம்பலாம். ஏனென்றால், ‘மம்மி’ எப்போதும் நம்மைக் கைவிட மாட்டர்களல்லவா...?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மஞ்சள் நிழல்: சான்பிரான்சிஸ்கோவில் ரோஜரும், பில் மற்றும் தங்களுடைய தோழி நாடாலியும் ஒரு சைனிஸ் இசைக் கச்சேரிக்கு சென்று விட்டு வெளியே வருகிறார்கள். வெளிலேயோ பேய் மழை. டாக்ஸிக்கு காத்திருக்கும் போது, ஒருவன் தன்னை பொம்மைகள் கடித்து குதறி விட்டன என்று சொல்லி அலறியடித்துக் கொண்டு ஓடுகிறான். என்னவென்று கேட்கும் போது ஒரு கடையிலுள்ள பொம்மைகளை கைகாட்டிவிட்டு ஓடுகிறான்.
நாடாலியை வீட்டில் விட்டுவிட்டு, தன வீடு திரும்பி துயிலும் ரோஜரை பொம்மைகள் கடித்து குதறுகின்றன. சத்தம் கேட்டு அங்கு வரும் பில் ஒரு பொம்மையின் குட்டியான ஷூ வை கண்டெடுக்கிறார். இது என்ன கனவா..? நிஜமா..?
அலறும் தொலைப்பேசியை கையில் எடுக்கும் ரோஜருக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி... அவரில் தோழி நாடாலி காணாமல் போய்விடுகிறாள் தன் சிறுவயது பொம்மைகளுடன்.! இதன் பொருட்டு போலீஸ் ஸ்டேஷன்-ல் லெப்டினென்ட் சலோனியை சந்திக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பெண்கள் காணாமல் போகும் போது, அதனுடன் அவர்களின் பொம்மைகளும் சேர்ந்தே காணமல் போகிறது என்கிறார். அப்படி காணாமல் போகும் அத்தனை நபர்களும் சைனாக்காரர்கள் என்று சொல்லி ரோஜரிடம் வாங்கி கட்டிக்கொள்கிறார்.
அதனால் கோபமுறும் சலோனி, ரோஜர், பில் இருவரையும் ஆள் கடத்தல் குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைதுப் செய்த இரண்டு மணி நேரத்தில் ரோஜரின் தலைவரின் ஆணையால் விடுவிக்கப்படுகிறார்கள்.
அடுத்து நாடாலி வீட்டிற்கு இருவரும் செல்ல நாடாலியின் தந்தை புலம்பித் தீர்க்கிறார். எங்கிருந்து ஆரம்பிப்பது என்று எண்ணி இருவரும் அந்த பழைய பொம்மைக் கடைக்கு வருகிறார்கள். அப்போது அங்கு ஒரு ஹிப்பி சைனாக்காரன் ஒரு கடையினுள் நுழைகிறான். அந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறேன் என்று சொல்லி, அவன் வேறுயாருமல்ல இந்தக் கதையின் பிரதான வில்லனான ‘மஞ்சள் நிழல்’ என்கிறார். அவன் வெளியில் வரும் வரை காத்திருக்கும் நம் நாயகர்கள் இருவரும், ஹிப்பி தலையன் திரும்பி வெளியே வராததால் பொறுமையிழந்து ரோஜரும், பில்லும் கடையின் பின் பக்கமாக உள்ளே நுழைகிறார்கள். அதற்கப்புறம்...நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்திலிருந்து தப்பி தங்கள் காரை அடைகிறார்கள். காரின் ரேடியோவில் பேசும் ரோஜரின் ரகசிய தோழி டானியா, உங்களுடைய தோழி சோபியா தென்திசை கடலோர சாலையிலுள்ள படகு மேட்டில் ஆபத்திலிருப்பதாக சொல்கிறாள். அதன் பிறகு அங்கு செல்லும் ரோஜரும், பில்லும் சோபியாவை மீட்டார்களா...? நாடாலியின் கதியென்ன...? பொம்மைகளுக்கு முடிவு கட்டினார்களா...? என்பதை திக் திக் திகில் த்ரில்லரோடு பதில் சொல்கிறது இந்த ‘மஞ்சள் நிழல்’. கடைசியில் மஞ்சள் நிழல் எனும் வில்லன் வெடித்து சிதறினாலும், உயிரோடுதான் உள்ளான் என்பதை ஒரு சின்ன ட்விஸ்ட் மூலம் சொல்லியுள்ளார்கள். அது என்ன என்பதை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...! சாகச வீரரை அநியாயத்திற்கு கழிவு நீரில் குளிக்க வைத்ததற்கு வன்மையாக கண்டிக்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
PS: கதையில் வரும் இதுப்போன்ற நிகழ்வுகளெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு சாத்தியாமா என்றால், why not…? இந்த கதையின் ‘தாட்’ – இதுப்போன்ற பொம்மைகளும், ஜந்துகளும் உயிர் பெற்று வந்தால் என்னவாகுமென்பதே...? அதை திக்.. திக். திகில் த்ரில்லர் மூலம் வழங்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதே படமாக வந்திருந்தால், TV-ல் பார்க்கும் பொது லைட் அனைத்துவிட்டு ‘தில்’ லா பார்த்திருக்கலாம். ஆனால் இது போன்ற கதைகள் படிக்கும்போது எவ்வளவுதான் ‘தில்’ இருந்தாலும் லைட் போட்டே படிக்க வேண்டியிருக்கிறது. மொத்தத்தில் ‘மஞ்சள் நிழல்’ will never disappoint you.
மொய்தீன் சார்.!@
Deleteஉங்களது கதை விமர்சனம் விதம் அருமையாக உள்ளது.! எல்லா டர்னிங் பாயிண்ட்டையும் தெளிவாக கூறி கோர்வையாக கதை விமர்சனம் முறை அற்புதம். கி.நா.கதை சுருக்கத்தை சிதம்பர ரகசியமாக பாவிக்காமல் இதேபோல் தெளிவாக விமர்சனம் செய்தால் என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.!
நம் காமிக்ஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
ReplyDeleteஎமனின் வாசல் படித்து முடித்துவிட்டேன்.ஓவியங்கள் அழகை பார்த்தபோது கமான்சே கதை தொடர் மாதிரி ஆகிவிடக்கூடாது.என்று கலக்கத்துடன் படிக்க ஆரம்பித்தேன்.கதையும் அட்டகாசம்!.கதையும் ஓவியங்களும் ஒருசேர அற்புதமாக அமைந்து விட்டது.!.விக்டர் ரகசியம் சரியான டர்னிங் பாயிண்ட். இருவிதமான கதைக்களங்கள்.இரண்டும் அற்புதம்.!போனெல்லி குழமத்தினர் 50,60, வருடங்களாக டெக்ஸ் கதைகளை போர் அடிக்காமல்.,அதே எதிர்பார்ப்பு.,சுவராசியம்.,கவர்ச்சி என்று தொய்வில்லாமல் சென்றுகொண்டிருப்பதற்கு இதுதான் காரணம் போலும்.இதே முறையை நாமும் பின்தொடர்ந்தால்.,டெக்ஸ் கதைகள் வருடம் 24 வந்தாலும் போரடிக்காமல் நிச்சயம் வெற்றி பெரும்.!
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கும் ...அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் ....பிரகாஷ் பப்ளிஷர் பணியாளர் அனைவர்களுக்கும் ...காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும்
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் ....
நண்பர்களே.! எனக்கு ஒரு டவுட்.!
ReplyDelete//2016 வெளியீடு பட்டியலில்.//
விளம்பரத்தில் தீபாவளி மலரில் .,சர்வமும் நானே....!கதையை 330 முழு நீள சாகசம் சாகஸம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.!
"ஆனால் தனித்தனி இதழ்களாக. "
அப்படி என்றால் ஒரே கதையை பிரித்து போடுகிறார்களா.?
ஒய் திஸ் கொலவெறி.???????
100.....
Deleteஅந்த கதை இத்தாலியில் 3இதழ்களில் வெளிவந்ததாகவும், 3அட்டை படங்களும் டாப்பாம்...அவற்றை நாமும் ரசிக்க வேணும் என ஆசிரியர் விருப்பப் படுவதாலேயே 3தனித்தனி இதழ்கள், ஒரே கதை.......
3மாதம், மாதம் ஒன்றாக வா வரப்போகுது...ஒரே பாக்ஸ்...ஒரே கதை 3பிரிவுகள் ...அவ்வளவே....என்சாய்..... குண்டுமாதிரி....ஆனால் குண்டல்ல....ஹி...ஹி....எடுத்த கல்லை கீழே போட்டு விடுங்கள் MV சார்...
Delete@ சேலம் டெக்ஸ்
Deleteஒரு சின்ன திருத்தம்..!
அடுத்த தீபாவளி மலராக...
300 ரூபாயில்..
330 பக்கங்களில்...
முழுவண்ணத்தில்...
மூன்று புத்தகங்களாக...
ஒரு பாக்ஸ் செட்டாக...
முழுநீள ஸாகசமாக வரவிருக்கிறது..! மாதம் ஒன்றாக, மூன்று மாதமாக அல்ல..!
நண்பர்களே.! எனக்கு ஒரு டவுட்.!
ReplyDelete//2016 வெளியீடு பட்டியலில்.//
விளம்பரத்தில் தீபாவளி மலரில் .,சர்வமும் நானே....!கதையை 330 முழு நீள சாகசம் சாகஸம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.!
"ஆனால் தனித்தனி இதழ்களாக. "
அப்படி என்றால் ஒரே கதையை பிரித்து போடுகிறார்களா.?
ஒய் திஸ் கொலவெறி.???????
எடிட்டர் சார்
ReplyDeleteலீவு முடியலயா...?
உங்களுக்கு முடியலையா....?
Waiting
ReplyDeleteதீபாவளி நாள் வாழ்த்துகள்
ReplyDelete
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி, நண்பர்களே!
லலலா!
ReplyDelete