நண்பர்களே,
வணக்கம்.
வர்ண பகவான் ஆவேசமாய் செய்த ஆசீர்வாதம் சிங்காரச் சென்னையை வெனிஸ் நகரமாக்கியதை
இந்த வாரத்தின் பாதி நாட்களில் பார்க்க முடிந்தது! மழையோடு எப்போதுமே விரோதம்
பாராட்டும் எங்களது நகரும் கூட இந்த சில நாட்களாய் மப்பும், மந்தாரமுமாய் காட்சி
தர – மழையும் அது கொண்டு வரும் தடங்கல்களையும் தட்டுத் தடுமாறி சந்தித்து
வருகிறோம். எப்போதுமே மழைகாலத்து ஈர நாட்கள் அச்சுப் பணிகளுக்கு இம்சையான காலங்களே!
காற்றினில் கலந்திருக்கும் ஈரப்பதத்தை காகிதங்கள் உள்வாங்கிக் கொள்ள – அச்சின்
போது அவசியமாகும் நீர்க்கலவையும் சேரும் பொழுது பேப்பர் சோளக் கொல்லை பொம்மையைப்
போல துவண்டு விடுவதுண்டு. அதிலும் முன்பக்கத்து அச்சு முடிந்த பின்னர் – மறுபக்கத்தை
அச்சிட முனையும் போது – பள்ளிக்குப் போகப் பிடிக்காத பிள்ளைகளைப் போல செமையாக சண்டித்தனம்
செய்வது வாடிக்கை! அப்படியும், இப்படியுமாய் அவற்றை தாஜா செய்து – ஒரு மாதிரியாக தோர்கலின்
பணிகளை இந்த வாரத்தில் துவக்கி விட்டோம்! And நம்மாட்கள் இந்தப் பிரச்சனைகளைச்
சமாளிப்பதில் தேர்ச்சி பெற்று விட்டதால் ஆரிஸியாவின் ஆத்துக்காரர் கம்பீரமாய் மூன்றாம்
உலகத்தினுள் சாகஸம் செய்து வருகிறார்! தோர்கலின் வர்ணக் கலவைகளும் ஒரிஜினலிலேயே அட்டகாசமாக
உள்ளதால் – நமது தமிழாக்கமும் ரம்யமாய் படுகிறது!
டிசம்பரின்
ரம்யங்கள் தொடர்வது சென்றாண்டின் கதைத் தொடர்ச்சியின் ரூபத்தில்! வானமே எங்கள்
வீதியின் – பாகம் 3 “பாதைகளும்...
பயணங்களும்” என்ற பெயரோடு தயாராகி வருகிறது! இரண்டே ஆல்பங்களாய் ஆரம்பத்தில்
திட்டமிடப்பட்டு – கிடைத்த நல்வரவேற்பினைத் தொடர்ந்து முதல் சுற்றில் மூன்று
ஆல்பங்கள் ; அதன் பின்னர் ‘பார்த்துக் கொள்ளலாம்‘ என்ற சிந்தனையோடு படைப்பாளிகள் நீ/தீட்டியுள்ள தொடரிது! So- சென்றாண்டு நாம் இதன் துவக்க 2 ஆல்பங்களையும்
வெளியிட்டிருக்க – டிசம்பரில் ஆல்பம் # 3 வருகிறது ! And இதோ – அதன் அட்டைப்பட முதல் look!
முன்னட்டையும் சரி, பின்னட்டையும் சரி – அட்சர சுத்தமாய் ஒரிஜினல்களின் வார்ப்புகளே! ஒரிஜினலின் டிசைன்கள் பிரமாதமாய் இருந்ததால் அதனில் நமது திருக்கரங்களைப் பிரயோகிக்க முகாந்திரங்கள் ஏதும் எழுந்திடவில்லை ! அழகான ராப்பர் & வண்ணமயமான உட்பக்கங்கள் என இதுவொரு colorful read ஆக இருக்கக் காத்துள்ளது! நல்ல ஞாபகசக்தி ; இல்லையேல் துவக்க பாகங்களைத் தாங்கிய சென்றாண்டின் பதிப்பு உங்களுக்குத் துணையிருந்தால் நலம் என்பது மட்டுமே சின்னதொரு குறிப்பு! யுத்தப் பின்னணியில், பல நிஜ சம்பவங்கள்; நிஜ மாந்தர்களின் வாழ்க்கைகளைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை எனும் போது – என்றோ மடிந்தும் – மறக்கப்பட்டும் போன யுத்தத்தின் பலிகடாக்களை நினைவு கூர்ந்திட இதுவொரு வாய்ப்பு எனலாம்! Personal ஆக உலக யுத்தக் கதைகளில் தீரா ரசிகனான எனக்கு இது போன்ற கதைகள் ரொம்பவே பிடிக்கும் ! ஹன்னா & கோ.வை உங்களுக்கும் பிடித்திடும் பட்சத்தில் – பிரமாதமாக இருக்கும்!
முன்னட்டையும் சரி, பின்னட்டையும் சரி – அட்சர சுத்தமாய் ஒரிஜினல்களின் வார்ப்புகளே! ஒரிஜினலின் டிசைன்கள் பிரமாதமாய் இருந்ததால் அதனில் நமது திருக்கரங்களைப் பிரயோகிக்க முகாந்திரங்கள் ஏதும் எழுந்திடவில்லை ! அழகான ராப்பர் & வண்ணமயமான உட்பக்கங்கள் என இதுவொரு colorful read ஆக இருக்கக் காத்துள்ளது! நல்ல ஞாபகசக்தி ; இல்லையேல் துவக்க பாகங்களைத் தாங்கிய சென்றாண்டின் பதிப்பு உங்களுக்குத் துணையிருந்தால் நலம் என்பது மட்டுமே சின்னதொரு குறிப்பு! யுத்தப் பின்னணியில், பல நிஜ சம்பவங்கள்; நிஜ மாந்தர்களின் வாழ்க்கைகளைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை எனும் போது – என்றோ மடிந்தும் – மறக்கப்பட்டும் போன யுத்தத்தின் பலிகடாக்களை நினைவு கூர்ந்திட இதுவொரு வாய்ப்பு எனலாம்! Personal ஆக உலக யுத்தக் கதைகளில் தீரா ரசிகனான எனக்கு இது போன்ற கதைகள் ரொம்பவே பிடிக்கும் ! ஹன்னா & கோ.வை உங்களுக்கும் பிடித்திடும் பட்சத்தில் – பிரமாதமாக இருக்கும்!
டிசம்பரின்
இன்னுமொரு வண்ண மேளா காத்திருப்பது நமது கமான்சேயின் ரூபத்தில்!
ஓவியர் ஹெர்மனின் பிடரியில் சாத்தும் சித்திரங்களே இந்தத் தொடரின் ஜீவநாடி
என்பதில் இம்முறையும் துளி கூட மாற்றமில்லை! “சீற்றத்தின் நிறம் சிகப்பு” – கமான்சே தொடரின் ஆல்பம் # 7 எனினும் இதன்
நிஜ நாயகர் என்ற பட்டத்துக்கு திருவாளர் ரெட் டஸ்ட் 50% பொருத்தமெனில் – ஓவியர் ஹெர்மன்
தான் 100% தகுதியானவர் என்று சொல்லலாம்! பிரமிக்கச் செய்யும் ஓவியங்கள், திகைக்கச்
செய்யும் சித்திர angle-கள்; அட்டகாசமான கலரிங் என்று ஒன்று சேரும் போது – கதையின் வேகமோ
– வேகமின்மையோ ஒரு சமாச்சாரமாகவே தெரிவதில்லை! இம்முறை ஒரு புதுப் பாதையில்
கதையும் take off ஆகிடும் போது – விறுவிறுப்புக்குத் துளியும் பஞ்சமில்லை! இதோ
பாருங்களேன் – ஆரம்ப நிலையிலிருக்கும் கமான்சேயின் அட்டைப்பட டிசைனின் டீசர்!
இம்முறையும் ஒரிஜினல் சித்திரங்களே – ஆனால் நமது டிசைனரின் கைவண்ணத்தோடு ! இது இன்னமும் முழுமையாகிடா டிசைன் என்பதால் – நீங்கள் பார்க்கவிருக்கும் final version இதனிலிருந்து நிச்சயமாய் மேம்பட்டிருக்கும்! பின்னட்டை நமது தயாரிப்பே – கதையின் உட்பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்ட சித்திரங்களோடு ! And இதோ – உட்பக்கத்திலிருந்தும் ஒரு sneak preview ! கலக்கலான கலர்கள் + தடாலடி ஆக்ஷன் + ஹெர்மனின் ஓவியங்கள் என்ற combo-வில் ஒரு கௌ-பாய் விருந்து காத்துள்ளது நிச்சயம்!
இம்முறையும் ஒரிஜினல் சித்திரங்களே – ஆனால் நமது டிசைனரின் கைவண்ணத்தோடு ! இது இன்னமும் முழுமையாகிடா டிசைன் என்பதால் – நீங்கள் பார்க்கவிருக்கும் final version இதனிலிருந்து நிச்சயமாய் மேம்பட்டிருக்கும்! பின்னட்டை நமது தயாரிப்பே – கதையின் உட்பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்ட சித்திரங்களோடு ! And இதோ – உட்பக்கத்திலிருந்தும் ஒரு sneak preview ! கலக்கலான கலர்கள் + தடாலடி ஆக்ஷன் + ஹெர்மனின் ஓவியங்கள் என்ற combo-வில் ஒரு கௌ-பாய் விருந்து காத்துள்ளது நிச்சயம்!
On &
ahead into 2016 – ஜனவரியில் ஆட்டத்தைத் துவக்கக் காத்திருக்கும் நமது மதிமந்திரியாரின் கதைத் தொகுப்பின் பணிகளுக்குள் மூழ்கிக் கிடக்கிறேன்! பிரெஞ்சிலும்
சரி, ஆங்கிலப் பதிப்பிலும் சரி – வார்த்தை
விளையாட்டுக்களில் நகைச்சுவையை அள்ளித் தெளிக்கும் அட்டகாசமான ஆக்கங்கள் இவை ! முடிந்தளவு அந்த சித்து விளையாட்டை தமிழிலும் கொணர மொழிபெயர்ப்பினில் கிடந்து
உருளோ உருளென்று உருண்டு வருகிறேன்! மாங்கு மாங்கென்று எழுதிவிட்டு – ஆங்கில
ஒரிஜினலை மீண்டும் ஒரு முறை புரட்டினால் ‘அடடா.... இதை மாற்றி இப்படி
எழுதியிருக்கலாமோ?‘ என்று தோன்றுகிறது ! 26 எழுத்துக்களே கொண்டதொரு மொழிதனில்
இத்தனை ஆடுபுலியாட்டம் ஆடிட அந்த மொழிபெயர்ப்பாளருக்கு எப்படித் தான் சாத்தியம்
ஆனதோ? என்ற பெருமூச்சோடு என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன்! தை பிறக்கும்
முன்பே தெரிந்து விடும் என் முயற்சிகளின் பலன் எவ்விதமென்று!! மீசைக்கார ஷெல்டனை எழுதுவது 'குழந்தைப் புள்ள' விளையாட்டெனும் போது – இந்தக் குள்ளவாத்து மீசைக்காரரோ மிஸ்டர் tongue-ஐ
மிஸ்டர் தரையாரோடு உறவாடச் செய்கிறார்! Phew!
"ஜனவரியின்
சூறாவளி" கிட்டத்தட்டத் தயார் என்றும் சொல்லலாம்! நம்மைப் பொறுத்த வரை மஞ்சள் சட்டை
தான் புயலுக்கும், சூறாவளிக்கும் அடையாளம் எனும் பொழுது – நான் குறிப்பிடுவது நமது
டாப் ஸ்டாரின் சாகஸத்தைப் பற்றித் தானென்பது புரிந்திருக்கும்! Black & white-ல்
ஒரு நீ-ள-மா-ன ஆக்ஷன் அதிரடியோடு இப்போதே பரபரப்பாய்க் காத்திருக்கிறார் டெக்ஸ்! அந்த
சாகஸம் எதுவென்பதை டிசம்பர் இதழில் பார்த்திடலாம்!
பரபரப்பான
நாயகர்(கள்) பலரும் எங்களைப் பரபரப்பாய் பணியாற்றச் செய்து வரும் வேளைதனில் அதே பரபரப்பு
சந்தாப் புதுப்பித்தலில் இருந்திடும் பட்சத்தில் எங்களது சுவாசங்கள் சற்றே
சுலபமாகிடும்! Yes of course – ஜனவரிக்கு இன்னமும் நிறையவே அவகாசமுள்ளது தான்; ‘இப்போதே
பணம் அனுப்பி என்ன செய்வதாம்?‘ என்ற கேள்வி உங்களுள் எழுந்திடலாம் தான்! ஆனால் ஒரு
நெடும்பயணத்துக்கு தேவையான ஏற்பாடுகள் எத்தனை விஸ்தீரணமானவை என்பதை நான் சொல்லித்
தானா நீங்கள் தெரிந்திடப் போகிறீர்கள்? தற்போதைய நிலவரம் இதோ:
என் பெயர் டைகர் முன்பதிவு:
வண்ண இதழ் – 207 பிரதிகள்
B & W இதழ் – 65 பிரதிகள்
2016 சந்தா:
A + B + C + D – 91 சந்தாக்கள்
A + B + C – 4 சந்தாக்கள்
ஆன்லைனில் நமது அட்டவணையை வெளியிட்டு ஒரு மாதமாகி
விட்ட நிலையில்; 2016-ன் மொத்த இதழ்களின் booklet-ம் உங்களைச் சென்றடைந்து 20 நாட்கள்
ஆகிவிட்ட நிலையிலும் இந்தப் பரபரப்பின்மை ரொம்பவே நெருடுகிறது! அதிலும் டெக்ஸ்
இதழ்களுக்கு priority; கார்ட்டூன்களுக்கு தனிச்சந்தா என்ற ஜனரஞ்சக பார்முலாவும்
இந்தாண்டின் அட்டவணையில் இருக்கும் போதிலும் பெரியதொரு துரிதம் தென்படாது போவதைக்
காணும் போது சந்தா Z-ஐ நினைத்தால் கிராபிக் நாவலைப் பார்த்த தலீவரைப் போல
என் வதனம் பேஸ்தடித்துப் போயுள்ளது! தீபாவளி ; அப்புறம் அந்த மழையின் இடர்கள் என்று
தாமதங்களுக்கு ஏதேதோ காரணங்கள் இருக்கலாமே என்று மண்டை சமாதானங்களை முன்வைத்தாலும்
– ‘ஒருக்கால் நம்முள் ஒருவித அயர்ச்சி குடிபுகுந்து விட்டதோ?‘ என்ற சிந்தனையில்
நெஞ்சம் லயிக்காதில்லை!! கேட்டும் கிடைக்காத நாட்களில் இருந்த மவுசு – திகட்டத்
திகட்டக் கிடைத்து வரும் இந்நாளில் காலாவதியாகி விட்டதோ? என்ற கேள்வி அவ்வப்போது
எட்டிப் பார்க்கும் வேளைகளில் என்னிடம் பதிலில்லை!! ஒருக்கால் ஆண்டுக்கு இத்தனை இதழ்கள் என்பதெல்லாம் ரொம்பவே ஜாஸ்தியோ ? ; சந்தாத் தொகை ரூ.4000+ என்பது - எட்டும் தொலைவுகளிலிருந்து காமிக்ஸ்களை அகற்றிச் சென்று வருகிறதோ ? என்ற வினாக்களும் என்னிடம் வெறுமையையே பதிலாகப் பெற்று வருகின்றன ! ஒருக்கால் இவற்றிற்கான பதில்கள் உங்களிடம் உள்ளனவோ folks?
இருப்பின் என்னை சற்றே enlighten செய்திடலாமே – ப்ளீஸ்?
‘வியாபார
யுக்தியாய் ஏதாவதொரு rare முந்தைய இதழை சந்தா செலுத்துவோருக்கு மட்டும் exclusive
அன்பளிப்பாகத் தரலாமே?‘ என்று நண்பரொருவர் மின்னஞ்சலில் அபிப்பிராயத்தைப் பகிர்ந்திருந்தார்!
இன்னொருவரோ ஒரு cutoff தேதியை முன்வைத்து விட்டு இதற்குப் பிறகு சந்தாக்கள்
ஏற்கப்பட மாட்டாது என்ற ரீதியில் அறிவிக்கலாமே என்றும் கேட்டிருந்தார்! இன்னுமொரு நண்பரோ - "டெக்சின் பிந்தைய மாதத்து இதழ்களுள் ஏதோவொன்றை சந்தாதாரர்களுக்கு மட்டும் ஜனவரியிலேயே வழங்க ஏற்பாடு செய்யுங்களேன் - சந்தா கட்டவொரு incentive ஆக இருக்கும் விதமாய் !" என்று சொல்லியிருந்தார் ! இவையெல்லாம்
வியாபார ரீதியில் sound logic என்பதில் ஐயமில்லை தான்; ஆனால் ஸ்கூல் பீஸ் கட்டத் தாமதம் காட்டிடும் பிள்ளைகளை வகுப்புக்கு வெளியே நிற்கச் சொல்வது நம்மால் நினைத்துக் கூடப்
பார்க்க இயலா விஷயம். And ஏதோ காரணங்களால் "சந்தா வேண்டாம் - அவ்வப்போது ஆன்லைனிலும், கடைகளிலும் வாங்கிக் கொள்கிறேனே !" என்று எண்ணி இருக்கும் நண்பர்களை அன்னியப்படுத்திடவும் நிச்சயம் மனம் ஒப்பவில்லை !!
சந்தாக்களே நம் ஜீவநாடி ; அவை கடந்த ஆண்டுகளின் எண்ணிக்கைக்குக் குறையாது தொடர்ந்தால் தவிர, பிராண வாயுவின்றி ஆழ்கடல் நீச்சல் அடிப்பது போலாகிப் போகும் நம் பயணம் என்பதில் ஒளிவு மறைவு தேவையில்லை என்பதால் - எப்போதும் போலவே வார்னிஷ் அடிக்கா யதார்த்தத்தை உங்களிடம் சமர்ப்பித்து
விட்டேன்! இனி எல்லாமே உங்கள் பக்கமே ! மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் சொல்வதாயின் - The ball is really in your court folks! எங்கள் தரப்பினில் இதுவொரு அனாவசியப் பதைபதைப்பாகவோ ; ஒரு kneejerk reaction ஆகவோ உங்களுக்குத் தென்படாது இருப்பின் சந்தோஷம் கொள்வேன் !
மீண்டும் சந்திப்போம் guys ! அது வரை,
have a great Sunday & a bright week ahead !
ஹாய்.!
ReplyDeleteஇரண்டாவது...
ReplyDeleteவந்தாச்சி மேலே பார்த்து விட்டு வருகிறேன்
ReplyDeleteஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். 'பாதைகளும் பயணங்களும்', 'சீற்றத்தின் நிறம் சிவப்பு' - இரண்டு அட்டைப்படங்களுமே செம, தூள்!
ReplyDeleteஇனிய காலை வணக்கம் ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு..
ReplyDeleteநானும் வந்துட்டேன்
ReplyDeletePresent Sir
ReplyDeleteசந்தா வேண்டாம் - அவ்வப்போது ஆன்லைனிலும், கடைகளிலும் வாங்கிக் கொள்கிறேனே !" என்று எண்ணி இருக்கும் நண்பர்களை அன்னியப்படுத்திடவும் நிச்சயம் மனம் ஒப்பவில்லை !!
ReplyDeleteThank you sir
'சீற்றத்தின் நிறம் சிவப்பு' முன் அட்டைபடம் செம :-):-):-)
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteகரூர் குணா அவர்களே..உங்களை வருக..வருகவென இந்த காமிக்ஸ் உலகிற்கு வரவேற்கிறேன்..!
Deleteதங்களின் ஆசிர்வாதம்!
Delete//கேட்டும் கிடைக்காத நாட்களில் இருந்த மவுசு – திகட்டத் திகட்டக் கிடைத்து வரும் இந்நாளில் காலாவதியாகி விட்டதோ? என்ற கேள்வி அவ்வப்போது எட்டிப் பார்க்கும் வேளைகளில் என்னிடம் பதிலில்லை!! ஒருக்கால் ஆண்டுக்கு இத்தனை இதழ்கள் என்பதெல்லாம் ரொம்பவே ஜாஸ்தியோ ? ; சந்தாத் தொகை ரூ.4000+ என்பது - எட்டும் தொலைவுகளிலிருந்து காமிக்ஸ்களை அகற்றிச் சென்று வருகிறதோ ? //
ReplyDeleteஇந்தக் கருத்தினைப் பல நண்பர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே நமது காமிக்ஸ் வாசக வட்டம் சுழன்றுகொண்டிருக்கும் நிலையில், இதுவே யதார்த்த நிலையாகவும் தெரிகிறது. புதிய வாசகர்களை உள்ளிளுக்க விரைவான முனைப்புகள் அவசியம். இங்கே பதிவிலே கும்மியடிக்கும் நம் நண்பர்கள், தினமும் ஒரு பதிவாவது நமது காமிக்ஸ்கள் பற்றி தமது முகப்புத்தகத்திலோ, டுவிட்டரிலோ இடுவதன் மூலம் புதிய வாசகர்களை ஈர்க்க முயலலாம். ஆசிரியர் மட்டுமே முயற்சிப்பதால் இந்தத் தேரை இழுத்துவிடமுடியாது. ஊர் கூடி இழுக்கவேண்டிய தேர் இது!!
பிரதீப்,
Deleteஉங்கள் கருத்தில் ஏற்பு எனும்போது கூட அதை செயலாக்கும் விதத்தில் மாறுபடுகிறேன்.
ஏற்கனவே இணைய உலகில் காமிக்ஸ் காதலர்கள் பலர் (ரபிக், கார்த்திக் சொமலிங்கா, கிங் விஸ்வா, ஸ்டாலின், சௌந்தர் - ஏன் நீங்களுமே - இன்னும் பலரும் காமிக்ஸ் சந்தாக்கள் பற்றி எழுதி வந்த காலம் உண்டு. (கார்த்திக் சொமலிங்கா இரு வருடங்கள் அந்த தன பதிவையே மறுபதிப்பு வேறு செய்தார் :-p). காமிக்ஸ் பதிவுகள் போடுவதனால் சந்தாக்கள் கூடிவிடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.
நான் சில வருடங்களுக்கு முன் கூறியது போல எடிட்டர் இதை ஒரு தொழிலாக இல்லாவிட்டாலும் இன்னும் சற்றே பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும். (போன முறை இந்த தர்க்கம் வந்த போது மாயாவி சிவாவும் இது பற்றி எழுதி இருந்தார்). பல்சுவைப் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வர வேண்டும். இது விளம்பர யுகம் !
இன்னொரு யுத்தி - தற்போது பிரபலமாக இருக்கும் மீடியாக்களில் ஏதாவது ஒன்றோடு "media-partnership" ஏற்பாடு செய்து கொள்வது. "கொள்கை பரப்பை" அவர்கள் செய்து விடுவார்கள். இது எல்லாமே கொஞ்சம் முதல் பிடிக்கும் விஷயங்கள். எனக்கு புரியாத விஷயம், இவ்வளவு வருடங்களாய் "printing machine" என்ற டைனாசரையே business செய்பவர் காமிக்ஸ் வர்த்தகத்தை இன்னும் சற்றே விரிவாக்கத் தயங்குவதேனோ? மறுபடியும் சொல்கிறேன் சற்றே செலவு பிடிக்கும் விஷயம் தான்.
நண்பர்களின் ஆலோசனைஐளை நடைமுறைப்படுத்த முடியுமா ஆசிரியரே...?
Deleteசெலவு கட்டுபடியாகும் பட்சத்தில் இது ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும்.....!
தந்தி சேனலில் நம் இப்போதைய நிலை என்னா சார்..?
Raghavan,
Deleteநீங்கள் சொல்லும் கருத்துக்கள் ஏற்புடையவையே! அதே நேரம், நான் சந்தாவை மட்டும் மனதில் கொண்டு எழுதவில்லை, முன்னொரு காலம் போல காமிக்ஸ் கடைகளில் பரவலாக விற்பனையாகவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அப்போதுதான் பெரியதொரு வாசக வட்டத்தை உருவாக்க முடியும் இல்லையா?
இங்கே, இலங்கையிலிருந்துகொண்டு காமிக்ஸ் பற்றி நமது நண்பர்கள் அவ்வப்போது சில பதிவுகள் இடும்போதே, எங்கே வாங்கலாம்? எங்கே கிடைக்கும் என்ற கேள்விகளோடு பல இந்திய நண்பர்கள் எம்மை தொடர்பு கொள்வது வழமை. அவர்களுக்கு லயன் காமிக்ஸ் தளத்தையும், தொடர்பு இலக்கங்களையும் அறிமுகப்படுத்துவதோடு, அவர்களது விபரங்களை அவ்வப்போது லயன் அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பியுமிருக்கிறோம்.
பலருக்கு இப்படி நமது காமிக்ஸ்கள் மீண்டு வருவது இத்தனை வருடங்களாகியும் தெரியவேயில்லை என்பதுதான் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டியது. அவ்வப்போது மீடியா வெளிச்சம் படுவது நிச்சயம் போதுமானதாக இராது. நீங்கள் குறிப்பிட்டதுபோல, மற்றைய நண்பர்கள் சுட்டிக்காட்டியதுபோல தொடர்ச்சியான வேலைத்திட்டம் எதிர் காலத்தை மனதில்கொண்டு முன்னெடுக்கவேண்டும்!
வணக்கம் சார்...வணக்கம் நண்பர்களே...
ReplyDeleteஹைய்யா...மதிமந்திரியார் இஸ் பேக் :-):-):-)
ReplyDeleteVanakkam friends
ReplyDelete//மழை சிங்கார சென்னையை வெனிஸ் நகரமாக்கியது.//
ReplyDeleteஹஹஹஹ..............ரணகளத்த்திலும் ஒரு கலகலப்பு........
ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்..
ReplyDeleteபல சென்னை வாசகர்கள் புத்தக விழாவில் சந்தா செலுத்தலாம் என்று காத்திருக்கிறார்களோ ?
ReplyDeleteஎல்லோரூக்கும் காலை வணக்கம்.
ReplyDelete//ஜனவரியின் சூறாவளி டெக்ஸ்// ஒரு மெகா டெக்ஸ் கதை...........
ReplyDeleteடெக்ஸ் விஜயராகவன்.!
" கண்ணா திருப்பதி லட்டு தின்ன ஆசையா ? "
//ஜனவரியின் சூறாவளி டெக்ஸ்// ஒரு மெகா டெக்ஸ் கதை...........///--- கண்ணா லட்டு தின்ன ஆசையா???..
Deleteசென்னை விழாவில் ஆசிரியர்+ நண்பர்கள் சந்திப்பு--- கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா;!!!!!
உள்ளேன் ஐயா!!!
ReplyDeleteHappy sunday
ReplyDelete25th
ReplyDeleteஎன்னை பொருத்த மட்டில் சந்தா தொகை கொஞ்சம் அதிகமே என பட்டாலும், மாதா மாதம் அந்த தேதிகளில் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்றால் பெருத்த ஏமாற்றமும்,வேதனையுமே மிஞ்சுகிறது! இதுவரை சந்தாவிலும்,ப்ளாக்கிலும் இல்லாதமெளன பார்வையாளன் நான்.2016-க்கான சந்தா செலுத்த உத்தேசித்துள்ளேன்! காமிக்ஸ் என்ற காதலியின் முன்னால் 4000 ரூ. என்பது துச்சமாகத்தான் தெரிகிறது! எடி அவர்களின் அருள்வாக்கு போல,,,, தினமும் ஒரு காபிக்கான செலவில்,,,!
ReplyDeleteகுணா கரூர் .!
Delete// காமிக்ஸ் காதலின் முன்னால் ரூ 4000 '/, என்பது துச்சமாகத்தான் தெரிகிறது.!//
"ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சார்.! "
எப்படியாவது சந்தா கட்டிவிட்டால் போதும் வருடம் முழுதும் ஹாயாக " சர்க்கரை பந்தலில் தேன்மாரி பொழிவது போல் " என்ஜாய் பண்ணலாம்.!
// காமிக்ஸ் காதலின் முன்னால் ரூ 4000 '/, என்பது துச்சமாகத்தான் தெரிகிறது.!//
Delete"ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சார்.! "
+1
சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிய வைக்க ரெடியாகிவிட்டேன் .ஸ்நேகங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்!
Deleteசர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிய வைக்க ரெடியாகிவிட்டேன் .ஸ்நேகங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்!
Deleteவானமே எங்கள் வீதி-3 அட்டைபடம் அசரடிகிறது! சந்தா சுருசுறுபடையாமல் காரணம் இடைவிடாத வருணபகவானின் திருவிளையாடல் என கருதுகிறேன்!
ReplyDelete// ஸ்கூல் பீஸ் கட்டாத மாணவனை வகுப்பறை க்கு வெளியே நிறுத்துவதை போல....//
ReplyDeleteஇதைப்படித்தவுடன் ஏனோ மனம் பாரமாகிவிட்டது.!
நான் இன்னும் சந்தா கட்டவில்லை இந்தமுறை தொடர் பண்டிகை விடுமுறை, மழைவெள்ளம் , அதை தொடரந்து மருத்துவச்செலவுகள்........ எல்லோருக்கும் எல்லா சமயமும் சூழ்நிலைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை புரிந்துவைத்தற்கு நன்றி.! எனினும் இன்னும் அவகாசம் இருப்பதால் டிசம்பரில் கட்டிவிடுவேன்.!
+1 sir...
Deleteகமான்சே அட்டை இப்பொழுதே சும்மா பட்டையை கிளப்புகிறது சார் ...சூப்பர் ..
ReplyDeleteமதியில்லா மந்திரியாரை புத்தாண்டிலியே கொண்டு வந்ததிற்கு மிக்க நன்றி சார் ..சிறு ..குறு ...கார்ட்டூன் கதைகளில் மதியில்லா மந்திரி தான் என்னை பொறுத்தவரை பெஸ்ட் ஒன் ....
சந்தாவை பொறுத்தவரை நண்பர்கள் பலர் ஜனவரி புத்தக காட்சியில் கட்டலாம் என்ற நினைப்பில் இருக்கலாம் சார் ..நானே முதலில் அவ்வாறு தான் நினைத்து இருந்தேன் ..காரணம் போஸ்ட் ஆபிஸ் ..பேங்க் ...என்று போய் அங்கே பணம் அனுப்புவதற்கு நேரமின்மை ..மற்றும் அங்கே ஒரு குறும் பகுதி பணம் கமிஷன் என்று செலுத்தவதை தவிர்க்க சென்னை புத்தக காட்சியில் செலுத்தி விடலாம் என்ற முடிவில் நண்பர்கள் இருக்கலாம் சார் ...
ReplyDeleteஎனினும் முடிந்த நண்பர்கள் இந்த மாதம் சந்தா கட்டினால் நலமே ....போன வருட சந்தா எண்ணிக்கையை விட இந்த வருடம் 30% ஆவது எண்ணிக்கை உயர்ந்தால் கூட இன்னும் நலமாக இருக்கும் ..நம்பிக்கையுடன் காத்திருப்போம் சார் ...
மதியில்லா மந்திரி போன்ற கார்ட்டூன் கதைகளின் இதழ்கள் மினிலயன் பேனரில் வருகிறதா அல்லது வழமை போல லயன் பேனரா சார் ...மினிலயன் என்ற பேனரில் வந்தால் மீண்டும் ஒரு பழைய நண்பரை சந்தித்த ஒரு உற்சாகம் ஏற்படும் ..ஆவண செய்யுங்கள் சார் ....;-))
ReplyDeleteமினி லயன் பேனர்!இது கூட நல்லாயிருக்கே!
ReplyDeleteVanakam sir
ReplyDeleteWelcome priyatel...!!!!
Deleteநான் Blog கு புது வரவு. Editor sir உங்கள Magnum release அப்ப erode la தான் முதல்ல பார்த்தேன் அப்ப இருந்து தான் காமிக்ஸ் தொடர்ச்சியா வாங்கிட்டு இருக்கேன். இந்த வருசம் Tex சந்தா Super. அப்படியே திகில் ல மறந்தராதிங்க, . . . Cartoon classic la bluecoat பட்டாளம் இல்லாதது வருத்தம், ரின் டின் கேன் க்கு Chance அதிகமா கொடுக்கலாம்
ReplyDeleteதிருவருள் பிரகாஷம்.!
Deleteவணக்கம்.! வருக.! வருக.!
Welcome Thiruvarul Sir !
Deleteஅடடே! வாங்க அருள்!! உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி!
Deleteநல்வரவு! தொடர்ந்து பதிவிடவும்.
Deleteஇன்று தனது 23ஆவது திருமணநாளை கொண்டாடும் "எடிட்டர்" திரு,விஜயன் சார் அவர்கள் இன்று போல் என்றும் தனது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாகவும்,சந்தோசத்துடனும் மனநிறைவுடனும் வாழவேண்டும் என்றும்,அப்படியே எங்களுக்கும் இன்றுபோல் இதே உற்சாகத்துடன் வருடாவருடம் காமிக்ஸ் என்னும் புதையலை அள்ளி அள்ளி கொடுத்து எங்களையும் சந்தோச கடலில் மூழ்கடிக்க வேண்டும் என்றும் எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.)
ReplyDelete.....இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் விஜயன் சார்...
அனைத்து சேந்தம்பட்டி குழு நண்பர்கள் சார்பில் ஆசிரியருக்கு, 23வது திருமண நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்...
DeleteHappy 23rd wedding anniversary sir!!!best wishes. ......
Deleteஅட பாருடா நான் கல்யாண நாள் அன்று வந்திருக்கிறேன்.
Deleteஎடிட்டருக்கு திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.!
Deleteஅன்பு ஆசிரியருக்கு திருமணநாள் வாழ்த்துகள்
DeleteHappy wedding anniversary sir
Deleteஅன்பு ஆசிரியருக்கு திருமணநாள் வாழ்த்துகள்
Deleteஹி ஹி .....வாழ்த்துக்கள் சிங்கமே ...............
Deleteஆசிரியருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்களை போராட்ட குழுவின் சார்பாக வாழ்த்துகிறேன் .....;-)
ReplyDeleteஅனைவருக்கும் காலை வணக்கம்
ReplyDeleteமுதல் முறையாக சந்தா கட்டியாச்சு
டியர் எடிட்டர்
ReplyDelete1) நீங்கள் அனுப்பிய சந்தா படிவத்தினை கொஞ்சம் நகாசு வேலைகள் செய்து - ஒரு பக்கம் காமிக்ஸ் பற்றி one pager , மறுபக்கம் சந்தா விலைகள் சொல்லி, பேப்பர் விநியோகம் செய்யும் முகவர்களிடம் கொடுக்க ஏற்பாடு செய்யவும் - பல இல்லங்களுக்கு இதனால் விஷயம் தெரியக்கூடும்.
2) தற்போது distributor ஆக இருப்பவர்களுக்கு அடுத்த ஆண்டு சந்தா போஸ்டர் அனுப்பி கடைகளிலேயே கட்டச் சொல்லலாம் - முகவர்கள் பணம் பெற்றவுடன் உங்களுக்கு ஒரு coupon மற்றும் அட்வான்ஸ் பணம் (கமிஷன் போக) உங்களுக்கு அனுப்ப வேண்டும்,
3) நாம் வாழ்வது விளம்பர யுகத்தில் எனும்போது - வெறும் விளம்பரங்களுக்கே சில புத்தகங்களுக்கு ஐம்பதாயிரம் பிரதிகள் முன்பதிவு ஆகிடும் போது - நாம் டைரக்ட் சேல்ஸ் தவிர ஒரு book distributorஐயும் engage செய்வது நலம் அல்லவா? சற்றே செலவு பிடிக்கும் சமாச்சாரம் தான் எனினும் it can be thought of as two year investment - if the returns are comparable it would prove wiser
Point 1 is very good idea..
DeleteRaghavan : //ஒரு பக்கம் காமிக்ஸ் பற்றி one pager , மறுபக்கம் சந்தா விலைகள் சொல்லி, பேப்பர் விநியோகம் செய்யும் முகவர்களிடம் கொடுக்க ஏற்பாடு செய்யவும் - பல இல்லங்களுக்கு இதனால் விஷயம் தெரியக்கூடும்.//
Deleteஈரோடு ; கோவை ; சென்னை (அடையாறு & தென் சென்னை) பகுதிகளில் ஏற்கனவே முயற்சித்து விட்டோம் - அந்தந்தப் பகுதியின் விற்பனையாளர்களின் முகவரிகளோடும் ! சொல்லிக் கொள்ளும்படியான results இல்லையென்ற போதிலும் அதனைத் தொடர்வதாகவே உள்ளோம் !
டெக்ஸ் – இரண்டு கதைகளும் நன்றாக இருந்தது, வழக்கமான டெக்ஸ் முத்திரை இதில் இல்லை, என்பதால் கதை இன்னும் சிறப்பாகவும் ரசிக்கும்படியும் இருந்தது.
ReplyDeleteஎமனின் வாசலில் கிளைமாக்ஸ் எதிர்பாராதவிதமாக அமைத்து இருந்தது, கதையில் குறிப்பாக விக்டர் கதாபாத்திரம் அருமை. ஓவியம் உண்மையில் பாராட்டுகளை அள்ளும் வகையில் இருந்தது. ஆனால் டெக்ஸ் முகம் சற்று நீளமாக இருப்பது போல் சில இடம்களில் வரைந்து இருந்தது நன்றாக இல்லை.
லோலாயி குறை:
அட்டை படத்தில் நண்பர்கள் குழுவை முழுமையாக போட்டு விட்டு உள்ளே டெக்ஸ் மற்றும் கார்சன் மட்டுமே வரும்படி உள்ள கதையை போட்டது. அதே போல் டெக்ஸ் கதைகளில் வழக்கமான தென்படும் கிண்டல் மிஸ்ஸிங். ஏன்?
உண்மையான குறை: பக்கம்கள் பல இடம்களில் கசங்கி, மட்டித்து இருந்தது. ஒரு சில பக்கம்கள் சரியாக கட் செய்யாமல் இருந்தது. சில நண்பர்கள் அவர்களின் புத்தகம்களில் சில பக்கம்கள் படம் ஏதும் இல்லாமல் வெள்ளையாக இருந்தது. இது போன்ற குறைகள் மீண்டும் வருவது நல்ல விஷயம் இல்லை. இவைகளை சரி செய்வது நலம்.
டெக்ஸ் வருவதே முத்திரை தானே நண்பரே.
Deleteஆசிரியருக்கு இனிய திருமணநாள்
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்
வணக்கம் நண்பர்களே
ReplyDeleteநண்பர் டெக்ஸ் நலமா
ReplyDeleteவெல்கம் டூ ப்ளாக்...சென்னை செந்தில் அவர்களே....தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்து வாருங்கள், தொடர்கிறோம்...
Deleteஎடி சார்,
ReplyDeleteதொடர் மழை மற்றும் பண்டிகை செலவுகளால் சந்தா லேட்டாகி விட்டது. டிசம்பர் முதல் வாரம் கணடிப்பாக கட்டி விடுகிறேன் சார். இந்த மாதம் ரோஜர் தவிர அனைத்தும் சூப்பர். அந்த கதை bwல் வந்திருக்கலாம்
ஆசிரியரே கவலை வேண்டாம் ஐணவரியில் சந்தா கலை கட்டும்
ReplyDeleteவாழ்துக்கள் எடி சார்!
ReplyDeleteகாலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.
ReplyDeleteஇன்று தனது 23ஆவது திருமணநாளை கொண்டாடும் "எடிட்டர்" திரு,விஜயன் சார் அவர்கள் இன்று போல் என்றும் தனது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாகவும்,சந்தோசத்துடனும் மனநிறைவுடனும் வாழவேண்டும் என்றும்,அப்படியே எங்களுக்கும் இன்றுபோல் இதே உற்சாகத்துடன் வருடாவருடம் காமிக்ஸ் என்னும் புதையலை அள்ளி அள்ளி கொடுத்து எங்களையும் சந்தோச கடலில் மூழ்கடிக்க வேண்டும் என்றும் எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.)
ReplyDelete.....இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் விஜயன் சார்...!!!
ஹைய்யா...மதிமந்திரியார் இஸ் பேக் :-):-):-)
ReplyDeleteசந்தா பெற்றுத்தரும் ஏஜெண்டுகளுக்கு ஏதாவது சலுகைகள் வழங்கலாம் ....!
ReplyDeleteAll have their own financial plans & commitments. Let's help & reduce editor's burden by renewing our subs.asap. I did renew my subscription for 2016. But, registration for TIGER SPL is pending on me. Will do this week.
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சார்...!!! திருமண நாள இப்ப நெனச்சாலும் கண்ண கட்டுது சார்
ReplyDeleteஇனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் எடிட்டர் சார் :-):-):-)
ReplyDeleteபதிவு தாமதித்திற்கான காரணமும் இதுதானோ :p
Deleteகேசரி பாயாசம் எல்லாம் ரெடி ஆக வேண்டாமா சார்
Deleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள் விஜயன் சார்..!
ReplyDeleteஅப்புறம் இன்னொரு சின்ன பரிந்துரை...
சந்தாவை இரண்டு தவணை என்பதிலிருந்து மூன்று அல்லது நான்கு தவணைகளாக மாற்றினால் இன்னும் நிறையப்பேர் சேர வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது..!
எனக்கும் இது வசதி என்றாலும் அடுத்த மாதம் & ஜனவரியில் இரு தவணைகளாகக் கட்ட எண்ணியுள்ளேன்..!
(நிதி எனக்கு நீதி செய்யவில்லை சார்..!)
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் விஜயன் சார்..!
ReplyDeleteஅப்புறம் இன்னொரு சின்ன பரிந்துரை...
சந்தாவை இரண்டு தவணை என்பதிலிருந்து மூன்று அல்லது நான்கு தவணைகளாக மாற்றினால் இன்னும் நிறையப்பேர் சேர வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது..!
எனக்கும் இது வசதி என்றாலும் அடுத்த மாதம் & ஜனவரியில் இரு தவணைகளாகக் கட்ட எண்ணியுள்ளேன்..!
(நிதி எனக்கு நீதி செய்யவில்லை சார்..!)
மூன்று அல்லது நான்கு தவணைகளாக மாற்றினால் நன்று +123
Deleteஇரு தவணை சந்தா சரியானதாக இருக்கும்!
Delete+1000
Deleteஜனவரியிலிருந்து ஜூன் வரை ஒரு சந்தா தொகை (ரூ.2000) மற்றும் ஜூலையிலிருந்து டிசம்பர் வரை மீதி சந்தாவாக (ரூ.2000) வசூலித்தால் பல நண்பர்களுக்கு வசதியாக இருப்பதோடு...உங்களுக்கும் கணக்கு வைக்க ஈஸி யாக இருக்குமே சார்!!!
+1000000000000
Deleteவாழ்துக்கள் எடி சார்!
ReplyDelete
ReplyDeleteதிருமணநாள் வாழ்த்துகள் சார்!
A - B - C - D என்று மிக அருமையாகத் திட்டமிட்டு, அதில் 'வசூல் மன்னன்' டெக்ஸுக்கும் ஒரு ட்ராக் அமைத்துக் கொடுத்திருக்கும் விதத்தில் வாசகர்களாகிய நாங்கள் அனைவருமே திருப்தியாகவே உணர்கிறோம்.
பண்டிகைக்கால செலவுகள் பலருக்கும் மிதமிஞ்சிப்போய் (எகிறி) விட்டதால், சனவரிக்கான 'சந்தா'வைக் கிடப்பில்போட வேண்டிய கட்டாயமே நண்பர்களில் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது ( உதாரணம் : 'மாடஸ்டி வெறியர்' M.V சார்). நண்பர்களில் பலரும் சந்தாவுக்கான Budget allocationஐ
டிசம்பருக்கு fix செய்திருப்பார்கள் என்பதும் எளிதாகக் கணிக்கக்கூடியதே!
தவிர, டிசம்பர் மற்றும் ஜ௬னவரியே சந்தாக்களுக்கான உகந்த மாதங்களாக முருகு ஜோதிடரால் அறிவிக்கப்பட்டிருக்கிறதாம்! ;)
Factu. Factu :)
Deleteதை பிறந்தால் வழி பிறக்கும்
ReplyDeleteமந்திரி: ஹைய்யா.. ஜனவரீல மந்திரியின் கதைத்தொகுப்பு வரப்போகுது ஜால்ரா பாய்..! அடுத்து... ஸ்ட்ரீஈஈட்டா மந்திரியின் தனி சந்தா அறிவிப்புதான்!!
ReplyDeleteஜால்ரா பாய்: போங்க எசமான்.. இந்த ஒரு தொகுப்போட நம்ம கதைகள் தீர்ந்து போகப்போகுதோ என்னவோ!
PS: ஹி ஹி! வாராவாரம் கேப்ஷன் எழுதி பழகிட்டதால இந்த வாரப்பதிவில் கடைசியாக உள்ள படத்திற்கு கேப்ஷன் எழுதாம இருக்கமுடியல!
comic sunday !
ReplyDeleteமழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் இடர்பட்டுக் கொண்டு இருந்தாலும், தங்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் இருக்க இயலவில்லை. தங்களின் அச்சம் உண்மையானது தான் சார். இப்படி நான் கூற காரணம், ஏற்கனவே பலமுறை இதுபோன்ற நிலைப் பற்றி உங்கள் பதிவுகளில் ஆங்கங்கே நான் எழுதி இருக்கிறேன் என்பதால் தான்! அதை மீண்டும் கோடிட்டுக் காட்டி தங்களின் வருத்தத்தையும், வாசகர்களின் கோபத்தையும் சம்பாதிக்க விரும்பவில்லை.
//ஒருக்கால் இவற்றிற்கான பதில்கள் உங்களிடம் உள்ளனவோ folks?//
இதற்கு பல காரணங்களை நான் எடுத்து வைத்தாலும், அது தங்களுக்கும், மற்றவர்களுக்கும் எரிச்சலாகத் தான் அமையும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஏனெனில், தன் மனநிலைக்கு மாற்றான கருத்துகள், வரும்போது அங்கே கூறப்படும் கருத்துகளின் மீது கவனத்தை செலுத்தாமல், அதைக் கூறியவரின் மீதே மனஸ்தாபம் கொள்வது தான் மனித இயல்பு அல்லவா ?! இருந்தாலும் முத்தாய்ப்பாக ஒரே ஒரு கருத்தை மட்டும் முன் வைக்கிறேன்...
இதற்கு தங்களின் கம்யூனிஸ சித்தாந்தமே முழு முதற் காரணம் என்பது என் கருத்து மட்டுமே !
இதைத் தாங்கள் பெருமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது சார், ஏனெனில், தொழில் வேறு - சேவை வேறு ! வியாபாரம் வேறு - நம் இயல்பான சிந்தனைகள் வேறு ! இரண்டையும் ஒன்றாக பார்க்கும் போது தான், இரண்டுமே பெரிய வெற்றி அடைவதில்லை. காலம் இப்படியே இருக்கப் போவதில்லை என்பதால் தாங்கள் கவலைக் கொள்ள எந்த அவசியமுமில்லை இல்லை சார் ! இந்தப் பின்னூட்டத்திற்கு தாங்கள் எந்த பதிலும் அளிக்க வேண்டாம், அது எனக்கு தர்மசங்கடத்தை மட்டுமே ஏற்படுத்துவதாக அமையும். நன்றி !
Mv சார், வணக்கம், தங்களின் பழைய பதிவுகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை, இப்போதும் பதிலளிக்க முடியாது என்பதால் முன் கூட்டிய வணக்கங்கள் ! நன்றி :))
73 வது
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசமீபத்திய நமது காமிக்ஸ் மறுவரவு ஆரம்பத்தில் பழைய வாசகர்களை முழுமையாக ஈர்த்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த ஆர்வம் படிப்படியாக குறைந்துபோகக்கூடியதே என்பதையும் நாம் எதிர்பார்க்கவேண்டும். புதிய வாசகர்களிடையே அபரிமிதமாக சந்தா ஆர்வம் ஏற்பட்டால் மட்டுமே இது பேலன்ஸ் ஆகும். (இதற்கு சாத்தியங்கள் மிகக்குறைவு என்பதும் உண்மை)
ReplyDeleteசமீப ஆண்டுகளின் வெளியீடு எண்ணிக்கை பெரும்பாலானோருக்கு "இவ்வளவு கதைகளை வாசிக்கும் அவகாசம், நமக்கு இல்லையே" என்கிற உணர்வை கண்டிப்பாகத் தந்திருக்கும். எனவே தேவைப்படும்போது மட்டும் வாங்கிக்கொள்ளலாம் என்கிற எண்ணங்களே தற்போது பெரும்பான்மையாக இருக்கக்கூடும். ஒருவேளை வரும் ஆண்டில் புத்தக கண்காட்சி மற்றும் தனி இதழ்களின் ஆன்லைன் விற்பனை எண்ணிக்கைகள் இதனை தெளிவுபடுத்தக்கூடும்.
//தேவைப்படும்போது மட்டும் வாங்கிக்கொள்ளலாம் என்கிற எண்ணங்களே தற்போது ""பெரும்பான்மையாக"" இருக்கக்கூடும்//
Delete-1
Ramesh Kumar + 1
Delete//வானமே எங்கள் வீதியின் – பாகம் 3 “பாதைகளும்... பயணங்களும்”//
ReplyDeleteமறகக்றதா வருக வருக.
// “சீற்றத்தின் நிறம் சிகப்பு” – கமான்சே தொடரின் ஆல்பம் # 7 //
சுப்பர் சுப்பர் வருக வருக
// என் பெயர் டைகர் முன்பதிவு:
வண்ண இதழ் – 207 பிரதிகள்//
தலைவன் ஜனவரி வந்தால் சந்தோஷம் நெஞ்சில் பொங்குமே!
// 2016 சந்தா:
A + B + C + D – 91 சந்தாக்கள்
A + B + C – 4 சந்தாக்கள்//
நான் சந்தா கட்டி ஆகிவிட்டது இருப்பினும் ஒரு சராசரி சந்தா கட்டாத வாசகனாக இருந்தால் என்ன காரணங்கள் நான் சொல்லக்கூடும் என்ற சிந்தனை ஓடத்தின் வெளிப்பாடு கீழே.
ஏன் நான் சந்தா கட்டாமல் இருக்கிறேன்
1. சந்தா கட்டும் கால வரையறை சார்ந்த பயன்கள்(benifits ) ஏதும் இல்லை எனவே சாந்தா வை ஜனவரி கூட கட்டமுடியும் இல்லை ஒரு புத்தக திருவிழாவில் ஆசிரியரை பார்த்து பின் சந்தா கட்டி அதனால் ஏதேனும் பரிசுப்பொருள் கிட்டும் போது அதையும் ஆசிரியர் கையால் வாங்கும் வாய்ப்பு இதில் இழப்பு எனக்கு இல்லை win win தான்.
2. சந்தா கட்டாமல் புத்தகதிருவிழா வில் வாங்கும் போது புத்தகத்தை பார்த்து நல்ல புத்தகமாக வாங்க முடியும். பெரிய தொகை கொண்ட (ஸ்பெஷல்)புத்தகம் கூட சில சமயம் பிரிண்டிங் issue உடன் வருவது புத்த திருவிழா better சாய்ஸ் ஆகா தெரியும் வாய்ப்பு அதிகம். வருடம் முழுதும் நன்றாக maintain செய்யப்பட்ட சந்தா புத்தக quality review கடைசி சிலமாதங்களாக தேய்ந்ததுஅனைவரும் வருத்தப்பட கூடிய செய்தி சில நண்பர்கள் open ஆகா அதை இங்கு எழுதும் போது/e-mail அனுப்பும் போதும் high priority ஆகா கூட இல்லை low priority ஆகா கூட responce வருவதில்லை என்பது(எனக்கு நேர்ந்த வருந்தகூடிய) உண்மை.
3.சந்தாவில் பிரியமான டெக்ஸ் வரும் இந்த ஆண்டு இத்தகைய பிரிண்ட் quality issue reports நேரடி விற்பனை யில் பார்த்து அந்த போகிசங்களை வாங்குவது நன்றோ என்ற சிந்தனை உதிக்க வழி செய்கிறது.
4. எனக்கு தேவை இல்லாத புத்தகங்களை நிச்சயமாக நான் ஸ்கிப் செய்யும் சுதந்திரம் மற்றும் கிட்டதட்ட சந்தவிற்கு சரிசனமான புத்தக திருவிழா purchase rate ஆசிரியர் கையெழுத்துடன் புத்தகம் win win தான்.
5.வீண் செலவு என்று சமூகம் சொல்வதால் சீக்ரெட் ஆகா பணம் புரட்ட ஏற்படும் எதார்த்த தாமதம்.
நான் ஏன் சந்தா கட்டினேன்...?
தமிழ் காமிக்ஸ் என்கையில் - மாதா மாதம் கனவு மெய்படுகிறது.
//பணம் புரட்ட ஏற்படும் எதார்த்த தாமதம்//
Delete+1
ஆசிரியருக்கு, 23வது திருமண நாள் நல்வாழ்த்துகள் !
Deleteநான் பினூடங்களை இப்போது தான் பார்த்தேன் நல்ல நாள் அதுவுமாவா இப்படியா கேள்வி கேப்பீங்க என் எழுத்துகள் புண்படுத்தியிருக்கும் வாய்புகள் அதிகம்தான் சாரி எடிட் சார் !
எல்லாமே valid points!
Delete+1 for each!
// 5. வீண் செலவு என்று சமூகம் சொல்வதால் சீக்ரெட் ஆகா பணம் புரட்ட ஏற்படும் எதார்த்த தாமதம் //
Delete;)
@Sathishkumar S:
Deleteநீங்கள் சொல்லியிருக்கும் பாயிண்ட்களில் 2 வது பாயிண்டை மிக அதிகமாக ஆமோதிக்கிறேன்....
//இவ்வளவு கதைகளை வாசிக்கும் அவகாசம், நமக்கு இல்லையே" என்கிற உணர்வை கண்டிப்பாகத் தந்திருக்கும். //
ReplyDelete-1
இந்த வருடத்தின் மிகச்சிறந்த அட்டைப்படம் இந்தவாரம் பதிவாகியுள்ளதது. வண்ணத் தோரணமாய் கமான்சேவின் ௐரு பக்கம் ....ஏக எதிர் பார்ப்புடன் முடிவில்லாமல் முடிவடைந்த வானமே எங்க வீதி .....ஆஹா காத்திருக்கிறேன்...கேட்காமலே நினைத்ததெல்லாம் கிடைப்பதால் அயற்ச்சி போல தோனலாம் சார்...சந்தா குடுவது நிச்சயம்...ஆனால் விரைந்து கட்டுங்கள் நண்பர்களே நாம் நிலை பெற்று மண்ணில் வாழ....
ReplyDeleteசார் சந்தா உடனே செலுத்தினால் ௐரு சலுகை ...மாதம் குறைய அடுத்த சலுகை என அறிவிக்கலாமோ
தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்டீல்க்ளா! :)
Deleteநண்பர் ஸ்டீல்கிளாவிற்கு மிகத் தாமதமானது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .
Deleteஆசிரியர் அவர்களுக்கு ..
ReplyDeleteதனிப்பட்ட முறையில் நண்பர் ஒருவர் தாங்கள் சந்தா நண்பர்களுக்கு காமிக்ஸ் இதழ் பரிசளிப்பது என்பது நல்ல யோசனையே ....நமது காமிக்ஸின் வளர்ச்சி சந்தா நண்பர்களால் தான் என தாங்கள் அறிவிக்கும் பொழுது அந்த நண்பர்களுக்கு தாங்கள் பரிசளிப்பது தவறு அல்லவே ....ஆனால் அந்த பரிசு டீசர்ட் போன்றவையாக இல்லாமல் ஒரு காமிக்ஸ் புத்தகமாக இருந்தால் நலம் பயக்கும் ...அது அதிக விலையில் தேவையில்லை ..நாப்பது ..ஐம்பது ரூபாய் அளவில் கறுப்பு வெள்ளை இதழாக புதிதாகவோ அல்லது பழைய மறுபதிப்பு இதழாகவோ இருந்தால் நன்றாக இருக்கும் ...இதை செயல்படுத்தினால் கண்டிப்பாக சந்தா கூடும் என்பது உண்மை ..அந்த இதழ் விற்பனைக்கு வராதவாறு கண்டிப்பாக சந்தா நண்பர்களுக்கு மட்டுமே எனில் பயனளிக்கும் ..ஆனால் இந்த முறை சந்தா நண்பர்களை தவிர மற்றவர்களை விலக்கி வைப்பதாக எண்ணாமல் அவர்களையும் சந்தா இல்லத்தில் இணைய வைப்பதற்காக ஏற்படும் முயற்சியாக இதனை கருதுங்கள் ..
நமது காமிக்ஸ் இதழ் வளர்ச்சி சந்தா நண்பர்களால் எனும்போது அனைவரையும் சந்தாவில் இணைப்பதற்காக இந்த செயலை செயல்படுத்துவது தவறே அல்ல ...
தலீவர் எது சொன்னாலும் ஒரு அர்த்தம் இருக்கும்!
Delete+1 தலீவரே!
@Paranitharan K:
Deleteஇல்லை தலைவரே...இக்கருத்துக்கு நான் உடன்படவில்லை...
சந்தா கட்டுபவர்களுக்கு டி-ஷர்ட் கொடுப்பது ஓ.கே. எந்தப் பிரச்சினையுமில்லை...
ஆனால் சந்தா கட்டியவர்களுக்கு மட்டும் என ஒரு காமிக்ஸ் புத்தகம் கொடுப்பது சரி வராது...வேண்டாமே...
ஏனென்றால் ஏற்கனவே நமது காமிக்ஸ் நண்பர்களுக்குள் அவங்களுக்கும் மட்டும் எடிட்டர் முக்கியத்துவம் தர்றாரு நமக்கு தர்றதில்லை என்ற் ரீதியில் பல பிரச்சினைகள்...
இதில் சந்தா கட்டியவர்களுக்கு மட்டும் தனியாக புத்தகம் தந்தாரென்றால்...மேலும் சங்கடத்தையே அது விளைவிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து...
நான் இன்னும் சந்தா கட்டவில்லை என்பதற்காக இதை சொல்லவில்லை...
ஒரு டி ஷர்ட் க்காகவோ ஒரு எக்ஸ்ட்ரா புத்தகத்துக்காகவோ யாரும் சந்தா கட்டப் போவதில்லை...
எக்ஸ்ட்ரா புக்கும் டி ஷர்ட்டும் இல்லையென்றாலும் சந்தா கட்டுபவர்கள் கட்டிவிடுவார்கள்...
சரி இந்த பிரச்சினை டி-சர்ட் கொடுத்தால் வராதா? புத்தகம் கொடுக்கறதுல தான் வந்துவிடப் போகிறதா?
Deleteஎன்று கேட்டால்...
ஆம்!!! என்பதே எனது பதில்....காரணம்...டி-ஷர்ட் கிடைக்காமல் போவதை விட பலரும் காமிக்ஸ் புத்தகம் நமக்கு கிடைக்கலையே என்று தான் அதிகம் வருத்தப்படுவார்கள்...
ஏனென்றால் நமக்கெல்லாம் காமிக்ஸ் மீது அவ்வளவு காதல் மற்ற எதையும் விட!!!
சரி ஓ.கே. ப்பா நீ சொன்ன மாதிரியே வருவோம்...
Deleteஅப்ப எப்படி அதிக வாசகர்களை சந்தா கட்ட வைக்கிறது?!
சந்தா கட்டின வாசகர்களை எப்படி மகிழ்விப்பது என்று கேட்டீர்களென்றால்?
என் பதில் இதுதான்...
1. நமது ஆஸ்தான 'லயன் முத்து' பிராண்ட் டி- ஷர்ட் போன்றவற்றைக் கொடுப்பது ஒரு நல்ல யுக்தி...சந்தா கட்டிய நண்பர்கள் மட்டும் அதை உடுத்திக் கொண்டு புத்தகத் திருவிழா போன்ற சமயங்களில் உலா வரும்போது "நான் சந்தா கட்டி ஆசிரியருக்கும் நமது காமிக்ஸ்க்கும் உதவியவன்" என்கிற பெருமிதம் கிடைக்கும்!!!
2. இரண்டாவது...மிக முக்கியமானது....
ஒவ்வொரு மாதமும் சரியாக தேதி 1-5 க்குள் சந்தா கட்டியவர்களுக்கு காமிக்ஸ் கிடைக்கச் செய்வது....
அதைவிட முக்கியம் அந்த காமிக்ஸ் அனைத்தும் நல்ல பிரிண்டிங்க் தரத்தில் நல்ல நிலைமையில் சந்தாதாரர்களை சென்று அடைய வேண்டும்!!!
கொன்சம் இதை யோசித்துப் பாருங்கள்...
இரு நண்பர்களில் ஒருவர் சந்தா கட்டியவர் மற்றொருவர் சந்தா கட்டாதவர்...
மாதா மாதம் சந்தா கட்டியவருக்கு டாண் ன்னு புத்தகம் வந்துவிடுகிறது அதுவும் நல்ல நிலைமையில்...
ஆனால் சந்தா கட்டாதவருக்கோ இன்னும் கடைகளில் புத்தகம் வரவில்லை...
இப்போ இவருக்கு " சே பேசாம நம்மளும் சந்தா கட்டியிருக்கலாமோ" என்று தோன்றும்...
இதே கருத்து நமது ப்ளாக்கிலும் எதிரொலிக்கும் போது சந்தா கட்டாத நண்பர்களயும் இது யோசிக்க செய்யும்!!!
ஆனால் இதுவே உல்டாவாக சந்தா கட்டியவருக்கு தாமதமாக புத்தகம் வருகிறது...அப்படியே சரியான நேரத்தில் வந்தாலும் புத்தக பிரிண்டிங் சரியில்லை...பேக்கிங் சரியில்லை...உள் பக்கங்கள் சரியில்லை என்றால்..."சே பேசாம நாமளும் அவனை மாதிரி சந்தா கட்டாம விட்டிருக்கலாம்...கடையிலயோ புக் பேரிலோ நல்ல நிலமையில்லுள்ள புக்கா பார்த்து நாமேளே வாங்கியிருக்கலாம்" என்று தோன்றும்...
மறுபடியும் அடுத்த வருடம் சந்தா கட்ட யோசிப்பர்கள்....
தங்களின் இந்த எண்ணத்தை நமது ப்ளாக்கிலும் வெளிப்படுத்துவார்கள்...
இது புதுசாக சந்தா கட்ட நினைப்பவர்களையும் யோசிக்க வைக்கும்...!!!
இதனால் நான் என்ன சொல்ல வருகிறேனென்றால்... சந்தா தாரர்களை சந்தோஷப் படுத்தறதும்..புதிய சந்தாதாரர்களை இணைப்பதும்...
நாம் கொடுக்கும் தரத்தில் தானே தவிர இலவசங்களில் அல்ல என்பது என் கருத்து...
***அப்பாடா ஒரு வழியா சொல்ல வந்தத சொல்லிட்டேன்...இந்த மொபைல்ல டைப் பண்றதுக்குள்ள இரண்டு கை கட்டை விரல்களும் நொந்து விட்டன சாமி...
Deleteஎடிட்டர் சார்...எப்படித்தான் வாரா வாரம் டைப் பண்றீங்களோ...தெய்வம் சார் நீங்க!!!!****
***மிடியலை....****
நண்பர் சத்யா அவர்களுக்கு ..
Deleteஎனது கருத்துக்கு உங்கள் பதிலில் கூட எனது கருத்தே ...
அதாவது ...
####
ஆம்!!! என்பதே எனது பதில்....காரணம்...டி-ஷர்ட் கிடைக்காமல் போவதை விட பலரும் காமிக்ஸ் புத்தகம் நமக்கு கிடைக்கலையே என்று தான் அதிகம் வருத்தப்படுவார்கள்...###
எனவே அந்த இதழும் நமக்கு தேவை என்பவர்கள் சந்தா கட்ட முனைவார்கள் என்பதே உண்மை ..அதனையே நான் எடுத்துரைத்து உள்ளேன் ...;-))
@Paranitharan K:
Deleteதலைவரே நீங்க சொன்னதுக்குப் பிறகு அப்பீல் ஏது....:-):-):-)
டியர் எடிட்டர்
ReplyDeleteஇன்னும் சற்று யோசித்துப் பார்த்தால் இன்று அனைத்து விதமான "காமிக்ஸ்"களும் கிராபிக் நாவல் என்றே அழைக்கப் பெறுகின்றன - மேல்நாட்டில். லார்கோ ஆகட்டும் .. தொரகால் ஆகட்டும் .. Batman ஆகட்டும் .. GN என்பதே classification. நம் நாட்டில் காமிக்ஸ் என்றால் சிறுவருக்கு என்ற எண்ணத்தை வேரறுக்க நாமும் Lion Graphic Novels / Muthu Graphic Novels என்று makeover செய்யலாம். இந்த makeoverஐ சென்னை புத்தக விழாவினை ஒட்டி அறிமுகம் செய்யலாம். பல வித சந்தாக்கள் இருப்பதால் Action Graphic Novel / Cartoon Graphic Novel என்று தானே வகை பிரிந்து விடும்.
இதற்குப் பின் விளம்பரங்கள் , distributorகள் என்ற முயற்சிகள் கை கொடுக்கலாம் !
ஒரு காபிக்கான செலவில் ஒரு முழுநீள திரைப்படத்தின் அனுபவம் - இப்போது கிராபிக் நாவல் வடிவில் !
Delete+1 நல்ல ஐடியா!
Delete'கிராபிக் நாவல்' என்ற குடையின் கீழ் வகைப்படுத்தப்பட்ட ஒரு சித்திரக் கதைப் புத்தகம் 50,000 பிரதிகள் விற்றிருப்பதன் மாயாஜாலம் ஆச்சரியப்படுத்துகிறது! அதுவும் ஆயிரம் ரூபாய் விலையில்!!
Exactly that is where I took the impact of the word Graphic Novel from - வெளிவராத ஒரு 150 பக்க பாகம் 1 மட்டும் உள்ள புத்தகத்திற்கு 50000 பிரதிகள் முன்பதிவு - ஐந்து கோடி rolling cash என்பது என்னைப் புரட்டிப் போட்ட விஷயம். காமிக்ஸ் எல்லாம் இப்போ விற்பதில்லை என்று சொல்பவர்கள் வாய் அடைத்த விஷயம் !
Deleteஅவர்கள் முன்வைக்கும் வாசகமே "புத்தக வடிவில் ஒரு திரைப்படம்" என்பதுதான் !
உண்மை. நாமும் பெயர் மாற்றி முயற்சிக்கலாம்.
Delete+1 ஆனால் too late considering the fact that past few years book fairs missed that :(
Deleteக்ராபிக் நாவல் என்கிற பெயரை நாம் வியாபார ரீதியிலான மற்றும் சமூகப் பார்வைகளின் பெனிஃபிட்டுக்காக பயன்படுத்துகிறோமோ இல்லையோ, நமது தளத்தில் அந்தப் பெயரையே காமெடியாக்கிவிட்டிருக்கிறோம். இன்றைய நாளில் அதற்கு சந்தா Z என மாற்றுப்பெயர் / முத்திரை குத்தி ஓரமே கட்டியாச்சு.
@ FRIENDS : பெயர்மாற்றம் மாத்திரமே வெற்றிக்கு உத்திரவாதம் என்பதாகாது என்பதை நானும் அறிவேன்...நிச்சயம் நீங்களும் அறிவீர்கள் !
Deleteவிகடன் குழுமம் பத்திரிகையுலக ஜாம்பவான் எனும் பொழுது அவர்கட்குள்ள reach நிச்சயமாய் வேறொரு லெவல் ! விளம்பரங்களிலும், மக்களைச் சென்றடையும் பாதைகளிலும் அவர்களுக்குள்ள லாவகம் என்னவென்பதை நாம் அறிவோம் தானே ! இதே முயற்சியினை குமுதம் / விகடன் குழுமம் அல்லாது வேறு பதிப்பகம் ஏதேனும் முயற்சித்திருப்பின், விற்பனை எண்ணிக்கை நிச்சயமாய் இதனில் பத்தில் ஒரு பங்கு கூட தேறிடாது !
Moreover இதற்கொரு இலக்கியப் பின்னணி உண்டேனும் பொழுது இதற்கான audience விசாலமாகின்றனர் ! சராசரியான "பொம்மை புத்தகம்" என்ற அடைமொழியின்றி இது "சீரியஸ் சமாச்சாரம்" என்று பார்க்கப்படுவது நிச்சயம் ! "இதுவும் கூட குழந்தைப் புள்ளே சமாச்சாரம் இல்லீங்கோ " என்று நாம் கரடியாய்க் கூப்பாடு போட்டாலும் - அது நிறையக் காதுகளை எட்டுவதில்லை !
விற்பனையினை பெருக்கிட பெருநகர வணிகர்களின் கதவுகளை மாதம்தோறும் தவறாது தட்டிக் கொண்டே தான் இருக்கிறோம் - பத்துக்கு 2 தேறுகிறது ! அந்த இரண்டு சரியாக செயல்பட்டாலே சந்தோசம் என மாதம்தோறும் முயற்சிகளைத் தொடரவே செய்கிறோம் ! So ஒரு பக்கம் சன்னமாய் புதுப் புது சாவிகளையாய்த் தேடித் தேடி புது விற்பனை வாசல்களைத் திறந்து கொண்டே தான் இருக்கிறோம் - தோர்கலைப் போல ! ஆனால் புது வாசல்கள் தேடும் வேளையில் ஏற்கனவே திறந்துள்ள கதவுகள் மூடிடக் கூடாதே என்பதே எனது ஆதங்கம் !
புது வாசகர்கள் / புது விற்பனைக் களங்கள் அல்ல இப்போதைய சிக்கல்...ஏற்கனவே உள்ள நண்பர்களைத் தக்க வைப்பதே !!
//புது வாசகர்கள் / புது விற்பனை களங்கள் அல்ல இப்போதைய சிக்கல்...ஏற்கனவே உள்ள நண்பர்களத் தக்க வைப்பதே!!//
Delete+1000000000
சரியான பாதையில் தான் பயணிகிறீர்கள் எடிட்டர் சார்...
இந்தத் தெளிவு நிச்சயம் நமது காமிக்ஸ்க்கு நன்மையைத் தரும் :-)
// புது வாசகர்கள் / புது விற்பனைக் களங்கள் அல்ல இப்போதைய சிக்கல்...ஏற்கனவே உள்ள நண்பர்களைத் தக்க வைப்பதே !! //
Deleteஅப்படியென்றால் பழைய வாசகர்களின் வாங்கும் சக்தி (மற்றும் ஆர்வம்) எந்தளவுக்கு உள்ளது என்பதைப் பொறுத்தே புதிய வெளியீடுகளின் எண்ணிக்கை மற்றும் விலை அமைந்தாகவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆண்டுக்கணக்காக தொடர்ந்து புத்தகங்களை வாங்கும் நிலையில் பழையவாசகர்கள் இருப்பார்கள் என்கிற எண்ணமே சற்று இயல்புக்கு மாறானதுதான். Vicious circle! At some point, subscriptions should attract new readers and old readers may not show interest on every genre. The Cartoon track looks promising though, lets see if earns more subscribers in the coming year.
விகடன் குழுமம் பத்திரிகையுலக ஜாம்பவான் - உண்மை. தமிழகத்தில் அனைவர் விட்டிலும் கலந்த விஷயம், அவர்கள் எதை செய்தாலும் நன்றாக இருக்கும் என வாங்குபவர்கள் அதிகம்.
Deleteஎனவே அவர்களுடன் நம்மை ஓப்பிடுவது சரியில்லை.
வணக்கம் சார். தனியே மின்னஞ்சலில் சந்தா குறித்த என் கருத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்றி!
ReplyDeleteம்ம்ம்... அந்தப் பயம் இருக்கட்டும்! :D
Deleteவிஜி கவனியுங்கள் நான் எவருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. சில குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். ஆசிரியருக்கும், எனக்குமான தனிப்பட்ட உறவினை இங்கே வெளிச்சமிட்டுக் காண்பிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சரியா? ஹீ ஹீ ஹீ ஆயா பக்தர்கள் போராடுவோம்! விட மாட்டோம்.
Deleteஅட...! இதுக்கெல்லாம் போய் விளக்கம் கொடுத்துக்கிட்டு! உங்களைப் பற்றித் தெரியாத சைமன்ஜி?
Deleteஇந்த ஆயா பக்தர்கள் எப்பவுமே இப்படித்தான்! ;)
தொலைகாட்சி விளம்பரங்கள் நமக்கு பல லட்ச செலவில் செயல்படுத்துவது தேவையில்லாத ஒன்று சார் ...பல நூறு செய்திகளுக்கு மத்தியில் நமது விளம்பரத்தை காண்பது அரிதாகவே உள்ளது ..மேலும் புதிதாக அறிமுகமாகும் நண்பர்களுக்கு தான் அந்த விளம்பரத்தின் நோக்கம் என்றாகும் பொழுது அது தேவையில்லாத செலவே ...காரணம் இப்பொழுது இருக்கும் எண்ணிக்கையடங்கா சேனல்கள் மத்தியில் விளம்பரம் வந்தவுடன் சேனல்களை மாற்றுவோரே அதிகம் ...எனவே அந்த விளம்பரத்திற்கான தொகையை வேறு வழியில் நண்பர்கள் அறிய பயன்படுத்தலாம் சார் ..
ReplyDelete'தினத்தந்தி' போன்ற வெகுஜன நாளிதழ்களில் விளம்பரம் செய்வதே மிக்க பயன் தரும்!
Delete'தினத்தந்தி' போன்ற வெகுஜன நாளிதழ்களில் விளம்பரம் செய்வதே மிக்க பயன் தரும்!
Delete+100000000000
தினத்தந்தியில் விளம்பரம் என்பது 100 சதவீதம் சரியான முடிவு. அதுவும் மாதம் ஒருமுறை வெளியாகும் தமிழ் மாத ராசி பலன் புத்தகத்தில் போடுவது இன்னும் நன்றாக வேலை செய்யும்.
Deleteஎடிட்டர் அவர்களுக்கு என் மனங்கனிந்த 23 வது இனிய திருமண நன்நாள் வாழ்த்துக்கள் ஸார்.
ReplyDeleteஅட்டை படங்கள் எல்லாம் சூப்பர்!
ReplyDeleteஎந்த சிந்தனையில் எனது இந்த கருத்தை பதிவிடுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. அயர்ச்சி என்பது நிதர்சனம். தலையணை போல் மாதம் ஒன்று என 12 டெக்ஸ் இதழ்கள் கிடைத்தால் போதும் என வேண்டுகிறது மனம். விலை ஒரு பொருட்டு அல்ல.
ReplyDeleteநான் வாங்கிய இந்த வருட புத்தகங்களின் பலவற்றை இன்னும் படிதிடகூட முடியவில்லை.
சற்றே கூடுதலான வேலைப்பளுவினால் இந்தமாதத்தில் 'தீவாளி வித் தல' தவிர இதுவரை வேறெதுவும் படிக்கவில்லை! :( (எனக்கு இப்படியொரு நிலைமையா?) ஆனாலும் அடுத்த மாதத்தின் தோர்கலையும், கமான்சேவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வா.எ.வீ-2 அடுத்த இடத்தில்!
ReplyDelete'எமனின் வாசலில்' சித்திரங்கள் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என் கண்களையும் எண்ணங்களையும் விட்டு அகல மறுக்கிறது!!
சந்தா கட்டிட்டோம்ல :-)
ReplyDeletesuper! வரவு நல்வரவு ஆகட்டும்! தொடர்ந்து பதிவிடுங்கள்!
DeleteDear editor sir
ReplyDeleteMay God showers flowers of love and health in your path when you travel hand in hand with your loved ones
டியர் எட்டிடர் சார்,
ReplyDeleteநானும் இன்னும் சந்தா கடவில்லை...சந்தா கட்டி விட வேண்டும் என்று ஆசைதான்...
ஆனால் சில தயக்கங்கள்...
அதைப்பற்றி இங்கே பதிவிடலாமா...இல்லை உங்கள் இமெயிலுக்கே அனுப்பிவிடலாமா என்று யோசிக்கிறேன்....
உங்கள் இமெயிலுக்கே அனுப்பிவிடுகிறேன் சார்...அதுதான் சரி!!!
Deleteமொபைலில் டைப் பண்ண கொஞ்சம் சிரமமாக உள்ளதால் இன்று அல்லது நாளை உங்கள் மெயிலுக்கு அனுப்பி விடுகிறேன் சார்!!!
ஆசிரியருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇத்தாலி விஜய்
ஸ்பைடர் ஸ்ரீதர்
மாயாவி சிவா
டெக்ஸ்
பரணிதரன்
அனைவருக்கும்
எனது வணக்கங்கள்
வணக்கம் செந்தில் சத்யா அவர்களே ..தொடர்ந்து வாருங்கள் ..;-))
Deleteதலைவரே இனி நானும் உங்கள் போராட்ட குழவில் ஓருவன்
Deleteதலைவரே இனி நானும் உங்கள் போராட்ட குழவில் ஓருவன்
Deleteசெந்தில் சத்யா அவர்களே உங்கள் வருகை போ.குழுவிற்கு பெருமை ..;-))
Deleteவணக்கம் செந்தில் சத்யா அவர்களே ..தொடர்ந்து வாருங்கள் ..;-))
Deleteவணக்கம் செந்தில் அவர்களே! உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து கருத்திடுங்கள்! :)
DeleteDeepawali with Tex very super. Tex enrum Tex than.mozi peyarppu nam editor than a empathy doubtaga irukirathu.emanin vasalil Tex entryku piragu Padua viru virus.coloril rasika vendiya art work.nam editor polave enakum inru thirumananal 13 yes.nam comics nanbargal kuripaga Tex rasikargal namadu editor ellorum prey rasiyaga irupom RNA ninikren nan magaram.nanbergaley neenga? Mayavi sir nanri kumbakonam jaisri book shopil Tex kanpatrinen.
ReplyDelete@ ALL : கல்யாண நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள் பல !!!
ReplyDeleteஇரவு ரயிலை சென்னையிலிருந்து பிடித்து - நடுராத்திரி வரை இந்தப் பதிவை எழுதிக் கொண்டே கண்ணயர, அதிகாலையில் நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனைத் தாண்டிப் போயான பின்னே கண்முழிக்க , அப்புறமாய் லொங்கு லொங்கென்று வீடு திரும்பிய கையோடு கம்ப்யூட்டர் முன்னே அமர, ஆத்துக்காரியின் முறைப்பை ஒரு பக்கம் சமாளிக்க என்று ஜாலியாய்த் தான் நகன்றுள்ளது இன்றைய தினம் !! Thanks guys !!
Dear Editor, the regularity of issue releases have now been ensured, quality is ensured, to improve on the circulation, volumes have to be increased and production cost be reduced to ensure viability. One way of reducing the cost would be to reserve atleast three pages (inner wrappers and back page) for advertisements. The quality of the comics now published will definitely attract large consumer goods manufacturers for sure.Gopalakrishnan
ReplyDeleteஎடிட்டர் அவர்களுக்கு என் மனமார்ந்த 23-ம் திருமணநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆசிரியரே 2012 ல் இருந்து 2015 வரை வந்த கதைகளை விட 2016 ன் கதைகள் பட்டயை கிளப்புகிறது டெக்ஸ் தனி சந்தா மிகப் பெரிய வெற்றி பெரும் வீணாய் மணதை குழப்பி கொள்ள வேண்டாம்
ReplyDeleteநல்வரவு! தொடர்ந்து பதிவிடவும்.
Deleteநன்றி பரணி
Deleteநன்றி பரணி
Deleteஅன்புள்ள எடிட்டர்,
ReplyDelete2016 சந்தா முன்பதிவு செய்தவர்களுக்கு T-Shirt-க்குப் பதிலாக, நமது favourite ஹீரோ/ஹீரோயின்-களுடன் கூடிய, முடிந்தால் தடிமனான அட்டைகளில், spiral binding செய்யப்பட்ட 12 Sheet Calendar கொடுக்க இயலுமா?
இக்காலண்டரை, வாசகர்கள் எல்லோர் பார்வையில் படும்படியாக, தத்தமது அலுவலகத்திலோ, கடைகளிலோ, இன்னபிற இடங்களில் வைத்திருந்தால், வருடம் முழுமைக்குமான, நமது காமிக்ஸ் விளம்பரம் ஆகும்.
முன் கூட்டிய நன்றிகளுடன்,
பெரியார்
+123456789
Delete@ பெரியார்
Deleteபெரியார் அவர்களே...அவருக்கும் காலண்டர் போட ஆசைதான்..ஆனால் அதற்கு காப்பிரைட் வாங்கும் செலவு தலை சுற்றுவதாக...ஈரோடில் அறிவித்தார்..! எனவே காலண்டருக்கு வாய்ப்பு இல்லை..! ஒரு படைப்பாளி மற்றொரு படைப்பாளியின் ஹீரோவுடன் இணைந்த கதம்ப காலண்டருக்கு ஒத்துக்கொள்வதில்லையாம்..!
போன வருசம் சந்தாவை (தோணிமாதிரி) டிசம்பர் 31ஆம் தேதியே கட்டிவிட்டேன். (ஹிஹிஹி) .
ReplyDeleteஇந்த வருசமாவது முன்கூட்டியே கட்டிடலாமேன்னு முயற்சி செய்து வருகிறேன். .!!
எப்படியும் டிசம்பர் 31 க்குள்ள கட்டிடுவேன்.!!!! :-)
///‘வியாபார யுக்தியாய் ஏதாவதொரு rare முந்தைய இதழை சந்தா செலுத்துவோருக்கு மட்டும் exclusive அன்பளிப்பாகத் தரலாமே?‘ ///
ReplyDeleteஇந்த யுக்தி நிச்சயம் நல்ல பலனை அளிக்கக்கூடும் சார்.!
விற்னைக்கு கிடைக்காது., சந்தாவுக்கு மட்டுமே எனும் பட்சத்தில் மட்டும்.!
ஒரு டி-ஷர்ட்...ஒரு கலெண்டர்....இது மட்டுமல்ல...
ReplyDeleteவேறு எதுவுமே....ஒரு rare முந்தைய இதழுக்கு ஈடாகாது!
அந்த டி-ஷர்ட் இல்ல காலெண்டர வாங்கி என்ன பண்ண போறோம்னு விளையாட்ட நெனகரவங்க கூட...
ஒரு rare முந்தைய இதழ்னு சொன்ன மூச் :-)
ஹம்.....சரி இனி நாமளும் சந்தா கட்ற வழிய பார்க்கலாம்னு 99% நெனைப்பாங்க!
இது atleast காமிக்ஸ் சுவை உணர்ந்த அனைத்து பழைய வாசகர்களை சந்தாவில் இணைக்கும் என்று நம்புகிறேன் !
caption போட்டிக்கு பழைய காமிக்ஸ் பரிசு என்றவுடன் நெறைய முயற்சிகளை பார்த்ததே இதற்கு சான்று !
ஒரு டி-ஷர்ட்...ஒரு கலெண்டர்....இது மட்டுமல்ல...
Deleteவேறு எதுவுமே....ஒரு rare முந்தைய இதழுக்கு ஈடாகாது!////----- சூப்பரா சொன்னீங்க சரவணன் ஜி........ இது இதைத்தான் ஆசிரியர் கன்சிடர் பண்ணணும்...
அந்த சுஸ்கி-விஸ்கின்னு ஒரு கதைத் தொடர் உள்ளதேவாம் சார்...அதை மறுபதிப்பும் பண்ண மாட்டேன் என சொல்லி விட்டீர்கள், புதிய வெளியீட்டிலும் போட மாட்டேன் என சொல்லி விட்டீர்கள்...
Deleteஅட்லீஸ்ட் இந்த, சந்தா கட்டும் நண்பர்களுக்கவது ஆளுக்கொரு சுஸ்கி-விஸ்கி சாகசம் தரலாமே சார்......அப்படியாவது, நான்லாம் அதைப்படிக்க இயலும்....ஹூஊஊஊஊம்...
This comment has been removed by the author.
ReplyDeleteவிஜயன் சார்,
Delete1. பண்டிகை சமயம் என்பது முதன்மையான ஒரு காரணம்.
1.1. நான் முதலில் ஜனவரியில் பணம் செலுத்தலாம் என நினைத்தேன், காரணம் எனது மகளுக்கு வருடத்தின் இரண்டாம் பகுதி கல்விக்கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதால். ஆனால் காமிக்ஸ் தொடரவேண்டும் என்ற காதலில் பணத்தை செலுத்திவிட்டேன்.
2. சந்தாதாரர் விலையில் ஒரு discount கொடுப்பது நலம், குறைந்தபட்சம் கொரியர் கட்டணத்தில் ஒரு சலுகை. சலுகை என்பது இந்த காலத்தில் மிகவும் முக்கியம். உங்களின் அடிப்படை சந்தாதார்கள் எனும்போது அவர்களை தக்கவைத்து கொள்வதற்கு இந்த சந்தா அவசியம்.
2.1 இந்த வருட சந்தாவில் இது எதுவும் இல்லை. T-Shit இஸ் "நாட்" குட் option for சந்தாதாரர்கள்.
2.2 சந்தா கட்டணத்தில் சலுகை + T-Shirt என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆனால் T-Shirt விட சந்தா கட்டணத்தில் சலுகை என்பது கர்வர்சியான அறிவிப்பாக அமைந்து இருக்கும்.
3.புத்தகம் சில நேரம்களில் சில குறைகளுடன் வருவதால் நண்பர்கள் சிலர் கடைகளில் நேரடியாக பார்த்து சரியான புதகம்களை வாங்கி கொள்ளலாம் என்ற ஒரு முக்கிய காரணம். குறைகளுடன் வரும் புத்தகம்களை உங்களிடம் திரும்ப அனுப்பி மாற்றி கொள்ளலாம், ஆனால் எத்தனை பேர் அதனை செய்ய விரும்புகிறார்கள் என தெரியவில்லை. (நேரம் இன்மை/புத்தகத்தை திரும்ப அனுப்ப ஆகும் கொரியர் செலவு)
4. இன்றைக்கு காமிக்ஸ் படிக்கும் அனைவரும் சிறுவர்கள் இல்லை, ஒவ்வொருக்கும் சில நாயகர்கள் கதை பிடிக்கும் (அ) பிடிக்காது. எனவே சந்தா செலுத்துவதற்கு பதில் கடைகளில் விருப்பட்ட நாயகர்களின் புத்தகம்களை வாங்கி கொள்ளலாம் என்ற மன மனநிலையும் ஒரு காரணம்.
மேலே குறிப்பிட்ட இரண்டாவது விசயத்தை மறுபரிசீலனை செய்யலாமே.
Note:
இந்த மாதம் வந்த புத்தகம்களின் அட்டை வந்த ஒரு வாரத்தில் பத்தமடை பாய் போன்று சுருண்டு விட்டது. புத்தக அட்டைகளில் கவனம் செலுத்தவும்.
ஆசிரியரே சந்தாவிற்கு முந்தைய இதழ்
Deleteஎன்பது நல்ல ஜடியா சந்தா கட்டும் ஆர்வம் அதிகரிக்கும் யோசித்து முடிவு எடுக்கவும்
@ parani...
DeleteRegarding your 1.1.........
With due respect i am saying this ...
You have taken your priorities wrong....family duties come first... Even editor sir won't approve this attidude ...i am sorry to say you are setting a bad example.... Others may too be misguided......
Don't mistake me...but always family duties come first .....
ஆசிரியரே சந்தாவிற்கு முந்தைய இதழ்
Deleteஎன்பது நல்ல ஜடியா சந்தா கட்டும் ஆர்வம் அதிகரிக்கும் யோசித்து முடிவு எடுக்கவும்
Selvam Abirami @ sorry for putting my personal reason here! just to give reason why our subscription is not picking up.
Deleteவிஜயன் சார், சந்தாதார்களுக்கு தற்போது உள்ள 2 தவணை சந்தா என்பது நல்ல விஷயம். சந்தாதார்களை கவர 3/4 தவணை என அதிகரிப்பது சரியில்லை. இவைகளை கூட்டுவது என்பது கடைக்கார்களிடம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பணத்தை எதிர்பார்த்து காத்திருபதற்கு சமம்.
ReplyDeleteசிலபதிவுகளுக்கு முன் கடந்த வருடம் 2 தவணைகளில் பணம் செலுத்துகிறேன் என்று சில நண்பர்கள் சொல்லி இரண்டாம் தவணையில் பணம் கட்டாமல் புத்தகத்தை மட்டும் வாங்கிய விசயம் கசப்பானது. நண்பர்கள் இதனை கவனத்தில் கொண்டு இது போன்ற விஷயம் நடக்காமல் தவிர்ப்பது நலம்.
எனவே சந்தா தவணைகளை அதிகரிப்பது என்பது என்னை பொறுத்தவரை நல்ல விஷயம் இல்லை.
+1
Deleteஇரு தவணை என்பதே சரி ..
+1
Delete+1
Deleteகாலண்டர் அல்லது வாசகர் அதிகம் எதிர்பார்க்கும் மறுபதிப்பு இதழை சந்தாதாரர்களுக்கு மட்டும் என்று அறிவித்தால் நன்றாக இருக்கும். அந்த இதழை எக்காரணம் கொண்டும் விற்பனைக்கோ, பரிசுப்போட்டிக்கோ கொண்டு வரக்கூடாது.
ReplyDeleteமேலும் அடுத்த மாத இதழ் கைகளில் கிடைத்தவுடன், இனி அடுத்த மாதம் புத்தகம் வராது என்ற நினைப்பில் எல்லோரும் பணம் கட்ட தொடங்கி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.
எனக்கு சந்தா தொகையை நேரில் கட்டினால்தான் திருப்தியாக இருக்கும். அடுத்த வாரம் அலுவல் காரணமாக திருநெல்வேலி செல்ல வேண்டியுள்ளதால், போகும் வழியில் கட்டிவிடவேன்.
பழைய மினி லயன் ...............
Deleteரீ பிரிண்ட் போட்டு அனுப்பிடுங்க ...........
சூப்பர் பிளான் ................
@ மதியில்லா மந்திரி
Deleteமதியுள்ள மந்திரி அவர்களே...பழைய மினி லயன்களின் முக்கிய நல்ல நிலையிலுள்ள புத்தகங்கள் இன்னிக்கு, ஆயிரத்துக்கும் பக்கமா விலை பேசறாங்க..! எடிட்டரே சில ஆயிரம் வாங்க ஆயிரம் மதிப்புள்ள புக்கை காட்டி வசூலில் இறங்க்கிட்டருன்னு ஆரம்பிச்சி...கதை வேறு பக்கம் திரும்பிடும்..! நான் பார்த்தவரையில்...நான் சின்ன வயசில படிச்ச அந்த கதை சூப்பர்..சூப்பர்ன்னு சொன்னவங்களுக்கு அதே கதையை கையில் கொடுத்து படிக்க சொன்னதில்...அவர்களுக்கு கொட்டாவியும்,சிரிப்பும் வந்ததுதான் மிச்சம்..!
ஏற்கனவே வந்த புத்தகத்தை எல்லோரும் மினிமம் கேரண்டியில் ஏற்றுக்கொள்வது ரொம்பவே கஷ்டம்..! மாற்று வழியோசிங்க..! மறுபதிப்பில் வந்த இந்த வருட 12 கதைகளின் விற்பனையும் ஒரே மாதிரி இல்லை என்பதும், முதலில் போட்ட நயாகராவில் மாயாவி தொட்ட விற்பனை, பின் வந்த இதழ்களுக்கு கிடைக்காமல் வெள்ளம்போல் வடிந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்ததே..! சேகரிப்புக்கு உதவுமே ஒழிய, அதில் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவுமே ஒழிய, பரவலாக முன்பணம் கட்டவைக்கு சக்தி அதற்கு கிடையாது.
ஒரு சின்ன தகவல்: ஈரோடில் டெக்ஸ் with தீபாவளி பஸ்ஸ்டாண்டில் உள்ள ஒரேஒரு கடையில் மட்டும் அவர் வாங்கி 100 புத்தங்களும் இரண்டு நாட்களின் விற்றுதீர்ந்துவிட்டதால், மீண்டும் வாங்கித்தான் கொடுக்கணும் சார் என கூறுகிறார்..! கூட மீதி புத்தகங்களுக்கு அந்த மரியாதை கிடைக்கவில்லை.பரிசுகொடுக்கும் தேர்வு, கவரும் வேகத்தை தாண்டி இருக்கவேண்டும்..!
ஓகே மாயாவி நான் எப்போதும் ஐனவரியில் தான் சந்தா கட்டுவேன் இம் முறை டிசம்பர் 10 ந்தேதி தேதி கட்ட போகிறேண்
Delete@ இத்தாலி விஜய், பரணிதரன், பொடியன், ராகவன்,அகமத் பாஷா,சேலம் டெக்ஸ்,முகுந்தன் குமார் மற்ற நண்பர்களுக்கும்..!
ReplyDeleteஇப்போது நமது காமிக்ஸ் உலகம் உள்ள நிலை புதிய வாசகர்களை கவரும்,சேர்க்கும் முக்கிய நிலையில் இல்லை.கடந்த வருடம் 700 க்கும் நெருங்கிய சந்தாக்களை கட்டிய வாசகர்கள் என்ன ஆனார்கள்...? முழு சந்தாவை நூறுக்கும் குறைந்த பேரே கட்டியுள்ளார்கள் என்பது, கேட்கவே அதிர்ச்சியாக உள்ளது. இனி விளம்பரம்,பத்திரிக்கை,தின இதழ்,தொலைக்காட்சி என விற்பனை உயர்வை பற்றி பேசி ஒரு 1% கூட பயன் இல்லை, அந்த கட்டங்களை தாண்டி விட்டோம். இப்போது இருக்கும் நிலை ஜீவமரண போராட்ட, அவசர நிலை..! தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடங்களும் பெரிய கேள்வி மிஞ்சும்படியாகிவிடும்..!
கடந்த வருடம் சந்தாகட்டிய நண்பர்களை தொடர்பு கொள்ளும் கடைசி வாய்ப்பு, அடுத்தவாரம் பயணிக்கும் கூரியரே..! அவர்களை அழைக்க, எந்த மீடியாவின் விளம்பரமும் வேண்டியதில்லை. அதிரடியாய் ஒரே ஒரு அறிவிப்பு அவர்களை அடுத்த பார்சலில் சென்றடைய வேண்டிய போர்கால நெருக்கடி..!
நூறுக்கும் குறைவான சந்தா வாங்கி 3000 [மதிப்பாக] பிரதிகளை அடித்து, நான்கு வகைகளில் தருவது கடும் சங்கடத்தை திரு விஜயன் அவர்களுக்கு ஏற்படுத்தும்..! இதை அப்படியே விடுவது நிச்சயம் சரியல்ல..!நினைவுகளை பின்னோக்கி பார்க்கலாம், நிலைகளில் பின்னோக்கி போவது..வேண்டாம்..! உடனே...உடனே..உடனே ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். உங்கள் பதில் என்ன நண்பர்களே...???
மாயாவி சார் ஜனவரியில் கண்டிப்பாக சந்தா அதிகரிக்கும்
Deleteமாயாவி சார் ஜனவரியில் கண்டிப்பாக சந்தா அதிகரிக்கும்
Deleteமாயாஜீ ...
Deleteஅப்படி எனில் சந்தாவை அதிகரிக்கும் வழி பழைய மறுபதிப்புகள் உத்தரவாதமல்ல எனில் என்னுடைய ஒரே ஐடியா ஒரு ஐம்பது ரூபாய் மதிப்பில் கறுப்பு வெள்ளை புது டெக்ஸ் இதழ் ..சந்தா நண்பர்களுக்கு மட்டுமே எனில் சந்தா நண்பர்களை குறையாமல் பார்த்து கொள்ளலாம் ..;-))
இதை இங்கு பேசினால் மட்டும் சரிபடும்ன்னு தோணலை...தலீவரே..! ஒரு காட்டுக்கு தீயை கொஞ்சம் இறங்கி பரப்பினால்...வேலை செய்யும் என நினைக்கிறேன்..! மாத்தியோசி டெக்னிகை கையாள வேண்டியதுதான்..!
Deleteமாயாவி சார்@.....
Deleteதீபாவளி பண்டிகைக்கு எப்போதும் நம்மிடையே முதலிடம்...கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் தீபாவளி, இந்த ஆண்டு நவம்பரில்....கடந்த ஆண்டு நவம்பரில் சூடுபிடித்த சந்தாசெலுத்துதல் இந்த ஆண்டு ஒரு மாதம் தள்ளி போவது , தவிர்க்க இயலாதது..... ஓரிரு நண்பர்களை தவிர , பெரும்பாலான நண்பர்கள் டிசம்பர் சம்பளத்தில் கட்டுவதற்காக காத்திருக்கக்கூடும்..( நான் அப்படியே, இது முற்றிலும் தவறாகவும் இருக்கலாம.).... இந்த ஆண்டின் சந்தா நண்பர்களுக்கு டிசம்பர் கவரில் ஒரு நினைவூட்டல் கடிதம் வைக்கலாம்......மழையின் காரணமாக அனைத்து பணிகளும் தாமதப்பட்டுள்ளன......சற்றே பொறுமை தேவையா என சொல்லத்தெரியவில்லை எனக்கு....
டீசர்ட்டோ, புத்தகமோ , காலண்டரோ .....சந்தாவை துரிதப்படுத்துமா??? என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, சந்தா செலுத்தும் நண்பர்கள் இந்த எதிர்பார்ப்பை தாண்டிய வயதுக்காரர்கள் என்பதே என் கணிப்பு....பந்தை மாற்றி போட்டு ஆட்டத்தின் போக்கை மாற்ற இயலுமா??- என உங்களுக்கு ஏதேனும் தோணுதா ????
ஒன்று செய்து பார்க்கலாம் - சென்ற வருடம் சந்தா செலுத்தியவர்களுக்கு - புத்தகம் - இத்யாதி gift கொடுப்பதை விட - போன் செய்து இரு கேள்விகள் மட்டும் கேட்டுப்பார்க்கலாம் :
Delete1) 2016 சந்தா செலுத்துவீர்களா ?
2) ஒரு தவணையா / இரு-தவணைகளா - தேதிகள் தெரிவிக்க இயலுமா ?
That would give a comfort factor to Editor !
PS: இதை எடிட்டரே செய்தால் அவர் குரல் கேட்டவுடன் கட்டி விடுவார்கள் :-)
எனக்கொரு சின்ன யோசனை ..! ராகவன் கூறியதில் இருந்து பட்டி டிங்கரிங் பார்த்து..!
Deleteவாசகர்களின் செல் நெம்பர், மெயில் id நிச்சயம் எடிட்டரிடம் இருக்கும்..! இன்று எந்த கடைக்கு போய்ட்டு வந்தாலும் செல் நெம்பர் வாங்கிகொள்கிறார்கள். பின்னர் அவர்களின் எல்லா 'ஆபர்' களையும் செல்போனில் அவர்கள் பலக் SMS செய்கிறார்கள்..! பலவருடங்களுக்கு முன் விசாரித்த வீட்டு மனை, UPS,மளிகைக்கடை,போத்திஸ்,சென்னை சில்க்ஸ்,நகை கடைகளில் இருந்து தொடர்ந்து பண்டிகை வாழ்த்தும், திட்டங்களும் இன்று வரை தொடர்கிறது..! அதே போல வாசகர்ளுக்கு SMS அனுப்பினால் நல்ல பலன் தருமே..! எடிட்டர் கேட்பது கொஞ்சம் நாகரிகமாக படவில்லை.
அடுத்து..
ஈமெயில் மூலமாக அழகான ஒரு வேண்டுகாள் வைப்பது இன்னுமொரு எளிய முயற்சி..! பதிவுக்கு கண் முழித்து காத்திருக்கும் நண்பர்களுக்கு,எடிட்டரிடமிருந்து தனி மெயில் தரும் உற்சாகம் செல்லவே வேண்டியதில்லை..! அருமையா பலன் தரும்..!
இதை எல்லாம் நேற்று படிப்பை முடித்து, இன்று கடைபோடும் இளம் வியாபாரிகள் உடனே செய்கிறார்கள். ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு விட்டு வெளியேவருவதற்குள்...SMS ல் சுவை எப்படி..? எங்கள் கடையில் ஷாப்பிங் அனுபவம் எப்படி..? உங்கள் சேவைக்கு நன்றி..! உங்களின் ஒரு மாதமருந்து வாங்கவேண்டிய நாள் இன்று என பட்டையை கிளப்புகிறார்கள்..!இன்னும் இரண்டு நாட்களில் எந்த தனி SMS,இமெயில் வரவில்லை என்றால் அடிப்படையில் எதோ கோளாறு இருக்கிறது என அர்த்தம்..! வேறென்ன திரு விஜயன் அவர்கள் அடுத்த ஞாயிறு வரையில் இங்கு திரும்பியே பார்க்காமல், பழைய பதிவில் எத்தனை கமெண்ட்ஸ் என, பேங்க் பேலன்ஸ் SMS பார்ப்பது போல, 359 கமெண்ட்ஸ்களா..!!! என வரும் சனிக்கிழமைநள்ளிரவு ஒரு பார்வைக்கும்...அதே 'தவறுக்கு திட்டமிடும் லாட்டரி சீட்டை வாங்காமல் பரிசை எதிர்பார்ப்பது' தான்..!
மாயாவி...இப்படி எடிட்டரை சீண்டுவது சரியா..? என கட்டாயம்கேட்கப்படும், அதற்கு பதில்: என் பெயர் டைகருக்கு காலை 6:00மணிக்கே நான் பணம் கட்டி கிளிக் போட்டது, உங்களின் சிலருக்கேனும் தெரிந்ததே..! பலன் பூஜியம்..! பணம் கட்டினேனா என எனக்கே சந்தேகம் வந்ததுதான் மிச்சம்..!அடுத்து, சாந்தா...ஸாரி...சந்தாவையும் கட்டிவிட்டு அத்துடன் பண்டு டிரான்ஸ்பர் எண் கொண்ட jpg fileகளை [என் பெயர் டைகர் முன்பதிவும் சேர்த்து]இணைத்து அனுப்புகிறேன் சந்தாதொகை கட்டிய விவரம் என தலைப்பை போட்டு..! ஒருபதிலும் இல்லை.போன் செய்து கேட்டால் அப்படியா மெயில் பார்க்கிறேன் என்கிறார்கள். திரும்ப போன்செய்து "சும்மா பணம் கட்டிடேன்னா எப்படிங்க..?" என போனிலேயே முறைகிறார்கள். "மெயிலில் டூ அட்டாச் பைல் பார்த்திர்களா..? அப்படி எதுவும் வரலையா..?" என கேட்டதும் "செக் பண்றேன் ஸார்..!" என பதில் வருகிறது. உலகில் லேசில் இலவசமாக கிடைக்காத பணவிவகாரமே இப்படி என்றால்..உலகத்தில் இலவசமாக கிடைக்கும் யோசனையை பத்தி சொல்லவேண்டுமா என்ன...?
mayavi.siva: எனக்கு வாய்த்த பணியாளர்கள் அப்படி..:( என்பதை எடிட்டர் என்ன செய்கிறார் பார்ப்போம்.
எடிட்டர் குரல் என்று சொன்னது ஒரு பர்சனல் டச் வேண்டும் என்பதால் தான். நம்மைப் போன்று 40+ "இளைஞர்களுக்கு" இது சற்றே சங்கடமாய் தோன்றினாலும் மாற்றுப்பர்வையில் சந்தாதாரர் அளவில் ஒரு VIP பொன் செய்து பேசுவது போன்றது இது.
DeleteSMS ஐடியா ஓகேதான் - அதையும் செய்ய வேண்டும்.
e-mail எல்லா வாசகர்களிடமும் இருக்க வேண்டியது அவசியமில்லை - இருந்தாலும் SPAM folderல் போய் உட்காரும் chances அதிகமே.
@ மாயாவி சிவா
Deleteஹாஹாஹா! :) :) :) தொழில்நுட்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்துவதில் நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம் ( அல்லது ஓரளவுதான் முன்னேறியிருக்கிறோம்) என்பது உண்மை. அதை உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தைக்கொண்டே சங்கடத்தோடுகூடிய நகைச்சுவையாய் விளக்கியிருக்கிறீர்கள். பாராட்டுகள்!
சந்தா குறைவான எண்ணிக்கையிலிருப்பதென்னவோ உண்மைதான்; ஆனாலும் அது 'ஏதோ ஆபத்திலிருப்பதைப் போன்று' நினைத்துப் பதறுவது தேவையில்லாததாகவே எனக்குத் தோன்றுகிறது! டிசம்பர் மாத இறுதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்(னு ஜக்கம்மா சொல்றா) என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களுடைய மாத்தியோசி (மாத்தி மாத்தி மாத்தி? ;)) கான்செப்ட்டில் நிச்சயம் இன்னும் பல சரவெடி ஐடியாக்களை கையில் வைத்திருப்பீர்களென நம்புகிறேன். எடுத்துவிடுங்களேன் உங்க வியூகத்தை? :)
@இத்தாலி விஜய்
Delete//மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் சொல்வதாயின் - The ball is really in your court folks! எங்கள் தரப்பினில் இதுவொரு அனாவசியப் பதைபதைப்பாகவோ ; ஒரு kneejerk reaction ஆகவோ உங்களுக்குத் தென்படாது இருப்பின் சந்தோஷம் கொள்வேன் !//
இத்தாலிகார் தப்புங்க...எடிட்டரோட வரிகளை பாருங்க..! நீங்களே இப்படி அனாவசியப்பதைபதைப்புன்னு சொன்னா எப்படி..? கர்ர்ர்ர்..! 30 வருஷமா நம்மளை பார்கிறார்..! அந்த வரிகள் எழுதும் முன் அவரின் கணிப்பு,கவலை,பதைப்பு இத்தனை வருட அனுபவங்கள் தாண்டியா வெளிவந்திருக்கும்..? உங்களின்,சேலம் டெக்ஸ் பதில்கள், உங்க தமிழ் வாத்தியின் உருண்டை கண்களின் முன்னமே வராமலா போயிருக்கும்..??? :D
எனக்கென்னமோ சம்திங் ராங்..! [பட்சி சொல்லுது..]
@ இத்தாலி விஜய்
Deleteசெலவில்லாத செமயான இந்த சின்ன ஐடியாவை அவர் முதல்ல செய்யட்டும்..! வீணா எனர்ஜியை இங்க வேஸ்டுபண்ற மாதிரி இல்லை.! நம்ம எனர்ஜியை வெளிய வெளிய செலவழிச்சா பத்து சந்தா கட்டலாம்..!
@ ராகவன்
என்னோட பதிவையே 100 நண்பர்களுக்கு மெயில் பண்றேன்..! நேரடியா அனுப்பற மெயில் spam போல்டருக்கு போகாது..! முன்னாடி நின்னு கப்புன்னு கழுத்தை பிடிக்கும்..! பல்க் மெயில் பத்தி youtube போட்டு பாருங்க..! அழகா பல வழிமுறை இருக்கு..!
சந்தா குறைந்ததற்கு கடந்த வருடம் வெளிவந்த
ReplyDeleteவிடுதலையே உண் விலையெண்ன
விண்ணில் ஒரு வேங்கை
போன்ற மரண மொக்கை கதைகளும் ஒரு காரணம்
பரீட்சார்த்தங்களில் ஒரிரண்டு தவறத்தானே செய்யும்...... பரீட்சார்த்தங்களே இல்லைஎனில் பெளன்சர், தோர்கல் கிடைத்திருக்காதே நண்பரே...
Deleteகைப்புள்ள அருவாளோட கெளம்பிட்டாரு. இன்னிக்கு எத்தனை தலை உருளப்போகுதோ.? ????
ReplyDelete(சந்தா யோசனையெல்லாம் இப்படித்தான் தோணுது.) :-)
அட்ராசக்க...அட்ராசக்க...அட்ராசக்க...தலைவரே இது ஒன்னும் பெரிய விசயமில்லை தலைவரே
ReplyDeleteமுன்பெல்லாம் புத்தகம் கடைகளில் கிடைக்காது இப்போ கிடைக்குதே...
கடையில் கிடைக்கலினா சந்தாதானே கட்டியாகணும்
சந்தா புக் வந்து சேர்ந்த ரெண்டு நாளுக்குள்ள கடைகளில் வந்துடுதே. அதுமட்டுமில்ல தலைவரே கடையில் வாங்கினால் அப்பதிக்கப்ப பணம் கொடுத்து வாங்கிக்கலாம் சிரமம் தெரியாது
ஓட்டுக்கா 4000 கட்டனும்னா கஷ்டம்தானே.
நா உங்களுக்கொரு ஐடியா சொல்றேன் தலைவரே
ஒன்னு கடையில் கொடுக்கிறதா நிறுத்துங்கோ
இல்ல சந்தாவ நிறுத்துங்கோ
ரெண்டு குதிரைல சவாரி செஞ்சா இப்படிதான் தலைவரே
கடைல கொடுக்கிறத மட்டும் நிறுத்தி பாருங்க தலைவரே
சாந்த அப்ளிகேசன தேடிகிட்டு பின்னங்கால் பிடரில படற அளவுக்கு ஓடுவாங்க பாருங்க
வெளி நாட்டுக்கார வாசகர்களுக்கு மட்டும் சந்தா போடுங்க
எப்படி ஏன் ஐடியா
அட்ராசக்க...அட்ராசக்க...அட்ராசக்க
( ம்ம்ம்ம் மனது வலிக்குது தலைவா நீங்க கோடீஸ்வரரா இருந்திருந்தா பரவாயில்லை சந்தாவதான் நம்பியிருக்கீங்க ஹும்ம்ம்ம்ம்)
இவ்வளவு அங்கலாய்ப்புகள் தேவையிலலை என நினைக்கிறேன்! இன்னும் ஒரு மாதம் முழுமையாக உள்ளது. கண்டிப்பாக சந்தா பூரணம் பெறும்! மாயாவி சிவா அவர்களின் sms யோசனை கண்டிப்பாக வரவேற்ப்புக்குரியது! மின்னும் மரணம் வெளிவந்த பிறகும் ஐந்தாறு நாட்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புரிய வைத்து, பிறகு கிடைக்கப்பெற்றேன்!
ReplyDelete@ குணா
Delete//மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் சொல்வதாயின் - The ball is really in your court folks! எங்கள் தரப்பினில் இதுவொரு அனாவசியப் பதைபதைப்பாகவோ ; ஒரு kneejerk reaction ஆகவோ உங்களுக்குத் தென்படாது இருப்பின் சந்தோஷம் கொள்வேன் !//
கரூர்கார் தப்புங்க...எடிட்டரோட வரிகளை பாருங்க..! நீங்களே இப்படி அனாவசியப்பதைபதைப்புன்னு சொன்னா எப்படி..? கர்ர்ர்ர்..! 30 வருஷமா நம்மளை பார்கிறார்..! அந்த வரிகள் எழுதும் முன் அவரின் கணிப்பு,கவலை,பதைப்பு இத்தனை வருட அனுபவங்கள் தாண்டியா வெளிவந்திருக்கும்..? உங்களின்,சேலம் டெக்ஸ் பதில்கள், உங்க தமிழ் வாத்தியின் உருண்டை கண்களின் முன்னமே வராமலா போயிருக்கும்..??? :D
எனக்கென்னமோ சம்திங் ராங்..! [பட்சி சொல்லுது..]
ரவி கிருஸ்ணாவின் அப்பத்திக்கப்ப வாங்கிக்கலாம்!, அப்படீங்கறதும் ஒரு காரணமா இருக்கலாம்!
ReplyDeleteஇவ்வளவு அங்கலாய்ப்புகள் தேவையிலலை என நினைக்கிறேன்! இன்னும் ஒரு மாதம் முழுமையாக உள்ளது. கண்டிப்பாக சந்தா பூரணம் பெறும்! மாயாவி சிவா அவர்களின் sms யோசனை கண்டிப்பாக வரவேற்ப்புக்குரியது! மின்னும் மரணம் வெளிவந்த பிறகும் ஐந்தாறு நாட்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புரிய வைத்து, பிறகு கிடைக்கப்பெற்றேன்!
ReplyDelete///சந்தா புக் வந்து சேர்ந்த ரெண்டு நாளுக்குள்ள கடைகளில் வந்துடுதே. அதுமட்டுமில்ல தலைவரே கடையில் வாங்கினால் அப்பதிக்கப்ப பணம் கொடுத்து வாங்கிக்கலாம் சிரமம் தெரியாது ///
ReplyDeleteஇது சரியான பாய்ண்ட். ரெண்டு நாள்கூட இல்லை. சில மாதங்களில் அடுத்தநாளே வந்திடுது.!
புத்தக திருவிழாக்களில் வாங்குவோரைவிட மாதாமாதம் கடைகளில் வாங்குவோர் எண்ணிக்கை அதிகம்.!
தவிரவும் சந்தா கட்டுவதால் என்ன உபயோகம். ஒரிரு நாளௌ முன்னாடி புக்கை வாங்குறிங்க என்பதை தவிர. என்ற கேள்வியை நிறைய இடங்களில் எதிர்கொண்டிருக்கிறேன்.!!!
என்னைப்பொருத்தவரை சந்தா கட்டுவதே சிறந்தது.!
Deleteவருடத்தில் ஒரே ஒருமுறை பணம் கட்டிவிட்டால் அது பாட்டுக்கு வந்துகொண்டே இருக்கும்.மேலும் ஸ்பெஷல் கதைகள் வ்ங்குவதற்கு லேட் ஆனால் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.!
எல்லாவற்றிற்கு மேலாக எடிட்டர் கால் கட்டைவிரலை ........சந்தா அவசியமாகும்