Powered By Blogger

Thursday, November 05, 2015

தென்னை மரத்தில்.....!

நண்பர்களே,

வணக்கம். நேற்றைய காலை ஒன்றரைக் கிலோ எடை கொண்ட நமது நவம்பர் இதழ்கள், புஷ்டியான டப்பாக்களில் ஒட்டு மொத்தமாய்ப் புறப்பட்டுள்ளன - உங்களைத் தேடி ! As always , எல்லாப் பிரதிகளும் ஒரே சமயத்தில் தான் கூரியரை நாடிச் சென்றுள்ளன என்பதால் இன்று காலை (வியாழன்) உங்கள் அனைவரின் கைகளிலும் அவை மிளிர்ந்திடுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது ! 2016-ன் அட்டவணையும் பிரதிகளோடு உள்ளன ! So இந்த தினத்தின் ஒரு பகுதியை நமக்கென ஒதுக்கிடக் கோருகிறேன் !!


அப்புறம் இந்த மினிப் பதிவின் தலைப்பின் பெயர் காரணம் பற்றிச் சொல்லி விடுகிறேன் ! அட்டவவணை 2 வாரங்கள் முன்பாகவே இறுதியான நிலையில் அச்சிடும் பணிகள் மட்டும் பாக்கி நின்றன ! சந்தாக் கட்டணங்களில் கூரியரின் ரேட்களை ஒன்றுக்கு இரு முறைகள் அவரவர் மண்டல அலுவலகங்களோடு உறுதிப்படுத்திக் கொள்வோமே என்ற அக்கறையில் காத்திருந்த பொழுது தான் 'தொபுக்' என படைப்பாளிகளிடமிருந்து வந்ததொரு ஒரு மின்னஞ்சல்...! நாம் திட்டமிட்டிருந்த புது வரவான JOHN TIFANY (நமக்கு ஜான் டைனமைட்) கதைகளை வெளியிட்டு வருவது பெல்ஜியத்திலுள்ள லோம்பா நிறுவனம். இந்தக்  கதைகளின் தொடர்ச்சியை வெளியிடுவது தொடர்பாக அவர்களுக்கும், கதாசிரிய / ஓவியக் கூட்டணிக்கும் மத்தியினில் ஏதோ சலனம் போல் தெரிகிறது ! So தொடரவிருக்கும் ஆல்பம் # 3 & 4 -ஐ லோம்பா வெளியிடுவது சந்தேகம் என்ற நிலை இப்போது எழுந்துள்ளதாம் ! (ஒரு கதைத்தொடர் நடுவிலேயே கைமாறுவது பௌன்சர் விஷயத்தில் கூட நடந்துள்ளது ! அல்பங்கள் 1-7 வரை ஒரு நிறுவனத்திடமும் ; பாக்கி 2 ஆல்பங்கள் இன்னொரு நிறுவனத்திடமும் இருப்பது நாம் அறிந்தது தானே ?) "இந்த நிலையில் JOHN TIFANY-ன் முதல் 2 ஆல்பங்களுக்கான உரிமைகளை விற்பனை செய்யலாமா ? கூடாதா ? என்ற கேள்வி எழுந்துள்ளதால் அந்தக் கதைகளை இப்போதைக்கு ஆறப் போடுங்கள் !" என்று லோம்பா சொல்லியிருந்தனர் - நமக்கு வந்த மின்னஞ்சலில் !! 'போச்சுடா - தொடரை அறிவித்தாச்சு ; முதல் கதையை மொழிபெயர்த்தும் விட்டாச்சே !' என்று கையைப் பிசைந்த வண்ணம் நமது இக்கட்டை லோம்பாவுக்குச் சொன்னோம் ! "ஆனால் இது எங்களால் தீர்வு சொல்ல இயலா பிரச்சனை ; கதாசிரியரும், ஓவியரும் இதனில் எடுக்கும் முடிவே இறுதியானது எனும் பொழுது - ஏதோ ஒருவித சலனம் எழுந்துள்ள இத்தருணத்தில் அவர்களிடமிருந்து உடனடிப் பதில் கிட்டுவது impossible !" என்று முடித்துக் கொண்டனர் ! 

இது என்னடா சோதனை ? தெளிவாய்க் கேட்டு ; எல்லாமே ஒ.கே. என்றான பின்பு தான் கதைகளையும் வரவழைத்து ; மொழிபெயர்க்கவும் செய்தான பின்பு தானே அறிவிப்பை செய்தோம் என்று தலையைப் பிறாண்டத் தொடங்கினேன் ! அதிலும் இந்தக் கூத்து சகலமும் இந்த வாரத்தின் திங்கள்கிழமை மதியம் தான் அரங்கேறியது எனும் பொழுது தலைசுற்றல் இருமடங்கானது ! ஏற்கனவே ஜான் டைனமைட்டின் விளம்பரத்தோடு அச்சாகியிருந்த கேட்லாக்கை கடாசி விட்டு - கடைசி நிமிடப் புது வரவாக இன்னொரு "J" நாயகரைக் களமிறக்குவதெனத்    தீர்மானம் செய்தேன் ! And அந்தப் புதியவர் கூட ஒரு வகையில் நமக்கு பரிச்சயமானவரே !! JASON BRICE  தான் நான் குறிப்பிடும் நாயகர் ! இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே இவரை நம் அணிவகுப்பினுள் கொணரும் திட்டமிருந்ததும் ; கதைகள் சற்றே முதிர்ந்தோருக்கு ஏற்றார் போல் இருப்பதால் கடைசி நிமிடத்தில் நாம் பின்வாங்கியதும் நினைவிருக்கலாம் ! ஆனால் பௌன்சரைப் பார்த்தான பின்னே - இதெல்லாம் பஞ்சு மிட்டாய்ச் சமாச்சாரம் என்று தோன்றியது ! And இதுவொரு நீண்டு செல்லும் தொடருமல்ல - மொத்தமே மூன்றே ஆல்பங்கள் இதனில் ! நவம்பர் & டிசம்பர் 2016-ல் முதல் இரு ஆல்பங்களையும் வெளியிட்டு விட்டால் - ஜனவரி 2017-ல் final ஆல்பத்தை வெளியிட்டு விட்டால் தொடர்ச்சியாய் இவரது கதைகளைப் படித்த திருப்தி கிடைக்குமே என்று நினைத்தேன் ! So தொலைதூரத்துப் பெல்ஜியத் தென்னையில் படைப்பாளிகளுக்கு மத்தியிலான சலசலப்பானது எங்கோ ஒரு கோடியில் இருக்கும் இந்தப் பனையில் விடிவதை விதி என்றில்லாது வேறேன்னவென்பது ?  Sorry guys - நம் சக்திக்கு மீறிய செயல்கள் எனும்  பொழுது இந்த மாற்றம் தவிர்க்க இயலாததாகிப் போகிறது ! And more than anything else - ஒன்றரை நாள் அவகாசமே எனக்கிருந்த சூழலில் மண்டை இதுக்கு மேல் செயல்படவில்லை ! 

புரிந்து கொள்வீர்களென்ற நம்பிக்கையோடு கிளம்புகிறேன் ! இனி புது இதழ்களைப் பற்றிய உங்கள் எண்ணங்களை அறிந்திடக் காத்திருப்போம் ! Bye for now all !! 

157 comments:

  1. வணக்கம் சார்...
    படித்து விட்டு வருகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் விஜய் காலையில் பார்சலுடன் சந்திப்போம்.

      Delete
    2. டெக்ஸ் விஜயராகவன்.!@

      குத்தாட்டத்திற்கு ரெடியா.?

      Delete
    3. ரெடியோ ரெடி MV சார்....கொரியர் ஆபீசில் வெயிட்டிங்.... பார்சல்களை பார்த்து தேடிக் கொண்டு உள்ளார்கள்...திக் திக்...என பார்த்து கொண்டே உள்ளேன்....சிவகாசி பெட்டியை மட்டும் காணல.......

      Delete
    4. பாக்ஸ் ஒரு கிளிக் போடவும்

      Delete
    5. பண்டிகையை ஒட்டி பார்சல்கள் அதிகம்...இந்த முதல் வண்டியில் நம் பார்சல்கள் வரவில்லையாம்....2ம் வண்டியில் சேலம் பார்சல்கள் உள்ளனவாம், இப்போது தான் அந்த வண்டி சேலத்தை நெருங்கி கொண்டு உள்ளதாம்.....இன்னும் 30நிமிடங்கள் கடின காத்திருப்பு......

      Delete
    6. டெக்ஸ் விஜய ராகவன்.!@

      கூரியர்காரர் பாடு திண்டாட்டம்தான்.!

      Delete
    7. பாக்ஸ் ஒரு கிளிக் போடவும்

      Delete
  2. நீண்ட நாள் முயற்சி. தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே.

    ReplyDelete
  3. பரவாயில்ல சார்! ஆனாலும் அந்த ஜான் டைனமைட் ஒரு காரைக் கவுத்துப்போட்டுகிட்டு அதுமேல ஏறி உட்கார்ந்து லுக்கு விட்டிட்டிருந்த அந்த அட்டைப் படத்தை மறக்கவே முடியாது! ப்பா!!

    ReplyDelete
    Replies
    1. ஈ.வி.,

      மகாபாரதத்துல துரோணரின் குருகுலத்தில் கௌரவர்களும் பாண்டவர்களும் வித்தை கற்றுக் கொண்டிருந்த சமயம் அது. ஒருநாள் அனைவரின் கையிலும் வில் அம்பை கொடுத்து அதோ அந்த மரத்தில் இருக்கும் பறவையை குறி வையுங்கள் என்றாராம் துரோணர்.
      அவ்வாறே அனைவரும் குறிவைத்தபடி தயாராக இருந்தார்களாம். துரோணர் ஒவ்வொருவரிடமும் என்ன தெரிகிறது என்று கேட்டுக்கொண்டே வந்தாராம். எல்லோரும் மரம் தெரிகிறது. கிளை தெரிகிறது பறவை தெரிகிறது என்றார்களாம்.
      அர்ச்சுனன் மட்டும் பறவையின் கழுத்து தெரிகிறது என்றாராம். உடனே துரோணர் சபாஷ் இப்போது நீ அம்பை விடலாம் என்றாராம். நிற்க. (அட. அந்த நிற்க இல்லை. உட்காருங்க) .
      இப்போ எதுக்கு இந்த கதைன்னுதானே கேக்குறிங்க.

      அந்த ஜான் டைனமைட் போட்டோவுல என் கண்ணுக்கு காரோ., அதன் கலரோ., அதில் அமர்ந்திருந்த ஜானோ தெரியவேயில்லை. நான் அர்ச்சுனனாக்கும்.!
      ஹிஹிஹி!!!!

      Delete
    2. @ கிட்ஆர்ட்டின்

      ஹிஹி! அட்டைப் படத்தின் பேக்ரவுண்டையே அப்படி ரசிச்சிருகேன்னா...
      நான் கடைசியா போட்டிருக்கும் "ப்பா!" எதுக்குன்னு நினைச்சீங்களாக்கும்? :P

      Delete
    3. அய்யாக்களா உங்க இருவரின் ஆட்டத்திற்கே டிபினி கிடைக்காம போச்சுது....க்ர்ர்...கொலவெறியுடன்....

      Delete
    4. ஈ வி & கி ஆ க

      என்னாலே நடக்கு ;-)
      .

      Delete
  4. தமிழ் காமிக்ஸ் பெருங்குடி மக்களுக்கு மட்டும் இன்றே துவங்கிடும் தீபாவளி திருநாளுக்கு எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஈனா வினா அண்ணே

      " பெருங்குடி "

      இதில் ஏதாவது உள்குத்து இருக்காண்ணே :))
      .

      Delete
  5. Dear Edi, Waiting for Diwali Dhamaka package.:)

    ReplyDelete
  6. எனக்கும் நாளையிலிருந்தே தீபாவளி துவங்குகிறது. ஹிஹி.. நீள் விடுப்பு. டிபனி போனா என்ன சார், நமக்கு ஒரு லஞ்சி இல்லாத போயிடுமா என்ன? சப்பை மேட்டர், விடுங்க எடிட்டர் சார். அனைத்து காமிக்ஸ் ரசிக உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. ஆசிரியருக்கும் , சீனியர் ஆசிரியர், ஜூனியர் ஆசிரியர் அவர்களது குடும்பத்தினருக்கும், ஆசிரியரின் Team இனருக்கும், அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும், நண்பர்கள் அனைவரிற்கும் என் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. ///பௌன்சர் விஷயத்தில் கூட நடந்துள்ளது ! அல்பங்கள் 1-7 வரை ஒரு நிறுவனத்திடமும் ; ////

    ங்ஙே!!!! :-)

    ReplyDelete
  9. ///நம் சக்திக்கு மீறிய செயல்கள் எனும் பொழுது இந்த மாற்றம் தவிர்க்க இயலாததாகிப் போகிறது !////

    நோ ப்ராப்ளம் சார்.!

    வெல்கம் ஜேசன்.!

    ஸீ யூ லேட்டர் ஜான்.!

    ReplyDelete
  10. காலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே..

    ReplyDelete
  11. 5.30க்கே அலாரம் வச்சு எழுந்தாச்சு.....6மணிக்கு சைக்கிளிங் போகும் க்ளிக்காருன் தொற்றிக்கொண்டு , கொரியர் ஆபீஸ் போயி, 6.30க்கு பார்சலை வாங்கினால்...... டம், டமார், புஸ்ஸ், பட பட என தீபாவளி வித் டெக்ஸ் வந்து விடும்......

    ReplyDelete
    Replies
    1. வாங்கியாச்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ...பார்சல்....2வது லாரியில் கடைசியாக நமது பார்சல்கள், ஒவ்வொரு நண்பருடையதாக வந்து கொண்டே இருந்தது, அறிவழகன், D.ரவி....மேச்சேரி ரவி கண்ணன்...ஆகா ..க்ளிக்கார்து....சுசீந்ரகுமார்...இன்னும் நிறைய...இதோ விஜயராகவன்... பட பட பட தீபாவளி.....பர பர வென பார்சலை பிரித்து பார்த்தோம்,நானும் க்ளிக்காரும்,....டெக்ஸ் வித் தீபாவளி குண்ண்ண்ண்ட்ட்டாஆஆஆஆஆஆ அற்புதமான பைண்டிங்கிள் என் கையில்.....புரட்டி பார்த்து பூரித்து போனேன், ஆசிரியர் மற்றும் அவர் அணியின் உழைப்பு புரிந்து கொள்ள முடிந்தது..... க்ளிக்கார் தொடருவார்.....

      Delete
    2. வாழ்த்துக்கள் டெக்ஸ் மற்றும் மாயாஜீ ....உங்கள் காமிக்ஸ் காதல் உண்மையிலேயே சந்தோச படுத்துகிறது ...

      Delete
    3. MV சார், அடுத்த ஆண்டு இளவரிசியின் கதை தலைப்பு......
      சட்டமும்.... சுறுக்குக் கயிறும்......விலை ரூபாய் 40.....போட்டோவுல இளவரசியை பார்க்கனுமே....அட்டகாஷ்.....

      Delete
    4. டெக்ஸ் விஜயராகவன்.!@

      ஒருவழியா புதையலை கைப்பற்றி விட்டீர்கள்.?சபாஷ்.!
      மாயாவியின் "இங்கே க்ளிக் " ற்காக வெயிட்டிங்.!

      Delete
  12. ஹிஹிஹி............ மாடஸ்டி கதையை தவிர நீங்கள் எந்த கதையை மாற்றி பல்டி அடித்தாலும் எனக்கு நோ ! பிராப்ளம்.!

    ReplyDelete
  13. ஜேஸன் ப்ரைஸீஸா.,.. சூப்பர் சார்

    ReplyDelete
  14. ஏம்பா லோம்பா.... உங்களோட ஒரே வம்பா போச்சே.... :)

    ReplyDelete
  15. Jason Brice seems mysterious
    I like Mystery
    Welcome to Lion-Muthu New hero :)

    ReplyDelete
  16. காலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
  17. Its a good selection. Happy diwali folks.

    ReplyDelete
  18. விடுங்க ஆசிரியரே,வெல்கம் ஜேஸன்.

    ReplyDelete
  19. தீபாவளி மலரை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நாள்.

    ReplyDelete
  20. Wish you happy diwali vijayan sir

    ReplyDelete
  21. நோ....ப்ராபளம் சார் ...யாருன்னே தெரியாத புள்ளைக வர்றாங்க ...அது யாரா இருந்தா என்ன ... வர்றவங்க சந்தோச படுத்திட்டு போனா சரி ....;-))

    அலுவலகம் கிளம்பியாச்சு ...மாலை பார்சலை கைப்பற்றி விடுவேன் என்ற நம்பிக்கையில் ...காத்து கொண்டு இருக்கிறேன் ...

    ReplyDelete
  22. பெட்டி வந்தாச்சு..

    ReplyDelete
  23. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  24. @Editor sir:
    இன்னும் நமது இணைய தளத்தில் நவம்பர் மாத இதழ்கள் லிஸ்ட் செய்யப்படவில்லை சார்!!! (-:

    ReplyDelete
  25. அட! திடீர்னு ஒரு வியாழக்கிழமை பதிவா?!! என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது....
    சரி இதுவும் நன்மைக்குத்தானே :-)

    ReplyDelete
  26. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  27. திக்..திக்..தீபாவளி..!

    அனைவருக்கும் காலை தீபாவளி வணக்கங்கள்..!

    இருப்பதிலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவரை சந்தோசப்படுத்தி பார்ப்பதுதான்..! அந்த சந்தோஷத்தை இன்று அனுபவத்தேன்..! நேற்றிரவு "தீபாவளி பரிசை கைப்பற்றும் பந்தயத்திற்கு தயாரா சேலம் டெக்ஸ்..?" என போன்செய்த போது..."எங்க ஸார் மழை நம்மளை வெளிய விடமாதிரி தெரியலையே..." என சோகம் தேய்ந்த குரல், எதிரில் கேட்டதும் கொஞ்சம் சோகமானேன்..!

    அதிகாலை ஆறுக்கு செல்போன், "ஸார் எங்க இருக்கீங்க..? நான் கொரியர் ஆபீஸ்ல.." என விசிலடிக்கும் சே.டெக்ஸ் குரல் குதிரையோட்டமாய் கேட்டது. என் மிதிவண்டி குதிரையில் "இதோ வந்துட்டு இருக்கேன்...தங்கம் கைபற்றியாச்சா..!!! " என விசாரித்து கொண்டே, உற்சாகத்துடன் பறந்தேன் [சைக்கிள்ல தாங்க].கொரியர் ஆபிசில் மழையாய் பார்சல்கள், அதன் இடையில் சில காமிக்ஸ் பார்சல், நெருக்கடி தாங்காமல் முனகிக்கொண்டே கிடந்தன. இதோ தங்கம் என நெருங்க.. "ஸார் அது தருமபுரி,கிருஸ்ணகிரி பார்சல்..." என சோகம் தேய்ந்த குரலில் பின்னால் சே.டெக்ஸ்.

    பெருமூச்சுடன் பின்வாங்கி,எதிர் காம்பொவுண்டில் நிற்க...யாரையோ போடவந்த 'கேங்'கை பார்ப்பது போல எங்களை பார்த்துக்கொண்டிருந்த கொரியர் பாய்ஸ், அரைமணிநேரம் அசராது நாங்கள்... கொரியர்ஆபிஸை நோட்டம்விட்டு பார்த்து கொண்டிருந்த எங்களை, தலைசொரிந்துகொண்டே "ஸார் இங்க வாங்க... எந்த ஏரியா..?" என அழைத்து பார்சலை தேட...நானும் டெக்ஸ்ம் பார்சல் அமைப்பை விவரிக்க...இருவர் கொ.பா. தேடி தேடி தேடி தேடிபார்த்து விட்டு சலித்துபோய்.."இதெல்லாம் வேலைக்காது கிளம்புங்க..நெம்பர் இருந்தாலே கஷ்டம்..இதுல பொட்டி பாத்து பிடிக்கிறது..ஆள விடுங்க..மதியத்துக்குள்ள வீட்டுக்கே வரும், இங்க வந்து ஏன் எங்கள ஊசிய தேட வெக்கிறிங்க.." என கையை விரித்தார்கள். பார்சல் கடலை தாண்டி வெளியேறிபடி..."நமக்கு வாய்ச்சது அவ்வளவுதான்.."என புலம்பிய டெக்ஸ் குரல் எனக்குமட்டுமல்ல,அருகில் இருந்த வேறு கெரியர்காரருக்கும் கேட்டது போல. "ஸார் ஒரு வண்டி நாமக்கல் பைபாஸ்ல வந்துட்டிருக்கு ஒரு அரைமணிநேரம் கழிச்சுவாங்க.." என தகவல் கூறினார். "இது சும்மா...அவ்வளவுதான் ஸார் இது ஆகாது, பார்சல் வந்துகுவிச்சத... பாத்தா நாளைக்கு கிடைகுமாங்கிறதே சந்தேகம்..கிளம்பலாமா ஸார்..?" என டெக்ஸ் தொங்கிபோய் கேட்டார்..! "அதெல்லாம் ஆகாது ஒரு பில்டர் காபி சாப்பிட்டு வந்து ப்ளான் பண்ணுவோம் வாங்க.." என இருவரும் சூடான சரவணபவன் காபி முடித்துவிட்டு, மீண்டும் காம்பவுண்ட் சுவரை தொற்றிக்கொண்டோம். "ஸார் உங்க வண்டி..." என ஆபிஸில் இருந்து ஒருவர் கைகாட்ட...சகதியில் ஆடிஆடி வரும் கொரியர் வண்டியை நோக்கி பாய்ந்து ஓடினோம். வண்டி கதவுகள் திறக்கப்பட்டன. உள்ளே எட்டி எட்டி பார்த்தோம். 'இந்த வண்டியில் நம் தங்கம் இருக்குமா...?' மனம் நிறைய ஒரே கேள்வி...மனதில் திக்..திக்..

    தொடரும்...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ..மாயாஜீ. உங்கள் வருகை மகிழ்ச்சி அடைய வைக்கிறது ..முதல் ஆட்டமே தொடர் ஓட்டமா ...

      சூப்பர் ....;-))

      Delete
    2. வெல்கம் பேக் மாயாவி சார்......தீபாவளி தின ( நமக்கெல்லாம் இன்றே தீபாவளி தானே) வாழ்த்துகள் மற்றும் மிகப்பெரிய நன்றிகள் சார்...... நீங்கள் மட்டும் கூட இருந்து ஹெல்ப் பண்ணலனா நள்ளிரவு வேட்டையில் புதையல் கிடைத்து இருக்காது......தொடருங்கள் தொடர்கிறோம்......

      Delete
    3. டாங்க்ஸ் தலீவா & டெக்ஸு

      பாதிவண்டி காலி, மீதி முழுசும் பெரிய பெரிய பார்சல். இதுல எங்க நம் பார்சல்..? என குழப்பம் மெல்ல தலைதூக்க..பெரிய பார்சல்கள் உருட்ட பட்டன. விதவிதமான பார்சல்..அந்த கொரியர் நண்பர் இதுவா..இதுவா..என எடுத்து எடுத்து காட்டினார்..! இரண்டு தொங்கிப்போன முகங்கள் இல்லை..இல்லை என தலையசைப்பதை பார்த்து கொ.நண்பர்.."அட போங்கப்பா.."என முகசாடையிலேயே பேசிவிட்டு, பார்சல்களை செங்கல் விசுறுவது போல வண்டியில் இருந்து விசுறதொடங்கினார். விதவிதமான அளவில் பார்சல்கள் பறந்த...அப்போது...அப்போது...ஒரு பார்சல்..உள்ளே சரிந்த ஒரு பார்சல் நம் பார்சல்...என் கண்கள் அதை நொடியில் ஸ்கேன் செய்துவிட்டது. "பாஸ்..அந்த பொட்டி..அதே மாதிரி பொட்டி..அதை எடுத்து பறக்கவுடுங்க.." என நான் சவுண்டு விட...முதல் கட்டத்தில் தேடி வெறுத்துபோன கொ.பாய் கடுப்புடன் பார்சல்களை பறக்கவிட்டார்.

      பறந்து வரும் பார்சல்களில் உள்ள பெயர்களை அதிவேகத்தில் நான் ஸ்கேன் செய்தேன், ரவி,ரவிகண்ணன், இளமாறன்,சுசிந்த்ர்,ஸ்ரீதர் என வேகமெடுத்தது. வண்டியில் கடைக்கோடியில் இருந்து உருவிஎடுத்து போட்டதில் வேறுசில பார்சல் செம்மண்ணுடனும், மழையில் கொஞ்சமே நனைந்தும் பார்க்க மனம் பதறத்தான் செய்தது...தலையில் கைவைத்துக்கொண்டு "சார்..விஜய..விஜ..ராகவா..ஸார் எம் பேர் ஏதும் இருக்கா..." என கேட்பதை காதிலேயே போட்டுக்கொள்ளாமல் பார்சல்கள் பல கைகள் மாறி கழுகாய் பறந்தன. என் தங்கம் சேதங்கள் இன்றி,கைக்கு வந்துவிட்டாலும், சே.டெக்ஸ் பார்சல் ஆட்டம் காட்டியது. படிப்புவாசம் கொஞ்சம் குறைந்த சுமைதூக்குபவர்கள் கைகள் மாறி பார்சல் படிக்க திணறி, படித்து கொண்டே வந்தார்கள். ஈரோடு விஜய் கூட ele vijay என்பதை .."இந்தப்பா எலி விஜய்ன்னு போட்டிருக்கு இதுவா..?" நீட்டினார்கள்.[இத்தாலிகார் மன்னிக்க..!]

      "சோ..கடவுளே இதுஇல்லீங்க.." என கடுப்பின் உச்சத்தில் இருந்த நேரத்தில்.."இந்தாங்க லைட்ஹவுஸ் விஜயராகவன்" என லுங்கி பனியனில் இருந்தவர் நீட்ட..ஒரு நிமிடம் திகைத்து, பின் சுதாரித்து கொண்டு வாங்கினேன். yes, சேலம்.டெக்ஸ் பார்சல்..! எந்த சேதமும் இல்லாத பார்சல்..! அந்த நொடியில் சே.டெக்ஸ் முகத்தை பார்க்கவேண்டுமே..அட..அட..அட...என்னா மகிழ்ச்சி..! சந்தோஷம்..! குதூகலம்..! தங்கம் கைபற்றிய கணமே ஒரு செல்பி எடுத்துக்கொண்டு...பார்சலை சே.டெக்ஸ் பிரிக்கலானார். அவர் பிரிக்கும்போது...அவர் இருதயத்தின் குதிரை வேக துடிப்பு டக்..டக்..டக்..என தாக்கியது. அவர் பிரித்தகணம் வெடித்தது பாருங்கள் பல ஆயிரம் வாலா வெடிகள், தாரை தப்பட்டை, உருவி மேளம் என அந்த பகுதியே அதிர்ந்தது. ஒரு ஈ,காக்கா கூட நம்மளை கவனிக்கலை...உலகமே கவனிக்கற மாதிரி அப்படி நிறைவு.. போங்கள்..!

      இரண்டுமணிநேர தவிப்பின் முடிவில் சுபம்..என முடிந்தபோது நண்பர் முகத்தில் தோன்றிய சந்தோஷம், தங்கத்தை நெஞ்சோடு அனைத்து கொண்டது,இனி பேசி புரியவைப்பது முடியாது...பாத்துகோங்க...
      இங்கே'கிளிக்'-1

      இங்கே'கிளிக்'-2

      Delete
    4. டெக்ஸ் விஜய் ஜி & மாயாவி ஜி

      அசத்துறீங்களே

      என்னா ஒரு கடமையுணர்ச்சிசூப்பரு :))
      .

      Delete
    5. அட அட
      உங்கள் கா.கா நினைச்சு நேக்கு பெருமையா இருக்கு
      வாழ்த்துக்கள் காமிக்ஸ் காதலர்களே..

      Delete
    6. @ பிரபாகர் T

      கடமை உணர்ச்சியெல்லாம் ஒன்னுமில்லிங்கோ...எல்லாம் ஆர்வகோளாறு..! இப்பதான் என் பார்சலை பிரிச்சேன், உள்ள குட்டிய ஒரு உருட்டுதடி..?!?!...அப்புறம் தான் புரிஞ்ச்சது புக்ஸ் பல சைஸ்ல இருக்கறதால, பேகிங் பாக்கவா இருக்கதான் அந்த பேப்பர் தடின்னு..! எல்லாம் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் கவர் மட்டுமில்லைனா...பல பார்சல் இந்த மழைக்கு நனைஞ்சி, பார்சல் ரெட்டிப்பு ஆகியிருக்கும். அப்புறம் டெக்ஸ் தீபாவளி புக் அட்டை ரொம்பவே ஸ்பெஷல் . முன்பின் அட்டைக்கும், ரெண்டு கதவு திறந்தா...வாழ்த்தும்,வரவேற்ப்பும் சொல்ற விதம் சரியான அசத்தல்..![சிக்கலான பைண்டிங்..பணிபுரிந்ததவர்களுக்கு பாராட்டுக்கள்]

      இன்னொரு நுட்பமான விஷயம், வரிசைஎண்கள்..! அட்டையில் உள்ள வரிசை எண்கள்..என்னை பார்த்து, இனிவரும் காலங்களில் தொடரும் என்பதை ஆழமாக தெரிவிக்கிறது..!

      Delete
    7. ஆஹா கலக்குறீங்க நண்பர்களே....வாழ்த்துகள் !
      இது போல சென்று கொண்டிருந்த எனது தடம் மாறியதால் ....காலையில் பத்து மணிக்கு சென்றதக்கே இன்னும் வரலை வீடிற்கு வந்ததும் வாங்கி கொள்ளுங்கள் என கூற ....அவர்களை சங்கட படுத்த விரும்பாமல் வந்து விட்டேன் .மதியம் 12க்கு வந்து விட்டது .....வீட்டிர்க்குசென்று பார்க்க வேண்டும் ......அது வரை ஷ்ஷ்ஷ் ஷ்ஷ்
      ஷெல்டனை காணும் ஆவலுடன்

      Delete
    8. சூப்பர்!
      கலக்கறீங்க பாஸ்!

      Delete
    9. மாயாவி வணக்கம்.! மீள் வருகைக்கு நன்றி.! உங்கள் இருவரின் காமிக்ஸ் நேசம் மிரளவைக்கிறது.!உங்களோடு ஒப்பிடும் போது நான் வெறும் எல்.கே.ஜி.தான்.!

      Delete
  28. வங்கியச்சி புத்தகத்தை

    ReplyDelete
  29. எடி சாப்
    ஆன்லைன் ல நவம்பர் மாதம் இன்னும் கடை திறக்கவில்லையே.
    என்ன காரணம்..
    யார் செய்த தாமதம்.??
    சீக்கிரம் கடைய தொறங்க சாமியோவ்..

    ReplyDelete
    Replies

    1. கடைய தொறந்துடாங்க
      ஆர்டரும் பன்னியாச்சி
      சொக்கா எப்ப வரும்
      எப்ப வரும்
      என் சொர்க்கம்..

      Delete
  30. "தல" தீபாவளிக்கு தயாராக உள்ேளாம்.
    ெதாடரட்டும் ேவட்னட.

    ReplyDelete
  31. "தல" தீபாவளிக்கு தயாராக உள்ேளாம்.
    ெதாடரட்டும் ேவட்னட.

    ReplyDelete
  32. நமக்கும் தல வந்துட்டார்

    கலக்கல் தீபாவளிதான்

    அருமை சார் :))
    .

    ReplyDelete
  33. Warm Welcome

    JASON BRICE

    யாரா இருந்தாலும் வரவேற்போம் :))
    .

    ReplyDelete
  34. பல பேரு கண்ணுபட்டாலும் பார்ஷல் பத்திரமா வந்து சேந்திடுச்சேய்!!!!!! :-)

    ReplyDelete
    Replies
    1. என்னாது மார்சல்(டைகர்) பத்திரமா வந்துட்டரா :))
      .

      Delete
    2. எங்க 2பேர் கண் பட்டது....உங்களுக்கு குத்தமா???..... உங்க பார்சலையும் கொண்டு போயிருக்கனும்...நேர்ல வந்து ஸ்வீட்டும் பட்டாசும் வாங்கி தந்துட்டு , தங்கத்தை கொண்டு போங்கனு சொல்லி இருக்கனும்.... அப்பவும் அந்த கொரியர் நண்பர் சொன்னாரு, " உங்கள்து எத்தினி பார்சல்னாலும் எடுத்துக்கோ சார், எல்லாத்துக்கும் கையெழுத்து போடு சாரு போதும் "--- என....ஹூம் , பாவம் கிட் மாமா, என நினைத்து பார்சலை மேச்சேரி போகட்டும்னு விட்டு வந்தேன் அல்லவா???.. இதுவும் பேசுவீக, இன்னமும் பேசுவீக.....

      Delete
  35. Vijayan sir,

    I don't know whether Jason Brice is "UA" or "Adults only" story line like Bouncer, but I have shared my suggestion below.

    I did not subscribe for Bouncer stories in 2014, since I came to know it has vulgar story line.
    Please do not bring so called matured stories (Adults only stories), to main line subscription.
    "U" and "UA" are good to have in main subscription. But having "vulgar" story lines is not a good idea.
    I wish to buy books and keep in shelf. I don't want the kids to take and read it in near future.Hence I don't buy those kind of stories.
    But keeping these books in different subscription package is good, it will reach people who wants to buy it.

    Regards,
    Mahesh

    ReplyDelete
  36. நள்ளிரவு 5.30க்கு கிளம்பி தீபாவளி மலரை கைப்பற்ற இவ்வளவு போராட்டமா என்ற நினைவுகள் புத்தகத்தை பார்த்த உடன் பறந்து போய் , உற்சாகம் தொற்றிக்கொண்டது சார்.......சிறுவயதில் அப்பா வாங்கி வரும் பட்டாசு பார்சலை பிரிக்கும் போது கிடைத்த ஆனந்தம், இன்று மீண்டும் 25வருடங்களுக்கு பிறகு துளியும் குறைவில்லாமல் கிடைத்தது சார்....ஸ்பெசல் நன்றிகள் உங்களுக்கும், உங்கள் அணியினருக்கும் சார்....கடைக்கு சென்று பொறுமையாக புரட்டி பார்த்ததில் அட்டைப்படம் டாப் செல்டன் இதலுடையதே சார்....
    தீபாவளி மலர் எண்ணா கணம்...அசத்தல் சார்...கடந்த ஆண்டின் ஏமாற்றம் ஓடோடி விட்டது சார்.......முதல் கதை "டைனோசரின் பாதையில"---எவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈளம், அப்பாடி........349பக்கம்.......10000வாலா தான் சார்...
    2வது கதை "எமனின் வாசலில் ";--- வாவ் வாவ் அட்டகாசமான ஓவியங்கள் சார்...அப்படியே செதுக்கியுள்ளார் சித்திரங்களை......க்ளோஸ் அப் சாட்களில்,நேரில் பார்ப்பது போல அத்துனை துல்லியம்.....7ஆண்டுகள் ஓவியரின் உழைப்பு ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது சார்.....ஓவிய ரசிகர்களுக்கு செமத்தியான விருந்து காத்துள்ளது நண்பர்களே.......முதலில் துக்கடா வெடிகளை வெடித்து விட்டு.....தீபாவளி இரண்டு நாள் விடுமுறையில் 10ஆயிரம் வாலா படிக்க ப்ளானிங் .....

    ReplyDelete
  37. @edi

    I had requested a copy of diwali malar to be sent to my friends son yday over phone and sent an email also.

    Really happy and appreciate your team for replying to the email after sending out the book.

    Kudos and Thank you.

    ReplyDelete
  38. NO JOHN TIFANY- வட போச்சே

    JASON BRICE - தலைவர் பஞ்ச் கண்ணா வருவது வராம இருக்காது வராதது வராது ! Huum .........!

    Edit sir இயல்பாக நடக்கும் இந்த விஷயங்கள் ஏற்புக்கு உரியன நிலைமையை விளக்கியதற்கு நன்றி

    கோரிக்கை: சென்ற வருடம் போல அறிவித்த புத்தகத்தை சர்வே ஏதும் வெச்சு தூக்கும் படலம் இல்லாமல் அறிவித்த புத்தகங்களே வருமாயின் all happy அண்ணாச்சி !

    ReplyDelete
  39. hi .new coming is best story.l knew it.l like bouncer.so happy.i am magic wind fan .like tex but its little over.martin and nick 1 slot only its bad.

    ReplyDelete
  40. சார்,

    மேலேயுள்ள டெக்ஸ் சித்திரம் அட்டகாசம். அதில் வர்ணத்தை தெளித்து ஏதாவது டெக்ஸ் இதழுக்கு உபயோகப் படுத்தி அதகளம் பண்ணயிருக்கலாம். இப்படி சாதாரணமாக போட்டிருக்க வேண்டாமே...!?

    ReplyDelete
  41. நமக்கும் தல வந்துட்டார்

    கலக்கல் தீபாவளிதான்

    அருமை சார் :))

    ReplyDelete
  42. அருமையான இதழ்கள் ஆசிரியரே....
    இன்று காலை கிடைத்தன.டெக்ஸின் சித்திரங்களும் உங்களின் தமிழாக்கமும் அட்டகாசம்...
    அப்புறம் என்னுடைய டெக்ஸ் தீபாவளி கலக்கல் இதழின் அட்டைப்படங்கள் உள்பக்கங்களை விட சற்றே சிறியதாக அமைந்து உட்தாள்கள் காட்சி தருவது நெருடலாக உள்ளது.காலத்திற்கும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களில் நான் எந்த ரிஸ்க்கையும் எடுப்பதாய் இல்லை.....
    தயவு செய்து மாற்றுப்புத்தகம்(என் கணக்கில்)அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்...
    திருப்பத்தூர் விலாசத்திற்கு அனுப்பவும்...
    Please...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வந்த புத்தகங்களும் அப்படித்தான் இருக்கிறது. அட்டையை சிறிது உட்பக்கம் வைத்து மடித்திருக்கிறார்கள். அட்டைப்படத்தை சற்றே வெளியே தள்ளி மடக்குங்கள், சரியாகிவிடும்.

      Delete
    2. Thanks RAMG75. This tip worked for me.

      Delete
    3. ராம்ஜி 75 உங்கள் ஆலோசனை சூப்பர்.!

      Delete
  43. புத்தகத்தைக் கைப்பற்றிய நண்பர்கள் அனைவரும் உற்சாகத்தின் உச்சத்திலிருக்க, இன்னும் மூன்று நாட்களுக்குப் பிறகே காணும்படியான சூழ்நிலையில்... ஏக்கத்துடன் ஈனா வினா!

    கொண்டாடுங்கள் நண்பர்களே! :)

    ReplyDelete
  44. அக்டோபர் மாத பார்சல் வழமைக்கு மாறாய் வரவில்லையே என எண்ணி , தபால் ஆபிசில் விசாரிப்போம் என தடியுடன் கிளம்பி , எதற்கும் ஒரு முறை கடித பாக்ஸ் இனை ஆராய்வோம் என பார்த்த எனக்கு இன்ப சந்தோசம் . போன மாத இதழ்கள் இப்போதுதான் எனக்கு கிடைத்தன . அதுவே எனக்கு சந்தோசம் என்னும்போது , "தல " இன் பார்சல் கிடைத்த நண்பர்களின் சந்தோசத்தினை , அதுவும் தீபாவளி அன்று பார்சல் இனை கைப்பற்றியமைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி . படித்து விட்டு வருகிறேன் .

    ReplyDelete
  45. டியர் எடிட்டர்,

    A warm welcome to JASON BRICE !!

    ஆனா ... முன்னொரு தபா, "புளிய மரத்தடியில் வடை சுட்டு விற்பேனே தவிர இந்த மாதிரி கதைகள் போட மாட்டேன்" அப்டீன்னு யாரோ எழுதிய ஞாபகம் ;-)

    ReplyDelete
  46. புத்தகங்கள் வந்து சேர்ந்தன.
    ஜானியை அனுப்ப மறந்து விட்டார்கள். அதனால் 3 புத்தகம் மட்டுமே கிடைத்தது.
    படித்துக்கொண்டிருக்கிறேன்.

    ஜேசன் ப்ரைஸ் நல்ல கதை. தயவு செய்து மூன்று பாகங்களையும் ஒரே இதழாக போடுங்கள் சார். தனித் தனி இதழ் வேண்டாம்.

    அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள். டெக்ஸ் ரசிகர்களுக்கு இன்று தான் தீபாவளி :-)

    ReplyDelete
  47. //நேற்றைய காலை ஒன்றரைக் கிலோ எடை கொண்ட நமது நவம்பர் இதழ்கள், புஷ்டியான டப்பாக்களில் ஒட்டு மொத்தமாய்ப் புறப்பட்டுள்ளன//

    என்ன கொடும சார் இது.... எனக்கு இன்னும் நூறு கிராம்கூட வரல.... :(

    ReplyDelete
  48. இன்று புத்தகங்கள் கிடைத்தன Wayne Sheldon அட்டை மட்டும் மிக மிக மெல்லியதாக இருக்கிறது. 2012 பிறகு வந்த அட்டைகளில் தரமற்ற படுவேகமாக அட்டை

    ReplyDelete
  49. விஜயன் சார், ஆச்சரியம்... புத்தகம்கள் கிடைத்து விட்டன! நன்றி... நமது அலுவலகத்தில் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    என்னை கவர்ந்தது: 2016 அட்டவணை, அதன் பொருட்டு உங்கள்மெனகடல். நன்றி!

    ReplyDelete
  50. நேற்று மாலை புத்தகங்களை கண் பற்றினேன் .அட்டை படங்கள் அனைத்தும் தூள் .....குறைவொன்றுமில்லை .அட்டகாசமான தீபாவளி காத்திருப்பது இதன் மூலம் உறுதிங்கோ.....

    ReplyDelete
  51. டியர் எடிட்டர்,

    RAMG75 சொல்வது போல JASON BRICE சந்தா Zல் மூன்று புத்தகங்கள் இணைத்து 'ப்ரைசே .. பாய்சே .. கொல்லாதே' என்று ஒரே புக்கா போட்டுவிட்டு, அந்த Tiffannyக்கு பதிலா ஒரு ப்ளுகொட்ஸ் மற்றும் டயபாலிக் .. ஹி ஹி ஹி !!!

    ReplyDelete
  52. டியர் எடிட்டர்,

    டெக்ஸ் சேவாக் போல தீபாவளி என்று பட்டாசு வெடித்துக் கொண்டிருக்க, இந்தப் பக்கம் சாகஸ வீரர் ரோஜர் டிராவிட் பாணியில் ஓசைப்படாமல் சதம் அடித்திருக்கிறார் .. இது கலரில் வராமல் B&Wல் வந்திருக்க வேண்டியது.

    The plot is awesome .. though coloring is awful !! எனினும் நிறைவான ஒரு கதை படித்த திருப்தி !

    ReplyDelete
  53. ஆசிரியர் அவர்களுக்கு ...

    நேற்று மாலை புத்தகம் கிடைக்க பெற்று இரவு அனைத்து இதழ்களையும் புரட்டி பார்க்கும் இன்பம் ஏற்பட்டது ....இந்த முறையும். அனைத்து அட்டை படங்களும் அருமை ...அதுவும் ஷெல்டன் அட்டைப்படம் செம கலக்கல் ...என்ன ஒன்று மெலிதான அட்டையாக போய்விட்டதால் காலையில் கொஞ்சம் சுருட்டியது போல வந்துவிட்டது ...உள்ளே சித்திர தரங்கள் அனைத்தும் அருமை .....டெக்ஸ் இதழ் பற்றி சொல்ல தேவை இல்லை ....அந்த பருமனான. அளவே பட்டையை கிளப்புகிறது ...உள்ளே இரண்டு கதைகளின் சித்திர தரமும் அட்டகாசம் ...இரண்டாவது கதையின் சித்திரங்கள் நீங்கள் சொன்னது போல வாவ் ரகம் ...அப்படியே நேச்சுரலாக உள்ளது ..அதே சமயம் டெக்ஸ் ...கார்சன் அவர்களின் க்ளோசப் முக பாவங்கள் மற்ற சித்திரங்களை விட சாதாரணமாகவும் தோன்றுவது போல ஒரு உணர்வு .....ஆனால் மற்ற பிண்ணனி ஓவியங்கள் பாராட்ட வார்த்தை இல்லை ..அவ்வளவு அட்டகாசம் ....அதை போலவே மறுபதிப்பு இதழும் சரி ...ரோஜரின் இதழும் சரி குறைவில்லா படைப்புகள் ....அனைத்து இதழ்களிலும் உங்கள் விரிவான ஹாட்லைன் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது ...அப்படியும் சிங்கத்தின் சிறு வயதில் பக்கத்தை காணாமல் போக செய்தது வருத்தமே ...


    அடுத்த வருட புத்தக விளம்பர இணைப்பு அட்டகாசம் சார் ...ஒவ்வொரு கதையுமே எதிர் பார்ப்பு உள்ள இதழாகவே உள்ளது .ஜூலியா ஒன்று மட்டும் எதிர் பார்ப்பை ஏற்படுத்த வில்லை எனினும் விளம்பர பக்கத்தை பார்க்கும் பொழுது இந்த முறை ஏமாற்றப் மாட்டார் போல உள்ளது ..பார்க்கலாம் ...அதே போல மறுபதிப்பு பட்டியல் இதழ்களில் மும்மூர்த்திகள் மூன்று பேருக்குமே காமிக்ஸ் க்ளாசிக் இதழில் வராத கதைகளாக ஒவ்வொன்று கொடுத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது ....

    மொத்ததில் அடுத்த வருடம் செம கொண்டாட்டம் என ட்ரையலர் பறைசாற்றுகிறது ...இந்த மாத இதழ்கள் இனிதான் படிக்க வேண்டும் ...படித்து விட்டு கருத்துக்களை பகிர்கிறேன் சார் ..நன்றி ...

    ReplyDelete
  54. என்ன ஆச்சரியம், எத்தனையோ நீண்ட நாட்களுக்குப் பின்னர் பின்னூட்ட ஏரியா கொஞ்சம் காத்தாடுது. இதுக்குள்ள எத்தனை லோடு மோர் குடிக்கணுமோனு பயந்துகிட்டே வந்தேன். :-)))

    இதழ்கள் கிடைத்தன. குறிப்பாக டெக்ஸ் இதழ் மிகமிக அருமை. அட்டைப்படம் அட்டகாசம். இது வழக்கமான தடிமனா, அல்லது மடிக்கப்பட்டிருந்ததால் எனக்கு தடிமனாக தோன்றியதா தெரியவில்லை.. ஹார்ட்கவரைவிடவும் எனக்கு இந்த தடிமன் அட்டைதான் மிகவும் பிடித்திருக்கிறது. கத்தரிப்பூ கலர் தீம் ஒரு கிளாஸிக் லுக்கை அட்டைக்குத்தந்திருந்தது. அடுத்த வருடம் வண்ணத்தில், அதுவும் ஒரு கதை அதுவும் மூணு இதழாகவெல்லாம் சரியாக வருமா தெரியவில்லை. அது போடுங்க அல்லது போடாம போங்க.. அது உங்க இஷ்டம். இதுமாதிரி பிளாகன் ஒயிட்ல சுமார் 600 பக்கத்துக்கு ஒரு குண்டு போட்டீங்கன்னா செமையா இருக்கும். அது டெக்ஸாத்தான் இருக்கணும்னும் அவசியமில்லை. ஆனா டெக்ஸ், மார்டின், டயபாலிக் தவிர வேற யாரும் செட்டாகுமானு தெரியல..

    அல்டிமேட்டா சொல்ல வர்றது... பிளாகன் ஒயிட், 600 பக்கம், இதே மாதிரி அட்டை! மைண்ட்ல வைச்சுக்கோங்க ப்ளீஸ்!!

    (தொடரும்)

    ReplyDelete
  55. புத்தகங்களை நேற்று கைப்பற்றிவிட்டேன்.!கோர்ட் தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் விடுமுறை எனவே தற்போது பயங்கர பிசி.மேலோட்டமாக பார்த்ததில் அனைத்தும் அட்டகாசம்.டெக்ஸ் வில்லர் குண்டு + ஓவியங்கள் சான்சே இல்லை அவ்வளவு அருமை.! ஓய்வுநேரத்திற்காக வெயிட்டிங்.!

    ReplyDelete
  56. இந்த தளத்துல 2016 முன்னோட்டம் படிக்கையில் அவ்வளவா உள்வாங்க முடியலை. அதுவும் மெயின் சந்தாவான சந்தா ஏ, சரியா அமையலையோனு ஒரு டவுட்டும் வந்துச்சு.. இப்ப முன்னோட்ட புக்கை பார்க்கும்போதுதான் சீரியஸ்னெஸே புரியுது.. நோ வேர்ட்ஸ் டு ஸே! AWESOME!

    அனைத்துத் தரப்பையும் மிக சின்சியராக கருத்தில் கொண்டு, ஒரு சிற்பத்தைப்போல மிகக் கவனமாக ஒவ்வொரு சந்தாவையும் வடிவமைத்திருக்கிறார் எடிட்டர். உண்மையில் பிரமிப்புதான். காமெடி+கார்டூன் என சந்தா சி, பிரமிப்புன்னா, சந்தா பி நீண்ட நாள் நண்பர்களின் கோரிக்கை என்ற வகையில் மட்டுமல்ல, உண்மையில் டெக்ஸ் தனி சந்தா ஒர்த்தானதுதான் எனவும் தோன்றியது. நமது விற்பனை முகமும் சற்றே மகிழும் இந்த சந்தாவால். அதோடு மெயின் சந்தாவான ஏவும் சர்வ சிரத்தையோடு அமைக்கப்பட்டிருப்பதாய் தோன்றியது. அதகள ஆக்‌ஷன்ஸ்!! அதோடு பொருளாதார மற்றும் பல காரணங்களால் ஏவை மட்டும் செலக்ட் செய்பவர்களில் டெக்ஸ் ரசிகர்களை ஏமாற்றாவண்ணம் மெயின் சந்தாவிலும், ரீபிரிண்டிலும் குறிப்பிடத்தகுந்த இடமளித்து கிளப்பியிருக்கிறார். சந்தா டியான தூக்க அணுகுண்டுகள் மட்டும்தான் சுமார். ஆயினும் அதற்கும் ஒரு பெரிய நாஸ்டால்ஜியா முகம் இருப்பதால் பல நண்பர்கள் மகிழ்வர். நமக்கும் சேகரிப்பு எனும் ஒரு காரணமிருப்பதால் பெரிய மாற்றுக்கருத்து இல்லை. இத்தனையையும் 4000க்குள் அடக்கிவிட பிரயத்தனம் செய்திருக்கிறார் என்பதும் புரிகிறது. இந்தக் காதலும் ஒரு பெரும் நன்றி!

    மொத்தமாக அனைத்து கமர்ஷியல் -நான் உட்பட- தரப்புக்கும் மிக்க மகிழ்ச்சி!

    கி.நா குரூப்பு மட்டும் பாவம்னு நினைச்சா.. ’அட நீங்க நம்ப குரூப்புங்க முதல்ல வந்த விருந்தாளுகல்லாம் சாப்புட்டுப் போவட்டும், நாம தனியா போய் ஒரு கட்டிங் போட்டுட்டு வந்து வெளுத்துக்கட்டுவோம், தனியா லெக்பீஸ் எடுத்துவைக்கச்சொல்லியிருக்கேன்னு’ நமக்குப் புடிச்ச மச்சானை மட்டும் கல்யாணவீட்டுல தனியா கவனிக்கிறாப்புல அவங்களுக்கும் தனி பிளான் வைச்சிருக்காரு. மொத்தத்துல இந்த 2016 பட்ஜெட் ஒரு.. சே.. இந்த 2016 முன்னோட்டம் ஒரு நெவர் பிபோர் கொண்டாட்டம்னுதான் சொல்லணும்.!!

    எடிட்டருக்கும், அவர் இப்படியெல்லாம் பிளான் பண்ணும் வகையில் அவரை கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி தயார் செய்த நம் போராட்டக்குழுக்களுக்கும் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
    Replies
    1. :)

      +1


      //நமக்குப் புடிச்ச மச்சானை மட்டும் கல்யாணவீட்டுல தனியா கவனிக்கிறாப்புல அவங்களுக்கும் தனி பிளான் வைச்சிருக்காரு.//
      :D



      Delete
  57. எங்கள் இளவரசி.க்கு, அடுத்த வருடம் ஒரே கதைதான் என்பதால் சோகத்தில் மெலிந்து விட்டார்,ஆனாலும் கலரில் அட்டகாசம்.!

    ReplyDelete
  58. Happy to get the long waited "Thigil Nagaril Tex" in 2016. Thank you Vijayan Sir.

    ReplyDelete
  59. சந்தா Zல் தோர்கல் மட்டும் லைட்டா இடிக்குது. அதை அப்படியே வேற ஏதாச்சும் சந்தாக்கள்ல தள்ளிவிட்டுட்டு (இல்லைனாலும் மெதுவா அடுத்தவருசம் போடுங்களேன், இப்ப என்ன? ஹிஹி!) Z பூரா ஒன் ஷாட், ஒலக கதைகள், வார் கதைகள், லவ் கதைகள், இலக்கியக் கதைகள்னு அப்படியே உலகே மாயம், வாழ்வே மாயம்னு போனா சூப்பரா இருக்கும்! மனசு வைப்பாரா எடிட்டர்?

    எல்லா சந்தாவிலும் குறஞ்சது 12 புக்கு, குறைஞ்சது 12 கதையிருக்கு. ஊருக்கு இளைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டிங்கிறாப்புல சந்தா Z ல மட்டும் 6 புக்கு, 8 புக்குனு கஞ்சம் பிடிச்சீங்கன்னா தெரியும் சேதி!! பிச்சி பிச்சி!!

    ReplyDelete
    Replies
    1. தோர்கலுக்கு இப்போது கிடைத்திருக்கும் 'மாஸ்' ஐப் பயன்படுத்தினால் சந்தா Z க்கு கூட்டம் கூடுமே பாஸ்!

      Delete
    2. ஆதிதாமிரா.!@

      //ஊருக்கு இளைத்தவன்.// அதுதான் இஸட் சந்தா உள்ளதே.? அது உங்கள் ராஜ்யம்தானே.? நாங்கள் கைகட்டி வாய்மூடி ஓரமாய் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம்.(சந்தா கட்டிவிடுவேன்.ஆனால் யாரவது கதை விளக்கினால்தான் உண்டு.!)

      Delete
    3. //எல்லா சந்தாவிலும் குறஞ்சது 12 புக்கு, குறைஞ்சது 12 கதையிருக்கு. ஊருக்கு இளைச்சவன் புள்ளையார் கோயில் ஆண்டிங்கிறாப்புல சந்தா Z ல மட்டும் 6 புக்கு, 8 புக்குனு கஞ்சம் பிடிச்சீங்கன்னா தெரியும் சேதி!! பிச்சி பிச்சி!!//
      +1
      அப்புடி சொல்லுங்கோ !

      Delete
    4. ஆதி தாமிரா.!&பொடியன் !& சதீஸ் குமார்.!@

      "ஒன்னு கூடிட்டாங்கய்யா ......ஒன்னு கூடிட்டாங்க "

      நான் எஸ்கேப்...............

      Delete
  60. எங்கள் இளவரசி.க்கு, அடுத்த வருடம் ஒரே கதைதான் என்பதால் சோகத்தில் மெலிந்து விட்டார்,ஆனாலும் கலரில் அட்டகாசம்.!

    ReplyDelete
    Replies
    1. கருப்பு வெள்ளையில் என தானே உள்ளது MV சார்...

      Delete
    2. ஹிஹிஹி ...........வருகிறது என்ற விளம்பரம் கலரில் தானே உள்ளது.!

      Delete
  61. புத்தக அட்டையிலேயே வெளியீட்டு எண் வெளியிட்டது பயனளிக்கும் ஒன்று சார் ....தொடர்ந்து இதை தொடருங்கள் சார் ...

    ReplyDelete
  62. @எடிட்டர் :

    எமனின் வாசலில் சித்திரங்கள் மிக அற்புதம். இவை வண்ணத்தில் விட கருப்பு வெள்ளையில் தான் அதிகம் ரசிக்க முடிகிறது. இதை பார்த்த பின் டைகர் இன் தங்க கல்லறை, மின்னும் மரணம் தொடர்களையும் இதை போல தரமான தாளில் b/w ல் பெரிய அளவில் போட்டிருக்கலாம் என தோன்றுகிறது. என் பெயர் டைகர் b/w ல் காண ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .

    தற்போதைய சைசில் இருந்து இன்னும் அதிகரிக்க இயலுமா ? 21 x 27?

    ReplyDelete
  63. 2016 வெளியீடுகளின் பட்டியலை பார்க்கும்போது ஆதிதாமிரா கூறியவைகள் தான் நினைவில் வந்தது.எல்லோருடைய மனசும் சந்தோசப்பட எவ்வளவு நாள் மெனக்கெட்டாரோ.?
    அதை புரட்ட புரட்ட அப்படி ஒரு ஆனந்தம் வருகிறது.! வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல் ஆனந்த வேதனை.!
    நன்றி சார்.!_______/\_______

    ReplyDelete
  64. Dear Editor
    I didn't get 2016 story list booklet
    Please send it with next month issues if possible
    Arvind
    Besant nagar
    Chennai

    ReplyDelete
  65. Dear Editor
    I didn't get 2016 story list booklet
    Please send it with next month issues if possible
    Arvind
    Besant nagar
    Chennai

    ReplyDelete
  66. கதைகளைப் படிக்காத நண்பர்களுக்காக அடக்கியே வாசிக்கிறேன் ..டினோசாரின் பாதையில் கதை
    நீஈஈஈள ம் ..மயிலுக்கு தோ கை நீளமாய் இருந்தால் தப்பா முடிந்ததும் முடிந்து விட்டதே என்ற உணர்வுதான்
    பார்னம் பயல் போல் ஒரு ஜாலியான பயலாக இருக்க ஆசைதான் ..அடுத்த கதைக்கு ஏழு வருஷம் செலவு பண்ணி படம் வரைஞ்சாராம் ..பலே வெள்ளைய தேவா ..பாராட்டுகிறேன்

    ReplyDelete
  67. மிக மிக நல்ல கதைகள் ..இதை இதைத்தான் எதிர் பார்த்தேன் ..டெக்ஸ் என்றாலே தடாலடிதான் ..ஏகப்பட்ட கதைகள் படித்ததால் விக்டர்தான் வில்லன் என்று ஊகிக்க முடிந்தது .

    ReplyDelete
    Replies
    1. BAMBAM BIGELOW : கதைகளில் ட்விஸ்ட் வைப்பது ஒரு விதம் ; ட்விஸ்ட் இல்லாமலே சுவாரஸ்யம் விதைப்பது இன்னொரு ரகம் ! இரவுக் கழுகார் பிந்தைய பாணியின் ரசிகர் !!

      Delete
  68. டெக்ஸ் கதைகளை ஏக்தம்மில் எந்தவித தொந்தரவு இல்லாமல் படிக்க வேண்டும்.எனவே நான் வெயிட்டிங்...................!

    மஞ்சள் நிழல் கதையை படித்து முடித்து விட்டேன்.மஞ்சள் நிழல் வில்லன் முன் கதையின் தொடர்ச்சி போலும் , இடையில் படித்ததுபோல் இருந்தது.
    இந்த நெருடல் தவிர வேறு எந்த குறையும் இல்லை. வில்லனை ஹிப்பிபோல் டம்மி பீஸாக காட்டிவிட்டார்கள்.கதை பரபரப்புடன் வேகமாக சென்றது.!ஓவியங்களும் கலரும் எனக்கு பிடித்து இருந்தது.!

    வில்லனை ஒரு தடவை மட்டும் காட்டிவிட்டு , அதன்பின் கடைசிவரை காட்டவே இல்லை.! அதுதான் தலைப்பில் நிழல் என்று வருகிறதோ.!இன்னமும் கதை தொடர்கிறதோ.?

    ReplyDelete
  69. குண்டு புத்தகத்தை பார்க்க பார்க்க அவ்வளவு ஆசையாக உள்ளது.பைண்டிங் அருமை.!

    ReplyDelete
  70. மஞ்சள் நிழல் கதையில் .,காமிக்ஸ் டைம், அருமை.! பள்ளிக் கூட நினைவில் லாயித்து பின் தற்போதய நம் குட்டீஸ் பள்ளிக்கூட நினைவில் மூழ்கி ,அப்படியே தீபாவளி பொங்கல் என்று இனிமையான நினைவுகளுடன்.!மற்ற புத்தகங்களின் குறை நிறைகளை கூறிவிட்டு பின் போன மாத இதழ்களின் ரிசல்ட்களை கூறி வலைதளம் இல்லாத காலத்தில் எழதிய ஹாட் லைன் போல் அற்புதமாக இருந்தது !(. சமீப காலங்களில் காலில் வென்ணீர் ஊற்றியது போல் ஒரு அவசரம் தென்பட்டது.!)

    ReplyDelete
    Replies
    1. Madipakkam Venkateswaran : நிஜத்தைச் சொல்வதானால் - நாம் எழுதுவது யாருக்கென சின்னதொரு குழப்பம் அவ்வப்போது தலைதூக்குவதே ஹாட்லைனில் ஒரு வித நெருடல் தெரிந்திடக் காரணம் ! பதிவைப் படிப்பதும், மௌனமாய்ப் பங்கேற்பதும் நம் வாசகர்களில் எத்தனை சதவிகிதம் என்பது சரியாகத் தெரியாத போது - "இது மறுஒலிபரப்பாகப் பார்க்கப்படுமா - அல்லது (புதியவர்களுக்கு) புதிதாய்த் தெரிந்திடுமா ? " என்ற கேள்விக்கு விடையில்லை என்னிடம். Maybe அது தெரிய வரும் பொழுது - என் பாடு கொஞ்சம் சுலபமாகிடும் !

      Delete
  71. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  72. இந்த தீபாவளி காமிக்ஸ் தீபாவளியாக மட்டுமல்லாமல் நண்பர்கள் தீபாவளியாகவும் மலர செய்து விட்டது போராட்ட குழு என்கிற சேந்தம்பட்டி குழு என்கிற வெளியே காஜா குழு என அழைக்கப்படும் நண்பர்களுக்கு ....இந்த செய்தியை இங்கே பகிரலாமா வேண்டாமா என நேற்றிலிருந்து குழப்பமாக இருந்தாலும் சில பதிவுகளுக்கு முன் நண்பர்களின் கருத்து வேறுபாட்டினால் ஆசிரியர் மனம் வருந்திய பொழுது இந்த செய்தியை அறிந்தால் அவரும் மகிழ்வாரே என்ற நோக்கில் பெயர்களை குறிப்பிடாமல் இங்கே தெரிவிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தேன் ...

    எங்கள் காமிக்ஸ் நணபர்கள் வட்டாரத்தில் நமது ஆசிரியரின் கொரியர் பார்சலுடன் நண்பர்களுக்கு மற்றொரு பார்சலும் கதவை தட்டியுள்ளது ..இரண்டு மூன்று .டீ சர்ட் பார்சலுடன் இரண்டு ..மூன்று காமிக்ஸ் இதழ்களும் ஒவ்வொரு நண்பர்கள் இல்லத்திலும் கதவை தட்டினால் மகிழ்ச்சிக்கு அளவு ஏது ....அதுவும் நண்பர்களிடம் இல்லாத இதழாக ....அரிய இதழாக உள்ள கழுகு வேட்டை ....மரண மாஸ்டர் ...கத்தி முனையில் மாடஸ்தி ...இரத்த நகரம் என ஒவ்வொரு வருக்கும் விரும்பிய தேவையுள்ள புத்தகங்களை அனுப்பி வைத்ததிற்கு காரணம் நட்பா .....கண்டிப்பாக இல்லை ....அதை விட அதிகம் ....இத்தனைக்கும் நாங்கள் சந்திப்பதோ ....கூதுகுலாவுவதோ வருடத்தில் புத்தக காட்சி சமயங்களில் மட்டுமே ....அந்த நண்பர் அப்படி என்றால் மற்றொரு நண்பர் பல இன்னல்களுக்கு இடையிலும் பேருந்தில் வந்து தங்களிடம் இல்லாத புத்தகம் இது தானா என விசாரித்து அந்த இதழை பரிசாக கொடுத்து விட்டு செல்வதும் நட்பினால் மட்டுமா ....இல்லை நண்பர் யாரவது அறியாத ஊரில் பயணமானால் அங்கே உள்ள குழு நண்பர்கள் தங்கள் உறவினரை போல அழைத்து உதவி செய்து வழி அனுப்பி வைப்பதும் நட்பினால் மட்டுமா ....தங்கள் வீட்டு விசேடங்களுக்கு உறவினர்களை அழைப்பது போல நண்பர்களுக்கும் அழைப்பு வைத்து சிறப்பித்து வைத்ததிற்கு காரணமும் நட்பு மட்டுமா .....ப்ளாகில் கருத்து வேறுபாடு வருவது போல எங்கள் நண்பர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அது சாதாரண ஊடலாக இரண்டே நாளில் மறைந்து மீண்டும் நட்பாக மலர் மலருவது போல மலர்ந்து கொண்டே இருப்பதன் காரணம் நட்பு மட்டுமா ...


    கண்டிப்பாக இல்லை சார் ...

    உங்கள் காமிக்ஸ் எங்கள் நண்பர்களிடையே நட்பிற்கும் மேலும் ...உறவுகளுக்கு மேலும் அழைத்து சென்று விட்டது ....ஒரு குடும்பம் போல .....

    இப்படி எங்கள் குழுவை ஒரு குடும்பமாக ஆக்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி சார் ...இந்த குழு மட்டுமல்லாமல் இங்கு ப்ளாக் வரும் நண்பர்களும் விரைவில் ஒன்று போல இணைந்து கொண்டாடுவதும் விரைவில் நடக்கும் என்பது திண்ணம் சார் ...


    நன்றி .....

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சிபி அவர்களே.!உங்கள் பெயரைப் போலவே உங்கள் மனதும் சிபி சக்கரவர்த்தி போல் உள்ளது.!
      அந்த வானத்தைப்போல மனம் படைத்த சிபி அவர்களே.!உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.! ! தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!

      Delete
    2. நண்பரின் தயாள குணம் எனக்கு 4 வருடங்களாகவே பரிச்சயம் தலீவரே !! ஓசையின்றி ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் ஒரு பார்சலைக் கையில் திணித்து விட்டுச் செல்வார் !!

      Delete
    3. @ திரு விஜயன்

      திருப்பூர் வாழ் நண்பர் புது ரக டிஷர்ட்டை கையில் திணிப்பதை...நீங்களும் பழைய ரக காமிக்ஸ்களை ஓசையின்றி புத்தகதிருவிழவுக்கு வரும் ஒவ்வொரு நண்பர்களின் கையிலும் திணிப்பதாக...ஒரு செய்தி கசிந்தால் உங்கள்' பாடு எப்படியிருக்கும் என யோசித்து பார்த்தேன்..ஹாஹா...செம..ஹாஹா..!

      Delete
  73. @ பரணிதரன் P

    நல்ல விஷயத்தை, நல்ல நாட்கள் நெருங்கும் சமயத்துல,
    தைரியமா பத்தவெச்சிடிங்களே பரணி..! என் பங்குக்கு...இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. உங்கள் "இங்கே கிளிக்" குகளை மறுபடியும் பார்க்க மிக்க மகிழ்ச்சி. தீபாவளி குதூகலம் இன்னும் அதிகமாகிறது..

      Delete
  74. சார், பனி மலையில் புதையலைத் தேடி என்ன ஆச்சு..

    ReplyDelete
    Replies
    1. Srithar Chockappa : அது தான் இது..! இது தான் அது..! மாற்றம் பொருத்தமான பெயரில் மட்டுமே !

      Delete
  75. திசைமாறிச் சென்ற என் தீபாவளி பார்சலை, ‘தல’ டெக்ஸையே மிஞ்சுமளவுக்கு, சில பல சாகஸங்கள் செய்து ஒரு வழியாக, இன்று கைப்பற்றிய களைப்பினால்.... வேறென்ன நாளைக்குதான் பிரித்து பார்க்கபடும் என்ற வயிற்றெரிச்சலோடு..... எஸ் டி கொரியர் இன்று முதல் நீர் டஸ்டி கொரியர் என்று அழைக்கப்படுவீர்... என்ற செய்தியோடு...

    அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகளை சொல்லிச் செல்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. P.Karthikeyan : 2016 முதல் DTDC -க்கு மாறிப் பார்ப்போமே..!

      Delete
    2. அப்போ..அடுத்த வருஷம் சைக்கிளிங் ரூட்டை மாத்திக்கணும் போல..:)

      Delete
    3. எடிட்டர் சார்.!

      சென்னையைப் பொறுத்த அளவில் எஸ்.டி கூரியர் சேவை நன்றாக உள்ளது.இது வரை புத்தகங்கள் டேமேஜ் ஆனதே கிடையாது.மேலும் தாமதம் என்பதே கிடையாது.எனக்கு எஸ்.டி.கூரியரே போதும்.தற்போது இந்த கூரியர் காரர்கள் நன்றாக பழகிவிட்டனர்.எந்த பிரச்சினையும் இல்லை.!

      விலையோ குறைவு.தரமோ அதி உன்னதம்.!

      Delete
    4. @ MV

      நீங்கள் சொல்வது ரொம்பவே சரி..! அவர்களின் செயல் வேகம், வாங்கும் தொகை எல்லாமே நம் விரலுக்கேத்த மோதிரம்..! மலைபோல குவிந்து கிடந்த பார்சலில் கணநேரத்தில் காணாமல் போன கிட்அர்டின் கண்ணன் பார்சலை நானும் விஜயராகவனும் ஒரு நொடி வாங்கிகொள்ளலாமா..? என யோசித்தோம். அங்கு இருந்த சூழல் நாளைபோய் சேருமா என்பதே சந்தேகமாக இருந்தது. நாம்வாங்கி அனுப்பியிருந்தாலும் மதியத்திற்குள் நண்பர் வசம் சேர்த்திருக்க முடியுமா என்பது சந்தேகமே...ஆனால் 11மணிக்கெல்லாம் ST கொரியர் டெலிவரி கொடுத்துவிட்டார்கள் என்பது நம்பவேமுடியவில்லை..! அதே போலவே பெங்களுருக்கும் அன்றே போய் சேர்ந்து விட்டது. தனிதன்மையுள்ள நம் காமிக்ஸ் பெட்டியை சரியாக இன்னாருக்கு என மாதமாதம் பழகியவர்கள் உடனே கொண்டுவந்து கொடுத்துவிடுகிறார்கள். பழகிய தடம் மாற்றிபார்ப்பது படு காமெடியான பிரச்சனைகளை கொரியரில் இலவசமாக எடிட்டருக்கு டெலிவரி செய்யும் என்றே தோன்றுகிறது..!

      (ஒருவேளை சுடசுட காமிக்சை கைமாறுவதில், வருடம் விட்டு வருடம்...ஏதாவது ஒரு சிக்கல் வந்து சேரும்படியான ஜாதகதோஷம் ஏதும் இருக்குமோ..:)

      Delete
    5. //திசைமாறிச் சென்ற என் தீபாவளி பார்சலை, ‘தல’ டெக்ஸையே மிஞ்சுமளவுக்கு, சில பல சாகஸங்கள் செய்து ஒரு வழியாக, இன்று கைப்பற்றிய களைப்பினால்...//
      Same happened to me this time. I rushed to all branch and finally collected the parcel yesterday only.

      Delete
  76. ஆசிரியர் சார் ....

    தல டெக்ஸ் இதழை தவிர மற்ற மூன்று இதழ்களையும் படித்து முடித்தாயிற்று ..மறுபதிப்பில் வந்த மூளை திருடர்கள் முதலில் ..படித்து நாளாகி விட்டதால் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு பேருந்தில் செல்லும் பயண நேரத்திலியே படித்து விட்டேன் ..எப்பொழுதும் ஒரு மணி நேர களைப்பான பயணம் அன்று சுறுசுறுப்பாக சென்று விட்டது ....புதிய புத்தகத்தில் புதிதாக படிப்பது போலவே சுவையான அனுபவம் தான் ...முன் அட்டைப்படம் நல்ல கலக்கலாக அமைந்து இருந்தது ...பாராட்டுகள் ...


    அடுத்து ரோஜரின் மஞ்சள் நிழலில் ....ரோஜர் எனக்கு பிடித்தமான ஹீரோவே ...ஆனால் போன முறை மறுபிறப்பில் சுமாராக தோன்றியவர் இந்த முறை ஏமாற்ற வில்லை ..ஒரு மணிநேரம் நாமும் பொம்மையின் அருகில் இருப்பது போல பிரமை ....நம்ப முடியாத கதையா என நினைக்கும் பொழுது பொம்மைகள் அனைத்தும் ரோபா என மஞ்சள் நிழலின் மூலம் அறியும் பொழுது லாஜிக் கும் ஓகே ஆகி விட்டது ....சித்திரங்களும் அருமை ....


    நேற்று இரவு ஷெல்டன் ....கொஞ்சம் அசதியாக இருந்ததாலும் ஷெல்டனை படித்து நாளாயிற்றே ...ஒரு பாகம் மட்டும் படித்து பார்க்கலாம் என ஆரம்பித்தால் பரபர.....விறுவிறு என சென்று ஒரே மூச்சில் புத்தகத்தை படித்து விட்டு தான் வைக்க கீழே வைக்க முடிந்தது ....சித்திரங்கள் ஒவ்வொரு பிரேமும் புகைப்படமோ என ஐயப்படும் அளவிற்கு சிறப்பாக அமைந்து இருந்தது ..ஷெல்டனுக்கு டாடி வயது என்றவுடன் அவரை போலவே எனக்கும் கோபம் வந்ததும் ..மன ஆறுதலுக்கு மற்ற தோழியிடம் ஆறுதலுக்கு போன் பேச அந்த தோழியின் பதில் வாய்விட்டு சிரிக்கவும் வைத்ததும் .உண்மை ....அந்த ஈட்டியின் மகிமை ஷெல்டனை போலவே நமக்குள்ளும் கடைசியில் உண்மையா ...பொய்யா என பட்டிமன்றம் போல குழப்பம் வர வைத்தது கதையின் வெற்றி ....முடிவில் இறந்து விட்டதாக நினைத்த தோழி உயிருடன் எழுப்பியது மனதில் மகிழ்ச்சி ...மொத்ததில் ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை பார்த்த திருப்தி ....ஷெல்டன் எப்பொழுதும் போலவே இம்முறையும் ஏமாற்ற வில்லை ...இந்த நூற்றாண்டின் டெக்ஸ் வில்லர் தான் ஷெல்டன் ....என்ன டெக்ஸ் ஏக பத்தினி விரதன் ...ஷெல்டன் ஏகப்பட்ட பத்தினி விரதன் ..அவ்வளவுதான் ...;-))



    இனி காத்திருப்பது எங்கள் தலயின் அதிரடி மட்டுமே ....காத்திருக்கிறேன் ....

    ReplyDelete
  77. ஆசிரியரின் புதிய பதிவு(?) ரெடி நண்பர்களே....

    ReplyDelete