நண்பர்களே,
வணக்கம்.
ரயில்வே ஸ்டேஷன்களில் ஓரம் கட்டிக் கொண்டும், ஏதாவதொரு நகரத்து ஹோட்டல் பால்கனியில் தொற்றிக் கொண்டும், ஸ்லீப்பர் பஸ்களில் சயனித்துக் கொண்டும் சமீப வாரத்துப்
பதிவுகளைத் தயாரித்தே பழகிப் போய்விட்டதால், ரொம்ப நாள் கழித்து வீட்டிலிருந்தபடி
ஒரு பதிவை எழுதுவது எனக்கே கொஞ்சம் வித்தியாசமாகப் படுகிறது! நவம்பர் இதழ்களின்
அச்சுப் பணிகள் நிறைவேறும் தருணம் என்பதால் அங்கே-இங்கே ஊர் சுற்ற முடியவில்லை; ஒழுங்காய்,
மரியாதையாய் ஆபீஸிலேயே வாரத்தின் எல்லா நாட்களையும் கழிக்க அவசியமானது !இதோ –
2015-ன் இறுதி இதழின் அட்டைப்பட first look:
இதுவொரு
மாடஸ்டி பிளைஸி நாவலின் ராப்பரின் தழுவலே என்பதால், பின்னட்டையில் மட்டுமே நமது
கைவண்ணம் சொல்லிக் கொள்ளும் விதமாய் உள்ளது! வசீகரமாய் எனக்குத் தோற்றம் தந்த டிசைன் உங்களையும், நமது மாடஸ்டி பக்தர்களையும் அதே போல கவர்ந்திட்டால் நிச்சயம் சந்தோஷம் கொள்வேன் ! கடைசியாய் வெளிவந்த மாடஸ்டியின் உட்பக்க சித்திர பாணிகள் நிறையவே
சர்ச்சைகளுக்கு இடம் தந்தது என்பது மறக்கவில்லை ; இம்முறையோ அதற்கான முகாந்திரம்
துளியும் இருந்திடாது என்பது உறுதி! இந்தக் கதைக்கான சித்திரங்கள் ஓவியர் பீட்டர்
ரோமெரோவின் கைவண்ணம்! ஏகப்பட்ட ‘ஹிட்‘ மாடஸ்டி சாகஸங்களுக்குத் தூரிகை பிடித்தவர்
இவர் என்பதால் artwork-ன் பொருட்டு இந்தத் தடவை நெருடல்களுக்கு வாய்ப்பேயில்லை! And
நமது டைப்செட்டிங் & டிசைனிங் பிரிவிலும் சென்ற முறையின் தவறுகள் தொடர்ந்திட
வாய்ப்பளிக்கவில்லை என்பதால் கதைக்குள் நீங்கள் ஐக்கியமாகிட சித்திரங்கள் / layout ஓர்
சிரமமாய் இருந்திடாது ! அப்புறம் இளவரசி + கார்வின் கூட்டணி அதிரடியாய் வலம் வருவதால்
மாடஸ்டி ரசிகர்களுக்கு மாத்திரமின்றி நம் எல்லோருக்குமே ஒரு treat காத்துள்ளது
என்று சொல்லலாம் ! அச்சின் பாக்கிப் பணிகள் முடிந்து, பைண்டிங்கும் முடிந்து – வரும்
வெள்ளியன்று (டிசம்பர் 4) உங்கள் சந்தாப் பிரதிகள் புறப்படும்! ஆண்டின் இறுதி
மாதம் என்பதால் டயரிகள்; planner-கள் என்று ஏகமாய் பைண்டிங்கில் பணிகள் குவிந்து
கிடப்பதால் அவர்களுக்கு அவகாசம் தர வேண்டியது அவசியமாகிறது ! So- சற்றே
பொறுமை ப்ளீஸ்!
மாடஸ்டியின் பின்னட்டையில் மட்டுமின்றி, இம்மாதத்து சகல வெளியீடுகளின் பின் ராப்பர்களிலும்
சின்னதொரு bar code டப்பா இருப்பதைப் பார்த்திடப் போகிறீர்கள்! நமது ஜுனியர் எடிட்டரின் ஓசையில்லா முயற்சிகளின் பலனிது ! நமது கையிருப்பு + வரும் 2016 முதற்கொண்டான
விற்பனைகள் என சகலத்தையும் computerize செய்திடும் முயற்சிகளின் ஆரம்பப்படிகள்
இந்த bar codes! மழைகாலத்துத் தவளை போல
‘வறக்...வறக்‘ என்று சத்தம் போடுவது என் பாணி எனில் – அதன் மறுமுனை ஜு.எ.!
இந்தாண்டின் இறுதிக்கு முன்பாக ஜுனியரின் ஒரு சுவாரஸ்யமான project-ன் பலனை இங்கே
அறிவித்திடுவேன்! “புதுசாய் ஒரு காமிக்ஸைத் தொடங்குவது பற்றிய அறிவிப்போ?” ‘ஸ்பெஷல்
இதழ் ஏதேனும் தொடர்பான தகவலோ?‘ என்ற யூகங்கள் நிச்சயம் தவறாகிடும் ; ஏனெனில் இது வேறொரு
மார்க்கத்தின் படலம் ! இந்தப் புது முயற்சியானது நமது சந்தாதாரர்களுக்கு ஒரு அழகான பரிசினையும் தரக் காத்துள்ளது என்பதை மட்டுமே இப்போதைக்கு சொல்ல முடியும்! நிச்சயமாய் இது
உடான்ஸோ; உதாரோ கிடையாது guys ! அது என்னவாக இருக்குமென்பதை இப்போதைக்கு உங்கள் யூகங்களுக்கு விட்டு விடுகிறேன் !
And சென்ற
வாரத்து எனது பதிவைத் தொடர்ந்து சந்தா மட்டுமின்றி ‘எ.பெ.டை.‘ முன்பதிவுகளிலும் ஒரு
சுறுசுறுப்பைக் கண்டிட முடிகிறது என்பது சந்தோஷமான update! இன்னும் சிலரோ - "சந்தா C " தனை பள்ளிகளுக்கு அன்பளிப்பாக்கிட முனைந்துள்ளனர் !! நிறைய வாசகர்கள் (இங்கே பதிவிடுவோரும்
சரி; மௌனப் பார்வையாளர்களாக இருந்து வருவோரும் சரி) அக்கறையாக ஈ-மெயில்கள் அனுப்பி,
“இதுவரையில் நாங்கள் சந்தாவைப் புதுப்பிக்காததன் காரணம் இவை ; இந்தத்
தேதிக்குள்ளாகப் பணம் அனுப்பி விடுவோம்!” என்றும் ”சென்றாண்டின் நம்பரை எட்ட
முடியாது போனால் அந்தக் குறைபடியை நண்பர்களாய் இணைந்து சரி செய்து விடுகிறோம்!” என்றும்
தெரியப்படுத்தியுள்ளதைப் பார்க்கும் போது என் முகத்தில் லிட்டர் கணக்கில் அசடு
வழியத் தான் செய்கிறது! டெக்ஸ் சந்தா & கார்ட்டூன் சந்தாவென 2016-க்குப்
பிரத்யேகமாய் அறிவித்ததைத் தொடர்ந்து சென்னையின் மழைகளைப் போல சந்தா வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுமென்ற கற்பனை எனக்குள் ஒரு ஓரமாய் குடிகொண்டு விட்டது போலத்தான் படுகிறது! அவ்விதமில்லாது
– நார்மலான வேகத்தில் வந்து கொண்டிருந்த சந்தாக்கள் என் ஆந்தை விழிகளுக்கு
அலாரமடிக்கும் ஆபத்தாய் காட்சி தந்து விட்டது போலும்! இன்னும் ஒரு படி மேலே சென்று
– சென்றாண்டின் சந்தா வரவுகளின் pattern-ன் மீது கொஞ்சம் கவனத்தை லயிக்கச் செய்த
போது – சந்தாக்களின் 75% டிசம்பரிலும், ஜனவரியின் துவக்கத்திலும் தான்
பதிவாகியிருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது! So- அவசரம் அவசரமாய் புயல்
எச்சரிக்கையை துறைமுகத்தில் ஏற்றியது போலான என் அவரசக் குடுக்கைத்தனத்தின் பொருட்டு
apologies guys!
அதே சமயம் – இதிலும் ஒரு நன்மை இல்லாதில்லை என்றே சொல்வேன்! பல
தரப்பிலிருந்தும் நண்பர்கள் சந்தாவுக்கென நாம் செய்திடக் கூடிய incentives; ஊக்கங்கள்
பற்றிய கருத்துக்களை நம் காதுகளுக்குக் கொணர்ந்துள்ளனர்! அவற்றை ஒரே தம்மில்
நம்மால் அமல்படுத்திட இயலாதெனினும் நிச்சயம் நமது cache memory-ல் அவை பதிந்திருக்குமென்ற
நம்பிக்கை கொண்டிடலாம் நீங்கள்! “நான் சொல்லும் யோசனைகளை ஏற்றுக் கொள்ள
மாட்டேன்கிறீர்கள்!” என்றோ – “என் யோசனைக்குப் பதில் சொல்லக் கூட
மாட்டேன்கிறீர்கள்!” என்றோ வருத்தம் கொள்ளும் நண்பர்களுக்கு : உங்கள் ஒவ்வொருவரின்
எண்ணங்களுக்கும் ஒவ்வொரு முறையும், ஆங்காங்கே நான் react செய்திடாது போயினும், அவற்றை உள்வாங்கிடத் தவறுவதில்லை guys! அனுதினமும்
எனது நேரங்களை காமிக்ஸ் + மற்ற தொழில்கள் என்ற குதிரைகளுக்கு மத்தியில் பங்கிட்டுச்
சவாரி செய்வதன் சிரமத்தை – நான் விவரிக்கத் தொடங்கினால் – அதுவொரு பீற்றல்
புராணமாகி விடும்! தினமும் இமைகள் மூடும் பொழுது நள்ளிரவைத் தாண்டி நிறைய நேரம் கடந்திருக்குமென்பதே
எனது routine என்பதில் தான் இரகசியம் இல்லையே ?! இதனில் உங்களின் எண்ணங்களுக்கு பதிலளிக்காது போவதால் அவை என் கவனத்தை ஈர்க்கவில்லை என்றோ ; அவற்றைப் படித்திட, சீர்தூக்கிப் பார்த்திட நான் நேரம் ஒதுக்கவில்லை என்றோ உங்களின் முயற்சிகளுக்கு / நேரங்களுக்கு மதிப்புத் தரத் தவறியதாகவோ எண்ணிட வேண்டாமே - ப்ளீஸ் ?! உங்களின் ஒவ்வொருவரும் தத்தம் பணிகளில் எத்தனை பிசி என்பதையோ ; நமக்காக நீங்கள் அக்கறையோடு செலவிடும் நேரத்தின் மதிப்பினையோ நாம் நிச்சயம் மறக்கவோ ; உதாசீனம் செய்வதோ சாத்தியமே கிடையாது ! Rest assured ,சாத்தியமானதொரு suggestion-ஆக இருக்கும் பட்சத்தில் இயன்ற
தருணங்களில் உங்கள் ஆலோசனைகளைச் செயல்படுத்தத் தயங்க மாட்டேன் !
கடந்த பதிவின் பின்னூட்டங்களில் கூட
வாசகர்களுக்கு SMS அனுப்புவது பற்றி நண்பர்கள் எழுதியிருந்தது என் கவனத்துக்கு
வராதில்லை! 2016-ன் துவக்கம் முதலாய் இதனை நடைமுறைப்படுத்த எல்லா ஏற்பாடுகளும்
ஏற்கனவே செய்யப்பட்டு விட்டன! நமது ஆன்லைன் விற்பனைகளை நிர்வகித்து வரும் Worldmart தளம் இதற்கான ஒரு package ஏற்பாடு செய்துள்ளது ! உங்கள் பின்னூட்டங்களைப்
பார்த்தான பின்பு, அதனை டிசம்பருக்குமே செயல்படுத்திட ஜூ.எ.விடம் கேட்டுள்ளேன் ; so அநேகமாய் இம்மாதமே அது நடைமுறைக்கு வந்திடும் ! கம்ப்யூட்டர்
சார்ந்த பணிகளிலோ; புதுயுக செயல்பாடுகளிலோ நானொரு டைனோசர் என்பதில் இரகசியமேதுமில்லை
எனும் பொழுது – உங்கள் பார்வைகளில் சுலபமாய்த் தோன்றிடும் பல விஷயங்கள் என்னை
எட்டிடக் கொஞ்சம் கூடுதலாய் நேரம் எடுக்கவே தான் செய்கிறது! More than anything else
– மொழிபெயர்ப்பிலும் தயாரிப்பிலும் எனக்கு அவசியமாகிடும் man hours தவிர்க்க
இயலாதொரு விஷயம்! அதற்கென நான் ஒதுக்கிடும் அவகாசத்தை மட்டுப்படுத்திடும்
பட்சத்தில் கதை literal ஆகக் கந்தலாகிப் போகும் என்பதால் – அந்தப் பொறுப்புகளை ஜு.எ.
ஏற்றிடத் தயாராகும் நாள் புலரும் வரை – ‘எடிட்டர்‘ என்ற தொப்பியே என் வழுக்கை மண்டையை
அதிக நேரம் சூழ்ந்து நிற்கும்! அதனைக் கழற்றி விட்டு “வியாபாரி“ என்ற குல்லாவும்
அணிதல் காலத்தின் கட்டாயமென்பதை நான் உணராதில்லை guys – but முதலாவது தொப்பியே
எனது நேசத்திற்குரியதாக இருந்திடும் – என்றென்றும் ! சரக்கு முறுக்காகவே
இருப்பினும் செட்டியாரும் முறுக்காக இருத்தல் அவசியம் என்பதை நீங்கள் புரியச்
செய்திருக்கிறீர்கள் ! May be நான் சரக்கு மாஸ்டராகவும்; ஜு.எ. செட்டியாராகவும்
இருந்து பார்த்தால் வண்டி எவ்விதம் ஓடுகிறதென்பதைச் சிறுகச் சிறுகப் பார்த்திடலாமே! வளரும் வயதில் என்றைக்குமே என்னை "இதைச் செய்...அதைச் செய்.!".என்று சொல்லி என் தந்தை வற்புறுத்தியதில்லை என்பதால் எனக்கும் ஜூனியரின் தலையில் பொறுப்புக்களை வம்படியாய்த் திணிப்பதில் ஆர்வமில்லை ! நதி செல்லும் பாதையை இயற்கையே தீர்மானம் செய்யட்டுமே !
"சந்தா
செலுத்தும் நண்பர்களுக்கு ‘டி-ஷர்ட்‘; ஜிப்பா – பைஜாமா என்றெல்லாம் முயற்சிப்பது
சுத்த வேஸ்ட்! வாசகர்கள் எதிர்பார்ப்பது இது போன்ற ஜிகினா சமாச்சாரங்களையல்ல!" என்றும்
சில நண்பர்கள் மின்னஞ்சல்களில் சொல்லியிருந்தனர் ! இங்கே I beg to differ! டி-ஷர்ட்கள்
வழங்கிடும் திட்டமானது நமது சந்தாதாரர்களைக் குஷிப்படுத்திடும் வியாபார
நோக்கிலானது அல்ல – அவ்விதம் திட்டமிட்டிருப்பின் சந்தா சார்ந்த விளம்பரங்களில் ; கூப்பன்களில் ; நமது இதழ்களில் அதனை முன்னிலைப்படுத்தியிருக்க மாட்டோமா? புத்தக விழா சந்திப்புகளின் போது நம்மவர்கள்
ஒரே மாதிரியாகப் போட்டு வந்து அசத்த இது உதவுமே என்ற நோக்கம் மட்டுமே இந்த
அறிவிப்பின் பின்னணி! So இது சந்தாவுக்கான சலுகையோ, ஊக்கப் பரிசோ அல்ல; நம்மவர்களுக்கொரு
ஜாலியான gift மாத்திரமே!
ரொம்ப
காலமாகவே நான் செய்திட நினைத்து வந்ததொரு விஷயத்தின் நடைமுறைப்படுத்துதலை maybe நமது
சந்தாதாரர்களுக்கான ஸ்பெஷல் சமாச்சாரமாகக் கருதிடலாம்! இத்தாலியில் TEX Magazine என்ற
பெயரில் ஆண்டுக்கு இரண்டோ – மூன்றோ ஆன்லைன் இதழ்களை போனெல்லி வெளியிட்டு
வருகிறதைப் பார்த்த நாள் முதலாகவே அது போலொரு முயற்சியினில் நாமும் கால்பதித்துப்
பார்க்க வேண்டுமென்பது எனது தீராத ஆசை! டெக்ஸ் கதாசிரியர்களோடு பேட்டிகள்; ஓவியங்களின்
முன்னோட்டங்கள்; கதைகள் தயாரானதன் பின்னணிகள்; புதுசாய் உள்ள திட்டமிடல்கள் என
TEX-ன் சகல பேக்கிரவுண்ட் சங்கதிகளையும் உள்ளடக்கிய 64 பக்க ஆன்லைன் இதழ் அது! அத்தனை
பெரிதாகவோ; அத்தனை in-depth ஆகவோ நாம் முயற்சிப்பதும் சிரமம்; அதனில்
சுவாரஸ்யத்தைத் தங்கச் செய்வதும் சிரமம் என்பதால் – அதன் ஒரு மினி version-ஐ நாம்
நிஜ பத்திரிகையாகச் செய்து பார்த்தால் என்னவென்பது கொஞ்ச காலமாகவே எனது ஆசை! அதிலும்
TEX-ன் ஆக்கத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாது – இதர பிரான்கோ பெல்ஜியக்
கதைவரிசைகளின் பின்னணிகளை; அவற்றின் கதாசிரியர்களைக் கையைக், காலைப் பிடித்தாவது
பேட்டி எடுத்து வெளியிடுவது ஒரு variety ஐத் தருமென்று நினைத்தேன்! So - ஒரு வண்ண
நியூஸ் பேப்பர் வடிவத்தில் – “COMIX TIMES” என்ற பெயரில் ஆண்டுக்கு 4 முறைகள் ஒரு பிரத்யேகப்
பத்திரிகையினைத் தயாரிக்கவுள்ளோம் ! நமது சந்தாதாரர்களுக்கு இதனை ஃப்ரீயாக
இதழ்களோடு கூரியரில் அனுப்பிடுவோம்! And சந்தாவில் இணைந்திடா நண்பர்கள் இதனைப்
படித்திட வேண்டுமெனில் ஒரு சிறு இடைவெளிக்குப் பின்பாக ஆன்லைனில் நமது தளத்தில் ஒரு
லிங்க் தந்து விடலாம்! பேட்டிகள்; முன்னோட்டங்கள்; உலகெங்கும் நடந்திடும் காமிக்ஸ்
நிகழ்வுகள்; ஸ்வாரஸ்யமான கார்ட்டூன் பக்கங்கள்; நமது முந்தைய ஹிட் இதழ்களின் review-கள்
– என இந்த நியூஸ்பேப்பரை ஒரு சுவாரஸ்யமான படைப்பாக்கிட உங்களின் ஆர்வமான பங்களிப்பும்
அவசியமே! இணையத்தினுள் புகுந்தால் வானமே எல்லை எனும் போது – உங்களின் தேடல்களும் நமது COMIX
TIMES-க்கு மெருகூட்டுமென்பது நிச்சயம்! ஒரே பாதையில் ஒரே மாதிரியாக ஓடிக்
கொண்டிருக்கும் நமது பயணத்திற்கு இதுவொரு சின்ன வித்தியாசமாக இருந்தாலே கூட நமக்கு
சந்தோஷமே!
And
before I sign off – some updates :
- கோவையில் புதியதொரு இளம் முகவரின் ஆர்வமான ஒத்துழைப்பு கிடைத்திருப்பதால் – கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் போன்ற ஷாப்பிங் தளங்களிலும் நமது select இதழ்களைப் பார்த்திட முடியும்! நூறு பேரின் பார்வைகளில் பட்டால் ஒருத்தராவது வாங்கக் கூடும் என்ற லாஜிக் workout ஆனால் கூட இது போன்ற பிஸியான இடங்களில் நமது காமிக்ஸ்கள் take off ஆகிடக் கூடும் என்பதால் நம்பிக்கையோடு காத்திருப்போம்!
- இத்தாலியில் நமது வலைப்பதிவுகளுக்கென ஒரு சிறு ரசிகர் குழு உள்ளதாம் !! டெக்ஸ் பற்றிய நமது பதிவுகளை ; விவாதங்களை google translate துணையுடன் ஆர்வத்தோடு அவர்களும் ரசித்து வருகிறார்கள் !! 'அட..உங்கள் மண்ணிலும் எங்களவருக்கு இத்தனை வெறித்தன ரசிகர்களா ?' என்ற வியப்பை வெளிப்படுத்தியுள்ளனர் ! அது மட்டுமன்றி இத்தாலியில் - ALL TEX சந்தாவிற்கு 4 பேர் பதிவு செய்துள்ளனர் !!
- 2016-ன் நமது அட்டவணையின் பொருட்டு போனெல்லி நிறுவனம் ஒரு புன்னகை கலந்த thumbs up தந்துள்ளனர் !! அவர்களது படைப்புகளுக்கு நம்மிடையே முக்கியத்துவம் அதிகரிப்பது குறித்து ரொம்பவே சந்தோஷப் பட்டுள்ளார்கள் ! (இதர மார்கெட்களில் அவர்கள் தூள் பறத்துவதை ஒப்பிட்டால் நாம் ஜூஜூபி என்பது வேறு விஷயம் !!)
- நமது வலைப்பதிவுகளை மூத்த வாசகர்களும் கவனித்து வருகிறார்கள் என்பதை சமீபத்தைய ஒரு வாசகர் கடிதம் மூலம் அறிய முடிந்தது ! எப்போதுமே நெடிய கடிதங்கள் மட்டுமே அனுப்பிடும் இந்த சீனியர் வாசகர் இம்முறை அனுப்பிய கடிதத்தில் இங்கே நம் வலைப்பதிவில் ஓடிடும் current topics பலவற்றையும் துல்லியமாய்க் குறிப்பிட்டு, அதனில் தனது நிலைப்பாடுகளையும் பற்றி எழுதியிருந்ததை ஆச்சர்யத்தோடு படித்தேன் ! ஒவ்வொரு ஞாயிறும் ஆர்வமாய் ; மௌனமாய் இங்கு வருகை புரிவது பற்றி அவர் எழுதியிருந்தது ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது ! நன்றிகள் சார் !!
மீண்டும் சந்திப்போம் folks ! Have a fun Sunday ! Bye for now !