Powered By Blogger

Thursday, June 04, 2015

குறுக்கே ஒரு குட்டிப் பதிவு !

நண்பர்களே,

வணக்கம். நேற்று மாலை உங்களைத் தேடி ஜூன் மாத்து 3 இதழ்களும் புறப்பட்டு விட்டன ! பள்ளி துவங்கும் வேளை என்பதால் பைண்டிங்கில் ஏகப்பட்ட வேலைப்பளு ! So ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே இதழ்களை அனுப்பும் எங்கள் அவா பூர்த்தியாகிடவில்லை And இம்முறை மூன்றே சன்னமான / வண்ண இதழ்கள் மட்டுமே என்பதால் சமீப வழக்கமான அட்டை டப்பா பாக்கிங் சாத்தியமாகிடவில்லை ! கொஞ்சமேனும் thickness இருந்தால் தவிர, அட்டை டப்பாக்கள் தயாரிப்பில் சைடில் பின் அடிக்க gets to be impossible ; உரிய குறைந்தபட்ச பருமன் இல்லாது போகும் இது போன்ற நேரங்களில் ஆரம்ப நாட்களைப் போல துணிக் கவரே நமக்கு மார்க்கமாகிறது ! So செலவைக் குறைக்க ஆரம்பிச்சுட்டான் டோய் என்ற பீதிக்குத் தேவையில்லை !


And இம்மாத இதழ் # 3-ன் அட்டைப்படம் & டீசர் இதோ ! கம்பியூட்டர் இல்லாதொரு இடத்தில் நான் இருப்பதால் போனிலிருந்து முதல் முறையாக போடும் பதிவினை நீளமாய் அமைத்திட தெம்பில்லை ! So இதழ்கள் பற்றிய உங்களின் எண்ணங்களை - விமர்சனங்களை முன்வைக்க உதவும் ஒரு பக்கமாய் இதை பயன்படுத்திடலாமே ! உங்கள் எண்ணங்களை அறியக் காத்திருப்போம் ஆவலாய் !  See you again on sunday folks ! Bye for now !

253 comments:

  1. விஜயன் சார், அட்டை படம் அருமை! உங்கள் பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பரணி, எல்லாரும் ரீப்ரெஷ் பட்டன் மேலேதான் விரலை வைத்து கொண்டு இருந்தீர்களா??. ஒண்ணு தெரியுது, காலைல ஆபீஸ் போய் யாரும் வேலை பார்க்கல. குதூகளிக்கும் குழந்தை மனதுடன் புத்தகம் அனுப்பி யாச்சான்னு தெரிந்து கொள்ள துடிப்புடன் இருக்கிறோம் ,என்பதே உண்மை . ..ஹி..ஹி....

      Delete
    2. சேலம் Tex விஜயராகவன் @ இன்று அதிகாலை நமது தளத்தை பார்வையிட முடியாததால் ஆபீஸ் நேரத்தில் visit!

      Delete
  2. Replies
    1. SMURFS contract கூட நம் கைக்கு வந்தாச்சு !!

      Delete
    2. சூப்பர்! சூப்பர்! சூப்பர்! சூப்பர்! சூப்பர்! சூப்பர்! சூப்பர்! சூப்பர்! சூப்பர்! சூப்பர்!

      Delete
    3. விஜயன் சார் @ உங்கள் நம்பிக்கை பலித்துவிட்டது! உங்கள் விடா முயற்சி வெற்றியை தந்துவிட்டது!

      Delete
    4. சூப்பர் நியூஸ் சார் . இதை பதிவில் நீங்கள் சொல்லி இருக்கனும் சார் . அப்படியே ஸ்மர்ஃப் க்கு என்ன பேர் வைக்கலாம்னு ஒரு போட்டி வைத்தீர்கள் என்றால் இந்த புக் வராமல் நகத்தை கடிக்கும் நண்பர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவார்கள் சார் . மறுபடியும் ஆஆஆஆ .. என நீங்கள் அங்கே லைட்டா கத்துவது இங்கே கேட்கிறது சார் .

      Delete
    5. //சூப்பர் நியூஸ் சார் . இதை பதிவில் நீங்கள் சொல்லி இருக்கனும் சார் . அப்படியே ஸ்மர்ஃப் க்கு என்ன பேர் வைக்கலாம்னு ஒரு போட்டி வைத்தீர்கள் என்றால் இந்த புக் வராமல் நகத்தை கடிக்கும் நண்பர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவார்கள் சார் . ///

      +1

      Delete
  3. சார் ...போன் மூலமாக நாலுவரி எழுதியாவது இங்கே வந்து விட்டீர்களே ..நன்றி சார் ..


    செயலாளர் இப்போது தான் ஆசிரியரை காண வில்லை ...என்ன போராட்டத்தில் ஈடுபடலாம் என்று போனில் வாக்கு கேட்டு கொண்டு இருந்தார் ..

    தமிழகம் தப்பித்தது ...:)

    ReplyDelete
    Replies
    1. //தமிழகம் தப்பித்தது //

      இந்த வார்த்தையை உங்கள் செயலாளர் இத்தாலிக்கு குடிபெயரும்போது சொல்லுங்கள் தலீவரே! ;)

      Delete
  4. நானும் வந்தாச்சு முதல் முறையாக முதல் ஐந்து பேரில் ஒருவராக

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் பேக் தியாகராஜன் சார் . அடிக்கடி வாங்க...மறுபடியும் எப்ப அந்த மெஸ்க்கு கூட்டி போவீங்க .....

      Delete
    2. அந்த மெஸ் வேண்டாம் டெக்ஸ் உங்களுக்காக வறுத்த கறியும் பின்ஸ் கிடைக்கும் மெஸ் ஒன்றை பார்த்து வைத்துள்ளேன் இம்முறை அங்கு போகலாம் எப்ப பிரியாக இருக்கிங்கனு சொல்லுங்க

      Delete
    3. மீண்டும் நல்வரவு தியாகராஜன் சார்.!!!

      Delete
    4. THIAGARAJAN DURAI @ வரவு நல்வரவு ஆகட்டும்!

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. கிட் மாமா சேலம் வரும் அன்று பேசாக அங்கே போகலாம் தியாகராஜன் சார் .

      Delete
  5. வணக்கம் சார் . புத்தகங்கள் அனுப்பி ஆச்சு ன்னு உங்கள் செய்தியை சொல்லி வயிற்றில் பாலை வார்த்தீர்கள் சார் . துணி கவர்னு சொல்லி ,லேசாக ஒரு ஜெர்க்ககையும் தந்து விட்டீர்கள் சார் . கவர் கைக்கு வரும் வரை நகத்தை கடித்துக் கொண்டே இருக்கவேண்டியது தான் சார் .....ஹி..ஹி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார் . புத்தகங்கள் அனுப்பி ஆச்சு ன்னு உங்கள் செய்தியை சொல்லி வயிற்றில் பாலை வார்த்தீர்கள் சார் . #

      உங்கள் பதிவு காணாமல் போனதால் புத்தகம் அடுத்த வாரம் தானா என்ற சந்தேகம் துளிர் விட ஆரம்பித்த பொழுதே அதை அனைத்ததிற்கு நன்றி சார் .._:)

      Delete
    2. நம்பிக்கை வேணும் தலீவரே . இன்று புத்தகங்கள் வரும்னு சார் சொன்னார் என்றால் அதை நம்பணும் . மணி 9ஆச்சு ,10ஆச்சு , 10.15, 10.30ம் ஆச்சு இன்னும் பதிவைக் காணேமே என டென்சன் ஆக கூடாது . பதிவு லேட்டா வந்தாலும் லைட்டா வந்திருக்குல்ல ........கொரியர் மேனுக்கு போன் அடிங்க ....

      Delete
  6. ஆசிரியர் மற்றும் கா.காதலர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்

    ReplyDelete
  7. விடுதலையே உன் விலை என்ன ..?

    தலைப்பும் சரி ...அட்டைப்படமும் சரி ...

    நண்பர்களுக்கு ஒரு கிராபிக் கொண்டாட்டம் காத்து கொண்டிருக்கிறது போல ... :(

    ReplyDelete
    Replies
    1. தலீவரே....தைரியமாய், குலதெய்வங்களை நன்கு வேண்டிக் கொண்டு உள்ளே குதித்துப் பாருங்கள் - ஒரு சந்தோஷ ஆச்சர்யம் காத்திருக்கலாம் உங்களுக்கு !

      Delete
    2. //ஒரு சந்தோஷ ஆச்சர்யம் காத்திருக்கலாம் உங்களுக்கு ! ///

      ஃபில்லர் பேஜ்க்கு பதிலா எங்க தலீவர் எழுதின கண்ணீர் கடுதாசிய பத்துப் பக்கத்துக்கு போட்டிருக்கீங்களா எடிட்டர் சார்?

      Delete
    3. ஆஹா ...புத்தகம் கைக்கு எப்ப கிடைக்கும் என காத்து கொண்டே இருக்கிறேன் சார் ..:)

      Delete
  8. Replies
    1. துணைக்கு வந்த தொல்லை - ஜில் ஜோர்டான்.
      தங்கம் தேடிய சிங்கம் - ப்ளூகோட்ஸ்.
      விடுதலையே உன் விலையென்ன - தாரமங்கலம் பரணீதரன் (கிராபிக் நாவல்) :):):)

      Delete
    2. KiD ஆர்டின் KannaN @
      துணைக்கு வந்த தொல்லை, தங்கம் தேடிய சிங்கம்
      உங்களை (நம்மை) போன்ற காமெடி விரும்பிகளுக்கு இந்த மாதம் இவை ஒரு விருந்து!

      Delete
    3. Parani from Bangalore @

      டெபனட்லீ டெபனட்லீ.!!!

      Delete
  9. S T கூரியர்., டெலிவரி மேனோட செல்போன் சுவிட்ச் ஆஃப்.!!! :(:(:(

    கிர்ர்ர்ர்ர்ர்ர்………………………ர்ர்ர்!!!

    ReplyDelete
  10. சார்! இதுவரை துணிக்கவரில் அனுப்பியதில் நுனிகூட மடங்கியது கிடையாது.!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு "காலனின் கைக்கூலி " லேசாய் நுனி மடங்கியிருந்தது.!!!
      ஆனாலும் துணிக்கவர் பேக்கிங்கில் இருந்த வசீகரம் அட்டை டப்பாவில் இல்லை என்பது என் கருத்து.!!!

      Delete
    2. ////துணிக்கவர் பேக்கிங்கில் இருந்த வசீகரம் அட்டை டப்பாவில் இல்லை ///- அப்படி இல்லை மாமா . எவ்வளவோ சிரமங்களுக்கு இடையே சந்தா கட்டி காத்துள்ளோம். ஆசிரியரும் பலவிதமான போராட்டங்களுக்கு இடையே முடிந்த அளவு வசீகரமான இதழை தயார் செய்து அனுப்புகிறார் . யாரோ ஒரு அஜாக்கிரதையான கொரியர் ஆட்களின் அசிரத்தை யால் கவர் மடங்கி , அட்டைப்படம் பாதி மடங்கி , ஏன் சிலசமயங்களில் உட்பகுதி கூட மடங்கி வரும் . இப்போது அட்டை பெட்டியில் வைத்து அனுப்பி வைப்பதால் அந்த குறை பெருமளவு களையப்பட்டு உள்ளது . வசீகரமான கவரை விட பாதுகாப்பான டப்பாக்களே இவ்விடத்தில் தேவையான ஒன்று .

      Delete
  11. பதிவு போட்டு ஒரு மணி நேரம் ஆச்சே.. அப்படின்னு திங்க் பண்ணிட்டு இருந்தேன்...

    இப்பத்தான் நுனியில ஆரம்பிச்சிருக்காங்க...

    பாப்பம்... என்னதான் நடக்குதுன்னு....

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் பேக் வெங்கடேசன் சார் . அது சில சமயம் துணி கவர் நுனியில் அடிபட்டு விடும் சார் . கொரியர் வாலாக்களின் அஜாக்கிரதை தான் காரணமாக இருக்கும் . அவர்களுக்கு அது வெறும் கவர் , நமக்கு அப்படி அல்லவே. அது நம்முடைய மனசை தாங்கி வரும் பொக்கிஷம் னு நமக்கு தானே தெரியும் . ஹி...ஹி...

      Delete
  12. சார் ,இந்த அட்டைப்படத்தை பார்த்தால் "மனதில் மிருகம் வேண்டும் "-ஞாபகம் வருகிறது சார் . இதுவும் அதுபோலவே சூப்பர் கொலைகளுடன் இருக்குமா சார் . ஏன்னா அந்த கதை படித்த போது நானே சில கொலைகளை கூட இருந்து செய்தது போல ஒரு சந்தோஷம் ஆக இருந்தது

    ReplyDelete
    Replies
    1. ......., அதேபோல இ.இ.கொ . கிளைமாக்ஸ் படிக்கும் போதும் அப்படியே இருந்தது சார். இதுவும் அப்படி இருக்க வேண்டி மனம் லேசாக ஏங்குகிறது சார் .

      Delete
    2. //அந்த கதை படித்த போது நானே சில கொலைகளை கூட இருந்து செய்தது போல ஒரு சந்தோஷம் ஆக இருந்தது///

      //மனம் லேசாக ஏங்குகிறது சார் . //

      (((( ய்யீயீக்க்... ))))

      Delete
    3. கதையின் ஓட்டத்தில் நானும் கலப்பதை அப்படி சொன்னேன் விஜய் . வாரம் 3நாள் அசைவ உணவு காரணமாக லேசாக இப்படி ஒரு இரத்த வெறி கதைகள் மேல் தனியான பிரியம் உண்டு . க்ரீன் மேனர் , மனதில் மிருகம் வேண்டும் ,, இரவே இருளே கொல்லாதே ....போன்ற கதைகள் என்னுடைய ஆல் டைம் பேவரைட் . மசாலா கதைகள் உடனடியாக மறந்து போய் விடும் . ஆனால் இது போன்ற வித்தியாசமான கதைகள் கால வெள்ளத்தை வென்று நிற்கும் . வருடம் ஒரு கதையாவது இந்த வகையில் வரவேண்டும் விஜய் .

      Delete
    4. இந்த வருட பெளன்சர் ..கூட இதே ரகம் தான் . ஆனால் க்ரீன் மேனர் அளவுக்கு இல்லை , காரணம் சில இடங்களில் அடுத்து என்ன என்பது எளிதாக ஊகிக்க முடிவதேயாகும். அடுத்து என்ன என்பதை சற்றும் ஊகிக்க முடியாமல் தன் வழியே நடைபோட்டதே க்ரீன் மேனரின் பலம் மற்றும் பிரமாண்டம் .

      Delete
    5. // அடுத்து என்ன என்பதை சற்றும் ஊகிக்க முடியாமல் தன் வழியே நடைபோட்டதே க்ரீன் மேனரின் பலம் மற்றும் பிரமாண்டம் //

      +1

      Delete
    6. // அடுத்து என்ன என்பதை சற்றும் ஊகிக்க முடியாமல் தன் வழியே நடைபோட்டதே க்ரீன் மேனரின் பலம் மற்றும் பிரமாண்டம் //

      +1
      கதையின் சித்திரங்கள் மிக நேர்த்தி, உடல்மொழிஐ(body language) மிக அருமையாக கையாண்டிருகிரர்கள். மிக நுண்ணிய வேலைப்பாடு எப்படியும் ஒரு கதை ஒரு நாள் என்ற நேரத்தை கேட்கும் தொகுப்பு. கதையின் சிதிரங்களுக்காக மிக ரசித்த கதை தொகுப்பு.

      Delete
  13. அட்டைப்படம் அருமை.

    ReplyDelete
  14. சேலம் Tex விஜயராகவன் // கொரியர் வாலாக்களின் அஜாக்கிரதை தான் காரணமாக இருக்கும் . அவர்களுக்கு அது வெறும் கவர் , நமக்கு அப்படி அல்லவே...//

    டெக்ஸ் என்று பெயரை வைத்துக் கொண்டு, கொரியர்காரர்களை தரம் தாழ்த்திப் பேசுவதா?

    பாலைவனம், காட்டாறு, செவ்விந்தியர்களின் விஷ அம்புகள், வெகுமதி வேட்டையர்கள் என்று பல அபாயங்களை தாண்டி வருபவர்கள் கொரியர்காரர்கள் என்பதை டெக்ஸ் அறிவாரல்லவா?

    ReplyDelete
    Replies
    1. அலோ சார் அதெல்லாம் அப்போ . இப்போது அமேசான் க்கும் ஃப்ளிப்கால்ட்டுக்கும் வரும் கொரியர் ஆசாமிகளை சற்றே பாருங்கள் சார் . பேங் மானேஜர் போல ஸ்டைலா வாராக . மற்ற கொரியர் ஆசாமிகளின் கமிசனும் மலைக்கச் செய்யும் தொகை சார் . இவ்வளவு வசதிகளும் சம்பாத்தியமும் இருக்கும் போது ,அதற்கு மூல காரணமான கவர்களை அவர்கள் கவனத்துடன் கையாள வேண்டும் அல்லவா சார் . நம்முடைய புதையலைப் போன்ற காமிக்ஸ் நன்றாக வந்து சேரனும் சார் . அப்படிநான் சொன்னது தவறு என்றால் கவர்களை மடங்காமல் தரவேண்டியது அவர்கள் கடமைஅல்லவா?

      Delete
    2. அதானே... ராஸ்கோல்ஸ்... கடமை முக்கியமல்லவா?

      Delete
  15. எனக்கான புத்தகங்கள் டிரேடிங் போஸ்ட்டுக்கு வந்து சேர்ந்து விட்டதான புகை சமிக்◌ைஞ இன்னும் கிளம்பவில்லை... அதுவும் இம்முறை ஜில்ஜோர்டன் வேறு...

    ReplyDelete
    Replies
    1. அந்த கொரியர் நண்பர்களை சப்போர்ட் செய்தீர்கள் அல்லவா?. உங்களுக்கு ஒரு வாரம் தாமதமாக கிடைக்க கடவது சார் .

      Delete
    2. சேலம் டெக்ஸ் விஸ்வாமித்திரரே, கொரியர்காரர்களுக்கான எனது ஆதரவை நிபந்தனையற்று விலக்கிகொண்டேன்... சாபத்தை முதலில் வாபஸ் வாங்கும்...

      Delete
    3. அப்படி வாங்க சார் வழிக்கு . மணி 1.30ல் ஆச்சு இதுவரை யாருக்கும் புக்கை பற்றி ஒண்ணுமே சொல்ல காணோம் . இதுதான் உங்கள் கொரியர் கண்மணி களின் கடமை சிரத்தை .........

      Delete
  16. அட்டைப்படம் அருமை கலக்கிடீங்க ! இந்த வருட சிறந்த அட்டைபடவரிசைனுள் ஒன்று!


    இந்த வருட new genre quota வில் மிகவும் எதிர்பார்கப்பட்ட புத்தகம்(by me), ஆர்வமாக உள்ளேன்

    ReplyDelete
  17. Welcome back. S.V.V. Sir,

    "காலனின் கைக்கூலி " அட்டை நுனியில் லேசாக மடங்கியிருந்ததாகத்தான் சொன்னேன். அதனை பத்து புத்தகங்களுக்கு அடியில் சிறிது நேரம் வைத்திருந்தவுடன் சரியாகிவிட்டது.
    தவிரவும் அந்த மாதம் கா.கைமட்டுமே பெரிய சைஸ் புக். மீதம் இரண்டோ மூண்றோ சிறிய சைஸ் புத்ததகங்கள். இவற்றை ஒன்றாக பேக் செய்து அனுப்பியதால் அந்தமாதிரி ஆகிவிட்டது. அதன்பிறகு அதுபோன்ற குறைகள் ஏற்படாதவாறு எடிட்டர் பார்த்துக் கொள்கிறார்.
    இம்மாதம் மூண்று புக்ஸும் ஒரே சைஸ் என்பதால் துணிக்கவரால் இடைஞ்சல் ஏதும் ஏற்படாது. (இன்னும் பார்ஷல் கையில் கிடைக்கவில்லை. கிர்ர்ர்.……ர்)

    ReplyDelete
    Replies
    1. வெயிட்டாக வைத்த அந்த 10 புத்தகங்களின் லிஸ்டை வெளியிட்டால், ஹிஹி... கொஞ்சம் ஓசி கேட்க வசதியாக இருக்கும்...

      Delete
    2. //வெயிட்டாக வைத்த அந்த 10 புத்தகங்களின் லிஸ்டை வெளியிட்டால், ஹிஹி... கொஞ்சம் ஓசி கேட்க வசதியாக இருக்கும்.../

      ஹிஹிஹி.!!!

      என் பிள்ளைகளின் ஆறாம் வகுப்பு., நான்காம் வகுப்பின் பாடப் புத்தகங்கள் அவை.
      இப்போது அவர்கள் ஏழு., ஐந்து என அடுத்த வகுப்புக்கு சென்றுவிட்டதால் அந்த புத்தகங்கள் உபயோகமின்றித்தான் இருக்கின்றன.!
      உங்களுக்கு தேவை என்றால் அனுப்பி வைக்கிறேன் S.V.V சார்.!!!

      ஹிஹிஹி.!!!

      Delete
    3. மாமி உம்ம பதிலை படித்து விட்டு நண்பர் s. v.v. எப்படி இருப்பாரு தெரியுமா ???- க்ரீன் மேனரின் நல் நேர நஞ்சு - குடிக்க வைக்க பட்ட கனவான்களை போல போஸ்ல ........

      Delete
  18. அப்பாடா நேற்றிலிருந்து காத்திருந்து refresh செய்ததிற்கு இன்றாவது புது பதிவு வந்ததே ! மகிழ்ச்சி !

    ReplyDelete
  19. அட்டைபடம் சிறப்பாக உள்ளது . கதையும் ஏமாற்றது என நம்புகிறேன் !

    ReplyDelete
  20. ஹூம் ....எப்பவுமே புக் வந்தவுடன் ஞாயிறாக இருந்தாலும் போன் செய்து வாங்கி கொள்ள சொல்லும் St கொரியர் நண்பர்கள் இந்த முறை நானே போன் செய்தாலும் நோ ரெஸ்பான்ஸ் ...


    கிர்ர் ....

    ReplyDelete
    Replies
    1. நமது சேந்தம்பட்டி குரூப்பின் மூத்த ஆலோசகர் மற்றும் லீகல் அட்வைசர் S.V.V.அவர்களிடம் எதற்கும் கேட்டு பாருங்கள் தலீவரே ஒருவேளை அவர் ஆவண செய்து உங்களுக்கு பார்சல் கவரை பெற்று தரக்கூடும் . தலீவரே ஒருவேளை பதிவை 24மணிநேரம் முன்பாகவே ஆசிரியர் போட்டு இருப்பாரோ ?????.

      Delete
    2. தலீவரே சென்னை நண்பர் இப்போது தான் போட்டோ போட்டார் . புத்தகங்கள் வந்து விட்டன அவருக்கு . விடுதலையே உன் விலையென்ன ??-அட்டைப்படம் சூப்பர் . இனி கொரியர் நண்பர்கள் கருணை வைத்தால் தான் .......

      Delete
    3. தலீவரே சென்னை நண்பர் இப்போது தான் போட்டோ போட்டார் . புத்தகங்கள் வந்து விட்டன அவருக்கு . விடுதலையே உன் விலையென்ன ??-அட்டைப்படம் சூப்பர் . இனி கொரியர் நண்பர்கள் கருணை வைத்தால் தான் .......

      Delete
    4. இன்னும் எனக்கும் புத்தகங்கள் வரவில்லை

      Delete
  21. பார்ஷலை பிரிச்சாச்சேய்.!!!


    முத்து 350 ல. நம்ம லியானார்டோ தாத்தாவ்ஸூம் இடம் பிடிச்சிருக்காரு போல.!!!

    ReplyDelete
  22. பார்சல் கெடச்சாச்சு! அடுத்த மாதம் டெக்ஸ் அதிரடி ஸ்பெஷல் !

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் கிடச்சுருச்சு.!மூன்றும் ஒரே சைசில் இருந்ததால் பிரஷ்சாக பார்சல் கிடைத்தது.அடுத்த மாதம் ஒரு மெகா டெக்ஸ் கதை என்றவுடன்.உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்((விசில் அடிக்கிறேன்)புத்தகங்களின் அழகை புரட்டி புரட்டி ரசித்துக்கொண்டிருக்கின்றேன்.தனிமைக்காக வெயிட்டிங்.!

      Delete
    2. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !!!!!!!
      இன்னும் எனக்கு புக் வரவில்லை. நீங்க என்ஜாய் பண்ணுங்க நண்பர்களே!!!!!!

      Delete
  23. //மாயாவிக்கு மட்டும் உடனடியாக கிடைப்பதன் மர்மம் என்னவோ?//

    ஹாஹாஹா.!!! மகேந்திரன் சார்.,
    போன வருடம் "தேவ ரகசியம் தேடலுக்கல்ல " ஒரீரு நாட்கள் தாமதமாக மாயாவிக்கு கிடைத்தது. அதற்க்குள் அவர் இந்த ப்ளாக்கில் செய்த சாகசங்களை இப்போது நினைத்தாலும் கிலியாக இருக்கிறது.!!!

    அவருக்கு முதலில் டெலிவரி கிடைப்பது நமக்குத்தான் நல்லது.! :):):)

    ReplyDelete
    Replies
    1. நன்றாக நினைவிருக்கிறது. இவர் அட்டகாசம் தங்காமல் டாக்டர் நண்பர் வீட்டிற்கே போய் கொடுத்து வந்தாரே...

      Delete

    2. வோ.! இல்லையில்லை மகேந்திரன் சார்.! அன்று மாயாவிக்கு நேரில் சென்று புத்தகம் தந்து நம்மை காத்து ரட்சித்தவர்., புதிதாக கவிஞர் அவதாரம் எடுத்திருக்கும் இசைக்குயில் இத்தாலி விஜய் அவர்கள்.!!!

      Delete
    3. ஓஹோ மாயாவியின் லீலைகளில் இதுவும் ஒன்றா?

      Delete
  24. இன்னமும் புத்தகம் கிடைத்திடாத நண்பர்களின் "ஆவலை " மேலும் தூண்டிட :-

    மூண்று அட்டைப் படங்களும் அட்டகாசம்.
    வண்ணச்சேர்க்கை கண்ணைப் பறிக்கிது.
    வசூல்ராஜா வில்லரின் "THE LION 250 "
    விளம்பரம் முதல் பக்கத்திலேயே பட்டையை கிளப்புகிறது.

    "மாறிப்போன மாப்பிள்ளை "யில் மல்லாக்க பறந்து வரும் ஆர்டினின் படம்., இதழ் எப்போது கிடைக்குமோ என்று மனதை அலைகழிக்கிறது.
    கமான்சே., ஜானி, பிரிண்ஸ் கதைகளின் விளம்பரங்களும் சூப்பரோ சூப்பர்.!
    முத்து 350 விளம்பரத்தில் லியனார்டோ தாத்தாவ்ஸ் இடம்பிடித்து இருக்கிறார்.

    மீதி அப்புறம்.!! :):):-)

    ReplyDelete
    Replies
    1. சொன்னதே சொன்னீங்க எல்லாத்தையும் சொல்லலாமே KiD ஆர்டின் KannaN

      அது என்ன மீதி அப்புறம்
      சஸ்பென்ஸ் தாங்காது சொல்லிடுங்களேன் :))

      Delete
    2. சிபி ஜி! உங்க ஆணைப்படி இதோ மீதி.:-

      மூணு புக்ஸையும் மலைக்க மலைக்க பாத்தாச்சு. முதல் பார்வையிலேயே செம்ம வசீகரம். உண்மையை சொல்லணும்னா போன மாதம் பெரிய திருப்தி இல்லை. (ஸ்டெல்லாவுக்கு டூப் போட்டு இருந்தாங்க) .
      ஆனால் அதற்கு வட்டியும் முதலுமாய் இந்த மாதம் கிடைத்துவிட்டது.
      ஓ.கே. முதல் சாய்ஸ் ப்ளூகோட்ஸ்.
      தங்கம் தேடிய சிங்கம். ஸ்கூபி.,ரூபியுடன் தங்கம் தேடி க்யூபெக் சென்று வருகிறேன்.
      நாளை சந்திப்போமா.!!!!

      Delete
    3. உங்க ஆணைப்படி இதோ மீதி.: //

      என்னாது ஆனைப்படியா எனக்கு டாக்டர் சுந்தர் சொன்ன குரங்கு/யானை ஜோக்கு ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது ;-)

      அப்புறம் உங்க பெரிய மனசு யாருக்கு வரும் கேட்டவுடனே
      சஸ்பென்ஸ் வைக்காம சொல்லி அசத்திட்டீங்க
      நன்றி _/\_
      .

      Delete
  25. ஊருக்குள்ளே தீவாளிங்கிறாங்க... பட்டாசு சத்தம் மட்டும் தான் கேட்குது.... சந்தா கட்டடாத்தால்..... கடுப்பேத்துறாங்க மைலார்ட்.....

    ReplyDelete
    Replies
    1. சந்தா கட்டியும் பட்டாசு பார்சல் லேட்டு , சேலம் மாநகர கொரியர் அலுவலகம் சரியாக இயங்கவில்லை போல தெரிகிறது .......

      Delete
    2. இங்கேயும் அதே கதை தான்
      சேலம் Tex விஜயராகவன் அவர்களே :((
      .

      Delete
  26. இந்த வருடத்தின் மீதி சந்தா தொகை எவ்வளவு????

    ReplyDelete
  27. இன்னமும் தங்க தலைவனின் புத்தகத்தை திருப்பி அனுப்பவில்லை.... வேலை பளு.......

    ReplyDelete
  28. தயவு செய்து இந்த பதிவிலாவது பொமிக்கான் செய்முறையை வெளியிடுமாறு சேந்தப்பட்டி குழுவினரை கேட்டு கொள்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ரம்மி @சுட்டி லக்கியின் முதல் சாகஸத்தில் தெளிவாக விளக்கம் இருக்கும் . அப்ப எருமைக்கறி சாப்பிட போறீங்க .......டெக்ஸ் ஒரு கதையில் கிட் கிட்ட (கிட் மாமா நீங்கள் இல்லை ) சொல்வாரு ," பெம்மிக்கானை நன்றாக மென்று விழுங்க வேண்டும் ,அப்போது தான் செரிக்கும் ". ரம்மி நீங்களும் அவ்வாறு பாலோ செய்து பாருங்களேன் .....

      Delete
    2. நாங்க யூத்து.... எதுவும் செரிக்கும்.....

      Delete
    3. ," பெம்மிக்கானை நன்றாக மென்று விழுங்க வேண்டும் ,அப்போது தான் செரிக்கும் ". - கார்சனின் கடந்த காலம் Part 1

      Delete
    4. தகவலுக்கு நன்றி பசுபதி . மின்னும் மரணம் படித்து கொண்டு இருப்பதால் பல விசயங்களும் மறந்து போய் விட்டன.

      Delete
  29. நேர் கோட்டில் செல்ல இந்த பிளாக் ஒன்றும் டெக்ஸ் கதை அல்லவே..... இது தங்க தலைவன் கதை போல ஏராளமான எதிர்பாரா திருப்பங்களை உடையது.... அதில் தானே சுவாராசியம்....

    ReplyDelete
    Replies
    1. என்னா குறுக்கு வழியில் வந்தாலும் ,,நேர்க்கோட்டில் ராஜநடை போடும் தல டெக்ஸை நெருங்க கூட முடியாது .
      இன்னும் ஒரே மாதம் தான் டெக்ஸ்ன் அதிரடி ஸ்பெசல் வந்து விட்டது என்றால் மின்னும் மரணம் , மீளா மரணம் ஆகி விடும் .

      Delete
    2. யாருக்கு.... யாருக்கோ.....:)

      Delete
    3. //ரம்மி//தெளிந்த நீரோடை போல் செல்லும் கதைகள்தான் புதிய வாசகர்கள்&மற்றும் எங்களுக்கு பிடிக்கிறது.!!

      Delete
    4. //ரம்மி//தெளிந்த நீரோடை போல் செல்லும் கதைகள்தான் புதிய வாசகர்கள்&மற்றும் எங்களுக்கு பிடிக்கிறது.!!

      Delete
  30. அண்ணே டீ இன்னமும் வரல :((
    .

    ReplyDelete
    Replies
    1. எனக்கு டீ வந்துடுச்சி,ஹி,ஹி.

      Delete
    2. கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர் :(
      .

      Delete
  31. புத்தகங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் விஜயன் சார்
    விடுதலையே உன் விலை என்ன அட்டைப்படம் அசத்துகிறது சார்

    ( ஹ்ம்ம் கடுப்ப கிளப்புறாங்களே இந்த கொரியர் வாலாக்கள் :(( )
    .

    ReplyDelete
    Replies
    1. அங்கேயும் கடுப்புதானா பிரபாகர் ஜி....

      Delete
    2. சேம் ப்ளட் :(
      .

      Delete
  32. Replies
    1. வெல்கம் சுசீ . கலக்குங்கள் தொடர்ந்து ...

      Delete
    2. நல்வரவு சுசீந்திரன் அவர்களே!

      Delete
    3. நல்வரவு கொம்பன் சுசி அவர்களே.

      Delete
    4. நல்வரவு சேலம் சுசீ அவர்களே _/\_
      .

      Delete
  33. இம்மாதம் உண்மையிலேயே முழு வண்ண இதழ்கள்.
    அப்படி ஒரு அட்டகாசமான வண்ணங்கள்.
    தரமான பிரின்டிங் என..
    1. தங்கம் தேடிய சிங்கம்.
    2.துணைக்கு வந்த தொல்லை.
    அட்டகாசமாய் உள்ளன. கதையும்,ஆசிரியரின் கரை கண்ட அக்மார்க் மொழி நடையும் என ஜூன் மாதம் 100% திருப்தியான ஒரு மைல் கல் .
    அப்புறம் ...
    விடுதலையே உன் விலையென்ன..?
    அமர்களமான அட்டைப்படம். ஈஸ்ட் மென் டப்பா வண்ணங்கள் என்றாலும், கதையும் ,துல்லியமான பிரின்டிங்கும் ரசிக்க வைக்கின்றன.
    மொத்தத்தில் பரம திருப்தி.

    ReplyDelete
  34. இரவு வணக்கம் நண்பர்களே வேளை பளுவின் காரணாமாக சற்றே இடைவெளி.

    ReplyDelete
  35. @ALL : Online Listings for June are now on...!

    ReplyDelete
  36. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. ப்ளாக்குக்கு நல்வரவு ஸ்பைடர் ஶ்ரீதர் அவர்களே....கலக்குங்கள்

      Delete
    2. நல்வரவு ஸ்பைடர் அவர்களே.கலக்குங்க.

      Delete
    3. வருக நண்பர் ஸ்ரீதர் அவர்களே!

      Delete
    4. நல்வரவு ஸ்பைடர் ஸ்ரீதர் அவர்களே _/\_

      Delete
  37. சேலம் சுசீ அவர்களுக்கு எங்கள் போராட்ட குழுவின் சார்பாக மாபெரும் வரவேற்பை அளிக்கிறோம் ..
    இங்கே வந்த முதல் நாளிலேயே தங்களை எங்கள் குழுவில் இனைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் ...எவ்வளவு கடினமான சூழ்நிலை வந்தாலும் போராட்ட குழுவிற்கு உண்மையாகவும் உறுதுணையாகவும் இருப்பேன் என்று உறுதி மொழி எடுத்து கொண்டு தாங்கள் அமரலாம் ..


    செயலாளர் அவர்களுக்கு ....புதுசா நமது போராட்ட குழுவிற்கு ஒரு பலி ஆடு வந்திருக்கிறது ...கவனமாக பார்த்து கொள்ளவும் ..;)

    ReplyDelete
    Replies
    1. கொம்பனுக்கு துணையாக நான் இருக்கிறேன் பரணி.

      Delete
  38. சேலம் சுசீ., ஸ்பைடர் ஸ்ரீதர்
    நல்வரவு நண்பர்களே!!!

    பேபிம்மா வாட் எ சர்ப்ரைஸ்., சொல்லவேயில்ல. கலக்குங்க மீசைக்கார நண்பா!!!

    சக தவில் வித்துவான் கலியுக நந்தி ஸ்பைடர் ஸ்ரீதரை வரவேற்பதில் கோடையிடி கிட் ஆர்டின் பெருமைப்படுகிறார். .!!!

    ReplyDelete
    Replies
    1. ஏன் எங்களை எல்லாம் வரவேற்க மாட்டிங்களோ.என்னமோ வித்துவான்,வித்துவான் அப்படின்னு சொல்றிங்க அவரு என்னத்த வித்தாரு.

      Delete
  39. என்னது ஸ்பைடரும் வந்துட்டாரா ...ஸ்பைடர் அவர்களே தங்களையும் எங்கள் போராட்ட குழுவில் முதல் நாளிலேயே இணைத்துள்ளோம் ..தாங்களும் உறுதி மொழி எடுத்து கொண்டு சேலம் சுசீ மடியில் அமரலாம் ..தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் சங்கம் ஆரம்பத்தில் இருந்தே அபராத தொகையில் ஓடுவதால் ஒரு நாற்காலி மட்டுமே ...அதையும் சங்கத்திற்கு தெரியாமல் செயலாளர் வெளி வாடகைக்கு விடுவதாக ஒரு வதந்தி ..சரி அதை விடுங்கள் ..அதை தனியாக செயலாளர் இடம் நானே டீல் செய்து கொள்கிறேன் ..தாங்கள் அமரலாம் ..


    ஹலோ ..செயலாளரா ...இன்னொரு ஆடும் சிக்கிறிச்சு .சீக்கிரமா வாங்க ..சங்கம் பெரிசாயி்ட்டே போகுது ..என்னாலயே நம்ப முடியலை ..பேசாம இடை தேர்தலில் நிக்கலாம்ன்னு தோணுது ..உடனே வரவும் ..அவசியம் அவசரம் ....

    ReplyDelete
  40. இந்த மாதம் மூன்று புத்தகங்களின் அட்டைப்படமும் சூப்பர் சார்.விளம்பரங்கள் கண்ணை பறிக்கின்றன.வாவ் அருமை சார்.

    ReplyDelete
  41. ஆனால் எடி சார் போன மாத கனவின் குழந்தைகள் புத்தகத்தையே இன்னும் படிக்கவில்லை.மற்றவை மூன்றையும் படித்து விட்டேன்.முடிந்தால் நாளை விமர்சனம் போடுகிறேன் சார்.

    ReplyDelete
  42. கனவின் குழந்தைகள் - இப்போதான் படிச்சி முடிச்சேன், எனக்கு எந்த குழப்பமும் இல்லை. எடியின் மொழிபெயர்ப்புக்கு நன்றி.

    'விடுதலையே உன் விலை' அட்டை படம் அருமை.


    ReplyDelete
  43. தங்கம் தேடிய சிங்கம் படித்து விட்டேன்.அருமையான சித்திரம்&கலர் . இந்த கதைகளில் மட்டும் பளிச் என்று கண்ணை கவர்கிறது.நல்ல நகைச்சுவை ,லக்கிலூக் கதைக்கு நிகரான நகைச்சுவை.மற்ற தொடர்களில் காமெடி அதிகமாக இருந்தாலும் போர் களங்களில் கதை நகர்வதால் நகைச்சுவையை முழவதும் அனுபவிக்க முடியாமல் மனது பாரமாக இருக்கும்.இதில்அப்படி இல்லை.லக்கிலூக் நிகரான காமெடி.மற்றொரு விஷயம் எனக்கும் சட்டைக்குள் ஊறல் எடுக்குறமாதிரி இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. என்னாது அதுக்குள்ள படிச்சாச்சா :((

      என்னாம்மா இப்பிடி பண்றீங்களேமா :((
      .

      Delete
  44. மாயாவி சிவா ஜி
    அவர்களுக்கு நாளை பிறந்தநாள்

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏

    💐💐💐💐💐

    யாராவது இவருக்கு க்ளிக் போட்டு அசத்துங்கப்பா :))
    .

    ReplyDelete
  45. சடுதியரய் ஒரு பதிவு . சூப்பர் . எதிர் பர்ரரத மகிழ்ச்சி ஸர்ர். இரண்டாவது வரும்மரத இதழ்கள் மூன்றும் இன்றே புறப்பட்டு விட்டது என்று சொல்லி சக்கரையை என் வரய் முழுதும் நிரப்பியது போல் உள்ளது ஸர்ர். அட்டைபடங்களும் உள்பக்கமும் நன்றரக வந்துள்ளதரக எனக்கு படுகிறது.

    ReplyDelete
  46. ஐ! ஸ்மர்ஃப் கிடைத்து விட்டதரம். அப்ப இந்த நீல குட்டி மனிதர்கள் கலரில் ஒரு வலம் வர வழி பிறந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth @ Your e-mail-id required. Please let me know.

      Delete
    2. Parani sir, My email id is
      prapananth_1@yahoo.com

      Delete
  47. காமிக்ஸ் களஞ்சியம்., சித்திரக்கதையின் என் சைக்கிள பிடியா, மஞ்சள் சட்டையை விரும்பி அணியும் டைகரு ரசிகர்.
    எங்களை வழிநடத்தும் தானைத்தலைவர்.,
    தொப்பி அணிந்த சிங்கம், செம்பு கலக்காத தங்கம்.
    போன மாதம் வந்த கதையாயினும் சரி, பிரிட்டிஷ் ஆட்சியில் வந்திருந்த கதையாயினும் சரி., யார் எதைப்பற்றி எவ்வளவு பேசினாலும் , ஒரே "இங்கே க்ளிக் "ல் வாயடைக்க வைக்கும் வைர நெஞ்ச வல்லவர்.
    வேதாள மாயாத்மாவின் முத்திரை மோதிரம் வைத்திருக்கும் அதிரடிவீரர்.
    இன்னும் எவ்வளவோ பெருமைக்கு சொந்தக்காரராக இருந்தாலும்., எதையும் காட்டிக் கொள்ளாமல் நண்பர்களுடன் எளிமையாக பழகும் பண்பாளர்,
    எங்கள் ஹீரோ "சேந்தம்பட்டி முத்தையன் " மாயாவி சிவா அவர்களுக்கு , ஆர்டினின் அடி நெஞ்சில் இருந்து பிறந்தநாள் வாழ்த்துகள்.!!!
    நண்பர் மாயாவி சிவா., நீவீர் வாழிய பல்லாண்டு!!!

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாயாவி அவர்களே! நான் ஃபீல் பண்ண நினைத்ததைவிடவும் ஒருபடி அதிகமாகவே கிட்ஆர்ட்டின் கண்ணன் ஃபீல் பண்ணி அசத்திவிட்டதால் சிம்பிளாய் வாழ்த்தோடு நிறைவு செய்கிறேன். ;)

      உங்களுடைய நட்பை பெருமையாகக் கருதுகிறேன். வாழ்க பல்லாண்டு!

      Delete
    2. இனிய பிறந்த நாள் காணும் மாயாவி சார். இன்று போல என்றும் ஆனந்தமா இங்கே க்ளிக் போட்டு அசத்த வாழ்த்துக்கள் சார் .விஜய் ஒரு இங்கே க்ளிக் போடுங்கள் .....ப்ளீஸ்

      Delete
    3. "க்ளிக்"ஸ்பெஷலிஸ்ட் மாயாவிக்கே க்ளிக் க சூப்பர் ஐடியா.!

      Delete
    4. இனிய பிறந்த நாள் நாள் வாழ்த்துக்கள் மாயாவி..

      Delete
  48. டியர் எடிட்டர்..

    இம்மாத இதழ்கள் மூன்றும் படு அட்டகாசம், அனைத்திலும்..

    'முத்துக்கள்' மூன்று....

    ReplyDelete
  49. உள்ளூரில் அட்டை டப்பா பெரிய வித்தியாசத்தைக் கொண்டு வந்ததோ இல்லையோ வெளிநாட்டுக்கு சாதாரண கவரில் அனுப்பும் போதெல்லாம் புத்தகம் கந்தலாகிப் போய்த்தான் வருகிறது. வேணுமென்றே கசக்கிக் கொண்டு வந்து கொடுப்பாங்களோ என்கிற மாதிரி இருக்கும் :(
    ஆனால் உங்கள் விளக்கம் புரிகிறது. எனக்கு இதழ் தாமதமாக (இரு மாத இதழ்கள் சேர்த்து) வந்தாலும் பரவாயில்லை, கசங்காமல் வர வேண்டும் என்பதே முக்கியம். ஆனால் பிற வாசகர்கள் இதழ் விரைவில் கிடைத்தால் நல்லது என்று நினைக்கலாம்.

    ReplyDelete
  50. மாயாவி சிவா .!பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  51. Replies

    1. +1

      Steel my friend you are not seen that often....?
      i remember the days forum filled with your comments , bring back those comics days if you find time friend !

      Delete
    2. நண்பர் ஸ்டீல் ! வெல்கம் பேக் ! :-)

      Delete
  52. ஆசிரியர் விஜயன் அவர்களுக்கும், நண்பர்கள் மற்றும் காமிக்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் காலை வணக்கம் ! நலம் நலமறிய ஆவல் என்று எழுத ஆசையாக இருந்தாலும், கத்திரி வெயில் காலத்தில், மேட்னி ஷோவிற்கு, படம் ஆரம்பித்து பத்து நிமிடம் நேரம் கால தாமதமாக சென்ற தனியனாகத் தடுமாறுகிறேன். அரங்கின் உள்ளே சில்லெனத் தொட்டுத் தவழும் குளிர் காற்று உடலையும், மனதையும் சட்டென ஜில்லிட்டுப் போக வைத்தாலும், எனக்கான வரிசையும், அதில் உள்ள இருக்கையும் எதுவென்று தெரியாமல், செயற்கையான இருட்டில் மரமண்டை போல் தயங்கி நிற்கிறேன் ! இருந்தாலும், திரையில் நகரும் படம் போல் ஆசிரியரின் பதிவுகள் ஒவ்வொரு முறையும் பரபரப்பையும், அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பையும் எகிறச் செய்வதால், வழியில் உள்ள இருக்கைகளை இடறாமல் என் இருக்கையை நோக்கி, மெல்ல மெல்ல நகர ஆரம்பிக்கிறேன் நண்பர்களே !

    முதலில், மின்னும் மரணம் மறுபதிப்பை Customized imprintடாக தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு அளித்த ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு, என் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொண்டால் மட்டுமே என் மனம் அமைதி பெரும்.. மிக்க நன்றி விஜயன் ஸார் !! நன்றி எனும் ஒரு ஒற்றை வார்த்தை மட்டுமே இதற்கு ஈடாகாது எனும் போது, அந்த நன்றி கடன், நிலுவையில் மட்டுமே இருந்து வரும் என்பதும் உண்மை தானே ?!

    சென்ற வருடத்தில், இதே நாட்களில், சாத்தியமே இல்லை என்று பட்டிமன்ற கருபொருளாக, காரசாரமாக விவாதிக்கப்பட்ட இந்த மறுபதிப்பு சம்பந்தமான கருத்துகளும் ; எண்ணங்களும் நேற்றே சரித்திரமாகிப் போய் விட்டாலும், அதே சரித்திரம் தன்னுடைய காலசுவடுகளில், இந்த முத்து collector's ஸ்பெஷல் வெளியீடான மின்னும் மரணம் சாதனையை, மின்னும் பொன் எழுத்துகளால் அழியாமல் தன்னகத்தே செதுக்கி வைத்துக் கொண்டு விட்டது !

    Customized imprint என்ற இந்த முதல் சாதனை, தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் பதியப்பட்ட முதல் மைல்கல்லாக இனி வரும் காலம் தோறும், காமிக்ஸ் பதிப்பகத்தாருக்கும்,காமிக்ஸ் வாசகர்களுக்கும் ஒரு கைகாட்டியாக இருந்து வரும் என்பதை யாராலும் மறுக்க இயலுமா என்ன ?! இந்த அரியதொரு பெருமை நம் அபிமான ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு சொந்தமானதில் நான் பெருமிதம் அடைகிறேன் !!

    ReplyDelete
    Replies
    1. Happy to see your post after lonnnnnnnnnnnnng gap Mr. M

      Delete
    2. hey you are back, long time no write...!

      :)

      //முதலில், மின்னும் மரணம் மறுபதிப்பை Customized imprintடாக தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு அளித்த ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு, என் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொண்டால் மட்டுமே என் மனம் அமைதி பெரும்.. மிக்க நன்றி விஜயன் ஸார் !! நன்றி எனும் ஒரு ஒற்றை வார்த்தை மட்டுமே இதற்கு ஈடாகாது எனும் போது, அந்த நன்றி கடன், நிலுவையில் மட்டுமே இருந்து வரும் என்பதும் உண்மை தானே ?! //

      உண்மை உண்மை !

      MM Customized imprint is legend land mark for Muthu comics history.

      Delete
    3. ///வழியில் உள்ள இருக்கைகளை இடறாமல் என் இருக்கையை நோக்கி, மெல்ல மெல்ல நகர ஆரம்பிக்கிறேன் நண்பர்களே !////----உங்களுக்கான இருக்கை ஆல்வேஸ் வெயிட்டிங் ஃபார் யூஊஊஊ ஒன்லி. இங்கே அவரவர் இடம் அவரவர்க்கானது என்பதில் மாற்று கருத்து ஏது??????

      Delete
    4. நீண்ட இடைவெளிக்கு பிறகான உங்கள் பதிவை பார்த்ததும் "டெக்வில்லாவை கண்ட ஜிம்மி" போலானேன் மரமண்டை சார்.வெல்கம் பேக் !!!

      Delete
  53. என்னது ஸ்பைடரும் வந்துட்டாரா ...ஸ்பைடர் அவர்களே தங்களையும் எங்கள் போராட்ட குழுவில் முதல் நாளிலேயே இணைத்துள்ளோம் ..தாங்களும் உறுதி மொழி எடுத்து கொண்டு சேலம் சுசீ மடியில் அமரலாம் ..தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் சங்கம் ஆரம்பத்தில் இருந்தே அபராத தொகையில் ஓடுவதால் ஒரு நாற்காலி மட்டுமே ...அதையும் சங்கத்திற்கு தெரியாமல் செயலாளர் வெளி வாடகைக்கு விடுவதாக ஒரு வதந்தி ..சரி அதை விடுங்கள் ..அதை தனியாக செயலாளர் இடம் நானே டீல் செய்து கொள்கிறேன் ..தாங்கள் அமரலாம் ..


    ஹலோ ..செயலாளரா ...இன்னொரு ஆடும் சிக்கிறிச்சு .சீக்கிரமா வாங்க ..சங்கம் பெரிசாயி்ட்டே போகுது ..என்னாலயே நம்ப முடியலை ..பேசாம இடை தேர்தலில் நிக்கலாம்ன்னு தோணுது ..உடனே வரவும் ..அவசியம் அவசரம் ....

    ReplyDelete
    Replies
    1. ஸ்மைலி காணோமே தலிவரே ......

      :D

      Delete
  54. இவருக்காக காமிக்ஸா

    காமிக்ஸ்க்காக

    இவரா


    பலருக்கு வாழ்வில்

    காமிக்ஸ்

    ஒரு பகுதி ...


    இவருக்கோ

    காமிக்ஸினால்

    வாழ்வே

    ஒரு பகுதி


    இந்த இனிய

    காமிக்ஸ் நேசருக்கு

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


    என்னுடைய சார்பாகவும் ..போராட்ட குழு சார்பாகவும் ..இனிய காமிக்ஸ் வாசகர்கள் சார்பாகவும் உரித்தாகுக ..


    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாயாவி sir

      Delete
    2. பரணிதரன் சார் அருமை.!!எல்லா வரிகளுக்கும் 100%பொருத்தமானவர்.மாயாவி.!

      Delete
  55. ஜில் ஜோர்டன் - துணைக்கு வந்த தொல்லை !

    ஜூன் மாத வெளியீடுகளில் நமது டாப் 3 - கவுண்ட் அப் ல் முதலிடம் பிடிப்பது, நமது மேன்மை தாங்கிய டிடெக்டிவ் 'ஜில் ஜோர்டன்' அவர்கள் கௌரவ தோற்றத்தில் வந்து அசத்தும் 'துணைக்கு வந்த தொல்லை' !

    இலகுவான கதை !
    தெளிவான கதை ஓட்டம் !
    யதார்த்தமான கதைகரு !
    எந்த மனநிலையிலும் படிக்கக் கூடிய கதை !
    லாஜிக் ஓட்டை சிறிதும் இல்லாத கதை !
    வாய் விட்டுச் சிரிக்க வைக்கும் வசனங்கள் !

    என்று அட்டகாசமாக இருக்கிறது. ஜில் ஜோர்டன் கதைகள் - இவ்வளவு வசீகரமாகப் பயணிக்கக் கூடிய காமெடி கலந்த ஆக்ஷன் கதைகளை உள்ளடக்கியதா என்று, நம் காமிக்ஸ் வாசகர்கள் ஒரு கணம் திகைத்து தான் போகப் போகிறார்கள்.. எல்லாவிதமான மனநிலையில் படிப்பதற்கும் ; படித்தவுடன் மனம் இலேசான உணர்வுகளுக்குள் அமிழ்வதற்கும் இக்கதை நூறு சதவீதம் உத்திரவாதம் அளிப்பதாக இருக்கிறது !

    கார்மேகம் சூழ்ந்த ஒரு மழைகாலத்தில், குளிர் காற்று சூழ, பூவானமாய் தூறும் மழை, சட்டென்று சடசடவென தூரலாய் உருவெடுக்கும் சமயத்தில் கிடைக்கும் உணர்வைப் போல், கதையின் முதல் சில பக்கங்களில் சிறிதாக எட்டிப் பார்க்கும் புன்முறுவல், சிறிது நேரத்திலேயே நம்மை வாய் விட்டுச் சிரிக்க வைக்கிறது. அளவான காட்சி அமைப்புகள் ; அதற்கேற்ற அழகான வசனங்கள் என அமைந்து, நம்மை ஒரு டீசண்டான காமெடி படம் பார்த்த உணர்வுக்குள் அமிழ்த்துவதாலேயே இம்மாத வெளியீடுகளில் முதல் இடத்தை பிடித்து விட்டது !

    ஜில் ஜோர்டன் என்ற துப்பறியும் புலிக்கு நிறைய வேலை இல்லா விட்டாலும், சலசலக்கும் பனங்காட்டு நரியாய், கதையின் கடைசி வரை அதிரடியிலும், காமெடியிலும் தூள் கிளப்பும், வில்லனின் கைத்தடி 'ப்ரெடோ', சும்மா கலக்கு கலக்கு என்று கலக்கி, தன் முத்திரையை ஆழமாக பதிந்து விட்டதே இந்தக் கதையின் வெற்றிக்கு காரணமாக அமைந்து விட்டது. நெருடலே இல்லாத காட்சி அமைப்புகள் ; வசனங்கள் ; குழப்பமில்லாத கதைகரு ; இழுவையாக மாறாத கதை ஓட்டம் ; லாஜிக் ஓட்டை இல்லாத காமெடிகள் ; படித்தவுடன் சிரிப்பு வரும் வசனங்கள் என இந்தக் கதை முழுவதும் அமைந்திருப்பதால், இதை குடும்பத்துடன் சேர்ந்து அனைவரும் படிக்கக் கூடிய கதையாக பரிந்துரை செய்கிறோம் !

    எல்லோருக்கும் ஒரு நினைப்புண்டு ; அதுவே அவர்களின் பிழைப்பைக் கெடுப்பதும் உண்டு ! 7 முதல் 77 வரை அனைவருக்கும் என்ற caption க்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த ஜில் ஜோர்டன் என்பதற்கு, இந்தக் கதை அச்சாரம் போடுவதாக அமைந்துள்ளது. இந்தக் கதையை படிக்கும் போது, 7 வயது வாசகனும் சிரிக்கலாம் ; 40 வயது வாசகரும் சிரிக்கலாம் ; 77 வயது வாசகரும் சிரிக்கலாம் என்பதால் முதலிடம் பெறுவதில் தடையேது ?!

    ReplyDelete
    Replies
    1. மறுவருகை செய்திருக்கும் நண்பர் Mr .M -க்கு இனிய வாழ்த்துக்கள் !!

      புது வருகை நண்பர்கள் ஶ்ரீ மற்றும் ஸ்பைடர் ,சுசீக்கு இனிய நல்வரவு :-)

      Delete
    2. ஜில் பற்றிய விமர்சனங்கள் படிக்க ஜில்லுன்னு இருக்கு...:-)

      Delete
    3. வெல்கம் பேக் மிஸ்டர் மரமண்டை (உங்கள் பேரை டைப்ப கொஞ்சம் சங்கடமாக உள்ளது ). உங்கள் காமிக்ஸ் காதலுக்கு என்னுடைய வணக்கங்கள் .

      Delete
    4. //எல்லாவிதமான மனநிலையில் படிப்பதற்கும் ; படித்தவுடன் மனம் இலேசான உணர்வுகளுக்குள் அமிழ்வதற்கும் இக்கதை நூறு சதவீதம் உத்திரவாதம் அளிப்பதாக இருக்கிறது ! //
      +1

      Delete
    5. typo : //என் மனம் அமைதி பெரும்// என்பதை ''என் மனம் அமைதி பெறும்'' என்பதாகவும், //தூரலாய் உருவெடுக்கும் சமயத்தில் கிடைக்கும் உணர்வைப் போல்// என்பதை ''தூரலாய் உருவெடுக்கும் சமயத்தில் ஏற்படும் மாற்றத்தைப் போல்'' என்பதாகவும் மாற்றிப் படிக்க வேண்டுகிறேன் நண்பர்களே !

      அன்போடு வரவேற்பளித்த நண்பர்கள் - Dasu bala, Satishkumar S, karthic murugesan, Dr.Sundar,Salem., சேலம் Tex விஜயராகவன், Mahendran Paramasivam, selvam abirami, KiD ஆர்டின் KannaN, Paranitharan K, saint satan ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..! இந்த காமிக்ஸ் நேசம் நம்மிடையே கடைசி வரை கைகோர்த்து நிற்க எல்லாம் வல்ல ஆண்டவன் துணை நிற்கட்டும் !!

      அடுத்து வருவது :

      இம்மாத வெளியீடுகளில் இரண்டாம் இடம் பிடிக்கும் கதை விமர்சனம் !

      Delete
  56. மீண்டு(ம்) வந்துள்ள நண்பர் மரமண்டைக்கு, வாழ்த்துகள் பல.மின்னும் மரணம் பற்றிய.உங்களுக்கே உரித்தானஅலசல் உங்கள் தளத்தில் விரைவில் எதீர்பார்கிறேன்


    முதன்முறையாக பிளாக்கில் கமெண்டும் ஸ்ரீ, மற்றும் சுசீக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  57. துணைக்கு வந்த தொல்லை கதையும் அருமை.!இதுவரை வந்த ஜில் ஜோர்டன் கதைகளில் இதுதான் நெ.1 கதைர இதுபோன்ற கதைகளை இனி அடிக்கடி வெளியிடலாம் சார்.!கலர் &சித்திரம் நன்றாக உள்ளது.!(இது போன்று படைப்பாளிகளிடம் டாப் 10 கதைகளை கேட்டு அனைத்து வெளியீடுகளையும் வெளியிட சாத்தியம் உள்ளதா சார்?)சி.சி.வலையில்....முதல் பட்டியலில் மாடஸ்டி பேரின் அருகில் போட்ட ஆச்சர்ய குறியை நீக்கியதற்கு நன்றி சார்.?விடுதலையே உன் விலை என்ன ?கதைக்கு "நோ கமென்ட்ஸ்"என்றோ ஒரு மழை நாளில்தான் படிக்க வேண்டும்.வெயிட்டிங்.!

    ReplyDelete
    Replies
    1. அடடே!விடுதலையே உன் விலை என்ன?.கதை கூட சுவராசியமாகத்தான் உள்ளது.!

      Delete
  58. notify me click செய்திருந்தாலும் நண்பர்களின் comments mailல் வரவில்லை . இதற்கு யாராவது தீர்வு கொடுக்கவும்.

    ReplyDelete
  59. கவர் வந்து புத்தகங்கள் கிடைத்தது சார் . முனை மழுங்காமல், கசங்காமல் அழகாக வந்து கிடைத்துள்ளன சார் . 3அட்டைப்படங்கள் ல விடுதலையே உன் விலையென்ன ? ,டாப் சார் . முதல் புரட்டலில் தங்கம் தேடிய சிங்கம் கவர்கிறது சார் .

    ReplyDelete
    Replies
    1. சேலம் டெக்ஸ் இன்றுதான் கிடைத்ததா.?நான் கூறும் கதையை கேட்டு தவறாக நினைக்க வேண்டாம்..நான் மதுரையில் படிக்கும் போது,கே.கே.நகரில் ஒரு வீட்டில் குடியேறினோம்.!முதல் நாளில் ஒரு தெருநாய் சில இளம்பெண்கள் முன்னால் என்னை கடிக்க வந்து கேவலப்படுத்தி விட்டது.இதை நான் கல்லூரியில் நண்பர்களிடம் கூறியபோது அந்தநாயை விஷம் வைத்து கொன்றுவிடும்படி திட்டம் தீட்டிகொடுத்தனர்(ப்ளூகிராஸ் கதையெல்லம் அங்கு செல்லாது)அப்போது அங்கு வந்த சீனி என்ற நண்பன் "டேய் விஷம் வாங்குற காசுல பொறைவாங்கி போடுடா அது சாகும்வரை உண்னை மறக்காது"என்றான் நானும் அவன் கூறியதுபோல் செய்தேன்.இரண்டுவருடம் அங்கு இருந்தேன்.என்னை பார்த்தாலே வாலை ஆட்டிக்கொண்டு வந்து என்னை கூனிகுறுகச்செய்தது."மாத்தி யோசி" என்பதை தற்போதும் பலவிஷயங்களிலும் கடைபிடிக்கின்றேன்.நன்றி.!

      Delete
    2. ஒரு நாள் டிலே தான் MV சார் .நோ ப்ராப்ளம் . ஆனால் இந்த கதை மூலம் எனக்கு தாங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன சார் ???. உங்களுக்கு இல்லாத உரிமை யா ??? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ் விவேக் சார் .??

      Delete
  60. இனிய பிறந்த நரள் வரழ்த்துக்கள் மரயரவி சிவர ஸர்ர்.

    ReplyDelete

  61. Welcome back steel claw Ponraj.!!

    தங்களின் மீள்வருகைக்கு மகிழ்ச்சி மிஸ்டர் மரமண்டை.!!!

    ReplyDelete
  62. மீள் வருகை புரிந்த பழைய நண்பர்களுக்கும்


    மெளன பார்வையாளர்களாக மட்டுமே இருந்து இப்பொழுது தளத்தில் நடை போடும் புது நண்பர்களுக்கும்

    காமிக்ஸ் நண்பர்களின் சார்பாக நல் வாழ்த்துக்கள் ..


    இன்று புத்தகம் வந்து விட்டதாக தகவல் ..இரவு புத்தகத்தை புரட்ட ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் ..

    ReplyDelete
  63. புத்தகம் கிடைத்தது முதலில் விடுதலையே விலை என்ன

    ReplyDelete
    Replies
    1. சுசீ சார் மூணு புத்தகம் ஆசிரியர் அனுப்பியதற்காக தாங்களும் மூன்று முறை புத்தகம் கிடைக்க பெற்றதை சொல்வதை பாராட்டுகிறேன் ..கிர்ர்

      Delete
  64. //ரம்மி//தெளிந்த நீரோடை போல் செல்லும் கதைகள்தான் புதிய வாசகர்கள்&மற்றும் எங்களுக்கு பிடிக்கிறது.!!#


    மடிப்பாக்கம் வெங்கடேஷ் சார் ..நாலே வரில நச்சுன்னு சொன்னீங்க ...:)

    ReplyDelete
  65. சரியாக சொன்னீர்கள் தலீவரே . தெளிந்த நீரோடைகள் 3வரும் பாருங்கள் இன்னும் ஒரு மாதத்தில் ,நம் அனைவரும் சொக்கிக் போகும் படி.........தி லயன் 250தான் .....கவுண்டன் ஸ்டார்ட்ஸ் ....

    ReplyDelete
    Replies
    1. உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்(தப்பாக நினைக்க வேண்டாம் நீண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பின் வரும் டெக்ஸ்க்கு விசில் அடிக்கின்றேன்.!!

      Delete
  66. ஆசிரியர் சார்@ ஆகஸ்டு ஈரோடு திருவிழா நெருங்கி வந்து விட்டதால் , அங்கே இம்முறை 200ரூபாயில் வரும் கார்ட்டூன் ஸ்பெசல் பொசுக்கு என்று இருக்குமே சார் .
    அடுத்த மாதம் வரும் 450ரூபாய் தி லயன் 250ஐ ஈரோடு விழாவில் ரிலீஸ் செய்யலாமே சார் . போன முறை LMS போல குண்டு புக் என எக்ஸ்ட்ரா ஆர்வம் வரும் சார் . அடுத்த மாதத்திற்கு கார்டூன் ஸ்பெசலை முன்கூட்டியே கொண்டு வந்து விடுங்களேன் சார் . வாய்ப்பு இருந்தால் மட்டுமே சார் . தலையின் மெகா இதழை உங்கள் கையால் பெற்றிட்டால் அது தனிச்சிறப்பு சார் . கொரியரில் வந்தால் சப் என ஆகிடும் சார் . உங்கள் கையால் வாங்கிட இன்னும் ஒரு மாதம் காத்திருக்க தலையும் ரெடி, நாங்களும் ரெடி சார் ...............

    ReplyDelete
    Replies
    1. //தலையின் மெகா இதழை உங்கள் கையால் பெற்றிட்டால் அது தனிச்சிறப்பு சார் . //

      +1

      (ஆனால் ஈரோட்டில் கைதட்ட முடியாதே) :)

      Delete
    2. டெக்ஸ் விஜயராகவன் ,!ஏன் இந்த கொலவெறி, ஏற்கனவே ஏகப்பட்ட தாமதத்தில் டெக்ஸ் கதை வருகிறது.!பற்றாகுறைக்கு விளம்பரங்களை பார்த்தவுடன் ஆவலை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறேன்.இன்னும் ஒருமாதம் தாமதமா ?தாங்காது சாமி.!!!

      Delete
  67. இன்று பிறந்த நாள் கொண்டாடும் "இங்கே க்ளிக்" புகழ் மாயாவி சிவா சாருக்கு இனிய நல்வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  68. கார்டூன் ஸ்பெஷலுக்கு முன்பதிவு அவசியமா அல்லது சந்தாவில் சேருமா ? முன்பதிவு அவசியம் எனில் முன்பதிவு எப்போது ஆரம்பம் எடிட்டர் சார் ?

    ReplyDelete
  69. பிறந்த நாள் காணும் நண்பர் மாயாவி சிவாவை வாழ்த்துகிறோம் !

    ReplyDelete
  70. பிறந்த நாள் காணும் நண்பர் மாயாவி சிவாவை வாழ்த்துகிறோம் !

    ReplyDelete
  71. ப்ளுகோட் பட்டாளம் - தங்கம் தேடிய சிங்கம் !

    ஜூன் மாத வெளியீடுகளில் நமது டாப் 3 - கவுண்ட் அப் ல் இரண்டாமிடம் பிடிப்பது, காட்டுவாசி ரெனால்ட்' காமெடியில் அசத்தும் 'தங்கம் தேடிய சிங்கம்' ! அதில் அப்படி என்ன விசேஷம் என்று கேட்பவர்களுக்காக, கொஞ்சமாய் விளக்கம் !

    பொதுவாகவே எனக்கு ப்ளுகோட் பட்டாளம் என்றாலே அவ்வளவாக ஈர்ப்பு வந்ததில்லை. அக்மார்க் காமெடி முத்திரையோடு தமிழில் தடம் பதித்திருந்தப் போதிலும், அதில் உள்ள காமெடி கிலோ என்ன விலை என்று தான் கேட்கத் தோன்றும்... பலசமயம், ''ப்ளுகோட் பட்டாளம் படிக்கும் போது நான் விழுந்து விழுந்து சிரித்தேன் சாரே !?'' என்ற ரீங்காரத்தில் இங்கு வந்து விழும் கமெண்டுகளைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு நிறையவே குழப்பமாக இருக்கும்... ஒருவேளை நான் தான் சரியாகப் படிக்கவில்லையோ என்று கூடத் தோன்றும் ; அதற்காக ப்ளுகோட் பட்டாளம் கதையைப் படிக்கும் போது, எனக்கு நானே கிச்சுக் கிச்சு மூட்டிக் கொள்ளவா முடியும் ?! ஹா.. ஹா.. ஹா.. :D (என்ன நண்பர்களே? என் ஜோக்கைப் படித்துக் கடுப்பாகி விட்டீர்களா ? சரிதான்... ப்ளுகோட் பட்டாளம் கதையைப் படிக்கும் போது எனக்கும் இப்படித் தானே இருந்து இருக்கும் என்று யாராவது என்றாவது யோசித்து இருப்பீர்களா..? ஹி.. ஹி..)

    காமெடி என்ற பெயரில் கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் சும்மா அடித்து விடுவதும் ; யதார்த்தமே பொய்யானது என்று யூனியன் படைகளை நக்கல், நய்யாண்டி மூலம் பகடி செய்வதும் காமெடி கதைக்கு முழுவதுமாய் பொருந்தவில்லை என்பது என் அபிப்ராயம். விண்ணிலிருந்து தலைகுப்புற விழுந்தப் பின்பும், சாவகாசமாய் எழுந்து ஜோக் அடிப்பதையும் ; நாலடி தூரத்தில் நின்று கொண்டு, பீரங்கிக் குண்டை வாங்கிக் கொண்டு, வெள்ளை பனியன் கூட கிழியாமல் கெக்கெபிக்கே என்று காமெடி செய்வதையும் ; கப்பலே சுக்கு நூறானாலும் நம் தலைவர்கள் சிந்தாமல் சிதறாமல் நம்மை சிரிக்க வைக்க முயல்வதையும் படித்து நான் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டுமானால்,

    ஒன்று, நான் சிறுவயது முதலே டாம் & ஜெரி, ரோட் ரன்னர் கார்ட்டூன்களைப் பார்த்து, விழுந்து விழுந்து சிரித்து, உடலெங்கும் தழும்புகளோடு உலாவருபவனாக இருக்க வேண்டும், அல்லது நான் ஒரு சரியான மரமண்டையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால், இம்முறை 'தங்கம் தேடிய சிங்கம்' அப்படியெல்லாம் என்னை வெறுப்பேற்றாமல் வாய் விட்டுச் சிரிக்க வைத்து விட்டது. இம்முறை ப்ளுகோட் பட்டாளம் உண்மையான காமெடி கதையாகவே வெளிவந்து நம்மை சிரிக்க வைத்து வெற்றி பெற்று விட்ட காரணத்தினால் இரண்டாமிடத்தைப் பெறுகிறது !

    தொடர்கிறது...

    ReplyDelete
    Replies
    1. பார்ட் 2 of 2

      மிகவும் எளிமையான கதைகரு ; ஒரு வரி கதை என இவையிரண்டை மட்டுமே வைத்துக் கொண்டு, கதையைச் சுவாரசியமாகவும், நகைசுவை உணர்வு கடைசி வரை மங்கி விடாமலும் ஒரு மிகச் சிறந்த ஆல்பத்தை உருவாக்கி உள்ளார்கள் !

      புத்தகம் கையில் கிடைத்தவுடன் படிக்கக் கூடிய கதை மட்டுமல்ல ; சிரிப்பு வெடிகள் ஆங்காங்கே கண்ணி வெடியாக, வசனங்கள் தோறும் புதையுண்டு கிடப்பது, நிச்சயம் காமிக்ஸ் வாசகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான் ! கதையில் இரண்டு இடத்தில் வரும் சிறு நெருடல்களை மட்டும் சகித்துக் கொண்டால் இந்தக் காமெடி கதையில் குறையொன்றும் இல்லை என்றே சொல்லலாம். (எடிட்டர் அதை தம் வசனங்கள் மூலம் மாற்றி அமைத்து இருந்து இருக்கலாம்)

      காட்டுவாசி உண்மையாகவே காமெடியில் பட்டையைக் கிளப்புகிறார். அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் சிரிப்புக்கு உத்திரவாதம் அளிக்கிறது. கடைசிவரை சிரித்துக் கொண்டே படிக்க நினைக்கும் வாசகர்கள், இந்தக் கதையை முதல் வாசிப்பிற்கு தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் !

      இந்தக் கதையின் வெற்றிக்கு வழிகாட்டியாக இருப்பது காட்டுவாசி மட்டுமே என்பதால், அவருக்கு நம் பாராட்டுக்கள் உரித்தாகட்டும். சும்மா சொல்லக் கூடாது, உண்மையிலேயே ரெனால்ட் ஒரு காட்டுவாசி பய தான். ஹா.. ஹா.. ஹா :D

      Delete
  72. ///விண்ணிலிருந்து தலைகுப்புற விழுந்தப் பின்பும், சாவகாசமாய் எழுந்து ஜோக் அடிப்பதையும் ; நாலடி தூரத்தில் நின்று கொண்டு, பீரங்கிக் குண்டை வாங்கிக் கொண்டு, வெள்ளை பனியன் கூட கிழியாமல் கெக்கெபிக்கே என்று காமெடி செய்வதையும் ; கப்பலே சுக்கு நூறானாலும் நம் தலைவர்கள் சிந்தாமல் சிதறாமல் நம்மை சிரிக்க வைக்க முயல்வதையும் படித்து நான் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டுமானால்,///

    லாஜிக் லாஜீக் லாஆஜீஈக்.…………


    ஒரு படத்துல நம்ம வைகைப்புயல் தற்கொலை செய்ய விரும்பும் நபரை காப்பாற்ற., பேச்சு சுவாரஸ்யத்தில் பாம் மீது உட்கார்ந்து விடுவார். பாம் வெடித்து தூக்கி எறியப்பட்ட பின் , மரத்தில் தொங்கிக் கொண்டு " பேசாம நம்மளும் பந்தயம் கட்டியிருக்கலாம் " ன்னு பொலம்புவாரு.

    நம்ம செந்தில் சார் ஒரு படத்துல., இந்த வெடிகுண்டின் திரியை கடித்து துப்பிட்டு பத்து எண்ணினால் குண்டு வெடித்துவிடும் என்று அண்ணன் கவுண்டரிடம் சொல்லுவார். அதை சோதனை செய்ய., திரியை கடித்து துப்பிவிட்டு., ஒன்று இரண்டு என விரல்விட்டு எண்ணுவார். ஐந்து முடிந்தவுடன் வெடிகுண்டை பிடித்துக்கொள்ளும்படி கவுண்டரிடம் கொடுப்பார். கவுண்டரோ "நீயே வெச்சுக்கோடா " எனச் சொல்ல., செந்தில் சார் வெடிகுண்டை கால்களுக்கிடையில் வைத்துக்கொண்டு மீதத்தை எண்ணும்போது வெடிகுண்டு வெடிக்கும். உடை மட்டும் கிழிந்து தொங்க செந்தில் சார் காட்சியளிப்பார்.

    மேற்கண்ட காமெடிகளுக்கு சிரிப்பவர்களால் ப்ளூகோட்ஸின் பீரங்கி காமெடிகளுக்கு சிரிக்க முடியும் என்பது என் கருத்து.

    இன்னொரு விசயம்., நான் இன்னமும் டாம் & ஜெர்ரி., ரோட் ரன்னர்., பிங் பேந்தர் ஏன் இப்போதைய காக்ரோச்சுகளுக்கு கூட விழுந்து விழுந்து சிரிக்கிறேன். (D) (P) :-) :-):-) எல்லாமே.!!!

    ReplyDelete
    Replies
    1. //மேற்கண்ட காமெடிகளுக்கு சிரிப்பவர்களால் ப்ளூகோட்ஸின் பீரங்கி காமெடிகளுக்கு சிரிக்க முடியும் என்பது என் கருத்து//

      தாங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் திரைப் படங்களை நான் பார்க்கவில்லை. ஒருவேளை இப்படங்களைப் பார்த்திருந்து, இந்தக் காமெடி காட்சிகளைக் கண்டு ரசித்திருந்து, நானும் விழுந்து, விழுந்து, விழுந்து, விழுந்து சிரித்து இருந்து இருப்பேனால் - தற்போது நானும் கூட விலா நோகச் சிரித்திருப்பேனோ என்னவோ ?!

      :-) அளவான புன்னகை மட்டுமே :)

      Delete
  73. விடுதலையே உன் விலையென்ன?

    இந்தக் கதையின் ரிசல்ட்டை தெரிந்து கொள்ள, எடிட்டர் அவர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருப்பதை அறிய முடிகிறது. நானும் நேற்றிலிருந்து காத்திருந்தப் பின்பு தான் பதிவிடுகிறேன். சைபீரியா என்றவுடன் உறைந்துப் போக வைக்கும் குளிரை நாம் கற்பனை செய்ய இயன்றாலும், கதைகளில் காட்சியாக ; வனாந்தரமாகக் காணக்கிடைப்பது என்னவோ மிகக் குறைவே !

    திரும்பிய பக்கமெல்லாம் மனித முகங்கள் ; கிராபிக் நாவல்களுக்கே உரிய 'மங்காத்தா' ஸ்டைல் கதை சொல்லும் யுக்தி. அதாவது, உள்ளே வெளியே சீட்டாட்டம் போல கதையை ஒவ்வொரு பேனல் க்கோ அல்லது ஒவ்வொரு பக்கத்திற்கோ முன் அறிவிப்பு இன்றி மாற்றி மாற்றிப் போட்டு குழப்புவது என சரியாகவே இருந்தாலும், கதையில் அவ்வளவு வலு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை !

    இன்னும் கூட சொல்லப் போனால், கதையின் ஆரம்பத்தில் ஆழமான சோகம் விதைக்கப்படவில்லை ; இது போன்ற கதைகளில் வழக்கமாக கதையெங்கும் இழைந்தோடும் மெல்லிய ரணம் இதில் நம்மை ஆழமாக பாதிக்கவில்லை ; பிறகு எப்படி கடைசியில், அவர்களின் விடுதலையின் போது நம்மால் குதூகளிக்க முடியும் ?

    எனவே என்னைப் பொருத்தமட்டில் இந்தக் கதையின் கவுண்ட் டவுன், 3 என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் மற்றவர்களின் எண்ணங்கள் எப்படியிருக்கிறது என்று அறிந்து கொள்ள எடிட்டரைப் போலவே மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பர்களே !

    மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும் !!

    ReplyDelete