Powered By Blogger

Sunday, June 28, 2015

ஒரு விரல் குறுக்கிய பதிவு !

நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் 4 வாரங்களைக் கடத்துவது ஒரு யுகமாய்த் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? என்று தெரியவில்லை......! ஜில் ஜோர்டனையும், அட்டையில் 'வரக்..வரக் ' என சொரிந்து கொண்டே நடை போட்ட ப்ளூகோட் பட்டாளத்தையும் உங்களுக்கு அனுப்பியதெல்லாம்  நான் ஏழாம் வகுப்புப் படித்த நாட்களின் தூரத்து நினைவுகள் போல் நிழலாடுகின்றன மண்டைக்குள் ! "இதழ் வந்தது ; பிரித்தோம் ; படித்தோம் - what next ?" என்ற கேள்விகள் உச்சரிக்கப்படாவிட்டாலும், அரங்கேறும் அரட்டைகளுக்கு மத்தியில் அவை இங்கே மௌனமாய் எழுந்து  நிற்பது போலொரு உணர்வு கூட எனக்குத் தோன்றுகிறது ! தொடரவிருக்கும் நமது 'தல ஸ்பெஷல்' கொஞ்ச வாரங்களுக்காவது உங்களை பிசியாக வைத்திருக்கப் போவது உறுதி என்பதால் - அந்த "what next ?" கேள்வியானது இம்மாதம் அத்தனை துரிதமாய்த் தலை தூக்காது என்றே நினைக்கிறேன் ! பைண்டிங் பணிகள் முடிந்து - இதற்கென ஆர்டர் கொடுத்துத் தயார் செய்யப்பட்டிருக்கும் ஸ்பெஷல் டப்பாக்களுக்குள் தஞ்சம் புகுந்து THE LION 250 இங்கிருந்து ஜூலை 3-ஆம் தேதி புறப்படும் ! நெய்வேலி புத்தக விழாவினில் இதனை வெளியிடுவது என்பதே ஒரிஜினல் பிளான் ; அப்படிப் பார்த்தால் - we are on target - becos நெய்வேலி விழா துவங்குவதும் 3-ம் தேதி தான் ! சமீப சமயங்களின் பாணியில் -" ஸ்பெஷல் இதழ்கள் - அச்சமயத்து  ஒரு புத்தக விழாவில் வெளியீடு ; நம் சந்திப்பு" என்பது இம்முறை சாத்தியமில்லாது போய் விட்டதில் வருத்தமே எனினும், ஈரோடு கூப்பிடு தொலைவில் உள்ளதென்ற விஷயத்தை நினைவுக்குக் கொணர்ந்து மனதைத் தேற்றிக் கொள்கிறோம் ! ஈரோட்டில் நமக்கு அதிர்ஷ்டமும், ஸ்டாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் CCC ஜரூராய் தயாராகி வருகிறது ! அதற்குள் தாவும் முன்பாக - நெய்வேலி புத்தக விழாவில் நமது இதழ்கள் 2 வெவ்வேறு விற்பனையாளர்களின் ஸ்டால்களில் பிரதானமாய் விற்பனைக்குக் காட்சி தரும் என்ற (ஆறுதல்) சேதியைப் பகிர்ந்து கொள்கிறேன் ! நம் பணியாளரும் சில நாட்களுக்கு நெய்வேலியில் தங்கியிருந்து அந்த ஸ்டால்களில் நமது விற்பனைகளுக்கு முன்னுரிமை தந்திடும் முனைப்பில் செயல்பட்டிடுவார் ! So அந்தப் பக்கங்களுக்கு முற்றிலும் முதன்முறையாய் நம் இதழ்கள் அடியெடுத்து வைக்கக் காத்துள்ளன ; நிலக்கரி நகர் வாசகர்களிடம் கொஞ்சமேனும் ஒரு முத்திரை பதிக்க சாத்தியமாகிடும் பட்சத்தில் அதுவொரு சந்தோஷ முன்னேற்றமாய் இருந்திடும் ! Fingers crossed...!

வெளிச்ச வட்டத்தின் அடுத்த வாடிக்கையாளர்கள் நமது CCC -ன் கார்ட்டூன் கும்பலே என்பதால் நிஜமாகவே ஒரு ஜாலியான வேகத்தில் பணிகள் அரங்கேறி வருகின்றன ! CCC -ன் புக் # 3-ன் நாயகர் பற்றிய அறிமுகத்தை இந்த வாரம் வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றியதால் அந்த வேலையைப் பார்ப்போமா ? ஆசாமி உங்களுக்கு முற்றிலும் புதியவர் என்று சொல்ல முடியாது ; இவரொரு 'கெக்கே பிக்கே' சிரிப்புப் பார்ட்டி மட்டுமே என்றும் முத்திரை குத்திட முடியாது ! கார்டூன் ஸ்டைல் ஓவியங்களுடன், ஜாலியான கதை நகர்த்தலுடன், ஒரு உருப்படியான கதையையும் தாங்கி வரும் இந்தக் கட்டிளன்காளைக்குக் "கர்னல் க்ளிப்டன்" என்பதே நாமகரணம் ! ஏற்கனவே ஒரு நரை முடி கொண்ட மீசைக்காரர் நம் மத்தியில் சீரியசான பாணிகளில் சாகசம் செய்து வர ; இந்த மீசைக்கார பிரம்மச்சாரியோ அதே சாகசங்களை சற்றே கோணங்கித்தனப் பாணியில் நடத்துவதை விரைவில் பார்த்திடப் போகிறீர்கள். "காமெடி கர்னல்" என்ற பெயரில் ஏதோ ஒரு மாமாங்கத்தில் மினி-லயனில் (சரி தானா ?) ஒற்றை சாகசத்தில் மட்டுமே தலைக்காட்டிய இந்த பிரிட்டிஷ் துப்பறியும் சிங்கம் 2016-ல் கொஞ்சம் active ஆக நம்மிடையே வலம் வரும் சாத்தியங்கள் பிரகாசம் ! Of course இவருக்கு நீங்கள் தந்திடப் போகும் வரவேற்பு தான் long run-ல் இவரது தலைவிதியை நிர்ணயம் செய்திடும் முக்கிய அம்சமாக இருக்கப் போகின்றது என்றாலும் - இவர் தாக்குப் பிடிப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது ! Cinebooks-ல் சில காலமாகவே வெளிவந்து கொண்டிருக்கும் க்ளிப்டன் அங்கே decent விற்பனைகளைச் சந்தித்து வருகிறாராம் ; அவற்றுள் சுவாரஸ்யமான கதைகளையாய் கடந்த முறை படைப்பாளிகளைச் சந்தித்த போது அள்ளிக் கொண்டு வந்திருப்பதால் என் மேஜை நிறைய இந்த மீசைக்காரர் விரவிக் கிடக்கிறார் ! பாரிஸ் செல்லும் சமயங்களில் எல்லாம் படைப்பாளிகளின் சமீபத்திய பிரெஞ்சு ஆல்பங்களைப் புரட்டிப் படம் பார்ப்பது எனது பொழுதுபோக்கு என்றாலும், அவர்களின் தலைமை நிர்வாகி அலுவலகத்தில் இருக்கும் பட்சத்தில் எனக்குப் பிரத்தியேக அழைப்பு வந்து விடும் - ததும்பி வழியும் அவரது ஷெல்புகளிலிருந்து ஆங்கில ஆல்பங்களை அப்புறப்படுத்தி இடத்தைக் கொஞ்சம் காலி செய்திடும் பொருட்டு ! "இவையெல்லாம் புதுசாய் வந்தவை...இது வேணுமா ? இது ஏற்கனவே உள்ளதா உன்னிடம் ?" என்று அக்கறையாய் விசாரித்து குறைந்த பட்சம் பத்து கிலோ எடையிலான ஆல்பங்களை நான் தோளில் போட்டுத் தூக்கிச் செல்வதை புன்சிரிப்போடு வேடிக்கை பார்ப்பது அவர் வழக்கம் ! குவிந்து கிடக்கும் ஆங்கில பதிப்புகளிலிருந்தும் ; வேறு சில அமெரிக்கப் பதிப்புகளிலிருந்தும் மாதிரிகளை அள்ளி வந்து விடும் போது நம் கதைத் தேர்வுகள் ; மொழிபெயர்ப்பு என சகலமுமே சுலபமாகி விடுகிறது என்பதால் - புஜமே கழன்று போனாலும் பரவாயில்லைடா சாமி ! என்று நான் தேட்டை போடுவது வாடிக்கை ! அதன் சமீபத்தைய பலனே க்ளிப்டன் !


க்ளிப்டனின் பின்னணியிலும் சரி, இம்மாதம் அறிமுகம் காணும் நம் லியனார்டோ தாத்தாவின் பின்னேயும் சரி - பெல்ஜிய காமிக்ஸ் படைப்புலகின் 2 ஜாம்பவான்களான டெ க்ரூட் & டர்க் தான் உள்ளனர் ! இந்த ஆற்றல்மிகு ஜோடியின் படைப்புகள் நிச்சயமாய் சோடை போகாதென்ற நம்பிக்கை எனக்குள்ளது !

ஜில் ஜோர்டான் கூட இதே போன்ற அடையாளங்களுக்குச் சொந்தக்காரரே ; அவருக்கும் கார்டூன் பாணி சித்திரங்கள் ; அவரும் ஒரு துப்பறிவாளர்; அங்கேயும் கதைக்கு மத்தியினில் humor ! ஆனால் ஜில்லாரை விட கிளிப்டன் சற்றே மாறுபட்டு எனக்குத் தோன்றுகிறார் - கதைகளில் புராதன நெடி அந்தளவுக்குத் தூக்கலாய் அடிக்காத காரணத்தால் ! So இந்தத் துப்பறியும் திலகம் நம்முடன் எத்தனை தொலைவு பயணிக்கிறார் என்பதை தொடரும் நாட்களில் அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளேன் ! Fingers crossed once more !

அடுத்த மாதம் CCC என்பதால் லேசாகப் பின்சீட்டுக்குச் செல்லும் நம் ஒற்றைக்கையார் பற்றியும் இங்கே லேசாகப் பார்ப்போமே ? ஏற்கனவே நான் சொன்னபடி இந்தத் தொடரின் மிகச் சங்கடமான கதைகள் தொடரும் 2 பாகங்களின் தொகுப்பான :கறுப்பு விதவை" தான் என்பதில் துளியும் ஐயம் கிடையாது ! போட்டுத் தாக்கும் வன்முறை ; கையாளக் கஷ்டமான கதைக் களம் என இதன் ஆக்கத்தின் போது -கதாசிரியர் சீற்றமானதொரு மூடில் இருந்திருக்க வேண்டும் ! பெருசாய் சென்சார் செய்து கதையின் ஓட்டத்தைச் சீர்குலைக்கும் பாதையையும் தேர்வு செய்திடாமல் ; அப்படியே போட்டு பிய்ந்த விளக்குமாற்றுச் சாத்துக்கள் வாங்கும் ரஸ்தாவுக்குள்ளும் அடியெடுத்து வைக்காமல் இடைப்பட்டதொரு அந்தி மண்டல பாணியைக் கடைபிடிக்க முயற்சித்து வருகிறேன் ! செவ்விந்தியர்களின் இஷ்ட தெய்வம் குண்டக்க மண்டகானந்தா தான் என்னை இம்முறை காப்பாற்றியாக வேண்டும் ! (ஜெயசித்ராவிடம் 'லெப்ட்' வாங்கி விட்டு பட்டாப்பட்டி டிரௌசரொடு ஓரமாய்க் குந்தி இருக்கும் கவுண்டர் இப்போவே என் மனக்கண்ணில் முன்னும் பின்னும் ஓடிப் பிடித்து விளையாடி வருகிறார் !!!) Fingers crossed yet again !!!


இந்த அழகில் - பௌன்சர் தொடரில் இறுதி 2 ஆல்பங்கள் வேறொரு பதிப்பகத்தின் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகியுள்ளன ! அவற்றுக்கும் உரிமைகளை வாங்குவதா ? அல்லது 'சிவனே' என்று அந்த slot -ல் தளபதியைப் புகுத்தி விடுவதா ? என்ற ரோசனை மண்டைக்குள் !! 

ஆகஸ்டில் இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் நமது சிரசாசனத் தலைவரும், மின்சாரக் காதலரும் தலை காட்டுகிறார்கள் - மறுபதிப்புக் கோட்டாக்களோடு ! "உறைபனி மர்மம்" இதழின் பணிகளை நேற்றிரவு பார்த்துக் கொண்டிருந்த பொழுது நிஜமாகவே என் காதுகளில் மல்லிகைச் சரங்களின் மணம் தூக்கலாய் வீசியது போலொரு பிரமை ! But இதுவும் கூட CCC வெளியாகும் ஒரு ஜாலி மாதத்தில் அந்த feel good factor -ஐ உச்சப்படுத்த உதவினால் சூப்பரே என்று நினைத்துக் கொண்டேன் ! ஸ்டாக் நிலவரங்களை நோட்டம் விட்ட பொழுது - 'நயாகராவில் மாயாவி" கையிருப்பு அதள பாதாளத்தில் இருப்பதைப் பார்த்தேன் ; மறு கணம் அந்த மல்லிகைச் சரம் காதுகளில் மட்டும் என்றில்லாது மேஜையில், நாற்காலியில் சுற்றிக் கிடந்தாலும் ஒ.கே. ஒ.கே. என்று நினைக்கத் தோன்றியது ! The man is sheer magic ! 

பற்றாக்குறைக்கு நியூயார்க் நகரத்தை  அப்பத்தைப் பிய்த்துக் கொள்வதைப் போல அடியிலிருந்து லவட்டிச் செல்ல முயற்சிக்கும் ஆசாமியும் ஆகஸ்டில் உண்டெனும் போது கொத்துக்களுக்குப் பஞ்சமிராது ! நேற்றைக்கு இந்தக் கதையை முதன்முறையாகப் படித்துப் பார்த்த ஜூனியர் எடிட்டர் "செம சூப்பர் !!" என்று சான்றிதழ் வழங்கியுள்ளார் ! So என்றேனும் ஒரு புது வருடத்தில், திடீரென்று ஒரு 200 பக்க மொக்கை இதழில் நம் கூர்மண்டையரின் எஞ்சி நிற்கும் புதிய கதை வெளிச்சத்தைப் பார்க்க நேரிட்டாலும் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள் ! Fingers crossed - இம்முறையோ தமிழ் பேசும் நல்லுலகத்துக்கு அத்தகைய சோதனை புலர்ந்திடக் கூடாதே என்று !!

நாளைய பொழுது எனக்கொரு பயணப் பொழுது என்பதால் இரவில் ஆஜராக முயற்சிப்பேன் ! Have fun guys ! Enjoy the day & the week ahead !

Updates !! இன்னமுமொரு புது ஆக்ஷன் கௌபாய் கதைத் தொடருக்கும், ஒரு கார்டூன் தொடருக்கும் உரிமைகள் கிட்டியுள்ளன !

கடந்த 3.5 ஆண்டுகளாய் நம் அலுவலகத்தில் ஆர்வமாய்ப் பணி செய்து வந்த ஸ்டெல்லா மேரி நேற்றோடு விடை பெற்றுச் சென்று விட்டார் ! திருமணத்தைத் தொடர்ந்து குடும்ப இடமாற்றம் !! ஏற்கனவே பணியாற்றி வரும் Ms .துர்கா + புது வரவான Ms .வாசுகி தான் இனி front office -ல் இருப்பர் !

Caption எழுதும் போட்டிக்கான முடிவை வரும் ஞாயிறுப் பதிவில் பார்ப்போமே ?!

357 comments:

  1. ஐ.... நான் தான் பர்ஸ்ட்டு....

    ReplyDelete
  2. இன்னமுமொரு புது ஆக்ஷன் கௌபாய் கதைத் தொடருக்கும், ஒரு கார்டூன் தொடருக்கும் உரிமைகள் கிட்டியுள்ளன !
    We are waiting....

    ReplyDelete
  3. இன்னமுமொரு புது ஆக்ஷன் கௌபாய் கதைத் தொடருக்கும், ஒரு கார்டூன் தொடருக்கும் உரிமைகள் கிட்டியுள்ளன !
    We are waiting....

    ReplyDelete
  4. 4வது , வணக்கம் சார் ....
    வணக்கம் நண்பர்களே....நலமா ???

    ReplyDelete
  5. எடிட்டர் சார்,
    காமெடி கர்னல் ஏற்கனேவே ரசித்த கதைதான். மீண்டு(ம்) வருவதில் மிக்க மகிழ்ச்சி.
    நீங்கள் புதிய உரிமை பெற்ற கௌபாய் தொடர் Jonathan Cartland ஆ சார் :-)

    ReplyDelete
  6. /// THE LION 250 இங்கிருந்து ஜூலை 3-ஆம் தேதி புறப்படும் !////--- ஆகா பிரியாணி வாசம் மூக்கை துளைக்கிறது........ சனிக்கிழமை பெருமாளை கும்பிட்டு விட்டு வந்தம்னா தலை தரிசனம் கிடைக்கும் .......அமெரிக்க சுதந்திர நாளில் தலைக்கும் விடுதலை .....

    ReplyDelete
  7. The lion 250 இங்கிருந்து ஜூலை 3 ம் திகதி புறப்படும் . கரும்பு தின்ன கூலியர? தலையின் 3 கதைகள் அல்லவா?

    ReplyDelete
  8. CCC க்கு இதுவரை அறிவிக்கப்பட்ட 3பேருமே விதமான ரகம் ......4வதும் தனி ரகமா சார் ?
    கார்ட்டூன் பிரியர்கள் விசில் சப்தம் காதைப் பிளக்கிறது .....

    ReplyDelete
  9. இன்னமுமொரு புது ஆக்ஷன் கௌபாய் கதைத் தொடருக்கும், ஒரு கார்டூன் தொடருக்கும் உரிமைகள் கிட்டியுள்ளன !
    I am waiting....

    ReplyDelete
  10. Dear Edi,

    Good to know, Comedy Colonel is back in Tamil Comics. Loved his story published in Mini Lion, in 90s. But his stories could turn a little down right for our taste, going by the quality of albums published by Cinebook. Going by your choices, The fourth cartoon character then is set to be Oom-pa-pah, per your selection techniques. Would be happy if it's so.

    Waiting for Tex special and Cover unveil.

    ReplyDelete
  11. ஆஹா,

    கர்னல் க்ளிஃப்டன் மறுபடியும் வருகிறாரா? அருமை. 2013 காமிக் கானில் இது பற்றி உங்களிடம் கேட்டபோது, பார்க்கலாம் என்று சொன்னீர்கள். அதற்கான நேரம் இப்போது தான் வந்ததா?

    என்னைப் போன்ற புதிய வாசகர்கள் காமெடி கர்னல் பற்றிய ஒரு அறிமுகத்தை படிக்க: காமெடி கர்னல் - சிரிக்க வைக்கும் சூரப்புலி

    ReplyDelete
  12. காமெடி கர்னல் பற்றிய ரஃபீக்கின் பதிவு: காமெடி கர்னல்

    ReplyDelete
  13. மினி லயனில் காமெடி கர்னல் படித்ததில்லை ஆகவே கர்னலின் வருகையை ஆவலுடன் எதிர்பார்கிறேன் ! எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார் என நம்புவோம் மக்களே! Spiderஇன் 200 பக்க கதையை தயக்கமின்றி வெளியிடவும் ஆசிரியரே ! மொக்கையாக இருந்தாலும் முன்னாள் குற்ற சக்கரவர்த்தியின் கீர்த்தியை மனதில் கொண்டு ஏற்றுகொள்கிறோம் ! "தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு மலர் சரம் பார்சல் "

    ReplyDelete
    Replies
    1. //Spiderஇன் 200 பக்க கதையை தயக்கமின்றி வெளியிடவும் ஆசிரியரே //
      +1

      Delete
  14. பௌன்சர் தொடரில் இறுதி 2 ஆல்பங்கள் விரைவில் தமிழில் எதிர்பார்க்கிறோம் !

    ReplyDelete
    Replies
    1. //பௌன்சர் தொடரில் இறுதி 2 ஆல்பங்கள் விரைவில் தமிழில் எதிர்பார்க்கிறோம் !//
      +1

      Delete
  15. காமெடி கர்னலின் மீள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  16. Replies
    1. ஐஞ்சாப்பு படிக்கறீயளா.......அ..ஆ..இ..ஈ..எ.....
      எ ஏ பி பீ சி சீ....எல்லாம் நல்லா சொல்லி தர்ராங்களா மிஸ்சு ???

      Delete
  17. Cinebookல் வெளிவந்துள்ள IR$ தமிழில் எதிர்பார்க்கலாமா சார் ? லார்கோ வின்ச் கதை தொடர் போல் வரவேற்பை பெரும் என நினைக்கிறேன் !

    ReplyDelete
  18. // THE LION 250 இங்கிருந்து ஜூலை 3-ஆம் தேதி புறப்படும் !// .,காலை வணக்கங்கள் நண்பர்களே..,..ஜூலை 4 ல் 45ந்தாவது பிறந்த நாள் கொண்டாட இருக்கும் எனக்கு பிறந்த நான் பரிசு அனுப்ப இருக்கும் திரு. எடிட்டர் அவர்களுக்கு நன்றிகள்.....

    ReplyDelete
    Replies
    1. லியனார்டோ தாத்தாவின் லூட்டிகளை காண ஆவலாக உள்ளது....

      Delete
    2. கரூர் சரவணன்.!"கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா.!

      Delete
    3. கரூர் சரவணன் சார் ..அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..தல யோடு கொண்டாடுங்கள் ...:)

      Delete
    4. கரூர் சரவணன் சார் ..அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..தல யோடு கொண்டாடுங்கள் ...:)

      Delete
    5. அட்வான்ஸ் வாழ்த்து சொன்ன & சொல்லப்போகும் நண்பர்கள் அனைவர்களுக்கும் நன்றிகள்...

      Delete
  19. காலை வணக்கம் எடி சார் & நண்பர்களே,பதிவை படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  20. /// THE LION 250 இங்கிருந்து ஜூலை 3-ஆம் தேதி புறப்படும் !////
    அடுத்த வாரம் தல வாரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ReplyDelete
  21. காமெடி கர்னலின் மீள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  22. சார் அசத்துரீங்களே. சீக்கிரம் அந்த ஸ்பைடர .......

    ReplyDelete
  23. ரொம்பவே குட்டி வயதில் படித்ததால் 'காமெடிக் கர்னல்' ஞாபகத்தில் இல்லை. தற்போது அந்தப் புத்தகமும் என்னிடம் இல்லை.
    தாத்தாவின் இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றியடைய வாழ்த்துகள்!

    ReplyDelete
  24. டியர் விஜயன் சார்., ஏதேது ஒரே சந்தோஷ அறிவுப்புகளாகவே உள்ளது.அனைத்து தரப்பு வாசகர்களையும் திருப்திபடுத்தும் அறிவிப்புகள்.சூப்பர்ஜி,சூப்பர்ஜி. காமெடிகர்னல் புத்தகத்தை பலமுறை படித்துள்ளேன்,வயிறு குலுங்க சிரித்துள்ளேன்.ஈரோட்டில் மிகப்பெரிய காமிக்ஸ் விருந்தும்,ஸ்டாலின் வீட்டில் மெய்யாலுமே நம்ம வீட்டு விருந்தும் காத்துள்ளது என நினைக்க, நினைக்க, Bookfair சீக்கிரம் வரகூடாதா என ஏங்க வைக்கிறது.அப்புறம் ஒரு விசயம் சார்,ஈரோடு புத்தகதிருவிழாவில் டெக்ஸ் வில்லருக்கு, ஏதோ ஒரு வகையில் Contribute செய்வதாக இரு பதிவுக்கு முன்பு அறிவித்திருந்தீர்கள்.அதை பற்றிய நண்பர்களின் யூகங்கள் கன்னாபின்னாவென உள்ளன.அவை
    1.டெக்ஸ் வில்லர் போஸ்டர் மட்டும் தருவார்,விஜயன் சார்.

    2.கண்டிப்பாக டிராகன் நகரம் மறுபதிப்பு கலரில் சர்ப்ரைசாக வெளியிடுவார்.
    3.இந்த வருட கோட்டாவில் எஞ்சியுள்ள டெக்ஸ் கதையை வெளியிடுவார்.
    எனக்கென்னவோ யூகம் 3வதுதான் நடக்கும் என்று, அறிவு சொல்கிறது.ஆனால் யூகம்2வது நடக்ககூடாதா என மனது ஏங்குகிறது.யூகம் 1 கண்டிப்பாக வேண்டவே வேண்டாம் என அறிவும்,மனதும் சேர்ந்து சொல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. //மாமன்மகள் படத்தில் ஜெயச்சித்ராவிடம் அடிவாங்கிய..............//சார் இந்த கதை கொடூரம் வக்கிரம் கொண்ட கதை என்று எச்சரித்து தனி சந்தா கட்டி என் வழி தனிவழின்னு போயிகிட்டு இருக்கிறோமே அப்புறம் என்ன சார்?.
      கதை,சமூககட்டுப்பாட்டில் சொகுசாய் வாழம் நமக்கு சற்று நெருடலாக இருந்தாலும் படித்துமுடித்த பின் நாம் பாதுகாப்பான சமுதாயத்தில் வாழ்கிறோம் என்கிற சந்தோசமும் கிடைக்கிறது.!!!

      Delete
    2. டெக்ஸ் வில்லர் போஸ்டர் தான் ஈரோட்டில் ....அல்லது வேறு ஏதாவது கூட இருக்கலாம் ....ஆனால் புத்தகம் என்ற ஆட்டத்திற்கு தான் வரவில்லை என ஆசிரியர் முன்பே தெரிவித்து விட்டாரே....

      Delete
    3. யூகம் 2ஜ நினைத்தால் ....அடடா.. அப்படியும் நடக்குமோ....ஆசிரியர் ஒ௹ வேளை மறந்திருந்தாலும் இப்போது கூட காலம் உள்ளது

      Delete
    4. ////மாமன்மகள் படத்தில் ஜெயச்சித்ராவிடம் அடிவாங்கிய..............//சார் இந்த கதை கொடூரம் வக்கிரம் கொண்ட கதை என்று எச்சரித்து தனி சந்தா கட்டி என் வழி தனிவழின்னு போயிகிட்டு இருக்கிறோமே அப்புறம் என்ன சார்?.//
      +11111111111111

      Delete
  25. தல டெக்ஸ் வருவதருக்கு காத்திருக்கிறோம்!!! அப்டியே எங்க லக்கி லுக், டைய போலிக் அவர்களையும் கொஞ்சம் கண்ணுல கட்டுனிங்கான உங்களுக்கு புண்ணியமா போகும்!!!

    ReplyDelete
  26. விஜயன் சார், காமெடி கர்னல் படித்ததில்லை. ஆவலுடன் இருக்கிறேன்!

    அருமையான பதிவு! நன்றி!

    ReplyDelete
  27. Comedy carnal was a decent story with humour ... Better than JILL Jordan ... Hope new stories are good ...

    ReplyDelete
  28. //So என்றேனும் ஒரு புது வருடத்தில், திடீரென்று ஒரு 200 பக்க மொக்கை இதழில் நம் கூர்மண்டையரின் எஞ்சி நிற்கும் புதிய கதை வெளிச்சத்தைப் பார்க்க நேரிட்டாலும் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள் ! //

    சந்தோஷம்! சந்தோஷம்! !சந்தோஷம்! !!

    ReplyDelete
    Replies
    1. ஹேப்பி அண்ணாச்சி ....அடுத்த வருட புத்தரண்டு மலர் ....அதானாம...

      Delete
  29. //ஜீலை 3ஆம் தேதி //"கண்ணா லட்டு திண்ண ஆசையா.!"சூப்பர்.!
    காமெடி கர்னல் திரும்பவும் வர்ராரா?சூப்பர்தான். படித்த ஞாபகம் உள்ளது.!

    ReplyDelete
  30. காமெடி கர்னல் மீண்டுமா ...சூப்பர் செய்தி சார் ...முடிந்தால் மினிலயனில் வந்த காமெடி கர்னல் கதையையும் மறுபதிப்பாக வெளியிட்டால் இன்னும் மகிழ்ச்சி ...

    வலை மன்னனின் புது சாகசமே வரும் பொழுது திகிலில் தொடராக வந்த "விண்வெளி பிசாசு " மறுபதிப்பாக வந்தால் வரவேற்பு இன்னும் பலமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது சார் ..


    தலையை காண இன்னும் ஒரு வாரம் காத்து கொண்டு இருக்க வேண்டுமா ...நாளே நகர மாட்டேன் என்கிறது .இதில் ஈரோடு புத்தக காட்சியை நினைத்தால் நாட்கள் யுகமாக போகிறது ....

    ReplyDelete
    Replies
    1. தலைவரே.!அது விண்வெளி பிசாசுதான் என்று தோன்றுகிறது.!(தீவிர ஸ்பைடர் ரசிகர்கள் யூகித்து சொல்லவும்.!!!)

      Delete
    2. அது வேற ....இது வேற நண்பா ....ஆனா ரெண்டுமே வேணும் ...

      Delete
    3. ஸ்டீல் க்ளா.!ஓ!அப்படியா?ரெம்ப சந்தோசம்.! விண்வெளி பிசாசு சித்திரங்கள் தெளிவாக அட்டகாசமாய் இருக்கும்.!!!

      Delete
  31. லக்கி ..சிக்பில் இல்லாத ஒரு காமெடி ஸ்பெஷலா ...ஆச்சர்யமாக தான் உள்ளது ...:)

    ReplyDelete
    Replies
    1. லக்கி லூக் இல்லாத கார்டூன்கதைகள் ஆச்சர்யமாகத்தான் உள்ளது.
      LMS ல் மாடஸ்டிக்கு இடம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தலிருந்தே எடிட்டர் மரபுகளை மாற்றி விட்டார்.(இது வரை வந்த காக்டெயில் ஸ்பெஷல்கள் அனைத்திலும் மாடஸ்டிக்கு முக்கிய இடம் கொடுத்துள்ளர்.)மாற்றம் ஒன்றே மாறாதது.!இதுவும் நன்றாகத்தான் உள்ளது.புதுசு கண்ணா புதுசு.!!!

      Delete
  32. பெளன்சரா ...டைகரா என்ற என்கிற ஓட்டத்தில் இப்போது பெளன்சர் தான் முன்னிலையில் இருப்பதாக தோன்றுகிறது ...எனவே .....ஹிஹி ...

    பின்னால் டைகர் ரசிகர் இருப்பதாக தோன்றுகிறது ..நான் அப்புறமா வரேன் சார் ...:)

    ReplyDelete
  33. சுந்தர் சார் சொன்னது போல ஈரோட்டில் டெக்ஸ்க்கான மரியாதை என்னவாக இருக்கும் என்று மண்டை உடைந்து கொண்டே இருக்கிறது சார் ..ஏதாவது இப்போது கோடு ஆவது போட முடியுமா என்று பாருங்கள் சார் ..

    ReplyDelete
  34. இன்னமுமொரு புது ஆக்ஷன் கௌபாய் கதைத் தொடருக்கும், ஒரு கார்டூன் தொடருக்கும் உரிமைகள் கிட்டியுள்ளன !
    I am waiting....

    ReplyDelete
  35. ஸ்டெல்லாவிற்க்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. கடந்த 2015ஜனவரியில் ஆரம்பித்த பௌன்சரை 2016 ஜனவரியில் முடித்து வைக்க ஆவன செய்யுங்களேன்.....

    ReplyDelete
  37. "கர்னல் க்ளிப்டன்" -எதிர்பார்ப்புடன் இருக்கின்றேன் Edit Sir.

    நீங்கள் புதிய உரிமை பெற்ற கௌபாய் தொடர் Jonah Hexஆகா இருந்தால் மிக மகிழ்ச்சி

    ReplyDelete
  38. லக்கியும்., ஆர்டினும் இல்லாமல் ஒரு காமெடி ஷ்பெசல்., சற்றே நெருடலான விசயம்தான்.
    ஓ.கே. மற்ற நாயகர்கள் ஈடு செய்வர் என்று நம்புவோம்.

    ஆனாலும் இந்த வருடம் ஒரே ஒரு லக்கி., சிக்பில் கதைதான் எனும்போது இது ஒரூ கருப்பு வருடமாக தோன்றுகிறது.!

    ReplyDelete
    Replies
    1. கருப்பு வருடம் ///--ஏன் மாமா இந்த கொலை வெறி??.......கார்டூன் ஸ்பெசல்னு முதல் முறையாக 42ஆண்டு கால காமிக்ஸ் வரலாற்றில் வருவது கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்லவா?????...
      கொளபாய் ஸ்பெசல்னு முன்பு வந்த போது கூட அதில் லக்கியின் கார்ட்டூன் கதை வந்தது .....கார்ட்டூன் க்கு இங்கே முன்னிறுத்தல் இல்லை என்று சொன்னால் நம்புவதற்கு நாங்கள் ஒன்றும் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்லவே ....

      Delete
    2. அண்டர்வேர் டெக்ஸ் அங்கிள்.!
      கருப்பு வருடம்னு சொன்னதை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன். :):):)

      Delete
  39. //Updates !! இன்னமுமொரு புது ஆக்ஷன் கௌபாய் கதைத் தொடருக்கும், ஒரு கார்டூன் தொடருக்கும் உரிமைகள் கிட்டியுள்ளன !//

    ஆஹா.! அருமை.!

    அப்படியே கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என்று அந்த ... அந்த .., ஆஸ்ட்ரிக்ஸ் & ஒப்ளிக்ஸ் ன் தரிசனத்தை ஒருமுறையேனும் தமிழில் காட்டிவிட்டீர்கள் எனில் நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிடும். (டின் டின் ஐ விட ஆ /ஒ நல்லாயிருக்கும் என்பது என் கருத்து) :-)

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார்.,
      இதற்கான பதிலை இங்கே நீங்கள் ஏற்கனவே பலமுறை சொல்லியிருந்தாலும் ,
      பாழும் மனசு கேட்கமாட்டேங்குது.!

      Delete
    2. கரூரார் இங்கே அரைசதம் கொண்டாட இருக்கும் வேளையில் அவரை வாழ்த்த அவர்கள் வந்தே தீருவார்கள் என உங்கள் ஜக்கம்மா இப்போது தான் இங்கே சொன்னாள் மாமா....ஹி...ஹ...

      Delete
    3. அரை சதத்திற்கு இன்னும் ஐந்து வருடங்கள் உள்ளன..அதற்குள் எவ்வளவோ பார்துவிடலாம்...

      Delete
  40. Dear Editor,

    ///..So என்றேனும் ஒரு புது வருடத்தில், திடீரென்று ஒரு 200 பக்க மொக்கை இதழில் நம் கூர்மண்டையரின் எஞ்சி நிற்கும் புதிய கதை வெளிச்சத்தைப் பார்க்க நேரிட்டாலும் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள் ! ../

    அது ஏன் Jan-2016 ஆக இருக்கக்கூடாது? :)

    ஏன் அது வரை காத்திருக்க வேண்டும்? அதுக்கு முன்பே கிடைக்க வாய்ப்பிருக்கிறதா? :)

    ReplyDelete
    Replies
    1. ///அது ஏன் Jan-2016 ஆக இருக்கக்கூடாது////--- அலோ நீங்கள் 2016ஜனவரி சென்னை புத்தக விழாவில் வந்து எங்களை எல்லாம் மகிழ்விப்பதாக உறுதியாக சொல்லுங்கள் .......போ.குழு உடனடியாக களம் இறங்கும் !!!!

      Delete
  41. மீண்டும் 'காமெடி கர்னல்' க்ளிஃப்டன்! இரு தினங்களுக்கு முன்னர் தான், சினிபுக்கில் வெளியான Black Moon கதையைப் படித்தேன். மெல்லிய புன்னகைக்கு உத்தரவாதமான, ஜேம்ஸ்பாண்ட் பாணி(யை) காமெடி (செய்யும்) கதை.

    பௌன்சர் தொடரை முழுவதுமாக வெளியிட்டு விடுங்களேன்?

    ReplyDelete
  42. ////அப்படியே கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என்று அந்த ... அந்த .., ஆஸ்ட்ரிக்ஸ் & ஒப்ளிக்ஸ் ன் தரிசனத்தை ஒருமுறையேனும் தமிழில் காட்டிவிட்டீர்கள் எனில் நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிடும். (டின் டின் ஐ விட ஆ /ஒ நல்லாயிருக்கும் என்பது என் கருத்து) ://///

    +1

    ReplyDelete
  43. Dear Editor,

    Some requests:

    1. Please complete the Bouncer series
    2. Six volumes of All Star WESTERN has been published in The New 52 series of DC comics - should be more than 1100 pages.Is this the NEW cowboy series? If not with your recent arrangements with DC, this may be tried?

    ReplyDelete
    Replies
    1. புது கொளபாய் சீரியஸ் 1100பக்கங்களாஆஆஆஆஆஆஆஆஆஆ!!!!.....ராகவன் ஜி இன்னும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன் ......

      Delete
  44. காலை வணக்கம் நண்பர்களே!

    //கடந்த 3.5 ஆண்டுகளாய் நம் அலுவலகத்தில் ஆர்வமாய்ப் பணி செய்து வந்த ஸ்டெல்லா மேரி நேற்றோடு விடை பெற்றுச் சென்று விட்டார் ! திருமணத்தைத் தொடர்ந்து குடும்ப இடமாற்றம் !!//


    லயன் அலுவலக இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொண்டு புத்தகங்கள் அனுப்புவது தொடர்பாக கேட்கும் வினாக்களுக்கு பொறுமையோடும் தரவுகளோடும் பதிலளிப்பது, மின்னஞ்சலில் விபரங்களை அனுப்புவது என்று ஆசிரியருக்கும் எமக்குமிடையில் நல்ல பாலமாய், பலமாய் செயற்பட்ட சகோதரி திருமதி.ஸ்டெல்லா மேரி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளும், எதிர்கால வாழ்க்கையும் சிறப்பாக அமைய வாழ்த்துக்களும். தெரிந்தோ தெரியாமலோ (!!!!) இந்த 'படுபயங்கரமான' காமிக்ஸ் உலகில் அவர் பட்ட அவஸ்தைகளுக்கு காரணமானவர்களில் நானும் ஒருவனாய் இருந்திருக்கிறேன் என்ற வகையில் அவரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். முதலிலேயே தெரிந்திருந்தால் அலுவலகத்துக்கு போன் செய்து நேரிலேயே சகோதரியிடம் தெரிவித்திருக்கலாம்! மீண்டுமொரு வாய்ப்பு அமையுமாயின் நமது லயன் அலுவலகத்தில் அவர் பணிக்குத்திரும்பவேண்டும் என்று கோரிக்கையையும் முன்வைக்கிறோம்.!

    ReplyDelete
  45. காமிக்ஸ் காதலர்களுக்கு அன்பு வணக்கம். ஒரு வருட பின் தொடரலுக்குப்பின் முதலாவது பதிவு

    ReplyDelete
  46. கெளபாய் தொடர் ஒன்று ..கார்ட்டூன் தொடர் ஒன்று ...#

    ஆஹா ....இனிக்கிறதே .....இவை தொடராக அமையாமல் இருந்தால் இன்னும் தித்திப்பு சார் ....:)

    ReplyDelete
    Replies
    1. தொடர்களும் வேணும் தலீவரே ......
      ஒன் சாட்டுகளுக்கு மத்தியில் ஓரிரு தொடர்களும் இருந்தால் களை கட்டுமே .....

      Delete
    2. தொடர்., மின்னும் மரணம் போல் இருந்தால் ஒ.கேதான்.இரும்பு கை எத்தன் போன்று இருந்தால்.,கிடா விருந்து பந்தியில் பாதியில் எழப்பி விரட்டி அடித்தால் ஏற்படும் கோபம் எரிச்சல் வருவது போல் தோன்றுவது எனக்கு மட்டும்தானா

      Delete
    3. ஏன் MV சார் இரத்தப்படலம் மெகா தொடர் பிடிக்கலயா ??...இரத்தகோட்டை தொடரும் சூப்பர் தானே ....தோர்கல் தொடர் இனிமேல் பிக்அப் ஆகிடும் என நண்பர்கள் சொல்கிறார்கள் ...

      Delete
    4. நீங்கள் சொல்லும் கதைகள் அனைத்தும் தொங்கல் இல்லாதவை.ஆனால் பரலோகப் பாதையில் போன்று அதிக ஆவலையும்எதிர்பார்ப்புடனும் இருப்பது எரிச்சலை தரும்.!!

      Delete
    5. அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான வேணும்னு நாம அழுது அடம் பிடித்தோம் .....

      Delete
    6. //பெட்ரோமாக்ஸ் லைட்//வயித்தெரிச்சலாக இருந்தாலும்.சிரிப்பாக உள்ளது.!!!

      Delete
  47. ////Caption எழுதும் போட்டிக்கான முடிவை வரும் ஞாயிறுப் பதிவில் பார்ப்போமே ?!////-- அட டா முடிவு தள்ளி போடப்பட்டதா !!???...
    விடாகண்டன் பாம்பாம் பிக்காலோ வா ???..
    கொடாகண்டன் செல்வம் அபிராமி யா????...
    அல்லது குறுக்கே புகுந்து வேறு யாரேனுமா ...??? ...யார் வெற்றி ??? யார் வெற்றி ???யார் வெற்றி ???? ....யார் வென்றாலும் முன்கூட்டியே வாழ்த்துக்கள். நண்பர்களே...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வாரம் பரிசு அறிவிக்கும் போது, டெக்ஸ் கதை வெளியீடும் சேர்ந்து வரும்போது சற்றே வீரியம் குறைந்துவிடும்.!

      Delete

  48. 200 பக்கங்களுக்கு ஸ்பைடர் கதை வரப்போகுதுன்னு சொன்னதும் எல்லோரும் பயந்துட்டாங்களா.?
    ப்ளாக் வெறிச்சோன்னு இருக்கே :-)

    ReplyDelete
    Replies
    1. நோ நோ நமக்கெல்லாம் அது ரஸ்கு சாப்பிடர மாதிரி .........
      ///நாளைய பொழுது எனக்கொரு பயணப் பொழுது என்பதால் இரவில் ஆஜராக முயற்சிப்பேன்///---இதுவே ப்ளாக் டல்லடிக்க காரணம் ....இரவு ஆசிரியர் வரும் வேளையில் நாமும் ஆஜர் ஆகலாம் என அனைவரும் எஸ்கேப்......

      Delete
    2. கிட் ஆர்ட்டின்.!ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ............!இருந்தாலும் புயலுக்கு முன் உள்ள அமைதி இது.!(புயல் என்பது டெக்ஸின் வரவு.)

      Delete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. கார்ட்டூன் ஸ்பெஷல் - சந்தா D (12 இதழ்கள் ) 2016 ல் - இப்படி இருந்தால் எப்படி இருக்கும் ?!

    1.சிக் பில்
    2.லக்கி லூக்
    3.ப்ளுகோட் பட்டாளம்
    4.மதியில்லா மந்திரி
    5.ரின் டின் கேன்
    6.SMURFS
    7.காமெடி கர்னல்
    8.லியனார்டோ
    9.ஸ்டீல்பாடி ஷெர்லாக்ஹோம்
    10.புது கார்ட்டூன் தொடர்
    11.விஸ்கி-சுஸ்கி (வண்ண மறுபதிப்பு )
    12.அலிபாபா (வண்ண மறுபதிப்பு )

    2016 ல் இருந்து சிறுவர்களுக்கான தனி கார்ட்டூன் காமிக்ஸ் சந்தா ! பெரியவர்களுக்கும் உகந்தது :))

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர்.ம.ம.!வணக்கம்.நீங்கள் சொன்னது மாதிரி வந்தால் சூப்பர்தான்.இந்த மாதிரிதான் ஏக் தம்மில் மொத்தமாக கார்டூன் ஸ்பெஷல் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.பட்ஜெட் காரணமாக மாறிவிட்டது.

      Delete
    2. Madipakkam Venkateswaran : வணக்கம் நண்பரே ! தற்போதெல்லாம் உடனுக்குடன் பதிலளிக்க முடிவதில்லை. சென்ற பதிவில் எனக்குப் பதிலளித்த ; நான் பதிலளிக்க வேண்டிய - நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். Notify me செய்து விடுவதால் தவறாமல், அநேகமாக அனைத்துப் பின்னூட்டங்களையும் படித்து விடுகிறேன். இருந்தாலும் வாரத்தில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ மட்டுமே இங்குப் பதிவிட இயலுகிறது என்பதால் நண்பர்கள் தவறாக நினைக்க வேண்டாம். நன்றி !

      Delete
  51. டியர் எடிட்டர் ஸர்ர்,
    கரமெடி கர்னல் கிளிப்டன் மீண்டும் தமிழில் ஆஜர்ரகுவது மகிழ்ச்சியே. எப்படியரவது பெளன்சர் இதழின் கடைசி 2 ஆல்பங்களின் உரிமைகளையும் வரங்கி தமிழில் வெளியிடுங்கள் ஸர்ர். பேர்ரசைதரன். என்ன செய்வது? CCC எப்போது வரும் என்றுள்ளது.

    ReplyDelete
  52. நெருடல் ! ( நெருடல் இல்லாமல் இருப்பதே சிறந்தது )

    டியர் விஜயன் சார்,

    இன்றையப் பதிவில், பௌன்சரின் கறுப்பு விதவை பற்றிய தங்களின் சஞ்சலங்கள் என் மனதில் கலக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. என்னைப் பொறுத்தவரை நான் வாங்கி வாங்கிப் பாதுகாத்து வைக்கும் காமிக் புத்தகங்கள் என்னோடு முடிவடையப் போவதில்லை. வாரிசு உரிமை கோரும் விதமாகவும் ; இவையனைத்தும் இன்னாருக்கு மட்டுமே பாத்தியமானது என்று உயில் எழுதி வைக்கும் அளவிற்கு பொக்கிஷமானதாகவும் கருதுகிறேன் :) ஆத்மதிருப்தி என்பது ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சிலதில் மட்டுமே லயித்து வாழ்கிறது. அதன் மதிப்போ ; அதன் தேவையோ - அங்கு அடிபட்டு போகும் ஒன்றாகிறது !

    பொதுவாகவே நாம் பார்க்கும், கேட்கும், படிக்கும் எந்த ஒரு விஷயமும் நம் ஆழ் மனதை விட்டு அகலுவதே இல்லை. ஆழப்பதிந்து, அதற்கான சமயச் சந்தர்ப்பம் சூழ்நிலையாக அமையும் போது - நம் எண்ணத்தின் வலிமையைப் பொருத்து, அது ஆசையாகவோ ; பாதிப்பாகவோ ; செயல் ஊக்கியாகவோ வெளிப்படுகிறது. அவ்வாறு சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையாத வரை - குழப்பமான கனவுகளின் வழியாக நம் வாழ்க்கையின் பெரும்பாலான இரவுகளில், பயத்தையும் ; வேதனையையும் ; அருவருப்பையும் ; சோகத்தையும் ; துன்பத்தையும் அள்ளித் தந்து, ஒவ்வொரு விடியலையும் வேதனைக்குள்ளாக்கியப் பொழுதுகளாக மாற்றிச் செல்கிறது :(

    சாதாராண நிகழ்வுகளுக்கே இத்தனை வலிமை எனில், நாம் நேசிக்கும் காமிக்ஸில், சமூகத்திற்கு ஒவ்வாத அருவருப்பான படத்துடனோ ; அதற்கேற்ற வசனங்களுடனோ பரிணமிக்கும் போது - நம் மனதில் பட்டா போட்டு குடியேறி விட்டால், அவ்வப்போது மனதில் நிழலாடிச் செல்லும் அருவருப்பு சொல்லி மாளாது :( அதற்காக முத்தக் காட்சிகளோ ; அரைகுறை ஆடைகளின் தரிசனமோ கூட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஏனெனில், இவையெல்லாம் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத டிவி விளம்பரங்களாகவே இன்று பரிணமித்து விட்டது. இந்த ஆக்கிரமிப்பில் இருந்து மீள்வது இயலாத காரியம் என்பதால் இதில் (காமிக்ஸில்) அளவுக்கு மீறிய சென்சார் என்பது எந்த விதத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால்,

    ReplyDelete
    Replies
    1. நெருடல் ! ( நெருடல் இல்லாமல் இருப்பதே சிறந்தது ) பார்ட் - 2

      எத்தனையோ விதமான நெருடல்கள் இருக்கலாம் ; அதே சமயம் ஒவ்வொருவருக்கும் அதில் ஏதோ ஒரு விஷயம் நெருடலின்றி தோன்றலாம். ஆனால், இன்றும் நாம் வாழும் நம் சமுதாயத்திற்கு ஏற்பு இல்லாத ; அதனாலென்ன என்று வசியப்படாத மனப்பக்குவத்திற்கு எதிரான விஷயங்களை தயவு செய்து சென்சார் செய்து விடவும். கதையின் போக்கு சிறிது மாறினாலும் கூட எடிட் செய்வது நலம் பயப்பதாகவே அமையும். ஏனெனில், இன்னும் கூட காமிக்ஸ் வாசகர்களில் 90 சதவிகிதம் நபர்கள், கிராபிக் நாவலுக்கு அடிமையாவாதவர்கள் தான் அல்லவா :-)

      ப்ளுகோட் (த.தே.சி) கதை விமர்சனத்தில் கூட இதைத்தான் நான் கோடிட்டு காட்டியிருந்தேன். உதாரணமாக, இயற்கை வகுத்துள்ள விதிக்கு மாறான பாலியியல் உறவுகளைச் சித்தரிக்காமல் விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்பதே என் வேண்டுகோள். எங்கோ நடந்தால் நடந்து விட்டுப் போகட்டும் ; அதுவே அங்கு நடைமுறையாக இருந்தாலும் தொலைந்துப் போகட்டும். நாம் நாமாக இருக்கலாமே ?!

      ஊர் உலகத்தில் நடக்காததையா நாம் படிக்கப் போகிறோம் என்ற கேள்வி எழாமலிருக்கப் போவதில்லை தான் ; அதற்காக நாம், நமக்கு ஒவ்வாத சில விஷயங்களை விலாவரியாக நம் மண்டைக்குள் திணித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதே என் இறுதிக் கருத்து. நன்றி சார் !!

      Delete
    2. @ மி.ம

      ///இயற்கை வகுத்துள்ள விதிக்கு மாறான பாலியியல் உறவுகளைச் சித்தரிக்காமல் விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்பதே என் வேண்டுகோள். எங்கோ நடந்தால் நடந்து விட்டுப் போகட்டும் ; அதுவே அங்கு நடைமுறையாக இருந்தாலும் தொலைந்துப் போகட்டும். நாம் நாமாக இருக்கலாமே ?! ///

      அழகான, நியாயமான கருத்துகள்! +1

      Delete
    3. மிஸ்டர் ம.ம.!பௌன்சர் கதைகளை படிக்கும்போது நெருப்பு துண்டை கையில் வைத்து அல்லாடுவது போன்ற ஓர் உணர்வு.!ஆனாலும் கதையில் ஏதோ ஒரு ஈர்ப்பு அது என்னவென்று புரியவில்லை.!கதையை படிக்கும்போது காய்ச்சல் வந்துவிட்டு போனமாதிரி உள்ளது.கதையை படித்து முடித்தவுடன் மேற்கத்ய கலாச்சாரம் &பெண்கள் மீது ஒரு பரிதாப உணர்வு .நம் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தின் மீது ம் நமது சமூக அமைப்பின் மீது மரியாதை +பெருமிதம் கொள்ளச்செய்தது..!

      Delete
    4. வணக்கம் மி.ம.ம.

      நெத்தியடி கருத்துக்கள்... பளிச்சென்ற வார்த்தைக் கோர்ப்புகள்...

      Delete
    5. வணக்கம் மி.ம.ம.

      நெத்தியடி கருத்துக்கள்... பளிச்சென்ற வார்த்தைக் கோர்ப்புக

      Delete
    6. கருப்பு விதவையில் இயற்கை வகுத்துள்ள விதிக்கு மாறான பாலியியல் உறவுகளைச் சித்தரிக்கும் கட்சிகள் எதுவும் இருப்பதாக நினைவில் இல்லை. கருப்பு விதவை சர்ப்பத்தின் சாபம் விட பரபரப்பாக இருக்கும். 8 மற்றும் 9 கதைகள் இதற்கு முன் வந்த கதைகளை விட பரபரப்பாக இருக்கும்.

      Delete
    7. EV ; MV ; SVV ; STV : நன்றி நண்பர்களே !!

      Mahendran Paramasivam : மிகவும் சந்தோஷமான விஷயம் நண்பரே !!

      Delete
    8. ////8 மற்றும் 9 கதைகள் இதற்கு முன் வந்த கதைகளை விட பரபரப்பாக இருக்கும்.////-அதானே நமக்கு வேணும்.... ஆசிரியர் சார், ஆரம்பித்தது போலவே சென்னை விழாவில் முடித்து வைக்க ஆவண செய்யுங்கள் சார் ...

      Delete
    9. மகேந்திரன் சார்.!!வணக்கம்.!விருப்பு வெறுப்பு இல்லாமல் பொறுப்பாக பதில் சொல்லும் பாணி எனக்கு ரெம்ப பிடித்துவிட்டது.!

      Delete
    10. மிஸ்டர் ம.ம.! நீங்கள் கூறிய கருத்துக்கள் 100% உண்மைதான் .!.பௌன்சரின் முதல் கதையிலே யே டர்ஆகி போனது என்னவோ வாஸ்துவம் தான்.கற்பனைக்கு எட்டாத மிருகம் போன்ற செயல்கள்.கதையை விவாதம் செய்யமுடியாமல் கூசியது.அனாலும் அது என்னவென்றே கூறமுடியாத மாதிரி கதையின் மீது ஈர்ப்பு ,ஏதோ ஒன்று உள்ளது.அதை பலமுறை படித்தும் கண்டுபிடிக்கமுடியவில்லை..கதை எழதும் போது பேனாவில் இங்க் உடன் போதை பொருளையும் சேர்த்து கலந்து எழதுனமாதிரி உள்ளது.

      Delete
  53. எடிட்டர் சார்,

    நெய்வேலியில் ஸ்டால் கிடைக்காவிட்டாலும் வேறு இரண்டு பதிப்பகத்தார்களின் ஸ்டாலில் நம் புத்தகங்களையும் புகுத்தியிருக்கும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது! நம் காமிக்ஸ் தொடர்ந்து வெளிவருவதை அறியாமல் எதையோ இழந்துவிட்டதான மனநிலையுடன் இந்தப் புத்தகத் திருவிழாவில் அடியெடுத்து வைக்கப்போகும் நமது முகமறியா முன்னாள் வாசக நண்பர்களின் கண்களில் மாயாவியும், ஸ்பைடரும் விழ நேரிடும்போது.... அவர்கள் அடையப்போகும் ஜிவ்வென்ற உற்சாக நிலையை அவர்களே நினைத்தாலும் வார்த்தைகளில் வெளிப்படுத்திவிட முடியாது! இழந்துவிட்ட ஆத்ம உற்சாகத்தை மீட்டெடுக்கப்போகும் அந்த ஒரு சில நண்பர்களுக்காக நானும் குதூகலிப்பதோடு, இந்தக் கூட்டணி விற்பனை ஜோராக அமைந்திடவும் எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
  54. //"இவையெல்லாம் புதுசாய் வந்தவை...இது வேணுமா ? இது ஏற்கனவே உள்ளதா உன்னிடம் ?" என்று அக்கறையாய் விசாரித்து குறைந்த பட்சம் பத்து கிலோ எடையிலான ஆல்பங்களை நான் தோளில் போட்டுத் தூக்கிச் செல்வதை புன்சிரிப்போடு வேடிக்கை பார்ப்பது அவர் வழக்கம் ! ///

    என்னிக்காச்சும் ஒரு நாள் நானும் இதே மாதிரி ஒரு பத்து கிலோ பழைய புத்தகங்களை லயன் ஆபீஸ் செல்ஃப்புகளிலிருந்து அள்ளிச் செல்லும்போது நீங்களும் அதேமாதிரியான புன்சிரிப்புடன் வேடிக்கை பார்க்கவேண்டும் எடிட்டர் சார்! அதுக்குக் கொஞ்சம் பிராக்டீஸ் எடுக்கிட்டீங்கன்னா தேவலை! :P

    ReplyDelete
    Replies
    1. அந்த காலத்து சினிமா படத்தில் முகத்தில் சிகப்பு லைட் அடித்து நம்பியார்,பி.எஸ். வீரப்பா மாதிரி சிரிப்பார் பரவாயில்லையா?.

      Delete
    2. ////என்னிக்காச்சும் ஒரு நாள் நானும் இதே மாதிரி ஒரு பத்து கிலோ பழைய புத்தகங்களை லயன் ஆபீஸ் செல்ஃப்புகளிலிருந்து அள்ளிச் செல்லும்போது நீங்களும் அதேமாதிரியான புன்சிரிப்புடன் வேடிக்கை பார்க்கவேண்டும் எடிட்டர் சார்! அதுக்குக் கொஞ்சம் பிராக்டீஸ் எடுக்கிட்டீங்கன்னா தேவலை///--- சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெசல் ஒரு பத்து கிலோ பார்சல் நேற்று தான் குடோன்ல இருந்து தேடி எடுத்தார்களாம் .......அவற்றை லயன் ஆபீஸ் செல்ஃப் களில் அடுக்கி வைத்து உள்ளார்களாம் ...

      Delete
    3. ஈரோடு விஜய்.!நீங்கள் நி.நி.யு.ஒரு பத்துகிலோ வாங்கிட்டு போனங்கீனா, நான் நீங்கள் எப்படி சிரிக்க சொன்னாலும் சிரிக்கின்றேன்.!!!

      Delete
  55. //கார்ட்டூன் ஸ்பெஷல் - சந்தா D (12 இதழ்கள் ) 2016 ல் - இப்படி இருந்தால் எப்படி இருக்கும் ?! //

    நன்றாகவே இருக்கும்.
    ஆனாலும் பாருங்க., வருசத்துக்கு லக்கியும்., ஆர்டினும் ஒரே முறைதான் வருவார்கள் என்பது., ஸ்டெல்லா இல்லாத ஜானி கதையைப் போலத்தான் இருக்கும் என்பது என் கருத்து.
    (மலைக்கோட்டை மர்மத்தில் ஸ்டெல்லாவுக்கு டூப் போட்டு ஒப்பேத்தியிருந்தார்கள் என்பதை இங்கே குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.) :-)

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN : //ஆனாலும் பாருங்க., வருசத்துக்கு லக்கியும்., ஆர்டினும் ஒரே முறைதான் வருவார்கள்//

      கவலையே வேண்டாம் கண்ணன், கார்ட்டூன் ஸ்பெஷல் - சந்தா E (typo - E தான் சரி) 2016ல் அதிக சந்தா எண்ணிக்கையை அடைந்து விட்டால் அடுத்த வருடத்தில் 24 இதழ்கள் வேண்டும் என்று ஆசிரியரிடம் கோரிக்கை வைப்போம். அதில் சிக்பில் - 4 ; லக்கி லூக் - 4 என்று சேர்த்து விடவும் கோரிக்கை வைப்போம். இல்லாவிட்டாலும்,

      1.ஸ்டீல்பாடி ஷெர்லாக்ஹோம்
      2.விஸ்கி-சுஸ்கி (வண்ண மறுபதிப்பு )
      3.அலிபாபா (வண்ண மறுபதிப்பு )

      ஆகியவற்றை எடுத்துவிட்டு, 2016 ல் சிக்பில் கதையை நான்காக அதிகரித்து விடலாம். ஹா.. ஹா இது எப்படி இருக்கு ?!

      //மலைக்கோட்டை மர்மத்தில் ஸ்டெல்லாவுக்கு டூப் போட்டு ஒப்பேத்தியிருந்தார்கள் என்பதை இங்கே குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்// உண்மையாகவா ?! கதையின் சுவாரசியத்தில், ஸ்டெல்லாவைப் பார்க்க நான் மறந்தே விட்டேன் :-)

      Delete
  56. //
    Updates !! இன்னமுமொரு புது ஆக்ஷன் கௌபாய் கதைத் தொடருக்கும், ஒரு கார்டூன் தொடருக்கும் உரிமைகள் கிட்டியுள்ளன !//

    .…ம்ம்ம்…… இன்னும் கொஞ்சம் டீட்டெய்லான அப்டேட்ஸா இருந்திருக்கலாம் சார்.!

    போற போக்கை பார்த்தா 2016 ல் ஏகப்பட்ட விருந்து காத்துக்கொண்டு இருக்கும் போல் தெரிகிறதே.?

    அட்டவணை எப்போ கிடைக்கும் சார்.?

    ReplyDelete
  57. புது கௌபாய் தொடரை ஒரு சாம்பில் காமிச்சுட்டு பிறகு டாப் கியரில் போனால் நன்றாக இருக்கும்.!!

    ReplyDelete
  58. நான்10 வயது சிறுவனாக இருந்த போது முதன்முதலில் தனியாக காமிக்ஸ் படித்தது துருக்கியில் ஜானி நீரோ .அந்த புத்தகத்தை கொடுத்தது ஸ்டெல்லா போலிருந்த கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ஒரு அக்கா.அவர்கள் ஞாபகமாக நான் இன்னும் அந்த புத்தகத்தை வைத்துள்ளேன்.!!!

    ReplyDelete
    Replies
    1. //அந்த புத்தகத்தை கொடுத்தது ஸ்டெல்லா போலிருந்த கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ஒரு அக்கா.///

      அவங்களுக்கென்ன... உங்களுக்கு காமிக்ஸை பழக்கிவிட்ட அந்த அக்கா படிப்ப முடிச்சுட்டு எப்பவோ அமெரிக்கால போய் செட்டில் ஆகியிருப்பாங்க... இங்கே நாங்கயில்ல கிடந்து அல்லாடுறோம்! ;)

      ஆமா... M.V அவர்களே... நியாயப்படி நீங்க ஸ்டெல்லாவின் ரசிகராத்தானே இருந்திருக்கணும்?!! ;)

      Delete
    2. ஈரோடு விஜய்.!!மு.வ.தமிழ் வாணன்.டால்ஸ்டாய் போன்ற எழத்தாளர்களின் கதையில்.,கதை மட்டும் அல்லாது.வாழ்கை தத்துவம்,மனித இயல்புகள் மற்றும் தான் கற்ற&படித்த நல்ல விஷயங்களை கதையின் போக்கில் கலந்துவிடுவார்கள்.!அது போலத்தான் மாடஸ்டி கதை.!நல்ல தரமான கதை ஆசிரியர்.!அன்னப்பறவை பாலையும் தண்ணீரையும் பிரித்து எடுப்பது போல் நமது எடிட்டர் இந்த கதைகளை நமக்கு தகுந்தாற்போல் அடிப்படை கதை மாறமல் சுவையாக மொழி மாற்றம் செய்திருப்பார்.நாமும் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோமே.!!!

      Delete
    3. //அடிப்படை கதை மாறமல்//

      அப்படியா? கொஞ்சம் இங்கே க்ளிக் .

      Delete
    4. //அருன்//ஹஹஹஹஹஹஹஹ............கழகு கண் உங்களுக்கு.!ஓ.!செல்வம் அபிராமி சொன்னது சரி.!நான் ஆரம்ப காலங்களில் பத்தோடு பதினொன்றாகத்தான் படித்து வந்ததேன்.30 வயதில்தான் அந்த கதைகளின் வீரியம் புரிந்தது.அதுவும் மாடஸ்டி&கார்வின் நட்பு எனக்கு ரெம்ம்ப பிடிக்கும்."பழிவாங்கும் புயல்,பயங்கர நாடகம் கதையுடன் வந்த(தலைப்பு கிழிந்து விட்டது)கதை"இவை இரண்டும் கதைகளும் மாடஸ்டி&கார்வின் நட்பை பிரதிபலிக்கும் உச்சகட்ட உருக்கமான கதைகள்.!

      Delete
  59. எடிட்டர் சார்., மற்றும் நண்பர்களுக்கு.,

    சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்., "மிஸ்டர் முகமூடி " என்ற சிக்பில் கதையை தபால் மூலம் நம்முடைய லயன் ஆபிசில் இருந்து வாங்கிய ஞாபகம்.

    அந்த கதையில் 19 ஆம் பக்கத்திலிருந்து 50 ஆம் பக்கம் வரை ஆர்டின் கதைக்கு பதிலாக மின்னல் ஜெர்ரியின் கதை பின் பண்ணப்பட்டிருந்தது. (அந்த கதையும் பாதி மட்டுமே இருந்தது.) ஆர்டின் கதை முழுதாக இல்லை.
    எல்லா காப்பிகளிலும் அப்படித்தானா., இல்லை என்னுடையது மட்டும்தான் அப்படியா.??

    இதை இப்போது ஏன் கேட்கிறாய் என்று நீங்க கேட்பது புரிகிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் இப்போதுதான் அந்த புக்கை கையிலெடுத்தேன்.

    அந்த கதை மீண்டும் வரும் வாய்ப்பு சிறிதளவேனும் இருக்கிறதா.??,??

    ReplyDelete
    Replies
    1. அருணாச்சலம்,இருவர்,மின்சாரகனவு இந்த மாதிரி படமெல்லாம் வந்தவருசத்துல...வந்த சிக்பில் குழுவின் சாகஸம் செஞ்ச 'மிஸ்டர் முகமூடி' கதையை சொல்றிங்களா...அது 1997-ல கடைசியில வந்த புக்...68 பக்கங்களும் சரியாதான் இருக்கு கிட்ஆர்ட்டின் கண்ணன்..! எடிட்டரின் தாத்தா திரு:SVA.கந்தசாமி நாடார் மறைவுக்கு இதயஞ்சலி கூட முன்பக்கத்துல இருக்கே..! மழை-தாத்தாவின் மறைவு காரணமா.. டிசம்பர் வரவேண்டிய இந்தஇதழ்...ஜனவரியில் வந்தது...உங்களுக்காக...இங்கே'கிளிக்'
      இந்த கதையை விட...'நட்புக்கு நிறமில்லை' என்ற கதை ஐந்து ரூபாய்குள் தரவேண்டும் என்பதற்காக..பாதிகதையே எடிட்டிங் செய்யப்பட்டது...அந்த கதை பிரஞ்ச்சில் கலரில் வந்தவை என்பதால் அதை கேட்கலாமே கிட் ஆர்ட்டின்..! :-)))

      Delete
    2. புத்தகத்தின் நடுவில் 'மின்னும் மரணம்' 'மெகா ஸ்பெஷல்' இரு வண்ணத்தில் நான்கு பக்க டிரைலர் கூட வந்துள்ளது..!

      Delete
    3. கிட் ஆர்ட்டின் சார்.!சிறு வயதில் முதன்முதலில் வந்த 5 ரூபாய் கோடை மலர் காமிக்ஸில் நான் வாங்கிய புத்தகத்தில் ஸ்பைடர் கதை பாதியும் ஆர்ச்சி கதையில் பாதியும் காணோம் .மீதி டபுளாக இருந்தது.அந்த நாளில் நான் பட்ட துயரம் அளவே இல்லை.அந்த நேரம் ₹5ரூபாய் எனக்கு பெரிய தொகை!.புத்தகத்தை அச்சிட்ட முகம் தெரியாத ஓனரை மனதுக்குள் திட்டி தீர்த்தேன்.அதற்கு பிறகு அந்த மாதிரி புத்தகங்கள் ரிபிட் பக்கங்கள் என்னிடம் சிக்கவில்லை.!

      Delete
    4. அடேடே.!மாயாவி சார் வணக்கம்.!

      Delete
    5. //'நட்புக்கு நிறமில்லை' என்ற கதை ஐந்து ரூபாய்குள் தரவேண்டும் என்பதற்காக..பாதிகதையே எடிட்டிங் செய்யப்பட்டது//

      இதென்ன புதுக் கதையாக இருக்கே? இங்கே க்ளிக் லின்க் ப்ளீஸ்......

      Delete
    6. @ மாயாத்மா.,
      68 பக்கங்கள் சரியா இருக்கு வேதாளரே, நடுவில்தான் வேறு ஒருகதையின் பக்கங்கள் (ஜெர்ரி) 30. பக்கங்கள் உள்ளது. இரண்டு கதைகளும் முழுதாய் இல்லை.

      வாங்கியபோது என்ன செய்வதென்று தெரியவில்லை .(நான் எங்க போவேன். நேக்கு யாரத் தெரியும்) .
      இப்போது தளம் இருப்பதால் என்னுடையது மட்டும்தான் அப்படியா எனத் தெரிந்துகொள்ளும் ஆவலில் கேட்டேன். (போட்டோஸ் உங்களுக்கு அனுப்பிஇருக்கிறேன்)

      நட்புக்கு நிறமில்லை பற்றி அடுத்து கேட்கலாம் என்று நினைத்திருந்தேன். நீங்களே கேட்டுட்டிங்க.! எனவே அதற்கு +1 .

      Delete
  60. TeX cover photo eppothu varum.surprise.

    ReplyDelete
  61. //பெருசாய் சென்சார் செய்து கதையின் ஓட்டத்தைச் சீர்குலைக்கும் பாதையையும் தேர்வு செய்திடாமல் ; அப்படியே போட்டு பிய்ந்த விளக்குமாற்றுச் சாத்துக்கள் வாங்கும் ரஸ்தாவுக்குள்ளும் அடியெடுத்து வைக்காமல் இடைப்பட்டதொரு அந்தி மண்டல பாணியைக் கடைபிடிக்க முயற்சித்து வருகிறேன்//
    -1.
    I remember that, u confirmed to release Bouncer series without modifying the content and concept. For that reason only u announced separate subscription option B. But now you changing everything. Then what is the use of introducing options A, B, C

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் .!பௌன்சர் கதையை வழக்கமாக நீங்கள் பின்பற்றும்"பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்" என்ற பாணியையே பின்பற்றுங்கள்.!

      Delete
    2. அப்போ நீங்க பௌன்சரோட அடுத்த கதையும் வேணும்னு சொல்றிங்களா MV சார்.
      அது கிராபிக் நாவலாச்சே.!!! : -)

      Delete
    3. ஹிஹிஹிஹி................பழகிய கதைக்களம்,பிடித்த ஹீரோயின் இவர்கள் எல்லாம் விதிவிலக்கு.!நான் திரும்ப திரும்ப படிக்கும் கதைகள்.,கிரீன் மேனர்.!பௌன்சர்.!வா.எ.வி.
      நல்ல தரமான கதைகளுக்கு எதுவுமே தடையாக இருக்காது என்பது தாழ்மையான கருத்து.!சாதரணமான கதை ,புதிய கதை களம்,புதிய பாணி,இதுதான் எனக்கு பிரச்சனை.!

      Delete
  62. // பெருசாய் சென்சார் செய்து கதையின் ஓட்டத்தைச் சீர்குலைக்கும் பாதையையும் தேர்வு செய்திடாமல் ; // வெளியிட வேண்டும்,விஜயன் சார். அதற்காக தானே தனி சந்தா என வெளியிட படுகிறது!

    " பௌன்சர் தொடரில் இறுதி 2 ஆல்பங்கள் வேறொரு பதிப்பகத்தின் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகியுள்ளன ! அவற்றுக்கும் உரிமைகளை வாங்குவதா?" பௌன்சர்-ஐ முழுமையாக வெளிடுங்கள் விஜயன் சார்! யோசனை வேண்டாம்,இப்போது உள்ளது போலவே தனி சந்தாவினில் தொடருங்களேன்!

    டைகருக்கு தனியாக ஒரு பாதை போட்டுகொள்ளலாம் !

    ReplyDelete
  63. ஆ... ஒரு மீள்பதிவு (:

    மிஸ்டர் மரமண்டை15 June 2015 at 20:41:00 GMT+5:30 நான்... நமது... 2016..! பார்ட் - 6

    5.பௌன்சர் !

    கதையின் சாரம் நல்லதோ.. கெட்டதோ வெளியிட்டு விட்டோம் ; மிகப் பெரிய வெற்றியோ.. மிதமான வெற்றியோ .. பதிப்பித்து விட்டோம் ; ஒரே வருடத்தில் ஒரு தொடரின் 88 சதவீதத்தைப் பூர்த்தி செய்த நாம், மீதமிருக்கும் இரண்டே ஆல்பமான 8 & 9 ஐயும், வரும் 2016ல் வெளியிட்டு - காமிக்ஸ் உலகின் மிகவும் பிரபலமான ; மிகப் பெரிய வெற்றி ஈட்டிய ஒரு தொடருக்கு, தமிழில் நாம் மட்டுமே உரிமையாளர்கள் என்ற லேண்ட்மார்க் உடன் வலம் வரவேண்டும். வழக்கம் போல், சில நெருடலான விஷயங்களை, கதையின் போக்கு மாறாமல் வசனத்தில் மாற்றி அமைத்து விட்டாலே, எடிட்டர் விஜயன் அவர்களுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது போலாகி விடும். எனவே,

    பௌன்சர் - 120+ = 1 book

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இது ஏற்புடையதே.
      ஆரம்பித்துவிட்ட தொடரை முழுதாக வெளியிட்டு விடுவதே பரவாயில்லை.!

      Delete
    2. KiD ஆர்டின் KannaN : +1

      :)

      Delete

    3. ஙே !!!!

      நான் உங்களுக்கு +1. போட்டா., நீங்க அதுக்கு +1 போடுறிங்களே!

      :- -))

      Delete
    4. நண்பர்கள் விட்டுக்கொடுத்து போவது மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கிறது.!

      Delete
    5. //ஒரே வருடத்தில் ஒரு தொடரின் 88 சதவீதத்தைப் பூர்த்தி செய்த நாம், மீதமிருக்கும் இரண்டே ஆல்பமான 8 & 9 ஐயும், வரும் 2016ல் வெளியிட்டு//
      +1

      Delete
  64. no doubts விண்வெளி பிசாசு " 200 பக்க மறுபதிப்பாக வருகிறது

    ReplyDelete
  65. no doubts விண்வெளி பிசாசு தான் " 200 பக்க மறுபதிப்பாக வருகிறது

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நானும் அப்படித்தான் எண்ணினேன்.!நண்பர் ஸ்டீல் க்ளா அவர்கள் இரண்டு கதை மீதி இருப்பதாக கூறியுள்ளார்.!!!

      Delete
  66. அபிராமி செல்வம் சார்.! மாடஸ்டியின் பிடித்த ஆயுதமான காங்கோ பற்றி நேரம் கிடைத்தால் எழதுங்களேன்.!(எடிட்டர் டம்பிள் போல் உள்ள ஆயுதம் என்று மட்டுமே அறிமுகப்படுத்தி உள்ளார். !

    ReplyDelete
  67. ///
    Caption எழுதும் போட்டிக்கான முடிவை வரும் ஞாயிறுப் பதிவில் பார்ப்போமே ?! ///

    போட்டியில் வெற்றி பெற்றவரின் பெயரை அறிவித்து "அண்ணாரின் சிறந்த பங்களிப்பைப் பாராட்டி Fleetway வழங்கும் 'Learn To Write Captions Effectively' என்ற புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்" - அப்படீன்னு எடிட்டர் அறிவிக்கணுமாம்! ஹாஹாஹா ... ஹைய்யோ ஹைய்யோ ... நம்ம செ.அ & பா.பா.பி'யின் நிலைமையை நினைச்சா சிப்புத் தாங்கல! :D

    ReplyDelete
    Replies
    1. கிச்சு கிச்சு மூ ட்டுறதிலே விச்சு கிச்சுவை முந்திட்டோம்னு ஜனங்க சொல்றாங்க சார்
      நாலு பேரு குறிப்பா ஈனா வினா வாய்விட்டு சிரிக்கணும்னா எதுவுமே தப்பில்லே டேவிட்டு
      (JUST FOR FU N VIJAY )

      Delete
    2. சூர்யா நம்மளை வச்சு படம் எடுக்க வந்ததை வேணாமுன்னு சொல்லிட்டேங்களாமே ..சார்
      ஆமா 96 வயதினிலே ன்னு எடுக்க வந்தாரு ..

      Delete
    3. 65லே கே ஆர் விஜயா,75லே ஸ்ரீ தேவி,85லே ஸ்ரீப்ரியா ,95லே நக்மா இப்போ 2015லே அனுஷ்கா
      யார் சார் இவங்கல்லாம்..
      இந்த மொட்டைத்தலை டே விட்டுக்குப் பதிலா எனக்கு உதவியாளரா அனுப்பசொல்லி மேலிடத்துக்கு
      நான் போட்ட அப்ளிக் கேசன் லே உள்ளவங்க..ஹ்ம்ம் .

      Delete
    4. // 96 வயதினிலே ///

      :D ஹாஹாஹா!

      Delete
    5. @ பா.பா.பி

      LOLm அட்டகாசம்! :)))))

      Delete
  68. மாடஸ்டியும் காங்கோவும்





    சைனீஸ் மாண்டரின் மொழியின் வரிவடிவம் பக்கத்து ஆசிய நாடுகளுக்கு இறக்குமதி ஆன\போது ஹான்சி ஜப்பானில் கன்ஜி என மாறியது.பின்னர் அதன் மாற்று உச்சரிப்பு யுவார(YAWARA) என பெயர் மாற்றம் கண்டது.



    YAWARA சாமுராய்கள் காலத்தில் முழுதும் கவச உடை அணிந்துள்ள எதிரிகளை தாக்குவதற்கு உண்டான martial arts கலைகளில் ஒன்று.

    பெரும்பாலும் கவச உடையால் மூடப்படாத under arms, முன்,பின், பக்கவாட்டு கழுத்து பகுதிகள், முன்நெற்றி பொட்டு ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்துவது வழமை.

    இதற்கும் மாடஸ்டியின் காங்கோவிற்கும் என்ன சம்பந்தம்?

    YAWARA கலை பயின்றோர் பயன்படுத்தும் ஒருஆயுதம்தான் YAWARA STICK. YAWARA என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருப்பினும் SUPPLENESS என்ற வார்த்தை மிகவும் கவர்ந்தது.

    தன்மேல் விழுந்த பனியின் கனம் காரணமாக வளையும் மரக்கிளை அந்த பனிதனை வழுக்கி விழசெய்து தனது இயல்பு நிலைக்கு திரும்புவது,,,

    பனியின் கனத்தினை இழப்பது என்ற தனக்கு பாதகமான அம்சத்தை சாதகமாக்கி வேகமாக தனது இயல்பு நிலைக்கு திரும்புகிறது மரக்கிளை.

    அதுபோல தனது எதிராளியின் ஆற்றலை அவனுக்கு எதிராக திருப்புவது YAWARA கலை.

    இந்த YAWARA STICK –ன் ஜப்பானிய புத்த மத அடையாள வடிவமான KONGJOU என்பதனை மனதில் கொண்டு இதற்கு KONGO என பெயரிடுகிறார் மாடஸ்டி.....

    வெறும் கையோ அல்லது முஷ்டியோ ஏற்படுத்தும் விளைவை விட DUMB BELL வடிவம் உள்ள காங்கோ அதிக தாக்குதல் பலனை கொடுக்கும்.

    ஆனால் காங்கோவினால் விளையும் பலன்களுக்கு அடிப்படை காரணம் மாடஸ்டிக்கு YAWARA என்ற தற்காப்பு கலையில் உள்ள பரிச்சயமே,

    (என்னிடம் காங்கோவை கொடுத்தால் அதை வைத்து ஓமகுச்சி நரசிம்மனை கூட ஒன்றும் செய்ய முடியாது)



    நமது பாரத நாட்டிலும் வஜ்ரம் என்ற பெயரில் காங்கோ அல்லது யுவாரா ஸ்டிக் இருந்துதான் இருக்கிறது...

    ரிக்வேதத்தில் இந்திரனின் ஆயுதமாக. வடிவம் இதே DUMB BELL வடிவம்தான்.



    நமது உயர் ராணுவ விருதான பரம் வீர் சக்ராவிலும் இந்த வடிவம் குறுக்கு நெடுக்காக (இரண்டு) இடம் பெற்றுள்ளது.



    நான் என்னவோ பயப்படுவது மாடஸ்டியின் கண்களை பார்த்துதான்...;-௦



    ReplyDelete
    Replies
    1. Watch "Мой взгляд на явару" on YouTube - https://youtu.be/e_Wy-InPJUY

      Delete
    2. Watch "Yawara Stick Training" on YouTube - https://youtu.be/2i5jU847hV8

      Delete
    3. Watch "Self Defense Training with the Yawara Stick 02" on YouTube - https://youtu.be/cQHgpeqHllI

      Delete
    4. Watch "Self Defense Training with the Yawara Stick 02" on YouTube - https://youtu.be/cQHgpeqHllI

      Delete
    5. Watch "Introduction to Yawara Stick - Bug Out Bag - Self Defense for Everyone - Kubaton" on YouTube - https://youtu.be/6VPUaCap-HQ

      Delete
    6. https://en.m.wikipedia.org/wiki/File:Param_veer_chakra.gif

      Delete
    7. https://en.m.wikipedia.org/wiki/File:Vajra.jpg

      Delete
    8. https://en.m.wikipedia.org/wiki/File:Emblem_of_Bhutan.svg

      Delete
    9. Yawara Stick - https://m.facebook.com/yawarastick?refsrc=https%3A%2F%2Fwww.facebook.com%2Fyawarastick

      Delete
    10. @ செ.அ

      ஊப்ஸ்!! தக்கணூன்டு கட்டைக்கு இம்புட்டு வரலாறா?!! தேடியெடுத்து இங்கே படைத்ததற்கு நன்றிகள் பல!

      பி.கு: நான் (உங்களைப் போலவே) மாடஸ்டியிடம் பயப்படும் விசயங்களில் கண்களுக்கும் முக்கிய இடமுண்டு! ஹிஹி!

      Delete
  69. இங்கே சிலர் பௌன்சர் பற்றிய விமர்சனங்களை முன் வைக்கின்றனர். எனக்கும் ஆரம்பத்தில் அந்த கதை பிடிக்க வில்லை என்பது தான் உண்மை. பிறகு அதைப்பற்றி பல இடங்களில் படித்து, ஓரளவுக்கு விஷயங்களை சேகரித்தேன்.

    குமுதம் மே மாத இதழில் ஒரு 7-8 பக்க கட்டுரை இந்த பௌன்சரைப் பற்றி வந்து இருந்தது. அது மிகவும் உபயோகமாக இருந்தது (அதில் நமது மொழியாக்கம் பற்றிய விமர்சனமும் இருந்தது). பின்னரே இந்தக் கதைதொடரை ரசிக்க ஆரம்பித்தேன். நீங்களும் தேடிப்பிடித்து படியுங்கள், நிச்சயமாக உபயோகமாக இருக்கும்.

    ஸ்பைடர் கதை வருவது குறித்து: நண்பர்களே, எடி குறிப்பிடுவது ஸ்பைடர் Vs சினிஸ்டர் செவன் என்ற கதை. (மேலே சில நண்பர்கள் அதை தவறாக விண்வெளிப் பிசாசு என்று சொல்கிறார்கள், விண்வெளிப்பிசாசு 18 பாக, 36 பக்க கதையாகும். 200 பக்கம் அல்ல).

    என்னைப் பொருத்த வரையில், இப்போது தான் ஸ்பைடரின் டைஜெஸ்ட் கதைகள் மறுபதிப்பாக வந்து, தற்பொதைய புதிய வாசகர்களிடம் மாயாவி, ஸ்பைடர் போன்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் (ஓரளவுக்கு) மாறி வருகிறது (ஜூனியர் எடிட்டரின் கருத்துகளே இதற்கு சாட்சி).

    அப்படி இருக்க, மறுபடியும், ஸ்பைடரின் கதைத் தொடரை வெளியிட்டு, அந்த எண்ணத்தை மாற்ற வேண்டுமா? முதலில் மீதம் இருக்கும் 11 ஸ்பைடர் டைஜெஸ்ட் கதைகளையும் வெளியிட்டு விட்டு, பின்னர் இந்த தொடர்கதைகளை வெளியிட ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். (ஸ்பைடர் கதைகளும், மாயாவி கதைகளும் டைஜெஸ்ட் வடிவில் வடிவில் வந்தவை தான் நமது ஆரம்பகால வாசகர்களிடையே பிரபலம் ஆனவை. அவற்றில் மொத்தம் 13 கதைகளே உள்ளன. மீதம் இருப்பவை அனைத்துமே தொடர்கதையாக வந்தவை. அவை இந்த அள்வுக்கு நன்றாக இராது என்பதே நிதர்சனம். ரஜினியின் ஆரம்பகால அக்தைகளை எதிர்பார்த்து, லிங்காவை பார்ப்பது போல ஏமாற்றம் அடைவதை தவிர்க்கலாமே?

    காமெடி கர்னல் கதைகளைப் பொறுத்த வரையில், அவற்றில் நகைச்சுவை என்பதே மிகவும் subtle ஆகவே இருக்கும். யாரோ வொன்னது போல இது ஜேம்ஸ்பாண்ட் கதையை கிண்டல் செய்யும் கதையல்ல. இங்கிலாந்தில் நடப்பது போல எழுதப்பட்ட அக்மார்க் ப்ராங்கோ-பெல்ஜிய கதை இது. இதில் நகைச்சுவையை எதிர்பார்த்து செல்லாதீர்கள். நிச்சயமாக ஏமாற்றமே மிஞ்சும்.

    இது ஒரு துப்பறியும் கதை வரிசை (ஜில் ஜோர்டான் போல). ஜில் ஜோர்டானை ஒரு காமெடி கதை என்று பிராண்டிங் செய்தது போல, இதையும் செய்ய வேண்டாம். இந்த வகை கதைகளில் இருப்பது மிகவும் நுண்ணிய, இலேசாக புன்னகையை வரவழைக்கும் நகைச்சுவையே ஒழிய, நம்மை குலுங்க, குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை இதில் கிடையாது. அதுவும் கிளிஃப்டன் கதைகளில் இருப்பது தொடர்ந்து வரும் ஒரே வகை காட்சியமைப்புகளே. உதாரணமாக, கிளிஃப்டனின் கார், சிக்னல் இல்லாத இடத்தில் நிற்பதும், அவருக்கு ட்ராஃபிக் போலீசார் அபராதம் விதிப்பதும் உங்களுக்கு நகைச்சுவை என்றால், இந்த தொடரை நீங்கள் தொடர்ந்து, நகைச்சுவை கதை என்று படிக்கலாம். இல்லை என்றால், ஏமாற்றமே மிஞ்சும்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் அவசியமான முன்னெச்சரிக்கைக் குறிப்புகள்! நன்றி நண்பரே!

      ( காமெடிக் கர்னல் இன்னொரு ஜில்லாராகி விடுவாரோ என்ற ஆதங்கம் எனக்குள்! )

      Delete
    2. ஜில் ஜோர்டான் பற்றி சொல்ல வேண்டுமென்றால்.....

      It is considered a great combination of mystery, adventure and humour, and a masterpiece of European comics.

      நன்றாக கவனியுங்கள், இது மர்மம், சாகசம் மற்றும் நகைச்சுவை கலந்த ஒரு கதைத்தொடர். வெறும் நகைச்சுவை கதைத்தொடர் (மட்டுமே) அல்ல.

      இந்த கதாசிரியரது முந்தைய கதையான ஃபெலிக்ஸ் கதையை சற்று மாற்றி எழுதப்பட்ட இந்த ஜில் ஜோர்டான் தொடரின் முதல் இரண்டு பாகங்கள் ஃப்ரான்சில் தடை செய்யப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

      ஆமாம், போதை மருந்து கடத்தலை அப்பட்டமாக விவரிக்கிறது என்ற காரணத்திற்காக சொந்த ஊரிலேயே தடை செய்யப்பட்ட ஒரு காமிக்ஸ் எப்படி முழுக்க முழுக்க நகைச்சுவைத்தொடராக இருக்க முடியும் ஈரோடு விஜய்?

      ஆக, நமக்கு டெல்லி கனேஷை அறிமுகம் செய்து, இவர் தான் இந்தியாவின் டாம் க்ரூஸ் என்று சொன்னால், காலப்போக்கில் நமக்கு டெல்லி கனேஷ் மீது கோபம் வருமா? வராதா?

      கவனிக்க: இது டெல்லி கணேஷின் தவறல்ல. அவர் தனது வேலையை ஒழுங்காகவே செய்கிறார். ஆனால். நமக்குதான் அவரைப் பற்றிய தவறான புரிதல் உள்ளது.

      ஜில் ஜோர்டானைப் பொறுத்தவரையில், அவரது கதையில் மெல்லிய நகைச்சுவை இஅழையோடுவது, வசனங்களில் தான்.

      Delete
    3. @அருண்:
      //யாரோ சொன்னது போல இது ஜேம்ஸ்பாண்ட் கதையை கிண்டல் செய்யும் கதையல்ல//
      நான் குறிப்பிட்டிருந்தது Black Moon கதையைப் பற்றி! அதன் களம் அப்படி; ஒரு வசனத்தில் ஜேம்ஸை நேரடியாகவே வாரி இருப்பார்கள்.

      //அவற்றில் நகைச்சுவை என்பதே மிகவும் subtle ஆகவே இருக்கும்//
      உண்மை. மேற்சொன்ன கதையிலும் அப்படியே... வசனங்களும், சித்திரங்களும் மெலிதாய்ப் புன்னகைக்க வைத்தன.

      Delete
    4. Arun SowmyaNarayan : //இங்கே சிலர் பௌன்சர் பற்றிய விமர்சனங்களை முன் வைக்கின்றனர்//

      அந்த சிலரில் நானும் ஒருவன் என்பதால், ஒரு சிறு விளக்கம். இந்த ஞாயிறுப் பதிவில், அநேகமாக அனைவரும் பௌன்சருக்கு ஆதரவாகவே ஒட்டு அளித்துள்ளனர். என்னுடைய பதிவுகள் பௌன்சர் கதைப் பற்றிய விமர்சனம் அல்ல ; சில சமயம் ஒரிஜினல் கதையில் உள்ளது உள்ளபடி அட்சரம் பிசுகாமல் மொழிபெயர்க்க வேண்டும் என்ற காரணத்தினால், ஒரிஜினலில் இருக்கக் கூடிய நம் சமூகத்திற்கு ஒவ்வாத சில விஷயங்களை அப்படியே சித்தரிக்காமல், அவற்றை தவிர்த்து விட்டால், சில நெருடல்கள் எழாமலேயே தவிர்த்து விடலாம் என்பதே என் கோரிக்கை. அது பௌன்சராக இருந்தாலும் சரி அல்லது ப்ளுகோட் பட்டாளமாக இருந்தாலும் சரி என்பதே என் பதிவின் நோக்கம் :)

      என் பதிவிலிருந்து சில வரிகள் ;

      //ப்ளுகோட் (த.தே.சி) கதை விமர்சனத்தில் கூட இதைத்தான் நான் கோடிட்டுக் காட்டியிருந்தேன். உதாரணமாக, இயற்கை வகுத்துள்ள விதிக்கு மாறான பாலியியல் உறவுகளைச் சித்தரிக்காமல் விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்பதே என் வேண்டுகோள்//

      ஆசிரியரின் பதிவிலிருந்து சில வரிகள் ;

      //போட்டுத் தாக்கும் வன்முறை ; கையாளக் கஷ்டமான கதைக் களம் என இதன் ஆக்கத்தின் போது -கதாசிரியர் சீற்றமானதொரு மூடில் இருந்திருக்க வேண்டும் ! பெருசாய் சென்சார் செய்து கதையின் ஓட்டத்தைச் சீர்குலைக்கும் பாதையையும் தேர்வு செய்திடாமல் ; அப்படியே போட்டு பிய்ந்த விளக்குமாற்றுச் சாத்துக்கள் வாங்கும் ரஸ்தாவுக்குள்ளும் அடியெடுத்து வைக்காமல் இடைப்பட்டதொரு அந்தி மண்டல பாணியைக் கடைபிடிக்க முயற்சித்து வருகிறேன்//

      Delete
    5. @ அருண்

      ஜில்லாரைப் பற்றிய தெளிவான விளக்கத்திற்கு மீண்டும் நன்றிகள்!

      Delete
    6. Arun SowmyaNarayan :

      உண்மை !! முதலில் மீதம் இருக்கும் 11 ஸ்பைடர் டைஜெஸ்ட் கதைகளையும் வெளியிட்டு விட்டு, பின்னர் புதிய ஸ்பைடர் கதைகளை வெளியிடுவதே சிறந்த முடிவாக இருக்கும். மீண்டும் ஒரு சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் இம்பாக்ட் (impact) ஏற்படுவதை யாருமே விரும்ப மாட்டார்கள் என்பது திண்ணம் :)

      //ஜில் ஜோர்டானை ஒரு காமெடி கதை என்று பிராண்டிங் செய்தது போல, இதையும் செய்ய வேண்டாம். இந்த வகை கதைகளில் இருப்பது மிகவும் நுண்ணிய, இலேசாக புன்னகையை வரவழைக்கும் நகைச்சுவையே ஒழிய, நம்மை குலுங்க, குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை இதில் கிடையாது//

      +1

      ஜில் ஜோர்டான் கதையைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு டின் டின் தொடர் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. தக்காளியை, ஏழைகளின் ஆப்பில் என்று கூறுவதைப் போல் நமக்கு, ஜில் ஜோர்டான் ஒரு டின் டின் கதைத் தொடர் என்பதே என் அபிப்ராயம். ஏறக்குறைய அதே பாணி கதைகள் தான், என்னவொன்று டின் டின் அஞ்சாங் கிளாஸ் என்றால் ஜில் ஒரு Lkg பயல் அவ்வளவு தான் :))

      Delete
  70. நண்பர்களே அடுத்த வருடம் என்ன கதைகள் வரும் என்ற டாபிக் ஓடிக்கொண்டிருக்கும் இப்போது , என் மனதில் இந்த வருடத்தின் எஞ்சிய மாதங்கள் எப்படி அமையும் என்பதே....
    ஜூலையில் தலை தாண்டவம் ....ஆகஸ்ட்ல கார்டூன் ஸ்பெசல், கறுப்பு விதவை மற்றும் இரும்புக்கையாரும் வலைமன்னனும்....பிறகு இருக்கும் 4மாதங்களுக்கு எஞ்சிய கதைகளை ப்ளானரில் எடுத்து பார்த்து எப்படி என்ன காம்பினேசன்ல ஆசிரியர் வெளியிடுவார் என யோசித்தேன்...இதோ.........
    கார்டூன் ஸ்பெசலுக்கு ,ஒற்றை ரூபாய் கூட சந்தாவை மீறி வசூலிக்க மாட்டேன் என சொல்லி விட்டார் நமது அன்பின் ஆசிரியர் ..எவைகள் ட்ராப் ஆகும், அதற்கான பலியாடுகள் எவை?? இப்போது கி.நா.க்கள் மார்க்கெட் இழந்த மேகி நூடுல்ஸ் மாதிரி இருப்பதால் கருப்பு வெள்ளை கி.நா. டாப் ஆன் த லிஸ்ட், இரண்டு கமான்சே சாகசங்கள் பாக்கி சோ ஒன்று காலி, 3வது ட்ராப் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா என சகலரும் அறிவர்...100+60+60=220(பாக்ஸ் செட்டுடன் கூடிய கார்ட்டூன் ஸ்பெசல் ரெடி, திருவிழாவில் விலை250,, சந்தா பாய்ஸ்களுக்கு 220) .... மிச்சம் இருக்கும் இதழ்களை கூட்டி பெருக்கி வகுத்து பார்த்து நான் ஒரு அட்டவணை தயாரித்து உள்ளேன்...........
    *செப்டம்பர் : எமனின் வாசலில் -டெக்ஸ், சைத்தான் துறைமுகம்-பிரின்ஸ் , வாரோதோ ஒரு விடியலே -டைலன், & சாஸ்வதத்தின் சாவி-தோர்கல் ..
    *அக்டோபர் : ஆண்டவனின் ஆயுதம் &வரலாறும் ஒரு வல்லூறும்-செல்டன் , மாறிப்போன மாப்பிள்ளை-சிக்பில், சாத்வீகமாய் ஒரு சிங்கம்-கமான்சே &மரணத்தின் முத்தம்-மாடஸ்தி ...
    *நவம்பர் :தீபாவளி மலர்-பனிமலையில் ஒரு புதையலைத்தேடி-டெக்ஸ், மூன்றாம் உலகம்-தோர்கல் & இரண்டு கருப்பு வெள்ளை மறுபதிப்புகள்..
    *டிசம்பர் : கறுப்புக் காகிதங்கள்-மேஜிக் விண்ட், ஒரு மஞ்சள் நிழல்-ரோஜர், காலனின் காலம-ஜானி,& புயலுக்கொரு பள்ளிக்கூடம்-சுட்டி லக்கி.......
    இது என்னுடைய உத்தேச பட்டியல் நண்பர்களே......தலை வரும் வாரம் ப்ளாக் பயங்கர டல்லா இருப்பது எனக்கு வெறுப்பு .....எனவே ஆளாலுக்கு உங்கள் உத்தேச பட்டியல் மற்றும் ட்ராப் லிஸட் கொஞ்சம் போடுங்களேன் நண்பர்களே....இன்னும் 4நாள் பொழுது கலகலப்பா போகனும் என்பதே என் அவா......ஆசிரியர் வெளியிடும் வரிசையின் பட்டியல் உடன் மிக அருகே கணிக்கும் நண்பருக்கு முன்கூட்டியே பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
    Replies
    1. @ டெக்ஸ் விஜய்

      நல்ல முயற்சி! ஆனால் 'கமான்சே'யில் ஒன்றைக் காவு கொடுப்பதில் உடன்பாடில்லை எனக்கு! ( அதற்குப் பதிலாக ரோஜர்?). மற்றபடி எனக்கு எந்தக் கதை எந்தமாதத்தில் வந்தாலும் சரிதான் ( பூவை 'பூ'னும் சொல்லலாம் 'புய்ப்பம்'னும் சொல்லலாம்). ஆனால் தீபாவளிக்கு 'தல' வரணும்; வந்தே ஆகணும்! இல்லேன்னா பூனை ஒன்று புலியாய் மாறிய கொடிய சம்பவத்தை இந்தளம் சந்திக்க நேரிடும்... ஆம்ம்ம்மா!!

      Delete
    2. ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளவர்களை விட்டு விடலாமே விஜய் .....பாவம் ஒற்றை வாய்ப்பு ஆசாமிகள்...அந்த ஒரு வாய்ப்பிலும் சோபிக்கவில்லைனா நிலைமை பரிதாபமான ஒன்று ....அந்த வாய்ப்பே மறுக்கப்பட்டால்.......அதான் அடுத்த 5வருடங்களுக்காவது தலை இல்லாத தீபாவளி இல்லை னு ஆசிரியர் உறுதி சொல்லி உள்ளாரே....

      Delete
  71. மிஸ்டர் மரமண்டை: //சில சமயம் ஒரிஜினல் கதையில் உள்ளது உள்ளபடி அட்சரம் பிசுகாமல் மொழிபெயர்க்க வேண்டும் என்ற காரணத்தினால், ஒரிஜினலில் இருக்கக் கூடிய நம் சமூகத்திற்கு ஒவ்வாத சில விஷயங்களை அப்படியே சித்தரிக்காமல், அவற்றை தவிர்த்து விட்டால், சில நெருடல்கள் எழாமலேயே தவிர்த்து விடலாம் என்பதே என் கோரிக்கை. அது பௌன்சராக இருந்தாலும் சரி அல்லது ப்ளுகோட் பட்டாளமாக இருந்தாலும் சரி என்பதே என் பதிவின் நோக்கம்//

    என்னுடைய பார்வையில், முற்றிலும் தவறான கருத்து.

    ஒரு மொழிமாற்றம் / மொழியாக்கம் செய்பவரின் முக்கியமான வேலையே அதன் ஆக்கப்படைப்பில் இருப்பவற்றை, அதன் உள்ளடக்கம் கெடாமல் தருவது தான்.

    உதாரணமாக, ஒரு கொரியப் படம் நமக்கு பிடிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் (எடுத்துக் காட்டு: ஓல்ட் பாய்). அருமையான கதை.

    ஒரு மனிதன் கடத்தப்பட்டு, 14 ஆண்டுகள் ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டு, தண்டனைக்குள்ளாகிறான். அவனை கடத்தியது யார்? என்று தெரியவே தெரியாத சூழலில், திடீரென்று ஒரு நாள் அவன் மயக்கம் தெளிந்து எழும்போது, நகரில் இருக்கிறான். அவனது மனைவி, வேலை அனைத்துமே போய் விட்டது. அவனது மனைவியின் மரணத்திற்கு அவனையே சந்தேகப்பட்டுக்கொண்டு இருக்கிறது போலிஸ்.

    இப்போது அவன், தன்னை கடத்தி, தன்னுடைய வாழ்வை நிர்மூலமாக்கியவனை தேடிப்பிடித்து பழிவாங்க துடிக்கிறான். ஆனால், அவனை இப்படி தணடனைக்குள்ளாக்கியவனுக்கும் ஒரு நியாயமான காரணம் இருக்கிறது. அது என்ன? என்பதே கதை. கிராஃபிக் நாவலாக வந்து, கொரியாவையே கலக்கிய இந்த திரைப்படத்தை இந்தியில் (அனுமதியின்றி) எடுத்தனர். ஆனால், அந்த நியாயமான காரணம் என்ன என்பது நமது இந்தியக் கலாச்சார எல்லைக்குள் நுழைய முடியாத ஒன்று.

    ஆனால், இந்தப் படத்தை இந்தியில் எடுக்க ஆசைப்பட்டு, காரணத்தை மாற்றி, மொக்கையாக்கி விட்டார்கள்.

    இதிலிருந்து நான் சொல்ல விரும்புவது என்ன என்றால்,

    1. மூலக்கதை நன்றாக இருக்கிறது என்றால், அதை அப்படியே டப்பிங் செய்து வெளியிடலாம்.

    2. மூலக்கதை நன்றாக இருந்தும், அதை அப்படியே வெளியிட முடியாத கலாச்சார காரணம் இருந்தால், அதை ரீமேக் செய்யலாம்.

    ஆனால், ரீமேக் செய்ய பண வசதி இல்லையென்றால், டப்பிங் செய்யும் கதையை நீங்களாகவே மாற்றுவது முற்றிலும் தவறு. (இதனை படைப்பாளிகள் பெரும்பாலும் ஏற்பதில்லை, குறிப்பாக ஜப்பானியர்களும், ஐரோப்பியர்களும்).

    நாமும் இதைத்தான் செய்து வருகிறோம். மூலக்கதை நமக்கு பிடிக்கிறது. ஆனால், அதில் வரும் சில அம்சங்களை நமது வசதிக்கேற்ப மாற்றிக்கொள்கிறோம் (எடுத்துக்காட்டு: மாடஸ்டி இங்கிலாந்து உளவுத்துறையில் பணியாற்றுவது என்பது போல ).

    ReplyDelete
    Replies
    1. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்று பேலன்ஸ் செய்வது க்டைசியில், கூழுக்கும் மரியாதை தராது, மீசைக்கும் மரியாதை தராது.

      ஒன்று: பௌன்சர் நிச்சயமாக வேண்டும் என்றால், துணிந்து அதனை வெளியிடவேண்டும். நோ காம்ப்ரமைஸ்.

      இரண்டு: இல்லை, நிச்சயமாக பௌன்சரை அப்படியே வெளியிட முடியாது என்றால், தொடரின் ஆரம்பத்தில், இதனை தனியாக ஒரு கிராபிஃக் நாவல் வரிசையில் வெளியிடுவது என்று சொல்லிவிட்டு, இப்போது மாற்றுவது என்ன நியாயம்?

      //ப்ளுகோட் (த.தே.சி) கதை விமர்சனத்தில் கூட இதைத்தான் நான் கோடிட்டுக் காட்டியிருந்தேன். உதாரணமாக, இயற்கை வகுத்துள்ள விதிக்கு மாறான பாலியியல் உறவுகளைச் சித்தரிக்காமல் விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்பதே என் வேண்டுகோள்//

      இதென்ன அநியாயம்? அப்டியானால், எதற்கு பௌன்சரை தமிழில் படிக்க வேண்டும்? இது நிச்சயமாக அந்த கதாசிரியருக்கு செய்யும் அவமரியாதையே ஒழிய, நமது காலாச்சாரத்திற்கு செய்யும் பெருமை அல்ல. தமிழில் இந்த டெக்ஸ் வில்லர், ஸ்பைடர் கதைகளையே படித்துவிட்டுப்போகலாமே? ஏன் இந்த முயற்சி?

      Delete
    2. Arun SowmyaNarayan :

      //மூலக்கதை நன்றாக இருக்கிறது என்றால், அதை அப்படியே டப்பிங் செய்து வெளியிடலாம்//

      மிகப்பெரிய ஹாலிவுட் வெற்றிப்படமாகவே இருந்தாலும், அப்படியே டப்பிங் செய்யப்பட்டு இங்கு வெளியிட்டு விட முடியாது அல்லவா ?! இந்திய சென்சார் அளவுகோலுக்கு ஏற்ப, தணிக்கை செய்யப்பட பிறகே அப்படம் நம் திரையரங்கில் வெளிவரும் என்பது தானே உண்மை ?!

      //மூலக்கதை நன்றாக இருந்தும், அதை அப்படியே வெளியிட முடியாத கலாச்சார காரணம் இருந்தால், அதை ரீமேக் செய்யலாம்//

      இதற்கு அவசியமே இல்லை. ஏனெனில் படத்தில் 98 சதவீதம் பார்க்கக் கூடியதாக இருக்கும் பட்சத்தில், 2 சதவீதம் தணிக்கை செய்யப்படுவதில் என்ன தவறு ?! அப்படியே தான் வேண்டும் எனும் பட்சத்தில் அதற்கு ஒரிஜினல் மூலப் பிரதி மட்டுமே சிறந்த தீர்வாக இருக்க முடியும் !

      Delete
    3. Arun SowmyaNarayan : //கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்று பேலன்ஸ் செய்வது க்டைசியில், கூழுக்கும் மரியாதை தராது, மீசைக்கும் மரியாதை தராது//

      ஏன் மரியாதை இருக்காது நண்பரே ? ஒரு ஸ்பூன் மட்டும் போதுமே ?! அதைத் தானே நாங்கள் இங்கு கூறுகிறோம் :)

      Delete
    4. அருமையான வாதம், ஆனால், அடிப்படையில் பிழை இருக்கிறது.

      மேலே சொன்ன கொரியன் படம் ஏன் இந்தியில் ஓடவில்லை தெரியுமா? கலாசாரம் கருதி செய்த மாற்றமே.

      தணிக்கை என்பது வேறு. ஆனால், தணிக்கை செய்யப்படாத ஒரிஜினல் டீவிடி என்று சொல்லிவிட்டு அதிலும் தனிக்கை செய்வது வேறு. ஜனவரியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்ன? இது தனித்தொடராக வருவதற்கு காரணம் என்ன?

      நம்முடைய காமிக்ஸ் என்பது இங்கே ஒரு டீவிடி போலத்தான். ஆனால், என்ன? இதிலுமே தனிக்கை செய்யப்படுவது தான் விந்தையாக இருக்கிறது. இதைத்தான் நான் முதலிலேயே சொல்லிவிட்டேனே? நீங்கள் என்ன மாதிரியான “பில்ட் அப்” கொடுக்கிறீர்கள் என்பதை பொறுத்து தானே எங்களுடைய எதிர்பார்ப்பு இருக்கும்?

      தணிக்கையே செய்யப்படாது என்று சொல்லிவிட்டு இப்போது......

      ஸ்பூன் உதாரணம் அருமை. ஆனால், இந்த contextல் சரிப்பட்டு வரவில்லை.

      Delete
    5. Arun SowmyaNarayan : //இதென்ன அநியாயம்? அப்டியானால், எதற்கு பௌன்சரை தமிழில் படிக்க வேண்டும்? இது நிச்சயமாக அந்த கதாசிரியருக்கு செய்யும் அவமரியாதையே ஒழிய, நமது காலாச்சாரத்திற்கு செய்யும் பெருமை அல்ல.//

      தொடரின் 7 பாகங்கள் நன்றாக இருக்கும் போது, எஞ்சிய இரண்டு பாகத்தில், ஏதோ ஒரு சில பேனலில் மட்டுமே தென்படக்கூடிய (எதுவென்று இன்னும் தெரியாத நிலையில்) சில நெருடல்களை களைவதில் என்ன தவறு நிகழ்ந்து விடும் ?

      Delete
    6. Arun SowmyaNarayan : //தணிக்கை என்பது வேறு. ஆனால், தணிக்கை செய்யப்படாத ஒரிஜினல் டீவிடி என்று சொல்லிவிட்டு அதிலும் தனிக்கை செய்வது வேறு. ஜனவரியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்ன? இது தனித்தொடராக வருவதற்கு காரணம் என்ன?//

      இங்கு Dvd என்பதே தவறான உதாரணம்... இந்திய சென்சாருக்கு உட்பட்டு திரையிடப்படும் ப்ரெஞ்ச் டப்பிங் திரைப்படம் என்பதே சரியாக இருக்கலாம் ! தணிக்கையின்றி கொடுக்கப்படும் என்று ஜனவரியில் வாக்குறுதி அளித்ததாக ஞாபகம் இல்லை. ஆனால் பௌன்சர் தனித் தொடராக வருவதற்கு காரணமே, இன்னும் நம் காமிக்ஸ் வாசகர்களில் 90 சதவீதம் நண்பர்கள் கிராபிக் நாவலை விரும்பாதவர்கள் என்பதே ! மாறாக, ரெகுலர் சந்தாவில் இணைத்து, அனைத்து வாசகர்களிடமும் ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதே காரணம். நான் கிராபிக் நாவல் தனிச் சந்தா வாசகன் தான், ஆனால் சில ஒவ்வாத விஷயங்கள் கதைகளில் அப்படியே வரும்போது, அது எனக்கு அருவருப்பு உணர்வை தரும் போல் இருப்பதால் அதைத் தவிர்க்க சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும் ?!

      Delete
  72. நண்பர் திரு மரமண்டை மற்றும் அருண் சார்.,
    அருமையான ஆரோக்யமான விவாதம்.
    தொடருங்கள். தளம் களைகட்டுகிறது.

    ReplyDelete
  73. Dear editor sir like Clifton also try blake and mortimer

    ReplyDelete