நண்பர்களே,
வணக்கம்! ரொம்ப ரொம்ப நாட்களாய் புத்தக விழாக்களில், பதிவுகளில்
என்னிடம் கேட்கப்படும் கேள்விகளின் தரவரிசைப் பட்டியல் இது போலிருப்பது வாடிக்கை:
- § இரும்புக்கை மாயாவி புக்ஸ் இப்போதெல்லாம் வர்றதில்லையா? (இது நமது மறுபதிப்புப் படலம் துவங்கும் முன்வரையிலான கேள்வி)
- §“இரத்தப் படலம்“ முழுத்தொகுப்பை திரும்பவும் போடும் உத்தேசமுண்டா? வண்ணத்தில்/ Black & Whiteல்?
- § “டிராகன் நகரம்“ மறுபதிப்பு எப்போது?
- § எங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு ஏற்ற மாதிரியாக; அடுத்த தலைமுறை இளம் வாசகர்களுக்காக ஏதாவது செய்யும் எண்ணமுண்டா?
இதில் முதற்கேள்வி
தற்சமயம் relevant இல்லையெனும் போது- கேள்விகள் # 2 & 3 க்கு ‘ஹி...ஹி...ஹி...’
ரகப் பதில்களை நல்கி விட்டு வேறு topicக்குத்
தாவுவது வழக்கம். ஆனால் கேள்வி # 4 ன்
பதிலாக ஒரு மௌனத்தையே இதுவரை முன்வைத்திருக்கிறேன். என் மௌனங்களை எதிர்மறை
பதிலுக்கு அடையாளமாகக் கருதிக் கொண்டு அடுத்த தலைமுறையைக் ‘கவனிக்க’ மறந்த மாபாதகனாக அவ்வப்போது ஆங்காங்கே என்னைப் போட்டுத் துவைப்பதும் உண்டு
என்பதில் இரகசியமேது? பொதுவாக இந்த விஷயத்தில் எனது thought process இதுவே:
அரை நிஜார் பாலகர்களாய் லயன் / திகில்
/ முத்து காமிக்ஸ் இதழ்களைக் கடைகளில் வாங்கியதொரு
(கி.மு. காலகட்டத்து) சூழல் இன்றைக்கு நடைமுறையில் கிடையாதல்லவா? நமது இதழ்கள்
தெரு முனையிலுள்ள கடைகளில் இப்போதெல்லாம் விற்பனையாவதும் கிடையாது ;
இன்றைய சிறார்கள் கடைகளுக்குப் போய் காமிக்ஸ்களைக் கேட்டு வாங்குவதும் (பரவலாகக்) கிடையாதெனும்
போது- குடும்பத்துப் பெரிய தலைகள் யாரேனும் மனசு வைத்தல் இங்கே அத்திவாசியம். And- குட்டீஸ்களின் பொருட்டு நாம் கார்ட்டூன் / காமெடிக் கதைகளைக் கோரினாலும் கூட அவை ‘அடுத்த இலைக்குப் பாயசம்!!’ என்ற கதையும் கூடத் தானே ? So நமது
வாசிப்புகளுக்கும் சுவாரஸ்யம் தரும் விஷயங்களாக அவை அமைந்திட வேண்டுமென்பதிலும் பரம
இரகசியங்களில்லை ! Which means - உங்களையும் ஓரளவிற்காவது வசியம் செய்தாலன்றி அந்தக்
கதைத் தொடர்கள் உங்கள் வீட்டு சுட்டீஸ்களைத் (தொடர்ச்சியாய்) சென்றடைவது சிரமமே
அல்லவா? Tintin;
Asterix போன்ற உலகப் பிரசித்தி பெற்ற
கார்ட்டூன் களங்கள் இந்தத் தேவைக்குக் கச்சிதமான பதில்களாக இருந்திடலாம் தான்- ஆனால்
அவை நமது reach-க்குள் இல்லா எட்டாக்கனிகள் எனும் போது பொறுமையுடன்
தேடல்களைத் தொடர்வதே எனக்கிருந்த உபாயம்! சிக்பில் கதைகளோ ப்ளுகோட் கதைகளோ இளம்
வரவுகளுக்குக் கதை சொல்ல ஏதுவானவையல்ல எனும் போது லக்கி லூக்கின் பாதையில் ரின்
டின் கேனையும் நுழைத்திட முயற்சித்தேன் ! ஆனால் ஒரு நாலுகால் ஜீவனுக்கு ஒரு ஆல்பமா?
என்ற ரீதியிலோ என்னவோ நம்மில் பலர் ரி.டி.கே.வை அத்தனை வாஞ்சையாய் ஆதரிக்கவில்லை
என்பதால் பயலைக் கொஞ்சம் ஓரம்கட்ட நேர்ந்தது. Of course- ஒரே கதையோடு அந்தத் தொடரைக் கைகழுவுவதாயில்லை தான்; ரின்னியின் மறுவருகை would be sooner than later !
நமக்குப் பிடித்து /
நம் வீட்டு குட்டீஸ்களுக்கும் பிடிக்கக் கூடிய இன்னொரு தொடரான சுஸ்கி-விஸ்கி
கதைகளுக்கான உரிமைகளைப் பெற்றிட சென்றாண்டு முயற்சி செய்து- கிட்டத்தட்ட கான்டிராக்ட்
போடும் நிலையிலிருந்தோம்! துரதிர்ஷ்டவசமாய் இறுதிக் கட்டத்தின் போது நமது நிதிநிலைமை தள்ளாட்டத்திலிருக்க –
கான்டிராக்டை ஜனவரிக்கு வைத்துக் கொள்வோம் என்றிருந்தேன்! ஆனால் நம் நேரமோ என்னவோ-
அந்தப் பொறுப்பிலிருந்த நிர்வாகி "சு.வி". கம்பெனியிலிருந்து இடைப்பட்ட நாட்களில் வெளியேறியிருக்க
ஜனவரியில் திரும்பவும் பிள்ளையார் சுழியிலிருந்து துவங்க வேண்டியது போலான சூழலைக்
காண முடிந்தது! ஜனவரியில் நமது ரெகுலர் இதழ்களுக்கான முன்பணப் பட்டுவாடாக்கள்
துவங்கிய ஜரூரில்- “சு.வி.யை“ கொஞ்சம் பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாமே!' என்ற
எண்ணம் தலைதூக்க- நாட்கள் நகன்று விட்டன!
இடைப்பட்ட சமயங்களில் எனது ஆந்தைவிழிகள் அங்குமிங்குமாய் தேடல்களில்
ஈடுபடுத்திய வண்ணமே இருந்த போதிலும், உருப்படியாகக் கதைகள் சிக்கியபாடில்லை! அந்த
சமயம் அவ்வப்போது செய்திடும் சில தேடல்களின் முடிவுகளைப் போட்டு வைத்திருக்கும் folder-ன் நினைவு வந்தது ! அதனை எதேச்சையாய் உருட்டிய போது தான் சில “புதியவர்கள்“ பற்றிய நினைவுகள் refresh ஆயின ! ஒவ்வொரு விடுமுறையின் போதும் எங்களிடம்
குவிந்து கிடக்கும் முந்தைய இதழ்களை;
கேட்லாக்களை மட்டுமின்றி நெட்டிலும் சிதறிக் கிடக்கும் சில / பல தொடர்களைத் திரும்பத் திரும்பப் புரட்டுவது ஒரு
பொழுதுபோக்கு! காலங்கள் மாறும் போது நமது ரசனைகளில் / வாசிப்புக்களங்களில் மாற்றங்கள் நிகழ்வதும் உண்டு
என்பதை அனுபவம் உணர்த்தியிருப்பதால்- எந்தவொரு கதைத் தொடருக்கும் இப்போதெல்லாம்
ஒட்டுமொத்தமாய் reject முத்திரை
குத்துவதில்லை ! பத்தாண்டுகளாய் புரட்டிப் பார்த்த கையோடு மூலைசேர்த்த லார்கோவைத்
தான் பதினோறாம் ஆண்டு முதலாய் நாமொரு சூப்பர்ஸ்டாராய் ஸ்வீகாரம் செய்திருக்கிறோமல்லவா ? ஏகப்பட்ட காலமாய் ‘No-No’
ரகத்திலிருந்த பௌன்சரோ இன்றொரு டாப் வரவு நம்மிடையே ! ஆண்டாண்டு காலமாய் ‘ஙே’
என்ற பார்வையோடு பரணில் சாத்தி வைக்கப்பட்டிருந்த டைலன் டாக் இன்று நம்மிடையே புழக்கத்தில்
உள்ளார் ! So - நேற்றைய thought process-கள் இன்றைய ரசனைகளுக்கும் / தேர்வுகளுக்கும் அதே மாதிரியான தாக்கங்களையே
ஏற்படுத்துமென்ற கட்டுப்பாடுகளின்றி ஒவ்வொரு தொடரையும் fresh ஆகப் புரட்ட முயற்சிப்பேன்! அப்போது கண்ணில் பட்டது
தான் அந்த “ஊதா சமாச்சாரம்“!
வர்ணத்தைக் கொண்டு வில்லங்கமான விஷயமோ என்ற பயம் அவசியமில்லை...
ஏனெனில் நான் குறிப்பிடும் அந்த ‘நீல
உலகம்’ பிரான்கோ- பெல்ஜியக் காமிக்ஸ் உலகினில் ஒரு 57
ஆண்டுச் சகாப்தமாகும்! 1958ல் முதன்முதலாய் பெல்ஜியத்தில் தலைகாட்டிய அந்தத்
தக்கனூண்டு நீல மனிதர்களான SMURFS
பற்றித் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ள அதிக
சிரமமிராது என்று நினைக்கிறேன்!
நமது முந்தைய கையிருப்புகளுள் நிறையவே இடம்பிடித்திருந்த SMURFS ஆல்பம்களை நீண்டதொரு இடைவெளிக்குப் பின்பாகப் புரட்டிய போது சின்னதாய் ஒரு பொறி தட்டியது என் சொட்டைத் தலைக்குள் ! முழு வண்ணம் ; ஆர்ட் பேப்பர்... பெரிய சைஸ் என்றதொரு decent பாணிக்கு புரமோஷன் கண்ட பின்னே இந்தத் தொடரை நமது அணிவகுப்பில் கற்பனை செய்து பார்த்த போது- ஒரே கல்லில் சீனியர் + ஜூனியர் taste-களுக்கான மாங்காய்கள் அடிக்க வாய்ப்புள்ளது போல் தோன்றியது ! So- ஓசையின்றி சில பல மாதங்களுக்கு முன்பாகவே இதன் உரிமைகளை பெற்றிடும் பொருட்டு வேலைகளை ஆரம்பித்திருந்தேன்! என்ன தான் ஈ-மெயில்; facebook இத்யாதி என்றெல்லாம் உலகம் முன்னேறியிருப்பினும்- இந்த உரிமைகள் கோரிப்பெறும் படலமானது எப்போதுமே ஒருவிதமான நெடிய process ஆக அமைந்திடுவதைத் தவிர்த்தல் சாத்தியமாவதில்லை! இலட்சங்களில் விற்பனை- பல்லாயிர யூரோ / டாலர்களில் ராயல்டி என்று களமிறங்கும் இதர தேசத்து ; இதர மொழிப் பதிப்பகங்களோடு இடுப்பில் கோணிச் சாக்கைக் கட்டிக் கொண்டு நாம் நடத்தப் பார்க்க முயற்சிக்கும் ஓட்டப் பந்தயங்கள் எவ்வித முடிவுகளைத் தருமென யூகிப்பதில் சிரமங்களேது? சில வேளைகளில் ஒரு சின்ன மின்னஞ்சல் வினவலுக்குப் பதில் கிட்ட சில பல மாதங்கள் கூட அவசியப்பட்டிடலாமெனும் போது மண்டைக்குள் எட்டிப் பார்க்கும் அயர்ச்சிகளை பக்குவமாய் ஓரம்கட்டியாக வேண்டியிருக்கும். So- சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் படைப்பாளிகளின் முன்னே போய் "ஒரு நடமாடும் நினைவூட்டலாய்" நான் நிற்க முயற்சிப்பதன் காரணம் இதுவே! SMURFS கதைகளின் தேடலின் பின்னனிக் கதையும் இந்த ரகமே!

So- கடந்த வாரம் ஐரோப்பாவில் எனக்கொரு பணி வாய்த்த போது-
சந்தடி சாக்கில் SMURFS-ன் படைப்பாளிகளையும்
சந்தித்து விடுவதென்ற தீர்மானத்தில் இருந்தேன்! வழக்கமாய் படைப்பாளிகளின் மைய
அலுவலகங்கள் பாரிஸ் ; பிரஸ்ஸல்ஸ்; மிலான்;
நியுயார்க்; இலண்டன் என உலகின் முக்கிய
நகரங்களில் - ஒரு ‘பளிச்’ இடத்தில் அமைந்திருப்பது வாடிக்கை! ஆனால் SMURFS-ன் படைப்பாளிகளோ பெல்ஜியத் தலைநகரிலிருந்து முப்பது
நிமிட இரயில்ப் பயண தூரத்திலொரு குட்டியான கிராமத்தில் அமர்ந்திருப்பதை கூகுள்
மேப்பில் பார்த்த போது வியப்பாக இருந்தது ! எனது இதர பணிகளை முடித்த கையோடு அவசரம்
அவசரமாய் இரயிலைப் பிடித்து மதியப் பொழுதில் அந்தக் குட்டியான ரயில் நிலையத்தில்
இறங்கிய போது லேசான சிலுசிலுப்புடனான காற்று மட்டுமே எனக்குத் துணைக்கிருந்தது! பூட்டிக்
கிடக்கும் ஒரு பாழடைந்த இரயில்வே ஸ்டேஷன்;
பரிதாபமாக நின்ற ஆட்டோமேடிக் டிக்கெட் வழங்கும் மிஷின் என்பதைத் தாண்டி அங்கே
நின்றவை மௌனமான இரு இரும்பு பெஞ்சுகள் மாத்திரமே! கூகுள் மேப்பில் ஒரு கிலோ மீட்டருக்குக்
குறைவான நடைதூரம் என்பதைக் கண்டிருந்த போதிலும் - உறுதிப்படுத்திக் கொள்ளலாமே என
ஸ்டேஷனுக்கு வெளியிலிருந்ததொரு பாகிஸ்தானிய மளிகைக் கடைக்காரரிடம் (!!) கேட்டுப்
பார்த்தால்- அவரோ உதட்டை வேக வேகமாய்ப் பிதுக்கி விட்டார்- ‘எனக்குத் தெரியாது’
என்று!! சரி... நடராஜா டிரான்ஸ்போர்ட் இருக்க பயமேன்? என்று நான் நடைபோட-
சுற்றுமுற்றும் வீடுகளும், சின்ன வயல்வெளிகளுமே கண்ணில்பட்டன! சரியான திசையில்
தான் நடக்கிறோமா ? - அல்லது எதிர்திசையில் சொதப்பிக் கொண்டிருக்கிறோமோ ? என்ற
சந்தேகத்தில்- அங்கே சாலைப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இருவரிடம்
கேட்டுப் பார்த்தேன்! நம் இங்கிலீஷ் அவர்களுக்கு ‘நஹி
மாலும்’... அவர்களது பிரெஞ்சு எனக்கு ‘புரிஞ்சில்லா... ’ என்ற போது- கையிலிருந்த SMURFS ஆல்பம் ஒன்றினைக் காட்டிய மறுகணம் அந்த மனுஷன்
முகத்தில் வெளிச்ச ரேகைகள்! அப்புறம் சைகை பாஷையில் பாதையை அவர் சுட்டிக்காட்ட-
சில பல நிமிடங்களில் ஒரு இறக்கத்தில் ஒரு ஸ்டைலான கட்டிடத்தின் கண்ணாடிச் சுவர்கள்
வழியாக ஒரு மந்தை நீலக் குள்ள மனிதர்கள் என்னை எட்டிப் பார்ப்பதைக் காண முடிந்தது! அத்தனையும் SMURFS அலுவலகத்தில் நின்ற
அலங்கார பொம்மைகள்!
ரொம்ப... ரொம்ப... ஸ்டைலாக; அட்டகாசமான ரசனையோடு வடிவமைக்கப்பட்டிருந்ததொரு
அலுவலகத்திற்குள் நான் காலடி வைக்க- புன்னகையோடு என்னை வரவேற்று உள்ளே அழைத்துச்
சென்றார்கள்! திரும்பிய பக்கமெல்லாம் SMURFS பொம்மைகள்; மாடல்கள்; கட்-அவுட்கள்; விளையாட்டுச் சாமான்கள்; ஆல்பம்கள்! மேற்கொண்டு நான் கதையளப்பதற்கு முன்பாக- இந்த SMURFS உலகத்தைப் பற்றிக்
கேள்விப்பட்டிரா நண்பர்களுக்கென சின்னதாயொரு preview நல்கிடல் நலமென்று தோன்றுவதால்- சடக்கென்று 1929க்குத்
தாவுகிறேன்! அந்த வருஷம் தான் பெல்ஜியம் தலைநகருக்கருகே பியரி கலிபோர்ட் என்றதொரு
ஆற்றலாளர் பிறந்தார்! ஆரம்ப நாட்களில் சின்ன சின்னதாய் ஏதேதோ வேலைகள் பார்த்தவர்-
சீககிரமே காமிக்ஸ் உலகத்தினுள் ஈர்க்கப்பட்டு லக்கி லூக்கின் படைப்பாளியான மோரிஸ்
போன்ற ஜாம்பவான்களிடமெல்லாம் உதவியாளராகப் பணிபுரிந்திருக்கிறார்! ஒரு வரலாற்றுக்
காமிக்ஸ் தொடரை துவக்கத்தில் போட்டுக் கொண்டிருந்த மனுஷன் 1958ல் இந்த SMURFS-களை முதன்முதலாகக்
கற்பனையில் சிருஷ்டித்திருக்கிறார்!
ஒரு தூரத்து மாய உலகிலுள்ள
சிறு கிராமம் தான் கதையின் பின்னணி. சுண்டுவிரல் உயரத்துக்கே இருக்கும் நீலக்கலரிலான ஜாலியான குட்டி மனிதர்கள் தான் அந்த கிராமத்தின் வாசிகள்! காளான் வடிவிலான
வீடுகள்; கேக் மீது அலாதி ஆசை; தங்களுக்கே தங்களுக்கான SMURFS பாஷை என்பன தான் இந்த SMURFS-களின் முக்கிய அடையாளங்கள்!
ராஜா ஸ்மர்ஃப்; தாத்தா ஸ்மர்ஃப்; பேபி ஸ்மர்ஃப்; சிடுமூஞ்சி ஸ்மர்ஃப்; கவிஞர் ஸ்மர்ஃப்; மந்திரவாதி கார்காமெல் என்று ஏகப்பட்ட குட்டியாசாமிகள் கதைநெடுகிலும் வந்து செல்வர்!
இந்தக் கதைகளின் இன்னுமொரு விசேஷ அடையாளம் அவர்கள் பேசிக் கொள்ளும் பாஷையும், அதன் பாணியுமே! “ஸ்மர்ஃப்“ என்ற வார்த்தை கிட்டத்தட்ட எல்லாவித அர்த்தங்களையும் வழங்கும் விதமாய் அநேக சம்பாஷணைகளிலும் இடம்பிடித்திடுவது வாடிக்கை!

“முக்கியமான ஸ்மர்ஃப் இருக்கு... அதனால் தான் ஸ்மர்ஃப்- ஸ்மர்ஃபா ஓடிட்டிருக்கேன்...!“
“என்னவொரு ஸ்மர்ஃப் உனக்கு? இவ்ளோ ஸ்மர்ஃப்பை விரயம் பண்ணிட்டு வந்திருக்கியே?“
ஸ்மர்ஃப் எனும் வார்த்தை கதை முழுக்க
ரவுண்ட் கட்டியடிப்பது இங்கொரு டிரேட்மார்க் ! ரொம்பச் சீக்கிரமே பிரான்கோ-பெல்ஜியக்
காமிக்ஸ் உலகில் தனக்கென ஒரு தனியிடத்தை இந்த நீல ஆசாமிகள் ஆக்கிரமித்துக் கொள்ள-
ஆல்பம்கள்; ஒற்றைப்பக்க கார்ட்டூன்கள்; அப்புறமாய் தினசரிகளில்
வெளிவரக்கூடிய strips என நிறைய வடிவங்கள் உருவாயின. 1992ல் SMURFS-களின் பிதாமகரான பீயோ (புனைப்பெயர்) மரணத்தைத் தழுவுவதற்கு
முன்பாக 16 ஆல்பம்களை உருவாக்கி இருந்தார். அவரது மறைவுக்குப் பின்பும் இதர
ஆர்டிஸ்டுகள் /
கதாசிரியர்கள் துணைகளுடன் தொடரும் இந்தக் கதைவரிசையில் ஆல்பம் # 34 வெளியாகக் காத்துள்ளது ! பொதுவாக ஐரோப்பாவில் சாதிக்கும் காமிக்ஸ் தொடர்கள்
அமெரிக்கக் கரைகளில் அட்டகாசம் செய்வது அதிசயமே! ஆனால் டி.வி. கார்ட்டூன் தொடராக
1981-ல் அமெரிக்காவினுள் எட்டிப் பார்த்த இந்த நீல மனிதர்கள் அங்குள்ள இளம்
தலைமுறைகளை வசியம் செய்து விட்டனர். 256 எபிசோட்கள் இன்றளவும் உலகின் கிட்டத்தட்ட
70 நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறதாம் ! (தமிழிலும் ஒரு முன்னணி TV இதனை தங்களது
சுட்டிகளது சேனலுக்காக தற்போது டப்பிங் செய்து தயார் செய்து வருவது கொசுறுத்
தகவல்!)
2011-ல் சோனி நிறுவனம் ஸ்மர்ஃப்களைக் கொண்டதொரு கார்ட்டூன் 3D திரைப்படத்தை உருவாக்க- உலகளவில் வசூலை வாரிக் குவித்ததைத் தொடர்ந்து SMURFS-களின் ராஜ்ஜியம் விரிவாகிக் கொண்டே போனது! சுமார் 25 உலக மொழிகளில் இன்று வரைக்கும் கிட்டத்தட்ட 25 மில்லியன் ஆல்பம்கள் விற்பனை கண்டுள்ளன ! சராசரியாய் ஒவ்வொரு பிரெஞ்சு ஆல்பமும் 150,000 பிரதிகள் விற்கின்றனவாம்! காமிக்ஸ் விற்பனை என்ற களத்தில் மட்டும் வெற்றிக்கொடி என்றில்லாது- merchandising என்று சொல்லப்படும்- காமிக்ஸ் கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்படும் வியாபார வாய்ப்புகளில் SMURFS கற்பனைக்கெட்டா சாதனைகள் செய்துள்ளனர்! கதைப் புத்தகங்கள்; நாவல்கள்; டிராயிங் / கலரிங் புத்தங்கள்; ABC புத்தகங்கள்; மழலைகளுக்கான ஓசை எழுப்பும் புத்தகங்கள்; ஸ்டிக்கர் ஆல்பம்கள்; CDகள்; கம்ப்யூட்டர் கேம்கள்; பொம்மைகள்; சாக்லேட்கள்; ஏகப்பட்ட விளம்பரங்களுக்கு உதவிடும் பிராண்ட் தூதுவர்கள்; என இவர்களது ஒவ்வொரு வியாபார முயற்சியும் அசாத்திய வெற்றிகள்!
Cut & back to my புராணம்!

SMURFS-களின் அசாத்திய வெற்றிகளுக்கு சாட்சிகளாக அவர்களது மீட்டிங் ஹால் முழுவதிலும் இறைந்து
கிடந்த கட்-அவுட்களை; பொம்மைகளை ‘ஆ’வென்று நான் பார்த்துக்
கொண்டிருக்க மெதுவாக தங்களது அசுர வெற்றிக்கு உறுதுணை செய்துள்ள இந்தக் குட்டி
மனிதர்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்! கடந்த 30+ ஆண்டுகளில் நானும் உலகின் எத்தனையோ டாப் காமிக்ஸ்
நாயகர்களின் marketing யுக்திகளைப் பார்த்துள்ள போதிலும்- இந்தக் "குட்டிப்
பசங்களை" மட்டுமே வைத்துக் கொண்டு இவர்கள் தொட்டிருக்கும் உயரங்கள் பிரமிப்பைத்
தந்தன! நாம் பிரான்கோ-பெல்ஜிய உலகினுள் 1985-ல் புகுந்த நாட்களிலேயே ஸ்மர்ஃப்களும் இருந்தனர் தான் என்ற போதிலும்- அவர்களது பேசும் பாணிகளும்;
கதைக்களங்களும் நமக்கு சுவாரஸ்யம் தருமோ-தராதோ என்ற தயக்கம் என்னிடமிருந்ததால்
அந்நாட்களிலேயே இத்தொடரை அரவணைக்க நான் பெரியதொரு ஆர்வம் காட்டியிருக்கவில்லை! ஆனால்
இன்றைய நமது தேடல்களுக்கு இந்தக்
குட்டிக்கும்பல் சரிவருமென்று பட்டது! So- ஊர்க் கதை ; உலகக் கதை என்றெல்லாம்
பேசிவிட்டு நமது சமீப இதழ்களையெல்லாம் காட்டினேன் - ‘மி.மி.’ உட்பட!
‘அட... இந்தியாவில் கூட எங்கள் தேசத்துத் தயாரிப்புகளில் இத்தனை கதைத்தொடர்கள்
உலவுகின்றனவா ? ’ என்ற ஆச்சரியம் அவர்களிடம்
வெளிப்பட்டது ! ஆங்கிலத்தில் Papercutz என்ற நிறுவனம் வெளியிட்டு வரும் SMURFS ஆல்பம்களை ; சீனாவில் ; இந்தோநேஷியாவில் வெளியான ஆசிய ஆல்பம்களை காட்டினார்கள் ! ‘Graphic Novel’ என்று ஆங்கிலப் பதிப்புகளில் பெயரிட்டிருப்பதைப் பார்த்த போது எனக்குள் ஒரு
குட்டிப் புன்னகை! ஒவ்வொரு தேசத்திலும்; ஒவ்வொரு மார்கெட்டிலும் ஒரே
சொற்றொடருக்குத் தான் எத்தனை மாறுபட்ட அர்த்தங்கள் என்று நினைத்துக் கொண்டேன்! ராயல்டி
பற்றி, நமது விற்பனை முறைகள் பற்றியெல்லாம் பேசி முடித்த சமயம் - “வாருங்களேன்- எங்களது studio-வை ஒரு ரவுண்ட் பாருங்களேன்!“ என்று அழைத்தார்கள்! ‘ஆஹா...
இதைத் தானே எதிர்பார்த்தாய் பாலகுமாரா...!’ என்ற கதையாக நான் துள்ளிக்
குதித்து அவர்களைப் பின்தொடர்ந்தேன்!
தரைத்தளத்தில் அலுவலகம் ; கீழ்தளத்தில் ஆர்டிஸ்ட்களின் ஸ்டுடியோ என அமைத்திருந்தனர். அலுவலகத்தின் சுவர்கள் ப்ளூ ; அனைத்து மேஜைகளின் நிறம் ப்ளூ ; பின்னணியின் பொருட்கள் சகலமும் ப்ளூ என அதுவே ஒரு குட்டி ஸ்மர்ஃப் உலகமாய்க் காட்சி தந்தது ! பீயோவின் மறைவுக்குப் பின்னே அவரது வாரிசுகளின் நிர்வாகத்தில் ஸ்மர்ஃப் படைப்புகள் தொடர்வதாகவும், வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு ஓவியர்கள் பணியாற்றி இருப்பதாகவும் சொன்னார்கள் ! நான் போன சமயம் புதிதாய் வெளியாகவிருக்கும் ஆல்பமின் பணிகளில் தலைமை ஓவியர் ஜெரொயென் டி கொனின்க் மும்முரமாய் ஈடுபட்டிருந்தார் ! மேஜையில் பென்சில் ஸ்கெட்ச் போட்ட பக்கங்கள் ; பக்கவாட்டில் ஒரு மெகா சைஸ் கம்பியூட்டர் ; பின்னே நிறைய ஸ்மர்ப் மாடல் பொம்மைகள் ; என்று குவிந்து கிடந்தன ! துளியும் பந்தாயின்றி நேசத்துடன் கைகுலுக்கி விட்டு, அழகான இங்கிலீஷில் எனது கேள்விகளுக்குப் பதில் சொன்னார் ! அவர்களது புது ஆல்பம்கள் நிறைய தேசங்களில் நம்மூர் திரைப்படங்களைப் போல விமரிசையாக வெளியாகும் சங்கதிகள் என்பதால் - புதுத் தயாரிப்புகள் அரங்கேறும் சமயம் அது பற்றிய தகவல்கள் வெளியே கசிந்திடாது பார்த்துக் கொள்கின்றனர் என்பதால் - 'ஹி..ஹி..நான் போட்டோ எடுத்துக்கவா ?' என்ற அசட்டுக் கேள்வியை கேட்கத் தோன்றவில்லை எனக்கு ! தவிர, இன்னமும் அவர்களோடு ஒரு காண்டிராக்ட் போட்டிருக்கா நிலையில் அவர்களை தர்மசங்கடப்படுத்தத் தோன்றவில்லை எனக்கு ! So திறந்த வாயை மூடாது பராக்குப் பார்த்துக் கொண்டு நின்றேன் அவரது விரல்கள் செய்யும் ஜாலங்களை !
அவருக்கு அருகாமையில் இன்னுமொரு ஓவியர் அமர்ந்து வேறேதோ செய்து கொண்டிருந்தார்....என்னுடன் வந்திருந்த பெண்மணி எட்டிப் பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க - பத்தாண்டுகளாய் வேலை செய்து விட்டு ஒய்வு பெறப் போகும் டெலிபோன் ஆபரேட்டருக்கு ஒரு அழகான ஸ்மர்ப் கார்டூன் போட்டு கீழே தன பெயரையும் கையொப்பமிட்டுக் கொண்டிருந்தார் ! என்னவொரு அட்டகாசமான memento என்று நினைத்துக் கொண்டேன்..! அவருக்குப் பின்னே இருந்த கண்ணாடிச் சுவற்றில் ஒரு குட்டி ஸ்மர்ப் பயல் தொற்றி நின்று அடுத்த கேபினுக்குள் எட்டிப் பார்ப்பது போலொரு லைன் டிராயிங் ஒட்டி இருந்தது ! ஜாலியான மனுஷன் தான் என்பதை அவரது மின்னும் கண்களும் ; சிரித்த முகமும் சொல்லின ! வழக்கமாய் கேட்கும் அதே பழைய பல்லவியை இவர்களிடமும் கேட்டு வைத்தேன் - "ஒரு பக்கத்தை உருவாக்க எத்தனை நாட்கள் பிடிக்கும் ?" என்று ! சராசரியாய் பென்சில் ஸ்கெட்ச் முடிக்க 3 நாட்கள் ; அதன் பின்னே இந்தியன் இந்க்கில் அவுட்லைன் போடவொரு இரு நாட்கள் என்று சொன்னார் ஜெரொயென் ! லெட்டெரிங்க் பணிகள் வேறொரு பிரிவின் பொறுப்பு என்று சொன்னார் !
வர்ணக் கலவைகள் இன்னொரு பக்கம் கம்பியூட்டரில் நடந்து கொண்டிருந்தது சில இளைஞர்களுடன் ! இந்தக் கதைவரிசையின் mood எப்போதுமே ஜாலியானது என்பதால் 'பளிச்' கலர்களாகவே தேர்வு செய்து கொண்டிருந்தார்கள் ! இங்கே ஒரு பக்கத்துக்கு சுமாராய் 4-5 நாட்கள் என்ற அட்டவணையில் வண்டி ஓடுகிறது ! So சராசரியாய் ஒரு 48 பக்க ஆல்பத்தின் கதைப் பணிகளைச் சேர்க்காமலே டிராயிங் & கலரிங் மட்டுமே 250 நாட்களை விழுங்கி விடுவதைப் புரிந்து கொள்ள முடிந்தது ! காமிக்ஸ் வாசிப்புகளுக்குப் புதியவர்களின் பார்வைகளில் எல்லாமே "பொம்மை புத்தகங்கள்" தான் என்றாலும் - இந்த "பொம்மை படங்கள் நிறைந்ததொரு புக்கை உருவாக்கிட இத்தனை ஆற்றலும் ; இத்தனை அவகாசமும் அவசியப்படுவதை நினைத்த போது கண்ணைக் கட்டியது ! இன்னொரு பக்கமோ கம்பியூட்டரின் முன்னே அமர்ந்திருந்த இன்னொரு இளைஞன் 3D மாடல்களை உருவாக்கிக் கொண்டிருந்தார் ! ஸ்மர்ப் கையைத் தூக்கிக் கொண்டு நிற்பது போல் ; இப்படித் தலை சாய்த்து நிற்பது போல் ; அப்படி காலைத் தூக்கி நின்று கொண்டிருப்பது போல் என விதம் விதமாய் அவர் செய்திருந்த பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன ! அவை உருவாக்கப்படும் விதம் பற்றி பிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் வேக வேகமாய்ப் பேசிட, நான் "யெஸ்..யெஸ்..யெஸ்.." என்று மண்டையை ஆட்டி வைத்தேன் ! அவர்களது merchandising பிரிவின் பொருட்டு இந்த மாடல்கள் உருவாகி வருகின்றன என்பதை மட்டும் கிரகித்துக் கொள்ள முடிந்த போதிலும், அதன் பின்னணி செயல்முறை விளக்கங்கள் லத்தீன் மொழி போல் சுத்தமாய்ப் புரியவே இல்லை ! சீனாவில் ஒரு புத்தக விழா சமீபமாய் நடந்ததாகவும், அங்கே ஸ்மர்ப் கதைகளை வெளியிடும் பதிப்பகம் தமது ஸ்டாலுக்குப் பக்கத்தில் ஒரு குட்டியான ஸ்மர்ப் கிராமத்தையே பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்து மாடலாக வைத்து அட்டகாசம் செய்ததாகவும் அவர் சொன்னார் ! விரைவில் மத்திய கிழக்கில் துவங்கவிருக்கும் ஒரு தீம்பார்க்கில் "ஸ்மர்ப் உலகம்" என்றே ஒரு தனிப் பகுதி ஏகப்பட்ட விளையாட்டுக்களோடு இருக்கப் போவதாகவும், அதன் creative பின்னணி நான் பேசிக் கொண்டிருந்த இளைஞர் தான் என்றும் சொன்னார்கள் ! அந்தத் தளத்தின் இன்னொரு பகுதியிலோ கதை விவாதங்கள் ஓடிக் கொண்டிருந்தன ஒரு கண்ணாடி அறையினுள் ! மிட்டாய்க் கடையைப் பார்த்த பச்சைப் புள்ளையைப் போல வெளியில் நின்றே வேடிக்கை பார்த்தேன் - அவர்களது பணிகளைத் தொந்தரவு செய்திட வேண்டாமே என்று ! இன்னொரு பக்கமோ ஒரு யுவதி உலகெங்கிலிருந்தும் வந்து சேரும் ஸ்மர்ப் வேற்று மொழிப் படைப்புகளின் அட்டைப்படங்களை ; டிசைன்களை சரி பார்த்து ஒப்புதல் வழங்கும் வேளையில் ஈடுபட்டிருந்தார் !
சுண்டு விரல் சைஸ் மனிதர்களாக இருப்பினும், இவர்களுக்குப் பின்னே இத்தனை உழைப்பும், சிந்தனையும் மூலதனமாகிடுவதை நேரில் பார்க்கும் போது "காமிக்ஸ் is indeed serious business !" என்பது நெத்தியடியாய் புரிந்தது ! ஒரு மாதிரியாய் திரும்பவும் மேல் தளத்துக்கு வந்து சம்பிரதாய bye -bye சொல்லி விட்டு ரயில் நிலையத்தை நோக்கிய வாபஸ் பயணத்தைத் தொடர்ந்த சமயம் என் மண்டைக்குள்ளே ஸ்மர்ப் டயலாக்கள் ஓடத் துவங்கியிருந்ததன ! ஆங்கிலத்தினில் போல தமிழில் உச்சரிக்கவும், எழுதிடவும் இந்தப் பெயர் அத்தனை சுலபமல்ல எனும் போது அவர்கள் பயன்படுத்தும் அத்தனை இடங்களிலும் நம்மாலும் அந்த "ஸ்மர்ப்" வார்த்தையினை லாவகமாய்ப் பயன்படுத்தல் சாத்தியமாவென்று எனக்கு சொல்லத் தெரிந்திருக்கவில்லை ! Anyways காண்டிராக்ட் கைக்கு வந்து, நாம் பணம் அனுப்பி, அதன் பின்னே கதை(கள்) கைக்கு வந்து சேர்ந்திட இன்னமும் அவகாசம் உள்ளதேனும் போது - அதற்குள் இந்த ஸ்மர்ப் பாஷையைக் கற்றுத் தேர்ந்து கொள்ளப் பார்ப்போமே என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன் ! தொடரும் இந்த வாரத்தினில் காண்டிராக்ட் நம் கைகளுக்குக் கிட்டி விடுமென்றும் ; காத்திருக்கும் நமது கார்ட்டூன் ஸ்பெஷல் இதழினில் இந்த நீல மனிதர்களை உலா வரச் செய்வது சாத்தியமாகிடுமென்றும் நம்புகிறேன்...!
இதே போலவே இன்னமும் 2 புது வரவுகளுக்காக துண்டை விரித்து வைத்து, படைப்பாளிகளின் பதில்களுக்காக waiting என்பதால் தான் கா.ஸ்பெ. பற்றிய அறிவிப்பு இன்னமும் தாமதம் காண்கிறது ! வழக்கமாய் போடும் கதைகளை ஒன்றிணைத்து அது தான் ஸ்பெஷல் என்று உங்கள் தலைகளில் சுமத்துவதை விட - கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டாவது அழகான-புதுக் கதைகளோடு உங்களை சந்திக்க முயற்சித்து வருகிறேன் folks ! இன்னொரு ராட்சசப் பதிப்பகமோ - "4 வார அவகாசம் கொடுங்கள் எங்கள் தீர்மானத்தைச் சொல்லிட" என்று கோரி 15 நாட்கள் ஆகின்றன ! அதுவும் நமக்கு சாதகமாய் அமைந்திடும் பட்சம் ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் மட்டுமல்ல - ஒரு நூறு ஸ்பெஷல்கள் சாத்தியமாகிடும் என்பதால் பொறுமையாய்க் காத்திருக்கிறேன் ! இம்முயற்சிகளின் வெற்றி-தோல்வி பற்றிய கணிப்புகள் செய்திடும் திறன் என்னிடமில்லை ; and இதைப் பற்றி நான் வெளியே பேசாதேவும் இருந்திடுவது தான் எனது வழக்கமும் கூட ! மாம்பழம் கிட்டும் போது அதைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம் ; கல் மட்டுமே திரும்ப வந்து முன்மண்டையைப் பதம் பார்க்கும் பட்சத்தில் சத்தமின்றி வீக்கத்துக்கு ஒத்தடம் கொடுத்து விட்டு 'ஒட்டலியே..மீசையில் மண்ணே ஒட்டலியே.." என்று வண்டியை ஓட்டியும் இருக்கலாம் ! ஆனால் உங்களுள் பலருக்கும் இதழ் பற்றிய அறிவிப்பைக் காணோமே என்ற ஆதங்கம் தலைதூக்குவதாலேயே தான் திரைக்குப் பின்னே இருக்க வேண்டிய சில சங்கதிகள் முதல்முறையாக மேடைக்கு வருகின்றன ! So please relax folks....rest assured we are not lacking on efforts..!
ஒரு வியாபாரத்தின் துரிதத்தையோ / மந்த கதியையோ நிர்ணயம் செய்திடும் அதிகாரம் எல்லா நேரங்களிலும் நம் கைகளில் இருப்பதில்லை என்பது தான் யதார்த்தம் ! தவிர, நிறைய நேரங்களில் கதைகளின் உரிமைகளைக் கோரிப் பெறும் பணிகள் அதன் படைப்பாளிகளின் சட்டபூர்வ வாரிசுகளின் ஒப்புதல்களுக்காகத் தாமதப்படுவதும் நடைமுறை ! சில தருணங்களில் உரிமைகள் ஒரு legal trust வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கவும் செய்யும் ; அவ்வேளைகளில் பேரம் பேசுவதென்பது கண்ணாடி மேல் நடப்பது போலானதொரு அனுபவம் ! காலில் தக்காளிச் சட்னி ஒழுகினாலும் கூட காட்டிக்காமல் புன்னகை மன்னனாய் தொடர்ந்திட வேண்டி வரும் ! இந்த நர்த்தனங்கள் எல்லாமே எங்கள் பணியின் ஒரு அங்கமென்பதால் இவற்றை பெருசாய் நான் சிலாகிப்பது முறையாகாது ! உங்களிடமிருந்து நாங்கள் கோரிப் பெறும் பைசாக்களும், பாராட்டுக்களும் இந்த சங்கடங்களுக்கும் சேர்த்தே தான் எனும் போது இது பற்றிய நீட்டி முழக்கல்கள் நியாயமாகாது தான் ! ஆனால் இந்த சூழலில் நண்பர்களுக்கு கொஞ்சமே கொஞ்சமாய் ஒரு புரிதல் புலர்ந்திடும் பொருட்டே இந்தப் பிலாக்கனங்கள் சகலமும் ! And yes, முயற்சிகளில் தற்போதைக்கு வெற்றி கிட்டாது போயின், இருக்கும் இட்லியையே உப்மாவாக்கிப் பரிமாறும் ஹி..ஹி..வைபவங்களுக்கும் வாய்ப்புகள் உண்டே... ; but இயன்றமட்டிலும் காத்திருந்து பார்ப்போமே என்ற சின்னதொரு வைராக்கியம் தான் இம்முறை என்னை இயக்கி வருகிறது ! நம்புவோம்...நல்லது நடக்குமென்று !!
Before I sign off - கடந்த சில நாட்களாய் இங்கே அரங்கேறி வரும் களேபரம் பற்றிய எனது ten cents : வாழ்க்கையில் ஒவ்வொரு தினமும் ஒருவிதச் சவாலை முன்வைக்கும் வேளைகளில் இது போன்ற ஒன்றரை அணா பெறாத மோதல்களை நமக்குள்ளே நடத்திக் காட்டி நாம் சாதிக்கப் போவது தான் என்னவோ ? இதில் தவறு யார் மீது ? ; எதனால்..? எங்கிருந்து ஆரம்பித்தது ? போன்ற ஆராய்ச்சிகளில் செலவிடும் நேரத்தை ஆரோக்கியமான எத்தனையோ பல விஷயங்களில் காட்டித் தான் பார்ப்போமே guys ? நமக்குள் அபிப்பிராய பேதங்கள் நேரும் பொழுதுகளில் சட்டென்று ரியாக்ட் செய்திடாது அந்த கணத்தைக் கொஞ்சமாய் தாண்டிப் போகத் தான் விட்டுப் பார்ப்போமே - மனதின் கனம் அந்த அவகாசத்தில் சற்றே குறைகிறதா என்று பார்த்திடும் பொருட்டு ? பிரச்சனைகள் எதுவாக இருப்பினும், முற்சந்தியில் வைத்து அவற்றை சலவை செய்ய முற்படுவதும், சக வாசகரின் குடும்பத்தை இந்த சண்டைகளுக்குள் இழுப்பதும் நிச்சயமாய் வேதனைக்கு வித்திடும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருந்திட முடியாது ! நட்பை ; நேசத்தைச் சம்பாதிக்க ஒரு ஆயுட்காலம் போதாது guys; அதனை நான்கே சூடான வரிகளினாலும், சில நொடிப் பொழுதுகளின் ஈகோ மோதல்களாலும் ; பழசைச் சேகரிக்கிறேன் - விற்கிறேன் பேர்வழி என்ற முயற்சிகளினாலும் அநியாயமாய் கடாசும் வேலை நமக்கெதற்கு ? வார்த்தைக்கு வார்த்தை ; கருத்துக்குக் கருத்து என்று அறிக்கைப்போர் விடும் அக்கப்போரை நம் தலைவர்களிடம் விட்டு விட்டு - நாம் தல..தளபதி அபிமானிகளாய் மாத்திரமே தொடர்ந்திடுவோமே ? Peace be with us ! See you around all..Bye for now !
P.S: ஜூன் இதழ்கள் புதன் காலையில் இங்கிருந்து புறப்படும் ! அன்றைய காலைப் பதிவில் "விடுதலையே உன் விலையென்ன ?" ட்ரைலர் பிரசன்னமாகிடும் !

அட ஆசிரியரின் பதிவு இந்த முறை எதிர்பார்த்தபடியே சீக்கிரமாகவே வந்துவிட்டது :-) சூப்பர் Sir
ReplyDeleteஇரண்டாவது :-)
ReplyDeleteஅனைவருக்கும் நள்ளிரவு வணக்கம் இரண்டாவது
ReplyDeleteஇது நள்ளிரவு...நல்'இரவு'.
ReplyDeleteவிஜயன் சார், இந்த முறை மூம்மூர்த்தி மறுபதிப்பில் பிடித்த விஷயம், நமது கடந்த மறுபதிப்பில் வராத கதைகளை தேர்ந்தெடுத்து வெளீஈடுவது தான். அடுத்தவருடமும் இதே போல் தொடரவும்.
ReplyDeleteநண்பர்களே, கடந்த பதிவில் எனது விவாதம் அங்கு இடபட்ட கருத்துகளை பற்றியது மட்டும்தான், மற்றபடி அதனை பதிவிட்ட நண்பர்கள் மேல் எனக்கு எந்தவிதமான கோபமோ வெறுப்போ கிடையாது என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன்!
ReplyDeleteசேலம் Tex விஜயராகவன் @ உங்களின் ஆழ்மனதில் இருந்து இந்த கருத்துகள், மற்ற நண்பர்கள் எனது பதிவுகளை எப்படி எல்லாம் புரிந்து கொள்ளுவார்கள் என்பதை "புரிந்து" கொண்டேன். நன்றி.
Deleteஇவை அனைத்திற்கும் விளக்கம்களை உங்களை நேரில் சந்திக்கும் போது தெரிவித்து கொள்கிறேன்.
ஆனால் என்னை பற்றிய எனது பதிவுகள் பற்றிய உங்கள் எண்ணம் தவறானவை. எனது கமெண்ட்களை மீண்டும் ஒருமுறை படித்து பார்த்தால் புரியும். நீங்கள் இங்கு சொன்ன அளவுக்கு நான் வோர்த்து இல்லை. நன்றி.
@ விஜயராகவன்
Deleteகடந்த பதிவிலேயே முடித்திருக்கவேண்டிய விசயம் இது, விஜய்! கடந்த சில நாட்களாக ரணகளமாகிக் கிடந்த இத்தளம் மீண்டும் அதுபோல வேண்டாமே?
அட விடுங்கப்பா... ஒரு ஒன்னாரூபா போன் காலில் பேசி முடிக்க வேண்டிய மேட்டரை பக்கம் பக்கமா கை வலிக்க எழுதிட்டு.....
Deleteஅட்டகாசமான புதுவரவு சார். ஆவலுடன் காத்திருக்கிறோம்.
ReplyDeleteடியர் எடிட்டர்,
ReplyDeleteSMURFS எனப்படும் ஊதா (நிறப்) பொடியர்களுக்கு - welcome !
இருவாண்டுகளுக்கு முன்னர் நண்பர் கார்த்திக் சோமலிங்கா SMURF பற்றி bladepediaவில் அருமையாக கட்டுரைகள் எழுதி இருந்தார். அச்சமயம் ஆங்கில SMURF இதழ்கள் பெருஞ்சலுகை விலைகளில் அமேசான் மற்றும் flipkartல் கிடைத்ததால் வாங்கிக் குவித்தேன். பெரும்பாலும் படித்தும் விட்டேன். என்னை மட்டுமன்றி என் மகளையும் கவர்ந்தது இக்கதைகள். தமிழில் வருவதில் மகிழ்ச்சி.
பின் குறிப்பு : கவனம் கொள்ளப்பட வேண்டிய ஒரு விஷயம்: இவ்வரிசை காமெடிக்கு நமது தற்போதைய மொழிநடையிலிருந்து சற்றே விலக வேண்டி வரும்.இவ்வாங்கில நடையை தமிழிப்படுத்துவதில் காமிக்ஸ் நண்பர் 'லக்கி லிமட்' தமிழ்செல்வன் வல்லவர் என்பதை இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்
//இருவாண்டுகளுக்கு முன்னர் நண்பர் கார்த்திக் சோமலிங்கா SMURF பற்றி bladepediaவில் அருமையாக கட்டுரைகள் எழுதி இருந்தார். ///
Deleteஆமாம்! Smurfs எனக்கு அறிமுகமானது இந்தக் கட்டுரையின் மூலமே! நன்றி கார்த்திக்!
யெஸ் ...ஆகஸ்ட் 2013 பதிவு ....
Deleteஸ்மர்ஃப் பத்தி கா .சோ செம smruf ஆக எழுதி இருந்தார் ...:-)
அதில் விஜயின் கமெண்ட்டும் செம smurf ....:-)
ராகவன்ஜீ&ஈரோடு விஜய் நன்றி.!
Deletenal varavu
ReplyDeleteஎடிட்டர் சார், இனிமேல் எங்களின் பணி சும்மா மொழிபெயர்ப்பு செய்து வெளியிடுவதே என்று சொல்லாதீர்கள் :-)
ReplyDeleteஒவ்வொரு புது தொடரையும் contract போட்டு உரிமை வாங்குவதற்குள் "தாவு" தீர்ந்துவிடும் போல் உள்ளதே :-)
Hats off sir and advance felicitations for new contracts.
+1. நண்பரின் உதவியால் பிப்ரவரி முதல் ஏப்ரல் முடிய புத்தகங்கள் கைக்கு வந்து சேர்ந்தன. மின்னும் மரணம் தவிர அனைத்தையும் படித்து முடித்து விட்டேன். லார்கோ மற்றும் பௌன்செர் ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் உங்கள் மொழிப்பெயர்ப்பில் படிப்பது அலாதியானது. குறிப்பாக பௌன்செர். நீங்கள் எவ்வளவு நாகரிகமாக நாசூக்காக மொழிபெயர்த்துள்ளிர்கள் என்பது ஆங்கில பௌன்செர் படித்தால் புரியும்
Delete//உங்கள் மொழிபெயர்ப்பில் படிப்பது அலாதியானது.//+1,அப்படியே தமிழில் வேறுபதிப்பகத்தில் வெளிவந்த மாடஸ்டி கதைகளில் அருமையான கதை மற்றும் சித்திரங்கள் கொண்ட கதைகளை திரும்ப உங்கள் மொழிபெயர்ப்பில் படித்தால் நன்றாக இருக்கும்.ஹிஹிஹி.........!
Deleteநன்றி சார்,நீங்கள் ஹிஹின்னு போட வேண்டிய அவசியம் இல்லை,கண்டிப்பாக இளவரசியின் கதைகள் அனைத்தும் வேண்டும்.எடிட்டருக்கும் அது
Deleteதெரியும்.
ஒன்றல்ல ஒருநூறு கார்ட்டூன் ஸ்பெஷல்கள் சாத்தியமே. வரும் ஆண்டு தமிழ் காமிக்ஸ் உலகின் மறக்கமுடியாத ஆண்டாக அமையப்போகிறது என்பதை உங்களுடைய பதிவு சொல்லாமல் சொல்கிறது சார். காத்திருக்கிறோம். நன்றி.
ReplyDeleteஅட்டகாசமான புதுவரவு சார். ஆவலுடன் காத்திருக்கிறோம்
ReplyDeleteஎன்னுடைய 10 ஆண்டு கால Cine Industry அனுபவத்தில் மிக மோசமாக ஊற்றி கொண்ட Hollywood படம் Smurfs (தமிழகத்தில்).
ReplyDeleteஆகவே கார்டூன் ஸ்பெஷலில் புதிய கதைகளை எதிர்பார்க்கலாம் என்கிறீர்கள் ! முடியை கட்டி மலையை இழுப்போம் வந்தால் மலை போனால் முடிதானே!
ReplyDeleteஅட ..."அதைக்" கொண்டு தான் மலையைக் கட்டியிழுக்க வேண்டுமெனில் உருப்பட்ட மாதிரித் தான்...!! :-)
Deleteஹா!ஹா !
Deleteஎடிட்டர் சார் ..:-)))
Deleteஹாஹாஹா! இருப்பதைக்கொண்டு இழுத்துக் காட்டுங்கள் சார். அதானே சாதனை?
Deleteதாமதம் ஆனாலும் தரமாக வரட்டும் கார்டூன் ஸ்பெஷல் !
ReplyDelete+1
DeleteRelief from earlier post comments............
ReplyDeleteவிஜயன் சார், SMURFS - வரவு நல்வரவு ஆகட்டும். இந்த தொடரின் காண்டிராக்ட் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது!
ReplyDeleteSMURFS - கடந்த வருடம் வெளியான SMURFS படம் பார்த்தேன், எனக்கு அந்த அளவு பிடிக்கவில்லை. ஆனால் பொதுவாக புத்தக வடிவில் வந்த சில விஷயம்களை திரைப்படமாக வெளி வரும் போது எனக்கு அந்த அளவு அவை பிடிப்பது இல்லை, காரணம் புத்தகத்தில் உள்ளதை சரியாக திரையில் கொண்டுவராதது/வரமுடியாது.
SMURFS - கதைகளை நமது காமிக்ஸில் படிக்க ஆர்வமுடன் காத்துகொண்டு இருக்கிறேன்! இந்த குட்டி மனிதர்கள் கண்டிப்பாக நமது வீட்டு குட்டிகளை கவரும், ஏன் நமது வீட்டு குட்டிகளின் அம்மாகளையும் இவை கவரும்.
Parani from Bangalore : //இந்த குட்டி மனிதர்கள் கண்டிப்பாக நமது வீட்டு குட்டிகளை கவரும், ஏன் நமது வீட்டு குட்டிகளின் அம்மாகளையும் இவை கவரும்.//
Deleteநம்பிக்கை நிஜமாகின் அற்புதம் தான் !! Fingers crossed !
இந்த Smurfs மூஞ்சிகளைப் பார்த்தால் நம்ம கிட்ஆர்டினை (மேச்சேரிக்காரரை அல்ல) குழந்தையாய் பார்ப்பதுபோல ஒரு ஃபீலிங்! இவர்கள் செய்யவிருக்கும் ரகளையும் கிட்ஆர்ட்டினைப் போலவே இருந்துவிட்டால் சூப்பரோ சூப்பர்!
ReplyDeleteSmurfs தமிழிலும் வெற்றிக்கொடி நாட்டிட வேண்டுமென்பதே என் வேண்டுதல்/ஆசை!
//மேச்சேரிக்காரர் அல்ல//ஹஹஹஹ........
DeleteSmurfs! Wow, what a News!!
ReplyDelete28 வது
ReplyDeleteஊதாப் பொடியர்கள்., நிச்சயம் நல்வரவுதான்.!
ReplyDeleteநான் கூட ஒரு சோம்பேறி ஸ்மர்ஃப்தான்.!! :)
KiD ஆர்டின் KannaN : அட..நான் கூடத் தான் !
Deleteஎன் பையன் இதை டி.வியில் ரசித்து பார்த்தான்.நானும் பார்த்தேன்.நன்றாகத்தான் இருந்தது.
ReplyDeleteMadipakkam Venkateswaran : அப்படியானால் கதை சொல்லும் வேலை சீக்கிரமே காத்திருக்கிறது வக்கீல் சாருக்கு !
Deleteவணக்கம் சார் . வணக்கம் நண்பர்களே. பொடியர்களின் வரவு இந்த ஆண்டின் உச்ச பட்ச நிகழ்வு என்பதில் சந்தேகம்இல்லை சார் . கார்டூன் ஸ்பெசல் இது வரும் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி சார் .
ReplyDelete:-)
Deleteஊதா நிறப்பெடியர்கள் .நண்பர்களிடையே வெற்றிகராமாய் உலா வந்த தொடர் இது .கண்டிப்பாக உங்கள் மொழி நடையில் மிகுந்த வரவேற்பு பெரும் சார்
ReplyDeleteranjith ranjith : நம்பிக்கைக்கு நன்றிகள் சார் !
DeleteSmurfs லயனில் (முத்துவில்?) வெளிவரவிருப்பதை நினைத்து அக ஸ்மர்ஃப்பதா அல்லது உலகப்புகழ் பெற்ற இந்த காமிக்ஸ் தொடர், பத்தோடு பதினொன்றாக (மூன்றோடு நான்காக?) கார்ட்டூன் காக்டெயில் ஸ்பெஷலில் அறிமுகமாக இருப்பதை நினைத்து ஸ்மர்ஃப்பதா?!
ReplyDeleteஸ்.கு.:
ஸ்மர்ஃப்பதா 1: மகிழ்வதா
ஸ்மர்ஃப்பதா 2: பயங்கரமாக கடுப்பாகி பின்னர் இப்படி எல்லாம் கமெண்ட் போடுவதால் மட்டும் ஸ்மர்ஃப்ஸ் ஒரு தனிப் புத்தகமாக / தொடராக வெளிவந்து விடப் போவதில்லை என்று எண்ணித் தெளிந்து, "அவரு மாற மாட்டாரு, மாறவ்வே மாட்டாரு" என்று புலம்பியவாறு, ரெண்டு நாள் தாடியை சொறிந்து கொண்டே ஸ்லோமோஷனில் நடையைக் கட்டுவது!
வணக்கம் .!கார்த்திக் சோமலிங்கா சார்.உங்கள் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.!.
DeleteThis comment has been removed by the author.
DeleteKarthik Somalinga : நண்பரே, ஸ்மர்ப்களை கைகளில் இறுக்கமாய்ப் பற்றிக் கொள்ளுங்கள் ; நேரம் வரும் பொழுது அவசியமெனில் நானே ஞாபகப்படுத்தி வாங்கிக் கொள்கிறேன்....இப்போவே why jump the smurf ??
Delete+1
Deleteஇக்கதைகளை இரண்டு அல்லது மூன்று இதழ்கள் கொண்ட ஒரு collection அல்லது பாக்ஸ் செட் (மற்ற வரவுகளுடன்) காண ஆவல்
இப்படிக்கு,
"நிதி நிலைமை தெரியாமல் ஓசியில் ஐடியா குடுப்போர் சங்கம்"
Madipakkam Venkateswaran : சார்...சார்...வேண்டாமே இது போன்ற பெரிய வார்த்தைகள் !!
Deleteஎன்னைப் பழக்கடைக்காரரோடு ஒப்பிட்டால் கூட பாம்பு டான்ஸ் தான் ஆடத் தோன்றும் எனும் போது ; நீங்களானால் பரமசிவன் ரேஞ்சுக்கு என்னைக் கொண்டு போய் விட்டீர்கள் ! ஜாலியான மனிதர்களாய் இருந்து விட்டுப் போவோம் சார் !
@விஜயன் சார்:
Delete//இப்போவே why jump the smurf ??//
எல்லாம் ஸ்மர்ஃப்பிய பிறகு ஸ்மர்ஃப்பினால் அதனால் என்ன ஸ்மர்ஃப் இருக்கப் போகிறது? இப்போவே ஸ்மர்ஃப்பியதன் காரணம் கீழே:
//தொடரும் இந்த வாரத்தினில் காண்டிராக்ட் நம் கைகளுக்குக் கிட்டி விடுமென்றும் ; காத்திருக்கும் நமது கார்ட்டூன் ஸ்பெஷல் இதழினில் இந்த நீல மனிதர்களை உலா வரச் செய்வது சாத்தியமாகிடுமென்றும் நம்புகிறேன்...!//
@Raghavan:
//"நிதி நிலைமை தெரியாமல் ஓசியில் ஐடியா குடுப்போர் சங்கம்"//
+1 :)
@Madipakkam Venkateswaran:
நன்றி நண்பரே! :)
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
Deleteபிளேட் பீடியாவை கை விட்டிட்டீர்களா
உங்களது எழுத்துக்களின் அபிமானியாகிய நான், உங்களது கலைச்சேவை தொடர வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.
நண்பர் கார்த்திக் சோமலிங்காவுக்கு ..
Deleterosaleen கருத்தை வழிமொழிகிறேன் ..
இதை இங்கே சொல்ல கூடாதுதான் ..எனினும் அற்புதமான எழுத்து நடையும் நகைச்சுவை உணர்வும் மிக்க நீங்கள் காமிக்ஸ் பற்றி நிறைய எழுதினால் பழைய மற்றும் புதிய காமிக்ஸ் ரசிகர்கள் மிகவும் மகிழ்வர் ...பிற மொழி காமிக்ஸ் பற்றிய நிறைய பதிவுகளை உங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கும் கையோடு லயன் முத்து காமிக்ஸ் புதிய கதைகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் அனைவருக்கும் விருந்தாக அமையும் ...
ரெகுலரான பதிவுகளை விருப்பமுடன் எதிர்நோக்கும் ..priyatel ...
நானும் பலமுறை சொல்லிட்டேன் அபிராமி அவர்களே! அப்படியென்னதான் பிஸியோ தெரியலை! இத்தனைபேர் கேட்டும் பிடிவாதமா இருக்கார். ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வந்தா கோழி அழுக்கறமாதிரி அமுக்கிடலாம்னு இருக்கேன்! ;)
Deleteஈரோடு விஜய் !என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.!
Deleteநீங்கதான் கார்த்திக்கை மீட்டெடுப்பதில்(!) பார்ட்-டைம் ஜாப்பே பார்த்திருக்கீங்களே வெங்கடேஸ்வரன் அவர்களே! ;)
Delete@Mohammed Roseleen, Selvam Abirami, Erode VIJAY & Madipakkam Venkateswaran:
Deleteஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பர்களே! சுருக்கமான பதிலை, தவறாக எண்ண வேண்டாம். :)
ப்ளு பொடியர்களுக்கு நல்வரவு.!
ReplyDelete// ராஜா ஸ்மர்ஃப்; தாத்தா ஸ்மர்ஃப்; பேபி ஸ்மர்ஃப்; சிடுமூஞ்சி ஸ்மர்ஃப்; கவிஞர் ஸ்மர்ஃப்; மந்திரவாதி கார்காமெல் என்று ஏகப்பட்ட குட்டியாசாமிகள் கதைநெடுகிலும் வந்து செல்வர்! //
ReplyDeleteமந்திரவாதி கார்க்மெல் குட்டிஆசாமி கிடையாது என்று நினைக்கிறேன்.
(ஹைய்யா குற்றம் கண்டுபிடிச்சிட்டேனே. :):):))
அனைவருக்கும் ப்ளூ மார்னிங் ..!
ReplyDeleteஅனைவருக்கும் ப்ளூ வணக்கங்கள். இது வரை இந்த தொடரை நான் படித்ததில்லை/பார்த்ததில்லை. எதிர்பார்ப்போடு காத்து இருக்கிறேன்.
ReplyDeleteநீலப் பொடியர்களை அழகு தமிழில் கலகலப்பாக எமக்கு கொண்டுவந்த நண்பர் லக்கி லிமட்டை இந்தவேளையில் நன்றியோடு நினைபடுத்த விரும்புகிறேன். அவருடைய மொழி நடை சிறப்பாகவே இருந்தது. ஆசிரியர் ஏன் அவரை நமது பொடியர்களின் மொழிபெயர்ப்பு அணியில் இணைத்துக்கொள்ளக்கூடாது? ஆசிரியரின் மெருகூட்டலோடு நண்பர் லக்கியின் மொழிபெயர்ப்பு வந்தால் அருமையாக இருக்குமே? Hope it will happen ! :-)
ReplyDelete+1
DeleteMy comments about this are in an e-mail to the Editor. இங்கு போட்டுவிட்டு ஒரு சாராரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள இப்போதெல்லாம் உடம்பில் தெம்பு லேது - வயசு ஆயிடுத்தோல்லியொ :-) ;-)
Raghavan : பதிவுக்குப் பதிவு "ஏழு கழுதை வயசாகுது" என்று இங்கே ஒருத்தன் கூவிக் கொண்டே இருக்க, வயசைக் காரணம் காட்டி நீங்க மட்டும் தப்பித்துக் கொள்ளவா ? அஸ்கு..புஸ்கு..!!
Deleteஆரம்பத்துல கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யுமெ! நல்லா வாங்கி வாங்கி உடம்பு உரமேறிப் போய்டுச்சுன்னா அப்புறம் வலி துளிகூட இருக்காது! உங்களால முடியும், முயற்சி பண்ணுங்க காமிக் லவரே! ;)
Deleteஎன்னைப் போல..
Deleteஇல்லையா விஜய்...
//ஆரம்பத்துல கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யுமெ! நல்லா வாங்கி வாங்கி உடம்பு உரமேறிப் போய்டுச்சுன்னா அப்புறம் வலி துளிகூட இருக்காது! உங்களால முடியும், முயற்சி பண்ணுங்க காமிக் லவரே! ;)//
Deleteஆமா.. உள்நாட்டில மட்டுமில்ல, வெளிநாட்டுக்கெல்லாம்கூட தேடிவந்து அப்பு அப்புனு அப்பியிருக்காங்க. இப்ப, ரோட் ரோலர் ஏறினாகூட தென்றல் காத்து மேனில படுற சுகமாதான் இருக்கு...
அது ஒரு யோகமான நிலை போல் தெரிகிறதே? நான் கல்யாணமாகி முதல் வருடத்திலேயே அந்த நிலைக்கு வந்து விட்டேன்
DeleteDear Editor,
ReplyDeleteplease check Spirou & Fantasio Art quality is on par with chickbill and Gil jourdan. (action comedy)
ReplyDeleteபெல்ஜியத்தின் அந்த சின்ன கிராமம் எவ்வள்வு அழகானது என்று உங்கள் வரிகளில் புரிந்தது. அந்த அலுவலகத்தின் வெளிப்புறத்தினை ஒரு க்ளிக் செய்திருப்பீர்கள் எனில் இங்கே போடுங்கள் சார்.
ரின் டின் கேன் ஏன் பலருக்கு பிடிக்கவில்லை என்பதனை தாங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள் சார் ( எனக்கு பிடித்தமானது ). அதனை விட கடினமான கதையாக எனக்கு ஸ்மர்ப் தோன்றுகிறது. ஆனால் நீங்கள் இதனை திறம்பட கையாளூவிர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
RAMG75 : //அதனை விட கடினமான கதையாக எனக்கு ஸ்மர்ப் தோன்றுகிறது//
Deleteஇதுவொரு ஸ்மர்பான உலகம் சார் ; இதனை ஸ்மர்பிக்க கொஞ்சமே கொஞ்சமாய் நாம் பழகிக் கொண்டால் போதும் !
53rd
ReplyDelete///லக்கி லூக்கின் பாதையில் ரின் டின் கேனையும் நுழைத்திட முயற்சித்தேன் ! ஆனால் ஒரு நாலுகால் ஜீவனுக்கு ஒரு ஆல்பமா? என்ற ரீதியிலோ என்னவோ நம்மில் பலர் ரி.டி.கே.வை அத்தனை வாஞ்சையாய் ஆதரிக்கவில்லை என்பதால் பயலைக் கொஞ்சம் ஓரம்கட்ட நேர்ந்தது. Of course- ஒரே கதையோடு அந்தத் தொடரைக் கைகழுவுவதாயில்லை தான்; ரின்னியின் மறுவருகை would be sooner than later ! ///
ReplyDeleteடியர் ரின்டின்கேன்,
உன்னைக் காணாமல் நாங்கள் பரிதவித்துப் போயிருக்கிறோம். எங்கு சென்றாய் நீ?
தியான நிலையிலிருக்கும் யோகி போல எப்போதும்பாதி மூடிய விழிகளுடனும், சரியாய் மூடாத கார்ப்பொரேஷன் குழாயாய் ஊற்றெடுக்கும் உன் திருவாயும் - மறுஜென்மத்திலும் மறக்க முடியாதவையாயிற்றே!
களவாணிகளைக் கண்டறிந்து கச்சிதமாய் கவ்வுவதிலாகட்டும்; கலாரசிகர்களைக் கண்டறிந்து காதலுடன் தவ்வுவதிலாகட்டும் - உனக்கு நிகர் வேறு யார்?
கைகளை அகல விரித்தபடியே உனக்காகக் காத்திருக்கிறோம்... நீ தாவி ஏறி தொற்றிக்கொள்ளும்போது உன்னைத் தாங்கிப் பிடித்து அணைத்துக்கொள்ள!
பூனையார் ரின் டின் கேனுக்காக ஏங்குவது எப்படின்னு புரியலையே...
DeleteXIIIஐ பச்சை குத்திக்கிட்டு நீங்க 'புலிக் கேப்டனுக்காக' ஏங்கிக்கிடப்பதைப் போலதான், ரம்மி அவர்களே! ;)
DeleteErode VIJAY : நீர் இத்தாலிக்காரரா ? ஆஸ்திரேலியரா..? பெல்ஜியத்தின் புதல்வரா ? ரவுண்ட் சுற்றி வருகிறதே ரசனையின் முள் !!
Deleteபூனையாருக்கு நாய் பிடிக்கிறதா.?அதிசியம்தான்.!
Deleteஎடிட்டர் சார்.டெக்ஸ் வில்லரையே மறக்கடித்து விட்டீர்களே.!இதே நிலைநீடித்தால்.,இத்தாலி ,அவிநாசிக்கு கிழக்கால பல்லடத்துக்கு வடபுறத்தல்ல என்று சொல்லப்போறோம்.!
Delete////டெக்ஸ் வில்லரையே மறக்கடித்து விட்டீர்களே///----ஆகா வந்ததய்யா தலைக்கு ஆபத்து !!!!MV சார் சாதா ஆட்டக்காரஆட்டக்காரவுகளுக்கு முதலில் வாய்ப்பு தருவாக தலை. 10பந்துகளில் 60வது ரன்கள் வேணுமா ?? அப்ப வந்தால் தானே தலைக்கு மரியாதை .
DeleteWarm welcome to smurfs!
ReplyDeleteபுது வரவு "ப்ளூ " அவர்களுக்கு எனது சார்பாகவும் ...எனது குழந்தைகள் சார்பாகவும் மனமார்ந்த வரவேற்புகள்...சார் ..
ReplyDeleteபலநூறு ஸ்பெஷல் #ஆஹா அப்ப அடுத்த வருடம் திகில் போல மினி லயனும் உண்டா சார் ...:)
காமிக்ஸ் நட்பை சில வரிகளில் எழுதி விலக்கி வைக்க வேண்டுமா ...#
உண்மை சார் ...பணத்தை சம்பாதிப்பதை விட இப்போது மனிதர்களை சம்பாதிப்பது மிக கடினமான ஒன்று தான் ..அதுவும் கொஞ்சமே கொஞ்சம் உள்ள காமிக்ஸ் நண்பர்கள் மகிழ்வதற்கு மட்டுமே ஒன்று கூடினால் மிகவும் ஆனந்தமாகவே இருக்கும் ...
//So - நேற்றைய thought process-கள் இன்றைய ரசனைகளுக்கும் / தேர்வுகளுக்கும் அதே மாதிரியான தாக்கங்களையே ஏற்படுத்துமென்ற கட்டுப்பாடுகளின்றி ஒவ்வொரு தொடரையும் fresh ஆகப் புரட்ட முயற்சிப்பேன்!//
ReplyDeleteமுயற்சியில் நாங்களும் உங்களுடன் சார்
//நம் இங்கிலீஷ் அவர்களுக்கு ‘நஹி மாலும்’... அவர்களது பிரெஞ்சு எனக்கு ‘புரிஞ்சில்லா... ’ என்ற போது- கையிலிருந்த SMURFS ஆல்பம் ஒன்றினைக் காட்டிய மறுகணம் அந்த மனுஷன் முகத்தில் வெளிச்ச ரேகைகள்! அப்புறம் சைகை பாஷையில் பாதையை அவர் சுட்டிக்காட்ட- சில பல நிமிடங்களில் ஒரு இறக்கத்தில் ஒரு ஸ்டைலான கட்டிடத்தின் கண்ணாடிச் சுவர்கள் வழியாக ஒரு மந்தை நீலக் குள்ள மனிதர்கள் என்னை எட்டிப் பார்ப்பதைக் காண முடிந்தது! அத்தனையும் SMURFS அலுவலகத்தில் நின்ற அலங்கார பொம்மைகள்!//
உங்கள் வார்த்தைகள் எனையும் உடன் அழைத்து செல்கிறது.
//ஆங்கிலத்தினில் போல தமிழில் உச்சரிக்கவும், எழுதிடவும் இந்தப் பெயர் அத்தனை சுலபமல்ல எனும் போது அவர்கள் பயன்படுத்தும் அத்தனை இடங்களிலும் நம்மாலும் அந்த "ஸ்மர்ப்" வார்த்தையினை லாவகமாய்ப் பயன்படுத்தல் சாத்தியமாவென்று எனக்கு சொல்லத் தெரிந்திருக்கவில்லை !//
நண்பர்கள் கூறியது போல் புதிய character புதிய எழுத்து நடை தேவை என்பது எனது எண்ணம் கூட
//இதே போலவே இன்னமும் 2 புது வரவுகளுக்காக துண்டை விரித்து வைத்து, படைப்பாளிகளின் பதில்களுக்காக waiting என்பதால் தான் கா.ஸ்பெ. பற்றிய அறிவிப்பு இன்னமும் தாமதம் காண்கிறது ! வழக்கமாய் போடும் கதைகளை ஒன்றிணைத்து அது தான் ஸ்பெஷல் என்று உங்கள் தலைகளில் சுமத்துவதை விட - கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டாவது அழகான-புதுக் கதைகளோடு உங்களை சந்திக்க முயற்சித்து வருகிறேன் folks ! இன்னொரு ராட்சசப் பதிப்பகமோ - "4 வார அவகாசம் கொடுங்கள் எங்கள் தீர்மானத்தைச் சொல்லிட" என்று கோரி 15 நாட்கள் ஆகின்றன ! அதுவும் நமக்கு சாதகமாய் அமைந்திடும் பட்சம் ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் மட்டுமல்ல - ஒரு நூறு ஸ்பெஷல்கள் சாத்தியமாகிடும் என்பதால் பொறுமையாய்க் காத்திருக்கிறேன் ! //
//but இயன்றமட்டிலும் காத்திருந்து பார்ப்போமே என்ற சின்னதொரு வைராக்கியம் தான் இம்முறை என்னை இயக்கி வருகிறது ! நம்புவோம்...நல்லது நடக்குமென்று !!//
காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை சார் It is to get us the best நான் காத்திருக்க தயார் சார்!
நாங்களும் இந்த காத்திருப்பில் உங்களுடன் காத்திருப்பு கவிதை வாசிக்கிறோம் சார்
காத்திருப்பு கவிதை from net:
நாளை வருவேன் காத்திரு என்றாய்!
நாளை நாளை என்று நாளைகள் பல கழிந்து நூலிடை தேய்ந்தும்…
இன்றும் நீ வரும் அந்த நாளைக்காய் என் காத்திருப்பு!
+1
Deleteஅன்பு ஆசிரியரே...
ReplyDeleteநம் மும்மூர்த்திகள் மறுபதிப்பாக வருவது மிகவும் சந்தோஷம்.
அட்டைப்படங்களும் பேப்பர் குவாலிடியும் அருமையாக இருந்தும் ,சைஸ் பெரியதாக உள்ளதால் மனது லயிக்கவில்லை.சொல்ல முடியாத ஏதோ ஒன்று நெருடலாக உள்ளது.இன்னும் கொஞ்சம் சின்ன சைஸ்( முடிந்தால் பழைய சைஸ்)கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.மற்ற நண்பர்களின் கருத்தையும் கோரலாமே.....
'சின்னத்தம்பி'ல நம்ம கவுண்டமணி மாதிரி "தூரத்துல ரெண்டு மோட்டர்சைக்கிள் வருது... நடுவுல பூந்து போயிடலாம்னுதான்ங்க நெனச்சேன்" என்று சொலலும்படியான கண்பார்வையை நாமெல்லாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம் பாட்ஷா அவர்களே! அதனால, இனிமே இந்த சைஸ் படங்களும் எழுத்துக்களும்தான் நமக்கெல்லாம் சரிப்பட்டுவரும்னு தோனுது! ;)
Delete//இந்த சைஸ் படங்களும் எழுத்துக்களும்தான் நமக்கெல்லாம் சரிப்பட்டுவரும்னு தோனுது!//
Deleteநான் இதனை ஆமோதிக்கிறேன்!
ஈரோடு விஜய் அவர்களே நீங்களே அப்படி கூறும்போது, எங்கள் நிலை எப்படி இருக்கும் நண்பரே.!தற்போது பழைய பாக்கெட் சைஸ் புத்தகங்களை கூர்ந்து படிக்க சிரமம்ஆக உள்ளது நண்பரே.!பாக்கெட் சைஸ் புத்தகங்களை பார்க்கும்போது கண்ணாடி போடவேண்டிய நிலை வந்துவிட்டதே என்று மனது பாரமாகிறது நண்பரே.!!
Deleteஎனக்கு இதுவொரு பிரச்சினையே அல்ல வெங்கடேஸ்வரன் அவர்களே! (படிக்கத் தெரியாத அளவுக்கு) சின்னப் பையனா இருந்தப்போ எங்க அப்பாவை காமிக்ஸ் படிக்கச் சொல்லி(மிரட்டி) கதை கேட்டுக்கிட்டேன்... இன்னும் சில வருஷங்களுக்குப் பிறகு மீண்டும் படிக்க முடியாத அளவுக்கு பார்வையில் கோளாறு ஏற்படும்போது பிள்ளைகளிடம் காமிக்ஸைக் கொடுத்து படித்துக் காட்டச் சொல்லி( மிரட்டி/கெஞ்சி) கதை கேட்டுக் வேண்டியதுதான்! காதும் கேட்காமப் போனாத்தான் பிரச்சினையே! ;)
Delete( வருஷத்துக்கு ஒருதபா நம்ம புதுவை செந்திலைப் போய் பார்த்துக்கிட்டோம்னா இன்னும் கொஞ்சம் சமாளிச்சுடலாம் ;) )
This comment has been removed by the author.
ReplyDeleteஹா ஹா! சுவையான நிகழ்வு; அந்த 'அரைக் கிழவனுங்க'ன்ற வார்த்தையைத் தவிர! சரி... அதுதானே யதார்த்தம்! ( ஆத்தாடியோவ்! இப்பல்லாம் 'யதார்த்தம்'ன்ற வார்த்தையைச் சொல்லவே பயமாருக்கு!) ;)
Deleteவிஜய் ...ஒரு ஐடியா வந்துச்சு ...ஸ்டெல்லா மாதிரி ஒரு செகரெட்டரி இருந்தா படிச்சு சொல்ல வசதியா இருக்குமேன்னு ....வீட்ல பர்மிஷன் கேட்டேன் ...அப்புறம் என்ன நடந்ததுன்னே தெரியல ....காது ரெண்டுலேறர்ந்து உய்ங் அப்படின்னு சத்தம் மட்டுமே கேட்டு கிட்டு இருக்கு ..
Deleteஜெயசித்ரா கிட்ட அடி வாங்குன கவுண்டமணி மாதிரி ....
ஒரு குத்துமதிப்பா இந்த கமெண்ட் போடறேன்னா பாத்துக்குங்களேன் ...:-)
விஜய் ...ஒரு ஐடியா வந்துச்சு ...ஸ்டெல்லா மாதிரி ஒரு செகரெட்டரி இருந்தா படிச்சு சொல்ல வசதியா இருக்குமேன்னு ....வீட்ல பர்மிஷன் கேட்டேன் ...அப்புறம் என்ன நடந்ததுன்னே தெரியல ....காது ரெண்டுலேறர்ந்து உய்ங் அப்படின்னு சத்தம் மட்டுமே கேட்டு கிட்டு இருக்கு ..
Deleteஜெயசித்ரா கிட்ட அடி வாங்குன கவுண்டமணி மாதிரி ....
ஒரு குத்துமதிப்பா இந்த கமெண்ட் போடறேன்னா பாத்துக்குங்களேன் ...:-)
@ செல்வம் அபிராமி
Deleteஹாஹாஹா! பொரிகலங்கிப்போய் விழுந்து கிடக்கறீங்கன்றதை எசகுபிசகா நீங்க போடுற கமெண்டுலயே தெரிஞ்சுக்கிட்டேன். நல்லவேளையா கீழே உள்ள கமெண்ட்டுக்கு நீங்க ரிப்ளை பண்ணல! :D
//ஒரு குத்துமதிப்பா இந்த கமெண்ட் போடறேன்னா பாத்துக்குங்களேன் ...:-)//
Deleteமதிப்பான குத்தா இல்லை குத்து மற்றும் மிதிப்பா?
ஈரோடு விஜய் அந்த பதிவை அழித்துவிட்டேன்.தவறில்லையே.!"மாப்பிள்ளை சொம்புல தண்ணீர் கேட்ட வடிவேல் கதையாக்கிவிடுவார்கள்.இந்த தளத்தில் விவாதம் சிறிது சூடேறினாலும் பெட்ரோல் ஊத்தி கொளுத்திவிட சிலபேர் பெட்ரோல் கேனோடு அலைகின்றனர்.என்னசெய்வது.!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇனிய நண்பரே
Deleteவணக்கம் !!!
தாங்கள் இவ்வளவு வருத்த படும் அளவு எதுவும் நடந்து விட வில்லை.
இது அனைவருக்கும் பொதுவான மேடை. நமக்கு பிடிக்காத கருத்து வரும் போது அமைதி காத்தல் நலம்.
சுமார் 2 ஆண்டுகளாக இந்த வலை தளத்துக்கு வந்தாலும் இது வரை எந்த கருத்தும் நான் பதிவேற்றியது இல்லை. உங்களது ஆதங்கம் தான் என்னை முதல் முறை எழுத வைத்தது.
நமது நண்பர்கள் எழுதுவது நன்றாக இருந்தால் பாராட்டுவோம் . சில கருத்துகள் நன்றாக இல்லையாயின் பொருட்படுத்த வேண்டாம்.
எனவே தயவு செய்து அமைதி அடையவும்.
ஆசிரியருக்கும் , அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்.
அன்புடன்
விராடபுரத்து நிலவன்.
அடடே!மவுன பார்வையாளர்களை வரவழைக்க இப்படி ஒரு யுக்தி இருக்கா.!சபாஷ்.!நன்றி நண்பரே.!
Deleteஇதுவரை smurf நான் படித்ததில்லை, smurf திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து ஆனால் என்னால் தாக்குப்பிடிக்க முடியல்ல :(
ReplyDeleteஆனாலும் நம்ம காமிக்ஸுல வரும் பொழுது நல்லா இருக்கும்முன்னு நம்புவோம்.
// ஜனவரியில் நமது ரெகுலர் இதழ்களுக்கான முன்பணப் பட்டுவாடாக்கள் துவங்கிய ஜரூரில்- “சு.வி.யை“ கொஞ்சம் பொறுமையாகப் பார்த்துக் கொள்ளலாமே!' என்ற எண்ணம் தலைதூக்க- நாட்கள் நகன்று விட்டன!
//
சு. வி. யை கொங்சம் மறுபடியும் முயற்ச்சி பன்னி பாருங்க சார் உங்களுக்கு புன்னியமா போகும் :)
சார் சு. வி. யை படிக்க நீங்க (லயன் காமிக்ஸ்) மட்டும் தான் ஒரே வழி (ஆங்கில பதிப்பு தற்ப்போது வருவதில்லை ) அஅதனால் நிச்சயம் ஹிட் அடிக்கும்
சுஸ்கி விஸ்கி வருமா சார் ....
ReplyDeleteடிராகன் நகரம் மறுபதிப்பு வருமா சார் ...
டிராகன் நகரம் மறுபதிப்பு வந்தால் அட்டகாசம்தான்.!
Delete+1
Delete+1
Deleteஸ்மர்ஃப் க்கு இரத்தின கம்பள வரவேற்பு. ஊதர! ஊதர மனிதர்கள் பற்றி அபர்ரமரகவும் விரிவரகவும் எழுதி உள்ளீர்கள். நன்றிகள் ஸர்ர்.
ReplyDelete1.
ReplyDeleteநண்பரின் உதவியால் பிப்ரவரி முதல் ஏப்ரல் முடிய புத்தகங்கள் கைக்கு வந்து சேர்ந்தன. மின்னும் மரணம் தவிர அனைத்தையும் படித்து முடித்து விட்டேன். லார்கோ மற்றும் பௌன்செர் ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் உங்கள் மொழிப்பெயர்ப்பில் படிப்பது அலாதியானது. குறிப்பாக பௌன்செர். நீங்கள் எவ்வளவு நாகரிகமாக நாசூக்காக மொழிபெயர்த்துள்ளிர்கள் என்பது ஆங்கில பௌன்செர் படித்தவர்களுக்கு புரியும்.
பிறகு அதிகம் சித்திரங்களுக்காக விமர்சிக்கப்பட்ட மாடஸ்டி கதை என்னால் ரசிக்க முடிந்தது. நான் படித்த முதல் லயன் மாடஸ்டியுடையது என்பதாலோ என்னவோ நான் மாடஸ்டியின் மிக சிறந்த ரசிகன் (ஒரு வேலை மடிப்பாக்கத்து வயதுக்காரர்கள் எல்லாருக்கும் மாடஸ்டி தான் கனவுக்கன்னியோ?) மாடஸ்டியை விட்டு விடாதீர்கள்.
ப்ளுகோட்ஸ், மற்றும் லக்கிலூக் படிப்பதில் எனக்கும் என் மகளுக்கும் பெரிய அடிதடி. எனக்கு ப்ளுகோட்ஸ் பிடிக்காது (நான் தெற்கில் வசித்தாலும் வடக்கு ஆதரவாளன்). அனால் அதில் வரும் கலாட்டக்களுக்காக என் மகள் அதை ரசிக்கிறாள். இப்போதைக்கு அவள் படிக்க முயற்சிக்கும் தமிழ் எழுத்துக்கள் உங்களுடையதே. வந்த புத்தக குவியலில் ஸ்பைடர் இல்லாதது அவளுக்கு ஏமாற்றம்.
2.
Deleteஎன் மனைவி தோர்கல் ரசிகை. அது என்ன மாயமோ, மந்திரமோ தோர்கலை எல்லாப் பெண்களுக்கும் பிடிக்கிறது (தேவதை, கதாநாயகி, வில்லி, துர்தேவதை எல்லோரும் விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள்). இந்த வருடம் வரும் தோர்கலின் கதைகள் மிகப் பெரிய வெற்றியடையும் என்று நினைக்கிறேன். இனி வரும் கதைகள் எல்லாமே சிறப்பானவையே. குறிப்பாக அந்த ஒற்றை ஆல்பமாக உள்ள time travel கதை. பௌன்செரைப் போல், இந்த வருட தோர்கல் கதைகளைப் போல் அடுத்த வருடம் முழுக் கதைகளாக போட்டு விடுங்கள். கண்டிப்பாக வெற்றி.
பௌன்செர். கதையை மற்றும் மொழிபெயர்ப்பு பற்றி நிறையவே பேசி ஆயிற்று. நீங்கள் போன வருடம் அறிவித்த போது, இது விசப் பரிட்சை, நம்ம ஆளுங்களுக்கு பிடிக்குமா என்று சந்தேகப்பட்டேன். வெற்றி அடைந்தது மிக மகிழ்ச்சி. 8 மற்றும் 9உம் மிக அதிரடியான கதைகள். 10 வேறு ரிலீஸ் ஆகி உள்ளது (விலை அதிகமில்லை வெறும் Rs.1800 தான்). லயனில் வரும் போது படித்துக் கொள்ளுங்கள் என்று ஹோம் மினிஸ்டர் சொல்லி விட்டார்.
3.
Deleteஅடுத்தது மின்னும் மரணம். முதலில் சிலாகிக்க வேண்டியது. தலைப்பு. இது போல் கவரக் கூடிய தலைப்பில் நமது காமிக்ஸ்ல் நிறைய கதைகள் வந்ததில்லை. ஆர்வலர் பதிப்புக்கும் அதே தலைப்பு தேர்ந்தேடுத்துக்கும் அந்த ஆலோசனையை வழங்கிய நண்பர்களுக்கும் நன்றி. ஏற்கனவே ஆங்கிலத்திலும் தமிழிலும் பல முறை படித்த கதை தான். எனவே கதையை பற்றி புதியதாக விமர்சிக்க ஒன்றும் இல்லை. ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை விடுமுறை எடுத்திருக்கிறேன் இதை முழு மூச்சில் படிக்க என்னும் போதே இது எவ்வளவு சாதாரண(?!) கதை என்பது புரிந்திருக்கும். கதை தவிர கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் செலவு செய்து அட்டை, கட்டுரைகள், கவிதைகள், மற்றும் அச்சுத் தரம் ஆகியவற்றை படித்து, பார்த்து, தடவி மற்றும் முகர்ந்து அனுபவித்து சிலாகித்து விட்டேன். உங்களுக்கும் உங்கள் டீமுக்கும், உங்களை சம்மதிக்க வைத்த 15 பேருக்கும், இந்த புத்தகம் வர வேண்டி தன்னிடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுக்கு இரண்டாக முன் பதிவு செய்த நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். என்னைப் பொருத்தவரைக்கும் நமது கூட்டுறவுக்கு அதன் வெற்றிக்கு M2CS ஒரு சாட்சி. காமிக்ஸ் ஆர்வலர்கள் அனைவரும் பிடித்த மற்றும் பிடிக்காத கதைகள் என்று ஒதுக்காமல் அனைத்து கதைகளையும் அணைத்துக் கொண்டால் சந்தா கட்டி வாங்கினால் நீங்கள் இன்னும் பல மாயங்கள் செய்வீர்கள் எ.எ.க.
அடுத்து கவிதைகள் பக்கம். எப்படி இருக்கும் என்று நான் கவலைப்பட்டதில் இதுவும் ஒன்று. சிறந்த தேர்வுகள். இப்பொழுது ஆதி தாமிராவின் புலம்பல் தளத்திற்கு வாசகனாகி விட்டேன். வசன பலூன்கள். ஆங்கிலத்திலேயே வசனம் அதிகம் உள்ள கதை இது. எனவே அதை குறையாகவோ குற்றம் சொல்லவோ ஏதும் இல்லை. மொத்தத்தில் மேலும் பல இந்த மாதிரி சிறப்பிதழ்களை கேட்கத் தூண்டும் படைப்பு M2CS. அன்பிற்கினிய நண்பர் சேலம் டெக்ஸ் விஜயின் மைன்ட் வாய்ஸ்: என்ன இவரை கல்யாணத்துக்கு கூப்பிட்டா வளைகாப்புக்கு வர்றாரு?
பிறகு என் மகளுக்குப் மிகவும் ஸ்மர்பிய SMURFS வருவது மிகவும் ஸ்மர்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட 16 SMURF வைத்து இருக்கிறார். உங்கள் மொழிபெயர்ப்பை வைத்து தமிழ் ஸ்மர்பிக்க வாய்ப்பு. நண்பர்கள் காமிக்சையும் திரைப்படத்தையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். இது வேறு. அது வேறு.
//ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை விடுமுறை எடுத்திருக்கிறேன் இதை முழு மூச்சில் படிக்க என்னும் போதே இது எவ்வளவு சாதாரண(?!) கதை என்பது புரிந்திருக்கும்.//
Deletespecial +1
// உங்களுக்கும் உங்கள் டீமுக்கும், உங்களை சம்மதிக்க வைத்த 15 பேருக்கும், இந்த புத்தகம் வர வேண்டி தன்னிடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுக்கு இரண்டாக முன் பதிவு செய்த நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். என்னைப் பொருத்தவரைக்கும் நமது கூட்டுறவுக்கு அதன் வெற்றிக்கு M2CS ஒரு சாட்சி. காமிக்ஸ் ஆர்வலர்கள் அனைவரும் பிடித்த மற்றும் பிடிக்காத கதைகள் என்று ஒதுக்காமல் அனைத்து கதைகளையும் அணைத்துக் கொண்டால் சந்தா கட்டி வாங்கினால் நீங்கள் இன்னும் பல மாயங்கள் செய்வீர்கள் எ.எ.க.//
உங்கள் வார்த்தைகள் உண்மை... உண்மை... உண்மை... Mahendran Paramasivam sir!
+1
@ Mahendran Paramasivam
Deleteஉங்களது இயல்பான எழுத்துநடை என்னை அதிக சிரமமின்றி கவர்ந்துவிட்டது! கதைகள்/புத்தகங்கள் மீதான உங்கள் பார்வை/ஒப்பீடு அருமை!
நன்றி நண்பர்களே. ரொம்ப சோம்பேறி நான். தளத்துக்கு நாள் தவறாமல் வந்தாலும் பதிவிடாமல் இருப்பதற்கு காரணம் சோம்பேறித்தனம் மற்றும் நான் நீங்கள் உடனே படிக்கும் புத்தகங்களை 4 அல்லது 6 மாதம் பிறகே படிப்பதும். (ஏர்மெயிலில் பெறலாம். அதற்கு செலவளிப்பதற்கு பதில் ரெண்டு சந்தாவாக கட்டிவிடுகிறேன்.) எனவே என்னுடைய கருத்துக்கள் பெரும்பாலும் ஆறின கஞ்சி தான். ஆனாலும் LMS ஹாட்லைன் படித்த பிறகு கதைகளை படித்த பிறகு உடனுக்குடன் பதிவிடுவது என்று முடிவு செய்து விட்டேன்.
Deleteவெல்கம் மகேந்திரன் பரமசிவம் சார் . உங்கள் தொகுப்பான விமர்சனங்கள் அருமை சார் . அப்பாடி நிறைய தகவல்களை ஞாபகம் வைத்து எழுதி அசத்துகிறீர்கள் சார் . நேரம் கிடைக்கும் போது இன்னும் நிறைய விமர்சனங்கள் எழுதுங்கள் சார் .
Delete\\\தோர்கல் மாதிரி கதைகள் பெண்களுக்கு பிடிக்கிறது\\\ 100%உண்மை சார்.இ.இ.கொ.கதையை எனக்கு மற்றும் பெரும்பாலான நண்பர்களுக்கு பிடிக்கவில்லை.கழவி கழவி ஊத்தினோம்.வாசக நண்பர் ஒருவர் தன்மனைவியிடம் இந்த புத்தகத்தை படிக்க கொடுத்துள்ளார் .அதை படித்துவிட்டு ஆகா ஒகோ என்று பாராட்டி உள்ளார்.இதை கேள்விபட்ட எனக்கு புஸ் என்றாகிவிட்டது.எடிட்டரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றியது.நம்முடைய ரசணையை மட்டும் வைத்து முடிவுசெய்யக்கூடாது என்று.! என் மனைவி கூட மரணமுள் கதையை படித்த பின்னரே தீவிர டெக்ஸ் ரசிகையாக மாறினாள்ர!
Delete//.இதை கேள்விபட்ட எனக்கு புஸ் என்றாகிவிட்டது.எடிட்டரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றியது.நம்முடைய ரசணையை மட்டும் வைத்து முடிவுசெய்யக்கூடாது என்று///
Deleteஅனைவருக்குமான பாடம் இது!
//அனைவருக்குமான பாடம் இது!//
Deleteஆனால், எந்தப் பாடத்தையும் நாம ஒழுங்காப் படிச்சதா சரித்திரம் இல்லை! ;)
ஹி ஹி ஹி :))
Delete.
மகேந்திரன் சார்.அருமையான பதிவு மிக்க சந்தோஷம்., அதுவும் நீங்கள் மாடஸ்டி கதைக்கு கொடுத்த ஆதரவால் இரட்டிப்பு சந்தோஷம்..எடிட்டர் பெரும்பான்மை வாசகர்களின் ரசனை களின் அடிப்படையாக கொண்டு கதைகளை தேர்வு செய்கிறார்.!ஆதலால் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது முக்கியம்.!இல்லாவிட்டால் கடந்த ஆண்டுகளைப்போல் மனதில் மட்டுமே இடம் என்று கூலாக கைவிரித்து விடுவார்.!!
ReplyDeleteகண்டிப்பாக MV சார்!!! என்னிடம் இருக்கும் மற்றும் இல்லாத மறு பதிப்புகள் எல்லாத்துக்கும் என் ஆதரவு உண்டு.மனங்கவர்ந்த மாடஸ்டியை கேட்காமல் விடுவேனா...
Deleteமிக்க நன்றி சார்.!!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஒரிஜினல் கிட் ஆர்டின் பேசறமாதிரியே இருக்கு.!
ReplyDeleteஸ்மர்ஃப்பவும் மாடஸ்டி சார். இது ரொம்ப சின்ன ஸ்மர்ஃப்பா இருந்ததாலே ஸ்மர்ப்ஃபிட்டேன். கீழே கொஞ்சொம் பெரிய ஸ்மர்ஃப்பா ஸ்மர்ஃப்பியிருக்கேன்.
Deleteஸ்மர்ஃப்புங்க ஸ்மர்ஃப்.!!!
ஸ்மர்ஃப் நண்பர்களே.!
ReplyDeleteஎல்லாரும் ஸ்மர்ஃப்பா ஸ்மர்ஃப்றிங்களா.?
நேத்து ஒரூ முக்கிய ஸ்மர்ஃப்பா வெளியே ஸ்மர்ஃப்பிட்டதாலே., இங்கே அதிகமா ஸ்மர்ஃப்ப முடியல. ஆனா எல்லா ஸ்மர்ஃப்பையும் ஸ்மர்ப்பினேன். எல்லோருமே நல்லா ஸ்மர்ஃப்பி இருக்கீங்க. ஸ்மர்ஃப்பரப்பூ.!!!
புதன்கிழமை ஸ்மர்ப்ப போகும் இம்மாத ஸ்மர்ஃப்புகளுக்காக மிகவும் ஸ்மர்ஃப்பாக இருக்கிறேன்.
ப்ளூகோட்ஸின் ஸ்மர்ஃப் ஸ்மர்ஃப்பிய ஸ்மர்ஃப்பை ஸ்மர்ஃப்ப ஸ்மர்ஃப்பாக இருக்கிறேன்.
இந்த முறை ஜோர்டான் ஸ்மர்ஃப்புவார் என்று ஸ்மர்ஃப்புகிறேன்.
ஸ்மர்ஃப்பே உன் ஸ்மர்ஃப்பென்ன என்னும் கிராபிக் ஸ்மர்ஃப்புதான் எப்படி ஸ்மர்ஃப்பும் என்று ஸ்மர்ஃப்பவில்லை.
ஏனெனில் போனமாதம் ஸ்மர்ஃப்பிய லேடி ஸ்பிட்ஃபயரின் ஸ்மர்ஃப்பில் ஒரு ஸ்மர்ஃப் கொஞ்சம் சுமாராகத்தான் ஸ்மர்ஃப்பியது.
இந்த ஸ்மர்ஃப்பை தமிழில் எப்படி ஸ்மர்ஃப்புவது என்று யாராவது ஸ்மர்ஃப்பினால் அவர்களுக்கு ஸ்மர்ஃப்பாக போகும்.
ஏனெனில் ஸ்மர்ஃப் ஸ்மர்ஃப் என்று ஸ்மர்ஃப்ப ரொம்ப ஸ்மர்ஃப்பாக இருக்கு.பிகாஸ் பேசிக்கா நானொரு சோம்பேறி ஸ்மர்ஃப் என்பது உங்களுக்கு தெளிவாகவே ஸ்மர்ஃப்பும்.
இப்போ ஸ்மர்ஃபிட்டு அப்பாலிக்கா ஸ்மர்ஃப்புறேன்.
ஸ்மர்ஃப் ஸ்மர்ஃப் ஃப்ரெண்ட்ஸ்.🙏🙏🙏
ஙே ......இந்த மாதிரி தமிழில் வந்தால் முதல் கதையோடு நீல குள்ளர்கள் ரின் டின் கதியோடு சேர்ந்து விடுவார்களே ...:(
Delete
Deleteஹெஹ்ஹெ.!
நீங்க தலைவரா இருக்குறவரையிலும் புது முயற்ச்சின்னு எதுவுமே பண்ணமுடியாது போலிருக்கே.!!!
ரின்டின்., ஸ்மர்ஃப் மட்டும் விதிவிலக்கா என்ன.?,??
வாட்டமா ஒரு சட்டி செஞ்சி வெச்சிக்கிட்டு அதுலயே குருதை ஓட்டுங்கோ. :):):) (ஸ்மைலியை கவனிக்கவும்)
ஹாஹாஹா! வாய்விட்டு ஸ்மர்ஃபினேன் கிட்ஆர்ட்டின்!குறிப்பா //ஸ்மர்ஃப்பரப்பூ// ஹாஹாஹா உண்மையாகவே ஸ்மர்ஃப்பரப்பூ!
Deleteஅய்யோ கடவுளே தலை ஸ்மர்ஃப்புது
Deleteஹாஹாஹா! வாய்விட்டு ஸ்மர்ஃபினேன் கிட்ஆர்ட்டின்!குறிப்பா //ஸ்மர்ஃப்பரப்பூ// ஹாஹாஹா உண்மையாகவே ஸ்மர்ஃப்பரப்பூ!
Deleteஆத்தாடி எதனை நீளமான பதிவு .................கை வலிக்கலையா சார் ....................
ReplyDeleteசித்திர குள்ளர்கள் ...........சீக்கிரம் வரட்டும்
நெய்வேலி புத்தக கண்காட்சி என்னவாயிற்று? நாம் பங்குபெறுகிறோமா இல்லையா?. ஏதேனும் விபரங்கள் தெரியுமா நண்பர்களே?
ReplyDeleteமீள் வருகையில், அச்சுதரம் ,அட்டகாசமான சித்திரம் என்றுஅனைத்திலும் பட்டையை கிளப்பி நான் வேறமாதிரி என்று காட்டி கொண்டாலும் "தாமதம்"என்பது மண்டையில் இருக்கும் கொண்டைமாதிரி காட்டி கொடுத்து விடுகிறது. !!
ReplyDeleteஎடிட்டர் வாக்குறுதி கொடுத்திருந்ததன் அடிப்படையில் வேண்டுமானால் இதை 'தாமதமாக'க் கொள்ளலாமே தவிர, மாதத்தின் மூன்றாவது நாளிலேயே அனுப்பிவைக்கப்படும் புத்தகங்களை 'தாமதம்' என்று எப்படிச் சொல்வது வெங்கடேஸ்வரன் அவர்களே?! தாமதம் என்பது நமது பழைய பாஷையில் வாரங்கள்/மாதங்கள் அல்லவா? ;)
Deleteஆனால், இதையேகூட தாமதம் என்று சொல்லுமளவிற்கு முன்னேறியிருக்கிறோம் என்பது மகிழ்ச்சியான செய்திதான்!
உண்மைதான் .(காப்பிரைட் கேட்டு சண்டைக்கு வந்திராதிங்க.!)!
Deleteஸ்கூல் பீஸ்,விடுமுறையில் ஜாலி,பாக்கெட் காலி என்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பு என்று மனச்சோர்வான நிலையில்,காமிக்ஸ்மட்டுமே ஒரு சந்தோஷம் என்ற சூழலில்,காமிக்ஸ் வருகை தாமதம் என்றவுடன் ஏமாற்றம் வேறொன்றும் இல்லை.!
Delete// நமக்கு சாதகமாய் அமைந்திடும் பட்சம் ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் மட்டுமல்ல - ஒரு நூறு ஸ்பெஷல்கள் சாத்தியமாகிடும் என்பதால் பொறுமையாய்க் காத்திருக்கிறேன் //
ReplyDeleteஆஹா அப்ப
தில் இருந்தால் திகில் உண்டு மாதிரி
காலம் கனிந்தால் கார்ட்டூன்
உண்டு
அப்படின்னு ஒரு தனி டிராக் வரப்போகுதாம்ல :))
.
எத்தனை தனி டிரக் வந்தாலும் எனக்கு சந்தோஷமே.!!
Delete//காலம் கனிந்தால் கார்ட்டூன்
Deleteஉண்டு
அப்படின்னு ஒரு தனி டிராக் வரப்போகுதாம்ல :))//
நெடுநாள் கோரிக்கை.
நிறைவேறினால் மகிழ்ச்சி.!!!
மனித முகங்கள் தந்திட முடியாத ஒரு மனஆறுதலையும் மகிழ்ச்சியையும் கார்ட்டூன்கள் தந்திடுமென்பது என் கருத்து.!!!
This comment has been removed by the author.
Deleteகிட் ஆர்டின் சார்,புது போட்டோ அருமை.!
Deleteநன்றி மாடஸ்டி வெங்கடேஷ்வன் சார்.! நீங்க எப்பவும் இளவரசி மட்டும்தானா.??? :):):)
Delete//மனித முகங்கள் தந்திட முடியாத ஒரு மனஆறுதலையும் மகிழ்ச்சியையும் கார்ட்டூன்கள் தந்திடுமென்பது//
Deleteகண்ணாடியில் அடிக்கடி முகத்தை பாக்காதீங்கன்னு சொல்றதை கேட்டாத்தானே ?.. ;-)
//கிட் ஆர்டின் சார்,புது போட்டோ அருமை.!//
DeleteMV.சார் ..புரொஃபைல் போட்டாதானே ..பரவாயில்லை ...
அவர் எப்ப பேரை மாத்த போறாரோன்னு நடுங்கி கிட்டு இருக்கேன் ..;-)
@ Selvam Abiraami
Delete(ஹி! ஹி! ஹி! ) × 2.
@ Selvam Abiraami
Delete(ஹி! ஹி! ஹி! ) × 2.
கிட் ஆர்டின்,இந்த விஷயத்தில் நான் "அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி"
Delete//
Deleteகண்ணாடியில் அடிக்கடி முகத்தை பாக்காதீங்கன்னு சொல்றதை கேட்டாத்தானே ?.. ///
:D
// Of course- ஒரே கதையோடு அந்தத் தொடரைக் கைகழுவுவதாயில்லை தான்; ரின்னியின் மறுவருகை would be sooner than later ! //
ReplyDeleteஎடிட்டர் சார் ,
சிலருக்கு ரின்டின் பிடிக்காமல் போனதற்க்கு "பல்வேறு " காரணங்கள் இருக்கலாம்.
ஒரேடியாக கைககழுவப் போவதில்லை என்று நீங்கள் சொன்னது மட்டும் கொஞ்சம் ஆறுதலாக உள்ளது.
வேண்டுமானால் இப்படி செய்யலாம்.இப்போ வருடத்திற்கு நாலு ரின்டின் கதைகளை போடுகிறோம் இல்லையா., அதைக் குறைத்து இனிமேல் வருடம் ரெண்டு கதைகளை மட்டும் வெளியிடுவோம்.!!!
எப்பூடீ.!!!!!!
நேக்கும் எலும்பு சின்னம் ரொம்ப புடிக்கும் ....:-)
Delete// இனிமேல் வருடம் ரெண்டு கதைகளை மட்டும் வெளியிடுவோம்.!!!
Deleteஎப்பூடீ.!!!!!! ///
ஸ்மர்ப்ஃபரப்பு!
//அதுவும் நமக்கு சாதகமாய் அமைந்திடும் பட்சம் ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் மட்டுமல்ல - ஒரு நூறு ஸ்பெஷல்கள் சாத்தியமாகிடும் //
ReplyDeleteநிச்சயம் நமக்கு சாதகமான பதில் கிடைக்கும் சார்.!
அதன் பிறகாவது மாதம் ஒரு கார்ட்டூன் கதை வருவது போல் 2016 ன் பட்டியலை திட்டமிடுங்கள் சார்.!
வருடம் 15 அல்லது 18 கார்ட்டூன் கதைகள் அதுவும் தனிசந்தாவில் வருகிறது என்றால் ………………………………………
"உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
செய்யடா செய்யடா செய்யடா " ன்னு கண்டசாலா குரலில் (கொஞ்சம் கஷ்டம்தான், எப்படியாச்சும் முயற்சி பண்ணி) பாட ஆரம்பிச்சிடுவேன் சார்.!!!
15- 18 கதைகள் ..???
Deleteஎனக்கும்
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
என்ற திருச்சி லோகநாதன் குரலில் பாட ஆசை .....
:-)
// திருச்சி லோகநாதன் குரலில் பாட ஆசை .....//
Deleteஇ...இ..இது சாத்தியமா செல்வம்.?
ஏன்னா நான் உங்க ரெண்டு பேரோட குரலையும் கேட்டிருக்கேன். . :):):)
கண்ணன் ....:-)
Deleteநாளைய ஆசிரியர் பதிவிற்கும் ...புத்தகங்களின் பார்வைக்கும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் .....
ReplyDeleteTest
Delete///நாளைய ஆசிரியர் பதிவிற்கும் ...புத்தகங்களின் பார்வைக்கும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் ...../////---நாளைக்கு அனுப்பி விட்டு ,வியாழன் காலைல பதிவு போடுவதாக ஆசிரியர் சொன்னதாக ஞாபகம் தலீவரே .....
Delete//P.S: ஜூன் இதழ்கள் புதன் காலையில் இங்கிருந்து புறப்படும் ! அன்றைய காலைப் பதிவில் "விடுதலையே உன் விலையென்ன ?" ட்ரைலர் பிரசன்னமாகிடும் ! /
Deleteஇது டெக்ஸ் விஜயராகவன் கவனத்திற்க்கு!!!
நன்றி நண்பர்களே !! கண்ணிலே விளக்கெண்ணெய் ஊற்றி கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக படிப்பீர்பளோ??? ...ஹி..ஹி...
DeleteTEST
ReplyDeleteடெக்ஸ் விஜய் அவர்களே ..இந்த பதிவில் ஆசிரியர் பின் குறிப்பை மீண்டும் கவனமுடன் படிக்க கோருகிறேன் :)
ReplyDeleteஹெஹ்ஹெ.!
ReplyDeleteநீங்க தலைவரா இருக்குறவரையிலும் புது முயற்ச்சின்னு எதுவுமே பண்ணமுடியாது போலிருக்கே.!!!
ரின்டின்., ஸ்மர்ஃப் மட்டும் விதிவிலக்கா என்ன.?,??
வாட்டமா ஒரு சட்டி செஞ்சி வெச்சிக்கிட்டு அதுலயே குருதை ஓட்டுங்கோ. :):):) (ஸ்மைலியை கவனிக்கவும்)
#####
கிட் ஆர்டின் அவர்களே ...
ஸ்மைல் குறி போட்டு தப்பித்து விட்டீர்கள் ..இல்லையெனில் கடந்த இரண்டு பதிவிகளாக நடந்த களபரம் எல்லாம் ஜூஜுபி என்று கண்டு கொண்டு இருப்பீர்கள் ...
நான் பாட்டுக்கு என் வழில தனியா போய்ட்டு இருக்கேன் ..சீண்டாதீங்க ..
பின் குறிப்பு ..
நான் ஸ்மைல் குறி போடலை ..கவனிங்க ..
Deleteஹிஹிஹி.!
தலீவரே தங்கள் வீரம்தான் நாடறீந்த ஒன்றாயிற்றே.!!! நானும் அறிவேனே!! :):):)
(கிர்ர்ர்ர்.……………எத்தனை டெஸ்ட்டுதான் எழுதுவீங்க.)
சாரி மீண்டும் test
ReplyDeleteஎடிட்டர் சார்,சமீபத்தில் ஒரு பதிவில் ஓருவர் மாடஸ்டி கதைகள் வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.மாடஸ்டி கதைகள் புது வாசகர்கள் மத்தியில் வரவேற்படைய மாடஸ்டியின் இளமைகாலகதையை அறிமுகமாக வெளியிடலாமே சார்.மடஸ்டியின் சோக வரலாறு நிறையபேருக்கு தெரியவில்லை சார் கதையின் வலிமையே அவரின் இளமைகாலவரலாறுதானே சார்.இதன் மூலம் மாடஸ்டியின் மீது மாறுபட்ட கருத்து மாற வாய்ப்பு உள்ளது.வாழ்க்கை வெள்ளத்தில் தத்தளிக்கும் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் கதை சார் இது.நன்றி.!
ReplyDeleteஇந்தக் கதையை நண்பர் வெங்கடேஸ்வரன் ஃபோனில் அழுதுகிட்டே சொல்லக் கேட்டபோது என் கண்ணுகள்லயும் உடைப்பெடுத்துக்கிச்சு! ( மாடஸ்டியை என்னிக்காச்சும் நேரில் சந்திக்கும்போது தோளில் சாய்ச்சுக்கிட்டு ஆறுதல் சொல்லாம விடமாட்டேன்! )
Deleteவிஜய் , அந்த சிறுவயது மாடஸ்தி கதையை நானும் படித்து உள்ளேன் . அந்த குழந்தை வயதில் அந்த சின்ன பெண் அழுது வீங்கிய கண்களுடன் ,அழுக்கான கிழிந்த உடைகளுடன் கொஞ்சம் மனசை சோகத்தில் ஆழ்த்தும் கதை . பேர் ஞாபகம் இல்லை . MV சாருக்கு தெரியும் . ரீபிரிண்ட்க்கு அற்புதமான தேர்வாக இருக்கும் அந்த கதை.
Deleteடெக்ஸ் விஜயராகவன்.6&7பக்கங்கள்தான் .முன் கதை சுருக்கம் போல் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.!நன்றி விஜயராகவன் சார்.!இப்படி நிறைய ஆதரவு இருந்தால் 33%கோட்டாவும் மாடஸ்டிக்கே கிடைத்துவிடும்.ஹிஹி.........!(நப்பாசை)
Delete@மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்
Delete@டெக்ஸ் விஜயராகவன்
இதை பாத்தா இன்னும் கொஞ்சம் ஏதாவது நியாபகம் வருதா பாருங்க...இங்கே'கிளிக்'
வாவ்! சூப்பர் டைமிங் மாயாவி அவர்களே!
Delete@ இத்தாலி விஜய்
Deleteஒரு பக்கத்திற்கு ஆறு பேனல் என 75 பக்க கதை..! சித்திரங்கள் படுதுல்லியமாக இருக்கும். 1986-ல் வந்த...அந்த தரத்தில் வந்தால் இரட்டை சந்தோஷம்..! மாடஸ்டியின் நிழலை ரசித்து, மீண்டும் ஒரு யுத்தம் செய்ய நான் இன்னும் பக்குவபடவில்லை... :-(
மாஸ்டியின் நிழல்கூட அழகாத்தானிருக்கும் மாயாவி அவர்களே! அனேகமா அது மாடஸ்டியோட டூப்போட டூப்போட டூப்பாத்தான் இருக்கணும்! ;)
Delete//அனேகமா அது மாடஸ்டியோட டூப்போட டூப்போட டூப்பாத்தான் இருக்கணும்! ;)//
Deleteஇதை எடிட்டரே ஒத்துகிட்டாலும், மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் ஒத்துக்கவே மாட்டார்..! :-))))
யப்பா.!சான்சே இல்லை.!அருமை.!நீங்கள் காமிக்ஸ் என்சைக்ளோபீடியா.!!சார்.!சூப்பர்.சூப்பர்.!
Deleteவாழ்க்கை வெள்ளத்தில் தத்தளிக்கும் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் கதை//// மிகவும் உண்மை. மறுபதிப்புக்கு எனது ஆதரவு & ஓட்டு
Deleteஅட ஆண்டவா..எதோ ஒரு நியாபகம் கிளிக் ஆயிடிச்சி...அதுக்காக சைக்கோன்னு பிடிக்கை போடாதிங்க ம.வெ..! மாடஸ்டி புள்ளைய பாத்தா ஏன் உங்களுக்கு நம்பிக்கை ஏறுதுன்னு கொஞ்சமே எடுத்து விடுங்க..!
Deleteவியாழன் காலை வரை உங்க டாபிக் ஓடுற மாதிரி வெயிட்டா சொல்லுங்க..! :-)))
\\மாடஸ்டியோட நிழலோட நிழல்\\மூன்று வருடங்கள் கோட்டாவில் இடம் கிடைக்காமல் சில நல்ல நண்பர்கள் கஷ்டப்பட்டு,எடிட்டரிடம் மனதில் மட்டுமே இடம் கொடுத்திருந்ததை மாற்றி ஒரு சீட்(கதை)கிடைத்து.....................உஸ்அப்பா.!அதிக எதிர்பார்ப்பு கதை நன்றாக இருந்தாலும் சித்திரங்கள் ஏமாற்றிவிட்டது.!இதில் நான் வாய்திறக்கவில்லை.!(ஏனென்றால் அதிக எதிர்ப்பு !"உள்ளதும் போச்சுடா நொள்ளகண்ணா"என்றுஆகிவிடக்கூடாது என்ற பயம்தான்.!
Delete//மாடஸ்டி புள்ளைய பாத்தா ஏன் உங்களுக்கு நம்பிக்கை ஏறுதுன்னு கொஞ்சமே எடுத்து விடுங்க..!
Deleteவியாழன் காலை வரை உங்க டாபிக் ஓடுற மாதிரி வெயிட்டா சொல்லுங்க..! ///
யதார்த்தமா எத்தனை கதைகள் வேணும்னாலும் சொல்லுங்க MV அவர்களே... ஆனா 'அந்த' ஒற்றை வார்த்தையை மட்டும் உபயோகப்படுத்திடாதீங்க! அப்புறம் பூக்கடையை பிரிச்சுப் போட்டுட்டு மீன் கடை வைக்கவேண்டியதாயிடும்! ;)
இத்தாலி விஜய் அவர்களே ..ஹாஹாஹா...ஒரே _ட்டை திரும்ப திரும்ப ஓட்டினா பெரிசா மொசு இருக்காது..! ம.வெ....பட்டுகுட்டி மாடஸ்டின்னு ஆரம்பிங்க..! :D
Delete@மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்
Deleteஎன்னிக்கோ வாங்கி வெச்ச கதையை உங்களை மாதிரி ரசிகர்கள் மாஞ்சி மாஞ்சி...கேக்க...எடிட்டரும் புதுசா வந்த மாதிரி நிறையவே பில்டப் கொடுத்து, மாடஸ்டியோட டூப்போட டூப்போட டூப்பை போட்டு வசம்மா மாட்டிக்கிட்டார்..ஹாஹஹா..!
ஈரோடு விஜய்.வாங்க !எங்க மாடஸ்டி கதையை கேட்டு கடுப்பாயி ஆளைகாணோமே என்று கலக்கமாயிட்டேன்.நன்றி.
ReplyDeleteகண்ணுகள்ல இருந்த ஈரம் கமெண்ட் போடவிடாம மறைச்சுடுச்சு வெங்கடேஸ்வரன் அவர்களே! காயவச்சுட்டுவர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு! ;)
Deleteஎன் தலைவியின்(மாடஸ்டி)சோக கதையை கேட்டு ,சோகத்தில் பங்குபெற்றதற்கு நன்றி.!.......................அப்புறம் ஒரு சந்தேகம்......."என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே.!"
Delete///அப்புறம் ஒரு சந்தேகம்......."என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே.!"
Delete///
என்னைப் பத்தி நீங்க சரியாப் புரிஞ்சிக்கிடலைனு தோனுது... இப்பக்கூட உங்க தலைவிய நினைச்சு அழுதுக்கிட்டேதான் இந்தக் கமெண்ட்டைப் போடுறேன்...
எடி சார்! அவசரப்பட்டு ஸ்மார்ப் கதை தொகுப்புகள் அத்தனையையும் வாங்கிவிட வேண்டாம்.ஒரு வால்யூமை மட்டும் வெளியிட்டு நம்மவர்களின் ரசனையை கண்டபின் முடிவெடுங்கள்.கார்ட்டூன் படங்களைபார்க்கும் போது சிறு குழந்தைகளுக்கானது போல் தோன்றுகிறது.நாற்பதை நெருங்கும் நண்பர்களுக்கு பிடிக்குமா என்பதை முடிவு செய்ய இயலாது.இரண்டாவது சிக்கலான மொழிபெயர்ப்பு.சரியாக மொழிபெயர்க்காவிட்டால் மொத்த கதையும் பணால் ஆகும் வாய்ப்பே அதிகம்.டெக்ஸ்.,டைகரிடம் எதிர்பார்க்கும் சாகஸங்களை இவர்களிடம் எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.எனக்கென்னவோ ரின்டின் கேன் போல இதுவும் ஒரம்கட்டப்படவே வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது.வீட்டில் இருக்கும் வாண்டுகளே இவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நீதிபதிகள்.!படிக்காமலே கருத்து சொல்வது தவறுதான்.படித்துபார்த்தபின் என் எண்ணங்கள் மாறவும் வாய்ப்பிருக்கிறதல்லவா.?நன்றி.!
ReplyDeleteசார் நிச்சயம் வீட்டு குட்டீஸ்களுக்கு பிடிக்கும் சார்.என் 10 வயது மகன்(டி.வி.யில் மூழ்கி இருந்தாலும்.)ஆர்வமுடன் உள்ளான்.!
DeleteI am waiting!
ReplyDeleteஅதிக எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிவதும்,எதிர்பார்ப்பே இல்லாதவைகள் தூள் கிளப்புவதும் வாழ்வின் நியதிகளில் ஒன்றல்லவா.!பொறுத்தார் பூமி ஆள்வார்.காத்திருப்பதற்கான கவுண்ட் டவுன் காலமல்லவா இது.?காத்திருப்போம்.!
ReplyDelete//பொறுத்தார் பூமி ஆள்வார்.//
Deleteஇப்படி பொறுத்துக்கிட்டே இருந்தோம்னா இன்னுமொரு 30+ வருஷத்துல பூமி தான் நம்மை ஆளும்னு தோனுது! :D
கார்த்திக் சார்.எனக்குமே அந்த குழப்பம் இருந்தாலும்.எடிட்டர் எப்பொழதுமே ஒரு சேம்பிள் கதையை விட்டு வாசகர்களின் எண்ண ஓட்டத்தை கொண்டே முடிவு செய்வார்.புதிய ரயில் பாதையில் பாதுகாப்பு கமிஷனர் செய்யும் ஆய்வுக்கு நிகராக ஆய்வு செய்தபின்னரே முடிவு செய்வார்.!.அதனால் நாம் கவலைபடத்தேவையில்வை. கதையை படித்தவுடன் உடனே நம்கருத்தை தாமதமின்றி பதிவு செய்வதுதான்.!மொழிபெயர்ப்பு பொருத்தவரை நம் எடிட்டரை மிஞ்ச ஆளில்லை.மாடஸ்டி&கார்வின் நட்பின் நூலிலை வித்தியாசத்தை அழகாக சொல்வதிலிருந்து தெரிந்துகொள்ளலாம் . மேலும் ஆங்கிலத்தில் பௌன்சர் கதையை படித்த நண்பர்கள் பாராட்டுவதிலிருந்து புரிந்துகொள்ளலம்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபுக்கு எங்கே..? ஏன் லேட்டு..? என்னிக்கு அனுப்புறிங்க..? எனக்கு மட்டும் ஏன் இன்னும் கிடைக்கலை..? 'மாசம் பொறந்தா டான்னு புக்கு வாராதது கடுப்பா இருக்கு' ...என விசாரனைகள் வரும் வேகத்திற்கோ, அதில் உள்ள ஆர்வத்தில் கால் பங்கு கூட...படித்தால் என்ன தான் தோன்றுகிறது என்ற ரெண்டு வரி விமர்சனம் வரவர குறைந்து கொண்டே வருகிறதோ..!
ReplyDeleteநல்ல சிந்தனையே! பதில்தான் சட்டென்று புலப்படவில்லை!
Deleteமாயாவி சிவா சார்.!நான் புத்தகம் வந்தவுடன்.புத்தகத்தின் வாசனை(நல்ல வாசனை மட்டும்)புத்தகத்தின் அழகிய அட்டை,என்று புரட்டக்கொண்டே என்னை அறியாமல் ஹாட்லைன் படித்துவிடுவேன்.!பின் கடிதங்கள் விளம்பரங்கள் ,என்று ஒவ்வொரு புத்தகத்தையும் மாறி மாறி ஆசைதீர புரட்டிக்கொண்டே இருப்பேன்.ஒரு நல்ல சமயத்தில் என் மனைவிக்கு கொஞ்சம் பணம் கொடுத்து பிள்ளைகளுடன் ஷாப்பிங் அனுப்பி விட்டு ஆனந்தமாய் படிப்பேன்.டெக்ஸ் வில்லர் கதையாக இருப்பின் நண்பர்களிடம் கேஸை ஒப்படைத்துவிட்டு(பீஸ் நான் வாங்கிக்கொண்டு) வக்கீலுக்கு உடம்பு சரியில்லை அவர்கள் வாய்தா வாங்கிவிடுவார்கள்.நான் நிம்மதியா தனியே ஆனந்தமாக படிப்பேன்.!
Deleteஅப்போ...அடுத்தமாசம் உங்களுக்கு பயங்கர குளிர் காய்ச்சல்..! (நல்லா உங்களுக்கு மட்டும் பீஸ் வர்ற மாதிரி ரெண்டு கேஸை பிடிச்சி வைச்சிகங்க..ஹீஹீ..)
Deleteநான் புத்தகங்களைக் கொரியர் கவரிலிருந்து பிரித்தவுடன் ...
Delete1. புத்தகங்கள் சரியான எண்ணிக்கையிலிருக்கிறதா என்று சரிபார்ப்பேன் .
2. ஒவ்வொரு புத்தகமாய் கையிலெடுத்து கனம் பார்ப்பேன்.
3. கனமான புத்தகமென்றால் ஒரு புன்முறுவல் பூப்பேன். ஒல்லிப்பிச்சான் புத்தகங்களை கையிலெடுக்கும்போது புன்முறுவல் காணாமல் போய் கடுகடுப்பு வந்திருக்கும்.
4. ஒவ்வொரு அட்டைப்படமாய் ரசிப்பேன். இங்கே தளத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசங்களை ஒப்பீடு செய்வேன். அட்டைப்படம் மாலையப்பரால் வரையப்பட்டதாக இருந்தால் கை, கால், தலை ஆகியவற்றின் விகிதாச்சாரங்களை அலசுவேன். ஏதேனும் மாறுபாடு தெரிந்தால் "ஙே" என்பேன்.
5. அட்டைகளைத் தடவிப்பார்த்து அதன் வழவழப்பை உணர முயற்சிப்பேன்.
6. உள்ளே புரட்டி சில பக்கங்களை சாம்ப்பிள் பார்ப்பேன் ( அச்சுத்தரம், வண்ணக்கலவை, ஓவியபாணி etc.,). அப்போது நாசியில் ஏறும் டோனரின் வாசனையை ரசிப்பேன்.
7. ஹாட்லைன்/காமிக்ஸ்டைம் (எந்த புத்தகத்தில் இவை இல்லையென்றாலும் கடுப்பாய்டுவேன்.மறுபதிப்புகளுக்கு மட்டும் எதிர்பார்ப்பதில்லை)
8. அடுத்த வெளியீடு, விரைவில் வருகிறது - ட்ரெய்லர் பக்கங்களை ரசிப்பேன் (இவை இல்லாவிட்டாலும் கடுப்பாய்டும்)
9. 'சி.சி.வயதில்'
அப்புறமென்ன... கதையைப் படிக்க ஏற்றதொரு அமைதியான சூழலுக்காக காத்திருக்க வேண்டியதுதான்! அப்படியொரு சூழல் வாய்க்கும்வரை மேற்காணும் பாயிண்ட்டுகளில் 2 முதல் 8 வரை ர்ர்ரிப்பீட்டே! :)
10.பக்கங்கள் வரிசைபடி சரியாக உள்ளனவா என சரிபார்ப்பேன்.
Delete11.வெளியிடு எண் எங்கே என தேடி (சரிபார்ப்பேன்)முன் பக்கம் எழுதிவிடுவேன்.
12.கூரியரில் வந்த தேதியை உள் அட்டையில் பென்சிலில் குறித்துவிவேன்.
13.எந்த புத்தகம் முதலில் படிக்க தீர்மானிக்கிறேனோ..அதன் அட்டை படத்தை ஆபிஸ் டேஸ்டாபில் வால்பேப்பராக வைத்துகொள்வேன்.
14.போனில் எக்செல் சீட்டில் பெயர் டைப் செய்து பட்டியலில் சேர்த்துவிடுவேன்.
15.எனக்கு புத்தகம் நல்லமுறையில் வந்ததை ப்ளாக்கில் தாவலுடல் அறிவிப்பேன்.
16.முக்கியமாக புத்தகத்திற்கு ஸ்கூல் பையன் போல (வீட்டுக்கு தெரியாம) உட்காந்து அட்டை போடுவேன்.
17....
இத்தாலி விஜய் அவர்கள் என்னிடம் போனில் சொன்ன சில குறிப்புகள் தான் இவை..! இன்னும் பட்டியல் உள்ளது. அதை அவரே சொல்லுவார் என எதிர்பார்க்கிறேன்..ஹீ..ஹீ...! :D
//.முக்கியமாக புத்தகத்திற்கு ஸ்கூல் பையன் போல (வீட்டுக்கு தெரியாம) உட்காந்து அட்டை போடுவேன். ///
Deleteஆபீஸில் படிக்க எடுத்துப்போனால் மட்டும் அட்டை போட்டுக்குவேன் ஹிஹி...
//இத்தாலி விஜய் அவர்கள் என்னிடம் போனில் சொன்ன சில குறிப்புகள் தான் இவை..//
மிஸ்டர்... போன் வயர் பிஞ்சிபோய் பல மாசங்களாச்சு.
சீப்பு விற்பவர் : என்னுடைய சீப்பு வளையாது .....
Deleteவாங்க வந்தவர் : !!!
சீப்பு விற்பவர் : என் சீப்பு உடையாது ....
வாங்க வந்தவர் : !!!
சீப்பு விற்பவர் : என் சீப்பு நெளியாது ..
வாங்க வந்தவர் : அதெல்லாம் சரிப்பா
உன் சீப்பு நல்லா தலை சீவுமா ???
சீப்பு விற்பவர் :!!!!!!!!!!!
@MV sir ,ஈரோடு விஜய் ...
மாயாவிஜி சார் கேள்வி இதானே
//படித்தால் என்ன தான் தோன்றுகிறது என்ற ரெண்டு வரி விமர்சனம் வரவர குறைந்து கொண்டே வருகிறதோ..!///
நீங்க சொன்னதெல்லாம் சரி ...
விமர்சனம் எப்ப எழுதுவீங்க ????...:-)
//மாடஸ்டி கதை எது தன்னம்பிக்கை கொடுக்கிறது// என்று கேட்டு இருந்தீர்கள்.கதையை சொல்வதை விட என்சூழ்நிலையை சொன்னால் பொருத்தமாக இருக்கும்.படித்து முடித்தபின் பெரிய திறமையோ,அறிவு இல்லாத எனக்கு அதுவரை கஷ்டம் என்றால் என்னவென்று அறியாத சூழ்நிலையில்,வெறும்2000ரூபாய் கையில் வைத்து கொண்டு யாருடைய உதவியும் இல்லாமல் "அடுத்து என்ன நடக்குமோ என்முன்பின் அறிமுகம் இல்லாத மதறாஸ் சிட்டியில்சமாளித்த எனக்கு கார்வின் மட்டுமல்லாமல் எனக்கும் மாடஸ்டி இளவரசியாகத்தான்தெரிகின்றார்
DeleteWhat happened?
ReplyDeleteஎன்ன ஆச்சி.?
Where is the new post.?
புதிய பதிவு எங்கே.?
From,
major Sundharajan fans!
இவண் - மேஜர் சுந்தர்ராஜன் ரசிகர் மன்றம்.!
Deleteரவி கண்ணன் ...
மேலே உங்கள் கேள்விக்கு பதில் உள்ளது ..
உற்று பார்த்தால் மங்கலாக ஒரு வீடியோ லிங்க் -ம்
உற்று கேட்டால் ஒரு வார்த்தை பதில் உள்ள ஆடியோ லிங்க் -ம். கிடைக்கும்
இப்படிக்கு
டைரக்டர் மணிரத்னம் ரசிகர் மன்றம்
:-)