நண்பர்களே,
வணக்கம். வர்ண பகவானின் கோடைக் கொடை நேற்றைய பொழுதை சிவகாசிக்கொரு ஈரமானதொரு நாளாக்கி விட - நமக்கு பைண்டிங் செய்யும் நண்பரின் பணியிடத்தில் தினத்தின் பெரும்பகுதிக்கு மின்சாரம் இல்லாது போய் விட்டது ! ஆகையால் பகலில் நமக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய மார்ட்டினின் இதழ் இரவு தான் கிட்டியது என்பதால் கூரியர்கள் இன்று தான் கிளம்புகின்றன ! 3 தாட்டியமான b&w புத்தகங்கள் சற்றே சின்ன சைசில் + 1 வண்ண இதழ் மட்டும் பெரிய சைசில் - எனும் போது பேக்கிங்கும் ரொம்பவே நிதானமாய் செய்யும் அவசியம் ஏற்படுவதால் நம்மாட்கள் கவனமாய் செய்து வருகின்றனர் ! இம்மாத மறுபதிப்புகளைக் கையில் புரட்டும் போது ஒரு "முரட்டு" வேறுபாட்டை உணரப் போகிறீர்கள் ! நமக்கு வெள்ளைக் காகிதம் சப்ளை செய்து வரும் பேப்பர் ஆலை சமீபமாய் - Natural Shade என்ற பெயரிலொரு புதுவகைக் காகிதத்தைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர் ! இதனில் புத்தகங்களுக்கெனவே நல்ல திக்கான ரகக் காகிதங்களும் வருங்கின்றன ! பளீர் வெண்மை நிறத்தில் இல்லாது இவையொரு லேசான natural shade -ல் இருப்பது ஒரு வித வசீகரத்தை தருவதை உணர முடிந்தது ! நாம் வழக்கமாய் உபயோகிக்கும் வெள்ளைப் பேப்பரை விட இந்தப் புது ரகம் கொஞ்சமே கொஞ்சம் விலை கூடுதல் தான் ; ஆனால் இதழின் கனம் செமத்தியாக இருக்குமென்பதால் இம்மாதக் கூர்மண்டையர் + ஜா.நீ.கதைகளுக்கு இதனை பயன்படுத்தியுள்ளோம் ! And the result has been wonderful ! ஒரே சிக்கல் என்னவென்றால் புத்தகங்களின் எடை கூடிப் போவதால் - கூரியர் கட்டணங்களும் நம் பற்களைப் பதம் பார்க்கின்றன !! Anyways - இதழைப் பார்த்த பின்னே உங்கள் அபிப்பிராயங்களையும் அறிந்திட ஆவல் !
And இதோ - இது வரை நீங்கள் பார்த்திரா அந்த மறுபதிப்புகளின் முன்னட்டைகள் !
1984-ல் நமக்கு அறிமுகமானது முதலாய் - ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு நம் மனச்சிம்மாசனங்களில் போட்டியில்லா தலைவனாய் கோலோச்சிய இந்த நீளமுக நாயகனைச் சுற்றியே லயன் காமிக்ஸின் ஆரம்பத்து வெற்றிகள் அரங்கேறின என்பதில் இரகசியம் ஏதுமில்லை ! அந்நாட்களில் ஸ்பைடர் கதைகள் வாங்குவதே ஒரு அலாதியான சந்தோஷ அனுபவம் ! டெல்லியில் இருந்த Fleetway-ன் இந்திய ஏஜெண்டின் அலுவலகத்தில் மாயாவி ; ஸ்பைடர் ; லாரன்ஸ்-டேவிட் கதைகளின் ஒரிஜினல் ப்ரிண்ட்ஸ் வண்டி-வண்டியாய் குமிந்து கிடக்கும். அந்நாட்களில் மலையாளத்தில் ; ஹிந்தியில் ; பெங்காலியில் என மாயாவியையோ ; லாரன்ஸ்-டேவிட்டையோ வேறு பதிப்பகங்கள் வாங்கிச் செல்வதுண்டு ; ஆனால் திருவாளர் சிலந்தியாரைச் சீந்த ஆளே இராது ! So நான் டில்லி செல்லும் சமயம் வாங்கிடும் கதைகள் நீங்கலாக எஞ்சியிருக்கும் அத்தனை ஸ்பைடர் கதைகளும் ஒரு வருஷம் கழிந்த நிலையிலும் பத்திரமாக துயில் பயில்வது வாடிக்கை ! ஆண்டாண்டு காலமாய் யாருமே கைவைக்காத கதைகளை நாம் காலி செய்வதில் அவர்களுக்கு ஏக மகிழ்ச்சி ; so வழக்கமான கதைக் கட்டணங்களிலிருந்து ஸ்பைடருக்கு ரூ.200 தள்ளுபடி(!!!) உண்டு ! ஸ்பைடர் கதைகளுக்கு சித்திரம் தீட்டிய ஓவியர்கள் நிறையப் பேர் என்பதால் தினுசு தினுசாய் artwork இருப்பதை நாம் அறிவோம் ! அந்நாட்களிலோ - "யௌவன யுவனாய்" காட்சி தரும் ஸ்பைடரை முதலில் வெளியிட்டு விட்டு - அப்புறமாய் கீச்சல் பாணிகளிலான கதைகளில் கைவைப்போமே என்ற எண்ணம் எனக்குள் இருப்பதுண்டு ! ஆனால் டில்லிக்காரர்களுக்கோ இந்தப் பாகுபாடுகளெல்லாம் புரிவதில்லை - 'எல்லாம் ஒரே தொடரின் கதை தானே ?' எனபது அவர்களது எண்ணவோட்டம். இதனால் நான் டில்லி செல்லும் போதெல்லாம் இந்த கீச்சல் பாணிக் கதைகளை அடியில் போட்டுப் புதைத்து வைத்து விடுவேன் - மேலோட்டமாய் கைக்குச் சிக்கும் கதைகள் அனைத்துமே ஒ.கே. ரகமாய் இருக்கும் விதமாய் ! அந்த கண்ணாமூச்சி ஆட்டங்களை நடத்தி முடித்த தருணத்தில் வெளியான கதை தான் இந்த "இராட்சசக் குள்ளன்" ! இன்றைக்குப் படிக்கும் பொழுது நிறையவே ஹி..ஹி..ஹி..என பாம்பு டான்ஸ் ஆடத் தோன்றுவது எனது ஏழு கழுதை வயதின் வெளிப்பாடாய் இருப்பினும், அந்நாட்களில் இதனை வெளியிட்ட போது வாயெல்லாம் பல்லே - உத்திரவாத வெற்றியின் பொருட்டு !
ஸ்பைடர் கதைகள் வெளியானது இங்கிலாந்தில் என்றாலும் - அதன் பின்னணியில் இருந்த உழைப்பின் பெரும் பங்கு வேற்று நாடுகளைச் சார்ந்ததே ! டைஜெஸ்ட் சைசில் வெளியான 13 கதைகளை 6 வெவ்வேறு கதாசிரியர்கள் கையாண்டனர் ! சித்திரங்களோ - 5 வெவ்வேறு ஓவியர்களின் கைவண்ணத்தில் ! அமெரிக்கக் கதாசிரியர்கள் ; இத்தாலிய / ஸ்பானிஷ் ஓவியர்கள் என படைப்பாளிகளின் பாஸ்போர்ட்கள் வெவ்வேறு தேசங்களைப் பறைசாற்றினாலும் - அவர்களது இலட்சியம் - இங்கிலாந்தில் துளிர்விட்டுக் கொண்டிருந்த அமெரிக்க சூப்பர் ஹீரோ காமிக்ஸ்க்கான ஆர்வத்தை உள்ளூர் வெளியீடுகளால் சரிக்கட்டுவதே ! அல்டோ மார்சுலெட்டா என்ற ஓவியரும், ஸ்காட் குடால் என்ற கதாசிரியரும் இணைந்து உருவாக்கிய THE SHRIVELLER என்ற இந்தக் கதை ஒரிஜினலாய் வெளியானது நவம்பர் 1967-ல் ! அரை செஞ்சுவரி அடிக்க இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையிலும், நம்மில் ஒரு பெரும்பகுதியினருக்கு இவரொரு தலைமுறைத் தலைவனாய்த் தொடர்வது ஒரு அசாத்திய சாதனை தான் ! அட்டைப்படங்களைப் பொறுத்த வரை முன் + பின் அட்டைகள் அந்நாட்களது ஒரிஜினல் ஐரோப்பிய ஆக்கங்களே ! லேசான வண்ண மெருகூட்டல்களை மட்டுமே நாம் செய்துள்ளோம் ! இதோ அதன் ஒரிஜினல் :
கதையைப் பற்றிப் புதிதாய் சொல்ல என்னவுள்ளது - அந்த வளமான கற்பனைகளை எண்ணிப் புன்னகைப்பதைத் தாண்டி ! போன இதழில் தலைவர் சிரசாசன SMS அனுப்பினார் எனில் - இதில் அவர் கைவசமுள்ள யுக்திகள் வேறு மாதிரியானவை ! So - சிறு வயதில் படித்ததை இந்த முதன்முறையான மறுபதிப்பு வழியாக நினைவுகூர்ந்திடக் காத்திருக்கும் நண்பர்களும் சரி ; முதல் தடவையாய்ப் படிக்கப் போகும் நண்பர்களும் சரி - ஒரு 30 நிமிட உற்சாகப் பயணத்துக்குத் தயார் ஆகிக் கொள்ளுங்கள் ! லாஜிக் ..லாஜிக் ..எனும் அந்த ஒற்றை சமாச்சாரத்தை கொஞ்ச நேரத்துக்கு பீரோவுக்குள் போட்டு அடைத்து விட்டால் - great fun awaits you !!
கூர்மண்டையர் பற்றிய முன்னோட்டத்திலிருந்து நகர்ந்தால் - அடுத்து காத்திருப்பவர் ஜேம்ஸ் பாண்டின் தூரத்துச் சொந்தக்காரரைப் போலான ஜானி நீரோ & ஸ்டெல்லா ! முன்னர் அறிவித்திருந்தது போல "மூளைத் திருடர்கள் " இதழாக அல்லாது - இன்னுமொரு சாகசமான "மலைக்கோட்டை மர்மம்" இம்முறை ஆஜராகிறது ! இதற்கு முன்பாக இந்தக் கதை மறுபதிப்புப் பட்டியலில் இடம் பெற்றிருக்கவில்லை என்பதாக ஞாபகம் - correct me if I'm wrong please ! அந்நாட்களில் இந்தக் கதை வெளியான போது இதையும் சரி ; கொலைக்கரம் இதழையும் சரி - படு சுவாரஸ்யமாய் படித்த நினைவுள்ளது ! மார்ட்டின் கதைகள் இடியாப்ப ரகமென்றால் - துளியும் குழப்பமின்றி ஒரே சீராய்ப் பயணம் செய்யும் ஜானி நீரோ ; லாரன்ஸ் டேவிட் கதைகள் ஒரு நிம்மதிப் பெருமூச்சை வரச் செய்யும் ரகம் ! கதைகளின் புராதன நெடி நமக்கொரு பொருட்டல்ல என்றிருப்பின் - இந்தக் கதைகள் சுலப வாசிப்புகளுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு ! ஒவ்வொரு புத்தக விழாவின் போதும், இவையே இன்றெல்லாம் நமக்குக் கூடுதல் விற்பனையை ஈட்டித் தரும் இதழ்கள் எனும் போது - வியாக்கியானங்கள் பேசிடாது ஓசையின்றி இவற்றை ஒரு பக்கம் சுட்டு அடுக்க வேண்டியதும் நம் கடமையாகிறது ! அதே போல புத்தகக் கடைகளிலும், இந்த b&w மறுபதிப்புத் தொடர்களுக்கு சூப்பராய் வரவேற்புள்ளது எனும் போது இவற்றை commercial hits என்று பார்ப்பது தவிர்க்க இயலா யதார்த்தமாகிப் போகிறது ! இதோ - இம்மாத ஜா.நீ.சாகசத்தின் அட்டைப்படம் !
முன்னட்டை முத்து காமிக்ஸின் அந்நாளைய ராப்பர் டிசைனின் improved version - பின்னணி வர்ணக்கலவையோடு ! ஓவியர் காளியப்பா என்ற முது ஓவியர் '70-களில் வரைந்த டிசைன் நம்மிடம் இத்தனை காலம் பத்திரமாக இருந்ததால் அதனை பயன்படுத்தியுள்ளோம் ! கொஞ்சம் நிறையவே மேக் அப் போட்டது போல் தோன்றுவது நீங்கலாக - I thought Johnny looks o.k. ! பின்னட்டையோ - இந்தக் கதைக்கான ஒரிஜினல் Fleetway அட்டைப்படம் - கொஞ்சமே கொஞ்சமான நமது டெய்லர் வேலையுடன் ! ஜானி நீரோ கதைகளுக்கு ஒரு inspiration ஆக இருந்து வந்தது அந்நாட்களது இத்தாலிய நடிகரான மார்செல்லோ மாஸ்ட்ரோயானி தானாம் ! இதோ பாருங்களேன் அந்தக் கூலிங் கிளாசின் பின்னணியினை !
2015-ன் மறுபதிப்புகளில் பெரும் பகுதி அதற்குள்ளே நிறைவு பெற்றிட - எஞ்சியிருக்கும் 4 இதழ்களும் அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் வெளிவந்திடும் ! ஸ்பைடரின் "எத்தனுக்கு எத்தன்" & லாரன்ஸ்-டேவிடின் "சிறைப் பறவைகள்" தயாராகி வருகின்றன - அடுத்த reprint களாய் வளம் வந்திட !
இம்மாதத்துத் தாமதத்தை ஈடு செய்யும் விதமாய் ஜூனின் இதழ்கள் ஜரூராய் தயாராகி வருகின்றன ! ஜூனுக்கு 3 இதழ்கள் - முழு வண்ணத்தில் என்பதால் சீக்கிரமே அவற்றை அச்சுக்குக் கொண்டு செல்லும் அவசியம் முன்நிற்கிறது ! கார்டூன் கோட்டாவை ப்ளூகோட் பட்டாளம் நிரப்பிக் கொள்கிறது - "தங்கம் தேடிய சிங்கம்" வாயிலாக ! இது படைப்பாளிகளே நமக்குப் பரிந்துரை செய்த கதை என்பதால் நிச்சயம் சோடை போகாது என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! அதே போல ஜாலியான வாசிப்புக்கு ஏற்ற இன்னொரு பிரான்கோ-பெல்ஜிய நாயகரான ஜில் ஜோர்டனும் ஜூனில் தலை காட்டுகிறார்- "துணைக்கு வந்த தொல்லை " வழியாக ! இதுவும் கூட ஜில் ஜோர்டான் கதைவரிசையில் one of the best என்ற படைப்பாளிகளின் சர்டிபிகேட் சகிதம் வரவிருப்பதால் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமிராது ! ஜூனின் இதழ் # 3 - சற்றே கனமான களம் - "விடுதலையே உன் விலை என்ன ?" ரூபத்தில் ! அழுகாச்சிக் காவியமாக இல்லாது - இதுவொரு ருசிகரமான ஆக்ஷன் கதையாகவே இருந்திடும் - சைபீரியப் பனிமண்டலத்தைப் பின்னணியாகக் கொண்டு ! இதுவரையில் எங்கெங்கோ பயணித்துள்ள நமது காமிக்ஸ் ரயில் சைபீரியா திசையில் பிரயாணம் மேற்கொண்டுள்ளதா என்பது எனக்கு நினைவில் இல்லை - இருப்பின் இங்கே சொல்லிடலாமே ?
அப்புறம் கார்ட்டூன் ஸ்பெஷல் இதழுக்கென கதைத் தேர்வுகள் முடியும் கட்டத்தில் உள்ளன ! "முத்து காமிக்ஸில் கார்டூனா ?" என்ற ஆதங்கம் ஓரிரு நண்பர்களிடையே ; THE LION 250 என்ற பெயர் தேர்வுக்கான மொத்துக்கள் இன்னொரு பக்கமென கடந்த வாரத்து நமது மின்னஞ்சல்பெட்டி ரொம்பவே பிசியாக இருந்தது ! எந்தவொரு தீர்மானத்துக்கும் ஏகோபித்த ஆதரவு கிட்டுவது நடைமுறையில் எத்தனை சிரமம் என்பதை ஆயிரம் உதை வாங்கிய உரமேறிய முதுகைத் தடவிக் கொண்டே நினைத்துப் பார்த்துக் கொண்டேன் ! சிற்சிறு விஷயங்களுக்குக் கூட நண்பர்களில் சிலர் வீறு கொண்டெழும் பாங்குகள் காமிக்ஸ் மீதான ஈடுபாட்டின் காரணமாய் தான் என்பது எப்போதோ புரிந்த சங்கதி என்பதால் தற்காலிகமாய் "சுனா.பானா" அவதாரத்தை கையில் எடுத்துக் கொண்டு பிரச்சனைகளை மட்டுப்படுத்திக் கொள்ளவும் பழகி வருகிறேன் ! So - அந்த கெத்தொடெ இப்போதைக்குப் புறப்படுகிறேன் - காத்துக் கிடக்கும் பனிக்குள்ளும் / பணிகளுக்குள்ளும் புதைந்திடும் பொருட்டு !
கிளம்பும் முன்னே சின்னதாய் ஓரிரு updates : சமீபத்திய பதிவில் - புதியதொரு படைப்பாளிக் குழுமத்தோடு கைகோர்க்க முயன்று வருவதாய் பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம் ! அதனில் வெற்றி என்பதால் - 2016-ல் புதுத் தொடர்கள் / நாயகர்கள் நம் திசையில் உதிக்கவிருப்பது நிச்சயமாகி விட்டது ! இப்போது ஓசையின்றி இன்னுமொரு கல்லை வீசிப் பார்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம் - ஒரு அழகான மாங்காய் கிட்டுகிறதா என்ற ஆசையோடு ! ஜெயம் கிட்டின் - மெகா சந்தோஷம் நிச்சயம் ! நமக்காக வேண்டிக் கொள்ளுங்களேன் guys !!See you around next week ! Bye till then !
P.S : மே மாதத்து இதழ்கள் இப்போது ஆன்லைன் விற்பனைக்கும் தயார் :
P.S : மே மாதத்து இதழ்கள் இப்போது ஆன்லைன் விற்பனைக்கும் தயார் :
ஐயா நான்தான் 1St.
ReplyDeleteவாழ்த்துக்கள் யுவா.
Deleteநான் 2வதா ......
ReplyDeleteஆமா சார் :))
Delete.
Deleteஆமாங் டெக்ஸ் சாமிங்ங்ங்ங்.......
Waiting for Spider....
ReplyDeleteலக்கி நம்பர் நாலு..!
ReplyDeleteஆசிரியர் சார் ...இதுவரை காமிக்ஸ் கிளாசிக் இதழில் வெளி வராத கதை "மலை கோட்டை மர்மம் " வெளி இட்டு நண்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டர்கள் ...நன்றி ,,நன்றி ......
ReplyDeleteஜானி நீரோ அட்டையை விட ஸ்பைடர் அட்டைபடத்தில் கலக்குகிறார் .....
நாளை விடுமுறை ...திங்கள் தான் புத்தகம் கிடைக்கும் ....என்ற நிலை ...இருப்பினும் நன்றி சார் ....
// இதுவரை காமிக்ஸ் கிளாசிக் இதழில் வெளி வராத கதை "மலை கோட்டை மர்மம் " வெளி இட்டு நண்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டர்கள் ...நன்றி ,,நன்றி //
Delete+ ஒரு நன்றி
ஆசிரியர் சார் ...இதுவரை காமிக்ஸ் கிளாசிக் இதழில் வெளி வராத கதை "மலை கோட்டை மர்மம் " வெளி இட்டு நண்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டர்கள் ...நன்றி ,,நன்றி ......
ReplyDeleteஜானி நீரோ அட்டையை விட ஸ்பைடர் அட்டைபடத்தில் கலக்குகிறார் .....
நாளை விடுமுறை ...திங்கள் தான் புத்தகம் கிடைக்கும் ....என்ற நிலை ...இருப்பினும் நன்றி சார் ....
சார் 2016-ல் விண்வெளியில் ஓரு எலி வெளிவர வாய்ப்பு உண்டா...
ReplyDeleteESS : Digital files உருவாகிட வேண்டுமல்லவா ?
Deleteஅருமை விஜயன் சார்
ReplyDeleteநாங்களும் வந்துட்டோம்ல :))
.
வாங்க வாங்க
Delete// புத்தகங்களுக்கெனவே நல்ல திக்கான ரகக் காகிதங்களும் வருங்கின்றன ! பளீர் வெண்மை நிறத்தில் இல்லாது இவையொரு லேசான natural shade -ல் இருப்பது ஒரு வித வசீகரத்தை தருவதை உணர முடிந்தது ! //
ReplyDeleteஅருமை சார்
அப்ப ரீ பிரிண்ட் ஒரிஜினல் போலவே வரப்போகுதுன்னு சொல்லுங்க சார்
// அப்புறம் கார்ட்டூன் ஸ்பெஷல் இதழுக்கென கதைத் தேர்வுகள் முடியும் கட்டத்தில் உள்ளன ! //
சந்தோசமான செய்தி சார்
அப்படியே யார் யார் வரப்போகிறார்கள் என்பதை சொன்னீங்கன்னா
நல்லா இருக்குமுங்க
// ஜெயம் கிட்டின் - மெகா சந்தோஷம் நிச்சயம் ! நமக்காக வேண்டிக் கொள்ளுங்களேன் guys !!See you around next week ! Bye till then ! //
கண்டிப்பாக நமக்கு வெற்றிதான் சார்
அப்ப நாளைக்கு புதிய பதிவு கிடையாதா ;-)
.
8
ReplyDeletehi
ReplyDeleteHi Hi :))
Delete.
கஷ்டப்பட்டு பேரும் டைப்பறீங்க , கை வலிக்காதா ???? ஐஸ் பீர் வாங்கி வரட்டுமா , ஆளுக்கொன்று சாப்பிட்டு விட்டு உற்சாகமாக டைப்பரீங்களா அய்யாக்களா??????
Deleteவட்ட செயலாளர் வ.மு . மன்னிக்கவும் ஈ . வி
ReplyDeleteஎங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரும்படி அன்போடு அழைக்கிறோம்
தலிவர் தனியாக தவித்துக்கொண்டு இருக்கிறார் :))
.
மாலை வணக்கம்
ReplyDeleteசனிக்கிழமை யே பதிவை போட்டு ஆனந்த அதிர்ச்சியை அளித்து விட்டீர்கள், நன்றி சார் . நாளைக்கு விடுமுறை புத்தகங்கள் திங்கள் தான் , கொஞ்சம் காத்திருப்பு இப்போது நீண்டு விட்டது சற்றே நகம் கடிக்க வைத்து விட்டது சார் .
ReplyDeleteகார்டூன் ஸ்பெசல் சில இதழ்களுக்கு மாற்றாகவா ? சந்தாவில் அடக்காமா ? அல்லது தனியாக பணம் அனுப்பி முன்பதிவு செய்யனுமா ? யார் யார் வருகிறார்கள் ? இப்படி முக்கியமான கேள்விகள் பதில் இல்லாமல் உள்ளனவே சார் !!!!!!!
புதிய முயற்சிகள் பலிக்கட்டும் ,, எங்கள் காட்டில் காமிக்ஸ் மழை பொழியட்டும் சார் . அதற்காக எங்களின் மனங்கள் எப்போதும் உங்கள் கூடவே வரும் சார் .
வணக்கம் எடி சார்
ReplyDeleteகூர்மண்டையர் முன் அட்டையில் * ஜேம்ஸ்பாண்ட் * கணக்கா இருக்காக
மலைக்கோட்டை மர்மம் நான் படித்த சேகரம் செய்த கதையிது
முன்னட்டையில் ஜானி நீரோக்கு பவுடர்தான் அதிகம் பூசிட்டீங்க போலிருக்கு
அது பாண்ட்ஸ் பவுடருங்களா?
பின்னட்டை குஜிலி நிரம்ப ஆழகாத்தான் இருக்காக ( கிட் ஆர்டின் கண்ணண் உங்களுக்கு ஏத்த குஜிலியத்தான் செலக்டு பண்ணிருக்காக )
தங்கம் தேடிய சிங்கம் - இது நம்ம பரட்டைக்கு கொடுக்க வேண்டிய தலைப்பாச்சே ( எடி சார் தலைப்பை சுட்டுட்டாரே :( )
// சமீபத்திய பதிவில் - புதியதொரு படைப்பாளிக் குழுமத்தோடு கைகோர்க்க முயன்று வருவதாய் பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம் ! அதனில் வெற்றி என்பதால் - 2016-ல் புதுத் தொடர்கள் / நாயகர்கள் நம் திசையில் உதிக்கவிருப்பது நிச்சயமாகி விட்டது ! இப்போது ஓசையின்றி இன்னுமொரு கல்லை வீசிப் பார்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம் //
ReplyDeleteவீசறதுதான் வீசறீங்க அதென்ன சின்னகல்லாப் பார்த்து வீசறது!
பாறாங்கல்லா பார்த்து வீசுங்க அப்பத்தான் நல்ல கதைகளா அள்ளித் தெளிப்பாய்ங்க. :-)
Jaya Sekhar : வீசும் சின்னக்கல் மண்டையிலேயே திரும்பவும் வந்து விழுந்தால் கூட தாக்குப் பிடித்துக் கொள்ளலாம் - பாறாங்கல்..?
Deleteயானையை கொசு ( பாறாங்கல் ) க(அ)டித்த கதையாகிவிடும்
Delete// வீசும் சின்னக்கல் மண்டையிலேயே திரும்வும் வந்து விழுந்தால் //
நீங்க எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்
இருந்தாலும் பர்ஸ்ட் எய்டு பாக்ஸ்ஸ ரெடீயா வெச்சுக்குங்க எடி சார் !!!!
நாளைக்கும் புது பதிவு வேண்டுமு
ReplyDeleteநாளையும் புது பதிவு வேண்டும் #
ReplyDeleteஇதை நான் வழிமொழிகிறேன் சார் ..
ஆமாம் சார் ..மறவாமல் கார்டூன் சிறப்பிதழ் சந்தாவின் அங்கமா ...அல்லது தனி பாதையா என்பதை தெரிவிக்கவும் ..
ReplyDeleteDaer Editor,
ReplyDeleteஸ்பைடர் அட்டை அட்டகாசம் Classic ... Waiting ...
ஜானி நீரோ - முன்னட்டை சுத்தமாகப் பிடிக்கவில்லை
மலைக்கோட்டை மர்மம் ...இன்ப அதிர்ச்சி சார்
ReplyDeleteகார்ட்டூன் ஸ்பெஷல் ...நிறைய பக்கம் ,நிறைய கதைகள் போடுங்க சார் ......
ஜோர்டான் இதழை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ...:-)
(டெக்ஸ்...ஒரு சில்டு டின் பீர் பார்சல் ..:-) ]
ஆகா ஒரு ஒரே வருடம் பொறுத்து கொள்ளுங்கள் சார் , அடுத்த என்னுடைய 40வது ஆண்டு முடிந்து ,41வது ஆண்டு பிறக்கும் போது நிச்சயமாக வாங்கி தந்து விடுகிறேன் ... ஹி...ஹி...
Delete//கார்ட்டூன் ஸ்பெஷல் ...நிறைய பக்கம் ,நிறைய கதைகள் போடுங்க சார் ......//
Delete+1
+11111
Deleteஸ்னைடரின் முன் அட்டை ஒரிஜினலை விட நன்றாக இருக்கிறது. பின் அட்டையின் மஞ்சள் நிறம் ஆம்லேட் போட்டது போல உள்ளது.
ReplyDeleteமாலை வணக்கம் எடி சார் & நண்பர்களே.
ReplyDeleteஎடி சார் கூர் மண்டையர் அட்டைபடம் கலக்கலா இருக்கு, இரண்டாம் இடம் ஜானி நீரோவுக்கு கொடுக்கலாம்.
ReplyDeleteசமீபத்திய பதிவில் - புதியதொரு படைப்பாளிக் குழுமத்தோடு கைகோர்க்க முயன்று வருவதாய் பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம் ! அதனில் வெற்றி என்பதால் - 2016-ல் புதுத் தொடர்கள் / நாயகர்கள் நம் திசையில் உதிக்கவிருப்பது நிச்சயமாகி விட்டது ! இப்போது ஓசையின்றி இன்னுமொரு கல்லை வீசிப் பார்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம் - ஒரு அழகான மாங்காய் கிட்டுகிறதா என்ற ஆசையோடு ! ஜெயம் கிட்டின் - மெகா சந்தோஷம் நிச்சயம் ! நமக்காக வேண்டிக் கொள்ளுங்களேன்....
ReplyDeleteஇப்போவே ஒரு கிடாயை ஓடின் தெய்வத்திற்க்கு நேர்ந்து விட்டாச்சு....
Rummi XIII : ஓடின் தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஒரு கிடா விருந்துக்கு ரூட் போட்டாச்சா ? ஆஹா !
Deleteமாங்காயா??? இல்லை மங்காவா????
ReplyDeleteமாயாவி சிவா உபயத்தால் , ஒரு மங்கா காமிக்ஸை காண நேர்ந்தது ரம்மி.!!!
Deleteஅய்யகோ.! அங்கே தொடங்கிய ஓட்டடம் வீட்டீல் தான் நின்றது.
மங்கா வா.??? நல்லா யோசிச்சு முடிவெடுங்க .!!!!
அட ஆண்டவா..அதுக்கா அந்த 'pizza' டப்பாவ எடுத்துட்டு ஓடுனிங்க...! :-)))
Deleteஹிஹிஹி.!!!
Deleteமாங்காயா??? இல்லை மங்காவா????
ReplyDeleteகாமிக்ஸ் நண்பர்களே,
ReplyDeleteபுதிய காமிக்ஸ் வாட்ஸ்அப் குரூப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கலாம் !
பெயர் : காமிக்ஸ் ஜால்ரா பாய்ஸ் !
(தில் இருந்தால் திகில் உண்டு)
ஹர ஹர மகாதேவா
Deleteதில் இருந்தால் என்னை சேர்க்கலாம்
Delete:):):)
Delete:):)
DeleteSpider அட்டை படம் கலக்கல்
ReplyDeleteJohnny Nero அட்டை படம் சுமார்தான்
மர்ம மனிதன் மார்ட்டின் மற்றும் ரிப்போர்டர் ஜானி கோட்டாவை அடுத்த ஆண்டு தயவு செய்து அதிகபடுத்தவும்
// அதனில் வெற்றி என்பதால் - 2016-ல் புதுத் தொடர்கள் / நாயகர்கள் நம் திசையில் உதிக்கவிருப்பது நிச்சயமாகி விட்டது //
அட வாழ்த்துக்கள் , எந்த நாட்டு பதிப்பாளர் என்று கொங்சம் clue கொடுக்கும்மாரு ஓட்டைவாய் உலகநாதனிடம் கேட்டுக்கொள்கிறேன் :)
// மர்ம மனிதன் மார்ட்டின் //
Deleteஇதற்கு வாய்ப்பே இல்லைன்னு போன பதிவிலயே எடிசார் சொல்லிட்டார்
@jaya sekhar
Deleteஎனக்கு அப்படி நியாபகம் இல்லையே, அப்படியே இருந்தாலும் கொங்சம் ரிப்போர்டர் ஜானியையாவது கவினிக்கலாமே
This comment has been removed by the author.
ReplyDeleteSpider அட்டை படம் அருமை. இந்த கதையை சிறுவயதில் படித்த ஞாபகம் இல்லை! ஆவலுடன் உள்ளேன்! கடந்த மாதம் பழைய இதழான மலைகோட்டை மர்மம் படித்தேன், புதிய தரத்தில் வரும் இந்த இதழை மீண்டும் படித்திட அதே ஆவர்துடன்!
ReplyDeleteஅடுத்த மாதம் வரவுள்ள இதழ்களில் எனது ஆர்வத்தை மிகவும் கிளப்புவது ஜில் ஜோர்டன்.. வருடம் ஒரு முறையாவது இவர் கதைகள் வர வேண்டும்!
ReplyDelete+1
Delete+1
Delete+1
Delete-1
Deleteஜில் ஜோர்டன் சம போருப்பா
என்பது என்கருத்து :)
+1
Delete@ ALL : அட...ஜில்லாருக்கு இத்தனை ஆதரவா ?
Deleteகடவுளே ஜில் ஜோர்டான் பெயரை கேட்டாலே பயமாக இருக்கிறது.
Deleteடெக்சிடம் மாட்டிய எதிரிகள் நிலை, ஜில் ஜோர்டான் புத்தகத்தை கையில் எடுத்தால் எனக்கு ஏற்படுகிறது.
/////// எடிட்டர் சார் /////
சாய் விக்னேஸ் 3 தடவை +1 போட்டிருக்கிறார். இதையெல்லாம் கணக்கில் வைத்து ஜில் ஜோர்டானுக்கு ஆதரவு அதிகம் என்று தவறாக நினைத்து விட வேண்டாம்.
Please release Gil Jordan...at least 2 stories for a year. Introducing Gil Jordan with the NBS mixture may be, one of the reason it get lost among other big heroes.
DeleteFor the same reason, I don't prefer the "Cartoon special - mixture" for introducing new characters.
For food you can have different variety in a single plate. But for books, you can't mix different genre's together and expect everything will reach the audience properly.
Please come-out of this mix & match specials in the future.
People will certainly buy Cartoon special for Lucky Luke, but the essence of introducing new taste & characters will get lost. It will certainly impact the long print run for the new characters.
Editor should take better decision with an eye on the future of the new characters.
எடிட்டர் அவர்களுக்கு மாலை வணக்கங்கள்...!
ReplyDelete// இன்னுமொரு சாகசமான "மலைக்கோட்டை மர்மம்" இம்முறை ஆஜராகிறது ! இதற்கு முன்பாக இந்தக் கதை மறுபதிப்புப் பட்டியலில் இடம் பெற்றிருக்கவில்லை என்பதாக ஞாபகம் - correct me if I'm wrong please ! //
1974 -ம் வருடம் மார்ச் மாதத்தில், முத்து காமிக்ஸில் 24 வது வெளியீடாக வந்த 'மலைகோட்டை மர்மம்'...1986 ம் வருடம் மறுபதிப்பில் முத்து 150 வது இதழாக வெளிவந்தது..!
அதன் அட்டைபடங்கள் பார்க்க...இங்கே'கிளிக்'
இந்த இரு இதழ்களும் சென்னை ராமாவரம் தோட்டம் அருகே ஒரு பழைய புத்தக கடையில் 1997 கிடைத்தது!
DeleteThis comment has been removed by the author.
DeleteThanks for sharing the pictures...looks like you have a comics treasure at your home...:)
Deleteஅருமை ,மாயாவி சார்.
Deleteஇங்கு மறுபதிப்பு என்பது க்ளாசிக் என்று நினைக்கின்றேன்.மாயாவி சார்.
Delete@mayavi siva
Deleteமுதல் பதிப்பின் அட்டை படம் சூப்பர்
mayavi.siva @ friends : ஒரிஜினலின் அந்த ரோப்கார் படமுடன் ஆன முன்னட்டை அந்தக் காலத்து நோட்புக் ராப்பருக்காகப் போடப்பட்ட டிசைன் !
Deleteஜானி கதையின் முன் அட்டை வெகு சுமார் :-( பின் அட்டை அருமை
ReplyDeleteParani from Bangalore : பின்னட்டையில் நிறைய டெய்லர் வேலை நடந்துள்ளது !
DeletePlease add 9731800433 for the whatsapp group
ReplyDeleteசு னா பா னா சொல்லிட்டா அப்பீல் ஏது
ReplyDelete--
ஏற்கனவே என்னிடம் முளை திருடர்கள் இதழ் இருந்ததால் திரும்பவும் அதே கதையா என்றிருதேன். நல்ல வேலையாக எங்கள் சிறப்பான முக்கிய இடமானதும் , இதுவரை மறுபதிப்பு வராத இதழாகிய மலைகோட்டை மர்மம் வெளிவருவது மிக்க மகிழ்ச்சி சார்! Original Wrapperவிட நமது ராட்சச குள்ளனின் wrapper பிரமாதமாக உள்ளது. மற்றும் ஓர் வேண்டுகோள் மறுபதிப்பு இதழ்கள் இதுவரை ஒரு முறைக்கு மேல் வராத இதழாக இருந்தால் நலம்.
ReplyDeletesenthilwest2000@ Karumandabam Senthil : Please see below !
Deleteகொள்ளைக்கார மாயாவி சமீபத்தில் வந்த கதை சார். க்ளாசிக்ஸில் வராத கதைகளை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் சார்.
ReplyDeleteMadipakkam Venkateswaran : மறுபதிப்புகளில் நாம் COMICS CLASSICS -ல் போடாத கதைகள் ரொம்பவே குறைச்சல் தான் ! So போட்டது / போடாதது என்ற பாகுபாடுகளின்றி சகலத்தையும் வரும் ஆண்டுகளில் மறுபதிப்பு செய்திடவுள்ளோம் ! புதிய சைசில், தரமான தாளில், பளிச் என்று வெளியாகும் இதழ்கள் என்பதாலும், இவை அத்தனை சீக்கிரமாய் damage ஆகிடாது என்பதாலும் - இவையே இந்தக் கதைகளின் last editions என்று கருதிடலாமே !
DeleteWhat about 'vethalar? Pls reprint muthu comics vethalar stories!
DeleteI like vethalar please reprint sir
Deleteஅதுவும் சரியான முடிவு சார்.என் பழைய கையிருப்பு பாக்கெட் சைஸ் புத்தகங்களை வயதாகிவிட்டதால் கூர்ந்து பார்த்து ரசித்து படிக்க முடியவில்லை.(சிறிய எழத்துக்கள் மற்றும் சித்திரங்கள்)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteFor follow up!
ReplyDeleteஎடிட்டர் சார்.சென்ற மாதம் ஒரு பழைய இதழை வாசகர்களிடையே போட்டி வைத்து அதை பரிசாககொடுக்க கேட்டுக் கொண்டேன்.அதற்கு நீங்கள் ஆளை விடுடா சாமி என்று ஜகா வாங்கிய காரணம் சென்ற பதிவில் புரிந்தது. மொழி புரியாத இதழக்கே இந்த நிலைமை என்றால்………………பழைய இதழக்கு?????.144 தடை உத்தரவே போட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.நீங்கள் "தீர்க்கதரசி"சார்.
ReplyDeleteமடிப்பாக்கம் வெங்கடேஷ் சார் ..
Deleteஹாஹா .....உண்மை ..:):):):)
ஹாஹா .....உண்மை ..:):):):)
Deleteடியர் எடிட்டர்,
ReplyDeleteமுத்து காமிக்ஸ் கார்ட்டூன் ஸ்பெஷலுக்கு "THE MUTHU CARTOON SPECIAL" என்று பெயர் வைத்து இப்பொழுதே பரிசைத் தட்டிச் செல்கிறேனே ப்ளீஸ் :-)
Comic Lover Raghavan
Raghavan : அதாவது சார்...கம்பெனி இப்போதுள்ள நிலைமையில் கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பாவைக் கூட பரிசாகத் தரும் வாய்ப்பு இல்லை என்பதால் தற்காலிகமாய் போட்டி பரணுக்குப் பார்சல் ஆகிறது !
Deleteஹாஹா ....:):)
Delete:D
DeleteJokes apart, streamlined regular comics are 'prize' enough to cherish !
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஈரோடு விஜய் எங்கிருந்தாலும் இங்கு ஆஜராகவும்
Deleteமுன்பு சிறுவயதில் கோடைமலருக்காக புத்தக கடையில் தவம் இருப்போம்.இன்று 10 நாட்கள் தாமதம் .கோடை மலரும் இல்லை.இனிமேல் அரைத்த மாவை அரைப்பதில்(மறுபதிப்பு)கிலோ கணக்கில் மட்டும் போதும் சார்.டன் கணக்கில் வேண்டாம் சார்.
ReplyDeleteMadipakkam Venkateswaran : ஒரு பக்கம் இந்த மாவு மில் சிவனே என்று ஓடிக் கொண்டிருக்கட்டும் சார் ; தேவைப்படுவோர் மட்டும் தானே அதை வாங்கிக் கொள்ளப் போகிறார்கள் !
DeleteThis comment has been removed by the author.
DeleteYes l agree. Venkatesan I never had a opportunity to buy Comics then, for reader like me it is a வரபிரசாதம்
Deleteவாங்க ஸ்பைடர்.....ஸார்
ReplyDeleteஹை ..மந்திரியார் ...எங்க போனீங்க இவ்ளோ நாளா ...
Deleteஏன் லீவு போட்டீங்க ??
பார்வையோட சரி செல்வம் அபிராமி அவர்களே .............
Deleteவேலை பளு ...............
முடியல..............
காமிக்ஸ் கிளாசிக்ஸில் மறுபதிப்பு வராத கதைகள் வருவது மகிழ்ச்சியான செய்தி :) அவ்வாறான கதைகள் இருப்பின் அவற்றுக்கு முன்னுரிமை கொடுங்களேன்.
ReplyDeleteபுராதன நெடியடித்தாலும் இரும்புக் கை மாயாவியோ, நீரோவோ ஏனோ சலிப்பதில்லை :)
மார்செல்லோ மாஸ்ட்ரோயானியை தான் டையடித்து நீரோவாக்கினார்களா?
ஆமா இந்த Spider இன் அழகு முகம் யாருடைய inspiration ? :)
// ஆமா இந்த Spider இன் அழகு முகம் யாருடைய inspiration ? :) //
Deleteஹாஹா
@ FRIENDS : நம்மூரில் சில பல நடிகர்களின் முகவெட்டுக்கள் நம்மாளுக்கு ஒத்துப்போக வாய்ப்புண்டு ...யூகித்துப் பாருங்களேன்..!
Delete81 வது
ReplyDeleteஎனக்கு அட்டை படங்கள் பிடித்துள்ளன. புதியதொரு படைப்பரளிகள் குழுவோடு கைகோர்ப்பதில் வெற்றி பெற்ற உங்களுக்கு என் மனம் கனிந்த வரழ்த்துக்கள் ஸர்ர். எம்பொருட்டுதரனே இந்த முயற்சி. ஏதோ நரனே வெற்றி பெற்றது போல் மகிழ்ச்சியரக உள்ளது. இப்போது ஓசைபடரமல் கல் எறியும் முயற்சி கூடவும் கட்டரயம் வெற்றி பெற கடவுளை நரன் வேண்டுகின்றேன். உங்களின் அந்த முயற்சியும் வெற்றி பெறும் பர்ருங்களேன் .
ReplyDeleteThiruchelvam Prapananth : நன்றிகள் சார் !
Deleteஅனைவருக்கும் வணக்கம். அட்டைப்படங்கள் அருமை. புதிய கதை தொடர்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ReplyDeleteமலைக்கோட்டை மர்மம் கதையின் பின்னட்டையிலுள்ள பெண் படத்தை ஏற்கனவே நமது காமிக்ஸ் அட்டையில் பயன்படுத்திருப்பதாக நினைவு. நண்பர்கள் யாருக்கேனும் ஞாபகம் வருகிறதா?
ReplyDeleteஆங்! இதோ கிடைத்துவிட்டது!! http://i37.tinypic.com/et8ml4.jpg
Deleteஇன்றைய பதிவு எங்கே?????
ReplyDeleteஎடிட்டர் சார் புத்தகங்களின் இருப்பு அதிகமாகி கொன்டே போகுது அதனால்
ReplyDeleteஇதழ்களை குறைத்து குண்டு புக் வெளியிடுங்கள்
+11111
DeleteAnandappane Mariappan : மொத்தத்துக்கு இதழ்களின் எண்ணிக்கையைக் குறைக்கச் சொல்லியிருந்தால் அது வேறு விஷயம்...! ஆனால் நிறைய சாதா இதழ்களுக்கும், அவற்றை ஒன்றிணைத்துப் போடும் சில பல குண்டு இதழ்களுக்கும் என்ன வேறுபாடு இருந்திடப் போகிறதென்று எனக்குப் புரியவில்லையே..!
Deleteபணம் தான் வேறுபாடு 60 ருபாய் இதழில் 20 ₹ கிடைக்கும் 500₹ இதழில் ₹200 லாபம் மற்றும் குண்டு புக் ஸ்டாக் 1 கூட இல்லை
Deleteஆகவே ...........எனது ஓட்டு குண்டுக்கே லாபம் நஷ்டம் நிங்க பார்க்க மாட்டிங்க ஆனலும்.......எங்களுக்கு காமிக்ஸ் முக்கியம்
Good post
ReplyDeleteஈரோடு விஜய் சென்னை சுற்றுப்பயணத்தில் குடும்பத்துடன் சென்றிருப்பதால் இப்போதைக்கு பங்கேற்க மாட்டார் என்று தோண்றுகிறது.ஆனாலும் ஆசிரியரின் பதிவை படித்திருப்பார்.
ReplyDeleteபூனையின் பயணங்கள்...!
DeleteGood morning Editor sir,
ReplyDeleteExpected more details about cartoon special, release date, price, selection of stories.
<ahesh : திட்டமிடல் பூர்த்தியடையும் வேளை விபரங்கள் தொடர்ந்திடும்..!
Deleteஇந்த சனி பதிவு சுறுசுறுப்பு இல்லாமலிருக்கே
ReplyDeleteசேகர்ஜீ போன பதிவு மாதிரி சுறுசுறுப்பா வர வச்சுறலாமா :):)
Deleteஆ மே ! :D :P
Deleteஆசிரியர் சார் ..நண்பருக்கு இந்த பதிவு சுறுசுறுப்பாக இல்லையாம் ..மதியம் புது பதிவோடு வாருங்கள் சார் ...:)
ReplyDeleteகாலையில் எழுந்ததும் ஞாயிறு வந்தாலே தூக்கம்தான் நினைவில் வரும்
Deleteஇப்பொழுதெல்லாம் எடி சாரின் பதிவுதான் நினைவிற்க்கு வருகிறது
ஆனால் இன்றைய பதிவு என்னை உறக்கத்தில் ஆழ்த்துவது போல் தெரிகிறது
வேண்டும் புதிய பதிவு
ஜில் ஜோர்டானை அடிச்சு துவைத்ததால் நெடு நாட்களாக வரவில்லை. அதனால் அவர் மேல் ஒரு பரிதாபம் மற்றும் எதிர்பார்புகள் குறைவு என்பதால் வரும் கதை நல் வரவேற்ப்பு பெறும் என நினைக்கிறேன்.
ReplyDeleteஎனக்கு இவர் பிடித்தமானவர்.
துப்பறியும் கதைகள் வருவது கம்மி என்பதால் ஜெரோம் கலரில் கவருவார் என நினைக்கிறேன்.
எடி மனது வைக்க வேண்டும்.
ஸ்பைடர் அட்டை படம் டாப்.
கடவுளே ஜில் ஜோர்டான் பெயரை கேட்டாலே பயமாக இருக்கிறது.
Deleteடெக்சிடம் மாட்டிய எதிரிகள் நிலை, ஜில் ஜோர்டான் புத்தகத்தை கையில் எடுத்தால் எனக்கு ஏற்படுகிறது.
Gil Jordan +1
DeleteGerome in Color + 1
113th
ReplyDeleteREG: MM
ReplyDeleteமுதலில் ஒரு காவிய படைப்பை தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு அற்புத தொகுப்பாய் தந்த
உங்களின் குழுவினருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
மின்னல் வேக heroism மட்டுமே கதை இல்லை, ஹீரோவை அடிக்காத வில்லன்கள் இல்லை ,பார்க்காத சிறை கொடுமை இல்லை, ஓடாத ஓட்டம் இல்லை, நம்பியவலை இவன் காதலிக்கவில்லை , இவன் காதலித்தவல் இவன் கூட இல்லை. இத்தனை இல்லை ஆனால் நம்பிக்கை, நேர்மை, பொறுமை, வீரம் அளவுக்கு அதிகமாகவே உண்டு!.
Tiger என்ற ஒரு கதாபாத்திரம் என்மனதில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது.ஒரு சராசரி ஹீரோவிலிருந்து டைகர் மிகவும் மாறுபட்டு தெரிகிறார்,டைகரின் இந்தபயணம் பல படிப்பினையை மனதில் விட்டு சென்றிருகிறது. தலைமேல் கொலைமுயற்சி, தேசத்ரோகம், பின்தொடரும் bounty hunters என பல ஆபத்துகள் விரட்ட இவர் செவிந்திய குழுவிற்கு உதவமுனைவது twist இங்கு. சார்லியர்(கதாசிரியர்) சொல்லாமல் பலவற்றையும் சொல்கிறார். டைகர் போடும் கத்திமேல் நடை நமையும் பரபரப்பாகவே இறுதி அத்யாயம் வரை வைக்கிறது.
வெற்றி மாட்டும் வாழ்வாக பார்க்கப்படும் இந்த சூழலில் பயணமும் அதன் சுவைகளையும் புரிய வைக்கிறார் டைகர். வாழ்வு வெற்றி என்ற புள்ளி மட்டும் இல்லை அதன் இடையே ஆனா கோடுகள் என்பதை புரிய செய்கிறது கதை.
புத்தகம் decadeகளை கடந்து வந்ததை சித்திரதின் மாற்றங்கள் சாட்சி சொல்கின்றன கொளுத்தும் வெயிலில் பழுத்த முகத்தையும் வானத்தையும் அடர் மஞ்சள் நிறத்தில் (ப க :35) காட்டுவது 1973இன் ஸ்டைல் என்றால்
கழுகு சண்டை(ப க :271)யில் கழுகு டைகரின் கையை பிடிக்கும் கட்சி 1980இன் ஸ்டைல் அறிசோனா loveஇல் வரும் சித்திரங்கள் தோப்பின் நிழலை முகத்தில் காட்டுவது contemporary ஸ்டைல் என Gaston Giraud(பட ஆசிரியர் ), mesmerism செய்கிறார்.
நான் டைகரின் விசிறி என்றபோதிலும் மின்னும் மரணத்தின் சில கதைகளை அங்கும் இங்குமாகதான் படித்த நியாபகம். பொதுவாக பெரிய புத்தகத்தை எடுப்பதும் பாதி புத்தகத்தில் இதை எப்போது முடிபோம் என்ற எண்ணம் மேலோங்க நாக்கை விரித்து முடிடா! முடிடா! என்ற motivation உடன் முடிப்பதும் எந்தன் சமீபத்திய நடைமுறை!
ஆனால் இந்த தொகுப்பு ஆரம்பித்ததிலிருந்து புத்தகத்துடன் என்னை கட்டிபோட்டது தான் உண்மை! எந்தன் கடந்த வார சில இரவுகளை முழுமையாக தனதாக்கிய இதழ். என்னை ஒரு மேற்குலக சுற்றுலா கூட்டி சென்று வந்திருகிறது.
இந்த தொகுப்பு world's best ever western comics பட்டியலில் 10வது இடம் பெற்றிருப்பது அந்த பட்டியலுக்கு பெருமை சேர்கவே என்றே தோன்றுகிறது . இந்த தொகுப்பை சீரான qualityஇல் வெளியிட்ட உங்களுக்கும் முத்து லயன் குழுமத்திற்கு எந்தன் நன்றி !
//////// சதீஸ்குமார் ////////
Deleteரொம்ப ரொம்ப அழகான விமர்சனம். இந்த மாதிரி எழுத தெரியாமதான் நான் மின்னும் மரணத்தை பற்றி எந்த ஒரு விமர்சனமும் செய்யாமல் இருந்தேன்.
///////// ஆசிரியருக்கு /////////
இந்த தொகுப்பு world's best ever western comics பட்டியலில் 10வது இடம் பெற்றிருப்பது அந்த பட்டியலுக்கு பெருமை சேர்கவே என்றே தோன்றுகிறது .
இந்த பட்டியலில் உள்ள முதல் 9 இதழ்களை நமது காமிக்சிற்கு கொண்டு வர முயற்சிக்கலாமே.
என் முதல் காமிக்ஸ்- தமிழ் விமர்சனம் ! thanks Mugunthan!
Deletesathishkumar : எடிட்டர் ப்ளாகில் வெகுநாட்கள் கழித்து இப்படி ஒரு அழகான காமிக்ஸ் விமர்சனம் .
Delete//இத்தனை இல்லை ஆனால் நம்பிக்கை, நேர்மை, பொறுமை, வீரம் அளவுக்கு அதிகமாகவே உண்டு!.//
Delete+1
Nice Review
:)
Deletethanks Udaya, Bala sir....
அட்டகாசமான விமர்சனம்... மனதில் உள்ளதை அப்படியே பிலதிபலிக்கும் வார்த்தைகள்....
Deleteதங்க தலைவனை ஆராதிக்க காரணமே கதைகளில் இருக்கும் inspiration and motivation தான்...
:)
Deletethanks Rummi..!
//சமீபத்திய பதிவில் - புதியதொரு படைப்பாளிக் குழுமத்தோடு கைகோர்க்க முயன்று வருவதாய் பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம் ! அதனில் வெற்றி என்பதால் - 2016-ல் புதுத் தொடர்கள் / நாயகர்கள் நம் திசையில் உதிக்கவிருப்பது நிச்சயமாகி விட்டது ! //
ReplyDelete+1
//இப்போது ஓசையின்றி இன்னுமொரு கல்லை வீசிப் பார்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம் - ஒரு அழகான மாங்காய் கிட்டுகிறதா என்ற ஆசையோடு ! ஜெயம் கிட்டின் - மெகா சந்தோஷம் நிச்சயம் ! //
ஜெயம் உண்டாகட்டும் சார் !
//////////// சமீபத்திய பதிவில் - புதியதொரு படைப்பாளிக் குழுமத்தோடு கைகோர்க்க முயன்று வருவதாய் பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம் ! அதனில் வெற்றி என்பதால் - 2016-ல் புதுத் தொடர்கள் / நாயகர்கள் நம் திசையில் உதிக்கவிருப்பது நிச்சயமாகி விட்டது ! இப்போது ஓசையின்றி இன்னுமொரு கல்லை வீசிப் பார்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம் - ஒரு அழகான மாங்காய் கிட்டுகிறதா என்ற ஆசையோடு ! ஜெயம் கிட்டின் - மெகா சந்தோஷம் நிச்சயம் ! நமக்காக வேண்டிக் கொள்ளுங்களேன் guys ///////////////
ReplyDeleteமிகவும் சந்தோசமான விசயம். நம் ஊரில் இது மாம்பழ சீசன் என்பதால் அந்த அழகான மாங்காய் நிச்சயம் கிடைக்கும்.
ரெகுலர் சந்தா எப்போதும்போல் இருக்கட்டும். புது அறிமுகங்களை பவுன்சர்போல் சந்தா சி, சந்தா டி என்று கொண்டு வந்து விடுங்கள்.
புதிய படைப்பாளிகள்,கி.நா.மட்டும் இருந்துவிடக்கூடாது.கடவுளே!,கககடவுளே!!.
Delete@ ALL : மே மாதத்து இதழ்கள் இப்போது ஆன்லைன் விற்பனைக்கும் தயார் :
ReplyDeletehttp://lioncomics.in/monthly-packs…/12519-may-2015-pack.html
முகவரி சரியாக வரவில்லையெனில்...இங்கே'கிளிக்'
Deletehttp://lioncomics.in/monthly-packs-may-2015/12519-may-2015-pack.html
DeleteDear Editor Sir,
ReplyDeleteWaiting eagerly for Cartoon Special details.
In 2016 Schedule please give a chance for "Chatti Thalaiyan Archie" .
Sir...Sunday Post?
ReplyDeleteஇனிய காலை வணக்கங்கள் எடிட்டர் சார்!!!
ReplyDeleteஇனிய காலை வணக்கங்கள் நண்பர்களே!!!
அட நேற்றே பதிவு வந்திடுச்சா?!!!! ஓ.கே.
Sir..What is the record you mentioned for MM? Hope we are asking about this repeatedly. Will u reveal it?
ReplyDeleteDasu bala : more speech balloons in one single page ?!
DeleteYes. More image are lost, than any other books.
Delete//Vijayan10 May 2015 at 09:43:00 GMT+5:30
ReplyDelete@ FRIENDS : நம்மூரில் சில பல நடிகர்களின் முகவெட்டுக்கள் நம்மாளுக்கு ஒத்துப்போக வாய்ப்புண்டு ...யூகித்துப் பாருங்களேன்..! //
பின் அட்டை: 'முத்து' ரஜினி
முன் அட்டை: 'வில்லன்' அஜித்....
ஹி..ஹி...கரெக்டா எடிட்டர் சார் :-)
கூரியர் வந்திடுச்சேய்.!
ReplyDelete130 பக்க மறுபதிப்புகளும் , 210 பக்க மார்ட்டின் புக்கும் ஒரே கணமாக தெரிகின்றன.
விண்ணில் ஒரு வேங்கை மட்டும் நோஞ்சானாய் தெரிகிறது.
முதலில் எதை படிப்பது.???
இங்கி பிங்கி பாங்கி.…………
@KiD ஆர்டின் KannaN:
Delete//கூரியர் வந்திடுச்சேய்.!//
Njoyyyyyyyyyyyyy...:-):-):-)
//முதலில் எதை படிப்பது.???//
Deleteபாங்கி யை.....?
எப்படிங்க உங்களுக்கு மட்டும் ஞாயிற்று கிழமை எல்லாம் காமிக்ஸ் கிடைக்கிறது.?
Delete@Dasu bala:
ReplyDelete//Sir..What is the record you mentioned for MM? Hope we are asking about this repeatedly. Will u reveal it?//
'மின்னும் மரணம்' புத்தகத்தில் ஒரே பக்கத்தில் கிட்டத்திட்ட '43 பலூன்' வசனங்கள் இடம்பெற்றிருந்ததைத் தான் எடிட்டர் 'மின்னும் மரணத்தின்' ரெக்கார்ட் என்று குறிப்பிட்டிருந்தார் என்று நினைக்கிறேன்...
வேறேதுனும் ரெக்கார்ட் என்றால் 'திரு.ஓட்டைவாய் உலகநாதன்' அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் ப்ளீஸ்... :-)
மி.ம ரெக்கார்டு பதில்,அதிக விமர்சம் எழம் பதிலாக இருக்கக்கூடும் என்று நினைக்கின்றேன்.எனவே எடிட்டர்,பெவிக்கால் பெரியசாமியாக உள்ளார்.
Delete//"விடுதலையே உன் விலை என்ன ?" ரூபத்தில் ! அழுகாச்சிக் காவியமாக இல்லாது - இதுவொரு ருசிகரமான ஆக்ஷன் கதையாகவே இருந்திடும் - சைபீரியப் பனிமண்டலத்தைப் பின்னணியாகக் கொண்டு ! இதுவரையில் எங்கெங்கோ பயணித்துள்ள நமது காமிக்ஸ் ரயில் சைபீரியா திசையில் பிரயாணம் மேற்கொண்டுள்ளதா என்பது எனக்கு நினைவில் இல்லை - இருப்பின் இங்கே சொல்லிடலாமே ?//
ReplyDeleteமாயாவி சார் உங்கள் இங்க கிளிக் பதிலுகாக waiting !
ReplyDeletesome cartoon comics suggestions:
1. Spirou and Fantasio,
http://www.cinebook.co.uk/advanced_search_result.php?keywords=Spirou+and+Fantasio&search_in_description=1&osCsid=6c4f55217b638e137d8b0212b7998d25
2. The Rugger Boys
http://www.comicvine.com/the-rugger-boys/4050-58324/
3.Yakari
http://en.wikipedia.org/wiki/Yakari
http://www.comicvine.com/yakari/4050-52335/
4.Boule et Bill(billy & buddy)
http://en.wikipedia.org/wiki/Boule_et_Bill
5.Wind in the Willows
http://www.comicvine.com/wind-in-the-willows/4050-48153/
கார்ட்டூன் ஸ்பெஷல் இக்கான வயது range-ai ஆசிரியர் தீர்மானித்து அதற்கு ஏற்ற கதைகளை தீர்மானிப்பது கார்ட்டூன் என்ற வார்த்தைக்கு நியாயம் சேர்க்கும் என்பது எ.க . ஆசிரியரின் தேர்வுகள் நிச்சயம் better ஆகா இருக்கும் என்று நம்புகிறேன் . கதை தேர்வுகளை அறிய அவா ...!
DeleteCinebook Spooks எனும் தொடருக்கு, புது trailer வெளியிடிருகிரர்கள்
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=Qp7MLYtenI0&feature=youtu.be
maybe we may see it in tamil....?
மின்னும் மரணம் பற்றி முகுந்தன் சார் எந்த தகவலும் சொல்ல வில்லையே ..என இருந்தேன் ..உங்கள் அருமையான விமர்சனத்தின் மூலம் அவரையும் ...உங்கள் அழகான எழுத்தாற்றலையும் வெளிகொணர்ந்தமைக்கு பாராட்டுக்கள் சதிஷ் குமார் சார் ....
ReplyDelete:)
Deleteநன்றி தலீவரே,
blog மிகவும் slowஆகா போகிறதே நமது சங்க ஆட்கள் கோடை விடுமுறையோ இல்லை மல்யுத்ததாக்கமா ..?
Deleteப்ளாக் ஸ்லோவா போக 2காரணமாக நான் நினைக்கிறேன்
Delete1.எதிர்பாராத தாமதங்கள் -புத்தகங்கள் ஒரிருவர் தவிர யாருக்கும் கிடைக்கல.
2.கார்ட்டூன் ஸ்பெசல் பற்றி மேலதிக விவரங்கள் இல்லாமை.
மின்னும் மரணம் ஏற்கனவே படித்த போதும் ஒரே மூச்சில் முழு வண்ணத்தில் படிக்கும் போது மெய்மறந்து போகிறது.
ReplyDeleteபேர்ளை டைகர் கல்யாணம் செய்யாதது ஒரு வகையில் நல்ல விடயம்.இல்லை எனில் டெக்ஸ் மனைவி போல் தொடரும் தொடர்களில் கொன்றிருப்பார்கள்.
மனைவி,காதலி என பெண்கள் சகவாசம் கரடுமுரடான கௌ பாய் உலகுக்கு ஒத்து வராது என்று கதாசிரியர்கள் நினைகிறார்கள் போலும் :)
//டைகர் கல்யாணம் செய்யாதது ஒரு வகையில் நல்ல விடயம்.இல்லை எனில் டெக்ஸ் மனைவி போல் தொடரும் தொடர்களில் கொன்றிருப்பார்கள்.//
Deleteits another convenience for authors. keeping the hero alone, it give more space for them in future stories ...
ஜூன் வெளியீடுகள் கலக்குகின்றன. எனக்கு பிடித்துள்ளன.
ReplyDeleteEditor sir please try
ReplyDeleteJesslong
Jil Jordan
Jerome
ஹய்யா..எனக்கு புக்ஸ் வந்துடிச்சி...
ReplyDeleteப்ப்பா...மைவாசனை மூக்கை அடைச்சி,வயத்த பொரட்டுது...எப்படித்தான் இந்த நொடியிலேயே இருந்து வேலை செய்யுறிங்களோ...ஆண்டவா...மொத்த கம்பேனிக்கும் ஆரோக்கியத்தை அள்ளிவீருப்பா..முருகா..! ___/\___
ஆஹா எனக்கும் புத்தகங்கள் வந்து விட்டன
ReplyDeleteநேச்சுரல் பேப்பர் கலர் எனது 1975 ம் வருடத்திற்கே கொண்டுசென்று விட்டது
செய்யும் செயல்களில் முழு அர்பணிப்பு செலுத்துவதில் நமது எடிக்கு இணை அவரே தான்
நாளைக்கு வேலைக்கு செல்ல வேண்டுமே!!!!எப்படி படிப்பேன்?¿\|¢><¡][+_₹®^€£©~±×÷•°`´}}?/;:''!)(=-*&%$#@
ReplyDeleteஹய்யா!,கொரியர் கிடைத்து விட்டது.இன்று இரண்டு நல்ல செய்தி.மிக்க சந்தோஷம்.
Deleteஇப்பதான் இராட்சஸக் குள்ளன படிச்சு முடிச்சேன். என்னதான் எடிட்டர் லாஜிக்கெல்லாம் பாக்காதீங்கனு வார்ன் பண்ணிருந்தாலும் ஏழெட்டு பாலகிருஷ்னா படத்த மொத்தமா பாத்த எஃபெக்டு. :P அடுத்து மலைக்கோட்டைக்குள்ள போறேன் hope Johnny doesn't disappoint. :)
ReplyDeleteஅன்புள்ள எடிட்டர்,
ReplyDeleteபுதிய ரகக் காகிதம் சூப்பர் ...
மார்ட்டின் புத்தக அட்டைfinishing different, நன்றாக உள்ளது .. Matte Finish?
மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன்.. தல ஸ்பைடர் அட்டைப்படங்கள் அட்டகாசம்
மின்னும் மரணம் என்னும் ஒரு அற்புதமான சாகசத்தை இன்று மதியம் படித்து முடித்தாயிற்று.
ReplyDeleteமுதலில் இப்படி ஒரு படைப்பை தந்தமைக்கு உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.
புத்தகம் வந்த முதல் நாள் முழுக்க தடவி பார்க்க மட்டுமே சென்றது,இரண்டாம் நாள் இதர விசயங்களை படித்தேன்.மூன்றாம் நாள் முதல் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.
பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் மட்டுமே ஆங்காங்கே தட்டுப்படும் சிறு பிழைகள்,மற்றபடி ஒரு நல்ல கமர்ஷியல் + யதார்த்தம் நிறைந்த மாஸ் மசாலா, ஒரு ஆகச்சிறந்த வாசிப்பு மற்றும் மறக்க முடியாத பயண அனுபவத்தை மின்னும் மரணம் கொடுத்தது.
இவ்வாண்டில் நமது காமிக்ஸின் அரிய,அற்புதமான படைப்பு இது என்று சொன்னால் அது மிகையல்ல.அட்டை டு அட்டை வடிமைப்பு அருமையாக இருந்தது,வசனங்கள் நிறைய இடங்களில் படங்களை மறைப்பது சற்றே உறுத்தலாக உள்ளது,ஆனாலும் முடிந்தவரை அதை சரி செய்ய மெனக்கெட்டு உள்ளது தெரிகிறது,வசனங்களே இக்கதையின் ஆத்ம பலம் என்னும்போது நீங்களும்தான் என்ன செய்ய முடியும்.
கதைக்கான வர்ணச்சேர்க்கைகள் பிரமாதம்,மொழிபெயர்ப்பு உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு கட்டியம் கூறுகின்றன.பலமுறை, பலரும் ஒவ்வொரு புத்தகம் வரும்பொழுதும் இது விலை அதிகம் ,அது சரியில்லை,இது சரியில்லை என்று கூறுவதுண்டு.ஆனால் மின்னும் மரணத்தை பொறுத்த வரை எந்த குறையைக் கூறுவதும் என்னைப்பொறுத்தவரை அர்த்தமற்றது,மின்னும் மரணம் ஆயிரம் விலை என்பது உங்கள் அணியின் உழைப்பிற்கும்,உங்களின் திறமைக்கும் முழு நியாயம் செய்கிறது.இந்த விலைக்கு, இந்த தரத்தில் வேறு பதிப்பகத்தில் இப்படி ஒரு படைப்பு சாத்தியம் என்று எனக்கு தோன்றவில்லை.மீண்டும் சொல்கிறேன் மின்னும் மரணம் ஒரு நம்ப முடியாத நல்ல படைப்பு,இந்த இதழ் என்னிடம் உள்ளது என்னை பெருமை கொள்ள செய்கிறது.
நல்லதொரு படைப்பை கொடுத்ததற்கு உங்களுக்கு மீண்டும் ஒரு ராயல் சல்யூட்.
ரவி ...க்ளாப் ...க்ளாப் ...
Deleteஅருமையான தீர்ப்பு ...
(மல்லூரின் குமாரசாமி என உங்களை. அழைக்கலாமா ?..;-) ]
//வசனங்கள் நிறைய இடங்களில் படங்களை மறைப்பது சற்றே உறுத்தலாக உள்ளது,ஆனாலும் முடிந்தவரை அதை சரி செய்ய மெனக்கெட்டு உள்ளது தெரிகிறது,வசனங்களே இக்கதையின் ஆத்ம பலம் என்னும்போது நீங்களும்தான் என்ன செய்ய முடியும்.//
Delete:)
//கதைக்கான வர்ணச்சேர்க்கைகள் பிரமாதம்,மொழிபெயர்ப்பு உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு கட்டியம் கூறுகின்றன.//
+1
i love to see the coloring quality of MM as base for all future issues!
//இந்த தரத்தில் வேறு பதிப்பகத்தில் இப்படி ஒரு படைப்பு சாத்தியம் என்று எனக்கு தோன்றவில்லை.மீண்டும் சொல்கிறேன் மின்னும் மரணம் ஒரு நம்ப முடியாத நல்ல படைப்பு,இந்த இதழ் என்னிடம் உள்ளது என்னை பெருமை கொள்ள செய்கிறது.//
+1
me too share your feeling friend
ரவி ரசித்து ,ருசித்து படித்துள்ளீர்கள். அருமையான விமர்சனம் .....சூப்பர் ...
DeleteArivarasu @ Ravi : இங்கும் சரி, மின்னஞ்சல்கள் வாயிலாகவும் சரி - மின்னும் மரணம் இதழுக்குக் கிட்டியுள்ள அன்பான பாராட்டுக்கள் ரொம்பவே நிறைவைத் தருகின்றன ! படித்த கதை தான் எனினும், அதனை மீண்டுமொருமுறை புதுப் பொலிவில் காணும் போது உங்களிடையே நேர்ந்திடும் அந்த உற்சாகத் துள்ளல் எங்கள் பணிகளின் சிரமங்களை மறக்கச் செய்துள்ளன ! A great big thanks folks !!
Deleteமின்னும் கனவு ;
ReplyDeleteஒரு வருடத்திற்கு முன் தினம் இரவு தூங்கும் முன் நமது பழைய காமிக்ஸ் இதழ்கள் முக்கியமாய் டெக்ஸ் அல்லது கார்ட்டூன் இதழ்களை தினமும் படித்து விட்டு தூங்குவது வாடிக்கை ..இப்பொழுது எல்லாம் பணி சுமையால் மறு வாசிப்பு குறைந்து விட்டது ..புது இதழ்கள் மட்டுமே வாசிப்பு இரவில் ...வழக்கம் போல போன ஞாயிறு மின்னும் மரணம் படிக்க ஆரம்பித்தேன் ..பழைய பாகங்கள் ஏற்கனவே இரண்டு முறை முழுதாக படித்து இருந்தது தான் ..ஆனாலும் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தேன் ..ஒரே மூச்சில் முடித்து விட்டேன் என சொல்ல மாட்டேன் ..தினம் இரவு இரண்டு பாகம் ..அல்லது ஒரு பாகமாவது படித்து இன்று தான் முழுவதுமாக படித்து முடித்தேன் ..வார்த்தையே இல்லை சார் ..பல மாதங்கள் கழித்து நானும் கனவில் குதிரையில் பயணம் ...இந்த ஒரு வாரமும் கெளபாய் உலகில் மறக்கவே முடியாத பயணத்தை அளித்து விட்டீர்கள் ..இதற்கு முன்னர் தனித்தனியாக படிக்கும் பொழுது செவ்விந்தியர் பாகம் கொஞ்சம் புரிபடாத ஒன்றாகவும் ..இந்த கதைக்கு இதை தேவையே இல்லாத பாகமாக போட்டு இழுத்து கொண்டு போவதாகவும் ஒரு எண்ணம் வந்தது உண்மை ...ஆனால் இப்போது ஒரு கோர்வையாக தொடர்ந்து படித்த பொழுது மிக சிறப்பாக படைக்க பட்டு இருந்ததை உணர முடிந்தது ..அட்டகாசமான படைப்பு ..கடைசி பாகம் முடிந்த பொழுது இந்த பாகம் படைக்காமலே இருந்திருந்தால் முன் பாகத்துடன் டைகர் மகிழ்ச்சி உடன் கிளம்பியது போல நானும் சந்தோசத்துடன் கிளம்பி இருப்பேன் ..ஆனால் இரத்த படலம் போல ஒரு மென் சோகத்துடன் கதை முடிந்தது டைகரை போலவே ஒரு இறுக்கத்தை நமக்குள்ளும் டைகர் உண்டு பண்ணியது நிஜம் ...
இந்த ஒரு வார காலமும் அருமையான பயணம் ...மேலே நண்பர் ரவி சொன்னது போல இரண்டு ..மூன்று இடங்களில் மட்டும் சில எழுத்து பிழைகள் காணப்பட்டதை தவிர வேறு எந்தவித குறைகளும் இல்லாத படைப்பாக ....சித்திர தரம் ..அச்சு தரம் ...மொழி பெயர்ப்பு எதிலுமே குறை சொல்ல முடியாத அளவிற்கு படைத்த உங்கள் குழுவினர்களுக்கு மீண்டும் காமிக்ஸ் ரசிகர்கள் சார்பாக மாபெரும் பாராட்டுக்கள் சார் ...
ஆயிரம் ரூபாயில் "மின்னும் புதையலை " அளித்துள்ளீர்கள் என்பது மாபெரும் உண்மை ....நன்றி ...நன்றி .....
//பல மாதங்கள் கழித்து நானும் கனவில் குதிரையில் பயணம் ...இந்த ஒரு வாரமும் கெளபாய் உலகில் மறக்கவே முடியாத பயணத்தை அளித்து விட்டீர்கள் ..
Deleteஆனால் இப்போது ஒரு கோர்வையாக தொடர்ந்து படித்த பொழுது மிக சிறப்பாக படைக்க பட்டு இருந்ததை உணர முடிந்தது ..
இந்த ஒரு வார காலமும் அருமையான பயணம் ...
//
+1
தலீவரே கலக்கிடீங்க.... hats off.
//இரண்டு ..மூன்று இடங்களில் மட்டும் சில எழுத்து பிழைகள் காணப்பட்டதை தவிர வேறு எந்தவித குறைகளும் இல்லாத படைப்பாக .//
Delete+ஒரு இடத்தில small empty பலூன் மட்டும் இருந்தது .....
தலீவரே நல்லா விமர்சனம் செய்துள்ளீர்கள் , நன்று ஓகே.
Deleteஆனால் டைகர் தான் அந்த சில்க் கூட ஓரிரவு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு என்ஜாய் பன்னிட்டு கழட்டி விடராரு . பிறகெங்கே சேட் எண்ட் , சரியான எண்ட் தானே ?????கெளபாய் ஸ்னாவே ஏமாற்றம் தானே , அட்லீஸ்ட் இவர் ஒரு நாள் மாப்பிள்ளை யாக இருந்தாரேஏஏஏஏஏஏ!!!!!
""ஒரிரவு ஆட்டம் பாட்டம் என்ஜாய் பன்னிட்டு கழண்டுக்கிட்டார்"" டெக்ஸ் வில்லருக்கு இருக்கும் தீவிர மகளிர் வாசகர் வட்டம் ஏன் டைகருக்கு இல்லை இப்போது புரிகிறது.
DeleteThis comment has been removed by the author.
Deleteஇந்த மாத இதழ்கள் நான்கும் இப்பொழுது கைகளில் ....ஜானி நீரோ அட்டை படம் மட்டும் சுமாராக இருப்பது போல ஒரு தோற்றம் ..ஆனால் மற்ற மூன்றுமே அட்டையில் அசத்தி விட்டது ...அதுவும் ஸ்பைடர் அட்டைபடம் செம கலக்கல் ...அது போலவே மார்ட்டின் அட்டைப்படம் ...
ReplyDeleteமறுபதிப்பு புத்தகங்களின் தாள்கள் ..சொல்லவே தேவை இல்லை சார் ..அவ்வளவு அசத்தல் ..பழைய முத்து காமிக்ஸ் முதல் பிரதிகளின் அளவிலும் ..தரத்திலும் அப்படியே ஒத்து போவதால் அந்த பழைய பொக்கிஷ இதழ்களே புத்தம் புதிதாய் மீண்டும் கைகளில் புழங்குவது போல மனதில் மகிழ்ச்சி ...மறுபதிப்பு இதழ்களை பொறுத்த வரை இனி இந்த தாள்களையே பயன்படுத்துங்கள் சார் ..அதிலும் குண்டன் பில்லி ..பரட்டை தலை ராஜா ..இயற்கையின் பாதையில் என பில்லர் பேஜ் பக்கங்கள் ஒரிஜினல் இதழ்களை நினைவு படுத்துகின்றன ...
ராட்சஸ குள்ளன் இன்னமும் படிக்காத கதை எனும் போது மனது துள்ளுகிறது ...மேலும் இரண்டுமே காமிக்ஸ் க்ளாசிக் இதழில் வராதவை எனும் போது இந்த மாதம் நான்கு இதழ்களுமே மனதை நிறைவு செய்கிறது ..
பேக்கிங் முறையிலும் புத்தங்களை மடங்காமல் இருக்க உருளை யுடன் வந்து புத்தகங்களை எந்தவித குறையும் இல்லாமல் வர வைத்ததிற்கும் பாராட்டுக்கள் சார் ..
Paranitharan K : //மறுபதிப்பு இதழ்களை பொறுத்த வரை இனி இந்த தாள்களையே பயன்படுத்துங்கள் //
Delete:-)
நான்கு புத்தகங்களும் அட்டை படம் அருமை.ஜானி,ஸ்பைடர் மஞ்சள் நிற பேப்பர் சூப்பர்.
ReplyDeleteநான்கு புத்தகங்களும் வந்து கிடைத்தன சார் . கச்சிதமான பேக்கிங் அலங்காமல் வந்தன . 2மறுபதிப்பு களும் பழைய இதழ்கள் இல்லையே என்ற ஏக்கத்தை ஓரளவு போக்க வகை செய்கின்றன சார் . ஒரு ஸ்பெஷல் நன்றி சார் . இனி மறுபதிப்புகளை இவ்வாறே தொடருங்கள் சார் . ஸ்பைடர் அட்டைப்படம் என்னைப்பொறுத்து டாப் சார். படித்து விட்டு விமர்சனங்கள் போடுகிறேன் சார் .
ReplyDeleteஇன்னும் கார்டூன் ஸ்பெசல் கதைகள் இறுதி செய்யவில்லையா சார் ??????
வி.ஒ.வே.சித்திரங்கள் அட்டாகசம்.அதிலும் அட்டை படம் சிறுவர்களை வெகுவாக கவந்துள்ளது.எனது 9 வயது பையன் ,டி.வி யை விட்டுவிட்டு கதை கேட்டு நச்சரிக்கின்றான்.ம.ம .மா.கதைகள் பார்த்தாலே குமட்டுகிறது.(எல்.எம்.எஸில் வந்த கதை மட்டும் விதிவிலக்கு)எடிட்டருக்கு எல்லா விதமான ரசனை உள்ள வாசகர்களையும் திருப்தி படுத்தும் கடமை உள்ளது.ம.ம.மா கதைகளை பிடிக்காவிட்டாலும் கதை ஆசிரியரின் பண்பு பிடிக்கும் எனவே "நோ கமெண்ட்ஸ்".
ReplyDeleteMadipakkam Venkateswaran : அட..கேஸ் கட்டுக்களைப் படிப்பதை விடவா சார் - மார்ட்டின் கதைகள் வறட்சியாய் இருந்திடப் போகின்றன ? அட்டைப்படத்தில் உள்ள அந்தப் பூச்சியையும் உங்கள் பையனிடம் காட்டிப் பாருங்கள் - அந்தக் கதையையும் கூட படித்துச் சொல்ல அவன் கேட்கக் கூடும் !
Deleteவிண்ணில் ஒரு வேங்கை அட்டகாசமான சித்திரங்கள். போர்க்களத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு, இருந்தாலும் திருப்பங்கள் இல்லாத நேரான கதை சற்று போர் அடிக்கிறது. வானமே எங்கள் வீதி அளவுக்கு சொல்ல முடியாது. எனது பார்வையில் 3/5
ReplyDeletesaravanan srinivasan : இடியாப்பங்களாய்ப் பார்த்துப் பார்த்து - நேர்கோட்டிலான கதைகள் இப்போது விசேஷமாய்த் தெரியாது போவது கூட நம் ரசனை மாற்றங்களின் ஒரு சின்ன எடுத்துக்காட்டோ ? :-)
Deleteதொடரும் பாகங்களில் விறுவிறுப்பு தொக்களாய் உள்ளது - so no worries !!
Natural Shadeல் வந்த மறுபதிப்புகள் அருமை. விண்ணில் ஒரு வேங்கை First look ல் சித்திரங்கள் அபாரம். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை. மின்னும் மரணம் 3 அத்தியாயங்களும் கடைசி அத்தியாத்தையும் இப்போதுதான் முதன் முறையாக படித்தேன். முழுமையாக படித்து முடித்துவிட்டேன். 1000 ருபாய் செலவில் Wild westல் ஒரு பார்வையாளனாக வாழ்ந்தேன்.இந்த அனுபவத்தை வழங்கிய படைபாளிகளுகும், தமிழில் இந்த முயற்சி வெளிவர காரணமாகிய எடிட்டர் அர்களுகும் மிக்க நன்றி சார்
ReplyDeletesenthilwest2000@ Karumandabam Senthil : //விண்ணில் ஒரு வேங்கை First look ல் சித்திரங்கள் அபாரம். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை//
Deleteபடித்து விட்டுச் சொல்லுங்களேன்..!
நான்கு புத்தகங்களும் வந்து கிடைத்தன சார் . கச்சிதமான பேக்கிங் அலங்காமல் வந்தன . 2மறுபதிப்பு களும் பழைய இதழ்கள் இல்லையே என்ற ஏக்கத்தை ஓரளவு போக்க வகை செய்கின்றன சார் . ஒரு ஸ்பெஷல் நன்றி சார் . இனி மறுபதிப்புகளை இவ்வாறே தொடருங்கள் சார் . ஸ்பைடர் அட்டைப்படம் என்னைப்பொறுத்து டாப் சார். படித்து விட்டு விமர்சனங்கள் போடுகிறேன் சார் .
ReplyDeleteஇன்னும் கார்டூன் ஸ்பெசல் கதைகள் இறுதி செய்யவில்லையா சார் ??????
சேலம் Tex விஜயராகவன் : கூப்பிடு தொலைவில் காத்திருக்கும் டெக்சின் மெகா-வர்ண இதழின் பணிகள் ; பௌன்சரின் இறுதி அத்தியாயங்கள் என முரட்டு சிகரங்கள் பாதையில் நிற்கின்றன ..! அதைத் தாண்டுவதிலும் நாம் கவனம் செலுத்தியாக வேண்டுமல்லவா ?
Deleteகார்டூன் ஸ்பெஷல் பூர்வாங்கப் பணிகள் ஓசையின்றி நடந்து வருகின்றன...சரியான சமயம் விபரங்கள் வெளிவந்திடும் ! அது வரைக்கும் பொறுமை ப்ளீஸ் !
எவ்வளவு விலையில் வரும் என தெரிந்து கொள்ளலாமா சார் :))
Delete.
க.கு தவிர மற்ற கதைகள் சூப்பர்.க.கு கதையை பின்னர் பொறுமையாக படிக்க வேண்டும்.இந்த இதழின் வெளியீடு எண் என்ன?
ReplyDeleteவிஜயன் சார்
ReplyDeleteஇராட்சசக் குள்ளன் வெளியீடு எண் 249 அல்லவா
246 என வந்திருக்கிறது
நன்றி :))
.