Powered By Blogger

Sunday, May 24, 2015

ஒரு "ஜொய்ங்" படலம் ...!

நண்பர்களே,
     
வணக்கம்! எல்லாப் பணிகளிலும் போலவே எங்களது  வேலைகளிலும் சில good days இருப்பதுண்டு ; பல not so good days-ம் இருப்பதுண்டு! மொழிபெயர்ப்பில் முதல் நாள் காலை கிட்டிடும் flow மறுநாள் காணாமல் போய் கடுப்பேற்றுவது சகஜம் ; டைப்செட்டிங்கில் ‘குண்டக்க மண்டக்க வேலைகள் நடைபெறும் நாட்களும் இருக்கத் தான் செய்யும்; சிகப்பு மையில் அங்கே இங்கே மொக்கையாய் பிழைதிருத்தங்களைக் குறி்த்து அனுப்பியும், அடுத்த பிரதியினில் அதே தவறுகள் தொடர்வதைப் பார்க்கும் போது ‘ஜிவ்வென்று உஷ்ணமானி உயர்வது நடைமுறை தான் ; பேப்பர் ஸ்டோர்களில் அந்தந்த மாதத்துக் காகிதங்களை வாங்கிட முயற்சிக்கும் போது பணம் புரட்டும் அத்தியாயங்கள் என் முகத்தை பெருந்தலைவர் ஸ்பைடரின் வதனத்தை விடவும் அழகாய் மாற்றிடுவது மாதாந்திர நிகழ்வே ; அச்சின் போது அடிக்க நேரிடும் அந்தர் பல்டிகள் இப்போதெல்லாம் பழகியே போச்சு ; அட்டைப்பட டிசைன்களுக்காக பொன்னனை துரத்தோ துரத்தென்று துரத்தி ஏகப்பட்ட ஜோடிச் செருப்புகளை தேய விட்டிருக்கிறோம் தான் ; கடனுக்குப் பிரதிகளை விற்று விட்டு கஷாயம் குடித்த குரங்குகள் போல வசூலுக்கு நடைபழகுவதும் நடைமுறையே...! ஆனால்- இவை அனைத்தையும் மறக்கச் செய்யும் ஆற்றல் மூன்றே விஷயங்களுக்கு உண்டு என்பது தான் saving grace

இதழ்கள் தயாராகிய பின்னே – அவை மொக்கைக் கதைகளாக இருந்தாலும் சரி – சூப்பர் ஹிட் ரகமாயிருந்தாலும் சரி; அவற்றைக் கையில் வைத்து இப்படியும், அப்படியும் மேலோட்டாய் புரட்டி அழகு பார்ப்பது முதல் சந்தோஷத் தருணம்! ஆழமாய் அதை ஆராய்ந்தால் பிழைகளோ / குறைகளோ கண்ணில் பட்டுத் தொலைத்து – அந்த முதல் பார்வையின் ஆனந்தத்தைப் போட்டுத் தள்ளி விடுமோ என்ற பயம் அடிமனதில் ஆட்சி செய்ய – தூரத்தில் வைத்து ‘ச்சே ..சூப்பர் லே...? என்று எனக்கு நானே பொன்னாடை போர்த்திக் கொள்ளும் சிறுபிள்ளைத்தனம் இந்த 31 ஆண்டுகளிலும் காணாமல் போயிருக்கவில்லை...!
     
அப்புறமாய் இதழ்கள் உங்களைச் சென்றடையும் தருணங்களில் – அவை நிஜமாகவே உங்களை impress செய்திருக்கும் பட்சத்தில் உங்களது ஆர்வமான விமர்சனங்களை, சிலாகிப்புகளை ரசிப்பது சந்தோஷ வேளை 2. அதிலும் ஆங்காங்கே கொஞ்சம் கூடுதல் கவனம் தந்து வசனங்களில் ஏதாவது extra fittings பொருத்தியிருந்து அவையும் கவனிக்கப்படும் போது ஒரு மெலிதான ‘ஜிலீர்’ feeling வியாபிப்பதுண்டு! “ஓவர் பீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பி ! என்ற கதையாக இன்னொரு பக்கம் ‘டின் கட்டும் படலம் ஏதாகினும் ஒரு காரணத்தின் பொருட்டு துவங்கிடுவதும் உண்டென்பதால் சடுதியில் புமிக்குக் கால்கள் திரும்பி விடுவதுண்டு !
     
எல்லாவற்றிற்கும் மேலாக – சந்தோஷ வேளைகளின் icing என்று நான் கருதுவது இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் நதிமூலமாய்- ரிஷிமூலமாய் இருந்திடும் புதுக்கதைகளின் தேர்வுக் கணங்களையே! சீக்கிரமே அரும்பிய மீசை கொண்டிருப்பினும் - பச்சாவாக; 17 வயதே ஆனதொரு எடிட்டராக (!!) இந்தப் பணிகளைத் துவக்கிய நாட்களில் தான் இந்த சந்தோஷத்தின் முதல் "ருசிபார்ப்புப் படலம்" வாய்த்தது! ஜேம்ஸ் பாண்ட் கதைகளை வாங்க முயற்சித்து – அது நடவாமல் போன பின்னே மாடஸ்டியை உறுதி செய்த கையோடு முதல் கதையின் bromide prints பதிவுத் தபாலில் வந்து சேர்ந்த பொழுது அவற்றைக் கையில் வைத்துத் தடவி, ரசித்த நாட்களுக்கு 31 வயதாகி விட்ட போதிலும் அந்த எண்ணங்களின் பசுமை துளியும் குறையவில்லை என்னுள் ! இரண்டே மாதங்கள் ஓடியிருந்த நிலையில் - மாடஸ்டியின் முதலிரண்டு கதைகளும் செம மாத்து வாங்கியிருந்த நிலையில்... ‘ச்சீய்... இந்தப் புள்ளையின் கதைகளை வாங்கியிருக்கக் கூடாதோ? என்ற கடுப்போடு சுற்றித் திரிந்த என் கண்களில் தானைத் தலைவரும்; ஏற்நெற்றி நாயகரும்; நியுயார்க்கைத் திருட முயற்சித்தவருமான திருமிகு.ஸ்பைடரின் கதை தட்டுப்பட்ட பொழுது அந்த சந்தோஷப் புல்லரிப்பை திரும்பவும் உணர்ந்தேன்! எடுத்த எடுப்பிலேயே டாப் கியர் தான் என்று ஸ்பைடர் ஊர்ஜிதம் செய்தான பின்னே, அவசரம் அவசரமாய் டெல்லிக்கு எனது தாத்தாவோடு பயணம் மேற்கொண்டு அங்கிருந்த Fleetway ஏஜெண்டின் அலுவலகத்தில் கிடந்த ஸ்பைடர் கதைகளைப் பார்த்த போது- பூட்டிக் கிடக்கும் வீட்டுக்குள் திருடப் புகுந்த ‘நந்தா பட கருணாஸ் போல டான்ஸ் ஆடாத குறை தான்! “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!!“ என்று உள்ளம் உற்சாகத்தில் துள்ளியது - அந்தக் கதைக் குவியலைக் கண்டு! வாயெல்லாம் பல்லாக நான் நிற்பதைப் பார்த்து விட்டால் ஏஜெண்ட் விலையைக் கூட்டித் தொலைத்து விடுவாரோ என்ற முன்ஜாக்கிரதையையும் மீறி என் முத்துப்பற்கள் அங்கே காட்சிப் பொருட்களாகத் தான் இருந்தன!
     
தொடர்ந்த மாதங்களில் frankfurt புத்தக விழாவிற்குள் திருவிழாவில் தொலைந்த பிள்ளையாகச் சுற்றித் திரிந்த பொழுது ஒரு non-stop ‘ஜொய்ங் நிலையில் தான் அடியேன் பயணித்தேன் என்று சொல்லலாம்! ‘ஜென் நிலை பற்றிக் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு; அதென்ன ‘ஜொய்ங் நிலை என்ற கேள்வி எழுகிறதா? சதா காலமும் ‘ஜொய்ங் என்று ஆகாசத்தில் பறக்கும் உணர்வோடே சுற்றித் திரிந்தால் அது ‘ஜொய்ங் நிலையில்லாது வேறென்னவாக இருந்திட முடியும்? திரும்பிய பக்கமெல்லாம் அட்டகாசமான கதைகள் ; நாம் துளி கூட சுவாசித்திரா ஒரு அகன்ற உலகம்; அள்ள அள்ளக் குறையவே முடியாத காமிக்ஸ் களஞ்சியம் ஒன்றுக்குள் தொபுக்கடீரென்று குதிக்கும் அதிர்ஷ்டம் வாய்த்த அந்த நாட்களில் ஒவ்வொரு புதுத்தொடரையும் துவங்கும் போதெல்லாம் நான் அந்த சந்தோஷப் பரவசங்களை உணர்ந்திருக்கிறேன் !
     
பின்நாட்களில் டெக்ஸின் வெற்றி இதழ்கள் ; லக்கி லூக்கை இரண்டே ரூபாய்க்கு வண்ணத்தில் கொணர முடிந்த சம்பவங்கள் ; அப்புறமாய் கேப்டன் டைகரின் தங்கக் கல்லறையை ஒரு நடுராத்திரி விமானப் பயணத்தின் போது ரசித்தது என பல ஜிலீர் moments தொடர்ந்தாலும்- நடுவே நேர்ந்த ஒரு வித தொய்வு என்னை மழுங்கச் செய்திருந்தது ! ஆண்டவன் புண்ணியத்தில் 2012ல் நமது Comeback Special-ஐ உருவாக்க எத்தனித்த நாட்கள் முதலாய் இந்த பிரிட்ஜூக்குள் குந்திடும் சந்தோஷ நாட்களும் மறுமலர்ச்சி கண்டன ! அதிலும் க்ரீன் மேனர் கதைகளை ; லார்கோவின் சாகஸங்களை ; பௌன்சரின் அதிரடிகளை முதல் தடவையாகக் கையில் printout-களாக ரசித்த சமயங்கள் ரொம்பவே ஸ்பெஷல் ! சரி... ‘தம் கட்டி இந்த மலரும் நினைவுகளை ஞாயிறு காலையில் களமிறக்கும் அவசியமென்னவோ என்று கேட்கிறீர்களா? 

கடந்த சில நாட்களை நமது மிஷினரி இறக்குமதிப் பிரிவின் பணியொன்றிற்காக ஐரோப்பாவில் செலவிட நேர்ந்தது! எப்போதும் போலவே செலவுகளை அந்த நிறுவனத்தின் தலையில் கட்டி விட்டு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் நமது கதைத் தேடல்களின் பொருட்டு படைப்பாளிகளைச் சந்திக்க அற்றுவிட்ட கழுதையாக நான் புறப்பட்டிருந்தேன்! அதிவேக ரயிலில் ஏறியமர்ந்தால் காலையில் ஹாலந்து ; ஒன்றரை மணி நேரப் பிரயாணத்தில் பெல்ஜியம் ; அங்கிருந்து இன்னொரு ஒன்றரை மணி நேரப் பயண தூரத்தில் பிரான்ஸ் என்பதால் – கிடைத்த ஒற்றை நாள் சைக்கிள் கேப்பில் முடிந்தளவுக்கு ரோடு போட முயற்சிக்க தீவிரமாயிருந்தேன். நமது பதிப்பகங்களுக்கு நான் எப்போதுமே ‘வாம்மா... மின்னல் என்ற பாணியில் வேளை கெட்ட வேளைகளிலும் ஆஜராகி அவர்களது குடல்களை உருவிடுவேன் என்பதும் தெரியும் என்பதால் முகம் சுளிக்காமல் காத்திருப்பது புதிய அனுபவமல்ல ! இம்முறை ஒன்றுக்கு மூன்றாய் பதிப்பகங்களை ஒரே நாளில் நான் சந்திக்க முடிந்ததும் சரி; இந்தாண்டின் இதுவரையிலான அவர்களது ஆக்கங்களின் பிரவாகத்தினுள் மூழ்கியதும் சரி; புதிய பதிப்பகம் ஒன்றினில் நமக்குக் கிட்டிய வரவேற்பும் சரி- புகைக்க ஹூக்கா பைப்போ; அதை எடுத்துத் தர இடுங்கிய கண்ணழகி யின் லியோ இல்லாமலும் கூட வானத்தில் சஞ்சாரம் செய்யும் புளகாங்கிதம் (!!) கிட்டியது ! 

Seven & more donkeys அகவைகளைத் தொடும் வேளைகளில்- ஒரு விதமான ‘த்சௌ... ஏற்கனவே பார்த்த வேலை தானே..? புதுசாய் இதிலென்ன இளிப்பு வேண்டிக் கிடக்கிறது? என்ற ரீதியில் ஒரு பெரிய மனுஷத் தோரணையை maintain பண்ணிடச் சொல்லி தலை பாசாங்கு நாடகத்தை அரங்கேற்றுவது சகஜமே! ஆனால்- அந்த விறைப்பையும், பாசாங்கான முறுக்கையும் மீறி படைப்பாளிகளோடு நேரம் செலவிடும் ஒவ்வொரு முறையும் தொண்டைக்குழி வரைக்கும் ஒரு வித நிறைவு ததும்புவதை இந்த வியாழனன்று திரும்பவும் ஒரு முறை உணர முடிந்தது! அதிலும் அந்தப் புதிய பதிப்பகத்தில் எனக்கொரு guided tour தந்தார்கள். கதையிலாகாவிலிருந்து- ஓவியப் பிரிவு- வர்ணப் பிரிவுகள் வரையிலும்! ஒவ்வொரு ஓவியரும் பணியாற்றுவதை அருகிலிருந்து பார்க்க முடிந்த போது தான் இந்த எல்லையில்லா உலகின் நிஜமான ஆற்றலாளர்களின் முழுப் பரிமாணங்களை உணர முடிந்தது! ஒரு வெற்றுக் காகிதம் சில பல மணி நேர உழைப்பின் பின் உலகை மயக்கும் பேசும் சித்திரங்களாய் உருமாற்றம் காண்பதைப் பார்த்த போது- “ஷப்பாடி“ என்ற பெருமூச்சு மட்டுமே சாத்தியமானது! ஏதேதோ மனக்கோட்டைகளையும் நம்மைப் பற்றி நாமே வளர்த்திருக்கக் கூடிய இறுமாப்புகளையும் தரைமட்டமாக்க இது போன்ற அனுபவங்கள் பெரிதும் உதவிடுவது தான் கலப்பில்லா நிஜம்! எங்கோ வசிக்கும் இந்த ஜாம்பவான்களின் நிழலில் நாம் குளிர் காயக் கூட ஒரு வரம் வாங்கியிருக்க வேண்டுமென்பதை உணர முடிந்தது; கைகுலுக்கி விட்டு, அடுத்த பதிப்பகத்தைப் பார்க்க ரயிலைப் பிடிக்க ஓட்டம் பிடித்த போது ஏழரைக் கழுதைகளில் ஒரு சில காணாமல் போய்விட்டது போலொரு feeling! சரி.. அது எந்தத் தொடர் ? - எந்தப் பதிப்பகம் ? - என்ற சஸ்பென்ஸை மட்டும் இன்னும் ஒரேயொரு வாரத்திற்கு அனுமதியுங்களேன்- ப்ளீஸ்! முறைப்படி contract அடுத்த சில நாட்களுக்குள் நம் கைக்குக் கிட்டியான பின்னே பெவிகாலை வாயிலிருந்து கழுவிடுவது உத்தமம் என்பதால் தான் இந்த முன்ஜாக்கிரதை முத்தண்ணா  அவதாரம்!

அதே போல- வரவிருக்கும் நமது கார்டூன் ஸ்பெஷலுக்கான கதைத் தேர்வுக்களத்தில் நான் இதுவரை வண்டி வண்டியாய் கதைகளை உலவ விட்டு வேடிக்கை பார்த்து வருவதும் ஒரு அட்டகாசமான அனுபவமாகயிருந்து வருகிறது! இம்முறை பார்க்க நேரிட்ட சில பல புதிய கதைகளையும் இதற்குள் நுழைத்தாலென்ன என்ற சிந்தனை! சில வேளைகளில் மெனுவில் தட்டுப்படும் அத்தனை ஐட்டங்களையும் பார்த்து கடவாயில் நயாக்ரா ஓடும் அல்லவா ? –அதைப் போலத் தான் இந்த கார்ட்டூன் விருந்தில் ‘ஏக் தம்மில் எல்லாவற்றையும் பரிமாறிட முடியாதா ? என்பது போலான ஆதங்கம் என்னுள் ! சரி... இப்போதைக்கு இதை மட்டும் சொல்லி வைக்கிறேன்- கா.ஸ்பெ.யில் மொத்தம் 4 கதைகள் / நாயகர்கள்...! விலை ரூ.200/- முழு வண்ணத்தில்! "ஐநூறு-ஆயிரம்" என்று விலைகளைப் போட்டு மீண்டுமொரு தாக்கு தாக்கிட தற்காலிகமாய் நம்மிடம் தம்மில்லை என்பதால் ரொம்பவே ‘மெகா இதழாக எதிர்பார்த்துக் காத்திருந்த நண்பர்கள் ஏமாற்றம் கொண்டிருக்கலாம்; அடுத்த மாதம் காத்திருக்கும் ‘தல திருவிழாவிற்குத் தயாராவதிலேயே தாவு தீர்ந்து வருகிறது! அது மட்டுமின்றி ஆகஸ்ட் தான் நமது மறு ஆண்டின் கதை finalization-களின் தருணமாக கடந்த 2 ஆண்டுகளுமே அமைந்து வந்திருக்கிறது! So- அந்த நேரத்தில் இன்னமும் ஒரு முரட்டு இதழின் பணிகளுக்குள் ஐக்கியமாகிக் கிடந்து நமது focus-ஐ சிதறச் செய்ய வேண்டாமே என்றும் பார்த்தேன்! ஆனால் 4 கதைகள் கொண்ட இந்த கார்ட்டூன் ஸ்பெஷல் நிச்சயம் ஒரு கலக்கல் இதழாக அமையவிருப்பது உறுதி!
     
சரி- துபாய்; உஸ்பெகிஸ்தான் என்ற பறக்கும் சிந்தனைகளிலிருந்து இங்கேயிருக்கும் உளுந்தூர்பேட்டையில் தரையிறங்குவோமா guys - இம்மாத இதழின் அடுத்த preview சகிதமாய் ? இதோ ஒன்றரையாண்டுகளுக்குப் பின்பாய் மறுவரவு காணும் ஜில் ஜோர்டனின் “துணைக்கு வந்த தொல்லை“ யின் அட்டைப்பட first look! இது இன்னமும் பூர்த்தியடையா  டிசைன் என்பதால்- பின்னட்டையில் கொஞ்சம் பட்டி-டிக்கரிங் காத்துள்ளது! ஒரிஜினல் டிசைன்- நமது improvements சகிதம் என்ற சமீப பாணி இம்முறையும் தொடர்கிறது ! பாருங்களேன் - ஒரிஜினலையும், நமது version-ம்...!



கதையைப் பொறுத்தவரை- ரிப்போர்ட்டர் ஜானி பாணியிலான துப்பறியும் களங்களோ; C.I.D. ராபின் பாணியிலான மர்ம முடிச்சுகளோ ஜல்லாரின் armoryல் எதிர்பார்த்தல் விவேகமாகாது! அதே போல கார்ட்டூன் பாணிச் சித்திரங்கள் கொண்ட தொடரிது என்பதற்காக பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பு வெடிகளை எதிர்நோக்கியிருப்பதும் வேலைக்கு ஆகாது! சுலபமாய் படிக்க; ஜாலியாய் ரசிக்க; கண்களுக்கு இதமான வர்ண / சித்திர பாணிகள் உள்வாங்கிட இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டால்- you wouldn’t be disappointed! 

இதோ- அவரது உட்பக்கத்தின் ஒரு teaser! ஜரூராய் பணிகள் நடந்து வருகின்றன- மே இறுதியில் இதழ்கள் மூன்றையும் அனுப்பும் விதமாய்! அவ்வப்போது நான் ஊர் சுற்றல்களை மேற்கொள்வதைத் தவிர்க்க இயலாதெனும் போது கடைசி நிமிடக் கூத்துக்கள் எப்போதும் போல இம்மாதமும் அரங்கேறுகின்றன! ஆனால் அது தான் நமக்குப் பரிச்சயமே- ஆண்டாண்டு காலமாய் !மீண்டும் சந்திப்போம் guys! Have fun! Bye for now !

336 comments:

  1. லக்கி லூக், சிக் பில், ப்ளூகோட், & மதியில்லா மந்திரி or ஜில் ஜோர்டான். சரிதானே சார்?

    ReplyDelete
  2. sir mathi illa mandhiri enna achu ? Kindly consider green manor type stories also.Try to avoid diabolic,roger.rindin and Julia. Finally we receive cartoon special with less number of stories but it is good to avoid burden to u and for us also. Sir we need varieties other wise it starts boring .

    ReplyDelete
  3. 200 ரூபாய் 4 கதைகள் எதிர்பார்ப்பில் பாதி தான் பூர்த்தியாகி இருக்கிறது.
    உள்ளம் கேட்குமே more

    ReplyDelete
    Replies
    1. //உள்ளம் கேட்குமே more//
      +1

      Delete
  4. ஆசிரியர்+கா.கா. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்

    ReplyDelete
  5. கதையைப் பொறுத்தவரை- ரிப்போர்ட்டர் ஜானி பாணியிலான துப்பறியும் களங்களோ; C.I.D. ராபின் பாணியிலான மர்ம முடிச்சுகளோ ஜல்லாரின் armoryல் எதிர்பார்த்தல் விவேகமாகாது! அதே போல கார்ட்டூன் பாணிச் சித்திரங்கள் கொண்ட தொடரிது என்பதற்காக பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பு வெடிகளை எதிர்நோக்கியிருப்பதும் வேலைக்கு ஆகாது! சுலபமாய் படிக்க; ஜாலியாய் ரசிக்க; கண்களுக்கு இதமான வர்ண / சித்திர பாணிகள் உள்வாங்கிட இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டால்- you wouldn’t be disappointed!
    yes I like this very much sir

    ReplyDelete
  6. சமீபத்தியவைகளில் மிகவும் ரசித்த பதிவு இது.
    ஆசிரியரின் ட்ரேட் மார்க் நடை.
    நான்கு/ஐந்து கதைகள் எவ்வளவாயினும்
    கார்டூன் ஸ்பெஷல் நல்ல பெரிய சைஸ் பக்கங்களில் வெளியிடுங்கள் ஸார்.
    பலூன்களே 60 % மூடி மறைத்த சைஸில் இனி எந்த இதழும் வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. // கார்டூன் ஸ்பெஷல் நல்ல பெரிய சைஸ் பக்கங்களில் வெளியிடுங்கள் ஸார் //

      +1

      Delete
  7. கார்ட்டூன் ஸ்பெஷல் 4கதைகள் மட்டுமே உள்ளடக்கியது என்பது பெரும் ஏமாற்றமே .....10 கதைகளாவது இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது ...உங்களது நிலைமையும் புரியுது ....

    ReplyDelete
  8. விஜயன்சார், நெடுநாட்களுக்குபிறகு, திருப்தியான ஹாட்லைனை படித்தது போன்றதொரு பதிவு.எனக்கென்னமோ, கார்டூன் ஸ்பெசலில், ஏற்கனவே அடிக்கடி தலைகாட்டிய நாயகர்கள், லக்கி, சிக்பில் தவிர்த்து, விஸ்கி சுஸ்கி, அலிபாபா, அல்லது வேறு புதிய கார்டூன் தொடர்களை முயற்சிக்கலாமோ என்று தோன்றுகிறது சார்.அதாவது ஹாலிவுட்டில் ஜாலி என்று 90களில், வந்த நான்ஸ்டாப் காமெடி., கார்டூன் கதைகளை போன்று.

    ReplyDelete
    Replies
    1. // ஏற்கனவே அடிக்கடி தலைகாட்டிய நாயகர்கள், லக்கி, சிக்பில் தவிர்த்து, // விஸ்கி சுஸ்கி, அலிபாபா, அல்லது வேறு புதிய கார்டூன் தொடர்களை முயற்சிக்கலாமோ என்று தோன்றுகிறது //

      +1

      Delete
  9. Dear Edi,

    4 Stories for Rs.200 price-point is a correct as right decision for Cartoon Special. Looking forward for stories reveal and new contract announcement.

    By the way our color combinations for Gil, is as attractive as ever. :-)

    ReplyDelete
    Replies
    1. ரபீக்,

      ராமராஜன் சட்டையும் லயன் காமிக்ஸ் அட்டையும் தகதகன்னு ஜொலிப்பா இருந்தாதான் மதிப்பு :) :) :) ஹி ஹி !!

      Delete
    2. // 4 Stories for Rs.200 price-point is a correct as right decision for Cartoon Special. //
      +1

      Delete
  10. //கா.ஸ்பெ.யில் மொத்தம் 4 கதைகள் / நாயகர்கள்...! விலை ரூ.200/- முழு வண்ணத்தில்! //
    இன்னும் இரண்டு கதைகளாவது சேர்த்து ரூ 300 வைத்திருக்கலாமே சார்.
    ரொம்ப நோஞ்சான் இதழாய் எனது கனவு இதழ் வருவது ஏமாற்றமே. :(

    ReplyDelete
    Replies
    1. அதனால் என்ன சார்
      ₹ 200 உடன்
      ₹ 100 லக்கி ஸ்பெஷலை சேர்த்து அனுப்பிட சொல்லிவிட்டால் ஆச்சு
      உங்க கவலை தீர்ந்து விடும் அல்லவா

      Delete
    2. சிக்பில் ஷ்பெசல்னா அதைவிட அதிக சந்தோஷம் ஆர்டினுக்கு உண்டாகும் ஜெயசேகர் சார்.! :)

      Delete
    3. உங்ககிட்ட இருக்கும் சிக்பில் கதைகளை ஒன்றாக கோர்த்து தைத்து கொள்ளுங்களேன் ,சிக்பில் ஸ்பெஷல் ரெடி. வருடம் ஒற்றை கதைக்கே டிஜிட்டல் கோப்பு கிடைப்பது அரிதான ஒன்று என ஆசிரியர் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள் ஆர்டினாரே.

      Delete
    4. ஹீரோயின் அப்பாயின்மெண்ட் கொடுத்தாலும்., செகரட்ரி உள்ள விடமாட்டாரு போல இருக்கே.!!!
      கிர்ர்ர்ர்ர்ர்...………!!!

      Delete
    5. //ஹீரோயின் அப்பாயின்மெண்ட் கொடுத்தாலும்., செகரட்ரி உள்ள விடமாட்டாரு போல இருக்கே.!!!//

      ROTFL

      Delete
  11. இன்னும் வரவிருக்கும் புதிய நாயகர்களுக்கு எங்களின் வாழ்த்துகளும்,வரவேற்பும்.

    ReplyDelete
  12. ரூபாய் 200 என்பது ரொம்பவே..

    நியாயமான விலை ✔
    திருப்திகரமான விலை ✔
    சௌகரியமான விலை ✔
    வசதியான வாங்கக்கூடிய விலை ✔
    என் பட்ஜெட்டில் துண்டு விழாத விலை ✔

    நன்றி எடிட்டர் சார் !

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீங்க உதயகுமார்!

      Delete
    2. உங்களை போன்ற முகநூல் நண்பர்கள் இங்கு தொடர்ந்து இங்கு பதிவிட வேண்டும்.

      Delete
  13. ஒரு வாரம் சஸ்பென்ஸ் புதிய தொடர் வரவேற்கிறோம்

    ReplyDelete
  14. ///ரிப்போர்ட்டர் ஜானி பாணியிலான துப்பறியும் களங்களோ; C.I.D. ராபின் பாணியிலான மர்ம முடிச்சுகளோ ஜல்லாரின் armoryல் எதிர்பார்த்தல் விவேகமாகாது! அதே போல கார்ட்டூன் பாணிச் சித்திரங்கள் கொண்ட தொடரிது என்பதற்காக பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பு வெடிகளை எதிர்நோக்கியிருப்பதும் வேலைக்கு ஆகாது!///

    இந்த ஜில்லுப் பயலிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகிவிட்டபடியால்., கதையை படிக்கும்போது தொல்லை ஏதும் துணைக்கு வரப்போவதில்லை. :)

    ReplyDelete
    Replies
    1. //இந்த ஜில்லுப் பயலிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகிவிட்டபடியால்., கதையை படிக்கும்போது தொல்லை ஏதும் துணைக்கு வரப்போவதில்லை. :) ///

      :))

      Delete
  15. //அதைப் போலத் தான் இந்த கார்ட்டூன் விருந்தில் ‘ஏக் தம்மில்’ எல்லாவற்றையும் பரிமாறிட முடியாதா ? என்பது போலான ஆதங்கம் என்னுள் //

    ஒரு தீபாவளி மலர் போட்டு உங்க ஆதங்கத்தை தீர்த்துக் கொள்ளலாமே சார்.?

    ReplyDelete
    Replies
    1. "ஒரு தீபாவளி மலர்"சூப்பர்,சூப்பர்.அட்டகாசமான யோசனை.

      Delete
    2. 'தீபாவளி மலர்' இந்த வருடம் உறுதியென்றே தோன்றுகிறது. 'தல' தீபாவளி!

      Delete
    3. தலை வாங்கி குரங்கிலிருந்து ஆரம்பித்த தீபாவளி மலர் னா தலையின் 10000வாலா என பதிவாகிட்டது. சோ , அது தலையின் சிம்மாசனம் , அங்கே வேறு யாருக்கும் இடமில்லை . தலை தீபாவளிக்கு வரும் மாப்பிள்ளை மாதிரி ஜம்முனு நம்ம தலை வந்தாலே வரப்போகும் தீபாவளி கூட எனக்கு தலை தீபாவளி தான் .

      Delete
    4. // வரப்போகும் தீபாவளி கூட எனக்கு தலை தீபாவளி தான் .//

      ஊட்டுக்கார அம்மாகிட்ட இருந்து கம்மிங் தீபாவளிக்கு உங்கள்க்கு 10000 வாலா வெடி கிடைக்கனும் சார்

      Delete
  16. ஹாட்லைன் அருமை விஜயன் சார்

    எங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளீர்கள் சார்

    கலக்கல் இதழை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் சார்

    என்ன ஒரு சிறிய ஏமாற்றம் 4 கதைகள்ங்கறது
    ரொம்ப ரொம்ப கம்மியா தெரியுது

    உங்கள் நிலமையும் புரியுது

    நன்றி சார் :(
    .

    ReplyDelete
    Replies
    1. //ஏமாற்றம் 4 கதைகள்ங்கறது
      ரொம்ப ரொம்ப கம்மியா தெரியுது//
      +1

      Delete
  17. காலை வணக்கம் எடி சார்

    கா.ஸ்பெஷல்

    மினி லயனின் சம்மர் ஸ்பெஷல் போல் இருக்குமா எடி சார்

    ReplyDelete
  18. மி.ம.புத்தகத்தை அவ்வப்போது மேலோட்டமாக ரசித்து வந்தாலும்,நேற்று அதனுடன் அரைநாள் செலவிட்டேன்.அப்பா சான்சே இல்லை,அவ்வளவு அருமை.ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போதும் ,எடிட்டரின் உழைப்பும்,அவர் எடுத்துக்கொண்ட சிரத்தையும்தான் ஞாபகம் வந்தது.இது ஒரு பொக்கிஷம் தான்.சந்தேகமே இல்லை.நன்றி.

    ReplyDelete
  19. ஆ பெவிகால் வாயரின் புலம்பல்கள் இனிமை ரகம்
    கார்ட்டூன் ஸ்பெஷல் வெறும் ரூ 200/-
    பரவாயில்ல எடி சார்
    நாங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்கும் வடிவேல் கள் தான்
    கா ஸ்பெஷல் ரூ 1000/-போடுங்கப்ப்பா

    ReplyDelete
  20. 200ரூபாய் விலையில் கார்டூன் ஸ்பெஷல் ,4 கதைகளுடன் ......அருமையான முடிவு சார் . கரவோசை எழுப்பி வரவேற்கிறேன் சார் .
    ஏற்கனவே 200விலையில் வந்த ஆல் நியூ ஸ்பெசலின் அளவு படிப்பதற்கு ஆவலை தூண்டும் சரியான அளவு சார் .
    மின்னும் மரணத்தையும் இதேமாதிரி 200ரூபாய் விலையில் 5புத்தகங்கள் கொண்ட செட்டாக போட்டிருக்கலாம் சார் . என்னை மாதிரி மெல்லுடல் ஆசாமிகளுக்கு மடியில் வைத்து படிக்க எளிதாக இருந்து இருக்கும் சார் .
    1.சுட்டி லக்கி, 2.சிக்பில் , 3.புதிய கார்டூன் அறிமுகம், 4.சுஸ்கி விஸ்கி கதை ஒன்று + மதியில்லா மந்திரி போனஸ் என்று என்னுடைய எதிர்பார்ப்பு சார் . சுஸ்கி விஸ்கியை மீள் வரவு செய்ய இதை விட சிறந்த சந்தர்ப்பம் அமையாது சார் . பெரும்பாலானவர்கள் நீண்ட கால கோரிக்கை இது சார் . சென்னை விழாவில் கூட பலர் இதை தங்களிடம் கேட்டார்கள் என சற்றே நினைவூட்டுகிறேன் சார் .

    ReplyDelete
    Replies
    1. எதுக்கோ பயந்து என்னவோ பண்ணுற கதையா இருக்கே.,???

      Delete
    2. ஒரே கமெண்ட்ஸ் ல வேலை முடிந்து விடும் நகைச்சுவை நாயகரே .
      மேலும் ப்ளாக்ல டே ஒண்ல இருந்தே நாம ஃபாலோ செய்யரோம் . அது எதுவும் தெரிந்து கொள்ள மாட்டார்கள் ,பழைய பதிவு படித்து யார் யார் நடுநிலை யான கமெண்ட்ஸ் போடராங்க ன்னு பார்க்க மாட்டார்கள் , ஆசிரியர் ட்ட சில விசயங்களில் ஏமாற்றம் காரணமாக ஏதாவது கேட்டால் 3மாதம் முன்பு தான் ப்ளாக்கே வந்துட்டு , ""நீங்களுமா ??"-என நக்கலாக கேட்பார்கள் . இரவு வரை உட்கார்ந்து பதில் சொல்ல தெம்பில்லை உடம்பில் . எல்லாருக்கும் பிடித்தது எனக்கும் பிடிக்கும் . தட்ஸ் ஆல் ,சோ சிம்பிள் ....

      Delete
    3. சேலம் Tex விஜயராகவன் @ சொக்கா இருக்குது உங்க ஐடியா!

      Delete
    4. எல்லோருக்கும் பிடித்தது எனக்கும் பிடிக்கும் //---அதானே , நன்றி பரணீ ஜி.

      Delete
    5. // சுஸ்கி விஸ்கியை மீள் வரவு செய்ய இதை விட சிறந்த சந்தர்ப்பம் அமையாது சார் . பெரும்பாலானவர்கள் நீண்ட கால கோரிக்கை இது சார் . சென்னை விழாவில் கூட பலர் இதை தங்களிடம் கேட்டார்கள் என சற்றே நினைவூட்டுகிறேன் சார் . //

      +1

      Delete
    6. மின்னும் மரணத்தை 5x2 செட்டாக போட்டிருந்தால் நானும் டெக்ஸ் ரசிகனாயிருப்பேன்..

      Delete
    7. Rummi XIII @ ஹா ஹா! சூப்பர்!

      Delete
  21. கா.ஸ்பெ.யில் மொத்தம் 4 கதைகள் / நாயகர்கள்...! விலை ரூ.200/-

    மிக சரியான முடிவு. அனைவரும் வாங்கும் விலை, அதிக நபர்களிடம் இந்த புத்தகம் சென்று அடையும்.

    ReplyDelete
    Replies
    1. வரும் காலம்களில் சிறப்பு இதழ்கள் அனைவரும் வாங்கும் விலையில் வரவேண்டும்! முக்கியமாக இணைய தளத்திருக்கு அப்பால் உள்ளவர்களையும் மனதில் கொண்டு சிறப்பு இதழ்களை திட்டமிட வேண்டும்.

      Delete
  22. "ஜொய்ங்" படலம் - இந்த பதிவு படிக்க சுவையாக உள்ளது! ஒரு சிங்கத்தின் பெரிய வயதில் :-) சூப்பர்! எங்களுக்கு நேரில் பார்க்க கிடைக்காத காமிக்ஸ் விஷயம்களை உங்கள் எழுத்துகள் முலம் கொடுதத்தற்கு நன்றி!

    ReplyDelete

  23. இந்த முறை ஜில் கலக்குவார் என நம்புகிறேன். அட்டைப் படம் சூப்பர்.

    புதிய பதிப்பகங்களுக்கு போகும்போது நம் இதழ்களில் சிலவற்றை அவர்களுக்கு காட்ட எடுத்து செல்வீர்களா ? அப்படி இந்த முறை எடுத்து சென்ற இதழ்கள் எது ? அதனைப் பார்க்கும் அவர்களின் எண்ணங்கள் என்ன ?. எதாவது சுவாரசியமான விஷயம் இருந்தால் பகிருங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல யோசனை! நமது ஆசிரியர் பொதுவாக நமது இதழ்களை எடுத்து செல்வதாக ஒரு பதிவில் சொன்னதாக ஞாபகம்!

      விஜயன் சார், ப்ளீஸ் பகிருங்கள்!

      Delete
  24. சிறுவயதில்,ஏப்ரல்,மே மாதங்களில் காமிக்ஸே கதி என்றுகிடந்த நாட்கள் போய்.,தற்போது வீட்டு வாண்டுகளையும்,வீட்டுகார அம்மாவையு வைத்து வண்டியில் பூட்டிய மாடு மாதிரி ஊர்,ஊராய் வலம்வந்துகொண்டுருக்கின்றேன்.எப்படா இந்த மே மாதம் முடியும் என்று.அது ஒரு கணாக்காலம்.

    ReplyDelete
    Replies

    1. காலத்தின் கோலம். :)

      Delete
    2. //வண்டியில் பூட்டிய மாடு மாதிரி ஊர்,ஊராய் வலம்வந்துகொண்டுருக்கின்றேன்.///
      வண்டி இப்ப எந்த ஊர்ல இருக்கு வெங்கடேஷ் ஜி?

      Delete
  25. // அது எந்தத் தொடர் ? - எந்தப் பதிப்பகம் ? - என்ற சஸ்பென்ஸை மட்டும் இன்னும் ஒரேயொரு வாரத்திற்கு அனுமதியுங்களேன்- /
    ஒருவேளை.....
    அதுவா....?
    அதானா..,?
    அதுவேதானா....?

    (ஆ& ஒ) நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறப்போகிறதா.?????????

    ReplyDelete
    Replies
    1. //(ஆ& ஒ) //

      கொஞ்சம் பேராசையாத்தான் தோனுது! ஆனா, நிறைவேறினால் உற்சாகமே!! :)

      Delete
  26. //புகைக்க ஹூக்கா பைப்போ; அதை எடுத்துத் தர இடுங்கிய கண்ணழகி யின் லியோ இல்லாமலும் கூட வானத்தில் சஞ்சாரம் செய்யும் புளகாங்கிதம் (!!) கிட்டியது ! //

    அதுக்கு நீங்க பர்மாவுக்கு இல்ல போயிருக்கணும்.
    பைடாங் இல்லாத சமயமெனில் இன்னும் விசேஷம். :):):)

    ReplyDelete
  27. * அழகான பதிவு

    * மிஸ்டர் 'ஜில்' இம்முறை வெற்றிபெற இறைவனை வேண்டுகிறேன்! அதிக எதிர்பார்ப்பின்றி கதையைப் படிக்க எடிட்டரின் இந்த முன்னுரை நிறையவே உதவிடும்தான்!

    * புதிய பதிப்பகம்/ புதிய தொடர் ஆவலைக் கிளப்பியுள்ளது. அடுத்தவாரத்துக்காக ஆவலுடன் வெய்ட்டிங்...

    * 4 கதைகளுடன் ரூ.200 விலையில் கார்ட்டூன் ஸ்பெஷல் - என்பது அழகான/அடக்கமான முடிவு! இடம்பெறப்போகும் கதைகளைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்திட ஓ.வா.உ.நா'வை விரைவில் எதிர்பார்க்கிறோம். ( 'இதற்கான ஏற்பாடுகள் முழுக்க ஜூ.எடிட்டரே கவனித்துக்கொள்வார்' என நீங்கள் சொல்லியிருந்தீர்களே எடிட்டர் சார்... அது அப்படித்தானா அல்லது அப்படியில்லையா?)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். ஈரோடு விஜய் அவர்களே!.பூனை அருமை.

      Delete
    2. ஈரோடு விஜய் , உங்கள் ஞாபக சக்தி அபாரம்.!

      Delete
    3. வணக்கம் வெங்கடேஸ்வரன் அவர்களே!

      //உங்கள் ஞாபக சக்தி அபாரம்.! //
      இப்படி மனம்விட்டுப் பாராட்டும் ஒரு டாக்டரை நான் பார்த்ததேயில்லை!! :D

      Delete
    4. அலோ அவர் அட்வகேட் னு சொன்னாளே ? டிகிரி யை மாத்திட்டாளா இப்போ!!!

      Delete
    5. இம்பூட்டு வெள்ளந்தியா இருக்கியளே மாமோய்.!

      அது ஞாபக சக்தி குறித்த நக்கல் கமெண்ட்டுங்கோ.!!!

      Delete
    6. இது மாதிரி குசல விசாரிப்புகளை மெசேஜிலோ அல்லது வாட்ஸ்அப் குரூப்பிலியே வைத்து கொல்லலாமே நண்பர்களே...

      Delete

    7. ஹிஹிஹி.!!! ஸாரி ரம்மி.!
      இனிமேல் வைத்துக் "கொல்கிறோம் ".!

      Delete
  28. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்..

    ReplyDelete
  29. அலோ ஆல் நண்பர்களே அட்டென்சன் ப்ளீஸ் .
    ஏங்க 200ரூபாய் க்கு புத்தகம் போடுது என்பது வழக்கமான ஒன்று . சர்ப்பங்களின் சாபம் எவ்வளவு 200தானே ???- அவரும் 200ரூபாய்க்கு சிம்பிளாக போடுகிறேன் என்கிறார் , நீங்களும் ஆகா ஓகோன்னு ட்டு இருக்கீக ??? என்னா விளையாடுறீங்களா?
    லயன் 250ஏ 450ரூபாய் னா முத்து 350வெறும் 200க்கா ?. முத்து காமிக்ஸ் னாவே ஓரவஞ்சனை செய்வதாக வரலாறு உங்களை தூற்றாதா சார் ?.
    இம்மாத இறுதியில் வரும் இதழ்களில் முத்து 350 ஸ்பெசல் 500ரூபாய் ல என விளம்பரம் செய்யுங்கள் சார் . ஆகஸ்டு 9ம் தேதி ஞாயிறு , ஈரோடு விழாவில் ரிலீஸ் பன்னுங்கள் சார் .புக்கிங் ஸ்டார்ட் பன்னுங்கள் சார் . இடையில் உள்ள ஜூன் , ஜூலை 2மாதங்கள் போதுமான கால அவகாசம் தானே . உங்களால் நிச்சயமாக முடியும் . நண்பர்களும் விரைவாக புக்கிங் செய்கிறோம் .
    ஆசிரியர் அறிவிப்பு செய்தபடி 4கார்டூன் கதைகள் வரட்டும் . மீதும் 4கதைகள் முத்து காமிக்ஸ் ன் உயிர் நாடியான துப்பறியும் கதைகள் வரட்டும் . மதியில்லா மந்திரி ,இன்னும் மற்ற வழக்கமான விளம்பரம் , சி.சி . வயதில் , காமிக்ஸ் டைம் வரட்டும் சார் .
    சிறப்பு காமிக்ஸ் டைம் அய்யா செளந்திரபாண்டியன் அவர்கள் எழுதட்டும் சார் .இந்த ஆண்டு தமிழ் காமிக்ஸ் ன் பொன்ஆண்டாக திகழட்டும் சார் .ஒவ்வொரு ஞாயிறும் அன்றைய பதிவில் உள்ள விசயங்கள் பற்றி ப்ளாக்ல இல்லாத நண்பர்கள் போனில் என்னிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள் சார் .
    ப்ளாக்ல வராது உள்ள பல சேலம் நண்பர்கள் 200ரூபாய் க்கு வெறும் கார்டூன் ஸ்பெசலாக மட்டுமே வருவதை விரும்பவில்லை சார் . அனைவரின் எதிர்பார்ப்பும் கார்டூன் +துப்பறியும் நாயகர்கள் இணைந்த ஒரு பெரிய மெகா இதழையே சார் .
    மேலும் நீங்கள் போட இருக்கும் 200ரூபாய்க்கு சில இதழ்களை கட் செய்யப்போகிறீர்கள் தானே சார் . அவ்வாறு ட்ராப்ஆக இருக்கும் இதழ்களுக்காக ஆண்டு ஆரம்பத்தில் ,ஏன் சென்ற ஆண்டு இறுதியிலேயே பணம் கட்டிவிட்டு காத்திருக்கும் என்போன்ற பல நண்பர்களுக்கும் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் சார் .
    நீங்கள் ஒருதடவை முடிவு செய்து விட்டால் பிறகு மாற மாட்டீர்கள் என்பது நீண்ட கால வாசகனான எனக்கு தெரியும் சார் . ஆனால் பாலாய்ப்போன இந்த மனதின் கேள்வியையும் மற்றும் நண்பர்களின் வேண்டுகோள் களையும் உங்கள் முன் சமர்ப்பித்த திருப்தி இருக்கும் சார் . நீங்கள் எதை முடிவு செய்தாலும் எங்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு சார் .

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் அவர்களின் கூற்றை வழிமொழிகிறேன் சார் ....

      Delete
    2. //லயன் 250ஏ 450ரூபாய் னா முத்து 350வெறும் 200க்கா ?.//
      //ஆசிரியர் அறிவிப்பு செய்தபடி 4கார்டூன் கதைகள் வரட்டும் . மீதும் 4கதைகள் முத்து காமிக்ஸ் ன் உயிர் நாடியான துப்பறியும் கதைகள் வரட்டும் .//
      //எதிர்பார்ப்பும் கார்டூன் +துப்பறியும் நாயகர்கள் இணைந்த ஒரு பெரிய மெகா இதழையே சார் .//
      +1

      Delete
    3. சேலம் டெக்ஸ் விஜயராகவன் நீங்க சொல்றத கேட்க நல்லாத்தான் இருக்கு.ஆனால் அவருக்கு என் னசூழ்நிலையோ.?"த்ரிஷா இல்லைன்னா திவ்யா"இதுதான் என் பாலிசி.!

      Delete
    4. //லயன் 250ஏ 450ரூபாய் னா முத்து 350வெறும் 200க்கா ?. முத்து காமிக்ஸ் னாவே ஓரவஞ்சனை செய்வதாக வரலாறு உங்களை தூற்றாதா சார் ?. //

      இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைச்ச பின்னாடிதான் கல்யாணம் செஞ்சிக்கணும்னு லட்சியத்தோட இருக்கேன்.
      நீங்க என்ன நினைக்கிறீங்க.! :):):)

      Delete
    5. //லயன் 250ஏ 450ரூபாய் னா முத்து 350வெறும் 200க்கா ?. முத்து காமிக்ஸ் னாவே ஓரவஞ்சனை செய்வதாக வரலாறு உங்களை தூற்றாதா சார் ?. //

      இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைச்ச பின்னாடிதான் கல்யாணம் செஞ்சிக்கணும்னு லட்சியத்தோட இருக்கேன்.
      நீங்க என்ன நினைக்கிறீங்க.! :):):)

      Delete
    6. முத்து 300 வின் ஹாட் லைனின் படி நடப்பதானால் டபுள் ஓகே

      Delete
    7. மடி சார் -//த்ரிஷா இல்லைன்னா திவ்யா"இதுதான் என் பாலிசி.!///---ஏகப்பட்ட முன் அனுபவம் இருக்கும் போல.....ஹி...ஹி...

      Delete
    8. KiD ஆர்டின் KannaN @ என்னது வடிவேல் இந்தியாவ கண்டு பிடிச்சிட்டாரா? சொல்லவே இல்லை!

      Delete
  30. அதிக எதிர் பார்ப்பில் இருந்த "கார்ட்டூன் ஸ்பெஷல் "அறிவிப்பை ஒரு பதிவாக எதிர்பார்த்த எனக்கு பொசுக் என்று ஒரு பத்தியில் முடிந்து விட்டது வருத்தமே ...


    200 விலையில் ஸ்பெஷல் ஓகே .மகிழ்ச்சியான. செய்தி சார் .....ஆனால் நான்கு கதைகளில் முடிந்து விட்டதை நினைத்தால் கொஞ்சம் வருத்தமே ..

    கார்ட்டூன் என்றால் லக்கி ...சிக்பில் கண்டிப்பாக உண்டு ..ப்ளூகோட் பட்டாளமும் நண்பர்கள் எதிர்பார்ப்பில் இருப்பதை கணித்தும் ...இந்த மற்றும் ..கடந்த ..பதிவின் மூலம் அறிமுக நாயகர் ஒன்று என கணக்கு போட்டால் ...


    எங்கள் "மதியில்லா மந்திரி " க்கு அனுமதி இல்லையா சார் ...

    ReplyDelete
  31. சார் ....அந்த புதுமுக அறிமுக ஹீரோ ...பழைய திகில் காமிக்ஸ் இதழில் வந்த ஹீரோவாக இருந்தால் ...


    பெரிய கொண்டாட்டமாக இருக்கும். :)

    ReplyDelete
  32. Dear Editor,
    Please release cartoon special as single issues. I'm ok with 240 Rs (4*60). At least we will get individual wrappers . It will be helpful to arrange the books like lucky Luke collection, Gill Jordan collection... recently I bought a set of 24 lucky Luke books all in same size, price.... I'm keeping it as a collection.... now imagine if they released 6 books as individual books and 3 books as 4 story collection (in this one book has the second part of largo winch, one Gil Jordan) 2 books as 6 story collection... added to the confusion the six story collection in the size of NBS... even imagining such thing is disgusting... but this is what happening in Tamil comics....

    ReplyDelete
    Replies
    1. I like கதம்பம் special, reason being in a single book you get to read multiple genre of stories.

      Collection special can only be released for custom prints like மின்னும் மரணம்.

      Delete
    2. No more cocktail specials please. Editor should come out of the children weekly magazine model. Every story/characters should be given equal footing as an individual book at the minimum.

      Delete
    3. +1

      Dear Editor,

      Kindly give us four cartoons from the same hero or four different books in a BOX SET - we should step out of this kathamba special mode please.

      Comic Lover

      Delete
    4. Dear Editor,
      BOX SET is a very good idea... its will satisfy both groups Please implement this......btw the Natural Shade paper quality is fantastic.both "மலைக்கோட்டை மர்மம்" and "இராட்சசக் குள்ளன்" looks excellent like originals... Please release all upcoming issues in the Natural Shade paper only.

      Delete
  33. நண்பர்களே ஆசிரியர் கதைகளின் எண்ணிக்கையில் ஏமாற்றிவிட்டாலும் கதைத்தேர்வில் கலக்கிடுவார் என்பதை நம்பலாம்

    ReplyDelete
  34. கார்ட்டூன் ஸ்பெஷல் விலை rs.200/- 4 கதைகள் என்பது விரலுக்கு தகுந்த வீக்கம்! கதைகளின் தரம், நகைச்சுவை மட்டும் குறைவில்லாமல் பார்துகொள்வீர்கள் என நம்புகிறோம்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை செந்தில்! இதனை நான் ஆமோதிக்கிறேன்!

      Delete
  35. Jill Jordan இந்த முறை அனைத்து வாசகர்களையும் கவர்வார் என நம்புவோமாக !

    ReplyDelete
  36. Jill Jordan wrapper originalவிட நமது அட்டைபடம் super!

    ReplyDelete
  37. சிறப்பு இதழ் சிறப்பாக மேலும் அதிக பக்ககங்களை கொண்டதாக இருந்தால் மிக நன்றாக இருக்கும் என்பது எ.க. Edit sir!

    ReplyDelete
  38. //அது எந்தத் தொடர் ? - எந்தப் பதிப்பகம் ? - என்ற சஸ்பென்ஸை மட்டும் இன்னும் ஒரேயொரு வாரத்திற்கு அனுமதியுங்களேன்- ப்ளீஸ்! முறைப்படி contract அடுத்த சில நாட்களுக்குள் நம் கைக்குக் கிட்டியான பின்னே பெவிகாலை வாயிலிருந்து கழுவிடுவது உத்தமம் என்பதால் தான் இந்த முன்ஜாக்கிரதை முத்தண்ணா அவதாரம்!//

    முன்ஜாக்கிரதை முத்தண்ணாவின் படிக்கச் அனுபவம் சுவாரசியமாக இருந்தது!

    //அதிர்ஷ்டம் வாய்த்த அந்த நாட்களில் ஒவ்வொரு புதுத்தொடரையும் துவங்கும் போதெல்லாம் நான் அந்த சந்தோஷப் பரவசங்களை உணர்ந்திருக்கிறேன் !//

    envy you!

    நாங்களும் அத்தகைய பரவசங்களை புதிய கதை, கதைகளம் கொண்ட புத்தகத்தை படிக்க கையில் எடுக்கும் போது உணர்கிறோம் Editor sir!

    ReplyDelete

  39. எடிட்டர் எங்கேனும்., காதுகுத்து கிடாவெட்டை சிறப்பிக்கச் சென்றுவிட்டாரா.??
    சத்தமே காணோமே.!!! :):):)

    ReplyDelete
    Replies
    1. சைவத்துக்கு மாறிவிட்டதால் கிடாவுக்கும் எடிட்டருக்கும் சம்பந்தமிருப்பதாகத் தெரியவில்லை! ஏதேனும் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றும் விழாவுக்கு சென்றிருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது! :D

      Delete
    2. KiD ஆர்டின் KannaN : கிடாவெட்டு...காதுகுத்து இத்யாதிகளெல்லாம் ஊருக்கு வந்து சேர்ந்தால் தானே சாத்தியம் ?

      ஊரைப் பார்த்துக் கிளம்புவோம்டா சாமி என விமானத்தில் ஏறி அமர்ந்த பின்னே ஏதோ technical clearance இல்லையென்று சொல்லி நாலரை மணி நேரங்கள் விமானத்துக்குள்ளேயே தேவுடு காத்து ; ஒரு வழியாக தட்டுத் தடுமாறி டில்லி வந்து சேர்ந்தால் அங்கே ஒரு 4 மணி நேரக் காத்திருப்பு ; சென்னை வந்து சேர்ந்த பின்னிரவுச் சமயம் கிடைத்த இரவு ரயிலில் ஏறிப் படுத்தால் அதுவும் ஒரு 2.5 மணி நேரம் லேட்டு என தாவங்கட்டையில் குத்து விட - வீட்டுக்கு வந்து மட்டையாக மட்டுமே தம் இருந்தது !!

      Delete
  40. ஒரு கார்ட்டூன் ஸ்பெஷலில் 4 கதைகள் இடம்பெறுவது சரியான அளவீடாகவே தோன்றுகிறது. இதற்கு மேற்பட்டு ஒரு காமெடித் தொகுப்பு வெளியாகுமானால் காமெடியே சற்று ஓவர் டோஸாகி திகட்டிவிடவும் வாய்ப்பிருக்கிறது எ.எ.க! ரூ.200/ரூ.250க்கு மேற்பட்ட விலை நிர்ணயம் நண்பர்களின்/எடிட்டரின் பட்ஜெட்டுக்கும் உகந்ததாய் இருக்காது.

    என்னைப் பொருத்தவரை, '4 கதைகள் - 200 விலையில்' என்ற எடிட்டரின் நிலைப்பாடு மிகவும் சரியே! கொஞ்சம் உஷாராக இருந்தோமானால் The முத்து-400க்கு(ஹிஹி) ஒரு மாபெரும் கொண்டாட்டத்தை திட்டமிட்டுக்கொள்ளலாம்!

    ReplyDelete
    Replies
    1. //கொஞ்சம் உஷாராக இருந்தோமானால் The முத்து-400க்கு(ஹிஹி) ஒரு மாபெரும் கொண்டாட்டத்தை திட்டமிட்டுக்கொள்ளலாம்!//
      இப்போதே டைட்டிலும் வைத்து பரிசை தட்டிச்சென்று விட்டீர்களே இத்தாலியாரே.!!!

      Delete
    2. Erode VIJAY : //ரூ.200/ரூ.250க்கு மேற்பட்ட விலை நிர்ணயம் நண்பர்களின்/எடிட்டரின் பட்ஜெட்டுக்கும் உகந்ததாய் இருக்காது.//

      ஏப்ரல் இறுதியில் ரூ.1000 ; ஜூலை துவக்கத்தில் ரூ.450 ; தொடரும் மாதமே இன்னொரு மெகா இதழ் எனில் தயாரிப்பில் உள்ள சிரமங்கள் ; முதலீட்டில் உள்ள சிக்கல்கள் சொல்லி மாளா...!

      Delete
  41. அது என்ன ஒரு வார சஸ்பென்ஸ்? புதிதாக எவரையேனும் அறிமுகப் படுத்தும் படலமா? இந்த மாதிரி கார்டூன் இதழ்களை சற்றே பெரிய பக்கங்களில் வெளியிடவும். மிகவும் ரசித்திடலாம்.

    ReplyDelete
    Replies
    1. அருப்புக்கோட்டை சரவணன் : காத்திருப்பு வெறும் ஏழு நாட்களுக்கு மட்டும் தானே..? ஓடியே போய் விடும்..!

      Delete
    2. Sir, ஒருவேளை டின்டின் ஆக இருக்குமோ?

      Delete
  42. அவசர கோரிக்கை:
    1) ஜில் ஜோர்டனின் “துணைக்கு வந்த தொல்லை“ யின் அட்டைப்படம் அருமை! ஆனால் கதையின் தலைப்பில் உபயோகபடுத்தி உள்ள font "தொல்லை" என்பதை தெளிவாக காண்பிக்கவில்லை, முடிந்தால் கதையின் தலைப்பு தெளிவாக தெரியும் படி, வேறு ஒரு "font" உபயோகபடுத்தவும்.

    2) வரபோகும் கார்ட்டூன் ஸ்பெஷல் வண்ணத்தில் வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : ஏற்கனவே அவை திருத்தங்களின் பட்டியலில் உள்ளன ! So no worries !

      Delete
  43. விஜயன் சார், பணி நிமித்தமாக எங்கு சென்றாலும் வாரம் தவறாமல் இங்கு பதிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது பாராட்ட கூடிய விஷயம்! இன்று போல் என்றும் தொடர வேண்டும்.

    ஜில் ஜோர்டன் teaser - Simply super!

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : பெரியதொரு திட்டமிடல் ஏதுமின்றி இங்கும் அங்குமாய் நாம் உலாற்றித் திரிந்த சமயங்களில் சில நல்ல விஷயங்கள் தாமாக ஒரு slot -க்குள் விழுந்ததை நமது அதிர்ஷ்டம் என்று தான் சொல்லுவேன்..! LMS வெளியீட்டின் ட்ரைலர் படலத்தோடு துவங்கிய இந்த ஞாயிறுப் பதிவுப் பழக்கமும் அவற்றுள் ஒன்று ! So அதனை விரயம் செய்திட வேண்டாமே என்ற சிந்தனை தான் !

      தவிர, ஞாயிறுதோறும் இதற்கென நண்பர்கள் நேரம் ஒதுக்கிக் காத்திருக்கும் போது நான் அதற்கான மரியாதை நல்கிடலும் அவசியமன்றோ ?

      Delete
    2. //தவிர, ஞாயிறுதோறும் இதற்கென நண்பர்கள் நேரம் ஒதுக்கிக் காத்திருக்கும் போது நான் அதற்கான மரியாதை நல்கிடலும் அவசியமன்றோ ?//
      Thanks for your understanding sir..

      Delete
    3. கண்டிப்பாக உண்மை சார் ...இப்பொழுது எல்லாம் சனி இரவு தூங்கும் பொழுதே ஏதாவது பிரச்சினை மனதில் ஓடினாலும் ...ஆஹா ...நாளை ஆசிரியர் பதிவு வர போகிறது என்ற. சந்தோச உணர்வுடன் தான் தூக்கம் வருகிறது ...நாளை புது இதழ்கள் சந்தாவில் வரும் என்ற சந்தோச அறிவிப்பு போல ....அதுவும் நான் கடையை திறப்பசற்காக ஐந்து மணிக்கு எழுவதால் அப்போதே அலைபேசி நெட்டை ஆன் செய்து நமது ப்ளாக் வந்து பதிவின் தலைப்பையும் ....அதன் நீள ..அகலத்தையும் :) ஒரு கண்ணோட்டம் மட்டும் இட்டு ...பிறகு அலுவலகம் கிளம்பும் பேருந்தில் ஏறியவுடன் தான் படிப்பது ...காரணம் நமது இதழ்களை படிக்கும் பொழுது எந்த குறுக்கீடும் இல்லாத சூழ்நிலையில் படிப்பது போல தான் இப்போது பதிவையும் படிப்பது ...

      இதை ஏன் விரிவாக சொல்கிறேன் என்றால் தாங்கள் நடுவில் திடீரென வந்தாலும் ஞாயிறு பதிவை விட்டு விடாதீர்கள் ..அன்று நீளத்தையும் குறைத்து விடாதீர்கள் சார் ... :)

      Delete
    4. //இதை ஏன் விரிவாக சொல்கிறேன் என்றால் தாங்கள் நடுவில் திடீரென வந்தாலும் ஞாயிறு பதிவை விட்டு விடாதீர்கள் ..அன்று நீளத்தையும் குறைத்து விடாதீர்கள் சார்//
      +1

      Delete
  44. Impressive. Dear EDI the way of article presentation is improving higher and higher. Nice little word's to express the feelings. It's been a pleasure to read.. Keep rocking...

    ReplyDelete
  45. Dear Mr. Vijayan...This edition fullfills the missing of "Singathin siru vayathil - Flashback " in May books. We welcome the cartton special and as well as the new series!!!!!!!??!!!! (we dont know the details ..but we know that u will select the best as always:).....

    ReplyDelete
    Replies
    1. Comic Rider Arul : நம்பிக்கைக்கு நன்றிகள்...! You won't be disappointed !

      Delete
  46. விஜயன் சார்,
    நேற்றுதான் சென்ற மாதத்து இதழ்கள் மும்பையில் இருக்கும் எனக்கு கையில் கிடைக்கப் பெற்றன. "இராட்சஸக் குள்ளன்" வாசித்து முடித்து விட்டேன். ஏற்கனவே சிறு வயதில் படித்திருந்தாலும், இப்போது வாசிக்கையில் சற்றும் சலிப்பு தட்டவில்லை. காரணம் எழுத்து நடை என்றுதான் சொல்வேன். ஆர்டினி அவ்வப்போது அடிக்கும் நக்கல்கள் (mind voice) , உ.ம். "எஃகு இழைகள் ஒரு ஈயைக்கூட கட்டிப்போட திறனற்றவைகளாகிப் போய் விட்டது", "இப்போது இருக்கும் நிலையில் நொண்டிக்கொண்டு செல்லும் ஒரு சிறு எறும்பைக்கூட தடுத்து நிறுத்த உங்களால் ஆகாது", செமத்தியானவை.

    'காதில் பூ' என்ற ரகத்தில் இந்தக் கதையை விமர்சிக்கும் போது, எளிமையான இந்த கதைத் தளம்தான் டவுசர் வயதில் ஸ்பைடருடன் நம்மை நட்பு கொள்ள செய்திருந்தது என்பதை மறந்து விடக்கூடாது. கதை முழுவதும் ஸ்பைடர் பேசும் வசனங்களில் மிளிரும் தன்னம்பிக்கை, உண்மையோ அல்லது டுபாக்கூரோ கதையில் ஆங்காங்கே தென்படும் விஞ்ஞான ஆச்சர்யங்கள், இளம் வாசகர்களை உற்சாகப் படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

    மொத்தத்தில் "இராட்சஸக் குள்ளன்" மறுபதிப்பு என்பது ஒரு சோடை போகாத முயற்சி.

    ReplyDelete
  47. டியர் எடிட்டர் ஸர்ர்,
    இன்றுதான் எனக்கு இந்த மரத இதழ்கள் வந்து கிடைத்தன. ஹே ஜிங்குசர! என சொல்ல தோணுகிறது எனக்கு மட்டும்தரனர?
    எனக்கு ஜில் ஜோர்டனின் அட்டை படம் பிடித்துள்ளது ஸர்ர். ஒரிஜினலில் உள்ளது போலவே பிர்ரன்ஸின் கொடி வருமர ஸர்ர்? கர்ர்டூன் ஸ்பெஷல் வரவுள்ளது அருமை. ஆனரல் தனியே நரம் முன்பதிவு செய்ய வேண்டுமர அல்லது இதுவும் சந்தரவுகுள் அடங்குமா என்று தயவு செய்து அறியத் தருவீர்களா?

    ReplyDelete
  48. ஜில்லர்ரின் மூலம் பிர்ரன்ஸர ஸர்ர்?

    ReplyDelete
  49. Dear Edi,
    அடுத்த பதிவின்போது நீங்கள் இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் புதிய பதிப்பகத்தின் விபரங்களை வெளியிடும் எண்ணமிருந்தால், உள்ளே பணி நடக்கும்போது பிடித்த புகைப்படங்களையும் மறக்காமல் பதிவேற்றுங்கள். ஆவலாக காத்திருக்கிறேன் ப்ளீஸ்!

    ReplyDelete
  50. @FRIENDS : இப்போதெல்லாம் "டி.வா.ப." ஒரு அடிக்கடி நிகழ்வாகி விட்டதால் இன்றைக்கும் அது அரங்கேறும் என்ற எனது எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை ! ஆர்வங்களின் வெளிப்பாடு ; தம் பார்வைக் கோணங்களோடு எனது தீர்மானங்கள் ஒத்துப்போகா வேளைகளில் விதம் விதமாய் வெளிப்படும் ஆதங்கங்கள் - என என்ன தான் எனக்கு நானே விளக்கம் சொல்லிக் கொண்டாலும் கூட சில தருணங்களில் எனது நிலைப்பாடையும் கொஞ்சமே கொஞ்சமாய் கருத்தில் கொண்டிட நண்பர்கள் முனைந்தால் தேவலையே என்ற எண்ணம் தலைதூக்காதில்லை !

    Disappointed ...ஏமாற்றி விட்டீர்கள் ; disgusting ....இத்யாதி..இத்யாதி வார்த்தைப் பிரயோகங்களும் சரி ; sarcasm இழையோடும் பதிவுகளும் சரி - மறு பக்கத்திலுள்ள உணர்வுகளை எத்தனை தூரம் உணர்ந்தவை என்று தெரியவில்லை எனக்கு !

    ஒவ்வொரு முறையும் ஒரு முறையான திட்டமிடலை முன்வைத்து அதனைப் பின்பற்றி டாப் கியரில் ஜாலியாகச் சவாரி செய்திட - நம் முன்னே காத்திருப்பது 6 வழிச் சாலையல்லவே ! நாம் பயணிக்கும் பாதைகளில் உள்ளவை குட்டியான குட்டையா அல்லது ஆனை பிடிக்கும் பள்ளமா ? என்பதை போகும் சமயங்களில் நாமாகவே தான் அறிந்து கொள்ள வேண்டுமேயன்றி நமக்கொரு வழிகாட்டி எங்கேயும் கிடையாது ! So இந்தப் பயணத்தில் தடுமாற்றங்கள் இருக்கத் தான் செய்யும் ; சில அனுபவப் பாடங்கள் தவிர்த்தல் சாத்தியமே ஆகிடாது !

    ஆயிரம் ரூபாய்க்கானதொரு இதழைத் திட்டமிடும் பொழுது அதன் சிரமங்கள் ; முதலீட்டுச் சிக்கல்கள் ; தயாரிப்பு இடர்கள் அனைத்தையும் முன்கூட்டியே கணித்தல் பத்திரிகையுலக ஜாம்பவான்களுக்கு வேண்டுமானால் முடிந்திருக்கலாம் ! இருக்கும் வசதிகளுக்குள் 12 மாதங்களுக்கு 47 இதழ்களைத் திட்டமிட்டு விட்டு இடையிலும் புதிதாக இதழ்களை இணைத்திட முனையும் பொழுது - அது அவசியப்படுத்தும் கூடுதல் பணிகள் என்னவாக இருக்கும் என்பதை அட்சர சுத்தமாய் புட்டு வைக்க தேர்ந்த கில்லாடிகளுக்கு வேண்டுமானால் சாத்தியமாகிடலாம் ! நாம் ஜாம்பவான்களின் பட்டியலிலோ ; கில்லாடிகளின் பட்டியலிலோ இடம் பிடிக்கும் வேட்பாளர்கள் அல்ல எனும் போது இது போன்ற சிற்சிறு think as you go நிகழ்வுகள் இருந்திடவே செய்யும் !

    தவிரவும் ஒவ்வொரு முறையும் அச்சிடும் பிரதிகளில் நாம் விற்பது மூன்றில் ஒரு பங்கே ; கிட்டங்கிகளில் அடுக்குவதே பாக்கி எனும் போது - நீங்கள் ஐநூறு ; ஆயிரமென வாங்கிடத் தயாராகவே இருப்பினும் கூட - நான் அதைப் போல இன்னமும் 2 மடங்குப் பணத்தைப் புரட்டும் நெருக்கடியில் இருப்பவனல்லவா ? So பரவலான எதிர்பார்ப்பின்படி நானூறோ / ஐநூறோ என்றொரு விலையில் கார்ட்டூன் ஸ்பெஷல் இதழை நீங்கள் வாங்கத் தயார் எனினும், நான் அதைவிட இரு மடங்குத் தொகையை / பிரதிகளை முடக்கிடவும் தயாராகி இருந்தாகும் கட்டாயம் எழுந்திடுமே ? அந்தப் பணத்தைக் கொண்டு மூன்று மாதங்களுக்கான நார்மல் இதழ்களை சிரமின்றி ஒட்டி விடலாமே என நான் கருதினால் அது உங்களை ஏமாற்றுவதற்கு சமமாகிடுமா ?

    அது மட்டுமன்றி - இன்றைக்குக் கடனுக்கும் இதழ்களை விற்பனை செய்யும் ஒரு நிலையில் - மாதாந்திர இதழ்கள் அனைத்தையும் எதிர்பார்த்திடுகிறார்கள் நமது விற்பனையாளர்களும் ! இது போன்ற விலை கூடுதலான இதழ்களை நாங்கள் அனுப்பிடாது விட்டால் அதுவே ஒரு சிக்கலுக்கு / மனஸ்தாபத்துக்கு வழி வகுத்து விடுகிறது ! விலை கூடுதலான இதழ்களை அனுப்பினால் கடன் தொகை 'டமக்'கென கூடிப் போகிறது ; அனுப்பாது போனால் தலைவலிகள் உருவாகின்றன எனும் போது விலைகளை ஒரு நிதானத்துக்குள் வைத்திருக்க இதுவும் ஒரு காரணமாகிடுவதை நான் disappoint செய்து விட்டதாய் எண்ணும் நண்பர்களுக்குப் புரிய வைப்பது எவ்விதம் ?

    சரி...நானும் எப்படியோ உருண்டு, பிரண்டு கடனை உடனை வாங்கி தாக்குப் பிடித்து விடுகிறேன் என்றே வைத்துக் கொண்டாலும் - நம்மால் தயாரிக்கக் கூடிய கதைகளின் எண்ணிக்கை எத்தனையாக இருந்திட முடியும் ? ஒவ்வொரு கதையையும் எழுதிட குறைந்த பட்சம் 5 நாட்கள் எடுக்கிறது ; அதன் பின்னே அதனை குறைந்த பட்சம் 3 தடவைகளாவது தலை முதல் கால் வரை review செய்திடாது DTP க்கு நான் ஒப்படைப்பதில்லை ! இந்த நிலையில் எட்டுக் கதை / பத்துக் கதை combo ஒன்றினை ஒன்றரை மாத அவகாசத்துக்குள் நிஜமாக்குவதெனில் நான் தற்காலிகமாய் பேண்டுக்கு மேலே ஜட்டியைப் போட்டாக வேண்டும் ; அல்லது நீங்கள் எதிர்பார்க்கும் தரங்களில் compromise செய்திட வேண்டும் ! இதனில் முன்னது எனக்கு சாத்தியமில்லை ; பின்னதுக்கு நீங்களும் சரி / நானும் சரி - ஒ.கே. அல்ல எனும் போது ஒரு மத்திம நிலை தேடல் தானே இந்நேரத்தின் தேவை ? அதைச் செய்ய தானே நானும் இப்போது எத்தனிக்கிறேன் ?

    "டி.வா.ப." வேண்டாமென்று சொல்லவில்லை guys - விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன் நானென்ற கனவுகள் நிச்சயமாய் என்னிடமில்லை ! ஆனால் கீ-பேடை disgust -ல் தட்டும் முன்பாக அதன் மறுபக்கமிருப்பவன் நிறைய கனவுகள் கொண்டிருந்தாலும் ஒரு சாதாரண ஆசாமி மட்டுமே என்பதை நினைவில் கொள்ள முயற்சிக்கலாமே -ப்ளீஸ் ?!

    ReplyDelete
    Replies
    1. விஜயன் சார், உங்களின் நிலைமை எங்கள் அனைவருக்கும் புரிகிறது! காமிக்ஸ் வராமல் இருந்த நாட்கள் போய் இன்று மாதம் தவறாமல் வருவதே என்னை பொறுத்தவரை மிக பெரிய விஷயம், அதுவும் மாதம் குறைந்தது 2-3 காமிக்ஸ்; குறைந்த வாசக வட்டம் உள்ள நமக்கு மிக பெரிய விஷயம்; நாம் இதனை பற்றி சந்தோஷபட வேண்டும். இதனை நமது நண்பர்கள் இன்னும் புரிந்து கொள்ள வில்லையே என்பது எனக்கும் வருத்தம் தான்.

      எனக்கு மாதம் தவறாமல் புத்தகம்கள் வந்தால் போதும், அதே நேரம் நமது வாசகர்கள் அதிகரிக்க வேண்டும்.

      எனது பக்கத்து வீட்டு நண்பர் ஒருவரிடம் நமது காமிக்ஸ் வருகிறது என்று சொன்னவுடன் நமது புத்தகம்களை பார்த்த பின் அவர் சொன்ன விஷயம், இந்த காமிக்ஸ் இன்னும் வருவது ஆச்சரியம், இது தொடர்ந்தவரணும் என்று கூறினார்.

      Delete
    2. //விஜயன் சார், உங்களின் நிலைமை எங்கள் அனைவருக்கும் புரிகிறது! காமிக்ஸ் வராமல் இருந்த நாட்கள் போய் இன்று மாதம் தவறாமல் வருவதே என்னை பொறுத்தவரை மிக பெரிய விஷயம், அதுவும் மாதம் குறைந்தது 2-3 காமிக்ஸ்; குறைந்த வாசக வட்டம் உள்ள நமக்கு மிக பெரிய விஷயம்; நாம் இதனை பற்றி சந்தோஷபட வேண்டும். இதனை நமது நண்பர்கள் இன்னும் புரிந்து கொள்ள வில்லையே என்பது எனக்கும் வருத்தம் தான். ///

      அதே அதே!

      Delete
    3. Responses so heart felt. I only wish that the so called special issue fans, take some sense, before registering such harsh comments.

      We are with you Edi. Your decision is right. As I always repeat, time and again, the most important factor for me - is seeing 3 to 4 variety of Comics, every month - far more than seeing specials here and there. Befitting,a small publisher like us with a niche reading crowd.

      Power to You, Dear Edit.

      Delete
    4. //விஜயன் சார், உங்களின் நிலைமை எங்கள் அனைவருக்கும் புரிகிறது! காமிக்ஸ் வராமல் இருந்த நாட்கள் போய் இன்று மாதம் தவறாமல் வருவதே என்னை பொறுத்தவரை மிக பெரிய விஷயம், அதுவும் மாதம் குறைந்தது 2-3 காமிக்ஸ்; குறைந்த வாசக வட்டம் உள்ள நமக்கு மிக பெரிய விஷயம்; நாம் இதனை பற்றி சந்தோஷபட வேண்டும். இதனை நமது நண்பர்கள் இன்னும் புரிந்து கொள்ள வில்லையே என்பது எனக்கும் வருத்தம் தான். ///

      சேம் பீலிங்ஸ்

      Delete
    5. வருடம் இரண்டு ஸ்பெஷல் 400+ விலையில் என்பதே சரியான பாதை எ.எ.க. இந்த வருடத்துக்கு அந்த quota வை மி.ம., Lion 250 எடுத்துக் கொண்டு விட்டது. இனி அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் மி.ம. ஒரு one-off என்பதும் இனி அப்படிப்பட்ட இதழ் வருவது சாத்தியமில்லை என்பதும் மனதுக்கு சங்கடமாகவே உள்ளது.

      Delete
    6. Dear Editor,

      நிறை:
      Natural Shade paper quality மிக நன்றாக உள்ளது. Both "மலைக்கோட்டை மர்மம்" and "இராட்சசக் குள்ளன்" looks excellent like originals... Please release all upcoming B&W issues in the Natural Shade paper only.

      குறை:
      இரு வேறு கதாநாயகர்களை அல்லது இரு வேறு genre கதைகளை ஒன்றிணைப்பது வேறு எங்கும் வழக்கத்தில் இல்லாத பொழுது நம் மட்டும் ஏன் செய்ய வேண்டும்? comic lover கூறியது போல பாக்ஸ் செட்
      நல்ல idea -வாக உள்ளது. NBS போன்ற புத்தகங்களை வெளியிட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் oneshot comicsஒ களில் இருந்து தேர்வு செய்து வெளியிடலாம். இப்பொழுது மார்டின் மிஸ்ட்ரி கதைகளை collection ஐ தனியாக arrange செய்ய முடியவில்லை. ஒரு கதை NBS இல் உள்ளது. டெக்ஸ் வில்லரும் அப்படியே.



      Delete
    7. டியர் எடிட்டர்,

      எனக்கும் 200 விலை புத்தகங்கள் சம்மதமே - மி ம வை (மே வரவுகளுடன் சேர்த்து) தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு நான் அலைவதைப் பாரத்து 'இதுக்கு ராமாயணம் படிச்சா போற வழிக்காவது ஆகும்' என்று எங்கள் வீட்டு 'இன்னும் டிக்கெட் எடுக்காதோர் சங்கம்' உறுப்பினர்கள் பண்ணும் ரவுசு தாங்க முடியவில்லை :-)

      ஒரு முதல் முயற்சியை பாக்ஸ் செட் போட்டு (கேட்டு) பார்த்து விடுவோமே என்ற நப்பாசைதான் .. ! ஹ்ம்ம் .. அதுக்கும் ஒரு டைம் வரும் ...!!

      Delete
    8. ///எங்கள் வீட்டு 'இன்னும் டிக்கெட் எடுக்காதோர் சங்கம்' உறுப்பினர்கள் பண்ணும் ரவுசு தாங்க முடியவில்லை///

      LOL :D

      Delete
  51. விஜயன் சார், தற்சமயம் வரும் மறுபதிப்பில் எனக்கு பிடித்த விஷயம், சிறுவயதில் படிக்காத அல்லது பக்கத்து வீட்டில் வாங்கி படித்த புத்தகம்கள் வருவது.

    அடுத்த மறுபதிப்பு லிஸ்டில் உள்ள ஜானி நீரோ கதை தவிர மற்ற கதைகள் எதுவும் படித்து இல்லை! மிகவும் ஆவலுடன் உள்ளேன்.

    அடுத்த வருடம் (2016) மறுபதிப்பு திட்டமிடும் போது இது போன்ற சிறந்த நமது "கடந்த" மறுபதிப்பில் வராத கதைகளை வெளி ஈட வேண்டும். அதே போல் இந்த புத்தகம்கள் தற்போது வரும் அளவில், தரத்தில் வர வேண்டும். விலையை முடித்தால் குறைக்கவும், அப்படி முடியாவிட்டால் இதே விலையில் கொடுக்கவும்.

    ReplyDelete
  52. Vijayan @ //ஏற்கனவே அவை திருத்தங்களின் பட்டியலில் உள்ளன ! So no worries !//
    புதிய fontடில் கதையின் தலைப்பு நன்றாக உள்ளது.

    ReplyDelete
  53. விஜயன் சார், ஜூன் மாத புத்தகம்களை இந்த மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அவரசபடாமல், அவை சில நாட்கள் தாமதமாக வந்தாலும் தரத்துடன் வருமாறு பார்த்து கொண்டால் போதும்.

    ReplyDelete
  54. விஜயன் சார், வரும் கார்ட்டூன் சிறப்பிதழில், நமது வழக்கமான காமெடி ஹீரோ இல்லாத புதிய நாயகர்களுடன் வெளி இட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  55. விஜயன் சார் ....உங்கள் நிலைமை கண்டிப்பாக உணர முடிகிறது ...ஆனாலும் பாவி மனம் கேக்க மாட்டேங்கது ...


    என்னிக்கு தான் எங்களுக்கு திருப்தி வருகிறது ...


    பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்து கொண்டு இருக்கும் போது நாம் செல்ல கூடிய பேருந்து எப்படா வருமுன்னு ..ஏதாவது வராதா ன்னு காத்துகிட்டு இருப்போம் ..வந்தா கூட்டமா இருந்தாலும் பரவாயில்லை ஏறிக்கலாம் ஓரமா நிக்கலாம்ன்னு ஏங்குவோம் ...ஏறிக்கிட்டா ...உட்காரா இடம் கிடைக்காதா ன்னு ஏங்குவோம் ....உட்கார இடம் கிடைத்தா ஜன்னலோரம் சீட் கிடைச்சா பரவாயில்லைன்னு ஏங்குவோம் ...

    இப்படி பஸ் சீட்டுக்கே ஏங்கற மனசு காமிக்ஸ்க்கும் ஏங்கி போயிறது சார் ..தப்பா நினைக்காதீங்க ..:)

    ReplyDelete
    Replies
    1. அடடா! அடடடடா!! "ஆசை என்னிக்கும் அடங்கவே அடங்காது"ன்றதை எவ்வளவு அழகா பேருந்துல பயணிக்கவச்சு விளக்கிட்டீங்க தலீவரே! போராட்டக்குழு பெருமைப்படுது தலீவரே!

      Delete
    2. ஹா ..ஹா ..எடிட்டர் சார் சொல்ல வர்றது இன்னான்னா ..மகளிர் மட்டும் பஸ்ஸில் தலீவர் பயணம் செய்ய நினைக்க கூடாது அப்டீங்கறதுதான் ;-)

      Delete
    3. என் மனசிலே இருந்ததும் இதே தான் தலீவரே .
      உங்கள் சிரமம் புத்திக்கு தெரியுது;
      ஆனால் மனசு கேட்கமாட்டேன் என அல்லாடுது சார் . சிரமத்திற்கு மன்னிக்கவும் சார்

      Delete
    4. த..தலீவரே! லேடீஸ் பஸ்ல பயணம் பண்றதுக்கா இவ்வளவு உருக்கமா அறிக்கை விட்டீங்க? சங்கத்தின் இறையாண்மையை கவலைக்கிடமாக்கிட்டீங்களே தலீவரே... :D

      Delete
    5. செயலாளர் அவர்களே ..என்னை போய் சந்தேகபடலாமா ...அதுவுமில்லாம பேருந்தில் ஆறு வயது பெண் அருகில் வந்தாலே பின் சீட்டுக்கே வந்துறுவேன் நான் ..என்னை போய் ...:(

      Delete
    6. அதுவுமில்லாமல் நம்ம ஊர்ல எங்கே மகளிர் பேருந்து விடறாங்க ..அது மெட்ராஸ்ல மட்டும் தானே ...ஒரே முறை கூட்டிட்டு போனீங்க ..அப்பவும் கையை பிடிச்சுட்டே இழுத்துட்டு வந்திட்டீங்க ....கிர் ...:(

      Delete
    7. செயலாளர் அவர்களே ..என்னை போய் சந்தேகபடலாமா ...அதுவுமில்லாம பேருந்தில் ஆறு வயது பெண் அருகில் வந்தாலே பின் சீட்டுக்கே வந்துறுவேன் நான் ..என்னை போய் ...:(

      Delete
    8. விடுங்க தலீவரே! இன்னிக்கு செல்வம் அபிராமியின் காரியங்கள் ஜெயமாகனும்னு இருந்தா மாத்தவா முடியும்? ;)

      நமது போராட்டக் குழுவின் மகளிரணிக்கு ஆள் சேர்க்கும் படலம் எந்த நிலையிலுள்ளது தலீவரே? ;)

      Delete
  56. ////Responses so heart felt. I only wish that the so called special issue fans, take some sense, before registering such harsh comments./// wow , ரஃபீக் நீங்கள் தொடர்ந்து கமெண்ட்ஸ் இடுவது மகிழ்ச்சி யான ஒன்று . நிச்சயமாக ஆசிரியருக்கு மனவருத்தம் தருவதற்காக போடப்பட்ட வரிகள் அல்ல அவைகள் , மனதில் பட்டதை ஆசிரியரிடம் கேட்டு விடுவோமே என்ற ஆதங்கம் தான் . எவ்வாறு இருப்பினும் அதற்காக வருந்துகிறேன் .நீங்கள் இங்கே தொடர்ந்து வருவதற்காவது என்னுடைய மற்றும் மற்ற நண்பர்களின் கடினமான வார்த்தைகள் உபயோகமானது என்ற வகையில் திருப்தியே .

    ReplyDelete
    Replies
    1. Dear Vijay,

      No hard feelings. I was just against this mass request of special issues, which will financially break down our small publishing house. But then again, I have too many differences with Edi, in terms of his choices over Translation, Print Quality, etc. But budget, is one of the things where I would like to take his side, because that's sensible decision.

      Excuse me for replying in English. Out of Station, with just phone access. So saving myself the trouble from having to do Tanglish :-)

      Delete
    2. டியர் ரஃபீக் , காமிக் லவர் ராகவன் ஜி,
      நான் ஏன் கதம்ப ஸ்பெசல் க்கு ஏங்குகிறேன் , எப்போதும் அதையே கேட்கிறேன் என்றால் சற்றே பின்னோக்கி பார்க்க வேண்டும் . நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சேலம் ,பெரிய புதூர் என்ற கிராமத்தில் தான் .ஏழ்மை + பின்தங்கிய ஏரியா ,வீட்டில் மற்றும் அக்கம் பக்கம் படித்தவர்கள் இல்லை போன்ற வற்றால் 9ம் வகுப்பு வரை கதைப்புத்தகங்கள் என்றாலே என்னவென எனக்கு தெரியாது . St Paul's பள்ளியில் 10ஆம் வகுப்பில் ஒருவன் முதல் முறையாக நோட்டிற்குள் ஒரு புத்தகத்தை மறைந்து வைத்து படித்து கொண்டு இருந்தான் , பிடிங்கி பார்த்தால் ப்ளாஸ் கார்டன் என்ற ஒரு காமிக்ஸ் புத்தகம் . அதை அவன் படிக்க தந்தான். பிறகு தான் சொன்னான் இப்படி ராணி காமிக்ஸ் னு ஒண்ணு வருது இதுமாதிரி கதைகள் வரும் என. அவன் தான் எனக்கு அன்று முதல் கடவுள் , பழைய ராணி காமிக்ஸ் கள் பல அவன் மூலம் படித்தேன் . இது 1990ல் நடந்தது . அடுத்து 2வருடங்களுக்கு அவன் தான் என்னுடைய குரு. +2 நோட்ஸ் வாங்க பழைய புத்தக கடைக்கு கூட்டி போனான். அங்கே ராணி காமிக்ஸ் ல வந்த சில ஜேம்ஸ் பாண்ட் புத்தகங்கள் வாங்கி தந்தான். அந்த கடைக்காரன் இதை விட சூப்பர் புக் இருக்குன்னான். ஆனால் ராணி காமிக்ஸ் 0.75காசு , இது 3ரூபாய் ன்னான். அய்யோ 6புக்கோட காசு போட்டு 1வாங்கனுமா? என குழப்பம் . சரின்னு வாங்குனேன் . ஏதோ டெக்ஸ் வில்லர் தோன்றும் பழி வாங்கும் புயல் - னு ரூபாய் 6விலையில் இருந்த புக்கை 3ரூபாய் க்கு குடுத்தான் . 3ரூபாய்யா என மனசே இல்லாமல் தான் வீட்டுக்கு வந்தேன் . படிக்க படிக்க ஆச்சரியம் , சந்தாசம் ,, பெரிய கதை , வித்தியாசமான ஹீரோ , ஒரு ராணுவத்தையே ஜெயித்த போராட்டம் என புதிய அனுபவம் . அன்று முதல் என் கடவுள் மாறிட்டார் . டெக்ஸ் வில்லர் தான் அது என சொல்லவும் வேண்டுமோ.......அந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் பெயரும் விஜயன் என இருக்கவும் , அட நம்ம பேரு என ஒரு இனம் புரியாத பாசம் அந்த பேரின் மேல் ஒட்டிக்கொண்டது .
      தொடர்ந்த நாட்களில் ஞாயிறு தோறும் அந்த பழைய புத்தக கடைக்கு படை எடுப்புதான் . சில டெக்ஸ்வில்லர் கதைகள் அங்கே கிடைத்தன. கழுகு வேட்டை,, ரத்த வெறியர்கள் , பவள சிலை மர்மம் ,, ட்ராகன் நகரம் எளிதில் கிடைத்தன.சில நண்பர்களும் அங்கே அறிமுகமானார்கள். அதில் ஒரு நண்பர் சொன்னார் ,இங்கே கிடைக்கும் மற்ற புத்தகங்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள்,, அதில் பாருங்கள் ரசிகர்களின் அட்ரஸ் இருக்கும் அவர்களிடமும் ,இங்கே வரும் மற்ற நண்பர்களிடம் கூட எக்ஸ்சேஞ் செய்து உங்களுக்கு பிடித்த டெக்ஸ் புத்தகங்களை வாங்கலாம் என்று ஒரு அற்புத வழியை காண்பித்து கொடுத்தார் . இந்த வகையில் நாய்அலை பேய் அலை என அலைந்ததன் பயனாக பழிவாங்கும் பாவை, வைகிங் தீவு மர்மம் , அதிரடி கணவாய் , டெக்ஸின் அறிமுக தலை வாங்கி குரங்கு போன்றவை கிடைத்தன. ஓரிரு மாதங்கள் கழித்து ரூபாய் 20க்கு லயன் சென்சுரி ஸ்பெசல் வரும் என தகவல் தெரிய ஆவலானேன். கடையில் 20ரூபாய் கொடுத்து வாங்குவது இமாலய முயற்சி என்னைப் பொறுத்து . அந்த புத்தகத்தை வாங்கிய அன்று கிடைத்த சுகம் , மகிழ்ச்சி இதுவரை கிட்டியதில்லை. அந்த புத்தகத்தில் இதுவரை வந்த லயன் காமிக்ஸ்களின் பட்டியல் இருந்தது. அந்த பட்டிலை சரியாக சொன்ன 9பேருக்கும் பரிசு வழங்கப்பட்டு, அவர்களின் அட்ரஸ்சும் இருந்தது. அவர்கள் எனக்கு ஜாம்பவான் களாக தோன்றினார்கள் .
      அந்த லிஸ்ட்ல கோடைமலர் 86, தீபாவளி மலர் 86, கோடைமலர் 87, லயன் சூப்பர் ஸ்பெசல் 87 ( தீபாவளி மலர் 87என பிறகு தெரிந்து கொண்டேன் ) என்ற வார்த்தைகள் நெஞ்சில் மையம் கொண்டன. ரூபாய் 5க்கு இத்தகைய இதழா ,இத்தனை கதைகளா என ஆச்சரியம் அளித்தன. அவைகளை அடைய பைத்தியம் ஆனேன் .................தொடர்ச்சி மதியம் .

      Delete
    3. டெக்ஸ் விஜய்,

      நம் எல்லாருக்கும் ஒரு பிளாஷ் பேக் இருப்பது இயல்பே - நான் முன்னமே இங்கு பகிர்ந்துள்ளபடி ஒரு மூன்று ரூபாய் விலை சூப்பர்மேன் காமிக்ஸ் ரயில் நிலையத்தில் வாங்க முடியாமல் (மாதம் 30-40 காமிக்ஸ்கள் வந்த நிலையினில் ஒரு அரசு உழியரால் எவ்வளவுதான் தனது மகனின் காமிக்ஸ் ஆர்வத்தை தணிக்க இயலும்?) வருந்திய அந்த நாட்களது ஏக்கம் 2011'ன் ஒரு மேகங்கள் சூழ்ந்த ஒரு நியூயார்க் பிற்பகலில் ஒரு புல் செட் ஆங்கில XIII கையில் வந்ததும் கரைந்தே போனது).

      இப்போ நாம் மொபைலில் கமெண்ட், கிண்டிலில் 'கள்ள' காமிக்ஸ் :-) என்று அசுர வேகத்தில் மாறி வருகிறோம் - எனும்போது பாக்ஸ் செட் நாம் கோறுவது வியப்பான சமாச்சாரம் இல்லியே? இப்பொழுதே புத்தகங்கள் அழகாக ஒரு பாக்ஸ்ல் தானே வருகிறது? அந்த பாக்ஸ் கொஞ்சம் வண்ணம் தீட்டப்பட்டு, கெட்டியாக்கப்ப் பட்டால் பாக்ஸ் செட் ரெடி - தனி இதழ் ஆர்வலர்களுக்கு தனி இதழ்களும் சேர்ந்துதான் வேண்டும் என்பவர்களுக்கு பாக்ஸும் ... ஒரு WIN-WIN விஷயம்தானே நண்பரே !

      Delete
    4. அன்று 1980 களில் rs.5/- க்கு புத்தகம் என்றால் அனைவராலும் வாங்க இயலாது ஒரு சிலரால் மட்டுமே வாங்க இயலும் ஏனெனிலல் ஒரு மாதத்திற்கான பாக்கெட் மணி rs.4 குள் தான். editorம் அன்றைய காலகட்டத்தில் அது போன்ற இதழ் வரவதற்கு முதலிடு செய்ய பணத்திற்கு அலைந்தரோ !1990 களில் இது நிலை தான் rs.20,50 விலையில் இதழ் வெளியிட்டபோதும், 2000தில் rs.100க்கு இதழ் வெளியிட்டபோதும் , 2010ல் இரத்தபடலம் Rs.200/- விலையில் அவர் வெளியிட பட்ட சிரமங்கள் நாம் அறிந்ததே அதனால் தான் இரத்தபடலம் வண்ணத்தில் வெளியிட திட்டவட்டமாக மறுக்கிறார். மின்னும் மரணம் limited edition என்பதால் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம். ஆகவே அவரின் சிரமங்களை புரிந்து கொண்டு வாசகர்களாகிய நாம் ஒத்துழைப்போம்

      Delete
    5. //இப்பொழுதே புத்தகங்கள் அழகாக ஒரு பாக்ஸ்ல் தானே வருகிறது? அந்த பாக்ஸ் கொஞ்சம் வண்ணம் தீட்டப்பட்டு, கெட்டியாக்கப்ப் பட்டால் பாக்ஸ் செட் ரெடி -///

      LOL. :D

      Delete
    6. ..... விஜய், (ஹி ஹி அதாவது ஈரோடு விஜய்),

      ஏதாவது உருப்பிடியா எனக்கே தோணி எழுதினா வந்து LOL போட்டு லொள்ளு பண்ணி விட்டுட்டு போய்டுங்க .. ஹ்ம்ம் ... :-) :-)

      Delete
    7. @ மாயாவி

      :))) என் பேச்சைக் கேட்டு எடிட்டரே கிறங்கிப்போய் நிக்கிற மாதிரி இருக்கே! ஒருவேளை, எடிட்டருக்கு எது பிடிக்கலைன்னாலும் தூங்கிடுவாரோ? ;)

      Delete
    8. ..............பாலாய் போன படம் பார்க்க ஆசைப்பட்ட கேடு கெட்ட மனதை நொந்து கொண்டே ,அந்த புத்தக கடைக்காரன் ட்ட புக்குகளை எடுத்து வைங்க ஒரு மணி நேரத்தில் வருகிறேன் என சொல்லி கிளம்பினேன். சொன்ன டைமல வர்லனா என்னைப்போன்ற அலையும் ஏதாவது ஒரு கழுகு கொத்திட்டு போயிடுமே என்ற பயத்தில் பக் பக் என நடுங்கி கொண்டே சைக்கிளை அழ்த்தினேன். என்னுடைய வரலாறு புவியியலில் அன்றுதான் மிக வேகமாக சைக்கிள் ஓட்டினேன் . 7ஏ நிமிடங்களில் சேலம் டவுன் ஸ்டேட் பாங்கு பின்புறம் உள்ள பழைய புக் கடையில் இருந்து சாராதா கல்லூரி பின்புற ரோட்ல 2கிமீ தொலைவில் உள்ள எங்கள் ஊரை அடைந்தேன் . வீட்ல போனால் காசு கொட்டி கடக்கிர மாதிரி ,அங்கயும் ஒண்ணும் கிடையாது . ஆனால் இந்த சமயத்தில் +2ல் ஓரளவு நல்ல மார்க் வாங்கி இருந்ததால் நான் கேட்கும் சமயம் அப்பா காசு தருவார் ஆனால் 10ரூபாய் க்கு மேல் தர மாட்டாரு . ஒரே வழி என் தங்கைகள் தான் ,3 தங்கைகளிடமும் கெஞ்சி கூத்தாடி அவர்களின் உண்டியல் ல இருந்து 30ரூபாய் வாங்கி (அவர்கள் சொல்லும் போதெல்லாம் வளையல் கடைக்கு கூட்டி செல்ல வேண்டும் என்ற பயங்கரமான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட பிறகே பணம் கை மாறியது ) கொண்டு பசியில் மீண்டும் சாப்பிடாமல் கூட பறந்து போய் சேர்ந்தேன் பழைய புக் கடைக்கு . அந்த புத்தகங்களை வாங்கி கொண்டு அருகே உள்ள காந்தி ஸ்டேடியம் சென்று அமர்ந்து ஒரு மணி நேரம் அனைத்து புத்தகங்களையும் ஒரு புரட்டு புரட்டி விட்டு வீட்டிற்கு போனேன் . அந்த வயதில் அந்த புதையல்களை அடைந்தது பெருமகிழ்ச்சி ,அதை வார்த்தைல நிச்சயமாக சொல்ல முடியாது நண்பர்களே.
      என்னுடைய 3வது தங்கை மட்டுமே டெக்ஸ் வில்லர் கதைகளை அனைத்தும் படித்து உள்ளாள் . சமீபத்தில் கூட என மனைவியிடம் அவள் சொன்னாள் - இந்த புக்லாம் வாங்க உங்க வீட்டுக்கார்ரு நாயாக அலைவார் என்று . என் வீட்டுக்காரிக்கு இதெல்லாம் புரியாத புதிர். அதன் பிறகு ரெகுலாராக கடையில் வாங்க ஆரம்பித்து விட்டேன். அடுத்து வந்து லயன் topடென் ஸ்பெசல் ஒரு மறக்க இயலா புத்தகம் . 25விலையில் மீடியம் சைசில் வந்த ஒரு ஹிட். அதில் கூட அறிவிப்பு செய்யப்பட்ட தலை கதை கடைசி நிமிடத்தில் மாறி வேறு ஒன்று வந்தது . அதற்கு அடுத்து வந்த 100ரூபாய் ஸ்பெசல்களின் போது வேலைக்கு சென்று விட்டதால் வாங்குவது எளிதானது ,ஆனாலும் ஆர்வம் சிறிதும் குறையவில்லை . அடுத்து வந்த இரத்த படலம் 200ரூபாய் யில் வந்து கலக்கியது . சமீபத்திய வண்ண ஸ்பெசல்கள், nbs , lms , இப்படி எந்த ஸ்பெசல் வந்தாலும் அது எப்போதும் மெகா ஹிட் தான் . இவைகளை வெளியிட பல்வேறு சிரமங்கள் பட்டாலும் ஆசிரியர் தயங்கியதில்லை. ஆனால் நான் பார்த்து அவரே தயங்கியது மின்னும் மரணம் கலக்சன் தான் ,ஒரே கதை கொண்ட இதழ் சொதப்பி விடுமோ என பயந்து டிபன்ஸ் கேம் ஆடினார் அல்லவா?? .500 புக்கிங் வந்தால் தான் வெளியிடுவேன் என அவர் நிபந்தனை வைக்க காரணம் என்ள???. கதம்ப ஸ்பெசல்களுக்கு ஒரு போதும் அவர் தயங்கியதே கிடையாது . விற்பனையில் ஆகட்டும் கதம்ப இதழ்கள் எப்போதும் சளைத்தவை அல்ல. உடனடியாக விற்கும் . ஆனால் ஒரே கதையில் ஸ்பெசலாக வந்த இரத்த படலம் 5வருடங்கள் ஆனதே விற்க.
      அதேசமயம் 8ஏமாதங்களில் nbs ம் ,6ஏ மாதங்களில் lms விற்று தீர்ந்து கதம்ப ஸ்பெசல்களின் வெற்றியை பறை சாற்றினவே. இது ஒன்று போதாதா கதம்பமா ??கலக்சன் ஸ்பெசலா என முடிவெடுக்க!!!.
      இன்னும் 20ஆண்டுகள் ஆனாலும் கதம்பம் ஸ்பெசல்களின் வரவேற்பு குறையாது ,அதற்காக குரல் கொடுப்பேன் எனவும் சொல்லி முடிக்கிறேன் . நன்றி , நண்பர்களே.

      Delete
    9. மாயாவி சார் இரண்டு க்ளிக் களும் அட்டகாஷ் .

      Delete
    10. @ டெக்ஸ் விஜயராகவன்

      வாவ்! பாலுமகேந்திராவின் கலைப் படத்தை இந்த ப்ளாக்கில் ஓடவிட்டதைப்போல ஒரு உணர்வு! பெளடர் பூசாத இயல்பான எழுத்துநடையை பாராட்டாமல் இருக்கமுடியாது. பிட்டு படம் பார்த்ததைக்கூட வெளிப்படையாக சொல்லும் குணம் ஆச்சர்யப்படுத்துகிறது நண்பரே!

      ( பாக்ஸ் செட்டுக்கு எதிரியல்ல என்றபோதிலும்) நானும் கதம்ப/குண்டு புத்தகங்களின் தீவிர ரசிகனே என்ற வகையில் உங்கள் கதம்பப் போராட்டத்திற்கு நானும் ஆதரவு தருகிறேன்!

      Delete
    11. //( பாக்ஸ் செட்டுக்கு எதிரியல்ல என்றபோதிலும்) நானும் கதம்ப/குண்டு புத்தகங்களின் தீவிர ரசிகனே என்ற வகையில் உங்கள் கதம்பப் போராட்டத்திற்கு நானும் ஆதரவு தருகிறேன்!//

      +1

      பாக்ஸ் செட்டுக்கும்
      +1

      (காமிக்ஸ் எந்த வடிவில் வந்தாலும் வரவேற்க வேண்டியதுதானே.!!!)

      Delete
    12. // கதம்ப ஸ்பெசல்களுக்கு ஒரு போதும் அவர் தயங்கியதே கிடையாது . விற்பனையில் ஆகட்டும் கதம்ப இதழ்கள் எப்போதும் சளைத்தவை அல்ல. உடனடியாக விற்கும் . ஆனால் ஒரே கதையில் ஸ்பெசலாக வந்த இரத்த படலம் 5வருடங்கள் ஆனதே விற்க.//

      @tex vijayaraghavan
      Very valid points, I am also a big supporter of கதம்பம் ஸ்பெஷல்
      பாக்ஸ் செட் பார்க்க நல்லாதான் இருக்கு, ஒரே ஹீரோ கதை அத்தனை பக்கங்கள் படிக்கமுடியுமான்னுதான் தெரியல்ல.
      மின்னும் மரணம் இன்னும் ஒரு பக்கம்கூட படிக்கல, இதே NBS or LMS மாதிரி இருந்தா எப்படி இருந்துருக்கும். ஹும்ம்

      ஒரே கதானாயகனின் புத்தகம் என்றால் Rs 200 மேல் வேண்டாம். கதம்பம் என்றாள் minimum Rs 500, maximum infinity:)

      Delete
    13. To சேலம் Tex விஜயராகவன்

      You had mentioned a lot of history about cocktail specials and it sales then. But its history! We can't always re-live our history for nostalgic purpose. Cocktail specials suits to a weekly children magazine model. We should make necessary changes from a future & mature reading perspective.

      Currently we are exploring different genre of stories, different kind of arts, less censorship than before, stories for different age audience. If we mix everything in a single cocktail special book, it doesn't reach the target audience at the proper level, in a proper way, the creators expect. There are more chances, some genre stories/characters/art get lost, when it is published with other genre or in a cocktail specials like NBS, LMS, to be released Cartoon Special, etc,.

      We can't expect audience to enjoy a Director Hari movie with Director Bala movie together.

      The same goes for even for a lucky luke and a Gil Jordan, when enjoyed separately, than together. Or even some wrong combination of various lucky luke stories together.

      Even the recent Tex willer story Nil Gavani Sudu had a different kind of art & it was great and immersive. If you add this story with another Tex Willer hit story, with a different kind of art, OR in color. How would be the success of Nil Gavani Sudu ? . Even among Tex Willer stories, we can’t have combination.

      Even with another recent combo Diwali special of Tex; it would have been greater, if the second story in that book had come in an individual release.

      XIII collection & recent Blueberry collection are of the same story/art. If the budget/sales permit’s, we can have such kind of collection editions in future.

      It’s not only about the budget & the number of pages. It’s about proper reach/enjoyment of the different genre characters, stories and art kinds.

      If the budget permits, we should ask for books with the original art size, starting with Tex willer; instead of asking for cocktail specials.

      Thanks!

      Delete
    14. டெக்ஸ் விஜய் ராகவன்.அடேயப்பா.!என்னம யோசிக்கரீங்க.!அருமை "ஏக்"தம்மில் படித்துவிட்டேன்.நீங்கள் கூறியது 100%உண்மை.ஆனால் என்ன செய்வது நமது வாசகர் வட்டம் மிககுறுகியது .நமது எடிட்டர் .,விற்பனை,மற்றும் பெரும்பான்மை வாசகர்களின் ரசனை ஆகியவை கொண்டு முடிவு எடுக்கிறார்.அவரும் மாடஸ்டி ரசிகர் என்றபோதும் எதிர்ப்பு அதிகமாக இருந்தால்.மனதில் மட்டுமே இடம் என்று கூறிவிடுவாரோ என்று பயந்துதான் இதில் மட்டும் நச்சரிக்கிறேன்..மற்றபடி எல்லா கதைகளும் ஓ.கே."த்ரிஷா இல்லைன்னா திவ்யா"

      Delete
  57. கார்ட்டூன் ஸ்பெஷலுக்கு முன் பதிவு அவசியமெனில் அதனை ஜூன் முதல் அரம்பித்து விடலாமே !

    ReplyDelete
  58. கதைகள் 4 ஆக இருந்தாலும் சிறந்த தரமான கதைகளை தேர்ந்தெடுக்கவும் ...

    இந்த வருடத்திற்குள் ஒரு கதம்ப special வெளியிடுங்கள் சார் ..

    ReplyDelete
  59. எங்கள் வீட்டு 'இன்னும் டிக்கெட் எடுக்காதோர் சங்கம்' உறுப்பினர்கள் பண்ணும் ரவுசு தாங்க முடியவில்லை :-)

    ராகவன் சார் ....ஹாஹா ....:):):)

    இந்த தடவயாவது உங்களை புத்தக காட்சியில் பார்க்க முடியுமா என்று பார்க்கிறேன் ...:)

    செயலாளர் அவர்களே

    நமது சங்க மகளிர் அணி தலைவராக தாங்களே உள்ளதால் அதற்கான பொறுப்பு. தங்கள் வசமே ...:)

    மாயாஜீ ....இங்கே க்ளிக் ..அருமை :)

    ReplyDelete
  60. டெக்ஸ் விஜய் அழகான மலரும் நினைவுகள் ...அருமையான எழுத்து நடை ...பாராட்டுக்கள் ..
    இப்பொழுது கூட கஷ்டப்பட்டு குண்டு புக்கை வாங்கினாலும் அது கையில் வந்தவுடன் அதுவும் கதம்ப இதழாக இருந்தால் ஏற்படும் ஆனந்ததிற்கு அளவே இல்லை என்பதும் உண்மை ..

    ReplyDelete

  61. டெக்ஸ் விஜயராகவன் என்ற பெயர் உங்களுக்கு பொருத்தமான ஒன்றுதான்.
    டெக்ஸ் கதைகளை நீங்கள் சேகரித்த விதத்தை நேரில் பார்த்த உணர்வு., உங்கள் கட்டூரையை படிக்கும்போது ஏற்பட்டது. வாழ்க உமது காமிக்ஸ் காதல். ஹேட்ஸ் ஆஃப் "டெக்ஸ் "விஜயராகவன்.

    ReplyDelete
  62. வேதாள மாயாத்மா.,
    இரண்டு இங்கே க்ளிக் களும் ஜுப்பரு.!!!

    ReplyDelete
  63. நீண்ட நாள் ரெகுலர் வாசகர்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தால் இந்த தளம் ரொம்பவே ஆரோக்கியமாக இருக்கும் என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா ?

    பயங்கர ஜொல்லு பார்ட்டிகளாக அல்லவா கமெண்டு போடுகிறார்கள் ?!

    யாராவது அகப்படுவார்களா என்று அலைவது போல் கமெண்டு ஒவ்வொன்றும் தொடர்ச்சியாக விழுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை :(

    இது காமிக்ஸ் சம்பந்தமான தளம் தானே ?!

    ReplyDelete
    Replies
    1. இரண்டு வாசகர்களுக்கு மகளிர் அணிக்கு ஆள் புடிக்க வேண்டுமாம் ; இன்னொருத்தர் B.F படம் பார்த்ததை இங்கு பகிரங்கமாக கமெண்டுவாராம் ?!

      என்னய்யா நடக்குது இங்கே ?! கேட்டா ஜோக்காம் ?!

      அடப் போங்கய்யா.. நீங்களும் உங்க காமிக்ஸ் கமெண்டும் :(((

      Delete
  64. சிக்பில் கதை எப்ப வரும் எடிட்டர் சார்?

    ReplyDelete
  65. காமிக்ஸ் காதலர்களுக்கு கோரிக்கை:
    நாம் நமது மலரும் நினைவுகளை எழுதுகிறோம் என்று கொஞ்சம் ஓவராக போய் கொண்டு உள்ளோம். இந்த தளம் பல சகோத சகோதரிகள் தினமும் வந்து போகும் இடம்; இதனை கருத்தில் கொண்டு பதிவிடலாமே? இது போன்ற மலரும் நினைவுகளை அவரவர் சொந்த தளத்தில் பதிவிடல் நலம்.

    புதிதாக வருபவர்கள் இங்கு இடப்படும் வாசகர்கள் கமெண்ட்-ஐ படித்தால் முகம் சுழிக்க நேரும். இது போன்ற தேவையில்லா விஷயம்களை தவிர்ப்பது நலம் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. டியர் பரணி,
      ,
      '7 முதல் 77 வரை' என்ற அறிவிப்புடன் வெளியாகும் நமது காமிக்ஸில்கூட இப்போதெல்லாம் கதையின் போக்கு சிதைந்துவிடக்கூடாதென்ற காரணத்தாலும், காலத்தோடு ஒத்துப்போக நினைக்கும் நாகரீக முன்னேற்றக் கோட்பாடுகளாலும் முத்த/படுக்கையறைக் காட்சிகள் அளவோடு அரங்கேற்றப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அவை ஏற்படுத்தாத முகச்சுளிப்பையா 'பிட்டுபடம் பார்த்துவிட்டு வரும்போது' என்ற யதார்த்தமான வரிகள் ஏற்படுத்திவிடப்போகிறது?

      இத்தளத்தை பார்வையிட்டு வருபவர்களில் குழந்தைகள் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன். 'சகோதர/
      சகோகரிகள்' என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பவர்களும்கூட குழந்தைகள் இல்லை. நண்பர் டெக்ஸ் விஜயராகவன் தன் மனதிலிருப்பதை யதார்த்தமாக இங்கே பகிர்ந்துகொண்டிருப்பது கதம்பப் புத்தகங்களை தான் விரும்பிடும் காரணத்தை அழுத்தமாகப் பதிவிடுவதற்காகவே அன்றி யாரையும் முகம் சுளிக்க வைக்க அல்ல! இதை அழகாகப் புரிந்துகொண்ட நம் சகோதரி ரமா கார்த்திகை கூட அவருக்கு பதிலளித்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்!

      உண்மையில், முகம் சுளிக்கும்படியான வார்த்தைப் பிரயோகங்களை டெக்ஸ் விஜயராகவன் இங்கே சில பதிவுகளுக்கு முன்பே அரங்கேற்றியிருந்தார். 'மி.ம'வில் ஒரு பக்கத்துக்கான கவிதைப்போட்டியை எடிட்டர் அறிவித்தபோது 'கண்டவர்களின் கவிதைகளை நான் ஏன் காசு கொடுத்து வாங்கிப் படிக்கவேண்டும்?' என்ற ரீதியில் ஆவேசப்பட்டிருந்தார். சகோதர/சகோதரிகள் பலரையும் முகம் சுளிக்க வைத்த/வேதனைப்பட வைத்த அப்பின்னூட்டத்திற்கு உங்களுடைய நிலைப்பாடு என்னவாக இருந்ததென்பதை நானறியேன்!

      எது 'ஓவர்' என்பதை இனம்கண்டு கொள்வதில் நாம் இன்னும் கொஞ்சம் தேர்ச்சிபெற வேண்டியதிருக்கிறது எ.எ.க! ;)

      காமிக்ஸ் தொடர்பான எதையும் இங்கே பகிர்ந்துகொள்ளும் உரிமை எடிட்டரால் இங்கே நம் அனைவருக்குமே அளிக்கப்பட்டிருப்பதால், நாமே நமது நண்பர்களின் கருத்துச் சுதந்திரத்திற்குத் தடைபோட வேண்டாமே ப்ளீஸ்?

      Delete
    2. // 'சகோதர/
      சகோகரிகள்' என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பவர்களும்கூட குழந்தைகள் இல்லை. நண்பர் டெக்ஸ் விஜயராகவன் தன் மனதிலிருப்பதை யதார்த்தமாக இங்கே பகிர்ந்துகொண்டிருப்பது கதம்பப் புத்தகங்களை தான் விரும்பிடும் காரணத்தை அழுத்தமாகப் பதிவிடுவதற்காகவே அன்றி யாரையும் முகம் சுளிக்க வைக்க அல்ல! //

      நாம் அவர்கூறிய வார்த்தைகளை எடுத்துக்கொல்லும் விதத்தில் கொண்டால் அது தவறாகிவிடாதே பரணி சார்
      விசயராகவன் சார்அப்படி ஒன்றும் தவறாக பேசியதாக எனக்கு தெரியவில்லை

      கருத்துச் சுதந்திரத்திற்கு தடை வேண்டாமே தோழர்களே :)

      Delete
    3. // காமிக்ஸ் காதலர்களுக்கு கோரிக்கை:
      நாம் நமது மலரும் நினைவுகளை எழுதுகிறோம் என்று கொஞ்சம் ஓவராக போய் கொண்டு உள்ளோம். இந்த தளம் பல சகோத சகோதரிகள் தினமும் வந்து போகும் இடம்; இதனை கருத்தில் கொண்டு பதிவிடலாமே? இது போன்ற மலரும் நினைவுகளை அவரவர் சொந்த தளத்தில் பதிவிடல் நலம்.

      புதிதாக வருபவர்கள் இங்கு இடப்படும் வாசகர்கள் கமெண்ட்-ஐ படித்தால் முகம் சுழிக்க நேரும். இது போன்ற தேவையில்லா விஷயம்களை தவிர்ப்பது நலம் நண்பர்களே.//

      நெத்தியடி பரணி சார் .

      கருத்து சுதந்திரம் என்பது வீடு வரை மட்டுமே இருக்க வேண்டும் ; படுக்கை அறையில் நடப்பதை விலாவரியாக விவரிப்பதில் இருக்க கூடாது. சகோதரி என்று மட்டும் விளித்து விட்டு, நான் B.F ரசிகன் என்று கூறினால் யதார்த்தமாகி விடுமா ?! இப்படி தான் நம் வீட்டு சகோதரியிடமும் பேசுவோமா என்ன :(

      Delete
    4. நண்பர்களே, மறுபடியும் எனது பதிவு வேறு திசை நோக்கி பயணம் செய்கிறது :-)

      நான் கருத்துச் சுதந்திரத்திற்கு தடை போடவில்லை! நாம் இங்கு (இது போன்ற பொது தளத்தில்) பகிரும் வார்த்தைகள் மிகவும் முக்கியம், அதனை ஒரு முறைக்கு இருமுறை யோசித்து பகிரலாமே என்பது எனது கருத்து! அது எந்த விதமான முக சுழிப்பை கொண்டு வரவேண்டாம் என்பதே.

      அப்படி உள்ள பதிவுகளை நாம் நமது சொந்த தளத்தில் பதிவிடலாம் என்பது தான் எனது தனிப்பட்ட விருப்பம்.

      என்னை பொறுத்தவரை நமது காமிக்ஸ் புத்தகத்தில் இல்லாததா, அதனால் இதில் என்ன தவறு என்பது ஆரோக்கியமான விவாதம் இல்லை!

      Delete
    5. என்னை பொறுத்தவரை நமது காமிக்ஸ் புத்தகத்தில் இல்லாததா, அதனால் இதில் என்ன தவறு என்பது ஆரோக்கியமான விவாதம் இல்லை!

      +1

      Delete
  66. கிட் ஆர்டின் கண்ணண் சார் கடந்துபோன ஒருமாதமும் குழந்தைகளை பள்ளி விடுமுறைக்கு உறவினர் வீடுகளுக்கு அழைத்து சென்று டேரா போட்டிருந்தபடியால் உங்களுக்கு அனுப்பிட நினைத்த ஜீனியர்/மினி லயனை அனுப்பிட முடியாததாகிட நேறிட்டது

    அடுத்த திங்கள் நான் ஊர் வந்து சேர்ந்ததும்
    எடிட்டர் சார் ஆபீஸிற்க்கு அப்புத்தகத்தினை அனுப்பியதும் உங்களுக்கான தகவலை இங்கே தெரிவித்து விடுகிறேன்

    வந்தனம் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி Jeya Sekhar
      சார். காத்திருக்கிறேன்.இந்த .. அன்புக்கு என்ன கைமாறு செய்யமுடியுமோ தெரியவில்லை நண்பரே.!
      இந்த மாதிரி முகமறியா நட்புகளை ஏற்படுத்தி இருக்கும் காமிக்ஸ் வலைதளம் வாழட்டும் வளரட்டும்.!!!

      Delete
  67. செயலாளர் அவர்களே இங்கே தவறு எழுத்தின் மேல் அல்ல ..எழுதியவர்களின் மேலே தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் ..நமது சேந்தம்பட்டி குழுவில் புதிதாய் வந்து அங்கே சேந்தம்பட்டி குழுவினர் யாருமே ஆசிரியரை விட்டு கொடுக்காததால் வந்த வினை அது ..


    எனவே நாம் அண்ணா டீ சாப்டீங்களான்னா ..காபி சாப்டீங்களா ன்னா

    என்று கேட்டால் கூட டீ என்பது வாடி ..போடி ...என்று பெண்களை இழிவாக சொல்லும் சுருக்கமான சொல் ...இது என்ன காமிக்ஸ் தளமா என்றும் கேட்பார்கள் ..


    காப்பி என்பது மாணவர்கள் தேர்வில் தவறு செய்யும் போக்கை ஊக்குவிக்கிறீர் என்றும் நம்மை தாக்குவார்கள் என்பது சேந்தம்பட்டி குழு அனைவரும் அறிந்ததே .அதற்காகவே இங்கே சிலர் வருகை புரிந்து உள்ளதும் யாம் அறிந்ததே ....நீங்கள் அடிக்கடி தொடர்பு எல்லைக்கு வெளியே போய் விடுவதால் மறந்து விடுகிறீர் .. :)

    ReplyDelete
    Replies
    1. ஒரு ஞானியால மட்டும்தான் இப்படி எல்லாம் விளக்கம் கொடுக்க முடியும்.
      எங்கையோ போயீட்டீங்க போங்க....

      Delete
  68. // காமிக்ஸ் காதலர்களுக்கு கோரிக்கை:
    நாம் நமது மலரும் நினைவுகளை எழுதுகிறோம் என்று கொஞ்சம் ஓவராக போய் கொண்டு உள்ளோம். இந்த தளம் பல சகோத சகோதரிகள் தினமும் வந்து போகும் இடம்; இதனை கருத்தில் கொண்டு பதிவிடலாமே? இது போன்ற மலரும் நினைவுகளை அவரவர் சொந்த தளத்தில் பதிவிடல் நலம்.

    புதிதாக வருபவர்கள் இங்கு இடப்படும் வாசகர்கள் கமெண்ட்-ஐ படித்தால் முகம் சுழிக்க நேரும். இது போன்ற தேவையில்லா விஷயம்களை தவிர்ப்பது நலம் நண்பர்களே.//

    நெத்தியடி பரணி சார் .

    கருத்து சுதந்திரம் என்பது வீடு வரை மட்டுமே இருக்க வேண்டும் ; படுக்கை அறையில் நடப்பதை விலாவரியாக விவரிப்பதில் இருக்க கூடாது. சகோதரி என்று மட்டும் விளித்து விட்டு, நான் B.F ரசிகன் என்று கூறினால் யதார்த்தமாகி விடுமா ?! இப்படி தான் நம் வீட்டு சகோதரியிடமும் பேசுவோமா என்ன ?! :(

    ReplyDelete
  69. ஈரோடு விஜய் சார். சென்னையில் வெயில் தாங்க முடியல .அங்கு எப்படி.

    ReplyDelete