Powered By Blogger

Friday, May 10, 2013

லக்கியின் luck !


நண்பர்களே,

வணக்கம். ஒரே இதழைப் பெரிதாய்த் தயாரிப்பதை விட - 4 இதழ்களைத் தனித் தனியாய் உருவாக்குவது எத்தனை சிரமம் என்பதை ஜூன் மாதப் பணிகள் எனக்கு உணர்த்தி வருகின்றன ! 4 தனித் தனி அட்டைப்படங்கள் ; பின்பக்க டிசைன்கள் ; ஒவ்வொரு இதழுக்கும் ஒரு filler pages batch - தலையங்கம் - என்று அத்தனை வேலைகளையும் 4 தடவை செய்திடும் அவசியம் எழும் போது - மெய்யாகவே பெண்ட் கழறுகிறது ! Anyways - மாறுபட்ட அனுபவங்களுக்குப் பஞ்சமே அல்லாத நமது இரண்டாம் வருகையின் இன்னொரு பரிமாணமாக இதனையும் எடுத்துக் கொள்கிறோம் ! பெங்களுருவில் நடந்திடவிருக்கும் COMIC CON -க்கு இன்னமும் 3 வாரங்களே எஞ்சியுள்ளன என்ற நிலையில் - வரவிருக்கும் நம் இதழ்கள் ஒவ்வொன்றிற்கும் வாரம் ஒரு முன்னோட்டப் பதிவும்  ; இறுதி இதழுக்கு ஜூன் முதல் தேதியன்று ஒரு பதிவும் போடலாமென்ற எண்ணம் !  So, here goes :

மறுபதிப்பு என்பதால் எனது பணிகள் சற்றே மட்டுப்படுவதால், முதலில் தயாராவது நமது சன்ஷைன் லைப்ரரியின் "லக்கி ஸ்பெஷல்-1" தான் ! இதோ இந்த இதழுக்கான நமது அட்டைப்படம் :


"INTEGRALS " என்ற வரிசையில் பிரபல்யமான நாயகர்களின் கதைகளில் 2 அல்லது 3 சேர்ந்த hardcover ஆல்பம்கள் ஐரோப்பாவில் ரொம்பவே பிரசித்தம். நாமும் கூட இது போலெல்லாம் வெளியிடும் நாள் எப்போதாச்சும் புலருமா என்று நிறைய முறை கனவுலகில் நான் சஞ்சாரம் செய்தது உண்டு ! Hardcover எனும் அடுத்த நிலையினை எட்டிப்பிடித்திட இன்னமும் நிறைய தூரம் இருப்பினும், இந்த மட்டிற்காவது சாத்தியப்பட்டதே என்ற சின்ன சந்தோசம் இந்த இதழைப் பார்க்கும் போது ! இதோ - நமது அட்டைப்பட டிசைனின் inspiration:


1987-ல் நமது ஜூனியர் லயன் காமிக்ஸ் இதழில் சின்ன சைசில் - ஆனால் முழு வண்ணத்தில் வெளி வந்த "சூப்பர் சர்கஸ்" நமது இதழின் கதை # 1 ! 30 ஆண்டுகளுக்கு முந்தைய நம் ஊர்களில் - ஆங்கிலத்தைத் தாண்டிய காமிக்ஸ் இதழ்களின் சேகரிப்பு என்பது குதிரைக் கொம்பான சமாச்சாரம் ! இன்டர்நெட் எனும் தகவல் சுரங்கமும் இல்லாத நாட்கள் அவை என்பதால் இன்று சுலபமாய் சாத்தியப்படும் பல விஷயங்களை சாதிக்க அன்று ஏராளமான பிரயத்தனங்கள் தேவைப்படுவது வழக்கம். மும்பையின் பிளாட்பாரப் பழைய புத்தகக் கடைகளிலும், லெண்டிங் லைப்ரரிகளிலும் மாமூலாய் துளாவும் எங்களது routine -கள் நல்கிய  பொக்கிஷங்களில் ஒன்று தான் லக்கி லூக்கின் "Western Circus" ஆங்கிலப் பதிப்பு!  Egmont என்றதொரு பதிப்பகம் அந்நாட்களிலேயே லக்கியின் கதைகளில் சில தரமானவைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டு புண்ணியம் சேர்த்திருந்தனர் ! இந்தக் கதையினைப் படித்த நாள் முதலே, எனக்குள் ஒரு வெறி - எப்படியாவது இதை தமிழுக்குக் கொணர வேண்டுமேவென்று ! பின்னாட்களில் அது சாத்தியமான போதும் சரி ; அதனை வண்ணத்தில் தயாரித்த பூரிப்பில் ஓராயிரம் முறைகள் ரசித்த போதும் சரி - ஏதோ இமயத்தையே தாண்டி விட்ட பெருமிதம் என்னுள் இருந்ததை இன்றும் நினைவலைகள் பதிவு செய்கின்றன ! நான் தயாரித்த முதல் வண்ண இதழ் என்ற முறையில் அந்த நியூஸ் பிரிண்ட் edition கூட எனக்கு அத்தனை அழகாய்த் தெரிந்தது ! இந்த இதழை வெளியான சமயமே படித்த அரை நிஜார் நண்பர்களுள் எத்தனை பேர் இப்போது இங்குள்ளனர் என்பதை அறிந்திட சின்னதாய் ஒரு ஆவல் ! கால் நூற்றாண்டுக்கும் முந்தையதொரு அனுபவத்தினை நம் புது வாசகர்களின் பொருட்டு பகிர்ந்திட்டால் சுவாரஸ்யம் கூடிடும் அல்லவா ? ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டோ ; அல்லது உங்கள் வீட்டுக் குட்டீஸ்களின் வண்டியைத் தள்ளிக் கொண்டோ - நினைவுகளைப் பின்னோக்கித் திருப்பிடலாமே guys ?


கதை நம்பர் 2 - இன்றளவும் நம் இதழ்களை சேகரிப்போர்க்கு பெரும்பாலும் எட்டாக்கனியாக இருந்து வரும் 1987 லயன் காமிக்ஸ் தீபாவளி சூப்பர் ஸ்பெஷலில் வந்திட்ட "பொடியன் பில்லி" ! ஒரிஜினலாய் பார்த்தால் - பொடியன் பில்லி தான் சீனியர் : 1962-ன் துவக்கத்திலேயே வெளி வந்திட்ட இதழ் இது ! (Western Circus உருவானது 1970-ல்!) பாக்கெட் சைசில் நமது தீபாவளி மலரில் வந்த கதையினை இப்போது பெரிய சைசில், அழகான ஆர்ட் பேப்பரில் படிக்கும் அனுபவம் நிச்சயம் சுகமானதாய் இருக்கக் காத்துள்ளது ! அது மட்டுமல்லாது, உங்கள் வீட்டில் நம் அடுத்த தலைமுறை வாசகர்கள்   இருப்பின், அவர்களுக்கு காமிக்ஸ் எனும் மாய உலகினுள் அடியெடுத்து வைக்கும் அனுபவத்தைத் தந்திட இந்த 2 கதைகளும் ரம்யமான துவக்கப் புள்ளிகளாய் இருந்திடும் என்பது எனது அபிப்ராயம் ! What say folks ? 


சன்ஷைன் லைப்ரரியில் கதைகளைத் தாண்டி, தலையங்கம் என்ற பாணியில் நான் எதனையும் எழுதிட டைகர் ஸ்பெஷலில் முயற்சித்திருக்கவில்லை ! இம்முறை - பிரத்யேகமாய் லக்கி லூக்கை அறிமுகம் செய்யும் விதமாய் ஒரு சின்ன piece எழுதியுள்ளேன் ! ஹாட்லைன் ; காமிக்ஸ்டைம் பாணிகளில் - இந்தப் பகுதிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற சிந்தனை என்னுள் ! உங்களது suggestions -ம் உதவிடுமே ? 

விடை பெறும் முன்னே, சின்னதாய் ஒரு சேதி : விறுவிறுப்பாய் வந்திடும் ரூ.375 -க்கான +6 சந்தாத் தொகைகள் எங்கள் பணியாளர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் ; 4 இதழ்களின் தயாரிப்பின் சுமையில் நலிந்து நிற்கும்  எங்களது வங்கி இருப்பு லேசாய் போஷாக்குக் காட்டுவதற்கும்  உதவுகின்றது ! Many thanks all !! See you around soon ! 

244 comments:

 1. Replies
  1. அந்த பழைய அட்டை படம் இந்த western circus அட்டை போலவே ,ஆனால் நிறம் மட்டும் கலக்கலாய் மஞ்சளில் நினைவிலாடுகிடது, குட்டீஸை கவர அற்புதமாய் வெளிப்படுமென நினைக்கிறேன்!
   முழு வண்ணத்தில் பொடியன் பில்லி, சூப்பர் சர்கஸ் பெரிய சைசில், பழைய காமிக்ஸ் வெறியர்ளான எமக்கு இதனை விட பெரும் பேறு ஏது!

   Delete
  2. அதுவும் லக்கி குறித்தும், ஜாலி குறித்தும் வரும் முன்னுரைகள் அவர்களது திறமை குறித்து வெளிபடுத்தும் கட்டங்கள் மேலும் அழகு சேர்க்கும், பின் அட்டையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹீரோவின் ஆற்றலை இதுபோல குறிப்பிட்டால் இன்னும் சுவாரஸ்யம்தான்!

   Delete
 2. //காமிக்ஸ்டைம் பாணிகளில் - இந்தப் பகுதிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற சிந்தனை என்னுள்//
  ரீமிக்ஸ் டைம்! :)

  ReplyDelete
  Replies
  1. Karthik Somalinga : சன்ஷைனில் மறு பதிப்புகள் மட்டுமல்லாது - முற்றிலும் புதிய கதை வரிசைகளும் வரவிருப்பதால் - "ரீமிக்ஸ்" எனும் போது பழையதையே re-pack செய்திடுவதான உணர்வைத் தவிர்க்க இயலாதே..!

   Delete
  2. ஹ்ம்ம்... வாஸ்தவம்தான்! ஆனால், அது ஒரு ஜாலியான கமெண்ட் மட்டுமே! :)

   (கொஞ்சம்) சீரியஸாக மூளையை உருட்டியதில்:
   சன்ஷைன் ஸ்பாட்!
   சன்ஷைன் கார்னர்!
   சன்ஷைன் டெஸ்க்!

   Delete
 3. அட்டைப்படம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் விதத்தில் உள்ளது பிரமாதம்.

  இந்தக் கதைகள் வெளிவந்த காலத்தில் உடனடியாக படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 1989இல் சூப்பர் சர்க்கஸ் படிக்கக் கிடைத்தது. பொடியன் பில்லி, அதன் பின்னர்... இரண்டு புத்தகங்களுமே என் கைவசம் இருந்தன. பின்னர் சூழ்நிலை காரணமாக அவற்றை இழக்க நேரிட்டது இன்றுவரை கவலையே. இவற்றை மீள் பதிப்பிப்பதற்கு மிக்க நன்றி.

  சூப்பர் சர்க்கஸில் வரும் சின்னச்சின்ன நகைச்சுவைகள்கூட அப்படியே மனதில் பதிந்துள்ளன. தமிழில் இப்படியொரு கதையை தந்த உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

  இன்னமும் 'இரத்தத்தடம்' எமக்கு கிடைக்கவில்லையாதலால் அதன் அச்சுப்பதிப்பு தரம் பற்றி நண்பர்கள் தெரிவித்துவரும் முறையீடுகள் பற்றி சரிவர தெரியவில்லை. அப்படியொரு சிக்கல் 'லக்கி ஸ்பெஷலி'ல் வந்துவிடக்கூடாது. காலாகாலத்துக்கும் வைத்துப் பாதுகாக்கவேண்டிய பொக்கிஷம் இது. எனவே, கொஞ்சம் கூடுதலாகவே கவனம் அவசியம், ப்ளீஸ்!

  ReplyDelete
 4. டியர் விஜயன் சார்,
  9 ஆம் ஆண்டு ஈரோடு புத்தக திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 4 முதல் 15 ஆம் தேதி வரை ஈரோடு வ.ஊ.சி. மைதானத்தில் நடை பெற உள்ளது. இந்த முறை முன்கூட்டியே நமது லைன் - முத்து காமிக்ஸ் ஸ்டால் இடம் பெற முயற்சி செய்யுங்கள் சார். சென்னை புத்தக கண்காட்சிக்கு அடுத்த படியாக ஈரோடு புத்தக திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் காமிக்ஸ் குறித்த விழிப்புணர்வு அதிகமாகும். அப்படியே மாயாவி, ஸ்பைடர், ஆர்ச்சி digest களையும் களம் இறக்க பாருங்கள் சார்.
  புத்தக திருவிழா தொடர்புக்கு:
  *****************************************
  த. ஸ்டாலின் குண சேகரன், தலைவர், மக்கள் சிந்தனை பேரவை,
  a - 38, சம்பத் நகர், ஈரோடு
  போன்: 0424-2269186, மொபைல் : 94430 36444

  ReplyDelete
  Replies
  1. jayakanthan : ஏற்கனவே அதற்கான முயற்சிகள் நடந்தேறி வருகின்றன...பார்ப்போமே !

   Delete
 5. Let me say very proudly,I am also the one in that ARAI NIJAAR elite group.... I have both the golden editions very safe ....even now ...in very good shape.....

  ReplyDelete
 6. Sample titles: காமிக்ஸ் கார்னர்!, ஹலோ காமிரேட்ஸ்!

  ReplyDelete
 7. Lime Light, Sun Light,Rush time, வானவில் தோரணம் , கிறுக்கல் பக்கங்கள்... few of the names...

  அப்புறம் எடி சார் , இத சொல்லியே ஆகணும் , அட்டை பக்கம் செம கலக்கல். கண்டிப்பா சுத்தி போடணும் .

  Great innovative thinking...

  ReplyDelete
 8. சன்ஷைன் வரவேற்பறை?

  ReplyDelete
 9. சன்ஷைன் கூல் டைம்?
  சன்ஷைன் ஸ்டார்ட்டிங் பேஜ்?

  ReplyDelete
 10. சன்ஷைன் டயலாக் பாக்ஸ்?
  சன்ஷைன் ரிலாக்ஸ் டைம்?

  ReplyDelete
  Replies
  1. 'ரிலாக்ஸ் ப்ளீஸ், டியர் ரீடர்ஸ்!'

   Delete
  2. சன்ஷைன்'ஸ் ஹோம் பேஜ்?
   சன்ஷைன்'ஸ் வெல்கம் பேஜ்?

   Delete
  3. எடிட்டர்'ஸ் என்ட்ரி டைம்?
   ஸ்டே கூல், டியர் ஃப்ரண்ட்ஸ்! ?

   Delete
  4. Editor's view point?
   Sunshine's scribbling page?
   Hello readers...
   Editor's ring tone...

   Delete
  5. Thoughts on third page?
   Sunshine prime page?

   Delete
  6. Sunshine Hot-Spot?
   Sunshine Spot-light?

   Delete
  7. Erode VIJAY : நல்ல முயற்சிகளே....Sunshine Spot-light ; Sunshine Hotspot நன்றாகவே இருந்தன...but - "Comics.com " சிம்பிளாக ; பொருத்தமாக இருப்பது போல் மனதுக்குப் பட்டது ! அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இதை விட better option கிட்டாவிடின் இதுவே தேர்வாகும் !

   Delete
 11. அட்டைப்படம் கலக்கலாக உள்ளது, மற்ற மூன்று அட்டைப்படங்களையும் காண ஆவலாக உள்ளோம். இரத்தத்தடத்திற்கான மாதிரி அட்டையை வடிவமைத்த சண்முக சுந்தரம் நானே . . . நான் திரைப்படத்துரையில் உதவி இயக்குனராக உள்ளேன். தங்கள் லயன் அல்லது முத்து காமிக்ஸ்க்கு ஒரு முறையாவது அட்டையை வடிவமைக்க வேண்டும் என்பது எனது ஆசை என்பதை விட வெறி என்றே சொல்ல வேண்டும். தங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளளாமா சார் . . . உங்கள் பதிலை எதிர்பார்க்கும் உங்கள் நீண்ட கால வாசகன் . . .

  ReplyDelete
  Replies
  1. அதுவும் உங்களது டயபாளிக் அட்டை படங்களை அடிச்சுக்கவே முடியாது! என்னை பொறுத்தவரை மாஸ்டர் பீஸ்!

   Delete
  2. @ சண்முக சுந்தரம்

   நீங்கள் வடிவமைத்த ஒவ்வொரு அட்டைப்படமும் உங்களுக்குள்ளிருக்கும் ஆழமான காமிக்ஸ் காதலையும், அட்டகாசமான படைப்பாளியையும் வெளிச்சம்போட்டுக் காட்டி என்னைப் போன்ற பலரையும் அசத்தியிருக்கிறது!

   உங்கள் படைப்புகள் நமது காமிக்ஸில் இடம்பிடிப்பது சாத்தியமானால் அது மகிழ்ச்சியே!

   விரைவிலேயே உங்கள் படைப்புகளை வெள்ளித்திரையும் கண்டிட வாழ்த்துக்கள்!

   Delete
  3. நன்றி நண்பரே . . .

   Delete
  4. உங்களை நிரூபித்து விட்டே கேட்கிறீர்கள் ஷண்முக சுந்தரம். எடிட்டர் ஒரு வாய்ப்பு தருவார் என்று நம்புவோமாக.

   Delete
  5. ஆசிரியரே, தயவு செய்து சண்முகசுந்தரத்தின் அட்டைப் படத்தை பயன்படுத்துங்கள். அவரது டேஞ்சர் டயபோலிக் அட்டைப் படம் அட்டகாசமோ அட்டகாசம்! இந்த மாதிரித் திறமையை வைத்துக் கொண்டு தனது அட்டை வடிவமைப்பை உபயோகிக்கும்படி வேண்டிக் கேட்கும் நிலையா :(

   Delete
  6. @ சண்முக சுந்தரம்

   நான்கூட நினைத்தேன், எடிட்டர் ப்ளாக் ல் ஏன் இதை ஒரு கோரிக்கையாக வைக்கக்கூடாது என்று. ஒரு சில மாதங்களாக உங்கள் திறமையை நான் உட்பட பலரும் பார்த்து பாராட்டி வருகிறோம். ஆசிரியர் வாசகர்களின் திறமைக்கு எப்போதும் மதிப்பளிப்பவர். தங்கள் திறமை நமது காமிக்ஸ் இல் வெளிப்படவேண்டும் என்று நானும் ஆசைப்படுகிறேன். கண்டிப்பாக நிறைவேறும். அதற்கு இப்போதே என் வாழ்த்துக்கள்.

   Delete
  7. @ ஷண்முக சுந்தரம் : சொல்ல மறந்து விட்டேன். உங்கள் அட்டைகள் உலகத் தரமானது. உங்கள் ஒவ்வொரு அட்டையும் வாவ் என்று சொல்லாமல் விட்டதில்லை.

   Delete
  8. //தங்கள் லயன் அல்லது முத்து காமிக்ஸ்க்கு ஒரு முறையாவது அட்டையை வடிவமைக்க வேண்டும் என்பது எனது ஆசை என்பதை விட வெறி என்றே சொல்ல வேண்டும//

   ஆசிரியர் நண்பர் சண்முகத்தின் திறமையை ஒருமுறையாவது உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும் எனபது எனது ஆசை.

   Delete
  9. @ஷண்முக சுந்தரம்: Almost இங்கேயுள்ள அனைத்து வாசகர்களுக்கும் உங்கள் படைப்புகள் கவர்ந்துள்ளன. நீங்கள் தயவுசெய்து உங்கள் அட்டைப்படங்களை எடிட்டருக்கு அனுப்பிவையுங்கள். அதன் தரத்தை பார்த்து, அவர் கண்டிப்பாக உபயோகப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.

   Especially உங்களது டயபாலிக் அட்டைப்படம், வரவிருக்கும் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டால், it will be Super

   Dear Editor, Hope you will consider these superb designs from Shanmuga sundaram. Thanks in advance

   Delete
  10. ஆசிரியராகக் கேட்டால் அவர் உங்களிடம் "என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" போன்ற கேள்விகள் கேட்க வேண்டி வரும் :) இந்தச் சிக்கலுக்கு இப்பொழுது இருக்கும் designer போதும் என்று அவர் எண்ணலாம். நீங்களாக "இலவசமாக" பயன்படுத்தும் உரிமையை ஆசிரியருக்குக் கொடுத்து விடுங்கள். காலம் பதில் சொல்லும் :)

   Delete
  11. @ Shanmuga sundaram:

   Simply brilliant design / artwork - as many of the comic fans and friends say - the Danger Diabolic wrapper is just awesome.

   I also have another suggestion to you: In the upcoming bangalore comic con festival on June 1 and 2 - Cinebook is setting up a shop. Please travel with print outs of some of your sample covers - especially the Shelton, Largo ones and show it to them. They may rally that to their bosses and who knows - pretty soon you may be a consultant for Cinebook art and design section!

   Delete
  12. டியர் விஜயன் சார்,
   ஷண்முக சுந்தரம் அவர்களின் அட்டை வடிவமைப்புகளை நமது இதழ்களுக்கு பயன்படுத்தினால் மகிழ்வேன்! டயபாலிக் இதழ் இந்த அட்டையுடன் வெளிவந்தால் அடி தூள் கிளப்பும்! :)

   @ராகவன்:
   //I also have another suggestion to you ---8<--- pretty soon you may be a consultant for Cinebook art and design section!//
   Excellent idea indeed! :)

   Delete
  13. பின்(னூட்டக்)குறிப்பு:
   கத்திரி சிம்பல் போடுவது எப்படி என்பதை சமீபத்தில் கற்றுக்கொண்டேன்! எட்டுக்கு பின்னால் 'லெஸ் தன் சிம்பலை' போட்டால் கத்திரி ரெடி! :D

   8<

   Delete
  14. இங்குள்ள பின்னூட்டங்களைப் பார்க்கும்போது நம் நண்பர்கள் காமிக்ஸ் மீதும் ஒரு படைப்பின் மீதும் எவ்வளவு
   அபிப்ராயங்களை கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. . . நன்றி நண்பர்களே . . .

   Delete
  15. Karthik Somalinga @ where / how did you get this cover page of dayabolic? the cover page is really supper.

   Delete
  16. From the forbidden Facebook comics groups! ;)

   Btw, this is just one of the works of Shanmuga Sundaram! There are many more like these!

   Delete
  17. Thanks Karthik Somalinga! What is the name of the facebook group?

   Delete
  18. @paranni : Karthik is kidding. Shanmugam is posting it in lion muthu comics FB group. I also collected all his pictures in my latest post in my blog http://www.comicsda.com/2013/04/blog-post_26.html. It will be in the middle of the post. Pls check that. It is hard to find ALL pics in FB group now.

   Delete
  19. Shanmuga Sundaram.S நிச்சயமாக உங்கள் முயற்சிகளை அனுப்பிடலாமே ! நமது மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது படைப்புகளின் உயர் resolution images அனுப்பிடும் பட்சத்தில் சிறப்பனவைகளை நமது அட்டைப்படங்களுக்கு பயன்படுத்த முயற்சிப்போமே ! தற்போது டயபாலிக் பின்னட்டை பணிகள் நடந்தேறி வருகின்றன - அடுத்த ஓரிரு நாட்களுக்குள் உங்களது ஆக்கத்தை அனுப்பிட இயலுமெனின் தூள் கிளப்பிடலாம் ! நிஜமான திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிட சின்ன அளவிலாவது நம்மால் இயலுமெனின் - I am all for it !

   இன்னும் ஒரு படி மேலே போகணுமென்றால் - "KAUN BANEGA TRANSLATOR " பாணியில் - "Kaun Banega Graphic Designer " என்றதொரு போட்டி கூட துவக்கிப் பார்க்கலாமே - நண்பர்களின் திறன்களை வெளிக் கொணர ?! What say folks ?

   Delete
  20. @ எடிட்டர்

   நண்பர் சண்முக சுந்தரத்திற்கு நீங்கள் வாய்ப்களித்திருப்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது!

   டிசைனர் போட்டி வைத்தாலும் சண்முகசுந்தரமே ஒவ்வொரு முறையும் ஜெயித்திடுவார் என்பதால், நான் போட்டி அறிவிக்கும் முன்னரே வெளிநடப்புச் செய்கிறேன்! :)

   Delete
  21. நண்பர் விஜயின் கருத்து நான் வழிமொழிகிறேன் :)

   Delete
  22. ஆஹா சூப்பர் சார் ,சண்முகசுந்தரம் உங்களது அந்த முழுவதும் கருப்பு வண்ணத்தில் இரண்டாவதாய் வெளியிட்டீர்கள அசத்தும் கருப்பில் அது தூள் கிளப்பும்;அந்த மூன்றாவது மஞ்சள் வண்ணமும் அற்புதமே !

   Delete
  23. நாம் ஆற்றும் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு - இந்த விதி விஞ்ஞானத்திலும் உண்டு - ஆன்மிகத்திலும் உண்டு.

   இன்று நமது காமிக்ஸ் அட்டை டிசைன் வாய்ப்பு பெற்ற திரு.ஷண்முக சுந்தரம் - நாளை தனது கலைத்திறமையால் ஒரு பெரும் இயக்குனராய் பரிமளிக்கும் சமயத்தில் அவரிடமிருந்து லயன் காமிக்ஸ் பற்றிய ஒரு வரி ஊடகத்தில் வந்தால் நமது subscriber base என்ன ஆகிடும்? :-) :-)

   இரண்டும் in tandem நடந்தேற வாழ்த்துக்கள் !!

   Delete
  24. This comment has been removed by the author.

   Delete
  25. Rajmuthukumar @ Karthik Somalinga given all the url's to me through mail; also SSS FB have all the photos of the cover he designed for our comics. I have seen them there.

   Delete
  26. Great Vijayan SIR!

   Dear SSS, Please send the designs to our editor without fail. I am wishing you good luck for your career, right place to start chasing your dream from our comics.

   Delete
 12. 'லக்கி ஸ்பெஷல் -1' அட்டைப்படம் அட்டகாசம்! நமது வழக்கமான டிசைன்களிலிருந்து மாறுபட்டு, கலக்கலாய் வந்திருக்கிறது!

  அன்றைய நாட்களில், அணிந்திருந்த ட்ரவுசர் பட்டன்கள் தெரித்து விழுமளவுக்கு குலுங்கிக் குலுங்கி சிரிக்கவைத்த, பலமுறை படித்தாலும் சலிப்பேற்படுத்தாத, காலப் பயணத்தில் எப்படியோ காணாமல் போய்விட்ட அந்த சூப்பர்-ஹிட் கதைகளை மீண்டும் படித்திட மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.

  இக்கதைகளைப் படிக்கும்போது மீண்டும் என் பால்ய வயதுக்கு ஒரு பயணம் போவது சாத்தியமாகிடும் என்பது உறுதி!

  ReplyDelete
 13. விஜயன் சாரின் பதிலுக்குதான் காத்திருக்கிறேன் நண்பர்களே . . .

  ReplyDelete
 14. A request to you sir... I dont know if there are others like me.. we stay at one place but our comics are delivered at our home. So we can read it only at the time of visiting our home. So if you can upload hotlion and comics time pages it would help usunderstand things better. I just knew that +6 subscription is rs 375. Will send asap...

  ReplyDelete
  Replies
  1. Friend, you can easily change your address by telling Lion comics staff to send to your current location.

   Else try http://tamilcomics-soundarss.blogspot.fr/. Soundar is uploading Hot Line and Comics TImes in his blog.

   Delete
 15. அடப்போங்க சார்.....ரத்தத்தடம் பிரிண்டிங் ஏன் சரியாக வரவில்லை என்ற அத்தனை பேர் கேட்ட கேள்விக்கே இன்னும் பதில் வரவில்லை. மண்டையையும் பிச்சுகிட்டு இருக்கோம் .... உங்களுக்குமட்டும் உடனே வருமா என்ன? ஹும்ம்............ட்ரலலலல்லா...... ட்ரலலலல்லா......

  ReplyDelete
  Replies
  1. என்னோட கருத்து என்னன்னா ...(இப்ப யாரு கேட்டா ).......ஒரு வேளை
   பவர் கட் உள்ள சமயத்து.............ல
   DIM LIGHT .........ல
   பிரிண்ட் பண்ணி இருப்பாங்களோ.
   அதனால தான் DIM ஆ இருக்கோ
   HOW IS THE LOGIC OF THE MINE

   Delete
  2. @ friends : என்ன தான் இயந்திரங்களும், கணினிகளும் வந்து விட்டாலும்,end of the day அதனை இயக்குவது மனிதர்களே ! இம்முறை நமது அச்சகப் பணியாளர்கள் சொதப்பி விட்டது தான் அச்சில் நேர்ந்த பிரச்னைகளுக்குக் காரணம். பகலில் மின்வெட்டு பிராணனை வாங்கியதால், பெரும்பான்மையான அச்சுப் பணிகள் நடந்தேறியது இரவினில் !

   அசதியும், கவனமின்மையும் கொண்டு வந்த இப்பிரச்னை இனி வரும் நாட்களில் தொடராது !

   Delete
 16. என் வாழ்வின் மறக்க இயலா புத்தகம் இது. 7ஆம் வகுப்பு படிக்கும் போது, சைக்கிள் ஓட்டத் தெரிந்த என் அண்ணன் இந்த புத்தகத்தை வாங்கி வந்தான். மேட் ஃபினிஷ் உடன் இந்த புத்தகத்தை ரூ 2 விலையில் பார்த்தபோது ஒரு வித்தியாசமான அனுபவம்.. ஒரு பரவசம். அந்நாளில் கலர் என்பது sports star என்ற கிரிக்கெட் புத்தகத்தில் மட்டுமே பாத்த ஒன்று.

  பின்னை மெதுவாக, புத்தகம் கிழியாமல் திறந்த உடன், எடிட்டரின் - “நெற்றிப்பின்னை எடுத்த உடன்.....” என்ற வாக்கியம், இத்தனை ஆண்டுகள் கழித்தும் மறக்காமல் நினைவிருக்கிறது.

  ஜாலி ஜம்பரின் - தரையில் நம்பர் வரையும் புத்திசாலித்தனம் எங்களுக்கு அன்று புதிது. வசனம் இன்றி படத்தின் மூலம் ஒரு விஷயத்தை வாசகர்களுக்கு கடத்துதல் அரிது.

  இந்த புத்தகத்தை எத்தனை முறைப் படித்திருப்பேன் என்பது எனக்குத் தெரியாது.

  கல்லூரியில் சேர்ந்த பின்னும் என் அண்ணனிடம் இந்த புத்தகம் இருந்து, ஒரு நாள் மாயமானது. மீண்டும் இந்த புத்தகத்தைப் பார்ப்பது மனதிற்கு இதமளிக்கின்றது.

  ****** ஒரு கோரிக்கை.......
  எடிட்டர்.. தயவு செய்து உங்களின் அந்த முகப்புரையை.. அப்படியே இந்த இதழில் பதிப்பிக்கலாமே.. ப்ளீஸ்..
  ******

  ReplyDelete
  Replies
  1. //எடிட்டர்.. தயவு செய்து உங்களின் அந்த முகப்புரையை.. அப்படியே இந்த இதழில் பதிப்பிக்கலாமே.. ப்ளீஸ்..//
   நானும் ...

   Delete
  2. நமது கடந்த கால இனிமையான நினைவுகளை இப்போதும் தித்திப்பாய் உணர உதவுமே....இதனுடன் இப்போதைய தங்களது வழக்கமான எழுத்துக்கள் முன் பக்கத்திலும்!
   எப்போதடா வருமென தவிப்புடன், இந்த அட்டை படத்தை பார்த்தவுடன் புத்தகம் எப்போதடா வருமென எங்க வைத்து விட்டீர்கள் ....காரமெல்லை மறக்க முடியுமா ,,,,,

   Delete
  3. டிட்டர்.. தயவு செய்து உங்களின் அந்த முகப்புரையை.. அப்படியே இந்த இதழில் பதிப்பிக்கலாமே.. ப்ளீஸ்..//
   நானும் ...

   Exactly my thoughts when i was reading this. Pleeeeeeeeeaseeeeeee include the same. Will make the book more valuable.

   Delete
  4. RAMG75 & others : கால் நூற்றாண்டுக்கு முந்தைய சூழலில் எழுதப்பட்டதொரு பக்கம் இன்று படித்தால் ஒரு anachronism போல் தோன்ற வாய்ப்புண்டு ! இன்று படிக்கவிருப்போர் - நமது ஆரம்ப நாட்களது வாசகர்கள் மாத்திரமல்லாது - இன்றைய தலைமுறையினரும் கூட என்பதை நாம் மதித்திட வேண்டுமே ! பழமை விரும்புவோர்க்குத் தான் இருக்கவே இருக்கிறதே அந்தக் காலத்து ஒரிஜினல் பதிப்புகள் !

   Delete
  5. Dear Editor,

   If it is not possible to republish the foreword please scan and upload here on the day of the release so that we can at least read it here. Thanks.

   Delete
 17. சார் , ரத்த தடம் புத்தகம் நேற்று தான் படித்து முடித்தேன். கலங்கலான பக்கங்கள் கதையின் விறு விறுப் பையே குறைத்து விட்டது. இருளில் ஒரு இரும்புக் குதிரை இதழிலும் இதே குறை தான். திரும்ப திரும்ப அதே குறைகள் நடப்பதை தவிர்க்க எதாவது செய்யுங்கள். முதலில் ஒரு பிரிண்ட் காப்பி கையில் எடுத்து சரி பார்த்து விட்டு மற்றவற்றை பிரிண்ட் பண்ண முடியாதா?

  ReplyDelete
 18. அட்டைப்படம் சூப்பர் மற்றும் பயங்கர அட்டகாசம்....

  ReplyDelete
 19. இந்த இரண்டு புத்தகங்களின் முதல் வெளியீடுகளை அப்போதே படித்த கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட நண்பர்களுள் நானும் ஒருவன் என்று சொல்வதில் எனக்கு மிகவும் பெருமை.நியூஸ் print தாளில் முழு வண்ணத்தில் வந்த சூப்பர் சர்க்கஸ் சின் விலை 1.25 Rs. என்று நினைகிறேன். தற்போது அந்த புத்தகம் என்னிடம் இல்லையென்றாலும் அது விட்டுச்சென்ற காலத்தால் அழிக்கமுடியாத இனிமையான நினைவுகளுக்கு மதிப்பை யாரால் நிர்ணயிக்க முடியும்???PRICELESS!! நன்றி விஜயன் சார்!
  தொலைகாட்சியும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்களும் ஆக்கரமிக்காத அன்றைய கால சிறுவர்களான எங்களுக்கு சர்க்கஸ் என்ற ஒற்றை வார்த்தை எங்கள் மனதில் கொண்டுவரும் ஆனந்தத்துக்கு அன்னைகள் கிடையாது. குதூகலம் கும்மியடிக்க அந்திரத்தில் பறக்கும் WORRY LESS PRISTINE HAPPINESS அது. இது போன்ற ஒரு சர்க்கரை கதை களத்தில் முதல் முதலாக அறிமுகமாகும் லக்கி லூக்கும் ஜாலி ஜம்பரும் போடும் அதகள அட்டகாசமான நகைசுவை அதுவும் தமிழில் முதன் முதலாக... அதுவும் முழு வண்ணத்தில்...அன்றைய அரை நிஜார் வயதில் அந்த புத்தகம் தந்த ஆனந்ததிற்கு எதுவும் ஈடாக முடியாது. வாழ்வில் கடினமான காலங்களில் இந்த நினைவுகள் அருமருந்துதாய் நமக்குதவுகின்றன அல்லவா???

  பொடியன் பில்லி வந்த அந்த குண்டு புத்தகமும் மனதில் நீங்காத நினைவுகளை பொறித்துச்சென்ற பொன் புதையல். அந்த புத்தகத்தை படித்து முடிக்கும் வரை எங்கு சென்றாலும் பாக்கெட்டிலேயே வைத்துக்கொண்டு சுற்றிய நினைவுகள்... கிடைக்கும் இடைவெளியில் புத்தகத்தில் மூழ்கி திளைத்த பொழுதுகள்...அந்த கதையில் கதை சொல்லும் ஒரு கிழவனே பில்லிக்கு "அந்த அழகான இளவரசி..." என்று கதை சொல்லும் கட்டங்கள்...

  ஆரம்பகால வாசகனாயினும் புத்தகங்கள் சேகரிக்கும் பழக்கம் என்னிடம் இல்லையாதலால் இரண்டு புத்தகங்களும் தற்போது என்னிடம் இல்லை.கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கடந்துவிட்ட நினைவுகளை மென்மையாக வருடப்போகும் இந்த ஸ்பெஷல் இதழுக்காக ஆவலுடன் காத்துள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. பேசாமல் இந்த புத்தகத்தை அச்சாகி இருந்தால் இப்போதே அனுப்பினால் என்ன!

   Delete
  2. சொல்ல மறந்த கட்டாயம் சொல்லவேண்டிய ஒரு விடயம்...
   பொடியன் பில்லியில் HIGHLIGHT கிளைமாக்ஸ்சில் பில்லியின் அரை நிஜாரை இறக்கி அவனை கால்களில் குப்புற படுக்கபோட்டு அவன் பின்புறத்தில் லக்கி சாத்தும் சாத்திருக்கிறதே...மிகவும் ரசிக்கவைக்கு நகைசுவை கட்டம்.
   நண்பர்கள் தயவு செய்து அதற்கெல்லாம் சென்சார் கேட்காதீர்கள்!!

   Delete
  3. ஆனால் நண்பர் விஜய் இப்போது பட்டன் தெரிக்குமளவு சிரித்தாள் அதற்க்கு ஆசிரியர் பொறுப்பல்ல ..

   Delete
  4. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //பேசாமல் இந்த புத்தகத்தை அச்சாகி இருந்தால் இப்போதே அனுப்பினால் என்ன!//

   பில்லியின் அரை நிஜாரை லக்கி கழட்டி விட்டது போல் - கூரியர் கட்டணங்கள் நம் டிரௌசர்களைக் கலட்டிடும் அபாயம் உண்டல்லவா ?

   Delete
  5. விஸ்கி-சுஸ்கி : லக்கி லூக்கின் டாப் சாகசங்களின் பட்டியலில் பிரதான இடம் பிடிக்கும் இந்தக் கதைகளைப் படிக்க வாய்ப்புக் கிட்டிய நாம் அனைவருமே ஒரு வகையில் blessed தான் என்பதில் ஐயமில்லை ! காமிக்ஸ் என்பது சிறுபிள்ளைகள் சங்கதி என்ற மேலோட்டமான சிந்தையில் இவற்றைப் புறந்தள்ளியவர்கள் எவ்வளவை miss பண்ணி இருக்கிறார்களென்பதை நாம் அறிவோம் !

   Delete
 20. சன் லைட்(light) , சன் ஸ்பாட்

  ReplyDelete
 21. அட்டைப்படம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் விதத்தில் உள்ளது பிரமாதம்.
  /காமிக்ஸ்டைம் பாணிகளில் - இந்தப் பகுதிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற சிந்தனை என்னுள்//
  சூரிய வணக்கம்!
  டியர் காமிக் ரீடர்ஸ்!

  எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

  ReplyDelete
  Replies
  1. //அட்டைப்படம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் விதத்தில் உள்ளது பிரமாதம்.//

   நல்லா கால ஊனி நின்னுக்கோப்பா.

   Delete
  2. // நல்லா கால ஊனி நின்னுக்கோப்பா //

   ஹா ஹா ஹா!

   Delete
 22. வணக்கம் வாத்யாரே! இன்னா கேள்வி கேட்டுபுட்ட? 1987 ஜனவரி மாசம் ஜூனியர் & மினி ரெண்டு புக் வரும்னு தப்பா நெனசிக்குனு ரெண்டே கால் ரூபாய எத்து போட்டுக்குனு அம்மாந்தூரம் இருக்குற கடைக்கு போனா 'துப்பாக்கி முனையில்' மட்டுந்தான் வந்துருந்தது. அப்பாலிக்கா சில பல நாள் கழிச்சி ஒரு தோஸ்து மூலமா 'சூப்பர் சர்க்கஸ்' வந்துக்குதுன்னு கேள்வி பட்டு மூச்சு வாங்க ஓடி போய் புக்க கேட்டா கடக்காரன் 2 ரூபா கொடுன்னு சொன்னான். ஒன்னே கால் ரூபா தான்னு நான் அவன் கிட்ட சண்டையே போட்டேன் கச்சீல புக்க எத்து காட்ன பின்னால தான் நான் நம்புனேன், ஆனா எங்கிட்ட 2 ரூபா இல்ல அதனாலங்காட்டி இன்னொரு தபா வூட்டாண்ட போயி வூட்ல காசு கேட்டா ஓத தான் கச்சிது.அப்புறம் எங்கிட்ட இருந்த பழைய ராணி காமிக்ஸ்,பாட புக் ,ராணி ,கல்கி,குமுதம், அல்லாத்தியும் பீரான்ச்சி எத்துக்குனு போயி 'டேவிட் தண்ட பேப்பர் மார்ட்' ல போட்டு 2 ரூபா தேத்தி புக்க வாங்கி கலர பாத்து அப்டியே மெர்சல் ஆயிட்டேன்.அன்னிக்கலாம் அந்த புக்க படிக்கவ இல்ல.புக்க மாஞ்சி மாஞ்சி போரட்டுவேன் ஆனா படிக்கவே மாட்டேன். இப்டியே 2 நாள் வச்சி இருந்தேன்பா மூனான் நாலு என் பிரண்டு அசோக்குன்னு ஒருத்தேன் படிக்க கேட்டான்னு நம்பி குத்தேன்,ஆனா அந்த துரோகி அவன் வூட்டாண்ட இருந்த அவன் உஷார் பண்ற ஒரு குட்டியாண்ட எத்து குத்து பூட்டான்.சரி வேற புக்க வாங்கிக்கோன்னு பெரிய மன்சு பண்ணி 2 ரூபா குத்தான்,இதுல ஒரு 5 நாலு பாசாயிச்சு,இன்னொரு தபா அந்த கடையாண்ட போயி புக்க கேட்டா,தீந்து போயிச்சே ன்னு சொல்டாருப்பா.... சொல்டாருப்பா....! அப்பாலிக்கா ஒரு லைப்ரரி ல அந்த புக்க சுட்டந்துட்டேன் அது வேற விஷயம் .

  ReplyDelete
  Replies
  1. I m very pleased to read such experience.... same blood....

   Delete
  2. வுன் கதைய கொஞ்சம் சொல்லேம்ப்பா கேட்டா குஜாலா இருக்கும்.

   Delete
  3. Right now I m operating from my phone so its unable to write in tamil. Mannichiko vathiyare.

   Delete
  4. 1.//அந்த துரோகி அவன் வூட்டாண்ட இருந்த அவன் உஷார் பண்ற ஒரு குட்டியாண்ட எத்து குத்து பூட்டான்..// அந்த இளம் பிராயதிலேயே ஒரு குட்டிய உஷார் பண்ணினாரா ....................இரண்டாம் வகுப்பு படிக்கிற புள்ளயவா ? நம்பமுடியலியே ...........figure pulling with color comics.........
   2.//அப்பாலிக்கா ஒரு லைப்ரரி ல அந்த புக்க சுட்டந்துட்டேன் அது வேற விஷயம் .//............டால்டன் வேலை இது .

   Delete
 23. Dear Editor sir, my suggestion,

  Sunshine Time
  Hot Sunshine
  Hello Sunshine
  Ha Ha Sunshine
  Thunder Sunshine

  Even I too read both the stories on earlier release, through my neibhour I read those books. Some time back I got the ""பயங்கர பொடியன்" from old book stall. I hope "பயங்கர பொடியன்" and ""பொடியன் பில்லி" are same, correct me if I am wrong friends!

  ReplyDelete
  Replies
  1. இரண்டுமே வில்லன் பில்லி ....ஆனால் இரு வேறு கதைகள்

   Delete
  2. சித்திரம் பேசுதடி!
   கலர்புல் டைம்!!
   டைம் பாஸ்

   Delete
  3. Steel, does it mean that this book have both the stories along with Super Circus?

   Delete
  4. இல்லை நண்பரே , இது லயன் சூப்பர் ஸ்பெசலில் வந்த கதை என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதால் ஒரு கதை மட்டுமே வெளியாகும் என நினைக்கிறேன்! மேலும் இரண்டுமே முழு நீள கதைகள்; இன்னொரு கதை மினி லயனில் வந்தது!

   Delete
  5. லயன் சூப்பர் ஸ்பெசலில் வந்த கதை +சூப்பர் சர்கஸ்

   Delete
  6. Parani from Bangalore : சூப்பர் சர்க்கஸ் + பொடியன் பில்லி = 2 கதைகள் !

   Delete
 24. இந்த இருகதைகளையுமே நான் படித்த ஞாபகமே இல்லை..ஐ..ஜாலி..

  ReplyDelete
 25. டியர் எடிட்,

  லக்கிலூக் டைஜஸ்ட் அட்டை கச்சிதமாக இருக்கிறது. ஒரே குறை, ஒரிஜினல் அட்டைகஸ் ஸ்டாம்ப் சைஸுக்கு மாறி விட்டு, டிசைன் மட்டும் அட்டையை ஆக்கிரமித்திருப்பதே. Integrals பாணியை கடைபிடித்திருந்தாலும், நமது புராதண அட்டைகளை சற்றே பிரதானபடுத்தியிருக்கலாமோ ? இல்லை, ஒரிஜினல் அட்டைகள் உள்ளே ஒவ்வொரு கதைக்கும் முன்பு தனி பக்கங்களாக வெளியடபட்டிருககின்றனவா ??

  சூப்பர் சர்க்கஸ் நான் பார்த்த முதல் முழு லக்கி கலர் இதழ். பார்த்தவுடன் தமிழில இப்படியும் காமிக்ஸ்கள் வெளியாகி இருந்தது தெரியாமல் போனதே என்ற அங்கலாய்ப்பு இன்றும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் பாதி விலைக்கு கூட வாங்க அப்போது பட்ஜெட் ஒத்துக்கொள்ளவில்லை. பயங்கர பொடியன் பெரும்பாலானேரிடம் இல்லாத ஸ்பெஷல் இதழில் வெளிவந்ததால் ஆரம்பத்தில் படிக்கவில்லை. பின்பு பயங்கர பொடியன்-II என்று நீங்கள் அடுத்த பாகத்தில் குறிபிட்ட போதே இதற்கு முன்பு ஒன்று இருந்தது பற்றி அறிந்தேன். இரு கதைகளையும் மீண்டும் ஒருங்கே தமிழில் நல்ல வண்ண பேப்பர்களில் படிக்க ஆர்வமாக உள்ளேன். ஒரெ பயம்....

  இரத்த தடத்தில் ஏற்பட்ட பிரிண்டிங் ப்ராஸஸிங் குளறுபடிகள், இனி எந்த இதழிலும் முக்கியமாக லக்கி இதழில் வராமல் இருக்கும் என்ற வாக்கு கிடைக்குமா ?? சென்ற பதிவுகளில் இது தொடர்பான பரவலான கேள்விகளுக்கு நீங்கள் பதிலே அளிக்கவில்லை என்பதால், இப்படியாக அதை உறுதிபடுத்திவிடுத்திவிடலாம் என்பதாலேயே, இந்த கேள்வி.

  +6 க்கான எனது முன்பதிவையும் அனுப்பி வைத்தாயிற்று. முதல் புத்தகத்தை காமிக் கானிலேயே பெற்று கொள்ள முயல்கிறன்.

  ReplyDelete
 26. லக்கி லூக்கின் சூப்பர் சர்க்கஸ் , பொடியன் பில்லி , புரட்சித்தீ போன்ற இதழ்களை [ பொக்கிஷங்களை ] வெளியானபோதே படிக்கும் வாய்ப்பு கிடைத்த வாச‌கர்களில் நானும் ஒருவன்......... நண்பர் விஸ்கி - சுஸ்கி குறிப்பிட்டதைப்போல '' தொலைக்காட்சியும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்களும் ஆக்கரமிக்காத அன்றைய கால சிறுவர்களான எங்களுக்கு சர்க்கஸ் என்ற ஒற்றை வார்த்தை எங்கள் மனதில் கொண்டுவரும் ஆனந்தத்துக்கு அன்னைகள் கிடையாது.


  என்னுடைய நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.......

  ReplyDelete
 27. முன்னட்டை படம்/design சூப்பர்!


  நானும் சூப்பர் சர்க்கஸ், புரட்சித்தீ முதலில் வெளியிட்ட போதே வாங்கி படித்துள்ளேன். ஆனால் இன்று என்னிடம் இல்லை :( இப்போது பெரிய size ல் கிடைக்கப் போவதை நினைத்தால் மிக்க மகிழ்ச்சி. :)

  ReplyDelete
 28. பொடியன் பில்லி மட்டும் படித்த ஞாபகம் உள்ளது! இப்போது இரு இதழ்களும் இப்போது கைவசம் இல்லை! ஆகவே மிக்க மகிழ்ச்சி! 4 booksல் suspenseஆனா இதழ் பெயர் என்ன? Hero யார்?

  ReplyDelete
 29. சார்!
  சூரியபார்வை!
  தணலாய் ஒரு தலையங்கம்!
  ஜிலீர் எண்ணங்கள்!
  வண்ணத்தில் வார்த்தைகள்!
  நல்லா இருக்கா சார்!

  ReplyDelete
  Replies
  1. Cap Tiger @ நல்லா இருக்கா சார்! --> In the title super :-)

   Delete
  2. cap tiger : அழகான முயற்சிகளே ! காமிக்ஸ்.COM எப்படித் தோன்றுகிறது ?

   Delete
  3. காமிக்ஸ்.COM ( இந்த வலைபக்க பதிவுகள் போட ஏற்ற தலைப்பு சார்!)

   Delete
 30. How about following headings:-)

  Vaanavil
  Comics Oasis
  Sunshine retreat
  Chithira Chitharlgal
  Varna Vedikkai
  Time pass
  Comics Kalam
  Comics Kaipesi
  How are you?

  ReplyDelete
 31. Vijayan Sir,

  I WANT PARATTAI RAJA
  I WANT PARATTAI RAJA
  I WANT PARATTAI RAJA

  Idukkumela adam pidikka mudiayadu dayavu senji podunga.

  if its B&W then whenever u publish a B&W book rajavai marakkadirgal....

  ReplyDelete
 32. ஆமாம்ப்பா எனக்கும் பரட்டை தல ராசாவ ரொம்ப புடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. you can chk out below link

   http://skipcomics.blogspot.in/2010/04/tatty-mane-king-of-jungle.html

   enakku ennavo english version kooda compare panna tamil version excellentnnu feeling

   aasiriyarai translationil adichikka mudiyaadu in fact namma comicsoda BACKBONE is arputhamana mozhipeyarpu.

   Delete
  2. Sathya : பார்ப்போமே !

   Delete
 33. அப்டியே குண்டன் பில்லிய கூட போடுங்க வாத்யாரே.

  ReplyDelete
 34. தலையங்கத்திற்கான option
  1. ப்ரைம் டைம்
  2. Gottcha!

  ReplyDelete
 35. +6 க்கான எனது முன்பதிவையும் அனுப்பி வைத்தாயிற்று.

  ReplyDelete
 36. டியர் விஜயன் சார்,
  அட்டை படம் சூப்பர்...

  ReplyDelete
 37. இந்த கதைகளின் மூலம், மீண்டும் எனது பள்ளி பருவத்து நினைவுகளை என்னுள் தூண்டிய உங்களுக்கு நன்றி. தலயங்கத்திற்கான என்னுடைய சாய்ஸ்.....

  1. கூல் லைன்...
  2. கூல் டைம்...
  3. லக்கி டைம்...

  இன்னும் வரும்......

  ReplyDelete
 38. 1. ஜூனியர் பக்கம்...

  ReplyDelete
 39. sun light , sun sight, sunshine light,sunshine. Sight, sunshine page

  ReplyDelete
 40. சூப்பர் சர்க்கஸ்,பொடியன் பில்லி இந்த இரண்டு ஒரிஜினல் புத்தககளும் என்னிடம் இப்பொழுதும் இருந்தாலும் இந்த அழகான அட்டை படத்திற்காகவும் ,உயர் தர வர்ண தாளில் படிக்கவும் புத்தகம் வரும் நாளை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் .

  சார் ..,மறவாமல்"சூப்பர் சர்க்கஸ் "புத்தகத்தில் லக்கி லூக் பற்றி வரும் முன்னோட்ட இரு பக்க காமிக்ஸ் கதையை தவறாமல் இதிலும் இணைத்தால் நமக்கும் ,புதிதாய் அறிமுக மாகும் இளைய சுட்டிகளுக்கும் கொண்டாட்டமாக இருக்கும் .மறந்து விடாதிர்கள் .

  ReplyDelete
  Replies
  1. Plz note this sir ......nice suggestion..

   Delete
  2. Paranitharan and Ahmed Pasha @ Editor mentioned the same in the post..
   "இம்முறை - பிரத்யேகமாய் லக்கி லூக்கை அறிமுகம் செய்யும் விதமாய் ஒரு சின்ன piece எழுதியுள்ளேன் !"

   Delete
  3. Paranitharan K : ///மறவாமல்"சூப்பர் சர்க்கஸ் "புத்தகத்தில் லக்கி லூக் பற்றி வரும் முன்னோட்ட இரு பக்க காமிக்ஸ் கதையை தவறாமல் இதிலும் இணைத்தால் நமக்கும் ,புதிதாய் அறிமுக மாகும் இளைய சுட்டிகளுக்கும் கொண்டாட்டமாக இருக்கும் ///

   நல்ல யோசனையே ; ஆனால் தற்சமயம் சாத்தியமாகாது ! அந்த அறிமுகம் ஒரிஜினலாக "ஜெஸ்ஸி ஜேம்ஸ் " கதையினில் வரும் சங்கதி. முதல் முறையாய் தமிழுக்கு அறிமுகமாகும் கதாபாத்திரம் என்று சொல்லி அன்றைக்கு எப்படியோ பதிப்பகத்தினரை சரிக் கட்டிவிட முடிந்தது. ஆனால் இன்று, ஆண்டுகள் 26 ஆன பின்னே அந்த விளக்கம் எடுபடாது ! So - கதைகளின் பக்கங்கள் மாத்திரமே வந்திடும் இம்முறை !

   Delete
  4. அஹா அப்படி போனதா !அந்த அறிமுக முன்னோட்டம் இல்லை என்பது, அதுவும் பெரிய சைசில் ரொம்பவே மிஸ் பண்றோம் சார்!

   Delete
 41. சூப்பர் சர்க்கஸ் புத்தகம் வந்த பொழுது "சாரை பாம்பு சார்லி "யை கண்டு வில்லனின் அடியாள் மட்டுமல்ல ...,நானும் அவனை கண்டு நடுங்கி கொண்டே படித்தது இன்னமும் நினைவலையில் ....

  ReplyDelete
  Replies
  1. சரியான பில்டப் கொடுத்து சாரை பாம்பு சார்லி கடைசியில் யானையைப் பார்த்து நடுங்குவது என்று.. ரகளையான கதை

   Delete
  2. இங்கே ஒரு நண்பரின் பெயரே அதுதான், அதிலும் அந்த பத்தடி தொலைவில் உள்ள யானையை கையுறை இல்லாமல் சுட இயலாமல் முழிக்கும் கட்டம்.......அடடா

   Delete
 42. For Sunshine,
  1.Editor Area
  2.Warming Page
  3.Open Thoughts
  4.Head Lines

  ReplyDelete
 43. டியர் எடிட்டர்,

  ஒரு காமிக்ஸின் முக்கிய அம்சமே சித்திரங்கள் தான் என்று நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியவர் அல்ல எனும் போதிலும், சமீபத்தில் வந்திட்ட இரத்தத் தடம் புத்தகத்தில் சித்திரங்கள் மங்கலாகவும், வண்ணக் கலவை திரிபுகள் கொண்டும் வந்தது குறித்த உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாய் உள்ளேன் (உள்ளோம்).

  அடுத்து வரவிருக்கும் இதழ்களின் பணிகள் உங்கள் குழுவினரை busy-யாக வைத்திடும் வேளையிலும், நண்பர்கள் பலரின் இது குறித்த கேள்விக்கு தாங்கள் ஒரு சிறிய பத்தி எழுதிடுவது - will be a clarification in the right direction for our passionate fans - இந்த காமிக்ஸ் காதலர்களின் முதல் வரிசை முதல் சீட் உங்களுடையது என்பதனால் ஒரு ரசிகராகவும் உங்கள் கருத்தை அறிந்திட ஆவல்.

  ReplyDelete
  Replies
  1. Today I started reading both books. But I am very disappointed to see 2nd book almost all the pages are very dull and not clear.

   Worst part is even tiger special in my copy around 10 pages were dull and pictures are not sharp also in few pages colors are spread.

   I request Editor to look into this issue immediately..

   Delete
  2. Me too sir! Pls try to avoid this problem in the future books sir! thanks!

   Delete
 44. Where can I find Mr.Shanmugam's other wrappers. Web Address pls.

  ReplyDelete
  Replies
  1. Check out at Facebook groups: Tamil Comics Dreamzz, Comics Kalavara Kazhagam, Lion/Muthu Comics etc ..

   Delete
 45. உள்ளம் திறக்கிறேன்...
  உள்ளதை சொல்கிறேன்...
  உள்ளிருந்த எண்ணங்கள் ...

  ReplyDelete
 46. மை டியர் மானிடர்களே!!!
  FACEBOOK இணையத்தளத்தில் திரு.சண்முக சுந்தரம் என்கிற நண்பர் உருவாக்கிய அற்புதமான கவர் டிஸைன்களை தற்செயலாக பார்த்து அதிசயித்தேன்.வாயை பிளக்க வைத்த அந்த அட்டைப்படங்களை நம்ம காமிக்ஸ்களில் ரெகுலராக பயன்படுத்தினால் நமது இதழ்களின் விற்பனை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அடியேனின் சிறு மூளைக்கு தோன்றுகிறது.எடிட்டர்ஜீ நல்ல முடிவாக எடுப்பார் என நம்புகிறேன்.அந்த அட்டை படங்கள் உண்மையில் பிரபஞ்ச தரத்தில் அமைந்துள்ளது.
  யாருங்க அந்த சண்முக சுந்தரம்.....?அந்த தம்பியெ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.ஹிஹி!!!

  ReplyDelete
 47. காமிக்ஸ் கதம்பம் ...
  காகித பூக்களின் வாசம் ...
  காமிக்ஸ் காதலால்...

  ReplyDelete
 48. இருபக்கமும் அட்டைபடம் ஜோர்.

  லயன் மற்றும் முத்துவின் அட்டைப்படங்கள் மட்டுமல்ல இப்போது sunshine இலும் கூட அழகுடன் மனதுக்கு ஒரு வகை அமைதியை தர கூடிய இளநீலம்,பச்சைபசேல் என பசுமையையான பச்சை போன்றன ஒதுக்கபட்டு சிவப்பு,மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் கலரில் அதிகம் வருவது ரொம்ப டெரராக இருக்கனும் என்பதாலா?

  டைகர் ஸ்பெஷலில் கூட துரத்தும் தலைவிதியில் வெளியிட்ட ஒரிஜினல் அல்லது பழைய இரும்புக்கை எத்தன் பாணி அட்டைகளை அந்த நிறங்களுகாகவே மிகவும் எதிர்பார்த்தேன்.

  ReplyDelete

 49. சூப் பர் சர்கஸ் குறித்தான ஆர்வம் அதிகரிக்கிறது.பொடியன் பில்லியை பொறுத்தவரை சிறுவயதில் நண்பர்கள் மூலம் ஆர்வம் ஏற்பட்டு தேடி கிடைக்காத பட்டியலில் முக்கியமான ஒன்று.

  20 வருடத்தை நெருங்கும் லயன்,முத்து வாசிப்பில் அவதானித்த அளவில் கார்ட்டூன் பாணி என வரும் போது லுக்கியும்,சிக் பில் co வும் மட்டுமே முடி சூடா மன்னர்களாக குட்டிஸ் மற்றும் கார்டுன் ரசிகர்கு மட்டுமல்லாது ரசனைகள் மாறிய வாசகர்களது தெரிவாக கூட இருப்பது இவர்கள் சிறப்பு.சுட்டி லக்கி பற்றி படித்தபின்.

  லக்கியின் Jessijames and பழைய கதைகளும் ,சிக் பில் co வில் முதலில் படித்த படித்தவுடன் ரசிகனாக வைத்த தலை வாங்கும் தேசம் உள்ளிட்ட பல B&W இல் கலக்கிய கதைகள் அவ்வப்போது வர்ணத்தில் காண ஆசையே.

  ReplyDelete
 50. TV ,Dvd களில் சுற்றுபுரதிலுள்ள குட்டிஸ் குறித்து கூறவேண்டுமெனில்அவர்கள் ரசனையும் Tom&Jerry,Tintin இலிருந்து HiTec ஆக 3Dபடங்கள் ,Ben 10, Avengers,Superman;Batman ரக superhero வாக மாறிவிட்டது.

  இதற்கு முக்கிய காரணமாக சீரியல் பார்க்கும் மம்மீஸ் இவர்களை மிக சிறுவயதில் டாடிஸ்ஸோடு காம்யூட்டர் பக்கம் ஒதுங்க வைத்து விட்டது சீரியல்களின் ஒரு பின்விளைவு.

  பழைய மார்வெல் பாணியிலிருந்து நவீன sci பாணிக்கு மாறிவிட்ட Ironman ,கண்ணால் blast பண்ணும்,கையில் கத்தி முளைக்கும் Xமென் ரகங்கள்,சுட்டியில் ஒளிபரப்பாகிய ஜாக்கிசான் இவர்களை கவர்வதாக தெரிகிறது. அடுத்த கார்ட்டூன் தொடர்களை இவ்வகையில் தர முயட்சியுன்களேன் சார்?

  ReplyDelete
  Replies
  1. அனால் காலங்கள் எவ்வளவுதான் மாறினாலும் டாம் அண்ட் ஜெர்ரிக்கு மௌசு குறையாது நண்பரே!
   அந்த கலக்கலான, ஓவியங்களும் வன்னச்சேர்க்கையும் இன்றும் பல தலைமுறை கடந்தும் கார்ட்டூன் சேனலில் அதற்க்கு தனி இடம் கொடுத்துள்ளது என்றால் மிகை அல்லவே! ஓவியங்கள் ஈர்க்கும் வகையில் இருந்தால் போதும்; பழையது, புதியது என்று ஏதுமில்லை. கவனத்தை ஈர்க்கும் அழகிற்கு என்றுமே மனிதனின் புலன்கள் அடக்கம்!

   Delete
  2. டாம் அண்ட் ஜெர்ரியை நாமும் ரசிப்போம்; பழைய தலை முறையும் ரசிக்கும்; புதிய தலை முறையும் ரசிக்கும். ஆனால் Ben 10, சுட்டியில் ஒளிபரப்பாகிய ஜாக்கிசான் இவர்களை நாம் அதாவது பழைய தலை முறை எத்தனை பேர் ரசிப்போம் என்பது கேள்விக்குறியே!
   மனம் கவர் கதைகளும், அழகிய ஓவியங்களும், ஈர்க்கும் வண்ணசேர்க்கைகலுமே அனைத்து தலை முறைகளையும் கவர ஏதுவானது!

   Delete
  3. நன்றி ஸ்டீல் க்ளா சார்
   Tom and Jerry குறித்த தங்கள் கருத்து உண்மை.நான் Tom and Jerry குறித்து குறிபிட்டது யாரும் ரசிக்கவில்லை என்று அல்ல.சுற்று வட்டார குட்டீசின் மிகவிரும்பும் கார்ட்டூன் என அவர்கள் தெரிவித்தபட்டியல் மட்டுமே..நான் விரும்புவதும் மனம் கவர் கதைகளும், அழகிய ஓவியங்களும், ஈர்க்கும் வண்ணசேர்க்கைகலுமே என தாங்கள் கூறுவது போலே.

   Ben 10,ஜாக்கிசானை நீங்கள் கூறியபடி பழைய தலைமுறை ரசிப்பது இயலாது.இருபினும் கூற விரும்பிய விடயம் அதிகரிக்கும் கார்ட்டூன் கதைகள் குறித்தது.

   கார்டூன் பாணி Superhero,Fantasy & Sci-fic பல சினிமாவில் கூட படைக்கும் வெற்றிகளும்,வசூல் சாதனைகளும் கூறுவது எல்லா வயதினரும் அங்கு ஈர்க்க பட்டுவிட்டார்கள் என்ற நிலையில் காமிக்ஸ் கார்ட்டூன்கதைகள் புதிய அறிமுகமாக எத்தனை பேர் ரசிப்போம் என்ற Agent 327,ஜில் ஜோர்டன்,ஜெரோம் என தொடர்வதும், Thumbs down பெறுவதும் சலிபூட்டுகிறது.

   எனவே தான் தொடர்கதையாக வராத புதிய வகை தொடர் ஏதேனும் ஆசிரியரிடம் அகபட்டால் அவருக்கும் பிடித்து ஆனால் எம் ரசனை குறித்து தயங்கினால் அவ்வகையறாகளிலும் முயற்சித்து வாசகர் வரவேற்பு இருப்பின் தொடர வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.மற்றபடி சத்தியமாக என்னிடம் எந்த வகையான வில்லங்கமோ ,உள்நோக்கமோ இல்லை.

   Delete
  4. Superhero,Fantasy & Sci-fic நிச்சயம் வேண்டும் நண்பரே !நாமெல்லாம் ஸ்பைடர் , ஆர்ச்சி, மாயாவியால் ஈர்க்க பட்டவர்கள் தாமே ...இவர்களெல்லாம் இல்லையென்றால் நிச்சயமாக சிறு வயதில் நான் காமிச்சே படித்திருக்க மாட்டேன் என்பது உண்மை !

   Delete
  5. ஜில் ஜோர்டன்,ஜெரோம் ஆசிரியர் சரியான சந்தர்ப்பம் வாய்க்கும் போது தொடர்வதாய் கூறியுள்ளார் !

   மேலும் பல சிறந்த நாயகர்கள் , சிறந்த கதைகள் வரும் காலங்களில் தூள் கிளப்ப போவது உறுதி! ஆசிரியர் எதை வெளியிட என மலைத்து நிற்பதே நமக்கு மிக பெரிய சந்தோசம் தரும் செய்தி !

   பார்ப்போம் .....

   Delete
  6. Abisheg : Entertainment என்பதை இரண்டு விதங்களாய்ப் பார்த்திடல் சாத்தியம் ; Popular ஆன சங்கதிகளுக்கு அப்படியே thumbs up கொடுப்பது ஒரு ரகமெனில் ; இரண்டாவதும் - சற்றே சிரமமானதும் - நல்ல விஷயங்களைத் தேடிப் பிடித்து - அவற்றை அழகாய் வழங்கிட முயற்சிப்பது.

   நாம் பயணிப்பது பாதை # 2-ல் !

   எனினும் அடுத்த தலைமுறை சிறுகச் சிறுக நம் வாசகக் குடும்பத்தினில் ஒரு குறிப்பிடும் அளவிலான பங்கை ஏற்கும் வேலை வரும் பொது, அவர்களது ரசனைகளுக்கு சிறுகச் சிறுக நாமும் நிச்சயம் மாறிக் கொள்வோமே !

   Delete
  7. ஆமாம் சார் ,உடனடியாக என்றில்லாது நல்ல கதையமைப்புடன் லார்கோவுக்கு போல் உங்களுக்கும் பிடித்து வாசகர்கள் ஏட்பார்கள் என்ற தயக்கம் இராத காலம் வரும் போது நீங்கள் புதிய பாணி முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது என் வேண்டுகோலும்.

   Delete
  8. அண்ணன் கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் தங்கள் அன்புக்கு கருத்துகளுக்கு நன்றி,ஜில் ஜோர்டன் ,ஜெரோம் சிலரை போல் எனக்கும் தனிபட்ட முறையில் முதல் கதைகள் பெரிதும் பிடிக்காது போய் விட்டது.இருபினும் வலைபதிவுகள் ,ஆசிரியர் ,வாசகர் கருத்துகள் படித்த பின் ஒரு கதையுடன் முடிவெடுக்கவில்லை.சிறு வயதிலிருந்து படிக்கும் லக்கி ,சிக்பில் போன்றோருடன் இவர்களை ஒப்பிடமுடியவில்லை என்பது தான் காரணமோ தெரியவில்லை.

   Delete
  9. ஜெரோம் கதை எனக்கும் பிடிக்கவில்லை நண்பரே, ஆனால் ஆசிரியர், மற்றும் நண்பர்கள் சிறப்பாய் கூறுவதால் வண்ணத்தில் ஒரு முறை பார்ப்போமே என்றிருக்கிறேன்!

   Delete
 51. சுட்டி டைம்...
  ஜாலி டைம்...
  புதிய பாதை...

  ReplyDelete
 52. ரிலாக்ஸ் டைம்.
  ரெய்ன்போ லைட்ஸ்
  வெஸ்டர்ன் ஹிட்ஸ் டைம்
  லயன் லைன்

  ReplyDelete
 53. 1.Manasodu Pesugiren!
  2.Ungaludan urimaiyudan!
  3.Ungalodu oru varthai!
  4.Heart Time
  5.Kamics Kathalukku!

  ReplyDelete
 54. I am R.Dinesh aditya, Iam studying "II" Standard in lisieux matrric.Hr.sec.school,saibaba colony, coimbatore, I want "KID LUCKY" and "LUCKY LUKE"...

  டியர் சார்,
  இது என் மகனுடைய ஆசை ,அவன் சொல்ல, சொல்ல நான் டைப் செய்தேன்... என்னை போல் அவனையும் காமிக்ஸ் படிக்க வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி....

  ReplyDelete
  Replies
  1. கோவை. ரமேஷ்.. சந்தோஷங்களில் தலையாயது - நம் மழலைகள் நம் முன்னே மலரும் அற்புதத்தைப் பார்த்து ரசிப்பது !

   குட்டி தினேஷ் இங்கே அவனாகவும் பதிவிடும் நாளும் தொலைவில் இராது என்பது நிச்சயம் ! அன்று அவனை வரவேற்க 400+ கரங்கள் காத்திருக்குமென்பதும் உறுதி !

   Delete
  2. எடிட்டர் சார் நன்றி...

   இந்த ஒரு வார்த்தை மட்டும் போதாது ...

   எனக்கு மறுக்கப்பட்ட ஒன்றை என் மகனுக்கு தர வேண்டும் என்று நான் நினைத்தததின் வெளிப்பாடே இது ... மேலும் அவனை நான் வற்புறுத்தவில்லை,அவன் - NEW LOOK SPECIAL - பார்த்ததின் விளைவு,கண்டிப்பாக உங்களுடன் அவனாகவே பதிவுடுவான்...

   Delete
 55. //காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: தென்மாவட்டத்தில் மின்வெட்டு குறைந்தது//

  இந்தச் செய்தி உண்மையா சார்?

  ReplyDelete
  Replies
  1. Podiyan : நாங்களெல்லாம் இப்போது இருப்பது பூலோக சொர்க்கத்தில் !! 5 மணி நேரம் மாத்திரமே மின்வெட்டு !!!! ஹூராய் !!

   Delete
  2. /* 5 மணி நேரம் மாத்திரமே மின்வெட்டு ... */ :-) :-)

   Delete
 56. காமிக்ஸ் குரல் ...

  காமிக்ஸ் நெஞ்சத்தில் ...

  காமிக்ஸ் ரசிகனுக்கு ...

  காமிக்ஸ் லைப்ரரி...

  காமிக்ஸ் பாலம் ...

  உங்களுடன் ...

  உங்களுடன் கொஞ்ச நேரம் ..

  ReplyDelete
 57. டியர் எடிட்டர்,

  நமது காமிக்ஸ்கள் விரைவில் '3D காமிக்ஸ்' ஆகிட வாய்ப்புள்ளதா?
  ('இரத்ததத் தடம்' புத்தகத்தில் சில பக்கங்களை உற்றுப் பார்த்தபோது கணநேரத்தில் உதித்த கேள்வி இது!)

  ReplyDelete
 58. அன்பான ஆசிரியர் ஸாருக்கு,

  (இதுக்கு வேற யாரும் பதில் சொல்ல வேணாம் ப்ளீஸ். இது ஆசிரியர் மட்டுமே பதில் சொல்லவேண்டிய கேள்வி. அவருக்கு இஷ்டமில்லைன்னா விட்டுரட்டும். மத்தவங்க யாரும் முந்திக்கிட்டு வரவேணாமே. ஓ.கே?)

  இரத்ததடம் புத்தகத்தின் ப்ரிண்ட்டிங் மோசமா வந்தது பற்றி கடந்த பதிவுகளிலும் இந்தப் பதிவிலும் நண்பர்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு ஏன் விஜயன் ஸார் பதிலளிக்காமல் இருக்கிறார்னு புரியலை. வழக்கமாக ஏதாவது சிறிய ப்ரச்னை பற்றி யாராவது கேள்வி எழுப்பினாலே அதற்கு ஏதாவது ரீஸன் சொல்லி அதற்கு ஒரு முடிவு கட்டும் விஜயன் ஸார் இந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லமலிருக்கறது பெரிய மைனஸ்.

  கலரில் காமிக்ஸ்கள் வர ஆரம்பித்தப்பின்னாடி இவ்ளவு நாளும் அவரும் அவரோட டீமும் கொடுத்த உழைப்பும் இந்த ஒரு புக்கோட க்வாலிட்டி லாஸ்னால லாஸ் ஆப் போச்சேங்கறதுதான் என்னோட கவலை.

  சரி, அவரோட முத பதிவுல, ப்ரிண்டிங் மெஷின் ப்ராப்ளம் அதனால டிலே ஆச்சுனு எழுதியிருந்தாரு. அப்படி அதனாலதான் இந்த பக்கங்கள் இப்படி மோசமா ப்ரிண்ட் ஆயிருச்சுன்னா அத முதல்லயே சொல்லியிருக்கலாமே? இல்லைன்னா ப்ரிண்டிங் மோசமானது தெரிஞ்சா உடனே நிப்பாட்டிட்டு மறுபடி சரியா ப்ரிண்ட் பண்ணி அனுப்பிச்சிருக்கணும். பணம் கொடுத்து வாங்கற பொருள்தானே? இதுல நம்பிக்கையும் முக்கியம்தானே?

  இங்கே ரபிக் சார் சொல்லியிருக்கற மாதிரி புத்தகம் அச்சுக்குப்போன பிறகு ஆசிரியர் புக்குகளை பார்க்கற வழக்கம் இல்லைன்னாலும்,ப்ரஸ்ல இருக்கறவங்க, பைண்டிங் பண்றவங்க, ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி, ஜூனியர் எடிட்டர், டெஸ்ட்பாட்ச் வேலை பண்றவங்க யாருமே புக்க பாக்கறதில்லையா?

  'இப்படி இப்படிதான். இது இதனாலதான் இப்படி ஆச்சு பொறுத்துக்குங்க பசங்களா'னு விஜயன் ஸார் முன்னாடியே சொல்லீருந்தா எல்லாருமே ஓகே. எந்திர கோளாறு வர்றது சகஜம்தானேனு அத ஏத்துக்கிட்டிருப்பாங்க. ஆனா, இவ்வளவு கேட்டதுக்கப்புறவும் அவர் மௌனமாவே இருக்கிறார்னா, இது நடந்தது தெரிஞ்சும், அத ஓபனா பேசி பேஸ் பண்ண தயக்கம் காட்டறார்னுதானே அர்த்தம்.

  இதுக்கு சரியான ரீஸன் சொல்லி. இந்த விவகாரத்துக்கு ஒரு முடிவு கட்டணும். இல்லைன்னா, இதே மோசமான ப்ரிண்ட்டிங் வொர்க் தான் தொடரும்னு அர்த்தமாயிடும். கவனிங்க ஸார்.

  (இதுக்கு வேற யாரும் பதில் சொல்ல வேணாம் ப்ளீஸ். இது ஆசிரியர் மட்டுமே பதில் சொல்லவேண்டிய கேள்வி. அவருக்கு இஷ்டமில்லைன்னா விட்டுரட்டும். மத்தவங்க யாரும் முந்திக்கிட்டு வரவேணாமே. டீல் ஓ.கே?)

  ReplyDelete
  Replies
  1. Bond 2012 : Bond 2012 : பிரச்னைகளின் மையத்தைக் கண்டறிந்து ; அதனை செம்மை செய்ய முயற்சிப்பதே - பத்தி பத்தியான பதில்களை விடச் சிறந்த மருந்து என்பது எனது அபிப்ராயம். எங்களது வீட்டு அழுக்கை வீதியில் போட்டு சுத்தம் செய்ய முயற்சிப்பது நியாயமாகாது என்பதாலேயே மௌனம் காத்தேன்.

   சொல்லப்படா பதில்கள் அனைத்துக்கும் - பதிலின்மை காரணமாகாது !

   Delete
  2. அது சரிதான். ஆனா சந்தா மூலம் பெற்ற, கடைல வாங்கிய வாசகர்கள் அடைந்த ஏமாற்றம்? கொடுத்து மாற்றலாம்னு பார்த்தா எல்லாமே அப்படித்தானே இருக்கிறது? இந்த ஏமாற்றத்துக்கு மாற்று மருந்து தேவைதானே?

   Delete
 59. //@ friends : என்ன தான் இயந்திரங்களும், கணினிகளும் வந்து விட்டாலும்,end of the day அதனை இயக்குவது மனிதர்களே ! இம்முறை நமது அச்சகப் பணியாளர்கள் சொதப்பி விட்டது தான் அச்சில் நேர்ந்த பிரச்னைகளுக்குக் காரணம். பகலில் மின்வெட்டு பிராணனை வாங்கியதால், பெரும்பான்மையான அச்சுப் பணிகள் நடந்தேறியது இரவினில் !

  அசதியும், கவனமின்மையும் கொண்டு வந்த இப்பிரச்னை இனி வரும் நாட்களில் தொடராது !//

  இதத்தானே ஸார் எதிர்பார்த்தோம். இத முன்னாடியே சொல்லியருந்தா இத்தனைபேர் இவ்வளவு நாளா புலம்பியிருக்க தேவையில்லியே? உங்க வார்த்தை தானே எங்க நம்பிக்கை?

  ReplyDelete
 60. விஜயன் சார், ரத்த தடம் புத்தகத்தின் பின் உள்ள lucky-luke குதிரைக்கு முடி வெட்டும் அழகை பார்த்து ஒருநாள் முழுவதும் என்னிடம் வர்ணித்த எனது 4 வயது மகள் லக்-லுகே ரசிகை ஆகிவிட்டாள்!

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : பார்த்து பரணி....நீங்கள் தூங்கும் நேரமாய் உங்களுக்கு லேசாக கிராப் அடிக்க முயற்சித்து விடப் போகிறது வாண்டு !!

   Delete
  2. ஒருநாள் அது போல் நடந்தாலும் நடக்கலாம்!! பணம் மிச்சம் என சமாதானம் செய்து கொள்ள வேண்டியது தான்! :-) வாழ்கை -ல இது எல்லாம் சாதாரணம்:-)

   Delete
 61. விஜயன் சார், ரத்த தடம் புத்தகத்தின் அட்டை படத்தில் "Tiger" சட்டை பக்கத்தில் கட்டம் போட்டு "கௌபாய் ஸ்பெஷல்" என பிரிண்ட் செய்தது நன்றாக இல்லை; சிறுபிள்ளை டிசைன் செய்தது போல் உள்ளது!!

  சில மாதம் கதைகளுக்கான தலைப்புக்கு உபயோக படுத்தி உள்ள font மற்றும் ஸ்டைல் மிகவும் மோசமாக உள்ளது. இதை தவிர்க்க நமது காமிக்ஸ் கதைகளுக்கான தலைப்புக்கு ஒரு குறிப்பிட்ட font style உபயோகபடுத்தினால் நன்றாக இருக்கும்! I am impressed with the font used by Shanmuga Sundaram S for Danger Diabolic cover.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : இந்த சங்கதிகள் முழுக்க முழுக்க அவரவரது ரசனையைச் சார்ந்தது ! இரத்தத் தடம் " அட்டைப்படம் தான் சமீபத்திய best என்று கருத்துச் சொன்னவர்களும் இங்குண்டு ; சுமார் என்று அபிப்ராயப்பட்டவர்களும் உண்டு !

   Anyways நண்பர் ஷண்முகசுந்தரத்தின் முயற்சிகள் மிகச் சிறப்பாக உள்ளன என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் நிச்சயம் கிடையாது !

   Delete
  2. அட்டை படம் அருமை என சொன்னவர்களில் நானும் ஒருவன்!! எனது கருத்து கதையின் தலைப்புக்கு உபயோகித்து உள்ள "font" மற்றும் "ஸ்டைல்" பற்றியது! It would be good if we start using one standard font for title of the stories in the cover.

   Thanks for replying my comments... that too within one hour u replied for two of my comments :-) Happy.....

   Delete
 62. டியர் எடிட்டர்,

  உங்களது இரத்தத் தடம் குறித்த பதில் கண்டேன். இதனை சிறிது முன்னம் சொல்லிருக்கலாம். இப்போது வரும் இதழ்கள் - உங்களின் குழுவின் அயாராத உழைப்பும் ஆர்வமும் ஒரு பக்கமும் வாசகர்களின் ஆர்வம், சந்தா, passionate support ஆகியவை இன்னொரு பக்கம் கொண்ட ஒரு double engine இணைந்த வேகப் பயணம். எனவே பல வாசகர்கள் சில சமயம் உங்களிடத்தில் தவறிருந்தாலும் பொறுத்திருப்பார்கள்.

  அனால் தவறிடும் சமயங்களில் ஓரிரு வரிகள் மூலம் தெரிவித்துவிட்டால் - அது உங்கள் கவனத்தில் உள்ளது - எனவே சீராகிவிடும் என்று தெளிவு கொண்டிடுவோம். [நாம் அனைவரும் பல சமயங்களில் தவறு செய்பவர்களே - மேலே நான் கூறியவை எனக்கும் சேர்த்துதான்].

  ReplyDelete
  Replies
  1. @ காமிக் லவர்

   நியாயமான ஆதங்கத்தின் வெளிப்பாடு! ஒரு SMS அளவு செய்தியாக இந்த 'அச்சில் ஏற்பட்ட கோளாறை' எடிட்டர் முன்பே அறிவித்திருந்தால் இவ்வளவு கேள்விகள் எழுந்திருக்காதே!
   எடிட்டரின் பொருட்டு இந்த சிறு பிழையைக்கூடப் பொறுத்திருக்க மாட்டோமா என்ன?

   சில சமயங்களில் எடிட்டரும் ஒரு புரியாத புதிர்தான்!

   Delete
 63. SUNSHINE JUNCTION .......?மறுபடியும் ஹிஹி!!!

  ReplyDelete
 64. ஒரு ரசிகனின் ரசனை
  ரசிகனின் பக்கம்
  ரசனைகளின் பயணத்தில்
  ரசனையுடன் பயணித்ததில்

  ReplyDelete
  Replies
  1. ஏதாவது பயணம் போற ஐடியாவில் இருக்கீங்களா, ஸ்டீல்? :D

   Delete
 65. டியர் எடிட்டர்,

  தற்போது நீங்கள் மனதில் கொண்டுள்ள 'காமிக்ஸ்.காம்' என்ற தலைப்பு எவ்விதத்தில் பொருந்திப்போவதாக நீங்கள் நினைக்கிறீர்கள் என்று புரியவில்லை! உங்களது முன்னுரைக்காக இல்லாமல் 'சிங்கத்தின் சிறு வலை'க்கு வேண்டுமானால் இது நூறுசதம் பொருந்திப் போகலாம்!

  மாறாக, நண்பர் கார்த்திக் முன்மொழிந்த 'சன்ஷைன் ஸ்பாட்' என்பதுகூட எளிமையாகவும், அழகாகவும் பொருந்துவதாக எனக்குத் தோன்றுகிறது!

  தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தபோது திடீரென்று தோன்றியது; கேட்டுவிட்டேன் அவ்வளவுதான்! மற்றபடி, நீங்கள் என் கேள்வியை தூக்கத்தில் உளறுவதாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்! :)

  ReplyDelete
  Replies
  1. @ எடிட்டர்

   'காமிக்ஸ்.com' என்ற தலைப்பை நீங்கள் 3 முறை இங்கு பதிவிட்டும், நண்பர்களிடமிருந்து ஒரு 'ஆஹா!' கூட வரவில்லையே, கவனித்தீர்களா?
   அந்தத் தலைப்பில் நிறைவடையாமல்தான் நம்ம 'ஸ்டீல்'கூட அவர் பங்குக்கு தூக்கத்தில் உளறி ஏதோ 'ரசிகன்... ரசனை...' அப்படி இபபடீன்னு தலைப்பு தலைப்பா எழுதிட்டிருக்கார்; சற்று மேலே கவனித்தீர்களா?
   இப்படியே போனால் உங்களைப் புகழ்ந்து மறுபடியும் ஏதாவது செய்யுள் எழுத ஆரம்பிச்சுடுவார் போலிருக்கே?!! :)

   Delete
 66. Titles for Sunshine...
  எண்ணக் களஞ்சியம்
  ஷைன் பேஜ்
  நியூ லைன்ஸ்
  உற்சாக வேளை

  ReplyDelete
 67. என்னா தலைவா உங்கமேலே ஒரு தப்புன்னு வரும் போது (அதாவது நமது இதழ் ) உடனே நீங்க பதில் சொல்லிடுங்க தலைவா....இல்லைனா எல்லாரும் சுத்தி நின்னு பயங்கரமா பேசிடுவாங்க தலைவா...., ஒரு குறையாக ஒரு கேள்வி வரும் போது நீங்கள் உடனே அதற்க்கு பதில் சொல்லி முற்றுபுள்ளி வை தலைவா இல்லைனா அதற்கு வாசகர்கள் பதிலளித்துவிடுகிறார்கள் தலைவா உங்களுக்கு தெரியாததில்லை தலைவா சும்மா அட்ராசக்க அட்ராசக்கன்னு போட்டு தாக்குங்க தலைவா .......

  ReplyDelete