Powered By Blogger

Friday, May 17, 2013

சூப்பர் ஜூனில் ஒரு சூப்பர் ஹீரோ !

நண்பர்களே,

வணக்கம். சூப்பர் ஜூனின் அடுத்த ஆக்கத்தை அறிமுகம் செய்திடும் வேளை இது ! இந்தாண்டின் துவக்கத்தில் தலை காட்டிய நம் இரவுக் கழுகார் -  "பூத வேட்டை"யில் இறங்கிடும் சாகசத்தை இம்முறை ரசிக்கப் போகிறீர்கள் ! "பூத வேட்டை" இதழினை நாம் முதன் முதலில் விளம்பரப்படுத்தியது எந்த மாமாங்கத்தில் என்று யாருக்கேனும் நினைவிருப்பின் - Memoryplus மாத்திரைகளுக்கு விளம்பரப் பிரதிநிதியாகும் தகுதி அவர்களுக்கு நிச்சயம்  இருக்கும் என்பது எனது அபிப்ராயம் ! ஏறத்தாள 15+ ஆண்டுகளுக்கு முன்பே ட்ரைலராய் வந்து நிறையப் பேரின் ஆர்வத்தைக் கிளப்பி விட்ட பின்னே - ஓசையின்றி துயில் பயிலச் சென்ற பல கதைகளுள் "பூத வேட்டை" யும் ஒன்று ! அது வெளிச்சத்தைப் பார்த்திடும் தருணம் ஒரு வழியாகப் புலர்ந்து விட்டதில் எனக்கும் சந்தோஷமே ! (இந்தப் பட்டியலில் "திகில் நகரில் டெக்ஸ் " உள்ளதும் நினைவுள்ளது guys !!!)

டெக்ஸ் வில்லருக்கு அறிமுகம் என்பது அவசியமில்லா வேலை என்பதால், அதனில் நான் அதிக நேரம் செலவிடப் போவதில்லை ! டெக்சின் 90% கதைகள் பரபரப்பான த்ரில்லர்களே என்ற போதிலும் "பூத வேட்டை" அதில் ராக்கெட் பட்டாசு ரகம்!  சற்றே மாறுபட்டதொரு plot  + துவக்கம் முதல் இறுதி வரை  non -stop ஆக்க்ஷன் என இரவுக் கழுகாரும், குழுவினரும் அதிரடி அதகளம் செய்யும் adventure இது ! இதோ - மாலையப்பன் வரைந்த அட்டைப்பட ஓவியம், சின்னதாய் டிஜிட்டல் improvisation சகிதம். பல வாரங்களாய் முடியோ ; நகமோ வெட்டாத ; சவரம் செய்து கொள்ளாத சூப்பர்மேனைப் போல் காட்சி தருவது தான் இம்முறை டெக்ஸ் சந்திக்கவிருக்கும் பகைவன் !

இதழில் வண்ணங்கள் இன்னமும் அழுத்தமாக இருந்திடும் !


டெக்ஸ் கதைகள் இன்றளவும் வெளிவரும் ஒரு live தொடர் என்பதோடு மட்டுமல்லாது - ஆண்டுக்கு எக்கச்சக்கமான பக்கங்கள் அவசியமாகிடும் ஒரு மெகா ப்ராஜெக்ட் கூட என்பதால் - நிறைய ஆர்டிஸ்ட் குழுக்கள் இதனில் பணியாற்றுகின்றனர்  போன வாரம் தான் இதழ் # 631 வெளியாகி உள்ளது இத்தாலியில் ! (விசா போடுவது பற்றி விசாரித்தீர்களா ஈரோடு விஜய் ?)


துவக்க ஓவியரான காலெபினி மாத்திரமே சித்திரங்கள் தீட்டி வந்த சமயம் கதைக்குக் கதை டெக்ஸ் & கோ.வின் உருவங்களில் துளியும் வேறுபாடு இருந்திடாது maintain செய்வது சாத்தியமானது! ஆனால் கரங்கள் மாறிக் கொண்டே செல்லும் பொது அந்த பாணிகளிலும் வேற்றுமை தெரிவது தவிர்க்க இயலா சங்கதியாகி விடுகிறது !  இம்முறை நிஸ்சி + டி ஏஞ்சலிஸ் என்ற கூட்டணி பணியாற்றும் இந்த சாகசம் ஒரு அசாத்திய ரக சித்திர விருந்து என்றே சொல்லுவேன் ! இதோ பாருங்களேன் :

இவை நான் வீட்டில் செய்த scans மாத்திரமே. நண்பகலுக்கு முன்னே இவற்றின் இடத்தினில் டிஜிட்டல் files இடம்பிடித்திடும் ! 
இனி வரும் அத்தனை டெக்ஸ் இதழ்களிலும், அதன் (துவக்க) படைப்பாளிகளின் பெயர்களை அட்டைப்படத்தில் குறிப்பிடக் கோரி அனைத்து மொழிகளிலுமான டெக்ஸ் வெளியீட்டாளர்களுக்கு உத்தரவாகி இருப்பதால் முதன்முறையாக நமது முன்னட்டையில் குட்டியாய் அவர்களது பெயர்களைப் பார்த்திடலாம் ! வழக்கமான பகுதிகள் அனைத்தும் இந்த இதழில் இடம் பிடிப்பதால், திருப்தியானதொரு இதழாக இது அமைந்திடுமென்ற எதிர்பார்ப்பு என்னுள் ! வழக்கம் போலவே fingers crossed ! 

1985 முதல் நமக்கு ரொம்பவே பரிச்சயமான டெக்ஸ் வில்லரின் 50-வது இதழ் இது என்று நான் சில மாதங்களுக்கு முன்னே குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம் ! ஆனால் அது சரியான தகவல் அல்லவென்பது தொடர்ந்த நாட்களிலேயே நமது தீவிர சேகரிப்பாளர்கள் மூலமாய் அறிந்திட இயன்றது. இடைப்பட்ட 2 சிறுகதைகளை நான் கணக்கில் சேர்த்திடவில்லை என்பது காரணமெனினும், இதோ நமது நண்பர் ஈரோடு ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ள comprehensive list : 
நன்றிகள் ஸ்டாலின் + சேலம் டெக்ஸ் விஜயராகவன் ! 
இவற்றில் அனைத்தையும் படித்தவர்கள் உங்களில் எத்தனை பேர் என்றறிய ஆவல் ! அவ்விதம் படித்திருக்கும் பட்சத்தில் - இந்தக் கதைகளில் best of the lot எது என்றும் அறிந்திட ஆவல் ! Do write in guys !! தொடர்ந்து சந்திப்போம்  ! Bye for now ! 

205 comments:

 1. Replies
  1. YAHOO ....!ஓகே துண்டு போடாச்சு...படிச்சிட்டு வந்திடுறேன் ...

   Delete
  2. அட்டைபடம் வர வர பின்னி எடுக்கிறது, வாழ்த்துக்கள் நண்பருக்கு !

   Delete
  3. இரவுக்கழுகு ஈகிள் ஆஃப் த நைட் சூப்பர் ,பின்னட்டையும் அசத்தல்!

   Delete
  4. "பூத வேட்டை" இன்னமுமொரு டெக்ஸ் சாகச விருந்து வாவ் !. கதைக்கான ஓவியங்கள் ஓகே ! சென்ற இதழான "சிகப்பாய் ஒரு சொப்பனம்" போல இல்லை போல தெரிகிறது.இந்த புத்தகம் publish ஆனா வருடம் என்னவென்று தெரியவில்லை. ஓவியங்களில் புரதான நெடி அடிக்கிறது. ஆனால் சென்ற புத்தகத்தின் விளம்பரத்தில் வந்த ஓவியம் மிகவும் ஷார்ப் ஆக லேட்டஸ்ட் ஆக தெரிந்ததே ???SCANNER ISSUE ???

   #631 னா ??? அம்மாடி ! இத்தனை புத்தகங்களையும் படித்து முடிக்கும் நாள் எந்நாளோ ??இத்தாலியில் உள்ளவர்கள் HARDCORE டெக்ஸ் விசிறிகள் போல...

   முன்னட்டை சுமாருக்கும் சுமார் ரகமே! பின்னட்டை கிளாச்சிக்.

   பட்டியலுக்கு நன்றி ஸ்டாலின் !

   JOIN U GUYS LATER !

   Delete
  5. //ஓவியங்களில் புரதான நெடி அடிக்கிறது.//
   அதுவே அற்புதமாய் உள்ளது ....

   Delete
  6. //அதுவே அற்புதமாய் உள்ளது ....// முடியல ...

   Delete
 2. எனக்கே இது ஒரு பெரிய ஆச்சரியம் . டெக்ஸ் 2,3,4 இதழ்கள் தவிர அனைத்தும் என்னிடம் உள்ளது... ஹூஊ.....

  நள்ளிரவு வேட்டை, மற்றும் மந்திர மண்டலம் இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தமான கதைகள். அது இல்லாமல் மரண முள், அத்துடன் தொடராக வந்த தனியே ஒரு வேங்கை சாகசம் மறக்க முடியாத ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளை திருப்பூர் எனக்கு மிக அருகில் உள்ளது....

   Delete
 3. //பெயரைக் கேட்டால் புலியே பதறும்//
  இப்படி எல்லாம் போட்டால் தமிழ் காமிக்ஸ் கதறும் :( 'வேறு சில' தமிழ் காமிக்ஸ்களில் இது போன்ற மசாலா வாசகங்களை பார்த்திருக்கிறேன், நமது இதழ்களின் தரத்திற்கு இது பொருந்தவில்லை என்பது என் அபிப்ராயம்.

  //இம்முறை நிஸ்சி + டி ஏஞ்சலிஸ் என்ற கூட்டணி//

  இன்னமும் அச்சுக்கு சென்றிராவிட்டால், மேற்கண்ட கூட்டணியின் பெயர்களை இக்கதையின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டால் பதிப்பாளர்கள் ஏற்படுத்திய குழப்பம் தீரும் என நினைக்கிறேன்!

  //இனி வரும் அத்தனை டெக்ஸ் இதழ்களிலும், அதன் (துவக்க) படைப்பாளிகளின் பெயர்களை அட்டைப்படத்தில் குறிப்பிடக் கோரி//

  ReplyDelete
  Replies
  1. //இன்னமும் அச்சுக்கு சென்றிராவிட்டால், மேற்கண்ட கூட்டணியின் பெயர்களை இக்கதையின் முதல் பக்கத்தில் குறிப்பிட்டால் பதிப்பாளர்கள் ஏற்படுத்திய குழப்பம் தீரும் என நினைக்கிறேன்!//

   அட்டையில் பெயர்களை போடுவதே நாம் படைப்பாளிகளுக்கு செய்யும் ஒரு சின்ன TRIBUTE ! புத்தகத்தின் உள்ளே அவர்களை பற்றிய சின்ன BIO-DATA கொடுப்பது இன்னமும் சிறப்பு.

   Delete
  2. @விஸ்கி-சுஸ்கி:
   நான் சொல்ல வந்தது உங்களுக்கு புரிந்ததா என தெரியவில்லை! :) அட்டையில் உள்ள படைப்பாளிகள் டெக்ஸ் தொடரின் பிரதான படைப்பாளிகள் என்றாலும், இந்த குறிப்பிட்ட கதையை (பூத வேட்டை) அவர்கள் படைக்கவில்லை.

   Delete
  3. டியர் எடிட்டர்,

   நமது காமிக்ஸில் 'சினிமா ரக' subtitles தவிர்த்துவிடுங்களேன். Does not give a professional appeal. இதை Hot and Cool ஸ்பெஷல் வந்த போதெ சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். Please ...!

   Delete
  4. //எஞ்சியிருக்கும் எம் வாழ்க்கைப் பயணத்தில் இன்னுமொரு நூறு கதைகளிலாவது அவரை தரிசித்துவிட முடியுமா? (இப்பவே கண்கள் கொஞ்சம் மசமசவென்றிருப்பதான பிரம்மை)//

   நண்பர் விஜயின் இந்த பின்னூட்டத்தை படித்தபோதிருந்து எனக்கும் கண்கள் கொஞ்சம் மசமசவென்று சரியாக பார்க்க முடியாமல் இருக்கிறது கார்த்திக் பின்ன 631 னுன்ன சும்மாவா ???

   Delete
  5. இப்படி எல்லாம் போட்டால் தமிழ் காமிக்ஸ் கதறும் :( 'வேறு சில' தமிழ் காமிக்ஸ்களில் இது போன்ற மசாலா வாசகங்களை பார்த்திருக்கிறேன், நமது இதழ்களின் தரத்திற்கு இது பொருந்தவில்லை என்பது என் அபிப்ராயம். --> Very True Karthik! I echo the same.

   Delete
  6. அந்த வசனம் "பெயரைக் கேட்டால் புலியே பதறும்", கேப்டன் tiger யை குறிப்பிடும்படியாக உள்ளது.. இருந்துட்டு போகட்டும் :)

   Delete
  7. // கேப்டன் tigerயை குறிப்பிடும்படியாக உள்ளது //

   :D

   Delete
 4. சைத்தான் சாம்ராஜ்யம் தவிர அனைத்துமே படித்து விட்டேன்!நண்பர் ஒருவர் தயவால் தற்போது படிக்கவிருக்கிறேன்!

  ReplyDelete
 5. பூதவேட்டை, திகில் நகரில் டெக்ஸ் இரண்டு கதைகளும் பெயரை கேட்டாலே அப்போ அதிர்ந்துச்சுல்ல
  அந்த விளம்பரங்களை காணும் போதெல்லாம் வந்த ஏக்கம் எப்போதுமே வந்து சென்றது பசுமையாய் நினைவில் .....பல மாமாங்களுக்கு பின்னர் தரமாய் வெளிவருது கூடுதல் சந்தோசம்

  ReplyDelete
 6. டெக்ஸ் கதைகள் இரண்டு புத்தகங்கள் வந்தாலும் கதை ஒன்றுதானே, ஆகவே டெக்ஸ்ன் ஐபதாவது கதை இன்னும் வெளிவரவில்லையே ....ஐம்பதாவது கதையா சிறப்பாய் வெளியிட இன்னும் பிரகாசமான வாய்ப்புள்ளதே..

  ReplyDelete
 7. நீங்கள் கூறியது போல சித்திரங்கள் வெகு அற்புதம் 1980 க்கே அழைத்து செல்ல தவறவில்லை ,....

  ReplyDelete
 8. I have all ......in my opinion the best among them should be PAZIKKU PAZHI. &KARSONIN KADANTHA KAALAM..

  ReplyDelete
  Replies
  1. ஓரிரண்டு கதைகள் தவிர அனைத்துமே ஒன்றுக்கொன்று இணையற்றவை ...
   இருந்தாலும் கார்சனின் கடந்த காலம் அற்புதம் .....
   அது கிளப்பிய பல்வேறு வகையான உணர்ச்சிகள் அருமை!

   Delete
  2. ஆம் ... நான் படித்த வரையில் கார்சனின் கடந்த காலம் ஒரு அற்புதமான கதை ...!

   Delete
  3. ME TOO AGREE...கார்சனின் கடந்த காலம் ஒரு OUT OF THE BOX டெக்ஸ் சாகசம். என்னை பெரிது கவர்ந்தது "பவள சிலை மர்மம்".

   Delete
 9. நான் படித்ததில் பிடித்தது "மரண முள்".(எரிந்த கடிதம் புத்தகத்தில் இருந்து தான் படித்துள்ள போதிலும்..)

  ReplyDelete
 10. 2-15 kathaigal padithathilai! eppodiyo VETTAI ARAMBAMAYIDUCHU!

  ReplyDelete
 11. கார்ஸனின் கடந்த காலம்.. முதல் பாகம் படித்துள்ளேன்..அதனால்..classics reprint வந்தால் ரொம்ப சந்தோசப் படுவேன்...

  ReplyDelete
 12. வாவ்... 'பூத வேட்டை' அட்டைப்படங்கள் சூப்பர் !

  //பெயரைக் கேட்டால் புலியே பதறும்//

  பெயரைக் கேட்டாலே 'டைகர்' ம் டர்ர்ர் ஆகிடுவார். :-)

  ReplyDelete
  Replies
  1. @P.Karthikeyan:
   //பெயரைக் கேட்டாலே 'டைகர்' ம் டர்ர்ர் ஆகிடுவார். :-)//
   புலி = டைகர்

   அடுத்த டைகர் இதழில், 'பெயரைக் கேட்டால் கழுகும் கதறும், கை கால் உதறும்!' என்று போட்டு பழி வாங்கி விடலாம்! :D

   பி.கு: கழுகு = டெக்ஸ் :)

   Delete
  2. வரும் இதழ்களின் அட்டைப்படங்களில் வரப்போகும் பஞ்ச் லைன்களுக்கான அடுத்த போட்டி ஆரம்பம் ....

   ENTRY #1 :"பெயரைக் கேட்டால் கழுகும் கதறும், கை கால் உதறும்"

   .

   Delete
  3. ENTRY # 2: "அண்ணன் பேரு லார்கொ ... கேட்டா மத்தவன் far go ..."

   ENTRY # 3: "நம்ம தலைவர் ஷெல்டன் .... செய்வதெல்லாம் well done ..."

   Delete
  4. @ Karthik Somalinga

   கழுகு (டெக்ஸ்) = எப்பவும் உச்சத்தில் இருக்கும்

   புலி (டைகர்) = சேற்றிலும் சகதியிலும் திரியும்

   எப்புடி ;-)

   Delete
  5. ENTRY #4: "சூப்பர் ஸ்டாரு லக்கி ... மீதி எல்லாம் பக்கி ..."

   Delete
  6. @ P.Karthikeyan.....ரொம்ப சரி ...........இந்தப்பா டைகர் ..........அண்ணன் டெக்ஸ் வில்லர் பாத்து கத்துக்கோ .........
   கண்ணா தினமும் நீ குளி .....
   இல்லன்னா புடிச்சுடும் சளி .....
   டே ஜிம்மி டைகரை பாத்து முகத்த சுளி .....
   அலிஸ்டர் கொடுப்பான் களி.
   உன்ன கண்டாலே அவனுக்கு கிலி
   அனாலும் நீ ஒரு சூப்பர் புலி.
   திருப்பியும் சொல்லுறேன்
   கண்ணா தினமும் நீ குளி .....
   இல்லன்னா புடிச்சுடும் சளி .....

   Delete
  7. மதியில்லா மந்திரி
   நீங்க ஒரு பண்ருட்டி முந்திரி !
   உங்க வார்த்தை ஒவ்வொன்னும் ஜாங்கிரி !

   Delete
  8. ENTRY 5# "டயபாலிக் டேஞ்சரு .... வில்லர் டெக்ஸு ரேஞ்சரு ...."

   Delete
  9. ENTRY 6# "ஷெர்லாக் ஹோம்சு ஸ்டீல் பாடி ... துப்பறிபவர்களில் big daddy"

   Delete
  10. ENTRY 7#:

   "சூப்பர் ஸ்டாரு சிக் பில்லு ...
   காமெடி கூட்டணி டாக் புல்லு ...
   பசித்தாலும் புலி தின்னுமா புல்லு,
   நீ சொல்லு ..."

   Delete
  11. டெக்ஸ், டைகர் நீங்கல்லாம் சாதா வர்த்தி , இந்த spider தாண்டா சக்ரவர்த்தி . குற்ற சக்ரவர்த்தி !

   Delete
  12. நாந்தான் spider எனக்கு அப்பால தான் டைகர்

   Delete
  13. ............மத்தவங்கலேல்லாம் ஊதுபத்தி

   Delete
  14. இரட்டை வேட்டையர்
   டே ஜார்ஜ்....... எப்படா ஆவ டிஸ்சார்ஜ்
   டே ட்ரேக்....... எப்படா உனக்கு ரிமேக்கு

   Delete
  15. மந்திரி மாத்திரம் கொசு வர்த்தி

   Delete
  16. அடப்பாவிகளா சந்தடி சாக்குல என்னையே கலாசுட்டீங்களே ...............

   Delete
  17. @ காமிக் லவர்

   ஹா ஹா ஹா! செம பச்ஞ் டயலாக்ஸ்! டி.ஆர் மாதிரியே நல்லா வருவீங்க! :)

   Delete
 13. மேற்கண்ட அணைத்து டெக்ஸ் இதழ்களும் என்னிடம் உள்ளன. நான் சேகரிக்க ஆரம்பித்த காலத்தில் (in 90s) அது என்னவோ தெரியல டெக்ஸ் இதழ்கள் ரொம்ப சுலபமாக எனக்கு கிடைத்தன (புது வாசகர்களின் காதுகளில் புகை வருவது தெரிகிறது :-)).

  நான் வேலை செய்த முதல் அலுவலகத்தில் நிறைய பயணம் செய்த போது என்னுடன் வழித்துணையாக வந்தவை பெரும்பாலும் டெக்ஸ் மற்றும் லக்கி லூக் கதைகளே. நடு இரவில் (1-2 AM) ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த சமயங்களில் எனக்கு தைரியத்தை கொடுத்தவை டெக்ஸ் இதழ்களே. அதற்கான என்னுடைய நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

  என்னை பொறுத்த வரையில் அனைத்து டெக்ஸ் கதைகளும் எனக்கு பிடித்தவையே. இருந்தலும் நான் அடிக்கடி படிக்கும் சில டெக்ஸ் கதைகள் உங்கள் பார்வைக்கு-
  கார்சனின் கடந்த காலம் 1 & 2
  டிராகன் நகரம்
  இரத்த வெறியர்கள்
  பழி வாங்கும் புயல்
  சிகப்பாய் ஒரு சொப்பனம்.

  சார், கூரியர் / பதிவுத்தபாலில் வரும்போது இதழ்களை பிளாஸ்டிக் கவர்களில் வைத்து அனுப்புவது போல புத்தகக் கண்காட்சிகளில் வாங்கும் போதும் பிளாஸ்டிக் கவர்களில் வைத்து கொடுத்தால் பராமரிக்க வசதியாக இருக்கும். ஆவன செய்வீர்களா?

  ReplyDelete
  Replies
  1. சொல்ல மறந்து விட்டேன். முன்னட்டை நீல வண்ணம் நம் முந்தைய டெக்ஸ் இதழ்களை நினவு படுத்துகிறது. மற்றும் டெக்ஸ்-ன் முகம்/தலை உடலைவிட சிறியதாக இருக்கிறது. பின்னட்டை கிளாசிக்.

   Delete
 14. முன் அட்டையை விட பின் அட்டை படு ஜோர். முன் அட்டை குழந்தைகளை கவரும் :)

  ReplyDelete
  Replies
  1. //முன் அட்டை குழந்தைகளை கவரும் // EXACTLY....

   Delete
  2. மலைஅப்பன் சார் பேர் போடலையே

   Delete
  3. Point ..

   Dear Editor,

   We can also give credit to our own artist.

   Delete
 15. இரண்டு கதைகளை தவிர மற்ற அனைத்தும் என்னிடம் உள்ளது என்னுடைய டாப் 6
  1)இரத்த வெறியர்கள்
  2)பவள சிலை மர்மம்
  3)கார்சனின் கடந்த காலம் 1 & 2
  4)டிராகன் நகரம்
  5)கழுகு வேட்டை
  6)பாலைவனப் பரலோகம் (Top 10 ஸ்பெஷல்)

  ReplyDelete
  Replies
  1. இவை அணைத்தும் Classicsஇல் வந்தால் சூப்பராக இருக்கும். நடக்குமா

   Delete
  2. Agree and expecting for classics..

   Delete
 16. டியர் எடிட்டர்ஜீ !!!
  நமது டெக்ஸ் வில்லருக்கு யானைக்கால் வியாதி ஏதேனும் வந்திருக்கிறதா?அண்ணாரது வலது கால் சற்று வீக்கம் கண்டிருக்கிறதே?
  பின்னட்டை படம் அருமையாக வந்திருக்கிறது.அதிலும் அந்த மண்டையோடு சிலிர்க்க வைக்கிறது.
  "பெயரை கேட்டாலே புலியும் பதறும்"-சற்று நாடகத்தனமான வாசகம் என்றாலும் நன்றாகவே இருக்கிறது.ஹிஹி!!!

  ReplyDelete
 17. இருளின் மைந்தர்கள்
  கார்சன் கடந்த காலம்
  சாத்தான் வேட்டை
  சைத்தான் சாம்ராஜ்யம்

  ReplyDelete
 18. ''பேர கேட்டாலே சும்மா பதறுதில்ல ...............''

  ReplyDelete
 19. மந்திரி இன்னைக்கு தூங்கின மாதிரி தான் ..........பூதத்தோட முகம் பயங்ககரமா இருக்கு.........ITS REAL HORROR,EXITING,TERRIFIC DISFIGUREMENT OF THE BONES OF THE SKULL OF THE BAITHAAL.

  ReplyDelete
 20. எடிட்டர் சார்,
  முன் அட்டையில் டெக்ஸ் ஏதோ ஒரு சினிமா ஹீரோவைப்போல தோற்றமளிக்கிறார்.. :-) பின் அட்டை மிக பிரமாதமாக உள்ளது. டெக்ஸின் ஒரிஜினல் லோகோவும், அவருடைய பட்டப்பெயரான 'இரவுக்கழுகு' ஆங்கிலத்தில் உள்ளதும் அருமை. அப்படியே அதன் மூலமான "Aquila della Notte" வையும் முன்னட்டையில் போட்டிருக்கலாமே :-)

  இதோ எனக்கு பிடித்த கதை வரிசை:

  1) மரண முள்
  எல் மோரிஸ்கோவின் துணையுடன் மரண முட்களை டெக்ஸ் குழு அழிக்கும் spine-chilling சாகசமே எனது டாப் 1.

  2) மரண ஒப்பந்தம் (டெக்ஸின் கடந்த காலம் என்று கூட சொல்லலாம்) ;-)
  மிக பிரமாதமான பழிவாங்கும் கதை. டெக்ஸின் இளமைக்காலம் (to some extent!), அவரின் அவசர திருமணம் மற்றும் மனைவியின் மரணம், ஆண்டுகள் பல கழிந்த பின்பு பழிவாங்கல், என ஒரு perfect entertainer.

  3) கார்சனின் கடந்த காலம்
  முன்னது டெக்ஸின் கடந்த காலமென்றால் இது அவரின் ஆத்ம நண்பரான கார்சனின் கடந்த காலம..! பணயமாக ஷெரிப் Ray Clummons மற்றும் லீனாவை வைத்துக்கொண்டு அப்பாவிகளுடன் டெக்ஸ் குழு ஆடும் climax ஒரு hollywood படத்திற்கு நிகரானது..!

  நான் ஒரு காலத்தில் சினிமா இயக்குனர் ஆனால் கண்டிப்பாக இந்த மூன்று கதையையும் படமாக எடுப்பேன் :-)

  ReplyDelete
  Replies
  1. Prasanna @ @ நான் ஒரு காலத்தில் சினிமா இயக்குனர் ஆனால் கண்டிப்பாக இந்த மூன்று கதையையும் படமாக எடுப்பேன் :-)

   Is it true? what are all the movies you have directed earlier!!! I wish your wish to become true soon.

   Delete
 21. பூத வேட்டை எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கதை. 1995 ம் வருடத்தில் விளம்பரப் படுத்திய கதை ஒரு வழியாக வெளி வருவது மகிழ்ச்சி. ஆனால் பின் அட்டை அளவுக்கு முன் அட்டை படம் தேறவில்லை. டெக்ஸ் கதைகளிலே மிக மோசமான அட்டை படமாக இது உள்ளது. புத்தகத்தின் அழகே முன் அட்டை படம் தான். அப்புறம் ஒரே கதையை மூன்று,அல்லது நான்கு பாகமாக பிரித்து போட்டால் ஒரு புத்தகம் நான்கு புத்தகமாக மாறி விடுமா?

  ReplyDelete
 22. //நமது தற்சமய நாயகர் பட்டியலில் TOP என்று நீங்கள் கருதுவது யாரை ?//

  எண்ணக்கொடும சார் இது !!!?
  ஸ்டீல் பாடி கூட போட்டிபோடற சின்னப் பையன்களோட எல்லாம் 'தன்னிகரற்ற தலைவர் டெக்ஸ்' போட்டிபோடறதா !

  பூதத்தை பாருங்க, தல டெக்ஸ் ஐ பார்த்து பயத்துல உள்ளேன் அய்யா அப்படின்னு நிக்கிறத.....

  ReplyDelete
  Replies
  1. @P.Karthikeyan:
   //பூதத்தை பாருங்க, தல டெக்ஸ் ஐ பார்த்து பயத்துல உள்ளேன் அய்யா அப்படின்னு நிக்கிறத..... //
   அதானே? டெக்ஸ் துப்பாக்கிய நீட்டுன உடனே பூதம் ஹேண்ட்ஸ்-அப் பண்ணிருச்சே!!! அடடே! :)

   தவிர, பயந்தது பூதம் மட்டுமல்ல... முன்னட்டை பார்த்த நானும்தான்! ;)

   மத்தபடிக்கு உங்க ரஜினி & கமல் (டெக்ஸ் & ப்ளூ) சண்டைக்கு நான் வரல! எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்கும்காது! இப்படித்தான் குழப்பமா பதில் சொல்வோம்! :D

   Delete
  2. // பிடிக்கும்காது! //

   பிடிக்கும் பிடிக்காது ...

   அது என்ன நண்பரே பிடிக்கும் காது ?

   உங்களுக்கு டெக்ஸ் ப்ளூ பிடிக்குமா ? பிடிக்காதா ? படிக்க பிடிக்குமா ? படிக்க பிடிக்காதா ? பார்க்க பிடிக்குமா ? பார்க்க பிடிக்காதா ? இல்ல பிடிக்கவே பிடிக்காதா ? இல்ல பார்க்க பார்க்க பிடிக்குமா ? பிடிக்காதா ?

   :(


   Delete
  3. பிடிக்கும்காதுன்னா அவரோட காத பிடிச்சு இழுத்தா .........

   Delete
  4. @திருப்பூர் புளுபெர்ரி & ஸ்டீல் க்ளா:
   பிடிக்கும்காது - அதாவது டெக்ஸ் & டைகரோட காது டிசைன்(?!) எனக்கு ரெம்ப பிடிக்கும்னு அர்த்தம்! :) ஆனா பாருங்க டைகரோட மூக்கு டிசைன் மட்டும் எனக்கு சுத்தமா பிடிக்காது! ;) அதே மாதிரி டெக்ஸோட ஓவர் டிரெஸ்ஸிங் சென்ஸ் எனக்கு பிடிக்கறது இல்ல! அது எப்படி பாலைவனத்துலேயும் மஞ்சாக் கலர் சட்டையை இஸ்திரி போட்டு சுத்துறார்! :) ஹப்பாடா ரெண்டு பேரையும் கலாய்ச்சாச்சு! :D

   Delete
  5. @ Karthik Somalinga

   அந்த பூதம் நிக்கிற எடத்துல உங்களை நிக்கவச்சு இருந்தா சூப்பரா இருந்திருக்கும். :-D

   Delete
  6. @PKP:
   'டெக்ஸ், நிராயுதபாணியா கைதூக்கி நிக்குற என்னைப் பார்த்து துப்பாக்கி நீட்டறீங்களே? இது உங்களுக்குகே வெக்கமா இல்ல?' அப்படின்னு சென்டிமென்டலா டயலாக் அடிச்சு கம்பி நீட்டிருவேன்! :)

   Delete
  7. கார்த்திக் அது சரண்டர் அல்ல, வெறி கொண்ட எக்காள முழக்கம்! கொரில்லாக்களை போல!

   Delete
 23. மேலே உள்ளவற்றில் என்னிடம் உள்ள புத்தகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் ... ஆனால் என்னிடம் இல்லாத நிறைய புத்தகங்களை, நண்பர்களது உதவியுடன் படிக்க முடிந்ததது எனது பாக்கியமே :)

  என்னை மிகவும் கவர்ந்த டெக்ஸ் கதை என்றால்:


  #13 - கழுகு வேட்டை


  சிறு வயதில் (ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது என நினைக்கிறேன்) பள்ளி விடுமுறை நாட்களில், திருப்பூர் இல் உள்ள எனது மாமா வீட்டிற்கு செல்வது வழக்கம். ஒரு புத்தக கடையில் இந்த புத்தகத்தை பார்த்து விட்டு, கையில் ஐந்து ரூபாய் மட்டும் இருந்தததால் வங்க முடியாமல் ஏக்கத்துடன் திரும்பி விட்டேன். பிறகு மாமாவிடம் கெஞ்சி இன்னொரு ஐந்து ரூபாய் வாங்கி இந்த புத்தகத்தை வாங்கி படித்தேன். மறக்க முடியாத நாட்கள் அவை.

  நான் முதன் முதலில் படித்த டெக்ஸ் வில்லர் கதை, எனக்கு டெக்ஸ் அறிமுகமான கதை. அதன் பிறகு நிறைய டெக்ஸ் கதைகள் படித்து இருந்தாலும், எனது மனதில் 'கழுகு வேட்டை' தனி இடம் பெற்று விட்டது.

  அதிலும் கதையின் இறுதி காட்சி, டெக்ஸ் இன் முகத்தில் காணப்படும் இறுக்கம், அந்த மணியோசை ... அடடா ... இன்னும் எத்தனை டெக்ஸ் கதைகள் வந்தாலும் என்னை பொறுத்த வரை இந்த இதழ் டாப்.

  பசுமரத்து ஆணி போல நெஞ்சில் பதிந்த நினைவுகளை கிளறி விட்டதற்கு நன்றிகள் சார் ...

  'First Impression is the Best Impression' - முதல் கதையிலேயே என் மனம் கவர்ந்த ஹீரோ வரிசையில் ஒருவர் ஆகி விட்டார் டெக்ஸ்.  திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்  ReplyDelete
 24. டெக்ஸ் ..................
  நீ தான்
  நேற்றய ஜெனரேட்டர்
  இன்றைய இன்வெர்ட்டர்
  நாளைய கூடங்குளம்

  ReplyDelete
 25. "பெயரைக் கேட்டால் புலியே பதறும்" ...! ஆஹா, நம்ம எடி டெக்ஸ் ரசிகர்ய்யா ..டெக்ஸ் ரசிகர்ய்யா! அவரு புலின்னு சொன்னது நம்ம கேப்டன் டைகர! இதைதான் வன்மையாக கடிக்கிறேன்..ச்சே.. கண்டிக்கிறேன்! :)

  ReplyDelete
  Replies
  1. சார் டெக்ஸ் & ப்ளூ மேட்டர் இப்பதான் கொஞ்சம் அடங்கி இருக்கு .. நீங்க என்னடான்னா 'டெக்ஸ் பெயரை கேட்டாலே புலியும் பதறும்' அப்படின்னு போட்டு மேட்டரை மறுபடியும் ஸ்டார்ட் பண்ணி இருக்கீங்க ?

   அடுத்த டைகர் புத்தகத்தில் இதே போல ஒரு பன்ச் டயலாக்கை போட்டே ஆகணும்.

   நிறைய பன்ச் டயலாக் நண்பர்கள் மேலே சொல்லி இருக்காங்க ... நல்லதா ஒன்னை செலக்ட் பண்ணி போடுங்க (அதுவும் முன் அட்டையில்)

   Delete
  2. புலின்ன்ன்னா கழுகும் கிலியாகும் கிலியாலே......

   Delete
  3. நாட்டாமையே (எடிட்டர்) தீர்ப்பை சொல்லீட்டார் :) சூப்பர்

   "டெக்ஸ் பெயரைக் கேட்டால் புலியே பதறும்" ....

   Delete
  4. புலி பதருதோ இல்லையோ ஆனா கண்டிப்பா குதிரை பதறும் கதறும், 'அது தானே தூக்கி சுமக்குது.

   Delete
 26. front cover tex is very very awkward(disproportionate body parts), back cover is excellent..

  not sure eppadi aasiriyar paarvaiyil tappithaduendru.... if time permits definetly improve pannalam.

  Nanbargal punch dialgoue elllame supero super!

  ReplyDelete
 27. 'பூத வேட்டை' அட்டைப்படம் நன்றாகவே உள்ளது. பின்னட்டை மேலைத்தேய பாணி என்றால், முன்னட்டை நமது பாணி - நமக்கேயுரிய பாணி. இத்தகைய அட்டைகள்தான் இது நமது தமிழ் காமிக்ஸ்கள் என்று அடையாளம் காட்டுகின்றன. சிகப்பாய் ஒரு சொப்பனம் அவளவுக்கு பிரமாதமாக இல்லாவிடினும், நமது ஓவியரின் கைவண்ணம் பாராட்டப்படவேண்டியதே. பின்னணி மரங்கள், பூதம் நிற்கும் பாறை, டெக்ஸ் அமர்ந்திருக்கும் பாறை, நிலவு போன்றவை கிராபிக்ஸில் இணைக்கப்பட்டிருப்பதால் வழமையிலிருந்து சற்றே வித்தியாசம் தெரிகிறது. என்னதான், அருகில் - தொலைவில் பாணியில் டெக்ஸ் உருவம் வரையப்பட்டிருந்தாலும் அவரது தலை சிறிதாகிவிட்டது உறுத்துகிறது. இன்னும் சற்று மெனக்கெட்டு சரியான அளவில் வரைந்திருக்கலாம்.

  ReplyDelete
 28. டியர் எடிட்டர்,

  பல வருடங்களாக 'இதோ பூதம் வருது' கதையை ஒருவாறாக முடிவுக்குக் கொண்டுவந்தமைக்கு தேவதைகள் அருள்பாலிக்கட்டும்! இந்தப் பதிவின்மூலம், இரண்டு நாட்களாக தூங்கிவழிந்த வலைத்தளத்தை உச்சபட்ச அதிர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறீர்கள்!

  'டெக்ஸ்' என்றாலே ஒருவிதப் பரபரப்பும், குதூகலமும் உடனே வந்து ஒட்டிக்கொள்வதுமாத்திரம் சிறுவயது முதல் இன்றளவும் மாறாதிருப்பதன் மர்மத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை!!

  இந்தமுறை முன் அட்டைப்படம் 'பரவாயில்லை' ரகமே ( டெக்ஸின் உடல் அளவைவிட தலையின் அளவு சற்று சிறிதாகத் தோன்றுவது எனக்கு மட்டும்தானோ?). அதற்குப் பரிகாரம் செய்வதுபோல பின் அட்டை படு அசத்தலாக வந்திருக்கிறது! (பின் அட்டையே முன்அட்டையாக இருந்திருந்தால் விசிலடித்து ஒரு டான்ஸ் போட்டிருப்பேன்! )

  இதுவரை லயனில் வந்த டெக்ஸின் கதைகளில் 90 சதவீதக் கதைகள் அட்டகாச ரகமே; என்றாலும், எனக்குப் மிகவும் பிடித்த கதை 'பழிவாங்கும் புயல்'- செவ்விந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ராணுவத்தையே புரட்டிப்போட்ட, பல யுத்த தந்திரங்கள் நிறைந்த ஒரு நிறைவான இதழ் அது! பல முறை படித்து வியந்திருக்கிறேன்! அப்புறம் 'கார்ஸனின் கடந்த காலம்', 'பழிக்குப் பழி' என்று அந்தப்பட்டியல் ரொம்பவே பெரிசு!

  'டெக்ஸ் கதைகளுக்கென்றே மாதாமாதம் ஒரு தனி இதழ் வெளியிடவிருப்பதாக' நீங்கள் என் கனவில் வந்து வாக்குறுதி அளித்ததையடுத்து, வீடு தேடி விசா கொண்டுவந்த இத்தாலியத் தூதரை 'அடுத்த வருடம் பார்க்கலாம் போப்பா' என்று கூறி விரட்டியடித்துவிட்டேன்! :)

  ReplyDelete
  Replies
  1. ஒரு பெரிய தலையணை வச்சுக்கிட்டு தூங்கி பாருங்க விஜய்...டெக்ஸ்சோ டெக்ஸ் பத்திய கனவுகளோ வராது...

   Delete
  2. @ விஸ்கி-சுஸ்கி

   'அதை' ஞாபகப்படுத்தி என் ஏக்கத்தை அதிகரித்துவிட்டீர்களே நண்பரே! தூங்குவதற்காகத்தான் 'அது' என்றால் ஒரே சமயத்தில் பத்து பதினைந்துகூட வாங்கி கட்டில் முழுக்கப் போட்டுவிடலாம்தான்! ஆனால் அது 'அந்த' சைசில் படிக்க விரும்பும் டெக்ஸ் கதையாச்சே! நான் யாரிடம் போய் கேட்பேன்?

   (இனிமேல் 'அதை' கேட்பதில்லை என்று சில பதிவுகளுக்கு முன்னால் உறுதி எடுத்திருக்கிறேனென்பதால் 'அதை' நான் 'அதை' என்றே இங்கு குறிப்பிடவேண்டியதாகிவிட்டது!) :)

   Delete
 29. விஜயன் சார், முன் அட்டை படத்தில் உள்ள வில்லன் ஓவியம் சுமார் ரகம்! பின் அட்டை படம் சூப்பர்.

  ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதம் வெளி வரவுள்ள காமிக்ஸ் எவை என கூறினால் நன்று! நண்பர்கள் யாருகாவது இது பற்றி தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்!!

  ReplyDelete
 30. பின்னட்டையில் முன்பு போட இன்பெக்டர் டேஞ்சர், இரத்த வெறியன் ஹேகர் போன்ற கதைகளை பிரசுரிக்க உபயோகித்தால் என்ன?

  ReplyDelete
 31. கொஞ்ச நாள் லார்கோ, டைகர், கதைகளுக்கு விடுமுறை கொடுத்து
  பழைய ஹீரோக்களுக்கும் (சார்லி, ரிப் கெர்பி, லாரன்ஸ்,டேவிட், மாயாவி ,ஜானி நீரோ, டெக்ஸ்) வாய்ப்பு தரலாமே அல்லது ரூபாய் 200 ,500 special விலையில் வெளிஇடலாமே

  ReplyDelete
 32. பின்னட்டை சூப்பர்.. அதையே முன்னட்டையாக பயன்படுத்திருக்கலாம்.

  ReplyDelete
 33. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. PUBLIC ... PUBLIC ...! Ladies are also among our fans Gentlemen ..!!!

   Delete
 34. தலைவா! முன்னட்டை ஊத்திக்கிச்சே தலைவா! டெக்சின், கால், தலை மற்றும் பூதத்தின் கால் வித்தியாசமான போஸில் இருக்கு தலைவா! அதை போல நான் நின்று பார்த்து எனக்கு கால் வலி வந்ததுதான் மிச்சம். காலை வளைத்து பாதத்தை நேராக திருப்பி இப்படியும் நிற்க முடியுமா? நமது அட்டைப்பட வாசகரை வைத்து (சண்முக சுந்தரம்) முன்னட்டையை முடித்து இருக்கலாம் தலைவா! சும்மா அட்ராசக்க அட்ராசக்கன்னு அவரையும் பிடிச்சு போடுங்க தலைவா! ஊஹும் எனக்கு முன் அட்டை பிடிக்கவில்லை சாரி தலைவா! அட்டைபடம் பிரிண்டிங் போகும் முன் ஒரு முறை எங்களிடம்காட்டிவிட்டு அப்புறம் பிரிண்டிங் போகலாம் சும்மா தூள் டக்கராக இருக்கும்....

  ReplyDelete
 35. எடிட்டர்: //(இந்தப் பட்டியலில் "திகில் நகரில் டெக்ஸ் " உள்ளதும் நினைவுள்ளது guys !!!)//
  அப்போ "திகில் நகரில் டெக்ஸ்" கூடிய சீக்கிரம் நம்மை சந்திக்க போகிறார் நண்பர்களே!
  இதுவரை வந்த டெக்ஸ் கதைகளில், பாகங்களாக வெளிவந்த கதைகளை கூட்டிப் பார்த்தால் மொத்தம் 42 கதைகள் தான் வெளிவந்துள்ளன! அதனால் 50வது இதழ் இனிமேல் தான் வரவுள்ளது!

  ReplyDelete
 36. Have transferred the amount 375RS for +6 books today :)

  ReplyDelete
 37. விஜயன் சார், 2014 ரெகுலராக மாதமாதம் வெளிவரும் கதைகளில். டெக்ஸ் மற்றும் Tiger கதைகளை சேர்க்காமல் 6+ வெளிஈடுகளில் (3 Tex + 3 Tiger) தனியாக வெளி இட்டால் நன்றாக இருக்கும்!இப்படி செய்வதால் 2014 மேலும் பல புதிய நாயகர்கள் கதைகள் மற்றும் நமது பவ் எவர் கிரீன் நாயகர்கள் கதைகளையும் தர ஒரு வாய்ப்பாக அமையகூடும்!

  ReplyDelete
 38. டெக்ஸ் (கௌபாய்) ரசிகர்களே, எல்லாருக்கும் நமது ஹீரோ மேல பொறாமை அதான் இப்படி கமெண்ட் பண்ணுறாங்க, இதுக்கெல்லாம் நாம கவலைபட கூடாது!இத்தனை வருஷமா எவர் கிரீன் ஹீரோவா இருக்கிறத பார்த்து வவுதேரிச்சல் :-)

  ReplyDelete
 39. வண்ணத்தில் வெளிவந்த டெக்ஸ் கதைகளை மாத்திரம் வண்ணத்தில் வெளியிடலாமே சார்! ஒரிஜினல் சித்திரங்களையே அட்டைப்படங்களில் சற்று மெருகேற்றி வெளியிட்டால் நன்றாக இருக்குமே! (எக்ஸ்: ரத்த தடம், சிகப்பாய் ஒரு சொப்பனம், விதியோடு விளையாடுவேன், etc.)

  ReplyDelete
 40. மீண்டும் ஒரு கௌபாய் ஸ்பெஷல் (கலரில்) கொண்டு வந்தால் அட்டகாசமாக இருக்கும்.2014லிலாவது கொண்டுவர இப்போதே அறிவிப்பு கொடுங்களேன்…

  ReplyDelete
 41. This comment has been removed by the author.

  ReplyDelete
 42. என்ன நடக்குது இங்கே ! கொஞ்ச நாளைக்கு முன்னாலே புக் வந்தா போதும் என்று இருந்தோம், இப்போ டெக்ஸ் கால் வீங்கிருச்சி, துப்பாக்கில குறி சரியில்ல, தல தொங்கிருச்சி அப்படின்னு ஒரு அட்ட படத்த பயங்கரமா கலாய்க்கிரிங்களே ? பாத்துப்பா டெக்ஸ் குதிரையில இருந்து இறங்காம அப்படியே போய் விடபோகிறார் . 'பாவம் ஒரு அட்டை '

  ReplyDelete
 43. டியர் எடிட்,

  நமது ஓவியர்களின் திறமையை குறைத்து சொல்ல கூடாது என்ற எண்ணம் வலுத்தாலும், ஒரிஜினல் அட்டை தரங்களுடன் ஒப்பிடுகையில், முழுவதும் நமது முயற்சியில் வரும் அட்டைகளில் பல குறைகள் வருவதை கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

  டெக்ஸ் மற்றும் பூத உருவத்தின் அனாடமி முற்றிலும் ஏறுக்கு மாறாக இருக்கின்றன... ஆனால், பின் அட்டைக்கு உபயோக படுத்தியிருக்கும் டெக்ஸ் சித்திரம் எவ்வளவு கிளாசிக் டச் தருகிறது என்று பார்க்கலாம். இல்லையென்றால், டெக்ஸ் ஒரிஜினலில் அந்த அட்டையில் இருக்கும் சிம்பிளிசிட்டி எவ்வளவு பளிச்சென்று தெரிகிறது என்பது வெளிச்சம்.

  பின் அட்டை ஓவியத்திற்கு திருஷ்டி பரிகாரம் போல ஒரு பஞ்ச் டயலாக்... அமெரிக்காவில் இருக்கும் புலிகள் அத்தனைக்கும் டெக்ஸ் பெயர் மனப்பாடமா ??? இது நமக்கு தேவைதானா ?

  பி.கு.: ஸ்டாலின் மற்றும் விஜயராகவன் உழைப்பு அசாத்தியம். நமது காமிக்ஸ் பயணத்தை இன்னும் தாங்கி பிடித்து கொண்டிருக்கும் தூண்கள் இவர்களை போன்ற நண்பர்கள் தான் என்பது அசைக்கமுடியாத உண்மை. என்ன புதிய வாசகர்களை இழுப்பதற்கு உண்டான அந்த Professionalism நமக்கு வர இன்னும் பல மாமாங்கள் ஆகும் போல.

  ReplyDelete
  Replies
  1. இன்னொரு குழப்பம்: கர்த்தாக்களின் பெயர்களை போட உரிமையாளர்கள் கேட்டு கொண்டாலும்... வேறு ஒரு ஓவியர் மற்றும் கதையாசிரிர் கூட்டணியின் வந்த கதை தொடருக்கும்.. சித்திரம் ஆக்கம் என்று முன்னவர்களின் பெயர்களை போடுவது குழப்பமான சங்கதியாகி விடாதா...????

   இதற்கு பதிலாக, சித்திரம் ஆக்கம் என்று அவர்களை வகைபடுத்தால், பெயர்களை மட்டும் அட்டையின் ஓரங்களில் பொறித்து விடலாமே??? உள்ளே, புதிய ஆசிரியர் மற்றும் ஓவியரின் பெயர்களையும் போட்டு கவுரவித்தால் சிறப்பாக இருக்கும்.

   Delete
  2. டியர் ரபிக்,நமது இந்த அட்டைப்படம் வழக்கமான நமது ஆஸ்தான ஓவியர் திரு.மாலையப்பனின் தனித்துவமான ஸ்டைல். HEAD TO TOE PROPORTION களில் எப்போதும் ஒரு சிறு நெருடல் நமது ஓவியங்களில் உண்டு. இப்போது இந்த ஓவியம் அனைவரின் THUMBS DOWN பெற்றதன் காரணம் "சண்முகசுந்தரத்தின் தாக்கம்" என கொள்ளலாமா ???

   BY THE WAY அட்டையில் PUNCH LINER போடுவது வரவேற்க்கப்படவேண்டிய ஒன்றே...மொட்டையாக படம் மட்டும் உள்ள ஒரு அட்டையைவிட LINER உள்ள அட்டை சற்று BETTER ஆக தோன்றுகிறது. புதிய வாசகர்களை கவரும் இந்த சொல்தொடர்கள் நமக்கு சற்றே ALIEN ஆக தொன்றுவதேன்னவோ உண்மைதான்.தற்போதைய மார்க்கெட் TREND க்கு இது போன்ற LINER கள் தேவையல்லவா ??? LINER ரில் இன்னமும் சற்று கவனம் செலுத்தலாம்.

   Delete
 44. டியர் சார்,

  முன்னட்டை நம் ஸ்டான்டர்டையும் பின் அட்டை ஒரிஜினலின் ஸ்டான்டர்டையும் காட்டுகிறது. ஏற்கனவே நான் பக்கம் பக்கமாக இட்ட பின்னுட்டம் once again

  கேரக்டரை வரையும் (ReInventing The Wheel) வேலையை விட்டு விட்டு (அதுதான் நமக்கு சரியா வரமாட்டேங்குதே) ஒரிஜினலை பட்டி டிங்கரிங் பார்கலாமே. நாமே வரையும் முயற்சியில் சபாஷ் பெறுவது 10 க்கு 1 என்ற கணக்கில் கூட வரவில்லையே. ஒரிஜினலை டச் அப் பண்ணி போடுவதுதான் காலத்தோடு ஒத்து போவதற்கு வழி.

  டெக்ஸ் இதழ் ராக்கெட் பட்டாசு ரகம் என்று உங்கள் ஊரை நினைவு படுத்தி விட்டீர்கள். படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

  ReplyDelete
 45. அட்டைப்படம் இந்த இதழ் சிறுவர்களுக்கானது என எண்ண வைக்கிறது!

  ReplyDelete
 46. //டெக்ஸ் மற்றும் பூத உருவத்தின் அனாடமி முற்றிலும் ஏறுக்கு மாறாக இருக்கின்றன... ஆனால், பின் அட்டைக்கு உபயோக படுத்தியிருக்கும் டெக்ஸ் சித்திரம் எவ்வளவு கிளாசிக் டச் தருகிறது என்று பார்க்கலாம். இல்லையென்றால், டெக்ஸ் ஒரிஜினலில் அந்த அட்டையில் இருக்கும் சிம்பிளிசிட்டி எவ்வளவு பளிச்சென்று தெரிகிறது என்பது வெளிச்சம்.

  பின் அட்டை ஓவியத்திற்கு திருஷ்டி பரிகாரம் போல ஒரு பஞ்ச் டயலாக்... அமெரிக்காவில் இருக்கும் புலிகள் அத்தனைக்கும் டெக்ஸ் பெயர் மனப்பாடமா ??? இது நமக்கு தேவைதானா ?//
  உண்மையான வார்த்தை!

  ReplyDelete
 47. ---

  கார்சனின் கடந்த காலம் கதை படித்ததில்லை. அதனால் என்னுடைய ஃபேவரைட்

  - பழி வாங்கும் பாவை - முதல் பதிப்பு

  அந்த மேட் ஃபினிஷ் அட்டைப் படமும், அடக்கமான பாக்கெட் வடிவமைப்பு, அட்டகாசமான ஓவியங்கள் மற்றும் அருமையான வெள்ளைத் தாள் என என்னை மிகவும் கவர்ந்த கதை இது

  ----

  ReplyDelete
  Replies
  1. //அந்த மேட் ஃபினிஷ் அட்டைப் படமும்//

   மறக்க முடியவில்லை நண்பரே ....அந்த வித்தியாசமான அட்டையும்,அட்டை படமும் .....கதை மறைக்க முடிமா வெடிக்கும் பட்டாசின் ஓசையை ...

   Delete
 48. நண்பர்கள் யாருக்கேனும் இந்த பூதவேட்டை இதழின் ஒரிஜினல் தலைப்பு தெரியுமா?

  I cant find it anywhere..

  -sankar

  ReplyDelete
  Replies
  1. ombre nella notte! மேலே உள்ள அட்டை பட ஸ்கான் பாருங்கள் ஜி!

   Delete
 49. இருபது வருடங்களாக (கைல காசு இல்லாத துவக்க பள்ளி நாட்கள் முதல்) படித்து/சேகரித்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் 7-8 டெக்ஸ் புத்தகங்களை தவற விட்டடிருக்கிறேன். என்ன கொடும சார் இது!

  என்னுடைய rating வரிசை :
  தலை வாங்கி குரங்கு
  கார்சனின் கடந்த காலம் 1 & 2
  தனியே ஒரு வேங்கை - 1 & 2 & 3
  நள்ளிரவு வேட்டை
  மரண தூதர்கள்

  ReplyDelete
 50. முன் அட்டைப் படத்தை கவனமாக ஆராய்ந்தபோது , டெக்ஸின் தலைக்கும் - உடலுக்குமான விகிதாச்சார வேறுபாடே பிரச்சினைக்குக் காரணம் என்பது கணநேரத்தில் புலனாகியது! பூதத்தின் கால்கள் கொஞ்சம் எசகுபிசகாய் இருந்திடுவதில் அப்படியொன்றும் தவறில்லை (பூதம் தானே). ஆனால், டெக்ஸை அப்படிப்பட்ட பிறவிக் குறைபாடுள்ள மனிதனாகப் பார்த்திடும்போது மனசு 'த்சொ' என்கிறது. கடைக் கண்ணிற்கு அருகில் தெரியும் சுருக்கத்தைக்கூட ஏதாவது மேக்கப் போட்டு மறைத்திருக்கலாம். டெக்ஸுக்கு வயதாகவே கூடாது!

  பல்சக்கரம் பொருத்திய கெளபாய் ஷூக்களை அணிந்துகொண்டு அப்படிக் காலை மடித்து உட்கார்வதெல்லாம் படு ஆபத்தானது என்பதை என்றைக்குத்தான் டெக்ஸ் உணர்ந்துகொள்ளப் போகிறாரோ, தெரியவில்லை!!
  :)

  ReplyDelete
 51. @ ALL : கண் திருஷ்டியோ என்னவோ - கடந்த ஒரு வாரமாய் சீராய் இருந்து வந்த மின்விநியோகம் இன்று முதல் முருங்கைமரம் ஏறி விட்டதால் - இன்றைய நாள் முழுவதும் புழுக்கத்திலும் ; துளியும் பயனில்லா வெட்டிப் பொழுதுபோக்குகளிலும் கழிந்தது ! இந்த அழகில் நாளைய தினம் முழு மின்தடை என்ற சந்தோஷ சேதி வேறு ! So நண்பர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு ஆங்காங்கே புகுந்து பதில் சொல்லிட சந்தர்ப்பம் இராதென்பதால் - கலவையாக இங்கேயே முடிந்தளவு பதில்கள் பதிவிடும் நெருக்கடி ! Hope you understand guys !

  'அட்டைப்படம் சுமார் ; ஒ.கே. ; மோசம்' என்று பதிவாகி இருக்கும் பலவிதமான அபிப்ராயங்களுக்கு மத்தியினில் சின்னதாய் ஒரு சேதி : டெக்ஸ் வில்லர் & டயபாலிக் கதைகளுக்கு மாத்திரம் இதழின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் உரிமையாளர்களோடு தொடர்பில் இருந்து, அவர்களது பூரண சம்மதங்களைப் பெறுவது அவசியம் ! அட்டைப்படத்தில் துவங்கி ; 'வருகிறது' விளம்பரங்கள் வரை அவர்கள் பார்வைக்கு சமர்ப்பித்த பின்னரே அச்சினைத் துவங்கிட முடியும். நேற்றைய இரவு அட்டைப்பட டிசைன் + inner pages அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தோம். அவற்றிற்கு இன்று மதியம் கிட்டிய பதிலின் சில வரிகள் இங்கே :

  "Dear Vijayan, The covers are wonderful. Both me & Bonelli really enjoy your approach to our character ! It's great and approved instantly by all at Bonelli ! All the very best"

  அவர்களது சந்தோஷப் பாராட்டுக்களை எனக்கு நானே குல்லா போட்டுக் கொள்ளும் பொருட்டு இங்கு பதிவு செய்திடவில்லை ; ரசனை சார்ந்த பார்வைகளுக்குப் பன்முகப் பரிமாணங்கள் இருந்திடலாம் தானே என்பதைச் சுட்டிக்காட்டவே நினைத்தேன் ! நாம் ரசிக்கும் படைப்பாளிகள் நம் கலைஞனை ரசிக்கும் வினோதம் தான் யதார்த்தமோ ?

  இந்த இதழின் அட்டையினில் உள்ள டெக்ஸ் வில்லரின் on one knee போஸ் இத்தாலிய ஒரிஜினலின் inch by inch தழுவல். இன்டர்நெட்டில் 5 நிமிடங்கள் செலவிட்டால் - இதன் ஒரிஜினலை சுலபமாய்ப் பார்த்திட முடியும். தொலைவில் நிற்கும் பூதம் மாத்திரமே கூடுதலாய் சேர்க்கப்பட்ட சங்கதி ! கதையைப் படிக்கும் போது அந்த ஜந்துவும் கூட டெய்லரிடம் அளவு கொடுக்க நிற்கும் பாணியினில் இருப்பதை பார்த்திடத் தான் போகிறீர்கள் ! So அளவுகளில் பிழை இருப்பின் ; அது ஈயடிச்சான் காப்பியின் விளைவுகளே ! 'இந்தாண்டின் அற்புதம் - இந்த அட்டைப்படம்' என்று நான் நிச்சயம் அடம் பிடிக்க நினைக்கவில்லை ; மிதமான ஆக்கமே இது என்பதில் எனது கண்களும், புலன்களும் சம்மதம் தெரிவிக்கின்றன ! ஆனால் - batting செய்யப் போகும் ஒவ்வொரு முறையும் ; ஒவ்வொரு பந்திலும் சிக்சர் அடிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பினை நம் ஓவியரின் தோள்களில் சுமத்துவது சிரமமே என்ற அனுசரணையோடு balance செய்திடும் பொறுப்பும் எனக்குள்ளதே ? Contd..

  ReplyDelete
  Replies
  1. Contd :

   ஒரிஜினலை ஏன் பின்பற்றக் கூடாதென்று தொடர்ச்சியாய் கேட்கும் நண்பர் ராஜ்குமாருக்கு பதிலாய் நான் சொல்வது ஒன்றே : அழகாய் இருக்கும் ஒரிஜினல்களை நாம் ஒரு போதும் மாற்றி - நனைத்துச் சுமக்கும் ஆர்வக்கோளாறில் பணியாற்றுவது கிடையாது. எனது இன்றைய காலைப் பதிவினிற்குள் ஒரிஜினலாய் இந்த Tex இதழுக்குப் போடப்பட்ட (இத்தாலிய ) அட்டைப்படத்தினையும் இப்போது இணைத்துள்ளேன்.இது நமக்கு ஒத்து வருமென்று நம்மில் எத்தனை பேர் கை தூக்குவோம் ? ஐரோப்பிய ரசனைகள் நமது சாயலுக்கு சரியாகும் சமயங்களில் அப்படியே பயன்படுத்துவதோ ; லேசாகப் பட்டி டிங்கரிங் பார்த்து உபயோகிப்பதோ சாத்தியமே ! ஆனால் அவை சரி வராத வேளைகளில் - we need to try re-inventing simply because the original wheels were meant for a different terrain !

   நண்பர் ரபீக் ஆதங்கப்பட்டிடும் அந்தப் professionalism-ன் தேடலில் நம்மை முழுமூச்சாய் ஆழ்த்திடவிடாது நம்மிடமுள்ள limitations தடுப்பதை ஒத்துக் கொள்ளும் முதல் நபர் நானே ! ஆனால் நான் சொல்ல விழைவதெல்லாம் ஒன்றே ; கால்களைக் கட்டிக் கொண்டு ஓடும் போட்டி இது ! இதில் சிட்டாய்ப் பறந்திடும் கலையைக் கற்றிடுவது அனுபவத்தினில் தேட வேண்டியதொரு ஆற்றலே ! குப்புற விழுந்து மூக்குத் தண்டை சேதப்படுத்திக் கொள்ளாது இருப்பதே இந்த ஆட்டத்தின் முதல் விதி என்று கூட சொல்லலாம் ! நிறைய புது வாசகர்களை எட்டிடும் முயற்சிகளில் "சென்னையின் அடையாளமாய்" திகழும் professionalism-ல் மிளிரும் ஒரு ஜாம்பவானிடம் சிக்கி நாம் படும் பாடு - நான் மட்டுமே அறிந்த சேதி ! We learn on the job each single day guys..! Trust me on that !

   இவை எல்லாவற்றையும் விட - இன்றைய பதிவு அழுத்தமாய்ச் சுட்டிக் காட்டிய சேதி - TEX என்ற ஒற்றைச் சொல்லுக்கு நம்மிடையே உள்ள அந்த அசாத்தியக் காந்தசக்தியே !! ஒரே நாளில் இத்தனை பின்னூட்டங்கள் ; இத்தனை உத்வேகம் என்பது திகைக்கச் செய்கிறது ! அதிலும் "மரண முள்" ;" கார்சனின் கடந்த காலம் "கதைகள் பெற்றுள்ள வரவேற்பு நிஜமாக அற்புதம் ! எனது பர்சனல் favorites என்று தேர்வு செய்திட வேண்டுமெனில் - நான் விரல் நீட்டுவது "சைத்தான் சாம்ராஜ்யம்" + "தலைவாங்கிக் குரங்கு" கதைகளை நோக்கியே இருக்கும் !

   அப்புறம் பின்னட்டையில் இருந்த caption குறித்தும் நிறைய ஜாலியான அபிப்ராயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததைக் கவனித்தேன் ! கபில் தேவ் கூட பிரபுதேவாவைப் போல் steps போட முயற்சிக்கும் IPL சீசன் இது guys ; நாமும் கொஞ்சமாய் dancing shoes -க்கு வேலை கொடுத்தால் என்ன ? Anyways - தொடரும் மாதங்களில் 2 கதைகள் combo தான் பெரும்பான்மையாக எனும் போது பின்னட்டைகளில் இரண்டாம் கதையின் அட்டைப்படமே இடம்பிடிக்கும் ! So பஞ்ச் டயலாக் போட்டி இப்போதைக்கு அவசியமாகாது :-)

   Delete
  2. சார், பஞ்ச் டயலாக் நிச்சயமாய் சிறப்பே! கட்டங்களுக்குள் இல்லாமல் புத்தகத்தில் இடம் பெற்ற தலைப்பும் அபாரமான எழுத்துரு!

   Delete
  3. நல்ல விளக்கங்களுக்கு நன்றி சார்!

   ஆனாலும், பார்த்தவுடன் கண்களை உறுத்தும் இதைப்போன்ற உடல் அளவு விகிதாச்சார மாறுபாடு கொண்ட அட்டைப்படங்களை ( அவை ஒரிஜினலாகவே இருந்தாலும் ) சற்றே ஒதுக்கி வைத்துவிடுவதே நல்லதென்று தோன்றுகிறது!

   சம்பந்தமில்லாததாகினும் பார்த்தவுடனே 'ச்சும்மா அதிருதில்லே' சொல்ல வைக்கும் அட்டைப்படங்களை பயன்படுத்தினால் ஆஹா ஓஹா தானே?!! :)

   Delete
  4. விஜய்யின் வார்த்தையில் உண்மை தெரிகிறது தலைவா...இதை நானும் ஒத்துக்கொள்கிறேன் எங்கள் வார்த்தைக்கும் ஒரு முறை செவி சாயுங்களேன் தலைவா....

   Delete
  5. Punch Super,ஷங்கர் உங்க பஞ்ச் வசனத்தை சுடும் முன் copyrights பண்ணிடுங்க. :D

   Delete
  6. //Dear Vijayan, The covers are wonderful. Both me & Bonelli really enjoy your approach to our character ! It's great and approved instantly by all at Bonelli ! All the very best"//

   HMMMM.... INTERESTING...அட்டையில் ஒரு சீரியஸ்நேஸ் மிஸ்ஸிங் எனபது எனது மாற்றப்படமுடியாத அபிப்ராயம். BTW காமிக்ஸ் எனபது ஒரு ஜாலி பொழுதுபோக்கு எனும்போது நாம் ஏன் அதை இவ்வளவு சீரியஸ்சாக எடுத்துக்கொள்ளவேண்டும்???சட்டியில் இல்லாததை தேடுவதை விட்டுவிட்டு இருப்பதை சுவைகலாமே எனபது மிகவும் PRACTICAL ஆக தோன்றுகிறது!!


   //நிறைய புது வாசகர்களை எட்டிடும் முயற்சிகளில் "சென்னையின் அடையாளமாய்" திகழும் professionalism-ல் மிளிரும் ஒரு ஜாம்பவானிடம் சிக்கி நாம் படும் பாடு - நான் மட்டுமே அறிந்த சேதி ! //

   LANDMARK?? HB??

   Delete
 52. டெக்ஸ் கதைகளில் எனக்கு மிக பிடித்த கதை இன்று வரை கார்சனின் கடந்த காலம் (2) தான்.
  1] ரொமாண்டிக் உள்ள கதை என்பதால் மட்டுமல்ல
  2] ஓர் பாழடைந்த நகரில் நடக்கும் அந்த கண்ணாமூச்சி யுத்தம் ,
  3] கார்சனின் நரைக்காத தலை தரிசிப்பு
  4] நக்கல் வார்த்தைகள் உள்ளிட்ட நல்ல மொழிபெயர்ப்பு ,
  5] மகன்,மற்றும் மகள் மீது இரு தந்தைமார் காட்டும் பாசம்,அக்கறை
  6] கில்லாடி வில்லன்கள்
  எல்லாமே never again பாணி சம்திங் ஸ்பெஷல்.

  அடுத்தது
  சாத்தான் வேட்டை ,
  மரண முள் ,பழிவாங்கும் புல் ,மரணத்தின் நிறம் பச்சை ,தலைவாங்கி குரங்கு

  ReplyDelete
  Replies
  1. இதனுடன் கதையை துவங்குவார்களே புல்வெளியில் ...வண்ணத்தில் இருந்திருந்தால்...

   Delete
  2. உண்மை,டெக்ஸ்சையும் வண்ணத்தில் பார்க்க ஆசை.அந்த இத்தாலி காரங்களுக்கு வண்ணம் மேல் ஏன் இந்த கோபமோ?

   Delete
 53. ஹூம் மற்றும்,அடுத்து என்று சொல்ல இந்த ஆள் டெக்ஸ் கதைகளில் தாங்காது சாமி .
  ஆனால் படித்த 43 ல் பிடிக்காத கதை என்றால் அந்த துயில் எழுந்த பிசாசு மற்றும் கானக கோட்டை இரண்டும் மட்டுமே.

  ReplyDelete
  Replies
  1. என்ன கொடும சார் இது? என்னோட பஞ்ச் இனி இது தான்.ஏனெனில் ,மேலே நண்பர் கருத்துகள் பார்பதற்கு முன் மனதில் பட்டதை எழுதினேன். அது மட்டுமல்ல கிழே பதிய உள்ள கருத்தும் [பஞ்ச்] ஏற்கனவே டைப் பண்ணியது தான்.


   அருமையான இந்த அட்டையை அதே போல் பின்னட்டையில் உள்ள "பஞ்ச்"சையும் பார்த்து கைதட்டியா இல்லை விசில் அடித்தா பாராட்டுவது என்பது தான் என் ஒரே குழப்பம்.

   அத்துடன் சமீப காலத்தில் வழமையாக அற்புதமான அட்டைப்பட டிசைன் இருப்பினும் மாலையப்பன் அவர்களின் [?] official நிறங்களாக செம்மஞ்சள் சிவப்பு ,மஞ்சள் என அட்டை படம் அமையாது புதிய வண்ணங்கள் உட்சாகமூட்டுகின்றன :D

   Delete
 54. அத்தனை கதைகளும் மனதில் மறக்கவியலா இடம் பிடித்தவை சார்! ஆயினும் இரத்த ஒப்பந்தம், தணியாத தணல், காலன் தீர்த்த கணக்கு டெக்ஸ் மனைவியின் அருமை பெருமைகளை சொல்வதில் சிறப்பான இடம் பிடித்த கதை சார்! அடிதடிக்கு டிராகன் நகரம் நட்புக்கு கார்சனின் கடந்த காலம், விஞ்ஞானம் வரிசையில் துயிலெழுந்த பிசாசு, மரணமுள் வகை விஞ்ஞான கதைகள், ஆர்பாட்டத்திற்கு சாத்தான் வேட்டை திகிலுக்கு சைத்தான் சாம்ராஜ்யம், தலை வாங்கிக் குரங்கு! மற்ற அனைத்துமே எனக்கு மிக மிக மனதிற்கு நிறைவான கதைகள் சார்! பழிவாங்கும் புயல், பழிக்குப் பழி ஆகியவை மனதில் மாறா பாதிப்பை உண்டாக்கியவை சார்!

  ReplyDelete
 55. மிக நீண்ட நாட்களாக ஆசைப்பட்டு படிக்க துடித்த கதைகளுள் ஒன்று இந்த பூத வேட்டை சார்! வெளியிட்டமைக்கு மிக்க நன்றி! விளம்பரம் ஓவியமாக மனதில் தங்கிவிட்டது! செப்டெம்பர் 1995 வெளியீடான இரத்தக் கரம் புத்தகத்தில் முதன்முறை விளம்பரம் வெளியிட்டு பதினெட்டு ஆண்டுகளாகின்றன சார்! வெளியீடு 115 சார்! அதற்கு முன்னால் 113 விபரீத விதவையில் வந்த விளம்பரம் திகில் நகரில் டெக்ஸ்! அடுத்த முயற்சியாக அதை கொண்டு வந்தால் நாங்கள் மகிழ்வோம் சார்!

  ReplyDelete
 56. டெக்ஸ் கதைகள் அனைத்துமே தனித்தனியே முத்திரை பதிப்பவை! அவற்றில் முதலில் நினைவில் வருபவை...
  1. பழி வாங்கும் பாவை
  2. மரணமுள்
  3. சைத்தான் சாம்ராஜ்யம்
  4. ரத்த ஒப்பந்தம் - 3 பாகங்கள்
  5. சாத்தான் வேட்டை
  6. கார்சனின் கடந்த காலம்
  7. மரணத்தின் நிறம் பச்சை

  ReplyDelete
 57. Any how, we are waiting for to go with Tex "POOTHA VEEDDAI".

  ReplyDelete
 58. விஜயன் சார் அவர்களுக்கு .... தயவு செய்து அட்டைப்படத்தை மாற்றுங்கள்.. இது நீங்கள் டேக்ஸ்கு செய்யும் அவமானமாகவே நான் கருதுகிறேன்..
  இது போல ஏதாவது செயுங்களேன்..
  http://www.facebook.com/photo.php?fbid=3091961113557&set=o.565691670116822&type=1&theater

  ReplyDelete
  Replies
  1. When this is going to get released in comic con I dont know if ppl would ever lift this book by the wrapper of it, while it contains one of the renowned and wonderfull artists work into it... everything is judged by its outer appearance...

   whoever has same idea over the cover can let know..

   Shriram.

   Delete
  2. ஆமாம் சார்! கதை சுருக்கம் பின்னால் போட்டு பின்னணியில் ஓவியம் மிளிர முன் அட்டையில் அதிரடியான ஓவியம் மின்ன வந்தால் மிக அழகாக இருக்கும் சார்!

   Delete
  3. Modesty Blaise : பிரிண்ட் on demand என்றொரு பணிமுறை உள்ளது ; அவசியப்பட்டால் ஒரே ஒரு பிரதி கூட அச்சிடும் சாத்தியம் அதனில் உண்டு ! என்றேனும் ஒரு பொழுதில் அது நமக்கும் எட்டும் தூரத்திற்கு வரும் போது - ஒவ்வொருவரின் பிரத்யேக விருப்பங்களுக்கு ஏற்ப individual copies தயாரிக்க முடிந்திடும் ! அது நாள் வரை "அவமானங்களை " சகித்துக் கொள்ளும் பொறுமை அவசியமே !

   Delete
  4. நம் டெக்ஸ் மீது உள்ள அளவு கடந்த காதலினால் அவ்வாறு சொல்லிவிட்டேன்.. தவறாக இரூபின் மன்னிக்கவும்..

   Delete
  5. மணிமேகலை பிரசுரம் போன்று என்றாவது ஒரு நாள் மிக நேர்த்தியாக மிக பிரம்மாண்டமான பதிப்பகமாக நம்ம காமிக்ஸ் மலரும் பொன்னான தருணமதில் இது நிச்சயம் சாத்தியம் சார்! காத்திருக்கிறோம் மிகுந்த ஆர்வமுடன் ப்ளஸ் ஆவலுடன்!

   Delete
 59. பூதமா குட்டிச் சாத்தானா என பட்டி மன்றமே நடத்தலாம் போலிருக்கு சார்! முடிந்தால் இந்த அட்டைப் படத்தினை மாற்ற இயலுமானால் செய்து விடுங்களேன் ப்ளீஸ்! குழந்தைகளை கவர இது உதவுமா? என்பதில் சந்தேகமே எனக்கு!

  ReplyDelete
 60. இதுல அது காட்டுற சிக்ஸ் பாக் வேற நற! நற! நற!

  ReplyDelete
 61. " We learn on the job each single day guys..! Trust me on that !" சூப்பர் சார்! பன்ச் டைலாக் மிக ரசிக்க வைத்தது! அது கண்டிப்பாக நன்கு ரீச் ஆகும் சார்!

  ReplyDelete
 62. குழந்தைகளுக்கான இதழின் அட்டை படம் போல் உள்ளது

  ReplyDelete
 63. Punch line Simply Superb! It fits to our "Comics SUPERSTAR Tex Willer"!

  ReplyDelete
 64. Dear sir, do you consider a business combine with flipkart and snapdeal? both are very good online sites.compare to ebay ,the rates are very cheap there. english and hindi comics like manga,dc,marvel,archie,diamond and raj are available now in flipkart.if we make an order of Rs500 and above the shipping fee is totally free there.i bought so many things in both sites.
  If our lion available in flipkart or snapdeal,we save all the courior chargers. not only,our comics circulation also goes up and up.you please consider.....
  sorry for my english. it's very tough to type in tamil.
  -by comic tragula.

  ReplyDelete
  Replies
  1. Dear Editor,

   This is very very useful suggestion.. Pls consider..

   Delete
 65. சார், கூரியர் / பதிவுத்தபாலில் வரும்போது இதழ்களை பிளாஸ்டிக் கவர்களில் வைத்து அனுப்புவது போல புத்தகக் கண்காட்சிகளில் வாங்கும் போதும் பிளாஸ்டிக் கவர்களில் வைத்து கொடுத்தால் பராமரிக்க வசதியாக இருக்கும். ஆவன செய்வீர்களா?

  ReplyDelete
 66. டியர் எடிட்டர்,

  தமிழில் ராணி காமிக்ஸ் முத்து காமிக்ஸ் (நம் லயனுக்கு போட்டியாக இருந்த பொது), பொன்னி காமிக்ஸ், போன்ற பல காமிக்ஸ் கதைகள் வந்த பொற்காலத்திலும் லயன் குழுமம் மற்றும் பூந்தளிர் ACK தவிர தமிழில் மற்றவை நான் படித்ததில்லை.

  இதற்கு முக்கிய காரணம் அட்டைப் படங்கள் ஏற்படுத்திய 'keep-off'. நான் சிறுவனாக இருந்த '84-'87 வருடங்களிலேயே இப்படி அட்டைப் படங்கள் பார்த்து காமிக்ஸ் வாங்காமல் இருந்திருக்கிறேன். என்னைப் போன்ற பலரும் உண்டு - லயன் குழுமத்தின் தீவிர வாசகர்களான இவர்கள் ஓவியம் சரியில்லாததால் மற்ற பல காமிக்ஸ் இதழ்கள் வாங்கியதில்லை.

  இந்தக் கால சிறுவர்கள் இன்னும் உஷார் நிலை கொண்டவர்கள். இவர்களைக் கவர்வது எளிதல்ல என்று நம் அனைவருக்குமே தெரியும்.

  தற்போது நாம் காமிக்-கான் அரங்கில் நம்மை நிலைப் படுத்திக்கொள்ளும் இந்த சமயத்தில் 'பூத வேட்டை' முன்னட்டை looks too amateurish. காமிக்-கான் அரங்கில் இந்த அட்டை ஒரு பின்னடைவைக் கொடுக்காமல் இருக்க வேண்டும். தற்கால சிறுவர்-சிறுமியரை இந்த அட்டை கவர்ந்திழுத்தல் கடினமே !!

  இந்த பாணி original creators ரசித்திருக்கலாம் - ஆனால் நமது பெரும்பாலான நெடுநாளைய டெக்ஸ் ரசிகர்களிடையே கூட வரவேற்பில்லாத ஒரு முன்னட்டையாய் அமைந்துவிட்டது.

  நம்மிடையே உள்ள ஆர்வலர்களைக்கொண்டோ அல்லது திரு.மாலையப்பர் அவர்களைக் கொண்டோ இது சரி செய்துவிடக் கூடியதே. அதற்கு நேரம் இல்லாமல் போனால் குறைந்த பட்சம் பின் அட்டையை முன்னும், இந்த முன்னட்டையை பின்னும் swap செய்திடலாமே. அதற்கு நேரம் அதிகம் ஆகிடாதே.

  ReplyDelete
  Replies
  1. swap செய்திடுவது சாத்தியமெனில் நிச்சயம் சந்தோஷமே!

   Delete
  2. @ friends : இந்த அட்டைப்படத்தை வரைந்ததே மாலையப்பன் தான் ! தவிர,அச்சான அட்டையை swap செய்வது எங்கணம் சாத்தியமாகும் ??

   Delete
  3. டியர் எடிட்டர்,

   பதில் அளித்தமைக்கு நன்றி.

   பிரிண்ட் ஆகிவிட்டிருந்தால் ஒன்றும் செய்ய இயலாதுதான். ஒரு வேலை பிரிண்ட் செய்வதற்கு முன்னாள் டிஜிட்டல் processing செய்யப்பட்டிருக்குமோ என்ற எண்ணம் தான் அந்த swap யோசனை.

   By the way, பல சூப்பர் அட்டைகளை நமக்காக இதுவரை அளித்த திரு.மாலையப்பரைக் குறை சொல்லும் எண்ணம் இல்லை - நம்மில் பலரும் அவரது ரசிகர்களே - எனினும் இந்த முறை - given the occassion - மேம்பாடுக்குட்பட்டதே என்பது பலரின் கருத்து.

   அலுவலகத்தில் நாம் நெடுநேரம் அரும்பாடுபட்டு செதுக்கிய ஒரு திட்டத்தின் கோப்புகள் review செய்யப்பட்டு நம்மிடம் மாற்றத்திற்கு வருவது போல தான் இந்த யோசனை.

   Delete
  4. // பல சூப்பர் அட்டைகளை நமக்காக அளித்த திரு. மாலையப்பரைக் குறை சொல்லும் எண்ணம் இல்லை - நம்மில் பலரும் அவரது ரசிகர்களே //

   உண்மை! மறுக்க முடியாத உண்மை!

   'காமிக் கான்' போன்ற சர்வதேச காமிக்ஸ் படைப்பாளிகள் ஒன்றுகூடும் இடத்தில் முன்நிறுத்தப்படும் நம் எல்லா இதழ்களுமே குறையில்லாததாக இருக்க வேண்டும் என்பதோடு, அங்கே வருகை தரும் புதியவர்களும் பார்த்தவுடன் 'அட!' என்று விழிகளை உயர்த்தும் விதத்தில் நம் புத்தகங்கள் அமையவேண்டும் என்ற ஆசையே இந்த வற்புறுத்தல்களுக்கு காரணம்!

   மற்றபடி, இதே அட்டையை அப்படியே மேம்போக்காகப் பார்த்தால் குறை புலனாகாமல் போக சிறிது வாய்ப்புண்டுதான்!

   Delete
  5. Comic Lover (a) சென்னை ராகவன் @ தற்போது நாம் காமிக்-கான் அரங்கில் நம்மை நிலைப் படுத்திக்கொள்ளும் இந்த சமயத்தில் 'பூத வேட்டை' முன்னட்டை looks too amateurish. காமிக்-கான் அரங்கில் இந்த அட்டை ஒரு பின்னடைவைக் கொடுக்காமல் இருக்க வேண்டும். தற்கால சிறுவர்-சிறுமியரை இந்த அட்டை கவர்ந்திழுத்தல் கடினமே !!

   I feel it is depends of people, it is very difficult to find other taste especially the kids! We might have liked this when we were kids!! Even though the cover page is not up to the mark I believe the story will be going to super duper hit of this year.. all because of name "TEX".

   Delete
 67. இந்த லிஸ்டில் உள்ள டெக்ஸ் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள்

  1 to 50 லிஸ்டில் உள்ள கதைகள் மற்றும் திகில் "சைத்தான் சாம் ராஜ்யம் ".

  "பழி வாங்கும் புயல் " மட்டும் விதி விலக்கு .காரணம் எவ்வளவு தேடியும் இன்னமும் கிடைக்காத ,கை வசம் இல்லாத புத்தகம் அது .

  ReplyDelete
 68. இந்த அட்டை படம் பற்றி இப்பொழுது எனது கருத்தை தெரிவிக்க போவதிலை .காரணம் ஒவ்வொரு முறையும் அட்டை படத்தை சிறிது குறை சொல்வதும் ..,புத்தகம் வந்தவுடன் பார்த்தால் அட்டகாசமாகவும் எனது பார்வைக்கு படுவதால் நோ கமெண்ட்ஸ் ...

  ReplyDelete
 69. பின் அட்டை பஞ்ச் டயலாக் எனக்கு சூப்பர் ஓகே ..

  ஆசிரியரே சொல்லி விட்டாரே .....

  "டெக்ஸ் பேர கேட்டாலே "டைகர் " கூட பதுங்கும் " ன்னு ..

  எனக்கு அது போதும்பா.... :-)

  ReplyDelete
 70. இரவுக்கழுகாருக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமைக்கு ஈடுசெய்யும் வகையில், வெள்ளையர்கள் துயில்கொள்கையில் தலையைத் தாங்கிடும் அந்தப் பஞ்சுப்பொதிக்கு நிகராக எம் இரவுக்கழுகாரின் வீரதீர சாகஸம் தாங்கிய கனமான தொகுப்புத்தாள்களை இரண்டு பெளர்ணமிகள் நிறைவடையும் முன் வெளியிட வெள்ளையர் தலைவன் ஆவனம் செய்யவேண்டியது.
  இல்லையேல், சினம்கொண்டிருக்கும் தூய ஆவியின் விருப்பத்தை எம் மாந்திரீகர்கள் கேட்டறிந்த பின், செந்நிற ஓநாய்கள் ஊளையிடும் நல்லதோர் நடுநிசிப் பொழுதில் சிவகாசிக் கோட்டை மீது சீறிப் பாய்ந்திடுவோம் என்று வெள்ளையர் தலைவருக்கு இந்த ப்ளாக் க்ளவுட் எச்சரிக்கை விடுக்கிறான்.   :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா !! ஈரோடு விஜய், அடுத்த டெக்ஸ் கதைக்கு வசனம் எழுதிட நீங்கள் ரெடி போல :-)

   Delete
  2. ப்ளாக் க்ளவுட் எச்சரிக்கைக்கு பலன் கிடைத்தால் நன்று...

   Delete
 71. அட்டைபடத்தில் டெக்ஸ் மற்றும் அந்த பூதத்தின் SIZE மற்றும் SHAPE சற்று மாறியிருந்தாலும் வண்ணக்கலவைகள் அற்புதமாக உள்ளன! நாம் உற்று பார்க்காவிடில் அந்த குறைகள் கூட பெரிதாய் தெரியாது! தீம் மிகவும் அட்டகாசமானதாக உள்ளது!

  ReplyDelete
 72. தலைவா! இந்த பிரச்சனைகளை தவிர்க்க அட்டைபடம் அச்சாவதற்கு முன்பே எங்களிடம் (ப்ளாக்ல் ) காட்டிவிட்டால் தவறுகளை தவிர்த்து நல்ல தரத்துடன் அட்டைபடம் தயாரிக்கலாம் அல்லவா (ஆனால் முன்பே நீங்கள் காட்டவேண்டுமே!) தலைவர் மனது வைத்தால் மட்டுமே சத்தியம். இன்னும் சிறு பிள்ளை தனத்துடன் அட்டை படங்கள் வருவது தவிர்க்கப்படலாம் நல்ல உலக தரத்துடன் அட்டை படங்கள் வரவேண்டுமென்பதே எனது அவா.

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஐடியாதான்!

   // நல்ல உலக தரத்துடன் அட்டைப் படங்கள் வரவேண்டுமென்பதே எனது அவா//

   உலகத் தரத்தை நாம் எப்போதோ தொட்டுவிட்டோம்; என்றாலும் இதுபோன்ற சிறு சறுக்கல்கள் நிகழாதிருந்தாலே போதும்!

   Delete
  2. ஹலோ! ஏன் இப்படி எல்லாம் கேக்குரிங்க? அட்டை படத்தை நம்மிடம் காட்டிய பின்பு தான் அச்சில் ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பது அவர்களுடைய உழைப்பை சந்தேகிப்பது போல் உள்ளது. வேண்டாமே அந்த வேண்டுகோள் நமக்கான எல்லைக்குள் நாம் இருப்பது தான் முறை. அட்டை என்பது ஒருவருக்கு சட்டை போன்றது உண்மை தான், சட்டை சரி இல்லை என்றால் அதை உடுத்தி இருப்பவனும் சரி இல்லை என்றாகிவிடுமா? அட்டை நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பலனை அனுபவிப்பது ஆசிரியர் தான் நாம் அல்ல.ஆசிரியருக்கு தெரியாதா நல்லதை தான் தர வேண்டும் என்று. என்னை பொறுத்த வரை பின் அட்டையை விட முன் அட்டைதான் கதைக்கு சம்மந்தமான காமிக்ஸ் தனமான அட்டை. பின் அட்டை நாவல் அட்டை போலுள்ளது. நமது காமிக்ஸ் களுக்கு போட்டோ போன்ற அட்டையை விட கதையில் வரும் படங்கள் போன்ற வரைந்த அட்டைதான் சூப்பர்.(உதாரணம் மில்லேனியம் ஸ்பெஷல்.) இது ஆசிரியருக்கு வக்காலத்து வாங்குவதாக என்ன வேண்டாம்.இது என்னுடைய கருத்து மட்டுமே. தயவு செய்து தவறாக இருப்பின் அனைவரும் மன்னிக்கவும். நன்றி .

   Delete
  3. குற்றச் சக்கரவர்த்தி @ Well said! Very True.... friends.

   Delete
  4. குற்றச் சக்கரவர்த்தி : சும்மா "நச்" னு சொன்னீங்க.

   Delete
  5. Mr.குற்றச் சக்கரவர்த்தி, I accept point, but millennium Super special cover is a class work. but this is totally awkward, i too like the real painted format but we expect some quality in it. i really admire how the editor accept to print this..... i am too upset about the front cover design.

   Delete
 73. hello brothers only 12 day's left for comic con

  ReplyDelete
 74. "நீதியின் நிழலில்" அட்டைபடத்தில் ஆசிரியர் இரட்டிப்பாக ஈடுகட்டி அமர்க்களம் பண்ணிவிடுவார் நண்பர்களே! யாரும் கவலைப்படாமல் காத்திருப்போம்!

  ReplyDelete
 75. என்ன ஆச்சு-ஸ்டீல் க்ளாவும், பொடியனும் எங்கே போனாங்க.... எடிட்டர் என்றவுடன் மூச்சே விடமாட்டேங்கறாங்க ....யாராவது கண்டுபிடிங்கப்பா அவங்க என்னதான் கருத்து சொல்றாங்கன்னு பாக்கலாம்...

  ReplyDelete
 76. from what i have read, tex kadaigalil there is no acknowledgement there is pei or boodam. It is generally humans manipulating. Adae adippadaiyil dan inda kadaiyum irukkum endru ninaikkiraen.

  but namma coverla irukkura picture kadaikullae eppadi pugum.... appadiayae oru picturla insert pannalum boodam mattha ella picturlaeyum vera madri illa irukkumm, insertae pannalaenna appo sammadam illada cover aaiyidumae and covera parthu yaaravudu adae boodathae thedi manasu odinji poiduvangalae:-)

  Actually enakku boodam ok tex dan romba kan kalanga vechittar...

  But print panniyachhunnu enna panna mudiyum, namma veetla saappadu oru naal namma tastukku illaenna enna odiya poidrom, adjust pannikradu illaya adaemadri idu namma comicsdanae freeya vittu jollya kadaikku ethir parpom,

  Cover ingayae parthuttom, kadai drawing stylum, trailerum ingaeyae vanduruchu, ippo meedhi irukkura surprise only fillers dan :-(

  courier vanda udanae ullae enna irukkunnae teriyam open panni cover to cover tirupi tirupi paarthu kidaikkura maghizhi marupadiyum kidaikkavae kidaikkada

  Vijayan sir, Title mattum announce panni surprisa oru book engalluku ellam anuppa koodada, supportukku yaaravudu irunda voice kudungpaaaa.....

  blog padikkamae oru masam iraen appo unakku surprisdanane apdinnu sonna, mudiyalayapa mudiyalae padikkama irukka mudiyaliyae:-)

  matrapadi tex attaiyai ivvalo comment aditha engal elloraiyum - adutha tex attayil nadunayagamai nidru vasagargalai nooki suduvadu pola kalakkal pose kudduthu cover poda utharavu allikkiraen, case closed.

  ReplyDelete
 77. ivan yennada inglishliyae adikkarannu kaduppagadinage, tamillae try panni parthaen but neriya spelling mistake + konjam somberitanam adaaaan...:-P

  ReplyDelete
 78. This comment has been removed by the author.

  ReplyDelete
 79. கோழி மிதிச்சு குஞ்சு செத்துடுமா என்ன .........இது பழமொழி.
  நெருப்பு கோழிய கைல பிடுச்சா என்ன சுடவா போகுது ?..இது மந்தி(ரி) மொழி......

  ReplyDelete
 80. காக்கான்னு சொன்னா கருப்பயிடுவோமா? இல்லாங்காட்டி செவப்பா ஒரு சொப்பனம் பச்சா செவப்பா ஆயிடுவோமா? ஆயிரம் ஈரோ வந்தாலும் அண்ணாத்த ஸ்பைடர் க்கு ஈகொல் ஆவுமா? எப்பூடி......

  ReplyDelete
 81. அனைத்து டெக்ஸ் கதைகளும் எனக்கு பிடித்தவையே
  எனக்கு மிகவும் பிடித்தமான கதைகள்
  கார்சனின் கடந்த காலம் 1 & 2
  பழி வாங்கும் புயல்

  ReplyDelete
 82. நேற்று ஆசிரியரை ஆபிசில் சந்தித்துப் பேசினேன்..மகிழ்ச்சியான தருணம்.விஸ்கி-சுஸ்கி கதைகளை மீண்டும் வெளியிட கோரிக்கை வைத்தேன்... இப்போது அக்கதைகளுக்கு போதிய வரவேற்பு இருக்காது என்று ஆசிரியர் கூறிவிட்டார்..வருத்தமாகிவிட்டது..திரும்பி வருகையில் தலையணை சைசில் டெக்ஸ் & டயபாலிக் கதைகளைப் பார்த்தேன்(in english). ஆசிரியரது விடாமுயற்சியான தன்னம்பிக்கை கண்டிப்பாக மீண்டும் நமக்கு காமிக்ஸ் வசந்த காலத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையோடு விஸ்கி-சுஸ்கியின் "ஒரு பயங்கரப் பயணம்","ராஜா ராணி ஜாக்கி","ஒரு பேரிக்காய் போராட்டம்" மற்றும் பழைய மினி&ஜூனியர் லயன் காமிக்ஸ்களைத் தேடி கஜினியாக விடைபெற்றேன்...

  ReplyDelete
  Replies
  1. Its sad editor is not going to publish suskie and wiskie. Not all the suskie and wiskie stories are good but there are lot of gems in that series, wish editor can publish at least one in a year

   Delete
 83. // தலையணை சைசில் டெக்ஸ் & டயபாலிக் கதைகளைப் பார்த்தேன் //

  ஆஹா! ஆஹா!

  ReplyDelete
 84. Dear Editor,
  The Front Cover is really disappointing for an art lover like me.
  please look into it. its not a one day show. we have safeguard the book, and it should not make us feel sorry after 10 years.

  The Back Cover is really good. Kudos..:)

  ReplyDelete
 85. லயன் 30வது ஆண்டு சூப்பர் ஸ்பெஷலுக்கான முன் பதிவு விபரம் மற்றும் கதைகள் பற்றிய விளம்பரங்கள் எப்பொழுது வெளியிடுவீர்கள் சார்! மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்!

  ReplyDelete
 86. //Ravi Krishnan
  என்ன ஆச்சு-ஸ்டீல் க்ளாவும், பொடியனும் எங்கே போனாங்க.... எடிட்டர் என்றவுடன் மூச்சே விடமாட்டேங்கறாங்க ....யாராவது கண்டுபிடிங்கப்பா அவங்க என்னதான் கருத்து சொல்றாங்கன்னு பாக்கலாம்...//


  பொடியன பத்தி தெரியல, ஸ்டீல் க்ளா நெல்லையில் தினமும் 5 மணி நேரம் ‘தண்ணியில்’ மிதப்பதாக நம்பத்தகுந்த வட்டாரஙகளிலிருந்து தகவல் கிடைத்தது.

  ReplyDelete
 87. நண்பர்களே நாளை எனக்கு ஒரு முக்கியமான நாள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் நண்பரே :))
   .

   Delete
 88. விஜயன் சார் முன் அட்டையை பார்க்கும் போது பொன்னி காமிக்ஸ் அட்டைபடம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை :(

  பின் அட்டைபடம் simply superb :))
  .

  ReplyDelete