Powered By Blogger

Wednesday, May 01, 2013

விட்டத்தைப் பார்த்திடும் ஒரு விடுமுறை நாளில்..!


நண்பர்களே,

வணக்கம். பொழுது புலர்ந்த கணமே மலர்ந்தது "ஆஹா.. இன்றொரு விடுமுறை" என்ற சிந்தனை ! இன்னும் கொஞ்ச நேரம் குறட்டையைத் தொடரலாம்  என்ற ஆசை எழுந்த கணமே, 'நீ ஆணியே பிடுங்க வேண்டாம், எழுந்திருக்கும் வழியைப் பாரு' என்ற இலவசமாய் wake up call  கொடுத்தது கடமை தவறா நம் மின்னிலாக்கா ! தூக்கம் தெளிந்த சற்றைக்கெல்லாம் கிளைமாக்சில் தொங்கிக் கொண்டிருக்கும் டெக்ஸ் வில்லரின் மொழிபெயர்ப்பு ஞாபகத்திற்கு வர, சுவாரஸ்யமாய் அதனுள் புகுந்தேன். தடாலடி ஆக்க்ஷன் கதையென்பதால் ஏகப்பட்ட "டமால்-டுமீல்-சொய்ய்ங்"களோடு கார்சனும், டெக்சும் எதிரிகளை துவம்சம் செய்து விட்டு ஒரு வழியாய் புறப்பட்ட பின்னே - கொஞ்ச நேரம் மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்க்கும் படலத்தில்  ஆழ்ந்திடுவது உத்தமம் என்று தோன்றியது. மோட்டு வளையின் ஆராய்ச்சிக்கு மத்தியினில் சிந்தனைக் குதிரை (!!) - நேற்று நம் அயல்நாட்டுப் பதிப்பகத்திலிருந்து வந்திருந்த மின்னஞ்சலை நினைவுக்குக் கொணர்ந்தது ! இவ்வாண்டின் இரண்டாம் பாதிக்குத் தேவையான கதைகளின் பட்டியலில் ஏதேனும் மாற்றம் உண்டா - அல்லது அதன்படியே கதைகளை அனுப்பிடலாமா ? என்று வினவி இருந்தனர். அதற்கு பதில் போடுவதைப் பற்றி மண்டைக்குள் அசை போட்டுக் கொண்டிருந்த போதே - வரவிருக்கும் 2014 பற்றிய planning  மனதில் நிழலாடுவதைத் தவிர்க்க இயலவில்லை ! 30 நாட்களைத் தாண்டிச் சிந்திக்க முனைந்திருக்காத நாம் - இப்போதெல்லாம் 200 நாட்களுக்கான முன்சிந்தினையில் ஆழ்ந்திடுவது சற்றே பிரமிப்பாய் இருந்தது ! நம்பிக்கையோடும், மிகுந்த உற்சாகத்தோடும்  வடம் பிடித்துத் தேர் இழுக்கும் உங்களின் கூட்டு முயற்சிகளின் பலனே இந்த சந்தோஷ மாற்றம் என்பதில் என்னுள் துளி ஐயமும் கிடையாது ! 


2013-ன் எஞ்சியுள்ள ஆறு மாதங்களில் வரிசைக்கிரமங்கள் சற்றே மாறினால் கூட - அறிவிக்கப்பட்ட கதைகளில் பெரியதொரு மாற்றம் இருந்திடாது ! ஜூன் மாத 4 இதழ் மேளாவைத் தொடர்வது நமது ALL NEW ஸ்பெஷல் ! அது பற்றி தனியாக ஒரு பதிவு தொடரும் வாரங்களில் வந்திடும். 

ஆகஸ்ட் ; செப்டெம்பர் / அக்டோபர் மாதங்களில் இடம் பிடிக்கவிருக்கும்  இதழ்களும், விலைகளும் பின்வருமாறு இருந்திடும் :

 • சிப்பாயின் சுவடுகள் (முழு நீள கிராபிக் நாவல் ) - Rs.100
 • வேங்கையின் சீற்றம் (இ.ஒ.இ.கு.-வின் இறுதி பாகம்) - Rs.50
 • இரத்தப் படலம் - (2 புதிய பாகங்கள்) - Rs.100
 • "நீதியின் நிழலில்" (டெக்ஸ் வில்லர் b &w சாகசம் )- Rs.50

நவம்பரில் லார்கோவின் "ஆதலினால் அதகளம் செய்வீர்" (வழக்கம் போல் 2 பாக த்ரில்லர்) & டிசம்பரில் ஒரு டயபாலிக் b&w issue என்பது தான் திட்டம். சன்ஷைன் லைப்ரரியின் எஞ்சியுள்ள 4 வண்ண மறுபதிப்புகள் (அனைத்துமே ரூ.100 இதழ்கள் - முழு வண்ணத்தில்)  இடையிடையே புகுந்திடும் :
 • ஜூன் - லக்கி ஸ்பெஷல் -1
 • செப்டெம்பர் - பிரின்ஸ் ஸ்பெஷல் -1
 • நவம்பர் - சிக் பில் ஸ்பெஷல்- 1 ("விற்பனைக்கு ஒரு ஷெரிப் & விண்வெளியில் ஒரு எலி ")
 • டிசெம்பர் - ரிபோர்டர் ஜானி ஸ்பெஷல் -1 
இவை தவிர +6 இதழ்கள் அவ்வப்போது இந்த schedules -க்கு மத்தியினில் ஓசையின்றி நுழைந்து கொள்ளும். So +6 இதழ்களின் இரு குட்டி /சுட்டி  லக்கி கதைகளைத் தவிர்த்து - பாக்கியுள்ள 4 இதழ்கள் என்னவென்பது மாத்திரமே இப்போதைக்கு நீங்கள் அறிந்திருக்கா விஷயம் ! இந்தாண்டின் போக்கில் அந்த சஸ்பென்சும் சிறிது சிறிதாய் விலகிடும்.


Looking ahead, 2014--ல் நமது ஆதர்ஷ நாயகர்களில் - யாருக்கு எத்தனை slots தந்திடுவது என்பது பற்றி சின்னதாய் ஒரு சிந்தனை என் தலைக்குள் ஏற்கனவே ஓடி வருகின்றது. பட்டியல் போட்டுப் பார்த்தால் நமது ஹீரோக்களை - "தவிர்க்கவே இயலாத ஜாம்பவான்கள் பிரிவு" ; "வாய்ப்புத் தரலாம் -ஆனால் அளவாய்"என்றொரு பிரிவு ; "ம்ம்ம்ம்... யோசிப்போமே"..என்றொரு பிரிவு என 3 categories -ல் அடைக்கலாம் !

முதலாம் லிஸ்டில் - லார்கோ வின்ச் ; கேப்டன் டைகர் ; டெக்ஸ் வில்லர் & வேய்ன் ஷெல்டன் இடம் பிடிப்பர் என்று தைரியமாகச் சொல்லலாம் தானே ? பட்டியல் இரண்டில் - "லக்கி லூக் ; சிக் பில் ; டயபாலிக் ; மதியில்லா மந்திரி " ஆகியோர் தேர்வாகுவதும் ஒ.கே. தானே ? எஞ்சி இருப்போரை பட்டியல் 3-க்கு அனுப்பிடும் போது - " ப்ருனோ பிரேசில் ; ரிப்போர்டர் ஜானி ;  சாகச வீரர் ரோஜர் ; மர்ம மனிதன் மார்டின் ; மாடஸ்டி ப்ளைசி " என்று அமைந்திடும் அந்தப் பட்டியல். (இதனில் நிச்சயம் மாற்றுக் கருத்துக்கள் இருக்கும் தான் !!)  

12 புது இதழ்கள் கொண்டதொரு முழு ஆண்டிற்கு - யாருக்கு எத்தனை வாய்ப்புகள் தந்திடலாமென்பது பற்றிய உங்களது உரத்த சிந்தனைகளை அறிந்திட எழுந்த அவாவின் பலனே இந்தப் பதிவு ! மேலிருக்கும் எனது இந்தப் பட்டியல்களில் அல்லாத புதுமுகங்கள் சிலர் 2014-க்கு தயார் ஆகி வருவது ஒரு புறமிருக்க - உங்களின் ஆதர்ஷ ஹீரோக்களின் வாய்ப்புகள் எவ்விதம் அமைந்தால் சிறப்பாக இருக்குமென்ற ஆசைகளை இங்கு வெளிப்படுத்தலாமே ? 'தலைவர் ஸ்பைடருக்கு 2 இதழ்கள்' போன்ற அட்டகாசத் தேர்வுகள் அல்லாது ; நமது தற்சமய trend -க்கு ஏற்ப உங்களின் choices என்னவாக இருக்கும் என்று இங்கே பின்னூட்டப் பரிமாற்றம் நடந்தேறினால் அட்டகாசமாக இருக்கும் ! அதே போல் புதிய தொடர்கள் / நாயகர்கள் எனும் போது  உங்களின் தேர்வுகள் என்னவாக இருக்கும் என்பதனையும் லேசாகக் கோடிட்டுக் காட்டலாம். TINTIN போன்ற எட்டாக்கனிகளைத் தவிர்த்து விட்டு - உங்களின் யதார்த்தமான choices சுவை சேர்க்கும் ! 

End of the day, இறுதி முடிவுகளை எடுக்கப் போவது நான் தான் என்ற போதிலும், பகிரப்படும் உங்களின் எண்ணங்கள் என் தலைக்குள் ஓடிடும் திட்டமிடலில் ஆங்காங்கே தேவையான சில realignments செய்திட உதவும் ! அப்புறம் இன்னொரு விஷயமும் கூட : இது முழுக்க முழுக்க - 2014-க்கான 12 லயன் & முத்து காமிக்ஸ் புது இதழ்களுக்கான முன்னோட்டம் என்பதால், மறுபதிப்புத் தேர்வுகள் இப்போதைக்கு வேண்டாமே - ப்ளீஸ் ?  அதனை இவ்வாண்டின் இறுதிப் பகுதியின் போது தனிப்பட்டதொரு பதிவில் பார்த்துக் கொள்வோம் ! So, get those thinking caps on guys ! 


297 comments:

 1. Replies
  1. 1st vantha giriyaarukku vanakkam! aasiriyar ippadi asaththuraar! ethai solla? ethai vida? he he he naan appeettu! nanbargal pattaiyai kilappungal! vaazhga!

   Delete
 2. //முதலாம் லிஸ்டில் - லார்கோ வின்ச் ; கேப்டன் டைகர் ; டெக்ஸ் வில்லர் & வேய்ன் ஷெல்டன் இடம் பிடிப்பர் என்று தைரியமாகச் சொல்லலாம் தானே ? பட்டியல் இரண்டில் - "லக்கி லூக் ; சிக் பில் ; டயபாலிக் ; மதியில்லா மந்திரி " ஆகியோர் தேர்வாகுவதும் ஒ.கே. தானே ? எஞ்சி இருப்போரை பட்டியல் 3-க்கு அனுப்பிடும் போது - " ப்ருனோ பிரேசில் ; ரிப்போர்டர் ஜானி ; சாகச வீரர் ரோஜர் ; மர்ம மனிதன் மார்டின் ; மாடஸ்டி ப்ளைசி " என்று அமைந்திடும் அந்தப் பட்டியல். (இதனில் நிச்சயம் மாற்றுக் கருத்துக்கள் இருக்கும் தான் !!) //
  மாடஸ்டியை தவிர அனைவரையும் முதலிடத்திலேயே வரவேற்கிறேன் !
  மர்ம மனிதனை இப்போது படிக்கும் போது அட்டகாசமாய் இருக்கிறது !

  ReplyDelete
  Replies
  1. அப்புறம் அந்த புதிய கௌ பாய் ஏன் இடம் பெறவில்லை !

   Delete
  2. லாரான்ஸ் டேவிட் புதிய கதையான பணியில் ஒரு அசுரன் விளம்பர படுத்தினீர்களே அது நினைவில் உண்டா !

   Delete
  3. வேங்கையின் சீற்றத்துடன் ,கன்சாஸ் கொடூரனின் மீதி பாகங்களையும் இணைக்கலாமே !

   Delete
  4. "வேங்கையின் சீற்றத்தோடு" நிறைவு பெறுகிறது அந்த சாகசம். தொடர்வது புதியதொரு அத்தியாயம்.

   Delete
 3. Sir regarding ெவ ஒ

  எ " you supposed to do the translation once again since the conversation was in pure Tamil in old issue. If you read the story, you will come to know.

  ReplyDelete
  Replies
  1. Sir I am taking about நவப -   ெபஷ- 1 ("ெவ ஒ எ ") reprint. As far as I am concerned, Tamil translation was very poorly done in this issue. Please read the Tamil book when you get time, you will automatically come to know, what I am coming to say.

   Delete
  2. நவப -   ெபஷ- 1 ("ெவ ஒ எ ") ??

   Delete
  3. ***Talking about November chik bill special- "vinveliyil oru eli" reprint - tamil font problem :-)

   Delete
  4. Yes you are right :) sorry sir font problem

   Delete
  5. Did you get a chance to read that book sir ?

   Delete
 4. அற்புதமான மறுகதை தொகுப்பு ; ரத்த படலம் ,மீண்டும் ஒரு டெக்ஸ் அருமை ....

  ReplyDelete
  Replies
  1. ரிபோர்டர் ஜானியின் கதைகளை தேர்வு செய்தாகி விட்டதா ?

   Delete
  2. ஊடு சூன்யம் + சைத்தான் வீடு

   Delete
  3. சா...........................ர்
   சைத்தானுக்கு ஒரு வீடு
   சூனியத்திற்கு ஒரு ஊடு
   சந்தோஷமான மூடு
   போற்றி கொண்டாடு
   யே டண்டனக்க்கா ......யே டணக்குணக்கா ..........


   Delete
  4. ஜானி கதை தேர்வுகள் அட்டகாசம். வரவேற்கிறேன்.

   Delete
 5. டியர் எடிட்டர் விஜயன் சார்,
  2014 ஆம் ஆண்டுக்கான உங்களது தேர்வுகள் பொதுவாகவே அனைத்து வாசகர்களும் ஏற்று கொள்ளும் வண்ணமே உள்ளது. nbs போல் ஆண்டுதோறும் ஜனவரி புத்தக கண்காட்சியில் 10 கதைகள் கொண்ட ஒரு மெகா இதழையும், கோடை விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது மெகா இதழ்களை வழங்க இப்போதே திட்டமிடுங்கள் சார். அதற்கு ஏற்றவாறு 2014 சந்தாவையும் திட்டமிட்டால் நன்றாக இருக்கும். 70, 80 களில் அடிக்கடி கலக்கிய ஸ்பெஷல் இதழ்கள் மறு பதிப்பில் வருமாறு செய்யுங்கள் சார். நன்றி.
  எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

  ReplyDelete
 6. @friends : 2014-க்கு யாருக்கு எத்தனை கதைகள் ஒதுக்கலாம் என்ற ரீதியினில் வினவியிருந்தேன்...!

  12 இதழ் x 2 கதை வீதம் = 24 கதைகள் ஆச்சு ! இதில் யாருக்கு எவ்வளவு space ஒதுக்கலாம் ?

  ReplyDelete
  Replies
  1. சார் லார்கோ 6,ஷெல்டன் 4,டைகர் 3,டெக்ஸ் ௨, லக்கி 2,சிக் பில் 2,டயபாளிக் 2,ரோஜர் 1,ப்ரூனோ 1,மார்ட்டின் 1....

   Delete
  2. அப்புறம் தயவு செய்து உங்கள் அதிரடி திட்டத்தில்/வெளியீடுகளில் அந்த புதிய கௌ பாய் ,மற்றும் ஜோனதன் கார்ட்லண்டை சேர்த்து கொள்ளுங்கள் ....

   Delete
  3. மதியில்லா மந்திரியை நான் தேர்வு செய்யவில்லை ,இடை நிரப்பியாக வரும்தானே !

   Delete
  4. அப்புறம் இந்த இலக்கில்லா யாத்திரை,கிராபிக் நாவல்கள் ...இன்ன பிற சிறந்த கதைகள் சிறப்பிதழ்களை அலங்கரிக்கட்டும் !

   Delete
  5. Super sir.. 24(lion+muthu) ,+12 reprint(sunshine) and +12 (special issues)... great year ahead

   Delete
  6. லார்கோ 4,ஷெல்டன் 4,டைகர் 4,டெக்ஸ் 4

   Delete
  7. டியர் எடிட்டர்,

   என்னை பொருத்தவரையில் ஏகப்பட்ட ஆக்ஷன் ஹீரோக்கள் இருக்கிறார்கள் . ஆகையால் புதியதாக ஹீரோக்களை கொண்டு வருவதாக இருந்தால் காமெடி ஜானரில் கொண்டு வாருங்களேன்? இப்போதைக்கு லக்கிலூக், சிக்பில் (ஊறுகாய் போல மதியில்லா மந்திரி,ஸ்டீல் பாடி ஷெர்லாக்) தவிர நகைச்சுவை சார்ந்த ஹீரோக்களே இல்லை

   புதியதாக வாய்ப்பு கொடுக்கப்படும் காமெடி ஹீரோக்களில் ஏற்கனவே நம்முடைய மினி லயன் காமிக்ஸில் ஒரே ஒரு கதையில் வந்து கலக்கிய காமெடி கர்னல் க்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?

   இந்த ஹீரோவை பற்றிய உங்களது எண்ணம் என்ன? இப்போதைய நிலையில் இவருக்கு வாய்ப்பு இருக்கின்றதா? மினி லயனில் வந்த மிகச்சிறந்த ஹீரோக்களான சிலரின் வெளிவராத கதைகளையும் கொண்டு வரலாமே?

   இதை தவிர ப்ளூ கோட்ஸ் போன்ற கதைகளையும் கொண்டு வந்தால் என்னைப்போன்ற இளம் வாசகர்களை கவரும் அல்லவா?

   Delete
  8. ungal ishtam thalaivare! ethai vendumaanaalum kondu vaangal! he he he appadiye oru thigil story special serthukkungal! virunthaaga amaiyattum! pei paakka bayamaaa irukira nanbargal inga yaaravathu irunthaa aatchebanai therivikkalaam ji! hee hee hee ayaa vazhi thani vazhi!

   Delete
  9. Largo - 4
   Tiger - 4
   Shelton - 2
   Chik bill - 2
   Lucky - 1
   Tex - 2
   Robin - 2
   Diabolic - 1
   Martin - 1
   Buruno Brazil - 1
   Others and New - 4

   Delete
  10. டெக்ஸ்=4, லார்கோ=4, வெய்னே ஷெல்டன்=3, சிக் பில்=3,லக்கி லூக்=3, பிரின்ஸ்=2, மாடஸ்டி=2, டயபாலிக்=2, டைகர்=1

   :)

   Delete
 7. முதலாம் லிஸ்டில் - லார்கோ வின்ச் ; கேப்டன் டைகர் ; டெக்ஸ் வில்லர் & வேய்ன் ஷெல்டன்; "ப்ருனோ பிரேசில்
  பட்டியல் இரண்டில் - "லக்கி லூக் ; சிக் பில் ; மதியில்லா மந்திரி; ரிப்போர்டர் ஜானி; டயபாலிக்
  பட்டியல் மூன்றில் - சாகச வீரர் ரோஜர் ; மர்ம மனிதன் மார்டின் ; மாடஸ்டி ப்ளைசி ;

  ReplyDelete
 8. சார் அப்படியே அந்த மெகா ட்ரீம் ஸ்பெஷல், மில்லேனியம் ஸ்பெஷல் (நற.. நற ...... நற ..... யாரோ கொபத்தில் பல் கடிக்கும் ஓசை
  )

  ReplyDelete
  Replies
  1. மெகா ட்ரீம் ஸ்பெஷல், மில்லேனியம் ஸ்பெஷல்

   Delete
 9. Please consider some kid lucky luke stories and cartoon stories for our kids.

  ReplyDelete
 10. RATHAPADALAM 2 NEW PARTS GOOD DECISION. 2014 marma manithan martin and war storiesku konjam importance kodukalame!

  ReplyDelete
 11. may day greetings to our beloved editor, his team members and all comics lovers!

  ReplyDelete
 12. 2014 -என்னுடைய நாயகர் செலக்சன் ....

  லார்கோ.......3 x 2 =6
  செல்டன்......2 x 2 =4
  டைகர் .........2 x 2 =4
  டெக்ஸ் .............. = 3 (பெரிதாக )
  லக்கி .....................=2
  ப்ருனோ ..............=1
  சிக் பில் ...............=2
  ஜானி.,madasthi =1+1 =2
  motham =24

  ReplyDelete
  Replies
  1. ஐயோயோ......டயபாலிக்க மறந்துட்டனே ...
   அப்படிய 2014 -கோடை மலர் ..,தீபாவளி மலர் ....

   Delete
 13. //தலைவர் ஸ்பைடருக்கு 2 இதழ்கள்' போன்ற அட்டகாசத் தேர்வுகள் அல்லாது ;//
  ha ha haa.....

  ReplyDelete
 14. TEX WILLER-3, TIGER-3, LARGO-3, SHELTON-3, CHICK BILL-2, LUCKY LUKE-2, BRUNO BRAZIL-1, ROGER-1, REPORTER JOHNY-1, MARTIN-1, MODESTY-1, DIABOLIQUE-2, IZNOGOUD-1
  THIS IS MY 2014 LIST BOSS!

  ReplyDelete
 15. TO: Editor

  உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!

  இது என்னுடைய கருத்து:

  லார்கோ வின்ச் - 4
  கேப்டன் டைகர் - 2
  டெக்ஸ் வில்லர் - 2
  வேய்ன் ஷெல்டன் - 2
  லக்கி லூக் - 2
  சிக் பில் - 2
  டயபாலிக் - 2
  மதியில்லா மந்திரி - 1
  ப்ருனோ பிரேசில் - 2
  ரிப்போர்டர் ஜானி - 1
  சாகச வீரர் ரோஜர் - 2
  மர்ம மனிதன் மார்டின் - 1
  மாடஸ்டி ப்ளைசி - 1

  இங்கே கவனிக்கவேண்டியது: பொதுவாக லார்கோ, ஷெல்ட்டன், டைகர் கதைகள் குறைந்தபட்சம் 2 பாகங்களாக இருக்கும். ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு கதை என்கிற ரீதியில் குறிப்பிட்டுள்ளேன்.

  டைகரின் ரீ-பிரிண்டும் வரவாய்ப்புள்ளதால் அவருக்கு 2கதைகள் மட்டும் ஒதுக்கலாம் என்பது என் எண்ணம். டெக்ஸ் இன் புதிய கதைகள் எக்கச்சக்கமாய் இருப்பதால் குறைந்தது 2 ஆவது வேண்டும்.

  அதிரடிகளுக்கு மத்தியில் வருடத்தின் விடுமுறைப்பகுதிகளில் லக்கிலூக் அவசியம். பொடியன் லக்கியும் வரட்டும் தனியே. சிக் பில் குழுவின் தற்போதைய கதை மெகா ஹிட் என்பதால் அவர்களுக்கு 2 ஸ்லாட்டுகள். மதியில்லா மந்திரிக்கு தனிப்புத்தகம் ஒதுக்குவதை விட இப்போதுபோல் பின்பக்கங்களிலேயே வரட்டும். அவருக்கு ஒதுக்கிய ஒரு இடத்தை புதிய ஒரு கதாநாயகருக்கு கொடுத்துவிடலாம்.

  நீண்ட இடைவெளி விட்டுவிட்டதால் டபாலிக்கிற்கு 2 இடங்கள். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால் அதற்கடுத்தவருடம் சீட்டு கொடுக்கவேண்டாம்.

  புருனோ பிரேசில், ரோஜர் இருவரது அதிரடிகளையும் நமது (ஆமாய்யா... நமதுதான்!!) ஆஸ்தான ஓவியரின் கைவண்ணத்தில் கலரில் பார்த்து ரசிக்க 2, 2 கதைகள் போதாதுதான்!! ஜானியின் ரீபிரிண்ட் வரிசையும் வருவதால் அவருக்கு 1 இடம்.

  மார்டினுக்கு இன்னும் அதிக இடம் ஒதுக்க ஆசைதான். ஆனா, வச்சுக்கிட்டா பாஸ் வஞ்சகம் பண்றோம்? அடுத்த வருடம் 'திகில்' துயில் எழுந்தால் உங்களுக்கு 25 பர்செண்ட் இட ஒதுக்கீடு. ஓகேவா?

  மாடஸ்டி- வெரி ஸாரி. உங்களுக்கு நிச்சயம் அதிக இடம் கொடுக்கவேண்டும். ஆனால், இப்போது வரும் கதைகள் ஆரம்ப காலம்போல அட்டகாசமாய் இல்லையே?

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் கதைகள் அதிகம் என்பதால் வரவேற்பு அதிகரித்தால் +6 டெக்ஸ் என ஒரு இதழ் !

   Delete
 16. வேறு நாயகர்கள் பேட் மேன், வண்ணக் கிழவி, டொனால்ட், ஸ்கூபி, வேதாளர், ஜில் ஜோர்டான், ஆஸ்ட்ரிக்ஸ், ஸ்பைடர் மேன், .....இன்னும் வரும்!

  ReplyDelete
  Replies
  1. //வேறு நாயகர்கள் பேட் மேன், வண்ணக் கிழவி, டொனால்ட், ஸ்கூபி, வேதாளர், ஜில் ஜோர்டான், ஆஸ்ட்ரிக்ஸ், ஸ்பைடர் மேன், .....இன்னும் வரும்!//
   இத்த நான் சப்போட்டு பன்றம்ப்பா.

   Delete
 17. APPADIYE NAMMA 'KARUPPU KIZHAVI' KADHAIGALAIYUM FILLER PAGES LA SERTHUKUNGA BOSS!

  ReplyDelete
 18. நண்பர்களே புத்தம் புதிய லாரன்ஸ் - டேவிட் கதைகளுக்கு உங்களது ஆதரவு இல்லையா ! நான் மட்டுமே குரல் கொடுக்கிறேனே !

  ReplyDelete
  Replies
  1. இன்னா வாத்யாரே எங்க தல spider க்கு நீங்க சப்போர்ட் பண்ணீங்கன்னா நான் வுங்குளுக்கு புல்லா சப்போட்டு பண்றேன் .

   Delete
  2. அந்த அட்டகாசமான கேள்வி வேணாம்னு ஆசிரியர் கூறி விட்டாரே ????????????

   Delete
  3. வாத்யார நான் நேர்ல பாத்து சொல்லிக்கீறேன் நைனா. நீங்கோ எங்க தலைக்கு சப்போட்டு பண்ணுவீங்களா மாட்டீங்களா ? தட் இஸ் த கொஸ்டீன். டெல் மீ .

   Delete
  4. //இது முழுக்க முழுக்க - 2014-க்கான 12 லயன் & முத்து காமிக்ஸ் புது இதழ்களுக்கான முன்னோட்டம் என்பதால், மறுபதிப்புத் தேர்வுகள் இப்போதைக்கு வேண்டாமே - ப்ளீஸ் ? அதனை இவ்வாண்டின் இறுதிப் பகுதியின் போது தனிப்பட்டதொரு பதிவில் பார்த்துக் கொள்வோம் ! So, get those thinking caps on guys ! //
   ஆசிரியர் வாயை அடித்து விட்டாரே நண்பரே !
   comiconவெற்றிக்கு பிறகு வைத்து கொள்வோம் நண்பரே, நமது கச்சேரியை !

   Delete
 19. THIS IS MY 2014 CORRECTED LIST BOSS!
  TEX WILLER-3, TIGER-3, LARGO-4, SHELTON-2, CHICK BILL-2, LUCKY LUKE-2, BRUNO BRAZIL-2, ROGER-1, REPORTER JOHNY-1, MARTIN-1, MODESTY-1, DIABOLIQUE-2

  ReplyDelete
 20. குரு : சிஷ்யா ..,நமது ஆசிரியர் ப்ளாகில் நமது புது பதிவை பற்றிய விளம்பரத்தை அறிவித்தால் சிலருக்கு பொறுக்க முடியாத தல வலி வருவதால் "baraniwithcomics .blogspot.com." என்ற தளத்தின் இன்றைய புது பதிவயும்..,இனி வர போகும் பதிவையும் இனி விளம்பர படுத்த போவதில்லை ..என முடிவடுத்து உள்ளேன் .

  சிஷ்யன் : நல்ல முடிவு குருவே ....
  ஜிம்பலக்க பம்பா பம்படிக்க கும்மா ..
  வேர ஒன்னும் இல்லை குருவே ..இந்த முடிவுக்கு தென் ஆப்பிரிக்கா மொழியில் கிடைத்த பாராட்டுகள் .:-)

  ReplyDelete
 21. இன்னா வாத்யாரே எங்க தல SPIDERA இந்த மேரி கலாசிட்டீங்கோ? புச்சா SPIDER வந்தா போடுவீங்கோ தானே? அப்பாலிக்கா இன்னொரு மேட்டரு இன்னான்னா எங்க குட்டி தல டயபாலிக் கதைய ரொம்போ போடுங்கோ,மேற்படி உங்க இஷ்ட்டப்படி என்ன புக் வுட்டாலும் பரவாயில்ல வாத்யாரே.

  ReplyDelete
  Replies
  1. ஸா..................ர்
   எங்க தல ஸ்பைட........று
   ஒரு காலத்துல காமிக்ஸின் க்ளைட..........று
   அவருக்கு இதெல்லாம் சப்ப மேட்ட............ரு(ங்க)
   வருசத்துக்கு ஒரு முறையாவது விட்டு........ரு(ங்க)
   சச்சினுக்கு தேவை பூஸ்.......டு
   ஸ்பைடர் இல்லன்னா வேஸ்.......டு
   யே டண்டனக்க்கா ......யே டணக்குணக்கா ..........

   Delete
  2. Dear Editor,

   என்ன இருந்தாலும் ஸ்பைடரை பற்றி, நீங்கள் இப்படி சொல்லியிருக்கக் கூடாது.

   இதை சரிக் கட்டுவதற்கு, நீங்கள் ஒரு ஸ்பைடர் ஸ்பெஷல் டைஜஸ்ட் வெளியிட்டே ஆகவேண்டும்.. அதுவும் 2013 முடிவதற்குள்

   Delete
  3. பெரியாரே சொல்லிட்டாரு அப்புறம் என்ன ஸாஆஆஅர்............

   Delete
 22. இன்னா வாத்யாரே! நம்ம பிரின்ஸ் பையன் கதையிலே சைத்தான் துரைமுகத்த அச்சிக்க முடியுமா சொல்லுங்கோ? அந்த பனிக்கடலும் மேரி நவம்பர் கப்பலையும் மறக்க முடியுமா? அத்த வுட்டீங்கன்னா சூப்பரா இக்கும்.

  ReplyDelete
 23. Dear Editor,

  My regular list for 12 months

  Largo Winch - 4 (2 issues) - 2 months
  Bruno Brazil - 2 (1 issue)- 1 month
  Tex Willer - 2 (2 issues)- 1 month
  Blueberry - 2 (1 issue)- 1 month
  Lucky Luke - 2 (1 issue)- 1 month
  Chik Bill - 2 (1 issue)- 1 month
  Shelton -2 (1 issue)- 1 month
  Diabolic - 2 (2 issues)- 1 month
  Iznogoud - 2 (1 issue) - 1 month
  Robin/Martin - 1 (1 issue each) - 1 month
  Graphic Novel - 1 Issue - 1 month

  Possible New Heroes / Come Back premieres:

  Batman
  Clifton
  Blue Coats

  If you decide to allocate plus 6 to cowboys alone then let us all know - Tiger and Tex may be removed from regular line then and those places (4 issues) can be given to other OR new heroes.

  ReplyDelete
  Replies
  1. Forgot - "Gundu Palasarakku" special - June 2014 Lion Comics 30th Annual Edition - containing 10 stories - 2 each from popular Lion genres

   Tex, Lucky Luke, Chik Bill, Shelton - 2 stories each
   Diabolic and Spider - 1 story each

   600 pages, 500 rupees! We can all start collecting money from now itself if you announce :-)

   Delete
  2. super.. i agree on this.. and we will start collecting 500 rs..

   Delete
  3. Updated NEW faces list:

   Batman (comeback)
   Clifton (comeback)
   Blue Coats
   Thorgal
   Lady S
   Gil Joardan (with good 'comic fan' translation)

   Delete
 24. dear vijayan sir , உங்கள் list ok .but , நம் ஆதர்ஷ நாயகர்களை list no 1,2,3 என்று தரம் பிரி ப்பதுதான் மனதை என்னமோ செய்கிறது ! உள் மனதில் இருந்து சொல்லவேண்டுமெனில் ,எனக்கு லார்கோ வை விட jhony பிடிக்கும் ! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வுகள் ! எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுத்தால் எதையும் செய்ய முடியாது !
  so ,உங்கள் முடிவின் படி செயல்படுங்கள் , நாங்கள் தோள் கொடுப்போம் ! அடுத்த வருடம் கௌபாய் spl 2, rs 200/- ல் வருவதாகவும் ,அதில் டெக்ஸ் colour ல் வருவதாகவும் , கனவு கண்டேன் ! கனவு பலிக்குமா ?

  ReplyDelete
 25. சார் அப்படியே அந்த மெகா ட்ரீம் ஸ்பெஷல், மில்லேனியம் ஸ்பெஷல்

  ReplyDelete
 26. First of all Cheers for all on the event of crossing 4,00,000 hits :)

  ReplyDelete
  Replies
  1. இங்கு வந்து நீண்ட நாட்கள் ஆகி விட்டதால், நான் எழுதும் சற்றே பெரிய பதிவு... அடுத்த வருடத்துக்கான ப்லான்னிங் இந்த வருட மத்தியில் செய்வது உண்மையிலேயே வியப்பான , மற்றும் வரவேற்கப்படும் ஒன்று. நீங்கள் தரம் பிரித்து காட்டியது, விற்பனை ரீதியில் பார்த்தல் சரியான ஒன்றே. ஆனாலும் தங்கள் பதிவினில் குறிப்பிட்ட நாயகர்கள் அனைவரும் வாசகர்கள் எங்களுக்கு சமமான நபர்களே..

   +6 இதழ்களில் இரவு கழுகாருக்கு சிறிது அதிக இடம் குடுத்தால், நமக்கு இன்னொரு கூடுதல் இடம் ரெகுலர் இதழ்களில் காலியாகும். அதனை Thorgal நிரப்பினால் மிக்க சந்தோசம். மேலும் மாடஸ்தி எனது பிரியமான நாயகி என்றாலும் கூட , Lady S அவ்விடத்தை நிரப்பினாலோ , அல்லது கூடுதல் வாய்பாக கிடைத்தாலோ அது ஜாக் பாட் .

   லார்கோ ஈட்டிய அதே வெற்றியை , ஷெல்டன் பாணிக்கு கிடைத்ததில் எனக்கு நெருடலே. இருந்தாலும் வான் ஹாம் , என்ற மந்திர சொல்லே இங்கு பிரதானமாக இருக்கிறது. அத்துடன் ஜோர்டான் பெயரை கூட நீங்கள் புறக்கணித்தது எனக்கு மிகுந்த மனவேதை அளிக்கிறது. குறைந்த பட்சம் இரண்டாம் வரிசையிலாவது அவருக்கு கண்டிப்பாக இடம் ஒதுக்க வேண்டும்.

   மேலும் Cedric கதைகளை உங்கள் பரிசீலனையில் கொண்டு வந்தால் நான் மிகவும் மகிழ்வேன்.

   நாயகர்களை தரம் பிரிப்பது சற்றே கடினம் என்றாலும், விற்பனை அடிப்படையில் 12 <> 8 <> 4 என்று பிரித்து வாய்ப்பு அளிக்கப்படலாம். நமது ரெகுலர் Hero's உடன் எனது கூடுதல் தேர்வு, Thorgal , Lady S , மற்றும் Cedric .

   Delete
  2. வணக்கம் நண்பர் ஸ்டீல் க்ளா அவர்களே.... தொடர்ந்து ஆசிரியர் இடும் பதிவுகளை படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் விவாதங்களில் பங்குபெற இயலவில்லை... இனி அடிகடி தலைகாடிடுவோம்... :)

   Delete
 27. டியர் எடிட்டர்,

  ஆரம்பித்த ஒரு வருடம் நான்கு மாதங்களில் 400000 ஹிட்ஸ் ஒரு சிறப்பான milestone. மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள். பெரும்பாலான வலை மேய்ப்பர்களுக்கு இந்த வலைப்பூ இன்னும் அறிமுகம் ஆகிடாத நிலையினில் இது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய, பெருமை கொள்ள வேண்டிய விஷயம். congrats.

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. வரும் இதழ்களை நாம் அறிந்திருந்தாலும் பட்டியளிட்டு பார்க்கும் பொழுது மனதில் ஒரு சந்தோசம் வருகிறது.

  2014 காண அட்வான்ஸ் திட்டமிடல் அளவிற்கு நாம் முன்னேறி இருப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
  இன்னும் அதிகப்பக்க டெக்ஸ் ஸ்பெசல் பற்றிய அறிவிப்பு இல்லாதது இன்னும் உள்ளது.

  +6 காண சந்தா இன்று காலை அனுப்பிவிட்டேன்.

  எனது பட்டியல்.

  டெக்ஸ் வில்லர் - 3 X 1 = 3 (அதிக பக்கங்களுடன் 1)
  கேப்டன் டைகர் - 2 X 2 = 4 (ஒவ்வொரு கதையும் பல பாகங்கள் உள்ளதால் கண்டிப்பாக முழுமை பெரும் கதைகள்)
  லார்கோ வின்ச் - 2 x 2 = 4
  வேய்ன் ஷெல்டன் - 2 X 1 = 2
  லக்கி லூக் - 2 X 1 = 2
  சிக் பில் - 2 X 1 = 2
  டயபாலிக் - 1 X 1 = 1 (தற்போது இவருக்கு ஒரு இடம் தான் இவ்வருடம் வரும் கதைகள் பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்)
  மதியில்லா மந்திரி - இவருக்கு என்று தனி இடம் தேவையில்லை என்று நினைக்கிறேன் பக்க நிரப்பிகளாக வரும் அல்லவா)
  ப்ருனோ பிரேசில் - 2 X 1 = 2
  ரிப்போர்டர் ஜானி - 2 X 1 = 2
  சாகச வீரர் ரோஜர் - 1 X 1 = 1 (தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்றது போல இருக்குமா என்று ஒரு முறை முயற்சி செய்துவிட்டு பிறகு வாய்ப்பளிக்கலாம்)
  மர்ம மனிதன் மார்டின் - 1 X 1 = 1

  புதிய அறிமுகங்களுக்கு எனது தேர்வு :

  1. yakaari - கண்டிப்பாக குழந்தைகளுக்கு மிக பிடிக்கும் ஏற்கனவே பல ஆக்சன் கதாநாயகர்கள் அறிமுகம் செய்ததால் இவருக்கு எனது முதல் ஒட்டு.
  2. பாட்மான் : பல சிறந்த கதை அம்சங்களுடன் இப்பொழுது கதைகள் உள்ளதால் (ஆனால் ராயல்டி அதிகமாக இருந்தால் வேண்டாம்)

  இவை தவிர 10 கதைகளுடன் ஒரு சிறப்பு மலர் அல்லது 5 கதைகளுடன் இரண்டு சிறப்பு மலர் கண்டிப்பாக வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது ஆதரவுக்கு நன்றி கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்.

   Delete
  2. I second கிருஷ்ணா வ வெ.

   Vijayan sir,
   Please consider to publish more Blueberry and Tex Willer stories.
   We need more reporter Johnny stories too.
   Thanks.
   Mahesh kumar S

   Delete
 30. விஜயன் சார் ,
  XIII ,லார்கோ மற்றும் ஷெல்டன் கதைகள் வருடம் ஒருமுறை அல்லது 2 வருடம் ஒருமுறை உருவாகி வருவது தான் ஒரு தலைவலி.ஆகவே நாம் சற்று அளவுக்கு அதி வேகமாக பயணிப்பது போல் படுகிறது.

  18 இல் 8 லார்கோ இரண்டே வருடத்தில் ம் வர போகிறது.10 இல் 3 ஷெல்டன் சில மாதத்தில் வந்து விட்டது.எனவே XIII தொடர் முன் செய்தது போல் சில வருடங்களுக்கு ஒருமுறை "நவரச நாயகன்" லார்கோவையும் ,ஷேல்டனையும் பார்க்க தவமிருப்பது நினைக்கவே கடினமான விடயம்.

  இதை தான் நீங்கள் தவிர்க்கவே இயலாத ஜாம்பவான்கள் பிரிவு" ; "வாய்ப்புத் தரலாம் -ஆனால் அளவாய்"என்றொரு பிரிவு என குறிபிடுகிரிர்கள் என தெரிகிறது.2 இதழ் என்றில்லாமல் இவர்களையும் , டைகரையும் சேர்த்து ரூ 50 இல் வருடம் 1 சாகசம் வீதம் or இவர்களுக்கு ஒன்றுவிட்ட ஒரு மாதத்தில் 1 வாய்பளிபின் தாக்கு பிடிக்கலாமே?

  அப்புறம் இவர்கள் போன்ற புதிய யதார்த்த ஹீரோஸ் ,கிராபிக் நாவல் போன்றவற்றை இரு கதைகள் முறையில் தரலாமே?

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. லார்கோ,ஷெல்டன் - அதிகம் வேண்டாம். ஒரு இரு பாக கதை போதும்.(ரெண்டு மாசம் ஆச்சு) டெக்ஸ், லக்கி, டயபாலிக்,மாடஸ்டி,கிராபிக் நாவல்,சிக்பில்,மார்டின் மற்றும் விங் காமேண்டேர் ஜார்ஜ் மற்ற விண்டேஜ் B& W நாயகர்கள் இணைந்த ஒரு இதழ்.(10 மாசம் கணக்கு). மிச்ச இரண்டு மாதம் - புதிய அறிமுகம்கள்.

  புதுசாய் வருவதற்கு என் தேர்வு
  1.காமெடி கர்னல் க்ளிப்டன்.
  2. herlock shomes
  3. IRS
  4. Bluecoats
  5. நிறைய sci fi உள்ளது. ஏதேனும் ஒன்று. Please Experiment.

  ReplyDelete
 33. டியர் சார்...
  உங்களின் தேர்வுகள் மிகவும் அருமை. குறிப்பாக இரத்தப்படலம் புதிய கதை இரண்டையும் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியான செய்திதான். புதிய ஓவியரின் சித்திரம் வில்லியம் வான்ஸ் சித்திரங்கள் போலவே அற்புதமாகவும்,கதை விறு,விறுப்பாகவும் உள்ளன. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கதை. அப்புறம் டெக்ஸின் நீதியின் நிழலில் கதையும் ஆவலைத்தூண்டியுள்ளது. ஆனால்? தாங்கள் புதிய ஹீரோக்களுக்கு வாய்ப்பளிப்பது போல் பழைய ஹீரோக்களுக்கும் தாங்கள் வாய்ப்பளித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். பரணில் போட வேண்டியவர்களுக்கெல்லாம்(மாடஸ்டி பிளைஸி) வாய்ப்பு தருகிறீர்கள். லாரன்ஸ்&டேவிட்,ப்ரூனோ பிரேசில், ரோஜர்&பில்,விங் கமாண்டர் ஜார்ஜ், சி.ஐ.டி.ராபின், மார்ட்டீன், ஜெஸ்லாங், மாண்ட்ரெக், சி.ஐ.டி.மார்ஷல், காரிகன், ரிப் கெர்பி, சிஸ்கோ கிட், ஜான் சில்வர், சார்லி சாயர், போன்ற ஹீரோக்களுக்கும் வாய்ப்பு அளிக்காதது மிகவும் வருத்தமான விஷயமாக உள்ளது. வரப்போகும் டைகரின் வேங்கையின் சீற்றத்துடன், ப்ரூனோ பிரேசில் அல்லது ரோஜர் கதைகளில் ஒன்றை சேர்த்து வெளியிடலாமே சார்?

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் முன்பு வெளியிட்ட மெகா ட்ரீம் ஸ்பெஷல், கெளபாய் ஸ்பெஷல், லயன் ஜாலி ஸ்பெஷல், சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் போல கருப்பு, வெள்ளை நாயகர்களின் கதைகளாக ஐந்து அல்லது ஆறு கதைகள் சேர்த்து ஸ்பெஷலும் போடலாமே? சார்.மற்றும் கேப்டன் பிரின்ஸ் கதைகள். இரண்டு சிறு கதைகளும், ஒரு முழு நீள கதைகளும் உள்ளன. அதையும் தாங்கள் வெளியிட முயற்றிச்சிக்கலாம்.

   Delete
 34. NBS இன் மகத்தான வெற்றிக்குப் பின்புமா உங்களுக்கு 1000 ரூபாவுக்கு ஒரு ஸ்பெஷல் வெளியிடும் தைரியம் வரவில்லை? :) 2014 இல் ஒரு 1000 ரூபாய் இதழ் வேண்டும். முன்பதிவை இப்போதே ஆரம்பித்து விடலாம் :)

  ReplyDelete
 35. எடிட்டர் சார்,

  என்னை பொருத்தவரை தங்களின் கதை தேர்வுகள் நன்று "மதியில்லா மந்திரியை" தவிர.

  XIII ன் புதிய கதைகள் புதிய ஓவியர் மற்றும் கதாசிரியரின் கைவண்ணத்தில் மிக நன்றாகவே உள்ளன. A sure hit .

  புதிய கதைகளுக்கு என்னுடைய பரிந்துரை : Dargaud பதிப்பகத்தில் வந்துகொண்டிருக்கும் Dantes மற்றும் Le Dernier Templier.

  Dantes - பழிவாங்கும் action / thriller type கதை. Art work கும் அருமையாக இருக்கும்.

  Le Dernier Templier - Da Vinci Code பாணியில் பழைய காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் தொடர்புடைய ஒரு பேழையை தேடி அலையும் ஒரு விறுவிறுப்பான action / adventure கதை.

  இவை இரண்டும் நமது வாசகர்களுக்கு (எங்களுக்கு) நிச்சயம் பிடிக்கும்.

  ReplyDelete
 36. மார்ட்டின் கதைகளை போன்று அமானுஷ்ய கதைகளும் வால்ட் டிஸ்னி கார்ட்டூன்களும் SCI-FI கதைகளும் அதிகம் வெளியிடுங்களேன். பேட்மேனும் வந்தால் சூப்பரப்பு…

  ReplyDelete
 37. கெடச்சிருச்சு கெடச்சுருச்சு !
  அட்டை படம் நேரில் அட்டகாசம் ...பளிச் .....
  உள்ளே சில பக்கங்கள் வண்ணம் வெளிறியது போல காட்ச்சியளிக்கிறதே (பக்கம் 27... ).....

  ReplyDelete
 38. //அங்குள்ள பதிப்பகங்களை புதுப் புது பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ள துணிந்திடச் செய்கிறது! ஒரு தொடரின் கருவே - "WHAT IF ..?" என்பதே !

  நிலவில் முதலில் கால் பதித்தது அமெரிக்கர்களாக இல்லாது ரஷ்யர்களாய் இருந்திருந்தால் - வரலாற்றின் போக்கு எப்படி மாறி இருக்கும் ?


  அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னெடி கொலை செய்யப்படாது போய் இருந்தால்..?
  //

  தங்களது முந்தய பதிவான அசுரர்களின் தேசத்திலிருந்து .....
  இது போல கதைகள் சிலவற்றை முயற்ச்சிக்கலாமே ...

  ReplyDelete
 39. my list:
  ********
  லார்கோ வின்ச் - 4
  கேப்டன் டைகர் - 3
  டெக்ஸ் வில்லர் - 3
  வேய்ன் ஷெல்டன் - 2
  லக்கி லூக் - 2
  சிக் பில் - 2
  டயபாலிக் - 2
  மதியில்லா மந்திரி - 1
  ப்ருனோ பிரேசில் - 1
  ரிப்போர்டர் ஜானி - 1
  சாகச வீரர் ரோஜர் - 1
  மர்ம மனிதன் மார்டின் - 1
  மாடஸ்டி ப்ளைசி - 1
  இவை தவிர 10 கதைகளுடன் ஒரு சிறப்பு மலர் அல்லது 5 கதைகளுடன் இரண்டு சிறப்பு மலர் கண்டிப்பாக வேண்டும். (மெகா ட்ரீம் ஸ்பெஷல், மில்லேனியம் ஸ்பெஷல், 2014 -கோடை மலர் ..,தீபாவளி மலர் ....)
  எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

  ReplyDelete
 40. டியர் விஜயன் சார்,
  ரத்த தடம் புத்தகம் பதிவு தபால் மூலம் பெரும் வாசகர்களுக்கு அனுப்ப பட்டு விட்டதா? +6 இதழ்களுக்கான சந்தா ரூபாய் 375 அனுப்பி விட்டேன். இந்த புத்தகங்கள் கூரியர் மூலமாகவா அல்லது தபால் மூலம் அனுப்ப படுமா சார்?
  எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

  ReplyDelete
 41. நண்பர்களே...
  ஆசிரியர் வெளியிட்டுள்ள லிஸ்ட்டில் உள்ள நாயகர்களின் புத்தகங்கள் அனைத்துமே தரமான படைப்புகள் என்பதால் அவற்றுள் எது வந்தாலும் எவ்வளவு வந்தாலும் நமக்கு மகிழ்ச்சியே...எனக்கு, இவருக்கு இவ்வளவு என பிரிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆசிரியரின் லிஸ்ட் வியாபார நோக்கில் பிரிக்கப்பட்டதாக தெரிகிறது. உதாரணத்துக்கு "ஒரு கழுதையின் கதையை" எவ்வளவு ரசித்தேனோ அதேபோல் ஷெல்டனின் "ஒரு ஒப்பந்தத்தின் கதையையும்" ரசித்தேன். இதில் ஓன்று இரண்டு என எப்படி பிரிப்பது...???

  இதில் ஒரு எதார்த்தம் என்னவென்றால் கடந்த காலங்களில் ஒரு சில லக்கி, சிக்பில்,டெக்ஸ்,ஜானி, மற்றும் மாடஸ்ட கதைகள் மிகவும் மொக்கையாக இருந்தது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் லார்கோ.டைகர் மற்றும் ஷெல்டன் போன்ற நிகழ்கால கதை தொடர்கள் அனைத்து பாகங்களும் "SATISFACTION GUARANTEED" ரகமாகவே தெரிகிறது.

  டெக்ஸ்சின் ஒரு பளிங்கு சிலை மர்மத்துக்கும் ஜானி யின் ஊடு சூன்யதுக்கும் சைத்தான் விட்டிற்கும் லக்கி யின் மரண சர்கஸ்க்கும் நிகழ்கால லார்கோவுக்கு ஈடிணையான கதைகள் எனபது எனது கருத்து.TO BE PRECISE, எனக்கு காமிக்ஸ் என்ற அற்புத சொர்கத்தை அறிமுகப்படுத்திய இந்த ஹீரோக்களிடம் உள்ள ஒரு FRACTION OF ATTRACTION லார்கோவிடமோ ஷெல்டனிடமோ இல்லை. :-)

  so கதைதேர்வின் போது சற்று கவனமாக இருந்தால் I WOULD LOVE TO GIVE EQUAL CHANCES TO ALL HEROES.

  ReplyDelete
  Replies
  1. / * கதைதேர்வின் போது சற்று கவனமாக இருந்தால் I WOULD LOVE TO GIVE EQUAL CHANCES TO ALL HEROES. */

   Great last liner! Hoping to meet you in B'lore ComicCon.

   Delete
 42. ஒரு மாறுதலுக்கு அமெரிக்க சூப்பர் ஹீரோக்களை களமிறக்குங்கள் சார்! :) Batman-ன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிட் கதைகள் முதல் சாய்ஸ்! இந்தியாவில் இருந்து வெளிவரும் ஆங்கில காமிக்ஸ்களை தமிழில் வெளியிடுவது பற்றிய உங்கள் (சென்ற வருட காமிக்கான்) சிந்தனையில் முன்னேற்றம் ஏதும் உள்ளதா?! :)

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஐடியா ... ஆனால் அது லயன் முத்து பேனரில் இல்லாமல், பழையபடி திகிலில் வந்தால் நன்றாக இருக்கும் :)

   நமக்கும் 12 more காமிக்ஸ் கிடைக்கும் ;)

   Delete
 43. காமிக்ஸ் டைம் கதை படிக்க போகும் முன்னர் சுவாரஸ்யத்தை கூட்டும் வண்ணம் உள்ளது !
  சிங்கத்தின் சிறு வயதிலும் இந்த இதழிலே உள்ளது கூடுதல் சந்தோஷம் !
  ப்ளாக் மெயில் சிறுவயதில் மாயாவி தவறானவர்கள் துணையுடன் சிறையில் தப்பும் சாகசமும், மோரீஸை வில்லன் பணயமாக வைத்து கொதிக்கும் உலோக குழம்பில் போடுவேன் என மிரட்டுவதும் இன்னும் நினைவில்; அதுவும் இரு வண்ணத்தில்.
  பறக்கும் பிசாசு அப்பப்பா ....அற்புதமான கோமாளியின் த்ரில்லர் வித்தை என்றால் மிகை அல்ல ;ஜிகால்டி அல்லது ஜிபால்டி என நினைக்கிறேன் ...ஆவியாய் கயிற்றிலே பறந்து வருவது என அற்புதமான நம்பும் விதத்தில் வந்த அற்புத கதை ,பாம்பு,சர்கஸ் பணியாளர்கள் என பல பல அற்புதங்கள்; மாயாவி, முகமூடியில் ஒட்டியுள்ள வண்ண துகள்களை வைத்து குற்றவாளியை மடக்கும் இடம் அருமை; இதுவும் இரு வண்ணமே.
  எனக்கு இப்போதும் இரு வண்ண கைதிகளின் மேல் ஈர்ப்பு உண்டேனில் இரும்புமனிதன், கொலை படையோடு ஏன் அதனை விட பெரிதும் என்னை கவர்ந்த அதிரடிக்கு பஞ்சமில்லாத இந்த இரு வண்ண இதழ்களுமே முக்கிய காரணம் !
  ராம்போவுக்கும் கட்டாயம் வாய்ப்பு கொடுங்களேன் !

  ReplyDelete
  Replies
  1. குற்றவியல் சக்ரவத்திக்கு போட்டியை வர உள்ள குற்றத் திருவிழாவின் விளம்பரமும், பூத வேட்டை விளம்பரமும் எதிர் பார்ப்பை எகிற வைக்கின்றன!ஆனால் இந்த விளம்பரத்திலாவது தண்ணி சாரி,வண்ணத்தை காட்டியிருக்கலாம் /தீட்டியிருக்கலாம் !

   Delete
 44. சார் ஸ்டீல் பாடி ஷெர்லாக் அட்டகாசம் சார்! பட்டய கிளப்புது! விட்டு விடாதீர்கள்; பிடித்து கொள்ளுங்கள்!
  ஆறே பக்கத்திற்குள் இது போல எதுவும் என்னை ஈர்த்ததில்லை! விழுந்து விழுந்து சிரித்தேன், இயல்பான நகைச்சுவைதனை அள்ளி தூவியுள்ளீர்கள் இம்முறையும்! என்ன சொல்லி பாராட்ட என வாட்சன், புத்தகத்தை புரட்டும் போது தெறிக்கும் இயல்பான நகைசுவை வசனமும், கடைசியில் செர்லக்கை காலை வாருவதும்....என அருமை !படித்த பின்னர் உணரலாம் நண்பர்களே இதுவும் ஒரு அற்புதமான உணர்வு !துப்பறிவதுடன் கூடிய நகைச்சுவை விருந்து !

  ReplyDelete
 45. லண்டனை காட்டுவதென்றால் பெரும்பாலான கதைகளில் அந்த ஒரே வீதியில்தான் சுற்றி திரிவார்கள் போலும் !

  ReplyDelete
 46. சார்! மர்ம மனிதன் மார்டினை மூன்றாம் இடத்தில் வைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்! விஞ்ஞானரீதியாலான கதைகளாகினும் உண்மையாகவே இப்படி இருந்திருக்குமோ என வாசகனை சிந்திக்கதூண்டும், டான் பிரவுன் நாவல்கள் போன்ற கதைதரம் கொண்டது மார்டின் கதைகள்! மீண்டும் மீண்டும் கௌபாய் உலகத்தை சுற்றியே வராமல் வாசகனுக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாத விஞ்ஞான , ராணுவ, டிடெக்டிவ் வகை கதைகளை கொண்டுவந்தால் நன்றாக இருக்குமே?? செய்வீர்களா? :)

  ReplyDelete
 47. நண்பர் விஸ்கி-சுஸ்கியின் எண்ணங்களே எனக்கும்!

  அதோடு,

  +6ல் முடிவு செய்யப்பட்ட இரு சுட்டி லக்கி போக மீதமுள்ள +4ஐயும் ஒரே இதழாக ரூ.200 விலையில் அக்டோபர்/நவம்பர் மாதங்களில் கொடுக்க முடிந்தால்....
  (1) சில வருடங்களாகக் காணாமல் போன தீபாவளி மலரை திரும்பக் கொண்டுவந்த புண்ணியம் எடிட்டருக்குக் கிடைத்திடும்.
  (2) ஜனவரியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அடுக்கிட கொஞ்சம் புஷ்டியானதொரு புத்தகமும் கிடைத்திடும்!

  அடுத்த வருட டிசம்பர் வரையிலான திட்டமிடல் இங்கே இருந்திடும்போது, லயன் 30வது ஆண்டு மலருக்கான மெகா இதழைப்பற்றிய ஒரு பேச்சு எழும்பாமலிருப்பது சற்று வியப்பளிக்கிறது!

  மற்றபடி, 'தலையணை' தொடர்பான எதையும் நான் இங்கே ஞாபகப்படுத்தப்போவதில்லை! ;)

  ReplyDelete
  Replies
  1. ஜனவரியில் பெரிய டெக்ஸ் சாகஸம் என்று ஆசிரியர் அறிவத்ததாக ஞாபகம்...

   Delete
  2. Erode VIJAY:
   //மற்றபடி, 'தலையணை' தொடர்பான எதையும் நான் இங்கே ஞாபகப்படுத்தப்போவதில்லை! ;)//
   ஆமாஆமா இப்போ எல்லாம் படுக்கையதான் கேட்பீங்க போல....

   Delete
 48. நண்பர்களே...சற்று முன் இரத்தத்தடம் கிடைக்கப்பெற்றேன். இந்த இறுதிப்பாகங்களுக்கான நீண்ட... தேடல் நிறைவுபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

  இந்த புத்தகத்தின் ஆக்கத்தில் மற்றும் dispatch & delivery யில் பணியாற்றிய ஆசிரியர் மற்றும் அவரது குழுவுக்கு உளம்நிறந்த நன்றிகள்.

  அட்டைப்படம் வாவ் சொல்லவைக்கிறது.Wonderful ! தலைப்பில் அந்த ஒரே ஒரு black font attractive ஆக உள்ளது. அந்த பலூன் இல்லாமல் வேறு ஒரு டிசைன் இருந்திருந்தால் இன்னமும் கிளாஸ் ஆக வந்திருக்கும்.Good looking attractive cover after a long time.

  பின்பக்க அட்டை சற்று CHILDISH DESIGN ஆக உள்ளது.

  வழக்கமான காமிக்ஸ் டைம்,மியாவி,சிங்கத்தின் சிறு வயதில்( முத்துவில் !!!!),வாசகர் கடிதம்,மாதம் ஒரு வாசகர்( வாழ்த்துக்கள் சாக்ரடீஸ்!),சிங்கத்தில் சிறு வலையில்,வருகிறது விளம்பரங்களுடன் புதிதாக ஷெர்லாக் FILLER கதை என இந்த புத்தகம் பூங்கொத்தாய் கைகளில் மலர்கிறது.

  இந்த 114 பக்க புத்தகம் கைகளில் சற்று மெலிந்துவிட்டது போல் தோன்றுகிறது. அதற்கான காரணம் 80 மைக்ரான் தாளில் இதற்குமுன் வந்த பக்கங்கள் இந்த இதழில் 70 மைக்ரானுக்கு மாறியுள்ளது. இதற்க்கு சற்று கண்டனங்கள் வரலாம்.

  ஒரு சில பக்கங்களில் ஓவியங்களில் SHARPNESS இல்லை. மூலமே அப்படிதான் இருக்குமென நினைகிறேன்.

  ஒரு அற்புதமான கௌபாய் அனுபவம் காத்துள்ளது. WILL SOON HIT BACK AFTER READING...ENJOY FOLKS!

  ReplyDelete
  Replies
  1. விஸ்கி-சுஸ்கி : முற்றிலும் தவறானதொரு கருத்து ! வழக்கமாய் பயன்படுத்தப்படும் காகிதமும், இம்முறை பயன்படுத்தப்பட்டிருக்கும் காகிதமும் ஒரே 100 gsm கனமே ! சென்ற முறை வேறொரு நாட்டு மில்லின் தயாரிப்பு ; இம்முறையோ புதிதாய் ஒரு மில்லின் அறிமுகம். அவ்வளவே வேறுபாடு !

   80 gsm ; 70 gsm என்ற உங்களின் யூகங்கள் way off the mark ! 70 gsm காகிதத்தில் முன்னும் பின்னும் இத்தனை வண்ணங்களை அச்சிட்டால் - கோரமாக இருக்கும் ! தவிர மெல்லிசான ஆர்ட் பேப்பரில் பிரிண்ட் பண்ணுவதென்பது நடைமுறையிலும் ஓராயிரம் தலைவலிகளைக் கொணரும் சிக்கலான பணி !

   நானே சிக்கன நடவடிக்கையாய் அது போலொரு சிந்தனையில் இருந்தாலும் - is an awful tough task ! ஒரு நாளும் அதனை நான் எத்தனிக்கப் போவதுமில்லை !

   Delete
  2. தெளிவு படுத்தியமைக்கு நன்றி சார் !ஆனால் அந்த பழைய மில்லின் தயாரிப்பையே உபயோக படுத்தலாம் ....வாய்ப்பிருந்தால் !

   Delete
 49. தற்போது வெளிவருகின்ற காமிக்ஸ் புத்தகங்கள் அனைத்தும் புதுப்பொலிவுடன் இருப்பதால் என்னுடைய காமிக் நண்பர்கள் வட்டம் பெரிதாகிக்கொண்டே வருகிறது.தற்போது கல்ரில் அனைத்து கதைகளும் வெளிவருவதால் வாசகர்கள் அதிகமாகிக்கொண்டே வருகிறார்கள், அவர்களது நோக்கம் தற்போது பழைய காமிக் புத்தகங்கள் கிடைக்குமா என்று ஆவலோடு எதிர்பார்கிறார்கள் பழையபுத்தகங்கள் யாரேனும் விற்பனை செய்வதற்கு தயாராக இருந்தால் அதனை பெற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மொபைல் எண் 9940840980 வருகின்ற காமிக் (ஜீன் 1) திருவிழாவிற்கு காமிக் நண்பர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

  ReplyDelete
 50. காலை 10 மணிக்கு ஆபீஸ் புறப்படும் முன்னரே கூரியர் வந்துவிட்டது. இரு டைகர் இதழ்களையும் - சென்ற மாதம் படிக்கவில்லை - கையில் வைத்துக்கொண்டு ஒரு ஸ்கூல் பையன் போல ஆபீஸ் bag-ம் மாட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன்.

  இப்போது ரெடைர் ஆகி விட்ட அப்பா வந்து "களம்புடா ... காமிக்ஸ்-ஐ வைத்துக்கொண்டு 10:15 மணிக்கு இப்படி நடு ஹாலில் நிக்கற ! போடா ஆபீஸ்-க்கு" என்றார். என் மகளும் வந்து தன் பங்கிற்கு மழலையில் "அப்பா... ஆபீஸ் ...டாட்டா" என்று சொல்ல, மனைவி லஞ்ச் பாக்ஸ் கொடுக்கும் பொது முறைக்க ... நினைவுக்கு வந்தது "ஹ்ம்ம் ... நாம் அந்த எட்டாம் வகுப்பு மாணவன் அல்லவே" என்று .... another day ... another lifetime ....!!

  ReplyDelete
 51. என்னைப் பொறுத்தவரை கதை தரமாகவும், பிழை இல்லாமலும், முழு வண்ணத்தில் உள்ளவை வண்ணத்திலும் - இரண்டு கதைகள் நூறு ருபாய் என்னும் பொது - மிக்க சந்தோஷம். தாள் கணம் அதிகம், கம்மி என்று மண்டை பிய்த்துக் கொள்ளப் போவதில்லை.
  ஒரு format-ல் ஒரே எண்ணிக்கை கொண்ட பக்கங்கள் வந்திட்டால் போதும்.

  எனது ஒரே எண்ணம் இன்று தாள்கள் இருக்கும் விலையினில் இரு வண்ணக்கதைகள் ஆர்ட் பேப்பரில் - நூறு ரூபாய்க்கு எவ்வளவு நாள் தாக்கு பிடிக்க முடியும் என்பதே. 2-3 வருடங்கள் என்றால் நன்று.

  ReplyDelete
 52. முருகன் என்ற ஸ்பைடரிடமிருந்து ,
  நண்பர்களே இரதத்தடம் வந்து விட்டது .படித்து விட்டேன் ஏநோ எனக்கு கதையும் கலரும் பிடிக்கவில்லை.இரும்புக்கை எத்தனில் இருந்த grip missing in this story more over there is no reason for why tiger didnt try to reach dodge and why he helps alister to kill red indians.being a military man is not enough for me.ITS MY PERSONAL OPINION AND I DONT INTEND TO HURT DIE HARD TIGER FANS {for ur information i myself is a great tiger fan}

  ReplyDelete
  Replies
  1. அதுதான் ஒரு சுத்த வீரனின் கடமை என போதிக்க படுவதே; அதாவது மேலதிகாரி கிணற்றில்; குதி என்று கூறினால் பாய்ந்து விடு என்பதே!

   Delete

 53. FROM MURUGAN AKA SPIDER,
  THE IMAGE WORK OF THIS BOOK "IRATHATHADAM"IS NOT UP TO THE MARK AND VERY DULL IN MANY PAGES AND THE COLOR IS NOT SHARP.THE GREENISH TINGE IN MANY PAGES IS NOT HELPING.THE FIRST PART OF THIS BOOK IS FAR BETTER.

  ReplyDelete
  Replies
  1. உண்மை! அடுத்த முறை ஆசிரியர் நிச்சயம் சரி செய்து விடுவார் ....

   Delete
 54. கண்டிப்பா ரிப்போர்டர் ஜானி, மர்ம மனிதன் மார்டின் 3வது option கெடையாது சார் .

  மர்ம மனிதன் மார்டின் - one of its kind.
  ரிப்போர்டர் ஜானி - மூளைய கொஞ்சம் tune பண்ற type.

  Both need promotion, Please!!!

  ReplyDelete
  Replies
  1. Senthilvel Samatharman : இருவருமே எனது personal favorites தான்...! ஆனால் துரதிர்ஷ்டவசமாய் அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்திடுவதில் சற்றே தடுமாறுகிறார்கள் என்பது தான் நிதர்சனம் !

   Delete
 55. இரத்தத் தடம் புத்தகம் கிடைத்து விட்டது. அட்டைப்படம் அருமை. ஆனால்? உள்ளே உள்ள பக்கங்கள் சரியான விகிதத்தில் கலர் பிரிண்ட் ஆகாமல், மிக டல்லாகவும். மங்களாகவும் உள்ளன. மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. இனி வரும் புத்தகங்களிலாவது இது போன்ற குறை ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும், அப்புறம் அட்டை படத்தில் பேசும் டயலாக்(கொளபாய் த்ரில்லர்) வசனங்கள் தேவையில்லாதது. சாதரணமாக டிஸைன் செய்தாலே போதுமே!

  ReplyDelete
 56. என்ன மாயமோ தெரியலை கடந்த இரண்டு மாதமாக , ST கொரியர் படு சொதப்பல்... இன்று புத்தகம் கைக்கு கிடைக்கவில்லை என்று இங்கு கொரியர் ஆபீஸ் சென்று தலைகீழாக புரட்டி தேடிய பின்பும், இங்கு டெலிவரி செய்யப்படாமல் கிடந்த மற்ற நண்பர்களின் புத்தங்கள் கிடைத்ததே தவிர, என்னுடையது கிடைக்கவே இல்லை...

  Editor sir, please look on to this issue, as the service from them is getting too bad... Even after paying for the courier, they are making us to work for them....

  ReplyDelete
  Replies
  1. @#$%^&**%$ ****** பசங்க .... திருப்பூர் அனுப்ப வேண்டியதை , கிருஷ்ணகிரிக்கு அனுப்பி இருக்காங்க...

   http://www.stcourier.com/cgi_bin/show_status1.php?awb_no=015554215093

   நல்ல கொரியர் சர்வீஸ்.

   Delete
  2. எனக்கும் இன்றும் புத்தகம் வரவில்லை.

   எங்கிருந்து ட்ராக்கிங் எண்ணைப் பெற்றீர்கள்.. ?

   நானும் ட்ராக் செய்யவேண்டும்.. நாளை...

   Delete
  3. நண்பரே அந்த எண்களை நமது அலுவலகத்தில் கேட்டு பெற்றேன் .

   Delete
  4. S.T. குரியர் வழக்கமாக முனையை மழுக்கி புத்தகத்தை டெலிவரி செய்ய, புதிதாக வந்த வாட்ச்மேன், புத்தகத்தை இரண்டாக மடக்கி, வீட்டு தபால் பெட்டியில் போட்டார் :( புத்தகம் பிரிண்டிங்கும் மச..மச வென்று இருக்கிறது :(

   Delete
 57. I hv got books this morning... this is the best wrapper I hv seen recently.... simply superb. ....

  ReplyDelete
 58. அற்புதமான கதை! வழக்கம் போல டைகர் சோதனைகளில் சிக்கி, மதிப்பிழந்து ,சித்திரவதைப்பட்டு, துரோகி என குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்க படும் கதை! வழக்கம் போல நியாயத்தினை கூறும் டைகரின் கதை!
  அலிஸ்டரின் வருகைக்கு பின்னர் சீரும் வேகம் ,தரமான ஓவியங்கள் வண்ணங்கள் என சூடு பிடிக்கிறது! போர் சூழ காரணம் வெள்ளையர் அதிகாரிகளின் பெயரெடுக்க வேண்டும் என்ற பேராசையும், தங்கள் வசதிகளை பெருக்கி கொள்ள செவிந்தியரின் மேய்ச்சல் நிலங்களை அபகரிக்க நினைக்கும் பண முதலைகள்,யுத்த வியாபாரிகள் என தெளிவாய் கூறியுள்ளார் கதாசிரியர் தெளிவாக!
  ஆனால் சில இடங்களில் வண்ணங்கள்,சித்திரங்கள் கூர்மை நெருடலாய் தெரிந்தாலும் கதையின் போக்கு அந்த குறைகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டது! ஆசிரியருக்கு நன்றி, மொழி பெயர்ப்பு வழக்கம் போல பிரகாசிக்கிறது.டைகரின் பணத்தை விட தனது வாக்கிற்காக, தேவை இல்லாத இரத்தம் சிந்துதுவதை தவிர்க்க விரும்பும் காட்ச்சிகள் அருமையான சித்தரிப்பு. ஜிம்மியை தொடர்ந்து ரெட்டுக்கும் டைகர் கோபத்தில் பரிசளிக்கும் இடம் நகைச்சுவை வரவழைக்க தவறாது.
  இரண்டாம் பாகம் குறித்து விரைவில்!

  ReplyDelete
 59. முன்பொரு முறை ஆசிரியர் குறிப்பிட்டபடி இரண்டாம் உலகப் போரில் 'ஹிட்லர்' ஜெயித்தால் எப்படி இருக்கும்? கென்னெடி சுட்டு கொள்ளப்படாமல் இருந்தால் எப்படி இருக்கும்! என்று நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட வடிவங்களையும் பரிசீலிக்கலாம்.

  ஆப்ரிக்க காடுகளில் அற்புத சாகசங்கள் செய்யும் வன ரேன்ஜர் ஜோ-வின் கதைகளையும் கூட ஆசிரியர் பரிசீலிக்கலாம்.

  மற்றபடி என்னுடைய விருப்பமான நாயகர்கள் அனைவரும் உள்ளனர்.

  குறிப்பு: லெப்டினென்ட் ப்ளுபெர்ரியின் இதழ்களில் எதனை மிச்சம் உள்ளதோ அவற்றை தனி தனி கதைகளாக அனால் ஒரே இதழாக போட்டால் நன்றாக இருக்கும் !

  இவண்
  discoverboo

  ReplyDelete
 60. சார், My List for 2014 issues:

  1. ஜனவரி - கோல்டன் ஏஜ் ஸ்பெஷல் (GAS) (ஜானி, ரோஜர் மற்றும் ப்ருனோ பிரேஸில் )Rs 150/-
  2. பிப்ரவரி - wayn ஷெல்டன் Rs.100/-
  3. மார்ச் - டைகர் ஸ்பெஷல் Rs .100/-
  4. ஏப்ரல் - லார்கொ ஸ்பெஷல் Rs.100/-
  5. மே - கூல் சம்மர் ஸ்பெஷல் (லக்கி லூக், சிக் பில் மற்றும் ஜில் ஜோர்டான்) Rs.150/-
  6. ஜூன் - டெக்ஸ் ஸ்பெஷல் Rs.50/-
  7. ஜூலை - லயன் ஆண்டு மலர் (All Genre Special / 10 Stories / Rs.500)
  8. ஆகஸ்ட் - ஜானி மற்றும் ரோஜர் Rs.100/-
  9. செப்டம்பர் - டைகர் ஸ்பெஷல் Rs.100/-
  10. அக்டோபர் - மார்டின் & மாடஸ்டி Rs.100/-
  11. நவம்பர் - wayne ஷெல்டன் Rs.100/-
  12. டிசம்பர் - டெக்ஸ் ஸ்பெஷல் Rs.50/-
  புது வரவாக bluecoats & legends of Percevan போன்றவற்றையும் பரிசீலிக்கலாமே?

  ReplyDelete
  Replies
  1. MH Mohideen : சுவாரஸ்யமான பட்டியலே !

   BLUECOATS தொடர் சுமாரான நகைச்சுவை தொடரே ; அது பெரிதாய் மின்னிட வாய்ப்புகள் குறைச்சலே !

   தவிர, LEGENDS OF PERCEVAN போன்ற மாயாஜாலக் கதைகளைப் போட்டால் எனக்கு டின் கட்டப்படுவது நிச்சயம் ! நமது தற்சமயத்து ரசனைகளுக்கேற்ற வேறு நிறைய புதுத் தொடர்கள் உள்ளன ! கொஞ்சம் கொஞ்சமாய் அவற்றை களமிறக்கிட பணிகள் நடந்தேறி வருகின்றன !

   Delete
  2. ஒரு மாயஜால கதை முயற்சிப்போமே! வரவேற்ப்பில்லையேனில் விட்டிடுவோம்...

   Delete
 61. Dear Sir! sent 375/- by money transfer for the +6 efforts. Choose as ur choice sir! we are waiting eagerly! thanks.

  ReplyDelete
 62. வீரர்கள் செய் அல்லது செத்து மடி எனவே உருவாகிறார்கள் என கூறுகிறது. ராணுவ அதிகாரிகளுக்கு கட்டு பட்டு என்ன விலை எனினும் கொடுக்க தயங்குவதில்லை. அப்படி இருந்தால்தாம் குழப்பமின்றி செயல் பட முடியும்(மன சாட்சியோ அல்லது பயமோ ). ஆனால் அலிஸ்டர் வீரரா அல்லது கோழையா என பல கேள்விகளை நமக்குள்ளே எழுப்பியுள்ளார் கதாசிரியர்!!! டைகரின் செயல் தனது மன சாட்சியை விட, தவறு எனினும் தனது சகாக்களின் உயிர் மேல் உள்ள அக்கறையும், தனது மேலதிகாரியின் உத்தரவை செயல் படுத்த கண்ணை மூடி கொண்டு (மனசாட்சியை) செயல் படுவதும் ராணுவத்தின் மேல் கோபத்தை குறைத்து அனுதாப பட செய்கிறது. ராணுவ தலைமையில் இது போன்ற முட்டாள்களால்,ஈவிரக்கமற்ற அரக்கர்களால் விளையும் கொடுமைகளையும் பட்டியலிடுகிறது கதை. தகுதி உள்ளன தப்பி பிழைக்கும் ,தகுதிகளை வளர்த்து கொள்ளுங்கள் ,இல்லையேல் நசுக்க படுவீர்கள் கருணையற்ற காலத்தின் முன்னே அப்பாவிகளே/வீரர்களே என சொல்லாமல் சொல்கிறது.நாகரிகமடைந்த மனிதன் விலங்குகளை நாட்டினுள் ஒழிக்கவில்லையா, அவை காடுகளுக்குள் தொடர்ந்து சென்றாலும் பாதுகாப்பாளர்கள் சிலர் எதிர்த்தாலும் தமது சந்தோசத்திற்காக குரூரமுடன் செயல் படும் சில வேட்டையர்கள் அங்கும் அவர்களுக்கு சென்று தொல்லை தருகிறார்களே!
  வலிமையுடன், சீற்றத்துடன் வாழ்வதுடன் எதிரியை வெல்ல அவனை விட மேம்பட்ட யுத்திகளோ,ஆயுதங்களோ இருந்தால் மட்டுமே எதிர்த்து போர் செய், என உணர்ந்து அமைதியாக இருந்தாலும் தேடி சென்று தொல்லை தரும் அலிஸ்டர் போன்றவர்கள் இருக்கும் வரை, அமைதி நிலைக்காது என்பதை எப்படியேனும் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும்.அது போல அச்ச உணர்வு இருந்தால் நிம்மதி நிலைக்காது, இரு தரப்பும் அவன் நம்மை விட முன்னேறி தாக்கி விடுவானோ என்ற அச்ச உணர்வு குறையாது; இந்த உணர்வு நாகரிகமடைந்த மனித உலகிற்கே ஒரு சாபக்கேடு வேறென்ன சொல்ல! முன்பு விலங்குகளுக்கு அஞ்சினான் ,பின்னர் சக மனிதனுக்கு அஞ்சினான்; இதற்க்கெல்லாம் காரணம் இங்கே எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தாலும் தனக்கு மட்டுமே எல்லாம் என்ற எண்ணமே!
  ஆனால் இந்த அற்புதமான கதையை நிறைவு செய்த போது என்னுள்ளே வியாபித்திருப்பது அவலம் மட்டுமே ,அசாத்தியமாக மிளிர்கிறார் கதாசிரியரும், நமது மொழி பெயர்ப்பாசிரியரும் .....

  ReplyDelete
 63. இரத்தத்தடத்தில் 16 ஆண்டு கால காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்துள்ளது...

  டைகரை மிஞ்சி ஒரு கெளபாய் வர முடியாது!

  ஜிம்மியும் ரெட்டும் அடிக்கும் லூட்டிகள் வயிற்றை பதம் பார்க்கின்றன!

  மாதம் ஒரு வாசகர் பகுதியில் எனது படம் பிரசுரமானதற்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றிகள்!

  ReplyDelete
  Replies
  1. //ஜிம்மியும் ரெட்டும் அடிக்கும் லூட்டிகள் வயிற்றை பதம் பார்க்கின்றன!//
   அதுவும் வட்டி ஏறுகிறது என கூறும் போது ரெட்டின் முகம் போகும் போக்கு இருக்கிறதே வாய் விட்டு சிரித்து விட்டேன் அருமை !
   வாசகர் பகுதியில் இடம் பிடித்த தங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நண்பரே .

   Delete
  2. மாசம் ஒரு ரீடர் பேஜ்ல நீ வந்துக்குநியாப்பா, கலக்குக்குப்பா சாக்ரடீஸ் கலக்கு!

   Delete
 64. லைட்டான கலரில் வந்த "ரத்ததடம் "அட்டைபடம் அதிகம் கவர வில்லை என பதிவில் பார்த்ததும் சொல்லி இருந்தேன்.அதை மறந்து விடுங்கள் .
  புத்தகத்தில் அட்டைப்படத்தை பார்த்ததும் அசந்து விட்டேன் .சூப்பர் .
  கதையை இன்று தான் படிக்க வேண்டும் .

  ReplyDelete
 65. ஜானியின் மறுபதிப்பில் "சைத்தான் வீடு " ஓகே . ஊடு சூனியம் கொஞ்சம் குழப்பான கதை .அதற்கு பதிலாக ஓநாய் மனிதன் வந்திருந்தால் இன்னும் சூப்பர் ஆக இருந்திருக்கும் .

  ( ஹும்...உன்கிட்ட ஊடு சூனியம் புக் இருகிரனாலே இதுவும் சொல்லுவே ...இதுக்கு மேலும் சொல்லுவே )

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : வண்ணத்தில் படித்துப் பாருங்கள்..அழகாகத் தோன்றிடும் !

   Delete
  2. I too agree Parani's thought, wolf man is far more better than Oodu sunyam

   Delete
  3. சும்மா இருங்க அண்ணாத்தே ........என்கிட்ட உடூ சூனியம் இல்லை ............அடுத்த தபா பாத்துக்கலாம் ஓநாய் மனிதன்

   Delete
 66. நானும் ஒரு லிஸ்ட் போடறேன்.. ஆசைப்படறதுக்கு என்ன.. (but, editor, pls கமெண்ட் possibilities )

  1. லார்கோ, Wayne ஷெல்டன், 2 ஆல்பம் each (6 மாத இடைவெளியில்) 4X 100
  2. டெக்ஸ் & டயபோலிக் 1 each 2X 50 (ஒரே மாதத்தில்)
  3. கார்ட்டூன் கலாட்டா spl (லக்கி, சுட்டி லக்கி, iznogoud, ஸ்டீல் பாடி ஷெர்லாக், Blue Coats & Yaakri, கிரீன் மனோர், Clifton, சிக் பில்,Gaston ) 1 @ 500
  4. கிராபிக் Novel 1 @100
  5. கோல்டன் ஏஜ் SPL (நன்றி:திரு:MH Mohideen) - மாடஸ்டி, மார்டின், ஜோ, காரிகன், ராபின்,மாண்ட்ரேக், சார்லி, லாரன்ஸ்&டேவிட்) இவை மறுபதிபுகள் அல்லாதது @ 200 in B&W
  6: டைகர் மெகா spl - full series @ 250 (Arizona Love, Mister Blueberry, Shadows Over Tombstone,Geronimo The Apache, OK Corral, Dust)
  7. கிரைம் spl - IRS 1 or Blake & Mortimer ஆல்பம் @100
  8. War காமிக்ஸ் (BATCHALO type )@100
  9. jason Brice or ஜோனதன் கார்ட்லண்ட் @100
  Total 12 months

  தவிர sunshine இல் ஒரு மெகா டைகர் spl (2 complete series in color )@500

  ReplyDelete
  Replies
  1. சுமார் மூஞ்சி குமார் : GREEN MANOR கதைகள் உங்களது 'கார்ட்டூன் கலாட்டா' பட்டியலுக்கு வந்து விட்டதைப் படைப்பாளிகள் பார்த்திட்டால் கண்ணீர் விடப் போகிறார்கள் !!

   Delete
 67. 2014-பற்றிய உங்களின் திட்டமிடல் உற்சாகமூட்டுகிறது .நண்பர்களின் ஆலோசனைகளும் ஒன்றுக்கொன்று சிறந்ததாகவையாக உள்ளன ....ஆனால் இப்போதைக்கு மறுபதிப்புகள் வேண்டாமே என்று தாங்கள் கூறியுள்ளது இரத்தப்படலத்தின் வண்ண மறுப்பதிவை அந்தரத்தில் தொங்கவிட விட்டது போல் தோன்றச்செய்துவிட்டது ......டிசெம்பர் /ஜனவரியில் மறுபதிப்புகள் உண்டு என்று தாங்கள் முன்பு கூறியிருந்ததை நினைவுப்படுத்துகிறேன் .....

  ReplyDelete
  Replies
  1. Ahmed Pasha : புது இதழ்கள் கல்யாண வீட்டுப் பந்தியைப் போன்றது ...பல்சுவையோடு அனைவருக்கும் நிறைவைத் தந்திட வேண்டியதொரு சங்கதி ! மறுபதிப்புகள் தாம்பூலப் பை போன்றவை ! நீங்களே சொல்லுங்களேன் - திட்டமிடலும், கவனமும் எங்கே பிரதானப்படுவது அவசியமாக இருந்திட வேண்டுமென்று ?

   தவிர, மறுபதிப்புகள் கிடையாதென்று நான் சொல்லவில்லை ; இப்போதைக்கான விவாதம் புது இதழ்களைப் பற்றியதாக மாத்திரம் இருக்கட்டுமே என்று தான் எழுதி இருந்தேன் !

   Delete
 68. My choices for third list
  a) Chinaman
  b) Spirou & Fantasio
  c) Blake & Mortimer
  d) Detective Jess long
  e) CID Robin
  f) Gil Jordan
  g) Detective Jerome
  h) Wing commander George
  i) Any war stories
  J) Magician Mandrake
  k) Rantanplan
  L) If there are any unpublished books from heroes of " Kollikara car "
  M) Sherlock Holmes

  ReplyDelete
  Replies
  1. Arun Prasad : ரொம்பவே மெதுவாக நகரும் கதை பாணி CHINAMAN ....அதனை வெளியிட உரிமைகளை ரொம்ப காலம் முன்பாகவே வாங்கி விட்டு ஓரம் கட்டி விட்டோம்.

   spirou கதைகள் ரொம்பவே இளம் வயதினருக்கானதொரு தொடர்..!

   Blake & Mortimer - புராதன நெடியடிக்கும் கதைக்களம் ; ஆனால் சமீபமாய் இத்தொடர் revamp செய்யப்பட்டு வெளி வருவதால், நம் ராடாரில் இடம் பிடித்துள்ளது !

   JES LONG - பாதி ஓகே ; மீதி சொதப்பல் ரகக் கதைகள் இவரது. அந்த 50-50 விகிதம் நெருடலான விஷயம் என்பதாலும், ஏற்கனவே நம்மிடம் உறங்கிக் கொண்டிருக்கும் இவரது "நண்டுக் குகை மர்மம் "கதைக்கு துணை தேட வேண்டாமே என்பதாலும் - this is a non starter !

   CID ராபின் ; கில் ஜோர்டன் & ஜெரோம் நல்ல தொடர்களே ; சமயம் சரியாக அமையும் போது தலை காட்டுவார்கள் !

   Delete
  2. Blake and Mortimer is such a nice choice sir, it will attract all kind of readers, also please think about bluecoats series which have been published in cinebook recently, those are wonderful comic kalata better than lucky Luke

   Delete
 69. இரட்டை வேட்டையர் ,இரும்பு கை எஜன்ட் வில்சன்................... தலா ஒன்று சன் ஷைன் லைப்ரரியில்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சாமீ .......நான் நூறு முறையாவது மனனம் செய்து இருப்பேன் ..............திகட்டாத விருந்து ..........
   பொங்கலும் வடகறியும் போல............ஸ். ஸ். ஸ். ஸ். ஸ். ஸ். ஸ். ஸ். ஸ். ஆ ..(எம் .ஜி.ஆர் ஸ்டைலில் வாசிக்கவும் )

   Delete
 70. ரத்ததடம் கதையின் பிரிண்ட் நன்றாகா இல்லை. ரொம்பா டல் மற்றும் தெளிவாக இல்லை..

  ReplyDelete
 71. captain tiger package order seithen. ebay vazhiyaga. aanal indru vanthathu tiger spl1 2 puthagam. ratha thadam athil illai! :(

  ReplyDelete
 72. நம்மில் பெரும்பாலானோர் மறந்து போய்விட்ட ஆனாலும் தரமான கதை வரிசைகள்..

  1. வன அதிகாரி 'ஜோ'
  2.'கனவே கொல்லாதே' டிரேசி
  3. டைனமைட் ரெக்ஸ் (சித்திரங்களுக்காக)

  எளிமையான (கருப்பு வெள்ளை) கதைகள் என்ற ஒரே காரணத்திற்காக் வாய்ப்பு மறுக்கப்படும் நாயகர்கள்
  1. ரிப் கெர்பி
  2. சார்லி
  3. விங் கமேண்டர் ஜார்ஜ்
  4. மாடஸ்டி
  5. மாண்டிரெக்

  இவற்றில் ஏதேனும் தேறுமா என்று பாருங்களேன்...

  ReplyDelete
  Replies
  1. @ Siv .There are no more stories on வன அதிகாரி 'ஜோ'

   Delete
  2. SIV : இப்படிப் பார்ப்போமே..? 10 வருடங்களுக்கு முந்தையதொரு ஜீன்ஸ் இன்னமும் பீரோவில் பத்திரமாக உள்ளதென்பதற்காக அதை நாம் அணிய முயற்சிப்பதில்லையே.....! நம் இடுப்பளவும் மாறி இருக்கும் ; maybe இன்றைய பாணிகளும் மாறுபட்டுப் போய் இருக்கும் !

   நம் பழைய நாயகர்களின் கதையும் கூட இதைப் போன்றது தானே ? கடுமையானதொரு கதைப் பஞ்சம் நேர்ந்தாலன்றி மீண்டும் அவர்களைத் தேடித் பிடித்திட தேவை தோன்றிடுமா

   Delete
 73. மர்ம மனிதன் மார்ட்டினுக்கு மூன்றாம் இடம் என்பது கண்டனத்துக்குரியது . மார்டின் கதைகள் அமானுஷ்யம் நிறைந்தவையாக , suspense கலந்தும் சமீபத்திய ஆங்கில நாவலான் த வின்சி code ய் ஒத்ததாக உள்ளது . மார்டினுக்கு இரண்டு கதைகளாவது வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. leom : மார்டினின் கதைகளில் எனக்கு துளியும் பிரச்னை கிடையாது ; ஆனால் விற்பனையின் புள்ளி விபரங்கள் வேறொரு கதையைச் சொல்லுவதே சோகம் !

   Delete
 74. ஒருவேளை மாடஸ்டி கதைகள் வண்ணத்தில் வெளியிடப்பட்டால் அனைவரையும் கவரக்கூடுமோ?

  ReplyDelete
  Replies
  1. WillerFan : ஒரிஜினலாய் வண்ணத்திற்காக உருவாக்கப்பட்ட கதைகளைத் தாண்டி - b & w கதைகளுக்கு நாமாய் பெயிண்ட் அடிப்பது மிகச் சுமாரான பலன்களையே தரும் !

   Delete
  2. மாடஸ்டி கதைகள் எல்லாமே B & W தானா சார்? கற்கால வேட்டை போன்ற கதைகள் வண்ணத்தில் வந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்! இருந்தாலும் நமது நாயகியை கருப்பு வெள்ளையிலேயே ரசிப்போம்!

   Delete
 75. @ ALL :

  நண்பர்களே,

  ஏராளமான தேர்வுகள் ; suggestions ; எண்ணச் சிதறல்கள் என்று தூள் கிளப்பியுள்ளீர்கள் !! இன்றிரவு முடிந்த வரை ஆங்காங்கே எனது பதில்களையும் பதிவிட எண்ணியுள்ளேன் !

  ReplyDelete
  Replies
  1. Our pleasure sir..... waiting....

   Delete
  2. டியர் விஜயன் சார்,
   2014 இல் கண்டிப்பாக கோடைமலர், தீபாவளி மலர் உள்ளிட்ட சிறப்பு இதழ்கள் வேண்டும். உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
   எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி.

   Delete
  3. கோடைமலர், தீபாவளி மலர் என்றால் பக்கங்கள் அதிகம் வேண்டும். அவ்வளவுதான் .....அது போன்ற சமயங்களில் கருப்பு வெள்ளை இதழ்கள் நூறு அல்லது இருநூறு விலையில் விட்டால் பக்கங்களும் அதிகரிக்கும், நமது பட்ஜெட்டும் கையை கடிக்காது!

   Delete
  4. கருப்பு வெள்ளை நாயகர்களை அணிவகுக்க செய்யலாம்.

   Delete
  5. கோடைமலர், தீபாவளி மலர் என்றால் பக்கங்கள் அதிகம் வேண்டும். அவ்வளவுதான் .....அது போன்ற சமயங்களில் கருப்பு வெள்ளை இதழ்கள் நூறு அல்லது இருநூறு விலையில் விட்டால் பக்கங்களும் அதிகரிக்கும், நமது பட்ஜெட்டும் கையை கடிக்காது!


   எனது விருப்பமும் அதுவே.....

   Delete
  6. @ friends : IPL போட்டிகளை ஒரே ஒரு நாள் டிவி-யில் கறுப்பு-வெள்ளையில் காட்டினால் நமது reaction எவ்விதமாய் இருக்கும் நண்பர்களே ? இந்த வண்ணங்கள் தொலைக்காட்சிக்கு வருகை தரும் முன்னே b&w-ல் தானே சகலத்தையும் நாம் ரசித்து வந்தோம் ?

   கால் நூற்றாண்டுக்கு முந்தைய நமது பாக்கெட் சைசும் சரி ; அந்தக் கதை பாணிகளும் சரி - நமக்கு அற்புதமாய் ரசித்ததற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு ! அது - அன்றைய நமது பால்ய வயதுகள் ! (அந்தக் கதைகளில் சரக்கில்லை என்ற ரீதியில் நான் சொல்லிடவில்லை ; but - அவற்றை ரசிக்கக் கூடிய சரியான பிராயத்தில் நாமும் இருந்தோம் என்பதால் அவற்றின் தாக்கம் சிறப்பாக இருந்தது !)

   இப்போது மீண்டும் அந்த பாணிகளை கொணர்ந்திடல் சாத்தியமே ; but அவர்களது பாணிகளும் ; வண்ணமின்மையும் நெருடலாய் தோன்றுவது நிச்சயம். தற்சமயம் வண்ணமின்றியும் ரசிக்கக் கூடிய கதைத் தொடர்கள் டெக்ஸ் வில்லர் & மாடஸ்டி பிளைஸ் மாத்திரமே என்பது எனது opinion...! இரண்டே கதைத்தொடர்களைக் கொண்டு ஒரு 300 பக்க மலர் வெளியிடல் எங்ஙனம் ?

   Delete
  7. சார், டெக்ஸ், மார்டின், டயாபாளிக், மாடஸ்டி, ராபின் இணைந்தால் வாய்ப்பு கிட்டுமல்லவா ! அட்லீஸ்ட் ஒரு இதழாவது அன்று போல ப்ளீஸ்......
   அப்புறம் முயற்சிக்காத சிறந்த கதைகள் பல உண்டு என கூறினீர்கள் சந்தோசம் அவற்றை கொண்டு வாருங்கள் ,முன்பு இடையிடையே வந்த பல கதைகள் பறவை இல்லை ரகமாகவே இருக்கும் ,ஆனால் இப்போதைய வரவுகள் தொடர்ந்து அசத்துவது சந்தேகமில்லை !
   வர உள்ள அற்புதங்களுக்காகவும், ஆச்சரியங்களுக்காகவும் காத்திருக்கிறோம்!

   Delete
 76. தலைவா....புது ஹீரோக்களைவிட பழைய ஹீரோக்களை ஏன் தலைவா மறந்தீங்க...ஏதோ ஒரே வட்டத்திற்குள் சுற்றுவது போல் தெரிகிறது தலைவா....ஒரு சலிப்பும் உண்டாகிறது தலைவா...சும்மா அட்ராசக்க..... அட்ராசக்க....ன்னு பழைய ஹீரோக்களை போட்டு தாக்குங்க தலைவா....சேல்ஸ்ம் சும்மா பிச்சுகிட்டு போகும் தலைவா....

  ReplyDelete
  Replies
  1. Ravi Krishnan : பழைய ஹீரோக்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது எவரையோ சிஷ்யரே ?

   Delete
 77. நமது கேப்டன் சாகசத்தை காட்டிலும் , மிகுந்த சிரமப்பட்டு , அலைந்து திரிந்து ஒரு வாறு புத்தகத்தை வாங்கி, ஏக் தம்மில் படித்து முடித்து விட்டேன். மிகுதியான ஏமாற்றமே..எஞ்சியது....

  முதலில் ஆசிரியருக்கு, ப்ளூ பெர்ரி வெறியர்களில் ஒருவன் என்ற முறையில் , எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். வெகு சிறப்பாக முடிவை நோக்கி சென்று கொண்டிருந்த கதை , சின்னாபின்னமாக்கப்பட்டதை படிக்கும் பொழுது உணர முடிகிறது. எனக்கென்னமோ கதாசிரியரின் புத்தி , அலிஸ்டரின் மறு உருவமோ என்று நினைக்க தோன்றுகிறது. உடைந்த மூக்கன் என்ற அடைமொழி நிஜமாக்கிடும் பொருட்டு, எங்களது டைகரின் மூக்கை உடைத்து நிரூபித்து விட்டார்.

  அத்துடன் சித்திரங்களும் ஏனோ ஒருவாறு இருக்கிறது. ஹ்ம்ம்ம்ம் சொல்லப்போனால் , நீண்ட நெடுங்காலங்கள் கழித்து , வெளிவந்த டைகரின் சுமாரான கதை இதுதான். அத்துடன் செவ்விந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு , என்ன தண்டனை வழங்கலாம் என்று , தலைவர்கள் கோஸிஸ் , ரெட் கிளவுட் , சிட்டிங் புல் , போன்றவர்களுடன் விவாதித்த பொழுது, முழுவதும் செவ்விந்தியர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படும் ஒருகதையினை, ஆசிரியர் வெளியிடுவது என்று தீர்மானிக்க பட்டுள்ளது. அதனை நான்கு பொளர்ணமிக்குள் வெளியிடவேண்டியது எனவும் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

  ReplyDelete
  Replies
  1. சிம்பா : இந்த இரு அத்தியாயங்களின் போக்கு எவ்விதம் இருக்கவுள்ளது என்பது பற்றி நான் காமிக்ஸ் டைமில் சின்னதாய் ஒரு கோடு போட்டிருந்தேன்.....டைகரின் சாகசங்களை விட, மிலிட்டரியின் கட்டுக்கோப்பை வெளிச்சம் போடும் முயற்சி இது என்று !

   கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலே தான் சாவு என்பது டைகருக்கும் பொருந்தும் ! வழக்கமான கௌபாய் இலக்கணங்களுக்கு மாறுபட்டு, போர் குணம் கொண்டதொரு யதார்த்தமான இளைஞனை பிரதிபலிக்கும் இந்தக் கதை வரிசைகளில் மெல்லிசாக வரலாற்று உண்மைகளும் இழையப்பட்டுள்ளன.....! யுத்த களத்தில் சில மறை கழன்ற தலைவர்கள் இருந்ததும் நிஜம் ; கண்மூடித்தனமாய் செவ்விந்தியர்கள் மீதிருந்த துவேஷத்தை express செய்திட அவர்கள் முயற்சித்ததும் நிஜம். So - உடைந்த மூக்கர் ஒரு ராணுவ ஊழியனாய் பணியாற்ற வேண்டியதொரு கதைக் களத்தில் - அவரை பெரியதொரு நாயகராகக் காட்டிடாது - underplay செய்ய வைத்துள்ளனர் !

   இதே கதைக்கு மாமூலான கௌபாய் ஹீரோக்கள் treatment கொடுத்திருப்பின் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருப்பது சாத்தியமாகி இருக்கலாம் ; ஆனால் அது டைகரின் பாணியல்லவே !

   Delete
 78. 'ரத்தத் தடம்' படித்தவர்கள் இங்கே விமர்சனம் போட்டு தாக்கிக் கொண்டிருக்க, எனக்கோ புத்தகம் இதுவரை வந்துசேரவில்லை! :(

  மாலையில் லயன் ஆபீசுக்கு போன் போட்டு ட்ராக்கிங் ஐடி கேட்டேன்; பார்த்துவிட்டு போன் செய்வதாகக் கூறியிருக்கிறார்கள்.

  ஹம்...

  ReplyDelete
  Replies
  1. நண்பரே புத்தகத்தை (கதையை ) படித்து விட்டு மனது ரணமாவது ஓரிருநாள் தள்ளி போனது என்று நினைத்து நிம்மதி அடையுங்கள்.

   Delete
  2. நண்பரே உங்களை போன்று தான் நானும் , ஆனால் கதையின் தரத்தை நான் குறை சொல்லபோவதில்லை.நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு வரும் கதை என்பதால் ஒரு சில குறைகளை தவிர்த்து இந்த கதையின் சுவாரசியமான முடிவை ரசிப்போம்... டைகர் ,ஜிம்மி ,ரெட் இவர்களின் சாகசங்களை மீண்டும் எதிர்பார்த்து .....

   Delete
  3. நான் படித்த முழு டைகர் கதைகள் இதுவரை இரண்டே இரண்டு - ரத்தக் கோட்டை தொடர் புத்தகங்கள் மற்றும் தங்கக்கல்லறை. இரண்டும் எனக்குப் பிடித்தது.

   நான் வாசிக்க இருக்கும் மூன்றாவது முழு டைகர் கதை இது - படித்துவிட்டு பதிவிடுகிறேன். ஆனால் மேல்மட்டமாக பார்த்த பொது இந்த மாத இதழில் சித்திரங்கள் sharpness கம்மி மற்றும் கலர் மங்கலாக இருக்கிறது - சில பக்கங்களில். வில்லன்னுக்கொரு வேலி புத்தகத்திலும் சில மங்கலான அச்சு கொண்ட பக்கங்கள் இருந்தது.

   Delete
 79. டியர் எடிட்டர்,

  அறிவிக்கப்பட்ட புதிதில் +6ஐ டெக்ஸ் மற்றும் டயபாலிக் ஆகியோருக்கான பிரத்யேக வெளியீடு என்பதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி ஆசைகாட்டிவிட்டு, பின்னொரு நன்னாளில் +6ன் முதல் இரண்டு 'சுட்டி லக்கி'க்கான அறிமுகம் என்றீர்கள்; தமிழகக் குழந்தைகளின் நலன் கருதி அதை முழுமனதுடன் வரவேற்றோம்! இப்போது 'என்ன தோணுதோ அதை வெளியிடலாம்' என்கிறீர்கள்! இந்த வார்த்தைகளில் டெக்ஸோ, டயபாலிக்கோ ஒளிந்திருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை!
  அந்த இத்தாலிய ஜாம்பவான்கள் +6ல் புறக்கணிக்கப்படுவதாய் ஒரு எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை!

  600 கதைகளைத் தாண்டி வீறுநடை போட்டுவரும் அந்த நவஹோ தலைவரை, வாழ்க்கையின் பாதியைக் கடந்துவிட்ட நிலையில் இதுவரை நாங்கள் தரிசித்திருப்பது வெறும் 50க்கும் குறைவான தடவைகளே!

  எஞ்சியிருக்கும் எம் வாழ்க்கைப் பயணத்தில் இன்னுமொரு நூறு கதைகளிலாவது அவரை தரிசித்துவிட முடியுமா? (இப்பவே கண்கள் கொஞ்சம் மசமசவென்றிருப்பதான பிரம்மை)

  நீங்களன்றி வேறு யார்; நாங்கள் உரிமையில் கேட்டிட?

  இப்படிக்கு,
  அடுத்த ஜென்மத்து இத்தாலியக் குடிமகன்- ஈரோடு விஜய்.

  ReplyDelete
 80. Erode VIJAY : குதிரைகளையும், அந்த டெக்சாஸ் பாலை நிலங்களையும் தாண்டியதொரு பிரமிப்பான காமிக்ஸ் உலகம் நம் ஆராய்ச்சிக்காகக் காத்துள்ளது ! தற்சமய லார்கோ & ஷெல்டன் நீங்கலாய் கிட்டத்தட்ட பாக்கியுள்ள நம் நாயகர்களில் பெரும்பாலானோர் கௌபாய்கள் தானே ?!

  டெக்சை +6-ல் கண்டுக்கப் போவதில்லை என்று நான் சொல்லவில்லை - நிச்சயம் அவர் நமது திட்டங்களில் ஒரு முன்வரிசை இடத்தை துண்டு போட்டுப் பிடித்து வைத்துள்ளார் தான் ; ஆனால் ஒரு overkill வேண்டாமே ?!

  அப்புறம் பாண்டிச்சேரி பக்கமாய் போகும் பட்சத்தில் அந்த 'மொசு மொசு ' கண்களுக்கு - நம் புதுவை செந்திலின் ஆப்டிகல்சில் சொல்லி ஒரு லென்ஸ் ரெடி பண்ணிவிட்டால் போச்சு !

  ReplyDelete
  Replies
  1. ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி சார்!
   இன்னும் நாற்பது வருடங்களில் நடைபெறவிருக்கும் 'டெக்ஸ் - ஆயிரமாவது புத்தக வெளியீட்டு விழா'வில் பங்கேற்க நீங்கள் இத்தாலி ஏர்போர்ட்டில் வந்திறங்கும்போது,  டீ-ஷர்ட்டில் பொரிக்கப்பட்ட டெக்ஸ் உருவத்துடனும், கைகளில் பூங்கொத்தையும், இதழ்களில் புன்சிரிப்பையும் ஏந்தியபடியும் உங்களை வரவேற்றிடும் அந்த அழகான இத்தாலியச் சிறுவன் -  நானாகவும் இருக்கக்கூடும்!  :)

   Delete
  2. Erode VIJAY : ஸ்டீல்பாடி ஷெர்லாக் கதையினில் லாரன்ஸ் கிளாக்கி என்றொரு கூன் விழுந்த பெருசு வரும்...கம்பும் கையுமாய் ! இன்னும் நாற்பது ஆண்டுகளில் நான் அப்படி இருந்தாலே பெரும் பாடு - இதில் நான் இத்தாலிய ஏர்போர்டில் வந்து இறங்குவதா ? ஆஹா...!!

   அப்போது உங்களுக்கு தோராயமாய் வயது 16 இருக்குமா விஜய் ?

   Delete
 81. dear vijayan sir,
  tex willer old book naanga padikathathu irukku. dragan nagaram. palingu silai poonra books yellam maru pathipul podalamae ? please.


  madhan

  ReplyDelete
  Replies
  1. madhan : Half the fun is in trying hard to collect back issues....reprints would be once in a while..!

   Delete
 82. 'Oodu Soonyam' Lion Super Special-il vandha kadhai. Andha idhazh palaridam illai. So, Aasiriyar selection sariyaanadhe. Vannathil rasikka thayaaraagungal friends!

  ReplyDelete
 83. "தி வாக்கிங் டெட்" டை தமிழுக்கு கொண்டுவர முடியுமா சார் ???

  ReplyDelete
 84. விஸ்கி-சுஸ்கி : ரொம்பவே வித்தியாசமான கதைக்களம் தான் ; ஆனால் அந்த சித்திரத் தரம் சின்னதொரு நெருடல். தவிர இத்தனை hardcore horror -க்கு நாம் தயாராகி விட்டோமோ - தெரியவில்லையே !

  ReplyDelete
  Replies
  1. இந்த தொடரில் சித்திரங்களின் தரத்தின் மேல் எனக்கு அபார நம்பிக்கையுள்ளது. அருமையான வித்யாசமான சித்திரங்கள் நிச்சயம் ஹிட் ஆகும் . ஆனால் HARDCORE HORROR க்கு நமது வாசகர்கள் தயாரா எனபது பெரிய கேள்விக்குறியே! இதுவரை கருப்புக்கிழவியை!! தாண்டி நமது HORROR DIMENSION பெரிதாக EXPAND ஆகவில்லை.

   WHY NOT WE TRY நண்பர்களே ???

   Delete
 85. டியர் விஜயன் சார்,
  கோடை மலர், தீபாவளி மலர் ஆகியவற்றை கருப்பு வெள்ளையில் வெளியிட விட்டால் வண்ணத்தில் வெளியுடுங்கள் சார். வாசகர்கள் கேட்பது அதிக பக்கங்கள், நிறைய கதைகள் ஒரே இதழில்!. 2014 இல் கோடை மலர், தீபாவளி மலர் போன்றவற்றிகுக்கும் திட்டமிடுங்கள் சார். ப்ளீஸ்.
  என்னதான் புதிய கதை நாயகர்களை ரசித்தாலும் பழைய நாயகர்களை மறக்க முடிய வில்லை.ஏற்கனவே திட்டமிட்டு கைவிட்ட மாயாவி, ஸ்பைடர், ஆர்ச்சி digest களை சென்னை புத்தக கண்காட்சியின் போது ஆவது
  வெளியுடுங்கள் சார். நிச்சியம் அவை நன்கு விற்பனையாகும் சார். உங்கள் மேலான பதிலுகாக ஆவலுடன் .....
  எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

  ReplyDelete
 86. இரத்தத்தடம் இதழின் சித்திரங்கள் சிறிது மங்கலாக உள்ளன!

  என்ன காரணம் சார்?

  ReplyDelete