Powered By Blogger

Wednesday, May 22, 2013

சேதி சொல்லும் சித்திரங்கள் !

நண்பர்களே,

வணக்கம். கதை சொல்லும் படங்களான காமிக்ஸ்களுக்கு பத்தி பத்தியாய் முன்னுரை எழுதுவதற்குப் பதிலாக இம்முறை சித்திரங்களே சேதி சொல்ல அனுமதித்திட்டால் என்னவென்று தோன்றியது ..! பலனே நமது பதிவு எண் : 94 ! 

COMIC CON -ல் சின்னதாகவேனும் ஒரு புது ரிலீஸ் இருப்பின் சுவாரஸ்யமாக இருந்திடுமென்று மனதுக்குத் தோன்றிய போது - +6 அறிவிப்பு நினைவுக்கு வந்தது! So +6-ன் முதல் இதழாக மலரவுள்ள surprise-இதோ உங்களுக்காக சின்னதான preview -ல்! 

இந்த மினி பதிவு ஏராளமாய் அபிப்ராயங்களை உய்விக்குமென்பதை    நானறிவேன் ; பணிகளை முடிக்கும் பரபரப்பு சற்றே அடங்கிய பின்னே இது பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதிடுகிறேன் ! அது வரை - have fun amigos ! 


19 cm x  12.5 cm (முந்தைய லயன் சைசில் - ஆர்ட் பேப்பரில் ...வண்ணத்தில்...) 
நமது அட்டைக்கு inspiration ! இதனைஆதாரமாகக் கொண்டு, கதைகேற்ற மாற்றங்களோடு  முழுமையாய், புதிதாய் நம் ஓவியர் தீட்டிய சித்திரமே  இந்த இதழுக்கான ராப்பர். 
சின்னதாய் ஒரு reminder : இது +6 வரிசையின் வெளியீடு என்பதால், மாதாந்திர லயன்-முத்து காமிக்ஸ் சந்தாவினில் இடம் பெறாது. So ஜூன் மாதத்து ரெகுலர் பிரதிகளோடு இந்த இதழும் கிட்டிட வேண்டுமெனில் ரூ.375 சந்தாத் தொகை அனுப்பிடல் அவசியம் ! (வழக்கமான சந்தாப் பிரதிகள் அனுப்பி முடிந்த பின்னே, இதனை மாத்திரமே தனியாக அனுப்ப நேரிடும் பட்சத்தில், கூரியர் கட்டணங்கள் கூடுதலாகும் என்பதையும் நினைவூட்டுகிறேன் !) Thanks in advance folks ! 

258 comments:

 1. 1st impression - coloril Arputhagama irukkiradu


  2nd impression - drawings are not of the usual type, Tex face is very different, other faces are not clearly drawn -think the artist for this story is a different person( enna panradu you like chennai super kings have set our expectations very high)

  On the whole TEX in 110+ pages in color for 50 RS is UNBELIEVABLE, UNBEATABLE and to be treasured.

  ReplyDelete
 2. அடக்கடவுளே நான் காண்பதென்ன கனவா? என் கண்களை என்னாலையே நம்ப முடியலை. எங்க இரவுக்கழுகார் அதுவும் வண்ணத்தில். வாவ்.... எடி சார், ஆனந்தம் ஆனந்தம்... நீண்ட நெடுலாலைய ஆசை நிறைவேறியது.... கலக்கல் சார்...

  ReplyDelete
 3. சூப்பர் .... டெக்ஸ் ரசிகர்களுக்கு அடுத்த மாதம் கொண்டாட்டம் தான்

  ReplyDelete
  Replies
  1. Comics rasigagal - in toto - so many things gonna happen ! :-)

   Delete
 4. கலரில் டெக்ஸ். டெக்ஸ் ரசிகர்கள் சந்தோசத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கப் போவது உறுதி. விஸ்வா இதைத்தான் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்றாரோ? இந்த தடவை அட்டைப் படங்கள் நன்றாக வந்திருக்கிறது. பின்னட்டையில் டெக்ஸ் நிற்கும் ஸ்டைல் சூப்பர்.

  ReplyDelete
 5. TSK டெக்ஸ் சூப்பர் கிங் க்கு விசில் போடு...! :)

  ReplyDelete
 6. டியர் எடிட்டர் விஜயன் சார்,
  இரவு கழுகாரை வண்ணத்தில் எப்போது தரிசிப்போம் என்று எண்ணி கொண்டிருந்த எங்களை ஒரே நேரத்தில் கருப்பு வெள்ளை மற்றும் வண்ணத்தில் இரு இதழ்களை வெளியிட்டு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டர்கள். நன்றி சார். உண்மையாகவே இந்த ஜூன் மாதம் காமிக்ஸ் உலகின் பொற்காலம் தான். நிலவொளியில் ஒரு நரபலி அட்டைபடம் சூப்பர் சார். இதழ்களை எப்போது காண்போம் என்ற ஆவல் அதிகரிக்கிறது.
  எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

  ReplyDelete
 7. Dear Editor,

  Thanks a lot. Finally Tex Willer in color .. and in தமிழ் :)

  Its a pleasant surprise..

  ReplyDelete
 8. சூப்பர் .....

  இதற்க்காக தானே காத்திருந்தோம், நன்றி சார்...
  அட்டை படத்தை பற்றி இனி யாரும் பேச மாட்டார்கள்,நம்ம ஓவியருக்கு திருஷ்டி சுற்றி போடுங்க சார்.

  ReplyDelete
 9. கடவுளே.......நான் என்ன கனவு காண்கிறேனா ! இது நிஜம்தானா ! யாராவது டைகரை ரெண்டு போடு போடுங்களேன். அவர் அலறல் சத்தம் கேட்டால்தான் நம்புவேன். :-)

  வண்ணத்தில் டெக்ஸ் !

  ஆஹா கனவு நிஜமானது !

  நன்றி ! நன்றி ! நன்றி !

  ReplyDelete
 10. லோகோவில் தமிழில் சன்ஷைன் லைப்ரரி நன்றாக உள்ளது

  ReplyDelete
 11. கதை நன்றாக இருக்கும். ஆனால் சித்திரங்கள் அட்டையில் உள்ளதுபோல் இருக்காது.
  anyway tex-ஐ கலரில் பார்க்க ஆவலுடன் உள்ளோம்.

  ReplyDelete
 12. ஆஹா! ஆஹா! அற்புதம்! அற்புதம்! நான் காண்பதென்ன கனவா? இல்லை நிஜமா? சூப்பர் ஸ்டார் டெக்ஸ் வண்ணத்தில்! ஐயோ சொக்கா! ஜூன் 1 நாளைக்கே வரக்கூடாதா!

  ReplyDelete
 13. SURPRISE என்றால் REAL SURPRISE. இரவு கழுகார் வண்ணத்தில் அசத்துகிறார். கதைக்கான ஓவியங்களின் ஸ்டைல் சற்றே REFRESHING ஆக உள்ளது. இந்த முறை நமது ஓவியர் பூதத்தை 45 ஆம் பக்கத்தில் இருந்து சுட்டது போல் தெரிகிறது. பூதம் என்றால் சற்றே பீதியடைந்து விடுகிறாரே திரு.மாலையப்பன்.?? டெக்ஸ் சை கலக்கலாக தீட்டியுள்ளார் நமது ஓவியர்.EXCELLENT WORK. ஜூனில் ஒரு காமிக்ஸ் மகா விருந்து காத்துள்ளது. நன்றி விஜயன் சார் !! COUNTING MY DAYS...!

  ReplyDelete
  Replies
  1. விஸ்கி-சுஸ்கி : //நன்றி விஜயன் சார் !! COUNTING MY DAYS...!//

   "counting the days" என்பது பொருத்தமாகிடுமே !

   Delete
  2. OOPS...மிக சரி சார்! :-). BUT IN REAL LIFE WE ARE ALL DOING THE SAME!JUST DON'T WANT TO REMEMBER & DISCUSS. : )

   Delete
 14. சன்ஷைன் லோகோ சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது! அட்டைப்பட சித்திரங்கள் கண்ணைக்கவரும் வண்ணத்தில் வரையப்பட்டுள்ளன! மாலையப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! ஆசிரியருக்கு நன்றிகள் பல!

  ReplyDelete
 15. First of all, a big credit goes to front & rear covers. Marvellous!!!!!!!!!!! Enna!!!!tex colorila, Kanava ithu nijama, en kaiyai killi pathu kolkiren. I don't want to wake up,if it's a dream :):):):):):):):):):):):):) thanks a lot sir :)

  ReplyDelete
 16. இதிலிருந்து என்ன தெரிகிறது .
  குட்டி தலையணை சைஸ் டெக்ஸ் இதழ் வெளிவரும் நாள் வெகு தொலைவில் இல்லை !!!!!

  ReplyDelete
 17. முந்தைய Lion சைஸ் என்பது தற்போதைய 'Tex Willer' புத்தக அளவு தானே?

  ReplyDelete
 18. வாவ் மெய்தானா இது

  சூப்பர் விஜயன் சார்

  காத்திருந்தது வீண் போகவில்லை :))
  .

  ReplyDelete
 19. ஹா ஹா ஹா

  வழக்கம் போல டெக்ஸ்சின் நையாண்டி வசனங்கள் சூப்பர் பஞ்ச் சார்

  நன்றாக வாய்விட்டு சிரித்துவிட்டேன் :))
  .

  ReplyDelete
 20. உலக தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக கலரில் டெக்ஸ்

  மெய்யாலுமே மெய்யாலுமே மெய்யாலுமே :))
  .

  ReplyDelete
 21. Super Sir.. I can not believe this sir.. When the e-Bay listing Sir..

  ReplyDelete
 22. இப்புத்தகம் ஆங்கிலத்தில் பார்த்திருக்கிறேன் அதில் நீல வண்ணம் எடுப்பாக உள்ளது ஆனால்

  நமது பிரிண்டில் கிரே வண்ணத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் படங்கள் மிகத்தெளிவாக தெரிகிறது

  உலக தரத்தில் நமது தமிழ் காமிக்ஸ் ஜொலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

  hats of you விஜயன் சார் :))
  .

  ReplyDelete
 23. வாவ்! இதுவல்லவா சர்ப்ரைஸ். நிஜமாகவே எங்களைப் போன்ற (டெக்ஸ்) வாசகர்கள் மெய்மறந்து போவது நிச்சயம். டெக்ஸ் வில்லர் வண்ணத்தில் வெளிவருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பூத வேட்டை அட்டை படம் போல் இல்லாமல் கலக்கலாக வந்துள்ளது. நன்றிகள் பல சார்.

  ReplyDelete
 24. டியர் எடிட்,

  ஒரிஜினலை ஒத்தி நமது ஆர்டிஸ்ட் வரைந்த அட்டைபடம் கனகச்சிதமாக இருக்கிறது. தடாலடியாக இந்த டெக்ஸ் கதை தமிழில் வந்திருப்பதற்கான காரணத்தை அனைவரும் அறிவார்கள் என்றாலும், டெக்ஸின் சாகஸம் ஒன்றை வண்ணத்தில் தமிழில் பார்த்து விட வேண்டும் என்ற டெக்ஸ் ரசிகர்கள் பல நாள் கனவை இந்த புத்தகம் நிறைவேற்ற போகிறது போல.

  4 ல் 3 இதழ்கள் வெளியாகி விட்டது... அப்போது எஞ்சியிருப்பது 1 இதழா, இல்லை இன்னும் சில சர்ப்ரைஸ் இழ்கள் வரிசையில் உள்ளதா ?

  பி.கு.: பெங்களூரை தொடர்ந்து சென்னையிலும் காமிக் கான் நடப்பதற்கான வாய்ப்புகள் ஆகஸ்டில் இருப்பதாக தகவல்கள் கசிகிறது. அப்போது சென்னைக்கும் 4 ஸ்பெஷல் புத்தகங்கள் தடாலடியாக உருவாகும் வாய்ப்புகள் உண்டோ.

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் கலர் இதழை தரிசித்து விட்டு, இனி கருப்பு வெள்ளைக்கு பதிலாக கலர் இதழ்கள் தான் வேண்டும் என்று வாசக கோஷ்டி கோஷம் எழுப்பபோவது நிச்சயம். ஆனால், டெக்ஸின் பல வெற்றி கதைகளை கொண்ட கருப்பு வெள்ளை இதழ்கள் நமது வரிசையில் பிராதனமாக இருக்கும் என்று நம்பலாமா ?

   முந்தைய லயன் சைஸ் என்று ஒரு பிட் போட்டிருக்கிறீர்களே... அது சிவப்பாய் ஒரு சொப்பனம் சைஸ் தானே ? திரும்பவும் சின்ன சைஸில் புத்தகங்களை தவிர்க்கலாமே என்பதால் ஒரு கேள்வி... ஆனால் 50 ரூபாய்க்கு வண்ணத்தில் சொப்பனம் சைஸில் வர வாய்ப்பு குறைவு என்பதும் உறுத்துகிறது. அது அப்படிதான் என்றால், விலையை சற்றே அதிகமாக்கி தற்போதைய கருப்பு வெள்ளை இத்தாலிய கதைகளுக்கு உத்தேசித்து வைத்திற்கும் சைஸிற்கே இந்த புத்தகத்தையும் வெளியிடலாமே ???

   கிழட்டு சேவல் ரோஸ்ட் டிமாண்ட் ரொம்ப அதிகம் போல. :)

   Delete
  2. ஆஹா.. ஆகஸ்டிலும் நான்கு புத்தகங்களா...சூப்பர் ...

   அப்படியே நடுவுல லயன் trade mark ஒரு ஸ்பெஷல் (கோடை மலர்) பெரியதாக.. Rs.500 க்கு :)

   Delete
 25. கொஞ்சம் இருங்கள் கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன். 'ஆ..வ்'.. ஆமா நிஜம்தான். கனவு இல்லை. கலரில் டெக்ஸ். 'நம்ம தல டெக்ஸ்க்கு பெரிய விசில் போடுங்க!!'. திரு.விஜயன் அவர்களுக்கு நன்றி. மாலையப்பன் அவர்களுக்கு ''தம்ஸ் அப்'' செய்து காட்டிவிடுங்கள் சார், எங்கள் சார்பில்!

  ReplyDelete
 26. இந்தியாவில் உறவினரல்லாத வெளிநாட்டு வாகர்களுக்கு சந்தா பணத்த் தொகையை விட அதை செலுத்த வழி தேடுவதுதான் பெரும் பாடாக இருக்கிறது. அண்மையில்தான் சந்தா பணத்தொகை எவளவு என்று கேட்ட மெயிலுக்கு பதில் வந்து, நானும் ஒரு நன்பனின் நண்பியூடே பணத்தை செலுத்திவிட்டு குசியாக காத்திருக்கிறேன்.

  அதற்குள் இது ஏதோ +6, லைப்ரரி, தனி சந்தா, ஆப்பு சந்தா என்று குண்டு குண்டாய் என்று போட்டுத்தள்ளப் பட்டுள்ளதே. :-0 அதுவும் டெக்ஸ், லக்கி கதைகளுடன்? Vijayan Sir, இந்த சந்தா கடந்த வாரத்தில் அறவிடப்பட்ட வெளிநாட்டு சந்தாகளில் உள்ளடங்க படுள்ளதா? இன்னொருக்க காசு அனுபிற ப்ரோசெஸ்ஸ நினைக்க வயத்த கலக்குது. :-( . officail emailkku மெயில் அடித்தால் பதில் வருமோ தெரியாது. வந்தாலும் நறுகென்று நாலு வார்த்தையில் வரும்.

  யாரவது வெளிநாட்டு வாசகர்கள் இருந்தாலும் பதில் சொல்லுங்க, pls.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அதே குழப்பம் தான் :(

   Delete
 27. விஜயன் சார்,

  பிரமாதம் !!! கலக்கீட்டிங்க போங்க !!!

  இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம் ... அட்டைபடம் உண்மையிலேயே அவ்வளவு அட்டகாசம் அதிலும் டெக்ஸ் கலக்கல் ...

  +6 சந்தா யாரவது செலுத்தாமல் இருந்தால், இந்த பதிவை பார்த்தவுடனே அதை அனுப்பி விட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள் :)

  கூடிய விரைவில் 100 ஆவது சிறப்பு பதிவில் (இதை எல்லாம் விட) பெரிய இன்ப அதிர்ச்சி நீங்கள் தர போவதாக தகவல் வந்தது :) உண்மைதானே சார் ...

  (இந்த பதிவு பற்றி எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தந்த நண்பர் சேலம் டெக்ஸ் விஜய் அவர்களுக்கு நன்றி)

  ReplyDelete
 28. நண்பர்களே !!!

  நமது ஆசிரியர் அவர்களே 'டெக்ஸ்' க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்து விட்டார் :)

  எனவே இனி டெக்ஸ், 'சூப்பர் ஸ்டார் டெக்ஸ்' என்றே அழைக்கப்படுவார் ...

  ReplyDelete
  Replies
  1. ப்லுபெர்ரின்னு பெயர் வைத்துகொண்டு தாங்களே இப்படி பேசலாமா :)

   Delete
 29. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் ://கூடிய விரைவில் 100 ஆவது சிறப்பு பதிவில் (இதை எல்லாம் விட) பெரிய இன்ப அதிர்ச்சி நீங்கள் தர போவதாக தகவல் வந்தது :) உண்மைதானே சார் ... //

  "தகவல்" தந்தவரிடம் அடுத்த முறை எனக்கும் சேர்த்துச் சொல்லிடக் கூறுங்களேன் ப்ளீஸ் ? தவிர நீங்கள் எதிர்பார்க்கும் அந்த "இன்ப அதிர்ச்சி" என்னவாக இருக்குமென்று இங்குள்ள நண்பர்களும் அறிவார்கள் தானே..!

  100-வது பதிவென்றில்லை - இங்கு ஒவ்வொரு பதிவுமே ஏதாகினும் ஒரு வகையில் நமக்கு சந்தோஷம் தரும் சேதிகள் சுமந்து வருபவையாக இருக்கவே விழைவேன் ! '100' என்ற எண்ணுக்கு மரியாதை செய்யும் நிமித்தம் இப்போதே தலையைப் பிய்த்துக் கொள்வதை விட, அது வரும் சமயம் பார்த்துக் கொள்வோமே ?

  தவிரவும், 'சேதிகள் இருப்பின் பதிவுகள் !' என்பதே பொருத்தமாய் இருக்குமே அன்றி - 'பதிவின் பொருட்டு சேதிகளை உருவாக்குவது' செயற்கையாய் அமைந்திடும் அல்லவா ?

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சார், நீங்க எப்போ கால் கட்டை விரலை வாய்க்குள் வைத்தாலும் எங்களுக்கு சந்தோசமே :)

   Delete
 30. -----
  அட்டைப்படம் அருமை.. அட்டகாசம்.. பிரம்மாதம்.

  பின் அட்டையில் டெக்ஸ் நிற்கும் ஸ்டைல் கலக்கலாக இருக்கின்றது.

  கலரில் டெக்ஸ் படிக்க ஆவலாக இருக்கின்றோம்.

  சூப்பர், மெகா ஹிட் புத்தகம் இது என்பது, இப்போதே உறுதியாகிவிட்டது.

  அந்த 4 வது இதழ் என்ன என்று அறியவும் ரொம்ப ஆவலாக இருக்கின்றோம்.

  -------------

  ReplyDelete
 31. டியர் விஜயன் சார்,
  Dear Vijayan Sir,

  வண்ணத்தில் டெக்ஸ்...! :)
  Tex in Color...! :)

  ஒன்றுமில்லை நமது தற்போதைய பின்னட்டை (மேஜர் சுந்தர்ராஜன்) பாணியிலான கமெண்ட்! ;)

  //இந்த மினி பதிவு ஏராளமாய் அபிப்ராயங்களை உய்விக்குமென்பதை நானறிவேன்//

  Sure, நிச்சயமாக! :)

  மாலையப்பன் சாரிடம் எந்த அட்டையை மாடலாக கொடுத்தாலும் அதில் உள்ள நபர்களின் கண்களை தெளிவாக திறந்து வைத்து விடுகிறார்! (உ.ம்.: துரத்தும் தலைவிதி லார்கோவின் கண்கள்!). இதுவும் ஒரு அமானுஷ்ய ரக கதையோ?! பூ.வே. பூதத்தை விட இந்த நிலவொளி பூதம் பரவாயில்லை ரகம். சாம்பல் நிற சால்வை மற்றும் கோவணம் சகிதம் குதித்திருந்தால், பூதம் இன்னமும் அழகாக(!) இருந்திருக்கும்! :) :) என்னுடைய ஒரு சிறு அபிப்ராயம் என்னவென்றால் மாலையப்பன் அவர்களின் ஓவியத்தோடு, ஏதாவது ஒரு ரியலிஸ்டிக் பின்னணி அல்லது டிஜிட்டல் டிசைனை கூடுதலாக இணைப்பது அவ்வளவு பொருத்தமாக இருப்பதில்லை.

  உட்பக்கங்கள் அட்டகாசமாக இருக்கின்றன, குறிப்பாக நான்காவது பக்கம்! வண்ணத்தில் டெக்ஸ் என்பதால் இந்த இதழை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

  கௌபாய்களில் டெக்ஸ்தான் சூப்பர் ஸ்டார் என முத்திரை (literally on the back cover!) குத்தி விட்டீர்கள் போல? டைகர் ரசிகர்கள் கடுப்பாவதற்கு முன்னர், அவருக்கு குறைந்த பட்சம் ஒரு 'பவர் ஸ்டார்' பட்டமாவது கொடுத்து விடுங்கள்! ;)

  காமிக் கானில் மொத்தம் எத்தனை இதழ்கள் வெளியாகவிருக்கின்றன? உங்கள் அலுவலகத்தில் 'இந்த மாதம் ஓவர் டைம் மாதம்' போல?! :)

  ReplyDelete
  Replies
  1. Karthik Somalinga : // மாலையப்பன் அவர்களின் ஓவியத்தோடு, ஏதாவது ஒரு ரியலிஸ்டிக் பின்னணி அல்லது டிஜிட்டல் டிசைனை கூடுதலாக இணைப்பது அவ்வளவு பொருத்தமாக இருப்பதில்லை.//

   எழுத்துக்களை place செய்ததைத் தாண்டி முன்னட்டையில் கணினியின் பங்களிப்பு முற்றிலுமாய்க் கிடையாது இம்முறை. இது முழுக்க முழுக்க மாலையப்பனின் ஓவியமே !

   On the contrary "துரத்தும் தலைவிதி"யில் மாலையப்பனின் பணி 1% கூடக் கிடையாது ; முழுமையாய் டிசைனர் பொன்னனின் வேலைப்பாடு அது !

   Delete
  2. Karthik Somalinga : அந்த பின்னட்டை மேஜர் சுந்தர்ராஜன் பாணி பிரத்யேகமாய் உங்களூர் மக்களின் பொருட்டு !

   சென்ற COMIC CON -ல் தமிழர் அல்லாத விருந்தினர்கள் ஸ்டாலுக்குள் நுழைந்த வேகத்திலேயே ஓட்டம் பிடித்தனர் - எதனையும் வாசிக்கக் கூட இயலாததால் ! குறைந்த பட்சம் நமது நாயகர்களின் பெயர்களையாவது படிக்கட்டுமே என்ற ஆசையில் தான் இந்த bi-lingual back cover !

   Delete
  3. டிஜிட்டல் டிசைனை கூடுதலாக இணைப்பது - பூத வேட்டை, வேய்ன் முன்னட்டைகளில் அந்த எண்ணம் பலமாக தோன்றியது! இதிலும் அப்படியே (உங்கள் பதிலை பார்க்கும் வரை!)

   //கணினியின் பங்களிப்பு முற்றிலுமாய்க் கிடையாது இம்முறை//
   அட! பின்னணி நீல வானமும், மேகங்களும் போட்டோ ஃபினிஷில் இருக்கின்றன! Nice!

   Delete
  4. //குறைந்த பட்சம் நமது நாயகர்களின் பெயர்களையாவது படிக்கட்டுமே என்ற ஆசையில் தான் இந்த bi-lingual back cover !//
   நல்ல யோசனை சார், nice idea! :)

   Delete
  5. Karthik Somalinga : //அட! பின்னணி நீல வானமும், மேகங்களும் போட்டோ ஃபினிஷில் இருக்கின்றன! Nice!//

   Subject + வண்ண அமைப்பிற்கு சரியான reference கொடுத்து விட்டால் மனுஷன் பின்னி எடுத்து விடுவார் !

   Delete
 32. இ..இது லயன் காமிக்ஸ் blog தானே?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பூனை குட்டி

   Delete
  2. Erode VIJAY : மாண்ட்ரேக் கதைகளில் வருவதைப் போல் - இதுவொரு parallel universe ! பூமியைப் போலவே இது இன்னொரு கிரகம் ; அதே போன்ற மாந்தர்கள் கூட நடமாடுகிறார்கள் இங்கு !

   So - இதுவும் ஒரு parallel blog :-)

   Delete
 33. நாய்க்கு என்ன தான் நாலு கால் இருந்தாலும் ...........கால் மேல கால் போட்டு உக்கார முடியாது .............


  ஆனால் நம்ப ''லயனா''லே முடியும் ...........

  ReplyDelete
  Replies
  1. madhiyilla mandhiri22 : இது எந்தப் படத்துப் பஞ்ச் ? :-)

   Delete
  2. எல்லாம் நீங்க பிரான்க்போர்ட் போற சமயத்துல ஒரு காட்டு காட்டுனது தான் சார்

   Delete
  3. உங்களை ON LION ல் சந்தித்தது சந்தோசமாய் உள்ளது

   Delete
 34. பாத்துப்பா டெக்ஸ் .....நீ பத்து அடியில் நிக்குற காட்டு எருமையை குறி வைக்குற ................
  ஆனா உன்ன குறி வச்சு ஒரு ''காட்டு எருமை'' பாயுதே ...........
  அந்த உடஞ்ச மூக்குகாரன் சந்தோஷ படுற மாதிரி எதுவும் செய்து மாட்டிக்காதே ........

  ReplyDelete
 35. டாப் நாயகர் வாக்கெடுப்பில் , இதுவரையில் முன்னணியில் இருந்த லார்கோ , மற்றும் டைகர் இருவரையும் , இந்த ஒரே பதிவின் மூலம் இரவுக்கழுகார் பின்னுக்கு தள்ளி விட்டார்.

  உண்மைய சொல்லுங்காப்பா, யாரெல்லாம் போட்ட ஓட்டை மாற்றி போட்டது .... ஹி ஹி ...

  ReplyDelete
 36. "NILAVOLZHIYILL ORU NARAPALI" title super Editor sir. And Tex in colour , amazing. Front Page is veryvery good and colourful. Is this the first book of +6 advertisement? Is so which period other 5 books will come sir?

  ReplyDelete
 37. In which date can we get this issue Editor SIr?

  ReplyDelete
 38. டியர் எடிட்டர்,

  நன்றி*100000000000.

  நம்பவே முடியவில்லை!!!!
  டெக்ஸை வண்ணத்தில் கண்டிடும் நெடுவருட கனவு நிஜமாகிடும் நாளொன்று அதிகபட்சமாக அடுத்த வருட ஜூலையில் 30வது ஆண்டுமலராகப் புலருமென்று நம்பியிருந்தேன். இவ்வளவு சீக்கிரமாக, அதுவும் யாருமே எதிர்பார்க்காத தருணத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு அசத்தியிருக்கிறீர்கள்!! அட்டகாசம்!!! அட்டகாசம்!!!

  கடலளவு சந்தோஷத்தோடு, கூடவே கட்டுமரங்களாய் ஓரிரு சந்தேகங்கள்:

  * ட்ரெயிலரின் மூலம் நூற்றுக்கும் அதிகமான பக்கங்களிலிருப்பது புலனாகிறது; 50 ரூபாய் விலைக்கு எப்படிக் கட்டுப்படியாகிடும்?

  * சித்திரங்களும், டெக்ஸின் புதிய தோற்றமும்(!) இதுவரை பார்க்காததாயிருக்கிறதே?! ஏனோ ஒரு மெல்லிய கிலேசம்...

  ReplyDelete
 39. நிலவொளியில் ஒரு நரபலி, முன்னட்டை படம் சூப்பர் எடிட்டர் சார். டெக்ஸ் வில்லர் வண்ணத்தில் காண ஆவலாக உள்ளேன். எப்போது எங்கள் கையில் கிடைக்கும் ? +6 என்ற உங்களின் அறிவிப்பில் இது முதல் புத்தகம் எனில் மிகுதி 5 உம் எப்போது வெளியிட உள்ளீர்கள்?

  ReplyDelete
 40. ரூ.375 ஐ நாளைக்கே அனுப்பிவிடுகிறேன்....... நம்மையும் லிஸ்ட்ல சேத்துக்கங்க சார்...... [ எல்லாம் சோம்பேறித்தனத்தின் விளைவுதான்..........]

  ReplyDelete
 41. டியர் எடிட்டர் சார்,
  ரூபா. 375 கூடுதல் சந்தா எனில் , இப்போது உங்கள் கையிருப்பில் உள்ள எனது சந்தா போதுமானதா என்று தயவு செய்து e Mail மூலம் அறியத்தரவும்.ஏனெனில் எந்தவொரு வெளியீட்டை கூட மிஸ் பண்ண எனக்கு விருப்பமில்லை . ப்ளீஸ்

  ReplyDelete
 42. நெடு நாளைய தவம் இன்று பலன் அளித்துள்ளது.
  மிகவும் நன்றி சார்.

  இனி கலரில் இருக்கும் டெக்ஸ் கதைகளை கலரிலேயே வெளியிடுங்கள் சார்.
  அதற்காக கருப்பு வெள்ளையில் வந்தால் பிடிக்காது என்று இல்லை கண்டிப்பாக அதுவும் வரவேற்கப்படும்.

  இக்கதையை நான் ஆங்கிலத்தில் "The Demons of the North" படித்துள்ளேன்.
  அதிரடி மற்றும் த்ரில்லிங் காட்சிகள் நிறைந்தது.

  தீயவர்களால் நமது குழுவினரின் கோட்டை சுற்றிவளைக்கப்படும் காட்சி ஒன்று வரும்
  அய்யோ அடுத்து என்ன நடக்குமோ என்று ஒரு தவிப்பு தோன்றியது எனக்கு.

  கண்டிப்பாக நண்பர்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

  ReplyDelete
 43. டியர் எடிட்டர்ஜீ !!!

  யாருமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் பதிவு!!! நமது இரவு கழுகார் முதன்முதலாக வண்ணத்தில் வரவிருப்பது மிகுந்த மகிழ்வூட்டும் சங்கதி.அநேகமாக நண்பர் சேலம் டெக்ஸ் விஜயராகவன் புத்தகம் வரும்வரை இரவில் தூங்கமாட்டார் என நினைக்கிறேன்.கோவை இரும்பு கையாரை பற்றி சொல்லவேண்டியதே இல்லை.சேதி தெரிந்தால் சந்தோசத்தில் எகிறி குதித்தபடியே பெங்களூருக்கு ஒரே தாவாக தாவி வந்துவிடுவார்:-)
  மறுபதிப்பில் "கார்சனின் கடந்த காலம்"மற்றும் "மரண முள்"போன்ற டாப் டெக்ஸ் கதைகளை வண்ணத்தில் வெளியிடுவீர்கள் என மற்றவர்களை போலவே அடியேனும் எதிர்பார்க்கிறேன்.குறிப்பாக இந்த வருட தீபாவளிக்கு இவ்விரு கதைகளும் வெளியிட்டால் அமர்க்களமாக இருக்கும்.காமிக்ஸ் கானுக்காக 4இதழ்கள் என்றால்,தீபாவளிக்காக 1சேர்த்து 5ஆக வெளியிடலாமே ஸார்?(எப்படி அடியேனின் "சகுனி"வேலை....?சும்மா கிடந்த வாசக நண்பர்களை "சொறிந்து"விட்டுவிட்டேன்:-)
  (சென்ற வருட தீபாவளிக்கு "த"-வில் ஆரம்பித்து "றை"-யில் முடிந்த கதை வந்ததாக ஞாபகம்.ஹிஹி!!!)

  ReplyDelete
 44. இந்த முறை திரு. மாலையப்பர் டெக்ஸை வரைந்திருக்கும் விதத்திலும், டெக்ஸின் பின்னணியிலுள்ள வானத்தை வரைந்திருக்கும் விதத்திலும் 'ஆஹா' சொல்ல வைக்கிறார். டெக்ஸின்மீது பாயும் அந்த உருவம் கொஞ்சம் அப்படி-இப்படி இருந்தாலும், டெக்ஸின் இறுக்கமான முகமும், கம்பீரமான ஸ்டைலும் அந்த அப்படி-இப்படியை பின்னுக்குத் தள்ளி ஒருவித மலைப்பை ஏற்படுத்துகின்றன!

  நாம் கேட்டதெல்லாம் கிடைத்துக்கொண்டிருக்கிறது, நண்பர்களே! இதோ டெக்ஸும் கலரில் வரவிருக்கிறது!

  அடுத்து என்ன கேட்கலாம்?...

  * ரூ.500 விலையில் லயன் 30வது ஆண்டுமலர்?
  * 'மின்னும் மரணம்' வண்ணத்தில்?
  * 'கார்ஸனின் கடந்த காலம்' வண்ணத்தில்?
  * குட்டியானதொரு 'அந்த' ஸைசில் டெக்ஸ்?
  * தீபாவளி மலர்?
  * முத்து 41வது ஆண்டுமலர்?
  * கெளபாய்களுக்கென்றே தனி புத்தகம்?

  கண்ணை மூடிக்கொண்டாவது கல்லை வீசிக்கொண்டே இருப்போம்; பழம் விழும்போது விழட்டுமே? :)

  ReplyDelete
  Replies
  1. ஆகா,உங்கள் எதிர்பார்ப்புகளை நினைத்தாலே இனிக்கிறதே...அதுவும் 'மின்னும் மரணம்' வண்ணத்தில் - பகுத் அச்சா ஹை… மெல்ல ஏறும் நமது சந்தாதாரர்கள் எண்ணிக்கை மந்திர எண்ணைத் தொட்டதும் நமக்கெல்லாம் மாதந்தோறும் சிவகாசியிலிருந்து காமிக்ஸ் அதிரடி சரவெடிகள் வரவிருப்பதாக ஸ்டீல்கிளாவின் பட்சி என் கனவில் சொன்னது…

   Delete
  2. //

   * ரூ.500 விலையில் லயன் 30வது ஆண்டுமலர்?
   * 'மின்னும் மரணம்' வண்ணத்தில்?
   * 'கார்ஸனின் கடந்த காலம்' வண்ணத்தில்?
   * குட்டியானதொரு 'அந்த' ஸைசில் டெக்ஸ்?
   * தீபாவளி மலர்?
   * முத்து 41வது ஆண்டுமலர்?
   * கெளபாய்களுக்கென்றே தனி புத்தகம்

   //

   நண்பரது வேண்டுகோள்கள் அனைத்தும் (காமிக்ஸ் படிக்கும், படிக்க போகும்) பொது மக்களின் நன்மையை மனதில் கொண்டு எழுப்பப்பட்டு உள்ளதாலும், இதில் வேறு எந்த தனிப்பட்ட உள்நோக்கமும் இல்லாதாலும், நண்பர் விஜயின் அனைத்து கோரிக்கைகளையும் முழு மனதாக நமது காமிக்ஸ் சங்கம் ஏற்று கொண்டு, உரிய காலத்திற்குள் இவற்றை பரிசீலனை செய்யுமாறு ஆசிரியர் திரு. விஜயன் அவர்களை கேட்டு கொள்கிறது.   Delete
 45. ஒரு சிறிய பிரயாணத்தினால் உடனடியாக கமெண்ட் போடா முடியல பேச வார்த்தைகளே இல்லை மிக்க சந்தோசம் நான் இங்கே சந்தோஷ மிகுதியில் நடனமாடிக்கொண்டு இருக்கிறேன்.

  Awesome wonderfull super... I am very happy, I was thinking when a chota like me is thinking this much you should be already doing this.. but its very much worth the suspense and surprise till now..

  Shriram

  ReplyDelete
  Replies
  1. So no embarassment in Comic Con for Tex as there is a super issue...

   Delete
 46. அட அட அடா ! டெக்ஸ் கலரில் கலக்கலாக உள்ளது. அட்டைப்படமும் அட்டகாசம். 50 ரூபாய் க்கு கலரில் 110 பக்கத்திற்கும் மேலாகவா? நம்ப முடியவில்லை.
  உண்மையிலேயே இது ஒரு இன்ப அதிர்ச்சி தான்.

  ReplyDelete
 47. அட்டை படம் பின்னி பெடலெடுக்கிறது! பின்னட்டை கட்டம் கட்டினாலும் அருமை! வண்ணத்தில் டெக்ஸ், மீண்டும் கனவுலகம் உயிர் பெறுகிறது, சந்தோசத்தை விவரிக்கவோ, கொண்டாடவோ வார்த்தைகள் போதாது!
  நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஸாஆஆஆஆஆஆஆஆஆ............ர்

  ReplyDelete
  Replies
  1. தமிழில் லோகோ ,the king of the wild west, நிலவொளியில் ஒரு நர பலி என்னவொரு அட்டகாசமான தலைப்பு, அனைத்தும் அருமை ! அடுத்த சர்ப்ரைஸ் என்னவோ ! விஜய் இப்போதே நமது அலுவலகம் அருகே சுற்றியலைவதாய் கேள்வி !

   Delete
  2. தம்பி தண்ணியிலிருந்து வெளியே வந்துட்டியா

   Delete
 48. ஜூன் 1 அன்று நான்கு புத்தகங்களில் எதை முதலில் படிப்பது என்ற குழப்பத்தை இப்பதிவு தீர்த்து வைத்தது.மாதாந்தோறும் நான்கு இதழ்கள் வெளிவரும் நாள் அதிக தொலைவில் இல்லை சார்...

  ReplyDelete
 49. இனி சொல்லிவிட்டுச் செய்வதைவிட செய்துவிட்டே சொல்வது என்று முன்பொருமுறை ஆசிரியர் கூறியது இத்தகைய இன்ப அதிர்ச்சிகளின் இனிய ஆரம்பம் என்பது இம்மாதத்திலிருந்து உறுதியாகிறது... அப்படியே குடோனில் ஸ்டாக் வைக்கப் போவதாகக் கூறிய வண்ண மறுபதிப்புகள் ரெடியானதும் மூன்று மாதமொருமுறை கூறினால் கொரியர் கூட வேணாம், நேரிலேயே வந்து அள்ளிக் கொள்வோமே…

  ReplyDelete
 50. கலரில் டெக்ஸ்! நம்பமுடியவில்லை யஹூஊஊஊஊ ......அட்ராசக்க.... அட்ராசக்கன்னு நம்ம தலைவர் போட்டு தாக்கிட்டாருப்பா....அடடா என்ன ஒரு சந்தோசமான விஷயம்.....அட்டைப்படத்தில் டெக்ஸ் நல்ல கம்பீரம் ஆனால் டெக்ஸ்ன் மீது பாயும் அந்த உருவத்தின் அனாடமி மிஸ்ஸிங். ஒரிஜினலில் உள்ள பறக்கும் ஸ்டைலில் உள்ள படமும் நாம் வரைந்த பறக்கும் ஸ்டைலில் உள்ள படத்தையும் கம்பேர் பண்ணினால்....ஹும்ம்ம்ம்ம்ம்ம் .......நாம் இன்னும்...நிறைய......

  ReplyDelete
 51. இன்று தான் இந்த பதிவை படிக்கிறேன். இன்று எனது திருமணநாளும்கூட, எனவே இதனை நமது ச்கோதரர் விஜயன் அவர்கள் அளித்த பரிசாக எடுத்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நண்பருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் !

   Delete
  2. வாழ்த்துக்கள் நண்பரே! ஆனாலும், கல்யாண நாளையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் உங்கள் தைரியத்தையும் பாராட்டியே ஆகவேண்டும்!

   Delete
  3. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் !

   Delete
  4. HAPPY WEDDING ANNIVERSARY TO MR AND MRS FERNANDEZ!

   Delete
  5. திருமண நல்நாள் வாழ்த்துக்கள் !

   Delete
 52. நமது ஓவியர் மலையப்பன் சச்சின் மாதிரி, ஒரு முறை டக் அடித்ததாக விமர்சனம் வந்தால் அடுத்த முறை செஞ்சுரி அடித்துவிடுகிறார்

  ReplyDelete
  Replies
  1. இந்த அட்டை படத்தை பார்த்து கொண்டே இருங்கள் வண்ணக்கலவைகள் என்ன ஒரு ஈர்ப்பு !
   சிறுவர்களை ஈர்க்க இதுவே சரியான வண்ணம் !

   Delete
 53. டெக்ஸ் கலர்ல ...சூப்பர்ரப்ப்பு !!!!

  ReplyDelete
 54. எடிட்டர் சாருக்கு,

  டெக்ஸை கலரில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கார்ஸனின் கடந்த காலத்தையும் கலரில் கொண்டு வர முயற்சிக்கவும்.

  அட்டைப்படம் அருமை.

  ஒரு பிரச்னை என்னவென்றால், கலரில் படித்து பழகி விட்டால் black and white படிக்க பிடிக்கவில்லை. அதனால் எல்லா இதழ்களையும் இனிமேல் கலரிலேயே வெளியிட முயற்சி செய்யவும்.

  ஒரு கவித:

  வோ வோ வோ
  வோ வோ வோ

  அழுக்கு மூஞ்சி டைகரு
  தொப்பையாரு டாக் புள்ளு
  லூக்கு ஜாலி ஜம்பரு
  நீங்க மட்டுமா கலரில
  வந்துடேன்டா வில்லரு
  தெரிக்கபோறேன்டா வானவில்ல

  வோ வோ வோ
  வோ வோ வோ

  ReplyDelete
 55. எடிட்டர் சார்,
  அடுத்த பதிவு வெள்ளிக்கிழமைதான் என்று நினைத்த எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டீர்கள்.! 'இந்திய காமிக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக' டெக்ஸ் வண்ணத்தில் வருவது மகிழ்ச்சி :-)

  நான் +6க்கு முன்பே subscribe செய்துவிட்டேன். ஆனால், இதை courier-ல் அனுப்பாமல் காமிக் கானில் நேரடியாக பெற்றுக்கொள்ள ஆவண செய்வீர்களா, please?

  ReplyDelete
 56. ஆங்.. சொல்ல மறந்து விட்டேன்..
  காமிக் கானுக்காக பெங்களுரு வருகை தரப்போகும் நண்பர்கள் கவனத்திற்கு..

  நீங்கள் பஸ் மூலம் வருவதாக இருந்தால், PayTM என்று ஒரு bus reservation site இருக்கிறது. (Redbus போல) அவர்களது Facebook பக்கத்தை 'Share' செய்தால், 150 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். தேவைப்படும் நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

  ReplyDelete
 57. டியர் எடிட்டர்,

  எனது புது boss உடனான 11:45 AM முதல் மீட்டிங்கை தள்ளி வைத்துவிட்டு பிரத்யோகமாக இங்கே கமெண்ட்ஸ் இடுகிறேன் - நம்பினால் நம்புங்கள் :-)

  - Tex கலரில் அருமை
  - அட்டைப் படம் - நம்ம லயன் படம் - திரு. மாலையப்பர் பள்ளி நாட்களுக்கு கொண்டு சென்று விட்டார்

  இதை எல்லாம் விட என்னை ஆச்சர்யப்படுத்தியது 50 ரூபாய்க்கு 110 பக்கங்கள். பதிப்புலகில் அங்கே-இங்கே கொஞ்சம் ஜல்லியடித்துக் கொண்டிருப்பதால் இதன் சிரமங்கள் நான் அறிவேன். That is a shocking sweet surprise.

  எனவே இந்த ஜூனில் 240 ரூபாய்க்கு 4 புத்தகங்கள் 5 கதைகள் - அவற்றுள் மூன்று முழுவண்ணத்தில். இம்முயற்சி மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

  இப்போ தீபாவளி ஸ்பெஷல்-க்கு தாராளமாய் announce பண்ணலாம் :-)

  அப்புறம் லயன் 30வது annual - தலையணை சைசில் (ஈரோடு காமிக்ஸ் கிளவுட் மன்னிப்பாராக​) - 500 ரூபாயில் - 4 டெக்ஸ் 4 டைகர் 2 லக்கி லுக் தாங்கி ...டொக் டொக் டொக் ... டுமீல் !

  ReplyDelete
  Replies
  1. @ காமிக் லவர்

   வெள்ளையர்கள் மையல் கொள்ளும் பச்சைநிறத் தாள்கள் எம்மிடம் நிறையவே உள்ளன; எண்ணிக்கையில் ஐநூறென்ன? இருப்பதையெல்லாம் அப்படியே கொடுத்துவிடவும் இந்த ப்ளாக் க்ளவுட் சம்மதிக்கிறான். ஈடிணையற்ற இரவுக்கழுகின் வீரம்செறித்த கதைகூறும் தொகுப்புத்தாள்களை வண்ணத்திலோ, கருப்புவெள்ளையிலோ வெளியிடுவதே வெள்ளையருக்கும் எங்களுக்குமான சமரசத்தை உறுதிசெய்திடும்!

   இரவுக்கழுகார் வாழ்க!

   Delete
  2. @ ஸ்டீல்

   நாங்கள் பின்னுவதில் அவ்வப்போது பூ வைத்துச் செல்வதுதானே வெள்ளையர்களின் வாடிக்கை?!

   என்றாவது ஒருநாள் வஞ்சம் தீர்த்திடுவோம்!

   Delete
  3. // நடத்துங்கள் காத்திருக்கிறோம் //

   நாங்கள் என்ன நாடகக் குழுவா நடத்திவருகிறோம்?

   வெள்ளையர் ஸ்டீலின் பிதற்றல் இந்த ப்ளாக் க்ளவுடை சினம் கொள்ளச் செய்கிறது!

   (மண்டைத்தொலி நலமா?)

   Delete
  4. உலகமே நாடக மேடை ....அதில் நடிகர்கள்தான ஐயா நீங்களும்..

   Delete
 58. பாலில் இருந்து பால்கோவா செய்யலாம் ...........
  ஆனால்
  ரசத்திலிருந்து ரசகுல்லா செய்ய முடியுமா ............

  செஞ்சு வச்சுடார்யா விஜயன் செஞ்சு வச்சுடார்யா .....
  50 க்கு 110

  ReplyDelete
  Replies
  1. மந்திரி. நீங்கமட்டுமில்லே. பலர் ஒண்ண சரியா கவனிக்கல. பக்கம் 110 உடன் கதை முடியல. ஆகவே, இன்னும் சலி பக்கங்கள் இருக்கு!

   Delete
  2. எழுத்துக்களை பொடி பொடியாய் இருந்தால் கூட விட மாடீர்கள் போல உள்ளதே .............அப்பிடியே நடக்கட்டும்

   Delete
 59. Super news vijayanSir Thanks tex in Color

  ReplyDelete

 60. கண்ணா லட்டு திங்க ஆசையா...
  ஆமா...
  இந்தா ...பூத வேட்டை ...

  கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா...
  ஆமா... ஆமா...
  இந்தா ...நள்ளிரவில் ஒரு நரபலி...
  ஆசிரியருக்கு திருஸ்டி சுத்தி பொடுங்கப்பா..
  ஜுன் மாதம் டெக்ஸ் மாதம்.....
  இனிமேல் ஒவ்வொரு வருசமும் ஜுன் மாதம் எங்க தலைவர் டெக்ஸுகெ..

  ReplyDelete
 61. விஜய் கனவில் போய் இத்தாலிக்கு போவென் என்று சொன்னதால் இந்த மாதமே.. இரண்டு டெக்ஸ் புத்தகங்கள் அதுவும் ஒன்று colourல் வந்துள்ளது...

  ReplyDelete
 62. ஜுன் மாதம் school திறக்கும்.(புது வருசம்).அதுபோல நமது இதழில் ஜுன் மாதம்(ஒவ்வொரு
  வருசம்) டெக்ஸ் வருவார்...

  ReplyDelete
 63. ஹ்ம்ம் ஒரு கறுப்பு வெள்ளை புத்தகத்துக்கே தாங்காது..
  ஜுனில் ரெண்டு புத்தகம் வேற...சொக்கா comic cona propone பண்ண கூடதா இந்த வாரமே..

  ReplyDelete
 64. This comment has been removed by the author.

  ReplyDelete
 65. 'நிலவொளியில் ஒரு நரபலி' இதழ் சிகப்பாய் ஒரு சொப்பனம் 'சைசில்' வரவிருப்பதாக தோன்றுகிறது. So பக்கங்கள் அதிகமாக இருப்பது இயல்பே எனினும் கலரில் ஒரு களேபரம் தான்!

  ReplyDelete
 66. ஒரு மாதத்தில் நான்குக்கும் மேற்பட்ட இதழ்கள் வருவது எனக்கு 1988ம் (முத்து, லயன், மினிலயன், திகில் காமிக்ஸ்) ஆண்டினை நினைவுபடுத்தினது. உங்கள் அயராத முயற்சிக்கு எங்கள் நன்றிகள், விஜயன் சார்!

  டெக்ஸ் வில்லரின் கதை அதுவும் கார்சன், வில்லர் உரையாடல் நகைச்சுவைகளோடு முழு வண்ணத்தில் வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. பழிக்கு பழி கதையில் (லயன் கோடை மலர் 87) ஆரம்பித்த சிவகாசி பட்டாசல்லவா அந்த நகைச்சுவை உரையாடல்கள்?

  அட்டைபடம் அற்புதமாக வரையப்பட்டுள்ளது. எங்களது அனைவரின் பாராட்டுகளையும் ஓவியர் மாலையப்பனிடம் சேர்த்து விடுங்கள். போன டெக்ஸ் அட்டைபடத்தில் ஓவியம் மற்றும் proportion ல் என் கண்களுக்கு தவறேதும் தென்படவில்லை, ஆனால் சிறப்பான அந்த artwork யை கம்ப்யூட்டரில் மிக்ஸ் செய்யும் போது போட்டோவை அப்படியே போட்டு விடாமல், அதனையும் ஓவியம் போன்றே effect கொடுத்து, கலர் correction செய்து இருப்பின் அமர்க்களமாக வந்திருக்கும். (பாலைவனத்தில் கானகத்தின் மரங்கள் வந்தது எப்படியென்றும் தெரியவில்லை) அனைத்திற்கும் நேரமின்மையும், தர மதிப்பீடு செய்ய ஆளில்லாமையும் காரணம் என கருதுகிறேன்.

  இரும்புக்கை எத்தனின் இறுதி பாகங்கள் யதார்த்தமாக, அற்புதமாக இருந்தது. மொழிபெயர்ப்பு உயிரோட்டமாக இருந்தது. அட்டைப்படமும் ஓகே தான்.(And I dont want to comment about the inner pages as it has been analsyed DEEPLY by our friends) இந்த கதை டெக்ஸ் வில்லரின் பழி வாங்கும் பாவையை நினைவு படுத்தினது. ரெண்டு கதைகளில் வரும் கர்னல் அர்லிங்க்டன், கர்னல் அலிஸ்டர் இருவரும் ஒருவரே தானா?. தோற்றமும் திமிரும் ஒன்றாகவே இருக்கிறது. சரிதானா, நண்பர்களே?

  ReplyDelete
 67. விஜயன் சார், டெக்ஸ் கலரில் பார்க்க சந்தோசமாக உள்ளது. ஆனால் ஓவியம்கள் கருப்பு வெள்ளையில் உள்ளது போல் வசீகரமாக இல்லை; ஓவியரை பொறுத்து இவை மாறும் போல் உள்ளது.

  ReplyDelete
 68. Super & surprise for my eyes too.ஆனால் Rs.50 இல் அதிக பக்கம் 110+ ? கொண்ட இதழ் முழுவண்ணத்தில் என்பது சைஸ் குறித்து கவலை தருகிறது.

  Comic con எட்டா தூரத்தில் உள்ளது உண்மையாக வருத்தமாக உள்ளது.என்றாவது 1]சிவகாசி வர வேண்டும்.2]வந்து வாங்காத எல்லா காமிக்ஸும் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இரண்டாவது இதே Comic con புண்ணியத்தால் பகல்கனவாக முடிந்து விட்டது.எனவே அடுத்த சில வருடங்களில் ஒரு முறையாவது Comic con வரவேண்டும் என்பது என் புதிய இலக்கு.

  ReplyDelete
 69. Why this book and previous one (bootha veetai) both not listed in ebay listing?

  ReplyDelete
  Replies
  1. புத்தகங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை நண்பரே. அடுத்தமாதம்தான் வருகின்றன. கொஞ்ச நாள் காத்திருங்கள்.

   Delete
 70. ஒரே கல்லுல 4 மாங்காவா அல்லது 5 மாங்காவா?!

  ReplyDelete
 71. விஜயன் சார்................
  COMIC CON னுக்கு .........
  ''டெக்ஸ்'' வேஷம் கட்டி வந்தா ''டெக்ஸ் வில்லர்'' ஆகிடலாம்............
  ஆனால்...............
  ''புலி'' வேஷம் கட்டி வந்தால் ''டைகர்'' ஆக முடியுமா ..............?
  திகில் காமிக்ஸ் கேட்போர் சங்கம் .....
  (அதான்பா .....BLACK and WHITE ல வந்த COMICS திடீர்னு காணமல் போச்சே.......)

  ReplyDelete
 72. This comment has been removed by the author.

  ReplyDelete
 73. விஜயன் சார், நமது ஜூன் மாத இதழ்கள் காமிக்ஸ்-கான் முன் கொரியர் கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் 4 புத்தகத்தையும் காமிக்ஸ்-கானிலும் ஒரு செட் வாங்கி விட வேண்டியதுதான் :-)

  காமிக்ஸ்-கான்இல் வெளி ஈட உள்ள 5வது இதழ் பற்றி எப்ப சொல்ல போறீங்க :-) ஆவலுடன் காத்திருக்கிறோம் :-)

  இப்பவே காமிக்ஸ்-கான் ஜுரம் ஜாஸ்தி ஆகிவிட்டது, இன்னும் 10 நாள எப்படி சமாளிப்பதுன்னு தெரியவில்லை! நமது பழைய புத்தகத்த எடுத்து அடுத்த 10 நாள் படிச்சா தாக்கு பிடிக்கலாம் என வீட்டுல சொன்னாங்க :-)

  ReplyDelete
 74. மற்றும் ஒரு புத்தகம் 6+ லிஸ்டில் காமிக்ஸ்-கானில் இருந்து வர போகுது!

  நமது ஆசிரியர் இன்னும் 5 புத்தகம்களை (from 6+ issue)அடுத்த 6 மாதம்களுக்குள் வெளி இட இருந்தால், நமக்கு அடுத்த 6 மாதம்களுக்கு மாதம் 2 புத்தகம் வரும் என நம்புகிறேன் :-)

  ReplyDelete
 75. 50 ரூபாயில் வண்ணத்தில் டெக்ஸ் வில்லரா!

  எத்தனை பக்கம் சார்?

  சின்னக்கதையா இருக்குமோ...

  அல்லது பெரிய கதையை 2 அல்லது 3 பாகமா பிரிச்சு போடுறீங்களா?

  ReplyDelete
 76. //19 cm x 12.5 cm (முந்தைய லயன் சைசில் - ஆர்ட் பேப்பரில் ...வண்ணத்தில்...) //

  "சிகப்பாய் ஒரு சொப்பனம்" புத்தக சைஸ் என்று நினைக்கிறேன்.

  ஆர்ட் பேப்பர் என்பதால் 114 அல்லது 116 பக்கங்களில் கனமாக இருக்கும்.
  - தலைவாங்கி குரங்கு மறுபதிப்புக்கு உபயோகித்த பேப்பர் - கலரில் - என்பது என்னோட எதிர்பார்ப்பு. :)

  ReplyDelete
  Replies
  1. அட்டகாசமாக இருக்கும்!
   ஆசிரியர் மீண்டும் அதிரடியில் இறங்கி விட்டார்!
   நிச்சயம் அதிக பக்கங்கள் விரும்புவோருக்கு வரப்ரசாதம்!
   ஆனால் இந்த பரீட்சையை டெக்ஸ்சுக்கு மட்டும் வைத்து கொள்ளவேண்டும்!
   சிகப்பாய் சிம்ம சொப்பனம் 14 X 21.5
   Delete

   Delete
 77. tomorrow saturday ..next sat..comic con...Jolly Jolly..

  ReplyDelete
 78. ......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

  ReplyDelete
 79. டெக்ஸ் கலர்ல வர்ரது நடக்காத சங்கதிங்கறமாதிர முன்னாடி சொல்லியிருந்தீங்க. இப்ப திடீர்னு கலர்ல கொண்டுவந்துட்டீங்க. இதேபோல இன்னும் யாரெல்லாம் வர வாய்ப்பிருக்குனு சொல்லிட்டா நாங்களும் ரெடியா இருப்போமே சார்?

  ReplyDelete
 80. இனிமே நீங்க, 'அது நடக்காது'னு எதப்பத்தியாவது சொன்னா, அது நடக்கப்போகுதுனு நாங்க அர்த்தம் எடுத்துக்கலாமா சார்?

  ReplyDelete
 81. அடுத்ததா நீங்க அறிமுகப்படுத்தப்போற ஹீரோ யாரா இருக்கும் என்று மண்டைய போட்டு குழப்பிட்டிருக்காங்க நம்ம நண்பர்களெல்லாம். அந்த சஸ்பென்ஸ் உடைக்கப்படுகிற நாள் எது சார்?

  ReplyDelete
 82. Comment Num 150:
  Dear Edit,

  இந்த டெக்ஸ் வில்லர் கதை, கறுப்பு-வெள்ளைக்காக வரையப்பட்டு, அப்புறம் கம்யூட்டர்ல கலர் பண்ணியது மாதிரி தெரியுதே? ஏன்னா, கறுப்பு-வெள்ளைக்கு ஏற்றமாதிரி நிறைய கறுப்பு கலர் பயன்படுத்தியிருக்கிறாங்க.

  நீங்க முன்ன ஒரு தடவை சொன்னவிடயம் 'கறுப்பு-வெள்ளை'யில் ஒரிஜினலாக தயாரான கதைகளை கலருக்கு மாற்றுவது நன்றாக இராது. அது கறுப்பு-வெள்ளைக்கு' ஏற்ப வரையப்பட்டிருப்பதால், கறுப்பு வர்ணம் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும்' என்று.

  இது அப்படி ஒரிஜினலாகவே கறுப்பு-வெள்ளை கதைக்காக தயாரானது என்றால், இதுபோலவே மற்றைய கறுப்பு-வெள்ளை கதைகளையும் கலருக்கு மாற்ற முடியும்தானே சார்?

  ReplyDelete
 83. எல்லா டெக்ஸ்கதையும் வர்ணத்தில் காண ஆசை எல்லோருக்கும் நிச்சயம் ஆசை தான்.இருபினும் நண்பர்களே டெக்ஸ் வில்லர் கதைகளில் மிக சில வண்ணத்தில் வந்துள்ளன.அதில் ஒன்று தான் இது .
  அது மட்டுமல்ல மிக முக்கியமான ஓர் இதழும் கூட.அது என்ன என்பதை சார் எமக்கு சர்ப்ரைசாக புதிய பதிவுகளில் சொல்ல கூடும்.

  ReplyDelete
 84. பல நண்பர்கள் கோருவது போல் சொந்தமாக வண்ணம் தீட்டி டெக்ஸ் மட்டுமல்ல எல்லா க-வெ கதைகளும் கலரில் வந்தால் குறிப்பாக டைகருடன் ஒரே காலகட்டத்தில் அறிமுகமான ராபின்.

  ReplyDelete
 85. please , any body tell me how to type in tamil by using a english key board.

  ReplyDelete
 86. ஒருபுறம் செவ்விந்தியர்களின் உயிர் காக்கும் தன்னிகரற்ற தலைவனாய் டெக்ஸ்வில்லர் கலக்கிக்கொண்டிருக்க, மறுபுறம் பெரும் போரிலிருந்து செவ்விந்தியர்களைக் காப்பதாய் வாக்களித்துவிட்டு ஜெனரல் அலிஸ்டரின் பதவிவெறி உத்தரவுகளுக்கு அடிபணிந்து நூற்றுக்கணக்கான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்த கேப்டன் டைகரின் 'கடமை உணர்வு' குறித்து செவ்விந்திய தலைவர் ஒருவரிடம்  ஈரோடு காமிக்ஸ்  க்ளப் சார்பாக திரு. ஸ்டாலின் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது அச்செவ்விந்தியத் தலைவர் அளித்த பேட்டியிலிருந்து...

  " அமைதி உடன்படிக்கை ஏற்பட என்னாலானதைச் செய்வேனென்று வாக்களித்துவிட்டு, பெரும் வெள்ளையர் படைக்குத் தலைமை தாங்கிவந்த தங்கத்தலையனுடன் கூட்டுச்சேர்ந்து எம் கூட்டத்தின் பெரும்பாலான வீரர்களைக் கொன்று குவித்த 'உடைந்த மூக்கரின்' மண்டைத்தொலியைக் கொண்டு எம் கூடாரத்தின் கொடிமரத்தை அலங்கரிக்கும்வரை ஒரு கணமும் துயில் கொண்டிடமாட்டோம்! இது இரவுக்கழுகார் மீது ஆணை!"

  இதுகுறித்து கருத்துக் கேட்டிட கேப்டன் டைகரை நாம் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவர் பதிலேதும் கூற மறுத்துவிட்டார்!

  த்சொ! ;)

  ReplyDelete
  Replies
  1. டைகரை பிடித்து வரும் திறமையுள்ள, திரானியுள்ள வீரர்களுக்கு அந்த மண்டைத்தொழி அவர்களுக்கே பரிசலிக்கப்படும் என மேகத்தின் சார்பாகவும் கேட்டு கொண்டார்! வீரர்களே விரைந்து வாருங்கள்!

   Delete
  2. டெக்ஸிடம் முறையிடுங்களேன், இதுதானே காலம் காலமாக கடந்து, சாரி நடந்து வருகிறது!

   Delete
  3. //இதுகுறித்து கருத்துக் கேட்டிட கேப்டன் டைகரை நாம் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவர் பதிலேதும் கூற மறுத்துவிட்டார்!//

   புகை சமிக்கை அனுப்பி பார்க்கல்லமே :)

   Delete
 87. COMIC CON STALLS LINK:
  Folks here are Comic Con stall details:

  http://www.bangalorecomiccon.com/exhibitors.html

  Lion Comics - B10
  ACK - A1 to A3
  Cinebook - A7
  DC (agency) - A35
  Marvel (agency) - A47-A48

  See you all there :-) :-)

  ReplyDelete
 88. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு காமிக்ஸ் படிக்கும் வாய்ப்பு நேற்றுதான் கிடைத்தது! டைகர் ஸ்பெஷல் & இரத்தத்தடம் - இரண்டு புத்தகங்களையும் ஒருசேர படித்து விட்டேன்! ரெட் க்ளவுட் & ஸிட்டிங் புல் என இரண்டு ஹீரோக்கள்; ஆனால் வில்லன்கள் மட்டும் மூன்று பேர் - டைகரையும் சேர்த்து!!! :) யதார்த்தமான முடிவு என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும், லாஜிக் ரொம்பவே உதைக்கிறது. டைகர் மட்டும் எந்த நிலையிலும் பல யுக்திகள் செய்து தப்பி விடுகிறார், அலிஸ்டருக்கு ஆதரவாக பல தந்திரங்கள் செய்கிறார் - ஆனால் தனது மூளையை செவ்விந்தியர்களை காக்க மட்டும் உபயோகிக்க மாட்டேன் என்கிறார்! டிவி சீரியல்களில் வருவதைப் போல 'இவருக்கு பதில் இவர்' என்று நாலாவது பாகத்தில் டெக்ஸை உள்ளே நுழைத்திருந்தால் கதையே மாறியிருக்கும்! ;)

  ReplyDelete
  Replies
  1. //டைகர் மட்டும் எந்த நிலையிலும் பல யுக்திகள் செய்து தப்பி விடுகிறார், அலிஸ்டருக்கு ஆதரவாக பல தந்திரங்கள் செய்கிறார் - ஆனால் தனது மூளையை செவ்விந்தியர்களை காக்க மட்டும் உபயோகிக்க மாட்டேன் என்கிறார்!//
   உண்மை! படுபாவி அலிஸ்டரை நீருக்குள் மூழ்க விட்டிருக்கலாம்! தன இனம் என்ற உள்ளனர்வு தடுத்திருக்கலாமோ!

   Delete
  2. டைகர் இங்கே நம்மிடையே ஜீரோவாகி இருக்கலாம்! வெள்ளையரிடையே நிச்சயம் ஹீரோவாகி இருப்பாரே!

   Delete
 89. "டிவி சீரியல்களில் வருவதைப் போல 'இவருக்கு பதில் இவர்' என்று நாலாவது பாகத்தில் டெக்ஸை உள்ளே நுழைத்திருந்தால் கதையே மாறியிருக்கும்!;"
  :)இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா?

  ReplyDelete
 90. ராணுவத்தில் கீழ்ப்படியாமை என்பது கடுமையான குற்றமாகும்.

  அலிஸ்டர் செவ்விந்தியக் குடியிருப்பு மீது வெறியுடன் பாய்ந்த போது அதை தடுக்க டைகர் தன்னால் முடிந்தவரை போராடுகிறாரே,

  அலிஸ்டரை காப்பாற்றும் கட்டத்தில் டைகரின் தனித்தன்மை வெளிப்படுகிறது.

  ஒரு மனிதன் எவ்ளவுதான் கொடியவனாக இருந்தாலும் நம்மால் முடியும் என்றால் அவன் உயிரை காப்பாற்றாமல் இருப்போமா?

  #புலி புலிதான்
  :-)

  ReplyDelete
 91. அன்புள்ள ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு,

  வண்ணத்தில் டெக்ஸ் - முதன் முதலாக காமிக்ஸ் அறிமுகமானபோது அடைந்த சந்தோசம் இப்போது இந்தப் பதிவைப் பார்த்ததும்.

  என்னை லயன் காமிக்சிற்கு அடிமைப்படுத்திய பெருமை நம்முடைய சூப்பர் கௌ பாய் டெக்ஸ் - யே சேரும். நான் படித்த முதல் லயன் - டெக்ஸ் - ன் " இரத்த வெறியர்கள் ". அது வரை நான் படித்து வந்தது ராணி காமிக்ஸ் மட்டுமே. ராணி காமிக்ஸை மட்டுமே படித்து வந்திருந்தேன் என்றால் என்றைக்கோ இந்தப் பழக்கத்தை விட்டிருப்பேன். என் அதிர்ஷ்டம் லயன் குருப் இதழ்களும் பூந்தளிர், வாண்டுமாமாவின் சித்திர கதைகளும் எனக்கு அறிமுகமாயின. அதுவே காமிக்ஸ் மீது இன்றளவும் காதல் கொள்ள வைத்துள்ளது.

  டெக்ஸ் இன் அனைத்து இதழ்களுமே மனம் கவர்ந்தவை. அவற்றில்
  பழி வாங்கும் பாவை, டிராகன் நகரம், பலி வாங்கும் புயல், இரத்த வெறியர்கள், கார்சனின் கடந்த காலம் இவற்றை தரமாக மறுபதிப்பு (இயன்றால் வண்ணத்தில்) செய்வீர்கள் என்றால் மிக மகிழ்வேன்.

  ReplyDelete
 92. பழனியின் பேருந்து நிலையத்தின் உள்ளே clock room அருகிலிருக்கும் குமுதம் புத்தக கடையில் நமது சமிபத்திய இதழ்கள் அனைத்தும் கிடைக்கின்றன . வில்லன்னுக்கொரு வேலி ,துரத்தும் தலைவிதி ,ஹாட் அண்ட் கூல் ஸ்பெஷல் ,டைகர் ஸ்பெஷல் வாங்கினேன் . NBS சும் உள்ளது . nbs முடிகின்ற தருவாயில் இருப்பதாக கடைக்காரர் கூறினார் . காமிக்ஸ் எப்படிங்க போகுது என்று கடைக்காரரிடம் விசாரித்ததற்கு அவர் முக மலர்ச்சியுடன் ரொம்ப நல்லா போகுதுங்க திருப்பூரிலிருந்தெல்லாம் வந்து வாங்கி செல்கின்றார்கள் என்று கூறினார் .

  ReplyDelete
  Replies
  1. எங்க நண்பரே ரொம்ப நாளா காணோமே !
   தங்கள் வரவு நல்வரவாகுக !

   Delete
  2. // திருப்பூரிலிருந்தெல்லாம் வந்து வாங்கிச்செல்கின்றனர் என்று கூறினார் //

   நம்ம ப்ளூபெர்ரியின் வேலையாகத்தானிருக்கும்! ;)

   Delete
  3. நான் அவன் இல்லை நண்பரே :)

   // " அமைதி உடன்படிக்கை ஏற்பட என்னாலானதைச் செய்வேனென்று வாக்களித்துவிட்டு, பெரும் வெள்ளையர் படைக்குத் தலைமை தாங்கிவந்த தங்கத்தலையனுடன் கூட்டுச்சேர்ந்து எம் கூட்டத்தின் பெரும்பாலான வீரர்களைக் கொன்று குவித்த 'உடைந்த மூக்கரின்' மண்டைத்தொலியைக் கொண்டு எம் கூடாரத்தின் கொடிமரத்தை அலங்கரிக்கும்வரை ஒரு கணமும் துயில் கொண்டிடமாட்டோம்! இது இரவுக்கழுகார் மீது ஆணை!" //

   WHY திஸ் கொலைவெறி ?

   Delete
 93. // பெரும் போரிலிருந்து செவ்விந்தியர்களைக் காப்பதாய் வாக்களித்துவிட்டு ஜெனரல் அலிஸ்டரின் பதவிவெறி உத்தரவுகளுக்கு அடிபணிந்து நூற்றுக்கணக்கான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்த கேப்டன் டைகரின் 'கடமை உணர்வு' குறித்து//

  டைகரும் ஜெனரல் டாட்ஜ் ம் சேர்ந்து வாக்களித்த போது அலிஸ்டரின் குறுக்கீடு எதிர்பார்க்கப்படவில்லை!

  அலிஸ்டரால் கதையின் போக்கே திசை திரும்பியது...

  இங்கே டைகர் உயரதிகாரியின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய வேண்டிய நிலை.

  காற்றில் கரைந்த கூட்டம் கதையில் [சிறையிலிருந்து தப்பியோடிய] சுதந்திர டைகர் செவ்விந்தியர்களுக்கு தளபதியாகவே மாறி விடுகிறாரே!

  பின்னொரு நாளில் அலிஸ்டர் டைகரிடம் சொல்வார் [ புயல் தேடிய புதையல்] "சியோக்ஸ்களுக்கு எதிராக நான் எடுத்த நடவடிக்கையில் நீ குறுக்கிட்டதால் நான் வெற்றி வாய்ப்பை இழந்தது மட்டுமின்றி டாட்ஜ் க்ராண்ட் போன்ற உயரதிகாரிகளின் பார்வையில் மதிப்பிழந்து போனேன்" என்று.

  டைகரால் பெரும் யுத்தமொன்று தவிர்க்கப்பட்டுள்ளது...

  ReplyDelete
 94. பழைய அட்டைப்படங்களின் அணிவகுப்பை கண்டு ரசியுங்கள் நண்பர்களே!

  இவை அனைத்தும் இணைய தளங்களில் இருந்து திரட்டப்பட்டவை.

  http://m.facebook.com/media/set/?set=o.104018776435256&type=1&s=96&refid=56

  ReplyDelete
 95. இன்னும் ஐந்து நாட்கள்தாம் உள்ளன, இரண்டு அல்லது அதற்க்கு மேல் உள்ள புத்தகங்கள் குறித்து பதிவுகள் வரவேண்டுமே,சீக்கிரம் சார் ..... அடுத்த பதிவில் டேஞ்சர் வருவாரா?

  ReplyDelete
  Replies
  1. நண்பரே ..இன்னும் டயபாலிக் கதை ஒன்று மட்டுமே வர வேண்டும் .

   Delete
 96. சனிக்கிழமை எங்கள் கரங்களிலும்(comic con வர இயலாத பரிதாபத்திற்குரியவர்கள்) தவழுமா ?

  ReplyDelete
  Replies
  1. கொரியர் அலுவலகத்தில் அனைவரும் நலமா, ஸ்டீல் க்ளா? :D

   Delete
  2. ஈரோடு விஜய்,

   கோயம்பத்தூரில் கொரியர்கள் உண்டா? அவர்களுக்கு தனி அலுவலகங்கள் உண்டா? ஓ..

   இல்ல ஸ்டீல் க்ளா கொரியா சென்று வந்தாரா? கொழப்புதே உங்க கமெண்ட்டு !!!

   Delete
  3. அப்படியே அது சவுத் கொரியரா இல்ல நார்த் கொரியரா என்பதையும் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்குமே :)

   Delete
  4. Steel started his own courier services to receive our comics books on time :-)

   Delete
  5. இல்லை நண்பர்களே எங்கு எப்படியோ, ஆனால் கோவையில் stc சும்மா கில்லி மாதிரி, i received the books on time till now......

   Delete
 97. Sir much eager to know when the books will be dispatched...

  ReplyDelete
  Replies
  1. I am dispatching myself to Bangalore on Friday night :-) :-)

   Delete
  2. its heat wave all around my head.... :) Oh my god... plz send us the book a bit fast ... he he

   Delete
  3. Comic Lover (a) சென்னை ராகவன் @ Welcome to Bangalore! See you all on Saturday morning :-)

   Delete
  4. //its heat wave all around my head.... :) Oh my god... plz send us the book a bit fast ... he he//
   same blood running through my veins

   Delete
 98. சார்..மிகவும் தாமதமான கமெண்ட்ஸ் என்றாலும் மிக்க ,மிக்க சந்தோசத்துடன் இதை இடுகிறேன் .வண்ணத்தில் டெக்ஸ் ...வாவ் ....இதை விட சந்தோஷ செய்தி எதுவும் இல்லை .

  அதிலும் அட்டைபடம் செம கலக்கல் சார் ..

  இன்னும் ஐந்து நாளில்... நான்கு புத்தகங்கள் கைகளில் ...மனம் பர பர என்கிறது .

  ஒவ்வொரு மாதமும் இப்படி வந்தால் ....

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு மாதமும் இப்படி வந்தால் ....மனம் பர பர என்பதை விட்டு பற பற என்னுமோ !

   Delete
 99. நண்பர் கார்த்திக் அவர்களுக்கு,

  இந்த வருடம் comic con நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து அதிர்ஷ்டசாலி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  சென்ற வருட comic con பற்றிய உங்களது பதிவிலிருந்து :

  // உண்மையில் முத்து / லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு. S.விஜயனை பேட்டி காண வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் இருந்தாலும் அவர் வலைப்பூ வாசகர்களுக்காக பேசுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. அதனாலேயே எந்த ஒரு முன்னேற்ப்பாடுடனும் செல்லவில்லை. என்ன பேச வேண்டும் என்று முடிவெடுக்காமலேயே எடுத்த சொதப்பலான கத்துக்குட்டி பேட்டி இது! :) //

  நண்பரே இந்த தடவை அப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது ... நல்லா வீட்டுல உட்காந்து 'கொஸ்டின்' பேப்பரை ரெடி செய்து எடுத்துட்டு போங்க, கீழே உள்ள கேள்விகளையும் உங்களது லிஸ்டில் சேர்த்து கொள்ளாலாம்.

  * ரூ.500 விலையில் லயன் 30வது ஆண்டுமலர்?
  * 'மின்னும் மரணம்' வண்ணத்தில்?
  * 'கார்ஸனின் கடந்த காலம்' வண்ணத்தில்?
  * குட்டியானதொரு 'அந்த' ஸைசில் டெக்ஸ்?
  * தீபாவளி மலர்?
  * முத்து 41வது ஆண்டுமலர்?
  * கெளபாய்களுக்கென்றே தனி புத்தகம்?

  (நன்றி நண்பர் திரு ஈரோடு விஜய்)

  இதனுடன் இந்த கேள்வியும்

  * அடுத்து எப்பொழுது கால் கட்டை விரலை வாயில் வைப்பதாக உத்தேசம் ?  வரும் சனியன்று உங்களது பதிவை (ஆசிரியரின் பதில்களையும்) எதிர்பார்த்து .... பெங்களூர் வர முடியாத நண்பர்கள் அனைவரும் ....

  ReplyDelete
  Replies
  1. I m going to take that dream interview .....

   Delete
  2. அப்படியே பழைய கோடைமலர்கள் மறுபதிப்பு குறித்தும் எனது இந்த கேள்விதனையும் இணைத்து கொள்ளுங்கள்!
   அப்புறம் ஹி ஹி ஹி.... உங்களுக்கு பிடிக்காதுதான் எங்களுக்காக ஸ்பைடர், மாயாவி, மும்மூர்த்திகள் மறு பதிப்பு குறித்தும் வண்ணத்தில் கேளுங்களேன்.....

   Delete
 100. Danger Diabolic பற்றிய பதிவு எப்போது எடிட்டர் சார்!?

  ReplyDelete
  Replies
  1. மிக பெரிய எதிர்பார்ப்பு டெக்ஸ்சை விட கூட எனக்குள்ளும் .......

   Delete
 101. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜூன் மாதம்...

  * முதல் முறையாக டெக்ஸ் வண்ணத்தில்!
  * முதல்முறையாக ஒரே மாதத்தில் இரண்டு டெக்ஸ் கதைககள்!
  * வண்ண மறுபதிப்பாக லக்கி-லூக்கின் இரண்டு சூப்பர்-டூப்பர் ஹிட் கதைகள்!
  * இத்தாலியின் இன்னுமொரு சூப்பர் ஸ்டார் டேஞ்சர் டயபாலிக்கின் அட்டகாச மறுபிரவேசம்!
  * ஒரே மாதத்தில் மொத்தம் 650க்கும் (தோராயமான) அதிகமான பக்கங்களில் நான்கு புத்தகங்கள்!
  * குதூகலத் தகவல்களை அள்ளித்தரவிருக்கும் காமிக்-கான் நிகழ்வுகள்!
  * ஓரிரு அதிரடி அறிவிப்புகள்!

  இன்னும், இன்னும்....

  விரைவில்!

  ReplyDelete