Powered By Blogger

Sunday, March 10, 2013

சித்திரங்களும், சென்சார்களும்...!

நண்பர்களே, 

வணக்கம் ! சின்னதாய் ஒரு warning.... இம்மாதத்து இதழான லார்கோவின் "துரத்தும் தலைவிதி" இதழினை நீங்கள் இன்னமும் வாங்கி இருக்காத பட்சத்தில் ; நமது பதிவு என் : 82 ஐ படித்திருக்கா பட்சத்தில் - இப்புதுப்பதிவு உங்களுக்கு greek & latin ஆகத் தோன்றிடுவதைத் தவிர்த்தல் சிரமமே...! 

சென்சார் பற்றிய இதற்கு முந்தைய பின்னூட்டங்களுக்கு நான் பெரிதாய் பதிலளிக்காது போனதன் பிரதான காரணம் இந்த உறுத்தல் எனக்குள் இருந்திட்டதனாலேயே...! சித்திரங்களுக்கு கத்திரி போடுவதையும் தாண்டி லார்கோ & ஷெல்டன் கதை வரிசைகளின் சில episodes சற்றே mature audience -க்கானவை என்ற புரிதல் என் மண்டைக்குள் சின்னதொரு சஞ்சலத்தை எற்படுத்தாமலில்லை ! சொல்லப் போனால் WILD WEST ஸ்பெஷலின் சமயமே அந்த கிராபிக் நாவலின் சில வன்முறை சித்தரிப்புகள் ; இறுதியில் வெளிச்சத்துக்கு வரும் அந்த முறையற்ற நேசத்தின் வெளிப்பாடு - விமர்சனங்களை ஈர்க்குமென்று தான் எதிர்பார்த்தேன் ! 


லார்கோவைப் பொருத்த வரை, கதையோடு இணைந்து ஓடிடும் வன்முறை sequences ; பெண்களின் அங்க தரிசனங்கள் ; மேற்க்கத்திய கலாச்சாரங்களின் வாழ்க்கை முறைகள் இத்யாதிகளை முழுவதுமாய் மழுங்கச் செய்வது - கதையின் ஜீவனைக் குழி தோண்டியது போலாகி விடும் எனும் போது - ஒரு மிதமான compromise அவசியமாகியே தீர்கிறது என்பது வானவில்லின் மறு முனை ! 

அதே போல கதையினில் பணியாற்றிடும் சமயம் கண்ணில் தட்டுப்படும் விஷயங்களுக்கும், அதனை முழுமையாய் - எந்தவொரு சார்பு நிலையுமின்றி - முழு இதழாய் படித்திடுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு ! பணி செய்யும் போது மொழிபெயர்ப்பின் கோர்வை ; எழுத்துக்களின் நயம் ; பிழைகளில்லாமை ; அச்சின் தர அளவுகளில் கவனம் etc ..என்று பிரதானமாய் ஓடிடும் பார்வையும், அக்கறையும் - அதனைத் தாண்டிச் சென்றிடுவது முழு இதழைக் கையினில் கொண்டிடும் போது மாத்திரமே ! இந்த இதழில் கூட ஒரு சில இடங்களில் ஆடைகளின் அளவுகளில் கவனப்பிசகு நேர்ந்தது இதனாலேயே !(இது பற்றி நண்பர் கர்ணன் சுட்டிக் காட்டியிருந்த விஷயங்களில் எனது ஆட்சேபணை அவரது எழுத்துக்களின் தொனிக்கு மாத்திரமே தவிர - கருத்துக்களுக்கு அல்லவே.) நிறைய நேரங்களில் உள்ளங்கையினில் இருந்திடுமொரு சங்கதியினைச் சுட்டிக் காட்ட எட்ட நிற்கும் மாந்தர்களின் உதவி அவசியப்படுவதும் உண்டு தானே ?

இதனை எனது நிலைக்கு ஒரு சாக்காகச் சொல்லிடுவது நோக்கமல்ல; எப்போதும் போல எனது பிரச்சனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிஜமான முயற்சியே ! 

லார்கோ அவசியப்படுத்திடும் புதுச் சிந்தனைகளுக்கும் ; புதுப் பாணிகளுக்கும் +15 / +18 என்ற பரிந்துரை சுலபமான தீர்வே.......! ஆனால் எதனையும் பொதுவானதொரு குடையின் கீழே கூட்டாக்கிப் பார்க்கும் நம் மக்களது generalizing மனப்பாங்கிற்கு - இது போன்ற லேபில்கள் காமிக்ஸ் மீதே ஒரு தவறான அபிப்ராயத்தை எற்படுத்திடுமோ என்ற அச்சம் தான் குறுக்கே வந்திடும் பூனை ! ஏற்கனவே காமிக்ஸ் படிப்பதே வெட்டிப் பொழுதுபோக்கு தான் என்ற சிந்தை கொண்ட மக்களுக்கு இது போன்ற +15 / +18 tags - என்ன விதமான சேதியைச் சொல்லிடுமோ ?? 

முன் நாட்களைப் போல - கடைகளில் இதழ்களை வாங்கிடும் முறை அமலில் இருந்திடும் பட்சத்தில் - 'எதை வாங்கலாம் ?; எதை தவிர்க்கலாமென்ற சுதந்திரம் வாங்கிடும் முனையினில் இருந்திட்டது. ஆனால் தற்சமய சந்தா முறையில் அந்த சுதந்திரம் காணாது போவதால், எனது பொறுப்பும், சங்கடமும் அந்தளவிற்கு அதிகமே ! 

தற்சமயத்திற்கு இத்தகைய சிக்கலைக் கொணர்வது திருவாளர் லார்கோ மாத்திரமே என்பதால்,இனி வரும் நாட்களில் லார்கோவின் கதைகளில் நம்மால் இயன்றளவிற்கு எடிட்டிங் செய்த பின்னரும் - தவிர்க்க இயலா கனமும்; களமும் தொடர்ந்திடும் சந்தர்ப்பங்களில் "Recommended for +18 readers" என்ற tag ஒன்றினை selective ஆக இணைத்திட சிந்திப்போம்! 


மற்றபடிக்கு மினி லயனை மீட்டுக் கொணரும் முயற்சிகளை இன்னும் சில காலம் கழிந்த பின்னரே தூசி தட்டிப் பார்ப்பது தான் பொருத்தமாய் இருக்கும் ! தரத்தில் சிறிதும் compromise சாத்தியமல்ல என்றதொரு நிலையினில் - எனது கவனம் பிறிதெங்கும் செல்லல் வம்பை விலைக்கு வாங்கிடும் முயற்சி ! So - இன்னும் பலமாகக் கால்களை ஊன்றி நாம் நடக்கும் நாள் புலரட்டுமே ?!


அப்புறம் ஒரு சந்தோஷமான சேதியும் சொல்லிட மறந்து விட்டேன் !!

நமது டெக்ஸ் வில்லரின் "சிகப்பாய் இரு சொப்பனம்" நமக்குப் பிடித்ததில் வியப்பில்லை தான்....ஆனால் - அதன் படைப்பாளிகளே அதற்கொரு மிகப்பெரிய thumbs up கொடுத்துள்ளனர் !! இதழின் அமைப்பு ; நம் ஓவியரின் அட்டைபடம் ; overall தோற்றம் என்று எல்லாமே அவர்களுக்குப் பெரிதும் பிடித்து இருப்பதாகவும் ; இந்த இதழினை உலகெங்குமுள்ள டெக்ஸ் வில்லரின் இதர licensees -க்கு அனுப்பிடும் பொருட்டு - கூடுதலாய் 10 பிரதிகள் தேவை என்றும் கோரியுள்ளனர் !


அது மட்டுமல்லாது, இத்தாலியில் மிலன் நகரிலுள்ள காமிக்ஸ் மியூசியத்திற்கும் நமது இந்த டெக்ஸ் இதழ் பயணமாகிறதாம் ! இந்தியாவிலிருந்து வெளியாகும் ஒரு காமிக்ஸ் இதழ் இந்த அருங்காட்சியகத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறை என்பது தான் icing on the cake  ! Let's pat ourselves on the back guys :-)

P.S : சென்ற பதிவின் 300+ பின்னூட்டங்களுக்கிடையே இந்த சேதியைத் தேடிப் படிப்பது அனைவருக்கும் சுலபமல்ல என்பதாலும் ; இது ஒரு அவசியமான பகிர்வு என்பதாலும், இதனை ஒரு quickie பதிவாகவே மாற்றி விட்டேன் ! 

270 comments:

 1. ஹையா நான் தான் முதல் கமெண்ட்

  ReplyDelete
 2. Karnan L : சென்ற பதிவின் உங்களது பின்னூட்டத்திற்கு எனது பதில் சற்றே வேகமாய் அமைந்திருந்தால் சாரி நண்பரே !

  ReplyDelete
 3. This Font looks better & Professional :)

  ReplyDelete
 4. //இத்தாலியில் மிலன் நகரிலுள்ள காமிக்ஸ் மியூசியத்திற்கும் நமது இந்த டெக்ஸ் இதழ் பயணமாகிறதாம் ! இந்தியாவிலிருந்து வெளியாகும் ஒரு காமிக்ஸ் இதழ் இந்த அருங்காட்சியகத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறை என்பது தான் icing on the cake // Congrats sir, Credit for your hard work :)

  ReplyDelete
 5. //தவிர்க்க இயலா கனமும்; களமும் தொடர்ந்திடும் சந்தர்ப்பங்களில் "Recommended for +18 readers" என்ற tag ஒன்றினை selective ஆக இணைத்திட சிந்திப்போம்!//
  தலையை கொய்து தட்டில் கொண்டு வரும் கட்சி இன்னும் என் மனதை விட்டு அகல மறுக்கிறது :(. I feel, it's good to tag this kind of books with some restrictions as you quote.

  ReplyDelete
 6. டியர் எடிட்டர் விஜயன் அவர்களுக்கு என்னுடைய எழுத்தின் தொனி தங்களுக்கு பிடிக்காமல் போனதற்கு வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன். என்னுடைய கருத்து தங்களை சென்றடைந்தது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் நான் இதை குறிப்பாக எழுத இன்னுமொரு முக்கிய காரணம்... எனக்கு மூன்று மகள்கள் எனது மூத்த மகள் பி எஸ் சி படிக்கிறார்கள் இரண்டாவது மகள் 8 ஆம் வகுப்பு படிக்கிறார்கள். இவர்கள் இருவரும் காமிக்ஸ் படித்த பின்தான் நானே படிக்கிறேன். இந்த சூழ்நிலையில் நான் எப்படி புத்தகத்தை தந்தை ஸ்தானத்தில் நின்று கொடுக்கமுடியும் என் சங்கடங்களை தாங்கள் புரிந்து கொள்வீர்களென்றே நான் இந்த எடிட் சமாச்சாரத்தை வலியுறுத்தி வந்தேன். பெண்ணைப் பெற்றவன் அல்லவா நான் இப்படித்தான் இருந்தாகவேண்டும். என்னை தப்பாக எடுத்து கொள்ளவேண்டாம். புத்தகத்தின் மேலேயே ஒரு ஸ்ட்ரிப் நீங்கள் போட்டுவிட்டால் அதை வாங்காமல் தவிர்த்து விடுவேன் அவ்வளவுதான். மேலும் உங்கள் திறமை, எழுத்துநடை, மொழிபெயர்ப்பு, அச்சுத்திறமை ஆகியவற்றின்மீது எனக்கு அளவு கடந்த நம்பிக்கை உண்டு நன்றி.

  ReplyDelete
 7. டியர் விஜயன் சார்!

  மிக்க நன்றி! என் கடந்த பின்னூட்டத்தின் நோக்கம் உங்களை சங்கடப் படுத்திப் பார்ப்பது அல்ல! மாறாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் விடுபட்ட பெண்களின் ஆடை சார்ந்த சென்சார் தவறுதல்களை பெரிது படுத்தி உங்களை கேள்விகளால் துளைத்திடும் நண்பர்களுக்கு, கதை நெடுக விரவிக் கிடக்கும் 'வேறு ரக' அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்கள் சற்றும் உறுத்திடவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே அது!

  //இனி வரும் நாட்களில் லார்கோவின் கதைகளில் நம்மால் இயன்றளவிற்கு எடிட்டிங் செய்த பின்னரும் - தவிர்க்க இயலா கனமும்; களமும் தொடர்ந்திடும் சந்தர்ப்பங்களில் "Recommended for +18 readers" என்ற tag ஒன்றினை selective ஆக இணைத்திட சிந்திப்போம்!//
  நல்ல முடிவு! "இயன்றளவிற்கு எடிட்டிங்" என்பதற்கான வரைகோலை +18 வாசகர்களை கருத்தில் கொண்டு செய்தால் மிகவும் மகிழ்வேன்!

  //எதனையும் பொதுவானதொரு குடையின் கீழே கூட்டாக்கிப் பார்க்கும் நம் மக்களது generalizing மனப்பாங்கிற்கு - இது போன்ற லேபில்கள் காமிக்ஸ் மீதே ஒரு தவறான அபிப்ராயத்தை எற்படுத்திடுமோ என்ற அச்சம் தான் குறுக்கே வந்திடும் பூனை !//
  இதே தவறை நாமும் "7 முதல் 77" என்ற வாசகங்களின் மூலம் செய்து கொண்டிருக்கிறோம் என்றே எனக்கு நினைக்கத் தோன்றுகிறது! 7 வயது என்று சொன்ன உடனேயே, நம்மைப் பற்றி சரியாக அறியாத matured வாசகர்கள் 'கொழந்தைங்க புக்ஸ் போல' என்று நடையைக் கட்டிவிடுகிறார்கள் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது!

  உங்களுக்கு சாத்தியப்படும் ஒரு நன்னாளில் "Recommended for +18 readers" அல்லது "For matured readers" போன்ற வாசகங்களை நமது இதழ்களில் பயன்படுத்திப் பாருங்கள். சிறுவர்கள் தவிர்த்த புதிய (தலைமுறை) வாசகர்கள் நிச்சயம் கிடைப்பார்கள்!

  ReplyDelete
 8. அடுத்த டெக்ஸ்வில்லர் கதை எப்போது சார்?

  ReplyDelete
 9. அந்த பின்னூட்டங்களை காணத் தவறிய வாசகர்களின் நலனுக்காக!
  Karthik Somalinga10 March 2013 11:25:00 GMT+05:30

  டியர் விஜயன் சார்,

  பொதுவாக நம்மவர்களின் சென்சார் குறித்த புரிதல் பெண்களின் குறிப்பிட்ட அங்கங்களை முழுவதுமாய் மறைப்பது என்பதாக மட்டுமே இருக்கிறது! அதிலும் காமிக்ஸ் இதழ்களில் அப்படி மறைத்து விட்டால், பச்சிளம் பாலகன் முதற்கொண்டு பல் விழுந்த தாத்தா வரை அனைவரும் படிக்க ஏற்புடையதாக அந்த புத்தகம் உடனே மாறிவிடும் என்றே உறுதியாக நம்புகிறார்கள்.

  ஆனால், ஆயுத கலாச்சாரம், மிதமிஞ்சிய வன்முறை, நாலாபுறமும் சிதறும் இரத்தத் துளிகள், பாலியல் சார்ந்த வசனங்கள், மது அருந்துதல் குறித்த பிரஸ்தாபங்கள், போதைப் பொருள் உபயோகம் மற்றும் இது போன்ற இன்னபிற சங்கதிகள் நம்மவர்களை சற்றும் உறுத்துவதே இல்லை! குறிப்பாக இம்மாத லார்கோ இதழில் "குறைந்த செலவில் ஹெராயின் தயாரித்து அதிக லாபம் ஈட்டுவது எப்படி?" என ஒரு விலாவாரியான செய்முறை விளக்கமே இருக்கிறது! ஹெராயின் ஒரு சைத்தான் ஆனால் கஞ்சா கடவுள் அளித்த பரிசு என்ற ரீதியிலான போதை ஆதரவு வசனங்களும் இருக்கின்றன!

  பெண்களின் படங்களை சென்சார் செய்துவிட்ட ஒரே காரணத்தினால், இது போன்ற கதைகள் 7 வயது சிறுவர் / சிறுமிகள் படிக்க ஏற்புடையதாக மாறிவிடுமா என்ன?! நான் இல்லை என்று அடித்துச் சொல்வேன்! மறுக்க முடியுமா உங்களால்?! உங்களின் தர்ம சங்கடம் எனக்கு புரியாமலில்லை! ஆனால், இதுபோன்ற கதைகளுக்கு '7 முதல் 77 வரை அனைவருக்கும்' என்பது ஒரு பொருந்தாத கோட்பாடு என்பது என் தாழ்மையான கருத்து!

  //'Recommended for 15+' என்று ஆங்கிலப் பதிப்பில் சுலபமாய்ப் போட்டு விடுவதில் தீர்ந்திடும் பிரச்னை - நமக்கு சிக்கலாக இருந்து வருவது நிஜமே !//
  நீங்கள் மேலே குறிப்பிட்டது போல இது போன்ற கதைகளில், கத்தரியை குறைத்து "வயது வந்தோர்க்கு மட்டும்" என்ற எச்சரிக்கையை புத்தகத்தில் இணைப்பதன் மூலம் இப்பிரச்சினையை தவிர்க்கலாம் என்பது என்பதே என்னுடைய கருத்தும்! பரிசீலிக்க முடியுமா?!

  பெண்களின் அங்கங்களை மறைததிற்காகத்தான் நான் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று மட்டும் தவறாக எண்ணிவிட வேண்டாம்! சென்சார் என்பதை ஒரு கோணத்தில் மட்டுமே அணுக வேண்டாம் என்பதே என் கோரிக்கை!

  ரொம்பவே சீரியசாக போய்விட்ட இந்த பின்னூட்டத்தை சற்றே ஜாலியாக்குவோமா?! :)

  "7 முதல் 77 வரை அனைவருக்கும்" - இதற்கு கீழே,
  7 முதல் 77 வயதினர் வரை படிக்கக் கூடிய அனைத்து ரக காமிக்ஸ்களும் எங்களிடம் கிடைக்கும்! அந்தந்த வயதினர், அந்தந்த வயதிற்கேற்ற புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்துக் கொள்ளலாம் என ஒரு சமாளிபிகேஷன் பிட்டை Fine Print ஆக சேர்த்துக்கொண்டால் பிரச்சினை தீர்ந்தது! :)

  ****************

  Karthik Somalinga10 March 2013 13:34:00 GMT+05:30

  மிக்க நன்றி கிரி!

  //தலையை கொய்து தட்டில் கொண்டு வருவது எல்லாம் சத்தியமாக குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல//
  ஏழு வயது குழந்தையின் மனதில் அது எவ்வளவு பெரிய தாக்கத்தை / பயத்தை ஏற்படுத்தும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்! அதற்காக இனி வரும் இதழ்களில், இது போன்ற வன்முறையான ஆனால் கதைக்கு மிகவும் அவசியமான இடங்களில் எல்லாம் எடிட் செய்ய ஆரம்பித்தால், அது படைப்பின் ருசியை முழுதாக ரசிக்க விரும்பும் வாசகர்களுக்கு சற்றும் ஏற்புடையதாக இருக்காது என்பதையும் முன்னதாகவே தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 10. மெச்சூர்டான லார்கோ,ஷெல்டன் கதைகளோடு மியாவி , மதியில்லா மந்திரி போன்றவற்றை சேர்த்து படிக்கும் போது சிறிது நெருடலாகவே உள்ளது.

  மினிலயன் போன்ற வற்றில் மியாவி,ம.ம போன்ற வற்றையும் லார்கோ வகையறா முத்து, லயனில் வந்தால் குட்டீஸ்களிடம் கொடுக்க நெருடல் இல்லாமல் இருக்குமே?

  ReplyDelete
 11. ♥ டியர் சார்!
  வர இருக்கும் காமிக்ஸ் கிளாஸிக்ஸ் மறுபதிப்பு இதழ்களில் பக்க நிரப்பிகளாக "மினிலயனில்" வந்த அலிபாபா, சிந்துபாத், அங்கிள் ஸ்குரூஜ், போன்ற சிறிய கார்டூன்களை மறுபதிப்பு செய்யலாமே!

  ReplyDelete
 12. ஆஹா !அப்படியென்றால் அடுத்த 50 வது டெக்ஸ் கதைகளை பெரிதும் எதிர்பார்ப்பது நாம் மட்டுமல்ல என்றாகிறது ! நமது ஓவியரின் வண்ண சேர்க்கை ,நமது பொறுப்பான புத்தக வடிவமைப்பு அனைத்தும் படைப்பாளிகளே வியக்கும் வண்ணம் உள்ளதென்பதே தங்களுக்கு கிடைத்துள்ள மிக பெரிய அங்கீகாரம் !+6 முயற்ச்சிகள் கூடிய சீக்கிரம் தொடங்க தங்களுக்கு இது ஒரு தூண்டுகோலாய் அமையும் என்பது கூடுதல் சந்தோசம் !என்னதான் நாம் சிறப்பாய் செய்தாலும் ,அங்கீகாரம் என்பது பிறர் தந்தால்தானே !வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர !

  18 வயதுக்கு மேல் என போடும் விபரீத முயற்சி எப்போதும் வேண்டாம் !இங்கே 18 வயதுக்கு மேல் என போட்டாலே adults only சமாச்சாரமாகவே பார்க்க படும் !உடைகள் விசயத்தில் மட்டும் சற்று கூர்ந்து கவனித்து கொள்ளுங்கள் !இது வரை சரியாய் வந்தது ,இந்த முறை மட்டும் சற்றே கோட்டை விட்டு விட்டீர்கள் !

  ReplyDelete
  Replies
  1. தவறுவது சகஜம் ,திருத்தி கொள்ள வாய்ப்புகள் எப்போதும் உண்டு !தங்கள் மேல் எப்போதும் நம்பிக்கை உண்டு !

   Delete
  2. //இந்தியாவிலிருந்து வெளியாகும் ஒரு காமிக்ஸ் இதழ் இந்த அருங்காட்சியகத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறை என்பது தான் icing on the cake ! Let's pat ourselves on the back guys//

   Delete
  3. நண்பர்களே,நமது மனதிடமே ஒரு கேள்வி !கதைகளில் வன்முறைகள் இருந்தால் பிறர் முன் வைத்து படிக்க பயப்பட மாட்டோம் ,ஆனால் அது போன்ற சித்திரங்களை இருந்தால் எல்லோர் முன்பும் கூச்சமின்றி படிப்போமா? உங்கள் மனதிலும் கேளுங்கள் !just இரண்டே படங்களில் கத்தரி /உடை போடுவதால் கதையின் தரம் குறைந்தா போகும் !

   Delete
  4. அப்படிக் கேளுங்க ஸ்டீல் க்ளா!

   முடிஞ்ச வரைக்கும் போராடிப் பார்ப்போம்; முடியலைன்னா ஆளுக்கு ஒரு இண்டியன் இங்க் வாங்கிக்குவோம்.
   முடிஞ்ச வரைக்கும் ரசிச்சுட்டு, கனத்த மனசோட மை பூசிட வேண்டியதுதான்! :)

   எச்சரிக்கை : மை பூசும்போது அதில் ஜொள் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமாம்; இல்லைனா மை சரியா ஒட்டாதாம்! :D

   Delete
  5. கவலை பட வேண்டாம் நண்பரே ,இந்த முறை ஆசிரியரின் மொழி பெயர்ப்பில் இருந்த உற்ச்சாகம் ,அதனை கண்டு கொள்ள தவறி இருக்கலாம் ,ஆனால் இனி கவனமாக பார்த்து கொள்வார் ,அவரே கூறி விட்டாரே !

   Delete
 13. நல்ல பிசாசு:- "என்னாது.........? சென்ஸாரா......?அது நம்ம ஈரோடு இளைய தளபதிக்கு புடிக்காத வார்த்தையாச்சே.....?:-):-)

  நண்பர்கள் ;- "எவண்டா அவன் சீரியஸா பேசிட்டுருக்கும்போது காமெடி பண்றது....?:-):-)

  ReplyDelete
 14. ♥ கர்ணன் L அவர்களின் ஆதங்கம் புரிகிறது!

  சில இடங்களில் ரொம்ப ஓவர்தான்!

  ReplyDelete
 15. சென்சாரில் எனக்கு உடன்பாடில்லை! நம் ரசனையின் பரிமாற்றமாகத்தான் இன்று நாம் லார்கோ கதைகளை சுவைத்துக் கொண்டியிருப்பது. ரத்தமும், கத்தியும், வன்முறையும், கஞ்சாவும் வேண்டாமென்றால் ஸ்பைடர், மாயாவி, ஆர்ச்சிவுடன் மல்லுக்கட்டியிருக்கலாமே?

  ஒரு பொருளை வாங்கினால் நன்றாக இருந்தால் மட்டுமே குழந்தைக்கு கொடுக்கும் நாம், இது போன்றவற்றைத் தவிர்க்கலாமே?

  ஒரு கழுதையுடன் இனைந்து வரும் wayne shelton என்ன பாடுப்படப்போகிறார்?

  ReplyDelete
 16. Just On to the lite'r side ;) :

  இந்தியாவுக்கும் , இத்தாலிக்கும் பெரிய நெருக்கம் உண்டு என்றாலும் கூட , நமது தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட புத்தகம் அந்த நாட்டு காமிக்ஸ் மியூசியம் செல்வது உண்மையிலேயே கொண்டாப்படவேண்டிய சேதி...

  Cheers to all . ஆனால் எடிடருக்கு இது மிக முக்கிய தருணம். இனி வரப்போகும் இரவுக்கழுகாரின் ஐம்பதாவது இதழை , மேலும் கூடுதலான கவனத்துடன், மிகவும் சிறப்பான ஒரு வெளிடீடாக அமைத்திட வேண்டிய கடமை முன் உள்ளது....

  முடிந்தால் புத்தகம் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்ட பின்னர், ஒரு புகைப்படம் எடுத்து இங்கே நமது தளத்தில் அப்லோட் செய்திடுங்கள் :)...

  ReplyDelete
  Replies
  1. ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்த்தால், திரு . கர்ணன் சொல்வதை மறுக்க இயலாது... ஆனால் அயல் நாட்டு ஒரிஜினல் பதிப்போடு சேர்த்து பார்கையில், ஆசிரியரின் உழைப்பு மட்டுமே கண் முன்னே தெரிந்தது...

   கதையோட்டம் இம்மி அளவு கூட பிசகாமல், நமது கலாச்சாரமும் பங்கப்படாமல் , (வசனங்களில் கூட) தரப்பட்டிருக்கும் மற்றொரு முயற்சி... இது காலம் செல்ல செல்ல இன்னமும் மெருகேரிடும் என்ற அசைக்கமுடியா நம்பிக்கை எனக்கு உள்ளது...

   Delete
  2. To see the description of Largo by the author just see the image in this link :) http://www.freeimagehosting.net/5x8au

   Delete
 17. நண்பர் கர்ணனை சில மாதங்களுக்கு முன்பு நேரில் சந்தித்துப் பேசியபோது, அவர் கல்லூரி செல்லும் வயதிலுள்ள இரு பெண்களின் தந்தை என்பதும், காமிக்ஸை விரும்பிப் படிக்கும் அவரது மகள்களுக்கு ஒரு தந்தையின் இடத்திலிருந்து அவற்றைப்படிக்கக் கொடுப்பதிலிருந்த சங்கடங்களையும் சொல்லி வருந்தியபோதுதான், சிலபல வருடங்களுக்குப் பிறகு இப்படியொரு நிலை எனக்கும், நம் வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கும் ( பெரும் பலானவர்கள்னு படிக்கக்கூடாது, ஸ்டீல் க்ளா ) ஏற்பட்டிடுமென்ற உண்மை பட்டென்று உறைத்தது!

  அதனாலேயே நண்பர் கர்ணன் மற்றும் ப்ளூபெர்ரியின் கருத்துக்கு ஆதரவாகப் பின்னூட்டமிட்டேன்.

  இப்போது இங்கே அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

  என்னைப் பொறுத்தவரை, ஒரு காஸ்ட்யூம் டிஸைனரை வேலைக்கு அமர்த்தி, கோடு போட்ட சொக்காய்களை நிறையத் தயாரித்து, லார்கோ-வேய்ன் நாயகிக்களுக்கு அணிவித்து அழகு பார்ப்பதோடு, அவை அடிக்கடி கழண்டு வராதபடிக்குப் பார்த்துக்கொண்டாலே போதும்! :)

  ReplyDelete
 18. நமது மனப்பாங்கை நாம் மாற்றி கொள்ளாத வரை, நமது புத்தகங்களில் சென்சார் என்றுமே ஒரு நெருஞ்சி முள் தான். கார்த்திக் சொன்னதை போலவே வன்முறை, கொலை, புகை + மது காட்சிகள் இல்லாத புக், சினிமா ஏது? நாம் பார்க்கும் டிவி நிகழ்ச்சியில் கூட இவை நிரந்தர காட்சிகள் ஆயிற்றே தற்போது. அதை எல்லாம் விட்டு விட்டு எதுவும் இல்லாதவாறு இருத்தல் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு படைப்பாளியின் படைப்பை கூறு போடுவது போலாகும் அல்லவா? இல்லாவிடில் கார்ட்டூன் கதைகளை மட்டுமே வெளியிட முடியும். அதிலும் நம் மக்கள் க்ளிவேஜ் தெரிகிறது என்று சொன்னால் அதையும் வெளியிடுதல் சந்தேகம் தான், இல்லையெனில் கதையில் வரும் அனைத்து பெண்களுக்கும் பர்தா போட்டு விடுதல் சாலச் சிறந்தது. நமது வாரிசுகளுக்கு எதை படிக்க தர வேண்டும் என்று நாம் நம்மை வரையறை படுத்தி கொள்ளுதல் நலம். ஒரு குமுதம், விகடன் இதழில் கூட தற்போதைய காலத்தினை ஒட்டி கவர்ச்சி படங்கள் ஆக்கிரமிக்கும் என்பது கண்கூடு. நமது குழந்தைகளை நாம் ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு அனுப்ப முடியாது அல்லவா? அது போலவே எந்த புத்தகங்களை வாசிக்க தர வேண்டும் என்று நாம் வரைமுறை படுத்த இயலாதா? அதை எதையும் நாம் செய்யாமல் மற்றவரே (எடிட்டர்) செய்ய வேண்டும் என எதிர்பார்த்து இருப்பது என்ன விதத்தில் நியாயம்? தெருவில் நாம் நடக்கும் போது கண்ணில் படும் ஆபாச போஸ்டர்களை நம்மால் என்ன செய்ய முடியும்? எனவே அனைத்து வித கதைகளும் தேவை என்று ஒருவர் ஆசை படும் போது இதையும் எதிர்கொள்ளும் பக்குவம் கண்டிப்பாக தேவை எனது எனது கருத்து. இன்று புத்தக வாசிப்பின் வாயிலாக மட்டுமே நமது குழந்தைகள் வெளி உலகத்தை பார்க்க வில்லையே. உலா பேசி, இணையம் ஒன்று போதாதா அவர்களுக்கு? நமக்கும் அவர்கள் லேட்டஸ்ட் டெக்னாலஜி யில் ஆசானாக முந்தி நிற்பதை அனேகர் வீட்டில் காணலாம். கண்ணியம் என்பது காமிக்ஸ் படத்தில் மட்டுமே இருத்தி விடுவதால் வராது, நம் பங்களிப்பும் அதில் கண்டிப்பாக தேவை. NBS ல் வெளி வந்த வெய்ன் ஷெல்டன் ஆங்கில வடிவை நம் மக்கள் பார்த்தால் சென்சார் எவ்வளவு நாசூக்காக கையாள பட்டு இருக்கிறது என்பது புரியும். ஒரு ப்ளே பாயை (லார்கோ) வேறு எப்படி சித்தரிக்க முடியும், அதுவும் ஆபாசம் இல்லாமல்?

  ReplyDelete
  Replies
  1. //எந்த புத்தகங்களை வாசிக்க தர வேண்டும் என்று நாம் வரைமுறை படுத்த இயலாதா? அதை எதையும் நாம் செய்யாமல் மற்றவரே (எடிட்டர்) செய்ய வேண்டும் என எதிர்பார்த்து இருப்பது என்ன விதத்தில் நியாயம்?//
   ஆமோதிக்கிறேன்!

   Delete
  2. இது குறித்த என் முந்தைய கருத்து ஒன்றை இங்கே மீள்பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன்!

   //Karthik Somalinga18 January 2013 11:31:00 GMT+05:30"
   வன்முறை கலந்த காமிக்ஸ்களை சிறுவர் / சிறுமிகள் படிப்பதை மட்டும் நம் கலாச்சாரம் / பண்பாடு அனுமதிக்கிறதா என்ன?! காமிக்ஸ் புத்தகத்தில் வன்முறையை பார்ப்பதற்கு / படிப்பதற்கு மட்டும் குழந்தைகளுக்கு எந்த ஒரு பக்குவமும், முதிர்ச்சியும் தேவையில்லையா?! அடுத்ததாக இப்படியான வன்முறைக் காட்சிகளையும் சென்சார் செய்யுமாறு ஆசிரியரிடம் கோரப் போகிறீர்களா?! என்னுடைய கருத்து" இதுதான்: குழந்தைகளின் வயதிற்கேற்ற காமிக்ஸ் புத்தகங்களை மட்டும் அவர்களிடம் படிக்கக் கொடுக்கலாம்! வன்முறை & கவர்ச்சி தூக்கலாக இருக்கும் காமிக்ஸ்களை - உதாரணத்திற்கு லார்கோ வின்சையும், மாடஸ்டியையும், வேய்ன் ஷெல்டனையும், கிராபிக் நாவல்களையும் ஏன் கொடுக்க வேண்டும்?! வன்முறை குறைவான கார்ட்டூன் கதைகளையும், கவர்ச்சி கலவாத - அவர்கள் வயதிற்கேற்ற காமிக்ஸ் கதைகளையும் மட்டும் தேர்ந்தெடுத்து படிக்கக் கொடுப்பது பெற்றோரின் கடமை.//

   Delete
  3. I completely agree with you two. I am not saying no sensor at all, already editor is doing that don't push him to do more - otherwise every page will have some touch-up/cover-up which will irk comics reading experience.

   Delete
 19. நமக்கு நாமே ஒரு கடிவாளம் போட்டு கொண்டு லார்கோ, வெய்ன் ஷெல்டன் னும் வேணும், 100% சென்சாரும் வேணும் என்றால் அது எப்படி முடியும்? இரத்தம் + அதீத வன்முறை ஓகே பட் ஆபாசம் நோ என்பதில் கருத்து பிறழ்வு உள்ளதே. நானும் தந்தை தான், இன்று காமிக்ஸ் படிக்கும் நாம் அனைவரும் அனேகமாக தந்தைமார்கள் தானே? வரை முறை படுத்துதல் நம் வீட்டை பொறுத்த வரை சாத்தியமே. இல்லையேல் நமது கதைகளின் செலேக்ட்ஷன்ஐ மாற்றி கொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாரா? இனிவரும் லார்கோ பாகங்கள் அதிலும் குறிப்பாக குழந்தைகளுடன் தகாத உறவு, லெஸ்பியன் காட்சிகளை நாம் எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம்? ஒரே தீர்வு, அதை அனைத்தையும் எடிட்டர் "இந்த பாகத்தில் என்று ஒரு பத்தியில் கதையினை படங்கள் இன்றி கூற வேண்டிய நிலை தான் லார்கோ அனைத்து பாகங்களுக்கும் மிஞ்சும்."

  ReplyDelete
  Replies
  1. // "இந்த பாகத்தில் என்று ஒரு பத்தியில் கதையினை படங்கள் இன்றி கூற வேண்டிய நிலை தான் லார்கோ அனைத்து பாகங்களுக்கும் மிஞ்சும்." //

   சரியாகச் சொன்னீர்கள்.

   Delete
  2. //இனிவரும் லார்கோ பாகங்கள் அதிலும் குறிப்பாக குழந்தைகளுடன் தகாத உறவு, லெஸ்பியன் காட்சிகளை நாம் எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம்?//

   Please don't reveal information about future editions. Now i will start guessing how the story flow is going to be based on the above information :)

   Delete
 20. Dear editor,

  When is the next tex issue?

  What happened to "Bootha vettai"?.

  Since you are focussed only on Rs. 100/- now and also color, i expect a serious answer to this question.

  The way it is going it seems that tex stories are not possible to accomodate in our recent trend.

  ReplyDelete
 21. 'சிவப்பாய் ஒரு சொப்பணம்' அதன் படைப்பாளிகளிடமே பாராட்டும், காமிக்ஸ் மியூசியத்தில் வைத்து அழகுபார்க்கப்போகும் அங்கீகாரத்தையும் அளித்திருப்பது நிறையவே மகிழ்ச்சியளிக்கிறது!

  இது ஒருபுறமிருக்க,

  ஒவ்வொரு நாளும் தலையணையில் முகம் புதைக்கும்போதெல்லாம் என்னையும் அறியாமல் 'குட்டியானதொரு தலையணை சைஸில் டெக்ஸ்' ஞாபகம் வந்து பாடாய்ப் படுத்துவதுவதிலிருந்து என்றைக்குத்தான் விடுபடப்போகிறேனோ? ஹூம்...

  +6ன் முதல் இதழ் ஆரவாரமாய், பிரம்மாண்டமாய், டெக்ஸின் 50 வது இதழ் என்ற பெருமையோடு வெளிவருமானால் மிக்க மகிழ்வேன்!

  (டெக்ஸ் கதைகளுக்கு சென்சார் பிரச்சினைகள் இருக்காது என்பது ஒரு கூடுதல் சிறப்பம்சம்தானே?) :)

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. Dear editor,

  By the way adding Chick & bill by removing Ratha padalam (jumbo special published just 3-4 years before) is a good move.

  Why don't you think of publishing one Black & white book in comics classics list each year in Rs.100/- to accomodate tex stories & other black & white heros?

  I had already subscribed for this year to both Lion & Muthu and Comics classics. That means i am ready to buy whatever you are going to publish. I will not choose to buy. I will buy anything & everything. In the coming years also i will continue to subscribe

  But pl tell the possibility of reading our old goldies also (may be as a new release exclusively for next year's chennai book fair is good enough - like Vikatan publishers releasing new books every year in January month). Either it can be bought in book fair or ebay.in or thro' courier directly from you (all other than subscription)

  I feel this is also important at this moment as we can have a fair idea how our comics journey will proceed in the coming years. Whether we will stick to new trend/heros or is there any small possibility of seeing our old golds in Black & white

  Always with you - kuberan as a strong fan of prakash publishers with rights to praise & criticise

  Bye

  ReplyDelete
 24. //சி.ஒ.சொ - இந்த இதழினை உலகெங்குமுள்ள டெக்ஸ் வில்லரின் இதர licensees -க்கு அனுப்பிடும் பொருட்டு - கூடுதலாய் 10 பிரதிகள் தேவை என்றும் கோரியுள்ளனர் ! & அது மட்டுமல்லாது, இத்தாலியில் மிலன் நகரிலுள்ள காமிக்ஸ் மியூசியத்திற்கும் நமது இந்த டெக்ஸ் இதழ் பயணமாகிறதாம் ! //

  டெக்ஸ் பாணியில் சொல்வதானால் "உற்சாகமூட்டும் சங்கதிதான்!" :) மனமார்ந்த வாழ்துக்கள் சார்! :)

  கண்காட்சிக்கு செல்லும் இத்தாலிய மக்கள், 'ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவான விலையில் நம் டெக்ஸின் காமிக்ஸா?!' என்று மூக்கு மேல் விரலை அல்ல, இரண்டு கைகளையுமே வைத்து வியப்புடன் பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை! :)

  ReplyDelete
 25. கார்த்திக்'ன் முந்தைய கருத்தை ஒட்டி மேலும் ஒரு எண்ணம்: compromise என்பது நாம் நமக்கு பிடித்த கதைகளுக்காக நாமே செய்து கொள்ள வேண்டியது. அதை விடுத்து கதைக்கும், அதில் வரும் படங்களுக்கும் ஒவ்வொருவரின் விருப்பத்திற்கிணங்க அதில் கை வைக்க ஆரம்பித்தால் அந்த கதை மட்டுமல்ல எந்த கதையிலும் எது தான் இறுதியில் மிஞ்சும்? கதை மூலத்தை ஓரிரு படங்களே விளக்கும் வகையில் இருப்பின் அதை கத்திரி போடுவது கதையினையே சிதைத்து விடாதா?

  ReplyDelete
 26. டியர் எடிட்,

  சென்சார் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பது, நபருக்கு நபர், கலாச்சாரத்திற்கு கலாச்சாரம், நாட்டிற்கு நாடு மாறுபடுவது உண்மை தான் என்றாலும், இந்தியாவில் தற்போது பரவி வரும் பொதுஜன ரசிப்பு மீடியாக்களின் மூலம் நாமும் ஒரு கட்டத்தை தாண்டி விட்டும் என்பதை உணரும் காலம் நெருங்கி விட்டது என்றே சொல்லாம். பெரும்பாலும் மேல்தட்டு வாசகர்கள் கொண்ட நாடுகளில் விநியோகம் செய்யபடும் சினிபுக் கூட சென்சார் என்ற விஷயத்தில் சற்றே கவனமாக நடைபோடுவது, நாமும் கவனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வலு சேர்க்கிறது.

  முக்கியமாக 7 முதல் 77 என்ற Tagline இழுத்து விட்ட பிரச்சனைகள். எனக்கு தெரிந்து 10 வயது சிறுவர்கள் எத்தனை பெயர் தற்போது காமிக்ஸ் படிக்கிறார்கள் என்பதல்ல, எழுத்து கூட்டி தமிழ் படிக்கிறார்கள் எனபதே கேள்வி. எனவே 100 க்கு 2 என்ற கணக்கில் ஒருவேளை இருக்கும் அவர்களுக்கா மீதி 98 பெயரை கண்ணை கட்டி கொண்டு புத்தகம் படிக்கலாம் என்று விதிப்பதே தவறுதானே...

  லார்கோ இதழ்களுக்கு 15+ 18+ போன்ற சுட்டிகளை பரீசீலனை பண்ணை செய்யும் அதே வேளையில், மாடஸ்தி போன்ற கதைகளில் பிகினிக்களுக்கு கவுன் மாட்டி விடும் வேலையையும் தவிர்ப்பதில் செய்வீர்கள் என்று நம்புகிறேன். சென்சார் என்ற கண்ணோட்டத்தோடு, அவ்விடயங்களில் சற்றே ஓவராக சென்று விட்டதாக தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. பி.கு.1 : நமது இதழ் ஒன்று கண்காட்சி அளவிற்கு சென்றடைந்திருப்பது கேட்டறிந்ததில் சால சந்தோஷம். ஒவ்வொரு இதழிலும் தயாரிப்பு தரம் உயர்ந்து வரும் வேளையில், இனி இது நடவாமல் இருந்தால் தான் ஆச்சர்யபடவேண்டி இருக்கும். உங்கள் டீமிற்கும், விடாமல் தரத்தை உயர்த்த வேண்டும் என்று நச்சரித்த அந்த நல்ல வாசக உள்ளங்களிற்கும் பாராட்டுகள் உரித்தாகட்டும்.

   பி.கு.2 : புதிய லார்கோ இதழ் முற்றிலும் வண்ணமயமாக இருந்ததை காண்கையில் பேரானந்தம் அளவிடலாதது. கருப்பு வெள்ளை பக்கங்களை இனி கருப்பு வெள்ளை இதழ்களுக்கு மட்டும் ஒதுக்கி வைக்க எண்ணியிருக்கும் உங்கள் உறுதியை எப்போதும் கடைபிடியுங்கள். பெரும்பான்மையான வாசகர்களின் எண்ணமும் அவ்வழியே சாரும்.

   பி.கு.3 : சென்ற பதிவில் சாக்ரடீஸ் கேட்டிருந்த கேள்வி நானும் கேட்க தோன்றியதே. தற்போது சிங்கத்தின் சிறுவலையில், ஹாட்லைன்/காமிக்ஸ் டைம், வாசகர் கடிதம், சிங்கத்தின் வலையில் என்று பல பகுதிகள் கிட்டதட்ட 10 பக்கங்களை விழுங்கி விடுவதை நாம் தடுக்க முயலலாமோ.... இணையம் இல்லாத நாட்களில் ஹாட்லைன் விரும்பி படிப்பது, தற்போது ஓவர்டோஸாக போய் விட்ட வேலை நெருங்கிவிட்டது எனலாம். அதே நேரத்தில் மாதம் தோறும் 4 பதிவுகளை ஒன்றாக சேர்த்து வைத்து ஒரு 3 மாதங்கள் கழித்து ஒரு இதழில் இடுவதும் நடவாத காரியம்.

   எனவே, அவற்றை எடிட் செய்து மொத்தமாக சாரம்சத்தை மட்டும் ஒரு பக்கம் அல்ல இரு பக்கத்தில் கொண்டு வர முடியுமா என்று எடிட் சிந்திக்க வேண்டும்.

   பி.கு.4: புதிய ப்ளாக் லேஅவுட் கண்ணிற்கு மிக இதமாக இருப்பதற்கு, ஜுனியர் எடிட்டுக்கு ஒரு சின்ன சபாஷ்.

   Delete
  2. நண்பர் Rafiq Raja குறிப்பிட்டுள்ளது போல், சிங்கத்தின் சிறுவலையில், ஹாட்லைன்/காமிக்ஸ் டைம், வாசகர் கடிதம் - பகுதிகளின் சாரம்சத்தை மட்டும் ஒன்று அல்லது இரு பக்கத்தில் கொண்டு வரும் ஐடியா நன்றாக உள்ளது

   Delete
  3. அதனையும் கருப்பு வெள்ளையில் தனி இணைப்பாக கொடுத்தால் இன்னும் நலம்.

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. நண்பர்களே, சிங்கத்தின் சிறுவலையில், ஹாட்லைன்/காமிக்ஸ் டைம், வாசகர் கடிதம் மற்றும் வருகிறது விளம்பரங்கள் - இவை எல்லாம் சேர்ந்து இருந்தால்தான் ஒரு முழமையான காமிக்ஸ். வெறும் கதை மட்டுமே இருந்தால் அதில் சுவாரஸ்யமே இருக்காது என்பது என் கருத்து. மேலும் இவைகள் இணையத்திற்கு வருகை தராத வாசகர்களுக்காகவும் என்று ஆசிரியர் பல முறை கூறியிருக்கிறார் என்பதனையும் தயவு செய்து கருத்தில் கொள்ளவும்.

   Delete
 27. டியர் எடிட்டர் சார்,

  உங்களது விரிவான பதிலுக்கு நன்றி. இனி வரும் லார்கோ இதழ்கள் உங்களுக்கு நிறைய வேலை வைக்கும் என்பது தெளிவாகிறது :)

  நமது டெக்ஸ் இதழுக்கு கிடைத்த அங்கீகாரம் - உங்களது உழைப்பிற்கு கிடைத்த பரிசு.

  டெக்ஸ் 50 வது இதழ் இதையெல்லாம் மிஞ்சும் வகையில் அமைய வேண்டும் சார். டெக்ஸ் இன் சிறந்த கதைகள் கலந்த 'சூப்பர் டூப்பர் ஸ்பெஷல்' இதழாக அமைய வேண்டும்.

  திருப்பூர் ப்ளுபெர்ரி

  ReplyDelete
 28. //சி.ஒ.சொ - இந்த இதழினை உலகெங்குமுள்ள டெக்ஸ் வில்லரின் இதர licensees -க்கு அனுப்பிடும் பொருட்டு - கூடுதலாய் 10 பிரதிகள் தேவை என்றும் கோரியுள்ளனர் ! & அது மட்டுமல்லாது, இத்தாலியில் மிலன் நகரிலுள்ள காமிக்ஸ் மியூசியத்திற்கும் நமது இந்த டெக்ஸ் இதழ் பயணமாகிறதாம் ! //

  அட்டகாசமான செய்தி ....நமது தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் கொண்டாட வேண்டிய செய்தி

  ReplyDelete
 29. Recommended for +18 readers என போடுவது நமது தமிழ் நாட்டில் தப்பான அபிராயத்தையே ஏற்படுத்தும் என்பது எனது எண்ணம்

  ReplyDelete
  Replies
  1. எனக்குக்கூட அப்படித்தான் தோன்றுகிறது.
   'Recommended for 18+ age group' என்பதற்குப் பதிலாகத் தேவைப்படும் இதழ்களில் மட்டும் 'Not suitable for young children' என்று போடலாமோ?!

   Delete
  2. Some Violence May Not Be Suitable For Children எனவும் போடலாம்

   Delete
  3. @Erode Vijay & Lucky Limat:
   //Not suitable for young children//
   //Some Violence May Not Be Suitable For Children//

   நல்ல யோசனை! இது போன்ற வன்முறை தூக்கலான புத்தகங்களுக்கு,
   "For mature readers" என்றும் போடலாம். தமிழில் சில எச்சரிக்கைகள்:
   - சிறார்க்கு உகந்ததல்ல!
   - பண்பட்ட(Mature என்பதற்கு?!) வாசகர்களுக்கு மட்டும்!
   - முதிர் ரசனை கொண்டவர்க்கு மட்டும்!
   - இளகிய மனம் படைத்தவர்களுக்கு அல்ல!

   Delete
  4. நண்பர் லக்கி லிட்மட் அவர்களின் கருத்தை நான் நூறு சதவீதம் ஆதரிக்கிறேன்......... எப்படி சென்சார் செய்வது என்பதை ஆசிரியர் தீர்மானிக்கட்டும்.......ஆனால் வயது வந்தவர்களுக்கு மட்டும் பாணியில் தலைப்பிடுவதெல்லாம் ரொம்ப ஓவர்...........

   // ஏற்கனவே காமிக்ஸ் படிப்பதே வெட்டிப் பொழுதுபோக்கு தான் என்ற சிந்தை கொண்ட மக்களுக்கு இது போன்ற +15 / +18 tags - என்ன விதமான சேதியைச் சொல்லிடுமோ ?? //

   ஆசிரியரின் கருத்து நூறு சதவீதம் வரவேற்கத்தக்கது......... நாம் என்னதான் முயன்றாலும் நம் வயது உள்ளவர்களை, அல்லது நம்மைவிட மூத்தவர்களை இனிமேல் காமிக்ஸ் பக்கம் திருப்பமுடியாது......புதிய வாசகர்கள் பெரும்பாலும் குழந்தைகளே......எனவே அவர்களை மனதில் வைத்து செயல்படுவது அவசியம்.......


   விகடன் குழுமத்தின் வெளியீடான '' டைம் பாஸ் '' முதல் இதழை வீட்டுக்கு வாங்கிச்சென்றேன்......புத்தகத்தை புரட்டிப்பார்த்த்வுடன் என் மனைவி , '' இனிமேல் இந்தப்புத்த‌கம் எல்லாம் வாங்காதீங்க '' என்றார்...... [ உடனே டி.வி , சினிமாவில் ஆபாசம் இல்லையா என்று கிளம்பவேண்டாம்....டி. வி யில் சேனல் மாற்றலாம் , சினிமாவை தவிர்த்துவிடலாம்........சுவரில் ஆபாச போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது என்பதற்காக அதை நம் வீட்டில் ஒட்ட அனுமதிப்பதில்லை........]

   நாம் இருக்கும்சமூகத்துக்கு தக்கபடிதான் நாம் வாழ் முடியும் நண்பர்களே....... நானும் இரு குழந்தைகளுக்கு தந்தை...........

   எனவே மீண்டு சொல்கிறேன்........ 18 + தலைப்பெல்லாம் ரொம்ப ஓவர்......ஒருவேளை நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆசிரியர் அப்படி செயல் படும் பட்சத்தில் மேற்படி புத்தகங்களை எனக்கு அனுப்பவேண்டாம்.... அடுத்த்முறை சந்தாவை புதுப்பிக்க மாட்டேன்.........[ இது என் கருத்து நண்பர்களே....யாரையும் புண்படுத்த நினைக்கவில்லை.....]

   Delete
 30. எடிட்டர் சார் யார் என்ன சொன்னாலும் சரி சென்சார் விசயத்தில் மட்டும் நோ compromise. இந்த விஷயத்தில் மிஸ்டர் கர்ணன் அவர்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்

  ReplyDelete
 31. //டெக்ஸ் கதைகளுக்கு சென்சார் பிரச்சினைகள் இருக்காது என்பது ஒரு கூடுதல் சிறப்பம்சம்தானே?)//

  அப்படிப்போடுங்க விஜய்

  ReplyDelete
 32. //இத்தாலியில் மிலன் நகரிலுள்ள காமிக்ஸ் மியூசியத்திற்கும் நமது இந்த டெக்ஸ் இதழ் பயணமாகிறதாம் ! இந்தியாவிலிருந்து வெளியாகும் ஒரு காமிக்ஸ் இதழ் இந்த அருங்காட்சியகத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறை என்பது தான் icing on the cake //

  அன்புள்ள எடிட்டருக்கு,

  வாழ்த்துக்கள்! நமது தமிழ் பதிப்பை அங்கு காட்சிக்கு வைப்பது மிகவும் பெருமையாக உள்ளது. மேலே நண்பர் கூறியுள்ளது போல் அதை புகைப்படம் எடுத்தது இங்கே பகிர்வதுடன், ஏதாவது ஒரு டெக்ஸ்வில்லர் புத்தகத்தில் இணைத்து வெளியிட வேண்டுகிறேன்

  ReplyDelete
 33. //தவிர்க்க இயலா கனமும்; களமும் தொடர்ந்திடும் சந்தர்ப்பங்களில் "Recommended for +18 readers" என்ற tag ஒன்றினை selective ஆக இணைத்திட சிந்திப்போம்! //
  இது போல ஒரு தர்மசங்கடமான நிலமை எப்பொழுதுமே நமது இதழுக்கு வர வேண்டாமே !. பல ஆண்டுகளாக அனவரது வீட்டிலும் வாங்கிவரும் குமுதமும்.ஆனந்தவிகடன் போன்ற இதழ்கள் இன்று நடிகைகளின் பிடியில் சிக்கித்தவித்து சீரழிந்து வருவது போதும்

  ReplyDelete
 34. உடைகள் விஷயத்தில் சென்சார் செய்வது அவசியமான ஒன்றே..மற்றபடி நம் தமிழ்க் கதாநாயகிகள் சொல்வதுபோல கதைக்குத் தேவையென்றால் கவர்ச்சிக் காட்சிகளை நீக்காமல் மாடஸ்டியை கோடஸ்டி ஆக்கியது போல செய்வது உறுத்தாமல் இருந்தால் சரிதான்..அதே நேரம் என் மகன்(10 வயது) லார்கோவின் கதைகளை பார்த்துவிட்டு(அவனுக்கு ம.மந்திரி, லக்கிலூக், சிக்பில் மட்டுமே படிக்க பிடிக்கும்) லார்கோவின் டிரஸ்ஸைப் போல என்னையும் தைத்துப் போடச் சொல்கின்றான்… அந்த அளவு அவனை லார்கோவின் appearance கவர்ந்துவிட்டது... அங்க்கிள் ஸ்குரூஜ் போன்ற வால்ட் டிஸ்னி காமிக்ஸ்களை filler pages பகுதியில் சிறுசிறு கதைகளை வெளியிட்டால் மாஸ்ஹிட் ஆக வாய்ப்பு அதிகமாக உள்ளது..

  ReplyDelete
 35. டெக்ஸ் கதைகளின் பெரும்பான்மை வெற்றிக்கு அவரது ஆண்மை மிளிரும் வீரமும் கண்ணியமான பேச்சும் புத்திக் கூர்மையும் மட்டும் காரணமென்று நான் எண்ணவில்லை... நம் ஆசிரியரின் கதை தேர்ந்தெடுக்கும் திறனும் ஒரு முக்கிய காரணமென தோன்றுகிறது... அடுத்த இத்தாலியப் படைப்பான டேஞ்சர் டயபாலிக்கும் முத்திரை பதிப்பார் என்றே தோன்றுகிறது(டயபாலிக் கதைகளுக்கும் கழுகுக்கண் சென்சார் தேவைப்படும் என்றே நினைக்கிறேன்)

  ReplyDelete
 36. வில்லருக்கு என்றுமே வெற்றிதான்!

  ReplyDelete
 37. Dear Sir,
  வழக்கமான தங்கள் எடிட்டிங்கில் சித்திரங்களிலும் வார்த்தைகளிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தினாலே போதும் என கருதுகிறேன்! பழைய கதைகளில் உங்கள் எடிட்டிங் சரியான இடத்தில் சரியாக செய்திருப்பீர்கள். உதாரணத்துக்கு XIII Series.

  ReplyDelete
 38. எடிட்டர் சார்,

  மிலன் காமிக்ஸ் மியூசியத்திற்கு நமது டெக்ஸ் வில்லர் செல்வது குறித்து மிக்க மகிழ்ச்சி. எல்லாம் உங்கள் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு.

  தற்போது மாற்றப்பட்டிருக்கும் நமது வலைப்பூ கண்ணுக்கு "குளிர்ச்சியாக " இருக்கிறது. ஜூனியர் எடிட்டருக்கு ஒரு சபாஷ்.

  கதைகளில் சென்சார் பற்றி எனது கருத்து : Recommended for +18 readers என்று போடுவதை விட , நண்பர் கார்த்திக் கூறியது போல் "For matured readers" என்று போடலாம்.

  சமிபத்தில் இங்கு புதியதாய் வெளிவந்த லார்கோவின் கதைகளை படிக்க நேர்ந்தது (Collère Rouge ). அதில் Playboy போஸ்டரின் "முழு" கவர்ச்சி படங்கள் back dropல் இருக்கும். இதைப் பார்க்கும்போது உங்கள் நினைப்புதான் வந்தது. நமது ஆசிரியர் இதையெல்லாம் எடிட் செய்ய என்ன கஷ்டப்பட போகிறாரோ என்று. A great challenge for you sir.

  ReplyDelete
 39. CENSOR BOARD for 'A' CERTIFICATE ?

  1. 7 முதல் 77 வரை கவர்கள் அச்சடித்த மறுவாரமே குப்பை கூடைக்குள் போகவேண்டுமா ?
  2. 40 வருட கால நம் காமிக்ஸ் பாரம்பரியம் காணாமல் போகவேண்டுமா ?

  3. முழு 'நீள' வண்ணப்படங்கள் நமது காமிக்ஸ் க்கு தேவையா ?
  4. சில அரிதான தமிழ் படங்கள் போல் நமக்கும் சிலநேரம் 'A' முத்திரை அவசியமா ?


  'U' முத்திரை கேட்கும் கர்ணன் போன்ற வாசகர்களுக்கும்,
  'A' முத்திரை ஆதரவு எதிர் தரப்பு வாசகர்களுக்கும் தீர்வுகள் தான் என்ன ?

  contd part.2...

  ReplyDelete
 40. Dear vijayan, There is no need for cultural policing be brought into the comics.These comics are written and produced in a society which accepts such liberalization. Further if you start editing to suit our conservative out look (in print media only) the tempo of the story will be lost and will look like the doctoring done on Mischelle Obama's dress by Iranian Media. The present day TV programmes and movies (to which most of the children are gulued to with the approval of the parents) day in and day out dish out much worse violence and sex. We are prepared to accept the same. Please do not corrupt the originals and make the story a mockery to please a few.

  tgopalakrishnan

  ReplyDelete
 41. தற்சமயம் மிகவும் முக்கியமான/தேவையான முடிவு.

  நான் இப்பொழுது கதையினை படித்து முடித்தேன்.

  ஆங்கிலத்தில் தரவிறக்கம் செய்து வைத்திருந்தாலும் தமிழிழ் படிக்கும் வரை அதனை படிக்காது இருக்க மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது.

  அருமையான கதை.முழு வேகத்தில் செல்கிறது.

  மொழி பெயர்ப்பு சிறப்பாக இருந்தது.

  // "Recommended for +18 readers" என்ற tag ஒன்றினை selective ஆக இணைத்திட சிந்திப்போம்//

  இதுபோல முடிவு செய்தால் அனைத்து லார்கோ கதைகளும் இதன் கீழ் வரும் என நினைக்கிறன்.

  //7 முதல் 77 வயதினர் வரை படிக்கக் கூடிய அனைத்து ரக காமிக்ஸ்களும் எங்களிடம் கிடைக்கும்! //

  கார்த்திக்கின் இக்கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

  டெக்ஸின் மூலம் நமக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்திற்கு வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 42. @ கர்ணன் , கார்த்திக் & others

  NBS வந்த பொழுதே படத்தனிக்கை பற்றி அனல்பறக்க விவாதித்திருந்த போதும் மீண்டும் இங்கே அதைபற்றி விவாதங்கள் எழுந்துள்ளது. லார்கோ புத்தகங்கள் வெளியிடப்படும் ஒவ்வொரு முறையும் தலைகாடப்போகும் இந்த விவாதங்களை தவிர்க்க/பதிலளிக்க ஆசிரியர் சற்று சிரமப்படவேண்டியிருக்கும்.

  நமது காமிக்ஸ் வாசகர் வட்டத்தை பற்றிய நமது ஆசிரியர் நம்மை விட மிக தெளிவாக, நமக்கு எதை எப்படி கொடுக்கவேண்டும் என்பதை விரிவாக புரிந்துகொண்டுள்ளார் என்பதை நாம் அனைவரும் முதலில் ஒத்துகொண்டு அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

  படத்தனிக்கை நம்மை போன்ற நமது காமிக்ஸ்க்கு அறிமுகமான சந்தாதரர்களைவிட கடைகளில் தொங்கவிடப்பட்டுள்ள புத்தகங்களின் பளபளப்பில் கவரப்பட்ட ஒரு சிறுவன்/சிறுமி அதை தன தந்தையிடம் வாங்கிக்கொடுக்கச்சொல்லி கட்டாயப்படுத்தும்போது நமது காமிக்ஸ் பற்றிய அறிமுகமில்லாத அந்த அப்பாவி தந்தைக்கு அந்த புத்தகம் தனது மகனுக்கு/மகளுக்கு ஏற்றதா என யோசிக்காமல் வாங்கிக்கொடுக்கும்போது அதில் உள்ள பெரியவர்களின் புரிதலுக்கு உகந்த விஷ்யங்கள் அவனது/அவளது மனதை காயப்படுத்திவிடக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால் அந்த நோக்கமே படத்தனிக்கைக்கு பிரதானமாக கொள்ளவேண்டும். தொடர்களை பற்றி புரிந்த சந்தாதாரர்கலான நாம் தவிர்க்கப்படவேண்டிய புத்தகங்கள் என்று நமது மனதுக்கு பட்டால் மிகசுலபமாக அதை நமது குழந்தைகளின் பார்வையிலிருந்து அப்புறப்படுத்திவிடலாமே.இதற்கு எந்த எச்சரிக்கை வாசகமும் தேவையில்லையே???'

  இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் முறைப்படுத்தப்படாத துறைகளேன பல உண்டு. அதில் நமது மீடியாவும் ஓன்று. AXN போன்ற அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு தொடருக்கும் முன்னே CONTENT ADVICE அறிவிகிறார்களே ,நமது தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் ஏதாவது ஒன்றிலாவது இது போன்ற பழக்கம் உண்டா ??க்ரைம் நாவல் மற்றும் குமுதம் போன்ற வார மாத இதழ்களின் எச்சரிக்கை வாசகம் உள்ளதா ??
  லட்சக்கணக்கான பார்வையாளர்கள் உள்ள இந்த துறைகளே இன்னமும் செப்பனிடப்படாமல் இருக்கும்போது நமது வெறும் ஆயிர இலக்க கூட்டம் கொண்ட வாசகர்களின் புத்தகத்தில் இந்த வாசகங்களை பிரசுரிக்கசெய்ய வற்புறுத்துவது "பவானி ஆற்றை சுத்தப்படுதுகிறேன், மாரப்பன் தோட்டத்தில் உள்ள சாயப்படரையில் உடனே சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தவேண்டும் மற்றவர்களை பற்றி எனக்கு கவலையில்லை " என்பதை போன்று உள்ளது.ஒரு துறையில் அனைவரும் இதுவரை ஏற்று ஒரு சமமான புரிதலுக்கு வராத ஒரு விஷ்யத்தை ஒருவர் மேல் மட்டு திணித்தால் அந்த முயற்சி அவரது தொழில் சாலையை முடக்கச்செய்ய மட்டுமே உதவக்கூடியதாக இருக்கும்.

  சரி நமது சமூக அக்கறை என்னவாவது என்பவர்களுக்கு...வளர்த்து வரும் நாட்டில் வளர்ந்து வரும் துறை நமது. அதற்க்கு சற்று BREATHING SPACE தேவை. CO2 EMISSION ஒப்பந்தத்தில் நாம் இது வரை கையெழுத்து இடாதது நமக்கு நமது சுற்று சூழல் மீது அக்கறை இல்லை என்ற காரணத்தால் அல்ல, நமது தொழில் துறையும் வளர வேண்டும் என்பதற்காக.

  நமது பதிப்புதுறையும் சற்று வளர வேண்டும் ESPECIALLY நமது நிறுவனம் இப்போதுதான் அதன் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.ஆரம்பத்திலேயே கடிவாளம் போடும் இந்த முயற்சி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதை போன்றது.

  தற்போது நமது ஆசிரியர் நமது அறிவுரைகள் கேட்பதற்கு முன்பே ஒரு படத்தனிக்கை முறையை செயல்படுதிவருகிறார். இந்த முறை 99% சதவீத ஆபாசஅம்சங்களை கதைகளில் இருந்து நீக்கிவிடுகிறது. வன்முறைகளும் கனத்த கதையசங்களும் தற்போது தவிர்கமுடியாதது. இதற்காக "FOR ONLY 18+" என்ற வாசகம் விபரீத முயற்சி. அதற்கான அவசியமும் தற்போதைய சூழ்நிலையில் இல்லை.

  இன்னமும் சற்று வளர்ந்த பிறகு இதைபற்றி யோசிப்போமே !

  ReplyDelete
 43. @ கார்த்திக்
  எனக்கு இதில் முழு உடன்பாடு இல்லையென்றாலும், 'சிறார்களுக்கு உகந்ததல்ல' என்று போடுவதும்கூட ஒரு வகையில் நல்லதுதான்! அப்பத்தான் சிறுவர்கள் நிறைய வாங்குவார்கள்(ஒரு வகையான curiosity). தங்களை 'சிறுவர்கள்' என்று ஒரு குரூப் ஒதுக்கித்தள்ளுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது!

  ReplyDelete
 44. இங்கு சில நண்பர்களின் கருத்துக்களை படிக்கையில், 'சென்சார் வேண்டும் என்பவர்கள் அடல்ட்ஸ் ஒன்லி ரக சித்திரங்களை ஆதரிக்கிறார்கள்' என்ற தொனியிலேயே இருக்கிறது! ஆனால் நான் எனது முந்தைய பின்னூட்டங்களில் எழுப்பிய (சித்திரங்களைத் தவிர்த்த) பல கேள்விகளுக்கும்; "அதை நான் சொல்லும் முன்னரே" அதே கோணத்தில் ஆசிரியரிடம் இருந்த புரிதலினால் அவருக்கு ஏற்பட்ட சஞ்சலத்திற்கும் (கீழே!) திருப்திகரமான பதில் எவரிடமும் இல்லை!!!

  //சென்சார் பற்றிய இதற்கு முந்தைய பின்னூட்டங்களுக்கு நான் பெரிதாய் பதிலளிக்காது போனதன் பிரதான காரணம் இந்த உறுத்தல் எனக்குள் இருந்திட்டதனாலேயே...! சித்திரங்களுக்கு கத்திரி போடுவதையும் தாண்டி லார்கோ & ஷெல்டன் கதை வரிசைகளின் சில episodes சற்றே mature audience -க்கானவை என்ற புரிதல் என் மண்டைக்குள் சின்னதொரு சஞ்சலத்தை எற்படுத்தாமலில்லை ! சொல்லப் போனால் WILD WEST ஸ்பெஷலின் சமயமே அந்த கிராபிக் நாவலின் சில வன்முறை சித்தரிப்புகள் ; இறுதியில் வெளிச்சத்துக்கு வரும் அந்த முறையற்ற நேசத்தின் வெளிப்பாடு - விமர்சனங்களை ஈர்க்குமென்று தான் எதிர்பார்த்தேன் ! //

  நண்பர்களே, ப்ளேபாய் லார்கோவை பற்றி பிறகு பேசலாம்! ஆனால், அப்பாவி முகத்துடன் கடந்த ஆண்டு தமிழில் அறிமுகமான ஜெரோமின் கதையில்; முறையற்ற உறவின் வெளிப்பாடு கத்தரிக்கப்பட்டது, அந்தக் கதையின் ஜீவ நாடியையே கத்தரித்து விட்டதை யாரும் உணரவில்லையா?!

  ஆசிரியர் குறிப்பிட்டது போல "எமனின் திசை மேற்கு" கிராபிக் நாவலில் இடம்பெறும் "அந்த முறையற்ற நேசத்தின் வெளிப்பாடு" கத்தரிக்கப்படாததிற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தீர்களா?!

  அல்லது நண்பர் "புத்தகப் பிரியன்" எழுப்பிய கேள்விகளுக்கு நம் பதில்தான் என்ன?
  //இனிவரும் லார்கோ பாகங்கள் அதிலும் குறிப்பாக குழந்தைகளுடன் தகாத உறவு, லெஸ்பியன் காட்சிகளை நாம் எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம்?//

  குழந்தைகளுடன் தகாத உறவு குறித்த "வசனங்கள்" இம்மாத லார்கோ இதழிலேயே உள்ளதே?! ஆண் பெண் பாலியல் உறவு குறித்த இரட்டை அர்த்த வசனங்கள் கதை நெடுக உள்ளனவே?! சித்திரங்களில் மட்டும் சென்சார் கோரும் வாசகர்கள், இதைப்பற்றி ஏன் கேள்விகள் எழுப்புவதில்லை?

  இது போன்ற சந்தர்பங்களில் படங்களை கத்தரித்தால் மட்டும் போதுமா? அப்படி செய்தால், அது உடனே 7 முதல் 17 வயதினர் படிக்க ஏற்புடையதாக மாறிவிடுமா?! 'இல்லை இல்லை, வசனங்களையும் சேர்த்துக் கத்தரிக்க வேண்டும்!' என்று நீங்கள் சொல்வீர்களானால் அந்தக் கதைகளின் கதி என்னாவது?!

  தவிர, பெண்களின் படங்களை மட்டுமே கத்திரி போடச் சொல்லும் நண்பர்கள் மித மிஞ்சிய வன்முறைக் காட்சிகளை வெகு சாதாரணமாக அணுகுவது மிகவும் வருத்தத்தையே தருகிறது! ஆபாசத்தால் சீரழிந்த குழந்தைகளை விட; வன்முறை நிறைந்த TV அனிமேஷன் தொடர்கள், சினிமாக்கள், வீடியோ கேம்ஸ் இவற்றிற்கு அடிமையான, இவற்றால் மனம் பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாய் இருந்திடும் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?! அது எப்படி வன்முறையை அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ள முடிகிறது?!

  சினிமாவில் "A" முத்திரை குத்தப் படுவது பாலியல் காட்சிகளை சார்ந்து மட்டுமல்ல என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதே போல "U" முத்திரை பெற்ற படங்கள் எல்லாம் பக்தி ரசம் சொட்டும் காவியங்கள் அல்ல என்பதும் நாம் அறிந்ததே!

  காமிக்ஸை பொறுத்தவரை, சென்சார் என்பதை 'ஆபாச சித்திரங்களுக்கு ஆடை அணிவிப்பது' என்ற ஒரே ஒரு கோணத்தில் மட்டுமே அணுக வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை நண்பர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்!

  நான் ஆபாசக் காட்சிகளுக்கு ஆதரவாளனும் அல்ல, 18+ முத்திரை போடச் சொல்லி வலியுறுத்துவது என் நோக்கமும் அல்ல! அது வேண்டாம் என்று ஆசிரியர் நினைத்தால் அவர் முடிவை இனி எதிர்க்கப் போவதும் இல்லை!

  ஏனென்றால் என் குழந்தைக்கு எதை சென்சார் செய்து , எதைக் கொடுக்க வேண்டும் என்பதில் நான் நிச்சயமாக பிறரைச் சார்ந்து இல்லை! :) என் குழந்தைக்கு 7 வயது ஆகும் போது, "7 முதல் 77 வரை" என்ற வாசகம் தாங்கி வரும் லார்கோ மற்றும் இதர கிராபிக் நாவல்களை ஒரு மெல்லிய கேலிச் சிரிப்புடன் அவன் கண்களில் படாமல் மறைத்து வைத்து விடுவேன்! ;)

  Have a great day folks! :) :) :)

  ReplyDelete
  Replies
  1. //ஆசிரியர் குறிப்பிட்டது போல "எமனின் திசை மேற்கு" கிராபிக் நாவலில் இடம்பெறும் "அந்த முறையற்ற நேசத்தின் வெளிப்பாடு" கத்தரிக்கப்படாததிற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தீர்களா?!//
   நண்பரே , அவனுக்கு உண்மையிலே தான் சகோதரன்தான் என்பது தெரியாதே !அவள் சகோதரன் என நினைத்தே விலகினாள் ! அது போல அவன் இறக்கும் தருவாயில் ஷெரிப் அவன் சகோதரன் அல்ல என கூறிய பின்னரே அவளும் ஏற்று கொள்வது போல இருக்கும் !ஆனால் முடிவில் ஷெரிப் உண்மை உரைக்க அவள் இடிந்து போவதை முடியும் !இதில் முறையற்ற காதலுக்கு எங்கே ஆதரவு !அது தகாதது எனும் வரிகள் இளையோடுமே !

   Delete
  2. கிளிவேஜ்ல் கூட ஆடை அணிவித்து விட்டு..... அந்த முழுவதும் என்ற இடம்

   Delete
  3. அப்புறம் வன்முறை என்பது இங்கே நமது பள்ளி பாட வரலாறுகளிலே உள்ளதே !பாலீர்ப்பு என்ற உணர்வு அனைவருக்குமுண்டு !ஆனால் இந்த உடை ஒன்றும் கதையின் ஓட்டத்தை மாற்றி விடாதே !

   Delete
  4. லார்கோவில் சிறுமியர் பாலியலை சப்போர்ட் செய்து வரிகள் எங்கும் இல்லையே !

   Delete
  5. //இனிவரும் லார்கோ பாகங்கள் அதிலும் குறிப்பாக குழந்தைகளுடன் தகாத உறவு, லெஸ்பியன் காட்சிகளை நாம் எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம்?//
   50 பக்கங்களுமா அப்படியே இருக்கும் !ஆவெரேஜா இரண்டு பக்கங்கள் கத்தரி போடுவோமா !

   Delete
  6. அன்பு நண்பர் ஸ்டீல் க்ளா,
   "எமனின் திசை மேற்கு" குறித்த உங்களின் பதில் ஏற்புடையது.

   ஆனாலும் ,எனது மற்ற கேள்விகளுக்கான உங்களின் மேலோட்டமான பதில்கள்... பொதுப்படையான பதில்கள்... சமாளிஃபிகேஷன் பதில்கள்... இவை பற்றி...

   மற்றும், பதில் சொல்லத் தவிர்த்த கேள்விகள்... சரியாக புரிந்து கொள்ளாத கேள்விகள்... புரிந்து கொள்ள விரும்பாத கேள்விகள்... இவை குறித்து...

   சரி விடுங்கள்! :) எனது கருத்துக்களை சொல்லி விட்டேன், மேற்கொண்டு எந்த நண்பரிடமும் நான் விவாதிக்கப் போவதில்லை! உண்மைகள் அவரவர் மனதிற்கே தெரியும்! ;)

   Delete
  7. நிச்சயம் கதைக்கு பாதிப்பு இல்லை என வருவதில் உள்ளவற்றை தூக்குவதில் தவறு இல்லையே !வன்முறைகள் ,சம்பவங்கள் நிறைய பார்க்கிறோம் ஆனால் அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையாக ஏற்று கொள்ள இயலாத ஒன்று !ஆராய்ச்சிகள் சொல்வதை விடுங்கள் உங்கள் மனதை கேளுங்களேன் !

   Delete
 45. பெண்களின் படங்களை சென்சார் செய்துவிட்ட ஒரே காரணத்தினால், இது போன்ற கதைகள் 7 வயது சிறுவர் / சிறுமிகள் படிக்க ஏற்புடையதாக மாறிவிடுமா என்ன?! நான் இல்லை என்று அடித்துச் சொல்வேன்! மறுக்க முடியுமா உங்களால்?! உங்களின் தர்ம சங்கடம் எனக்கு புரியாமலில்லை! ஆனால், இதுபோன்ற கதைகளுக்கு '7 முதல் 77 வரை அனைவருக்கும்' என்பது ஒரு பொருந்தாத கோட்பாடு என்பது என் தாழ்மையான கருத்து! i also agree this.....i think we r creating a scene that is needless these days....no need to panic...do u realy believe censor of some frames would bring that much of revolution in our rapidly changing culture....?

  ReplyDelete
 46. CENSOR BOARD for 'A' CERTIFICATE...?

  ஆயுத கலாச்சாரம், மிதமிஞ்சிய வன்முறை, சார்பு வசனங்கள், மது, புகை, போதைப்பொருட்கள் மற்றும் ரத்தமும், கத்தியும், வன்முறையும், கஞ்சாவும் நம்மை தானாக அடிமையாக்குவதில்லை. அதற்கு நாம் அடிமையாவதும், ஈர்க்கப்படுவதும் சமூகமும், சிறுவர்கள் வளரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும், வாழும் இடமும் தான் காரணமாக அமைகின்றன !

  ஆனால் ஆண் பெண் உறவு என்பது இயற்கை. இது போன்ற முழு "நீள" வண்ணப்படங்களை பார்த்தவுடன் பாலுணர்வை தூண்டி உடம்பில் ரசாயன மாற்றங்களை உண்டாக்கி விடும். தற்போதைய CO-EDUCATION முறை அதற்கு வடிகால் தேட சொல்லி ஆர்ப்பரிக்கும்...

  நமக்கு பள்ளிக் கல்வி கற்றுகொடுக்காத போர் வன்முறைகளா? நாம் படிக்காத ரத்தம் சிந்திய சுதந்திர போராட்ட சித்திரவதை கதைகளா? ஆனால் அதை படித்து வளர்ந்த நம் தாக்கம் தான் என்ன? ஏனெனில் அவை சமூகமும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் சார்ந்த விஷயங்கள். பாதிப்பு வராமலேயே மறைந்து விடும்.

  ஆனால் பாலுணர்வு அப்படிப்பட்டதல்ல, தன் மன உணர்ச்சி தூண்டுதல் ஒன்று மட்டுமே போதுமானது, நம் கலாச்சாரம் சீரழிய ...!

  contd...Last but not the least part.3 : இதற்கான இறுதியான தீர்வுகள் !

  ReplyDelete
  Replies
  1. //ஆனால் ஆண் பெண் உறவு என்பது இயற்கை. இது போன்ற முழு "நீள" வண்ணப்படங்களை பார்த்தவுடன் பாலுணர்வை தூண்டி உடம்பில் ரசாயன மாற்றங்களை உண்டாக்கி விடும். தற்போதைய CO-EDUCATION முறை அதற்கு வடிகால் தேட சொல்லி ஆர்ப்பரிக்கும்... //
   எதிர்பாலீர்ப்பு என்பது சிறுவயதிலே ஆரம்பித்து விடுமே !

   Delete
 47. பேசாமல் ஓட்டெடுப்பு நடத்தி விடலாம் .........


  அப்புறம் என்னை மாதிரி சின்ன(?)பசங்க என்ன படிக்கிறதாம்?

  ReplyDelete
 48. அருங்காட்சியகத்துக்கு போற அளவுக்கு லயன் காமிக்ஸ் உயர்ந்திடுச்சு ............வெரி குட் .........(வேற தொனியில் நண்பர்கள் படிக்க வேண்டாம் )

  ReplyDelete
 49. பிரச்சனை என்னவென்றால், இதற்குமுன் கருப்பு வெள்ளையில் நம் கவனத்தை ஈர்க்காத பல விஷயங்கள் இப்போது கலரில் பளிச்சென்று தெரிவதாலேயே விவாதத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. என்னை பொறுத்தவரை புதிய விஷயங்களின் தேடலில் நம் மனமும், நமது கலாச்சாரமும் ஏற்றுகொள்ளமுடியாத அல்லது நமக்கு இதுவரை பழக்கமில்லாத சில எதிர்மறை விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். அது நமது சந்ததிகளை பாதிக்காதவாறு கொண்டுசெல்லவேண்டும். ஆனால் இப்போது வரும் லார்கோ மற்றும் ஷெல்டன் கதைகளில் பிரச்சனைக்குரிய பகுதிகளை ஆசிரியர் சென்சார் செய்தும் எடிட் செய்தும் வெளியிடுகிறார். இதற்கு மேலும் கத்தரியை உபயோகித்தால், அவைகளை ரசிக்க முடியாது என்பதே என் கருத்து.

  இந்த மாத லார்கோவை, நமது பிள்ளைகளை துரத்தி விட்டு, தலைவிதி'யே என்று நமது விதியோடு விளையாடி, மறைத்து மறைத்து வைத்து படிக்கும் அளவுக்கு ஒன்றுமில்லை என்பதே என் கருத்து. :-)

  ReplyDelete
  Replies
  1. //இதற்கு மேலும் கத்தரியை உபயோகித்தால், அவைகளை ரசிக்க முடியாது என்பதே என் கருத்து.//

   மாபெரும் உண்மை !


   இந்த மாத லார்கோவை, நமது பிள்ளைகளை துரத்தி விட்டு, தலைவிதி'யே என்று நமது விதியோடு விளையாடி, மறைத்து மறைத்து வைத்து படிக்கும் அளவுக்கு ஒன்றுமில்லை என்பதே என் கருத்து.//

   73ம் பக்கத்தின் அடியில் முதல் கட்டத்தில் கொஞ்சம் விளையாடி இருக்கலாம் என்பதே எனது எண்ணம் !மற்றபடி லார்கோ அசத்தல் !


   Delete
  2. ஆசிரியர் சரியான கதைகளைத்தான் தருவார்,தருகிறார் ......மேற்கொண்டு சில விஷயங்கள் ஆசிரியர் உணர்ந்துள்ளார் ....ஆகவே அவர் தமது கதைகளை வன்முறைக்காக ஒதுக்க வேண்டாம் !அதற்காக அதன் மேல் முத்திரை குத்த வேண்டாம் !

   Delete
 50. @P.Karthikeyan:
  //இந்த மாத லார்கோவை, நமது பிள்ளைகளை துரத்தி விட்டு, தலைவிதி'யே என்று நமது விதியோடு விளையாடி, மறைத்து மறைத்து வைத்து படிக்கும் அளவுக்கு ஒன்றுமில்லை என்பதே என் கருத்து. :-)//
  ஹா ஹா ஹா, தூள் நண்பரே! :)

  ReplyDelete
 51. CENSOR BOARD for 'A' CERTIFICATE...?

  part .3 :

  1. 7 முதல் 77 வரை என்பது நீடித்து நிலைத்து நிற்க வேண்டும் !

  2. ஆசிரியர் எப்பொழுதும் போல் தன் பாணியில் CENSOR செய்து வரவேண்டும். அவரை விட காமிக்ஸ் புரிதல் இங்கு எவருக்கும் இல்லை என்பதே என் கருத்து. ஏனெனில் LM Comics 40 வருட பாரம்பரியம் கொண்டது !

  3. ஆசிரியர், தம்முடைய CENSOR க்கு பெரும்பாலான 'U' தமிழ் படங்களை அளவுக்கோளாக வைத்துக் கொள்ளலாம். அதில் வன்முறை, ரத்தம், மது, புகை, காதல், காமம் மற்றும் லார்கோ முத்தங்கள் என அனைத்தும் அடங்கியுள்ளது !

  4. பள்ளிகளுக்கு லார்கோ, ஷெல்டன் போன்ற புத்தகங்களை மட்டும் அனுப்பிட வேண்டாம். நம்மிடம் சந்தா செலுத்திய பள்ளிகளுக்கு தொலைப்பேசியில் நேரடியாக புரியவைத்து விடலாம் !

  5. கர்ணன் போன்ற வாசகர்கள் லார்கோ, ஷெல்டன் போன்ற கதைகளை மட்டும் தம் பிள்ளைகளுக்கு படிக்க கொடுக்க வேண்டாம். கேட்டால் "ஜேம்ஸ் பாண்ட் படம்" போன்ற கதைகள் என்று கூறிவிடலாம் !

  6. கடைசியாக, நம் பிள்ளைகளுக்கு நாமாக பாலியியல் (SEX) கல்வி கற்றுக் கொடுக்க வேண்டாமே... ப்ளீஸ்...!

  ReplyDelete
  Replies
  1. //ஆசிரியர் எப்பொழுதும் போல் தன் பாணியில் CENSOR செய்து வரவேண்டும். அவரை விட காமிக்ஸ் புரிதல் இங்கு எவருக்கும் இல்லை என்பதே என் கருத்து. ஏனெனில் LM Comics 40 வருட பாரம்பரியம் கொண்டது !
   //


   எப்பொழுதும் போல்

   Delete
  2. மாடஸ்டி போல கோடும் வேண்டாம் 73ம் பக்கம் போல திறந்த வெளியும் வேண்டாம் !எப்போதும் போல ....

   Delete
 52. As far as I am concerned largo should have come in novel format not in comics format. The is a very dangerous plot I have ever read in comics.

  ReplyDelete
 53. As far as I am concerned largo should have come in novel format not in comics format. The is a very dangerous plot I have ever read in comics.

  ReplyDelete
 54. CENSOR BOARD for 'A' CERTIFICATE...? ( making-off )

  25 வருட காலமாக நாம் படித்து ரசித்து வந்த "டெக்ஸ் வில்லர்" கதைகளில் இல்லாத ஆயுத கலாச்சாரம், மிதமிஞ்சிய வன்முறை, மது, புகை, போதைப்பொருட்கள், ரத்தம் போன்றவைகளா இன்று லார்கோ வில் வந்து விட்டது? உயிரோடு மண்டை தொலியை உரித்தெடுத்த காட்சிக்களுக்கு இன்றுவரை இல்லாத வக்காலத்து...

  இன்று லார்கோ விற்கு மட்டும் வருவது எதனால்...?
  அந்த படங்களுக்கு என்று நான் சொல்லவில்லை...!

  நம்மால் ஊரை சுத்தப்படுத்த முடியாது. TV, சினிமா, internet, வெளிவட்டாரம் ஆகியவற்றில் உள்ள cleavage எதையும் நம்மால் சுத்தப்படுத்த முடியாது. ஆனால் நம் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது நம் கையில் மட்டுமே உள்ளது. அதுபோல் நம் வீடு போன்ற நம் தமிழ் காமிக்ஸ் சுத்தமாகவே இருக்கட்டும்...!

  ReplyDelete
 55. //25 வருட காலமாக நாம் படித்து ரசித்து வந்த "டெக்ஸ் வில்லர்" கதைகளில் இல்லாத ஆயுத கலாச்சாரம், மிதமிஞ்சிய வன்முறை, மது, புகை, போதைப்பொருட்கள், ரத்தம் போன்றவைகளா இன்று லார்கோ வில் வந்து விட்டது? //

  மிக மிக சரி !அப்படியென்றால் புத்தகமே வெளியிட இயலாதே !

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் கதைக்கு பாதிப்பு இல்லை என வருவதில் உள்ளவற்றை தூக்குவதில் தவறு இல்லையே !வன்முறைகள் ,சம்பவங்கள் நிறைய பார்க்கிறோம் ஆனால் அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையாக ஏற்று கொள்ள இயலாத ஒன்று !ஆராய்ச்சிகள் சொல்வதை விடுங்கள் உங்கள் மனதை கேளுங்களேன் நண்பர்களே !

   Delete
 56. நண்பரின் கருத்தை நான் வரவேற்கிறேன்..........

  ReplyDelete
 57. மதியில்ல மந்திரி புண்ணியத்தில் நான்கு லட்டுகளை இந்த மாதம் சுவைக்கும் பாக்கியம் பெற்றோம்.
  நண்பர்களின் கடின உழைப்புக்கு ஒரு சின்ன payback!


  லட்டு 1 @ செந்தில் குமார்
  1.தலைப்பில் அசத்திவிட்டார்.
  2 .முகபாவதுக்கு ஏற்புடைய வசனங்களை உபயோகிப்பதில் ஒரு இடத்தை தவிர்த்து அனைத்து இடங்களிலும் கவனமாக செயல்பட்டுள்ளார். (அந்த பாடலை ஒரு குத்து பாடலாக மாற்றியிருக்க வேண்டும் )
  3 .வழக்கமான மதியில்ல மந்திரியின் நடைக்கு ஒட்டி வருவதில் ஏறக்குறைய வெற்றிபெற்றுள்ளார்
  4.கதாப்பாத்திரங்களின் பெயர்களை சற்று கவனமாக கையாண்டிருக்க வேண்டும்.


  லட்டு 2 @ கார்த்திக்
  1.தலைப்பு சற்று average ராகமே. கதைக்கு சூட்டாகவில்லையே...?
  2.குத்துபாய்,குந்திக்கின்னேசிந்திப்பவன் ஹா ஹா ஹா கார்த்திக் டச்...அருமை
  3."நான் அவன் இல்லை" போன்ற வசனங்களை தவிர்த்திருக்கலாம் " என்றாலும் இந்த "இரும்புக்கை மாயாவி பாத்த மாதிரி ஓடறான்" வசனம் good try.
  4."ஏன் முதலிலேயே சொல்லல ?? நான் அவரை உடனே பாக்கனுமே " முகபாவதுக்கு பொருந்தாத வசனம்.
  5.இருந்தாலும் முதல் இரண்டு லட்டுக்களிடயே பெரிய வித்யாசம் தெரியவில்லை.
  6.அருமையான முயற்சி !

  லட்டு 3 @ பொடியன்
  1.தலைப்பு ஒரு சொதப்பலாக படுகிறது. இன்னமும் சற்று நகைசுவையாக வைத்திருக்கலாம்
  2.கதாப்பதிரங்களின் பெயர்களை செலக்ட் செய்வதில் சற்று கவனம் தேவை
  3.வசனங்களில் நகைசுவை தெரிக்கிறது என்றாலும் மதியில்லா மந்திரி styleக்கு சில இடங்களில் பொருந்தவில்லை.
  4.அருமையான் முயற்சி.படங்களின் முகபாவங்களுக்கு ஏற்ப வசனங்கள் ,very near to perfection பொடியன்.

  ReplyDelete
 58. இந்த வன்முறைக் காட்சிகளோ, கத்தி-ரத்தமோ, தூக்கிலிடுவதோ, துப்பாக்கியால் சுடுவதோ நமது காமிக்ஸுக்குப் புதிதல்லவே! இதுவரை வந்த 99% கதைகளில் அதைத்தானே பார்த்து, படித்து வளர்ந்திருக்கிறோம்! நம்மில் எத்தனைபேர் வன்முறைவாதியாக வளர்ந்திருக்கிறோம்? ( மாறாக, 'அடடே, நீங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்கறீங்களே!' ன்னு மனைவியிடம் சபாஷ் வாங்குபவர்கள் நம்மில் நூற்றுக்கணக்கானோர் உண்டே!)

  ஆனால், இப்படிப்பட்ட கிளுகிளுப்பான காட்சிகள் நம் காமிக்ஸ் வரலாறு இதுவரை கண்டறியாதது! இது இப்படியே தொடருமானால் என்றாவது ஒருநாள் 'ஈவ் டீசிங் வழக்கில் ஈரோடு விஜய் கைது' அப்படீன்னு தினத்தந்தியில் வந்தாலும் வரக்கூடும்தானே?! :) அப்புறம் கோவை மத்தியச் சிறையில் குத்தவச்சு உட்கார்ந்துகொண்டு ஸ்டீல் க்ளாவிற்கு புகை சமிக்ஞை அனுப்பி 'இந்த மாசம் லார்கோ படிச்சீங்களா?'ன்னு குசலம் விசாரித்துக் கொண்டிருக்க வேண்டுமா, நான்?

  கிளுகிளுப்பான படங்களில்/இடங்களில் உடைகள் வரைவதும், ஆபாச வசனங்களை சற்றே மாற்றியமைப்பதும் கதையோட்டத்திற்கு எவ்விதத்தில் தொய்வைத் தருமென்று எனக்கு விளங்கவில்லை! சரி அப்படியே கொஞ்சம் தொய்வைக் கொடுத்தாலும் அதை நாம் நம் பாரம்பரியம் மிக்க காமிக்ஸின் நன்மைக்காக சற்று விட்டுக் கொடுக்கமாட்டோமா என்ன?

  ReplyDelete
  Replies
  1. விஜய் பேசாமல் உங்கள் பெயரை சைமன் என மாற்றி விடுங்கள் ~!!

   Delete
  2. டியர் விஜய்,
   //இதுவரை வந்த 99% கதைகளில் அதைத்தானே பார்த்து, படித்து வளர்ந்திருக்கிறோம்! நம்மில் எத்தனைபேர் வன்முறைவாதியாக வளர்ந்திருக்கிறோம்?//
   அதே போல, ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்ட் கதைகளின் (முழு & அரைகுறை) நிர்வாணக் காட்சிகளை, சிறு வயதிலேயே படித்து (பார்த்து) வளர்ந்ததால் மட்டும் நாம் அனைவரும் கெட்டுப் போய் விட்டோமா என்ன?! கருப்பு வெள்ளையில் வந்ததை விட வன்முறை & ஆபாசம் வண்ணத்தில் ஒருபடி தூக்கலாக இருக்கிறது என்பதே என் கருத்து!

   Delete
  3. //ஜேம்ஸ் பாண்ட் கதைகளின் (முழு & அரைகுறை) நிர்வாணக் காட்சிகளை//
   அங்கும் கூட முதல் கதைக்கு பின்னர் முழு & அரைகுறை காட்ச்சிகள் நீக்க பட்டன நண்பரே !

   Delete
  4. நல்லவேளையாக ராணி காமிக்ஸ்களை படிப்பதை (குறிப்பாக ஜேம்ஸ்பாண்டு கதைகள்) ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டதால்தான், இன்று கண்ணியம் மிக்க கணவானாக ஈரோடு வீதிகளில் வலம் வந்துகொண்டிருக்கிறேன், பல இளம் பெண்கள் தப்பித்தார்கள். :D

   (அந்தப் புத்தகங்கள் யாரிடமாவது இருந்தா கொடுங்களேன், சும்மா படம் பார்த்துட்டுத் தரேன்) :)

   Delete
 59. Largo விற்கு மட்டும் "Content Not Suitable for Minors" என்று caption போட்டுவிட்டால் போதும் என்று தோன்றுகிறது.. இவ்வளவு விவாதங்கள் தேவையற்றது.. கதைக்கு நீதி செய்து Largoவை சென்சர் செய்யாமல் (Mild censor only for Nudity)வெளியிட வேண்டும். கண்டிப்பாக Largo is not for young readers.Caption போடுவது, வியாபாரத்தை பாதிக்கும் என்ற காரணத்திற்காகவோ 7 to 77 இல் fit ஆகவில்லை என்பதற்காகவோ , அதித சென்சர் செய்வது , ஒரு Art ஐ உதாசீனபடுத்துவது போலாகும்

  டிவி பார்க்கும் போது முத்த காட்சி வந்தால் சேனல் மாற்றுவது போல், இவ்விதல்களை நம் வீட்டில் புழங்காமல் தனிப்பட்ட முறையில் நாம் தான் எதாவது செய்யவேண்டும். அதை விடுத்தது சென்சர் செய்தால் அது அந்த கதைக்கு அநீதி செய்வதாகும். அதற்கு அந்த seriesஐயே நிறுத்திவிடலாம்.., நமது 7 to 77 format ல் வராததால்..

  HBO, Star Movies போன்ற சேனல்கள் இந்திய censor செய்து ஒளிபரப்பும் படங்கள், வேறும் timepass அன்றி அவை ஒருபோதும் "A Movie Experience" குடுப்பதில்லை.. உலக சினிமா எல்லாம் ஓட்டை சினிமா வாக்கிய பெருமை இந்த சேனல் கலையே சாரும்..

  நாமும் அதே தவறை செய்ய வேண்டாமே. ப்ளீஸ்.. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறன்.. நானும் இரு பெண் குழந்தைகளுக்கு தந்தை ஆனாலும் என் மக்களுக்கு இவற்றை (தவறானவற்றை தவிர்க்க) புரியவைப்பது தான் நல்லது (ஒளித்து வைப்பதை விட) என்று நம்புகிறேன்..

  ReplyDelete
  Replies
  1. //Largo விற்கு மட்டும் "Content Not Suitable for Minors" என்று caption போட்டுவிட்டால் போதும் என்று தோன்றுகிறது//
   நண்பரே எத்தனை புத்தகங்கள் தமிழிலே இப்படி வார்த்தைகள் தாங்கி வருகின்றன !நிச்சயம் இது ஒரு விபரீத முயற்சி !

   //கதைக்கு நீதி செய்து Largoவை சென்சர் செய்யாமல் (Mild censor only for Nudity)வெளியிட வேண்டும்.//
   மிக சரி !

   Delete
  2. Simon Sir, Sollunga..

   Delete
 60. ஆசிரியர் 1ம் தேதியே இரண்டு புத்தகங்களையும் வெளியிட திட்டமிட்டிருப்பதாக பட்சி சொல்கிறதே!உண்மைதானா ?

  ReplyDelete
 61. பக்கங்களும் பகுத்தறியா பாய்ச்சல்களும் !

  1.TINTIN - சராசரி பக்கங்கள் 60-70 விலை Rs.430.
  2. ASTERIX - சராசரி பக்கங்கள் 50 விலை Rs.425.

  கிட்டத்தட்ட 90 சதவிகிதம் மேற்கூறிய புத்தகங்களின் தரத்தில் உள்ள, 110 சதவிகிதம் வெரைட்டி கொண்ட நம் தற்போதைய முழு வண்ண காமிக்ஸ் புத்தகங்களின் விலை Rs.100. மட்டுமே! ஆனால் அதற்கும் கூட சிங்கத்தின் சிறுவலையில், ஹாட்லைன், விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு 8 பக்கங்கள் வீண் என்று ஓயாத குரல்கள்.

  உண்மையை சொல்வதென்றால் 'துரத்தும் தலைவிதி' ஒவ்வொரு பக்கத்தை திருப்பும் போதும் இது நூறு ரூபாய்க்கு மிக அதிகம் என்றே என் மனசாட்சி ஓயாமல் ஓரத்தில் நின்று, உண்மைக்கு ஆதரவாக குரல் கொடுத்தது.

  சிறந்த வியாபாரியால் மட்டுமே தம் வாடிக்கையாளர்களின்
  அனைத்து தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்ய முடியும்...!

  ReplyDelete
  Replies
  1. ஹாட் லைனுக்கு அடுத்து ரசிப்பதே விளம்பரங்கள்தான் !அவை தரும் எதிர்பார்ப்பு இனிய தருணங்களில் ஒன்றே !இந்த முறை சிங்கத்தின் சிறு வலையிலுக்கு ஆரஞ்சு பார்டர் கொடுத்தது போல் இவற்றுக்கும் அளித்தால் ஜொலிக்கும் !

   Delete
  2. //சிறந்த வியாபாரியால் மட்டுமே தம் வாடிக்கையாளர்களின்
   அனைத்து தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்ய முடியும்...! //

   குழப்பத்தை தவிர்க்க இங்கு ஒரு சிறு விளக்கம். லாபம் அற்று அல்லது சிறு லாபம் கொண்டு செய்யும் தொழிலை பெரிய அளவில் விரிவாக்க முடியாது. தம் வாடிக்கையாளர்களின் தேவைகளையும், அவர்களின் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்ய முடியாது. அதிகமான கையிருப்புக்களையும் (STOCK) கொண்டிருக்க முடியாது. எனவே தொழில் என்று வந்து விட்டப்பின் 'அதற்கேற்ற' லாபம் அவசியமானது. உதாரணமாக,

   1. நாளுக்கு நாள் விலையேறும் பேப்பர், இன்றைய விலையில் இரண்டு வருட கையிருப்பு நம்மிடம் இருந்தால் எப்படி இருக்கும் ?

   2. XIII வண்ண பதிப்புகள் இந்த வருடம் தயாரித்தால் Rs.100. இரண்டுவருடம் கழித்து தயாரித்தால் Rs.200. அல்லது Rs.300. எது சிறந்தது ?

   3. குறைந்த லாபம், நிறைந்த தரம் என்ற வியாபாரம் 'வால்மார்ட்' ஐ தவிர உலகில் வேறு எவருக்கும் இதுவரை மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததில்லை !

   எனவே ஆசிரியர் அவர்கள் சிறந்த வியாபாரியாக மாறவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், அதற்காக இங்கே வேண்டுகோள் ஒன்றையும் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்...!

   Delete
  3. // கிட்டத்தட்ட 90 சதவிகிதம் மேற்கூறிய புத்தகங்களின் தரத்தில் உள்ள, 110 சதவிகிதம் வெரைட்டி கொண்ட நம் தற்போதைய முழு வண்ண காமிக்ஸ் புத்தகங்களின் விலை Rs.100.//

   Very true, our book prices are very cheap compared to other publishers. And i brag about this to my family and friends all the time :-)

   Delete
 62. kanniyamaana vasagar.Tr.L.Karnan Avargalukku Nanrigal! Theerpai Thiruthum Negizh thanmai konda nenjam konda aasiriyarukku Valthukkal! menmelum onguga!

  ReplyDelete
 63. வேறு காமிக்ஸ்கள் பற்றி இங்கே குறிப்பிடுவது சரியாக இராது என்றாலும், ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன்.

  ராணி காமிக்ஸ் இல், ஜேம்ஸ் பாண்ட் (முதல் இதழ் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்) அப்புறம் கார்த் என்று அந்தக் கதைகளில் சென்சார் செய்யாமலே காட்சிகள் இருக்கும் (சில இதழ்கள் மட்டும் விதிவிலக்கு). இதனாலேயே எங்கள் பாடசாலையில் இந்தப் புத்தகங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. அப்படியும் மீறி, அவற்றை கொண்டுபோய் மாட்டிக்கொண்டால் அவற்றை ஆசிரியர்கள் வீடுகளுக்கு எடுத்துப்போய் வாசித்துவிட்டு, இனி இதையெல்லாம் கொண்டுவராதீர்கள் என்று எச்சரிக்கையோடு திருப்பித் தந்தவையெல்லாம் தனிக்கதை.

  ஆனால், என் வீட்டில் அப்பா, அம்மா இருவருமே காமிக்ஸ் வாசிப்பவர்கள்தான். ஆயினும், எந்தத் தடையும் சொல்லாதது ஆச்சரியம். அதனாலேயே என்னமோ, அவை எனக்கு அப்போது உறுத்தலாக இருந்ததில்லை. எல்லாம் அவரவர் பார்வையில்தான் உள்ளது. அதற்காக சென்சார் செய்யக்கூடாது என்று கோரவில்லை. தணிக்கை அவசியமான இடங்களில் இருக்கட்டும்.

  அடிக்கடி நான் கோரிவரும் ஒரு விடயத்தை இங்கு மீண்டும் ஞாபகமூட்டுகிறேன்:

  லயன், முத்து - என்று இரண்டு பிராண்ட்கள் உள்ளதால், இரண்டு பிராண்ட்களுக்கும் கதாநாயகர்களை பிரித்து வைத்துவிடுங்கள். வெய்ன் ஷெல்ட்டன், லார்கோ போன்றவர்கள் முத்துவிலேயே தொடரட்டும். சிறுவர்களும் வாசிக்கக்கூடிய கதாநாயகர்களை லயனில் தொடருங்கள். இது படிக்கும்போது தேர்வு செய்ய இலகுவாக இருக்கும்.

  ஆனால், இரத்தப்படலம் போன்ற வன்முறை மற்றும் 'அந்த'மாதிரியான காட்சிகள் உள்ள கதைகளைப் படிக்கும்போது நாங்களும் சிறுவர்களாக இருந்தவர்களே என்பதையும் ஞாபகப்படுத்துகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. yes podiyan avargale! my grand pa & Ma ethuvum thadai seyyavillai! kuzhanthaiyaai irunthapothu thappartham unaravillai!

   Delete
  2. நானும் அப்போதைய வயதில் அதனை கவனிக்கவில்லை நண்பரே !

   Delete
  3. நண்பரே சௌந்தர் வந்து விட்டார் !நமது புத்தக ஸ்கேன் காபிகள் அங்கே வெளியிடப்பட்டு விட்டன .

   Delete
 64. -------

  என்னைப் பொறுத்த வரை, இந்த லார்கோ இதழில் ஓரிரு இடங்களில் சித்திரங்கள் சென்சார் செய்யப் பட்டிருக்கலாம்.

  ???? - சிறுவர்கள் இந்த லார்கோ இதழைப் படித்தால், அதில் வரும் வசனங்கள் பல அவர்களுக்குப் புரியுமா ?. ஆனால் சித்திரங்கள் மனதைக் கெடுக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் வசனங்கள் ஆசிரியரின் தணிக்கைக்கு உட்பட்டு கண்ணியமுடனே (லார்கோவில் அந்த படகு காட்சி) வருகின்றது. அதனால் வசனத்தால் வரும் பிரச்சினை தேவையில்லை என்பதே என் கருத்து.


  -- படங்களில் சற்றே கூடுதல் கவனத்துடன் சென்சார் செய்தல் போதுமானது.
  -- வசனங்களில் ஏற்கனவே சென்சார் இருக்கிறது அதுவே போதுமானது.

  அதையும் மீறி, சிலர் “இந்த இதழ் தன் பிள்ளைப் படிக்க கூடியதல்ல” என்று நினைத்தால் கண்டிப்பாக அவர்கள் கையில் கிடைக்காதவகையில் வைத்துவிடலாம். பலவற்றை நாம் அப்படி வைக்கின்றோமே :)

  ---------

  ReplyDelete
 65. //சிறந்த வியாபாரியால் மட்டுமே தம் வாடிக்கையாளர்களின்
  அனைத்து தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி செய்ய முடியும்...! //

  குழப்பத்தை தவிர்க்க இங்கு ஒரு சிறு விளக்கம். லாபம் அற்று அல்லது சிறு லாபம் கொண்டு செய்யும் தொழிலை பெரிய அளவில் விரிவாக்க முடியாது. தம் வாடிக்கையாளர்களின் தேவைகளையும், அவர்களின் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்ய முடியாது. அதிகமான கையிருப்புக்களையும் (STOCK) கொண்டிருக்க முடியாது. எனவே தொழில் என்று வந்து விட்டப்பின் 'அதற்கேற்ற' லாபம் அவசியமானது. உதாரணமாக,

  1. நாளுக்கு நாள் விலையேறும் பேப்பர், இன்றைய விலையில் இரண்டு வருட கையிருப்பு நம்மிடம் இருந்தால் எப்படி இருக்கும் ?

  2. XIII வண்ண பதிப்புகள் இந்த வருடம் தயாரித்தால் Rs.100. இரண்டுவருடம் கழித்து தயாரித்தால் Rs.200. அல்லது Rs.300. எது சிறந்தது ?

  3. குறைந்த லாபம், நிறைந்த தரம் என்ற வியாபாரம் 'வால்மார்ட்' ஐ தவிர உலகில் வேறு எவருக்கும் இதுவரை மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததில்லை !

  எனவே ஆசிரியர் அவர்கள் சிறந்த வியாபாரியாக மாறவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், அதற்காக இங்கே வேண்டுகோள் ஒன்றையும் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்...!

  ReplyDelete
 66. இந்த இடத்தில், என் பள்ளிப்பருவ காலத்துக் கனவுகளில் மாடஸ்டி பிளைஸிதான் பெரும்பங்கு தோன்றுவார் என்ற தகவலை சிறிது வெட்கத்தோடு இங்கு கூறிக் கொள்கிறேன்... இனக் கவர்ச்சியின் தொடக்க நாட்களை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தோன்றுகின்றது…

  ReplyDelete

 67. லயன் காமிக்ஸ்-ன் 'சிகப்பாய் ஒரு சொப்பனம்!' இதழை அதன் படைப்பாளிகளே பாராட்டி, உலகெங்குமுள்ள டெக்ஸ் வில்லரின் இதர licensees -க்கு அனுப்பி வைப்பது உங்களை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்ற ஆவல். அது நீங்கள் முன்னணியில் இருப்பதை காட்டுகிறது.

  .
  இத்தாலியில் மிலன் நகரிலுள்ள காமிக்ஸ் அருங்காட்சியகத்திற்குள் லயன் இருக்க போவது இன்னும் நிறைய சாதிக்க இருப்பதை பறை சாற்றுவதாகவே அமையும்.


  இந்தியாவிலிருந்து வெளியாகும் காமிக்ஸ் இதழ்களில் லயன்-முத்து காமிக்ஸ்-தான் எப்போதும் தரத்தில் சிறந்தது என்பது என் நெடுநாளைய வலிமையான கருத்து.


  வண்ணப் புதுப் பட்டாடைகள் வேண்டுமானால் இன்று உடுத்தியிருக்கலாம், (கதை) நளினத்தில், (எழுத்து) நடையில், (அட்டை) ஓவியத்தில், (இதழ்) அழகில் என்றுமே லயன்-முத்து காமிக்ஸ் சிகரம்தான், யாரும் சுலபமாக எட்டிவிடமுடியாது.

  ReplyDelete
 68. காமிக்ஸ் புத்தகம் என்றாலே அது சின்ன பசங்க படிக்கிற புத்தகம் என்று பலர் சொல்கிறார்கள். இதில் வேற +18 +15 என்று வேற போடணுமா? தற்போது +12 படிக்கும் பசங்களிடம் தமிழ்(காமிக்ஸ்) புத்தகத்தை படிக்க கொடுத்தால். ஆங்கிலத்தில் இருந்தால் கொடுங்கள் படிக்கிறேன் என்று சொல்லும் நிலையில் தற்போது உள்ளனர்.எங்கோ ஒரு மூலையில் ஒரு சில குழந்தைகள் படிப்பதற்காக. இதைக் கொண்டு வருவது ஏற்றுக் கோள்ள கூடியதாக இல்லை என்பதே எனது கருத்து. அனைத்து விஷயங்களிலும் இது வேண்டாம். அது வேண்டாம் என்றால் காமிக்ஸ் புத்தகங்களை நாவல்(சித்திரங்களே இல்லாமல்) வடிவில் தான் படிக்க முடியுமே.

  ReplyDelete
 69. ஒவ்வொரு முறையும் நம் இதழ்களைப் பார்த்தவுடன் பாராட்டுகிறோமோ இல்லையோ criticism செய்வதற்கு தயாராகயிருக்கிறோம்?

  முதல்ல மொழிபெயர்ப்பு பிரச்சினை?
  இப்பொழுது ஆபாசம் மற்றும் வன்முறை பிரச்சினை?
  நம் இதழ்களில் வரும் சித்திரங்களை வைத்து / பார்த்து கெட்டுப் போவார்கள் என்பது சுத்த அபத்தமாகயிருக்கிறது?
  கெட்டுப் போகிறவர்கள் எப்படிவேண்டுமென்றாலும் கேட்டுப் போவார்கள்? துரத்தும் தலைவிதியால்!

  லார்கோவை ரசிகர்கள் பந்தாட வேண்டும் என்பது விதியின் விளையாட்டுப் போல?
  லார்கோவை கத்திரிமேல் கத்திரிப் போட்டுத்தான் வெளியிட வேண்டுமா?

  லார்கோ வந்தால் முழுமையாக வரட்டும்? இல்லையென்றால் அவருக்கு தமிழில் வணக்கம்கூறி விடைக் கொடுப்பதே சாலச் சிறந்தது?!

  (நமது இதழ்களை 15 வயதுக்கு மேற்ப்பட்டவர்களே படிப்பதால் அதனை முழுமையாக வெளியிட வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையானக் கருத்து!)

  ReplyDelete
  Replies
  1. நண்பரே.. நானும்... எடிட்டர் தற்போது செய்யும் சென்சார்கள் போதுமானது என்று கருதுபவன்.

   ஆனால்.. +15 அப்படியே.. என்பதில் உடன்பாடில்லை. ஆங்கில +15க்கும் தமிழ் +15க்கும் வித்தியாசம் உள்ளது நண்பரே :-)

   Delete
 70. நண்பர்களே, இந்த விவகாரத்தில் கடைசியாய் ஒரு விளக்கம். இதன் சாரம் ஏற்கனவே என்னுடைய கடந்த பின்னூட்டங்களில் எதிரொலித்தாலும் மீண்டும் ஒரு முறை தெள்ளத் தெளிவாக!

  என் நோக்கம், வன்முறைக்கும் சென்சார் வேண்டும் என வலியுறுத்துவதோ, nudity-ஐ அறவே சென்சார் செய்ய வேண்டாம் என வற்புறுத்துவதோ அல்லது நமது இதழ்களில் 18+ tag அவசியம் கொண்டு வர வேண்டும் என அடம் பிடிப்பதோ "நிச்சயமாக அல்ல!" - in capitals!

  ஏற்கனவே "இயன்ற அளவு" ஆசிரியரால் சென்சார் செய்யப்பட்டு வெளி வரும் நம் இதழ்களில் - இங்கே ஏன் கத்தரிக்கவில்லை, அங்கே ஏன் கத்தரிக்கவில்லை - குழந்தைகள் கெட்டுப் போய் விடுவார்கள் என்றெல்லாம் காரணம் காட்டி பலர் எதிர்ப்பு தெரிவித்ததாலேயே, சென்சார் செய்யாமல் அப்படியே வெளிவரும் "வேறு ரக" அடல்ட்ஸ் ஒன்லி சமாசாரங்களைப் பற்றிய தர்மசங்கடமான கேள்விகளை இங்கே எழுப்ப வேண்டி இருந்தது!

  நாம் அனைவரும் இப்படி ஆட்சேபிக்கத் தொடங்கினால் mature content அடங்கிய லார்கோ, வேய்ன், டயபாலிக் போன்ற தொடர்களில் சென்சாரைத் தாண்டி எதுவுமே மிஞ்சாது என உணர்த்துவதே என் நோக்கம். குழந்தைகளுக்கு எதைக் கொடுப்பது எதை விடுப்பது என்ற மாபெரும் பொறுப்பை நாம் நம்மிடமே வைத்துக் கொண்டு, ஆசிரியரை சுதந்திரமாக செயல்பட விடுவோம்!

  மேற்கண்ட எனது பின்னூட்டங்கள் ஆசிரியருக்கு ஆதரவையானவையே அன்றி அவரை எதிர்ப்பவை அல்ல! இது மற்றவர்களுக்கு புரிந்ததோ இல்லையோ, ஆசிரியர் அவர்கள் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புகிறேன். 7 முதல் 77 என்ற வாசகத்தை literal ஆக அர்த்தம் கொண்டால் இது போன்ற பிரச்சினைகள்தான் மலரும். நன்றி நண்பர்களே!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் எண்ணம் தெளிவாய் புரிகிறது நண்பரே ,நிச்சயம் குழந்தைகள் கெட்டு போவார்கள் என்பதற்காக இதனை நானும் வலியுருத்தவில்லை !மாடஸ்டி போல கோடும் வேண்டாம் ,அந்த ஒரு பக்கம் போல ஒப்பனும் வேண்டாம் என்றே மற்றபடி கிளிவேஜ்களுக்கு எதிர்ப்பு இல்லை !இதன் மூலம் நமது புத்தகங்களுக்கு எதிர்ப்பு வர கூடாதே என்றே !நிச்சயமாய் இன்றைய தாராளமயமாக்கபட்ட தொலைக்காட்சி தொடர்கள்,காட்ச்சிகள் முன்பு ,குழந்தைகளுக்கு தெரியாமல் மறைத்து வைத்து படிக்கும் கேவலமான நிலையில் நமது புத்தகங்கள் எந்த இடத்திலும் இல்லை !அது ஒரு நெகடிவ் ஃபீளிங்கை தந்து விட கூடாதே என்றே !

   Delete
  2. அப்புறம் அந்த புத்தகத்தின் மேலே இவர்களுக்கானது (18,பலகீனமான மனது,,,etc)என்ற முத்திரைக்கு சிறிதும் உடன்பாடில்லை எனக்கு ....

   Delete
  3. கார்த்திக்.. உங்களின் ஒவ்வொரு வரியும் எனக்கு உடன்பாடே..

   குழந்தைகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு பெற்றோரிடமே தொடங்குகிறது. வெளிநாடுகளில் அப்படியே நினைக்கிறார்கள்.

   ஒரு சிறிய விளக்கம் கலாச்சார வித்தியாசங்களைப் பற்றி

   ---- இங்கு ஒரு 15 வயது பெண் குழந்தை மற்றும் 5 வயது பெண் குழந்தையுடன் பயணம் செய்யும் பெற்றோர், தன் 5 வயது குழந்தையை, பிறர் அருகில் உட்கார்ந்து பயணிக்க அனுமதிப்பார்கள்.

   ----- வெளிநாடுகளில், 15 வயதுப் பெண்ணை பிறர் அருகில் அமரச்செய்து, 5 வயது குழந்தையைத் தன் அருகில் அமரச்செய்வார்கள்

   காரணம் - 15 வயது பெண்ணால் தவறான செய்கைகளை அடையாளம் காண முடியும். ஆதலால் 5 வயது குழந்தைக்கே பாதுகாப்பு தர வேண்டும்.

   அதுபோல.....

   குழந்தைகள், குழந்தைகளாக இருக்கும் வரை, பெற்றோரின் கட்டுப்பாடு அவசியம். அது அவர்கள் பார்க்கும் திரைப்படம், படிக்கும் புத்தகம், வெளி உலக நட்பு ஆகியவற்றிற்குப் பொருந்தும்.


   இறுதியாக..

   பல வருட அனுபவம் கொண்ட நம் எடிட்டர் கையில் இந்த பெரிய சென்சார் பொறுப்பை முழு மனதுடன் அளித்து, அவரின் முயற்சிக்கு நம் ஆதரவைத் தெரிவிப்போம்..

   வணக்கம்.

   Delete
  4. @ கார்த்திக், ஸ்டீல்

   எது எப்படியோ, விஜய் டிவியில் வரும் 'நீயா நானா'வுக்கு சற்றும் சளைக்காமல் இங்கே நடந்தேறிவரும் விவாதங்கள் நிச்சயம் நல்லதையே விளைவிக்கும் என்ற உண்மையும் மறுக்க முடியாததே! ( எடிட்டர் மாதிரியே பேசுகிறேனோ?!)

   நிச்சயம் இன்னேரம் நமது எடிட்டர் ஒரு பெரிய லென்சை வாங்கியிருப்பார் (ஷெர்லக் ஹோம்ஸிடம் இருப்பதைப்போல). அதைக் கொண்டு இனிவரும் புத்தகங்களின் ஒரு இண்டுஇடுக்கு விடாமல் தேடி 'திறந்த வெளி' காட்சிகள் ஏதேனும் இருப்பின் அழகான ஆடை வரைந்திட ஏற்பாடு செய்திடுவார் என்று எதிர்பார்கலாம்.

   எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
   73ம் பக்கமும் நன்றாகவே இருந்தது! :)

   Delete
  5. @ RAMG75

   அருமையான உதாரணம்!

   Delete
  6. @Erode Vijay:
   //எது எப்படியோ, விஜய் டிவியில் வரும் 'நீயா நானா'வுக்கு சற்றும் சளைக்காமல் இங்கே நடந்தேறிவரும் விவாதங்கள்//
   அதே... ன், இது ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சின்னு சொல்லிட்டாய்ங்களே ;)

   //எடிட்டர் மாதிரியே பேசுகிறேனோ?!//
   நீங்கள் ரொம்ப நாளாகவே அப்படித்தானே பேசி வருகிறீர்கள் ;) இதில் வியப்பேதும் அல்லவே?! (டவுட்டு: இந்த இடத்தில் 'அல்லவே' செட் ஆகாதோ?!) :) :)

   //இன்னேரம் நமது எடிட்டர் ஒரு பெரிய லென்சை வாங்கியிருப்பார் & எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!//
   அடப்பாவமே, நடக்கக்கூடாதது எல்லாம் நடந்து விடும் போல் இருக்கிறதே?! :(

   //73ம் பக்கமும் நன்றாகவே இருந்தது! :)//
   குழந்தையையும் கிள்ளி விட்டு... ஹீம்ம்ம்... என்னா ஒரு வில்லத்தனம்! :D

   Delete
  7. @Erode Vijay:
   //இதில் வியப்பேதும் அல்லவே?! (டவுட்டு: இந்த இடத்தில் 'அல்லவே' செட் ஆகாதோ?!)//

   ஆங்! சரியான வார்த்தையை கண்டுபுடிச்சிட்டேன்...

   *** அது ஒன்றும் வியப்பானது அல்லவே?! ***

   எப்புடீ?! :)

   Delete
  8. @Vijay :

   ஆசிரியர் மிகவும் பிஸி யாக இருப்பதால் அந்த பெரிய லென்ஸ் கொண்டு திறந்த வெளி தேடலை நான் அவருடன் பகிர்ந்து கொல்லாம் என நினைக்கிறன்.

   Delete
  9. @ கிருஷ்ணா

   குழந்தைங்களெல்லாம் லென்சு வச்சு விளையாடப்படாது; அப்புறம் பெரியவங்க நாங்க எதுக்கு இருக்கோம்? :)

   Delete
  10. நண்பர் கார்த்திக்கின் கருத்தை நான் தவறாகத்தான் புரிந்துகொண்டேன். தங்களின் இப்போதைய விளக்கத்திற்கு நன்றி நண்பரே.

   ஆசிரியர் இப்போது செய்துவரும் censorship பே சிறந்ததாக இருக்கிறது. உதாரணத்திற்கு XIII - அயர்லாந்து படலத்தில் அந்த சூப்பர் மார்கெட்டில் IRA குண்டு வெடிக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு ஸிமஸும் மைரிடும் சேரும் ஒரு முழு sequence உள்ளது. அனால் அந்த sequence ஐ நமது ஆசிரியர் எவ்வளவு அழகாக கதைக்கு பாதகமில்லா வண்ணம் எடிட் செய்து இருப்பார். சூப்பர். இது நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. கதையும் விறுவிறுப்பாக இருந்தது.

   Delete
  11. @Radja from France:
   ஒவ்வொரு மாதமும் தொடரும் இது போன்ற கருத்துக்களால் ஆசிரியர் over conscious ஆகி தாராளமாக எடிட் செய்ய ஆரம்பித்து விடுவாரோ என்ற பயம்தான் எனது நீண்ட நெடும் புலம்பல்களுக்கு காரணம்! :) புரிந்து கொண்டதிற்கு மிக்க நன்றி நண்பரே! நன்றி, XIII பற்றிய பின்னணித் தகவல்களுக்கும் சேர்த்து! :)

   Delete
  12. // XIII பற்றிய பின்னணித் தகவல்களுக்கும் சேர்த்து! :) // ஹி .. ஹி ... ஹி

   Delete
 71. If we keep on push editor like this then we may not get stories like largo, Wayne etc.... in future. So please leave the censorship with editor and enjoy the book.

  ReplyDelete
 72. ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் (4)

  தாங்கள் புதிய பதிவு ஒன்று இங்கு பதிவிடும்முன், நிலுவையில் உள்ள பதிவின் கமெண்ட் ல் கீழ்கண்டவாறு குறிப்பு கொடுக்க விண்ணப்பிக்கிறேன். உதாரணமாக,


  புதிய பதிவு : கண்ணா..லட்டு தின்ன ஆசையா.....?


  ஏனெனில், பெரும்பாலும் 'மொபைல் email ' மூலம் கமெண்ட் படிக்கும் என் போன்ற பெரும்பான்மையான வாசகர்களுக்கு தங்களின் பதிவை உடனே அறியமுடிவதில்லை. தொடர்ச்சியாக 5 மணிநேரம் கமெண்ட் வராவிட்டால் மட்டுமே 'சந்தேகத்தின் பெயரில்' இங்கு வந்து பார்க்க வேண்டியிருக்கிறது :) அதன்பிறகே அடித்துபிடித்து email subscribe செய்ய முடிகிறது !

  ReplyDelete
  Replies
  1. அவசியமான கோரிக்கை!

   எனக்கும் அதே பிரச்சினைதான்!

   Delete
  2. Erode விஜய் ன் கோரிக்கையும் சேர்ந்து மிகப்பெரிய பலத்தை கொடுப்பதால்,

   ஆசிரியர் எங்கள் கோரிக்கையை அடுத்த பதிவிலேயே ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

   Delete
  3. Super idea. நானும் நண்பர்கள் Erode Vijay மற்றும் மரமண்டை அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.

   Delete
 73. //ஒவ்வொரு முறையும் நம் இதழ்களைப் பார்த்தவுடன் பாராட்டுகிறோமோ இல்லையோ criticism செய்வதற்கு தயாராகயிருக்கிறோம்?//  எல்லாம் ஒரு விளம்பரம்தே....ன்

  ReplyDelete
 74. ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் (5)

  பல நேரங்களில் நீங்கள், இங்கு பதிவிடப்படும் பின்னூட்டங்களை படிக்கிறீர்களா என்றே தெரிவதில்லை. தங்களின் பதிலை எதிர்பார்த்து அல்ல. எங்களின் பதிவுகள் தங்களின் பார்வைக்கு வந்ததா அல்லது தங்களின் கவனத்தை ஈர்த்ததா என்று அறிய மட்டுமே. எனவே உங்களின் எண்ணவோட்டங்களை நாங்கள் அறிந்துக்கொள்ள கீழ்கண்ட எளிய 'சுட்டிக்காட்டும்' முறையை பின்பற்ற விண்ணப்பிக்கிறேன். உதாரணமாக,

  1. ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே பதிவில் ஒன்றை DELETE செய்துவிடலாம் :)
  2. DELETED கமெண்ட் ஐ DELETE செய்து விடலாம் :)
  3. இது எதுவுமே இல்லாவிட்டால் நண்பர் விஜய் க்கு ஒரு பதில் அளித்து விடலாம் :)

  பின்குறிப்பு:

  1. நண்பர் Msakrates மன்னிப்பாராக :)
  2. MR.ஸ்டீல் வழக்கம் போல் பதிவிட்டு DELETE செய்யவும் :)
  3. நண்பர் Erode விஜய் இடைவிடாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கவும் :)

  ReplyDelete
 75. மிலன் நகருக்கு பயணமாகும் நமது lion, muthu comicsகு வாழ்த்துகள்! தமிழ் காமிக்ஸ் உலகிற்கு பெருமை சேர்த்திட்ட நமது Editor அவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்!

  ReplyDelete
 76. Largo Winch latest storiesl கதையின் வேகத்திற்கு நண்பர்கள் குறிப்பிட்ட censor செய்யப்பட வேண்டிய காட்சிகள் புலப்படவில்லை. நண்பர்கள் குறிபிட்ட பக்கங்களை பிறகுதான் பார்த்தேன். Largo, Sheldon கதைகளுக்கு எடிட்டர் குறிபிட்டபடி For mature readers என்று label இடலாம் ! Over censorship கண்டிப்பாக கதையோட்டத்தை பாதிக்கும்!

  ReplyDelete
 77. விஜயன் சார்,

  ஏப்ரல் முதல் வாரத்திலேயே 'டைகர்' + 'ஹாட் & கூல் ஸ்பெஷல்' இதழ்கள் வெளிவர வாய்ப்புள்ளதா சார் ?
  ('ஹாட் & கூல் ஸ்பெஷல்' தலைப்பு அதிக ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளாதால் நோ டவுட் இதுவே சிறந்த தலைப்பு என எனக்கு தோன்றுகிறது)

  இரு இதழ்கள் ஏப்ரல் மாதத்தில் ஒன்றாக வருவதை பற்றி ஒரு பதிவு நீங்கள் போடலாமே ?

  பி.கு: லாரகோ வந்த அன்றே படித்து விட்டோம் (கடந்த ஞாயிறு மீண்டும் ஒரு முறை), அடுத்த புத்தகங்கள் ஏப்ரல் முதல் வாரத்தில், இந்த வாரம் படிக்க எதுவும் இல்லையே சார், எனவே ஒரு பதிவை போட்டு தாக்குங்க :)  ReplyDelete
  Replies
  1. //பி.கு: லாரகோ வந்த அன்றே படித்து விட்டோம் (கடந்த ஞாயிறு மீண்டும் ஒரு முறை), அடுத்த புத்தகங்கள் ஏப்ரல் முதல் வாரத்தில், இந்த வாரம் படிக்க எதுவும் இல்லையே சார், எனவே ஒரு பதிவை போட்டு தாக்குங்க :)
   //

   இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !

   Delete
  2. @ ப்ளூ

   // எனவே, ஒரு பதிவை போட்டுத் தாக்குங்க//

   பதிவை அவர் போடட்டும்; தாக்கும் வேலையை நாம பார்த்துக்கலாம். :)

   Delete
  3. @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் , @Erode VIJAY

   எதோ நம்மளால முடிஞ்சது :)

   Delete
 78. நண்பர்களே,

  'காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு ' - பாரதியார்.
  'காலை எழுந்தவுடன் ஒரு புது பதிவு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல கமெண்ட் ' - நாம் :)

  தினமும் காலையில் நமது எடிட்டர் ஒரு புது பதிவு போட வேண்டும். அதை பற்றிய விவாதங்கள் (?) அன்றே முடித்து விட்டு அடுத்த நாள் புது பதிவுக்கு நாம் காத்திருப்போம்.

  நமக்கும் தினசரி புதிய பதிவு கிடைக்கும். நண்பர்களும் எப்பொழுது புது பதிவு வரும் என காத்திருக்க தேவையில்லை .. நானும்தான் ...

  எப்பூடி ?????
  ReplyDelete
 79. துரத்தும் தலைவிதி 'லார்கோ வின்ச்' தான் தற்போதைய நம் காமிக்ஸ் 'மெகா ஸ்டார்' என்பதில் எவருக்கும் எந்தவித மாற்று கருத்தும் இருந்திடப் போவதில்லை என்பதே உண்மை. துரத்தும் தலைவிதி அருமையான கதை, சிறிதளவும் தொய்வை கொடுக்காத கதைகளம்.

  வானவில்லை மிஞ்சிய வண்ணங்கள்,
  அதற்கேற்ற திடகாத்திரமான வசனங்கள் !

  அழகாய் ஜோடிக்கப்பட்ட கதைகள்,
  அதற்கென ஜோடி no.1 ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள் !

  தகவல் களஞ்சியமாய் போதைப்பொருட்களின் தாயகம், ஆக்கம், உருவாக்கம், அழிவு, அட்டூழியம், அதனால் ஏற்படும் தனிமனித பேரழிவு என சுவைப்பட, நம் உணர்வெங்கும் ஊடுருவ, ஒருசேர தமிழில் அறியவைத்த ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு பலஆயிரம் நேரடி சந்தாக்கள் உரித்தாகுக;

  துரத்தும் தலைவிதி கதையின் பிரமாண்ட ரசிப்பு தன்மைக்கு ஒரு உதாரணம் கூற வேண்டுமானால், நான் படித்து முடித்த கையோடு மீண்டும் ஒருமுறை என்பெயர் லார்கோ, NBS லார்கோ, துரத்து தலைவிதி என மூன்று கதை தொடர்களையும் சிறிதும் சலிப்பு எங்கேயும் இன்றி படித்து ரசித்தேன்.

  அப்படிப்பட்ட தனிதனி பெட்டிகளாய் (கதைகள்) இணைந்து புயலென சீறிப்பாயும் EUROSTAR ரயில்வண்டி தான் நம் லார்கோ வின்ச் தொடர்கள். அருமை, அற்புதம், அட்டகாசம், தொடரும் அதகளம் இதுதான் நம் நாயகனின் மிகப்பெரிய வெற்றி என்றால் அது மிகையல்ல !!!

  ps : Eurostar - 320 kilometres per hour

  ReplyDelete
  Replies
  1. உங்களது இந்த கதை விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன் !அனைத்து நண்பர்களும் கைப்பற்றிய வுடன் ...

   Delete
 80. MR. ஸ்டீல் க்கு ஒரு பாராட்டு விழா :)

  அன்பு வாசகரும், எல்லோருக்கும் நண்பரும், ஓய்வு ஒழிச்சல் இன்றி தளராமல் கமெண்டு இடும் 'இரும்புக்கை'யை போன்றவருமான MR. ஸ்டீல் தெரிவு செய்த 'பகைச்சுவை' என்ற தலைப்பு TOP 4 லிஸ்டில் இடம் பிடித்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை 'ரகசியமாக' தெரிவித்துக் கொள்கிறேன்.

  பலமுறை வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட அன்பர் இம்முறை தலைப்பிற்காக ஒரு 'புது சொல்லையே' (புது வார்த்தை) அதாவது 'பகைச்சுவை' என்று உருவாக்கி சாத்தானையே அதிரவைத்து சாதனை புரிந்தவர் என்பதால் என் தாமதமான கரகோஷத்தை அவருக்கு காணிக்கையாக்குகிறேன்.

  தோல்வி வெற்றிக்கு முதல் படி. ஆனால் அந்த
  வெற்றிக்கு தான் எத்தனை படிகள் என்று அறிந்தவர் யாரோ ?

  ReplyDelete
  Replies
  1. ஆனா நான் ஒட்டு போட்டது ஹாட்&கூல் spl கே !அட்டகாசமான என்பதுடன் பொருத்தமான தலைப்பு !

   Delete
  2. முகம் தெரியால் பழகுகிறோம்,வெற்றி,தோல்வி பார்ப்பதே இல்லை !

   Delete
  3. பாராட்டோ திட்டோ கருத்துகளுக்கு மட்டும் கிடைத்தால் போதுமே !

   Delete
  4. பாராட்டு விழவா விஜெய்.....அதிக பட்சம் கருத்துக்கள் பிடித்தால் சப்போர்ட் செய்யலாம் ....

   Delete
  5. /* கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்12 March 2013 18:35:00 GMT+05:30
   பாராட்டு விழவா விஜெய்.....அதிக பட்சம் கருத்துக்கள் பிடித்தால் சப்போர்ட் செய்யலாம் ....*/   அப்போ 'மரமண்டை' அவர்களின் பெயர் விஜயா? இவர் நமக்கு தெரிந்த விஜய்-யா? :-) :-)

   Delete
  6. இல்லை முன்பு நடந்ததை நினைத்து...... நமது நண்பரை அழைத்தேன் !
   அந்த புள்ளிகளுக்கு பின்னர் மரமண்டை அவர்களுக்கு ...

   Delete
  7. இதுவரை சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது .....
   பாராட்டு விழா என்றவுடன் நடுக்கமாய் இருக்கிறது !

   Delete
  8. விடுங்க ஸ்டீல் :-) இதுக்கும் ஒரு பல பத்திகள் நிறைந்த பதில் வந்துடப் போகுது!அப்புறம் யார் அதயெல்லாம் கடந்து கடந்து நல்ல கருத்துக்களை படிப்பது :-) :-)

   Delete
  9. @ Comic Lover

   அவர் - 'மரமண்டை' என்ற புனைப் பெயரில் வரும் செம மண்டை!

   நான் - 'செம மண்டை'யாக காட்டிக்கொண்டிருக்கும் காலி மண்டை!

   @ ஸ்டீல்
   உங்களை ஒரு நல்ல தமிழ் வாத்தியாரிடம் ட்யூசன் அனுப்பலாம்னு இருக்கேன்!

   Delete
  10. எந்த விஜய்னு கரெக்டா சொல்லுங்கபா, இங்க நானும் ஒரு விஜய் இருக்கேன்... வம்புல மாட்டிவுட்டுடாதிங்க... இப்போதான் மரமண்டை சார் கூட ஒரு சண்டை ஓய்ந்திருக்கு.. (சண்டை இல்ல சச்சரவு.. சண்டைனு சொன்னா மரமண்டை கோச்சுகுவரு.. )
   மரமண்டை அவர்கள் ஒரு தமிழ் வாத்தியார் என்பது என் யூகம்.. (2மாசம் summer vacation நு சொல்லி மாட்டிகிட்டாரு)

   Delete
  11. 'கேள்விகளின் மேல் ஏன் இந்த தீராத காதல் '- நன்றி பை டாங்

   Delete
 81. ஒவ்வொரு முறையும் நம் இதழ்களைப் பார்த்தவுடன் பாராட்டுகிறோமோ இல்லையோ criticism செய்வதற்கு தயாராகயிருக்கிறோம்?

  முதல்ல மொழிபெயர்ப்பு பிரச்சினை?
  இப்பொழுது ஆபாசம் மற்றும் வன்முறை பிரச்சினை?
  நம் இதழ்களில் வரும் சித்திரங்களை வைத்து / பார்த்து கெட்டுப் போவார்கள் என்பது சுத்த அபத்தமாகயிருக்கிறது?
  கெட்டுப் போகிறவர்கள் எப்படிவேண்டுமென்றாலும் கேட்டுப் போவார்கள்? துரத்தும் தலைவிதியால்!

  லார்கோவை ரசிகர்கள் பந்தாட வேண்டும் என்பது விதியின் விளையாட்டுப் போல?
  லார்கோவை கத்திரிமேல் கத்திரிப் போட்டுத்தான் வெளியிட வேண்டுமா?

  லார்கோ வந்தால் முழுமையாக வரட்டும்? இல்லையென்றால் அவருக்கு தமிழில் வணக்கம்கூறி விடைக் கொடுப்பதே சாலச் சிறந்தது?!

  (நமது இதழ்களை 15 வயதுக்கு மேற்ப்பட்டவர்களே படிப்பதால் அதனை முழுமையாக வெளியிட வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையானக் கருத்து!) in my opinion this is the best comment ...well said mohiuddeen.....

  ReplyDelete
 82. This comment has been removed by the author.

  ReplyDelete
 83. This comment has been removed by the author.

  ReplyDelete
 84. லயன் முத்து தீவிர வாசகர் 'BN USA' அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் !

  வளவள என்று எழுதுவதே சங்கடம் தரும் பதிவுகள். ஆயாசம் தரும் பின்னூட்டங்கள். ஆயின் வளமாய் எழுதுவதில் ஏதும் தவறு இல்லை. அது NBS ன் DUST COVER போன்றது. அது அவசியமற்றது போல் வெளிப்பார்வைக்கு தோன்றினாலும் காரணமின்றி தயாரிக்கப்படவில்லை !

  தினம் தினம் நாம் அரிசி சாதம் சாப்பிடுகிறோம், வாரத்தில் பல நாட்கள் சாம்பார், ரசம், மோர் என உணவில் சேர்த்துக்கொள்கிறோம். ஆண்டுகள் பல சென்றாலும் இன்றுவரை நமக்கு சலித்ததில்லை. வேண்டாம் என்று பல நாட்கள் நாம் பட்டினி கிடப்பதில்லை !

  ஆனால் SHSS நமக்கு சலிப்புற்றது ஏன், எதனால் என்று எவராவது, என்றாவது ஆராய்ந்தோமா? இல்லையே, அது ஏன் ? ஏனெனில் காமிக்ஸ் படிப்பது என்பது நமக்கு, கற்பனையாக விரிந்த காலம் மறைந்து, தற்போது ஒரு HOBBY யாக, ஒரு FASHION ஆக நினைத்து படிக்க ஆரம்பித்து விட்டோம் !

  அதனால் காமிக்ஸ் உணர்வோடு கலந்த அந்த பொற்காலம் மறைந்து, இன்று மனதோடு உறவாடி, மாலையில் மறைந்து போகும் மதி மயக்கமாக உணர்கிறோம் !

  அதனால் தான் ...

  contd part.2

  ReplyDelete
 85. லயன் முத்து தீவிர வாசகர் 'BN USA' அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் ! (பார்ட் 2)

  அதனால் தான் நிஜ வாழ்க்கையில் நடக்க வாய்ப்பில்லாத, நினைக்க கூட சாத்தியமில்லாத பல விஷயங்கள் உள்ளடக்கிய சினிமாவை வாய் பிளந்து, மெய் மறந்து, அதன் வயப்பட்டு பார்த்து, பின் அதனை அலசி ஆராய்ந்து அதனால் ஏற்படும் உணர்வில் இன்பம் எய்தி மகிழ்கிறோம் !

  காதல் செய்திட ஒரு பெண் கிடைப்பதே அரிதான இனிய காதலில், காதலன் காதலி டூயட் பாட, அவர்களுக்கு பின்னால் நடனமாடி நம்மை தாலாட்ட பத்து பதினைந்து கொடியிடை இள கயல்விழியினர் நம் நிஜ வாழ்க்கையில் தான் கிடைத்திடுமோ ?

  இது போன்ற காதில் பூ சுற்றும் ரகத்தை ''ஆ''வென்று ரசித்திடும் நாம் மாயாவி, ஸ்பைடர், ஆர்ச்சி காமிக்ஸ் மறுபதிப்பு கேட்பவர்களை இகழ்வதோ, காதில் பூ சுற்றும் ரகம், பத்தாம் பசலிகள் என்று பரிகாசிப்பதோ எவ்வகையில் நியாயம் ?

  மும்மூர்த்திகளை விரும்புவதால் சிறுமையும் இல்லை, லார்கோ, வெய்ன் ஷெல்டன் ஆகியோரை பாராட்டுவதால் எந்த பெருமையும் இல்லை. ஏனெனில் இரண்டுமே கட்டம் போட்ட கோட்டிற்குள் வரையப்பட்ட சித்திரங்களை வைத்து கதை சொல்லும் காமிக்ஸ்கள் தான். நம் நிஜத்தை நிழலில் தொலைக்கும் கற்பனைகள் தான். இது நிற்க ;

  contd part 3.

  ReplyDelete
 86. லயன் முத்து தீவிர வாசகர் 'BN USA' அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் ! (பார்ட் 3)

  SHSS அதிக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட காரணம்;

  1. மாயாவி : மூன்று கதைகள் ஒன்றாய் சேர்ந்தது போல், மிகவும் நீண்டு சற்று அதிகமாய் திகட்ட செய்து விட்டது. அது மாயாவியின் குற்றம் அல்ல, கதையின் நீளமே குற்றம் !

  2. ஸ்பைடர் : மிகப்பெரிய anti-hero வை எதிர்பார்த்தவர்களுக்கு, அந்த குற்ற சக்ரவர்த்தியை ஏற்கனவே படித்தவர்களுக்கு, அந்த 'சகலகலா வல்லவன்' 'தர்ம அடி' வாங்கியது எதிர்மறை ரசனையை கொடுத்து விட்டது. அது ஸ்பைடர் குற்றம் அல்ல கதையின் குற்றமே !

  3. ஆர்ச்சி : இவர்களால் தட்டு தடுமாறி பாஸ் செய்து விட்டான். அந்த ஆவரேஜ் மார்க் ஆர்ச்சியின் குற்றம் அல்ல, அவன் கடைசி பந்தியில் உட்கார்ந்த குற்றமே !

  பஞ்ச் டயலாக் : கவலப்படாத BN USA தல, காமிக்ஸ் ஒரு வட்டம், அதுல சிக்காத கட்டமே இல்ல :)

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் இங்கே போட்டு காட்டினாரே அந்த வெளிவராத ஸ்பைடரின் முழு நீ.....ள கதையை கேட்டாலென்ன ?

   Delete
 87. ஸ்டீல் க்ளா அவர்களே அது என்ன அது ஸ்பைடரின் முழு நீள கதை எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்

  ReplyDelete
  Replies
  1. //http://lion-muthucomics.blogspot.in/2012_10_01_archive.html//
   ஆசிரியரின் இந்த பதிவின் அட்டகாசமான படங்களை பாருங்களேன் !

   Delete
  2. //அட்டையில் ஆர்ச்சியும், ஸ்பைடரும் ; மாயாவியும் இருந்தால் போதும் ; அது அதிரடி வெற்றிக்கு உத்திரவாதமென்று சொல்லக் கூடிய நாட்கள் நமது நினைவுகளில் மாத்திரமே இனி நீடிக்க வல்லவை ; இன்றைய ரசனை இவர்களைத் தாண்டிப் பயணித்து விட்டதென்று எனக்குள் தோன்றியதால் தான் சூ.ஹீ.சூ.ஸ்பெ.வின் வெளியீட்டுத் தேதியில் சுணக்கம் காட்டினேன்.//

   Delete
  3. //
   "ஆஹா..அற்புதம் ! " என்று மிகப் பெரிய thumbs up !
   "ஆஹா...இதுக்குத் தானா இத்தனை பில்டப் ?காதிலே பூ தாங்கலைடா சாமி" என்ற ரகக் கருத்துக்கள் !
   "கதைகள் சுமார்..குறைகள் அதிகம்...ரசித்திட முடியவில்லை " என்ற ரீதியிலான reservations.
   //

   Delete
 88. லார்கோ கதைகள் 'for mature audience' என்ற tag தாங்கி வருவதற்கு ஒரு வழி இது.

  லார்கோ, ஷெல்டன் போன்ற கதைப்பற்று [மற்றும் சதைப்பற்று :-)] கொண்டுள்ள கதைகள் இரு பாகங்களாக ஐம்பது ரூபாய் விலையினில் அடுத்தடுத்த மாதங்கள் வெளியிடலாம் - with a tag 'for mature audience only'. இந்த ஐம்பது ருபாய் இதழ்களுடன் வேறொரு கார்டூன் இதழும் வெளியிடலாம்.

  பள்ளிக்கூடங்கள் சந்தா செலுத்தியிருப்பின் அந்த கார்டூன் இதழ் மற்றும் இன்னொரு காமிக்ஸ் கிளாசிக்ஸ் கார்டூன் இதழ் அனுப்பி விடாலாம் அவர்களுக்கு.

  மற்றைய சந்தாதார்களுக்கு இரு ஐம்பது ருபாய் இதழ்களையும் அனுப்பி வைத்தால் - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு லார்கோ / ஷெல்டன் இல்லாத இதழ்களும் மற்றவர்களுக்கு இரண்டும் படிக்கக் கிட்டிடும்.

  மேலும் சிக்-பில் மற்றும் ஷெல்டன் சேர்ந்து வருவதையும் (in future - not next month) தனி issues ஆக்கிவிடலாம்!

  நண்பர்கள் லார்கோ மற்றும் ஷெல்டன் இரு பாகங்களை வருவதை நமக்குள்ள தார்மீக பொறுப்பினால் பொறுத்தல் வேண்டும். This is just a suggestion!

  ReplyDelete
 89. //

  puthagapriyan 8 July 2012 22:07:00 GMT+05:30

  இது போன்ற துணிகர செயலை பரிட்சித்து பார்க்கும் தைரியம் இங்கு நமது ஆசிரியரை தவிர யாருக்கேனும் உண்டா என்ன? சந்தேகம் தான். பதில் இட வில்லையே என்று சோர்ந்து போய் இருந்த நேரத்தில் ஒரு உற்சாக டானிக் இந்த பதிவு. எண்ணங்கள் விதைத்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் என்றும் நிஜமாக்கும் உங்கள் தளராத முயற்சி. எனினும் ஒரு நெருடல் உண்டு. நமது "என் பெயர் லார்கோ" கதை 73 ம் பக்கத்தில் அந்த எடிட்டிங், கதையின் முழு பரிமாணத்தையும் காட்டுமா என்ற கேள்வி அதே கதை வரிசையில் உள்ள "பார்ட் 3 H " Dutch Connection இல் எத்தனை பக்கத்தை நீங்கள் நமது பாணியில் வெளி இட முடியும் என்று தோன்றுகிறது ". உண்மையான சவால்கள் இன்னும் பல லார்கோ கதை வரிசையில் உண்டு என்று எண்ணவே எனக்கு தோன்றுகிறது. உங்கள் எந்த முயற்சிக்கும் உங்கள் நீண்ட நாள் தோழனாய் என்றும் உங்கள் பின்னால்... புத்தக ப்ரியன்

  Reply

  Vijayan 9 July 2012 02:09:00 GMT+05:30
  puthagapriyan : லார்கோ வின்ச்சின் தமிழ் வருகைக்கு நாம் முதலில் நன்றி சொல்ல வேண்டியது Cinebooks நிறுவனத்திற்கே என்று சொல்லுவேன் ! இந்தத் தொடர் 1990 ல் துவங்கியது ; இரு வருடங்களிலேயே ஐரோப்பா முழுவதும் rave reviews பெற்று தூள் கிளப்புவது பற்றிக் கேள்விப் பட்டேன் ! அப்போதே இத்னை தமிழுக்குக் கொண்டு வந்திருக்கலாம்...ஆனால் அச்சமயம் லார்கோவின் ஆங்கிலப் பதிப்புகள் இருந்திடவில்லை. So பிரெஞ்சு ஒரிஜினல்களைக் கொண்டு என்னால் சரிவர எந்த முடிவும் எடுத்திட முடியவில்லை. கதைத் தொடரில் adults only நெடி வேறு சற்றே தூக்கலாய் தெரிந்திட்டதால் 'வம்பு வேண்டாமே' என்று ஜகா வாங்கி விட்டேன்.

  சமீப ஆண்டுகளில் இங்கிலாந்தின் Cinebooks நிறுவனம் பல பிரபல பிரெஞ்சு கதைத்தொடர்களின் ஆங்கில உரிமைகளைப் பெற்று ஆங்கில மொழிபெயர்ப்போடு பற்பல கதைவரிசைகளை வெளியிடத் துவங்கிய பொது தான் லார்கோவின் முழுப் பரிமாணமும் புலனானது எனக்கு!

  'Project Largo in Tamil' துவங்கியதும் முதல் பத்து பாகங்களையும் english ல் படித்து விட்டு'அக்கடா'வென ஓரிரு நாட்களுக்கு என் தலைக்குள்ளே அவரது கதாப்பாத்திரம் settle ஆகிட அவகாசம் கொடுக்க முயற்சித்தேன். இத்தொடரில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களும் சரி, சிரமங்களும் சரி அப்போதே loud and clear ஆகத் தெரிந்திட்டது ! அதனால் தான் லார்கோவின் அறிமுகப் படலங்களின் போதெல்லாம்'இது கத்தி மேல் நடக்கும் அனுபவமென' எழுதினேன் !

  Anyways 'இவற்றை சமாளிக்க பெரியதொரு முன்னேற்பாடுகள் செய்தேன்..அது இது'வெனப் பீலா விடப் போறதில்லை நான் ! கதையின் flow மட்டுமே ஆங்காங்கே நாம் செய்யக் கூடிய editing ன் அளவை நிர்ணயம் செய்திடும் என்பதால், just go with the flow ! இது வரை அந்த simple பார்முலா நம்மைக் கைவிட்டிடவில்லை என்பதால்,தொடரும் பாகங்களிலும் அதனையே முடிந்தளவிற்கு பிரயோகிப்போமே!

  //

  'மெய்யாலும் முதல்முறையாக....!!!' பதிவில் புத்தக ப்ரியனின் கேள்வியும், ஆசிரியரின் பதிலும். (சும்மா பழைய பதிவை படித்த பொழுது கண்ணில் பட்டது)

  //'இது கத்தி மேல் நடக்கும் அனுபவமென' // - மிக சரியாகவே கணித்து உள்ளீர்கள் சார் ...

  ReplyDelete
  Replies
  1. எந்த பதிவில் இந்த உரையாடல் நடந்தது என்று தேடி பார்த்து அலுத்து விட்டேன். அதை கண்டுபிடித்து பதிவு இட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே. முன்னர் நமது ப்ளாகில் இருந்த "search" option தற்போது இல்லை போலும். பகிர்வுக்கு நன்றி.

   Delete
 90. ஆசிரியர்க்கு, போன பதிவில் எனது கமெண்ட்ஸ் தங்களை வருத்த படுத்தி இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன் . (உண்மையை உணர வைத்த இனிய நண்பருக்கு நன்றி ...)

  ReplyDelete
 91. //லார்கோ, ஷெல்டன் போன்ற கதைப்பற்று [மற்றும் சதைப்பற்று :-)] கொண்டுள்ள கதைகள் இரு பாகங்களாக ஐம்பது ரூபாய் விலையினில் அடுத்தடுத்த மாதங்கள் வெளியிடலாம்//
  //மற்றைய சந்தாதார்களுக்கு இரு ஐம்பது ருபாய் இதழ்களையும் அனுப்பி வைத்தால் - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு லார்கோ / ஷெல்டன் இல்லாத இதழ்களும் மற்றவர்களுக்கு இரண்டும் படிக்கக் கிட்டிடும்.//
  //மேலும் சிக்-பில் மற்றும் ஷெல்டன் சேர்ந்து வருவதையும் (in future - not next month) தனி issues ஆக்கிவிடலாம்!//

  நல்ல கருத்து ...

  ReplyDelete
 92. விஜயன் சார்

  //9 மாதங்களுக்கு ரூ.100 விலையினில் வரவிருக்கும் இதழ்களுக்கு = ரூ.900
  1 மாதத்திற்கு ரூ.200 விலையிலான ALL NEW ஸ்பெஷல் = ரூ.200
  டிசெம்பர் 2013 -ல் மாத்திரம் ரூ.50 விலையினில் 1 இதழ் = ரூ.50
  மாதம் ரூ.30 வீதம் - 10 மாதக் கூரியர் கட்டணம் = ரூ.300
  டிசம்பரில் மாத்திரம் கூரியர் கட்டணம் = ரூ.20//

  // டிசெம்பர் 2013 -ல் மாத்திரம் ரூ.50 விலையினில் 1 இதழ் //

  சார், இன்னும் டெக்ஸ் கதை (பூத வேட்டை?) ஒன்றும், டயாபலிக் கதை ஒன்றும் இந்த வருடம் ரூ.50 விலையில் வருவதாக கூறி இருந்தீர்கள். இப்பொழுது இதில் ஏதோ ஒன்றுதான் வருகிறதா ?


  ReplyDelete
 93. ஆசிரியர் இல்லாத ஒரு வகுப்பறையில் ஓர் அரட்டை :)

  'U' முத்திரை கேட்ட வாசகர்களே, வாசகர்கள் என்ற நண்பர்களே, நண்பர்கள் என்ற தனிமனித சமுதாய அக்கறை கொண்டவர்களே உங்கள் அனைவருக்கும் என் இனிய மாலை வணக்கம். உங்கள் யாரையாவது பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. ஏன் தெரியுமா, பாராட்டு ஒன்றே, பலன்கருதி செய்யாத தனிமனித ஒழுக்கத்திற்கு மரியாதையாகும், அதுவே அதற்கு உண்டான ஊக்கமாகும். அதனால் தான் ..

  கும்கி பெண்,
  " நாம நாலு பேருக்கு நன்ம செஞ்சாலே அதுவே போதும் மச்சா....ன் "

  என்று பாடினாள். ஏன் தெரியுமா? நல்லவங்க நாலு பேரு இருந்தால் தான், நாட்டில் நல்ல மழை பெய்யும் என்பதால் தான். ஆனால் மிகவும் தளர்ந்து சோர்ந்துவிடும் இதுபோன்ற பதிவில் கூட என்னால் கமெண்டு இட முடிவதில்லை. ஏன் என்று உங்கள் யாருக்காவது தெரியுமா? உங்களுக்கு தெரியாது. ஆனால் இதை வெகுகாலம் முன்பே தீர்க்கதரிசனமாக உணர்ந்த 'சின்னத்தம்பி' பிரபு அன்றே, இது யாருக்கும் தெரியவேண்டாம் என்று நடு ஜாமத்தில் பாடிச் சென்றுள்ளார். அதாவது...

  "குயில புடிச்சு கூண்டுலடிச்சு பாட சொல்லுகிற உலகம்,
  "மயிலப் புடிச்சி கால ஒடச்சி ஆட சொல்லுகிற உலகம்......

  இந்த ஆருட பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்கு மீண்டும் மீண்டும் ஒரு விஷயம் மட்டுமே மனதில் நிழலாடுகிறது. அது என்னவென்றால், இவரும் ஒருகாலத்தில் ஏதோ ஒரு blogspot ல் பதிவிட்டு பின் பாடியிருப்பாரோ என்று...

  contd.. if no ego comment...part.2

  ReplyDelete
 94. ஆசிரியர் இல்லாத ஒரு வகுப்பறையில் ஓர் அரட்டை :) (பார்ட். 2)

  அதற்கு முன் ஒரு விடயம்...

  இங்கும் அங்கும் சிலர் constructive கமெண்டு தான் வேண்டும் என்று ஓயாமல் empty vessels போல் ஓலமிடுகின்றனர். அது என்ன constructive கமெண்டு என்று எனக்கு தெரியவில்லை. 40 ஆண்டுகள் காமிக்ஸ் பாரம்பரியம் கொண்ட ஸ்தாபனத்திற்கு தெரியாத கட்டுமானமா ? சுதந்திரம் வாங்கி 65 வருடங்கள் சென்ற பின்பும் 'வால்மார்ட்' க்கே இன்னும் இங்கே வழியில்லை. ஆனால் இவர்களுக்கு எல்லாமே 'அப்பா-டக்கர்' கமெண்டு வேண்டுமாம். என்ன கொடும சார் இது :(

  constructive கமெண்டும், நல்ல நல்ல கமெண்டும் நாப்பது மட்டும் போதுமாம், அட அதுகூட சரிதான், ok தல, ஒரு நாளைக்கு 4 constructive கமெண்டாவது போட வேண்டியது தானே. அட போடுங்க சார், படிக்க காத்திருக்கிறோம் !

  contd part.3 :- if no ego comment...

  ReplyDelete
 95. ஆசிரியர் இல்லாத ஒரு வகுப்பறையில் ஓர் அரட்டை :) (பார்ட்.3)

  MR.ஸ்டீல் ஐப் போல் பாராட்டு விழா என்றவுடன் எனக்கும் திடிரென இனம்தெரியா நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. எனவே பளிச்சென்று விஷயத்தை போட்டு உடைத்து விடுகிறேன். வர்ணனைகளுக்கும், வ்ழுமையான நீள் பதிவுகளுக்கும் சற்று இடைவெளி கொடுப்போம் தோழர்களே... இதோ இங்கே இந்த பதிவின் TOP 5 constructive கமெண்ட் கள் ;

  1. சிவ.சரவணக்குமார் :

  உடனே டி.வி , சினிமாவில் ஆபாசம் இல்லையா என்று கிளம்பவேண்டாம். டி.வி யில் சேனல் மாற்றலாம், சினிமாவை தவிர்த்துவிடலாம். சுவரில் ஆபாச போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது என்பதற்காக அதை நம் வீட்டில் ஒட்ட அனுமதிப்பதில்லை. நாம் இருக்கும் சமூகத்துக்கு தக்கபடிதான் நாம் வாழ முடியும் நண்பர்களே. எனவே மீண்டும் சொல்கிறேன்.18 + தலைப்பெல்லாம் ரொம்ப ஓவர். ஒருவேளை நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆசிரியர் அப்படி செயல் படும் பட்சத்தில் மேற்படி புத்தகங்களை எனக்கு அனுப்பவேண்டாம் :(

  2. Erode M.STALIN :

  Recommended for +18 readers" என்ற tag --- இது போல ஒரு தர்மசங்கடமான நிலமை எப்பொழுதுமே நமது இதழுக்கு வர வேண்டாமே ! பல ஆண்டுகளாக அனவரது வீட்டிலும் வாங்கிவரும் குமுதம், ஆனந்தவிகடன் போன்ற இதழ்கள் இன்று நடிகைகளின் பிடியில் சிக்கித்தவித்து சீரழிந்து வருவது போதும் :(

  contd part 4 : top 3, 4, 5 .

  ReplyDelete
 96. ஆசிரியர் இல்லாத ஒரு வகுப்பறையில் ஓர் அரட்டை :) (பார்ட்.3)

  3.விஸ்கி-சுஸ்கி :

  நமது பதிப்புதுறையும் சற்று வளர வேண்டும் ESPECIALLY நமது நிறுவனம் இப்போதுதான் அதன் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. ஆரம்பத்திலேயே கடிவாளம் போடும் இந்த முயற்சி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதை போன்றது. தற்போது நமது ஆசிரியர் நமது அறிவுரைகள் கேட்பதற்கு முன்பே ஒரு படத்தனிக்கை முறையை செயல்படுதிவருகிறார். இந்த முறை 99% சதவீத ஆபாசஅம்சங்களை கதைகளில் இருந்து நீக்கிவிடுகிறது. இதற்காக "FOR ONLY 18+" என்ற வாசகம் விபரீத முயற்சி. அதற்கான அவசியமும் தற்போதைய சூழ்நிலையில் இல்லை.

  4. மர மண்டை :

  ஆனால் ஆண் பெண் உறவு என்பது இயற்கை. இது போன்ற முழு "நீள" வண்ணப்படங்களை பார்த்தவுடன் பாலுணர்வை தூண்டி உடம்பில் ரசாயன மாற்றங்களை உண்டாக்கி விடும். தற்போதைய CO-EDUCATION முறை அதற்கு வடிகால் தேட சொல்லி ஆர்ப்பரிக்கும்... ஆனால் பாலுணர்வு அப்படிப்பட்டதல்ல, தன் மன உணர்ச்சி தூண்டுதல் ஒன்று மட்டுமே போதுமானது, நம் கலாச்சாரம் சீரழிய ...!

  5.Erode VIJAY :

  கிளுகிளுப்பான படங்களில்/இடங்களில் உடைகள் வரைவதும், ஆபாச வசனங்களை சற்றே மாற்றியமைப்பதும் கதையோட்டத்திற்கு எவ்விதத்தில் தொய்வைத் தருமென்று எனக்கு விளங்கவில்லை! சரி அப்படியே கொஞ்சம் தொய்வைக் கொடுத்தாலும் அதை நாம் நம் பாரம்பரியம் மிக்க காமிக்ஸின் நன்மைக்காக சற்று விட்டுக் கொடுக்கமாட்டோமா என்ன?

  ReplyDelete