Sunday, March 24, 2013

அறிமுகம் ஒரு சுட்டி ..பதிவோ ரொம்பக் குட்டி..!


நண்பர்களே,

வணக்கம். சின்னதாய் ஒரு பயணம் அவசியப்படுவதால் அதன் ஏற்பாடுகளில் கடந்த வாரத்தின் பின்பாதி செலவாகி விட்டது. இன்று இரவு கிளம்பிடத் தயாராகும் முன்னே இங்கே ஒரு attendance போட்டே ஆக வேண்டுமென்ற முனைப்பில் - "டைகர் ஸ்பெஷல் "க்கான பணிகளை முடித்த கையோடு இங்கே ஆஜராகியுள்ளேன். 

ஷெல்டன் & சிக் பில் கூட்டணியிலான Hot n 'Cool ஸ்பெஷல் தற்போது    அச்சில் உள்ளது.அடுத்த சில நாட்களில் அதன் அட்டைப்படம் அச்சாகியதும் பைண்டிங் பணிகள் துவங்கிடும். தொடரும்  மாதங்களுக்கான ராப்பர்களையும் 'ஏக் தம்மில்' அச்சிட்டால் பணமும், காலமும் மிச்சமாகுமென்பதால் - ஹாட் n ' கூல் ஸ்பெஷல் + டைகர் ஸ்பெஷல் + இரத்தத் தடம் + லக்கி லூக் ஸ்பெஷல் என்று 4 ராப்பர்கள் ஏக நேரத்தில் அடுத்த சில நாட்களில் அச்சுக்குப் பயணமாகிடவுள்ளன. Promise செய்தபடியே ஏப்ரலின் முதல் வாரத்தில் இரு இதழ்களும் (H & C ஸ்பெஷல் + டைகர் ஸ்பெஷல்) உங்களைத் தேடி வந்திடும். இரு இதழ்களுமே அழகாய் அமைந்திருப்பதாய் மனதுக்குப் பட்டது fingers crossed !

டைகரின் "பரலோகப் பாதை" + "இரும்புக்கை எத்தன் " இதழ்களை மீண்டுமொருமுறை படித்திட வாய்ப்புக் கிடைத்த போது, டைகரின் அந்த கரடுமுரடான வசீகரத்திற்கு மயங்காது இருக்க இயலவில்லை. (நான் பணியாற்றிய நமது இதழ்களை ஒரு போதும் திரும்பப் படிக்கும் பழக்கம் கொண்டவனல்ல என்பதால் -இது போன்ற மறுபதிப்பு முயற்சிகள் ஜாலியாய்ப் பின்னோக்கிப் பயணம் செய்திட உதவிடுகின்றன!) சமீபத்திய "தங்கக் கல்லறை " ஒரு த்ரில்லர் ரகமென்றால் - தற்சமய "ப.பா & இ.எ " அட்டகாசமான action சூறாவளி என்பதை புரட்டும் ஒவ்வொரு பக்கமும் நினைவூட்டுகின்றது ! "இரத்தத் தடத்தில்" நிறைவு பெறும் இந்த அசாத்திய அத்தியாயம் நமது இந்த ஏப்ரல் & மே மாதங்களை நிரம்பவே lively ஆக வைத்திருக்கக் காத்துள்ளது ! மே முதல் தேதிக்கு "இரத்தத் தடம் " உங்கள் கைகளில் இருந்திடும் - உறுதியாக !

அப்புறம் - நமது Kaun Banega Translator - சீசன் 2 -க்கான மொழிபெயர்ப்புப் பக்கங்களை - நான் ஊருக்குத் திரும்பியவுடன் (வரும் வெள்ளியன்று) அனுப்பிடவுள்ளோம். Green Manor தொடருக்கான கான்டிராக்ட் நம் கைக்குக் கிடைத்த பின்னே இந்த வேலையைச் செய்திடலாமே என்று நான் நினைத்திட்டதால் அறிவித்தபடி மார்ச் 15-க்கு உங்களை செயலில் ஆழ்த்திட இயலாது போனது. கிடைத்திடும் பக்கங்களை -மொழிபெயர்ப்போடு ஏப்ரல் 14க்கு முன்னதாக நமக்குக் கிடைக்கும் விதத்தில் அனுப்பிடல் அவசியம் என்பதை underline செய்திடுகிறேன். அது மட்டுமல்லாது, போஸ்டல் அட்ரஸ் இன்றி வந்திடும் மின்னஞ்சல் கோரிக்கைகளுக்கு வாய்ப்பளிக்க இயலாதென்பதால், மறவாது முழு முகவரியோடு விண்ணப்பிக்க வேண்டுகிறேன் !


ஆண்டின் முதல் quarter நிறைவு பெற்றிடும் இவ்வேளையினில் - எங்களது திட்டமிடல்கள் கொஞ்சமாய் முன்னே இருப்பதால் - சில  காலம் முன்னே நான் அறிவித்திருந்த +6 முயற்சிகளுக்கான பிள்ளையார் சுழியினைப் போடும் நேரமும் நெருங்கி வந்துள்ளதாய் உணர்கிறேன். அறிமுகமாகவிருக்கும் தலைவர் "சுட்டி லக்கி" தான் அந்தப் புதிய பாதையில் ஜாலியாய் சவாரி செய்யக் காத்திருக்கும் முதல் நாயகர் (!!)  ரூ.50 விலையினில், வழக்கம் போல் முழு வண்ணத்தில் வந்திடும் சுட்டி லக்கி உங்களையும், உங்கள் வீட்டுச் சுட்டீசையும் கவர்ந்திட்டால் - +6 ன் அடுத்த படியாய் "OKLAHOMA JIM" (சுட்டி லக்கி # 2) வந்திடும். லக்கி லூக் மாத்திரமல்லாது டால்டன் சகோதரர்களும் குட்டிப் பயல்களாய்  அரை நிஜாரில் அட்டகாசம் செய்யும் சாகசமிது ! இவை தவிர +6 முயற்சியில் ஒரு சூப்பரான டெக்ஸ் சாகசமும் black & white -ல் உண்டென்பதை இப்போதைக்குச் சொல்லிடுகிறேன் ! பாக்கி 3 இதழ்கள் பற்றிய அறிவிப்பு - இவ்வாண்டின் பிற்பகுதியினில் வந்திடும். உங்கள் பர்ஸ்களுக்கு வெடி வைக்கும் வேலையினைச் செய்கிறோமோ என்ற குறுகுறுப்பு சின்னதாய் தலைக்குள் இல்லாதில்லை - but #1 & 2 இதழ்கள் மட்டுமாவது நம் அடுத்த தலைமுறை வாசகர்களின் பொருட்டு என்ற ஆறுதல் மனதுக்குள் ! 

விரைவில் சிந்திப்போம் ..அது வரை stay cool folks & ஈஸ்டர் வாழ்த்துக்கள் !


161 comments:

 1. டியர் எடிட்டர்ஜீ !!!
  +6 அறிவிப்புகளோடு கூடிய பதிவை அடியேன் எதிர்பார்க்கவில்லை.ரியலி....வெரி சூப்பர்.!!!
  அப்புறம் நமது டைகர் கதை வரிசை இரும்புக்கை எத்தன்&பரலோக பாதை என்று தானே இருக்கவேண்டும்.மறந்துவிட்டீர்களா...?:-)

  ReplyDelete
 2. அட்டகாசம் சார் !பொடியனை தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் !+6 ம் வண்ணத்தின் கை ஓங்கியிருப்பதை பார்த்தால் கருப்பு ,வெள்ளை ஒரு ஓரத்திற்கே சென்று விடும் போலுள்ளதே !அதே நேரம் நமது come back spl ல் அறிவித்தபடி லாரன்ஸ் -டேவிடின் புதிய கதையையும் சற்றே நினைவில் வைத்து கொள்ளுங்கள் !

  தாங்கள் கூறுவதை பார்த்தால் ஹாட் ன் கூல் ஏப்ரல் முதல் நாளிலே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது போலுள்ளதே !இரும்பு கை எத்தனை இப்போதே படிக்க வேண்டும் என்ற ஆவலை கிளப்பி விட்டீர்கள் !சுட்டியின் இரு அட்டைகளும் ஒன்று போலவே உள்ளது !அசத்தல் !
  எப்போது வருவார் ஷெல்டன் என காத்திருக்கிறேன் !

  ReplyDelete
  Replies
  1. பதிவோ குட்டி ,அறிவிப்புகளோ தங்க கட்டி !
   இந்த முறை astrix ஐ கைபற்றி விடுவீர்களா !இந்த பயணம் எவளவு ஆச்சரியங்களை தர காத்துள்ளதோ,பெருமூச்சுகள் வெளிபடுகின்றன மாதம் ஒரு இதல்தானா என்று!ஏகத்துக்கும் இப்படி ஏக்கத்தை அதிகரிக்கும் சிறந்த தொடர்கள் வந்து கொண்டிருந்தால் என்ன செய்வது !மாதம்தோறும் தீபாவளிதான்,வெடி வேடிக்கைதான் !

   Delete
  2. கோடையில் பதியவிருக்கும் /பூக்கவிருக்கும் இரத்ததடம் விரைந்து வர உள்ளது மே முதல்நாளில் இன்னும் சூப்பர் !அட்டகாசம் சார் !

   Delete
 3. //உங்கள் பர்ஸ்களுக்கு வெடி வைக்கும் வேலையினைச் செய்கிறோமோ//
  எடிட்டர் சார் அப்படி எல்லாம் எதுவுமில்லை
  எங்களுக்குதேவை நிறைய புத்தகங்கள் புத்தகங்கள்  ReplyDelete
  Replies
  1. அதே....அதே ...
   சார் ..,எங்கள் பர்ஸ் கனமாகவே உள்ளது .கவலை வேண்டாம் .எங்களுக்கு தேவை நமது புத்தகம் மட்டுமே ...

   Delete
 4. waiting for 6+............
  special waiting for kid lucky

  ReplyDelete
 5. THANKS ERODE VIJAY FOR INFORMING US ABOUT NEW POST TO EMAIL SUBSCRIBERS!

  ReplyDelete
  Replies
  1. @ senthilwest2000

   நன்றிகள் எதற்கு? நான் என் கடமையைத்தானே... ஊவ் யாரோ அடிக்கிறாங்க...

   Delete
  2. Thanks vijay, got to know about the new post immediately because of you.

   Delete
 6. இப்போதெல்லாம் உங்கள் பதிவுகள் தகவல் திரட்டுக்களாய் அமைந்துவிடுகின்றன. வரப்போகும் இதழ்களுக்கான எதிர்பார்ப்பை அதிகரிகும் இந்தப் பதிவு சட்டென்று முடிந்துவிட்டதாய்த் தோன்றுகிறது.

  சுட்டி லக்கியை சுட்டீஸ் மட்டுமல்ல பெரிஸ்களும் ரசித்துச் சிரிக்கப்போவது உறுதி. 'தனிமையே என் துணைவன்...' பாட்டை லக்கி யாரிடமிருந்து சுட்டார் என்பதை நினைத்தாலே சிரிப்புத்தான் வரும்.

  +6 என்பது விரைவிலேயே +12 பரிணமிக்கவும், உங்கள் பயணம் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 7. ஈஸ்டர் வாழ்த்துக்கள்..? அப்போ அடுத்த ஞாயிறு வரைக்கும் இங்கே தலை காட்டப் போறதில்லை. அப்படித்தானே?

  ReplyDelete
 8. //உங்கள் பர்ஸ்களுக்கு வெடி வைக்கும் வேலையினைச் செய்கிறோமோ//

  பல நண்பர்களின் உடல் நலத்தைக் கெடுக்கும் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி, புத்தகங்களை வாங்க வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது அப்பட்டமான உண்மை! இன்னும் புத்தகங்களை அதிக எண்ணிக்கையில் நீங்கள் வெளியிட்டால் இன்னும் அது நன்மை பயக்குமே தவிர பாதிக்காது.

  ReplyDelete
 9. DALTONS AND LUCKY LUKE IN CHILDHOOD WOW! waiting for climax of irumbukai ethan in rathathadam !

  ReplyDelete
 10. சார் ஒரு முக்கியக் கேள்வி: சுட்டி லக்கி ஜட்டி போடாமல் ஆற்றில் குளிக்கும் ஸீனை சென்சார் பண்ணுவீர்களா?

  ReplyDelete
  Replies
  1. நண்பரே சிரிக்காதீர்கள். அது ஒரு சீரியஸான கேள்வி, ஆமாம்! :-)

   Delete
  2. 'சுட்டி' லக்கிதானே, சென்ஸார் செய்யுமளவுக்கு பெரிதாய்(!) ஒன்றுமிருக்காதுன்னு நினைக்கிறேன்! :D

   Delete
  3. ஆமாம். கோஸ்ஸினி அதைக்கூட காட்டாமலே வரைந்துவிட்டார்....

   Delete
  4. மன்னிக்கவும். இதில் கோஸ்ஸினி இல்லை. வேறு ஓவியர்கள்.

   Delete
  5. // 'சுட்டி' லக்கிதானே, சென்ஸார் செய்யுமளவுக்கு பெரிதாய்(!) ஒன்றுமிருக்காதுன்னு நினைக்கிறேன்! :D //

   சிறிதாய் இருந்தால் பரவாயில்லையா நண்பரே ;-)
   .

   Delete
  6. இப்படியே போனால் உங்கள் comments ஐ சென்சார் பண்ணிவிடப் போகிறார் ஆசிரியர். பார்த்து :)

   Delete
 11. டியர் எடிட்டர்,

  பயணம் கிளம்பிடும் இந்த அவசரத்திலும், இங்கே உங்களின் பதிவுக்காக காத்திருக்கும் சில நூறு வாசகர்கள் ஏமாந்துவிடாதிருப்பதன் பொருட்டு ஒரு அவசரக் குட்டிப் பதிவை அள்ளி வீசிவிட்டுச் செல்லும் உங்கள் கடமை உணர்வுக்கு நன்றிகள் பல!

  +6 பற்றிய அறிவிப்பு ஒரே நேரத்தில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது.  +6ல் முதலில் அசத்தப்போவது நமது சூப்பர் கெளபாய் டெக்ஸின் 50 சாகஸம் என எண்ணியிருந்தேன்; என்  கணிப்பில் மண்!  சுட்டி லக்கியின் வரவும் மகிழ்ச்சியே; எனினும், +6கள் முழுக்க கருப்பு-வெள்ளை இனத்தைச் சார்ந்தவை என நினைத்திருந்தேனே?!! 

  நான்கு இதழ்களின் அட்டைப்படங்கள் ஒரே நேரத்தில் அச்சுக்குச் செல்கின்றன - என்ற செய்தி சந்தோஷமாய் என்னவோ செய்கின்றது!

  ஷெல்டன், வுட்சிட்டி கும்பல், டைகர், லக்கிலூக் - என வரவிருக்கும் நாட்கள்...

  கோடை விருந்து! :)

  ReplyDelete
 12. வாண்டு லக்கியின் சாகசங்களை காண பெரும் ஆவலாக உள்ளேன். 50 ரூபாய் இதழாக வருவது மற்றொரு சந்தோஷம்

  ReplyDelete
 13. 'சுட்டி லக்கி'யை இங்கே முதன் முதலில் அறிமுகப்படுத்தியது யாரு? பார்க்க எனது Profile படம்! ஹி..ஹி...!

  ReplyDelete
  Replies
  1. பாத்துட்டேன்!

   Delete
  2. // 'சுட்டி லக்கி'யை இங்கே முதன் முதலில் அறிமுகப்படுத்தியது யாரு? பார்க்க எனது Profile படம்! ஹி..ஹி...! //

   நீங்க அப்பப்போ வெற்றிலையில் மை போட்டு பாப்பீங்களோ நண்பரே :))
   .

   Delete
 14. டியர் சார்...
  சுட்டி லக்கியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். இரும்புக்கை எத்தன்& வெய்ன் ஷெல்டன்
  அட்டைப் படத்தையும் வெளியிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இரும்புக்கை எத்தன்
  முதல் தேதியிலும், வெய்ன் ஷெல்டனை 10 தேதிக்குள் வெளீயிடுங்கள் சார். அப்புறம் தாங்கள் முன்பு
  அறிவித்திருந்த சி.ஐ.டி.ராபின். மார்ட்டீன். ஜெஸ்லாங். பேட்மேன். மாண்ட்ரெக். சுஸ்கி விஸ்கி கதைகள்
  எப்போது வெளிவரும்?

  ReplyDelete
 15. "அறிமுகம் ஓரு சுட்டி...
  பதிவோ ரொம்பக் குட்டி... "

  !!!!

  இந்தப் பதிவைக் கம்போஸ் பண்ணிட்டிருக்கும்போது T.R. படம் ஏதாவது TVல ஓடிட்டிருந்ததா சார்? :)

  ReplyDelete
 16. சுட்டி லக்கியோடு சுட்டி டால்டன்ஸ் வேறா? ஆகா... அதகளம் ஆரம்பமாகப் போகுதே... மீண்டும் ஒரு காமிக்ஸ் வசந்த காலத்தை வெகு ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 17. விஜய் அவர்களே நான்கூட +6ல் முதலில் டெக்ஸ் என்றுதான் நினைத்து இருந்தேன் பரவாயில்லை சுட்டி லக்கி தான் வரப்போகிறார். வரவேற்போமே...

  ReplyDelete
  Replies
  1. ஏதோ நீங்க சொன்னதால சமாதானமாகிறேன், கர்ணன்ஜி!
   'கர்ணன் சொல்லி விஜய் கேட்கலை'னு நாளைய வரலாறில் யாரும் எழுதிடக் கூடாதில்லையா? :)

   Delete
 18. 01. "மே முதல் தேதிக்கு "இரத்தத் தடம் " உங்கள் கைகளில் இருந்திடும் - உறுதியாக!"

  இந்த வார்தைக்க்காகத்தான் இவ்வளவு வருடங்கள் காத்திருந்தேன்! Hats off to your team editor Sir !

  02. சுட்டி லக்கி அடுத்த தலைமுறை காமிக்ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் எங்களைப் போன்ற 30+களையும் சிறுவர்களாக மற்றும் என நம்புகிறேன்!

  ReplyDelete
 19. //இவை தவிர +6 முயற்சியில் ஒரு சூப்பரான டெக்ஸ் சாகசமும் black & white -ல் உண்டென்பதை இப்போதைக்குச் சொல்லிடுகிறேன் !//
  அது எந்த கதை என்பது தெரியும் வரை நிம்மதி போச்சே!

  ReplyDelete
 20. டைகரின் சாகசத்தை படிக்கும் ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் இறுதிப்பாகமான ரத்தத்தடத்திற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டியுள்ளதை நினைத்தால் வருத்தமாக உள்ளது... மின்னும் மரணத்தையும் கிளாசிக்ஸில் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்... டைகர் கதைகளையும் டெக்ஸ் கதைகளையும் தொங்கலில் விடாமல் ஒரே இதழாக வெளியிட்டால் கலெக்ஷன் செய்து வைக்க வசதியாக இருக்கும் சார்…

  ReplyDelete
 21. ஆஹா! 'மின்னும் மரணம்' ரீப்ரிண்ட் டா! நினைக்கும் போதே இனிக்கிறதே! வண்ணக் கனவு நிஜமாகுமா சார்?

  ReplyDelete
  Replies
  1. நண்பர்களே நாம் அனைவரும் ஒன்றாக குரல் கொடுத்தால் நமது வண்ணக்கனவு நிச்சயம் மெய்யாகும்

   "மின்னும் மரணம் " முழுவதும் வண்ணத்தில்

   மொத்தம் பத்து பாகங்கள் ஒரே புத்தகமாக வந்தால் நமது இப்போதைய நிலவரத்தின் படி 500 ரூபாய்க்கு மேலே செல்லாது

   அல்லது ஐந்து பாகங்கள் கொண்ட இரு புத்தகங்களாக 250 விலையில் வெளியிடலாம்

   நண்பர்களே உங்களது குரல்களை மன்னிக்கவும் ஆதரவுகளை அள்ளி தெளியுங்கள் :))

   கனவுகளை நனவாக்குவோம் நன்றி
   .

   Delete
  2. "மின்னும் மரணம் " முழுவதும் வண்ணத்தில் மறுபதிப்பாக ...

   வேண்டும் வேண்டும் வேண்டும்

   Delete
  3. எனக்கும்! எனக்கும்! எனக்கும்!

   Delete
  4. தல எனக்கு இரண்டு

   Delete
 22. Editor Sir,
  Like few other friends had mentioned me too thought +6 is for B&W stories (CID robin, martin mystery, tex, diabolik etc..). Ok with Kid lucky coming in, but in the expense of B&W stories.

  By now if you haven't realized i am a big fan of B&W stories :-)

  ReplyDelete
 23. friendz ingu tamilil eppadi write pannuvathu?

  ReplyDelete
 24. Dear Editor,

  Bon Voyage to you again ...!

  Welcome to Kid Lucky as part of +6. Finally, a bunch of books scheduled to arrive sooner feels good.

  ReplyDelete
 25. வர போகும் மாதம் அனைத்தும் ...உங்கள் இந்த பதிவால் "காமிக்ஸ் மாதம் "என்பதை உணர்ந்து விட்டோம் .
  ஹுரே.........

  (மாதத்திற்கு பத்து நாள் இருந்தால் போதாதா ....
  யார்யா ....முப்பது நாள் கண்டு பிடித்தது .....)

  ReplyDelete
  Replies
  1. // (மாதத்திற்கு பத்து நாள் இருந்தால் போதாதா ....
   யார்யா ....முப்பது நாள் கண்டு பிடித்தது .....) //

   சத்தியமாக நான் இல்லீங்கோவ் :))
   .

   Delete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. லக்கி லூக்குக்கு எப்போ கண்ணாலம் ஆச்சு ...........ஜாலி ஜம்பருக்கு எப்போ கண்ணாலம் ஆச்சு .......இல்ல டால்டனுக்கு தான் எப்போ கண்ணாலம் ஆச்சு .................TEST TUBE BABIES.ஆஆ........ என்னா ஒரு வில்லத்தனம் ........

  எனக்கு கண்ணாலம் பண்ணி வைக்கணும்னு ஆசிரியருக்கு தோணாமல் போனது ஏனோ ...........சுட்டி மந்திரி இருந்தா சீக்கிரமா நான் ராஜாவாகி விடுவேன்..

  ...............௩௨௪௫௭௭௫௪௪௩௪௪௭௮௭ ...........
  .இந்த ஜால்ரா பாயை அட்லீஸ்ட் ஒரு பெண்ணணாவாவது....I MEAN ஒரு ஜால்ரா GIRL போட்டு இருக்கலாம்.........

  ReplyDelete
  Replies
  1. சுட்டீ இருந்தா பெரிய மந்திரியாகலாம் ...ராஜாவாக முடியாது !

   Delete
  2. //லக்கி லூக்குக்கு எப்போ கண்ணாலம் ஆச்சு ...........ஜாலி ஜம்பருக்கு எப்போ கண்ணாலம் ஆச்சு .......இல்ல டால்டனுக்கு தான் எப்போ கண்ணாலம் ஆச்சு .................TEST TUBE BABIES.ஆஆ........ என்னா ஒரு வில்லத்தனம் ........//

   மந்திரி.. இது லக்கி கண்ணாலதுக்கு அப்புறமா வர்ற கதை இல்லே! லக்கியோட ப்ளாஷ்பேக். ஆனா உங்க கோரிக்ளை நியாயமானதே!

   To Editor: 'சுட்டி மந்திரி' கதை எப்போ சார் வரும்?

   Delete
  3. உங்க ரெண்டு பேர் தல்தலையில பாலைவனத்துல போகும் போது சுவர் விழக்கடவ ..............(ஹி ஹிஹி..........)


   ஜால்ரா பாய் ......''மாஸ்டர் கண்டிப்பா உங்க தலையில தானே விழும் ஹி ஹிஹி......கண்ணாலம் வேணுமாம் கண்ணாலம்''

   Delete
 28. //உங்கள் பர்ஸ்களுக்கு வெடி வைக்கும் வேலையினைச் செய்கிறோமோ//

  அணுகுண்டே வச்சாலும் டபுள் ஓகே தான் !

  ReplyDelete
 29. //உங்கள் பர்ஸ்களுக்கு வெடி வைக்கும் வேலையினைச் செய்கிறோமோ//

  என்னுடைய பர்ஸ் கொஞ்சம் வீக்தான், ஆனால் என் துணைவியாரும் இந்த பதிவுகளை ப்டிப்பதால் நண்பர் ஒருவர் புகை விடும் பழக்கத்தை கைவிட்டு காமிக்ஸ் வாங்குவதாக கூறியிருப்பதை பார்த்து என்னை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டாள். எனவே அதிகமாக புத்தகங்கள் வருமானால் நான் வீட்டில் வாங்குவதை (திட்டு)நிறுத்தி விடுவதாக உத்தேசம்.

  இப்போது ஒரு மாதத்திற்கு 30*(3*7)=630 செலவாகிறது.

  ReplyDelete
  Replies
  1. @ கி கி

   // நான் வீட்டில் திட்டு வாங்குவதை நிறுத்திவிடுவதாக உத்தேசம் //

   எனக்கு எந்த கெட்ட பழக்கமுமில்லை! ஆனாலும், என் வீட்டில் நான் தினமும் வாங்கிக்கட்டிக் கொண்டுதானிருக்கிறேன்.

   நீதி: இதுக்காக இல்லைன்னாலும்
   எதுக்காகவாவது திட்டிட்டேதான் இருப்பாய்ங்க!

   உப நீதி: இவிங்க எப்பவுமே இப்படித்தான். :)

   Delete
  2. கரெக்டா சொன்னீங்க விஜய்

   Delete
  3. வீட்டில் வாங்கின அடியை வெளியே சொல்லாம மனசுக்குள்ளேயே போட்டு மறைச்சு, வெளியே சிரிச்சுட்டுத் திரியறாங்களே... அவர்கள் கோழைகள்!

   நாமெல்லாம் வீரர்களாகிட்டோம் கிகி, ராஜ் முத்து குமார், சு.மூ.கு!

   முன்னேறுவோம் வீரர்களே, வீடு நோக்கி! :)

   Delete
  4. நான் சொல்லும் நீதி என்னான்னா,

   630 ரூ மீதியாவதால் மாதா மாதாம் +6 வந்தாலும் வாங்கலாம் என்பதே

   Delete
  5. @ கி கி

   நீங்க கணக்குல (என்னை விட) வீக் போலிருக்கே?!

   மாதா மாதம் வந்தா அது +12 ஆகிடுமோல்லியோ?

   ஷல்லூம், கொஞ்சம் சொல்லும்! :)

   Delete
  6. என்னாது........வருசத்துக்கு பன்னெண்டு மாசமா....? சொல்லவேல்ல...?:-)

   Delete
  7. இது எப்போ இருந்து .... பன்னிரண்டு மாசம் ஆச்சு ???

   Delete
 30. Dear friends, please tell me largo's english comics download site.... (By this itself, I will not stop read out fav. lion & Muthu comics..!)

  ReplyDelete
 31. யப்பா எனக்கு தமிழ்ல டைப் பண்ண வந்துச்சி

  ReplyDelete
  Replies
  1. டியர் சென்னைவாசி!!!
   அப்படியே மெட்ராஸ் பாஷையில் அடித்துவிடுங்களேன்...?:-)

   Delete
  2. சர்த்தான் வுடு தல இதெல்லாம் நமக்கு சப்ப மேட்ரு!

   Delete
  3. இது உங்களுக்குத் தேவைதான் சாத்தான் அவர்களே :)

   Delete
 32. எ ப் பொழுது நமது காமிக்ஸ் மாதம் 2 முறை வரும் நாள் வரும் நண்பரகளே நன்றி நண்பர் இரும்பு கை அவரகளே உங்கள் உதவியால் இன்று தமிழில் எனது முதல் பதிவு

  ReplyDelete
  Replies
  1. நானும் அப்டி தான்பா! தேங்க்ஸ் பா இரும்பு.

   Delete
 33. வணக்கம் சென்னை!

  ReplyDelete
 34. சுட்டி லக்கிக்காக என் மகன் சார்பில் நன்றிங்க தலைவரே! ஒரு வேண்டுகோள் நீண்ட நாளாக சுமார் இருபது வருடமாக கண்ணாமூச்சி ஆடும் பூத வேட்டை அல்லது திகில் நகரில் டெக்ஸ் கதைகளை இந்த வரிசைக்குப் பரிசீலித்தருள வேண்டுகிறேன் ஜி! (ஹி ஹி ஹி முடிஞ்சா வண்ணத்தில்..)

  ReplyDelete
  Replies
  1. அப்படியே கருப்பு ஆயாவை வண்ணத்தில் கேட்கலையா-ji ? :D

   Delete
  2. @ ராஜ் முத்து குமார்

   அப்படியே... கருப்பு ஆயாவின் பொக்கை வாயை வண்ணத்தில் பார்த்திட்டாலும்...

   Delete
  3. @ John Simon : add kanavai kollaiar also to the list .

   Delete
  4. ஆமாம் சார் கணவாய் கொள்ளையர்கள், கணவாய் கதைகள் வேண்டும் சார்!

   Delete
 35. புள்ளைங்களா வாரம் ஒரு தபா நம்ம லயன் வந்தாத்தான் நம்பளுக்கு வயசாவ்ரத்துக்கு மின்னால அல்லாத்தியும் படிக்க முடியும்.

  ReplyDelete
  Replies
  1. கரீக்டா சொன்னீங்க போங்க!

   ஏற்கனவே பாதி ஆயுசு பறந்து போயிடுச்சு! இருக்கற நாளுக்குள்ளே எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் படிச்சிட்டு, அவ்வளவு நாள் சேர்த்துவச்ச காமிக்ஸ்களுக்கு ஒரு வாரிசையும் நியமிச்சுட்டு ஸ்லோ-மோஷன்ல கண்ணை மூடிடணும். ;)

   Delete
  2. இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நமது நண்பர் விஜய் அவர்கள் தனது வாரிசாக

   என்னைத்தான் / என்னை மட்டும் தான் நியமித்திருக்கிறார் ;-)

   என்பதை இங்கே சொல்லிக்கொள்ள கடமைப் பட்டுள்ளேன் நண்பர்களே :))

   நன்றி நண்பர் விஜய் அவர்களே :))
   .

   Delete
  3. @ சிபி

   ஆஹா! உங்களைவிடப் பொருத்தமா வேற யாரு கிடைப்பா?
   என்ன ஒரே ஒரு கஷ்டம்னா, பொங்கல் தீபாவளின்னு உங்களை சந்திக்கிற நண்பர்களுக்கும் அன்பளிப்பா எல்லா காமிக்ஸையும் தர்மம் பண்ணிட்டு ஒரே வருஷத்துல பொட்டியைக் காலி பண்ணிடுவீங்களே!!

   (MDSனா என்னன்னு ஞாபகம் இருக்கிறதா சிபி அவர்களே? திருப்பூரில் ஒரு தியேட்டரின் பெயர்னு சொல்லிடாதீங்க; அது MPS) :)

   ஹையோ! ஹையோ!

   Delete
 36. பிளான் பண்ணி பண்ணுவதால் வரும் நேரம் மற்றும் பண சேமிப்பை உணர்ந்திருக்கிரீர்கள் என்று நினைக்கிறன். சுட்டி லக்கி வண்ணத்தில் +6 இல் வருவது மகிழ்ச்சி.


  பர்சுக்கு வெடி அவ்வப்போது வீட்டில் இருந்து வந்து கொண்டுத்தான் இருக்கிறது. காமிக்ஸ் வாங்குவதை பர்சுக்கு வெடி என்று நாங்கள் நினைக்க வில்லை. இப்போது போகும் வேகம் சரியானது தான்.

  ReplyDelete
 37. லக்கி, பெரிதானதும் சிகரெட் அல்லது வைக்கோல் நாரை வாயில் எந்நேரமும் வைத்துக்கொண்டு திரிந்ததை போல சிறு வயதில் எதை வைத்திருந்தார்? லாலி பாப்பா அல்லது குச்சி மிட்டாயா?!

  ReplyDelete
  Replies
  1. @ கார்த்திக்

   கட்டை விரலைத்தான்!

   ஆனா, யாரோட கட்டை விரலைன்னு கேட்கப்படாது! :)

   Delete
  2. டியர் கார்த்திக்!!!
   ஐ திங் ....லாலி பாப் -ன்னு நெனைக்கிறேன்.

   Delete
 38. வர போகும் இதழ்களை பற்றிய தங்களின் மிக்க சந்தோசம் டெக்ஸ் கதை மிகவும் எதிர்பார்கிறேன்...
  ஸ்ரீராம்

  ReplyDelete
 39. டெக்ஸ், டைகர், ஹாட் & கூல், மினி லக்கி மற்றும் +6 ஸ்பெஷல் போன்ற அறிவிப்புகளால் இது குட்டி பதிவு அல்ல, அதையும் தாண்டி பிரமாண்டமானது ! :)

  ReplyDelete
 40. Dear Editor , How to pay for this + 6 books .? Please clarify

  ReplyDelete
  Replies
  1. Good Question ;-)

   உங்கள் கடமை உணர்ச்சி என்னை வியக்க வைக்கிறது நண்பரே :))
   .

   Delete
 41. வாவ் மெய்யாலுமே சூப்பர் நியூஸ் சார்

  சுட்டி லக்கியை அனைவருக்குமே பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை :))
  .

  ReplyDelete
 42. நண்பர்களுக்கு

  Suriyaa Book Centre
  157/A, Alagar Kovil Road, Tallakulam Out post,
  Madurai-2

  ​மேற்கண்ட இடத்தில் நமது லயன் மற்றும் முத்து காமிக்ஸ் (புதியது மட்டும்) வி​லைக்கு கி​டைக்கும்.

  நன்றி

  ReplyDelete
 43. ஆர்வத்தை தூண்டும் குட்டி பதிவு.

  சுட்டி லக்கி நமது லயன் குடும்பத்தில் இணைவது குறித்து மகிழ்ச்சி,

  கண்டிப்பாக நாளைய சந்தாதாரர்களை ஈர்க்கும்.

  +6 கான சந்தா எவ்வளவு என்பதை கூறினால் பணம் செலுத்தி விடுவேன்.

  ஜூன் மாதம் வரவிருக்கும் காமிக் கானிர்க்காக எதாவது டைஜெஸ்ட் போடுகிறீர்களா?

  பொறுமை இல்லாமல் லார்கொ,பச்சை மாளிகை,ஜேசன் பிரைஸ் மற்றும் வெய்னே ஆகிய அனைவரையும் ஆங்கிலத்தில் தரவிறக்கி படித்து விட்டேன்.

  லார்கோ வின் அணைத்து சாகசங்களும் அருமை.ஒன்று கூட போர் அடிக்கவில்லை.

  பச்சை மாளிகை,ஜேசன் பிரைஸ் கண்டிப்பாக படிக்கும் அனைவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

  BATCHALO வும் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும் என்று நீங்கள் கூறுவதில் இருந்து தெரிகிறது.

  விரைவில் மாதம் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கண்டிப்பாக ஒன்று பற்றுவதில்லை.

  +6 இல் வரவிருக்கும் டெக்ஸ் கதை அவரின் 50ஆவது கதை என்பதால் ஒரு தலையணை சைசில் ( குட்டி தலையணை கூட போதாது) ஒரு புத்தகம் தர கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. // குட்டி தலையணை கூட போதாது// 50ஆவது கதை என்பதால் இருப்பதிலே பெரிய சிறந்த/நீண்ட கதையை தயார் படுத்த வேண்டும் ...

   Delete
  2. இதனை இரண்டு புத்தகமாக கூட எடுத்து கொள்ளுங்கள் ,+6 கோட்டாவில் இரண்டு குட்டி லக்கி தவித்து மீதம் உள்ள நான்கில் இந்த 50 வது இதழுக்கு இரண்டு தவிர்த்து மீதம் இரண்டு உள்ளது என நினைத்து கொள்வோமே !

   Delete
  3. ்//இதனை இரண்டு புத்தகமாகக்கூட எடுத்துக்கொள்ளுங்கள்//

   சும்மாயிருங்க ஸ்டீல்,

   டெக்ஸ் 50வது இதழ் - 490 பக்கங்கள் - ரூ100 விலையில் ஒருபுத்தகம் - சுட்டி லக்கிக்கு இரண்டு - டயபாலிக் ஒன்று - மறுபடியும் டெக்ஸ் ரூ.50 விலையில் இரண்டு.

   டீல் ஓகேவா? கூட்டிக் கழிச்சுப் பாருங்க +6 சரியா வரும்! சந்தாவும் ரூ500 ல் அடங்கிடும்.

   அடுத்த வருடம் +12.

   Delete
  4. எனக்கும் டபுள் & 12 ஓகே!

   Delete
  5. Vijayan8 February 2013 08:44:00 GMT+05:30

   //Erode VIJAY : ஏற்கனவே நான் சொல்லிய காரணமே தான் விஜய்...!

   நிர்ணயிக்கப்பட்ட சந்தாத் தொகைக்குள்ளே சவாரி செய்திடும் கட்டாயம் இருந்திடும் போது, ரைட்லே இண்டிகேட்டரைப் போட்டுட்டு, லெப்ட்-லே கையைக் காட்டி விட்டு நேராய்ப் போகும் சுதந்திரம் (!!) குறைந்திடுகிறது ! எனினும் இன்னமும் தீபாவளிக்கு நாட்கள் நிறைய உள்ளனவே...பார்ப்போமே !

   டெக்ஸ் வில்லரின் இதழ் # 50 -க்கு அது சாத்தியப்படுகின்றதோ இல்லையோ ; 2014-ன் முதல் இதழ் ஒரு 360 பக்க டெக்ஸ் மெகா சாகசம் ! //

   Delete
 44. //விரைவில் மாதம் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கண்டிப்பாக ஒன்று பற்றுவதில்லை.
  //

  மிக சரியாக கேட்டீர்கள் ...மாதமிருமுறை வந்தாலும் கூட போதும் ...ஒரே நாளில் இவற்றை அனுப்பினால் ஒரே வாரத்தில் முடித்து விடுவோம் ....கொரியர் கட்டணங்களை பெரிதாக நினைக்க விட்டால் இரு வாரங்களுக்கு ஒரு புத்தகம் என கோரிக்கை வைக்கலாம் !30 சதம் கொரியர் செலவு என்பதால் யாருக்கும் உபயோக மில்லாமல் ,அதாவது ஆசிரியர் அல்லது நமக்கு ....கொரியர் செலவாக போகிறது என்பதை கருதாவிட்டால் ஆசிரியரிடம் வலியுறுத்தலாம் !முன்பு ஆசிரியர் ஒன்றாக ஆறு புத்தகங்களை அனுப்புவதை கூறியது கூட இதை நினைத்தே என நினைக்கிறேன் ,,,,,,வழிதான் புலப்பட மாட்டேன் என்கிறது என்ன செய்ய !இப்போது கொரியர் கட்டணம் முப்பது ரூபாய் வருடம் 360 ரூபாய் ,மாதமிருமுறை வந்தால் 720 ரூபாய் ,நாம் உடனடி சந்தோசம் பெற நமது இழப்பு மூன்று புத்தகங்கள் மேலும் வாங்கும் சக்தி ....இது ஒன்றும் பெரிய தொகையாக தெரியவில்லை எனக்கு அதை விட பெரிது நமது உற்ச்சாகம் என நினைப்பதால் ,எனவே ஆசிரியர் முன் கேட்கலாம் விருப்பம் உள்ளவர்கள் !

  ஆசிரியருக்கு நாட்கள் பஞ்சாய் பறக்கிறது ,இந்த தொழிலில் இருப்பதாலும் ,அவ்வப்போது கரண்டியில் எடுத்து தயாரிப்பின் போதே ருசி பார்ப்பதாலும் ,நமக்கோ பசியில் துடிக்கிறோம் எப்போது வருமென்று !இதுவே ஆசிரியருக்கு நேரம் விரைந்து செல்லவும்,நமக்கு கணம் யுகமாக போவதும் !

  ReplyDelete
 45. 100% agree with கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்

  lion-muthu should become fortnightly
  comics classics should be monthly
  once in 3 months nbs style bumber issue

  will vijayan sir agree for this ?

  ReplyDelete
 46. Dear Editor sir,

  IF Possible please print Detective digest, Johny Nero digest in +6 Issues...

  ReplyDelete
 47. //Erode VIJAY25 March 2013 16:21:00 GMT+05:30
  @ கி கி

  நீங்க கணக்குல (என்னை விட) வீக் போலிருக்கே?!

  மாதா மாதம் ந்தா அது +12 ஆகிடுமோல்லியோ?

  ஷல்லூம், கொஞ்சம் சொல்லும்! :)//


  நான் சொன்னது மாதா மாதம் +6, அப்போ வருடம் 72 (என்னாஆஆஆஆ ஒரு ஆசை)

  ReplyDelete
  Replies
  1. @ கிகி

   உங்க மதிநுட்பத்தைப் பாராட்டுகிறேன்!

   ஆனாலும், 12*6=72ன்னு கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு நாள் முழுக்க தேவைப்பட்டிருக்கே?!

   ச்சொ!

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 48. உங்க கணக்கு எல்லாம் சரி தான்
  ஆனா சம்சாரம்
  ச்சே மின்சாரம் மனசு வைக்கணுமே

  ReplyDelete
 49. How do you guys type in tamil here? I don't get any language switch option??

  ReplyDelete
 50. கண்டு பிடித்து விட்டேன். வாழ்க google!!

  ReplyDelete
 51. விஜயன் சார் - நீங்கள் ஏன் app டெக்னாலஜிக்கு மாற கூடாது ? உதாரணத்துக்கு விகடன்.com அவர்கள் புத்தகங்களை iPad மற்றும் Android tablet டெக்னாலஜிக்கு மாற்றி நன்றாக வருவாய் ஈட் டுகிறார்ள். அவர்களின் printed புத்தகங்களை வழக்கம் போல் விற்கிறார்கள் . இந்த வழியில் வெளிநாட்டு வாசகர்கள் சுலபமாக படிக்க முடியும். உங்கள் வணிகமும் மேம்படும்

  ReplyDelete
  Replies
  1. கதைகளின் மேலைத்தேய உரிமையாளர்கள் அதனை விரும்பவில்லை என்று ஒரு தடவை ஆசிரியர் தனது பதிலில் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம்.

   Delete
 52. we want minnum maranam series collectors issue in colour. is it possible in 2014?

  ReplyDelete
  Replies
  1. மின்னும் மரணம் - அடுத்த வருடம் கிளாசிக் ரீ-பிரிண்ட் ஆக கலரில் வரும் நண்பரே. ஆசிரியர் அனைவரது பதிவுகளையும் படித்து கொண்டுதான் இருக்கிறார்,

   அடுத்த வருடத்திற்கான லிஸ்ட் அவரது மனதில் ஓடி கொண்டு இருக்கும், அதில் மின்னும் மரணம் முதலாவதாக இருக்கும் :)

   Delete
  2. @ பளூ

   அதோட, இதுவரைக்கும் வெளிவராத 'ARIZONA LOVE' (தமிழில் 'பாலைவன உல்லாசம்'னு பேர் வச்சா ச்சும்மா டக்கரா இருக்குமில்ல?) கிடைச்சாலும் அட்டகாசம்தான்! ;)

   Delete
 53. நண்பர் விஜய்,

  'பாலைவன உல்லாசம்' போக இன்னும் சில பாகங்கள் தமிழில் வராமலே உள்ளன. இதோ லிஸ்ட்:

  Mister Blueberry
  Shadows Over Tombstone
  Geronimo The Apache
  OK Corral
  Dust

  இதற்கும் தாங்கள் நல்ல தமிழ் பெயரை சொல்லலாமே :) எடிட்டர் சார் வேலையை கொஞ்சம் குறைப்போம்.

  ReplyDelete
  Replies
  1. ஊப்ஸ்!

   'Geronimo the Apache' - அபாச்சே அப்புச்சி

   மற்ற தலைப்புகளை தேர்வு செய்யும் பணியை நண்பர்களிடம் விட்டுவிடுகிறேன்! ;)

   Delete
  2. Mister Blueberry - தங்க மகன் டைகர்
   Shadows Over Tombstone - கல்லறை நிழல் மர்மம்
   Dust - புழிதிப் படலம்

   Delete
  3. @ Comic lover

   நம்ம லயன்/முத்து காமிக்ஸ்களின் frequencyய கரெக்டா புடிச்சுட்டீங்க போலிருக்கே?! :)

   Delete
  4. Dust - புழிதிப் படலம் ==> ப்ளூ'தீ'ப் படலம்

   நல்ல இருக்கா நண்பர்களே ?

   Delete
 54. NEXT YEAR ATTRACTION WOULD BE 'MINNUM MARANAM' REPRINT ONLY AS ALL OF US SUGGEST!

  ReplyDelete
  Replies
  1. வண்ணதில்னு சொல்லுங்க

   Delete
 55. இந்த அறிவிப்பை பார்க்கும் போது ஆசிரியர் மனதில் உள்ள ஜூனியர் lion-இன் மறுபிரவேசம் விரைவில் வரும் என தோன்றுகிறது!! அதுவும் இந்த வருடமே ..... :-) நாங்க எத்தனை புத்தகம் வந்தாலும் வாங்க எப்பவும் தயார் :-) என்னிடம் உள்ள ஒரே கேட்ட பழக்கம் நமது காமிக்ஸ்-ஐ தவறாம வாங்கி படிக்கிறதுதான் :-) அதனால பிரச்சனை இல்லை :-) :-)

  Happy long week-end Friends.

  ReplyDelete
  Replies
  1. அதாவது. ஆரம்பத்தில் '+6' என்பது விரைவில் 'for 6+ years' னு மாறிடும்னு சொல்ல வர்றீங்களா, பரணி? ;)

   Delete
  2. இன்னாப்பா இப்டி சொல்லிக்கினே அது கெட்ட பய்க்கம் இல்லப்பா குட் ஹாபிட் ஓகே?

   Delete
  3. விஜய், எல்லாம் ஆசிரியர்க்கே தெரியும் ..... +6 ஆ 6+

   சென்னைவாசி, சரி அண்ணாத்தே!

   Delete
 56. This comment has been removed by the author.

  ReplyDelete
 57. how many books have come so far in Kid lucky series ?

  ReplyDelete
  Replies
  1. checked in net so far 3 only released :))
   .

   Delete
  2. what is the 3rd book name ?.

   1)Kid Lucky
   2)Oklahoma Jim

   Delete
 58. I like லக்கி லூக்
  instead of sutti lucky

  ReplyDelete
 59. வணக்கம், நண்பா்களே!
  கொஞ்ச காலத்திற்க்கு முன்னால் நமது ஆசிரியர் காமிக்ஸ் வரலாறு பற்றியும் காமிக்ஸ் எப்படி உருவாகிறது என்றும் இரு தொடர்களை வெளியிட்டிருந்தார். அவற்றை ஒரே புத்தகங்களாக வெளியிட்டால் காமிக்ஸ் என்பது சிறு பிள்ளை சமாச்சாரம் இல்லை என்று புதிய தலைமுறை வாசகர்களுக்கு விளங்க வைக்க முடியும். யாராவது முழு கலெக்க்ஷன் வைத்து இருந்தால் ப்ளாக்கில் ஏற்றலாமே.

  ReplyDelete
 60. இன்று எனது லார்கோ action ஸ்பெஷல் மற்றும் வில்லன்னுக்கொரு வேலி புத்தகங்களை பார்த்தேன். முன்னட்டை மற்றும் பின்னட்டை முனைகள் பிரிந்து brown நிற விரிசல்கள் தெரிகின்றன. Binding-லும் இனி சற்று கவனம் செலுத்திட வேண்டும்.

  ReplyDelete
 61. டியர் எடிட்டர் விஜயன் சார்,
  மின்னும் மரணம் அனைத்து பாகங்களையும் ஒரே இதழாக வண்ணத்தில் வெளியுடுங்கள் சார். 2014 புத்தாண்டில் ருபாய் 500 விலையில் சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடும் வகையில் முயற்சி செய்யுங்கள் சார். பெரும்பாலான வாசகர்களின் விருப்பம் மின்னும் மரணம். தங்களிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்கிறோம். நன்றி
  எஸ்.ஜெயகாந்தன், புன்செய் புளியம்பட்டி

  ReplyDelete
 62. வண்ண கலவை மற்றும் அற்புதமான கதை நகர்த்தலில் குளித்து எழுந்தேன் !லார்கோவை மீண்டும் புரட்டினேன் முதலிலிருந்து ,இப்போதைய மூன்றாவது கதையை படித்த பின்னர் கதாசிரியருக்கு மீண்டும் ஒரு ராயல் சல்யூட்.....நன்றாக கவனித்தால் 13 ன் சாயலை நினைவு படுத்துகிறது கதாபாத்திரங்களும்,காட்சி அமைப்புகளும் ,கதை நகரும் விதமும் ,நாயகனின் சாகசங்களும் ....ஆனால் 13 ஐ தூக்கி சாப்பிட்டு விடுகிறார் நாயகர் ....

  ReplyDelete
  Replies
  1. சுவாரஸ்யம் சற்றும் குறையவில்லை எவ்வளவு படித்தாலும் ,....

   Delete
 63. சார் ,சீக்கிரமா வந்து ஒரு பதிவ போட்டுட்டு, புத்தகங்கள அனுப்புநீங்கன்ன அடடா ....

  ReplyDelete
  Replies
  1. // அனுப்புநீங்கன்ன //

   ஸ்டீல், கமெண்ட்டுகள் போடும் நேரம் தவிர தமிழ்ல ஆராய்ச்சிப் படிப்பு ஏதாவது படிக்கிறீங்களா?!!

   உங்க தமில் அளகோ அளகு! :)

   Delete
 64. ஹப்பி ஈஸ்டர் நண்பர்களே!

  ReplyDelete
 65. கோயமுத்தூராரே ஹாப்பி ஈஸ்டர்! உங்க கமெண்ட்ஸ் படிச்சி தமிழ் தகறாரா வருதுய்யா! வாழ்க!

  ReplyDelete
 66. ஹாப்பி ஈஸ்டர்..! நண்பர்களே ..!
  விஜயன் சார் புக் எல்லாம் ரெடியா?

  நாளை உங்களின் பதிவை எதிர்பார்த்து....

  ReplyDelete
 67. நண்பர்களே விஜயன் சார் இன் புதிய பதிவு உள்ளது. மொபைல் நண்பர்களுக்காக (நண்பர் விஜய் சார்பில்)

  ReplyDelete