Thursday, March 07, 2013

கண்ணா..லட்டு தின்ன ஆசையா.....?


நண்பர்களே,

வணக்கம். இங்கும் அங்குமாய் பிரயாணம் அவசியப்பட்டதால் இந்தப் பதிவு சற்றே தாமதமாகி விட்டது ! 

நமது ப்ளூ ஜீன்ஸ் பில்லியனரின் அதிரடிப் படலத்தின் மூன்றாவது அத்தியாயம் இப்போது தயார் ! லார்கோவின் Action ஸ்பெஷலும், நமது மார்ச் வெளியீடுமான :துரத்தும் தலைவிதி" நேற்றைய மதியமே உங்களைத் தேடி கூரியர்களில் / பதிவுத் தபால்களில் தன் பயணத்தைத் துவக்கி விட்டது ! ஒரு மொத்தமாய் அணைத்து நண்பர்களுக்கும் இதழ்களை அனுப்பியாகி விட்டதென்பதால் பரவலாக இன்று பட்டுவாடா ஆகிடுமென்பது எனது நம்பிக்கை !


லார்கோவோடு போட்டி போட்டு கதை முழுக்க தனி ஆவர்த்தனம் நடத்திடும் சைமனுக்கு promotion வழங்கிடும் ஒரு முயற்சியாக இந்த இதழின் அட்டையினில் நண்பர்கள் இருவருமே சம அளவில் காட்சி தருகின்றனர் ! பல மாதங்கள் கழிந்த பின்னர் வந்திடும் ஒரு horizontal அட்டைபடம் என்பதோடு, வழக்கமான நாடகத் திரை backdrop பாணியிலிருந்து விலகி ஒரு realistic பின்னணி இந்த ராப்பரின் பலமென்று எனக்குத் தோன்றியது ! உங்களுக்கும் அந்த feel தோன்றிடும் பட்சத்தில் அதற்கான கிரெடிட் கொஞ்சமாய் எனக்கும் ; ஏகமாய் நமது அட்டைப்படக் கம்ப்யூட்டர் டிசைனர் பொன்னனுக்கும் சாரும் !

முதலாவது 'ஆல்-கலர்' ; ஆர்ட் பேப்பர் வெளியீடு என்ற முறையில் புதியதொரு பாணிக்கு பாதையமைக்க எத்தனிக்கும் முயற்சி இது. 112 வண்ணப் பக்கங்கள் மாத்திரமே என்பதால், முந்தைய இதழ்களோடு ஒப்பீடு பொருத்தமாய் இராது ; so 'மெலிந்து விட்டது...இளைத்து விட்டது ..'   என்ற பதிவுகள் வேண்டாமே - ப்ளீஸ் ?! தொடரும் நாட்களில் இந்த பார்முலா தொடர்ந்திடும் ; பிரதானக் கதையோடு ஓட்டாக வந்திடும் சிறுகதைகளில் மட்டும் மாற்றங்களோடு ! மதியில்லா மந்திரியார் ; லக்கி லூக்கின் குட்டி சாகசங்கள் ; ஸ்டீல் பாடி ஷெர்லாகின் கதைகள் என்று பின்சீட் பயணிகள் மாத்திரம் அவ்வப்போது மாறிடுவார்கள் !

லார்கோவின் இந்த அத்தியாயத்தின் ஒரிஜினல் அட்டைப்படங்கள் வழமை போல் சுமார் ரகங்களே என்பதால் அவற்றை அதிகமாய் பயன்படுத்திட நான் முனைந்திடவில்லை. ஒரிஜினலின் முதல் பாகத்து அட்டையின் சித்திரம் - ஒரிஜினல் வண்ணக் கலவையோடு நமது காமிக்ஸ் டைம் பகுதியின் பின்னணியாகவும் ; இரண்டாம் பாக அட்டையின் சித்திரம் நமது பின்னட்டைக்கும் பயனாகி இருப்பதால், உட்பக்கங்களில் அதே படங்களை மீண்டுமொருமுறை முழுப் பக்கங்களாக்கி 2 பக்கங்களை வீணடிக்க விரும்பிடவில்லை !

Original.....

கதையைப் பற்றிப் பெரிதாய் பீடிகை தேவையில்லை என்பது அறிந்த விஷயம் தானே ? ஒரு மாமூலான கதைக்கருவினையும்  கூட வான் ஹாம்மேவால் இத்தனைப் பிரத்யேகமாக்கிட இயல்கிறது எனும் போது, கோர்வையாய் கதை சொல்லும் அவரது ஆற்றலுக்கு இன்னுமொரு salute என்பதைத் தாண்டி நாம் சொல்லிட என்னவிருக்கிறது ? அதே போல இந்த இதழின் உட்பக்கங்களுக்கான வண்ணக் கலவைகளும் அட்டகாசமேன்றே சொல்லிட வேண்டும் ! ஆம்ஸ்டர்டாமின் வீதிகளில் சைமன் சுற்றிடும் sequences களில் செய்யப்பட்டுள்ள லைட்டிங் ; ராட்சச விமானங்கள் நீல வானில் பறந்திடும் போது அந்தப் 'பளீர்' பின்னணி ; ஏகாந்தமான கடற் பரப்புகளின் backdrop என்று அசரடிக்கும் நிறைய சங்கதிகள் இந்த இதழின் வண்ணஜாலங்கள் ! ஒரிஜினலின் வண்ணங்களுக்கு நியாயம் செய்திட வேண்டுமென்ற ஆர்வத்தில் இம்முறை அச்சுக்கு நாம் பயன்படுத்தியிருப்பது அத்தனையுமே உயர்ரக அயல்நாட்டு மை வகைகள் ! So - பெல்ஜியத்தில் உருவாகி ; சீனாவின் காகிதத்தோடு, ஜப்பானிய அச்சு இயந்திரத்தில், ஜெர்மானிய மைகள் கலந்து, இதுவொரு சர்வதேசச் சந்தையின் குழந்தையாய்க் காட்சி தரும் இதழ் என்று சொல்லிடலாம் !

கதையின் பெரும்பான்மைக்கு லார்கோ கண்ணாமூச்சி ஆடி விட்டு ஆகாயத்தில் நடத்திடும் கிளைமாக்ஸ் இந்த இதழின் highlight ! Happy Reading ! லார்கோவின் சீரியசான பாணிக்கு விடை கொடுத்து விட்டு பக்கங்களைப் புரட்டும் போது நமது மீசைக்கார மந்திரியார் தலைகாட்டிடுவார் - இன்னுமொரு வண்ண காமெடி விருந்தோடு ! சமீபத்திய நமது "Kaun  Banega Translator " மொழிபெயர்ப்புப் போட்டியின் களம் இக்கதையே என்பதால் இதனை அங்குலம் அங்குலமாய் அலசிட ஆர்வலர்கள் ஆவலாய் இருப்பர் என்பது நிச்சயம். அது மட்டுமல்லாது இந்த இதழோடு குட்டியான 8 பக்க black & white  இணைப்பினில் வெற்றி பெற்ற வாசக நண்பரின் மொழிபெயர்ப்போடு இதே கதை மீண்டுமொருமுறை எட்டிப் பார்க்கின்றது !

இது வரை சஸ்பென்சாக இருந்திட்ட அந்த நண்பரது விபரங்கள் இதோ :

காமிக்ஸ் ரசிகன் (எ ) புதுவை D .செந்தில் குமார் !

வாழ்த்துக்கள் செந்தில் ! பலூன்கள் வேறு வரைந்து மொழிபெயர்ப்பினை அழகாக lettering செய்திருந்ததும் சிறப்பாக இருந்தது !

சமீபமாய் மொழிபெயர்ச்சி பற்றி ஏராளமாய் ஒப்பீடுகளும், அபிப்ராயங்களும் மிகுந்து வரும் இத்தருணத்தில், ஒரே கதைக்கு இரு வேறு எழுத்து நடைகள் எனும் போது, பிரவாகமாய் எண்ணங்கள் எழுந்திடக் காத்துள்ளன என்பதை யூகிப்பதில் சிரமமில்லை ! முக்கியமாக - "செந்தில்குமாரின் மொழிபெயர்ப்பை விட உங்களது எவ்விதத்தில் உசத்தி ?" என்ற ரீதியிலான கேள்விகள் இங்கோ ; இணையத்தின் பிற பகுதிகளிலோ நண்பர்கள் தத்தம் பாணிகளில் எழுப்பிட்டு தூள் கிளப்பிடப் போவது உறுதி ! அட்வான்சாக ' start music' சொன்ன பெருமை எனக்கே :-)

இந்தப் போட்டியின் என் பார்வையிலான அடுத்த இடத்தை இணைந்து பிடித்திடும் நண்பர்கள் :

* Podiyan , ஸ்ரீலங்கா & கார்த்திக் சோமலிங்கா பெங்களுரு *

இருவரின் வேகங்களும் அசாத்தியம் என்பதை முதலில் குறிப்பிட்டாக   வேண்டும் ! கைக்குப் பக்கங்கள் கிட்டிய மறு நாளே இருவரது மொழிபெயர்ப்பு ஸ்கிரிப்ட்களும் என்னைத் தேடி மின்னஞ்சலில் வந்திருந்தன ! அந்த வேகம் எழுத்து நடைகளிலும் தெரிவதை நீங்களும் வெகு சீக்கிரமே ரசித்திடத் தான் போகிறீர்கள் ! இதழ் இன்னமும் கைக்குக் கிடைத்திடாத நிலையில், நண்பர்களது மொழிபெயர்ப்புகளை மாத்திரம் இங்கே வெளியிடுவது, இந்தக் கதையின் பரிச்சயமற்ற இதர வாசகர்களுக்கு உதவாது என்பதால், ஸ்கிரிப்ட் இரண்டினையும் நாளை upload செய்யவிருக்கிறேன் ! (எதாகினும் ஒரு வெளித் தளத்தில் அவற்றை load செய்து விட்டு, அதற்கான லிங்க் இங்கே கொடுப்பது சாத்தியமா ? 2 முழு ஸ்க்ரிப்ட்கள் எனும் போது பக்க நீளம் இங்கே அதிகமாகிடுமே என்ற சிந்தனை !) நண்பர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் !

தட்டில் ஒரு லட்டு என்றானது இரண்டாகி ; அதுவே நான்காக உருமாற்றம் பெற்றிடும் போது அபிப்ராயங்களுக்கும் ; ஒப்பீடுகளுக்கும் மடை திறந்து விட்டது போல் அமைந்திடும் என்பதில் சந்தேகமேது ? "இது தான் பெஸ்ட் ; அதை விட இது தேவலாம்..!" ரக தீர்ப்புகள் ; தீர்மானங்கள் ஆங்காங்கே நிறைவேற்றப்படலாம் எனும் போதிலும், நான் சொல்ல எண்ணுவது ஒன்றே : இவை எனது கண்ணோட்டத்தின் தேர்வுகளே தவிர, judgement அல்லவே ! கணக்கில் 100/100 போடுவது போல், மொழிபெயர்ப்புகளுக்கு  எவ்வித அளவுகோல்களும் கிடையாதென்ற நிலையில் இந்தத் தேர்வுகள் எனது point of view மாத்திரமே ! Plain & simple !

'இணையத்தில் பந்தாட்டம் ' துவங்கிட அழகான புதிய களம் அமைத்துக் கொடுத்திருக்கிறேன் என்ற புரிதலும் ; அடுத்த 30 நாட்களுக்காவது நிறைய கீ-போர்டுகள் மும்முரமாய் நம் பெயரைச் சொல்லி குத்துக்கள் வாங்கிடக் காத்துள்ளன என்ற யூகமும் என்னுள் :-) ஓராண்டுக்கு முந்தைய 'இணைய உலகப் புது வரவான விஜயனுக்கும்  - இன்று உலவிடும் 'ஒரு நூறு உதைகள் வாங்கிய விஜயனுக்கும் ' வேறுபாடென்று நான் நினைத்திடுவது இந்த internet bashing கலாச்சாரம் தற்கால ஆட்டத்தின் ஒரு பிரிக்க இயலா அங்கமே என்ற உணர்தல் எழுந்துள்ளது மாத்திரமே ! அதனைத் தவிர்த்து எனது எண்ணங்களிலும், செயல்களிலும் காமிக்ஸ் எனும் காதலை, வாழ்கையின் சின்னதொரு சந்தோஷமாய்ப் பார்த்திடும் பாணியில் எந்தவொரு மாற்றமும் இருந்திடாது ! இங்கே சின்னதாய் ஒரு கோரிக்கையும் கூட:

சில நேரங்களில் இங்கும், மின்னஞ்சல் மூலமும் கருத்துத் தெரிவிக்கும் நண்பர்களும் , அதன் மீது நான் ஒப்புதல் தெரிவித்திட வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு இருந்திடுவதும், அதில் எனக்கு உடன்பாடின்றிப் போனாலோ ;நான் மெளனமாக இருந்திட்டாலோ வருத்தப்படுவது  சமீபமாய் கவனித்திடும் சங்கதி ! நிறைய நேரங்களில் நான் சொல்லிடக் கூடிய நியாயமான விளக்கங்கள் கூட 'சப்பைக் கட்டு ' என்ற சாப்பா முத்திரை பெற வல்லதென்பதாலேயே நான் மௌனத்தை நாடிடுகிறேன். அதே போல ஒரு ஆக்கத்தின் மீது அபிப்ராயங்களைத் தெரிவிப்பது உங்களது கருத்து சுதந்திரமென்பதை நான் மதிப்பது எத்தனை தூரம் அவசியமோ, அதே அளவிற்கு அபிப்ராயங்களில் எவற்றை உள்வாங்கிடுவது ; எவற்றை என் சிற்றறிவிற்கு எட்டிய ஆற்றலிடம் ஒப்படைப்பது என்ற எனது முடிவுகளையும் - எனக்கிருக்கும் சிந்தனை சுதந்திரமாய் கருதிடலும் நியாயமான எதிர்பார்ப்புத் தானே ? (ஷ் ஷ் ஷ்ப்பா ....எத்தனை நீள வாக்கியம் !!)

Moving on to lighter things...அடுத்த மாதத்து "கதைகள் ஸ்பெஷலுக்கு" (ஒரு ஒப்பந்தத்தின் கதை + ஒரு கழுதையின் கதை") பெயர் ஒன்று சூட்டிடுவோமே ? ஒரு போராளியும் ஜென்டில்மேனும் - ஒரு கௌண்டமணி-செந்தில் கும்பலோடு இணையும் இந்த வித்தியாசமான combo விற்கு பொருத்தமாய் பெயரேதும் எனக்குத் தோன்றிடவில்லை ! உங்களின் suggestions ப்ளீஸ் ?

அப்புறம், ஏப்ரலில் நமது காமிக்ஸ் க்ளாசிக்ஸ் முயற்சியின் முதல் படலமும் (TIGER SPECIAL)அரங்கேறுகிறது தெரிந்த சங்கதி தானே ?! ஏப்ரல் 15-ல் இரு இதழ்களும் இணைந்து வந்திடும் உங்களை சந்திக்க ! அப்புறம் இன்னொரு கோரிக்கையும் கூட ! இங்கே பதிவாகும் நம் கதைகளுக்கான பாராட்டுக்கள் ; விமர்சனங்களை இனி வரும் இதழ்களில்  "வாசகர் கடிதம்" பகுதியினில் வெளியிட எண்ணியுள்ளேன் ! 300 ; 400 என்ற பின்னூட்டக் குவியலின் மத்தியினில் உங்களின் எண்ணச் சிதறல்களைத் தேடித் பிடிப்பது சிரமமாகிறது என்பதால், சிரமம் பார்த்திடாமல்,இங்கு பதிவு செய்யும் வேளையில், comicscomments@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் ஒரு மெயில் தட்டி விட்டால் என் பணி இலகுவாகிடும் ! (கதைகள் பற்றிய எண்ணங்களை மாத்திரமே!)

இந்தப் பதிவினை நிறைவு செய்திடும் முன்னே சின்னதாய் ஒரு trivia ! லார்கோவின் முதல் இதழின் அட்டைப்படத்திற்காக உருவாக்கப்பட்டு ; வெளிச்சத்தைப் பார்க்காது போன சில முயற்சிகளில் ஒன்று இதோ !


நம் front office -ல் ஸ்டெல்லாவிற்கு உதவியாக Mrs .தேவி கடந்த இரு வாரங்களாய் பணியில் உள்ளார். உங்கள் தொலைபேசி அழைப்புகளை அவரும் கவனித்திடுவார். புதியவர் என்பதால், சற்றே பரிச்சயம் கிட்டிடும் வரை உங்களின் அனுசரணை உதவிடும் ! Thanks in advance ! See you soon guys ! Take care !

307 comments:

 1. அட்டைப்படம் சூப்பர் .

  ReplyDelete
 2. சொன்னோமில்ல... காலையில் வந்துவிட்டது பதிவு. அட்டகாசமாய்!!

  ReplyDelete
 3. அட்டை அமர்க்களம். எனினும் விமர்சனங்கள் எழாமல் இருக்கும் சாத்தியகூறுகள் இல்லை :)

  ReplyDelete
 4. 10 ரூபாய் இதழுக்கு தயார் செய்த அட்டையை பெரிய சைசுக்கு கொண்டுவந்தது போல இருக்கிறது முன்னட்டை. அந்த ஸ்டைல் இதற்கும் பொருந்துகிறது. திரு.பொன்னனுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள் சார்.

  முன்னட்டையின் பின்னணி டிசைன் எல்லாம் அபாரம்தான். வர்ணத்தை மட்டும் 'பளிச்' என்று ஆக்கியிருக்கலாமோ என்று ஓர் எண்ணம்! - பளிச் ரகம்தானே லார்கோ ஸ்டைல்?

  ReplyDelete
  Replies
  1. Podiyan : ராப்பரில் ஏக பளிச் ஆகவே இருப்பதைப் பார்ப்பீர்கள் ; இது low resolution scan..

   Delete
  2. Oh... இரண்டுவாரங்கள் ஆகும் நாங்கள் நேரில் பார்க்க! :-)

   Delete
  3. //ராப்பரில் ஏக பளிச் ஆகவே இருப்பதைப் பார்ப்பீர்கள்//

   உண்மை! உண்மை!! உண்மை !!!
   முன்னட்டை அட்டகாசம் ,பின்னட்டை அமர்க்களம் !

   Delete
  4. காமிக்ஸ் டைம் இந்த வண்ணத்தயே தொடரலாம் !உறுத்தல் இல்லாமல் அற்புதமாய் உள்ளது !

   Delete
 5. விஜெய்க்கு
  விழித்து கொண்டோரெல்லாம் பிழைத்து கொண்டார் ....தம்பி குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்
  வாங்கிட்டேன் !வாங்கிட்டேன் !
  விளம்பரம் கூட வண்ணத்தில்தான் !அமர்க்களம் சார் !

  ReplyDelete
 6. To: Editor,

  சில நேரங்களில் அண்டர் ப்ளே பண்ணும் சைமன், சில விறு விறு சமயங்களில் லார்கோவை தாண்டி அட்டகாசமாய் தெரிந்திடுவது உண்மைதான். அற்புதமான characterization: சைமன்!

  ReplyDelete
 7. இப்போது தாங்கள் அனுப்பிய கவர் கூட அற்புதமான முயற்சி சார் !இந்த முறைதான் அவர்கள் இது காமிக்ஸ் என உணர்ந்தார்கள் !இது அருமையான விளம்பரமாய் கூட அமையும் !

  ReplyDelete
 8. வாழத்துக்கள் காமிக்ஸ் ரசிகன் (எ ) புதுவை D .செந்தில் குமார் !

  ReplyDelete
 9. //கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்//

  அப்படியே சில போட்டோக்களையோ ஸ்கேன்களையோ அப்லோட் பண்ணினீர்கள் என்றால், நாங்களும் பார்த்து சந்தோஷப்படுவோமே, நண்பா!

  ReplyDelete
  Replies
  1. என்னிடம் அதற்க்கான வசதிகள் இல்லை நண்பரே ,இங்கே ஆசிரியரே அதனை வெளியிட்டால் நன்றாக இருக்குமே !

   Delete
 10. வாழ்த்துக்கள் D .செந்தில் குமார் !

  ReplyDelete
 11. சிங்கத்தின் சிறுவலையில்ல் லே அவுட் களும் சிகப்பு வண்ணத்தில் அருமை !

  ReplyDelete
 12. முன்னட்டையில் ஷார்ப்பான லுக்குடன் லார்கோ அண்ட் சைமன் கவர்கிறார்கள்! லாரன்ஸ் & டேவிட்டை நினைவுறுத்தும் போஸ்! ஆனால், ரியலிஸ்டிக் பின்னணி, முன்னணியில் நிற்கும் நபர்களுடன் சரியாக கலவாமல் தனியே தெரிவதை தவிர்த்தால் இன்னமும் ரியலிஸ்டிக்காக அமையும்! சமீப காலமாக பச்சை நிறக் கதிர்கள் பின்னட்டையில் நிரந்தர இடம் பிடித்திருப்பதை கவனிக்க முடிகிறது.

  நண்பர்களின் பாராட்டுகளை வைத்துப் பார்க்கும் போது KBT-யில் தேர்வான அந்த அண்டைப் பிரதேசத்து நண்பர் பாண்டிச்சேரி D.செந்தில்குமார் என்பது தெரிகிறது. அவருக்கும், நண்பர் பொடியன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! :)

  செந்தில்குமார் இதற்காக எடுத்த தீவிர முயற்சிகள் பற்றி சமீபத்தில் ஒரு பட்சி(!) மூலம் தெரிய வந்தது! அந்த அசுர முயற்சிகளின் பலனாக அவர் மொழிப்பெயர்ப்பு தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது! :)

  ReplyDelete
  Replies
  1. அது பச்சை கதிர் அல்ல நண்பரே !புத்தகம் வந்த பின்னர் பாருங்கள் ...

   Delete
 13. சுயவிளக்கம்:

  இங்கு 3 தினங்களாக ஏற்பட்ட களோபரங்களுக்கு நான் காரணம் ஆகிவிட்டது மிகுந்த மனஉளைச்சலை தந்தது. ஆபீஸ்க்கு ஒரு நாள் லீவ் போட்டுவிட்டு மனைவி குழந்தைகளுடன் பென்னர்கட்டா நேஷனல் பார்க் சென்று வந்தும் மனது ஆற வில்லை. வழியெங்கிலும் இதே நினைவுகள், விட்டு விட்டு.

  இன்று காலை ofc வந்தவுடன் முதல் வேலையாக இந்த பதிவிடுகிறேன்.

  நான் தான் விஜய் S என்ற பெயரில் பதிவிடும் நபர். கொஞ்சம் நகைச்சுவையாக எழுதும் Evijay, இன் inspirationஇல் நகைச்சுவையாக எழுத ஆசைப்பட்டு உருவாக்கிய id. சில பதிவுகள் (மரமண்டை அவர்களை Archie என்று சொன்னது, Msacrates அவர்களை சற்று கரமாக விமர்சித்தது, ) தவிர மற்றவை சிலரின் பின்னூடங்களுக்கு சினிமா காமெடி வசனங்களை சேர்தது மட்டுமே. அதற்காக மரமண்டை & Msacrates அவர்களிடம் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

  ஆயினும் நான் என்னை பற்றி கூறியது உண்மை. நான் விஜய், 32, M, MArried, 2kids, Civil engr, Working as AGM in a company at Bangalore since 6 months, earlier in Mysore ( i've mentioned mys in one of the post. so to clarify). I am from Palani. Also i run a small construction business in Palani through a friend.

  Ps: கோபாலு, நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. மரமண்டை என்னை கண்டுபிடித்த உங்கள் சாமர்த்தியம், gud ! இவ்வளவு தீவிரமாக எல்லாவற்றையும் follow செய்ய என்னால் இயலாது..

  ஆசிரியர் மற்றும் பதிவிடும் நண்பர்கள் அனைவர்க்கும் Sorry, யாரேனும் புண்படுத்தி இருந்தால், இங்கு நிலவும் decorum ஐ spoil செய்திருந்தால்.

  இனி தொடர்ந்து சு.மூ.கு id இல் பதிவிடலாம் என்று இருக்கிறேன். So என்னை போலி என்று யாரும் இனி கூறமாட்டீர்கள் என நினைக்கிறன்.

  ReplyDelete
  Replies
  1. சுமார் மூஞ்சி குமார் :

   மிகவும் சந்தோஷம் ! எனக்கு உங்கள் மீது வருத்தம் சிறிதும் இல்லை. சென்ற பதிவில் கூட உங்கள் பெயரை வெளிப்படையாக கூறாமல் இருந்தது ஏன் என்றால், என் மூலம் ஒருவரின் பெயருக்கு களங்கம் வந்து விடக்கூடாதே என்பதால் மட்டுமே !

   கவலையை விடுங்கள், இந்த களத்தில் கலக்குங்கள் !

   SUMMER VACATION ல் 60 நாட்கள் இந்த பக்கமே வரமாட்டேன். ஒரு முன் எச்சரிக்கை அறிவிப்பு :)

   Delete
  2. "SUMMER VACATION ல் 60 நாட்கள் இந்த பக்கமே வரமாட்டேன். ஒரு முன் எச்சரிக்கை அறிவிப்பு :)"

   ரொம்ப சந்தோஷம்... LOL... அப்போ நீங்க ஸ்கூல் ஹெட் மாஸ்டரா?


   Delete
  3. உங்கள் சந்தோஷமே என் பாக்கியம் :) மகனுக்கு விடுமுறை என்பதால் 60 நாட்களும் சுற்றுலா தான். ஊரிலேயே இருக்க மாட்டோம், வேலையும் பார்க்கமாட்டோம் ! ஆனால் நான் ஸ்கூல் ஹெட் மாஸ்டர் அல்ல ! நான் வராமல் இருந்த கடந்த 15 நாட்களும் out of station தான், தனிப்பட்ட வகையில்.

   Delete
  4. Meeraan :

   எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய உங்களை நான் அங்கே எதிர்ப்பார்க்கவில்லை. அங்கு....

   (அதனால் தான்..) //வெள்ளை தொப்பியோடும், வாயில் சிகரட்டோடும், கழுத்தில் அணிந்த சிகப்பு துணியோடும் உங்கள் கண்களில் தெரிகின்றேன் என்பதை நான் அறிவேன்// (நீங்கள் லக்கி லூக் கா) எனக்கு சிரிப்பை.....

   புத்தர் ஏன் தெரியுமா ? நான் புத்தர் என்பதால் அல்ல, அவரின் கோட்பாடுகளின் மேல் எனக்கு தீராத .....

   மனிதனாக இம்மண்ணில்பிறந்து விட்டவனுக்கு நகைச்சுவையும் அவசியமே. அதுவற்றவன்...

   //ஏனெனில் நீங்கள் பதிவிட்டு இருப்பது உங்கள் கணினியின் திரையில் இல்லை ரத்ததாலும், சதையாலும் ஆன ஒரு மனிதனின் இதயத்தில் என்பதை நீங்கள் அறிவீர்களா?...// இது உங்கள் பழைய பதிவு.....

   இதன் முழு நீள பதிவிற்கும், உங்களின் விவாதங்களுக்கும் "முயற்சிக்கு மரியாதை" பதிவுக்கு விருப்பம் இருந்தால் உங்களின் நேரப்படி வரவும். ஏனெனில் உங்களின் பதிவு தரமற்றது, தனிமனித துவேஷத்தை (ஈகோ)கொண்டுள்ளது.......

   Delete
  5. உங்களுடைய இந்த பின்னூட்டத்திற்கு நான் சிரிக்கலாமா? ஏனெனில் எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது....   சும்மா தமாசு.

   Delete
  6. உங்களுடன் உரையாட ஆவலுடன் உள்ளேன். உங்களின் அத்தனை கேள்விக்கும் பதில் சொல்வேன். இப்போ கொஞ்சம் வியாபார அலைச்சல்கள் . பின்னர் சந்திப்போம் .

   Delete
  7. ஏன் சிரிப்பு சிரிப்பாக வருகிறது என்றால்?...........

   1:- புத்தர் ஏன் தெரியுமா ? நான் புத்தர் என்பதால் அல்ல, அவரின் கோட்பாடுகளின் மேல் எனக்கு தீராத ..... கொலைவெறி

   2:-மனிதனாக இம்மண்ணில்பிறந்து விட்டவனுக்கு நகைச்சுவையும் அவசியமே. அதுவற்றவன்...பெரிய மனிதன்

   என்று நீங்கள் கூறுவதாகவே எனக்கு தோன்றுகிறது .

   இப்போ சொல்லுங்க நான் சிரிக்கவா வேண்டாமா?

   Delete
  8. மன்னிக்கும் குணமே மனிதனின் மிக சிறந்த குணம் என்பதை மிக மிக உணர்ந்தவன் நான் என்ற முறையில் என் மனதில் இருந்த வருத்தங்களை நேற்றிரவே போக்கிவிட்டேன்.

   Delete
  9. இதைப்போன்ற ஒரு கற்பனை கொண்டு உங்கள் பின்னூட்டதிற்கு சிரித்தால் அவருடைய அறிவு திறனை எவ்வாறு எடுத்துக்கொள்வது?

   Delete
  10. என்னுடைய பதிவைப் பற்றி நீங்கள் கருத்து கூறும்போது ''பொதுவாக அனைவருமே இங்கு சிரிப்பதற்கு என்ன இருக்கின்றது என்றே நினைப்பார்கள் ஆனால் எனக்கு மட்டுமே சிரிக்க தோன்றுகிறது'' என்று கூறினீர்கள் .அந்த பின்னூட்டத்தை அழித்து விட்டீர்கள். உங்களுடைய கூற்றின் படியே யாருக்கும் தோன்றாத கற்பனை உங்களுக்கு மட்டும் தோன்றி உள்ளதே அதை நான் எப்படி எடுத்து கொள்ள வேண்டும் .

   Delete
  11. கோபக்கார கோபாலு (எ) Meeraan :

   இங்கே, "கண்ணா..லட்டு தின்ன ஆசையா...." போட்டி சுவாரசியமாக நடந்துக் கொண்டிருப்பதால் உங்களின் பதில் பதிவுகளை இங்கு DELETE செய்து விட்டு சென்ற பதிவில் பதிவிடவும். இல்லை என்றால்,
   கண்ணா..லட்டு தின்ன ஆசையா.....? போட்டிக்கு வருபவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள் !

   Delete
  12. மரமண்டை / மீரான் இருவர் மேலும் எந்த தவறும் இல்லை என்பது எட்டி நின்று உங்கள் பின்னூட்டங்களை படிபவற்கு தெரியும். இது வெறும் வாதங்கள் தான்.. இந்த misunderstanding ஐ துவக்கி வைத்ததற்காக ஏற்கனவே மன்னிப்பு கோரிவிட்டேன்.
   இதை இத்துடன் நிறுத்திக்கொண்டால் நல்லது.. காமிக்ஸ் பற்றி மட்டும் பேசலாமே இங்கே..

   Delete
  13. மம, நீங்கள் எந்த ஆபிஸ் ல வேல பாக்கறிங்க.. 60days லீவ் குடுக்கும் அந்த கம்பெனி எந்த ஊர்ல இருக்கு சொல்லுங்க நானும் வேலைக்கு apply பண்ணறேன்.. ஹெட் மாஸ்டர் இல்லேன ஒருவேள தமிழ் வாத்தியாரோ?

   Delete
 14. Dear Sir,

  முன் அட்டைப்படம் பழைய முத்து காமிக்ஸ் பாணியை நினைவு படுத்துகிறது.

  //முன்னட்டையில் ஷார்ப்பான லுக்குடன் லார்கோ அண்ட் சைமன் கவர்கிறார்கள்! லாரன்ஸ் & டேவிட்டை நினைவுறுத்தும் போஸ்! ஆனால், ரியலிஸ்டிக் பின்னணி, முன்னணியில் நிற்கும் நபர்களுடன் சரியாக கலவாமல் தனியே தெரிவதை தவிர்த்தால் இன்னமும் ரியலிஸ்டிக்காக அமையும்!// Same Feeling :-)

  //காமிக்ஸ் ரசிகன் (எ ) புதுவை D .செந்தில் குமார் !, Podiyan , ஸ்ரீலங்கா & கார்த்திக் சோமலிங்கா பெங்களுரு// - நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்கள்.

  ReplyDelete
 15. எனது ஸ்க்ரிப்டை தேர்வு செய்ததிற்கு நன்றிகள் விஜயன் சார்!

  //எதாகினும் ஒரு வெளித் தளத்தில் அவற்றை load செய்து விட்டு, அதற்கான லிங்க் இங்கே கொடுப்பது சாத்தியமா?//
  உங்கள் ப்ளாகில் ஒவ்வொரு ஸ்க்ரிப்டுக்கும் ஒரு தனி Page (Post அல்ல Page!) உருவாக்கி அவற்றின் Link-கை இங்கே இணைத்திடலாம்.
  Blogger -> Select your Blog -> Left Pane -> Pages -> New Page -> Blank Page -> Edit & Publish

  அவசியப்பட்டால், நான் அனுப்பிய PDF ஃபைலை வேறு தளத்தில் அப்லோட் செய்து விட்டு இணைப்பை தருகிறேன்.

  ReplyDelete
 16. ஆசிரியருக்கு,
  இங்கே கோப்புகளை பதிவேற்றம் பண்ணிவிட்டு உரலை பகிரலாமே?
  http://www.2shared.com/
  http://www.speedyshare.com/

  ReplyDelete
 17. First things first!
  KBT-ல் வெற்றிபெற்ற நண்பர்கள் புதுவை செந்தில், பொடியன், கார்த்திக் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)

  எடிட்டர் சார்,
  செவ்வாயிலிருந்து இன்று வரை, every half-an-hour உங்களது புதிய பதிவொன்று வருமென refresh செய்து கொண்டே இருந்தேன்! ஒரு வழியாக இன்று அதிகாலை வெளியிட்டு விட்டீர்கள்!

  ஒரு சின்ன விண்ணப்பம்: இனி ஒவ்வொரு வெளியீடுக்கு முன்பு, காமிக்ஸ்-டைம் (அ) ஹாட் லைன், சிங்கத்தில் சிறுவயதில், முன்-பின் அட்டைகள், filler pages (other than mini stories, coming soon..) போன்றவைகளை நீங்களே ஸ்கேன் செய்து இங்கே பதிவேற்றினால் நன்றாக இருக்கும். எப்படியும் புத்தகம் அனுப்பிய பிறகு எங்களை வந்தடைய 2-3 நாட்கள் ஆகும். அதற்கு முன்னதாக இதனை வெளியிட்டால் எங்களுக்கும் ஒரு official trailer பார்த்தது போல இருக்கும் :-)

  ஒரு சின்ன கேள்வி: Green Manor நகல்களை அனுப்பி விட்டீர்களா சார்?

  ReplyDelete
  Replies
  1. Prasanna.S - இன்னமும் இல்லை ; இது வரை 26 பேர் மாத்திரமே விண்ணப்பித்துள்ளனர் (translation contest-season 2) ! எண்ணிக்கை சென்ற முறையின் அளவைத் தாண்டிடக் காத்துள்ளேன்.

   Delete
  2. கூடிய சீக்கிரம் எண்ணிக்கை தாண்டிட வேண்டும் சார்!

   இந்த முறை என் பெயரும் வெற்றியாளர்களின் list-ல் வரவேண்டும் என்ற ஆர்வத்தில், சினிபுக்கின் ஆங்கில பதிப்பை கணிணியில் கடந்த ஒரு வாரமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன் :-)

   Delete
  3. @ prasanna

   Exam-க்கு கூட இப்படியெல்லாம் படிச்சிருக்கமாட்டீங்க போலிருக்கே?!! :)

   Anyway, All the best! :)

   Delete
  4. Thank you! சரித்திரத்தில் நம்ம பெயர் வரவேண்டாமா? வரலாறு மிக முக்கியம் ஈரோடாரே! :-)

   Delete
 18. மொழி பெயர்ப்பு போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள், லார்கோ அட்டை படம் அருமை..

  ReplyDelete
 19. முதலில் வாழ்த்துக்கள் காமிக்ஸ் ரசிகன் (எ ) புதுவை D .செந்தில் குமார், பொடியன் மற்றும் கார்த்திக் ...

  உங்களுடைய மொழிபெயர்ப்பை படிக்க ஆவலுடன் இருக்கிறேன். நண்பர் கார்த்திக் அவர்களுது நகைச்சுவை உணர்வு எனக்கு தெரியும், நிச்சயம் கலக்கி இருப்பார். பொடியன் மற்றும் காமிக்ஸ் ரசிகன் இவர்களது மொழிபெயர்ப்பு எப்படி என அறிந்து கொள்ளும் ஆவல், நிச்சயம் எனது எதிர்பார்ப்பை அதிகமாக்குகிறது.

  புத்தகம் இன்னும் கைக்கு கிடைக்கவில்லை. இன்றைய இரவு லார்கோ & சைமன் உடன் ... :)

  புத்தகம் கிடைக்க பெற்ற நண்பர்கள் உங்களது விமர்சனங்களை ஆரம்பிக்காலாமே ? இந்நேரம் சௌந்தர் இருந்திருந்தா ஒரு பதிவு போட்டு இருப்பார், சௌந்தர் சீக்கிரம் வாங்க :)

  லேட்டஸ்ட் அப்டேட்: நண்பர் ஈரோடு விஜய் இன்னும் திறக்கபடாத குரியர் ஆபீஸ் வாசலில் நின்று கொண்டிருப்பாதாக ஒரு பட்சி கூறுகிறது :)  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் செந்தில்,பொடியன்,மற்றும் கார்த்திக். பொடியனையும் கார்த்திக்கையும் எதிர் பார்த்தேன்.


  dear editor sir,

  இந்த தடவை போல புதன் கிழமை அனுப்புவது சாத்தியமா என்பதை சொல்லுங்கள் . ஏனென்றால் அனுப்பிய நாளுக்கு, அடுத்த நாளுக்கு அடுத்த நாள் தான் கிடைக்கிறது. வியாழன் அனுப்பினால் சனி வந்து சேருகிறது. என்னைப் போல ஆபீஸ் முகவரியை கொடுத்து வைத்து இருக்கும் நண்பர்கள் அவஸ்தையுடன் திங்கள் வரை காத்து இருக்க வேண்டியுள்ளது.

  ReplyDelete
 21. Sir please take nessarry steps for this problem

  ReplyDelete
 22. ebay list ல் புத்தகம் வரவில்லையே sir !

  ReplyDelete
 23. இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டு , நேற்று தான் இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட, ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட , மூன்றாம் பாக கதையினை, ஆர்வ மிகுதியில் படித்து விட்டேன்...

  ஆகையால் புத்தகம் கைக்கு வரும் முன்னரே , ஒரு விமர்சனம்.... அது வழமை போல் , அட்டகாசம் என்பது மட்டுமே. :) சைமன் இந்த கதையினில் ஆடியிருக்கும் ஆட்டம் , அதகளம்..

  போதை பொருளை மையமாக வைத்து பின்னப்பட்ட கதையினில் , எனது ஒரே எதிர்பார்ப்பு , எப்படி அந்த பெரிய பெரிய விளக்க வசனங்களை மொழிபெயர்க்க பட்டுள்ளது என்பதே... :)

  இந்த இதழ் கைக்கு கிடைக்கும் முன்னரே நான் சொல்லிட நினைப்பது , இது ஒரு All Time Hit , சாதனையை படைத்திடும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சிம்பா அவர்களே! என் வசம் இருக்கிறது ஆனால் படிக்க நேரமில்லை! ஆசிரியரின் மொழி பெயர்ப்புக்கு நான் அடிமை அவ்வளவே! வாழ்த்துக்கள்! கண்டிப்பாக கலக்கலாக அமையும் என்பது உறுதி!

   Delete
  2. நண்பர் ஜான் சைமன் ,கதையில் ஒபியம் மூலம் கோகைன் மற்றும் மார்பன் தயாரிக்க சொல்லப்படும் செயல்முறை விளக்கங்கள் மிகவும் நீள நீளமாக உள்ளது.. அனால் அனைத்தும் அருமை... அதனை ஆசிரியர் எவ்வாறு கையாண்டு உள்ளார் என்பதனை பார்க்க ஆவல்.... :)

   எனக்கும் பொதுவாக கணினி மூலம் படிப்பது பிடிக்காத ஒன்று தான்... ஆனால் காமிக்ஸ் வறட்சி காரணமாக இந்த முடிவு :)

   Delete
 24. சிங்க நடை போட்டு சிகரம் ஏற மீண்டும் வரார் லார்கோ! வாங்க நண்பர்களே கொண்டாடலாம்! வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களே!

  ReplyDelete
 25. //அடுத்த மாதத்து "கதைகள் ஸ்பெஷலுக்கு" (ஒரு ஒப்பந்தத்தின் கதை + ஒரு கழுதையின் கதை") பெயர் ஒன்று சூட்டிடுவோமே //

  1. ‘அதிரடி தோரணம்’ ஸ்பெஷல்
  2. 'சிரிக்கும் தோட்டா' ஸ்பெஷல்
  3. 'ஒப்பந்தம் ஒரு கோடி' ஸ்பெஷல்
  4. ‘அதிரடி சி(ரி)றப்பிதழ்’
  5. சிரிப்பு’வெடி’ ஸ்பெஷல்

  ReplyDelete
 26. காமிக்ஸ் ரசிகன் (எ ) புதுவை D .செந்தில் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  மற்றும்

  Podiyan , ஸ்ரீலங்கா & கார்த்திக் சோமலிங்கா பெங்களுரு ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  நண்பர் செந்தில் அவர்களின் ஆர்வத்தை, கலீலும், நானும் நேரில் கவனித்தோம் என்ற வகையில் அவர் தேர்வானது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. p.Karthikeyan: இந்த சந்தோஷச்செய்தியை காலையிலேயே ஃபோன் செய்து தெரிவித்தமைக்கு நன்றிகள் சார்...

   நான் மொழி பெயர்ப்பு செய்த கதைக்கு "ஒரு மாய-ஜால மோசடி" என்ற தலைப்பு சூட்டிய பெருமை அருமை நண்பர் கலீல் அவர்களையே சாரும்... நன்றி கலீல் சார்...

   Delete
  2. Vetri Petradharku enadhu manamaarndha vaazhthukkal Mr Sendhil.

   Delete
 27. தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே.

  கார்த்திக் சோமலிங்கா வுக்கும் வாழ்த்துக்கள்.

  வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 28. இந்த முதல் கதை அட்டைபடம் அருமை ....ஆனால் வண்ணங்கள் எடுப்பாய் இல்லை !

  ReplyDelete
 29. @ காமிக்ஸ் ரசிகன், பொடியன், கார்த்திக்

  வாழ்த்துக்கள் நண்பர்களே! மிகக் குறுகிய கால அளவிலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செயல்பட்டு மொழிபெயர்ப்புப் பணிகளில் கலக்கியுள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  தொடர்ந்து கலக்குங்கள்!

  தேர்வாகாத மற்றவர்களுக்கு:
  தொடர்ந்து முயற்சிசெய்யுங்கள். அடுத்த வெற்றியாளர் நீங்களாகவும் இருக்கலாம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்து சொல்பவருக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்த வெற்றியாளர் நீங்களாகவும் இருக்கலாம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! :)

   Delete
  2. Vijay.. You have got the book???

   Delete
  3. @ ப்ளூ

   நன்றி ப்ளூ! முயற்சிக்கிறேன்! நீங்களும்தானே?

   @ tex kit

   ம்ஹூம்! இரவில் வீடு திரும்பிடும்போது,எனக்காக லார்கோ காத்திருப்பார்னு நம்பறேன்!

   Delete
  4. கண்டியப்பாக நண்பரே !!! நாமும் முயற்சிப்போம் :)

   Delete
 30. Today we will get the book... good news...

  ReplyDelete
 31. To: Editor,
  ஒரிஜினல் அட்டைகளையே பிரசுரிக்க வெளியீட்டாளர்கள் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இம்முறை அட்டையை மாற்றியதற்கு கண்டனங்கள் வராதா?

  என் பெயர் லார்கோ வுக்கு ப்ரிண்ட் செய்யப்பட்ட அட்டைப்படம் நன்றாகவே இருந்தது. ஆயினும் இந்த அட்டையை போட்டிருந்தால் இன்னும் கண்களை ஈர்ப்பதாக இருந்திருக்கும்.

  என் பெயர் லார்கோ - மீள் பதிப்பு செய்யப்படுமாயின் (புத்தகம் ஸ்டாக் இல்லை தானே?) இந்த அட்டையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Podiyan : இதுவும் ஒரிஜினலின் நகலே...!

   Delete
 32. "Hot & Sweet Special"
  "Special April Bash"
  "The Special Buffet"

  ReplyDelete
  Replies
  1. "Bang, bang, brayyy..." or "Bang, Bang, hee-hawwww..."

   Delete
 33. வெற்றிபெற்ற நண்பர் செந்தில்குமாருக்கு வாழ்த்துக்கள். runner-up நண்பர்கள் பொடியன் & கார்த்திக் க்கும் great going! KEEP IT UP FRIENDS.KBT -2 மிகவும் சுவராஸ்யமாக இருக்கப்போவது உறுதி.

  //இம்முறை அச்சுக்கு நாம் பயன்படுத்தியிருப்பது அத்தனையுமே உயர்ரக அயல்நாட்டு மை வகைகள் ! So - பெல்ஜியத்தில் உருவாகி ; சீனாவின் காகிதத்தோடு, ஜப்பானிய அச்சு இயந்திரத்தில், ஜெர்மானிய மைகள் கலந்து, இதுவொரு சர்வதேசச் சந்தையின் குழந்தையாய்க் காட்சி தரும் இதழ் என்று சொல்லிடலாம் //

  நமது புத்தக தர மேம்பாட்டுக்கு உங்களது அயராத தொடர் பங்களிப்பு உள்ளதை உவகைகொள்ள செய்கிறது.2011 ஆரம்பத்தில் புத்தகம் வருவதையே 'ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை' ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் கொக்கு போல காத்திருந்து வந்தவற்றை ஊர் ஊராக தேடி சுற்றிதிரிந்து கைபற்றி சுவைத்த காலத்தை யாரும் மறந்திருக்க முடியாது.வெறும் news print தாளில் புத்தகம் வந்த காலம் மலையேறி [போய் இன்று சீனதேசத்து உயர்ரக காகிதத்தில் ஜெர்மானிய மையில் ஜப்பானிய இயந்திரத்தில் பெல்ஜீய தேசத்து சித்திரக்கதை திகட்டாத தேன்தமிழில் மொழிபெயர்த்து, ஒரு சிறு வாசகர் கூட்டத்துக்கு அச்சாகி வெளியிட்ட மறுநாள் நமது மேசைதேடி வரும் இந்த இரண்டு வருடத்து முன்னேற்றம் அசாத்தியமானது. இதன் பின்னே உங்களை செலுத்தும் விசையாக இருக்கக்கூடியது தணியாத தணலாய் கொழுந்துவிட்டு எரியும் உங்கள் சித்திரக்கதை மோகம்/காதல் அன்றி வேறு எதுவாக இருக்க முடியும்??

  நாம் அடைந்த வெற்றியை எண்ணி பேருமிதப்படவேண்டிய இந்த தருணத்தில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த சிறு தடுமாற்றம் தேவையற்றது." THE ALL COLOUR SPECIAL LARGO" வின் விமர்சனங்களை விட உங்கள் ஆர்வமும் படபடப்பும் KBT -1 னின் மேல் அதிகம் உள்ளது ஏனோ?? RELAX SIR ! CONSTRUCTIVE CRITICS ALWAYS HELPS US TO IMPROVE UPON THINGS. REST WE CAN JUST IGNORE! : )


  //உங்களுக்கும் அந்த feel தோன்றிடும் பட்சத்தில் அதற்கான கிரெடிட் கொஞ்சமாய் எனக்கும் ; ஏகமாய் நமது அட்டைப்படக் கம்ப்யூட்டர் டிசைனர் பொன்னனுக்கும் சாரும் !//

  @பொன்னன்
  அட்டைப்படம் ஒரு CRISPY COOKIE ! சமீபத்திய சில அட்டைப்படங்களை காட்டிலும் better. BUT STILL HOPE FOR LOT OF IMPROVEMENTS. BACKGROUND LIGHTING ம FORE GROUND LIGHTING கும் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை. லார்கோ முதல் புத்தக வெளியிடப்படாத அட்டையும் உங்கள் கைவண்ணம் போல் உள்ளது. WOW ! அருமை! உங்கள் கைவண்ணத்தை வரும் இதழ்களில் பெரிதும் ஏதிர்பார்கிறேன்! இந்த LAND SCAPE ஏனோ இரட்டை வேடையர்களை நினைவுபடுத்துகிறது.

  // நிறைய நேரங்களில் நான் சொல்லிடக் கூடிய நியாயமான விளக்கங்கள் கூட 'சப்பைக் கட்டு ' என்ற சாப்பா முத்திரை பெற வல்லதென்பதாலேயே நான் மௌனத்தை நாடிடுகிறேன். அதே போல ஒரு ஆக்கத்தின் மீது அபிப்ராயங்களைத் தெரிவிப்பது உங்களது கருத்து சுதந்திரமென்பதை நான் மதிப்பது எத்தனை தூரம் அவசியமோ, அதே அளவிற்கு அபிப்ராயங்களில் எவற்றை உள்வாங்கிடுவது ; எவற்றை என் சிற்றறிவிற்கு எட்டிய ஆற்றலிடம் ஒப்படைப்பது என்ற எனது முடிவுகளையும் - எனக்கிருக்கும் சிந்தனை சுதந்திரமாய் கருதிடலும் நியாயமான எதிர்பார்ப்புத் தானே ?//

  இங்கே பதிவிடும் நண்பர்களின் முக்கிய கவனத்துக்கு! நமது விமர்சனங்களை இங்கே பின்னூட்டமிடும்போது அவை ABUSIVE வாக இல்லாமல் CONSTRUCTIVE CRITICISM எனும் தொனியில் பதிவிடுவது மிக அவசியம்.

  பயணத்தில் உள்ள லார்கோ என்னை அடைந்தவுடன் புத்தகத்தை பற்றி அலசுவோம்!

  BTW நண்பர்களே..."THE GREEN MANOR CLUB " இதை எப்படி தூய தமிழில் மொழிபெயர்ப்பது??? கடந்த சில நாட்களாக என்னை தூங்க விடாதா கேள்வி இது!! : (

  ReplyDelete
  Replies
  1. சிம்பா7 March 2013 11:32:00 GMT+05:30

   @விஸ்கி-சுஸ்கி : பசுமை பண்ணை சங்கம் :) :)

   @ சிம்பா
   பசுமை பண்ணை சங்கம்,கானக கோடை கழகம்,தொட்ட மாளிகை கூட்டம், பச்சை மாளிகை குழு என பலவற்றை
   நானும் யோசித்தேன்.ஆனால் கதை நடைபெறும் களத்துக்கும் "பசுமை பண்ணைக்கும்" சம்மதமே இல்லை தோழரே!

   Delete
  2. நண்பரே கதை களம் என்ற ஒன்றை விட்டு விட்டு பார்த்தால், தங்களின் தலைப்பு தேர்வுகள் அருமை... இம்முறை போட்டியில் பங்கெடுக்காமல் , நமது நண்பர்களின் முயற்சியினை படித்து , பரவசப்படும் எண்ணத்தில் உள்ளேன்...

   முதல் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கும், கஜினி முகமது போல் அடுத்த போட்டிக்கு படையெடுத்து தயாராகும் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..

   Delete
  3. @ விஸ்கி-சுஸ்கி

   உங்களுடைய பின்னூட்டங்ககளை 'பின்னி எடுக்கும் ஊட்டமான வரிகள்' என்று சொல்வது சரியாக இருக்கும்! சூப்பர்!

   Delete
  4. ப்ளூபெர்ரி ஐ டைகர் என்னும் போது கிரீன் மனோர் ஐ "மென்கொலைக்கழகம்" என சொல்லலாமா? கதையை ஒத்து வருவதால்..

   Delete
  5. "THE GREEN MANOR" ரின் நகல் பக்கங்களை போடியாளர்களுக்கு விநியோகிக்கும் முன் ""THE GREEN MANOR" என்ற தலைப்புக்கு பொருத்தமான பொதுவான பெயரை ஆசிரியர் முடிவு செய்தால் போடியாளர்களின் படைப்பில் ஒரு குழப்பமில்லா ஒற்றுமை நிலவும்.

   @ஈரோடு விஜய்
   பாராட்டுக்களுக்கு நன்றி விஜய் !
   நாங்கள் எடுப்பது வெறும் பின்னல் மட்டுமே...தாங்கள் பெடலையும் அல்லவா சேர்த்து எடுக்கின்றீர்கள் ??? : ) : ) உங்கள் பின்னூட்டங்களால் INSPIRE ஆனா நண்பர் சு.மூ.கு தமது id யையே உங்கள் பெயரை ஒற்றி உருவாக்கியதாக சொன்னது எங்கும் நடக்காத அதிசயம். பதிவர்களை பின்னூட்டமிடுபவர்கள் பின்பற்றினால அது அதிசயம் இல்லை. பின்னூடமிடுபவரயே ஒருவர் follow செய்கிறார் என்றால் உங்களது எழுத்து நடைக்கு எவ்வளவு சக்தியுள்ளது என்பதை உணருங்கள்.Great going Vijay !

   @சுமார் மூஞ்சி குமார்
   அருமையான தலைப்பு! ஆனால் இதுவும் கதைக்கு சூட் ஆகாது. ஏன்னென்றால் கதைக்கு ஒரு introduction உள்ளது.

   " ஒரு கோப்பை தேநீரா ? ஒரு கரண்டி பாலா ? ஒரு துளி விஷமா ? நமது முதல் பார்வையில் "தி கிரீன் மேனர் கிளப்" புக்கும் மற்ற லண்டன் கிளப்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் தெரியாது..." என்று தொடங்கும்.

   இது எப்படி இருக்க "மென்கொலைக்கழகம்" என்ற OPEN NAME எப்படி சூட் ஆகும் ???

   Delete
  6. கண்டிப்பாக, E.Vijay & Saint sathan போன்றோர் பின்னூடங்களுக்கு நான் விசிறி, AC, cooler, இன்வேர்ட்டர் எல்லாம்...நானும் விஜய் என்பதால் ஒரு விளம்பரத்திற்காக அந்த பெயரை தெரிவு செய்தேன்.. மற்றபடி E.vijay கும் எனது id க்கும் எந்த சம்பந்தமும் இல்லை,ஏனென்றால் அவர் முகம் எப்படி இருக்கும் என்று நான் பார்த்தது இல்லை... LOL..
   கதைப்படி அந்த கொலைகார கிளப்ஐ சேர்த்தவர்கள் கிரீன் மனோர் இல் கூடுபவர்கள் அதலால் literal ஆக "பச்சைமளிகை கொலைஞர்கள் கழகம்" என்று யோசித்தேன்.. அதைவிட "மென்கொலைக்கழகம்" சொல்ப attractive ஆக பட்டது..

   Delete
  7. * கொஞ்சம் என்பது "சொல்ப" என்று கன்னடத்தில் டைப் செய்து விட்டேன்..

   Delete
  8. @விஸ்கி-சுஸ்கி:
   இக்கதைத் தொடரை படித்ததில்லை என்பதால் அப்பெயர்க்கான காரணம் சரியாகத் தெரியவில்லை! சினிபுக் தளத்தில் உள்ள அறிமுகத்தைப் பார்த்ததில் மேல்தட்டு விடுதி (சங்கம்?) ஒன்றில் நடக்கும் குற்றங்களைப் பற்றிய துப்பறியும் கதைத் தொடர் எனத் தெரிகிறது!

   சரி சீரியஸான முதல் பத்தியில் இருந்து சற்றே விலகி, ஜாலியாக இப்படி பெயர்கள் வைத்தால் என்ன?

   * "அரிமா சங்கம்" அல்லது "Lion's Club". ;) ஆனால் நம்மூர் அரிமா உறுப்பினர்கள் சண்டைக்கு வந்து விடும் வாய்ப்புக்கள் பலமாக இருப்பதால் அந்த விபரீத ஐடியாவை விட்டு விடுவோம்!

   * பழைய முத்து காமிக்ஸ் ஸ்டைலில் பெயர் வைப்பதானால், 'பச்சை விடுதி பயங்கரம்' என்று வைக்கலாம். லயன் ஸ்டைலில் வைத்தால் 'மரணத்தின் நிறம் பச்சை' என்று வைக்கலாம்.

   * தூய தமிழில் பெயர் வைப்பதானால் 'மனோகரன் மனமகிழ் மன்றம்' என்று நாமம் சூட்டலாம்.

   * அந்த விடுதியில் கொலைகள் நடைபெறுவதாக கதையமைப்பு இருந்தால் 'பச்சைக்கொலை விடுதி" என்று வைக்கலாம்.

   இதே ரீதியில் நான் பெயர்கள் வைத்துக் கொண்டிருந்தால் பெங்களூரிலும் ஒரு கொலை விழக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாகிவிடும் என்பதால், "க்ரீன் மேனர்" என்றே மூலத்துக்கு முதல் மரியாதை செலுத்திடும் விதத்தில் பெயர் சூட்டலாம் என்று கேட்டுக் கொண்டு மௌஸை அமுக்கி வடை பெறுகிறேன். நன்றி, வணக்கம்! :)

   Delete
  9. //பச்சை விடுதி பயங்கரம் அருமை !//
   நண்பரே அது சும்மா ஜாலிக்காக! இப்படி நேரடியாக மொழிபெயர்த்தால் அது அந்த கதைத் தொடருக்கு பொருந்துமா என்பது சந்தேகமே! :)

   Delete
  10. "மரகதமாளிகை மனமகிழ் மன்றம்"
   "பச்சைமாளிகை மனமகிழ் மன்றம்"
   "மரகதவிலாஸ் மனமகிழ் மன்றம்"

   Delete
  11. @ Karthik Somalinga, hv u received? St or SP?

   Delete
 34. //நம் front office -ல் ஸ்டெல்லாவிற்கு உதவியாக Mrs .தேவி கடந்த இரு வாரங்களாய் பணியில் உள்ளார். உங்கள் தொலைபேசி அழைப்புகளை அவரும் கவனித்திடுவார்.//

  சில தினங்களுக்கு முன் அலுவலகத்துக்கு அழைத்தபோது புதிய குரல் கேட்டது. விரைவில் இன்னுமொரு காமிக்ஸ் வெளிவரப்போவதற்கான அறிகுறிகள் அலுவலகத்தில் தென்பட ஆரம்பித்துவிட்டன போலும்.... அணியை பலப்படுத்திவருகிறீர்களே! முன்கூட்டிய வாழ்த்துக்கள் சார்...

  ReplyDelete
  Replies
  1. Podiyan : :-) பணிகளின் சுமை ஒற்றை ஆளாய் மல்லுக்கட்டும் ஸ்டெல்லாவை பயம் காட்டிடக் கூடாதே என்ற முன்ஜாக்கிரதை தான் !

   Delete
 35. //
  அடுத்த மாதத்து "கதைகள் ஸ்பெஷலுக்கு" (ஒரு ஒப்பந்தத்தின் கதை + ஒரு கழுதையின் கதை") பெயர் ஒன்று சூட்டிடுவோமே ? //


  1. ‘அதிரடி தோரணம்’ ஸ்பெஷல்
  2. 'சிரிக்கும் தோட்டா' ஸ்பெஷல்
  3. 'ஒப்பந்தம் ஒரு கோடி' ஸ்பெஷல்
  4. ‘அதிரடி சி(ரி)றப்பிதழ்’
  5. சிரிப்பு’வெடி’ ஸ்பெஷல்

  ReplyDelete
 36. Dear comic lovers,
  Here we expect constructive and informative comments only. Not anymore controversies arising comments like which is in Muyarchiku mariyathai post.

  ReplyDelete
 37. எனது மொழிபெயர்ப்பினை தேர்வு செய்த விஜயன் சாருக்கும், வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்!

  Podiyan மற்றும் கார்த்திக் - வாழ்த்துக்கள் நண்பர்களே!

  இன்று என் சந்தோஷத்திற்கு அளவில்லை. நன்றி விஜயன் சார்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் நண்பரே !!! உள்களது மொழிபெயர்ப்பை படிக்க ஆவலுடன் உள்ளேன் ...

   Delete
  2. நன்றி நண்பரே.. உங்களைப்போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்...

   Delete
  3. வாழ்த்துகள் புதுவை செந்தில்

   Delete
 38. Received he book....:) :) :) ..Thanks to the team...

  ReplyDelete
 39. தலைப்பு:

  ஒரு ஒப்பந்தத்தின் கதை + ஒரு கழுதையின் கதை =

  'ஒரு ஒப்பந்தக் கழுதை'

  எப்பூடி...? :)

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY : அல்லது - "ஒரு கழுதையின் ஒப்பந்தம் " ? :-)

   Delete
  2. ஆங்! எடிட்டரே சொல்லிட்டார்; என்னோட தலைப்பு தேர்வாகிடுச்சு; எல்லோரும் வீட்டுக்குப் போலாம்! :)

   Delete
  3. தொடர்புடைய தலைப்புகள்

   Delete
  4. Erode Vijay : சூப்பர் பின்னிட்டிங்க :-))))))

   Delete
  5. //ஆங்! எடிட்டரே சொல்லிட்டார்; என்னோட தலைப்பு தேர்வாகிடுச்சு; எல்லோரும் வீட்டுக்குப் போலாம்! :)//

   அருமை அருமை... LOL

   Delete
 40. ஒரிஜினல் அட்டை ப்ளூ பின்னணியில் நன்றாக தானே உள்ளது.....
  ஈ-பே வில் எப்போது?

  ReplyDelete
 41. 1. ஒரு ஜென்டில்மேன் ஒரு கொமாளிமேன் ஸ்பெஷல்

  2. ஹாட் and கூல் ஸ்பெஷல்
  (HOT and COOL ஸ்பெஷல்)

  3. ஆக்க்ஷன் - காமெடி ஸ்பெஷல்

  ReplyDelete
 42. P.Karthikeyan : (HOT and COOL ஸ்பெஷல்) sounds good !

  ReplyDelete
  Replies
  1. கழுதை போச்சே! :(

   வாழ்த்துக்கள் கார்த்திகேயன்! :)

   "HOT and COOL Special" - சூப்பர்!

   Delete
  2. மயிரிழையில் கோட்டை விட்டுவிட்டேனே... Hot & Cold என்று டைப் செய்து அழித்துவிட்டு "Hot & Sweet Special" என டைப் செய்த என் நேரத்தை என்னவென்பது... PK: congrats..

   Bang.. bang.. hee-hawww... எனக்கு மிகவும் பொருத்தமாக தோன்றியது, ஆனாலும் not suitable for தமிழ்..

   Delete
  3. (HOT and COOL ஸ்பெஷல்) -- Apt title, good choice P.Karthikeyan

   Delete
 43. டியர் எடிட்டர்ஜீ !!!
  மொழிபெயர்ப்பு போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் திருப்தி படுத்த மீதியுள்ள 11 ஸ்க்ரிப்ட்டுகளையும் வலையேற்றலாமே...?அது ஒன்றும் கடினமான காரியம் அல்லவே !!!எது சிறந்த மொழிபெயர்ப்பு என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்த வலைதள வாசகர்களிடம் விட்டுவிடலாமே?அடியேனின் கோரிக்கையை பரிசீலிப்பீர்களா....?

  ReplyDelete
  Replies
  1. saint satan : லட்டுக்கள் திகட்டிடும்...! வேண்டாம் !

   Delete
  2. மூனு நாளைக்கு வச்சிருந்து கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக்கிறோமே, சார்? ;)

   Delete
  3. டியர் எடிட்டர்ஜீ !!!
   நாங்கள்லாம் சோட்டா பீம் மாதிரி.லட்டு எங்களுக்கு எப்போதும் திகட்டாது :-)

   Delete
 44. Replies
  1. டியர் ஸ்டீல் க்ளா !!!
   பகைச்சுவை ......?இப்படி ஒரு புது வார்த்தையை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.அற்புதமாக இருக்கிறது.

   Delete
  2. மை டியர் மானிடர்களே!!!
   அடியேனின் வாக்கு அருமை நண்பர் ஸ்டீல் க்ளா அவர்களின் "பகைச்சுவை நகைச்சுவை "ஸ்பெசலுக்கே !!!
   அட்டகாசமான தலைப்பு !!!

   Delete
 45. ebay list ல் புத்தகம் வரவில்லையே sir !

  ReplyDelete
 46. டியர் எடிட்,

  அட்டைகளில் ஓவியங்களின் பிண்ணணியில் புகைபடங்களை இணைப்பது, ஒரு சுமாரான தோற்றத்தையே கொடுக்கும். ஏற்கனவே மேதா காமிக்ஸில் இம்முறை பயன்படுத்தபட்டு அது பிசுத்து போனது நியாபகம் வருகிறது. சமீபத்திய டிடெக்டிவ் ஜெரோம் இதழ்களுக்கு இப்பாணியை உபயோகித்த போதே அது சரிவர பெரும்பான்மையினருக்கு பிடித்தம் இல்லை என்றே நான் அறிந்து கொண்டேன். எனவே நமது இதழ்களின் ஸ்பெஷல் வசீகரமான, முழுக்க ஓவிய அட்டைபடங்களில் இருந்து விலக வேண்டாமே, ப்ளீஸ்.

  கூடேவே Landscape முறையில் அட்டை அமைப்பது, மொத்த புத்தகமும் அவ்வடிப்படையில் இருந்தால் மட்டுமே சரிவர எடுபடும். சமீபத்தில் லக்கி லூக் ஸ்பெஷலுக்கு இதே கதி தான். இதையும் முறைபடுத்த முயலுங்களேன்.

  லார்கோவின் முதல் இதழ் வெளிவந்த அட்டையை விட, இப்போது வெளியிட்டது சிறப்பான தேர்வாக இருந்திருக்குமோ ?

  ஏப்ரல் ஸ்பெஷலுக்கு என்னுடைய சாய்ஸ் Galatta Special.

  ReplyDelete
  Replies
  1. // பெல்ஜியத்தில் உருவாகி ; சீனாவின் காகிதத்தோடு, ஜப்பானிய அச்சு இயந்திரத்தில், ஜெர்மானிய மைகள் கலந்து, இதுவொரு சர்வதேசச் சந்தையின் குழந்தையாய்க் காட்சி தரும் இதழ் என்று சொல்லிடலாம் ! //

   TNPL பக்கங்களை உபயோகித்து வருவதாக முன்பு கூறியிருந்தீர்கள்... இனி சீன காகிதம் என்றால் தரம் உயர்ந்திருக்கிறது என்று சங்கேதமாக சுட்டிகாட்டியிருக்கிறீர்களா ? அப்படியன்றால், இம்முறை காகிதத்தின் தடிமத்தில் மாற்றங்கள் உள்ளது என்று எதிர்பார்க்கலாமா எடிட் ?

   // எனக்கிருக்கும் சிந்தனை சுதந்திரமாய் கருதிடலும் நியாயமான எதிர்பார்ப்புத் தானே ? //

   கண்டிப்பாக உங்களுக்கு உண்டு. நான் இங்கு வெளியிடும் எந்த கருத்திற்கும், நீங்கள் கட்டாயம் பதிலளிப்பீர்கள் என்று எதிர்பார்த்து இடவில்லை. அதே நேரத்தில் நிறைகளுடன் குறைகளும் சுட்டி காட்டுவதை எப்போதும் தொடருவேன்.

   Delete
  2. TNPL பேப்பர் - கருப்பு வெள்ளை காமிக்ஸ் பக்கங்களில் / இதழ்களில் மட்டும்! ஆர்ட் பேப்பர் (முதலில் இருந்தே) அயல் நாட்டில் இருந்துதான் இறக்குமதி ஆகிறது என்று ஆசிரியர் சொன்னதாக நியாபகம்!

   Delete
  3. நண்பர்களின் மொழிபெயர்ப்புகளை அப்லோட் செய்ய http://issuu.com/ முயலுங்களேன். லயன்-முத்து காமிக்ஸுக்கு என்று அங்கு தனி அக்கவுண்ட் ஒன்று ஆரம்பித்து விட்டால், வருங்காலத்தில் Preview போன்றவைக்கும் அதை உபயோகம் செய்ய முடியும்.

   கூடவே Disqus பற்றி முன்பு நான் குறிபிட்டதையும் நமது தளத்தில் உபயோகபடுத்த முயலலாமே ?!

   பி.கு. : லார்கோ வந்து சேர்ந்துவிட்டார், சந்தா பிரதி மூலம் :)

   Delete
 47. ebay list ல் புத்தகம் வரவில்லையே sir
  When will available in ebay sir

  ReplyDelete
 48. ebay list ல் புத்தகம் வரவில்லையே sir !

  ReplyDelete
 49. // ஹாட் லைன், சிங்கத்தில் சிறுவயதில், முன்-பின் அட்டைகள், filler pages (other than mini stories, coming soon..) போன்றவைகளை நீங்களே ஸ்கேன் செய்து இங்கே பதிவேற்றினால் நன்றாக இருக்கும். எப்படியும் புத்தகம் அனுப்பிய பிறகு எங்களை வந்தடைய 2-3 நாட்கள் ஆகும். அதற்கு முன்னதாக இதனை வெளியிட்டால் எங்களுக்கும் ஒரு official trailer பார்த்தது போல இருக்கும் :-) //

  எடிட்டர் சார்,

  நண்பர்கள் கூறியது போல, நீங்கள் இதனையும் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்குமே ?

  ReplyDelete
 50. டியர் எடிட்டர்ஜீ !!!
  KBT -க்கான எனது மொழிபெயர்ப்பை அடியேனின் "மொக்க "வலைப்பூவில் பதிவேற்ற தங்கள் அனுமதியை (சர்ச்சைகளை தவிர்க்க முன்கூட்டியே )கோருகிறேன்.
  நீங்கள் அனுமதித்தால் மட்டுமே எனது மொழிபெயர்ப்பு வெளியிடப்படும் .

  ReplyDelete
  Replies
  1. saint satan : Sorry...வேண்டாமே ப்ளீஸ் ...ஒவ்வொரு போட்டியாளரும் தத்தம் எழுத்துக்களை வலை ஏற்றிப் பார்த்திட எண்ணினால் - இதுவொரு தொடர்கதையாகிடும் !

   Delete
 51. புத்தகம் ​கைக்கு கி​டைத்துவிட்டது... இதுவ​ரை வந்த அட்​டை படங்களி​​லே​யே இது தான் சூப்பர்..

  தூற்றியவர்களுக்​கெல்லாம் ​பேரிடி தான் ​போங்கள்.

  ReplyDelete
 52. பொடியன் மற்றும் கார்த்திக் somalinga வாழ்த்துகள்

  ReplyDelete
 53. SUMMER COOL ஸ்பெஷல் !

  ReplyDelete
 54. KBT போட்டியில் வென்றவர்களையும் பங்குபெற்றவர்களையும் வாழ்த்துகிறேன்... லார்கோ இதழ் இப்போதுதான் வந்தததாக மனைவி போன் செய்தார்.. இன்று மாலை அற்புதமான சித்திர விருந்து காத்திருப்பதை நினைத்தாலே நெஞ்சம் துள்ளுகிறது…

  ReplyDelete
 55. நண்பர்கள் செந்தில், கார்த்திக் சோமலிங்கா, பொடியன் ஆகிய மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
  துரத்தும் தலைவிதி அட்டை படம் அருமை.

  ReplyDelete
 56. விஜயன் சார்,

  ஒவ்வொரு இதழுக்கும் ஒரு ஸ்பெஷல் பெயர் வைப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பம் இல்லை என்றாலும்...

  //காமிக்ஸ் டைம்: "கதை ஸ்பெஷல்" என்று அல்லாது - வித்தியாசமாய் ஏதேனும் ஒரு பெயர் suggest பண்ணுங்களேன்!//
  இரண்டு கதைகள் இணைந்து வருவதாலேயே அவற்றிக்கு ஒரு பொதுவான பெயர் சூட்ட நீங்கள் விரும்புவது புரிகிறது! எனவே எனக்கு விருப்பமான 'ஸ்பெஷல்' அல்லாத பெயர்கள் இதோ:

  * Fun packed Action Digest!
  * Action & Fun - Double Digest!

  மாதா மாதம் நேரும் இந்த பெயர் சூட்டல் குழப்பத்தை தவிர்க்க கீழ்க்கண்ட முறையை பரிசீலிக்கலாமே?
  * Lion Double Digest #1301 (1st Double digest of 2013 from Lion!)

  ஹீரோக்களின் பெயரை சார்ந்து டைஜெஸ்ட் பெயர் சூட்டலாம் என்றால், இரண்டு ஹீரோக்கள் இணைந்து ஒரே இதழில் வருகையில் குழப்பம் நேரும்! எனினும் இம்முறையை CC ரீப்ரின்ட் இதழ்களுக்கு பரிசீலிக்கலாமே? "டைகர் டைஜெஸ்ட் 01", "டைகர் டைஜெஸ்ட் 02", "லக்கி டைஜெஸ்ட் 01" and so on..... - இந்தப் பாணியில் பெயரிட்டால் அவற்றை பின்னாளில் நினைவு கூற எளிதாக இருக்கும் என்பது என் அபிப்ராயம்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்து சரியே, ஒரு இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் இருக்கும்.

   ஆனாலும் இது நமது trademark அல்லவா.. இதுவே நம் காமிக்ஸ் க்கு ஒரு தனித்தன்மை தான், சும்மா reprint செய்யாமல் அதற்கு ஒரு local டச் இது என்று படுகிறது எனக்கு.. ( கண்ணை பறிக்கும் கலர்கள், அதிரடி பெயர்கள், பல காமிக்ஸ் கதம்பம் இவை இல்லாமல் lion/muthu will be just another..) ஒரு ஜனோர் Gener ரே உருவாக்கி இருக்கிறோம் என்று பெருமை படவேண்டிய சங்கதி இது.. (சில திரைப்பட tiltle பார்க்கும்போது "என்னடா காமிக்ஸ் டைட்டில் போல இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு தமிழில் காமிக்ஸ் என்றால் நாம் தான் என பதிவிட்ட format இது )

   Delete
  2. Karthik Somalinga : மாதமொரு பெயர் சூட்டலை குழப்ப முயற்சியாய் பார்த்திடாது ஒரு ஜாலியான அனுபவமாகவே நான் பார்த்திடுகிறேன் ! இதனில் இன்னுமொரு சமாச்சாரமும் உள்ளது !

   காமிக்ஸ் கிட்டங்கியினில் நாளெல்லாம் கழித்தாலும், கதைகளின் நான்கு பக்கங்களைக் கூடப் புரட்டிடாத எங்களின் பணியாளர்களுக்கும் இவ்விதப் பெயர்கள் நினைவில் கொண்டிடச் சுலபமான யுக்திகள் ! நித்தமும் உங்களோடு போனில் பேசிடும் ஸ்டெல்லாவோ ; புத்தகக் கண்காட்சிகளில் அளவளாவிடும் ராதாகிருஷ்ணனோ - காமிக்ஸ் என்றால் 'வீசம்படி எவ்வளவு ? என்று கேட்டிடும் ரகங்களே ! So - இந்தப் 'டமால் ஸ்பெஷல்' ; டுமீல் ஸ்பெஷல் ' ரக பெயர்சூட்டல் வைபவத்தின் பின்னணியினில் இதுவும் உண்டு !

   Delete
  3. ராதாக்ருஷ்ணன் அவர்கள் இதனை கூறியுள்ளார் என்னிடம் ....உங்களது இப்போதைய தூங்காத உழைப்புகள் குறித்தும் !வெற்றி !வெற்றி !!வெற்றி !!!

   Delete
 57. ஆசிரியர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

  தங்களின் பதிவுகளை எப்பொழுதும் போல் குறிப்பிட்ட நாளின் இரவில் பதிவேற்றலாமே, அல்லது பதிவிடும் நேரம் இரவாக இருக்கலாமே! அதுபோல் புத்தகம் அனுப்பிடும் தினத்திற்கு ஒரு நாள் முன்பாக அதைப்பற்றிய பதிவு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ! ஏனெனில்...

  1. உங்களின் பதிவு எதிர்பார்க்காத ஒன்றாகி விடுகிறது !
  2. புத்தகம் கையில் இருக்கும் போது பதிவின் (trailer) சுவாரசியம் சற்றே குறைகிறது !
  3. லஞ்ச் டைம் ல் பதிவிட முடிவதில்லை !

  4. அப்படியே நேரம் கிடைத்தாலும் புத்தகத்தை படிப்பதா, பதிவை படிப்பதா, கமெண்ட் போடுவதா என்று தலையை பிய்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சிந்தனையில் நேரம் காற்றில் கரைந்த கற்பூரமாகி விடுகிறது !

  ReplyDelete
  Replies
  1. மர மண்டை : புத்தகம் கையில் இருக்கும் போதே எனது பதிவும் வெளியாகிட வேண்டுமென்ற திட்டமிடலே இம்முறை இந்தப் பகல் படலத்தின் காரணம் .....!

   Delete
  2. பதிலுக்கு நன்றி சார். அப்படியே கீழே உள்ள என் பதிவையும் தாங்கள் படித்து விட்டால், அதை விட அந்த பதிவுக்கு சிறப்பேது ! என் மகிழ்ச்சிக்கு குறையேது !

   Delete
 58. நண்பர் புதுவை செந்தில் மற்றும் பொடியன் ஸ்ரீலங்கா & கார்த்திக் சோமலிங்கா ஆகியவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். KEEP IT UP GUYS!

  ReplyDelete
 59. WOW! LONGING TO GRAB THE 'ACTION SPECIAL', BECAUSE OF THE WRAPPER DESIGN. LOOKING VERY ATTRACTIVE!

  ReplyDelete
 60. நண்பர்கள் புதுவை செந்தில், பொடியன் ஸ்ரீலங்கா மற்றும் கார்த்திக் சோமலிங்கா ஆகியவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்..
  நமது எழுத்தை அச்சில் பார்க்கும் சந்தோசம் அளவிடமுடியாதது.. பலமுறை பதிப்பகத்தாரால் குப்பைதொட்டிகளில் போடப்பட்ட கதைகளை எழுதியவர்களுக்கு தான் (என்னைப்போல்), அந்த சந்தோசத்தின் அளவு முழுமையாக புரியும்... .

  ReplyDelete
 61. கற்பனை இன்று நிஜமாகியது !

  சுமார் 14 வருடங்களுக்கு முன்பு நானும் என் தம்பியும் இரத்தப்படலம் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, XIII ன் கதையையும், அதன் சித்திரங்களையும் படித்து, பார்த்து, ரசித்து பிரமித்து பேசி சிலாகித்துக் கொண்டிருந்தோம் ! கருப்பு வெள்ளையிலேயே இவ்வளவு பிரமிப்பை தரும் இந்த XIII ம், மற்ற லயன் முத்து காமிக்ஸ் புத்தகங்களும் அயல்நாட்டு தரத்தில், முழு வண்ணத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்று என் தம்பி ஆவலாய் வினவிய போது நான் இதுபோல் கூறினேன்...

  அந்த வாய்ப்பு நமக்கு தமிழில் கிடைப்பது சந்தேகமே, ஏனெனில் விஜயன் சார் இதை வியாபாரமாக செய்யாமல், காமிக்ஸ் ரசனையின் வெளிப்பாடாக, அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக மிகவும் குறைந்த விலைக்கு வெளியிட விரும்புவதால் அதெல்லாம் சாத்தியப்படாது. அது இனிமையான கனவாக, நிறைவேறாத கற்பனையாகவே இருக்கும், வேண்டுமானால் ஆங்கிலத்தில் தான் வாங்க இயலும் என்று வருத்தத்துடன் கூறினேன்.

  அதுபோல் சுமார் 10 வருடங்களுக்கு முன் TINTIN, ASTERIX Full set படிக்க நேர்ந்த பொழுது, அதன் வண்ணம், தரம், ஆர்ட் பேப்பர் என ஒவ்வொன்றையும் லயன் முத்து காமிக்ஸாக கற்பனை செய்து கற்பனையில் மகிழ்ந்திருக்கிறேன். அதுபோல் லயன் முத்து காமிக்ஸ் அனைத்தும் அந்த தரத்திற்கு மாறிவிட்டால் எப்படி இருக்கும் என்று கறபனையில் பல வருடம் வானத்தில் பறந்திருக்கிறேன்!

  இதோ இன்று என் கற்பனை நிஜமாகியது ! துரத்தும் தலைவிதி அதற்கு சாட்சியாக கண்முன்னே கண்சிமிட்டி சிரிக்கிறது ! என் உணர்ச்சிக்கு வார்த்தைகளேது ! மௌனமே நம்மை உணர்ந்துக் கொள்ள முழுமையானதாகும் !

  நன்றி விஜயன் சார் !

  ReplyDelete
  Replies
  1. மர மண்டை : கனவுகள் சிறுகச் சிறுக நிஜமாகிடும் போது சந்தோஷமே நமக்கெல்லாம் ! நன்றிகளுக்கு நிச்சயம் அவசியங்கள் கிடையாது !

   Delete
  2. நன்றிக்கு அவசியமில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் கண்களில் சுரக்கும் ஆனந்த கண்ணீருக்கு வடிகால், நன்றிகள் தானே !

   Delete
  3. XIII ன் கதைகள் வண்ணத்தில் வர வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளதால் ....மிச்சம் வையுங்கள் ஆனந்த கண்ணீரை ...லார்கோவை அட்டை படத்தை தாண்டியே மனசு செல்ல மறுத்தது !வைத்து பார்ப்பதே அருமையான அனுபவம் !இனி படிக்க செல்கிறேன் !உள்ளே திறந்தாள் வண்ணங்கள் என் மேல் விழுந்து தெறிக்கின்றன !இந்த அருமையான அனுபவத்தை தந்த ஆசிரியருக்கு எனது....

   Delete
 62. KBT போட்டியில் வெற்றிபெற்ற நண்பர்கள் புதுவை செந்தில்குமார், பொடியன் மற்றும் கார்த்திக் அவர்களுக்கு என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

  உங்களுடைய உழைப்பை (மொழி பெயர்ப்பை) காண ஆவலாக உள்ளேன்.

  அன்புடன்,
  ராஜா

  ReplyDelete
 63. புத்தகம் கைக்கு கிடைத்துவிட்டது!ANOTHER PROMPT DELIVERY! : ) ஆசிரியர் திரு விஜயன், லயன் காமிக்ஸ் அலுவலர்கள், மற்றும் ST கொரியருக்கு நன்றிகள் பல.

  க்ளோத் கவரில் நமது பெயரை BOLD டாக பிரிண்ட் செய்துள்ளது அருமையான ஐடியா. நமக்கு ஓசையில்லாமல் விளம்பரங்கள் கூடும். எனது அலுவலக சகா..."அது என்ன சார் 7 முதல் 77 வரை?" என வினாவியது இதற்கொரு உதாரணம்.

  கவர் சற்றே dark கடிக்கிறது. BUT NOT BAD !

  புத்தகம் எங்கும் வண்ண மாயம்.வழக்கம் போல் ஹாட் லைன் மியாவி ஹேகர் மற்றும் குட்டிஸ் கார்னர் அருமை.

  நண்பர் செந்தில்குமாரின் எட்டு பக்க மொழிபெயர்ப்பு இணைப்பு இந்த வெளியீட்டுக்கு ஒரு தனி தன்மை கொடுக்கிறது.

  இனி லார்கோவுடன் முதலில் கைகோர்கிரேன் !!!

  ReplyDelete
 64. வெய்ன்-சிக்பில் கதைக்கான எனது தலைப்பு

  ஒரு போராளி- கோமாளி ஸ்பெஷல்.

  இதில் ஒரு என்பது பெரிய எழுத்திலும் போராளி கோமாளி எனபது மேலும் கீழுமாக வர வேண்டும்

  ReplyDelete
 65. This time packing very good and cover design also impressive ..

  ReplyDelete
 66. This comment has been removed by the author.

  ReplyDelete
 67. டியர் எடிட்டர்,

  "அதிரடி சிரிப்பு" ஸ்பெஷல்

  அதிரடி - ஷேல்டனுக்காக
  சிரிப்பு - சிக்-பில்லுக்காக

  ReplyDelete
 68. காமிக்ஸ் ரசிகன், பொடியன், கார்த்திக் சொமலிங்கா:

  வாழ்த்துகள் ! இல்லம் சென்றவுடன் முதலில் படிக்க இருப்பது வாசகர் மொழிபெயர்ப்பினை. அப்புறம் எடிட்டர் அவர்களுக்கு மார்க்கும் கொஞ்சம் மியூசிக்-கும் போடுவோம் :)

  ReplyDelete
 69. லார்கோ வின் அட்டைபடம் சூப்பர். அதிகாமான கோன்த்ராஸ்ட் இல் படங்களை காணும்போது அருமையாக இருக்கிறது .

  ReplyDelete
 70. ஆசிரியர் விஜயன் அவர்களே, என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் தமிழ் டைட்டில் களோடு கூடவே சிறியதாக ஆங்கிலத்திலும் கூட ஒரிஜினல் தலைப்புகளை போட்டால் மூல ஆசிரியரை பெருமைபடுதுவதாக அமையும். எ .கா : பிசினஸ் blues , the weir

  ReplyDelete
 71. -------

  கதையைப் படித்து முடித்துவிட்டேன். மொழிபெயர்ப்பாளரை பெண்டு நிமித்திய கதை இது. பக்கம் பக்கமாக வசனம். பல தகவல்கள். நல்ல கதை.

  கதையில் வரும் அனைத்துப் ******** உளவாளிகள் .... W க்ரூப்பின் ஒவ்வொரு ******** ஒவ்வொரு கதையில் காவு வாங்குவது.. சற்றே டெம்ளேட் ரகமாக இருக்கிறது.

  இன்னும் ஒரு சூப்பர் ஹிட் கதை இது

  ******* - கதையைப் படிக்காதவர்களுக்காக..

  -------

  ReplyDelete
  Replies
  1. @ RAMG75 : உங்களுக்கு ஒரு சிறு செய்தி.. லார்கோ அடுத்த பாகத்தில் , மேலும் காவுகள் இல்லை... இந்த இதழை விட அருமையான ஆக்சன் நிறைந்த கதை... :)

   Delete
 72. leon : தங்களின் கூற்றுப்படி மூல ஆசிரியரை பெருமை படுத்துவதாயின் பிரெஞ்சு மொழியில் தான் டைட்டில் போடவேண்டும் ஆங்கிலத்தில் அல்ல.

  ReplyDelete
 73. அருமை !லார்கோவும் ,சைமனும் மாறி மாறி கலக்கினாலும் சைமன் நச் !லாரென்ஸ் -டேவிட் இணை போல அற்புதமான ஜோடிகள் !இது போன்ற அற்புதங்கள் இருக்கும் வரை ,நாம் காமிக்ஸை ரசிக்க சிறு குழந்தையாய் இருந்தாலே நன்று என்ற எண்ணம் தவறி போய், ரசனை எப்போதும் நம்முள்ளே இருக்கும் ... 7 ஆனால் என்ன 77 ஆனால் என்ன !நிச்சயம் தாங்கள் போஸ்ட் கவரில் எழுதிய வார்த்தைகள் மெய்யாகி வருகிறது தொடர்ந்து !தங்கள் தேடலில் இது போன்ற சிறந்த கதைகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும்,நாங்கள் படித்து ரசிக்க வேண்டும் !வண்ணம்,மொழி பெயர்ப்பு அசத்தல் ,தயவு செய்து எழுத்துக்கள் சிறிதானாலும் பரவா இல்லை ,வசனங்களில் மட்டும் கத்தரி போட்டு விடாதீர்கள் !முழு வண்ணம்,அயல் நாட்டு தரம் 100 ரூபாய் விலை என சென்ற ஆண்டு நீங்கள் தேர்ந்தெடுத்ததே லார்கோவை பார்த்துதானோ என எண்ணி வியக்கிறேன் !
  ஆனால் காற்று வந்ததால் இலை அசைந்ததா ,இலை அசைந்ததால் காற்று வந்ததா....என்பது போல இரண்டுமே சரியாய் அமைந்ததே ,வெற்றி படி கட்டில் நாம் ஏறி சந்தோசம் எனும் சிகரம் நோக்கி ஆரவாரமாய் செல்ல உதவுகிறது என்பதே மெய் !சரியான காலத்தில்,சரியான நேரத்தில் வரும் சிந்தனைகளின் வெற்றி மகத்தானதே!அடுத்த லார்கோவிர்க்காக காத்திருந்தாலும் .....அடுத்த மாத ஷெல்டன் மற்றும் உள்ளம் கவர் டைகருக்காகவும் காத்திருக்கிறேன் ......அன்று எப்படி ஸ்பைடர்,ஆர்ச்சி,டெக்ஸ்,இரட்டை வேட்டையர்,மும்மூர்த்திகள்,சிக் பில்,லக்கி,இரும்புக்கை வில்சன்,நார்மன்,பிரின்ஸ்,ஜானி என மனம் கவர் நாயகர்களுக்காக காத்திருந்தேனோ அது போல தொடரும் கதைகளை நினைத்தாலே தித்திக்கிறதே !சிறப்பான வரிசைகள் தொடர்ந்து காத்திருக்கின்றன ,கொண்டாட !
  இரண்டாம் பாகம் காத்திருக்கிறது !

  ReplyDelete
 74. KBT-1 வெற்றிபெற்ற நண்பர்கள் புதுவை செந்தில்குமார், பொடியன் மற்றும் கார்த்திக் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

  Editor Sir / Friends,
  I recently received a letter from the Lion/Muthu office that last year subscription was over and please renew it for this year 2013 to receive the books. But i had already paid the subscription long time before, my question is "Is this letter sent to all the subscribers irrespective of whether they had paid the subscription or not? OR Something messed up in my subscription and i need to contact the office to resolve the issue?"

  ReplyDelete
 75. வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 76. ஆசிரியர் அவர்களுக்கு,

  இரவு வீட்டிற்கு வந்தவுடன், லார்கோ & சைமன் படித்து விட்டுதான் மறு வேலை என்று அமர்ந்து முழுவதுமாக படித்து முடித்து இந்த பதிவு.

  கவர் : மிக சிறப்பு ! அட்ரஸ் பிரிண்ட் செய்து அனுப்பியது நன்று இதையே தொடரவும், கவர் மேல் உள்ள வாசகங்கள் நமது இதழ்களுக்கு ஒரு நல்ல விளம்பரமாக அமையும்.

  மதியில்லா மந்திரி : மதியில்லா மந்திரி - சிரிப்பு வெடிகள். நண்பர் புதுவை செந்தில் அவர்களது மொழிபெயர்ப்பு நன்றாகவே உள்ளது. உங்களுடைய மொழிபெயர்ப்பு வழக்கம் போல அருமை.

  லார்கோ / சைமன்: சொல்ல ஒன்றுமில்லை :) அதிரடி சரவெடி அதிரடி !!!!

  இது வரை வந்த லார்கோ கதைகளில், இது முதலிடம் பெற தகுதியானது என்றே எனக்கு தோன்றுகிறது. இன்னும் வரவிருக்கும் சாகசங்கள் இதை விட அருமையாக இருக்கும் என்றே நம்புகிறேன். (சீக்கிரம் எல்லா பாகத்தையும் ரிலீஸ் பண்ணுங்க சார், ஒரு லார்கோ ஸ்பெஷல் போட்டால் போதுமே, NBS மாதிரி)


  ஒரு சிறிய வருத்தத்தை இங்கே பதிவு செய்வதும் அவசியமாகிறது:


  நமது காமிக்ஸ் "7 முதல் 77 வரை" என்பது வெறும் வாசகமாக இல்லாமல், அனைவரும் படிக்க வேண்டும் என்று சில இடங்களில் சென்சார் செய்யப்படுகிறது (அதுவும் லார்கோ கதைகளில், நிறைய இடங்களில்)

  ஆனால் சில இடங்கள் எப்படி உங்களது பார்வையை மீறி தப்பியது என தெரியவில்லை.

  பக்கம் 62 மற்றும் 73 உங்களது பார்வையில் இருந்து தப்பிய பக்கங்கள். சிறுவர்களும் படிக்க கூடிய நமது காமிக்ஸ் புத்தகங்கள் (முக்கியமாக லார்கோ போன்ற கதைகள்) ஒரு முறைக்கு இரு முறை சென்சார் செய்யப்படுவது நன்று என் நினைக்கிறேன்.


  பி.கு: சார் லார்கோ படித்து முடித்து விட்டேன், நம்ம டைகர், ஷெல்டன் அண்ட் சிக்பில் மூவரையும் முடிந்த அளவு சீக்கிரன் அனுப்பி வையுங்க :)


  திருப்பூர் ப்ளுபெர்ரி

  ReplyDelete
  Replies
  1. //பக்கம் 62 மற்றும் 73 உங்களது பார்வையில் இருந்து தப்பிய பக்கங்கள். சிறுவர்களும் படிக்க கூடிய நமது காமிக்ஸ் புத்தகங்கள் (முக்கியமாக லார்கோ போன்ற கதைகள்) ஒரு முறைக்கு இரு முறை சென்சார் செய்யப்படுவது நன்று என் நினைக்கிறேன்.
   //

   நிச்சயம் நீங்கள் காமிக்ஸ் டைமில் கூறியது போல பள்ளிகளுக்கும் செல்லும் என்றால் .....

   Delete
 77. வழக்கம் போல முதல் பாகம் அழுத்தமான தளம் அமைத்து கொடுக்க ,இரண்டாம் பாகம் மின்னல் வேகம் !முதல் பாகம் சைமனின் கலக்கல் என்றால்,இரண்டாம் பாகம் லார்கோவின் கலக்கல்!முடிவில் சமணும் ,லார்கோவும் மட்டும் சிரிப்பது அழகு !

  ReplyDelete
 78. அன்பு நண்பர் மரமண்டை :-

  நீங்கள் போன பதிவில் கேட்டு வைத்த கேள்விகளுக்கான பதில்கள் .

  1. //நான் யாரென்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் யுகம் சரியே வெள்ளை தொப்பியோடும், வாயில் சிகரட்டோடும், கழுத்தில் அணிந்த சிகப்பு துணியோடும் உங்கள் கண்களில் தெரிகின்றேன் என்பதை நான் அறிவேன்// - உண்மையான "லக்கி லூக்" என்று நீங்கள் கூறுவதாகவே எனக்கு பட்டது !

  இதற்கு பதில் மேலே உள்ளது

  2.//என்னை மிகவும் வருத்தமடைய செய்தது. இறைவனிடம் மன்னிப்பு தேடிக்கொண்டேன்// -கொழுப்பை அளவெடுக்க கூறி ஆத்திரப்பட்ட நீங்கள், அடுத்த நாள் தானாகவே மன்னிப்பு கிடைத்து விட்டதாக கூறியது, புனையப்பட்டதோ என்ற தோற்றத்தை கொடுத்தது, ஏனெனில் உங்களால் மனம் புண்பட்டவர் அல்லவா உங்களுக்கு மன்னிப்பு தரவேண்டும்? ஏனெனில் அவர் உங்களை ஒருபோதும் சம்பந்தப்படுத்தி பதிவிடவில்லை. சம்பந்தம் இல்லாமல் நீங்கள் தான் அங்கே ஆஜரானீர்கள் ?

  அவர் கூறிய வார்த்தைக்கு அவர் மன்னிப்பு கேட்காத வரை அவரிடம் மன்னிப்பு கேட்பதில் அர்த்தம் இல்லை என்பதாலேயே இறைவனிடம் மன்னிப்பு கேட்கப்பட்டது .

  புனயப்பட்டதோ என்ற கற்பனைக்கான பதில்களை ஏற்கனவே கூறிவிட்டேன் .

  கூடுதல் தகவலாக அது அதிகாலை தொழுகைக்கு பின் எழுத பட்டது என்பதை அதை பதிவிட்ட நேரத்தை வைத்து நீங்கள் புரிந்து கொள்ள முடியும் .

  எனக்கும் அவருக்கும் சம்பந்தம் உள்ளதா இல்லையா என்பதை மிகவும் விளக்கமாக அவர் கேட்டால் கூறிட தயாராகவே உள்ளேன் அந்த கடிதம் இந்த கேள்வியை எதிர் பார்த்தே எழுத பட்டது

  3. //ஏன் புனைப்பெயரில் எழுதுகிறேன் என்றால் எனக்கு யுனானி மருத்துவத்தில் நம்பிக்கை உண்டு// - இதை பற்றி அறியாத வாசகர் கோணத்தில் இருந்து படிப்பவர்களுக்கு, புன்சிரிப்பையே வரவழைக்கும் அல்லவா?

  அறியாத வாசகர்களுக்கு குழப்பத்தை வேண்டுமானால் உண்டு பண்ணலாம் சிரிக்க என்ன இருக்கிறது?

  பி கு :-நீங்கள் விழுந்து விழுந்து சிரித்ததாக எழுதி இருந்தீர்கள் .


  4. //இனியும் நீங்கள் இலவச பரிசோதனை செய்யமாட்டீர்கள் என நம்புகின்றேன்// - அவர் என்ன ஒவ்வொருவர் வீட்டிற்கு சென்றா இலவச பரிசோதனை செய்தார், என்று நினைக்க தோன்றுகிறதா, இல்லையா?

  இங்கு வீடு எங்கிருந்து வந்தது?உங்கள் சிந்தனையில் நேர்மை இல்லை என்பதையே உங்கள் வரிகள் காட்டுகின்றன .
  உங்கள் கற்பனைக்கான பதில்கள் ஏற்கனவே கூறியாகிவிட்டது .

  உங்களுடைய மற்ற விசயங்களுக்கும் வரிக்கு வரி பதில் சொல்வேன் .நான் மேலே பின்னூட்டத்தில் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு அவசியமிருந்தால் பதில் கூறுங்கள் .

  ReplyDelete
 79. அன்பு நண்பர் மரமண்டை:-

  நீங்கள் தெரிந்தே செய்த ஒரு தவறை மறைப்பதற்கு ஆயிரம் சப்பைக்கட்டுகள் கட்டுகின்றீர்கள்.

  இங்கு யார் ஈகோ பார்ப்பது? நீங்களா இல்லை நானா?

  நீங்கள் பின்னூடம் இட்டிருப்பது உங்கள் கணினியின் திரையில் இல்லை இரத்தத்தாலும் சதையாலும் ஆன ஒரு மனிதனின் இதயத்தில் என்ற என்னுடைய வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் இல்லை என்பதாலேயே இரவில் தூக்கம் தொலைத்து நாளின் முதல் காரியமாக நண்பர் சுமார் மூஞ்சி குமாருக்கு என் வருத்தம் தெரிவிக்கும் கடிதம் எழுதினேன்.

  உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை? அதை காமடி ஆக்க முன்றீர்கள் .

  மற்றவர்களின் மன உணர்வை புரிந்து கொள்பவர்களையே மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள் என்ற என்னுடைய கருத்தை நீங்கள் உணர்ந்தீர்களா என்று தெரியவில்லை ?!

  நான் உங்களுக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை என்கிறீர்கள். உங்களுக்கு பதிலாக என்னுடைய முதல் பின்னூட்டமே இன்னும் கொஞ்சம் சீரியஸாக முற்சிக்கலாமே என்பதுதான் .அதற்கும் உங்கள் பதில் கிண்டலாகவே வந்தது .

  தூங்குரவன எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாது என்பதை உணர்ந்ததாலேயே உங்களுக்கு அந்த பின்னூட்டமிட்டேன் .
  நீங்கள் இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை.

  எதோ உள் நோக்கத்துடன் நீங்கள் இட்ட பின்னூடத்திற்கு வெளிபடையான என்னுடைய பதில்கள் வலிப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை .

  ReplyDelete
 80. கோபக்கார கோபாலு (எ) Meeraan :

  இங்கே, "கண்ணா..லட்டு தின்ன ஆசையா...." போட்டி சுவாரசியமாக நடந்துக் கொண்டிருப்பதால் உங்களின் பதில் பதிவுகளை இங்கு DELETE செய்து விட்டு சென்ற பதிவில் பதிவிடவும். இல்லை என்றால்,
  கண்ணா..லட்டு தின்ன ஆசையா.....? போட்டிக்கு வருபவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள் !

  ReplyDelete
 81. ஆசிரியர்க்கு,நான் வாசர்களின் மொழி பயற்ப்பை விட நமது டீமின் மொழி நடையை தான் விரும்புகிறேன் என்று கூறியது உண்மைதான் .இந்த போட்டி வேண்டாம் என்றும் கோரியது உண்மை தான் .வாஸ்தவம் .அதர்காக எனக்கு மட்டும் அந்த B &W வாசகர் மொழி நடையின் இலவச இணைப்பை அனுப்பாமல் புத்தகத்தை மட்டும் அனுப்பியது ரொம்ப டூ மச் சார் :)

  ReplyDelete
 82. இரவு முழுதும் புத்தகத்தின் அழகை ரசிப்பிளைய கழிந்து விட்டதால் பகலில் ஆபீஸ் போய்தான் அமைதியாக படிக்க வேண்டும் .;)

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நல்லவங்க உங்க ஆபீஸ்ல இருக்கவங்க.. ரெண்டு நாள் ப்ளாக் விசிட் செய்ததற்கே எங்க ஆபிஸ்ல(வேலைபார்க்கும் ஆபிஸ்,blr ) எல்லாத்தையும் பிளாக் பண்ணிடனுவோ... (Now using Nokia PC connect )..

   என்னோட ஆபிஸ் ல (சொந்த ஆபிஸ், பழனி) வேலைபார்க்கும் 4-5 நபர்களுக்கும் unlimitted இன்டர்நெட் கொடுத்து உள்ளேன். Reception டேபிள் ல NBS & வி.ஒ.வே வைத்துளேன், clients உடன் வரும் children விரும்பி படிபதாகவும், சிலர் எடுத்து செல்ல விரும்பியதாகவும் என் receptionist cum admin cum marketing பணியாளர் கூறினார்.. (so எங்களிடம் வீடு கட்டுபவருக்கு ஒருவருட லயன் காமிக்ஸ் சந்தா இலவசம்னு பழனி அடிவாரத்துல ப்ளெக்ஸ் வைக்கலாம்னு இருக்கேன்...)

   Delete
 83. லார்கோ அருமையான சித்திரங்கள் வண்ணக்கலவை முந்தைய இதழ்களை விட சிறப்பாக உள்ளது!

  கதையில் சென்ற பாகங்களை விட ஆக் ஷன் குறைவுதான்!

  கதையின் வசன நடையில் சில சமயம் விஜயன் சாரின் "ஹாட்லைன்" எழுத்து நடை வெளிப்படுகிறது. [அல்லவே!]
  சில இடங்களில் அவரது பதிவை படிப்பது போன்ற உணர்வு வருகிறது.

  சிங்கத்தின் சிறு வலைக்கும்
  வருகிறது விளம்பரங்களும் 8 பக்கங்களை வீணடித்திருக்க வேண்டுமா?

  வேறு கார்டூன் or திகில் கதை சேர்த்திருக்கலாம்.

  உங்கள் கடுமையான உழைப்பை புத்தகத்தின் நேர்த்தியான வடிவமைப்பில் உணர முடிகிறது பாராட்டுக்கள்!

  லார்கோ 80% suppper...

  ReplyDelete
 84. நீண்ட நாட்களாக நமது ப்ளாக் பக்கம் வர இயலவில்லை, முதலாவதாக எனது மறுபதிப்பு choice
  ரிப்போட்டர் ஜானி:
  சைத்தான் வீடு
  ஓநாய் மனிதன்

  சிக் பில்:
  நீலப்பேய் மர்மம்
  இரும்பு கௌபாய் :)

  லக்கி லுக் வில்லனுக்கொரு வேலி அசத்தல் சார், சைஸ், quality superb. இந்த மாதிரி தரத்துடன் படித்துவிட்டு பழைய black & whiteபுத்தகங்களை பார்க்கவே பிடிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம் :)(அதுக்காக பழைய புத்தகங்களை யாரும் கேக்க பிடாது ;) கலக்குங்க சார்.

  மாதம் ஒன்று அல்ல இரண்டு என்ற புத்தகங்கள் என்ற வலையிலிருந்து வெளி வாருங்கள் சார் . நிறைய 50 ரூபாய் புத்தங்களை வெளி இடுங்கள் வில்லனுக்கொரு வேலி தரத்தில். இன்னும் நிறைய அற்புதமான படைப்புக்களை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறோம்.


  ReplyDelete
  Replies
  1. Yes just monthly we get lion and muthu 2 issues enough and 2 month once classic issues..

   Delete
 85. 'லயன் காமிக்ஸ் - முத்து காமிக்ஸ் 7 முதல் 77 வரை அனைவருக்கும்' என அச்சிடப்பட்டிருந்த கொரியர் கவரைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்துவிட்டேன்! அப்படியானால் என் 78வது வயதில் நான் காமிக்ஸ் படிக்க முடியாதா?!!
  ஜாதகப்படி நான் 80 வயதுவரை உயிரோடிருப்பேன் என்று ஜோசியர் சொல்லியிருக்கிறாரே?!

  வயதான காலத்தில் எனக்கு இப்படியொரு சோதனையா? :(

  '8 முதல் 88 வரை' என்று மாற்றக்கூடாதா?

  ReplyDelete
  Replies
  1. நான் ஏழு வயதிலேயே படிக்க ஆரம்பித்து விட்டேனே !ஏழு முதல் இருக்கும் வரை !

   Delete
  2. ஆறிலிருந்து நூறு..

   Delete
  3. ஓ!நீங்கள் ஒரு ஸ்டெப் முன்னால்,இது போல அனைவரும் வர வாய்ப்பிருப்பதாலும் ,வண்ணசிறல்களை அள்ளி தெளிப்பதாலும் ,குழந்தைகளை வண்ணங்கள் ஈர்க்கும் என்பதாலும் சிறுகுழந்தைகளும் பெற்றோரால் பார்க்க வாய்ப்பிருப்பதாலும்

   Delete
 86. Sir,

  Choose a common title for Greenmanor.

  Suggestions:
  "மரகதமாளிகை மனமகிழ் மன்றம்"
  "பச்சைமாளிகை மனமகிழ் மன்றம்"
  "மரகதவிலாஸ் மனமகிழ் மன்றம்"

  ReplyDelete
  Replies
  1. @ சு.மூ.கு

   ஏதாவது மனமகிழ் மன்றத்தின் பொறுப்பதிகாரியா நீங்கள்? :)

   Delete
  2. ஆம்மாம் வருத்தமில்லா வாலிபர் சங்கம்... lol..

   Club க்கு சரியான தமிழ் வார்த்தை மனமகிழ் மன்றம் அல்லவா.. (பழனியில் Club ரோடு என்று ஒன்று இருந்தது அதற்கு சமிபமாய் இந்த பெயர் சூட்டினார்கள், அதை தான் காபி அடித்தேன்..)

   Delete