Powered By Blogger

Thursday, May 10, 2012

சிறகடிக்கும் சிந்தனைகள்..


நண்பர்களே,

சின்னதாய் ஒரு எச்சரிக்கை ! புதிதாய் ஏதேனும் அறிவிப்பைத் தாங்கியோ....பழையதொரு இதழை அசைபோட்டோ நான் எழுதிடும் வழக்கமான பக்கமல்ல இது ! சமீபமாய் என்னை "விடாது கறுப்பு" பாணியில் துரத்தி வரும் மொபைல் இன்டர்நெட்டின் படுத்தல்களின் புண்ணியத்தால் இங்கே அதிகம் தலை காட்ட முடியாது போயிட்டது ! So இடைப்பட்ட நாட்களில் எங்கள் பக்கம் நடந்தேறிய சங்கதிகள்...என் மண்டைக்குள் ஓடிய சிந்தனைகள்...இங்கே நண்பர்கள் பலரும் எழுதி வரும் பின்னூட்டங்களுக்கு எனது பொதுவான பதில்கள் என்று ஒரு கலவையானதொரு பதிவு இது !எதிர்பார்ப்புகளின்றிப் படித்தால் நிச்சயம் மொக்கையாகத் தோன்றாதென்று நம்ம்ம்பி எழுதுகிறேன்! Fingers crossed ! 

"வசந்த காலத்து ஐரோப்பாவின் அழகே அழகு" என்று நான் ஆரம்பித்தால் 'இது ஏதோ பயணக் கட்டுரைடா சாமி'  என்று உங்களில் முக்கால்வாசிப் பேர் குதிங்கால் பிடறியில் அடிக்க ஜூட் விடுவீர்கள் என்பது நான் அறிந்ததே ! இருப்பினும் அந்த தேய்ந்து போன டயலாகை கைவிட்டிட இயலா சூழ்நிலை.நான்கு ஆண்டுகளுக்கொரு முறை ஜெர்மனியில் அச்சுத் தொழிலின் தலைசிறந்த நிறுவனங்கள் தத்தம் புதுக் கண்டுபிடிப்புகளை , நவீனங்களை showcase செய்திட DRUPA என்றதொரு பிரம்மாண்டமான show நடத்திடுவது உண்டு. 


Dusseldorf நகரில் தற்சமயம் நடந்து வரும் இந்த ராட்சசக் கண்காட்சியினை பார்வையிடச் சென்ற மக்கள் வெள்ளத்தில் 'பராக்குப்' பார்த்திடச் சென்ற நானும் ஐக்கியம் ! Dusseldorf நகரில் தற்சமயம் ரூம் எடுத்துத் தங்கிட வேண்டுமெனில் சொத்து பத்துக்களை விற்றுக் கொண்டு வந்தால் தான் ஆயிற்று என்பதால்..அருகாமையில் உள்ள Cologne நகரில் ஜாகை எனக்கு!நகரின் மையத்தில் உள்ள அற்புதமான தேவாலயத்தின் படிகளில் அமர்ந்து, மாலை ஒன்பது மணி வரை இதமாய் முகம் காட்டும் சூரிய வெளிச்சத்தை ரசித்துக் கொண்டே எனது லேப்டாப்பில் இந்தப் பதிவை 'லொட்டு லொட்டென' தட்டிக் கொடுத்து தயாரிக்க முனைந்து கொண்டிருக்கிறேன்!

Cologne Dome
"முத்து காமிக்ஸ் Surprise ஸ்பெஷல்" கிடைக்கப் பெற்ற நண்பர்கள் அட்டகாசமாய் review செய்து வருவதை படித்திடும் போது மனதுக்கு நிறைவாக இருந்தது ! லார்கோ வின்ச் கதைகள் எத்தகைய சவாலாய் அமைந்திட்டது என்பதைப் பற்றி "காமிக்ஸ் டைம் "  பகுதியில் எழுதி இருந்தேன்...இங்கேயும் அது பற்றிப் பேசி இருந்தோம்!கதாசிரியர் Van Hamme தன் மனதில் உருவாக்கிட்ட அந்த லார்கோவை துளியும் சேதமில்லாது உங்களிடம் கொண்டு வந்து சேர்த்திட வேண்டுமென்ற வேட்கை மட்டுமிலாது, பிரெஞ்சில்,ஆங்கிலத்தில் இக்கதைகளைப் படித்துள்ள நம் நண்பர்கள், தமிழ் version படித்திடும் போது துளியும் எமாற்றமடையக் கூடாதென்ற அவா என்னுள்.இன்னும் பரவலாய் விமர்சனங்கள் வந்த பின்னரே எங்கள் முயற்சிகளுக்கு மதிப்பெண் போட்டிட முடியுமென நினைக்கிறன் !இங்கே ஒரு கொசுறு செய்தியும் கூட...! நான் சிவகாசியிலிருந்து கிளம்பியது 10 நாட்களுக்கு முன்னர் என்பதால் உள் இன்னர் பக்கங்கள் அச்சான போது மட்டுமே பார்க்க முடிந்தது. Complete ஆன முழு இதழை நான் இன்னமும் பார்க்கவில்லை ! So இன்னமும் இதழ் கைக்குக் கிடைக்கப் பெறாத நண்பர்கள் கொஞ்சம் ஆறுதல் கொண்டிடலாமே - துணைக்கு நானும் இருக்கிறேன் என்று!!


சிவகாசியில் ஆண்டுக்கு மூன்று பொங்கல்கள் கொண்டாடுகிறோம் என்பது நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் ! தைப் பொங்கல் எப்போதும் போல் ; பங்குனியில் அம்மன் கோவில் பொங்கல் ; மூன்றாவதாய் சித்திரையில் இன்னுமொரு அம்மன் கோவில் பொங்கல் என்று சிவகாசியே திருவிழா கோலத்தில் தற்போது உள்ளது ! ஞாயிறு துவங்கி புதன் முடிய விடுமுறைகளே எங்களுக்கு.இருப்பினும் எங்களது ஊழியர்கள் பைண்டிங்கில் இருந்து வந்திட்ட முதல் batch பிரதிகளை அனுப்பிடும் பொருட்டு வேலைக்கு வந்திருந்தனர் ! நம் வாசகர்களில் பெரும்பான்மைக்கு என்னைத் தெரியுமோ இல்லையோ..எங்களது நிறுவனத்தில் 35 + ஆண்டுகளாய்ப் பணியாற்றிடும் ராதாக்ருஷ்ணன், குரல் அளவிலாது உங்களில் அனைவருக்கும் பரிச்சயமானவர் என்பது நான் அறிவேன் ! எதற்கும் அயராத இவரோடு பணியாற்றுவது சமீபத்திய addition ஆன Ms ஸ்டெல்லா மேரி ! பணியில் ஆர்வமும் ; சலிப்பின்றி தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லிடும் நேர்த்தியும் இந்த சின்னப் பெண்ணின் பிளஸ் points ! அத்தோடு தயாரிப்புப் பணிகளின் பக்கம் சர்வமுமாய் இருந்திடும் மைதீன் எங்களது மிகப் பெரிய பலம் ! கதைகளை அச்சுக்கோர்வை செய்திடும் கம்ப்யூட்டர் டிசைன் ஆர்டிஸ்ட்களை தாஜா செய்து பணிகளை முடித்துக் கொண்டு வருவதில் துவங்கி..அச்சுப் பிரிவினில் வேலை வாங்கி ; பைண்டிங்கிற்கு நடையாய் நடந்திடுவது என்று இவர் ஒரு ஆல்-இன் -ஆல் அழகுராஜா !அவர்களுக்கு நிச்சயம் உங்கள் பாராட்டுகளில் பெரும் பங்கு சாரும் !

நாளை (வியாழன்) அடுத்த batch பிரதிகள் அனுப்பிடுவோம் ! நிச்சயம் இவ்வார இறுதிக்குள் அனைவருக்கும் இதழ்கள் கிடைத்து விடும் ! (அயல்நாட்டு வாசக நண்பர்களுக்கு முதல் batch-ன் போதே அனுப்பியாகி விட்டது ) !கொஞ்சம் கொஞ்சமாய் புதுப் பாணிக்கு..தயாரிப்புகளுக்குப் பரிச்சயமாகி வருகின்றோம் நாங்கள்.விரைவில் பைண்டிங் தாமதங்களை கட்டுக்குள் கொண்டு வந்திட்டால், ஒரே நாளில் அனைவருக்கும் இதழ் அனுப்பிட சாத்தியமாகிடும் !  அந்நாள் நிச்சயம் தொலைவில் இல்லை !

அப்புறம், வண்ணத்தில் காமிக்ஸ் பற்றி Youtube பதிவோடு Tamil Comics Lover எழுதி இருந்தார் !  2008 -ல் upload செய்திடப்பட்ட வீடியோ அது என்பதைக் கவனிக்க முடிந்தது. ! சந்தேகமின்றி கவலை தரும் விஷயமே ! இந்தத் தயாரிப்புகள் பற்றி முழுதாய் விபரம் தெரிந்திடாமல் நான் இப்போது சொல்லிடும் எந்தக் கருத்தும் பொருத்தமாய் இருந்திடாது ! So ஊருக்குத் திரும்பிய பின்னர் இது பற்றி நிச்சயம் விசாரித்திடுவேன் ! அது வரை கொஞ்சம் பொறுமையாய் இருப்போமே..ப்ளீஸ் ?

இங்கே எக்கச்சக்கமான இயக்கங்கள் (லார்கோ நற்பணி ; சூப்பர் ஹீரோஸ் மன்றம் ; டைகர் அணி ) உருவாகி இருக்கும் அழகை ரசிக்காது இருக்க முடியவில்லை ! கள்ள வோட்டும் போட்டு விட்டு அதை ஒப்புக் கொள்ளும் அந்த நல்ல உள்ளங்களின் ஆர்வத்திற்கு நிச்சயம் பலனில்லாது போகாது :-) விரைவில் சில அதிரடி அறிவிப்புகள் இது சம்பந்தமாய் வந்திடும் !  பொறுத்திருந்து பாருங்களேன் !

அடுத்தடுத்து கூடுதல் விலையில் இதழ்கள் வந்திடுவது ஒரு சிரமத்தை உண்டாக்குமா ; இல்லையா என்ற கேள்வியினை தொடரும் நம் இதழ்களிலும் எழுப்பிடவிருக்கிறேன் ! இன்னும் கொஞ்சம் புதிய சந்தாக்கள் சேகரிக்க முடிந்திடும் பட்சத்தில் ஆண்டொன்றிற்கு எங்களால் கணிசமான அளவு இதழ்களை வெளியிட முடியுமென்ற நம்பிக்கை எனக்குள் திடமாய் உள்ளது ! "Gift a Subscription" என்ற பாணியில் உங்களுக்குப் பரிச்சயமானவர்களுக்கு நீங்கள் சந்தா செலுத்திடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாமா என்ற எண்ணமும் உள்ளது ! தட்டுத் தடுமாறிக் கிடந்த நம் காமிக்ஸ் தற்சமயம் எட்டிப் பிடித்திருக்கும் ஒரு வேகத்தை தொய்வின்றித் தொடர்ந்திட உங்கள் உதவி எப்போதையும் விட இப்போது தேவை நண்பர்களே ! உங்கள் ஆர்வத்தை exploit செய்து கல்லா கட்ட நினைக்கிறோமென்று தவறாய் எண்ணிட மாட்டீர்களென்ற நம்பிக்கையில் உங்கள் முன் கோரிக்கையினை வைக்கின்றேன் !

உங்களின் பாக்கெட்டுக்கு சேதாரத்தை சற்றே மட்டுப்படுத்திட வேண்டுமெனில் லார்கோ வின்ச் ; லக்கி லூக் ; டைகர் ; சிக் பில் போன்ற கதைகளை ஒற்றை இதழாய் வெளியிட்டால் குறைந்த பட்சம் Rs .45 - என்று விலை நிர்ணயம் செய்திட முடியும். 48  முழு வண்ணப் பக்கங்கள் பிளஸ் கொஞ்சமாய் கறுப்பு வெள்ளை பக்கங்கள் இருந்திட முடியும் அப்படிப்பட்டதொரு இதழில் ! அட்டைப்படம் சற்றே மெல்லிய அட்டையில் வந்திடும். இந்த option ஓ.கே என்று நினைத்தால் மாதம் ஒரு இதழ் என்பது சுலபமாய் சாத்தியமே ! ஒரு trial பார்ப்போமா அது போல ?இதில் ஒரே சிக்கல் என்னவென்றால் லார்கோ வின்ச் தொடரில் அனைத்துக் கதைகளுமே இரு பாகங்களில் நிறைவுறும் ரகம் ! So ஒற்றை இதழாய் லார்கோவை வெளியிடும் பட்சத்தில் கதை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் - இரண்டாம் பாகம் மறு மாதம் வந்திடும் வரை ! So லார்கோ மட்டும் சிங்கள் சிங்கமாய் வந்திடாமல் doubles அடிக்க அவசியப்படும் ! அப்புறம் புதிதாய் இன்னும் சில கதைத் தொடர்களைத் துரத்திச் சென்று கொண்டிருக்கிறேன்...! இவ்வாண்டின் பாக்கி இதழ்கள் அனைத்தையும் பிளான் செய்து முடித்த பின்னர் புதுத் தொடர்களை 2013 -க்கு அதிரடியாக வைத்துக் கொள்ளலாமென்று திட்டம் ! So வாண வேடிக்கைகள் தொடரும் !!

'என்ன எழுதினேன் ?' என்று தெரியாமலே இத்தனை நேரம் ஏதேதோ எழுதி இருக்கிறேன் ! நாளைக் காலை இதை நானே படிக்கும் போது அசடு வழியப் போகிறேனா தெரியவில்லை ! முன்னமே சொன்னது போல் இது ஒரு light  hearted பதிவு மட்டுமே ! Take care guys !

 

89 comments:

 1. Mr. Radhakrishnan is a familiar voice to me for the past 10+ years and recently all my calls were answered by a very polite and professional young lady. Now thanks to your post I know her name also. Thank you for mentioning about them in your post. My compliments to both of them for their dedication and hard work.

  ReplyDelete
 2. My wish is that one day the XIII Jumbo special should be re-issued in full color. Is this possible?

  ReplyDelete
  Replies
  1. Well...let me reply this way : Nothing's impossible when I have such passionate comics lovers right behind me !

   Delete
  2. தூள் கிளைபீடிங்க. மிகவும் நன்றி

   Delete
 3. >> அப்புறம் புதிதாய் இன்னும் சில கதைத் தொடர்களைத் துரத்திச் சென்று கொண்டிருக்கிறேன்...!

  Thorgal perhaps? :)

  ReplyDelete
  Replies
  1. You'll have to keep guessing for some time ....until I tie down the rights ! :-)

   Delete
 4. Sir kathaikal anaithum
  ippothu pola
  RS.25
  RS.50
  RS.100
  enkira vilaiyil veliyidunkal
  LARGO TIGAR TEX kathaikalai pirikkamal ore book la podunkal!

  ReplyDelete
 5. RS.45
  RS.48
  vilaiyil
  trial lum vendam poriyalum vendam ippothu pola tharamana book podunkal!

  ReplyDelete
  Replies
  1. //ட்ரையலும் வேண்டாம், பொரியலும் வேண்டாம்!//
   :)

   Delete
 6. LORGO vai enakku romba pidichirukku...

  ReplyDelete
 7. லார்கோவை நானும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைவதோடு, புதிய தொடர்களையும் கொண்டுவர வாழ்த்துக்கள்.
  -Theeban (SL)

  ReplyDelete
 8. //"வசந்த காலத்து ஐரோப்பாவின் அழகே அழகு" என்று நான் ஆரம்பித்தால்//
  இன்னும் கொஞ்சம் விரிவாகவே எழுதி இருக்கலாம்! நீங்கள் தனியே பயணக் கட்டுரைகள் எழுதினால் என்ன?

  //"முத்து காமிக்ஸ் Surprise ஸ்பெஷல்" கிடைக்கப் பெற்ற நண்பர்கள் அட்டகாசமாய் review செய்து வருவதை படித்திடும் போது மனதுக்கு நிறைவாக இருந்தது//
  கிடைக்காமலும் சில பேர் 'preview' எழுதி வருகிறார்கள் ;) எனக்கு எப்போது கிடைக்கும் என தெரியவில்லை :( கிடைத்த உடனே review நிச்சயம்!

  //எதற்கும் அயராத இவரோடு பணியாற்றுவது சமீபத்திய addition ஆன Ms ஸ்டெல்லா மேரி !//
  நிச்சயமாக! அவருடைய பொறுமையான, நம்பிக்கையூட்டும் பதிகளுக்கு நான் விசிறி! முத்து அலுவலகத்தில் ஸ்டெல்லா - ஜானி நீரோக்கு ஒரு tribute-தான்!

  **ராதாக்ருஷ்ணன் / ஸ்டெல்லா மேரி / மைதீன்**
  உங்கள் அலுவலகர்களை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி! ஓவியருக்கும், பெயருடன் ஒரு intro கொடுங்கள்!

  //குறைந்த பட்சம் Rs .45 ... அட்டைப்படம் சற்றே மெல்லிய அட்டையில் வந்திடும்//
  ஐந்து ரூபாய் அதிகமாக நிர்ணயித்து கெட்டி அட்டை போடுங்கள்... ப்ளீஸ்! புத்தக சேகரிப்பாளர்களுக்கும், புத்தகத்தை நேசிப்பவர்களுக்கும் இது வசதியாக இருக்கும்!

  //ஒற்றை இதழாய் லார்கோவை வெளியிடும் பட்சத்தில் கதை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்//
  லார்கோவுக்கு விதிவிலக்கு அளித்திடுங்கள்! ஒரிஜினல் பார்மட்டில், இரட்டை பாகங்களாக, மற்ற திகில் போன்ற இதழ்களின் இலவச இணைப்பு இன்றி ஒரே இதழாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்!

  ReplyDelete
 9. //உங்களின் பாக்கெட்டுக்கு சேதாரத்தை சற்றே மட்டுப்படுத்திட வேண்டுமெனில் லார்கோ வின்ச் ; லக்கி லூக் ; டைகர் ; சிக் பில் போன்ற கதைகளை ஒற்றை இதழாய் வெளியிட்டால் குறைந்த பட்சம் Rs .45 - என்று விலை நிர்ணயம் செய்திட முடியும். 48 முழு வண்ணப் பக்கங்கள் பிளஸ் கொஞ்சமாய் கறுப்பு வெள்ளை பக்கங்கள் இருந்திட முடியும் அப்படிப்பட்டதொரு இதழில் ! அட்டைப்படம் சற்றே மெல்லிய அட்டையில் வந்திடும். இந்த option ஓ.கே என்று நினைத்தால் மாதம் ஒரு இதழ் என்பது சுலபமாய் சாத்தியமே ! ஒரு trial பார்ப்போமா அது போல//  மெல்லிய அட்டை கண்டிப்பாக வேண்டாம்.  //அடுத்தடுத்து கூடுதல் விலையில் இதழ்கள் வந்திடுவது ஒரு சிரமத்தை உண்டாக்குமா ; இல்லையா என்ற கேள்வியினை தொடரும் நம் இதழ்களிலும் எழுப்பிடவிருக்கிறேன் //

  இங்கே நிறைய பேர் பிறர் வாங்குவதற்கு விலைகள் குறைவான இதழ்களும் வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.அவர்களது நல்லெண்ணத்திற்கு நன்றிகள்.சிறு வயதில் நானும் வீட்டில் சுட்ட பணத்தில் கஷ்டப்பட்டு வாங்கியுள்ளேன்.என் தந்தை எனக்கு வேண்டிய எதையும் நிறைவேற்றி தருவார்.ஆனால் கதை புத்தகங்களுக்கு தயக்கம் காட்டுவார்.ஆனால் பஞ்ச தந்திர கதைகள் போன்ற புத்தகங்களுக்கு எவ்வளவு செலவானாலும் கவலை பட மாட்டார் .காமிக்ஸின் தரம் பற்றி அவருக்கு தெரியாது .அவ்வளவுதான் .ஆனால் இப்போது நமது காமிக்ஸ் படிப்பவர்கள் அனைவரும் வாங்க கூடிய நிலையில் இருப்பிர்கள் என நம்புகிறேன்.எனவே சிரமம் பாராது புத்தகம் படிக்கும் அனைவரும் ஒரு அஞ்சல் அட்டையில் உங்களுக்கு இது சம்மதமா என (100 ரூபாய் /மாதம் அல்லது 45 /மாதம் அல்லது 10 ரூபாய் இதழ்களும் தேவை ) என அலுவலகத்திற்கு பதிலனுங்களேன்.ஏனனில் அனைவரும் பிறரையும் சார்ந்து படிக்க வேண்டிய நிலையில்தான் உள்ளோம்.ஒருவர் வாங்க இயலாவிடினும் பாதிப்புதான்.புதிய சந்தாதாரர்களும்தேவை எனும் நிலையில் ஒருவரை கூட இழக்க முடியாது.எதனை பேரிடம் நெட் இணைப்பு இருக்குமோ தெரியாது ,ஆகவே அனைவரும் புத்தகம் படிப்பவர் ஒருவர் கூட விட்டு போகாமல் அனுப்பி வைத்தால் ஆசிரியருக்கு எளிதாக இருக்கும் என கருதுகிறேன் .உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்களே நிர்மாணித்து கொள்ளுங்கள்.


  //சிவகாசியில் ஆண்டுக்கு மூன்று பொங்கல்கள் கொண்டாடுகிறோம் என்பது நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் ! தைப் பொங்கல் எப்போதும் போல் ; பங்குனியில் அம்மன் கோவில் பொங்கல் ; மூன்றாவதாய் சித்திரையில் இன்னுமொரு அம்மன் கோவில் பொங்கல் என்று சிவகாசியே திருவிழா கோலத்தில் தற்போது உள்ளது ! ஞாயிறு துவங்கி புதன் முடிய விடுமுறைகளே எங்களுக்கு.இருப்பினும் எங்களது ஊழியர்கள் பைண்டிங்கில் இருந்து வந்திட்ட முதல் batch பிரதிகளை அனுப்பிடும் பொருட்டு வேலைக்கு வந்திருந்தனர் ! நம் வாசகர்களில் பெரும்பான்மைக்கு என்னைத் தெரியுமோ இல்லையோ..எங்களது நிறுவனத்தில் 35 + ஆண்டுகளாய்ப் பணியாற்றிடும் ராதாக்ருஷ்ணன், குரல் அளவிலாது உங்களில் அனைவருக்கும் பரிச்சயமானவர் என்பது நான் அறிவேன் ! எதற்கும் அயராத இவரோடு பணியாற்றுவது சமீபத்திய addition ஆன Ms ஸ்டெல்லா மேரி ! பணியில் ஆர்வமும் ; சலிப்பின்றி தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லிடும் நேர்த்தியும் இந்த சின்னப் பெண்ணின் பிளஸ் points ! அத்தோடு தயாரிப்புப் பணிகளின் பக்கம் சர்வமுமாய் இருந்திடும் மைதீன் எங்களது மிகப் பெரிய பலம் ! கதைகளை அச்சுக்கோர்வை செய்திடும் கம்ப்யூட்டர் டிசைன் ஆர்டிஸ்ட்களை தாஜா செய்து பணிகளை முடித்துக் கொண்டு வருவதில் துவங்கி..அச்சுப் பிரிவினில் வேலை வாங்கி ; பைண்டிங்கிற்கு நடையாய் நடந்திடுவது என்று இவர் ஒரு ஆல்-இன் -ஆல் அழகுராஜா !அவர்களுக்கு நிச்சயம் உங்கள் பாராட்டுகளில் பெரும் பங்கு சாரும் //


  கண்டிப்பாக ராதாக்ருஷ்ணன் அவர்கள்,நான் மூன்று முறை அலுவலகத்திற்கு வந்த போதும் ,நேரம் தவறிய போதும் அலுவலகத்தை திறந்து எவ்வித தயக்கமும் இன்றி பனி புரிந்தது எனக்கு வியப்பே .நல்ல மனிதர் .அந்த சிறிய பெண்மணியும் புத்தகம் வரவில்லை என்றதும் ,கொரியரில் அனுப்பி வைத்ததும்,பிறகு புத்தகம் இரண்டு வந்து விட்டதை தெரிவித்தவுடன் ,பரவாயில்லை திருப்பி அனுப்பிவிடுங்கள் என கூலாக பதிலளித்த விதமும் சந்தோசமே .நிதமும் போன் செய்து புத்தகம் வரவில்லை என கூறினாலும் ,சலிக்காமல் பதில் கூறுவார் .

  ReplyDelete
 10. ட்ரையல்லாம் வேண்டாம். இப்போ வருகிறதே தொடரலாம்

  ReplyDelete
 11. டியர் ,தல , தயவு செய்து லார்கோ வை கொத்து பரோட்டா ஆகவேண்டாம் . முழுமையாகவே வெளியிடுங்கள் .கூடவே black &white ல் சிக்பில் or உங்கள் மேஜை டிராயரில் தூங்கும் பழைய ரிப்கிர்பி or other ஹீரோஸ் யை இணை து வெளியிடலாம் .சார் , ஒரு கேள்வி தயவு செய்து தவறாக நினைகவேண்டம். முன்பு எதோ ஒரு காமிக்ஸ் ல் பேர் நியாபகம் இல்லை ,காமிக்ஸ் cd போட்டு விற்பவர்கள் மீது சட்டறேதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னிர்கள் . இப்போது அவர்கள் கலர் பிரிண்டர் அளவுக்கு develop ஆகிவிட்டார்கள் . அவர்களுக்கு எதிராக இன்னும் solidaga எழுத வில்லை .ஏன் சார் . அவர்களை திருத்த முடியாது என்றா? அதனால் நம் தீவிர காமிக்ஸ் வாசகர்கள் நிறைய பணத்தை இழந்தது தங்களுக்கு தெர்யுமா சார் ? மேலும் என் நண்பர் இப்படி கலர் காமிக்ஸ் வாங்குபவர் அவர் இடம் வாங்காதே என்று சொன்னபோது அவர் சொன்ன தகவல் அதிர்ச்சி யா இருந்தது .அப்படி இருக்காது என்று உறுதியாக நம்பினாலும் தங்கள் இடம் தெரிவித்து விடலாம் என்றே நான் பதிவு செய்கிறேன் .உங்கள் எடிட்டர் ரே , சமிப காலமாக copy wright வாங்காமல் தான் லக்கி luke , மற்றும் சில காமிக்ஸ் வெளியிடுகிறார் , மற்றும் தெகில் காமிக்ஸ் reprint கூட அவர் இடம் காமிக்ஸ் இல்லாமல் எங்களை மாதிரி ஆட்கள் இடம் வாங்கித்தான் வெளியிடுகிறார் என்றார் . நான் நம்பவில்லை .ஆனால் இப்படி ரூமர் பரவி வருகிறது . தங்கள் இடம் தெரிவித்து விட்டேன் .தவறா இருந்தா மன்னிச்சு .

  ReplyDelete
  Replies
  1. லூசு பையன் : "அவர்கள்" சொன்ன தகவலை சந்தேகமாய் மனதில் வைத்திடாமல் இங்கே கேள்வியாய் எழுப்பியமைக்கு நன்றிகள் ! லக்கி லூக் & இதரக் கதைகள் ஒவ்வொன்றிற்கும் எங்கள் வசம் சட்ட ரீதியான contract மற்றும் பதிப்பகத்தார்களின் invoice -ம் உள்ளது. இன்றைய இன்டர்நெட் உலகில், நாங்கள் உட்டாலக்கடி வேலை செய்வதாக இருப்பின் மாட்டிக் கொண்டிட அதிக நேரம் பிடிக்காது ! முறையாக ஒரு வலைத்தளம் + இந்த வலைப்பதிவு நடத்திடும் போது என் மடியில் கனம் கொண்டும் பயணிக்க இயலாது. நானும் திருட்டு VCD பாணியில் தான் இதழ்களை விற்பனை செய்திட வேண்டும். இன்றைக்கும் நமது பதிப்பகத்தினரை சந்தித்திடும் போது நட்பான வரவேற்பு எனக்குண்டு. அதனை பாழ் பண்ணிடும் அபிப்ராயம் எனக்குக் கிடையவே கிடையாது.

   அப்புறம் "திகில்" மறுபதிப்பிற்கு நம் பழைய இதழ்களை ஸ்கேன் செய்து கொடுத்தது Dr சதீஸ் என்று நானே தலையங்கத்தில் acknowledge செய்துள்ளேன். எங்களிடம் உள்ள பிரதி சுமாரான தரத்தில் இருந்ததால் அவரிடம் இருந்த நல்ல இதழில் இருந்து உயர் resolution -ல் ஸ்கேன் செய்து கொடுத்திருந்தார்.

   உங்களிடம் இந்த கலர் காமிக்ஸ் (CD யோ : பிரிண்டர் பதிப்போ ) இருந்திட்டால் தயை கூர்ந்து எனக்கு அனுப்பிடலாமே ?? அதே போல் உங்களிடம் பேசியது யாரென்பது பற்றியும் எனக்கு ஒரு இ-மெயில் அனுப்பிடலாமே - ப்ளீஸ் ?

   Delete
  2. இதே பிரச்சனை தான் சார் அப்போதும் இப்போதும் பரவி வருகிறது. ஒரே ஒரு scanner மற்றும் பிரிண்டர் வைத்து கொண்டு அனைத்து இதழ்களையும் ஸ்கேன் செய்து அதிக சாரி கொள்ளை விலைக்கு விற்பனை செய்த லிஸ்ட் இல் நமது ப்ளாக் இல் கமெண்ட் போட்டவர்களும் உண்டு. சினி புக் உபயத்தில் புது காமிக்ஸ் போட்டவர்களும் பலர் உண்டு. அப்படி போட்ட ஒவ்வொரு புத்தகமும் 1000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை ஆனது தான் கொடுமை. அனைவரையும் குற்றம் சொல்ல வில்லை.ஆதாரம் அந்த யு tube வீடியோ வை விடவும் கூடுதலாக வேண்டுமா என்ன? இன்னும் இதே போல பலரும் உண்டு. எனினும் இன்னும் அந்த கலர் புத்தகம் இருக்குமா என கேட்கும் நமது காமிக்ஸ் அன்பர்களும் உள்ளனர். நிலைமை இப்படி இருக்க 100 ரூபாய் இதழ் அடிக்கடி வெளியிட நீங்கள் தயங்குவது தான் இன்றைய வாசகர்களின் நிதர்சனமான நிலை. லூசு பையன் சொன்ன வதந்தி எங்கள் காதுகளுக்கும் வந்தது. விளக்கத்திற்கு நன்றி. லார்கோ சூப்பர், மொழி பெயர்ப்பு ஆங்கில பதிப்பினை விடவும் கதையுடன் மிகவும் ஒன்ற வைத்தது. really superbbbbbb. நன்றிகள் பல. சில பசுந்தோல் போர்த்திய புலிகள் தற்போது பதுங்குவது தான் உங்கள் ப்ளாக் இன் வெற்றிக்கு அடையாளம். புத்தக ப்ரியன்

   Delete
  3. //இதே பிரச்சனை தான் சார் அப்போதும் இப்போதும் பரவி வருகிறது. ஒரே ஒரு scanner மற்றும் பிரிண்டர் வைத்து கொண்டு அனைத்து இதழ்களையும் ஸ்கேன் செய்து//

   ஐய்யய்யோ! உங்களுக்கு விஷயமே தெரியாதா? ஒரே ஒரு scanner மற்றும் பிரிண்டர் மற்றும் இருந்தால் போதாது. ஸ்கேன் செய்ய புத்தகமும் வேண்டும்.

   //அதிக சாரி கொள்ளை விலைக்கு விற்பனை செய்த லிஸ்ட் இல் நமது ப்ளாக் இல் கமெண்ட் போட்டவர்களும் உண்டு.//

   டீச்சர் டீச்சர் இந்த பையன் என் பென்சிலை உடைச்சிட்டான். அவன் கூட மத்த பேட் பாய்ஸ் லாமும் இருக்காங்க. அவுங்க பேரை சொன்ன என்னை அடிப்பாங்க.

   //சினி புக் உபயத்தில் புது காமிக்ஸ் போட்டவர்களும் பலர் உண்டு.//

   எனக்கு இங்கிலீஷ் தெரியாததால் நான் சினி புக் படிப்பதில்லை.

   //அப்படி போட்ட ஒவ்வொரு புத்தகமும் 1000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை ஆனது தான் கொடுமை//

   நான் ஐநூறு ரூபாய் வரை கொடுக்க தயாராகத்தான் இருந்தேன்.

   //அனைவரையும் குற்றம் சொல்ல வில்லை.//

   ஒரு சிலரை மட்டும் தான் நான் குறிவைத்து சொல்கிறேன்.

   //ஆதாரம் அந்த யு tube வீடியோ வை விடவும் கூடுதலாக வேண்டுமா என்ன?//

   ச்சே ச்சே வேற ஒன்னுமே வேண்டாம்

   //இன்னும் இதே போல பலரும் உண்டு//

   டீச்சர் டீச்சர் - ரிப்பீட்டு.

   //எனினும் இன்னும் அந்த கலர் புத்தகம் இருக்குமா என கேட்கும் நமது காமிக்ஸ் அன்பர்களும் உள்ளனர்//

   நான் கூட வாங்க ரொம்ப ட்ரை செய்தேன். ஆனால் விலை தான் கொஞ்சம் அதிகமாக சொன்னார்கள்.

   //லூசு பையன் சொன்ன வதந்தி எங்கள் காதுகளுக்கும் வந்தது//

   உங்கள் காதுகளுக்கா? அப்போ நீங்க தனிஆள் இல்லையா?

   //லார்கோ சூப்பர், மொழி பெயர்ப்பு ஆங்கில பதிப்பினை விடவும் கதையுடன் மிகவும் ஒன்ற வைத்தது. really superbbbbbb. நன்றிகள் பல.//

   அப்பாடா. காமிக்ஸ் பற்றி ஏதாவது சொல்லிவிட்டால் நாம் சொன்னதெல்லாம் சரிஎன்று எல்லாரும் ஒத்துக்கொள்வார்கள். [ரகசியமாக] - காமிக்ஸ் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை..

   //சில பசுந்தோல் போர்த்திய புலிகள் தற்போது பதுங்குவது தான் உங்கள் ப்ளாக் இன் வெற்றிக்கு அடையாளம்.//

   அடச்சே! தமிழ் காமிக்ஸ் உலகில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும், ஆசிரியரின் நடையும் தான் இந்த ப்ளாக் இன் வெற்றிக்கு அடையாளம் என்று தான் சொல்ல வந்தேன். ஆனால் டைபிங் மிஸ்டேக் கால் இப்படி வந்துவிட்டது.

   Delete
  4. டீச்சர் டீச்சர் ,எங்க அப்பன் குதிர் குள்ளே இல்ல டீச்சர் ,புத்தக பிரியன் கமெண்ட் போட்டு 3 நாள் கழித்து நான் கிண்டல் செய்வ தக்கு காரணம் நான் தூங்கிட்டேன் டீச்சர் ,இல்ல இல்ல புனை பெயர் வெய்பதற்கு நாள் ஆய் டிச்சு டீச்சர்.கேவலமா இல்ல ,வெக்கமா இல்ல , அது சரி அது எல்லாம் இருந்தா உங்களை மா திரி கேவலமான பிறவிகள் , அடுத்தவ ங்களோட காமிக்ஸ் ஆர்வ த்தை use பண்ணி கலர் காமிக்ஸ் போட்டு ஏன் கல்லா கட்ட போறீங்க . அப்புறம் என்னங்க ஸ்கேன் பண்ண புக் தேவையா? இந்தா டா கண்டுபிடிப்பு , பரிசு கொடுத்து விடலாமா ? பழைய காமிக்ஸ் புக் collecters இடம் இருந்து ஒரு புக் 200 ரூபா வுக்கு வாங்கி அதை கலர் இல் போடுவதற்கு பேர் என்ன ? உங் க லந்து , கேவலமான கமெண்ட் எல்லாம் face புக் ஓட நிறுதிகிங்க. எங்க editer ன் ப்ளாக் க்கு வந்து அசிங்கம் பண்ணாதிங்க . இனிமேல் நீ எவளவு கேவலமா கமெண்ட் போட்டாலும் நான் reply செய்ய போவது கிடையாது , ஆ மா , இந்த கலர் காமிக்ஸ் புரோக்கர் வேலை தான் முழு நேர தொழிலா? இல்ல பொழப்புக்கு வேற மாதிரி புரோக்கர் வேலை யும் பார் ப்பது உண்டா! அடுத்தவங்க weekness வெய்து சம்பாதிப்பது ஒரு பொழப்பு , த்தூ ................

   Delete
 12. November or december L
  "XIII oru pulan visaranai" veliyidalame!

  By
  pasa thalaivan
  XIII pasarai!

  ReplyDelete
 13. மீண்டும் ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு வித்திட்டு உள்ளீர்கள் அய்யா! கண்டிப்பாக இன்றும் நூறு ரூபாய் என்பது எளிதில் எட்டி தொட முடியாத சமாச்சாரம்தான்! இருபத்தெட்டு ரூபாய்தான் வறுமை கோட்டுக்கு இலக்கணம் என்னும் நாட்டில், எளிய ரசிகர்கள் இதில் பாதிக்க பட வாய்ப்புள்ளது. உமது கருத்து சரியே! எங்கோ ஒரு சில புல்லுருவிகள் செய்யும் சித்து வேலைகளும் தங்களது சரியான இடைவெளிகளில் கொண்டு வரும் நூல்களால் கண்டிப்பாக மூட்டையை கட்டிக்கொண்டு திருட்டு விசிடி பக்கம் கிளம்பி விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு! அடிக்கடி இருபத்தைந்து ரூபாய் புத்தகங்களும் எப்போவாவது நூறு ரூபாய் புத்தகங்களும் முடிந்தவரை விலை குறைவான நூல்களையும் விரும்பும் வாசகர்கள் தங்கள் கருத்தை தபாலில் தெரிவிக்க ஒரு பக்கம் முயற்சித்து வருகிறார்கள். பிழை இருப்பின் மன்னிக்கவும்!

  ReplyDelete
  Replies
  1. dear ஜான் , நீங்கள் எளிய ,ஏழ்மையான வாசகர்கள் க்கு fell செய்வது நியாயம் தான். but இப்பொது காமிக்ஸ் படிப்பது நம்பள மாதிரி 30 + தான் . இப்போது தான் காமிக்ஸ் கரெக்ட் ஆக உயர்ந்த தரதில் வருகிறது . திரும்ப பழைய மாதிரி வேண்டும் என்கிறாயே நியாயமா நண்பா ?

   Delete
 14. விடிய விடிய உங்களது பதிவை பார்த்துக்கொண்டிருந்தாலும் கண் இமைக்கும் கேப் ல பதிவை போட்டு போய்டீங்களே சார், இந்த முறையும் மீ த முதல் போட முடியவில்லை. ;((((

  ReplyDelete
 15. சார்,
  மற்றும் ஒரு வேண்டுகோள்.
  சந்தாதாரர்களுக்கு என்று ஒரு identification நம்பர் இருந்தால் புக் அனுபினோமா இல்லையா என்று தெரிந்துகொள்ள முடியும்.
  மற்றும் அந்த நம்பர் எங்களுக்கும் தெரிந்தால் அதனை கூறி விவரம் அறிந்துகொள்வோம்.

  என்னக்கு இன்னும் புக் கிடைக்கவில்லை.
  நான் போன வாரம் தான் சந்தா செலுத்தினேன்.
  நான் போன் செய்து சென்னை புத்தகங்கள் அனைத்தும் அனுப்பியகிவிட்டதா என்று தான் கேட்க முடிந்தது.

  உங்கள் கருத்தை கூறுங்கள்.

  நன்றியுடன்
  கிருஷ்ணா வ வெ

  ReplyDelete
  Replies
  1. SMS Alert

   "Book dispatched " - "Your subscription amount received " - "அடுத்த வெளியீடு 'தங்க கல்லறை'" அப்படின்னு சந்தாதாரர்களுக்கு sms அனுப்பி கலக்கலாம்.

   Delete
 16. ''நான் தண்டா லார்கோ'' ன்னு பேர் வெச்சு இருந்த சூப்பரா இருக்கும்.முட்டு சந்துல கார் பாம் வச்சது லார்கோவாக தான் இருக்கும்.........''யாதும் ஊரே யாவரும் மகளிர்'' ...ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி......சுவையோ சுவை அருஞ்சுவை ........

  ReplyDelete
 17. வேணாம், முடியல, அழுதுடுவேன்...... இன்னும் புத்தகம் வரலப்பா..:-(

  ReplyDelete
 18. போங்க கார்த்தி ...விஞ்சை கிழவனா காட்டுன போது கண்ணுல தண்ணி வராத குறை தான்...... அப்புறமா மேல படிச்சா பிறகு தான் மூச்சே வந்ததது ...எடுத்த வுடனே கிழட்டு விஞ்ச மண்டைய போட்ட சீனை படிகரவங்களுக்கு அப்ப எப்பிடி இருக்கும் ...........

  ReplyDelete
  Replies
  1. "யாரங்கே"

   "சொல்லுங்கள் அரசே"

   "உடனே நம் வடநாட்டு கைதிகளை 'மதியில்லா மந்திரி' வீட்டுக்கு அனுப்பி 'லார்கோ விஞ்ச' புத்தகத்தை ஒரு பிட்டு பேப்பர் கிழியாமல் பத்திரமாக களவாடி வரசொல்லுங்கள்"

   "உத்தரவு அரசே"

   Delete
  2. "புத்தகம் வந்து விட்டதாக அரண்மனையில் இருந்து சற்று முன்னர் தகவல் வந்துவிட்டதால் 'மதியில்லா மந்திரி' வீட்டில் களவாட சொன்ன உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது. இந்தமுறை பொழச்சிபோகட்டும் மதியில்லா மந்திரி"

   Delete
 19. இந்த ட்ரெண்டை ஆரம்பிச்ச சிம்பவுக்கு நன்றி
  இந்த மந்திரிக்கு புக் வரலைன்னா நொந்துடுவான்.. ஆனா அடுத்தவங்களுக்கு புக் வந்தா நொந்து நூடுல்ஸ் ஆயிடுவான் (நண்பன் டயலாக் )
  ‘’அடே அடிமையே ‘’
  ‘’எஸ் மாஸ்டர்’’
  ‘’இனிமே நமக்கு தான்புக் முதல்ல வரணும்கரத்துக்கு மூணு பிளான் இருக்கு’’
  ‘’வேண்டாம் மாஸ்டர் ‘’
  ‘’நோ .......
  ‘’பிளான் A ''பழி வாங்கும் பொம்மை'' வீட்டுக்கு போ ...சூலாயுதத்தை கடன் வாங்கு ஹருண் அல் குண்டு பாய்அரண்மனைக்கு போ( இப்போதைக்கு கார்த்தி) சர்ப்ரைஸ் ஸ்பெசல் புக்கை மறைய வை ….’’
  ‘’ஓகே எப்படி யூஸ் பண்றது மாஸ்டர்’’
  ‘’சூலாயுதத்தை இப்பிடி தலைகீழாய் பிடி .....’’
  ‘’மாஸ்டர்...எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க .........ஆசிரியர் கூட ‘’
  டூஷ்....டூஷ்

  ReplyDelete
  Replies
  1. மந்திரி நீர் என்ன கண்ணகியின் அடுத்த வாரிசா, அநியாயம், இன்று காலை என்னோட வீட்டுல நான் இல்லாத பொழுது எனது ஆருயிர் நண்பன், லார்கோ புத்தகத்தை தேட்டை போட்டு ஓடிட்டான்.

   இப்போதைக்கு நம்ம ஸ்டெல்லா மேடம் தாஜா செஞ்சு இன்னொரு புத்தகம் அனுப்ப பணித்துள்ளேன். :((

   Delete
  2. ''மாஸ்டர் வேண்டாம் மாஸ்டர் நேத்து தான் நீங்க சூலாயதத்தை தப்பா பிடுச்சு மறஞ்சு போனீங்க .....''
   ''விடுடா என்னை சிம்பா நண்பர் வீட்டு போய் நம்ப ஜகஜால தானதிய விக்கிரம பரிபூரண பரிபாலன வித்தையை காட்டிட்டு .....லார்கோவை நாம கூடியாந்துறலாம் ...அவருக்கு புக்க வாங்கவே தெர்ல எப்பிடி பாதுக்காக்க போறாரு....''

   Delete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. ’பிளான் C அடே அடிமையே ..’’
  ‘’எஸ் மாஸ்டர் ...’’ யாருக்காவது புக் கிடைகலேனு புலம்பினாலோ நமக்கு முன்னாடி வேற யாருக்கும் புக் கிடச்சலோ (என்ன தவிர்த்து ...... என்னை தவிர்த்து.....என்னை தவிர்த்து..........என்னை தவிர்த்து ......)இலவசமா ரெண்டு நாள் ரூம் போட்டு என்கிட்ட இருக்கற எல்லா வெஸ் ஸ்லேடு புக்கை நூறு வாட்டி படிக்க சொல்லுனும்.......

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. பிளான் B
  ''அடே அடிமையே ..''
  ''எஸ் மாஸ்டர் ...''
  ''இனிமே நமக்கு தான் புக் முதல்ல வரணும்கரத்துக்கு இரண்டாவது பிளான் இருக்கு ''
  ''வேண்டாம் மாஸ்டர் ...''
  ''நோ .......''
  ''சிவகாசிக்கு போ ....லயன் ஆபிஸ் முன்னாடி ஒரு ''புதிர் அரங்கம்'' போடு ...
  ''புது ஆர்ட் பேப்பர் வந்து இருக்குனு கூவு....''
  ''மொதல்ல மொய்தீன் வருவாரு..... அவர 'புதிர் அரங்கத்துக்குள்ள' அனுப்பு(அடே மடையா நீ உள்ள கூட்டிட்டு போயி வழி காட்டாதே )
  ''அப்புறம் ஸ்டெல்லா வருவாங்க ..''
  ''அப்புறம் ராதாகிருஷ்ணன் வருவாரு ......''
  ''அம்புட்டு பய புள்ளையும் காணோம்னு நம்ப விஜய மகாராஜா அயல் நாட்டு விண்ணில் இருந்து நம்ப மண்ணில் இறங்கி புதிர் அரங்கத்துக்குள போவாரு
  ''சரி மாஸ்டர்.....................................''
  ''உடனே முதல் காமிக்ஸ் நமக்கு தான் வரணும்னு கோரிக்கை வைக்க நாம உள்ள போறோம் ...........????????
  ‘’மாஸ்டர்...எல்லாரும் மீண்டும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க .........''

  ReplyDelete
  Replies
  1. மகா காமடி..... மதி இல்லா மந்திரி . நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு !.
   உள்ளே போனால் திரும்பி வர வழிதெரியாத "புதிர் அரங்கம்" குறித்த உண்மை தெரிந்தால் மட்டுமே ரசிக்க முடியும்

   Delete
  2. மகா காமடி..... மதி இல்லா மந்திரி . நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு !.
   உள்ளே போனால் திரும்பி வர வழிதெரியாத "புதிர் அரங்கம்" குறித்த உண்மை தெரிந்தால் மட்டுமே ரசிக்க முடியும்

   Delete
 24. டியர் தல , முதன் முதலாக என் பின்னுட திற்கு , பதில் அளித்தது மகிழ்ச்சி .நான் இன்னும் 2 வாரத்தில் தங்க ளை நேரில் வந்து சந்திக்கிறேன், ஆதரங்களோடு .....................~!

  ReplyDelete
 25. //So இன்னமும் இதழ் கைக்குக் கிடைக்கப் பெறாத நண்பர்கள் கொஞ்சம் ஆறுதல் கொண்டிடலாமே - துணைக்கு நானும் இருக்கிறேன் என்று!!//

  அப்பாடா நான் மட்டும் தனியாக என பயந்து போனேன் :) ஹீ ஹீ ஹீ நம்ம சார் எனக்கு கம்பெனி கொடுக்கிறார் :)

  நாகராஜன்

  ReplyDelete
 26. உங்களின் வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றியும், அங்கு கண்ட புதிய அச்சு இயந்திர தொழில் நுட்பத்தினையும், அதனை காமிக்ஸ் பிரிண்டிங்கில் பயன்படுத்துவீர்களா ? போன்ற வித்தியாசமான தகவல்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே ?.

  ரூ45 புத்தகம் வேண்டாம். ரூ50 தொடரட்டும். லார்கோவை கலரில் பார்த்ததிலிருந்து, கேப்டன் டைகரின் கதையை கலரில் பார்க்கும் ஆர்வம் மேலும் அதிகமாகியிருக்கிறது.

  காத்திருக்கிறோம்...

  ReplyDelete
 27. சார், இப்போதுதான் போல்ட்டா அடியை முன்வைத்து ஸ்டெடியா போறமாதிரியிருக்கு? அதற்குள் ஜகா வாங்கி விலையைக் குறைத்து சொதப்பிவிடாதீர்கள்..? மாதம் நூறு ரூபாய் என்பதெல்லாம் இப்போ ரொம்ம சர்வசாதாரணம்! நாங்கள் எதிர் பார்ப்பதெல்லாம் சர்வதேசதரத்தில் மிக பிரம்மாண்டமான இதழ்களே! தாங்கள் அறிவித்திருக்கும் மே - ஆகஸ்ட் schedule போல ஒவ்வொருமாதமும் எதிர்பார்க்கிறோம்.

  இப்போதெல்லாம் பள்ளி மாணாக்கள் எத்தனைப்பேர் காமிக்ஸ் படிக்கிறார்கள் என்பது கேள்வி? வாழ்க்கையில் செட்டில் ஆனவர்களே காமிக்ஸ் அதிகம் படிப்பதால் விலை ஒரு பொருட்டல்ல என்பது என் வாதம். ஆகையால் 'ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா என் பேச்சை நானே கேக்கமாட்டேன்' என்ற பஞ்ச் டயலாக்வோடு சிங்க நடைப் போட்டு சிகரத்தில் தாங்கள் ஏற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

  ReplyDelete
 28. லார்கோ வின்ச் ஒரு அட்டகாசமான, அலட்டல் இல்லது கதாநாயகர். ரசிக்ககூடிய சித்திரம்! முதன்முதலில் இந்த கதையை ஆங்கிலத்தில் படித்த பொழுது, இந்த கதையை தமிழில் படிக்கும் நாளை எதிர்பார்த்திருந்தேன். இதுவரை வந்தா 14 புத்தங்களில் 12டை படித்துவிட்டேன். மேலும் இரண்டை படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன். கூடிய விரைவில் அனைத்து கதைகளும் தமிழில் மொழிபயர்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். வருடதிக்கு 4 லார்கோ வின்சி கதைகள் வந்தால் நன்றாக இருக்கும். புதியா கதைகளை விரைவில் வெளிவரும் என்ற அறிவிப்பு ஆவலை தூண்டுகின்றது. அனைத்து வாசகர்களுக்கும் லார்கோ வின்சி கதைகள் பிடித்துவிட்டது என்று தெரிகின்றது, அதனால் குறைகளை பற்றி எங்கு பேச விரும்பவில்லை. எதார்த்தம் நிறைந்த சேடை போகத கதைகளை வாசகர்கள் விரும்புவர்கள் என்று தெரிகின்றது. அதனால், கூடிய விரைவில் இதுமாதிரி அல்லது இதை விட நல்ல சிறந்த கதைகள் வந்தால் நன்றாக இருக்கும். சிக்பில் மற்றும் லக்கி லுக்கு இணையான மற்றும் ஒரு நகைசுவை விருந்து வந்தால் நன்றாக இருக்கும். எடுத்துகாட்டாக bluecoats (நீலசட்டை). தோர்கள் பற்றி முதலிலே அறிவிப்பு வந்துவிட்டது, அதையும் விரைவில் எதிர்பார்க்கலாம். ஒரு எதிர்காலத்தில் நடக்கும் கதையையும் வெளியீடு செய்தால் நன்றாக இருக்கும். நம்முடைய வாசகர்களில் நிறையபேர்களுக்கு சிறந்த முறையில் மொழிமாற்றம் செய்யும் திறமை உள்ளது. நீங்கள் அவர்களை உபயோகபடுதளம். மாதம் இரு புத்தகம் வந்தால் நன்றாக இருக்கும். முதல் தேதி ஒரு புத்தகமும், பதினைந்து இரண்டம் புத்தகம். இது மாதிரி வெளிவந்தால் மாதம் முழுவதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். (வாரம் ஒரு புத்தகம் வந்தாலும்..... ).

  ReplyDelete
 29. நானும் பணம் அனுப்பி விட்டுக் காத்துக்கொண்டிருக்கிறேன் :( போன வாரம் phone பண்ணி இந்த வாரம் நான் கேட்ட அனைத்துப் புத்தகங்களையும் (லார்கோ உட்பட) அனுப்புவதாகச் சொன்னார்கள். இன்னும் வரவில்லை :(

  ReplyDelete
 30. Dear Editor,
  The current structure (10rs, 25rs, 100rs issues), that had been introduced for 2012 is PERFECT please do not change them atleast until for another year -- so that we will know whether this is Sucess or not.
  Gifting the subsriction is a very good idea and i had already gifted subscription to my relatives (who were adrent Muthu comics fans once but lost the interest, so trying to re-introduce our books to them).
  I love to see and proud to read the 100Rs issue, but i do miss our 10rs paper print issue - it knid of brings the nostalgia so please continue to release atleast few 10rs books in a year.

  - Karthikeyan

  ReplyDelete
 31. Editor sir,
  Just now noticed your profile picture, its simply superb a lion face thinking (worried) what to write... really funny kudos to the person who designed it.

  -Karthikeyan

  ReplyDelete
 32. இன்னும் எனக்கு லார்கோ வரலே ? முதலில் லார்கோ கிடை தவர்களை எங்க கருப்பு கிழவி உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறார் ,யார் வீட்டுக்கு போகலாம் என்று ! ஜாக்கிரதை ! ஸ்டார்ட் மியூசிக் lets rock with கருப்பு கிழவி .

  ReplyDelete
  Replies
  1. A warm welcome siva.saravanakumar ji!

   Delete
  2. நன்றி.....ஜான் சைமன் அவர்களே....

   Delete
  3. ஐய , என்னபா இது , என க்கு சூனியமா ? நாங்க எல்லாம் யா ரு? இளைய talapathi , டாக்டர் , நம்ப அணில் , இதிய தெய்வம் (வேற எதாவது பட்டம் இருந்தா அடுத்த பதிவில் கரெக்ட் okva ) விஜய் யோட ரசிகர் கள் .ஓடுற ட்ரெயின் யயே அப்படியே ஜஸ்ட் லைக் தட் நிறுத்தர ஆளுங்க . சொந்த செலவில் சூனியம் வச்சி கிட்டேன்களே. உங்க வீட்ல பழைய காமிக்ஸ் திருட 4 வட நாட்டு கொள்ளை கும்பலை arange செய்து இருக்கிறேன் . அரிசி மூட்டை க்கு அடி யில இருக்கிற காமிக்ஸ் யை பத்தி ர படுத்தி கிங்க மடியில சாரி மதியில ஆ முந்திரி சாரி மந்திரி அவர்களே .

   Delete
 33. காமிக்ஸ் நண்பர்கள் வட்டம் மிக பெரிது! அதன் முன் உண்மை மட்டுமே நிற்கும்! வெற்றி வாகை சூடும்! தங்களது லார்கோவின் வெற்றி ஓலங்கள் என் காதுகளில் தேன் மாரி பொழிகின்றன!
  நண்பர் திரு.நாகராஜன் சாந்தன் அவர்கள் இலவசமாக மீண்டும் கவனிக்கவும் இலவசமாக எனது போட்டோவுடன் வெளியான பெர்முடா படலம் புத்தகத்தை பெரிய மனது பண்ணி கொடுத்து உள்ளார்.
  இவரை போன்ற அன்பு உள்ளங்கள் நிறைந்த நமது வாசகர்கள் நிறைய பேர் உள்ளார்கள் அய்யா!
  இந்த வாய்ப்பினை தங்கள் ப்ளாக் அளித்து இருக்கிறது. இதே போல புக் மார்க்கெட் பகுதிக்கும் உயிர் கொடுக்க முடியுமா என்று மிக அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  ReplyDelete
 34. லார்கோ இரண்டு பாகங்களும் மிக அருமையாக இருந்தன. எனக்கு மிகவும் பிடித்தன. இரண்டு பாகங்களையும் பிரிக்காதீர்கள்.

  100 ரூபாய் என்பது தற்போது ஒரு பெரிய தொகை அல்ல. தற்போது பள்ளி செல்லும் சிறுவர்கள் கூட அலைபேசி வைத்துள்ளனர். ஆனாலும் சிறிய இதழ்களையும் அவ்வப்போது வெளிவிடுங்கள். சிறிய இதழ்கள் நமது காமிக்ஸின் ஒரு அடையாளமும் கூட.

  > "Gift a Subscription"
  இது மிக நல்ல யோசனை.

  ReplyDelete
 35. ஆயிரம் ருபாய் கொடுத்தும் லயன் வாங்க நாங்க ரெடி. Compromise இல்லாம publish பண்ண நீங்க ரெடியா?

  ReplyDelete
 36. ப​ழைய முத்து, லயன் மினிலயன் காமிக்க​ளை பல யுகங்களாக பரணியிள் ​வைத்து ​கொண்டு தானும் படிக்காமல், மற்றவர்களுக்கும் ​கொடுக்காமல் இங்​கே வந்து anonymous ​comments இடுபவர்கள், special issues வரும் ​பொழூது மட்டும் சந்தா கட்டுபவர்கள், இரண்டு மூன்று இதழ்கள் மட்டும் படித்து விட்டு குற்றம் கு​றை கண்டுபிடிப்பவர்கள், புது ​வெளியிடுக​ள் வரும்​பொழூது படிக்காமல் பரணியில் ​வைத்து விட்டு புக் supero super என்று comments இடுபவர்கள் இவர்களுக்​கெல்லாம் லார்​கோ விஞ்ச் வராதாம்.... எனக்கும் இன்னும் வரவில்​லை?

  ReplyDelete
  Replies
  1. same to u மச்சி ,என்னகும் புக் வரலே .உங்க கம்மேன்ட்லே ஒன்னு மிஸ்ஸிங் .பழைய புக் யை( காமிக்ஸ் )வைத்து கல்லா கட்டிவிட்டு , காமிக்ஸ் ல் அது நொட்டை இது நொட்டை என்று என்று வெட்டியாக fell செய்றவங்களை விட்டுடிங்களே நண்பா ?

   Delete
 37. லார்கோ வின்ச் கதைத் தரம் மற்றும் புத்தக வடிவமைப்புக்கு 10 / 10 மதிப்பெண் நிச்சயம் தரலாம் . ஆனால் பார்சல் பேக்கிங்கிற்கு 0 / 10 தான் தர இயலும் . 10 ரூபாய் புத்தகத்திற்கு சுற்றி அனுப்பும் அதே பிரவுன் பேப்பரை 100 ரூபாய் புத்தகத்திற்கும் பயன் படுத்தினால் [parcel's top and bottom fully open] எப்படி விஜயன் சார் ? இது குறித்து உங்கள் விளக்கத்தை எதிர் பார்க்கிறேன் [புத்தக விளிம்புகள் கிழிந்தும்,மடங்கியும் இருந்தன].

  ReplyDelete
 38. I am ready to buy your comics at any rate, but you should publish at least 4 books in a year :-)
  I prefer for 4 special edition in a year. I really enjoy the "come back special", the art work was amazing especially the lucky luke and captain prince stories! Irrumbukai mayavi story was really nice, I get the same tempo like his old stories.

  Please convey my special thanks and wishes to your staff, I believe they are the back bone of this.

  Even I spoke to Radhakrishnan yesterday to send the "Surprise special", he can be a good marketing guy, he was saying "send bulk amount we can keep sending comics"; I like it.
  Keep going..............

  ReplyDelete
 39. அன்பு ஆசிரியருக்கு,

  எனது கருத்துக்கு மதிப்பளித்து பதிவில் பதில் தெரித்ததற்க்கு நன்றி. உங்களின் உறுதியான நடவடிக்கையை உங்களது காமிக்ஸை மிகவும் விரும்பும் என் போன்ற வாசகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சீக்கிரமே ஆவன செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

  மேலும் சில ஆதாரங்களை உங்கள் மற்றும் நமது காமிக்ஸ் நண்பர்களின் பார்வைக்கு பதிவிட்டிருக்கிறேன். லிங்க்: http://tamilcomics143.blogspot.in/2012/05/color-comics-evidence-2.html

  நன்றி
  TamilComicsLover.

  ReplyDelete
  Replies
  1. ஐயகோ. இது என்ன கொடுமை. தமிழில் வண்ணத்தில் இது போல காமிக்ஸ் எல்லாம் வந்தனவா? நீங்கள் கொடுத்த ஆதாரத்தில் இருந்து பல காமிக்ஸ்கள் வண்ணத்தில் அதிகாரபூர்வமற்ற முறையில் வந்தது தெளிவாக தெரிகிறது. இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று என்பதனை உங்கள் ஆதாரங்கள் தெளிவாக படம்போட்டு விளக்குகிறது. இதைவிட வேறு ஆதாரம் எதுவுமே தேவையில்லை. இதைவிட பெரிய ஆதாரம் ஒன்றும் கொடுக்கவும் முடியாது. கேட்கவும் முடியாது. இந்த காமிக்ஸ்களை போட்டவரின் அட்ரஸ், விலை, மற்றும் விற்ற கடை, வாங்கியவரின் பெயர் போன்ற விபரங்களும் தெளிவாக உங்கள் ஆதாரத்தில் இருக்கிறது. உங்களுக்கு பல கோடி நன்றிகள். வருங்கால காமிக்ஸ் சமுதாயமே உங்களை வாழ்த்தப்போகிறது.

   Delete
  2. ஆமாம் , இந்த ஆதாரம், ஆதாரம் என்று எதோ போட்டு இருக்கீங்க என்று நானும் உங்கள் போஸ்டை பார்த்து கமெண்ட்ஸ் போட்டு விட்டேன். அப்புறமாக போய் பார்த்தால்தான் அந்த ஆதாரம் இருக்கும் லிங்க் சேதாரம் ஆகி இருப்பது தெரிகிறது. அடச்சே! தேவையில்லாமல் ரொம்ப பில்ட் அப் குடுத்துட்டேனே!

   Delete
  3. சரி விடுங்க! எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் ஆதாரம் குடுக்கத்தான் போறீங்க. அதற்கு இந்த கமெண்ட்ஸ் அட்வான்சா போட்டதா இருக்கட்டும்.

   Delete
 40. திரு.விஜயன் அவர்களே.....
  தற்போது முப்பதுகளின் பிற்பகுதியில் இருக்கும் நீண்ட நாள் லயன் காமிக்ஸ் வாசகன் நான்....என் பள்ளிப்பருவ விடுமுறைகளில் லயன் காமிக்ஸ்தான் என் உற்ற தோழன்....முத்து, லயன் , திகில் , மினி லயன் , ஜூனியர் லயன் என காமிக்ஸ்களின் பொற்காலம் அது.... நமது வெளியீடுகள் மட்டுமல்லாது பாலமித்ரா, ரத்னபாலா, அம்புலிமாமா, பூந்தளிர் ,அமர்சித்ர கதைகள் என குழந்தை இதழ்கள் எத்தனை? தற்போது என் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த லயன் மட்டுமே உள்ளது...அதற்காகவே உங்களுக்கு தனி நன்றிகள்.....

  என் தனிப்பட்ட வேண்டுகோள்......லக்கி லூக்கின் புரட்சித்தீ, சூப்பர் சர்க்கஸ் மற்றும் டைகரின் புதையல் வேட்டை [முழு கதையும் ஒரே வெளியீடாக - 13 போல் ] காமிக்ஸ் கிளாசிக்ஸில் வெளியிடலாமே?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் siva.saravanakumar. உங்களை அன்போடு இந்த வலைக் குழாமுக்கு வரவேற்கிறோம்.

   நீங்கள் கேட்கும், கேட்க நினைக்கும் பல கேள்விகளுக்கு இங்கே ஏற்கனவே ஆசிரியரும் நண்பர்களும் விவாதித்து பல தீர்வுகளையும், முடிவுகளையும் எட்டியிருக்கிறார்கள்.

   எனவே சற்றே பொறுமையோடு ஆசிரியரின் அத்தனை பதிவுகளையும், அதற்கான பின்னூட்டங்களையும் படித்துப்பாருங்கள். உங்கள் மனதிலுள்ள பல வினாக்களுக்கு விடை கிடைத்துவிடும். அதன்பின்னர் உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.

   இல்லாவிட்டால், இங்குள்ள பல நண்பர்கள் உங்களது பதிவுகளையும், கேள்விகளையும் அலுப்போடு பார்க்கும் நிலைதான் ஏற்படும்.
   தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

   -Theeban (SL)

   Delete
  2. எங்கள் காமிக்ஸ் குடும்பத்தில் புது உறுப்பினராக வருகை தந்துள்ள siva .saravanakumar . அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் நண்பரே, நமது காமிக்ஸ் க்கு சந்தா செலுத்திவிட்டீர்களா, இல்லையென்றால் உடனே செலுத்துங்களேன். ப்ளீஸ்..

   Delete
  3. என்னது எனது கருத்தை போலவே உள்ளது .வாழ்த்தி வரவேற்கிறோம் நண்பரே

   Delete
  4. திரு.கார்த்திகேயன் அவர்களே....

   கடந்த வியாழக்கிழமையே சந்தா தொகையை மணி ஆர்டரில் அனுப்பி விட்டேன்....லார்கோ வின்ச்சுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.......

   Delete
 41. டிராகன் நகரம் எப்போ சார் ?

  ReplyDelete
 42. Dear Vijayan Sir,

  I would like to see a collector's edition, yearly with collection of stories already published in our comics in good paper and reasonable price (300-400)from Robot Archie, Spider, Reporter Johnny, Captain Prince, Chick bill, lucky luke.

  Each edition consisting full of single hero stories. Which we can treasure and save it.

  ReplyDelete
 43. //உங்களின் பாக்கெட்டுக்கு சேதாரத்தை சற்றே மட்டுப்படுத்திட வேண்டுமெனில் லார்கோ வின்ச் ; லக்கி லூக் ; டைகர் ; சிக் பில் போன்ற கதைகளை ஒற்றை இதழாய் வெளியிட்டால் குறைந்த பட்சம் Rs .45 - என்று விலை நிர்ணயம் செய்திட முடியும். 48 முழு வண்ணப் பக்கங்கள் பிளஸ் கொஞ்சமாய் கறுப்பு வெள்ளை பக்கங்கள் இருந்திட முடியும் அப்படிப்பட்டதொரு இதழில் ! அட்டைப்படம் சற்றே மெல்லிய அட்டையில் வந்திடும். இந்த option ஓ.கே என்று நினைத்தால் மாதம் ஒரு இதழ் என்பது சுலபமாய் சாத்தியமே ! ஒரு trial பார்ப்போமா?//

  "வேண்டாம்!"

  rajeshkanna

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹ ஹா ஹா ............ .நெத்தி அடி
   இடை விட நயமாக யாரும் மறுக்க முடியாது நண்பரே

   Delete
 44. டொட்ட டொட்டடோ, டொட்ட டொட்டடோ , டொட்ட டொட்டடோ .................... சோக கிதம் இசைப்பது உங்களின் லூசுபையன். இது என்ன சோக கிதம் ,என்று கிண்டல் அடிபவர்களே , லார்கோ இன்னும் கைக்கு கிடை காமல், courior க்கு, தினமும் இரண்டு முறை யாவது ph செய்பவர்களுக்காக, பிர தியேக, சோக கிதம் . அவன் அவன் employment seniority லேயே பணம் கொடுத்து முன்னாடி வரான். இந்த காமிக்ஸ் ல சந்தா seniority எப்படி வருவது என்று தெரியலையே ? யாராவது விவரம் தெரிஞ்ச பெரிய தலைங்க ஐடியா கொடுத்தா, அவங்களுக்கு குச்சி மிட்டாய் யும் ,குருவி ரொட்டியும் இலவசமாக புறா கூரியர் மூலம் கொடுத்து அனுபப்படும். டேக் கேர் guys .லெட்ஸ் sing a லார்கோ சூப் சாங் (லார்கோ வராதவங்களுக்கு) டொட்ட டொட்டடோ ,டொட்ட டொட்டடோ ,டொட்ட டோட்டோ

  ReplyDelete
  Replies
  1. 5 varusam santha kattirunka!
   Muthal pirathi unkalukkuthan...

   Delete
 45. This comment has been removed by the author.

  ReplyDelete
 46. sir, we have lot of books to reprint, other then tiger. we have lucky luke , chickbill, tex , reporter jhony and many more. i don't understand why u are publish books in b&w and then in colour. Thanga kallarai is published more are less 7 years ago. But lot of books are waiting for more thens 15 years. sir think about it. thanks.

  ReplyDelete
 47. ஏகப்பட்ட ஆர்ப்பாட்டம் ​செய்து, ​கொரியர் ஆபிசிர்கு ​போன் ​செய்து க​டைசியாக லார்​கோ வந்தாகிவிட்டது. ​பைண்டிங், கலர், புத்தக ​சைஸ் அ​னைத்தும் திருப்தி, 100/100 ​போடலாம். உங்களுக்கும் ஆபிஸ் ஸ்டாப் அ​னணவருக்கும் திருஷ்டி சுற்றி ​போடுங்கள கண் பட்டுவிடப்​போகிறது.

  ReplyDelete
  Replies
  1. நற நற நற ........ஒன்னு மில்லை , என் பற்கள் கடிபடும் சத்தம் தான் அது . ஜோல்னா எந்த மலை குகை யில் காமிக்ஸ் படித்து கொண்டு இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாமா ? எனக்கு தெரிந்து ஒருவர் மலை யில் காமிக்ஸ் படிக்கிறேன் என்று போய், ஒரு குரங்கு காமிக்ஸ் யை பிடுங்கி கொண்டு விட்டது .அப்புறம் குரங்கு க்கு மேல் குரங்கு வித்தை எல்லாம் காட்டி காமிக்ஸ் யை மீட்டார். இங்கு நம்ம ஜோல்னா காமிக்ஸ் படிக்கும் போது காட்டும் facial expresson பார்த்து குரங்கு பயந்து விட போகிறது ..........! just kidding .

   Delete
 48. இ​தோ நான் ​செய்த உறுதியின்படி ம​லையடிவாரத்​தை ​நோக்கி புரப்பட்டு​விட்​டேன், see you guys soon

  ReplyDelete
 49. I have received Surprise Special 2 days before. Largo Winch wow!! Superb pictures in Colour! Very speedy stories. But Muthu comicsl thirsti pottu pola Palaya thigil comics stories. Muthu comicsl ethu pondra thigil comics arambakala kathaigal Vendame! Friends kobithu kola kudathu. Aramba kala Lion comics characters like Erattai Vettaiyar, Irumbukai Ulavali, John Master,Danger Diaboligue pondravar galai meendum ethirparkirom. Will editor consider our request?

  ReplyDelete
 50. மை டியர் மணலூர்பேட்டை சின்னப்பன் ஜான் சைமன் அவர்களே.(ஹிஹி .பெர்முடா படலம் என்னிடமும் இருக்கிறது ).நீங்கள் காவல் துறையில் பணியாற்றுபவரா?சொல்லவேயில்லே.எந்த ஊரில் டூட்டியில் இருக்கிறீர்கள்.வடையை உங்களிடமிருந்து பறித்து கொண்டதற்காக என்னை முட்டிக்கு முட்டி தட்டிவிடாதீர்கள்.புனித சாத்தானுக்கு இருப்பதோ ரெண்டே ரெண்டு லெக்பீஸ்.(பின் குறிப்பு.புனித சாத்தானுக்கு வடையும் வந்த பாடில்லை.லார்கோவும் வந்த பாடில்லை)சாத்தான் மீது கடவுளுக்கு (ஹி ஹி .நம்ம எடிட்டர் சாரை சொன்னேன்)ஏன் இந்த கோபமோ .

  ReplyDelete
  Replies
  1. அன்புக்கு நன்றி புனித சாத்தான் அவர்களே! தங்களுக்கு வடை கிடைத்தது நம் வாசகர் படைக்கே கிடைத்த கோப்பை போன்றது அதில் எங்களுக்கு சந்தோஷமே! எளிய சென்னை வாசி அய்யா நான்!
   எனக்கும் லார்கோ தண்ணி காட்டுறார்! ஆங்கிலத்தில் ஸ்கேன் உள்ளது ஆனால் படிக்க மனசில்லை! நம்ம தலைவர் மொழி பெயர்ப்புக்கு நான் அடிமை அய்யா!

   Delete
 51. Dear Vijayan :நேற்று லார்கே கைக்கு கிடைத்தது . வந்ததுமுதல் இப்பொழுதுவரை பலமுறை புத்தகத்தை எடுதுபார்த்து விட்டேன் புத்தகத்தின் வண்ண கலவை பார்த்த மெய் சிலிர்ப்பில் இன்னும் கதை படிக்கவே ஆரம்பிக்கவில்லை . பலமுறை முயற்சித்தும் தோல்விதான். என்ன அப்படியோருகலவை . வினாடிக்கு வினாடி புதிய புத்தகத்தின் நறுமனம்வேறு ( லக்கி லுக் "புரட்சி தீ " கதை பாணியில் ஏதெனும் சமாச்சாரம் பண்ணிவிடீர்களா ) . பொதுவாகவே ஒரு காமிக்ஸ் அணு அணுவாக படிப்தற்கு மணி கணக்கில் நாள்கணக்கில் காலம் எடுப்பவன் நான் ( XIII இன்னும் முடிக்கவில்லை ) இதற்க்கு எத்தனை நாட்கள் ஆகுமோ தெரியவில்லை ......
  அப்புறம், தலைவாழை இலைபோட்டு சாப்பாடு போட்டபின் மறுபடியும் பழைய கஞ்சி குடிக்கிற கதையெல்லாம் வேண்டாம். அதையும் மீறி
  பக்கத்தை கறுப்பு வெள்ளையாக்கி அட்டை கனத்தை குறைத்து .... கச மூஸா வேலை நடந்தால் .... அலுவலகத்தின் முன்னாள் தர்னாபோராடம், உண்ணாவிரதம் எல்லாம் நடக்கும் .
  இப்படி உசுபேத்தி உசுபேத்தி உங்கள் உடம்பை ரணகளம் ஆக்க நினைக்கவில்லை. நீங்களும் உங்கள் குடும்பத்தின் வம்சாவழியும் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்ந்து
  இதனை தொடர்ந்து நடத்தவேண்டும் என்பதன் உள்ளார்ந்த மனபூர்வமான ஆசைதான் காரணம் .

  நண்பர்களே : அவகாசம் இருப்பின் முத்து காமிக்ஸின் பழைய ஆரம்ப கால இதழான "இருளின் விலை இரண்டு கோடி " ஒரு கண்ணோட்டம் பாருங்கள் http://25-3-2012.blogspot.in/2012/05/2.html

  ReplyDelete
 52. கண்டிப்பாக மெல்லிய அட்டை வேண்டாம் சார் ........என்னிடம் உள்ள பழைய புக் கிழிஞ்சு போனதுக்கு காரணமே மெல்லிய அட்டை தான் . என் வாரிசுகள் தமிழ் காமிக்ஸை தொடுவது கூட இல்லை .விடியோ கேம்ஸ் ,கார்ட்டூன் நெட்வர்க் என்று போய் விட்டார்கள் இதை படிப்பது என்னை போன்ற அரை கிணறு தாண்டியவர்கள் மட்டுமே அதனால் பணத்தை பற்றி கவலை கொள்ளாமல் வண்ணத்தில் ஸ்பெசல் இதழ்கள் கொண்டு வாருங்கள் மேலும் நேரடி விற்பனையில் காசை பற்றி கவலை பட ஒன்றும் இல்லை .நாங்கள் இருக்கும் வரை லயன் படித்து கொண்டே இருப்போம்

  ReplyDelete
 53. நாளை முதல் தொலை பேசியில் எனது தொல்லை தொடர போகிறது சார்! லார்கோ வரும்வரை அடியேனின் போராட்டம் தொடர உள்ளது என்பதை தாழ்மையுடன் (ஹி ஹி பண்றது போராட்டம் அதுல என்ன பணிவு? -அப்படியாவது உடனே புக் வரும்னுதான்) தெரிவித்து கொள்கிறேன்.

  ReplyDelete
 54. Dear Editor, can you please put a filter in the blogspot for urls/link; some of the people use this website creating publicity for their "home page". Similar problem was there in your previous lion page also.

  I have received my surprise special yesterday, I made the payment last Friday and received the book on Monday morning.
  Hello John Simon, when did you send your money, did you speak to lion office about the same. They are doing a very good job!

  About the surprise special, good to read the "thikil" again. I am yet to start the "Largo"

  ReplyDelete
 55. அன்பு ஆசிரியருக்கு, திகில் கதைகள் மூன்றும் அற்புதம்,இரு பக்க கதைகள் பெரும் பாலும் என்னை கவர்ந்த்ததில்லை ,ஆனால் இங்கு இரண்டு கதைகளுமே சூப்பர் .........பிசாசு செடிகள் அட்டகாசம் பண்ணி விட்டன ,முடிவு கணிக்க இயலவில்லை ,வெப்பமே அவற்றின் அசுர வளர்ச்சியின் பலம் போலும்...,ப்ரோஃபெசருடன் நானும் பயணித்தேன்....பென்சிலின் தற்காலிகமாக கண்டு பிடிக்க பட்டதை நினைவு படுத்துகிறது .....மொத்தத்தில் இக்கதைகள் அனைத்தும் சூப்பர் .......முதல் திகில் இதழ் கூட அந்த அளவு கவரவில்லை ! இரண்டாவது அட்டகாசம் ! இடை நிரப்பிகளாக இவற்றையே வெளி விடலாம் ! ஸ்டீவின் பனி வேட்டை தவிர இடை நிரப்பு கதைகள் மோசமில்லை என்றே கூறலாம் !இந்த கதை எனது கணிப்பு படி இரண்டாம் இடம் பிடிக்க தவறவில்லை !அனைத்து கதைகளும் கவந்த இதழ் என்றால் முதலிடம் இப்புத்தகத்திர்க்கே !

  ReplyDelete
 56. Planning, Travelling, Executing, Expressing, and lots more, we are enjoying it...

  ReplyDelete