Powered By Blogger

Tuesday, May 29, 2012

ஒரு காமிக்ஸ் எக்ஸ்பிரசில் ஜன்னலோரம் ....!


நண்பர்களே,

புது முயற்சிகளோடு நமக்குத் துவங்கிட்ட 2012 -ன் மையப் பகுதியினை நெருங்கிடும் நேரமிது...! உங்களின் உற்சாகம் தந்திடும் உத்வேகத்துடன் 'தடதட' வென நமது காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் உருண்டோடிச் செல்கின்றது ! பயணத்தின் நடுவே நாம் கடந்து செல்லக் காத்திருக்கும் "ஸ்டேஷன்களை" ஒரு ஜன்னலோரப் பார்வையாய் சற்றே ரசித்திடுவோமா ? 

ரிப்போர்டர் ஜானியின் கிரைம் த்ரில்லர் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை ! அவற்றிற்கு வண்ணம் எனும் வீரியத்தை சேர்த்திடும் போது - அட்டகாசமானதொரு end -product கிட்டுவதை சீக்கிரமே நீங்களும் ரசிக்கப் போகிறீர்கள் ! "பனியில் ஒரு பரலோகம்"   அட்டகாசமாய் முழு வண்ணத்தில் தயாராகி உள்ளது ! இதோ -சில பக்கங்கள் உங்கள் பார்வைக்காக !! 
பனியில் ஒரு பரலோகம்- 46 பக்கங்கள்...முழுநீள..முழு வண்ண சாகசம் ! ரிப்போர்டர் ஜானியுடன் கைகோர்க்கக் காத்திருப்பது அநேகமாக கேப்டன் டைகரின் "இளமையில் கொல்" தொடரின் கதை # 4 !  கேப்டன் டைகரின் சாகசங்களை வரிசைக்கிரமமாய் வெளியிட எண்ணியுள்ளேன்...so தொடர்ச்சியாய் டைகரின் இளம் பிராயத்து சாகசங்களை நிறைவு செய்திட்டு அதன் பின்னர் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இதர டைகர் கதைகளைக் கவனித்திடுவதாய் உத்தேசம் !
                                                            "மரண நகரம் மிசூரி "                                                            

46 பக்கங்கள்..முழு வண்ணத்தில்..முதல் முறையாய் கேப்டன் டைகர் !
'இந்தப் பூனையும் பால் குடிக்குமா ?' என்று எண்ணச் செய்திடும் தோற்றத்தோடு தன்னை அறிமுகம் செய்து கொண்ட நமது புது நண்பரான லார்கோ வின்ச் - 'இந்தப் பூனை பாலும் குடிக்கும் ; குரல்வளையையும் கடிக்கும் ' என்று நிரூபித்திடும் விதத்தில் அடுத்த அதிரடிக்குத் தயாராகி வருகிறார் ! " கான்க்ரீட் கானகம் " லார்கோவின் கதை வரிசையில் எண் 3 ! 

"கான்க்ரீட் கானகம் "
கதை எண் 3 & 4 இணைந்தே ஒரு முழுநீள சாகசம் என்பதால் இவற்றைப் பிரிக்கும் விஷப்பரீட்சைகள் ஏதுமின்றி..ஒரே இதழில் பாகம் 3 & 4 வந்திடும். "சுறாவோடு சடுகுடு" - லார்கோவின் ஒரு action masterpiece ! 

"சுறாவோடு சடுகுடு"
தொடர்ந்து இன்னுமொரு கேப்டன்;இன்னுமொரு பரட்டைத்தலை..இன்னுமொரு அழுக்குக் கும்பல் ! ஆனால் இவர்களும் நம் அன்பையும் ; அபிமானத்தையும் சம்பாதித்ததொரு சாகசக் கும்பல் ! "பரலோகப் பாதை பச்சை" - நம் அபிமான கேப்டன் பிரின்சின் முழுவண்ண முழு நீள சாகசம் ! தற்சமயம் பிரின்ஸ் கதை வரிசையில் நாம் பிரசுரிக்காது உள்ள ஒரே புது சாகசம் இது மாத்திரமே ! So - இனி புதிதாய் பிரின்ஸ் கதைகள் உருவாக்கப்படாத பட்சத்தில், இதுவே பிரின்சின் farewell !!  

"பரலோகப் பாதை பச்சை"
நண்பர் புனித சாத்தானின் உபயத்தில் "லயன் நியூ லுக் ஸ்பெஷல்" என்ற hep நாமகரணத்துடன் வரவிருக்கும் நம் ஆண்டுமலரில் தூள் கிளப்பிட  நமது லக்கி லூக்கும் தயார் ஆகி வருகின்றார் !  "பனியில் ஒரு கண்ணாமூச்சி" + "ஒரு வானவில்லைத் தேடி " - இரு classic லக்கி லூக் சாகசங்கள் ! 


ஆண்டுமலரைத் தொடர்ந்து நம் "அந்தக் காலத்து ஜாம்பவான்கள்" - லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலில் அதிரடி செய்யவிருக்கிறார்கள் ! இங்கே உங்களில் பெரும்பான்மையினர் சூப்பர் ஹீரோக்களுக்கு செம ஆதரவாய் குரல் கொடுத்தது வீண் போகவில்லை ! So திட்டமிட்டபடியே ரூபாய் 100 விலையில் முழுக்க முழுக்க black & white -ல் மாயாவி ; ஸ்பைடர் & ஆர்ச்சி களம் இறங்குவார்கள் !!இவை தவிர நமது black & white - பத்து ரூபாய் இதழ்களின் எஞ்சியுள்ள (புது) வரவுகள் இதோ :இவை தவிர புது ஹீரோவான டிடெக்டிவ் ஜெரோம் துப்பறியும் "சிவப்புக் கன்னி மர்மம் " & தற்செயலாய் ஒரு தற்கொலை" தலா ரூபாய் 10  விலையில் வரவிருக்கின்றன !  இவ்வாண்டின் இறுதியினில் இன்னமும் நிறையவே புதுக் கதைகள்..புது அறிமுகங்கள் காத்துள்ளன ! உங்களின் அன்பான ஆதரவு தொடர்ந்திடும் வரை, வானமே நமக்கு எல்லை ! Fingers crossed !

54 comments:

 1. பலநாள் காத்திருக்குப்பிறகு அட்டகாசமான அறிவிப்புக்களோடு ஒரு பதிவு.

  நண்பர்கள் வந்து வந்து பார்த்துப்போய் அலுத்துவிட்டிருக்கும் நேரத்தில் 'கோடையில் இடி மழை' போல அறிவிப்புகளோடு வந்திருக்கிறீர்கள். அத்தனையும் எதிர்பார்க்கவைக்கும் அறிவிப்புக்கள்.

  'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்' வருவது நிச்சயமாகியிருப்பது இந்தப் பதிவின் ஹை-லைட் என்றால், பிரின்ஸிற்கு பிரியாவிடை என்பது அதிர்ச்சியளிக்கிறது. பரவாயில்லை; காமிக்ஸ் க்ளாஸிக்கில் எப்படியாவது இடைக்கிடையே பிரின்ஸின் மறக்கமுடியாத இதழ்களைக் கொண்டுவந்துவிடுவீர்கள் என்பது எமது நம்பிக்கை.

  ரிப்போர்ட்டர் ஜானி கலரில் வருகிறார் என்பது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.

  -Theeban (SL)

  ReplyDelete
 2. ரிப்போர்ட்டர் ஜானியின் கதைகளில் சித்திரங்கள் அபாரமாக இருக்கும். குறிப்பாக மழை அல்லது பனி பொழியும் காட்சிகள்! வண்ணத்தில் நிச்சயம் அட்டகாசமாகத்தான் இருக்கும்! :)

  ReplyDelete
 3. ஜானியின் கதையை தமிழில், அதுவும் கலரில் பார்க்கும்போது ............... அட்டகாசம் !
  இந்த காமிக்ஸ் விருந்துகளுக்காக உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை!

  ReplyDelete
 4. விஜயன் சார் கோச்சுக்க மாட்டார்னா கொஞ்சம் கலாய்க்கலாமா? :) just for fun, seriously! :) :)

  லிஸ்ட் போட்டதுக்கப்புறம்தான் தெரியுது! யப்பா! பனிரெண்டு கதைகளா?!! ரொம்ப தேங்க்ஸ் சார்! :)

  * பனியில் ஒரு பரலோகம் - பனியா? பணியா? IT ஆளுங்களுக்கு பணியில்தான் பரலோகம்! :)
  * மரண நகரம் மிசூரி - ப்ளுபெர்ரி இந்தியா வந்திருந்தார்னா "மரண நகரம் மைசூர்"ன்னு வச்சுருக்கலாம்! :)
  * கான்க்ரீட் கானகம் - செம தலைப்பு!
  * சுறாவோடு சடுகுடு - விஜய் கோச்சுக்கப் போறார்! :)
  * பரலோகப் பாதை பச்சை - எப்படி? திகில் காமிக்ஸ் பேய் மாதிரியா? ;)
  * பனியில் ஒரு கண்ணாமூச்சி - இது பனியில் ஒரு பரலோகத்தோட செகண்ட் பார்ட்டா? :)
  * ஒரு வானவில்லைத் தேடி - கவித்துவமான தலைப்பு! விக்ரமன் படப் பெயர் மாதிரி!
  * காவல் கழுகு - அட்டகாசம்! இந்த பேர்ல படம் எடுத்தா நல்லா இருக்கும்! இந்த புக்கோட அட்டை படம் பிரமாதம்!
  * மரணத்தின் நிசப்தம் - கிளாஸிக்!
  * சிவப்புக் கன்னி மர்மம் - ரொம்ப பயங்கரமா இருக்குமோ? :)
  * தற்செயலாய் ஒரு தற்கொலை - சூப்பர்!
  * லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் - ஹி ஹி ஹி!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. இப்பதான் unoffcial lion facebook க்ரூப்ல, நண்பர் ஒருவர், டெக்ஸ்ஸோட இந்திய சாகசம் வெளி வந்திருக்கிறதா (TEX - THUGS!) எழுதி இருந்தார்! அதே மாதிரி, டைகர் தமிழ்நாட்டுக்கு வந்தா "மரண நகரம் முசிறி"ன்னு டைட்டில் வச்சுக்கலாம்! :) :) :)

   Delete
 5. லார்கோ பார்க்க பார்க்க அசத்துகிறார்.அட்டகாசமான வண்ணக்கலவை,பழைய புத்தகங்களில் அடுத்த வெளியீடுகள் நான் மிக மிக எதிர்பார்க்கும் பகுதி,அதைப்போலவே இந்த பதிவில் தூள் கிளப்பியிருக்கிரீர்கள்,லார்கோவின் இந்த படங்கள் மீண்டும் வியப்பில் ஆழ்த்துகின்றன ,ஜானி கதை படங்களும் தூள்,வண்ணத்தில் டைகர் அட்டகாசம் ,முதலில் இருந்து டைகர் கதைகள் அனைத்தையும் வண்ணத்தில் வெளி விட்டால் இன்னும் அற்புதமாக இருக்கும்,நீங்கள் தொங்கி கொண்டிருக்கும் கதைகளை வெளியிட்டு விட்டு மீண்டும் பழைய கதைகளை வண்ணத்தில் வெளிவிட்டால் நண்பர்கள் அனைவரும் ஆதரிப்பார்கள் என நினைக்கிறேன், இது காலத்தின் கட்டாயம் .வழக்கம் போல லக்கி கதைகளின் வண்ண பதிவு தூள் கிளப்ப போவது நிச்சயம்,நமது எக்ஸ்பிரஸ் நம்மை நெடும் பயணத்திற்கு அழைத்து செல்ல ,அற்புதமான வண்ணமயமான வழித்தடங்களை கடந்து செல்லவிருப்பது உங்களது அடுத்தடுத்த அதிரடி அறிவுப்புகளில் ,மின்னலென பளிச்சிடுவதுடன் ,வண்ண வில்லின் காட்சியுடன் ,இது வரை தாங்கள் வண்ண மழை பொழிந்ததும் ,சிறப்பான பயணங்கள் காத்திருக்கின்றன என தொடர் வண்டியில் பயணித்து வரும் எங்களுக்கு தெளிவாக விளக்கி விட்டிர்கள் ,நன்றிகள் பல. லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் , வண்டி தாமதமாய் செல்வது தெரியாமளிருக்கும்படி ,இந்த பிற புத்தகங்களின் அறிவுப்புகளால் எங்களை களிப்பில் ஆழ்த்தி வண்ண ஜாலங்கள் படைத்து விட்டிர்கள் .நன்றி !நன்றி!!நன்றி!!!

  ஆனால் தங்க கல்லறை மறந்து விடாதிர்கள் ,விரைவில் வேண்டும் .....டும் ...............டும் ...............டும்

  ReplyDelete
  Replies
  1. தங்க கல்லறை பற்றி எதுவுமே சொல்லவில்லையே ................... விஜயன் சார் ????? ;-)
   .

   Delete
 6. அட ..... பல்சுவை விருந்து காத்துள்ளது .....

  ReplyDelete
 7. சைக்கிள் கேப்பில் கேப்டன் டைகரின் "தங்கக் கல்லறை" மறுபதிப்புப் பற்றியும் இரண்டு லைன் எழுதி இருக்கலாம். (ஆகஸ்டில் வருவது நிச்சையம்தானே?) அப்புறம், வரவிருக்கும் லயன் ஆண்டு மலர் இதழில் வழக்கம் போல் "தீபாவளி மலர் பற்றிய அறிவிப்பு அட்டகாசமான அறிவிப்பு செய்ய மறந்துடாதீங்கோ...?(பார்மெட் நான் சொல்லிவிடுகிறேன், கதைகளை நீங்களே முடிவுபண்ணிகோங்கோ) பெரிய சைஸ், முழுவண்ணம், 250 பக்கங்கள், விலை 200 /- , 5 கதைகள், நவம்பர் 10 -ல் கிடைக்கும், படிக்கதவறாதீர்கள். எப்புடீ!!!!

  ReplyDelete
  Replies
  1. // "தீபாவளி மலர் பற்றிய அறிவிப்பு அட்டகாசமான அறிவிப்பு செய்ய மறந்துடாதீங்கோ...? //

   விஜயன் சார் நாங்க ரெடி நீங்க ரெடியா ????
   .

   Delete
 8. its an superb, inspiring post from u to all of us sir.
  plz do keep up the tempo so that we are not (again) forced to wait long to see them to be realistic in the near future.
  puthaga priyan

  ReplyDelete
 9. என்ன நடக்குது இங்கே, அட்டகாசம் போங்க... திக்குமுக்காட செய்யும் அறிவிப்புகள். இத இத இதத்தான் சார் நான் எதிர்பார்த்தேன்.

  கலவையான, மற்றும் ரசனையான அறிவிப்புகள். இவ்வாறு ப்லான்னிங் செய்திட்டால், அடுத்து அடுத்து நமது இலக்குகள் எளிதாக அமைய வாய்ப்புள்ளது. தங்கக்கல்லரைக்கு பதில், புதிதாக டைகர் கதையினை தேர்த்தெடுத்தது மிக நேர்த்தியான முடிவு. அதேபோல் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் இதழினை முழுமையாக வெளியிட முடிவு செய்தமைக்கு நன்றிகள் பல. எடிட்டர் சார் ஆகா மொத்தத்தில் மறுபதிப்பு இதழ்களுக்கு சிறிய இடைவெளி விடுவதென்பது மிகவும் சரியான முடிவே.

  ReplyDelete
 10. Sir

  Can you also tell us the probable month/date the books you had mentioned, will come?

  what to expect first?(June)

  ReplyDelete
 11. டெக்ஸ் வில்லர் எப்போது வண்ணத்தில் வருவார்.அதை பற்றி எடிட்டரும் சரி வாசக நண்பர்களும் சரி மூச்சே விடுவதில்லையே.நமது எவர் கிரீன் ஸ்டார் அல்லவோ அவர்.அவரை மறந்துவிட்டீர்களே .புனித சாத்தானின் சாபத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால் வாசக நண்பர்கள் டெக்ஸ் வில்லருக்கு ஆதரவாக உடனே களத்தில் இறங்க வேண்டும்.இல்லையேல் கடும் விளைவுகள் ஏற்படும் என சாத்தான் எச்சரிக்கிறான் (ஹிஹி ஹி )

  ReplyDelete
 12. அருமை அருமை கூற வார்த்தைகளே இல்லை.
  காலை ஆறு மணிக்கு கொட்டாவியுடன் ஆபீஸ் ஷிப்டில் அமர்ந்த எனக்கு ஒரு புத்துணர்ச்சி அளித்த பதிவு.

  //உங்களின் அன்பான ஆதரவு தொடர்ந்திடும் வரை, வானமே நமக்கு எல்லை ! Fingers crossed !//
  நாங்கள் எப்பொழுதும் உங்களுடன்.அட நம்புங்க சார்.

  லார்கோவை கலரில் படித்த எனக்கு இனி வரும் அனைத்து கதைகளும் கலரில் படிக்க வேண்டும்
  என்ற எனது கனவை நனவாக்கிவிடும் போல் உள்ளது உங்கள் பதிவு.

  நாங்களும் Fingers Crossed .

  மற்றும் சாத்தானின் வேண்டுகோள் மிகவும் நியாயமானதாக படுகிறது.
  அவருடைய குரலுக்கு எடிட்டர் சார் செவி சாய்த்தே ஆகவேண்டும்.

  எனது ஆதரவு டெக்ஸ் இன் கலருக்கு எப்போதும் உண்டு.

  கிருஷ்ணா வ வெ

  ReplyDelete
 13. sooooper...everything is wonderful..
  a small obligation from my end..can't you print கேப்டன் டைகரின் "இளமையில் கொல்" தொடரின் கதை # 4 ! along with the previous 3 editions in a single book, so that it would be nice for a hard core Tiger fan like me to preserve the book.

  ReplyDelete
 14. நன்றி

  கத்திரி வெயில் முடிந்து தென்றல் இல்லை ... இல்லை புயல் வீச ஆரம்பித்து இருக்கிறது - உங்கள் அறிவிப்புகள் மூலம்

  மறுபடியும் நன்றி

  சூப்பர் ஹீரோ ஸ்பெசல் வரும் என்ற அறிவிப்பு (இதை மட்டும் நீங்கள் அறிவிக்காமல் இருந்திருந்தால் உங்கள் ப்ளாக் பக்கம் சிறிதுகாலம் வராமல் ஸ்ட்ரைக் பண்ணிருப்பேன்)

  வேண்டுகோள்

  தங்க கல்லறை - ஆகஸ்ட் ல் வெளியிட மறந்துவிடாதீர்கள்

  ஆர்வம் + பாராட்டு + எதிர்பார்ப்பு

  உங்கள் அத்தனை சரவெடி அறிவிப்புகள் - இந்த ஆண்டே வெளிவரவேண்டும்

  கோபம்

  //உங்களின் அன்பான ஆதரவு தொடர்ந்திடும் வரை//
  இன்னும் எங்களை நம்பவில்லையே என்பதால் :)

  ReplyDelete
  Replies
  1. ஏமாற்றம்

   என் அபிமான ஹீரோ 'டெக்ஸ் வில்லர்' பற்றிய பெரிய அறிவிப்பு இல்லாதது

   Delete
 15. சில கதைத் தொடர்களின் விளம்பரங்கள் பெரிய அளவில் ஈர்க்காது. ஆனால் கதைத் தொடராக வரும்போது நம் எண்ணங்கள் அத்தனையையும் கலைத்துப் போட்டு பட்டாசு கிளப்பி விடும். எனக்கு முதலில் இப்படியொரு அனுபவம் XIII இல் நிகழ்ந்தது. தீவிரமாக நான் லயன் வாசிக்க ஆரம்பித்தபோது XIII கதைகளின் சில பாகங்கள் ஏற்கனவே வெளிவந்து இருந்தன. ஆதி என்னவென்று தெரியாமல் வாசித்தால் சுகமாய் இருக்காது என்பதற்காக அந்த சீரிஸையே புறக்கணித்து வந்தேன். எனவே ஜம்போ ஸ்பெசல் அறிவிக்கப்பட்டபோதும் எனக்கு அதில் பெரிதாக எந்த ஆர்வமும் இருக்கவில்லை. ஆனால் புத்தகத்தை சிவகாசிக்கு நேரடியாகப் போய் வாங்கிவந்த மூன்றே நாட்களில் படித்து முடித்தேன். அதுவரைக்கும் XIII மீது இருந்த அத்தனை அவநம்பிக்கையும் காணாமல் போய் இத்தனை நாள் இவரை மிஸ் செய்து விட்டோமே என்கிற பெரும் அச்சலாத்தி தான் ஏற்பட்டது. இப்போது லார்கோ வின்ச்சிலும் இதே கதைதான். விளம்பரங்களும் அதிலிருந்த சித்திரங்களும் என்னைப் பெரியளவில் இம்ப்ரஸ் செய்திடவில்லை. புத்தகம் வீட்டுக்கு வந்தபோது வெகு அசுவாரசியமாகத்தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் லார்கோ அடி தூள் கிளப்பி விட்டார். குறிப்பாக வண்ணச் சித்திரங்களும் கதை சொல்லப்பட்ட முறையும். ஒரு ஆங்கில படத்துக்கான அப்பட்டமான ஸ்டோரிபோர்டு போல பட்டாசாக இருந்தது கதை. குறிப்பிட்டுச் சொல்ல நிறைய இடங்கள் இருந்தாலும் சிறுவன் லார்கோ தனது மாமாவின் வீட்டை விட்டு நெரியோவுடன் கிளம்பும் இடத்தைச் சொல்லலாம். வீட்டை விட்டு வெளியே வந்து காருக்குள் இருந்தபடி ஏக்கத்துடன் பார்க்கும் சின்ன வயது லார்கொ. அடுத்த படத்தில் வாலிபனாக. கிட்டத்தட்ட திரைப்படம் பார்க்கும்படியான உணர்வு. ஆரம்ப சாகசமே அபாரம் என்னும் நிலையில் அடுத்தடுத்து வர இருக்கும் கதைகள் ஆவலை நிறையவே தூண்டி விட்டன. அத்தோடு, புது இதழ்கள் பற்றிய இந்த உங்களுடைய பதிவு இன்னும் மனதை சந்தோசமாகச் செய்திருக்கிறது. வாழ்த்துகள் விஜயன் சார். தொடரட்டும் நம் தடாலடி காமிக்ஸ் எக்ஸ்பிரஸின் பயணம். உங்களோடு நாங்களும்..:-)))

  ReplyDelete
 16. ஒரு சந்தேகம்! ஜானி மற்றும் லக்கி ஸ்கேன்கள், கொஞ்சம் டல்லடிக்கின்றனவே?! ஆனால் வழு வழு ஆர்ட் பேப்பரில் பிரிண்ட் செய்யும் போது இப்படி இருக்காது (லார்கோ தரத்தில் இருக்கும்) என நம்புகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது சரிதான். அதிலும், ஜானியின் முதல் பக்கத்தில் அழுக்கு அப்பிக்கிடப்பது அப்படியே தெரிகிறது. ஒரிஜினல் ஆர்ட்வொர்க் கிடைக்காமல் (அழுக்கான) புத்தகத்தை ஸ்கேன் செய்திருப்பார்களோ?
   -Theeban (SL)

   Delete
  2. Friends, our editor posted the scan copy of the proof. Thats why the dullness is there. It is not the soft copy. I am sure quality will be same as comeback special and surprise special.

   Delete
  3. @ Theeban & Udhayakumar: கருத்துக்கு நன்றி நண்பர்களே!

   Delete
 17. விஜயன் சார், அட்டகாசமான அறிவிப்பு. நன்றி

  எஸ்.ஜெயகாந்தன், punjai puliampatti

  ReplyDelete
 18. ஜானியின் கதையை தமிழில், அதுவும் கலரில் பார்க்கும்போது ............... அட்டகாசம் !
  இந்த காமிக்ஸ் விருந்துகளுக்காக உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை!

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. டியர் எடிட்டர்,

  புதிய வெளியீடுகள் அதுவும் வண்ணத்தில், பட்டையை கிளப்புகின்றன. முக்கியமாக ரிப்போர்டர் ஜானியை தமிழில் வண்ணத்தில் பார்ப்பதற்கு ஆவல் அதிகமாகிறது. இரு வண்ணங்களில் ஒரு முறை ஜானி கதை படித்த நியாபகம்.

  அறிவிப்புகளுடன், புத்தக வெளியீடுகளின் தற்போதைய ப்ளானையும் சேர்த்து இடுங்களேன். ஜுன் மாத இதழ்களாக டிடெக்டிவ் ஜெரோம் அறிவித்தபடி வருமா...

  கூடவே, தற்போது புதிததாக அறிவிக்கபட்ட கதைகள், ஏற்கனனேவ லார்கோவில் வெளியான மாத அறிவிப்பின்படி, கடைசி நான்கு மாதங்களுக்கு தானே... இல்லை அந்த வெளியீடு பட்டியலும் மாற்றபடுகிறதா ?

  விவரமளித்தால் தெளிவு பெறலாம்.

  ReplyDelete
 21. Dear Editor&Staff,

  After a break you are back with a "BANG".I always check the blog 3or4 times in a day.
  We are all with you. We need more and more comics books. When i was young i could not afford to
  buy many of your books.Now no body can stops me including my wife.
  Aldrin Ramesh from Oman.

  ReplyDelete
 22. வழக்கம் போல தலைப்புகள் மிக அருமை

  லார்கோவை வெகு விரைவில் வெளியிட்டால் மிக நன்றாக இருக்கும் ;-)
  .

  ReplyDelete
 23. // "சுறாவோடு சடுகுடு" //

  விஜயன் சார் சுறாவோடு சடுகுடு விளையாட நாங்க ரெடி நீங்க எப்ப அனுப்ப போறீங்கன்னு சொன்னா நாங்க அதுக்கு தயராவோம்ல ;-)
  .

  ReplyDelete
 24. தயவு ​செய்து பிரின்ஸ் க​தைவரி​சையில் பாக்கியுள்ள பர​லோக பா​தை பச்​சை தவிர 18 க​தைகளில் இன்​னொரு க​தை​யையும் ​வெளியிடுங்கள் ​மொத்தம்.

  ReplyDelete
 25. டியர் விஜயன்,

  ரிப்போர்ட்டர் ஜானி கதை வண்ணத்தில் வரும்யென்ற அறிவிப்புக்கு நன்றி. பிரின்ஸ் கதைகள் மொத்தம் 18 அதில் 17 கதைகள் தமிழில் வந்துவிட்டது என்பது புதியா செய்தி எனக்கு. என்னிடம் ஒரு சில கதைகள் மட்டும் உள்ளது. திகிலில் வந்தா கதைகள் என்னிடம் இல்லை. மீதம் உள்ள 16 கதைகளையும் ஏன் வண்ணத்தில் வெளியீடு செய்யகூடாது?

  ReplyDelete
 26. இந்த business blues என்ற க​தையில் Monkey balls என்ற கதாபாத்திரம் தான் சுறாவா? சரியான சவால்தான்!

  ReplyDelete
 27. Dear Sir,

  அருமையான அறிவிப்புகள். ஆனால் எதற்குமே DATE CONFIRMATION இல்லையே சார். நமது காமிக்ஸின் மிகப்பெரிய MINUS POINT இதுதான். சீக்கிரம் சரி செய்வீர்களா?

  SOUNDAR, SIVAKASI

  ReplyDelete
 28. Dear Editor,
  Wow!Big bang post. What's this month issue? Don't postpone "Thanga Kalarai part1 &2" . Pls publish as announced (August issue).

  ReplyDelete
 29. சாத்தானின் தூதன் டாக்டர் 7, என் பெயர் லார்கோ இரண்டு புத்தகங்களும் கொழும்புவில் இன்றுதான் வாங்கினேன். சூப்பர்ப்பா..!!! கலரில் தமிழ் காமிக்ஸ் பார்ப்பது மகிழ்ச்சியாயிருக்கிறது. முன்பைவிட விலையும் இங்கே குறைவு. அடுத்தவெளியிட்டையும் விரைவாக வெளியிடுங்கள்.
  http://lion-muthucomics.blogspot.com/2012/02/for-our-sri-lankan-friends.html

  ReplyDelete
 30. சார் லார்கோ இன்றுதான் டென்வர் வந்தார். சட்டை கிழிஞ்சு போனதுபோல இருந்தது கவர். டெலிவரி செய்த போஸ்ட்மேன் தயவு செய்து நல்ல கவரில் அனுப்ப சொல்லுங்க என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் இதோடு மூன்று முறை டெலிவரி செய்யும்போதும் இதையே சொல்லிச்சென்றார். நானும் ஒவ்வொருமுறையும் ஹி ஹி ஹி என சிரித்து சமாளிக்கிறேன். இனிமேல் கொஞ்சம் நல்ல கவரில் அனுப்புமாறு வேண்டிகொள்கிறேன். மத்தபடி லார்கோ அட்டகாசம். திகிலும் பட்டாசு கெளப்புது.

  ReplyDelete
 31. Wonderful News. As many people had already requested please proide the release dates.

  - Karthikeyan

  ReplyDelete
 32. ஜோல்னாவை காண இமய மலை வரை சென்று இருந்தேன் ............. அங்கு தாடி வை த்து கொண்டு ஒரு ஜோல்னா சாமீ லார்கோ படித்து கொண்டு இருந்தது ............ நம்ப ஜோல்னபயன் மாறு வேஷத்தில் இருகிறாரோ என்று அவர் தாடி யில் கை வை த்தேன்..........பட் அவர் கேடி ஆகி விட்டர்....................ஜோக்ஸ் apart ..............அறிவிப்புகள் சூப்பர் ....................அடுத்த issue detective ஜெரோம் ஆ இல்லை கலர் reporter jhony ஆ ?..............இது எடிட்டர் கே தெரியாத கடினமான கேள்விதான் ............but பதில் சொல்லும் புண் ணிய வன்களுக்கு என் ஸ்டைல் ல் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் அனுபப்படும்.................take care guys .............................லெட்ஸ் ஸ்டார்ட்ஸ் தி மியூசிக் ....................... டொட்ட டொட்டோ..................டொட்ட டொட்டோ ...........

  ReplyDelete
 33. என்ன நடக்குது இங்கே, அட்டகாசம் போங்க... திக்குமுக்காட செய்யும் அறிவிப்புகள். இத இத இதத்தான் சார் நான் எதிர்பார்த்தேன்.

  [Parani] Please ensure that it will be released as you have announced, do leave them just with an announcement :-)

  Can you also tell us the probable month/date the books you had mentioned, will come?
  [Parani] You are expecting too much! you should be happy with the announcement!

  ReplyDelete
 34. அது சரி… நமது லயன் காமிக்ஸின் ஆண்டுவிழாவை முன்னிட்டு ஒரு விழா வைக்கலாம்… ஒரு கெட்-டூ-கெதர் மாதிரி இருக்கும்னு கொஞ்ச நாள் முன்னாடி பேசுதுனதா ஞாபகம்… என்னாச்சு ஸார்?

  ReplyDelete
 35. ஆமாம் பய புள்ள....... சிவகாசி சிங்கத நேர்ல பாத்துபுடனும்லா ...யே...என்ன சொல்லுதீக....அதான் ஜூலை 15 கூடணும்னு முடிவு பன்னிருக்குளா ...என்ன பய புள்ளகளா..... நான் சொல்லறது சரி தானே........

  ReplyDelete
  Replies
  1. அது சரி… நீங்க முடிவு பண்ணா மட்டும் போதுமா? எங்கே… எப்போது… எப்படி… எதுவுமே தெரியலைலா…

   Delete
 36. எனது பெயர் கொண்ட நாயகனை வண்ணத்தில் கொண்டு வரும் தங்கள் மாபெரும் அன்பிற்கு மிக்க நன்றி தலைவரே!

  ReplyDelete
 37. விஜயன் சார்,

  தாங்கள் வலைப்பூவில் தகவல்களை அப்டேட் செய்வது போல லயன் முத்து காமிக்ஸ் இணைய தளத்திலும் ("www.http://lion-muthucomics.com") அப்டேட் செய்யலாமே (போன ஜனவரிக்கு பிறகு அப்டேட் பண்ணவே இல்லை போல சார்). உங்களிடமிருந்து நாங்கள் ரொம்ப எதிர் பார்ப்பது அடுத்த இதழ் என்ன & எப்பொழுது எங்களுக்கு வந்து சேரும். அடுத்து வலைப்பூவில் அப்டேட் பண்ணும பொழுது இதை தெரிவிக்கலாமே...? அத்துடன் எங்களின் அமோக ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கே சார்.

  ReplyDelete
 38. லார்கோ சம்திங் ஸ்பெஷல் திகில் வொன்டர் புல்

  ReplyDelete
 39. happy to hear from all lion comics fans and thanks to vijayan sir for this enthusiastic New episodes of our comics journey. I have no words to explain my happiness. YOU WILL BECOME SPEECHLESS WHENEVER YOUR MIND AND HEART FILLED WITH HAPPINESS. And, so i am.
  we want tex willer and captain tiger in colour please...

  ReplyDelete
 40. ரிப்போர்ட்டர் ஜானி + கேப்டன் பிரின்ஸ் International Comics - களுக்கு இணையாக முழு வண்ணத்தில், அட்டகாசமான வழுவழு காகிதத்தில்!!!

  நேற்று காலை புத்தகம் தபால் மூலம் வந்தது. வேலை முடிந்து இரவு தாமதமாக வீடு திரும்பியும், இரண்டு கதைகளையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன் :)

  தயவு செய்து காமிக்ஸ் கிளாசிக் - அனைத்து ஹீரோக்களையும் (ஸ்பைடர், இரும்புக்கை மாயாவி, ஆர்ச்சி ....), அனைத்து முத்து, லயன் & மினி லயன் கதைகளை மறு பதிப்பு செய்ய முடிந்தால்... Super

  டெக்ஸ் வில்லர் & சிக் பில் - கிட் ஆர்டின் கதைகளையும் முழு வண்ணத்தில் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்

  Keep it up

  ReplyDelete
 41. Interesting to know about your plans. Young tiger, largo, reprints hmmm well well well

  ReplyDelete