Powered By Blogger

Sunday, May 13, 2012

ஒரு காமிக்ஸ் ஞாயிறு ......!

நண்பர்களே,

திரும்பிய பக்கமெல்லாம் வசீகரமாய்ச் சிரிக்கும் Tintin மண்ணின் மைந்தனாய்ப் பாவிக்கப்படும் பெல்ஜியத் தலைநகரான Bruxelles-லிருந்து இந்தப் பதிவினை எழுதுகிறேன் !

Tintin & Snowy
 காமிக்ஸ்களில் ; சாக்லட்களில் ; தோரணங்களில் ; ரயில்நிலையத்தின் உட்சுவர்களில் என்று எங்கே சென்றாலும் துரத்தும் டின்டின் இன்னமும் நம் தமிழுக்கு வந்திடும் வேளை வந்திடவில்லை  - ஆனால் வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கிட தளராது நடை பயின்ற விக்ரமாதித்தன் போல் நானும் தம் கட்டி முயற்சித்துக் கொண்டே இருப்பேன். வண்ணம் ; சர்வதேசத் தரம் ; 'கெத்தான' விலை என்று டின்டின் பதிப்பகத்தினர் எதிர்பார்க்கும் சங்கதிகளில் முக்காலே மூன்று வீசம் இப்போது நம் அருகாமையில் ! விற்பனை எண்ணிக்கை மட்டும் இன்னும் சற்றே முன்னேறி விடும் நாள் டின்டின் நம்மோடு தமிழில் கை குலுக்கிடும் நாளாக இருந்திடும் !

நான் அமர்ந்திருக்கும் இன்டர்நெட் சென்டரிலிருந்து பார்த்தால் Tintin மண்டையினை மேலே தாங்கிப் பிடிக்கும் Lombard காமிக்ஸ்   நிறுவனத்தின் அலுவலகம் தெரிகிறது !

காமிக்ஸ் தலைநகரம் !
டின்டின் வெளியிடும் நிறுவனத்திற்கும் Lombard நிறுவனத்திற்கும் தொடர்பில்லை எனினும், "டின்டின் " என்ற பெயரில் எக்கச்சக்க ஆண்டுகளாய் ஒரு அற்புத காமிக்ஸ் இதழ் நடத்தி வந்த நிறுவனம் என்பதால் டின்டின் & snowy இவர்களது அலுவலகக் கூரையில் ஒய்யாரமாய் ஊஞ்சலாடுகிறார்கள் ! 

பிரெஞ்சு மொழியில் காமிக்ஸ் இதழ்
 எட்டு கழுதை வயசாகும் சங்கதியினை இது போன்ற சந்தர்ப்பங்களே நினைவுக்குக் கொண்டு வருகின்றன ! இதே அலுவலகத்திற்கு தம்மாத்துண்டு மீசையோடு ; கையில் பர்மா பஜார் பிரீப் கேஸ் சகிதம் ,  கோட் தைக்கப் பிரியப்பட்டதொரு மவுண்ட் ரோடு டைலரின் பரீட்சார்த்த முயற்சியினை அணிந்து நான் வந்தது - 27 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதை தலை சொல்லிடும் போது, உள்ளம் வேண்டாவெறுப்பாய்  ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ! ஆனால் காலம் புரட்டிப் போட முடியா ஒரே சங்கதி நம் காமிக்ஸ் காதல் மட்டுமே என்பதை என் கையில் உள்ள பையும்..அதனுள்ளே உள்ள காமிக்ஸ்களும் உணர்த்திடும் போது மெய்யான சந்தோஷம் என்னுள் !

லார்கோ வின்ச் இதழ்கள் சந்தாக்களுக்கு முமுமையாக அனுப்பியாகி விட்டது என்று அலுவலகத்தில் சனிக்கிழமை கேட்டுத் தெரிந்து கொண்டேன். கூரியர் & பதிவுத் தபாலில் மட்டுமே இதழ்கள் அனைத்தும் அனுப்பப்பட்டுள்ளன என்பதால் transit -ல்  தவறிட வாய்ப்புகள் குறைவே.இது வரை வந்துள்ள விமர்சனங்கள் ஒரு வழிகாட்டியாகக் கருதிடுவதென்றால்  லார்கோ நம்மிடையே அதிரடியான impact ஏற்படுத்திவிட்டார் என்பது சந்தேகமில்லா நிஜம் ! வேற்று மொழியில் சக்கை போடு போட்டதொரு திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் போது - வெற்றிக்கு ஒரு பாதி உத்திரவாதம் உண்டு என்பது போல் - ஆங்கிலத்தில் Cinebooks நம் லார்கோவை அதிரடி செய்ய அனுமதித்து 'இவர் நிச்சயம் தூள் கிளப்பும் ஆசாமி ' என்ற தைரியத்தை நிறையவே கொடுத்திருந்தார்கள் எங்களுக்கு! So தயக்கங்களின்றி லார்கோவை களம் இறக்கச் செய்திடுவதற்கு Cinebooks ஆங்கில இதழ்களும் ஒரு பிரதான காரணமே ! அவர்களுக்கு நம் நன்றிகள் !

மாறுபட்ட  விலைகள்  பற்றி மாறுபட்ட பல சிந்தனைகள் என்ற போதிலும் பெரும்பான்மையினர் இதே தரத்தைத் தொடர்ந்திடுவதில் தான் நாட்டம் கொண்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது !  என்னைப் பொறுத்த வரை தரத்தில் compromise செய்வதாகத் துளியும் எண்ணமில்லை. நான் இன்னமும் அசை போட்டிடும் ஒரே விஷயம் : 

 • ரூபாய் 100 விலையில் இரு கதைகள் வண்ணத்தில்+ கொஞ்சம் கருப்பு வெள்ளை என்ற இதே பாணியைத் தொடருவதா ? 
 • அல்லது மாதம் ஒரு 50 ரூபாய் இதழ் (1 கதை வண்ணத்தில் + சிறிது black & white) 
 என்று streamline பண்ணிடுவதா என்பது மட்டுமே ! கைவசம் உள்ள 4 கருப்பு வெள்ளை இதழ்கள் 10 ரூபாய் விலையில் வந்திடும் (புதிய வெளியீடுகளின்) கடைசிப் பிரசுரங்கள் ! இனி எப்போதாவது மறுபதிப்பு செய்திடும் சமயங்களில் மட்டுமே இந்த  விலை ; இந்த format பார்த்திட இயலும்.So, let's savour them for now guys !  

அப்புறம் இன்னொரு அதிரடி சேதியும் கூட .... !

லார்கோவின் வண்ண வானவேடிக்கைகளைப் பார்த்த கையோடு    அடுத்து நமது முத்தான மூவரை சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலில் ; கருப்பு வெள்ளைப் பாணியில் ; புராதனக் கதைகளோடு கொணர்வதில் எனக்கே கொஞ்சம் தயக்கமாய் உள்ளது ! (கனவுகளின் காதலர் 'அட்ராசக்கை' ; 'அட்ராசக்கை' என்று உற்சாகத்தில் குரல் எழுப்புவது உங்களுக்கும் கேட்டுடுச்சா :-)  ) முன்னரைப் போல் கடைகளில் நம் இதழ்கள் விற்பனை ஆகிடும் பட்சத்தில் - பிடிக்காததொரு இதழ் வெளியாகும் சமயம் அதனை சும்மா ignore செய்து விட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம் ! வாங்கிட வேண்டுமென்ற கட்டாயங்கள் நிச்சயம் இருந்திருக்காது ! ஆனால் இப்போதோ நாம் நேரடி விற்பனை முறையில் இருக்கிறோம் என்பதால் - பிடிக்காத இதழாய் இருக்கும் பட்சத்திலும் கூட  உங்கள் 100 ரூபாய் பிளஸ் கூரியர் பணம் கோவிந்தாவாகிவிட வாய்ப்புள்ளது. So கொஞ்சமும் பிசிறின்றி ; உங்கள் பணத்திற்கான தரத்தை வழங்க வேண்டுமென்ற பொறுப்பு எங்களுக்கு அதிகமாகி உள்ளது ! சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் தனி இதழாக வெளியிடுவதா...அல்லது அவ்வப்போது வந்திடும் வண்ணக் கதைகளோடு மாயாவி ;ஆர்ச்சி ஸ்பைடர் கதைகளை ஒன்றொன்றாய் ஒட்டுச் சேர்த்திடலாமா?KK-ன் கருத்து இங்கே ஏற்கனவே பதிவாகி விட்டதென்பதால்,அவர் நீங்கலாய் மற்ற நண்பர்கள் அனைவரும் கொஞ்சம் தெளிவு தந்திட உதவிடுங்களேன் !  அதற்காக சூப்பர் ஹீரோ கதைகளை முழு வண்ணத்தில் போடலாமே என்ற suggestions வேண்டாமே ப்ளீஸ் ? நடைமுறைக்குச் சாத்தியப்படா விஷயம் அது !

அப்புறம் லார்கோவின் அறிமுகத்தைத் தொடர்ந்து புதிதாய் கொஞ்சம் கார்ட்டூன் கதைத் தொடர்களையும் அறிமுகப்படுதினாலென்ன என்று நண்பர் Ramesh கேள்வி  எழுப்பி இருந்தார்... நிஜமான ஆதங்கமே !  என்னைப் பொறுத்த வரை கார்ட்டூன் தொடர்களில் ஆழம் இல்லாது போகும் பட்சத்தில் அவற்றை அதிகம் ரசித்திட இயலாது. பெயரளவில் மாத்திரம் கார்டூனாக உள்ள தொடர்கள் நிறையவே உள்ளன - ஏன் லக்கி லூக் கதைகளிலேயே ரொம்பவும் கவனமாய்க் கதைகளைத் தேர்வு செய்யாவிடின் சொதப்பலான ஒன்றிரண்டு வந்து சேரும் அபாயம் உண்டு. Cinebooks ஆங்கிலத்தில் வெளியிட்ட லக்கி லூக் கதைத் தேர்வுகள் ரொம்பவே சுமார் என்பது எனது அபிப்ராயம். So நிஜமாய்த் தரமான  கார்ட்டூன் தொடர் கண்ணில் படும் சமயம் நிச்சயம் அவற்றை மிஸ் பண்ணிட மாட்டேன் !

அது சரி... ஆங்கிலத்தில் அசாத்திய வெற்றி பெற்ற ASTERIX & OBELIX கார்ட்டூன்  தொடர்களைப் பற்றி உங்களில் எவருமே அதிகமாய் கேள்வி எழுப்பியதில்லியே   ? எனது சின்ன வயது favorites -களில் இத்தொடருக்குப் பெரியதொரு அபிமானம் உண்டு !

ASTERIX & OBELIX
வயிறு பசியில் உறுமும் சமயம் துவங்கி விட்டதால் இப்போதைக்கு விடை பெறுகிறேன் guys  ! IPL மேட்ச்கள் ..மின்வெட்டு ... அக்னி நட்சத்திரப் புழுக்கம் எண்ணெய் வழியும் முகம் என்பதெல்லாம் வேற்று மண்டலத்து சங்கதிகளாய்  இந்த தேசங்களில் புலப்படும் போதிலும் ஊர் திரும்பும் நாளுக்குக் காத்திருக்கிறேன் ! Can't wait to be back home...இன்னமும் லார்கோவை கூட நான் பார்த்திடவில்லையே !
 

113 comments:

 1. Replies
  1. சாதனைக்கு நாட்கள் தடையல்ல ,என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கபட்டுள்ளது

   Delete
  2. ஐயோஓஓஓ ஓஓஓஒ .....என்னோட காமெடி கதைய உட்டுடீங்கலேபா ...........நான் தான் சிரிப்பில் டாப் .............மத்தெதேல்லாம்
   டூப்பு...................நான் சுத்து சுத்தி வர்றது தெரியலையா .......next ஒப்ளிக்ஸ்;;;;;;;;;; next ;;;;;;;;;; டின் டின் ........ஒகே ''இந்த மந்திரி ஒரு வாட்டி சொன்ன நூறு வாட்டி சொன்ன மாதிரி''

   Delete
  3. ''சோறுபோட்ட ஆத்தாள...மறப்பேனா..........விஜய ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லே .........காமிக்ஸ் புதுசு என்றாலும் பழசு என்றாலும்..சொகுசு நம்போட தான் .......''.
   ''அ.. ஆ .. பாட்டாவே படிச்சிட்டியா ''
   ''அப்போ மினிகாமிக்ஸ்... லயன்காமிக்ஸ்... ,திகில் காமிச்சு நடு நடுவுல நுறு ரூபாய்க்கு போட்டுக்கணும் .....''
   ச்பைடேரே உன் வீட்டுல சௌக்கியமா நான் இங்க சௌக்கியமே......
   ஆர்சியே உன் வீட்டுல சௌக்கியமா நான் இங்க சௌக்கியமே.....
   உன்னை நினைத்து பார்கையில் அழுகை முட்டுது ....
   லயன் காமிக்ஸ் பார்கையில் எச்சில் கொட்டுது....
   இரும்பு கைக்கு மட்டும் வாய்ப்பு எட்டுது ....
   ஸ்பைடர், ஆர்ச்சி, இரும்பு கை, மேல நாங்க வச்ச காதல்அதயும் தாண்டி.....
   புனிதமானது.........
   புனிதமானது.........
   புனிதமானது.........
   புனிதமானது.........

   Delete
  4. மதியில்லா மந்திரியாரே ! உங்களை நாங்கள் மறந்திடவில்லை ! ரொம்ப சீக்கிரமே உங்கள் சேஷ்டைகளை நமது லயனில் தொடரப் போகிறீர்கள் !

   Delete
  5. ''மாஸ்டர் நமக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளது .......
   ஐயோ ......அடுத்த ப்ளான் போட ஆரம்பிச்சிடீங்களா மாஸ்டர் ''

   Delete
  6. நண்பர்களே.....ரிப்ளை மூலமாக அல்லாமல் நேரடியாக கமென்ட் செய்யும் வழிமுறையை யாரேனும் எனக்கு சொல்லித்தாருங்களேன்...ப்ளீஸ்...

   Delete
 2. Replies
  1. என்ன நைஸ் சார் ! ஸ்பைடரை தரிசிக்க ஆசை இல்லையா ? ஸுப்பர் ஹீரோ ஸ்பெசலில் !

   கேளுங்கள் கொடுக்கப்படும்

   Delete
  2. விட்டால் என் மண்டையை உடைத்து விடுவீர்கள் இரும்பு கையாரே....... ஸ்பைடருக்கு ஸ்பெசல் இல்லையா .......ஸ்பைடரை விட நொடிக்கு நொடி குணம் மாருகிறாரே நம்ப பாஸ் ......என்ன தான் கலர் காமிக்ஸ் என்றாலும் பெல்ஹாம் ராய் அர்டினியை ஸ்பைடர், கவுண்டமணி திட்டுவது போல திட்டுவதற்கு ஈடே ஆகாது.....கலர் தனி ,கருப்பு வெள்ளை தனி .....மாதம் நூறு ரூபாய் ஆனாலும் ஒகே....

   Delete
  3. ஆசிரியர் தான் ஊர்ல இல்லையே ....என்னோட பாசறைல உள்ள உருவ பொம்மைக்கு விஜயன் சார் மேக் அப் போட்டு விட்டு சிவகாசிக்கு அனுப்பி.., பாஸ் ஊருக்கு வரதுக்குள்ள .......சூப்பர் ஹீரோ ஸ்பெசல் போட வச்சுடலாம் ........நீங்களும் மாயமா மறஞ்சு ஆபிஸ் பக்கம் போய் வரலாமே இரும்பு கையாரே......

   Delete
  4. வேண்டாம் நண்பரே நமது படைக்கு முன் அவர் பணிந்து விடுவார். ஏன் அவரே தலைமை தாங்கி நடத்தி செல்லவும் செய்வார் . அவரும் ரசிக்க வேண்டாமா !கலரில் கூட விட்டாலும் விடுவார்.

   Delete
 3. டியர் தல , சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் இனி அவளவு தானா? வராதா? 100 ரூபா கலர் காமிக்ஸ் ஓடு இரும்பு கை மற்றும் aarchi வெளியிடுவது நல்ல ஐடியா பட் சூப்பர் ஹீரோஸ் காக வெயிட் செய்து கொண்டு இருக்கிறோம் . ஜஸ்ட் consider சார் .

  ReplyDelete
 4. #ரூபாய் 100 விலையில் இரு கதைகள் வண்ணத்தில்+ கொஞ்சம் கருப்பு வெள்ளை என்ற இதே பாணியைத் தொடருவதா ? #
  100 ரூபாய்க்கு இரண்டு கலர் மற்றும் கறுப்பு வெள்ளையை விட, மூன்று கலர் கதை + சிறிது விலை நன்றாக இருக்கும். கருப்பு வெள்ளைகளை தொகுத்து ஒரு புத்தகமா வெளியேடலாம்.

  Tintin மற்றும் ASTERIX & OBELIX தேருந்து எடுக்க முடிவு செய்தால், என்னுடைய தேர்வு ASTERIX & OBELIX தான். டின்டின்னை விட ASTERIX கதைகள் அட்டகாசமாக இருக்கும். முதலில் சொன்னதுபோல, கருப்பு வெள்ளைகளை தனியாக வெளியீடு செய்யவும்.

  ReplyDelete
  Replies
  1. வழி மொழிகிறேன் .ஆனால் சூப்பர் ஹீரோ ஸ்பெஸல் தனியாக வந்தேயாக வேண்டும்.

   Delete
 5. //லார்கோ வின்ச் இதழ்கள் சந்தாக்களுக்கு முமுமையாக அனுப்பியாகி விட்டது என்று அலுவலகத்தில் சனிக்கிழமை கேட்டுத் தெரிந்து கொண்டேன்.//

  விஜயன் சார்

  நீங்கள் கூறியபடி பார்த்தல் எனக்கு நாளை லார்கோவை படிக்கும் வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். (இன்னும் புக் வந்து சேரவில்லை சார்... சந்தா லிஸ்டில் மேல வர எதாவது வழி இருக்க சார் ? )

  புதிய கதைகள் வரவேற்க வேண்டியவையே ...

  எப்படி இருந்தாலும் (குறைந்தபட்சம்) மாதம் ஒரு புத்தகமாது எங்களுக்கு கிடைக்க வேண்டும்.

  மாதம் ஒரு புத்தகம் 50 ரூபாய் இதழ்
  மூன்று மாதங்களுக்கு ஒரு புத்தகம் ரூபாய் 100 விலையில்

  சந்தா தொகை (50 X 12=600) + (100 X 4=400) Total Rs. 1000 + Courier

  நன்றி
  நாகராஜன்

  பி.கு. நாளைக்கு மட்டும் எனக்கு லார்கோ வரவில்லை எனில், கன்சூமர் கோர்ட் போவது உறுதி சார் :)

  ReplyDelete
  Replies
  1. ஆகா ! புத்தகங்களை அதிகம் இருப்பதால் திகில் ,மினிலயன் என வெளியிட்ட நீங்கள் அதை போல மாதமிருமுறை என ஏன் வெளியிடக்கூடாது?இதுதானே நண்பரே நீங்கள் கேட்க நினைப்பது

   Delete
 6. கலக்கலான பதிவு.

  முதலிலேயே சில விஷயங்களைக் 'கோடி'காட்டியிருப்பதற்கு நன்றிகளைச் சொல்லிவிடுகிறேன்.

  100ரூபாயில் 'லார்கோ' போல கலர் ப்ளஸ் கறுப்பு வெள்ளை கதைகொண்ட இதழ்கள் வரட்டுமே. அவை தவிர, தற்போது நீங்கள் விளம்பரப்படுத்தியிருக்கும் (லார்கோ கைக்கு இன்னும் வராவிட்டாலும் நண்பர்களின் ஸ்கான் உதவியுடன் விளம்பரங்கள் பார்த்தாயிற்று) 'எமனின் திசை மேற்கு' போன்ற கதைகளை 50ரூபாயில் முழு வர்ணத்தில் கொண்டுவந்திடுங்கள். 25, 50, 100, எப்போதாவது 10, தேவைப்பட்டால் 30, அதிரடியாய் 200 என்று விலைகளில் நம் காமிக்ஸ்கள் வரட்டுமே? கதைகளுக்கும், அவற்றின் ஓவியங்களுக்கும் ஏற்ப நீங்கள் விலைகளைத் தீர்மானித்தால் மறுக்கவா போகிறோம்? வாசகர்களின் எண்ணங்கள் வேறுவேறு விதமாக இருக்கும்தான். ஆனால், பொதுவானதொரு கருத்து எட்டப்படுவது நிச்சயம் சாத்தியமே! (இல்லாவிட்டால் லார்கோ வந்திருக்கமுடியுமா தமிழுக்கு?).

  ஆனால், உங்களுக்கு வாசகர்கள் தரும் ஒத்துழைப்புப்போல, வாசகர்களின் (அநேக) விருப்பமான சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலை தயவசெய்து வெளியிட்டுவிடுங்கள். ஆண்டாண்டு காலமாக அவர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த எமக்கு இது ஒன்றும் பெரிய சுமையாக இருக்காது, ப்ளீஸ்! (நண்பர்களே என்ன சொல்றீங்க?).

  'டின் டின்' - தமிழில்; நடந்தால் - வா....வ்...!!! நினைக்கவே சிலிர்க்கிறது.
  நடக்கும்; நம்பிக்கையிருக்கிறது. (ஆனால், 'டின் டின்'னை உல்ட்டா பண்ணி, 'அங்கதன் கோட்டை அதிசயமாக' வாண்டுமாமா பெயரில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட கொடுமை நடந்தேவிட்டது!).

  அடுத்தது- ஆஸ்ட்ரிக் - ஒப்ளிக்ஸ் தொடர்!

  ஸார், இது உங்களுக்கே நியாயமா? பொதுவாக வாசகர்கள் அன்றிலிருந்து இன்றுரை சொல்லிவரும் கருத்துக்களை ஞாபகம் வைத்திருக்கும் நீங்கள் இதைமட்டும் எப்படி மறந்தீர்கள்?

  ஒரு வாசகர் இந்தத் தொடர்பற்றி எழுப்பியிருந்த கேள்வியொன்றுக்கு 'ஹாட்-லைனில்' பதில்சொல்லும்போது, இந்தக் கதைத்தொடர் நமது பாணிக்கு சரிப்பட்டுவராது! என்று ஒரேயடியாக புல்ஸ்டாப் வைத்தவர் நீங்கள்தான். இப்போ, அதைப்பற்றி கேக்கலியே என்று இப்படி அசால்ட்டாகக் கேட்டால் எப்படி? ஒருவேளை வாசகர்களின் ரசனை மாற்றத்தை நாடிபிடித்துப் பார்க்கிறீர்களோ? கொண்டுவாங்க ஸார். தமிழில் அவர்களிருவரும் கலாய்ப்பதை நாங்களும் ரசிப்போமே!

  உங்களது இந்தப் பதிவில் முன்னமே நான் சொன்னதுபோல நிறைய விஷயங்களுக்கு 'கோடி' காட்டியிருக்கிறீர்கள். நடக்கட்டும், நடக்கட்டும். நாங்கள்தானே வாசிக்கப்போகிறோம்!!!

  -Theeban (SL)

  ReplyDelete
  Replies
  1. அருமை நண்பரே .எனது எதிர்பார்ப்பும் இதே இதே

   Delete
  2. Theeban (SL): நமது பழைய கருப்பு வெள்ளை பாணிக்கும் சரி...குறைந்த விலை - சின்ன சைஸ் பார்முலாவிற்கும் சரி - Asterix & Obelix சுத்தமாகப் பொருந்தி இருக்க மாட்டார்கள் ! அதை விட முக்கியமாக இன்று போல் நம் ரசனைகளில் ஒரு quantum jump அன்று இருந்திடவில்லை என்பதும் நிஜமே ! So அந்த காலகட்டத்தில் இத்தொடர் அதிகமாய் என் பரிசீலனையில் இருந்திடவில்லை.

   2013 இந்த காமெடி ஜோடி நம்மை சந்திக்கவிருக்கும் ஆண்டாக,அமைந்திடுமா என்பதற்கு காலம் பதில் சொல்லும் ...!

   Delete
 7. Replies
  1. இன்னும் எல்லோரும் சத்தமா சாருக்கு கேக்ற மாதிரி ஒரு முறை சொல்லுங்க

   Delete
 8. FROM RR,
  SIR PLEASE PUBLISH SUPER HERO SPECIAL AS EARLY AS POSSIBLE AS FOR TIN TIN @ ASTERIX I DONT THINK THEY WILL SUIT OUR TASTE THEY ARE TOO CHILDISH.PLEASE CONCENTRATE MORE ON TIGER,LARCO.WESTERN LIKE SERIES YOU CAN EVEN TRY SOME OFF BEAT SERIES LIKE SCORPION AND AFRICA.

  ReplyDelete
  Replies
  1. //SIR PLEASE PUBLISH SUPER HERO SPECIAL AS EARLY AS POSSIBLE //   we are expecting our super dooper stars .
   please please please sir

   Delete
  2. RR அவர்களுக்கு, நீங்கள் மிகுந்த குழந்தைத்தனம் என குறிப்பிட்டுள்ள அதே டின் டின் தலை முடி ஸ்டைல் தான் இன்று டோனி முதல் விஜய் வரை, பாப் ஸ்டார் முதல் ராக் ஸ்டார் வரை, ஏன் இங்கிலாந்து இளவரசர் கூட தனது திருமணத்தின் போது செய்து கொண்ட அலங்காரம். சமீபத்தில் டின் டின் திரைப்படம் டப் செய்யப்படாமல் ஆங்கிலத்திலேயே வெளியாகி நமது தமிழ்நாட்டில் கூட சக்கை போடு போட்டது நினைவில்லையா?

   Delete
  3. DEAR SIMBA,
   I DIDNT MEAN TO HURT TINTIN @ASTERIX FANS.THERE ARE MORE SERIES BETTER THAN THESE FOR OUR TAMIL COMICS LOVERS.

   Delete
 9. நல்ல கதைகளை மட்டுமே நீங்கள் செலக்ட் செய்வீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு இருப்பதால் எங்கள் ஓட்டு உங்கள் விருப்பத்திற்கே. எனவே உங்கள் விருப்பமே எங்கள் விருப்பம். புத்தக ப்ரியன்

  ReplyDelete
 10. டியர் எடிட்டர் சார், நீங்கள் ஜெர்மனி சுற்று பயணம் என்று சொன்னவுடன், எனது மனதில் பட்டது, டின் டின் தான். இப்பொழுது இந்த பதிவை பார்த்தவுடன் உங்களது எண்ணங்கள் புரிகிறது. கனவு மெய்பட வேண்டும், டின் டின் கதைகள் ஆங்கில இதழ்கள் பல படித்துள்ளேன், ஆனால் தமிழில் அதிலும் நமது லயன் தொகுப்புகளில் டின் டின் படிக்க வாய்ப்பு அமைந்தால், இதை விட இன்பம் வேறில்லை. எவ்வாறேனும் முயற்சி எடுத்து அதன் பதிப்புரிமைகளை பெற்றிடுங்கள்.

  சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் பற்றி உங்கள் மனதில் ஏற்ப்பட எண்ணம் ஞாயாமான ஒன்றே. எதார்த்த பாணியிலான வண்ண இதழுக்கு கிடைத்திட அபரித ஆதரவு, கருப்பு வெள்ளை இதழ்களுக்கு, அதிலும் காதில் பூசுற்றும் வகையான கதைகளுக்கு முழுவதுமாக கிடைத்திடுமா என்றால் இல்லை தான். அதற்காக அம்மூவர் கூட்டணியை உடைப்பது வேண்டாம். Let's stick to the plan. இன்னமும் உலோக தலையனுக்கான ஆதரவு கரைந்திடவில்லை.

  ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஒப்ளிக்ஸ் பற்றி எனக்கு பெரிதாக தெரியாது. இருந்தாலும் இந்த படத்தில் அவர்களது முகத்தை பார்த்தாலே சிரிக்க தோன்றுகிறது. அவர்களது சாகசங்கள் வரிசையில் நின்றால், சளைக்காமல் நாங்களும் படிக்க காத்திரிக்கிறோம்.

  கடைசீயாக புத்தக விலை. ஒருவாறு தாங்கள் almost nearing a decision I think. சாதரணமாக இன்று இருவர் ஒரு தேநீர் விடுதிக்கு சென்று இரண்டு டீ, இரண்டு வடை சாப்பிட்டால் குறைந்தது ஐம்பது ரூபாய் செலவாகிறது. I am ready to spare my 2 days tea expense for the sake of a precious monthly edition. மாதம் நூறு ருபாய் என்பது இன்றைய நிலையில் இரண்டு நாள் டீ செலவு மட்டுமே. நண்பர்கள் யார் யார் என்னுடன் இருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. //கருப்பு வெள்ளை இதழ்களுக்கு, அதிலும் காதில் பூசுற்றும் வகையான கதைகளுக்கு முழுவதுமாக கிடைத்திடுமா என்றால் இல்லை தான். அதற்காக அம்மூவர் கூட்டணியை உடைப்பது வேண்டாம். Let's stick to the plan. இன்னமும் உலோக தலையனுக்கான ஆதரவு கரைந்திடவில்லை. //


   ஆமா ஆமா

   Delete
  2. மூவர் கூட்டணி நிச்சயம் கை கழுவப் படவில்லை நண்பர்களே...! உரக்க சிந்திக்கிறேன் என்று மட்டும் கொண்டிடலாமே !

   Delete
 11. ஸ்டீல் க்ளா ஒன் மேன் ஆர்மியா போராட காலத்தில் இறங்கிட்டார் போல. உங்கள் போராட்டம் முழு வெற்றி அடைய வாழ்த்துக்கள் நண்பரே ;)

  ReplyDelete
  Replies
  1. இல்லை ,நண்பரே உங்களை போல இன்னும் நண்பர்கள் இணைந்தால் ஒரு பெரும் படையே திரட்டி விடலாம்

   Delete
  2. நன்றாக பாருங்கள் உங்கள் படையில் நானும் என்னை இணைத்துள்ளேன்

   Delete
 12. வேணாம் சார் ! கனவுகளின் காதலர் அழுதிடுவார்
  வேணாம் சார் ! கனவுகளின் காதலர் கொதித்திடுவார் .இல்லன்ன என்ன

  எழுதிடுவார்

  ReplyDelete
 13. ஒரு காமிக்ஸ் sunday .என எழுதி விட்டு இருளில் தள்ளி விட்டிர்களே

  ReplyDelete
  Replies
  1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா : கோவையில் நிகழ்ந்திடும் மின்வெட்டுக்கு நான் பொறுப்பல்ல சார் :-)

   Delete
  2. ஹ ஹ ஹா ஹா ,உங்கள் ஹாஸ்யம் நிறைந்த பதிலால் தவறு என சுட்டிகாட்டிய எனது கையை மடக்கி விட்டிர்கள் .நன்றி சார் .ஆஹா தோற்பதில் கூட இவ்ளோவு சந்தோசமா! வெற்று வார்த்தைகள் இல்லை இது! எனது சந்தோசம் உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்

   Delete
 14. சார்,

  டின் டின் காமிக்ஸ் நான் படித்தது கிடையாது.
  ஆனால் திரைப்படம் பார்த்தபோது மிகவும் பிடித்தது.

  So டின் டின் தமிழில் படிக்கச் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்.

  சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் கண்டிப்பாக vanthaha வேண்டும்.
  பொறுத்தது போதும்.

  விலை பற்றி பலர் கருது கூறி உள்ளார்கள்.

  என்னை பொறுத்த வரை தரத்தில் comprimise செய்யவேண்டாமே.

  கலரில் படித்த பின் அனைத்தையுமே கலரில் படிக்கவேண்டும் என்று பேராசை படுகிறேன்.

  நன்றியுடன்,
  கிருஷ்ணா வ வெ

  ReplyDelete
 15. ஸூப்பர் இரவுக்கழுகாரே .எடிட்டர் சார் தயவு செய்யுங்களேன்.

  ReplyDelete
 16. //ரூபாய் 100 விலையில் இரு கதைகள் வண்ணத்தில்+ கொஞ்சம் கருப்பு வெள்ளை// என்ற இதே பாணியைத் தொடர முடிந்தால் நல்லது. நண்பர்கள் குறிப்பிட்டதைப்போல இது இரண்டு அல்லது நான்கு நாட்கள் காபி குடிக்கும் செலவுதான் இப்போது.

  சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் - இந்த புத்தகத்தை மட்டும் பதிப்பித்து விட்டு மற்ற கதைகளுக்கு இப்போதைக்கு விடுமுறை விட்டு விடலாமே. அல்லது இருக்கும் மிச்ச கதைகளை கருப்பு வெள்ளையில் திகில் முதல் பாகம் மறுபதிப்பு செய்தது போல் செய்யலாம். ஆனால் ஒரு சில கதைகள் பெரிதாக இருந்தால் மட்டுமே ஸ்பெஷல் பற்றி கொஞ்ச காலம் கழித்து பேசலாம் என்று நினைக்கிறேன்.

  //ஆனால் இப்போதோ நாம் நேரடி விற்பனை முறையில் இருக்கிறோம் என்பதால் - பிடிக்காத இதழாய் இருக்கும் பட்சத்திலும் கூட உங்கள் 100 ரூபாய் பிளஸ் கூரியர் பணம் கோவிந்தாவாகிவிட வாய்ப்புள்ளது.//

  யாருக்கு எந்த புத்தகம் வேண்டாமோ அவர்கள் லயன் அலுவலகத்தை தொடர்புகொண்டோ, அல்லது கடிதம் மூலமாகவோ தெரிய படுத்திவிட்டால், அவர்களுக்கு புத்தகம் அனுப்பாமல் விட்டுவிடலாமே?(கள்ள வோட்டு/புனைப்பெயர் பதிவும் நிஜத்தை இப்போது பிரதி பலிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்)ஆனால் இதில் நடைமுறை சிக்கல்கள் உங்களுக்கு என்னவெல்லாம் இருக்கும் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் யாரும் எனக்கு இந்த புத்தகம் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஒரு சில வாசகர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு சில கதாநாயகர்கள் பற்றி விருப்பு வெறுப்பு இருந்தாலும், புத்தகம் வாங்காமல் இருக்கமாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

  டின் டின் மற்றும் அச்டேரிக்ஸ் & ஒபெளிக்ஸ் தமிழ் பேச காத்திருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. மிக நெருக்கத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு விசா எடுத்து
  தமிழ் நாட்டிற்க்கு அழைத்து வருவது இன்னும் ஒரு சில ஆண்டுகளிலேயே சாத்தியம் என்றுதான் நினைக்கிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  லக்கி லூக் சினி புக்கில் சுமார் என்றால், யூரோ புக்ஸ் மொழி பெயர்ப்போ சித்ரவதை. மருந்துக்கு கூட சிரிப்பு இல்லை. ஒரு சில புத்தகங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. அவர்கள் மேலும் தொடராமல் இருப்பது நல்லது.

  //நான் வந்தது - 27 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதை தலை சொல்லிடும் போது, உள்ளம் வேண்டாவெறுப்பாய் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் !// ஹி ஹி ஹி. என் தலையை பார்த்து மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.

  //ஆனால் காலம் புரட்டிப் போட முடியா ஒரே சங்கதி நம் காமிக்ஸ் காதல் மட்டுமே என்பதை என் கையில் உள்ள பையும்..அதனுள்ளே உள்ள காமிக்ஸ்களும் உணர்த்திடும் போது மெய்யான சந்தோஷம் என்னுள் !// இது போன்ற நெஞ்சிலிருந்து நேரடியாக வரும் வாசகங்கள்தான் உங்களுடைய பலமே!

  //IPL மேட்ச்கள் ..மின்வெட்டு ... அக்னி நட்சத்திரப் புழுக்கம் எண்ணெய் வழியும் முகம் என்பதெல்லாம் வேற்று மண்டலத்து சங்கதிகளாய் இந்த தேசங்களில் புலப்படும் போதிலும் ஊர் திரும்பும் நாளுக்குக் காத்திருக்கிறேன் !// - சொர்க்கமே என்றாலும் ....(படம் : ஊரு விட்டு ஊரு வந்து-1990) :-)

  ReplyDelete
  Replies
  1. முத்து விசிறி : பதிவிற்கு நன்றிகள் பல ! லார்கோ சிங்கபூர் வந்து சேர்ந்துவிட்டாரா ?

   Delete
  2. //ஆனால் யாரும் எனக்கு இந்த புத்தகம் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.//

   ஆகா வெற்றி நமதே .முது விசிறி அவர்களே கோட்டையினுள் கத்தியின்றி ரத்தமின்றி நுழைந்து விட்டிர்கள் .
   உங்களை கட்டியணைத்து வரவேற்கிறார் நமது மன்னர்

   Delete
 17. Hi..Vijayan.

  archie!!! is it going to make new edition? Vijayan, requesting try to make for us "SCOOBY DOO" in tamil its mix of susbanse with funny.

  you doing good vijayan...really i feel up

  Senthil

  ReplyDelete
 18. Muthu Comics:-
  Scope: Reasonably new stories & Graphic Novels + WARTIME STORIES!
  Price: One or more stories @ Rs.50/- & Largo (plus another story?) @ Rs.100/-
  Paper: Some good quality B&W pages are OK!
  Stars: Largo, Blueberry & bring more of Graphic Novels
  Never: Old Muthu Heroes, Mixing of Thigil or anyother re-prints

  Lion Comics:-
  Scope: Reasonably new stories & Cartoon Heroes + (new) HORROR STORIES!
  Price: One or more stories @ Rs.50/- & Two or more stories @ Rs.100/-
  Paper: Some good quality B&W pages are OK!
  Stars: Tex, XIII, Prince, Tex, Ric Hochet, Chick Bill etc. / Bring new heroes!
  Never: old Lion Heroes, Mixing of re-prints

  Comics Classics:-
  Scope: Re-prints & Unpublished Stories of Archaic heroes!
  Price: One or more stories @ Rs.25/- & Two or more stories @ Rs.50/-
  Paper: Mostly B&W issues @ Rs.25/-, Occasionally color issues @ Rs.50/-
  Stars: Old gang of Muthu and Lion & Thigil / bring some more new(!) oldies as well!
  Never: Only Except for re-prints never print new Cow-boy Comics (new adventures of Tex, Blueberry etc.)

  Frequency of issues:
  Muthu:
  Rs.50/- issues: Jan, Mar, May, Jul, Sep, Nov
  Note: If you print a Rs.100/- issue for example in May then skip the Rs.50/- issue in July! that way you can keep the subscription price in check!

  Lion:
  Rs.50/- issues: Feb, Apr, Jun, Aug, Oct, Dec
  * If you print a Rs.100/- issue for example in Feb then skip the Rs.50/- issue in April!

  Classics: Jan, Apr, Jul, Oct
  * If you print a Rs.50/- issue for example in Jan then skip the Rs.25/- issue in Apr!

  Specials:
  Muthu special in May @ Rs.200/-
  Lion Special in December @ Rs.200/-

  Total number of issues: 18 or less depending on the frequency of Rs.25, 50, 100 & 200 books :)

  Total subscription amount:
  Muthu : 50*6 = 300
  Lion : 50*6 = 300
  Classics: 25*4 = 100
  Specials: 200*2 = 400
  Total: Rs.1100/-

  Thoughts that I want to highlight:
  1. No compromise on quality - Good papers and hard wrappers are a must for us :)
  2. No re-prints / unpublished stories of archaic heroes in Muthu or Lion save them for Comics Classics :)
  3. Cow-boy and Wartimes stories can be part of Muthu / Lion except for re-prints which should go to CC!
  4. Price options: 25 / 50 / 100 / 200 with the above mentioned combinations of stories, B&W pages & frequncey
  5. Maintain a standard size for your magazines (at the max two different sizes)
  6. Special issues: Twice a year @ Rs.200/- & no special issues for archaic heroes even on Comics Classics!
  7. Modernize your packing mechanism - Better packing material, Custom made covers with printed address
  8. Separate column on the first or last page with issue details (title, number, year, month, artist, publication etc.)
  9. Cute fonts for cartoon comics (Lucky Luke, Chik Bill etc.)
  10. No seniority method for sending out the books. Pack them all and send them on the same day! PLEASE, this is no game show, we all pay equal money!
  11. Registered Indian Post for Rs.25/- books & Courier for Rs.50/- and above books!
  12. Either maintain www.lion-muthucomics.com or link that domain name to this Blog!
  13. Official Facebook page to increase interaction among readers
  14. There are more but bye for now, getting late to office :D

  ReplyDelete
 19. ஆசிரியரிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்...

  ஏற்றிவிட்ட ஏணியை எட்டயுதைப்பது எந்தவிதத்தில் நியாயம்?

  நான் 'ஏணி' என்று சொல்வது நமது சூப்பர் ஹீரோக்களைதான்.

  நமது காமிக்ஸ் அடையாளமே சூப்பர் ஹீரோ மாயாவிதான். சிலந்தி மனிதனும், சட்டிதளையனும் எங்களைபோன்ற பழைய வாசகர்களோடு எவ்வளவு நெருங்கிய தொடர்பு இருக்கு என்பது நீங்கள் அறிந்ததே (இப்போதும் காமிக்ஸ் ரசிகர்களாக இருப்பவர்களில் மெஜாரிட்டி பழைய வாசகர்கள்தான் என்பது உங்களுக்கும் தெரியும்). அப்படி இருக்கையில் சூப்பர் ஹீரோக்களை அலைகழிப்பதும், கழட்டிவிட முயற்சிப்பதும் எந்தவிதத்தில் நியாயம். அவ்வளவு ஏன், லயன் comeback ஸ்பெஷல் என்று காமிக்ஸ் மறுமலர்ச்சியை ஏற்படுத்த நீங்கள் செலக்ட் செய்தது மாயாவியையும், கேப்டன் பிரின்ஸ் போன்ற நமது ஆரம்பகால ஹீரோக்கள்தான் என்பதை எப்படி மறந்து போனீர்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.

  எத்தனையோ ஹீரோக்களை அறிமுகபடுத்தபோகும் விளம்பரத்தோடு மட்டுமே நிறுத்தி இருக்கிறீர்கள், இந்த தேதியில் இந்த ஹீரோ கதை வெளியாகிறது என்று விளம்பரப்படுத்தபட்டு அந்த தேதியில் சம்பந்தமே இல்லாத ஹீரோவின் கதையை வெளியிட்டு இருக்கிறீர்கள். இது எல்லாம் என்னைபோன்ற பழைய வாசகர்கள் பழகிப்போன ஒன்றுதான். ஆனால் இப்போதும் அது தொடன்றால் எப்படி சார்...

  //அடுத்து நமது முத்தான மூவரை சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலில் ; கருப்பு வெள்ளைப் பாணியில் ; புராதனக் கதைகளோடு கொணர்வதில் எனக்கே கொஞ்சம் தயக்கமாய் உள்ளது !//

  இதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. காரணம் நீங்கள் நடத்திய ஓட்டெடுப்பே உங்களுக்கு பதில் சொல்லும்.

  இறுதியாக நான் உங்களிடம் வேண்டி கேட்டுகொள்வது இது ஒன்றுதான்

  தயவுசெய்து நீங்கள் அறிவித்தபடி 'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்' வெளியிடுங்கள். அதன்பிறகு அவர்களை என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். இதற்கு வாசக நண்பர்கள் அனைவரும் அதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.

  அதிகபிரசங்கிதனமாக எதாவது சொல்லிஇருந்தால் மன்னிக்கவும். நன்றி....

  குறிப்பு : எனது evergreen ஹீரோ 'டெக்ஸ் வில்லர்' க்கும் இதே கதிதானோ. ஐயோ நினைக்கவே பயமாக உள்ளதே...

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் ஹீரோ.. சூப்பர் ஸ்பெஷல் கண்டிப்பாக வெளிவர வேண்டும். மூன்று காலத்தை வென்ற ஹூரோக்களுக்கு நாம் நல்ல வகையில் விடை கொடுக்கவேண்டும். அது ஒரு ஸ்பெஷல் வெளியீட்டில் செய்வதே, அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை :).

   ப்ளீஸ்.. சூ.ஹீ.சூ.ஸ் வேண்டும்.

   Delete
  2. நண்பர்களே,

   இது ஒரு கருத்து சேகரிப்பே தவிர ; எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல ! So நம் நண்பர்களின் பெரும்பான்மை என்ன நினைகிறார்கள் என்பதைத் தான் தெரிந்து கொள்ளுவோமே ?

   Delete
  3. மன்னர் இணங்கி வருவதாக நமது ஒற்றர்களிடமிருந்து செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன .

   வி(சொ)ல்லுக்குக்கு விஜயன் (சார்) இருக்க பயமேன் ?

   Delete
  4. நண்பரே,

   'ஜால்ரா சத்தம் காது கிழியுது" என்று ஏற்கனவே எனக்குக் கடிதங்களும்,மெயில்களும் வந்திடும் நேரம், நீங்கள் இன்னும் பில்டப் ஏற்றி ரணகளம் ஆக்குகிறீர்கள் ! வேண்டாமே.... நானும் உங்களைப் போல் ஒரு காமிக்ஸ் ரசிகன் மாத்திரமே !

   Delete
 20. Dear Vijayan Sir,

  It was pleasing to see your thoughts of bringing Tintin & asterix in tamil, Each and every story in those collections are gem of a stories.

  It would a launching pad for our comics to get new set of readers with those characters. I would pay anything to see good art papers with color pictures (Hard bound covers if possible) in tamil that to in our Comics.

  Guys you all will really love those characters, i can't express the quality of the stories and drawings of asterix and tintin, you will be fascinated to see those characters in our comics.

  All the best to our Editor to bring those guys to our comics.

  ReplyDelete
 21. ஆஸ்டெரிக்ஸ் அண்ட் ஒபெளிக்ஸ் பற்றி பல வருடங்களுக்கு முன்பே வாசகர்கள் எழுப்பிய கேள்விகளை எடிட்டர் மறந்துவிட்டார் என நினைக்கிறேன்.ஜூலியஸ் சீசரின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து போராடும் அப்பாவி கிராம வாசிகளான ஆஸ்டெரிக்ஸ் மற்றும் ஒபெளிக்ஸ் கதை தொடர்கள் பல வருடங்களுக்கு முன் outlook ஆங்கில இதழில் வந்துள்ளது.அதன் தொகுப்பு ஒன்று என்னிடம் உள்ளது.அற்புதமான அந்த கதைகள் தமிழுக்கு ஏற்றதல்ல என்று நமது எடிட்டர் அவர்கள் பதில் அளித்துள்ளார்கள்.ஆனால் தற்பொழுது நமது காமிக்ஸ்கள் நேரடி விற்பனைக்கு மாறியுள்ளதால் எடிட்டர் அவர்கள் டின் டின் மற்றும் ஆஸ்டெரிக்ஸ் தொடர்களை தமிழுக்கு கொண்டுவர உத்தேசித்துள்ளார்.இம்முடிவை புனித சாத்தான் மற்றும் நமது லயன் வாசக நண்பர்கள் அனைவரும் முழு மனதாக ஆதரிக்க தயாராக உள்ளனர்.வரும் தீபாவளி பண்டிகைக்கு இவ்விரு கதைகள் அடங்கிய ஸ்பெசல் வெளியீடு ஒன்றை புனித சாத்தான் எதிர்பார்க்கிறான்.(ஹிஹி .எனக்கு இன்னும் லார்கோவே வந்து சேரவில்லை.இந்த லச்சணத்தில் என் பேராசையை பாருங்கள்)

  ReplyDelete
 22. சூப்பர் ஹீரோ.. சூப்பர் ஸ்பெஷல் கண்டிப்பாக வெளிவர வேண்டும். மூன்று காலத்தை வென்ற ஹூரோக்களுக்கு நாம் நல்ல வகையில் விடை கொடுக்கவேண்டும். அது ஒரு ஸ்பெஷல் வெளியீட்டில் செய்வதே, அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை :).

  ப்ளீஸ்.. சூ.ஹீ.சூ.ஸ் வேண்டும்.

  ReplyDelete
 23. எனக்கும் லார்கோவின்ச் இன்னமும் வரலே…

  ReplyDelete
 24. 100 ரூபாய் இதழ்கள் தொடரலாமே..... tintin கதைகளை படித்தது இல்லை. ஆனால் tintin திரைப்படம் மிக நன்றாக இருந்தது.

  பல்வேறு வகையான காமிக்ஸ்கள் தமிழில் வருவது மிகவும் மகிழ்ச்சியே.

  >>பிடிக்காததொரு இதழ் வெளியாகும் சமயம் அதனை சும்மா ignore செய்து விட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம்


  இதுவரை ஒரு தடவை கூட அவ்வாறு நினைத்தது இல்லை.

  ReplyDelete
 25. ''மாஸ்டர் நமக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளது .......
  ஐயோ ......அடுத்த ப்ளான் போட ஆரம்பிச்சிடீங்களா மாஸ்டர் ''

  ReplyDelete
 26. மை டியர் மானிடர்களே.லார்கோ வின்ச் இன்று மதியம் வந்து சேர்ந்தார் என்ற குதூகல தகவலை உலக மானிட சமுதாயத்திற்கு புனித சாத்தான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொல்கிறான்.(ஹிஹி .சாரி கொள்கிறான்.)

  ReplyDelete
 27. சார் எனக்கு இன்னும் சூப்பர் ஹீரோ ஸ்பெசல் வரலை ...(கொஞ்சம் ஓவர்தான் போறோமோ! )

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹ ஹா ஹா .ஆசிரியர் மறந்து விட்டார் போலும் .நினைவு படுத்திவிட்டிர்கள்

   Delete
 28. அன்புள்ள விஜயன் சார்!

  வழ வழவென நான் மேலே கருத்திட்டதில் நான் சொல்ல வந்த முக்கிய கருத்து புதைந்து விட்டதாய் கருதுவதால் தனியாக இங்கே!

  சந்தா தொகையை மாறாமல் வைக்க ஒரே வழி:

  Muthu:
  Rs.50/- issues: Jan, Mar, May, Jul, Sep, Nov

  Lion:
  Rs.50/- issues: Feb, Apr, Jun, Aug, Oct, Dec

  Classics:
  Rs.50/- issues: Jan, Apr, Jul, Oct

  *** If you publish a Rs.100/- Lion issue for example in February then skip the Rs.50/- in the next cycle (April). Same logic applies to Muthu and Comics Classics.

  Specials:
  Muthu special in May @ Rs.200/-
  Lion Special in December @ Rs.200/-

  Total number of issues: 18 or less depending on the frequency of Rs.50, 100 & 200 books :)

  Total subscription amount:
  Muthu : 50*6 = 300
  Lion : 50*6 = 300
  Classics: 50*4 = 200
  Specials: 200*2 = 400
  Total: Rs.1200/-

  ReplyDelete
 29. கனவுகளின் காதலர் புத்தகம் படித்து கனவுலகில் இருக்கிறாரா ஆளையே காணோமே.விழித்து எழுந்து உங்கள் கனவுகளை வெளிபடுத்தினால்தானே எங்களுக்கும் தெரியும் .

  ReplyDelete
 30. 50 or 100 Rs doesnt matter, whatever can make you release them monthly please follow that model. As everybody else had mentioned, money is not a restriction anymore since almost 99% of the readers are "working".

  And please don't forgot the specials, if you are going to release 100Rs monthly then release yearly once a 250Rs special issue.

  Lastly, so sad to hear that you are going to say goodbye to 10Rs issues. They are kind of our trademark (good or bad), i will be missing them badly.

  --Karthikeyan

  ReplyDelete
 31. டியர் விஜயன் சார்,

  இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

  1 . நான் லயன் , முத்து காமிக்ஸ் வாங்குவதற்கு முக்கியமான காரணம் அதில் வரும் கதைகள் ஆங்கிலத்தில் இல்லாததால் தான்.

  2 . TIN TIN & ASTERIX புத்தகங்கள் இந்தியாவில் எனக்கு தெரிந்து 40 வருடங்களாக லெண்டிங் லைப்ரரிகளிலும் அணைத்து புத்தக கடைகளிலும் கிடைகின்றன, புதிய / பழைய வாசகர்கள் அனைவரும் இதை படித்திருப்பார்கள், நமது இதழ்களில் அவை தமிழில் படிப்பதற்கு மற்றும் நமது வாசகர்களால் மட்டுமே விரும்பப்படும்.

  3 . லார்கோ விஞ்சை என்னால் முழுமையாக ரசிக முடியவில்லை காரணம் ஆங்கிலத்தில் படித்ததால் suspense இல்லை. லார்கோ கதைகளில் suspense மிக முக்கியம்.

  4 என்னுடைய விருப்பம் மெல்லாம் நீங்கள் ரிப்போர்ட்டர் ஜானி, சிக் பில், சுஸ்கி, டெக்ஸ் வில்லர் போன்ற இங்கே கிடைத்திடாத புத்தகங்களை கலரில் இருக்கும் புத்தகங்களை வெளியிடவேண்டும் என்பதே. இது கண்டிப்பாக புதிய தலைமுறையை நமது கமிக்ஸிருக்கு கொன்டுவரும்.

  5 . நமது காமிக்ஸ் இன்னும் வளர்ந்து ஒரு பெரிய வாசகர் வட்டம் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய அவா.

  6 சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் கண்டிப்பாக வெளியட வேண்டும் that is our root and I am looking forward for it.

  சுரேஷ்

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய விருப்பம் மெல்லாம் நீங்கள் ரிப்போர்ட்டர் ஜானி, சிக் பில், சுஸ்கி, டெக்ஸ் வில்லர் போன்ற இங்கே கிடைத்திடாத புத்தகங்களை கலரில் இருக்கும் புத்தகங்களை வெளியிடவேண்டும் என்பதே. இது கண்டிப்பாக புதிய தலைமுறையை நமது கமிக்ஸிருக்கு கொன்டுவரும்.


   i accept this

   Delete
 32. டியர் தல , லார்கோ இன்று காலை நான் அலுவலகத்தில் இருந்தபோது பதிவு தபாலில் வந்தது . மதியம் அலுவலகம் கட் . லார்கோவை தூக்கி கொண்டு வீட்டிற்கு எஸ்கேப் . evening இங்கே climate சூப்பர் .மழை வராமல் , ஆனால் வந்து விடுவேன் என்று மிரடிகொண்டு , பக்கத்தில் ஸ்நாக்ஸ் வைத்து கொண்டு லார்கோ வை படித்த அனுபவம் இருகிறதே , உண்மையிலேயே அருமை . லார்கோ அடுத்த தொடர் எபோது என்று ஆர்வம் வருகிறது சார் . லார்கோ வை இவளவு நாள் கண்ணில் க்காட்டதற்கு கோபமும் ,இவளவு சூப்பர் ஆகா கொடுத்ததற்கு சந்தோசமும் ஒரு சேர வருகிறது . நீங்கள் மட்டும் பக்கத்தில் இருந்தால் கட்டிபிடித்து முத்தமே கொடுத்து இருப்பேன் .தப்பித்து கொண்டிர்கள் . அடுத்த லார்கோ எப்போ சார் . ரொம்பதான் அவசர படுகிறோமா? ஹையா மேட்டர் கிடைச்சாசு எடிட்டர் யை முத்தம் இட துடித்த லூசு பயன் (காமிக்ஸ் hater க்ரூப்ஸ்& face புக் அட்டு பீஸ் க்ரூப்ஸ் ) நீங்க மேட்டர் போடுவதற்கு முன்பு நானே போட்டுவிட்டேன் . வேற வேலைங்க இருந்தா பாருங்க நண்பர்களே , அதுதான் குழந்தை குட்டிகளை படிக்க வைப்பது போன்ற வேலைகளை .................................டண்ட நக்க டணக்கு நக்க ...........சந்தோஷ கீதம் இசைப்பது உங்கள் லூசு பையன்& லார்கோ ................

  ReplyDelete
 33. விஜயன் சார்,
  ரூபாய் 100 விலையில் இரு கதைகள் வண்ணத்தில்+ கொஞ்சம் கருப்பு வெள்ளை என்ற இதே பாணியைத் தொடருவது நன்றாக இருக்கும் என்பது என்னுடைய விருப்பம். நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இதழ்களின் தொகையை கூறினால் இந்த ஆண்டு சாந்தா தொகையை செலுத்த வசதியாக இருக்கும். சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலை தனி தனி இதழ்களாக போடா வேண்டாம் என்பது அடியேனின் விருப்பம். புது புது காமிக்ஸ் வரவுகளினால் முத்து & லைன் காமிக்ஸ் ஜொலிப்பது உறுதி. தாங்கள் செலக்ட் செய்யும் அனைத்து இதழ்களும் அருமை. உதாரணத்திற்கு லார்கோ விஞ்ச கதை. புதிய மாறுபட்ட சித்தனையில் உதித்த கதை என்பது படிக்கும் போதே தெரிந்தது. இதே போல பல புதிய காமிக்ஸ் கதைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்ச கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன்.

  ReplyDelete
 34. விஜயன் சார்,

  சமீபத்தில் "தலை வாங்கி குரங்கு" இதழில் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் விளம்பரங்களை ஆர்ட் பேப்பரில் பார்த்தபோது ஸ்தம்பித்து விட்டேன். இதுவரை மாயாவி, ஸ்பைடர் மற்றும் ஆர்ச்சியை இப்படிப்பட்ட தரத்தில் நான் பார்த்ததே இல்லை. இதே தரத்தில் சூப்பர் ஹீரோ ஸ்பெஷலை படிக்க வேண்டும் என்பது எனது ஆசை.

  நமது பெரும்பாலான வாசக நண்பர்கள் கூறுவது போல், தாங்கள் இப்போது வெளியிடுவதுபோல் 100 ரூபாய் விலையிலேயே இதே தரத்தில் மற்ற ஸ்பெஷல்களையும் வெளியிடலாம்.

  ராஜா, France.

  ReplyDelete
 35. நண்பர்களே,

  தமிழில் டின் டின் என்றவுடன், நான் உடனே ஒரு டின் டின் ஆங்கிலம் வாங்கி படித்தேன்.
  மிகவும் மோசமான மொழி மாற்றம்.புரிந்து கொள்ளவே முடியவில்லை.

  படித்த கதை டின் டின் இன் அமெரிக்கா.
  வெளியிட்டோர் Egmont.

  மற்றும் கதையின் ஓட்டம் ஒரு குழப்பமாக இருந்தது.
  டின் டின் திரைபடத்தார் மிக நன்றாஹா Screenplay செய்துள்ளார்கள்.

  நான் படித்த கதை தான் இப்படி இருந்ததா.வேறு கதைகள் நன்றாக இருக்குமா?

  இதை பற்றி உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் நண்பர்களே.

  நன்றியுடன்
  கிருஷ்ணா வ வெ

  ReplyDelete
  Replies
  1. may be you will like the translation in tamil, tintin as a gripping story and good art work, try reading the book picturing the story again you may like it.

   Delete
 36. உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறான்

  ReplyDelete
  Replies
  1. இரும்பு தலையாரே வந்தால் மட்டும் போதாது ,காலகோட்டையில் விரைந்து சென்று உங்கள் அழுத்தமான வேண்டுகோளை பதிவு செயுங்களேன்.உங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும், மீண்டும் வருக.

   Delete
 37. ஸ்பைடர் வந்தாச்சு, இரும்புக்கை வந்தாச்சு.. எங்கடா அர்ச்சிய காணோமேன்னு பார்த்தேன் ....வெல்கம் இரும்பு சட்டி தலையா.... லோகோவை போடுங்க பிரதர் ...அசந்தா அடிக்கறது அவர் பாலிசி..... அசராம நிக்கறது நம்ப பாலிசி
  ..I.A.S.படிச்சே ஆகணும் (காமிக்ஸ் கலக்டர்...I-IRUMBUKKAI.A-ARCHIE.S-SPIDER )

  ReplyDelete
 38. லார்கோ ஒரு வழியாக நேற்று வந்து விட்டார்! இன்னும் படிக்கவில்லை :) ஆனால் அவர் வந்த நிலைமையை பார்த்து மிகவும் பரிதாபமாக இருந்தது! அவ்வளவு பெரிய மில்லியனர், சாதாரண ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டு, பெயருக்கு ஒரு பிரவுன் அட்டை மேலாடையில், ஈரப்பதத்துடன், முனைகள் லேசாக (நல்ல வேளை!) மழுங்கி வந்திருந்தார்! காலையில் லயன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு என் எதிர்ப்பை தெரிவித்து, அடுத்த முறையாவது நல்ல விதத்தில் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொண்டேன்! :(

  மீண்டும் ஒரு முறை இதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்:
  //சந்தாதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் புத்தகங்களை பொறுமையாக காக்கி காகிதத்தில் மடித்துக்கட்டி, கையால் பெயர் மற்றும் முகவரி எழுதும் உங்களது அலுவலக பணியாளர்களை நினைத்தால் மிகவும் பாவமாக உள்ளது! நம் இதழ்களின் அளவுக்கேற்ப தானே ஒட்டிடும் ஆயத்த உறைகள் (!!!) தயாரித்து அவற்றின் மேல் அச்சடிக்கப்பட்ட முகவரிகளை ஒட்டிடலாமே! அதே நேரம் இப்போது போலவே காகிதத்தில் கட்டிடும் முறையை தொடரவும்! பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தாத உங்களுக்கு பாராட்டுக்கள்!//

  ReplyDelete
 39. சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெசல் படிக்க ஆர்வமா இருக்கிறோம் , எங்களை ஏமாற்றி விடாதீர்கள். சொல்லிய தரத்தில் , சொல்லிய விலையில் கண்டிப்பாக வரும்ன்னு காத்திருக்கிறேன்

  ReplyDelete
 40. I am eagerly waiting for the SUPER HERO SPECIAL, please DON'T CHANGE THE PLAN. Release all three
  together as COMMUNICATED earlier! If possible print one of the story in COLOR :-)

  ReplyDelete
 41. Editor sir,

  1.50rs book with hard cover(the ones we hve now) every month is welcome by most of our readers here. If we get it every month, we are more than happy.

  2. 100rs book can be released in every quarter.

  3. Please release the Super hero special as planned as 100rs book. Dont split that/stop that.

  4. Your tamil translation of Largo Winch was really very good..Hats off sir..

  5. I also strongly feel that Tintin and Asterix comics are too childish..reconsider whether it will suit our readers.(Most of them working now)

  keep going..we are with you..:)

  ReplyDelete
 42. லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  ReplyDelete
 43. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா: உங்களுக்கு ஆசிரியருடைய லாஜிக் புரியவில்லை " எதிர் பாராததை எதிர்பாருங்கள் " மாதிரி "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெசல்" வேண்டாம் என எழுதுங்கள் உடனே வந்தாலும் வந்து விடும் .வாக்கெடுப்பில் கடைசியல் வந்த லார்கோ முதலில் வந்த மாதிரி

  ReplyDelete
  Replies
  1. இப்போ லார்கோ வாக்கெடுப்பிற்கு விட்டால் முதலில் வந்து விடுவார் என நினைக்கிறேன் .இல்லையா நண்பரே ?

   Delete
  2. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா: இருக்கலாம் . ஆனால் புதிய வண்ண கலவை லார்கோவிற்கு அதிக புள்ளிகள் கொடுத்துள்ளது . இதே போல டைகர் கதையும் புதிய வண்ண கலவையில் வந்தால் தெரியும் .
   லார்கோ பிளே பாய் , டைகர் கவ் பாய்
   லார்கோ பணக்கார வர்க்கம் , டைகர் பரதேசி வர்க்கம்
   லார்கோவிற்கு பணக்கார எதிரிகள், இவருக்கு காவல்தேசமே வைரிகள்
   புதியவர் நடைமுறை , பழையவர் நடந்த கதை

   இருவருக்கும் ஒற்றுமை : அதிக எதிரிகள் , துறத்தல்கள் , etc .,

   இரண்டையும் ஒப்பிடுவது கடினம் . ஆனாலும் இருகதைகளையும் அதனுள் நுழைத்து அவர்களுடன் பயணித்து அனுபவிக்கும் சுகம் அலாதி

   Delete
 44. ஸ்டாலின் அவர் நம்மை விட அவர்களின் மிக பெரிய ரசிகர்.கண்டிப்பாக வந்து விடும்

  ReplyDelete
 45. ஆசிரியர் அவர்களுக்கு இன்னும் புத்தகம் வரவில்லை என்ற குரல்கள் ஒலித்து கொண்டே இருக்கின்றன .புத்தகம் வந்து 10 நாட்கள் கழித்தும். எனவே அனைவருக்கும் ஒரே நாளில் கிடைப்பது போலவோ அல்லது மூன்று நாட்களுக்குள் கிடைப்பது போலவோ புத்தகங்களை முழுவதும் அச்சிட்டு அனுப்பலாமே .அதிகபட்சம் புத்தகங்கள் அனைவருக்கும் மூன்று நாட்களுக்குள் கிடைத்தால் அனைவரும் சந்தோஷ படுவார்கள் என நினைக்கிறேன்.ஆவன செய்யுங்களேன் .முடியாது எனில் ,இப்படியே வரட்டும்,நாங்கள் அறியாத கஷ்டங்கள் ஏதேனும் இருப்பின்.

  ReplyDelete
 46. 16-MAY-2012 09:00 PM
  --------------------

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  லார்கோ இன்னும் வந்து சேரவில்லை ...

  ReplyDelete
 47. விஜயன் சார் வந்துட்டரானு தெரியல...

  எப்போ வரார்னு தெரிஞ்சா, காமிக்ஸ் ரசிகர்களாம் சேர்ந்து ஏர்போர்ட்ல ஒரு வரவேற்ப்பு கொடுக்கலாம். என்ன நண்பர்களே கரெக்ட்தானே.

  விஜயன் சார் இது ஜோக் இல்ல, நிஜமாவே சொல்றேன். சென்னை மற்றும் அருகில் இருக்கும் ரசிகர்களாம் ஆர்வமா கலந்துப்பாங்க (நீங்கள் சென்னை வரும்பட்சத்தில்).

  ReplyDelete
 48. We always welcome your new attempts sir. We are always with you.

  ReplyDelete
 49. சிவகாசிக்கு போன் பண்ணி அடுத்த புக் என்ன என்று கேட்டதற்கு மௌனமே பதில் அவங்குளுக்கே புரியாத புதிர் ....

  ReplyDelete
  Replies
  1. ஸ்பைடர் : நம் பாணி தான்..'காலை ஒரு சிந்தனை...மாலை ஒரு திட்டம்' ரகமாச்சே ! நம் பணியாளர்கள் பாவம் - என்ன செய்வார்கள் ? ! அடுத்து (ஜூன் மாதம்) வரவிருக்கும் இதழ்கள் - பத்து ரூபாய் விலையிலான டிடெக்டிவ் ஜெரோம் கதைகள் - பாகம் 1 & 2 ! விரைவில் இங்கே அறிவிப்பினை பார்த்திடலாம் !

   Delete
 50. // ரூபாய் 100 விலையில் இரு கதைகள் வண்ணத்தில்+ கொஞ்சம் கருப்பு வெள்ளை என்ற இதே பாணியைத் தொடருவதா ?
  அல்லது மாதம் ஒரு 50 ரூபாய் இதழ் (1 கதை வண்ணத்தில் + சிறிது black & white) //

  விஜயன் சார் எங்களுக்கு தொடர்ந்து புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கவேண்டும்
  100 அல்லது 50 அதைப்பற்றி கவலை இல்லை ஆனால் அட்டை இப்பொழுது வருவதைப் போல வேண்டும் ;-)
  .

  ReplyDelete
 51. // Can't wait to be back home...இன்னமும் லார்கோவை கூட நான் பார்த்திடவில்லையே ! //

  சார் அடுத்த லார்கோ எப்போ சார் ;-)
  .

  ReplyDelete
 52. சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் இதழுக்கு தயவு செய்து கல்தா கொடுத்துவிடாதீர்கள். வாசகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஸ்பெசல் இதழ் இது. தற்போது அறிமுகமான லார்கோவை கூட சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் க்காக தியாகம் செய்ய இங்கு பல வாசகர்கள் தயாரக இருப்பார்கள் என்பது என் கருத்து. இங்குள்ள வாசகர்கள் பலரது வாழ்கையில் பின்னி பினைந்து விட்ட கலாட்ட உறவுகள் நமது சூப்பர் ஹீரோக்கள். இன்றும் அவர்களது பழைய சகசங்களை எடுத்து புரட்டும் போது முதலில் ஒரு மெல்லிய உற்சாகம் எனது செல்களில் உயிற்பெற்று நரம்பகளுள்ளே எப்1 பந்தயம் நடத்தி
  உடல் இயக்கங்கள் அனைத்துக்கும் புத்துயிர் கொடுத்திடும்.
  இது போன்ற ஒரு அனுபவ உணர்வை நிச்சயம் தற்கால ஹீரோக்களால் (டைகர் லார்கோ )
  கொடுக்க முடியாது. (முழு வண்ணத்திலும் அனைத்து பக்கங்களும் ஆர்ட் பேப்பர் ஆக இருந்தாலும் கூட )  இப்படி எனது கருத்து பதிவை முடிக்க நினைத்த நேரத்தில் உங்களது இந்த வரி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.  //உங்கள் பணத்திற்கான தரத்தை வழங்க வேண்டுமென்ற பொறுப்பு எங்களுக்கு அதிகமாகி உள்ளது.//

  இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்படலாம்.? உங்கள் கருத்தை அதன் நேரடி அர்த்தத்தில் எடுத்தால் நமது சூப்பர் ஹீரோக்கள் தரமற்றவர்கள் என்றகிறது. இது போன்ற ஒரு கருத்தை நான் வன்மையாக மறுக்கிறேன்.
  நிச்சயம் அது உங்கள் எண்ணமாக இராது.

  அடுத்து தற்போது கைவசமுள்ள கதைகளின் தரம் பற்றிய சந்தேகம்.
  இதன் முடிவை நீங்கள் சரியா எடுப்பீர்கள் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது.

  அடுத்து புதிய இளய தலைமுறை வாசகர்களை கவர Latest Trend கதைகள் தான் மிகச்சரியான தீர்வு.

  லயன் இன்னமும் பலநுறhண்டுகள் பயணிக்க இதுபோன்ற ஒரு strategic முடிவுகள் அவசியம்
  So, நண்பர்களே சூப்பர் ஹீரோக்களை நமக்கு எப்படி/ எப்போது கொடுப்பது என்பதை நமது அசிரியாரிடமே விட்டுவிடலாம். சூப்பர் ஹீரோக்கள் எவ்வளவு முக்கியமோ அதை விட நமது சிங்கம் நமக்கு ரொம்ப முக்கியம்.

  ReplyDelete
 53. Dear Editor,
  Don't change the plan. Please publish as per already notified.

  ReplyDelete
 54. காமிக்ஸ் மீது உள்ள காதலினால் நாங்கள் டின் டின்னை வரவேற்க கஷ்டபட்டாலும்,
  நமது காமிக்ஸை மக்கள் தெரிந்து கொள்ள எது ஒரு பயங்கர பூஸ்டாக இருக்கும் என்பது என் கருத்து,
  So நண்பர்களே நமக்கு டின் டின் ஒரு கஷ்டமாக இருந்தாலும் அது நமது லயனை தமிழகமெங்கும் படிக்காதவர்களையும் படிக்க வைக்கும்
  அதனால் அதனை வரவேற்போம்

  I Read the Largo and was atouned by the language translation you have done as usual.
  Would like the introduction of both Astrix and Tin Tin as it would increase the reader scope,
  but you would have to couple our super heros with a tin tin issue so that the new generation who knows and likes only tin tin would get to know about the wonderfull superheros and would ultimately come to know the beauty of our wonderfull artworks so that we reach a huge sample space.

  Sorry folks i tried lot in tamil translitration and as i am working continuously for the past 14 hours i changed to english... bear with me

  Shriram
  Chennai.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக ஸ்ரீ ராம் அவர்களே ,நாம் அவர்களை கோலாகலமாய் வரவேற்போம்

   Delete
 55. நண்பர்களே

  லார்கோ வந்து சேர்ந்து விட்டார் ...
  லார்கோ வந்து சேர்ந்து விட்டார் ...
  லார்கோ வந்து சேர்ந்து விட்டார் ...


  திரு. விஜயன்,

  தங்கள் அலுவலகத்தில் இருந்து நேற்று போன்கால் வந்தது (ஸ்டெல்லா என நினைக்கிறேன்)

  என்னுடைய சந்தா தொகை குறைவாக உள்ளதாகவும், இருப்பினும் ஆசிரியர் புத்தகத்தை அனுப்பி வைக்க சொல்லி உள்ளார் எனக்கூறினார். அதுபோலவே புத்தகம் இன்று எனக்கு வந்து விட்டது. மிக்க மகிழ்ச்சி.

  நான் இதற்கு முன்பு ஒரு பதிவில் எனது சந்தா குறைந்தால் உடனே சொல்லுங்கள், இதனால் எனக்கு புத்தகம் வருவது நின்று விடக்கூடாது என சொல்லியிருந்தேன்.

  நான் சொன்னது நடந்து விட்டது. இருப்பினும் தங்கள் உடனடியாக புத்தகம் அனுப்ப ஏற்பாடு செய்தமைக்கு மிக்க நன்றி.

  நான் நேற்று மாலை ரூபாய் ஐநூறு தங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டேன்.

  இனி மேல் இது போல நேராமல் (எனக்கு மட்டுமல்ல, நமது அனைத்து வாசகர்களுக்கும்) இருக்க சந்தா தொகை குறையும் பொழுது அவர்களுக்கு முன்கூட்டியே நினைவு படுத்தலாமே ?

  நாகராஜன்

  ReplyDelete
  Replies
  1. Nagarajan Santhan : ஏற்கனவே அதற்கான பணிகளைத் துவக்கிடச் சொல்லி விட்டேன் ! மீண்டும் இது போல் நேராது..(உங்களுக்கும் சரி ; மற்ற நண்பர்களுக்கும் சரி)

   Delete
 56. Largo, was really really awesome...புத்தக தரமும், முழு வண்ணமும் நமக்கே உரிய அசத்தல் போங்க...enjoyed every bit of it :-)

  ReplyDelete
 57. அன்பு நண்பர் விஜயனுக்கு, முத்து கம் பேக் ஸ்பெஷலும் தலை வாங்கிக் குரங்கும் கிடைக்கப் பெற்றேன். இதில் லார்கோ பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை, இந்த ஸ்டைல் சினிமாவிற்குப் பொருத்தமாக இருக்கும் ஆனால் காமிக்சுக்கு சரியாக வராது என்பது என் அபிப்ராயம்

  50 ஆ அல்லது 100 ஆ என்பது பிரச்சினையல்ல ஒவ்வொரு மாதமும் தவறாமல் வருமா என்பதுதான் கேள்வி ஒரு விஷயம்: முத்துவும் லயனும் உருவான காலத்தில் இருந்தது போல இப்போதைய உங்கள் வாசகர்கள் சிறுவர்களல்ல ஆகவே பணம் என்பது பிரச்சினையல்ல
  சந்தாதாரர்களின் செல்பேசி எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு புத்தகம் அனுப்பியதும் குறுஞ்செய்தி அனுப்பலாம் அல்லது சந்தா தீர்ந்து போனால் நினைவுட்டலாம்.
  அடுத்ததாக டின்டின், இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, முன் பதிவு முறையில் வெளியிடலாம் என்பது என் யோசனை. காலாண்டுக்கு ஒரு முறை ஒரு இதழ் வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஆனால் அச்டீரிக்ஸ் அது போல இல்லை அந்த கேரக்டர்களின் பெயரை தமிழ்படுத்தினால் அது சரியாக வருமா என்பது என் கேள்வி. ஏனெனில் ஆர்ச்சி வெரோனிகா வுக்கு நான் பயங்கர ரசிகன் கடந்த 20 வருடமாக. ஆனால் சத்தியமாக அதை தமிழ்படுத்தினால் பைத்தியம்தான் பிடிக்கும், அந்த கல்ச்சர் மற்றும் ஸ்லாங்கில்தான் உள்ளது அதன் வெற்றி அது தமிழில் வராது

  முத்துவை தனியாக 10 விலையில் ஒரு மாதமிருமுறை இதழாக வெளியிடலாம். தனியாக சந்தா கட்டவும் தயாராக உள்ளோம். முத்துவின் ஆரம்ப கால இதழ்களையே மறு பதிப்பு செய்தாலும் எங்களுக்கு மகிழ்சியே . இந்த வேண்டுகோளை பரிஸீலிப்பீர்களா?

  ReplyDelete
 58. Why our Lion and Muthu are not on Facebook?

  ReplyDelete
  Replies
  1. chanakyan : அமெரிக்க ஆர்ச்சி காமிக்ஸ் தமிழில் சாதிக்காது போனதில் ஆச்சர்யம் இல்லை...ஆனால் Asterix தொடர்களில் பெயர்களில் வரும் நகைச்சுவைகளைத் தாண்டியும் ஒரு கதை ; ஒரு நயம் உண்டு ! So அவற்றினை தமிழில் அழகாய்க் கொண்டு வருவது சவாலான...அதே சமயம் சுவாரஸ்யமானதொரு பணியாகவே இருக்கும். பார்ப்போமே...!

   மீண்டும் பத்து ரூபாய் இதழ்களை தயாரிப்பதென்பது நடைமுறைக்கு சாத்தியமிலா சங்கதி ! திரும்பவும் அதை நோக்கிப் பயணிப்பது வேண்டாமே ! Facebook பிரவேசத்திற்கும் அதிக நாள் காத்திருக்கத் தேவை இல்லை...வெகு விரைவிலேயே !

   Delete
 59. Tintin and Asterix.. one dream fullfilled and the next one waiting

  ReplyDelete