Powered By Blogger

Friday, April 13, 2012

ஜாலியாய் ஒரு சேதி !


நண்பர்களே,

நிறையவே ஆக்க்ஷன் காட்சிகளைப் பார்த்தாகிவிட்டோம் சமீப நாட்களில்..!  So ஒரு மாறுதலுக்கு / ஆறுதலுக்கு  காமெடி நோக்கி நமது பார்வைகளைக் கொஞ்சம் திருப்பிட்டால் என்னவென்று தோன்றியது ! அத்தோடு மட்டுமல்லாது இங்கே என்னால் உணர முடிகின்ற ஒரு அதீத எனர்ஜியினை .....ஆற்றலினை சின்னதாய் நம் எல்லோருக்கும் பிரயோஜனமாய் ; சந்தோஷமாய்ப் பயன்படுத்திடுவோமே என்றும் நினைத்தேன் ! 'பில்டப்' போதுமென்றால் இனி நேராய் விஷயத்துக்கு வருகின்றேன் !

தொடரும் மே & ஜூன் மாதங்களில் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் (கனவுகளின் காதலர் 'நற நற' வெனப் பற்களைக் கடிக்கும் சத்தம் கேட்குது!) ; லார்கோ வின்ச் கதைகள் & திகில் மறுபதிப்பு என காலெண்டர் புல்லாக உள்ளது. மின்வெட்டு நிலவரம் சற்றே தேவலாம் எனும் பட்சத்தில் பத்து ரூபாய் விலையிலான ரிப்போர்ட்டர் ஜானியின் "மரணத்தின் நிசப்தம்"  சைக்கிள் கேப்பில் புகுந்திடும் !

அடுத்து என்னவென்று எண்ணங்களை ஓட விட்ட போது ஜூலையும் சரி ..நமது லயனின் பிறந்தநாளும் சரி நினைவுக்கு வந்து நின்றன !எக்கச்சக்க இடைவெளிக்குப் பின்னே ஒரு திருப்தியான ஆண்டுமலர் வெளியிடுவது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன் ! (நண்பர் அருண் பிரசாத் கூட இது பற்றி சமீபத்தில் பதிவிட்டிருந்ததும் நினைவுள்ளது!


ஒரு நீண்ட இடைவெளியினைத் தகர்த்திட நம் காமெடி கௌபாயை விடப் பொருத்தமான நபர் வேறு யார் இருந்திட முடியும் ? So வரும் ஜூலை 15 -ல் இரண்டு அட்டகாசமான முழு வண்ணக் கதைகளோடு லக்கி லுக் ; ஜாலி ஜம்பர் & டால்டன் கோஷ்டி உங்களை சந்திப்பார்கள் - நமது 28 -வது ஆண்டுமலரில்

பனியில் ஒரு கண்ணாமூச்சி


"பனியில் ஒரு கண்ணாமூச்சி" - கதை நம்பர் 1 ! அமெரிக்க எல்லையைத் தாண்டித் தப்பித்து கனடாவுக்குள் புகுந்திடும் இந்தத் திருட்டு சகோதரர்களை லக்கி லூக்கும் ; ஜாலி ஜம்பரும் (நாலு கால் ஜம்பரே!!) மீட்டுக் கொண்டு வரும் அட்டகாசக் காமெடித் தோரணம் இது ! முழு வண்ணத்தில்...ஆர்ட் பேப்பரில் ! 

கதை நம்பர் 2 : "ஒரு வானவில்லைத் தேடி..!"  The Wagon Train என்ற பெயரில் வந்திட்ட இந்தக் கதை ஒரு ஆரம்ப கால லக்கி சாகசம் ! புதியதொரு வாழ்க்கையை ; வசந்தத்தைத் தேடி அமெரிக்காவின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பயணிக்கும் ஒரு கூடார வண்டி ஜனத்தின் அட்டகாசமான கதைக் களம் ; அழகான சிரிப்புத் தோரணம் என்று இது ஒரு surefire hit ! 

ஒரு வானவில்லைத் தேடி..!
இந்த இரு கதைகள் தவிர குண்டன் பில்லி கதைகள் ; நிறைய கொசுறுகள் என்று ஒரு அழகான ஆண்டுமலராய் ரூபாய் 100 விலையில் மிளிர்ந்திடும் !

அடிக்கடி ரூபாய் 100 விலையிலான இதழ்களை வெளியிடுவது ஓ.கே. தானா என்ற கலக்கம் என்னுள் இல்லாது இல்லை ! 'செலவழிக்கத் தயாரான வாசகர்கள் சிக்கிட்டாங்க..பர்சுக்கு வெடி வைக்கிறான் டோய்' என்று மட்டும் நினைத்திட வேண்டாமே ப்ளீஸ் ? தரமான இதழ்களை எங்கேயும் compromise செய்திடாமல் வெளியிடும் எனது வேட்கைக்கும்;படித்திடும் உங்கள் ஆர்வத்துக்குமான ஒரு சின்ன விலை இது !

இந்த இதழுக்கு வழக்கம் போல் "லயன் ஆண்டு மலர்" என்று பெயரிட்டு விடலாம் ! ஆனால் இன்னும் சற்றே creative-ஆக ஒரு பெயரை வைத்திட உங்களின் கற்பனைக் குதிரைகளை..உங்களின் பாசிடிவ் எனர்ஜியை உலாவ விடலாமே என்று நினைத்தேன் ! So இந்த இதழுக்குப் பெயர் சூட்டப் போவது உங்களில் ஒருவரே...! Think of something cool guys !! 

நிச்சயம் பலரும் ஒரே பெயரினை suggest செய்திட வாய்ப்புள்ளது என்பது தெரிந்ததே ! ஆனால் இது ஒரு ஜாலியான போட்டி மட்டுமே என்பதால் - ஒரே சூப்பர் பெயரினை நிறையப் பேர் எழுதிடும் பட்சத்தில் அனைவருக்கும் வடை பகிர்ந்தளிக்கப்படும் ! Take Care folks...நாளை சந்திப்பேன்..இன்னுமொரு புதுப் பதிவோடு !!

103 comments:

 1. சார்,
  கடந்த இரண்டரை மணி நேரமாக இந்த பதிவுக்கு வெயிட்டிங்.

  பொறுத்தார் பூமி ஆள்வார் & நல்லதொரு காமிக்ஸ் பதிவும் படிப்பார்.


  காமிரேட்ஸ்,

  லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் இதழின் புத்தக வெளியீட்டை சென்னை புத்தக கண்காட்சியில் பார்க்க முடியாத பல வாசகர்களுக்காக இதோ ஒரு வாய்ப்பு.

  லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறப்பு பேட்டி

  ReplyDelete
  Replies
  1. லிங்க் சரியாக வொர்க் ஆக வில்லை என்று அதற்குள் ஒரு கம்ப்ளைன்ட்:

   சரியான லிங்க் இதோ: லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

   Delete
  2. அடடே, பெயர் சூட்டும் படலம் சூடு பிடிக்கிறதே?

   நமக்கெல்லாம் லக்கி லுக் கதைகளை அறிமுகப்படுத்திய ஜூனியர் லயன்/மினி லயன் நினைவாக (லக்கி லுக், சிக் பில், குண்டன் பில்லி எல்லாம் அங்கே அறிமுகம் ஆனவர்கள்தானே) இந்த ஸ்பெஷல் இதழுக்கு "மினி லயன் ஸ்பெஷல்" என்று கூட பெயரிடலாம்.

   It will also serve as a tribute to the long forgotten comics series from our publishing house.

   Delete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் King Viswa!

   ஏப்ரல் 14, காலைதான் வாழ்த்து சொன்னேன், ஆனா 'Apr 13' ன்னு போஸ்ட்ல டைம் வருது :)

   -Theeban (SL)

   Delete
  4. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தீபன். Much Appreciated.

   Delete
  5. Many more happy returns of the day KING :)

   Delete
  6. Thank You Very Much, Nagarajan.S

   Much Appreciated.

   Delete
 2. மிக மிக அற்புதமான செய்தி விஜயன் சார். படுமோசமான சச்சரவுகளைப் பார்த்துப் பார்த்துச் நொந்துபோயிருந்த என் போன்றவர்களுக்கு பெரும் ஆறுதலூட்டிய பதிவு. (பி.கு: தலைவாங்கிக் குரங்கு இன்னும் வரவில்லை)

  ReplyDelete
 3. Lion Dragon 28 Special!

  PS: 2012 is Dragon year as per Chinese calender! :)

  ReplyDelete
  Replies
  1. Lion Lucky 28 Special!

   (லக்கி லூக் கதைகள் பிரசுரிப்பதற்காக மற்றும் இது காமிக்ஸ் வாசகர்களுக்கு லக்கியான வருடமாக இருப்பதற்காக!)

   Delete
 4. Murali : உங்கள் முகவரியுடன் ஒரே ஒரு ஈ-மெயில் ப்ளீஸ்..கூரியரில் நாளை மாற்றாக ஒரு இதழை அனுப்பிடுகின்றோம் ! உங்கள் பகுதி போஸ்ட்மன் நமது ரசிகரும் கூட என்று தெரிகின்றது !

  ReplyDelete
  Replies
  1. ஆனா பெங்களூர்ல கன்னடா போஸ்ட்மேன் தமிழ் காமிக்ஸ் படிக்கறத நினைச்சு பாத்தாதான் ஒடம்பு ஃபுல்லா புல்லரிக்குது! ;)

   Delete
  2. Dear VIJAYAN

   "THALA VANKI KURANKU" and "DR 7" not yet received.

   I would suggest to send all the books (Rs.10 also) by courier OR send by VPP. We will pay the extra amount (deduct courier charges from my subscription charges).

   Thanks
   Nagarajan S

   Delete
 5. ஆண்டு மலர் லக்கி கதைகளோடு முழு வண்ணத்தில் வருவது மிக சந்தோசமே...

  ReplyDelete
 6. அப்புறம் எடிட்டர் சார்,

  தலை வாங்கி குரங்கு சென்னைக்கு விற்பனைக்கு வந்து விட்டதா????????????

  ReplyDelete
  Replies
  1. இன்றுவரை இல்லை லிமட்

   Delete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் King Viswa!

   Delete
  3. வாழ்த்துக்களுக்கு மிக்க நனறி பொடியன்.

   Delete
 7. Replies
  1. இது லயன் காமிக்ஸ் ஆண்டு மலருக்கு நீங்கள் சொல்லும் தலைப்பா? அல்லது எடிட்டரின் நடையை சொல்கிறீர்களா?

   :)

   Delete
  2. லயன் காமிக்ஸ் ஆண்டு மலருக்கு சொல்லும் தலைப்புதான் அது!2012ல் இருந்து அடுத்தடுத்து காமிக்ஸ் வெளியிட்டு நம்மை மகிழ்ச்சி படுத்தியதற்காக இந்த தலைப்பு! :)

   Delete
 8. எடிட்டர் சார்,

  உங்களுக்கும், நமது காமிக்ஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு தின / விடுமுறை தின / சித்திரை முதல் நாள் நல்வாழ்த்துக்கள் (யார் யாருக்கு எது எது வேணுமோ அங்கே டிக் செய்துக்கொள்ளுங்கள்).

  ஐந்து நாட்கள் காத்திருந்ததின் பலன் இந்த சூப்பர் பதிவா? இந்த வார இறுதி லயன் காமிக்ஸ் எடிட்டரின் பிளாக்கில் தான் கழியும் போலுள்ளதே?

  முத்தான மூன்று வார இறுதி பதிவுகளில் முதல் பதிவே அசத்தல். அடுத்த இரண்டு பதிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்கிறேன்.

  #டவுட்டு 1: தமிழ் புத்தாண்டுக்கு நம்ம ஆபீஸ் லீவு கிடையாதா?

  #டவுட்டு 2: ஒரு காலத்தில் மினி லயன் மற்றும் லயன் காமிக்ஸ் இதழ்களில் கொடி கட்டி பறந்த ஃபில்லர் கதைகள் என்று சொல்லப்படும் குண்டன் பில்லி, விச்சு கிச்சு, துப்பறியும் ஜார்ஜ் நோலன், பரட்டைத் தலை ராஜா போன்றவற்றை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம். குண்டன் பில்லியுடன் இவையும் வருமா?

  ReplyDelete
  Replies
  1. ஒலக காமிக்ஸ் ரசிகன் : வாழ்த்துகளுக்கு நன்றிகள் ! தமிழ் புத்தாண்டுக்கும் சரி ; ஆங்கிலப் புத்தாண்டுக்கும் சரி...சிவகாசி என்றுமே விடுமுறை அனுசரிப்பது இல்லை ! வழக்கம் போல் பணியே இங்கே !

   குண்டன் பில்லியோடு துணைக்கு முடிந்தளவு filler பக்கங்களில் நம் பழைய கார்ட்டூன் நண்பர்கள் வந்திடுவர் !

   Delete
 9. அற்புதமான அறிவிப்பு!

  உடனடியாக மனதில் தோன்றிய பெயர் 'லக்கி - ஸ்பெஷல்!' என்பது (லக்கிலூக் - அத்தோடு நாங்களும் இந்த ஸ்பெஷலால் 'லக்கி' என்பதால்). வேறு ஏதாவது மண்டையைக் குடைந்து கிடைத்தால் பதிகிறேன் ஸார்.

  இந்த இரண்டு கதைகளிலில் ஒன்று மட்டும் (The Wagon Train) ஆங்கிலத்தில் டவுண்லோட் செய்து வாசித்திருக்கிறேன். நல்லதொரு தேர்வு. இரண்டு கதைகளும் கலரில் வருகிறது என்பது எதிர்பார்ப்பை எகிறவைக்கிறது.
  நன்றி.

  -Theeban (SL)

  ReplyDelete
  Replies
  1. டைப் அடிச்சுப் போடுறத்துக்குள்ள - 'ப்ளேட்பீடியா - காமிக்ஸ், காரம், காமெடி with கார்த்திக்!' - முந்திக்கிட்டாரே! பரவால்ல.. யார் குத்தி அரிசியானா என்ன? எல்லாரும் வயிறார சாப்பிடுவோம்!! :)

   -Theeban (SL)

   Delete
  2. >>>ப்ளேட்பீடியா - காமிக்ஸ், காரம், காமெடி with கார்த்திக்!Apr 13, 2012 11:52 AM

   Lion Lucky 28 Special!

   (லக்கி லூக் கதைகள் பிரசுரிப்பதற்காக மற்றும் இது காமிக்ஸ் வாசகர்களுக்கு லக்கியான வருடமாக இருப்பதற்காக!)<<<

   நாந்தான் பர்ஸ்ட் :) உங்களுக்கு இரண்டு நிமிஷம் முன்னாடியே அதை செலக்ட் பண்ணிட்டேன்! :)

   Delete
  3. அட பரவாயில்லையே! கப்புன்னு ஒரே டைம்ல ரிப்ளை பண்ணறீங்க! :)

   Delete
  4. யெஸ் பாஸ்.

   -Theeban (SL)

   Delete
 10. புனித சாத்தானின் தலைப்புகள் ;1.லயன் லக்கி ஸ்பெசல் .2.லயன் ரன்னிங் ஸ்பெசல் .3.லயன் b-day ஸ்பெசல்.4.லயன் வெஸ்டர்ன் ஸ்பெசல்.5.லயன் நியூ லுக் ஸ்பெசல்.(பின் குறிப்பு;புனித சாத்தானுக்கு முழு வடையும் வேண்டும்.)

  ReplyDelete
  Replies
  1. சாத்தானுக்கு அடையார் ஆனந்த பவன் வடை மாலையை சாத்திட்டா போச்சு! :D

   Delete
  2. என்னது சாத்தானுக்கு வடை மாலையா??? நற... நற... நற... (ஆஞ்சநேயர் பக்தனாக்கும் நான்...)

   Delete
  3. Mr satan unkalukku thalai vangi kurgnku vanuhu vittatha?

   Delete
  4. அட டென்சன் ஆகாதீங்க பாஸ், எனக்கும் ஆஞ்சநேயர் ரொம்ப புடிக்கும் :) சோமசுந்தரம் சாரை நெஜ சாத்தான்னு நெனச்சுட்டீங்களா?! மை டியர் குட்டி சாத்தான் மாதிரி ரொம்ப நெல்லவர் சார் அவரு :D

   Delete
 11. இந்த ஆண்டு லயன் கம்பேக் ஸ்பெஷலில் வந்த புதிய லக்கிலூக் கதை பழைய வாசகர்கள் பெரும்பாலனவர்களுக்கு பிடிக்கவில்லை (இல்லை, அவ்வளவு சிறப்பாக இல்லை என்றே சொல்லலாம்). ஆனால் முதல் முறையாக இந்த லக்கிலூக் கதைகளை படிக்கும் வாசகர்களுக்கு இது மிகவும் பிடித்து இருந்ததாம்.

  ஒருவேளை இந்த விமர்சனங்களால் (கான்ஷியஸ் ஆக) எடிட்டர் சூப்பர் ஹிட் கிரியேட்டர் ஜோடி கோஸ்சினி + மொரிஸ் இவர்களது கதையை தேர்ந்தெடுத்தாரா?

  ReplyDelete
 12. என்னுடைய கருத்துக்கு எட்டியவரை இந்த ஆண்டு மலர் இனிமேல் ஒவ்வொரு வருடமும் பட்டையை கிளப்ப போகிறது. ஆகையால் ஒரு வகையான கன்டினியூட்டி இருக்கும் வகையில் பெயர் இருந்தால் நலம். ஆகையால் இதனை லயன் ஆன்னுவல் 2012, லயன் ஆன்னுவல் 2013 என்று இலக்கமிட்டு தொகுக்க எதுவாக இருக்குமே?

  ஆண்டுமலரையே ஆங்கிலத்தில் சொல்கிறான் என்று கிண்டல் வேண்டாம். ஆண்டுமலர் பல வருடங்களாக சரியாகவே வருவதில்லை. அந்த பேட் லக் இனிமேலும் தொடர வேண்டாம் என்றுதான் இந்த ஐடியா.

  ReplyDelete
 13. டியர் எடிட்டர்,

  லயன் ஆண்டு மலர் பல வருடங்கள் கழித்து மீண்டும் சிறப்புற போகிறது என்று கேட்டதில் மகிழ்ச்சி. லக்கி லூக்கை அதற்கு சிறப்பான ஒரு தேர்ந்தெடுப்பு என்றாலும், இரு லக்கிலூக் சாகஸங்களிற்கு பதில், ஒரு சிக்பில் வண்ண சாகசத்தையும் சேர்த்திருக்கலாமோ...?

  ஆனாலும், தேர்ந்தெடுத்திருக்கும் இரு கதைகளும் அட்டகாசமான காமடி படைப்பு என்பதால், கண்டிப்பாக அது சோடை போகாது. அறிவிப்புகள் கலைகட்ட ஆரம்பித்து விட்டன.

  லக்கி லயன் ஸ்பெஷல் என்ற பெயர் சரியான தலைப்பாக இருக்கும் என்று நானும் ஆவன செய்கிறேன். ஒரே ஆண்டில் இத்தனை ஸ்பெஷல் இதழ்கள் வருவது, நமது லயன் முத்து விற்கு ஒரு மைல்கல் தானே.

  ReplyDelete
  Replies
  1. சிக்பில் தேர்ந்தெடுக்காமல் விட்டதற்கு ஸ்பெஷல் காரணங்கள் உள்ளனவா... இல்லை சினிபுக் அவற்றை வெளியிடாதது தற்போதைய காரணமா ;) ?

   Delete
  2. Rafiq Raja : சினிபுக் நிறுவனம் காமிக்ஸ் எனும் ரசனைக்குள் அடிபதிப்பதற்கு ஒரு மாமாங்கம் முன்னரே சிக் பில் குழுவினர் நமக்குப் பரிச்சயமானவர்கள் தானே ...! So அந்நிறுவனத்தின் பதிப்புகளுக்கும் நாம் சிக் பில்லை சற்றே ஓய்வெடுக்கச் செய்வதற்கும் துளித் தொடர்பும் கிடையாது. சொல்லப் போனால் இன்னும் கை வசம் இரு சிக் பில் புதுக் கதைகள் துயில் பயின்று கொண்டுள்ளன.

   வுட்சிடி கோமாளிகள் வருவார்கள் ! வண்ணத்தில்...இந்தாண்டின் இறுதியின் போது !

   Delete
  3. டியர் எடிட்டர்,

   சினிபுக் இதுவரை தொட்டிடாத தொடரை, முதலில் இருந்தே நாம் கிரகித்து கொண்டிருந்தும், அதற்கு சரியான அங்கீகாரத்தை நமது லயனின் இந்த கலர் மறுபிரவேஷத்தில் காட்டவில்லை என்ற ஆதங்கம் தான், அந்த குத்தி பார்க்கும் கமெண்டின் மூலம்.

   விற்பனைக்கு ஒரு ஷெரீப்பின் வண்ண கலவைகளை இன்றும் மறக்க முடியவில்லை. வுட்சி கோமாளிகளை சற்று முன்னரே ஏதாவது ஸ்பெஷலில் இணைக்க முடிந்தால், சந்தோஷம். நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள அந்த இரு கதைகளும் சிக்பில்லின் ஆதி கால கதைகளாக இருந்தால் சிறப்பு. சமீபத்திய கதைகள் வெறும் சுமார் ரகம் தான், உதாரணத்திற்கு வெள்ளையாய் ஒரு பேய்.

   காத்திருக்கிறேன் சிக்பில்லை மற்றும் ஷெரீப் அண்ட் கோவை மீண்டும் வண்ணத்தில் தமிழில், காண்பதற்கு.

   Delete
 14. 1)Lion BirthDay Special
  2)Lion Anniversary Special
  3)Lion the King of Comics Special
  4)Lion 28 Not out

  Choose anyone which you feel fits better :)
  Venkat from Denver.

  ReplyDelete
 15. இரவுக் கழுகாரின் சிஷ்யர்கள் என்பதால் தானோ இத்தனை விழிப்பு இரவிலும் ?! கலக்குறீங்க guys !!

  ReplyDelete
  Replies
  1. வட வாங்காம போவ மாட்டேன், கொடுக்கலைனா புதுசா பதிவு போட்டு இங்க லிங்கு குடுத்துருவேன் ;)

   Delete
  2. சார்,
   என்னைப்பற்றி ஏதோ சொன்ன மாதிரி இருக்கே?

   Delete
  3. ada athu neenka illainka TEX WILLER!

   Delete
 16. நான் இனி பற்களை அல்ல பக்கத்தில் இருப்பவர்களை கடிக்கப் போகிறேன்....:))

  1- சூப்பர் ஹீரோ ஜன்னி முறிப்பான் சிறப்பிதழ்
  2- அமெரிக்க ராமராஜன் சிறப்பிதழ்
  3- அரிமாவின் அட்ராசக்கை அகவை சிறப்பிதழ்
  4- இருமலில்லாமல் ஒரு இருபத்தெட்டு
  5- ஜூலை வலை

  லிஸ்டு தொடரும்

  ReplyDelete
  Replies
  1. 6-சூப்பர் ஜீரோ குளிர் ஜீரவிதழ்!

   Delete
  2. Kadiyum bledum payankarama irukku.!

   Delete
  3. அடிக்கடி பவர் போய்டுதுன்னு எடிட்டர் பீல் செய்வதால் "பவர் ஸ்டார் ஸ்பெஷல்" ன்னு போட்டு பவர் ஏத்திகிட்டா என்ன?
   பவர் ஸ்டாரின் துணையுன் இதழ் சிறக்க வாழ்த்துக்கள்

   Delete
 17. எடிட்டர் சார்,
  இந்த வருடம் காமிக்ஸ் உலகிற்கு ஒரு பொற்காலம் என்பதில் சந்தேகமே இல்லை.
  என்னுடைய பரிந்துரை " லக்கி லயன் ஆண்டு மலர்".

  ReplyDelete
 18. ஸார் இரவு ​நேரத்துல பதிவு ​போட்டு துாக்கம் வர மாட்​டேன்கிறது, பவர் ​வேறு கட், என்னு​டைய பங்கு லக்கி லுாக் ஹாலி​டே ஸ்​பெஷல், லக்கி ஸ்​பெஷல்... ​போங்கபா நான் துாங்க ​போ​றேன்.

  ReplyDelete
 19. Puthu puthu COMICSsala
  pudichathu
  kirukku.....!
  Seenikkulla
  erumpu
  sikkikitta
  kanakku....!

  ReplyDelete
 20. 1.Lion comedi special
  2.lucky super special
  3.new treem special
  4.super comedi 2012

  ReplyDelete
 21. Sar ippo time
  APRAL 14 3.30 AM
  commend time parunka!
  Apral 13 3.00 pm kattuthu!

  ReplyDelete
 22. Sir matham oru book RS 100 vilaiyil veliyidalam
  aandu santha
  RS 1500 vaikkalam!

  ReplyDelete
 23. oorellam
  thoongaiyila vilithirukkum
  en iravu....
  puthu puthu
  kathaikal thedi
  thavithirukum en manasu.....

  ReplyDelete
 24. சாத்தானின் வடை வேட்டை தொடர்கிறது.6.லயன் சூப்பர் 28 ஸ்பெசல்.7.லயன் 28 விக்டரி ஸ்பெசல்.8.லயன் எலைட் ஸ்பெசல்.9.லயன் எக்சலன்ட் ஸ்பெசல்.10.லயன் ஜுஜூபி ஸ்பெசல்.(சூப்பர் ஸ்டார் மன்னிப்பாராக).எனக்கு அடையார் ஆனந்த பவன் வடை வேண்டாம். சிவகாசி பிரகாஷ் பப்ளிசர்ஸ் வடைதான் வேண்டும்.தலை வாங்கியார் என்றுதான் வருவாரோ?ஹஆவ்(ஒன்றுமில்லை.கொட்டாவி விட்டேன்.)

  ReplyDelete
 25. டியர் சார் ,lion's happy birthday சிறப்பிதழ் என்று பெயர் வெய்த்து lion 28 candil களுடன் கேக் cut செய்யும்போது சுற்றி லக்கி ,captiger ,டெக்ஸ்,madasty ,என எல்லோரும் கை தட்டும் படி அட்டைபடம் வந்தால் superb ஆக இருக்கும் சாரே.

  ReplyDelete
  Replies
  1. டாக்டர் அவர்களுக்கு ஸ்பைடர், ஆர்ச்சி,நார்மன் என்ன கொடுமை செய்தாரோ .மறந்து விட்டார் .எனது தலைப்பும்

   நான் யோசித்ததே ராஜா அவர்களும் கூறி விட்டார் . லக்கி லயன் ஆண்டு மலர் .ஆண்டு மலர் ,கோடை மலர் ,இவைகளே நமது உற்சாகத்தை கிளர்ந்தெழ செய்தவை .எனவே பெயரை மற்ற வேண்டாமே. சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் உடன் கோடை மலர் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் என்று சேர்த்தல் கூட நன்றாகவே இருக்கும்

   Delete
 26. பளபளா வண்ணத்தில் வெளிவரவிருக்கும் ஆண்டு மலருக்கு வாழ்த்துக்கள்

  என் அபிமான சிக்-பில் குழுவினரை எப்போதும் டீல் ல விட்டு விடுகிறீர்களே சார்.எப்போது தான் டாக்புல்லிடம் கிட் உதை வாங்குவதை வண்ணத்தில் பார்க்க போகிறோம்?
  Dr. Sunder ன் அட்டைப்பட ஐடியா சூப்பர். எல்லா முக்கிய ஹீரோக்களும் இருக்கும் வண்ணம் ஒரு அட்டைப்படம் பிளீஸ்.

  ReplyDelete
 27. அடப்பாவிகளா...தூங்கவே மாட்டிங்களா. அதுக்குள்ள 50 comment போட்டு தாக்கியிருக்கிங்க.

  ஓகே என்னோட பங்குக்கு, முதலில் எடிடரின் இந்த அறிவிப்பு நிறைந்த மனநிறைவையும், மட்டற்ற மகிழ்ச்சியும் தருகிறது. முழு மனதுடன் வரவேற்கிறேன்.

  "லயன்-லக்கி ஸ்பெஷல்-ஆண்டுமலர் 2012" என்று பெயர் வைக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல டைட்டில் .நானும் இதை ஆமோதிக்கிறேன் .வடை ல் எனக்கும் பங்கு உண்டா? அப்படியே எடிட்டர் சார் க்கு சூப்பர் சலாம்.விவாடத்தை அப்படி ஏ சூப்பர் ஆக திசை திருப்பி விட்டதற்கு !

   Delete
 28. இந்த வருடத்தின் "சிரிப்பு தோரணம்" ஜூலையில் வந்து அனைவரையும் "சிரிப்பு கடலில்" முல்கடிகட்டும்.

  லக்கி லுக் இரண்டு கதைகளும் சிறந்தவை. இடையில் ஒரு குட்டி சிக் பில் கதையும் வந்தால் நன்றாக இருக்கும். அல்லது, ஒரு புதியா சிரிப்பு நாயகரை அறிமுகப்படுத்தலாம். நண்பர்களுக்கு பிடிதிருந்தால் மேலும் வெளிடலாம். உதாரணம் "ப்ளூ கோட்ஸ்" , "Smith & Wesson". ஆங்கிலத்தில் கதை படித்தாலும், தமிழில் படிப்பது ஒரு சுகம் அதவும் நம்முடைய நையாண்டி தமிழில் படிப்பது சுகம். இது சுகம் ஆங்கிலத்தில் கிடைப்பது இல்லை. "கருத்து கந்தசாமி" (Rin Tin) கதைகளையும் அறிமுகப்படுத்தலாம். "கல்லறை கனவுகள்" (Pierre Tombal) கதையை ஒரு இடை சொருகளாக வெளியிடலாம். இன்னும் நிறைய கதைகள் உள்ளன அது நிங்களும் அறிந்ததுதான்.

  "சிரிப்பு தோரணம்" ஜூலை மாதத்தில் கலக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. புது புது காமிக்ஸ் பெயராக சொல்லி "எடிட்டரை நன்றாக உசுப்பேத்துபவர்கள் சங்கத்தின்" தலைவர் நீங்க தான். நீங்களே தான் :) :)

   எப்ப்டியோ, நல்லா உசுப்பேத்தி நிறைய புத்தகங்கள் வந்தால் சரி

   Delete
  2. உங்களுடைய கனிவான வார்த்தைகளும் & என்னை சங்க தலைவர் ஆகியதற்கும் நன்றி சிவா! என்ன பண்ணறது என்னால் முடிந்தது.... வேறுயாரும் புதியா கதைகளை பற்றி சொல்வதில்லை. நிறைய கதைகள் வந்தால் நன்றாகத்தான் இருக்கும். அதுவும் புதியா அறிமுகங்கள்......

   Delete
 29. Dear Sir,

  My suggestion is "Lion 28th Vaibhav Special".

  Advance ஹாப்பி ஹாப்பி பர்த்டே டு our "Lion " காமிக்ஸ். (எனக்கும் 28 என்பது என் நினைவிற்கு வருகிறது).

  தவிர நீங்கள் எந்த Title செலக்ட் பண்ணினாலும் நன்றாகவே இருக்கும் என்பது என் கருத்து.

  அப்புறம் //தமிழ் புத்தாண்டுக்கும் சரி ; ஆங்கிலப் புத்தாண்டுக்கும் சரி...சிவகாசி என்றுமே விடுமுறை அனுசரிப்பது இல்லை ! வழக்கம் போல் பணியே இங்கே ! //
  நண்பர்களே எங்க ஊரில் ஒரு பஞ்ச டயலாக் வைத்துள்ளர்கள், "வருடபிறப்பன்று லீவு விட்டா வருடம் முழுதும் லீவாகிவிடுமாம்". வருடத்தின் முதல் நாள் புத்தகத்தை (பாட புத்தகத்தை காமிக்ஸை அல்ல. காமிக்ஸை சொல்லாமலே படிப்போமே) எடுத்து படித்தே ஆக வேண்டும் என்று வீட்டில் கூட தொல்லை பண்ணுவார்கள். So நாங்கள் எந்த ஒரு வருடபிறப்பன்றும் லீவு எடுப்பதில்லை. "குட்டி ஜப்பான்-நா சும்மாவா". (அதே நேரத்தில் எங்கள் ஊரில் மட்டும் இரண்டு போனஸ் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்).

  ReplyDelete
 30. 1. ஜில்லுன்னு ஒரு சும்மர்
  2. ஜாலி-யாய் ஒரு பர்த்டே
  3. வருஷம் - 28, லக்கியுடன்

  ReplyDelete
  Replies
  1. தலைப்புகள் நல்லா இருக்கு

   Delete
 31. என்னப்பா இது. ஒரே இங்கிலிபீஸு தலைப்புகளாக இருக்கே...

  வடைக்கான எனது தலைப்புகள்
  1. லயன் புத்துணர்ச்சி ஆண்டு மலர் - 2012
  2. லயன் மறுமலர்ச்சி ஆண்டு மலர் - 2012 (ரெண்டும் ஒன்னுதானோ??)

  ReplyDelete
 32. அருமையான செய்தி. இரண்டு லக்கிலூக் கதைகள் ஒரே இதழில் வருவது இதுவே முதல் முறை (?) என்ற வகையில் டபுள் கொண்டாட்டம். கூடவே சிறிய சிக்-பில் கதையை (அப்படி ஒரு சிறு கதை இருந்தால்) கலரில் பார்க்க ஆசை.

  என் பங்குக்கு

  ”லயன் பர்த்டே காமெடி ஸ்பெஷல்”

  ReplyDelete
 33. 6- லயன் வடை சிறப்பிதழ் [ இலவச இணைப்பாக கெட்டி சட்னி]

  ReplyDelete
 34. HI....ARPUDHAM ARPUDHAM
  REALLY 10XS VIJAYAN

  SENTHIL

  ReplyDelete
 35. எடிட்டர் சார் "லயன் காமெடி சம்மர் ஸ்பெஷல் 2012" யாரும் சொல்லி இருக்காங்களா? ஓகே வா இந்த தலைப்பு நண்பர்களே? புத்தக ப்ரியன்

  ReplyDelete
 36. something special
  ever green special
  lucky one man show special
  laughing therapy special
  comedy guarantee special

  ReplyDelete
 37. புனித சாத்தானின் ஹிம்சை தொடர்கிறது.11.லயன் ஜாலி ஜம்பர் ஸ்பெசல்.12.லயன் ஹை ஜம்ப் ஸ்பெசல்.13.லயன் லாங் லிவ் ஸ்பெசல்.14.லயன் ஹிஹி ஸ்பெசல்.15.லயன் எம்பெரர் ஸ்பெசல்.(உஷ் முடியல்லே)மேற்படி 15 தலைப்புகளுக்கான ராயல்டி தொகையை எனது சுவிஸ் பேங்க் அக்கௌண்டில் செலுத்தி விடவும்.வடையை கார்த்திக்குக்கு அனுப்பிவிடவும்.

  ReplyDelete
 38. Dear VIJAYAN

  "THALA VANKI KURANKU" and "DR 7" not yet received.

  I would suggest to send all the books (Rs.10 also) by courier OR send by VPP. We will pay the extra amount (deduct courier charges from my subscription charges).

  Thanks
  Nagarajan S

  ReplyDelete
 39. விஜயன் சார்

  மீண்டும் புது பொலிவு பெற்றுள்ள நமது லயன் ஆண்டு மலர் என்பதால்

  "லயன் - நான் ஸ்டாப் ஸ்பெஷல்"

  ........ அல்லது ........

  "லயன் - நான் ஸ்டாப் ஆண்டு மலர்"


  நாகராஜன் s

  ReplyDelete
 40. எனக்கு இன்னும் DR 7 வரவில்லை. தபால்துறை இப்படி இருந்த எப்படி சிறந்து விளங்கும்?

  ReplyDelete
 41. நண்பர்க​ளே பனிநிமித்தமாக ​வெளியூர் ​செல்கி​றேன்...... ​​சே ​ரொம்ப ​கொடு​மை... அதுவ​ரை
  பதிவுக​ளை பார்க்க முடியாது.. வியாழன் தான் வரு​வேன்.

  ReplyDelete
 42. இன்று மாலை 6.40 க்கு சிவகாசியிலிருந்து போன்.பேசிய நண்பர் லயன் காமிக்ஸ் வந்துவிட்டதா?என்று கேட்டார்.இன்னும் வரவில்லை என்றேன்.உங்கள் ஊரில் எந்த கூரியர் உள்ளது என்றார்.எனக்கு சட்டென்று எந்த கூரியர் பெயரும் நினைவுக்கு வரவில்லை.பேசிய நண்பர் professional கூரியர் உள்ளதா?என்றார்.இருக்கிறது என்றேன்.அதில் அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லி வைத்து விட்டார்.சற்று நேரம் களித்து நான் சிவகாசிக்கு போன் செய்தேன்.ஒரு பெண் (ஸ்டெல்லா மேரி?)எடுத்து பேசினார்.புத்தகம் என்று அனுப்புகிறீர்கள் என்று கேட்டேன்.இன்று அனுப்பினால் திங்கள் கிழமை உங்களுக்கு வந்து விடும் என்றார்.ஆகவே ,என் உயிரினும் மேலான அன்பு லயன் வாசகர்களே ;இந்த புனித சாத்தானுக்கு லயன் காமிக்ஸ் அநேகமாக திங்கள் கிழமை வந்துவிடும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 43. well . good day friends
  happy to receive Dr.7
  read it
  enjoyed it
  nice

  dear Mr . vijayan
  kuli peruchaali endra villan vandha palaiya muthu comics re print seithidalaamae

  janarthan
  kumbakonam
  igaidsag@gmail.com

  ReplyDelete
 44. Dear editor,
  As always, you know how to spoil us rotten! :-) We love you for this!

  As I mentioned in an earlier post, I prefer your titles to others', Yes sir, anything you do, is OK with us. :-)

  Your choice of stories for the Lion Birthday is great. I was one of those actually loved the previous Pinkerton Lucky Luke. It captures the recent turn of events such as erosion of civil rights, inland surveillance via patriot act, SOPA, PIPA etc.

  And yes, reporter Johnny's adventures are eagerly awaited too (I have never seen his English comic books, so I assume he is a very Franco-Belgian hero, yes?).

  About the payment for these books, is it OK to NEFT transfer the money for our copy, or do you still prefer DDs for amounts below Rs 100?

  P.S: I have missed some of the Blueberry comics in the chronology and I am groping with regards to his full storyline. Any chance of a Blueberry magnum opus like the XIII special? Just asking, you know.


  Best,

  ReplyDelete
  Replies
  1. Sorry, I meant to type:
   About the payment for these books, is it OK to NEFT transfer the money for our copy, or do you still prefer DDs for amounts below Rs 300?

   Delete
 45. "உங்க கிட்ட இன்னும் நெறைய எதிர் பார்கிறேன் " ன்னு ஆசிரியர் முனு முனுக்குறது ஈரோடு காவேரி ஆறு வர கேக்குது .
  வட ஊசுரதுகுள்ள பேரு வச்சா நல்லது

  ReplyDelete
 46. சிரிப்பு சிறப்பிதழ் ;
  லக்கி ஸ்பெசல் ;
  lion பர்த்டே ஸ்பெசல்

  ReplyDelete
 47. ஜாலியாய் ஒரு லயன்

  ReplyDelete
 48. சார். "லயன் மீண்ட வருஷம் ஸ்பெஷல் " எப்புடி ....?

  ReplyDelete
 49. சார், "லயன் மீண்ட ஆண்டு மலர்" இது நல்லா இருக்கே...?

  ReplyDelete
 50. கொஞ்சம் தமிழ் பெயர்களையும் வைக்கலாமே

  * அகவை 28 ஆனந்த சிறப்பிதழ்
  * அகவை 28 அற்புத இதழ்
  * குளு குளு அகவை 28 சிறப்பிதழ்
  * வாடா மலர் 28

  அது ஏனோ தெரியவில்லை, என் பெயர் unknown என்று வருகிறது.
  சங்கர் C.

  ReplyDelete
 51. நான் லக்கி லூக்கின் நீண்ண்ட நாள் ரசிகன். இரண்டு முழு நீள லக்கி லூக் கதைகள் முழு வண்ணத்தில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி! இதனுடன் முன்பு வெளி வந்த "பூம் பூம் படலம்" கதையை முழு வண்ணத்தில் மறு பதிப்பு செய்திட்டாலென்ன? ஏனெனில் லக்கி லூக் கதைகளில் அருமையான கதை & முழு வண்ணத்தில் எதிர்பார்த்து இரு வண்ணங்களில் வந்து என்னை ஏமாற்றிய கதை. இந்த அருமையான கதையை முழு வண்ணத்தில், உயர் தரத்தில் படிக்க ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.

  நண்பர்களே, என் விருப்பத்துடன் நீங்கள் ஒத்து போனால், உங்கள் கருத்தையும் பதிவு செய்யவும்.

  மிகுந்த எதிர்பார்ப்புடன்
  செ. சங்கர்

  ReplyDelete
  Replies
  1. செ. சங்கர்: ஓசி குடுத்து ஓடிப்போன என்னோட அபிமான புத்தகம் . கண்டிப்பா மறுபதிப்பு வேண்டும்

   Delete
 52. ஹாய் எடிட்டர் சார்!
  மாமூலான காமிக்ஸ் பாணியில பெயர் வைத்தால் "சிங்கத்திற்கொரு பிறந்தநாள்" என்று வைக்கலாம்.
  -- விமலாஹரன்

  ReplyDelete
 53. “சிங்கத்தின் சிறுவயது 28” – எப்படி இருக்கு நம்ம தலைப்பு…?

  ReplyDelete
 54. ஹலோ விஜயன் சார் ,
  லயன் சூப்பர் ஸ்பெஷல் ஆண்டு பதிப்பு
  லயன் நியூ சூப்பர் ஸ்பெஷல்
  லக்கி லுக் ரீபிட் ஸ்பெஷல் பதிப்பு
  லயன் ரீபிட் ஸ்பெஷல்
  இதுதான் லயன் வருட மலர்
  காமிக்ஸ் திருவிழா மலர்
  லயன் பைவ்ஸ்டார் ஸ்பெஷல்

  ReplyDelete
 55. sir i think this will our 29th year of celebration. By the way the changes in the blog, like page alignment, and other things are excellent.

  ReplyDelete
 56. லயன் கிச்சு கிச்சு மலர்
  -The Roaring is back

  ReplyDelete
 57. Lion celebration special -> reasons for the name. i have never seen such a positive energy from you after the early 90's...this is what lion & muthu known for...they are like phoenix birds..
  so it time for us to celebrate the "love for our comics"..
  Luv u all comic fans & special thanks to vijayan sir....

  small request-> please try to publish thorgal...he is quite superb like Tiger..
  consider it sir....

  ReplyDelete
 58. டியர் சார் ,லக்கி -லயன் combine ஸ்பெஷல்,லயன் ஸ் colourful happy birthday ஸ்பெஷல் எப்படி ?

  ReplyDelete
 59. கோடையில் ஒரு கலாட்டா

  ReplyDelete
 60. கோடையில் ஒரே கலாட்டா மீ தி 100

  ReplyDelete
 61. Vijayan Sir

  So Far I have not received thalai vangi kurangu and doctor 7 books. Its almost a month over since you said you have started despatching books(mar 3rd week i think).

  I have sent many emails to lioncomics "lioncomics@yahoo.com" . Not even a single reply.

  I have posted this message also in your forums. You also dont reply.

  This is how a subscriber(who has already paid the subscription amount) is being treated.

  You can check in how many of your forums I have posted this message. For none of them, you have replied. But you are replying only to certain set of people whom you are aware/comfortable with. Why ?

  Why we are supposed to follow up so many times to get new issues?

  If this continues, again the subscriber count will only reduce and people may not come back.

  I am tired of these follow ups. on what basis, books are sent ? please clarify that.

  When you send books to someone, the subscriber can be informed in his email id I think.

  Why the books are not sent to the subscribers inspite of the fact that they have mailed many times and posted many times in your forums?

  If this continues, I would like to cancel my subscription and pay for books only when it comes. So that I can get the books in courier or so..

  Dont you think that issues faced by a subscriber in getting his books is high priority for you to look into?

  Please reply to this ATLEAST.

  ReplyDelete