Powered By Blogger

Friday, April 06, 2012

சென்று வாருங்கள் நண்பர்களே !


நண்பர்களே ,

சித்திரக் கதை உலகின் இரு அசாத்திய ஓவியத் திறமைகள் இம்மாத லயன் காமிக்ஸில் அரங்கேறுகின்றன ! 

Yes - "எமனின் தூதன் டாக்டர் 7 ' தயாராகி விட்டது.

கூரியரில் பிரதிகளைப் பெற்றிடும் நண்பர்களுக்கு இன்று முதலும் ; தபாலில் பெற்றிடும் நண்பர்களுக்கு Good Friday விடுமுறை முடிந்த பின், சனிக்கிழமை முதலும் அனுப்பிடவிருக்கிறோம்.இங்கே சிவகாசியில் வரும் திங்கள் & செவ்வாய் கிழமைகள் கோவில் திருவிழாவை முன்னிட்டு முழு விடுமுறைகள் என்பதால், அவ்விரு நாட்களும் நமது அலுவலகமும் மூடப்பட்டிருக்கும். So உங்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு அவ்விரு நாட்களும் பதில் தந்திட இயலாது !

காரிகன்


இதழின் highlight மிரளச் செய்யும் சித்திர நேர்த்தியே ! ஏஜெண்ட் காரிகனின் 40 பக்க சாகசமும், ரிப் கிர்பியின் 46 பக்கக் கதையும் இந்த இதழின் இரு படைப்புகள் ! இரண்டுமே '60 களின் இறுதியிலும் ; '70 களின் துவக்கத்திலும் அமெரிக்க newspaperகளில் தொடர்களாக வந்து..பின்னர் ஒன்றிணைக்கப்பட்டு முழுநீளச் சித்திரக் கதைகளாக வெளி வந்தவை ! 

ரிப் கிர்பி


இன்றைய தேர்ந்த நம் ரசனைகளுக்கு இந்தப் புராதனக் கதைகள் எத்தனை தூரம் திருப்தியினைத் தந்திடுமோ நானறியேன் ....ஆனால் சித்திரத் தரத்திற்கு மதிமயங்கிடாது இருப்பது மிக மிகக் கஷ்டமே !! அப்புறம் இன்னொரு விஷயம்...காரிகனும்,அவரது பரம வைரியுமான டாக்டர் 7 முதன் முதலில் சந்தித்துக் கொள்வது இந்தக் கதையிலே தான் ! So அவர்கள் முதன்முறை சந்தித்துக் கொள்ளும் போது நேசமாகப் பேசிக் கொள்ளுவதைப் பார்த்து மண்டை காய்ந்து போய்விட வேண்டாமே ! 

கதைகள் தவிர, (வழக்கமான) எனது ஹாட்லைன் ஒன்றரைப் பக்கத்திற்கும் , வரவிருக்கும் வெளியீடுகள் பற்றிய விளம்பரங்களும்..மறுபதிப்புப் பற்றிய அறிவிப்பும் இந்த இதழில் இடம் பெறுகின்றன !

இன்னமும் இந்தப் பத்து ரூபாய் விலையிலான இதழ்கள் நான்கே நான்கு மட்டும் வெளி வர பாக்கி உள்ளன ! அந்த நான்கும் ஒரு வழியாக வந்து விட்ட பின்னே...இநத கறுப்பு ; வெள்ளை formatக்கும் சரி...நமது புராதன நாயகர்களுக்கும் சரி..ஒரு பெரிய விடுமுறை ! So கொஞ்ச காலத்திற்காவது நமது இதழ்களில் நீங்கள் பார்த்திடப் போகும் கடைசி காரிகன் & ரிப் கிர்பி சாகசங்கள் இவை தான் !


ரிப் கிர்பி ஆர்ப்பாட்டமில்லா நாயகர் என்ற போதிலும்..அவரது அற்புத சாகசங்கள் என் நினைவில் என்றுமே நின்றிடும் ! முத்து காமிக்ஸில் வந்திட்ட "ரோஜா மாளிகை ரகசியம்".."புதையல் வேட்டை" எனது evergreen  favorites !

ஸ்கேன் : Muthufan -க்கு நன்றி ! 

அதே போல் காரிகனின் சாகசங்களில் பொறி பறக்கும் "வைரஸ் X" ; மடாலய மர்மம்" "பனித்தீவின் தேவதைகள்".."லயனில் வந்திட்ட "ஒரு பனிமலைப் பயங்கரம் " ; "சிலந்திவலையில் காரிகன்" போன்றவை 'பளிச்' ரகம் !  இவர்களின் ஏராளமான கதைகளில் உங்களின் favorites பற்றி எழுதிடலாமே ?

எத்தனையோ நாட்கள் நம்மை மகிழ்வித்திருக்கும் இநத ஜோடிக்கு ஒரு  அழகான வழியனுப்பு தந்திடுவது நம் கடமை தானே !!  Let's give them a fond farewell guys !! சென்று வாருங்கள் துப்பறியும் நண்பர்களே !






106 comments:

  1. superb news editor sir.
    whatever u do we will follow suite.

    ReplyDelete
  2. என்னைப் போலவே நிரம்பவே இரவுக் கழுகுகள் (!)

    ReplyDelete
    Replies
    1. YES sir tinamum 10 muraiyavathu unka blog parkiren!
      (mobill la)

      Delete
    2. இரவினில் பதிவிடுவது சுகம். அப்படி இடப்பட்ட பதிவினில் சென்று உடனுக்குடன் கலாய்ப்பது சுகமோ சுகம்.

      Delete
    3. டால்டன் சகோதர்கள் பாணியில் சொல்வதென்றால் : இப்படியே எல்லா பயல்வலும் தூங்காம முழிச்சுகிட்டு இருந்தா யாரு வூட்டுல போயி லவட்டிக்கிட்டு போறதாம் ?

      Delete
    4. இப்பதான் சார் டைம் கிடைக்குது! இருந்தாலும் பகலிலும் கொஞ்சம் பேர் எப்படியோ விழித்து கொண்டுதான் இருகிறார்கள் போல் உள்ளதே ஆச்சரியம்தான். நாங்கல்லாம் டெக்ஸ் வில்லர் கூட வைல்ட் வெஸ்ட்ல இருக்கிரவங்கதானே(ஹீ ஹீ கனவில்தான்)

      Delete
  3. நீண்ட இடைவெளிக்கு பின் ரிப் கிர்பி வாசிக்கப்போவதை நினைத்தால் சந்தோசமாக உள்ளது. தலை கேட்ட தங்க புதையல் தலைவரின் சாகசம் தானே if im not wrong??? மேலும் சிறிய இடைவெளிகளில் கிடைத்திடும் நமது காமிக்ஸ் வாசிப்பது இன்னும் எனது அன்றாட வாழ்வை இனிமையான ரசனையுடன் மற்றும் எதிர்பார்புகளுடன் கூடிய காத்திருப்பில் வைத்துள்ளது. நன்றி எடிட்டர் சார்.

    ReplyDelete
    Replies
    1. Thalai ketta thanka puthaiyal! C.I.D. Larance kathai!

      Delete
    2. ஊப்ஸ், ஸ்பெல்லிங் மிஸ்டேக்.அப்போ ரிப் சாகசத்தில் ஒரு பெண் தங்க சிலையாக மாறும் கதையின் பெயரென்ன?

      Delete
    3. நீங்கள் கூறும் கதை பலி கேட்ட புதையல், என்று நினைக்கிறேன் (லயன் நிர்.93)

      Delete
  4. என்ன தல .... ஓல்ட் இஸ் கோல்ட் அல்லவா? ஒரேயடியா முழுக்கு போட்டா எப்படி ? ரிப்பின் " மூன்று தூண் மர்மம் " பிலிப்பின் "தீ விபத்தில் திரைப்பட சுருள் " இதெல்லாம் யாரு வெளிவிடுறதாம் .........?

    ReplyDelete
  5. Puthusu than ippothaiku uarathu nu solranka palaiya kathai ellam reprint panna vaichiruvom!

    ReplyDelete
  6. விஜயன் சாரின் இந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னுடைய இரண்டு ஆல் டைம் favorite ஹீரோஸ் : ரிப் அண்ட் காரிகன் இம்மாதம் வரவிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

    ரிப் கிர்பியின் கதைகள் அனைத்தும் நன்றாக இருக்கும். குறிப்பாக கையெழுத்து மோசடி, புதையல் வேட்டை, மூன்று தூண் மர்மம். அதேபோல் காரிகனின் மாடாலய மர்மம், வைரஸ் X கதைகளும் எனக்கு பிடித்தமான ஒன்று.

    முத்து காமிக்ஸில் வந்த அனைத்து வேதாளரின் கதைகளும் சூப்பர் ஹிட் (விண்வெளி வீரன் எங்கே தவிர). அதிலும் "ஜும்போ" ஒரு சூப்பர் கதை. எதனை முறை படித்தாலும் சலிப்பே வராது.

    நண்பர் ஸ்டாலின் கூறியதுபோல் ஓரேயடியாக இவற்றிக்கு முழுக்குபோட தேவை இல்லையே.

    ராஜா பிரான்ஸ்

    ReplyDelete
  7. எடிட்டர் சார்,
    கறுப்பு;வெள்ளை format-ற்கு விடுமுறை விடுவதைவிட ஏற்றுக்கொள்கிறோம் (மீளா விடுமுறையாக இருந்திட்டால் சந்தோஷமே...), ஆனால் புராதன நாயகர்களுக்கு விடுமுறை அளிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர்களை வழியனுப்ப சக நண்பர்களுக்கும் விருப்பம் இருக்காது என்று நினைக்கிறேன்.அவ்வப்போது அவர்களும் வந்து தலைகாட்டிவிட்டு சென்றால் தப்பில்லையே....

    ஸ்ரீதர் ராமமூர்த்தி,

    சேலம்.

    ReplyDelete
  8. சார் நான் ஆட்​சேப​னை ​தெரிவிக்கி​றேன், என்னதான் நாம் காலத்திற்​கேற்ப ஆல்பங்களுக்கு மாறிவிட்டாலும், நமது எவர்க்ரின் ஹி​ரோக்க​ளை வழிஅனுப்ப எனக்கு மனமில்​லை, மன்னிக்கவும்.

    ReplyDelete
  9. சானிதாள் ரசிகர்க​ளே வாருங்கள ஒன்றாக குறள்​கொடுப்​போம்.

    ReplyDelete
  10. இது அநியாயம். என்னதான் புதிய கதாநாயகர்களைக் கொண்டுவந்து குவித்தாலும் இவர்களது 'ஸ்டெடியாக' நகரும் சாகசங்களுக்கு ஈடாகுமா?

    இலங்கை வாசகர்கள் சார்பில் பெரியதொரு கண்டனத்தை முன்வைக்கிறோம்!(தயவுசெய்து ஒரேயடியாக மூட்டை கட்டிவிடாதீர்கள், ப்ளீஸ்! நாலுகால் திருடன் போன்ற ரிப்பின் கதைகளை ரசிக்காதவர்களின் ரசனையே கேள்விக்குறிதான் என்பது எனது தனிப்பட்ட கருத்து!).

    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. அழுகை வருகிறது. நண்பர்களை நிரந்தரமாகப் பிரியும் சோகம்.

      துன்பங்கள் நிறைந்த காலகட்டங்களில் எங்களுக்கான ஆறுதல்களாய் இருந்தவர்களில் இந்த நண்பர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்!

      ஆசிரியர் இந்த அளவுக்கு கல்நெஞ்சக்காரராய் இருக்கவேண்டாமே!

      -Theeban (SL)

      Delete
  11. முடியாது.கூடாது.

    ReplyDelete
  12. sir! Vethalan namma comics la ini varuvaara? Pls reprint all vethalan(phantom) stories!

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் நண்பரே வேதாலரின் கல்யாண ஆல்பம் " பூ விலங்கு " கதை செல்லரித்து போனாலும் பாதுகாக்கிறேன் . ஆசிரியர் இந்த குடும்பத்தை கொஞ்சம் கவனித்தால் நல்லது . ஆமா .....வேதாலரின் இரட்டை ஜூனியர் எப்படி இருகிறார்கள் ஆசிரியரே ?

      Delete
  13. சோகமான சேதி! ஆனால் காலத்தின் கட்டாயம்!

    ரிப் கிர்பி:
    பலருக்கு பிடித்திடாத ரிப் கிர்பி, எனக்கு நிரம்ப பிடித்தவர். ஒரு பக்கத்துக்கு வீட்டு அங்கிள் போல் அலட்டலில்லாமல் சாவகாசமாய் ஒரு சாகசம் (அட தலைப்பு நல்ல இருக்கே) செய்வதில் அவருக்கு ஈடு இல்லை. அதே போல டெஸ்மாண்டும் எனக்கு மிகவும் பிரியமானவர் :(

    ஏஜன்ட் காரிகன்:
    ஆர்ப்பாட்டமில்லாத துப்பறிவாளர்! அவர் தலை வாரும் ஸ்டைலுக்கு நான் ரசிகன்! அதாவது, வாரிவிட்ட ஓவியருக்கு!

    ReplyDelete
  14. I'm happy to have new heroes but not at the cost of my favourites !

    Koolukkum Aasai ! Meesaikkum Aasai Thaan !

    ReplyDelete
  15. >>>காரிகனும்,அவரது பரம வைரியுமான டாக்டர் 7 முதன் முதலில் சந்தித்துக் ..... நேசமாகப் பேசிக் கொள்ளுவதைப் பார்த்து மண்டை காய்ந்து போய்விட வேண்டாமே !<<<
    மேலை நாட்டுப் படங்களிலும், கதைகளிலும் இது ஒரு வாடிக்கையான சங்கதிதானே! வில்லன், ஹீரோவை தனது இடதிற்கு வரவழைத்து, குசலம் விசாரித்து, விருந்து வைத்து, தப்ப விட்டு பிறகு புலம்புவது செம காமெடி!

    ReplyDelete
  16. எடிட்டர் சொல்வது போல, புதிய கதைகள் இனி வராது. ஆனால், மறுபதிப்புகளில் இந்த நாயகர்களைப் பார்த்திடுவோம் என்ற நம்பிக்கையிருக்கிறது.

    தலை வாங்கிக் குரங்கு இன்னும் எனக்கு வரவில்லை. திருவிழா விடுமுறைகளுக்கு அடுத்து, இந்த இரண்டு புத்தகங்களும் ஒரு சேர வந்துசேரும் என்ற நம்புகிறேன். திருவிழாவை மகிழ்வுடன் கொண்டாட சிவகாசி மக்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. துரைசாமி6 April 2012 at 10:28:00 GMT+5:30

    எடிட்டர் சார்,
    தயவு செய்து லக்கி லூக், சிக்பில் சாகசங்கள், டெக்ஸ்வில்லர் சாகசங்கள் அதிகமாக வெளியிடவும்

    துரை

    ReplyDelete
  18. Hello sir, happy to hear the goodnews about next issues.

    I always feel good when reading Rib's stories. A 40 aged Gentleman cum play boy(slightly) character is unique among comics heroes. A small brake for him is ok. I hope the brake will not be more than 6~8 months. You can bring Rib in special issues at least as page fillers.

    Similarly Buzz sawyer also one of my favourite. Why not you allow him to face us at least once in while??. In re print also you can consider Rib and Sawyer.

    BTW - Doctor 7's cover page sema terrorrra irruku. Going to be the one best all time cover pages of lion. Hats off to the team.

    ReplyDelete
  19. திரு. விஜயன் அவர்களின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. மாயாவி, லாரென்ஸ் & டேவிட், ஜானி நீரோ, காரிகன், ஜானி ஹசார்ட் இல்லாத காமிக்ஸ் குழுமத்தில் நான் இனி கலந்து கொள்ளப் போவதில்லை! சென்று வருகிறேன் நண்பர்களே!

    ReplyDelete
  20. Regular reader, but first comment. Usually the stalwarts said it all, with nothing new to add.

    But now, I feel I have to weigh in with all the other stalwarts in conveying my dismay. It is not fair (unjust?) to do away with the "old" heroes (all of them are old in that case -- Spider, Archie, Robin, Agent Julian, Agent Robin, Maayaavi, irumbukai Norman, Roger moore, James Bond, John Master, Tiger ("totta-doing", not Blueberry) Lawrence/David, rettai vettayar, who else?).

    Personally, I am a great fan of Rip. He has flair. I mean, he even has a butler past comparison (Des)! Same goes for Agent Carrigan too. Please don't give up on them. As one of them mentioned, those hair-dos from many of those heroes inspired some of us to have a coiffure like that too -- albeit not much can be seen these days ;-). Women from many of those stories were drawn with a certain poise & demureness along with feminity that can't be replaced. But, I am a great fan of Modesty, and all for Women's lib, lest someone mistakes me. Those comics are special because they allow "everyman" people like me to engage in some wishful fantasy that I too, with my daily life, can do derring-do like those other "everyman" imaged heroes. So, please don't stop printing them (unless some quirk of fate changes us into wealth inheriting Largo Winches, Haha :-D!)


    Now that Lion has moved to a "print-on-demand" format in the form of subscriptions only model, then surely there is no danger of too many unsold copies, right? It makes no sense to retire *anyone* from your stables now, because there is now a clear, dedicated and willing to pay fan base that will pay for all the books that come out of your press, yes? If there is going to be a few reprints as you alluded in another post, these all your previous books *must* feature in it :-P. (Anyway, due to my father's job transfers, I was out of TN for decades since late 80s, and I have totally missed out on the comics released since then. I *want* them all, even if it is 30 years late ;-) )

    I might be a lone voice, but I somehow preferred the older Tamil titles of Largo Winch ("வேங்கையாய் ஒரு வாரிசு" & "செல்வத்தின் நிறம் சிவப்பு"), rather than the new titles you have come up with. The new ones sound too pleb too me and the older titles had a certain "air" to them. But, to each their own, as they say.
    But it is nice that you took reader suggestion to heed and acted on it too. @Karthik did sound very pleased in the comment of that post. ;-)

    I don't have a particular favourite amongst your books -- because they are ALL my favourites :-D ;-) But perhaps a reprint of old Archie/Spider books are overdue? Your Archie wisecracks are far superior to the original English ones, in our family's humble opinion.

    Since I missed a lot of your old Blueberry stories, do you have any intention of doing a Blueberry chronological mega volume like the iratthapadalam complete saga?

    I just read the comeback special and contrary to popular opinion that you expressed elsewhere -- I liked the Lucky Luke story. It had all the parallels with modern day politics in that story. Erosion of civil rights, the Patriot act that allows detention on suspicion, the eavesdropping, the censorship of (social) media through monitoring (SOPA/PIPA/"kolaveri" piracy law to make ISPs snoop on subscribers), preemptive arrests and data snooping for future misuse (happened in koodankulam protests) etc. The parallels are eerie! Did this new Prince comic feature new artists? Barney looked hideous in a few frames to me. But it was a double-take , reading the stories in Colour. Well, Maayaavi is maayaavi, so nothing to add. +1 for the beautiful translation into Tamil... It never fails to amaze as well as entertain me, as to how you manage to translate and keep it topical. It's truly a gift.

    Like @SIV above, I am impressed with Dr. 7's cover art too. Oh, BTW, Happy Kovil Thiruvizha!

    Bye for now,
    Anbudan,

    ReplyDelete
  21. இப்படி பொசுக்குன்னு கோபப்பட்டா எப்படி?. காமிக்ஸே இல்லாமல் பல மாதங்கள் தாக்கு பிடித்து வாழ்ந்தவர்கள் நாம். இந்த நாயகர்கள் இல்லாமல் கொஞ்ச நாள் தாக்கு பிடிக்க முடியாதா என்ன?

    ReplyDelete
  22. And one more thing, I liked your pre-computer kaalathu Tamil fonts on the comics. These computer fonts are pretty lousy in terms of size, typographic aesthetics and readability. You need to experiment with other fonts a little more. There are quite a few freebies on the net.

    ReplyDelete
  23. @ SIV
    >>>BTW - Doctor 7's cover page sema terrorrra irruku. Going to be the one best all time cover pages of lion. Hats off to the team.<<<
    ஞாயமா பாத்தா நான் டிசைன் பண்ணிருக்க வேண்டிய கவர் சார், அது! மேலதிக விவரங்களுக்கு கீழ் கண்ட சுட்டியை அணுகவும்!

    @ Everyone!
    படிக்க தவறாதீங்க!
    விஜயன் அவர்கள் எனக்கு எழுதிய, ஒரு கடிதத்தின் கதை!

    ReplyDelete
    Replies
    1. விஜயன் சாருக்கு ஒரு விண்ணப்பம்:
      என்னை போன்ற வாசகர்களின் கருத்துக்கு மதிப்பளித்து கிரெடிட் கொடுத்திடும் நீங்கள், உங்கள் அலுவலக ஊழியர்களையும் அறிமுகப்படித்திடலாமே! குறிப்பாக நமது கவர் ஆர்டிஸ்ட்டை!

      Delete
  24. ரிப் கிர்பி, காரிகன் இருவருக்கும் தற்காலிக ஓய்வு கொடுப்பது நல்ல சங்கதியே. புதிய ரசிகர்களை கவர இப்போதைக்கு நவீன கால கதாநாயகர்களே சரியான பாதை. நமது பழைய கதாநாயகர்களை அவ்வப்போது ஏதாவது சிறப்பு கலெக்டட் எடிஷனில் தலைகாட்டி விட்டு செல்ல வைக்கலாம்.

    எடிட்டர் இவ்விதழ் 10 ரூபாய் என்றாலும், நல்ல தரமான காகிதத்தில் அச்சடிக்கபட்டிருகிறது என்று கூறியிருக்கிறார். நேரில் பார்த்து விட வேண்டியது தான். முன்பே கூறியிருந்தபடி, அட்டைபடம் சமீப கால லயன் முத்து இதழ்களில் ஒரு மைல்கல்.

    இப்போதவது உங்கள் சிறப்பு ஓவியரை, இத்தளத்தில் அறிமுகபடுத்தலாமே ?

    ReplyDelete
  25. ரிப் கிர்பியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  26. enakku tamilil type adikkum murayai vilakkavum.

    ReplyDelete
    Replies
    1. இங்கே சென்று,
      http://www.google.com/transliterate/indic/Tamil

      நீங்கள் மேலே இங்கிலிஷில் அடித்த ஒவ்வொரு சொல்லையும் அங்கே அடித்தால் தமிழாய் மாறிடும்!

      முழு இங்கிலீஷ் வாக்கியத்தையும் copy+paste செய்தால் இது வேலை செய்யாது! ஒவ்வொரு சொல் அடித்த பிறகும் தட்டச்சில் space bar-ஐ விரலால் அடித்திட வேண்டியது அவசியம்)

      Delete
    2. தட்டச்சு அல்ல விசைப்பலகை :D இதுக்குதான் டூய டமில்ல ஓவரா பீட்டர்(!) விடக்கூடாது :)

      Delete
    3. "saint satan" - இவரு நித்தியானந்தா சிஷ்யரா? :)

      Delete
  27. சார், தங்களின் தன்னிச்சையான இந்த முடிவு வருத்தமளிக்கும் விஷயமாகும்! என்னதான் நாம் பல ரசனைகளை கடந்து வந்தாலும் துப்பறியும் ஹீரோக்களுக்கு உள்ள கெத்து அசாத்தியமானது! தரமான தாள்களில், கறுப்பு மற்றும் வெள்ளையில் இவர்களின் சாகசங்களை வெளிட்டால், இப்போது உள்ள ஹீரோக்களுக்கு சளைத்தவர்களில்லை என்பதை உணரமுடியும். நமது காமிக்ஸ் வளர்வதுக்கு உறுதுணையாக இருந்த இந்த ஹீரோக்களுக்கு தாங்கள் அளிக்கும் சிறப்பு இதுதானா? மேலே வந்தபின் ஏறிவந்த ஏணியை உதைப்பது நியாயமா?
    இன்னும் மாயாவி மற்றும் spider - ரை ரசிக்கும் எங்களுக்கு இவர்கள் மட்டும் விதிவிலக்கா? வரவிருக்கும் 'லார்கோ' வண்ணத்தில் வந்தாலும் எந்த அளவிற்கு ஈர்க்கும் என்பதை பொருத்துதிருந்துதான் பார்க்க வேண்டும்...? எனவே old is gold டை நாங்கள் இழக்க விரும்பவில்லை....!
    சுருக்கமாக சொல்வதென்றால் - கறுப்பு வெள்ளைக்கு அழிவில்லை, துப்பறியும் ஹீரோக்களுக்கு சாவில்லை?

    ReplyDelete
  28. ok .aanaal lionmuthu blogspotukku eppadi adippadhu

    ReplyDelete
    Replies
    1. அங்கே type செய்ததை இங்கே copy+paste செய்திடவும்! :)

      Delete
  29. Hello fans,

    Can anybody give the original English titles of the following:
    வைரஸ் X" ; மடாலய மர்மம்", "பனித்தீவின் தேவதைகள்", "ஒரு பனிமலைப் பயங்கரம் " ; "சிலந்திவலையில் காரிகன்;

    Rip Kirby:
    "ரோஜா மாளிகை ரகசியம்".."புதையல் வேட்டை"

    Thanks in advance
    RK

    ReplyDelete
  30. very nice....thanks.

    Senthil

    ReplyDelete
  31. வேதாளர் கதைகளை தயவு செய்து வெளியிடலாமே டபுள் கலரில் .அதே போல ச்பிதர் கதைகளையும் கொலை படை போல டபுள் கலரில் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் வெளியிடலாமே .டபுள் கலர் அட்டகசமயிருக்கும்.நண்பர்களே உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்களேன் .கோயம்புதூரிளிருந்து ஸ்டீல் க்ளா

    ReplyDelete
  32. நன்றி கார்த்திக்

    ReplyDelete
  33. கறுப்பு - வெள்ளை கதாநாயகர்களை ஒதுக்கிவைக்க ஆசிரியர் முடிவெடுப்பதற்கு மோசடித் தனமான - கறுப்பு வெள்ளை காமிக்ஸ்களை ஸ்கான் செய்து - வர்ணத்தில் அச்சடித்து விற்கும் திருட்டுக் கும்பலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    எனவே, உடனடியாக இத்தகைய திருட்டுக் கும்பல்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து - எமது கறுப்பு வெள்ளை கதாநாயகர்களைக் காப்பாற்றும் பணி எங்கள் கைகளிலேயே இருக்கிறது. அதைவிடுத்து ஆசிரியரைக் கடிந்துகொள்வதில் பயனில்லை!

    நண்பர்களே!

    உங்களை இவ்வாறு மோசடிப் புத்தகங்களோடு தொடர்புகொண்டவர்களது பெயர் விபரம், மின்னஞ்சல், தொலைபேசி இலக்கம், முகவரி என எல்லா விபரங்களையும் பகிரங்கப்படுத்துங்கள்.

    இது எமது காமிக்ஸ்களின் உயிர் மூச்சைத் தக்கவைக்க உதவும்.

    மனிதருக்கு இரத்த தானம் செய்வதுபோல இது எமது காமிக்ஸ்களுக்கு நீங்கள் செய்யப்போகும் உயிர்க்கொடை.

    செய்வீர்களா?

    மோசடிக்கும்பல்களை விரட்டி ஒழிக்கும் எமது காமிக்ஸ் கதாநாயகர்களைவிடவும் உயர்ந்த கதாநாயகர்களாக உங்களுக்கு இது ஒரு முக்கிய கட்டம்.

    வாருங்கள்; வாருங்கள்!

    பகிரங்கப்படுத்துங்கள். மோசடிக்கும்பலை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க உதவுங்கள்.

    ANANDH.RS

    ReplyDelete
    Replies
    1. என்னப்பா நீ, தினமும் ஒர் ​பெயரில் வருகிறாய், எனக்கு ​தெறிந்த விஷயத்​தை ​சொல்கி​றேன் ​கேளும், நீ முன் ​வைக்கும் புத்தகங்க​ளை எல்லாம் எனக்கு ​தெறிந்து விஷ்வா ​வெளியிட்டது அல்ல, விஷ்வா நம்​மை ​போல் அதிக வி​​லைக்கு புத்தகங்க​ளை வாங்கும் ஒர் ​கைபா​வை.
      இப்​போழூது இ​தை ​பேசி என்ன பிர​யோஜனம், என்​னை எடுத்து ​கொள்ளுங்கள் நான் தினமும் ஒர் காமிக்ஸ் படிக்கும் பழக்கமுல்லவன், எனக்​கோ விஜயன் ஸார் ​வெளியிடும் புத்தகங்கள் பற்றுவதில்​லை, அவர் நாம் எதிர்பார்க்கும் புத்தகங்க​ளை கலரில் ​வெளியிடுவதும் இல்​லை, இதற்கு வடிகால்....

      மது​ரையிலிருந்து..

      Delete
    2. இதற்கு முழூ ​பொறுப்பும் விஜயன் ஸா​ரை தான் ​சேறும், ஏ​னென்றால் அவர்தான் நமக்கு காமிக்ஸை அறிமுகம் ​செய்துவிட்டு(அடி​மையாக்கிவிட்டு) பிறகு மிக நீண்ட............காலம் நமது பிரகாஸ் பப்ளிசர்ஸ் உறங்க ​சென்று விட்டது, இதனால் யா​ரை ​சொல்லி என்ன
      பி​ரை​யோஜனம்.

      மது​ரையிலிருந்து

      Delete
    3. மதுரைக் காரரே. நீர் யார் யாரிடம் இப்படி திருட்டுப் புத்தகங்களை வாங்கினீர் என்பதை வெளிப்படுத்தவேண்டும் என்பது எமது அனைவரதும் கோரிக்கை. Please?

      இங்கே நான் யாருடைய பெயரையும் குறிப்பிடாதபோது, நீர் ஒருவரை குறிப்பிட்டிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

      ANANDH.RS

      Delete
    4. ஆனந்த் அவர்களே இது நம்ம கையில் மட்டும்தான் இருக்கிறது என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் கண்டிப்பாக இது போன்று செய்திகள் மிகவும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவை. பார்ப்போம் நம் நண்பர்கள் நம் காமிக்ஸ் குடும்பத்திற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார்கள். தீயவை தவிர்க்கப்படும் நல்லதே வெல்லும். தங்களுக்கு என் வந்தனங்கள்

      Delete
    5. to: John Simon C

      "தீயவை தவிர்க்கப்படும் நல்லதே வெல்லும்"

      தங்களது பதிலுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. வெறும் பேச்சோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கி வேலை செய்வோம் வாருங்கள்!

      ANANDH.RS

      Delete
    6. கண்டிப்பா நண்பா
      தங்கள் நல் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!
      விஜயன் சார் என்றுமே வெற்றி அடையணும் அது நமது வெற்றி நண்பர்களே!

      Delete
    7. இப்படி களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று கடைசியாக சொன்னது யார் என்று நினைத்து பார்த்தால் காமெடியாக இருக்கிறது.

      அதே சமயம் இன்று ஆனந்த் என்ற பெயரில் கமென்ட் போட்டு இருப்பவர் யார் என்பது ஒரு சந்தேகக் குறியாகிவிட்டது.

      //மதுரைக் காரரே. நீர் யார் யாரிடம் இப்படி திருட்டுப் புத்தகங்களை வாங்கினீர் என்பதை வெளிப்படுத்தவேண்டும் என்பது எமது அனைவரதும் கோரிக்கை. Please?
      இங்கே நான் யாருடைய பெயரையும் குறிப்பிடாதபோது, நீர் ஒருவரை குறிப்பிட்டிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. //

      இவ்வளவு கேள்வி கேட்கும் ஆனந்த் தன்னைப்பற்றி எதுவுமே சொல்லாதது ஏனாம்? ஆனந்த் என்ற பெயரில் இங்கே வந்து முடிந்து போன விஷயத்தில் அரசியல் செய்வது யார்?

      களத்தில் இறங்கி காமிக்ஸ் வேலை செய்யப்போகும் ஆனந்த் தன்னுடைய மெயில் ஐடியை கூட வெளியிடமுடியாமல் இருப்பது ஏன்?

      கடந்த பல வருடங்களாக காமிக்ஸ் தளங்களில் பல காமிக்ஸ் ரசிகர்கள் இயங்கி வந்தாலும் அவர்களில் இந்த பெங்களூரில் இருந்துக்கொண்டு விருதுநகர் ஷங்கர் என்ற பெயரில் ஒரு நாளைப்போல எடிட்டரின் தளத்திற்கு மதியம் இரண்டு மணி முதல் இரண்டரை மணிக்குள் வந்து கமென்ட் போடும் ஆளையோ, அல்லது இந்த சோ கால்ட் ஆனந்தையோ வாசகர்கள் யாருக்குமே அடையாளம் தெரியாதது ஏன்? ஏனென்றால் அப்படி யாருமே இல்லை என்பதால்தான்.

      இங்கே என்னுடைய பெயரையும் மெயில் ஐடியையும் வெளியிட ஆசைதான். ஆனால் அதனால் ஸ்பாம் மெயில் அனுப்புபவர்கள் எண்ணிக்கையில் மற்றுமொரு மெயில் ஐடி கூடும்,அவ்வளவே. மற்றபடி லயன் காமிக்ஸ் ஆபீசில் போன் செய்து புத்தக கண்காட்சியில் முதல் சந்தா கட்டியது யார் என்று கேட்டால் எடிட்டருக்கும், மற்ற ஊழியர்களுக்கும் என்னை தெரியும்.

      Delete
  34. @Vijayan,
    I had placed two comments to this post yesterday? Perhaps you need to approve them to be published?

    ReplyDelete
  35. Vijayan Sir

    Till today I have not received thalai vangi kurangu comic..when it will be sent? I am in chennai.

    Thanks

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நாட்களுக்கு முன் போன் செய்து கேட்டபோது,இன்னும் 10 நாட்களில் மீதமுள்ள அனைவருக்கும் புத்தகம் அனுப்பப்படும் என்று சொன்னார்கள். இடையில் இரண்டு நாட்கள் திருவிழா விடுமுறை வருவதால் இந்தத் தாமதம்.

      Delete
    2. Srini V : உங்கள் சந்தா எண்ணை மட்டும் குறிப்பிட்டு அருள் கூர்ந்து ஒரு ஈ-மெயில் அனுப்புங்களேன்...தலைவாங்கிக் குரங்கு அனைவருக்கும் அனுப்பி முடித்து விட்டோம் !

      பின்னோக்கி : நிச்சயம் உங்களுக்கு சொல்லப்பட்ட தகவல் தவறே..! தலைவாங்கிக் குரங்கு & டாக்டர் 7 - இரு இதழ்களுமே அனைத்து சந்தாக்களுக்கும் அனுப்பி விட்டோம்.

      நமது அலுவலகத்திற்கு தொலைபேசியில் அழைக்கும் பட்சத்தில் - Mr .ராதாக்ருஷ்ணன் அல்லது Ms ஸ்டெல்லா மேரி ஆகிய இருவரிடம் மட்டுமே இது பற்றிக் கேட்டிடக் கோருகிறேன். அலுவல் நேரங்கள் : காலை 9 :30 - மதியம் 1 :30 & 2 -45 முதல் மாலை 7 வரை ! இதர நேரங்களில் நமது அச்சகப் பிரிவில் பணியாற்றும் நபர்கள் போன் எடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சரியான தகவல்கள் தெரிந்திருக்காது.

      உங்களின் சந்தா எண்ணைக் குறிப்பிட்டு அனுப்பினால்..இன்றே கூரியர் மூலம் உங்கள் இதழை அனுப்பிடுகிறோம். எங்களது திருவிழா விடுமுறைகளினால் despatch பணிகள் பாதிக்கக் கூடாதென்பதில் கவனமாய் இருக்கிறோம்.உங்களுக்கு ஏற்பட்ட சிரமம் இன்னொரு முறை நிகழாது பார்த்துக் கொள்ளுவோம் !

      Delete
    3. விஜயன் சார்,

      எனக்கும் இன்னும் தலைவாங்கி குரங்கு வரவில்லை. நேற்று உங்கள் அலுவலகத்துக்கு போன் செய்து கேட்டேன், திரு ராதாகிருஷ்ணன் பேசினார், திங்கள்வரை wait பன்னசொன்னார்

      Delete
    4. P.Karthikeyan : இடையில் இரு தினங்கள் அரசு விடுமுறை என்பதால்..தபால் துறை விடுமுறைகளால் தான் இந்த தாமதம் !

      Delete
    5. நன்றி சார். உடனடியாக எனது சந்தா மற்றும் அட்ரஸ் விபரங்களை ஈ-மெயிலி உடனடியாக அனுப்புகிறேன்.

      Delete
  36. Dear Sir,

    Don't give retirement to மாயாவி, லாரென்ஸ் & டேவிட், ஜானி நீரோ, காரிகன், ஜானி ஹசார்ட். We need them. We always love them. At-least we need them in reprint books.

    I got சாத்தானின் தூதன் DR . 7. I like the book very much. (http://soundarss.blogspot.in/2012/04/dr-7.html)

    ReplyDelete
  37. இது யாரப்பா புது ​பெயரில், ​கை கால் ஒன்றும் புரியவில்​லை.

    ReplyDelete
  38. பெயரே இல்லாமல் வரும் நபர்களுக்குள் புது பெயரில் வருபவர் பரவாயில்லை தானே?

    Giri

    ReplyDelete
  39. //VijayanApr 5, 2012 09:54 AM
    Shankar,Virudhunagar : விஷ்வாவும், ஒலக காமிக்ஸ் ரசிகனும் ஒருவரே என்று உங்களுக்கு ஏன் சந்தேகமென்று எனக்குப் புரியவில்லை!இருவரையும் நான் சந்தித்து உள்ளேன்! நன்கு அறிவேன் !

    பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், தயை கூர்ந்து அடிப்படை மரியாதையில் compromise செய்திட வேண்டாமே !! இது நான் எழுதி வரும் தளம் என்பதால், இங்கு நடந்திடும் நல்லது, கெட்டதுகளுக்கும் நான் பொருப்பேற்றிடுவது தான் முறையாக இருக்கும் !

    முறையற்ற வார்த்தைகளுக்காக உங்கள் சார்பில் விஷ்வா & ஒ.கா.ர விடம் நான் மன்னிப்புக் கோருகிறேன் !//

    ஆசிரியர் விளக்கம் அளித்தபிறகும் சில பேர் இதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. ஆதாரம் இல்லாமல் ஏன் "விஸ்வா" என்ற தனிமனிதர் மீது குறிவைக்கிறார்கள் என்றும் புரியவில்லை. மேலும் விஷ்வா அப்படிப்பட்டவர் இல்லை என்று நான் தனிப்பட்டமுறையில் நம்புகிறேன்.

    நண்பர்களே, சிங்கம் சிலகாலம் சோம்பலாக இருந்ததால்தான் இந்த பிரச்சனையே. இப்போதுதான் சிலிர்த்து எழுந்துவிட்டது அல்லவா, இனிமேல் கயவர்களின் பருப்பு வேகாது என்று முழுக்க முழுக்க நம்பலாம். மற்றபடி தவறு செய்தவர்களை ஆண்டவன் பார்த்துகொள்வான் என்று விட்டுவிடலாமே.

    ReplyDelete
    Replies
    1. to: P.Karthikeyan

      அப்படி விட்டுவிடுவது மேலும் இப்படியான அநியாயங்கள் நடக்க வாய்ப்புக் கொடுத்துவிடும்.

      அதுமட்டுமல்லாமல், அப்படி விட்டுவிடுவதால் நாமும் தொடரப்போகும் அநியாயங்களுக்கு உடந்தை என்றும் ஆகிவிடாதா நண்பரே?

      (ஆனால், ஆதாரமில்லாமல் தனிப்பட சிலர்மேல் தாக்குதல் நடத்தப்படுவதை நானும் வன்மையாக கண்டிக்கிறேன்.

      யாரிடமாவது இப்படி 'இல்லீகல்' காப்பிகளை நண்பர்கள் வாங்கியிருந்தால் அப்படி விற்றவர்கள், இன்னும் விற்றுக்கொண்டிருப்பவர்கள் பற்றி ஆதாரத்தோடு குறிப்பிடுவதே சரியானது.

      தனிப்பட்ட விரோதங்களால் சில நண்பர்களைக் காயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது!

      இதில், ஆசிரியருக்கு நன்கு பரிச்சயமான விஸ்வா, ஒ.கா.ர போன்றவர்களும் களத்தில் இறங்கி வேலைசெய்யவேண்டும் என்பதே எமது கோரிக்கை!!).

      ANANDH.RS

      Delete
    2. //ஆதாரம் இல்லாமல் ஏன் "விஸ்வா" என்ற தனிமனிதர் மீது குறிவைக்கிறார்கள் என்றும் புரியவில்லை. மேலும் விஷ்வா அப்படிப்பட்டவர் இல்லை என்று நான் தனிப்பட்டமுறையில் நம்புகிறேன். // JALRA SATHAM THANGA MUDIYALA

      Delete
  40. என்ன நடக்குது இங்கே. எடிட்டர் சார், தயவு செய்து பின்னூட்ட செட்டிங் ல் அனானிமஸ் கமெண்ட்ஸ் இடும் முறையை மாற்றி மின்னஞ்சல் முகவரியுடன் மட்டுமே பின்னூட்டம் இடுமாறு மாற்றி விடுங்கள்.

    hope that may solve unwanted issues creating in this blog.

    ReplyDelete
  41. விஜயன் சார் அவர்களுக்கு,

    Rip கிர்பி மற்றும் காரிகன் இருவரும் எனக்கு மட்டும் அல்லாது பல ஆயிரகணக்கான வாசகர்களுக்கும் பிரியமான நாயகர்கள். அவர்களுக்கு நிரந்தர விடுமுறை மற்றும் நீளமான விடுமுறை என்று சொல்வது காமிக்ஸ்-க்கு நிரந்தர விடுமுறை மற்றும் நீளமான விடுமுறை என்று சொல்வது போல் தான்! வேண்டாம் இந்த விபரீத முடிவு!

    நன்றி!

    இப்படிக்கு
    இல. பூபதி

    ReplyDelete
  42. நண்பர்களே கிங் இதற்கு விளக்கம் சொல்வார்.
    தாங்கள் கோபம் கொள்வதில் பயனில்லை என்ற காரணத்தால்தான் நான் எதுவும் சொல்லாமல் இருந்தேன் நல்லவங்களுக்கு சோதனை சில நல்லவர்களின் தவறான புரிதல்களால் வரலாம் அல்லவா?
    பொறுமை ப்ளீஸ் ஆனால் இவ்வளவு அழகாக கோபத்தை வெளிப்படுத்தும் உங்களின் காமிக்ஸ் காதல் எங்களை மிகவும் மகிழ்ச்சிபடுத்துகிறது.
    கிங் விஸ்வா அவர்கள் மக்கள் தொலைகாட்சியில் பணியில் உள்ளார் எனவே இது போன்ற தவறுகளுக்கு எப்போதும் கை கொடுக்க மாட்டார் என இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.
    சிங்கம் தன் ராஜபாட்டையில் நடை பயில கிங் முயற்சிகள் தங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. நான் புத்தக கண்காட்சியில் கண் கூடாக கண்டேன் நண்பர்களே. அவரது தமிழ் காமிக்ஸ் உலகம் ப்ளாக்கினை தயவு செய்து ஒரு முறை பார்த்து விட்டு வரவும். என்றும் அதே அன்புடன் ஜானி

    ReplyDelete
  43. very nice....thanks vijayan

    Senthil

    ReplyDelete
  44. Hello fans,

    Can anybody give the original English titles of the following:
    வைரஸ் X" ; மடாலய மர்மம்", "பனித்தீவின் தேவதைகள்", "ஒரு பனிமலைப் பயங்கரம் " ; "சிலந்திவலையில் காரிகன்;

    Rip Kirby:
    "ரோஜா மாளிகை ரகசியம்".."புதையல் வேட்டை"

    Thanks in advance
    RK

    ReplyDelete
  45. // திங்கள் & செவ்வாய் கிழமைகள் கோவில் திருவிழாவை முன்னிட்டு முழு விடுமுறைகள் என்பதால், அவ்விரு நாட்களும் நமது அலுவலகமும் மூடப்பட்டிருக்கும். So உங்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு அவ்விரு நாட்களும் பதில் தந்திட இயலாது ! //

    சூப்பர் விஜயன் சார்
    .

    ReplyDelete
  46. ஹலோ விஜயன் சார்.நான் உங்கள் நீண்ட கால வாசகன்.என் பெயர் சோமசுந்தரம்.ஈரோடு அருகில் உள்ள பள்ளிபாளையம் என் ஊர். செயின்ட் சாட்டான் என்ற பெயரில் உங்கள் வலை தலத்தில் இனி அடிக்கடி எழுதுவேன்.எனக்கு தமிழில் டைப் அடிக்க கற்று தந்த கார்த்திக் அவர்களுக்கு ஆயிரம் மெகா வாட் நன்றி. எனக்கு இன்னும் தலை வாங்கி குரங்கு வரவில்லை.மறுபதிப்பு கதைகளில் பழைய லக்கி லுக்,சிக்பில்,டெக்ஸ்,ரிப்போர்ட்டர் ஜானி போன்றவர்களின் ஆரம்ப கால கதைகளை வெளியிடுங்கள்.உங்கள் மறதி வியாதிக்கு பலியான கோட் நேம் மின்னல் மற்றும் சைனா மேனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ReplyDelete
    Replies
    1. saint satan,

      இந்தத் தளத்திற்கு நீங்கள் புதியவர் என்பது உங்கள் பின்னூட்டத்திலேயே தெரிகிறது.

      இந்த வலைப்பூவிலுள்ள ஆசிரியரின் பதிவுகளையும் நண்பர்களது கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பின்னூட்டப் பதில்களையும் தயவுசெய்து முழுமையாகப் பொறுமையாகப் படித்துப் பாருங்கள். அதன்பின்னர் உங்கள் பின்னூட்டங்களை இடுங்கள். நீங்கள் இப்பொழுது குறிப்பிட்டிருக்கும், இனி குறிப்பிடப்போகும் பல விடயங்களுக்கு ஆசிரியர் முதலிலேயே தெளிவாக - விரிவாகப் பதில் எழுதியிருக்கிறார் இந்தத் தளத்திலேயே!

      வார்த்தைப் பிரயோகங்கள் மற்றவரைக் காயப்படுத்தும்படி இருப்பது நல்லதல்ல. அதிலும் நமது மரியாதைக்குரிய ஆசிரியரை!

      உதாரணத்துக்கு இந்த இணைப்பைப் பாருங்கள்: கோட் நேம் மின்னல், Chinaman (பின்னூட்டங்களையும் வாசிக்கவும்): http://lion-muthucomics.blogspot.com/2012/01/blog-post_3554.html

      -Theeban (SL)

      Delete
    2. தீபன்(SL): எனது பணியினை சுலபமாக்கி விட்டீர்கள் ! நன்றிகள் !!

      Delete
  47. டியர் தீபன் .மறதி என்பது யாரையும் காயப்படுத்தும் சொல் அல்ல.எனினும் உங்கள் அறிவுரைக்கு தலை வணங்குகிறேன்.எங்கள் ஏரியா லொள்ளை மற்ற பகுதி மக்கள் பெரிதும் ரசிப்பார்கள் என்பது உலகறிந்த விஷயம்.சுமார் முப்பது ஆண்டு முத்து,லயன் வாசகன் நான்.மரியாதைக்குரிய எடிட்டர் அவர்களை கலாய்க்கும் உரிமையும் ,வயதும் எனக்கு உண்டு.அவரை அவமதிக்கும் எண்ணம் துளி அளவும் எனக்கு இல்லை.நமது லயன் வாசகர்கள் அனைவரோடும் நல்ல நட்பு கொள்ள விரும்புகிறேன்.உங்கள் நாட்டில் அனைவரும் நலமோடும் வளமோடும் வாழ பிரார்த்திக்கிறேன்.இப்படிக்கு புனித சாத்தான்

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் saint satan.

      அது கோபத்தால் நானிட்ட பின்னூட்டமில்லை. முழுமையாகப் பதிவுகளைப் படிக்காமல் முன்னரே பல தடவைகள் ஆசிரியர் விளக்கமளித்திருந்த விடயங்கள் பற்றி நீங்கள் பிரஸ்தாபித்திருந்ததால் எழுந்த ஆதங்கத்தில் எழுதியதே!

      திரைப்படம் ஒன்று ஆரம்பித்து அரைமணி நேரம் போனபின்னர் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பியுங்கள் என்று யாராவது வந்து நின்றால்.. "ஸ்ஸ்..ஸப்பா.." என்று இருக்குமே, அதுதான். மற்றப்படி உங்களது நகைச்சுவை எழுத்தைக் குறைசொல்லும் எண்ணமோ, அருகதையோ எனக்கு இல்லை.

      எங்கள் மக்கள் பற்றிய உங்களது எண்ணங்களுக்கு மிக்க நன்றி. மரத்துப்போயிருக்கும் மனங்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து சிறிதளவேனும் மருந்து தடவ முயன்றுகொண்டிருக்கிறோம். உங்கள் அனைவரதும் ஆதரவு எமக்குத் தேவை. நன்றி.

      -Theeban (SL)

      Delete
  48. விஜயன் சார், இது உங்களுக்கான ஸ்பெஷல் பதிவு! : சிலம்பமாடும் சிந்தனைகள்!

    ReplyDelete
    Replies
    1. பி.கு.: மேற்கண்ட பதிவில் வாசகர் பங்கேற்ப்பும் அவசியம் :)

      Delete
  49. சாத்தானின் சிந்தனைகள் . நமது காமிக்ஸ்களை விகடன் ,குமுதம் போன்ற வெகுஜன பத்திரிக்கைகளில் ஒரு சிறிய அளவேனும் விளம்பரம் வெளியிட்டால் என்ன ?லார்கோ வின்ச் தொடர்களுக்காவது இந்த விளம்பரங்கள் வெளியிடலாமே .

    ReplyDelete
  50. ஆவ​ரெல் டால்டன் -" நான் ஆனந்துடன ​சேர்ந்து, களத்தில் இறங்கி ​வே​​​லை ​செய்ய ​போகி​றேன், வாரம் இரண்டு டாலர் ​பேரம், எனக்கு ​​ஜெயிலுக்கு ​போவது வருவது ​போர் அடித்து விட்டது, நான் நல்லவனா மாரப்​போகி​றேன்.

    ​​​ஜோ டால்டன் -" அ​டேய் ஆவ​ரெல் ராஸ்கல்*@##$ - நம் மம்மா ​சொன்னது மறந்து விட்டதா, இந்த ஆனந்த் பயலுடன் ​சேரக்கூடாது என்று ​சொன்னது, நம் குடும்ப மறுவாதி என்ன ஆவது.

    வில்லியம் டால்டன் -" அ​மைதி ​ஜோ, அ​மைதி ​ஜோ "

    ரின் டின் ​​கேன்- இந்த அனந்த் மாமா ​ரொம்ப நல்லவரா ​தெரிகிறார், இவ​ரைதான் இத்த​னை வருடங்களாக ​தேடி ​கொண்டிருந்​தேன்.

    ஜாலி ஜம்பர்- //எனவே, உடனடியாக இத்தகைய திருட்டுக் கும்பல்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து - எமது கறுப்பு வெள்ளை கதாநாயகர்களைக் காப்பாற்றும் பணி எங்கள் கைகளிலேயே இருக்கிறது. அதைவிடுத்து ஆசிரியரைக் கடிந்துகொள்வதில் பயனில்லை!// -என்ன​வோ அரசியல்வாதியின் ​தேர்தல் பிரச்சாரம் ​போல் உள்ளது.

    களாமிட்டி ​ஜேன் - நான் இருக்கும் ​பொழூது இந்த ஆனந்த பயல் ​ரொம்பத்தான பீலா விடுகிறான். ​​வாங்க நாம தனியா கூட்டு ​சேர்த்து களத்தில் இறங்கு​வோம்.

    பில்லி- ​இவ்வளவு நல்லவனா இருந்து என்​னை உசுப்​பேற்றி விட்டாய், உன்​னை ​போல் இவ்வளவு நல்லவ​னை நான் இந்த உலகத்தில் பார்த்தது இல்​லை.

    காது ​கேளாத ​​பெரியவர் - தம்பி ஆனந்த், நான் காசு ​கொடுத்து ரின் டின் ​கே​னை வாங்கி இருக்​கேன், பசிச்சதுனா ​காசு ​கொடுத்து ​ரொட்டி வாங்கி தின்னு.

    ​ஜெயிலர் - அனுமதி இல்லாமல் கலரில் காமிக்ஸ் தயாரிக்கும் திருட்டு பசங்களா வாங்க இங்​கே நி​றைய இடம் காலியாக உள்ளது.


    ​​பெளண்ட்டி ஹண்டர் - தம்பி ஆனந்த், அனுமதி இல்லாமல் கலரில் காமிக்ஸ் தயாரிக்கும் கும்ப​லை இரண்​டே நாளில் நான் பிடித்து தருகி​றேன், ​பயண ​செலவு, சம்பளத்துடன் சாப்பாடு, கிம்பளம் தனி சம்மதமா.

    ​​ஜெஸ்ஸி ​​ஜேம்ஸ் - நீ இப்படி தனியாக ​போராடுவதற்கு பதிலாக என்​னோடு களத்தில் ​சேர்ந்து ​கொள், ​​​தேட்​டையில் பாதி.

    சவப்​பெட்டி விற்பவர் - ஆஹா நமக்கு நல்ல ​தேட்​டை தான், நன்றாக சன்​டை ​போடுங்கள்.

    சலுான் சிப்பந்தி- நீ ​ரொம்ப நல்லவனா இருக்க உனக்கு இங்​கே இடமில்​லை, இது ​கெட்டவர்கள் புலங்குகிர இடம்.

    ஜட்ஜ் - அ​மைதி! அ​மைதி! ஆனந்தும், சங்கரும் ஒ​ரே ஆளா இல்​லை தனி தனி ஆளா, குற்றத்தின் மறுபக்கம் என்ன என்பது ​தெறியாதவ​ரை இந்த ச​பை ஒத்தி​வைக்கப்படுகிறது.


    மது​ரையிலிருந்து..

    ReplyDelete
  51. டியர் friends நம் குழாயடி சண்டையை நிறுத்திவிட்டு யார் அதிக சந்தா சேர்துவது என்று ஆரோக்ய போட்டி வைத்து கொள்வோமே .பிறகு காமிக்ஸ் குறித்து நம் சந்தேகங்களை எடிட்டர் இடம் கேட்பது மற்றும் காமிக்ஸ் தகவல்களை பகிர்ந்து கொள்வது என்று இந்த ப்ளாக் யை முன் எடு த்து செல்லலாமே!அதை விடுத்தது சந்தா கட்டினேன் புக் வரவில்லை போன்ற கேள்விகளை தவிர்க்கலாமே, அதை ph செய்து கேட்டால் சொல்லிவிடுவார்கள் . யோசிக்கலாமே friends .உங்களின் காமிக்ஸ் அனுபவங்களை தெரிந்து கொள்ள நான் ஆர்வமா உள்ளேன் .எனக்கு காமிக்ஸ் அனுபவம் நான் 5 ம் வகுப்பு படிக்கும்போது என் வீட்டுக்கு அருகில் ஒரு பாட்டி காமிக்ஸ் யை வாடகை க்கு விட்டார்கள் .அங்கேயே உட்கார்ந்து படித்தால் 10 காசு வீட்டுக்கு கொண்டு சென்றால் 25 காசு .அப்போது என்னுடைய pocketmoney daily 25 காசு மட்டுமே .so ,அங்கேயே உட்கார்ந்து 3 காமிக்ஸ் padithu 25 காசு கொடுப்பேன் .பிறகு வீடு மாறியது ,டியூஷன் சென்றது ,காமிக்ஸ் படிக்கும்போது பாட புத்தகம் படிக்காமல் காமிக்ஸ் படிக்கிறியா என்று அம்மா காமிக்ஸ் யை பிடுங்கி அடுப்பில் போட்டது என்று என் காமிக்ஸ் அனுபவம் முற்றுபுள்ளி ஆனது .பிறகு colleage படிக்கும்போது என் சீனியர் மூலமாக திரும்ப அறிமுகம் ஆனது .அதில் இருந்து என் பிரிய காமிக்ஸ் என்னிடம் இருந்து பிரியவில்லை .நடுவில் அது பிரிந்த போது ,மிகவும் feel செய்தேன்.இனி பிரியாது என்று நம்புகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. நல்லா சொன்னீங்க ஜி கண்டிப்பா எல்லாருக்கும் காமிக்ஸ் விதவிதமாக அறிமுகம் ஆகி இருக்கும் எனக்கு என் பாட்டனார் திரு அமிர்தன் அவர்கள் மற்றும் என் பாட்டியார் திருமதி தாயார் அம்மாள் அவர்கள் மூலமாக அப்பா அம்மா இருவரும் ராணுவ விஷயமாக என் தங்கைகளுடன் ஈராக் சென்று விட்டதால் அவர்கள் கையில் இருந்த என் நான்கு வயதில் இருந்து என் அமர்க்களம் தாங்காமல் ஒரு பொழுது போக்காக இருக்குமே என அறிமுகம் செய்து வைத்ததுதான் புத்தகங்கள் அவற்றில் அதிகம் என் ஊரில் கிடைத்த ராணி காமிக்ஸ், சிறுவர் மலர் போன்றவைதான் ஆனால் அருகில் இருக்கும் திருக்கோவிலூர் சினிமா பார்க்க போனால் அவர்களை எப்படியாவது கெஞ்சி வாங்கி விடுவேன் அதில் இன்று வரை கிடைக்காத danger diabolic than நினைவில் இருக்கு. கிடைக்காதது தானே அதிகம் மனதில் பதியும்? நேற்று பார்த்த காட்சி போல் இருக்கு ஜி. நண்பர் http://akotheeka.blogspot.in அவர்களோ http://browsecomics.blogspot.in அவர்களோ விளக்கமாக எழுதி இருந்த குறிப்பு மூலமாக ஆறுதல் அடைந்தேன் நன்றி நண்பர்களே!!

      Delete
  52. டியர் friends நம் குழாயடி சண்டையை நிறுத்திவிட்டு யார் அதிக சந்தா சேர்துவது என்று ஆரோக்ய போட்டி வைத்து கொள்வோமே .பிறகு காமிக்ஸ் குறித்து நம் சந்தேகங்களை எடிட்டர் இடம் கேட்பது மற்றும் காமிக்ஸ் தகவல்களை பகிர்ந்து கொள்வது என்று இந்த ப்ளாக் யை முன் எடு த்து செல்லலாமே!அதை விடுத்தது சந்தா கட்டினேன் புக் வரவில்லை போன்ற கேள்விகளை தவிர்க்கலாமே, அதை ph செய்து கேட்டால் சொல்லிவிடுவார்கள் . யோசிக்கலாமே friends .உங்களின் காமிக்ஸ் அனுபவங்களை தெரிந்து கொள்ள நான் ஆர்வமா உள்ளேன் .எனக்கு காமிக்ஸ் அனுபவம் நான் 5 ம் வகுப்பு படிக்கும்போது என் வீட்டுக்கு அருகில் ஒரு பாட்டி காமிக்ஸ் யை வாடகை க்கு விட்டார்கள் .அங்கேயே உட்கார்ந்து படித்தால் 10 காசு வீட்டுக்கு கொண்டு சென்றால் 25 காசு .அப்போது என்னுடைய pocketmoney daily 25 காசு மட்டுமே .so ,அங்கேயே உட்கார்ந்து 3 காமிக்ஸ் padithu 25 காசு கொடுப்பேன் .பிறகு வீடு மாறியது ,டியூஷன் சென்றது ,காமிக்ஸ் படிக்கும்போது பாட புத்தகம் படிக்காமல் காமிக்ஸ் படிக்கிறியா என்று அம்மா காமிக்ஸ் யை பிடுங்கி அடுப்பில் போட்டது என்று என் காமிக்ஸ் அனுபவம் முற்றுபுள்ளி ஆனது .பிறகு colleage படிக்கும்போது என் சீனியர் மூலமாக திரும்ப அறிமுகம் ஆனது .அதில் இருந்து என் பிரிய காமிக்ஸ் என்னிடம் இருந்து பிரியவில்லை .நடுவில் அது பிரிந்த போது ,மிகவும் feel செய்தேன்.இனி பிரியாது என்று நம்புகிறேன் .

    ReplyDelete
  53. டியர் editer சார் ,வாசகர்களின் கருத்துக்கு தாங்கள் மதிப்பு அளிப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது.சார் ஒரு small suggestion .வரும் 2013 சென்னை புக் fair ல் நம் பழைய நாயகர்களை உலவ விடலாமே !ரிப் கிர்பி 3 சாகசங்கள் rs 50 , madasty 3 சாகசங்கள் rs 50 ,மற்றும் காரிகன் சாகசம் என்று publish செய்யலாமே சார், யோசிக்கலாமே சார் ,கண்டிப்பாக நம் வாசகர்கள் தங்களை disoppoint செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன் .pls சார் .consider this .pl.

    ReplyDelete
  54. எனக்கு ஒரு சந்தேகம். சென்னை புக் fair இல் மட்டும் தான் நம் லயன் இடம்பெறுமா?மற்ற நகரங்களில் நடக்கும் புக் fair களிலும் இடம் பெறுமா?பதில் கூறுங்கள் எடிட்டர் சார்?

    ReplyDelete
  55. அன்பான நண்பர்களுக்கு,

    எத்தனையோ தடைகள், பிரச்சினைகள் ஊடாக நம் அபிமான லயனும் முத்துவும் மறு பிறப்பு எடுத்து வந்திருக்கும் இந்த தருணத்தில், நமக்கிடையே வீண் வாக்குவாதங்கள் வேண்டாமே....

    வேறுபட்ட கருத்துக்கள் ஆக்கத்துக்கு வழி வகுக்குமானால் வரவேற்கலாம், அதுவே நமக்குத் தடைக்கல்லாக இருக்குமென்றால் ஏன் நாம் அதற்குள் சிக்கித் திணற வேண்டும்....???!!!!

    புரிந்து கொள்வோம், புரிந்தே நடப்போம்.

    ----------------------------------------------------------------------------------------------------------------------

    புதியன புகுதலும், பழையன கழிதலும் காலத்தின் கட்டாயம் தானே - அந்த நியதிக்கு இயங்கி நானும் காரிகனையும் ரிப் கிர்பியையும் வழியனுப்புவதில் இணைந்து கொள்கிறேன்.

    சென்று வாருங்கள் நண்பர்களே...!!!!!!!!!

    ReplyDelete
  56. Dear Editor sir, My name is chezhianbabu from chennai. I send the amount for both tex willer and karigan books on two weeks before. But I did not get the books yet. Please arrange to send the books immediately

    ReplyDelete
  57. நான் பணம் அனுப்பி சுமார் 3 வாரங்கள் ஆகியும், இன்னும் டெக்ஸ் வில்லரின் தலை வாங்கி குரங்கு மற்றும் காரிகனின் டாக்டர் 7 ஆகிய புத்தகங்கள் வந்து சேரவில்லை.
    உடனடியாக ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்
    இவண்
    சு. செழியன் பாபு

    ReplyDelete
  58. Chezhian Babu : ALL remaining Subscription copies (inland & overseas) have been despatched on Saturday the 7th.April. Please wait for a day or two for the postal service to deliver them.

    ReplyDelete
  59. me the 100th vera onnum illai nanbargale ponathu 99

    ReplyDelete
  60. rip girby மிக சிறந்த துப்பறிவாளர் அவருக்கும் என் இனிய காரிகனுக்கும் இவ்வேளையில் நன்றிகளுடன் விடை கொடுக்கிறேன்

    ReplyDelete
  61. டியர் ஜான் danger diabolic பற்றி சொல்லி இருந்தீர்கள் .என்னிடம் இருந்ததை நண்பர் ஒருவர் படிக்க என்று லவுடிகின்னு போய்விட்டார் ,என்னிடம் மட்டுமல்ல என் dr friend இடம் கூட abase செய்து விட்டார் ,விசாரித்தால் italli காரங்க இந்த காமிக்ஸ் யை வாங்க போட்டி போடுகிறர்கலம்.நிசமா ?friends .(பத்த வச்சிட்டியே பரட்டை)................................................

    ReplyDelete
  62. Vijayan sir,

    I subscribed at the chennai book fair jan 2012. I have not been provided any subscriber number in that subscription form receipt I received at the stall.

    Till now, I have not received thalai vangi kurangu and doctor 7.pls lookinto it..the books should be sent based on the subscription date..is that being followed? Why am i required to follow up so many times to get my copy? I should get that automatically when a new issue is released..

    I have sent my address details to your email id..pls send the books at the earliest..

    ReplyDelete
  63. விஜயன் சார்&லயன்,முத்து காமிக்ஸ் குடும்பத்திற்கு, காமிக்ஸ் வாசகர்களுக்கு
    தமிழ் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  64. நம்ம காரிகனுக்கும் ரிப்புக்கும் எதோ என்னால முடிஞ்ச சேவை!
    http://johnsimon-johny.blogspot.in/2012/04/blog-post_19.html
    & http://johnsimon-johny.blogspot.in/2012/04/blog-post.html

    ReplyDelete
  65. இப்பொழுதெல்லாம் இந்த குழாயடி சண்டை இல்லையே என்று ஆனந்தப் படுவதா அல்லது அடுத்த பதிவுகளின் கமெண்ட் செக்ஷன் படிக்காமல் வெறும் பதிவு மட்டும் படித்தும் கமெண்ட் இடுவதா என்ற குழப்பத்தில் நான்

    ReplyDelete