Powered By Blogger

Friday, April 27, 2012

ஒரு விடையும்..வடையும் !!

அன்பர்களே ;  நண்பர்களே ; ஆண்டு மலருக்கு பெயர் சூட்ட முனைந்த ஆர்வலர்களே ; இரவெல்லாம் கண் முழித்து ஒவ்வொரு காமிக்ஸ் வலைப்பதிவாய் ரசித்து விட்டு பகலில் அலிபாபா குகை போல் வாய் திறந்து கொட்டாவி விடும் கோமான்களே.. !!


நீங்கள் எல்லோருமே ஆர்வமாய் (ஹாவ் ......) எதிர்பார்த்திட்ட வேளை வந்தே விட்டது !! Yes -  வடை தரும் நேரம் இது !!

வடை ஊசிப் போயிடாமல் இருக்க சிவகாசி ஆனந்த பவனில் சொல்லி வைத்திருந்ததால் - அவர்களும் ஐஸ்பெட்டியில் அதைத் தூக்கிப் பத்திரப் படுத்தியுள்ளதாகத் தகவல் ! So - தினமும் 'பொசுக் பொசுக்'கென போயிடும் மின்சாரத்தால் வடை ஊசிப் போயிருக்கக் கூடாதென்ற வேண்டுதலோடும் ; வெற்றி பெற்றிடும் நண்பர் விக்கோ வஜ்ரதந்தி உபயோகித்து வலுவான கடவாய்ப் பற்கள் கொண்டவராய் இருப்பாரென்ற நம்பிக்கையோடும் அடியேன் வடை தந்திடும் படலத்தைத் துவக்குகிறேன் !  பெரும் சிந்தனை பல செய்து ;தலைப்புகள் பல சூட்டிய அன்புள்ளங்கள் அனைத்துக்கும் முதலில் எனது நன்றிகள்! தினுசு தினுசாய் நிறைய பெயர்கள் suggest செய்யப் பட்டிருந்த போதிலும் நடுவர் குழு (!!!) பெருத்த ஆலோசனைக்குப் பின் கீழ்க்கண்ட தலைப்புகளை shortlist  செய்திட்டது ! 


 • கோடையில் ஒரு கலாட்டா - John Simon
 • லக்கி லயன் ஆண்டு மலர் - Radja
 • லக்கி லயன் ஸ்பெஷல் - Rafiq Raja ; Podiyan ; coimbatoorilirinthu sateel claw
 • லயன் 'நியூ லுக்' ஸ்பெஷல் - Saint Satan
 • லயன் 'Birthday' ஸ்பெஷல் - Saint Satan ; Venkat Denver 

பெயர்கள் பலவற்றை ஐந்தாக சுருக்கிய பின்னே தான் நிஜமான குழப்பம் துவங்கியது ! ஒவ்வொன்றாய் ஆராய்ந்து (!!) அவற்றின் நிறை குறைகளை அலசிட்டால் என்னவென்று தோன்றியது ! 

"லக்கி லயன் ஆண்டுமலர்"  & "லயன் லக்கி ஸ்பெஷல்" - இவ்விரு பெயர்களுமே அழகாய்...பொருத்தமாய் உள்ளன என்பதில் ஐயமே இல்லை ! ஆனால் "I want more emotions boss " என்ற கதை தான் ! இன்னும் கொஞ்சம் expressiveஆக..இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் இருந்தால் தேவலையே என்ற எண்ணம் தலைதூக்கியது ! So கனத்த இதயத்தோடு மேற்படி இரு பெயர்களையும் விலக்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது !! 

அடுத்தபடியாக Venkat (டென்வர்) & வடைப் பிரியர் புனித சாத்தான் தேர்வு செய்திருந்த "லயன் Birthday ஸ்பெஷல்" தேர்வுக்கு வந்தது ! ரத்தினச் சுருக்கமாய்...yet மிகப் பொருத்தமாய் தலைப்பு உள்ளதில் மிகுந்த சந்தோஷப்பட்டோம் ! பாதி வடையை அமெரிக்கா வரைக் கொண்டு போக சம்மதமாவென DHL கூரியரில் விசாரிக்க ஆள் அனுப்பிட நினைத்தேன் !அப்போது தான் நண்பர் ஜான் சைமன் அனுப்பிட்ட கடைசிப் பதிவு வந்து சேர்ந்து எங்களை பிரேக் போட வைத்தது ! 

கோடையில் ஒரு கலாட்டா " என்ற பெயர்சூட்டல் சச்சின் டெண்டுல்கரின் புது hairstyle  போல 'நச்' என்று இருப்பதாகப்பட்டது !!  சரி...லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக உள்ள இந்தப் பெயருக்கே வடை தந்திடலாமென்று முடிவு செய்திட்டு இறுதியாய் ஒரு முறை பட்டியலின் பெயர்களை வாசித்தேன் !! 

"கோடையில் ஒரு கலாட்டா" என்பது அழகாய் இருப்பினும் ஒரு கதையின் பெயர் போலத் தோணுதே என்று எண்ணம் தலை தூக்கியது ! அப்போது தான் புனித சாத்தான் அவர்களின் இன்னுமொரு தேர்வான "லயன் நியூ லுக் ஸ்பெஷல்" பளீரென்று ஒளி விடுவது புலனாயிற்று !! நமது புது அவதாரை விவரிப்பது போலவும்...ரெம்பவே cool & modern ஆகவும் இப்பெயர் உள்ளதென்று மனசுக்குப் பட்டது ! 

Guys...இது நண்பர் புனித சாத்தான் அல்ல !! 
'இது..இது..இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்' என்று நொடியில் தேர்வுக் குழு இந்தப் பெயரையே தேர்வு செய்து ஒரு மனதாய் முழு வடையினையும் நண்பர் புனித சாத்தான் அவர்களுக்கு வழங்கிடத் தீர்மானித்தது !!  Hoorayyy!! Three Cheers to Saint Satan !!! வெற்றி பெற்றிட்ட நம் நண்பருக்கு கூரியர் மூலம் ஒரு மசால் வடை இன்று அனுப்பி வைக்கப்படும் ! அவர் அந்த வடையை ரசித்து..ருசித்து சாப்பிடும் தருணத்தை காமெராவில் புடித்து அனுப்பினால்..அந்த அற்புதப் புகைப்படத்தை இங்கே வெளியிட நான் தயார் ! 

இப்படியாக வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த "வடை தரும் படலமும்" நமது ஆண்டுமலருக்குப் பெயர் சூடும் படலமும் இனிதே நிறைவு பெறுகின்றது!!   "லயன் நியூ லுக் ஸ்பெஷல்" - லக்கி லூக்கின் இரு அற்புதக் கதைகளுடன் வண்ணத்தில் ஜூலை 15 -ல் அழகாய் வந்திடும் ! "இது கள்ளாட்டை..!!.வடை வாங்க 'சம்திங்' கொடுத்து கரெக்ட் பண்ணிட்டாங்க"-ன்னு விசனப்படும் உள்ளங்களே... மனம் தளர வேண்டாம் ! விரைவிலேயே "பஜ்ஜிக்கு ஒரு போட்டி" நடத்தி உங்களை மெய்சிலிர்க்கச் செய்வேன் என்பது உறுதி !! See you soon everybody !! 
40 comments:

 1. வட போச்சி ....

  சொக்கா ... வட நமக்கில்ல ... நமக்கில்ல ... நமக்கில்ல ...

  ஐயோ .... சிவகாசி ஆனந்த பவன் வடயச்சே ...

  சொக்கா ... நமக்கில்ல ... வட நமக்கில்ல ... நமக்கில்ல ... நமக்கில்ல ...

  :)

  வாழ்த்துக்கள் நண்பர் செயின்ட் சாத்தான் அவர்களே .....


  போகட்டும் ... பஜ்ஜி வாங்க ட்ரை பண்ணுவோம்

  நாகராஜன்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் புனித சாத்தானுக்கு....
  நான் சொன்ன பெயர் எடிட்டரால் தேர்வு செய்யப்படாததால், இன்னும் இரண்டு காப்பிக்கு பணம் அனுப்பி என் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன் :)

  ReplyDelete
 3. புனித சாத்தான் என்று தமிழில் பெயர் வைத்துகொண்டு "லயன் நியூ லுக் ஸ்பெஷல்" என்ற ஆங்கில பெயரை ரெகமென்ட் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
  வட போச்சே....:)
  வயிர்ரெறிச்சல்ங்க வேறென்ன ...:-)

  நண்பர் புனித சாத்தான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. Cool! Congrats Satan!

  Vijayan Sir, don't forget to add the age:

  லயன் நியூ லுக் ஸ்பெஷல் - 28

  ReplyDelete
  Replies
  1. >>>வடை ஊசிப் போயிடாமல் இருக்க சிவகாசி ஆனந்த பவனில் சொல்லி வைத்திருந்ததால்<<<
   பரவாயில்லையே, எடிட்டர் என் வேண்டுகோளுகிணங்க A2B வடையையே அனுப்புறாரே! சாத்தான், பாதி வட எனக்கு - ஓகே?

   Delete
  2. போட்டோல இருக்குறவர் "சிவகாசி சிங்கங்கள்" IPL டீமின் 'தல'தானே!

   Delete
 5. அன்பின் விஜயன் சார்..

  //வடை ஊசிப் போயிடாமல் இருக்க சிவகாசி ஆனந்த பவனில் சொல்லி வைத்திருந்ததால் - அவர்களும் ஐஸ்பெட்டியில் அதைத் தூக்கிப் பத்திரப் படுத்தியுள்ளதாகத் தகவல் ! So - தினமும் 'பொசுக் பொசுக்'கென போயிடும் மின்சாரத்தால் வடை ஊசிப் போயிருக்கக் கூடாதென்ற வேண்டுதலோடும் ; வெற்றி பெற்றிடும் நண்பர் விக்கோ வஜ்ரதந்தி உபயோகித்து வலுவான கடவாய்ப் பற்கள் கொண்டவராய் இருப்பாரென்ற நம்பிக்கையோடும் அடியேன் வடை தந்திடும் படலத்தைத் துவக்குகிறேன் ! //

  இன்று வரைக்கும் லயனில் மிகவும் பிடித்தவற்றில் ஹாட்லைனும் அதில் நீங்கள் நேர்மையாகப் பதியும் straight from the heart ரீதியிலான விசயங்களும் முக்கியமானவை. எதற்காகவும் நீங்கள் அதை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்பதும் வலைத்தளங்களில் எழுதுகிறோம் என்பதற்காக நீங்கள் இறங்கி வந்து அடிக்கத் தேவையில்லை என்பதுவும் எனது தாழ்மையான கருத்து.

  ReplyDelete
  Replies
  1. எடிட்டர் பேச்சு தமிழில் எழுதுவது முதலில் என்னாலும் ஜீரணிக்க முடியவில்லைதான் - அப்பாலிக்கா பழகிருச்சு!

   -Karthik

   Delete
  2. சொல்லப்போனா, பேச்சு தமிழ்ல எழுதுறது எடிட்டருக்கு ஒண்ணும் புதுசு கிடையாது! லக்கி லூக், சிக் பில் மற்றும் வேற காமெடி கதைகள்ல அதத்தான பண்ணறாரு!
   - Karthik

   Delete
 6. நமக்கு இந்த வடை எல்லாம் வேண்டாம் எடிட்டர் சார், ஆனால் ஒரு சின்ன கருத்து..

  லயன் நியூ லுக் (லூக்) ஸ்பெஷல் என்று பெயரிட்டு வெளியிட்டால் என்ன? இது நமது லயனையும் லக்கி லூக்கையும் ஒரு சேர பெருமைப்படுத்தும் அல்லவா?

  நண்பர் புனித சாத்தான் கோவித்துக்கொள்ள (கொல்ல?!) வேண்டாம் :-)

  ReplyDelete
 7. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தங்கத் தமிழ் நாட்டில் ஒரு தமிழ் காமிக்ஸ் இதழுக்கு ஆங்கிலத்தில் பெயர் கொண்ட ஒருவர் ஆங்கில பெயரையே தலைப்பாக வைத்ததை வன்மையாக கண்டித்து இன்று முழுவதும் அலுவலகத்தில் வடை சாப்பிடும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்கிறேன். தமிழ் கூறும் நல்லுலக நண்பர்கள் இதனை ஆதரிக்க வேண்டுகிறேன்.

  அட்லீஸ்ட் அடுத்த பஜ்ஜி போட்டியில் எங்களுக்கு ஆறுதல் பரிசாவது கொடுக்க வைக்கவே இந்த மிரட்டல் ஆர்ப்பாட்டம். உடனடியாக இந்த போட்டியிலும் ஆறுதல் பரிசை எங்களுக்கு அளிக்க வில்லை என்றால் நாங்கள் வடை சாப்பிடுவதை போட்டோ எடுத்து இங்கே லிங்க் கொடுப்போம் என்றும் உறுதி அளிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. எமோஷன கொறைங்க ஒலக காமிக்ஸ் ரசிகரே.. அடுத்த தடவை நீங்க மட்டும்தான் தலைப்பு தேர்ந்தேடுக்கனும்னு விஜயன் சாரை ரூல் போட சொல்லி மொத்த வடை, பஜ்ஜியும் எடுத்துக்கோங்க :-)

   இப்போ, நீங்க சமாதானம் ஆகலன்னா, உங்களுக்காக "சிங்கத்தின் புதிய பார்வை சிறப்பு வெளியீடு" அப்படின்னு வெச்சுடுவோம். என்ன சொல்றிங்க? ;-)

   Delete
  2. New Look - புதிய தோற்றம்

   Delete
 8. எல்லாரையும் சமாதானபடுத்த ஆசிரியர் ஒன்னு செய்யலாம், புத்தக அட்டைல 'லயன் ஆண்டுமலர் 2012 ' , அப்படின்னு பொதுவா ஒரு பெயர் வச்சுட்டு , blank space கொஞ்சம் விட்டுட்டு 'உங்களுக்கு பிடிச்சமான டைட்டில்' கலர் pen வச்சு எழுதிக்கங்கனு சொல்லிடலாம். அப்படியே எல்லாருக்கும் புத்தகத்தோட ஒரு வட இலவச இணைப்பா கொடுத்துடலாம் ...எப்புடி ...:-)

  ReplyDelete
 9. விஜயன் சார்,

  நீங்கள் தேர்ந்து எடுத்த தலைப்பு "லயன் நியூ லுக் ஸ்பெஷல்" நன்றாக உள்ளது. புனித சாத்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. இவ்வளோ தூரம் முன்னேறி இருக்கேனா? மிக்க நன்றி தலைவரே! தங்கள் சித்தம் என் பாக்கியம்!
  நன்றிகளுடன் மற்றும் தோழருக்கு வாழ்த்துக்களுடன் - ஜானி. டைம் எடுத்து சிந்தித்து கொடுத்த தலைப்பு சாரே அது (வேறென்ன பீலிங்க்ஸ் தான்)

  ReplyDelete
 11. உங்க காமெடியான எழுத்து நடை மிக சூப்பர் அப்படியே கலக்குங்கள் ஜி!

  ReplyDelete
 12. முழு வடையும் எனக்கே அளித்த எடிட்டருக்கு புனித சாத்தானின் மில்லியன் டாலர் நன்றிகள்.வாழ்த்து சொன்ன அனைவருக்கும் வடையை பறி கொடுத்த நண்பர் ஜான் சீமோன்,radja ,ரபிக் ராஜா,பொடியன்,ஸ்டீல் க்லா,மற்றும் வெங்கட் ஆகிய நண்பர்களுக்கும் புனித சாத்தானின் வந்தனங்கள்.இந்த ப்ளாக்கின் புது வரவான எனக்கு நீங்கள் அளித்த ஆதரவு என்னை நெகிழ வைக்கிறது.தமிழில் ஏன் பெயர் வைக்கவில்லை என்போருக்கு என் பதில் லயன் காமிக்ஸ் என்பதே தமிழ் பெயரில்லையே?ஒ.கே.நண்பர்களே.அடுத்த தடவை பஜ்ஜி சாப்பிட போகும் எனக்கு இப்போதே அட்வான்சாக வாழ்த்து சொல்லிவிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வேண்டா வெறுப்பாய் வாழ்த்துகிறேன் நண்பரே !

   நன்றி விஜயன் சார் ஸ்பைடரிடமிருந்து

   Delete
  2. அந்த வடையை என்னிடம் கொடுத்தால் எண்ணையை பிழிந்து தருவேன் .

   அட போங்கப்பா மன்னருக்கே பிடித்துவிட்டது

   Delete
 13. வடை போச்சே! அடுத்து பஜ்ஜியா…? அட போங்கப்பா! ஒண்ணும் வேண்டாம்… கூடிய சீக்கிரம் லயன் ஆண்டு மலர் வந்தா போதும்… பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் வீட்டுக்காரம்மா கிட்ட செய்யச் சொல்லி சாப்பிட்டுக்கிறேன்.

  ReplyDelete
 14. இப்படி தனியா பொலம்ப விட்டுட்டாரே.

  கத்தி கத்தி வடையும் போச்சு .பஜ்ஜியும் போக போகுது

  எனக்கில்ல

  ReplyDelete
 15. பந்தயத்துல கலந்துகுவாநேன்...... பின்னாண்டி வடைய காக்கா தூக்கிட்டு பூடுசின்னு பொலம்புவாநேன்......நாங்க எல்லாம் ( போட்டி புறக்கணிப்பு சங்கத்தார் ) எப்பவுமே ஸ்டடியாதான் நிப்போம் . . ஹி .... ஹி,, ஹி,,,,
  சீ சீ .... இந்தவடை ஊசி போச்சு ( வேற என்னத்த சொல்லி புலம்பறது ....)
  வாழ்த்துக்கள் சாத்தான் .......
  பின் குறிப்பு : பாட்டி வடையை எந்த கொரியரில் அனுப்புராங்கனு தெரிஞ்சா சொலுங்க ... 50 % பங்கு தரேன்

  ReplyDelete
 16. "Lion New Look Special" Wow... Good creative sense.
  Even I too tried to give a title like "Dynamic 28 special" but i was thinking and thinking to get a aesthetic title and lost this vada.

  The selected title has 3in1 aesthetic senses, 1) LION SPECIAL (Annual Issue) 2) 2)NEW trendy Lion's avatar 3)lucky LOOK(LUKE)

  Nice Selection...
  "வேண்டா வெறுப்பாய் ஒத்து கொள்கிறேன் Saint satan!" (Courtesy: Neethikaavalan Spider, Lion Issue No:28 (My first comics experience))

  ReplyDelete
 17. தேர்வுக் குழுவில் இடம்பெற்ற நடிகை த்ரிஷா நான் வழங்கிட்ட தலைப்புக்களை பாசத்துடனும் நேசத்துடனும் கண்களில் நிஜமான கண்ணீருடனும் ஆதரித்து போராடிட்ட போதும் அதை ஏற்க மறுத்த ஏனைய இரக்கமற்ற கல்நெஞ்சக்கார தேர்வுக் குழு அங்கத்தினர்க்கு பெண் பாவம் பொல்லாதது என்பதைக் கூறிக் கொண்டு... போட்டியில் வடை பெற்ற ஜெய்ண்ட் ஜெய்த்தான் அவர்களிற்கு என் கண்ணீர் பொக்கேயை அன்பளிப்பாக்குகிறேன்......

  என்ன அவெஞ்சர்ஸ் பெரிய அவெஞ்சர்ஸ்..... மே மாதம் வர்றாங்க த டமில் அவெஞ்சர்ஸ்... மாயாவி ஸ்பைடர் ஆர்ச்சி..... இது பிரபஞ்ச யனனத்தின் ஒரு கண அனுபவம்......

  ReplyDelete
 18. செம்ம போஸ்ட். நல்ல தலைப்பு தேர்வு. பாதி வடயாவது இங்க டென்வர் வரும்னு பாத்தேன் :) சரி பரவாயில்ல. சாத்தான் சார் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. For the people all worried about the english name for birthday special: first our comics name is in english : Lion, so no hard feelings guys. Vijayan sir, I like the way you write its not like reading it looks like listening. Keep the good work.

  ReplyDelete
 20. வடை அற்புதம் (டைட்டில்) ஆனால் ஆங்லிலத்தில் அதுதான் கொஞ்சம் சட்டினி இல்லாமல் வடை போல் தோன்றிகிறது.

  இருந்தாலும் சாத்தானுக்கு வாழ்த்துக்கள்.....விஜயன் நன்றி

  வண்ண புத்தகத்தை நான் மிக ஆவலுடன் எதிர் பார்கிறேன்.

  செந்தில்.

  ReplyDelete
 21. அடுத்த பஜ்ஜி போட்டிக்கு தலைப்பாக " காமிக்ஸிற்கு புதுவாசகர்களை அறிமுகபடுத்துவது எப்படி?" என்று கொடுத்து நமது காமிக்ஸ் வளர சிறப்பான ஆலோசனை தரும் வாசகர்களுக்கு கூடுதலாக ஒரு போண்டா கூட கொடுக்கலாம் . உதாரணத்திற்கு நமது கார்த்திக் தந்திருக்கும் ஆலோசனைகளை பாருங்கள் . எவ்வளவு ஆர்வம் இருந்தால் இப்படி ஒரு பதிவை போடுவர் ( இதை எவ்வளவு வாசகர்கள் படித்தார்கள் என்று தெரியவில்லை ) . ஆசிரியர் இதனை தயவுகூர்த்து படிக்கவும்
  http://www.bladepedia.com/2012/04/blog-post_08.html

  ReplyDelete
 22. தலிவா அப்பாலிகா எதாவது போட்டி வெச்சா, சிக்கன் பிரியாணி ரேஞ்சுக்கு வெய்ங்க.அப்பத்தான் ஒரு கிக் இருக்கும் .வடை எல்லாம் ஜுஜுபி மேட்டர் . அதனாலதான் நான் புனித ரத்த காட்டேரி க்கு சாரி சாரி ,புனித பேயே சாரி சாரி புனித சைத்தான் க்கு விட்டு கொடுத்து விட்டேன் .அப்புறம் என்னை face book ல் வாழ்த்திய அத்தனை காமடி பீசு களுக்கும் நன்றிங்கோ !

  ReplyDelete
 23. இ​டைப்பட்ட காலங்களில் நான் "​தொர்கள்"(​ரொஸன்ஸ்கி + வாண்ஹா​மே) என்ற உலகப்புகழ் ​பெற்ற காமிக் ​தொட​ரை படித்து முடித்து விட்​டேன். ஆசிரியர் லார்​கோ ​தொட​ரை ​வெளியிட்டு விட்டு ​​"தொர்க​ள்" என்கிற ​புது தொட​ரை ஆரம்பிக்கலாம். அதுவும் "ஆரீசீயா" என்கிற பாகத்தில் ​தொர்களின் வீரமும் ஆரீசீயாவின் சாதுர்யமும் நம்​மை எல்லாம் ​மெய்சிலிர்க்க ​வைக்கும். ​தொர்க​ள் நிச்சயமாக நம்​மை எல்லாம் கவருவார்.

  ReplyDelete
 24. நண்பர்களே விஸ்கி-சுஸ்கி யின் வணக்கம்!
  லயன் நியூ லுக் ஸ்பெஷல் என்ற ஒரு இனிப்பான செய்தியை வெளியிட்ட நமது எடிட்டருக்கு ஒரு ஒOO போடுவோம். இது ஒரு Fitting'ஆன தலைப்பு.

  ReplyDelete
 25. டியர் எடிட்டர் சார் ,புனித சாத்தானின் புகைப்படம் மிகவும் அருமை . அது அவர் இல்லை என்று நீங்கள் சொன்னாலும் நாங்கள் அதை நம்ப தயாராக இல்லை .எதாவது கிராபிக் வொர்க் செய்திங்களா? போடோவில் மிகவும் நன்றாக இருக்கிறார் .வடை போச்சே ? anyway congrates புனித சாத்தான், its just joke .dont serious about this .

  ReplyDelete
 26. டோன்ட் வொர்ரி டாக்டர் சார்.போட்டோவில் இருப்பது நானில்லை.ஒரு ஐய்ரோப்பியராக இருக்கலாம்.அல்லது ஒரு வடை (ஹிஹி .சாரி )வட இந்தியராக இருக்கலாம்.

  ReplyDelete
 27. விஜயன் சார்

  "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெசல்" பற்றி ஏதேனும் அறிவிப்பு உண்டா ?

  மே மாதம் முதலாம் தேதி வெளியீட்டு நாள் என நினைக்கிறேன் ....

  இது பற்றி ஒரு அப்டேட் போடலாமே ?

  நாகராஜன்

  ReplyDelete