நண்பர்களே,
வணக்கம். நூறே நாட்கள் எஞ்சியுள்ளன - புத்தாண்டுக்கும், நமது முத்து காமிக்சின் 50 வது ஆண்டுமலருக்கும் !! So எனக்கு நானே - "on the double" என்று சொல்லிக் கொண்டு உசைன் போல்ட்டுக்கு ஒண்ணு விட்ட பெரியப்பா மாதிரியாவது பணிகளில் வேகமெடுக்க, இந்த நாளையும் சரி, தொடரவுள்ள தொண்ணூற்றி ஒன்பதையும் பயன்படுத்திட நினைக்கின்றேன் ! எப்போதுமே கழுதைக்கு முன்னே இலக்கென்றொரு கேரட் தொங்கும் போது, ஓட்டத்தில் ஒரு ஜூவாரஸ்யம் ஏறிடுவதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான் ! இம்முறையும் அதனில் மாற்றமிராதென்றே நம்புவோம் !
And most importantly, இந்த "100 DAYS TO GO" பயணத்தின் ஒவ்வொரு நொடியினிலும் உங்கள் ஒவ்வொருத்தருக்குமே பங்கிருப்பதாய் எனக்குப்படுகிறது :
- இன்றைக்கு முதலாய் நமது Facebook பக்கத்தினிலும் ; Insta பக்கத்தினிலும் - அடுத்த 100 நாட்களுக்கு தினசரி, சின்னச் சின்னதாய், ஏதேனுமொரு முத்து காமிக்ஸ் இதழ் பற்றிய பதிவிருந்திடும் !
- அவை முந்தைய இதழ்கள் பற்றிய குட்டியூண்டு நினைவுப் பகிரல்களாய் இருக்கலாம் ; உங்களுக்கான கேள்விகளாய் இருக்கலாம் ; ஏதேனும் quiz ஆக இருக்கலாம் ; அல்லது முன்னாட்களது சுவாரஸ்ய நிகழ்வு பற்றிய பதிவாகவும் இருக்கலாம் ! Whatever they are - they will be short n ' crisp !
- அவற்றினில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கலந்து கொண்டு, உங்களின் "முத்து best moments" பற்றி ; முத்துவுடனான உங்களின் முதல் பரிச்சயம் பற்றி ; நாம் கோரிடும் கேள்விகளுக்கான பதில்கள் பற்றி ; உங்களிடமுள்ள "முத்து சேகரிப்பு" பற்றியெல்லாம் எழுதிடலாம் !
- தவிர, இந்த மைல்கல் ஆண்டுமலருக்கு மெருகூட்ட ; காத்திருக்கும் ஆண்டுக்கு சிறப்பு சேர்க்க உங்களின் ஆலோசனைகளும் most welcome ! அவை சுவாரஸ்யமான முன்மொழிவுகளாய் இருந்து ; நடைமுறை சாத்தியங்களுக்குள்ளும் இருந்து, அனைவருக்கும் ஏற்புடையதாய் அமைந்திடும் பட்சத்தினில், நிச்சயமாய் நிறைவேற்றப்படும் !
- இங்கே நமது ப்ளாகிலோ ; அல்லது FB பக்கத்தினிலோ நீங்கள் பதிவிடும் அழகான நினைவலைகள் ; அலசல்கள் ; போட்டோக்கள் - முத்து ஆண்டு மலர் 50-ல் இடம் பிடித்திடும் ! So ஒரு மறக்கவியலா தருணத்தினில் உங்களின் முத்திரைகளைப் பதிக்க காத்திருக்கும் இந்த 100 நாட்கள் பிரயோஜனப்படக்கூடும் !
- உங்கள் கரம் பிடித்தபடிக்கே நாற்பத்தியொன்பதுச் சொச்ச ஆண்டுகளைக் கடந்திருக்கும் நமக்கு, அடுத்த 100 நாட்களின் ஓட்டத்தினில் உங்களின் வழிகாட்டல்கள் முன்னெப்போதையும் விட ரெம்பவே அவசியம் என்பேன் ! So அடுத்த 2400 மணி நேரங்களில் நமக்காகவும் சிந்திக்கக் கொஞ்சம் மெனெக்கெடுங்களேன் - ப்ளீஸ் folks ?
- இவற்றுள் ஏதேனும் அழகாய்த் தென்பட்டு, இன்னும் கொஞ்சம் மெருகூட்டினால் தேறிடும் என உங்களுக்குத் தோன்றும் பட்சத்தில் - அதனைச் சுட்டிக்காட்டிப் பதிவிடலாம் !
- உங்களின் கைவண்ணங்களில் ஏதேனும் புதுசாய் உருவாக்கிட இயலுமெனில், sure - give it a try guys !! உங்களின் படைப்பு அழகாய் அமைந்து தேர்வாகிடும் பட்சத்தினில் - 2022-ன் முழுமைக்கும் அது நமது இதழ்களினில் பயன்படுத்தப்படுவதோடு - ரூ.2000 சன்மானத்தினையும் ஈட்டித் தந்திடும் உங்களுக்கு !
And ஆங்காங்கே க்ரூப்களை ; FB பக்கங்களை நிர்வகித்து வரும் நண்பர்கள் நோக்கியோரு வேண்டுகோளும் :
நமது தினசரிப் பதிவுகளில் உங்களுக்குத் பிடித்தவற்றைத் தூக்கி உங்களது பக்கங்களிலும் போட்டுத் தாக்கலாம் ! Ultimate aim - "சிவாஜி செத்துப் போயிட்டாரா ?" என்ற ரீதியில் தகவல் பரிமாற்றத்தில் இடைவெளி விழுந்து போயிடாது பார்த்துக் கொள்வதே !!
இதோ - கண் முன்னேயே அதற்கான உதாரணத்தைப் பார்க்கிறோமே ?! ஒண்ணேகால் ஆண்டுகளாய் நாம் கூவிக் கூவி "இரத்தப் படலத்தை" விற்க தம் கட்டிக் கொண்டிருந்த போதெல்லாம் பிசியாக இருந்து விட்டு, இன்றைக்கு புக் வெளியான ஒண்ணேகால் மாதத்திலேயே கூசாது ரூ.10,000 கோரும் "ஆர்வலர்கள்" போடும் லிஸ்டிங்குகளை கண்கள் வியர்க்கப் பார்த்து வரும் நண்பர்களுக்கா பஞ்சம் ?? A piece of advice guys : இந்த "6000 ; 10000 ; multiple copies available" கூத்துக்களைப் பார்த்து பணங்களை விரயம் செய்யாதீர்கள் ! நியாயமான விலைகளெனில் வாங்குங்கள் ; இல்லாத பட்சங்களில் சற்றே பொறுமை ப்ளீஸ் : இதெற்கென ஒரு ஏற்பாடு செய்து விடுவோம் ! So - hold on to your money !!
ஆங்காங்கே கையில் உள்ள பழைய இதழ்களை premium விலைகளுக்கு விற்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபணைகளும் லேது ; உலகெங்கும் காமிக்ஸ் சேகரிப்பின் ஒரு அங்கமது என்பது தெரிந்தது தானே ?! ஆனால் புக் வெளியான மறு மாதங்களிலேயே அபத்த விலைகளில் விற்பதற்கென்றே வாங்கிப் பதுக்கும் :தொழில்களை" செழித்திட அனுமதிப்பதென்பது - long term-ல் ஒட்டு மொத்தமாய் காமிக்ஸ் மீதே வெறுப்பினை உருவாக்கக் கூடிய விஷப் பழக்கமாய்த் தோன்றுகிறது ! So this will not find favor with us !
அதே போல டெக்ஸ் வில்லர் இதழ்களையுமே அர்த்தம் கெட்ட விலைகளில் வாங்கிடவும் வேகம் காட்டாதீர்கள் நண்பர்களே ! காத்திருக்கும் ஜனவரியில், சென்னைப் புத்தக விழாவோ ; நமது ஆன்லைன் புத்தக விழாவோ - ஏதோவொன்றின் பெயரைச் சொல்லி சமீப out of stock டெக்ஸ் இதழ்களை மறுக்கா ரெடி பண்ணிடவுள்ளோம் ! And அதன் முதல்கட்டமாய் நடப்பாண்டில் வெளியாகி, வெளியான வேகத்துக்கே சில பல வளைகளுக்குள் பதுங்க நேரிட்டிருக்கும் 3 இதழ்களுமே அக்டொபரின் மத்தியில் நம்மிடம் ஸ்டாக்கில் இருக்கும் ! And அவை முகவர்களுக்கும் அனுப்பிடப்படும் என்பதால், கடைகளிலேயே கூட நீங்கள் வாங்கிட வசதிப்படும் ! So relax please !!
"தொழில்" பாதிக்கும் முதல் நொடியினில் நம்மளுக்கு "முதல் மருவாதை" செய்திட ஆங்காங்கே முனைப்பு தலையெடுக்கும் என்பது தெரியாதில்லை தான் ; ஆனால் என்றைக்கு நமக்குக் கிரீடம் காத்திருந்தது - இன்றைக்கு விளக்குமாற்றைக் கண்டு அஞ்சிட ? So கொஞ்சம் ப்ளீச்சிங் பவுடரையும், சானிடைசரையும் கையில் வைத்துக் கொண்டால் போச்சு - மு.ச.க்களை எதிர்நோக்கி !
Bye all....செப்டெம்பரின் அலசல்கள் தொடரட்டும் &!
And மறவாதீர்கள் ப்ளீஸ் - நூறே நாட்கள் !! Just 100 days to go !!
And before I sign out : 😀😀😁😁
























