நண்பர்களே,
வணக்கம். ஒரே நேரத்தில் காலியாகவும், நிறைவாகவும் உணர்ந்திட இயலுமா ? முடியும்ங்கிறேன்....!! ஒண்ணு இல்லை...ஆனா இருக்குங்கறேன் ! எப்புடின்னு நீங்க கேக்கவே கேக்காட்டியும்,நான் சொல்லியே தீருவேனே !!
மாலை 6 மணி சுமாருக்கு ஆபீசுக்கு சும்மா எட்டிப் பார்ப்போமே என்று போயிருந்தேன். மாடியில் அத்தனை பேருமே கேம்ப் அடித்திருக்க, கீழே நிசப்தம் ! எனது ரூமுக்குள் போய் லைட்டைப் போட்டால் - ரூமே காலியாய் ; வெறிச்சோடிக் கிடப்பது போல் சுத்தமாய் பள பளத்தது ! இந்த வாரத்தின் துவக்கம் முதலாய் நம்ம XIII & பட்டாளம் எனது அறையினை மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்திருக்க - தொடர்ந்த ஒவ்வொரு நாளிலும் அங்கேயே அமர்ந்து புக்ஸை சரி பார்ப்பது ; பபுள் ராப் செய்வது ; பேக் செய்வது ; அட்ரஸ் ஓட்டுவது - என நம்மவர்கள் பணி செய்து கொண்டிருந்தனர் ! ஆனால் நேற்றைக்கு XIII முன்பதிவுப் பிரதிகளின் முழுமையும் புறப்பட்டிருக்க, இன்றைக்கு முகவர்களின் ஆர்டர் அனைத்தும் கிளம்பியிருக்க, இப்போது அறையினுள் மேஜையும், நாற்காலிகளும், வித வித பாஷைகளிலான காமிக்ஸ்களும் மட்டுமே உள்ளன !!
காலியானது அறையாக இருந்தாலும், உள்ளே சென்று அமர்ந்த போது மனசில் ஒருவித நிறைவு !! Of course - இது மறுபதிப்புக்கு மறுபதிப்புக்கு மறுபதிப்பு தான் ; எப்போதோ ஒரு சமயம் துவங்கி, எப்போதோ ஒரு வேளையில் நனவாகியுள்ளது தான் ; அட்சர சுத்த நகலுமே தான் ; and நாம் பார்த்திடும் முதல் பெரிய இதழும் அல்ல தான் ! ஆனால் இத்தனை பெரியதொரு தேரை இழுத்துக் கொணர்ந்து எல்லை சேர்க்கும் ஒவ்வொரு தருணமும் மகிழ்ந்திட வேண்டியதொன்று தானே ?
தவிர, நேற்று முதலாய் இங்கு நாம் சாட்சியாக இருந்து வருவது அசாத்தியமானதொரு ஈகைப் பிரவாகத்திற்கு ! இங்கே காமிக்ஸ் ரகளைகளை ஒருநூறுவாட்டி பார்த்திருப்போம் ; கையைப் புடிச்சி இழுத்தியா ? பஞ்சாயத்துக்களோடு இருநூறுவாட்டி குப்பை கொட்டியிருப்போம் ; ஏதேதோ அலசல்கள் உற்சாகங்களில் திளைத்திருக்கிறோம் ! And yes - சுகவீனங்களில் சங்கடப்பட்டு வந்த நண்பர்களுக்கென நாம் பணம் திரட்டிட முயன்றுள்ளதுமே பல முறைகள் நிகழ்ந்துள்ளன தான் ! ஆனால் நேற்று முதலாய் நண்பர்கள் இங்கே கரங்கள் சிவக்கக் காட்சி தந்திடுவது இரு காரணங்களின் பொருட்டு என்று எனக்குப்பட்டது ! முதலாவதும், பிரதானமானதும் : அசாத்திய மருத்துவச் சேவை செய்து வரும் ஒரு அமைப்புக்கு தம் சிறு பங்கினைச் செய்திட, இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ள நண்பர்கள் முன்வந்தது ! இரண்டாவதும் & நமது காமிக்ஸின் பார்வைக்கோணத்தினில் significant ஆனது : வாசிப்பினில், வணிகம் ஒரு இடராகிட அனுமதிக்கலாகாது என்பதை highlight செய்திட முனைந்தது என்பேன் ! Of course, 'காதிலே புகை கழகம்' இதனில் மாற்றுக் கருத்து கொண்டிருக்கும் தான் & இந்த ஒற்றை நாளினில் சகல 'ஏலேலோ ஐலசா' நிகழ்வுகளும் காற்றில் கரைந்து போய்விடவும் போவதில்லை தான் ! In fact - 'நீயென்ன சொல்றது ? நான் என்ன கேக்குறது ?' பாணியினில் எதிர்வினையாற்றும் முனைப்புகள் வேகமெடுக்கும் என்பதை யூகிப்பதிலும் சிரமங்களில்லை தான் ! ஆனால் எல்லா மாற்றங்களுக்கும் ஏதேனுமொரு புள்ளியில் துவக்கம் இருந்திடத் தான் வேணுமெனும் போது - அந்தப் புள்ளியை நண்பர்கள் தங்களின் தயாளங்கள் வாயிலாக அழகான கோலமாய்ப் போட்டிருப்பது எனக்கு அளவிலா மனா நிறைவைத் தந்துள்ளது ! சம்பந்தமே இல்லாதோர் கூட, தெருவில் ஒரு அழகான மாக்கோலம் போடப்பட்டிருக்கும் போது, அதனை மிதிக்காது சுற்றிப் போக முனைவதுண்டு தானே ? அது இங்கே கிஞ்சித்தேனும் நடந்திடாது போகாதென்ற நம்பிக்கையினை இன்றைய பொழுது விதைத்துள்ளது !
இதோ, இப்போது வரையிலும் போணியாகியுள்ள 11 புக்ஸ் நிகழ்த்தியுள்ள மாயாஜாலம் இது :
அடையார் புற்று நோய் ஆய்வு மையத்துக்கு 11 நண்பர்களும் நேரடியாய், அவரவரது பெயர்களிலேயே அனுப்பியுள்ள / அனுப்பி வரும் நன்கொடைத் தொகை : ரூ.32400 !!
நண்பர்களின் தயாளங்களுக்கான புண்ணியங்கள் அவர்களையே சார்ந்திட வேண்டுமென்பதனாலேயே, நான் பணத்தினை நேரடியாகவே அங்கு அனுப்பிடச் சொல்லிக் கோரியிருந்தேன் !!
Here are the donors :
1.Mr.Shanthakumar, Chennai.
2.Mr.Sathya Sainath, Chennai
3.*************** (name withheld on request)
4.Mr.Srinivasa Raghavan, Chennai
5.Master.Kanishk, Srirangam.
6.Mr.Prem, Nagercoil / U.S.A.
7.Mr.Kumar Raghavan, Salem.
8.Mr.Sanjay, Chennai.
9.Dr.Rajesh Ranganathan, Chennai.
10.Mr.Sundarapandian, Nellai
11.Mr.Gautham
And ரூ.2900 வீதம் 11 புக்சின் பொருட்டு நமக்கு வந்துள்ள / வந்து கொண்டுள்ள தொகை - ரூ.31900 !! இந்தத் தொகையானது நாளையே சன்ஷைன் லைப்ரரியின் பெயரினில் அடையாருக்கு அனுப்பிடப்படும் !
And திங்களன்று உங்கள் சார்பினில் + பிரகாஷ் பப்ளீஷர்ஸ் சார்பினில் இன்னொரு தொகை அடையாருக்கு புறப்பட்டிடும் - இந்த நடப்பு இ.ப. புராஜெக்டின் பணத்திலிருந்து !! Thanks a million : அத்தனை நண்பர்களுக்கும் !!
இந்த சிந்தனை போதாதா - ஒரு காலி அறையின் நிசப்தத்திலும், நிறைவாய் உணர்ந்திட ?! என்ன ஒரே சிக்கல் - 'ரூமை மறுக்கா ரொப்பிப் பார்க்க இன்னா செய்யலாம் மன்னாரு ?'ன்னு மனசு கேட்கும் போது தான் பதில் சொல்ல முழிச்ச பிழைப்பாய்ப் போகுது ; கட்டைவிரல்கள் நமைச்சல் எடுக்கிறா மெரியே தோணுது !! And அதுக்கோசரம் ஒரு திட்டமிடல் லேசாய்த் துளிர் விடவும் துவங்கியுள்ளது - வரும் நாட்களில் அதனை நனவாக்கிட புனித மனிடோ அருள்புரிவாராக !!
அப்புறம் இன்று காலை முதலாய் ஆபீசில் நடந்து வரும் E ROAD ஆன்லைன் புத்தக விழா - ஒரு smashing success !! காலையில் ஒரு ரெண்டு மணி நேரம் ; மாலையில் ஒரு மணி நேரம் நம்மவர்களோடு அமர்ந்திருந்தேன் !! Phewwwwwwwww !!! தாரை தாரையாய் தக்காளிச் சட்னி அந்த அறையெங்கும் ஒவ்வொருவரின் காதிலிருந்தும் வழிந்திடாத குறை தான் என்றாலும், அடுத்த போன் அழைப்பிற்கு அதே புன்னகையோடு அவர்கள் தயாராவதைப் பார்க்கும் போது மெய்யாலுமே பெருமையாய் இருந்தது ! "நான் தென்..நான் தென்..." என்று சொட்டைத் தலையை முன்னே நீட்டிக்க கொண்டு நிற்கும் வாய்ப்பு எனதாகிடும் போது, நான் பணிகளின் பொருட்டு மெனெக்கெடுவதில் பெருசாய் வியப்புகளில்லை தான் ! ஆனால் சொற்பமோ, ஜாஸ்தியோ - வாங்கும் சம்பளங்களுக்கு உண்மையாய் ; வாசகர்களின் ஆவல்களைப் புரிந்து கொண்டு, இயன்றமட்டிலும் யார் மனதும் நோகிடாது பணியாற்றுவதென்பது சாமான்யக் காரியமில்லை !! And பொதுவாய் நான் அருகே இருக்கும் பட்சங்களில் 'சொடலைமுத்து ரொம்ப ஸ்டிக்கட்டுப்பா !" என்ற பயத்தில் பணிகளில் கவனம் செலுத்தத் திணறிடுவார்கள் ! So இதற்காகவே நான் 'மாசா மாசம் பொழியுதா மழை ?" என்ற கேட்ட கையோடு எனது அறைக்குச் சென்றுவிடுவேன் தான் ! ஆனால் இன்றைக்கு இந்த Slipcase XIII புக்ஸ்களை அனுப்பும் பணியினையும் அவர்கள் தலைகளில் சுமத்திட வேண்டாமே என எண்ணியவனாய் அங்கே இருக்க வேண்டிப் போனது ! And உங்களின் ஆர்வங்கள், துள்ளல்கள், என சகலத்தையும் ஒரு ஓரத்திலிருந்து பார்க்க / கேட்க முடிந்த போது - நேரம் போனதே தெரியலை !! End of the day - உங்கள் ஒவ்வொருவரின் காமிக்ஸ் நேசங்களும், இறைவன் நஇந்த காமிக்ஸ் சிறுவட்டத்திற்கென தந்துள்ள பிரத்யேக வரம் என்பதைத் தாண்டி இந்த நொடியில் வேறெதுவும் சொல்லத் தோணலை !!
ரைட்டு...தடி தடியாய் ; கலர் கலராய் ஒரு வண்டி புக்ஸை கையில் ஏந்தியிருக்கும் உங்கள் மீதே இனி limelight ! அலசுங்கள்...ஆராயுங்கள் guys ; நான் "அந்தியும் அழகே" தாத்தாஸ் கூட கரம் கோர்க்கக் கிளம்புகிறேன் !! Bye all ; see you around !! அட்வான்ஸ் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !! And நாளைய பொழுதையும் நமது புத்தக விழாவுக்கு மெர்ச்சலூட்டும் தினமாக்கிட உங்களைக் கோரியபடிக்கே I am அப்பீட் ! Have a Safe Sunday !!
P.S : எங்காச்சும் இந்தப் பச்சையை சமீபமாப் பாத்தா மெரி இருக்குங்களா ?











