நண்பர்களே,
வணக்கம். ஆலமரத்தடிப் பஞ்சாயத்துக்கள் ரொம்பவே ஓடிவிட்டுள்ளதால் time to move on – to better & brighter things ! கடந்த 8½ ஆண்டுகளாக காலெண்டர்களின் தேதி கிழிப்புப் படலமே எனது சுறுசுறுப்பையோ ; சோம்பேறித்தனத்தையோ தீர்மானிக்கும் சமாச்சாரமாய் இருந்து வந்துள்ளது ! மாத இறுதிகள் எனில், பொழுது விடியும் போதே – ”ஆத்தாடியோவ்… அதிகாரி கதையிலே இன்னும் 50 பக்கம் பாக்கி நிற்குதே… அம்மாடியோவ்… கி.நா. முழுசாய் எழுத வேண்டிக் கிடக்குதே !‘ என்ற ரீதியில் ஏதேனுமொரு பரபரப்பு ஒட்டிக் கொள்ளும் ! அதே நேரம் மாதத்தின் முதல் வாரமெனில் – ஹாயாக புது புக்குகளின் உங்கள் அலசல்களை வாசித்தபடிக்கே குறட்டை நேரங்களை நீட்டித்தபடிக்கே, பொழுதுகளை ஓட்டத் தோன்றும் ! ஆனால் கொரோனா நாட்களின் புண்ணியத்தில் இப்போது எல்லாமே உல்டா ! இதோ – மாதத்தின் முதல் வாரத்திலுள்ளோம் – ஆனால் பணிகளில் பாதி முடிந்தும், முடியாமலும் கிடக்க, ‘மாதத்தின் 1-ம் தேதி” என்ற அந்த இலக்கு இல்லாது போனதன் குழப்பங்களை உணர்ந்து வருகிறோம்! என்ன தான் மாதத்தின் 10-ம் தேதி, 15-ம் தேதி என்று நிர்ணயித்துக் கொண்டாலுமே முதல் தேதியின் focus இதனில் சாத்தியமாக மாட்டேன்கிறது! Maybe ஆகஸ்டில் 10-ம் தேதிவாக்கினில் அந்த மாதத்து இதழ்களை வெளியிட்ட கையோடு – செப்டம்பர் முதல் தேதியினை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும் போலும் ! அதற்குள்ளாய் கொரோனா தாண்டவம் மட்டுப்பட்டிருக்குமென்று வேண்டிக் கொள்வோமாக!
ஜுலை !! 1984 முதலாகவே இது நமக்கு ஸ்பெஷலானதொரு மாதமாக இருந்து வருகிறது! ‘லயன் காமிக்ஸ்‘ என்றதொரு கோலத்தின் முதற்புள்ளி 36 ஆண்டுகளுக்கு முன்பாய் இதே வேளையினில் தான் அரங்கேறியது எனும் போது, தொடர்ந்துள்ள ஜுலைகள் சகலமுமே நம்மளவிற்கு வாஞ்சையான நினைவுகளைத் தாங்கி நின்று வந்துள்ளன ! உள்ளபடிக்க்குப் பார்த்தால் லயனின் முதல் இதழ் மே 1984-ல் வெளிவந்திருக்க வேண்டும் தான் ! அப்போதெல்லாம் (காமிக்ஸ்) விற்பனைக்கு உகந்த மாதங்கள் என்ற வகையில் எனது முதல் இலக்கு மே 1984 தான் ! ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது ? எப்படிப் பயணிப்பது ? என்று எதுவும் தெரியா குழந்தைப் புள்ளையாய்த் தடுமாறித் திரிந்தவனுக்கு – இன்னும் கொஞ்சம் காத்திருந்து முயற்சித்தால், எப்படியாவது ஜேம்ஸ் பாண்ட் 007 கதைகளையுமே லவட்டி விட வாய்ப்பிருக்காதா ? என்ற சபலமும் ! And most importantly – “முதலீடு” என்றதொரு சமாச்சாரம் எங்கிருந்து தேறக் கூடுமென்ற ஞானம் கிஞ்சித்தும் இல்லாத நிலையில் மே சொதப்பி ; ஜுனும் சொதப்பி , இறுதியாய் ஜுலையில் வண்டி நகரத் தொடங்கியிருந்தது – நமது இளவரசி மாடஸ்டி பிளைஸியின் பெயரைச் சொல்லி ! இதோ – இன்றைக்கு நமது 36-வது ஆண்டுமலரை லக்கி லூக்கின் yet another கலர் தொகுப்போடு வரவேற்கத் காத்திருக்கும் வேளையில் – இடைப்பட்ட 432 மாதங்களின் அனுபவங்கள் ‘வாம்மா மின்னல்ஸ்ஸ்ஸ்‘ என்ற வேகத்தில் குறுக்கும் நெடுக்குமாய்ப் பவனி வருகின்றன! இந்த வேளையில் எனது கேள்விகள் இவையே!
1. “கத்தி முனையில் மாடஸ்டி“ வெளியான அந்த நாட்களில் வாசிப்பைத் துவங்கியோர் யாரேனும் இக்கட உண்டோ ? I mean, நமது துவக்க (லயன்) இதழின் 1984 முதலாய் இந்தப் பயணத்தினில் தொற்றிக் கொண்டோர் யாரேனும் ?
2. “கத்தி முனையில் மாடஸ்டி“ இதழைப் பின்நாட்களிலாவது வாங்கிடச் சாத்தியமானது எத்தினி பேருக்கு ? இன்னும் அந்த இதழைக் கைவசம் வைத்துள்ளீர்களா folks ?
3.உங்களுள் பெரும்பான்மை அப்புறமாய்ப் பயணங்களில் இணைந்து கொண்டோராகவே ருப்பது நிச்சயம் ! So உங்களின் முதல் வாசிப்பு எதுவோ - நம் குழுமத்தின் காமிச்சினில் ? நினைவிருப்பின் சொல்லுங்களளேன் புலீஜ் !
4. அதனை வைத்திருக்கும் நண்பர்கள் – ஒரு Selfie with Blaise ப்ளீஸ் ? எத்தனை வண்டி இதழ்கள் தொடர்ந்திட்டாலுமே அந்த "முதல் இதழ்" என்ற பெருமை மாறாதெனும் போது அதற்கொரு கெத்து உண்டு தானே ? And உங்கள் selfie-க்களை நமது அலுவலக செல் நம்பரான 98423 19755-க்கே அனுப்பிடலாம் ; அது இப்போது என்னிடமே இருந்திடும் !
நிஜத்தைச் சொல்வதானால் ரொம்பவே சுமாரான கதை ; படு சுமாரான மொழிபெயர்ப்பு என்ற கூட்டணியோடு இன்றைக்கு இதே இதழ் மட்டும் வெளியாகியிருப்பின் சில பல டாக்டர்களைத் தாண்டி பாக்கிப் பேர் எல்லாமே பிறாண்டித் தள்ளியிருப்பது உறுதி! ஆனால் அன்றைக்கு The Gods were kind & so were you! இன்றைக்கு நிறைய தூரம் பயணம் பண்ணி விட்டோம் – வாழ்க்கையிலும், வாசிப்பிலும் ! ஆயிரம், ரெண்டாயிரம், மூவாயிரம் என்ற விலைகளையெல்லாம் பார்த்து விட்டோம் – ஆனால் அந்த இரண்டு ரூபாய்க்கான முதல் இதழைக் கையில் ஏந்திப் பார்க்கும் போது உள்ளம் லேசாய்த் துள்ளத் தவறுவதில்லை!
இந்த 64 பக்கங்களை அந்தக் காலத்தில் மொழிபெயர்க்க நாலைந்து நாட்களோ, என்னவோ எடுத்துக் கொண்டது போலொரு ஞாபகம்; ஆனால் அச்சுக்கோர்த்து, ஆர்டிஸ்ட்கள் பணிமுடித்த பக்கங்களை அடுத்த ஒரு மாதத்திற்குக் குட்டி போட்ட குரங்காட்டம் சுமந்து கொண்டே திரிந்தது மட்டும் நன்றாகவே நினைவில் உள்ளது! இன்றைக்கு மேலோட்டமாய் வாசிக்கும் போது அந்நாட்களின் கூட்டெழுத்துத் தமிழ் fonts; அப்போதே “சங்கதி”; “பிதற்றல்கள்” போன்ற நயமான ட்ரேட்மார்க் வார்த்தைகள் மீதான காதல் கண்ணில் படுகிறது! ஆனால் பெருசாய் உறுத்தியது முதல் பக்கத்து அறிமுகம் சமாச்சாரம் தான் ! மாடஸ்டியும், கார்வினும் ஏதோ ஜேம்ஸ் பாண்ட் பாணியில் தேசத்து உளவு ஸ்தாபனத்தில் குப்பை கொட்டிய பிற்பாடு VRS வாங்கியவர்களைப் போல நான் அன்றைக்குத் தந்திருந்த பில்டப்பை இப்போது வாசிக்கும் போது ‘ஙே‘ என்றே முழிக்கத் தோன்றுகிறது !

தவிர புக் முழுசும் புரட்டினாலும் கூட ஒரேயொரு Post Box நம்ரைத் தாண்டி முகவரி என்றோ; தொடர்பு கொள்ளவொரு தொலைபேசி நம்பரோ கண்ணில் படவேயில்லை! அந்நாட்களது “டெல்லி டிரான்ஸிஸ்டர் ரேடியோ” விளம்பரங்களாய் நம்மையும் டுபாக்கூராகக் கருதிடாது, ஏஜெண்ட்கள் எப்படித் தான் பணம் அனுப்பி வைத்தார்களோ? என்று வியக்கிறேன் இப்போது !
And இக்கட எனது
கேள்வி # 5 :
5. மாடஸ்டியை “இளவரசி” என்று அழைக்கச் செய்ததெல்லாம் பின்நாட்களது வாடிக்கை என்பது மட்டும் நினைவுள்ளது ! ஆனால் எந்த இதழிலிருந்து என்பதை மாடஸ்டி பேரவையோ ; தொழிலதிபப் பேரவையோ தெளிவுபடுத்திட முடியுமா ? Just curious !
பழங்கதைகள் போதும் என்பதால் – இதோ காத்திருக்கும் லக்கி ஆண்டுமலரின் பக்கமாய்ப் பார்வைகளைத் திருப்புவோமா ? இதோ அட்டைப்பட முதல் look !
And வழக்கம் போலவே hardcover-ல்; அட்டைப்பட நகாசு வேலைகளுடன் நமது லக்கி கௌபாய் மிளிரவுள்ளார் ! Maybe – just maybe இந்தச் செலவுகளைக் கழற்றி விட்டு – இந்த இதழை ரெகுலர் பைண்டிங்கோடே தயாரிக்கலாமா ? என்ற சபலம் ஒரு ஓரமாய் எட்டிப் பார்த்தது தான் ! ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே சகல லக்கி தொகுப்புகளையும் கம்பீரமான ஹார்கவர்களில் பார்த்து விட்டு – இப்போது சாதா லுக்கில் வெளியிட்டால் நிச்சயமாய் பதம் தவறிய பர்பியைப் போலவே இருக்குமென்றுபட்டது ! தவிரவும் ஆண்டுமலரின் கேக்கை 36 மெழுகுவர்த்திகளுடன் கொண்டாடவுள்ள சிங்கத்தைப் பார்த்த போது சிக்கனம் இதற்குச் சுகப்படாதுடோய் ! என்று புரிந்தது. So எப்போதும் போல இந்த இதழ் compromises ஏதுமின்றி உருவாகிடும் !
கதைகளைப் பொறுத்தவரையிலும் சமீபப் படைப்புகள் என்பதால், மேக்கிங்கில் ; கலரிங்கில் டாலடிக்கின்றன இரு சாகஸங்களும் ! ஏற்கனவே நாம் சந்தித்திருக்கும் அந்த ஜென்டில்மேன் கோமகனும், அவரது பட்லரும் “பொன் தேடிய பயணம்” கதை நெடுகப் பயணிப்பது ஒரு highlight! இதோ – அந்த ஆல்பத்திலிருந்து ஒரு உட்பக்க preview !
கதை # 2 – ஜுனியர் எடிட்டரின் மொழிபெயர்ப்போடு வந்திடவுள்ளது என்பதை முன்னமே நான் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்! 2013-ல் ஏதோ ஒரு வேகத்தில் புள்ளையாண்டர் எழுதியது கூடப் பெரிய சமாச்சாரமல்ல; ஆனால் அந்த நோட்டை இத்தனை காலம் தொலைக்காமல் நான் பத்திரப்படுத்தி வைத்திருந்தது தான் என்மட்டிற்கு big deal ! Of course – ஆங்காங்கே பட்டி-டின்கரிங் பார்க்கத் தான் செய்துள்ளேன் ; ஆனால் இயன்றமட்டிலும் எனது பேனாவின் நிழல் ஆக்ரமிக்காதிருக்க முயற்சி செய்திருக்கிறேன் ! So வாசிக்கும் போது – நான் நோண்டிய இடங்கள் எவை ? ஒரிஜினலானவை எவை ? என்பதை நிச்சயமாய்க் கண்டுபிடிக்கத் தவற மாட்டீர்கள் தான் ! And இதோ – அந்த ஆல்பத்திலிருந்தும் ஒரு preview !
Moving on இம்மாதத்து சந்தா D அட்டைப்படத்தின் முதல் பார்வையும் இதோ :
அட்டைப்படத்தில் லாரன்ஸ் குத்த ஒரு குமட்டைத் தேடிக் கொண்டிருக்க, மொட்டை டேவிட்டோ அபிநயம் பிடித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றினாலும் – இதுவொரு ஸ்பானிஷ் மொழியில் வெளியான இதே சாகஸத்தின் அட்டைப்படமே ! நமது அமெரிக்க ஓவியையின் கைவண்ணத்தில் உயர்தரத்தில் புத்துயிர் பெற்றுள்ளது ! And அந்த மாமூலான மினுமினுக்கும் effect சகிதம் அட்டைப்படம் கண்ணைப் பறிக்கக் காத்துள்ளது !
என்ன ஒரே வருத்தம் – நமது இந்தக் குறைந்த விலை, b&w கமர்ஷியல் இதழ்களின் தடமான சந்தா : D, கொரோனாவின் மகிமையில் எதிர்பார்த்த பலன்களை ஈட்டவில்லை ! மார்ச் முதலே கடைகள் அடைப்பு ; வியாபார மந்தம் ; ஆங்காங்கே லாக்டௌன்கள் என்ற சூழலில், டாலடிக்கும் அட்டைப்படங்களோடு 007-ம்; இளவரசியும்; டயபாலிக்கும் ஜொலித்திருந்தாலும் – வழக்கமான நமது வாசக வட்டத்தைத் தாண்டியுமே புதியவர்களை எட்டிப் பிடிக்க எண்ணிய நமக்கு, ஜெயம் நஹி ! இந்தாண்டின் பாக்கி இதழ்கள் எல்லாமே அறிவித்தபடியே வெளிவந்திடும் தான் – ஆனால் இந்தத் தடம் தொடர்வது சார்ந்த இறுதி முடிவு அக்டோபரிலேயே இருந்திடும் !
And at this point - எனது கேள்வி # 6 இதுவே :
6. வழக்கமான டெக்ஸ்வில்லர் சைஸில் b&w இதழ்களைப் படிப்பதற்கும், இந்தப் பெரிய சைஸில் படிப்பதற்கும் ஏதேனும் வித்தியாசங்களை உணர்கிறீர்களா ? Of course எழுத்துக்கள் சின்னதாக இருக்கும் சிக்கல்களைக் களைந்து விட்டாச்சு தான் ; So அது நீங்கலாய் இந்தப் பெரிய சைஸில் ஏதேனும் ப்ளஸ் or மைனஸ் உங்கள் பார்வையினில் ?
”மீண்டும் கிங் கோப்ரா” நமது ஆதர்ஷ Fleetway காமிக்ஸ் புதையலின் அங்கமே ! ஒட்டுமொத்தமாய் அந்நாட்களது க்ளாஸிக் கதைகளைத் திரட்டி, உயர்தரத்தில் மீண்டும் வெளியிட்டு ப்ரிட்டனின் மார்க்கெட்டைத் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர் ! காத்திருக்கும் 2021-ல் ஒரு 128 பக்க மாயாவி பெரிய சைஸ் ஸ்பெஷல் ; ஸ்பைடர் ஸ்பெஷல் என்று ஏதேதோ திட்டமிடல்கள் தூள் பறத்திக் கொண்டுள்ளன ! மொத்தமாய் அந்நாட்களது ஆக்கங்களை விஸ்வரூபம் எடுக்கச் செய்யத் தயாராகி இருப்பதால் – தொடரும் ஆண்டுகளில் நமது 1980’s & `90s களின் அதிரடி ஹிட்களுக்குக் காரணமான பல்வேறு நாயகர்களையும் / கதைத் தொடர்களையும் ஒன்றன்பின் ஒன்றாய் ரசித்திட இயலும் போல்த் தெரிகிறது! இது சிலருக்குத் தேனாய் இனிக்கவும், சிலருக்குத் தேளாய் கொட்டவும் கூடும் என்பது புரிகிறது தான்! Anyways – “உறுதிபட போணியாகும்” என்ற உத்திரவாதத்தைத் தாங்கி வரும் நாயகர்களை மட்டும் 2021-ல் ‘டிக்‘ அடிக்க நினைத்துள்ளேன் – evergreen இரும்புக்கை மாயாவி அதனில் முதல்வராய் இருந்திடும் விதமாய் ! இதோ - மீண்டும் கிங் கோப்ராவின் உட்பக்க பிரிவியூ :
And எனது கேள்வி # 7 :
7. “பெருச்சாளிப் பட்டாளம்” நினைவுள்ளதா folks? நினைவில் இருந்து, அவர்கள் மீது நாட்டமும் இருக்கும் பட்சத்தில் – அவர்களது கதையினை பரிசீலிக்கலாம் என்பீர்களா? Black & White –ல் நமது தற்போதைய சந்தா:D சைஸில் அம்சமாய் fit ஆகிடக்கூடிய கதைகள் இவை! ரசனைகளிலுமே அம்சமாய் பொருந்திடும் பட்சத்தில் முயற்சிக்கலாம் !
மேற்கண்ட 7 கேள்விகளுக்கான பதில்களோடு, இன்னொரு சகாயத்தையும் கோரிடுகிறேன் உங்களிடமிருந்து ! வேறொன்றுமில்லை – நமது lion-muthucomics.com ஆன்லைன் தளத்தில், ஒவ்வொரு இதழின் ஆர்டர் பக்கத்திலும் அந்த இதழின் உட்பக்க preview-க்களைப் போட்டுக் கொண்டிருக்கிறோம். அந்தப் பக்கங்களில் கீழேயுள்ள பெட்டிகளுக்குள், அந்தந்தக் கதைகளைப் பற்றி கதைச்சுருக்கம் போல ‘நச்‘சென்று நாலு வரிகளைச் சேர்க்க முடிந்தால், புதுசாய் browse செய்திடக் கூடிய வாசகர்களுக்கு / வாடிக்கையாளர்களுக்கு வாங்கிட அதுவொரு உந்துகோலாகிடக் கூடுமென்று நினைத்தேன்! நம்மிடமோ – கிட்டத்தட்ட 300 புக்குகள் லிஸ்டாகிக் கிடக்க, அவை சகலத்துக்கும் நானே கதைச்சுருக்கம் எழுதுவதாயின் டப்பா டான்ஸ் ஆடிப் போகும் ! So ஆர்வமுள்ள நண்பர்கள் – தத்தமக்கு நினைவில் நின்றிடக்கூடிய ஆதர்ஷ இதழ்களின் Synopsis-களை எழுதி இங்கே பதிவு செய்தால், நம்மாட்கள் அப்படியே தூக்கிச் சாத்தி விடுவார்கள் வலைப்பக்கத்தில் ! கதையை முழுசுமாய் ஒப்பிக்காத வண்ணம், மேலோட்டமாய், ஆர்வத்தைத் தூண்டும் விதமாய் மட்டும் எழுதுதல் முக்கியம் என்பதை நினைவூட்டுகிறேன் folks ! அப்புறம் ஒரே ஆல்பத்துக்கே ஆள் மாற்றி ஆளாய் synopsis எழுதிடக் கூடிய விரயத்தைத் தவிர்க்கும் விதமாய் – எந்த இதழை review செய்திட விரும்புகிறீர்களோ – அதன் பெயரை மட்டும் இங்கு முதலில் பதிவிட்டு விட்டால் நலமென்பேன் !
Before I sign off - இதோ இன்றைய முன்பதிவுகளும் சேர்ந்தான updated இரத்தப் படல முன்பதிவு லிஸ்ட் :

| NO |
NAME |
PLACE |
| 1 |
Mr.K.V.GANESH |
CHENNAI |
| 2 |
Mr.K.PARTHIBAN |
TRICHY |
| 3 |
Mr.V.HARIHARAN |
COIMBATORE |
| 4 |
Mr.S.SENTHIL KUMAR |
TIRUPUR |
| 5 |
Mr.KRISHNA MOORTHY |
DHARAPURAM |
| 6 |
Mr.ARUN KUMAR |
NAMAKKAL |
| 7 |
Mr.ARUN KUMAR |
NAMAKKAL |
| 8 |
Mr.M.BABU MOHAMED ALI |
SALEM |
| 9 |
Mr.T.SOUNDRA PANDIAN |
RAJAPALAYAM |
| 10 |
Mr.T.SOUNDRA PANDIAN |
RAJAPALAYAM |
| 11 |
Mr.R.ANBALAGAN |
GOBICHETTIPALAYAM |
| 12 |
Mr.R.ANBALAGAN |
GOBICHETTIPALAYAM |
| 13 |
Mr.R.GANESH |
MADURAI |
| 14 |
Mr.AUGUSTIN
SAINTLYDOSS |
HOSUR |
| 15 |
Mr.A.D.BASKARAN |
CHENNAI |
| 16 |
Mr.SARAVANAN
SUNDARAVEL |
NOIDA |
| 17 |
Mr.SARAVANAN VADIVEL |
NAGAPATTINAM |
| 18 |
Mr.MOHAMMED ARAFARTH |
MAYILADUTHURAI |
| 19 |
Mr.SURESH NATARAJAN |
AUSTRALIA |
| 20 |
Mr.SURESH NATARAJAN |
AUSTRALIA |
| 21 |
Mr.SURESH NATARAJAN |
AUSTRALIA |
| 22 |
Mr.SRINIVASARAGHAVAN
RAMAN |
CHENNAI |
| 23 |
Mr.PRABHUDASS PALANI |
CUDDALORE |
| 24 |
Mr.MAHENDRAN
PARAMASIVAM |
COIMBATORE |
| 25 |
Mr.A.SATHISH KUMAR |
VELLORE |
| 26 |
Mr.PRASANNA SRIDHAR |
COIMBATORE |
| 27 |
Mr.S.S.KARTHIK |
BANGALORE |
| 28 |
Mr.A.PALANIVEL |
TRICHY |
| 29 |
Mr.A.PALANIVEL |
TRICHY |
| 30 |
Mr.RAJ KUMAR
SIVANANDI |
MADURAI |
| 31 |
Mr.SATHAYA BALAJI |
BANGALORE |
| 32 |
Mr.MA.SENTHIL |
COIMBATORE |
| 33 |
Mr.MA.SENTHIL |
COIMBATORE |
| 34 |
Mr.SANKAR CHELLAPPAN |
CHENNAI |
| 35 |
Mr.V.RAJEEV |
COIMBATORE |
| 36 |
Mr.SELVAM ANNAMALAI |
ERODE |
| 37 |
Mr.S.ANANTHA SANKAR |
TIRUNELVELI |
| 38 |
Mr.R.SARAVANAN |
ERODE |
| 39 |
Dr.PRASANNA |
SRILANKA |
| 40 |
Dr.PRASANNA |
SRILANKA |
| 41 |
Dr.PRASANNA |
SRILANKA |
| 42 |
Mr.A.PALANIVEL |
TRICHY |
| 43 |
Mr.M.RAMKUMAR |
UNKNOWN |
| 44 |
Mr.V.V.KRISHNA |
CHENNAI |
| 45 |
Mr.N.SHANMUGAM |
TIRUCHENGODE |
| 46 |
Mr.MOHAMED RAFIQ RAJA |
BANGALORE |
| 47 |
Mr.MANI.MB |
CHENNAI |
| 48 |
Mr.MANI.MB |
CHENNAI |
| 49 |
Mr.MANI.MB |
CHENNAI |
| 50 |
Mr.MANI.MB |
CHENNAI |
| 51 |
Mr.MANI.MB |
CHENNAI |
| 52 |
Mr.SUBRAMANIAN |
CHIDAMBARAM |
| 53 |
Dr.A.K.K.RAJA |
KARUR |
| 54 |
Dr.A.K.K.RAJA |
KARUR |
| 55 |
Dr.A.K.K.RAJA |
KARUR |
| 56 |
Mr.K.V.GANESH |
CHENNAI |
| 57 |
Mr.YOGI SIVAKUMARAN |
SRILANKA |
| 58 |
Mr.SELVAM ANNAMALAI |
ERODE |
| 59 |
Mr.SELVAM ANNAMALAI |
ERODE |
| 60 |
Mr.S.BALA
SUBRAMANIYAN
|
BANGALORE |
| 61 |
Mr.V.R.SRINIVASA
RAGHAVAN
|
CHENNAI |
| 62 |
Mr.V.R.SRINIVASA
RAGHAVAN
|
CHENNAI |
| 63 |
Mr.V.R.SRINIVASA
RAGHAVAN
|
CHENNAI |
| 64 |
Mr.SUNDARALINGAM
MATHINATH |
SRILANKA |
| 65 |
Mr.R.S.SHARMA |
SRILANKA |
| 66 |
Mr.VIMALAKANDHAN
THANUSHAN |
SRILANKA |
| 67 |
Mr.VIMALAKANDHAN
THANUSHAN |
SRILANKA |
ஜெய் ஜேசன் மக்லேன் ! இலக்கின் முதல் கால்வாசித் தூரத்தை அடுத்த ஓரிரு நாட்களுக்குள் எட்டி விடுவீர்கள் என்று தோன்றுகிறது ! பார்க்கலாமே - துரிதம் ஒரு தொடர்கதையாகிறதா என்று !
மீண்டும் சந்திப்போம் folks! Bye for now… See you around !