நண்பர்களே,
வணக்கம்.'இதோ வருது தீபாவளி ...அதோ வருது விடுமுறை என்று காத்திருந்த நாட்களெல்லாம் கரைந்து செல்ல - தீபாவளியுமே அடித்துத் துவைத்த மழையின் மத்தியில் ஓசையின்றித் தாண்டிச் சென்றது போலத் தோன்றியது எனக்கு மட்டும் தானா - தெரியவில்லை ! ஆனால் மழைத் தூறலின் மத்தியிலும் எங்கள் ஊரில் அந்த சாயங்காலப் பொழுதை பட்டாசுகளால் அதிரச் செய்த ஜனம் ஏராளம் ! So இன்னுமொரு வருஷம்...இன்னுமொரு பண்டிகை நம் நினைவுகளின் பேழைகளுக்குள்ளே பார்சலாகிட - நார்மலான நாட்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது ! உலகுக்கே இது தான்கதை எனும் போது - கதை சொல்வதே உலகமான நமக்கு மட்டும் மாறுபட்டா இருந்திடும் நிலவரம்? ஆண்டின் இறுதி மாதத்து இதழ்களோடு மல்லுக்கட்ட எப்போதும் போல் தயாராகிக் கொண்டிருக்கிறோம் ! And இம்மாதம் தூள் கிளப்பப் போவது "தோர்கல்" தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை எனக்கு ! வேற்று மொழியின் ஒரிஜினல்களிலிருந்து மொழிபெயர்க்க வேண்டிய கதைகள் என்றாலோ - சற்றே இடியாப்பமான கதையோட்டம் கொண்ட ஆல்பங்கள் என்றாலோ - முன்ஜாக்கிரதையாய் கொஞ்சம் முன்கூட்டியே எழுதத் தொடங்கிடுவது வழக்கம். ஆனால் Cinebooks புண்ணியத்தில் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் தரத்தில் தோர்கலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நமக்குக் கிடைத்திருப்பதால் சாவகாசமாய் தான் இந்தக் கதைக்குள் மூழ்கினேன் ! வாவ் !!! என்பதைத் தாண்டி எனக்கு வேறு வார்த்தைகள் வரவில்லை - கதையோட்டத்தை ரசிக்க இயன்ற போது !! இது இது வரையிலான கதைகள் பிரமாதம் எனில் - காத்திருக்கும் 2 சாகசங்களும் சுத்தமாய் புதியதொரு லெவல் என்று தான் சொல்ல வேண்டும் ! கதாசிரியர் வான் ஹாம்மேவை நிறைய நாம் சிலாகித்திருக்கிறோம் ; XIII ; லார்கோ ; ஷெல்டன் போன்ற அவரது சமகால படைப்புகளைக் கண்டு வியந்திருக்கிறோம் - ஆனால் fantasy-ல் மனுஷன் வீடு கட்டி அடிப்பதைப் பார்த்தால் மிரட்சியாக உள்ளது !! கதையை எழுதும் போது அடுத்த knot இதுவாக இருக்குமோ ? - இந்த மாதிரிக் கொண்டு சென்றிருப்பாரோ ? என்ற யூகத்தோடே நானிருக்க - எந்தவொரு guesswork-ம் பருப்பு வேகவில்லை ! ஒவ்வொரு முச்சந்தியிலும் மனுஷன் எந்தப் பக்கம் இன்டிகேடரைப் போடுவாரோ என்ற சுவாரஸ்யத்திலே முதல் பாகம் முடிந்து விட்டது ! "பிள்ளைகளுக்குக் கதை சொல்ல சூப்பரான ஆல்பம் !" என்று நினைத்துக் கொண்டே இதற்குள் மூழ்கினால் - நாமே கொஞ்ச நேரத்தில் கட்டை விரலை வாய்க்குள் செருகி அமர்ந்திருப்பதை உணரலாம் ! This is an absolute crackerjack !!
இதோ இன்னுமொரு ஒரிஜினல் ராப்பரின் பயன்பாடு - துளியும் மாற்றங்களின்றி !! இந்தத் தொடருக்குத் தீட்டப்பட்டுள்ள அட்டைப்படங்கள் ஒவ்வொன்றுமே classic ரகத்தினில் இருப்பதால் - இங்கே நமது ஓவியருக்கோ, டிசைனருக்கோ துளியும் வேலையிராது என்பது அப்பட்டம் ! (இந்த முன்னட்டையினில் மட்டும் கொஞ்சமே கொஞ்சமாய் டெய்லர் வேலை செய்யச் சொல்லி நம் டிசைனருக்குச் சொல்லியுள்ளேன் !!)
நவம்பர் இதழ்களின் உங்கள் review களை சுவாரஸ்யமாய்ப் படித்தேன்....! என்னைப் பொறுத்த வரை டெக்சின் டபுள் இதழ் ஹிட் அடித்ததில் ஆச்சர்யமில்லை ...! "டைனோசாரின் பாதையில்" கதைக்கான சித்திரங்கள் மட்டுமே கொஞ்சம் புருவ உயர்த்தல் சமாச்சாரமாகிடும் என்பதை எதிர்பார்த்திடுவதில் அதிக சிரமம் இருக்கவில்லை ; அது நீங்கலாக பாக்கி சமாச்சாரங்களை 'தல'யின் presence பார்த்துக் கொள்ளுமென்பது தான் தெரியுமே ! So "தீபாவளி with டெக்ஸ் " நமது "புஷ்டியான ஹிட் இதழ்கள்" பட்டியலுக்கொரு புது வரவு என்பது புரிகிறது ! And ஷெல்டனின் சாகசமும் நிச்சயமாய் சோடை போகாதேன்றே எதிர்பார்த்தோம் ! வரலாற்றுப் பின்னணி கொஞ்சம் நிறையவே இருப்பினும், ஒரு டபுள் ஆல்ப கதை நகற்றலுக்கு அது அத்தியாவசியமே என்று தோன்றியது ! கதை 'பர பர' வேகமெனில் சித்திரங்கள் ஆளை விழுங்கும் அழகு என்பதை சொல்லவே தேவையில்லை - was simply awesome ! நவம்பரின் surprise என்று நான் பார்ப்பது சா.வீ.ரோ. சாகசத்தையே ! லாஜிக் பார்க்காத வரையிலும் "மஞ்சள் நிழல்"அழகானதொரு படைப்பே என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை - ஆனால் தட்டுப்படும் புராதனம் + குட்டிப் பிள்ளைகள் crayons கொண்டு கீச்சியது போலான வர்ண சேர்க்கைக்கும் உங்களது reactions எவ்விதம் இருக்குமோ என்பதில் சின்னதாய் ஒரு பயமிருந்தது எனக்குள் ! But 44 பக்கக் கதை தான் எனும் பொழுது "லாஜிக் லங்கேஷ்வரர்களாக" அவதாரமெடுக்க நீங்கள் அதிகம் மெனக்கெடவில்லை என்ற மட்டில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு !! Last of the lot - மறுபதிப்பான "மூளைத் திருடர்கள்" கொஞ்சம் மொக்கை என்பதில் ஒளிவு மறைவு அவசியமிராது தான் ! இந்தக் கதை முத்து காமிக்ஸில் வெளியான போதே ஜானி நீரோவை ஏன் இத்தனை "ஞே " முழியோடு வெளியிட்டுள்ளனரோ என்று யோசித்தது நினைவுள்ளது - and ஒரு சிவப்புக் கலர் ரயில் ஓடும் ராப்பர் தான் அந்நாட்களது கவர் என்பதும் நினைவில் உள்ளது ! ஜானி நீரோ கதைவரிசைக்கும் சரி ; ஸ்பைடரின் ஆல்பங்களுக்கும் சரி - இடையிடையே கொஞ்சம் கோக்கு மாக்கான ஓவிய பாணி நடைமுறையில் இருப்பதை இப்போது உணர முடிகிறது ! தொடரும் ஆண்டின் மறுபதிப்புகள் அனைத்திலும் இந்தச் சிக்கல் இல்லை என்ற மட்டில் சந்தோஷப்பட்டுக் கொண்டேன் !
இம்மாத highlight என்று சொல்வதாயின் - டெக்சின் வருகையினாலோ என்னவோ 'ஜிவ்'வென்று ஒரு எகிறு எகிறியுள்ள நமது ஆன்லைன் விற்பனையினைத் தான் சொல்ல வேண்டும் !! கடைசியாக CCC வெளியான ஜூலையில் இதே போலொரு ஆன்லைன் பரபரப்பு இருந்தது நம் விற்பனையில் ! அதன் பின்னே இந்த நவம்பரும் ஒரு உற்சாகப் பொழுதாகியுள்ளது ! நம் வாசக வட்டத்தினுள் ஒரு பகுதி - தரம் பிரித்து வாங்குவதை இது காட்டுவதோடு - கார்ட்டூன்கள் + டெக்ஸ் என்ற கூட்டணிக்கு அவர்களது thumbs up இருப்பதும் புரிகிறது ! 2016-ல் இந்த இரு சங்கதிகளுக்குமே நிறைய முன்னுரிமை இருப்பதால் நமது ஆன்லைன் வாசகர்களும் குஷி கொள்ளவொரு சாத்தியம் தெரிகிறது !! Fingers crossed !
சந்தோஷமான இக்கட்டொன்றும் இந்த "highlight " பிரிவினில் சேர்த்தி என்று சொல்லுவேன் ! 2016-ன் நமது அட்டவணையினில் இணைத்திடும் பொருட்டு - ஒரு அழகான கௌபாய் புதுத் தொடருக்கான உரிமைகளைக் கோரியிருந்தேன். ஆனால் அவர்களிடமிருந்து அது தொடர்பான பதில் கிட்டவில்லை எனும் பொழுது தாமதிக்க நம்மிடம் அவகாசம் இருக்கவில்லை ! ஆனால் இந்த வாரம் அவர்கள் சம்மதம் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர் !! இந்தப் புதியவரை எவ்விதம் - எப்போது - எங்கே நுழைப்பது என இல்லாத கேசத்தைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன் !
சந்தா Z தொடர்பான தேடல்களும், சிந்தனைகளும் இன்னொரு பக்கத் தண்டவாளத்தில் ஓடிக் கொண்டு வருகிறது ! அதன் பொருட்டு புதுசு புதுசாய்க் கதைகளைப் படிப்பது ஒரு ஜாலியான வேலையாக இருந்து வருகிறது !! அது ஏனோ தெரியவில்லை - எனக்கு பிரமாதமாகத் தெரியும் கதைகளின் முக்காலே மூன்று வீசம் யுத்தப் பின்னணிக் கதைகளாகவே இருந்து வருகின்றன !! ஆனால் கடும் பிரயத்தனங்களின் பெயரில் இம்முறை அந்தப் பக்கம் பார்வையை ஓட விடப் போவதில்லை என்றொரு தீர்மானம் எடுத்துள்ளேன் ! And டாகுமெண்டரி ரகக் கதைகளையும் தொடுவதில்லை என்று மண்டையில் பதிவு செய்துள்ளேன் ! So புரட்டிய மூன்றாம் பக்கத்திலேயே விட்டம் வரை விரியும் கொட்டாவிகள் இம்முறை ஆஜராகா என்ற தைரியம் கொள்ளலாம் நீங்கள் ! சுவாரஸ்யமான கதைகள் - சொல்லப்பட்டுள்ள பாணிகளில் வித்தியாசம் என்பதே Z -ன் விசிடிங் கார்டாக இருந்திடப் போகிறது !
ஆண்டின் இறுதி மாதம் நம் முன்னே காத்திருக்கும் வேளை எனும் பொழுது - ஆண்டறிக்கை ; இந்த வருஷத்தின் performers ; non -performers பற்றிய சிந்தனைகளும் எனக்குள் மேலோட்டமாய் ஓடத் துவங்கியுள்ளது ! இம்மாத இதழ்களில் வழக்கம் போலொரு கேள்விகள் பகுதி இருந்திடும் என்பதால் அதற்கு உங்களின் பதில்களை ஆவலாய் எதிர்பார்ப்போம் ! இப்போது வரையிலான 2015-ன் BEST எதுவென்ற உங்கள எண்ணங்களை அறிந்து கொள்ள மாத்திரம் இப்போதைக்கு ஆவல் ! 11 மாதங்களது சுமார் 44 இதழ்களுள் உங்கள் சிந்தையைக் கவர்ந்த இதழ் எதுவோ ? And why ? பதிவிடலாமே இந்த ஞாயிறை சற்றே சுறுசுறுப்பாக்கிட ?
Before I wind off - கடைசிக் caption எழுதும் போட்டியினில் (முதலைக்கு மேலே கார்சன் + டெக்ஸ் _ அந்த ஆரம்பத்து 'மினி லயன்' இதழின் பரிசைத் தட்டிச் செல்வது "உருவுது..உருவுது.."நண்பர் சரவணன் ! உங்களின் முகவரியை ஒரு மின்னஞ்சலில் தட்டி விடுங்களேன் நண்பரே !
And இந்த வாரத்துக்கு yet another போட்டி ! இதற்கு ஆரம்பத்து லயன் இதழைப் பரிசாக்கிடுவோமா ?
And before I sign off - சந்தாப் புதுப்பித்தலின் நினைவூட்டல் !!! ப்ளீஸ் - இன்னும் சற்றே வேகம் நண்பர்களே ?!! See you around ! Bye for now !
![]() |
| WORKS IN PROGRESS.... |