நண்பர்களே,
புதியதொரு மாதம் ! பள்ளி / கல்லூரி செல்லும் மாணாக்கருக்குப் புதியதொரு துவக்கமும் கூட !
'பலித்த மட்டிற்குப் பார்ப்போமே' என்று அம்மாமார்களின் உடும்புப் பிடியினிலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்திடும் குழந்தைகள் ! நேற்று வரை IPL மேட்ச்கள் பார்த்து விட்டு, மறு நாள் விட்டம் வரை விரியும் கொட்டாவிகளோடு பணிக்குச் சென்று வந்த தந்தைமார்கள்,இன்று பரபரப்பாய் டூ-வீலர்களிலும், சைக்கிள்களிலும், தத்தம் சிறார்களை பள்ளிக்குக் கூட்டிச் செல்லும் நேர்த்தி!....2 மாதங்களாய் sudoku போட்டுக் கொண்டிருந்த கடைக்காரர்கள் இப்போது நிமிர்ந்து பார்க்க நேரமின்றி நோட்டுக்களும் , புத்தகங்களும் விற்பனை செய்திடும் லாவகம் - என ஒரே நாளில் தான் எத்தனை மாறுபட்ட காட்சிகள் !!
சுறுசுறுப்பாய் துவங்கியுள்ள இந்த ஜூன் மாதம் ஒரு காலத்தில் நமக்கு ரொம்பவே 'கடுப்பேற்றும் மாதம்' என்ற ரகமாய் இருந்து வந்தது நிஜம் ! ஏப்ரல், மே இரு மாதங்களும் பள்ளி விடுமுறைகள் என்பதால் காமிக்ஸ் விற்பனை அட்டகாசமாய் இருந்திடும் -ஆனால் ஜூன் வில்லங்கமான மாதமாய் இருந்திடும் - உங்களில் பெரும்பான்மை பள்ளி செல்லும் மாணவர்களாய் இருந்து வந்த காரணத்தினால் !! காலம் தான் எத்தனை துரிதமாய் பயணித்து விட்டது !!
புதிதாய் டைம் டேபிள் போட்டு வகுப்புகள் துவங்கிடும் இப்புது மாதத்தில், சின்னதாய் நாமும் ஒரு டைம் டேபிள் போட்டால் என்னவென்று எனக்குத் தோன்றியது ! உங்களில் பலர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் சொன்னது போலவும் ஆகிடும்..சின்னச் சின்னதாய் புதிய சங்கதிகளையும் உங்களுக்குத் தெரிவித்த திருப்தியும் இருக்குமென நினைத்தேன் !அதன் பலனே இப்பதிவு !
![]() |
| June 15 releases ! |
![]() |
| July 15 release |
அதனைத் தொடர்ந்து ஜூலை 15 -ல் நமது "லயன் நியூ லுக் ஸ்பெஷல் " - ரூபாய் 100 விலையில் - முழு வண்ண லக்கி லூக் சாகசங்களுடன் ! இரு லக்கி லூக் கதைகள் முழு வண்ணத்தில், ப்ளஸ் ஒரு black & white கதை வந்திடும் ! (இந்தப் பக்கங்களில் நிச்சயம் மறுபதிப்புக் கதைகள் இருந்திடாது ...!!)
ஆகஸ்ட் மாதம் ரிப்போர்டர் ஜானியின் குத்தகையில்..! ரூபாய் 100 விலையில் - "பனியில் ஒரு பரலோகம்' முழு வண்ணத்தில் ! அத்தோடு கேப்டன் பிரின்சின் "பரலோகப் பாதை பச்சை" முழு வண்ணத்தில். So ஜானி & பிரின்ஸ் என்று நமது "பழைய கைகள் " ஒன்று சேர்கிறார்கள் ! இந்த "இடைத்தேர்தல் கூட்டணிக்கு" என்ன பெயர் சூட்டலாம் ? இந்த இதழுக்குப் பொருத்தமாய் ஒரு பெயரை உருவாக்கிடுவோமா ?! (இம்முறை பரிசாய் வடை இல்லாங்காட்டி ஒருபஜ்ஜியாவது நிச்சயம் உண்டு !! )
![]() |
| August'2012 |
அதே ஆகஸ்ட் 15ல், ரூபாய் 10 விலையிலான ஜானியின் "மரணத்தின் நிசப்தம்" black & white சாகசமும் கூட வெளி வந்திடும் ! So, ஜானியை வண்ண அவதாரத்திலும் சரி..கருப்பு வெள்ளையிலும் சரி..ஒரே சமயம் ரசித்திடப் போகிறீர்கள் ! உங்களின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள ஆகஸ்டில் எப்போதையும் விட அதிக ஆர்வமாய் காத்திருப்பேன் ! ஒரு டெஸ்ட் போட்டியும், ஒரு T20 மாட்ச்சும் ஒரே சமயம் பார்த்திடும் effect நிச்சயம் இருந்திடப் போகின்றது !!
| September'12 |
செப்டெம்பரில் ஒரு மாறுபட்ட combo காத்துள்ளது ! கேப்டன் டைகர் தோன்றும் "மரண நகரம் மிசூரி" முழு வண்ணத்தில்..பிளஸ் "எமனின் திசை மேற்கு" graphic novel - இரு அட்டகாசமான கௌபாய் சாகசங்களும் கரம் கோர்த்து வரவிருக்கின்றன ரூபாய் 100 விலையினில்!இரு கதைகளும் வண்ணத்தில் வந்திடும் !இரு கதைகளும் பிரெஞ்சு காமிக்ஸ் உலக ஜாம்பவான்களின் அசாத்தியப் படைப்புகள் !! பெயர் சூட்டிடும் அன்பர்களே..ஆர்வலர்களே...மீண்டும் உங்கள் சேவைக்கு வேலை வந்து விட்டது !இந்த மாறுபட்ட இதழுக்குப் பொருத்தமாய் ஒரு பெயர் உருவாக்கிடும் நண்பருக்கு ஒரு சிவகாசிப் பட்டாசு பார்சல் அந்த இதழோடு அனுப்பிடப்படும் ! So, get cracking guys..please !
![]() |
| October'12 - Diwali Special ! |
அக்டோபர் மாதம் நமது "சூப்பர் மூவர்" ; "சாகச Trio " தோன்றிடும் "லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" ரூபாய் 100 விலையினில் தீபாவளி மலராய் வந்திட உள்ளது ! இதில் எந்த மாற்றமோ ; ஒத்திவைப்போ ; நிச்சயம் இருந்திடாது guys ! ஸ்பைடர் & சட்டித் தலையன் ஆர்ச்சி கதைகளில் பட்டி டிங்கரிங் செய்திட இன்னும் சற்றே கூடுதலாய் எனக்கும் அவகாசம் கிட்டியுள்ளது !
![]() |
| November'12 |
நவம்பர் மாதம் திரும்பவும் டைகர் மாதமே ! இம்முறை "தங்கக் கல்லறை" பாகம் 1 & 2 இணைந்த முழு வண்ண மறுபதிப்பு...ரூபாய் 100 விலையில் ! இந்த இதழின் பின் பகுதியில் black & white -ல் - திகில் இதழ் # 2 மறுபதிப்பாக வந்திடும் ! So இது முழுக்கவே மறுபதிப்பு சமாச்சாரம் !
![]() |
| Dec'12 |
Rs .100 + (கூரியர் கட்டணம்) 25 = Rs .125 வீதம் x 4 இதழ்கள் = Rs 500
- லயன் Comeback ஸ்பெஷல்
- முத்து காமிக்ஸ் Surprise ஸ்பெஷல்
- லயன் நியூ லூக் ஸ்பெஷல்
- ஆகஸ்ட் மாத ஜானி + பிரின்ஸ் ஸ்பெஷல்
Rs.10 + (தபால் கட்டணம்) Rs .5 வீதம் = Rs.15 வீதம் x 6 இதழ்கள் = Rs .90
- விண்ணில் ஓரு குள்ளநரி
- கொலைகாரக் கலைஞன்
- சாத்தானின் தூதன் Dr .7
- சிவப்புக் கன்னி மர்மம்
- தற்செயலாய் ஒரு தற்கொலை
- மரணத்தின் நிசப்தம்
ஆக மொத்தம் : Rs .620
இந்தாண்டின் துவக்கத்தின் போது சந்தாத் தொகை நிர்ணயம் செய்திட்ட போது - ஸ்பெஷல் இதழ்கள் நான்கிற்கு மேல் நம்மால் முடியுமென நான் நிச்சயம் எதிர்பார்த்திடவில்லை ! உங்களின் அசாத்திய உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டதன் பலனே இந்த அதிசயம் என்று நான் சொல்வேன் ! Thanks for the awesome support guys !
செப்டம்பர் ; அக்டோபர் ; நவம்பர் & டிசம்பர் 2012 மாதங்களுக்கான இதழ்களுக்குக் கட்டணம் Rs .400 ஆகின்றது ! (3 x ரூபாய் 100 இதழ்கள் + 1 x Rs .10 + கூரியர் & தபால் கட்டணங்கள்). So ஜூலை மாதத்திற்குள் இந்தத் தொகையினை எங்களுக்கு அனுப்பிட்டால், தொடர்ச்சியாய் இதழ்களை இந்தாண்டின் இறுதி வரை அனுப்பிட ஏதுவாய் இருக்கும். Please make some time to transfer Rs.400 to our account guys ! பணம் அனுப்பிய பின்னர் lioncomics@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு "சந்தா நீட்டிப்பு" என்று தலைப்பிட்டு ஒரு இ-மெயில் ; உங்களின் செல் நம்பரோடு அனுப்பிடக் கோருகிறேன் ! இதோ -எங்களின் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பிடத் தேவையான விபரங்கள் :
2013 -க்கான புது இதழ்கள் பற்றிய சிந்தனை என் மண்டைக்குள்ளே ஓடிய வண்ணம் உள்ளன ! God willing அடுத்த ஆண்டு இன்னும் எக்கச்சக்கமான hi tech கதைகள் ; அற்புத அறிமுகங்கள் என்று உங்களை அசத்திட என்னால் இயன்றதை செய்வேன் !
இந்தப் பதிவிற்கு சுப மங்களம் போட்டிடும் முன்னே, சின்னதாய் ஒரு சேதி ! ஜூலை 15 -ல் வரவிருக்கும் "லயன் நியூ லுக் ஸ்பெஷல்"-ல் ஒரு அட்டகாச அறிவிப்பு காத்துள்ளது ! Keep guessing folks ! Bye for now !

























