Sunday, August 30, 2026

பேரைச் சொல்லவா.... 🎵🎵

 நண்பர்களே, 

வணக்கம் கபாலி படத்தில்  தலைவர் பேசும் வசனம் போல "வந்துட்டேன்னு சொல்லு.... போன மாதிரியே திரும்பவும் வந்துட்டேன்னு சொல்லு...." இன்று இல்லாவிட்டாலுமே, ஒரு ஜாலியான அடுத்த இன்னிங்ஸை துவங்கத் தேவையான உத்வேகத்தை போன வாரமே நீங்கள் கணிசமாய் வழங்கி விட்டுள்ளீர்கள். Thanks a ton all !! சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பதிவுகளைப் பறக்க விட வேண்டியதுதான் என்று மண்டைக்குள் மறுக்கா பதிவு செய்து கொண்டுவிட்டேன். காத்திருக்கும் செப்டம்பர் இதழ்களின் மீதங்களைப் பற்றி பேசுவதை தாண்டி இந்தப் பதிவில் எதனைப்  எழுதுவதென்று யோசிக்க அவசியமே ஏற்பட்டிருக்கவில்லை - becos வாரத்தின் நிகழ்வு ஒன்று பதிவின் தலைப்பை எனக்கு தேடித்தந்துவிட்டது...! 

வேறொன்றுமில்லை folks.... 2027 சார்ந்த அட்டவணைக்கான பணிகள் கிட்டத்தட்ட ஓவர் என்ற நிலையில் கதைகளுக்குப் பெயர் வைத்து finishing touches தந்து கொண்டிருந்தேன். ஜூனியர் எடிட்டருக்கு இப்போதெல்லாம் நான் பணியாற்றும் விதம் அத்துப்படி. காலையில் 6 மணிக்கு எழுந்தால் "ஆறரைக்கு ஆளைக்  காணோம்... !" என்று பெயர் வைப்பேன் என்பது தெரியும். 7 மணிக்கு எழுந்தால் ""எமனின் நம்பர் ஏழு " என்று பெயர் சூட்டுவேன் என்பதும் தெரியும். So நான் பணியாற்றுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவர், "ஒரே பெயரை மறுக்கா ரிப்பீட் செய்யாமல் எப்படி பார்த்துக் கொள்வீர்கள் ?" என்ற கேள்வியை முன்வைத்தான். நம்ம கைவண்ணத்திலேயே கிட்டத்தட்ட 1200 இதழ்கள் தயாராகி உள்ள நிலையில் எனக்கே அந்த கேள்வி 'ஆமால்ல....ஒரே தலைப்பை இருவேறு கதைகளுக்கு வைத்தும் தொலைத்திருக்கலாமோ ??' என்ற பீதி உருவாகியது. எதையோ சொல்லிச் சமாளித்துவிட்டு முந்தைய இதழ்களின் பட்டியலை எடுத்து ஒருவாட்டி வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த நொடியில் தோன்றியதுதான் தலைப்புகளை மையமாக்கி ஒரு பதிவு எழுதினால் என்ன என்று....?

ஒவ்வொரு கதைக்குமான முதல் திறவுகோல் அதன் தலைப்பு தான் என்பது நமக்குத் தெரியும். இந்தத்  தலைப்புகள் எவ்விதம் தலைக்குள் உதிக்கின்றன ? என்பது எனக்கே இன்றளவும் பிடிபடாத ஒரு புதிரே. வழக்கம் போல ரிவர்ஸ் கியர் போட்டு, லயனின் துவக்க நாளில் போய் நின்றால் - அந்த முதல் இதழான "கத்திமுனையில் மாடஸ்டி" கண்முன்னே நிழலாடுகிறது. ஒரிஜினலாய் இந்தக் கதையின் ஆங்கிலத்திலான பெயர் "The Vanishing Dollybirds"  - அதாவது "மாயமாய் மறைந்து போகும் சிட்டுக்கள்" என்ற அர்த்தத்தில்..! அதுவரையிலும் முத்துக்காமிக்ஸில் பெயர் வைப்பதைப் பார்த்திருந்து பழகியவனுக்கு, முதன்முறையாக நாமளே ஒரு பெயர் சூட்டணுமோ ? என்ற கேள்வி எழுந்தபோது, மண்டை மொத்தமாய் blank ஆகிப் போயிருந்தது. ஏதேதோ யோசித்துப் பார்த்தாலும், அன்றைக்கு சுத்தமாய் வண்டி செல்ப் எடுக்கவே இல்லை. முத்துக்காமிக்ஸில் அன்று மேனேஜராகப் பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியனிடம் ஒரு டைட்டில் மட்டும் வைக்கச் சொல்லி கேட்போம் என்றால் - நம்ம ஈகோ அதற்கு இடம் தரவில்லை. அந்தக் கதையின் sequence-ல் மாடஸ்டி இலக்காகி நிற்க, வில்லி கார்வின் அவளைச் சுற்றி கத்திகளை வீசுவார். அந்த ஒரு சீன் மனதில் ஸ்பஷ்டமாய் பதிந்திருக்க, "கத்தி முனையில் மாடஸ்டி" என்ற பெயர் உதயமானது. இது யாரோட கதை என்பதையும் தலைப்பிலேயே சொன்னது போலாயிற்று ; கொஞ்சம் பரபரப்பும் சேர்ந்த டைட்டிலாகவும் அமைந்துவிட்டது என்று நினைத்து அதையே லாக் செய்துவிட்டேன். இன்று யோசிக்கும் போது, அந்தக் கதைக்கு நிச்சயமாய் இன்னும் கொஞ்சம் பெட்டராய் தலைப்பு சூட்டியிருக்கலாம் என்றே படுகிறது. இரண்டாவது இதழுக்குச் சூட்டிய பெயரானது, முழுக்க முழுக்க முத்துக்காமிக்ஸின் தலைப்புகள் தந்த influence தான் காரணம் என்பேன். "மாயாவி in மாம்பலம்"..... "ஜானி in ஜக்கம்பட்டி"..... "லாரன்ஸ் in தல்லாகுளம்" என்று வைக்காத குறையாய், "இமயத்தில் மாயாவி"..... "நயாகராவில் மாயாவி".... "ஜானி in ஜப்பான்".... "ஜானி in லண்டன்".... என்ற ரீதியில் அந்நாட்களது முத்துக்காமிக்ஸ் இதழ்களில் சாகசங்கள் அரங்கேறும் நகரங்களை தலைப்போடு இணைத்திருப்பது என் நினைவில் இருந்தது. மாடஸ்டியின் அந்த இரண்டாவது ஆல்பமானது ஒரிஜினலாய் "The Junkmen" என்ற பெயருடன் இங்கிலீஷில் வெளிவந்திருந்தது. ஆனால் கதைக்களமோ இஸ்தான்புல் என்றவுடன் பச்சக்கென "மாடஸ்டி in இஸ்தான்புல்" என்று ஜோலியை முடித்துவிட்டேன். 

என் பார்வையில் மெய்யாலுமே கொஞ்சம் அர்த்தத்துடன் அமைந்த முதல் தலைப்பானது நமது தானைத்  தலைவரின்  "எத்தனுக்கு எத்தன்" தான் என்பேன் ! அங்குமே original பெயர் அட்டகாசமான ஒன்று The Man Who Stole New York. தமிழில் "நியூயார்க்கைத் திருடிய ஸ்பைடர், ஸ்பைடர் திருடிய நகரம், நகரத்தைக் காணோம், தலைநகரில் டெரர் என்றெல்லாம் ஏதேதோ யோசித்துப் பார்த்தது எனக்கு நினைவுள்ளது. ஆனால் அங்கெல்லாம் எழுந்த முதல் practical சிக்கலை அன்றுதான் அனுபவித்தேன். இன்றைக்குப் போல digital-ல் எழுத்துருக்களை உருவாக்க முடியாது என்பதால் ஓவியர்களே பெயர்களை அழகாய் எழுதித் தருவதுண்டு. எனது original-ஆன முழுப் பெயரைப் போல - சிங்கம்புணரியில்  ஆரம்பித்து ஸ்ரீ லங்கா  வரை நீண்டு செல்லும் title ஆக இருந்தால் painting-க்குள் அதை அடக்குவது நாக்குத் தள்ளும் வேலையாகி போய்க்கொண்டிருந்தது. So கொஞ்சம் க்ரிஸ்ப்பான பெயராய்  இருந்தால் தேவலாம் என்று எதார்த்தம் சொல்லியது. பற்றாக்குறைக்கு இது pocket size வேறு. ஆகையால் "ராஜாதிராஜ... ராஜகம்பீர.... ராஜமார்த்தாண்ட... என்றெல்லாம் இழுத்துக் கொண்டு போக இடமே இல்லை. அந்த நொடியில் எங்கேயோ மண்டைக்குள் strike ஆனதுதான் எத்தனுக்கு எத்தன் என்ற தலைப்பானது. அந்த இளிக்கும் ஸ்பைடரின் close-up மண்டையோடு இந்த title அழகாய் gel ஆனதாக எனக்குப் பட்டது. And the rest is history.....

அடுத்த மாதம் வந்த ஸ்பைடர் கதைக்கோ பெயர்  வைப்பது மறுபடியும் தண்ணீர் குடிக்கச்  செய்யும் சிக்கலாகிப் போனது. எதேதோ முயற்சித்துப் பார்த்தாலும் நச்சென்று  எதுவும் அமையவில்லை. அந்நாட்களில்  "டக்கர்" என்ற வார்த்தை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகமாகி சரளமாய் பேச்சுநடையில் ஐக்கியமாகியிருந்தது. அத்தனை போதாதா நமக்கு ? அந்த மெயின் வில்லனுக்கு "டாக்டர் டக்கர்" என்று பெயர் சூட்டிய கையோடு அதையே கதைக்கும் தலைப்பாக்கி வைத்தேன். மிச்ச மீதியை நமது சிரசாசன SMS-காரர் பார்த்துக் கொண்டார். தொடர்ந்து நாட்களில் கபாலர் கழகம், பாதாளப் போராட்டம், கொலைப்படை என்று வண்டி தடதடக்க ஆரம்பித்ததெல்லாம் நமது இஸ்திரியின் ஒரு பக்கம். ஓரளவிற்கு தலைப்புகளெல்லாம் நேர்கோட்டில் தட்டையாகவே லயனின் துவக்க நாட்களில் அமைந்திருந்தன என்று சொல்வதுதான் பொருத்தமென்று நினைக்கிறேன். எல்லாமே கதையை நேரடியாய் சுட்டிக்காட்டும் விதத்தில் - பழிவாங்கும் பொம்மை, காணாமல் போன கடல், யார் அந்த மினி ஸ்பைடர், தலைவாங்கிக்  குரங்கு என்ற ரேஞ்சிலேயே இருந்து வந்தன. எனக்குத் தெரிய தலைப்புகளில் கொஞ்சமாய் ஒரு வித்தியாச பாணியைத் துவக்கித் தந்தது நமது திகில்தான். 

ஒரு iconic தலைப்பாக, 40 ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்திடும் இரத்தப் படலம் அதற்கொரு உதாரணம் என்பேன். எனக்கு நினைவில் உள்ள வரைக்கும் அந்நாட்களில் maximum மொக்கை போட்டது இந்த தலைப்பிற்காகத் தான். கதையே முற்றிலும் வித்தியாசமான பாணியிலானது.... and நாம் எதிர்பார்த்திருந்ததற்கு நேர்மாறான துவக்கம் கொண்டது. இந்த அழகில் கதை ஒரு தொடர் வேறு. So, இழுத்துப் போட்டு மொத்துவீர்களா..? தெளிய வைத்துச் சாத்துவீர்களா ? என்பது மட்டுமே அன்றைக்கு எனது பிரதான பயமாக இருந்தது.​ எத்தனை யோசித்தாலும் ஒரு கிளாசிக் தலைப்பு அமையவே இல்லை. "நினைவைத் தொலைத்தவன்".... "நினைவுகளைத் தேடி"..... "இறந்தகால வேட்டை" என்றெல்லாம் மொக்கை மொக்கையாய் தலைப்புகள் தான் தலைக்குள் தாண்டவமாடின. அன்றைய குழப்பத்தில். out of the blue தோன்றியது தான் இரத்தப் படலம் என்ற அந்த டைட்டில். ​தலையில் காயம்பட்டு நினைவிழந்த நிலையில் நமது XIII கரை சேரும் போது, ஏதோ ஒரு sequence-ல் அவரது நினைவுகள் முழுமையும், ரத்தக் கசிவில் அழிந்து போயிருக்கக்கூடும் என்பது போன்றான காட்சி எனக்கு முக்கியமானதாகப் பட்டது. ஆக, கதை நெடுக ரத்தம் சிந்துவது ஒரு பக்கம் இருக்க, நாயகனின் அந்த நினைவற்ற நிலைக்கே மூளையைச் சூழ்ந்திருக்கும் ரத்தப்படலமே காரணம் என்ற ரீதியில் தலைப்பு அமைந்தால் மோசமில்லை என்று தான் நினைத்தேன். 40 ஆண்டுகள் கழித்தும் நமது பயணத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்டிருக்கும் பெயராக அது பின்நாட்களில் அமைந்திடும் என்பது அன்றைய 19 வயது எடிட்டருக்கு சர்வநிச்சயமாய் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. கேப்டன் பிரின்ஸின் பனிமண்டலக் கோட்டை என்ற தலைப்புமே எனக்கு கம்பீரமானதாய் அன்றைக்கே பட்டது. அந்த அட்டைப் படத்திற்கும் அந்த தலைப்பிற்கும் அழகாய் ஒரு harmony செட்டாகி இருப்பதாக நினைத்தேன். திகில் இதழ்களில் வித்தியாசமான titles தொடர்ந்தது மறுவருடம் 'சாவதற்கு நேரமில்லை' என்ற தலைப்போடு. தொடர்ந்த மாதங்களில் 'முகமற்ற கண்கள்', 'சிரித்துக் கொல்ல  வேண்டும்', 'பற்றி எரியும் பாலைவனம்', 'மரணத்தின் பல முகங்கள்', 'இறந்தவனைக் கொல்லாதே' என்றெல்லாம் நமது தலைப்புகளின் range ஒரு படி வீரியம் பெற்றிருந்தது என்றே சொல்வேன்.

​திகிலில் தலைப்புகள்  கொஞ்சம் வித்தியாசமாக இருந்தன என்றால், மினி லயனிலும், ஜூனியர் லயனிலும் அந்தச் சிக்கலே இருக்கவில்லை. எல்லாமே நேர்கோட்டுக் கதைகள், கார்ட்டூன்கள் என்றபோது - 'ராஜா ராணி ஜாக்கி', 'விண்வெளியில் ஒரு எலி', 'ஒரு நாணயப் போராட்டம்', 'எழுந்து வந்த எலும்புக்கூடு' என்று பஜக் பஜக்கென போட்டுத் தாக்குவது சாத்தியமாகி இருந்தது. And by then - இந்தப் பெயரிடும் படலங்கள் பெரும் கம்பு சுற்றும் கடினங்களாக இருந்திருக்கவுமில்லை ! ஒருகட்டத்தில் கதையோடு பயணிக்கும்போதே தலைக்குள் எழும் முதல் தலைப்பே பொருத்தமானதாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் குடியேறத் தொடங்கியிருந்தது. அப்போதெல்லாம் இப்போது போல 'ஏக்' தம்மில் ஒரு வருஷ அட்டவணைகளை கண்ணில் காட்டும் அவசியங்கள் லேது எனும்போது, அந்த மாதத்து இதழின் கடைசிப் பக்கத்தில் அடுத்த இதழாய் செய்திட வேண்டிய விளம்பரத்திற்கு ஆர்ட்டிஸ்ட்டுகள் விவரம் கேட்கும்போதுதான் இந்தத் தலைப்புப் பஞ்சாயத்தே தலைதூக்கும். So அவசர அவசரமாகவே முக்கால்வாசி நேரங்களில் பேர்களைச் சூட்ட வேண்டியதிருக்கும்.

​இந்த ஊர்களை சம்பந்தப்படுத்தும் பாணியானது அவ்வப்போது கைகொடுக்கத் தவறியதும் இல்லை. எதுவும் தோணாத பட்சத்தில் - 'பிரின்ஸ் in ஆப்பிரிக்கா', 'ஆர்ச்சி in பாரிஸ்' என்றெல்லாம்  தலைப்புகளாக்கியும் விடுவதுண்டு. இடையிடையே 'பெர்முடா படலம்', 'மெக்ஸிகோ படலம்' என்றெல்லாம் படலப் படலங்களும் தொடர்ந்து வந்தன.

​லயனில் கம்பீரமான தலைப்புகள் என்று இன்றும் எனக்குப்படும் சில - நமது இரவுக் கழுகாரின் சாகசங்களைச் சொல்வேன். 'கார்சனின் கடந்தகாலம்' ஒரு cult hit என்பதற்கு அந்தத் தலைப்பும் சிறியதோர் அளவில் உதவியதென்றால் மிகையில்லைதானே ? அப்புறம் மூன்று அத்தியாய சாகசமான 

'ரத்த ஒப்பந்தம்', 'தணியாத தணல்', 'காலன் தீர்த்த கணக்கு

என்ற காம்போ இன்றும் எனக்கு நினைவிலிருக்கும் titles.

தலைப்புகளில் "சாவுக்கு சா, காவுக்கு கா" என்று ரைமிங்காக வார்த்தைகள் அமைந்தால் வேலை சுலபம் என்பதும் அந்த பூமர் காலத்து mindset.​ அதற்கேற்ப பார்த்தீர்களெனில் 

'ஆர்ச்சிகோர் ஆர்ச்சி', 

'கானகத்தில் கண்ணாமூச்சி', 

'வாரிசு வேட்டை', 

'யமனுக்கு யமன்', 

'திக்குத் தெரியாத தீவில்', 

'யமனோடு யுத்தம்', 

'ஏரியில் ஒரு எரிமலை', 

'பலி கேட்ட புதையல்', 

'மேடையில் ஒரு மன்மதன்', 

'பூமிக்கொரு பிளாக்மெயில்' 

என்று அடுக்கிக் கொண்டே போகலாம். நம் நேரத்திற்கு அதுபோலான ரைமிங் தலைப்புகள் கதையோடும் எப்படியோ பொருந்திப்போய்விட, அந்நாட்களில் உங்களை impress செய்வது எனக்கு சாத்தியமாகிப் போனது. இன்னும் பட்டியலை எடுத்துப் பார்த்தால் கெக்கபிக்கவென்று சிரிப்புதான் வருகிறது. 

'கானகத்தில் கலவரம்', 

'பறக்கும் பரலோகம்', 

'மலையோடு மல்யுத்தம்',  

என்று இஷ்டத்திற்கு போட்டுத் தள்ளியிருக்கிறேன்.

​இந்தக் கூட்டணி இதழ்கள் — அதாவது பல கதைகளின் combo-வில் வந்த இதழ்களுக்கு எப்படியோ அந்நாட்களிலேயே, கம்பீரமாகவே தலைப்புகள்  செட்டாகி இருப்பதாக  இன்று லிஸ்ட்டைப் பார்க்கும்போது மனதில் படுகிறது. 'லயன் மெகா ட்ரீம் ஸ்பெஷல்' ஆரம்பித்து வைத்த பாணியை 'லயன் ஜாலி ஸ்பெஷல்', 'கவ்பாய் ஸ்பெஷல்' என்றெல்லாம் தொடர்ந்திருந்தோம்.

​ஆனால் மெய்யாலுமே எல்லாமே ஒரு கியர் உசக்கே செல்ல ஆரம்பித்தது நமது இரண்டாம் வருகையைத் தொடர்ந்தான தருணங்களில்தான் என்பேன். நாம் கம்பேக் செய்த நொடியில் எனக்கு அந்த இதழினை 'The கம்பேக் ஸ்பெஷல்' என்று பெயரிட அரைக்கால் நொடி கூட பிடிக்கவில்லை. 'இல்ல இல்ல, நாங்க எப்பயும் போல இங்கேயே இருக்கத்தானே செய்கிறோம்' என்று பாசாங்கெல்லாம் செய்திடத் தோன்றவே இல்லை. 'ஆமாம், தேசாந்தரம் போயிருந்தோம், இதோ திரும்ப வந்தாச்சு' என்று சொல்வதில் ஒரு நயம் இருக்கும் என்று மனதில்பட்டது. So, அதைக் கொண்டு அமைத்ததுதான் 'The கம்பேக் ஸ்பெஷல்' என்ற தலைப்பு. அதைத் தொடர்ந்து வந்த சில தலைப்புகளெல்லாம் நீங்கள் வழங்கியவை. 

'லயன் நியூ லுக் ஸ்பெஷல்', 

'லயன் டபுள் த்ரில் ஸ்பெஷல்', 

'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்', 

The Wild West ஸ்பெஷல்

'ஹாட் அண்ட் கூல் ஸ்பெஷல்', 

'ஆல் நியூ ஸ்பெஷல்' 

என்றெல்லாம் வரிசைக்கு ஸ்பெஷல் தோசைகளை சுட்டுத்தள்ள ஆளுக்கொரு கை மாவு நல்கிய நாட்கள் மறக்க இயலாதவை.

​நமது இரண்டாம் வருகையில் முதல் வித்தியாசமான தலைப்பாக எனக்குப் படுவது 'Green Manor'. அந்தத் த்ரில்லிக்கச் செய்யும் சிறுகதைத் தொகுப்பிற்கு 'மனதில் மிருகம் வேண்டும்' என்று வைத்தது ரொம்பவே 'ரிச்'சான தலைப்பு என்று இன்றைக்கும் எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அதேபோல ஏதோ ஒரு ஜனவரியின் புத்தக விழா சமயத்தில் வெளியான கமான்சே இதழுக்கு 'யுத்தம் உண்டு எதிரி இல்லை' என்ற டைட்டில் கூட நம்ம ரேஞ்சுக்குக் கவித்துவமான தலைப்பாக இன்றும் கவிஞர் முத்துவிசயனாருக்குத் தோன்றுவதுண்டு. ​'எஞ்சி நின்றவனின் கதை' என்ற தலைப்பிலும் ஒரு கம்பீரம் இருப்பதை உணரலாம். 'நில் கவனி சுடு' என்று நம்ம தலை தெறிக்கவிட்டது 2014-ன் ஹைலைட் என்று நினைக்கிறேன். தொடர்ந்த தலைப்புகளுள் 'ஆத்மாக்கள் அடங்குவதில்லை' என்பதும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்ததொரு பெயர். And of course, மறக்கவே முடியாத 'லயன் மேக்னம் ஸ்பெஷல்'! இந்தப் பெயருக்கு எத்தனை அலசி ஆராய்ந்து இதில் fix ஆனோம் என்பதெல்லாம் இந்தப் blog-ன் ஒரு மறக்க இயலாத அத்தியாயம் என்பேன்.

​அதனைத் தொடர்ந்து வந்த 'தேவரகசியம் தேடலுக்கல்ல' தலைப்பு உருவான விதம் இந்த நொடி கூட எனக்கு நினைவிலுள்ளது. கதையெல்லாம் வந்தாச்சு, அட்டகாசமான கதை என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஆனால் ஏனோ டைட்டில் மட்டும் 'சிங்கிடி ஜிங்கிடி' ரகத்தில்தான் செட் ஆகிக் கொண்டே இருந்தது. உச்சரிக்கும்போதே பவர்ஃபுல்லான உணர்வைத் தரும் விதமாய் இந்த டைட்டில் அமைந்தால்தான் ரசிக்கும் என்ற எண்ணத்தில் அல்லாடிக் கொண்டிருந்தேன். பொதுவாகவே சிவகாசியில் அத்தனை பெரிய வீதிகளும் கிடையாது, ஆளைத் தூக்கிப் போகும் traffic-ம் கிடையாது. ஆகையால் வீட்டிற்கோ, ஆபீஸிற்கோ போகும்போது மண்டையை இதுபோல் ஏதேனும் சிந்தனைகளுக்குள் தொலைத்துவிட்டபடியே பயணிப்பது வழக்கம். நம்பினால் நம்புங்கள் guys, மிகச்சரியாக நமது ஆபீஸுக்குச் செல்லும் வழியில் உள்ளதொரு தேவாலயத்து வாசலைக் கடப்பதற்கு முன்னே மண்டையில் flash ஆன டைட்டில்தான் இது ! நம்ம சோன்பப்டி தாடி லியோனார்டோ தாத்தாவின் தலைக்குள் ஐடியா பல்ப் பளீரென்று எரிவது போல், அந்தப் பகலில் சாலையோரமாய் என் தலைக்குள் உதித்ததுதான் 'தேவரகசியம் தேடலுக்கு அல்ல'. கிட்டத்தட்ட அதே  நேரத்தில் வாங்கி இருந்த இன்னொரு கதையான 'THE HALLOWEEN BLUES' என்ற ஆல்பத்திற்கும் இதே போலவே ரோட்டில் ஷண்டிங் அடிக்கும் போதுதான் தலைப்பு செட் ஆனது. ​12 ஆண்டுகள் கழிந்தும் கைவசம் ஸ்டாக் இருந்தாலும் கூட, இன்னமும் ஒவ்வொரு புத்தக விழாவையும் தெறிக்கவிடும் அந்தத் திகில் ஆல்பத்தின் வெற்றிக்கு ஒரு சிறு காரணமாய் அமைந்திருப்பது 'இரவே..இருளே....கொல்லாதே' என்ற அந்த தலைப்புதான் என்பேன். தொடர்ந்த நாட்களில் 'வல்லவர்கள் வீழ்வதில்லை', 'நித்தமும் குற்றம்', 'ரௌத்திரம் பழகு', 'ஆதலால் காதல் கொள்ளாதீர்', 'சாத்வீகமாய் ஒரு சிங்கம்', 'வாராதோ ஒரு விடியலே' என்றெல்லாம் வண்டி ஓடி வந்தது.

​நடுநடுவே "கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" என்ற ரேஞ்சில் சில தலைப்புகளும் தொடராதில்லை ! 'மரணத்தின் நிறம் பச்சை', 'சீற்றத்தின் நிறம் சிகப்பு', 'என் சொக்காயின் நிறம் நீலம்' என்ற ரேஞ்சுக்கு நடுநடுவே டைட்டில்களைப் போட்டு, தஞ்சாவூர் கல்வெட்டுகளில் இல்லாவிட்டாலும் ஏதாச்சும் ஒரு வயல்காட்டில் எழுதி வைக்கப் பேர்கள் உருவாக்கிய இஸ்திரி நமக்கு உண்டு. தொடர்ந்த நாட்களில் 'பிரியமுடன் ஒரு பிணையக்கைதி', 'கேடியும் ஒரு கோடியும்', 'தற்செயலாய் ஒரு ஹீரோ' என்றெல்லாம் பயணித்துக் கொண்டிருந்தபோது, another good one என என்னை நினைக்கச் செய்தது 'சர்வமும் நானே' என்ற தலைப்புதான். 

நிஜத்தைச் சொல்வதானால் அந்த சாகசத்திற்கு இந்தத்  தலைப்பானது முழுப் பொருத்தம் என்றெல்லாம் சொல்லவே மாட்டேன். மாறாக அது நமது பயணத்தில் சகலமுமாய் அமைந்து போய்விட்டிருந்த தலைவர் டெக்ஸின் பெருமையைப் பறைசாற்றும் பெயராக நான் பார்த்தேன். And அதே கோணத்தில் நாம் அனைவருமே பார்த்தோம் என்பது அந்த இதழின் smash hit ஸ்டேட்டஸுக்குக் காரணமாகிப்போனது மெய்தானே...? ​'நீதிக்கு நிறம் ஏது..?', 'திரை விலகும் நேரம் இது', 'தடை பல தகர்த்தெறி', 'இது கொலையுதிர்காலம்' என்றெல்லாம் சற்றே வித்தியாசமான titles சகிதம் நமது பயணம் தொடர்ந்தது இந்த இரண்டாவது இன்னிங்ஸின் போது. இப்போதெல்லாம் கதையோடு டிராவல் செய்வது போல், அதே சமயம் தலைப்பிலேயே கதையைப் போட்டு உடைத்துவிடாத பாணியில் டைட்டில்ஸ் இருக்க வேண்டும் என நிரம்பவே மெனக்கெடுகிறோம். இதோ சமீப டெக்ஸ் கதைகளில் கூட கொஞ்சம் வழக்கமான ஆக்ஷன் டெம்ப்ளேட் இல்லாமல் 'என் இனிய பொய்யே', 'உதிரம் பொழியும் நிலவே', 'தலைநகரில் தலைமகன்', 'பனிமண்டல போராளிகள்' ; நித்திரை மறந்த நித்தியன் என்றெல்லாம் வித்தியாசம் காட்ட முனைந்து வருகிறோம். Of course, sometimes we get it right, sometimes we don't. ஆனால் by far இந்த இரண்டாவது இன்னிங்ஸில் நமது பெயர் சூட்டல்கள் துவக்க நாட்களை விட ஒரு படி பெட்டர் என்பதே எனது எண்ணம்.

As titles go, இன்றைக்கு என் தலைக்குள் TOP என்று படும் சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறேன் பாருங்களேன்:

​பிஸ்டலுக்கு பிரியாவிடை

​சாம்பலின் சங்கீதம்

​நிஜங்களின் நிசப்தம்

​கர்மாவின் சாலையில்

​மறந்தும் மறவாதே

​கலாஷ்னிகோவ் காதல்

நித்திரை மறந்த நியூ யார்க் 

என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்

​உங்களது நினைவில் நிழலாடும் தலைப்புகளைப் பற்றி சொன்னீர்களெனில் இந்த பதிவை கொஞ்சம் களைகட்ட செய்யலாம் மக்களே. Why not give it a try?

And - இரத்தப் படலம் சாகசத்தை முழுமையையும் இன்று அறிவீர்கள் ! இந்த நொடியில் - அதற்கு சாலச் சிறந்த தலைப்பாய் ஒன்றைச் சூட்டுவதாயின் உங்க சாய்ஸ் என்னவாக இருக்கும் guys ? ஆளுக்கு மூன்றே பெயர்கள் தான் !! ஓ.கே.வா ?

அப்புறம் செப்டெம்பர் புக்ஸ் எல்லாமே பைண்டிங்கில் உள்ளன folks - புதன் or வியாழனன்று கிளம்பிடும் ! இதோ - அவற்றின் அட்டைப்பட ப்ரீவியூஸ் மாத்திரம் இங்கே ! புக்ஸ் புறப்படும் தினத்தன்று அவற்றின் களங்கள் பற்றி எழுதுகிறேன் - இந்தப் பதிவினை இதற்கு மேலும் நீட்டிக்க தம் லேது !! 




Bye all...see you around ! பூனைமண்டை டிடெக்டிவ் சாரோடு இந்த ஞாயிறு பயணிக்க வேண்டியுள்ளது !! Have a lovely Sunday !!


167 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. மூன்று அட்டைப் படங்களும் கலக்கலாக இருக்கிறது

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த தலைப்புகள்

    லயன் சூப்பர் ஸ்பெசல்
    லயன் டாப் டென் special
    பாதளப் போராட்டம்
    அப்போ

    தற்செயலாய் ஒரு ஹீரோ
    பனியில் ஒரு குருதிப் புனல்
    நித்தமும் குற்றம்
    என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்

    இப்போ

    ReplyDelete
  4. இந்த பெயர் வைக்கும் படலம் நீங்கள் எளிதாக சொன்னாலும் ரொம்பவே கஷ்டமான வேலை ஆசிரியரே அதுவும் நீங்கள் டக் கென வைத்த பெயர் என்றாலும் மிகப்பொருத்தமான பெயர் தற்செயலாய் ஹீரோ
    மலையோடு மல்யுத்தம்

    ReplyDelete
  5. .எனக்கு பிடிச்ச சில.
    1.என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்
    2.காத்திரு நீ கண்ணாளா
    3.புரட்சி தீ
    4.வதம் செய்வோம் வேங்கைகளே
    4 குருதியில் பூத்த குறிஞ்சி மலர்
    5.கோடியும் ஒரு கேடியும்
    6.மரண நடை
    7.ஒரு விடுமுறை வில்லங்கம்
    8.சிறையில் ஒரு சிட்டுக் குருவி
    9.கனவே கலையாகவே
    10.நிழலும் நிஜமும்

    ReplyDelete
  6. ,கேப்டன் டைகரின் தலைப்புகள் அனைத்துமே சூப்பர் !

    ReplyDelete
  7. எனக்கு பிடித்த டைட்டில்கள் ஓராயிரத்து இருநூறு நீங்கள் கேட்டதால் டாப் 10
    1.கலாஷ்னிகோவ் காதல்
    2.நெஞ்சே எழு
    3.போர் கண்ட சிங்கம்
    4.இருளின் ராஜ்யத்தில்
    5.தங்கக் கல்லறை
    6.வல்லவர்கள் வீழ்வதில்லை
    7.அப்பல்லோ படலம்
    8.ஒற்றை நொடி ஒன்பது தோட்டா
    9.எமனுடன் ஓரு யுத்தம்
    10.அந்தியும் அழகே

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே... 🙏🙏

    ReplyDelete
  9. கலக்கல் அட்டைப்படங்கள்.. 💥💥💥

    ReplyDelete
  10. வாவ்..பதிவு வந்து விட்டதா...?!

    வாசித்து விட்டு வருகிறேன் சார்...:-)

    ReplyDelete
  11. யார் அவள்..?
    சத்தியமாய் இது இந்தியாவில் உருவாக்கப்பட்டது என்றால் நம்ப முடியவில்லை.
    கதையின் மூலக் கருவும்,கதை நடையும் அபாரம்
    நமது காமிக்ஸில் வந்த பெண் கேரக்டர்களில் மிகவும் அழகான பெண் என்று நான் நினைத்தது இது நாள் வரை டைலன் டாக்கின்
    "சட்டைப். பையில் சாவு" கதையின் நாயகி செலின் கேரக்டர்தான்.
    இந்த மாயா செலினை விடவும். அழகு.
    மனதைக் கவர்ந்த வசனங்கள்:;
    அன்பு என்பது வெறும் வார்த்தைகளால் அளக்கப்படுவதில்லை. மாறாக நம்மை நம்பியுள்ளோரை நாம் எப்படி பார்த்துக் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.

    எத்தனை சாமர்த்தியமாய் பொய்களை மறைத்தபடியே நாம் பரமபிதாவின் ஆலயத்திற்குள் நுழைந்தாலும் உண்மை நம்மை தேடிக்கண்டு பிடித்துவிடும்..
    தேர்ந்தெடுத்த குழந்தைகளை மட்டும் நேசிப்பது இறைவனின் வழியல்ல. எல்லாக் குழந்தைகளையும் சமமாக நேசிக்கவே அவர் சொல்கிறார்

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விமர்சனம் சார் 😍

      Delete
    2. அட்டகாசம் சார்!

      Delete
    3. அருமை ராஜசேகர் சகோ

      Delete
  12. யார் அவள்?
    அனைத்துவிதங்களிலும் சர்வதேசத் தரத்திலான ஒருபடைப்பு..ஹாட்ஜ் ஆஃப் ஜுனியர் எடிட்டர் சார்

    ReplyDelete
  13. இந்த தலைப்புகளை பற்றி பேசும் பொழுது தளத்தின் ஆரம்ப காலங்களில் சில திரைப்பட இயக்குநர்கள் தனது படத்தின் தலைப்பிற்கு அல்லாடுவதையும்...அந்த தலைப்பு என்னுடையது என வழக்காடுவதும் இருக்க ஆயிரக்கணக்கில் தலைப்பு வைக்கும்எங்கள் ஆசிரியரிடம் கதையை சொல்லி தலைப்பை கேளுங்கள் என பதிவிட்டது நினைவு வருகிறது சார்...:-)

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்களிடம் கற்ற யானைப்பாலின் உபயம் தலீவரே 💪

      Delete
  14. டெக்ஸ் அட்டைப்படம் அருமை சார்...இதழை எப்பொழுது கைகளில் ஏந்துவோம் என இப்பொழுதே ஆவல்...

    ReplyDelete
  15. சார், உங்களின் பல வீரியமான தலைப்புகளை பார்த்து வியந்தது் உள்ளேன்..ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம்.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் போல… என்னை சமீபத்தில் மிகவும் கவர்ந்த தலைப்பு: “திக்கெட்டும் பகைவர்கள்”.

    ReplyDelete
    Replies
    1. இளம் டெக்ஸ் தொடருக்கு பெயரிடுவது சுலபம் சார்...!

      Delete
  16. *யார் அவள்*

    Karma is a Bitch. அப்படி உண்மையாலுமே இருந்தா இந்தக் கதைல வர மாதிரி நடந்தா நல்லாருக்கும். சிம்பிளான நேர்கோட்டுக் கதை. அமானுஷ்யமான சம்பவங்கள். அதை தொடர்ந்த கேள்விகள். கடைசில பதிலளிக்கும் விதமா ஒரு சின்ன பிளாஷ்பேக்.

    AI ஓவியங்களாக இருந்தாலும் கதைக்கு பொருத்தமாக நச்சென இருக்கிறது.

    20 ரூபாய் விலையில் வாசிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கிய கதையில் கதை சொல்லும் உத்தி, லாஜிக் என்பதெல்லாம் யோசிக்கவே தேவையில்லை. அந்தக் கேள்விகளுக்கான பதில்களை தேடி நகரும் கதை ஆர்வமூட்டும் வகையில் நகர்கிறதா என்பதே முக்கியம். யெஸ் என்பதே அதற்கான பதில்.

    *I liked it*

    Pages: 50
    Black&White
    Price: Inr 45 (Book Fair Price 20 for Students )

    மிஸ்டர். ஷெரீப்..

    ReplyDelete
    Replies
    1. ஷெரீப் அவர்களின் விமர்சன பதிவு...:-)

      Delete
    2. ஷெரீப் அவர்களின் விமர்சன பதிவு...:-)

      Delete
    3. பாத்ரூமில் இருந்து அதிபர் பதிவு போட்டிருப்பாரோ - அல்லது நீங்க போட்டிருப்பீங்களோ... 🤔🤔.... எதிரொலிக்குதே தலீவரே 🤔🤔?

      Delete
    4. என்னைக் கண்டாலே அச்சத்தில் பாத்ரூமில் பதுங்குகிறார் தலீவர்னு கேள்விப்பட்டது உண்மை தானா.

      Delete
    5. சார், சும்மா எங்க தலைவர் கையை பிடிச்சு இழுக்காதீங்க சார், அப்புறம் பதுங்கு குழிக்குள் மீண்டும் போய் விடுவார் சார்.

      Delete
    6. எமோஜி போட முடியலைன்னு சொல்லிட்டு எங்க தலீவரை கலாய்க்க மட்டும் வேலை செய்கிறது போல

      Delete
  17. அமெரிக்க அதிபரின் அடுத்த விமர்சன பதிவு...

    *உதிரம் பொழியும் நிலவே*

    நீண்ட நாளா காமிக்ஸ் மட்டுமில்லே. பாட புத்தகங்கள் தவிர வேற எதும் வாசிக்க எடுக்கலை. More than two years.

    இந்த மாதிரி சமயங்களில் திடீர்னு ஒரு 2 நாள் சும்மா விட்டத்தை பாத்து கொட்டாவி விட சான்ஸ். எதை படிக்கலாம்னு நினைச்சாலும் போன் இழுக்க உதவிக்கு இரவுக்கழுகாரை கூப்பிட வேண்டியதாச்சு.

    தேடுதல் & வேட்டை தான் கதை. நீண்ட நாட்களுக்கு பிறகு சூழ்ச்சிகளிலும், உடல் வலுவிலும் பலமான எதிரியை சந்திக்க நேரிடுகிறது. டெக்ஸ் வேட்டையாடுகிறாரா அல்லது வில்லன் டெக்ஸை வேட்டையாடுகிறானா என்று குழம்பும் அளவுக்கு சாதுர்யமாக காய்களை நகர்த்துகிறான் வில்லன். இதில் குடும்ப சென்டிமென்ட் வேறு. 260 பக்கங்கள். ஒரு சாதாரண ஒன்லைனை சின்ன சின்ன சம்பவங்களால் ஆர்வமூட்டும் வகையில் சொல்லியிருக்கிறார்கள்.

    *I enjoyed it*
    260 பக்கங்கள்
    கருப்பு வெள்ளை
    விலை ரூ. 200

    ReplyDelete
  18. எனக்கு எப்போதும் பிடித்த தலைப்பு-வல்லவர்கள் வீழ்வதில்லை.

    ReplyDelete
  19. அப்பப்பா....
    "இரத்தப்படலம் "தலைப்பு வைத்த பிண்ணணியை ரொம்ப காலமாக கேட்டிருந்தேன்...
    அத்தனை பாகங்களையும்
    ஒரு வட்டத்திற்குள் கொண்டு வரும் அருமையான தலைப்பு...
    சூப்பர் சார்...

    ReplyDelete
  20. எனக்கு மிகவும் பிடித்த டைட்டில்
    பூம்பூம் படலம் - Nitroglycerin என்ற ஆங்கில டைட்டிலை காட்டிலும் ஒரு அட்டகாசமான பொருத்தம் ஒரு கார்ட்டூன் காமிக்ஸிற்கு...!

    எனக்கு ரொம்ப disappointed டைட்டில் என்று சொன்னால் அது போர் கண்ட சிங்கம். Morning Star என்ற டைட்டில் எனக்கு பெரிய ஆர்வத்தை தூண்டியது. ஆனால் அதில் கதையுமே எனக்கு disappointed தான். வழக்கமான லார்கோ பாணி. பங்குச் சந்தை பற்றி பெரிதாக எதிர்பார்த்தேன்.
    அந்த தலைப்பில் நெறைய சுவாரஸ்யாக பண்ணியிருக்க முடியும் என்பது என் எண்ணம்...!!

    ReplyDelete
    Replies
    1. கதைகளை முழுக்கப் படிச்சு, அலசி, ஆராய்ந்த பிற்பாடு ஏகமாய் எண்ணங்கள் பிரவாகமெடுப்பதில் வியப்பே லேது சார்! ஆனால் வெறும் நாலு வரிகளில், கதைச் சுருக்கத்தை மட்டுமே படித்த கையோடு, ஒரு வருஷத்துக்கு முன்னமே பெயர் சூட்டும் போது - வறட்சியே தாண்டாவமாடும்!

      Delete
  21. சார் டைட்டில் அப்புறம் உங்கள் பதிவு 100000000 Super

    ReplyDelete
  22. தலைப்பு என்றதும் இன்னொரு தலைப்பு அதிகமாக வந்திருக்கிறது.
    மடாலய மர்மம்
    மர்மத்தீவு
    மிஸ்டர் எக்ஸ் மர்மம்
    போன்றவை.

    ReplyDelete
  23. ஆத்திச்சூடி தலைப்பு
    ஓட்டமதை கைவிடேல் சூப்பர் டைட்டில் சார் டெக்ஸ் வில்லருக்கு இ பொருத்தமான டைட்டில்கள் உங்களால் எப்படி கொடுக்க முடிகிறது என்பது ஒரு அபூர்வம்தான் சார்.

    ReplyDelete
    Replies
    1. இளம் டெக்ஸ் தொடருக்கே பொருத்தமான தலைப்பாச்சே சார்....

      Delete
  24. இரத்தப் படலம் தலைப்பிற்கு மாற்றாக

    நிஜத்தைத் தேடிய நிழல்
    நினைவுகளை துரத்திய நிஜம்
    ஒரு தேடல் படலம்

    ReplyDelete
    Replies
    1. மறுக்காவும் படலமா 🤕🤕

      Delete
  25. வெகு நாட்களுக்குப் பின், வழக்கமான பாணியில் ஒரு பதிவை படித்த உணர்வு இன்று...!

    பெயர் வைக்கும் சம்பவங்களைப் பற்றி முன்பொறுமுறை, நீங்கள் குறிப்பிடும் போது:

    ...காலையில் படுக்கையில் இருந்து எழுந்து, வலது பக்கம் இறங்கினால் படலம், இடது பக்கம் இறங்கினால் மர்மம் என்ற ரீதியில் பெயர்களை வைத்திருக்கிறேன் என்று சொல்லியது இப்போது என் நினைவுக்கு வந்துள்ளது..."

    ReplyDelete
    Replies
    1. தலைப்புகள் தலைக்குள் தாமாய் துளிர் விடுபவை சார்! பெருசாய் யோசித்து, உருப்படியாய் ஒண்ணும் தோணாமலே போன தருணங்கள் கணிசம்!

      Delete
  26. அடடே! தலைப்புகளுக்குப் பின்னே இத்தனை சுவாரஷ்ய சம்பவங்களா!! அட்டகாசம் சார்!!😍😍😍😍😍

    ReplyDelete
  27. மூன்று அட்டைப்படங்களும் அருமை. அதில் என்னை மிகவும் கவர்ந்தது நவீன வெட்டியான் அட்டை படம்.

    ReplyDelete
  28. சித்திரமும் கொல்லுதடி
    முடிவிலா மூடுபனி
    குள்ள நரிகளின் இரவு
    மர்ம மைனா
    எரிந்த கடிதம்
    ஓநாயின் சங்கீதம்
    பிரிவோம் சந்திப்போம்
    சாலையெலாம் ஜூவாலைகளே
    காற்றில் கரைந்த கழுகு
    பரலோகத்துக்கு ஒரு பாலம்

    ReplyDelete
  29. Xiii -
    பதின்மூன்றின் பாதையில்...
    நினைவெல்லாம் 13
    பதின்மூன்றின் கனவுகள்

    ReplyDelete
  30. புளுகோட் அட்டைப் படம் அழகு... பச்சைப் புல்வெளி, பசு, தொலைத்தூரத்து அழகிய பைன் மரங்கள், நிழல் தரு மரம், வசந்தகால வண்ணத்துப்பூச்சி, நீல வானில் தவழும் முகில்கள்...

    ReplyDelete
    Replies
    1. கதையுமே ஜாலியாய் நகரும் ரகம் சார்!

      Delete
  31. 1.நினைவு மறந்த நித்தியன்
    2.தொலைந்த நினைவு துரத்தும் மர்மம்
    3.மறதியின் (மர்மம் )மறுபக்கம்

    எப்படி பெயர் வைத்தாலும்
    எவ்வளவு பெயர் தேடினாலும்
    இரத்தப் படலமே சரியாக கன கச்சிதமாக பொருந்துகிறது ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. அது எப்போவுமே ஒரு பழகிய பெயர் பண்ணும் வேலை தான் சத்யா .....!

      "மறதியின் மறுபக்கம்" - மோசமில்லை ரகம்...!

      Delete
  32. இரத்தப் படலம் கதையில் பொருந்தக் கூடிய பெயரில் ரிப்போர்ட்டர் ஜானி கதை வந்துள்ளது

    ReplyDelete
  33. கல்லறையில் ஒரு கவிஞன்
    நதியில் ஒரு நாடகம்

    ReplyDelete
  34. ஒரே பெயரில் இரு புத்தகம்
    திக்கு தெரியாத தீவில்
    பழி வாங்கும் புயல்
    கல் நெஞ்சன்
    உங்களுக்கு ஞாபகம் உள்ளதையும் சொல்லுங்க நண்பர்களே

    ReplyDelete
  35. படலம் வகையறா
    இரத்தப்படலம்
    அப்பல்லோ படலம்
    மெக்ஸிகோ படலம்
    பெர்முடா படலம்
    பச்சை நரிப் படலம்
    கலர் வகையறா
    மரணத்தின் நிறம் பச்சை
    சீற்றத்தின் நிறம் சிவப்பு
    மஞ்சள் பூ மர்மம்
    பரலோகப் பாதை பச்சை

    தொடரும்

    ReplyDelete
  36. *The குட்…பேட் & அக்லி*

    முதல் கதை படிச்சப்பறம் கொஞ்ச நேரம் பே…பே…ன்னு விழிச்சுட்டு இருந்தேன். தன் தாயைக் காப்பாற்ற இயலாத டைலனின் குற்ற உணர்ச்சியினால் ஏற்பட்ட கனவின் நீட்சி தான் அந்தக் கதை என்பது மாதிரி புரிஞ்சுகிட்டேன். படிச்சு முடிக்கற வரை என்னடா நடக்குது ஏண்டா நடக்குதுன்னு பரபரப்பா போச்சு. ஏண்டா நடக்குது கொஞ்சம் க்ளியரா இருந்தா நல்லாந்துருக்கும்.

    2 வது கதை standard template. கல்லூரியில் தோன்றும் பேய். சம்பவிக்கும் மரணங்கள். யாரால் மரணம் & தீர்வு. 15-20 பக்க கதை. அதில் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லி இருக்கிறார்கள். அனேகமா யார் அவள் மாதிரியான கதைகளை உருவாக்க இது ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  37. ரத்தப்படலம், மின்னும் மரணம் மற்றும் பிஸ்டலுக்கு பிரியாவிடை. என்னோட டாப் 3 டைட்டில்ஸ்.

    ReplyDelete
  38. எங்கேயோ கேட்ட குரல்: கதை இந்த நவீன உலகத்துக்கு உகந்த கதை; டிஜிட்டல் எங்கும் டிஜிட்டல் என்பது எப்படி ஆபத்தானது என்பதை மிரட்டலாக சொல்லி இருக்கிறார். ராபின் 2.0 செம கம்பேக், வேற லெவல்; என்னதான் டிஜிட்டல் என்றாலும் அவரது தனித்துவதை அழகாக உணர வைத்து இருக்கிறார் கதாசிரியர். முடிவை பார்க்கும் போது அடுத்த பாகம் வரும் என்று தெரிகிறது; முடிவு எனக்கு பிடிக்கவில்லை, இப்படி ஒரு மகா பாதகனை அவனின் டிஜிட்டல் முறையில் மரணம் வழங்கி இருக்கலாம் என்பது எனது ஆசை, இதே அந்த வில்லனின் வெற்றி என்பேன். ராபின் புதிய டீம் செம சூப்பர் காம்பினேஷன்.

    எங்கேயோ கேட்ட குரல் எப்போதுமே எங்கள் காதுகளில் கேட்டுகொண்டே இருக்கும்.

    கதைக்கு மிகவும் பொருத்தமான பெயர்.

    ReplyDelete
    Replies
    1. //ராபின் புதிய டீம் செம சூப்பர் காம்பினேஷன்.//

      +9

      Delete
    2. இரண்டு இளையராஜா-களும் இன்று விமர்சனம் எழுதி இருக்கீங்க 😇😊

      Delete
    3. கருப்பு மை இருக்கிற வரைக்கும், ரண்டு பேருக்கும் இயமை இர்க்கும் ...!

      Delete
  39. சார் முதல் தலைப்பு நெசமாவே வேற லெவல்....கத்தி முனையில் மாடஸ்டி.....நமது தலைப்புகளில் பெஸ்டாருக்கும்

    ReplyDelete
  40. மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் பதிவு. எத்தனை எத்தனை விவரங்கள் ..ப்பா.. சூப்பர் சார்...

    ReplyDelete
    Replies
    1. சார் - பசிக்க ஆரம்பிச்சிருச்சின்னு சுருக்கிட்டேன் 🥹🥹

      Delete
  41. மின்னும் மரணம்.
    இத்தலைப்பு சூப்பர். மிகவும் பொருத்தமானது.

    எமனின் திசை மேற்கு
    திசை திரும்பிய தோட்டா
    சூப்பர் சர்க்கஸ்
    பயங்கரப் பொடியன்.

    ReplyDelete
  42. One of my favourite is Thalai kaetta thangha pudhaiyal

    ReplyDelete
  43. தலைப்பைப் படித்த உடனே கதையைப் படிக்கத் தூண்டும் ஒரு ஈர்ப்பு! கதை முழுவதுமாக படித்து முடித்தவுடன் என்ன தலைப்பு என்று மீண்டும் ஒருமுறை ஆராயத் தூண்டும்! கதைக்கேற்ற தலைப்பு ; தலைப்புக்கு ஏற்ற கதை !

    அந்த வகையில் எனக்குப் பிடித்த தலைப்புகளில் ஒன்று;

    தங்கக் கல்லறை!

    இதுதாண்டா தலைப்பு! இதுதாண்டா கதை! இதுதாண்டா மொழிபெயர்ப்பு! இவன் தான்டா ஹீரோ - என்று கேப்டன் டைகரை இன்று வரை மறக்க இயலாத கதாநாயகனாக மாற்றிய தருணம் அதுவே!

    அதுவரை டாப் டக்கராக முன்னணியில் நம்பர் 1 ஆக இருந்த டெக்ஸ் வில்லர் - என் காமிக்ஸ் வாசிப்பில் வனவாசம் சென்று விட்டார்! "ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை" என்று டைகர் இல்லாத போது டெக்ஸ் வில்லரை படித்து வருகிறேன்! :)

    ReplyDelete
  44. //இரத்தப் படலம் சாகசத்தை முழுமையையும் இன்று அறிவீர்கள் ! இந்த நொடியில் - அதற்கு சாலச் சிறந்த தலைப்பாய் ஒன்றைச் சூட்டுவதாயின் உங்க சாய்ஸ் என்னவாக இருக்கும் guys ? //


    XIII

    ReplyDelete
  45. மூனு அட்டையும் ஒன்னை ஒன்னு விஞ்சுது....வேற லெவல்...டெக்ஸ் இது வரை வந்ததிலேயே டாப் அட்டை

    ReplyDelete
  46. சார் மூனே பூனா....பயங்கர குழப்பம்...இந்தச் சொன்னா அது வருது....அதச்சொன்னா வேறொன்னு வருதே.....மொக்கைன்னு தோடுனா மூனு தேறுமோ என்னமோ


    அனைத்துமே சூப்பர்...

    பதிவும் ஏகசுவாரஸ்ய காலப்பயணமே

    ReplyDelete
  47. Ninaivugalai Thedi the alternative title for RATHAPADALAM

    ReplyDelete
  48. Top தலைப்புகள் IMO:

    1.பிஸ்டலுக்கு பிரியா விடை
    2.மின்னும் மரணம்
    3.தங்க கல்லறை
    4.CONCRETE கானகம் நியூ யார்க்
    5.காற்றுக்கு ஏது வேலி
    6.​'எஞ்சி நின்றவனின் கதை
    7.'தேவரகசியம் தேடலுக்கு அல்ல
    8.வல்லவர்கள் வீழ்வதில்லை
    9.​சாம்பலின் சங்கீதம்
    10.நிஜங்களின் நிசப்தம்
    11.'கார்சனின் கடந்தகாலம்
    12.இரத்தப் படலம்

    பிஸ்டலுக்கு பிரியா விடை,கார்சனின் கடந்தகாலம்,இரத்தப் படலம்
    ,தங்க கல்லறை ,சாம்பலின் சங்கீதம் WERE MORE APT AND SUITABLE FOR THE STORIES ..


    ReplyDelete
  49. Interesting and jovial post sir. Thanks.

    Minnum Maranam
    Jane irukka bayamen
    Nilavoliyil oru narabali
    Vidiya Vidya vinjaani
    Are my favorites.

    XIII. Once u name something and we have read it, it's impossible to create another title sir. This is applicable for most books and movies

    ReplyDelete
  50. பொதுவாகவே கடவுள் அவதாரங்கள் ; அவதார புருஷர்கள் - இவர்களைப் பற்றிய பிறப்பு, இறப்பு போன்ற இறை இரகசியங்கள் - ஆராய்ச்சியிற்கு அப்பாற்பட்டது! நம்புபவர்கள் இதுவரை உள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே தொடர்ந்தால், குழப்பங்கள் ஏதும் இன்றி அவரவர்களின் நம்பிக்கைத் தொடரும்! இல்லாவிட்டால் அனைவரும் நாத்திகவாதியாக தான் வாழ வேண்டும்!

    ஆய்வாளர்கள் இதை கண்டுபிடிக்க முயலும் போது கடைசியில் அவர்களுக்கு பூஜ்ஜியமே பலனாக கிடைக்கிறது - இப்படியும் இருக்கலாம் ; அப்படியும் இருக்கலாம் ; இதுவே உண்மை ஆனால் நிரூபிக்க ஆதாரம் இல்லை - என்று லாம், லாம், லாம் என்பதாகவே முடித்து விடுவார்கள்!

    வெறும் 5 வருடத்திற்கு முன்பு இருந்த Blog Versionஏ அன்று போல் இன்று இல்லை என்றும், இது புதுயுக Version 2.0 என்றும் கூறப்படுகிறது! அப்படி இருக்கையில் 10 ஆயிரம், 5 ஆயிரம், 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயத்தை தேடிச் சென்றால் கிடைப்பது என்னவாக இருக்கும் ?!

    தேவ ரகசியம் தேடலுக்கல்ல!

    ஆஹா ! எவ்வளவு அர்த்தமுள்ள தலைப்பு ; சுவாரஸ்யமான, மிகவும் அழகான பெயரல்லவா இது ?!

    கை நாடி பிடித்து - உடம்பில் உள்ள வாதம், பித்தம், கபம் அறிவது போல - தலைப்பின் மூலமே கதை, கதைக்களம், கதையின் முடிவு என ஒரு சேர உணர்த்தும் பெயர் அல்லவா இது?!

    தலைப்பு மட்டும் அல்ல இந்த கதையும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று!

    ReplyDelete
  51. இரத்த படலம்... அது மட்டுமே மிகவும் பொருத்தம் sir.. 👍❤️
    30 வருடம் முன்பு "தலைப்பு சரியில்லை "என்று ஒரு வாசக நண்பர் சொன்னதை நீங்களும் வாசகர் கடிதத்தில் போட்டிருந்தீர்கள்.. 😄😄.. எனக்கு கோபம் வந்து தபால் கார்டில் அவரை திட்ட.. நீங்கள் சமாதானம் பண்ண.. 😄😄அது ஒரு அழகிய காலம்... நினைவுள்ளதா உங்களுக்கு.. 😄😄.. எல்லாமே சூப்பர் தாங்க sir.... மின்னும் மரணம், சாம்பலின் சங்கீதம்.. ரொம்ப பிடிச்சது.. வாழ்த்துக்கள்.. நன்றி 🙏❤️❤️❤️

    ReplyDelete
    Replies
    1. // எனக்கு கோபம் வந்து தபால் கார்டில் அவரை திட்ட.. நீங்கள் சமாதானம் பண்ண //
      Interesting to hear this sir.
      அட நீங்க அவ்வளவு கோபக்காரா சார் :-)

      Delete
    2. 😄😄😄.. ❤️👍🙏... சில சமயங்களில் கோபம் வந்து சத்தம் அதிகம் போடுவேன் சகோ.. 😄😄❤️

      Delete
    3. நம்பளுக்கு நேத்திக்கி துன்ன நாஷ்டாவே நெனவில் நிக்காது சார் - 30 வர்ஷம் பின்னாடிலாம் 🥹🥹🥹

      அப்போல்லாம் நீங்க ரெகுலரா ஓலை அனுப்புவீங்க - அது மட்டும் ஞாபகம் இருக்கு 💪

      Delete
  52. மூன்று அட்டைபடங்களும் டக்கர், சார்
    எழுத்துருவ ஆக்கம் & டிசைனிங் செம,
    அதுவும் ப்ளூகோட்ஸ் எழுத்துருவம் ரொம்ப பிடித்துள்ளது

    ReplyDelete
  53. //பூனைமண்டை டிடெக்டிவ் சாரோடு இந்த ஞாயிறு பயணிக்க வேண்டியுள்ளது !! //

    அருமை சார்
    வெயிடிங் 😊😇😊

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. இரத்தப் படலம் is my top favourite title. XIII-க்கு என்னோட alternate titles “பதிமூன்றாம் மர்மம்” or “என்னை அறிந்தால்”.

    Tex Willer-ல என்னோட favourite titles சிகப்பாய் ஒரு சிலுவை and ஒரு ரௌத்திர Ranger.

    சிகப்பாய் ஒரு சிலுவை தான் நான் படிச்ச முதல் Tex story. Lion Mega Dream Special PDF edition-லதான் படிச்சேன். One of the best stories! Ku Klux Klan-ஐ villains-ஆ வைத்து, politics-ஐ பல layers-ல கொண்டு போயிருப்பாங்க. ஒரு Tarantino படம் பார்த்த மாதிரி தரமா இருக்கும்.

    இப்போ வரைக்கும் வந்த Tex stories-ல அந்த அளவுக்கு political layers-ம் controversial elements-ம் வராதது கொஞ்சம் வருத்தம்தான்.

    Tex-ஐ தலன்னு சொல்லிட்டு ஒரு Thala reference title கூட வைக்காதது மன்னிக்கவே முடியாது!!! 😤

    என் end-ல இருந்து சில suggestions:

    Tex – நேர்கொண்ட பார்வை

    Arizona-வில் அட்டகாசம்

    அதே மாதிரி Captain Tiger-க்கு,

    Texas-இல் ஜனநாயகன் 🔥

    ReplyDelete
    Replies
    1. //Texas-இல் ஜனநாயகன்//

      அவரு தளபதியாவே தொடரட்டும் ப்ரோ.... வாணாம் இந்த புதுப் பட்டம்லாம் 🥹🥹 பயம்மா கீது!

      Delete
    2. Oh apo
      தளபதியின் கச்சேரி
      தளபதி வெற்றி கொண்டார்

      Tex:
      மெக்சிகோவில் மங்காத்தா 🔥

      Delete
    3. 😄😄🫣🫣🫣🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

      Delete
    4. இந்த ஆட்டைக்கே நாங்க வரல... இன்னிலேர்ந்து ஒருத்தர் பவர் ஸ்டார் ; இன்னொருத்தர் ஷைனிங் ஸ்டார்...!

      Delete
  56. வணக்கம் சார்,

    எப்போதுமே உங்கள் கதைத் தலைப்புகள் தனித்துவமாக இருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்படுவேன். ஒரே மாதிரியான தலைப்புகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல், ஒவ்வொரு முறையும் வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சிறப்பு.

    எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும் சில தலைப்புகள்:

    1. தங்கக் கல்லறை
    2. மின்னும் மரணம்
    3. தோட்டா தலைநகரம்
    4. தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல
    5. ஒரு சர்ப்பத்தின் சின்னம்
    6. தலைவாங்கிக் குரங்கு
    7. ரத்தப் படலம்
    8. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா
    9. பழிவாங்கும் புயல்
    10. வல்லவர்கள் வீழ்வதில்லை

    ReplyDelete
  57. இளம் டெக்ஸ் பின் அட்டைபடத்தில் என்ன ஒரு துல்லியமான ஓவியர், டெக்ஸ் கால் முட்டிக்கு குறிபார்த்த தோட்டா முன்னால் உள்ள மரத்தடுப்பில் பட்டு தெரிகிறது! செம மாஸ் ஓவியம்!

    ReplyDelete
  58. ப்ளூகோட் பட்டாளம் அட்டை படத்தை பார்க்கும் போது கதை இந்த முறை இன்னும் காமெடியாக இருக்கும் என்று தோன்றுகிறது, காரணம் நமது இரட்டையர்கள் அவர்களுடன் ஒரு குழந்தை, அந்த குழந்தை முகத்தை பாருங்கள் செம சுட்டிதனத்துடன் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. இந்த தடவை நம்ம ப்ளூகோட் ஜோடி என்னவெல்லாம் லூட்டி அடிக்க போறாங்க என காண ஆவலுடன் வெயிடிங்

      Delete
  59. இந்த குழந்தை முகம் லியோனார்டோ தாத்தாவின் ஒரு கதையில் வந்த குழந்தை போலவே உள்ளது

    ReplyDelete
  60. *முத்து கோடை மலர் 2026*

    முத்தான மூன்று கதைகள். என்னைப் பொறுத்தவரை 1. ரூபின் 2. டேங்கோ. 3. ஜானி.

    *விடுமுறையில் விதி முடிப்போம்*

    ரூபின் சாகசம். ஆரம்பம் முதலே மெல்லிய காமெடி இழையோடும் கதையில் Tomboy ரூபினின் in your face attitude உம் சேர்ந்து கொள்ள சூடு பிடிக்கும் கதை ரூபின் தன் சொந்த ஊருக்கு வந்த பிறகு பரபரவென நகர்கிறது. யதார்த்தமான துப்பறியும் காட்சிகளுடன் ரூபினின் அடாவடி ஆட்டிட்யூட்டும் சேர்ந்து கொள்ள கதை களைகட்டுகிறது. ரூபினின் தந்தை மற்றும் தாயார் கேரக்டர்களும் ரசிக்கும்படி இருக்கிறது. *I loved it*

    *நதி ஒன்று…கரைகள் மூன்று…*

    டேங்கோ சாகசம். டேங்கோவின் கதைகளில் எப்போதுமே ஓவியங்கள் மனதை அள்ளும். இதிலும் அப்படியே. தென்னமெரிக்காவின் இயற்கை வளங்களையும் நகரங்களையும் கண் முன்னே கொண்டாந்து நிறுத்தி விடுகிறார் ஓவியர். கதையைப் பொறுத்த வரை ஜேசன் ஸ்டேதம், ஸ்டேலன் போன்றவர்கள் சினிமாக்களில் வரும் கதை தான். நண்பர். ஒருவர் உதவி வேண்டி SOS அனுப்ப டேங்கோ அங்கே விரைகிறான். பிரச்னை விளக்கம், வில்லன்கள் அறிமுகம், நண்பர்களில் ஒருவர் கோலேடரல் டேமேஜ் அதை தொடர்ந்து பழி வாங்குதல். ஆனால் அதை சொல்லிய விதம், ஓவியங்கள் மூலம் அசத்தியிருக்கிறார்கள். சிம்பிளான பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் தரும ஹீரோவாகிவிட்டார் டேங்கோ. *I loved it*

    *திகில் முகமூடி*

    தொடர் கொலைகள் நிகழும் போது அதற்கான மோட்டிவை துளிக்கூட ஆராயாத உப்புமா டிடெக்டிவாகி விட்டார் ஜானி. விறுவிறுப்பாக கதையை கொண்டு போயி கடைசியில் யாரோ ஒரு இளிச்சவாயனை கொண்டாந்து கொலையாளி என்று தலையில் கட்டும் அதே டெம்ப்ளேட். ஒரு சின்ன ஹின்ட். அவ்வளவு தான். அது கூட உருப்படியான ஹிண்ட் அல்ல. இந்த மாதிரி யதேச்சையாக கடைசியில் நிகழும் ஒரு நிகழ்வைக் கொண்டு கொலையாளியைக் கண்டுபிடிக்கும் புராதன டெம்ப்ளேட்டிலேயே இந்தக் கதையும். *Jhonny should retire*

    ReplyDelete
    Replies
    1. அருமை ஷெரீப்ய்யா 👏👏👏

      Delete
    2. அவர் இன்னாடான்னா ஜானி ஊட்டாண்ட குந்திக்கிறது தேவலாம்ங்கிறார்.... இவுக அதுக்கு அருமைங்கிறாங்க.... இதையெல்லாம் கேக்க ஆளில்லையா....? ஐயகோ...!

      Delete
    3. சரியாக தான் சொல்கிறாருங்க 😅😅

      Delete
    4. Paytm டாலர்லே வர்றப்போ வெயிட்டா இருக்கும் தான்... 🤔

      Delete
    5. 😄😄😄🫣🫣🏃‍♂️🏃‍♂️

      Delete
    6. நம்ம ஊர் டாலர் கூட தர மாட்டாருங்க

      Delete
    7. என்னிக்காவது ஒரு நாள் நாலு வரி எழுதறவனை மிரட்ட வேண்டாம்னு விட்டுட்டாங்க சார்.

      Delete
  61. கோடை மலர் மூன்று கதைகளுக்கும் விமர்சனம்,
    சூப்பர்ங்க! மகி ஜி

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நீங்களும் கண்டிக்கலியா சார் - போச்சு!

      Delete
  62. ஆமாங்க சார் . சில கதைகளில் ஜானி சொதப்பும் போது வூட்டாண்ட குந்திக்கிறது தேவலாம்னு தோணும் . ஆனா கடைசியாக வந்திருக்கிற ஜெர்மனியில் ஜானி, ஜானிக்கொரு தீக்கனவு ,திகில் முகமூடி மூணும் சூப்பர். . தொடர்ந்தஜானியின் கதைத் தேர்வுகள் அட்டகாசம்
    தொடரட்டும் ஜானியின் வெற்றி நடை

    ReplyDelete
  63. // "மாயாவி in மாம்பலம்"..... "ஜானி in ஜக்கம்பட்டி"..... "லாரன்ஸ் in தல்லாகுளம்" என்று வைக்காத குறையாய் //

    சிரிப்போ சிரிப்பு!

    ReplyDelete
  64. "எத்தனுக்கு எத்தன்" செம டைட்டில்! ஸ்பைடருக்கு மிகவும் பொருத்தமான டைட்டில் சார்! அதே போல "ஆர்ச்சிக்கோர் ஆர்ச்சி" தலைப்பும் மிகவும் எனக்கு பிடித்தது!

    ReplyDelete
  65. விதி எழுதிய திரைக்கதை
    விதி எழுதிய வெள்ளை வரிகள்
    விதி எழுதிய வெற்றி வரிகள்
    Now we have
    விதி எழுதிய விசாரனை

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு GPay இர்க்கா...?

      Delete
    2. இருக்குங்க சார்
      சற்று நேரத்தில் "டிங்" என கேட்கப்போகும் சத்தத்தை எதிர்பார்த்து 😁😋

      Delete
    3. // சற்று நேரத்தில் "டிங்" என கேட்கப்போகும் சத்தத்தை எதிர்பார்த்து //

      மண்டையில் டிங் என்று சத்தம் கேட்டா ஒகேவா 😁😁😁😁😁

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. ரம்யா.. 😄😄😄.. Beautiful.. 😄❤️👍🙏. டிங். சத்தம்.. 😄

      Delete
    6. பரணி சகோ.. ராமயாவின் தலையில் டிங் அல்ல டங் சத்தம்.. கேட்கும்.. 😄😄😄❤️👍

      Delete
    7. மொத்தத்தில் டிங் டாங் 😁

      Delete
  66. // வரிசைக்கு ஸ்பெஷல் தோசைகளை சுட்டுத்தள்ள ஆளுக்கொரு கை மாவு நல்கிய நாட்கள் //
    ROFL. சாருக்கு ஒரு ஸ்பெஷல் ஊத்தாப்பம் :-)

    ReplyDelete
  67. எனக்கு பிடித்த சில கதை தலைப்புகள்
    மனதில் மிருகம் வேண்டும்
    ஆத்மாக்கள் அடங்குவதில்லை
    தேவரகசியம் தேடலுக்கல்ல
    இரவே..இருளே....கொல்லாதே
    சாத்வீகமாய் ஒரு சிங்கம்
    ​பிஸ்டலுக்கு பிரியாவிடை
    ​சாம்பலின் சங்கீதம்
    ​கலாஷ்னிகோவ் காதல்
    எங்கேயோ கேட்ட குரல்

    'பிரியமுடன் ஒரு பிணையக்கைதி' - நம்ப ரின் டின் கேனின் கதை, பலமுறை குழந்தைகளுடன் படித்துக்காட்டி சிரிச்சி மகிழ தருணம்களை வழங்கியது.

    ReplyDelete
  68. ஆத்திச்சூடி வகையான டைட்டில்களை விட்டுட்டீங்களே சார்.. அது குறித்தும் பேசியிருக்கலாம்

    ReplyDelete
  69. //2027 சார்ந்த அட்டவணைக்கான பணிகள் கிட்டத்தட்ட ஓவர் என்ற நிலையில் கதைகளுக்குப் பெயர் வைத்து finishing touches தந்து கொண்டிருந்தேன்//

    அப்போ கூடிய விரைவில் அட்டவணை பதிவு எதிர்பார்க்கலாமா, சார்

    ReplyDelete
  70. "மாயாவி in மாம்பலம்".
    "ஜானி in ஜக்கம் பட்டி"
    அன்றைய ட்ரெண்ட் இதுதான் சார். அன்றைய ஜாம்பவானான
    திரு . தமிழ்வாணனே
    "ஜெர்மனியில் சங்கர் லால்"
    "டோக்யோவில் சங்கர் லால்"
    என்று ஹைடெக் நகரங்கள் பெயர்களில் தான்தலைப்பகளிட்டிருந்தார்

    ReplyDelete
  71. பல வருடங்களாக மனதில் இருந்த சந்தேகத்தை தீர்த்து வைத்த ஆசிரியருக்கு பணிவான வணக்கங்கள்.
    பெயர் சூட்டும் படலம் படங்களை பார்த்து வைக்கப்படுகிறதா அல்லது கதையைப் படித்து விட்டு வைக்கப்படுகிறதா( கதையை படித்து பெயர் சூட்ட வேண்டும் என்றால் நேரம் பிடிக்குமே ) என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இந்த பதிவு மூலம் எனது நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது.. சில கதைகளுக்கு விளம்பரத்தில் ஒரு பெயரும் புத்தக வெளியீட்டின் போது வேறு பெயரும் இருக்கும் .. (எ. கா) கொலைகாரக் குரங்கு தலை வாங்கி குரங்காக மாறியதும் குற்ற பூதம் பாட்டில் பூதமாக மாறியதும் குறிப்பிடத்தக்கது..

    ReplyDelete
  72. தலை வாங்கி குரங்கின் முதல் வெளியீட்டில் நான் ஒரு விஷயத்தை கவனித்தேன்... இன்று வரை வந்த லயன் வெளியீட்டில் வில்லனுக்கு முன்னுரிமை கொடுத்து பின் அட்டையை எடுத்துக் கொண்ட ஹீரோ வேறு யாரேனும் உண்டா..

    ReplyDelete
  73. சரண் ஹரீஷ் சார்..
    அன்றைய சூப்பர் ஹிட் தங்கக் கல்லறையிலும் வில்லன் தான் அட்டையில். ஹீரோ டைகருக்கு இடமே இல்லை

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பரே.. ஆனால் முத்துவை நிறைய கதைகளில் முன் அட்டையில் ஹீரோ இல்லாமல் வந்துள்ளது. ( எனக்கு சரியாக நினைவு இருக்கும் என்றால் பிளைட் 731இல் வில்லன் மட்டும் பிளைட் போட்டோவுடன் தான் முன் அட்டை வந்துள்ளது.) அதனால்தான் நான் தனியாக லயன் என்று குறிப்பிட்டேன்.

      Delete
  74. 150 .அப்பாடா பாதிக் கிணறு தாண்டியாச்சு

    ReplyDelete
  75. உங்களின் ஒவ்வொரு தலைப்புமே தனித்துவம் வாய்ந்தது... அதில் டாப் 10 ரொம்ப கஷ்டம் இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.
    1. எத்தனைக்கு எத்தன் ( எக்காலத்திலும் ஸ்பைடருக்கு பொருந்தக்கூடிய தலைப்பு ).
    2. லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் ( இதை உச்சரிக்கும் போது மனதில் ஏற்படும் ஒரு விதமான பரவசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை ).
    3.இரத்தப் படலம். ( நீங்கள் எங்களை முயற்சி செய்து பார்க்க சொன்னபோது கூட இந்த தலைப்பிற்கு இணையான ஒன்று தோன்றவே இல்லை. அதுதான் இந்த தலைப்பின் மகிமை).
    4. சர்வமும் நானே.(டெக்ஸ் க்கு மட்டுமே இது சாத்தியம். அப்படிப்பட்ட ஒரு தலைப்பு).
    5. தங்கக் கல்லறை &மின்னும் மரணம்(. இரண்டையும் ஒன்றாகவே குறிப்பிடுகிறேன். காரணம் இரண்டுமே மரணம் சம்பந்தப்பட்டது.. ஆனால் அதிலும் ஒரு அழகு சேர்த்தது ).
    6( தொடரும்)🙏🌹🙏🌹

    ReplyDelete
  76. சீக்கிரம் தொடருங்கள். நன்றாக உள்ளது.
    .//தனியாக "லயன்" என்று குறிப்பிட்டேன்//கரெக்ட் .ங்க ஜி
    தங்கக் கல்லறை முத்து காமிக்ஸ்

    ReplyDelete
  77. அருமையான பதிவு எடிட்டர் சார் !

    எனக்கு பிடித்த சில தலைப்புகள் :
    உங்களை கொன்றதில் மகிழ்ச்சி
    மைனாவோடு மஞ்சுவிரட்டு
    சாபங்கள் சாவதில்லை
    பறக்க மறந்த பறவைகள்
    ஒரு துளி துரோகம்
    சித்திரமும் கொலைப் பழக்கம்
    வஞ்சம் மறப்பதில்லை

    சமீபத்தில் பிடிக்காத தலைப்பு : போர் கண்ட சிங்கம் !!

    ReplyDelete
  78. நினைவில் நிழலாடும் தலைப்புகள் (3 & 4 )

    சில விஷயங்கள் மாறுவதே இல்லை ; தமிழ் காமிக்ஸ் படிப்பது போல ! சில பழக்கங்கள் இடையில் வந்திருந்தாலும் சட்டென்று விலகுவதில்லை !

    முதன்முதலாக ஒரு சிலரின் ஜாலிக்காக ; கிண்டலுக்காக ; நையாண்டிக்காக - இங்கு ஒரு ஹீரோவின் இமேஜ் கமெண்ட்களால் தரைமட்டமாக்கப்பட்டது - இன்னும் எத்தனை வாசகர்களுக்கு ஞாபகம் இருக்குமோ தெரியவில்லை ?! சப்பை மூக்கன் ; ஒடைஞ்ச மூக்கு ; குளிக்காதவன் ; அழுக்கு மூட்டை ; துரோகி - என்று அடி அடியென்று கேப்டன் டைகரை தர்ம அடி அடித்தார்கள்! அன்று விழுந்த தளபதியின் மார்க்கெட் இன்றுவரை எழவில்லை ! அதற்கேற்ப அவரின் கதைகளும் சோபிக்கவில்லை !

    காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததா அல்லது பனம்பழம் விழும் போது காக்கை சரியாக உட்கார்ந்ததா என்பதல்ல கேள்வி ?! ஆனால் காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்பது தான் உண்மை !

    அதுவரை தமிழ் காமிக்ஸ் ரசிகர்களாக ஒன்றிணைந்து இருந்த வாசகர்களில் ஒரு சிறு, குறு எண்ணிக்கையில் - பெரும் திரளான [ ? ! ;) ] டெக்ஸ் வில்லர் ரசிகர்களுக்கு ஈடாக வினையாற்ற நிர்பந்திக்கப்பட்டனர் (அதாவது பகடி), அதில் யானும் ஒருவன் என்பதால் இன்று வரை அந்த பழக்கம் என்னை விட்டு விலக மறுக்கிறது - வறன்ட வன்மேற்கு சலூன்களில் சரக்கு அடிக்கும் போதையைப் போல :)

    தொடரும்..

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் பயணம் மேற்கொள்ளும் போதே சரக்கு அடிக்கும் சலூன்கள் இருக்கும் திசை நோக்கியேப் பயணிப்பது போல ; டெக்ஸ் வில்லர் கதைகளைப் பற்றி எழுதும் போது அவரை கலாய்க்காமல் இருக்க முடிவதில்லை ! சலூனும் சண்டையும் போல பிரிக்க இயலாததாக அமைந்துவிட்டதை என்னவென்று சொல்வது ?!

      இருந்தாலும் டெக்ஸ் வில்லர் நல்லவர் தான் ; வல்லவர் தான் ; அப்பழுக்கற்ற நேர்மையாளி தான் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை ! ஓவர் பில்டப் ஒடம்புக்கு ஆகாது என்பார்கள், ஆனால் இவர் விஷயத்தில் மட்டும் அது நடப்பதே இல்லை ! அத்திப் பூத்தாற் போல் எப்போதாவது கதையில் பலசாலியாகவும், புத்தி கூர்மை கொண்டவனாகவும் வரும் வில்லனிடம் மாட்டிக்கொண்டு கம்பத்தில் கட்டுண்டு மட்டும் கிடப்பார் !

      இவருக்குப் பொறுமை என்பது எள்ளளவும் கிடையாது ; ஒரு வார்த்தை அடுத்தவர் சொல்லி விடக்கூடாது சட்டென்று மூக்கின் மேல் கோபம் வந்து விடும் - சொன்னவரின் மூக்கை உடைத்து விட்டு மறுவேலை பார்க்கும் முன்கோபம் கொண்டவர் ! துப்பாக்கியில் குண்டு இல்லாவிட்டாலும் சுட்டுக் கொண்டே இருப்பவர் - இது நிற்க ;

      அங்கனம் வன்மேற்கின் ஒரே சகலகலா வல்லவர், எப்போதும் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்ளும் டெக்ஸ் வில்லர் தோன்றும் கதைகளில் எனக்குப் பிடித்த தலைப்புகளில்

      இருளின் மைந்தர்கள்!


      மரண முள்!

      இவ்விரண்டும் அடங்கும்! அதற்குக் காரணம் யாதெனில்..

      தொடரும்..

      Delete
    2. குஸ்தி ; குதிரை ஏற்றம் ; துப்பாக்கிச் சுடுதல் ; வில்அம்பு எய்தல் ; மலையேற்றம் - என்ற டெம்ப்ளேட் ரீதியிலான டெக்ஸ் கதைகளைப் படித்து வந்த எனக்கு,

      இருளின் மைந்தர்கள்! என்ற தலைப்பு ஒருவித அமானுஷ்யத்தைக் கொடுத்தது. இனம் தெரிந்த ஓர் ஈர்ப்பு. ஆர்வமுடன் கதையைப் படிக்கப் படிக்கக் கொஞ்சம் கூட என்னை ஏமாற்றாத கதைக்களமும், கதையமைப்பும் - என்னால் மறக்க முடியாத ஒரு கதையாக இது இன்று வரை உள்ளது ! அதுபோலவே மரணமுள் - கதையும் திகில் நிறைந்த உணர்வைத் தரும் தலைப்பாகவும், கதையுமாகவும் அமைந்தது வெகு சிறப்பு!

      இப்படியாக எனக்குப் பிடித்த கதைகளின் பெயர்களை எழுத நினைக்கும் போது தான் ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது! நான் கமெண்டுப் போடும்
      இந்த பெயர் எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை ! எனவே அடுத்த முறை பதிவிடும் போது புதிய பெயரில் வருகிறேன் ; வந்தவுடன் சொல்லியும் விடுகிறேன் !

      நன்றி ! வணக்கம் !

      Delete
  79. தங்கக் கல்லறையில் வில்லனின் முகம் மட்டும் அட்டையில்!,....டைகரின்முகம் பற்றி கமெண்ட் அடிக்க நினைத்திருந்தேன்.........
    நல்லவேளை

    ReplyDelete
  80. சமீப ஒரு வருட காலமாகவே பார்சல் வந்தபின் புத்தகங்களின்
    தலைப்புகள் பார்த்து வீட்டில்
    விமர்சனம் குடுப்பது வழக்கமாகி உள்ளது, சில நேரங்களில் கலாய்த்து விடுவதும் உண்டு


    அப்போதெல்லாம் ஒரு கதைய அடையாளபடுத்தி கொள்ள தலைப்பை ஞாபகம் வைத்து கொள்வேன்

    கோவை சாய்பாபா காலனியில் ஒரு லெண்டிங் லைப்ரரியில் பழைய புத்தகமாக விற்பனைக்கு இருந்த மார்டினின் சரித்திரத்தை சாகடிப்போம் தலைப்பு ஈர்த்தது

    2014 தளத்தில் வந்த பிறகு கதையின் பெயருக்கு நடக்கும் டிஸ்கஷனினால்
    தலைப்புகளை கவனிக்கலானேன்.

    தலைப்புகளால் ஆர்வத்தை ஏற்படுத்திய கதைகள்
    அப்போது ரொம்ப பிடித்துபோன தலைப்புகள்

    ஒரு சிப்பாயின் சுவடுகளில்
    மனதில் மிருகம் வேண்டும்
    கொலை செய்வீர் கனவான்களே
    தேவரகசியம் தேடலுக்கல்ல
    இரவே..இருளே....கொல்லாதே
    எஞ்சி நின்றவனின் கதை

    தோர்கலின்
    சாகாவரத்தின் சாவி
    மூன்றாம் உலகம்

    லார்கோவின்
    துரத்தும் தலைவிதி
    ஆதலினால் அதகளம் செய்வீர்

    கர்னல் க்ளிப்டன்
    மறந்தும் மறவாதே
    ஏழு நாட்களில் எமலோகம்

    கிராபிக் நாவல் தலைப்புகள் ரொம்பவே ரசித்தது

    நிஜங்களின் நிசப்தம்
    என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்
    முடியா இரவு
    வழியனுப்ப வந்தவன்

    டுராங்கோ, கமான்சே, கேப்டன் பிரின்ஸ் தலைப்புகள் அதகளம்

    ராபின் 2.0, தலைப்புகள் அனைத்தும் அருமை
    ரொம்ப குறிப்பாக

    தலைவனுக்கொரு தாலாட்டு
    கொலைநோக்கு பார்வை
    எழுந்து வந்த எதிரி
    இரத்தமின்றி யுத்தம்

    இளம் டெக்ஸ் ஒவ்வொரு சாகஸத்துக்கு ஏற்றவாறு தலைப்புகள் ஒவ்வொன்றும் டாப் டக்கர்

    டைகர் கதைகள் தலைப்பு கேட்கவே வேண்டாம்
    எல்லாமே பிடித்திருந்தது

    போன வருடத்தின் மைல்கல் இதழான
    சாம்பலின் சங்கீதம் 🍉

    மற்ற மொழிகளில் என்ற பெயர் இருந்தது
    தமிழில் அதே போன்று இல்லாமல்
    கதையோடு அமைந்த இந்த தலைப்பு மிகவும் பிடித்து போனது

    ReplyDelete
  81. இரத்தபடலம் ரொம்பவே பொருந்தி போனது

    It was an intriguing title and brought a sense of curiosity within us readers

    ReplyDelete