நண்பர்களே,
இது நேற்றைய பதிவின் நீட்சி folks - மறவாது அதனை முதலில் வாசித்து விடுங்கள் ப்ளீஸ் ! அதன் லிங்க் : : https://lion-muthucomics.blogspot.com/2026/04/dial-t.html
வணக்கம். காரணங்கள் எதுவாய் இருப்பினும் "TEX" என்றாலே அரங்கமே அதிர்வது இன்னமுமே தொடர்வதில் செம ஹேப்பி அண்ணாச்சி ! ஆனால் தலைகீழாய் நின்று தண்ணி குடிக்க முற்பட்டாலும், "ஒரே புக் - ஒரே கதை" என்ற பார்முலாவிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளல் அசாத்தியம் என்பது yet again நிரூபணம் காண்கிறது !! இத்தனைக்கும் தனித்தனி புக்ஸ்களாய் டெக்சின் சாகசங்களை ரசிப்பதற்கு நாம் புதியவர்களே அல்ல தான் !
- இதோ போன வருஷம் கூட Magic Moments ஸ்பெஷலில் 5 மாதங்களின் இடைவெளியினில், டெக்சின் சாகசத்தினை வெளியிட்டிருந்தோம் தான் !
- Again "பனிவனப் போராளிகள்" நெடும் கதை - இரு இதழ்களில் !
- காத்திருக்கும் Tex தீபாவளி மலர் (அசுரர்கள் அடங்குவதில்லை) கூட நெடும் கதை in 2 ஆல்பம்ஸ் என்ற பார்முலாவில் தானே வரவுள்ளது ?
So மறுபதிப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் வெளிவந்தால் should be o.k என்றே எண்ணியிருந்தேன் ! But கோப்பையில் காலியான பகுதியே பெரும்பான்மை நண்பர்களின் கண்களை உறுத்துவது தான் சங்கடமாக உள்ளது !
இதே - 'ம.ம.பை.மட்டுமே' கோஷத்தினால் தான் இளம் டெக்ஸை மாதா மாதம் ஒரு தனித்தடத்தினில் இத்தாலிய ஸ்டைலில் நம்மிடையே வரக்கூடிய வாய்ப்பு புஸ்வாணமாகிப் போனது. At least மறுபதிப்புகளிலாச்சும் கொஞ்சம் flexible ஆக இருந்திடுவோமே ; ஒரு தொடராய் டெக்ஸை ரசிக்கும் அனுபவமானது எவ்விதம் தான் உள்ளதென்று பார்த்திடலாமே ? என்ற அவாவே எனது திட்டமிடலின் பின்னணி ! ஒரே புக்காய் வெளியிடக்கூடிய இதழினை இரண்டாய் பிரித்து வெளியிடும் போது நமக்குச் செலவினங்கள் ஜாஸ்தியே ; இரண்டு அட்டைப்படச் செலவுகள் ....இரு பைண்டிங் கூலிகள் என்று ! So முன்செல்லும் நாட்களுக்கு இந்தப் பரீட்சார்த்த முயற்சி உதவிடக்கூடுமே என்ற எண்ணத்தினில் தான் செலவுகளை பொருட்படுத்தாது, தொடர்களாய் வெளியிடும் திட்டத்தையே முன்மொழிந்திருந்தோம் ! But சில விஷயங்களில் மாற்றங்களுக்கு வாய்ப்பே லேது என்பது கஜினி முகமத்துக்கே தண்ணி காட்டிடும் உங்களது உறுதிகள் காட்டிடுகின்றன !
நமது திட்டமிடல்களை, விலைகளை, இதழ்களின் எண்ணிக்கைகளை போனெலியில் தெளிவாகச் சொல்லியே உரிமைகளை வாங்கியுள்ள நிலையில் இப்போது, "இல்லீங்க சார்... கோட்டை அழிச்சிட்டு முதல்லேர்ந்து பரோட்டா சாப்பிடலாமா ?" என்று கேட்டிட வாய்ப்பில்லை ! So the best I can replan will be as follows :
இந்த மாதம் முதல் பாகம் & தொடரும் மாதத்தில் கிளைமாக்ஸ் பாகம் என்ற திட்டமிடலை சற்றே மாற்றிக் கொள்ளலாம் ! ஒரே மாதத்தில், ஒரே தருணத்தில், இரு அத்தியாயங்களையும் தனித்தனி இதழ்களாகவே வெளியிட்டு விடலாம் ! Which will mean :
ஆகஸ்ட் '26 :
சாத்தான் வேட்டை 1
&
சாத்தான் வேட்டை 2
அக்டோபர் '26 :
நள்ளிரவு வேட்டை
டிசம்பர் '26 :
எல்லையில் ஒரு யுத்தம் 1
&
எல்லையில் ஒரு யுத்தம் 2 -
ஜனவரி '27 :
மரண தூதர்கள் + இரும்புக்குதிரையின் பாதையில்
(இது லயன் # 100-ல் வந்த classic கதை ; not the recent one)
மார்ச் '27 :
இரத்த முத்திரை
So மார்ச் '27 -ல் TTS முற்றுப் பெறும் விதமாய் , சீரான விலைகளில், அதே சமயம் உங்களைத் தொங்கலில் விடாதும், ஒரே மாதத்தில் அந்தந்தக் கதைகளை வாசிக்க வசதியாகவும் வெளியிட்டு விடலாம் ! என்ன - மாதமொன்று எனும் போது பணியாற்ற கொஞ்சம் அவகாசம் கிடைக்கும் ; but இங்கே நடு நடுவே ஒரு மாதத்தினை skip செய்கிறோமெனும் போது அது ஈடு செய்து கொள்ளும் தான் ! And நேற்றே சொன்னது போல இந்தச் சந்தா முற்றுப் பெற்ற பிற்பாடு ஒரு classy slipcase-ல் சகலத்தையும் உள்ளடக்கவும் முயற்சிக்கலாம் !
Of course - இது நீங்கள் எதிர்பார்த்த மமிதா பைஜு அல்ல தான் ; but இது க்ரித்தி ஷெட்டி என்று எடுத்துக் கொள்ளலாமே ? What say folks ?
Have a great long weekend all !! See you around !
P.S : TERRIC TEX சந்தாவுக்கு 2 தவணைகளிலும் பணம் அனுப்பிடலாம் guys !





ஆஜர்
ReplyDeleteவாழ்த்துகள் தோழரே💐😊
Deleteவாழ்த்துக்கள் சத்யா
Deleteநன்றி 🙏🙏🙏
DeleteHi Sir
ReplyDeleteHi..
ReplyDeleteSuper plan sir
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteகாலை வணக்கம் சார் ஒரே மாதத்தில் இரு அத்தியாயங்கள் வருவது மனதுக்கு நிறைவாக இருக்கின்றன சார், நான் டெக்ஸ் வில்லர் க்கு மிக பெரிய ரசிகன் சார் Slip Case யில் பொக்கிஷமாகா பாதுகாப்பேன் சார் 😍😍
ReplyDeleteமமிதா பைஜுக்கு ஈடாகாது எனினும் இந்த ஐடியா கொஞ்சூண்டு பரவால்லைங்க சார்! 🙏💐💐💐😍😍
ReplyDeleteபரவை முனிம்மா போய் சேரந்துட்டாங்க ஸார் - இல்லாட்டி first choice ஆ இருந்திருப்பாங்க!
Deleteவாட் அபவுட் தேனி குஞ்சரம்மா குருநாயரே?
Deleteஹொவ் அபௌட் ரங்கம்மா இளவரசே!
Deleteமமிதா பைஜூ வேணும்னு கேட்டா... முனியம்மா, குஞ்*சரம்மா, ரங்கம்மா...!!😵💫
Deleteஉங்களையெல்லாம்.. 😬😬😬👹👺
உங்களுக்கு இதுதான் சரியாக செட் ஆகும் இளவரசே 😊
DeleteThis comment has been removed by the author.
Deleteதங்களுக்கு சமோசா இருக்கும்போது கவலை ஏன், இளவரசரே
DeleteSuperapu
ReplyDelete🙏
Delete100000time
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDelete// So the best I can replan will be as follows //
ReplyDeleteஇந்த அறிவிப்பு இன்னமும் கூடுதல் மகிழ்ச்சியே,முதல் பதிவில் மாற்றுக் கருத்து இருப்பினும் இதழ்கள் எல்லாம் கிடைத்தவுடன் ஸ்லிப்கேஸில் வைத்துக் கொள்ளும் திட்டம் பிடித்திருந்தது,மாற்றுத் திட்டமான இரண்டாம் அறிவிப்பும் நலமே சார்,தொடரட்டும் வெற்றிகள்...
ம்ம்.. ஓகே ஷெட்டி...
ReplyDeleteஆந்திராகாரு ஷெட்டிக்கு ஓகே சொல்லிட்டாரு
Deleteஅவருக்கு நம்ப காமிக்ஸ் போட்டி டேமேஜ் ஆகாம வந்தா மட்டும் போதும்
Deleteசார், நேற்று இரவு பதிவின் லிங்க் இந்த பதிவில் கொடுத்து விடுங்கள் சார். நேற்றைய பதிவை படிக்காத சில நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.
ReplyDeleteDone sir..!
Deleteநன்றி சார்.
Deleteஇது நீங்கள் எதிர்பார்த்த மமிதா பைஜு அல்ல தான் ; but இது க்ரித்தி ஷெட்டி என்று எடுத்துக் கொள்ளலாமே ? What say folks ? ////
ReplyDeleteகமான் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு....😍
யூத்னா இப்புடி இருக்கணும் !!
Deleteஒரு யூத்தோட மனசு இன்னொரு யூத்துக்குத்தான் தெரியும்னு முன்னாள் யூத்துகள் சொல்லியிருக்காங்க சார்.
Deleteகமான் பேபி லெட்ஸ் கோ ஆன் த தண்டர் பேர்டு ....😍
Deleteநாங்களும் யூத் தான் 🤩
ஜமீனையா இது அந்த செட்டி இல்ல Aura 10/10 இந்த ஷெட்டி....
Deleteஜமீனையா இது அந்த செட்டி இல்ல Aura 10/10 இந்த ஷெட்டி....///
Deleteஅது கெட்டிகா ஷர்மா குமார்..
இவங்க க்ரித்தி ஷெட்டி. புல்லட் சாங்னு யூட்யுப்ல தேடிப்பாருங்க.
இந்த ஆராச்சிலே பல விஞ்ஞான உண்மைகள் வெளி வரும் போலிருக்கே 🤔
Delete// க்ரித்தி ஷெட்டி. புல்லட் சாங்னு //
Deleteஅடேங்கப்பா என்ன ஒரு டான்ஸ்
இந்த ஆராச்சிலே பல விஞ்ஞான உண்மைகள் வெளி வரும் போலிருக்கே 🤔///
Deleteமுனைவர் பட்டம் வாங்கியிருக்கோமாக்கும்..😎
23rd
ReplyDeleteஅகில உலக மமிதா பைஜூ ரசிகர் மன்றத் தலைவர் என்ற முறையில் ,ஒரே மாதத்தில் இரண்டு அத்தியாயங்கள் கொண்ட இரண்டு இதழ்கள் என்ற ஐடியாவை வன்மையாக ஆதரிக்கிறேன்.
ReplyDeleteஅப்போ ஷெட்டி பேரவையிலே போஸ்டிங் வாணாமா ஸார்?
Deleteஅட ரொம்ப நாள் கழித்து நம்ம புனித சாத்தான் ஜி
Deleteசார் இது ஐசிங் ஆன் தி கேக் . சூப்பர் சார். ஒரு கதையும் ஆச்சு. புத்தகத்துக்கு புத்தகமும் ஆச்சு. All people Satisfied.
ReplyDeleteஅஸ்கு - அஸ்கு... வார்டன்னா அடிப்போம் 💪...
DeleteSir... மனந்தால் மகாதேவி தான்.... 1000 page குண்டு புக் தான் வேணும்... But அந்த Classy Slipcase idea... 👍 குண்டு புக் lovers அ ஓரளவுக்கு திருப்தி படுத்தும். So...we will be happy.. If you implement the same.
ReplyDeleteபதிவ முழுசா படிங்க சாரே 🥹
Delete😘💐👍Me in 😘😘😘
ReplyDeleteஅப்பாடா
ReplyDeleteநானும் அம்மாவும் இதுவரை படித்ததில்லைங்க
அடுத்த மாதம் வரும் வரை அம்மா வெயிட் பண்ணுவாங்களா என யோசனை இருந்ததுங்க 😁😁😁
கலரில் முதல் முறையாக படிக்க ரெடிங்க
இப்பொழுது தான் இரண்டு பதிவுகளையும் வாசிக்க முடிந்தது சார்...முதலில் பலமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் சார்...முதல் பதிவை படித்ததும் மிக மிக மகிழ்ச்சி என்றாலுமே எனக்கு ஏற்கனவே ஒரே பாகமாக வந்த கதை இப்பொழுது இரண்டு பாகமாக அடுத்தடுத்து எனும் பொழுது சிறு வருத்தமே என்றாகி இருந்த பொழுது இந்த பதிவு அந்த வருத்தத்தையும் போக்கி விட்டது சார்..சூப்பர் சூப்பர் சூப்பர்..
ReplyDeleteஹைய்யா ...தலீவருக்கு பொழுது விடிஞ்சிடுச்சி !!
Deleteதலைவர் ஹாப்பி. நல்லவேளை தலைவரின் ஒன்றை வேப்பிலை டான்ஸ் போராட்டம் இல்லாமல் வெற்றி வெற்றி 😊
Delete:-))
Deleteஅதுவும் கதைகள் அனைத்துமே தேர்ந்தெடுத்த மிக பழமையான ..வெற்றியான கதைகள் எனும் பொழுது இன்னமும் மகிழ்ச்சி கூடுகிறது சார்..இந்த சந்தா தொடர்ச்சியில் தனி தனி பாகங்களாக வந்த சில டெக்ஸ் சாகஸங்கள் ( இரத்த ஒப்பந்தம்..போல..)அடுத்த முறை ஒரே இதழாக அந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து விடுங்கள் சார்..
ReplyDeleteமுக்கிய குறிப்பு : ஒரே இதழாக..:-)
சார் ஒரு சின்ன சந்தேகம் ஹார்ட் பவுண்ட் or பேபர் back ?
ReplyDeleteAnyway this is for collection purpose only sir I have all the originals, previous colour reprint with hardbound makes excellent collection edition sir
Deleteமூ.ச. கேட்ட எப்போவுமே தொறந்தே வைச்சிருக்கது இது போலான அவசர- ஆத்திரப் பயணங்களுக்கோசரம் தானே சார் ?
Delete112 பக்க புக்குக்கு எப்படி சார் ஹார்ட் கவர் வரும் ?
கொஞ்சம் ஆர்வ கோலார் தான் சார் காரணம் 😁
Deleteஅதுக்கு தான் மமிதா பைஜூ கிடைக்குமானு பார்த்தோம் 😭😭😭
Delete"திருப்திப்படா வாலிப சங்கம்" உங்களை அன்போடு அழைக்கிங் நண்பரே!
Deleteபப்லிஷரா உங்க கவலை உங்களுக்கு ரசிகரா எங்க கவலை எங்களுக்கு
Deleteஇரத்த நகரம் மிஸ்ஸாகுதே சார்...😯
ReplyDeleteஇந்நேரத்துக்கு மிசஸ் ஆகியிருக்கணுமே.... இப்போ தான் மிஸ்ஸாவே ஆகுதா? 🤔🤔🤔
Deleteஒரு மனுசன் தன்னோட தவ்ளூண்டு வயசுல ரசிச்ச கதை கலர்ல வரக்காணோமேன்னு அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினாக்கா........ 😭
Delete:-))
Deleteஆல் ஈஸ் வெல் சார்
ReplyDeleteஇரண்டு தவணைகளாகவும். கட்டலாம். நன்றிங்க சார்.
ReplyDeleteஎனக்கு டெக்ஸ் கதைகளிலேயே நம்பர் 1 இடம் பிடித்த சாத்தான் வேட்டை வருவது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி ஆனால் நான் எதிர் பார்த்தது கார்சனின் கடந்த காலம் சைசில்
ReplyDeleteஆங்.... ஜமுக்காளத்தை எடுத்தா மைதீன்....! நெஸ்ட் பஞ்சாயத்த ஆரம்பிக்கலாம் 💪
Delete224 பக்கங்கள் - MAXI சைசில் என்றால் தோராயமாய் ரூ. 850.
Deleteஒற்றை புக்குக்கு அம்புட்டு செலவிட்டு விட்டு மொத்த சந்தாவினை எவ்வளவென்று நிர்ணயிப்பது என்பதையும் சொல்லிப்புடுங்களேன்!
சாத்தான் வேட்டை தனியாக போடலாம் டெக்ஸ் கிளாசிக் சந்தாவில் சாத்தான் வேட்டைக்கு பதில் எமனுடன் ஒரு யுத்தம் இரத்த நகரம் அல்லது வேறு ஏதாவது கதை போடலாம் ஆசிரியரே
Deleteஅற்புதமான டெக்ஸ் கதைகள் வண்ணத்தில் வருவது சூப்பர் சார்...
ReplyDeleteஒவ்வொரு கதைகளும் மொத்தமே 220 பக்கங்களுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ள புத்தகங்களை ஒரே புத்தகமாக வெளியிடுவது தான் சாலச்சிறந்தது.
அதனைத் துண்டு துக்கடாவாக கொத்துக்கறி போடுவது.... நினைக்கவே ஏமாற்றமாக உள்ளது...
தற்சமயம் புதிதாக வரும் கதைகளே எளிதாக 200 பக்கங்களைக் கடக்கும் போது டெக்ஸ் இந்த கதைகள் கலரில் வரும் மறுபதிப்புதான்... அதனை இரண்டாக உடைப்பதை ஏற்க முடியவில்லை சார்...
நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது.... இது உங்கள் பதில் ஆனால் ஏமாற்றம் மட்டுமே எங்களுக்கு மிஞ்சும்....
புதிய புத்தகங்களையே நம்மவர்கள் கண்டுகொள்ளாமல் பிறகு படித்துக் கொள்ளலாம் நினைக்கும் போது... நீங்கள் எத்தனை துண்டுகளாக மாற்றி தந்தாலும் மறு பதிப்புக்கு என்ன நேரம் என்று சொல்லித்தான் தீர வேண்டுமா....??
ஒரு காலத்தில் குண்டு குண்டு புத்தகங்கள் பெரும் கனவாய் இருந்தது... ஆனால் அவர் எளிதாகவே கிடைத்தது... ஆனால் இன்று வளர்ந்த பின்னும் குண்டு புத்தகம் நிறைவேறும் பாக்கியம் கானல் நீர் வடிவில் காத்திருக்கிறது....
எப்படி இந்த பதிவைநீங்கள் நீக்கி விடுவீர்கள் என்று தெரியும்.... இருப்பினும் சொல்லத் தோன்றியது... அவ்வளவுதான் நன்றி சார்....
நான் எதுக்கு நண்பரே பதிவை நீக்கப் போறேன்?
Deleteமாற்றுக் கருத்துக்கள் நமக்கென்ன புதுசா? அவற்றின் பொருட்டு உலகம் எதுவும் மாற்றிச் சுழலப் போகிறதா? ஆளுக்கொரு அபிப்பிராயம் இருப்பது இயல்பே என்ற mindset க்கு நான் வந்து மாமாங்கம் ஆச்சு!
இரத்த நகரம் plz try sir🙏🏻
ReplyDelete
ReplyDeleteமறு பதிப்புகளில் எனக்கு ஆர்வம் அதிகம் எப்போதும் இருந்ததில்லை. வண்ணத்தில் டெக்ஸ் மறு பதிப்பு என்பது சற்றே மகிழ்வூட்டும் செய்திதான்.
எடிட்டர் சாரின் இரண்டாம் பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பது சந்தோஷம் அளிக்கும் செய்தி
ஒவ்வொரு பூவிலிருந்தும் பூவை உறிஞ்சும் வண்டாக இருக்கவே ஆசை. தேன்குடத்தில் இருந்து மதுவை அருந்தும் வண்டாக இருப்பதில் சில சிரமங்கள் உள்ளன.
அடுத்த வாரம் இரட்டை இதழ்களுக்காக சந்தா செலுத்தப்படும்.
ஒரே இதழாக சுமார் ஆயிரம் பக்கங்களில் தயார் செய்வதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் பற்றி எடிட்டர் சார் இவ்வளவு விளக்கம் கொடுத்த பின்பும் அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் எப்படி?
ஒரே இதழ் இரண்டு பாகங்களாக தனித்தனியாக வருவதில் நமக்கு அனுகூலங்கள் தான் இருக்கிறது போல் தோன்றுகிறது. சில பேருக்கு உறுத்தலாக இருந்த அடுத்த அடுத்த மாதங்களில் ஒரே இதழின் இரண்டு பாகங்கள் என்ற குறையும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும். போதாக்குறைக்கு இறுதியில் ஸ் லிப் கேஸ் வேறு. 🌹
FAB 5 & GNT முன்பதிவில் பின் தங்கியிருப்பதில் மிகவும் வருத்தம் தான்.
+1
Deleteஅப்பாடா! அனைத்தும் சுமுகமாக முடிந்தன. இனிமே சந்தா கட்டற வழிய பார்க்கணும்
ReplyDeleteHi editor sir ,
ReplyDeleteExcellent announcement. I always like Tex in color and especially the classic ones.
Fab 5 - even if it’s less 300 , is there any chance for publishing them or will it be dropped sir ?
Story selections are really good on fab 5
Yes this is a good question.
DeleteFab Five வருமா?
தாத்தாஸ், மேகி வருமா?
குமார் @ கஷ்டப்பட்டு பணம் கட்டி இருக்கிறோம். நம்ப விஜயன் சார் கண்டிப்பாக மனதில் கொண்டு இவைகளை நமக்காக வெளியீடுவார் என்று நம்புவோம். 😉 ஏதோ நம்மால முடிஞ்சது குமார்
Deleteதாத்தாஸ் & மேகி வந்துவிடும், சகோதரர்களே
Deleteபோன பதிவில் சொல்லி இருந்தார், சார்
மகிழ்ச்சி ரம்யா
Deleteலட்டோ பூந்தியோ நமக்குத் தேவை ஸ்வீட்டை மொக்கனும். அவ்வளவு தான்.
ReplyDeleteஆனா ஒண்ணு… இதுக்கும் சந்தால வர மாதம் ஒரு டெக்சுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது. இது வேற ..அது வேற என்பதை மனதில் வைச்சுக்குங்க.
ஆமா ஆமா அதனாலே தானே தனி சந்தா
Delete72nd
ReplyDeleteTTT - The Terrific Tex சந்தா..
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்.
டெக்ஸ் வில்லர் 6 கதைகள், மறுபதிப்பு கதைகள் வண்ணங்களில் 1000 பக்கங்களுக்கு அருகில். டெக்ஸ் ரசிகர்களுக்கு மெத்த மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇரு நாட்களாக பதிவுகளையும் பின்னூட்டங்களையும் வாசித்து வருகிறேன். கருத்துகள் வரவேற்புகள் நன்றாக உள்ளது.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு சேலம், சின்ன திருப்பதியில் உள்ள என் நண்பர் ஒரு கருத்து சொன்னார்.
"கிளாசிக் நாயகர் கிளாசிக் கதைகள் அல்லது மறுபதிப்பு வரும் போது கேலியும், கிண்டலும், எதிர்ப்பும், கிளாசிக் கதைகளின் ரசனையை குறைத்து மதிப்பீடு செய்தும்.. பிளாக்கில், நண்பர்கள் குழுவில் கிண்டல்கள் பதிவுகள் அமோகமாக இருக்கும். ஆனால் எங்கேயாவது புதிய கதைகளுக்கான அல்லது புதிய நாயகர்களுக்கான அறிவிப்பு வரும் பொழுது கிளாசிக் வாசகர்கள் கேலி கிண்டல்கள் தெரிவித்து எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது பார்த்தாயா ? இதுதான் கிளாசிக் நாயகர்களான இரும்பு கை மாயாவி, ஆர்ச்சி, ஸ்பைடர், லாரன்ஸ் டேவிட் கதைகளை வாசித்து பழகிய கிளாசிக் ரசிகர்களின் மெச்சூரிட்டி" என்றார். இது நண்பரின் தனிப்பட்ட கருத்து ஏனோ நினைவு வந்தது. கிளாசிக் கதை நண்பர்கள் பற்றி அவர் சொன்னது உண்மைதான் போல.
கிளாசிக் நாயகர்களின் கதை அல்லது மறுபதிப்பு கதைகள் வந்தால் பிடித்திருந்தால் தொடருங்கள். பிடிக்காவிட்டால் தவிர்த்திடுங்கள்... ரசனையில் முதிர்ந்தவர் ஆக காட்டிக் கொள்வதற்காக கிளாசிக் கதைகளை, நாயகர்களை கேலி கிண்டல் தவிர்ப்பது நலம்.
ReplyDeleteஉங்களுக்குப் பிடித்த நாயகர்களை, கதைகளை சந்தோசமாக கொண்டாடுங்கள் கிளாசிக் ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்தது கொண்டாடட்டும்.
இந்தக் கருத்தை சொல்வதற்கு சரியான சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாக கருதுகிறேன்.
இன்னிக்கு பதிவுக்கிழமையாச்சே?!! 🤔
ReplyDeleteநேற்றே போட்டாச்சாம்
Deleteதிங்கள் புத்தகம் கிளம்பும் நாள் அன்று புது பதிவு கேட்போம் இளவரசரே
அது சரிதான் 😊
Deleteகடல் சகோ . முந்திஎல்லாம் 1.ம் தேதி ஒரு பதிவு என்பது வழக்கம் .சனிக்கிழமை 1.ம் தேதி பதிவு வந்தாலும் ஞாயிறு அன்று பதிவு வழக்கம் போல வரும்.தற்போது சார், வேலை பளுவின் காரணமாக இந்த வழக்கத்தை குறைத்துக் கொண்டு விட்டார்
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteபதிவு ஆர்வத்துடன் கேட்கும் நாமளுமே இப்போது எல்லாம் பதிவு வந்த பிறகு பெரியதாக இங்கு தலைகாட்டுவது இல்லையே நண்பர்களே 😒.
ReplyDeleteஆமாங்க பரணி ஜி. கமெண்ட்ஸ் 300 தொட்டு ரொம்ப நாளாகுது. 200கூட வரமாட்டேங்குது
ReplyDeleteஇரட்டை வேட்டையர்கள் புத்தகங்களையும் வெளியிடலாமே.
ReplyDelete