Powered By Blogger

Friday, May 01, 2026

பைஜு இல்லேன்னா ஷெட்டி !

 நண்பர்களே,

இது நேற்றைய பதிவின் நீட்சி folks - மறவாது அதனை முதலில் வாசித்து விடுங்கள் ப்ளீஸ் ! அதன் லிங்க் :  : https://lion-muthucomics.blogspot.com/2026/04/dial-t.html

வணக்கம். காரணங்கள் எதுவாய் இருப்பினும் "TEX" என்றாலே அரங்கமே அதிர்வது இன்னமுமே தொடர்வதில் செம ஹேப்பி அண்ணாச்சி ! ஆனால் தலைகீழாய் நின்று தண்ணி குடிக்க முற்பட்டாலும்,  "ஒரே புக் - ஒரே கதை" என்ற பார்முலாவிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளல் அசாத்தியம் என்பது yet again நிரூபணம் காண்கிறது !! இத்தனைக்கும் தனித்தனி புக்ஸ்களாய் டெக்சின் சாகசங்களை ரசிப்பதற்கு நாம் புதியவர்களே அல்ல தான் ! 

  • இதோ போன வருஷம் கூட Magic Moments ஸ்பெஷலில் 5 மாதங்களின் இடைவெளியினில், டெக்சின் சாகசத்தினை வெளியிட்டிருந்தோம் தான் ! 
  • Again "பனிவனப் போராளிகள்" நெடும் கதை - இரு இதழ்களில் ! 
  • காத்திருக்கும் Tex தீபாவளி மலர் (அசுரர்கள் அடங்குவதில்லை) கூட நெடும் கதை in 2 ஆல்பம்ஸ் என்ற பார்முலாவில் தானே வரவுள்ளது ? 

So மறுபதிப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் வெளிவந்தால் should be o.k என்றே எண்ணியிருந்தேன் ! But கோப்பையில் காலியான பகுதியே பெரும்பான்மை நண்பர்களின் கண்களை உறுத்துவது  தான் சங்கடமாக உள்ளது ! 

இதே - 'ம.ம.பை.மட்டுமே' கோஷத்தினால் தான் இளம் டெக்ஸை மாதா மாதம் ஒரு தனித்தடத்தினில் இத்தாலிய ஸ்டைலில் நம்மிடையே வரக்கூடிய வாய்ப்பு புஸ்வாணமாகிப் போனது. At least மறுபதிப்புகளிலாச்சும் கொஞ்சம் flexible ஆக இருந்திடுவோமே ;  ஒரு தொடராய்  டெக்ஸை ரசிக்கும்  அனுபவமானது எவ்விதம் தான் உள்ளதென்று பார்த்திடலாமே ? என்ற அவாவே எனது திட்டமிடலின் பின்னணி ! ஒரே புக்காய்  வெளியிடக்கூடிய இதழினை இரண்டாய் பிரித்து வெளியிடும் போது  நமக்குச் செலவினங்கள் ஜாஸ்தியே ; இரண்டு அட்டைப்படச் செலவுகள் ....இரு பைண்டிங் கூலிகள் என்று ! So முன்செல்லும் நாட்களுக்கு இந்தப் பரீட்சார்த்த முயற்சி உதவிடக்கூடுமே என்ற எண்ணத்தினில் தான் செலவுகளை பொருட்படுத்தாது, தொடர்களாய் வெளியிடும் திட்டத்தையே முன்மொழிந்திருந்தோம் ! But சில விஷயங்களில் மாற்றங்களுக்கு வாய்ப்பே லேது என்பது கஜினி முகமத்துக்கே தண்ணி காட்டிடும் உங்களது உறுதிகள் காட்டிடுகின்றன !

நமது திட்டமிடல்களை, விலைகளை, இதழ்களின் எண்ணிக்கைகளை போனெலியில் தெளிவாகச் சொல்லியே உரிமைகளை வாங்கியுள்ள நிலையில் இப்போது, "இல்லீங்க சார்... கோட்டை அழிச்சிட்டு  முதல்லேர்ந்து பரோட்டா சாப்பிடலாமா ?" என்று கேட்டிட வாய்ப்பில்லை ! So the best I can replan will be as follows :

இந்த மாதம் முதல் பாகம்  & தொடரும் மாதத்தில் கிளைமாக்ஸ் பாகம் என்ற திட்டமிடலை சற்றே மாற்றிக் கொள்ளலாம் ! ஒரே மாதத்தில், ஒரே தருணத்தில், இரு அத்தியாயங்களையும் தனித்தனி இதழ்களாகவே வெளியிட்டு விடலாம் ! Which will mean : 

ஆகஸ்ட் '26

சாத்தான் வேட்டை 1 

சாத்தான் வேட்டை 2 

அக்டோபர் '26

நள்ளிரவு வேட்டை 

டிசம்பர் '26  : 

எல்லையில் ஒரு யுத்தம் 1 

எல்லையில் ஒரு யுத்தம் 2 - 

ஜனவரி '27  : 

மரண தூதர்கள் + இரும்புக்குதிரையின் பாதையில் 

(இது லயன் # 100-ல் வந்த classic கதை ; not the recent one)  

மார்ச் '27 

இரத்த முத்திரை

So மார்ச் '27 -ல் TTS முற்றுப் பெறும் விதமாய் , சீரான விலைகளில், அதே சமயம் உங்களைத் தொங்கலில் விடாதும், ஒரே மாதத்தில் அந்தந்தக் கதைகளை வாசிக்க வசதியாகவும் வெளியிட்டு விடலாம் ! என்ன - மாதமொன்று எனும் போது பணியாற்ற கொஞ்சம் அவகாசம் கிடைக்கும் ; but இங்கே நடு நடுவே ஒரு மாதத்தினை skip செய்கிறோமெனும் போது அது ஈடு செய்து கொள்ளும் தான் ! And நேற்றே சொன்னது போல இந்தச் சந்தா முற்றுப் பெற்ற பிற்பாடு ஒரு classy slipcase-ல் சகலத்தையும் உள்ளடக்கவும் முயற்சிக்கலாம் ! 

Of course - இது நீங்கள் எதிர்பார்த்த மமிதா பைஜு அல்ல தான் ; but இது க்ரித்தி ஷெட்டி என்று எடுத்துக் கொள்ளலாமே ? What say folks ?

Have a great long weekend all !! See you around !


P.S : TERRIC TEX சந்தாவுக்கு 2 தவணைகளிலும்  பணம் அனுப்பிடலாம் guys !





35 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. காலை வணக்கம் சார் ஒரே மாதத்தில் இரு அத்தியாயங்கள் வருவது மனதுக்கு நிறைவாக இருக்கின்றன சார், நான் டெக்ஸ் வில்லர் க்கு மிக பெரிய ரசிகன் சார் Slip Case யில் பொக்கிஷமாகா பாதுகாப்பேன் சார் 😍😍

    ReplyDelete
  3. மமிதா பைஜுக்கு ஈடாகாது எனினும் இந்த ஐடியா கொஞ்சூண்டு பரவால்லைங்க சார்! 🙏💐💐💐😍😍

    ReplyDelete
    Replies
    1. பரவை முனிம்மா போய் சேரந்துட்டாங்க ஸார் - இல்லாட்டி first choice ஆ இருந்திருப்பாங்க!

      Delete
    2. வாட் அபவுட் தேனி குஞ்சரம்மா குருநாயரே?

      Delete
    3. ஹொவ் அபௌட் ரங்கம்மா இளவரசே!

      Delete
  4. // So the best I can replan will be as follows //
    இந்த அறிவிப்பு இன்னமும் கூடுதல் மகிழ்ச்சியே,முதல் பதிவில் மாற்றுக் கருத்து இருப்பினும் இதழ்கள் எல்லாம் கிடைத்தவுடன் ஸ்லிப்கேஸில் வைத்துக் கொள்ளும் திட்டம் பிடித்திருந்தது,மாற்றுத் திட்டமான இரண்டாம் அறிவிப்பும் நலமே சார்,தொடரட்டும் வெற்றிகள்...

    ReplyDelete
  5. ம்ம்.. ஓகே ஷெட்டி...

    ReplyDelete
  6. சார், நேற்று இரவு பதிவின் லிங்க் இந்த பதிவில் கொடுத்து விடுங்கள் சார். நேற்றைய பதிவை படிக்காத சில நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  7. இது நீங்கள் எதிர்பார்த்த மமிதா பைஜு அல்ல தான் ; but இது க்ரித்தி ஷெட்டி என்று எடுத்துக் கொள்ளலாமே ? What say folks ? ////

    கமான் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு....😍

    ReplyDelete
    Replies
    1. யூத்னா இப்புடி இருக்கணும் !!

      Delete
    2. ஒரு யூத்தோட மனசு இன்னொரு யூத்துக்குத்தான் தெரியும்னு முன்னாள் யூத்துகள் சொல்லியிருக்காங்க சார்.

      Delete
    3. கமான் பேபி லெட்ஸ் கோ ஆன் த தண்டர் பேர்டு ....😍

      நாங்களும் யூத் தான் 🤩

      Delete
    4. ஜமீனையா இது அந்த செட்டி இல்ல Aura 10/10 இந்த ஷெட்டி....

      Delete
    5. ஜமீனையா இது அந்த செட்டி இல்ல Aura 10/10 இந்த ஷெட்டி....///

      அது கெட்டிகா ஷர்மா குமார்..

      இவங்க க்ரித்தி ஷெட்டி. புல்லட் சாங்னு யூட்யுப்ல தேடிப்பாருங்க.

      Delete
    6. இந்த ஆராச்சிலே பல விஞ்ஞான உண்மைகள் வெளி வரும் போலிருக்கே 🤔

      Delete
    7. // க்ரித்தி ஷெட்டி. புல்லட் சாங்னு //

      அடேங்கப்பா என்ன ஒரு டான்ஸ்

      Delete
  8. அகில உலக மமிதா பைஜூ ரசிகர் மன்றத் தலைவர் என்ற முறையில் ,ஒரே மாதத்தில் இரண்டு அத்தியாயங்கள் கொண்ட இரண்டு இதழ்கள் என்ற ஐடியாவை வன்மையாக ஆதரிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்போ ஷெட்டி பேரவையிலே போஸ்டிங் வாணாமா ஸார்?

      Delete
  9. சார் இது ஐசிங் ஆன் தி கேக் . சூப்பர் சார். ஒரு கதையும் ஆச்சு. புத்தகத்துக்கு புத்தகமும் ஆச்சு. All people Satisfied.

    ReplyDelete
    Replies
    1. அஸ்கு - அஸ்கு... வார்டன்னா அடிப்போம் 💪...

      Delete
  10. Sir... மனந்தால் மகாதேவி தான்.... 1000 page குண்டு புக் தான் வேணும்... But அந்த Classy Slipcase idea... 👍 குண்டு புக் lovers அ ஓரளவுக்கு திருப்தி படுத்தும். So...we will be happy.. If you implement the same.

    ReplyDelete
    Replies
    1. பதிவ முழுசா படிங்க சாரே 🥹

      Delete