நண்பர்களே,
CAUTION : ஒரு நெடும் பதிவு லோடிங் ....
வணக்கம். சிக்கின திக்கெல்லாம் இண்டிகேட்டரை போட்டுவிட்டு "ரிவர்ஸிலும் போவோம்... முன்னாடியும் போவோம்... புளிய மரத்திலும் ஏற்றுவோம்..." என்று கூத்தடிக்கும் நம்ம வண்டிக்கு எதுவுமே ஒரு முழுமையான சர்ப்ரைஸ் ஆகிடக் கூடாது தான். இதோ இன்று வரையிலும், Fab 5 மற்றும் Graphic Novel Twins சார்ந்த முன்பதிவுகள் செம மொக்கை போட்டு வருகின்றன என்ற புலம்பலுக்கு முற்றுப்புள்ளியே வைக்கவில்லை ; ஆனாலும் சூப்பர்மேன் பாணியில் "டாஹ்டா" என்று புதியதொரு திக்கில் தடதடக்க புதியதொரு ரயில் தடத்தைப் பற்றி அறிவிக்க அடியேன் ஆஜர்.
முன் செல்லும் பாதையில் கொஞ்ச காலத்திற்கேனும் பரீட்சார்த்த முயற்சிகள் வேண்டாமே என்பதாகவே உங்களது சமீபத்திய எண்ணவோட்டங்கள் இருப்பதாய் எனக்குள் ஒரு எண்ணம். Yes, "நாங்க சகலத்துக்கும் தயார்!"என்று முழங்கிடும் ஒரு சிறு வட்டம் இருப்பதை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் நல்ல நாளைக்கே நமக்கு இருப்பது ஒரு ஆகச்சின்ன வட்டம். And அதற்குள் இன்றைக்கு இன்னொரு மினி வட்டம் வரையும் அவசியம் நேரும் போது, உள்ளங்கையில் போட்டுக் கொள்ளும் மருதாணிக் கோலம் அளவிற்கே நமது உள்வட்டம் சுருங்கிவிடும் அபாயம் இருக்கிறது.So இந்த நொடியில் 'ஆடுறா ராமா...தாண்டுறா ராமா' என்று தினுசு தினுசாய் வித்தை காட்டுவதைக் காட்டிலும், பெரும்பான்மைக்கு பிடித்ததைப் படிக்கத் தரும் புண்ணியத்தையாவது கட்டிக் கொள்ளுவோமே என்று படுகிறது. "ஆஹா ஓவரா பில்டப் கொடுக்கிறானே?" என்று கடுப்பா? இதோ மேட்டருக்குள் நுழைகிறேன்.
போன வருஷம் கிட்டத்தட்ட இதே தருணத்தில் "ஒரு ஆயிரம் பக்க வெளியீடு போட்டே தீரணும்" என்று இங்கே குரல்கள் உரக்க ஒலித்தது நினைவிருக்கலாம். And அந்த ஆயிரம் பக்கங்களில் டெக்ஸின் இதுவரை மறுபதிப்பு கண்டிரா கிளாசிக்குகளை கலரில் போட்டுத் தாக்கினால் தெறி மாஸாக இருக்குமே என்ற எண்ணமும் தலைதூக்கி இருந்தது. ஆரம்பத்தில் மண்டையை மறுப்பில் நான் ஆட்டி வைத்தாலும், உங்களது ஒட்டுமொத்த உத்வேகத்தைக் கண்டபோது எனக்குமே அந்த சபலம் தொற்றிக் கொண்டதை மறுக்க மாட்டேன். மட மடவென ஆபீசில் மைதீனிடம் சொல்லி, ஒரு ஆயிரம் பக்க டெக்ஸ் சைஸிலான ஹார்ட் கவர் இதழின் மாதிரியையும் தயாரித்து, அதனை ஒரு போட்டோவும் எடுத்து, நமது வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் பகிர்ந்து இருந்தது நினைவிருக்கலாம். "தெய்வங்களா இத்தனை பெரிய புக்கை இத்தனை பக்கங்களோடு போடும் பட்சத்தில் - விலை ரூ.1800-ஐத் தொட்டு விடுமே பரவாயில்லையா?" என்று கேட்டிருந்த போது அதற்குமே டபுள் ஓகே என்று சொல்லியிருந்தீர்கள். 'சரி.... பார்த்துக் கொள்வோம்' என்றபடியே அந்த நொடியில் ஆறப்போட்டு இருந்தாலும், அடிமனதில் இது தொடர்பான சிந்தனை ஓட்டமெடுத்துக் கொண்டே தான் இருந்தது.
And ஓரளவிற்கு அது குறித்த shape எனக்குள் கிட்டியிருந்த போது போனெலியிடம் மெதுவாய் இது குறித்து வாயைத் திறந்தேன். 'இன்ன மாரி... இன்ன மாரி... எங்க ஊரில் டெக்ஸ் தலைகாட்டி 40 ஆண்டுகள் ஆகின்றன. அதைக் கொண்டாடும் வகையில் அடுத்த வருஷத்தில் ஒரு ஆயிரம் பக்க அதிரடி டெக்ஸ் இதழை கலரில் போட ஆசை. இது சரிப்படுமா? " என்று அவர்களிடம் கேட்டிருந்தோம். "அடடே அதற்குள் 40 ஆண்டுகள் ஓடிவிட்டனவா? பலே பலே" என்று முதுகில் தட்டிக் கொடுத்தவர்கள், 'கொஞ்சம் யோசித்து விட்டுச் சொல்கிறோம்' என்று பதிலளித்திருந்தார்கள். தொடர்ந்த பொழுதுகளில் அவர்கள் தெரிவித்தது - "ஒரே புக் ஆயிரம் பக்கங்கள் என்பது தயாரிப்பில் ஐரோப்பியத் தரங்களுக்கே ஒரு நூறு தலைநோவுகள் தரக்கூடிய சமாச்சாரமாச்சே? இதனை இந்தியாவில் நீங்கள் செய்திடும் போது எத்தனை கவனமாய் பணி செய்தாலும் அச்சிலும் சரி பைண்டிங்கிலும் சரி, பூரண திருப்தி கிட்டுவது கடினம் என்பதே எங்களது அபிப்பிராயம். ஆகையால் ஒரே ஆயிரம் என்பதை மறுபரிசீலித்து தனித்தனி இதழ்களாய் அல்லது ஒன்றிரண்டு கதைகளின் தொகுப்புகளாய் இப்போது போலவே தொடர்ந்திடலாமே?" என்று பகிர்ந்திருந்தனர்.
அவர்களது கவலை நியாயமானதே என்பதை மறுப்பதற்கே இல்லை தான். சொல்லப்போனால் மிகச் சரியாய் இதே காரணங்களை சொல்லியே நானுமே உங்களிடம் மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தேன் ! ஆயிரம் பக்கங்கள் எனும் போது கிட்டத்தட்ட 65 துண்டு காகிதங்களில் அச்சிட்டு, அவற்றை ஒன்று கோர்த்து, தைத்து அதன்பின்னே ஹார்ட்கவர் பைண்டிங் செய்தாக வேண்டும். அந்த பருமன் & அந்த பழு தாங்கும் விதமாய் அட்டையும் சூப்பர் ஸ்டராங்காக இருத்தல் அவசியமாகிடும். சரி,எல்லாம் செய்துவிடலாம் தான். ஆனால் அந்த 65 துண்டுக் காகிதங்களைச் சேகரிக்கும் போது, ஒற்றக் காகிதம் விடுபட்டாலோ, இடம் மாறிப் போனாலோ அந்த புக்கே குப்பைக்குத் தான் போக நேரிடும். தவிர அத்தனை பருமனான இதழை இங்கு நமக்கு சாத்தியமாகிடும் பைண்டிங் இயந்திரங்களின் மூலம் தையல் செய்திடும் போது, ஐரோப்பியத் தரங்கள் ஒரு கனவாகவே இருந்திடும் என்பதை மறுக்க இயலவில்லை. So அவர்களது வாதத்தில் முழுமையான லாஜிக் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
"இல்லைங்கண்ணா எங்க ஊர் முயலெல்லாம் மூணு கால்ல தான் நொண்டியடிக்கும்" என்று மறுக்கா பிட்டைப் போட்டுப் பார்க்கும் சபலம் உள்ளுக்குள் எழுந்தது தான். ஆனால் சுப்ரிமோ ஸ்பெஷல் வெளியிட்ட தருணத்திலேயே பைண்டிங்கில் இந்த பக்கக் குளறுபடிகள் / விடுதல்கள் சார்ந்த நோவுகள் கணிசமாகவே எழுந்திருந்தது நினைவுக்கு வந்தது. இது அதைக்காட்டிலும் முரட்டு புக் எனும்போது, பக்கப் பிழைகள் எழும் பட்சத்தில் குமுறி எடுத்துவிடுவீர்கள் என்ற பயமும் உள்ளுக்குள் விரவுவதை உணர முடிந்தது.ஆனால் 'மணந்தால் மகாதேவி - படித்தால் குண்டு புக்' என்று நீங்கள் ஒற்றைக் காலில் தான் நிற்பீர்கள் என்பதுமே தெரியாமல் இல்லை. So மறுபடியும் "இல்லைங்க சார்... நாங்கள் முடிந்த மட்டிற்கு கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்துக் கொள்கிறோம். அதிலும் நம்ம கண்களின் சைஸ் பற்றித் தான் உங்களுக்குத் தெரியுமே? So பிழையில்லாமல் பார்த்துக் கொள்கிறோம்" என்று மீண்டும் ஒருவாட்டி கேட்கவும் செய்தோம்.ஆனால் இத்தனை தசாப்தங்களாய் டெக்சோடு பயணித்து வரும் ஜாம்பவான்களே கூட இத்தகையதொரு தடிமனான முயற்சிக்குள் தலைவைத்துப் படுத்திருக்கவில்லை என்பதால், "வேண்டாமே விஷப்பரீட்சை!" என்பதே அவர்களது பதிலாகவும் இருந்தது.
தெய்வமே தீர்ப்பு சொன்ன பிற்பாடு, முன்சீப் கோர்ட்டில் போய் மனுப் போடுவது அரை அணாவிற்கு பலன் தரப் போவதில்லையே ?! So சத்தமில்லாமல் அதை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் முன்மொழிந்தது போல் தனித்தனி இதழ்களாக வெளியிட என்ன செய்யலாம் என்ற யோசனையோடு நாட்களை நகர்த்தினேன்.அதற்குள் 2026-ன் அட்டவணைத் தருணம் வந்துவிட அதனில் பிஸியாகி விட்டாச்சு. ஜனவரி பிறக்கும் வரை மேற்கொண்டு எதுவும் சிந்திக்கவும் இயலவில்லை. பிப்ரவரி பிறந்த பிற்பாடு what next? என்ற சிந்தனைகள் தலைக்குள் ஓடிய போது, தொங்கிக் கொண்டு நின்ற இந்தக் கிளாசிக் கலர் மறுபதிப்பு ப்ராஜெக்ட் பற்றிய நினைவு திரும்பியது. சரி, கிராபிக் நாவல் ட்வின்ஸ் முன்பதிவுகளும் அதற்குப் பின்பான Fab 5 முன்பதிவுகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன ; இந்த நொடியில் அவற்றை கொஞ்சமாச்சும் கரைசேர்ப்பதே பிரதானம் and அதன்பின் இந்த க்ளாசிக் டெக்ஸ் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் ஓட்டம் எடுத்தவை நாட்கள்தானே அன்றி, முன்பதிவுகளின் துரிதமே அல்ல. 'ஹாவ்' என்ற பெரும் கொட்டாவிகள் சகிதம், கிராபிக் நாவல்களுக்கும் சரி, Fab 5-க்கும் சரி, தலா 212 + 228 முன்பதிவுகளைத் தாண்டி எதுவுமே சாத்தியப்படவில்லை.
ஆனால் இன்னொருபுறமோ மரணத்தை மறந்தது மம்மியாகவே இருந்தாலும், தெறிக்கவிடுவதில் டெக்ஸ் சகலருக்கும் டாடி என்பதை ஏப்ரல் நிரூபித்துக் கொண்டிருந்தது. மறுபக்கமோ கிங் ஸ்பெஷலில் வேதாளரும், இன்ன பிற ஜாம்பவான்களும், ரவுண்டு கட்டி அடிக்க, மெகா சைஸில் டின்டின் தனக்கே உரித்தான அடையாளத்துடன் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தார். ஆக தற்காலிகமாகவாவது வாசகப் பெரும்பான்மை கேட்பதைத் தருவதே சரியான தீர்மானம் என்று மனதில்பட்டது. நேரங்கள் கிடைப்பதே குதிரைக் கொம்பு என்றாகி வரும் இக்காலத்தில் 'தல' என்ற ஒற்றைச் சொல்லுக்குத் தலைவணங்கி, தேவையான வாசிப்பு அவகாசங்களை நீங்கள் தரத் தவறுவதில்லை என்பது புரிந்தது. So அதனைச் சாதகமாக்கிக் கொண்டு ஒரு பிரத்தியேக டெக்ஸ் கலர் கிளாசிக் தடத்தை அறிவிக்க உத்தேசித்திருக்கிறோம். காத்திருக்கும் ஆகஸ்ட் முதலாய் ‘The TERRIFIC TEX சந்தா' என்ற பெயரில் TTS எக்ஸ்பிரஸ் தததடக்கக் காத்துள்ளது. ஏற்கனவே டெக்ஸ் கதைகளில் எவற்றையெல்லாம் நீங்கள் 'தம்' கட்டிப் பரிந்துரை செய்திருந்தீர்களோ, அவை சகலத்தையுமே மண்டைக்குள் ஒரு ஓரத்தில் சேமித்தே வைத்திருந்தேன். So அவற்றை தனித்தனி இதழ்களாக்கினால் எத்தனை ஆல்பங்களை உருவாக்கிட முடியும் என்று கணிக்கும் முயற்சியில் இறங்கினேன்.
அந்தத் திக்கில் புகுந்த போதுதான் அடுத்த சவால் காத்திருப்பது புரிந்தது. நீங்கள் கோரியிருந்த மறுபதிப்பிற்கான கதைகள் எல்லாமே குறைந்தது 35-40 ஆண்டுகளுக்கு முன்னே Black & White-ல் நாம் வெளியிட்டிருந்தவை. அந்நாட்களில் இன்டர்நெட்டும் கிடையாது,. டெக்ஸ் கதைகளில் எத்தனை இருக்கும்? என்பதும் நமக்குத் தெரியாது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருவாட்டி மொத்தமாய் ஒரு 20-30 இத்தாலிய டெக்ஸ் புக்குகளை நமக்கு அஞ்சல் மூலம் பார்சலாக்கி அனுப்பி வைப்பார்கள். அவற்றுள் பொம்ம பார்த்துவிட்டு 'ஆங் இது ரைட் , இது ஓ.கே ' என்றபடிக்கு கதைகளைத் தேர்வு செய்வதே அன்றைய வாடிக்கை.And முழுக்க முழுக்கவே கடிதங்களும், அதன் பின்பான காலங்களில் Fax செய்திகளுமே தகவல் பரிமாற்றக் கருவிகள். 35+ ஆண்டுகளுக்குப் பின்னே அன்று அனுப்பிய Fax தகவல்கள் சகலமும் சுத்தமாய் வெளுத்துப் போய் காலிக் காகிதங்களாகியிருக்க, கடுதாசிகளோ File-ல் போட்டது பாதி, போடாதது மீதி என்று போன இடமே தெரியவில்லை.
So 788 கதைகள் என்ற அசுர உயரத்தில் இருக்கும் டெக்ஸின் தொடருக்குள்ளிருந்து நாம் 1988-ல் போட்ட கதையின் இத்தாலியத் தலைப்பு எது? நம்பர் எது? என்றெல்லாம் தேடுவது என் முன்மண்டையில் கேசத்தைத் தேடுவதைக் காட்டிலும் கடினமான பணியாகிப் போனது. வேறு வழியே இன்றி டெக்ஸ் கதைகளில் நாம் தோராயமாய் தேர்வு செய்ய ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து ஒவ்வொரு இதழுக்குமான முன்னோட்டங்களை போனெலியின் வெப்சைட்டிலிருந்து ஆங்கிலத்தில் வாசிக்கத் துவங்கினேன். அதற்கு முன்பாக இங்கு நாம் மறுபதிப்பு செய்திட எண்ணியிருக்கும் கிளாசிக்ஸ்களின் கதைச்சுருக்கத்தைத் தெரிந்து கொள்ள மெனக்கெட்டிருந்தேன்."இது பேங்க் கொள்ளை பற்றிய கதை", "இது செவ்விந்தியப் புரட்சிக் கதை", "இது ஆயுதக் கடத்தல் பற்றிய கதை" என்று ஒவ்வொரு சாகசத்துக்குமான கருக்களை மேலோட்டமாய் குறித்து வைத்துக் கொண்டு, அதில் தலைகாட்டிடும் வில்லன்கள், சகாக்கள், ஊர்கள் என்ற பெயர்களையும் குறித்து வைத்துக் கொண்டேன்.அப்புறமாய் நான் வாசிக்கும் முன்னோட்டங்களில் அவை tally ஆகின்றனவா? என்றபடிக்கே புரட்டிக் கொண்டே போனேன். கிட்டத்தட்ட தொடரில் 300 இதழ்களின் கதைச் சுருக்கங்களை கரைத்துக் குடித்த பிற்பாடு, நம் தேடல் பூர்த்தி கண்டிருந்தது.கண்ணோ ஒரு பக்கத்துக்கு இஸ்துக்கினு இருந்தது. மொத்தம் ஆறு கதைகள் - 968 பக்கங்களை ஆக்கிரமித்திருந்தன. 'அய்யா போதும்.... இதுக்கு மேலேயும் தேட தம் லேது!' என்றபடிக்கே அடுத்து இவற்றை எவ்விதம் நமக்கான இதழ்களாக்குவது என்ற திட்டமிடலுக்குள் புகுந்தேன்.
இங்கேயுமே ‘மணந்தால் மமிதா பைஜூவைத்தான்’ என்ற அடம் பிடிப்பீர்கள் என்பது புரிந்தது. 'ஒவ்வொரு கதையையும் ஒட்டே புக்காகத் தான் போடணும்!' என்ற குரல்கள் கேட்கும் என்பதை யூகிக்க முடிந்தது. ஆனால் இங்கோ இன்னொரு மாதிரியான சிக்கலும் தலைதூக்கி நிற்பது புரிந்தது. இதோ நீங்கள் கோரியிருந்த கதைகளின் பட்டியலும், பக்க எண்ணிக்கைகளும் சார்ந்த விபரங்களும் : நிதானமாய் பாருங்களேன் :
- எல்லையில் ஒரு யுத்தம்: 220 பக்கங்கள்
- மரண தூதர்கள்: 65 பக்கங்கள்
- நள்ளிரவு வேட்டை: 182 பக்கங்கள்
- இரும்புக்குதிரையின் பாதையில்: 152 பக்கங்கள்
- சாத்தான் வேட்டை: 224 பக்கங்கள்
- ரத்த முத்திரை: 120 பக்கங்கள்
ஆக இரண்டு சாகசங்கள் தவிர்த்த மீதம் அனைத்தும் தினுசு தினுசான பக்க எண்ணிக்கைகளில் பயணிக்கின்றன ! So ஒவ்வொரு இதழுக்கும் ஒரு தினுசான விலை நிர்ணயம் செய்ய வேண்டியிருக்கும். சீரற்ற விலைகளில் இவற்றை தனித்தனியாய் - "இந்தப் புத்தக விழா Special, அந்த ஆன்லைன் ஸ்பெஷல்" என்று ரிலீஸ் பண்ணும் பட்சத்தில் ஏகமாய் குழப்பம் தலைதூக்கிடும் என்பதும் புரிந்தது ! ஒரு ரெகுலரான தடத்தில் மாதா மாதம் சீராக வெளியாகும் இதழ்களைத் தவிர, தோதுக்கேற்ப எப்போது வந்தாலும் ஹிட் அடிக்கும் ஆற்றல் நம்ம இரும்புக்கை மாயாவியாருக்கு மட்டுமே உண்டு என்பதுதான் bottomline. ஓ யெஸ்.... டெக்ஸ் வில்லரை எந்தக் களத்தில் இறக்கி விட்டாலும் பட்டையைக் கிளப்பி விடுவார் என்ற நம்பிக்கை உள்ளதுதான் ; ஆனால் விற்பனை சார்ந்த நடைமுறைகளுக்கு சீரற்ற விலைகளும், சீரற்ற இடைவெளிகளும் பெரும் தலைவலிகளாகிப் போவதை இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது. So, போட்டால் ஒரே மெகா 1000 பக்க புக்காக அல்லது இவற்றை ஒரு கிளாசிக் சந்தாவாக்கி இயன்ற மட்டிலும் சீரான பக்க அளவுகளோடும் , விலைகளோடும் வெளியிடுவதே உசிதம் என்று இந்த உசிதமணிக்குத் தோன்றியது. ஒரே மெகா ஆல்பம் என்ற கனவு சாத்தியமில்லை என்றான பிற்பாடு இரண்டாவது option மட்டுமே நமக்கு எஞ்சி நிற்கின்றது.
சாத்தான் வேட்டை 220 பக்க சாகசம். So, இதனை தலா 110 பக்கம் வீதம் இரு ஆல்பங்களாக ஆக்கி அடுத்தடுத்த மாதங்களில் வெளியிட்டால் என்ன? என்று நினைக்கத் தோன்றியது. ஆகஸ்டில் முதல் இதழ் என்றால் தொடரும் செப்டம்பரிலேயே அடுத்த அத்தியாயத்துடன் முடித்து விடலாம்! And இவை சகலமுமே ஏற்கனவே வெளிவந்த கிளாசிக்ஸ் தான் என்னும்போது, "ஐயோ கதை தொங்கலில் நிற்குதே, கிளைமாக்ஸ் என்னான்னு தெரியாமல் சிண்டை பிய்த்துக்கொள்வது போல் உள்ளதே" என்று கூக்குரலிட அவசியங்கள் இராது என்றும் நினைக்கத் தோன்றியது. Anyways, யுகங்களாய் போனெல்லியில் புதுப்படைப்புகளுக்குமே இதுதான் நடைமுறை எனும்போது அந்த அனுபவத்தினை நாமும் சற்றே உணர்ந்து தான் பார்ப்போமே? என்று நினைத்தேன். And உள்ளபடிக்கே வாசிப்புக்கு நேரம் ஒதுக்க நீங்கள் தடுமாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இது போன்ற தவணை முறை வாசிப்பு வாய்ப்புகள் உங்களுக்கு மெய்யாலுமே ஒரு உபகாரமாகவும் அமைந்திடக் கூடும் என்றும் நினைத்தேன். So, இந்த TERRIFIC TEX சந்தாவின் டெம்ப்ளேட் இதுவாகவே இருந்துவிட்டால் தேவலாம் என்று படுகிறது.
ரைட், இப்போது ஆங்காங்கே எழக்கூடிய மைண்ட் வாய்ஸ்களை "கேள்வியும் நானே -பதிலும் நானே" பாணியில் கையாள்வதாய் இருந்தால் இதோ இப்படித்தான் அரங்கேறிடும் என்று எண்ணுகிறேன்:
1.கேள்வி: ஆங்.. ரெண்டு பாகம் கொண்ட புக்கா வெளியிட்டுப்புட்டு அதில் ஒரு பாகம் மட்டும் காலியாகிப் போச்சுன்னா, இன்னொரு பாகம் யூஸ் இல்லாம போயிடுமே, அதுக்கு என்ன பண்ணுவ?
பதில்: ரொம்ப சிம்பிள். ஆன்லைன் லிஸ்டிங் போடப் போடுவதே ஒரு சாகசம் பூர்த்தி கண்ட பிற்பாடு என்றுதான் திட்டமிட்டுள்ளோம். இரு பாகங்களையும் இணைத்து ஒரே பேக்காக மாத்திரமே லிஸ்டிங் செய்வோம், விற்பனையும் செய்வோம். So, வாங்கினால் செட்டாக வாங்கும் வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும். புத்தக விழாக்களிலும் இதுவேதான் பாலிசியாகத் தொடர்ந்திடும். இதோ டின்டினின் மாயப் பந்துகள் ஏழு & கதிரவனின் கைதிகள் கூட இரு தனித்தனி ஆல்பங்களாகத்தானே வெளிவந்துள்ளன ? ஆனால் நாம் அவற்றை பிரித்து விற்பனை செய்வதில்லை. So அதே பாணி இங்கேயும் தொடர்ந்தால் ஓ.கே தானே?
2.கேள்வி: எப்போதிலிருந்து இது ஆரம்பம்டா தம்பி?
பதில் : ஆகஸ்ட் '26 முதலான ஈரோடு புத்தக விழாவிலிருந்து ஆரம்பிக்க உத்தேசம். இந்த சந்தாக்களில் இணைந்திட உங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் தந்தது போலவும் இருக்கும்; இதழ்களின் தயாரிப்பிற்கு நமக்கு கொஞ்சம் மூச்சு விடும் நேரமும் கிட்டியிருக்கும்.
3.கேள்வி: சந்தா தொகை எம்புட்டு?
பதில்: ரெகுலர் சந்தாக்களில் உள்ளோருக்கு ரூ.1800. அவர்களுக்குத் தனியாக கூரியர் கட்டணங்கள் இராது. சந்தாவில் இல்லாதோர் எனில் தமிழகத்திற்குள் ரூ. 2250.
இங்கே இந்த கூரியர் தொகை ஒரு பஞ்சாயத்தாகி வருவது நான் அறியாததல்ல. மாசா மாசம் இதற்கென இவ்வளவு தண்டம் அழணுமா? என்ற கேள்வியோடு Fab 5 முன்பதிவிற்கு சிலர் தயங்கியிருப்பதாக ஆங்காங்கே வாசிக்கத்தான் செய்துள்ளேன். உள்ளதைச் சொல்லப்போனால், ஒவ்வொரு மாதமும் புத்தகங்களை கூரியர் செய்திட ஆகும் செலவுகளின் முழுமையையும் ஒருபோதும் உங்களிடம் நாம் pass on செய்வதில்லை. இன்று கூட்டப்பட்டுள்ள கூரியர் கட்டணங்கள் + அந்த Packing Boxes கிரயங்களைச் சேர்க்கும்போது வரும் முழுச் செலவினில் 30 சதவீதத்தை நாமே ஏற்றுக்கொண்டு, மீதத்தை மாத்திரமே உங்களிடம் கோருகிறோம். இதுவுமே நோவுதான் எனில், அதைத் தவிர்க்க சத்தியமாய் வேறு மார்க்கமே கிடையாது. And ரெகுலர் சந்தாக்களில் உள்ளோருக்கு இதுபோலான தருணங்கள் தான் கூடுதலாகப் பலன்களைக் கண்ணில் காட்டக்கூடிய நேரங்கள்.
4.கேள்வி: "இப்படியே பழசைப் போட்டுக்கிட்டே போனாக்கா வழுக்கிப் பாறையில மோதி வழுக்கை பிளந்துடும் ; ஆமா சொல்லிப்புட்டேன்"
பதில்: Oh yes.....இத்தகைய சீரிய எச்சரிக்கைகள் நொடிப்பொழுதில் பாய்ந்தோடி வரும் என்பதும் obvious. ரெகுலர் தடம் ஒருபுறம் இருக்க, சைடுல - "பாருங்கோ சார் சர்க்கஸ் பண்றேன், பவுசு காட்டுறேன்"னு பரீட்சார்த்த முயற்சிகளில் பல்லைப் பெயர்த்துக்க இதுக்கு மேலேயும் 'தம்'மோ 'தில்'லோ ஸ்டாக்கில் இல்லை என்பதுதான் நிலவரம். மேகி காரிசன் & தாத்தாஸ் கிராபிக் நாவல் pack மொத்தமே 212 பிரதிகள் தான் முன்பதிவு கண்டுள்ளன. And உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக வெறும் 300 பிரதிகள் அச்சிட உள்ளோம். இந்த பிரிண்ட்ரன்னுக்கு மெய்யாலுமே ஏற்றதொரு விலையை நாம் நிர்ணயிக்க நேர்ந்தால், வழுக்கும் பாறைகள் நிரம்பிய பட்டி தொட்டிகளில் இருந்து எழக்கூடிய புகைச் சமிக்கைகளை புதுக்கோட்டையில் கூடப் பார்க்க முடிந்திருக்கும். இந்தத் துக்கணூண்டு பிரிண்ட்ரன்னில் கதைகளுக்கான ராயல்டி தொகையே தேறிடாது என்பதுதான் வார்னிஷ் அடிக்காத நிஜம். பாக்கித் தயாரிப்புச் செலவுகளின் முழுமையுமே தேசப் பிதாவின் கணக்கில் எழுதுவதைத் தவிர வேறு வழியே இல்லை. இதில் கொடுமை என்னவெனில் - கூடுதலாய் பிரிண்ட் செய்து கையிருப்பில் வைத்திருந்து விட்டு, விற்காது தேங்கியிருக்கும் பட்சத்தில் பின்னாட்களில் ஸ்கூல் பசங்களுக்கும் கொடுக்க ஏற்ற இதழ்களல்ல இவை ! So எனது 42 கால அனுபவத்தில் இதைக் காட்டிலும் கபாலத்தைக் காயப்படுத்திக்கொள்ள ஒரு செமத்தியான சந்தர்ப்பம் அமைந்ததே கிடையாதுதான்.
'ஆங்.. நீ ரூபாய் 200-ன்னு விலை வெச்சதால்தான் சுணக்கம், இல்லாங்காட்டி விட்டம் வரை ஆர்டர்கள் விரிஞ்சிருக்கும்' என்று ஒரு ஏழு பத்திக்கான விளக்கமும் வழுக்கிக்கிட்டு வர ரொம்ப நேரமெடுக்காது என்பதுமே புரிகிறது. ஆனால் ரெகுலர் தட விலைகளை விடவும் குறைவான விலைகளுடன் இன்னொரு பக்கம் முன்பதிவுகளாய் ஓடிக்கொண்டிருக்கும் Fab 5 கூட 16 வயதினிலே சப்பாணியாய் தான் 228 முன்பதிவுகளுடன் நொண்டியடித்து வருகின்றது எனும்போது, நம் மத்தியில் "எதைப் போட்டாலும் படிக்க ரெடி" என்ற டீம் ரொம்ப ரொம்ப குட்டியாகிப் போய்விட்டது என்பதை உணர முடிகிறது. சுடும் நிஜம் இதுவே. இம்முறை இந்த முன்பதிவு முயற்சிகளுக்கு நாம் தரவுள்ள விலையானது - இந்த நிலவர மாற்றம் குறித்த ஞானத்தை ஈட்டத் தேவையான புத்திக் கொள்முதல் முதலீடு என்றே எடுத்துக் கொள்கிறோம்.
ஒரு பக்கத்து நிலவரம் இவ்விதமிருக்க, வானவில்லின் மறு முனையிலோ ஏப்ரல் மாதம் - டின்டின், டெக்ஸ், King ஸ்பெஷல் etc இம்மிகூடச் சுணக்கமின்றி விற்பனையில் அனல் கிளப்புவதைக் காணும்போது பெரும்பான்மையின் இன்றைய mood ஸ்பஷ்டமாய் புரிகிறது. The way I see things, நிலவரம் ரொம்பவே simple மக்களே : ஜாம்பவான்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் ஆடக்கூடிய test match-களைப் பார்க்க ஜனம் எப்போதும் போலவே ஆவலாய் வருகிறதுதான். மாறாக அடுத்தநிலை வஸ்தாதுகளான ஆப்கானிஸ்தானும், பங்களாதேஷும் ஆடினால் - மிகச் சன்னமான அதிதீவிர ரசிகப் பெருமக்கள் மட்டுமே ஆஜராகிடுகிறார்கள். காத்திருக்கும் காலங்களில் இயன்றமட்டும் ஜாம்பவான்களின் மேட்ச்களையே நம்ம கிரவுண்டில் நடத்திடலாமே ? என்ற சிந்தனையின் நீட்சியே இந்த க்ளாஸிக் சந்தா முயற்சி ! தவிர - இது 2026-ல் நீங்கள் கேட்ட ஆயிரம் பக்க டெக்சின் கன்டென்ட் மாத்திரமே ! So ஒரேயடியாய் பின்னோக்கிய பயணம் தானா ? என்ற கேள்விகளுக்கு இங்கு அவசியங்கள் லேது !
But முன்செல்லும் நாட்களில், வாசிப்புக்கு அவகாசங்களும், பொறுமைகளும் குன்றிக்கொண்டே செல்லும் பட்சத்தில் லொஜக்-மொஜக்கென முடிவுறும் T20 மேட்ச்கள் தான் வேலைக்கு ஆகும் போலும் !! இப்போதே கனமான களங்கள் பக்கமாய் குறைந்து வரும் ஈர்ப்புகள் இதைத்தான் சுட்டிக்காட்டுவதாய் எனக்குப் படுகிறது. So, 'இந்தக் கோட்டச்சாமி தலைகீழாகத்தான் குதிப்பான்!' என்று இத்தனை காலமாய் பிடிவாதமாய் செய்து வந்து விஷப்பரீட்சைகள் தான் கொஞ்ச காலத்துக்கேனும் pause mode-க்குச் செல்லவுள்ளதே தவிர, ரெகுலர் தடத்தின் திட்டமிடல்கள் எப்போதும் போலவே தொடர்ந்திடும் !
5.கேள்வி: இனி மரத்தைச் சுற்றி டூயட் மட்டும்தான் பாடப்போறோமா? கமர்ஷியல் கதைகள் மட்டும்தான் கோலோச்சப்போகுதா இனி?
பதில்: ண்ணா....அந்த shift ஏற்கனவே நடந்து வருகிறது. 'Crisp reading' தான் தாரக மந்திரம் என்று என்றைக்குத் தீர்மானித்தோமோ - அன்றைக்கே ரெகுலர் தடத்தினில் லைட்டாகத் தடுமாறும் ஹீரோக்களுக்குமே கல்தா தரத் தொடங்கி விட்டோம் தானே? So, இன்றைக்கு நமது regular சந்தாக்களில் உலவிடும் நாயகப் பெருமக்கள் அனைவருமே விற்பனை சார்ந்த அளவுகோல்களிலும் சரி, வாசக அபிமானத்திலும் சரி பாஸ் ஆனவர்கள் மாத்திரமே. ஏதேனும் ஒற்றை அளவுகோலில் தடுமாறினால் கூட சரக்கென்று சீட்டு கிழிக்கப்பட்டு விடுகிறது !. சொல்லப் போனால் இந்தப் பயணத்திலிருந்து நாம் இறக்கி விட்டிருக்கும் ஹீரோக்களைக் கொண்டே நாலு போட்டிக் கடைகள் நடத்தலாம் எனும்போது, ஓசையின்றி அந்த filtering படலமானது ஏற்கனவே தொடங்கியாச்சு. But in many ways, இது காலத்தின் கட்டாயம் தான் ! படிக்கிறீர்களோ - இல்லையோ, நம் மீதுள்ள அன்பின் காரணமாய் சகலத்தையும் வாங்கி பீரோக்களுள் குவிப்பதைக் காட்டிலும், படிக்க உங்களை ஈர்க்கவல்ல இதழ்களை மட்டுமே தேர்வு செய்வது a step in the right direction தானே ?
ஆனால் அதற்காக புதுவரவுகளே இனி வர மாட்டார்கள் என்றெல்லாம் இல்லை. இதோ கவனமாய் இந்தத் தரவுகளை உள்வாங்கிட முயற்சித்துப் பாருங்களேன்:
*டின்டின் அறிமுகம் கண்டு அதகள வெற்றியும் கண்டுள்ளார். இவரது தொடரில் இருப்பனவோ 23 albums மட்டுமே.
*சமூராய்ஸ் வந்தனர் - வென்றனர். அவர்களது தொடரிலோ மொத்தமே 6 ஆல்பம்ஸ் தான்.
*வைல்ட்கேட் இன்னொரு சமீப அறிமுகம். இவரது தொடரிலோ மொத்தமே 4 ஆல்பம்ஸ் தான்.
*இதோ வில்லியம் வான்ஸ்-ன் ப்ரூஸ் ஹாக்கர் தொடரை அறிவித்துள்ளோம். அதனில் இருப்பதோ ஏழே ஆல்பம்ஸ் தான்.
*அடுத்த மாதம் அறிமுகமாகவிருக்கும் ரெட் கன் தொடரிலோ இரண்டே ஆல்பம்ஸ்!
*போன பதிவில் நான் அறிவித்திருந்த BLACKSAD தொடரிலோ மொத்தமே 6 ஆல்பம்ஸ் தான்.
ஆக , நாம் புதியவர்களுக்கான கேட்டை மூடவே கிடையாது. மாறாக 100, 200, 300 கதைகள் கொண்ட நெடும் தொடர்கள் பக்கமாக இப்போதெல்லாம் வண்டியை விடுவது கிடையாது. Short & sweet-ஆன தொடர்களாய் மட்டுமே பார்த்துப் பார்த்துத் தேடித் தேடி முயற்சிக்க முனைந்து வருகிறோம். So நம் தேடல்களும் தொடரும் தான், புது வரவுகளும் வருவர் தான். ஆனால் மொத்தமே 14 மீட்டிங்களை நடத்தினாலே போதும் - தேர்தலைச் சந்தித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் களமாடும் புதுயுக template போலவே, சன்னமான கதை இருப்பினைக் கொண்ட புதியவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தர விழைந்து வருகிறோம். ஆகையால் ரெகுலர் தடத்தில எப்போதும் போலவே variety தொடர்ந்திடும் தான் - நீங்கள் அவற்றை ரசிக்கும் வரையிலும்!
இந்தத் தருணத்தில் ஒரு பழைய புராணத்தைச் சற்றே உரக்க, மறுக்கா பாடும் அவசியம் இருப்பதாகவும் எனக்குத் தோன்றுகிறது.உங்களுக்குத் தெரியாததல்ல guys - இது சமூக வலைத்தளங்களில் influencers நம்மை கரம் பற்றி ஒவ்வொரு திக்கிலும் இட்டுச்செல்லும் காலங்கள். ஒரு தம்மாத்துண்டு வெத்தலைப்பெட்டியை வாங்கவோ, ஒரு புகையிலை சுருக்குப்பையை வாங்கவோ நினைத்தால் கூட "இக்கடா ராரா....அக்கட போ...போ... என்று வழிகாட்ட Insta-விலும் இன்னபிற தளங்களிலும் ஓராயிரம் பேர் படையெடுத்துக் காத்திருப்பது கண்கூடு. அந்தக் கோணத்தில் பார்வையிட்டால், சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் நீங்களுமே காமிக்ஸ் சார்ந்த influencers தான். உங்களது குரலுக்கு நிச்சயமாய் நீங்களே உணர்ந்திருக்கா ஒரு வெயிட் உண்டு. உங்களது பங்களிப்புகள் இன்னும் சற்றே வீரியமாய் இருக்கும் பட்சத்தில் - 'இந்த பொம்ம புக் எனக்கு செட்டாகுமா? இதை படிக்கலாமா- வேணாமா?' என்ற மதில் மேல் பூனையான நண்பர்களுக்கு ஒரு தெளிவு கிட்டிட உதவிடக் கூடும் .சமீபகாலமாகவே அந்த வழிகாட்டல்கள் குறைந்து கொண்டே போவதுமே பரிச்சயமான ஜாம்பவான்களைத் தவிர்த்த புதுவரவுகள் பக்கம் புது வாசகர்களின் பார்வைகள் அதிகம் திரும்பிடாது போகவொரு காரணமோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. "இது எதுக்கு ரிஸ்க்..? சகுவாரோவா, சாமுராயோ - யாருன்னே தெரியலையே?!" என்று ஒதுங்கக்கூடிய நண்பர்களையும், வாசித்து, ரசித்திருக்கும் நீங்கள் சரியாக வழிநடத்த முடியும் தான். அது நிகழும் பட்சத்தில் - இந்த "ஈரோ கல்தா" படலமும் தொடர்கதை ஆகிடாது & புதியவர்களைத் தேடிப்பிடிக்கும் உத்வேகமும் தொடர்ந்திடும் தான்.
'சர்தான் , புக்க படிக்கவே நேரத்தை காணோம், இதுல வழியை காட்ட... கிளிய காட்ட எவனுக்குடா தம்பி சீவன் இருக்கு ?' - என்கிறீர்களா? பத்தி பத்தியாய் பெருசாய் எழுதினால்தான் என்றில்லையே guys... "படித்ததில் பிடித்தது" என்று சிம்பிளாக அந்த புக்கின் கவரை போட உங்களது Insta-விலோ, FB- யிலோ ; வாட்சப் குரூப்பிலோ மெனக்கெட்டால் அதுவே கூட நான் தொண்டை கிழியக் கத்துவதை காட்டிலும் கூடுதல் பலன் நல்கிடக்கூடும். Make no mistake guys.....நம் ஆகச் சிறிய வட்டத்திற்கு இது ஒரு முக்கிய காலகட்டம். முன்செல்லும் பாதைகள் இனி கமர்ஷியலாக மட்டுமே இருக்குமா? அல்லது வழக்கம் போலவே வெரைட்டியாக இருக்குமா? என்பதை தீர்மானிக்க போவது நீங்களே. So, இந்தத் தருணத்து மெனக்கெடல்கள் will go a long way என்பதில் எனக்கு ஐயமே இல்லை.
கேள்வி 6 : என்னமோ போப்பா.. ஏதேதோ சொல்லுறே.. கேட்டுக்கிறோம்...ஒரே புக்குன்னு கண்ட கனவு தான் நெசமாகலை...புக்குகளை பிரிச்சு பிரிச்சு போட்டு பிராணனை வாங்கியே தான் தீரணுமா?
பதில்: ண்ணா...நிலவரத்தை உள்ளது உள்ளபடிக்கே, ஒளிவு மறைவின்றி கூட்டிக் குறைக்காது ஒப்பித்துவிட்டேன்.இங்கே இன்னமும் ஒரு விஷயம் நான் செய்யக்கூடியது உள்ளது!இந்த ஒன்பது ஆல்பங்களும் வெளியான பிற்பாடு மொத்தமாய் நீங்கள் பத்திரப்படுத்த எண்ணும் பட்சத்தில், உத்தேசமாய் ரூ.100 to 120 ரூபாய் கிரயத்துக்கு ஒரு கெட்டிமனான slip case-ஐ தயார் செய்து வழங்கிட வாய்ப்புண்டு.So தனித்தனி இதழ்களாய் இருப்பனவற்றை மொத்தமாய் The Terrific Tex Collection'26 என்று அதனுள் அடுக்கி பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.மற்றபடிக்கு இன்றைய மார்க்கெட் நிலவரமும், விற்பனை சூழல்களும், முன்மொழியும் சில பல நிபந்தனைகளுக்கு யாருமே விதிவிலக்காகிட முடியாது என்பது தான் bottom line.புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள் உள்ளது. புரிந்துகொள்ளாதோர் அன்போடு மூ.ச பக்கம் இட்டுச் செல்ல அழைக்கும் பட்சத்தில் மறுப்பின்றி ஆஜராகிடவும் காத்திருப்பேன்.ஏற்கனவே காலையிலேயே ஒரு ரவுண்டு bleaching powder போட்டு fresh ஆக்கி வைத்தாயிற்று. So நாளையும் லீவு தானே.. எப்போ கூப்பிட்டாலும் வர நானாச்சு...!
7.கேள்வி : அப்போ ஆன்லைன் மேளா பீப்பீப்பீ தானா?
பதில் : Not at all.... மே மாதம் என்பதை ஆண்டின் பிற்பகுதிக்கு நகற்றிட வேண்டியது தான். நானே ஒரு pool of books முன்மொழிகிறேன் and அவற்றிலிருந்து நீங்கள் எவற்றை தேர்வு செய்கிறீர்களோ - அவற்றை ஆன்லைன் ஸ்பெஷல்ஸ் ஆக்கிடுவோம்! பந்து பூரணமாய் உங்க தரப்பிலேயே இருந்திடும் guys! ஓ.கேவா?
Bye all... See you around! Have an awesome long weekend!
P.S : புது புக்ஸ் அடுத்த வாரத் துவக்கத்தில் கிளம்பிடும் !





Its me the first of the first
ReplyDeleteஹி ஹி 😁😁😁
DeleteOhhhhhhhhh....after a long time...its you இளவரசரே 😁😁😁
Deleteவாழ்த்துக்கள் EV
Deleteஹி ஹி.. Dank u friends! இது மாதிரியான சாகஸங்கள் எல்லாம் எனக்கு சாதாரணம்!!🙏😇
Delete"Me the first" போட்டுப்புட்டு காஜல் அகர்வாலை , அகர்வால் பவன் ஸ்வீட்ஸ் சாப்பிட்டுக்கினே ரசிக்கக் கிளம்பிடறதும் நம்ம ஜாகஜங்களில் சகசம் தானே ?
DeleteSir, புரிகிறது சார், உங்கள் வலி!
Deleteஇல்லீங்க எடிட்டர் சார்.. உங்க பதிவை பொறுமையா நிதானமா படிச்சுட்டு.. பதிவு தொடர்பான சிந்தனையிலும் மூழ்கியிருந்தேன் என்பதே உண்மை!!
Deleteஹாய்...
ReplyDeleteஆஜர்
ReplyDeleteபத்துக்குல் வந்ததில் சந்தோஷம்.. படித்துவிட்டு வருகிறேன் நன்றி 🙏🙏
ReplyDeleteஆஜர்
ReplyDeleteஎந்த ஸ்டேஷன் சார்.
DeletePresent sir
ReplyDelete😘😄💐Me in Sir 😘😘😘
ReplyDeleteசூப்பர் சார் ஆனால் சாத்தான் வேட்டை இரு பாகங்கள் எனும் போது கொஞ்சம் யோசனையாக உள்ளது
ReplyDeleteநல்லாவே பாருங்க சத்யா - பக்க நீளம் அதிகமிருப்பது "சாத்தான் வேட்டை" மட்டுமே அல்ல !
Delete10th
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDelete13th
ReplyDeleteவணக்கம் எடிட்டர்
ReplyDeleteடெக்ஸ் மறு பதிப்பு கதைகளுக்கு அவ்வளவு செலவு செய்ய எனக்கு ஆர்வம் இல்லை. நான் விரும்புவதெல்லாம் புது காமிக்ஸ்கள் மட்டுமே
ReplyDeleteஅது தப்பே இல்லை தான் சார் !! ஆளுக்கொரு அவா !!
Deleteவந்துட்டேன்...
ReplyDeleteஅருமையான அறிவிப்பு சார்...
ReplyDeleteநன்றி சார் !
Deleteகுண்டு புக்கை தான் குழியில் போட்டு புதைத்து விட்டீர்கள்(😭😭😭😭)... ஆனால் இவற்றை தனித்தனியாக தரப் போகிறீர்கள் என்பது ஒரு புது சந்தோஷத்தை கொடுக்கிறது.
ReplyDeleteசில நேரங்களில் ...இல்லே ..இல்லே ..பல நேரங்களில்.... விடிய விடிய ஒரு பதிவினை எல்லாக் கோணங்களிலிருந்தும் யோசித்து எழுதுவதெல்லாம் வீணோ ? என்று தோன்றுவதுண்டு - simply becos அதனை முழுமையாய் வாசிக்கவோ, உள்வாங்கிடவோ நம்மில் பலருக்கும் பொறுமைகளோ, நேரங்களோ இருப்பதில்லை ! இதோ - உங்களின் பின்னூட்டம் கூட ஒரு க்ளாஸிக் உதாரணம் நண்பரே ! துவக்கப் புள்ளி முதல் , இறுதித் தீர்மானம் வரைக்கும் அங்குலம் அனுகுலமாய் விளக்கிய பிற்பாடும் கிடைப்பது என்ன ?
Delete//குண்டு புக்கை தான் குழியில் போட்டு புதைத்து விட்டீர்கள்//
என்ற சிந்தனைச் சிதறல் !
நான் எதுக்கு சாமி குழி வெட்டப் போறேன் - புதைக்கப் போறேன் ? அதுக்குத் தான் ஸ்டெர்ன் இருக்கார் ; அண்டர்டேக்கர் இருக்காரே ?
ஆர்வங்கள் என்பதெல்லாம் சரி தான், ஆனால் யதார்த்தம் சார்ந்த புரிதல்களும் முக்கியம் அன்றோ ?
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா 🤣🤣🤣🤣. ( மூளை ஏற்றுக் கொண்டாலும் மனது ஏற்க மறுப்பது தான் உண்மை நிலவரம் )
Deleteஆயிரமே பேர் புழங்கும் ஒரு சிறு வட்டத்துக்கு அந்த அரசியல் தேவை தானா ?
Deleteஇதில் எனக்கு ஒரு சின்ன ஆசை.. மரண தூதர்கள் 65 பக்கம் இன்று உள்ளது நமது ரெகுலர் டெக்ஸைசில்.. இதுவே ஒரு பாக்கெட் சைஸில் வந்தால் ஒரு சின்ன குண்டு புக்கு போன்று கையில் இருக்கும். நமது TTSயை ரெகுலர் சைஸ் இல்லாமல் எல்லாவற்றையும் பாக்கெட் சைஸில் தர முடிந்தால் ஒரு மாறுதலாக இருக்குமே.. இதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா
ReplyDeleteஊஹூம் ...வாய்ப்பே இல்லை !
Deleteஇளம் டெக்ஸ் குண்டு வேண்டும் சார்.
ReplyDeleteமேற்கண்ட கிளாசிக் டெக்ஸ் எல்லாம் நல்ல நிலையில் என்னிடம் உள்ளன சார்.
இளம் டெக்ஸ் வருவதெல்லாம் குண்டு புக்சாகத் தானே சார் ? நடப்பாண்டில் காத்திருப்பது 3 அத்தியாயங்கள் கொண்டது !
Deleteஓகே சார். தகவலுக்கு நன்றி சார்.
Deleteபுதிய டெக்ஸ் கதைகள் இன்னும் நிறையவே உள்ளன இன்னும் குண்டு சட்டியில் குதிரை ஓட்டத்தான் வேண்டுமா?
ReplyDeleteஎன்பது என் எளிய கருத்து தயவு செய்து யாரும் பகடி செய்ய வேண்டாம்.
மறுக்கா மறுக்கா ஒரே தப்பைத் தான் செய்கிறோம் சார் ! டெக்ஸ் தொடரில் 788 ஆல்பங்கள் உள்ளன தான் ; ஆனால் கதைகளின் எண்ணிக்கையும் 788 அல்லவே அல்ல ! உத்தேசமாய் 325+ தான் இருக்கும். மெபிஸ்டோ அவர்களது லிஸ்டில் 4 ஆல்பங்கள் ; நம்மிடமோ ஒரே ஆல்பம். இதே போல சொல்லிக்கொண்டே போகலாம் !
DeleteSo எண்பது ஆண்டு காலத் தொடரில் 325+ கதைகள் என்பதே யதார்த்தம்..! நாம் 40 ஆண்டுகளில் அதனில் பாதியை நெருங்கியிருக்கிறோம் !
சார் அட்டகாசமான அறிவிப்பு.
ReplyDeleteஇந்த 6 புத்தகம் 1800 ரூபாய் மொத்தம் 968 பக்கங்கள் எல்லாமே ok தான் எனக்கு. I'm game Sir
6 கதைகள் 9 புத்தகங்கள் சார்
DeleteYes - கதைகள் 6 ...ஆல்பங்கள் 9
DeleteOh Sorry for the mistake Sir.
Deleteநன்றி நண்பரே...
ஒரே ஒரு வேண்டுகோள். அந்த டெக்ஸ் slip case முதலில் கொடுத்து விடுங்கள் சார்.
ReplyDeleteNopes sir ...புக்ஸை உள்ளே வைத்துப் பார்த்த பின்பே திட்டமிட இயலும் !
Delete// ஒரே ஒரு வேண்டுகோள். அந்த டெக்ஸ் slip case முதலில் கொடுத்து விடுங்கள் சார். //
DeleteKumar :-)
Hi
ReplyDeleteமேலும் சாத்தான் வேட்டை, மரண தூதர்கள் தவிர்த்து பிற டெக்ஸ் கதைகள் ஓவியங்கள் சுமாராகவே உள்ளன. கருப்பு வெள்ளையில் ஓகே ஆனால் வண்ணத்தில் வண்ணத்தில் எப்படி சோதிக்கும் என்பதை தெரியவில்லை.
ReplyDeleteஇப்படிப் பார்த்தால் என்ன சார் - கருப்பு வெள்ளையிலேயே தேறி விட்ட சமாச்சாரங்கள் கலரில் விஸ்வரூபம் எடுக்கவும் கூடும் தானே ?
Deleteடெக்ஸ் என்றும் விற்பனையில் சோடை போனது இல்லை சார். .அதனால் அதைப் பற்றிய கவலை இல்லை,என் ஆசை காலத்துக்குள் அனைத்து டெக்ஸ் படித்து விட வேண்டும் என்பது தான்,
Deleteஅந்த எண்ணத்தில் தான் அப்படி சொன்னேன் சார் மன்னிக்கவும்.
தலைகீழாய் நின்னு தண்ணி குடிச்சாலும் அவர்களது எண்பத்தியொரு ஆண்டுப் பயணத்தை நம்மால் எட்டிப்பிடிக்க முடியாதே சார் ?
Deleteபணம் அனுப்பியாச்சு சார். சனிக்கிழமை Screen shot Share செய்கிறேன்.
ReplyDeleteநன்றி சார் !!
DeleteVery good Kumar.
Deleteமுழு நீளக் கதைகளை ஒரே இதழாகக் கொடுத்தால் நன்றாக இருக்குமே சார்... ப்ளீஸ்... 🙏🙏🙏🙏
ReplyDeleteஒன்பது இதழ்கள் x ரூ.200 = ரூ.1800 என்பது நலமா சார் விற்பனைக்கு ?
Deleteஅல்லது
Rs.425
Rs.115
Rs.275
Rs.425
Rs.225
Rs.350
என்ற விலைகளா ?
டெக்ஸ் க்ளாசிக்ஸ் குறித்து போன வருடம் பேசியது நினைவில் இருந்து கொண்டே இருந்ததுங்க, சார்
ReplyDeleteஇவ்வருட வர வாய்ப்பில்லை என நினைந்திருந்தேன்
போட்டாலும் எந்த மாதிரி அறிவிப்பீங்க என யோசித்திருந்தேன்
எதிர்பாரா அதிரடி அறிவிப்பு
ரெடி டூ Dial T
அம்மா பொதுவாக பழைய டெக்ஸ் ரீபிரிண்ட் கதைகள் வாங்கினால் திட்டுவாங்க
Deleteஆனால் இதில் உள்ள பழைய டெக்ஸ் கதைகள் படித்ததில்லை, ஆகையால் பிரச்சனை இல்லை
பிரச்சனை இல்லையென்றால் பிரச்சனை இல்லை !!
Deleteதெறிக்க விடும் கலக்கல் அறிவிப்பு... 💥💥💥💥💥
ReplyDeleteமீண்டும் ஒரு சின்ன கருத்து.. முதல் கதையை பிரித்து தராமல் ஒரே கதையாக தர முடிந்தால் நன்றாக இருக்குமே. ஆகஸ்ட் மாத புத்தக விழாவிற்கு வருபவர்கள் வாங்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
ReplyDeleteஆகஸ்ட்டில் ஈரோடு ; செப்டெம்பரில் மதுரை ; அக்டொபரில் திருச்சி ; நவம்பரில் சேலம் !
Deleteஇவையெல்லாமுமே புத்தக விழாக்கள் தானே நண்பரே ?
யோசிப்பது என்றாகி விட்டால் அந்த ஊர் மக்களுக்கெனவுமே யோசிக்க வேணாமோ ?
ஆனால் சார், ஆகஸ்ட்டில் ஈரோட்டில் முதல் பாகம் வாங்கி விட்டு, அடுத்த பாகம் செப்டம்பர் மாதத்தில் வாங்க எத்தனை பேருக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை .
Deleteஏன் - ஈரோட்டில் ஸ்டாலின் சார் தான் வருஷம் முழுக்க இருப்பாரே? அவரிடம் வாங்கிக்கலாம் தானே?
Deleteநான் (கோவை) சந்தாவில் இருக்கிறேன் சார் எனக்கு பிரச்சனை இல்லை, புத்தகவிழாவில் மட்டும் வந்து வாங்குவோர் எத்தனை பேருக்கு அவரை தெரிந்து இருக்கும் ? . ஒரே கதை இரண்டு பாகங்களாக இல்லாமல் ஒரே பாகமாக இருந்தால் , அவர்களுக்கும் கடைகளில் மற்றும் ஆன்லைனில் வாங்குவோருக்கும் நன்மையாக இருக்கும் .
Deleteசரி,விலையைப் பார்த்து விட்டு வாங்காமலே நடையைக் கட்டுவோர்...?
Delete/ஒன்பது இதழ்கள் x ரூ.200 = ரூ.1800 என்பது நலமா சார் விற்பனைக்கு ?
ReplyDeleteஅல்லது
Rs.425
Rs.115
Rs.275
Rs.425
Rs.225
Rs.350
என்ற விலைகளா ?//
நாங்க மொத்தமாக தான சார் பணம் அனுப்ப போறோம் ?
சரி சார் ....கடைகளில் வாங்குவோர் ?
Deleteஅவர்களுக்கு தேவையான புத்தகத்தை அதற்கான பணம் செலுத்தி வாங்க முடியுமே சார், எப்படியும் ஒரு பாகம் வாங்கி மறு பாகம் வாங்காமல் இருக்க போவதில்லையே ? ஒரே இதழாக இருந்தால் சேமிக்க இலகுவாக இருக்குமே சார்
Deleteநடைமுறையில் உள்ள சிக்கல்களை புரிந்து கொள்ள யாருமே தயாரில்லை என்பது தான் இங்கே நெருடுகிறது சார்! Higginbothams, Odyssey, Sapna Books போன்ற கடைகளெல்லாம் இன்னன்ன விலைகளில் ஆன புக்சில் இத்தனை இத்தனை என்று ஆர்டர் பொதுவாய் செய்திடுவார்கள். இந்த மாசம் விலை ரூ.425 ; அடுத்த மாசம் ரூ.115 என்றால் ஆர்டர்கள் புதுசாய் generate செய்திட வேணும். அந்த மெனக்கேடலுக்கு பயந்து ஆர்டர் தராதே விட்டும் விடுவார்கள்....
Deleteஅதே போல சிறு நகரங்களில், கூடுதல் விலை இதழ்கள் என்றாலே ஆர்டர் பாதியாகிப் போகும்...!
இதற்காகவே ரெகுலர் டெக்ஸ் இதழ்களின் விலைகளைக் கூட இயன்றமட்டிலும் ரூ. 175 க்கு கீழே வைத்திருக்க முனைவோம்!
Deleteவணக்கம்!
ReplyDeleteஒரு சிறிய சந்தேகம் சார்.
ReplyDeleteமொத்தம் 9 புத்தகங்கள் . ஆகஸ்ட் 2026 தொடங்கி , ஏப்ரல் 2027 வரை ...
August 1 book
September 1 book
October 1 book
November 1 book
December 1 book
January 1 book
February 1 book
March 1 book
April 1 book
என இப்படி வர போகிறதா சார் ?
Yes bro...
Deleteஅப்படி என்றால் 2026 சந்தா வாங்கி 2027 சந்தா வாங்கவில்லை என்றால், 2027 ஆண்டு மீதம் இருக்கும் 4 புத்தகங்களுக்கு ரூ.200 மட்டும் செலுத்தி கூரியர் பெற்று கொள்ளலாமா ?
DeleteYes again bro...
Deleteவணக்கம். தல தீபாவளி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசம்பத்... புதுசா - பழசோ - மொத்தத்துக்கே நாம புடுங்கிட்டு இருக்கும் ஆணிகள் ஈரான் - அமெரிக்கா யுத்தத்தையோ ; டாலர் விலையேற்றத்தையோ ; காசா படுகொலைகளையோ சரி பண்ணக்கூடிய நிவாரணிகள் அல்ல தானே ?
Deleteபொழுதுபோக்குக்கானதொரு சமாச்சாரத்தை சிம்பிளாகப் பார்த்தால் எல்லாமே சிம்பிள் ! மூக்கைச் சுற்றித் தொட்டுப் பார்த்தால் தேவைகளற்ற ஆணிகள் ! அவ்வளவே !
பதிவை இன்னும் முழுமையாக படிக்கவில்லை சார் ! பணத்தை அனுப்பிவிட்டேன் சார்! அப்படியே அதன் screen ஷாட் உங்களுக்கு + நமது அலுவலகத்துக்கும் அனுப்பிவிட்டேன் சார்.
ReplyDeleteஇப்பொது எல்லாம் டெக்ஸ் கதைகள் வண்ணத்தில் படிக்க ரொம்ப பிடிக்கிறது சார்.
Delete+10000
Deleteஎடிட்டர் சார்...
ReplyDelete1000 பக்க குண்டு டெக்ஸாக வெளியாவத்திலுள்ள நடைமுறை சிக்கல்கள் ஏற்புடையவே! ஆகவே ஒரு ஆயிரம் பக்க டெக்ஸ் குண்டு கிடைக்காமல் போவதில்லை பெரிய வருத்தங்கள் இல்லைதான்!
ஆனால் 220 பக்க கதையை இரண்டு புத்தகங்களாகப் பிரிப்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது! முதன்முறையாக வெளியான காலத்திலேயே ஒரே புத்தகமாக வந்ததை இப்போது மறுபதிப்பில் (ஓரிரு சன்னமான காரணங்களுக்காகப்) பிரித்துப் போடுவது சற்றே உற்சாகத்தைக் குறைக்கிறது!😒
'220 பக்க டெக்ஸ் கிளாசிக் கதையை 2 பாகங்களாகப் பிரித்துப் போடுவதில் உங்களுக்கு உடன்பாடுண்டா folks?' என்று நீங்கள் நம் கம்யூனிட்டியில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தால் 'மணந்தால் மமிதா பைஜூவைத்தான்’ என்பதைத் தெளிவாகச் சொல்லியிருப்போம் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம் சார்!🙏
நாளை TTS க்கு பணம் அனுப்புகிறேன்!
அதே கவலை தான் எனக்கும் சார் பிரித்துப் போடுவதில் எனக்கும் வருத்தமாக உள்ளது
Deleteஎனக்கு லைட்டா அழுகை கூட வருதுங்க மகேஷ் ஜி!
DeleteThis comment has been removed by the author.
Delete*2 ஒரிஜினல் அட்டைப்படங்கள்...
Delete*சீரான விலைகள்...
*மொத்தமாய் சேகரிக்க ஸ்லிப்கேஸ் -
என இருந்தாலுமே , இல்லாததே இங்கு பிரதானமாய் தெரிவதைப் பார்க்கும் போது, நியாயப்படி நான் தான் அழுவணும்!
இளம் டெக்ஸ் தனித்தொடராய், மாதா மாதம் இத்தாலியில் வருவது போலவே இங்கும் வெளிவரக்கூடிய வாய்ப்பினை இதே காரணத்தினால் தான் இழந்தோம்!
Delete'காத்திருப்பதும் சுகமே' என்று 81 ஆண்டுகளாய் அங்குள்ள ரசிகர்கள் தொடர்கின்றனர் - அந்த அனுபவம் எவ்விதம் இருக்குமோ? என்று மறுபதிப்புகளில் கூட உணரத் தயாரில்லை எனில் என்ன சொல்லவென்று தெரிலீங்கோ!
ஒரே டெக்ஸ் இதழில் : ஒரு கதையின் கடைசி 20 பக்கங்கள் ; ஒரு புதுக்கதையின் 65 பக்கங்கள் & அதற்கடுத்த சாகசத்திலிருந்து 25 பக்கங்கள் என்றெல்லாம் உண்டு - இத்தாலியப் பதிப்புகளில்!
Deleteநான்லாம் அதைச் செய்திருந்தால் என்னவாகி இருக்குமென்று யோசிக்கிறேன் 🤕🤕!
இத்தாலிய ரசிகர்களோடு எங்களை ஒப்பிட்டு பேசாதீங்க சார்... பீட்சா ஒரு நாலும் சம்சாவாக முடியாது!😇
Deleteபீட்சா இல்லையேல் சம்சா லேது இயவரசரே!
Deleteஇத்தாலியிலாச்சும் வெறும் 30 நாட்களின் காத்திருப்பு..... பிரெஞ்சில் 2 - 3 ஆண்டுகளின் காத்திருப்புகள் சர்வ சாதாரணம் 🤕
Delete///ஒரே டெக்ஸ் இதழில் : ஒரு கதையின் கடைசி 20 பக்கங்கள் ; ஒரு புதுக்கதையின் 65 பக்கங்கள் & அதற்கடுத்த சாகசத்திலிருந்து 25 பக்கங்கள் என்றெல்லாம் உண்டு - இத்தாலியப் பதிப்புகளில்!///
Deleteஇதைப் படிக்கும்போதே லேசா குமட்டிக்கிட்டு வருதுங்களே.. எப்படித்தான் படிக்கறாங்களோ!!🤔🤔
ஒரே இதழில் மூன்று கதைகளும், மூன்று வெவ்வேறு ஆர்ட்டிஸ்ட்களோடு வெளிவரவும் செய்துள்ளது!
Deleteசார்.. நடுராத்திரியில் நான் குமட்டிகிட்டிருக்கும் சத்தத்தை கேட்டு வீட்டிலிருப்பவர்கள் எல்லாம் 'ஏதாச்சும் மசக்கையோ' ன்னு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க சார்!😌
Deleteவேள கெட்ட வேளையிலே சம்சா மொசுக்குனா இப்புடி தான் 🥴
DeleteAs a fervent fan of Tex, I am thrilled❤️. I want to book two sets!
ReplyDelete😍😍😍😍
Delete❤️👍🙏...
ReplyDeleteHi editor sir.
ReplyDeleteSuper post and wonderful announcement . I always like Tex in color and all these classic hits , no words to express the happiness.
Thanks for reprinting these Tex classics
ஆல் இஸ் வெல் சார்.சற்றே தாமதமாக நிச்சயம் டெக்ஸ் சந்தாவில் இணைந்திடுவேன் . சந்தா மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்
ReplyDeleteஆயிரம் பொற்காசுகளும் எனக்கான்னு கேட்ட தருமி கண்டிசன் தான் இப்ப.
ReplyDeleteநான் கேள்வி பதில் எல்லாம் படிக்கறதுக்கு முன்னாடியே இங்கே வந்துட்டேன். அதுல என்ன கேள்வி இருக்கு நான் பதில் சொல்லனுமான்னு கூட தெர்ல. ஒரே புக்கா வரணும் ஹார்ட்கவர்ல வரணும் அப்படி எல்லாம் எதும் சொல்லப் போறதில்லே டெக்ஸ் வந்தாப் போதும்…
Awesome news!!!
சார் இரும்புக் குதிரையின் பாதையில் நமது 2012மறுவருகைக்கு பின்பானகதை தானே ங்க சார் மறுபதிப்பு கள் எல்லாம் அதிக பஞ்சம் 2012க்கு முன்பான கதைகளாக இருந்தால் பரவாயில்லை ங்க சார்
ReplyDeleteசார் இரும்புக் குதிரையின் பாதையில் நமது 2012மறுவருகைக்கு பின்பானகதை தானே ங்க சார் மறுபதிப்பு கள் எல்லாம் அதிக பஞ்சம் 2012க்கு முன்பான கதைகளாக இருந்தால் பரவாயில்லை ங்க சார்
ReplyDeleteயெஸ். இது செஞ்சுரி ஸ்பெசலில் வந்ததுன்னு நினைக்கிறேன்
Delete