நண்பர்களே,
வணக்கம். ”ஆயிரம் வருது... ரண்டாயிரம் வருது” என்ற பொழுதுகளெல்லாம் தாண்டி – இதோ ஆயிரத்திரண்டில் நின்று கொண்டிருக்கிறோம்! And இந்த நொடியிலோ focus அடுத்த முக்கிய இலக்குகள் மீது மையம் கொண்டு நிற்கத் துவங்கியாச்சு! So காத்திருப்பது என்னவென்று ஒரு பட்டியல் போட்டுத் தான் பார்ப்போமா?
1. கூப்பிடு தொலைவில் காத்திருப்பது நமது லயனின் 40-வது ஆண்டுமலர் combo இதழ்கள் :
- டபுள் ஆல்பங்களோடு லக்கி லூக்!
- கலரில் டெக்ஸ் !
ஆங்... அப்புறம்... அது வந்து....
- கலரில், மெகா சைஸில் ”விண்வெளிப் பிசாசு!”
நம்ம தானைத் தலைவர் ஸ்பைடரின் இந்த க்ளாஸிக் மறுபதிப்பானது ஜுலையின் showstealer ஆக அமையக்கூடுமென்று கருத்துக் கணிப்புகள் இல்லாமலே சொல்லத் தோன்றுகிறது! Of course இங்கே நோஸ்டால்ஜியா தான் கோலோச்சும் என்பது புரிகிறது – ஆனால் பழம் நினைவுகளையும், தமிழ் காமிக்ஸ் நண்பர்களையும் பிரித்துப் பார்க்க இயலாதென்பது நிதர்சனமல்லவா ? இதோ – அதற்கான லேட்டஸ்ட் நிரூபணம் – க்ளாஸிக் நாயகர்களின் தனித்தடமான ”ELECTRIC 80's” ஈட்டி வரும் அதிரடி முன்பதிவுகள்! புது இதழ்கள் கொண்ட MYOMS சந்தாவானது இரண்டு மாதங்களில் தட்டுத் தடுமாறித் தொட்ட நம்பரை “ELECTRIC 80's” பத்தே நாட்களில் எட்டி விடும் போலுள்ளது! So ரயிலின் கணிசமான பெட்டிகளில் புளிசாதத்தோடு, ஸ்வெட்டர், மங்க்கி குல்லாவெல்லாம் போட்டுக் கொண்டு ஏறியமர்ந்திருக்கும் க்ளாஸிக் பார்ட்டிகளை நமது பயணத் துணைவர்களாக முழுமனதோடு ஏற்றுக் கொள்வோமே folks?
2. ஜுலையில் ஆண்டுமலர் காத்துள்ளதெனில், அதையும் தாண்டிய ஆகஸ்டை முன்கூட்டியே கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது – simply becos அது தான் நம்ம டின்டின் சாரின் டபுள் ஆல்ப ரிலீஸ் மாதம்! நிறையவே பேசியுள்ளோம் – டின்டினின் தயாரிப்பு சார்ந்த முஸ்தீபுகள் பற்றி ! And இம்முறையுமே இம்மி கூட மாற்றமில்லை ! சொல்லப் போனால் இம்முறை டபுள் ஆல்பங்கள் எனும் போது, குட்டிக் கரணங்களுமே டபுள்! தவிர, டின்டின் புக்ஸ்களை நாம் தயாரிப்பதில்லை ; இது சார்ந்த இயந்திரங்களை முழுமையாகக் கொண்ட ஒரு பெரும் புத்தக ஏற்றுமதிக்குழுமத்திடமே ஒப்படைக்கிறோம் எனும் போது – கணிசமாக, ரொம்பக் கணிசமாகவே அவர்களுக்கு அவகாசம் தந்திட வேண்டியுள்ளது ! கண்டெயினர் கண்டெயினராய் அவர்களின் இதர ஆர்டர்கள் ஏற்றுமதியாகும் வேளையில், நாமளோ ஒரு 407 லோடு வேனில் ஏற்றும் அளவிலான புக்சிற்கு மட்டும் ஆர்டர் தந்துப்புட்டு, அதட்டி வேலை வாங்க முடியாதில்லையா ? So டின்டின் பணிகளும் தெறிக்கும் துரிதத்தில் நடந்தேறி வருகின்றன ! ஆக, ஆகஸ்டில் டின்டின் உங்கள் கைகளில் மிளிர்ந்தாக வேண்டுமென்றால் இந்த நொடியில் எங்கள் கால்களில் நாங்கள் வெந்நீர் அபிபேஷகம் செய்தாக வேண்டும்! தண்ணீ சுட்ருச்சா மைதீன்?
3. ஆகஸ்டை ஆவலோடு எதிர்நோக்க – as always ஈரோட்டுப் புத்தக விழா என்ற மெகா காரணமும் வெயிட்டிங்!
அதற்கு முன்பாகவே ஜுலை முதல் வாரத்திலிருந்து நகரத் தொடங்கவுள்ள புத்தக விழா circuit பற்றிச் சொல்லி விடுகிறேனே! தமிழகப் பட்டி தொட்டிகளெல்லாமே புத்தக விழாக்கள் கண்டு வரும் இந்த சந்தோஷ, சமீப நாட்களுக்கெல்லாம் முன்னோடிகளாக சில முக்கிய bookfairs இருந்து வந்துள்ளன! அவற்றுள் ஒன்று தான் நெய்வேலியில் அரங்கேறிடும் விழா! NLC-ன் திட்டமிடலில் நடைபெற்று வந்த இந்த ஜுலை நிகழ்வானது, திருவிழா போல களைகட்டிடும் என்று circuit-ல் பழம் தின்று கொட்டை போட்ட சீனியர்கள் சொல்வதுண்டு! ஆறோ – ஏழோ ஆண்டுகளுக்கு முன்பாக நாம் ஒரேயொரு தபா ஸ்டால் போட்டிருந்தோம் தான்; ஆனால் அவையெல்லாம் கையில் சொற்ப titleகள் சகிதம் நாம் சுற்றி வந்த நாட்கள்! And கொரோனா சள்ளையால் கடந்த 4 ஆண்டுகளாய் களமிறங்கியிருக்காத நெய்வேலி இதோ – ஜுலை 5 to 14 வரை மீள்வருகை செய்திடவுள்ளது! And நமது காமிக்ஸ் கேரவனின் பயணம் அங்கிருந்து தொடங்கிடுகிறது!
நெய்வேலி முடிந்த கையோடு கோவைக்குக் கவனம் திரும்பிடவுள்ளது – எப்போதும் போல கொடீஸியா அரங்கினில் நடைபெற்றிடும் புத்தக விழாவின் ரூபத்தில்! So ஜுலை 19 to 29 வரை கோவை நண்பர்களோடு அன்னம், தண்ணீர் புழங்கிடக் காத்திருப்பர் - நமது நாயகர்கள் அனைவரும்!
And கொங்கு மண்ணில் ஜுலை 30-க்கு சட்டி, பெட்டிகளை பேக் செய்ய ஆரம்பித்தால் அவற்றோடு நேராக ஈரோட்டில் land ஆகிடுவோம் – ஆகஸ்ட் 2-ல் துவங்கவிருக்கும் புத்தக விழாவுக்காண்டி!
ஈரோட்டுப் புத்தகவிழா எனும் போதே – நமது வாசக சந்திப்பு பற்றிய வினாவுமே எழுகிறது! "இம்முறை ஈரோடா? சேலமா? சந்திப்புக்கான உங்கள் சாய்ஸ் எதுவோ?" என்ற கேள்வியை போன வாரப் பதிவில் உங்கள் முன் வைத்திருந்தேன்! And இதோ – இன்று இரவுக்குள் அதற்கான முடிவுகள் வெளியாகி விடும்! உங்களது தீர்ப்புகள் என்னவென்று தெரிந்து கொள்ளும் நொடியில் ஒரு உபபதிவில் அது குறித்து அலசிடலாமா folks?
4. And இந்த நடப்பாண்டு நடைமுறைகளுக்குள் பிஸியாகிடும் வேளைதனில் ரொம்பவே முக்கியமானதொரு பணிக்கான பொழுது புலர்ந்திருப்பதையுமே பளிங்குக் கபாலம் நினைவூட்டுகிறது!
அது தான் காத்திருக்கும் ஆண்டுக்கான திட்டமிடல்!
புத்தாண்டு இன்னமுமே ஐந்தரை மாதங்களின் தொலைவில் காத்திருந்தாலுமே அங்கு களம் கண்டிட வேண்டிய கதை நாயகர்களையும், கதைகளையும் ரெடி செய்திட நிரம்பவே lead time தேவையாகிடும் தானே? So ஆயிரமாவது பதிவை நிறைவு பண்ணின கையோடு 2025-க்கான திட்டமிடலுக்கு ஜுனியர் எடிட்டரும், நானுமாய் ரூம் போட்டு யோசிக்க ஆரம்பிச்சாச்சு! And உங்ககிட்டே கலந்து பேசாமல் ரூம் போட்டோ; திண்ணையில் படுத்துறங்கியோ தம்புடிக்குப் பிரயோஜனம் கிடையாதே? So ”மறுபடியும் ஆரம்பிச்சுட்டானா மொக்கையை??” என்ற புருவ உயர்த்தல்கள் நிகழக் கூடுமென்றாலுமே 'தகிரியமாய்' வினாக்களைத் தொடுக்கிறேன்!
Disclaimer! ரசனைகள் எனும் ரசம் நெதத்துக்கும் ஒரே மாதிரியிருப்பதில்லை தானே? பூண்டு தூக்கலாகிப்புட்டா பூண்டு ரசம்னும்... தக்காளி சல்லிசா கிடைக்கிறச்சே தக்காளி ரசம்னும் பெயரிட்டுக் கொள்வது இயல்பு தானே? So ரசனைகளானவை always subject to change(s) என்ற நம்பிக்கையில் வினாக்கள் தொடர்கின்றன ! இவை பழைய கேள்விகளாகவே இருந்தாலும், கேட்டுத் தெரிந்து ஊர்ஜிதம் செய்வது எனது கடமையாகிறதுங்களே! So here goes!
கேள்வி # 1 :
டெக்ஸ்! ‘தல‘! இரவுக் கழுகார்! ஆண்டின் அட்டவணையை தயார் செய்யத் துவங்கும் போது பிள்ளையார் சுழிக்கு அடுத்தபடியாக எழுதும் முதல் பெயரிது – 2012 முதலாகவே! So “இவர் வேணுமா? வேணாமா?” என்ற குடாக்குக் கேள்வியெல்லாம் டெக்ஸ் தொடர்பாய் தொடரப் போவதில்லை! மாறாக நமது கேள்வி இதோ :
- “மாதமொரு டெக்ஸ்” – ஏதேனும் மார்க்கத்தில்! இந்த template 2025-க்கும் தொடர்ந்திடல் –
A. காலத்தின் கட்டாயம்!
B. வருஷத்துக்கு 10 இதழ்கள் மதி!
C. நம்பர்களின் மத்தியில் “8“ தான் செம லக்கி என்பது சீனர்களின் நம்பிக்கை! நாமளும் ஓராண்டுக்கு சங்க்கி-மங்க்கி ஸ்டைலுக்கு மாறிப் பார்க்கலாமா டெக்ஸ் கதைகளை பொறுத்தவரை ? ?
என்னைப் பொறுத்தவரையிலோ, நமது முகவர்களைப் பொறுத்த வரையிலோ, நம்ம front desk பெண்களைப் பொறுத்த வரையிலோ – இந்தக் கேள்விக்கு Option A–வைத் தாண்டி வேற பட்டனே இருந்திடக் கூடாது தான் ; அட, ஓட்டெடுப்பே இவருக்கு அவசியம் லேது ! ஆனால் அமெரிக்க ஜனாதிபதிகளே நாலு வருஷங்களுக்கொரு தபா “கும்பிடுறேனுங்க அண்ணாச்சி!” என்று மக்கள் மன்ற ஆதரவை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பது தானே ஜனநாயகம்? So நமது காமிக்ஸ் குடியரசிற்கும் அந்த ஜனநாயக மரபு தப்பில்லீங்களே? வோட்டுப் போட வேண்டிய லிங்க் இதோ: https://strawpoll.com/QrgewaMG2yp
கேள்வி # 2:
“முதல் மரியாதை” படத்தில் சாமத்தில் ஒரு பெருசு வந்து “எனக்கொரு உண்மை தெரியணும் சாமி” என்று கதவைத் தட்டும் – ஞாபகமிருக்கா? அந்த ரேஞ்சுக்கான கேள்வியாக இதை எடுத்துக்கோங்களேன்?!
சமீப வருஷங்களாகவே புது வரவுகள் வேகமாய் ஆஜராவதும், வந்த பிற்பாடு கொட்டாவிகளோடு அவர்களை நாம் வழியனுப்பி வைப்பதும் வாடிக்கையாகி வருகிறது! இதோ பாருங்களேன் வந்தோர்-சென்றோர் லிஸ்ட் :
- ரிங்கோ (கௌபாய்)
- SODA
- C.I.A. ஏஜெண்ட் ஆல்பா
- மேக் & ஜாக்
- ஸ்மர்ஃப்ஸ்
- சுட்டிப் பயல் பென்னி
- ட்யூக்
- ஜெரெமயா
- மேஜிக் விண்ட்
- க்ளிப்டன்
- நெவாடா
- I.R.$
Of course – டெட்வுட் டிக் ; தாத்தாஸ்; டின்டின் ; Mr.நோ போன்ற புது வரவுகளையும் கொண்டாடியுள்ளீர்கள் தான்! டேங்கோவையும் அந்த லிஸ்டில் சேர்த்திருக்கிறீர்கள் தான்! ஆனால் உள்ளே – வெளியே ஆட்டத்தில் more of வெளியே தான் அமலில் இருக்கின்றது ! Oh yes - மறுப்பதற்கில்லை – சரக்கிருந்தால் யாராக இருந்தாலும் சாதிப்பார்களென்பதை! ஆனால் புதியவர்களுக்கான long rope தந்திட இன்றைக்கெல்லாம் நம்மிடம் நேரமும், பொறுமையும் இருக்கின்றதா folks ? இருக்கத் தான் செய்கிறதெனில் – நமது புதுசு சார்ந்த தேடல்கள் எந்த ஜானரில் தீவிரமாக இருந்திட வேண்டுமென்பீர்களோ?
A. கௌபாய்
B. டிடெக்டிவ் / க்ரைம்
C. ஹாரர்
D. கார்ட்டூன்
E. சயின்ஸ் ஃபிக்ஷன்
F. சூப்பர் ஹீரோஸ்
மேற்படிக் கேள்விக்கான வோட்டிங் லிங்க் இதோ: https://strawpoll.com/eJnvVxdGknv
கேள்வி # 3 :
Again சாமக்கோடங்கி ரேஞ்சிற்கொரு கேள்வி :
தாத்தாஸ் கதைகள் கனமான களங்களென்பதில் no doubts! வாழ்க்கையின் அந்திமத்தை அர்த்தமுள்ளதாக்க விளையும் பெருசுகளின் வாயிலாக சுற்றுப்புறச் சூழல் பற்றி கதாசிரியர் நமக்கொரு புரிதல் தர முனைந்து வருகிறார்.
My question is:
தாத்தாக்களின் இதுவரையிலுமான 3 ஆல்பங்களையும் முழுசாகப் படித்து விட்டீர்களா? அவர்கள் கிராபிக் நாவல் தடத்தில் தொடர்வது உங்களுக்கு ஓ.கே. தானா ? அல்லது, ரொம்பவே அடர்த்தியாய் உள்ளதால் உட்புக சிரமமாகிறதா ? Honest replies please !
இதற்கு மட்டும் இங்கேயே பதில் போட்டுப்புடலாமே யூத்ஸ் ?
QUESTION # 4 :
தோர்கல் ?
ஒரே நேரத்தில் ஆளுமை கொண்டதொரு நாயகராகவும், அசாத்திய சாகசங்களின் தலைவனாகவும் மிளிரும் இந்த மனுஷன், ஒரு டஜன் ஆண்டுகளுக்குப் பின்னும் நம் மத்தியிலானதொரு automatic தேர்வாகிடும் வழியைக் காணோம் !! நண்பர்கள் குழுவானது - வருஷா வருஷம் தோர்கல் போட்டிகள் ; அது-இதுவென்று 'தம்' கட்டி நடத்தி, தோர்கல் சார்ந்த விழிப்புணர்வை உயர்த்திட முயன்று வரினும், உரிமையோடு கான சபாவில் கச்சேரி செய்திடும் பாகவதராய் ஆரிஷியாவின் ஆத்துக்காரர் மாற்றம் கண்ட பாட்டைக் காணோம் ! So - சொல்லுங்களேன் ப்ளீஸ் :
ரெகுலர் தடத்தில் தோர்கல் ?
A.டபுள் ஓ.கே.
B.வந்தாலும் ஓ.கே. ; வராட்டியும் ஓ.கே.
C.நானே Netflix-லே சீரியல் பாக்க நேரமில்லாம அல்லாடிட்டிருக்கேன் - இதிலே தேரைக்குள்ளே கல்லோ ; தவளைக்குள்ளே கல்லோ வர்றது பற்றி விசனப்படுவேனா ?
இதோ - இந்தக் கேள்விக்கான வோட்டிங் லிங்க் : https://strawpoll.com/poy9kQbxOgJ
5.QUESTION # 5 :
நமது மீசைக்கார நாயகர் ஷெல்டன் புதியதொரு ஆல்பத்தோடு பிரெஞ்சில் ஆஜராகியுள்ளார் !! இதுவரைக்கும் தொடரின் சகல ஆல்பங்களையும் போட்டுவிட்டோம் and புக்ஸ் வெளியான வேளைகளில் மனுஷன் சிலாகிக்கப்பட்டாலும், அப்பாலிக்கா இம்மியும் அசையாமல், கிட்டங்கியில் கமான்சேவுக்கு ஜிக்டி தோஸ்தாய் உருமாற்றம் கண்டுவிட்டார் ! But இவரது கதைகளில் விறுவிறுப்புக்குப் பஞ்சமே இருப்பதில்லை என்பது எனது அபிப்பிராயம் ! சொல்லுங்களேன் - ஆல்பம் # 14 வரட்டுமா நம் மத்தியில் ?
Have a great Sunday !
First
ReplyDeleteஅட டே வாழ்த்துகள் கிட்💐👌
Deleteநன்றி
Deleteவாழ்த்துகள் சகோ
Deleteஇவங்களே பதிவு போடுவாங்களாம்.. இவங்களே வந்து 'ஐ பர்ஸ்ட்' போடுவாங்களாம்.. நாமெல்லாம் வாழ்த்தணுமாம்!!
Delete(ஹிஹி! என்னாங்க Tex kit.. எங்கே கேட்ட மாதிரி இருக்குமே..) ;)
வாழ்த்துக்கள் சார்
DeleteCongrats sir👏👏👏
Delete@EV sago 😂😂😂😂😂
Deleteஅப்படி போடுரவங்களுக்கு முன்னாடி போட முன் ஜென்மத்துல புண்ணியம் பண்ணி இருக்கணுமாம்
DeleteFirsto first....
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteவணக்கம் உறவுகளே..
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDelete🌹
ReplyDeleteபதிவு வரலாற்றில் முதன் முறையாக.. 5 எண்றதுக்குள்ள..❤️🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteவாழ்த்துக்கள்
Deleteவாழ்த்துகள் சகோ
Deleteவணக்கம்
ReplyDelete🙏👀
ReplyDeleteஐயம் கம்மிங் சார்...:-)
ReplyDeleteஷெல்டன் என்னை பொறுத்தவரை எப்பொழுதுமே ஏமாற்றியது இல்லை சார்...கண்டிப்பாக அவர் வரவேண்டும்...
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteஅதானே நீங்க இல்லாமையா... 👍
Deleteதாத்தாக்கள்...
ReplyDeleteஎனது ஓட்டு
வந்தாலும் ஓகே வராவிட்டாலும் ஓகே...
Thathhas graphic ok
ReplyDeleteShelton vendum...
appuram Tex kelviye kidayathu...masam ondru kattayam...
ஆத்தீ....இது நம்ம texkit தானா ?
Deleteசார்.. ஒருவேளை.. தூக்கத்துல பேசியிருப்பாரோ?!!
DeleteVotum appove pottachuu...
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஆஜர்
ReplyDelete//ஜுலை 19 to 29 வரை கோவை நண்பர்களோடு அன்னம், தண்ணீர் புழங்கிடக் காத்திருப்பர் - நமது நாயகர்கள் அனைவரும்!//
ReplyDelete🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳💐💐💐💐💐💐💐💐💐💐
தாத்தாஸ் கிராபிக் நாவலில் வந்தாலும் சரி! ரெகுலரில் வந்தாலும் சரி! வந்தே ஆகனுங்க சார்... இப்படி புளியை கரைக்கிறீங்களே...
ReplyDeleteMe in 😍😘😃
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDelete25th.. cake கிடைக்குமா
ReplyDeleteஷெல்டனை வெல்டன் என் கை தட்டி வரவேற்ப்போம்
ReplyDeleteஅய்யகோ...! இதென்ன தோர்கலுக்கு வந்த சோதனை...!! முதல் சுற்றிலே கடைசி ஆல்பம் மட்டும்தானே மிச்சமிருக்கு!!!
ReplyDelete// இந்த template 2025-க்கும் தொடர்ந்திடல் //
ReplyDeleteA. காலத்தின் கட்டாயம்...
Yes for Shelton
ReplyDeleteவந்துட்டேன்.
ReplyDeleteதாத்தாக்கள் எப்பொழுதும் போல ஜாலியாகத் தொடரட்டும் சார்.
ReplyDelete//உங்களது தீர்ப்புகள் என்னவென்று தெரிந்து கொள்ளும் நொடியில் ஒரு உபபதிவில் அது குறித்து அலசிடலாமா folks?//
ReplyDeleteசெய்து விடலாங்க ஆசிரியரே
//அவர்கள் கிராபிக் நாவல் தடத்தில் தொடர்வது உங்களுக்கு ஓ.கே. தானா ? //
ReplyDeleteதாத்தாஸ் அட்ராசிட்டி எல்லாத்தையும் பார்த்தாச்சி,படிச்சாச்சி...
தாத்தாஸ் தொடரலாம்,எதில் வந்தாலும் ஓகேதான்...
Hi..
ReplyDelete// எந்த ஜானரில் தீவிரமாக இருந்திட வேண்டுமென்பீர்களோ? //
ReplyDeleteB. டிடெக்டிவ் / க்ரைம்...
கெளபாய்ஸ் நிறைய சுத்திகிட்டு இருக்காங்க...
மற்றவை எதுவாக இருப்பினும் கதைக்களம் ஈர்ப்பாய் இருந்தால் ஓகேதான்...
ஷெல்டனுக்கு கம் பேக் தரலாங்க சார்!
ReplyDeleteஆமாம். நான் இதை வழி மொழிகிறேன். 🙏
Delete// ரெகுலர் தடத்தில் தோர்கல் ? //
ReplyDeleteA.டபுள் ஓ.கே....
-என்னடா இது ஆரிசியா வூட்டுகாரருக்கு வந்த சத்திய சோதனை...
ஆரிசியாகாக கண்டிப்பாக வேணுங்க, சகோ
Deleteயெஸ் சகோ...
Deleteதாத்தாக்களும் வேணும்.. ஷெல்டனும் வேணும்..
ReplyDeleteதாத்தா's முடியலை ஸார்
ReplyDeleteடெக்ஸ் மாதிரியே தோர்கலும் சிலர் பிடித்திருப்பதாக சொன்னார்கள். ஆனால் டெக்ஸ் போல அது தனிக்கதைகளாக இல்லாமல் முந்தைய கதையின் நீட்சியாக இருப்பதால், பெரும்பாலும் தனித்தனி கதைகளாக உள்ளவற்றை விரும்புகிறார்கள்
ReplyDeleteதாத்தா's முடியலை
ReplyDelete//But இவரது கதைகளில் விறுவிறுப்புக்குப் பஞ்சமே இருப்பதில்லை என்பது எனது அபிப்பிராயம் ! //
ReplyDeleteஉண்மைதான் சார்...
விறுவிறுப்புக்கு குறைவில்லா நாயகர்...
ஆல்பம் # 14 வரட்டுமா நம் மத்தியில் . கண்டிப்பாக வரவேண்டும் சார்💪💪
ReplyDelete// சொல்லுங்களேன் - ஆல்பம் # 14 வரட்டுமா நம் மத்தியில் ? //
ReplyDeleteஷெல்டன் தாரளமாக வரட்டும் சார்...
தாத்தாக்கள் கிராஃபிக் நாவல் தடத்தில் வரட்டும் மற்றும் ஷெல்டன் கட்டாயம் வேண்டும்.
ReplyDeleteலயனின் 40வது ஆண்டுவிழா சந்திப்புக்கு இந்த வருஷம் எது சுகப்படும் சாரே ? மேடம் ?
ReplyDeleteby
Lion-Muthu Comics
· 1 week ago
வழக்கம் போல ஆகஸ்டில் ஈரோடு !
48.85% (64 votes)
நவம்பரில் சேலம் !
45.8% (60 votes)
அடுத்த மாசம் எங்க ஊட்டு புழக்கடையில்...!
5.34% (7 votes)
வாவ்..
வாழ்த்துகள் ஈரோடு💐💐💐💐💐
🤪 புள்ளி விவர புலியே (Tiger). 😆
Deleteதாத்தா வர வேண்டும் என்பதே ஆசை
ReplyDeleteஷெல்டன் - வரட்டுமே. ஹிட் தந்த ஹீரோ தானே அவரு
ஆயிரம் பதிவு ஸ்பெஷலுக்கு உங்கள் சாய்ஸ் ?
ReplyDeleteby
Lion-Muthu Comics
· 1 week ago
விஷம் !! (Cowboy thriller)
36.13% (86 votes)
ரூட் 66 !! (Crime thriller)
32.35% (77 votes)
பயணம் !! (Dark graphic novel)
31.51% (75 votes)
Total votes: 238
விசம் வெற்றிஈஈஈஈஈஈ..
@KOK மாம்ஸ் வெற்றி...உன் ஆசை நிறைவேறுதுய்யா👌👌👌👌💐💐💐
😍😍😍
Deleteஷெல்டன் நல்லாவே இருக்கும்... வரட்டும் சார்..
ReplyDelete// நமது புதுசு சார்ந்த தேடல்கள் எந்த ஜானரில் தீவிரமாக இருந்திட வேண்டுமென்பீர்களோ? //
ReplyDeleteஹாரர்... வெகு நாட்கள் ஆகி விட்டன
ஹி...ஹி..ஹி..தாத்தா கதையை படிக்கவேயில்லை.இன்னும் சொல்லப் போனால்..அதைப் படிக்கிற ஆர்வமும் இல்லை
ReplyDeleteஒரு பாகத்தை பரிச்சித்து பாருங்கள், சகோ
Deleteநானுமே ஒதுக்கி வைந்திருந்தேன்
ஆனால் மூன்றாவது கதை பிடித்து போய் மற்ற இரண்டையும் வாங்கி படித்தேன்
ரிப்போர்ட்டர் ஜானியின் ரத்த காட்டேரி மர்மம் மற்றும் பிசாசு குகை வெகு நாட்கள் எதிர்பார்ப்புகளில் ஒன்று இந்த கதைகளின் மேல் எடிட்டர் சாருக்கு நம்பிக்கை வர இன்னும் சில நாட்கள் ஆகும் போல் உள்ளது.
ReplyDeleteவந்தால் நன்றாக இருக்கும்..
ரிப்போர்ட்டர் ஜானி ரீப்ரின்ட்டுக்கு என்னுடைய ஏகோபித்த ஆதரவும் உண்டு ரகு சார்..💪💪
Deleteரகுவய்யா இந்த லிஸ்ட்டில் இன்னும் சேர்க்க வேண்டியவை
Deleteஇரத்த அம்பு
மரணப் பட்டியல்
விண்வெளிப் படையெடுப்பு
பயங்கரவாதி ஜானி
விசித்திர நண்பன்
நாம கேட்டுகிட்டே இருப்போம் சார்
Deleteஷெல்டனோட செல்ஃபி எடுக்கலாம்னு பாத்தா..செல்ப் எடுக்க மாட்டாரே.(எப்படி)
ReplyDelete:-)
தாத்தாஸ் - என்னோட பாசத்துக்குரியவங்க.
ReplyDelete3வது இதழ் மட்டும் இன்னும் படிக்காமல் வைத்திருக்கும் அவல நிலை!!
ஷெல்டன் - வெல்கம் வெல்கம்!
கேள்வி 1:
ReplyDeleteவருடத்திற்கு 12 டெக்ஸ் கட்டாயம் வேண்டும்.
கேள்வி 2:
B
டிடெக்டிவ்/க்ரைம்
கேள்வி 3:
தாத்தாஸ் வேண்டும்
கேள்வி 4:
A டபுள் OK.
தோர்கல் வேண்டும்.
கேள்வி 4:
ஷெல்டன் நான் படித்ததில்லை அதனால் கருத்து சொல்ல விரும்பவில்லை.
சதாசிவம் காங்கேயம்
கேள்வி மூன்று : தாத்தாக்கள் கதை வரிசை அடர்த்தியானது தான். ஆனால் தனித்துவமானது. எந்தப் பெயரில் வந்தாலும் சரி. கண்டிப்பாக வரவேண்டிய தொடர்.
ReplyDeleteதாத்தாக்களின் மூன்று கதையும் நான் படித்துவிட்டேன்.
ReplyDeleteஎன்னைப் பொருத்தவரை மூன்று கதையும் அட்டகாசமாக இருந்தது. எனவே தாத்தாக்கள் நம் மத்தியில் கும்மாளமிடலாம்
அனைவருக்கும் வணக்கம்!!!!
ReplyDeleteஇது 1002 வது பதிவு.
ReplyDeleteசக்கரத்தில் ஒரு சாத்தான்...
ReplyDeleteகதாசிரியர் ஒரு சின்ன சமாச்சாரத்தை வைத்தை வைத்து சிக்கனமாக (பக்க எண்ணிக்கை ) திகில் ஷோவை நடாத்தியிருக்கிறார்.
சைக்கிள் இருக்கும் இடத்தில் சுலபமாக கையிலிருக்கும் மொபைலை உருவகமாக்கிக் கொள்ளலாம்.
எதுவும் அளவுக்கு மிஞ்சினால்......
அருமையாக சொன்னீர்கள், சகோ
Deleteஷெல்டன் வரட்டும். 😍
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDelete/// தாத்தாக்களின் இதுவரையிலுமான 3 ஆல்பங்களையும் முழுசாகப் படித்து விட்டீர்களா? அவர்கள் கிராபிக் நாவல் தடத்தில் தொடர்வது உங்களுக்கு ஓ.கே. தானா ? அல்லது, ரொம்பவே அடர்த்தியாய் உள்ளதால் உட்புக சிரமமாகிறதா ? Honest replies please ! ///
ReplyDeleteமூன்றையுமே படித்திருக்கிறேன்.. பிடித்தே இருக்கிறது..!
தாத்தாவ்ஸ் தொடர்வதில் சம்மதமே...!
/// “மாதமொரு டெக்ஸ்” – ஏதேனும் மார்க்கத்தில்! இந்த template 2025-க்கும் தொடர்ந்திடல் –
ReplyDeleteA. காலத்தின் கட்டாயம்!
B. வருஷத்துக்கு 10 இதழ்கள் மதி! ///
A ) காலத்தின் கட்டாயம்.
இனிமே இந்தமாதிரி கேள்வியெல்லாம் கேக்காதி.க சார்..!
15 போதுமா அல்லது 18 வேணுமா..? இப்படித்தான் கேக்கோணும்.!
இதான் சரியான கேள்வியா இருக்கும். இளம் டெக்சும் பிடிக்க முடியாத தூரத்தில் போயிகிட்டு இருக்கு. என்னோட ஆப்சன் 7 கிழம் டெக்ஸ். 6 இளம் டெக்ஸ். 2 கிளாசிக்ஸ். இந்த மாதிரியான தொகுதி பங்கீடே வெற்றிக் கூட்டணியா்இருக்கும்.
Deleteஎன்னாது கிழம் டெக்ஸா?
Deleteமேக்கப் போடாத நம்ம டெக்ஸ் விஜய்யோட முகத்தை தினமும் பத்து முறை உனக்கு குளோஸப்புல காட்டுனாதான்யா உனக்கு புத்தி வரும்.
வருடங்கள் ஓடினாலும், மாறாதது எங்க டெக்ஸ்தான்யா...
இப்பதான் 40 வயசுல இருந்து இளமை இருபதுக்கு யங் டெக்ஸா திரும்பி இருக்காரு..
அடுத்து கிட் டெக்ஸா மாற ரொம்ப நேரம் ஆகாது...
கபர்தார்...
எனது அலவலக நண்பருக்கு இந்த 40 வயது குடுத்தேன்
Deleteநல்லா இருக்கு சொல்லி டெக்ஸ் மீது ஆர்வம் கொண்டார்
யங் டெக்ஸ் கதைகள் இன்னும் தெனாவெட்டு அதிகமா இருக்கு என்றேன், அதற்கு என்னது யங் டெக்ஸா, இந்த கதையில் வரும் டெக்ஸூக்கு 25 வயது இருக்கும்ல, அப்ப டீனெஜ் டெக்ஸ் கதைகளா என்றார்
புதிதாய் படிக்கிறவங்க டெக்ஸ் இளமையாய் தான் காட்சி தருகிறார்
40 வயது என்று தெரிந்தால் மட்டும் ஆச்சரியமுடன் பார்க்கின்றனர்
மேக்கப் போடாத நம்ம டெக்ஸ் விஜய்யோட முகத்தை தினமும் பத்து முறை உனக்கு குளோஸப்புல காட்டுனாதான்யா உனக்கு புத்தி வரும்.//
Delete🏃🏻♂️➡️🏃🏻♂️➡️🏃🏻♂️➡️🏃🏻♂️➡️🏃🏻♂️➡️🏃🏻♂️➡️
///நமது புதுசு சார்ந்த தேடல்கள் எந்த ஜானரில் தீவிரமாக இருந்திட வேண்டுமென்பீர்களோ?
ReplyDeleteA. கௌபாய்
B. டிடெக்டிவ் / க்ரைம்
C. ஹாரர்
D. கார்ட்டூன்
E. சயின்ஸ் ஃபிக்ஷன்
F. சூப்பர் ஹீரோஸ்///
A . கௌபாய்
B டிடெக்டிவ் & க்ரைம்
&
D. கௌபாய்
(அங்கே ஒரு சின்னத்துலதான் குத்த முடியுது.. அதான் இங்குட்டு மூணுல குத்திட்டேன்.!
ஹானஸ்டியும் வேய்ன் ஷெல்டனும் வந்தே தீரணும்...💪💪💪
ReplyDeleteஎனக்கென்னமோ வெய்ன் ஷெல்டனக்கனான சப்போர்ட் மாதிரி தெரியலையே
Deleteநல்ல பையனை சந்தேகப்படாதிங்க சகோ..!
Delete@Edi Sir..😍😘
ReplyDeleteQ.no.3:
தாத்தாஸ் இதுவரைக்கும் வந்த எல்லாத்தையுமே படிச்சாச்சு..😃👍👌
தாத்தாஸ்கள் பேசும் தங்களின் நையாண்டி வசனங்களுக்கு நான் அடிமை சார்.😃😃
I like தாத்தாஸ்..😍😘😘😘
Q.no:5
ஷெல்டன் கதைகள் வரலாம் சார்.👍👍👍
சிறைப் பறவையின் நிழலில்...
ReplyDeleteபுதுசா சொல்ல என்ன இருக்கு?
களிப்பூட்டும் கதை.
9.2 / 10
செல்டன் வந்தே தீரணும்சார். தாத்தாக்கள்"சீக்கிரம்" வேண்டும். A.கௌபாய் க்கு ஓட்டு போட்டுள்ளேன். மாதம் ஒரு டெக்ஸ் புதுசு இல்லனா பத்து புத்தகங்கள் இருந்தாலும் திருப்தியே இல்லங்க சார்.செல்டன் இடையில் எதாவது ஆல்பம் வெளியிடாமல் விட்டுள்ளோமாங்க சார் எதேனும் பெண்டிங் இருந்தால் அதையும் வெளியிடுங்க
ReplyDeleteவேய்ன் ஷெல்டன் கண்டிப்பாக வேணுமுங்க.
ReplyDeleteதாத்தா சாரி ஷெல்டன லெல்கம
ReplyDeleteசெல்டன் மற்றும் தாத்தா இரண்டுமே வேணும் சார்
ReplyDeleteவயதான தாத்தா கெட் அவுட் ஆனாலே போதும்
ReplyDeleteமீசக்காரர் வேணாமே
ஓட்டு போட்டாச்சுங்க சார்
ReplyDeleteப்ரான்ஸ்லயும் எலக்சனா மாப்பு...🤓
Deleteதாத்தா வேண்டும். ஷெல்டன் கண்டிப்பாக வேண்டும்.
ReplyDeleteவோட்டுக்களை போட்டாச்சு.
ReplyDeleteஇளம் டெக்ஸ் எண்ணிக்கையை வி காமிக்ஸில் ஆல்டர்னேட் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புண்டுங்களா ?
ReplyDeleteஇருக்கத் தான் செய்கிறதெனில் – நமது புதுசு சார்ந்த தேடல்கள் எந்த ஜானரில் தீவிரமாக இருந்திட வேண்டுமென்பீர்களோ?
ReplyDeleteA. கௌபாய்
B. டிடெக்டிவ் / க்ரைம்
E. சயின்ஸ் ஃபிக்ஷன்
இது மூணும் என்னோட சாய்ஸ். ஒண்ணே ஒண்ணு செலகட் பண்ணனும்னா B. இரண்டுன்னா B & E.
பயணமும் ரூட் 66 எதோ ஒரு ரூபத்தில் கண்டிப்பாக வந்து விடும் என்ற காரணத்தால் இப்போதைக்கு விஷத்தை குடிக்கத் திட்டம் போட்டுள்ளோம் (உண்மையான காரணம் அட்டையிலருந்த அம்மணி தான் என்பதை வெளியே சொல்லிடாதீங்க).
ReplyDeleteநானும் அதே காரணத்துக்காக தான் விஷத்துக்கு ஓட்டு போட்டேன்
DeleteWe welcome SHELTON Series
ReplyDeleteBut No to. Thorgal
Keep TEX 15 Books per year
// தாத்தாக்களின் இதுவரையிலுமான 3 ஆல்பங்களையும் முழுசாகப் படித்து விட்டீர்களா? அவர்கள் கிராபிக் நாவல் தடத்தில் தொடர்வது உங்களுக்கு ஓ.கே. தானா ? அல்லது, ரொம்பவே அடர்த்தியாய் உள்ளதால் உட்புக சிரமமாகிறதா ? Honest replies please ! //
ReplyDeleteபடித்து விட்டேன். கிராபிக் நாவல் தடத்தில் தொடர்வது எனக்கு ஓ.கே.
எனது சாய்ஸ் 1) B 2) E 3)F.
ReplyDelete///தாத்தாக்களின் இதுவரையிலுமான 3 ஆல்பங்களையும் முழுசாகப் படித்து விட்டீர்களா? அவர்கள் கிராபிக் நாவல் தடத்தில் தொடர்வது உங்களுக்கு ஓ.கே. தானா ? அல்லது, ரொம்பவே அடர்த்தியாய் உள்ளதால் உட்புக சிரமமாகிறதா ? Honest replies please ! ///
ReplyDeleteமூன்றையும் படித்து விட்டேங்க, ஆசிரியரே
முக்கியமாக மூன்றாவது ரொம்ப பிடித்திருந்தது
தாத்தாஸ் கண்டிப்பாக வேண்டுங்க
கண்டிப்பா வேணுமா. அப்ப தாத்தாஸ் தொடர்ந்து பிரயாணம் பன்னுவாங்க போல நம்முடன். Ok ok 💐
Deleteவணக்கம் விஜயன் sir. ஒரு கேள்வி sir. "வன்மேற்கின் வரலாறு" வரிசை இவ்வருடத்தின் பிற்பகுதியிலும் காணோமே? (V Comics வரிசையில் அறிவிப்பு வரும் என்று எதிர் பார்த்தேன்.)
ReplyDeleteடெக்ஸ் அங்கே வெளிவரும் நம்பருக்கு நாம கம்மி
ReplyDeleteஉச்சத்தில் இருக்கும்போது அதிக நம்பரில் வருவதே சிறந்தது
காலத்தின் கட்டாயம் ஒரு குத்து
Hi
ReplyDeleteவெல்கம்💐
Deleteஎனது பழைய அலுவலகத்தின் செக்ரட்ரி அவர்களின் பொண்ணுக்கு டெக்ஸ் பிடித்து விட்டார்
ReplyDeleteமற்ற கதைகள் குடுத்தாலும் டெக்ஸ் தான் வேண்டுமாம்
+2 னால கதை புத்தகங்கள் படிக்கல, ரிசல்ட் வந்த ஒரு வாரம் கழித்து என்னை தொடர்பு கொண்டார், நம் லயன் வாட்சப் நம்பர் குடுத்தேன்
டெக்ஸ் புத்தகங்கள் தனது மகளுக்கு பரிசாக வாங்கி குடுத்துள்ளாருங்க
டெக்ஸ் புது ரசிக, ரசிகைகளை உருவாக்கிடு கொள்வதில் டாப்பில் உள்ளார்
அருமை...அருமை..குட் ஒர்க் சகோ...👌👌👌👌
DeleteSuper super
Deleteசூப்பர். நல்ல செயல்
Delete😊😊😊😊😊😊😊😊😊😊💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Deleteஒவ்வொரு புதிய வாசகி யா உருவாக்கிட்டு வருகிறிங்க அருமை தோழி உங்களுக்கு நம்ம செலவில் ஒரு ரவுண்டு பன்
Delete18 லட்சியம்....12 டெக்ஸ் நிச்சயம்
Deleteநன்றிகள் தோழரே@செந்தில் சத்யா
Deleteஈரோடில் பன் குடுக்கும் போது நம்மளுக்கு இரண்டு பன்னாக குடுத்து விடுங்கள் 😁😁😁
///18 லட்சியம்....12 டெக்ஸ் நிச்சயம்///
Delete💪🏾💪🏾💪🏾💪🏾🔥🔥🔥🔥🔥
Shelton - welcome
ReplyDeleteGood Morning to all Dear Comics Friends.
ReplyDeleteநமது புதுசு சார்ந்த தேடல்கள் எந்த ஜானரில் தீவிரமாக இருந்திட வேண்டுமென்பீர்களோ?
ReplyDeleteA. கௌபாய்
B. டிடெக்டிவ் / க்ரைம்
C. ஹாரர்
D. கார்ட்டூன்
E. சயின்ஸ் ஃபிக்ஷன்
F. சூப்பர் ஹீரோஸ்
ஒன்றை தேர்வு செயுவதில் கடினங்க, ஆசிரியரே
என்னை கேட்டா, அம்புட்டும் 😊😊😊😁😁
கணண மூடிக்கொண்டு ஏதாவது ஒன்றை தொடுஙக 😊
Deleteநீ கண்ட மூடிட்டு படில....
Deleteகார்டூன்
ReplyDeleteசயின்ஸ் ஃபிக்க்ஷன்
டிடெக்டிவ்/க்ரைம்.
இந்த வரிசை ஓகே சார்.
ஷெல்டன் கதைகள் சரிதான் ஆனால் some 18+ விரசங்கள் பிடிக்கவில்லை.
ஷெல்டன் பழைய கதைகள் நம்மிடம் காலியாகிவிட்டால் இவரின் புதிய கதையை வெளியிடலாம்.
ReplyDeleteஎனக்கும் இவருக்கும் எந்த வாய்க்கால் வரப்பு சண்டை எல்லாம் இல்ல சார் :-)
Deleteஅப்ப உனக்கும் எனக்கும்தாம்ல...ஷெல்டன் இப்பவே வாரத தடுத்தின்னா
Deleteசெம சூப்பர் சார்....
ReplyDeleteதோழர்கள் ரெகுலர்ல பெருசா சாதிக்கலன்னா லிமிட்டெட்ல ரெண்டு குண்ட சட்டு புட்டு போட்டு கதய முடிக்கலாமே எங்கள் போல ஆர்வலர்க்காக...
சார் தாத்தாக்கள் வேற லெவல்....காரணம் அங்க தாத்தா மட்டுமில்ல...ஓவியங்களில் அழகாய் பேசும் பேத்தியும்....சாகசங்களும் அது வேற லெவல்....மேலும் தாத்தாக்களோடு நீண்ட காலம் செலவிடாததாலோ என்னவோ நேரிலும் அந்த வார்த்தைக்குத்தான் என்னவோர் ஈர்ப்பு
ReplyDeleteஷெல்டன் நிச்சயம் வேண்டும் சார்...நீண்ட கால காத்திருப்பில் இப்புதிய சுனாமி வந்து ஆரவார அலையில்லாமல் நமது கிட்டங்கி மில் தேங்கிப் கிடக்கும் கடலையும் ...சுருட்டிச் செல்லலாமே
ReplyDeleteஅடடா சூப்பர் ஸ்பைடர் ...அதிரடி ஆர்ச்சி...இளவரசி ....விளம்பரங்களே அள்ளிக்கோ...அள்ளிக்கோங்குதே....வானவில் ஒன்னு மட்டும் மிஸ்ஸிங்....சினிஸ்டர் செவனத்தவிர ஏதுமிராதுன்னு வானவில்லின் நிறங்களே கூறிடுமே
ReplyDeleteஷெல்டன் 14 வேண்டும் ஐயா!
ReplyDeleteதாத்தா - No sir
ReplyDeleteவாலிப வயோதிகர் (ஷெல்டன்) - yes sir 👍
ஆல்ஃபா மற்றும் சிஸ்கோ சாகசங்களை வெளியிடலாம் ஐயா!
ReplyDeleteதரமான க்ரைம் த்ரில்லர் மற்றும் ஆக்சன் கதைகள் அவை! அதிலும் சிஸ்கோவின் கதைகளில் எல்லாமே நன்றாக இருக்கும். ஆல்பாவும் சளைத்தவரில்லை
+9
Delete//சிஸ்கோவின் கதைகளில் எல்லாமே நன்றாக இருக்கும். ஆல்பாவும் சளைத்தவரில்லை// +100 ..
DeleteATLEAST FINISH LAST ISSUE ARC OF CISCO SIR .. தொங்கலில் உள்ளது ..
நிச்சயமா தொடரனும் சார்...தேறிடுவாங்க
Delete1.தாத்தாவ்ஸ் - வந்தாலும் ஓ.கே. ; வராட்டியும் ஓ.கே. ..
ReplyDelete2.ஷெல்டன் - டபுள் ஓ.கே..
EVEN THORGAL LOSE THE POLLS ATLEAST FINISH THIS ARC SIR .. WITH ONLY ONE ISSUE PENDING ..
நமது புதுசு சார்ந்த தேடல்கள் எந்த ஜானரில் தீவிரமாக இருந்திட வேண்டுமென்பீர்களோ
ReplyDeleteC. ஹாரர்
E. சயின்ஸ் ஃபிக்ஷன்
F. சூப்பர் ஹீரோஸ்
மூன்றில் ஏதேனும் ஒன்று .. horror மற்றும் சூப்பர் ஹீரோஸ் நிறைய இள வயதினர் சேலம் புக் fairil கேட்டது .. இதில் ஒன்று இருந்தால் புது வாசகர்கள் உள்ளே கொண்டு வரலாம் .. கவ்பாய், டிடெக்ட்டிவ் ,கார்ட்டூன் மீதெல்லாம் அவர்களுக்கு ஆர்வம் இல்லை ..
தாத்தாஸ் தனி தடத்தில்
ReplyDeleteவெயின் ஷெல்டன் எனக்கு ஓகே
சார் மறுபதிப்கபுளில் ஒரு கதை நல்ல கதை மற்ற கதை கொஞ்சம் ஆவ்ரேஜ் போல தோன்றுகிறது
ஸ்பைடர் பூதம் டபுள் ஓகே ஆனால் மற்ற இரு கதைகளுக்கு பதில் இதுவரை வராதா கதைஎதுவும் போட முடியுமா மிஸ்டர் மர்மம் அல்லது நீதி காவலன் ஸ்பைடர் போல
ஆர்ச்சி கதைகளில் கூட ஆர்சியோடு மோதாதே பதில் யார்அந்த ஜூனியர் ஆர்ச்சிபோட முடியுமா
கொலைபடை போல டபுள் கலரில் வரும் வாய்ப்பு கிடைக்குமா
ஓட்டெடுப்பில் ஒரு ஓட்டு தான்போட முடியும் அதனால் அங்கு ஹாரர் பதிவு செய்துள்ளேன்
ReplyDeleteமற்றவை கீழே
டிடெக்டிவ் / க்ரைம்
ஹாரர்
சயின்ஸ் ஃபிக்ஷன்
நானும் Horror தான் போட்டேன்.
Deleteகொஞ்ச வருடம் முன்பு க்ராபிக் நாவல் வரிசையில் பல நல்ல ஹாரர் கதைகள் வந்தன அவை எனது விருப்பமானகதைகள் அது போல தொடர வேண்டும்
Deleteநானும் ஹாரர் தான் ஒட்டு போட்டேன்.
Deleteசார் இனி எனது பெர்சனல் நிலை
ReplyDeleteபழனி வீடும் புல்
சென்னை வீடும் புல் இனி வாங்கும் புத்தகங்களை வைக்க இடமில்லை
ஹார்ட் பவுண்டுகளாக வரும் புத்தகங்கள் வைக்க இன்னும் நிலை மோசம்
மறுபதிப்புகளில் முதல் வேதாளர் தொகுப்பு மட்டுமே படித்துள்ளேன் மற்ற எந்த புத்தகங்களும் படிக்க வில்லை நேரம் இன்மையால்
ஆகையால் இனி தேர்ந்தெடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்
அதனால் தான் இன்னும் myos மற்றும் 80 இன்னும் பணம் கட்டவில்லை
தொடர்ந்து வரும் ஸ்பெஷல் புத்தகங்களின் அறிவிப்புகள் பார்த்து பதட்டம் தான் வருகிறது
எப்படி வாங்குவது என்று.
@கிருஷ்ணா ஜீ..😍😃
DeleteMYOMS தான் நின்னுப் போச்சே ஜி..
அதனால Electric '80 க்கு புக்கிங் போடுங்க..😍😘💐💐
Advt பாக்கிறப்பவே அள்ளுது..😍😍❤💛
உடனே புக் பண்ணிடுங்க ji.. 😍👍👌
தூண்டாதீர்கள் பாபு ஜி 😀
Delete///பழனி வீடும் புல்
Deleteசென்னை வீடும் புல் இனி வாங்கும் புத்தகங்களை வைக்க இடமில்லை///
என்ன எதிர்பார்க்கறீங்க கிருஷ்ணா?!!
"பழனியிலோ, சென்னையிலோ ஒரு மேற்கொண்டு ஒரு சின்னவீடு ஏற்பாடு பண்ணிக்க வேண்டியதுதானே?"ன்னு எடிட்டரோ , நாங்க யாராவதுமோ சொல்லணும்னு எதிர்பார்க்கறீங்களாக்கும்? ;)
வேண்டாங்க அப்படி மட்டும் சொல்லிடாதீங்க இரண்டில் இருக்கும் கஷ்டமே இந்த ஜென்மத்திற்கு போதும்
Deleteதோர்கல் ரெகுலர் தடத்தில் ஓகே..
ReplyDeleteஆனால் இரண்டு அல்லது மூன்று ஆல்பங்களைத் தாங்கி வர வேண்டும்..
ஷெல்டன் கண்டிப்பாக வேண்டும்..
ReplyDeleteஹாரர் வேண்டும் சார்.. கொஞ்சம் இரத்த வாடை கம்மியா...
ReplyDeleteநம்ம கறுப்புக் கிழவி ஆயாவ கூட்டிட்டு வாங்களேன்..
ReplyDeleteதாத்தாஸ்.. வந்தாலும் சரி.. வரலீனாலும் சரி..
ReplyDelete//இதான் சரியான கேள்வியா இருக்கும். இளம் டெக்சும் பிடிக்க முடியாத தூரத்தில் போயிகிட்டு இருக்கு. என்னோட ஆப்சன் 7 கிழம் டெக்ஸ். 6 இளம் டெக்ஸ். 2 கிளாசிக்ஸ். இந்த மாதிரியான தொகுதி பங்கீடே வெற்றிக் கூட்டணியா்இருக்கும்.//
ReplyDeleteஉயர்ந்த மனிதர் (மனதளவிலும்) மஹிஜீயின் இந்த கருத்தை நான் வழி மொழிகிறேன்.. 😍😍😍
இந்த வருசம் கூடி கும்மியடிக்கறது மஞ்சள் நகரமா? இரும்பு நகரமா? சல்லுங்க ஆசானே.. 🙏🏻🙏🏻
ReplyDeleteஇளம் tex தனி தடமாக வேண்டும். தாத்தாஸ் தொடரலாம். தோர்கல் ரெகுலராக வரலாம். புதிய genres ஆக சயின்ஸ் fiction மற்றும் சூப்பர் ஹீரோஸ் கதைகளை வழங்கலாம்.😍🥰💐💐💐💐💐
ReplyDelete@Guna ஜி..😍😃
ReplyDeleteஇந்த வருசம் கும்மி @மஞ்சள் மாநகரம் தான்..😍😃👍👌
போன வருசம் EBF ல ஆசிரியருக்கு @Erode team பரிசளித்த "இரும்புகை" யை பார்த்து பிரம்மிச்சு போய் நின்னது இன்னும் மனச விட்டு அகலவில்லை.😍😍
இந்த வருசம் என்ன ஆச்சரியங்கள் காத்திருக்கோ ன்னு மனசு துடிக்குது..😍
அடுத்த வருசம் நம்ப டெக்ஸ் நகரத்துல வச்சுக்கலாம்..👍👌✊
மகிழ்ச்சி நண்பரே..😍😍😍
Deleteதாத்தாக்களை போதுமான அளவு பார்த்தாயிற்று சார் !! ஒரு இரண்டு, மூன்று வருடங்கள் கேப் விட்டு வெளியிடலாமே..
ReplyDeleteஷெல்டன் கதைகளை டன் டன்னாக வெளியிட்டாலும் சம்மதமே!!
'தல' லார்கோ வந்துவிட்டார் என்றால் 'தளபதி' ஷெல்டனும் வந்தாக வேண்டுமல்லவா!!
மீண்டும் எனது அதே பல்லவி..
ReplyDeleteபுத்தக விழாவுக்கு வரும் இளைய வாசகர்கள் ஹாரர், சஸ்பென்ஸ் கதைகள் கேட்கிறார்கள்.
அவர்களின் கேள்விக்கு பதிலை கொடுப்பதற்காக ஹாரர்,சஸ்பென்ஸ் கதைகள் வேண்டும் சார்.
அடுத்து வரும் நெய்வேலி , கோவை புத்தக விழாக்களில் இந்த தேடல் அதிகமாக இருப்பதை அறிய முடியும்.
***** சிறைப்பறவையின் நிழலில் *****
ReplyDeleteசிறையிலிருந்து தப்பித்த போக்கிரியை டெக்ஸ் பின்தொடர, டெக்ஸுக்குத் தெரியாமல் ஒரு சகோதரர் கூட்டம் அவரைப் பின்தொடர.. இறுதியில் அனைவரும் ஒரு கல்லறையில் சந்தித்துக் கொள்ள; அவர்கள் அனைவரையும் சமாதிக்குள் அடைக்கும் வேலையை வசதியாகச் செய்து முடிக்கிறார் டெக்ஸ்!
அப்படியொன்றும் அழுத்தமான கதை இல்லை தான்.. ஆனால் அதை நகர்த்திச் சென்ற விதத்தில் தெறிக்கவிட்டிருக்கிறார்கள்!
இம்முறை டெக்ஸும், டைகர் ஜாக்கும் மட்டுமே களமிறங்க; மற்றவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. அவ்வப்போது டெக்ஸின் உயிர் காப்பதின் மூலம் தன் வேலையை திறம்படச் செய்து நம் மனதில் நிறைகிறார் டைகர் ஜாக்! எனினும், கார்ஸன் இல்லாததால் நக்கல்-நையாண்டிகள் ஏதுமின்றி கடைசிவரை ஒருவகையான இறுக்கத்தோடே பயணிக்கிறது கதை!
வில்லன்கள் - மூன்று தனித்தனிக் குழுவாக வந்து தங்கள் பாணியில் மிரட்டுவதும் ஒரு வித்தியாசமே!
9.5/10
Editor sir: Thorgal Fantasy Fans
ReplyDeleteரெகுலர் தடத்தில் தோர்கல் ?
A.டபுள் ஓ.கே.
துணைக்கு வந்த மாயாவி :- வயதான கவ்பாய் தனக்கு பெண் குழந்தை இருப்பதை தனது முன்னால் காதலி எழுதிய கடிதம் மூலம் தெரிந்து கொண்டு அவளை தேடி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கதை. 82 பக்கத்தை பெரிய டமார் டீமில் இல்லாமல் அளவான டயலாக் அழகான ஓவியம் மற்றும் விறுவிறுப்பாக கதையை கொடுத்த கதாசிரியர்க்கு பாராட்டுக்கள். மார்கன் உடன் வரும் சிறுவன் ஒரு நல்ல கதாபாத்திரம், பேசாமல் இருந்து நம்மை கவர்ந்து விட்டான், கடைசி பக்கம் திருப்பம் அருமை. வயதான மார்கன் பாத்திர படைப்பு இயல்பு.
ReplyDelete82 கதையில் 90% வசனங்கள் மார்கன்தான் பேசியது போல உள்ளது ஆனால் ஒரு இடத்தில் கூட எனக்கு சலிக்கவில்லை, இதுவே நான் அவருடன் பயணிக்கும் அனுபவத்தை கொடுத்தது.
இது போன்ற கதைகள் நிறைய எங்களுக்கு வேண்டும் சார்.
சின்ன சின்ன சம்பவங்கள் கதையை சுவாரசியமாக கொண்டு சென்றது.
Deleteஇந்த வருடம் இதுவரை வந்த கதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை துணைக்கு வந்த மாயாவி தான்.ஒரு rugged அரைக்கிழ கவ்பாயை லீட் கதாபாத்திரமாக வைத்து இவ்வளவு சுவாரசியமாக கதையை நடத்திச் செல்ல முடியும் என்பது மகிழ்ச்சிகரமான விஷயம்.
Deleteஉரையாடல்கள் கையாளப்பட்ட விதம் மிகவும் அற்புதம்.
உண்மை செல்வம் அபிராமி சார்.
DeleteSir...
ReplyDeleteThanks for the sponge Bun. Recd Day before.
Thatthaas can be continued in Graphic Novel.
Wayne Shelton Album 14...eppo release sir....we are waiting
Sponge கேக்கு கிடைச்சு குடும்பமா உட்கார்ந்து ரசிச்சு சுவைச்சாச்சு @@Edi Sir..😍😘
ReplyDeleteரொம்ப நன்றி சார்..😍😘🙏🙏🙏
1)June'24 மாத புத்தகங்களில் முதல்ல படிச்சது க்ரே தண்டர்..😃😀
நல்லா ஜாலியா இருந்தது சார்..😃😍
2)அடுத்து Mr.No..😃😍
கொஞ்சம் நிறுத்தி நிதானமா படிச்சேன்..😃
ரேடியோ ரியோ குழுவுடன் Mr.No வின் சாகசங்கள் அருமை..
வில்லனின் ரசிப்பு தன்மையால் ஏற்படும் ட்விஸ்ட் அருமை..😍💐
3) தல Tex -ன் சிறைப்பறவையின் நிழலில்.. ஒரே..சேஷிங்..சேஷிங்..👍👌
விறுவிறுப்பா இருந்தது..😍😃
"வோ" டைகர் ஜாக் ரொம்பவே பேசறாரு..
ஒரு கட்டத்துல தல டெக்ஸை "நண்பரே" ன்னு வேற கூப்பிட்டறாரு..😃😃😃😃
"Mr.சுக்கா ரோஸ்ட் கார்சன்" இல்லாதது கொஞ்சம் போரிங்..😃
டைகர் பழைய கதைகளில் டெக்சை பெயரை சொல்லி அழைப்பது போல அமைத்திருந்தோம் சார் ! இந்த இரண்டாம் இன்னிங்சில் சகலத்தையுமே மாற்றி அமைத்துள்ளோம் !
Delete4)xiii-நதி மூலம் க்யூபா..
ReplyDeleteபடிக்க "மறந்துட்டேன்"😃..
இதோ இப்ப படிச்சிடறேன்..😃😃😃
மறதிகாரர் கதையை மறந்துட்டீங்களே, சகோ😂😂😂😂😂
Deleteநதி மூலம் கியூபா அட்டகாசமாக இருந்தது. கதை பெரிதாக இருக்கிறது. 50 பக்கத்துக்குள் அந்த சுவாரசியம் குறையாமல் எப்படி கதையை முடிக்கப் போகிறார்களோ
ReplyDeleteநாளை தான் எலக்ட்ரிக் 80
ReplyDeleteவி காமிக்ஸ் சந்தாக்களை கட்ட வேண்டும். சந்தா குதிரையில் ஏறிய பின் இரங்க மனம் மறுக்கிறது.
ஒரு சில கதைகள் பிடிக்காமல் தான் இருக்கிறது. ஆனால் ஓரிரு கதைகளுக்காக மற்ற கதைகளை தேடித்தேடி வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவே சந்தாவை செலுத்தி விட்டால் பிரச்சனை முடிந்தது. நம் இருக்கும் இடத்திற்கே தேடி வந்துவிடும். ஆன்லைனிலும் வாங்கலாம் தான். ஆனால் பணிச்சுமை காரணமாக ஆன்லைன் செல்ல மறந்து விட்டால் பிரச்சனையாகிவிடும் எனவே சந்தாவை கட்டி விட்டால் அது பாட்டுக்கு வந்துவிடும். இது என் தனிப்பட்ட கருத்து.
பிடிக்காத கதைகளே இராதென்பது போலொரு சந்தாவினை 2025 க்கு தயாரிக்க முனைவோம் சார் !
Deleteஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது பறக்கும் பலூனில் டெக்ஸ் இதழ் வெளியான பிற்பாடு வந்த ஒரு இதழில் இப்படிக் கூறியிருந்தீர்கள் டெக்ஸ் கதையில் இப்படி ஒரு உப்புமா கதையா என்று புருவம் உயர்த்தும் நீங்கள் அடுத்த டெக்ஸ் கதை வரும்போது ஆசையாக வாங்குகிறீர்கள். இதே முறையை மற்ற பாவப்பட்ட நாயகர்கள் மீதும் காட்டலாமே என்றும் வேகமாய் போய்க் கொண்டிருக்கும் ஓட்டத்தில் ஸ்பீட் பிரேக்கர் போல இது போன்ற திடீரென்று புத்தகங்களை ஒரேடியாக வாங்காமல் விட்டால் தர்ம சங்கடமாகி போய் விடுவதாக எழுதி இருந்தீர்கள். அப்போதே நான் ஒரு முடிவு செய்தேன். தமிழில் வெளிவரும் காமிக்ஸ் இது ஒன்றுதான். இதில் நாம் ஒரு கதையை வாங்காமல் விட்டாலும் எதிர்காலத்தில் காமிக்ஸ் என்பது கேள்விக்குறியாகிவிடுமோ என்ற பயம் எனக்கு அப்பொழுது வந்தது. அதனால் கதை பிடிக்குதோ பிடிக்கலையோ அனைத்து புத்தகங்களையும் வாங்கி விடுவேன். ஆனால் அதன் பின் வந்த கதைகளில் சைபர் சைபர் ஏழு மற்றும் காரிகன் கதைகள் மட்டுமே எனக்கு பிடிக்கவில்லை. மற்றைய அனைத்து கதைகளும் பிடித்தன. கார்ட்டூன்கள் கிராபிக் நாவல்கள் போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் பெரும்பான்மை மக்கள் மாமுலான கதைகளே விரும்புவதால் இது போன்ற கதைகள் அரிதாகிக் கொண்டு வருவது வேதனையாக தான் உள்ளது. முப்பது கதைகள் வரும்போது அது அனைவரையும் திருப்திப்படுத்தும் என்கின்ற அவசியம் இல்லை. என்னைப் பொருத்தவரை 30 புத்தகங்கள் வரும்போது ஓரிரு கதைகள் பழுதாவது தப்பில்லை என்றே கூறுவேன். எனக்கு எப்படி ஆவது தொடர்ந்து தமிழில் காமிக்ஸ் வந்தே ஆக வேண்டும். ஆகையால் எந்த ஒரு புத்தகத்தையும் வாங்காமல் தவிர்க்க மாட்டேன். அதுமட்டுமல்ல நாளை தேடும்போது இந்த புத்தகத்தை வரிசையில் மிஸ் ஆகுதே என்கின்ற கவலையும் வந்துவிடும். பெரும்பான்மை வாங்காமல் விட்டதால்தான் கார்ட்டூன் என்பது தற்போது அரிதாகிக் கொண்டே போகிறது. ஆனால் ஒரு புத்தகத்தை வாங்குவதும் வாங்காதோம் அவரவர் விருப்பம்தான். சிலரின் பொருளாதார சூழ்நிலைகள் கூட ஒத்துழைக்காமல் இருக்கலாம். மாதாமாதம் கடையில் புத்தம் வாங்குவதில் பட இன்னல்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தது. சந்தா கட்டுவதற்கு அப்போதைய சூழ்நிலையில் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் விஜயன் அவர்கள் வருடம் தெரியவில்லை அப்பொழுது சந்தாவை இரண்டு தவணையாக கட்ட அனுமதி அளித்த போது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. அதற்கு அடுத்த வருடம் 3 தவணைகளில் கூட கட்டினேன். தற்போது பொருளாதாரத்தில் கொஞ்சம் மேம்பட்டு விட்டாலும் காமிக்ஸ் என தனியாக தொகையை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்க ஆரம்பித்தேன். இப்பொழுது அனைத்து சென்றாலும் கட்டி விட்டேன். இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே. நான் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான் புத்தகம் வாங்கும் நிலையில் இருக்கும் நண்பர்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று சில புத்தகங்கள் வாங்குவதை தவிர்ப்பதை தவிருங்கள் என்று கூறுகிறேன். விஜயன் சார் 2024 பொறுத்தவரை அனைத்து புத்தகங்களும் அட்டகாசமாக இருந்தது. என்ன காரிகன் மட்டும் நான் படிக்கவில்லை அவ்வளவே. 2023 எடுத்துக்கொண்டால் காரிகன் இதழ் தவிர ஏலியன் கதை ஆக இரண்டு இதழ்கள் மட்டுமே எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அந்த ஏலியன் கதை கூட எழுத்துரு படிப்பதற்கு தோதாக இல்லாததால் தான் அதை படிக்கவில்லை. ஆகவே விஜயன் சார் நீங்கள் வெளியிடும் அனைத்து புத்தகங்களையும் வாங்க நான் தயாராக தான் இருக்கிறேன். எனக்கு தொடர்ந்து தமிழில் காமிக்ஸ் வந்தே ஆக வேண்டும் என்பதற்காக ஓரிரு கதைகள் பழுதாக இருந்தாலும் பரவாயில்லை. இன்னொன்றையும் கூறிக் கொள்கிறேன் 100% யாரையும் திருப்தி படுத்தவே முடியாது.
Deleteமனசிலிருப்பதையெல்லாம் அப்படியே கொட்டிட்டீங்க சதாசிவம் ஜி!
Deleteஉங்கள் அழகான எண்ணங்களும், காமிக்ஸ் காதலும் வாழ்க!
ReplyDeleteபாலையில் ஒரு போராளி
மிஸ்டர் நோ தொடர்ந்து சந்தோஷமான ஆச்சரியம் அளித்து வருகிறார். இந்த கதையும் படிக்க சுவாரசியமான கதையே.
9.1/10
நம்பிக்கையானதொரு மினிமம் கியாரண்டி நாயகராய் mister நோ உருவெடுத்து வருவதில் எனக்குமே மகிழ்ச்சி சார் !
Deleteசிறை பறவையின் நிழலில்..
ReplyDeleteவழக்கமான டெக்ஸ் கதை தான். போற போக்கில் தானே மூக்கை நுழைத்து அடிவாங்குபவனை காப்பாற்றி. பின்னர் அவன் பின்னால் கதை இறுதிவரை சுற்றுவது தான்.
எனக்கு என்னவோ கதை எழுதிவிட்டு வழக்கமாக கார்சன் இருக்கும் இடத்தை அழித்து விட்டு டைகர் ஜாக் சேர்த்துவிட்டார்கள் போல.
எப்போதும் வோ தவிர வேறு எதுவும் பேசாதவர், எப்போதும் கல்லை போல இருகிய முகம் உடையவர், இக்கதையில் பல வசனங்கள் பேசுகிறார், நண்பரே, டெக்ஸ், இரவுக்கழுக்காரே என மூன்று விதமாகவும் டெக்ஸை கூப்பிடுகிறார், சிரிக்கிறார். என கதை நெடுக பல விதமாக அவரை பார்கிறோம். வழக்கமாக கார்சனை ஓரண்டை இழுத்துக்கொண்டு இருப்பவர் இக்கதையில் டைகரிடம் உருகுகிறார், அடி பட்டால் துடிக்கிறார், இல்லை கேட்கிறேன் இதே அடி கார்சனிற்கு பட்டிருந்தால் சும்மா நடிக்காதே வயதானதால் தான் உன்னால் தாங்க முடியவில்லை என வம்பு செய்திருப்பார், அவருக்கு ஒரு நியாயம் டைகருக்கு ஒரு நியாயம்.
சரி கதை ஒரு கடகட வாசிப்பிற்கு ஓகே. அத்தனை குண்டில் ஒரு குண்டு கூட டெக்ஸ் மீது படாதா என்ற எதிரணியின் கேள்விக்கு இன்னும் பதிலில்லை என்பதை மீண்டும் வழிமொழியும் புத்தகம்.
ஒரு இடத்தில் டெக்ஸை கிண்டல் வேறு செய்கிறார் டைகர்
///நண்பரே, டெக்ஸ், இரவுக்கழுக்காரே என மூன்று விதமாகவும் டெக்ஸை கூப்பிடுகிறார், ///
Deleteநன்றாகக் கவனித்துப் படித்திருக்கிறீர்கள் கிருஷ்ணா!
எனக்குமே டெக்ஸை டைகர் 'நண்பரே' என்று அழைத்தபோது 'புதுஸ்ஸா இருக்கு.. இது எப்போலேர்ந்து' என்றே தோன்றியது!
இந்தக் கதையில் டைகருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை வைத்துப் பார்க்கும்போது சீக்கிரமே படைப்பாளிகள் டைகர் ஜாக்குக்கென்று ஒரு தனித்தடத்தை ஆரம்பிக்கப் போகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது!
Deleteஅதன்பிறகு 'இளம் டைகர் ஜாக்', 'சுட்டி டைகர் ஜாக் என்றெல்லாம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! :)
பிரிந்த காதலர்களை சேர்த்து வைப்பது போன்ற முக்கியப் பணியில் டெக்ஸ் மூழ்கிக்கிடக்கும் போது வரும் மற்ற கிரிமினல் கேஸ்கள் இனி டைகர் ஜாக் வசம் ஒப்படைக்கப்படும் வாய்ப்புகளும் அதிகம்! ;)
அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் காமிகஸ் உலகம் தாங்காது அதுவும் இல்லாமல் சீனியர் கார்சன் இருக்கும் போது டைகர் தனி தடம் வந்தால் போராட்டத்தில் குதிப்போம்
Deleteதாத்தாக்கள்... பிடித்தமானவர்கள்
ReplyDeleteஎனக்கு... But, உங்க "கையை" கடிக்காமல் இருந்தால் ஓகே தான் சார்... ❤️👍
கார்சனுக்கு ஒரு கடந்த காலம் இருப்பது போல, டைகருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கக் கூடாதுங்களா கிருஷ்ணா சார்...
ReplyDeleteஒரே ஒரு கதை கண்ணே கண்ணுன்னு இருக்கு அது மட்டும் போதுங்களா சார்
Deleteமிஸ்டர் நோ அட்டகாசமாக இருந்தது.
ReplyDeleteவி காமிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் 80 சந்தா கட்டியாச்சு.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவி காமிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் 80 சந்தா கட்டியாச்சு. கட்டியதை வாட்ஸ் அப் செய்த உடன் பழைய சந்தாவை கட் செய்து விட்டு எலக்ட்ரிக் சந்தாவுக்கு உடனே மாற்றி விட்டனர்.
ReplyDeleteசந்தா புக்கிங் எண் உடனே வந்து விட்டது. எதற்கும் ஆபீஸில் கூப்பிட்டு சொல்லலாம் என்று கூப்பிட்டேன். என் முகத்துடன் பேசிய ஆபீஸ் ஊழியை அவர்கள் உங்களது சந்தா கட் செய்யப்பட்டு எலக்ட்ரிக்80 சந்தா புக் செய்து விட்டேன் என்று கூறினார். அவரது புன்னகை போனில் இங்கே தெரிகிறது. ஆனாலும் சிலர் அவர்களை வசை பாடுவது ஏன் என்று தான் எனக்குப் புரியவில்லை. நான் பலமுறை ஆபீசுக்கு போன் செய்து என் குடாக்குத்தனமான சில சந்தேகங்களை கேட்ட போதெல்லாம் இன் முகத்துடன் பதில் அளித்தார் அந்த சகோதரி.
The 200 !
ReplyDelete😊😊😊👌👏
Delete