ஆயிரத்தார்களே,
வணக்கம் ! பெரும் மழை பெய்து ஓய்ந்தது போலொரு பீலிங்கு உள்ளுக்குள் ! இது வரைக்குமான 999 பதிவுகளுக்குமே, பெருசாய் எதையும் குறித்துக் கொண்டோ, தயாரித்துக் கொண்டோ எழுத அமர்ந்தது லேது ! லேப்டாப்பையோ, பேப்பர்-பேனாவையோ எடுத்துக் கொண்டு சேரில் சாயும் போது என்ன தோன்றுகிறதோ - அதுவே அந்த வாரத்தின் பதிவாக இருந்து வந்துள்ளது ! ஆனால் முதல்முறையாக இந்த ஆயிரமாவது பதிவுக்காண்டி நாலைந்து நாட்களாய் பிட் பிட்டாய் எழுதி, அப்பாலிக்கா கோர்வையாக்கி முழுப் பதிவாக்கினேன் ! இங்கும் சரி, எனக்கான வாட்சப் தகவல்களிலும் சரி, பதிவு # 1000 குறித்தான எதிர்பார்ப்புகள் கணிசமாய் உள்ளன என்ற தகவலைப் பறைசாற்ற, உங்களை disappoint செய்திடக் கூடாதே என்ற பயம் பூரணமாய்த் தொற்றிக் கொண்டது ! And வாகாக ஆயிரம்வாலா அறிவிப்புகளும் பெண்டிங்கில் இருக்க, அவற்றை நிறைவாக நிறைவேற்றிட வேண்டுமே என்ற பதற்றமும் கைகோர்த்துக் கொண்டது ! எல்லாவற்றிற்கும் மேலாக - 'இந்தப் பதிவு எம்மாம் நீளம் இருக்க வேணும் ?' என்பது குறித்த குயப்பமும் இடுப்பில் ஏறிக்கொண்டது ! என்றைக்குமே, எதையுமே நறுக்கென்று சொல்லும் நல்ல பழக்கமெல்லாம் நம்பளுக்குக் கிடையாது என்பதில் ஏது ரகசியம் ? நல்ல நாளைக்கே கே.பி.சுந்தராம்பாள் பாணியில் இழுப்பது வாடிக்கை எனும் போது, ஆயிரத்திலும் அதே பாணியைத் தொடர்வதா ? அல்லாங்காட்டி 'crisp வாசிப்பு' என்ற நமது புதுத் தாரக மந்திரத்தை, பதிவிலும் இனி அமல்படுத்துவதா ? என்ற யோசனை மிகுந்தது ! நிஜத்தைச் சொல்வதானால் "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" கதை தான் நடைமுறை கண்டது ! விசாழகெழமையே பதிவு ரெடி ; ஆனால் எழுதித் தள்ளியதில் அவசியமான ஆணி எது ? வேஸ்ட் ஆணியெது ? என்று பரிசீலிக்க எனக்கு நானே ரண்டு நாள் அவகாசம் தந்து கொள்ள விழைந்தேன் ! தவிர, எங்கயாச்சும் நம்மையும் அறியாமல் பீப்பீ smurf பாணியிலான வரிகள் நுழைந்துள்ளனவா ? எங்கேயேனும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் க்வாட்டர் குருசாமியாட்டம் உளறி வைத்திருக்கிறேனா ? எங்கயாச்சும் புது அரசியல்வாதியாட்டம் டூ மச்-த்ரீ மச்சாய் வாக்குறுதிகளை அள்ளி விட்டிருக்கேனா ? அடுத்தாண்டின் அட்டவணையோடு sync ஆகிடக்கூடிய விதமாய் புது அறிவிப்புகள் அமைகின்றனவா ? - என்று நிறையவே கேள்விகளை எனக்கு நானே கேட்டுக் கொள்ள அந்த 2 தினங்கள் பிரயோஜனப்பட்டன ! எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் பதிவுப் பக்கத்தின் மீது நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் அரூப வாஞ்சைக்கு நியாயம் செய்திட ஒரு மைல்கல் பதிவினில் தவறிடக்கூடாதே, என்ற பயமும் கணிசமாக இருந்தது ! So "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்" என்ற பலகை வாசகம், வெள்ளிக்கிழமை "நல்ல மீன்கள் விற்கப்படும்" என்றாகி, சனியன்று "மீன்கள் விற்பனையாகிடும்" என்றாகியது ! இதை ஞாயிறு காலை வரைக்கும் நீட்டித்தால், வெற்றுப் பலகை மட்டுமே மிஞ்சும் என்ற பயம் வந்துவிட, சனி இரவே 'பச்சக்'கென்று publish பட்டனை அமுக்கி வைத்தேன் ! And the rest we know ...... !!
மனநிறைவோடு...நிறைந்த அன்போடு...நிபந்தனைகளற்ற வாஞ்சையோடு....நீங்கள் இங்கு பதிவிட்ட மனதைத் தொட்ட வரிகள் ஒவ்வொன்றையும் நான் வாசிக்கத் தவறவில்லை ; and அவற்றைப் படித்த நொடியிலேயே நன்றி சொல்லிடவும், பதில்களிடவும் விரல்கள் பர பரத்தன !ஆனால் ஏற்கனவே சொல்லியிருந்தது போல,சித்தப்பா வீட்டில் திருமணம் என்பதால் சகோதரிகளும், பிள்ளைகளும் வந்திருக்க, அவர்களோடு நேரம் ஓட்டமெடுத்து விட்டது ! And ஒரு மாதிரியாய் இங்கு பதிவிடக் கொஞ்சம் அவகாசம் கிடைத்த போதோ, பின்னூட்ட எண்ணிக்கை முன்னூறை நெருங்கி இருந்தது ! எண்ண அலைகளை வரிகளாக்கும் ஏதாச்சுமொரு சூட்சமத்தை சீக்கிரத்திலேயே AI புண்ணியவான்கள் கொண்டு வந்து விட்டார்களெனில், என் வேலை ரெம்போவே சுலபமாகிப் போகும் ; ஸ்டீலுக்கு tough தரும் விதமாய் கவிஞர் முத்துவிசயனாரே களமிறங்கி விட முடியும் ! ஆனால் எண்ணங்களை எழுத்தாக்கிடும் டெக்நாலஜி வந்துப்புட்டா, அதிலொரு சிக்கலும் இல்லாது போகாது ! அவ்வப்போது தலைகாட்டக்கூடிய டப்ஸா கதைகளை நம் மீதான அன்பில்,கொஞ்சூண்டு Pril liquid மட்டும் ஊற்றி அலசிவிட்டு அனுப்பும் நண்பர்களின் ஆழ்மனசு அபிப்பிராயங்களுமே வரிகளாகிடும் பட்சத்தில் - Scotchbrite போட்டு கர்ரங்-கர்ரங்கென தேய்த்துக் கழுவி ஊற்றியது போலாகி விடக்கூடும் என்பது புரிகிறது ! So கொஞ்சம் மெனெக்கெட்டுனாலும் டைப்படிச்சிட்டுப் போயிடலாமோ ? வம்பு எதுக்கு ?
Jokes apart, இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நொடியிலும் நமக்கு தோள் கொடுத்து நின்று வருவதற்கும், இந்த ஆயிரமாவது பதிவினை அற்புதமானதொரு அனுபவமாக்கித் தந்துள்ளமைக்கும், அந்தக் குன்றா அன்பிற்கும் கரம்கூப்பிய ஓராயிரம் நன்றிகள் folks ! கம்பெனிக்கு மட்டும் வசதி இருந்தால் - "யாரங்கே..? இந்தப் பதிவில் கலந்துக்கிட்ட அம்புட்டுப் பேருக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை சன்மானமாக்கு !!" என்று கட்டளையிட்டிருப்பேன் ! ஆனால் கஜானாவில் நிதியும் நஹி ; நோட்டில் ஆயிரமும் நஹி என்பதால் - ப்ராமிஸ் செய்தது போல அந்த முதல் 25 நண்பர்களுக்கு மட்டும் ஒரு ஸ்பாஞ் கேக் அனுப்பிட கம்பெனி ரெடியாகி விட்டது ! First 25 comments போட்ட நண்பர்கள்ஸ் - சிரமம் பாராது நமது ஆபீஸ் வாட்சப் நம்பருக்கு (98423 19755) உங்களின் முகவரி ப்ளீஸ் ? அல்லது நமக்கொரு மின்னஞ்சல் ?
ரைட்டு...திருவிழா நிறைவுக்கு வந்துப்புடிச்சி ; so மேக்கப்பை கலைச்சுப்புட்டு பிழைப்பைப் பார்க்கப் போயாக வேணும் தானே guys ? உங்களிடம் பகிர விழையும் முதல் தகவல் - ELECTRIC '80s முன்பதிவில் கொப்பளிக்கும் அசாத்திய ஆர்வமே !! பஞ்சாயத்துக்கு வரும் சுனா.பானாவுக்குமே புரியும் விதமாய், மொத தபாவா இந்தச் சந்தா குறித்து தெளிவாக விளக்கி விட்டோமோ - என்னவோ,விளக்கங்கள் கோரிய calls ஜாஸ்தி இல்லாது, மட மடவென புக்கிங்ஸ் ஆரம்பித்து விட்டன ! 'இது தீபாவளி 2024 முதல் துவக்கம் காணும்' - என்ற அறிவிப்போடே களம் காண்பதும் maybe இந்த துரிதத்துக்கொரு பின்னணியாக இருந்திடக்கூடுமோ - என்னமோ ? Whatever the reason - பரபரப்பாய் பணிகளை நாங்கள் ஏற்கனவே துவக்கியாச்சு ; and கதைகளின் முக்கால்வாசியும் வந்தாச்சு ! அட்டைப்படங்கள் அமெரிக்காவில் ரெடியாகி வருகின்றன ; so லைட்ஸ்..கேமரா...ஆக்ஷன் !! என்று நவம்பர் 1 தேதிக்கு ரெடியாகிடுவார் நமது தானைத் தலைவர் ஸ்பைடர் !
And yes, மற்ற பரபரப்புகளின் மத்தியில் ரெகுலர் தடத்தின் இதழ்களை மறந்திடப்படாதில்லையா ? ஒரு குருட்டு யோகம் - இம்மாதத்துக் கூட்டணியின் சகல இதழ்களுமே தவிர்க்க இயலா காந்தங்களாய் in their own ways அமைந்துவிட்டுள்ளன ! இல்லையெனில், சூழ்ந்துள்ள அறிவிப்புகள் படலத்தின் மத்தியில், திருவிழாவில் தொலைந்து போன புள்ளைங்களைப் போல காணாதே போயிருப்பர் ! But இம்மாதத்து மூவருமே செம toughies !! XIII - நதிமூலம் க்யூபா பற்றிச் சொல்லிடவே தேவையில்லை ; தெறிக்க விடுகிறார் ஜேசன் ! டெக்சின் "சிறைப்பறவையின் நிழலில்" அவரது மறக்கமுடியா அதிர்வேட்டுப் பட்டியலில் இன்னொரு addition and மிஸ்டர் நோ "பாலையில் போராளி" மூலமாக தனது ஆளுமையினை இன்னும் ஷார்ப்பாகப் பதிவு செய்திருக்கிறார் ! So இவர்களே இன்னும் கொஞ்ச நாட்களுக்காவது ஒளிவட்டத்தில் திளைக்க வேண்டியோர் என்பதால் - உங்களது first look ரேட்டிங்ஸ் ; first வாசிப்பு ரேட்டிங்ஸ் ; வாசித்திருப்பின் அலசல்கள் - என்று ஆரம்பிக்கலாமே ப்ளீஸ் ? And of course - "தண்டர் in ஆப்ரிக்கா" பற்றிய உங்களின் எண்ணவோட்டங்களும் ப்ளீஸ் ?
Bye all ; see you around ! நான் ஒரிஜினல் தாத்தாக்களோடும், லக்கி லூக்கில் இம்முறை வந்திடவிருக்கும் ஆராய்ச்சியாளத் தாத்தாக்களோடும் லூட்டியடிக்கக் கிளம்புகிறேன் ! Have a fun week !!
P.S : வோட்டிங்கில் ஸ்பெஷல் இதழ்கள் மூன்றுக்கு மத்தியிலும் செம tug off war நடந்து வருகிறது !!! ரிசல்ட் என்னவாக இருக்குமென்று நிச்சயமாய் இந்த நொடியினில் கணிக்க இயலவில்லை ! இன்னமும் வாக்களித்திருக்காதோர் - ப்ளீஸ் இங்கே க்ளிக்குங்களேன் : https://strawpoll.com/NPgxeqP9PZ2
Hi guys😍
ReplyDelete1001 ஆவது பதிவில் first 🙏
Deleteவாழ்த்துகள் சகோ
Deleteவாழ்த்துக்கள் விக்ரம்
Deleteநடுச் சாமம் தாண்டி விழித்திருந்து 'ஐ பர்ஸ்ட்' போட்ட நண்பர் JSVPக்கு வாழ்த்துகள்! :)
DeleteThank u Ramya Sis, Kumar Sir, E. V sir🙏🙏🙏😊
Deleteடென்னிஸ் பார்த்துகிட்டு இருந்தேன் சார்...
சும்மா செக் பண்ணேன், புது பதிவு இருக்குது
எந்த comments உம் இல்லாமல்... அப்புறம் ஃப்ரீயா 3 கமெண்ட் போட்டுட்டு தூங்கிட்டேன் 😅
உண்மையிலே 1000 ஆவது பதிவு எதிர் பார்ப்பை மிஞ்சியது சார்💪 கண்டிப்பாக மிகச் சிறந்த மீன்களை விற்றுள்ளீர்கள் 🤗
ReplyDeleteஇரண்டு ஆயிரம் Special இதழ்களின் அறிவிப்புகள் அசத்தல் எனில் Electric 80's Icing on the cake 🍰
எனவே electric சந்தாவில் high voltage பாய்வதில் ஆச்சரியமில்லை👍
தீபாவளி மேலும் களை கட்டப் போகிறது கூர்மண்டையரின் அதிரடி வரவால்💥
ஒரு மில்லினியத்தை தாண்டி அடுத்த மில்லியனியத்தில் அடி எடுத்து வைத்து விட்டோம்...🏇
Once Again Thank u sir🙏🙏🙏
( ஸ்பாஞ்ச் கேக் முதன் முதலில் வாங்கப் போகிறேன் , எப்படி இருக்கும் என்ற சஸ்பென்ஸ் தாங்க வில்லை😅)
///( ஸ்பாஞ்ச் கேக் முதன் முதலில் வாங்கப் போகிறேன் , எப்படி இருக்கும் என்ற சஸ்பென்ஸ் தாங்க வில்லை😅)////
Deleteஸ்பாஞ்ச் கேக்கை பிரித்தவுடன் ஒரு பெரிய ரூமின் நடுவில் வைத்துவிட்டு - ரூமை பூட்டிவிட்டு வெளியே காத்திருக்கவும். சில மணி நேரங்களிலேயே அந்த ஸ்பாஞ்ச் கேக் நன்றாக விரிந்து ஒரு mattress சைஸுக்கு உருவெடுத்திருக்கும்!
நீங்கள் குழந்தைகளோடு அதில் சிறிதுநேரம் குதித்து மகிழ்ந்துவிட்டு, ஆக்ஸா பிளேடால் அறுத்துச் சாப்பிடலாம்!
😂😂😂😂😂
Deleteஉங்ககிட்ட இருந்து ஒரு விரிவான விளக்கம் கிடைக்கும் nu எதிர் பார்த்தேன்...
எதிர்பார்ப்பை அழகா நிறைவேற்றி உள்ளீர்கள்...
Thank u sir🙏🙏🙏😍
Present Sir !
ReplyDeleteஆஜர்
ReplyDeleteபத்துக்குள்ள ஒன்னு
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteசிறைப் பறவையின் நிழலில்,
ReplyDeleteஓப்பனிங்கே நல்லாதான் இருக்கு,வசந்த காலத்தின் இதமான ஆதிக்கம் நிறைவுக்கு வந்து கொண்டிருந்த நாளொன்றில்...
அடடா,வன்மேற்கில் வசந்தகாலம் கூட இருக்கா... டெக்ஸ் & டைகர் ஜாக்கின் அதிரடியால் சிறை செல்லும் ஸ்டான்டன் சிறைக்கு டேக்கா கொடுத்துவிட்டு பறக்க,ஸ்டான்டன் மிச் ஃபிரேஸர் என்பவனின் அபாயகரமான கூட்டத்தை சேர்ந்தவன் என கிடைக்கப் பெறும் தகவல் டெக்ஸை உந்தி தள்ள,டெக்ஸூம் & டைகர் ஜாக்கும் வழக்கம்போல் வேட்டைக்கு கிளம்ப நடக்கும் அதிரிபுதிரி சம்பவங்களும்,அதிரடி ஆட்டங்களுமாய் கதை நெடுக எங்கேயும் சுணங்காமல் ராக்கெட்டை பத்தவெச்ச ஸ்பீடில் பரபரன்னு போகுது...
டெக்ஸ் & டைகர் ஜாக் ஸ்டான்டனை பின் தொடர,டெக்ஸ் & டைகர் ஜாக்கை ஃபேரல் கூட்டணி தொடர...
ஒருபுறம் ஃபேரல் கூட்டணி,மறுபுறம் மிச் ஃப்ரேஸரின் கூட்டணி,ஒரே ஆடுபுலி ஆட்டம்தான்...
டெக்ஸின் தோற்றம் கொஞ்சம் Rugged Feel கொடுத்தது...
டைகருக்கும் ஓநாயுக்குமான ,மெளனம் கலந்த அந்தப் பார்வை பரிமாற்றக் காட்சியமைப்பு அசத்தல்...
செவ்விந்தியக் குழுவிடம் இருந்து
ஸ்டான்டனை விடுவித்து அனுப்ப டெக்ஸ் வகுக்கும் உத்தி அபாரம்...
எங்கேயும் பெரிதாய் உறுத்தாத கதைக்களம் இறுதிக் காட்சியில் மட்டும் கொஞ்சம் மனதில் ஒட்டதாதது போல் தோன்றுகிறது,பொறுந்தாத காட்சியாய் சற்றே உறுத்தியது போல் உணர்வு...
அபாரமான கதை நகர்வை கொண்டுசென்ற திரைக்கதை இறுதி முடிவை இன்னும் சிறப்பாய் வடிவமைத்திருக்கலாமோ ???!!!
டெக்ஸ் எனும் பாத்திரத்தின் வயது ம்,அனுபவத்தையும் மனதில் கொண்டு திரைக்கதையில் புத்திசாலித்தனமான உத்திகளை டெக்ஸ் எனும் நாயகனின் வழியே வாசிப்பாளனுக்கு கடத்திய விதத்தில் கதாசிரியருக்கு வாழ்த்து சொல்லியே ஆகவேண்டும்...
வாசிப்பின் தொடக்கத்திலேயே டெக்ஸ் எனும் நாயகன் வாசிப்பாளனின் எண்ணவோட்டத்தில் கலந்து விடுவதால் அந்த மாஸான பிம்பத்தை வேறு ஒரு நாயகன் கொண்டுவருவது கடினம்தான்...
எமது மதிப்பெண்கள்-9/10...
சூப்பர் விமர்சனம் அண்ணா. நானும் வாசித்து விட்டேன். சும்மா பட்டாசக பொறியும் கதை.
Deleteவாக்கு எண்ணிக்கை பிஸியிலும் படிச்சாச்சாப்பா சூப்பரு...
Delete///டெக்ஸ் எனும் பாத்திரத்தின் வயது ம்,அனுபவத்தையும் மனதில் கொண்டு திரைக்கதையில் புத்திசாலித்தனமான உத்திகளை டெக்ஸ் எனும் நாயகனின் வழியே வாசிப்பாளனுக்கு கடத்திய விதத்தில் கதாசிரியருக்கு வாழ்த்து சொல்லியே ஆகவேண்டும்... ///
Deleteஅட்டகாசமா எழுதறீங்க அறிவரசு அவர்களே!
பூனையாரின் கூர்நகம் கொண்ட பாதங்கள் தேகத்தில் மென்மெதுவாய் படிவதைப் போல பாராட்டினீர்கள்...
Deleteதண்டர் In ஆப்பிரிக்கா,
ReplyDeleteபோலோ இன மக்களைத் தேடி தண்டரின் ஆப்பிரிக்கா பயணம் நல்லாவே இருக்கு...
ஆப்பிரிக்க கானகத்தின் ஊடே தண்டரோடு நாமும் ஜாலியா பயணம் போயிட்டு வந்தாற்போல உணர்வு...
ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டும் வசனங்கள், அந்த முதலை டயலாக் இரண்டும் படக்னு சிரிப்பு வந்துடுச்சி...
ஆராய்ச்சியாளர் லிவிங்ஸ்டோனின் வரைபடம்,பாப் ராவ்லாண்ட் எனும் மானுடவியல் அறிஞரின் ஆய்வுக் குறிப்புகள்னு சுவராஸ்யமூட்டும் தகவல்கள்...
போரடிக்காத கதை நகர்வு,நல்ல வர்ணச் சேர்க்கைகள்,ஜாலியான ஆப்பிரிக்கா பயணம்,இதெல்லாம் போதாதா இந்தக் கதைக்கு...
தண்டர் அடுத்த சாகஸத்தில் நம்மை எந்த நாட்டுக்கு பயணத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறாரோ ?!
எமது மதிப்பெண்கள்-9/10...
பாலையில் ஒரு போராளி,
ReplyDeleteஒரு கதைசொல்லியின் வழியே கங்கசீய்ரோவின் ஆவி களத்தை பெரும்பான்மையாய் ஆக்ரமித்து நம் வாசிப்பை சுவராஸ்யப்படுத்துகிறது...
கேப்டன் ஜெரொனிமா ட்ராகோவின் பாத்திரத்திற்கு கர்னல் மலக்ரா "மிஸ்டர் நோ" எனும் பெயர் சூட்டும் காட்சி அடடே இரகம்...
வரலாறு கடந்தகாலத்தின் நீண்டநெடிய சுரங்கத்தில் அள்ளக் குறையாத அரிய தகவல்களை எப்போதும் தன்வசம் வைத்துள்ளது,சமகாலத்தின் வாசிப்பாளனின் பெரும் வாசிப்பு தாகத்திற்கு அவை பெரும் தாகசாந்தியாய் அமைகின்றன...
பாலையில் ஒரு போராளி "மிஸ்டர் நோ" வின் தடத்தில் முக்கியமானதொரு சாகஸம்...
எமது மதிப்பெண்கள்-8/10...
வறண்ட நிலத்தின் தன்மை தலைப்பில் எதிரொலித்தது நன்று, ஐந்திணையில் ஒரு திணையாய் "பாலை" தகிக்கிறது...
Deleteகொளுத்தும் வெப்பத்தை பார்க்கும்பொழுதும்,கான்கீரிட் கானகம் போன்ற நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்பொழுதும் நாமும் கூட பாலையில்தான் வசிக்கிறோமோ என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது...
மிஸ்டர் நோ இப்போதெல்லாம் படிக்க ரொம்பவே நன்றாக உள்ளது. இந்த 3ஆவது கதையும் கொஞ்சமும் ஏமாற்றவில்லை
Deleteசூப்பர் சார்...அனைத்துக் கதைகளின் துவக்கபக்கங்களுமே நெருப்பு பொறியாய்
ReplyDeleteஇனிய புதன் காலை வணக்கம் நண்பர்களே ✨🩷😅
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteHi..
ReplyDelete1001 பதிவுகளில் நம்மை வேறு மாய உலகிற்கு கொண்டு சென்ற, இன்னும் பத்தாயிரம் பதிவுகளை தொடப் போகும், நமது அன்பு ஆசிரியர், காமிக்ஸ் உலகின் நிரந்தர ஷெஹர்ஸாதேவிற்கு (Scheherazade) காலை வாழ்த்துகள்...
ReplyDelete♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹
Hi
ReplyDeleteஇந்த மாத புத்தகங்கள் மிக அருமை. 😍🥰
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteமுதல் பார்வையில்
ReplyDelete1. பாலையில் ஒரு போராளி.
2. நதி மூலம் கியூபா.
3. சிறைப் பறவையின் நிழலில்.
அடடே மிஸ்டர் நோ முதலிலா...
DeleteElectric-80'sக்கான சந்தாவை இன்று அனுப்பிடுவேன்!
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteMe in..😍😃
@Edi Sir..😃😍😘
ReplyDeleteஸ்பான்ஞ் கேக்- First 25 entries க்கு அட்ரஸ் அனுப்பிச்சிட்டேன் சார்..😃🙏🙏
மறக்காம அனுப்பிச்சிடுங்க..😃😃😃
உள்ளேன் ஐயா
ReplyDeleteதண்டர் இன் ஆப்பிரிக்கா - எளிமையான, கவலைகளை மறந்து ஜாலியாக ஆப்ரிக்க காட்டில் சிரித்து கொண்டே நம்மை சுற்றி வர செய்தது.
ReplyDeleteநம்மை, நமப வீட்டு சுட்டிகளை + சிறுவர் சிறுமியரை கண்டிப்பாக கவரும்.
அக்கம்பக்கத்து யெளவன யுவதிகளை?!!
Deleteஉங்கள் வீட்டு பக்கத்துல உள்ளவங்கள பற்றி நீங்கள் தான் சொல்லணும் 🤩
Delete1001 இரவுகள் ச்சே வணக்கங்கள் சார்.....🙏
ReplyDelete😂😂😂😂😂😂
Deleteஇரண்டு புத்தகங்களை படித்து விட்டேன். Mr. No, டெக்ஸ் இரண்டும். Xiii ம் படித்து விட்டு 3 விமர்சனங்களையும் ஒன்றாக பதிவிடுகிறேன்.
ReplyDeleteஸ்பாஞ் கேக் நாமளும் உண்டு, இதோ விலாசம் தந்திடறோம்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete///உங்களிடம் பகிர விழையும் முதல் தகவல் - ELECTRIC '80s முன்பதிவில் கொப்பளிக்கும் அசாத்திய ஆர்வமே !!///
ReplyDeleteஇது இது இதைத்தானே எதிர் பார்த்தோம்....👌👌👌👌👌👌👌👌👌
நியூஸ் ஆஃப் த டே சார்
பழமைனா சும்மாவா...
பழசுதான் பெஸ்ட்டு...
""மாற்றம் ஒன்றே மாறாதது "-- என்ற உண்மையும் தோற்றுப் போகும் ஒரே இடம் இந்த பழங்காமீஸ் பறவைகளிடம்...💪💪💪💪
வாழ்க ஸ்பைடர்
வெல்க ஆர்ச்சி
வளர்க மாடஸ்தி
இந்தனை வேகம் உள்ளதற்கு இனி எக்காலமும் தடை போட வேணாம் சார்..
புதுசு தேவைதான்...ஆனா இந்த கூட்டத்துகிட்ட இந்த பருப்பு வேகாதுனு தெளிவாக புரியுது...புதிய கதைகளின் ரசிகனாக என் தோல்வியை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறேன்...
இதற்கு மேலும் புதிய கதைகளுக்கு கொடி பிடிக்கும் மடத்தனத்தை செய்வது எந்தனை வேஸ்ட்னு புரியுது..
ஆண்டு சந்தாவில் அறிமுகம் ஆகபோகும் புதியவர்களை கூட கழட்டிட்டி ஏதாவது பழசு பட்டை போட்டு விடுங்க....இதான் விற்குதுனு தெரிஞ்சபின்பு புதுசு போட்டு ஏன் கோடவுனை நிரப்புவானேன்..
இந்த பதிவு ஆயிரம் ஸ்பெசல்களில் கூட புதுசு புக்கிங் ஆகலனா அங்கேயும் பழசை தாக்கிவிடுங்க....
அப்புறம் அதுவும் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா கதையாகிட போவுது..🤣
+10000000
DeleteTex was super racy sir - one sitting read !
ReplyDeleteMYOMS சந்தாவுக்கு செலுத்தி இருந்த தொகையை கனத்த மனதுடன் திரும்ப பெற்றுக்கொள்கிறேன் சார்.....
ReplyDeleteஒரு புத்தகத்திற்கு பணம் செலுத்திவர்களிடம,
/// அது வராது பணத்தை திரும்ப பெற்று கொள்ளுங்கள்..///--- என ஆப்சன் தரும் போது தாங்கள் எத்தனை சங்கடப்பட்டு இருப்பீர்கள் என உணர முடிகிறது சார்🙏
தானை தலைவரது "பாட்டில் பூதம்"-
புத்தகம் வெளிவரும் போது அதை மட்டுமே தனியாக வாங்கிக் கொள்கிறேன் சார்
(குற்ற பூதம்"-னு முதலில் விளம்பர படுத்தப்பட்டு இருந்த தலைப்பே கவர்ச்சியானது, வாய்ப்பு இருந்தால் கதை ஆரம்பிக்கும் பக்கத்தில் அந்த பெயரையே வைக்க வேண்டுகிறேன் சார்🙏)....
"கடத்தல் குமிழி"-யையும் இதேபோல மெகா சைசில் என்றாவது போட்டுபுட்டீங்கனா ஜென்மம் சாபல்யம் ஆகிடும்💓💓💓💓
இது ரெண்டும்தான் மை டாப் ஃபேவரைட்ஸ்😍
நதிமூலம் க்யூபா,
ReplyDeleteஹேக்கர் டாடினை மீட்கும் க்யூபா படலம்,க்யூபாவில் நம்ம ஜேசனின் அதிரடி சும்மா பறபற...
ஜேஸனின் ஸ்னைப்பர் ஸாட் ஒரு ஜித்தனின் வேலை என கணிக்கும் ஸ்பார்க்கின் வார்த்தைகள் நல்லா இருந்துச்சி...
எங்கே கதைப் பாட்டுக்கு நேர்கோட்டில் போகுதேன்னு யோசித்துக் கொண்டிருந்தபோது பின்பாதியில் நிறைய கேரக்டர்கள் அதிரடி விசிட் தந்து பரபரப்பான களமாக்கி விட்டனர்...
நதிமூலம் க்யூபாவை வாசித்தவுடன் தொடக்க சாகஸத்தை தொட்டு நீண்ட இடைவெளி ஆனதால் எனது நினைவு கூறும் படலம் சற்றே தடுமாறியது,நினைவுப் பேழையில் சிறு சுணக்கம் போல, XIII இன் தொடக்கத்திலிருந்து மறுக்கா பயணம் பண்ணனும்னு தோணிச்சி...
சமயம் வாய்க்கும்போது தொடங்கணும்...
எல்லாத்தையும் வரிசைப்படுத்தி எடுக்கனும்னு நினைக்கும்போது கொஞ்சம் தலைசுற்றத்தான் செய்யுது...
ஜேஸனின் க்யூபா படலம் ஜெட் வேகம்,அடுத்து மாஸ்கோ படலத்துக்காக வெயிட்டிங்...
உறுத்தாத வர்ணச் சேர்க்கைகளும்,தெளிவான ஓவியங்களும் நச்...
எமது மதிப்பெண்கள்-9/10...
நச்!!👌👌
Deleteஅருமையான விமர்சனம் சார்👏👏👏👏👏
Deleteநன்றி...
DeleteKing speciala?
ReplyDelete
ReplyDeleteMP எடிட்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ( M= Mille ரோமன் லெட்டரில் ஆயிரம். P=Post ). ஆயிரம் பதிவு எழுதியவர் காமிக்ஸ் ஜனநாயக உலகில் எம்பி தானே 😄.
பாட்டில் பூதம் என்றவுடன் இரக்க சிந்தனை உள்ள ஈரோடு இளவரசர் அல்லதுமேச்சேரிக்காரர் இவர்களுடைய சங்கீத விழா பற்றிய புத்தகம் என நினைத்தேன். 😄.
வீட்டுக்கார அம்மாவை டொமஸ்டிக் ஃபிளைட்டிலாவது கூட்டிப்போகும்போது விண்வெளி பிசாசு டைட்டில் உபயோகப்படும் என்று நினைக்கிறேன் 😄
குயின் ஸ்பெஷல் வெளியிடுவதற்கு நன்றி. கிங் ஸ்பெஷல்னு சொல்லும்போது மாடஸ்டி டைஜஸ்டை குயின் ஸ்பெஷல்னு சொல்லக்கூடாதா என்ன? 😄
கல்யாணம் ஆகிவிட்டாலும் சாந்தி முகூர்த்தம் நாலு நாள் கழிச்சி தான் அப்படிங்கற மாதிரி ஜூன் மாத புஸ்தகங்கள் வந்து ரெண்டு நாள் ஆகிவிட்டன. இன்னைக்கு தான் படிக்கணும் 😄
செனா அனா.. ROFL🤣🤣🤣🤣🤣🤣🤣
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஜூன் மாத இதழ்கள் ரேங்கிங் (படித்த முடித்த பின்)
ReplyDeleteஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. மூன்று புத்துக்கும் ஒரே ரேங்க் சார்.
நதிமூலம் கியூபா
ReplyDeleteஒரு சில பக்கங்களை கடக்க வெகு நேரம் எடுத்துக் கொண்டேன், ஒரு சிட்டிங்கில் ஓரிரு பக்கங்களே படிக்க முடிந்தது. என்னடா கதை ரொம்ப ராவா போகுதுன்னு நினைச்சுகிட்டு புத்தகத்தை ஓரம் வச்சிடலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கும் பொழுதே மிஸ்டர் ஷேன் கதையில் நுழைய, சோர்ந்திருந்த மனது சிலிர்ப்புடன் எழுந்து உட்கார்ந்தது.
ஆஹா KNOT நல்லா இருக்கே என்று அடுத்த பக்கத்தில் செகண்ட் கியர் போட்டு நுழைந்தால் அடுத்தடுத்த பக்கங்கள் ஒவ்வொரு கியராக முன்னேற, கொஞ்ச நேரத்தில் கதை டாப் கியரில் பயணிக்க அட அட அட... அஞ்சாவது கியரில் இருந்து கதை இறங்கவேயில்லை. முடிவு பக்கம் வந்த பொழுதும் மனம் ஐந்தாவது கியரில் அந்த விமானத்துடன் பறந்து கொண்டிருக்கிறது.
எண்ணற்ற தகவல்கள், டாப் லெவல் சாதனங்கள், ஒரு நவீன ஜேம்ஸ் பாண்ட் படம் பார்த்த திருப்தி. ஓவியங்கள் வழக்கம் போல செம, எடிட்டரின் மொழிபெயர்ப்பு SIGNATURE EFFECT உடன், ஆஹா ஆஹா. ஆனாலும் முடிவு தெரியாத கதைகள் கொஞ்சம் கடுப்பாகவே இருக்கிறது. (பாலையில் ஒரு போராளி கதையில் வரும் வில்லனின் டயலாக் எழுதினா ஓவரா இருக்குமோ)
மூளையில் சிப், அதை இயக்க கண்ணாடி மற்றும் அந்த Shallow Water Combat Submersible குறித்து அருமையான தகவல்கள். ஆச்சரியமூட்டும் ஆழ்கடல் கண்ணி வெடிகளை FINDING NEMO படத்தில் பார்த்து விட்டதால் ஆச்சரியம் ஊட்டவில்லை. அந்த பாராசிட்டமால் அலர்ஜி ரியாக்ஷனை நேரடியாக ஒரு பேஷண்டிடம் பார்த்த அனுபவம் இருப்பதால் அதுவும் எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் தெரியாத நபர்களுக்கு ஆச்சரியமூட்டும் ட்விஸ்ட் அண்ட் TURNS என்பேன்.
நதிமூலம் கியூபா, சோடை போகவில்லை.
கதை 10/10
ஓவியம் 10/10
ஆக்கம் 10/10
Super review sir👌👌👌
DeleteThanks brother
Deleteஅறிவரசு ரவி சார் விமர்சனம். அடடே. ரகம் .இப்படி உடனுக்குடன் புத்தகங்களை படித்து உடனுக்குடன் விமர்சனங்கள் பதியுங்கள் ரவி சார்
ReplyDeleteடன் சார்...
Deleteஅனைவருக்கும் வணக்கம்..
ReplyDelete1000 பதிவு இதழ் Title Choices:
ReplyDelete1) தி MASTER ஸ்பெஷல்
(The Majestic Achievement Sharing-by The Editor & Readers Special)
2) தி HOPE ஸ்பெஷல்
(The Honouring Occasion of the Passionate Editor Special)
3) தி BEST ஸ்பெஷல்
(The Blog's Epic Success Time Special)
4) தி CHIEF ஸ்பெஷல்
(The Comics Honour Involving Editor & Fans Special)
///தி MASTER ஸ்பெஷல்
Delete(The Majestic Achievement Sharing-by The Editor & Readers Special)
///
எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கறீங்க!! சூப்பர்!!
'The MASTER spl' என்ற டைட்டில் டெக்ஸ் கதைக்கு வந்தால் பொருத்தமாக இருந்திடும்; பொதுவான ஒரு ஈர்ப்பையும் கொண்டிருக்கும்!
😄 கண்டிப்பா E.V ஸார்... தல டெக்ஸ் க்கு கச்சிதமா இருக்கும்...
Deleteஇங்க இந்த Title ஐ நம்ம எடிட்டர் சாருக்கு பொருத்தமா இருக்குமேnu யோசிச்சேன்🤗
Thanx சார்🙏🤝
The கனவுகள் ஆயிரம் ஸ்பெஷல் !
Deleteஇது எப்பிடி இருக்குது கனம் ஜூரிக்களே ?
///The கனவுகள் ஆயிரம் ஸ்பெஷல் !
Deleteஇது எப்பிடி இருக்குது கனம் ஜூரிக்களே ?///
அழகாக, அருமையாக உள்ளது ஸார் 👌👌👌
But அந்த ஜூரியே நீங்க தானே ஸார் 🤗😅
அருமையான title சார். Two thumbs up
Deleteநாம் அனைத்து ஸ்பெஷல் இதழ்களின் தலைப்புகளையுமே ஆங்கிலத்தில் தான் வைக்கிறோம். எனவே இதற்கும் அப்படியே வைக்கலாம் சார்.
DeleteTHE DREAMING THOUSAND SPECIAL.
Delete//The கனவுகள் ஆயிரம் ஸ்பெஷல் !//
பல புஸ்தகங்கள்தான் பழசுனா தலைப்பும் பழசா? ஏற்கனவே தான் மெகா ட்ரீம் ஸ்பெஷல்னு வந்திருக்கே சார். லயன்தாரா ஸ்பெஷல் மாதிரி வையுங்களேன் சார். அட்லீஸ்ட் முத்துப்பேச்சி ஸ்பெஷல்னாவது வைங்க 😄
///லயன்தாரா ஸ்பெஷல்///
Delete😂😂😂 நல்ல கற்பனை சார்...
///லயன்தாரா ஸ்பெஷல் மாதிரி வையுங்களேன் சார். அட்லீஸ்ட் முத்துப்பேச்சி ஸ்பெஷல்னாவது வைங்க///
Delete🤣🤣🤣🤣
'ருக்கு ஸ்பெஷல்'னு ஓகே தான்!!😝😝
யார் அந்த ருக்கு சார்🧐
Deleteஉங்க ப்ரெண்ட் ah?😅
அட வந்திரும் போல
Deleteசரி..உங்களுக்கும் வாணாம் ; எனக்கும் வாணாம் :
DeleteThe ஆயிரம் ஸ்பெஷல் !
அட, அதுவும் வாணாமா -
The ஸ்பெஷல் !
ஸ்பெஷல் ?
///ஸ்பெஷல் ?///
Deleteவாய்ப்பில்லை சார்...
The முக்கியம் ஆச்சே😅
///யார் அந்த ருக்கு சார்🧐
Deleteஉங்க ப்ரெண்ட் ah?///
நான் அஞ்சாப்பு படிக்கேல அது என்னோட க்ரஷ்!! இங்கே தளத்தில் நிறையப் பேருக்கு அந்தக் கதை தெரியும். என்னிக்காச்சும் நேரில் சந்திக்கும்போது கட்டன் சாயா + ரவுண்டு பன் சாப்பிட்டுக்கிட்டே அந்தக் கதையச் சொல்றேன் நண்பரே.. ஹிஹி!! :)
//But அந்த ஜூரியே நீங்க தானே ஸார் 🤗😅//@JSVP @TEX TIGER
Deleteஇல்லை. எடிட்டர் சார் குறிப்பிடும் ஜூரி சிஸ்டம் கிரேட் பிரிட்டன் பேரரசாக இருந்த போது உருவாக்கப்பட்டது. இதில் ஜூரி என்பவர் பொதுமக்களில் ஒருவர்.
நல்ல தமிழில் நடுவர் குழு அல்லது அறம் கூறாயம். கிரேட் பிரிட்டன் ஆளுகையின் கீழ் இருந்த பெரும்பாலான நாடுகளில் இந்த முறை அமுலில் இருக்கிறது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகியவையும் அடங்கும். இந்தியாவிலும் ஜூரி சிஸ்டம் நடைமுறையில் இருந்தது. எதிர்ப்புகள் கிளம்பியதால் 1973இல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு இந்திய குற்றவியல் சட்டம் ஐ பி சி நடைமுறைக்கு வந்தது.
இந்த நடுவர் குழுவில் பொதுவாக 12 பேர் இருப்பார்கள். இவர்கள் ஒட்டுமொத்தமாக அல்லது பெரும்பான்மையாக சேர்ந்து எடுக்க முடிவு ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாலும் நீதிமன்றதாலும் ஏற்கப்படும். ஜூரியின் முடிவை ஒரு நீதிபதி
புறந்தள்ளுவது இயலாத காரியம்.
மிக அபூர்வமாகவே அது நிகழ்ந்திருக்கிறது.
கிரிமினல் வழக்குகளில் ட்ரையல் ஜூரி, சிவில் வழக்குகளில் சிவில் ஜூரி, அரசாங்க கொள்கை வடிவமைப்பு, சட்ட திருத்தம் போன்றவற்றில் பாலிசி ஜூரி என பல வகை உண்டு. வாதி பிரதிவாதிகளின் வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன் வைக்கும் போது அவற்றை நெறிப்படுத்துவது நீதிபதியே. இவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஜூரி தங்களுக்குள் கலந்து பேசி எடுக்க்கும் முடிவு verdict என அழைக்கப்படும். அதையே நீதிபதி சொன்னால் அது தீர்ப்பு.
தலைப்பு விஷயத்தில் வாசகர்களாகிய நாம் ஜூரி.
எடிட்டர் சார் நீதிபதி. அவர் ஜூரி அல்ல. அபூர்வமான சந்தர்ப்பங்களில் எடிட்டர் சார் தலைப்பு சம்பந்தமான போட்டிகளில் அவருக்கு எதுவுமே திருப்தி அளிக்கவில்லை என்றால் அவராகவே ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து இருப்பதை காண முடியும். Yes. A judge can overturn jury's verdict. Usually it's on rare occasion.
Amazing Analysis sir💥👌
DeleteIt must have taken a deep research...🧐
Thank u for yr easily understandable yet great writing🙏🙏🙏🤝🤝🤝
///என்னிக்காச்சும் நேரில் சந்திக்கும்போது கட்டன் சாயா + ரவுண்டு பன் சாப்பிட்டுக்கிட்டே அந்தக் கதையச் சொல்றேன் நண்பரே.. ///
DeleteSure E.V sir🤝🤝🤝
வெகு விரைவில் உங்க "அழகி" படக் கதையை ரவுண்ட் பன் சாப்பிட்டு கிட்டே கேட்க ஆர்வமா இருக்கேன்🥰😂
அனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteஇது ஆயிரத்தி ஒன்றாவது பதிவு.
ReplyDeleteAmount transferred for electric 80s today.
ReplyDeleteMYOMS சந்தாவை அப்படியே எலக்ட்ரிக் 80இதுக்கு மாற்றிக்கொள்ள இருக்கிறேன். விஜயன் சார் இன்று ஆயிரம் ரூபாய் செலுத்தி அப்படி மாற்றிக் கொள்ள முடியுமா. அல்லது ஜூலை வரை காத்திருக்க வேண்டுமா என்பதை விளக்குங்கள். த குயின் ஸ்பெஷல் வருவதால் இளவரசி டைஜிஸ்டை தான் கூறுகிறேன் அந்த சந்தாவுக்கு மாற விரும்புகிறேன்
ReplyDeleteAnytime sir...
Deleteஅடுத்த வாரம் அமெரிக்கா செல்வதற்கான பயண ஏற்பாடுகளில் மும்முரமாக இருப்பதால் இந்த மாத இதழ்கள் இன்னும் படிக்கவில்லை.
ReplyDelete""ஆயிரம் பதிவுகள் மலர்""
ReplyDeleteதீபாவளிமலர், ஆண்டுமலர் மாதிரி...(யாரும் அடிக்க வராதீங்கப்பா, நமக்கு கற்பனை வராது)🤓
😂😂😂
Deleteசார், நல்லாதான் இருக்கு...😍
கற்பனை மலர் வரும்ல
DeleteTop thousand special
ReplyDeleteRunning thousand special
ReplyDeleteThe Lion - (யை) Eye follow's Special
ReplyDeleteவிளக்கம். : அதாவது ஒரு லயனோட கண்களை - பல்லாயிரம் கண்கள். - தொடர்ந்த
ஸ்பெஷல்..
இந்த கோணத்தில் யாராவது பெயர் வைய்ங்களேன்..
Deleteஎடிட்டர் சாரோட மன உறுதி சிந்தனை செயல்வேகம் இதெல்லாம் சிங்கத்தோடதா இருக்கலாம். ஆனா விழிகள் வேறொரு பறவை இனத்துக்கு சொந்தமானது.. நீங்க சொல்ல வந்ததை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் " The acolytes' s gaze avidly follow the Owl's. தமிழ்ல சொல்லணும்னா ஆந்தை விழிகளை தொடரும் ஆயிரக்கணக்கான விழிகள் ( மெட்ராஸ் ஐ இல்லாதப்ப மட்டும் )
😄.
சார்.. கம்பெனி ரகசியத்தை
Deleteவெளியே சொல்லப்..படாது... ii
தமிழ்ல ..
அந்த சிங்கத்தை - ஆயிரம் விழிகள் தட்டாமாலை சுற்றும் சிறப்பிதழ்..
ப்ளீஸ் - இதை மொழிபெயர்க்கவும்..
பேசாம 'ஆந்தைப் பார்வைகள் 1000 ஸ்பெஷல்'னு வச்சிடலாம் போலிருக்கே!! :)
Deleteஇரத்தபடலம் - (நதி மூலம் க்யூபா)
ReplyDeleteMaxi - சைஸில் - ரசிக்க வேண்டிய
இதழ் சார்.. என்ன அட்டகாசமான ஓவியம் + கலரிங்..
கதையைப் படிக்காமல் அத்தனை பக்கத்தையும் புரட்டிப் பார்த்து ரசித்து விட்டேன்..
கதை படிக்கும் போது சுவராஸ்யமாய் இருக்கு மா?
அதான் தெரியுமே - என்பது போல் இருக்குமா - ? ii.
எண்ண அலைகளை வரிகளாக்கும் ஏதேனும் ஒரு
ReplyDeleteசூட்சுமம் . . .ஆஹா . .லயன் ல
எப்ப ஹாட்லைன் ஆரம்பிச்சீங்களோ . .அன்னைக்கிருந்து புத்தகம்
வாங்கியவுடன் நான் முதலில்
படிப்பது உங்கள் எழுத்தைத்
தான் Sir. . .அப்புறம் தான்
கதை.ஓவியம் எல்லாம் . . . .
93rd
ReplyDelete
ReplyDeleteமழைக்கு மறுநாள்.... எனக்கு என்னவோ வானவில் தான். தண்டர் இன் ஆப்பிரிக்கா இப்போதுதான் படித்து முடித்தேன்.
வானவில்லேதான். புதிய கதைக்களம் என்பதால் புத்துணர்ச்சியோடு படிக்க முடிந்தது.
தமிழில் நிலம் சார்ந்த திணைகள் ஐந்து வகை உண்டு. இந்த வருட துவக்கத்தில் திபெத்தில் டின்டின் மலையும் மலை சார்ந்த இடமும் என குறிஞ்சித் திணையாக வந்தது.
பின்னர் கடலும் கடல் சார்ந்த இடமும் என நெய்தல் திணையாக டேங்கோவின் தவணையில் துரோகம் வந்தது.
பாலையும் பாலை சார்ந்த இடமும் என பாலை திணையாக பவுன்சரின் சாபம் சுமந்த தங்கம் வந்தது.
இப்போது காடும் காடு சார்ந்த இடமும் என முல்லை திணையாக தண்டர் இன் ஆப்பிரிக்கா வந்திருக்கிறது.
வயலும் வயல் சார்ந்த இடமும் ஆன மருதம் திணையை நம்ம ஊரு பூவாயி போன்ற பழைய ராமராஜன் படங்களில் நாம் பார்த்துக் கொள்ளலாம். ( எங்க ஊரிலும் பூவாயிக்கள் இருக்கிறார்கள். ஆனால் நம்ம ஊரு பூவாயி கௌதமி மாதிரி இல்லை. அரக்கு வைத்த பம்படம் காதிலிருந்து தோள் வரை தொங்கும் பூவாயி கிழவிகள் தான் 😄).
தண்டர் இன் ஆப்ரிக்கா வாசிக்க அருமையாக இருக்கிறது. சாகச பயணமும் கதை நெடுக இழை யோடும் நகைச்சுவையும் சிறப்பு.
இத்தொடரின் அடுத்த கதை பற்றிய விளம்பரம் மகிழ்வை தருகிறது.
9.2/10
///எங்க ஊரிலும் பூவாயிக்கள் இருக்கிறார்கள். ஆனால் நம்ம ஊரு பூவாயி கௌதமி மாதிரி இல்லை. அரக்கு வைத்த பம்படம் காதிலிருந்து தோள் வரை தொங்கும் பூவாயி கிழவிகள் தான்///
Deleteஇன்னுமா அவங்களையெல்லாம் உசிரோட விட்டுவச்சிருக்கீங்க செனா அனா?!!😝😝
😂😂
Deleteஆயிரமாவது ஸ்பெஷல் இதழின் பெயர் சூட்டும் படலம் முடிவு எப்போது சார்.
ReplyDeleteஒரு மைல்ஸ்டோன் மலருக்கு பெயர் சூட்டுவது - ஜெயகடாவின் மகனுக்கு பெயர் சூட்டுவதைப்போல அத்தனை சுலபமல்லவே, PfB?!! 😝
Delete1. THE GRAND MILLENIUM SPECIAL
ReplyDelete2. THE MILLENIUM BLOGBUSTER SPECIAL
3. THE MEGA MILLENIUM SPECIAL
4 THE MAJESTIC MILLENIUM SPECIAL
5. THE MAGNIFICENT MILLENIUM SPECIAL
6. THE MONUMENTAL BLOGBUSTER SPECIAL
7. THE 1000TH BLOGBUSTER CELEBRATORY SPECIAL
8. THE GRANDOISE CELEBRATORY SPECIAL
9. THE 1K BLOGBUSTER SPECIAL
10. THE TEN HUNDREDS DREAM SPECIAL
11 THE TEN HUNDREDTH BLOGBUSTER SPECIAL
12 THE TEN HUNDREDTH CELEBRATORY SPECIAL
13 THE TEN HUNDREDTH BLOGBUSTER CELEBRATORY SPECIAL
14 THE 1K BLOGBUSTER CELEBRATORY SPECIAL
15 THE 1KB(BLOG) CELEBRATORY SPECIAL
👌👌👌👏👏 super ttitles sir...
DeleteThe 1000 f'lovers special
ReplyDeleteThe 1000 f'lowes spl(TTFS)
ReplyDeleteஆயிரத்தில் ஒருவன் விஜயன் ஸ்பெசல்
ReplyDeleteOnly 1000 spl
ReplyDeleteகளம் கண்டான் 1000 பரணி கொண்டான் ஸ்பெ
ReplyDelete1000 பரணி கொண்டான். ஸ்பெ
👌👌👌
Deleteபரணி சார் happy ஆகி இருப்பாரு சார்🤗
The More 1000 spl
ReplyDeleteThe Thousands Memories Special...
Delete-நாங்களும் வெப்போமில்ல...
1000 க்கோர் மலர்
ReplyDeleteஒரு நிமிஷம் 1000 சாகோர் மலர் nu நினைச்சிட்டேன் சார் 😅
Deleteவலையிலோர் ஆயிரம் லயன் மலர்
ReplyDelete👌👌👌
Deleteஆயிரமாவது பதிவில் 8வதாக கமெண்ட் பண்ணியதற்கான ஸ்பான்ஜ் கேக் வந்து கிடைத்ததுங் சார்...😋😋😋😋😋
ReplyDeleteமிகவும் சுவையாக உள்ளது தங்களின் அன்பு கலந்து இருப்பதால்....
தித்திக்கும் நாக்குடன் ஆயிரம் நன்றிகள்🙏🙏🙏🙏
குறிப்பு:- 10வருடமாக பார்சலில் புத்தகங்களை மட்டுமே பார்த்து வந்த என் அஸிஸ்டென்ட் தம்பி, சமீபத்திய "பன்" படலம், கேக்னு பார்த்து வியப்பாகிட்டான்..
Deleteஅண்ணா புக் கம்பெனிக்குதான் பணம் கட்டினீங்களா? னு சந்தேகமாகப் பார்க்கிறான்...🤣🤣🤣
இதுக்கும் ஒரு சந்தா போட்ரலாமோ ? நிச்சயம் அடியும் பிடியுமா ஓடும் !!
Deleteபொட்டிய தொறக்கவே தடுமாறும் கார்த்திக் , ரபீக் கூட இந்த டப்பிக்களை திறந்தே தீருவாங்க !!
///பொட்டிய தொறக்கவே தடுமாறும் கார்த்திக் , ரபீக் ///
Deleteஉச் உச்!! இருந்தாலும் அவங்களுக்கு திடீர்னு இவ்வளவு வயசாகியிருக்கக் கூடாதுங்க சார்!
ஈரோட்டு பக்கமா ரெண்டு டஜன் சந்தாக்கள் ஒரே அட்ரஸில் confirmed
Deleteசார்.. சந்தா தொகை எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா இப்பவே பணம் அனுப்பிடறேன்!
Deleteஆசிரியர் சார் @ இந்த பன், ஸ்பாஞ் கேக், மக்ரோன் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் சந்தா தான் ரெகார்டு பிரேக் பண்ணும்...😋😋😋😋
Deleteஇதையும் ஒரு தடவை போட்டுதான் பார்ப்போமே!
என்னா நாம வீட்டுக்கு போவதற்குள் வீட்டாரே லபக்கிடுவாங்க.... இனிமே இந்த சந்தாவை எங்க சிறுவாட்டு காசுலயே கட்டிடறோம்னுடுவாங்க..
அப்படியே நம்ம ரெகுலர் சந்தாவுக்கும் அந்த கடுகு டப்பாவுலயே கை விட்டுடலாம்..ஒரே கல்லில் பல மாங்காய் 🤣
STV Sir, super idea👌👌👌
Deleteசார் எனக்கு வரலயே
Deleteசூப்பர் ஐடியா, தனியா போட்டால் கட்டிடலாம்
Delete@ஸ்டீல்
அட்ரஸ் அனுப்புனீங்களா எனது கமெண்ட் அப்புறம் கமெண்ட் போட்டு இருந்தீங்களே
அடடா இல்லை கடல்....அதான் வரலயா...
Deleteநேற்று Electric-80's சந்தாவுக்கான தொகையையும், இன்று V-காமிக்ஸுக்கான சந்தாவையும் செலுத்திவிட்டேன் என்பதை பிரேசிலில் இருந்தும் இத்தாலியிலிருந்தும் இத்தளத்தை எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் 'தல' டெக்ஸ் ரசிகர்களிடம் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!😇😇
ReplyDeleteடெக்ஸ் அண்ட் co க்கும் இந்நேரம் நியூஸ் போய் இருக்கும் சார்😅
Deleteஹஹஹஹ
Deleteஸ்பாஞ் கேக் பார்சல் கிடைத்து விட்டது...🤩
ReplyDeleteகேக் டேஸ்ட் சூப்பர்...👌👌👌
சரியான டேஸ்ட்டு...
Deleteமுதலில் டீ கேக்னு நினைச்சா சுவை அசரடித்திட்டது...
சிவகாசி லயன் ஆபீஸ் போக கூடுதலாக ஒரு காரணமும் இணைஞ்சிட்டது...
அப்படியே அந்த கோரனேசன் பேக்கரிக்கும் ஒரு விசிட் அடிக்கணும்....😋😋😋
😂😂😂
Deleteகண்டிப்பா சார்...🤝
Normal plain cake ஐ விட நல்ல டேஸ்ட்😋
வவுத்த வலிக்க போவுது...பாத்து
Delete'ஸ்பாஞ்ச் கேக்' சாப்பிட்டவர்கள் நீர்நிலைகளின் பக்கமாகச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது! இயல்பிலேயே 'ஸ்பாஞ்ச்' தண்ணீரை அதிவேகமாக உறிஞ்சும் ஆற்றலுடையது என்பதாலேயே இந்த எச்சரிக்கை!
Delete//சிவகாசி லயன் ஆபீஸ் போக கூடுதலாக ஒரு காரணமும் இணைஞ்சிட்டது...
Deleteஅப்படியே அந்த கோரனேசன் பேக்கரிக்கும் ஒரு விசிட் அடிக்கணும்....😋😋😋//
+9
@Erode Vijay சகோ 😂😂😂😂
Delete///வவுத்த வலிக்க போவுது...பாத்து///
Delete😂😂😂😂😂
///!!வவுத்த வலிக்க போவுது...பாத்து///---
Deleteயோவ் க்ளா கண்ணு வெக்காதய்யா...பச்சை புள்ளைங்க மேல...😜☺
😂😂😂
Delete😂🤣😂
Deleteஸ்பாஞ்ச் கேக் இனிதே டீ வேளையில் வந்து சேர்ந்தது
ReplyDeleteநன்றிகள் ஆசிரியரே
சுவையோ சுவை
என் குடும்பத்தினர் மிகவும் சுவைத்தனர்
அப்படியே Coronation Bakery சிவையான கேக்கிற்கு நன்றிகள்
தண்டர் இன் ஆப்ரிக்கா :-
ReplyDeleteஆப்பிரிக்க கானகத்தின் உட்பகுதியில் வாழ்ந்த ஒரு பழங்குடி இனத்தவரின் கிராமத்தை.. சந்தர்ப்ப வசத்தால் ஹீரோ குழு ( ஹீரோ க்ரே தண்டர் , அவருடைய நண்பர் பில் மற்றும் ஸ்பைடரை போலவே இருக்கும் அட்டில்லா என்கிற சிம்பன்சி) தேடிப்போகிறது..!
அந்த இனத்தவரை பற்றிய தகவலை கொண்டுவந்த எழுத்தாளரை கடத்தியதாக நம்பப்படும் ஒரு கும்பல் மற்றும் பழங்குடியினரின் பொக்கிசங்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு ஹீரோ க்ரே தண்டரை தொடரும் (மாடஸ்டி ப்ளைசியை விட அழகாக இருக்கும்) வில்லியின் கும்பல் ஒன்று என மொத்தம் மூன்று கோஷ்டி ஆப்பிரிக்காவை நோக்கி கிளம்புகின்றன..!
இவர்களின் நோக்கம் நிறைவேறியதா என்பதே கதை.!
கதையின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் கலரிங்தான்..! குறிப்பாக இளம்பச்சை.. குளிர்நீலம்.. வெளிர் மஞ்சள் இந்த மூன்று கலர்களும் கதை முழுக்க கண்களை எடுக்கவிடாமல் செய்கின்றன..!
வசனங்களை விட வசனமே பேசாத அட்டில்லா செய்யும் ரகளைகள் கதையை நகர்த்த உதவுகின்றன.! பட்லராய்.. போர்ட்டராய்.. கைடாய் கதை முழுக்க அட்டில்லாவின் ராஜ்ஜியம்தான்..! ஒருவேளை ரின்டின்கேன் மாதிரி அட்டில்லாவுக்கும் மைண்ட் வாய்ஸ் போட்டிருந்தால் சுகப்படுமா என்று சொல்லத்தெரியவில்லை..!
க்ரே தண்டரின் அனைத்து கதைகளிலும் அட்டில்லா இடம்பெறுமென்றால் தொடருக்கு நல்லது..!
சிரிக்க சந்தர்ப்பங்கள் சொற்பமே.. வசனங்களை விட சித்திரங்களே அதிகம் ரசிக்கவைத்தன.. குறிப்பாக அட்டில்லா..!
க்ரே தண்டரின் அடுத்த சாகசமும் வரட்டும்..!
Super Review Sir 👌👌👌
Deleteபாலையில் ஒரு போராளி
ReplyDeleteமிஸ்டர் நோவின் முதலிரண்டு கதைகளும் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தன..!
இதுவும் பிடிக்குமென ஆரம்பமே சொல்லுது.. படிச்சிட்டு வாரேன்.!
*சிறைப்பறவையின் நிழலில்*
ReplyDeleteடெக்ஸ் இதழ் என்றாலே ஒரு கொண்டாட்டம் எனில் இப்படி ஒரு பருமனாக வரும் பொழுது அதில் இன்னும் ஓர் சந்தோசம் கூடி விடுகிறது...இந்த முறை பைண்டிங்கில் அட்டைக்குள் பின் அடித்து வந்துள்ளதே தெரியாத அளவில் தரமாக இதழ் வந்துள்ளது என்பதோடு இது போல் வந்தால் சில இதழ்கள் சில வருடங்கள் கழித்து குண்டு இதழ்களில் தாள்கள் தனித்தனியாக வருவது தவிர்க்கப்படும் என்பதால் இதனை வரவேற்கிறேன் சார்..உணவருந்த விடுதிக்கு வருகை தரும் டெக்ஸ்..டைகர் இருவரும் வழக்கம் போல் அங்கே இருக்கும் தீயவர்களை ஒழித்து தள்ளுவதுடன் ஒருவனை சிறையிலும் அடைக்க அதன் பின் வரும் சாகஸங்கள் இருநூறு பக்கங்களை தாண்டியும் நம்மை ஒரே மூச்சில் வாசிக்க வைத்து விடுகிறது வழக்கம் போலவே...வாசித்து முடித்தவுடன் இதே போல் அடுத்த டெக்ஸ் சாகஸம் எப்பொழுது என மனம் நினைக்க வைப்பதில் தான் டெக்ஸ் என்றுமே சூப்பர்ஸ்டார் என நிரூபித்து விடுகிறார்..
*பாலையில் ஒரு போராளி*
ReplyDeleteமிஸ்டர் நோ வின் அட்டகாசமான அட்டைப்படம் மிக அழகு....கதையும் அதே அழகு...முன் வந்த இரண்டு சாகஸங்களை விட இந்த சாகஸம் நன்கு என்னை கவர்ந்து விட்டது உண்மை..கதையில் சித்திரங்களும் கதைக்குள் கதை என வரும் பொழுது அதில் வரும் சித்திரங்கள் மிக அழகாக அமைந்து உள்ளது...மிஸ்டர் நோ வி காமிக்ஸ் ன் வி ( வெற்றி) நாயகர் என மீண்டும் நிரூபித்து விட்டார்..
*தண்டர் இன் ஆப்பிரிக்கா*
ReplyDeleteஅட்டைப்படமும்..உட்பக்க சித்திரங்களும் இது ஓர் காமெடி நாயகர் சாகஸம் என நினைக்க வைத்தாலும் கதை என்னவோ சீரியஸ் ரகமே...ஆனாலும் சில இடங்களில் மெல்லிய நகைச்சுவையோடு கதை நகர்வது சிறப்பு..இந்த காமெடி பாணி ஓவியங்களும்.. சீரியஸ் ரக கதையும் நம்மை ரசிக்கவே வைக்கின்றன...இந்த புது நாயகர் கண்டிப்பாக வாசிப்பவர்களை கவர்ந்து விடுவார் என்பது உறுதி ...என்னை கவர்ந்து விட்டார்...ஆண்டு இறுதியில் இந்த நாயகர் க்ரே தண்டர் அவர்களுக்கு அடுத்த ஆண்டு சான்ஸ் கொடுக்கலாமா என ஆசிரியர் வினவினால் நான் இப்பொழுதே துண்டை போட்டு விடுகிறேன் எஸ் ஸார்....என...:-)
'தண்டர் இன் ஆப்பிரிக்கா' படிச்சுக்கிட்டிருக்கேன்..
ReplyDeleteமுதல் பக்கத்தை பார்த்ததுமே அதிர்ந்து போயிட்டேன்! நம்ம தலீவரின் 'ஒற்றை வேப்பிலை' போராட்டம் மாதிரியான காட்சி அது!!😱😨😲
ஆத்தாடியோவ்!! ஆரம்பமே படு பயங்கரமா இருக்கே!!😲😲
Grey thunder is a pleasant surprise. Thoroughly enjoyed
ReplyDeleteXIII was also good. Excited to know what will happen in Russia
தண்டர் இன் ஆப்பிரிக்கா
ReplyDeleteடின்டின் னை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனை போல தண்டர். ஆனால் சுவாரசியமான தகவல்கள் கொட்டிக் கிடைக்கிறது. லிவிங்ஸ்டோன், சாணி வண்டு, 15 ஆம் நூற்றாண்டு சீன பேரரசு மிங் இனத்தின் யூங்க் லோ, அவரது தளபதி சாங் ஹோ, அவர்களின் கடவுள் குவான் தாய், இவர்கள் மேற்கொண்ட கடல் பயணம்.
ஓவியங்கள் கண்ணை உறுத்தவில்லை, சாணி உருண்டைக்குள் இருக்கும் புழுவின் மைண்ட் வாய்ஸ், வேங்கைகள் மரம் அறுப்பது போல் கனவு காண்பது என்று ஆங்காங்கே சிரிப்பு தோரணங்களை அமைத்து உள்ளனர்.
இன்னும் ஓரிரு புத்தகங்கள் பார்த்து விட்டால் இது நிஜமாகவே டின்டின் போன்ற புலியா அல்லது சூடு போட்டுக் கொண்ட பூனையா என்று தெரிந்து விடும்.
கதை 9/10
ஓவியம் 9/10
மேக்கிங் 10/10
இன்று காலை நமது வாசக நண்பர் திரு.மாயாவி சிவா இயற்கை எய்தி விட்டாரென்று மேச்சேரியார் அதிர்ச்சியூட்டும் தகவல் சொன்னார் ! சத்தியமாய் நம்ப முடியவில்லை ! அவ்வப்போது சில மனத்தாங்கல்கள் கொண்டு நண்பர் மாயாவி சிவா கண்சிவந்து , நம்மிடமிருந்து விலகிச் சென்றிருப்பினும் அவரது காமிக்ஸ் நேசம் என்றைக்குமே கேள்விக்குறியாக இருந்ததில்லை !
ReplyDeleteஈரோட்டில் 2014-ல் LMS ரிலீஸின் காலையில் முதன்முறையாக நண்பரை சந்தித்தேன் & அடுத்த நாலைந்து ஆண்டுகளுக்கு புத்தக விழா சந்திப்புகளிலும், இங்கே நமது பதிவுப் பக்கங்களிலும் சரி, தனது முத்திரையை பதிக்க அவர் தவறியதே இல்லை !
நிச்சயமாக இது விடைபெறும் வயசே அல்ல எனும் போது அவரையும், அவரது குடும்பத்தினரையும் எண்ணி ரொம்பவே வருத்தமாக உள்ளது ! கஷ்டமின்றி ஆண்டவன் எடுத்துக் கொண்டிருப்பார் என்று நம்புவோம் !
Rest in peace சிவா !
அதிர்ச்சியான தகவல்.
DeleteRest in peace மாயாத்மா..😢
Deleteஅதிர்ச்சியிவிருந்து இன்னும் மீள முடியவில்லை..!
ஏழெட்டு ஆண்டுகள் நெருங்கிப் பழகிய நம் நட்பின் நல்நினைவுகள் என்றும் நெஞ்சில் நிறைந்திருக்கும்..
RIP மாயாவி சிவா..🙏
தனது 'மாத்தி யோசி' எனும் புதிய சிந்தனைகளாலும் , செயல்களாலும் என்னை வியக்கச் செய்த மனிதர்! அன்றைய நாட்களில் காமிக்ஸ் பற்றி மணிக்கணக்கில் நேரிலும், ஃபோனிலும் பேசித் தீர்த்திருக்கிறோம்! புயல் போல நம்மிடையே அறிமுகமானவர் - ஒரு புயலைக் கிளப்பிச் சென்ற பிறகு தொடர்பற்றுப் போனார்! காலம் செய்த கோலம் அது!
DeleteRIP மாயாவி சிவா..🙏😔
ஆழ்ந்த இரங்கல்கள்...
Deleteஆழ்ந்த அனுதாபங்கள் 😥😥😥
Deleteநண்பரின் ஆன்மா சாந்தியடையட்டும்
Delete🙏😞😞😞😞🙏
DeleteRIP மாயாவி சிவா..
Deleteஆழ்ந்த இரங்கல்கள்...
ஆழ்ந்த இரங்கல் மாயாவி சிவா அவர்களுக்கு.
Deleteகண்ணீர் அஞ்சலி.
ஓம் சாந்தி ஓம் சாந்தி .
ஆழ்ந்த இரங்கல்கள் மாயாவி சிவா ,😭😭😭
Deleteஅதிர்ச்சி தரும் தகவல்... ஆழ்ந்த இரங்கல்கள்:(
DeleteRIP மாயாவி சிவா 💐😰😥😢😭
ReplyDeleteதிரு.மாயாவி சிவா அவர்களின் பெயரை காமிக்ஸ் தேடி பல தளங்களில் பயணித்த போது கண்ணால் பார்த்தும், நண்பர்களுடன் அளாவளாவிய பொழுதுகளில் கேட்டும் வியந்திருக்கிறேன்.
அவரை ஒரு முறையேனும் நேரில் சந்திக்க முடியுமா என்று ஆசைபட்டிருக்கிறேன்.
ஆனால் என்ஆசை கடைசிவரை நிராசையாகவே ஆகிவிட்டது..😕😥
அந்த ஓங்கி உயர்ந்து ஸ்டைலான தொப்பியுடன் புன்சிரிப்புடன் காணும் அவரது அழகிய உருவம் என் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும்..🙏🙏
நன்றி "மாயாவி சிவா" ஜி..💐💐
நீங்கள் படைத்து எங்களுக்கு அன்புடன் கொடுத்து சென்ற சென்ற பல அற்புத படைப்புகள் மூலமாக நீங்கள் எங்களுடன் எப்போதுமே வாழ்வீர்கள்..🙏💐
நீங்கா நினைவுகளுடன்..😔
ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteஅன்னாரது உறவுகளுக்கும், நட்புகளுக்கும் ஆறுதல் உண்டாகட்டும். இந்த துக்கம் கடந்து வர அருள்வதாக.
Delete
ReplyDeleteநதிமூலம் கியூபா
"அமெரிக்க அரசின் அரசியலமைப்பு சாசனத்தின் மூலப்பிரதி ஆர்கான் வாயு நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்படுகிறது."
"ஆர்கான் வாயுவா? ஏன்?"
"ஆர்கான் வாயு ஆக்சிஜனை வெளியேற்றி அதன் மூலம் மூலப்பிரதி ஏடுகள் ஆக்ஸிடேஷன் வினை மூலம் பாதிக்கப்படாமல் தடுக்கிறது. இதற்கு முன்னால் ஹீலியம் வாயுவை நிரப்பி இருந்தார்கள். இப்போது ஆர்கான் வாயுநிரப்பி இருக்கிறார்கள்."
"ஆர்கான் வாயு என்றால் என்ன?"
"ஆர்கான் வாயு ஒரு மந்த வாயு."
"மந்த வாயு என்றால் என்ன?"
"மந்தவாயு எந்த வேதி வினைகளிலும் ஈடுபடாது. அதனால் இதனை நோபில் (noble ) கேஸ் என்று கூறுவார்கள். Inert கேஸ் என்றும் கூறுவார்கள்."
"மந்தவாயுவுக்கும் இந்த விமர்சனத்துக்கும் என்ன சம்பந்தம்?"
"மந்த வாயு போல் ஆகிவிட்டது 13ன் இந்த கதை. 13 எந்த வினைகளிலும் ஈடுபடவில்லை. சிறகடிக்க ஆசை சீரியலை பற்றி பக்கத்து வீட்டு பார்வதி, கீழ் வீட்டு கீதா இருவரும் பேசிக் கொள்வதைப் போல் கதை முழுவதிலும் கதாபாத்திரங்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இதுவரை வந்த எந்த 13 கதையும் முடக்குவாதம் வந்தவன் நடையை போல இவ்வளவு மெதுவாக சென்றதில்லை."
8/10
கல்யாணத்திற்குப் பிறகு நானும்கூட ஆர்கான் வாயு போல மாறிவிட்டேன்! :)
Delete😂😂😂
Deleteசென்று வாருங்கள் நண்பரே.
ReplyDelete@ ALL :
ReplyDeleteஇதுவரைக்குமான எந்தவொரு வோட்டெடுப்புக்கும் இத்தனை close fight பார்த்ததில்லை guys !! இரண்டு கேள்விகளுக்கான சகல option களும் ரவுண்டு கட்டி ரேஸ் நடத்தி வருகின்றன !! நாளை நிறைவுறவுள்ள வோட்டிங்கில் நீங்கள் இன்னமும் பங்கேற்றிருக்காத பட்சத்தில் - இதோ இந்த லிங்க்கில் பயணித்து க்ளிக்கிடலாமே ப்ளீஸ் :
https://strawpoll.com/2ayLQJ4wMn4
https://strawpoll.com/NPgxeqP9PZ2
சார் இன்று பதிவுக் கிழமை...
Deleteஆசிரியர் சார் @
Deleteதேர்வாகப் போவது எந்த இடமாகினும் நமக்கு ஒன்றே!
தங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள்..🙏,
இத்தனை நாள் அனைத்து விழாக்களையும் சிறப்பாக நடத்தி கொடுத்து நம்மை மகிழ்வித்த செயலர் அருமை நண்பர் ஈவியை கெளரவிக்கும் விதமாக இந்த லயன் 40விழாவையும் ஈரோட்டிலேயே நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்🙏
10ஆண்டுகளாக அவர் கூடவே இருந்து அவரது ஆர்வம், செயல்திறன் அனைத்தும் கவனித்து வியந்து உள்ளேன்.
மனிதரது காமிக்ஸ் காதல் வியக்க வைக்கும் ஒவ்வொரு முறையும்...
லயன் 40வது விழாவை தலைமையேற்று நடத்த அவரை விட சிறந்த ரசிகர் நம்மிடையே யார் உளர்???
எப்போதும் போல இம்முறையும் அவர் அருகேயிருந்த விழா நடப்புகளை கவனித்து அகமகிழ்வேன்.
My heartfelt condolences to mayavi siva s family and friends
ReplyDeleteMr. No. After reading his first story, I thought all the stories would be alike. But surprise. Current issue is completely different. Enjoyed
ReplyDeleteSuper sir 👌👌👌
Deleteதண்டர் இன் ஆப்ரிக்கா
ReplyDeleteஅழகான புதுவரவு...💥
சில கதைகளுக்கு கதைக் களம் பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கும், சில கதைகளுக்கு ஓவியங்கள் பிளஸ் பாயிண்ட் ஆக இருக்கும்,
இந்த கதையிலோ வர்ண சேர்க்கையே ஹீரோ... What a Colouring😍 கதை தொடக்கம் முதல் முடிவு வரை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல் இருந்தது 👌👌👌
மெலிதான நகைச்சுவை இழையோடும் இந்த வகை சாகசங்கள் எல்லாருக்கும் பிடிக்கும்... புத்தக விழாக்களில் மாணவர்களை ஈர்க்கும்...
க்ரே தண்டர் - Welcome👍
நைஸ் ரிவ்யூ!!
DeleteGood review
Deleteபரணி சாருக்கும், E.V சாருக்கும் நன்றிகள் பல🙏🙏🙏
Deleteபாலையில் ஒரு போராளி
ReplyDeleteஅட்டைப் படம் மிக அழகு...👌👌👌
உள்ளே ஓவியங்களும் ok தான்... இறுதிக் கட்டங்களில் மிக நன்றாக இருந்தன...
கதை Mr. நோ வின் முதல் இரு கதைகளைப் போலவே போரடிக்காமல் விறுவிறுப்பாக சென்றது...👍👍👍
Mr. நோ நம்மிடையே ஒரு நிரந்தர இடத்தை பிடிப்பார் போல் தெரிகிறது✌️
///Mr. நோ நம்மிடையே ஒரு நிரந்தர இடத்தை பிடிப்பார் போல் தெரிகிறது///
Deleteசூப்பர்! உங்கள் ஆரூடம் பலிக்கட்டும்!
Super
DeleteThank u E.V ஸார் & பரணி சார்🤗🤗🤗
Delete1) The பரவசப் பதிவுகள் ஆயிரம் Special
ReplyDelete2) The அழகிய தருணங்கள் ஆயிரம் Special
3) The வலைப்பூவின் வசீகர தருணங்கள் Special
4) The வலைப்பூவின் வர்ணஜாலங்கள் Special
5) The ' வியப்பூ'ட்டும் 'வலைப்பூ' Special
///The பரவசப் பதிவுகள் ஆயிரம் Special
Delete///
The பரவசப் பதிவுகள் பத்தாயிரம் மைனஸ் ஒன்பதாயிரம் Special
ஹிஹி! :)
😂😂😂😂😂😂 உங்களால் மட்டுமே இப்படி யோசிக்க முடியும் சார்👌👌👌
Delete***** தண்டர் இன் ஆப்பிரிக்கா ****
ReplyDeleteமறுக்காவும் ஒரு புதையல் கதை!
ஆனால் கொஞ்சம் வரலாறும், இழையோடும் நகைச்சுவையோடும், ஜாலம் காட்டிடும் வண்ணங்களோடும் - ரசிக்கும்படியாகக் கொடுத்திருக்கிறார்கள்!
வசனங்களில் உரைநடைத் தமிழையும், பேச்சுத் தமிழையும் கலந்துகட்டிக் கொடுத்திருப்பதை தண்டரின் அடுத்த இதழில் தவிர்க்கப் பார்க்கலாம்!
தண்டர் - எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார்!
9.5/10
Short and sweet round bun 😊
Deleteதரமான விமர்சனம் சார் 👏👏👏
Deleteசார் ஆயிரம்னா சும்மாவா.....பயணம் செய்ய ரூட் 99 ஐ தேர்ந்தெடுத்து விஷத்தோட வீரியத்தை விருந்தா மாத்தி பாப்பமா
ReplyDeleteஇன்றைய விருந்து பதிவில்
நண்பர்களே@
ReplyDeleteநம்ம காமிக்ஸ் உலகில் நண்பர்களுக்கு உதவுதல், கடினமான நேரங்களில் முதல் ஆளாக தோள் கொடுத்தல் என எதுவாகினும் முதல் நபராக ஓடிவரும் நம்ம நண்பர் செயலர் ஈவி,
நேற்று சேலம் நண்பரது வீட்டிற்கு
நம்ம காமிக்ஸ் நண்பர்கள் சார்பில் சென்று துக்கம் விசாரித்துட்டு ஆறுதல் கூறு வந்துள்ளார்.
கடினமான நேரத்தில் ஆறுதலாக இருக்கும், கஷ்டமான நேரத்தில் உதவும், உதவிகளை பெற்று தர விழையும் ஈவியோட நல்மனசுக்கு நம் அனைவரது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Delete🙏🙏🙏
Deleteகாமிக்ஸுக்காகப் பலமுறை தன் சொந்த செலவில் பேனர் கட்டி அழகு பார்த்த நண்பரது வீட்டில் அவருக்கே பேனர் கட்டியிருந்ததைப் பார்த்தபோது மனசு கனத்துப் போனது நண்பர்களே!
நேற்று அவரது உயிரற்ற உடலைப் பார்த்த தருணத்தில் கூட 'தனது மாத்தி-யோசி பாணிக்காக இப்படிப் படுத்துக்கிடக்கிறாரோ.. இன்னும் சற்று நேரத்தில் சிரித்தபடியே எழுந்துவிடுவாரோ' என்றெல்லாம் கூட உள்மனதில் பைத்தியகாரத்தனமான எண்ணங்கள் ஓடியது!
குறுகிய காலத்தில் அனைவரையும் தன்வசம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டு
, தன் பெயருக்கேற்ப இன்று மாயமாகிக் காற்றிலே கலந்துவிட்டார்!😞
Great E.V sir...🙏🙏🙏
ReplyDeleteReally proud of yr work👏👏👏
இதை தெரியப் படுத்திய STV சாருக்கு நன்றி 🙏🙏🙏
🙏🙏
Delete200
ReplyDelete