நண்பர்களே,
வணக்கம். 2 வாரங்களுக்கு முன்பாகக் கேட்டிருந்த 2 கேள்விகளுக்கு நீங்கள் தந்திருந்த விடைகள் 2 பதிவுகளுக்கான content கொண்டிருந்தன! So என்ன எழுதுவதென்று முழிக்கும் அவசியம் இந்த வாரத்துக்கும், அடுத்த வாரத்துக்கும் நஹி!
லயனின் 40-வது ஆண்டு இது என்பதை நாமறிவோம்! இந்த மைல்கல் வருஷத்து வாசகச் சந்திப்புக்கு ஈரோடு சுகப்படுமா? சேலமா? என்று வினவியிருந்தோம்! உங்கள் தேர்வுகளுக்கு வோட்டுப் போடவும் ஏற்பாடாகியிருந்தது! சும்மா சொல்லப்படாது - செம tough போட்டியே நிலவியது. ஆனால் துவக்கம் முதலாகவே ஈரோடு சின்னதொரு முன்னணியோடே தொடர்ந்திட, அதனை இறுதி வரை தக்க வைத்து கெலித்து விட்டது! Truth to tell, சந்திப்பு நவம்பரில், சேலத்தில் அமைந்திடும் பட்சத்தில் - மூச்சு விடக் கொஞ்சம் அவகாசம் கிடைத்துக் கொள்ளுமே என்ற எண்ணம் என்னுள் இருந்தது தான்! ஆண்டுமலருக்கான 3 கலர் புக்ஸ்; அடுத்ததாய் டின்டின் டபுள் ஆல்பம்ஸ்; அதைத் தொடர்ந்து 2025 அட்டவணைக்கான இறுதிக்கட்ட பணிகள், Electric '80s தயாரிப்பு - என கழுத்து வரைக்கும் பணிகள் போட்டுத் தாக்கி வருவதால் கிடைக்கக் கூடிய gap கார்சனின் மனக்கண்ணிலான சுக்கா ரோஸ்ட் போலத் தென்பட்டதை மறுக்க மாட்டேன்! ஆனால் ‘ஆகஸ்டில் ஈரோடு‘ என்பது நம்மில் ஒரு template ஆகப் பதிவாகி விட்டிருக்க, ‘ரைட்டு... நாலு பல்டிகளைக் கூடுதலாய் போட்டால் ஆச்சு!‘ என்றபடிக்கே ரெடியாகி விட்டேன்! என்னையும் உங்களையும் தாண்டி, ஈரோட்டை செம ஆவலாய் எதிர்நோக்கியிருப்பவர் இன்னொருவருமே உண்டு! And - அது வேறு யாருமல்ல - நமது சீனியர் எடிட்டர் தான்! பண்டிகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பாலகனைப் போல ஈரோட்டின் திக்கில் இப்போதே வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறார்! So தேரிழுக்கத் துவங்கலாமா folks?
ஈரோட்டில் புத்தக விழா துவங்கிடுவது ஆகஸ்ட் 2ம் தேதி - வெள்ளியன்று! And நாம் வழக்கமாய் அந்த முதல் வாரத்தின் சனியன்று சந்திப்பதே வாடிக்கை! But இந்தவாட்டி சின்னதொரு மாற்றம் செய்து, நமது சந்திப்பை அந்த ஞாயிறுக்குக் கொண்டு செல்ல நினைக்கிறேன் - கீழ்க்கண்ட காணங்களுக்காக:
1. ஆகஸ்ட் 3, சனிக்கிழமை - ஆடி 18-ம் பெருக்கு! ஈரோட்டுப் பகுதிகளில் அது விமரிசையாகக் கொண்டாடப்படுவதை நிரம்ப தடவைகள் பார்த்திருக்கிறேன்! So வீட்டாரோடு நேரம் செலவிட அவசியமாகிடக் கூடிய அதே தினத்தில் நமது காமிக்ஸ் லூட்டிகளை வைப்பது சுகப்படுமா? என்ற சின்னச் சந்தேகம் எனக்குள்!
2. இந்த முறை நமது லயன் டீமையும் ஈரோட்டுக்கு அழைத்து வரும் எண்ணமுள்ளது உள்ளுக்குள்! நீங்கள் மாதா மாதம் பார்த்து வரும் குவியலான புக்ஸின் பின்னே இவர்களது உழைப்பும் விரவிக் கிடக்கின்றதெனும் போது, மாக்கானாட்டம் நான் மட்டுமே ஒளிவட்டத்தை ஆக்கிரமித்துக் கொள்வது உதைக்கிறது! So ஞாயிற்றுக்கிழமைக்கு சந்திப்பை அமைப்பதாயின் அவர்களை அழைத்து வர ஏதுவாக இருக்குமென்று எண்ணினேன்!
3. “காமிக்ஸ் குடும்பம்...” ; ”கமர்கட் குடும்பம்” என்று கணிசமாய்ப் பீற்றித் திரிகிறோம் தான்! ஒரு மைல்கல் ஆண்டினில் அதை நடைமுறையும் படுத்தினால் என்னவென்று தோன்றியது! So இந்த முறை நண்பர்கள் குடும்ப சகிதம் வருகை தந்திட முடிந்தால் ரொம்பவே மகிழ்வோம்! And அதற்கு ஞாயிறு தானே வசதிப்படும்?
So ஆகஸ்ட் 4ம் தேதி - ஞாயிற்றுக்கிழமைக்கு காலை 10 to மாலை 4.30 வரையில் ”ஈரோட்டில் லயன் 40” அழகாய் அரங்கேறிட புனித மனிடோவிடம் ஆசிகள் கோரிடலாமா folks?
ரைட்டு... தேதியும், கிழமையும் தீர்மானமாகி விட்டதெனில் எஞ்சியிருப்பது - இடம் எது? என்ற கேள்வி தானே? ஈரோட்டுப் புத்தக விழா அந்த V.O.C. பார்க் மைதானத்தில் நடந்து கொண்டிருந்த வரையிலும் அதன் வாசலில் இருந்த Le Jardin ஹோட்டலில் சந்தித்து வந்து கொண்டிருந்தோம். ஆனால் சமீப ஆண்டுகளில் புத்தக விழா இடம் பெயர்ந்திருக்க, நாமோ போன வருஷம் பிரம்மாண்டமான Oasis மஹாலில் முத்து காமிக்ஸின் 50-வது ஆண்டு விழாவிற்கென கூடியிருந்தோம்! மதியச் சாப்பாட்டு ஏற்பாடுகளையும் பொறுப்பேற்றிருந்த மஹால்காரர்கள் 200-க்கும் கூடுதலானோர் வருகை தருவோமென்பதை எதிர்பார்த்திருக்கவில்லை; So லஞ்ச் ரொம்பவே நெளியப் பண்ணியிருந்தது! ஆனால் இடமும், வசதிகளும் அசாத்திய சொகுசு என்பதை மறுப்பதற்கில்லை! கட்டணங்களும் அதற்கேற்ப செம கூடுதலே என்ற போதிலும், தூக்கி வளர்த்த ஒரு பிள்ளைக்கு ஆபட்ஸ்பரியில் கண்ணாலத்த நடத்திப்புட்டு, அடுத்த புள்ளைக்கு முருகன் கோவிலில் வைத்துத் திருமணத்தை நடத்த மனசு கேட்கவில்லை! Moreso இது எனது செல்லப் பிள்ளையான லயனின் moment எனும் போது! So “மேலேயிருப்பவர் பார்த்துக்குவார்” என்ற நம்பிக்கையில் Oasis மஹாலுக்கே thumbs-up தந்திருக்கிறோம்! இம்முறையோ அரங்கத்தை மட்டுமே வாடகைக்கு எடுத்துக் கொண்டு, சாப்பாட்டு ஏற்பாடுகளை நாமே செய்து விட எண்ணியிருக்கிறோம்!
இந்த வரியை எழுதும் போது எனக்கு லஜ்ஜை பிடுங்கித் தின்கிறது – simply becos ஏற்பாடுகளைச் செய்வதில் நமது பங்கு பூஜ்யத்துக்கு மிக மிக அருகில் இருப்பது தான்! தங்கள் வீட்டுக் கல்யாணங்களாய் பாவித்து பேனர் கட்டுவதில் ஆரம்பித்து, ஆடல் – பாடல் நிகழ்ச்சிகளை ரெடி பண்ணுவதிலிருந்து, பந்தி பரிமாறும் வேலை வரைக்கும் சகலத்தையும் இழுத்துப் போட்டுப் பார்த்துக் கொண்டது எல்லாமே நண்பர்கள் குழு தான்! இந்த முறையும் வாய் பார்க்கும் வேலையை மட்டுமே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க, களத்தில் நண்பர்களே இறங்கிடவுள்ளனர். And இந்த முறை ஆர்வமும், நேரமும் உள்ள நண்பர்கள் விழாவின் ஏற்பாடுகளில் சந்தோஷமாக கலந்து கொள்ளலாம்! ஈரோட்டு விழாவுக்கென பிரத்தியேகமாய் உருவாக்கியுள்ள இந்த ஈ-மெயில் முகவரிக்கு உங்கள் செல் நம்பரோடு ஒரு மெயிலைத் தட்டி விட்டால் – ”டீம் ஈரோட்டில்” ஒரு அங்கமாகிடலாம்! So தேர் இழுக்க, வடம் பிடிக்கச் சாத்தியப்படும் நண்பர்கள் most welcome!
இதோ ஸ்பெஷல் மின்னஞ்சல் முகவரி: lion40erode@gmail.com
ஏற்கனவே சொன்னது போல, குடும்பத்துடன் நண்பர்கள் ஆஜராகிடும் பட்சத்தில் most welcome! And வெளியூர்களிலிருந்து வரும் நண்பர்கள் & families சனி இரவு 7 மணி முதல் ஞாயிறு இரவு 7 மணி வரைக்கும் தங்கிட ரூம் வசதிகள் செய்து தரவிருக்கிறோம்! ஒரே வேண்டுகோள்: குறைந்தபட்சமாய் 2 வாரங்களுக்கு முன்கூட்டியே இது குறித்த தகவல் தந்திட வேண்டும்!
அதே போல – நமது லயனின் இந்த 40-வது ஆண்டினில் – தமது 40-வது பிறந்த நாட்களையும் கொண்டாடிடும் நண்பர்கள் ஈரோட்டுத் திருவிழாவில் நமது ஸ்பெஷல் விருந்தினர்களாக இருந்திடுவர்! அவரவரது ஊர்களிலிருந்து ஈரோடு வந்து போக ரயில் டிக்கெட்ஸ் ; தங்குமிடம் என கம்பேனி பொறுப்பேற்றுக் கொள்ளும்! (வெளிநாட்டிலேர்ந்து யாரும் கையை உசத்திக் காட்டிப்புடாதீங்க சாமீ... கதை கந்தலாகிப் போகும்!) So மேலேயுள்ள அந்தப் பிரத்தியேக ஈ-மெயில் முகவரிக்கு உங்களது ஆதார் அட்டைகளின் நகலோடு, ஒரு மின்னஞ்சல் ப்ளீஸ்! இது மட்டும் இந்த வாரத்திலேயே அவசியமாகிடும் guys – ரயில் டிக்கெட்களை புக் பண்ணிட!
ரைட்டு... அடுத்ததாய் அன்றைய பொழுதின் உங்களது பங்களிப்புகள் பற்றியும் பார்த்துப்புடலாமா?
1. நண்பர்களின் மத்தியில் எக்கச்சக்கமான தனித்திறமைகள் புதையுண்டு கிடப்பதாய் நம்பத்தகுந்த உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன! ஆளில்லா டவர்களில் ஏறி, ஆசை தீர சாரீர வளங்களை சரி பார்ப்பதிலிருந்து, டான்ஸ்(!!!) ; மோனோ-ஆக்டிங் ; குறும்படங்கள் தயாரிப்பு என எக்கச்சக்கம் இறைந்து கிடக்கிறதாக CNN-ல் சேதி வந்திருப்பதால் 3 நிமிடங்களுக்கு மிகுந்திடாத மாதிரி எதையேனும் ரெடி பண்ணிடலாம்! ஈரோட்டில் மேடை உங்களுக்காகக் காத்திருக்கும் கலைஞர்களே!!
Again – முன்கூட்டியே தகவல்ஸ் ப்ளீஸ்!
2. தூரத்தில் உள்ள நண்பர்கள் ; தொலைதூர தேசங்களில் உள்ள அன்பர்கள் – விழாவில் கலந்து கொள்ள முடியாது போனாலும், கொண்டாட்டங்களில் பங்கேற்க ஒரு ஏற்பாடு செய்தாலென்னவென்று தோன்றியது! So சின்னதாக ஒரு HD வீடியோ க்ளிப்பில், லயனுடனான உங்களது எண்ண அலைகளைப் பகிர்ந்து அனுப்பினீர்களேயானால், அவற்றைத் தொகுத்து அன்றைய தினம் ஒரு Audio Visual-ஆகத் திரையிடலாம் folks! முடிந்த மட்டிற்கு ஷார்ப்பாக, நல்ல வெளிச்சத்துடன் (preferably outdoors) எடுத்து அனுப்புங்களேன்!
3. ஈரோட்டுக்கு வருகை தந்திடவுள்ள நண்பர்கள் தங்களது தெளிவான பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோக்களை ஈ-மெயில் செய்திடுங்களேன் ப்ளீஸ்?
4. வழக்கம் போலவே ஒரு காமிக்ஸ் பட்டிமன்றமும் அன்றைக்கு இருந்திடவுள்ளது! And வழக்கம் போலவே நடுவர் சாலமன் பாப்பையாவாக நமது கருணையானந்தம் அங்கிள் செயல்படுவார்! And வழக்கம் போலவே, அந்தத் தகவல் அங்கிளுக்கு இந்தப் பதிவினைப் பார்த்தே தெரிய வருமென்றுமே நினைக்கிறேன் ! பட்டிமன்றத்தின் தலைப்பு வேறெதுவும் இல்லை – நெடுநாள் வாய்க்கா வரப்பு தகராறாய்த் தொடர்ந்திடும் லடாய்க்கு விடை காணும் ஒரு வாய்ப்பு!!
‘தல‘ டெக்ஸ் வில்லரா?
‘தளபதி‘ டைகரா?
- நமது கௌபாய் சாம்ராஜ்யத்தின் சாம்ராட் யார்? –
இரு அணிகளிலும் தலா 4 பேச்சாளர்கள் மேடையேறிடலாம்! And ஒவ்வொருவருக்கும் மூன்று நிமிடங்கள் தரப்படும்! So தர்க்கம் பண்ணத் தயாராகிடும் தங்கங்களே – உங்கள் ஆர்வத்தைத் தெரியப்படுத்தி ஒரு ஈ-மெயில் ப்ளீஸ்!
5. போன வருஷம் போலவே காமிக்ஸ் கிரிக்கெட் லீக்கில் இந்தாண்டும் அனல் பறக்க மோதிடவுள்ளனர்! ஜுலை 29-ல் அரங்கேறிடவுள்ள போட்டிகளின் பிற்பாடு பட்டி, டிங்கரிங் பார்த்த கையோடு விழாவுக்கு வருகை தந்திடவுள்ள வீரர்கள் அனைவருக்கும் போன வருஷம் போலவே இம்முறையும் மெடல்கள் காத்திருக்கும்! And சுழல் கோப்பையை இம்முறை யார் தட்டிச் செல்லப் போகிறார்களென்றறிய உங்களைப் போலவே நானும் ஆவலாய் காத்திருப்பேன்!
One request வீரர்வாள்ஸ்! விழா நடந்திடவுள்ள ஞாயிறு மாலையில் இன்னொரு மேட்ச் - கீட்ச் என்று திட்டமிட்டிட வேணாமே ப்ளீஸ்!
6. அப்புறம் ஒவ்வொரு ஆண்டின் ஈரோட்டுப் புத்தக விழாவிலும் மரத்தடியில் களைகட்டும் மாலை நேரக் காமிக்ஸ் கும்மியடி செம ஜாலியான அனுபவம்! இப்போதைய புத்தக விழாவில் அதற்கு வசதியில்லை என்பதாலும், விழா முடிந்த கையோடு ஆளாளுக்கு ஊர் திரும்ப வேண்டியிருக்கும் என்பதாலும், அந்த மரத்தடி பஞ்சாயத்தை, நிகழ்ச்சி நிரலிலேயே இணைத்திட எண்ணியுள்ளோம்!
So மதியத்துக்கு மேலாக கேள்வி - பதில் session-ஐ வைத்துக் கொள்ளலாமா folks?
7. அதே போல போன வருஷம் நேரமின்மை காரணமாய் நடத்த முடியாது போன நமது அட்டைப்பட சித்திரக் கண்காட்சியினை இந்த தபா நடத்திடலாமா? “கதை சொல்லும் சித்திரங்கள்” இம்முறை காலை session-ன் முதல் நிகழ்ச்சியாகிடும்! So மறவாது சீக்கிரமே ஆஜராகிடலாமே ப்ளீஸ்!
8. அப்புறம் வருகை தந்திடவுள்ள நண்பர்களுக்கு ஒரு கம்பேனி gift காத்துள்ளது! அது நிச்சயமாய் சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பி ரேஞ்சுக்கு இராதென்று நம்பலாம்!!
9. விழா இருக்க ஸ்பெஷல் இல்லாது போகுமா? So போன ஆண்டைப் போல மெகா பட்ஜெட்டில் இதழ்கள் இல்லாவிடினும், அழகான ஸ்பெஷல்ஸ் காத்திருக்கும்! இதோ அதன் முதல் preview!!
நம்புங்கள் guys - தெறிக்க விடும், செம சுவாரஸ்யமான சாகசங்கள் இம்முறை இந்தத் தொகுப்பின் முழுமையிலும் இடம்பிடித்து நிற்கின்றன !! நிச்சயமாய் மொக்கைக் கதைகள் லேது இங்கே !! And இதற்கோ, இதனுடன் வரக்கூடிய மற்ற ஈரோடு ஸ்பெஷல் இதழ்களுக்கோ முன்பதிவுகள் இப்போதைக்குத் தேவை இல்லை ; ஆகஸ்டில் relaxed ஆக வாங்கிக்கொள்ளலாம் !
அப்புறம், ஈரோட்டில் வெளியாகவுள்ளது - இன்னொரு ஜாலியான இதழுமே !!அது நாமெல்லாம் ரசித்ததொரு கார்ட்டூன் தொடரே & அதன் மீள்வருகைக்குப் பின்னே ஒரு சுவாரஸ்யக் கதை காத்துள்ளது ! அந்தத் தொடர் பற்றியும், அந்தக் கதையின் பின்னணிக் கதை பற்றியும் அடுத்த பதிவினில் !! இப்போதைக்கு லக்கி லூக்கின் தாத்தாக்களோடும், ஒரிஜினல் தாத்தாக்களோடும் பொழுதை ஓட்ட நான் புறப்படுகிறேன் !!
Bye all...see you around ! Have a lovely Sunday !! And ஈரோட்டுக்கு டிக்கெட்டைப் போட்டுப்புடலாமே ?
Me first time
ReplyDeleteவாழ்த்துகள்💐
DeleteSuper sir👏👏👏
Deleteவாழ்த்துகள் சகோ 💐💐💐
DeleteSecond..
ReplyDeleteHi
ReplyDeleteவணக்கம் நண்பர்களே உங்கள் கார்த்திக்🎉🥳👀
ReplyDeleteHi
ReplyDelete6வது பாஸ்
ReplyDeleteSTV என்ன இப்பதான் 6வது பாஸ் ஆ?
Delete@STV.. அண்ணே ... ஒரு அன்பு வேண்டுகோள் . தளபதி அணி சார்பா பட்டிமன்றத்துல நீங்க பேசணும் :)
Deleteரெஜோ@ பெயர் பதிவு செய்துள்ளேன்.. எந்த அணியில ஆள் குறையுதோ அதற்கு தக நம்ம நண்பர்களை பிரிச்சிகிடலாம்.....
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDelete7th
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்..
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteHi friends🙏
ReplyDeleteயாரையும் காணோமே
ReplyDeleteஅருமை சார்
ReplyDeleteHi All
ReplyDeleteCount me in @ ஆகஸ்டில் ஈரோடு...
ReplyDelete♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️🌹
Me 2 nd
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteWow Mandrake ! Welcome !! When is next TINTIN sir?
ReplyDeleteAugust'24 sir......Double Albums
Deleteவந்துட்டேன்...
ReplyDeleteஅனைவரும் வணக்கம்.
ReplyDeleteமகிழ்ச்சியான பதிவு.❤️💥👏👏👏
ReplyDeleteசார்! அந்த ஆப்பிரிக்க சதி + மாஸ்கோவில் மாஸ்டர் ஈரோடு புத்தக விழா ஸ்பெஷலாக வந்தால் சிறப்பாக இருக்கும்! பிளீஸ்...
ReplyDeleteவரும் சார் ; ஈரோட்டில் இயலாது - maybe சேலத்தில் !
Deleteஅடடே செம்ம செம்ம செம்ம. அருமை சார்.
Deleteநன்றிகள் சார்
Deleteசேலம் வாழ்க... அருமை.. நன்றி சார்
DeleteThanks a lot sir...
Deleteவரும் சார் ; ஈரோட்டில் இயலாது - maybe சேலத்தில் !
Deleteஆயிரம் கோடி நன்றிகள் ஆசிரியரே
ஏற்பாடுகள் எல்லாம் ஜெகஜோதியோடு பிரமாதமாக அமைந்து உள்ளன. சார்.இம்முறையும் ஈரோடு திருவிழா கூடுதல் உற்சாகத்தோடு களை கட்டப் போகுது.
ReplyDelete:-) :-)
Deleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteHi
ReplyDeleteகாமிக்ஸ் அற்புதங்கள் ஆகஸ்ட்டில் ஈரோட்டில் காத்திருக்கின்றன.
ReplyDeleteஅடடே ஈரோடு அட்டகாசமான பதிவு சார். நம்ம வாசகர் சந்திப்பு வந்தாலே உங்கள் பதிவில் உற்சாகம் தெறிக்கிறது.
ReplyDeleteமுதல் ஸ்பெஷல் மாண்ட்ரேக். இன்னும் எத்தனை ஸ்பெசல் சார்?
ஆஜர்
ReplyDeleteஇன்னொரு ஸ்பெஷல் அலிபாபா???
ReplyDeleteகரெக்ட் நண்பரே
DeleteOnly 2 specials?
ReplyDeleteஇது ஆரம்பந்தான்..KS
Deleteஅப்போ பெரிய விருந்து இருக்குன்னு சொல்லுங்க
Deleteண்னா....ஆராச்சும் கோயமுத்தூர் பக்கமாவோ ; திருச்செந்தூர் பக்கமாவோ போய் வந்தீங்க ?
Deleteஅந்த கார்ட்டூன் ஆயிரம் பக்க தொடர்ந்தான் சார்
Deleteதொடர்தான
Delete//ண்னா....ஆராச்சும் கோயமுத்தூர் பக்கமாவோ ; திருச்செந்தூர் பக்கமாவோ போய் வந்தீங்க ?//
Delete😂😂😂😂😂
வாசகர் சந்திப்பின் வசீகர புன்னகை ஈரோடு-கூப்பிடு தொலைவில்....😍
ReplyDeleteபட்டைய கிளப்ப வாழ்த்துகள் சார்💐
@STV ஜி..😍😍😘😘
Deleteஅப்படியே அந்த மேக்கப் பாக்ஸ் 💋👄 மறந்துடாதீங்க ...😃😃😃😃😘😘😘😘
ஜம்ப்பிங் தலீவரே.. ஹா ஹா ஹா :)))))))
DeleteSTVR,
Deleteஎன்னை நினைவு கூர்ந்தததர்க்கு நன்றி.
டெக்ஸ் அணிக்கு தலைமையேற்று டைகர் அணியை உண்டு இல்லைனு பண்ண ஐயாம் ரெடி யாவர் ஆனர் 💪💪💪
ReplyDeleteஅடடே.....!!
Deleteஅப்புறம் அந்த பாயாசக்கார் எங்கேப்பா ?
அது பாயாச அட்டாக் குள்ள ஒளிஞ்சிருக்கு சார்
Deleteஇம்முறை Tex அணி சார்பாக பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு பேச வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் @STVR அண்ணா.
Deleteயார் யார் எண்ட்ரினு பார்த்துட்டு அணி பிரிச்சிகிடலாம்...!!
Deleteடைகர் அணிக்கு தலைமையேற்க கடல் ரெடியாகிட்டாங்க...!!!
ஆமாங்க சகோ
Deleteடைகர் அணி சார்பாக ரெடி
இந்த தடவை சூப்பர் ரெடியாக வர போகிறேன், டைகருக்காக
@Edi Sir..😍😘
ReplyDeleteMe in..😍😃😘😀
இரண்டு நாட்களுக்கு முன்பே ஈரோடு வருகிறேன் ஆசிரியரே என்னால் முடிந்த வேலைகளை செய்கிறேன் இம்முறை வடை பாயசத்துடன் சாப்பாடு (பாசம்)காமிக்ஸ் நண்பர்களுக்கு பரிமாறிட ஆவலாக இருக்கிறேன்
ReplyDeleteவாங்க, வாங்க சத்யா !!
Deleteஆமா, நாங்களும் வர்றோம். எங்களுக்கும் ஏதோ சில்லறை வேலை கொடுத்தீங்கன்னா, அதையும் நாங்க கடமையா நினைச்சு செய்வோம்.
Deleteபோங்க சார்.. வருசா வருசம் இதே பட்டி மன்றம்.. இந்த வருசம் இரண்டு பேரையும் கலாய்க்க சொல்லி பட்டி மன்றம் வைக்கலாம்..
ReplyDeleteஇப்படி சொன்னதும் அமெரிக்க மாடஸ்டி கள்ள காதலர், இளவரசியை வம்பிழுக்க வங்துடுவார்...
'முத்து-50' விழா ஈரோட்டில் நடந்தபோது 'இதைவிடவும் ஒரு சிறப்பான விழா இனி வந்துவிடுமா என்ன' என்று எனக்கு நானே நினைத்ததுண்டுதான்! ஆனால் இன்றைய பதிவில் உங்கள் அறிவிப்புகளையும், ஏற்பாடுகளையும் பார்த்திடும்போது என் எண்ணம் தவறு என்பதை.உணர முடிகிறது எடிட்டர் சார்! பதிவைப் படித்த கணம் முதலாய் மனசுக்குள் 'உய் உய்' என்று ஓயாத விசில் சத்தம்..
ReplyDelete* குடும்பத்தோடு விழா
* 40 வயதானவர்களுக்கு சிறப்பு கெளரவம்
* ஸ்பெஷல் வெளியீடுகள்
* வருகை தரும் அனைவருக்கும் கம்பேனி கிஃப்ட்
* பட்டி மன்றம் (தெறிக்கும் தலைப்புடன்)
* கதை சொல்லும் படங்கள்
* வாசகர்களின் தனித்திறமைகளை மேடையேற்றும் நிகழ்வு
* காமிக்ஸ் கிரிக்கெட்
* அரங்கத்துள் ஒரு மரத்தடி மீட்டிங்
* அருசுவை உணவு
* பாற்கடலைக் கடைந்து திரட்டிய அமிர்தத்தால் செய்த - யெஸ் - ரவுண்டு பன்
* வெளியூர் நண்பர்களுக்கு தங்குமிட ஏற்பாடு
* அலுவலக சகோக்களை அழைத்து வரும் ஐடியா
* சீனியர் எடிட்டரின் உற்சாகம்
* கருணையானந்தம் ஐயா அவர்களின் உரை + பட்டிமன்றத் தீர்ப்பு
* இன்னும்..
* இன்னும் இன்னும்..
* இன்னும் இன்னும் இன்னும்..
இத்தனை சமாச்சாரங்கள் போதாதா காமிக்ஸ் படிக்கும் வாசகனுக்கு உற்சாகம் பொங்கிப் பீறிட?!!
ஆகஸ்டு நாலுக்காண்டி ஆசையோடு வெயிட்டிங்!!
@EV..😍😃😃😀
DeleteSemma.😍😃. Semma..😘😍
எனக்கு 14 வயசு தா ஆகுது. இதை தாண்டி எனக்கு எந்த பிரட்சனை வந்தாலும் அதை சமாளிப்பது அது பூனையாரின் பொறுப்பு.
Deleteஆமா சொல்லி புட்டேன்.
நானும் அண்ணே 😍
Delete❤❤❤❤❤❤❤❤❤❤
Deleteலைவ் டெலிகாஸ்டையும் சேர்த்து கொள்ளுங்கள் விஜய்.
Deleteநண்பர்கள் கொண்டு வரும் பலகாரங்களை மறந்து விட்டீர்களா 😀
@Edi Sir..😍😘
ReplyDeleteஆகஸ்டு விழாவை சிறப்பிக்க Me in..😍😘Sir..
ஈரோடு ஸ்பெஷல் மாண்ட்ரெக் ..😍😃
Wow..❤💛semma Sir..💜💚
#ஈரோட்டில் காமி(க்ஸ்) காண்#
வரும் நண்பர்களை வரவேற்க நம்ப தலீவரை மாண்ட்ரெக் உடையில் நிறுத்திடலாமா..😃😃😃
அப்புறம் மறக்காம நம்ப ஈ.வி யின் கானா குரலில் ஒரு ஆடல் பாடல் இருந்தே ஆகணும்.. 😃😃😃ஆமா..சொல்லிட்டேன்..😍😘
ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ஈரோட்டு திருவிழாவிற்கு. 😍🥰💐💓
ReplyDeleteHi..
ReplyDeleteபாடல் ஓகே.. ஆனா ஆடலுக்கெல்லாம் மேடை தாங்காதுங்க ஜம்ப்பிங் தலீவரே.. :)))
ReplyDelete@Edi Sir..😍😘😃
ReplyDeleteEBF'2024 ஸ்பெஷல் ஆல்பம்ஸ் என்னென்ன?😘 எவ்வளவு?..😍 என்று சொன்னால் ஒரு "Me first"😃 புக்கிங் போட்டுட்டு அடுத்த கட்ட வேளையா ஈரோடு வர்ரதுக்கு மூட்டை முடிச்ச கட்ட ஆரம்பிச்சிடுவேன்..😃😍😘😀👍👌
நா வர்றேன்.
ReplyDeleteரெட்ரோ '80s songs with கிதாரோட பாடுங்க... லைட்டா டான்ஸ் உடன் EV ஜி..😍😃😘😀
ReplyDelete"நம்ப ஊரு சிங்காரி..
சிங்கப்பூரு வந்தாலாம்..
பொட்டு வச்சு
பூ முடிச்சு நின்னாலாம்"..😍😃
"நம்ப ஊரு STV..😘😘
ஈரோடு வந்தாராம்..
லிப்ஸ்டிக் போட்டு
மேக்கப் போட்டு
நின்னாராம்"..😃😍😘😀
சூப்பர் சார்....ஈரோட்டில் பேமுலியுடன் பேய்முழி வாய்க்குதான்னு பாப்போம்...மாண்ட்ரேக் சூப்பர்...அந்த கார்ட்டூன் தொடர் ஸ்மர்ஃபா
ReplyDelete1. ஆகஸ்ட் 3, சனிக்கிழமை - ஆடி 18-ம் பெருக்கு! ஈரோட்டுப் பகுதிகளில் அது விமரிசையாகக் கொண்டாடப்படுவதை நிரம்ப தடவைகள் பார்த்திருக்கிறேன்! So வீட்டாரோடு நேரம் செலவிட அவசியமாகிடக் கூடிய அதே தினத்தில் நமது காமிக்ஸ் லூட்டிகளை வைப்பது சுகப்படுமா?
ReplyDeleteஞாயிறே சிறப்பு
2. இந்த முறை நமது லயன் டீமையும் ஈரோட்டுக்கு அழைத்து வரும் எண்ணமுள்ளது உள்ளுக்குள்! நீங்கள் மாதா மாதம் பார்த்து வரும் குவியலான புக்ஸின் பின்னே இவர்களது உழைப்பும் விரவிக் கிடக்கின்றதெனும் போது, மாக்கானாட்டம் நான் மட்டுமே ஒளிவட்டத்தை ஆக்கிரமித்துக் கொள்வது உதைக்கிறது! So ஞாயிற்றுக்கிழமைக்கு சந்திப்பை அமைப்பதாயின் அவர்களை அழைத்து வர ஏதுவாக இருக்குமென்று எண்ணினேன்!
ReplyDeleteஅருமை ஆசிரியரே அனைவரையும் அழைத்து வாருங்கள்
ReplyDeleteஎனக்கு புடிச்சது. என்னால வாங்க முடிஞ்சது எல்லாத்தையும் நா வாங்குவேன். அதை நான் செய்வேன். இதை விஜயன் சார் ஏத்துக்கணும். என்னை பொருத்தவரை இது தான் எனக்கு தலை போகிற காரியம்.
.3 “காமிக்ஸ் குடும்பம்...” ; ”கமர்கட் குடும்பம்” என்று கணிசமாய்ப் பீற்றித் திரிகிறோம் தான்! ஒரு மைல்கல் ஆண்டினில் அதை நடைமுறையும் படுத்தினால் என்னவென்று தோன்றியது! So இந்த முறை நண்பர்கள் குடும்ப சகிதம் வருகை தந்திட முடிந்தால் ரொம்பவே மகிழ்வோம்! And அதற்கு ஞாயிறு தானே வசதிப்படும்?
ReplyDeleteகுடும்பத்தை அழைத்து வருவது சிரமம் ஆசிரியரே
.அப்படியே அழைத்து வந்தாலும் என் மனைவிக்கு நீண்ட தூர பயணம் ஆகாது பொருளாதாரம் கை கொடுத்தால் எனது மகளை மட்டும் அழைத்து வர முயற்சி செய்கிறேன்
(எனக்கே ஒரு காமிக்ஸ் நண்பரின் ஸ்பான்சர்ஷிப்பில் தான் போனமுறை வந்தேன் 😀😀😀😀😀😀)
நமது லயனின் இந்த 40-வது ஆண்டினில் – தமது 40-வது பிறந்த நாட்களையும் கொண்டாடிடும் நண்பர்கள் ஈரோட்டுத் திருவிழாவில் நமது ஸ்பெஷல் விருந்தினர்களாக இருந்திடுவர்!
ReplyDelete40 ஐ தாண்டியச்சு ஆசிரியரே
ஆனால் லயன் பிறந்த ஜூலை மாதத்தில் தான் (ஜூலை 11) எனது பிறந்த நாளும் எதாவது பாத்து செய்யுங்க ஆசிரியரே
ஈரோடு போயி திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கேன் டியர் எடி ..
ReplyDeleteஏதாவது 5* ஓட்டல்ல ரூம் கெடைக்கலைன்னாலும் பரவாயில்ல .. நார்மல் ரூமா இருந்தாலும் எங்களுக்கு ஓகே தான் .. 😉😉
🙏🙏
ReplyDeleteஇம்முறையோ அரங்கத்தை மட்டுமே வாடகைக்கு எடுத்துக் கொண்டு, சாப்பாட்டு ஏற்பாடுகளை நாமே செய்து விட எண்ணியிருக்கிறோம்!
ReplyDeleteஇந்த வரியை எழுதும் போது எனக்கு லஜ்ஜை பிடுங்கித் தின்கிறது – simply becos ஏற்பாடுகளைச் செய்வதில் நமது பங்கு பூஜ்யத்துக்கு மிக மிக அருகில் இருப்பது தான்! தங்கள் வீட்டுக் கல்யாணங்களாய் பாவித்து பேனர் கட்டுவதில் ஆரம்பித்து, ஆடல் – பாடல் நிகழ்ச்சிகளை ரெடி பண்ணுவதிலிருந்து, பந்தி பரிமாறும் வேலை வரைக்கும் சகலத்தையும் இழுத்துப் போட்டுப் பார்த்துக் கொண்டது எல்லாமே நண்பர்கள் குழு தான்! இந்த முறையும் வாய் பார்க்கும் வேலையை மட்டுமே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க,
அப்படி சொல்லாதிங்க ஆசிரியரே
எங்களின் காமிக்ஸ் காதலுக்காக நீங்கள் அடிக்காத குட்டி கரணமா
கட்டை விரலை அடிக்கடி வாய்க்குள் விட்டு செய்யாத சாகசமா அவற்றை எண்ணிப் பார்த்தால் இதெல்லாம் ஜூஜூபி நீங்கள் திட்டம் போடுங்க ஆசிரியரேஇம்முறை இணைந்து எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்வோம்
This comment has been removed by the author.
ReplyDeleteஈரோடு family யோட போலாமா நண்பர்களே😍😁
ReplyDeleteலயன் காமிக்ஸ் 40 வது வருட விழா..💐😍
@ஆகஸ்ட் 4 ஞாயிறு😍💐
10 AM to 5 PM..👍
Non stop அலப்பறைகள் கேரண்டி..😍😘
ஆஹா.. மறுபடியும் கார்ட்டூன் மறுவருகை... நிறைய தொடர்கள் நிறுத்தப்பட்டுள்ளதே... என்னவாக இருக்கும்??
ReplyDeleteசீக்கிரம் சொல்லுங்கள் ஐயா..
போன முறை போல லைவ் டெலிகாஸ்ட்டில் கலந்து கொள்வேன்... HD வீடியோ எத்தனை நிமிடங்கள் இருந்தால் சுகப் படும் என்றும் சொல்லிவிடுங்கள். இல்லையெனில் மணிக்கணக்கில் பேச விஷயங்கள் உள்ளன...
என் போல ஆன்லைனில் கலந்து கொள்பவர்களுக்கு gift எதுவும் இல்லையா சார்??
லயன் காமிக்ஸ்ன் 40 வது ஆண்டு விழா ஏற்பாடுகள் பிரமாதம் எடிட்டர் சார் !!!
ReplyDeleteநேரில் கலந்து கொள்ள சாத்தியமிருந்தால் most welcome சார் : இல்லாங்காட்டி பாரிசிலிருந்து ஒரு வீடியோ எடுத்து அனுப்புங்களேன்?
Deleteவணக்கம், சூப்பர் சூப்பர் 👌👌👌
ReplyDeleteஈரோடு புத்தக விழாவுக்கு முன்பாக, படிக்காத கதைகள் அனைத்தையும் படித்துவிட வேண்டும்...!
Deleteதலைமேட்டில ஒன்னரை ஆண்டுகளாக 30-40 புத்தகங்கள் கைபடாமல் இருக்கின்றன!
இந்தமுறை இதற்கென நேரம் ஒதுக்கி படித்துவிட வேண்டும்!
ஆகஸ்டு கொண்டாட்டத்திற்கு
ReplyDeleteமுன்னோட்டம்
ஈரோட்டில் லயன் !!
சூப்பர் அறிவிப்பு சார் 💪💪💪
ஈரோட்டில் லயன்.. ii
ReplyDeleteநன்று.. நன்று ..i i.
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஇனிய காலை வணக்கங்கள் 💐💐💐
ReplyDeleteசூப்பர் தோர்கலுக்கு ஆதரவாக 138 ஓட்டுகள்💐💐🔥🔥🔥
ReplyDeleteடெக்ஸ் கேட்கவே வேணாம் 😊😁
செம்ம!! ஜெய் தோர்கல்!!
Deleteதல பேரை சொன்னாவே அதிரும்ல😍💪
Deleteபல்லடத்தில் கத்தை கத்தையாய் கரென்சி கைப்பற்றப்பட்டது - வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்ததா?
Deleteபுலனாய்வு தொடரவிருக்கிறது!!
🤣🤣🤣🤣🤣
Deleteவாவ்! சூப்பர்!!
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ஜம்பிங்கார் இன் ஃபுல் பார்ம்..
ReplyDeleteபட்டிமன்றத்தில இறக்கி விட்டுடுவோமா தோழர்களே😍😍😍???
அருமை
ReplyDeleteமாண்ட்ரெக் - ஸ்பெஷலை இந்த சைஸில் பார்க்க மிகவும் ஆவலோடு உள்ளேன்..
ReplyDeleteஅப்றம் - இனிவரும் க்ளாஸிக் - ஸ்பெஷல்களை (80's) இருவண்ணத்தில் வெளியிட முயற்சியுங்களேன்.. (நீங்கள் முன்பு குறிப்பிட்டீர்களே.. வண்ணத்தில் வெளியிடுவோம் என்று)
பழைய இதழ்களை இருவண்ணத்தில் பார்த்திருக்கிறேன்.
கதைக்களத்தின் எளிமையை
இருவண்ணம் வே
று லெவலுக்கு கொண்டு செல்கிறதே.. ப்ளீஸ் முயற்சி செய்யுங்களேன்..சார்.
நான் வழிமொழிகிறேன் 👍👍👌
Deleteபார்க்கலாம் சார்!
Deleteவாவ்.. ii நன்றி சார்..
Deleteசூப்பர் சார்...வண்ணத்த பார்த்து அலுத்து கண்களுக்கு இது வித்தியாசமாருக்கும்...நண்பர் சுஸ்கி விஸ்கி கூட இரு வண்ணம் நல்லாருக்கும்னார் போன வாரம் நான் பேசும் போது....8 கதைகளுக்கும் எட்டு இரு வண்ணங்கள்....
Deleteஆரஞ்சு...பச்சை...பஞ்சு மிட்டாய்...மஞ்சள்...ஊதா..நீலம்....சிவப்பு...நவாபழ நிறம்
அற்புதம்... ❤️❤️❤️❤️... 👍🙏..
ReplyDelete//பட்டிமன்றத்தில இறக்கி விட்டுடுவோமா தோழர்களே//
ReplyDeleteடபுள் ஓகே, சகோ
@Erode Vijay சகோ
ReplyDeleteஆடலுக்கு நம்ம ஜம்பிங் தலைவரையை இறக்கி விடுங்க
ஜம்பிங் செய்தே கலக்கிடுவாருங்க 😁😁😁
ReplyDeleteகொண்டாட்ட மனநிலைக்கு வாசகர்கள் வருவது குறித்துமிக்க மகிழ்ச்சி. ஈரோடு புத்தகத் திருவிழா சிறப்பிதழ்கள் மேலும் ஆர்வத்தை தூண்டுகின்றன. பல தரப்பினரும் ஒருங்கிணைந்து கூடி மகிழ்வது ஒரு சிறப்பான அனுபவமே. ஆயினும் பட்டிமன்ற தலைப்பு மிகப் பழமையானதும் காலாவதியான ஒன்றும் எனத் தோன்றுகிறது. பாட்டில் சிறந்தவன் பட்டுக்கோட்டையா கண்ணதாசனா என்ற பழைய லியோனி கால தலைப்பாகத் தெரிகிறது.
இன்றைய தேவை கார்ட்டூன்களா? கிராஃபிக் நாவல்களா?
கிராபிக் நாவல்கள் தாக்கம் ஏற்படுத்துவது தனிமனித உணர்வுகளிலா? சமுதாய உணர்வுகளிலா?
மா துஜே சலாம் vs துணைக்கு வந்த மாயாவி ஒரு ஒப்பீடு
இன்னமும் தர்க்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல புத்தகங்களை நாம் வெளியிட்டு இருக்கிறோம் தயவுசெய்து அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்
காலம் மாறிக்கொண்டே இருக்கிறது தல தளபதி போன்ற தலைப்புகளில் இருந்து விலகி நிற்க வேண்டிய அவசியமும் உள்ளது. கார்ட்டூன்கள் பற்றிய மறு விழிப்புணர்வும் கிராபிக் நாவல்களின் அவசியம் குறித்த உந்துணர்வும் இந்த காலகட்டத்தில் தேவையானதும் கூட. இது குறித்து பரிசீலிக்க வேண்டுகிறேன்
அருமை..👍👌
Deleteஆமாம்..
தலைப்பை மாத்துங்க..
இல்ல.. இரண்டு பட்டிமன்றமா வைங்க சார்..👍👌
ஒரு பட்டிமன்றம் : ஒரு கருத்தரங்கம்னு பண்ணிடலாமா நண்பர்களே?
Deleteஏற்கிறேன் சகோ
Deleteநமது சமீப காமிக்ஸ் காலத்துக்கு தேவையான தலைப்புகள்
சேலம் மீட்டில் இந்த டாபிக்கை கொண்டு சென்றிடலாம்
தலைப்பு ஏற்கனவே அறிவிக்க பட்டு விட்டது
ப்ளஸ் டெக்ஸ் மற்றும் டைகர் கதைகளில் ஹீரோயிஸம் தாண்டி, கதை ஓவியங்கள், அவர்களின் தாக்கம், அவர்களால் மற்ற வன்மேற்கு கதைகள் ஏற்படும் தாக்கம், இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து பேசிட இதை வாய்ப்பாக பயன்படுத்தலாம் என நினைக்கிறேன், சகோதரரே
//ஒரு பட்டிமன்றம் : ஒரு கருத்தரங்கம்னு பண்ணிடலாமா நண்பர்களே?//
Deleteஅருமை ஆசிரியரே
அப்படியே செய்துவிடலாம்
"இன்றைய தேவை கார்ட்டூன்களா? கிராஃபிக் நாவல்களா?"
Deleteரண்டும் வாணாம்னும் பேச ஒரு மூன்றாவது அணியும் இருக்குமே சார்?
எவ்வளவோ வாக்கெடுப்பு வெச்சிட்டோம்.... இதையும் கேட்டுவிடலாம் சார்..🤣
Deleteதலைப்பு..... 1.டெக்ஸ் vs டைகரா?
2.கார்டூனா? கி.நா.வா?
எது வென்றாலும் அத்தலைப்பில் ஜமாச்சிடலாம்....
ஆப்ஷன் 2. நல்ல ஐடியா செல்வம் அபிராமி சார்.
Deleteகாலையில் பதிவை படித்த பின் செய்த பின் முதல் வேலை
ReplyDeleteடைகர் சார்பாக பேசுவதற்கு ரெடி என்பதை மெயில் செய்ததுதான்
வாழ்த்துக்கள் .💐💐
Deleteகாசியப்பன் பாத்திரக்கடையிலே கூடுதலா ஒரு கோப்பைக்கு ஆர்டர் பண்ணனுமோ?
Deleteபாத்திர கடை என்று முடிவு செய்த பின்பு, கோப்பை வேண்டாங்க, ஆசிரியரே
Deleteஒரு தட்டு, டம்பளர் 😁😁😁
மாண்ட்ரெக் வருவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி @Edi Sir..😍😘
ReplyDeleteஎனக்கு இப்பவே "ஜாநாடு", இரண்டா பிரியற ரோடு, மாய சுவர், மாண்ட்ரெக், லோதார், நார்தா.. அப்புறமா அந்த "குக்".. அவரோட ஜூடோ ஃபைட்..
எல்லாம் கண்ணு முன்னாடி வந்து வந்து போகுதே...😃😍😘😀
ஹோஜோ. 😍
Deleteதெரான மறந்துட்டீங்களே ஜம்பிங் தலைவரே!
Delete😃😃😃
Deleteஇந்த xiii படிச்சதுல இருந்து அப்பப்ப ஏதாவது மறந்துடுதுங்க சார்..😀😀
ஆகா..ஆகா..ஆகாகாக...🔥🔥🔥
ReplyDeleteச்சும்மா பதிவே தெறிக்க வுடுது...
ReplyDeleteஆகஸ்டு முதல் தேதிக்கு டிக்கெட் போட்டாச்சே..
ReplyDeleteகொங்கு எக்ஸ்பிரஸ்ல குதியாட்டம் போட்டுகிட்டு வாரேனுங்கோவ்..❤️❤️❤️❤️
வாங்கய்யா வாங்க
Deleteஅடடே.... வாங்க சார்!
Delete❤️❤️❤️❤️😍😍
Deleteவணக்கம் செந்தில்..🙏🏻🙏🏻
Deleteமகிழ்ச்சி
Deleteபரணி அண்ணே..வணக்கமுங்க..😍😍
Deleteவணக்கம் குணா சார்
Deleteசேலத்தில் ஆப்பிரிக்க சதி..🔥🔥🔥🔥
ReplyDeleteதோர்கல் ரெகுலர் தடத்தில் கொண்டு வர வாக்களித்த வாலிப வயோதிக அன்பர்களுக்கு மங்களம் உண்டாகட்டும்....🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteஇது சேலத்து வைத்தியசாலை வெளம்பரம் மெரி தெரியுதே?
Deleteஎடி சார்...😂😂😂
Delete@Guna ji..😍😃
Deleteமங்களம் உண்டாகறது அவிங்க சஸ்பெண்ட்க்கு தெரியுமா?..😄😄😄
டெக்ஸ் அணி சார்பாக சகோதரர் ரம்மியை களத்தில் கலந்து சொல்லலாம் என நினைக்கிறேன்
ReplyDeleteடெக்ஸ் அணியனர் என்ன நினைக்கிறீர்கள் 😊😋
ஆஹா... இது கூட சூப்பர் அகுடியாவா தெரியுதே? ஏனுங் ரம்மி - அப்டியே பண்ணிப் போடலாமா?
Deleteசார்.. புலி பசித்தாலும் அதிகாரியை பேசாது..
DeleteMandrake spl. அருமை.... பிரமாதம்... பேஷ்.... பேஷ் 😍🥰💐
ReplyDeleteநீங்கள் நேரலையில் பார்க்கிறச்சே, உங்க பங்குக்கான ரவுண்டு பன்னை ஈ வி 'அவுக்'ணு கடிக்கிறதை வேணும்னா tight closeup லே காட்டலாம் சார்!
ReplyDeleteஇப்படி ஒரு காமிக்ஸ் பதிப்பகத்தைக் கொண்டாடும் வாசகர்களையும், மைல்கற்களைத் தாண்டும் கொண்டாட்டத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆசிரியரையும் வேறு எங்காவது காண முடியுமா என்று தெரியவில்லை! சிறப்பு விருந்தினராக, பிரெஞ்சு/பெல்ஜிய/இத்தாலிய/பிரிட்டிஷ் காமிக்ஸ் படைப்பாளிகள் அல்லது பதிப்பகங்களைச் சார்ந்தவர்கள் யாரையாவது அழைக்கும் எண்ணம் உள்ளதா சார்?
ReplyDeleteஎண்ணமெல்லாம் இருக்குது கார்த்திக் : but இக்கட்டு பட்ஜெட் தான்! நமது விருந்தினரை அங்கிருந்து இட்டு வருவதும் நமது பொறுப்பாகிடும் என்பதால்! And அவர்களையெல்லாம் நாம போற மாட்டுவண்டி economy class -ல் அழைத்து வர முடியாதே!
Deleteவணக்கம் கார்த்திக். நீங்கள் நினைத்தால் முடியும் 😀
Deleteஉண்மை.. பல லட்சங்கள்
Deleteஆகும்.. கார்த்திக் சகோ...
கம்பெனி... ஆஹா.. 😄😄😄
சரி விடுங்க, Alliance Française பாண்டிச்சேரில இருந்து உள்ளூர் பிரெஞ்சுக்காரர் யாரையாவது தூக்கிட்டு வந்துடலாம்! :-)
Deleteமாண்ட்ரேக் ஸ்பெஷல் வருகை அருமை...
ReplyDeleteவில்லன் ஆக்டன்... 8 ரகசிய தளங்களில், நமது முத்துக்காமிக்சில் இதுவரை தலை கேட்ட தலைவன், எத்தர் கும்பல் 8, எமனின் எண் 8 கதைகளில் மூன்று தளங்கள் மாண்ட்ரேடக் அழித்த கதைகள் வந்துள்ளன என நினைக்கிறேன்.
வரும் ஸ்பெஷல் இல் ஆக்டனின் மற்ற தளத்தையும் அழிக்கும் சாகசம் ஒன்றாவது தேர்வு செய்யுங்கள் எடிட்டர் சார்
"மாண்ட்ரேக் ஸ்பெசல் " கதைகள் தேர்வு குறித்துஆசிரியரின்கருத்து இதயத் துடிப்பை எகிறச்செய்துசந்தோச மீட்டரை உயரச் செய்கிறது.மாண்ட்ரேக் ஸ்பெசல் ரொம்போ ரொம்போ ஸ்பெஷலா இருக்கும்னு தோணுது. ராஜ சேகரன்
ReplyDeleteஇம்முறை நமது அலுவலக மதிப்பு மிக்க முக்கியஸ்தர்களையும் அழைத்து வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி...🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteI am available 🤩
ReplyDeleteMe too available
Deleteலயன் 40 ஈரோட்டில் மகிழ்ச்சி. சரியான தேர்வு.
ReplyDeleteசென்ற வருடம் பணிச்சுமை காரணமாக ஈரோட்டுக்கு என்னால் வருகை தர முடியவில்லை. இந்த வருடம் எப்படியாவது வர முயற்சி செய்கிறேன்.
ReplyDeleteவாருங்கள் சார்.
Deleteவாவ்....இந்த முறையும் ஈரோடு மறக்க இயலா நினைவாக இருக்கும் என்பது உறுதி சார்...
ReplyDeleteஆவலுடன் காத்திருக்கிறேன்....
மாண்ட்ரேக் சிறப்பிதழ்..எதிர்பார்க்க வில்லை சார்...சூப்பர்..அதே போல் ஜான் மாஸ்டர் அவ்வளவு தானா என நினைத்த பொழுது சேலத்தில் என்று உறுதிபடுத்தியதற்கு நன்றிகள் சார்..
ReplyDeleteஏடிட்டர் சார்...
ReplyDeleteலயன்/ முத்து காமிக்ஸ் ஆதர்ஷ நாயகர்/நாயகி ஸ்பெஷல் வெளியீடுகள்/ அறிவிப்புகள் அருமை.
அதேபோல் திகில் காமிக்ஸின் டாப் ஹீரோ ரிப்போர்ட்டர் ஜானியின் ஸ்பெஷல் வெளி வந்தால்..
நம் நண்பர்கள் பலரின்நீண்டகால கோரிக்கையான, எதிர்பார்த்த கதைகள் எங்களுக்கு கிடைக்கும். சார்
This comment has been removed by the author.
Deleteசார்... ஒரு தொடரில் இன்னமும் லைவாக கதைகள் இருக்கும் போதோ ; நாம் இன்னமும் வெளியிட்டிருக்கா கதைகளும் கணிசமாய் இருக்கும் போதோ- பழசுக்குள் பவனி வருவதில் ஆர்வம் எழ மாட்டேங்குது!
Deleteஜானி தொடரில் version 2.0 பிரெஞ்சில் சக்கை போடு போட்டு வருகிறது! அவை இன்றைய உலகை ஒட்டிப் பயணிக்கும் லேட்டஸ்ட் சாகசங்கள்! அவற்றையெல்லாம் பரிசீலிக்க வாய்ப்பு தேடுவோமே?
காமிக்ஸ் என்னும் அற்புத கலை
ReplyDeleteவடிவம்.. தமிழகத்தில் அஸ்தமனம் ஆகிடுமோ.. என்று
ஒரு சமயத்தில் அஞ்சினேன்...
வளர்பிறை போல் இப்போ
ஜொலிக்கிறது.. ❤️❤️❤️...
நன்றி சார்... மிக்க மகிழ்ச்சி..
இப்படி விழா எல்லாம் நடக்கும்
என்று உள்ளூர ஆசைப்பட்டேன்...
முத்து காமிக்ஸ் க்கு... லயன் காமிக்ஸ் க்கும் நடக்கிறது...
ஆஹா... அந்த பிரபஞ்சத்துக்கு
நன்றி.. ❤️👍🙏.. நம்முடைய
தீவிரமான ஆவலை" அது "
நிறைவேற்றி விடுமாம்... அதன் பெயர் தான் "பிரபஞ்ச ஆற்றல்"
எனப்படுமாம்... எங்கோ படித்த
நினைவு.. ❤️🙏
Paulo coelho- the alchemist
Deleteகடந்த முறை கிரிக்கெட் விளையாட சென்றதால் ஈரோடு புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி கிடைக்கவில்லை. இந்த முறை நோ டூ கிரிக்கெட் எனவே ஈரோடு புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள 99% வாய்ப்பு உள்ளது.
ReplyDeleteபாலையில் ஒரு போராளி -
ReplyDeleteMr. நோ. ரொம்பவே வசிகரிக்க ஆரம்பித்து விட்டார்..
இந்த கதை திரைப்படமாக ரசிப்பதை விட காமிக்ஸாக - அதே வசனங்களை முன்பக்கத்திற்கு சென்று படித்து ரசிப்பது.. வில்லன் கூட அந்த முன்னுரை வசனத்தை கேட்பதில் பிடிவாதமாக இருப்பது..
மொத்தத்தில் வில்லனை நாங்களாக உருவகப்படுத்தி படிக்கும் போது இந்த கதை எப்படி முடியப்போகிறது என்று
என்று எதிர்பார்க்கும் போது எந்த சேதாரமும் இல்லாமல் வில்லனின் ஒருவித மனத்தெளிவோடு முடிவது..
ரொம்ப பிடித்த கதையாகி விட்டது..
விஜயன் சார், காலை 10 முதல் மாலை வரை அருமையான திட்டமிடல். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சரியான நேரத்தில் ஆரம்பித்து சரியான நேரத்தில் முடிந்தால் ரசிக்க முடியும். அதே போல் அதிக இடைவெளி இல்லாமல் அடுத்து அடுத்து நிகழ்ச்சிகளை நடத்தினால் சரியான நேரத்தில் முடித்து நண்பர்கள் தங்கள் வீடு நோக்கி சென்று மறுநாள் அலுவலகம் செல்ல முடியும். நிகழ்ச்சிக்கு நடுவில் நண்பர்கள் யாரும் தேவையில்லாமல் மேடையில் ஏறி சீப் guestகளை தொந்தரவு செய்யாமல் பார்த்து கொள்வது நலம். கடந்த சில விழாக்களில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தன, இதனை நண்பர்கள் அனைவரும் புரிந்து கொண்டு முழு ஒத்துழைப்பு கொடுப்பது நலம் 🙏🙏🙏🙏
ReplyDeleteஅசத்தலான அறிவிப்புகள், ஆரவாரமான போட்டிகள், பரபரப்பூட்டும் பட்டிமன்றங்கள், மரத்தடி கும்மியடிகள், மதிய விருந்துகள், ஆடியோ விஷுவல்கள் போன்றவை அட்டகாசம் எனில்,
ReplyDeleteகுடும்பத்தினர் தங்குவதற்கு அழகான ஏற்பாடுகள், 40 ஆவது வயதை கொண்டாடும் வாசகர்களுக்கு ரயில் டிக்கட்ஸ் free வசதி, அனைவருக்கும் பரிசு போன்ற பெருந்தன்மையான அறிவிப்புகள் அமர்க்களம்👌👌👌😍
காலை 10மணி என்று கூறினாலும் நண்பர்கள் வருவதற்கு சுமார் 11மணி ஆகிவிடுகிறது .நிகழ்ச்சிகளை ஆரம்பிக்க 12மணியே ஆகிவிடுகிறது.அதாவது ஒரு பொழுது முடிந்துவிடுகிறது.எனவே ஆரம்ப நேரம் 9.a.m.என்பதாக அறிவித்து நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம் என்று கருதுகிறேன்.9 a.m..என்றாலும் அனைவரும் வருவதற்கு 10a.m.மணி ஆகிவிடும்.10to2நிகழ்ச்சிகள் பிறகு லஞ்ச் என்று ஒரு நிறைவு இருக்கும்
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்
Deleteஇல்லை என்றால் சரியாக 10 மணிக்கு விழாவை ஆரம்பித்து விடுங்கள் சார்.
Deleteகாலை 10.00 மணிக்கு ஷார்ப்பா ஆரம்பிச்சிட வேண்டியதுதான்..😍😘
ReplyDeleteசீக்ரம் வந்தா ஸ்பான்ச் கேக்கு😍, லேட்டா வந்தா காஞ்ச கேக் ..😬 அப்படின்னா அரங்கம் 9.30 மணிக்கே நிறைந்திடுமே..😍😘😘😘
அப்ப காலைலொருக்கா...லேட்டா ஒருக்கா...ரெண்டு கேக்
Deleteமாண்ட்ரேக் கதைகளின் பக்கங்கள் எவ்வளவு சார்?க்ளாசிக் கதைகளின் எண்ணிக்கை வரவர குறைந்துகொண்டே போகிதே.. ஏன் சார்?
ReplyDeleteஈரோடு புத்தக விழாக் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteTicket pottu vachurukken eppaidyachum Vara pakkanum
ReplyDeleteஈரோடு புத்தக விழா சிறப்புற நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிழாவை லைவ்வாக காட்டினால், அமெரிக்காவில் இருந்தபடி பார்த்து ரசிக்கிறேன்.
செவ்வாய் முதல் அடுத்த நான்கு மாதங்கள் அமெரிக்காவில் இருப்பேன்.
வணக்கம் ஆசிரியரே !
ReplyDeleteஈரோடு புத்தக விழா சிறப்புற நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
விழாவை வீடியோ எடுத்து போட முடியுமா சார் ?
அமெரிக்காவில் இருப்பதால் விழாவுக்கு வர இயலவில்லை.
மாண்ட்ரேக் கதைகள் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் .
YouTube live telecast உண்டு .
Deleteவிஜயன் சார், பஸ் மற்றும் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் காரில் வருபவர்களுக்கு பெட்ரோல் அலவனஸ எதுவும் உண்டா சார்🤔
ReplyDelete
Deleteஏன் இல்லாமல்?. பயணிக்கும் வாகனத்திற்கு FC கூட ஏற்பாடு செய்யப்படும். பயணப்படி கேட்பதால் பஞ்சபடியும் வழங்கப்படும். தங்கும் லாட்ஜில் ஒருவேளை லிப்ட் வேலை செய்யாவிடில் நான்கு அல்லது ஐந்தாவது மாடிக்கு தூக்கி செல்ல பாகுபலிகள் ஏற்பாடு செய்யப்படுவார்கள். பயணக் களைப்பில் சாப்பிட சிரமமாக இருந்தால் ஊட்டி விட ஆட்கள் ஏற்பாடு செய்யப்படும். பயணம் என்பதால் ரிஸ்க் அலவன்சும் உண்டு.😄
Pfb! எடிட்டர் பாவம் pfb. ஏற்கனவே ஒரு கல்யாணம் நடத்தும் அளவுக்கு அவருக்கு பொருளாதார சுமை ஏற்பட்டிருக்கிறது. அவருடைய பெருந்தன்மையை எக்ஸ்பிளாய்ட் செய்ய வேண்டாமே. வசதி குறைவானவர்கள் அவருடைய ஏற்பாடுகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். வசதி மிக்கவர்கள் TRIVAGO, IBIBO போன்ற ஆப்களை உபயோகப்படுத்தலாம்.
ஆண்ஆடுத்...கார்ல் உக்காந்து டுர்ரு டுர்னு சவுண்டு விடனும்....கார் போற மாதிரியே இருக்கும்
Deleteசெல்வம் அபிராமி சார், உண்மை. நான் ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே எழுதி இருந்தேன். ஆசிரியர் நிலமை நன்றாகத் தெரியும் சார்.
Deleteம்ம் நமக்கு சுட்டு போட்டாலும் நகைச்சுவையாக எழுத வராது போல 😄
நான் எழுதியது தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
Delete@டின்டின்
Deleteசெல்வம் அபராமி சகோ,
பரணி சகோ அவ்வப்போது காமெடி முயற்சிப்பார், ஆனால் அவருக்கு வராது 😋😋😋
He is a pakka gentleman...ஆசிரியரிடம் கலாய்க்க மட்டுமே செய்தார்😊😊😊
ஸ்டீலுக்கு சீக்கிரம் புரிந்து விடும்,
ஸ்டீல் வந்து ஏலே போலே அங்கிட்டுனு சொல்லுவார்
புரிதலுக்கு நன்றி ரம்யா. 🙏
Delete
Delete///நமக்கு சுட்டு போட்டாலும் நகைச்சுவையாக எழுத வராது போல ///
சரி விடுங்க PfB! இதுபோல 'பெட்ரோல் அலவன்ஸ்' சமாச்சாரங்களை நீங்க ஒருவேளை சீரியஸாவே கேட்டாலுமே கூட எடிட்டர் அதை காமெடியாத்தான் எடுத்துக்கிடுவார்! :)
@ கடல் சகோ..
Deleteஅருமையான விளக்கம்! நல்ல புரிதல்!! சூப்பர் சகோ!
@ செனா அனா
DeletePfBக்கு காமெடி சரியாக வராவிட்டாலும், அவர் தன் 'பெட்ரோல் அலவன்ஸ்' பின்னூட்டத்தின் இறுதியில் ஒரு கண்ணடிக்கும் எமோஜியைப் பயன்படுத்தியிருந்தாலாவது நீங்கள் அதைக் காமெடியாக எடுத்துக் கொண்டிருக்கும் வாய்ப்புண்டு தான்! ஆனால் அவர் அதையும் சரியாகச் செய்யவில்லை! :)
@பரணி சகோ 😊😊💐💐💐
Delete@ஈரோடு விஜய்
Deleteநன்றி சகோ 😊😊😊
ஈரோட்ல நாம கொயந்தைகெல்லா ஓடி புடிச்சு வெள்ளாட்ளாங்க நம்ம கூடவே இட்னு வர தாத்தாக்ளுக்கு ஏதாச்சும் பொயுதுபோக்கு ஏற்பாடு பண்ணுங்கய்யா..
ReplyDelete(போனது மிடில)
This time I will surely come
ReplyDelete