Powered By Blogger

Wednesday, September 30, 2020

ஒரு ஆன்லைன் லூட்டி !

 நண்பர்களே,

வணக்கம். உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ; ஆபீஸ் மாடியில், கடைக்கு வந்து சில மாதங்களே ஆன டெக்ஸ் வில்லர் ; லக்கி லூக் ; டைகர் ; ட்யுராங்கோ ; XIII ; மாடஸ்டி மற்றும் பலர் பங்கேற்கும் ஆ-ன்-லை-ன் பு-த்-த-க-விழா  !!! கா -ண-த் - தவறாதீர்கள் !!




**CINEBOOK பிரதிகளுக்கும், நடப்பாண்டின் (புது) வெளியீடுகளுக்கும் 10% டிஸ்கவுண்ட் & பாக்கி அனைத்து இதழ்களுக்கும் 20% டிஸ்கவுண்ட் இருந்திடும் ! 

**அப்புறம் ஆயிரம் ரூபாய்க்கு மேலான ஆர்டர்களுக்கு தமிழகத்தினுள் கூரியர் கட்டணம் இராது ! அதென்ன - பெங்களூருக்காரங்க உம்ம கண்ணுக்குத் தெரிலியா ? என்ற வினவல்கள் இருந்திடுமென்பது புரிகிறது தான் ! ஆனால் அண்டை மாநிலங்களுக்கான கூரியர் கட்டணங்கள் கிட்டத்தட்ட டபுள் என்பதாய் சாத்துகிறார்கள் ; so சலுகையினை அனைவருக்கும் வழங்குவது சிரமமாகிறது ! Sorry guys !

**அப்புறம் அந்த 2 ஸ்பெஷல் இதழ்கள் என்னவென்பதை நாளைக் காலையில் நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன் guys ? 'ஆயிரம் பக்க புக்  ; கொலைப்படை ; விண்வெளிப் பிசாசு ..இத்யாதி..இத்யாதி' என்ற க்ற்பனைகளின்றி casual ஆக எட்டிப் பார்த்தீர்களெனில் அந்த இரண்டு இதழ்களுமே உங்களை ஏமாற்றிடாது ! 

அப்புறம் எப்போதும் போலவே அந்த 2 இதழ்கள் பின்னிலும் ஒரு குட்டிக் கதையுள்ளது ! "இன்னொரு குட்டிக்கதையா ???" என்று நீங்கள் மூர்ச்சையாகிட்டாலுமே சோடா வாங்கி 'புளீச்' என்று முகத்தில் தெளித்து எழுப்பி, ஞாயிறு பதிவில் கதையைச் சொல்லிப்புடுவதாய் உள்ளேன் ! And இந்த வார ஞாயிறின் பதிவு அநேகமாய் vlog ஆகவே இருந்திடும் ; simply becos இவ்வாரம் முழுக்கப் பேனா பிடித்து புஜமெல்லாம் கழன்று விட்டது ! பதிவுக்கென மேற்கொண்டும் எழுத சுத்தமாய் தம் நஹி !! 

**இது வரையிலும் சுமார் 60 நண்பர்கள் போன் செய்து தங்களுக்கான நேர ஸ்லாட்களைப் பதிவு செய்துள்ளனர் என்பது ரொம்பவே pleasant surprise !! 

எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி வீசிப் பார்க்கும் இந்தக் கல்லுக்கு மாங்காய்ப் பத்தை பலனாகிட்டாலுமே சந்தோஷமாய்க் கடித்திடுவோம் ! மனிடோவின் அருளால் மாங்காயோ ; மாம்பழமோ விழுந்திடும் பட்சத்தில் லுங்கியை பல்லில் கவ்விக்கொண்டு ஆபீஸ் மேஜையில் நானும், அண்ணாச்சியும் ""ஹெய்ய....ஓரக்கண்ணால்..."என்று தனுஷ் பாணியில் ஒரு டான்சைப் போட்டாலும் ஆச்சர்யப்படலாகாது ! Bye folks ! See you around ! And if you find the time, please do give this a try !!

Saturday, September 26, 2020

ஜானி ...ஜானி..யெஸ் பப்பா !

 நண்பர்களே,

வணக்கம். பீலா விடுவதில் நிறையவே நடைமுறைச் சிக்கல்கள் உண்டு தான்! சாமி அந்த ஆந்தை முழிகளை குத்துவாரோ – இல்லையோ, பீலாக்களின் மறுமுனையிலிருப்பது நீங்களாக இருப்பின், சூட்டோடு சூடாய் மூக்கில் குத்தி விட்டிருப்பீர்கள் ! “உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக” என்ற பில்டப்பைப் பண்ணிப்புட்டு – “வெடிக்க மறந்த வெடிகுண்டையோ”; “தூங்கிப் போன டைம்பாமையோ”; “துயில் எழுந்த பிசாசையோ” உங்கள் தலைகளில் கட்டி விட்டால் – குத்து விடும் உங்கள் முனைப்புகளில் தவறே இருக்காது தான்! ஆனால் இது தவிர்த்துமே ஒரு நடைமுறைச் சிக்கலுள்ளது – பீலாக்களின் பின்தொடார்ச்சியாய் ! அது தான் – மெய்யாலுமே ”புலி வருதுங்கோய்” என்று நான் கூவிட அவசியமாகிடும் நேரங்களில், நீங்கள் விடக்கூடிய மெகாக் கொட்டாவிகள் ! ‘அட… இந்தப் பளாபளா மண்டையனுக்கு பில்டப்பெல்லாம் பால்பன் சாப்பிடற மாதிரி ; இதுவுமே அந்த ரகம் தான் !‘ என்று நீங்கள் கருதினால் தவறு நிச்சயம் உங்கள் மீதிராது ! சரி… இப்போது இந்த ஆராய்ச்சிக்கு என்ன அவசியம் ? என்ற கேள்வியா.... அவசியம் எழுந்துள்ளதே – ”புலி வருதுடோய்; செம ஷார்ப் நகங்களுடன் செம தில்லாய் ஒரு புலி வருதுடோய்!” என்று நான் கூவிட! இது என்ன புதுக் கரடி ? என்று கேட்கீறீர்களா- சொல்கிறேனே...! காத்திருப்பது ஒரு சாதாப் புலியல்ல… கோட் & சூட் போட்டதொரு துப்பறியும் சூரப்புலி ! அதிலும் பழசின் கெத்தையும், புதுசின் பரபரப்பையும் ஒன்றிணைத்து நடைபோடக் காத்திருக்கும் புலனாய்வுப் புலி ! Without anymore ado – இது காத்திருக்கும் ரிப்போர்ட்டர் ஜானியின் டபுள் ஆல்பமான ”ஆதலினால் கொலை செய்வீர்” இதழுக்கான preview படலமே என்பதைப் போட்டு உடைத்து விடுகிறேனே !

கிட்டத்தட்ட கடந்த 100 மாதங்களாய், எனது நாட்கள் புலர்வதும், நிறைவுக்கு வருவதும் வண்டி வண்டியாய்க் கதைகளோடும், வண்டி வண்டியாய் தொடர்களோடும் தான் ! மொழிபெயர்ப்புப் பணி ; எடிட்டிங் ; ப்ரூஃப்ரீடிங் என்று ஏதேனும் சமாச்சாரங்களால், தினப்படி என் மேஜைகள் நிறைந்து நிற்கும்! So ஒரு புள்ளியில் – ‘ப்பா… இந்த மாசம் பின்னிப்புட்டோம்லே!! என்று ஹிட்டடித்ததொரு பராகுடாவையோ ; பிஸ்டலுக்குப் பிரியாவிடையையோ பார்த்தபடிக்குப் பல்லிளித்துக் கிடக்கும் சொகுசெல்லாம் நான்கே நாட்களைத் தாண்டிடாது ! அதற்குள் அட்டவணையின் அடுத்த மாதத்துக் கிங்கரப் பணி ரெடியாகக் காத்திருக்கும் ! And அடுத்த கத்தைக்குள் புகுந்திடும் நேரம் – மண்டைக்குள் எல்லாமே ஒருவித ‘மசமச‘ கலரில் தான் தோற்றமளிக்கும் ! ஒரு மாதம் நிறைவு காண்பதும், அடுத்தது துவங்குவதும் – கன்னியாகுமரியில் சமுத்திரங்கள் ஏதோவொரு புள்ளியில் ஒன்றிணைவது போல ஒன்றோடொன்று merge ஆகி நிற்கும் ! So நாளாசரியாய் ஒருவிதச் செக்குமாட்டு routine குடிகொண்டிருப்பது தவிர்க்க இயலாது போய்விடும் ! இடையிடையே ஒரு ”பந்தம் தேடிய பயணமோ” ; ஒரு “பிரிவோம் சந்திப்போமோ” பிரசன்னமாகும் போது தான் ஒரே ரகப்பணிகளுக்கு மத்தியிலுமே மண்டைக்குள் பல்ப் எரிவது சாத்தியமாகும் ! 

அந்த விதத்தில் பார்த்தால் 2020 has been quite decent ! க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் ; டெக்ஸ் சாகஸங்கள்; டயபாலிக்; மாடஸ்டி தொடர்கள்; ட்ரெண்ட்; ட்யுராங்கோ என்ற சலனமற்ற பயணத்தின் மத்தியில் சில அதிர்வேட்டுக்கள் அவ்வப்போது பற்றித் தெறித்து வந்துள்ளன – தானே?!

- பிழையில்லா மழலை (Damocles)

- SODA

- 2132 மீட்டர்கள்

- பிரிவோம்… சந்திப்போம்!

- எதிரிகள் ஓராயிரம்

- பந்தம் தேடிய பயணம்

- கண்ணான கண்ணே!

- தனித்திரு… தணிந்திரு

என்று இம்முறை சற்றே வித்தியாசம் காட்டி நின்ற இதழ்களின் எண்ணிக்கை கணிசம் தானே ? வழக்கமான கதைகளில் பணியாற்றுவதை விடவும், இது போன்ற மாறுபட்ட களங்கள் கண்ணில்படும் போது உள்ளுக்குள் துளிர்விடும் ஒரு மெல்லிய உற்சாகமானது, பணிகளில் அயர்ச்சி தெரியாது செய்து விடுவது வழக்கம். ஆனால், ரொம்ப நாட்களுக்குப் பின்பாய், “அயர்ச்சியாவது - புண்ணாக்காவது; இந்த ஆல்பத்தை எழுதியே தீரணும்டோய்!” என்ற உத்வேகம் பொங்கியது இம்மாதம் தான் !

ரிப்போர்ட்டர் ஜானி ! 1986 முதல் இவருடனான நமது பரிச்சயம் தொடர்கிறது ! இந்த 34 ஆண்டுகளில் இவரது சாகஸங்களில் எத்தனையைப் போட்டிருப்போம் ? என்ற புள்ளிவிபரமெல்லாம் கைவசம் நஹி…ஆனால் சுமார் 30 இதழ்களிலான இவருடனான பயணத்தின் போது இரண்டே விஷயங்கள் மட்டுமே என்மட்டிற்கு மனதில் தங்கியுள்ளன : முதலாவது : மனுஷனின் கதைகளின் கடைசி இரண்டோ / மூன்றோ பக்கங்களில் ஒட்டுமொத்தப் புதிர்களையும் விடுவிக்க கதாசிரியர் மெனக்கெடும் பாணி ! பாசமானதொரு தாய், மசக்கையான பிள்ளைக்குச் சாப்பாட்டு ஐட்டங்களைத் திணியோ திணியென்று திணிக்கும் பாணியில் – ஜானியின் ஒவ்வொரு ஆல்பத்தின் இறுதிப் பக்கங்களிலும் கதாசிரியர் – ‘அந்தத் தடயம்… இந்தத் துப்பு… இங்கே விடைகள்… அங்கே கேள்விகள்‘ என்று திணித்துத் தள்ளுவதையும், அவற்றை முழுசாய், உருப்படியாய் புரிந்து கொண்டு பணியாற்றுவதற்கு நாக்குத் தள்ளுவதுமே நினைவில் நிற்கும் முதல் சங்கதி ! இரண்டாவது – அந்தக் கேரட் மண்டையுடனான பளீர் சிரிப்பு ! 

‘டக்‘கென்று யோசித்துப் பார்க்கும் போது – ‘சிரித்த முகம்‘ என்ற அடையாளத்துக்கு அருகதையுள்ளோராய் எனக்குத் தோன்றுவதும் இரண்டே பேர் தான் : முதலாமவர் – ரிப்போர்ட்டர் ஜானி & இரண்டாமவர் ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப்கிர்பி ! பாக்கிப் பேரெல்லாம் இறுகிய முகங்கள்; முறைக்கும் ரகங்கள் என்றே சொல்வேன்! Give it a moment’s thought folks:

டிரெண்ட் : ஒரு கம்பீரமான முகம் – ஆனால் கொரோனாவுக்கு மருந்து தேடுவதும், கனேடியக் காவலரின் முகத்தில் புன்சிரிப்பைத் தேடுவதும் சமஅளவிற்குச் சிரமமான முயற்சிகள் தானே ?

ட்யுராங்கோ : ‘சி-ரி-ப்‘ என்று ஆரம்பிப்பதற்குள் சுட்டுத் தள்ளிவிட்டுத் தன்பாட்டுக்கு நடையைக் கட்டிவிட மாட்டாரா மனுஷன்? 

SODA : "அட… போடா… மனுஷனுக்கிருக்கும் பிடுங்கல்களுக்கு இளிப்பு ஒன்று தான் குறைச்சல் ?"  என்பாரோ ??

XIII : தெய்வமே… இந்த ஆட்டத்துக்கே ஞான் வரில்லா…!!

தோர்கல் : ரம்பயமான ஆணழகனே… ஆனால் போகும் திக்கெல்லாம் ஆரிசியாவை இட்டாண்டு போகின்றவரைச் சிரிக்கக் கேட்பது டூ மச்சோ ?

டெக்ஸ் : வெள்ளிமுடியாரைக் கலாய்த்தாதொழிய ‘தல‘ டெரர் பார்ட்டியன்றோ ?

மர்ம மனிதன் மார்டின் : ஆங்… அது வந்து… என்ன சொல்ல வர்றேன்னா…?  சரி.. விடுப்பா....!

ஜேம்ஸ் பாண்ட் : 007 சிரித்திட என்ன அவசியமென்பதை அறியாதோரா நாம் ?

டயபாலிக் : வாணாம்… அழுதுருவேன் !

Of course கார்ட்டூன் பார்ட்டிகளையோ; மகளிரணியையோ இந்த அலசலுக்கு உட்படுத்துவது நியாயமாகாது என்பதால் அவர்களை ஆட்டத்துக்குச் சேர்த்திடவில்லை! So “புன்சிரிப்பு” என்ற நினைவுகளை எனக்குள் விதைத்து வைத்த வகையிலும் ரிப்போர்டர் ஜானி என்மட்டிற்கு memorable!

ஆனால் பணியாற்றும் போது, உராங்குட்டானாய் முழிக்கச் செய்பவரும் இவரே ! “சிகப்புப் பாதை” என்றதொரு பாக்கெட் சைஸ் b&w இதழினில் நான் அந்நாட்களில் போட்ட மொக்கை இன்றளவிற்கு மறக்கவில்லை ! ஆனால் – ஜானியின் இந்த இடியாப்ப template–ல் சின்னதாகவொரு மாற்றத்தை உணர முடிந்தது - சென்றாண்டினில் ! And that was because ஜானி 2.0 தொடருக்குப் புதுக் கதாசிரியர் Zidrou தந்திருந்த treatment ரொம்பவே refreshing ஆக இருந்தது. கதையின் ஓட்டத்தோடு ஒன்றிடுவதோ ; க்ளைமேக்ஸில் சிண்டைப் பிய்க்காது பயணிப்பதோ - பெரிய சிரமமாகவே தோன்றவில்லை ! அதனால் தான் Old is Gold என்பதில் தீரா நம்பிக்கை கொண்ட உங்கள் மத்தியில் – ‘என்ன தான் இருந்தாலும், பழசு தான் டாப்!‘ என்ற முணுமுணுப்பு உரக்கக் கேட்டு வந்தாலுமே, நடப்பாண்டில் நான் ஜானி 2.0 ஐ உட்புகுத்த ஆசைப்பட்ட்டேன் ! And even better - ஒரே இதழில் க்ளாஸிக் ஜானி Vs. புதுயுக ஜானி மோதிக் கொண்டால் ஒரு தீர்க்கமான முடிவு பிறக்குமென்று பட்டது ! அதன் பலனே ”ஆதலினால் கொலை செய்வீர்!

ரிப்போர்டர் ஜானி கதைகள் என்றைக்குமே நமது கருணையானந்தம் அவர்களின் பொறுப்பாக இருந்து வந்துள்ளதால், நான் பெருசாய் அதற்குள் தலைநுழைக்கப் பிரியப்பட்டதில்லை! இம்முறையும் அந்த routine–ல் மாற்றமிருக்கவில்லை ; 2 ஆல்பங்களையும் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளோடு, லாக்டவுணுக்கு முன்னமே அனுப்பி விட்டிருந்தோம் ! And க்ளாஸிக் ஜானியின் தமிழாக்கம் இரண்டு வாரங்களில் டாணென்று வந்தும் சேர்ந்தது ! ஆனால் அந்த ஜானி 2.0 கதையின் சார்பாய் எனக்கு வந்தது அங்கிளிடமிருந்து போன் மட்டுமே : “இது அவ்ளோவா புரியலியேப்பா… கஷ்டப்பட்டு பத்துப் பதினைந்து பக்கங்களை எழுதிப் பார்த்தாச்சு – மேற்கொண்டு இழுக்க மாட்டேன்கிறதே!‘” என்று சொன்னார். ‘சரி… ரைட்டு… அதைத் திருப்பியனுப்பிடுங்க ; நிறைய நேரமிருக்குது… பார்த்துக்கலாம் !" என்று சொல்லி வைத்தேன் பந்தாவாய் ! ஆனால் லாக்டௌனோடு “சோம்பல்” எனும் புதுவரவும் இணைந்து  கொள்ளுமென்பதை நான் எதிர்பார்க்கவேயில்லை தான் ! "அப்பாலிக்கா பார்த்துக்கலாம்…" என்றபடிக்கே நாட்களைக் கடத்த – ஒரு சுபயோக சுபதினத்தில் – அக்டோபர் வெளியீடு : ”ரிப்போர்டர் ஜானி” என்று எனது டயரி அறிவித்தது ! ஓடவும் முடியாது – ஒளியவும் முடியாது - என்றான பின்னே முதல் 10+ பக்கங்களின் தமிழ் டைப்செட்டிங் செய்யப்பட்ட pages & பாக்கியிருந்த 40+ பக்கங்கள் + பிரெஞ்சிலிருந்தான ஸ்க்ரிப்ட் என்று எடுத்துக் கொண்டு அமர்ந்த போது – வயிற்றைக் கொஞ்சமாய்க் கலக்கியது. நமது french மொழிபெயர்ப்பாளரோ பரீட்சைப் பேப்பரில் சுமார் 40 பக்கங்களுக்கு மணி மணியான கையெழுத்தில் ஆங்கில ஸ்க்ரிப்டை வெளுத்து வாங்கியிருக்க அதை வெறித்துப் பார்த்தபடிக்கே கொஞ்ச நேரத்தைக் கடத்தினேன்! For the umpteenth time அவரது ஆற்றலை எண்ணி வியக்காதிருக்க இயலவில்லை ! ‘எனக்கு ஒளிவட்டமே ஒத்துக்காது!‘ என்று ஒதுங்கிக் கொண்டு, பெரிதாய் சன்மானங்கள் சார்ந்த எதிர்பார்ப்புகளுமின்றி கடந்த 19 ஆண்டுகளாய் ஒரு தேர்ந்த இயந்திரமாய் பிய்த்து உதறி வருபவருக்கு வயது 67 என்றால் நம்ப முடியவில்லை தான்!

ரைட்டு. 67-ல் அவர் செய்வதை - 53-ல் நீ செய்யாட்டி என்ன புடலங்காய்க்குப் பீற்றிக்கணும்?” என்று என்னை நானே கேட்டுக் கொண்டு, கதைக்குள் புகுந்தேன். கருணையானந்தம் அங்கிள் குறிப்பிட்டிருந்தது சரி தான் என்பது சீக்கிரமே புரிந்தது. முதல் பத்துப்-பதினைந்து பக்கங்களில் தமிழ் ஸ்க்ரிப்ட் கோர்வையே இன்றி – இலக்கின்றிப் பயணிப்பது புரிந்தது ! ஆனால் ஏதோ ஒருவித ஈர்ப்பு கதையின் ஓட்டத்தில் தென்படுவதை உணர முடிந்தது ! முதல் 10 பக்கங்களின் பெரும்பகுதியை மாற்றியமைத்த கையோடு, தொடர்ந்தவற்றை பிரெஷ்ஷாக எழுத ஆரம்பித்தேன் ! ஆங்கிலத்தில் ஒரிஜினல்கள் இல்லாத பட்சங்களில் கதைகளை முழுசாய்ப் படித்து விட்டு எழுத ஆரம்பிக்கும் பொறுமைகள் என்றைக்குமே இருந்ததில்லை எனும் போது – இந்த முறையும் அதனில் மாற்றங்கள் இருந்திடவில்லை ! Take it as it comes என சிறுகச் சிறுக வண்டி நகர, நகர – எனக்கு இந்தப் புதுக் கதாசிரியர் மீதான ஈர்ப்பு கூடிக் கொண்டே போனது!

ஜானியின் அந்த பளீர் புன்னகையினையோ ; நமக்குப் பரிச்சயப்பட்டு விட்டுள்ள அந்த youthful தோற்றத்தையோ, புது ஓவியர் Simon VAN LIEMT பறித்துக் கொண்டு விட்டிருந்தாலும், இந்த ஜானி 2.0க்கு சற்றே கரடு முரடான லுக்ஸ் + சற்றே mature வதனம் ரொம்பவே பொருத்தமாய் இருப்பதாய் எனக்குப்பட்டது ! பற்றாக்குறைக்கு இது நாள் வரைக்கும் மில்க் பிகிஸ் சாப்பிடும் ரேஞ்சிலேயே ஜானி – நாடீன் உறவு சித்தரிக்கப்பட்டிருக்க, இங்கோ 'வேலு மிலிட்டரி' பாணியில் கதாசிரியர் அதனை மாற்றியமைத்திருக்க – மாமூலான ஜானி கதைகளிலிருந்து ரொம்பவே மாறுபட்ட feel ! 

கதை ஓட்டமெடுக்க, எனக்குள்ளேயும் ஒரு வேகம் தொற்றிக் கொண்டது ! எப்போதும் போலவே இங்கேயும் கதை நெடுக சந்தேகத்தின் பார்வைகளை ஈர்க்கும் ஜனம் படையெடுத்திடுவது தொடர்ந்தது & கதையின் களமோ நமக்கு நிறைய விதங்களில் relate செய்து கொள்ளும் விதத்திலிருக்க – என்றைக்கும் இல்லாத திருநாளாய் – முகரை முழுக்கப் புன்னகையோடே கதையின் முழுமைக்கும் பணியாற்றியுள்ளேன் ! இந்த ஆல்பம் வெளியான பின்னே புரியும் - அதற்கான காரணம் ! And true to the original template – கதையின் க்ளைமேக்ஸில் ஒரு மந்தை மக்களை நிறுத்தி வைத்து ஜானி தனது புலனாய்வின் போக்கை விளக்க ஆரம்பித்த வேளையில் – ‘மறுபடியுமா? இங்கேயுமா ?‘ என்று லைட்டாக ஜெர்க் அடித்தது தான் ! ஆனால் இம்முறையோ, ஸ்படிகக் கண்ணாடியாய் அத்தனை முடிச்சுகளும் ஏக் தம்மில் அவிழ்ந்திட – எழுந்து நின்று பெல்ஜியம் இருக்கும் மேற்கு திசை நோக்கிக் கைதட்டத் தோன்றியது ! ரொம்பச் சுலபமானதொரு கதைக்கருவைக் கையிலெடுத்துக் கொண்டு அதனை கதாசிரியர் 54 பக்கங்களில் சொல்லியுள்ள ஸ்டைல் அமர்க்களமாய்பட்டது! Maybe – just maybe இது பணி முடிந்த நொடியின் உற்சாக மிகுதியால் சற்றே ஜாஸ்தியான ரியாக்ஷனாகவும் இருக்கலாம் தான் ; ஆனால் இது மெய்யாலுமே “புலி வருது moment” தான் என்று என் gut feel சொல்கிறது ! பணி முடித்து விட்டு, இறுதிக்கட்ட எடிட்டிங்கில் இதை எழுதும் போது ஈடுபட்டிருக்கிறேன் & இப்போதுமே கதையின் freshness என்னுள் தொடர்கிறது ! 

இதழ் வெளியான பின்னே, இதற்கென கொஞ்சம் அவகாசங்களை ஒதுக்கிட நம் எல்லோருக்குமே சாத்தியப்பட்டால் – ஒரு செம ஜாலி அலசல் அரங்கம் வெயிட்டிங் என்பேன் ! இது போன்ற ஆல்பங்கள் அடிக்கடி கிட்டுவதில்லை எனும் போது – too good to miss out on ! அதே போல – இந்தக் கதையின் பணி என் கைக்கு வந்தது யதேச்சையாகத் தான் என்றாலும் – இப்போது அதை எண்ணி மகிழ்கிறேன் ! தினமும் வேலைகள் வாய்த்திடும் தான், ஆனால் இத்தகைய அனுபவங்கள் ஆடிக்கும், அமாவாசைகளுக்குமே தான் வாய்த்திடும் ! So நடப்பாண்டின் நினைவில் நிலைத்திடக் கூடிய இதழ்களின் பட்டியலில் இந்தக் கதையும் இடம்பிடிக்குமென்ற நம்பிக்கையோடு இதோ இந்த ஆல்பத்தின் previews பக்கமாய்த் திருப்புகிறேன் :

Front & Back - ஒரிஜினல் டிசைன்களே; 6 மாதங்களுக்கு முன்னரே கோகிலா மெருகூட்டியவை ! And இதோ – உட்பக்கங்களது preview :

And மாறுபட்ட களங்களின் படலம் இந்த இதழோடு ஓய்ந்திடாது! ஜம்போவின் “மா…துஜே சலாம்” ஆல்பத்தின் முதல் half-ல் பயணம் பண்ணிக் கொணடிருக்கிறேன் & பார்த்தமட்டிற்கு இதுவுமே செம refreshing களம் ! அது பற்றி – அடுத்த ஞாயிறு ! (ஷப்பா…. ஆனாலும் நீங்க ரெம்போ பாவம் தான்!) Before I sign out - இந்த வாரத்தில் கேட்க  நினைக்கும் கேள்விகள் :

1 "சிரித்த முகம்" என்ற அடையாளத்துக்கு உங்கள் பார்வைகளில் best suited யாரோ ? கார்ட்டூன் நாயகர்கள் அல்லாது ?

2 ரிப்போர்ட்டர் ஜானியின் தொடரினில் இதுவரையிலும் best எது ? உங்கள் பார்வையினில் ?

3 சந்தாவில் அல்லாதோரில் யாரெல்லாம் ஜானியை கடையில் வாங்குவதுண்டு ? வாங்குவதில்லை ?

Bye all! See you around....!  Stay safe !!

P.S : ஆன்லைன் புத்தக விழாவின் பொருட்டு 2 இதழ்கள் தயாராகி வருகின்றன ! அணு குண்டா ? ஆயிரம்வாலாவா ? என்ற ரேஞ்சுக்கான கற்பனைகள் வேண்டாமே ப்ளீஸ் ? And நமது கைவசமுள்ள புக்சின் ஸ்டாக் விபரம் - pdf file ஆக நம்மவர்கள் வைத்துள்ளனர் ; வாட்சப்பில் (98423 19755) கேட்டு வாங்கிக்கொள்ளலாம் - ஆர்டர் செய்திட உதவிடுமெனில் ! நடப்பாண்டின் புக்ஸ் + Cinebook இதழ்களுக்கு 10% & பாக்கி அனைத்துக்கும் 20% ! 

Sunday, September 20, 2020

விசில் போடு !

 நண்பர்களே,

வணக்கம். மாதத்தின் இந்த வேளையின் பதிவுகள் தான் கொஞ்சம் tricky ஆகிடுவதுண்டு ! புது இதழ்கள் பற்றிய பின்னணிகளைச் சொல்லி முடித்திருப்பேன் ; so அதே சாலையில் இன்னொருக்கா வண்டியை விட ரசிக்காது ! அதே சமயம் அடுத்த   மாதத்து இதழ்களின் பிரிவியூக்களுக்குள் புகுந்திடவும் too early ஆக இருந்திடும் ! So  எதையேனும்  அறிவிக்கிறேன் பேர்வழி என தத்துப் பித்தென்று ஏழரைக்குள் கால்பதிப்பது பெரும்பாலும் இது போன்ற தருணங்களிலே தான் ! இம்முறை அந்த மாதிரியான சொதப்பல்களுக்கு இடம் தராது - எதைப் பற்றி எழுதிடலாமென்று யோசிக்கும் போதே  MAXI சைசில்  என் மேஜையில் ஜெகஜோதியாய் இடம்பிடித்து நிற்கும்  சட்டித்தலையன் தான் கண்ணில் படுகின்றான் ! வண்ணத்தில் டாலடிக்கும் ஆர்ச்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்கும் போது - மனசுக்குள் கலவையாய் எண்ணங்கள் அணிவகுக்கின்றன ! நமது அபிமான இரும்பு மண்டையனின் அறிமுகமே இந்த மாக்சி சைசில் தான் (தீபாவளி 1984) எனும் போது - ஒருவித சன்னமான சந்தோஷம் உள்ளுக்குள்  - கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு நமது லயனின் ஒரு flagship நாயகனை, அதே மெகா சைசில் தரிசிப்பதன் பொருட்டு !  கதைக்களங்கள் இன்றைய நமது ரசனைகளுக்கு ஏற்புடையவைகளாய் உள்ளனவா ? இல்லையா ? என்ற கேள்விகளையெல்லாம் ஓரமாய் ஒதுக்கி விட்டு, for once நம் வயதுகளையும் மறக்க முயற்சித்தால், ஆர்ச்சியோடு குதூகலிப்பது அத்தனை பெரிய பிரயத்தனமாகிடாது என்று தோன்றுகிறது ! இதே "வண்ணத்தில் ஆர்ச்சி" முயற்சியினை கால்நூற்றாண்டுக்கு முன்னே செய்திட நமக்கு சாத்தியப்பட்டிருப்பின் - அன்றைக்கு பயல் இன்னும் எந்த அளவிற்குத் தெறிக்க விட்டிருப்பான் ? என்பதையும் யோசித்துப் யோசித்துப் பார்க்கிறேன் ! ஆர்ச்சி on his own இந்த மெகா சைசில் கருப்பு-வெள்ளையில் வெளியாகியிருப்பின் நிச்சயமாய்த் தற்போதைய தாக்கம் missing ஆகியிருக்குமென்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை ! So "கலர்" எனும் அந்த ஒற்றை விஷயத்தின் நிஜமான தாக்கம் நிதரிசனமாய்ப் புரிகிறது ! ஒரு அச்சக உரிமையாளரின் பிள்ளைக்கு வர்ணங்கள் என்பது வாழ்வின் ஒரு eventual அங்கமாகிடுவது சகஜமே ; ஆனால் எனக்கு  "கலர்" அறிமுகமான கதை ரொம்பவே ஸ்பெஷல் - என் மட்டிற்காவது ! So இதோ இன்னொரு வாடகை சைக்கிளில் பின்னோக்கிய பயண moment !!

முதன்முதலாய் முழு வண்ணம் என்பதை 1986 -ன் பாக்கெட் சைஸ் கோடைமலரில் - "ஈகிள்மேன்" கதையின் புண்ணியத்தில் தான் ரசித்தோமென்ற ஞாபகம் எனக்கு ! ஐந்து ரூபாய் எனும் அன்றைய அசாத்தியத் தொகைக்கு நியாயம் செய்திட, கொஞ்சமேனும் கலர் இருந்தால் தான் சுகப்படும் என்ற எண்ணம் ஒருபக்கமிருக்க, ஈகிள் மேனை கலரில் கொணர்ந்திட நான் தேர்வு செய்ததற்கு அப்போது இன்னொரு காரணமும்  இருந்தது என்னிடம் ! 1980 களின் துவக்கம் முதலாய் ஒரு கனவாய் எனக்குள் குடிகொண்டிருந்த பூந்தளிர் பாணியிலான சிறுவர் இதழ் "டிங்-டாங்' என்ற பெயரோடு உள்ளுக்குள் உலாற்றிக் கொண்டிருந்தது ! இதுபற்றி ஏற்கனவே இங்கே விரிவாய் எழுதிய நியாபகமும் உள்ளது ! (http://lion-muthucomics.blogspot.com/2014/04/blog-post_23.html) கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு - நின்றால், நடந்தால், படுத்தால் வேறு சிந்தனைகளே லேது - என்பது போலானதொரு காலகட்டம் அது ! பள்ளிக்கூடம் போவதே எப்போது சாயந்திரமாகும் ? ; வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஆபீசுக்கு எப்போது விசிட் அடிக்கலாம் ? என்றதொரு எதிர்பார்ப்போடே தான் ! If I am not mistaken - ஒன்பதாம் வகுப்பின் முழு ஆண்டு விடுமுறையில் சீனியர் எடிட்டரின் உபயத்தில் உருவான கனவு அது ! இது நிஜமாகுமா ? வயசுக்கு மீறிய அன்றைய கனவுகள் ரொம்பவே டூ மச்சா - இல்லையா ? என்றெல்லாம் யோசிக்கும் பக்குவம் ஏது அந்நாட்களில் ? வானமே எல்லை என்று தோன்றிய அந்நாட்களில் நான் வீட்டுப்பாடங்களை செய்தது கூட ஆபீசில் வைத்துத் தான் ! எனெக்கென அன்றைக்கே முத்து காமிக்ஸ் அலுவலகத்தில் ஒரு மேஜை தந்திருந்தார்கள் ! "முதலாளியின் பிள்ளை " என்ற அடையாளத்தை  தாண்டி, 'இது வெறும் ஆர்வக்கோளாறு பார்ட்டி அல்ல ; தட்டிக்கொடுத்தால் தேறும் கேஸ்  !' என அந்நாட்களில் எனக்கு ஊக்கம் தந்தவர் முத்து காமிக்ஸின் மேனேஜராக  பணியாற்றிய பாலசுப்ரமணியன் என்பேன் ! நமது கருணையானந்தம் அவர்களின் சகோதரி மகன் அவர் ! தரப்பட்ட பணிகளை பிசிறின்றிச் செய்திடும் அமைதியான திறமைசாலி ! ஆட்டையைப் போடும் பெருச்சாளிகள் ஆபீஸெங்கும் விரவிக்கிடந்த பொழுதிலும், பத்து பைசாவுக்கு கூட ஆசைப்படாது, தானுண்டு - தன வேலையுண்டு என கண்ணியமாய்ப் பணியாற்றியவர் ! ஒவ்வொரு மாதமும் முத்து காமிக்ஸ் இதழ்களுக்கென பேப்பர் வாங்கிட ; கதைக் கொள்முதல் செய்திட - அவர் சீனியர் எடிட்டரிடம் பணம் கோரிக் காவடியெடுக்கும் படலங்களை ஒரு நூறு முறைகள் பார்த்திருப்பேன் நான் ! பிடுங்கல்கள் தலைக்கு மேல் இருந்த காலகட்டம் அது எனும் போது - காமிக்ஸ் முயற்சிகளுக்குப் பணம் தருவதென்பதெல்லாம் priority list-ல் கட்டக்கடைசியில் தான் அன்றைக்கு இடம்பிடிக்கும் ! So "முத்து காமிக்ஸ் வரும்-ஆனா வராது" என்ற கண்ணாமூச்சி ஆட்டங்களுக்கு மத்தியில் தான் "டிங்-டாங்" என்ற அல்வாவை வாய் நிறைய இருத்திக் கொண்டு திரிந்தேன் நான் ! 

ஏற்கனவே on  track ஓடிக்கொண்டிருக்கும் இதழுக்கே பணம் புரட்ட இயலாச் சூழல்களில் புது முயற்சிக்கு எங்கிருந்து பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வரப்போகிறதோ ? என்ற கேள்விகளெல்லாம் அந்த வயதில் பெரிதாய் எழவில்லை எனக்குள் ! ஆபீசில் எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த மேஜையில் ஒரு வண்டி ஆங்கில புக்ஸை அள்ளிப்போட்டுக் கொண்டு, அவற்றிலிருந்து சுவாரஸ்ய வரலாற்றுத் துணுக்குகள் ; பொது அறிவுச் சமாச்சாரங்கள் என எதையேனும் தேர்வு செய்து, அவற்றை மாங்கு மாங்கென்று தமிழில் எழுதி வைப்பேன் ! அந்நாட்களில் அச்சுக் கோர்ப்பெல்லாம் கையால் தான் எனும் போது, உள்ளுக்குள் 3 பணியாட்கள் ஈயோட்டிக் கொண்டிருப்பார்கள் - முத்து காமிக்ஸ் அம்மாதம் வெளியாகாது போயிடும் பட்சங்களில் ! So சும்மா சொரிந்து கொண்டிருக்கும் ஆட்களுக்கு வேலை தந்தது போலவாவது ஆச்சே என - நான் எழுதித் தள்ளும் கட்டுரைகளையெல்லாம் (!!!!!) அச்சுக் கோர்க்கச் சொல்லிப் பணிப்பார் பாலசுப்ரமணியன் ! முன்தினம் கிறுக்கித் தந்ததை மறுநாள் அச்சுக் கோர்ப்பு செய்யப்பட்டு type transfer எனப்படும் பிரிண்டில் பார்க்கும் போது உள்ளுக்குள் நாலு பாஹுபலி...ஏழு ஆர்ச்சி..பன்னிரண்டு ஸ்பைடரின் உத்வேகம் ஊற்றெடுத்தது போலிருக்கும் ! மறுக்கா ஏதாச்சும் புக்ஸ் ; மறுக்கா தகவல் தேடல் ; மறுக்கா எழுதுதல் என்ற routine-ஐ இன்னும் ஆர்வமாய்த் தொடர்ந்திடுவேன் ! அந்நாட்களில் பள்ளி நூலகங்களில் நான் எடுத்திருக்கக்கூடிய புக்சின் பெரும் பகுதி கூட, அடியேனின் டிங்-டாங் கனவுகளின் பிரதிபலிப்புகளாகவே இருந்திருக்கும் ! அந்நாட்களில், அந்த வயசுப் பசங்களுக்கான கனவுகளோ, கற்பனைகளோ எனக்குள் ஓடிட்டதே கிடையாது ! அவனவன் லேட்டஸ்ட்டாய் அறிமுகமாகியுள்ள திரை நட்சத்திரங்களைப் பற்றிப் பெனாத்திக் கொண்டிருக்கும் போது - 'நட்சத்திரங்களின் தூரம் - புவி மண்டலத்திருந்து எவ்வளவு ? என்ற சிந்தனை இங்கே மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ! Looking back, அன்றைய முயற்சிகள் எவையுமே நனவாகிடவில்லை என்றாலும், எழுத்தென்பது ரசித்துச் செய்திடக்கூடியதொரு விஷயமே ; பள்ளிக்கூடத்தோடு முழுக்குப் போடப்பட வேண்டியதொரு சங்கதி அல்ல என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓசையின்றி துளிர் விட்டிருக்கக்கூடியது அப்போது தான் என்று தோன்றுகிறது ! Maybe, just maybe அன்றைக்கு எனக்குள் இந்தத் துறையின் மீதொரு மோகமும், பேனா பிடிப்பதில் ஒரு ரம்யமும் மட்டும் எழாது போயிருப்பின், ஸ்கூல் முடித்த பின்னே what next ? என்ற கேள்விக்கு விடை தெரிந்திராது போயிருக்கலாம் ! வசதியான fiireworks முதலாளிகளாக இருந்த எனது நண்பர்கள் யாரிடமேனும் கேட்டு, அவர்களது அலுவலகத்தில் ஒரு கிளார்க்காக வேலைக்குப் போயிருக்கவும் கூடும் !  தப்பிச்சது பட்டாசுத் தொழில் !! 😃😃

So புக்ஸ் ; தேடல்கள் ; கட்டுரைஸ் -  என்று ஒரு  மார்க்கமாய் ஓடிக்கொண்டிருந்த வேளையில், இந்த இதழில்  கொஞ்சமாய் காமிக்ஸ் பக்கங்களையுமே புகுத்தினாலென்ன ? என்ற சிந்தனை மெதுவாய் உருப்பெற்றது !  தொடர்கதையாய் எதையேனும் நுழைத்தால் சூப்பராக இருக்குமே என்று தோன்றிட, அப்போதைய நமது கதை சப்ளை நிறுவனங்கள் மூன்றுக்குமே லெட்டர் போட்டு வைத்தேன் ! டில்லியில் ஒருவரும், மும்பையில் இருவரும் இருக்க, அவர்கள் அத்தனை பேருக்குமே "உயிர்ப்பயம் காட்டிப்புட்டாங்கடா  பரமா !!" என்ற ரீதியில் முத்து காமிக்ஸின் payment schedules புளியைக் கரைத்து வைத்திருந்தது நானறியாச் சமாச்சாரம் ! So முத்து காமிக்ஸ் லெட்டர்பேடில் நான் பந்தாவாய் அனுப்பிய ஓலையானது கச்சிதமாய்க் குப்பைக்கூடைக்குப் போயிருக்க வேண்டும் போலும் - யாருமே பதில் போடவில்லை ! 'பதிலே வரலே அண்ணாச்சி !' என்று நான் பாலசுப்ரமணியனிடம் புலம்பிய போது அவர் தான் விளக்கினார் - இன்ன மெரி இன்ன மெரி ஜவ்வு மிட்டாய்களை ஆளுக்குக் கொஞ்சமாய்ப் பிரித்துத் தந்து வந்திருக்கிறோம் ; இந்த லட்சணத்தில் புதுசாய் உன் பங்குக்கு மஸ்கொத் அல்வா ரெடி பண்ண முற்பட்டால் யார் தான் வாயைத் திறப்பார்கள் என்று !! காற்றுப் போன பலூன் போலாகிப் போனது எனக்கு ! இருந்தாலும், மண்டைக்குள் அந்த அவாவைச் சுமந்து கொண்டே திரிய, பத்தாம் வகுப்பின் நெடுவிடுமுறையில் அதற்கொரு தீர்வும் பிறந்தது - சீனியர் எடிட்டருடனான எனது மும்பை பயணத்தின் புண்ணியத்தில் ! 

அங்குள்ள காலெண்டர் ஏஜெண்ட்களையும், ஆர்டிஸ்ட்களையும் சந்திக்க தெருத்தெருவாக சுற்றியவரோடு நானும் தெரியாத்தனமாக இணைந்து கொள்ள - மும்பையின் நீள அகலங்களை கண்ணில் காட்டிய பின்னே ஒரு மாலையில் மும்பையின் Fort ஏரியாவிலிருந்ததொரு புராதன அலுவலகத்துக்கு இட்டுச் சென்றார் சீனியர் எடிட்டர் ! அவர்கள் தான் வேதாளம், மாண்ட்ரேக் ; காரிகன் ; சார்லீ போன்ற தொடர்களின் இந்திய விநியோகிஸ்தர்கள் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் ! காலெண்டர் வசூலின் தொகை கையில் இருக்க, அவர்களிடம் முந்தைய கதை பில் பாக்கியை செட்டில் செய்த போது - எனது துண்டு சரேலென்று நடுவாக்கில் விரித்தேன் -  "ஒரு மாதமிருமுறை இதழில் தொடராகப்போட ஏதாச்சும் ரெண்டு காமிக்ஸ் வரிசைகளை பரிந்துரை செய்யுங்களேன் ?' என்றபடிக்கே ! இவன் யார்டா புதுசா ? என்பது போலொரு பார்வையோடு, லேட்டஸ்ட்டாய் அப்போது வந்திருந்த CONDORMAN என்ற டிஸ்னி திரைப்படத்தின் காமிக்ஸ் வடிவத்தை மேஜையில் போட்டார் ! சித்திரங்கள் அட்டகாசமாய்த் தோன்றிட, எனக்கு வாயெல்லாம் பல் ! டிஸ்னியின் ஆக்கம் எனும் போது நிச்சயமாய்ப் பட்டையைக் கிளப்பும் என்ற நம்பிக்கையும் உள்ளுக்குள் இருந்தது ! So வேக வேகமாய் மண்டையை ஆட்டினேன் ; இதை வாங்கி விடலாமென்று ! அதற்கும் சேர்த்து பில் போடப்பட்டு கையில் தரப்பட்ட கையோடு, கதையின் bromide prints-ம் ஒப்படைக்கப்பட்ட போது எனக்குள் எதையோ அசாத்தியமாய்ச் சாதித்துவிட்டதொரு உணர்வு ! விருந்தில் பாயாசமாக மட்டுமே அந்நாட்களில் காமிக்ஸ்சுக்கு எனது திட்டமிடல் இருந்ததென்றாலுமே - ஏதோ ஒரு வகைப் பெருமிதம் உள்ளுக்குள் ! பின்னாட்களில் இந்தப் படக்கதைகளே என் வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதியினை ஆக்ரமிக்கவுள்ளன என்பதை அந்த நொடியில் யாரேனும் எனக்கு ஆரூடமாய்ச் சொல்லியிருந்தால் - 'போங்கப்பு..போயி புள்ளீங்களைப் படிக்க வைக்கிற வழியைப் பாருங்கப்பு !' என்று சிரித்து வைத்திருப்பேன் தான் ! அத்தனை தூரத்துக்கு அந்தப் பூந்தளிர்- அம்புலிமாமா -கோகுலம் பாணியின் template எனக்குள் ஊன்றியிருந்தது ! 

ஊர் திரும்பிய பின்னே வேக வேகமாய் CONDORMAN-க்கு "ஈகிள் மேன்" என்ற பெயர் சூட்டலோடு - முதல் 4 பக்கங்களை டிங்-டாங்கில் தொடராகப் பயன்படுத்தும் நோக்கில் பேனா பிடித்தேன் ! அப்போது தான் லைட்டாய் தலைக்குள்ளே ஆசை எழுந்தது - இதைக் கலரில் போட முடிந்தால் எவ்விதமிருக்கும் என்று ! அதுவரையிலும் டிங்-டாங் black & white  இதழாகவே திட்டமிடப்பட்டிருந்தது எனும் போது எனது கலர் கனவு தேறும் வாய்ப்புகள் வெகு சொற்பமாகவே தென்பட்டது ! Black & White-ல் ஒரு sample புக்கை பிரிண்ட் செய்து பார்த்திடலாம் என்று ஒரு ஓய்வான நாளில் சீனியர் எடிட்டருக்குத் தோன்றிட, எனக்கோ மவுண்ட் ரோடில் யாரோ நாற்பதடி உசரத்துக்குக் கட்டவுட் வைத்திருப்பது போலொரு ஜிலீர் உணர்வு ! அத்தனை நாட்களாய் வெறும் வாயால் வடை சுட்டுக்கொண்டிருந்தவனின் முன்பாய் திடு திடுப்பென ஒரு modular kitchen பிரசன்னமானது போலொரு பீலிங்கு ! 

வேக வேகமாய் நெகடிவ்கள் எடுத்தோம் ; அவற்றை பிராசஸ் செய்து அச்சிடும் பிளேட்களாக்கினோம் ; யாரோ ஒரு புண்ணியவான் , எதையோ அச்சிடக் கொண்டு வந்து இறக்கியிருந்த பேப்பரிலிருந்து கொஞ்சத்தைச் சோமாறி - 32 பக்கங்கள் கொண்ட டிங்-டாங்கில் வெறும் 100 பிரதிகள் மட்டும் அச்சிட்டோம் ! அவை பைண்டிங் செய்யப்பட்டு கையில் புக்காய் தரப்பட்ட போது சந்திராயன் ; சென்றாயன் என எல்லா ராயன்களையும் ஏவியது போலான பெருமிதம் ஊற்றெடுத்தது ! ஆனாலும் என்னமோ குறைவது போலவே உறுத்திட, அது வண்ணமின்மை தான் என்பதும் புரிந்தது ! மெது மெதுவாய் சீனியரிடம் அதைச் சொல்ல - அவரோ "ஓ...பேஷாய் கலரில் பிளான் பண்ணிடலாம் !' என்றபடிக்கே பாலசுப்ரமணியத்தை கூப்பிட்டு - "முழுசையும் கலருக்கு ஒர்க் பண்ணிடுங்க !' என்று சொல்லி விட்டார் ! 

தொடர்ந்த ஒரு வாரத்துக்கு கால் தரையில் படுவேனா என்று மறுக்கிறது ; சைக்கிளில் போனாலும், பென்ஸ் காரில் சவாரி செய்வது போல் படுகிறது ; எதிர்ப்படும் ஒவ்வொரு பெட்டிக்கடையிலும் கடைக்காரர்கள் முகங்களை மறைத்து கலரில் டிங்-டாங் தொங்குவது போலவே தெரிகிறது !! உச்ச சந்தோஷத்தில் நான் திளைத்துத் திரிந்திட, முத்து காமிக்ஸ் அலுவலகத்திலோ ஒரு மாதிரியான ஹி..ஹி..ஹி..மூட் தான் பரவலாய்த் தென்பட்டது ! ஆண்டாண்டு காலங்களாய் அல்வாக்கள் பல உண்டு உரமேறிய அனுபவசாலிகள் என்ற வகையில் - "இதுவும் கடந்து போகும் !!" என்பதை உணர்ந்திருந்தார்கள் என்பதால், பாவம், பொடியனின் ஆசையைக் கெடுப்பானேன் ? என்ற நோக்கத்தோடு கலருக்கான பணிகளைத் தொடங்கினார்கள் ! அன்றைய நாட்களில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் லேது எனும் போது எல்லாமே திறமை வாய்ந்த கலைஞர்களின் வேலைப்பாடுகளே ! தொடர்ந்த 1 மாதத்துக்கு அவர்கள் கலர் மாற்றம் செய்திடப்  பணியாற்றியதை அகலத் திறந்த வாயோடு பராக்குப் பார்த்திருந்து இன்னமும் நினைவில் உள்ளது ! திடீர் திடீரென வேறு அவசர வேலைகளைத் திணித்தது ; அதன் பலனாய் டிங்-டாங் வேலைகள் கிடப்பில் போடப்பட்டது ; அப்புறமாய் நான் கெஞ்சிக்கூத்தாடி வேலைகளை மறுபடியும் துவங்கச் செய்தது என ஏகமாய் குரங்கு பல்டிக்கள் அந்நாட்களிலேயே பழக நேரிட்டது ! ஒன்றரை மாதங்களது உழைப்பின் பின்னே வண்ணத்தில் அச்சிட எல்லாமே தயார் என்ற போது - சொல்ல இயலா மலைப்பு எனக்குள் ! அந்த பிராசசிங் நுணுக்கங்கள் எனக்கு பாதி புரிந்திருந்தது ; பாதி புரிந்திருக்கவில்லை எனும் போது - பணியாற்றும் ஒவ்வொரு technician-ம் ஒரு மாண்ட்ரேக்காகத் தான் தென்பட்டனர் எனக்கு ! அந்நாட்களில் இப்போதைப் போல ஒரே நேரத்தில் 4 கலர்களை அச்சிடும் வசதிகளோ ; technology-யோ கிடையாது ! So முதலில் மஞ்சள் ; அப்புறமாய் ப்ளூ ; சிகப்பு & இறுதியாய் கருப்பு என்று முன்பக்கத்தை அச்சிட்டு விட்டு உலர விட்டு விடுவார்கள் ! அப்புறமாய் மறுபடியும் பின்பக்கத்தினில் அதே Yellow ; Cyan ; Majenta & Black அச்சு ! ஆக 16 பக்கங்கள் கொண்டதொரு காகிதத்தில் முன்னும் பின்னும் அச்சிடுவது என்பது புளிசாதத்தைக் கட்டிக் கொண்டு மிஷின் அருகேயே தேவுடு காக்கும் அனுபவத்துக்குச் சமானம் ! திடீர் திடீரென அச்சக சூப்பர்வைசர் வந்து - "இது அவசரம் !! இதை இப்போவே பிரிண்ட் பண்ணனும் !' என்று நின்றால், டிங்-டாங் பணால் -டாங் ஆகி விடும் ! அப்புறமாய் மறுக்கா வேலையைத் துவக்கச் செய்வதற்குள் ஒருநூறு குட்டிக்கரணங்கள் அவசியமாகிடும் ! அத்தனையையும் நான் சகித்துக் கொண்டிருந்ததே - ஈகிள் மேன் பக்கங்களை வண்ணத்தில் தரிசிப்பதன் பொருட்டு ! மற்ற பக்கங்களில் கட்டுரைகள் with some illustrations தான் எனும் போது அங்கெல்லாம் கலரில் ரொம்பவே டாலடிக்கும் வாய்ப்புகள் குறைவு  ! மாறாக டிஸ்னியின் காமிக்ஸ் ஆக்கமானது  கலரில் ரகளை செய்திடுமே ?!! So ஒரு வழியாய் அச்சு முழுவதுமாய் நிறைவுற்று - ஈகிள்மேனை மட்டுமன்றி, முழு புக்கையும் வண்ணத்தில் பார்த்த போது கரைபுரண்டோடிய உற்சாகத்தை கட்டுக்குள் கொண்டிட மிடிலே ! 40 ஆண்டுகள் சுமாருக்கு முன்பான அந்த நாட்களில் கலர் என்பது இன்றைக்குப் போல் சகஜ சமாச்சாரங்கள் அல்ல ! So நானே நானாய் உருவாக்கியதொரு இதழை முழு வண்ணத்தில் பார்க்க சாத்தியப்பட்ட அந்த தினத்தின் ரம்யம் எனக்குள் நிரந்தரமாய்த் தங்கி விட்டுள்ளது !  வண்ணத்திலான அந்த மாதிரி இதழ்களில் எதுவுமே இன்றைக்கு என்வசமில்லை  ; நினைவுகளைத் தவிர்த்து !  ஆனால் எத்தனை மெகா ரப்பரைக் கொண்டு அழிக்க முற்பட்டாலும் அந்த கலர் நாட்கள் மட்டும் விலகிடவே செய்யாது !  

And பின்னாட்களில் டிங்-டாங் வெடிக்க மறந்ததொரு வெடிகுண்டாக நமத்துப் போனாலும் - என்னோடு தொடர்ந்த எண்ணச்சிதறல்கள் 1986-ன் கோடைமலரின் போது மீண்டு எழுந்தன ! 1981-ல் உருவாக்கியிருந்த ஈகிள் மேன் வண்ணப்பக்கங்களை கோடைமலரில் நிஜமாக்கிப் பார்த்த போது கலர் சார்ந்த எனது வேட்கைக்கு ஒரு ஜென்ம சாபல்யம் கிட்டியது போலிருந்தது ! இன்றைக்கு எங்கெங்கோ பயணித்து விட்டோம் தான் ; "கலர்" என்பது பட்டனைத் தட்டும் நொடியில் சாத்தியமாகிடும் சுலபமும் ஆகி விட்டது தான் ! ஆனால் இதன் துவக்கப் புள்ளி 39  ஆண்டுகளுக்கு முன்னே ; அகல விரிந்த கண்களுடனானதொரு டீனேஜரின் ஒரு அனாமதேய நாளில் தான் என்பதை, கலரில் ஆர்ச்சியை பார்த்திடும் இந்த நொடியினில் நினைவூட்டுகிறது மண்டை !! 

நம்ம சென்னைக்கு மாத்திரமன்றி, கலருக்கும் ஒரு விசில் போட்டபடிக்கே கிளம்புகிறேன் - "மா துஜே சலாம்" இதழினில் பணியாற்றிட !! Bye guys ...see you around ! Have a safe sunday !!


Sunday, September 13, 2020

ஒரு சாவகாச ஞாயிறின் சிதறல்கள் !

 நண்பர்களே,

வணக்கம். By now நம் மத்தியில் செம பிரசித்தி ஆகிவிட்டிருக்கும் அந்த ரவுண்டு பன்னைத் தயாரிக்கும் பேக்கரியின் பணிக்கூடம் என் வீட்டுக்கு அருகே தான் ! காலையில் பூச்சாண்டியைப் போல மாஸ்க்கை மாட்டிக் கொண்டு அந்த ரோட்டில் வாக்கிங் போகும் போது, மாஸ்க்கையும் தாண்டி காற்றோடு இணைந்து வரும் சுகந்தங்களே ஆயிரம் கதைகள் சொல்லிடுவதுண்டு : "இப்போ பட்டர் பிஸ்கெட் பேக் ஆகுது ; இப்போ ஸ்வீட் பிரெட் !!" என்கிற ரீதியினில் மூக்கும், மண்டையும் ஒன்றுகூடிப் பட்டியல் போடும்  ! இன்று காலையும் அந்த மோப்பம் பிடிக்கும் படலம் அரங்கேறிட, காலங்கார்த்தாலே எங்கோ ஒரு விசேஷ ஆர்டருக்கென நிறைய ஐட்டங்களை வண்டியில் ஏற்றிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது ! ஒரே அச்சில் வார்த்தது போல் நூற்றுக்கணக்கில் ஜேம் பூசப்பட்ட கேக்குகள் ; ட்ரே முழுக்க ரவுண்டு பன்கள் ; தம்மாத்துண்டு முசல் குட்டிகளைப் போல மக்ரூன்கள் என்று வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்க, நாக்கிலோ இங்கே ஜலஜாலங்கள் !! கடையின் ஓனர் ஒரு குரங்குக்குல்லாயை மாட்டிக் கொண்டு ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, எனக்கு ஒருவித வியப்பு அந்த நொடியில் !! "ஆத்தாடி...வருஷத்தில் 365 நாட்களும், ஒரே தரத்தோடு, ஒரே சுவையோடு, ஒரே சீராய் இத்தனை சமாச்சாரங்களை உற்பத்தி செய்வது என்பது எத்தனை சவாலான காரியம் !! கொஞ்சமாய்ச் சர்க்கரை கூடிப்புட்டால் கதை கந்தல் ; 'புஸ்ஸென்று' உப்பிட்ட வேண்டிய பன் அன்று சண்டித்தனம் செய்ய நேரிட்டால் ஜோலி முடிந்தது !! Awesome !!" என்ற நினைப்போடே நகர்ந்த போதே எனக்கு 3 நாட்களுக்கு முன்பான நமது டெஸ்பாட்ச் தினம் தான் நினைவுக்கு வந்தது ! 

குரங்குக்குல்லா மாத்திரம் நஹி ; மற்றபடிக்கு ஓரமாய் ஒரு ஆந்தைவிழியன் வேடிக்கை பார்த்து நிற்க, "இதில் ஸ்டிக்கரை ஒட்டு ; அதைக் கவரில் போடு ; thank you card ஒட்டியாச்சா ? இது DTDC க்குப் போக வேண்டியது " என்ற பரபரப்போடு சுழன்று கொண்டிருந்த நமது அலுவலகம் என் முன்னே நிழலாடியது ! அந்த அடுமனை ; நம்ம ஆபீஸ் - சிலபல சமாச்சாரங்களில் ஒற்றுமை கொண்டிருப்பதாய்த் தோன்றியது ! ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு புக்கும் இயன்ற மட்டில் perfect ஆக அமைந்திட வேண்டியது எழுதப்படா விதியாயிற்றே !! ஒரு அட்டைப்படம், ஒரேயொரு மாற்று குறைவேனும் சிக்கல் தான் ; பைண்டிங்கில் துளியூண்டு பிசிறாய் இருந்தாலும் விமர்சனங்கள் பறக்கும் ; மேக்கிங்கிலும் சரி / பேக்கிங்கிலும் சரி -  முதல் பார்வைகளில் கவர்ந்திட்டாலன்றி அம்மாதம் மந்தகதியிலேயே பயணிக்கும் ! ஆனாலும், மாதத்துக்கு  ஒருவாட்டி அந்த டெஸ்பாட்ச் தினத்தன்று மூன்றோ / நாங்கோ புக்ஸை ஒருசேர கவர்களில் போட்டு, டப்பிக்களில் அடைக்கும் காட்சிகளை பார்க்கும் வேளையில் அந்த பேக்கரிக்கடைக்காரருக்கு நித்தமும் கிட்டிடக்கூடியதொரு மெல்லிய திருப்தி எனக்குள்ளும் விரவிடத் தவறுவதில்லை ! வாசிப்பினில் ரசிக்கப்போகிறதா ? சொதப்பப் போகிறதா ? என்பதெல்லாம் அந்நொடியில் தெரிந்திராது ; and பெரியதொரு சமாச்சாரமாய்த்  தோன்றிடவும் செய்யாது ! அட்டைப்படத்தில் என் கண்களுக்கு ரம்யமாய்த் தெரியும் லாரன்ஸ் - உங்கள் பார்வைகளில் லிப்ஸ்டிக் போட்டபடிக்கு அபிநயம் பிடிப்பதாய்த் தோன்றுவாரோ  ? என்ற சந்தேகங்கள் அந்த நொடிகளில் எழுந்திடாது ! கதைத்தேர்வுகளோ ; மொழிபெயர்ப்புப் பாணிகளோ துடைப்பக்கட்டைகளைத் தேடச் செய்திடுமா ? என்ற பயங்கள் அந்தக் காலைகளில் கிளர்ந்து நின்றிடாது ! மாறாக, மசியின் மணம் கலந்து, சொட சொடவென புது டிரெஸ்ஸைப் போட்டுப் போகும் புக்குகள் ஒவ்வொன்றுமே Booker பரிசுகளுக்கும், Pulitzer விருதுகளுக்கும் புறப்படும் பார்ட்டிங்களாகவே அந்த வேளைதனில் அகன்ற எனது விழிகளுக்குத் தென்படுவதுண்டு ! மறுநாளைக்கு யதார்த்தம் புலர்ந்திருக்கும் ; அலசல்கள் துவங்கியிருக்கும் and முன்தினத்து சோப்புக்குமிழிக் கற்பனைகளும் காலாவதியாகியிருக்கும் ! ஆனால் ஒவ்வொரு மாதமுமே எனது அந்த momentary madness-களுக்கு விடைகொடுப்பதே கிடையாது ! 

அதற்கொரு சன்னமான பின்னணிக் காரணமும் இல்லாதில்லை தான் ! ஒவ்வொரு இதழின் தயாரிப்பிலும் பிசகிடக்கூடிய சமாச்சாரங்கள் ஒரு நூறு உண்டு ! Forget the quality of the stories ; the translation & stuff - மேக்கிங்கினில் எத்தனை அனுபவசாலிகளும் சறுக்கிட வாய்ப்புகள் ஏராளம் - இதோ இம்மாதத்துப் "பிசாசுப் பண்ணை" இதழினில் MAGNA ARS விளம்பரத்தின் முதல் பக்கமும், இரண்டாம் பக்கமும் இடம் மாறிக் கிடப்பது போல !! 300 பக்கங்கள் கொண்டதொரு டெக்ஸ் வில்லர் கதையில் வாரமாய்ப் பணியாற்றும் பெண்களுக்கு நூறாம் பக்கத்திற்கும் ; நூற்றியோறாம் பக்கத்திற்கும் அந்நேரத்து அயர்ச்சியினில்  பெருசாய் வித்தியாசங்கள் தோன்றிடாது ! மந்தை மந்தையாய்  ஜனம் குருதைகளில் பயணிக்கும் சித்திரங்கள் இங்கேயும் இருந்திடும்   ; அங்கேயும் இருந்திடும் !! ஆனால் ஒரேயொரு பக்க நம்பரை மாற்றி வைத்துவிட்டாலுமே அம்மாதம் நடுமூக்கில் குத்துக்கள் வாங்க நேரிடும் மொத்த டீமுமே ! ஒற்றைப்பக்கத்தில் 20 டயலாக்குகள் கொண்ட கிங் கோப்ரா கதையினில் ஒரேயொரு வசன பலூனானது தப்பான திக்கில் திரும்பிக்கிடந்தால், அது கூட ஆட்டோ ஷங்கரின் குற்றங்களுக்கு இணையாகப் பார்த்திடப்படும் ; பரிகசிக்கப்படும் ! ஆயிரம் புத்தகங்களின் பைண்டிங்கினில் ஒன்றேயொன்றின் மூலை கசங்கியிருந்தால் கூட - "குற்றம்...!! நடந்தது என்ன ?" என்ற புலனாய்வுகள் துவங்கிடும் என்பது நமது ஜாலியான நடைமுறைகள் ஆச்சே !! ஒரு சின்னஞ்சிறு வட்டத்தின் உள்ளே வண்டியோட்டும் போது சின்னஞ்சிறு பிசகுகள் கூட பூதக்கண்ணாடிகளில் பார்த்திடப்படும் என்பதால் - ஒவ்வொரு மாதத்திலும், 'மேக்கிங் எனும் மொட்டைக் கிணறுகளில் சறுக்கி விழுந்திடாது தாண்டிட்டோமே தெய்வமே !! ' என்ற தற்காலிக நிம்மதி தான் அந்த டெஸ்பாட்ச் தின ரசிப்பின் பிரதானப் பின்னணி !  தவிர, ராமராஜனுக்குப் போட்டி தரவல்ல வர்ணங்களில் டாலடிக்கும் அட்டைப்படங்களையும், 'சர்ரென்று' புரட்டும் போது உள்ளுக்குள் தகதகக்கும் லக்கி லூக்கின் வர்ணங்களும் - ஒருகாலத்தில் சாணித் தாள்களில் சவாரி செய்த நமக்கு "ஏஏஏஏஏஏயப்பா !!" என்ற மலைப்புக்குரிய சமாச்சாரமாய்த் தோன்றத் தவறிடாது ! So இம்மாதமும் பராக்குப் பார்த்தபடிக்கே புத்தகங்களை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தேன் - கூடுதலாயொரு காரணத்தின் பொருட்டு !! 

இரும்பு மனிதன் ஆர்ச்சி...ரோபாட் ஆர்ச்சி...(ஆங்...உச்சரிப்பில் பிழை ; அது "ரோபோ" ஆர்ச்சி !! என்பவரா நீங்கள் ? இல்லீங்கோ - பிரிட்டிஷ் உச்சரிப்பினில் அது "ROW BAT "(https://www.youtube.com/watch?v=aAeUFwLjldo)..சட்டித்தலையன் ஆர்ச்சி - நீங்கள் எவ்விதம் கூப்பிடுபவராக இருந்தாலும் சரி, இம்மாதத்தின் firstlook ஒளிவட்டத்தை முழுசுமாய்க் கபளீகரம் செய்திருக்கும் இந்த கோமுட்டித்தலையனை நேசிக்காதோர் யாரும் இருக்க முடியாதென்பேன் ! இம்மாதத்து combo-வில் மாக்சி சைசில், முழு வண்ணத்தில் பயல் டாலடிப்பதையே நான் மறுக்கா மறுக்கா ரசித்துக் கொண்டிருந்தேன் ! துண்டும், துக்காணியுமாய் வெளியான சிறுகதைகளை ஒருசேர, முழுவண்ணத்தில், மாக்சி சைசில் தொகுத்து வழங்கிடும் "பிசாசுப் பண்ணை" ! 'தல' பின்னிப்பெடலெடுக்கும் ஒரு செம சாகசம் ; ஹெர்மனின் ஓவிய அதகளங்களில் மிளிரும் ஜம்போ ....இவையெல்லாம் இருந்தும் என் பார்வை உங்களை போலவே இந்தச் சிகப்பு மண்டையனோடே பயணித்து வந்தது ! அதன் முக்கியக் காரணமே - இந்த வர்ணங்கள் முழுக்கவே நமது தயாரிப்பு என்பதே !! வண்ணங்கள் நமக்குத் புதிதல்ல தான் ; ஒரிஜினல் கலரிங்களில் ஏதேதோ மிரட்டலான உச்சங்களைப் பார்த்திருக்கிறோம் தான் ! ஆனால் 'கழுகுமலைக் கோட்டை" ; "கொரில்லா சாம்ராஜ்யம்" ; "கொள்ளைக்கார பிசாசு" ; "யார் அந்த மாயாவி ?" பாணிகளில் நாமாய் உருவாக்கும்  வண்ணங்களுக்கு எப்போதுமே வாஞ்சை அதிகம் - என்னுள்ளாவது !! No different with Archie this time too !! 

நமக்கு அவ்வப்போது உதவிடும் குருமூர்த்தி தான் இம்முறையும் கலரிங் பொறுப்பைக் கையிலெடுத்துள்ளவர் ! ஆர்ச்சியை ஒரிஜினலாய் அவர்களது ஆண்டுமலர்களில் மட்டும்  சிறுகதைகளில்  Fleetway முழு வண்ணத்தில் பயன்படுத்துவதை ரொம்பகாலமாய் ரசித்து வந்தவன் நான் ! அதே போலவே நாமும் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் இதழில் செய்தாலென்ன ? என்றே எண்ணியிருந்தேன் துவக்கத்தில் ! ஆனால் இப்போதெல்லாம் இந்த இக்ளியூண்டுக் கதைகள் நமக்கு ரசிப்பதே இல்லையெனும் போது, கனவினை இன்னும் கொஞ்சம் பெருசாக்கிடத் துணிந்தேன் ! And அதுவே தற்போதைய "பனி அசுரர் படலம்" ! ஆரம்பித்திலேயே இந்த இதழை loyalty points க்கு ஈடாய்த் தந்திடும் திட்டம் என்னிடம் இருக்கவில்லை தான் ! ஈரோட்டிலோ ; சென்னையிலோ - இதையொரு சர்ப்ரைஸ் இதழாய் களமிறக்கத் தான் நினைத்திருந்தேன் ! ஆண்டின் ஓட்டத்தோடு பயணித்து, அப்போதைய மூடுக்கேற்ப ஏதேனுமொரு இதழை loyalty points க்குப் பதிலாய்த் தந்திடலாமென்று தான் எண்ணங்கள் அந்நேரம் குடிகொண்டிருந்தன ! In fact ஒரு வித்தியாசமான வன்மேற்குக்  கதையொன்றையும் shortlist செய்து, அதனை  வாங்கியும் விட்டிருந்தேன்! அது கொஞ்சமாய் dark shades கொண்ட ஆல்பம் ! ஆனால் இந்தக் கொரோனா கொடுமைகளின் புண்ணியத்தில் எல்லாத் திட்டமிடல்களும் went for a toss & நிறைய சமாச்சாரங்களை மாறுபட்ட விதத்தில் பார்க்கச் செய்தது ! ஏற்கனவே அட்டவணையில் உள்ள dark shade கதைகள் போதும் ; இன்றைய சூழல்களில் புதுசாயும் நோவுகள் வேண்டாமே என்று மனசு சொல்லிட, 'அதுவும் சர்தான் !' என்று பட்டது ! தவிர, ஒரு பத்தோடு பதினொன்று cowboy ஆல்பமானது பெருசாய் நினைவில் நிற்கக்கூடிய சாத்தியங்களைவிடவும், நமது சட்டித்தலையன் போலானதொரு ஆசாமி, அதுவும் முழுவண்ணத்தில் ஆஜரானால், அதன் தாக்கம் நிச்சயமாய் நினைவில் நின்றிடும் என்று தோன்றியது ! அப்புறமே தீர்மானித்தேன் - "ப.அ.ப' நமது loyalty points கனவுகளுக்கொரு தொடக்கம் தந்திடும் இதழாய் அமையட்டும் என்று ! And truth to tell - இதனை நார்மல் சைஸிலேயே தான் குருமூர்த்தியும் வேலை செய்து தந்திருந்தார் ! ஆனால், பிசாசுப் பண்ணை இதழின் வேலைகளை சில மாதங்களுக்கு முன்னே கையிலெடுத்த போதே, சிகப்புமண்டையனையும் மாக்சி சைசில் ரவுசு செய்திட வைக்கும் ஆசை துளிர்விட்டது ! And you know the rest !!  

கதையைப் பொறுத்தவரையிலும், வழக்கமான ஆர்ச்சி உட்டாலக்கடிகளிலும் இது இன்னொரு லெவல் தான் ! ஆனால் நண்பர் ரபீக் ராஜா போன பதிவில் பின்னூட்டமிட்டிருந்தது போல - 'சூப்பர்ஹீரோக்களுக்கு பூச்சுற்றலுமே அழகு தான் !' என்று எடுத்துக் கொண்டேன் ! And இதற்குப் பேனா பிடித்துள்ள   நமது கருணையானந்தம் அவர்களுக்கு இங்கொரு special mention அவசியமே !! ஆர்ச்சி ஆங்காங்கே அவிழ்த்துவிடும் டயலாக்குகளைத் தாண்டி, பாக்கி சகலமும் அவரது உழைப்பே ! சத்தியமாய் என்னால் இக்கதையினில் பணியாற்றுவது என்பது இயலாக்காரியமே ! ஆனால் சளைக்காது ஆர்ச்சிக்கும் சரி, தொடரவுள்ள ஸ்பைடருக்கும் சரி, மொழிபெயர்ப்பைச் செய்துள்ளார் எனும் போது hats off !!

ஆர்ச்சி ; மெகா சைஸ் ; வர்ணம் - என்றெல்லாம் தீர்மானமான பின்னே நமது அமெரிக்க ஓவியையைக் கொண்டு முதலில் ஒரு டிசைன் போட்டு வாங்கினேன் ! அதுவோ முன்னொருகாலத்தில் ஆர்ச்சி டச் மொழியில் வெளியான சமயம், ஹாலந்தினர் உருவாக்கிய அட்டைப்பட டிசைனின் டிஜிட்டல் உட்டாலக்கடி ! So அதையே ராப்பராக்கி, படைப்பாளிகளுக்கும் அனுப்பியிருந்தேன் - "ஷோக்கா கீதாங்க சார் ?" என்ற கேள்வியோடு ! அவர்களோ - புதுசாய் முடிவெட்டிப் பழகும் அப்ரஸிட்டி கிட்டே தலையைத் தந்தது போலக்காட்சியளித்த விக்டரையும், தாம்சனையும் பார்த்து மிரண்டே போய் விட்டார்கள் ! "இது தான் அட்டைப்படமா ?" என்று அவர்கள் சங்கடமாய்க் கேட்ட நொடியிலேயே, எனக்கு வயிற்றைக்கலக்கி விட்டது ! 'போச்சுடா..! க்ளாஸிக் டிசைன் என்று நம்ம கலைக்கண்களுக்குத் தென்பட்ட சமாச்சாரம் செம டப்ஸா தானா ? என்னடா இது - உன் ரசனைக்கு வந்த சோதனை மாதவா ? "என்று புரிந்த நொடியே, அடித்துப் பிடித்து இன்னொரு டிசைனை ரெடி செய்தோம் ! அதை பார்த்த பிற்பாடே படைப்பாளிகளின் முகங்களில் மலர்ச்சி ! பிரிட்டிஷ் கிளாசிக் நாயக / நாயகியரை புது உத்வேகத்தோடு மார்கெட்டினில் மறுஅறிமுகம் செய்துவரும் படைப்பாளிகளுக்கு இந்த ஸ்டெப்கட் மண்டைகள் எத்தனை நெருடலை ஏற்படுத்தியிருக்குமென்பதை இப்போது யோசித்துப் பார்க்கும் போது - பக்கோ என்றுள்ளது ! Anyways all's well that ends well !!இதோ - அந்த "wouldbe wrapper"- உங்கள் பார்வைகளுக்கு ! 

The REJECTED Cover !! Glad we changed it !!! Phew !

ஆர்ச்சியைக் கலரில் பார்த்தாச்சு ; மாயாவியை எப்போதோ பார்த்தாச்சு ; ஜேம்ஸ் பாண்டை தெறிக்கும் கலரில் பார்த்தாச்சு ; இளவரசியையும் பார்த்தாச்சு !! So கருப்பு-வெள்ளையில் ரகளை செய்யும் classic british stars-களுள் இன்னமும் நாம் வண்ணத்தில் பார்த்திரா சூப்பர்ஸ்டார் தானைத் தலைவர் மட்டுமே !! Maybe ஆர்ச்சி காட்டியுள்ள வழி, வெற்றியின் வழியாய் அமையின், ஒரு தூரத்து தினத்தில் கூர்மண்டையரும் மினுமினுப்பாரோ - என்னவோ !! Bye all ....enjoy the Sunday & the books !! மீண்டும் சந்திப்போம் !! 

Friday, September 11, 2020

மகிழ்ச்சிய்ய்ய்ய்..!

நண்பர்களே, 

வணக்கம். வழக்கம் போலவே ஒரு வண்டி பல்டிக்கள் ; வாடிக்கையான குட்டிக்கரணங்கள் ; மாமூலான ஓட்டங்கள் என அரங்கேறியதன் தொடர்ச்சியாய், உங்களின் கூரியர் டப்பிக்கள் நேற்று மதியம் (வியாழன்) இங்கிருந்து புறப்பட்டு விட்டன ! எதைச் செய்தாலும், அதனை ஒரு லார்கோ ஆல்பத்தின் க்ளைமாக்ஸைப் போன்ற பரபரப்போடே செய்வது தான் நாம் வாங்கி வந்த வரம் போலும் ! No different this time too !! எது எப்படியோ - மசியின் மணம் குன்றியிரா செப்டெம்பரின் இதழ்கள் இன்றோ / நாளையோ உங்கள் இல்லங்களில் நிச்சயமாய்க் குந்தியிருக்குமென்ற நம்பிக்கை உள்ளது ! 

MAXI லயன் இடம்பிடித்திடும் மாதமிது என்பதால், டப்பி சற்றே உசரமாய் இருந்திடும் ! And அதற்கு கூடுதலாகவும் ஒரு காரணமிருப்பதை இந்நேரத்துக்குக் கூரியர்களைக் கையில் வாங்கியிருக்கக்கூடிய நண்பர்கள் உணர்ந்திருப்பார்கள் ! 

Oh yes, MAXI சைசில், நமது சிகப்பு மண்டையன் ஆர்ச்சி, முழு வண்ணத்தில், இடம் பிடிக்கிறான் ! சந்தாவின் லாயல்ட்டி points ; லால்குடி points என்று ரொம்ப காலமாய் வெறும் பீலாவாய் விட்டு வரும் நிலையில், நடப்பாண்டிலிருந்தாவது செயலில் அதனைக் காட்டிட வேண்டுமென்ற முனைப்பு ரொம்பவே இருந்தது உள்ளுக்குள் ! But எதிர்பாரா இந்த கொரோனா கூத்தில் திட்டமிடல்கள் சகலமும் போயே போச்சு...! But still  அதையே காரணம் காட்டிக்கொண்டிராது, - செலவோடு செலவாய் ; பல்டியோடு பல்டியாய் இந்த விலையில்லா  இதழை நனவாக்கிட தீர்மானித்ததன் விளைவே - அண்ணனின் விண்ணில் எழும்பும் இந்த வண்ண இதழ் ! And ஏற்கனவே ஒரு மாக்ஸி இதழ் இடம்பிடிக்கும் மாதத்திலேயே இந்த மாக்சி ஆர்ச்சியையும் நுழைத்தால் தான் கூரியர் டப்பிக்களில் கொஞ்சமேனும் செலவு மிச்சமாகும் என்பதால், 'பிசாசுப் பண்ணை' மாதத்துக்கான இதனை hold-ல் போட்டு வைத்திருந்தேன் ! And that is now !

நமது ரெகுலர் சந்தாக்களின் அத்தினி பிரிவினருக்கும் இந்த இதழினை நம் அன்புடன் அனுப்பியுள்ளோம் ; 'ஐயே..காதிலே தோரணம் தொங்கவிடச் செய்யும் இந்த இதழ் எனக்கெதுக்கு ?' என்று கருதக்கூடிய நண்பர்கள் - உள்ளூர் நூலகத்துக்கு அன்பளிப்பாய்த் தந்திட்டால் வேலை முடிந்திடும் ! And இன்னமும் உள்ளத்தில் வாண்டுக்களாய் இருந்திடுவோர் ஜமாயுங்கள் ! In fact - வாண்டு ஸ்பெஷல் இதழுக்கு இது கூட, செம தேர்வாய் இருக்கக்கூடும் என்பேன் ! மினுமினுக்கும் ஆர்ட்பேப்பரில், முழு வண்ணத்தில், மெகா சைசில் மிளிரும் அண்ணாச்சியை உங்களின் இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து தான் பாருங்களேன் folks ! 

மறுபடியும் ஒரு 4 புக் மாதமாய் இந்த செப்டெம்பர் அமைந்திருப்பதால் எங்களுக்கு மகிழ்ச்சி ! வாசிப்பினிலும் அது பிரதிபலிப்பின், "மகிழ்ச்சிய்ய்ய்ய்" என்று தலைவரின் மாடுலேஷனில் சொல்லிக் கொள்ளலாம் ! Happy Reading all !

ONLINE LISTINGS :





Sunday, September 06, 2020

எல்.ஐ.சி.க்கள் வீழ்வதில்லை !

 நண்பர்களே,

வணக்கம். முழுசாய் ஒரு வாரம் இம்மாத இதழ்களின் final touches-ல் ஓட்டமாய் ஓடிவிட்டுள்ளது ! நமது DTP டீமில் (!!!) கோகிலா தற்சமயம் நஹி எனும் போது - புதிதாய் யாரையேனும் பணியில் அமர்த்திடும் வரை எல்லாமே இடியாப்பச் சிக்கல் தான் என்பது புரிகிறது ! முதல்வாட்டி கரெக்ஷன் + எடிட்டிங் ; அப்புறமாய் மறுக்கா ஒரு வாசிப்பு அதற்கப்புறமும் ஒரு மீள்வாசிப்பு - நமது proof reader சங்கவியினைக் கொண்டு - என ஒவ்வொரு தோசையையும் மூணுவாட்டி வேக வைக்க வேண்டிடுவதால் ஒவ்வொருமுறையும் கண்ணில் படும் ஏதேனும் குறைகளை நிவர்த்திப்பதில் DTP பிசியோ பிஸியாகிப் போகின்றது  ! இவை அத்தனைக்கும் பின்னேயும் பிழைகள் எட்டிப் பார்க்கும் போது தான் சிக்கின சுவரிலெல்லாம் ஒரு தபா முட்டிக்கொள்ளும் அவா அலையடிக்கிறது ! 

கலர் இதழ்கள் எனும் போது மிஞ்சிப் போனால்  44 அல்லது 46 பக்கங்களில் கதை முடிந்து விடும் ; so அக்கட பணியைக் கையில் தூக்கும் போதே ஒரு அயர்வு தோன்றிடும் வாய்ப்புகள் சற்றே குறைச்சல் ! ஆனால் நம்ம 'தல' தாண்டவங்களோ 224 பக்கங்கள் அல்லது இன்னமும் சாஸ்தி எனும் போது - ரெண்டு புல் மீல்ஸ்களை லபக்கிய ஜாம்பவானை உப்புமூட்டை தூக்குவது போலிருக்கும் - கத்தையான பிரிண்டவுட்களைக் கையில் ஏந்தும் போதெல்லாம் ! ஆனால் உள்ளே புகுந்து விட்டால் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு சுற்று வட்டாரத்தில் நிற்போரின் நடுமூக்குகளைப் பார்க்கும் போதெல்லாம் முஷ்டியில் ஒரு இனம்புரியா நமைச்சல் தோன்றுவதில், அத்தினி அயர்வும் போனயிடம் தெரிந்திடாது ! And no different this time as well !!! 

பந்தம் தேடிய பயணம் !!  

அட்டவணைகளைத் தயார் செய்திடும் ஒவ்வொரு வேளையிலும்,  ஒவ்வொரு ஆல்பத்துக்கும் பெயர் சூட்டும் படலம் அரங்கேறிடும் வேளையிலும் மோட்டுவளையை மும்முரமாய்ப் பார்த்திட வேண்டியிருக்கும் ! கதைச்சுருக்கங்களையும்   ; மேலோட்டப்புரட்டலில் கண்ணில்பட்ட சித்திரங்களையும் ; ஒரிஜினலின் பிரெஞ்சு / இத்தாலிய தலைப்புகளையும் மனதில் அசைபோட்டபடிக்கே உத்திரத்தில் ஓடிப்பிடித்து விளையாடும் எட்டுக்கால்ப்பூச்சிகளை முறைத்துக் கொண்டிருக்கும் வேளைகளில், 'டப்'பென்று ஏதாவதொரு பெயர் மனதில் முளைத்திடும் ! சில வேளைகளில் மண்டை காய்ந்ததே மிச்சமாக இருக்கும் ! ம.கா. - எனில் ஏதாச்சும் ஒரு "படலம்" ; அல்லது "வேட்டை" என்று வேலையை முடித்திடுவது வாடிக்கை ! சில நேரங்களிலோ - out of the blue ஏதேனுமொரு பெயர் உதிக்கும் ; 'அட..இது கூட நல்லாத் தானிருக்கே !!' என்று பல்பும்  எரியும் ; ஆனால் கதைக்கும், அந்தத் தலைப்புக்கும் பெரிதாக சம்பந்தம் இருப்பதாய்த் தோன்றாது ! இருந்தாலும், 'தலைப்பு நல்லா கீதே ; இதை எப்படியாச்சும் கதையோட சம்பந்தப்படுத்திக்குவோம் !!' என்ற தீர்மானங்களும் பிறப்பதுண்டு ! நடப்பாண்டின் "பிரிவோம் ..சந்திப்போம்..!' அது மாதிரியானதொரு சமாச்சாரமே ! Very rarely do titles suggest themselves instantaneously !! 

அத்தகைய "rare " தருணங்களில் ஒன்று - "பந்தம் தேடிய பயணம்" என்ற பெயர் சூட்டல் நடந்த வேளை !! ஒரிஜினலின் தலைப்பு - "ஒரேகன் செல்லும் பாதையில்.." என்பது போல் இருந்ததாய் ஞாபகம் ; ரொம்ப மொக்கை போட்டிருப்பின் - "ஒரேகான் படலம்" என்று தலைப்பு வைத்துச் சாத்தியிருப்பேன் ! ஆனால் அந்தக் கதையின் one liner-ஐப் படித்த மறுநொடியே "ப.தே.ப." என்று மனசுக்குள் ஒலித்தது ! 'ஆத்தாடி....வாசகர்கள் தப்பிச்சாங்க !!' என்றபடிக்கே அந்தப் பெயரையே இறுதி செய்தும் விட்டேன் ! அன்று முதலே நடப்பாண்டின் TEX கதைகளுள் இந்த ஆல்பத்தின் மீது ஒருவித soft corner எனக்கிருந்தது ! 'அதிகாரியின் அம்புட்டுக் கதைகளும் ஒரே மேரி ; ராப்பர் இல்லாங்காட்டி அத்தினியும் ஒண்ணுதேன்' என்றபடிக்கே பாயசம் போட "நான் அண்டா வைச்சிருக்கேன் ; நான் முந்திரி வாங்கி ரெடியா வைச்சிருக்கேன் ; கிஸ்மிஸ் நேத்தே வாங்கியாச்சு !' என்றொரு  சிறு அணி ஆர்வமாய்க் காத்திருப்பதால், இயன்றமட்டிலும் TEX கதைத் தேடல்களில் சற்றே diverse களங்களுக்கென நான் துழாவுவது வாடிக்கை ! இந்த ஆல்பமோ, அந்த விதத்தில் ஆர்வமாய்க் கைதூக்கி நின்றதொரு படைப்பு ; so தயக்கமேயின்றி டிக் அடித்திருந்தேன் ! 

ஒரு வழியாய் இதனில் பணியாற்றும் பொழுதும் புலர, கலர் இதழ்களின் பணிகளுக்கு 'சுபம்' போட்டான பிற்பாடு கையில் எடுத்திட்ட போது, கொஞ்ச நேரத்துக்கு இமை தட்டாது பக்கங்களை புரட்டிக் கொண்டே இருந்தேன், அந்த சித்திர நேர்த்தியினை ரசித்தபடிக்கு ! வித்தியாசமான பாணி ; ஆனால் செம clean strokes என பக்கத்துக்குப் பக்கம் ஓவியர் Gomez உசிரைக் கொடுத்து உழைத்திருப்பது அப்பட்டமாய்த் தெரிந்தது ! 'ரைட்டு....ரசிச்சிட்டே இருந்தா பொழுது ஓடியது தான் மிச்சமாயிருக்கும் ; அப்புறம்  "புக் எப்போ கிளம்பும் சாரே ?" என்ற அறிவரசு ரவி சாரின் வினவல்களுக்குப்  பதில் சொல்லி மாளாது  என்று பட்டதால் சிறுகச் சிறுக பணியினில் ஈடுபடத் துவங்கினேன்  -  சன்னம் சன்னமாய் வாய் அகல விரிந்து கொண்டே செல்வதை பொருட்படுத்தாது ! 

பத்தி பத்தியாய் பன்ச் டயலாக் எழுதும் அவசியங்கள் எழவில்லை இம்முறை ; 'பயபுள்ளையை இன்னும் ரெண்டு கும்மு கும்மு தல !' என்று நம்மைப் பொங்கச் செய்யும் ரீதியிலான வில்லன்களும் நஹி ; சட்டி சட்டியாய் வறுத்த கறியை மோப்பம் பிடிக்கும் வாய்ப்புகளும் கார்சனுக்கு இங்கில்லை ; ஆனால் இரும்புக் கரம் கொண்டு நம்மை அரவணைக்கும் அந்தக் கதையும், களமும் பக்கத்துக்குப் பக்கம் சத்தமின்றி நம்மை மெய்மறக்கச் செய்யும் ஜாலத்தை உணர முடிந்தது ! கதையில் தென்பட்ட ஏகப்பட்ட நிகழ்வுகளில் ஒருவித யதார்த்தம் மிளிர்வதைப் பார்த்த போது curiosity மேலோங்க, கூகுளில் கொஞ்சம் மெனெக்கெடவும் நேரம் செலவிட்ட போது - திறந்த வாய் இன்னமுமே விசாலமானது ! இந்த ஆல்பத்தின் பின்னணியில் எக்கச்சக்கமாய் வன்மேற்கின் வரலாறு பின்னிக்கிடப்பது புரிந்தது ! எந்தவொரு கதைக்குமே போனெல்லியில் ஏகமாய் மெனெக்கெடுவர் என்பது தெரிந்த சமாச்சாரம் தான் ; ஆனாலும் அதனை hands on உணர்ந்திடும் போது நேர்ந்திடும் மலைப்பு முற்றிலும் வேறொரு உச்சம் !  

இன்டர்நெட் தேடல்களையும், கதையின் சம்பவக்கோர்வைகளையும் லேசாய் மனதில் ஒன்றிணைத்து அசைபோட்ட போது, இன்னொரு விஷயமும் பிடரியில் சாத்தினாற்போல புரிந்தது ! ஊருக்கொரு சலூன் ; அழகழகாய் டான்ஸ் ஆடும் அம்மணிகள் ; ரம்யமான கோச்வண்டிப் பயணங்கள் ; தெறிக்க விடும் ஷெரீஃப்கள் என்று நாம் வாசிக்கும் கௌபாய்க் கதைகளில் ஏகப்பட்ட exotic சமாச்சாரங்கள் தென்படுவது வாடிக்கை ! ஆனால்  நிஜமான வன்மேற்கினில் வாழ்க்கை அவ்விதம் இருந்ததில்லை ; வாழ்க்கையில் கெலிக்க அங்கே  ஏகமாய் வியர்வைகளும், தியாகங்களும்,  உசிர்களுமே விலையாகியுள்ளன என்பதை yet again வாசித்துணர்ந்திட்ட போது மனசு கனத்துப் போனது ! அதிலும், கதையின் ஒரு பகுதியினில் - கொட்டும் மழையில் கந்தலாய்க் கிழிந்து தொங்கும் தார்ப்பாயுடனானதொரு கோச் வண்டி, செங்குத்தான மலையிறக்கத்தில் தடுமாறும் sequence வந்திடும்.......!! நான்கு பக்கங்களிலும், நாற்பது பிரேம்களிலும் நாம் தாண்டிடக்கூடிய அந்தச் சூழலை ஒத்ததொரு நிஜப்  புகைப்படத்தை நெட்டில் பார்த்த போது - அதனில் பயணம் செய்திருக்கக்கூடிய மாந்தர்களின் அல்லல்களை கற்பனையாய் நினைத்துப் பார்க்கவே மிரட்சியாக இருந்தது ! 

இந்த ஆல்பம் நெடுக டெக்ஸ் & கார்சன் மிகையில்லாத மனிதர்களாய் வலம் வருவதையும், நம்பியோரைக் கரைசேர்க்க நரகத்தையும் புரட்டிப் போடத்துணிவதும் ; கதை நிகழும் களமே இங்கொரு ஆட்டக்காரராக மிளிர்வதும் standout features ஆகத் தென்பட்டன - என்னளவிற்காவது ! In spite of all this ,இந்த தபாவும் - 'அக்காங்..பாயச அண்டா மலர்ந்தே தீரும் !' என்று  குரல்கள் கேட்கும் பட்சங்களில், கம்பெனி செலவில் அந்தந்த ஊர்களுக்கு ஸ்டீலை அனுப்பி, "பாட்டாலே புத்தி சொன்னார் !!" என்று இளையராஜா மெட்டில் கவித பாடச் சொல்லும் தீர்மானத்தில் இருக்கிறேன் ! Backup ஆக தலீவரிடம் ரெண்டு ரீம் புல்ஸ்கேப் பேப்பரையும், ஒரு டஜன் சிகப்பு பால்பாயிண்ட் பேனாக்களையும் ஒப்படைத்து விடவும் கம்பெனி முடிவு செய்துள்ளது ! So அண்டா பார்ட்டிஸ் - கபர்தார் !! 

பணிகளை நிறைவு செய்து வெள்ளியிரவு தான் ஒப்படைத்தேன் எனும் போது - திங்களன்று அச்சுக்குச் செல்கின்றன உட்பக்கங்கள் ! இதோ - இந்த இதழுக்கான அட்டைப்பட முதற்பார்வை - நமது அமெரிக்க ஓவியையின் கைவண்ணத்தில் ! (ஆங்..இல்லே இல்லே..நீ புளுகுறே ; இது ஒரு போர்ச்சுகீஸ் பதிப்பின் அட்டையே தான் !! நீ ஜெராக்ஸ் எடுத்திருக்கே !! என சாத்தக் காத்திருக்கும் நண்பர்களுக்கு சின்னதொரு தகவல் : அதனை மாதிரியாய்க் கொண்டு இது நாம் புதுசாய் வரைஞ்சதுங்கோ ! )

And இதோ மிரட்டலான உட்பக்கச் சித்திரங்களின் டிரெய்லருமே :


வர வர பெருசு பெருசாய் பில்டப் புராணங்களை அவிழ்த்து விடுவது ஒருவித வாடிக்கையாகிப் போயிருப்பதால்  - இதுவுமே அந்தப் பட்டியலில் சேர்ந்திடுமா ? அல்லது மெய்யாலுமே உங்களின் பாராட்டுக்களை ஈட்டவல்ல இதழா ? என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை ! Whatever it might be - என்மட்டிற்கு ரொம்பவே ரசித்திட்ட பணியிது ; so இனி உங்களுக்கு ஆச்சு - தலைக்கு ஆச்சு ! 

Moving on, இம்மாதத்தின் இதழ் # 3 - ஜம்போவின் "தனித்திரு..தணிந்திரு..!" ரொம்ப காலம் முன்னேவே உரிமைகளை வாங்கியிருந்த ஆல்பம் இது ; வாகான ஸ்லாட் கிட்டாததால் இதுவரையிலும் தேவுடு காத்து வந்துள்ளது ! Veering a bit off course - தொடரும் எனது கேள்விக்கான விடையைத் தேடித் தான் பாருங்களேன் !! 

பொதுவாய் ஒரு கதைத்தேடலின் போது நான் / நாம் எதிர்பார்ப்பது என்னவாக இருக்கும் folks ?

  • ஒரு சீரான துவக்கம் ? ..........ரைட்டு
  • ஒரு சுவாரஸ்யமான கதையோட்டம் ? ..........ரைட்டு
  • ஒரு மிரட்டலான க்ளைமாக்ஸ் ? ..........டபுள் ரைட்டு !
  • இறுதியாய்  சகல முடிச்சுகளுக்குமான விடைகள் ? ............டெபினிட்லி !
  • அப்புறம் கண்ணுக்கு லக்ஷணமான கதை மனுஷாள் ? ....ஆமா !!
  • நேர்த்தியான அழகான சித்திரங்கள் ?........வேணும்லே ! வேணும்லே !
So மேற்படிச் சமாச்சாரங்களோடு, ஒரு பரபரப்பான அட்டைப்படமும் இணைந்து கிட்டினால், அதை டக்கென்று டிக்கடிப்போம் !! ரைட் தானே ? 

ஆனால்...ஆனால்...எப்போதேனும் ஒருவாட்டி, மேற்படிக் கேள்விகளில் முக்காலே மூன்று வீசத்துக்கு எதிர்மறையான பதில்களையே நமக்குத் தந்திடும் கதைகளும் கண்ணில் பட்டால் ???  

  • துவக்கமா ? ஆங்...முதப் பக்கத்தைப் புரட்டினாக்கா கதை எப்புடியும் ஆரம்பிச்சுத்தானே தீரணும்  ?
  • கதையோட்டமா ? அது அதுபாட்டுக்கு ஏதோ ஒரு பக்கமா ஓடிட்டுப் போகட்டும்பா ; சுதந்திர நாடோ இல்லியோன்னோ ?!  
  • வல்லியதொரு க்ளைமாக்ஸ் ? : டொப்பிலாம் போட்டுக்கினு போல்ஸ்கார் வந்துட்டாலே அது க்ளைமாக்ஸ் தானே ; இங்கேயும் இருக்கில்லே !
  • அத்தினி முடிச்சுகளும் பதில் ? : ஆங்...அது வந்து இறுதியிலே கதையிலே ஒரு முரட்டு முடிச்சு வரத்தான் செய்யுது ! ஒரு வேளை நீங்க தேடறதும் அதைத் தானோ ?
  • லக்ஷணமான மக்கள் ? : அது வந்து....அகத்தின் அழகுமே அழகு தானுங்களே ? 
  • ப்புறம் அந்த மெர்சலான அட்டைப்படம் ? : 'இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால்ங்கிறே' மாரியொரு தாத்தா நிஜாருள்ளாற கைவிட்டுக்கினு நிற்கிறார் ; அஜீஸ் பண்ணிக்குவோம் ! 

நம் கதைத்தேடல்களுக்கான கேள்விகளுக்குப் பதில்கள் இவ்விதமே அமைந்திடின், நார்மலானதொரு ஆசாமி என்ன செய்வான் ? துண்டைக் காணோம் ; துணியைக் காணோமென்று தெறித்து ஓடுவான் ! ரைட்டு தானே ? ஆனால் அப்படியெல்லாம் ஓட்டமெடுக்காமல், அந்தக் கதையை குஷாலாய் டிக் அடிக்க நேர்ந்தால் - அங்கே இரண்டே யூகங்களுக்குத் தான் இடமிருக்க முடியும் :

யூகம் ஒன்று : டிக் அடிக்கும் அந்த ஆசாமி ஒரு ஆந்தைக்கண்ணப்  பேயனாக இருந்தாக வேண்டும் ! 
யூகம் இரண்டு : அந்தப் படைப்பாளி சாதாரணக் கேள்விகளுக்கு நின்று பதில் சொல்லிடும் அவசியங்களில்லா ஜாம்பவானாக இருந்திட வேண்டும் ! 

இம்முறை இரண்டுமே சரியான யூகங்களே !! நமக்கு ரொம்பவே பரிச்சயமான (கேப்டன் பிரின்ஸ் ; கமான்சே ; ஜெரெமியா புகழ்) ஹெர்மன் ஹப்பென் சித்திரங்களின் பொறுப்பேற்றிருக்க, கதைக்குப் பேனா பிடிப்பதோ என்னைவிடவும் ஒரேயொரு நாள் மூத்தவரான அவரது மகன் Yves Huppen தான் ! So தந்தையும், பிள்ளையும் கூட்டணியில் மிரட்டும் இந்த ஆல்பம் dark ஆனது - சகல அர்த்தங்களிலும் ! கதை ஆழம் ; புடலங்காய் என்பதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கதை சொல்லலை மட்டுமே பிரதானமாய்க் கையிலெடுத்துக் கொண்டு, மனிதகுலம் கடந்து வந்ததொரு காலகட்டத்தை தந்தையும், புள்ளையும் இணைந்து நம் கண்முன்னே கொணரும் நேர்த்தியினில் மயங்கியே இந்த ஆல்பத்தை தேர்வு செய்தேன் ! கதை நிகழும் அந்த 1950 களின் அமெரிக்கா ; கறுப்பின   மக்களின் அன்றாடங்கள் ; இருளில் அரங்கேறும் மனித வேட்டை ; என கதை நெடுக பெரியவர் ஹெர்மன் விளாசியிருப்பது சிக்ஸர் மாற்றி சித்திர சிக்ஸரே ! But coming on the heels of "பனியில் ஒரு குருதிப்புனல்"  - இதுவுமே விமர்சனங்களை ஈர்க்கவல்ல படைப்பே என்பது புரியாதில்லை தான் ! ஆனால் நாமாய் உருவாக்கிக்கொள்ளும் சிலபல தரம் சார்ந்த அளவுகோல்களின் காரணமாய் இதுபோன்ற சித்திர மாயாஜாலங்களை மதிப்பீடு செய்திட முனையாது, once in awhile அவற்றை கொண்டாடுவதில் தப்பே இல்லை என்ற நினைப்பில் இந்த இதழ் ஜம்போ சீசன் 3-ன் இதழ் # 3 ஆகிறது ! அதற்கு மீறியுமே  சாத்துப்படலங்கள் தொடரின் - "சாத்து வாங்குவதெல்லாம் நம்மளுக்கு சாத்துக்குடி சூஸ் மாரி !!' என்று சொல்லிக்க வேண்டியது தான் !! "தனித்திரு...தணிந்திரு...." - ஒரு கலைக்குடும்பத்தின் celebration !! And அமெரிக்க வரலாறை இரண்டாம் முறையாய் தேடிடவொரு முகாந்திரத்தை எனக்கு இம்மாதத்தினில் ஏற்படுத்தித் தந்தவொரு இதழ் ! பேனா பிடிக்க மொத்தமே முக்கால் நாளுக்கு மேல் அவசியப்படா இந்தச் சித்திர விருந்தின் டிரெய்லர் இதோ : 


புக்காய் பார்க்கும் சமயத்தில்  ஒவ்வொரு பக்கமும் மௌனமாய் ஒரு கதை பேசுவதை உணர்ந்திட உங்களுக்குமே சாத்தியப்படுமென்ற நம்பிக்கையில் இக்கட பில்டப் L.I.C கட்டிக்கொண்டிருக்கிறேன் ! அது மௌலிவாக்கத்து அபார்ட்மெண்டாய் மாறி குப்புறக் கவிழவும் கூடும் தான் என்பதும் புரியாதில்லை ; but the eternal optimist inside me - அடங்க மறுக்கிறான் !! பார்ப்போமே ! 

டெக்ஸ் மட்டும் திங்களன்று அச்சாகி விட்டால், வியாழனுக்கு டெஸ்பாட்ச் இருந்திடும் ! Fingers crossed !! 

Yves Huppen

ஆக செப்டெம்பரின் பில்டப் படலங்களை செமத்தியாய் நிறைவு செய்த மகிழ்வோடு உறங்கக் கிளம்புகிறேன் ! ஞாயிறின் பகலில் ஜம்போ இதழ் # 4 உடனான பயணம் வெயிட்டிங் !

கிளம்பும் முன்பாய் ஒரு கொசுறுச் சேதி ! Zoom ஆன்லைன் கிளாஸ் ; ஆன்லைன் மீட்டிங் ; ஆன்லைன் நீதிமன்ற விசாரணை என்று ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்திடும் இன்றைய காலகட்டத்தில், நாமும் ஒரு ஆன்லைன் புத்தக விழா நடத்தினால் என்னவென்ற மகா சிந்தனை தலைக்குள் ஓடியது ! கைவசமுள்ள புக்ஸ் சகலத்தையும் புத்தக விழா பாணியிலேயே ஆபீசில் அடுக்கி விட்டு, உருப்படியானதொரு டிஸ்கவுன்ட்டையும் அறிவித்து வைத்தால், ஷாப்பிங் செய்திட முனைவோருக்கு  அண்ணாச்சியை வீடியோ காலில் உதவிடச் செய்தால் என்னவென்று தோன்றியது ! No ஸ்டால் வாடகை ; no பயணச் செலவுகள் ; no லாட்ஜ் வாடகைஸ் எனும் போது, அந்தச் செலவுகளில் மிச்சம் பிடிக்கக்கூடிய காசை கூரியர் கட்டணத் தள்ளுபடிகள் ; ஸ்பெஷல் discounts என்று சலுகைகளாக்கிடலாம் தானே ? பணம் அனுப்ப சுலபமாய் GPAY கணக்கும் நம்மிடம் ரெடி எனும் போது இந்த ஆன்லைன் புத்தக விழாவை முயற்சித்துப் பார்க்கும் ஆவல் உள்ளுக்குள் தீவிரமாகிறது !! வாகான சமயத்தில் lets give  it a shot folks ?

அப்புறம்  GPAY மார்க்கத்தில் பணம் அனுப்பிட எண்ணிடுவோர் 9003964584 (லயன் காமிக்ஸ்) என்ற கணக்கிற்கு அனுப்பிடலாம் ! It's all set & ready to go !

மீண்டும் சந்திப்போம் all ; bye for now ! Have a Safe sunday !!